மழை சாரல்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்திராகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற "குமோன் மலைப்பிரதேச" பகுதியிலுள்ள பசுமை கொஞ்சும்
"நைனித்தாவில்''
அந்த அந்தி சாயும் நேரத்தில்:
மேகம் இரண்டும் உரசிக்கொள்ள மோகத் தீயால் முகம் கருக்கும் மேக மங்கை கண்டு "கில்பரி" மரங்களும் கிளுகிளுப்பை ஏற்றிய படி அசைந்து ஆடியக் கொண்டிருக்க அதற்கு இனங்கியபடி
இயற்கையால் சூழ்ந்த "நைனித்தால்" மலை பிரதேசத்தில்..
இரு மலைகளுக்கும் இடையே..
பிறை நிலவென வடிவில் வளைந்து ஓடிய நன்னீர் ஏரியில் படகில் மீது அமர்ந்தபடி பொழியும் பனி துளிகளில் நனைந்தபடி கண்ணடிக்கும் நிலவொளியில் கரைந்துக்கொண்டு இருந்தால் மாயா..
மாயா மதராஸ் வாசி.. கல்லூரி மாணவி மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அதன் ஈடுபட்டாள் வீட்டில் இருந்து ஏகிரி ஓடி வந்தவள்..
வெகு நாட்கள் மாயாவதியின் கனவில் தோன்றி மறைந்த " பண்டைய காலத்தின் பழம் பொருளை தேடிய பயணம்" ஆரம்பத்தின் முடிவே இந்த "உத்தராகண்ட் உள்ள இமயமலைத்தொடரின் இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரத்தில் இருக்கும்""நந்தாதேவி ஆலயத்தில் தான் உள்ளது தன் பிறவி பயன்".. அம்மா பாடிய பாடல் காதில் சொருகிய வாக்மேன் வழியாக ஒலித்துக்கொண்டு இருந்தது..
"சின்ன சிறு கிளியே கண்ணம்மா..
செல்வ களஞ்சியமே..
செல்வ களஞ்சியமே..!!"...
பாடலின் வரிகளில் கலந்து முனுமுனுத்தபடி வாய் அசைக்கும் மாயாவின் ரோஜா இதழினை ரசித்த நதி மீன்கள் துள்ளி குதிக்க மறந்து போயின..
காற்றின் வேகத்துக்கு இடுக்கொடுக்க முடியாமல் படகு தள்ளாட படகினை கரைக்கு வேகம்.. வேகமாக செலுவதில் மும்மும்மரமாக இருந்தவனை பார்த்து நகைத்தபடியே மாயா அவன் பெயரை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி அழைத்தும் அவன் திரும்பாமல் போகவே அடி தொண்டையில் இருந்து வேகமாக மீண்டும் கூப்பிட்டாள் "உத்ரா".. உத்ரா.. என
அவள் கூப்பிட்ட கூப்பாடுக்கு..
தலை நடுக்க படகின் வேகத்தை சற்றென நிறுத்தி துடுப்பினை அப்படியே போட்டு விட்டு மாயாவின் பக்கம் திரும்பியவன் சொல்லுங்க "மாயிமா" என்றவனை பார்வையால் எரித்து சாம்பாலாக்கி விடுவதை போல முறைத்தவளை பார்த்த
உத்ரன் " தாயி முறைக்காதீங்க தாயி" "நீங்கள் இப்படி கோவிச்சி கொள்ளும் படி என்ன தாயி செஞ்சி புட்டேன்" என வெகுளி கேட்கும் உத்ரனை கடித்துக்கொள்ளவும் மாயாவினால் முடியவில்லை என்றாலும் அவளின் வருகைக்கான பதிவேடு ஒவ்வொரு நாளாக இப்படி வீணாவதை பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை..
உத்ரா.. உன்னிடம் என்ன சொன்னேன் கண்டிப்பாக இம்முறை ""நந்ததேவி"" கோவிலுக்கு போயே தீரனுமும் என சொன்னேன் இல்ல அதனால் வருவது என்னவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் தானே சொன்னேன் நீ இப்படி ஒவ்வொரு முறையும் பாதி கல் தொலைவிற்கு அழைத்து போவதும் அப்புறம் திரும்பி ஏதோ ஒரு காரணம் சொல்லி அழைத்து வருவதும் எனக்கு உன் மேலே நம்பிக்கையை இல்லாமல் போகுது உத்ரா நீ என்ன ஏமாற்றியானோ தோணுது என்று மாயா வார்த்தையை முடிப்பதற்குள் சற்றென இரு கைகளையும் கூம்பி வணங்கிய உத்ரன்..
மாயிமா இன்னொரு முறை இப்படி சொல்லி புடாதீங்க இந்த உசுரூ உங்களுக்காக கிடக்கு "என் மலைவாழ் வாசிகள் உங்க விசுவாசிகள்.. இந்த உசுரு நீங்க போட்ட பிச்ச.. உணவின்றி வேட்டையாடி திரிஞ்ச மிருகங்க நாங்க.. எங்களுக்கு உண்ண உணவையும்.. உடுத்த உடுப்பையும்.. உறங்க குடிலையும் தந்தது மட்டுமல்ல எங்க சரஸ்வதி தேவி தாயி நீ எங்களுக்கு"..
உங்க ஆராய்ச்சியே நான் தப்புனு சொல்ல உங்க உசுருக்கு என்னாவது ஆச்சின்னா அப்புறம் எங்க உசுரூ இந்த மண்ணில் இருக்காது அம்புட்டு தான் என்றவனின் முகத்தை பார்க்க சலிக்கல மாயாவால்..
ஆனா.. ஊனா.. இப்படியே பேசி என் கை.. வாயே.. கட்டி போட்டுங்க.. சரி.. சரி.. என்ன எப்ப தான் நீ நந்ததேவி சிகர ஆலயத்திற்கு அலச்சிக்கிட்டு போறேனு பார்ப்போம் உத்ரா என்றவளை கொஞ்சமாக நிமிர்ந்து உட்கார்ந்து பார்த்தபடி சொன்னான்..
தாயி "அந்த தாயே.. இந்த தாயி பார்க்கனுமுனு என்றால் அவ உத்தரவு தரனும்" இதில் என் தப்பு ஒன்னுமில்ல தாயி என்றவனை கோபம் குறைந்து சிரித்தபடியே பார்த்தவளை பார்த்த உத்ரன் அய் என் மாயிமா சிரிச்சி புட்டாங்களே என குதிக்க படகு கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது..
அய்யோ..யோ.. ஐய்யா சாமி நீ பாட்டுக்கு என்ன சாமி.. சாமின்னுட்டு கடைசில என்ன சாமியாகவே ஆக்கி புடாத.. பார்த்து உட்காரு உத்ரா என சிரித்தவளை கண் சிமிட்டாமல் பார்த்தவன் உங்களை பார்க்கும் போது அப்படியே எங்க "நந்ததேவி" போல இருக்குது மாயிமா.. ஆமாம் இப்படியே சொல்லு ஆனா அழைச்சிக்கிட்டு மட்டும் போகதே என்றவள் அது எல்லாம் இருக்கட்டும் உன்னிடம் ஒன்னு நொம்ப நாளாக கேட்கனும் என நினைச்சேன் என்றவளை பார்த்த..
உத்ரன் நல்ல கேளுங்க மாயிமா..என அவள் கேட்க போகும் கேள்விக்கு காதை தீட்டிக்கொண்டு துடுப்பை போட்டான்..
அவளுக்கும் கரை போகும் வரை பொழுது போக வேணாமா விட்டா இவன் வாயே திறக்காமல் துடுப்பு போடுவான் என மனதுக்குள் நினைச்சவள்..
"உத்ரா.. உத்ரா.. உனக்கு ஏன் இந்த பெயர் வச்சாங்கனு உனக்கு தெரியுமா.." என்றவளின் கேள்விக்கு பதில் தெரிந்தவன் போல ஆரம்பித்தான்..
மாயிமா "எங்க தேசம் உத்திரக் கண்டம்.. நாங்கள் வாழும் தேசத்தின் நினைவாக தான் எங்க கண்டத்தின் பேரையே எனக்கு வச்சிதுனு அடிக்கடி என் அம்மாச்சி சொல்லும்" என்று அவன் சொன்ன போது அப்படியே ஒரு நிமிடம் புல்லறித்து போக செய்தது மாயாவிற்கு எவ்வளவு மலைவாசிகளாக இருந்தாலும் தன் வாழ்விடத்தின் மீது எவ்வளவு அக்கறை வச்சி இருக்காங்க.. இவர்கள் எல்லாம் இங்க உள்ள செடிக்கொடி கூட தன் உயிராக மதிப்பிடுகிறார்கள்.. மிருகங்களுடன் வாழ்ந்தாலும் மனிதர்களாக வாழும் இவர்கள் எங்கே மனிதர்களுடன் வாழும் மனித நேயமற்ற நம்ம இனத்தவர்கள் எங்கே எக்காரணம் கொண்டும் இங்க நாம வந்ததற்கான காரணம் நல்லபடியாக முடியனும் இந்த மண்ணுக்கும்.. இந்த மக்களுக்கும்.. எதுவும் ஆக கூடாது அது என் உயிர் இருக்கும் வரை நான் நடக்க விட மாட்டேன் என மனதுக்குள்ள பிராத்தனை செய்தபடி மௌனமாக அவனுடன் சென்றாள்..
மாயா??
சிறிது நேரத்திற்கு பிறகு எதையோ யோசித்தவளாக.. உத்ரா இப்ப நான் உன்னிடம் உன் பேருக்கு என்ன அர்த்தம் என கேட்டேன் இல்ல அதற்கு திரும்பி பதிலுக்கு நீ ஏன்?? என்னிடம் கேள்வி கேட்கல என்றவளிடம் மாயிமா அது எப்படி நான் உங்களிடம் கேள்வி கேட்பது என குலைந்தவனை முறைத்த மாயா யாராக இருந்தாலும் கேள்வி கேட்கனும் அது நானாக இருந்தாலும் சரி.. இப்ப கேளு.. இம் கேளு.. என்ற அவளின் அதட்டலுக்கு பயந்தவன்..
தட்டு தடுமாறி மாயிமா உங்களுக்கு ஏன் பெயர் வச்சங்க..
பெயர் வக்கலனா எப்படி கூப்பிட முடியும்.. நான் இப்படியா உன்னிடம் கேட்டேன் சொல்லு என்றவளிடம்..
அட போங்கமா எனக்கு உங்க முன்னாடி கை கட்டி.. தான் நிற்க தெரியும் கேள்வி எல்லாம் கேட்க தெரியாது.. என்றவன் வேகமாக கரைக்க செல்ல தீர்மனிச்சான்..
படகு கரையே நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..
அவர்களின் கரை ஓதுங்கியது படகு மட்டும் தான் மாயாவின் மனதுல்ல..
"மாயிமா.. மாயிமா.. என்று உரக்க குரலில் உத்ரன் அழைக்கவே சிந்தனை கலைந்து சுயநிலைக்கு வந்தவளாய்..
என்ன உத்ரன் ஏன் இப்படி கத்துற?? என்றபடி காதில் கை விட்டு தட்டிபடி உத்ரன் கரையின் மீது நின்று நீட்டிய கையினை பற்றிய போது தெரியாது இப்பற்று தொன்றுத்தொற்று தொடர போகும் "ஏழேழு ஜென்ம பந்தம்" என மாயாவதிக்கு தெரிய வாய்ப்பில்லை..
இரவினின் பொழுதில் மலையில் இருந்துக்கொட்டும் அருவியின் சத்தமும்.. சிலுசிலுவென வீசிடும் தென்றலின் தேகத்தை சிலிர்ப்பூட்டும் வயல் காற்றும்.. மனதை மயக்கும் மலர்களின் நறுமணங்களும்.. வளைந்து.. நெளிந்து.. தெளிந்து.. ஓடும் சலசலக்கும் ஓடைகளின் ஓசைகளும்.. உறங்கும் பூக்களின் உணர்வினை தூண்டும் சில்வண்டுக்களின் சினுங்கல் ரீங்காரமும்.. இவ்வளவு நாட்கள் மாயாவின் மனதினை வருடி வசம்பட செய்தைவகைகள் எவையும் இன்று ஏனோ மனதிற்கு புறம்பாகவே தோன்ற செய்தது..
புரண்டு.. புரண்டு.. படுத்தவளின் கண்கள் துயில் ஏற்க முரண்டு பிடித்தன..
மாயாவின் கனவினை நினைக்கும் பொழுது எல்லாம் மெல்சிலிர்க்க செய்தது..
கண்களின் ஓரம் வழிந்து ஓடும் கண்ணீரின் நடுவே மாயாவின் மனது மனம் உருகி வேண்டி அழைத்தது.. அம்மா தாயே..!!நந்தாதேவி என் கனவே நீ தானே..
உனக்காக உன் கட்டளைக்கு அடிப்பணிந்து உன் உடைமைக்கு வேண்டி தானே தாயே வந்தேன்.. பிறகு ஏன் என்னை இப்படி அலைக்கழிக்கிறாய்..!!
இப்பொழுதே சொல் என காளிங்கதேவி.. சொல்லு எனக்கு ஒரு பதிலை சொல்லு.. சொல்லுமா..
இக்காட்டில் நான் வந்து காத்திருப்பதின் பலன் தான் என்ன சொல்லு.. சொல்லுமா என மாயா புலம்பியபடி அழதாள்..
தாழிட்டு இருந்த அறையின் கதவு தானாகவே திறந்துக்கொண்டது "மகளே" .. "நைனித்தா".. எழு மகளே.. எழு என்ற அறையில் கேட்ட "அசரீரி" குரலுக்கு பொம்மையை போல் தன்னிலை மறந்து எழுந்தவள் குரல் வந்த திசை நோக்கி பயணிக்கிலானாள்..
மணமகள் அறையில் இருந்து அலறி அடித்து ஓடி வந்தவள் அத்த.. அத்த.. நம்ம "நைனித்தாவை" காணல என்றவளின் முகம் வெளிறி போய் இரத்த நாளங்களில் வந்த இரத்தம் உறைந்து இறுகி போய் இருந்தது..
ஏன்டி கத்துற இங்க தான் இருப்பாள் போய் நல்லா பாரு??
எல்லாம் இடமும் நல்லா தேடிட்டேன் அவளை காணல..
திருமண மண்டபவமே சற்றென அமைதிக்காக.. பின் வழக்கமான சலசலப்புகள் சங்கரித்தன..
ஓடும் பஸ்சில் ஏறி அமர்ந்தாள் மணகோலத்தில் "நைனித்தாள்" ..
அருகில் வந்த நடத்துனர் அவளை ஏற.. இறங்க.. ஒருமாதிரி பார்த்தபடியே "எங்க போகனும்மா" என்ற கேள்விக்கு பதில் இன்றி அமர்ந்து இருந்தவளிடம்.. இந்தாமா உன்ன தான் எங்க போகனும் என்ற போது தான் சுயநினைவிக்கு வந்தவளாய்..
நான்.. நான்.. என நாக்கு குலற நான் எங்க இருக்கேன் என்ற போது இது வேறவா தூக்கத்துல நடக்குற கேஸா என நகைத்த நடத்துனரை பார்க்க உடல் கூசி கீழே குனிந்தவள்.. சரி இந்த பஸ் எங்கே போகுது என்றவிடம் கடைசி ஸ்டாப் இரயில்வே ஸ்டேஷன் என்றவரிடம்.. எனக்கு ஸ்டேசனுக்கு ஒரு டிக்கெட் என எடுத்து அமர்ந்தவளின் மனது கிடந்து அடித்துக்கொண்டது..
அச்சோ.. இந்நேரம் மண்டபத்தில் என்னை அலங்காரம் செய்ய ஆள் வந்து இருப்பார்கள் என் மகளை காணும் என்று கேள்வி பட்டதும் பெத்த மனசு என்ன பாடுபடுமோ??
என்னையும் அறியாமல் என்னை இயக்கும் "சக்தி" யார்??
என குழம்பியபடி ஸ்டேஷனில் நின்ற பஸ்சில் இருந்து இறங்கியவளை அழைத்து போக காத்திருக்கும் மர்மங்கள் தொடரும்??
சித்தம்- 2 தொடரும்?!?!