எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காணாமல் கண்கள் நோகின்றதோ!!! -கதைத்திரி

Fasna

Moderator
inbound5593835278386230239.jpg
காணாமல் கண்கள் நோகின்றதோ!!!
 

Attachments

  • inbound2945873348103553793.jpg
    inbound2945873348103553793.jpg
    39.6 KB · Views: 2

Fasna

Moderator
கண்கள்-01

inbound2943717625223137919.jpg

போர்முரசாய் இடியிடிக்க, வானிலிருந்து வெள்ளிக்கம்பிகளாய் மின்னலிறங்கி பூமியைத் தொட்டணைக்க, ஊரே காரிருளில் மூழ்கியிருக்க, மெல்லிய தூரலாய் மழை துளிர்க்க, அதற்கீடாய் பெண்ணவள் கண்களிலும் விழிநீர் துளிர்க்க, மஞ்சுளாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. தாயின் கண்ணீருக்கு காரணமறிந்திருந்தும் சிலையாய் நின்றிருந்தாள் துஷாந்தினி. அந்த வானின் இடிபோலவே பெண்ணவளின் மனதும் கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தது.

"கடைசியா கேக்குறேன் கல்யாணத்துக்கு ஒத்துக்குவியா,மாட்டாயா?" உச்சக்கட்டக் கோபத்துடன் மஞ்சுளா கேட்க,

"மாட்டேன் ஒத்துக்கவே மாட்டேன் எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். அத்தான் கட்டிக்கும்போது நானும் கட்டிக்கிறேன், இப்போ என்னை விட்டுடுங்கோ ப்ளீஸ்ம்மா." மகளும் பிடிவாதமாகக்கூற

"அதென்ன, அத்தான் கட்டிக்கிட்டாத்தான் நீயும் கட்டிக்குவேனென்று சொல்லுற? அவன்கூடவே சுத்துறதால அப்படி நினைக்குறாயா? அவன் ஆம்பளப்புள்ளடி, இப்போதான் படிப்ப முடிச்சிட்டு தொழில ஆரம்பிச்சிருக்கான், லைஃப்ல செட்டிலாகனும், அவன் கல்யாணம் கட்டிக்குறதுக்கு முன்ன நம்ம வர்ஷிக்கு கல்யாணம் நடக்கனும். இதெல்லாம் முடிய மூணு,நாலு வருஷமாகும். ஏன் அதுக்குமேல கூட ஆகலாம். அதுவரை எப்படி?"

"நானும் படிக்கனும் என் சொந்தக்கால்ல நிக்கனும், அதுக்கு எப்படியும் மூனுவருஷத்துக்கு மேலயே ஆகும். அதுக்குபிறகுதான் கல்யாணம், இப்போ வேணாம்."

"அதான் இப்போ கம்பியூட்டர் கிளாஸுக்குப் போறாயே, அது படிப்பில்லையா?"

"அம்மா, உங்க காலம்மாதிரி இல்லம்மா இப்போ. இந்தக் காலத்துல எந்தப் படிப்பாயிருந்தாலும் கம்யூட்டரும் இங்லீஸும் ரொம்ப இம்போர்ட்டன்ட், அதுக்காகத்தான் இந்தக்கிளாஸ். ம்மா! எனக்கும் அத்தான்மாதிரி நல்லாப்படிச்சு அவரப்போலவே ஒருபிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணனுமென்று ஆசை, ப்ளீஸ்ம்மா மேல படிக்கிறேனே. அத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறப்போ நானும் கட்டாயம் ஒத்துக்கிறேன் ப்ளீஸ்." தாய்க்குப் புரிவதுபோல் எடுத்துக்கூற

"ஆனால் அதுக்கான அவகாசம் நம்மகிட்டயில்லடா, இப்பவே உனக்கு இருபதாச்சு உனக்கு பின்னால ரெண்டுபேர வச்சிருக்கேன். உன்னை கரையேத்தினாத்தான் அவங்களையும் என்னால கரை சேக்கமுடியும், நீ சொல்லுறமாதிரி நாலு வருஷமென்றால் இவங்களும் கல்யாணத்துக்கு வந்து நிப்பாங்க, அதவிட நீ மேல படிக்க எவ்வளவோ செலவாகும். அந்தளவு அம்மாவால இப்போ முடியாதுடா, புரிஞ்சுக்கம்மா." அவரோ மகளிடம் தங்கள் நிலைமை எடுத்துக்கூற

"முதல்ல நீங்க புரிஞ்சிக்கோங்க."

"எதைப் புரிஞ்சிக்க சொல்லுற? இங்கப்பாரு துஷாந்தினி! தனுவும் அடுத்த வருஷம் எக்ஸாம் எழுதிடுவா, உனக்கு இப்போ கல்யாணம் பண்ணினாத்தான் அடுத்ததா அவளைப் பார்க்கலாம்."

"தனுக்கு அவசரமென்றால் அவளுக்கே முதல்ல பண்ணுங்க, எனக்கு சேர்த்ததையும் அவளுக்கே போட்டுப்பண்ணுங்க எனக்கானதை நானே தேடிக்கிறேன், என் படிப்புச் செலவையும் நானே பார்த்துக்கிறேன். ஆனால் ஒன்று, உங்க சுயநலத்துக்காகவெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கமுடியாது." சொல்லி முடிக்க அவள் கன்னத்தில் இடியென இறங்கியது மஞ்சுளாவின் கரம். தாயின் அடியில் கதிகலங்கி நின்றவளை தாங்கிக்கொண்டார், அத்தை யசோதா. அப்போதும் யசோதாவை விலக்கிவிட்டு அவளை அடிக்கத்தொடங்கிய மஞ்சுளாவை தடுத்து நிறுத்தினார் யசோவின் கணவர் பிரபாகரன்.

"விடுங்கண்ணா, இவளுக்கு இன்னும் நாலு அறைவிட்டாத்தான் புத்திவரும்." மீண்டும் அடிக்கப்போனவரைத் தடுத்தது வள்ளியம்மையின் குரல்

"மஞ்சு! நிப்பாட்டு வயசுக்கு வந்த பிள்ளைய இத்தனைபேர் முன்னாடி கைநீட்டுற அறிவில்ல உனக்கு." அவர் கோபமாய் மருமகளைச்சாட

"அத்தை! அவ என்ன கதை கதைக்குறான்னு பாருங்கோ. அவளை விட்டுட்டு தனுக்கு பண்ணச்சொல்லுறா, அவளுக்கு அவளே சேர்த்துக்குறாளாம் எவ்வளவு திமிர். யாரையாவது மனசுல நினைச்சிருகாளான்னா அதுவுமில்ல, கல்யாணத்துக்கு ஒத்துக்கோன்னா அதுவும் முடியாது." அப்போதும் துஷாந்தினி விறைப்பாக நிற்க

"என்னடி முறைக்குற,
இப்போ ஒத்துக்கப்போறாயா, இல்லையா?"

"நீங்க என்ன சொன்னாலும் இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்."

"கண்ணும்மா, அம்மா சொல்லுறதுலயும் ஒரு நியாயமிருக்கில்லையாடா? ஒத்துக்கோடாம்மா தங்கம்." பேத்தியின் தலையைத் தடவியவாறு வள்ளியம்மை கேட்க

"எனக்கிப்போ கல்யாணம் வேணாமே, அத்தான் கல்யாணம் பண்ணிக்கும்போது நானும் சத்தியமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன் என்னை இப்போ விட்டுடுங்கோ, ப்ளீஸ் பாட்டிம்மா." அவள் வள்ளியம்மையின் கைகளைப் பிடித்துக் கெஞ்சிக்கொண்டிருக்க

"என்னடி திரும்பத்திரும்ப அத்தான் கல்யாணம் பண்ணிட்டாத்தான் பண்ணிக்குவென்று சொல்லிட்டிருக்க, புரிஞ்சுக்கோடி அவனுக்கு காலமிருக்கு ஆனால் உனக்கு அப்படியில்ல. உன்னைக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன் ஒத்துக்கோ." அப்போதும் அவள் நிலையில் மாற்றமின்றிப்போக

"நீ இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டுத்தானாகனும். விளங்குதா?" மஞ்சுளாவும் ஆணையிட

"ம்மா! என்ட கல்யாணம், என்ட ஃப்யூச்சர், என்ன செய்யனும் எல்லாம் என்ட இஷ்டம், அதுல நீங்க தலையிடாதீங்க."

"நான் தலையிடாம யாருடி தலையிடுவா?"

"வேண்டாம் யாரும் தலையிட வேண்டாம்." கோபமாய் கத்தியவள் விடுவிடுவென்று வீட்டைவிட்டு வெளியேற

"பாத்தீங்களா அத்தை, நான் இவ்வளவு கத்துறேன் கணக்கெடுக்காம எப்படி போயிட்டிருக்கா, திமிர் புடிச்சவ என்னைப்பார்த்து சுயநலக்காரின்னு சொல்லிட்டாளே, நான் அப்படி சுயநலமாவா நடந்துகிட்டேன்."

"விடு மஞ்சு, அவ சின்னப்புள்ளைதானே, நீ கல்யாணத்தப்பத்தி கதச்சதுனால கோபத்துல அப்படி சொல்லிட்டுப்போறா மத்தப்படி மனசுலயிருந்து வந்த வார்த்தையில்லம்மா அது, நம்ம துஷாந்தியப்பத்தி உனக்குத் தெரியாதா?" பிரபாகரன் கூற

"என் உலகமே இவங்கதானே. என் ராஜ் என்னை விட்டுட்டு போனபிறகும் நான் வாழ்றதே இவங்களுக்காகத்தான், ஒருவேளை நானும் இவங்கள அநாதையா விட்டுட்டு என் ராஜ்கூடவே போயிருந்தா இவ என்னை சுயநலக்காரின்னு சொல்லிருப்பாளா? அப்பவாவது என் அருமை இவளுக்குப் புரிஞ்சிருக்குமாக்கும்." மஞ்சுளா குலுங்கியழ தனுஜாவும் தீப்தியும் அவரை ஆதரவாய் தழுவிக்கொள்ள யசோதாவும் வள்ளியம்மையும் அவரைத்தேற்ற அழுதுகொண்டிருந்த மஞ்சுளாவின் நினைவுகள் பின்னோக்கிச்சென்றன.

'மஞ்சுளா-மாதவி இருவரும் உயிர்த்தோழிகள், தன் தங்கையின் தோழியாய் முதன்முதலில் மஞ்சுளாவை கண்ட ராஜசேகருக்கு அவர்மேல் காதல்வர தன் விருப்பத்தைக் கூறியபோது முதலில் மறுத்த மஞ்சுளா, ராஜசேகரின் குணத்திலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு அவரை ஏற்றுக்கொள்ள, அவளின் படிப்பு முடிந்தும் ராஜசேகருக்கு வேலை கிடைக்கும்வரை காத்திருந்தவர்கள், வேலை கிடைத்ததும் திருமணம் செய்ய முடிவெடுக்க, மஞ்சுளாவின் வீட்டில் அடியோடு எதிர்க்க, ராஜசேகரின் தந்தை நல்லசிவமும் தன் எதிர்ப்பை காட்டினார். கணவனின் வார்த்தையை மீறாத ராஜசேகரின் தாய் வள்ளியம்மை, அவர்களை மனதால் ஏற்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இருவீட்டின் எதிர்ப்பைமீறி இருவரும் கரங்கோர்க்க, வள்ளியம்மையின் தூண்டுதலில் அதற்கு முழுக்க பக்கபலமாகயிருந்தது ராஜசேகரின் மூத்த தங்கை யசோதாவும் அவர் கணவர் பிரபாகரனும்தான். ஆனால் மஞ்சுளாவின் உயிர்த்தோழி மாதவியோ தந்தை சொல்லை மீறமுடியாமல் தோழியைவிட்டு எட்டி நின்றபோதும் தமக்கை தோழிக்கு உதவுவதை ஆதரித்ததோடு மனமகிழ்ந்து போனாள். திருமணம் முடித்த கையோடு ராஜசேகர் வேலைபார்த்த ஊரில் குடியேறினர் தம்பதியர். மனநிறைவு இல்லாவிட்டாலும் சந்தோசமாகவே வாழ்க்கையை ஆரம்பித்தனர். துவளும்போது ஒருவரை ஒருவர் அன்பாய் தாங்கிக்கொள்ள வாழ்க்கையும் அழகாகவே நகரத்தொடங்கியது.

திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டமாய் எல்லாத்தம்பதியரும் எதிர்பார்ப்பதுபோல் குழந்தை வரம்வேண்டி நிற்க, கடவுளோ வரம் வழங்கிட மறுக்க கலங்கிப்போயினர் இருவரும். ஒருபக்கம் பிள்ளைவரமின்றித் தவிக்க, மறுபக்கம் குடும்பத்துடன் சேரமுடியாத நிலையை எண்ணித்துடித்தாலும் ஒருவர்மேல் ஒருவர்வைத்த காதல் இருவரையும் சோர்ந்து போகாது வாழவைத்தது. அடிக்கடி இவர்களை யசோதாவும் பிரபாகரனும் மட்டுமே பார்க்க வருவர். அவர்கள் வரும்நாள் தம்பதியருக்கு ஏதோவோர் மனநிம்மதி. அதற்கு முக்கிய காரணம் யசோதாவின் செல்ல மகன். தங்களுக்கு பிள்ளையில்லாததை அவனைப் பார்த்தே தம்பதியர் தீர்த்துக்கொண்டனர். அவனும் அத்தை-மாமா என்று இவர்களுடன் நன்றாகவே ஒட்டிக்கொண்டான். ஆனாலும் சிலவேளைகளில் நிறைமாத சூல் தாங்கியிருந்த யசோதாவின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தால், இப்படி தாய்மையின் பூரிப்பை அடைந்துகொள்ள தனக்கொரு காலத்தை கடவுள் இன்னும் அருளவில்லையே என்ற ஏக்கமும் மஞ்சுளாவிடம் வந்துவிடும். அப்போது அவளை மடிதாங்கும் தாயாக ராஜசேகர் மாறிவிடுவார்.

இப்படியே மூன்று வருடம் கடக்க முதன்முதலில் மஞ்சுளா கருவுற்றாள். மகிழ்ச்சியின் எல்லையில் தம்பதியர் மிதந்தனர். கண்ணிமைக்கும் நொடியில் பத்துத்திங்கள் கரைய மஞ்சுளாவும் அழகான வெண்பாவையொன்றை பெற்றெடுத்தாள். அந்த மகிழ்வுடனே தங்களின் பெற்றோரைப் பார்க்கச்செல்ல அப்போதும் அவர்களை ஏற்க மறுத்து இருவீட்டினராலும் துரத்தப்பட அதற்குப்பிறகு இவர்களும் அங்கு செல்லவில்லை. நாட்கள் மாதங்களாகி வருடங்கள் கடக்க மஞ்சுளா-ராஜசேகர் தம்பதியருக்கு துஷாந்தினியுடன் தனுஜா, தீப்தியென இன்னும் இரண்டு பெண் குழந்தைகளாகின. யசோதாவிற்கும் தேவேஷ்வா, விஷ்வானாந்தனுடன் மேலும் ஸ்ரீவர்ஷினியென ஒருபெண்ணும் பிறந்தாள். மாதவிக்கும் நந்தினி,நகுலன்,நவீன் என மூன்று குழந்தைகளிருந்தன. அப்போதும் மஞ்சுளாவின் வீட்டிலும் நல்லசிவமும் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தருணத்தில் நல்லசிவம் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானார் தன் இறுதிநாட்களில், தான் செய்த தவறையுணர்ந்து மகன்-மருமகளை அழைத்து மன்னிப்பை வேண்டியவர் அதற்குப் பரிகாரமாய் மகனுக்கே தான் வாழ்ந்த வீட்டை எழுதிவிட்டு அன்றிரவே தன் கடைசிப்பயணத்தை தொடர்ந்தார். தந்தை தன்னை ஏற்றுக்கொண்டதை எண்ணி மகிழ்ந்தபோதும் ராஜசேகர் உடனே அவ்வீட்டில் குடியேற விரும்பவில்லை.

ல்லசிவம் இறந்து நான்கு மாதத்திலே மஞ்சுளா-ராஜசேகர் வாழ்வில் விதியும் தன் விளையாட்டைக் காட்டியது. ராஜசேகர் பொறியியலாளராய் பணிபுரிந்த இடத்தில் அன்றைய வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தபோது கவனக்குறைவால் மாடியிலிருந்து தவறி கீழேவிழ, அவரை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்ததோடு அவர் வீட்டிற்கும் தகவல் சொல்ல பதறிவந்த மஞ்சுளா செய்வதறியாது திகைக்க, ராஜசேகரின் குடும்பத்தினரும் செய்தியறிந்து பதறி வந்தனர். வள்ளியம்மையோ பலகட்டுக்களுடன் கட்டிலில் கிடந்த மகனைப்பார்த்து வாய்விட்டுக்கதற, அவரின் கதறலில் அத்தனை நேரமும் திக்பிரமை பிடித்ததுபோல் நின்றிருந்த மஞ்சுளாவும் கதறித்தீர்க்க, பார்த்திருந்த யசோதாவும் மாதவியும் இணைந்துகொள்ள, பிரபாகரனும் ரவிச்சந்திரனும் பெண்களை எப்படி சமாதானப்படுத்துவதென புரியாமல் தவிக்க, அங்கு வந்த வைத்தியர் அவர்களை அதட்டியதில் பெண்களின் சத்தம் நின்றதே ஒழிய கண்ணீர் நிற்கவில்லை. ஒருவாரம் அனைவரையும் பதறவைத்தவர் அன்று கண்விழித்ததும் தன் மகனின் கைகளை பற்றிய வள்ளியம்மை, கணவருக்கும் சேர்த்து மன்னிப்புவேண்ட மகனோ அவரை ஆதரவாய் தழுவிக்கொண்டான். தந்தையின் எதிர்ப்பில் தமையனை விலக்கிவைத்த மாதவியும் தமையனிடம் மன்னிப்புக்கோர

"நான் உங்களை மன்னிக்கனுமென்றால் என் மஞ்சுவை நீங்க மனசார ஏத்துக்கனும்." மூச்சு வாங்கப் பேசியவரை தடுத்த மாதவியின் கணவர் ரவிச்சந்திரன்

"ராஜசேகர் உங்களை கோவிச்சுட்டு நாங்க விலகியிருக்கல்ல. மாமாவோட வார்த்தைக்காகத்தான் அப்படியிருந்தோம். ஆனாலும் யசோதாவும் பிரபாகரண்ணாவும் உங்க வீட்டுக்கு வந்தப்போ நேரடியா இல்லாட்டியும் மறைமுகமா நாங்களும் ஆதரிச்சோம். எப்ப மாமாவே அதை உணர்ந்தாரோ அப்பவே மஞ்சுளாவும் இந்த குடும்பத்துல ஒருத்தவங்க ஆகிட்டாங்க. எதைப்பத்தியும் கவலைப்படாம சீக்கிரமா குணமாகி வாங்க நம்ம எல்லோரும் ஒரேகுடும்பமா சந்தோசமாயிருக்கலாம்." என்றதும் அவர் உதட்டில் வருத்தமான மெல்லிய முறுவலொன்று பூத்தது. அத்தனையும் பார்த்துக்கொண்டு ஒதுங்கி நின்ற மனையாளை கண்களால் அழைத்தவர் அவள் கரங்களை தன் கரங்களில் ஏந்த மஞ்சுளாவின் கண்களோ கண்ணீரை உகுத்தது.

"மஞ்சும்மா, புள்ளைங்க எங்க?" கேட்டதும் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார் யசோதா. தன் செல்வங்களை அணைத்து முத்தமிட்டவர் யசோதாவிடமும் பிரபாகரனிடமும்

"யசோ, அத்தான் நீங்க ரெண்டுபேரும் இல்லையென்றால் நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்போம். அதுக்கு முதல்ல நன்றி, இனியும் என் குடும்பத்துக்கு நீங்கதான் பக்கபலமாயிருக்கனும் வாழ்நாள் முழுக்க."

"இதை நீங்க சொல்லனுமாண்ணா, அது எங்க கடமை."

"ராஜசேகர், என்னதிது நன்றியெல்லாம், யசோவுக்கு நீங்க அண்ணனென்றால் நான் மஞ்சுளாவை என் சொந்த தங்கச்சிமாதிரித்தான் பார்த்துகிட்டேன். இதுக்கெல்லாம் யாராவது நன்றி சொல்லுவாங்களா? நன்றி சொல்லி எங்களை வேற்றாளாக்கிடாதீங்க, ப்ளீஸ் ராஜசேகர்."

"இது உங்க பெருந்தன்மை, ஆனால் இன்றைக்கு சொல்லாட்டி இனி சொல்ல முடியாமக்கூட போயிடும் அதனாலதான் சொன்னேன்." என்றவர் சிறிதுநேரம் எதுவும் பேசாது தன் மனையாளையும் குழந்தைகளையுமே வைத்த கண் வாங்காது பார்த்திருந்தவர்

"மஞ்சும்மா! என்னால சொத்துபத்தென்று எதையும் சேர்த்துவைக்க முடியல்ல. என்னால முடிஞ்சதா பேங்க்ல கொஞ்சம் காசும் உனக்கு சிலநகைகளையும்தான் சேர்க்க முடிஞ்சுது, அதுக்காக என்னை மன்னிச்சிடும்மா."

"என்ன ராஜ் ஏன் இப்படியெல்லாம் கதைக்குறீங்க?"

"நீ எதுவும் கதைக்காதம்மா, நான் சொல்லுறதமட்டும் கேளு, நம்ம மகளுங்களை நல்லா பார்த்துக்கனும் அவங்க ஆசைப்பட்டதையெல்லாம் செய்யனும். அவங்களுக்கு நல்ல இடத்துல நல்லாப்படிச்ச மாப்பிள்ளையாப் பார்த்து சிறப்பா கல்யாணம் பண்ணிவைக்கனும். எல்லாத்துக்கும் மேல நீ எதை நினச்சும் கலங்கக்கூடாது எப்பவும் நான் உன்கூடத்தான் இருக்கேனென்று நினச்சுக்கனும். நீ என்றைக்கும் சந்தோசமா வாழனும் மஞ்சும்மா. அம்மா! என் மஞ்சு கூடவேயிருங்க. அவளுக்கு ஒருநல்ல அத்தையா, அம்மாவா என்றைக்குமிருக்கனும்." என்று தாரத்திடம் தொடங்கி தாயிடம் முடித்தவன் மீண்டும் மஞ்சுளாவிடம் திரும்பி

"இத்தனை நாள் வாழ்க்கையில நீ என்னையொரு நிறஞ்ச வாழ்க்கை வாழவச்சுட்ட, ஆனால் இந்த வாழ்க்கையில உனக்கு நான் குறையேதும் வச்சிருந்தா நம்ம காதலுக்காக என்னை மன்னிச்சிடு மஞ்சும்மா."

"ராஜ் ஏன் இப்படிக் கதைக்குறீங்க? எனக்கு பயமாயிருக்கு, நீங்க எந்தக்குறையும் எனக்கு வைக்கல்லப்பா. இந்த பத்துவருஷ வாழ்க்கையில அம்மாவா, அப்பாவா, நல்ல நண்பனா, யாருக்குமே கிடைக்காத சிறந்த கணவனா எல்லாமாவும் நீங்க இருந்திருக்கீங்க ராஜ். இந்த உலகத்துல என்னைவிட அதிஷ்டகாரி யாரிருக்கமுடியும். யாருக்கு இப்படியொரு புருஷன் கிடைக்கும்,
தயவுசெஞ்சு இன்னொருதடவை இந்தமாதிரி கதைக்காதீங்க என்னால தாங்கமுடியாது." மஞ்சுளாவின் வார்த்தையில் ராஜசேகரின் கண்கள் நனைய சுற்றியிருந்தவர்களை ஒருபார்வை பார்த்தவர் தன் மனையாளில் பார்வையை பதித்து அவள் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றியவாறே

"மஞ்சும்மா ஐ லவ் யூ. நம்ம புள்ளைங்களை நல்லாப்பார்த்துக்கோ." என்றவரின் வார்த்தைகள் தன் மனையாளின் நுதழிலே இறுதியாக இணைந்திட மஞ்சுளாவின் உலகமோ அக்கணமே ஸ்தம்பித்து நின்றது. சுற்றியிருந்தவர்கள் அழுதுகரைய மஞ்சுளாவோ கணவனையே பிரம்மை பிடித்ததுபோல் பார்த்திருந்தார். அதற்குப்பிறகு நடந்தவை எதுவும் அவர் மனதில் பதியவேயில்லை, அனைத்தையும் பிரபாகரனே அந்த வீட்டின் தலைமகனாயிருந்து பார்த்துக்கொண்டார். மூன்று நாட்கள் கடந்தபோதும் மஞ்சுளாவின் நிலையில் மாற்றமில்லாதுபோக பயந்துபோன யசோதாவும் மாதவியும் அவளின் மனச்சுமையை இறக்கி வைக்கக்கூற அத்தனை நாளும் அடக்கிவைத்த துக்கமெல்லாம் பீரிட்டுவர மடைதிறந்த வெள்ளமாய் பெருகிவந்த கண்ணீர் இன்றுவரை நிற்கவில்லை.

அன்றும் மஞ்சுளாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. தாயின் கண்கள் நனைவதை தாங்கமுடியாது அவரின் கன்னத்து நீரை தங்களின் பிஞ்சுக் கைகளால் துடைத்துவிட்டனர் அவள் பக்கத்திலமர்ந்திருந்த ஐந்து வயது துஷாந்தினியும் மூன்று வயதான தனுஜாவும், மகள்களின் செயலில் மேலும் நெஞ்சுவிம்ம இருவரையும் அணைத்துக்கொண்டு வாய்மூடி அழுதவரை பார்த்திருந்தவர்களின் கண்களும் கலங்க, தாயும் தமக்கைகளும் அழுவதைப் பார்த்து பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருவயதேயான சின்னச்சிட்டும் தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழத்தயாராக, அப்போதுதான் அறையினுள் நுழைந்த யசோதாவின் கண்களில் இக்காட்சிபட ஓடிச்சென்று அப்பிஞ்சை தன் கைகளில் அள்ளிக்கொண்டவர் மஞ்சுளாவின் புறம்திரும்பி

"மஞ்சு அழாதப்பா, பாரு உன்னைப் பார்த்து இதுங்களும் கண்ணைக் கசக்குது, அண்ணனோட இழப்பு எங்களாலேயும் தாங்கிக்கமுடியாத ஒன்றுதான். அதுலயும் வலியும் வேதனையும் உனக்குத்தான் அதிகமென்றும் நல்லாத்தெரியும். ஆனால் உன் பிள்ளைகளுக்காகவாவது நீ உன்னை தேத்திக்கிட்டு பழையமாதிரி இருக்கனும். நடந்ததையே நினச்சுட்டு இப்படி அழுதுட்டேயிருந்தா இவங்களை எப்படி உன்னால நல்லா பார்த்துக்கமுடியும் அண்ணனுக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாத்திக்கமுடியும். உன் மனசை மாத்திக்க மஞ்சு, இந்த பிள்ளைகளுக்காக. அண்ணா இல்லாமப்போய் மூனு மாசமாயிடுச்சு, ஆனால் தினமும் அவரை நினச்சே அழுதுட்டிருந்தா என்ன அர்த்தம் சொல்லு?"

"புரியுது யசோக்கா, ஆனாலும் என்னால முடியல்ல, எப்படி என் ராஜ் என்னை விட்டுப்போகலாம், அவருக்கு சாகவேண்டிய வயசாக்கா? என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாரே. மூனு பொம்பளை புள்ளைங்களையும் வச்சுகிட்டு இனி நான் என்னதான் செய்வேன். ஐயோ! ராஜ் ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு போனீங்க கூடவே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே. என்னால என் ராஜ் இல்லாததை ஏத்துக்கவே முடியல்லையே, என்கிட்ட சொன்னாரே காலம் முழுக்க என்கூடவே வருவேனென்று. இப்படி பாதியில விட்டுட்டு போயிட்டாரே. இப்போ நான் என்ன செய்வேன்." கதறித்துடித்தவளை தன்னோடு அணைத்து ஆறுதல்படுத்திய யசோதா,

"மஞ்சு! கட்டுப்படுத்திக்கோ, உன்னைப்பார்த்து புள்ளைங்களும் கவலைப்படுது பாரு, தனியா இங்கயிருக்க வேணாம், எங்ககூடவே ஊருக்கு வா. எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம்."

"இல்ல யசோக்கா அது சரிவராது. என் ராஜ்கூட வாழ்ந்த இந்த வீட்டைவிட்டு நான் எப்படி அங்க வாரது, நான் வரமாட்டேன். இது தெரிஞ்ச ஊர்தானே என்னால சமாளிச்சுக்க முடியும். அத்தைய உங்ககூடவே கூட்டிட்டு போயிடுங்க, அவங்களுக்கு பழக்கமில்லாத இடம் ரொம்ப கஷ்டப்படுறாங்க."

"இங்கப்பாரு மஞ்சு இது தெரிஞ்ச ஊர்தான் இல்லையென்று சொல்லல்ல, ஆனால் மூனு பொம்பளைப் புள்ளைங்கள வச்சுகிட்டு இந்த கேடுகெட்ட உலகத்துல தனியா எப்படி வாழப்போற. அதுவும் நீயொன்றும் வயசான கிழடுக்கட்டையில்லையே உன்னை நிம்மதியாத்தான் வாழவிட்டிடுவாங்களா? ஆம்பளையில்லாத வீடு அதச்செய்யுறேன், இதச்செய்யுறேனென்று ஆளாளுக்கு உரிமை எடுத்துட்டுவந்து உட்காரப் பார்ப்பாங்க. இதெல்லாம் உன்னால தனியாத்தடுக்க முடியுமா? இதுவே உன் உரிமையான வீட்டுல மாமியார், மச்சாளுங்க பாதுகாப்புல நீ வாழ்ந்தா, உன்னை யாரு நெருங்குவா சொல்லு?" இப்படியே விட்டால் சரிவராதென்ற எண்ணங்கொண்ட யசோதா தன்னுடன் வரக்கோர மஞ்சுளாவோ மறுத்து அமைதியாயிருக்க

"என்ன மஞ்சு அமைதியாயிருக்க, இப்போ உன் மச்சாளாக் கேக்கல்ல, உன்னோட அன்பான அக்காவா கேக்குறேன். தயவுசெஞ்சு எங்ககூடவே வந்துடு, உனக்கு உரிமையான என் அண்ணன் வீடு உனக்காக காத்திருக்கு. அதுக்காகத்தான் கூப்பிடுறேன், ப்ளீஸ் மறுக்காதே." யசோதா எடுத்துக்கூற

"மஞ்சும்மா! யசோ சொல்லுறதுதான் சரி, என்னாலயும் இங்கயிருக்க முடியல்ல, உங்களை இப்படி தனியா விட்டுட்டு போகவும் முடியல்ல, இதுவே நம்ம வீட்டுக்கு வந்தாயென்றால் நானும் இந்த பிஞ்சுகளோட முகத்தைப்பார்த்து நிம்மதியா இருந்துப்பேன். தயவுசெஞ்சு எங்ககூடவே வாம்மா நம்ம வீட்டுக்கே போயிடலாம்." தன் பங்குக்கு வள்ளியம்மையும் அவளிடம் மன்றாட

"மஞ்சு, எங்ககூடவே வந்துடு, நீங்க இங்க தனியாயிருக்கவேணாம். நம்ம எல்லோரும் ஒருகுடும்பமா வாழலாம். உன்னை இப்படித் தனியா விட்டுட்டு நாங்க அங்க நிம்மதியா இருக்கமுடியாது, புரிஞ்சுக்கடி எங்ககூடவே வந்திடு. எங்க அண்ணன்தான் எங்ககூடயில்லை அவர் புள்ளைங்களையாவது பார்த்து வாழ ஒருவாய்ப்புக் கொடுடி ப்ளீஸ் உன்னைக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன், மறுத்திடாதே." மாதவி தன் நண்பியின் காலில் விழாத குறையாகக்கெஞ்ச, பிரபாகரனும் ரவிசந்திரனும் தங்கள் பங்கிற்கு எடுத்துக்கூற அப்போதும் அமைதியாகயிருந்த மஞ்சுளாவை ஒருவாறு அதட்டி உருட்டி, கஷ்டப்பட்டு சம்மதிக்கவைத்து அவளை அழைத்துக்கொண்டு தங்களின் ஊரை நோக்கிச்சென்றனர் ராஜசேகரின் உறவுகள்.'

நினைவுகளிலிருந்து மீண்டவர் கணவனையும், மகளின் வார்த்தைகளையும் நினைத்து கண்களோயாது கண்ணீரைச் சொரிய, அத்தனை நேரமும் அமைதியாய் பார்த்திருந்த பிரபாகரன் மஞ்சுளாவிடம் வந்தார்.

"மஞ்சு! நீ இப்படி அழாதம்மா, பார்க்க கஷ்டமாயிருக்கு. துஷாந்தி சின்னப்பிள்ளை அவ கோபத்துல பேசினதை பெரிசா எடுத்துட்டு நீயும் மனசை வருத்திக்குற. இங்கப்பாரு, அவ சொல்லுறதுலயும் ஒருநியாயமிருக்கு. அவளுக்கும் படிக்கனுமென்று ஆசையிருக்கும்தானே. அவ படிச்சு நல்ல வேலையில சேரட்டும், பிறகு கல்யாணம் பண்ணிவச்சுடலாம். அவளுக்கு இப்போதானே இருபதாச்சு."

"அவதான் குடும்ப நிலமை விளங்காம கதைக்குறா என்றால் நீங்களுமா? அண்ணா! அவ மனசுல யாராவது இருக்காங்களோ அதனால மறுக்குறாளோன்னு அதப்பத்தியும் கேட்டுப்பார்த்துட்டேன், அப்படியொன்னும் இருக்குறதாவுமில்ல ஆனாலும் மறுத்துட்டிருக்கா. எனக்கு இன்னும் ரெண்டு பொம்பளைப்புள்ளைங்க இருக்குறாங்க, இவளை இப்பவே கட்டிக்கொடுத்தாதான் ரெண்டு வருஷத்துக்குள்ள தனுவுக்கு சேர்க்கவேண்டியத சேர்த்து, கொடுக்கவேண்டியத கொடுத்து நல்லபடியா கல்யாணம்பண்ணி வைக்கமுடியும். அடுத்து தீப்தி வந்து நிப்பா அதுக்கும் சேர்க்கனுமில்ல. இவ சொல்லுறமாதிரி இவளுக்கே இன்னும் நாலுவருஷத்துல கல்யாணம் பண்ணினா தனுக்கும் தீப்திக்கும் எப்போ பண்ணுறது, அவங்களுக்கு எப்போ சேர்க்குறது. என் உடம்புல தெம்பிருக்கும்போதே இவங்களை கரசேர்த்திடனுமென்று நினைக்குறேன், என் ராஜுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாத்தனுமென்றும் நினைக்குறேன். அது தப்பா?"

"நாங்கெல்லாம் இருக்கோம்தானே அப்படியே விட்டுடுவோமா சொல்லு ஏன்டி இப்படிக் கதைக்குற?" யசோதா கோபப்பட

"யசோக்கா, இத்தனை வருஷமும் நீங்க செஞ்ச உதவிக்கே என்ன கைமாறு செய்யப்போறேனென்று தெரியல்ல. இதுக்குமேலயும் என்னைக் கடன்காரியாக்காதீங்க. என்னால முடிஞ்சளவு செஞ்சு இவங்களை நல்லபடியா கரையேத்திட்டேனென்றால் அதுபோதும், அதுக்குப்பிறகு வாழ்நாள் முழுக்க உங்ககூடவே இருக்கப்போறேன். அப்போ என்னை பாரமா நினைக்காம நல்லாப்பார்த்துக்கோங்க."

"அதை எங்ககிட்ட நீ சொல்லனுமா என்ன?"

"அண்ணா, எனக்கொரு உதவி செய்ங்க. எப்படியாவது, துஷாந்திய கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடுங்க, நல்ல இடத்துலயிருந்து ரெண்டொரு சம்மந்தம் வந்திருக்கு, அதைத் தவறவிட எனக்கு விருப்பமில்லை, அதுல ஒன்னப்பார்த்து முடிச்சிடலாமென்று நினைக்குறேன்."

"சரிம்மா நான் கதைக்குறேன். ஆனால் அவ ரொம்ப கோபமாயிருக்கா இப்பபோய் உடனே கல்யாணமென்றால் அவ கோபம் இன்னும் கூடுமே ஒழிய குறையாது. பிறகு எல்லாம் தப்பாயிடும், அவகிட்ட பார்த்து பக்குவமாத்தான் கதைக்கனும்." என்றதும் அப்போதைக்கு சமாதானமான மஞ்சு, மகள் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

தாயுடன் சண்டையிட்டு, கொட்டும் மழையில் வீட்டைவிட்டு வெளியேறியவள் நேராக அவன் வீட்டுக்குச்சென்று, அறைக் கதைவைத்தட்ட உள்ளிருந்து சத்தமின்றிப்போக, கதவை திறந்துகொண்டு துஷாந்தினி உள்நுழையவும், குளியலறையிலிருந்து அவன் வெளிவரவும் சரியாயிருந்தது. உடலிலிருந்து நீர் சொட்டச்சொட்ட தொப்பலாய் நனைந்து வந்தவளை அந்தநேரத்தில் தன் அறையில் எதிர்பாராதவன் திடுக்கிட்டு போனான்.



inbound418580907583728413.jpg

காணும்......

விமர்சனங்களுக்கு👇


 

Fasna

Moderator
போட்டி முடியப்போகுது இப்ப தான் போட்டோ போடுறிங்க
முடிச்சிடலாம் என்ற நம்பிக்கைதான்😉
 

Fasna

Moderator
கண்கள்-02

inbound7952584308729914320.jpg

திடுதிப்பென தன்முன்னே தொப்பலாய் நனைந்து வந்து நின்றவளைக்கண்டு முதலில் திடுக்கிட்ட தேவேஷ்வா தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"ஹேய், துஷானி இங்க என்ன பண்ணுற?"

"ஏன் அத்தான் நான் வரக் கூடாதா?" உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளைப் பார்த்து புன்னகைத்தவன்

"தாராளமா வரலாம், முதல்ல இப்படி வந்து உட்காரு. என்ன என் கண்ணம்மா முகமெல்லாம் வாடிக்கிடக்கு, யாரு என் கண்ணம்மாக்கு என்ன செஞ்சாங்க?" அப்போதும் அவள் அப்படியே நிற்க அவள் அருகில் சென்று தலையை வருடிக்கொடுத்தவன்

"என்னடா, என்ன பிரச்சினை அத்தை ஏதாவது சொன்னாங்களா?" அவள் ஆமெனத் தலையாட்ட

"என்ன சொன்னாங்க?" அவன் கேள்வியெழுப்ப அவள் மௌனம் சாதிக்க அந்த மௌனத்தின் அர்த்தம் புரிந்தவனாய்

"என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுறாங்களா?" பளிச்சிட்ட கண்களால் அவனை நோக்கியவள் மீண்டும் ஆமெனத் தலையசைக்க

"பண்ணிக்க வேண்டியதுதானே."

"அத்தான் விளையாடாதீங்க நானே செம கடுப்புலயிருக்கேன்."

"யாரு விளையாடினா, நான் சீரியஸாத்தான் சொல்லுறேன். இங்கப்பாரு துஷானி, அத்தை சொல்லுறதிலயும் ஒரு நியாமிருக்குடா, உனக்கு பின்னாடி தனுவும் தீப்தியும் இருக்காங்கயில்ல. மாமாக்கு கொடுத்த வாக்க நிறைவேத்திக்க உங்க மூனுபேரோட பொறுப்பையும் நல்லபடியா முடிச்சிடனுமென்று நினைக்குறாங்க. அன்றைக்கு அத்தை, எங்கப்பாம்மாகிட்ட ரொம்ப கவலைப்பட்டு பேசிட்டிருந்தாங்க. படிக்கப்போறேன் கல்யாணம் வேணாமென்று சொல்லிட்டிருக்கென்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. துஷானி, நீ மேல படிக்கனுமென்றாலும் கல்யாணம் பண்ணிட்டுப் படி." அவன் பேசப்பேச அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். அவள் பார்வை மாற்றத்தை உணர்ந்து என்னவெனக் கேட்க

"அத்தான், உண்மையாத்தான் என்னைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லுறீங்களா, அப்போ உங்களுக்கு ஓகேயா?"

"எனக்கு ஓகேதான், ஆனால் ஏன் என்கிட்ட கேக்குற?" புரியாமல் அவளை நோக்க

"அப்போ வாங்க அத்தான் இப்பவே போய் கல்யாணத் தேதிய குறிக்கச் சொல்லிடலாம்."

"ஹேய் கண்ணம்மா, உனக்கு ஓகேன்னா அம்மாகிட்டயே சொல்லிருக்கலாமே, எதுக்குப்பா நான்?"

"அத்தான், நான் உங்ககிட்ட மூனுவருஷத்துக்கு முன்ன ஒருவிஷயம் சொன்னேன். ஞாபகமிருக்கா?"

"என்ன சொன்ன நினைவில்லையே...." அவனை முறைத்தவள் அப்போதும் அவன் என்னவென சிந்தித்துக்கொண்டிருக்க அவளே அந்நாளை ஞாபகப்படுத்தினாள்.

"எனக்கு ஒருத்தர ரொம்ப பிடிச்சிருக்கு அவரத்தான் கட்டிக்கப் போறேனென்று சொன்னேனில்ல." அவள் கூறியதில் நினைவு வந்தவனாக தலையாட்டியவன்

"ஆனால் அதை இப்பயுமா நினச்சிட்டிருக்க? நீ சும்மா விளையாட்டுக்குச் சொல்லுறேன்னு நான் அதை அப்பவே மறந்துட்டேன்டா சோரி, இப்பவும் உன் மனசுல அந்தக் காதலிருந்தால் இந்த விசயத்தை அத்தைக்கிட்டயே சொல்லிருக்கலாமே, அவங்க சந்தோசப்பட்டு உன் கல்யாணத்துக்கு இப்பவே நாள் குறிச்சிருப்பாங்க."

"அன்றைக்கு நான் உங்ககிட்ட சொன்னப்போ, முதல்ல நல்லாப்படி, நானே வீட்டுல பேசுறேனென்று, நீங்கதானே சொன்னீங்க. இப்போ என்னைச் சொல்ல சொல்லுறீங்க. எனக்கு தனியாச்சொல்ல ஒருமாதிரியிருக்கு அத்தான், அதனால ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லலாம், என்ன அத்தான் போகலாமா?"

"சரி கண்ணம்மா, முதல்ல உன் ஆள் யாருன்னு சொல்லு, உன் லவ்வ அவன்கிட்ட சொல்லிட்டாயா?"

"இன்னுமில்ல....." அவள் இழுக்க

"ஹேய் துஷானி முதல்ல அவன்கிட்ட சொல்லு, அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கான்னு பார்க்கனுமில்ல."

"நிச்சயமா அவருக்கும் என்னைப் பிடிக்கும். நானென்றால் அவருக்கு அவ்வளவு இஷ்டம் தெரியுமா?" அந்த அவரில் ஓர் அழுத்தம் கொடுக்க, அதில் சிரித்தவன்

"சரிம்மா ஆனாலும் முறையா சொல்லி உன்மேல அவருக்கும் காதலிருக்குன்னு உறுதிப்படுத்திக்கனுமில்ல, அதனாலதான் சொல்லுறேன் ஒழுங்கு மரியாதையா உன் வாயைத் திறந்து உன் மானசீக காதலை அவருக்கிட்ட சொல்லிடும்மா." அவனும் அவரில் ஓர் அழுத்தம் கொடுத்தான்.

"அப்போ சொல்லிடவா?" படபடப்புடன் கேட்க

"ஃபெர்ஸ்ட் அதச்செய், அவருக்கு ஓகேன்னா, அடுத்த நிமிஷமே வீட்டுல பேசிடலாம்." அவன் கூறியதும் அவள் மதிமுகத்தில் நாணச் சிவப்பேற, இளங்கீற்றாய் புன்னகையொன்று அவள் செப்பிதழில் குடியேற, விழிகளோ பட்டாம்பூச்சியாய் படபடக்க, எதையோ அவள் அதரங்கள் மெல்ல உச்சரித்தபோதும் வார்த்தைகள் வாய் வழி தாண்டாது தடைபோட தன் முன் நின்றவனின் முகம் காண முடியாமல் தலை குனிந்தாள். ஒருநாளும் இல்லாது அவளின் உடல்மொழியில் ஏற்பட்ட மாற்றத்தை ஒருவித ஆச்சரியத்தோடு பார்த்திருந்தவனை மீண்டும் விழி மலர்த்திப் பார்த்தவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு

"அத்தான்....ஐ...ஐ லவ்யூ" என்றதும் அப்படியே அதிர்ந்து கற்சிலையாய் இறுகி நின்றான் தேவேஷ்வா. சிலையாய் நின்றவனை பலதடவை அழைத்தும் அவன் அப்படியே நிற்க அவன் தோள்தொட்டு உசுப்பிவிட்டவளை ஏறஇறங்கப் பார்த்தவனிடம் என்னவென கண்களால் வினவ

"என்ன இப்படி சொல்லிட்ட?"

"நீங்கதானே சொல்லு சொல்லுன்னு சொன்னீங்க அதான் பட்டென்று சொல்லிட்டேன். இதுக்குமேல சொல்லாமவிட்டா தப்பாகிடும். ஏன்னா இந்த அம்மா கல்யாணம் பண்ணிக்கோன்னு ரொம்ப தொல்லை கொடுக்குறா, இப்போ நீங்களே வந்து நம்ம லவ்வபத்திச் சொன்னீங்கன்னா சீக்கிரமா நான் மிஸிஸ் தேவேஷ்வா ஆகிடுவேன். உங்க அருமை அத்தையும் நிம்மதியாகிடுவாங்க." அவள் குதூகலிக்க அவனோ கோபமாக பெண்ணவளை முறைத்தவன்

"இது என்ன உளரல் துஷாந்தினி." முதல் தடவையாக முழுவதாய் தன் பெயரை உச்சரித்தவனை ஆச்சரியமாய் விழிவிரித்து நோக்க அவன் முகத்திலோ எள்ளும்கொள்ளும் வெடித்தது, கோபமாயிருக்கிறான் என்பது புரிந்தாலும் ஏனெனத் தெரியாது பதட்டத்தோடும் கவலையோடும் அவனை ஏறிட அவனோ மேலும் கோபத்துடன்

"நான் எப்போ உன்னை லவ் பண்ணுறேனென்று சொன்னேன். ஒருகணம் கூட அப்படி நினச்சதில்லை, உனக்கு இந்தமாதிரியொரு எண்ணம் எப்போ வந்துச்சு, அது வாரளவுக்கு நான் உன்கிட்ட அப்படியொன்னும் நடந்துக்கவேயில்லையே. என் உயிர்த்தோழியா, செல்லத் தங்கையாத்தான் உன்னை நினைச்சு கைப்புடிச்சேன், ஆனால் நீ இப்படி மனச அலைபாய விட்டிருப்பன்னா நிச்சயமா உன் கை என்ன? உன் நகத்தைக்கூடத் தொட்டிருக்கமாட்டேன், ச்சை இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கவேயில்ல." அவனோ வெறுப்பாய் முகம் திருப்ப அதில் உயிர் வலியை உணர்ந்தவள்

"அத்தான் என் காதலை இப்படிக் கொச்சப்படுத்தாதீங்க, நான் உங்களுக்குத் தங்கச்சியா? எப்படி அத்தான் உங்களால என்னை இப்படி நினைக்க முடிஞ்சது."

"எப்போயிருந்து உனக்கு இப்படியொரு கெட்ட எண்ணம்?" அவளை ஏறிடாமல் கேள்வி மட்டும் அவனிடமிருந்து பிறக்க

"எப்போயிருந்து நான் உங்களை காதலிச்சேனென்றே தெரியல்ல, ஆனால் மூனுவருஷம் முன்னாடி விஷ்வாத்தான் ப்ரண்ட்டு அந்த திவ்யாக்கா, உங்களுக்கும் ப்ரண்ட்டில்ல. உங்ககிட்ட அவ லவ்வ ப்ரபோஸ் பண்ணினா, ஞாபகமிருக்கா அத்தான்? அப்போ அந்த திவ்யாக்காவை அடிச்சு துவைக்கனும் போலயிருந்துச்சு. யாரைப்பார்த்தும் இதுவரை அப்படி தோனினதில்ல, அது ஏனென்று யோசிச்சேன், ஒருவிசயம் புரிஞ்சது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எங்க கிளாஸ்ல நவீன் அத்தான்தான் ஹீரோ. எத்தனைபேரு என் முன்னாடியே அவனுக்கு ப்ரபோஸ் பண்ணிருக்காங்க, ஏன் என்னையே தூது போக வச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. ஆனால் அப்போல்லாம் எனக்கு இப்படி தோணினதேயில்ல, விஷ்வாத்தான், நகுலத்தானெல்லாம் அவங்கள சைட்டடிக்கிற கேர்ள்ஸ், அவங்க கிரஷ்பத்திக்கூட என்கிட்ட சொல்லிருக்காங்க தெரியுமா? அதுல எனக்கு பொறாமையெல்லாம் வந்ததேயில்ல, அப்போதான் என் மனசு எனக்குப்புரிஞ்சது, நான் உங்களை காதலிக்குறேனென்று. அதை உங்ககிட்ட சொல்ல தைரியமில்லாம ஒருத்தரைக் காதலிக்குறேனென்று என் மனசுலயிருக்குற காதலை அப்பவே உங்ககிட்ட வந்து சொன்னேன், மனசை அலைபாய விடாம முதல்ல படிப்பை முடி, அதுக்குப்பிறகு வீட்டுல பேசி கல்யாணம் கட்டிக்கலாமென்று சொன்னீங்க. அப்போதைக்கு எனக்கும் அதுதான் சரியாப்பட்டிச்சு. அத்தான்! இப்போதான் என் மனசிலிருந்த காதலைச் சொல்லிட்டேனே ப்ளீஸ் என் காதலை ஏத்துக்கோங்க, உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்தானே அத்தான். அப்போ என் காதலை ஏத்துக்குறதுல என்ன பிரச்சனை. ப்ளீஸ் அத்தான் என்னை ஏத்துப்பீங்களா? பதில் சொல்லுங்கோ அத்தான்." அப்போதும் அவன் அவள் முகம் பார்க்காதிருக்க

"நான் இவ்வளவு பேசுறேன் என்னைப் பார்க்காம திரும்பி நிக்குறீங்க எனக்கு பதில் சொல்லுங்க அத்தான். முதல்ல என்னைப் பாருங்கத்தான் நீங்க இப்படி முகம் திருப்புறதைப் பார்க்குறப்போ மனசு ரொம்ப வலிக்குது." என்றவள் கைகளால் முகத்தை மூடியழுதிட, அத்தனை நேரமும் விறைப்பாய் நின்றிருந்தவன் அவள் அழுவதைத் தாங்கமுடியாமல் அவளருகில் சென்று தலையை வருட, அடுத்தநொடி அவனை கட்டிக்கொண்டு அழுது துடிக்க, அவள் அழுகை ஓயும்வரை காத்திருந்தவன் அவளை அமரவைத்து அவள் முன்னே தானும் அமர்ந்து பெண்ணவளின் கைகளை தன் கரங்களுக்குள் அடக்கியவன்

"துஷானிம்மா, உன் மனசு எனக்கு புரியுதுடா, இங்கப்பாரு இது காதல் இல்லடா, இந்த வயசுல எல்லோருக்கும் வர்ர இன்பாக்சுவேஷன் அவ்வளவுதான். பதினேழு வயசுல ஒருத்தர் மேல காதல் என்று நீ வந்து சொன்னப்போ அறியாத வயசுல தெரியாம வந்த காதலென்றுதான் நான் நினச்சேன். அதனாலதான் இப்பக்கூட எனக்கு அந்த விசயமே மறந்துடுச்சு, அதை பெரிசா எடுத்துக்கிட்டு உன் படிப்பை நீ விட்டுடக் கூடாதுன்னுதான் முதல்ல நல்லாப்படின்னு சொன்னேன், ஆனால் அது நானாயிருப்பேனென்று கனவிலும் நினைக்கல்ல, துஷானிம்மா! சின்ன வயசுலயிருந்து நான் உன்கூடவே இருக்கிறேன் மத்தவங்களவிட என்கூடவே நீயும் அதிக உரிமையாப் பழகுறதால உனக்கு அப்படித்தோனிருக்கு. திவி காதலைச் சொன்னப்போ அத்தனை நாளும் உனக்கே உரிமைன்னு நினச்ச உன் அத்தானை யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாதென்ற உரிமை உணர்வுலதான் திவியைப் பார்த்ததும் உனக்கு அப்படித்தோனிருக்கு, அதை நீ காதலென்று தப்பா உணர்ந்திருக்கடா."

"அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்கல்லையா அத்தான்? என்னைக் கட்டிக்கிட்டா உங்களை நான் நல்லாப்பார்த்துப்பேன், நல்ல மனைவியா இருப்பேன். ஓகே சொல்லுங்க அத்தான்."

"ஐயோ துஷானி, உனக்கு எப்படிப் புரியவைக்குற சத்தியமா உன்மேல அப்படியொரு எண்ணமே எனக்கில்லம்மா. சரி நீ சொல்லுறமாதிரி உனக்காக நான் உன்னைக் கட்டிக்க சம்மதிக்குறேனென்று வை, இப்பதானேடா நான் படிப்ப முடிச்சிட்டு தொழில் ஆரம்பிச்சிருக்கேன், இதுக்குப்பிறகுதான் சேவிங், கல்யாணம்பத்தியெல்லாம் யோசிக்கமுடியும். அதவிடு வர்ஷி கல்யாணம் பண்ணிக்காம நாம எப்படி கல்யாணம் பண்ணிக்குறது. அவ கல்யாணமெல்லாம் முடிச்சு நானும் செட்டிலாக குறஞ்சது மூனு வருஷமாலுமெடுக்கும்." அவளுக்கு புரியவைக்கும் நோக்குடன் மிக நிதானமாக பேச

"நான் காத்துட்டிருக்கேன் அத்தான்."

"அதுவரை உங்கம்மா பொறுத்துக்கமாட்டாங்கடா, புரிஞ்சுக்கோ."

"அவங்களப்பத்தி எனக்கு கவலையில்ல."

"ஏய், என்ன இவ்வளவு சுயநலமா கதைக்குற, உங்களுக்காகத்தானே உங்கம்மா இவ்வளவு கஷ்டப்படுறாங்க, ஒருவார்த்தையில அவங்களைப்பத்தி கவலையில்லன்னு சொல்லுற"

"அவங்களும் என்னைப்பத்தி யோசிக்கல்லையே."

"உன்னைப்பத்தி யோசிச்சதாலதான் உனக்கு கல்யாணம் பண்ணனுமென்று துடிக்குறாங்க அவங்க சொல்லுறதை புரிஞ்சுக்கோ, முதல்ல இது காதலேயில்ல."

"என்னை சமாதானப்படுத்தினதெல்லாம் போதும் உங்களுக்கு என்னைக் கட்டிக்க ஓகேயா? இல்லையா? அதமட்டும் சொல்லுங்க."

"துஷானி சத்தியமா உன்னை அந்தமாதிரி நினைக்கமுடியல்ல, ஒருவேளை உனக்காக கட்டிக்க சம்மதிச்சாலும் உன்னை என்னால என் மனைவியாப் பார்க்க முடியாதும்மா, நம்ம ரெண்டுபேரோட வாழ்க்கையும் அழிஞ்சிடும் புரிஞ்சுக்கோடா. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடு எனக்கு ஓகேயில்ல." மென்மையாகவே அவளுக்கு எடுத்துக்கூற

"இதுதான் உங்க முடிவா?" அவனும் ஆமென தீர்க்கமாகக்கூற அவளோ அவனை விறைப்பாகப் பார்த்தவள்

"அத்தான், இன்றைக்கு முழுக்க.....இல்லல்ல எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்கோங்க ஒருகிழமையோ ஒருமாசமோ இல்லை வருஷமென்றாலும் பரவாயில்ல ஆனால் நல்லாயோசிச்சு, என்னைக்கட்டிக்க சம்மதம் சொல்லனும்." அவள் ஆணையிட

"துஷாந்தினி, உன்னை என் தங்கச்சியாத்தான் பார்த்தேன் என்னால உன்னைக் கட்டிக்கமுடியாது. என் மனைவியென்ற அந்தஸ்த்தை உனக்கு கொடுக்கவே முடியாது. என் மனசு அதுக்கு எப்பயும் ஒத்துக்கவே ஒத்துக்காது." மென்மையைக் கைவிட்டு வன்மையாய் பெண்ணவளிடம் பதிலளிக்க

"எனக்கு நீங்க அண்ணனா வேணாம், புருஷனாத்தான் வேணும்." பளாரென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைய எதிர்பாராமல் விழுந்த அறையில் தடுமாறி, பின் தன்னை நிலைப்படுத்தியவள்,

"இனியொரு தரம் என்னைத் தங்கச்சின்னு சொல்லாதீங்க, நீங்க எனக்கு வேணும் அத்தான்."

"இவ்வளவு சொல்லுறேன் திரும்பயும் அதையே சொல்லுற?"

"அத்தான் எனக்கொரு விசயம் விளங்கல்ல." அவன் முகத்தில் கேள்வி ரேகைகள் எழ

"ஏன் அத்தான் எதுக்காக அந்த திவ்யாவை வேணாமென்று சொன்னீங்க, எனக்காகத்தானே."

"நிச்சயமா உனக்காகயில்லை, அப்போ திவிமேல எனக்கு அப்படி எதுவும் தோனல்ல அதனால சொன்னேன்."

"ஓ....அப்போ அவங்களும் தங்கச்சிதானா?"

"அப்படியும் தோனல்ல."

"அப்போ காதலியா, பொண்டாட்டியா தோனுதோ?"

"இனி அப்படித்தோனவும் வாய்ப்பிருக்கு."

"அத்தான் இப்படிக் கதைக்க வேண்டாம் உங்களுக்கு பொண்டாட்டின்னா அது நான் மட்டுந்தான். வேறயாரும் அந்த இடத்துக்கு வரமுடியாது, வரவும் விடமாட்டேன். எனக்கு நீங்க வேணும், எனக்கு மட்டுமே வேணும். ஐ லவ்யூ அத்தான், ஐ லவ்யூ சோ மச்." உரக்கக் கத்த அவள் வாயைப் பொத்தியவன்

"கத்தாதே" என்றதும் தன் வாயை மூடியிருந்த அவன் கரங்களில் தன் இதழை ஒற்ற, பதறி கையை விலக்கியவன் அவளை முறைக்க கண்ணடித்து சிரித்தவள்

"என்னைக்கட்டிக்க ஒத்துக்கோங்க அத்தான்."

"ச்சீச்சீ, உன்னைப் பார்க்கவே எனக்குப்பிடிக்கல்ல, அருவருப்பாயிருக்கு. எவ்வளவு சொல்லியும் சொன்னதையே சொல்லிட்டிருக்கல்ல, இப்பவே என் ரூமைவிட்டு வெளிய போ." வெளியே கேட்ட இடிமுழக்கத்தை விட தேவேஷ்வாவின் கர்ஜனை மிக பயங்கரமாகயிருந்தது. அந்த சத்தத்தில் பெண்ணவளோ அதிர்ந்து நிற்க அவள் கைகளைப்பற்றி தரதரவென இழுத்து வந்தவன் வெளியே தள்ளி கதவை அறைந்து சாத்தினான். அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழுந்தவள் கைகள் தரையில் முட்டிக்கொள்ள அந்தஇடத்தில் வலித்தது. அதைக்கூட பொருட்படுத்தாது அவன் பூட்டிச்சென்ற கதவையே வெறித்தவள் மீண்டும் தன்னை திடப்படுத்திக்கொண்டு எழுந்து கதவை வேகமாக தட்ட, அவனா திறக்கப் போகிறான். அப்போதும் விடாது தட்டியவள் ஒருமுடிவெடுத்தவளாய்

"அத்தான், உங்களுக்கு எண்ணி பத்தேநாள்தான் டைம், அதுக்குள்ள என் காதலை ஏத்துட்டு எங்கம்மாக்கு மருமகனாகப் பாருங்க." அவனுக்கு கேட்கும்படி உரக்கக்கூறியவள் அவ்விடம்விட்டு நகர, அவள் கூறிய வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவனுக்கு கோபம் இன்னும் அதிகரிக்க, தன் மனதில் இவள் துளியுமில்லை என்பதை இவளுக்கு எதைச்சொல்லி புரியவைப்பதென சிந்தித்தவனுக்கு தலை வலிக்கத்தொடங்க அப்படியே தலையைப் பிடித்தவனாய் கட்டிலில் சாய்ந்தான்.

றுநாள் அந்திமாலைவேளை எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் துஷாந்தினி. அப்போது அங்கு வந்த பிரபாகரனைக் கண்டவள் எழுந்து நிற்க அவளை அமரச்செய்தவர் தானும் அமர்ந்து முந்திய நாளின் நிகழ்வுபற்றி பேசியவர் அவள் அன்னை மஞ்சுளாவின் மனக்கவலையையும் எடுத்துக்கூறி, அவளை திருமணம் செய்துகொள்ளும்படி மன்றாட்டத்துடன் வேண்ட

"கொஞ்சநாள்ல நானே முடிவு சொல்லுறேன் மாமா. அதுவரை என்கிட்ட இதப்பத்தி எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்." என்று அத்துடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவள் அவள் உள்ளங்கவர்ந்தவனின் பதிலிற்காக காத்திருந்தாள். ஆனால் பதில்கூற வேண்டியவனோ அவள் இருக்கும் திசைக்கே வராது அவளைவிட்டு மெல்ல மெல்ல விலகி தூரச்சென்று கொண்டிருந்தான்.


♦♦♦♦♦


வாரம் ஒன்று கடக்க அன்று கம்யூட்டர் வகுப்புக்குச்செல்ல தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தாள் துஷாந்தினி, ஹாலில் கூடியிருந்த அனைவரையும் கண்டு நின்றவளின் பார்வை முழுக்க முன்னறைக்கதவில் ஒருகாலை மடக்கி ஊன்றியவாறு கதவிலே முதுகை சாய்த்துநின்றவன் மீதேயிருந்தது. ஆனால் அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காமலிருக்க பெண்ணவளின் உள்ளம் உள்ளே நொறுங்க அந்த வலியுடன் வெளியேற எத்தனித்தவளை மஞ்சுளாவின் குரல் தடுத்துநிறுத்தியது. தாயின் குரலில் அவர் புறம் திரும்பாது அப்படியே நிற்க அவளருகில் வந்தவர்

"துஷாந்தி, எங்க போற?"

"இதென்ன கேள்வி கம்யூட்டர் கிளாஸுக்குத்தான்."

"எனக்கொரு பதில் சொல்லாம, நீ எங்கேயும் போகவேணாம்." அவள் கேள்வியாய் நோக்க

"இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கப்போறாயா, இல்லையா? இன்றைக்கே இந்த நிமிஷமே உன் பதில் எனக்குத் தெரிஞ்சாகனும் சொல்லு." தாயின் கேள்விக்கு பதில்கூறாது பிரபாகரனிடம் கேள்வியைத் தொடுத்தாள் பெண்.

"மாமா உங்ககிட்டதானே சொன்னேன், கொஞ்சநாள்ல சொல்லுறேனென்று அம்மாகிட்ட சொல்லல்லையா?" பிரபாகரன் பதில் சொல்லும் முன் அவரை முந்திக்கொண்ட மஞ்சுளாவோ

"அண்ணன் எல்லாம் சொல்லிட்டார். உன் கொஞ்சநாள் எத்தனைன்னு எனக்கு நல்லாத்தெரியும். அதுவரை காத்திருக்க என்னாலமுடியாது, சொல்லு இப்பவே கல்யாணம் பண்ணிக்க சம்மதமென்று சொல்லு."

"சொல்லுறேன் சீக்கிரமாவே சொல்லுறேன் ஆனால் இப்பயில்ல."

"எப்போ சொல்லப்போற? ஏன்டி என்னைப் பாடாப்படுத்துற கல்யாணத்துக்கு ஒத்துக்கோவேன், உன்னைக் கெஞ்சிக்கேக்குறேன்."

"நான் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு, இப்போ எனக்கு கிளாஸுக்கு டைமாச்சு நான் போயிட்டுவாரேன்." என்று திரும்பியவளின் கைகளைப்பற்றிய மஞ்சுளா

"இப்படிக் கொஞ்சங்கொஞ்சமா என்னை சாகடிக்குறதுக்கு மொத்தமா சாகடிச்சுடுடி. என்னடி முறைக்குற?" என்றவர் கோபம் கொண்டவராய் அவளை அடிக்க மற்றையவர்கள் மஞ்சுளாவைத்தடுக்க அவர்களை விலக்கிவிட்டு தன் கை வலிக்கும்வரை அவளை அடித்து ஓய்ந்தவர்

"இங்கப்பாரு துஷாந்தி, உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்து, அவங்களும் உன் போட்டோ பார்த்து சம்மதம் சொல்லி கல்யாணம் முடிவாகியிருக்கு, இப்போ எனக்கு உன் சம்மதம் மட்டுந்தான் வேணும்." தாயின் கூற்றில் அதிர்ந்தவள் தேவேஷ்வா புறம் திரும்ப அவனோ அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதுபோல் நிற்க அவள் கண்களில் நீர்துளிர்க்க ஆரம்பித்தது. கண்களைச் சிமிட்டி கண்ணீர் கன்னம் வழி கீழிறங்காது தடுத்தவள் தன்னைப் பற்றியிருந்த தாயின் கைகளை உதறிவிட்டு விடுவிடுவென சென்றவளைப்பார்த்து

"இதுக்கு நீ சம்மதிக்கல்ல, உங்கம்மா இனி உனக்கு உயிரோடயில்ல." மேலும் கோபத்தோடு கத்திய மஞ்சுளா, ஆற்றாமையோடு கதிரையில் தொப்பென அமர்ந்து குலுங்கியழ மற்றையவர்கள் எல்லோரும் அவரைச் சமாதானப்படுத்துவதில் ஈடுபட, விடுவிடுவெனச் சென்ற துஷாந்தினியோ முன்னறையில் கதவில் சாய்ந்துநின்ற தேவேஷ்வாவின் முன்னால் வந்து

"அத்தான் உங்களுக்கு நான் பத்துநாள் டைம் கொடுத்தேன், ஆனால் இப்போ எனக்கு அந்த அவகாசம் கூடயில்ல. ப்ளீஸ் அத்தான் உங்களுக்கு என்னைக்கட்டிக்க சம்மதமா?" அவனுக்கு மட்டும் கேட்குமளவிற்கு குரலைத் தணித்துப்பேச

"இங்கப்பாரு துஷாந்தினி, பத்துநாள் இல்லை பத்துவருஷம் தந்தாலும் என் முடிவு ஒன்றுதான் என்னால உன்னைக் கட்டிக்கவேமுடியாது. எனக்கு உன்மேல அந்தமாதிரி ஒருஉணர்வே வரல்ல பிறகு எப்படி உன்னைக் கட்டிக்கிறது. மன்னிச்சிடு தயவுசெஞ்சு இந்தப் பைத்தியகாரத்தனமெல்லாம் விட்டுட்டு அத்தை சொல்லுறதைக்கேளு."

"என் காதல் உங்களுக்கு பைத்தியகாரத்தனமா இருக்கில்ல. ஓம் அத்தான் நான் பைத்தியகாரிதான் அதுவும் உங்கமேல."

"லூசுமாதிரி கதைக்காதே!"

"உங்ககிட்ட அடிக்கடி ஒன்னு கேட்பேன் ஞாபகமிருக்கா? எப்பயும் என்கூடவே இருப்பீங்கதானே என்னை விட்டுட்டு போயிடமாட்டீங்களேன்னு, அதுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க தெரியுமா? 'கண்ணம்மா எப்பவும் உன் அத்தான் உன் கூடவேதான் இருப்பேன்' என்று சொல்லுவீங்க. அப்பெல்லாம் உங்களுக்கும் என்னை ரொம்பப்பிடிக்கும் என்மேல காதலுமிருக்கு அதனாலதான் இப்படி சொல்லுறீங்கென்னு நினைச்சேன், ஆனால் இப்போதான் புரியுது நீங்க சும்மா சொல்லிருக்கீங்கன்னு. இப்போ என் காதலைச் சொன்னபிறகும் உங்களுக்கு என்மனசோ அதிலிருந்த காதலோ கொஞ்சமும் புரியவேயில்லல்ல. சரி போனதுபோகட்டும் கடைசியாய் கேக்குறேன் உங்களுக்கு என்கூட வாழமுடியுமா அத்தான்?" கண்களில் நீர்வடிய அவன் பதிலுக்காய் விழிவிரித்து நோக்கியவளைப் பார்த்ததும் அவன் உள்ளம் வலித்தாலும் அதற்காக விருப்பமேயில்லாமல் அவள் கண்ணீருக்காக சம்மதித்து இருவர் வாழ்வையும் பாழாக்க முடியாததால் முகத்தை கோபமாக வைத்தவன்

"நீ கோடிமுறை கேட்டாலும் என் பதில் ஒன்றுதான் என்னால உன்னை கட்டிக்கவும்முடியாது. அந்தமாதிரி உறவுல உன்னை எண்ணவும் முடியவேமுடியாது." அவன் பதிலில் மேலும் அவள் விழிநீர் கீழிறங்கி கன்னத்தைத் தாண்டி வழிய அதனை துடைக்காது அவனை நேரே நோக்கியவள்

"என்னைப் பிடிக்கல்லென்றால் அப்போ யாரைப் பிடிச்சிருக்கு. அந்த திவ்யாவும் உங்க மனசுல இல்லையென்றீங்க,
அப்போ உங்க மனசுல வேறயாராவது இருக்காங்களா?" அவன் மௌனம் சாதிக்க

"உங்க மௌனமே அப்படி யாருமில்லன்னு சொல்லுது. அத்தான்! எப்படியோ யாரோ ஒருத்திய கட்டிக்கப்போறீங்க அது நானா இருந்துட்டுப் போறேனே, என்னையும் என் மொத்தக்குடும்பத்தையும் உங்களுக்கு நல்லாவேதெரியும். ஒத்துக்கோங்க அத்தான், ப்ளீஸ் என் மனசைப் புரிஞ்சுக்கோங்க, என் காதலை ஏத்துக்கோங்க, ப்ளீஸ் அத்தான், உங்க கால்ல விழுகிறேன்." என்றவள் விம்ம

"யாரு சொன்னா என் மனசுல யாருமில்லைன்னு? இருக்கா என் மனசைக் கொள்ளைகொண்ட ஒருத்தியிருக்கா." அடிபட்ட வலியுடன் அவனை நோக்க

"நீ சொன்னபிறகுதான் எனக்கே புரிஞ்சுது, என் திவிமேல நான் வச்சக்காதல். என் இதயம் முழுக்க இப்போ என் திவிதானிருக்கா. ஐ லவ் ஹேர்" பெண்ணவளின் இதயத்தில் வேலைப்பாய்ச்ச நொந்தவளோ பொய்யெனக்கூற அதில் கோபங்கொண்டவன்

"அதுதான் உண்மை. உன்னால ஏத்துக்க முடியாட்டி பொய்யாகிடுமா? இங்கப்பாரு துஷாந்தினி எனக்கு உன்னைப் பிடிக்கல்ல, திவியைத்தான் பிடிச்சிருக்கு அவளைத்தான் கட்டிக்கப்போறேன், இந்த பைத்தியதனமெல்லாம் விட்டுட்டு உங்கம்மா சொல்லுறதுக்கு ஒத்துக்கோ."

"முடியாது அத்தான்."

"நீ என்னை உண்மையாக் காதலிச்சிருந்தா இந்தக்கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. தயவுசெஞ்சு என் வாழ்க்கையை விட்டுப்போயிடு, அப்போதான் என்னால நிம்மதியா என் திவியக் கட்டிக்கமுடியும். உன் காதல் உண்மையென்றால் இதெல்லாம் செய்வ."

"என் காதல் நூறுவீதம் உண்மை அத்தான்."

"அப்போ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு, என்னை நிம்மதியா என் திவியோட சந்தோசமா வாழவிடு. ப்ளீஸ் முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சு உன் ஒருத்தி சந்தோசத்துக்காக எல்லோரையும் வேதனைப்படுத்தாதே!"

"அப்போ நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா அதுதான் உங்களுக்கு சந்தோசமும் நிம்மதியுமா இருக்குமா அத்தான்?" உயிர்வலியுடன் கேட்டவளிடம் ஈவிரக்கமின்றி ஆமெனத் தலையாட்டினான் தேவேஷ்வா. அவனை ஆழமாய் ஒருபார்வை பார்த்தவள், கண்களில் வழிந்த நீரை அழுத்தித் துடைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த தாயிடம் வந்தாள், அவள் பார்வை எங்கோ வெறித்திருக்க உள்ளம் முழுக்க ரணமாய் வலிக்க

"அம்மா இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்." என்று கூற மகிழ்வும் அதிர்வுமாய் மகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டவர் பெண்ணவளின் கன்னங்களின் இருபுறமும் முத்தமழை பொழிய பேதையவளோ எதையும் உணராது சிலையாக இறுகிநின்றாள், பின் தேவேஷ்வாவை தன் பக்கத்தில் அழைத்த மஞ்சுளா அவனையும் அணைத்தவர்

"தேவா! ரொம்பநன்றிப்பா, இத்தனைநாளும் எங்க யாராலும் செய்யமுடியாததை இந்த பத்துநிமிசத்துல நீ சாதிச்சுட்டடா. உன் ஒருவார்த்தைக்கு என் மகள்கிட்ட இப்படியொரு எதிர்வினை இருக்குமென்று தெரிஞ்சிருந்தா ஆரம்பத்துலயே உன் கால்ல விழுந்திருப்பேன் கண்ணா."

"அத்தை இது என் கடமை. உங்க சந்தோசமும் நிம்மதியும் ரொம்ப முக்கியமில்லை. அது விளங்குறமாதிரி நம்ம துஷானிக்கு எடுத்துசொன்னேன் அவ்வளவுதான். அவளும் விளங்கிக்கிட்டா. நான் சொல்லுறது சரிதானே துஷானி." எதுவும்கூறாது பெண்ணவளின் பார்வையோ 'என் காதல் உண்மையென்று இப்போதாவது நம்புகிறாயா?' என தேவேஷ்வாவிடம் வினா எழுப்ப அவன் முகத்தில் மகிழ்வின் சாயல், கண்டவள் உள்ளம் கண்ணாடித் துண்டுகளாய் உடைந்து சிதறியது.

"துஷாந்திம்மா அம்மாவுக்கு இப்போ எவ்வளவு சந்தோசமாயிருக்கு தெரியுமா? ஐயோ அத்தை, யசோக்கா, அண்ணா என் மகள் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா." குழந்தையாய் குதூகலித்த மஞ்சுளாவைப் பார்த்து மொத்தப்பேரும் சந்தோசமடைந்தனர். ஆனால் துஷாந்தினியோ அந்தக்குதூகலத்தில் கலந்துகொள்ள முடியாது தன் உள்ளங்கவர்ந்தவனையே வலியுடன் நோக்கியிருக்க, மஞ்சுளாவோ தன் பெண்மகளின் முகத்தை தன்புறம் திருப்பியவர்

"அம்மாடி, மாப்பிள்ளை பேரு ரிஷிதரன். நம்ம நந்தினியோட மச்சினர், மாதவி அத்தைக்கிட்ட அவங்க குடும்பத்தைப்பத்தி எல்லாம் விசாரிச்சிட்டேன், நல்லகுடும்பம், நம்ம குடும்பத்துக்கும் ஏத்தவங்க. நாளைக்கு அவங்க எல்லோரும் உன்னைப் பொண்ணு பார்க்கவராங்க. இந்தாம்மா மாப்பிள்ளை போட்டோ." மடமடவென்று ஒப்பித்து மேலே இன்னும் ஏதோ பேசத்தொடங்கியவரை கையுயர்த்தி தடுத்தாள் அவரின் புதல்வி.

"கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டீங்க, சொன்னேன். மத்தவிசயங்களை நீங்களே பார்த்துக்கோங்க. இனி நீங்க என்ன சொல்லுறீங்களோ அதைச்செய்யுறேன். என்கிட்ட எதுவும் சொல்லவும் வேணாம், காட்டவும் வேணாம்." என்றவள் தடதடவென்று படியேறி தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டதுதான் தாமதம் தன் காதல் மொத்தமாய் முடிந்ததை எண்ணி கதறித்தீர்த்துவிட்டாள்.

inbound6125183708343487413.jpg


காணும்.....

விமர்சனங்களுக்கு


https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 
Last edited:

Fasna

Moderator
கண்கள்-03

inbound4681556289581337369.jpg

முன் மாலைப்பொழுது, காலைவேளையில் உணவுக்காய் தன் கூட்டைவிட்டுப் பிரிந்துசென்ற பட்ஷிகளோ தங்கள் உறவுகளைக் காணும் ஆவலில் ஆரவாரித்துக் கொண்டு வானிலே வேகமாய் சிறகடித்துப் பறக்க, சிவப்பும் செம்மஞ்சளுமாய் மேற்குவானம் மெல்லச் சிவக்கத்தொடங்கிய வேளை தன் அறை பெல்கனியில் நின்று ஆர்பரித்துக்கொண்டு செல்லும் புள்ளினங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த துஷாந்தினியின் கவனத்தை ஈர்த்தன இருஜோடிப்புறாக்கள். அவள் அத்தான் வீட்டில் நின்ற மாமரத்தில் ஜோடியாய் வந்து அமர்ந்த புறாக்கள் இரண்டும் ஒன்றையொன்று உரசியபடி காதல் செய்துகொண்டிருக்க, பார்த்திருந்த துஷாந்தினியின் உள்ளமோ அந்த சின்ன பட்ஷிகள்போல் தான் ஆசைகொண்ட வாழ்க்கையை வாழமுடியாத தன் நிலையை எண்ணி வருந்தி நின்றவேளை அறையினுள் நுழைந்தனர் அவள் குடும்பத்துப் பெண்கள்.

"துஷாந்திம்மா இன்னும் ரெடியாகாம என்னடா செய்யுற? சீக்கிரம் வந்து ட்ரெஸ் மாத்திக்கோ, இங்கப்பாருங்க தனு, வர்ஷி அவளுக்கு கொஞ்சம் ரெடியாக ஹெல்ப் பண்ணுங்கோ." துஷாந்தினியிடம் ஆரம்பித்து மற்றையவர்களிடம் மஞ்சுளா முடிக்க, அப்போதும் அசையாமல் அவள் பார்வைமுழுக்க அந்த ஜோடிப்புறாக்களையே வெறித்திருக்க மஞ்சுளாவின் முகம் கோபத்தில் சிவக்கத்தொடங்கியது. அவரை சமாதானப்படுத்திய யசோதா, தான் பார்த்துக் கொள்வதாகக்கூறி துஷாந்தினியிடம் வந்தவர் அவள் தோள்தொட திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கு நின்ற யசோதாவைக் கண்டதும் அவள் புருவங்கள் லேசாக உயர, சற்றுநேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வரப்போவதை அவளுக்கு ஞாபகமூட்டியவர் தயாராகச்சொல்ல, சாவி கொடுத்த பொம்மையாய் அறையுள் வந்தவள், மாற்ற வேண்டிய ஆடையை கையிலெடுக்க மற்றையவர்கள் அறையைவிட்டு வெளியேறினர். நிதானமாக ஆடையை மாற்றியவள் அறையைத் திறக்க உள்நுழைந்த தனுஜாவும் வர்ஷினியும் அவளை அலங்கரிக்கத் தொடங்க அப்போதும் பதுமையாகவே அமர்ந்திருந்தாள் பாவை. பொன்னகையில் ஜொலித்தவளின் முகத்திலோ புன்னகையின்றி வாடியிருந்தது. ஒருவாறு மாப்பிள்ளை வீட்டார் வர அவர்களை வரவேற்று உள்ளழைத்து வந்தனர் துஷாந்தினி வீட்டார். அவர்கள் வந்தமர நலவிசாரிப்புகள் நடந்தேறின. பின் பெண்ணை அழைத்து வரச்சொல்ல யசோதாவுடன் மாதவியும் சென்று பெண்ணவளை அழைத்து வர,

"இது தாங்க எங்க வீட்டுப்பொண்ணு துஷாந்தினி." பிரபாகரன் பெண்ணவளை முறையாக அறிமுகப்படுத்த, அனைவருக்கும் வணக்கம்கூறி அமர்ந்த மலரவளின் மதிமுகம் கண்டு மயங்கிப்போனான் மாப்பிள்ளையாய் மங்கையைக் காணவந்த ரிஷிதரன். பாவையிலிருந்து கண்களை எடுக்கமுடியாமல் அவளையே பார்த்திருக்க, மகனின் மனம் புரிந்த அவனின் தாயார் வாசுகி கணவனிடம் கண்ஜாடை காட்ட மகனைப் பார்த்த தாமோதரனுக்கு வாய்மொழியாமலே அவன் உள்ளம் புரிந்திட தொண்டையை லேசாகச் செருமியவர் பிரபாகரன் மற்றும் ரவிச்சந்திரனுடன் பேசத்தொடங்கினார்.

"சம்மந்தி, திகதியைக் குறிச்சிடலாமென்று நினைக்குறேன். நீங்க என்ன சொல்லுறீங்க?" சம்மதத்தினை மறைமுகமாகக்கூற

"ரொம்பசந்தோசம் உங்க வசதி எப்படியோ எங்களுக்கு எதென்றாலும் சம்மதம். மஞ்சுளா நீ என்னம்மா சொல்லுற?" பிரபாகரன் மஞ்சுளாவையும் விட்டிடாமல் கேட்க

"அவங்க சொல்லுறமாதிரியே செஞ்சிடலாமண்ணா." மஞ்சுளா கூறியதும் துஷாந்தினியின் புறம் திரும்பிய தாமோதரன்

"துஷாந்தினிம்மா! என்பேரு தாமோதரன். மாப்பிளையோட அப்பா, இது என் மனைவி வாசுகி, என் மூத்த மகன் ரிதீஸ், மருமகள் நந்தினி, உங்க மாதவி அத்தையோட மகள். இது என் வீட்டு மகாலட்சுமி என் ஒரேமகள் ரஞ்சனி, இது அவளோட வீட்டுக்காரவர் பேரு கண்ணன். இதுதான் ரிஷிதரன் எங்க வீட்டு கடைசிப்புள்ள உன்னக் கட்டிக்கப்போற மாப்பிள்ளை. இனி நீயும் எங்க குடும்பத்துல ஒருத்திம்மா." முறையாக தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தியவர் நந்தினி மூலமாக ஏற்கனவே மொத்தக் குடும்பத்தையும் அறிந்திருந்தாலும் நாகரீகத்திற்காக அவர்களின் குடும்பத்தின் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் உள்நுழைந்தான் தேவேஷ்வா, அவனைக் கண்டதும்

"இது என் மகன் தேவேஷ்வா, ரிஷிதரன் உங்களுக்கு இவனை ஞாபகமிருக்குமென்று நினைக்குறேன், அத்தோட உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நம்ம துஷாந்தியோட பெஸ்ட் ப்ரண்டும் இவன்தான்." பிரபாகரன் மகனை அறிமுகப்படுத்த, அவனையே பார்த்திருந்தாள் அவனின் துஷானி. அவளின் பார்வை வீச்சை தாங்கமுடியாமல் அவனோ ரிஷிதரனின் புறம் திரும்ப,

"ஹாய் தேவேஷ்வா, அண்ணனோட வெட்டிங் டைம்ல பார்த்தது. அதுக்குப்பிறகு இப்போதான் மீட் பண்ணுறோமில்ல. எப்படி இருக்கீங்க, இப்போ என்ன செய்றீங்க?" ரிஷிதரன் கேட்டதும்

"படிப்பு முடிஞ்சிடுச்சு. இப்பதான் சின்னதா டிபார்ட்மென்டெல் ஸ்டோர் ஸ்டார்ட் பண்ணிருக்கேன். கொஞ்சம் பெரியளவுல செய்யுற ஐடியாயிருக்கு அதுக்கான வேர்க்ஸ் போக்கிட்டிருக்கு. நீங்க என்ன செய்றீங்க?"

"நான் சிவில் என்ஜினியரிங் முடிச்சிட்டு துபாய்ல வேர்க் பண்ணிட்டிருக்கேன்."

"ஓ...."
'அப்போ கல்யாணத்துக்குப்பிறகு துஷானியும் அங்கயே செட்டிலாகிடுவாயில்ல.' நினைத்தவன் நிம்மதியடைய அவன் முகத்திலே அகத்தைப் படித்தவள் உள்ளம் உள்ளே நொறுங்கியது. தன்னை எந்தளவு அவன் வெறுக்கத் தொடங்கிவிட்டான் என்பதையும் உணர்ந்தவள் மேலும் உடைந்து சிதறியபோது விழியோரம் நனையத்தொடங்க சட்டென்று தான் இருக்குமிடம் உணர்ந்து இமைகளை சிமிட்டிக்கொண்டாள்.

"சம்மந்தி மேல பேசவேண்டியதை எல்லாம் பேசிட்டா நல்லது" ரவிச்சந்திரன் ஆரம்பிக்க

"நல்லது சம்மந்தி, இன்றையிலயிருந்து இருபதாவதுநாள் நல்ல முகூர்த்தமிருக்கு. அன்றைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்." தாமோதரன் கூற
'இருபது நாட்களுக்குள்ளா? எத்தனையோ வேலைகளிருக்கு' என பெண்வீட்டார் சற்றுயோசிக்க அவர்களின் முகபாவணையைக் குறித்துக்கொண்ட தாமோதரன்

"சம்மந்தி, உங்களுக்கே தெரியும் நாள் அதிகமில்லையென்று. இன்னும் ஒருமாசத்துல என் மகன் மட்டுமில்ல உங்க மகளும் மருமகனும்கூட திரும்பிப்போக வேண்டியிருக்கு. அதோட கல்யாணப்பதிவுக்கு பதிவாளர்ட்ட வேறபோகனும் மாப்பிள்ளை பொண்ணுபேரு பதிவுபண்ணி, நோட்டீஸ் போட்டா அது வாரதுக்கு பதினாழு நாளாகுமில்ல அதனால இன்னும் இருபது நாட்களுக்குள்ள கல்யாணத்தை வச்சுக்கலாம். அதைவிடப் பிந்த முடியாதில்ல. கல்யாணத்தை முடிச்ச கையோட துஷாந்தினிம்மாவையும் கூட்டிட்டு துபாய் போகனும் அதுக்கான வேலைங்களையும் பார்க்கனும். நாள் குறைவாத்தானே இருக்கு. அதுக்கு முன்ன நிச்சயம் பண்ணிக்கலாம்."

'என்ன கூடவே கூட்டிட்டுப் போகப்போறாரா?' எண்ணியவளுக்கு நடப்பவை யாவும் செவிகளில் நாராசமாய் விழ, நிமிர்ந்து தேவேஷ்வாவின் முகம் நோக்க அவனோ மகிழ்ச்சியின் எல்லையிலிருக்க அனலிலிட்ட புழுவாய்த் துடித்துப்போனாள். நேற்றையதை மறக்கமுடியாமலும் இன்றையதை ஏற்கமுடியாமலும் தவித்தவளின் அகத்தின் அனல் அவள் மதி வதனத்தினை அடிக்கடி வாடச்செய்திட அவள் முகத்திலே பார்வையைப் பதித்திருந்த ரிஷிதரனின் முகமோ இப்போது யோசனையைக் காட்ட தந்தையின் பேச்சில் குறிக்கிட்டான் மைந்தன்.

"அப்பா முதல்ல நான் அவங்களோட கொஞ்சம் கதைக்கனும் பிறகு முடிவு பண்ணிக்கலாம்." துஷாந்தினியைச் சுட்டிக்காட்டி ரிஷிதரன் கோரிக்கை வைக்க மைந்தனின் கூற்றில் பெற்றவர்கள் அதிர்ந்து விழிக்க, மற்றையவர்கள் முகங்களோ சோகத்தைக் காட்டின. ஆனால் துஷாந்தினியின் முகத்திலோ ஒருகணம் மின்னல் வெட்டி மறைந்தது. அதையும் ரிஷிதரன் குறித்துக்கொண்டான், ஆனாலும் அது பொய்யோ என எண்ணுமளவு அடுத்தகணம் பொலிவிழந்த வதனமாய் மாறிவிட ஒவ்வொருவரின் முக உணர்ச்சிகளை கண்டவனுக்கு உள்ளே ஒருமாதிரி உணர்ந்தாலும் பெண்ணிடம் பேசிய பின் முடிவு செய்யலாமென நினைத்துக் கொண்டான். துஷாந்தினியிடம் ரிஷிதரனை அழைத்துக்கொண்டு மேலே செல்லச் சொல்ல அவளும் மறுபேச்சின்றி அவனை மாடிக்கு அழைத்துச்சென்றாள். அவள் முன்னே நடந்து தனது ஆஸ்தான இடமான பெல்கனியில் சென்று நிற்க பின்தொடர்ந்து வந்தவன், இரவு வெளிச்சத்தில் மின்னிய அந்தக் குட்டி மாடித்தோட்டத்தையும், அதன் நடுவே இருவர் அமரத்தக்க அழகிய கம்பி ஊஞ்சலையும் கண்டவனின் கண்கள், மனத்துக்கு இதம் தரக்கூடிய அவ்விடத்தை ரசனையோடு நோக்கியவாறு திரும்ப, அங்கே பெல்கனி கம்பிகளில் சாய்ந்தவாறு தலை குனிந்து நின்ற பதுமையை கண்டவன் தோட்டத்தின் எழிலை மறந்து பெண்ணவளையே ரசித்திருக்க அப்போதும் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பேச வந்தவன் பேசுவானென அவளும், ஒருமுறையாவது விழி மலர்த்தி தன் முகம் நோக்குவாளா? என அவனும் காத்திருக்க, இருவரிடையேயும் மௌனமே குடிகொண்டிருந்தது, அதற்குமேல் பொறுக்கமுடியாமல் அந்த மௌனத்தை முதலில் கலைத்தது ரிஷிதரன்தான்.

"உங்களுக்கு இந்தக்கல்யாணத்துல சம்மதமில்லப்போல" திடுதிப்பென கேட்டவனை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் பார்த்தபடியிருக்க

"ஹப்பா, இப்பயாச்சும் நிமிர்ந்து பார்த்தீங்களே! என்ன நான் கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டேனா?" அவள் மௌனியாக அவனே தொடர்ந்தான்.

"உங்க பார்வையே சொல்லுது நான் கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனென்று. சரி சொல்லுங்க உங்க ஆள் யாரு?" அவள் மீண்டும் அதிர

"அப்போ இதுவும் கரெக்ட்டா?" சட்டென்று தலை குனிய

"ஒன்று சொல்லட்டாங்க?" அவள் விழி விரித்து நோக்க

"நான் உங்ககூட தனியா பேசனும் என்று சொன்னதும் உங்க கண்ணுல ஒருமின்னல் வெட்டிச்சு அதை நான் பார்த்துட்டேன், அப்படின்னா நீங்களும் என்கூட கதைக்க நினச்சிருக்கீங்க." பெண்ணவள் கண்கள் மீண்டும் பளிச்சிட அதை ரசித்தவாறே

"உங்க மனசை அப்படியே கண்ணாடிபோல இந்த கயல்விழி ரெண்டும் காட்டிக் கொடுத்துடுதே, உங்களுக்கு உங்க கண்ணுதாங்க எதிரி." செங்காந்தள் மலர்வனத்தை சுற்றும் கருவண்டுகளாய் அங்குமிங்கும் அலைந்த விழிகளை ரசித்தவனாய்க்கூற அவளோ அப்போதும் மௌனமாகவே இருக்க

"சரிங்க உங்களுக்கு இந்தக்கல்யாணத்துல இஷ்டமில்ல, உங்க மனசு உங்ககிட்டயில்ல,
அப்படின்னா உங்க லவ்வபத்தி வீட்டுல சொல்லிருக்கலாமே. வீணா யாரையும் அலைக்கழிச்சிருக்கவும் வேணாம், ஆசைய வரவச்சிருக்கவும் வேணாம். தயவுசெஞ்சு அமைதியாயிருக்காம இப்பயாச்சும் கொஞ்சம் பேசுங்க. நீங்களும் என்கூட பேச நினச்சீங்கதானே, இப்படி மௌனியாயிருந்தா என்னங்க அர்த்தம், முதல்ல என்கிட்ட தனியா என்ன கதைக்க நினச்சீங்க, அதையாவது சொல்லுங்க?" அவன் கேட்டதும் எங்கு தொடங்குவது, எதைக்கூறவது, எப்படி முடிப்பதென தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தவள் மௌனத்தையே கடைப்பிடிக்க

"பதில் சொல்லுவீங்களா, இல்ல இப்பயும் மௌனமாத்தான் இருக்கப்போறீங்களா?"அவள் மௌனம் அவனை சற்றுக்கோபப்பட வைக்க அதற்குமேல் மௌனமாயிருப்பது சரியல்ல என்று உணர்ந்தவள்

" அது.....அது..." எனத்தடுமாற

"உதடு தாண்டி உங்க வார்த்தைகள் வெளிவர மாட்டேங்குது, உங்க வார்த்தைகளை தடுக்குற தடைய உடச்சுட்டு சொல்லுங்கோ." தன்னை திடப்படுத்தியவள் அவனை நேராக நோக்கி

"அது...வந்து...நீங்க சொன்னது எல்லாமே சரி, காதல் எனக்கும் இருக்கு, இப்போ அது இல்லாமப்போச்சு. எனக்கு கல்யாணத்துல விருப்பமேயில்ல, ஆனால் நான் அதை மறுக்கப்போறதுமில்லை."
'குரல் கூட சூப்பராத்தான் இருக்கு' முதன்முதலில் கேட்ட அவள் குரலை ரசித்தவனாய்

"என்னங்க மண்டைய காயவைக்குறீங்க, கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லது."

"இங்கப்பாருங்க என்னோடது ஒருதலை காதல்தான், அது துளிர்விடும் முன்னமே கருகிடுச்சு. அவங்க மனசுல நான் இல்லவேயில்ல. இதுல எதைப்போய் வீட்டுல சொல்லச் சொல்லுறீங்க. அதனால என் வலிகளை எனக்குள்ளே புதைச்சுக்கிட்டேன். நேத்தைக்கு என்காதல் மொத்தமா கருகிடுச்சு அந்த வலியை எனக்குள்ளே மறச்சுட்டு இன்றைக்கு பொய்யா சிரிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன் அதுல ஜெயிச்சுட்டேனென்றும் நினச்சேன் ஆனால் நீங்க என் மனசை படிச்சமாதிரி சொல்லுறீங்க. சத்தியமா எனக்கு கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இஷ்டமேயில்ல ஆனால் என் குடும்பத்துக்காக அவங்க மன சந்தோசத்துக்காக, நிம்மதிக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். என் மனசுல இருந்தத சொல்லிட்டேன் இதுக்குப்பிறகு முடிவு செய்யவேண்டியது நீங்கதான்."

"ஒருவேளை நான் தனியாக் கூப்பிடாமயிருந்தா நீங்களா என்கிட்ட பேச நினச்சிருக்கமாட்டீங்கல்ல. எதையும் சொல்லவும் தோன்றியிருக்காதில்ல?"

"அப்படியில்லங்க, ஒருவேளை என்கூட எதுவும் பேசாம நீங்க என்னைக் கட்டிக்க சம்மதிச்சிருந்தா, நானே உங்ககூட தனியா பேசனுமென்று சொல்லிருப்பேன், அதோட என் மனசுல இருக்குறதையும் என் காதல் கதையையும் முழுசா சொல்லியிருப்பேன். ஆனால் முடிவை உங்ககிட்டயே விட்டிருப்பேன்."

"அப்படின்னா இப்போ முழுசா சொல்லல்ல."

"இல்லைங்க, என்னைக் கட்டிக்கப் போறவருக்கிட்ட மட்டுந்தான் என் மொத்தத்தையும் சொல்லுவேன். நீங்க என்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க. என் மனசுல ஒருத்தர் இருந்தார் என்றவரை தெரிஞ்சுக்கத்தான் உங்களுக்கு உரிமையிருக்கு. ஒருவேளை இதுக்குப்பிறகும் உங்களுக்கு என்னைக் கட்டிக்க சம்மதமென்றால் என் கதையை உங்ககிட்ட சொல்லிடனுமென்று நினைக்குறேன். சரி, என் மனசுலயிருக்குற மொத்தத்தையும் உங்ககிட்ட சொல்லிடுறதா இல்லை வேணாமா? என்று நான் முடிவெடுக்கனும், அதோட என் மனசு மாற கொஞ்சம் அவகாசமும் கேட்டுக்கனும். சோ, உங்க முடிவை சொன்னா நல்லது."

"ரொம்பத் தெளிவான ஆளுங்க நீங்க."

"என்னைப்பத்தி கட்டிக்கப்போறவருக்கு மட்டும் தெரியுறதுதானேங்க நியாயம், அதுக்காகத்தான் கேக்குறேன்."

"சரிங்க, போலாம்." அவன் முன்னே நடக்க

"என்னங்க எதுவும் சொல்லாம போறீங்க?" அவனைத் தடுத்து நிறுத்த, நின்றவன்

"இப்போதைக்கு நான் எதையும் தெரிஞ்சுக்க விரும்பல்ல, வாங்க கீழ போகலாம்." அவன் வார்த்தைகளிலே அவன் பதிலும் புரிந்துவிட ஒருவித நிம்மதியுடன் அமைதியாகவே ரிஷிதரனைப் பின்தொடர்ந்தாள் துஷாந்தினி.
முகத்தில் நிம்மதியுடன் துஷாந்தினியும், எதையும் தெரிந்துகொள்ள முடியாத நிர்மலமான முகத்துடன் ரிஷிதரனும் படிகளிலே இறங்கிவர, அவர்கள் இருவரையும் ஹாலில் இருந்தவர்கள் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் நோக்கியிருக்க, யாரையும் நோக்காது தந்தையின் பக்கத்தில் சென்றமர்ந்து கொண்டான் ரிஷிதரன். துஷாந்தினியின் முகத்திலிருந்த நிம்மதியைப் பார்த்து மஞ்சுளாவின் உள்ளம் கலங்க, அவருடன் இணைந்து அவள் குடும்பத்தில் மற்றையவர்களும் கவலை கொள்ள, தாயின் பதட்டத்தைப் பார்த்து 'கல்யாணம் கட்டிக்கோன்னு என்ன பாடுபடுத்துனீங்க, இந்த கல்யாணம் நிக்கப்போகுது இப்போ என்ன செய்யப்போறீங்க என்னை அடிச்சமாதிரி, இந்த மாப்பிள்ளையை அடிக்கப் போறீங்களா?' தாயுடன் மானசீகமாக உரையாடியவாறு அவர் பக்கத்திலே எதுவுமறியாத குழந்தைபோல வந்து நின்றவள் 'மன்னிச்சிடுங்கத்தான் உங்க சந்தோசத்தையும் நிம்மதியையும் என்னால காப்பாத்த முடியாமபோச்சு' என தேவேஷ்வாவிடமும் மனதோடு பேசிக்கொண்டிருந்தவளை ஒருவித பதட்டத்துடன் மஞ்சுளா நோக்க, அவளோ அழகாக பல்வரிசை தெரிய தாயைப்பார்த்து சிரித்தாள். அச்சிரிப்போ தேவேஷ்வாவுடன் மற்றையவர்களையும் திகில் கொள்ளச்செய்தது.
ஒருவித பதட்டமும் குழப்பமுமாய் சுற்றியிருந்த அனைவரும் தன் பதிலுக்காய் காத்திருப்பதை உணர்ந்த ரிஷிதரன் சுற்றி ஒருபார்வை பார்த்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் ரவிச்சந்திரனிடம் திரும்பினான்.

"மாமா, எனக்கு இந்தக்கல்யாணத்துல முழுசம்மதம், துஷாந்தினிய ரொம்பப்பிடிச்சிருக்கு. இப்போ தாராளமா நீங்க திகதியக் குறிச்சுக்கலாம் ஆனால் இருபது நாள்லயில்ல, இன்றையிலிருந்து பதினஞ்சாவது நாள். நாம நாளைக்கே ரெஜிஸ்டர்கிட்ட போகலாம் எங்க நேம்ஸ்ஸ ரெஜிஸ்டர் பண்ணிக்க, நோடீஸெல்லாம் போட்டு பதினாழாவது நாள் எல்லாம் ஓகேயாகிடும். அன்றைக்கே டேட்ட பிக்ஸ் பண்ணலாமென்று நினைக்குறேன்." அவன் பதிலைக் கேட்டதும்தான் அனைவரும் மகிழ்வுடன் நிம்மதிப் பெருமூச்சிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத துஷாந்தினி மட்டும் கருவண்டு விழிகளை உருட்டி உருட்டி ரிஷிதரனையே பார்த்தவாறு அப்படியே சிலையாய் நின்றுவிட, அவள் செயலில் ரிஷிதரனுக்கு சிரிப்பு முட்டியது ஆனால் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.

"ரிஷிதர் கல்யாணத்துக்கு நாள் குறிக்க சொல்லிட்டான். அதனால மேற்படி விசயங்கள பேசிட்டா நல்லதுதானே சம்மந்திம்மா." வாசுகி, மஞ்சுளாவிடம் கூற அவரோ பிரபாகரனை நோக்க

"சரி சம்மந்திம்மா, எல்லாத்தையும் விவரமா பேசிடலாம். பதினஞ்சு நாள்ல கல்யாணமென்றால் நிச்சயதார்த்தம் எப்போ வச்சிக்குறது?" பிரபாகரன் தயக்கமாக கேட்க சற்று யோசித்த தாமோதரன் தன் மனையாளிடம் திரும்பி எதையோ கேட்க அவரும் சம்மதமாய் தலையாட்ட தொண்டையை கனைத்துக் கொண்டவர் பிரபாகரனை நோக்கி

"சம்மந்தி, எப்போ துஷாந்தினி போட்டோ பார்த்தோமோ அப்பவே எங்க எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு. ஆனாலும் கட்டிக்கப் போறவங்க ஒருமுறை நேரில பார்த்து சம்மதிச்சா நல்லதுன்னு நினச்சுத்தான் பொண்ணு பார்க்க வந்தோம். ரெண்டுபேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தால் இன்றைக்கே மத்தது பேசி முடிவெடுக்கலாமென்று நினச்சோம். அவங்க ரெண்டுபேரும் சம்மதிச்சிட்டாங்க. அதனால அடுத்த ஒருமாசத்துக்குள்ள இருக்கிற முகூர்த்த நாட்களை குறிச்சிட்டு வந்திருக்கோம். நிச்சயதார்த்தம், கல்யாணம் ரெண்டுக்கும் சேர்த்துத்தான். இன்னையிலயிருந்து பதினாறாவது நாள் நல்ல முகூர்த்தநாள், அதனால அன்றைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம், அதுக்கு ஐஞ்சு நாளைக்கு முன்ன நிச்சயதார்த்தத்தை வச்சுகிட்டா என்ன? இது எங்க அபிப்பிராயம், நீங்க என்ன சொல்லுறீங்க சம்மந்தி?" தாமோதரன் கேட்டதும் துஷாந்தி வீட்டார் அந்த நாளையே ஏக மனதாய் ஏற்றுக்கொண்டனர். மேலும் திருமணம்பற்றியும் கொடுக்கல் வாங்கல்பற்றியும் சில பல விடயங்களைப்பேசி ஒருவாறு அனைத்தையும் முடிவாக்கிய பின்னர்,

"பிரபாகர் அங்கிள், நம்ம தனித்தனியா பெர்சஸிங் பண்ணாம எல்லோரும் சேர்ந்தே போகலாம். அதோட எங்க வெடிங் ட்ரெஸெஸ் எல்லாம் நாங்க ரெண்டுபேரும் பார்த்து பிடிச்சதா எடுக்கனுமென்று நினைக்கிறேன். சோ, நாம சேர்ந்தே போகலாம்." அவன் பேசியதும் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் அனைவரையும் பார்த்து என்னவென புரியாமல் கேட்க

"ரிஷிதர், நம்ம பொண்ணுக்கு எடுக்கப்போற முகூர்த்தப்புடவைய அவ பார்க்கக்கூடாதுப்பா." வாசுகி விளங்கும்படி கூற மஞ்சுளாவும் மற்றையவர்களும் ஆமோதிப்பாய் தலையசைத்தனர். ஆனால் ரிஷிதரனோ விடுவதாயில்லை.

"அவங்க கட்டிக்கப்போற சாரி அவங்களுக்கு புடிச்ச மாதிரியிருக்குறது தானே நியாயம். சோ அவங்களும் கூட வரணும்." அவனுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல அனைவரும் முற்பட, ரிஷிதரனோ அவன் பிடியிலே நிற்க பெரியவர்கள் கவலைகொள்ள சற்று இறங்கிவந்தான் ஆடவன்.

"சரி நீங்க எல்லோரும் இவ்வளவு சொல்லுறதால ஒன்று செய்வம், துஷாந்தினியும் வரட்டும் ஆனால் நான் முகூர்த்தப்புடவையை மட்டும் அவங்களுக்கிட்ட காட்டல்ல ஓகே." அந்தப் பிரச்சனைக்கு அவன் முற்றுப்புள்ளி வைக்க அப்பாடா இந்தளவுக்காவது இறங்கி வந்தானே என்றிருந்தது. ஆனால் அவன் பிடிவாதத்தைப் பார்த்திருந்த துஷாந்தினியின் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ!

ஒருவாறு எல்லாம் முடிவானதும் யசோதா பிரபாகரனிடம் கண்ணைக் காட்ட

"சம்மந்தி எல்லோரும் வாங்க சாப்பிடலாம்." பிரபாகரன் அனைவரையும் அழைத்ததும் எல்லோரும் எழுந்து சாப்பாட்டறைக்கு செல்ல அங்கே மாப்பிள்ளை வீட்டாரை தடபுடலாக உபசரிக்கத் தொடங்கினர் துஷாந்தினி வீட்டார். உண்டு முடித்து சற்றுநேரம் தோட்டத்தில் வந்தமர்ந்தவர்கள் மகிழ்வுடன் மேலே நடக்க வேண்டியதுபற்றி திட்டமிடத் தொடங்க, தன்னவளை தேடியவன் கண்களுக்கு வீட்டின் வாசல்படியில் நின்று நகங்களை பற்களில் உராய்ந்தவாறு முகம் முழுக்க குழப்பம் மேலிட எதையோ சிந்தித்துக்கொண்டு நின்றவள் பட்டதும் மற்றையவர்கள் கவனத்தை ஈர்க்காதவாறு பூனைபோல் மெல்லப் பெண்ணவளை நெருங்கினான் ரிஷிதரன். ஆனால் தேவேஷ்வாவின் கவனம் முழுக்க அவனுடைய கண்ணம்மாவிலே இருந்ததால் ரிஷிதரனின் பூனைநடை அவனுக்குள் ஆர்வத்தோடு சிரிப்பையும் ஏற்படுத்த தன்னையும் அறியாமல் அவர்களையே பார்த்திருந்தான். தன்னிடம் நெருங்கி வந்த ரிஷிதரனை துஷாந்தினி முறைக்க அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

"ஐயோ! முறைக்காதம்மா உன் பார்வை வீச்சில் நான் பஸ்பமாகி விடுவேன்போல" என்று நாடக வசனம் பேச மேலும் முறைத்தவள்

"உங்ககிட்டதானே அத்தனை தரம் கேட்டேன். அங்க எதையும் தெரிஞ்சுக்க விரும்பல்லென்று சொல்லிட்டு இங்கவந்து மாத்தி சொல்லுறீங்க." படபட பட்டாசாய் அவள் வெடிக்க அதையும் ரசித்தவன்

"இப்போதைக்கு தெரிஞ்சுக்க விரும்பமில்ல என்றுதான் சொன்னேன். தெரிஞ்சுக்க வேண்டிய நேரத்துல கேக்குறேன் அப்போ சொல்லுங்க சரியா?"

"இல்லங்க என்னால இதை ஒத்துக்கமுடியாது, என்னைப்பத்தி முழுசா தெரிஞ்சுட்டு, பிறகு முழுமனசா நீங்க ஒத்துக்கோங்க."

"இப்போதைக்கு வேண்டாம் அவ்வளவுதான், அதோட இப்பவும் முழுமனசாத்தான் ஒத்துகிட்டேன். துஷாந்தினி, உங்களை போட்டோவில பார்த்ததுமே நீங்கதான் மிஸஸ்.ரிஷிதரன் என்று முடிவு பண்ணிட்டேன். உங்க முகத்துலிருந்த குழப்பத்தாலதான் உங்ககிட்ட தனியா பேசனுமென்று சொன்னேன் அதுவும் உங்களுக்காக மட்டுந்தான். சரி, எதை நினச்சும் ஃபீல் பண்ணாதீங்க. ஜஸ்ட் டூ வீக்ஸ்ல மிஸஸ்.ரிஷிதரனாகுறதுக்கு ரெடியாகிடுங்க. ஓகே" அவள் சற்றுக்கோபமாய் பேசுவதைக் கண்ட தேவேஷ்வாவின் உள்ளம் கலங்கிய அதேநொடி ரிஷிதரன் அவளிடம் மிக நிதானமாகவும் சமாதானப்படுத்தும் வகையிலும் பேசியதைக் கண்டதும் சட்டென்று தெளிந்தது. இனி தன் கண்ணம்மாவின் வாழ்வில் எல்லாமே நல்லாதாய் நடக்குமென துஷானியின் அத்தான் நிம்மதியுற்றான். அந்த நிம்மதியோடு அவன் முகத்தில் மெல்லிய புன்னகையும் அரும்ப, ரிஷிதரனின் பேச்சைக் கேட்டவாறு மற்றையவர்கள் இருக்குமிடத்தை நோக்கியவள் கண்களுக்கு புன்னகை முகமாய் தேவேஷ்வாவைக் கண்டதும் அவள் உள்ளம் மேலும் வேதனையுற்றது.

"மச்சினரே! அதான் இருபதுநாள்ல வைக்கவேண்டிய கல்யாணத்தை பதினஞ்சு நாளாக்கிட்டீங்கல்ல, இப்போ அதுக்குக்கூட காத்திட்டிருக்க முடியல்லையோ, இன்னும் ரெண்டுகிழமைதான் அதுக்குப்பிறகு அவகூடத்தான் காலம் முழுக்க கதைக்கோனும், அதான் ரெண்டுநாள்ல வெடிங்க்குக்கான பெர்ச்சஸ் பண்ண உங்க மேடத்தையும் கட்டாயம் வரணுமென்று சொல்லிட்டீங்கல்ல. சோ, மிச்சத்தை அப்போதைக்கு வச்சுக்கோங்க, இப்போ வாங்க எல்லோரும் போக வெளிக்கிட்டாச்சு." நந்தினியின் கேலியில் அனைவரும் சிரிக்க அசடு வழிந்த ரிஷிதரன் தன்னவளைப் பார்த்து கண்களால் விடைபெற அங்கே மீண்டும் சிரிப்பலை கிளம்பியது. அனைவரிடமும் விடைபெற்று மாப்பிள்ளை வீட்டினர் சென்றபிறகு மகளிடம் வந்த மஞ்சுளா அவளை அணைக்கவர அவர் கைகளை பட்டென்று தட்டிவிட்டவள் யாரிடமும் பேசாது தன் அறைக்குச் செல்ல அதிர்ந்துநின்றார் மஞ்சுளா. அவரிடம் வந்த தேவா சமாதானமாய் தோளணைத்தவன் இப்போது புரிந்துகொள்ளாமல் முரண்டு பிடிப்பவள் நிச்சயமாய் முழுமனதாய் ரிஷிதரனை ஏற்பதோடு மஞ்சுளாவையும் புரிந்துகொள்வாள், அத்துடன் மனம் நிறைந்த நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வாழ்வாள் என அவரை சமாதானப்படுத்த, அவன் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு நிம்மதியுற்ற அத்தையைப் பார்த்து அவனும் மகிழ்ந்து போனான். ஆனால் அவனையும் அறியாமல் அவன் உள்ளே ஏதோவொரு வெறுமை பரவியது. அப்போது அவன் அதை உணர்ந்து கொள்ளவில்லை. அந்த வெறுமைக்கான காரணம் உணர்ந்த தருணம் காலம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது.

அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டு கட்டிலில் குப்புறவிழ அத்தனை நேரமும் அடக்கி வைத்த அழுகையெல்லாம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டோடியது. தன் மனங்கவர்ந்தவனின் களிப்புக்கொண்ட முகமே அவள் மனக்கண்ணில் தோன்றி அவள் அழுகையை மேலும் அதிகரிக்கச்செய்ய

"ஏன் அத்தான், நான் உங்களுக்கு அவ்வளவு கஷ்டத்தையா கொடுத்துட்டேன். என் கல்யாணம் உங்களுக்கு இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குமென்று நான் கனவிலும் எண்ணல்லையே அத்தான். நான் உங்க வாழ்க்கைய விட்டுப்போறது உங்களுக்கு எவ்வளவு சந்தோசத்தையும் நிம்மதியையும் கொடுக்குமென்று நீங்க சொன்னப்ப நான் நம்பல்ல, ஆனால் இப்போ உங்க முகத்தைப் பார்த்தப்போதான் முழுசா புரிஞ்சுகிட்டேன். கவலைப்படாதீங்க அத்தான் இனிமே உங்க துஷானி உங்க வாழ்க்கையில எப்பவுமே இருக்கமாட்டா. நீங்க ஆசைப்பட்ட நிம்மதியும் சந்தோசமும் இனி உங்க வாழ்க்கையில நிரந்தரமாயிருக்கும். போறேன் அத்தான் இனி உங்க வாழ்க்கையில வரமுடியாத தூரத்துக்கு போயிடுறேன் நீங்க நிம்மதியாயிருங்க. இனிமே இந்த துஷாந்தினி மனசுல அத்தான் இருக்கவே மாட்டீங்க. நானும் ரிஷிதரனை முழுமனதா ஏற்றுக்க தயாராகிக்கிறேன். உங்க ஆசை நிறைவேறிடுச்சு அத்தான், இனி இந்த துஷாந்தினியோட தொல்லையில்லாம சந்தோசமாயிருங்க." தன்னோடு பேசியவள் கண்களை அழுந்தத்துடைத்து தனக்குள்ளே உறுதியும் பூண்டுகொண்டாள்.


inbound5546692005153573277.jpg

காணும்.....


விமர்சனங்களுக்கு
https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-04


inbound5121279168679091143.jpg

நகரின் புகழ் பெற்ற புடைவையகம், பட்டுப்புடைவைகளுக்கான பிரிவில் இருவீட்டனரும் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே பலவண்ணங்களிலும், வடிவங்களிலும் சிறு குன்றுபோல் பட்டுப்புடைவைகள் குவிந்திருந்தன. ஒருவர் ஒன்றைத்தெரிய மற்றையவருக்கு அது பிடிக்காமல்போக இப்படியே மாறிமாறி செய்துகொண்டிருக்க அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல்

"சுகி! நாங்க ஆண்கள் பகுதிக்குப்போறோம், மாப்பிள்ளைக்கும் மத்தவங்களுக்கும் எடுத்துட்டு, நீங்க எல்லோரும் பார்த்து எடுக்குறதுக்குள்ள வந்துடுறோம்."

"என்ன நாங்க அதுவரை எடுக்கமாட்டோமென்று நக்கல் பண்ணிறீங்களோ! ரிஷிதரும் துஷாந்தினியும் அவங்க ட்ரெஸ்ஸ ரெண்டுபேரும் சேர்ந்தெடுக்கத்தானே நம்ம எல்லோரும் ஒன்னாவே வந்திருக்கோம். நீங்க இப்படி அவனை தனியாக்கூட்டிட்டுப் போனா?" வாசுகி படபடக்க

"இல்லை சுகி, நாங்க இங்க சும்மாதானே நிக்குறோம் அதுக்கு அங்கபோய் அந்தவேலையும் முடிச்சிட்டா நல்லதுதானே, உடுப்பெடுத்ததும் நகையெடுக்க போகணும். இன்விடேஷன் கார்ட், மண்டபம், சாப்பாடுன்னு அதையும் கொஞ்சம் பார்க்கவேண்டியிருக்கு. இன்றைக்கே முடிக்கவேண்டிய இன்னும் எத்தனையோ வேலைங்கயிருக்கு, சும்மா நேரத்தை போக்காட்ட வேணாமென்று நினச்சேன்." தாமோதரன் எடுத்துக்கூற

"இல்லப்பா, முதல்ல துஷாந்தினிக்கு எடுத்தாத்தானே அதுக்கு மெச்சா எனக்கும் செலக்ட் பண்ணலாம். சோ நீங்க போங்க நான் அவங்களுக்கு எடுத்துட்டு மேல வாரேன்." சிறிது யோசித்த பிரபாகரன்

"ஒன்னு செய்வோம் கல்யாணத்துக்கு பட்டுவேட்டி சட்டைதானே முதல்ல அதை எடுத்திடுவோமே."

"சம்மந்தி சொல்லுறது சரிதான். மருமக புடவைய பார்த்து புடிச்சதா நாலஞ்சு எடுத்துவைக்கட்டும், ரிஷிதர் வந்ததும் எதுபிடிக்குதோ அதையே எடுக்கட்டுமே, என்ன நான் சொல்லுறது?"
தாமோதரன் கூறியதும்

"அதுவும் சரிதான், அவங்க சாரிஸ் சூஸ்பண்ணட்டும் நான் வந்ததும் பார்த்துக்கலாம், உங்களுக்கானதை எடுத்திடுங்கம்மா."

"சரிப்பா அப்படியே செஞ்சிடலாம்." வாசுகி கூறியதும் தனக்கும் இதற்கும் எதுவித சம்மந்தமுமில்லை என்பதுபோல் நின்றிருந்த துஷாந்தினியின் அருகில் வந்த ரிஷிதரன்,

"துஷாந்தினி, உங்களுக்கு என்ன பிடிக்குதோ, எத்தனை பிடிக்குதோ எடுத்துக்கோங்க. இன்னொரு விசயம் நம்ம விசேஷத்துக்கு எடுக்குற புடவைங்க எப்பவும் நமக்கு ரொம்ப ஸ்பெஷலாயிருக்கனும் சோ மணியப்பத்தி யோசிக்காம எடுங்கோ என்ன?" அவள் எதுவுங்கூறாது தரைநோக்கி அமைதியாகவே நிற்க

"நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குதுதானே! ப்ளீஸ் இது என்னோட ரிக்யூவஸ்ட், நல்லதாவே செலக்ட் பண்ணுங்க." என்று கூறியதும் அவள் சரியென மெதுவாக தலையசைத்தாள். ஆண்கள் அனைவரும் ஆடவர் பிரிவிற்குச் செல்லத்திரும்ப

"ஏங்க, எல்லோரும் அங்க போனா எப்படிங்க? ஏதாவது தேவையென்றால் எதுக்கும் ஒருத்தர் இங்கயிருக்குறது நல்லதுதானே." யசோதா கூற

"அதுவும் சரிதான் அப்போ நானிருக்கிறேன் நீங்க எல்லோரும் போங்க சம்மந்தி." பிரபாகரன் பின்தங்க, இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்போதுதான் உள்நுழைந்த தேவேஷ்வா பெண்களுடன் தானிருப்பதாகக்கூறி தந்தையை மற்றையவர்களுடன் அனுப்பிவிட்டுத் திரும்ப, அவனையே பார்த்திருந்தாள் துஷாந்தினி. அவளிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் அவனும் சிலகணங்கள் அவனுடைய கண்ணம்மாவைப் பார்த்திருந்தவன் சட்டென்று தன் தவறையுணர்ந்து பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டான்.
ஆண்கள் சென்றபின்பும் கண்ணைப் பறிக்கும் விதமாய் கலைந்து கிடந்த புடைவைகளையும் அதன் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் மயங்கி எதை எடுப்பதெனத் தெரியாது அப்போதும் தடுமாறிக்கொண்டிருந்த பெண்களுக்கு, உதவிக்கு வந்தான் தேவேஷ்வா. முதலில் வீட்டுப்பெரியவரான வள்ளியம்மைக்கு வெண்பட்டில் வெள்ளிக்கம்பிகள் இழையோடிய புடவையைத் தெரிய அவன் தெரிவில் வள்ளியம்மை மகிழ்ந்து போனார். யசோதா, மஞ்சுளா, மாதவி, வாசுகி என மூத்த இல்லத்தரசிகளுக்கு ஒரேமாதிரி அடர்நீல நிறத்தில் பெரியதாய் சிவப்பும் தங்கமுமாய் கரையிட்ட பட்டுப்புடைவையைத் திருமணத்திற்குத் தெரிந்தவன், வேறுபட்ட நிறங்களில் நிச்சயத்திற்கும் மருதாணிவிழாவிற்கும் வரவேற்பிற்குமென சேர்த்தே எடுக்க பெரியவர்கள் அவன் தெரிவைப்பார்த்து அசந்துபோய் பாராட்டித்தள்ள அதில் சிரித்தவாறே இளம்வயதினருக்கு மயில்கழுத்து நிறம், அடர்பச்சை, தளிர்ப்பச்சை, வெண்முத்து நிறம், இளஞ்சிவப்பு நிறம், மயில்கழுத்து ஊதா, ஆகாயநீலம், அரசநீலம்(ரோயல் ப்ளூ), அரக்கு வண்ணம், குழிப்பேரிப்பழ நிறம்(பீச் கலர்) என கண்ணைக்கவரும் வண்ணப்புடைவைகளை அவன் பரப்ப, அடர்பச்சையில் தங்கசரிகையிட்ட புடைவையை ரஞ்சனி, நந்தினி, தனுஜாவுடன் ஸ்ரீவர்ஷினியும் எடுத்துக்கொள்ள, அதேநிறத்தில் பட்டுப்பாவாடை தாவணியை தீப்தி எடுத்துக்கொண்டாள். அதுவரை எதிலும் ஈடுபடாமலிருந்த துஷாந்தினி தன் அத்தான் தெரிவுசெய்த புடைவைகளில் பார்வையைப்பதிக்க அத்தனையும் அவளுக்குப் பிடித்த நிறங்கள், அதிலும் மயில்கழுத்து வண்ணப்புடைவை அவள் கண்ணையும் கருத்தையும் கவர கைநீட்டி எடுக்கப்போனவளைத் தடுத்தான் தேவா. அவள் கேள்வியாய் ஏறிட

"ரிஷிதர் வந்து செலக்ட் பண்ணட்டுமே!" அவன் தெரிவை அவள் எடுப்பதில் பிரியங்கொள்ளாது கூற

"தேவா! ரிஷிதர் தம்பிதான் நம்ம துஷாந்தியப் பார்த்து எடுக்கச்சொன்னார். அதனாலதான் அவ எடுக்கிறா, நீ அதைத்தடுக்காதப்பா, நீவேற எல்லாமே அவளுக்கு பிடிச்ச கலரா எடுத்திருக்க. விடுப்பா இதுல பிடிச்சதை எடுத்துக்கட்டும்." அவனுக்கு பதில்சொல்ல தன் செப்பிதழ்களை மெல்லத்திறந்த துஷாந்தினியை முந்திக்கொண்டு தன் மைந்தனுக்கு பதிலளித்த யசோதா, துஷாந்தினியிடம் புடைவையைத் தெரியச்சொல்ல, அவளோ தேவாவினால் தேர்வான அத்தனை புடைவைகளையும் தன் தெரிவுப்பட்டியலில் வைத்துக்கொண்டாள். ஆனாலும் மயில்கழுத்து வண்ணம் அவள் மனதை வெகுவாக ஈர்த்தது. அதையே அடிக்கடி வருடிக்கொள்ள, தனக்கு மிகவும் பிடித்ததே அவளுக்கும் பிடித்ததையெண்ணி உள்ளூர வியந்துதான் போனான் தேவேஷ்வா.

தங்களின் ஆடைத்தெரிவைப் பூர்த்தி செய்துகொண்டு வந்த ஆண்கள் அப்போதும் பட்டுப்பிரிவிலே அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்து கேலியாய் நகைத்துவர, அவர்கள் அதற்கும் மேலாய் நகைத்து தங்கள் தெரிவைக்காட்டிச் சிரிக்க அதில் ஆடவர்கள் முகம் போனபோக்கைப் பார்த்து மேலும் சிரிக்க ஆண்களும் அதில் கலந்துகொண்டனர்.

"ரிஷிதர்! துஷாந்தினி, புடவையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா, உனக்கு புடிச்சமாதிரி நிச்சயத்துக்கு அவங்க சைட் ஒன்னு, நம்ம கொண்டுபோக ஒன்னுன்னு எடுப்பா."

"சம்மந்தி முகூர்த்ததுக்கு முன்ன கட்டுறதுக்கும் ஒன்னு எடுக்கனுமே." மஞ்சுளா கூற

"அதுவும் சரிதான் மூனு எடுத்திடுப்பா, என் மருமக வச்சிருக்குறதைப் பார்த்தா எல்லாமே நல்லாயிருக்கு. அதுவும் எல்லாமே அவளுக்கு புடிச்ச கலராமே, சரிப்பா நீ எடு."

"இல்லம்மா நிச்சயத்துக்கு புடைவை வேண்டாமே லெஹங்கா, லோங் ப்ரோக் அந்தமாதிரி எடுத்துக்கலாமே. நீங்க என்ன சொல்லுறீங்க துஷாந்தினி." அம்மாவிடம் கூறி துஷாந்தினியிடம் அபிப்பிராயம் கேட்டதும் அவளோ அமைதியாயிருக்க

"நிச்சயத்துக்கு புடவை கட்டினாத்தான் நல்லது. நம்ம கொண்டுபோற நிச்சயப்புடவையும் பட்டாயிருந்தா நல்லதுப்பா. வேணுமென்றால் வரவேற்புக்கு நீ சொன்னமாதிரி எடுத்துக்கோங்க, மெஹந்திக்கு என்ன செய்யப்போறீங்க?"

"அதுக்கு எல்லோ லெஹங்காதான். சரிம்மா, அப்போ ரிஷப்ஸெனுக்கு ப்ரோக் எடுத்துக்கலாம்."

"முகூர்த்தத்துக்கும் எடுக்கனுமே, ஆனால் அதை துஷாந்திம்மா பார்க்கக்கூடாது."

"ஓம் சம்மந்தி, மருமகன் பார்த்தெடுக்கட்டும் இவளுக்கு இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கவேண்டியிருக்கு, நாங்க அந்தப்பக்கம் பார்த்துட்டு வாரோம்." என்ற மஞ்சுளா துஷாந்தினியோடு மற்றைய பெண்களையும் அழைத்துக்கொண்டு நகர, ஆண்களோடு மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே அங்கிருந்தனர். தன்னவள் தெரிவுசெய்த புடைவைகளில் பார்வையைப் பதித்த ரிஷிதருக்கு அவை ஒன்றைவிட ஒன்று அழகாகவே தெரிந்தன. முதலில் நிச்சயத்துக்கு அரசநீலம்(ரோயல் ப்ளூ), குழிப்பேரிப்பழ நிறம்(பீச்கலர்) என இருபுடைவைகளை எடுத்தவன் முகூர்த்தத்துக்கு முதல் அணிய இளஞ்சிவப்பை தெரிந்துகொண்டான். மேலும் கண்கவர்ந்த இரண்டு புடைவைகளையும் எடுத்துக்கொண்டவன் இறுதியாக முகூர்த்தத்துக்கு எதைத் தெரிவதென சிறிது தடுமாறியவன் இறுதியில் பெண்ணவளின் மனங்கவர்ந்த மயில்கழுத்து வண்ணப் பட்டுப்புடைவையையே எடுக்க, அதில் தேவேஷ்வாவின் ஒற்றைப்புருவம் உயர்ந்து ஆச்சரியத்தைக் காட்டியது. துஷானியின் உள்ளமறிந்து நடக்கும் ரிஷிதரனைப் பார்த்து அவள் வாழ்வு நன்றாகயிருக்குமென அவன் உள்ளம் ஆறுதலடைந்தது. ஆனாலும் உள்ளூர ஏதோ ஓர் பரிதவிப்பு.

புடைவையைப் பிரித்துக் காட்டச்சொல்லி வாசுகி கேட்க கடைப்பணிப்பாளர் புடவையை விரிக்க ஆண் மயிலின் கழுத்தில் பளபளக்கும் கருநீல நிறத்தைப்போல் சேலையின் பாதியுடலிருக்க, இருகரையும் அதன் இறகுகள்போல் வெள்ளையும், பழுப்புமாக இடையிடையே தங்க சரிகையுடனிருந்தது. மீதியுடலோ மயிலின் நீண்ட தோகையாய் பச்சைநிறத்தில் பளபளக்கும் கருநீல வட்டங்களையும் அதன் கண்கள் தங்கங்களாயும் மின்னிக்கொண்டிருந்தன. பார்க்கவே கண்ணைப்பறித்தது. அதிலிருந்து கண்களை எடுக்கமுடியாமல் அத்தனைபேரும் அதை ரசித்திருந்தனர்.

"அப்போ எல்லாம் முடிஞ்சா புறப்படலாமா?" ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது சிலஆடைகளுடன் பெண்கள் வந்துசேர

"அப்பா, நாங்க இன்னும் நிச்சயத்துக்கும் மெஹந்திக்கும் ட்ரெஸ் எடுக்கல்ல." நந்தினி கூறிக்கொண்டு வர

"என்ன நந்து, எல்லோரும் எடுத்துட்டீங்கன்னு சிரிச்சீங்களே!" அவள் கணவன் ரிதீஸ் கேட்க

"அது இங்கயிருக்க ஓல்ட் லேடீஸுக்குத்தான் வாங்கினாங்க, யங்ஸ்ட்டேர்ஸ் எங்களுக்கில்ல" தீப்தி கூற

"ஏய், எங்களையா ஓல்ட் லேடீஸ்ன்னு சொல்லுற, வாயாடி அடிவாங்கப்போற." மாதவி மிரட்ட அவளோ யசோதாவிடம் தஞ்சமாக அவளை அணைத்துக்கொண்டார் அவர். இறுதியாக டிஸைனர் சேலைகள் மற்றும் லெஹங்காப் பகுதிக்குள் சென்றவர்கள் இப்போதும் தெரிவை தேவாவிடமே கொடுக்க அவனோ முடியாதென மறுக்க அவனிடம் வந்த தீப்தி

"தேவாத்தான், நீங்க சூப்பரா செலக்ட் பண்ணுறீங்க, இவங்களுக்கெல்லாம் வேணாம் எனக்குமட்டும் நீங்க செலக்ட் பண்ணிக்கொடுங்க ப்ளீஸ். பாருங்க நீங்க செலக்ட் பண்ணின சாரிஸ்தான் மாப்பிள்ளை-பொண்ணுக்கும் ரொம்பப்பிடிச்சிருக்கு."

"ஹேய் தேவா, இது உங்க செலக்ஸனா? உண்மையிலே சூப்பராயிருக்கு. அப்படின்னா இதையும் நீங்களே செலக்ட் பண்ணிடுங்களேன். உங்களுக்குத்தான் துஷானியோட டேஸ்ட் நல்லாத்தெரியுமே." ரிஷிதர் கூறியதும் தேவா தயங்க, அவன் மீண்டும் வற்புறுத்த ஒருவாறு ஒத்துக்கொண்டவன் அழகிய வேலைப்பாடமைந்த சில நீண்ட ஆடைகளையும் லெஹங்காக்களையும் அதுவும் துஷானிக்குப் பிடித்த நிறங்களிலேயே தெரிய அதில் பொன்மஞ்சள் நிற லெஹங்காவை மருதானி விழாவிற்கும், வெண்முத்து நிற கர்காசோலியில்
பொன் பொட்டுக்களை அள்ளித் தெளித்ததுபோல் பொன்கற்கள் மின்னிய ஆடையை வரவேற்பிற்கும் எடுத்துக்கொண்டனர். பின்னர் மற்றையவர்களுக்கும் தேவேஷ்வாவே தெரிவுசெய்ய, இறுதியாக மணப்பெண்ணின் ஆடைக்குப் பொருத்தமாய் மணமகனின் ஆடையையும் தெரிவுசெய்ய துஷாந்தியையும், கூடவர மறுத்த தேவாவையும் அழைத்துக்கொண்டு ஆடவர் பிரிவுக்குச்சென்ற ரிஷிதரன் சிலவற்றைத் தெரிந்து அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க, அவர்களிருவரின் தெரிவும் ஒன்றாப்போனதில் ரிஷிதரனுடன் சேர்த்து அவர்களும் ஆச்சரியமுற்றனர். ஒருவாறு ஆடைத்தெரிவுகள் முடிய எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளத்தொடங்கியது. அதற்குமேல் முடியாதென எண்ணியவர்கள் பைகளை வாகனத்தில் வைத்துவிட்டு உணவகத்தில் நுழைந்தவர்கள் உணவை முடித்துக்கொண்டு அடுத்ததாய் நகைமாளிகையில் நுழைந்தனர். நிச்சயத்திற்காக மணமக்களுக்கு மோதிரத்தை வாங்கியதோடு தேவையான மேலும் சில நகைகளையும் வாங்கிக் கொண்டனர். திருமணத்திற்கான மற்றைய வேலைகளையும் முடித்துக்கொண்டு மனம் நிறைந்த நிம்மதியுடன் உடல் மட்டும் களைத்தவர்களாக வீட்டையடைந்தனர்.

♦♦♦♦♦

துஷாந்தினியின் வீடு முழுக்க மாவிலைத் தோரணங்களும் மலர்ச்சரங்களுமாய் அலங்கரிக்கப்பட்டிருக்க இருவீட்டாரின் முக்கிய உறவுகள் மட்டுமே நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டனர். மணமகன் வீட்டார் வந்ததும் பெண்வீட்டார் அவர்களை வரவேற்க, அவர்கள் கொண்டுவந்த நிச்சயதார்த்தப் பொருட்களை மனையின் முன்னே பரப்பிவைத்து அமர்ந்ததும், குழிப்பேரிப்பழநிறப் புடைவையில் பொம்மையாய் வந்த துஷாந்தினி சபையோருக்கு வணக்கம் சொல்ல, வாசுகி அவளுக்கு பொட்டு வைத்து நிச்சயத்திற்காக கொண்டுவந்த சேலையடங்கிய தாம்பூலத்தட்டினை அவள் கைகளில் வைக்க, அதனை மாற்றிக் கொண்டுவர பெண்ணவள் உள்ளேசெல்ல அவளுடன் மற்றப்பெண்களும் சென்றனர்.

கருநீலநிற முழுக்கைச்சட்டையும் சாம்பல்நிற காற்சட்டையும் அணிந்து ஆணழகனாய் ரிஷிதரன் மனையில் அமர, அரசநீல நிறத்தில் பட்டணிந்து பொருத்தமாய் பொன்னகை பூண்டு வந்து மீண்டும் சபையோருக்கு கரங்கூப்பி அவன் பக்கத்திலமர்ந்த துஷாந்தினியின் மலர்வதனம் சற்றே வாடியிருந்தது. வாடிய தாமரையாய் தலை கவிழ்ந்திருந்தவளையே சற்றுத்தள்ளி நின்றுகொண்டு ஒருவித கவலையுடனே நோக்கியிருந்த தேவேஷ்வாவை அழைத்த பிரபாகரன் தன் பக்கத்தில் அமரச்சொல்ல அதை மறுத்து துஷானி அவன் பார்வைக்கு படுமிடத்தில் நின்றுகொண்டான் அவர் தனயன்.

நிச்சயதார்த்தத்திற்கான சடங்குகள் முடிக்கப்பட்டு மணமக்கள் இருவரிடமும் மாற்றிக்கொள்ள மோதிரத்தினை வாசுகி நீட்ட, பெண்ணவளின் கைகளை தன் கைகளில் ஏந்திய ரிஷிதரன் அவள் தளிர்விரல்களில் மோதிரத்தை அணிந்தவன் பஞ்சுபோன்ற மிருதுவான கரங்களுக்கு மென்மையாக முத்தமிட பதறியவளோ பிறர் கவனம் ஈர்க்காது கைகளை இழுத்தவள் விழிகளில் வலியோடு ஆடவனை நோக்க, பெண்ணவளை பார்வையாலே அமைதிப்படுத்தி கண்சிமிட்டிய ரிஷிதரன், பெண்ணவள் முன்னே தன் வலியகரத்தினை நீட்டினான். வேறுவழியின்றி ஆடவனின் இரும்புக் கரத்தினில் மோதிரத்தை அணிவித்துவிட்டாள் துஷாந்தினி. அவளால் நடக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் விலகிச்செல்லவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தவளின் பார்வை அடிக்கடி அவளின் உள்ளங்கவர்ந்த அவள் அத்தானிலே செல்ல, அவன் முகம் முழுக்க சந்தோஷச்சாயலைக் கண்டதும் துஷாந்தினி மேலும் வாட்டங்கொண்டாள். ஆனாலும் தேவாவின் முகந்தான் மலர்ந்திருந்ததே தவிர அகத்திலோ ஏதோ ஓர் சொல்லமுடியாத வலி அவன் நெஞ்சை அரிக்கத்தொடங்கியது. அவன் முகத்தில் அகத்தைப் படித்தவள் அதையும் உள்ளே குறித்துக்கொண்டாள்.

ஒருவாறு நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் சென்றதும் வீட்டுப்பெரியவர்கள் மிகச்சந்தோசமாக திருமணத்திற்கான வேலைகளை செய்யத்தொடங்கினர். ஆனால் இது எதிலும் பங்கெடுக்க முடியாமல் துஷாந்தினியின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது. இன்று தேவாவின் விழிகளிலிருந்த வலியின் அர்த்தம்தான் என்ன? விடையறிய வேண்டுமென உள்ளேயோர் தீர்மானம் உருவாக இதற்கு ஒருமுற்றுப்புள்ளி வைக்க எண்ணியவள் நேராக தேவாவிடம் சென்றாள். கட்டிலில் படுத்தவாறு விட்டத்தையே வெறித்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் சிக்கித்தவித்தவனின் முன்னால் வந்து நின்றவளை சிறிதும் எதிர்பாராதவன் சட்டென்று எழுந்து அறையை விட்டு வெளியேற அவனைப் பின்தொடர்ந்தவள் முன்னே சென்று வழியை மறித்துநிற்க, அவனோ ஒற்றைப்புருவம் உயர்த்தி என்னவென கேட்க

"அத்தான், ஏன் நீங்க ஒருமாதிரி இருக்கீங்க?" அவள் கேள்விக்கு பதில் கூறாது மௌனமாகவே நிற்க

"பார்த்தேன் அத்தான், நிச்சயதார்த்தத்துல நாங்க மோதிரம் மாத்திக்கிட்டப்போ உங்க முகம்தான் சிரிச்சுதே தவிர, உங்க கண்ணுல ஒருவலியப் பார்த்தேன் அத்தான். அது எனக்காகத்தானே! சொல்லுங்கத்தான் இந்த திவ்யாவோட கதையெல்லாம் பொய்தானே நீங்களும் என்னைக் காதலிக்குறீங்கதானே?" ஒருவித எதிர்பார்ப்புடன் ஆடவனிடம் கேள்விகளை எழுப்ப அவனோ சீற்றங்கொண்ட சிறுத்தையாய்

"வாயை மூடிட்டிருந்தா உன்னிஷ்டத்துக்கு கதச்சிட்டுப்போற, இங்கப்பாரு நான் உன்னைக் காதலிக்கவுமில்ல என் கண்ணுல எந்த வலியுமில்லை. என்ன சொன்ன திவி கதை பொய்யா, யாரு சொன்னா? நான் அவளைத்தான் லவ்பண்ணுறேன் அவளைத்தான் கட்டிக்கப்போறேன். புரிஞ்சுதா ஸீ இஸ் மைன் என்ட் ஐ லவ் ஹேர் வெரிமச் ஓகே. இந்தமாதிரி லூசுதனமா உளராம உன்ட கல்யாணத்துக்கு தயாராகு."

"எது லூசுத்தனம்? நீங்கதான் என் கல்யாணம் முடியும்வரை திவ்யாபேரை யூஸ்பண்ணிக்குறீங்க. மற்றப்படி அவமேல உங்களுக்கு எந்த இன்ட்ரெஸ்டுமில்ல அது எனக்கு நல்லாவேதெரியும்."

"நீ் என்ன பைத்தியமா? சரி நான் திவிய சின்ஸியரா லவ்பண்ணுறேன் என்றதை எதைச்சொன்னா நம்புவ?"

"எதையும் சொல்லத்தேவையில்ல, நீங்க அந்த திவ்யாவை உண்மையா காதலிச்சா அது எனக்கே தெரிஞ்சிடும். நீங்க எதையாவது செஞ்சுதான் என்னை நம்பவைக்கனுமென்று அவசியமில்லை. ஆனால் இப்போ உங்க கண்ணுல எனக்கான வலியப்பார்த்தேன், நான் உங்களை காதலிச்சமாதிரி இப்போ நீங்களும் என்னைக் காதலிக்குறீங்க, அதை ஒத்துக்கோங்க அத்தான்." அவள் வார்த்தையில் உள்ளூர அதிர்ந்தவன் முகத்தை கோபமாக மாற்றிக்கொண்டு

"ஐஞ்சுநாள்ல கல்யாணத்தை வச்சுகிட்டு இப்படி அடுத்தவன்கிட்ட வந்து காதலிக்குறேனென்று கதச்சிட்டிருக்க உனக்கு அசிங்கமாயில்ல."

"இல்லை, அசிங்கமாயில்ல எனக்கு ஒரேயொரு விசயம் மட்டும் சொல்லுங்க, என்மேல உங்களுக்கும் காதலிருக்குன்னு ஒத்துக்கோங்க, அந்த நிம்மதியோட போய் தாலியக்கட்டிக்குறேன். ப்ளீஸ் அத்தான்."

"பைத்தியம் முத்திடுச்சு, இங்கப்பாரு நான் திவிய மட்டுந்தான் காதலிக்குறேன் அவளைத்தான் கட்டிக்குவேன், நீ எத்தனைதடவை கேட்டாலும் என் பதில் இதுதான். ஒருவேளை உன்கிட்டமட்டும் சொல்லிட்டிருக்குறதால உனக்கு நம்பிக்கை வரல்லப்போல, அதனால உன் கல்யாணம் முடிஞ்சதும் திவியப்பத்தி சீக்கிரமே நான் வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிடுறேன். அப்போ நம்புவாயா?" அவன் கூற்றில் பாவையின் உதட்டிலோ வலியுடன் கூடிய மென்னகையொன்று மலர, கண்களில் கண்ணீரோடு அவனையே பார்த்திருந்தாள். அவனும் அவள் பார்வையில் கட்டுண்டவனாய் அவளையே பார்த்திருக்க

"என்ன இதெல்லாம்?" ஒருசேரக் கேட்ட குரல்களில் தங்கள் மோனநிலை கலைய திடுக்கிட்டு திரும்பிப்பார்த்த இருவரின் முன்னே கைகளைக் கட்டிக்கொண்டு இருவரையும் பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தனர் ஸ்ரீவர்ஷினியும் தனுஜாவும். அவர்களுக்கு என்ன கூறுவதென இருவரும் முழித்துக்கொண்டிருக்க துஷாந்தினியின் அருகில் வந்த தனுஜா

"என்ன அக்கா இதெல்லாம், நீங்க அத்தானை காதலிச்சீங்களா? என்னால நம்பவேமுடியல்ல. அப்போ அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே! அவங்களே உங்களை சேர்த்துவச்சிருப்பாங்க. இப்படி ரிஷிதர் அத்தானை ஏமாத்திருக்க வேணாமே அவர் பாவமில்ல. நாலஞ்சுநாள்ல உங்களுக்கும் அவருக்கும் கல்யாணம், ஆனால் அதைப்பத்தி கொஞ்சங்கூட யோசிக்காம ரெண்டுபேரும் இப்படி கதச்சிட்டிருக்கீங்க, இது நல்லாயிருக்கா? இது நியாயமா? துரோகமில்லையா? ஏனக்கா இப்படி செய்றீங்க? அப்பவே அம்மா கேட்டாங்கதானே உங்க மனசுல யாராவது இருக்காங்களான்னு, சொல்லிருக்கலாமே தேவாத்தான்தான் இருக்காரென்று. அப்போ அதைச்சொல்லாம எல்லா ஏற்பாடும் பண்ணி கல்யாணம்வரை வந்தபிறகு அத்தான்கிட்ட கெஞ்சிட்டிருக்கீங்க. சத்தியமா இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல்லக்கா." அழுதவாறு தனுஜா கூற

"நானும் உங்க ரெண்டுபேர்கிட்டயும் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல. அண்ணா! துஷாந்திக்கா சொல்லத்தயங்கினால் நம்ம அம்மாகிட்ட நீங்களாவது சொல்லிருக்கலாமே! ரிஷிதரண்ணா ரொம்பப்பாவம். நீங்க ரெண்டுபேரும் அவரை இப்படி ஏமாத்திட்டீங்களே!" கவலையுடன் வர்ஷியும் கூறிட அவர்கள் தங்களை தவறாக கருதுவது தாங்கமுடியாமல் கோபமான தேவேஷ்வா

"பாரு, எல்லாம் உன்னாலதான். இப்போ உன்னோட சேர்த்து எனக்கும் கெட்டபேர் வாங்கிக்கொடுத்துட்ட அதுவும் தங்கச்சிங்க வாயாலயே துரோகின்னு, இப்போ உனக்கு சந்தோசமா?" அவன் கடுகடுக்க

"நான் ஏன் அம்மாகிட்ட சொல்லல்ல என்றதுக்கு பதில் நான் சொல்லுறதைவிட இதோ நிக்குறாரே இவர்கிட்டயே கேளுங்க. அப்பதான் உங்களுக்கு என்பக்க நியாயம் விளங்கும்." என்றவள் விறைப்பாய் நிற்க பெண்கள் இருவரும் தேவேஷ்வாவின் புறம்திரும்பி பதிலுக்காய் அவன் முகம் பார்க்க, அவனோ அமைதிகாக்க, பொறுமையிழந்த வர்ஷினி தன் அண்ணனிடம் என்ன நடந்ததெனக் கேட்க, அதற்குமேல் எதையும் மறைக்காது துஷானி தன்னிடம் காதலைக் கூறியதுமுதல் சற்றுமுன் நடந்ததுவரை அனைத்தையும் கூறியவன், திவ்யாமேல் அவனுக்கிருந்த காதலையும் மறைக்காது கூறி அவர்களிடமே நியாயங்கேட்க யாருக்கு நியாயம் கூறுவதெனத்தெரியாது இருவரும் தவித்துப்போக அவர்களை நேராய்ப்பார்த்தவன்

"இங்கப்பாருங்க வர்ஷி, தனு இந்தவிசயம் உங்களைத்தவிர யாருக்கும் எப்போதும் தெரியவேகூடாது. இந்தரகசியம் ரகசியமாகவே கடைசிவரை வாழட்டும் அதுதான் எல்லோருக்கும் நல்லது. தனு! உங்க அக்காக்கு காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசந்தெரியல்ல அதனால அவளும் குழம்பி நம்மளையும் குழப்புறா. கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிடும். ரிஷிதர் ரொம்பநல்லவர் அதனால இவளை புரிஞ்சுநடந்துப்பார். இவளும் சீக்கிரமாவே அவரைப்புரிஞ்சிப்பா அப்போ இதெல்லாம் பைத்தியகரத்தனமாத் தெரியும், ஏன் சிரிப்புக்கூட வரும். அதனால எதையும் யோசிச்சு குழம்பாம நிம்மதியாயிருங்க என்ன?" அவர்களுக்குச் சொல்வதுபோல் துஷாந்தினிக்கும் எடுத்துக்கூற

"அத்தான்! எனக்கும் எல்லாம் தெளிவாகிடுச்சு, திவ்யாக்காப்பத்தி இவங்ககிட்ட சொன்னாமட்டும் போதாது முதல்ல உங்க லவ்வ திவ்யாக்காகிட்ட சொல்லுங்க, நீங்க சொன்னமாதிரி வீட்டிலயும் சீக்கிரமா சொல்லிடுங்க."

"அதை நான் பார்த்துக்கிறேன்." பட்டென்று பதில்கூற

"கவலைப்படாதீங்க, இனியும் உங்க வாழ்க்கைக்கு நான் தொந்தரவா இருக்கமாட்டேன். அத்தான்! உங்க கண்ணுல பார்த்த வலி எனக்கானதான்னு தெரிஞ்சுக்கத்தான் திரும்பத்திரும்ப கேட்டேன். உங்களை கட்டிக்கிறதுக்கில்லை. உங்க வாழ்க்கைய விட்டு நான் விலகினாத்தான் நிம்மதியும் சந்தோசமும் கிடைக்குமென்று எப்போ சொன்னீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி என்உடல், பொருள்,ஆவி எல்லாமே என் கணவருக்காக மட்டுந்தான். தனு! உங்க அக்கா துரோகியில்லடி, ஒருநாளும் ஆகவும்மாட்டேன். இந்தநிமிஷம் உனக்கு வாக்குத்தரேன். ரிஷிதரன்தான் என் கணவர் அதுல எந்த மாற்றமுமில்லை. இந்தக்கல்யாணம் நல்லபடியாவே நடக்கும். இதுவும் உறுதி." அவள் வார்த்தைகளில் மற்றையவர்கள் மகிழ, தேவேஷ்வா வெளியே மகிழ்ந்தாலும் 'ரிஷிதரன்தான் என் கணவர்.' என்ற அவள் வார்த்தையில் அவனுள்ளே லேசான வலி, ஆனால் காரணந்தான் ஆடவனுக்கு இறுதிவரை புரியவேயில்லை. அதற்குமேல் அங்கு தாமதித்தால் தன் அகத்தின் வலியை முகத்தின் வழியாக கண்டுகொண்டு காரணம் கேட்பாளோ என்ற பயத்தில் தங்கைகளுக்கு ரகசியம் பரகசியமாகாமல் காக்கும்படி மீண்டும் வலியுறுத்தியவன் புயல்வேகத்தில் தன் அறையை நோக்கிப்போக அவனை நிறுத்திய துஷாந்தினி

"அத்தான்! மறந்திடாதீங்க நாளைக்கே திவ்யாக்காட்ட சொல்லனும். வீட்டுலயும்தான்." கூறியவளை முறைத்தவன் அறைக்குள் நுழைந்துகொண்டான். அவனையே வலி நிறைந்த பார்வையுடன் பார்த்திருந்த துஷானியை நெருங்கிய வர்ஷியும் தனுவும் அவளை ஆதரவாய் தோளணைக்க அதில் பாவையவள் கண்களிலிருந்து இரண்டு பெரிய நீர் முத்துக்கள் கன்னத்தில் விழுந்து உடைந்துசிதறின. அவள் கண்ணீரை துடைத்துவிட்ட வர்ஷினி

"அக்கா, உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதென்றே தெரியல்ல, அண்ணா உங்க மனசுலயிருந்ததை நினச்சு சந்தோசப்படுறதா? இல்லை அவர் மனசுல நீங்கயில்லாம திவ்யாக்காயிருக்கிறதை நினச்சு வருத்தப்படுறதா? இல்லை ரிஷிதரண்ணாமாதிரி ஒருநல்லவர் உங்களுக்கு கிடச்சதை எண்ணி பெருமைப்படுறதா? இல்ல தேவாண்ணாவும் நீங்களும் சேராமப்போனதை நினச்சு கவலைப்படுறதா? எங்களுக்கும் எதுவும் புரியல்லக்கா. ஆனால் ஒன்னுக்கா இதுக்குமேலயும் தேவாண்ணாவை நினச்சிட்டிருக்காம உங்க மனசை மாத்திக்கோங்க. ரிஷிதரண்ணா ரொம்பநல்லவர். உங்களுக்கு ஏத்தவரும் அவர்தான் நிச்சயமா இதெல்லாம் மறந்துட்டு அவர்கூட நீங்க சந்தோசமாயிருப்பீங்க. தேவாண்ணா சொன்னமாதிரி இதெல்லாம் அப்போ பைத்தியகாரத்தனமாவே உங்களுக்கு தோனும். எதையும் நினச்சு ஃபீல்பண்ணாதீங்க."

"ஓமக்கா! தேவாத்தான் சொன்னமாதிரி இந்த ரகசியம் ரகசியமா வாழ்றதுதான் எல்லோருக்குமே நல்லது. நீங்க ரிஷிதரத்தான் கூட நிறையநாள் சந்தோசமா வாழனும். எங்க ரெண்டுபேருக்கும் தெரிஞ்ச இந்தரகசியம் எங்களோடயே போகட்டும். உடனே முடியாட்டியும் கொஞ்சங்கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துடுங்கக்கா. மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க. ப்ளீஸ்க்கா, அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப ஃபீல்பண்ணுவாங்க. நாங்க சொல்லுறது உங்களுக்கு புரியுதாக்கா? எல்லாத்தையும் மறந்துடுங்கக்கா இந்தநிமிஷத்துலயிருந்து ரிஷிதரத்தானை மட்டும் மனசுல வச்சுக்கோங்க ப்ளீஸ்." தனுஜாவின் பேச்சை வர்ஷினியும் ஆதரிக்க, அவர்களிருவரும் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்து கண்ணீர் விழிகளுடனே சரியென தலையசைத்தாள் துஷாந்தினி. அவளின் கண்ணீரில் பெண்களிருவரின் கண்களிலும் நீர் நிறைந்தது.

inbound7835792724525668189.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு


https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-05

inbound3454765895881127973.jpg

திருமண வேலைகள் அதிதீவிரமாக நடைபெற, அதில் முழுமனதாய் ஈடுபடமுடியாமல் தவித்தாள் துஷாந்தினி. தேவேஷ்வா அவ்வளவு உதாசீனப்படுத்தியும், எவ்வளவுதான் வர்ஷியும் தனுவும் ஆறுதலாயிருந்தும் அவளால் மனதை உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. மெல்ல மெல்ல ரிஷிதரனை தன் மனதிற்கு நெருக்கமானவனாக மாற்றிக்கொள்ள முயன்று அதில் வெற்றி காண்பதுபோல் உணரும் தருவாயில் கல்யாணவேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு, முகம் மலர்ந்திருந்தாலும் கண்களில் உயிர்ப்பில்லாமல் கண்முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் அவள் அத்தானை பார்க்கும் நொடியிலெல்லாம் பெண்ணவளின் உறுதி காற்றோடு கரைந்து போய்விட மனம் நோகலானாள். அன்றும் அப்படித்தான், வீட்டினரனைவரும் அமர்ந்து கல்யாணஏற்பாடுகள் அனைத்தையும் குறையேதும் வராது எப்படிச்செய்வதென பேசிக்கொண்டிருந்தனர்.

"அண்ணா, நாளைக்கு மருதாணிக்கு வார எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டீங்கல்ல."

"அதெல்லாம் பண்ணியாச்சு மஞ்சு, அதுசரி மாப்பிள்ளைத்தோழன் யாரு?"

"அதான் யோசிச்சிட்டிருக்கோம். நம்ம தேவா செஞ்சா என்ன?" யசோதா கேட்டதும் தேவா, துஷானி, வர்ஷி, தனு ஆகிய நால்வரின் தலைகளும் சட்டென்று அதிர்ச்சியாய் நிமிர்ந்து ஒருவரையொருவர் நோக்க

"தேவா முறையில்லையே யசோ, அதுசரி வராது." பிரபாகரன் கூற

"அத்தான்! எங்க பெரியப்பா மகன் ஆனந்தண்ணாட மகன் சரண் இருக்கான். அவன்கிட்ட ஏற்கனவே கதச்சிட்டேன் அவன் நம்ம துஷாந்திக்கு தம்பிமுறைதான்." மாதவி கூறியதும்தான் நால்வருக்கும் அப்பாடா என்றிருந்தது. கல்யாணஏற்பாடுகள் பற்றி மேலும் பேசிக்கொண்டிருக்க எதிலும் கலந்துகொள்ள முடியாமல் தரையை நோக்கிக்கொண்டு எதையோ சிந்தித்தவளாய் அமர்ந்திருந்த துஷாந்தினிக்கு யாரோ தன்னைப் பார்ப்பதுபோன்ற உணர்வுதோன்ற சட்டென்று நிமிர்ந்து தேவேஷ்வாவின் முகம்நோக்க அவனோ அவளையே பார்த்திருந்தான். அந்தப்பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் அவளும் அவனையே நோக்கியிருக்க, கல்யாண விடயங்களைப்பற்றி கலந்துரையாடியவர்கள் திருப்தியாய் பலமுடிவுகளை எடுத்துக்கொண்டு கலைந்து சென்ற பின்னும் இருவரின் பார்வையிலும் எதுவித மாற்றமுமில்லாமல் விழிகள் ஒன்றோடொன்று கலந்துகொள்ள அப்படியே அமர்ந்திருந்தனர். இந்த ஊமைநாடகத்தைப் பார்த்திருந்த வர்ஷியும் தனுவும் ஒவ்வொருவிதமாக தங்களின் உடன்பிறப்புகளை எண்ணி கவலைகொண்டவர்கள் அவர்களை நெருங்க அப்போதும் அவர்கள் அப்படியே அமர்ந்திருக்க, அவரவர் உடன்பிறப்புகளின் தோள்த்தொட திடுக்கிட்டு நிமிர்ந்தவர்களின் பார்வை பாவமாய், சட்டென்று தன்பார்வையைக் கடினமாக்கிய தேவேஷ்வா அவ்விடம்விட்டு நகர

"அத்தான்! இப்பயாவது ஒத்துக்கங்க, இந்த திவி கதையெல்லாம் பொய்யென்று. இந்தப் பார்வை எனக்காகத்தான், உங்க காதல் என் மேலதான், எனக்கது நல்லாவேதெரியும். அத்தான்! உங்க மனசுல நான்தான் இருக்கேனென்று எனக்கு இங்க ஃபீலாகுது." என்று தன் இதயப்பகுதியைத் தொட்டுக்காட்டியவள்

"அந்த ஃபீலிங்ஸ் ஒருநாளும் பொய்யாகாது. நீங்க எனக்காகத்தான் திவ்யாக்கா பேரை யூஸ்பண்ணிக்குறீங்க, மத்தப்படி உங்களுக்கு அவங்கள்ல ஒருகாதலுமில்ல, உங்க காதலெல்லாம் உங்க கண்ணம்மாவிலதானென்றும் எனக்கு இங்க சொல்லுது." மீண்டும் இதயம்தொட அவளை முறைத்தவன்

"உனக்கு எத்தனைதரம் சொன்னாலும் திரும்பத்திரும்ப பைத்தியகாரிமாதிரி கதச்சிட்டிருக்க. இங்கப்பாரு நான் என் திவியை மட்டுந்தான் காதலிக்கிறேன், திவிதான் என் பொண்டாட்டி. இதை முழுசா உன் புத்திக்கு ஏத்திக்கோ." கோபமாய் விலகிச்செல்ல அவன் கடுமையில் துஷாந்தினியோ சட்டென்று முகம் மூடியழுதவள் தன் அறைக்குள் விரைந்தாள். செய்வதறியாது திகைத்துநின்றது என்னவோ வர்ஷியும் தனுவும்தான்.

அறையினுள் நுழைந்த துஷானிக்கு தன் அத்தான் மனதில் எங்கோ ஓர்மூலையில் தானிருப்பது உறுதியாகப் தெரிந்ததும் அவள் உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையும் கண்களில் கண்ணீருமாய் இருந்தவளுக்கு அடுத்து செய்யவேண்டியது புரிய ஒருதிடமான முடிவுடன் துயில்கொள்ளத் தொடங்கினாள்.

மறுநாள் விஷ்வானந்தனைத் தேடிச்சென்ற துஷாந்தினி திவ்யாவைத் திருமணத்திற்கு அழைக்கும்படி கூற அவனோ ஆச்சரியமாக,

"இல்லை விஷ்வாத்தான், என் ப்ரண்ட் சுமியிருக்கால்ல அவளை கல்யாணத்திற்குக் கூப்பிட்டேன். அவங்க வீட்டுல தனியா அனுப்பமாட்டாங்களாம். அவளோட அக்காதான் உங்கப்ரண்ட் திவ்யா. அதனாலதான் அவங்களையும் கூப்பிடசொல்லுறேன். நீங்க கோள் பண்ணுங்கத்தான் நானும் அவங்கள இன்வைட் பண்ணுறேன்."

"ஓ...இதான் விஷயமா? ம்...அவளை மட்டும் கூப்பிட்டா வரமாட்டா. ஓகே என் ஜூனியர்ஸ் சிலரை நான் ஏற்கனவே இன்வைட் பண்ணிருக்கேன். அதைச்சொன்னா திவ்யாவும் ஓகே சொல்லிடுவா, அவ வந்தா நானும் ரொம்பஹேப்பி." பிரகாசமான முகத்துடன் கூறிய விஷ்வானந்தன் திவ்யாவிற்கு அழைப்பை ஏற்படுத்தி திருமணத்திற்கு அழைக்க அவள் தயங்க விஷ்வாவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய துஷாந்தினியும் அவளை அழைக்க முதலில் தயங்கிய திவ்யா, தேவாவை சந்திக்கலாமென்ற எண்ணம் தோன்ற சரியென்றாள்.

"மறக்காம சுமிகூட மெஹந்திக்கும் கட்டாயம் வந்திடுங்க. உங்களுக்கு ஒரு சேப்ரைஸுமிருக்கு. வராமவிட்டுடாதீங்கக்கா உங்களுக்காக நான் வெயிட் பண்ணுவேன்." என்றவள் அழைப்பைத்துண்டிக்க அவளைக் கேள்வியாய் நோக்கினான் விஷ்வா. அதைக் கவனியாததுபோல் அவனுக்கு நன்றிகூறி, அவ்விடம்விட்டு நகர்ந்தவளுக்கு, தான் செய்யப்போகும் விடயத்தை எண்ணி ஒருவித மனபாரம் உள்ளே ஏறிக்கொண்டது.

🌼🌼🌼

நடுவிலே இருவர் அமரத்தக்க சிறிய திவான்(நீள்இருக்கை) போடப்பட்டிருக்க அதன் பின்பக்கத்தில் மஞ்சள் மலர்களும் பச்சையிலைகளும் கொண்டு அமைக்கப்பட்ட வட்டவடிவமான பெரிய மலர்வளையம் ஒன்றிருக்க அதில் மஞ்சள் மலர்ச்சரங்கள் குஞ்சத்துடன் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் நடுவிலே தங்கப்பிள்ளையார் மின்னிக்கொண்டிருந்தார். வீடுமுழுக்க சிறிய அலங்கார விளக்குகள் படரவிடப்பட்டு மஞ்சளொளியை இறைத்துக்கொண்டிருந்தன. எங்கும் மஞ்சள்மயமாய் காட்சியளித்த அறையினுள் பொன்மஞ்சள் லெஹங்கா அணிந்து வெள்ளைமுத்துக்களுடன் கோர்க்கப்பட்ட ரோஜாக்கள் வடிவான ஆபரணங்கள் பூண்டு, அரும்பிய புன்னகையுடன் வந்த துஷாந்தினி, மஞ்சத்திலமர மலர்க்கூட்டத்தின் நடுவே மலர்ந்த மஞ்சள்மலராய் ஜொலித்தவளின் அழகோ காண்போர் கண்களுக்கு விருந்துபடைத்தது. புகைப்படக்காரவரும் பாவையின் அழகைப் பலகோணங்களில் புகைப்படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது தன் மருமகளருகில் வந்த வாசுகி அவளை கட்டியணைத்து உச்சிமுகர அந்த அழகியதருணமும் கேமராக்கண்களில் பதிவேற்றப்பட்டது. இப்படிப் பலதருணங்கள் கேமராக்கண்களில் பதிவாக மருதாணிவிழாவும் இனிதே துவங்கியது. ஒருபக்கம் மருதாணி வைக்க வந்த மருதாணி வடிவமைப்பாளர்கள் மணப்பெண்ணின் கரங்களிலும் மற்றைய பெண்களின் கரங்களிலும் மருதாணியை வைத்துவிட பிரிதொரு பக்கம் ஆடலும் பாடலும் அரங்கேறி விழாவை மேலும் மெருகேற்றியது. அந்தவேளையில் சுமித்திராவுடன் உள்நுழைந்த திவ்யாவைக் கண்டதும் தலையசைத்து தன் அருகிலே அவர்களை அழைத்துக்கொண்டாள் துஷாந்தினி. அத்தனை நேரமும் தன் கண்ணம்மாவின் அழகில் மெய்மறந்து அவள் புன்னகை தவழ்ந்த முகத்தை உள்ளூர சோகத்துடன் பார்த்திருந்த தேவேஷ்வா திவ்யாவை அந்தஇடத்தில் கண்டதும் தடுமாறிப்போக, அவனையே வைத்த கண் வாங்காது பார்த்து வந்தவளோ துஷாந்தினியருகில் அமர்ந்துகொள்ள சுமி மற்றைய தோழிகளுடன் இணைந்துகொண்டாள்.

திவ்யாவின் கைகளிலும் மருதாணி வைக்கச்சொல்ல மருதாணிப்பெண் அவளுக்கும் அழகாக மருதாணியை வைத்துவிட்டாள். துஷாந்தினியின் தோழிகள் ஆட்டத்தில் கலந்துகொள்ள அவளையும் அழைக்க இன்னும் அவள் மருதாணி அலங்காரம் முடியாததை சுட்டக்காட்டி மறுத்தவளோ திவ்யாவை ஆடச்சொல்ல முதலில் மறுத்தவள் பின் தன் நாயகனை மனதில் நினைத்து ஆடத்தொடங்கினாள். பாடலும் அதற்கேற்ப இசைக்கத் தொடங்கியது.

"காதல் வந்ததும் கன்னியினுள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை.......
........நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு, சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு....."

தேவாவையே பார்த்தவாறு ஆடிக்கொண்டிருந்த திவ்யாவை அதிர்ந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தான் தேவேஷ்வா. அவனையே பார்த்திருந்த துஷாந்தினிக்கு உள்ளூர வலித்தாலும் உதட்டோரம் மெல்லிய முறுவல் பூக்க, தன் அத்தையை அழைத்தவள் குடிக்கத் தண்ணீர் கேட்க கொண்டுவந்தவர் கையோடு அவளுக்குப் புகட்டிவிட்டு நகரத்தொடங்க, அவரை அழைத்து ஆடிக்கொண்டிருந்த திவ்யாவை சுட்டிக்காட்டி அவளைப்பற்றிய அவரின் கருத்தைக் கேட்க அவரோ

"விஷ்வா ப்ரண்ட் திவ்யாயில்ல அது, தேவாக்கும் ப்ரண்ட்டில்ல. ம்...ரொம்ப நல்லபிள்ளை, அழகாயிருக்கா நல்லா டான்ஸும் பண்ணுறா, அவங்க குடும்பமும் தெரிஞ்சவங்கதான். அதுசரி துஷாந்தி, எதுக்கு கேக்குற என்ன விஷ்வாப்பயல் இந்தப்பிள்ளைக்கிட்ட சிக்கிட்டானா?" கேட்டுவிட்டு சிரித்தவரிடம்

"சிக்கிட்டார்தான் ஆனால் விஷ்வாத்தானில்லை, உங்க மூத்தபிள்ளை."

"என்ன?" யசோதாவோ அதிர்ந்து கூவ மற்றையவர்கள் என்னவென விசாரிக்க ஒன்றுமில்லையென சமாளித்தனர் அத்தையும் மருமகளும். குரலை தணித்துக்கொண்டு

"என்ன சொல்லுற துஷாந்தி, உண்மையாவே நம்ம தேவாவா? என்னால நம்பவேமுடியல்லம்மா."

"எஸ் அத்தை, உங்க தேவாதான். அங்கப்பாருங்க வெச்ச கண்ணு வாங்காம அக்காவையே பார்த்துட்டிருக்கார். முதல்ல திவ்யாக்காதான் அவங்க லவ்வ சொன்னாங்க அப்போ சேர் ஏத்துக்கவேயில்ல. இப்போதான் அவருக்கு அவர் மனசு புரிஞ்சிருக்குப்போல அம்மணிமேல லவ் வந்திடுச்சுன்னு சொல்லிட்டாரு."

"என்கிட்ட ஒருவார்த்தை சொல்லல்ல பார்த்தாயா?"

"அத்தை! இன்னும் திவ்யாக்காகிட்டயே அவர் மனசுலயிருக்கிற லவ்வ சொல்லல்ல. எப்படி உங்ககிட்ட சொல்லுவார்?"

"அப்படியா? சரி முதல்ல உன் கல்யாணம் முடியட்டும் பிறகு பார்த்துக்கிறேன் அவனை."

"அத்தை நான் சொன்னேனென்று சொல்லிடாதீங்க."

"இல்லடா அவன்கிட்ட இப்போ நான் எதுவும் கேக்கப்போறதில்லை. அவனா சொல்லட்டும் அப்போயிருக்கு அவனுக்கு." என்றவர் அவ்விடம் விட்டுச்செல்ல அத்தனை நேரமும் சிரித்துக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் துளிர்க்க, இமைகளை மூடித்திறந்து கண்ணீரை தனக்குள்ளே இழுத்துக்கொண்டவள் பார்வை தேவாவிடம் திரும்ப அவனோ இமைக்காமல் இவளையே பார்த்திருந்தான்.

பெண்களின் கைகளை மருதாணி அலங்கரித்திருக்க திருமதிகளுக்கு அவர்களின் திருவாளர்கள் இரவுணவை ஊட்டிக்கொண்டிருந்தனர். அப்போது உணவுத்தட்டுடன் துஷாந்தினியிடம் வந்த யசோதா அவளுக்கு கரண்டியால் அள்ளிக்கொடுக்க

"அத்தை! அம்மாவையும் கூப்பிடுங்க, என் ப்ரண்ட்ஸும் இன்னும் சாப்பிடல்ல, அவங்களுக்கும் கொடுக்கனும்." என்றவள் குரலைத்தணித்து

"உங்க மருமகளுக்கும்தான்." என்றதும் அவளுக்கு செல்லமாக தலையில் தட்டியவர் மஞ்சுளா, மாதவியுடன் தேவா மற்றும் விஷ்வா, நவீன் ஆகியோரையும் அழைத்த யசோதா பெண்களுக்கு உணவு எடுத்துவைப்பதில் உதவச்சொன்னவர் துஷாந்தினியின் அருகிலே சுமியுடன் அமர்ந்திருந்த திவ்யாவிற்கும் ஊட்ட எத்தனிக்க

"ஐயோ! ஆன்ட்டி, எங்க கை நல்லாவே காஞ்சிடுச்சு, ஸ்பூன் வச்சு நாங்களே சாப்பிட்டுக்கிறோமே." திவ்யா மறுக்க திவ்யாவை நெருங்கிய யசோதா அவளுக்குமட்டும் கேட்கும் குரலில்

"அத்தை என்றே சொல்லும்மா." ஆச்சரியத்தில் திவ்யாவின் விழிகள் விரிய சட்டென்று திரும்பி துஷாந்தினியை நோக்க அவளோ 'தான் சொன்ன சேப்ரைஸ் இதுதான்' என உதடசைத்தாள். அதில் திவியின் முகம் ஆனந்தமாய் மலர்ந்தது. அப்போது தேவாவை அழைத்த யசோதா, சுமிக்கும் திவ்யாவிற்கும் உணவைப் பரிமாறுமாறு கூற அவ்விடம் வந்தவன் அவர்களுக்கு உணவைப் பரிமாற

"உனக்கானவங்களை நீதானேப்பா கவனிக்கனும்." யசோதா கூற திடுக்கிட்டுப் பார்த்தான் மைந்தன்

"இல்லப்பா திவ்யா உனக்கு நல்ல ப்ரண்டில்ல. அப்போ எங்களைவிட நீதானே நல்லாகவனிக்கனும்." தாயின் வார்த்தையில் துஷாந்தினிதான் ஏதோ குளறுபடி செய்திருக்கிறாளென உணர்ந்தவனுக்கு நாணித் தலை கவிழ்ந்திருந்த திவ்யாவின் முகம், இது துஷானியின் திருவிளையாடல்தான் என்பதை உறுதிசெய்தது. தாயின் முன்னே எதையும் செய்ய முடியாதவன் பற்களைக்கடிக்க அவனையே பார்த்திருந்த துஷாந்தினி வாய்க்குள்ளே சிரிக்க கையிலிருந்த சாப்பாட்டுப் பாத்திரத்தை தாயிடம் கொடுத்தவன் சடசடவென்று அவ்விடம்விட்டு நகர அவன் செல்லும் தோரணையே தன்மேல் எத்தனை கோபமாயிருக்கிறான் என்பதை பெண்ணிற்கு உணர்த்தியது. தேவாவை பின்தொடர்ந்தவள் அவன் வழியைமறிக்க அதில் அவன் அவளை முறைக்க அவளோ

"அத்தான் நீங்க என் காதலை ஏத்துக்கல்ல, என் காதல் தோத்திடுச்சு. பட் உங்ககாதல் கட்டாயம் வெற்றியடையனும். அதுக்காகத்தான் உங்க லவ்வ வீட்டுல சொல்ல நான் உங்களுக்கு வழிசெஞ்சு தந்திருக்கேன். இனி ஈஸியா அத்தைகிட்ட, திவ்யாக்காகிட்ட எல்லாம் உங்க லவ்வ சொல்லலாம்." கூறி கசந்த முறுவலொன்றை சிந்த, அவனுக்கோ தன் கண்ணம்மாவின் செயலில் தலையிலடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

"நீங்க நல்லாயிருங்க அத்தான், உங்க திவிகூட நிம்மதியா சந்தோஷமாயிருங்க. இன்னும் ரெண்டுநாள்ல உங்க வாழ்க்கையில துஷானின்னு ஒருத்தி இல்லாமலே போயிடுவா." கண்களில் கண்ணீரோடு கூறியவளை அணைத்து ஆறுதல்படுத்தத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அதற்காகவே தன்மேல் கோபங்கொண்டவனாய்

"உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை, அதான் நான் பார்த்துக்கிறேனென்று சொன்னேனில்ல. அதுக்குள்ள அம்மாகிட்டயும் சொல்லி, ஏய்! நீதானே திவிய இன்வைட் பண்ணிருக்க." படபடத்தவனை கையமர்த்தியவள்

"என்ன அத்தான் என் கல்யாணம் முடியும்வரை உங்க பொய்ய மெய்டெயின் பண்ண நினச்சீங்களோ, அதை நான் உடச்சதும் என்மேல பாயுறீங்களா?"

"பைத்தியம்மாதிரி உளராம சும்மா நிறுத்து, என் லைஃப்ப டிசைட் பண்ணுற உரிமைய உனக்கு யாரு கொடுத்தா? இதோட நிறுத்திக்க துஷாந்தினி."

"சரி அத்தான் நான் நிறுத்திக்கிறேன் ஆனால் நீங்க சொன்னது உண்மையென்று நிரூபீங்க."

"என்ன நிரூபிக்கனும்?"

"உங்க காதலை என் கண் முன்னாடியே திவ்யாக்காட்ட சொல்லனும்."

"அப்போ சொன்னா ஒத்துக்குவயில்ல கூப்பிடு இப்பவே இங்கயே உன் கண் முன்னாடியே சொல்லிடுறேன்." அவன் அடிக்குரலில் சீற, திவ்யாவை அழைத்துவந்து அவன் முன் நிறுத்தியவள் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்திருக்க அவளை முறைத்த தேவேஷ்வா திவியின் புறம் திரும்பி,

"மூனுவருஷம் முன்ன நீ சொன்ன காதலை நான் இப்போ ஏத்துக்கிறேன்." பட்டென்று கூற அதை சற்றும் எதிர்பாராது தடுமாறிய திவ்யா என்ன செய்வதெனத் தெரியாது சிறிதுநேரம் தேவாவையே பார்த்திருந்தவள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

"தேவேஷ்! துஷாந்தி, ஏதோ சேப்ரைஸென்று சொன்னப்போகூட நான் நம்பல்ல, உங்கம்மாவும் அத்தைன்னு கூப்பிடச்சொன்னதும் சந்தோஷமாயிருந்துச்சு, ஆசைகொண்ட நம்ம மனசுதான் நமக்கு பேவரா யோசிக்குதுன்னு என்னை நானே கட்டுப்படுத்திக்கிட்டேன். ஆனால் இப்போ நீங்க என்னை ஏத்துக்கிறேனென்று சொன்னதும் எனக்கு என்ன சொல்லுறதென்றே தெரியல்ல. என் வேண்டுதல் பலிச்சிடுச்சு. என் காதல் ஜெயிச்சிடுச்சு நான் ரொம்ப சந்தோசமாயிருக்கேன். துஷாந்தினி உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும் நீங்கமட்டும் என்னை கூப்பிடல்லென்றால் இந்ததருணம் எனக்கு கிடச்சிருக்கவே கிடச்சிருக்காது. தைங்க்ஸ் துஷாந்தினி." பேசிக்கொண்டிருக்கும் போதே சுமி அவளைத் தேடிவர, அவசரமாக தேவாவிடம் திரும்பி

"ஐ லவ் யூ தேவேஷ்." என்றவள் அவர்களிருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு சுமியுடன் புறப்பட்டாள். திவ்யா சென்றதும் துஷாந்தினியின் புறம் திரும்பி,

"இப்போ ஒத்துக்கிறாயா? நான் என் காதலைச் சொல்லியாச்சு திவியும் அதுக்கு பதில் தந்தாச்சு. இனியாவது என் விசயத்துல தலையிடாம உன் கல்யாண வேலையமட்டும் பாரு. புரிஞ்சுதா?" என்றவன் அவள் பதிலைக்கூட எதிர்பாராமல் தன் வீட்டை நோக்கிச்சென்றான். செல்லும் அவனையே நெஞ்சில் தைத்த வலியோடு பார்த்திருந்தாள் அவன் கண்ணம்மா.

🤵💍👰

திருமணநாளும் அழகாக விடிந்தது. அதிகாலையிலே எழுந்து தயாராகி மண்டபத்திற்கு வர அங்கே பலவண்ண ரோஜாமலர்கள் அந்தமண்டபம் முழுவதையும் அலங்கரிக்க, ரோஜா பந்தலிட்டே மணமேடையும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஐயர் திருமணத்திற்கான பூஜைகளை செய்யத்தொடங்கியிருக்க மணமகனாய் ரிஷிதரனும் பூஜைகளை மேற்கொண்டிருக்க இளஞ்சிவப்பு வண்ணப் பட்டுப்புடைவையில் தங்கநகைகள் ஜொலிக்க தாமரை மொட்டாய் தலை கவிழ்ந்து மணவறைநோக்கி வந்துகொண்டிருந்தாள் துஷாந்தினி. திரைக்குள்ளே தெரிந்த பெண்ணவளின் அழகை ஆடவனும் மெய்மறந்து பார்த்திருக்க பதுமையவளும் பக்கத்தில் வந்தமர முகூர்த்தத்திற்கு முதலான சடங்குகள் அனைத்தையும் மணமக்கள் முடித்ததும் முகூர்த்தத்திற்கான கூறைத்தட்டை பெண்ணிடத்தில் ரிஷிதரன் கொடுக்க தட்டிலிருந்த புடைவையைப் பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிய நிமிர்ந்து ஆடவனை நோக்கினாள். ரிஷிதரனும் சிரித்துக்கொண்டே ஒற்றைக்கண்ணடிக்க, அதில் சட்டென்று தலை கவிழ்ந்தவள் ஆடை மாற்றிவர உள்ளேசென்றதும் ஒப்பனைக்காக வந்திருந்த பெண் தன் வேலையை ஆரம்பித்தாள்.

மயில்தோகை பட்டுத்தி, திரைகொண்டு வதனம் மூடி, கழுத்திலொரு மலர்மாலையும் கைகளிலொரு மலர்மாலையுமாக அடிமேல் அடிவைத்து மணமேடையை நோக்கி வந்தவளை விட்டு ரிஷிதரனின் பார்வை விலகவில்லை. ஆனால் பாவையோ சற்றும் தலை நிமிர்ந்தாளில்லை. அது அவனுள் ஏதோசெய்ய அவள் நிலையை உணர்ந்தவன் தன்னை அடக்கிக்கொண்டான். ஆனாலும் அவன் பார்வையில் எதுவித மாற்றமுமில்லை. கைகளில் ஏந்தி வந்த மலர்மாலையை தலை குனிந்தபடியே ஆடவனுக்கு சூட்டியவள் அவன் பக்கத்தில் அமர்ந்ததும் பாவையின் வதனத்தை மறைத்திருந்த மெல்லிய திரையை நந்தினி நீக்கிவிட இப்போது முழுமதியாய் தெரிந்தவளின் மதிமுகத்தை எந்தத்தடங்கலுமின்றி ரசிக்கத்தொடங்கிய ரிஷிதரனை நந்தினியும் ரஞ்சனியும் கேலிசெய்ய அதை சிறிதும் பொருட்படுத்தாது தன் வேலையை தொடர்ந்தவனிடம் பாலில் தேய்த்து குங்குமமிட்டு அனைவரிடமும் ஆசிபெற்ற பொற்தாலியை, மந்திரங்கள் கூறி ஐயர் அவன் கைகளில் கொடுக்க, மேளதாளங்கள் முழங்க, உற்றாரும் சபையோரும் வாழ்த்தரிசி தூவி ஆசிர்வதித்தபோது, இந்தநிமிடம் முதல் தான் ரிஷிதரனின் சொத்து என்பதையும், தன் அத்தான் இனி தனக்கில்லை என்பதையும் ஊள்ளூர உணர்ந்த துஷாந்தினிக்கு நெஞ்சிலே சுள்ளென்றொரு வலியெழுந்தது, தன் வலியை கண்கள் காட்டிவிடக் கூடாதென்று இமைகளை மூடிக்கொள்ள ஆடவனும் பெண்ணவளின் கழுத்தில் மங்களநாணைப்பூட்டி சொன்னதுபோல் திருமதி ரிஷிதரனாக்கிக் கொண்டான். அதைத்தொடர்ந்து ஐயர், நெற்றியிலும் தாலியிலும் குங்குமத்தை வைக்கச்சொல்ல அவர் சொன்னதுபோல் தாலியில் குங்குமத்தை வைத்தவன் உச்சி வகிட்டிலும் வைத்துவிட கண்மூடி அதனை தனக்குள் ஏற்றுக்கொண்டாள். வைத்துவிட்டவன் அவளருகே குனிந்து

"மிஸிஸ்.ரிஷிதரன், இனியாவது இமை திறக்கலாமே, அப்படியே இந்த அடியானுக்கும் உங்கள் கடைக்கண் பார்வையைக் கொடுக்கலாமே." என்றதும் மெல்ல இமை திறந்தவளின் கண்முன்னே நின்றிருந்த தேவேஷ்வாவில் பார்வை நிலைத்திருக்க பாவையின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்திலிறங்க பார்த்திருந்தவர்களுக்கோ தாலியேறியதும் வரும் ஆனந்தகண்ணீராய்த் தோன்றியது. ஆனால் அவளின் அத்தான்மட்டுமே உணர்ந்துகொண்டான் தன் துஷானியின் கண்ணீர் தனக்காகத்தான் என்பதை, அடுத்தகணம் அவனின் ஒற்றைக்கண்ணிலிருந்து கண்ணீர் அவனின் கன்னம் தாண்டி வழிந்துகொண்டிருந்தது. அதனை மற்றையவர்கள் காணாது சட்டென்று துடைத்துக்கொள்ள அவனையே பார்த்திருந்த அவன் கண்ணம்மாவின் கண்களுக்கு அது தப்பவில்லை. ஆனால் அதனை எண்ணி மகிழ வேண்டியவளால் துளியும் மகிழ முடியவில்லை.
'கடைசிவரை எனக்காகத்தான் உங்க வலியெல்லாமென்று ஏன் அத்தான் நீங்க ஒத்துக்கொள்ளவேயில்ல, ஆனாலும் உங்க கண்ணீர் உங்க மனசை காட்டிக்கொடுத்திடுச்சு. வேண்டாம் அத்தான் உங்ககிட்டயிருந்து எனக்காக இனி எதுவுமேவேண்டாம். அது உங்க கண்ணீராயிருந்தாலும் சரி, சின்னப் புன்னகையாயிருந்தாலும் சரி, துஷாந்தினி ரிஷிதரனுக்கு வேண்டவேவேண்டாம். இந்த துஷாந்தினி இனி ரிஷிதரனுக்கு மனைவியா வாழ முழுமனசோட முயற்சிப்பேன்.' என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவள் தேவேஷ்வாவை அக்கணப்பொழுதிலிருந்து வெறுக்கத்தொடங்கினாள்.

அடுத்தடுத்து சடங்குகள் நடக்க அதில் தன் கவனத்தைத் திருப்பினாள் ரிஷிதரனின் மனைவியாய். அங்கு அரங்கேறிய நாடகத்தை வர்ஷினியும் தனுவும் பார்த்து மனம் வெதும்பியபோதும் தங்களால் எதுவும் செய்யமுடியாதென தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர்.

ஒருவாறு திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கே சென்றவர்கள் அங்கு செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களையும் முடித்ததும் ரிஷிதரன் ஆண்களுடன் முன்னறையில் பேசிக்கொண்டிருக்க, அங்கே தனியாக அமர்ந்திருந்த துஷாந்தினியிடம் வந்த மஞ்சுளா அவளை அழைக்க அவளோ அவர் புறம் சிறிதும் திரும்பாமலிருக்க, மகளின் செயலில் மஞ்சுளா அதிர்ந்து நிற்க, சமாதானமாய் அவர் தோள்தொட்ட யசோதா தான் பார்த்துக் கொள்வதாய்க்கூறி துஷாந்தினியை நெருங்கியவர்

"துஷாந்திம்மா, ரிஷிதர் தம்பிய உன் ரூமுக்கு கூட்டிட்டுப் போம்மா, அவர் கொஞ்சம் ஃப்ரெஸாகி ரெஸ்ட் எடுக்கட்டும்." அவளோ தயங்கி நிற்க

"என்னடா ஏன் இப்படி யோசிக்குற? அவரைக் கூப்பிடும்மா, உள்ளே கூட்டிட்டுப்போ எவ்வளவு நேரந்தான் இப்படியே இருப்பார். காலையில போட்ட ட்ரெஸ் கசகசன்னு இருக்காதா? நீயும் அலங்காரமெல்லாம் கலச்சுடும்மா, காலையில கட்டின புடவைவேற, குளிச்சு மாத்திட்டு ரெண்டுபேரும் நல்லா ரெஸ்டெடுங்க." அவள் மீண்டும் தயங்கிக்கொண்டிருக்க, நவீனை அழைத்த யசோதா, ரிஷிதரனை அழைத்து வரக்கூற அவ்விடம் வந்த ரிஷிதர் என்னவென விசாரிக்க யசோதாவும் அவனை உடைமாற்றி ஓய்வெடுக்கக்கூற அவனோ முதலில் முழு அலங்காரத்திலிருக்கும் துஷாந்தினியை உடை மாற்றக்கூறியவன் நவீனின் உதவியுடன் கீழிருக்கும் ஒருஅறையில் குளித்து உடை மாற்றிக்கொண்டான். பட்டாடை களைந்து தலைக்குக்குளித்து அறையிலிருந்து வெளிவந்தவளைக் கண்டதும் தேவாவுடனமர்ந்து பேசிக்கொண்டிருந்த ரிஷிதரனின் பார்வை அப்படியே நிற்க, அவன் பார்வை சென்ற திசையை நோக்க அங்கே மயில்தோகையாய் கார்குழல் விரித்திருக்க, புதுத்தாலிச் சங்கிலி அவள் கழுத்துக்கு மேலும் அழகு சேர்க்க, இளமஞ்சள் சுடிதார் அவளை தேவதையாய்க்காட்ட தேவாவினால் பார்வையைத் திருப்பமுடியவில்லை. ஆனால் துஷாந்தினியின் பார்வை அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளின் பாராமுகம் தேவாவை கவலை கொள்ளச்செய்ய அவளையே வைத்த கண் வாங்காது பார்த்திருக்க அவளோ நடந்துவந்து ரிஷிதரனின் அருகில் அமர்ந்ததும்தான் அவனுக்கு நிதர்சனம் உறைத்தது. அவள் தன் கண்ணம்மா இல்லையென்பதும் புரிந்தது. தன் கண்ணம்மாவின் மேல் அவன்வைத்த காதலை அந்தநொடிதான் முழுதாய் உணர்ந்துகொண்டான் துஷானியின் அத்தான். அதற்குமேல் ஒருகணமும் அவ்விடமிருக்க முடியாது யாரிடமும் விடைபெறாமல் கண்கள் கலங்க தன்வீட்டை நோக்கிச்சென்றவனையே பார்த்திருந்த வர்ஷினியின் கண்களுக்கு அவன் கண்ணீரும் அவனுடைய வேகநடையும் பட அவளும் தன் அண்ணனைப் பின்தொடர்ந்தாள்.

விருந்தினர் பலர் வந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கிச்செல்ல கலகலப்பாகவே நேரம் கடக்கத்தொடங்கியது. ஒருவாறு அனைவரும் விடைபெற்றுக் கிளம்பியதும் வீட்டினர் மட்டுமே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக பொழுதும் சாய்ந்து மதியழகி வானில் உலாவரத் தொடங்கியதும் இரவு நெருங்குவதையும் அதனைத் தொடர்ந்த நிகழ்வினையும் நினைத்தவளுள் பதைபதைப்பும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

inbound4392527312968311424.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-06


inbound3879001963196073641.jpg

துஷாந்தினியின் வீட்டிலே முதலிரவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவள் அறை பெல்கனித்தோட்டத்தின் நடுவிலிருந்த ஊஞ்சலிலமர்ந்து மெதுவாக ஆடியவாறு அறைவாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷிதரன். குட்டிமானாய் மிரண்ட பார்வையுடன் தயங்கியவாறு அறையினுள் கால்வைத்தாள் துஷாந்தினி. இளமஞ்சள் சுடிதாரிலிருந்து இப்போது வெள்ளையும் நீலமும் கலந்த சுடிதாருக்கு மாறியிருந்தாள். உள்நுழைந்தவள் அங்கு ரிஷிதரனைக் காணாது கண்களால் துழாவ, அவளையே வைத்தகண் வாங்காது பார்த்திருந்தவனைக் கண்டதும் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். சந்திரோதயத்தைக் கண்டதும் தளர்ந்துபோகும் தாமரையாய் கூம்பியிருந்தவளின் முகத்தினையே சிலநொடிகள் பார்த்திருந்தவன்

"ஹேய் துஷாந்தினி, என்ன அங்கேயே நின்னுட்டீங்க. இங்க வாங்க." அவள் தயங்கிநிற்க அவன் மீண்டுமழைக்க அப்போதும் அவள் தயங்க எழுந்தவன் பெண்ணிடம் சென்று அவள் கைப்பற்றத்தொடங்க அனிச்சையாய் ஆணவன் கைப்படாமல் விலகியவள் பெல்கனியை நோக்கி நடக்க, ஆடவனும் பெண்ணவளைப் பின்தொடர்ந்தான். சென்றவளோ அப்படியே நிற்க அவளுக்கு ஓர்இருக்கையைக் காட்டி அமரச்சொன்னவன் அவளையே பார்த்தவாறு பழையபடி ஊஞ்சலில் அமர்ந்தவனுக்கு அவள் முகத்திலிருந்த பதட்டரேகை பெண்ணவள் நிலையைக்கூற தனக்குள் சிரித்தவன் முதலில் இலகுவாகவே பேச்சை ஆரம்பித்தான்.

"இந்த பெல்கனி கார்டன் உங்க கைவண்ணமா?" அவள் மெதுவாய் தலையாட்ட

"சூப்பராயிருக்கு, இது உங்களுக்கு ரொம்பப்பிடிச்ச இடமோ!" மீண்டும் அவள் தலை மெல்ல மேலிருந்து கீழாக அசைய அதற்கேற்ப அவள் காதை அலங்கரித்திருந்த ஜிமிக்கிகளும் அசைந்தன. அதன் அழகை ரசித்துக்கொண்டே அவள் ஏதும் பேசுவாளென அமைதிகாக்க அவளோ இன்னும் அமைதியாக

"துஷாந்தினி, இங்கப்பாருங்க இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஸனாகுறீங்க. முதல்ல ரிலெக்ஸாகுங்க. என்ன இன்றைய இரவை நினச்சுப் பயப்படுறீங்களா?" சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் குனிந்துகொள்ள

"ஓ....அதுதான் விஷயமா? இன்றைக்கே எல்லாம் நடக்கனுமென்று எந்த அவசியமுமில்ல. முதல்ல நாம ஒருத்தரொருத்தர் புரிஞ்சிக்கலாம். மத்ததைப் பிறகு பார்த்துக்கலாம், யூ டோன்ட் வொரி." அவன் வார்த்தைகளில் 'அப்பாடா' என மூச்சை வெளியிட்டவள் மீண்டும் மௌனியாக அத்தனைநேரமும் அவளையே இளநகை மலரப் பார்த்திருந்தவனுக்கு அவளின் மௌனம் இப்போது மெதுவாக பொறுமையை இழக்கச்செய்ய

"இப்படி எவ்வளவுநேரம் மௌனமாயிரிக்குற ஐடியா? இல்ல ஒருவேளை பேசினால் உங்க வாயிலிருந்து முத்துகள் உதிர்ந்திடுமோ!" என்று சிந்திப்பவன்போல பாவனைசெய்ய

"அது....அது...வந்து....என்ன பேச?" அவள் திக்கித்திணற

"பேசவேண்டாம் முதல்ல கேக்கலாமே! அதுக்குப்பிறகு சொல்லலாமே" அவள் கேள்வியாய் நோக்க

"என்னைப் பார்த்ததும் கேட்க உங்க மனசுக்குள்ள ஆயிரம் கேள்வியிருக்கில்ல. அதைத்தான் கேக்கச்சொல்லுறேன்." முதலில் தயங்கியவள் தன்னை திடப்படுத்திக்கொண்டு இருவாரமாய் மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள்.

"அது....அன்றைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ நான் உங்ககிட்ட கேட்டேனே உங்க முடிவச் சொல்லுங்கன்னு, அப்போ நீங்க என்னைப்பற்றி எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல்லென்று சொன்னீங்கல்ல..."

"மன்னிக்கனும் ஒரு சின்னத்திருத்தம் இப்போதைக்கு எதையும் தெரிஞ்சுக்க விரும்பல்ல, தெரிஞ்சுக்க வேண்டிய நேரத்துல கேக்குறேன் அப்போ சொல்லுங்கன்னு சொன்னேனே தவிர தெரிஞ்சிக்கவே விரும்பல்லென்று சொல்லவேயில்லையே."


"சரி எப்படியோ, ஆனால் நீங்க அந்தநிமிஷம் தெரிஞ்சிக்க விரும்பல்லத்தானே, அப்படின்னா உங்களுக்கு என்னைக் கல்யாணம்பண்ணிக்க இஷ்டமில்ல என்றுதானே அர்த்தம். ஆனால் ஏன் எல்லோர் முன்னாடியும் என்னைக்கட்டிக்க சம்மதம் சொன்னீங்க. ஏன் அப்படி பண்ணினீங்க?"

"இதென்ன கேள்வி உங்களைப் பிடிச்சிருந்தது அதான் ஓகே சொன்னேன்." அவன் பதிலில் அவள் திருப்தியடையவில்லை.

"கேக்கவேண்டியது கேட்டாச்சு, இப்போ சொல்ல வேண்டியதைச் சொல்லலாமே!"

"என்ன சொல்லனும்?"

"துஷாந்தினி, அப்போதைக்குத்தான் எதையும் தெரிஞ்சிக்க விரும்பல்லென்று சொன்னேன், ஆனால் இப்போதைக்கு தெரிஞ்சிக்க விரும்புறேன். சொல்லுங்க"

"அதான் என்ன சொல்லனும்? எனக்கு விளங்கல்ல."

"மேடம், சொன்னீங்கல்ல என்னைக் கட்டிக்கப்போறவருக்கு மட்டுந்தான் என் மொத்தமும் சொல்லுவேனென்று சொன்னீங்க. அதுதான் நியாயமென்றும் சொன்னீங்கல்ல, கட்டிக்கப்போறவர் இல்லம்மா, இப்போ கட்டிக்கிட்டவர் கேக்குறேன் சொல்லுங்க மேடம், உங்க லவ்ஸ்டோரிய." திடீரென்று இப்படிக் கேட்பானென எதிர்பார்க்காதவள் கொஞ்சம் தடுமாறித்தயங்க

"ஓ.....அப்போ அன்றைக்கு இந்த நியாயம் அநியாயம்பத்திச் சும்மாதான் சொன்னீங்களா? நானும் உண்மையென்று நம்பி கேள்விவேற கேட்டுட்டிருக்கேன் பாருங்க."

"அப்படியெல்லாமில்லை. நானொன்னும் சும்மா சொல்லல்ல, உண்மையாத்தான் சொன்னேன்." லேசாக கோபம் எட்டிப்பார்க்கக் கூறியவள்

"அப்படின்னா இப்போ சொல்ல வேண்டியதுதானே, உங்க காதல் கதைய."

"நீங்க என் வீட்டுக்காரவர் அதை யாராலும் மாற்றமுடியாது. அதனால நீங்க கேக்காட்டியும் நான் சொல்லித்தான் ஆகனும் அதுதான் நியாயம், அது என் கடமையுங்கூட." என்றவள் அதற்குமேல் தயங்காது தன் காதல் கதையை கூறத்தொடங்கினாள்.

"எங்கப்பாவும் அம்மாவும் ரெண்டுவீட்டு எதிர்ப்பையும் மீறி காதலிச்சு கல்யாணம்பண்ணிக்கிட்டாங்க. அதனால ரெண்டுபேர் வீட்டுலயும் ஏத்துக்கல்ல, ஆனால் அப்பாவோட வீட்டுல மனசார ஏத்துகிட்டாலும் தாத்தாவோட எதிர்ப்பைமீறி அவங்க ஆதரவைக் காட்டமுடியல்ல, ஆரம்பத்துலயிருந்து யசோ அத்தையும் பிரபாகர் மாமாவும்தான் எங்களுக்கு துணையாயிருந்தாங்க. அது தாத்தாவுக்கு பிடிக்காட்டியும் வீட்டு மருமகனை எதிர்க்கமுடியாம அமைதியாயிருந்திட்டார். எங்கப்பாம்மா கல்யாணம்பண்ணி ஐஞ்சு வருஷம்வரைக்கும் அவங்களுக்கு குழந்தை பிறக்கல்ல. அப்போ அத்தான்தான் அவங்களுக்கு எல்லாமேவா இருந்திருக்கார்." முகம் விகசிக்கக் கூறியவளை பார்த்திருந்தவன்

"அந்த அத்தான் யாரு?" என்றதும்

"யசோ அத்தை மகன் தே..வேஷ்..வா அத்தான்." அதுவரை காலமும் பெயர்கூறி அழைக்காமல் முதன்முதலில் உச்சரித்த தன் அத்தானின் பெயரை தயக்கமாகக் கூறியவளை மேலசொல்லு என்பதாய் கையசைக்க

"ஐஞ்சுவருஷம் கழிச்சுத்தான் நான் பொறந்தேன். அப்போ அவங்க ரெண்டுபேரும் அடஞ்ச சந்தோசத்துக்கு அளவேயில்லையாம். புள்ளையே இல்லையென்று வாழ்ந்தவங்களுக்கு மூனுமகள்களை அந்தக்கடவுள் கொடுத்துட்டாரென்று அவங்க ரொம்ப சந்தோசமாயிருந்தாங்க. நாங்க மூனுபேரும்தான் அவங்க உலகம் அதனால எங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பார்த்து வளர்த்தாங்க. எங்க குட்டிஉலகம் எவ்வளவு சந்தோசமாயிருத்துச்சுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்த உலகத்துல யசோ அத்தையும் பிரபாகர்மாமாவும் அடக்கம், எங்கவீட்டுல எந்த விஷேசமென்றாலும் அவங்கயில்லாம எதுவுமேயில்ல. அப்போல்லாம் விஷ்வாத்தான் அத்தைகூட அடிக்கடி வருவாங்க. ஆனால், தேவ்வத்தான் அந்தளவுக்கு வந்ததா எனக்கு ஞாபகமேயில்ல, அம்மா சொல்லுவாங்க அத்தான் ரொம்ப சின்னவயசுல அத்தையில்லாம இரண்டு,மூனுநாள் எங்கவீட்டுல தங்கியிருப்பாராம். அப்போ அத்தான்கூடத்தான் விளையாடுவேனாம் எனக்கு அத்தானென்றால் ரொம்பப்பிடிக்குமாம் ஆனால் வருஷம் போகப்போக ஸ்கூல், வகுப்பென்று அவர் வாரது நல்லாக்குறைஞ்சு கடைசியில இல்லாமலே போச்சாம், அப்போல்லாம் ரொம்ப கவலையாயிருப்பனாம் பிறகு அதை மறந்துட்டேனாம். எங்கப்பாம்மாவும் கவலைப்படுவாங்களாம். ஆனால் புள்ளயோட படிப்புன்னு மனச தேத்திப்பாங்களாம். எனக்கு தெரிஞ்சு தேவத்தான் எங்க வீட்டுக்கு ஒருநாலுதடவை வந்திருப்பார். ஒருவழியா எங்க தாத்தாவும் மனம்மாறி எங்கப்பாம்மாவை ஏத்துக்கிட்டார். அதோட அப்பாபேருல இந்தவீட்டையும் எழுதிவச்சுட்டார். ஆனால் அப்பா உடனே இங்கவர விருப்பப்படல்ல, எங்கப்பா வீட்டுல எல்லோரும் கொஞ்சமா எங்ககூட கதைக்க ஆரம்பிச்சாங்களே தவிர போக்குவரத்தில்லை. ஆனால் இதுவரை எங்கம்மா குடும்பம் எங்களை ஏத்துக்கவுமில்ல, அவங்களா இனி எங்களை ஏத்துக்கிட்டாலும் எப்போதைக்கும் அவங்க வேணாமென்று நாங்களும் முடிவுமெடுத்துக்கிட்டோம். இப்படியே காலம் போக்கிட்டிருந்துச்சு அப்போதான் எங்க வாழ்க்கையே தலைகீழா மாத்துரமாதிரி ஒருபெரிய இடி எங்க தலையில விழுந்துச்சு. எனக்கு ஐஞ்சுவயசிருக்கும், அப்பா ஒருஎக்ஸிடென்ட்டால இறந்துட்டாரு. அதுல எங்கம்மா நிலகுழஞ்சி போயிட்டா. முதன்முதலா அப்பா வீட்டுலயிருந்து அப்பதான் பார்க்க வந்தாங்க. இறக்கும்போது எங்க யசோஅத்தை, மாதவியத்தை, பாட்டி கையில எங்கம்மாவையும் எங்களையும் பார்த்துக்கச்சொல்லி ஒப்படச்சுட்டு அப்பா இறந்துட்டார். பாட்டி எங்ககூடதான் இருந்தாங்க. எங்கப்பா இறந்ததுக்குப்பிறகு அப்பாவோட சொந்தங்களெல்லாம் எங்கம்மாவைக் கட்டாயப்படுத்தி அப்பா பேர்லயிருந்த இந்தவீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்போதான் முதன்முதலா நான் இந்த ஊருக்குள்ள காலெடுத்துவச்சேன். இந்த ஊரோட பரபரப்பும் நிக்க நேரமில்லாம ஓடிட்டிருக்குற மனிசங்களும் அந்தப்பரபரப்புக்கு எதிர்பதம்போல இந்தவீடும் அதன் அமைதியும் எனக்கு ரொம்பப்பிடிச்சது. ஊருக்குள்ள வந்ததும் முதன்முதலா அத்தானைத்தான் பார்த்தேன் அவரும் என்னைப் பார்த்தவுடனே என் கையப் புடிச்சிக்கிட்டார். அத்தான் என் கையப் புடிச்சிக்கிட்டதும் அவ்வளவு ஹேப்பியாயிடுச்சு. அதனால நானும் அவர் கைய இறுக்கி புடிச்சிக்கிட்டேன். அன்றைக்கு புடிச்ச கை இன்றைக்கு வரைக்கும் விடல்ல அது காலம்முழுக்க தொடரணுமென்று நினச்சேன். ஆனால் அது நடக்கல்ல." கூறிக்கொண்டே வந்தவள் சட்டென்று அமைதியாகி சிந்தனையிலாழ அவள் முகத்தில் அவமானம், கவலை, கோபம், ஏமாற்றமென பலகலவையான உணர்ச்சிகள், அவளையே பார்த்திருந்த ரிஷிதரன் அவள் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து அமைதியாயிருக்க அவளோ தன் சிந்தனையிலிருந்து கலைந்தவள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மேலேதொடர்ந்தாள்.


"யசோ அத்தை முதன்முதலா பெரியத்தான் என்றுதான் தேவேஷ்வா அத்தானை அறிமுகப்படுத்தினாங்க, அந்தவயசுல நானும் அப்படியே கூப்பிட்டேன். எனக்கு என்ன ஒருதேவையென்றாலும் எல்லாமே எனக்கு என்பெரியத்தானா மாறிடுச்சு. வர்ஷியும் என்னவிட ஒருவயசுதான் சின்னவ, தனுவும் அப்படித்தான் ஆனால் நான் அவங்ககூடெல்லாம் அவ்வளவு ஒட்டல்ல. ஏன் நகுலத்தான், விஷ்வாத்தானெல்லாம் என்னைவிட இரண்டு,மூனு வயசு பெரியவங்க, நவீனத்தானுக்கு என்வயசுதான் அவங்ககூடவும் நான் அவ்வளவு பழகமாட்டேன்...."

"நவீனுக்கு உங்க வயசுன்னு சொல்லுறீங்க, பிறகு எதுக்கு அத்தானென்று கூப்பிடுறீங்க?"

"பேர் சொல்லிக்கூப்பிட்டா அம்மாவுக்கு அறவேபிடிக்காது. அதனாலதான் நவீனத்தானென்று கூப்பிடுவேன். ஆனால் அது நவீன் அத்தானுக்கு கொஞ்சமும்பிடிக்காது. அதனால எங்க ப்ரண்ட்ஸுக்கு முன்னாலமட்டும் நவீன் என்று கூப்பிடுவேன்."

"ஓ....அப்படியா? சரி இன்னும் உங்க லவ்ஸ்டோரி ஸ்டார்ட் ஆகல்லையே, சொல்லுவீங்களா இல்ல....."

"அதான் சொல்லிட்டிருக்கேனில்ல. அதுக்குள்ள அவசரமா, உங்களுக்கு பொறுமையில்லையா?"
அவன் கைகட்டி வாய்மூட, அதில் சிரித்தவள் பேசத்தொடங்க அவள் சிரிப்பை ரசித்தவனாய் அவள் பேச்சுக்கு காதுகொடுத்தான்.

"எனக்கு பதினேழு வயசிருக்கும் அப்போ விஷ்வாத்தான் ஜூனியர் திவ்யா, பார்க்க ரொம்பஅழகாயிருப்பா, எங்க வீட்டுலயும் அவளை எல்லோருக்கும் நல்லாத்தெரியும் அதுமட்டுமில்ல அவளை எல்லோருக்கும் ரொம்பப்பிடிக்கும் அவ பெரியத்தானை காதலிக்கிறேன் அப்படின்னு அவ லவ்வ பெரியத்தான்கிட்ட ப்ரபோஸ் பண்ணினா, அவமேல எனக்கு அன்னைக்கு வந்துச்சுபாருங்க கோபம் அவளை அடிச்சு துவைக்கனும் போலயிருந்துச்சு. ஆனால் அத்தான் பிடிக்கல்ல, அந்தமாதிரி ஒருஎண்ணமேயில்ல அப்படின்னு சொல்லிட்டார். அதுக்குப்பிறகுதான் எனக்கு போன உயிர் வந்தமாதிரி அவ்வளவு நிம்மதியாயிருந்துச்சு, இப்படி ஒருஃபீல் இதுக்கு முன்னாடியெல்லாம் தோனாத ஒன்று. விஷ்வாத்தான், நகுலத்தான், நவீனை எல்லாம் இந்தப் பொம்பளப்புள்ளைங்க எனக்கு முன்னாடியே சைட் அடிப்பாளுங்க. ஏன் என்னையே தூதுபோக வச்சிருக்காளுங்க, நானும் தூதுபோய் அவங்க கையால குட்டுவேற வாங்கியிருக்கேன். அவ்வளவு ஏன் நவீனுக்கு என்ஜூனியர் புள்ளைமேல கொஞ்சம்லவ் அதை என்கிட்டதான் வந்து சொன்னான், அப்போல்லாம் எனக்கு அந்தப்புள்ளைங்க மேல எந்தக்கோபமும் வரயுமில்ல, நான் நிம்மதிய இழக்கயுமில்ல ஆனால் பெரியத்தானாலதான் எனக்கு இதெல்லாமாச்சு, அது ஏனென்றும் விளங்கல்ல, வீட்டுக்குவந்து யோசிச்சப்போதான் என் அத்தான்மேல எனக்கிருந்த காதல் தெளிவாபுரிஞ்சது. எப்போ அவர்மேல என் மனசு படர ஆரம்பிச்சதுன்னு எனக்கு புரிஞ்சதோ அந்தநிமிஷம் யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி பெரியத்தான் என்று சொல்லுறதை நிறுத்திட்டு மெல்லமெல்ல அத்தான் என்றுமட்டும் கூப்பிடத் தொடங்கினேன். ஆனால் அதை அவர் கவனிச்சுட்டு விஷ்வாத்தான், நகுலத்தான், நவீன் அத்தானென்று கூப்பிடுற ஏன் என்னைமட்டும் பெயர் சொல்லாம அத்தானென்று கூப்பிடுற, இத்தனை நாளா பெரியத்தானென்று தானே கூப்பிட்ட இப்போ என்னாச்சுன்னு கேட்டாங்க, எனக்குமட்டுமே உரிமையான அவரை அத்தானென்று கூப்பிடனுமென்று ஆசைப்பட்டேன் அதோட கட்டிக்கப்போறவரை எல்லோர் முன்னாடியும் எப்படி பெயர்சொல்லுறது அதுவும் ஒருகாரணம், அப்போ அதை என்னால அவர்கிட்ட சொல்லமுடியல்ல அதனால பெரியத்தானென்று கூப்பிடப்பிடிக்கல்ல, அது வயசானவங்கள கூப்பிடுறமாதிரி இருக்கென்று பொய்சொன்னேன். அதுமட்டுமில்ல அவர்
கண்ணம்மாவா கடைசிவரை அவர் கைபிடிச்சுக்கனுமென்னு ஆசைப்பட்டேன், ஆனால் இப்போ எதிலயும் பயனில்லல்ல." என்றவளின் கண்கள் கண்ணீரால் நிறைய, ரிஷிதரன் அவளின் கையை ஆறுதலாய் பற்றியதும் உடனே கையை எடுத்தவள் பதட்டமாக, மன்னிப்பை வேண்டியவனோ

"உங்க காதலை உங்க அத்தான்கிட்ட சொன்னீங்களா, இல்லையா?"

"சொன்னேன் இருபதுநாளைக்கு முன்னாடி என்காதலை மனசு தொறந்துசொன்னேன், ஆனால் அவர் என்னை ஏத்துக்கல்ல." என்றவள் அன்றையநாளில் நடந்ததை கண்ணீருடன் கூறிமுடிக்க அவளின் கதையைக் கேட்டவனுக்கு உள்ளூர வருத்தமாயிருந்தாலும் அவனுக்கு ஒருவகையில் சந்தோசமாகவும் நிம்மதியாகவுமே இருந்தது.

"இருபதுநாளைக்கு முன்னதான் உங்க காதலை சொன்னீங்கன்னு சொல்லுறீங்க, அப்போ என்னைக் கல்யாணம்பண்ண எப்படி ஒத்துக்கிட்டீங்க? ஒருவேளை கட்டாயக் கல்யாணமா....அப்படியும் இல்லையே" அவன் குழம்ப

"எந்தக்கட்டாயத்துலயுமில்ல. என் அத்தானோட சந்தோசத்துக்காக நிம்மதிக்காகத்தான் இந்தக்கல்யாணத்தையே பண்ணிக்க சம்மதிச்சேன்."

"எனக்குப்புரியல்ல, இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாயிருக்கும்." ரிஷிதரன் கேட்டதும் திருமணத்திற்கு சம்மதித்த நாளில் நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.

"அப்போ உங்க மனசுல நான் இல்லவேயில்ல உங்க அத்தான்தான் இருக்காரில்ல."

"அது அப்படியில்ல, இருந்தார் எப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சனோ அப்பவே என்மனசுல தேவத்தான் இல்லவேயில்ல, உங்க கைத்தாலி என்கழுத்துல ஏறினதும் அது இன்னும் உறுதியாகிடுச்சு."

"அப்போ உங்க மனசுல நான்தான் இருக்கேனா?" எதிர்பார்ப்புடன் கேட்க

"ஒருத்தரால இப்பதான் வலி உணர்ந்திருக்கேன் அதுலயிருந்து மீள்றதுக்குள்ள கல்யாணமாயிடுச்சு, எப்படிங்க பதினஞ்சு நாளைக்குள்ள உங்களை மனசுல வைக்கமுடியும்? அன்றைக்கு உங்ககிட்ட கதைக்கும்போது ஒன்று சொன்னேனில்ல என்கதை மொத்தத்தையும் சொல்றதோட என் மனசுமாற கொஞ்சம் அவகாசமும் கேட்டுக்கனுமென்றும் சொன்னேனே உங்களுக்கு ஞாபகமில்லையா?" அவள் கேள்வியில் நினைவிருப்பதாக அவன் தலையசைக்க

"இப்போ சொல்லுறேன் என்கணவர் நீங்கதான் ஆனால் அதை என் மனசார நான் உணர்ந்து ஏத்துக்கனுமென்று நினைக்கிறேன். அதுக்கான அவகாசம்மட்டும் எனக்கு வேணும் தருவீங்களா ப்ளீஸ்?"

"எஸ் எனக்கும் அதுதான் வேணும், என் மனைவியோட மனசுல நான் நிலையா இருக்கும்போது அவகூட வாழ்க்கைய ஆரம்பிக்கனுமென்று நினைக்குறேன். என்னோட கட்டாயத்துல நம்ம உறவு மலரவேண்டாம். கடமைக்காகவும் நீங்க எதையும் செய்யவேண்டாம். உங்க மனசு மாறுவதற்கான காலஅவகாசத்தை தாராளமா எடுத்துக்கோங்க. துஷாந்தினி! என்றைக்கு நான் உங்க உரிமையென்ற எண்ணம் உங்களுக்குள்ள ஆழமாத்தோணுதோ அன்றைக்கு கணவன் மனைவியா நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கலாம். அதுவரை நம்ம நல்ல ப்ரண்ட்ஸா இருக்கலாமென்று நான் நினைக்குறேன் நீங்க என்ன நினைக்குறீங்க?"

"இவ்வளவு என்னை புரிஞ்சி நடந்துக்கிறதுக்கு முதல்ல ரொம்பத்தைங்க்ஸ், இனிமேல் நாம ரெண்டுபேரும் வாழ்க்கை என்ற ஓடத்துல சேர்ந்து பயணிக்கப்போறோம். அதனால நம்ம நல்ல நண்பர்களா இருக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல."

"ஆனால் ஒருகன்டிஷன்." அவள் புருவம் சுருக்க

"நண்பர்களா மட்டும் இருக்கனுமென்று நினைக்கக்கூடாது. நம்ம உறவுல நல்ல முன்னேற்றம் வரவும் முயற்சிக்கனும் என்ன ஓகேவா?"

"இங்கப்பாருங்க உங்களுக்கு ஒரு வாக்குத்தாறேன். என் மனம் உங்களை முழுசா ஏத்துக்கத்தான் டைம் கேட்டேன். என்றைக்கு என் மனசுல நீங்க முழுசா இருக்கீங்கென்று உணர்கிறேனோ அந்தநிமிஷம் என் விருப்பத்தை உங்ககிட்ட சொல்ல உங்க முன்னாடி நானே வருவேன் எந்த தயக்கமுமில்லாம என் மனசுலயிருக்கறதை வெளிப்படையாச் சொல்லுவேன். நண்பர்களா மட்டும் வாழ ஆசைப்படமாட்டேன். நம்ம உறவு அடுத்த கட்டத்துக்குப் போறதுக்காக என் மனசை தயார்படுத்திக்கத்தான் இந்தக்கால அவகாசமே கேக்குறேன். நான் சொன்னது அத்தனையும் உறுதி."

"இந்தத் தெளிவிருந்தாப்போதும். துஷாந்தினி! நண்பர்கள்லயிருந்து காதலர்களாகி வெகுசீக்கிரமாவே கணவன் மனைவியாவும் வாழத் தொடங்கிடுவோம். உங்க பதில் எனக்கு ரொம்பத்திருப்தியாயிருக்கு ரொம்பசந்தோசம்."

"எனக்கும்தான்."

"சரி இனி நாம நல்ல ப்ரண்ட்ஸ். எனக்கு நீங்க....இல்லல்ல நம்மதான் ப்ரண்ட்ஸாகிட்டமே நமக்குள்ள எதுக்கு இந்த மரியாதைப்பன்மை சோ,இனிமேல் எனக்கு நீ துஷி, உனக்கு நான் ரிஷி." என்று அவளுக்கு கைநீட்ட அவளோ தயங்க

"நம்ம ப்ரண்ட்ஸ்தானே பின்ன ஏன் தயங்குற?" அவன் கேட்டதும் மறுவினாடி அவன் கைகளைப்பற்றிக் குலுக்கியவள்

"ஆனால்...உங்களை எப்படி பேர் சொல்லிக்கூப்பிடுறது. இதுமட்டும் எங்கம்மாவுக்குத் தெரிஞ்சது நான் தொலஞ்சேன்."

"அவங்க முன்னாடி உன்னை யார் கூப்பிடச்சொன்னா, நமக்குள்ளதான் இந்த டீல், பட் நான் எல்லோர் முன்னாடியும் துஷின்னுதான் கூப்பிடுவேன்."

"சரி, நான் ரிஷி என்றே கூப்பிடுறேன் ஆனால் உங்களை மரியாதையாத்தான் பேசுவேன். நீ, வா, போ வராதுங்க ப்ளீஸ் அதுல என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க."

"ஓகே துஷி அது உன்விருப்பம் நீ ஒருமையில கூப்பிட்டாலும் எனக்கு ஓகே."

"உங்ககிட்ட ஒன்னுகேக்கவா ரிஷி?" அவன் கேளு என்பதாய் தலையாட்ட

"உங்களுக்கு இந்தமாதிரி ஏதாவது...."

"காதல் இருந்துச்சான்னு கேக்குறாயா?" அவள் மெல்லத் தலையசைக்க

"இருந்துச்சு பார்த்ததும் பிடிச்சுப்போன ஒருகாதல் இருந்துச்சு."

"அதெப்படி பார்த்ததும் பிடிக்கும், எனக்குப்புரியல்ல."

"அது அப்படித்தான். பிடிக்குறதுக்கு ஒருகணப்பொழுது போதும். அந்தக்கணப்பொழுது என் அண்ணன் கல்யாணத்தன்னைக்கு எனக்கு நடந்துச்சு."

"என்ன! நந்தினிக்கா கல்யாணத்தன்றா, யாருங்க அது? உங்க காதலைச் சொன்னீங்களா, அவங்க ஏத்துக்கிட்டாங்களா? அப்போ எதனால பிரிஞ்சீங்க? அவங்களுக்கு என்னாச்சு, ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிடல்ல?" கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்க சிரித்துக்கொண்டே அவளைக் கையமர்த்தியவன்,

"என்ன துஷி இது, இத்தனை கேள்வி?" அவள் அசடுவழிய அதில் சிரித்தவன் அவள் அத்தனை கேள்விக்கும் பதில் கூறத்தொடங்கினான்.

"துஷி உன் காதலைவிட என் காதல்தான் சீனியர், ஏன்னா என் காதலுக்கு வயசு ஐஞ்சு. அன்றைக்கு மண்டபத்துக்கு மாப்பிள்ளை வந்தப்போ ஆரத்தியெடுக்க பொண்ணு வீட்டுக்காரங்க வரிசையா வந்தாங்க கூடவே பலவண்ண மீன்கள்மாதிரி பட்டுப்புடவை, பாவாடை-தாவணி என்று அழகழகா பொம்பளப்புள்ளைங்க அந்த இடத்துக்கு வந்தப்போ பார்க்கவே அவ்வளவு அழகாயிருந்துச்சு. அந்தப்புள்ளிமான்கள் கூட்டத்துக்கு தலைமானாய் ஒருத்தி அழகாக பாவாடை-தாவணி உடுத்தி தலை முழுக்க மல்லிகப்பூவச்சு, சந்தனம்,குங்கும தட்டைக் கையில ஏந்திவந்தா, அவளைப் பார்த்த அந்தநொடி எனக்குள்ள ஒருமாற்றம் அவளையே பார்த்திட்டிருக்கனும்போல இருந்துச்சு. அன்றையநாள் முழுக்க கல்யாணத்தக் கவனிச்சனோ இல்லையோ அந்த தேவதையையே பார்த்துட்டிருந்தேன். அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்குள்ள ஆழமாப் பதியத்தொடங்கிடுச்சு. இப்படியே எவ்வளவுநேரம் பார்த்திட்டிருக்க முடியுமென்று அவளைப்பத்தி தெரிஞ்சிக்க முயற்சிபண்ணினேன், ஒருவழியாத் தெரிஞ்சிக்கிட்டேன். அவ ஊர், பெயர், பொண்ணுவீட்டுக்கு அவ என்ன உறவு அப்படின்னு எல்லாமே தெரிஞ்சிக்கிட்ட எனக்கு அவ வயசைக் கேட்டதும் ஐயோ சின்னப்பொண்ணான்னு தோனிடுச்சு." அவன் பேச்சை இடைவெட்டியவள் பரபரப்பாக

"எங்களுக்கு சொந்தக்காரங்களா, யாருங்க அது? சொல்லுங்க நானும் ரொம்பநேரமா யோசிக்கிறேன் யாருன்னுதான் விளங்கல்ல, ப்ளீஸ் யாருன்னு சொல்லுங்க? எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலயிருக்கு."

"என்ன மேடம் யாரோ பொறுமை கொஞ்சங்கூட இல்லையா? என்று என்கிட்ட கேட்டதா எனக்கொரு ஞாபகம்." அவன் கூறியதும் இப்போது கைகட்டி வாய்மூடுவது அவள் முறையாயிட்டு. மேலசொல்லுமாறு சைகைசெய்ய சிரித்தவன் தன் கதையைத் தொடர்ந்தான்.

"அவ வயசைக்கேட்டு ஒரு சின்னத்தயக்கம் எனக்குள்ள வந்திருந்தாலும் என் மனசுலயிருந்த காதல் அதை ஒருபெரிய விசயமா எடுத்துகல்ல. சரி அவ படிப்புமுடியட்டும் நிதானமாப் பொண்ணு கேட்டுக்கலாமென்று நானும் துபாய் போய்ட்டேன்."

"அப்போ உங்க காதலை அவங்ககிட்ட சொல்லவேயில்லையா?"

"இந்த நிமிஷம்வரை சொல்லல்ல."

"ஏன்? சொல்லிருந்தால் அவங்களையே கல்யாணம்பண்ணி சந்தோசமா இருந்திருக்கலாமில்ல இப்படி என்னைக் கட்டிக்கிட்டு உங்க வாழ்க்கையத் தொலச்சுட்டீங்களே! சரி மேலசொல்லுங்க." அவள் பரிதாபப்பட

"இப்பயும் நான் சந்தோசமாத்தான் இருக்கிறேன். இவ்வளவுதான் நம்ம லவ்ஸ்டோரி."

"என்ன கதை முடியவேயில்ல, அதுக்குள்ள அவ்வளவுதானென்றீங்க துபாயிலயிருந்து வந்து அவங்கள பொண்ணு கேக்கல்லையா? அதுக்குப்பிறகு என்னாச்சு?"

"உனக்கும் எனக்கும் கல்யாணமாச்சு."

"அப்போ உங்க காதல் அதோட முடிஞ்சிடுச்சா, ச்சே மொக்க லவ்ஸ்டோரி, ஹெப்பி என்ட்டிங்குமில்ல, சேட் என்டிங்குமில்ல சீரியல்மாதிரி தொடரும் போட்டு முடிச்சிட்டீங்க."

"ஆனால் என் லைஃப் ஹெப்பி என்டிங்தான்." அவளோ புரியாமல் பார்க்க

"அதான் நான் உன்னைக் கல்யாணம்பண்ணிட்டேனே."

"சரியாக் குழப்புறீங்க. உங்க லவ்ஸ்டோரிய உங்களோடயே வச்சுக்கோங்க எனக்கு வேணா." என்றதும் அவன் சத்தமாக சிரிக்க அவள் முறைக்க இப்படியே இருவரும் பலமணிநேரங்கள் கடந்தும் பேசிக்கொண்டிருந்தனர்.

"துஷி! ரெண்டுகிழமையாக் குடஞ்சுட்டிருந்த உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடச்சிடுச்சில்ல, அதோட தொடர்ந்து நடந்த ஃபங்ஷன் அது இதென்று நல்ல தூக்கமும் இருந்திருக்காது நாளைக்கு ரிஷெப்ஸன் வேறயிருக்கு. நீ நல்லா தூங்கி ரெஸ்டெடு, இல்லாட்டி நாளைக்கு டயெர்டாயிருப்ப, முகம் பார்க்க நல்லாயிருக்காது. ஓகே நீ தூங்கும்மா எனக்கும் தூக்கம் வருது. நானும் தூங்கப்போறேன், குட்நைட்."

"சரி ரிஷி ஆ...நீங்க பெட்ல தூங்குங்க. நான் கீழ படுத்துக்கிறேன்."

"இல்லம்மா, நீ கட்டில்ல தூங்கு நான் நிலத்துல படுத்துக்கிறேன்." மாறிமாறி ஒருவரையொருவர் சொல்லிக்கொண்டிருக்க ஒருகட்டத்தில் இருவருக்கும் சலிப்புத்தட்டியது.

"உனக்கு பெட்ல உருளுற பழக்கமிருக்கா?" அவன் கேட்டதும் அவள் இல்லையென தலையாட்ட

"எனக்கும் அந்தப்பழக்கமில்ல, நான் எந்தஇடத்துல தூங்குறேனோ அதே இடத்திலயிருந்தே எழுந்துப்பேன். அதனால ரெண்டுபேரும் இந்தபெட்லயே தூங்கலாம். அந்தப்பக்கம் நீ தூங்கு, இந்தப்பக்கம் நான் தூங்குறேன்."

"ஐயோ! அது எப்படி ஒரேபெட்ல?" அவள் தயங்க

"இங்க ஒரு பெட்தானேயிருக்கு அதனாலதான் சொல்லுறேன், இங்க இருக்கிறவரை கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணிக்கோ துஷி. துபாயில ட்டூ பெட்ரூம்ஸ் பிளாட்தான் எடுத்திருக்கேன். நாம அங்க போனதும் உனக்கொரு ரூம் எனக்கொரு ரூமென்று இரண்டாப்பிரிச்சுக்கலாம். ஓகேயா? துஷிம்மா! உனக்கு உன்னுல நம்பிக்கையிருக்கில்ல."

"இருக்கு."

"என்னை நம்புறாயா?" அவள் ஆமெனத் தலையசைக்க

"அப்போ அந்த நம்பிக்கையோடே இங்கயே தூங்கு. உன் விருப்பமில்லாம என் விரல்கூட உன் மேலபடாது" என்றவன் கட்டிலின் மறுபக்கம் சென்று தூங்கிவிட, தனக்கான பக்கத்திலமர்ந்தவள் அன்றைய இரவில் இருவரும் பேசியதை அசைபோட்டவளுக்கு அவனுடைய வார்த்தையிலிருந்த தெளிவும் புரிதலும் நம்பிக்கையோடு பெண்ணவளுக்கு தெம்பையுமளிக்க அந்த நிம்மதியுடன் பெருமூச்சிட்டவளுக்கு தூக்கம் கண்களைச்சுழற்ற அப்படியே தூங்கிவிட்டாள்.


inbound7982641853818110038.jpg


காணும்......

விமர்சனங்களுக்கு


https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-07

inbound2107012554179733712.jpg


கலங்கிய கண்களுடன் சென்ற தமையனைத் தொடர்ந்துவந்த வர்ஷினி, அவன் அறையினுள் நுழைய அங்கே கண்டகாட்சி அவள் மனதினைக் கலங்கச்செய்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருக்க தலைக்குப்பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு கட்டிலிலே மல்லாந்து படுத்தவாறு விட்டத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் தேவேஷ்வா. சிலகணங்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்த வர்ஷினி, அதற்குமேல் தன் தமையன் கலங்குவதைத் தாங்கமுடியாமல் அவனருகில் சென்று அவன் தோள்த்தொட, திடுக்கிட்டுத் திருப்பிப்பார்த்தவன் தன்முன்னே நின்றிருந்த தங்கையைக்கண்டு கண்களை சட்டென்று துடைத்துக்கொண்டு எழுந்தவன் பெல்கனிக்குச் சென்றுநிற்க அவன் பின்னோடு வந்துநின்ற வர்ஷினி

"என்ன அண்ணா இது, என்னாச்சு? ஏன் துஷாந்திக்கா வந்ததும் வந்துட்டீங்க, அதுவும் கண்ணுல கண்ணீரோட"

"அது.....அது....வந்து ஒன்னுமில்ல வர்ஷி, சும்மாதான் போரடிச்சுது வீட்டுக்கு வரலாமென்று வந்துட்டேன். அவ்வளவுதான். வேறொன்றுமில்ல."

"நல்லாவே சமாளிக்கிறீங்கண்ணா. எனக்கு எல்லாந்தெரியும். உங்க கண்களும் உங்க கண்ணீரும் எனக்கு பதில் சொல்லிடுச்சு." தங்கையின் கூற்றில் அவள் புறம் திரும்பியவன்

"என்ன சொல்லிச்சு, என்ன உளரலிது?" அவளோ தமையனை நேராகநோக்கி அவன் விழிகளை ஊடுருவியவாறு

"என் அண்ணன் காதலிக்குறாரென்று சொல்லிச்சு, உங்க மனசுல இப்போ உங்க கண்ணம்மா இருக்காங்கன்னு சொல்லிச்சு. அவங்கள நீங்க காதலிக்குறீங்கன்னு சொல்லிச்சு. ரிஷிதரண்ணா பக்கத்துல அக்கா வந்து உட்கார்ந்ததும் உங்களால தாங்கிக்கமுடியல்ல அதான் எழும்பி வீட்டுக்கு வந்துடீங்கன்னும் சொல்லிச்சுண்ணா, அதுமட்டுமில்ல உங்க மனசுல இருக்குற காதலையும் அந்த நிமிஷம்தான் நீங்களே உணர்ந்தீங்கன்னும் இதோ உங்க கன்னத்துலயிருக்குற கண்ணீர்த்தடம் என்கிட்ட சொல்லிச்சுண்ணா." தங்கை அவன் மனதைப் படித்ததுபோல் கூறியதும் ஆடவனின் கால்களோ பலமிழந்து விட சட்டென்று மடங்கி தரையில் அமர்ந்தவன் தான் ஓர் ஆண்மகன் என்பதையும் மறந்து முகம் மூடி அழ தமையனின் செயலில் மனம் கணத்தவள் ஓடிச்சென்று அவனை தாங்கிக்கொள்ள, ஆதரவாய் ஒருகை கிடைத்ததும் தன் மனதிலுள்ள கவலைகளை தன்னை மறந்து பிதட்டத்தொடங்கினான் தேவேஷ்வா.

"வர்ஷி நான் தப்புப்பண்ணிட்டேன். என் கண்ணம்மா என்னைத் தேடி வந்தப்போ அவளை, அவ காதலை மதிக்காம எட்டி உதச்சிட்டேன். ஆனால் இன்றைக்கு அவ என்னை திரும்பிக்கூடப் பார்க்காம ரிஷிதர் பக்கத்துல உரிமையா உட்கார்ந்தப்போதான் என் கண்ணம்மா எனக்கு உரிமையானவயில்ல என்ற எதார்த்தம் புரிஞ்சது. அவளோட பாராமுகம் எனக்குள்ள எவ்வளவு வலிச்சதுன்னு தெரியுமா வர்ஷி? என் கண்ணம்மா என்னை யாரோபோல கடந்து போனப்போ என் உயிரே போறமாதிரி இருந்துச்சு அந்தவலிய என்னால தாங்கிக்கவே முடியல்லையே."

"ஐயோ! அண்ணா ஏன் இப்படி கதைக்குறீங்க இதெல்லாம் நம்ம வீட்டுல தெரிஞ்சா எவ்வளவு சங்கடப்படுவாங்க. எல்லாத்துக்கும் மேல துஷாந்திக்கா எவ்வளவு வருத்தப்படுவாங்க, எத்தனதடவை கேட்டாங்க அப்போ எல்லாம் மறுத்துட்டு எல்லாம் கைமீறிப்போன பின்ன இப்படிக் காதலிக்கிறேனென்று சொன்னா என்ன அர்த்தம் அண்ணா?"

"வர்ஷிம்மா என் கண்ணம்மா என் கைவிட்டு மொத்தமாப் போனப்போதான் அவமேல நான் வச்சிருந்த காதல் எனக்கு புரிஞ்சதுடா."

"இப்போ நான் உங்க ஆறுதலுக்காய் எல்லாம் சரியாகிடுமென்று பொய் சொல்லலாம் ஆனால் எதார்த்தம் அப்படியில்லையே, தயவுசெஞ்சு மறந்துடுங்கண்ணா."

"என்னால முடியல்லையே, ஏன் வர்ஷி, இனி என் கண்ணம்மா எனக்கு உரிமையானவ இல்லையா?"

"துஷாந்திக்கா இப்போ ரிஷிதரண்ணாவோட சொத்து, அவங்கள மனசால நினைக்குறதும் ரொம்ப பாவமண்ணா, இது யாருக்காவது தெரிஞ்சா எவ்வளவு பெரிய பிழையாகிடும் ப்ளீஸ் இத்தனைநாளா எப்படி இருந்தீங்களோ அப்படியே இப்பவுமிருங்க."

"அதுக்குத்தான் நானும் முயற்சிபண்ணுறேன் ஆனால் இங்க ரொம்பவலிக்குதுடா" என்று தன் இதயப்பகுதியைத் தொட்டுக்காட்டியவன்

"அன்றைக்கு என் துஷானிக்கும் இப்படித்தான் வலிச்சிருக்குமில்ல. என் காதலை நான் உணரும் முன்னே அவ உணர்ந்திருக்கா அதனாலதான் எத்தனைதடவை கேட்டா ஆனால் நான்தான் முட்டாள், அவளையும் புரிஞ்சிக்காம என்னையும் புரிஞ்சிக்காம தப்புப்பண்ணிட்டேன், நான் திவியக் காதலிக்கிறேனென்று சொன்னப்பவும் அவ அதை நம்பல்ல என்ன சொன்னான்னு உனக்குத்தெரியுமா?" வர்ஷினி அவனையே பார்த்துநிற்க

"நான்தான் அவ கல்யாணம் முடியும்வரை திவ்யாபேரை யூஸ்பண்ணிக்குறேனாம் மற்றப்படி அவமேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்டுமில்லயாம் அது என் கண்ணம்மாக்கு நல்லாவே தெரியுமாமென்று சொல்லிட்டிருந்தா, அப்போ நான் திவிய லவ்பண்ணுறேன் என்றதை எதைச்சொன்னா நம்புவன்னு கேட்டேன் அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா....? எதையும் அவகிட்ட சொல்லத் தேவையேயில்லயாம், நான் திவ்யாவை உண்மையா காதலிச்சா அது அவளுக்கே தெரிஞ்சிடுமாம். நான் எதையாவது செஞ்சுதான் அவளை நம்ப வைக்கனுமென்று அவசியமில்லயாம். ஆனால் அன்றைக்கு அவ என் கண்ணுல அவளுக்கான வலியப்பார்த்தாளாம், அவ என்னைக் காதலிச்சமாதிரி இப்போ நானும் அவளைக் காதலிக்குறேனென்றும், அதை ஒத்துக்கவும் சொன்னா. அன்றைக்கு அவமேல ரொம்பகோபப்பட்டு அவளை நல்லா ஏசிட்டேன். ஆனால் நான்தான் அப்போ என் காதலை உணரவேயில்லையே" சகோதரன் கூறியதைக்கேட்டு வர்ஷினி ஆச்சரியப்பட தேவேஷ்வரனோ தன் கண்ணம்மாவின் காதலின் ஆழத்தை வியந்தவனாய்

"வர்ஷி, அவ என்னை எவ்வளவு சரியா புரிஞ்சுவச்சிருக்காயில்ல."

"என்ன பிரயோசனம் அண்ணா?" வர்ஷினி கூறும்போதே அவன் கண்கள் அப்பட்டமாக வலியைக்காட்டியது.

"அண்ணா, நான் ஒன்று கேக்கிறேன் எனக்கு பதில் சொல்லுங்க." என்னவென்பதாய் தங்கையை ஏறிட

"திவ்யாக்காவை நீங்க காதலிக்கல்ல என்கிறப்போ ஏன் அவங்க மனசுல அந்தநம்பிக்கைய விதச்சீங்க. அவங்கள காதலிக்குறேனென்று ஏன் பொய் சொன்னீங்க எங்ககிட்ட மட்டுமில்ல திவ்யாக்காகிட்டயும் சொல்லிட்டீங்களேண்ணா. துஷாந்திக்கா சொன்னமாதிரி, அவ காதலை மறுக்குறதுக்காக பொய்யா திவ்யாக்கா பெயரை யூஸ்பண்ணிருக்கிறீங்கல்ல, துஷாந்திக்கா கல்யாணம்வரை அந்தபொய்ய மெயின்டெயின் பண்ண நினச்சிருக்கீங்கல்ல. ஆனால் துஷாந்திக்கா பிடிவாதமா நின்றதும் திவ்யாக்காவ காதலிக்குறேனென்று தைரியமா அவங்ககிட்டயே சொல்லிட்டீங்க. அவங்களோட அத்தனை வருஷ காதல் ஜெயிச்சதுல அவங்களும் ரொம்பசந்தோசப்பட்டு எதையும் யோசிக்காம உங்க காதலை உடனே ஏத்துக்கிட்டாங்க, ஆனால் அண்ணா! சொல்லுறேனென்று தப்பா எடுத்துக்காதீங்க, உங்க சுயநலத்துக்காக அவங்க மனசுல நம்பிக்கை விதையை விதச்சிட்டீங்க, அது துளிர்விடுறப்போ வேரோட பிச்சி எறியப் போறீங்களாண்ணா? திவ்யாக்கா பாவமில்லையா. இப்போ அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்கண்ணா." திவ்யாவிடம் தான் காதலைச் சொன்னதையும் அதை அவள் ஏற்றுக்கொண்டதையும் மறந்திருந்தவனுக்கு, தங்கையின் நியாயமான பேச்சு சாட்டையாய் சுழற்றியடிக்க, என்ன செய்வதெனப் புரியாமல் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டான். தமையனின் நிலையைக் காணச்சகியாமல் அவளும் கண்கலங்க தங்கையின் முகத்தைப் பார்த்தவாறே சிலமணிநேரங்கள் சிந்தனையில் அமர்ந்தவன் உள்ளூர ஒருதீர்க்கமான முடிவோடு

"வர்ஷி, நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னை சாட்டையால அடிச்சமாதிரி இருந்துச்சு, இப்போ நான் நல்லாயோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கேன். துஷானி இப்போ இன்னொருத்தரோட மனைவி, அவளை நான் மனசார நினைக்குறதும் பாவம் ஆனால் என்னால அவளை மறக்கமுடியுமான்னு தெரியல்ல ஆனால் சீக்கிரமே மறந்திடுவேன். எலலாத்தையும் மறந்திருந்த திவ்யாகிட்ட நானாத்தான் காதலிக்குறேனென்று சொன்னேன், அப்போ அவளைக் கல்யாணம் பண்ணிக்குறதுதான் நியாயம். திவ்யாதான் என் மனைவி இந்தமுடிவுல நான் உறுதியாயிருக்கேன். ஆனால் என் கண்ணம்மாவை என் மனசுலயிருந்து முழுசாமறக்குறதுக்கு எனக்கு கொஞ்சகாலம் வேணும். அதுக்குப்பிறகு திவியக் கட்டிக்குறதுல எந்தமாற்றமுமில்ல, இது உறுதி. வர்ஷிம்மா இந்த அண்ணனை நீ நூறுவீதம் நம்பலாம்." முகத்தில் தெளிவுடன் வார்த்தையில் உறுதியோடு அவள் கைப்பிடித்து வாக்களிக்க, தன் தமையனின் மனது துஷாந்தினியை மறந்து திவ்யாவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென இறைவனிடம் மனதாரவேண்டியவள் அவன் கரங்களை ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியுமாக பற்றிக்கொண்டாள்.

⭐⭐⭐⭐⭐

தேவலோகமோ என்று எண்ணுமளவிற்கு அலங்கார விளக்குகள் அந்த உயர்தர நட்சத்திரஹோட்டலின் விருந்துமண்டபத்தை ஒளியால் நிரப்பிக்கொண்டிருந்தது. வெண்ணிறப்பூக்களின் பின்னணியில் சிவப்புரோஜாக்களாய் புதுமணத் தம்பதியரின் பெயர்கள் மணம் பரப்பிக்கொண்டிருக்க, வரவேற்பு விழாவிற்கு வந்தவர்களை இருவீட்டு சார்பாகவும் நந்தினி, ரஞ்சனியுடன் தனுவும் வர்ஷினியும் இனிப்புக்கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். அப்போது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உயர்ரக வெண்ணிற மகிழுர்ந்தொன்று அந்தமண்டபத்தின் முன்னே வந்துநிற்க, அதிலிருந்து வெண்முத்துநிற கர்காசோலியில்
தங்கப்பொட்டுக்களை அள்ளித்தெளித்ததுபோல் பொன்கற்கள் மின்ன, தேவலோக கன்னியாய் துஷாந்தினியும், அதற்குப் பொருத்தமாய் கருநிறத்தில் புல்சூட் அணிந்து ரிஷிதரனும் இறங்கினர். ஒருவர் கையை மற்றையவர் பற்றியவாறு ஜோடியாய் அந்தவரவேற்பு மண்டபத்துள் நுழைய, அவர்கள் ஜோடிப்பொருத்தத்தைப் பார்த்து வியந்துதான் போயின அன்று வரவேற்பிற்கு வந்த கண்கள் அத்தனையும். ஆனால் ஒருவனுடைய கண்கள்மட்டும் வலியுடன் விழிநீரைச் சிந்தியபோதும் தன் உள்ளங்கவர்ந்தவளின் அழகினை ரசிக்கத்தொடங்க, அவன் புத்தியோ மாற்றான் மனைவி அவளென அவன் கண்களுக்கு தடைபோட காதல் கொண்ட மனமோ அந்ததடையை உடைத்தெறிந்து விழிகளுக்கு விருந்து படைக்க, புத்திக்கும் மனதிற்குமிடையில் அலைபாய்ந்து கொண்டிருந்தவேளை, மணமக்கள் இருவரும் அவன் நின்ற இடத்தினருகே நெருங்கிவர தன்னிடம் தன் கண்ணம்மா பேசுவாளென தேவேஷ்வா எதிர்பார்த்திருக்க, அவனருகில் வந்ததும் ரிஷிதரன் அவனுடன் நின்று பேசஆரம்பிக்க, துஷாந்தினியோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்துவிட, அவள் செயலின் காரணமறிந்த ரிஷிதரனோ அதைக் கண்டும்காணாமல் தேவாவுடன் சிறிது பேசிவிட்டு நகர, பெண்ணவளின் செயலில் உள்ளூர உடைந்துபோனான் ஆடவன். அங்கே நிற்கவும்முடியாமல் அவ்விடம்விட்டு நகரவும்முடியாமல் முள்ளின்மேல் நிற்பதுபோல் துடித்திருக்க, அவன் படும்பாட்டை உணர்ந்தவளாய் தன் அண்ணனை நெருங்கிய வர்ஷினி ஆறுதலாய் அவன் கைத்தொட அவளைப் பாவமாய்ப் பார்த்தான் தேவேஷ்வா. ஆனாலும் என்ன செய்யமுடியும் அவனை கண்களாலே அமைதிப்படுத்தியவள் அவனருகிலே நிற்க அவனும் சிறிது சமாதானமானபோதும் அவனால் தன் கண்ணம்மாவின் பாராமுகத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யாரோ அவன் இதயத்தை வாள்கொண்டு அறுத்ததுபோல் துடித்துப்போனான்.

திருமண வரவேற்புமேடைக்கு வந்த புதுமணத் தம்பதிகளிருவரும் இருகரங்கூப்பி வந்தவர்களை வரவேற்றதும் ரித்தீஸும் நந்தினியும் ரிப்பன் கட்டப்பட்ட கத்தியினை மணமக்கள் கைகளில் கொடுக்க, நான்கடுக்காய் வீற்றிருந்த வெண்நிற அணிச்சலை இருவருமிணைந்து வெட்டி விழாவினைத் தொடங்கி வைக்க, ரஞ்சனியோ ஒருவருக்கொருவர் ஊட்டிவிடச் சொல்ல துஷாந்தினி தயங்க அவள் நிலையைப் புரிந்துகொண்ட ரிஷிதரன் அவள் காதருகே குனிந்து

"துஷி! என்னை உன் ஹஸ்பென்டா நினைக்காம உன்னோட ப்ரண்ட்டுன்னு நினச்சு இந்தக்கேக்கை எனக்குக் கொடும்மா." என்று கூறியதும் அவள் முகத்தில் ஒரு தெளிவுவர, அவனுக்கு ஊட்டிவிட்டவள் அவன் கொடுத்தபோதும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். அடுத்ததாய் இருபக்கத்தாரும் தங்கள் உற்றத்தையும் சுற்றத்தையும் மணமக்களுக்கு அறிமுகப்படுத்த, அவர்களை வரவேற்று உறவுகள் கொடுத்த பரிசைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்முறுவலுடன் அவர்களை உணவருந்தச் சொல்லி உபசரித்தனர். நெடுநேரமாய் வரவேற்பில் நின்ற இருவரும் களைத்துப்போக குளிர்பானத்துடன் அவர்களிடம் வந்த யசோதா

"ஆட்கள் வாரது குறஞ்சிடுச்சு, முதல்ல ரெண்டுபேரும் கொஞ்சநேரம் உட்கார்ந்து இந்த ட்ரிங்ஸ்ஸ குடிங்க. ரெண்டுபேரும் ரொம்ப டயர்டாயிருக்கீங்க." என்று அவர்களை அமரவைத்து குளிர்பானத்தை அருந்தச்செய்ய அந்தநேரத்தில் தோழிகளுடனும் சுமித்ராவுடனும் திவ்யாவும் மேடையேறி வர அவர்களைக் கண்டதும் அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய் தன் அத்தையிடம் கண்களால் திவ்யாவைக் காட்டியவள்

"அத்தை! உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன், உங்க மகன் அவர் லவ்வ மேடம்கிட்ட ப்ரப்போஸ் பண்ணிட்டார். மேடமும் எக்ஸெப்ட் பண்ணிக்கிட்டா, சீக்கிரமே உங்ககிட்டயும் சொல்லிடுவார் சோ, டும்டும்டும் கொட்டுறதுக்கு ரெடியாகுங்க. அதுக்கு முதல்ல வர்ஷிக்கு நல்ல இடமாப்பாருங்க, கல்யாணம் பண்ணிடலாம்." பேசிக் கொண்டிருக்கும்போதே தோழிகள் பட்டாளம் இவர்களை நெருங்கிவந்து தங்கள் வாழ்த்தைக்கூறி பரிசைக் கொடுத்தவர்களிடம் நன்றி கூறி வாங்கிக்கொண்டவள் ரிஷிதரனுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு அவனுடன் இணைந்து தன் நட்புகளுடன் புகைப்படமெடுத்ததும் அவன் விலகி நிற்க, தோழிகளுடன் இன்னும் பலகோணங்களில் புகைப்படங்களை எடுத்ததும் மேலும் சிலசெல்பிகளையும் கிளுக்கிக்கொண்ட தோழிகள் அவளிடம் விடை பெற்றுக்கொள்ள துஷாந்தினியிடம் திரும்பிய திவ்யா அவளிடம் பேசத்தொடங்க சுமித்ராவும் கூடவே நின்றுவிட திவ்யாவால் பேசமுடியாமல் தவித்துப்போனாள். அவளின் மனநிலையை உணர்ந்த துஷாந்தினி

"சுமி அங்கப்பாரு உன்னை லல்லி கூப்பிடுறா நீ போ, திவ்யாக்காகிட்ட ஒருவிசயம் கேக்கனும்." என்று சுமித்ராவை அவ்விடம்விட்டு அனுப்பியவள் திவ்யாவிடம் திரும்பி

"திவ்யாக்கா, சொல்லுங்க என்ன விசயம்?" அவள் தன் மனநிலையை உணர்ந்து கொண்டதை எண்ணி மகிழ்ந்தவள்

"துஷாந்தினி, ரொம்ப நன்றி" அவள் கேள்வியாய் நோக்க

"அன்றைக்கு நீமட்டும் இல்லையென்றால் என் தேவேஷ் மனசுல என்மேல காதலிருக்குன்னு எனக்கு தெரியாமலே போயிருக்கும். தேவேஷ் அவர் லவ்வ சொன்னப்போ நான் இந்த உலகத்துலயேயில்ல என் காதுகளையே என்னால நம்பமுடியல்ல அந்தளவு நான் சந்தோசமாயிருந்தேன். பிறகு சுமி வர அப்படியே வெளிக்கிட்டேன். இத்தனைக்கும் காரணமான உனக்கு ஒரு நன்றிகூட சொல்லாம போய்ட்டேன். அதுக்காகத்தான் இப்போ உன்கிட்ட என் மனசு முழுக்க இருக்குற நன்றிய சொல்ல வந்தேன். ரொம்பநன்றி துஷாந்தினி."

"எதுக்கு திவ்யாக்கா நன்றியெல்லாம், அது என் கடமை எனக்காக தேவ் அத்தான் எவ்வளவு செஞ்சிருக்காங்க அதுக்கொரு சின்னஉதவி அவங்க மனசுலயிருந்ததை உங்ககிட்ட சொல்ல ஒருவழி செஞ்சேன் அவ்வளவுதான். அதோட அத்தைகிட்டயும் சொல்லிட்டேன் அவங்க சைட் பச்சக்கொடிதான் சீக்கிரம் உங்க வீட்டுல சொல்லி ஓகே வாங்கிடுங்க. ஆனால் கல்யாணம்மட்டும் இப்போ இருக்காது, ஏன்னா உங்களை நல்லாப் பார்த்துக்கனுமென்றால் உங்க ஆள் தொழில்ல புல்லா செட்டலாகனும் அதோட எங்க வர்ஷிக்கும் கல்யாணம் முடிஞ்சபிறகுதான் உங்க மேரேஜ், குறஞ்சது மூனு வருஷமாச்சுமாகும். அதுவரை நீங்க வெயிட் பண்ணனுமக்கா உங்களுக்கு ஓகேதானே ஒன்னும் ப்ரோப்ளமில்லையே, இல்ல உங்க வீட்டுல ஏதாவது......" தன் காதலை நிராகரிக்க தேவேஷ்வா கூறிய காரணங்களை திவ்யாவிடம் அடுக்க

"ஒன்னும் பிரச்சனையில்ல துஷாந்தி, எவ்வளவு காலமென்றாலும் நான் வெயிட் பண்ணுவேன். ஏன்னா நான் அந்தளவு தேவேஷைக் காதலிக்கிறேன். அதோட என் தேவேஷுக்காக எங்க வீட்டை எப்படியாவது சமாளிச்சுப்பேன், கெம்பஸ் முடிய இன்னும் ஒருவருஷமிருக்கு. மேல ஸ்பெஷல் செய்யனும், தொழிலெடுக்கனுமென்று ஏதாவது சாக்குசொல்லி நாட்களைக் கடத்திடுவேன். அதனால அது ஒருபிரச்சனையே இல்ல." அவள் காதலில் வியந்துதான் போனாள் துஷாந்தினி, அதோடு தன் அத்தானின் உள்ளத்தை வென்ற அவளின் அதிஷ்டத்தை எண்ணி துஷாந்தினியால் வருந்தாமலும் இருக்கமுடியவில்லை. திவ்யாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தன் அத்தையை அழைத்து

"என்ன அத்தை, உங்க மருமகளை உபசரிக்கல்லயா?" நேரடியாகக் கேட்டிட திவ்யா நாணங்கொள்ள வாஞ்சையாய் அவளின் தலையைத்தடவிய யசோதா

"என் மருமகளைக் கவனிக்காம எனக்கென்ன வேலை." என்றவர் கையோடு திவ்யாவை அழைத்துக்கொண்டு உணவருந்தச் செல்ல ஒருவித வலியுடன் இருவரையும் பார்த்திருந்த துஷாந்தினியின் தோள்தட்டினான் ரிஷதரன்.

"தேவ்ட திவி இவங்கதானில்ல? நீங்க பேசினதைக்கேட்டேன் அவங்க தேவ்வை ரொம்ப காதலிக்குறாங்க அவனுக்காக என்னென்றாலும் செய்வாங்க அப்படிபட்ட ஒருதீவிரம் அவங்க முகத்துல தெரிஞ்சது." பேசிக்கொண்டிருந்தவன் துஷாந்தினியின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைப் பார்த்து சிரித்தவனோ

"ஹேய் துஷி! உன் லவ்வும் பெஸ்ட்தானடி ஆனால் உன் விசயத்துல தேவ் துரதிஷ்டசாலி அவனுக்கு லக்கில்லாத்தாலதான் எனக்கு லக் அடிச்சிருக்கு. ஐ எம் த லக்கியஸ்ட் மேன் இன் தெ வேல்ட். இல்லாட்டி உன் ப்ரண்ட்ஸிப் எனக்கு கிடச்சிருக்குமா?" என்று ரகசியம் பேச அதில் அவள் முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது.

ஆடல் பாடலுடன் விழா களைகட்டத் தொடங்க இளஞ்ஜோடிகள் தங்கள் இணைகளுடன் ஆடத்துவங்கியவர்கள், மணமக்களை நடுநாயகமாய் கூட்டிவந்து ஆடச்சொல்ல வேறுவழியின்றி மணமக்களும் ஜோடியாக ஆடத்தொடங்கினர். ரிஷியுடன் இணைந்து ஆடிய அவன் கண்ணம்மாவை தூரயிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவினால் அதனை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த இடத்தைவிட்டு மெல்ல நகரத்தொடங்க அவன் முன்னால் வந்து நின்றாள் திவ்யா. அவன் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து அவன் தோள்த்தொட அவனோ வெறுப்பாய் நோக்கியதும் அதில் பயந்து சட்டென்று கையை எடுத்தவள் கவலையோடு அவனை ஏறிட அவள் முகம் பார்த்தவனுக்கு அப்போதுதான் தான் செய்த காரியம் புரிய சட்டென்று தன் முகபாவத்தை மாற்றிக்கொண்டவன் அவளோடு வெளியே சாதாரணமாகவும் உள்ளே வேண்டா வெறுப்பாகவும் பேசிக்கொண்டிருந்தான். அவ்வேளை துஷாந்தினியுடன் அவர்களை நெருங்கிய யசோதா

"தேவா! இந்த அம்மாகிட்டயே மறச்சுட்டயில்லப்பா, அப்படியாடா அம்மா உன்கிட்ட பழகினேன். ம்....சொல்லு ப்ரண்டுமாதிரித்தானே பழகினேன் எனக்கிட்டயே உன் மனசுலயிருந்த ஆசைய மறச்சுட்டாயேடா, ஏன்ப்பா இந்த அம்மா உன் விருப்பத்துக்கு எதிரா நிப்பான்னு நினச்சுட்டாயாடா? நீ பண்ணதை நினச்சு அம்மாக்கு ரொம்பக்கவலைடா" அனைத்தையும் அறிந்து பேசிய தாயின் கூற்றில் அதிர்ந்தவன் அவரை எப்படி சமாளிப்பதென தெரியாது தவிக்க

"ஐயோ! அத்தை தேவ் அத்தானை எதுக்கு ஏசுறீங்க அவருக்கே அவர் மனசு இப்போதான் விளங்கியிருக்கு, ரெண்டுநாள் முன்னதானே திவ்யாக்காகிட்டயே சொன்னாங்க, அப்படியிருக்கிறப்போ எப்படி உங்ககிட்ட சொல்லுவாங்க, சொல்லுங்க. என்ன தேவ்வத்தான் நான் சொல்லுறது சரிதானே!"
'ஓ....இதெல்லாம் உன் வேலைதானா?' என்றெண்ணியவன் அவளை முறைக்க

"சரிசரி, நீ என்கிட்ட மறச்சுட்ட என்ற ஆதங்கந்தானே தவிர வேறொன்றுமில்ல, கண்ணா! நீ, தங்கமான பிள்ளையொன்றைத்தான் என் மருமகளாப் பார்த்திருக்க நான் எப்படிப்பா இந்தத்தங்கத்தை ஏத்துக்காம இருப்பேன். எனக்கு இதுல மனப்பூர்வ சம்மதம் கண்ணா." என்றவர் திவ்யாவை அணைத்து உச்சிமுகர அவளும் பூரித்துபோய் தன் வருங்கால மாமியாரை அணைத்துக்கொண்டாள்.

"தேவ்வத்தான், திவ்யாக்கா உங்க லவ்வ ஏத்துக்கிட்டாங்க உங்க அம்மாவும் பச்சக்கொடி காட்டிட்டாங்க. யசோ அத்தை ஏத்துக்கிட்டாலே மொத்தக் குடும்பமும் ஏத்துக்கிட்ட மாதிரிதான் இப்போ உங்களுக்கு சந்தோசாமா? இதுக்கெல்லாம் நான்தான் காரணம். சோ, தேவ் அத்தான் எனக்குத்தான் நீங்க நன்றி சொல்லனும். திவ்யாக்கா ஏற்கனவே சொல்லிட்டாங்க சீக்கிரம் நீங்களும் சொல்லுங்க, சீக்கிரம் சீக்கிரம் அங்க ரிஷி எனக்காக வெயிட்டிங்." அவள் அவசரப்படுத்த 'நன்றி' என வாய்க்குள்ளே முணங்கினான் தேவேஷ்வா.

"ஏன் அத்தை, திவ்யாக்கா உங்களுக்கு ஏதாவது கேட்டிச்சு? சத்தியமா எனக்கு எதுவும் கேக்கல்ல, கொஞ்சம் சத்தமாத்தான் சொல்லுங்களேன்."

"ரொம்ப நன்றி." பற்களுக்கிடையே வார்த்தைகளைத்துப்ப

"சிரிச்சுக்கிட்டே சொல்லிருக்கலாம். ம்....பரவாயில்ல நான் ஏத்துக்கிறேன்." பெருந்தன்மையாய் ஏற்றுக்கொண்டாள்.

"ஏன் துஷாந்திம்மா நீ என்ன புதுசா தேவ்வத்தானென்று கூப்பிடுற?"

"அத்தை இனிஎல்லாமே புதுசுதான் இந்த துஷாந்தினியும் இனிப்புதுசுதான்." என்று தேவேஷ்வாவைப் பார்த்தவாறு கூறியவள்

"இத்தனை நாளும் அறியாம இவரை அத்தானென்று கூப்பிட்டுட்டேன். இப்போதான் எல்லாம் தெளிவாயிடுச்சே என் வீட்டுக்காரரை மட்டுந்தான் அத்தானென்று கூப்பிடுற உரிமை எனக்கிருக்கு, அதனால விஷ்வாத்தான், நவீனத்தான் மாதிரி இனிமே இவரை தேவ்வத்தானென்று கூப்பிடுறதுதானே நியாயம்." என்று யசோதாவிடம் பதிலளிக்க அவள் பதிலில் ஆடவனுக்கு பெண்ணின் தற்போதைய மனநிலை மொத்தமாய் விளங்கியது. அத்தனை நேரமும் அவள் தன்னை அழைத்தவிதம் நாராசமாய் அவன் காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்க அவளோ இனி வாழ்நாளுக்கும் அப்படித்தான் அழைப்பேனென்று கூறியது அவன் உள்ளத்தைப் புண்ணாக்கியது. எவ்விடத்தில் தன்னை வைத்து பூசித்தாளோ அவ்விடத்திலிருந்து வேரோடு பிடுங்கி தூரவே வீசிவிட்டாள் என்பதும் புரிந்துபோக உள்ளம் வாடலானான். அந்தநிமிடம் அவன் கண்ணில் கண்டவலி இப்போது பெண்ணவளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக ஒருவித வெறுப்பே அவளுள் எழுந்தது.

ஒருவாறு திருமணவரவேற்பு சிறப்பாகவும் திருப்தியாகவும் நிறைவுபெற மணமக்கள் இருவரும் மண்டபத்திலிருந்தவாறே ரிஷிதரன் வீட்டுக்குச் செல்வதாய் ஏற்பாடு.
அப்போது ரிஷிதரனிடம் தயங்கியவாறு

"ரிஷி! நான் உங்ககிட்ட ஒருஅனுமதி கேக்கப்போறேன் கொடுப்பீங்களா?"

"என்ன துஷி, பீடிகையெல்லாம் பலமாயிருக்கு. என்ன விஷயம்?"

"அது.....ரிஷி! நான் தேவ் அத்தான்கிட்ட கொஞ்சம் தனியாப்பேசனும்... பேசலாமா?" அவள் கேள்வியில் சிறு அதிர்வுடன் நோக்கியவன் அவள் பார்வையில் கெஞ்சலுடன் தெளிவும் இருந்ததைக் கண்டதும் அவனோ 'சரி' எனக்கூறி விலக, அவனுக்கு நன்றி சொன்னவள் தேவேஷ்வாவைத் தேடிச்சென்றாள்.

வர்ஷினியுடன் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு நின்றிருந்தவனிடம் தயங்கித்தயங்கிச் செல்ல, தன்னை நெருங்கி வந்தவளையே வைத்த கண்வாங்காது பார்த்திருந்தான் தேவா. அவனிடம் வந்த துஷாந்தினி முதலில் எதுவும்பேசாது அமைதியாய் நிற்க அவள் பேசுவாளென அவர்களும் அமைதியாய் நிற்க, வர்ஷினியிடம் திரும்பியவள்

"வர்ஷி, நான் தேவ்வத்தான்கிட்ட கொஞ்சம் தனியாப்பேசனும். ப்ளீஸ்..." அவளின் தேவ் அத்தான் என்ற அழைப்பிலே வர்ஷினிக்கு அவளின் மனது மிகத்தெளிவாகப் புரிய, அண்ணனின் புறம் திரும்ப அவனோ ரணத்துடன் துஷாந்தினியை நோக்கியவாறு நின்றிருக்க, துஷாந்தினியோ அவனைக் கவனிக்காது வர்ஷியையே பார்த்திருந்தாள். வர்ஷினியும் அவ்விடம்விட்டு நகர, தேவாவிடம் திரும்பியள் அவனின் வலியுடன்கூடிய விழிகளைப் பார்த்தும் அதனைக் கணக்கெடுக்காது நேர்கொண்ட பார்வையுடன்

"தேவ் அத்தான், உங்க ஆசை நிறைவேறிடுச்சு. நீங்க கேட்ட சந்தோசத்தையும் நிம்மதியையும் உங்களுக்கு கொடுத்தாச்சு. இனி இந்த துஷாந்தினி ரிஷிதரனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமிருக்காது. இன்னும் பத்துநாள்த்தான் அதுக்குப்பிறகு நீங்க கண்காணாத தூரத்துக்கு நான் போயிடுவேன். உங்க திவியக் கல்யாணம்பண்ணிக்கிட்டு சந்தோசமா, நிம்மதியா உங்க வாழ்க்கைய வாழுங்க. உங்க கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த துஷாந்தினி ரிஷிதரனோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்ன இப்பவே வாழ்த்துச் சொல்லுறேனென்று நினைக்கிறீங்களோ ஒருவேளை அப்போ சொல்ல முடியாமப் போயிடலாமில்ல அதுக்காகத்தான். ஓகே தேவ்வத்தான் நான் போறேன் இந்த நிமிசத்துலயிருந்து உங்க வாழ்க்கையிலயிருந்து நிரந்தரமாப்போறேன். சீக்கிரமே உங்க கண்பார்வையிலயிருந்தும் போயிடுவேன், குட்பை." என்றவள் விடுவிடுவென ரிஷிதரனிடம் சென்றதும் எல்லோரும் வீட்டுக்குச் செல்லத் தயாராகி, பெண்வீட்டார் ஒருவாகனத்திலேற மாப்பிள்ளை வீட்டார் இன்னுமொரு வாகனத்தில் ஏறிக்கொள்ள மணமக்கள் இருவரும் அவர்களுக்கான மகிழுந்தில் ஏறிக்கொண்டதும் அனைவரும் ரிஷிதரன் வீடு நோக்கிச்சென்றனர்.

அங்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்ததும் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவேளை

"ரிஷிதர்! ஹனிமூன் எங்க பிளான் பண்ணிருக்கீங்க?" ரஞ்சனியின் கணவர் கண்ணன் கேள்வியெழுப்ப, துஷாந்தினி சங்கடமாய் நெளிய அவளைப் பார்த்தவாறே

"அதுபத்தி இப்போதைக்கு எந்த பிளானுமில்ல அத்தான். இன்னும் பத்துநாள்ல துபாய் போயிடுவோம், அதுக்குப்பிறகு நாங்க தனியத்தானே இருக்கப்போறோம் அதனால எல்லாநாளும் எங்களுக்கு ஹனிமூன்தான்." ரிஷிதரனின் வார்த்தையில் தேவேஷ்வாவின் உள்ளம் கணத்தது.

"அது எப்படிடா? அங்கதான் அண்ணனும் அண்ணியும் இருப்பாங்களே அப்போ எப்படி தனியாயிருப்பீங்க." தன் சந்தேகத்தை ரஞ்சனி கேட்க அதில் அசடுவழிந்தவன்

"அக்கா, நான்தான் வேறப்ளாட் பாத்திருக்கேனே"

"இது எப்போ மச்சினரே, ஒருவார்த்த சொல்லல்ல சத்தமேயில்லாம வேலைய முடிச்சிருக்கீங்க."

"அதுவந்து அண்ணி நம்ம வீட்டுக்கு பக்கத்துலதான்."

"ஏன் மச்சினரே இம்பட்டு அவசரம் அந்த வீடு போதாதா?"

"இல்ல அண்ணி, இதுவரை நகுலனும் நானும் ரூமை சியார் பண்ணிட்டிருந்தோம் இப்போ துஷி வந்தா அவனுக்கு கஷ்டமாயிடும் அதனாலதான் நான் வேறவீடு பார்க்கச்சொன்னேன். நகுலன் எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டுத்தான் ஊருக்கே வந்தான்."

"நம்ம பக்கத்துலயே வீடு பார்த்திருக்கீங்க நல்லதாப்போச்சு" என்று ரித்தீஸ் மகிழ தாமோதரனும் அதை ஆமோதிக்க

"சரி அப்போ ஹனிமூன் துபாயிலதானா?" தன் கேள்வியிலே கண்ணன் நிற்க

"ஓம் அத்தான், ஆனால் நான் வேறொரு ப்ளான் பண்ணிருக்கேன். எல்லோரும் இங்கதானே இருக்கீங்க அதனால இப்பவே என் திட்டத்தை சொல்லிடுறேன்." அனைவரும் ஆவலாய் அவன் முகம் பார்க்க

"நாம எல்லோரும் சேர்ந்து ஒருட்ரிப் போகலாம்." அவன் சொன்னதும் துஷாந்தினி வீட்டார் மறுக்க, அவனோ தன் திட்டத்தைக்கூற

"நாங்க போனா திரும்பி வாரதுக்கு மினிமம் இரண்டு வருஷமாகும் அதைவிடக் கூடயுமாகலாம். அதனால நம்ம மொத்தக்குடும்பமும் ஒருசின்ன ட்ரிப் போகலாம் நான் ரொம்ப சந்தோசப்படுவேன். நாங்க எங்க ஹனிமூனை துபாயிலயே ஆரம்பிச்சிக்கிறோம், ப்ளீஸ் எனக்காக ஒத்துக்கோங்க எல்லோரும் போகலாம். நம்ம பேமிலி, அண்ணி பேமிலி, துஷி பேமிலி அதோட யசோதா ஆன்ட்டி பேமலியும் போகலாமென்று நினைக்குறேன்." என்றதும் முதலில் தயங்கியவர்கள் அவன் எடுத்துக்கூறியதும் ஒத்துக்கொண்டனர்.

சுற்றுலாச் செல்வதற்கான இடம் மற்றும் மற்றைய விடயங்களைப்பற்றி கலந்தாலோசித்தவர்கள் இறுதியாக இன்னும் மூன்று நாட்களில் இயற்கை அன்னை தன் வரங்களை அள்ளிக்கொடுத்த எழில் கொஞ்சும் மலைநாட்டிற்குச் செல்லலாமெனத் திட்டமிட்டனர். பின்னர் துஷாந்தினி வீட்டார் விடைபெற்றுச் சென்றதும் மற்றையவர்களும் தங்கள் தங்கள் அறைகளுக்குள் நுழைந்துகொண்டனர்.


inbound9218087484055123164.jpg


காணும்.....

விமர்சனங்களுக்கு
https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-08


inbound706727336431269877.jpg

இரவு பத்துமணி எங்கும் இருள் கவ்விக்கொண்டிருக்க, ஊர் மெதுவாக உறக்கத்தை தழுவிக்கொண்டிருந்தது. அவர்களின் வீடுமட்டும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க பயணத்திற்குத் தேவையானவைகளை பேருந்தில் எடுத்தடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர், ஜன்னலிருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்த துஷாந்தினியினருகே தீப்தியை அமரவைத்த ரிஷிதரன் நகுலனினருகில் சென்றமர, தன் கண்ணம்மாவை கண்பார்க்கும் தூரத்தில் விஷ்வாவுடன் தேவாவும் அமர்ந்துகொண்டான்.
ஒருவாறு எல்லோரும் ஏறியமர்ந்ததும் பேருந்து, இயற்கை எழிலை தன்னகத்தே அபரிதமாக வைத்துக்கொண்டிருக்கும் மலையகத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.

முதலில் சிவனொளிபாதமலையையும் இவ்வுலகை ஆழ உதயமாகிவரும் ஆதவனையும் தரிசித்துவிட்டே தங்களின் பயணத்தை ஆரம்பிக்க நினைத்தவர்கள் அதிகாலை மூன்றுமணிக்கெல்லாம் மலையடிவாரத்தை அடைந்துவிட்டனர். காலைப்பனியும் அந்த மலைக்குளிரும் உடலை ஊடுருவி அவர்களை சில்லிட வைக்க அந்தக் குளிருக்கு இதமாய் கடுங்கோப்பியும் பிஸ்கடும் உண்டவர்கள் மலையேறத் தொடங்கினர்.

"பாட்டி, சிவனொளிபாதமலைக்குத்தான் முதல்ல போகனுமென்று அவ்வளவு பிடிவாதம் பிடிச்சீங்களே! அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?" நகுலன் கேட்க

"என்ன நகுலா இப்படிக் கேட்டுட்ட? படிச்ச புள்ளை உனக்கிதெதுவும் தெரியாதா?" வள்ளியம்மை கேட்டதும் அவன் இல்லையெனத் தலையாட்ட

"வேறயாருக்காவது தெரியுமா?" என்று கேட்க இளசுகளும் சில பெரிசுகளும் இல்லையெனத் தலையாட்டியவர்கள் அதைப்பற்றிக்கூறக் கேட்டதும் வள்ளியம்மை சிவனொளிபாதமலை பற்றி விலாவரியாக விளக்கத்தொடங்கினார்.

"இந்த சிவனொளிபாதமலை முக்கோண வடிவிலதான் அமஞ்சிருக்கு. இந்தமலையில எங்குமில்லாத வகையில சிவவழிபாடும், ஒளிவழிபாடும், பாதவழிபாடும் ஒன்னா அமைஞ்சிருக்கிறதுதான் இதோட சிறப்பம்சமே. இது காரணமாத்தான் இந்த இடம் சிவன், ஒளி, பாதம் என்று பெயர் பெற்றிருக்கு. இந்த மலையில அந்தக்காலத்திலயே சிவனாலயமிருந்ததா சொல்லப்படுது. சிவனுக்கு சூரியவழிபாடு செய்றது இந்துமதத்தின் தொன்மையான வழிபாடு என்பதில சந்தேகமில்லை. இவ்வழிபாடு மேலோங்கியிருக்கும் இந்த இடந்தான் சிவனொளிபாதமலை. இந்த மலையுச்சியில விசாலமான, மனிதவுருவிற்கு அப்பாற்பட்ட பாதச்சுவடொன்றிருக்கு. அப்பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதச்சுவடென்று நினச்சு வழிபடுகிறார்கள். அதனாலதான் இது
‘சிவனடிபாதம்’ என்று அழைக்கப்படுகிது. சிலர் சொல்லுகிறாங்க இது இராவணனின் அடிச்சுவடுன்னு. அதுக்கு ஆதாரமில்லை. அதோட
பௌத்தமதம் இலங்கைக்கு அறிமுகமாகுறதுக்கு முன்னமே சிவனொளிபாதமலையில இந்துக்கள் வழிபாடு நடத்தியிருக்காங்க. இம்மலையில் மகாசுமனென்று ஒருதேவகுமாரன் இருந்ததாவும் அவனுக்கு பௌத்தநெறிகளைப் போதிக்கவே புத்தபகவான் முதன்முதல்ல இங்க வந்ததாவும், அவர் வந்தப்போ சிவனொளிபாதமலை இலங்கையின் முக்கிய வழிபாட்டுத்தலமாவும் இருந்திருக்கு. அதோட புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் வந்ததாவும் பாளி நூல்கள்ல சொல்லப்படுது.

இங்கிருந்த மகாசுமன் சிவவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும், இம்மலையிலிருந்து சிவவழிபாட்டை போதிப்பவனாகவும் இருந்தான், இதனை அறிஞ்ச புத்தபகவான் மகாசுமன்போல சிவசூரியவழிபாட்டை கடைப்பிடிக்கும் ஒருவனை பௌத்தநெறிக்குள்ள கொண்டுவந்தா, இந்தக் குட்டித்தீவிலயிருக்கிற பலரை பௌத்தநெறியை கடைப்பிடிக்கச் செய்யலாமென்ற எண்ணத்தோட சிவனொளிபாதம் போய் மகாசுமனுக்கு பௌத்தநெறிகளைப் போதிச்சதா சொல்லப்படுது. புத்தபகவான் மூனாவது தடவை இலங்கைக்கு வந்தப்போ திரும்ப ஒருதரம் இங்கவந்து மகாசுமனின் பௌத்தநெறி மாற்றத்தை உறுதிசெஞ்சதோடு மகாசுமனை பௌத்தமதத்தவர்கள் வணங்க வேண்டுமென்றும் கூறினார். அன்றுமுதல் பௌத்தர்கள் சிவனொளிபாதத்திற்கு வந்து மகாசுமனை வழிபட்டு வந்திருக்காங்க. இதனால் இம்மலை பெளத்தர்களால் ‘சுமண கூடபர்வதம்’ என்றும் சொல்லப்படுது. உலகின் முதல்மனிதன் அதோட அவங்க முதல்நபி ஆதமின் பாதத்தடமென்று முஸ்லிம்களும் ஆதி மனிதனான ஆதாமின் காலடித்தடம் என்று கிறிஸ்தவர்களும் இந்தமலைய தரிசிச்சிட்டு வாராங்க. அதனாலதான் இதுக்கு "அடெம்ஸ் பீக்" என்றும் சொல்லுறாங்க. தற்போது சிவனொளிபாதமலையை இந்துக்களும், பௌத்தர்களும் அதோட முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எந்த தங்குதடையுமில்லாம வழிபட்டுக்குவாராங்க. உலகத்துலயே எல்லாமதத்தினரும் ஒன்றா ஒத்துமையா வழிபடுற ஒரேயிடமா இந்த சிவனொளிபாதமலையிருக்கு. அது இன்னும் கூடுதல் சிறப்பு. இது பழைய காலத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாகயிருந்தாலும், பௌத்தர்கள் புத்தர் சொன்னதால மகாசுமனை இம்மலையில் வழிபட்டுவாராங்க. ஆனால் அந்தக் காலத்திலயிருந்து நடக்குற சிவசூரியவழிபாடு இன்றைக்குவரை நடந்துட்டுத்தானிருக்கு. இங்கு செல்லும் எல்லாமதத்தவர்களும் சூரியவழிபாடு செஞ்சபிறகே மலையைவிட்டு இறங்குவாங்க, அதோட பழைய காலத்திலிருந்து சிவவழிபாடு நடக்குற இந்தமலையுச்சியில சிவசின்னங்களான விபூதி, சந்தனம், குங்குமமெல்லாம் இங்க வருகிறவங்களுக்கு இன்றைவர கொடுக்கிறதை சிறப்பாகச் சொல்லலாம்.

அந்தக்காலத்துல அது எந்தவருஷமென்டு மறந்துடுச்சு. அரேபிக்காரரொருவர் இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதம் ஆரியச்சக்கரவர்த்தி என்றொரு அரசன்ட ஆதிக்கத்தில் இந்துமதத்தின்ட செல்வாக்கு பெற்ற இடமாகயிருந்துச்சு. அந்த அரபிக்காரர் அந்தமலையைத் தரிசிக்க சக்கரவர்த்திக்கிட்ட விருப்பம் தெரிவிச்சப்போ பிராமணர், யோகிகள், அதோட உதவிக்குன்னு சிலபேரையும் மன்னன் அவரோட அனுப்பினார். போனவரு அந்தமலையில இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் பார்த்ததாவும், இந்துக்களின் ஆதிக்கத்தில சிவனொளிபாதமலை இருந்தாலும் மத்த மதத்தவங்களும் இங்கு வழிபடுவதற்கு எந்த தடையுமிருக்கல்ல என்றும் அவர் எழுதின புத்தகத்திலோ, குறிப்பிலையோ சொல்லிருக்காராம். இதுதான் இந்த புன்னியதலமான சிவனொளிபாதமலையோட வரலாறு." அவர் கூறிமுடிக்கவும் அவர்கள் மலையுச்சியைத்தொடவும் சரியாகயிருந்தது.

"யப்பா, பாட்டி சொன்ன கதையால இம்பட்டு உயரம் ஏறினது கொஞ்சமும் விளங்கவேயில்லல்ல." தீப்தி கூற மற்றையவர்களும் ஆமோதிக்க பொழுதும் மெல்லப் புலரத்தொடங்கியது.

பூமிப்பெண்ணை இரவென்னும் கருநிறப் போர்வைகொண்டு போர்த்தி அவளை துயில் கொள்ளச்செய்த ஆதவனே, பெண்ணவளின் போர்வையை மெதுவாய் விலக்கிவிட்டு, நாயகிக்கு தன் உடலொளியால் கீழ்த்திசையிலிருந்து மெல்ல மெல்ல ஆடையணிந்தவனாய் தேவதையைத்தட்டி எழுப்பிட, பூமிமேல் ஆதவனின் காதல் பார்த்து பட்ஷிகள் தங்கள் இன்னிசையை ஆரம்பிக்க, தாமரைகளும் கைதட்டி மொட்டவிழ்க்க, இலைகளிலே இரத்தினங்களாய் மின்னிய பனிப்பாவையும் அவர்கள் காதலில் நாணங்கொண்டு இலைமடல்களில் தன்னை மறைத்துக்கொண்டாள். விடியலின் ஆரவாரத்தினை ரசித்தவாறே மெல்லக் கண்விழித்தாள் பூமி. உயர்ந்த இடத்திலிருந்து பார்த்த அந்த அழகிய காலைப்பொழுது துஷாந்தினியின் கண்களில் அழியாத ஓவியமாய் மாறிட தன்னையே மறந்திருந்தாள் பாவை. அவளருகே வந்த ரிஷிதரனின் கைகளை தன்னையுமறியாமல் பற்றியவள் தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொள்ள, பெண்ணின் ஸ்பரிஷமும் காலைக்குளிரின் இதமும் ஆடவனை போதை கொள்ளச்செய்ய, தன்னிலையை மறந்தவனாய் பெண்ணிலே பார்வை பதித்திருக்க அவனோடு பேசியவாறிருந்தவள் அவன் புறமிருந்து பதிலன்றிப்போக திரும்பி அவனைப் பார்க்க அதற்குள் தன்னை சரிசெய்து கொண்டவன் அவளின் இயற்கை ரசிப்பில் தானும் கலந்துகொண்டான்.

அத்தனைபேரும் அந்த பசுமையை ரசித்திருக்க தேவாவோ சிந்தனையோடு தன் உள்ளங்கவர்ந்தவளையே பார்த்திருந்தவன் உள்ளம் உள்ளே குமுறிக்கொண்டிருந்தது. அத்தனை காலமும் தன்னிடமே அவளின் மொத்த உணர்வுகளையும் கொட்டிய பெண் இன்று ரிஷிதரனிடம் தன் உள்ளத்து உவகையைக் காட்டியதை தேவேஷ்வாவினால் சிறிதும் ஏற்கமுடியவில்லை. தன் கைகளுக்கு தானாக வரவேண்டிய பொக்கிஷத்தை அதன் மதிப்புணராமல் தூக்கி வீசிய தன் முட்டாள்தனத்தை எண்ணியெண்ணி வேதனைகொண்டான்.

ஒருவாறு சூரிய தரிசனத்தோடு சிவன்,ஒளி,பாத வழிபாடுகளையும் முடித்துவிட்டு விபூதி,சந்தனம், குங்குமத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மலையிறங்க

"பாட்டி! வரும்போது கத சொல்லிட்டு வந்ததால அலுப்புத்தெரியல்ல இப்பயும் ஏதாவது கதை சொல்லுங்களேன் கேட்டுட்டே இறங்கினால் இப்பயும் அலுப்புத்தெரியாது. காலும் வலிக்காது" வர்ஷினியும் தனுஜாவும் இணைந்து கேட்டதும்

"அடி கிழவிகளா, உங்களுக்கு அப்படி என்ன வயசாகிடுச்சு, இப்பவே கால் வலின்னு சொல்லுறீங்க?" வள்ளியம்மை கேட்க

"பாட்டியவிட இழப்பமா தனு, வர்ஷி?" நவீன் கிண்டலடிக்க

"டேய் அவளுக்களை பகடிபண்ணுற சாக்குல என் வயசைக் கூட்டப்பாக்குறாயாடா?" வள்ளியம்மை நவீனின் காதைத் திருக

"அத்தை! நீங்க ஏற்கனவே இங்க வந்திருக்கீங்கல்ல"

"ஓம் மஞ்சும்மா, நான் முதன்முதல்ல என் அப்பாம்மாகூட வந்திருக்கேன் அதுக்குப்பிறகு உன் மாமனார் என்னையும் புள்ளைங்களையும் கூட்டிட்டு வந்தார். இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் வாரன். அவர்கூட வந்தப்போதான் இந்த மலையோட வரலாறைப்பத்திச் சொன்னார் அது எனக்குள்ள ரொம்ப ஆழமாப்பதிஞ்சிடுச்சு. மறுபடியும் ஒருதடவை பார்க்கனுமென்று விரும்பினேன். என் பேரனால அந்த பாக்கியம் கிடச்சிருக்கு." என்றவர் ரிஷிதரனை அணைத்துக்கொள்ள அவனும் அவரை அணைத்தவன்

"பாட்டிம்மா, நான் கேக்கனுமென்று நினச்சேன் இந்த வயசுலயும் இவ்வளவு ஸ்ட்ரோங்கா யங்கா இருக்கீங்களே எப்படி? துஷியோட பாட்டின்னு சொல்லுறதைவிட பெரியம்மான்னு சொல்லலாம் அவ்வளவு யங்காயிருக்கீங்க பாட்டி." ரிஷிதரன் கூறியதும்.

"என்னப்பா இப்படி வெட்கப்படவைக்குற? போப்பா." அவர் நாணங்கொள்ள அவரை அணைத்தவன்

"பாட்டிம்மா உங்களைப்பத்தி தெரிஞ்சுக்க ஆசையாயிருக்கு, உங்க வயசு, நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க, வரலாறெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க, இதெல்லாம் எப்படின்னு சொல்லுங்க பாட்டிம்மா." ரிஷிதரனின் கேள்வியில் சிரித்தவர்

"எட்டாம் வகுப்பு படிச்சிட்டிருக்கும்போதே கல்யாணங்கட்டி வச்சிட்டாங்கப்பா."

"அப்போ முழுசா ஸ்கூல்கூட முடிக்கல்லையா? பிறகு எப்படி பாட்டி இவ்வளவு விசயம் தெரிஞ்சுவச்சிருக்கீங்க?" விஷ்வாவின் கேள்வியில்

"பதிமூனு வயசுலயே எனக்கு கல்யாணமாச்சு. அடுத்த வருஷமே ராஜசேகர் பொறந்துட்டான். பதினெட்டு வயசுக்குள்ளேயே இவங்க மூனுபேரும் இருக்காங்க. ரிஷிதரு உம்பொண்டாட்டி பொறக்கும்போது எனக்கு நாப்பத்தாறு வயசு இப்போ உம்பொண்டாட்டிக்கு இருபது, அப்படின்னா என் வயசு என்னென்னு கணக்குப் பார்த்துக்கோங்க. எனக்கு உலகமே என் வீட்டுக்காரரும், புள்ளையலுந்தான், ஆனால் படிப்பென்றால் எனக்கு ரொம்பப்பிடிக்கும் அத தெரிஞ்சிக்கிட்ட உங்க தாத்தா என்னை படிக்கவச்சாரு."

"என்ன அந்தவயசுல ஸ்கூலுக்கு போனீங்களா?" நவீன் ஆச்சரியப்பட

"பள்ளிக்கூடம் போனாத்தான் படிப்பாப்பா? கண்டது கற்கப் பண்டிதனாவான் என்றொரு பழமொழியிருக்கு தெரியுமா? அதுமாதிரி உலக விசயங்களை தெரிஞ்சிக்க ஒவ்வொருநாளும் பத்திரிகை வாசிப்பேன், அதோட அறிவை வளர்த்துக்க எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்களிருக்கு அதெல்லாம் உங்க தாத்தா எனக்கு வாங்கித்தந்தார். நானும் படிக்கிற ஆர்வத்துல அத்தனையும் படிச்சு என் அறிவை பெருக்கிக்கிட்டேன். அதுக்குமேல உங்க தாத்தாவுக்கு தெரிஞ்ச எல்லாவிசயங்களையும் என்கிட்ட பகிர்ந்துப்பாரு அவரோட அனுபவங்கள், படிச்ச படிப்பு, அன்றாட வாழ்க்கையில நடக்குற சுவாரசியமான விசயங்கள் எல்லாத்தையும் என்கிட்ட பகிர்த்துப்பார். அதனாலதான் எனக்கு இந்தவரலாறெல்லாம் தெரிஞ்சது இந்தமலையோட வரலாறென்ன இலங்கை வரலாறு, ஏன் உலக வரலாறுகூட எனக்கு அத்துப்படி. சிங்களம்கூட நல்லாவரும் இங்கிலிஸும் கொஞ்சம் தெரியும். எல்லாத்துக்கும்மேல என் மனசும் உடம்பும் இவ்வளவு ஆரோக்கியமாயிருக்க என் வீட்டுக்காரவர்தான் காரணம். 'உடலுக்கு உடலுழைப்பு, மனசுக்கு தியானம்' இது அவர் அடிக்கடி சொல்லுற வசனம். அவர் இல்லாமப்போனாலும் அவர் காட்டித்தந்த வழிய நான் இதுவரை கைவிடல்ல, அதனாலதான் அறுபத்தாறு வயசுலயும் என்னால இப்படியிருக்க முடியுது. என்ன என் வயசோட ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டாயா பேராண்டி?" ரிஷிதரனிடம் கேலியாகக்கேட்டு சிரித்தவரின் கன்னம் கிள்ளியவன்

"சூப்பர் பாட்டிம்மா கலக்குறீங்க போங்க. உங்க மனோதிடமும் பக்குவமும் எங்களுக்கு வருமான்னு தெரியல்ல, ஆனால் உங்க நல்லபழக்கத்தை இன்றையிலயிருந்து நானும் கடைப்பிடிக்கப் போறேன்." ரிஷிதரன் கூறியதும் மற்றையவர்களும் அதையே ஆமோதித்தனர். இந்தப்பேச்சுக்களில் துஷாந்தினி கலந்துகொள்ளாத போதும் பாட்டியின் பேச்சை கவனத்துடன் கேட்டுக்கொண்டே வந்தாள். ஆனால் தேவேஷ்வா இதிலெதிலும் கலந்துகொள்ளாது தன் கண்ணம்மாவின் நினைவிலே அவள் தன் கைவிட்டுப் போனதை எண்ணியெண்ணி உள்ளூர மறுகிக்கொண்டிருந்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் அவனை யாரும் கவனிக்காதபோதும் வர்ஷினியின் பார்வை அடிக்கடி தமையனைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

அடுத்ததாய் அந்த ஊரை அண்மித்திருந்த முக்கிய சுற்றுலாத்தலங்களை பார்வையிட எண்ணியவர்கள் பேருந்தில் ஏறிக்கொள்ள பேருந்தும் மெல்ல மெல்ல மலைப்பாதையில் வளைந்து செல்லத்தொடங்கிய போதுதான் இருள் கவ்வியிருந்தவேளையில் காணமுடியாத மலையரசியின் அழகு அந்தக் காலைவேளையில் கண்களுக்கு விருந்து படைக்க, அத்தனை கண்களும் அம்மலையழகியின் எழிலோவியத்தைக்கண்டு உவகைகொண்டன. துஷாந்தினியோ அந்தக் கண்கொள்ளாக் காட்சியில் தன்னைத் தொலைத்தவள் அதனை ரசித்தவாறுவர அவளையே பார்த்திருந்தன உரிமையாய் ஒன்றும், உரிமையிழந்த துக்கத்தில் ஒன்றுமாய் இருவேறுபட்ட கண்கள்.

பச்சை பட்டாடையைப் போர்த்தியதுபோல் மலைகள், அதில் வானளவாய் உயர்ந்து நின்ற பைன்ஸ் மரங்கள் அந்தப்பச்சைக் கம்பளத்தில் அள்ளித்தெளித்தால்போல் பலவண்ண மலர்கள்! ஆர்பரித்து ஆலோலம் பாடியபடி அருவி சலசலத்து ஓடிவர, சீறிவரும் பாம்புகள்போல் ஆறுகள் வளைந்தோட, தலையசைத்து புல்லினமோ தென்றளவளை வாவென்றழைக்க,
தலைதூக்கி நடனமாடும் அட்டையோ கட்டையைக் கண்டதும் மெல்ல ஊர்ந்து செல்ல வெண்பஞ்சுகளாய் மிதந்துசெல்லும் மேகங்களோ வானை எட்டிய மலைத்தொடர்களை தொட்டுத் தழுவிச்செல்ல,
ஊடுருவிப்பாயும் குளிர்காற்று பாதம் தாண்டி உயிர்வரை நுழைந்து உடல் சிலிர்க்க வைக்க, குட்டிகளை வயிற்றோடு கட்டிக்கொண்டு குரங்குகளும் மரம்விட்டு மரம் தாவ, துள்ளிப்பாயும் புள்ளிமான்களோ மின்னல் வேகத்தில் வீதியைக்கடக்க,
திரும்பும் இடங்களிலெல்லாம் புள்ளினங்கள் இசைத்திருக்க,
அந்தப்புள்ளினங்களைத் தாங்கிய பூமரங்களும் தேன் துளிகளைச் சிந்திக்கொண்டிருக்க, கொழுகொம்பைப் பற்றிப்படர்ந்திருந்த கொடிமரங்கள் அழகின் அலைவரிசையாக, இத்தனை அழகையும் பத்திரமாய் இன்பத்தின் அத்வைத பாத்திரமாய், தீட்டாத ஓவியமாய், தன் கண்களுக்குள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டாள் துஷாந்தினி.

மலையரசியிடம் கொட்டிக்கிடக்கும் அபரிவிதமான அழகை அள்ளிப்பருகியவாறே அன்றையநாள் முழுக்க சுற்றியவர்களின் உடல் களைத்து ஓய்விற்கு கெஞ்சிக்கொண்டிருக்க அன்றைய இரவுப்பொழுதைக் கழிப்பதற்காக 'தலவாக்கலை' எனுமிடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். அந்த இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது தேவாதான் அதுவும் அவன் துஷானிக்காக, ஏனென்றால் அவள் தலவாக்கலை போன்ற அமைதியான இடத்தைத்தான் என்றும் விரும்புவாள். அதனாலே அவன் தெரிவு அதுவாகயிருந்தது. ஒருவாறு சேரவேண்டிய இடத்திற்கு வந்திறங்கியவர்கள் மாலை மங்கி வந்தநேரம் அந்த ஊரின் அழகையும் அமைதியையும் ரசித்தனர்.

"ஏன் தேவா! நுவரெலியவில இடம் பார்க்காம இந்த இடத்தை பார்த்திருக்க?" மஞ்சுளா கேட்டதும்

"அதுவா அத்தை. இது என் ப்ரண்டோட கெஸ்ட்ஹவுஸ், நுவரெலிய எப்பயுமே கொஞ்சம் ரஸ்ஸானயிடம், ஆனால் இங்க டவுனாயிருந்தாலும், கிராமத்தோட அமைதியும் அழகும் நிறையயிருக்கு, அதுமட்டுமில்ல இந்த அமைதி எல்லோருக்கும் பிடிக்கும்தானே." துஷாந்தினியைப் பார்த்தவாறு கூறியவனை பார்த்ததும் அவளுக்கும் புரிந்துவிட்டது இது தனக்காகத்தானென்று. ஆனால் அதையெண்ணி மகிழ வேண்டியவளுக்கு ஏனோ அவன் செயல் சிறிதும் பிடிக்காமல்போக வேண்டுமென்றே ரிஷிதரனிடம் சென்றவள்

"இதைவிட நுவரெலியவிலே தங்கினாத்தான் நல்லாயிருக்கும், இங்க பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சு, அங்கதான் சுத்திப்பார்க்க நிறையயிடமிருக்கு, இங்க அப்படி என்னதானிருக்கு. நம்ம நுவரெலியக்கே போயிடலாமே என்ன சொல்லுறீங்க?" அவள் கூறியதைக்கேட்டதும் தேவேஷ்வாவின் தெரிவென்பதனால்தான் வேண்டுமென்றே இடம் பிடிக்கவில்லையென துஷாந்தினி கூறிக்கொண்டிருக்கிறாள் என்று வர்ஷினியுடன் சேர்த்து தேவ் மற்றும் ரிஷிக்கும் புரிந்துவிட்டது.

"துஷானி! நாம இதுவரை பார்த்தது போக சுத்திப்பார்க்க இங்க இன்னும் நிறைய இடங்களிருக்கு, அதனால இங்க தங்குறதுதான் சரி." அவள் கேள்விக்கு தேவேஷ்வா பதிலளிக்க

"துஷாந்திம்மா, உனக்கு நெரிசலில்லாம அமைதியாயிருக்கிற இடம் என்றாத்தானே அவ்வளவு பிடிக்கும். எப்பயும் சொல்லிட்டிருப்பாயே, நுவரெலிய வந்தா அங்க தங்காம அதைச் சுத்தியிருக்கிற ஊருல தங்கி, நல்லா இந்த இயற்கையழகை ஆசைதீர ரசிக்கனுமென்று, உனக்கு பிடிக்குமென்றதாலதான் தேவாவும் இந்தயிடத்தை பார்த்திருக்கான்." யசோ சொன்னதும்

"அது......வந்து.....அமைதி பிடிக்கும்தான் ஆனால் இப்போ...அப்படித்தோணல்ல"

"என்ன துஷாந்தி இது, உனக்காகத்தானே தேவா இந்த இடத்தையே பார்த்திருக்கான் நீ என்னென்றால் பிடிக்காதமாதிரியே பேசிட்டிருக்க." மஞ்சுளா ஆதங்கப்பட

"வாவ் துஷி! சேம் டேஸ்ட், எனக்கும் சைலன்ட் பிளேஸஸ்தான் ரொம்பப்பிடிக்கும். இந்தமாதிரி இடத்தை சூஸ் பண்ணியதுக்காக நான் தேவிற்கு தைங்க்ஸ் பண்ணுமென்று நினச்சேன், ஆனால் பார்த்தா துஷியோட டேஸ்ட்டுக்காகத்தான் இந்த ஏற்பாடுன்னு நினைக்கும்போது ரொம்பஹேப்பி நான். தேவ் ரொம்பதைங்க்ஸ் உங்களமாதிரி ஒருநல்ல நண்பன், நல்ல அண்ணன் என் துஷிக்கு கிடச்சது அவ புண்ணியம்." என்றதும் ரிஷிதரின் அண்ணனென்ற வார்த்தையில் தேவாவின் முகத்தில் திரைவிழ அதை ரிஷியின் கண்கள் குறிப்பெடுத்துக்கொண்டன.

"துஷி! நம்ம இங்கேயே தங்கலாம். நம்ம டேஸ்ட்டுக்கேத்தமாதிரி தேவ் இடத்தை பார்த்திருக்கும்போது நாம ஏன் அந்தநெரிசலுக்க போய் மாட்டிக்கனும். என்ன சொல்லுற தங்கலாம்தானே?" சிறிது யோசித்தவள்

"இங்க அப்படி என்னயிருக்கு, இதைவிட நல்ல இடங்கள் நுவரெலியவிலதானே இருக்கு. சோ, அங்க தங்கினாத்தான் சரியாயிருக்கும்." தேவாவின் தெரிவான இடத்தில் அவள் தங்க விரும்பவில்லை என்பது விசயமறிந்த மூவருக்கும் புரிந்தது. ஆனால் வள்ளியம்மை அதற்கு தடைபோட்டார்.

"ஏன் துஷாந்தினி! இந்த இடம் நல்லாத்தானேயிருக்கு, இங்க பார்க்கவேண்டிய எத்தனையோ இடங்களிருக்கு அதுபத்தி உனக்கு தெரியல்ல போல, கொத்மல ஓயா, கொத்மல டேம், தேயிலத்தொழிற்சாலை, அதோட இலங்கையின்ட சுவையான தேயிலைத் தோட்டங்களும், ஆராய்ச்சி நிலையமும் இங்கதானிருக்கு. அழகான நீர்வீழ்ச்சிகள் கூடயிருக்கு. எல்லாம் பார்த்துட்டு முக்கியமா இங்கொரு பழைய முருகன் கோயிலிருக்கு அதையும் தரிச்சிட்டுப்போவோம்." வள்ளியம்மை கூறியதும்

"பாட்டி பின்னுறீங்க, எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கீங்கல்ல?" ரித்தீஸ் பெருமைப்பட

"இதென்ன, பூண்டுலோயா கோயில்பத்தியும், சீதாஎலிய சீதையம்மன் கோயில்பத்தியும் அங்க போகும்போது பக்கம்பக்கமா சொல்லுறேன், கேட்டுக்கோங்க. சரிசரி அம்மாடி துஷாந்தினி! இன்றைக்கு இங்கயே தங்கிக்கலாம், எல்லாம் பார்த்துட்டு மறுநாளு நீ ஆசைப்படுறமாதிரி உன் வீட்டுக்காரவர் நுவரெலியவில இடம் பார்க்கட்டுமே." வள்ளியம்மை சொன்னதும் அதற்குமேல் எதுவுங்கூறாது வாய் மூடிக்கொண்டாள்.

அன்றைய இரவின் தனிமையில் அவள் இங்கு தங்க மறுத்ததற்கு காரணம் தேவின் தெரிவுதானாவென துஷாந்தினியிடம் ரிஷிதரன் கேட்டதும் முதலில் அமைதியாக நின்றவள், பின் ஆம் எனத்தலையாட்ட

"துஷி! நீ இப்படி அவரை நேரடியா பகச்சுக்கிட்டா, உங்க வீட்டுல என்னென்று கேப்பாங்க பிறகு நீ தேவ்வைக் காதலிச்சதும் அவர் உன்னை மறுத்ததும் எல்லோருக்கும் தெரியவரும். அதுல எனக்கு உடன்பாடில்ல, துஷி எப்பயும்போல வேண்டாம் விஷ்வா, நகுல், நவீன்கூட பழகுற அளவுலயாவது தேவோட பேசு. இன்னும் ஒருகிழமைதான் அதுக்குப்பிறகு நம்ம கிளம்படுவோம். பிறகு தேவ் கல்யாணத்துக்கு வார வாய்ப்புக்கூட அமையுமோ என்னவோ அதனால நீ நோர்மலாவே இருப்பா." என்றதும் தலையாட்டியவளுக்கு தூக்கம் கண்களைப்பறிக்க கட்டிலில் உடலை சாய்த்தவளிடம் இரவு வணக்கத்தைக்கூறி அவனும் உறக்கத்தை தழுவினான்.

inbound5353287982432545334.jpg

காணும்.....


விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-09

inbound5003463022727214239.jpg

மறுநாள் அதிகாலையிலே துயில் கலைந்தவள் அறையின் யன்னலைத் திறக்க அங்கிருந்த தோட்டம் அவள் கண்களுக்கு விருந்து படைத்தது. அந்த இயற்கையன்னையின் கொள்ளையழகில் ஈர்க்கப்பட்டவளாய் தோட்டத்தில் இறங்கி நடக்க, இருள் விலகாத காலைப்பொழுதின் குளிர் அவள் உடலை ஊடுருவி சில்லிடச்செய்ய இருகைகளையும் மார்பிற்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு தூரத்து மலைப்பெண்ணை ரசித்தவாறு மெல்ல நடந்தவளுடன் ஒருஜோடிக் கால்களும் இணைந்துகொள்ள, திடுக்கிட்டவள் திரும்பிப்பார்க்க, கணமான போர்வையை அவளின் தோள்களைச்சுற்றி போர்த்திவிட்டவாறு கூட நடந்தான் ரிஷிதரன். அக்குளிருக்கு இதமாயிருந்த போர்வையை மேலும் இழுத்துப் போர்த்தியவள் அவன் அக்கறையில் பூரித்துப்போனாள்.

இருவரும் அந்த மலையரசியின் அழகையும் அம்மலை நாட்டிற்கு இயற்கையன்னை அள்ளிக்கொடுத்த வரத்தைப்பற்றியும் பேசியவாறு சிறிதுதூரம் நடந்தவர்கள் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வந்தபோது அனைவரும் எழுந்து பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். இவர்களைக்கண்ட வாசுகி இருவருக்கும் சூடான தேநீரைக் கொடுத்தவர் குடித்துவிட்டு இருவரையும் குளித்து தயாராகி வருமாறுகூற தேநீரை அருந்தியவர்கள் தங்கள் அறையினுள் நுழைந்தனர். முதலில் ரிஷிதரன் குளித்துவிட்டுவர, துஷாந்தினி உள்நுழைந்தாள் அதற்குள் தயாரானவன் கதவை சாத்திவிட்டு வெளியேவந்து மற்றையவர்களுடன் இணைந்துகொள்ள குளித்துவிட்டு வந்த துஷாந்தினியும் தயாராகி வந்ததும் அவளுடனிணைந்து காலைஉணவை உண்டதும் அனைவரும் தலவாக்கலையிலுள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் சுற்றிப்பார்க்கக் கிளம்பினர்.

வள்ளியம்மையின் வேண்டுகோளின்படி முதலில் மலையகத்தில் பிரசித்திபெற்ற அந்த பழைமையான முருகனை தரிசித்துவிட்டே மற்றையவற்றைப் பார்க்கச் சென்றனர். அன்றையநாள் முழுக்கப் பார்க்க வேண்டியவற்றைப் பார்த்தவர்கள் அன்றிரவும் தலவாக்கலை விருந்தினர் மாளிகையிலே தங்கியவர்கள் மறுநாள் பொழுதுவிடிய பூண்டுலோயாவிலுள்ள டன்சினன் நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகினை ரசித்தவர்கள் அந்த நீர்வீழ்ச்சியோடு இணைந்திருந்த ஸ்ரீமீனாட்சி சிவாலயத்திலுள்ள அம்மனையும் தரிசித்துவிட்டு வரும்போது வள்ளியம்மையிடம் அந்த ஆலயத்தைப்பற்றிக் கூறும்படி தாமோதரன் கேட்க,

"இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க வார எல்லோரும் கோயிலை தரிசிக்காம போனதேயில்லை. கோயிலும் நீர்வீழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைஞ்சே காணப்படுது. இந்தக்கோவில் மிக சக்திவாய்ந்தது, அதுமட்டுமில்ல இந்தக்கோயில்ல பலஅற்புதங்களும் நிகழ்ந்திருக்கு. குறிப்பாக இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து ஐஞ்சு சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கு. அந்த ஐஞ்சுலிங்கங்களும் கோவில்ல வைக்கப்பட்டிருக்கறதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடிவந்து பாதுகாப்பதாக சொல்லுறாங்க, அதோட கோவில்ல அர்ச்சகர்யில்லாதப்போ அர்ச்சகர் உருவத்துல வேறொருவர் அர்ச்சகரா வந்து பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கண்டதாகவும் சொல்லுறாங்க. மனதில் கஸ்டங்கள், மனக்குழப்பங்களிருக்கிற சமயங்கள்ல இந்த நீர்வீழ்ச்சியையும் இந்த அம்மாளையும் தரிசிச்சா உண்மையில மனநிம்மதி கிடைக்குமென்று உங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார். அதோட இந்த தொழில் பிரச்சனைகளெல்லாம் ஒன்றுகூடி தலையில ஏறும்போது நிம்மதி நம்மை விட்டுக்காணமப்போறப்போ எல்லாம் ரெண்டு, மூனுநாளென்று இங்கதான் வருவார். வருடம் முழுக்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை நிறைய காணப்படுது. டன்சினன் நீர்வீழ்ச்சிக்கு 'தூவான கங்கை' என்று இன்னொரு பேருமிருக்கு." அவர் கூறி முடிக்க

"அட இங்கதானே தனுஷும் ஸ்ரீதேவியும் 'அழகே பிரம்மனிடம் மனுக்கொடுக்க போயிருந்தேன்' என்ற பாட்டுக்கு டான்ஸ் ஆடினாங்க. அந்த சூட்டிங்ககூட இங்கதானே நடந்துச்சு." தீப்தியின் கூற்றை தனுவும் வர்ஷியும் ஆமோதித்தனர்.

பூண்டுலோயாவிலிருந்து கிரேட் வெஸ்டர்னிலுள்ள புகையிரத நிலையத்திற்கு சென்றவர்கள் அங்கிருந்து நானோயாவரை புகையிரத பயணத்தை மேற்கொண்டவர்கள் அந்த கிரேட்வெஸ்டர்ன் மௌன்டெனில் கொட்டிக்கிடக்கும் கோடி அழகை ரசித்தவர்களாய், ரயில்பயணத்தை சுகமாய் அனுபவித்தவர்கள் நானுஓயா வந்தடைந்ததும் அங்கிருந்து நுவரெலிய சென்றவர்கள் விக்டோரியா பார்க்கை பார்த்துவிட்டு, கெரகோரி லேக்கிலுள்ள ஹவுஸிங் போட்டில் மொத்தக்குடும்பமும் சந்தோசமாய் சவாரி செய்ததோடு அங்கு சிறுகுன்றுபோல் படர்ந்திருந்த புற்தரையில் அமர்ந்தவர்கள் அங்கிருந்த கடைகளில் நொறுக்குத் தீனியை வாங்கி சுவைத்தவாறு கண்முன்னே விரிந்திருந்த ஏரியின் அழகை ரசித்தவாறு கதை பேசிக்கொண்டிருக்க, தன்னவளுடன் தனியாக அன்னப்படகில் சவாரிசெய்ய எண்ணி துஷாந்தினியை அழைத்துச்சென்ற ரிஷிதரனை நந்தினி கேலிசெய்ய, மற்றையவர்களும் அவளுடனிணைந்து கொள்ள, அதில் துஷாந்தினி நெளிய, அவளை சமாதானம் செய்தவன் மற்றையவர்களை அடக்கிவிட்டு அங்கிருந்து நகர, இவையனைத்தையும் பார்த்திருந்த தேவேஷ்வாவிற்கு அதைத் தாங்கமுடியாமல் அத்தனை பேரிடமுமிருந்து தூரமாய்ச் சென்றவன் ஏரியினோரமாய் நடைபயிலத் தொடங்கினான். அவனைப் பார்த்த வர்ஷினி அவன் நிலையைப்பார்த்து கவலைகொண்டாள்.

ஜோடியாய் படகு சவாரிசென்ற தம்பதியர் திரும்பி வந்ததும் கிளம்பத் தயாரானவர்கள் தேவாவைத்தேட அவனோ ஏரிக்கரையிலே நின்று ஏரியை வெறித்துக் கொண்டிருந்தான்.

"என்ன வர்ஷினி உங்கண்ணன் தண்ணியையே உத்துப் பார்த்துட்டிருக்கான். என்னடி திவ்யாவை நினச்சு ஃபீல் பண்ணுறானோ, வா நம்ம போய் கூட்டிட்டு வருவோம்." என்ற யசோதா மகளையும் அழைத்துக்கொண்டு தனயனிடம் சென்றவர் அவன் தோள்த்தொட திரும்பியவன் அங்கே தாயையும் தங்கையையும் கண்டதும் என்னவெனக் கேட்க

"என்னப்பா, நானும் பார்த்துட்டேயிருக்கேன் வந்ததுலயிருந்து அடிக்கடி இப்படி தனியாநின்று ரொம்பத்தான் ஃபீல்பண்ணுற? என்ன என் மருமகளோட நினைப்போ?"

"அது தவிர உங்க மகனுக்கு வேற நினைப்புமுண்டோ" வர்ஷினி பொடிவைத்துப் பேச

"ஓ...அதுசரி அப்படின்னா அவளை உன்கிட்ட கூட்டிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும் போலயிருக்கே!" வாசுகி மகனை வம்பிழுக்க

"அது உங்களால முடியாதும்மா, உங்க மருமகளை உங்க மகனுகிட்ட உங்களால கூட்டிட்டு வந்து கொடுக்கவே முடியாதம்மா, அதனால அண்ணன் சரியாகப் போறதுமில்லம்மா." வர்ஷினி ஆதங்கத்துடன் படபடக்க அவள் உளரிடுவாளோ என்ற பயத்தில் அவளிடம் கண்ஜாடை செய்தவன், அமைதியாய் இருக்கும்படி சொன்னதும் வர்ஷினியும் தன் தவறுணர்ந்து அமைதியாகிட

"அதுசரிதான் வர்ஷி, திவிம்மாவ எப்படிக்கூட்டிட்டு வரமுடியும். எப்பயும் இவங்கூடவே நிழலாட்டம் சுத்துற நம்ம துஷாந்தியும் முதல்தடவையா கூட இல்லாததும் இவன் இப்படியிருக்க காரணமென்று எனக்கு நல்லாத்தெரியுது." 'அதுமட்டுந்தான் காரணம்மா' என அவரின் மகவுகள் உள்ளூர எண்ணியது பாவம் அவருக்கு கேட்கவில்லை.

"ஆனால் என்ன செய்யலாம் அவ அவளோட புருஷனையும் பார்க்கனுமில்ல." அந்த வார்த்தை தேவேஷ்வாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை.

"சரிசரி என்னைக்கூட்டத்தானே வந்தீங்க. வாங்க அங்க எல்லோரும் நமக்காகத்தான் காத்திருக்காங்க கிளம்பலாம்." என்றவாறு பெண்களிருவரையும் அழைத்துக்கொண்டவன் மற்றையவர்களுடன் இணைந்துகொள்ள பேருந்தும் சீதாஎலிய நோக்கிப்பயணமானது.

'இராவணனால் கடத்தப்பட்ட சீதாதேவி அசோகவனத்தில் சிறைவைக்கப்பட, தான்பட்ட துன்பம் யாரும்பட்டிடக் கூடாதென்பதற்காக அந்த அசோகவனத்திலே கோயில்கொண்டு அருள்புரிய, அந்தக்கோயில் 'ஆதிசக்தி சீதையம்மன் கோயில்' என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் அன்று சிறைவைக்கப்பட்ட சீதை இன்று பத்தினி தெய்வம் சீதையம்மனாக போற்றப்படுகிறாள். மலைச்சரிவிலிருக்கும் இந்தக்கோயிலின் நுழைவாயிலிலிருந்து கீழிறங்கிச்செல்லும் படிக்கட்டின் வழியாக கோயிலுக்குள் நுழைகையில் மலையிலிருந்து விழுந்து காட்டாறாய் ஓடிக்கொண்டிருக்கும் இராவண அருவி கோவிலுக்குப் பின்னால் விழும் சீதையருவியுடன் கலந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இவ்வருவி ஒருநாளும் வற்றுவதில்லை. மேலும் சீதை சிறையிருந்த காலத்தில் இவ்வருவியில்தான் நீராடி, கரையிலிருந்த பாறைகளில்தான் தன் கூந்தலை உலர்த்துவாள் என்றும் சொல்லப்படுகின்றது. அத்துடன் அவ்விடத்திலிருந்து பாயும் ஆற்றுநீர் எவ்வித சுவையுமின்றிக் காணப்படுகின்றது, அதற்கு சிறைவைக்கப்பட்ட சீதாதேவியின் கண்ணீரும் சாபமுமே காரணமென்றும் கூறப்படுகின்றது. இங்கு இராமாயணக் காட்சிகளும் ஓவியங்களாய் தீட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பாறையில் காணப்படும் பள்ளங்கள், சீதாதேவியைத் தேடிவந்த அனுமான் அசோகவனத்தில் அவளைக் கண்டுகொண்டதும் வானிலிருந்து பாறைகளில் குதித்தபோது அனுமானின் கால்தடங்களால் உண்டானவை எனவும் நம்பப்படுகின்றது. அதற்கு மக்கள் விளக்கேற்றி பூஜை செய்கின்றனர். இங்கு இராம, இலட்சுமணனுடன் சீத்தாதேவியும் அருள்புரியும் சந்நிதியும், அனுமான் அருள்புரியும் சந்நிதியும் காணப்படுகின்றது. ஆனால் சீதையம்மனே இங்கு முதன்மையான கடவுளாக பூஜித்துப் போற்றப்படுகின்றாள். பத்தினி தெய்வமான சீதையம்மனை அவள் சிறையிருந்தயிடத்திலே வழிபட்டு வந்தால் அத்தனை குறைகளும் நீங்கிவிடுமென மக்களால் நம்பப்படுகின்றது. ஊள்ளூர்வாசிகளின் இஷ்ட தெய்வமாகவும் சீதையம்மனே இருக்கின்றாள். இப்படிப்பட்ட சீதையம்மனை வழிபட்டு அவளின் அருளையும் பெற்றுக்கொண்டவர்கள் வள்ளியம்மையிடம் அக்கோயிலின் சிறப்புக்களையும் அறிந்துகொண்டு ஹக்கல தாவரவியல் பூங்காவினுள் நுழைந்தனர்.

எண்ணிலடங்கா நிறங்களிலும் வடிவங்களிலும் பூத்துச் சிரிக்கும் பூக்களைப் பார்த்ததும் மனதுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. பலஏக்கர் நிலத்தினை உள்ளடக்கிய அப்பூந்தோட்டத்தை சுற்றிக் களைப்படைந்த பெரிசுகள் ஒருமரநிழலில் அமர இளசுகள் அப்பூந்தோட்டத்தில் புகைப்படங்களையும் செல்பிகளையும் கிறுக்கப்போயின.

துஷியும் ரிஷியும் பலவண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜாத் தோட்டத்தினுள் நுழைந்தவர்கள் தனித்தனியாக புகைப்படமெடுத்துக் கொண்டனர். ஆனால் தன்னவளுடனிணைந்து புகைப்படமெடுக்க ஆசைகொண்ட ரிஷிதரன் யாரிடம் கொடுத்து எடுக்கச் சொல்லலாமென சுற்றிச்சுற்றிப் பார்க்க அவர்களுக்கு சற்றுத் தொலைவிலே நின்றிருந்த தேவா கண்ணில்பட்டதும் அவனை கைகாட்டி அருகழைத்தவன், தேவா வந்ததும் கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு தன்னவளுடன் இணைந்து புகைப்படம் எடுக்கத்தொடங்க முதலில் தேவா போட்டோ எடுப்பது பிடிக்காதபோதும், 'உன்மேல் இப்போது எனக்கெந்த எண்ணமுமில்லை' என்பதைக் காட்டவேண்டுமென நினைத்த துஷாந்தினி வேண்டுமென்றே ரிஷிதரனுடன் உரிமையாய் நிற்பதுபோல் அவன் கைகளை எடுத்து தன் தோள்களில் போட்டவாறும், அவன் தோள்வளைவில் சாய்ந்தவாறும், இருகரம் கோர்த்துக்கொண்டும், ஒருவர் முகத்தை மற்றையவர் பார்த்தவாறும் என பலகோணங்களில் நன்றாக ரிஷிதரனுடன் இணைந்து நின்றாள். பெண்ணவளின் தொடுகை ஆடவனின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப அதற்கு அந்த மலையரசியின் மேனிக்குளிர் தூபம்போட, மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டவன் அவளை ஏக்கமாய்ப்பார்க்க, தன் கணவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள் தன்னிலும் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்துகொண்டாள். தேவாவிற்காக வேண்டுமென்றே ரிஷிதரனுடன் இணைந்து நின்றபோதும் ஆடவனின் ஸ்பரிஷம் கணவன் என்பதாலோ என்னவோ பெண்ணினுள்ளும் ஒருமாற்றத்தை உண்டாக்கியது. அந்தமாற்றம் தந்த பாதிப்பில் தன்னை ஏக்கமாய்ப் பார்த்தவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்க, முள்ளின்மேல் நிற்பதுபோல் உணர்ந்தவாறே தம்பதிகளிருவரையும் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்த தேவேஷ்வா இப்போது தங்களையும் மறந்து சுற்றுச்சூழலையும் உணராது ஒருவரையொருவர் இமைக்காது பார்த்திருந்த காட்சி தன் கண்முன்னே அரங்கேற, அவர்கள் செயலில் நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்துப்போனான். அந்நொடியில் தன் கண்ணம்மாவின்மேல் தான் வைத்த காதலை இன்னும் ஆழமாய் உணர்ந்து கொண்டவனுக்கு அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் தொண்டையை அடைக்க, கதை பேசிக்கொண்டிருந்த விழிகள் நான்கும் அப்போதுதான் தாங்களிருக்கும் இடமுணர்ந்து சுயத்தையடைய ஒருவர் முகம் ஒருவர் கண்டு நாணம் அவர்களை சூழ்ந்துகொள்ள சட்டென்று அவனிலிருந்து பார்வையை விலக்கிய பெண்ணவள் அப்போதுதான் முன்னின்றவனைக் காண அவள் முகத்தில் சொல்லொன்னா வெறுப்புக் குடியேற மறுபுறம் திரும்பி நின்றுகொண்டாள். தன் கண்ணம்மாவின் செயலில் கண்ணாடித் துண்டுகளாய் ஆடவனின் இரும்பு இதயம் சுக்கல் சுக்கலாக, கேமராவினை ரிஷிதரனிடம் கொடுத்தவன் அடுத்தகணம் அவ்விடம்விட்டு நகர்ந்தான்.

தளர்ந்த நடையுடன் செல்லுமவனை பார்த்திருந்த ரிஷிதரனுக்கு தேவாவின் மனம் லேசாக புரிந்தது. அவனுக்கு தேவாவின்மேல் கோபம் வருவதற்குப்பதில் அனுதாபமே வந்தது. கையில் கிடைத்த பொக்கிஷத்தை தவறவிட்டு விட்டு தன் கைநழுவிச்சென்ற பின் அந்த பொக்கிஷத்திற்கு ஏங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த நிலைதான் இப்போது தேவாவின் நிலையென உணர்ந்தவன் அவன்மேல் பரிதாபப்பட்டாலும் ஒருவகையில் அவனுக்கு நன்றியும் கூறிக்கொண்டான். தேவேஷ்வா மட்டும் அன்று தன் துஷியின் காதலை ஏற்றிருந்தால் இன்று தன் உயிரானவள் நிச்சயமாய் அவனுக்கு கிடைத்திருக்கமாட்டாள். இதற்காகவே தேவிற்கு பலகோடிமுறை நன்றி சொன்னாலும் தகுமென்று உள்ளூர சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் தன்னவளின் மாற்றம் மெதுவாகப்புரிய தான் நினைத்ததைவிட வெகுசீக்கிரமே தங்கள் மணவாழ்க்கை மலர்ந்திடுமென உறுதியாக நம்பியவன் மனையாளை நோக்க அவளோ இவன் முகம் பார்க்கமுடியாமல் மலர்களிலே பார்வையை பதித்திருக்க மேலும் அவளை சங்கடப்படுத்த நினையாதவன்

"துஷி! நாம போகலாம். எல்லோரும் கிளம்பத்தயாராகிட்டாங்க." என்றவன் சாதாரணமாய் நடந்துகொள்ள அதில் நிம்மதியானவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அடுத்ததாய் அன்றைய மாலைப்பொழுதை மேலும் ரம்மியமாக்க 'மேக்வூட்ஸ் லபுக்கல்ல டீ சென்டர்'க்குச் சென்றவர்கள் அங்கிருந்த காட்சிக்கோணத்தை(வியூப்பொய்ன்ட்) ரசித்தவாறு அங்கு பிரசித்திபெற்ற தேயிலைக்கேக், சொக்லேட் பிரவுணி அத்துடன் சுவையான பால்தேநீர் என அனைத்தையும் பனி தவழ்ந்து செல்லும் தேயிலை மலைச்சாரலின் அழகை ரசித்தவாறு உண்டவர்கள் அங்கிருந்து லவர்ஸ் லீப் ஃபோல்ஸுக்கும் சென்றவர்கள் துஷாந்தினிக்காக அன்றிரவு நுவரெலியவிலே தங்கினர், இடம் ரிஷிதரனின் தெரிவானதும் பெண்ணவள் சந்தோசமடைந்தாள். ஆனால் அதன் பின்புலம் தேவேஷ்வாதான் என்பது பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

மறுநாள் அதிகாலையிலே தயாரானவர்கள் ஹோட்டன் சமவெளிக்குச்சென்று உலகமுடிவையும் அங்குள்ள பேக்கர் ஃபோல்ஸையும் கண்டுகழித்தவர்கள் திரும்பும் பயணத்தில் அம்பேவல கால்நடைப்பண்ணைக்குச் சென்றனர்.

பச்சைப்பசேலென்ற பரந்த புற்சமவெளி இயற்கை கொழிக்க வரவேற்றது. பண்ணையைச் சுற்றிலும் அமைந்துள்ள மிகப்பரந்த நிலப்பரப்புக்களில் கறுப்பு, வெள்ளை, பிறவுன் என பலவித நிறங்களில் உடல் கொழுத்த ஜேஸி இனத்தைச்சேர்ந்த உயர்தர மாடுகள் கூட்டங்கூட்டமாக புற்களை மேய்ந்துசென்றன. பண்ணையின் நுழைவாயிலிலிருந்து நடந்து செல்லும் முன்பாதையின் இருபுறமும் அழகான பூங்கன்றுகள் பூத்துக்குலுங்கின. அதன் இடையிடையே மலைநாட்டு மரக்கறிவகைகள் கரட், கோவா, உருளைக்கிழங்கு, லீக்ஸ் போன்றன பயிரிடப்பட்டு பசுமைத்தோட்டங்களாகக் காட்சியளித்தன, அவை பார்ப்பதற்கும் கண்ணைக் கவர்ந்தன.

முதலில் ஏறத்தாள நாற்பதிலிருந்து அறுபது கிலோவரை எடையுள்ள நெதர்லாந்தின் சாணன் இன வெள்ளாடுகள், கடாய்கள், குட்டிகள் அவற்றோடு நீண்ட முடிகளுடன்கூடிய ஆடுகளையும் பார்வையிட்டவர்கள், இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பிவேலிக்கு வெளியே தலையை நீட்டி அங்கு போடப்பட்டிருந்த புற்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த அவற்றின் ஒழுங்குமுறையைப் பார்த்து ஆச்சரியங்கொண்டனர்.

அடுத்ததாய் பசுக்களைப் பார்வையிட அவை பெரிய செட்போன்ற தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன. உணவும் அங்கேயே வழங்கப்பட்டது. அவற்றின் கழிவுகள் உடனுக்குடன் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

பால் கறக்குமிடத்தில் பசுக்கள் நிரையாக நிறுத்தப்பட்டு யந்திரங்களின் உதவியுடன் அவற்றின் ஒவ்வொரு முலைகளுக்கும் ரியூப்போட்டு மின்னசைவினால் கறக்கப்பட்ட பாலை ஒன்றோடொன்று இணைத்து பெரிய போத்தல்களில் கைபடாமல் சேர்க்கப்பட்டன.
மூடிய கண்ணாடியினூடாக பார்வையிட்டது அனைவருக்கும் ஓர் இனிய அனுபவமானது. நாம்பன் காளைகள் தனியே பராமரிக்கப்பட்டு தொழுவத்தில் நின்றிருந்தன.
அதனோடு பாற்கட்டி பெரிய தட்டையான தட்டுக்களில் உறைநிலையில் வைக்கப்பட்டு உறைந்த பின் எடுத்து சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவை இயந்திரங்களின்றி மனிதனினாலே செயல்படுத்தப்படுகின்றன. அதனையும் கண்ணாடித்தடுப்பினூடாவே கண்டுகழித்தனர். இவற்றுடன் வெண்பஞ்சு முயல்கள், என விதம்விதமாய் கால்நடைகளைக் கண்டுகழித்தவர்கள் அங்கு உற்பத்தியாகும் யோகட்பானம், பால்வகைகள், வெண்கட்டிகளையும் வாங்க மறக்கவில்லை. பண்ணையைத்தாண்டி ஓரிரு மைல்களுக்கப்பால் அழகிய சுத்தமான லேக்கும், லேக்கைக்சுற்றிக் காட்டுவதற்கு பத்துப்பதினைந்து பேர் செல்லக்கூடிய அழகிய இருபடகுகள் காத்திருந்தன. அதில் சவாரிசெய்து மனமகிழ்ந்தவர்கள் அடுத்ததாய் ஹைலண்ட்பால் தொழிற்சாலைக்குச் சென்றனர்.

செல்லும் வழியில் வானளவாய் ஓங்கி உயர்ந்த காட்டுமரங்கள், செடி,கொடிகள் என சுற்றிச்சூழ்ந்திருக்க அதன் நடுவே பாதை சென்றது. அந்த இனிய காட்டு வழிப்பயணம் அழகான ஓர்ரனுபவத்தை எல்லோருக்கும் கொடுத்தது. தொழிற்சாலையைச் சென்று பார்வையிட்டவிட்டு அருகே அமைந்திருந்த சிறிய பூங்காவில் சிறிதுநேரம் இளைப்பாறியவர்கள் அங்கேயே பகலுணவை முடித்துக்கொண்டனர்.

அந்தநாளின் இறுதியாய் சிவப்புக்கனிகளும் பச்சைக்காய்களுமாய் வெண்ணிறப்பூக்களும் பூத்திருந்த ஸ்டோபரித்தோட்டத்தை அதற்கென பிரத்தயேகமாயிருந்த வண்டியில் சென்று பார்வையிட்டவர்கள் அதற்குச் செல்லும் வழியிலிருந்த பலஏக்கர் கணக்கான கரட்,கோவா போன்ற பல்வேறு மலைநாட்டு மரக்கறித் தோட்டங்களையும் கண்டுகழித்தவர்கள், ஸ்டோபரிபாமிற்குரிய கஃபே ஒன்றில் புத்தம்புதிய ஸ்டோபரிகளால் விஷேடமாக தயாரிக்கப்படும் ஸ்டோபெரி பனிக்கூழ், பேன் கேக்குகளுடன் மற்றைய உணவுப்பண்டங்களினையும் புசிக்கத்தவறவில்லை.

மூன்று நாட்களென ஆரம்பித்த பயணம் நான்கு நாட்களாகிய போதும் அந்த மலையரசியின் மொத்தமுழு இராச்சியத்தையும் காணமுடியாவிட்டாலும் பெரும்பகுதியைக் கண்டுகழித்துவிட்டு வந்தவர்கள் அனைவருக்கும் அதுவொரு மறக்கமுடியாத இனிய பயணமாய் மாறியது. அதுவே ரிஷிதரனுக்கும் மொத்தக்குடும்பத்துடனும் கடைசிப் பயணமுமாகியது.

🩸🩸🩸🩸🩸

அடுத்த நான்கு நாட்களில் ரிஷிதரன்-துஷாந்தினியும் ரித்தீஸ்-நந்தினி அவர்களின் பிள்ளைகளுடனும் மற்றும் நகுலனும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தூபாய் நோக்கிப் பயணமாயினர். அத்தனை பேரிடமும் விடைபெற்ற துஷாந்தினி தேவேஷ்வாவிடம் வந்தவள்

"தேவ் அத்தான்! இத்தனை நாட்களும் நம்ம குடும்பத்துக்காகத்தான் உங்ககிட்ட வழமைபோல இருக்கறமாதிரி நடிக்க வேண்டியதாப்போச்சு. அதனால உங்க சந்தோசமும் நிம்மதியும் இந்த கொஞ்சநாள்ல என்னால காணாமப் போயிடுச்சு அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. இனி என்னால அந்தப்பிரச்சனை உங்களுக்கில்லை, நடிக்கவும் தேவையில்லை. இன்றையிலயிருந்து நாம சந்திச்சுக்கப் போற வாய்ப்பும் ரொம்பரொம்பக் குறைவாத்தானிருக்கப் போகுது. தேவ் அத்தான்! நீங்க சொன்னது ஒருவகையில உண்மைதான். உங்ககிட்ட சொன்னதை நினச்சா இப்போ பைத்தியகாரத்தனமாத் தோனுது, சிரிப்புக்கூட வருது, ஆனால் என்னால உங்க நிம்மதி, சந்தோசம் காணாமப் போனதுக்குத்தான் என்மேலயே எனக்கு வெறுப்பாவும் வருது. ஆனால் ஒன்னு ரிஷிமாதிரி ஒருநல்லவர் கிடைக்க நீங்கதான் காரணம். அன்றைக்கு மட்டும் நீங்க என்னை கல்யாணம் செய்துக்கச்சொல்லி வற்புறுத்தாம இருந்திருந்தா நிச்சயமா என்ரிஷியை நான் இழந்திருப்பேன். ரொம்ப தைங்க்ஸ் தேவ் அத்தான். இந்த நன்றி எந்நெஞ்சமெல்லாம் வாழ்நாளுக்குமிருக்கும். சரி, நான் போறேன். பை தேவ் அத்தான்." தேவேஷ்வாவின் தற்போதைய மனநிலையை அறிந்த துஷாந்தினி ரிஷிதரன்மேல் தான் கொண்ட நம்பிக்கையும் நட்பும் அவள் மனதிலிருக்க, வேண்டுமென்றே அதனைக் காதலென்றும் அதற்காகவே இந்த நன்றியென்றும் தேவிடம் குறிபார்த்து அம்பெய்ய, அதுவோ சரியாக அவன் காதல்கொண்ட இதயத்தைக் கூறுபோட்டது. அவளின் வார்த்தைகளும் ரிஷிதரன்மேல் அவள் வைத்துள்ள அன்பும், காதலும் தேவாவைத் துன்பப்படவைத்தது. அவனால் வேறெதுவும் செய்ய முடியாதலால் அந்தகணமும் தன் மடத்தனத்தை எண்ணியே வருத்தமுற்றான் ஆணவன்.

துபாய் விமானநிலையத்தில் வந்திறங்கியவர்கள் நேராக நந்தினியின் வீட்டிற்கே சென்றனர். இன்னும் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால் அவற்றையெல்லாம் சரிசெய்த பின் புதுவீட்டில் குடியேற நினைத்தவர்கள் மறுநாள் புதுவீட்டைப் பார்வையிடச் சென்றனர். சற்று விலையுர்ந்த குடியிருப்புப்பகுதி, முன்கதவைத் திறக்க அழகாய் அளவாய் சிறிய விருந்தினர் அறை வெள்ளைநிற சோஃபாக்களுடன் காட்சிதர, அதன் எதிர்திசையில் குளியலறையுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள், சுவரோடிணைத்த அலுமாரியும் சிறிய மேசையும் போடப்பட்டிருக்க, அதில் ஒரு படுக்கையறையில் மட்டுமே பெரியகட்டில் போடப்பட்டிருந்தது. அதனைப்பார்த்தும் துஷாந்தினிக்கு உள்ளே நெருடலாக திரும்பி ரிஷிதரனை நோக்க, அவளை பார்த்து இமை மூடித்திறந்தவனின் விழி மொழியறிந்தவள் நிம்மதியானாள். அதையடுத்து சிறிய நாகரீக சமையலறை, குசன் செய்யப்பட்ட கதிரைகளும் செவ்வகவடிவ கண்ணாடி மேசையும் போடப்பட்ட சிறிய சாப்பாட்டறையும் அதனோடு இணைந்திருக்க பார்க்கவே அம்சமாய் அழகாயிருந்தது. சமையலறைக்குத் தேவையானவைகளே பெரும்பாலும் வாங்க வேண்டியிருந்தன.

"துஷி! வீடு பிடிச்சிருக்கா?" ரிஷிதரன் கேட்க

"ரொம்ப பிடிச்சிருக்கு." என்றதும் திருப்தியுற்றவனாய்

"துஷி! இந்த கிச்சன்ஸ் திங்க்ஸ்தான் வாங்க வேண்டியிருக்கு, ரெண்டுநாள் கழிச்சு போகலாம், இல்லென்றால் அண்ணியும் நீயும் போய் வாங்கிவந்திடுங்க. என்னைவிட அண்ணிக்குத்தான் கிச்சன் வெயார்ஸ் பத்தி நல்லாதெரியும் அதுக்காகத்தான் சொல்லுறேன். வேறேதாவது வாங்கனுமென்றாலும் வாங்கிடுங்க." என்றதும் நந்தினியுடன் சேர்த்து அவளும் சரியென தலையாட்ட அத்துடன் வீட்டையும் அவள் ரசனைக்கேற்ப மாற்றியமைக்குமாறு கூறியதும், அலங்கார விடயங்களில் அளவில்லா ஆர்வங்கொண்டவள் சரியென்றதோடு அவன் தன்னை மதித்து தனக்குப் பிடித்தமாதிரி செய்யச்சொன்னதை எண்ணி மகிழ்ந்துபோனாள்.
ஒருவாறாய் வீட்டிற்குரிய அனைத்தும் வாங்கியதன் பிறகு, மறக்காமல் மற்றைய படுக்கையறைக்கு உயர்ரக மெத்தையும் கட்டிலும் வாங்கி வந்தான் ரிஷிதரன். அதில் மேலும் மகிழ்ந்தவள் தன் ரசனையோடு ரிஷிதரனின் விருப்பமாகவும் வீட்டை மாற்றியமைக்க வீடும் ஓரளவு தயாராகிவிட்டது. துஷாந்தினியின் கைவண்ணத்தில் வீடும் அழகாக மிளிர்ந்தது.

நல்லநாள் பார்த்து ரிஷிதரனும் துஷாந்தினியும் இணைந்து வாழப்போகும் வீட்டிற்கு அன்று அதிகாலையிலே அனைவரும் வந்துவிட்டனர், சிறு பூஜையொன்றை செய்தவர்கள் அங்கேயே பால்காய்ச்சி அனைவருக்கும் தேநீர் ஊற்றிக்கொடுத்த துஷாந்தினி, நந்தினியுடன் இணைந்து காலைஉணவை தயாரித்து அனைவருக்கும் பரிமாற கலகலத்தவாறு உண்டபின், ஆண்கள் அலுவலகத்திற்கு செல்ல அவர்களை அனுப்பிவிட்டு, வீட்டை துப்பரவு செய்துவிட்டு 'அப்பாடா' என்று அமர்ந்த துஷாந்தினியும் நந்தினியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், மதியுணவையும் உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர். ஆண்கள் வந்ததும் அன்றிரவு வெளியிலேயே சுற்றிவிட்டு, அங்கேயே இரவுணவையும் முடித்துக்கொண்டனர்.
மறுநாள் ரிஷிதரனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு முதலில் அவனுடைகளை அவனுக்குரிய இடத்தில் அடுக்கியவள் அடுத்ததாய்
தன் உடைகளை தன் அறையிலுள்ள அலுமாரியில் அடுக்கியதோடு அவளுக்கேற்றதுபோல் அறையையும் மாற்றியமைத்துக்கொண்டாள்.

ஓர்நாள் இவர்கள் வீட்டிற்கு வந்த நந்தினி, அவர்களிருவரும் தனித்தனி அறையைப் பயன்படுத்துவதைப் பார்த்ததும்

"என்ன துஷா, ரெண்டுபேரும் ரெண்டுரூம் யூஸ்பண்ணுறீங்க, ஏன் உங்களுக்குள்ள ஏதாவது....." மேலே கேட்கமுடியாமல் தடுமாற அவள் கேட்கவருவதை புரிந்துகொண்டவள்

"அக்கா! எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையுமில்ல, ரிஷி சம்டைம்ஸ் நைட்ல ஒபீஸ் வேர்க்ஸ் பார்த்துட்டிருப்பார் அந்தடேஸ்ல என் தூக்கம் கெட்டுடக்கூடாதுன்னு மத்த ரூம்ம யூஸ் பண்ணிக்கச்சொன்னார். அதுவும் அவர் நைட்வேர்க் பண்ணும்போது மட்டுந்தான், மத்தநாள்ல நாங்க சேர்ந்துதான் தூங்குவோம். மத்தப்படி வேற ஒன்னுமில்லக்கா."

"இதென்ன புதுக்கதை, நகுலும் ரிஷியும் ஒரே ரூம்தானே யூஸ் பண்ணிக்கிட்டாங்க. அந்தடைம்ல கொரோனாவேற, புல்டைம் வேர்க் வீட்டுலயிருந்துதான், அப்படின்னா நகுலோட தூக்கம் எவ்வளவு கெட்டுப் போயிருக்கும் அப்ப இதெல்லாம் உன் வீட்டுக்காரவருக்கு தோணல்லையாமா?" அவள் கிண்டலாய்க்கேட்க

"நானும் நகுலத்தானும் ஒன்னா நந்தினிக்கா. நான் அவரோட வீட்டுகாரி நகுலத்தான் அவரோட ப்ரண்ட்டு அதோட அண்ணனோட மச்சினர் அவ்வளவுதானே, நகுலத்தானுக்கும் ஒபீஸ் இருந்திருக்குமில்ல அவரும் வீட்டுலதானே வேலை செஞ்சிருப்பார். அதனால அதெல்லாம் அவங்களுக்கு பெரிசாபட்டிருக்காது. பட் நான் அப்படியில்லையே."

"சரி, தூங்க மட்டுந்தானே அதுவும் ரிஷிதரோட வேர்க்கிங்டேஸ்ல மட்டுந்தான்னு சொல்லுற அப்போ எதுக்காக உன்னோட திங்க்ஸெல்லாம் இந்த ரூம்லயிருக்கு."

"அக்கா! ரிஷியோட ஒபீஸ் பைல்ஸெல்லாம் அந்த ரூம்லதானிருக்கு அதோட அங்க ஒரு கபோர்ட்தானிருக்கு, அதனாலதான் நானே என் திங்க்ஸ இந்த ரூம்லயிருக்குற கபோர்ட்ல வச்சுட்டேன். ஆனால் ரிஷி, அங்கேயேதான் வைக்கச்சொன்னார். இடம்கூட ஒதுக்கித்தந்தார் நான்தான் வேண்டாமென்று சொல்லிட்டேன்
இது ஒரு குத்தமாக்கா?"

"அம்மா தாயே! தெரியாமக் கேட்டுட்டேன் விட்டுடும்மா, நீங்க ரெண்டுபேரும் நல்லாயிருந்தா அதுவேபோதும், வேற என்னவேணும் எங்களுக்கு, துஷாந்தி! உனக்கு இந்தக் கல்யாணத்துல அவ்வளவு விருப்பமில்லென்றும் எனக்கு நல்லாத்தெரியும். ஆனால் ரிஷிதர் ரொம்ப நல்லபிள்ளை, அதனாலதான் மஞ்சு அத்தைகிட்ட சொல்லி உனக்கு பேசினேன். ஏன்னா இப்படியொரு தங்கமான பிள்ளைய கைநழுவ விட எனக்கு விருப்பமில்ல அதனாலதான் உனக்குப் பேசினேன். ரெண்டு,மூனு பொண்ணு போட்டோ காட்டினப்போல்லாம் மாட்டேனென்று சொன்னவன் உன் போட்டோ பார்த்ததும் உடனே ஓகே சொல்லிட்டான் தெரியுமா?"
'உடனே ஓகே சொல்லிட்டாரா, ஏன் அப்படி?' என தனக்குள் சிந்தித்தவள் நந்தினியிடம் எதுவும் கேட்காது அமைதியாயிருக்க நந்தினி மேலே தொடர்ந்தாள்.

"எங்க அத்தைக்கும் நம்ம குடும்பமென்றதும் ஒரே சந்தோசமாயிடுச்சு. உங்க கல்யாணமும் எந்தத்தடங்கலுமில்லாம நல்லாபடியாவே முடிஞ்சிடுச்சு. உனக்கு விருப்பமில்லதானே அதுக்காகத்தான் இவ்வளவு கேள்வியும் கேட்டேன். உன்னை விருப்பப்பட்டு கட்டிக்கிட்ட ரிஷிதரை கஷ்டப்படுத்திடாதே, அவன் ஒரு சின்னப்பிள்ளைபோல, போகப்போக நீயே புரிஞ்சுக்குவ."

"இப்பவே நல்லா புரிஞ்சுக்கிட்டேன் அக்கா, உங்க மச்சினரு சொக்கத் தங்கம், அவரைக் கடைசிவரை கண்கலங்காம வச்சுப்பார்த்துக்க வேண்டியது என்னோட கடமைக்கா, அதனால நீங்க கவலையே படாதீங்க இனி உங்க மச்சினரு என் பொறுப்பு." அவள் பவ்யமாய் அதேநேரம் நாடக வசனம்போல் பதிலளித்ததும், நந்தினி அவள் தலையில் நங்கென்று கொட்ட, அவள் வலிப்பதுபோல் நடிக்க இருவரும் இணைந்து சிரித்துக்கொண்டனர்.

inbound593790012658908596.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு


https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-10

inbound2809658135626886743.jpg

துஷாந்தினி-ரிஷிதரன் திருமணம் முடிந்து அன்றுடன் மூன்று மாதங்கள் கழிந்திருக்க, துஷாந்தினியும் அந்த வாழ்க்கைமுறைக்கு நன்றாகவே பழகிக்கொண்டாள். ஆனால் அவர்கள் உறவில் இன்னும் மாற்றம் வரவில்லை. அவ்வப்போது துஷாந்தினி தன் கூட்டைவிட்டு வெளிவருவதுபோல் ரிஷிதரனுக்குத் தோன்றும் பின்னர் தனக்குள்ளே ஓர் வட்டத்தை அமைத்துக்கொண்டு நட்பென்னும் கவசத்தால் அவளிடமிருந்து அவனை விலக்கி வைப்பதுபோலும் தோன்றும். அதனால் அவனும் அவள் பாதையிலே சென்று அவளுடன் இணைந்துகொள்ள நினைத்தான்.

அலுவலகத்திலிருந்து வந்தவன் தாயுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, இரவுணவை தயாரித்துக் கொண்டிருந்தாள் துஷாந்தினி. சற்றுநேரத்தில் முகம்முழுக்க மகிழ்ச்சியுடன் சிரித்தபடி ஓடிவந்த ரிஷிதரன் அவள் கைப்பற்றி சுழற்ற அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள என்னவென கேட்டவளிடம் எதுவும் கூறாது அவளைக் கைகளிலேந்தியவன் தட்டாமலை சுற்ற அவளோ அவன் சட்டையை இறுகப்பற்றிக் கொண்டவள் கண்களையும் இறுக்கி மூடிக்கொள்ள அவளின் நிலைபுரிந்து கீழே இறக்கிவிட்டவன் பெண்ணவளை இழுத்து அணைத்துக்கொள்ள, நடப்பது எதுவும் விளங்காமலும் அவன் சிரிப்பில் மலர்ந்த முகத்தை வாடவைக்கப் பிடிக்காமலும் அவன் அணைப்புக்குள் அடங்கியபோதும் அவனிடமிருந்து இலேசாக விலக முற்பட அவனோ எதையும் உணராது இறுக அணைத்தவாறே

"துஷி! நான் இன்றைக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கேன். ஒரு குட்நியூஸ் ரஞ்சிக்கா ஏழுவருஷம் கழிச்சு கன்சீவாகிருக்காங்க, இப்பதான் அம்மா கோள் பண்ணி சொன்னாங்க. எனக்கு எவ்வளவு ஹேப்பியாயிருக்கு தெரியுமா? நீயும் அக்காட்ட போன் பண்ணிப்பேசு." அவன் சொன்ன செய்தியில் மகிழ்ந்தவள் சரியெனத் தலையாட்ட, அதன்பிறகே தன் கைக்களுள் அடங்கிய பெண்மையை உணர்ந்தவன் சட்டென்று அவளைவிட்டு விலகி மன்னிப்பை வேண்டியவன்

"சந்தோசத்துல எனக்கு எதுவும் விளங்கல்ல துஷி, சோரி."

"பரவாயில்லை" என்றவள் அந்த இனிப்பான செய்தியை கொண்டாடும் வகையில் குளிர்சாதனப்பெட்டியிலிருந்த அணிச்சல் துண்டுகளை அவனுக்கு கொடுக்க வாங்கியவன் முதலில் அவளுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டான்.

ன்று வெள்ளிக்கிழமை அந்தநாள் அரபுநாடுகளில் விடுமுறைதினம், அதனால் சற்று தாமதமாகவே எழுந்தான் ரிஷிதரன். முதலில் தேநீரைக்கொடுத்த துஷாந்தினி அவனுக்குப் பிடித்த தேங்காய் ரொட்டியும், சம்பலும் கூடவே பருப்புக்கறியும் எடுத்துவைக்க குளித்துவிட்டு வந்தவன் அவளையும் அமரச்செய்து பெண்ணவளின் கைமணத்தில் தன் விருப்ப உணவை ரசித்து ருசித்து உண்ணத்தொடங்க அவனுடன் இணைந்துகொண்டே அவளும் தன் உணவை ஆரம்பித்தாள். உண்டவாறே அவள் தட்டைப்பார்க்க அவளோ மெதுவாகவே ரொட்டியை மென்று கொண்டிருந்தாள்.

"ஏன் துஷி, உனக்குத்தான் இந்த ரொட்டி அவ்வளவு பிடிக்காதில்ல பின்ன ஏன் சாப்பிடுற? ரெண்டுபேருக்கும் பிடிக்கிறமாதிரி ஏதாவது பண்ணலாமில்ல."

"எனக்கும் இப்பெல்லாம் இந்த தேங்காய் ரொட்டி, சம்பல் காம்பினேஷன் கொஞ்சம் பிடிக்குதுதான். சோ அதெல்லாமொரு பிரச்சனையில்ல, உங்களுக்கு இது ரொம்பப்பிடிச்சதில்ல." இந்த மூன்றுமாத காலப்பகுதிக்குள் அவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டவள், அவளையுமறியாமல் மெல்ல மெல்ல அவனுடைய விருப்புகளை தன் விருப்புகளாக்கிக் கொண்டாள்.

"துஷி! நாம இன்றைக்கு வெளிய சாப்பிடப்போகலாம் சமைக்க வேணாம்."

"இல்ல ரிஷி, கிழமையில ரெண்டுநாள்தான் லன்ஞ்ச்டைம்ல நீங்க வீட்டுலயிருக்கீங்க, மத்த நாள்லதான் ஆறின கட்டுச்சாப்பாடு, வீட்டுலயிருக்கிற நாளாவது சூடா சாப்பிடலாமில்ல, அதனால இன்றைக்கு உங்களுக்கு பிடிச்சதா நானே சமச்சு சூடா பரிமாறனுமென்று நினைக்குறேன். நைட் வேணுமென்றால் போகலாம். ரித்தீஸத்தான், நந்தினிக்கா, நகுலத்தான் எல்லோரையும் வரச்சொல்லிடலாம் ரொம்பநாளாச்சு நம்ம எல்லோரும் அவுட்டிங்போய்."

"அப்படியா? சரி, அப்போ நான் ஹெல்ப்பண்ணுறேன். சேர்ந்தே சமைக்கலாம். அண்ணா,அண்ணிய லன்ஞ்சுக்கும் வரச்சொல்லிடும்மா, நைட் எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் ப்ளான் ஓகேயா?"

"வாவ் சூப்பர் சாப்பிட்டு முடிஞ்சதும் அக்காக்கு போன் பண்ணுறேன்" இருவரும் பேசியவாறே சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் நந்தினிக்கு தொடர்பை ஏற்படுத்தி, மதியவிருந்துக்கு அழைத்ததோடு மற்றைய திட்டத்தையும்கூறி இணைப்பைத் துண்டித்தவள் சமையலுக்கான வேலைகளை ஆரம்பிக்க அவளுடன் ரிஷிதரனும் இணைந்துகொண்டான். இருவரும் சலசலத்தபடியே சமைக்க ஆரம்பித்தனர். ஞாபகம் வந்தவனாய்

"துஷி ஒன்று கேக்கவா?" அவள் புருவமுயர்த்த

"நான் ஒபீஸ் போனா நீ என்ன செஞ்சிட்டிருப்ப?"

"என்ன புதுசா கேக்குறீங்க?"

"சும்மா சொல்லேன்."

"உங்களை அனுப்பிட்டு கொஞ்சம் வீடு கிளீன் பண்ணுவேன். ட்ரெஸ் வொஸிங், டிவி, தூக்கமென்று சும்மா போயிட்டிருக்கு."

"அப்போ இத்தனை நாளும் சும்மாதானிருக்கிறல்ல, எனக்கும் ஒபீஸ்ல கொஞ்சம் வேலை அதனால உன்னை கவனிக்காம விட்டுட்டேன், எத்தனை நேரத்துக்குத்தான் இதையே ரிப்பீட் மோட்டுல செஞ்சிட்டிருப்ப? அதவிட தனியா வேறயிருக்கிற, அப்பப்போ அண்ணி வீட்டுக்கு போகச்சொன்னாலும் மாட்டேனென்று சொல்லுற, நான் ஒருஐடியா சொல்லுறேன் செய்வாயா?"

"என்ன?"

"உனக்கு இந்த இன்டீரியர் டெக்ரேஸன் கேக் மேகிங்க், ஸ்டிச்சிங்கெல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டுன்னு தனுஜா சொன்னா, அதப்பத்தி இப்போ எத்தனையோ கோர்ஸஸிருக்கு அதுல ஏதாவதொன்னு செய்யலாமேம்மா, உனக்கு ஓகேன்னா உடனே அதுக்கான போர்மெலிட்டீஸ பார்த்துடலாம். என்ன சொல்லுற?" அவன் சொன்னதும் கண்ணிலோ மின்னலடிக்க, ஆயிரம் வால்ட் விளக்காய் அவள் முகம் மகிழ்ச்சியிலொளிர அதனைப்பார்த்து அவளின் மனதைப் படித்தவன் தானும் மகிழ்ந்தநேரம், எதையோ சிந்தித்து சட்டென்று முகம் வாடியவள்

"ஐயோ! என்னால முடியாது ரிஷி. எனக்கு பயமாயிருக்கு இங்கெல்லாம் கோர்ஸ் ஃபாலோ பண்ணனுமென்றால் இங்லிஸ் நல்லாத்தெரிஞ்சிருக்கனும் நான் இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருந்தேன், அதுக்குள்ள உங்களை கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க. எனக்கு ஓரளவுதான் இங்லிஸ்வரும், அதனால என்னால முடியாது."

"இதான் உன் பிரச்சனையா இல்லை வேறேதாவது...."

"வேறொன்றுமில்ல, தனு சொன்னமாதிரி எனக்கு இந்த விஷயத்துல ரொம்பரொம்ப இன்ட்ரெஸ்ட். நீங்க சொல்லும்போது எனக்கும் ஆசையாத்தானிருக்கு பட் இங்கென்று சொல்லும் போதுதான் கொஞ்சம் இல்லல்ல ரொம்ப பயமாயிருக்கு." அவள் கண்களை உருட்டி உருட்டி சிறு பிள்ளைபோல் பேசும்போது அவள் முகத்திலே தோன்றிய அபிநயங்களை ரசித்தவனாய்

"ஓகே அப்போ ஃபெர்ஸ்ட் இங்லிஸ் கோர்ஸ் ஒன்றை ஆன்லைன்ல ஃபாலோ பண்ணிக்கலாம். நெக்ஸ்ட் மத்தகோர்ஸையும் சேர்த்தே செஞ்சிடலாம்மா. அதுக்கான வேலையை கமிங் மன்டே ஸ்டார்ட் பண்ணிடுலாம்." அவன் கூறியதும் அடுத்த நிமிடம் தலையாட்டிவள் அவனுடைய பரந்த உள்ளத்தைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்து போனாள்.
சமையலுக்குப் பயன்படுத்த, பாத்திரங்களைக் கழுவியவள் அவற்றை எடுத்துக்கொண்டு திரும்பியபோது கவனிக்காமல் காலை இடித்துக்கொள்ள கையிலிருந்த பொருட்கள் தவறியதோடு அவளும் கால்மடங்கி கீழே விழுந்தவள் ஆவெனக் கத்த கைவேலையைவிட்டு விட்டு அவளிடம் விரைந்தவன் தன்னவளை கைகளிலேந்த அவளோ அவனைத்தடுக்க அதனைப் பொருட்படுத்தாது அங்கிருந்த மேசையில் அமரவைத்தவன் அவள் தடுக்கத்தடுக்க பெண்ணவளின் பாதங்களை கைகளிலேந்தி அடிப்பட்ட இடத்தினைப்பார்க்க அது லேசாக கன்றிச்சிவந்திருந்தது. உடனே நோவிற்குரிய தைலத்தை பூசி மசாஜ்செய்தவன் அதன்பிறகு அவளை எந்தவேலையையும் செய்யவிடவுமில்லை, அவ்விடத்திலிருந்து நகரவிடவுமில்லை. சமையலை முடித்தவன் அனைத்தையும் எடுத்து சாப்பாட்டு மேசைமீது அடுக்கிவிட்டு மீண்டும் தன்னவளை கைகளிலேந்தி, குளியறைக்குள் சென்றவன் ஏற்கனவே அவளுக்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவளை அமரவைத்து, அந்த இருக்கையிலே அமர்ந்தவாறு பெண்ணவளை குளிக்கக்கூறி அவளுக்கான மாற்றுடைகளையும் எடுத்துக்கொடுத்தவன், தயாரானதும் அழைக்கும்படி கூறி குளியலறைக் கதவைச் சாத்திவிட்டு அவள் அறைக்கட்டிலில் அமர்ந்து கொண்டான். தயாராகி வந்தவள் அவனை அழைக்காமலே வெளிவர அவனோ அதில் கோபங்கொள்ள

"ரிஷி! இங்கப்பாருங்க நீங்க பெயினுக்கு பாம் போட்டுவிட்டதால என்னால இப்போ நல்லா நடக்கமுடியுது. நோவுகூடயில்ல பாருங்க." சமாதானப்படுத்தியவள் அவனைத் திருப்திப்படுத்துவதற்காக அன்னநடை நடந்து காட்ட

"நீ சும்மா சொல்லுற துஷி, எனக்குத் தெரியும் உனக்கு வலிக்குது, ஆனால் எங்கிட்ட சொல்லமாட்டேங்குற. உன் விரல் ரெட்டாயிருந்ததை நான்தான் பார்த்தேனே. சரிசரி நிக்காம முதல்ல வந்து உட்காரு" என்றவன் அவள் கைப்பிடித்து கட்டிலிலே அமரவைக்க அவனுடைய அன்பிலும் அக்கறையிலும் கரைந்தவளாய் அவனருகிலே சற்று நெருங்கியமர்ந்தவள்

"ரிஷி! எனக்கு ஒன்னுமில்லப்பா நான் ஓகேதான், நந்தினியக்கா முன்னாடி இந்தமாதிரி பண்ணிடாதீங்க. பகடிபண்ணியே சாகடிச்சிடுவா, ப்ளீஸ்." அவள் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு மணியொலிக்க கதவை திறக்க எழுந்தவளைத் தடுத்து தானேசென்று திறந்தவன் வந்தவர்களை வரவேற்று அழைத்துவர அதற்குள் அறையிலிருந்து வெளிவந்தவள் அவர்களை வரவேற்க அதில் ரிஷிதரன் அவளை முறைக்க, கண்களால் கெஞ்சியவள், அவன் சமாதானமானதும் தடதடவென்று சமையலறைக்குள் சென்று தயாரித்து வைத்திருந்த குளிர்பானத்தைக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி எடுத்துவந்து அனைவருக்கும் பரிமாறியவள் தானும் ஓர் குவளையை எடுத்துக்கொண்டு ரிஷிதரனருகிலே அமர, இன்று இரண்டாவது தடவையாகவும் தன்னோடு மிக நெருக்கமாய் அமர்ந்த மனையாளின் ஸ்பரிஷத்தை உள்ளூர அனுபவித்தவனாய் தன்னவள் பக்கத்திலே அமர்ந்திருந்தான். அனைவரும் பேசிக்கொண்டிருக்க

"ரிஷிதர் நைட் என்ன ப்ளான்? அவுட்டிங் போறோமென்று நந்து சொன்னா." ரித்தீஸ் கேட்டதும்

"ஓம்மண்ணா ரொம்ப நாளாச்சில்ல சேர்ந்துபோய், அதனால எல்லோரும் போய் வரலாம். நகுல் ஓகேயாடா?"

"ஓகே மச்சி போகலாம்." நகுலன் சம்மதம் சொல்ல

"நாளைக்கு எனக்கு ஒபீஸ் இல்லை அதனால நைட்டவுட் ஓகே, உங்களுக்கும் இல்லையா?" ரித்தீஸ் கேட்டதும்

"இருக்கு அத்தான், பட் ஹாஃப்டேதானே." நகுலன் கூற அதையே ஆமோதித்த ரிஷிதரனும்

"துஷியும், எல்லோரும் சேர்ந்து போகனுமென்று ஆசைப்பட்டா அதனாலதான் இந்த ப்ளானே."

"அப்போ ஐயா வைஃப்கூட தனியாப்போக ப்ளான் பண்ணிருக்கார் பட் அம்மணி நம்மளைக் கூப்பிட்டு ஐயா ப்ளான்ல மண்ணள்ளிப் போட்டுட்டா, ஐயாவும் வேறவழி தெரியாம நம்மளையும் சாச்சுட்டுப் போகப்போறார்." நந்தினி வழமைபோல் தன் மச்சினரை கிண்டலடிக்க, அவன் அதை மறுக்க,

"அப்படியெல்லாம் இல்லக்கா, உங்களை லன்ஞ்சுக்கு கூப்பிடச் சொன்னதே அவர்தான், நீங்க என்னென்றால் அவரை பகடி பண்ணிட்டிருக்கீங்க போங்கக்கா" கணவனுக்காய் துஷாந்தினி போர்க்கொடி தூக்க, தனக்காக நந்தினியிடம் உரிமையாய்ப்பேசிய மனையாள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நெருங்கி வருகிறாளென்று ரிஷிதரன் மகிழ

"பார்ரா, கல்யாணம் பண்ணமாட்டேனென்று புடிவாதம் புடிச்ச புள்ளை, இன்றைக்கு அவ ஊட்டுக்காரவரை ஒன்று சொன்னதும் என்னம்மா சண்டைக்கு வாரா, பாருங்க ரித்து! எப்படியொரு லவ், ரிஷிதர் நீங்க கொடுத்துவச்ச ஆள்த்தான்." நந்தினி இப்போது துஷாந்தினியை வார, நந்தினியின் பேச்சில் திடுக்கிட்டு ரிஷிதரனைப் பார்க்க அவனும் அவளையே பார்த்திருந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

"துஷி! இப்பெல்லாம் நீ என் ப்ரண்டில்லாம கொஞ்சங்கொஞ்சமா என் வைஃபா மாறிட்டுவாராய். சீக்கிரமா உன் உரிமைய உணர்ந்திடுவாய், அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன், உன் மாற்றத்தால நான் ரொம்ப சந்தோசமாயிருக்கேன்." அவன் காதில் கிசுகிசுக்க அதில் அவளோ ஒருவித படபடப்பை உணர

"இப்படி சபையில புருஷனும் பொண்டாட்டியும் ரகசியம் பேசுறது நியாயமா? அப்படி என்ன சொல்லிட்டீங்க மச்சினரே, எங்க துஷாந்தி முகம் பல உணர்ச்சிகளைக் காட்டுதே!" மீண்டும் நந்தினி ஆரம்பிக்க அதில் இவர்கள் தங்களை சரி செய்துகொள்ள, இப்படியே பேசிக்கொண்டிருந்தவர்களை உணவுவேளை நெருங்க, உண்ண அழைத்த ரிஷிதரன் மனையாளையும் அமரவைத்து எல்லோருக்கும் அவனே பரிமாற, பரிமாறி முடித்தவனை தன் பக்கத்திலே அமரச்செய்து தன் கையால் அவனுக்குப் பரிமாறிய பின்னே முதல்கவளத்தை தன் வாயில் வைத்தாள் துஷாந்தினி. இவர்களின் புரிதலையும் அன்னியோன்னியத்தையும் பார்த்திருந்த அவர்களின் உறவுகள் உள்ளம் முழுவதாய் பூரிப்படைந்தன.

சொன்னதுபோல் இருதினங்களில் அவளுக்கு ஆங்கிலக்கல்வியுடன் அவளுக்குப்பிடித்த தையல், சமையல் கலைகளுக்கான பிரத்யேக வகுப்புகளில் சேர்த்துவிட்டான். தன் கணவனின் செயலில் பெருமிதமடைந்த பெண்ணவளும் ஆசையாகவே பயிலத்தொடங்கினாள்.
ரிஷிதரன் தன் மனையாளை ராணிபோல் நடத்தியவன் அவளுடைய விருப்பு வெறுப்புக்களையும் மதித்து நடக்கும் ஒருசிறந்த கணவனாக இருந்தான். ஓரே வீட்டில் தனியாயிருந்தபோதும் தவறான பார்வையோ தொடுகையோயின்றி கண்ணியமாகவே நடந்துகொள்பவன் ஒருசில சமயங்களில் கணவனென்ற உரிமையில் அவனையும் மீறி அவன் கண்களில் மனைவிக்கான தேடலும் காதலும் இருக்கத்தான் செய்தது. அதிலும் அவனைப் பொறுத்தவரையில் தன்னவளை விரும்பிக் கரம்பிடித்தவன் என்பதால் அவனையும்மீறி காதல் பொங்கிவரும்போது திருமணமானதாலோ என்னவோ அழையா விருந்தாளியாய் மோகமும் கொஞ்சம் இணைந்துவர அவன் பார்வை அத்துமீறி அவளை ரசிக்கும்போது தனக்கே கடிவாளமிட்டுக் கொள்வான். கணவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்திருந்தபோதும் முழுமனதாய் அவனை கணவனாய் உணரும் தருணத்திலே தன் வாழ்க்கையை ஆரம்பிக்க நினைத்தவள் அமைதியாகவே இருந்தாள். ஆனாலும் தன் சுயநலத்திற்காக அவனை விரதம் காக்கவைப்பதும் தவறென்று உணர்ந்தாலும் அதற்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறியவள் சீக்கிரமே தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டுமென உறுதியாக முடிவெடுத்தவள் மெல்ல மெல்ல அதனை செயற்படுத்தவும் தொடங்கினாள்.

நாட்கள் மெதுவாக நகரத்தொடங்கின. அதிகாலையில் எழுந்தவள் அன்று முருகனுக்கு உகந்தநாள் என்பதனால் தலைக்கு குளித்து வெண்ணிறத் துவாலையால் முடியை சுற்றிக்கட்டியவள் அழகான கனகாம்பர நிறத்தில் புடைவையுடுத்தி பூஜைசெய்து கொண்டிருக்க அப்போதுதான் எழுந்துவந்த ரிஷிதரனை மங்கையின் அழகு சுண்டியிழுக்க அவளோ பூஜையை முடித்துவிட்டு தேநீர்க்கோப்பையை அவன் முகத்திற்கு நேராக நீட்டும்வரை தன்னையே மறந்து தன்னவளை வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தான் அவள் நாயகன்.

"முதல்ல இதைக்குடிச்சிட்டு அதுக்குப்பிறகு என்னை சைட்டடிக்குற வேலைய கன்டினியூ பண்ணுங்க ரிஷி." அவள் வார்த்தையில் வெட்கமுற்றவனாய் தன் பார்வையை விலக்கியவன் அவளிடம் மன்னிப்பை வேண்ட

"ரிஷி! என்னை பார்க்குற, ரசிக்கிற உரிமை உங்களுக்கு முழுக்கயிருக்கு பிறகு எதுக்காக மன்னிப்புக் கேக்குறீங்க, இந்த சோரியென்ற வார்த்தை இதுவே கடைசியாயிருக்கட்டும்."

"என்னதான் உரிமையென்றாலும் நாம ஒரு ஒப்பந்தம் செய்தோமில்ல அதை மீறினது தப்புத்தானே. அதுக்காகத்தான் இந்த மன்னிப்பு. ஒருசில நேரங்கள்ல என்னையுமறியாம இப்படி நடந்துக்கிறேன். ப்ளீஸ் துஷிம்மா என்னை மன்னிச்சிடும்மா."

"இப்போதான் சொன்னேன் இந்த சோரியெல்லாம் சொல்லக்கூடாதென்று திரும்பயும் சொல்லுறீங்க, சரிசரி முதல்ல இதைக்குடிங்க, சூடாறிடப்போகுது. எனக்கு இன்றைக்கு நிறைய வேலையிருக்கு, சமையலை முடிச்சு உங்கள அனுப்பிட்டு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கவேண்டியிருக்கு அதையும் வாங்கிட்டு வந்தப்பிறகு கிளாஸுக்குவேற போகனும், சீக்கிரம் சீக்கிரம் இந்தாங்க." என்றவள் தேநீர்க் கோப்பையை கொடுத்தவாறே படபடக்க, அதை வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன்

"துஷி! இன்றைக்கு நீ....சூப்ப்ப்.....பராயிருக்க தெரியுமா? ஒரு.....செல்பி.... எடுத்துக்.....கலாமா....ப்ளீஸ்...." எங்கே மறுத்துவிடுவாளோ என்ற பயத்தில் தயங்கியவாறே கேட்க, அவளோ மறுப்பேதும் கூறாமல் அவனுடன் நன்றாக நெருங்கி நின்றவள் அழகாக சிரிக்க, அவளையே பார்த்தவாறு செல்பியைக் கிளுக்கினான் ரிஷிதரன்.

🩸🩸🩸🩸🩸

அழகாய் மலர்ந்திருந்த மலர்களை அவள் பார்வை வெறித்துக்கொண்டிருக்க, எதையோ சிந்தித்தவளாய் குழப்பமான மனநிலையில் யாருடைய வருகையையோ எதிர்பார்த்து அந்தப்பூங்காவில் அமர்ந்திருந்தாள் திவ்யதர்ஷினி. அவள்பார்வை அடிக்கடி பூங்காவின் வாயிலைப் பார்ப்பதும், பின் சிந்தனையோடு நகங்களை கடிப்பதுமாய் அமர்ந்தவளின் கண்கள் நொடிக்கொரு முறை அலைபேசியையும் பார்த்துக்கொண்டது. அந்தப் பூங்காவினுள் அவள் நுழைந்து முழுவதுமாக ஒருமணிநேரம் கடந்திருக்க அப்போதும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வரவேயில்லை. அதற்குமேல் பொறுமையிழந்தவள் கைப்பேசியில் இலக்கங்களைத் தட்டி காதிற்குக் கொடுக்க, அவள் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அழைக்க அதுவோ மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டது. அப்போதும் விடாமல் அழைக்க இந்ததடவை கைப்பேசி முழுவதுமாய் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்க, பெண்ணவள் கண்கள் கலங்கத் தொடங்கின. என்ன செய்வதெனத் தெரியாமல் சிலகணங்கள் தலையைப் பிடித்துக் கொண்டமர்ந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னந்தொட்டு விழ, சுற்றியுள்ளவர்களுக்கு காட்சிப்பொருளாக விரும்பாமல் அவசரமாக கண்களைத் துடைத்தவள் அந்தப் பூங்காவைவிட்டு வெளியேற எத்தனித்தவேளை உள்நுழைந்தான் தேவேஷ்வா. அவனைக் கண்டதும் மகிழ்ந்தவளாய் அவனைப் பார்த்து நிற்க அவனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை நெருங்கியவன்

"அறிவு வேணாம் ஒருதடவை கட் பண்ணினால் பிஸியாயிருக்கேனென்று புரிஞ்சக்கத் தெரியாதா? திரும்பத்திரும்ப கோள் பண்ணிட்டேயிருக்க, அதான் வாரேனென்று சொன்னேனில்ல அதுக்குள்ள என்ன அவசரம் என் நிலமையப் புரிஞ்சுக்கமுடியாத நீயெல்லாம் எப்படி என்கூட கடைசிவர குப்பகொட்டப்போற, இதுல காதல்வேற, ச்சை." அவன் கனல் வார்த்தைகளைக் கொட்ட

"புரிஞ்சுக்கிட்டதாலதான் தேவேஷ், உங்க ஸ்டோர் பக்கத்துலயிருக்கிற பார்க்குக்கு வரச்சொன்னேன். நான் இப்பவும் உங்களுக்கு போன் பண்ணிருக்கமாட்டேன் ஆனால், வீட்டிலயிருந்து வந்து ரொம்பநேரமாச்சு இதுக்கு மேலயும் லேட் பண்ணினா வீட்டுல தேடத் தொடங்கிடுவாங்க அதோட இங்கயும் எல்லோரும் ஒருமாதிரி பார்க்குறாங்க, அதுக்காகத்தான் கோள் பண்ணினேன். அதுவும் வன்னவருக்கு மேலயே காத்திட்டிருந்துட்டுத்தான் கோள் பண்ணினேன். இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமென்று இப்பதான் விளங்குது, மன்னிச்சிடுங்க தேவேஷ், இனி புரிஞ்சு நடந்துக்கிறேன்." மொத்தப்பழியையும் தன்மேலேற்று நிதானமாகப் பேசியவளை அதற்குமேல் குற்றம்சாட்ட முடியாமல்

"சரிசரி எதுக்கு பேசமென்று சொன்ன, என்ன விசயம்?"

"தேவேஷ், துஷானி கல்யாணத்தப்போ என் காதலை ஏத்துக்கிறேனென்று சொன்னதோட நம்ம எதுவும் பேசிக்கல்ல, அவ கல்யாணம் முடிஞ்சும் நாலு மாசத்துக்கு மேலயாச்சு. நானா உங்ககிட்ட வந்து பேச ஒருமாதிரி இருந்துச்சு. நீங்களாவது என்னை கான்டெக்ட் பண்ணுவீங்கன்னு காத்துட்டேயிருந்தேன். வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்க, மாப்பிள்ள வேற பார்த்திட்டிருக்காங்க. அப்பாம்மாகிட்ட நம்ம விசயத்தைப்பத்தி சொல்லுறதாயிருந்தா உங்ககிட்ட கதைக்காம எப்படிச் சொல்லுறது, அதனாலதான் உங்ககிட்ட பேச நினச்சேன். அன்றைக்கு துஷானிதான் உங்க பிஸ்னஸ்பத்தி, நம்ம கல்யாணம் எப்ப நடக்கும், என்ன ஏதுன்னு எல்லாம் சொன்னா, ஆனால் எனக்கு உங்க வாயால கேட்டாத்தான் திருப்தியாயிருக்கும். சொல்லுங்க தேவேஷ்! துஷானி சொன்னமாதிரி இன்னும் மூனு,நாலு வருஷமாகுமா?"

"முதல்ல துஷானின்னு கூப்பிடுறதை நிப்பாட்டு திவி. அவ எனக்கு மட்டுந்தான் துஷானி, இனிமே என் துஷானிய நீ அப்படிக் கூப்பிடாதே எல்லோரும் கூப்பிடுறாப்போல கூப்பிட்டா போதும், விளங்கிட்டா?" அவன் வார்த்தையில் உள்ளங்கலங்கியவள் மெதுவாய் தலையசைத்தாள்.

"இங்கப்பாரு திவி, எனக்கு இப்போ கல்யாணத்தைப்பத்தி யோசிக்கவே முடியாது. அந்த மைன்ட் செட்டிலயே நானில்ல, இப்போ என்னோட ஒரேநோக்கம் என் பிஸ்னஸ் நல்லாவரணும், அதுவும் ஆரம்பிச்சே வன் இயர்தான், இப்பதான் கொஞ்சங்கொஞ்சமா முன்னேறிட்டு வருது. அதை கல்யாணம் குடும்பமென்று திசைமாற்ற விரும்பல்ல, என் துஷானி சொன்னமாதிரி மூனு,நாலு என்ன அதுக்கு மேலகூட ஆகலாம். உன்னால வெயிட் பண்ண முடிஞ்சாப்பண்ணு, இல்லையென்றால் உங்க வீட்டுல பார்க்குற மாப்பிள்ளைய கட்டிக்க, ஓகே கிளியர் அப்ப நான் வரேன்." செல்லத் திரும்பியவனை தடுத்து நிறுத்தியவள்

"என்ன தேவேஷ் இப்படிச் சொல்லுறீங்க, அன்றைக்கு என்னைக் காதலிக்குறேனென்று சொல்லிட்டு, இன்றைக்கு வேற ஒருத்தனைக் கட்டிக்கன்னு சொல்லுறீங்க இது நியாயமா? உங்களுக்கு என்னைப் பிடிக்கல்லையா தேவேஷ்? துஷானி.... சோரி துஷாந்தினி சொன்னாளே நீங்க என்னை விரும்புறதா, அத்தை அதான் உங்க அம்மாகூட நம்ம லவ்வ எக்ஸெப்ட் பண்ணிட்டாங்களே நீங்க என்னென்டா இப்படிக் கதைக்குறீங்க?"

"நான் என்ன தப்பா கதச்சிட்டேன், உன்னால வெயிட் பண்ண முடிஞ்சாப்பண்ணு எப்போ எனக்கு கல்யாணம் பண்ணத் தோணுதோ அன்னைக்குத்தான் கல்யாணம். அதுக்கிடையில என்னை டிஸ்ர்டொப் பண்ணுற வேலையெல்லாம் வெச்சுக்கக்கூடாது. முக்கியமா எனக்கு உன் நம்பர்லயிருந்து கோளே வரக்கூடாது. இதுக்கெல்லாம் ஓகேன்னா வெயிட் பண்ணு இல்லயென்றால் உன் வழியப் பார்த்துப் போக்கிட்டேயிரு." என்று ஈவிரங்கமின்றி கூறியவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அவளோ பித்துப்பிடித்தவள்போல் செல்லும் அவனையே பார்த்திருந்தவள் அவன் தன் கண் பார்வையிலிருந்து மறைந்த பின்னே அவன் கூறிய வார்த்தைகளின் வீரியம் புரிய, அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய கைகளால் முகத்தை மூடியவள் சுற்றுப்புறத்தையும் மறந்து கதறியழுதாள்.

🩸🩸🩸🩸🩸

மேலும் ஒருமாதம் கடக்க அன்று அலுவலகத்திலிருந்து வந்த ரிஷிதரன் அழைப்பு மணியை அடிக்க உள்ளிருந்து எந்தவித பதிலுமின்றிப்போக மீண்டும் இருதடவை ஒலித்தும் பதிலின்றியிருக்க தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைய வீடே அமைதியாக இருந்தது. வந்ததும் சூடான தேநீருடன் மணமணக்க ஏதாவதொரு தின்பண்டம் செய்து வைத்துக்கொண்டு புத்தம்புது மலராய் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்கும் இல்லாளைக் காணாது புருவம் சுருக்கியவன் சமையலறையை நோக்க அது வெறுமையாயிருந்தது. சிந்தனையோடு பெண்ணவளின் அறையில் நுழைய கட்டிலிலே போர்வையை இழுத்து போர்த்தியவாறு சுருண்டு படுத்திருந்தாள் அவள். காற்பதனியும்(ஏசி) இயக்கமின்றியிருக்க, இவளுக்கு என்ன நடந்ததெனப் புரியாமல் அவளருகே வந்ததன் பின்னே பெண்ணவளின் முனகல் சத்தம் கேட்க அவசரமாய் அவளை நெருங்கியவன் நெற்றி, கழுத்தெங்கும் தொட்டுப்பார்க்க பெண்ணவளின் தேகம் அனலாய்க் கொதித்தது. போர்வையை விலக்க, அதை இறுகப்பற்றியவாறு கஷ்டப்பட்டு கண்ணிமைகளைப் பிரித்தவள், எதிரே நின்ற ரிஷியைக்கண்டு எழுந்தமர முற்பட, அவள் எழுந்தமர்வதற்கு உதவியவன் அவள் முதுகின் பின்னே இரு தலையணைகளை வைத்து அதிலே அவளை சாய்த்தவன்

"துஷி, நான் காலையில போகும்போது நல்லாத்தானே இருந்த இப்போ திடீரென்று என்னாச்சும்மா?"

"தெரியல்ல ரிஷி, இரண்டு நாளா கொஞ்சம் இருமல், தடிமல்(ஜலதோசம்) இருந்துச்சு, உடம்பும் ரொம்ப வலி. ஆனால் நான் அதைப் பெரிசா கணக்கெடுக்கல்ல, நேத்து நம்ம அவுட்டிங் போனப்போ ஐஸ்கிறீம் சாப்பிட்டோமே ஓல்ரெடி ஸ்னீஸிங்காயிருந்த எனக்கு கொஞ்சம் ஒத்துக்கல்லபோல, உங்களை அனுப்பிட்டு இன்றைக்கு புதன்கிழமை அதனால தலைக்குளிச்சிட்டு ரெடியாக வந்தனா மொத்தமா சுருட்டிடுச்சு. அப்படியே படுத்தவதான் இன்னும் எழுந்திருக்கல்ல, என்னால கொஞ்சமும் முடியல்லப்பா."

"எனக்கொரு கோள் பண்ணிருக்கலாமே துஷி."

"சமாளிச்சுக்கலாமென்று நினச்சேன்...நீங்களும் வேலையிருப்பீங்க, அதான் கோள் பண்ணல்ல, அதுக்குப்பிறகு என்னாச்சுன்னு தெரியல்ல."

"அண்ணியையாவது கூப்பிட்டிருக்கலாமில்ல, சரி சாப்பிட்டயா?" இல்லையெனத் தலையாட்டியவள் குளியலறை செல்ல வேண்டுமென எழுந்துகொள்ள முற்பட, அவனே கைத்தாங்கலாய் அழைத்துச்சென்று குளியலறையில் விட்டவன் அவள் வருவதற்குள் தனதறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு உடைமாற்றி அவள் அறையுள் நுழையவும், பெண்ணவள் குளியலறையிலிருந்து வெளிவரவும் சரியாயிருக்க அவளருகே சென்றவன் பெண்ணவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்து கட்டிலில் முன்னர் அமர்த்தியதுபோல் அமர வைத்துவிட்டு சாப்பாடு கொண்டு வருவதாய்க்கூறிச் சென்றவன் கஞ்சியுடன் திரும்பி வந்தான். தானே அவளுக்கு புகட்டிவிட எண்ணங்கொண்டாலும் ஏதேனும் கூறிடுவாளோ என்ற பயத்தில் அவளிடமே கொடுக்க அதை வாங்கியவளின் கைகள் நடுங்க தன் கைக்கு மாற்றியவன், தானே அவளுக்கு ஊட்டிவிட, கஞ்சி மெல்ல மெல்ல உள்ளே இறங்கியதும் அத்தனை நேரமும் வெறும் வயிறாயிருந்ததும் காய்ச்சலும் சேர்ந்துகொள்ள, உட்சென்றது அத்தனையும் வெளிவருவது போலிருக்க கட்டிலைவிட்டு வேகமாக இறங்கியபோதும் அவள் உடல் ஒத்துழைக்காததால் குளியலறைக்குள் ஓடும்முன்னே வாந்தி எடுத்துவிட அதைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டான் ஆடவன், அவள் சங்கடத்துடன் அவனை ஏறிட, ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதாய் இமை மூடித்திறந்தவன் குளியலறைக்குள் சென்று கைகழுவியவர அவள் மீண்டும் ஓங்காளிக்க அவளை குளியலறைக்குள் அழைத்துச்சென்றவன் அவள் வாந்தி எடுத்து முடிக்கும்வரை பெண்ணவளின் முதுகை நீவி விட அவளுக்கும் இதமாயிருந்தது. அவளை வாய் கொப்பளிக்கவைத்து கட்டிலுக்கு அழைத்து வந்தவன் அவளை அமரவைத்து விட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான நீருடன் காய்ச்சல் மாத்திரையையும் கொடுத்து உறங்கவைத்தவன், அவள் வாந்தியெடுத்த இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு, தானும் குளித்து உடை மாற்றிக்கொண்டு பெண்ணவளின் அறையில் நுழைய அவளோ ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள். துஷாந்தினியின் உள்ளத்தில் ரிஷிதரன் தினமும் ஒருபடி உயர்ந்து கொண்டேயிருந்தான். அவள் மனமும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்தது. அவள் உள்ளத்தில் கணவனாக மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கினான் ரிஷிதரன்.

நாட்கள் மெதுவாக நகரத்தொடங்கின. அலுவலகம் செல்லத் தயாராகி வந்தவன் காலை உணவிற்காக பெண்ணவளைத் தேடி அவள் அறைக்குச் செல்ல அவளோ குளித்துவிட்டு கண்ணாடி முன்னின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள். ஆழமாய் வெட்டப்பட்டிருந்த பின்னங்கழுத்தில் நீர் முத்துக்கள் அங்காங்கே கோலம் போட்டிருக்க செதுக்கிவைத்த சிலை போலிருந்த பின்னழகைப் பார்த்தவனுள் தாபம் மேலிட, பெண்ணவளை நோக்கியவன் அவள் பின்னோடு செல்ல கண்ணாடி வழியே கணவனைக் கண்டவள் அவனுக்கு காலை வணக்கம் கூறி அழகாகச் சிரிக்க அந்தச்சிரிப்பில் தன்னைத் தொலைத்தவன் பெண்ணவளைப் பின்னோடு அணைத்துக்கொள்ள பதறியவளும் பின்னர் அமைதியாகிட அவள் தோள்பற்றி முன்புறமாய் தன்னை நோக்கித் திருப்ப, தலை குனிந்தவாறு திரும்பியவளின் விழிகள் அவன் நெஞ்சுப்பகுதிக்கு மேல் எழவில்லை. ஆடவனும் தன் மனையாளின் முகவாய்பற்றி அவள் முகத்தினை தன்னை நோக்கி உயர்த்தியவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்கவிட, ஆணவனின் ஊடுருவும் பார்வையைத் தாங்கமுடியாமல் சிப்பி இமைகள் மூடிக்கொள்ள, பெண்ணின் செய்கையில் அவள் இதழ் நோக்கிக் குனிந்தவன் தன் தவறுணர்ந்து விலகிவிட, இமை திறந்தவளும் புரியாமல் நோக்க அவளிடம் மன்னிப்பை வேண்டியவன் அங்கிருந்து நகர, அவன் கைப்பற்றித் தடுத்தவள்

"ரிஷி உங்ககிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். என்னில உங்களுக்கு எல்லா உரிமையுமிருக்கென்று. என் மனசு மாறதுக்காகத்தான் உங்ககிட்ட டைம் கேட்டேனே தவிர உங்க உரிமைகளை மறுக்கயில்லை. இத்தனை நாள் நீங்க பொறுமையாயிருந்ததே போதும் இனி நான் எந்தத்தடையும் சொல்லுறதாயில்ல." என்றவள் அவனை நெருங்க

"முதல்ல உன் மனசுல நான் முழு உரிமைக்காரனா இருக்கேனா துஷி."அவள் அமைதியாக

"வேண்டாம் துஷி! எனக்கான உரிமையைத்தான் எடுத்துக்க சொல்லுற, ஆனால் உனக்கான உரிமையை கொடுக்கத் தயாரில்லை. முதல்ல நீ இன்னும் முழுமனசா என்னை ஏத்துகல்ல ஆனால் சீக்கிரமே ஏத்துப்ப அன்றைக்கு நீ எதுவும் சொல்லத்தேவையில்ல உன் பார்வையே உன் மனசை எனக்கு காட்டிக் கொடுத்திடும்." பேசிக் கொண்டிருக்கும்போதே அழைப்பு மணியொலிக்க ரிஷிதரன் சென்று கதவைத்திறக்க கையில் பாத்திரங்களுடன் நின்றிருந்தாள் நந்தினி. அவன் என்னவென கேட்க அப்போதுதான் அறையிலிருந்து வெளிவந்த துஷாந்தினியைக் கண்டவள்

"உங்க ஊட்டுக்காரம்மாகிட்ட காலச்சாப்பாடு கொண்டு வாரேன் நீ சமைக்காதென்று சொல்லிட்டுத்தானே வந்தேன் ஏன் அவ சொல்லலையா?" அவன் இல்லையெனத் தலையாட்ட, துஷாந்தினியின் முகத்தைப் பார்த்தவள்

"ஓ.....காலையிலே ரொமான்ஸா? என்ன சிவபூசைக் கரடியா வந்துட்டேனோ?" கேட்டவாறே பாத்திரங்களை மேசையில் வைக்க

"புரிஞ்சுக்கிட்டா சரி அண்ணி" வேண்டுமென்றே ரிஷிதரனும் நந்தினியின் காலை வார

"அப்போ என்னை சிவபூசைக் கரடியென்று சொல்லுறீங்களா ரிஷிதர். ஆனாலும் இப்படி முகத்துல சொல்லிருக்கக்கூடாது." என்றவாறு சில நிமிடங்கள் அவர்களுடன் அரட்டையடித்துவிட்டுச் செல்ல, ரிஷிதரனுக்கு உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள் துஷாந்தினி.

inbound1719959836308409818.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-11

inbound8420234185970197080.jpg

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ரிஷிதரனின் கைப்பேசி விடாது அடித்துக் கொண்டிருக்க தூக்கக் கலக்கத்தில் அழைப்பை ஏற்றவன் இலக்கங்களைப் பார்க்காமல் காதில்வைத்து 'ஹலோ' என்றதும்

"ரிஷி! என் ரூம்முக்கு கொஞ்சம் வரமுடியுமா?" மெல்லியகுரலில் பேசிய துஷாந்தினியின் குரலைக் கேட்டு சட்டென்று எழுந்தமர்ந்தவன் இரவு விளக்கை உயிர்ப்பித்து நேரம் பார்க்க அது பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

"என்ன துஷி இந்த நேரத்துல ஏதாவது பிரச்சனையா?" பேசியவாறே அவள் அறையை நோக்கி அவன் கால்கள் நடக்க

"முதல்ல வாங்க ரிஷி, சொல்லுறேன்." என்று அழைப்பைத் துண்டிக்கவும் அறைக்கதவு திறக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்தவன் சிலகணங்கள் தன்னையே மறந்து நின்றான். அறை முழுக்க மெழுகுவர்த்தியேற்றப்பட்டு அங்காங்கே ரோஜாக்கூட்டங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்க நடுநாயகமாயிருந்த சிறிய மேசையின் மீது இதயவடிவான இரத்தநிற அணிச்சல்(கேக்) அவன் கண்களுக்கு விருந்து படைக்க, இத்தனையையும் தாண்டி அழகுக்கே அழகு சேர்ப்பதாய் சிவப்புநிற ரோஜாக்களை கையிலேந்திய பாவை அங்கே நிற்பதைக் கண்டவனுக்கு எதுவும் விளங்கவில்லை. மெல்ல அவளை நெருங்க அவன் முன் வந்தவள்,

"ஹெப்பி அன்னிவெர்ஸரி" கூறிய பெண்ணவளின் கைகளிலிருந்து பூங்கொத்தும் அவன் கைகளுக்கு இடம் மாறின. அவனோ ஆனந்த அதிர்ச்சியாய் அவளையே பார்த்திருக்க

"ரிஷி! நான் உங்ககிட்ட மனசுவிட்டுக் கொஞ்சம் கதைக்கனும்." என்றதும் அவன் அவளையே பார்த்தவாறிருக்க

"ரிஷி! என் மனசென்ன, என் உரிமை என்ன, எனக்கானவர் யாரு? எல்லாத்தையும் இந்த ஒருவருஷத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். சத்தியமா சொல்லுறேன் ரிஷி, உங்களை விருப்பமேயில்லாமத்தான் கட்டிக்கிட்டேன். ஆனால் கொஞ்சங்கொஞ்சமா நீங்க எனக்குள்ள குடியேறினீங்க, இன்னைக்கு மொத்தமா எனக்குள்ள வேரூன்றிட்டீங்க.
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி கட்டிவச்சதுனாலயே எங்கம்மாவோட கதைக்குறதை விட்டுட்டேன். ஆனால் எப்போ நீங்க என் மனசுல நிரந்தரமா வந்ததை உணர்ந்தேனோ அப்பவே எங்கம்மாகிட்டயும் பேசஆரம்பிச்சேன். ஏன்னா நீங்க என் வாழ்க்கைக்குள்ள வர அவங்க ஒருகாரணமென்றால் தேவ் அத்தான் இன்னொரு காரணம். ஆனால் என்னால அவர்கூட சாதாரணமா கதைக்க முடியல்ல, அதுக்கான அவசியமுமில்ல. ரிஷி! உங்க உரிமைகளை இனி நீங்களா எடுக்கவேண்டாம் நானே கொடுக்கலாமென்று முடிவு செஞ்சுட்டேன்." அவள் பேசப்பேச மகிழ்ச்சியினுச்சத்தை அடைந்தவன் தன்னவளை வைத்தகண் வாங்காது பார்த்திருக்க பேசிமுடித்தவளோ அவன் ஊடுரும் பார்வையைத் தாங்க முடியாதவளாய் அவன் முகம் பார்க்காது அறையின் சாளரத்தை மெதுவாக திறந்துவிட்டவள், வெளிக்காற்றை சுவாச்சித்தவளாய் அந்த இரவின் அழகை ரசித்திருக்க, அப்போதுதான் அவள் பேசிய அத்தனையும் தனக்குள் உள்வாங்கியவனுக்கு பெண்ணின் வார்த்தைகளின் அர்த்தம் புரிய அவளை மெல்ல நெருங்கியவன் அவள் விரல் தீண்ட கூசிச் சிலிர்த்தவளோ அவ்விடம்விட்டு நகர்ந்து நிலைக்கண்ணாடி முன்வந்து நிற்க பின்னோடு வந்தவனோ கண்ணாடியில் தெரிந்த தன்னவளின் முகத்தைப் பார்த்திருக்க அவனைப் பார்க்கமுடியாமல் பாவையவளை நாணம் சூழ்ந்துகொள்ள முகத்தினை தளிர்கரங்கொண்டு மூடிவிட அவள் படும்பாட்டை ரசித்தவனோ இப்போது அவளருகிலே நெருங்கி வந்தான். ஆடவனின் சுவாசக்காற்று பெண்ணவளின் பின்கழுத்தை தொட்டு மீள, மெய்த்தீண்டிய காற்றில் அவள் சிலிர்த்தடங்க அதை உணர்ந்தவனோ பெண்ணவளை தன்புறமாய் திருப்பியவன் அவள் கரம் விலக்கி மதிமுகம் காண ஏறெடுத்துப் பார்த்தவளை கண்ணடித்து மேலும் சிலிர்க்க வைக்க, அவள் வதனம் செக்கச்சிவந்த வானமாக, சட்டென்று அவன் மார்பில் தன்னைப் புதைத்துக்கொண்டாள், அதில் அவன் மனது உள்ளே கூப்பாடு போட, பெண்ணவளின் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்த தன்னவனை விழிவிரித்துப் பார்த்தாள் பாவை. அதில் நாணத்துடன் லேசாக மோகமும் இழையோட பெண்ணின் மனதை அவள் கண்ணில் படித்தவன்

"துஷி! உனக்கு....." கேட்க முடியாமல் தடுமாற அவளோ அவன் கேள்வியைப் புரிந்தவளாய் சம்மதமென உதடசைக்க இப்போது அவளை முழுவதுமாய் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
தோளோடணைத்தபடி மேசையை நெருங்கியவர்கள் முதலில் அணிச்சலை வெட்டி ஒருவருக்கொருவர் காதலாய் ஊட்டிவிட்டு தங்களின் திருமணநாளை கொண்டாடியவர்கள் அன்றையநாள் முழுக்க பேசிக்கொண்டிருக்க அப்போது ஞாபகம் வந்தவளாய்

"ஏன் ரிஷி, நான் இன்னொருத்தரை விரும்புறேனென்று உங்ககிட்ட நேரடியாவே சொன்னப்பிறகும் எதுக்காக என்னைக் கட்டிக்க சம்மதிச்சீங்க?"

"துஷி, உன்னை முதன்முதலா பார்த்ததுமே என் மனசுல பிக்‌ஸாயிடுச்சு நீதான் என் வைஃப் என்று. அதுமட்டுமில்ல எனக்குத்தான் உன்னை ரொம்பப்பிடிக்குமே!"

" இது சரியான பதிலில்ல."

"என்ன? மேடம் எதிர்பார்த்த பதில் வரல்லபோல." அவள் அமைதியாயிருக்க அதிலே அவள் பதிலை உணர்ந்தவன்

"ஏன் என்று நான் முழுசா சொன்னாத்தான் மேடம் திருப்தியாவ போல, சரி சொல்லுறேன் எல்லாத்தையும் சொல்லிடுறேன். துஷி மேல இந்த ரிஷிக்கு காதல் வந்த பொழுதைச் சொல்லிடுறேன்." அவள் ஆச்சரியமாக அவன் முகம் பார்க்க இதழோரம் மெல்லிய புன்னகையுடன் சொல்லத் தொடங்கினான்.

"புள்ளிமான்களின் தலைமானாய் கையில் சந்தனம்,குங்குமத் தட்டோட, தலை முழுக்க மல்லிகைச் சரம் சூடி, மெரூன் பட்டுப்பாவாடை தாவணி உடுத்தி கழுத்துல சின்னதாய் பதக்கத்தோட ஒருதங்கமாலையும் கைவளையலும் குலுங்க, அவள் கால்கொலுசும் சிணுங்க, கலகலவென்று கூட நின்றவங்ககிட்ட தலைய அசச்சு அசச்சு கதைக்கும்போது அதுக்கு ஈடா அந்த காதுஜிமிக்கியும் அசைய நின்ற இந்த துஷாந்தினி ரிஷிதரனைக் கண்ட அந்தநொடி எனக்குள்ள காதல் பூத்திச்சு." அவள் உதடுகள் 'அது நானா?' என கேள்வியெழுப்ப தலையசைத்து ஆமெனப் பதிலளிக்க அவளோ லேசர்போல் கண்களை விரிக்க அதில் சிரித்தவன் மேலேதொடர்ந்தான்.

"அப்போ உனக்கு பதினஞ்சு வயசு, என்னைவிட ஏழுவயசுதான் சின்னவ ஆனால் அன்னைக்கு உன் வயசைக் கேட்டதும் எனக்கு நீ சின்னப்பிள்ளையாத்தான் தெரிஞ்ச, இருந்தாலும் உன்னைத்தான் கட்டிக்கனுமென்று உறுதியா முடிவெடுத்தேன், நீ படிச்சு முடியும்வரை காத்திருந்தேன். அண்ணி மூலமா நானே உன்னைப் பொண்ணு கேக்கனுமென்று நினச்சிட்டிருந்தப்போ பழம் நழுவிப் பால்ல விழுந்த கணக்கா உன் வரன் எங்க வீட்டுக்கு வந்துச்சு, உடனே ஓகே சொல்லிப் பொண்ணு பார்க்க வந்துட்டேன்..." நந்தினி கூறியதன் அர்த்தம் அப்போதுதான் அவளுக்கு புரிந்தது. சிந்தித்துக் கொண்டிருந்தவள் அவன் மேல பேசிக்கொண்டு போக அதற்கு செவி சாய்த்தாள்.

"....அப்போ உன் முகத்துலயிருந்த வாட்டம் என்னை யோசிக்க வச்சது, ஒருவேளை உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லையோன்னு நினச்சு அதைக் கிளியர் பண்ணிக்கத்தான் உன்கூட தனியாப் பேசனுமென்று சொன்னேன், பேசினதும்தான் எனக்கு நிம்மதியாச்சு. முழுசா நீ சொல்லாட்டியும் உன்னோட மனசுல ஒருகாதல் இருந்து அது தோல்வியில முடிஞ்சிருக்கு அதோட இப்போதைக்கு உன் மனசுல காயமிருந்தாலும் வெறுமையாத்தான் இருக்குன்னு தோணிச்சு. அன்றைக்கு உன் காதல் கதையை சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்த நினச்சயில்ல." அவள் கண்கள் பளிச்சிட அதனைப் பார்த்தவன்

"நான் சொன்னமாதிரி உனக்கு உன் கண்ணுதான்டி எதிரி என் பொண்டாட்டி, அப்படியே உன் மனசுல இருக்கிறதை புடம் போட்டுக்காட்டுது." என்றவன் தொடர்ந்து

"உன் காதல் கதையக்கேட்டு என்னைக் குழப்பிக்க நான் விரும்பல்ல உன்னை மனைவியா அடஞ்சபிறகு உரிமையா உன்னோட மொத்தத்தையும் தெரிஞ்சுக்க நினச்சேன்."

"ஒருவேளை தேவ் அத்தான் என் காதலை ஏற்றிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?"

"உன்னோட லவ் டூ சைட்டா இருந்து அந்த லவ்வுக்கு எதிர்ப்பா உங்க வீட்டுல கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருந்தால் உன் காதலாவது ஜெயிக்கட்டுமென்று நானே உன்னைவிட்டுப் போயிருப்பேன்." என்றவன் அமைதியாக, அவனையே பார்த்திருந்த துஷாந்தினியும் அமைதியானாள்.

"ஆனால் கடவுள் நான் ஆசைப்பட்ட உன்னையே என் மனைவியாக் கொடுத்துட்டான். அன்னைக்கு நீ என்னை கணவனா ஏத்துக்காட்டியும் ஒரு நல்லநண்பனா ஏத்துக்கிட்டயில்ல, அப்போதைக்கு அந்த சந்தோசம் மட்டும் போதுமென்று நினச்சேன், காலம்கழிய நிச்சயமா உன் மனசுல எனக்கான இடத்தை நீ கொடுப்ப அந்த நம்பிக்கையும் இருந்துச்சு. இன்றைக்கு என் நம்பிக்கை பலிச்சிடுச்சு. துஷி! நிச்சயமா நாம நல்லதொரு காதல் தம்பதியா வாழத்தான் போறோம்." மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியவனின் கரம் பற்றியவள்

"நிச்சயமாய் ரிஷி, இந்த உலகத்துல யாரும் வாழத ஒரு வாழ்க்கைய நாம வாழுவோம் இந்த ஒருவருஷமும் தவறவிட்ட வாழ்க்கையையும் சேர்த்து வாழுவோம் இது உறுதி."

"துஷி! நான் ஒன்று சொன்னா தப்பா நினைப்பாயா?"

"சொல்லுங்க"

"நாம நம்ம வாழ்க்கைய நாளை இரவு ஆரம்பிக்கலாமா?" அவள் கேள்வியாய் நோக்க

"இல்ல துஷி, போன வருஷம் நடக்காத நம்ம முதலிரவு அதேநேரம் இந்த வருஷம் நடக்கனுமென்று ஆசைப்படுறேன் தப்பா?" அவள் இல்லையெனத் தலையாட்ட

"ஆனால் நாளைய நாளுக்கு அச்சாரமா இன்றைக்கு என் அம்முவுக்கு ஒரு முத்தம் கொடுக்க நினைக்கிறேன். கொடுக்கலாமா?" என்று கேட்ட மறுநொடி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தவள்

"இதுக்கெல்லாம் பெர்மிஸன் கேக்கக் கூடாதுப்பா கொடுத்திட வேண்டியதுதான்...." அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் செவ்விதழ்களை சிறை செய்திருந்தான் துஷியின் ரிஷி.

அன்றுமாலை உயர்தர ஹோட்டலில் திருமணநாள் விழாவை இரவுணவுடன் ஏற்பாடு செய்த ரிஷிதரன் தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் அழைத்திருந்தான். நந்தினியுடன் மேடையேறிய துஷாந்தினிக்கு சிவப்பு ரோஜாக்களைப் பரிசளித்தவன், ஆர்.டி என இருவர் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்த பதக்கத்துடன் மெல்லிய தங்கச்சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்துவிட சுற்றியிருந்தவர்கள் கைதட்டி ஆரவரிக்க பெண்ணவளும் நாணத்தோடு தன்னவனின் தோள் வளைவில் புதைந்துகொள்ள இருவருமாய் இருதட்டு அணிச்சலை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டியவர்கள் இரண்டாவது முறையாக தங்கள் திருமணநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ன்றிரவு ரிஷிதரனின் விருப்பத்திற்காக வெண்முத்து நிறப்பட்டணிந்தவள் அதற்குப் பொருத்தமான அணிகலன்களுடன் தலை முழுக்க மல்லிகைச்சரம் தொடுத்திருக்க, நாணத்துடன் அவனறையினுள் நுழைந்தாள், நீலநிற விடிவிளக்கில் மெல்லிய திரைச்சீலைகளிட்ட கட்டிலும் அதில் முழுக்க ரோஜா இதழ்கள் படர்ந்திருக்க, ஒருபக்கத்தில் பழங்களும் இனிப்புக்களும் வீற்றியிருக்க எயாபிரஷ்னரின் மணம் அறை முழுக்க மணம் பரப்ப மொத்ததில் பார்க்க ஐந்துநட்சத்திர ஹோட்டலின் தேனிலவு அறைபோலவே காட்டிசியளித்தது. நாணத்துடன் அடிமேல் அடிவைத்து வந்தவளை இருகரங்கள் அணைத்துக் கொள்ள கரத்தின் உரிமையானவனை உணர்ந்தவளுக்கு தேகமெங்கும் சிலிர்த்துக்கொள்ள தன் கைகளுக்குள்ள சிலிர்த்தடங்கும் பெண்ணின் தேகம் ஆடவனின் உணர்ச்சிகளைக் கட்டவிழ்க்க, ஆரம்பித்தான் தன் தேடலை பெண்ணவள் தேகத்தில். ஆடவனின் தேடலுக்கு பெண்ணவளும் விடைகளை அள்ளிக்கொடுக்க, எடுக்க எடுக்க குறையாப் புதையலை அன்றிரவு முழுக்க தனக்குள்ளே சேர்த்துக் கொள்ள, இருவரும் களைத்த போதிலும் தேடலைவிடாது தொடரவே இருவர் உள்ளமும் ஆர்வங்கொண்டது. விடியலை பூமித்தாய் வரவேற்ற நேரம் தேடலில் களைப்புற்று உறங்கந்தழுவின புதிதாய் தங்கள் வாழ்வை ஆரம்பித்த இளங்குயில்கள் இரண்டும்.

🩸🩸🩸🩸🩸

வர்ஷினியும் தனுஜாவும் கைப்பேசியில் எதையோ பார்த்தவாறு துஷாந்தினி பற்றி சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவ்வழியாக கடந்த தேவேஷ்வா காதில் துஷாந்தினியின் பெயர்விழ அவர்களிடம் வந்தவன்

"என்ன பார்த்துட்டு இந்தச்சிரிப்பு சிரிக்குறீங்க, என்ன விசயம்? சொன்னா நாங்களும் சிரிப்போமில்ல." அவன் கேட்டுக்கொண்டிருக்க, அவனுக்கு பதிலளிக்காது அவர்கள் இருவரும் வாயைப் பிளந்தவாறு அவனையே பார்த்திருந்தனர்.

"நான் கேட்டுட்டேயிருக்கேன், நீங்க என்ன என் முகத்தையே பார்த்துட்டிருக்கீங்க உங்க ரெண்டுபேருக்கும் என்னதானாச்சு?"

"தேவா அத்தான்! நீங்க இப்படி எங்களோடல்லாம் கதச்சு எத்தனை காலமாயிற்று. உங்களை இப்படிப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாயிருக்கு." தனுஜா கூறுவது முற்றிலும் உண்மை, என்று அவன் துஷானியின் மேல் வைத்த காதலை உணர்ந்தானோ! என்று அவள் தனக்கு சொந்தமில்லாது இன்னொருவரின் உடமை என்பதை உணர்ந்தானோ! என்று அவன் துஷானி அவனைவிட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றாளோ! அன்றுடன் அவன் இதயத்துடன் சேர்த்து வாயும் மௌனமானது. கட்டாயத் தேவையன்றி தாயிடமும் எதுவும் பேசுவதில்லை. தன் உயிரில் கலந்தவளான அவன் கண்ணம்மாவின் நினைவுகளை மறக்கமுடியாமல் தவித்தவன் அவளை தன் இதயத்திலிருந்து மொத்தமாய் விலக்கிவிட நினைத்து, அப்போதுதான் ஆரம்பித்திருந்த வியாபாரத்தில் தன் கவனத்தை செலுத்தினான். ஆனாலும் அவனால் அவன் கண்ணம்மாவை அறவே மறக்கமுடியவில்லை. மாறாக ஒவ்வொரு மணித்துளியும் அவளையே ஞாபகப்படுத்த மேலும் மேலும் பிடிவாதமாய் தான் புதிதாய் நிறுவிய பல்பொருள் அங்காடியில் தன் மொத்த நேரத்தையும் செலவழித்தான். பசி தூக்கம்பாராது உடல் களைத்து தூக்கத்திற்கு கண்கள் கெஞ்சும்வரை வேலைசெய்து கொண்டிருந்தான். உடல் அசதியில் கண்கள் தூக்கத்தை தழுவும் தருணம் மட்டுமே உள்ளத்தில் ஆறாத ரணமாயிருக்கும் தன்னவளின் நினைவுகளும் தூங்கும். அவன் கண்விழிக்கும் நொடியிலே அவள் நினைவுகளும் துயில் கலைந்துவிடும். துஷானியை மறப்பதாய் நினைத்து தன் குடும்பத்தையும் அவன் இயல்புகளையும் அவளிடம் கேட்ட சந்தோசம், நிம்மதியென அனைத்தையும் மறந்தான். மொத்தத்தில் ஒருநடைப்பிணமாகவே இந்த ஒருவருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவன் இன்று அவனாகவே வந்து 'உங்கள் சிரிப்பில் நானும் கலந்து கொள்கிறேன்' என்று கூறினால் அவர்கள் ஆச்சரியங்கொள்வதில் தவறேதுமில்லையே! தமையனின் இந்த நடைப்பிண வாழ்க்கைக்கு காரணமறிந்த வர்ஷினி மட்டும் அவன் நிலையைப்பார்த்து யாரிடமும் பகிரமுடியாமல் உள்ளத்தால் அழுது கொண்டிருந்தாள். ஆனால் இன்று தன் அண்ணன் தங்களிடம் பேசியதை எண்ணிமகிழ்ந்தவள் அதற்கான காரணத்தை அவன் கேட்டபோது சொல்லமுடியாமல் தவித்தாள். ஏனெனில் அந்தக்காரணமே அவன் துன்பத்திற்கு காரணமான துஷாந்தினியின் இன்ப வாழ்க்கைதான் அதைப் பார்த்தால் தன் அண்ணன் மொத்தமாய் உடைந்திடுவானென அவனிடம் எதுவும் கூறாது அமைதியாய் நிற்க, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது தனுவின் முறையானது.

"தேவாத்தான், துஷாந்திக்கா ஸ்டேடெஸ் போட்டிருக்கா இன்றைக்கு அவங்களோட வெடிங் எனிவெர்ஸெரி, அதை அவங்க நேத்து நைட் செலிபிரேட் பண்ணிருக்காங்க. அக்காவும் அத்தானும் கேக், நைட்டவுட், செல்பி, அதோட ஹோட்டல்ல முக்கியமானவங்களுக்கு ஒரு சின்ன பார்ட்டி என்று பயங்கர செலிபிரேஷன். ரிஷிதரத்தான் சூப்பரா கோல்ட் நெக்லஸ் வேற கிப்ட் பண்ணிருக்கார். அந்த போட்டோஸத்தான் அக்கா ஸ்டேடெஸ் வச்சிருக்கா அதைத்தான் பார்த்து பேசிட்டிருந்தோம். கடைசியில நீங்க சொன்னதுதான் உண்மையாகிடுச்சு தேவாத்தான்." வர்ஷினி மறைத்ததை தனுஜா கூறிக் கொண்டிருக்கும்போது தேவேஷ்வாவின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிப் பிளம்புகள் தோன்றி மறைய ஒருவித கவலையுடனே வர்ஷினியும் பார்த்திருந்தாள்.

"என்ன உண்மை?"

"உங்களை காதலிக்குறேனென்று அக்கா சொன்னப்போ, அது காதலில்ல வெறும் ஈர்ப்புத்தானென்று அவகிட்ட சொன்னீங்கல்ல ஆனால் அவ எதையும் உணராம அப்படியில்லென்று சொன்னவ இன்றைக்கு எவ்வளவு சந்தோசமாயிருக்கா பாருங்க, கடைசியில நீங்க சொன்னதுதான் உண்மையாகிடுச்சு. இந்தாங்க அக்காவோட ஸ்டேடெஸ் பாருங்க" என்று அவன் முன்னே கைப்பேசியைக் கொடுக்க அவசரமாக வாங்கியவன் அதில் தன் கண்களை மேயவிட, அறை முழுக்க மெழுகுவரத்திகள் ஒளிபரப்ப மேசையின் நடுவில் சிவந்த இதயவடிவ அணிச்சலில் 'ஹெப்பி அனிவெர்ஸரி, ரிஷி என்ட் துஷி' என எழுதப்பட்டிருக்க, தன் கண்ணம்மா ரிஷிதருடன் இணைந்து அணிச்சலை வெட்டி ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஊட்டியவாறும், இருவரும் தோளிணைந்தவாறும், சிவப்பு ரோஜாக்களை ரிஷிதரன் அவளிடம் நீட்ட அவளோ நாணியவாறு அதை வாங்கிக் கொள்ள பெண்ணின் கழுத்தில் ஆரத்தை அணிந்தபோது பாவையின் முகத்தில் காதல் பார்வை,
பலபரிமாணங்களில் வீடியோ போட்டோக்களென துஷானியின் வாட்சாப் ஸ்டேடேஸ் நிரம்பி வழிய அதனைப் பார்த்திருந்தவனின் கண்களிலும் நீர் வழிய அதை பெண்கள் அறியாமல் மறைத்தவன் தீச்சுட்டாற்போல் கைப்பேசியை தனுவிடம் கொடுத்துவிட்டு விடுவிடுவென நடந்து சென்றுவிட

"ஏய் வர்ஷி இவருக்கு என்னாச்சு? அவரா வந்தார், அவரா கதச்சார் இப்போ என்னடான்னா என்னம்மோ நாமளே அவரைக்கூப்பிட்டு கதச்சமாதிரி பதறியடிச்சிட்டுப் போறார்."

"உனக்குத்தான் அண்ணனைப்பற்றி நல்லாத்தெரியுமில்ல, அதான் வந்தார், கதச்சார், போயிட்டார்."

"என்ன மாநாடா? உதை வாங்குவ சரி வாடி நம்ம வேலைய கன்டினியூ பண்ணுவோம்."

⚜⚜⚜⚜⚜

தன் அறையினுள்ளே குட்டிபோட்ட பூனைபோல் நடைபயின்று கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி. அவள் முகம் தீவிரமாய் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது. நகங்களோ அவள் பற்களுக்கிடையில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்க தமக்கையின் செயலில் எதுவும் விளங்காது அவளையே பார்த்திருந்தாள் சுமித்ரா. எதையோ சிந்தித்தவாறு திரும்பிய திவ்யா, தன்னையே ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டமர்ந்திருந்த தங்கையிடம் என்னவென புருவமுயர்த்த

"இல்லக்கா நானும் பார்த்துட்டேயிருக்கேன் கொஞ்சநாளா இப்படித்தான் சுத்திட்டிருக்க, அங்கயிருந்து இங்க நடக்குற, விட்டா விரலையே கடிச்சு தின்னுடுவாயோன்றளவுக்கு நகங்கடிக்குற, போதாக்குறைக்கு தனியாவேற கதைக்குற, திடீர் திடீரென்று உம்மன்னா மூஞ்சியாகிடுற, இதெல்லாம் விட நைட் தூங்கினப்பிறகு திடீரென்று யாரோ விசும்புற சத்தம் கேக்கும், கண்ணு முழுச்சுப்பார்த்தா நீதான்க்கா ஒருமூலையில உட்கார்ந்து குழறிக்கிட்டிருக்க. என்னதான் ஆச்சுக்கா? உன்னைப்பார்க்கவே பயமாயிருக்குக்கா." பயந்தவாறே சுமித்ரா கூற

"என்னடி என்னைப்பார்த்தா பைத்தியம் போலயிருக்கா?"

"அதை நான் வேற சொல்லனுமோ" வாய்க்குள் முணுமுணுக்க

"என்னடி கொழுப்பா?" அவளுடன் சண்டைக்குப் போனவளின் கைகளை பிடித்து அமரவைத்த சுமித்ரா

"அக்கா! முதல்ல உனக்கு என்ன ப்ரோப்ளமென்று சொல்லு அதை விட்டுட்டு இப்படி குட்டிபோட்ட பூனபோல அங்கயிருந்து இங்க நடந்தா எல்லாம் சரியாகிடுமா?" தங்கையிடம் எப்படிக்கூறுவதென தவித்தவள் 'என்றாவது தெரியப் போவதுதானே ஒருவேளை இவளிடம் கூறினாலாவது மனதிலுள்ள பாரம் இறங்கலாம், ஏன் என் பிரச்சனைக்கு தீர்வுகூடக் கிடைக்கலாம்' என மனதில் நினைத்தவள் தன் பிரச்சனையை கூறத்தொடங்கினாள்.

"சுமி, நீ ஒருத்தரை ஐஞ்சுவருஷமா காதலிச்சு மனசுல ஒருதைரியம் வந்து அவர்கிட்ட உன் லவ்வ ப்ரபோஸ் பண்ணி மூனு வருஷத்துக்குப்பிறகு அவரா வந்து உன் லவ்வ ஏத்துக்கிட்ட பிறகும் உன்னைக் கணக்கெடுக்காம உன்கூட கதைக்காம உன்னைப் பார்க்க வராமயிருந்தால் நீ என்ன பண்ணுவ, அதுக்கும்மேல நீயாப்போய் அவர்கிட்ட கல்யாணத்தைப்பத்தி பேசுறப்போ, நாலுவருஷத்துக்கு மேலயே ஆகும் முடிஞ்சா வெயிட்பண்ணு முடியாட்டி உன் வழியப்பார்த்து போ, இல்ல உன் வீட்டுல பார்க்குறவனைக் கட்டிக்கன்னு சொன்னா அதுக்கு என்னதான்டி அர்த்தம்?"

"என்னக்கா நானொன்னு கேட்டா நீ பெரிய கதையே சொல்லுற லவ்வென்றுற, ப்ரபோஸென்றுற, கல்யாணமென்றுற எனக்கு ஒன்னுமே புரியல்ல ஆனால் ஒன்னு நீ யாரையோ காதலிச்சு இப்போ கதறிட்டிருக்க அதுமட்டும் கன்போர்ம். சொல்லுக்கா யாரு உன்னை கதறவிட்டது?"

"முதல்ல நீ சொல்லு என்ன அர்த்தமென்று?"

"அவங்க தேவை முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்."

"என்னடி இப்படிச் சொல்லுற? அவர் அப்படிப்பட்டவரில்லடி." அவள் தேவேஷ்வாக்காகப் பேச

"அப்போ உன் ஆள் யாருன்னு சொல்லுக்கா?"

"அது...அவர்....தேவேஷ். அவரைத்தான் நான் காதலிக்கிறேன், அவரும்தான்"

"யாரு துஷாந்தியோட அத்தான் தேவேஷ்வாவையா?" அவள் ஆமென தலையாட்ட

"உண்மையாவே தேவாண்ணா உங்ககிட்ட ப்ரப்போஸ் பண்ணினாரா? என்னால நம்பவே முடியல்லக்கா. பட் சூப்பர்க்கா, தேவாண்ணா இப்போ எனக்கு அத்தானாகப் போறாரா? வாவ் வாவ் சூப்பர், சூப்பர் உனக்கொன்னு தெரியுமாக்கா தேவாண்ணாக்காகவே துஷாந்திய ப்ரண்ட் புடிச்சவங்க நிறைய பேரிருக்காங்க. தேவாண்ணா என்ன உன் ப்ரண்ட் விஷ்வாண்ணாக்காகவும்தான்."

"சரி நீ எதுக்கு துஷானி கூட ப்ரண்டான?" அந்த நேரத்திலும் தங்கையை வம்பிழுக்க

"ஐயோ அக்கா, நான் உண்மையா துஷாந்திக்காகத்தான் ப்ரண்டானேன். வேற யாருக்காகவுமில்ல ஆனால் அவங்கள சைட்டடிச்சிருக்கேன் பட், துஷாந்திக்குத் தெரியாமத்தான். தெரிஞ்சுது தொலச்சிடுவா, அவ அத்தானுங்களை சைட்டடிச்சா அவளுக்கு சுத்தமா பிடிக்காது ஸ்பெஷலி தேவாண்ணாவை."

"என்னடி சொல்லுற, ஏன் ஏன் பிடிக்காது?" ஏற்கனவே 'என் துஷானி' என்ற தேவேஷ்வாவின் வார்த்தையில் வலி உணர்ந்திருந்தவளுக்கு இப்போது தங்கை கூறிய செய்தியும் ஏனோ அவர்களுக்குள் ஏதேனும் இருக்குமோ என சிந்திக்க வைக்க

"என்னம்மோக்கா துஷாந்திக்கு எப்பயுமே தேவாண்ணா என்றாலே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் எப்ப பார்த்தாலும் அவரைப்பத்தி மட்டுந்தான் பேசிட்டேயிருப்பா ஆனால் தப்பித்தவறி நம்ம அவரை புகழ்ந்தோ இகழ்ந்தோ ஏதாவது பேசிட்டோமென்று வைக்கா அப்படியே பத்திரகாளியாகிடுவா."

"ஆனால்...என் லவ்வுக்கு ஹெல் பண்ணினது துஷானிதான் தெரியுமா?" தமக்கையின் வார்த்தையில் மயக்கம் வராத குறைதான் சுமித்ராவிற்கு.

"துஷாந்தியா சத்தியமாவாக்கா என்னால நம்பமுடியல்லையே இன்றைக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தாராய்க்கா நிஜமாவே துஷாந்திதானாக்கா?"

"ஏன்டி துஷானிதான் ஹெல்ப் பண்ணினா இதுல என்ன அதிர்ச்சி?"

"துஷானி....யா? இப்படித்தானே தேவாண்ணா அவளைக் கூப்பிடுவார். ஓ....அதாலதான் மேடமும் கூப்பிடுறீங்களோ! இதுவல்லவோ காதல், பதி எவ்வழியோ பத்தினியும் அவ்வழியே! ம்....நடக்கட்டும், நடக்கட்டும், டும்...டும்...டும்" சுமியின் பேச்சில் திவ்யா நாண அவளை மேலும் கேலி செய்ய,

"நான் அப்படிக்கூப்பிடுறது தேவேஷ்க்குப் பிடிக்கல்ல தெரியுமா?" சோகமாய்க்கூற யோசனையோடு

"அக்கா உன்கிட்ட ஒன்னு சொல்லவா?" தமக்கை கேள்வியாய் நோக்க

"அப்போல்லாம் நாங்க நினைப்போம் துஷாந்தியும் தேவாண்ணாவும் தான் கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு."

"ஏன் அப்படி நினைப்பீங்க?" தவிப்புடன் கேட்க

"ஏன்னா துஷாந்திக்கு எல்லாமே அவர்தான். அதேமாதிரி தேவாண்ணாக்கும் துஷாந்திதான் எல்லாரையும் விட ஃபெர்ஸ்ட் என் பெஸ்ட். துஷாந்தி கல்யாணத்தப்போ கூட அண்ணாவோட முகத்துல அவ்வளவு சந்தோசமில்ல அதை நான் மட்டுமில்ல என் ப்ரண்ட்ஸும் கவனிச்சாங்க, ஒருவேளை தேவாண்ணா துஷாந்திய லவ் பண்ணிருப்பாரோன்னு, அப்போ நாங்க எங்களுக்குள்ள கதச்சிக்கிட்டோம் ஆனால் நீ சொல்லுறதைப் பார்த்தா அண்ணா உன்னைத்தான் லவ் பண்ணிருக்காரா? துஷாந்திய இல்லையா?" யோசனையுடன் தமக்கை ஆமெனத் தலையாட்ட, அவளையே பார்த்திருந்தவளின் முகம் இப்போது சிந்தனையைக் காட்டியது.

"சரிக்கா, இப்போ என்ன பிரச்சனை? தேவாண்ணாதான் உங்க ஆளென்றால் நீங்க சொல்லுற கேரெக்டர் அவரில்லை, அவர் ரொம்ப நல்லவரக்கா என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்க." சுமித்ரா கேட்டதும் தான் தேவேஷ்வாவைக் காதலித்தது முதல் துஷாந்தினியின் திருமணத்தில் தேவா அவள் காதலை ஏற்றது, சிலமாதங்கள் முன்பு பூங்காவில் நடந்ததுவரை கூறிமுடிக்க கேட்டிருந்த சுமித்ராவோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.

"அக்கா, தேவாண்ணா புதுஷா ஸ்டார்ட் பண்ணிய பிஸ்னஸ் அவரோட கனவுன்னு துஷாந்தி ஒருதடவை சொன்னா, அதை நீ புரிஞ்சுக்காம பேசியதாலதான் அவர் அந்தளவு கோபப்பட்டிருக்கிறாரோ என்னமோ, நீ அதைத் தப்பா எடுத்துக்கிட்ட போல"

"அதுக்காகத்தான் இத்தனை நாளாப் பொறுமையாயிருந்தேன். வருஷம் ஒன்று கடந்திடுச்சு, ஆனால் அவர் ஆரம்பத்துலயிருந்தே என்னை அவொயிட் பண்ணுறாரோன்னு தோனுதுடி, அவர் மனசுல நானில்லையோ, எதனாலயோ என்னை ஏத்துட்டாரோன்னு தோனுதுடி, என் காதலை ஏத்துக்கிறேனென்று சொன்னபிறகு இதுவரை என்கூட கதைக்கவேயில்ல தெரியுமா? நான் அவரை சந்திச்சும் ஆறு மாசத்துக்கு மேலயாடுச்சு, அதான் கொஞ்சம் யோசனையாயிருக்குடி. ஒருவேளை என்னைப் பிடிக்கல்லையோ, இந்தக் கல்யாணம் நடக்காதோ?"

"அக்கா நீ ஒன்றும் கவலைப்படாதே! யசோதா ஆன்ட்டிக்குத்தான் எல்லாந்தெரியுமே, முதல்ல நாம ஆன்ட்டிக்கிட்ட பேசலாம், அதோட அப்பாம்மாகிட்ட நான் கதைக்கிறேன். கல்யாணம் பண்ணத்தானே மூனுவருஷமாகும் ஆனால் நிச்சயதார்த்தம் இப்ப பண்ணிக்கலாமே. இனி நான் பார்த்துக்கிறேன். நீ நிம்மதயாயிருக்கா." என்றவள் சொன்னதுபோல் மறுநாளே யசோதாவை சந்தித்துப் பேசியவள் பெற்றோரிடமும் விடயத்தைக்கூற அவர்களும் தேவேஷ்வாவை மாப்பிள்ளை கேட்டுச்செல்ல, நிச்சயதார்த்தத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. தேவேஷ்வாவோ மனதில் துஷானியை வைத்துக்கொண்டு திவியின் கரம்பிடிக்க கொஞ்சமும் விருப்பப்படவில்லை. அன்று துஷானியின் பிடிவாதத்தால் திவியின் மனதில் ஆசையை விதைத்தது, அவளிடம் பூங்காவில் நடந்துகொண்டது எல்லாம் தவறென்று காலங்கடந்து உணர்ந்தவன் அதற்குப்பகரமாய் திவ்யாவை கரம்பிடிக்க எண்ணினான். தன் காதலை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு திவ்யாவிற்காக வாழ முடிவெடுத்தான். அவனின் துஷானியை ஆடவனும் மறப்பானா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

துஷாந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்திய மஞ்சுளா தேவேஷ்வா-திவ்யதர்ஷினியின் நிச்சயதார்த்த விபரம் சொல்ல, அப்படியா என்பதோடு நிறுத்திக்கொண்டவள் அதுபற்றி வேறெந்த விபரமும் கேட்காது தேவையற்ற விடயங்கள்பற்றி விசாரிக்க, மஞ்சுளாவிற்கோ ஆச்சரியமாயிருந்தது.

"என்ன துஷாந்தி, உன் அத்தான் நிச்சயம்பற்றி சொல்லுறேன், அதப்பத்தி எதுவும் கேக்காம நீ என்னென்னமோ கதச்சிட்டிருக்க?"

"எல்லாந்தான் நீங்க சொல்லிட்டீங்களே பிறகு நான் என்னத்தைக் கேக்க." அப்பேச்சுக்கு அத்தோடு அவள் முற்றுப்புள்ளி வைக்க மஞ்சுளாவிற்கோ அதில் மனது சமாதானமாவதாயில்லை.
துஷாந்தினிக்கு இப்போது வருத்தமுமில்லை, சந்தோசமுமில்லை மாறாக அப்படியா நிச்சயமா அவ்வளவுதான் என்பதுபோலவே அவள் மனநிலையிருந்தது.

💍💍💍

நிச்சயநாளும் அழகாய் விடிந்தது. ஆனால் தேவேஷ்வாவின் நெஞ்சம் மட்டும் பாறாங்கல் ஒன்று குடி கொண்டதுபோல் கணத்திருந்தது. திவ்யாவின் வீட்டில் முதல் திருமண விஷேசம் என்பதால் ஆடம்பரமாகவே விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். தங்கநிற பட்டுப்புடவையில் இளம் பெண்கள் புடைசூழ மேலோக தேவதையொன்று பூலோகம் இறங்கியதுபோல் மெல்ல அடிவைத்து வந்தவளை அந்த மண்டபத்திலிருந்த அத்தனைபேர் கண்களும் ரசித்திருக்க, அவளை ரசிக்க வேண்டியவன் பார்வையோ வேறெங்கோ வெறித்திருந்தது. மேடையேறி வந்தவள் அவனை நெருங்கி நின்றதும் மாலை மாற்றச்சொல்லி ஐயர் கூற இயந்திரம்போல் செய்தவன் மோதிரத்தை பெண்ணின் கைகளில் போட்டுவிடச் சொல்ல கைகளில் வாங்கியவன் தடுமாறி நிற்க அவனை பின்னிருந்து அசைத்தான் விஷ்வானந்தன். அதில் சுயத்திற்கு வந்தவனோ அவள் கரம்பற்றி மோதிரத்தை அணிய எத்தனிக்கையில் அவன் கரங்களிலிருந்து மோதிரம் தவறிட, அத்தனைபேரும் கலங்கிங்கிப்போக ஐயர் அவர்களுக்கு சமாதானம் கூற மோதிரத்தை தேட அது விஷ்வாவின் கால்களுக்கருகில் கிடக்க அதனை எடுத்து தமையனிடம் நீட்டியதும் நடுங்கும் கரங்களால் வாங்கியவன் மனதை கல்லாக்கிக்கொண்டு திவ்யதர்ஷினியின் விரல்களில் அணிவித்துவிட்டான். அவளும் தன் உயிரானவனின் வலியகரங்களில் மோதிரத்தை அணிவித்துவிட இனிதே நிறைவேறியது நிச்சயதார்த்தம். மகிழ்ச்சியின் உச்சத்தில் திழைத்திருந்தாள் திவ்யதர்ஷினி, ஆனால் தேவேஷ்வாவால் கொஞ்சமும் மகிழமுடியவில்லை மாறாக யாரையும் காணமுடியாத தொலைதூரத்திற்கு ஓடிவிடவே அவன் மனது எண்ணியது.

சிறிதும் விருப்பமின்றி அரங்கேறிய நிச்சயதார்த்தம், தேவாவின் மனதை மாற்றுமா? திவியை அவன் உள்ளம்தான் ஏற்குமா?

inbound2581821474878516769.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-12

inbound8132840709932860886.jpg

திரையில் படம் ஓடிக்கொண்டிருக்க பாவையவள் சிந்தனை வேறங்கோயிருந்தது. நகங்களை பற்களில் உரசியவாறு அமர்ந்திருந்தவளைப் பார்க்கும்போது அவளை முதன்முதலாய் பெண் பார்க்கச் சென்ற நினைவு ஆடவனுள் எழுந்ததும் அவளருகில் சென்றமர பெண்ணிடமோ மாற்றமேதுமில்லை. இன்னும் ஒட்டியமர்ந்தவன் மனையாளைத் தோளோடணைக்க அப்போதுதான் உணர்வு பெற்றவளாய் கணவனைத் திரும்பிப் பார்த்தாள் துஷாந்தினி.

"என்ன அம்மு ரொம்ப யோசிச்சிட்டிருக்க, என்ன விஷயம்?" அவள் தயங்க அவன் மீண்டும் என்னவெனக் கேட்டதும்

"அம்மா கோள் பண்ணியிருந்தாங்க ரிஷி, தேவ் அத்தான் துபாய் வாறாராம். ட்டூவீக்ஸ் இங்கதான் இருப்பாராம் அதனால கட்டாயம் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு கொடுக்கச் சொன்னாங்க." அவள் தயக்கத்தோடு கூற

"அதுக்கென்ன கொடுத்துட்டாப் போச்சு, இத சொல்லத்தான் இவ்வளவு தயக்கமா?"

"இல்லை ரிஷி, எனக்கு அதுல அறவே விருப்பமில்ல ஆனால் அம்மாகிட்ட சொன்னா ஏனென்று காரணம் சொல்லனும். அதோட அவர் முகத்தைப்பார்க்க எனக்கும் ஒருமாதிரியிருக்கு, அதான் என்ன செய்யுறென்று யோசிச்சிட்டிருந்தேன்."

"இதுல யோசிக்க என்னயிருக்கு அம்மு. இங்கப்பாருடா, தேவ் உன் குடும்பத்துல முக்கியமானதொரு உறவு அதை நீ நினச்சாலும் பிரிக்கமுடியாது. ஏன்னா உன் அப்பாம்மாக்கு யசோ ஆன்ட்டியும் பிரபாகர் அங்கிளுந்தான் எல்லாமா இருந்திருக்காங்க, இன்றைவரைக்கும் இருக்காங்க. அப்படிப்பட்டவங்க பிள்ளையின்ட உறவை நீ முறிக்கமுடியுமா? இதக்கேட்டா அவங்க மனசு என்ன பாடுபடும் யோசிச்சுப்பாரு. காலம்முழுக்க கூட வரப்போற உறவுகளை நம்மால வெட்டி எறியமுடியாது அம்மு. அதனால அனுசரிச்சுப்போகப் பழகிக்கோ. வருஷத்துக்கு ஒருதடவைதான் அவங்களப் பார்க்கப்போறோம் ஒருஹாய், சின்ன ஸ்மையில் இதோடயே கடந்துபோயிடு, அவ்வளவுதான்."

"ஏன் ரிஷி! தேவ் அத்தான்கிட்ட காதலிக்குறேனென்று நானாப் போய் சொல்லிருக்கேன். அதை நினச்சு உங்களுக்கு எந்த சங்கடமுமில்லையா?"

"அம்மு! நியாயமா பார்த்தா எனக்கு கோபமும் பொறாமையும் வரணும், நீ தேவ்கூட பழகக்கூடாதுன்னு நான் சொல்லனும். ஆனால் இது எதுவும் எனக்குத் தோணல்ல ஏன் தெரியுமா? தேவ்மேல உனக்கு வந்தது காதலே இல்லடா, அது வெறும் விருப்பம் அவ்வளவுதான். ஒருவகையில தேவ்வுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நீ கிடைக்க காரணமே அவர்தான், அன்றைக்கு அவர்மட்டும் உன் காதலை ஏற்றிருந்தா என் அம்மு எனக்கு கிடச்சிருக்கமாட்டா. அதனால எனக்கு எப்படிக் கோபம்வரும் சொல்லு. அம்மு! இப்போ உன் மனசுல தேவ்வில்ல, அதை உனக்கே உணர்த்திக்க இதையொரு வாய்ப்பா பயன்படுத்திக்க, வீணா மனசைப்போட்டுக் குழப்பிக்காதடா." அவன் பேச்சில் தெளிவானவள் திடமாகவே சரியென்றாள்.

இருதினங்களில் துபாய் வந்த தேவேஷ்வா, நந்தினி வீட்டிலே தங்கிக்கொண்டான். அந்த வெள்ளிக்கிழமை அனைவரையும் விருந்துக்கு அழைத்திருந்தான் ரிஷிதரன். துஷாந்தினியின் கைமணத்தில் வீடே கமகமக்க வந்தவர்களும் ருசித்துண்டனர். முதன்முதலாய் தன் கண்ணம்மாவின் சமையலை உண்டவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. சாப்பாடு முடிந்ததும் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தேவாவின் நிச்சயதார்த்தம்பற்றி ரிஷிதர் விசாரிக்க, பட்டும்படாமலும் கூறியவன் பார்வை முழுக்க அவன் கண்ணாமாவிலேயே, ஆனால் அவளோ அவன் புறம் சிறிதும் திரும்பினாளில்லை, அவள் செயல் அவனை வருத்தியது. அன்றுமாலை எல்லோரும் வெளியே சுற்றிப்பார்க்கச் சென்றனர்.

துஷாந்தினியின் ஆசைகளை அவள் கூறும்முன்னே கண்பார்வையில் புரிந்துகொண்டு நிறைவேற்றிய ரிஷிதரனையும் அவனை ஒட்டியபடியே சுற்றிக்கொண்டிருந்த துஷாந்தினியையும் பார்த்தவனுக்கு பழைய ஞாபகங்கள் படமாயோடியது. எப்போதும் தன்னுடனே ஒட்டிக்கொண்டலையும் தன் கண்ணம்மா இன்று தன்னைப் பார்க்காதது உள்ளூர வலியைக் கொடுத்தது. ஒருவகையில் தன் கண்ணம்மாவின் மாற்றத்தையும் ரிஷிதரன் அவளைத் தாங்குவதையும் எண்ணி மனமகிழ்ந்தாலும், ஏனோ கணவன்-மனைவியின் அன்னியோன்னியம் ஆடவனின் கண்களைக் கலங்கச்செய்ய, மூச்சு முட்டுவது போலிருந்தது. அதற்குமேல் அங்கிருக்க முடியாதவன் தன் நண்பனைச் சந்திக்க வேண்டுமெனக்கூறி உடனே அங்கிருந்து அகன்றதும்தான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஆனால் கண்களில் வழியும் கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவாறு தேவேஷ்வா வந்தவேலையும் நல்லபடியாக முடிந்தபோதும் நந்தினியின் வேண்டுகோளில் மேலும் சிலதினங்கள் துபாயில் தங்கியிருந்தான்.

❤❤❤❤❤

ஒலியெழுப்பி துயில் கலைத்த அலாரத்தினை நிறுத்திவிட்டு எழுந்தவன் மனையாளைப் பார்க்க அவளோ குழந்தைபோல் உடலைக் குறுக்கியவாறு அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளையே சிலகணங்கள் பார்த்திருந்தவன் பெண்ணவளின் உச்சிநுதலில் இதழொற்றிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவன் காலைக்கடன்களை முடித்துவிட்டு வர அப்போதும் அவள் உறங்கிக்கொண்டிருக்க அருகில்சென்று பெண்ணவளை மெதுவாக எழுப்பினான். அவன் ஸ்பரிஷத்தில் இமை திறந்தவள் நேரத்தைப்பார்க்க அது ஆறைக்காட்டியது. அரக்கப்பரக்க எழுந்தவளுக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வர அப்படியே அமர்ந்துவிட்டாள். என்னவெனக் கேட்ட ரிஷியிடம்

"தெரியல்ல ரிஷி, உடம்புக்கு என்னம்மோ பண்ணுது, என்னென்னு தெரியல்ல. காலையில அறவே எழுந்திருக்க முடியல்லப்பா."

"அம்மு! ரெண்டு,மூனுநாளா இப்படித்தானிருக்கில்ல, என்னடா பழையமாதிரி காய்ச்சல் வந்திடுச்சா?" என்றவன் அவள் உடல் தொட்டுப்பார்க்க சூடேதுமில்லை.

"காய்ச்சலில்ல ரிஷி, வாய்க்கசப்பும் தலைச்சுத்துமாயிருக்கு. சரி, இருங்க குயிக்கா சமச்சிடுறேன்." என்று எழ

"இல்ல துஷி, நீ பிரெஸ் பண்ணிட்டுவா நான் டீ போடுறேன், பிரெட்டிருக்கில்ல அதையே பிரேக்ஃபாஸ்ட்டுக்கு எடுத்துக்கிறேன், லன்ஞ்ச் ஓபீஸ்ல பார்த்துக்கலாம். அம்மு, டீயக் குடிச்சிட்டு ரெஸ்ட்டெடு ஈவினிங் டாக்டர்கிட்ட போகலாம்." என்றவன் அவளை குளியலறையில் அழைத்துச்சென்று விட

"ரிஷி! எனக்கு டீ வேணாம்....,காஃபி குடிக்கனும் போலயிருக்கு......" தயங்கியவாறு அவள் சொன்னவிதத்தில் சிரித்தவன்

"சரிடா காஃபியே போட்டுவைக்கிறேன். ஆனாலும் அதச்சொல்ல எவ்வளவு தயக்கம். சரிசரி சீக்கிரம் பிரெஸ் பண்ணிட்டுவாடா." என்றவன் சமையலறையில் நுழைந்து இருவருக்கும் குழம்பியைத் தயாரித்ததோடு காலை உணவிற்கு இடையீட்டு ரொட்டியையும்(சான்விச்) செய்துவிட்டு அவளுக்காய் காத்திருக்க, மெல்லத் தள்ளாடியபடி வந்தவளிடம் குழம்பியைக் கொடுத்தவன், அவனும் குடித்துவிட்டு குளிக்கச்செல்ல, சூடான குழம்பி உள்ளிறங்கியதும் சற்றுதெம்பாக உணர்ந்தவள், மடமடவென்று பகலுணவிற்கான வேலைகளை ஆரம்பித்தாள். சிக்கன் ஃப்ரைட்ரைஸ் செய்தவள் கூடவே வைப்பதற்காய் ஓம்லெட் பொரித்துக் கொண்டிருக்கும்போது தயாராகி வந்தவன் சமையலறையிலிருந்து வந்த மணத்திலே மனைவியின் வேலையை புரிந்தவன் சமையலறையுள்ளே நுழைய அவளோ வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். என்னவென பதறிவந்தவன் அவள் முதுகை நீவிவிட வாய்கொப்பளித்தவள் அப்படியே அவன்மேல் சாய்ந்துகொள்ள கைத்தாங்கலாய் அவளை அழைத்துவந்து சோஃபாவில் அமரவைத்தவன்

"என்னாச்சு அம்மு, இப்படி வாமிட் பண்ணிட்டிருக்க?"

"தெரியல்ல ரிஷி, சமச்சுட்டிருந்தேன் என்னாச்சுன்னு தெரியல்ல, வயிற்றைப் புரட்டிக்கிட்டு வந்துச்சு. அதான் வாமிட் பண்ணிட்டேன்."

"நான்தான் ஒபீஸ்ல பார்த்துக்கிறேனென்று சொன்னேனில்ல பிறகு ஏன் சமச்ச?"

"இல்ல ரிஷி, அங்க எப்படியிருக்குமோ, நீங்க திருப்தியா சாப்பிடமாட்டீங்க, அதான் நானே சமச்சுட்டேன். ஈஸியா ப்ரைட் ரைஸ்தான் பண்ணிருக்கேன். எல்லாம் முடிஞ்சிடுச்சு பேக் பண்ணினால் சரி, இருங்க வரேன்." எழமுற்பட்டவளை அதட்டி அமரவைத்தவன்

"உன்னை இந்த நிலமையில விட்டுட்டு எப்படி போறது? நான் இன்றைக்கு லீவ் எடுத்துக்கிறேன்."

"இன்றைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு நைட்புல்லா கண் முழிச்சு வேல பார்த்தீங்கல்ல, இப்போ லீவ் போட்டா எப்படி?"

"உன்னைவிட அது முக்கியமில்லடா அம்மு."

"ரிஷி! நீங்க போனபிறகு கொஞ்சம் தூங்கி எழும்பினா உடம்பு ஓகே ஆகிடும். அப்படியில்லென்றால் நந்தினிக்காவை வரச்சொல்லி அவங்க வீட்டுக்கு போயிடுறேன்." அவள் எடுத்துக்கூற ஒருவாறு சமாதானமானவன் முதலில் அவளுக்கு இஞ்சிடீ போட்டுக் குடிக்க வைத்தவன் காலை உணவையும் உண்ணவைத்து தனக்கான மதியஉணவையும் அவனே கட்டிக்கொண்டு அவளை உறங்க சொல்லிவிட்டு, எழுந்ததும் மறக்காமல் தன்னை அழைக்கச் சொன்னவன் ஆயிரம்முறை பத்திரம் சொல்லி வேலைக்கு புறப்பட்டான். ஆணவன் சென்றதும் அவளும் துயிலத்தொடங்கினாள். தூங்கியெழுந்ததும் மறக்காமல் கணவனுக்கு அழைத்து தன் உடல் நிலையைப்பற்றிச் சொன்னதும் அவளை நந்தினி வீட்டுக்குப் போகச் சொன்னவன்,

"மறக்காம லன்ஞ்ச் சாப்பிட்டுடு அம்மு." அவள் சரியென்றதும் அழைப்பைத் துண்டித்தான். குளித்துவிட்டு வந்தவள் அறவே சாப்பிட முடியாவிட்டாலும் அவனுக்காக உண்டவள் நந்தினிக்கு அழைக்க அவளோ

"இப்போதான் உன் வீட்டுக்காரர் கோள் பண்ணிச்சொன்னார். இரு ஐஞ்சுநிமிசத்துல வாரேன்." என்று அழைப்பை துண்டித்தவள் ஐந்தாவது நிமிடம் துஷாந்தினியையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றாள்.

ன்று மாலை மூன்று மணியளவில் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்திய ரிஷிதரன் முதலில் தன்னவளை விசாரிக்க அவள் உறங்கிக் கொண்டிருப்பதாய் நந்தினி கூற, வைத்தியரை சந்திக்க அவளை அழைத்துச்செல்ல முடியாத நிலையில் முக்கியமானொரு சந்திப்பில் தான் மாட்டிக்கொண்டுள்ளதாய் கூறியவன் நந்தினியிடம் அவளை அழைத்துச்செல்ல முடியுமாவெனக் கேட்க,

"ரிஷிதர் இன்னைக்கு மதுவோட மொண்டோசெரியில ஈவினிங் பேரன்ட்ஸ் மீட்டிங்கிருக்கு. அண்ணனுமில்ல நான்தான் போகனும், ஆ...தேவாண்ணா இருக்கார். அவரைக் கூட்டிட்டுப்போக சொல்லவா? துஷாந்திய அவர் பத்திரமாப் பாத்துப்பார்."

"ஆனால் தேவுக்குத் தொந்தரவாயிருக்காதா?" யோசனையுடன் கேட்க,

"அதெல்லாமொரு ப்ரோப்ளமில்ல." நந்தினி கூற

"சரி நீங்க போனைக் கொடுங்கோ அண்ணி, நான் பேசுறேன்." நந்தினி கைப்பேசியை தேவாவிடம் கொடுக்க அத்தனை நேரமும் அவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு சாரம்சம் புரிந்துவிட ரிஷிதரன் கேட்டதும் சரியென்றவன், மீண்டும் நந்தினியிடம் கைப்பேசியைக்கொடுக்க

"அண்ணி! துஷி தேவ்கூட தனியாப்போக விருப்பப்பட மாட்டா......" அதில் சிரித்த நந்தினி

"முன்னாடியெல்லாம் அவளுக்கு எல்லாமே தேவாண்ணாதான், அவ பெஸ்ட் ப்ரண்டும் அவர்தான், அவ எப்படி அவர்கூட போகமுடியாதுன்னு சொல்லுவா ரிஷிதர்?"

"அண்ணி அது கல்யாணத்துக்கு முன்ன, இப்போ என் அம்மு என்ன யோசிப்பான்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். அதனால அவங்ககூட நீங்களும் ஹாஸ்பிட்டல் வரையாவது போகமுடியுமா? ப்ளீஸ் அண்ணி."

"ஆனால் ரிஷி என்னால டாக்டரை மீட் பண்ணமுடியுமான்னு தெரியல்ல"

"அதை தேவ் பார்த்துப்பார். அவர்கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன். சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வரப்பார்க்குறேன். துஷிக்கிட்ட பக்குவமா நீங்களே சொல்லுங்க, ரெடியாகிட்டு எனக்கு கோள் பண்ணச்சொல்லுங்கோ." என்றவன் அழைப்பைத் துண்டிக்க துஷாந்தினியை எழுப்பிய நந்தினி விடயத்தைக்கூற, அவளுக்கோ உள்ளூர கடுகடுக்கத் தொடங்கியது. ஆனாலும் தன் கணவன் தகுந்த காரணமில்லாமல் இன்னொருவரிடம் தன் பொறுப்பை ஒப்படைப்பவனில்லை அதிலும் தன்னைவிட எதையும் முக்கியமாக கருதாதவன் இன்று இப்படிக்கூறினால் அவனின் வேலைப்பளுவே காரணமென்பதை உணர்ந்தவள் அவனுக்கு அழைத்துப் பேசிவிட்டு தேவாவுடன் வைத்தியசாலை செல்லத்தயாரானாள்.

வைத்தியசாலையை அடைந்தவர்கள் வரவேற்பில் பெயர் விபரம் கூற, மருத்துவர் மற்றைய நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கான நேரம் வரும்வரை காத்திருக்கும்படி சொன்னாள் வரவேற்பிலிருந்த பெண். அதற்குமேல் தாமதிக்கமுடியாமல் நந்தினி, மகளின் பள்ளியை நோக்கிச்செல்ல, வைத்தியருக்காக இவர்களிருவரும் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஒருவாறு அவர்கள் முறைவர தேவுடன் உள்நுழைந்தவள் வைத்தியரிடம் தன் உடல் நிலையைக்கூற அவளை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர்

"காங்கராஜுலேசன்ஸ் மிஸ்டர், யுவர் வைஃப் இஸ் பிரக்னென்ட்." என்று கை நீட்ட, தன் கண்ணம்மாவிற்குள் ஓர் புது உயிராவென மகிழ்ந்தவன் அவனையறியாமலே மருத்துவர் கைப்பற்றிக் குலுக்கினான். அதனைக் கேட்டுக்கொண்டு வந்த துஷாந்தினிக்கு கூடை மலரைத் தன்மேல் பொழிந்ததுபோல் அத்தனை இன்பமாயிருக்க, தான் கருவுற்ற செய்தியை தன்னவன் அறியும்முன் தேவ் அறிந்துகொண்டது அவளுக்கு நெருப்பையள்ளிக் கொட்டியது போலிருந்தது. இரு உணர்வுகளுக்குமிடையே தவித்து நின்றவேளை, கணவன் பெயரைக் குறிப்பதற்காக மருத்துவர் தேவேஷ்வாவிடம் பெயர் கேட்க, சொல்ல வாயெடுத்த தேவாவை முந்திக்கொண்டு

"ரிஷிதரன்." சத்தமாகக்கூறி கனல்ப்பார்வை பார்த்து நின்றவளைக் கண்டதும் அவன் உதடுகள் மெல்லிய புன்னகையைச் சிந்த, அவளுக்கு மருத்துவரோ வாழ்த்துக்கூறி அமரச்சொன்னவர்

"துஷாந்தினி! கொஞ்சம் வீக்காயிருக்காங்க, என்ன டயட்டா?" அவள் புன்னகைக்க

"இங்கப்பாருங்க இனி நீங்க நல்ல ஹெல்தி ஃபூட்ஸ்ஸா சாப்பிடனும். ஃபுரூட்ஸ் என்ட் வெஜிடபிள்ஸ் நல்லா எடுத்துக்கனும். அதுவும் ஒருத்தருக்கில்லை ரெண்டுபேருக்கும் சேர்த்து, விளங்கிட்டா துஷாந்தினி? மிஸ்டர்.ரிஷிதரன் உங்க வைஃப்ப கவனிச்சுக்கவேண்டியது உங்க பொறுப்பு." மருத்துவர் துஷானியை மனைவி என்றதும் தேவேஷ்வா மகிழ, அதனைத் தாங்கமுடியாத துஷாந்தினி

"டாக்டர் இவர் என் ஹஸ்பென்டில்ல, இவர் எனக்கு அண்ணன்." அன்று அவன் கூறிய வார்த்தையை, இன்று அவள் கூறியதும் அவனோ துடித்துப்போக

"ஓ....ஐ எம் சோரி. ஆனாலும் அண்ணன்தானே அவருக்கும் உங்கமேல பொறுப்பிருக்கில்ல, சோ இவங்கள நல்லாப்பார்த்துக்கோங்க." என்றவர் சிலமாத்திரைகளை எழுதிக்கொடுக்க அவரிடம் விடைபெற்று வெளிவந்த நேரம் ரிஷிதரனின் அழைப்பும் வர அழைப்பையேற்று காதுக்கு கொடுத்தவளிடம்

"துஷி! இப்போதான் மீட்டிங் முடிஞ்சது, நான் வந்துட்டிருக்கேன்டா. டாக்டரைப் பார்த்துட்டீங்களா, என்ன சொன்னார்? உனக்கு ஒன்னுமில்லையே, நல்லாத்தானேயிருக்க, இல்லை ஏதாவது பிரச்சனையா?"

"எத்தனை கேள்வி ரிஷி! ட்ரைவ் பண்ணும்போது இந்தமாதிரி கதைச்சுட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்ல. முதல்ல வாங்க உங்க எல்லாக் கேள்விக்கும் மொத்தமா பதில் சொல்லுறேன், உங்க முகத்தைப் பார்த்து. சரி இப்போ கவனமா ரோட்டப்பார்த்து வாங்க." என்றவள் அழைப்பை துண்டிக்க அவளை வினோதமாகப் பார்த்தான் தேவேஷ்வா. அவன் பார்வையை புரிந்தவள், அவன் மேலிருந்த கோபம் மறந்தவளாய் முதன்முதலாக தன் மகிழ்வை அவனுடன் பகிர்ந்துகொண்டாள்.

"என்ன அத்தான் அப்படி பார்க்குறீங்க? என்னடா இவ இவ்வளவு சந்தோசமான விசயத்தை ரிஷிகிட்ட சொல்லாம அவரை வரச்சொல்லுறாளேன்னு பார்க்குறீங்களா? இது போன்னுல சொல்லுற விசயமில்லை அத்தான். இந்த சந்தோசமான சேதிய என் ரிஷி முகத்தைப்பார்த்து சொல்லனும். அப்போ அவர் முகத்துல வார சந்தோசத்தைப்பார்த்து நானும் சந்தோசப்படனும். அதனாலதான் அவரை வரச்சொன்னேன்." என்றவள் தொடர்ந்து

"அத்தான்! நீங்க சொன்னது எவ்வளவோ உண்மை, சின்ன வயசுலயிருந்து நான் மத்தவங்கள விட உங்ககூடவே அதிக உரிமையாப் பழகிட்டேன், அந்த உரிமைய யாருக்கும் விட்டுக்கொடுக்க நினைக்கல்ல அதை தப்பா நான்தான் காதலென்று நினச்சிட்டேன். அது காதலேயில்ல, அந்த வயசுல எல்லோருக்கும் வர்ர இன்பாக்சுவேஷன் அவ்வளவுதான். நீங்க சொன்னமாதிரி அறியாத வயசுல தெரியாம வந்தது, அதப்புரிஞ்சிக்காம நானும் காயப்பட்டு, உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க திவ்யாக்காதான் உங்களுக்கு பெர்ஃபெக்ட் ஜோடி நீங்க ரெண்டுபேரும் எப்பவும் சந்தோசமாயிருக்கனும். நான் உங்க என்கேஜ்மென்ட்டுக்கு விஸ் பண்ணல்லல்ல, விஸ் யூ ஓல் த பெஸ்ட் தேவ் அத்தான். திவ்யாக்காட்டயும் என் விஸ்ஸ சொல்லிடுங்க, அதோட தைங்க்ஸ்..... எதுக்குன்னு பார்க்குறீங்களா? நீங்களே பார்த்திருப்பீங்க என் ரிஷி என்னை எப்படி புரிஞ்சு நடந்துக்கிறாரென்று. என்னை ராணிமாதிரி தாங்குறார். அவரோட காதல்ல நான் மூழ்கிப்போறேன். காதலென்றா என்ன, வாழ்க்கையென்றால் என்ன? எல்லாத்தையும் என் ரிஷிகிட்டதான் பார்த்தேன். அப்படிப்பட்ட என் ரிஷிமாதிரி விலைமதிப்பில்லாத வைரம் எனக்கே எனக்குன்னு உரிமையாக நீங்கதான் காரணம் அதுக்காகத்தான் இந்த நன்றி. நீங்க சொன்னமாதிரி இப்போ எல்லாமே
பைத்தியகரத்தனமாத் தெரியுது, ஏன் சிரிப்புக்கூட வருது. நான் இனனைக்கு எவ்வளவு சந்தோசமாயிருக்கேன் தெரியுமா? எங்க சந்தோசமான வாழ்க்கைக்கு கடவுள் கொடுத்த முதல் பரிசு, இந்த சந்தோசத்துக்கு அத்தான் நீங்கதான் முக்கிய காரணம் ரொம்ப ரொம்ப தைங்க்ஸ் அத்தான்." எதையோ சாதித்துவிட்ட சந்தோசம் முகம்முழுக்க விகசித்திருக்க பார்க்கவே ரதியாய்த் தோன்றினாள் பாவை. அவள் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது. அதற்கு முக்கியமான இன்னொரு காரணமுமுண்டு ஒருவருடத்துக்கு மேல் கேட்காத அவளின் 'அத்தான்' என்ற அழைப்பு அவனை மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. இப்படியே தங்களில் மூழ்கியவர்களாக வைத்தியசாலை வெளிவாயிலுக்கு வந்தநேரம் எதிர்த்திசையில் மகிழுந்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான் ரிஷிதரன். இவர்களைக்கண்டு கையசைத்தவனுக்கு மலர்ந்திருந்த மனைவியின் முகம் ஆவலையுண்டாக்க பாதையை அவசரமாக கடந்தவன் மனைவியிலே பார்வையை பதித்துவர, எதிரே வந்த மருத்துவ ஊர்தியை(அம்யூலன்ஸ்) கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை மோதித்தள்ளிய வண்டி சற்றுத் தள்ளிப்போய் நின்றது. கண்முன்னே நடந்த சம்பவத்தில் அவள் சிலையாய் உறைய முதலில் தன்னை நிலைப்படுத்திய தேவேஷ்வா பெண்ணவளையும் இழுத்துக்கொண்டு ரிஷிதரனிடம் விரைந்தான். சந்தோசமாய் தன்னை நெருங்கி வந்தவன் இப்போது ரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதும்,

"ரிஷி......." அந்த இடமே அதிருமளவு கத்தினாள் துஷாந்தினி. உள்ளம் துடிக்க அவனை நெருங்கியவள் தன் மடியிலே அவனைக்கிடத்த, மெதுவாக கண் திறந்தவனோ மனையாளின் மகிழ்ந்த முகத்தைத்தேட அதுவோ இப்போது சோகத்தை சுமந்திருக்க மனம் கணத்துப்போனான். அதற்குள் தூக்கு படுக்கையுடன்(ஸ்ட்ரெச்சர்) வந்த தேவேஷ்வா, ரிஷிதரனை அதில் கிடத்தி வைத்தியசாலையுள்ளே அழைத்துச்செல்ல அப்போதும் தம்பதிகளின் கரங்கள் கோர்த்தேயிருந்தன. மீண்டும் சுயஉணர்வு வர மெதுவாக கண்திறந்தவன்

"அம்...மு...டாக்...டர்..." கணவன் தன்னிடம் எதைக்கேட்க வருகின்றான் என்பதை உணர்ந்தவள்

"ரிஷி! நம்ம சீக்கிரமே அப்பாம்மாவாகப் போறோம், இப்பதான் டாக்டர் சொன்னாங்க. அதை உங்க முகத்தைப் பார்த்து சொல்லனுமென்று ஆசைப்பட்டேன் ரிஷி." கூட நடந்துகொண்டே சொன்னதும் அவன் முகம் அந்த வலியிலும் பிரகாசமாக,

"நம்ம சந்தோசமான வாழ்க்கைக்கு கிடச்ச பரிசுங்க, இதோ இங்கதான் ரிஷி உங்க உயிரிருக்கு." என்றவள் அவன் கையைத்தூக்கி தன் வயிற்றில்வைக்க, தூக்கு படுக்கையை நிறுத்தச்சொன்னவன் பெண்ணவளின் மணிவயிற்றை மெதுவாக வருடியவாறு மனையாளின் முகத்தை நோக்கி கைநீட்ட, புரிந்தவளாய் அவனை நோக்கிக் குனிந்தாள் பாவை. முதலில் அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன் கன்னங்களையும் விட்டுவிடவில்லை. பிறகே அவள் வயிற்றில் இதழ் பதித்தவன்

"பாப்...பா அப்பாடா...., அம்....மாவை பத்தி...ரமா....பார்த்...துக்கோ..." தன் உயிருடன் பேசியவன் கண்கள் மெதுவாக மூடிக்கொண்டது. அவர்கள் புரிந்துணர்வைப் பார்த்து உண்மையிலே வியந்துபோனான் தேவேஷ்வா.

அவசர சிகிச்சைப்பிரிவில் ரிஷிதரன் அனுமதிக்கப்பட துஷாந்தினியோ அழுது கரைந்தவளாய் அங்கேயே நிற்க, தேவாவே ரித்தீஸ்,நந்தினி,நகுலனுக்கு அழைத்து விபரம் கூறியவன் மற்றையவர்களுக்கும் விபரத்தை எத்திவைத்தான். செய்திகேட்டு பதறியவர்களிடம் நடந்ததைக்கூறிய தேவா, துஷாந்தினி கருவுற்றிருப்பதையும் கூற, மகிழ்ந்தாலும் ரிஷிதரனின் நிலை அவர்களை அதிகம் மகிழவிடவில்லை.

ரிஷிதரனுக்கு சிகிச்சையும் தீவிரமாக நடந்துகொண்டிருக்க நினைவு வருவதும் போவதுமாயிருந்தது. ஒருதடவை நினைவு திரும்பியதும் தன்னவளைப் பார்க்க நினைத்தவன் அங்கிருந்த தாதியிடம் சொல்லி அவளையும், கூடவே தேவாவையும் அழைத்துவரச்செய்தான். உள்நுழைந்த துஷாந்தினியோ தடுமாறிவர அவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்தான் தேவேஷ்வா. இருவரையும் பார்த்திருந்த ரிஷிதரன் தன்னவளை அருகே அழைக்க, அவளை ரிஷிதரனிடம் விட்டுவிட்டு சற்று நகர்ந்து நின்றான். அத்தருணத்தில் உள்நுழைந்த ரித்தீஸும் நந்தினியும் கணவன்-மனைவி பேசி முடிக்கும்வரை தேவாவுடன் ஒதுங்கி நின்றனர். தன்னவளின் கைகளை தன் கைகளுக்குள்ளே அடக்கிக்கொண்ட ரிஷிதரன்.

"துஷிம்மா! உன்னை....தனியாவிட்....டுட்டு போயிடு...வேனோன்னு... எனக்கு...பயம்...மாயி...ருக்குடா அம்...மு, இப்...போதா..ன் வாழ...ஆரம்பிச்சோம்... அதுக்....குள்ள கடவுள்....இப்படி செஞ்....சுட்டா...ரே, உன்...னோட இன்னும்...நூறு...வருஷம்... வாழ...னுமென்...னு ஆசையா....யிருக்கு.....அம்மு, ஆனா....எனக்...கு நம்பிக்கை....யில்ல நான்... பிழைக்....கமாட்....டேன். அம்மு! நான்...இல்லாமப்...போனாலும் நீ...நம்ம பாப்....பாவ நல்லாப்....பார்த்துக்கனும். அதோட என்னையே...நினச்சு வருந்....தாம உன் வாழ்க்....கையையும் பார்த்....துக்கனும்....." வார்த்தைகளை ஒவ்வொன்றாய் கோர்த்தான்.

"ரிஷி! உங்களுக்கு ஒன்னுமாகாது எனக்கு நம்பிக்கையிருக்கு நீங்க எனக்காகவும் நம்ம பாப்பாக்காகவும் கட்டாயம் இந்த ஆபத்துலயிருந்து மீண்டு வருவீங்க. நாங்க உங்களுக்காக காத்திருப்போமென்று தெரிஞ்சு எங்களுக்காக முக்கியமா, எனக்காக உங்க துஷிக்காக, உங்க அம்முக்காக வருவீங்க ரிஷி. வந்துடுவீங்கயில்ல என்னை ஏமாத்திடமாட்டீங்களே! நான் காத்திட்டிருக்கேன் ரிஷி நம்ம பாப்பாவுந்தான்." அவள் நம்பிக்கையான வார்த்தைகளில் இதழோரம் மெல்லிய இளநகை பூக்க தேவேஷ்வாவைக் கண்களால் அழைத்தவன்

"தேவ்....! என்னோட.... இறுதி....நேரம்... நெருங்....கிட்டிருக்கு. நா....ன் இந்த...உலகத்....தை விட்டுப்....போறத நினச்...சு கவலைப்....படல்ல என்....அம்...முவ, அவ வயிற்...றுல வளர்ர...எங்க... பொக்கிஷத்...தை தனியா...விட்டுப்...போறதை நினச்சுத்தான்.... கவலைப்...படுறேன்..... ஆனா....லும் எனக்...கொரு...நிம்...மதி... என்....அம்..முவ பத்திரமா... பாத்துக்...க அவளோட அத்தான்... நீங்க...இருக்...கீங்க... ஐஞ்சு...வயசுலயி....ருந்து... அவளை நல்லாப்....பார்த்....துக்கிட்ட உங்களா....லதான் காலத்து....க்கும் அவளை.....பத்திர...மா பார்த்துக்.....கமுடியும், பார்த்துக்..கங்க..., உங்க துஷா....னியோட சேர்த்து எங்க....பாப்....பாவையும்... தேவ்....! என்...அம்முக்...கு ரொம்....பசின்ன....வயசு எனக்....குப்பிறகு அவ....தனிமர...மா நிக்....கக்கூடாது. அவளுக்கு நல்ல....வாழ்க்...கைய அமச்....சுகொடுக்க...வேண்...டியது உங்க....பொறு...ப்பு...தே....வ்." சிரமப்பட்டுப் பேசியவனின் வார்த்தைகளில் தேவேஷ்வாவோ அதிர்ச்சியாக, துஷாந்தினி கண்ணீர் வடிக்க, ரித்தீஸும் நந்தினியும் இவன் என்ன பேசுகிறானென புரியாமல் நோக்கினர்.

"ரிஷி! உங்களுக்கு எதுவுமாகாது நீங்க நல்லபடியா திரும்பிவருவீங்க. இந்தமாதிரி கதைக்காதீங்க." கூறியவள் முகத்தை மூடிக் குலுங்கியழ

"ரிஷிதர்! நிச்சயமா நீங்க நல்லபடியா குணமாகி வருவீங்க. உங்க அம்முவையும் பாப்பாவையும் நல்லபடியாப் பார்த்துக்குவீங்க. தயவுசெஞ்சு நம்பிக்கைய கைவிட்டுடாதீங்க."

"தே....வ்! டாக்டர்....ஸே நம்பிக்...கை...இழந்...துட்டாங்க. என்...னை நம்ப...சொல்லு....றீங்க. ஆனால்...தே...வ் என்...உள்..மனசு...சொல்...லுது, இது என்...கடைசி.... நிமிடங்....களென்று. அதனா...லதான்...மூச்சை இழுத்...துப்பிடிச்சிட்டு.... கதச்...சிட்டிருக்....கேன்.... இப்...போ கதைக்....கல்லென்....றால் இனி...கதைக்...கமுடி...யாது.... தே...வ்....புரிஞ்சுக்....கோங்..க..." மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு பேசியவன் தன்னவளின் கைகளை எடுத்து தேவிடம் ஒப்படைத்துவிட்டு

"உங்க....கண்...ணம்மாவ.... என்...றைக்கும்....பத்...திரமா பார்த்துக்...கங்க...தேவ். உங்க துஷா...னி...மட்டுமில்ல பாப்....பாவும் இனி...உங்க பொறுப்....புத்தான், அவங்க ரெண்...டுபேருக்...கும்... எப்போ....தும் துணை....யாயிருங்க.....நீங்க நல்லாப்....பார்த்....துப்பீங்க என்ற நம்பிக்....கையில உங்கக்.....கிட்ட....ஒப்படச்ச நிம்....மதியோட என் இறுதிப்....பயணமி....ருக்கட்டும்..... இ...து என்.... இறுதி....ஆசையு...ம்கூட...." திக்கித்திணறிப் பேசியவன் துஷாந்தினியின் புறம் திரும்பி

"துஷிம்...மா! இனி....உனக்கு... எல்....லாமா தேவ்.....இருப்....பார். நம்ம....பாப்பா பத்....திரம் அம்மு....." என்றவாறு அவளின் வயிற்றை தடவியவன்

"பாப்பா....! அம்மா....வை பத்..திரமா...பார்த்துக்...கங்க. உங்கள தூக்கிக்...கொஞ்...சுற பாக்கி....யத்தை அந்தக்....கடவு...ள் என...க்கு வைக்க...ல்ல தங்கம். அப்பா போ...றேன்...டா....செல்லம்..... என்.....அம்....முவைப் பார்த்....துக்க...ங்க....பாப்பா....." என்றவாறு சிரமப்பட்டு எழுந்தவனோ மனையாளின் சூல் தாங்கிய வயிற்றில் இதழொற்றியவன் மெல்ல மயக்க நிலைக்குச்செல்ல தேவா மருத்துவரை அழைக்க துஷாந்தினியோ

"ரிஷி.....ரிஷி....! என்னைப்பாருங்க ரிஷி என்னைவிட்டுப் போயிடாதீங்க ரிஷி, எனக்கும் நம்ம பாப்பாவுக்கும் நீங்கவேணும் ரிஷி தயவுசெஞ்சு திரும்பி வந்துடுங்க." கதறித்துடிக்க, அவளுடன் ரித்தீஸும் நந்தினியும் இணைந்துகொள்ள, அவசரமாய் வந்த மருத்துவரின் அதட்டலிலும் அவர்களின் கதறல் சிறிதும் நிற்கவில்லை. தேவாதான் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரவேண்டியதாயிற்று. நடப்பவை அனைத்தையும் கண்ணாடித் தடுப்பிற்கு வெளியே நின்று பார்த்திருந்த நகுலனும் பதறத்தொடங்க, அனைவரையும் சமாதானப்படுத்தியவன் உள்ளேயும் கவலை பற்றிக்கொண்டது. பலமணி நேரப்போராட்டத்தின் பின் அறையைவிட்டு வந்த மருத்துவர், ரிஷிதரனின் உயிர்காற்று, காற்றோடுகாற்றாய் கலந்துவிட்டதைக்கூற அடுத்தகணம் மயங்கிச்சரிந்தாள் அவனின் உயிரானவள். ஒருவாறு மயக்கம் தெளிந்தெழுந்தவள் ரிஷிதரனின் உடலைக்காண உள்ளே நுழைந்ததும் கணவனின் மீளாத்துயில் நெஞ்சடைக்கச் செய்ய தன்னை மறந்து கத்திகதறினாள் துஷாந்தினி, தம்பியின் நிலையைக்கண்டு ரித்தீஸும் கதற, கணவனுடன் சேர்ந்து நந்தினியும் துடிதுடித்தாள். பார்த்திருந்த தேவாவிற்கும் நகுலனிற்கும் நெஞ்சு கணக்க அவர்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

ரிஷிதரனின் மரணத்தை ஏற்கமுடியாமல் அவன் உறவுகள் கவலையில் மூழ்கியிருக்க, துஷாந்தினியோ நடைப்பிணமாக மாறியிருந்தாள். அனைவரையும் கவனித்துக் கொள்வது தேவாவின் பொறுப்பாயிற்று, அதிலும் யாருடனும் பேசாமல் அறையிலே முடங்கிய துஷாந்தினியைப் பார்த்துக் கொள்வதே பெரும்பாடாயிற்று. ஒற்றை ஆளாய் சமாளிக்கத் திணறியவனைக்கண்டு, தன் துக்கத்திலிருந்து முதலில் வெளிவந்தாள் நந்தினி. கணவனையும் துஷாந்தினியையும் அவள் பார்த்துக்கொள்ள, ரிஷிதரனின் உடலை நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவேஷ்வாவே முன்னின்று செய்துமுடித்ததும், அனைவரும் ரிஷிதரனின் உடலோடு தங்கள் நாட்டிற்கு பயணப்படத் தயாராகினர். ஆனால் அவர்களுக்கு காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி.


inbound8196458786836103073.jpg


காணும்......

விமர்சனங்களுக்கு


https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-13

inbound3709660111863994764.jpg

இளங்குயில்கள் ரெண்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்த வீட்டை காலிசெய்வதற்காக அவர்கள் உடைமைகளை நந்தினியும் மற்றவர்களும் அடுக்கிக் கொண்டிருந்தவேளை, அறையில் துயில் கொண்டிருந்த துஷாந்தினி அரக்கப்பரக்க எழுந்து 'ரிஷி,ரிஷி' என்று அழைத்துக்கொண்டே வந்தவள் நந்தினியைக் கண்டதும்

"என்ன அக்கா எப்போ வந்தீங்க, ரிஷி எங்க ஆளையே காணோம், அதுக்குள்ள ஒபீஸுக்கு போயிட்டாரா? என்னம்மோக்கா கொஞ்சநாளா ஒரே தலச்சுத்தலாயிருக்கு. அதான் காலையில சீக்கிரமா எழுந்திருக்கமுடியல்ல, இருங்கக்கா அவருக்கு ஒருகோள் பண்ணிக்கிறேன்." என்றவள் கைப்பேசியில் இலக்கங்களைத்தட்ட அவள் செயலில் அத்தனைபேரும் அதிர்ந்து நிற்க

"என்னக்கா அப்படிப் பார்க்குறீங்க, என்னாச்சு? ச்சே....பாருங்க போனை இங்கயே வச்சுட்டுப் போயிருக்கார். அவ்வளவு அவசரம் போறதுக்கு." அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போக அக்கணந்தான் அவள் தன்னையே மறந்திருப்பதை உணர்ந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாது திகைத்துநிற்க, நந்தினியும்
மற்றையவர்களும் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தது அப்போதுதான் பெண்ணவள் கருத்தில்பதிய

"ஏன் நந்தினிக்கா எல்லாத்தையும் எடுத்து அடுக்கிவைக்குறீங்க?"

"துஷாந்திம்மா! நாம வீட்டை வெகேட்பண்ணிட்டு மொத்தமா ஊருக்குப்போறோம். அதனாலதான் நம்ம பொருட்களை எடுத்து வச்சுட்டிருக்கோம்."

"நாம ஊருக்குப் போறோமா, அதுவும் மொத்தமாவா, ரிஷி சொல்லவேயில்ல, அவர்தான் எடுத்து வைக்க சொன்னாரா? போனை வேற வச்சுட்டுப்போயிட்டார் இப்ப இவர்கிட்ட எப்படி கதைக்குறது?" பேசிக்கொண்டிருந்தவளுக்கு எப்படிப் புரியவைப்பதென நந்தினி தடுமாற அப்பொறுப்பை தனதாக்கிக் கொண்ட தேவேஷ்வா மெல்ல அவளை நெருங்கி

"துஷானிம்மா, உனக்கு ரெண்டுநாள் முன்ன நடந்த எதுவும் ஞாபகமில்லையா?" எனக்கேட்க என்ன நடந்தென அவனைத் திருப்பிக்கேட்டாள் அவள். பெண்ணவளின் கேள்வியில் முதலில் அதிர்ந்தாலும் அவளின் மனநிலையை உணர்ந்தவன் தனக்குள் முடிவெடுத்தவனாய்

"துஷானிம்மா, ரிஷிதர் அவசரமா ஊருக்கு போயிருக்கார் நீ ரொம்ப டயர்டா தூங்கிட்டிருந்த அவருக்கு உன்னை எழுப்ப மனமில்ல அதான் எங்களை பார்த்துக்க சொல்லிட்டு அவர் முன்ன போயிட்டார், நம்ம பின்னாடியே போயிடலாம். சரியா?" அதிர்ந்து நோக்கிய நந்தினி,நகுலனை பார்வையால் அடக்கிவிட்டு

"அப்போ ரிஷி ஊருல எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரா? அப்போ நாம இப்பவே போகலாம் எனக்கு ரிஷியப்பார்க்கனும் போலயிருக்கு." என குழந்தைபோல் சிணுங்க

"முதல்ல பிரெஸ் பண்ணி குளிச்சிட்டு வா கண்ணம்மா, நான் காஃபி கொண்டுவாரேன். பிறகு நம்ம ஊருக்குப் போகலாம். அதுக்கு முதல்ல தலைச்சுத்தாயிருக்குன்னு சொன்னயில்ல டாக்டரை மீட்பண்ணிட்டு வந்துடலாம் சோ, சீக்கிரம் குளிச்சிட்டு வா துஷானிம்மா." என்றதும் சரியென குளியலறையில் நுழைந்துகொண்டாள் அவள். நடந்ததைப் பார்த்திருந்தவர்களுக்கு கண்களில் நீர் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது. அவளை மருத்துவரிடம் அழைத்துச்சென்றவன் விடயத்தைக்கூற மருத்துவரோ

"அதிர்ச்சியாலதான் இப்படியாகிருக்காங்க. முதல்ல அவங்க மனசுக்கு நடந்ததை கொஞ்சம் கொஞ்சமா புரியவைங்க அடக்கிவச்சிருக்குற துக்கமெல்லாம் கண்ணீரா வந்துச்சுன்னா சரியாகிடுவாங்க. இல்லாம இப்படியே அவங்களுக்குள்ளேயே உறஞ்சியிருந்தாங்கன்னா பெரிய ஆபத்தாகிடும். ஏன் அவங்க கர்ப்பம் கலையவும் வாய்ப்பிருக்கு, மிஸ்டர்.தேவேஷ்வா அவங்ககிட்ட புரிஞ்சுக்குறமாதிரி பக்குவமான எடுத்து சொல்லுங்க. எல்லாம் நல்லபடியாமுடியும் கவலைப்படாதீங்க." என்றதும் அவனுள் சிந்தனை ஓடத்தொடங்கியது. மேலும் மருத்துவரின் ஆலோசனையும் பெற்றுக்கொண்டவன் பெண்ணவளுக்கு புரியவைக்கவும் தன்னாளான முயற்சிகளை மேற்கொண்டான்.

இருதினங்களில் ரிஷிதரனின் உடலுடன் அனைவரும் ஒருவாறு நாட்டை வந்தடைந்தனர். உறவுகளின் பார்வைக்காக அவன் உடல் துஷாந்தினியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. ரிஷிதரனின் இறுதிக் கிரிகைகளுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதை எதையுமே உணராமல், வந்திறங்கியதிலிருந்து ரிஷிதரன் எங்கே என கேட்ட வண்ணமாக அத்தனை பேரையும் படுத்தியெடுத்துக் கொண்டிருந்தாள் துஷாந்தினி. அவளை எவ்வாறு சமாதானம் செய்வதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர் அவள் உறவுகள். இறுதியாக நந்தினியே, தேவேஷ்வாவை அழைத்து விடயத்தைக்கூற அவளிடம் வந்தவனும் மெல்ல அவளை சமாதானப்படுத்தியவன் நிச்சயமாக அவளவனின் முகத்தினை இறுதியாக ஒருதடவை பெண்ணவள் காணவேண்டும், அதற்குமுதல் அவள் தன்னையும் சுற்றுப்புறத்தையும் உணரவேண்டுமென நினைத்தவன், நடந்ததைக் கூறுவதைத்தவிர வேறுவழியில்லை என்பதை புரிந்து

"துஷானிம்மா! நம்ம துபாயில இருந்தப்போ கடைசி ஒருகிழமையா நடந்த எதுவும் உனக்கு ஞாபகமில்லையா?" கேட்டதும் கோபமானவள்

"எத்தனை தரம் கேப்பீங்க தேவ் அத்தான், எனக்கு எதுவும் ஞாபகமில்ல அப்படி என்னதான் நடந்துச்சு புதிர்போடாம சொல்லுங்க."
"உனக்கு உடம்பு முடியாமயிருந்த, ரிஷிதரும் டாக்டர்கிட்ட போக அப்பொயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணியிருந்தார் பட் அவரால உன்கூட வரமுடியல்ல, நான்தான் உன்கூட வந்தேன்." தேவேஷ்வா மெல்ல மெல்ல அன்று நடந்ததை ஞாபகப்படுத்த, அமைதியாய் கேட்டிருந்தவளுக்கு அன்று நடந்தவை ஒவ்வொன்றாய் படமாயோட, தன் கண்முன்னே கரம்பிடித்தவன் கைகள் தன்னைவிட்டு நிரந்தரமாய் நழுவிப்போனது முழுதாய் ஞாபகத்திற்கு வந்ததும் கால்மடங்கி கீழே விழுந்தவள் அந்த ஒற்றைவாரமும் தனக்குள்ளே புதைத்திருந்த துக்கத்தில் இறுகியிருந்தவளோ கதறிவிட, மெல்ல அவளைக் கைத்தாங்கலாய் ரிஷிதரனின் உடலருகே கூட்டிவந்தனர் நந்தினியும் தேவாவும். அவனருகே வந்தவளும் ஆடவனின் உடலைக் கட்டிக்கொண்டு அழ அவளைப் பார்த்து உற்றமும் சுற்றமும் கதறித்துடித்தனர். செல்ல மகனை இழந்த துக்கத்தில் பித்துப்பிடித்தது போல் அமர்ந்திருந்த வாசுகியும் மருமகளின் கதறலில் அவளை நெருங்கி வந்தவர் அவள் தோள்த்தொட பாய்ந்து மாமியாரைக் கட்டிக்கொண்டவள் வெடித்தழ அவரும் அவளைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தார். தன்னில் பாதியாய் இன்று தனியாய் தவிக்கவிட்டு போபவனின் முகத்திலே பார்வையைப் பதித்தவளாய் அவனருகே அமர்ந்தவளின் அழுகை சிறிதும் நிற்கவில்லை. இறுதி ஊர்வலத்திற்கு தயாரானவர்கள் அவன் உடலைச் சுமக்கத் தயாராக, அத்தனை நேரமும் அவனையே வெறித்த பார்வை பார்த்திருந்தவள் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டு தன்னவனின் முகத்தை கைகளால் வருடி, அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் அவன் முகத்தினை கைகளில் தாங்கியவாறு

"ரிஷி! உங்க அம்முவை விட்டுப்போக உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு, வாழ்க்கைப்பாடத்தை அழகாவே சொல்லிக் கொடுத்தீங்களே! சந்தோசமா வாழ்க்கைய ஆரம்பிச்ச நேரத்துல இப்படி தனியாவிட்டுப்போறது நியாயமா? உங்க காதல்ல என்னை மூழ்கவச்சீங்களே, ஆனால் என்காதலை முழுசா அனுபவிக்குமுன்ன என்னைவிட்டுப் போறீங்களே இது நியாயமா? உங்க அம்முவை கண்ணுக்குள்ள வச்சுட்டு, ராணிமாதிரி என்னை உங்க கையிலே தாங்கினீங்களே இப்போ இப்படி நடுவழியில விட்டுட்டுப் போறது நியாயமா ரிஷி? நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாவந்த நம்ம பாப்பாவப் பார்க்காமலே போறீங்களே! இது உங்களுக்கு நியாயமா? உங்களுக்காக காத்துட்டிருக்குற உங்க அம்முவ விட்டுப்போறீங்களே இது உங்களுக்கு நியாயமா? ஏன் ரிஷி உங்களுக்கு ஏன் இந்த அவசரம், என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போகாம இப்படிப் பாதியில விட்டுப்போறீங்களே இது நியாயமா? ஐயோ! நம்ம பாப்பாவ நல்லாப்பார்த்துக்க சொன்னீங்கல்ல, கவலைப்படாதீங்க ரிஷி, நீங்க சொன்னமாதிரி நம்ம பாப்பாவ பத்திரமா பார்த்துக்கிறேன், பாப்பாக்காக நான் வாழுவேன். நீங்க நிம்மதியாப்போங்க. நம்ம பாப்பாவோட பொறுப்புக்களை முடிச்சிட்டு உங்ககிட்டயே வந்திடுறேன்." என்றவள் இறுதியாக தன்னவனை அணைத்து அவன் முகம் எங்கும் முத்தமிட்டவள், தன் நெற்றியை அவன் இதழ்களில் பதித்தெழ இறுதி ஊர்வலமும் ஆரம்பித்தது. எப்போதுமே பிரியக்கூடாதென்று நினைத்த அவன் அம்முவைவிட்டு இன்று மீண்டுவரமுடியாத் தூரத்திற்கு சென்றுகொண்டிருந்தான் துஷியின் ரிஷி.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. கணவனின் இழப்பும் மசக்கையினால் ஏற்பட்ட உபாதையுமாக நன்றாகவே களைத்துப்போனாள் துஷாந்தினி. தன் தொழிலையும் மறந்து தன் கண்ணம்மாவிற்கு தேவையானதை பார்த்துப்பார்த்து செய்துகொண்டிருந்தான் தேவேஷ்வா. உண்ண மறுத்தவளை 'ரிஷியின் பாப்பா நல்லபடியாக பார்க்க வேண்டாமா?'என ஞாபகப்படுத்தி உண்ணவைத்தவன் அவளை நல்லபடியாகவே பார்த்துக்கொண்டான்.
கண்விழித்து கண்மூடும் வரை தன்னவனை நினைத்து அழுது கொண்டேயிருக்க அவளைப் பார்த்து வீட்டிலுள்ளவர்களும் அழ மஞ்சுளாவோ திருமணத்திற்கு மறுத்தவளை வலுக்கட்டாயமாய் திருமணம் செய்து வைத்து இப்போது தனிமரமாய் நிற்கவைத்து விட்டோமே என உள்ளம் புழுங்கியவர், மகளிடம் மன்னிப்புக்கோர அவளோ தன் ரிஷியுடன் கொஞ்சகாலமானாலும் வாழும் பாக்கியம் கிடைத்ததற்காகவே தாய்க்கு நன்றி கூறினாள்.

"அம்மாடி எனக்கு வந்த நிலமைதானா உனக்கும் வரணும்? நானாலும் பத்துவருஷம் என்ராஜ்கூட வாழ்ந்தவ, ஆனால் நீ ஆரம்பிக்கும்போதே எல்லாம் முடிஞ்சிடுச்சே. எல்லாம் என்னாலதான், கட்டிக்க மறுத்தவளை கட்டாயப்படுத்திட்டேனே."

"அம்மா! நீங்க பத்துவருஷம் வாழ்ந்த வாழ்க்கையை என் ரிஷிகூட இந்த ஒத்தவருஷம் வாழ்ந்துட்டேன். என் ரிஷி, என்னை எப்படிப் பார்த்துகிட்டாரென்று உங்களுக்குத் தெரியுமா? உங்க மகள் இந்த ஒன்றரை வருஷமும் ராணிமாதிரித்தான் வாழ்ந்தாம்மா, என்ரிஷிகூட வாழ்ற பாக்கியம் உங்களாலயும் தேவ்வத்தானாலயும் தான் எனக்கு கிடச்சது. ரொம்ப நன்றிம்மா இதை நினச்சு நீங்க கவலைப்படாதீங்க, என் ரிஷியோட பரிசை நான் என் வயித்துல சுமந்திட்டிருக்கேன் அதைப் பத்திரமாப் பார்த்துக்கனும் அதுக்காகவே நான் என்னை நல்லாப் பார்த்துப்பேன்." என்றவள் அன்றுடன் மற்றையவர்கள் முன் தன்னவனை நினைத்து மறுகுவதை நிறுத்திக் கொண்டாலும் தனிமையில் அவன் நிழற்படத்துடன் அன்றைய நிஜங்களை சமர்ப்பிப்பவள், தன்னவன் தன்னை விட்டுப் போனதை எண்ணி எண்ணி துடித்துப் போவாள். ஆனாலும் தன் வயிற்றிலிருக்கும் அவன் உயிரை நினைத்து தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் முயற்சிப்பாள். வாசுகியும் தன் மகன் வாரிசை சுமந்திருந்த மருமகளுக்கு இன்னொரு தாயாயிருந்து நன்றாகப் பார்த்துக்கொண்டார்.

மின்னலாய் மாதங்கள் கடக்க, அன்று பூக்குவியலாய் பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள் துஷாந்தினி. முதன்முதலாய் அவளைத் தன் கைகளில் வாங்கிக்கொண்ட தேவேஷ்வாவிற்கு உடலெங்கும் சிலிர்க்க அப்பூங்குவியலுக்கு முத்தமிட்டு வாசுகியின் கைகளில் குழந்தையைக் கொடுக்க கண்கள் கலங்க வாங்கிக்கொண்டார். ரிஷிதரனின் நகலாய் பிறந்த அவன் மகளின் கண்கள் மட்டும் தாயை ஒத்திருந்தது. ரிஷிதரனை நினைத்து அத்தனைபேரும் கண்கள் கலங்கினர்.

தன் ரிஷியின் ஞாபகமாய் குழந்தைக்கு ரிஷிதா எனப் பெயர்சூட்டினாள் துஷாந்தினி. அவள் உலகமே ரிஷிதா என்றானது. தேவேஷ்வாவிற்கும் செல்லப்பிள்ளையானாள் அவன் கண்ணம்மாவின் செல்ல மகள் ரிஷிதா.

ன்று ரிஷிதாவின் முதலாவது பிறந்தநாள். காலையில் எழுந்ததும் மகளைக் குளிக்க வைத்தவள் தானும் குளித்துவிட்டு ரிஷிதரனின் புகைப்படத்தை வணங்கியவள் தன்னவனோடு என்றும்போல் அன்றும் மனதார பேசிக்கொண்டாள்,

"ரிஷி! இன்னைக்கு நம்ம பாப்பாக்கு ஒருவயசு, நீங்கதான் அவளுக்கு எப்பவுமே கூடவேயிருந்து நல்லபடியாப் பார்த்துக்கனும்." மனதார வேண்டியவளோ கணவனை நினைத்து சிலமணிநேரம் அழுதவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ரிஷிதாவின் பிறந்தநாள் விழாவை தேவேஷ்வாவே வெகு விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தான். உற்றம் சுற்றமென அனைவரையும் அழைத்தவன் பெரியளவில் மதியவிருந்தோடு
அன்றுமாலை தேநீர் உபசாரத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

அன்றுமாலை, வெள்ளையும் இளஞ்சிவப்புமாய் பலூன்களுடன் வீடுமுழுக்க அலங்கரிக்கப்படிருக்க, அதேநிறத்தில் ஒன்று என இலக்கத்தில் பெரிய அணிச்சலொன்று(கேக்) செய்யப்பட்டு அந்த ஹாலின் நடுவேயிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பொருத்தமாய் வெண்ணிறமும் இளம்சிவப்புமான நீண்ட ஆடையை ரிஷிதா அணிந்திருக்க, அதேநிறத்தில் துஷாந்தினியும் ஆடையணிந்திருந்தாள். தேவேஷ்வாவும் வெண்ணிற ஆடையுடன் கைகளில் ரிஷிதாவை ஏந்தி நிற்க பார்க்கவே நிறைவான காட்சியாய் அத்தனை கண்களுக்கும் தோன்றியது. அணிச்சலை(கேக்கை) வெட்டுவதற்காய் மகளை தன்னிடம் அழைக்க அவளோ தாயிடம் வரமறுத்து தேவேஷ்வாவுடனே ஒட்டிக்கொண்டது துஷாந்தினிக்கு சிறிதும் பிடிக்காவிடினும் அமைதியாகவே இருந்தாள். ஆனாலும் அவளுள் கோபம் லேசாக எட்டிப்பார்க்க அவளை பார்வையில் அடக்கியவன் ரிஷிதாவை ஒருகையில் ஏந்தி, கூடவர மறுத்த அவன் கண்ணம்மாவை மறுகையால் பற்றி மேசையருகே அழைத்துச்சென்றவன், குழந்தை மற்றும் பெண்ணவள் கரங்களுடன் தன் கரத்தினையும் இணைத்து மூவருமாக அணிச்சலை வெட்டியதும் முதலில் ரிஷிதாவிற்கு துஷாந்தினி ஊட்டிவிட அவளைத்தொடர்ந்து தேவேஷ்வாவும் குழந்தைக்கு ஊட்டிவிட்டான். அந்தகணத்தில் அனைவர் உள்ளங்களிலும் ரிஷிதரனின் நினைவு அழையாமல் வந்துபோக கண்களும் கலங்கியது. ஆனால் இருவருடங்களின் பின் மலர்ந்திருந்த துஷாந்தினியின் முகத்தைப் பார்த்து அனைவரும் நிம்மதியடைய இது அனைத்தையும் பார்த்திருந்த திவ்யா வீட்டினருக்கு அங்கு நடந்த எதுவுமே துளியும் பிடிக்கவில்லை. திவ்யாவை முறைத்துப் பார்த்தவர்களை பார்வையால் கெஞ்சினாள் அவர்கள் பெண். ஆனாலும் அவளுக்கும் தேவேஷ்வாவின் நடவடிக்கை அறவே பிடிக்கவில்லை.

⚜⚜⚜⚜⚜

மேலும் ஒருவருடம் கடந்தது. ஸ்ரீவர்ஷினிக்கு நல்லவரன் ஒன்றமைய, அன்று முதன்முதலாக வர்ஷியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தனர். வந்தவர்களுக்கு அவளைப் பிடித்துவிட இன்னும் ஒருமாதத்தில் திருமணமும் நல்லபடியாக ஏற்பாடானது. அன்றுதான் துஷாந்தினிக்கும் சோதனை ஆரம்பமானது.

திருமணம் நெருங்க நெருங்க வீடே களைகட்டியது. திருமணத்திற்கான பலகாரங்கள் செய்வது, பட்டாடையெடுப்பது, பந்தக்கால் நடுவது, பத்திரிகை கொடுப்பதென வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்க உறவுகளும் நண்பர்களும் வீட்டையே நிறைத்திருந்தனர். திருமணத்திற்கு இருதினங்களின் முன் நிச்சயதார்த்தம் ஏற்பாடாயிருந்தது. தன் கவலைகளை மறந்தவளாய் துஷாந்தினியும் எல்லோருடனும் சேர்ந்து மகிழ்வுடனே அன்றைய நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டாள். குடும்பத்தினரின் வற்புறுத்தலில் பல நாட்களுக்குப்பிறகு வெண்பட்டில் தங்கப்பொட்டிட்ட புடைவையை உடுத்தியவள் கணமான நகைகளைத் தவிர்த்து தன்னவனின் திருமணப்பரிசான அந்த ஒற்றை ஆரத்தைமட்டும் அணிந்து, தங்கநிறப் பொட்டொன்றையும் வைத்துவிட்டு கண்ணாடியில் தன்னைப்பார்க்க அவளுக்கும் மனநிறைவாயிருந்தது.

"அம்மு அழகாயிருக்கடா, எப்பயும் இப்படியேயிரு, யாருக்காகவும் உன்ன மாத்திக்காத, அம்மு நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?" திடீரெனக் காதுகளுக்குள் கேட்ட தன்னவனின் குரலில் சுற்றுமுற்றும் பார்க்க அங்கே சட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவன் நிழற்படம் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தது. பெண்ணவளின் கண்களில் கண்ணீர் கோடு வரைய, மகளை அழைத்துச்செல்ல அறையினுள் நுழைந்த மஞ்சுளா அவள் அழுவதைக்கண்டு நெருங்கி வந்தவர் என்னவெனக் கேட்க அவள் நடந்ததைக் கூற, சமாதானப்படுத்துவதைத் தவிர அந்தத்தாயாலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஒருவாறு மகளை சமாதானப்படுத்தி மண்டபத்திற்கு அழைத்துச்செல்ல அவளைப் பார்த்த அவள் மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அவளிடம் வந்த வாசுகியோ பேத்தியை கைகளில் வாங்கிக்கொண்டவர்

"துஷாந்திம்மா! உன்னை இப்படிப்பார்த்து எத்தனை நாளாச்சு. ரொம்ப அழகாயிருக்கடா, எப்பயும் இப்படியேயிரு தங்கம்." என்றவர் மருமகளையும் அழைத்துக்கொண்டு முன்னிருக்கையில் அமர, விழாவிற்கு வந்தவர்களுக்கு அன்று துஷாந்தினிதான் வாய்க்கு அவலானாள்.

"புருஷன் செத்தாலும் எப்படி மினுக்கிக்கிட்டு வந்திருக்கா பாரு." ஒருத்தி சற்று உரக்கவே பேச

"புது மாப்பிள்ளை பிடிக்கிறதுக்காக்கும்." மற்றொருவளின் பதில் பட்டென்று வந்தது.

"என்ன தளுக்கல் மினுக்கல் புருஷன் செத்த கவலை கொஞ்சமும் இல்லப்போல." ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் அவள் காதுபடவே பேச பாவையும் துடித்துப்போனாள்.

"ஏன் இப்படிக் கதைக்குறீங்க? வெள்ளசாரிதானே உடுத்திருக்கா, பெரிசா நகையும் போடல்ல, ரொம்ப சிம்பிளாத்தான் வந்திருக்கா, அதுவும் அவங்க வீட்டுக்குக் கல்யாணமென்றதாலதான் இப்படியாச்சும் வந்திருக்கா?" அவளுக்கு சார்பாய் ஒருத்தர் பேச சற்று நிம்மதியாயுணர்ந்தாள்.

"வெள்ளை என்றாலும் அதுவும் பட்டுத்தான் உடுத்தியிருக்கா, புருஷன் போனபிறகு பட்டும் பவுனும் எதுக்கு?" மனது சுக்கல் சுக்கலாய் உடைந்தாலும் அவள் முகத்திலிருந்த புன்னகை வாடாமலிருக்க அதற்கும் அக்கூட்டம் குறை கதைக்க அத்தனை நேரமும் பொறுமையாயிருந்த வாசுகி திரும்பி அவர்களை முறைத்தவர்

"இங்கப்பாருங்க என் மருமகள் எப்படி உடுத்திருந்தாலும் அதுல உங்களுக்கென்ன பிரச்சனை? அவ பூவும் பொட்டும் வச்சிருந்தாலும் அதை விமர்ச்சிக்கிற உரிமைய உங்களுக்கு யாரும் கொடுக்கல்ல, விழாவுக்கு வந்தீங்களா சந்தோசமா இருந்தீங்களா, சாப்பீட்டீங்களா போயிட்டேயிருங்க, அடுத்தவங்கள சங்கடப்படுத்தி அதுல சந்தோசப்படாதீங்க. கவனம் கடவுள் சோதிச்சிடுவார். இன்றைக்கு எங்க வீட்டுலன்னா நாளைக்கு உங்க வீட்டுல நடந்திடப்போகுது, இவ்வளவுதான் இந்த உலக வாழ்க்கை ." வாசுகி கோபமாய்ப்பேச

"உள்ளதச்சொன்னால் குத்தமாக்கும்." அதற்கும் அந்தக்கூட்டம் குற்றம் பிடிக்க அதற்குமேல் அவர்களுடன் பேசுவதில் பிரயோசனமில்லை என்பதை உணர்ந்த வாசுகியும்

"திருந்தாத ஜென்மங்கள்" என முன் திரும்பிக்கொண்டார்.

றுநாள் மருதாணிவிழாவிற்கு வரத்தயங்கியவளை சிரமப்பட்டு அழைத்துச்செல்ல அன்றும் அவள் மனம் புண்படும்படியாகவே நிகழ்ச்சிகள் நடந்தேறின.
எல்லாப்பெண்களும் மருதாணியைக் கைகளில் வைத்துக்கொள்ள, வர்ஷினியும் துஷாந்தினியிடம் கைகளில் மருதாணி வைக்கச்சொல்ல மறுத்தவளைப் பிடித்து அமரவைக்க அப்போதும் அவள் தயங்க, பிடிவாதமாய் நின்ற வர்ஷினிக்காக அவள் மருதாணியை கைகளிலே போட்டுக்கொண்டவள் முகம் இப்போது மகிழ்ச்சியில் பிரகாசமாயிருந்தது. அத்தனை நேரமும் அனைத்தையும் பார்த்திருந்த மாப்பிள்ளை உறவிலுள்ள பாட்டியொருவர் துஷாந்தினியின் அருகே அமர்ந்தவர்

"ஏம்மா, அந்தப் புள்ளைக்குத்தான் அறிவில்ல என்றால் கல்யாணமாகி புள்ளயும் பெத்துக்கிட்ட உனக்கு எங்கபோச்சு அறிவு. நேத்தைக்கு என்னடான்றால் சுமங்கலிமாதிரி பட்டும் நகையுமா உட்கார்ந்திட்டிருக்க அதுவும் முன்வரிசையில, இன்றைக்கும் அலங்காரத்துக்கு குறைவில்ல பளபளத்துக்குத்தான் வந்திருக்க, வந்ததுதான் வந்த ஒரு ஓரமா ஒதுங்கிருக்க வேண்டியதுதானே பொண்ணுகூடவே உட்கார்ந்துட்டு புதுப்பொண்ணுமாதிரி மருதாணிவேற வச்சுக்கிற, மங்கலகரமான இந்த நேரத்துல அமங்கலமான நீ எல்லாத்துலயும் முன்ன நிக்கலாமா? உன் முகத்தைப் பார்த்துட்டு நல்லகாரியம் செஞ்சா எப்படி நல்லபடியா நடந்தேறும் அதுவும் அபசகுணமாத்தான் முடியும். வாழ்க்கைய ஆரம்பிக்கப்போறவங்க விழாவுல கல்யாணமாகி ஒருவருஷத்துலயே புருஷனப் பலிகொடுத்த நீயெல்லாம் கொஞ்சம் என்ன நல்லாவே ஒதுங்கியிருக்கனும். இது மத்தவங்க சொல்லித் தெரியக்கூடாது படிச்சவதானே நீ, உனக்காப் புரியவேணாம். இங்கப்பாரு கொஞ்சம் ஒதுங்கி உள்ளயேயிரு. அவுட்டுட்ட மாடாட்டம் மினுக்கிக்கிட்டு வெளியில சுத்தாத." அவள் மனதை சுக்கல் சுக்கலாய் உடைக்க, அதற்கு ஒருகூட்டம் தாளம் வாசிக்க, மாப்பிள்ளையின் உறவுக்காரர் என்பதால் எதுவும் செய்யமுடியாமல் அவள் குடும்பத்தார் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்க, அத்தனையும் கேட்டவளின் மனது வெகுவாக வலிக்க அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் அவ்விடத்தைவிட்டு தன் வீட்டை நோக்கிச்சென்றவளை வாசுகி பின்தொடர கூடவே மஞ்சுளாவும் வந்தார். இருவருமாக அவளை சமாதானப்படுத்த தாயின்தோளில் சாய்ந்துகொண்டு அழுதுதீர்த்தாள் பெண். அவளிலே பார்வையைப் பதித்தவாறு அங்கிருந்த ஆண்களுடன் பேசிக்கொண்டிருந்த தேவேஷ்வாவும் ஏதோவொரு குழறுபடி நடந்துவிட்டதெனப் புரிந்துகொண்டவன் பெண்ணவளை நெருங்க தேவேஷ்வாவைப் பின்தொடர்ந்த திவ்யாவின் தாய் சுபத்ராவோ அவர்கள் கண்ணுக்கு மறைவாக ஆனால் பேச்சுக்குரல் கேட்குமிடத்தில் நின்றுகொண்டார். தேவாவிடம் நடந்ததை வாசுகி கூற, மிகுந்த கோபத்துடன்
அத்தனை நேரமும் அவளைக் குறைகூறிக் கொண்டிருந்த கூட்டத்திடம் விரைய அவனை தடுத்துநிறுத்தினார் மஞ்சுளா.

"தேவா! வேணாம்ப்பா, துஷாந்திக்காக நீ ஏதாவது கதைக்கப்போய் நாளைக்கு அது நம்ம வர்ஷினி வாழ்க்கையப் பாதிச்சிடும். அதனால இதை இப்படியே விட்டுட்டுப்பா." அதைக்கேட்க அவன் தயாரில்லை.

"என் கண்ணம்மாவை கதைக்க இவங்க யாரு, மாப்பிள்ளையோட சொந்தமென்றா என்ன வேணுமென்றாலும் கதைப்பாங்களா? என் வீட்டுல என் கண்ணம்மாக்கு இல்லாத உரிமை வேறயாருக்குமில்ல அவளை ஒதுங்கியிருக்கச் சொல்ல இவங்க யாரு அத்தை? பாருங்க துஷானிம்மா எப்படி அழுதுட்டருக்கான்னு. இதை இப்படியே விடமுடியாது அத்தை, இருங்க என்னென்று பார்த்திட்டு வாரேன்." என்று சீறிப்பாய்ந்தவனை அவன் துஷானி தடுத்து நிறுத்த அப்போதைக்கு சமாதானமானவன் சந்தர்ப்பம் கிடைத்ததும் அவர்களை தனியாக அழைத்துச்சென்று பதமாக ஆனால் இனியொருதரம் துஷாந்தினியின் பக்கம் திரும்பாதவாறு காரசாரமாய் பேசிவிட அவனுக்குப் பயந்து அவர்களும் வாயை மூடிக்கொண்டனர்.

மங்களநாளில் அமங்கலியான பெண்ணவளை பின்னிறுத்திய மற்றையவர்களின் குத்தல் பேச்சால் மனதால் உடைந்துபோன பாவையின் உள்ளத்தை உணர்ந்த தேவேஷ்வாவும் பெண்ணவளுக்கு சார்பாகப்பேசி அனைவர் வாயையும் மூடவைத்ததோடு அவளுக்கு ஆறுதலாகவுமிருந்தான். ஆனால் அவன் முன்னால் வாயைமூடிய கூட்டம் முதுக்குப்பின்னால் ஆயிரம் வசைமொழி பேச துடித்துப்போனாள் துஷாந்தினி. அவள் துடித்ததைப் பார்த்திருந்த மஞ்சுளா மேலும் கலங்க, அவரை வாசுகி சமாதானம் செய்தாலும் அவரும் தன் மருமகளின் நிலையை எண்ணிக் கலங்கித்தான் போனார்.

நடந்தவை அனைத்தையும் பார்த்திருந்த சுபத்ரா, திவ்யாவைத் தனியாய் அழைத்துச்சென்றவர் நடந்ததை ஒப்பித்துவிட்டு

"இங்கப்பாரு திவ்யா, அந்த மஞ்சுளா அவ மகளை தேவா தலையில கட்டப்பாக்குறான்னு தோனுதடி. அவரும் என் கண்ணம்மா, என் துஷானின்னு உருகறதப் பார்த்தா தாங்கமுடியல்ல, அந்த அம்மா சொன்னதுல எந்தத்தப்புமில்ல புருஷன் செத்தா பொம்பளை அடக்கொடுக்கமா ஊட்டோட இருக்கனும் அதைவிட்டுப்போட்டு இப்படி தளுக்கி குலுக்கினால் ஊர் கதைக்கும்தான். செய்யுற தப்பெல்லாம் நாமளே செஞ்சுட்டு அடுத்தவங்ககிட்ட சண்டைக்குப்போறது என்ன நியாயமோ? அவளுக்கு ஒன்னு என்றதும் இவரு சீறிப்பாயுறார், அதைவிடு அந்த துஷானியோட மக பிறந்தநாளப்போ எல்லா ஏற்பாடும் தேவாதானாமே, சொந்தபுள்ளையப் போல கையவிட்டு அந்த சின்னத இறக்கிவிடல்ல பார்த்தாயா, அதுக்கும்மேல இவர்தான் அவ புருஷன்மாதிரி அவளை ஒட்டிக்கிட்டு நிக்குறார். போதாக்குறைக்கு அவ கையப்புடிச்சு கேக்கு வெட்டுறார், புருஷன் செத்த கவலை கொஞ்சங்கூட அந்த துஷாந்திக்கில்ல, வெக்கமேயில்லாம அவர்கூடயே நிக்குறா. பார்க்க நல்லாவா இருந்துச்சு. எல்லாம் தப்பாத்தோனுது, ஏன் திவ்யா உண்மையில தேவா உன்னை விரும்பித்தான் கட்டிக்கப்போறாரா? எனக்கென்னமோ சந்தேகந்தான், ஒன்னு சொல்லுறேன் நல்லா மண்டையில ஏத்திக்கோ, இங்கப்பாரு, இப்பயே உசாரா இருந்துக்க இல்ல அவங்க ரெண்டுபேரும் சேர்ந்து உன் தலையில மொட்ட போட்டுட்டு போயிடுவாங்க பார்த்துக்கோ." மகளின் காதில் வஞ்சத்தை ஊற்ற

"அப்படியெல்லாம் எதுவுமிருக்காதும்மா, எனக்கு என் தேவேஷையும் தெரியும் துஷாந்தியையும் நல்லாத்தெரியும்." தாய்க்கு சமாதானம் கூறியபோதும் அவளுள் சின்னதாய் சந்தேகமென்னும் பொறிவிழ ஆரம்பித்தது. தேவேஷ்வாவையும் துஷாந்தினியையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென முடிவெடுத்த திவ்யதர்ஷினியிடம்

"இவ்வளவு நம்புற ஒருவேளை அவர் அந்த மஞ்சுளா மகளைக் கட்டிக்க நினச்சா என்னடி பண்ணுவ?"

"நீங்க சொல்லுறமாதிரி என் தேவேஷ் அவர் துஷானிய கட்டிக்க நினச்சா நிச்சயமா அவருக்காக விட்டுக் கொடுப்பேம்மா." மகளின் வார்த்தையில் சுபத்ராவோ கோபத்துடன்

"பைத்தியம்மாதிரி உளறாத இது என்ன படமா ஆசைப்பட்டா விட்டுக்கொடுக்க? ஊரறிய நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு, நிச்சயம் முடிஞ்சாலே பாதிக் கல்யாணம் முடிஞ்சமாதிரி இதுல இவ அவனை விட்டுக்கொடுப்பாளாம் விட்டு. இதுக்கு மேலயும் பிந்தமுடியாது, வர்ஷி கல்யாணம் முடிஞ்ச கையோட உங்க கல்யாணத்தையும் பேசிமுடிக்க வேண்டியதுதான்." என்றவர் மகளையும் அழைத்துக்கொண்டு விழா நடக்குமிடத்திற்குச் செல்ல, அத்தனை நேரமும் அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டிருந்த தேவேஷ்வாவிற்கு சுபத்ராவின் மேல் கோபமெழுந்தாலும் திவ்யாவிற்காக பொறுத்துக்கொண்டவன் அவளுடன் பேசவேண்டுமெனவும் எண்ணிக்கொண்டான். ஆனால் இன்னொரு பக்கமிருந்து இதைக் கேட்டிருந்த வாசுகிக்கு சுபத்ரா மேல் சொல்லொன்னாக் கோபமெழ மஞ்சுளாவிடம் வந்தவர்

"சம்மந்தி! நான் ஒன்று சொன்னாத் தப்பா நினைப்பீங்களா?" அவர் கேள்வியா நோக்க

"நம்ம துஷாந்திக்கு சீக்கிரமா நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிவைக்கனும் அவ சுமங்கலியா வாழணும். அதைப்பார்த்து நான் சந்தோசப்படணும். அவ அமங்கலி என்றதாலானே இத்தனை ஏச்சும் பேச்சும். வேண்டாம் சம்மந்தி, என் தங்கத்துக்கு சீக்கிரமா நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வச்சுடலாம்." அவரின் நல்ல மனதை வியந்தவராய்

"என்ன சம்மந்திம்மா இப்படி சொல்லுறீங்க இதுக்கு துஷாந்தி ஒத்துக்குவாளா? ரிஷிதாம்மா இருக்காயில்ல அவளை விட்டுட்டு எப்படி துஷாந்தி இதுக்கு ஒத்துக்குவா சொல்லுங்க?"

"நீங்க மாப்பிள்ளை பாருங்க, துஷாந்திம்மாவ ஒத்துக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு. ரிஷிதாவை நினச்சு கவலைப்படாதீங்க. நீங்க இருக்கீங்க, நாங்க இருக்கோம் எல்லாரும் அவளை பத்திரமா பார்த்துக்கலாம். என்ன சொல்லுறீங்க சம்மந்தி."

"அப்படியொன்னு நடந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன். சம்மந்திம்மா முதல்ல பக்குவமா நீங்க துஷாந்திக்கிட்ட கதைங்க. அதுக்குப்பிறகு முடிவெடுக்கலாம்." என்றதும் சரியென்ற வாசுகி மறுநாளே அதுபற்றி மருமகளிடம் பேச ஒரேயடியாய் மறுத்துவிட்டாள் அவர் மருமகள். அவள் வாழ்வின் தொடக்கமும் முடிவும் அவளின் ரிஷி மட்டுந்தான் என்பதை உறுதியாய்க் கூற, அவளை எப்படி சம்மதிக்கவைப்பதெனத் தெரியாமல் கடவுளிடம் பாரத்தைக் கொடுத்தவர் நடந்ததை மஞ்சுளாவிடம் கூற அவரும் இறைவனையே தஞ்சமடைந்தார்.

ன்றுகாலையில் பத்துமணிக்கு முகூர்த்தம். அதிகாலையிலே எழுந்து சடங்கு சம்பிரதாயங்களை முடித்தவர்கள் மண்டபத்திற்குச் செல்லத் தயாராக, துஷாந்தினியோ மண்டபத்திற்கு வர மறுத்துக்கொண்டிருந்தாள். மஞ்சுளா எவ்வளவோ அழைத்தும் அவள் விடாப்பிடியாய் நிற்க என்ன செய்வதென புரியாமல் தடுமாறியவர் தேவாவிற்கழைக்க உடனே வந்தவன் பெண்ணவளை வரக்கூற அப்போதும் முடியாதென தன்பிடியிலே அவள் நிற்க இறுதியாக வர்ஷினி வந்தழைக்க முதலில் மறுத்தவள் அவள் கெஞ்சலில் அவளுக்காகவே வந்தாள்.

பட்டாடை உடுத்தாவிடினும் இளநிறத்தில் புடைவையணிந்தவள் சிறிய கருநிறப்பொட்டும் கழுத்தில் அவள் ரிஷியின் ஆர்.டி எழுத்துக்கள் இணைந்த சங்கிலியும் சிறியகாதணியும் அணிந்தபோதும் அவள் தேவதையாகவே தோன்றினாள். மற்றையவர் கண்ணைக்கவராது மணமேடையை விட்டு நன்கு ஒதுங்கிநின்ற மகளைப்பார்த்த மஞ்சுளாவோடு அவள் உறவுகளின் உள்ளங்களும் கணத்தன. தன் கண்ணம்மாவின் வாடிய முகத்தைப் பார்த்த தேவேஷ்வாவின் உள்ளமும் உள்ளே வாடியது.
எப்போதும் சிரிக்கும் கண்கள் ரிஷிதரனை இழந்தபோது மொத்தமாய்த் தொலைந்தாலும் அவள் குழந்தையின் வருகையால் கொஞ்சங்கொஞ்சமாக மாறிவந்தவளை இந்தத் திருமணவிழா மீண்டும் சிரிப்பிழக்கச் செய்ய, எப்படியாவது தன் கண்ணம்மாவின் முகத்தில் சிரிப்பைக் கொண்டுவர வேண்டுமென தனக்குள்ளே உறுதியாக முடிவெடுத்துக்கொண்டான் தேவேஷ்வா.

inbound8078362595999315658.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-14

inbound1588637324582939712.jpg

வர்ஷினியின் திருமணம் முடிந்து இருமாதங்கள் கடந்ததும், தேவேஷ்வா மற்றும் திவ்யாவின் திருமணவிடயமாய்ப் பேசவென திவ்யாவின் பெற்றோர் வர தன்னவனைப் பார்க்கும் ஆவலில் திவ்யாவும் உடன் வந்தாள். அவர்களை வரவேற்று அமரவைத்த தேவாவின் வீட்டினர் மேற்கொண்டு பேசிக்கொண்டிருந்தவேளை ரிஷிதாவுடன் உள்நுழைந்தாள் துஷாந்தினி, அவளைக் கண்டதும் வந்தவர்கள் முகம் சட்டென்று மாற அதைக் கவனித்த மஞ்சுளா, துஷாந்தினியிடம் நெருங்க அதற்குள் வார்த்தைகளைக் கொட்டிவிட்டார் சுபத்ரா

"சம்மந்தி, நல்ல விசயம் பேசவந்திருக்கோம் இந்த நேரத்துல துஷாந்தி இங்க இருக்குறது சரியில்ல....." என்றதும் அத்தனைபேருக்கும் அவர்மேல் கோபமெழ, திவ்யா தாயின் சொல்லில் பதட்டமாக, துஷாந்தினியோ கண்களில் கண்ணீரோடு தன் வீட்டிற்குச் செல்லத் திரும்ப அவளின் கைகளை அழுத்திப்பிடித்தது தேவாவின் கரம். அவனை பாவமாய் ஏறேடுத்துப் பார்க்க தன் கண்ணம்மாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவனுள் கோபம் கனலாய் எரிய அவன் முகம் பார்த்த திவ்யாவிற்கு உள்ளூர உதறெடுக்க, சுபத்ராவிடம் திரும்பியவனோ

"ஆன்ட்டி, துஷானிய இப்படிக் கதைக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும், இந்த வீட்டுல ஏன் எங்க மொத்தக் குடும்பத்துலயும் துஷானி இல்லாம எந்தவொரு நல்லகாரியமும் நடக்காது முதல்ல அதப்புரிஞ்சுக்கங்க, அதுக்குப்பிறகு மத்த விசயங்களைப் பேசலாம்." அழுத்திச் சொன்னவன் குரலில், சற்று ஆடித்தான் போனார் சுபத்ரா.

"வேணாம் எனக்காக நீங்க யாருக்கிட்டயும் சண்டைபோட வேணாம். சுபத்ரா ஆன்ட்டி சொல்லுறதும் சரிதான் நல்லகாரியம் நடக்குற இடத்துல அமங்கலமா நான் இருந்தா எப்படி அந்த காரியம் நல்லபடியா முடியும். தேவ் அத்தான் எனக்குத்தான் எதுவும் விளங்கல்ல, நம்ம வர்ஷி கல்யாணத்தப்பவே எத்தனை கதை,பேச்சு வாங்கினேன் அப்பவாச்சும் புத்தி வந்திருக்கனும் வரல்ல, இனியாவது வராமயிருந்தா அதுதான் தப்பு." என்றவள் சுபத்ராவிடம் திரும்பி

"ஆன்ட்டி, நீங்க இங்க கல்யாண விசயம் பேச வந்திருக்கிறது சத்தியமா எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நான் இந்தப்பக்கமே வந்திருக்கமாட்டேன் மன்னிச்சிடுங்க ஆன்ட்டி இனிமேல் இப்படி எதுவும் நடக்காது."

"என்ன துஷானி யாருக்கு விளக்கம் கொடுத்துட்டிருக்க? உன்னை மதிக்காதவங்க எனக்கு வேண்டவே வேண்டாம்." தேவேஷ்வா கோபமாய்க் கூற

"அதெப்படி தேவா, உங்க இஷ்டத்துக்கு வேணாமென்று சொல்லுவீங்க ஊரறிய நிச்சயம் பண்ணிட்டு இப்போ இந்த பிள்ளைக்காக எங்க திவ்யாவை வேணாமென்று சொல்லுவீங்களா? இது சரியல்ல." திவ்யாவின் தந்தை ராமநாதன் கொதித்தெழ, தேவாவும் முறுக்கிக்கொள்ள,

"தேவ் அத்தான்! தயவுசெஞ்சு இப்படிக் கதைக்காதீங்க. நீங்க திவ்யாக்காவைக் கல்யாணம் பண்ணிக்கங்க. இப்படி வேணாமென்றால் அந்தப் பழியும் எனக்குத்தான் வந்து சேரும், வேணாம். அந்தப்பழிக்கு என்னை ஆளாக்கிடாதீங்க ப்ளீஸ்." துஷாந்தினி அவனிடம் கெஞ்ச,

"இவ சொல்லித்தான் என் மகள் வாழனுமா? இல்லாட்டி இவர் திவ்யாவை கட்டிக்க மாட்டாரா?" சுபத்ரா மீண்டும் வார்த்தைகளை விட ராமநாதனும் கோபமாய்ப் பேச அதில் தேவா கோபமாக, நிலைமை கைமீறிப் போவதைப் புரிந்துகொண்ட பிரபாகரன்

"தேவா கொஞ்சம் இருப்பா, சம்மந்தி கோபப்படாதீங்க, சுமுகமா பேசித்தீர்த்துக்க வேண்டியதை பேசியே கெடுத்திடுவீங்க போலயிருக்கே."

"என்ன சம்மந்தி அப்போ நான்தான் தப்பா பேசுறேனா? உங்க மகன் கதச்சதெல்லாம் சரியா? கட்டிக்கப்போறவளை விட இந்தப்பிள்ளைதான் முக்கியமா?" ராமநாதன் இன்னும் சூடாக, ஏதோ பேசத்தொடங்கிய தேவாவை அடக்கிவிட்டு

"ராமநாதன்! துஷாந்திம்மா எங்க வீட்டுப்பிள்ளை, அவளை நீங்க இப்படி எங்க முன்னாடியே தப்பாக் கதைக்கிறீங்க இது சரியில்ல, எங்க வீட்டுல நடக்குற விஷேசத்துக்கு எங்கபிள்ளை இல்லாம செய்யச்சொல்லுறது நல்லாயிருக்கா?"

"என்னதான் சொல்ல வாரீங்க பிரபாகர், கொஞ்சம் தெளிவாக் கதைக்கிறது எல்லாருக்கும் நல்லது."

"எங்க வீட்டுல எது நடந்தாலும் துஷாந்தி இருப்பா அதை நீங்களும் சரி திவ்யாம்மாவும் சரி நல்லாப்புரிஞ்சிக்கனும்." பேச்சு செல்லும் திசையைப்பார்த்து பதட்டமான திவ்யா தன் பெற்றோரிடம்

"அப்பா! அம்மா! நம்ம கல்யாணத்தப்பத்தித்தான் கதைக்க வந்தோம், ஆனால் அதவிட்டுட்டு என்னென்னமோ கதச்சிட்டிருக்கீங்க. வந்த விசயத்தை மட்டும் பாருங்கப்பா வேற எந்தக்கதையும் வேணாம். ப்ளீஸ்ம்மா உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்." எங்கே தேவேஷ்வா கோபங்கொண்டு தன்னை நிராகரித்துவிடுவானோ என்று பயந்தவள் பெற்றோரிடம் கெஞ்சிக்கொண்டிருக்க மகளின் மன்றாட்டத்திற்காக பணிந்தவர்கள்

"எங்களை மன்னிச்சிடுங்க, துஷாந்தி இங்கயே இருக்கட்டும். நம்ம கல்யாணப் பேச்சை தொடங்கலாமென்று நினைக்கிறேன்." வேண்டாவெறுப்பாய் ராமநாதன் ஆரம்பிக்க சுபத்ராவும் அவருடன் இணைந்து கொள்ள அதை அனைவரும் புரிந்துகொண்டாலும் மேலும் பிரச்சனையை வளர்க்க வேண்டாமென அமைதிகாக்க, அதற்கு தடைபோட்டான் தேவா.

"எங்க கல்யாணம்பத்தி பேசுறதுக்கு முன்ன நான் உங்ககிட்டயும் திவிகிட்டயும் கொஞ்சம் கதைக்கனும். அதுக்குப்பிறகு மத்த ஏற்பாடெல்லாம் பார்த்துக்கலாம்." என்றவன் நேரடியாக விடயத்திற்கு வந்தான்,

"நான் ரிஷிதருக்கு வாக்குக் கொடுத்திருக்கேன், துஷானியும், ரிஷிதாவும் என் பொறுப்புன்னு...."

"நீங்க எங்களுக்கும் வாக்குத் தந்திருக்கீங்க, அது முதல்ல உங்களுக்கு ஞாபகமிருக்கா?" சினந்துளிர்க்க சுபத்ரா கேட்டதும்

"எல்லாமிருக்கு ஆனால் நான் முதல்ல கதச்சி முடிஞ்சிடுறேன்."

"அதுக்கு முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?" சுபத்ரா மீண்டும் கேட்க அதில் தேவா கோபம் கொள்ள தாயை அடக்கிய திவ்யா அவனிடம் மன்னிப்பு வேண்ட

"இது சரிவராது இவங்க எதையும் புரிஞ்சக்கமாட்டாங்க திவி, நான் உன்கிட்ட தனியாப் பேசலமா?" என்றதும் அவள் தலையாட்ட அதை மறுத்த சுபத்ராவோ

"இல்ல தம்பி, இங்கயே எல்லோர் முன்னாடியும் கதைங்கோ எல்லாருக்கும் எல்லாந்தெரியுறதுதான் சரி அதுக்கு முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?"

"என்ன சொல்லனும்?"

"நீங்க எங்களுக்கும் வாக்குத் தந்திருக்கீங்க, அது உங்களுக்கு ஞாபகமிருக்கான்னு கேட்டேன்?" சுபத்ரா குத்தலாய்க் கேட்டதும்

"நல்லாவேயிருக்கு அதுக்காகத்தான் இப்போ உங்க மகளைக் கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்கேன்." அவனும் எகத்தாளமாய் பதிலளிக்க

"ஓ....அப்போ தந்த வாக்குக்காக மட்டுந்தானா?"

"இல்லாட்டி இத்தன கதை கேட்டு அசிங்கப்பட்டு என் கண்ணம்மா கண்கலங்கி உங்க மகளைக் கட்டிக்கனுமென்று எந்த அவசியமுமில்ல." அவன் வார்த்தையில் திவ்யா துடித்துப்போக, அவள் பெற்றோர் வெகுண்டெழுந்தனர்.

"பார்த்தாயா, அவர் பதிலை பார்த்தாயா? இது சரிப்பட்டு வராது, என்ன தம்பி எங்க முன்னாடியே இத்தனை பேச்சு பேசுறீங்க நாளைக்கு கட்டிக்கிட்ட பிறகு இந்தப்பிள்ளைக்காக எங்க திவ்யாவை என்ன வேணுமென்றாலும் செய்வீங்க போலிருக்கே." துஷாந்தினியை சுட்டிக்காட்டி ராமநாதன் பேச அதில் பெண்ணவளின் கண்கள் நீரைப்பொழிய அதைப் பொறுக்கமுடியாமல் தேவா அவளை நெருங்கி ஆறுதல்படுத்த அதைப்பார்த்து அவர்கள் கடுப்பாக, திவ்யாவிற்கு அழுகை முட்டியது. அவனை ஏறெடுத்துப் பார்த்தவள்

"தேவேஷ், உண்மையிலே உங்களுக்கு என்னைக் கட்டிக்க சம்மதம்தானா?"

"இங்கப்பாரு திவி, நான் சொல்ல வந்ததை முழுசாக் கேட்டா இந்த பிரச்சனையெல்லாம் எதுவும் வராது அதுக்கு உங்கம்மா தயாராயில்ல." என்றதும்

"நான் காதுகொடுத்துக் கேக்குறேன் நீங்க சொல்லுங்க."

"நான் ரிஷிதருக்கு வாக்குக் கொடுத்திருக்கேன், துஷானியும், ரிஷிதாவும் என் பொறுப்புன்னு
என் பொறுப்பானவங்க என் மனைவிக்கும் பொறுப்பானவங்களா இருக்கனும். அவங்களை முழுமனசோட உன்னால ஏத்துக்க முடியுமா? என் கண்ணம்மாக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமச்சுக் கொடுக்கனும் ஆனாலும் ரிஷிதா எப்பயும் என் பொறுப்புத்தான், அவதான் எனக்கு மூத்த மகள் உன்னால இதை ஏற்றுக்க முடிஞ்சா கல்யாணத்தைப்பத்தி மேல பேசலாம். இல்லாட்டி உனக்கு ஏத்தமாதிரி ஒருத்தரை பார்த்து கல்யாணம் பண்ணிக்க. என்னால ரிஷிதருக்கு கொடுத்த வாக்கை மீறவும்முடியாது என் கண்ணம்மாவையும் இந்தச் செல்லத்தையும் கைவிடவும் முடியாது." கைகளில் ஏந்தியிருந்த ரிஷிதாவை அணைத்தவாறே தேவேஷ்வா கூற, அவன் அணைப்பில் ரிஷிதாவும் அவனை அணைத்துக்கொள்ள அதனைப் பார்த்து ராமநாதனும் சுபத்ராவும் முகத்தைத் திருப்ப திவ்யாவோ அதைப் பொருட்படுத்தாது அவனையே பார்த்து நிற்க

"திவி! என் கண்ணம்மா என் பொறுப்பு அவ்வளவுதான். ஆனால் நீதான் என் மனைவி என்றதுல நான் தெளிவாயிருக்கேன். அந்தத்தெளிவு உனக்கிருந்தா மேல பேசலாமென்று நினைக்கிறேன்."

"தேவேஷ்! உங்களை விட துஷாந்திக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன். இன்னைக்கு நீங்க எனக்கு கிடச்சருக்கீங்கன்னா அதுக்கு முழுக்காரணம் துஷாந்திதான் அதை என் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது. நீங்க துஷாந்தியையும் அவ மகளையும் பார்த்துக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல, ஆனால் எனக்கு ஒரே ஒருகேள்வி மட்டுந்தானிருக்கு உண்மையாவே நீங்க என்னை விரும்பித்தான் கட்டிக்கப் போறீங்களா? அதைமட்டும் சொல்லிடுங்க."

"ஏய் திவ்யா உனக்கென்ன பைத்தியமா எதுக்காக இப்படிக் கதச்சிட்டிருக்க?" அவளை இடைவெட்டிய சுபத்ராவை பார்வையால் அடக்கியவள்

"அம்மா, எனக்கு என் தேவேஷ் வேணும்மா, இன்னைக்கு நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணமே துஷாந்திதான். அம்மா! எனக்கு இவங்க ரெண்டுபேரையும் நல்லாவே தெரியும். வாழப்போற எங்களுக்குள்ள நம்பிக்கையோட ஒருதெளிவுமிருக்கனும் அதனாலதான் இப்படிக் கதச்சிட்டிருக்கேன்."

"நம்பிக்கிட்டேயிரு உன் தலைய ரெண்டுபேரும் சேர்ந்து மொட்டயடிக்கப் போறாங்க."

"அப்படி எதுவும் நடக்காது. என் தேவேஷ் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்."

"ரொம்ப தைங்க்ஸ் திவி, என்னை இந்தளவு புரிஞ்சி வச்சிருக்கிறதுக்கு."

"நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல்ல, உண்மையிலே என்னை விரும்பித்தான் கட்டிக்கப் போறீங்களா?" பொய்யுரைக்க முடியாமல் அவன் அப்போதும் அமைதிகாக்க தமையனின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்ட வர்ஷினி அவனுக்கு உதவிக்கு வந்தாள்

"திவ்யாக்கா, அண்ணனுக்கு ஓகே என்றதாலதான் உங்க காதலை அவர் ஏத்துக்கிட்டார். இல்லாட்டி அதுக்கு அவசியமேயில்லையே."

"என்னம்மா இது, நீ அண்ணங்கிட்ட கேள்வி கேட்டா தங்கச்சி பதில் சொல்லுறா?" ராமநாதன் கோபப்பட
"அப்பா...ப்பா...ப்பா...அப்பா ப்ளீஸ் என் தேவேஷ்கிட்ட நான் கதச்சிக்கிறேன் கொஞ்சம் அமைதியாயிருங்கப்பா." தந்தையை அமைதிப்படுத்த, தாயோ அதற்கு மேலாக எகிறத்தொடங்கினார்.

"எனக்கென்னமோ இதெல்லாம் சரியா வராதுன்னு தோணுது. திவ்யா! உனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சோம் ஆனால்....நீ கேட்டும் அவர் பதில் சொல்லாம இருக்காருன்னா அவர் மனசுல நீயில்ல, உன்மேல எந்த விருப்பமுமில்ல என்றுதான் அர்த்தம். இப்படிப்பட்ட வாழ்க்கை உனக்குத் தேவையா? நல்லா யோசிச்சுக்கோ. விட்டுடுடி நிச்சயதார்த்தம் மட்டுந்தானே முடிஞ்சிருக்கு, பரவாயில்ல இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடலாம்."

"நிறுத்திடலாம் அம்மா, ஆனால் ஊரறிய இவர்தான் புருஷனென்று நிச்சயதார்த்தம் நடந்த உங்க மகளுக்கு இனி என்றைக்கும் கல்யாணம் நடக்காது அதுக்கு சம்மதமென்றால் இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடலாம்." திவ்யாகூற அதில் சுபத்ரா கோபமாய் துஷாந்தியை முறைத்தவர்

"எல்லாம் இந்த துஷாந்தியாலதான், நீ மட்டும் இங்க வராமயிருந்தா இப்போ எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கும். ச்சை வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாயே பாவி." அவர் வார்த்தைகளை விட

"போதும், என்னை மன்னிச்சிடு திவி, உங்கம்மா எதையும் புரிஞ்சிக்கிறதாயில்ல." திவ்யாவிடம் மன்னிப்பை வேண்டியவன் சுபத்ராவிடம் திரும்பி

"இங்கப்பாருங்க, உங்க மகளுக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கட்டிவைங்க. இனிமேல் நீங்க நினச்சாலும் இந்தக் கல்யாணம் நடக்காது, " தேவேஷ்வா ஆத்திரமாய் கத்த, அவனை பிரபாகரும் மஞ்சுளாவும் அமைதிப்படுத்த, அவன் வீரியமான வார்த்தையில் திவ்யா அழுதுகரைய தன்னால்தான் அத்தனையுமென்ற எண்ணத்தில் அங்கிருக்கவும் முடியாமல் தேவாவின் உத்தரவால் அவ்விடம்விட்டுச் செல்லவும் முடியாமல் துஷாந்தினியின் கண்கள் கண்ணீரைப் பொழிய, யசோதாவிடம் திரும்பிய சுபத்ரா

"இதுக்காகத்தான் சம்மந்தி இந்தப்பிள்ளை இங்க இருக்க வேணாமென்று சொன்னேன். இப்பவாவது புரிஞ்சுக்கோங்க நல்ல விசயம் கதைக்குற இடத்துல இப்படி அமங்கலமா இருந்தா எல்லாந்தப்பாகிடும். அதுவும் ஒன்னுக்கு ரெண்டாவேற இருக்கு, உங்க வீட்டுப்புள்ளையா இருக்கலாம் ஆனால் நடைமுறைன்னு ஒன்னிருக்கில்ல. இதுக்காகத்தான் அத்தனை தரம் கேட்டுக்கிட்டேன் நீங்க யாரும் அதை பெரிசா எடுத்துக்கல்ல இப்போ என்னாச்சு இந்தக்கல்யாணம் நிக்க வேண்டிய இடத்துக்கு வந்தாச்சு. என் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிடுச்சு. நிச்சயமெல்லாம் முடிஞ்சு ஊரறிஞ்ச விசயம் இப்போ இல்லாமப்போனால் என்னதான் செய்றது. ஐயோ! இனி நான் என்ன செய்வேன்." சுபத்ரா வார்த்தைகளைக் கொட்ட அதில் துடித்துப் போனாள் துஷாந்தினி. அதற்குமேல் தாங்கமுடியாமல் அத்தனை நேரமும் பொறுமையாயிருந்த மஞ்சுளா

"போதும் சம்மந்திம்மா, நாங்க அமங்கலிதான் என்னாலயோ இல்ல என் மகளாலயோ உங்க மகள் கல்யாணத்துல எந்தக்குழப்பமும் வேணாம், நாங்க இது எதுலயுமே கலந்துக்கல்ல சந்தோசமா உங்க மகள் கல்யாணத்தை நடத்துங்க." என்றவர் யசோதா-பிரபாகரனிடம் திரும்பி

"யசோக்கா! அண்ணா, என்னை மன்னிச்சிடுங்க உங்க வீட்டு சம்மந்திகிட்ட கொஞ்சம் கோபமா கதச்சிட்டேன். ஆனாலும் நானும் எவ்வளவுதான் தாங்குவேன் அவங்களும் துஷாந்தி உள்ள வந்ததுலயிருந்து அவளை நோகடிசசிட்டிருக்காங்க ஒருதாயா எத்தனைநேரம் பொறுமையா இருக்கிறது அதான் பொங்கிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க யசோக்கா, அண்ணா நீங்களுந்தான். நாங்க தள்ளியே இருந்துக்கிறோம் நல்லபடியா எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிடுங்க இல்லாட்டி அந்தப்பழியும் பாவமும் என் மகள் தலையிலதான் விழும் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்"என்றவர் அழுதுகொண்டிருந்த துஷாந்தினியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற எத்தனிக்க அவர்கள் முன் வந்து நின்ற தேவாவோ

"என்ன அத்தை இது, யாரோ ஏதோ சொன்னாங்கன்னா நீங்க இப்படி துஷானியக் கூட்டிட்டு போயிடுவீங்களா, அதுக்கு நான் விட்டுடுவேனா? இங்கப்பாருங்க அத்தை என் கண்ணம்மாவையும் என் செல்ல மகளையும் ஏத்துக்குறவங்கதான் எனக்கு மனைவியா வரமுடியும். இதை புரிஞ்சுகிட்டா திவ்யா என் மனைவியா வருவா இல்லையென்றால் அவங்க தோது என்னவோ அதுப்படி அவங்க மகளுக்கு நல்ல வாழ்க்கைய அவங்க அமச்சுக் கொடுக்கட்டும்." என்றவன் துஷாந்தினியை தன்கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள, அதிர்ந்து நின்ற திவ்யாவிடம்

"பார்த்தாயாடி எத்தனை உரிமையா அவ கையப் புடிச்சிருக்கார். இப்பயே இப்படியிருந்தா கல்யாணத்துக்குப்பிறகு என்ன கூத்தல்லாம் காட்டப்போறாங்களோ, தெளிவாப்பேசி இன்றைக்கே முடிவெடுத்திடு." நஞ்சை அவள் நெஞ்சில் சுபத்ரா ஏற்ற, அதில் அவன் முன்னால் வந்து நின்ற திவ்யா, துஷாந்தினியின் கரங்களைப் பற்றியிருந்த அவன் கரங்களைப் பார்த்தவாறே

"தேவேஷ், எங்கப்பாம்மாவா இருந்தாலும் உங்களை அவங்க தப்பா நினைக்குறதுல எனக்கு உடன்பாடில்லை, தயவுசெஞ்சு ஒன்னே ஒன்னு சொல்லுங்க நீங்க என்னை காதலிக்குறீங்கதானே!" கண்களில் ஆவலுடன் கேட்டவளைப் பார்த்ததும் அவனுக்கும் உள்ளே ஏதோ நெருட
'திவி உன்னைக் காதலிக்கிறேனென்று பொய்சொல்ல விரும்பல்ல, ஆனால் உனக்கு நம்பிக்கையக் கொடுத்துட்டு அதை அழிக்கவும் விரும்பல்ல அதனாலதான் உன்னை என் மனைவியாக்க நினைக்கிறேன்.' தனக்குள்ளே சிந்தித்தவனின் முடிவு உறுதியாயிருந்தாலும் 'காதல் இல்லை' என்று அவளிடம் கூறமுடியாதென்பதால் அவன் அமைதியாயிருக்க

"சொல்லுங்க ஏன் இப்படி அமைதியாயிருக்கீங்க, நீங்க எதுவும் சொல்லாட்டி எங்கம்மா சொல்லுறது உண்மை என்றாகிடும். இப்பவே இவங்க எல்லார் முன்னாடியும் பதில் சொல்லுங்க தேவேஷ்."

"அவர் சொல்லமாட்டார் ஏன்னா அவருக்கு அதோ நிக்குற அந்ததுஷாந்திதான் முக்கியம் அதான் என் கண்ணம்மா, என் கண்ணம்மான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டிருக்காரே." சுபத்ரா கோபமாய்ப்பேச

"ஓம் எனக்கு என் கண்ணம்மாதான் முக்கியம்."

"உங்க கண்ணம்மா முக்கியமென்றால் எதுக்கு எங்கபிள்ளை மனசுல ஆசைய விதச்சீங்க, கல்யாணம்வரை கொண்டு வந்தீங்க, அப்போ அவளைத்தான் காதலிக்குறீங்களா?"

"ஓம் நான் என் கண்ணம்மாவைத்தான் காதலிக்கிறேன் அவளை மட்டுந்தான் காதலிக்கிறேன்." சுபத்ராவின் கேள்வியால் கோபத்தில் அவனும் வார்த்தைகளை விட, அதில் துஷாந்தினி உட்பட அனைவரும் அதிர்ந்து நிற்க, கண்களில் வலியுடன் அவன் கரங்களைப்பற்றிய திவ்யா

"தயவுசெஞ்சு இப்படி கதைக்காதீங்க தேவேஷ். நீங்க பொய் சொல்லுறீங்க, எங்கம்மா கதச்சதால, கோபத்துல கதைக்குறீங்க இனியொருதரம் இப்படிச் சொல்லாதீங்க எனக்கு நீங்கவேணும்." கண்ணீர்வழியப் பேசியவளைப் பார்த்து பரிதாபமெழ அவன் அமைதியாக

"என்னடி அவர்கிட்ட போய் கெஞ்சிட்டிருக்க, அதான் தெளிவா சொல்லிட்டாரே அவளைத்தான் காதலிக்குறேன் அவதான் முக்கியமென்று." சுபத்ராவுடன் ராமநாதனும் இணைந்துகொள்ள, அத்தனை நேரமும் அதிர்ச்சியாய் நின்றிருந்த துஷாந்தினி சுயத்தையடைந்தவள்

"என்ன வார்த்தை கதச்சீங்க தேவ் அத்தான். இத்தனை நாளா இந்த எண்ணத்துலதானா என்கிட்டப் பழகினீங்க, என் ரிஷியோட வார்த்தைக்காக இல்லையா? உங்களை நம்பினேனே என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே!" அவள் கோபமும் கவலையுமாகப் பேச

"ஐயோ! துஷானி அப்படியில்ல, இவங்க சொன்னதாலதான் நானும் கோபத்துல வார்த்தைய விட்டுட்டேன்....."

"என்னா நடிப்புடா சாமி, ரொம்பநல்லாயிருக்கு, உங்க வேசம் கலஞ்சு ரொம்பநேரமாயிடுச்சு." சுபத்ராவின் வார்த்தை வீரியத்தில்

"அம்மா, உங்களாலதான் எல்லாம் உங்களைக் கெஞ்சிக்கேக்குறேன் தயவுசெஞ்சு உங்க திருவாய மூடிட்டிருங்க." திவ்யா தாயுடன் கோபமாய்ப்பேச

"நான் ஏன்டி மூடனும் உண்மையத்தானே சொல்லுறேன்." சுபத்ரா அப்போதும் திமிராகவே பதிலளிக்க

"போதும் நீங்க எல்லாரும் கதச்சது போதும் இதுக்கு மேல யாரும் ஒருவார்த்தை கதைக்க வேணாம். நான் சொல்லுறதை மட்டும் கேளுங்க." யசோதா சத்தமிட அத்தனைபேரும் அமைதியாகி அவர் முகம் நோக்க

"இங்கப்பாருங்க சம்மந்தி, துஷாந்தினிய வச்சுத்தானே இத்தனை பிரச்சனை, இதுவே வர்ஷியா இருந்தா இப்படியெல்லாம் கதைக்க உங்களா முடியுமா? ஏன்னா அவ உங்க மருமகனோட சொந்தத் தங்கச்சி, ஆனால் உங்களைப் பொறுத்தவரை துஷாந்தி அப்படியில்ல அதனாலதான் வார்த்தைகளைக் கொட்டிட்டீங்க. ஆனால் எங்களுக்கு வர்ஷிவேற என் அண்ணன் மகள்கள் வேறகிடையாது, நீங்க இப்போ என் மூத்த மகளுக்குத்தான் இத்தனை கதை கதச்சிட்டீங்க, நானும் ரொம்பஅமைதியா அத்தனையும் கேட்டுட்டிருந்தேன் ஆனால் சுபத்ரா உங்க வார்த்தைகள் எல்லை மீறிடுச்சு. இதுக்குமேலயும் அமைதியா இருக்கக்கூடாதுன்னுதான் இப்போ நான் கதைக்கிறேன்." என்றவர் திவ்யாவை நெருங்கி

"திவ்யாம்மா! துஷாந்தியும் இந்தக் குடும்பத்துல ஒருத்தி, அதை நீ புரிஞ்சிகிட்ட, ஆனால் உங்க அப்பாம்மாவும் அதை புரிஞ்சிட்டா நல்லதும்மா. அதுதான் பின்னாடி நம்ம உறவு நல்லாயிருக்கிறதுக்கு உதவும். சரிசரி போனதெல்லாம் போகட்டும். நான் ஒருவிசயத்துல உறுதியாயிருக்கேன். நீதான் என் வீட்டு மருமகள் அதுல எந்த மாற்றமுமில்ல, அதனால கல்யாண விசயத்தைப்பத்தி மேல கதைக்கலாமென்று நினைக்குறேன் நீங்க என்ன சொல்லுறீங்க சம்மந்தி." யசோதாவின் கேள்வியில் பெற்றோரைத் திரும்பிப் பார்த்த திவ்யாவின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டவர்கள் மேலே விடயங்களைப்பற்றி கலந்தாலோசிக்கத் தொடங்கினர். ஆனால் தேவாவோ

"அம்மா! இத்தனைக்கும் பிறகு இந்தக் கல்யாணம் நடக்கனுமா? எவ்வளவு வார்த்தைகளை கொட்டிட்டாங்க என்னைக் கொஞ்சமும் புரிஞ்சிக்காதவங்க கூட எப்படிம்மா வாழ்றது அதனால இந்தக்கல்யாணப் பேச்சை இத்தோட நிறுத்திடுங்க. இந்தக்கல்யாணம் நடக்காது." என்றவன் துஷாந்தினியையும் அழைத்துக்கொண்டு அவ்விடம்விட்டு நகர்ந்தான் அவன் இழுப்புக்கு கூடவந்தவளோ சட்டென்று அவன் கைகளை தட்டிவிட்டு அவனைத்தடுத்து நிறுத்தியவள்

"தேவ்வத்தான், என் ரிஷியின் வார்த்தைக்காகத்தான் உங்ககூட கதச்சிட்டிருக்கேன், இந்தக்கல்யாணம் மட்டும் நின்னுட்டா மொத்தப்பழியும் என்மேலதான் விழும். திவ்யாக்காவ நீங்க விருப்பப்பட்டுத்தானே கட்டிக்க சம்மதிச்சீங்க, ஊரறிய எல்லாம் செஞ்சுட்டு இப்போ சட்டென்று கல்யாணம் பண்ணிக்கமுடியாது நிறுத்துன்னா என்ன அர்த்தம். அதுவும் என்னால. அவங்க வாழ்க்கைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்களா? அதைவிடுங்க அவங்கப்பாம்மாதான் உங்களை புரிஞ்சிக்காம பேசுறாங்க ஆனால் ஒருஇடத்திலயும் திவ்யாக்கா உங்களை விட்டுக்கொடுக்கவே இல்லையே அப்படிப்பட்டவங்கள நீங்க கைவிடுறது சரியா? தயவுசெஞ்சு இதை நிறுத்திடாதீங்க. இந்தக்கல்யாணம் கட்டாயம் நடக்கனும் உங்களை கெஞ்சிக்கேக்குறேன். எந்தப்பழிபாவத்தையும் என்னை சுமக்கவச்சிடாதீங்க." கண்களில் கண்ணீரோடு கெஞ்சிய துஷாந்தினியிடம்

"ஆனால் அவங்கதான் எதையும் கேக்கத் தயாராயில்லையே! நான் திவிகூட தனியாக் கதைக்க நினைச்சா அதுக்கு அவங்கம்மா தடைபோடுறாங்க எதையும் புரிஞ்சிக்காம எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது. அந்த வாழ்க்கை சந்தோசமாயிருக்குமா? இங்கப்பாரு துஷானி, காதல் ரெண்டு மனசு சம்மந்தப்பட்டது, ஆனால் கல்யாணம் ரெண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது. எவ்வளவு வார்த்தைகளை கொட்டிட்டாங்க என்னால அவங்களை ஏத்துக்கமுடியாது. அவங்களை விலக்கிவச்சுட்டு திவியால என்கூட நிம்மதியா வாழமுடியுமா? துஷானிம்மா! இந்தக்கல்யாணம் நிக்குறதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமுமில்லை."

"தேவ்வத்தான்! நீங்க அப்படி நினைக்கலாம் ஆனால் மத்தவங்க எல்லோரும் என்னாலதானென்று சொல்லுவாங்க. ப்ளீஸ் இப்பவே உள்ளபோங்க, யாருசொன்னாலும் கேக்காதீங்க, திவ்யாக்காகிட்ட மனசுவிட்டுப்பேசுங்க உங்களை நூறுவீதம் புரிஞ்சுக்கிற திவ்யாக்காவ அற்ப காரணத்துக்காக கைவிட்டுடாதீங்க, போங்கத்தான் நிதானமாப்பேசி கல்யாணத்தை முடிவுபண்ணுங்க. அதுமட்டும் நடக்கல்லன்னா இனி நான் உங்ககூட என்றைக்கும் கதைக்கவேமாட்டேன் என்ரிஷி வீட்டுக்கே போயிடுவேன். இதுஉறுதி." அவளின் வார்த்தைக்காக உள்ளே சென்றவன் நேராக அழுதுகொண்டிருந்த திவ்யாவிடம் சென்று அவளுடன் தனியாகப் பேசவேண்டுமெனக்கூற அப்போதும் சுபத்ரா வாயை விட அவரை உறுத்து விளித்தவன்

"இதுக்குமேல ஒருவார்த்தை கதச்சீங்க மரியாதை கெட்டுடும். நான் திவிக்கிட்ட கதைக்க நினைக்கிறேன். எங்க கல்யாணத்தைப்பத்தி இதுல யாரும் தலையிட வேணாம். என்ன திவி கதைக்கலாமா?" என்றதும் அவனின் 'எங்க கல்யாணம்' என்ற வார்த்தையில் மகிழ்ந்தவள் உடனே சரியென தலையாட்ட அவளை சுபத்ரா தடுக்க தாயாரை அடக்கியவள் ஆணவனுடன் தனியாகப் பேசச்செல்ல, ரிஷிதரனின் கடைசி நிமிடங்களில் நடந்தவற்றை மீண்டும் கூறியவன்

"இதுல உனக்கேதும் பிரச்சனையிருக்கா?" கேட்டதும் இல்லையென்றவளிடம் திருமணம் செய்ய சம்மதமா? எனக்கேட்க நாணத்துடன் ஆமெனத் தலையாட்டியவள்,

"தேவேஷ், எனக்குப் பொறாமையாயிருக்கு நான் திவியா இல்லாம உங்க கண்ணம்மாவா இருந்திருக்கலாம். ஸி இஸ் வெரி லக்கியஸ்ட் கேர்ள் உங்க அன்பு கிடைக்க, இன்னைக்கு நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்கன்னா அதுக்கு முதல் முழுக்காரணம் துஷாந்திதான் அவளை பார்த்துக்க வேண்டியது என் கடமையும்கூட. இதுல எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல." என்றதும்

"உங்க வீட்டுல இதை ஒத்துக்க தயாரில்லையே."

"அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க வாங்க." என்றவாறு முன் நடக்க பின்னோடு வந்தவன் கைகட்டி நிற்க, தாயிடம் வந்தவள்

"அம்மா, நாங்க பேசி முடிவெடுத்திட்டோம் நீங்க கல்யாண விசயத்தைபற்றி கதச்சு நாளைக் குறிச்சிடுங்க." என்றவள் பெற்றோரின் சார்பாக அனைவரிடமும் மன்னிப்பை வேண்டியவள் துஷாந்தினியிடமும் மன்னிப்புக் கேட்க, தேவேஷ்வாவும் அனைவரிடமும் மன்னிப்புக் கோரினான். யசோதாவிடம் திரும்பிய திவ்யதர்ஷினி,

"அத்தை இதுக்கு மேலயும் பிந்திப்போடாம சீக்கிரமா எங்க கல்யாணத்திகதியக் குறிச்சிடுங்க." என்றதும் மேற்கொண்டு மேலே பேசியவர்கள் திருமணத்திற்கான நாளையும் குறித்துக்கொண்டனர்.

inbound1575666663185689805.jpg

காணும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 

Fasna

Moderator
கண்கள்-15 (இறுதி அத்தியாயம்)


inbound703132803361829649.jpg

"நான் வரல்ல தேவ்அத்தான் என்னால இதுக்கு மேலயும் எந்தப்பேச்சும் கேட்கமுடியாது என்னை விட்டுட்டுங்க."

"நீயில்லாம நான் போகப்போறதுமில்ல, அம்மா, பாட்டி நீங்களாவது சொல்லுங்க."

"கண்ணா! அவ சொல்லுறதுலயும் ஒருநியாயமிருக்குப்பா. நம்மகூட வந்து திவ்யா வீட்டுல கொஞ்சம் முகஞ்சுழிச்சாலும் நம்ம துஷாந்தி துடிச்சுப்போயிடுவா. அவ இங்கயே இருக்கட்டும் நாம போய்ட்டு வந்திடலாம்." யசோதா கூற

"அதெல்லாந்தெரியாது எனக்கு என் கண்ணம்மா என்கூட வரணும் அவ்வளவுதான்." அவன் பிடிவாதமாய் நிற்க

"ஏன் தேவ்வத்தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க. இங்கப்பாருங்க அங்கவந்து அவங்க ஏதாச்சும் கதச்சா ஏன் முகத்தைத் திருப்பினாலே என்னால தாங்கமுடியாது. அவங்க புடவையெடுக்க சந்தோசமா வருவாங்க என்னால அவங்க சந்தோசம் பாதிக்கவேணாமே. ப்ளீஸ் என்னை விட்டுட்டுங்க நான் வரல்ல."

"இதுக்கே இப்படிச் சொல்லுற? அப்போ எப்படி கல்யாணத்தப்ப என்கூடவே நிக்கப்போற?" அவள் புரியாமல் நோக்க

"இங்கப்பாரு, அவங்க சொல்லுறாங்க இவங்க சொல்லுறாங்கன்னு ஒதுங்கிப்போய் நிக்கக்கூடாது கல்யாணமேடையிலே நீ என் பக்கத்திலயே நிக்கனும் விளங்கிச்சா துஷானி. நான் சொல்லுறதுக்கு மாறா ஏதாவது நடந்துச்சு பிறகு நான் என்ன செய்வேனென்று எனக்குத்தெரியாது."

"அதைப்பிறகு பார்க்கலாம் இப்ப என்னால வரமுடியாது. அவங்க ஏதாச்சும் செஞ்சா என்னால தாங்கமுடியாது புரிஞ்சிக்கோங்க."

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. இவ்வளவு தெளிவாக் கதச்சபிறகும் அவங்க முகஞ்சுழிப்பாங்களா? அதெல்லாமில்ல. நீ வா போகலாம், இல்ல நானும் போகல்ல." இறுதியாக அவன் பிடிவாதமே வெல்ல வேறுவழியின்றி துஷாந்தினியும் அவனுடன் திருமணத்திற்கான ஆடை தெரிவிற்குச் சென்றாள். மணமகளுக்கு ஆடையைத் தெரியும்முன், தன் கண்ணம்மாவிற்கே முதலில் புடைவையைத்தெரிய, அதில் பற்களைக்கடித்த சுபத்ராவை அமைதிப்படுத்திய ராமநாதன் எதுவும் கூறாதபோதும் அவருக்கும் அது பிடிக்கவில்லை. அவர்களின் முகபாவத்திலே அவர்களின் உள்ளம் தெள்ளத்தெளிவாய்த் தெரிய துஷாந்தினியும் உள்ளூரக் கலங்கிப்போனாள். அதைப் புரிந்துகொண்ட தேவேஷ்வா பெண்ணவளை அமைதிப்படுத்தினான்.

பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் தேவேஷ்வாவின் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து விழாவைத்தொடங்க, இருவீட்டு உறவுகளும், நண்பர்களும் கலந்துகொண்டனர். பொன்னுருக்குவதற்கு வந்த ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிக்கும் முன் வள்ளியம்மை தன்னுடைய தாலிக்கொடியை ஆச்சாரியாரிடம் கொடுத்தவர் அதற்கு பூஜைசெய்து அதையே உருக்கச்சொல்ல

"என்ன பாட்டி ஏன் உங்க தாலியக் கொடுக்குறீங்க?" தேவேஷ்வா கேட்டதும்

"இங்கப்பாரப்பா, உன் தாத்தா எனக்காக போட்ட தங்கத்துல என் பேரப்பிள்ளைகளுக்கு பொன்னுருக்கும்போது கொடுக்க நினச்சேன் அதேமாதிரி என் மூனு பேத்திங்களோட தாலிக்கொடியிலயும் இந்த வள்ளியம்மையோட பொட்டுத்தங்கமாச்சும் இருக்கும். ஆனால் இது என் தாலிக்கொடி நியாயமா இது என் மகன்வழி பேரனுக்கு சேரவேண்டியது ஆனால் என் மகனுக்கு மூனும் பொம்பளப்பிள்ளையளாப் போனதால என் மூத்த பேரனுக்கு இதுலதான் தாலிக்கு பொன்னுருக்கனுமென்று அப்பவே முடிவு செஞ்சுட்டேன். அதுக்காகத்தான் இதைக் கொடுக்கிறேனப்பா." என்று ஆச்சாரியாரிடம் தாலிக்கொடியை நீட்ட அவரும் பூஜித்து பொன்னை உருக்கிய பின்னர் ஒருதட்டில் பாக்கு,பழம்,பூ,மஞ்சள்,குங்குமம், தேசிக்காயுடன் வெற்றிலையின் மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து அதை தேவேஷ்வாவிடம் கொடுத்ததும் அவனும் பூஜையறையில் வைத்து வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருந்த சபையோருக்கு காண்பித்தான். ஆச்சாரியாரிடம் பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைக்க இனிதாக நிறைவேறியது பொன்னுருக்கல் வைபவம்.

அடுத்தடுத்தாய் மூலைப்பாலி இடல், பந்தக்கால் ஊன்றல், திருமணத்திற்குரிய பலகாரங்களைச் செய்தல், மருதாணிவிழா என திருமணத்திற்கான சடங்குகள் ஒவ்வொன்றாய் நிறைவேற திருமணநாளும் அழகாக விடிந்தது.

அதிகாலையிலே எழுந்து சடங்கு சம்பிரதாயங்களை முடித்தவனுள்ளே யோசனை ஓடிக்கொண்டேயிருந்தது. 'என்ன சொன்னாலும் துஷானிக்கு ஒரு வாழ்க்கைய அமச்சுக் கொடுக்காம அவசரப்பட்டு நான் திவியக் கட்டிக்க சம்மதிச்சிருக்கக்கூடாது. இனி என் துஷானிக்கு யாரிருக்கா? என்னால இப்போ எப்படி நிம்மதியா திவிய கட்டிக்கமுடியும்.' சிந்துக்கொண்டிருந்தவனிடம் வந்த விஷ்வானந்தன்

"என்ன அண்ணா தயாராகிட்டீங்களா? மாப்பிள்ளை அழைக்க வரப்போறாங்க." அமைதியாய்க் கூறியவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தவன்

"உனக்கு என்னடாச்சு ஒருமாதிரி இருக்க?"

"கொஞ்சம் தலவலியண்ணா, குளிசை போட்டிருக்கேன் சரியாகிடும். சரியாகாட்டியும் சரியாக்கிடனும்."

"என்னடா ஒருமாதிரி கதைக்கிறாய்?"

"ஒன்னுமில்ல அது என் தலைவலி சீக்கிரமே போயிடும். நீங்க வெளிக்கிட்டயலா அம்மா பார்த்துட்டு வரச்சொன்னாங்க." பேசிக்கொண்டிருக்கும் போதே மணத்தோழன் மணமகனை அழைத்துச்செல்ல வர மலர்மாலையை கழுத்தில் சூடியவன் மணவறை நோக்கிச்சென்றான்.

மணமகனுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முடிக்க, மேடையேறி வந்த மணப்பெண்ணவளும் முதலில் தன்னவனை நோக்க சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனோ அவள் பக்கம் திரும்பவேயில்லை. அதில் உள்ளம் வாட அமர்ந்தவள் தனக்கான சடங்கு சம்பிரதாயங்களை முடிக்க அனைவரிடமும் ஆசிபெற்ற கூறைத்தட்டை தேவாவிடம் கொடுத்த ஐயர், அதை திவ்யதர்ஷினியிடம் கொடுக்கச் சொல்ல அப்பொழுதும் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தட்டை நீட்ட அதில் அவள் உள்ளம் மேலும் வாட அவனிடம் தட்டைப் பெற்றுக்கொண்டவள் உடைமாற்றிவர உள்ளே சென்றாள்.

மணப்பெண் முகூர்த்தப்புடைவை மாற்றிவர உட்செல்ல வர்ஷினி, நந்தனியுடன் தேவேஷ்வாவின் வேண்டுகோளில் துஷாந்தினியும் கூடவே செல்ல அவளைத் தடுக்கும் நோக்குடன் சென்ற சுபத்ரா பெண்ணவளை தனியாக அழைத்துச் சென்றவர்

"ஏன் துஷாந்தி, உனக்கு அறிவில்லையா? நீ ஒரு விதவை, என் மகள் இன்றைக்குத்தான் வாழ்க்கைய ஆரம்பிக்கப்போறா மருமகன்தான் சொன்னாறென்றா உனக்கெங்க போச்சு அறிவு. உன்னைக் கஷ்டப்படுத்த வேணாமென்று உன் குடும்பத்துல இருக்கிறவங்க ஆயிரம் கதை சொல்லுவாங்க அதையெல்லாம் உண்மையென்று நம்பி எல்லாத்துலயும் முன்ன நிக்குற." அவள் மனதை உடைக்க அதில் அவள் கண்கள் கலங்க அப்போதுதான் அவள் அணிந்திருந்த புடைவையில் பார்வையைப் பதித்தவர்

"ஓ....எங்க மருமகன் வாங்கித் தந்த புடவையில்ல, அவருக்குத்தான் தெரியல்ல புருஷனில்லாதவ இப்படி கலர்கலரா புடவை கட்டக்கூடாதுன்னு உனக்கும் உங்கம்மாவுக்கும் நல்லாத் தெரியுமில்ல, அதுசரி அவங்களும் உன்னமாதிரி சின்னவயசுலயே புருஷனை இழந்தவயில்ல அவக்கு எப்படித்தெரியும். அவவும் நல்லா கலர்கலராத்தானே புடவை கட்டிட்டுத் திரியுறா. உங்க ராசி என்ன ராசியோ கட்டிக்கிட்ட புருஷனை காவு வாங்குறது. புருஷன் செத்தவமாதிரியா நடந்துக்கிற என்னம்மோ புதுப் பொண்ணுமாதிரித்தான் நல்லா தளுக்கி மினுக்கிட்டுத்திரியுற, இங்கப்பாரு என் மகள் கல்யாணம் முடியும்வரை அந்தப்பக்கம் தலை காட்டக்கூடாது. எங்க மருமகன் சொன்னாலும் அங்க நீ வரவேகூடாது. விளங்கிட்டா போ முதல்ல இங்கயிருந்து போ." என்றவர் அவள் தோள்பிடித்து தள்ளிவிட அதில் தடுமாறி விழப்போனவளை தாங்கிக்கொண்டார் வாசுகி.

"நினச்சேன் நீங்க அவசர அவசரமா மேடையவிட்டு இறங்கி வரும்போதே நினச்சேன். என் மருமகளை ஏசத்தான் வந்திருக்கீங்கன்னு. நினச்சமாதிரியே நடத்திட்டீங்க. இங்கப்பாருங்க உங்க மருமகன் மருமகனென்று சொல்லிறீங்களே அந்த மருமகன் என் மருமகளோட ஒரு வார்த்தைக்காகத்தான் உங்க மகள் கழுத்துல தாலி கட்ட சம்மதிச்சார். அதை ஞாபகத்துல வச்சுட்டு மிச்சத்தைக் கதைங்க விளங்கிச்சா. இவளை அங்க வரவேணாமென்று சொல்லுறீங்களே இவ வராமவிட்டா உங்க மகள் கழுத்துல தாலி ஏறுறது சந்தேகந்தான். பிறகு நீங்களா வந்து இவ கையப்பிடிச்சு கூட்டிட்டுபோக வேண்டியிருக்கும் பார்த்து கவனம்." சுபத்ராவிற்கு சரமாரியாக கொடுத்தவர் கலங்கி நின்ற தன் மருமகளையும் அழைத்துக்கொண்டு மண்டபத்திற்குச் செல்ல எத்தனிக்க துஷாந்தினியோ வரமறுக்க அவளை அதட்டி உள்ளழைத்துச் சென்றார் வாசுகி.

அத்தனை நேரமும் தன் கண்ணம்மாவை காணாமல் தவித்திருந்தவன் வாசுகியுடன் வந்தவளை கண்டதும்தான் ஆசுவாசமாக, அவள் முகத்திலிருந்த சோகமும் கண்ணில் தெரிந்த கண்ணீரும் ஆணவனுக்குள் கேள்விகளை எழுப்ப மணவறையிலிருந்தவாறே கண்களால் என்னவென வினவியவன் மேடைக்கு வருமாறு அழைக்க, அவளோ ஒன்றுமில்லை எனத் தலையாட்டி மேடையேற மறுத்தவள் ஒருஓரமாய்ச் சென்று நிற்க எதுவும் விளங்காமல் அவளையே பார்த்திருக்க சற்று இடைவெளிவிட்டு அவர்களின் பின்னால் வந்த சுபத்ராவைக் கண்டதும் அத்தனையும் அவனுக்கு அவள் சொல்லாமலே விளங்கியது.

கோபங்கொண்டவனாய் மணமேடையிலிருந்து எழத்தொடங்கியவனை, அமைதியாக இருக்கும்படி கண்களால் கெஞ்சிய துஷானிக்காக அமர்ந்தாலும் அவனுள் கோபம் கனல்விட்டு எரியத்தொடங்கியது. விஷ்வானந்தை அருகே அழைத்தவன் துஷாந்தினியை மேடைக்கு அழைத்துவரச் சொல்ல அவனும் சென்று பெண்ணவளை அழைக்க அவள் மறுக்க இங்கிருந்தவாறே அவள் வராவிடில் எழுந்து சென்றுவிடுவதாய் அவளை பயங்காட்டி அழைக்க அதற்குமேல் அங்கு நிற்காமல் மேடையேறி வந்தவளை முறைத்துப் பார்த்தார் சுபத்ரா. அவரின் பார்வையைக் கண்ட தேவா அவர்மேல் கொலைவெறியாக, துஷாந்தினியோ தேவாவை சமாதானப்படுத்தியவள் சுபத்ராவின் வெறுத்த பார்வையைத் தாங்கமுடியாமல் அவள் மற்றையவர்களின் பின்னால் நின்றவேளை முகூர்த்தப்பட்டுடுத்தி மணமேடை நோக்கிவந்தாள் திவ்யதர்ஷினி. வந்தவள் தன்னவனுக்கு மாலை அணிவித்து அவனருகே அமர சடங்குகளை ஆரம்பித்த ஐயர் மந்திரங்கள் கூறி பொற்தாலிக்கொடியை ஆணவனிடம் நீட்ட கைகளில் வாங்கியவன் சபையோருக்கு காட்டிவிட்டு எழுந்து நின்றவன் தன் கண்ணம்மாவைத்தேட அவளோ இன்னும் மறைவிலே நிற்க அவளை முன் வரக்கூறியதும் அவளும் சுபத்ராவைப் பார்த்தவாறே தயங்கித் தயங்கி வந்தவள் நந்தினி,வர்ஷினியுடன் மணப்பெண்ணின் பின்னால் நிற்க

"அவ்வளவு சொல்லியும் முன்னாடி வரதைப்பாரு இத்தனை சுமங்கலிகள் இருக்கும்போது, இந்த அமங்கலி முகத்துல முழச்சிட்டு தாலி கட்டினா என் மகளோட வாழ்க்கை என்னாகிறது ஐயோ கடவுளே என் மகள் வாழ்க்கையைக் காப்பாத்து. தாலி அறுத்ததுக்கெல்லாம் நல்ல காரியத்துல முதலிடம். எல்லாம் நம்ம நேரம்." கணவனிடம் முறைப்பட்ட சுபத்ரா வாய்க்குள்ளே முணங்கியது மிகத்தெளிவாக தேவாவின் காதுகளில் விழ கண்மூடித் திறந்தவன் திவ்யதர்ஷினியைப் பார்க்க அவளோ அவன் கைத்தாலி தன் கழுத்தில் சேர்வதற்காய் ஆசையும் சந்தோசமுமாய் கரங்கூப்பி கண்மூடிக் காத்திருக்க, ஐயரோ மந்திரங்களைச் சொல்லத்தொடங்க மங்கள வாத்தியங்களும் முழங்க, தனக்குள் முடிவெடுத்தவன் திவ்யதர்ஷினியின் பின்னால் நின்றிருந்த துஷாந்தினியின் கழுத்தில் மங்களநாணைப் பூட்டிவிட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வில் அத்தனைபேரும் அதிர்ச்சியாய் நிற்க, திருமணமந்திரம் சொன்னபோதும் தன் கழுத்தில் அதுவரை தாலியேறாததை உணர்ந்தவளாய் மெல்லக் கண் திறந்த திவ்யதர்ஷினி, தன் தலைக்கு மேலாய் ஆடவனின் கைகள் நீண்டிருக்க தன் கழுத்திற்கு வரவேண்டிய தாலி துஷாந்தினியின் கழுத்திலேறியதைப் பார்த்தவள் அதிர்ச்சியும் கவலையுமாக எழுந்து நின்றவளிடம்

"படிச்சுப்படிச்சு சொன்னேனேடி நீதான் கேக்கல்ல, தேவேஷைத் தெரியும் இந்த துஷாந்தியைத்தெரியும் அவங்க அப்படிப்பண்ண மாட்டாங்கன்னு சொன்னயில்ல இப்போ என்ன பண்ணிருக்காங்கன்னு பார்த்தாயாடி, உன் தலையில மொட்டடிச்சட்டாங்கடி இப்படி சபையைக் கூட்டிவச்சு நம்மள அவமானப்படுத்திட்டாங்களே. இனி யாருடி உன்னை கல்யாணம் கட்டிக்குவா. ஐயோ! ஐயோ! இப்ப நான் என்ன செய்வேன்." சுபத்ரா ஒப்பாரி வைக்க தேவேஷ்வாவோ கோபமாய்த் திரும்பியவன்

"நான் இந்த முடிவெடுக்க நீங்கதான் காரணம் நீங்க மட்டுந்தான் காரணம். இன்றைக்கு நேத்தா என் கண்ணம்மாக்கு கதைக்குறீங்க. வர்ஷி கல்யாணத்துலயிருந்து ஆரம்பிச்சீங்க இந்தநொடி வரை நிறுத்தவேயில்லையே இப்பகூட உங்க மகள் கழுத்துலதான் தாலிகட்ட எழுந்திருச்சேன் ஆனால் நீங்க வார்த்தையால துஷானியக் கொட்டினீங்க அவளும் அத்தனை வலியையும் தாங்கிட்டுத்தான் என் ஒற்றை வார்த்தைக்காக இங்க வந்து நின்னா. அவ அமங்கலி என்றதுதானே பிரச்சனை இனிமே அப்படிக்கிடையாது என் துஷானி நான் உயிரோட இருக்கிறவரை என்றைக்கும் சுமங்கலியாத்தானிருப்பா." என்றவன் ஐயரிடம் திரும்பி குங்குமத்தைப் பெற்றுக்கொண்டவன் கண்களில் நீர்வடிய நடந்ததை உணரமுடியாமல் அதிர்ந்து நின்ற பெண்ணவளின் தாலியிலும் நெற்றிவகிட்டிலும் குங்குமத்தை வைத்துவிட்டவன்

"இனியொரு வாட்டி என் கண்ணம்மாவை அமங்கலின்னு சொன்னீங்க நடக்குறதே வேற." என்றதும்

"இவளுக்கிட்ட எத்தனை வாட்டி சொன்னேன் என் கண்ணம்மா என் துஷானின்னு சொல்லிட்டுத் திரியிறான் அவனுக்கு உன்மேல விருப்பமேயில்லன்னு இந்தபுத்தி கெட்டவளுக்கிட்ட எத்தனை தரம் சொன்னேன் கேட்டாளா? புருஷனை முழுங்கி இரண்டாவது வருஷமே அடுத்தவளுக்கு நிச்சயம் பண்ணினவனை தனக்கு புருஷனாக்கிக்கிட்டா. ச்சை இதெல்லாம் ஒரு பொழப்பு." சுபத்ரா பாம்புபோல் விஷத்தைக் கக்க அதில் துடித்தவளோ

"போதும் ஆன்ட்டி வார்த்தைகளைக் கொட்டாதீங்க. தேவ்வத்தான்! ரொம்ப நன்றி செய்யக்கூடாத காரியத்தை செஞ்சு என்னை இப்படி நிரந்தரமா பாவத்துக்கும் பழிக்கும் ஆளாக்கிட்டீங்களே! இது உங்களுக்கே நியாயமா? என் ரிஷி இந்த உலகத்துல இல்லாட்டியும் அவர் மனைவியாய் அவரை நெஞ்சில சுமந்து வாழ்ந்திட்டிருக்கிற என்னை இப்படிக் களங்கப்படுத்திட்டீங்களே!" அவள் தேவாவிடம் கோபமாய் கதற

"என்ன நடிப்பு, நீ இதுக்குத்தானே ஆசைப்பட்ட...." சுபத்ராவும் மேலே சுடுசொற்களைக் கொட்டிக் கொண்டிருந்தவேளை

"தர்ஷி...." என்று கத்தியவாறே மயங்கி சரிந்தவளை மடிதாங்கிக் கொண்டான் விஷ்வானந்தன். அவன் அலறலில் தங்கள் சண்டையை மறந்தவர்கள் அவளை நெருங்க அப்போதுதான் தேவாவிற்கு திவியின் ஞாபகமே வந்தது. சுபத்ராவின் விஷவார்த்தைகளில் கோபம் தலைக்கேற அந்த வார்த்தையை தன் கண்ணம்மாவைப் பார்த்து இனியாரும் கூறிடக்கூடாது, அதில் அவள் கலங்கவும் கூடாதென நினைத்தானே தவிர, திவ்யதர்ஷினியை நினைக்க மறந்தான். அவனும் திவியை நெருங்க அவனை தடுத்த சுபத்ரா மேலும் வார்த்தைகளை விட, விஷ்வானந்தனோ பெண்ணவளை மயக்கம்தெளியச் செய்ய, மெல்ல எழுந்தவளுக்கு அவனே நீரைப் புகட்டியதும் எழுந்தமர்ந்தவள் தேவாவை நேராகப் பார்த்து

"ஏன் தேவேஷ் ஏன் இப்படி பண்ணீங்க? உங்க தாலிக்காக ஆசையாக் காத்திருந்த எனக்கு இப்படி அநியாயம் பண்ணிட்டீங்களே! இது உங்களுக்கே நியாயமா? உங்க மனசுல துஷாந்திதான் இருக்கான்னா அப்பவே சொல்லியிருக்கலாமே நானே விலகியிருப்பேன். உங்களுக்காக என்னனென்றாலும் செய்யத் தயாராயிருக்கிற நான் இதை செய்யமாட்டேனா? இப்படி மணமேடைவரை கூட்டிட்டு வந்து கைவிட்டுட்டீங்களே!" அவள் வார்த்தைகள் அவனை சாட்டையாலடிக்க

" யாருகிட்டடி நியாயம் கேக்குற அநியாயம் பண்ணவங்களிட்டேயா? அங்க எப்படிடி நியாயம் கிடைக்கும்."

"அம்மா! கொஞ்சம் அமைதியாயிருப்பீங்களா நான் என் தேவேஷ்கிட்ட......சோரி சோரி நீங்க என் தேவேஷ் இல்லல்ல இனி உங்க துஷானிக்கு மட்டுந்தான் சொந்தமில்ல." கண்ணீரோடு கூறியவள் தாயிடம்

"அம்மா! நான்தான் அவர்கிட்ட கதச்சிட்டிருக்கனில்ல, நீங்க பேசாம அமைதியாயிருங்க. ப்ளீஸ்."

"திவி! நான் பண்ணினது மகா தப்புதான், துஷானிய யோசிச்ச நான் உன்னை யோசிக்க மறந்துட்டேன் உங்கம்மா கதச்ச வார்த்தைகளாலதான் நான் இப்படியொரு முடிவெடுக்க வேண்டியதாப்போச்சு. இந்த ஊர் வாய்க்கிட்டயிருந்து என் கண்ணம்மாவைக் காப்பாத்தனுமென்ற வேகம் வந்துச்சே தவிர உன்னை ஏமாத்தனுமென்று சத்தியமா நினைக்கல்ல நான் சொல்லுற சமாதானமெல்லாம் உன் வலிக்கு ஈடாகாது, மன்னிச்சிடுன்னு என்னோட ஒருவார்த்தையும் உன் வலியைக் குறஞ்சிடாது. இருந்தாலும் கேக்குறேன் என்னை மன்னிச்சிடு திவி." அவள் கரம்பற்றி மன்னிப்புக் கேட்க அவள் அமைதியாயிருக்க

"முடிஞ்சிடுச்சு எல்லாமே முடிஞ்சிடுச்சு. அப்படி கல்யாணமேடை வரக் கூட்டிவந்து கழுத்தறுத்துட்டு இப்ப மன்னிப்புக்கேட்டா சரியா?"

"அம்மா போதும். வார்த்தைகளைக் கொட்டடாதீங்க ப்ளீஸ். உங்க வார்த்தைகள்தான் இன்றைக்கு என் வாழ்க்கையையே அழிச்சிடுச்சு." என்றவள் முகம்மூடி குலுங்கியழ

"ஐயோ என் ராசாத்தி அழாதம்மா, இப்படி என் மகளை கதறவச்சிட்டீங்களே நீங்க நல்லாயிருப்பீங்களா? இந்தத் தாலி நிலைக்குமா?" அவர் சாபம்விட அதில் பயந்த மஞ்சுளா

"ஐயோ! அப்படி சபிக்காதீங்க ஏற்கனவே தாலி இழந்து அதுலயிருந்து மீள்றதுக்குள்ள ஏதேதோ நடந்திடுச்சு. இப்ப ஏறின தாலியாலும் என் மகள் கழுத்துல தங்கட்டும் உங்களைக் கெஞ்சிக்கேக்குறேன் இப்படி பேசாதீங்க." சுபத்ராவிடம் கெஞ்ச அவரோ

"அதான் உங்க மகள்ட கழுத்துல தாலியேறிடுச்சே ஆனால் என் மகள் இன்றைக்கு இப்படி அவமானப்பட்டு அசிங்கப்பட்டு தனியா நிக்குறா, இனி அவளை யாருதான் கட்டிக்குவா ஐயோ நான் என்ன செய்வேன்." அத்தனை நேரமும் கோபமாயிருந்த தேவாவிற்கும் சுபத்ராவின் கதறல் நெஞ்சை உருக்க, நடப்பவை அனைத்தும் யசோதாவின் கண்களில் கனவுபோல் தோன்ற அப்படியே சிலையாய் நின்றிருந்தவருக்கு அப்போதுதான் உயிர் வந்ததுபோல் உணர்ந்தவர், ராமநாதனிடமும் சுபத்ராவிடமும் மன்னிப்பை வேண்ட அவர்களோ வாய்க்கு வந்தமாதிரி திட்டித்தீர்க்க அப்போதும் தேவேஷ்வாவிற்கு ஆதரவாய்ப் பேசி பெற்றவர்களிடம் மேலும் தீட்டை வாங்கிக்கொண்டாள் திவ்யதர்ஷினி.

"சம்மந்தி திவ்யாம்மாவ ஏசாதீங்க."

"யாருக்கு யாருங்க சம்மந்தி? அதான் எல்லாத்தையும் உங்க அண்ணன் மகள் கெடுத்துட்டாவே, இனியும் இங்க நமக்கென்ன வேலை, சுபா, திவ்யாவையும் கூட்டிட்டு வா போகலாம்." என்ற ராமநாதனின் கூற்றில் துஷாந்தினி அழ, அவரோ மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டிருக்க தேவேஷ்வா அவர்களிடம் மன்னிப்புக் கேட்க அவர்களோ அவனையும் துஷாந்தினியையும் வார்த்தைகளால் நோகடிக்க அத்தனையும் பார்த்திருந்த யசோதா ஒருமுடிவுடன் கணவனையும் இளையமகனையும் உள் அழைத்துச்சென்றவர், விஷ்வானந்தனிடம்

"விஷ்வா! அம்மா ஒன்று கேட்பேன் மறுப்பாயாப்பா?" தாய் தன்னிடம் என்ன கேட்க வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டவன்

"அம்மா! எனக்கு தர்ஷியக் கட்டிக்க மனப்பூர்வமான சம்மதம்மா. என்னதான் அண்ணன் நியாயம் சொன்னாலும் தர்ஷிக்கு அவர் பண்ணியது அநியாயம்தான். அந்த சாபம் நம்ம குடும்பத்துக்கு வேணாம்மா. அண்ணனுக்காக நம்ம குடும்பத்துக்காக என் தர்ஷிக்காக நான் இந்த முடிவை மனப்பூர்வமா எடுத்திருக்கேன்." என்றவனை தாயும் தந்தையும் அணைத்துக்கொள்ள, வெளியே வந்தவர்கள் நேராக சுபத்ராவிடம் சென்று

"சம்மந்தி....."

"அப்படிக்கூப்பிடாதீங்க. அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே."

"அப்படி எதுவும் முடியல்ல, நான் சொன்னதுலயும் எதுவும் மாறல்ல, நான் சொன்னமாதிரி திவ்யாதான் எங்க வீட்டு மருமகள்." யசோதா கூறியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகபாவத்தைக் காட்ட சுபத்ராவோ

"அதெப்படி அதான் உங்க மகனுக்கு கல்யாணமாகிடுச்சே."

"எனக்கு இன்னொரு மகனும் இருக்கு. இதோ விஷ்வானந்தன் உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சவன்தான். உங்க மகளோட நல்ல ப்ரண்ட் சொல்லுங்க சம்மந்தி உங்க மூத்த மகளை என் இளைய மகனுக்கு கல்யாணம் கட்டித்தர சம்மதமா?" என்றதும்
ராமநாதனுக்கும் சுபத்ராவிற்கும் மகளின் வாழ்க்கைக்கு நல்லதொரு வழி கிடைத்துவிட்டதென மகிழ்ந்தாலும் ஞாபகம் வந்தவராய்,

"எங்களுக்கிட்ட கேக்குறது இருக்கட்டும் உங்க மகனுக்கிட்ட சம்மதம் கேட்டீங்களா?" யசோதா பதில்கூறத் தொடங்கும் முன்னே

"ஆன்ட்டி, எனக்கு தர்ஷிய கல்யாணம்பண்ணிக்க மனப்பூர்வ சம்மதம். ஆனால் தர்ஷிக்கு சம்மதமா என்று கேளுங்க." அவன் கூறிய வார்த்தையில் திவ்யாவோ அதிர்ந்து நிற்க அவளிடம் வந்த சுபத்ரா பெண்ணவளின் சம்மதம் கேட்க தன்னுடைய தெரிவுதான் தவறாகிப்போனது பெற்றோரின் தெரிவாவது சரியாக இருக்கட்டுமென எண்ணியவள் விருப்பமில்லாவிடினும் பெற்றோருக்காக விஷ்வாவைத் திருமணம் செய்ய சம்மதித்ததும் அந்நாளில் அடுத்துவந்த முகூர்த்தவேளையில் திவ்யதர்ஷினியின் கழுத்தில் மங்களநாணை அணிவித்தான் விஷ்வானந்தன்.

இருஜோடிகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் ஒன்றாகவே நடக்க முறைத்துக் கொண்டிருந்த துஷாந்தினியை மஞ்சுளாவும் வாசுகியும் சமாதானப்படுத்தியே அனைத்து சடங்குகளையும. செய்வித்தனர். ஒருவாறு திருமணச் சடங்குகள் நிறைவேற இறுதியாக பெரியோரிடமும் சபையோரிடமும் ஆசிபெற வந்தவர்கள் முதலில் குடும்பத்தின் மூத்தவரான வள்ளியம்மையின் கால்களில் விழ நால்வருக்கும் ஆசி வழங்கியவர்

"கண்ணுங்களா, இங்க எவ்வளவோ நடந்திடுச்சு அதுவும் மனசை சங்கடப்புடுத்துற மாதிரி, ஆனாலும் கடவுள் யாருக்கு யாருன்னு விதிச்சிருக்காரோ அவங்கதான் கைசேருவாங்க, தேவா விதியில என் பேத்திதான் இருக்கா, அதேமாதிரி என் இளைய பேரனுக்கு அம்மாடி திவ்யா நீதான் பொண்டாட்டியாகனும் என்று விதி இருக்கும்மா. அது தெரியாம நாம ஜோடிய மாத்தினா கடவுள் போட்ட கணக்கு தப்பாகிடுமே அதுதான் இத்தனை குழப்பத்தையும் நடத்தி அவங்கவங்க துணையோட அவங்கவங்களை இணச்சிட்டார்." என்றவர் துஷாந்தினியிடம்

"அம்மாடி துஷாந்தி! என் மகன் வழி வாரிசுக்குத்தான் என் தாலி சேரணுமென்று ஆசைப்பட்டேன் ஆனால் மகனில்லையேன்னு கவலைப்படிருந்தேன் இப்பபாரு அந்தக்கடவுள் அதுக்கும் வழி செஞ்சுட்டார். என் ஆசைப்படி உன் கழுத்துல அந்தத் தாலி ஏறியிருக்கு. எனக்கு ரொம்பசந்தோசம்மா. திவ்யாம்மா! விஷ்வா ரொம்ப நல்லபிள்ளை உன்னை நல்லாப் பார்த்துக்குவான். இப்பயிருக்கிற மனநிலையில உடனே உன்னால என் பேரனை ஏத்துக்க முடியாட்டியும் காலம் கனிய உன் மனசும் மாறும். இங்கப்பாருப்பா விஷ்வா! அவ மனசு மாற கொஞ்சம் காலங்கொடு என்ன விளங்கிட்டா?" என்று தேவேஷ்வாவை அருகழைத்தவர்

"தேவா! நீ பண்ணினது தப்பாயிருந்தாலும் அதுல ஒரு நல்லது நடந்திருக்கு, என் பேத்திக்கு நல்லதொரு வாழ்க்கை அமஞ்சிருக்கு. உன்னைத்தவிர அவளை யாரும் புரிஞ்சிக்க முடியாதப்பா. இனி என் தங்கத்தோட கவலையில்லாம நிம்மதியா இருப்பேன்." என்றதும்

"உண்மைதான் பெரியம்மா, என் மருமகளை நினச்சு நான் கவலைப்படாத நாளில்ல, அவளுக்கு நல்ல வாழ்க்கையொன்று அமையனுமென்று நான் தினம் கடவுளை வேண்டிட்டே இருப்பேன். ஆனால் கடவுள் என் வேண்டுதலை ஏற்றுக் கொண்டதோட எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைய அமச்சுத் தந்திருக்கார். பெரியம்மா சொன்னமாதிரி தேவாவை விட சிறந்த துணை என் மருமகளுக்கும் இல்லை என் பேத்திக்குமில்லை." என்ற வாசுகி நால்வரையும் ஆசிர்வதிக்க அனைவரிடமும் ஆசிபெற்றவர்கள் சுபத்ராவிடம் ஆசிபெற வந்த தேவாவும் துஷாந்தினியும் தயங்கி நிற்க அவர்களிடம் வந்த சுபத்ரா முதலில் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டவர் பின் மனப்பூர்வமாக அவர்களை ஆசிர்வதித்தார். இறுதியாக மஞ்சுளாவிடம் தன் மனையாளை அழைத்து வந்த தேவா அவரிடம் ஆசிபெற்று அவரை அணைத்தவன்

"அத்தை! இனி உங்க மகளை நினச்சு கவலைப்படாதீங்க துஷானியும் ரிஷிதாவும் இனி முழுக்க என் பொறுப்பு. அதுமட்டுமில்ல தனுவும் தீப்தியும் கூட என் பொறுப்புத்தான் இத்தனை நாளும் உங்க மருமகனா இருந்து பார்த்துக்கிட்டேன். ஆனால் இனி உங்க வீட்டு மகனா இருந்து நம்ம குடும்பத்தை நல்லபடியாப் பார்த்துக்குவேன். இனிமேல் எதைப்பத்தியும் நீங்க யோசிக்காம நிம்மதியா இருங்க அத்தை." என்றவனை அணைத்துக்கொண்டவர் மகளையும் சேத்தே அணைத்துக்கொண்டார். ஒருவாறு எல்லாமே சுபமாய் முடிந்தது. அவ்வளவு நேரமும் மனஸ்தாபங்களால் பிளவுபட்டிருந்த அத்தனை மனங்களிலும் மகிழ்வும் நிம்மதியும் குடிகொண்டது.

❤❤❤❤❤

மெல்லத்தயங்கியவாறு அறையினுள் நுழைந்தாள் திவ்யதர்ஷினி. அவளின் தயக்கம் போக்க எண்ணிய விஷ்வானந்தன் அவளை நெருங்கியவன் கட்டிலில் அமரச்சொல்ல அவள் தயங்க

"தர்ஷி! எதுக்கு என்னைப் பார்த்து டென்ஸனாகுற உங்கிட்ட கொஞ்சம் பேசனும்." என்றதும் அமர்ந்தவளிடம்

"தர்ஷி! நீ எதை நினச்சும் கவலைப்படாதே! வாழ்க்கை இப்பதான் ஆரம்பிச்சிருக்கு காலம் பரந்து கிடக்கு வாழும் காலமும் நிறையயிருக்கு அவசரமேயில்லாம ஒருத்தரைஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு பொறுமையா வாழலாம்." என்றவனை கண்ணீருடன் ஏறிட்டவள்

"என் நிலமை யாருக்கும் வரக்கூடாது. அண்ணனை காதலிச்சு கல்யாணம்வரை போய், கடைசியில தம்பிக்கு வாழ்க்கைப்படிருக்கேன் என்னை நினைக்கும்போது எனக்கே அசிங்கமாயிருக்கு ஆனந்த்." என்றவள் கதறியழ அவளைத் தோள்களில் சாய்த்துக்கொண்டவன் ஆறுதலாய் தலைவருட அதில் மெல்ல மெல்ல அமைதியானவள் தானிருக்கும் நிலை புரிந்து அவனைவிட்டு விலக அவனும் அவளைத் தடுக்கவில்லை.

"ஆனந்த் என்னால பாவம் உங்க வாழ்க்கை இப்படிப் பாழாகிடுச்சு."

"தர்ஷி! நான் மனப்பூர்வமாத்தான் உன்னைக் கட்டிக்க ஒத்துக்கொண்டேன். ஏன்னா உன்னைமாதிரி ஒருநல்லவ யாருக்கும் கிடைக்கமாட்டா. அதனால என் வாழ்க்கை பாழாகல்ல, நந்தவனமா மலர்ந்திருக்கு நான் ரொம்பசந்தோசமாத்தான் உன்னை கட்டிக்கிட்டேன். தர்ஷி! எனக்கு இன்றைக்கு வாழ்க்கை ஆரம்பிக்குற என்றாலும் ஓகே இல்ல உன் மனசு என்றைக்கு மாறி என்னை ஏத்துக்குதோ அன்றைக்கு என்றாலும் உனக்காக நான் காத்திருப்பேன். இதையெல்லாம் மனசுலபோட்டுக் குழப்பிக்காதே. தர்ஷி! நீ ரொம்ப டயர்டாயிருப்ப கல்யாணம், பிரச்சனை என்று எல்லாம் உன்னை ரொம்ப பாதிச்சிருக்கும் எதையும் யோசிக்காம நிம்மதியாத் தூங்கு. நாளைய விடியல புதுசா ஆரம்பிக்கலாம்." என்றவன் இரவு வணக்கம் கூற பதிலுரைத்த திவ்யதர்ஷினியும் துயில்கொள்ள, தான் கரம்சேர்ந்தவளின் மனம் தன்னை நிச்சயம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் விஷ்வானந்தனும் துயிலத்தொடங்கினான்.

🌹🌹🌹🌹🌹

அன்றைய இரவின் தனிமையில் அறையில் நுழைந்த துஷாந்தினி அங்கே ரிஷிதாவை தோள்களில் போட்டவாறு உறங்கச் செய்த தேவாவைப் பார்த்திருக்க அவனோ குழந்தை துயில் கொண்டதும் அவளை கட்டிலில் உறங்கவைத்து தலையணையை இருபுறமும் அணை கொடுத்துவிட்டு வந்தவன் பெண்ணவளிடம் முதலில் மன்னிப்பை வேண்ட அவளோ மன்னிப்பை வழங்க மறுக்க

"துஷானி! நீ என்னை மன்னிக்காட்டியும் பரவாயில்ல. ஏன் என்னை உன் கணவனா ஏத்துக்காட்டியும் பரவாயில்ல காலம் முழுக்க உனக்கும் ரிஷிதாக்கும் நான்தான் துணையாயிருப்பேன் அது மட்டும் உறுதி. ரிஷிக்கு நான் கொடுத்த வாக்கையும் காப்பாத்திட்டேன். கண்ணம்மா நீ சந்தோசமா இருந்தால் அதுவேபோதும்." என்றவன் ஞாபகம் வந்தவனாய்

"என்கிட்ட உன் காதலை சொன்னப்போ ஒருவிசயம் சொன்ன உனக்கு ஞாபகமிருக்கா துஷானி?" அவள் முறைத்து நிற்க அதில் சிரித்தவன்

"என்ன நடந்தாலும் நான்தான் உங்க பொண்டாட்டி அந்த இடத்துக்கு யாரும் வரமுடியாது வரவும் விடமாட்டேனென்று சொன்ன, பாரு நீ சொன்னதுதான் நடந்திருக்கு. ஆனால் அதுல உனக்கு இப்போ சந்தோசமில்ல ஆனால் நான் ரொம்ப சந்தோசமாயிருக்கேன். என் கண்ணம்மா எனக்கு கிடச்சிட்டா." என்றதும்

"ஆனால் காலத்துக்கும் உங்களை என்னால ஏத்துக்க முடியாது. அது நடக்கவும் நடக்காது, ஏன்னா நீங்க தாலி கட்டியது உங்க கண்ணம்மாக்கு இல்ல எப்பயும் நெஞ்சுல ரிஷியை நினச்சு பூஜித்து வாழுற ரிஷியோட பொண்டாட்டிக்கு."

"எது நடக்கனும் நடக்க கூடாதுன்னு கடவுள் கணக்கு வச்சிருப்பார். அதை நாம தீர்மானிக்கவேணாம் காலம் தீர்மானிக்கட்டும். சரி நேரம் போகுது, ரிதாகிட்ட நீ போய் தூங்கு நான் இங்க படுத்துக்கிறேன் என்றவன் தரையில் பாயை விரித்து அதில் படுத்துக்கொள்ள அவளும் கட்டிலில் தன் மகளை அணைத்தவாறு துயில் கொள்ளத்தொடங்கினாள்.

தன்னவளின் மூச்சுக்காற்று அந்த அறை முழுக்க நிரம்பியிருக்க அதை சுவாசித்தவனாய் இன்றில்லாவிடினும் ஒருநாள் நிச்சயமாய் தன்னவளுடன் தன் வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையுடனும் துயில்கொள்ளத் தொடங்கினான் துஷாந்தினியின் தேவேஷ்வா.

inbound3902687288053050512.jpg

.....முற்றும்.....

விமர்சனங்களுக்கு

https://www.narumugainovels.com/index.php?threads/காணாமல்-கண்கள்-நோகின்றதோ-கருத்துத்திரி.1092/
 
Top