எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இரவுகள் கனா காணும் NNK21

yugarasha

Member
#Rasha_Review 4
#NNK_21
#இரவுகள்_கனா_காணும்
மௌன நிலா

பேபி முதல்ல உன் திறமைய நான் பாரட்டிருறன். அவன் அவன் ஒரு கதையே எழுதாம இருக்கும் போது இரண்டாவது கதையை முடிச்சிட்டிங்க. ??? லவ் யூ லாட் பேபி.♥️♥️

இந்த கதை ஆரம்பமே கணவன் மனைவி பிரிந்து இருப்பதில் தான் தொடங்குகிறது. மேகா வீட்டில் செல்லமாக வளர்ந்த பொண்ணு அதனால் தான் பிரிஞ்சு வந்து இருக்காள் என்று தான் ஆரம்பத்தில் யோசித்தேன் அப்புறம் என்ன காரணம் எண்டு பார்த்தா கடுப்பாகிட்டு???. அந்த கிழவி சொன்னத பெருசா எடுத்திட்டு புருசன்டயும் சொல்லாம வந்து இருக்காள் ( லூசு என்டே நான் கண்போர்ம் பண்ணிட்டன்)???

பிரபு அநியாயத்திக்கு நல்லவனா இருக்கான் இவன போய் ஆரம்பத்தில கோபக்காரன் மதிரி கட்டிட்டிங்களே???. அவன் ஒரு இடத்தில் கூட கோபப் படல்லையே, கோபம் வந்தாலும் எவ்வளவு பொறுமையா கதைக்கிறான்???. இவனைப் போல் துணை கிடைக்க மேகா கொடுத்து வச்சிருக்கனும். அதுவும் நாங்க பிரஞ்சு இருந்தலும் மேகாக்கு நான் தான் புருசன் என்கு மேகா தான் மனைவி என்பதில் அவனில் மன உறுதி சிறப்பாக இருக்கும்???. மேகா இல்லாத வீட்டில் இருக்காமல் ஊரை விட்டு போவதில் அவனின் காதல் புரிகிறது♥️♥️♥️

பூர்ணிமா மாதிரி ஒரு நண்பி எல்லார் வாழ்க்கைலயும் இருந்தால் அவள் ஒரு அதிஷ்டசாலி தான். அவளின் நட்பின் முக்கியத்துவம் சிறப்பாக இருக்கிறது. ❤️❤️

சுகுணா மற்றும் பிரியா இவங்கள சேர்து வைக்க றை பண்றது செமையா இருக்கும். அதுவும் சுகுணா அழகாக பிரியாவிடம் கதைத்து அவள் மனதை மாற்றுவது பெரிய விடயம் தான்( இதை இரண்டு வருடங்கள் முன்பு செய்து இருக்கலாம்)☹️☹️☹️

என்னை பொறுத்தவரை நாம் எல்லாரும் மேகா அண்ணிக்குத்தான் நன்றி கூற வேண்டும்.??? அவ மட்டும் இப்படி நடக்காவுடின் இந்த லூசு அப்பா வீட்டிலே டேறா போட்டு இருக்கும்??. மேகா அண்ணி மாதிரி இருக்கும் அண்ணிகளால் தீமை இருந்தாலும் மேகா மாதிரி லூசுகளுக்கு இதான் சரி.???

பைனலா சொல்ல வேண்டிய ஆள் நம்ம பாட்டி தான். ??ஆனாலும் இந்த கிழவிக்கு இந்த வில்லத் தனம் ஓவர்தான். சொந்த பேரன் வாழ்க்கையை அழிச்சு, சொந்த பேத்தி ரேண்டாந்தாரமா அனுப்ப யோசிக்குதே??. அதுவும் லாஸ்டா நான் செய்த தப்பு தான் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டன் வேனும்னா ஆசிர்வாதம் பணறன் எண்ணும் போது சிரிப்புத்தான் வந்திச்சு.???

உங்க கதை ஆர்பாட்டம் இல்லாத அழகான கதை. ??உப்பு சப்பு இல்லாத பிரச்சனை கொண்டு கணவனை பிரியும் பெண்கள் யோசிக்க வேண்டும். மேகாவின் அவர முடிவால் இரண்டு வருடம் வீண் ஆனது. ??

ஆனா ஒன்னு மட்டும் புரியல்ல பேபி, அதெப்படி கனவுல வார மாதிர மூனு குழந்தை வாரது. அதுவும் நீ கனவுல ஐஸ் கிரீம் தான் தந்த இப்பயும் அதான் வேனும் எங்கிற அடம் மேகாவின் செல்லத்தனம் புரிகிறது. ???

உங்க முதல் கதை போலவே இதுவும் செமையா இருந்திச்சு. இப்போ மூனாவதும் தொடங்கிட்டிங்க அதுவும் வரட்டும்.???

இந்த கதை போட்டியில் வெற்றி பேற வாழ்த்துக்கள் பேபி.???
 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#இரவுகள்_கனா_காணும்

சின்ன விஷயத்திற்காக மேகா கணவன் பிரபுவா பிரிந்து செல்ல, எப்படி ஒன்னு சேர்ந்தார்கள் அப்படிக்கறது தான் கதை......

மேகா - பாவம் இவ, இளவரசியாக அப்பா அம்மா என்ன சொன்னாலும் சரியா இருக்கும்னு வளர்ற சராசரி பொண்ணு......

இவங்களோட கண்மூடித்தனமான அன்பு தான் இவ வாழ்க்கையில் விளையாடுது😔😔😔😔😔😔

அதை இவ உணரும் நேரம் காலம் கடந்து போய்டுது 😒😒😒😒

சில சமயம் கோவம் கூட வருது இவ மேல, அம்மா மாதிரி மாமியார் கிடைக்கரதே பெரிய விசயம் ஆன இவ விசயத்தில் அவ அம்மாவா விடவே ரொம்ப நல்ல மாமியார், நாத்தனார் இப்படி எல்லாம் இருந்தும் யாரோ சொன்னதுக்கு இவ செய்தது 🙄🙄🙄🙄🙄🙄

பிரபு - இவனும் இவளை போல தான், ரெண்டு பேரும் மனம் விட்டு பேசி இருந்தாவே போதும்......

ஆன ரெண்டு பேருக்குமே அது தோணவே இல்ல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

பிரிவுக்கு பின் வரும் இவன் பக்குவம், ஆறுதல், அவ மேல இவன் காட்டும் அன்பு எல்லாமே 🥰🥰🥰🥰🥰

பூர்ணிமா - இவ இல்லைனா மொத்த கதையுமே இல்ல🤩🤩🤩🤩

மேகா ஓட ப்ரெண்ட், இப்படி ஒருத்தி கிடைக்க மேகா ரொம்ப லக்கி 🥰🥰🥰🥰🥰

சுகுணா - பிரபு ஓட தங்கை, இவ அண்ணனும் அண்ணியும் சேர வேணும் அப்படிக்கரதுல அவங்கள விட இவளுக்கு தான் ரொம்ப ஆசை, அது நடக்க இவளும் ஒரு முக்கிய காரணம் 😍😍😍😍

சுகுணா அம்மா - செம்ம மாமியார்🥰🥰🥰🥰

பாட்டி - மெயின் வில்லி😒😒😒😒 இவங்க திருந்தினது தான் கொஞ்சம் டக்குனு இருந்த மாதிரி இருந்தது......

பிரியா - சரியான நேரத்தில் புரிஞ்சிகிட்டா, இவ கிட்ட தப்பு அப்படினு ஒன்னும் இல்ல.......

இப்படி ஒரு குடும்பம் கிடைச்சும், அதை சரியா கையாள தெரியல மேகாக்கு அப்படினு தான் சொல்லணும், லேட் ஆனாலும் புரிஞ்சிகிட்டா.......

மேகா அம்மா & அப்பா - பொண்ணு மேல பாசம் இருக்கலாம், அதுக்குனு இப்படியா......

இவங்கள மாதிரி சிலர் செய்யர தப்பு தான் அவங்க பிள்ளைகளோட வாழ்க்கையை கெடுத்துருது....

இவங்களா மாதிரியும் இருக்க கூடாது, புகுந்த வீட்டில் எதுக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போ அப்படினும் இருக்க கூடாது.......

நல்ல குடும்ப கதை.......

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐
 
Top