எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 22

S.Theeba

Moderator
வினுவை வைத்தியரிடம் காட்டி விட்டு மருந்து வாங்குவதற்காக வைத்தியசாலையிலேயே இருந்த பார்மசிக்கு சென்றான் தமிழினியன். தாயிடம் இருந்த வினு தன்னைத் தூக்குமாறு கேட்கவும் அவனைத் தூக்கிக் கொண்டு நடந்தான். வினுவுக்கு தன் தந்தை தூக்குவதென்றால் கொள்ளைப் பிரியம். பெருமை வேறு.
வினுவைத் தூக்கியவாறு காயத்திரியிடம் பேசியபடி நடந்து சென்றவன் தன் எதிரே கடந்து சென்றவளைக் கவனிக்கவில்லை. அபிராமியின் அக்கா நளாயினியே அது. தந்தையின் டெஸ்ட் ரிப்போர்ட் எடுப்பதற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள்.
இரண்டாவது தளத்தில் இருக்கும் பகுதிக்குச் செல்வதற்கென லிஃப்டிற்காகக் காத்திருந்தாள். கீழே வந்த லிஃப்டில் இருந்து ஒரு பையனைத் தூக்கிக் கொண்டு வருவது தமிழினியன் தானே. இவர் எப்படி இவர்களுடன் என்று யோசித்தபடியே அவனைக் கடந்து லிஃப்டிற்குள் நுழையப் போனாள். அப்போது அவன் தன்னைக் கவனிக்காததைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. ஆனால், அருகில் செல்லும்போது அந்தப் பையன் இவனது தாடையைத் தொட்டுத் திருப்பி
"அப்பா... வினுவுக்கு பாட் வாங்கல?" எனவும்
"வீட்ட போகும்போது அப்பா வாங்கித் தருவேன்" என்று விட்டு பக்கத்தில் வந்தவளிடம் "காயூ நீ போர்டிகோவில் வெயிட் பண்ணு நான் காரை இங்கேயே எடுத்திட்டு வாறேன்." என்று கூறியது தெளிவாக இவள் காதுகளில் விழுந்தது.
அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்று விட்டாள் நளாயினி.
அப்பா என்றால்.... அவளது இதயத் துடிப்பு இருமடங்கு வேகத்தில் துடிக்க ரிப்போர்ட்டை வாங்காமலேயே திரும்பி விட்டாள்.
வீட்டிற்கு வந்தவள் இந்த விடயத்தை அபிராமியிடம் எவ்வாறு சொல்வதென தவித்துப் போனாள். தமிழினியனுடன் வந்த ஏனைய இருவரையும் நளாயினி ஏற்கனவே அறிந்திருந்தாள். தன் நண்பி ஒருத்தியைக் காண சில நாட்களுக்கு முன் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அப்போது அந்த நண்பியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் புதிதாகக் குடிவந்திருந்த அந்தப் பெண்ணைக் காண நேர்ந்தது. அவளை நளாயினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் அந்த நண்பி. நண்பியின் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவளது மகனையும் அறிமுகப்படுத்தினாள். ஸ்ரவனுடன் நட்பானான் அந்தச் சிறுவன். மூவரும் முற்றத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளைக் கவனிக்க வசதியாகப் போர்டிக்கோவில் கதிரையைப் போட்டு உட்கார்ந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் "அப்பா... அப்பா" என்று துள்ளினான் அந்தச் சிறுவன்.
"ஓகே.. நாம் அப்புறம் சந்திப்போம்." என்று கூறி விடைபெற்றாள் அப்பெண்.
அவள் சென்றதும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்த நளாயினி, பக்கத்து வீட்டின் அந்தக் குட்டையான மதிலின் மேலால் தெரிந்த அந்த உயரமான உருவத்தைப் பின்பக்கமாகப் பார்த்தாள். அங்கே காரிலிருந்து இறங்கி வீட்டின் உள்ளே சென்று கொண்டிருந்து தமிழினியனைப் போலவே இருந்தது. அந்த சிறுவன் அப்பா என அழைத்தது இவனையா? அது தமிழினியனா? அல்லது வேறு யாருமா? என்ற கேள்வி அவள் மூளையைக் குடைந்தது. அதன் பின்னர் அங்கே இருக்க அவளால் முடியவில்லை. ஸ்ரவனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்தவள் பலவாறு யோசித்தாள். 'அவனைப் போன்ற உருவமே ஒழிய அவன் என்று நிச்சயம் இல்லையே. சில வேளை என் கண்களில் ஏதாவது கோளாறோ? வேறு யாராவது ஒருவரைப் பார்த்து தமிழினியன் என்று நினைத்து விட்டேனோ...?' என்று சிந்திக்கத் தொடங்கினாள். இறுதியில் அதுதான் உண்மையாக இருக்கும் என்று நம்பத் தொடங்கினாள். எனவே அந்த விடயத்தை மெல்ல மெல்ல மறந்தாள்.
ஆனால், இன்று மீண்டும் வைத்தியசாலையில் அந்தப் பெண்ணுடன் தமிழினியனைக் கண்டாள். அதிலும் அந்தச் சிறுவனைத் தூக்கிக் கொண்டல்லவா நடந்து சென்றான். அதைவிட அவன் அப்பா என்றழைத்தானே. அது பொய்யில்லையே என்று நினைத்தாள். நளாயினி மனமெல்லாம் பதறத் தொடங்கியது. இந்த விடயத்தை அம்மா, அப்பாவிடம் கூறுவோமா என்று யோசித்தாள். ஆனால், அவர்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? தங்கள் மகளின் வாழ்க்கை மிக மிக சந்தோஷமாக இருப்பதாக நினைத்து பூரித்துப் போயுள்ளார்களே. இப்போது இதை அறிந்தால் உடைந்து போய் விடுவார்களே. வேறு என்னதான் செய்வது. பேசாமல் அபிராமியிடமே சொல்லுவோம். அவளுக்கு இது இமாலய அதிர்ச்சி தான். நான் சொல்லப் போகும் விஷயம் அவளது வாழ்வையே புரட்டிப் போடப் போகிறது. ஆனாலும் அவள் மிகவும் நிதானமானவள். தெளிவாக யோசித்து தீர்வு காண்பாள் என்று நினைத்தவள் அபிராமியிடம் உடனடியாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். இந்த விடயத்தை மறைப்பதும் நான் என் தங்கைக்கு செய்யும் தவறு என்று உணர்ந்தாள். அன்று காலையில் தான் அபிராமி தாய் வீட்டிற்கு வந்திருந்ததும் நல்லதுக்குத்தான் என்று தோன்றியது.
அபிராமியைத் தனியே அழைத்துச் சென்றவள் பக்குவமாகத் தான் கண்டவற்றைப் பற்றிக் கூறினாள். ஆனால், அவள் தங்கையோ கேட்ட விடயத்தால் அதிர்ச்சி அடைவதற்குப் பதில் முகத்தில் எந்த மாறுதலும் இன்றி ஒரு விரக்திப் புன்னகையுடன் இருந்ததைக் காண ஆச்சரியமாக இருந்தது.
"என்னடி நான் எவ்வளவு சீரியஸான விசயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னன்னா சிரிச்சுக்கிட்டே இருக்காய். நான் சொன்னதை நம்பலையா?"
"அக்கா... அப்படி இல்லை அக்கா.. நீ என்னிடம் சும்மா சொல்வாயா? உன்னை விட என் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் இல்லை. அம்மா அப்பாவின் பாசத்தை ஒட்டுமொத்தமாக எனக்குத் தருபவள் நீ. என் புன்னகைக்குக் காரணம் வேறு. நீ அவருடன் கண்டவர்களை எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்களை இன்னும் நேரில் பார்க்கவில்லையே தவிர அவர்கள் யாரென எனக்கு தெரியும். நேற்றுத்தான் அவர் எல்லா விஷயமும் சொன்னார்."
"என்னடி நீ இவ்வளவு அசால்டாகச் சொல்கிறாய். ஏற்கனவே தெரியும் என்றால் என்னடி அர்த்தம்? எல்லா விஷயமும் சொன்னார் என்றால் அவருக்கு ஒரு பையன் இருக்கிறான் என்றதும் தெரியுமா?"
"ம்ம்.. தெரியும்கா"
"ஐயோ என்னடி இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறாய். அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் என்றது தெரிஞ்சும் இவ்வளவு அமைதியாக இருக்கிறாயே" என்று தலையில் கைவைத்து கீழே அமர்ந்து விட்டாள் நளாயினி.
"அச்சச்சோ அக்கா, நீ நினைக்கிற மாதிரி அர்த்தம் இல்லை." என்றவள் தமிழினியனுக்கும் காயத்திரிக்கும் இடையிலான உறவு குறித்து நளாயினிக்கு விளக்கினாள்.
காயத்திரியைப் பற்றித் தன் தங்கை சொன்ன கதையைக் கேட்டதும் அவள் மீது மிகுந்த இரக்கம்தான் தோன்றியது நளாயினிக்கு. ஆனாலும் தன் தங்கையின் வாழ்வு அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் அழுவதைத் தவிர என்ன செய்வதெனப் புரியவில்லை.
"அக்கா, எனக்கு உண்மையில் காயத்திரி மீது பொறாமை தான் உண்டாகின்றது. இப்படி ஒரு நண்பன் கிடைத்திருக்கிறாரே" என்றாள் அபிராமி.
அவளையே சில நொடிகள் உற்றுப் பார்த்த நளாயினி,
"ஏன் அபி..., அப்படியானால் நீங்க இரண்டு பேரும்... இன்னும் சேர... சேர்ந்து வாழத் தொடங்கவே இல்லையாடி?"
சிறிது நேரம் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பின்னர்,
"இல்லக்கா... அவர்... அவருக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. அவர் சொல்லச் சொல்லக் கேட்காமல் நான்தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணமாயிட்டன்."
"என்னடி சொல்றே. அப்படியென்றால்... புரியல"
கல்யாணத்துக்கு முதல் நடந்தவற்றையும் நளாயினியிடம் கூறினாள்.
"அக்கா,, அவருக்குக் காயத்திரி மீது லவ் எதுவும் இல்லை. அது நூறு சதவீதம் எனக்குத் தெரியும். என் மீதுதான் அவருக்கு லவ். அதையும் நான் புரிஞ்சு கொண்டேன். ஆனால், அந்தக் குழந்தை...? அது அப்பா, அப்பா என்று இவர் மீது உயிராய் இருக்குது. அதனை ஏமாற்றவும் முடியாது. அந்தக் குழந்தையின் மனதை நோகடித்து நான் சந்தோசமாக வாழ முடியுமா? அக்கா..., ஒரு தடவை அப்பா இனிமேல் வரமாட்டார் என்று காயத்திரி கூறியிருக்கா. அன்று முழுதும் அழுதழுதே பிள்ளைக்குப் ஃபீவர் வந்திடுச்சாம். அதிலிருந்து அவனை ஏமாற்றாமல் தினமும் போய் பார்த்து வருவாராம். இதுவும் அவர்தான் சொன்னது. அந்தக் குழந்தையிடம் போய் இவர் உன் அப்பா இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். கூடாது... இதற்கு ஒரே தீர்வுதான் இருக்குது."
"என்னடி... நீ எதையோ சொல்ல வாராய். திடீரெனப் பெட்டியோட வீட்டிற்கும் வந்திருக்காய். பயமாயிருக்கடி"
"ஸ்ஸ்.. அக்கா... எதுவும் பிரச்சினையில்லை. இதற்கு ஒரே தீர்வு அவர் காயத்திரியைக் கல்யாணம் செய்து சட்டப்படி அவனுக்கு அப்பாவாக இருக்கணும்." என்றாள். இதனைச் சொல்லும்போது அவள் நெஞ்சுக்குள் அடைப்பது போலத் தோன்றியது. இதோ வெளிவருகிறேன் என்று உருண்ட கண்ணீரை... கண்களை மூடி உள்ளிழுத்துக் கொண்டாள்.
"என்னடி இப்படி சொல்லுற. உன்னைப் பற்றி ஏதாவது யோசிச்சாயா" என்று தவிப்புடன் கேட்டாள் நளாயினி.
தன் தமக்கை அறியாமல் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டவள்,
"இந்த முடிவை நான் நல்லா யோசித்துத்தான் எடுத்தேன். இப்போதைக்கு எதையும் அம்மா, அப்பாக்கிட்ட சொல்லாத. நான் காயத்திரியைச் சந்தித்துப் பேசப் போகின்றேன். எல்லாம் நல்லபடியாய் முடிந்ததும் நானே அவர்களுக்குப் பக்குவமாய் எடுத்துச் சொல்லுறேன்."
"அபிராமி இது உன் லைஃவ்டி. என்ன முடிவெடுக்கிறதென்றாலும் நல்லா யோசித்துப் பண்ணடி. அப்புறம் வருந்திப் பிரயோசனம் இல்லை."
அபிராமிக்கு உள்ளே ரொம்பவும் வலித்ததுதான். ஆனாலும் அதனை வெளிக்காட்டாது,
"அக்கா நான் ஒரு தடவையல்ல. நூறு தடவை யோசிச்சாச்சு. இதுதான் எனக்கு சரியான முடிவாய் தோணுது. அவர் தாலி கட்டிட்டார் என்பதற்காக அவருக்கு இன்னும் நான் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை. காயத்திரி அவருக்கு ரொம்பவும் ஏற்றவள்தான். சின்ன
வயசில் இருந்து ஒன்றாகத் திரிந்தவர்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நன்றாகத் தெரியும். இவருக்குக் காயத்திரி மீது காதல் இல்லாவிட்டாலும் நிரம்பவும் பாசம் உண்டு. அந்தப் பாசம்... கல்யாணம் ஆச்சுன்னா நாளடைவில் காதலாக மாறிடும்."
"என்னவோ சொல்றடி... என்னால் இதை ஏற்கவே முடியல."
"அக்கா, எனக்குத் தூங்கணும் போல இருக்கு. படுக்கவா...?" என்றாள்.
"ம்ம்" என்று தலையாட்டி விட்டு வெளியில் வந்த நளாயினிக்கு மனசெல்லாம் பெரும் பாரமாகிவிட்டது. தன் தங்கையின் வாழ்க்கைக்கு என்னதான் முடிவு என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றாள்.
அறையில் இருந்து தன் தமக்கை வெளியேறவும் கதவைத் தாழிட்டு விட்டுக் கதவோடு சேர்ந்து கீழே அமர்ந்தவள் தன் வாயை அழுந்தப் பொத்தியபடிக் கேவிக் கேவி அழுதாள். இந்த உயிர் இப்போதே என்னைவிட்டுப் போயிடாதா என்று ஏங்கி அழுதாள்.
"தமிழ்..." என்று முதன் முறையாகக் கணவனைத் தன் மனதில் நினைத்து வைத்திருந்த செல்லப் பெயர்கொண்டு வாய்விட்டுப் புலம்பி அழுதாள்.
"தமிழ்... எதுக்காக என் வாழ்க்கையில் வந்தீங்க... என்னை உயிரோடு கொல்வதற்கா... உங்களை விட்டுப் பிரிவதென்பது நரகத்தை விடக் கொடுமையாய் இருக்கே. உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. உங்கள் மீது பைத்தியமாக மாறிவிட்டேனே... தமிழ் ஐ லவ் யூ... ஐ லவ் யூ கண்ணா...'
'இத்தனைக்கும் காரணம் நான் தாங்க.... அப்பவும் நீங்க எத்தனை தடவை சொன்னிங்க இந்தக் கல்யாணமே வேணாம்னு. நான்தான் சுயநலமாய் முடிவெடுத்திட்டன். ஐயோ தமிழ் என்னால் முடியல. உங்களை விட்டு எப்படி வாழப் போறேன்.'
'உங்க வாழ்க்கை நல்லா இருக்கும். உங்களை நல்லாப் புரிஞ்சுகொண்ட காயத்திரி கூட நீங்க சந்தோசமாய் இருப்பிங்க. ஆனாலும் தமிழ் இங்க ரொம்ப வலிக்குதே....' என்று நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டாள்.
'காலையில் எழுந்ததும் நான் வைத்துவிட்டு வந்த கடிதத்தைப் பார்த்திருப்பார். சந்தோசப்பட்டிருப்பாரா...? நிச்சயமாய் இருக்காது. அவருக்கும் என் மேல் காதல் உண்டு. ரொம்பவும் வேதனைப் பட்டிருப்பார். ஆனால் நான் எடுத்த முடிவுதான் சரியென்று அவருக்கும் புரிஞ்சிருக்கும். தமிழ் நீங்க எப்பவும் சந்தோசமாக இருக்கணும். ஐ லவ் யூ தமிழ்' என்று புலம்பியவள், தன் மனதின் பாரம் குறையும் மட்டும் அழுது தீர்த்தாள்.
காயத்திரியையும் வினுவையும் வீட்டில் இறக்கிவிட்டான் தமிழினியன். குழந்தையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அவசியம் என்றால் தன்னை அழைக்குமாறும் கூறிவிட்டுப் புறப்பட்டான்.
"இனியா, உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். உனக்கு வேலையா...?" என்று தயக்கத்துடன் கேட்டாள் காயத்திரி.
அவனுக்கு இப்போது எதுவும் பேசும் மனநிலை இல்லை. மனம் முழுவதும் அபிராமி ஏன் வீட்டைவிட்டுப் போனாள் என்ற யோசனை பெரும் பாரமாக அழுத்தியது. எனவே,
"இப்போ அவசரமாக ஸ்ரோருக்குப் போக வேண்டியிருக்கு. பிறகு பேசுவோமே..."
"ஓகே டா நீ போயிட்டு வா."
"ம்ம்" என்று தலையாட்டியவன் காரைத் தனது வீட்டை நோக்கிச் செலுத்தினான். அவனால் இப்போது அமுதத்திற்குச் செல்ல முடியாது. அங்கே அவனால் இப்போதிருக்கும் மனநிலையில் எந்த வேலையிலும் கவனத்தைச் செலுத்த முடியாது. அபிராமி வீட்டிற்குப் போய் அவளைப் பார்ப்போமா என்று கூடத் தோன்றியது. ஆனால், அவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கின்றாளோ? அவர்கள் வீட்டில் என்ன சொல்லியிருக்கின்றாளோ? எதுவும் தெரியாது அங்கே எப்படிச்

"ம்ம்" என்று தலையாட்டியவன் காரைத் தனது வீட்டை நோக்கிச் செலுத்தினான். அவனால் இப்போது அமுதத்திற்குச் செல்ல முடியாது. அங்கே அவனால் இப்போதிருக்கும் மனநிலையில் எந்த வேலையிலும் கவனத்தைச் செலுத்த முடியாது. அபிராமி வீட்டிற்குப் போய் அவளைப் பார்ப்போமா என்று கூடத் தோன்றியது. ஆனால், அவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கின்றாளோ? அவர்கள் வீட்டில் என்ன சொல்லியிருக்கின்றாளோ? எதுவும் தெரியாது அங்கே எப்படிச் செல்வது? பேசாமல் வீட்டிற்கே செல்வோம் என்று முடிவெடுத்தவன் தனது காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.

? பேசாமல் வீட்டிற்கே செல்வோம் என்று முடிவெடுத்தவன் தனது காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
 
Top