Shalini shalu
Moderator
அந்தச் சங்கிலிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், விழிநீரைச் சுண்டி விட்டு, கையில் இருந்தவற்றைப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுப், படுக்கையில் விழுந்து, உறக்கத்தை மேற்கொண்டாள் அகதா.
மௌனாவும் அன்னையுடன் உறங்கி விட்டாள்.
வீட்டிற்குப் போன, மஹதனும், அவனுடைய பெற்றோரும் தங்களது களைப்பை நீக்கிக் கொள்ளத் தூக்கத்தை நாடினர்.

அலாரம் அடித்ததும், எழுந்து,
எழுந்த அன்னபூரணி,
வெளியே வந்து கணவனை எழுப்பி, "என்னங்க! ஹாலுக்குப் போகனும்ல? நீங்களும் இங்கேயே குளிச்சிட்டு வந்துருங்க" என்று சிவமணியைக் குளிக்க அனுப்பினார்.
தன்னருகே குழந்தையாக உறங்கிக் கொண்டிருந்த மகளின் திருமணம் வைபவம் சிறிது நேரத்தில் நடக்கவிருப்பதால், சிறுநகையுடன்,
"மௌனா ம்மா! எழுந்திருடா!" என்று அவளது கேசத்தை நீவி விட்டவாறு மகளை எழுப்பினார் அன்னபூரணி.
"ம்மா…" என்று செல்லம் கொஞ்சினாள்.
"இன்னைக்கு உனக்குக் கல்யாணம் டி!" என்று அதட்டியவர், அவளை உலுக்கி எழுப்பி அமர வைத்தார்.
"கண்ணை மட்டும் திறந்துட்டேன்னா போதும் மா" என்று நன்றாக விழிகளைத் தேய்த்துக் கொண்டாள் மௌனா.
"குட்மார்னிங்!" என்று அறைக்குள்ளே நுழைந்தாள் அகதா.
"குட்மார்னிங் டா!* என்றவர்,
"பாரு! அகி எழுந்து வந்துட்டா!" என்று மகளிடம் கூறினார் அன்னபூரணி.
தூக்கக் கலக்கம் இன்னும் தன்னை விட்டு நீங்காத போதும், மெல்லக் கண்களைத் திறந்து, தோழியைப் பார்த்து,
"ஹாய் அகி!" என்றாள் மௌனா.
"ம்ம்… நீ தான் கல்யாணப் பொண்ணு ஞாபகம் இருக்கா?" என்று அவளைக் கிண்டல் செய்தாள் அகதா.
"அதெல்லாம் இருக்கு அகி" என அவளிடம் சினுங்கினாள்.
அப்போது அன்னபூரணியின் செல்பேசி ஒலி எழுப்பியது. கௌசல்யா தான் அழைக்கிறார் என்பதை அறிந்ததும்,
"சம்பந்தியம்மா கால் பண்றாங்க. அகி! நீ இவளைக் கிளம்ப வை. நான் பேசிட்டு வர்றேன்" என்று அகதாவிடம் கூறி விட்டு வெளியே வந்தார்.
"ஹலோ"
"ஹலோ சம்பந்தி! மௌனா கிளம்ப ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டார் கௌசல்யா.
"ஹாங்! இதோ குளிக்கப் போயிருக்கா சம்பந்தி. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் மஹாலுக்கு வந்துருவோம்" என்று அவர் கூறிய சமயம், குளியலறைக்குள் நுழைந்தாள் மௌனா.
அவளுடைய உடைமைகளைப் பையினுள் அடுக்கினாள் அகதா.
"இங்கே நாங்களும், மஹதனும் கிளம்பிட்டு இருக்கோம். நீங்க தயாராகிட்டுச் சொல்லுங்க. அப்படியே பிக்கப் பண்ணிட்டு, மண்டபத்துக்குப் போயிடலாம்" என்றுரைத்தார் கௌசல்யா.
"சரிங்க சம்பந்தி. சொல்றோம்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் அன்னபூரணி.
மஹதனின் இல்லத்திலோ, மூவரும் எப்போதோ தயாராகி இருந்தனர். அதனால் தான், அன்னபூரணிக்கு அழைத்து அங்கே இருந்த நிலவரத்தைக் கேட்டறிந்தார் கௌசல்யா.
இரவிலும் சரி, இப்போதும் சரி, மௌனாவிற்குக் குறுஞ்செய்தியோ, அழைப்போ விடுக்கவில்லை மஹதன்.
ஏனெனில், அவள் தன்னுடைய வீட்டினருடன் நேரம் செலவழிப்பது தற்போது இன்றியமையாததாகும். எனவே, திருமணத்தின் போது தான், தன்னவளைத், தன்னருகே வைத்துப் பார்க்கப் போகிறான் மஹதன்.
அவனும் குளித்து கேஷுவலாக உடையணிந்து மண்டபத்திற்கு வருவதாக திட்டம். அங்கே போய் மாப்பிள்ளைக்கான உடையை அணிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான். ஆனால், மற்றவர்கள் எல்லாரும் வீட்டிலேயே தயாராகி விடுவார்கள்.
குர்தி மற்றும் கால்சராய் அணிந்திருந்தாள் மௌனா.
"முடியைக் க்ளிப் போட்டுக்கோ. ஈரம் அப்படியே இருக்குப் பாரு. அங்கப் போற வரைக்கும் காயட்டும். அப்பறம் டிரையர் யூஸ் பண்ணிக்கலாம்" என்றாள் அகதா.
அதேபோல் செய்த மௌனாவோ, அன்னையிடம் வந்து,"நான் ரெடி ம்மா!" எனக் கூறினாள்.
"உங்க அப்பா வரட்டும்" என்றார் அன்னபூரணி.
"வந்துட்டேன் பூரணி ம்மா" என்று அங்கே வந்தார் சிவமணி.
அனைவரும் தயாராகி இருப்பதைக் கௌசல்யாவிடம் தெரிவித்து விட்டார் அன்னபூரணி.
"அப்போ காரில் ஏறலாம் மா" என அவர்களுடன் மகிழுந்தில் ஏறினான் மஹதன்.
மௌனா மற்றும் அவளது மற்ற குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக் கொண்டு, மண்டபத்திற்குச் சென்றனர்.
"அவங்க கிளம்பியாச்சு அப்பா. நாம போவோமா?" என்று தந்தையிடம் கேட்டாள் முக்தா.
"சரிடா. என் பி.ஏ - வுக்குக் ஒரு கால் செய்து பேசிக்கிறேன். நீ முன்னாடி போறியா?" என்றார் நீலகண்டன்.
"சரிங்க அப்பா. நீங்க மெதுவாக வாங்க" எனக் கிளம்பி விட்டாள் முக்தா.
அவரது அலுவலகப் பணிகள் அவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது. இப்போது தான் தொழில் இரு மடங்காக ஏறுமுகத்தில் போகிறது.
அதனால், அதை விடுத்து மற்றக் காரியங்களைச் செய்வதில் அவருக்குச் சற்று கடினமாக உள்ளது.
இப்போது கூட முக்கியமான வேலை ஒன்றை அவர் மேற்பார்வையிட வேண்டும். ஆனால், மஹதனின் திருமணத்திற்குச் செல்லவிருப்பதால்,
அதைக் காரியதரிசியிடம் கூறி, குறை வந்து விடக் கூடாதென எச்சரிக்கை விடுக்கவே அழைத்துப் பேசப் போகிறார் நீலகண்டன். ஏனெனில், தனது பார்ட்னர் திருமூர்த்தியின் பணியையும் சேர்த்து இவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே, நினைத்த நேரத்தில் அவரால் எங்கும் அசைய முடியவில்லை.
மகள் சென்றதும் காரியதரிசியிடம் செல்பேசியில் பேசினார் நீலகண்டன்.
"அப்பாவுக்கு ஆஃபீஸ் வொர்க். கால் பேசிட்டு வர்றேன்னு சொன்னார். சோ, நான், ஆன் தி வே!" என்று கிஷானிடம் கூறினாள் முக்தா.
"சரி. வா" என்றவன், காஞ்சியப்பனிடமும், சித்ரலேகாவிடமும் இதைப் பகிர்ந்தான்.
"வரட்டும் டா. நாமளும் அங்கே தான் போயிட்டு இருக்கோம்ல? அப்பறம் என்ன உனக்கு?" என்று அவனை அமைதியாக இருக்கச் சொன்னார் சித்ரலேகா.
முதலில் மஹதனும், மௌனாவும் தங்கள் குடும்பத்தினருடன் மண்டபத்திற்குள் பிரவேசித்தனர்.
அவர்களுக்காகத் தனித்தனியாகப் பெரிய அறைகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தார் அதன் உரிமையாளர்.
இன்றைய நாளில் வருகை தரும் அனைவரையும் பாரபட்சமின்றிக் கண்காணித்துப் பரிசோதிக்கச் சொல்லி தங்களது ஆட்களிடம் உத்தரவிட்டு இருந்தார்கள் மஹதனும், திருமூர்த்தியும்.
முக்கியப் பிரமுகர்கள் ஆனாலும், சொந்தங்கள் என்றாலும் இது தான் விதி.
சிகையலங்காரம், உடையலங்காரம் மற்றும் இவற்றை மேற்பார்வையிட என, ஐந்து பேர் மௌனாவைச் சூழ்ந்து இருந்தனர்.
அவர்களே எல்லாம் பார்த்துச் செய்து விடுவார்கள் தான், ஆனாலும் மௌனாவுடனேயே இருந்தாள் அகதா.
மணப்பெண்ணிற்கு இணையாகத், தன்னையும் அழகாகத் தயார் செய்து கொண்டு இருந்தான் மஹதன்.
இந்த முறை, அனைத்துச் செலவுகளும், பொறுப்புகளும் மணமகனின் தந்தை திருமூர்த்தியுடையது என்பதால், சிவமணி மற்றும் அன்னபூரணிக்குத் தங்களுடைய பெண்ணுடன் சிறிது நேரம் உரையாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
ஆதலால், மௌனாவிற்கு அலங்காரம் தொடங்கியவுடன் சம்பந்தி வீட்டாரிடம் கூறி விட்டு அவளது அறையில் ஐக்கியமாகி விட்டனர் இருவரும்.
அவர்களுக்குப் பதிலாக, நண்பர்களுக்குள் இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? என்று கிஷானின் பெற்றோரான, சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் மணமகனுடைய தாய், தந்தையுடன் மற்ற வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்ள வந்து விட்டனர்.
அவர்களுக்கு முன்னரே மண்டபத்தினுள் வந்த முக்தாவைத் தேடிய கிஷானுக்குச் செல்பேசி அழைப்பு வந்தது.
அதை எடுத்துப் பேசியவன், யாரிடமும் கூறாமல் வெளியேறி விட்டுத் தன் காரில் கிளம்பி விட்டான் கிஷான்.
- தொடரும்
ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸூன்னுப் பெருசா எழுதாமல், "நங்கையின் மறவோன்" கதைக்கான இரண்டாவது பாகமாகத் தான், இந்தக் கதையை ஆரம்பிச்சேன். இன்னும் சில யூடியில் முடியப் போகுது ஃப்ரண்ட்ஸ். நன்றி
கதை முடிந்த பிறகு ஒரு வாரம் தளத்தில் இருக்கும்.