எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னடி என்னடி ஓவியமே....! அத்தி (2)

அத்தியாயம் (2)

“டேய் சுதாகர்.... டேய்.... எழுந்திருடா.... மணி என்னாகுது ...?”
“அம்மா... நீயே போய் பாத்துக்கக் கூடாதா...? இதுக் கெல்லாமா என்னை எழுப்புவ...?” கேட்டபடி போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டான் நாலேழு வருடங்களைக் கடந்த சுதாகர்.

“அடேய்... எழுந்திருக்கப் போறியா இல்லையாடா.... சரி... சரி... நல்லா தூங்கு தம்பி.... இன்னும் பத்து நிமிசத்துல வாக்கிங் போன மனுசன் வரட்டும்... அப்புறம் நடக்கற கச்சேரிய பாத்துக்கறேன்...” என்றபடி அருகிலிருந்த டேபிளில் அம்மா காபியை வைக்க,

“அச்சச்சோ... மணி ஏழாயிடுச்சா....” கேட்டான் அலறி அடித்தபடி.
“ஆஹா.... எம்மாங் கரிசனம் சாருக்கு.... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க சார்...” மீண்டும் அம்மா கலாய்க்க,

பதறியடித்து ஓடினான் குளியலறைக்குள்.
“டேய்... டேய் ... காபியக் குடிச்சிட்டு போடா...”
“வேணாம்மா... அத கொண்டு போய் உன் கண்ணாளனுக்கே கொடுங்க....”

“அடடா... அப்படீன்னா.... கொஞ்சம் ஸ்பெஷலா போட்டிருப்பேனே....”
“ஆங்... அப்படியா... இதெல்லாம் ரொம்ப ஓவரு... ஊர் உலகத்துல அம்மான்னா தன் மகனுக்குத் தான் முதல் ப்ரயாரிட்டி தருவாங்க.... இங்க அப்படியே உல்டா... க்கும்... நான் பேசாம பெரியம்மாவுக்கு பிள்ளையா பிறந்திருக்கலாம்...” எனப் புலம்பினான் குளியலறையிலிருந்து.

அப்போது, “பர்வதம்... காபி கொண்டா...” என்ற சத்தம் ஹாலிலிருந்து வந்திட, சுதாகர் சுதாரித்துக் கொண்டான்.
“அம்மா... உங்காளு வந்துட்டாரு போங்க சீக்கிரம்...” என்றவனின் குரலில் சின்னக் கோபம் இருந்தது.

“அடப்போடா மக்கு மகனே.... எனக்கு எப்பவுமே நீ தான்டா முக்கியம்...” வெளியேறினார் அம்மா பர்வதம்.
புன்னகையுடன் வந்த பர்வதத்தைப் பார்த்த அப்பா சிவராமன், “ஏன்டி... காலங்காத்தால அவனப் போய் சீண்டுற... பாவம்டி அவன் ...” சிரித்தார்.

“ம்ம்... என் புள்ளய நான் சீண்டுறேன்.. உங்களுக்கு என்ன...?"
"ஆமாம்... பச்சப்புள்ள.... தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டு மூணு கண்ணா வாரான்னு நிலாவக் காட்டி சோறு ஊட்ட வேண்டியது தான.... க்கும் ..." என்று தன் சங்குக் கழுத்தைச் செல்லமாய் சொடுக்கினாள் பதின்ம வயதுத் தங்கை மோகனா.

"போடி பொறாமப் புடிச்சவளே...முதல்ல என் புள்ளக்கி திருஷ்டி சுத்திப் போடணும்... உன் கண்ணே பட்டுடப் போகுதுடி..." முறைத்துவிட்டு அவனுக்கான உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தார் பர்வதம்.
"பாருங்கப்பா... இந்த அம்மாவ... எப்பப் பாத்தாலும் என்னையே குத்தம் சொல்லக்கிட்டு..."

"அம்மாடி மோகனா... இன்னிக்கி நேத்தா பாக்குறோம்... விடும்மா, அவளப் பத்தித் தான் தெரியும்ல... அவ உலகமே சுதாகர் தான்மா..."
"அப்புறம் ஏன்ப்பா தினமும் அண்ணன உங்கள வச்சி சீண்டுறாங்க..?"

"ஹாஹ்ஹா.... அது ஒரு ஜாலிக்குடி..." என்று அம்மா கண்ணடிக்கும் போது காக்கி உடுப்புடன் சாப்பிட வந்தான் எஸ் ஐ சுதாகர்.
அம்மாவின் செல்ல விளையாட்டுகளைக் கண்டுக் கொள்ளாதது போல உட்கார்ந்தவன் திடுக்கிட்டான் எதிரில் இருந்தத் தட்டைப் பார்த்ததும்.
"அம்மா... என்னம்மா இது...?"
"ஏன் அண்ணா... இது தெரியாதா உனக்கு....? இன்னிக்கு உனக்காக அம்மாவோட ஸ்பெஷல் சேமியா உப்புமா..." கன்னக் குழியால் சிரித்தாள் அழகுமிகு மோகனா.

"ஏன்டா... இதுக்கென்ன குறைச்சலு.... இந்த உப்புமாவோட டேஸ்டில மயங்கித் தான் உங்கப்பா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...தெரியுமா...?" கேட்டார் பெருமிதம் பொங்கிட.

"ஐயோ.... அப்பா... எல்லாம் உங்களால வந்தது...உங்கள..." எனச் செல்லமாய் சுதாகர் தலையிலடித்துக் கொண்டதும், சிரிப்பலை அங்கே ஓய நெடுநேரமானது.

அந்த அற்புதத் தருணத்தைக் கெடுத்தது கரகரத்தக் குரலில் கத்திய டெலிஃபோன் சத்தம்.
ஓடிப் போய் எடுத்த மோகனா, "அண்ணா.... உனக்குத் தான்..."

எடுத்துப் பேசியவன் முகம் கொஞ்ச கொஞ்சமாய் மாறியது.
"எஸ் சார்... உடனே வர்றேன்..."
கிட்டத்தட்ட ஓடத் தொடங்கினான்.

(தொடரும்)
 
அப்போ பேபி சுதாகர் போலீசா?
கஞ்சி குடித்த விரைப்போ இல்ல சிரிப்பு போலீசோ ?
 
Top