எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆல்பா – 06

ஆல்பா…6

இதுவரை ஆல்பா…



அது 3050 ஆம் ஆண்டு. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கோள் பிளானட் எக்ஸ் கோளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் மணி மற்றும் மேகலாவுடன் ரஷய தொலைநோக்கி விஞ்ஞானி ப்ரான்க் டேவ் இணைகின்றார். அவர்களது உண்மையான ஆராய்ச்சியுடன் மற்றொரு ரகசியமும் உள்ளது என்கிறார். இனி….



ஆல்பா திருப்பம் – 06



டேவ் சொன்னதைக் கேட்ட மணி மற்றும் மேகலா திகைத்து தலைவர் மல்கோத்ராவைப் பார்க்க அவர் மர்மமாய் சிரித்து கையைக் காட்ட டேவ் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.



“என்ன இரண்டு பேரும் திகைச்சு போயிட்டிங்க. வாங்க உங்க இடத்துக்குப் போவோம்.”



இருவரும் அவருடன் இடத்தை அடைந்து ஆளுக்கு ஒரு பக்கமாக அமர அவர் அவர்கள் முன் அமர அவர் குணிந்து தன்னுடன் கொண்டு வந்து இருந்த சிறிய பெட்டியை எடுத்து மடி மீது வைத்து சில ரகசிய விசைப் பலகைகளை தட்ட பெட்டி வாயை திறந்துக் கொண்டது.



மேகலா தன் நெற்றியில் அழகிய விரல்களால் தட்டிக் கொண்டாள்.

“இந்த மனுஷன் கையில பெட்டி வச்சிருந்ததை கவனிக்காம விட்டுடோமே.”



இருவரும் அவரைப் பார்க்க அவர் அந்த சிறிய வித்தியாசமான கருவியை எடுக்க அது முதலில் பார்ப்பதற்கு செவ்வக வடிவ அலைபேசி போல இருந்தாலும் தொடுதிரை இல்லாமல் ஆங்காங்கே சிறிய விசைப்பலகைகள் இருக்க அவர் ஒரு விசைப் பலகையை அழுத்த பக்கவாட்டில் ஒரு சிறு கம்பி போன்றதொரு அமைப்பு வெளியே நீண்டது. திரையில் ஒரு இடத்தில் சிவப்பு விளக்கு எரிந்து மின்னியது.



டேவ் இப்பொழுது பேச ஆரம்பித்தார்.

இந்த சிறிய கருவிக்கு பேரு பிட். அதாவது PID (POWER INDUCING DEVICE) தொலைநோக்கி திறனை அதிகப்படுத்தும் நான் கண்டுபிடித்த கருவி. இந்த 2050ஆம் வருசத்துல எங்க நாட்டு நிதி நிலைமை மோசமானதால விண்வெளி திட்டத்தை நடத்த முடியா சூழ்நிலை. மல்கோத்ரா எனது நண்பர். அதனால இதை ஒரு அலைபேசி மூடியை வைத்து எங்க நாட்டுல இருந்து கொண்டு வந்தேன். என்னுடைய ஒரு திட்டத்தை மல்கோத்ராவிடம் சொல்ல நீங்க செய்யக் கூடிய ஆராய்ச்சியோடு சேர்த்து கண்டு பிடிக்கச் சொல்லிட்டாரு.”



” சார் நீங்க சொல்றதை கேட்டா பிரமிப்பா இருக்கு. நம்ப முடியலை? என்ன சார் உங்க திட்டம் ?”



“ ஆமா சார். மணி போல எனக்கும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. உண்மையில் உங்க நோக்கம் என்ன ?”



மணி மற்றும் மேகலா இருவரையும் உற்றுப் பார்த்த டேவ் மர்மமாய் புன்னகைத்தார். பின் அவர்கள் இருந்த அறையில் உள்ள தொலைநோக்கி அருகே சென்று அதை இயக்கி அதன் அருகில் அவர் கொண்டு வந்து இருந்து சிறிய கருவியை இணைத்து ஒரு சிறு விசையை அழுத்த அந்த திரையில் பச்சை விளக்கு ஒளிர ஆரம்பித்தது.



”உங்களால முடியாத பிளானட் எக்ஸ் தவிர வேறு ஏதாவது கண்டுபிடிக்க முடியாத விசயத்தை சொல்லுங்க”

தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் விசயத்தை வேறு பக்கம் திருப்பும் அவரை இருவரும் வித்தியாசமாக பார்த்தார்கள். மேகலா வாயை திறந்தாள்.



“எஸ்ரா விண்மீன் இன்னைக்கு வரைக்கும் கண்ணுல தெரிய மாட்டேங்குது. அந்த விண்மீன்(ஸ்டார்) வித்தியாசமா பல வண்ணங்களை உமிழக் கூடியது. 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது. இந்த 3050ஆம் வருசம் அது தெரியனும். அதை யாராவது பார்த்தா அவங்க நினைச்சது நடக்கும்னு ஒரு ஐதீகம்.”



எஸ்ரா .. வித்தியாசமான கிரகம். கேட்க நினைத்ததை, விரம்புவதை அடையலாம் என்ற ஒரு நம்பிக்கை அந்த 3050ஆம் ஆண்டிலிலும் நிலவி வந்தது, இதற்கு முன் சில நொடிகள் முன்பு ஒரு முறை பார்த்த் வியந்தது மணிக்கு ஞாபகத்திற்கு வந்தது .பலரும் பார்க்க விரும்பும் கிரகம், ஆனால் கண்ணில் எளிதாக சிக்காத கிரகம்.



வித்தியாசமாக விதவிதமான வண்ணங்களை பிரதிபலிக்க கூடியது. இதற்கு முன் ஒரு நாள் மணி பார்த்திருந்தான். அப்போது மேகலா அங்கு இல்லை. பார்த்த விநாடியில் தனக்குள்ள ஒரு பிரச்சனை தீர வேண்டும் என நினைத்தான. அதுவும் அந்த சமயத்தில் நடக்கவே அவனுக்குள் உற்சாகம் கரைபுரண்டது.

‘தான் நீண்ட நாட்களாக மனதில் வளர்த்து வரும் காதல் செடி மரமாகி பூ பூக்குமா, காய் காய்க்குமா இந்த கிரகத்தை இப்பொழுது பார்த்தால் ?’ மனதில் ஆசை அலைகள் எழும்பி அடங்கின.



டேவின் பேச்சு அவன் கற்பனையை, கனவை , ஏக்கத்தை கலைத்தது.



“ என்னோட கருவி மூலமா நீங்க பார்க்க முயற்சிக்கறதை ஒருவேளை பார்க்கலாம்.ஆனா…..”



பேசிக்கொண்டிருந்த டேவ் திடீரென நிறுத்தியதைக் கண்டு இருவரும் திகைப்புடன் அவரைப் பார்க்க அவர் தொடர்ந்தார்….



“என்னுடைய கண்டுபிடிப்பு ஆரம்பகட்டம்தான். அதாவது என்னுடைய கருவியோட செயல்பாடு 5 நிமிடங்கள்தான். நான் அதற்கு மேல செயல்பட வைக்க முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்.”



டேவ் சொல்லி முடித்தவுடன் அவர்கள் வழக்கமாக பார்க்கக் கூடிய தொலைநோக்கி கோணத்தைக் கேட்டு அறிந்து ஒரு சில நிமிடங்கள் போராடி ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.



மணி தயாராக எழுந்து நின்றான். தொலைநோக்கி அருகில் சென்று டேவ் பக்கத்தில் நின்றான். மனதிற்குள் “ஆண்டவா, எஸ்ரா விண்மீனை நான் பார்த்தால் நான் இவள் மேல வச்சிருக்கற காதல் ஜெயிக்கனும் . என்னோட காதலை இவ புரிஞ்சுக்கணும். அப்படியே…” டேவ் அவன் தோளைத் தட்ட சுயநினைவிற்கு வர அவர் ஏதும் பேசாமல் அவனை சைகையால் கூப்பிட தொலைநோக்கியில் கண்களை வைத்துப் பார்க்க எஸ்ரா பல வித வண்ணங்களை உமிழ்ந்து அழகாய் தெரிய மனதில் தன் வேண்டுதலை நினைத்துக் கொண்டவன் அதிர்ச்சியில் உறைய மேகலா அவனைத் நகர்த்தி விட்டு பார்த்தவள் ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள்.



மனதுக்குள் தன்னுடைய தான் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தாலும் தன்னுடைய தாய் தந்தையரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்தாள். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களது பெயர் தெரிந்தும் அவர்களின் முகங்களை புகைப்படமாக கூட பார்த்ததில்லை. கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்க்க நினைத்தாலும் அடக்கிக் கொண்டாள்.



நிமிடங்கள் கரைய கரைய, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த தூரமான அழகிய கிரகம் மறைந்து புள்ளியாய் மறைந்துப் போனது.



மேகலாவும் மணியும் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் திகைத்து அமைதியானார்கள். டேவ் அவர்களை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தார்.



புதிய திருப்பமான இந்த எஸ்ரா கிரக கண்டுபிடிப்பு இன்னும் பல திருப்பங்களை கொண்டு வரப் போவது தெரியாமல் மணி , மேகலா திகைத்து நிற்க விதி ஓரமாய் நின்று சிரித்தது.



திருப்பம் திகைப்பைத் தருமா ? அல்லது வியப்பைத் தருமா ? ஆராய்ச்சியின் உண்மையான நோக்கம் என்ன ?



காத்திருங்கள். எதிர்பார்த்திருங்கள்.
 
Top