எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘தீ’ – 10

இவள் வசந் ‘தீ’ – 10

இதுவரை வசந் ‘தீ’

வசந்தியின் திருமணம் திடீரென நின்றுபோகும் சமயம், அவள் விரும்பாத முறைப்பையன் இலக்கியன் திடீர் மாப்பிள்ளையாகிறான். எல்லாரும் மகிழ்ச்சியில் மூழ்குகின்றனர். இனி…

நிபந்தனைத் ‘தீ’ –10

மண்டபத்திலிருந்து அனைவரும் வீடு திரும்புகின்றனர். ராகவன் வீடு கலகலப்பாக மாறுகின்றது. தங்கை நிஷாந்தி அக்காவை வம்பிழுத்தலை தொடர்கின்றாள். அப்படியே இலக்கியனையும் சீண்டுகிறாள்..

“ மாமா என்னோட அக்காகிட்ட கவனமா இருங்க. மெதுவா பேசுங்க. அக்கா கோபப்பட்டா உங்களால தாங்க முடியாது”

“ உங்க அக்காவை கோபப்படாம நான் பார்த்துக்கறேன், போதுமா “.

“ஏய் வாலு, சும்மா இருக்க மாட்டே. பேசாம இருடி” – வசந்தி படபடத்தாள் செல்லமாய்.

“ஆஹா , இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திட்டிங்களா ? என்னால இனிமே தப்பிக்க முடியாது. நான் சரண்டர்”.

அன்று இரவு. முதல் இனிய உறவுக்கு (?) உரிய ஏற்பாடுகள் மாடி அறையில் நடந்து கொண்டு இருந்தது.

இறைவன் இருவேறு இன உயிர்களைப் படைத்து அந்த இரு உயிர்களும் இன்னொரு உயிரைப் படைக்க உருவாக்கிய இனிய இரவு.

வசந்தி அறைக்குள் நுழைந்தாள். இலக்கியன் எந்தவித பதட்டமும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தான். அவளை புன்முறுவலுடன் பார்த்தான்.

“ வா, வசந்தி உட்காரு. உன்னை சின்ன வயசுல இருந்து எனக்குத் தெரியும். நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டிஸ் ? “

வசந்தி வழக்கம் போல முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டவில்லை. இலக்கியனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ நான் உங்களிடம் சில விசயம் பேச வேண்டும் . என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் “

மெல்லிய குரலில் வசந்தி சொன்னாலும் அந்த அறையில் அது பெரிதாக கேட்டது போல இருந்தது இலக்கியனுக்கு. அவளை கூர்ந்து பார்த்தான்.

வசந்தி கட்டிலில் இலக்கியன் பக்கத்தில் உட்கார்ந்தவள் எழுந்து அருகில் இருந்த நாற்காலியை அவனுக்கு எதிரே போட்டு உட்கார்ந்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ நீங்க என்னுடைய முறைப்பையன்தான். ஆனாலும் நமக்குள் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். அதற்கு காரணம் என் தந்தையா அல்லது என்னுடைய அகந்தையா என எனக்கு தெரியாது. நடந்தது ஒரு கனவு போல இருந்தாலும் என் மன் ஏற்க மாட்டேங்குது.”

இலக்கியன் அவள் பேச்சைக் கேட்டு அவளை உற்றுப் பார்த்தான். என்ன சொல்ல வருகிறாள் என அவளைப் பார்த்தான்.

வசந்தி தொடர்ந்தாள்.

“ நாம் வெளிஉலகத்திற்கு மட்டும்தான் கணவன் மனைவி. ஆனால் வீட்டிற்குள்…”

“ என் தாய் உன்னிடம் சம்மதம் கேட்டதற்கு மவுனத்தை சம்மதமாக எல்லார் முன்னாடியும் உன் மவுனத்தை தந்தாயே, அதற்கு என்ன அர்த்தம் ? “

“ என் தாயின் அழுத கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. என்னோட அப்பாவின் அவமான முகத்தை பார்க்க என் மனசு தாங்கலை. எல்லார் பார்வையும் என்னை நோக்கி இருக்கும்போது நான் மறுத்தால் என்னை என்ன நினைப்பார்கள் ? “

“ எனக்கு கழுத்து நீட்டும்போது விருப்பம் இல்லாமல்தான் நீட்டினியா ? நீ என்னை ஏமாற்றினாயா அல்லது மற்றவர்களை ஏமாற்றினியா இல்லை உன் வாழ்க்கையை மறுபடி தொலைத்து உன்னை ஏமாற்றிக்கொள்கிறாயா ? இது என்ன விபரீத விளையாட்டு ? “

“என் வாழ்க்கையை ஒருவன் அம்மா பேச்சைக் கேட்டு ஏமாற்றினான். நீங்களோ என் தாயின் பாசத்தைவைத்து என்னை ஏமாற்றினிர்கள். பெண் மனது என்ன களிமண்ணா நீங்கள் நினைத்தப்படி பிசைந்து சிலையாய் மாற்றுவதற்கு ? என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவில்லை. உங்களையும் நான் ஏமாற்றவில்லை” என்னுடைய நிபந்தனைக்கு நீங்கள் கண்டிப்பாக சம்மதிக்க வேண்டும் “

இலக்கியனுக்கு கோபம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டான். அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான்

வசந்திக்குள் எழுந்த கல்யாண எதிபார்ப்புத் தீ ,ஆசைத்தீயாக மாறி பின் ஏமாற்றப்பட்டவுடன் கோபத் தீயாக கிளம்பி பின் இலக்கியனை ஏற்பதா இல்லையா என குழப்பத் தீயாக உருவெடுத்து பின் தாயின் அழுகைக்காக முடிவுத் தீ உருவாகி பின் இப்பொழுது நிபந்தனைத் தீயில் நிற்கும் வசந்தியை கண்டு சற்றுக் குழம்பினான் இலக்கியன். இருந்தாலும் அவளாக சொல்லட்டும் என காத்திருந்தான்.

“ நாம் வெளியில்தான் தம்பதிகள்.ஆனால்..”

“ இதுவா உன் நிபந்தனை . இதை நீ ஏற்கனவே சொல்லிவிட்டாய்”.

“ இல்லை நான் சொல்ல வருவதைக் கேளுங்கள். மறுபடி நான் சுந்தரை கல்யாணம் செய்யவேண்டும்”.

சுந்தருக்கு தலை சுற்றியது. ‘ இவள் என்ன பேசுகிறாள் ? காதலித்தவன் ஏமாத்தினால் மீண்டும் கல்யாணம் செய்ய சொல்லிக் கேட்டால் அது ஒருவகையில் நியாயம். ஆனால் ..”

“ என்ன உளறுகிறாய் ? அவன் உன்னை மண்டபத்தில் அவ்வளவு பேர் முன்னால் அவமானப்படுத்திவிட்டு வெளியெறியவன். அவனால் உன் குடும்பம் அவமானப்பட்டதே , அது மறந்து விட்டதா உனக்கு ? கம்பீரமான , கர்வமான உன் தந்தை அன்று எந்த நிலையில் நின்றிருந்தார் என தெரியும்தானே உனக்கு ? “

“ இருக்கலாம். அவர் (!) அம்மாவுக்கு பயந்துதான் வெளியேறினாரே தவிர, என்னை அவர் வெறுக்கவில்லை. மிக நல்லவர்”.

“ அப்படியா, அந்த நல்லவர் அன்று தன் அம்மாவை சமாநானப்படுத்தி உன்னை கட்டியிருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ? ஒரு திருமணத்தை முறித்து மற்றொரு திருமணம் நடந்து அதையும் முறித்து விவாகரத்துப் பெறுவது எவ்வளவு சட்ட சிக்கல் இருக்கிறது தெரியுமா ? உடனே நடக்க்கூடிய காரியமா அது ?”

“ எனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் எனக்கு சுந்தரை பிடித்திருக்கிறது. அவரைத்தான் கல்யாணம் செய்ய ஆசை”

“ என்ன பிதற்றுகிறாய் ? +உலகத்தில் யாருமே இப்படி கேட்டதில்லை. யாராவது கேட்டால் சிரிப்பார்கள். பைத்தியம் என்று சொல்வார்கள் “

“ சொல்லிவிட்டுப் போகட்டும். அவர் என்னிடம் எவ்வளவு இனிமையாக பேசினார் தெரியுமா ?”

“ உண்மைதான் , கல்யாணத்திற்கு முன் எல்லா ஆண்களும் தேன் ஒழுகப் பேசுவார்கள். ஆனால் கல்யாணத்திற்குப் பின் தேன் தேளாக மாறிவிடும், தெரியுமா ?”

“ எது எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்ல வந்த நிபந்தனை , நீங்கள் , நான் சுந்தரை கல்யாணம் செய்ய உதவ வேண்டும், ஆனால் அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது”.

இலக்கியன் கோபமானான்.

அடுத்து என்ன ?

வசந்தி வருவாள்.
 

Attachments

  • download.jpg
    download.jpg
    5.6 KB · Views: 0
Top