எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகு குறிப்பு

Status
Not open for further replies.

L.keerthana

Moderator
ஹலோ ஃபிரண்ட்ஸ் நான் உங்கள் கீர்த்தனா நான் நறுமுகை தளத்தில் கதை எழுதுறேன். அதோட சேர்த்து ஃப்ரீ டைம்யில் சில எளிய முறை அழகு குறிப்பும் படிவிட போறேன். இந்த காலகட்டத்துல நம்மலோட உணவு பழக்கவழக்கம் சரி இல்ல அதனால பெண்களுக்கு முடி கொட்டுறது , சருமம் பிரச்சனைன்னு நிறய ப்ராப்ளம் இருக்கு அதுக்கு இந்த டிப்ஸ் யூஸ்புல் ஆக இருக்கும்.

நிறயபேர் ஹேர்ஃபால்க்கு(hair fall ) டிப்ஸ் கேட்டு இருந்தீங்க இதோ உங்களுக்கான டிப்ஸ்.

டிப்ஸ் 1

முதல் உங்களது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வாரம் ஒரு முறை நல்லெண்ணை தலைக்கு வைத்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து விட்டு குளிக்கவும்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2 உங்க உணவு பழக்கவழக்கம் நிரய புரதம் மற்றும் விட்டமின்(vitamin) சத்துள்ள உணவை உண்ணுங்கள். அதாவது கீரை ,பழங்கள் ,முட்டை

டிப்ஸ் 3
பொடுகு இருந்தாலும் முடி கொட்டும் அதனால் வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயம் ,வேப்பிலை , தேங்காய் பால் இவை அணைத்தயும் அரைத்து பொடுகு இருக்கும் இடத்தில் பூசி இருபது நிமிடம் வச்சி குளிக்கவும் . சைனஸ் பிரச்சனை இருப்பவங்க இதை செய்ய வேண்டாம்.

சைனஸ் இருக்குறவங்க தயிர் , கற்றாழை, வேப்பில்லை இதை அரைத்து பூசி பதினைந்து நிமிடம் வைத்து குளிக்கவும்.

டிப்ஸ் 4
செல்ஃப் ஆயில் மசாஜ்(self oil massage )
தேங்காயெண்ணை , நல்லெண்ணை விட்டமின் E(vitamin E) இது எல்லாத்தயும் டபுள் பாயில் (double boil ) செய்து நல்லா ஸ்கல்ப்(scalp) மசாஜ் செஞ்சி முப்பது நிமிடம் வச்சிட்டு குளிங்க.

டிப்ஸ் 5
டிரை ஹேர் (dry hair) உள்ளவங்க கற்றாழை , தயிர் இது இரண்டையும் அரைத்து பூசி இருபது நிமிடம் வைத்து குளிக்கவும்.

இது எல்லாத்தையும் கண்டிப்பா ட்ரை செய்து பாருங்க ஃபிரண்ட்ஸ் ஏதும் டவுட்ஸ் இருந்தா கமெண்ட்யில் கேளுங்க .









 
Status
Not open for further replies.
Top