எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இடியாப்பம் பிரியாணி

admin

Administrator
Staff member
வணக்கம் டார்லிங்ஸ்!
டியாப்பம் பிரியாணி. இது தான் இன்றையோட ஸ்பெசல் ரெசிபி. இது என் அம்மாவுடைய ரெசிபி. நம்மில் அநேகர் வீட்டில் அடிக்கடி இடியாப்பம் செய்வோம் அப்போது எல்லாம் இன்றைக்குமா? என்ற கேள்வி பிரதானமாக இருக்கும். அதே போல சிலர் முதல் நாள் செய்த இடியாப்பம் மீந்து விட்டால் அப்படியே கொடுக்க முனைவோம் அப்போது அதை சற்றே ருசி வடிவம் மாற்றி கொடுத்தால் அலாதி இன்பம் தரும்.


தேவையான பொருட்கள்

இடியாப்பம் 1 1/2 பௌல்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கேரட் - 2
பீன்ஸ் - 5
உருளைக்கிழங்கு(வேகவைத்தது) - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி, புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - 01 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை - 1
பிரியாணி மசாலா - 1கரண்டி
மல்லி பொடி - 1தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

இடியாப்பத்தை உதிர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும் பின்பு பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை எண்ணெயில் வதக்க வேண்டும்.

அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். அது வதங்கியதும் நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி,மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா என்பனவற்றையும் சேர்த்து வதக்கிகொள்ளவேண்டும்.

காய்கறிகளுக்கு மட்டுமே தேவையான உப்பிட்டு காய்கறிகள், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவை வதங்கிய பின் அதில் அவித்து உரித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கரண்டி பிரியாணி மசாலா, ஒரு கரண்டி மிளகாய்தூள், ஒருகரண்டி மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இடியப்பத்தில் உப்பு இருப்பதால் வதக்கிய கலவைக்கு உப்பினை தேவையான அளவு மட்டுமே போட வேண்டும். பின்னர் மசாலாவின் பச்சை வாசனை போனதும் அரை கப் தேங்காய் பால், கால் கப் நீர் விட்டு கலவையை கொதிக்கவிட வேண்டும்.

அதில் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இடியப்பம் நீரை உறிஞ்சி விடக் கூடியது என்பதால் அதனை அடிக்கடி கிளறிவிடுங்கள். மசாலாவில் இடியாப்பம் நன்றாக சேர்ந்து கலவைகளின் பச்சை வாசனை போனதும் சிறிது மல்லி இலை கொத்தமல்லி இலை ஆகியவற்றைத் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி வைத்துவிட்டார் சுவையான மணமான இடியாப்பம் பிரியாணி தயார்.

அன்புடன்

ப்ரஷா
 
Last edited:
Top