எல்லையற்ற காதலே
நேசமது
கொண்டிட்ட பின்னே
பாசமது
வேர்விட்ட பின்னே
அன்பது
கிளைவிட்டு செழிக்கவங்கே
உயிரெல்லாம்
உறைவிடம் கொள்ளவங்கே இரக்கமது
இறையுடைமையாக
கனியெல்லாம் பசியாற்ற சருகுமே உரமாகவே மாற
அழியாது காதலே என்றும்
இல்லையில்லை எல்லையுமே இல்லை அதற்கொன்றும்...
