Premakameswaran
Moderator
எல்லையற்ற காதலே






வார்த்தைகள் தேடி களைத்து போகிறேன்
வடிக்கப்பட வேண்டியது
உன்னில், உன்னால் நான் உணர்ந்த
எல்லையற்ற காதலை என்பதால்...
தலை கோதி மடிசாய்த்து
துயர்போக்கும் தாயின் அன்பிலும்...
தாங்கி பிடிக்கும் தகப்பனின்
சொல்லாத பாசத்திலும்...
செல்லசண்டை கொள்ளும்
தங்கையின் குறும்பிலும்...
என்னை தாண்டியே எதுவும் உனக்கு
எனும் தமையனின் உறுதியிலும்...
அனைத்திலும் தோள் கொடுக்கும்
ஆசுவாசமான ஆழ்ந்த நட்பிலும்...
ஒரு பார்வை சிறு செயல்
உன் சிறு பிரதியாய் நம் குழந்தையிலும்...
உன் சாயல் காண்கிறேன்...
உலகின் சொந்தங்கள்
ஒவ்வொன்றிலும் உன்னை உணர்கிறேன்...
உன்னால் மட்டுமே
நான் என்னை உணர்கிறேன்...
உன் ஒற்றை கண்சிமிட்டலில்
உன்னால் மட்டுமே உயிர் கொள்ளும்
என் பெண்மை உணர்கிறேன்.....
உன் உயிர் தாங்கிய நிமிடம்
உன்னால் பெண்மையின் முழுமையாய்
என் தாய்மை உணர்கிறேன்.....
உன்னால் முடியும்
எனும் சிறு கைஅழுத்ததில்
என் சரிபாதி நீ என்று உணர்கிறேன்.....
கர்வம் கொடுக்கும் காதலும்
சர்வமும் மயங்கும் காமமும்
சடுதியில் மறையும் காயமும்
உன்னால் உணர்கிறேன்...
மௌனங்கள் உரைக்கும்
வார்த்தைகள் மறைக்கும்
முரண்களிலும் உணர்கிறேன்.....
உன் எல்லையற்ற காதலே



- என்றும் நட்புடன்
பிரேமா காமேஸ்வரன்











வார்த்தைகள் தேடி களைத்து போகிறேன்
வடிக்கப்பட வேண்டியது
உன்னில், உன்னால் நான் உணர்ந்த
எல்லையற்ற காதலை என்பதால்...
தலை கோதி மடிசாய்த்து
துயர்போக்கும் தாயின் அன்பிலும்...
தாங்கி பிடிக்கும் தகப்பனின்
சொல்லாத பாசத்திலும்...
செல்லசண்டை கொள்ளும்
தங்கையின் குறும்பிலும்...
என்னை தாண்டியே எதுவும் உனக்கு
எனும் தமையனின் உறுதியிலும்...
அனைத்திலும் தோள் கொடுக்கும்
ஆசுவாசமான ஆழ்ந்த நட்பிலும்...
ஒரு பார்வை சிறு செயல்
உன் சிறு பிரதியாய் நம் குழந்தையிலும்...
உன் சாயல் காண்கிறேன்...
உலகின் சொந்தங்கள்
ஒவ்வொன்றிலும் உன்னை உணர்கிறேன்...
உன்னால் மட்டுமே
நான் என்னை உணர்கிறேன்...
உன் ஒற்றை கண்சிமிட்டலில்
உன்னால் மட்டுமே உயிர் கொள்ளும்
என் பெண்மை உணர்கிறேன்.....
உன் உயிர் தாங்கிய நிமிடம்
உன்னால் பெண்மையின் முழுமையாய்
என் தாய்மை உணர்கிறேன்.....
உன்னால் முடியும்
எனும் சிறு கைஅழுத்ததில்
என் சரிபாதி நீ என்று உணர்கிறேன்.....
கர்வம் கொடுக்கும் காதலும்
சர்வமும் மயங்கும் காமமும்
சடுதியில் மறையும் காயமும்
உன்னால் உணர்கிறேன்...
மௌனங்கள் உரைக்கும்
வார்த்தைகள் மறைக்கும்
முரண்களிலும் உணர்கிறேன்.....
உன் எல்லையற்ற காதலே




- என்றும் நட்புடன்
பிரேமா காமேஸ்வரன்





Last edited: