Mr D devil
Moderator









அத்தியாயம் 11
தேவாவை அழுத்தமாகப் பார்த்துவிட்டு கண்களையிறுக மூடிக் கொண்டவளின் மனம் பாறை போல் இறுகியிருந்தது... உண்மையை சொல்லபோனால் தேவியின் இச்செயலைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை தான் என்றாலும் மனம் ஒரு புறம் வலித்தது...
'இதெல்லாம் என்ன சாமி பெரிய விஷயம். அப்ப நீ பொறந்து பாத்தே நாளான குழந்தை. வெறும் தரையில் படுக்க வைச்சு மூச்சடைக்கற வரை அழ விட்டு பார்த்துட்டு இருந்தா உங்கம்மாகாரி...' என்றோ பேச்சு வார்த்தையில் ஆச்சியும் அவளின் அத்தை ராணி கூறியதும் நினைவு வந்தது முகிலுக்கு...
பெருமூச்சுடன் கேசத்தை கோதிக் கொள்ள கைகளைத் தூக்கிய நொடி கை மணிக்கட்டு சலுக்கென்றது. 'ஷிட்...' என்ற மெல்லிய முனகல் முகிலிடத்தில். கைகளில் அடிப்பட்டிருக்கிறது என்பதை மறந்து எப்போதும் போல கைகளை தூக்கி விட்டாள் இப்போது கைகள் வலித்தது.
முகிலின் சின்ன முனகலும் தேவாக்கு தெளிவாகக் கேட்டது. அவசரமாக பேத்தியின் அருகில் சென்று "ருத்தி கண்ணு என்னடாச்சு? ஏன் கண் எல்லாம் கலங்கியிருக்கு? கை ரொம்ப வலிக்குதா?..." என படப்படப்பாக கேட்டவரை முறைத்தாள் முகில். தேவா கேட்டு தான் வலியால் கண்கள் கலங்கி இருக்கிறதென்று புரிந்தது அவளுக்கு... முகத்தைத் தோள்பட்டையில் துடைக்கப் போக நெற்றியிலிருந்த காயம் அவளைக் கண்டு சிரித்தது.
பேத்தியின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் "என்ன டா? உடம்புக்கு என்ன பண்ணுது? காயம் ரொம்ப வலிக்குதா? நான் வேணுன்னா டாக்டரைக் கூப்பிடவா?...." எனக் கொண்டே முகிலின் கண்ணீரை அழுந்த துடைத்து விட்டவர் அவளுக்கு நீரைப் புகட்ட தேவாவை முறைத்தப்படியே நீரைப் பருகிக் கொண்டாள்.
"இப்படி பார்த்துட்டேயிருந்தா என்ன அர்த்தம்...உடம்புக்கு என்ன பண்ணுது..." என அழுத்தமாக தேவா கேட்க அவரை பார்த்து இகழ்ச்சியாக சிரித்தவள்
"உடம்புக்கு ஒன்னுமில்லை மனசு தான் உன் மருமக பண்ணத நினைச்சு கொதியா கொதிக்குது... காசு, பணத்துக்கு ஆசைப்பட்டு கட்டுன புருஷனைக் கொன்னுட்டு பத்துநாள் பச்சைக் குழந்தைன்னு கூடப் பார்க்காம உன் மகன் கூட ஓடி வந்த உன் அருமை மருமகளை நினைக்க நினைக்கப் பத்திகிட்டு வருது..." என பல்லைக் கடித்துக் கொண்டு ருத்ர முகத்துடன் கூறிய பேத்தியை விழி தெறிக்கப் பார்த்தார் தேவா...
அவர்களின் அழுகையை உண்மையென நம்பி பிள்ளையைக் கொடுத்து தவறு செய்து விட்டோமே எனக் காலங் கடந்து விளங்கியது தேவாக்கு...
இவரை மட்டுமே குறை சொல்ல முடியாதே அன்றைய சூழல் இப்படியான முடிவையெடுக்க வைத்திருந்தது. மகன் செய்த இழிவான செயலையும் மகன் இறந்த துக்கத்தையும் நினைத்து நினைத்து எண்ணி எண்ணி அழும் அன்னை ஒரு பக்கமென்றால் தாய் இருந்தும் இல்லாத நிலையில் கிடந்த வெறும் பத்தே நாட்களான பச்சிளம் குழந்தை ஒரு பக்கம்...இவர்களுக்கு மேல் எவ்வித உணர்வுமின்றி ஜடமாய் அமர்ந்திருந்த தேவி ஒரு பக்கம்... குழந்தை இங்கிருந்தால் நிச்சியம் தேவியை அந்த கொடூர நினைவிலிருந்து வெளிக் கொண்டு வர முடியாது என்பதால் தான் 'என் பேத்தியை என்னிடமே கொடுங்கள்' என்று கேட்ட அந்த அயோக்கியனின் தாயிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
அது தவறென்று ருத்ரா இங்கு வந்தன்றே உணர்ந்து கொண்டார். பழைய நினைவுகள் கண்முன்னே விரிய கண்களை இறுக மூடித் திறந்தார் தேவா.
தேவாவின் முக இறுக்கத்தை ஏளன சிரிப்போடு பார்த்தவள் "குத்தமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்... என்னதான் பூனை கண்ணை இறுக மூடிட்டாலும் உலகம் இருட்டாகிடாது பாரு..." சற்று முன் தேவா கூறியதை அவருக்கே திருப்பி கூறினாள்.
அவளை ஏறயிறங்க பார்த்தவர் சட்டென முகத்தை மாற்றி
"எல்லாரும் சிரிக்கறாங்கன்னு பூனையும் பொடக்காலியில போயி சிரிச்சிட்டு வந்துச்சாம். இவளுக்கு இருக்கற எகத்தாளத்தை பாரேன் நான் சொன்னதையே திருப்பி என்கிட்ட சொல்லிட்டு இருக்கா..." என முன்னதை சத்தமாக கூறிவிட்டு பின்னதை தனக்குள்ளேயே கூறியபடி திரும்ப... நிலைக்கதவில் சாய்ந்து கைகளைக் கட்டிப்படி சிறு சிரிப்போடு நின்றிருந்தான் ஆகாஷ் வானவராயன்.
மூன்று நாட்களாக அமைதியில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவன் இன்று தேவியிடமும், பிறையிடமும் தந்தையைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி விட்டதாலோ என்னவோ மனம் சற்றே அமைதியடைந்திருந்தது... மனம் அமைதியானதும் தன்னாலேயே முகிலின் நினைவு வர இதழில் நீங்கா புன்னகை ஒட்டிக் கொண்டது...
சொல்லபோனால் இத்தனை நாட்கள் மங்கை பேசிய பேச்சிற்கும் நடந்து கொண்ட செயலுக்கும் கோபம் கொண்டிருந்தவன் அவளின் காதலை அறிந்து கொண்ட நொடி அவனுள் இருந்த கோபம் எனும் மாயத்திரை விலகியிருந்தது... உண்மையில் ஆகாஷ் ஒன்றும் அத்தனை அழுத்தமான ஆள் அல்லவே. பல மாதங்களாக காரிகையின் மேல் கொண்ட காதலை கொச்சைப்படுத்தியதால் உண்டான கோபமே அவனின் மனதை இறுக செய்திருந்தது.
வெளியில் நின்றிருந்த ஆகாஸை பார்த்ததும் தேவாவின் முகம் புன்னகையை பூசிக் கொண்டாலும் வார்த்தைகள் என்னவோ கடுகடுவென வந்தது
"வா பேராண்டி இப்ப தான் என் பேத்தியை பார்க்க வழி தெரிஞ்சுதா..." எனக் கேட்டார்.
அப்பத்தாவின் பேச்சில் முகிலின் புருவங்கள் ஏறியிறங்க ஆகாசை அழுத்தமாக பார்த்தாள். அவளின் நயனங்கள் சொல்லும் செய்தி இவனுக்கு சிரிப்பைக் கொடுத்தது.
'நீ நடந்துக்கற முறையும், பேச்சும் வேணா தப்பா இருக்கலாம்... ஆனா உன் கண்ணு ஒவ்வொரு முறையும் உன்னை காட்டிக் கொடுக்குது மிஸஸ் மியாவ்...' என நினைத்தபடியே உள்ளே சென்றவன் முகிலினை ஒட்டி அமர்ந்து கொண்டான்.
பேரனுக்கும், பேத்திக்கும் இடையிலான இடைவெளியை பார்த்தது பார்த்தபடி நின்றார் தேவா...
"என்ன டார்லி? என்ன சொல்றா உன் திடீர் பேத்தி..." எனக் கேட்ட ஆகாஷின் குரலில் தன்னிலைக்கு வந்தவர்
"அவள் என்ன சொல்லுவா கொடுக்கி. எப்ப பாரு மூஞ்சியை சிடுசிடுன்னு வைச்சிட்டு ஒரே இரிட்டேஷன் டா பேராண்டி. பொம்பளை புள்ளைன்னா சிரிச்ச முகமா இருக்கணும். இவளை பாரு இடுச்ச புளி மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா..." என சொல்லவும் ஆகாஷ் சத்தமாக சிரித்தான்.
அதே சிரிப்போடு "எஸ் டார்லி கொஞ்சம் இல்லை ரொம்பவே இரிட்டேசன் கேரக்டர் தான். அதுக்காக என்ன செய்ய முடியும் எல்லாம் என் விதி..." என பெருவிரலால் நெற்றியை கீறியப்படி கூறினான். அவன் அப்படி கூறியதும் சட்டென திரும்பி ஆகாஸை முறைத்தாள் முகில்.
இருவரையும் புன்னகையோடு பார்த்தவர் "சரி பேராண்டி நீ இவளோட இரு. கொஞ்சம் நியூ டிரஸஸ் எடுக்க வேண்டியிருக்கு நான் போயி எடுத்துட்டு வரேன். எல்லா துணியும் கிழிஞ்ச மேனிக்கே போட்டுட்டு சுத்திட்டிருக்கா. நல்ல துணியா பார்த்து எடுத்துட்டு வரேன்.." என கேலி செய்த தேவாவை ஏறயிறங்க பார்த்தவள்
"வெட்டிருவேன்..." என்றாள்.
" இவங்க வெட்டற வரைக்கும் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருப்போம் பாரு போடி..." என நெடித்துக் கொண்டவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
தேவா வெளியில் செல்லும் வரை அமைதியாய் இருந்தவள் அவர் வெளியில் சென்றதும்
"ஆகாஷ் முதல்ல தள்ளி உட்காரு யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..." என்றாள் மெல்லிய குரலில் பல்லைக் கடித்துக்கொண்டு.
"பார்ரா அடுத்தவங்களுக்கு பயபடற ஆளா நீ..." நக்கல் தொனிக்க கேட்டான் ஆகாஷ்.
"ம்ம்ப்ச், இப்ப நீ தள்ளி உட்காரலன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஒழுங்கா எழுந்துடு..." என்றாள் அதட்டலாக.
உன் அதட்டலெல்லாம் எனக்கு பொருட்டேயில்லை என்பதை போல வஞ்சியை இன்னும் நெருங்கி அமர்ந்தவன் "அப்படியா? அப்படி என்ன பண்ணுவ நீ?..." எனப் புருவத்தை ஏற்றியிறக்கி கேலி குரலில் கேட்டான்.
அவன் பேச்சிலும், செய்கையிலும் காரிகையின் சீற்றம் நிமிடத்திற்கு நிமிடம் எகிறியது. "ஆகாஷ் என் பொறுமையை ரொம்ப சோதிக்கற..." என்றாள் அடக்கப்பட்டக் கோபத்தோடு
"ஷ்..." என ஒற்றை விரலை அவளின் காய்ந்திருந்த இதழ் மேல் வைத்து
மெல்லிய குரலில் "லிப்பை ஏன் இப்படி காய விட்டிருக்க தோல் விடுது பாரு..." எனக் கேட்டான்.
அவன் பேச்சில் எழுந்த உணர்வுகளை அடக்க கண்களை இறுக மூடித் திறந்தவள் "மிஸ்டர் ஆகாஷ் வானவராயன்...' என அழுத்தமாக அழைத்தாள். அவனோ நுண்ணிடையாளின் முறைப்பையும், கோபமான அழைப்பையும் கண்டுகொள்ளாமல்
அவள் இதழில் காய்ந்திருந்த தோளை மெல்ல எடுத்தான்.
"என்ன பண்ற ஆகாஷ், கையை எடு முதல்ல..." எரிந்து விழுந்தவளை கேலியாக பார்த்தவன் காரிகையின் இதழ் மேலிருந்த கைகளை எடுத்தான். ஆனால் இம்முறை கை செய்த வேலையை அவன் இதழ்களுக்கு கொடுக்க சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள். முகில் திரும்பியதும் இச் என்ற சத்தத்தோடு மங்கையின் கன்னதில் உரசியது மாயோனின் வன்மையான இதழ்கள்.
"ம்ம்ப்ச்...என்னடி..." என முறைப்பாக கேட்டான். இதழ் முத்தம் தவறியதில் கடுப்பாக வந்தது வார்த்தைகள்.
"என்ன என்னடி? கை, கால் உடைஞ்சு இருக்கு என்னால உன்னை எதுவும் பண்ண முடியாதுன்னு நினைக்காத.. கை நீட்ட கொஞ்ச நேரமாகாது வேண்டான்னு பாக்குறேன்..." என சிடுசிடுவென மொழிந்தாள்.
"யாரு நீயா? ஹாஹா எப்பவும் உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது..." அத்தனை உறுதியாக கூறினான்.
ஆகாஷின் பேச்சில் இதழ்கள் இகழ்ச்சியாக வளைய "உங்கப்பாவை அடிச்ச எனக்கு உன்னை அடிக்க நிமிசம் போதும்..." என்க அதற்கு ஆகாஷ் பேசவில்லை அமைதியாக முகிலை பார்த்தான்.
ஏற்கனவே தேவியின் மேலும் தேவராஜின் மீதும் கோபத்தில் இருந்தவள் தற்போது ஆகாஷின் இந்த அமைதி மேலும் கோபத்தை கொடுத்தது. அதே கணம் தேவராஜின் செயல்கள் அனைத்தும் கண்முன்னே விரிந்தது... அவர் தொட வந்த இடங்கள் கூசியது போல் இருந்தது. கோபம் அடங்க மறுத்தது அவரை ஏதாவது செய்திருந்தால் மனம் சமன்பட்டிருக்குமோ என்னவோ இப்போது மனம் கனலில் மூழ்கிய மேகமாய் பற்றி எரிந்தது.
"என்ன பேச மாட்டீங்கறீங்க மிஸ்டர் ஆகாஷ் வானவராயன்... ஏதாவது பேசுங்க ஆகாஷ் வானவராயன் அட்லீஸ்ட் உங்கப்பாவை ஏன் அடிச்சன்னாவது கேளுங்க..." எனக் கேட்டவளின் குரலில் என்ன இருந்ததென்றே யூகிக்க முடிவில்லை அவனால். அதற்குள் ஒரு முக்கியமான அழைப்பு வர "ஒரு நிமிசம் இரு...வந்துடறேன்..." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
ஒரு கையால் கேசத்தை அழுந்த கோதிக் கொண்டவன் ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தபடி அந்த மருத்துவமனையின் வளாகத்திலிருந்த கார்டாரில் நடந்தப்படியே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனுக்கு முகிலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கண்முன்னே விரிந்தது. அதே சமயம் அன்று தேவராஜ் தலையைப் பிடித்தப்படி நடந்து வந்ததும் நினைவிற்கு வந்தது.
"ஐ கால் யூ லேட்டர்..." என அழைப்பை துண்டித்தவன் முகிலிருந்த அறையை நோக்கி நடந்தான்.
****
அறையினுள் நுழைந்தவனின் கண்கள் இரண்டும் முகிலிருந்த நிலையை கண்டு விரிந்து கொண்டது. ஆம் மயங்கி தரையில் விழுந்திருந்தாள். ஏற்கனவே கை,கால்களில் இருந்த காயங்களில் இரத்தம் வழிந்தப்படி இருந்தது. அவசரமாக முகிலிடம் ஒடியவன் அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தி அருகிலிருந்த மருத்துவரை அழைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அவளை பரிசோதனை செய்துவிட்டு ஆதீத மன அழுத்தத்தால் மயக்கம் வந்துள்ளது என்று கூறியவர்கள் டிரெஸ்ஸிங் செய்திருந்த இடத்தில் வெளிவந்த இரத்தத்தை சுத்தப்படுத்தி மீண்டும் டிரெஸ்ஸிங் செய்துவிட்டு சென்றனர்... அதீத மன அழுத்தமா என நினைத்தவனுக்கு சற்றும் முன் தாங்கள் பேசிக் கொண்டிருந்த பேச்சு நினைவு வந்தது...அயர்ந்து உறங்கி கொண்டிருப்பவளை பார்த்தான் பெருமூச்சுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவனின் மனம் எவ்வித பகட்டும் இல்லாமல் உதட்டில் உறைந்த புன்னகையுடன் நின்றிருந்த அன்றைய முகில் நினைவிற்கு வந்தாள்.
***
அந்த திருமண மண்டபம் முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருமண விழாவிற்கு அனைவரும் கூடியிருந்தனர் என்பது நன்றாகவே தெரிந்தது. சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும் குழந்தைகளின் சந்தோச கூச்சலும் திருமண மண்டபம் முழுவதும் கேட்டது... மணமக்களின் வீட்டு பெரியவர்கள் மணமக்களுடன் புகைப்படம் எடுப்பதில் பிஸியாகி விட விருந்தினர்களை முகம் கொள்ள சிரிப்போடு வரவேற்பது வெல்கம் கேர்ள்ஷின் வேலையாக இருந்தது. அதில் ஒருவளாக நின்றிருந்தவள் தான் நறுமுகில்...
"சாப்பிட்டாச்சா கேர்ள்..." உடன் பணிபுரியும் பெண்ணின் கேள்விக்கு "சாப்பிட்டாச்சு டி... போன ஃபங்ஷன் புட் விட இங்க மச் பெட்டர்..." என மெல்லிய குரலில் புன்னகையுடன் கூறியவள் நெற்றியில் புரண்ட கேசத்தை செவியோரம் ஒதுக்கி விடப்படி நிமிர்ந்து பார்த்தாள். மங்கையின் முன் குனிந்தபடி நின்றான் ஆகாஷ் வானவராயன்.
நிமிடம் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தவள் பின் மாயோனின் செய்கை எதற்கென உணர்ந்தவளாய் கையிலிருந்த பன்னீர் துளிகளை அவனின் மேல் தூவினாள்.
பன்னீர் துளிகள் ஆகாஷின் மேல் விழுந்ததும் நிமிர்ந்தவன் எதிரில் நின்றவளை பார்த்தான். அவளும் தனக்கு எதிரில் நின்றவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
அலையலையான கேசம், பரந்த நெற்றி, எதிராளியை கூறு போடும் பார்வை, கூரிய நாசி, அழுத்தமான சிவந்த தடித்த இதழ்கள், இரண்டு நாட்களாக மலிக்கப்படாத தாடியென கோர்ட் சூட் விகதம் நின்றவனை ரசிக்கும் பாவனை அவளிடத்தில்... அவளின் ரசிப்பை எதிரில் நின்றவனும் கண்டு கொண்டானோ என்னவோ ஆடவனின் நயனங்கள் சட்டென மலர்ந்தது.
இப்படி பச்சையாக மாட்டிக் கொண்டோமே என நினைத்தவள் குனிந்து தன் அலைபேசியை பார்ப்பது போல பாவனை செய்தாள். அவளின் செய்கையை கவனித்தவனின் இதழ்களில் இன்னும் புன்னகை.
உள்ளே சென்றவன் நேராக மணமக்களை வாழ்த்திவிட்டு, சம்பிரதாயதிற்கென உண்டுவிட்டு வெளியில் வர மங்கையை காணவில்லை. எங்கே என கண்களால் தேடினான். அவள் அங்கில்லமால் போக சிறு ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.
தொழில் முறை நண்பனின் திருமணத்திற்கு வந்திருந்தான் ஆகாஷ் வானவராயன். காரிலிருந்து இறங்கியதுமே வரவேற்பிடத்தில் பல பெண் சிற்பங்களுக்கு இடையில் பொற் சிற்பமாய் நின்றிருந்தாள் பெண். ஏதோ ஓர் ஈர்ப்பு காரிகையிடத்தில் கதைகள் பேசும் விழிகளா? இல்லை மெல்லிய இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும் உதடுகளா? இல்லை பளிங்கு கற்களை போல ஜொலிக்கும் கன்னங்களா? இல்லை நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்த கேசமா? ஹிஹிம் இல்லை ஏதோ ஒன்று அவனை மொத்தமாய் அவளிடம் சரணடைய கெஞ்சியது. அதனாலேயே மற்ற பெண்களிடம் சிறு தலையசைப்போடு கடந்தவன் இவளிடம் மட்டும் குனிந்து நின்றான்.
சாதாரண வெல்கம் கேர்ள் என்றெல்லாம் நினைக்கவில்லை அவன். பார்த்ததும் பிடித்து விட்டவது அவ்வளவே அதற்கு கௌரவம், அந்தஸ்து, தொழில் என ஆராய தோன்றவில்லை ஆகாஸ்கிற்கு. சொல்லபோனால் பணத்தையும், அந்தஸ்த்தையும் பார்த்து பழகும் ரகமல்ல ஆகாஷ் வானவராயன். அவன் வளர்ந்த விதம் என்பதை விட வளர்த்த ஆள் அப்படி
நுண்ணிடையாளைக் கண்டதும் ஏதோ ஓர் இனம் புரியா ஈர்ப்பு அவனிடத்தில். நேராக காரிகயின் முன் நின்று விட்டான். தன் மனதில் எழுந்த ஈர்ப்பை போல அவளின் மனதில் எழுமா? என்ற கேள்விக்கு அவளின் விரிந்த அதரங்களும் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நயனங்களுமே சாட்சி...
ஓர் ஆண் மகனைக் கண்டவுடனே பெண்கள் அவன் எப்படியானவன் என்று கணித்திட முடியுமாம். அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். அவளை கண்டதுமே மங்கை எப்படியானவள் என்று கணித்து விட்டான். பாவம் அது அடுத்த சில மாதங்களிலயே பொய்யாகுமென்று துளியும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான்.
மங்கையின் மேலிருந்த ஒருவிதமான ஈர்ப்பு அவள் யாரென்று அறிய துண்டியது. டிடக்டிவ் வைத்து விசாரிக்கவில்லை என்றாலும் தொழில் முறை நண்பனை வைத்து விசாரித்தான். விசாரித்த வரை வெல்கம் கேர்ளாக வந்த அனைவருமே கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்தது... 'ஐயோ சிறு பெண்ணா...'என்ற எண்ணமே அதற்கு மேல் அவளை பற்றி விசாரிக்க விடாமல் செய்தது...
அன்றோடு அவளை பார்த்தது அதற்கு பின் அவளை பார்க்கவும் இல்லை விசாரிக்கவும் இல்லை... கிட்டத்தட்ட மங்கையவளை மறந்திருந்தான். ஆறேழு மாதங்கள் பிறகு ஏ.வி ஜூவல்லரியின் விளம்பர ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தான். மறந்து விட்டதாய் நினைத்திருந்த காரிகையின் முகம் மறையாது அவன் நெஞ்சில் ஆழமாய் அழுத்தமாய் பதிந்திருந்தது.சாதாரண வெல்கம் கேர்ளாக பணி புரியும் போதே இவனை அசைத்து பார்த்தவள் இன்று கேட்கவா வேண்டும்... மொத்தமாய் அவனை கவிழ்ந்திருந்தாள்.
பிடித்தமும் சரி காதலும் சரி யார் என்ன எப்படி இதையறிந்து வராத ஒன்றவல்லவா?
வெறும் ஈர்ப்பாய் இருக்குமென கடந்து சென்ற ஒன்று இப்போது வெறும் ஈர்ப்பா? என்ற கேள்வியை தேக்கி நின்றது... அவன் பார்வை மொத்தமும் அவளிடம் மட்டுமே நிலைத்து நின்றது...
சிவப்பு நிறத்தில் அறிந்திருந்த பட்டு சேலைக்கு ஏற்ப பல வேலைப்பாடுகளுடன் அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் அவளின் அழகிற்கே அழகு சேர்த்தது.
சேலை முந்தானையை பிடித்திருந்த வெண்டை விரல்களும், அனிச்சப்பூ பாதங்களா என கேள்வி எழுப்பும் பாதங்களும் அவனைப் பித்தம் கொள்ள வைத்தது. அதுமட்டுமா என்ன? அவள் நடந்து வருகையில்
பளிச்சென்று மின்னியது காரிகையின் பளிங்கு கற்களை போன்ற இடை 'ஐயோ....' என்றிருந்தது ஆகாசிற்கு. அதற்கு மேல் பார்க்க அவன் பொல்லாத இதயம் அனுமதிக்கவில்லை படபடவென அடித்துக் கொண்டது...
சட்டென நிமிர்ந்து காந்தையின்
கழுத்தை சுற்றிலும் முத்தமிட்டு கொண்டிருந்த கார்க்கூந்தலை பார்த்தான். அந்த வெண்சங்கு கழுத்தில் அழுத்தமாக இதழ் பதித்தால் என்ன? என தோன்றியது அடுத்த கணம் மனதளவில் திடுக்கிட்டான்.
இருந்தும் அவன் கண்கள் ரசிப்பதை மட்டும் விடவில்லை.. காதோரம் ஒதுக்கி விட்ட காரிகையின் சிவந்த செவிகள் இன்னும் ஈர்த்தது மாயவனை. உச்சி வகுட்டில் நார்த்தனமாடிய நெற்றி சுட்டியாகிட கூடாது என்று கூட தோன்றியது அவனுக்கு.
செதுக்கி வைத்த நாசியும் கருமை திட்டிய நயனங்களும், உதட்டு சாயமா இல்லை இய
ற்கையிலயே சிவந்த இதழ்களா என ஆராயும் அளவிற்கு சிவந்திருந்த திருத்தமான இதழ்களுடன் நின்றிருந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை ஆகாஸிற்கு...