எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலின் இன்மை உணர்கிறேன்-கதைத் திரி

Status
Not open for further replies.

Fa.Shafana

Moderator
பா. ஷபானாவின்
"காதலின் இன்மை உணர்கிறேன்"



அத்தியாயம் 1

"நினைவுகளில் கூட
என் அருகே வராதே
விட்டுச் சென்ற நீ...
விலகியே இருந்து கொள்..."





அன்றைய நாள் வேலை எல்லாம் முடிய உடல் சற்று ஓய்வு கேட்க தங்களின் அறைக்குள் நுழைந்த கமலாவை நிறுத்தியது நுழைவாயில் திறக்கும் ஓசை...
"அடடே வாங்க அண்ணா.. வா ரேணுகா ..." என்று புன்னகை முகமாக வரவேற்று... உட்கார வைத்து விட்டு தண்ணீர் எடுத்து வர உ‌ள்ளே சென்றவர் தன் அன்னையையும் அழைத்து வந்தார்...

கமலா கொடுத்த தண்ணீரைக் குடித்த ரேணுகா அண்ணா எப்பிடி இருக்கார் அண்ணி என்று கேட்க...

"இருக்கார் கொஞ்சம் கொஞ்சமா பேச ட்ரை பண்ணார் ஆனா முடியல..."

"உள்ள கூட்டிட்டு போ கமலா ... போங்க போய் மாப்பிள்ளைய பார்த்துட்டு வாங்க.." என்று சொன்னார் வாணியம்மா... கமலாவின் அம்மா..

இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் நாதன் பக்கவாதம் வந்து ஓரிடம் ஆகி விட மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்து தங்கிக் கொண்டார் வாணியம்மா...

" எப்பிடி இருக்கீங்கண்ணா..??" அண்ணனின் அருகில் உட்கார்ந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரேணுகாவிற்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது...
தங்கையின் ஸ்பரிசம் உணர்ந்து மூடி இருந்த கண்களை திறந்தவர்
தங்கை மட்டும் மச்சானைப் பார்த்து வரவேற்பாக ஒரு புன்னகை செய்தார்...
" உடம்பு எப்பிடி இருக்கு மச்சான்..." கேட்ட ரவிக்கு கண் மூடித் திறந்து பதில் சொன்னார்....


ஓடி ஆடித் திரிந்தவர் ஒரே நாளில் படுக்கையில் விழ உடலோடு சேர்ந்து மனமும் சோர்வு கண்டது....


ரேணுகாவைப் பார்த்து கை அசைத்து அவர் கேட்க வ‌ந்தது புரிந்து... "நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்ண்ணா... ரெண்டு மூணு நாளா உங்க நெனப்பாவே இருக்கு அதான் உங்கள பார்த்துட்டு போக வந்தோம்..."

" சா....ர்" என்பவரை புரிந்து....
"சாரு நல்லா இருக்கா... மருமகள தனியா விட்டுட்டு வர முடியல அதான் அவ கூட இருக்கா..."

ஒரு தலையசைப்பு நாதனிடம்...

கமலா கொடுத்த தேனீரைக் குடித்துவிட்டு

சற்று நேரம் நாதனுடன் இருந்துவிட்டு அவருக்கு ஓய்வு எடுக்க சொல்லி வெளியே முன்கட்டுக்கு வந்து உட்கார்ந்தார்கள்...
வாணியம்மாவும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தார்

"பசங்க எல்லாம் எப்பிடி இருக்காங்க அண்ணி" என்று ரேணுகா கேட்க...

"நல்லா இருக்காங்க ரேணுகா... நதி காலேஜ் விட்டு வர்ற டைம் தான்... தருண் ஃபீல்ட் வேர்க் ஒண்ணுக்கு வெளியூர் போய் இருக்கான்...."

" கரணோட ஆபீஸ்ல வேலன்னு சொன்னானே..."

"ஆமாண்ணா... ஆனால் இன்னும் ஜாயின் பண்ணல்ல..."
அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே...

" கரணுக்கு இன்னும் ஒண்ணும் அமையல்லையாமா???"
ரவி கேட்டு இருந்தார்...

" எங்கப்பா...!! முன்னதாக பேச்ச எடுத்தா இப்போ கல்யாணம் வேணாம்...அப்றம் பார்க்கலாம்னு தட்டிக் கழிச்சான்... இப்போ ஒண்ணும் சரியா அமையமாட்டேங்குது...“ வருந்தி வந்தது வாணியம்மாவின் வார்த்தைகள்...

கரண் சொன்னது தப்பில்ல பெரியம்மா அவன் தொழில கொஞ்சம் முன்னேற்றி நிலை நிறுத்திக்கணும் இல்லையா...

“ஆனா இப்போ எதுவும் அமையுதே இல்லையே... அவருக்கு கூட மனசுல அந்த கவலையும் இருக்குண்ணா... அவர வெச்சே சில இடம் தட்டி போகுது...“

"என்ன சொல்றீங்க அண்ணி..."

“ஆமா.... ரேணுகா ... அவனுக்கு வந்த சில இடம் அப்பிடி தான் தட்டிப் போகுது.... மாமனார் இப்பிடி ஒரு இடமா இருக்கும் போது....அவர கவனிச்சுக்குற வேல பொண்ணுக்கு இருக்கும்... பசங்க பொறுப்பு மூத்தவன் தலைக்கு தான் வரும்னு ஏதேதோ காரணம் சொல்லி எல்லாரும் தயங்குறாங்க.... காதுபடவே அப்பிடி பேசிக்கிறாங்க...ரேணுகா“

குறுக்கிட்ட வாணியம்மா “வெளியிலன்னா பரவாயில்லை குடும்பத்திலயே அப்பிடி சொல்லும் போது என் பேரன நெனச்சா எனக்கு கஷ்டமா இருக்கு....
என் மகனோட பொண்ணயே இத சொல்லி தர முடியாதுன்னு சொல்லிட்டான்ப்பா...“

அதிர்ச்சி மாறாமல் ரேணுகா இருக்க நாதனின் இருமல் சத்தம் கேட்டு உள்ளே போன கமலா...வெளியே வந்து ரேணுகா அண்ணா உங்க ரெண்டு பேரையும் அவர் கூப்பிடறார்... என்று சொன்னார்...
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 2

*எதிர்பாராமல் என்னை உன்னிடம் சேர்த்து வைத்தது காலம்... எதிர்கொள்ள இருக்கும் வாழ்க்கை பூதாகரமாக விரிகிறது என் கண்முன்னே!!!*


இரவு சமைத்து முடித்து உணவுப் பாத்திரங்களை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சாருவைக் கூப்பிட
"சொல்லுங்கப்பா...."

"அண்ணா அண்ணிய கீழ வர சொல்லு நீ பாப்பா கூட இரு அவங்க சாப்பிட்டு வந்ததும் நீ கீழ வந்தா போதும்...."ரவி சொல்ல

'இது என்ன புதுசா இருக்கு... மாமா வீட்டுக்கு போய் வந்ததுல இருந்து என்னமோ மார்க்கமாக தான் இருக்காங்க...' யோசனையுடன் மேலே போனவள் ரகுவின் அறைக்கதவைத் தட்டினாள்...

"என்ன சாரு....
உங்களையும் அண்ணியையும் அப்பா வர சொன்னார் நான் பாப்பா கிட்ட இருக்கேன் நீங்க போய் சாப்பிட்டு வாங்கண்ணா..."

"அப்பா கூப்பிட்டீங்களா...? நான் வேல முடிய வந்து பார்த்தேன் அம்மாவும் நீங்களும் மாமா வீட்டுக்கு போய் இருக்கீங்கன்னு இவ சொன்னா... மாமா எப்பிடி இருக்கார்...? "

"மாமா இருக்காரு கொஞ்சம் கொஞ்சம் பேச ட்ரை பண்றாங்க ஆனா வேற ஒரு முன்னேற்றமும் இல்ல அப்பிடியே தான் இருக்கார்...."

"முக்கியமான விஷயம் பேசத் தான் உங்கள கூப்பிட்டேன்..." சொன்னவர் மனைவியின் முகம் பார்த்தார்...

"என்னப்பா சொல்லுங்க...."

"நம்ம சாருவ கரணுக்கு கேக்குறாங்க ரகு.. அவனுக்கு வர்ற இடம் எல்லாம் தட்டிக்கிட்டே போகுது போல.... அத்தையோட தம்பி மகள கூட கேட்டு இருக்காங்க மாமாவோட இந்த நிலைய காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி இருக்காங்க.... அந்தக் கோவத்துல பாட்டி அங்க போறதே இல்லையாம்.... அதுக்கு பிறகு அவன் கல்யாணம் பேச்சே வேணாம் அதுவும் குடும்பத்துல வேணாமே வேணாம்ன்னு சொல்றானாம்....
கவலைப்பட்டு பேசினாங்க... இத பேசிட்டு இருக்கும் போது மாமா எங்கள கூப்பிட்டு சாருவ கேட்டாரு....எனக்கு மறுக்க தோணல்ல மறுக்கிறதுக்கு தேவையும் இருக்கல்ல... நான் சரின்னு சொல்லிட்டேன்..."
பேசி முடிய மகனின் முகம் பார்த்தார்....

" நல்லது தான்ப்பா என்ன ஒரு வார்த்த கரண் கிட்டயும் சாரு கிட்டயும் கேட்டு இருக்கலாம்..."

"இல்லப்பா நான் சரின்னு சொல்லியும் வீட்டில போய் பேசிட்டே சொல்லுங்க அதுக்கு அப்றம் கரண் கிட்ட கேட்டுக்கலாம்ன்னு பெரியம்மா சொல்றாங்க...."

"அதுவும் சரி தானே இவரு சரி சொல்லி சாரு மறுத்துட்டா திரும்ப கரண் அவங்க மேல தான் கோவப்படுவான் அத நெனச்சு தான் அத்த அப்படி சொல்லி இருப்பாங்க..." ரேணுகா சொல்ல

" சரிம்மா அப்போ சாரு கிட்ட கேட்டுடலாம்....."

" தேவையில்லை .... அவகிட்ட எதுக்கு கேட்டுகிட்டு..??"

" இல்லப்பா ஒரு வார்த்தை அவக்கு சம்மதமான்னு..." அவனை முடிக்கவிடாமல்

" நான் சொன்னது சொன்னது தான்.... சாரு தான் அந்த வீட்டு மருமக இதுல ஒண்ணும் மாத்தி பேச இல்லை...."


"நாம வெளிய எங்கையும் அவள கட்டிக் குடுக்கல்ல... சொந்த மாமன் மகன் தான அதுவும் அவங்க கூட இவ நல்ல ஒட்டுதல் தான அப்றம் என்ன கேக்க வேண்டி இருக்கு....???

யம்மா கவிதா நீயே உன் நாத்தனார் கிட்ட சொல்லிடு... நான் இப்பவே பேசி சம்மதம்ன்னு சொல்லப் போறேன்...."

ஏன் இந்த அவசரம் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை....

கேட்ட செய்தியை நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை...
" என்ன இப்பவே அத்தான் கூட கனவு உலகத்துக்கு போய்ட்ட போல" அண்ணியின் குரல் கலைத்தது....

" இல்ல இதோ வர்றேன்...."
வேகமாக கீழே ஓடியவள் சமையலறையில் இருந்த தாயின் முன் போய் நின்றாள்....

"அம்மா!!! அண்ணி சொன்னது..."

"ஆமாடா.... உண்மை தான் எங்களுக்கு முழு சம்மதம்...." சந்தோஷமாக சொன்னார் ரேணுகா....

"மாமா என்ன சொன்னார்மா...??"

"கேட்டதே மாமா தான்... அவங்களுக்கு எல்லாம் சம்மதம் தான் கரண் கூட சம்மதம் சொல்லிட்டானாம்... இப்போ தான் அத்த சொன்னாங்க..."

அதிர்ச்சி விலகாமல்" நான் புஜ்ஜி கிட்ட பேசணும்....." மெதுவாக அவள் முணுமுணுக்க....

அருகில் வந்த ரவியின் காதில் விழுந்து விட்டது....

" யாரும் யார் கூடவும் பேசத் தேவையில்லை.... பெரியவங்க பேசி எல்லாம் நல்ல படியா முடியும் வர அமைதியா இருந்தா போதும்...." கண்டிப்புடன் அவர் சொல்ல...

" ப்ளீஸ்ப்பா... ஒரே ஒரு தரம்ப்பா..."



அடுத்து என்ன என்று அவளை யோசிக்க விடாமல் முழு வீச்சில் எல்லா வேலையும் நடந்து இதோ அவளின் கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது....

நாதனின் உடல்நிலை காரணமாக பெரிய அளவில் இல்லாமல் இரு தரப்பு குடும்பத்தினர் மட்டும் அழைக்கப்ப‌ட்டு கோவிலில் திருமணம்

தான் கொடுத்த வாக்கை நல்ல முறையில் நிறைவேற்றி மகளை மணம் முடித்து வைத்து விட்டார்....

ஆனால் மகளிடம் ஒரு வார்த்தை சம்மதம் கேட்கவில்லை.... எங்கே எல்லோரும் சொன்ன அதே காரணத்தையோ அல்லது வேறு ஏதாவது காரணம் அவளும் சொல்லிவிடுவாளோ என்ற பயம் ஒருபுறம்...
கரணை அவள் மறுத்தால்...நாதனின் உடல் மற்றும் மனநிலையை யோசித்து தான் கொடுத்த வாக்கு பொய்த்து விடும் என்ற கவலை ஒருபுறமிருக்க... அவளிடம் சம்மதம் கேட்காமல்... கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டார்

ரேணுகா கூட தன் கணவர் அவசரமாக எல்லாம் முடிவு செய்தாலும்... அண்ணன் மகனுக்கு தானே மகளை திருமணம் செய்து வைக்கிறார்... நடக்கும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க... திருமணம் வேலைகளில் மும்முரமாக இருந்தார்.

ஆனால்..... சாருவின் மனதில் இருந்த மிகப்பெரிய காரணம் யாரும் அறியவில்லை....

அவளை ஊமையாக்கி உணர்வுகளை ஊனமாக்கி.... அழகாய் நடந்து முடிந்தது அந்தத் திருமணம்...
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 3

*பொருந்தாத இடத்தில் பொருந்த வைத்து; என் இயல்பைக் கொன்று வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை!!*

என்ன தான் ஓடியாடி வேலை பார்த்து இதோ கல்யாணமே முடிந்தாலும் அவளின் புஜ்ஜிக்கும் அவனின் பாபியோடு பேசித் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இப்போது வரை இருக்கிறதே....

அவளிடம் பேசிவிட மனம் அடித்துக் கொண்டாலும்...
ஓரே வாரத்தில் முடிவான கல்யாணம்...
அடுத்தடுத்த வேலைகள்.... இடையில் இருமுறை அழைத்த போதும் அணைத்து வைக்கப்பட்டிருந்த அவளின் தொலைபேசி என அவளுடன் பேசும் சந்தர்ப்பம் இப்போது வரை அமையவில்லை...

அவள் கண்களில் தெரிந்த கலக்கம் அவனை யோசிக்க வைக்க.... அவளுடன் பேசியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கியது....

அன்றைய நாளுக்குரிய பரபரப்பு அடங்கி.... நெஞ்சம் படபடக்க கரணின் அறையினுள் நுழைந்து கதவை மூடியவளை....

"வா... சாரு..." என்ற குரல் கதவருகே நிற்க வைத்தது....

"என்ன அங்கயே நின்னுட்ட.... இந்த ரூம் உனக்கு புதுசா என்ன???"
கரணின் கேள்வியில் சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்து....

"ரூம் பழையது பழக்கப்பட்டது தான் ஆனா இந்த உறவு புதுசு தானே..??" கேட்டு விட்டாள்....

"எதையும் யோசிக்காம வந்து தூங்கு...." சொன்னவன் அடுத்த நிமிடம் பால்கனியில் நின்றான்...
'எத யோசிக்க...?? அதான் யோசிக்க அவகாசமே தராம உணர்வுகள கொலை செய்து இந்த கல்யாணத்த செய்து வெச்சிட்டாங்களே...!!!'
விரக்திப் புன்னகை இதழ்களில் குடிவந்தது....

கல்யாண அதன் பின்னான சடங்குகள் குலதெய்வ வழிபாடு எல்லாம் முடிய நான்கு நாட்கள் கழிய.... இதோ இன்றைய காலை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவளைத் தோட்டத்தில் சிறிது இளைப்பாற நேரம் கொடுத்தது....

சிந்தனையில் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள்....

"பாபி..." என்ற குரலுக்கு சட்டென்று திரும்ப அவளருகில் அவளின் புஜ்ஜி.... "நான் வந்தது கூட உணராம என்ன யோசிக்கிற???"

"அதான் உணர்வுகள மொத்தமா கொண்ணுட்டாங்களே புஜ்ஜி...." அதே கண்களுக்கு எட்டாத புன்னகை இதழில்....

"இந்த புன்னகை பொய் பாபி...."
மீண்டும் ஒரு விரக்திப் புன்னகை அவளிடம்....

"உன்கிட்ட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டாங்களா பாபி....??" கேள்வி அவனிடமிருந்து
இல்லை என தலையசைப்பு அவளிடமிருந்து...

"கேட்டிருந்தா??" விடை தெரிந்தும் வினாத் தொடுத்தான்...

" கேட்டிருந்தா கடைசி வரை உன் பாபியா மட்டுமே இருந்திருப்பேன் புஜ்ஜி... உன் அண்ணனுக்கு பொண்டாட்டியாகி இருக்கமாட்டேன்..."

"ஒரு வார்த்த யாருகிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல பாபி...? அட்லீஸ்ட் என்கிட்ட கூட பேசல்ல நீ..."
"அட் பர்ஸ்ட் உன்கிட்ட தான் புஜ்ஜி பேச தோணிச்சி எனக்கு.... ஆனா அத சொல்லி முடிய என் ஃபோன் ஆஃப் ஆகி அம்மாவோட ரூம் அலமாரியில தான் இருந்துச்சு... கல்யாணம் முடிஞ்சு இங்க என்னைய விட்டுட்டு போகும் போது தான் தந்தாங்க...."

" அதிர்ந்து பார்த்தவன்.... அப்போ கட்டாய கல்யாணம் பண்ணி வெச்சுருக்காங்க அப்பிடி தானே..??"

" எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்லன்னும் தெரில டா... கல்யாணம் முடியும் வர என்னைய பேசவே விடல... ஒரு கட்டத்துக்கு மேல நான் பேச ட்ரை பண்ணவுமில்ல... என்னவோ செய்ங்கன்னு விட்டுட்டேன்..."

"எனக்கு தெரிஞ்சு அப்பா தான் மாமா கிட்ட கேட்டு இருக்கார்...."
நான் பீல்ட் வேர்க் ஒண்ணுல வெளி ஊர்ல இருந்தேன்... நைட் அம்மா கால் பண்ணி சொல்லவும் உடனே வந்துட்டேன்.. ஆனா உன்கிட்ட பேச முடியல... தலைக்கு மேல வேல... ரெண்டு முறை ட்ரை பண்ணா உன் ஃபோன் வேற ஆஃப்... அண்ணா கி‌ட்ட போய் என்ன கேட்குறது... எப்பிடி கேட்குறதுணும் புரியல... ஒரே டென்ஷன்.... கல்யாணமே முடிவாகி கூட நீ ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை பேசலணு ஒரு யோசன இருந்திச்சு... கல்யாணத்தன்னைக்கு உன் முகத்த பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் நீ சந்தோஷமா இல்லைன்னு.... ஆனா உன்கிட்ட சம்மதமே கேட்காம இந்த கல்யாணம்னு சொல்றப்ப கஷ்டமா இருக்கு பாபி...
சரி அண்ணா என்ன சொல்றான்?? "

" உங்க அண்ணன் எதுவும் சொல்லல்ல ஆனா கண்ணுக்கு தெரியாத திரை ஒண்ணு எங்களுக்கு இடையில இருக்கு...."

"சரி யோசிக்காத பாபி....
உங்களுக்கிடையில நடந்து முடிஞ்ச சம்பவம் அப்பிடி... எல்லாம் கடந்து போகும்... எல்லாம் சரி வரும்.... நான் எப்பவும் என் பாபி கூடவே இருப்பேன்..."

"முடிஞ்சது அப்பிடியே முடியாம திரும்ப ஆரம்பிச்சு இருக்கே.... இத நான் எதிர்பார்க்கல்ல... அதான் ஏத்துக்க கஷ்டமா இருக்கு... என்னைய நான் தேத்திக்க டைம் வேணும்...."

"அதுக்காக இப்படியா தனியா வந்து உக்காந்து யோசிச்சிட்டு இருப்ப..??
நீ வழமையா செய்ற வேலைய செய்... எங்கேயாவது வெளிய போகணும்னா சொல்லு அண்ணாக்கு முடியாத டைம் நான் கூட்டிட்டு போறேன்....பக்கத்தில தான் லைப்ரரி இருக்கு வேணும்னா உனக்கு நதி கூட போகலாம்... ஒரு இடத்தில இப்பிடி ஒடுங்கிடாம என் பாபியா இரு... இந்த டல்லா உட்கார்ந்துகிட்டு யோசிக்கிறது உனக்கு செட் ஆகவேயில்ல...
நீ நீயாக இரு.... இது நீ வந்து போய் பழகி தெரிஞ்ச இடம் தானே...
எங்க பாட்டி கூட உன்கிட்ட நல்ல க்ளோஸ் தான்... நீ இங்க இயல்பா இருக்கலாம்... அண்ணாவுக்கும் உனக்கும் இடையே வந்த இந்த தாலியத் தவிர வேற ஒண்ணும் மாத்தமில்ல... ஏதாவது யோசிச்சு உடம்ப கெடுத்துக்காம நிம்மதியா இரு....
இப்போ எழும்பி வந்து எனக்கு டிபன் எடுத்து வை...."
எதை சொன்னால் எழுந்து வருவாள் என அறிந்து சொல்ல....

" நீ இன்னும் சாப்பிடாம என்ன செய்ற புஜ்ஜி... வா.. வந்து சாப்பிடு..." எழுந்து விட்டாள்...
உணவைப் பரிமாறி அடுத்த இருக்கையில் அமர்ந்து அவளுக்கும் தட்டை வைத்துக் கொள்ள.... முறைப்பு ஒன்று அவனிடம்.... அசடு வழிய சிரித்து "பசிக்கல்லடா... அதான்...."
"உன் மூஞ்சி... சாப்பிடு.. அண்ணா எங்க போனார்..???"

"மாமாவோட மெடிக்கல் ரிப்போட் எடுக்க ஹாஸ்பிடல்க்கு... ஆமா நீ ஏன் இன்னமும் வீட்டில இருக்க?? எங்கேயோ போகணும்ன்னு சொல்லிட்டு இருந்த..??"

"போக இருந்தது தான் ப்ரோக்ராம் கேன்சல்..."
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 4

* உன் நட்பின் கைப்பற்றி என் வாழ்க்கைப் பயணம்... நட்பாக நீ வேண்டும் இறுதி வரை *


சாப்பிட்டு முடிந்து அவன் முன் ஹாலுக்கு போக கோவிலுக்கு போய் இருந்த கமலாவும் வாணியம்மாவும் வந்தார்கள்...

"ஏன்மா போனதே போன பாபியையும் நதியையும் கூட்டிட்டு போய் இருக்கலாம்ல... நான் அப்பா கூட இருந்திருப்பேன்..."

"டேய்... என்னடா... பாபி... பேபின்னுக்கிட்டு.. அழகா அண்ணின்னு சொல்லு..." வாணியம்மாவின் குரலுக்கு திரும்பி....

"இங்க பாரு பாட்டி அவ எப்பவுமே என்னோட பாபி தான்..."
" பாபின்னா பொம்ம பெயர்டா..."

"அதே தான் பாட்டி... சின்ன வயசுல அண்ணி பாபி டோல் மாதிரி இருக்காங்கன்னு சொல்ல ஆரம்பிச்சு இப்ப வர சொல்லிட்டு இருக்காங்களாம் தருண்ணா..." இது நதியா...

"அது எனக்கும் தெரியும்... ஆனா நதி உனக்கு, உங்க அண்ணி ஏன் இவன புஜ்ஜின்னு சொல்றான்னு தெரியாதுல..?"

"இல்லையே பாட்டி..."

" அய்யோ பாட்டி ப்ளீஸ் வேணாமே..."

" சும்மா இருங்கண்ணி... நீங்க சொல்லுங்க பாட்டி..."

சாருவின் பதற்றம் கண்டு ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது நதியாவிற்கு....

" இந்த ரெண்டு பேருக்கும் அப்போ ஏழு வயசு உன் மூணாவது பிறந்தநாளுக்கு உங்க அத்தனையும் சாருவும் இங்க வந்திருந்தாங்க... நானும் இங்கதான் இருந்தேன்... நாங்க எல்லாரும் வெளிய பேசிட்டு இருக்கும் போது கிச்சன்ல ஏதோ விழுந்த சத்தம்... சாரு ஒரு பக்கம் கத்துற சத்தம்... நாங்க பயந்து ஓடி வந்து பார்த்தா... இவன் கிச்சன் மேடைல ஏறி பேன்ட்றில இருந்த டப்பாவ எல்லாம் கிழ போட்டு வெச்சிருந்தான்...
விழுந்த டப்பா சிலது இவ கால்ல விழுந்திருக்கு அதான் இவ கத்தி இருக்கா... உங்க அம்மா கோவத்துல "டேய் குரங்கு குட்டி அங்க எதுக்கு ஏறின.. பாரு எல்லாத்தையும் தள்ளி விட்டுருக்க" ன்னு கேட்க...
"பாபிக்கு முறுக்கு எடுத்து கொடுக்க பார்த்தேன் விழுந்துருச்சு... நான் என்ன பண்ணன்னு கேட்டுட்டு முறுக்கு டப்பாவ எடுத்துட்டு இறங்கிட்டான்...
அப்போ தான் உங்கண்ணி கேட்டா பாரு ஒரு கேள்வி... "எனக்கு முறுக்கு எடுக்க போய் தானே உன்னைய அத்த குரங்கு குட்டின்னு சொன்னாங்க... அப்போ அந்த டோராவோட புஜ்ஜி போல நீயும் என் புஜ்ஜியா..??" ன்னு...
அதுக்கு இவனும்... "ஆமா பாபி... நான் எப்பவும் உன்னோட புஜ்ஜி தான்... எப்பவும் உன் கூடவே இருப்பேன்" என்னு சொன்னான்..."
கதை கேட்ட நதியோடு சேர்ந்து எல்லோரும் சிரிக்க...


"அப்போ சொன்னது போல இப்ப வர என் கூட இருக்கான் பாட்டி... எவ்வளவு பாசம் எவ்வளவு சப்போர்ட்டிவ் தெரியுமா...??" என்று சாரு சொல்ல...

" அது சரி தான்... எனக்கு கூட உங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்பவே சந்தோஷமா இருக்கும்..."

" சந்தோஷம் தானே... அப்போ எதுக்கு அண்ணின்னு சொல்ல சொல்ற...?? " தருண் கேட்க

" டேய்... முன்ன எப்பிடியோ கூப்பிட்ட... ஆனா இப்போ இவ உங்க அண்ணன் பொண்டாட்டி டா...."
"அய்யோ பாட்டி அவளுக்கு எனக்கும் ஒரே வயசு தான்...ஒரு மாசம் நான் தான் பெரியவன்... இன்னும் ஒண்ணு சொல்றேன் பாபின்னா ஹிந்தில அண்ணின்னு தான் அர்த்தம்... சோ நான் ஹிந்தில கூப்பிடறேன்னு நீ நெனச்சிக்க..... யாரு என்ன சொன்னாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல... அப்பிடி வேற யாருக்கும் ப்ராப்ளம்னாலும் என்னால அத மாத்திக்க முடியாது.... யாரு என்ன சொன்னாலும் இங்க என்ன நடந்தாலும் அவ எப்பவுமே என்னோட பாபி தான்..."
இவர்களின் கதை கேட்டுக் கொண்டே வந்து உட்கார்ந்த கரணை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தான்...

" உனக்கெல்லாம் சொல்லி புரிய வைக்க எனக்கு முடியாது... "

" நீ தான் புரிஞ்சிக்கணும்
நான், அண்ணின்னு சொன்னா அவ எப்பிடி கூப்பிடுவா...??"
" நீ குரங்கு குட்டியாவே இரு... புஜ்ஜின்னே அவ கூப்பிடட்டும்" பாட்டி சொல்ல சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது...

கரண் கூட அவர்களோடு சேர்ந்து சிரித்தவன் அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
மெல்லிய புன்னகை அவன் முகத்தில் இப்போது.... எந்த ஒரு இடத்திலும் சாரு, தருண் இடையில் சின்ன சண்டை கூட வந்ததில்லை... இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவார்கள்... யாரிடமும் ஒருவரை மற்றொருவர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள்... தருணுக்கு நதி கூட அவனது பாபிக்கு பின்பு தான்...
அதற்காக நதி சண்டை போட்டு ஒதுங்காமல் அவர்களுடன் சேர்ந்து இருந்தது தான் பெரிய விடயமே…

இந்த யோசனையில் இருந்தவனுக்கு தெரிந்து தான் இருந்தது... தருண் அவனுக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து சாருவுக்காக தன்னிடம் கேள்வி கேட்பான்...

இந்த சில வருடங்களாக அவனிடம் இருக்கும் ஒதுக்கம் அதற்கு சான்று...
என்ன தான் பேசி சிரித்து ஒன்றாக இருந்தாலும் முன்பு இருந்த ஒட்டுதல் இல்லை…

அவன் அதைப் பற்றி பேசும் வரை தானும் ஒன்றும் பேசாமல் இருப்பது தான் நல்லது என்று நினைத்து அமைதியாக இருக்கிறான்...

ஆனால் கரண் அறியவில்லை தருண் பேசும் போது வார்த்தைகளை தொலைத்து விட்டு ஊமையாக இருக்கத்தான் போகிறான் என்று...

நாட்கள் அதன் போக்கில் போக....கல்யாணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது...

சாரு வெகுவாக இந்த வாழ்க்கையில் பொருந்திவிட்டாள்... இது தான் வாழ்க்கை என்றான பின் ஒதுங்கி இருப்பது முடியாது என்ற உண்மை முகத்தில் அறைய நடப்பது நடக்கட்டும் என்று மனதை சாந்தப்படுத்திக் கொண்டாள்...
அன்றாட வேலைகளில் காமலாவுக்கு கூடவே இருந்து எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டு இருந்தவள் அவரவர் தேவை சுவை அறிந்து சமையல் முழுதும் அவளே செய்தாள்...நாதனிற்கு தேவையான பணிவிடைகள் செய்து கமலாவின் வேலைப்பளுவைக் குறைத்து இருந்தாள்.. ஏதாவது புத்தகங்களை படித்துக் காண்பித்து நாதனிற்கும் பொழுதுபோக வைத்தாள்....நதியாவின் கற்றல் வேலைகளில் உதவுவது... பாட்டி கோவிலுக்கு அல்லது அருகிலுள்ள பார்க் போகும் போது துணையாகப் போவது.. தருணோடும் நதியாவோடும் சீண்டி விளையாடி இடையில் பாட்டியிடம் தருணை சிக்க வைப்பது என நாட்களை கடத்திக் கொண்டு இருந்தாள்...
எல்லாம் செய்தவள் என்ன ஒன்று தானாக அவள் வீட்டிற்கு அழைத்துப் பேசவும் இல்லை வீட்டிற்கு போக வேண்டும் என்று நினைக்கவும் இல்லை...
வீட்டில் இருந்து யாரும் அழைத்தால் மட்டும் பேசுபவள்.... இடைப்பட்ட நாட்களில் தனது பெற்றார் வந்த பொழுதுகளில் கூட ஒட்டுதல் இல்லாமல் தான் நடந்து கொண்டாள்.... அதை அடுத்தவர் அறியாத அளவுக்கு கச்சிதமாக சமாளித்தும் இருந்தாள்...
ரகுவின் குழந்தையைப் பார்க்க நினைக்கும் பொழுது மட்டும் கவிதாவிற்கு வீடியோ கால் செய்வாள்....

கரணுடன் கூட முழுவதும் ஒட்டாமல் தான் இருந்தாள்... ஆனால் அவனுக்கு தேவையான அனைத்தும் இவளே தான் செய்வாள்... அதனால் அவளுக்கு மனதளவில் கரணுடன் இருக்கும் ஒதுக்கம் யாரும் அறிந்திருக்கவில்லை கரணுக்குக் கூட அவள் மனதை புரிந்து கொள்ள முடியாமல் போனது... ஆனால் அவள் பேசும் போது சொல்லும் "உங்க அண்ணா" என்ற ஒரே சொல்லை வைத்து தருண் புரிந்து வைத்திருந்தான் அவளின் ஒதுக்கத்தை... ஆனால் கணவன் மனைவிக்கிடையே தான் நுழையாமல்... அவர்களே தீர்வு காண வேண்டும் என்று இருந்துவிட்டான்... அவர்களின் கடந்த காலம் சுலபமாக அவளை கரணுடன் ஒன்ற விடாது என்றும் அவனுக்குத் தெரியும்...
எது எப்படி இருந்தாலும் சந்தர்ப்பம் அமைந்தால் கரணை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது அவனுக்கு...

அவளுக்குத் தோழனாக அவளை அரவணைத்தும், அண்ணனுக்குத் தம்பியாக அவர்கள் இடையே நுழையாமல் ஒதுங்கியும் அழகாக அவனது நட்பை நிலைப்படுத்தினான்…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 5

*புரிந்து கொள்ளாது பிரிந்து சென்ற உன்னை பிரமிக்க வைக்க வந்திருக்கிறேன் உன்னிடமே*

இப்பிடியான ஒரு நாள்... ஞாயிற்றுக்கிழமை கரண் பால்கனியில் உட்கார்ந்து லேப்டாப்பில் அலுவலக
வேலை செய்து கொண்டு இருக்கும்போது சாருவின் அழைபேசி இசை அவனைக் கலைத்து விட... எழுந்து வந்து பார்த்தான்.... அழைபேசியை எடுக்க அது துண்டிக்கப்பட்டது... அவளை கூப்பிட்டு சொல்லலாம் என கதவுப் பக்கம் போக அது மறுபடியும் தன் இருப்பைக் காட்டியது....
"தீபா மேடம்"என்ற பெயர் கண்டு புருவம் யோசனையாக சுளிக்க அழைப்பை ஏற்று காதில் வைத்தான்...

இவன் பேச ஆரம்பிக்கும் முன்பே ஒரு பெண் குரல்...
"ஹாய் சாரு!!! நான் கொடுத்த வேலை முடிஞ்சதாடா?? நாளைக்கு அனுப்பிடுவல்ல??" கேட்டு இருந்தது...

"ஹலோ!!! நான் சாருவோட ஹஸ்பண்ட் பேசறேன்... நீங்க யாரு பேசுறீங்க....??"
"ஓஹ்!!! சாரி சார் நான் அவன்னு நினைச்சு பேசிட்டேன்... நான் *** ஆசிரமத்தில் இருந்து பேசறேன்... சாருகிட்ட ரெகார்டிங் ஒண்ணு கேட்டு இருந்தேன் அதுக்கு தான் கால் பண்ணேன்…"
"ரெகார்டிங்???"கேள்வியாக அவன் நிறுத்த...
"உங்களுக்கு தெரியாதா சார்.... எங்களுக்கு தேவையான ரீடிங் மெட்டீரியல்ஸ் புக்ஸ் எல்லாம் சாரு ரெகார்ட் பண்ணி தருவா... நாளைக்கு ஒண்ணு கேட்டு இருந்தேன்.... அத கேட்டு கன்பார்ம் பண்ண தான் கால் பண்ணேன்…"
"ஒஹ்.. சாரி மேடம்... எனக்கு தெரில நான் அவள கால் பண்ண சொல்றேன்...."
"ஓகே சார்... வைக்கிறேன்...."

அவர் அழைப்பைத் துண்டிக்க... இவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு கீழே போனான்.... மண்டையை கேள்விகள் குடைந்தன...
"அம்மா.... சாரு எங்க??"வீடு முழுக்க தேடிவிட்டு கமலாவிடம் போய் நின்றான்...

"நதி கூட மொட்ட மாடில இருப்பா... ஏன்...உனக்கு எதுவும் வேணுமா...??"
"இல்லம்மா... அவளுக்கு ஃபோன் வந்தது…" பேசிக் கொண்டு மேலே ஏறினான்.. அவனுக்குத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது அவளின் இந்த வேலையைப் பற்றி...

படி ஏறும் போதே நதியின் குரல் ஆங்கிலத்தில் ஏதோ படிக்கும் சத்தம் கேட்டது.... அங்கே போய் பார்த்தவன்.... பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்று விட்டான்....
நதி படித்துக் கொண்டிருக்க.... சாரு அதை எழுதிக் கொண்டிருந்தாள்... அவனுக்குத் தெரிந்த சாருவுக்கு ... இப்படி செய்யும் திறமை இல்லை....
எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ.... நதியின் "என்னண்ணா அங்கேயே நின்னுட்ட…??" என்ற சத்தத்தில் கலைந்து அவர்கள் அருகில் சென்றான்....
எழுதிக் கொண்டு இருந்தவள் எழுந்து.... "உங்க வேலை முடிஞ்சதா?? காப்பி ஏதும் வேணுமா??"
எ‌ன்று கேட்க

மறுப்பாக தலை அசைத்தவன்...
"உனக்கு ஒரு கால் வந்துச்சி...." அழைபேசியை அவளிடம் கொடுத்தவன்....

நதியிடம் திரும்பி
"என்ன பண்றீங்க....??" எனக் கேட்டான்...

"ஒரு பெரிய அசைன்மெண்ட் என்னால எழுத முடியல்ல... அதான் அண்ணி எழுதிட்டு இருக்காங்க…"

அதற்குள் சாரு அழைப்பெடுக்க சற்று நகர்ந்திருக்க.... அவள் எழுதிய தாள் இவன் கையில் இருந்தது...
ஒருமுறை படித்துப் பார்க்க... ஒரு பிழை கூட இல்லாமல் அழகான நேர்த்தியான கையெழுத்தில் கச்சிதமாக இருந்தது அது....
" எல்லாம் கரெக்ட்டா இருக்கும்... சந்தேகத்திற்கு எந்தத் தேவையுமில்லை…"தருணின் குரல் படு நக்கலாக ஒலித்தது....

அவன் நக்கல் செய்வது புரியாது...
"ஆமாண்ணா.... அண்ணி தான் எனக்கு நிறைய எழுதித் தருவாங்க.... என்ன எழுதுறோம்னு எனக்கு புரியணும்னு என்னைய படிக்க சொல்லி அவங்க எழுதுவாங்க…"

"யெஸ் நதிம்மா... புரிதல் இல்லாம நாம எத செஞ்சாலும் அதுக்கு எந்தப் பயனும் இல்ல...."இது அடுத்த நக்கல் தருணிடம் இருந்து....
கரண்.... 'ஏன்டா??' எனும் கேள்வியை கண்ணில் வைத்து தருணைப் பார்த்தவன் கையில் இருந்த தாளை மேசையில் வைத்து விட்டு சாரு இருக்கும் இடம் நகர்ந்தான்...
"நதிம்மா நாம கீழ போய் காப்பி போட்டு எடுத்துட்டு வருவோம் வா" சொன்னவன்... நதி நகர்ந்து போக கரண் காதுக்குள் "என்னோட பாபிய பத்தி நீ தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு…" என்றவன் தடதடவென படியில் இறங்கும் சத்தம் கேட்டது…

"பேசிட்டியா....??"

"ஹ்ம்ம்.... இவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க....?? "

" காப்பி போட்டு எடுத்துட்டு வர போனாங்க…"

"ஓஹ்... அப்போ.... அவங்க வரும் வர நான் இன்னும் ஒரு கால் பேசிட்டு வர்றேன்…"

"முக்கியமான கால்லா???"

'ஏன்??' எனும் விதமாக அவள் கரணைப் பார்க்க...

" இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சாரு..."

"ஓகே... நான் அப்றம் பேசிக்கிறேன்... அவசரம் இல்ல…"

" அந்த கால்... ஆசிரமத்தில இருந்துன்னு சொன்னாங்க…??? ஏதோ ரெகார்டிங் கேட்டு இருந்தாங்களாம்... நான் தெரியாதுன்னு சொல்லவும் அவங்க என்னன்னமோ சொல்றாங்க எனக்கு எதுவும் புரியல்ல.... எனக்கு சொல்லு நீ என்ன பண்ற…??"

" ஏன் அதுக்கு இவ்ளோ டென்ஷன்...?? அது ஒரு ஆசிரமம்.... வயசானவங்க அநாதை பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க... அவங்களுக்கு தேவையான ஹெல்ப் என்னால முடியுமானத செய்றேன்…"

"குழந்தைகள் சின்ன பிள்ளைகளுக்கு தேவையான கதைகள் வயசானவங்களுக்குத் தேவையான புத்தகங்கள் எல்லாம் அவங்க சொல்லுவாங்க நான் வாசிச்சு ரெகார்ட் பண்ணி அனுப்புவேன்...
அவங்க மெட்டீரியல் அனுப்பி வைப்பாங்க சில நேரங்கள்ல நானே லைப்ரரி இல்லன்னா நெட்ல தேடி எடுப்பேன்…"
"அன்னைக்கு அப்பா கிட்ட உட்கார்ந்து ஏதோ படிச்சது???" கேள்வியாக நிறுத்தினான்… அன்று அவளருகில் அலைபேசி இருந்தது ஞாபகம் வந்தது…
" ஆமா சிலது மாமா ரூம்ல தான் ரெகார்ட் பண்ணுவேன்... அவரும் கேட்டதா இருக்கும் இல்ல…??ஒரே இடத்தில இருக்கறவருக்கு ஒரு பொழுதுபோக்கு…இந்த டிரஸ்ட்க்கு தான் செய்து கொடுக்க ஸ்டார்ட் பண்ணேன் ஆனா இப்போ அத போல நிறைய செய்றேன்…"

என்ன என்று சொல்ல முடியாத மனநிலையில கேட்டுக் கொண்டிருந்தான் கரண்…"அப்பா மேல உனக்கு கோபம் இல்லையா??" இந்த சில மாதங்களாக நாதனை அவள் கவனித்துக் கொள்ளும் நேர்த்தியில்....அவளிடம் பல நேரங்களில் கேட்டு விட நினைக்கும் கேள்வி இன்றும் தொண்டையில் சிக்கி நின்றது....

அதை விடுத்து வேறு கேட்டான்.... "வேற என்னெல்லாம் செய்ற???"

" இப்போ நதிக்கு எழுதினது போல கை ஊனமா இருக்கும் காலேஜ் பசங்க சிலருக்கு எழுதிக் கொடுப்பேன்...
என் கிளாஸ்ல ஒரு பையன் இருந்தான் கை கொஞ்சம் ஊனம் அவனால நிறைய எல்லாம் எழுத முடியாது சோ நாங்க தான் எழுதிக் கொடுத்துட்டு இருந்தோம்.... அப்பிடி அவனுக்கு எழுதிக் கொடுத்துட்டேன்னா அன்னைக்கு நாள் முழுக்க என்னமோ பெருசா சாதிச்சது போல மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்... அப்போதே என் மனசுல வந்த எண்ணம் இது.... இப்பிடி இருக்க பசங்களுக்கு எதாவது செய்யவே வேணும்ன்னு.... அதுக்கு முதல் முறையாக வாய்ப்பு எடுத்துத் தந்தது என் புஜ்ஜி... அவனோட காலேஜ்ல ஒரு பொண்ணு இருந்தா அவளுக்கு தான் எழுதிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.... எங்க ஊர் பொண்ணு அந்த காலேஜ் தான் படிச்சா சோ எழுதி அவகிட்ட அனுப்பி வைப்பேன்.... நான் ஹெல்ப் செய்த பொண்ண படிக்க வெச்ச டிரஸ்ட் மூலம் எனக்கு பழக்கமானவங்க தான் இப்போ கால் பண்ண மேடம்.... அவங்க மூலம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வந்தது... இப்போ நிறைய பசங்களுக்கு செய்றேன்... சில பசங்க கிட்ட மட்டும் பணம் எடுப்பேன்... காலேஜ் ஃபீஸ் கூட கட்ட முடியாத பசங்க இருக்காங்க அவங்களுக்கு இலவசமா செய்து கொடுப்பேன்....
ரெகார்டிங் கூட சிலது பணம் வரும் சிலது வராது...
இ‌ன்னு‌ம் சில பேர் நோட்ஸ் டைப் பண்ண அனுப்புவாங்க சாஃப்ட் காப்பி இல்லன்னா ரெகார்டிங் அனுப்ப நான் அத டைப் பண்ணி அனுப்புவேன்....
எனக்கு பொழுதுபோக்கு... மனத்திருப்தி...சந்தோஷம்... பணம் எல்லாம் கிடைக்குது...நான் தான் படிக்கல, படிக்கற பசங்களுக்காச்சும் ஹெல்ப் பண்ணலாம்னு இத செய்றேன்…ஆனா எங்க வீட்டில இது இந்த அளவுக்கு செய்றேன், பணம் வருதுன்னு எல்லாம் தெரியாது…"

பிரம்மித்து நின்று விட்டான் அவள் சொன்னவற்றைக் கேட்டு…'இது ஒன்றும் தனக்குத் தெரியாதே... இங்கு வந்த இந்த சில மாதங்கள்ல கூட தெரியாம இருந்தேனா?? இல்ல தெரிந்து கொள்ளும் அளவு இவகிட்ட நெருக்கமாக இருக்கல்லயா??'
மண்டைக்குள் இப்போது வண்டு குடையும் உணர்வு....
'அந்த கால் மட்டும் வரல்லன்னா எனக்கு இது இன்னும் எவ்வளவு நாள் தெரியாம இருந்திருக்கும்..??' அவனை நினைத்து அவனுக்கே ஒரு சலிப்பு... "ஆனா நீ ரெகார்ட் பண்றதோ, எழுதறதோ எதையும் நான் பார்த்ததே இல்லையே…?"

"இல்ல தான்… காலைல எல்லா வேலையும் முடிஞ்சிடும்… அப்றம் சும்மா இருக்க டைம்ல தான் செய்வேன்…ஈவினிங் ஆர் நைட் இந்த வேலை செய்ய மாட்டேன்… நதி ஏதும் ஹெல்ப் கேட்டா மட்டும் செய்து கொடுக்கறது… அதான் உங்களுக்கு தெரில… நீங்க வர லேட் ஆனா மட்டும் நைட்ல செய்வேன்… இதுலயே இருந்தா சரியா?? மத்த வேலைகளும் செய்யணும்ல…

"இந்த மொபைல்லயா இதெல்லாம் செய்ற..??"

"ஆமா.... இதுவும் புஜ்ஜி தான் வாங்கி தந்தான்...
அவன் மட்டும் இல்லைனா நான் ஒண்ணுக்கும் உதவாதவளா தான் இருந்திருப்பேன்…" அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு சொல்லி இருந்தாள்…
அடுத்த வார்த்தை பேச மறந்தவனாக நின்றிருந்தவனை அவளின் அலைபேசி ஒலி கலைத்தது....

"சொல்லு புஜ்ஜி…"

"ஏய்... காப்பி ரெடி ரெண்டு பேரும் கீழ வாரீங்களா...??"
"மேல எடுத்துட்டு வாடா... இன்னும் எழுதி முடிக்கல்ல…"
"நீ எழுதினது போதும்... மீதிய நாளைக்கு எழுதலாம்...இல்லன்னா இவளே எழுதிடுவா...சப்மிட் பண்ண இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு....
ஆல்ரெடி லேட் அப்றம் டின்னர் செய்யணும்னு பரபரப்ப... நீ கீழ வா முதல்ல…"

" சரி கத்தாத வர்றோம்…"

" வாங்க கீழ போகலாம்…"

அந்தப் பக்கம் தருண் பேசியது தெளிவாக கரணுக்குக் கேட்டது... 'நான் இவள கேர் பண்ணி பாத்துக்கவே இல்லையா..??'
தனக்குள்ளே ஒரு சுய அலசல்...
'அதுவு‌ம் இல்லாம அரைமணிநேரமா பேசிட்டு இருக்கோம் ஆனா....ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்…'
யோசிக்க... யோசிக்க... ஒன்றும் பிடிபடவில்லை அவனுக்கு....

அன்று இரவு சாப்பிட்டு முடிய... "தருண் இந்த புதன்கிழம ஆபீஸ்க்கு வந்திடு நீ கேட்ட மூணு மாச அவகாசம் முடிஞ்சு ரெண்டு மாசமாச்சு"

"ஓகேண்ணா…"

"ஆமா... ஆமா... இவன ஃபர்ஸ்ட் ஆபீஸ்க்கு கடத்தணும் அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்... வீட்டில இருந்து இவன் பண்ற அலும்பு தாங்கல…"

சொன்ன நதியின் தலையில், ரேணுகாவின் கையால் ஒரு கொட்டு விழுந்தது…"ஏன்டி அவன வம்புக்கு இழுக்கல்லன்னா உனக்கு தூக்கம் வராதே....???
போ....இதெல்லாம் எடுத்துட்டு போய் கழுவு.... அண்ணி கால் ஒண்ணு வந்ததுன்னு பேசிட்டு வர்றேன்னு போனாங்க…"

"போம்மா…" தலையைத் தேய்த்துக் கொண்டே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 6

*காதலால் மனம் நிறையவில்லை இருந்தும் உயிர் நீர் நிறைந்துவிட்டது கருவறையில்*


வழமையான நாட்களில் ஒன்றாக விடிந்த அந்த நாள் சாருவின் கர்ப்பத்தை உறுதி செய்து வண்ணமயமாக மாறியது....

கரணுக்கு மொத்த சந்தோஷமும் கைகூடி வந்த உணர்வு....
வீட்டில் எல்லோருக்கும் அடுத்த வாரிசின் வருகை மனதில் ஒரு துள்ளலை கொடுத்து இருந்தாலும்...

சாருவுக்கோ.... இன்னது என்று சொல்ல முடியாத உணர்வு....'என் வாழ்வின் பிடிமானம் நீ தான்..' நாட்பது நாட்களேயான கருவிடம் நானூறு முறையாவது சொல்லி இருப்பாள்..

"இந்த குட்டி பாப்பா உனக்கு எல்லா சந்தோஷத்தையும் திரும்பத் தரணும்.... நீ இழந்த உன் உண்மையான சந்தோஷம் இந்த பாப்பா மூலம் கிடைக்கும்....எதுவும் யோசிக்காத.... அவளின் புஜ்ஜி மட்டும் அவளின் மனமறிந்து சொன்னான்…"

அன்றிலிருந்து இதோ இந்த இரண்டு வாரமாக கருவில் வளரும் குழந்தையுடன் கற்பனையில் பேசிக் கொண்டே இருப்பாள்...
" நான் இழந்த சந்தோஷம் எல்லாம் மொத்தமா நீ திரும்ப எனக்குத் தருவியாம்.... புஜ்ஜி சொல்றான்.... என் காதலையும் திரும்ப என் கை சேர்க்க முடியுமா உன்னால...???
கல்யாணம் முடிஞ்ச இத்தன மாசம் எனக்கு கிடைக்காத நிம்மதி, சந்தோஷம் எனக்கு திருப்பி தர முடியுமா உன்னால...??"
இதே தான் அவளின் பிள்ளையுடனான பேச்சாக இருக்கும்....
அவளையும் மீறி சில சமயங்களில்......
"நீ தான் என் வாழ்க்கையோட பிடிமானம் பற்றுக்கோல்ன்னு நான் நெனச்சிட்டு இருக்கேன்.... நீ என்மேல பாசமா இருப்பியா இல்லன்னா எதோ ஒரு சந்தர்ப்பத்தில என்னைய உதறித் தள்ளிட்டு போய்டுவியா???"என யாரிடமோ கேட்கப்பட வேண்டிய கேள்வியை பிள்ளையிடம் கேட்டு வைப்பதும் உண்டு....

இன்று மாலை இப்படி மனதில் பேசிக்கொண்டு அவள் பின்கட்டில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் நேரம் கரண் வீட்டுக்கு வந்திருந்தான்.

" வா...ண்ணா.... என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட... அண்ணிக்கு செக் அப் கூட இல்லையே…"

"இல்ல.. நதிம்மா... இன்னைக்கு ஒரு மீட்டிங் முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன்....குடிக்க கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வாடா…"
"இதோ தர்றேன்..." கையில் இருந்த ஐஸ் கிரீமை டீப்போ மேல் வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

நீரைக் குடித்து கிளாஸை வைத்தவன்... "எங்க அம்மா, பாட்டி ரெண்டு பேரும்...??"

" அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க... அப்பா தூங்கிட்டார்...
உனக்கு காப்பி, டீ ஏதாவது வேணுமா..?? இல்ல இதோ ஐஸ்கிரீம் இருக்கு தரட்டுமா..??"

"எதுவும் வேணாம் அப்றம் பார்க்கலாம்.... சாரு எங்க..??"

"அண்ணி துணி துவைக்கிறாங்க…"

" இந்த டைம்ல....??"

" ஹ்ம்ம்... ஆமா... அண்ணி திங்க்ஸ் கொஞ்சம் வாங்கணும்னு சொன்னாங்க...அதான் போய் வந்து குளிக்க போனாங்க அதோட டிரஸ் எல்லாம் துவச்சிட்டு வர்றேன்னு சொன்னாங்க...."

"ரெண்டு நாள் முன்னாடி தானே நீயும் தருணும் போய் எல்லா மளிகை சாமானும் வாங்கிட்டு வந்தீங்க... இன்னும் என்ன..??"

" அது வீட்டுக்கு.... இது அண்ணிக்கு…"

"என்னடா... கன்பியூஸ் பண்ற...."
"நீ தான் புதுசா கேள்வி கேக்குற.... அண்ணி வந்து இத்தன மாசமா இது நடக்குறது தான்... ஒவ்வொரு மாசமும் அவங்களுக்கு தேவையான எல்லாம் போய் வாங்கிட்டு வருவாங்க... அவங்க யூஸ் பண்ற சில திங்ஸ் ப்ராண்ட் பார்த்து வாங்கணும்னு அவங்க போய் தான் வாங்கிட்டு வருவாங்க....எனக்கும் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் எல்லாம் வாங்கி தருவாங்க... இதோ ஐஸ்கிரீம் அவங்க வாங்கினது தான்... முன்ன எல்லாம் தரும் போது நல்லா சாப்புடுவ இன்னைக்கு புதுசா கேள்வி கேக்குற…"
நதி அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க…
இவன் புருவம் சுருங்கி யோசனையில் இருந்தான்....

சட்டென்று எழுந்து வெளியே போக, பின்னால் நதியும் போனாள்.... பின்கட்டில் துவைக்கும் கல்லில் அவளின் துணிகளுடன் அவனின் துணிகளையும் பிழிந்து வைத்துக் கொண்டு இருந்தவள்... இவர்களைக் கவனிக்கவில்லை...

"ஏன் நதிம்மா... வாஷிங் மெஷின் என்னாச்சு..??"மெதுவாக கேட்டான்.....
"அது நல்லா தான் இருக்கு... அண்ணி யூஸ் பண்ண மாட்டாங்க.... அவங்களுக்கு கைல கழுவி தான் பழக்கம்ன்னு சொல்வாங்க...."

அவனுக்கு இதில் எல்லாம் ஏதோ ஒரு முடிச்சு இருப்பதாக ஒரு எண்ணம் வர... அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...

உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்த்தவள்.... "ஓஹ்... சீக்கிரமே வந்துட்டீங்களா..??
இதோ குளிச்சிட்டு வர்றேன்…"
துணியெல்லாம் எடுத்து வாளியில் போட்டவள்...
குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்....

"அண்ணி குளிச்சு முடிய மேல வர சொல்லு நான் ரூமுக்கு போறேன்...."
"சரிண்ணா...."

சாரு நீட்டிய காப்பியை வாங்கி குடித்தவன்....
" உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்பிடி கொஞ்சம் உக்காரு…"

"என்ன பேசணும்....??" கட்டிலில் அமர்ந்தவாறு கேட்டாள்...

"இது என்ன..??" கொஞ்சம் பணத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்....

" பணம்...." ஏன் கேட்கிறான் என்று தெரியாமல் பதில் சொன்னாள்....

" பணம்னு தெரிஞ்சும் எடுத்து செலவு பண்ணாம இருந்தா என்ன அர்த்தம்...???"

"என்ன சொல்றீங்க...???
எனக்கு தலையும் புரியல வாலும் புரியல...."

"உனக்கு... உன் செலவுக்குனு நான் வெச்ச பணம்... இத்தன மாசமா நீ எடுக்கல்ல…"

"எனக்கா....??? எதுக்கு"

"இது என்ன கேள்வி...?? உனக்குத் தான்... அப்பப்ப வெச்சுட்டு போவேன் நீ எடுத்து டாயர்ல வெச்சிருப்ப…"

"ஆமா.... ட்றஸிங் டேபல்ல சில நேரம் இருக்கும்... மறந்து வெச்சிட்டு போய்ட்டீங்க போலன்னு எடுத்து வைப்பேன்…"

"நான் கூட எடுத்து வெச்சிட்டு தேவைப்படும் போது எடுத்துப்பன்னு நெனச்சிட்டு இருந்தேன்....
ஆனா இன்னைக்கு நீங்க ஷாப்பிங் போனீங்கன்னு நதி சொன்னா... இங்க வந்து பார்த்தா பணம் அப்படியே இருக்கு...
அதுவு‌ம் இத்தன மாசமா நான் வெச்ச மொத்தப் பணமும்.... நீ இத எடுக்காம செலவுக்கு என்ன பண்ணின…"

"அதான் என்கிட்ட பணம் இருக்கே... அத தான் செலவு பண்ணிட்டு இருக்கேன்.....
இந்தப் பணம் எனக்கு வெச்சதுன்னு எனக்குத் தெரியாது... நீங்க சொல்லவும் இல்ல நான் உங்ககிட்ட பணம்லாம் எதிர்பார்க்கவும் இல்ல…"

"ஏன் டீ...???" இயலாமைக் குரல் அவனது… ஏதோ பெரியதாக வரப் போகிறது என்று அவன் மனம் அறுதியிட்டு கூறியது...

" அப்றம்.... நான் உங்க பணத்துக்காகவும்.... கிராமத்தில நான் அனுபவிக்காத வசதியான இந்த வாழ்க்கைக்காகவும்.... உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதா யாரும் சொல்லிட கூடாதுன்னு தான்…"

தலையில் இடி விழுந்தது போல இருந்தது அவனுக்கு.... அதிர்ச்சி கோபம் இயலாமை எல்லாம் கலந்த உணர்வுடன்....

"அப்போ.... அன்னைக்கு நானும் தீப்தியும் பேசிட்டு இருந்தத ஒட்டுக் கேட்டிருக்க.. அப்படி தானே....???"

"ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமே இல்ல அவ உங்க கூட பேசுனதே நான் கேட்டுட்டு இருக்கேன்னு தெரிஞ்சு தான்…"
அடுத்த இடியையும் அழகாக இறக்கினாள்…

"உனக்கு எப்பிடி தெரியும் அது....?? அவளுக்கு என்ன தேவைக்கு அப்படி செய்யணும்...??" புரியாத புதிராக தன் முன்னால் வார்த்தைகள் வந்து கொட்டிக் கொண்டிருக்க.... புதிருக்கு விடையை அவளிடமே கேட்டான்....

" உங்களுக்குத் தெரியாத எத்தனையோ விஷயம் எனக்குத் தெரியும்…"

" அப்படி என்ன பெருசா தெரியும் உனக்கு..??" குரலில் கோபம் எட்டிப் பார்த்தது...

"கட்டிலை விட்டு எழுந்தவள்....அவ உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டது கூடத் தெரியும்…"

"லூசு மாதிரி ஏதாவது சொல்லாம சும்மா இரு சாரு…"

" ஆமா நான் லூசு தான்.... மக்கு தான்.... ஒண்ணுமே தெரியாத ஒண்ணுக்கும் உதவாதவ தான்…"

சொன்ன அவளுக்கு வலிக்காமல்
அந்த வார்த்தைகளை கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு வலித்தது.... இதெல்லாம் தீப்தி அன்று சொன்னது... மனம் அவனுக்கு ஞாபகமூட்டியது....

கசந்த புன்னகையுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்....

"பிளீஸ் என்ன நடந்ததுன்னு சொல்லு சாரு... எனக்கு ஒண்ணும் புரியல.... ஏதோ பெருசா நடந்திருக்குன்னு மட்டும் புரியுது…"
அவளின் தோல்களை பிடித்து உசுப்பினான்....

"முடியாது சொல்ல மாட்டேன்... அவ பேச்ச தானே நீங்க கேட்டீங்க... அவக்கிட்டயே போய் கேட்டுக்கங்க.... முறண்டிக் கொண்டு நின்றாள்…"

"அடியேய்.... இது என்ன சின்ன புள்ள தனமா பேசிகிட்டு இருக்க…"

"ஆமா தானே.... என் காதல் கூட சின்னபுள்ள விளையாட்டு தானே உங்களுக்கு…"

" அய்யோ…" அவள் தோல்களை விடுத்து.... தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.... ஆயாசமாக வந்தது அவனுக்கு...

அவள் இவனை திரும்பியும் பார்க்காமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தால்...

சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன்.... இன்று இதைப் பேசி முடிவுக்கு வர எண்ணி அவளைத் தேடிப் போனான்....
மொட்டை மாடிக்குப் போகும் கதவு திறந்து இருக்க அவள் அங்கு தான் இருப்பாள் என்று அங்கே போக அவள், தருணின் தோலில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது தெரிந்தது....

"சாரு...."

இவனின் குரலுக்கு அவள் நிமிர... இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்து எழுந்து வந்த தருணிடம்....

"ஏதோ பெருசா நடந்து இருக்கு இவ சொல்ல மாட்டேங்கறா... உனக்கு தெரியாம இருக்காது....
எனக்கு சொல்லு தருண்... என்ன தான் நடந்திச்சு..??"

கரணை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவன்... திரும்பி சாருவைப் பார்த்தான்....

"பாபி கூட நெருங்கி பழகுறது வெச்சி.... உனக்கும் அவளுக்கும் இடையில உங்களுக்கே உரிய தனியான இடங்கள்ல நான் வர மாட்டேன்.... சில விஷயங்கள அவ மூலமா நீ தெரிஞ்சுகிறது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது மூணாவதா யாரும் வேணாம் அது நானாகவே இருந்தாலும்…"

"ஆனா அவ சொல்ல…"
முடிக்க விடாமல்..
" இப்போ கேளு சொல்லுவா...
கதவ சும்மா சாத்தி வெச்சிட்டு போறேன் பாபி கூட பேசு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது…"

" சொல்லு என்ன தான் நடந்தது....??" சாருவின் அருகில் உட்கார்ந்து அவளின் ஒரு கையை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவன் அவள் பக்கம் திரும்பிக் கேட்டான்....

அவன் முகத்தைப் பார்க்காமல் தூரத்தில் தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்....
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 7

*காதல் நீ சொல்ல...தகுதியறிந்து நான் தூரம் போக… உன்னிடமே வந்து விழுகிறது என் பாவி மனது…*

ரேணுகா மற்றும் நாதனின் மூத்த அக்கா தான் ரேகா அவரின் மகள் தீப்தி…
நான்கு வருடங்களுக்கு முன் ரேணுகாவின் கணவர் பக்கத்து திருமணம் ஒன்றுக்காக எல்லோரும் அங்கே சென்று இருந்தனர்…

அன்று இரவு தீப்தி… "அம்மா நான் கரண கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்…"

"என்னடி சொல்ற அவனுக்கும் உனக்கும் ஒரே வயசு… மாமா இதுக்கு ஒத்துக்கவே மாட்டார்"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது… எனக்கு அவன புடிச்சிருக்கு… நான் அவன தான் கட்டிக்கப் போறேன்… சந்தர்ப்பம் பார்த்து நான் அவங்கிட்ட பேசறேன் அப்புறம் நீங்க, மாமா கிட்ட பேசிடுங்க… அவங்க இங்க இருந்து போக முன்ன எனக்கு முடிவு வேணும்…"

"இப்பிடி எடுத்தேன் கவுத்தேன்னு செய்ற வேலையா இது…கொஞ்சம் பொறுமையா இரு… பிறகு பேசிக்கலாம்... "

"நான் என்ன இன்னிக்கே கல்யாணத்த பண்ணி வைங்கன்னா கேட்டேன்… மாமா கிட்ட பேச தானே சொல்றேன்… ரெண்டு மூணு வருஷத்துக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன்… இப்போ உங்க மருமகன அட்வான்ஸ் புக்கிங் பண்ண சொல்றேன்…
இன்னும் ஒண்ணு, வயச பத்தி யோசிக்காதீங்க அவன், எனக்கு தான்னு கடவுளே முடிச்சி போட்டுருக்கார் போல அதான் உங்க கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷம் கழிச்சு அவன் பிறந்த அடுத்த மாசம் நான் பிறந்தேன்… இல்லைன்னா நீங்க சொன்ன வயசு பிரச்சனை வரும்ல…"

கேலியாக சிரித்து விட்டு சென்றவளை பார்த்து தலையில் அடித்து கொண்டே… "இவளையெல்லாம் நம்மலால ஒண்ணும் பண்ண முடியாது, என்னவோ பண்ணிக்கட்டும்" முணுமுணுக்க மட்டுமே முடிந்தது ரேகாவால்…

இவை அனைத்தும் தண்ணீர் குடிக்க அறையை விட்டு வெளியே வந்த சாருவின் காதில் விழுந்தது…

அடுத்த நாள் காலையில் திருமணத்திற்கு தயாராகி கீழே இறங்கி வந்த சாருவை தான் இருந்த அறை வாசலில் நின்று கூப்பிட்டு இருந்தான் கரண்…

"ஏன் அத்தான்"

"என் ட்றஸ்ஸ கொஞ்சம் அயர்ன் பண்ணி தர்றியா ப்ளீஸ், நான் குளிச்சிட்டு வர்றேன்…"

"சரி… தாங்க அத்தான்…"
அவள் அயர்ன் பண்ணி முடிய அவன் குளித்து விட்டு வந்திருந்தான்…

"தேங்ஸ் சாரு"

"தேங்ஸ் எல்லாம் எதுக்கு அத்தான்??"

"ஓகே தேங்ஸ் வாபஸ் ஆனா இன்னும் ஒண்ணு இருக்கு சொல்லட்டுமா..??"
குறும்பு பார்வை பார்த்துக் கேட்க… புரியாத பார்வை இவளிடம்…

"பக்கத்துல வா சொல்றேன்… "

"முடியாது வரமாட்டேன்… நான் போறேன்…"
அவளுக்கு கரண் என்னமோ கிண்டல் பண்ணுவதாக தோன்றியது

"ஏய்… இரு… இரு சொல்றேன்…"
சுற்றிலும் ஒரு பார்வை வீசி யாரும் இல்லை என உறுதி செய்து அவளருகில் வந்தவன்…

"நீ ரொம்ப அழகா இருக்க, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…??"

கேட்டு முடிய அவளது கண்களில் ஒரு பயப் பார்வை… என்னென்று அவன் உணர்ந்து கொள்ள முன்னர்.. அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடி வந்தவள்… படபடக்கும் நெஞ்சை நீவிக் கொண்டாள்…

'நைட் தீப்தி அக்கா அப்பிடி சொல்றாங்க, இப்போ அத்தான் என்கிட்ட கல்யாணம் பண்ண கேட்கிறார்…இது மட்டும் தீப்தி அக்காக்கு தெரிஞ்சது நான் செத்தேன்.. ஏற்கனவே என்னைய கண்டாலே பிடிக்காது' யோசனையுடன் இருந்தவளை கரண், நாதனிடம் ஏதோ பேசிய சத்தம் கலைக்க அவனின் குரல் என்று உணர்ந்த நொடி ரேணுகாவிடம் ஓடியிருந்தாள்…

"ஏய்… என்ன பாபி… நானும் இன்னைக்கு முழு நாளும் பார்த்துட்டு தான் இருக்கேன்… என்னவோ யோசிச்சுட்டே இருக்க...முகமே ஒரு மாதிரி இருக்கு…உடம்புக்கு முடியல்லையா இல்ல யாரும் ஏதும் சொன்னாங்களா…??"
திருமணம் முடிந்து வந்த பிறகும் கூட ஏதோ யோசனையாக உட்கார்ந்திருந்த சாருவிடம் கேட்டான்.

"இல்ல புஜ்ஜி ஒண்ணும் இல்ல… நான் நல்லா தான் இருக்கேன்.."

"இத நான் நம்பணுமா..?? உன் மூஞ்ச போய் நீயே கண்ணாடில பாரு அந்த மூஞ்ச பார்த்தாலே புரியுது நீ நல்லா இல்லன்னு… நீ என்கிட்ட மறைக்க பார்க்குற… சரி சொல்ல முடியலன்னா செல்லாத…"

"இல்லடா… அது… வந்து.." சுற்றுமுற்றும் பார்த்தவள் தட்டுத்தடுமாறி பயந்த குரலில்
"என்கிட்ட ஒருத்தர் க… கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாரா.. அதான் பயமா வருது பெரியவங்க யாரும் கேட்டுட்டு இருந்து அம்மா கிட்ட சொல்லிட்டாங்கன்னா... அடிச்சு தோல உரிச்சுட்டு தான் மத்த வேல பாப்பாங்க…"

"ஓஹ்… அது தான் பிரச்சனயா…?? சரி சொல்லு அவர உனக்கு
பிடிச்சிருக்கா..??"

"அட நீ வேற போடா… நானே பயந்து போய் இருக்கேன் உனக்கு கிண்டல்…"

"நான் கிண்டல் பண்ணல்ல…உண்மையா தான் கேட்கறேன்… பிடிச்சிருக்கா..??"

"நான் அத யோசிக்கவே இல்ல… பயம் மட்டும் தான் கண்ணுக்கு முன்னாடி நிக்குது…"

"சரி இப்ப யோசிச்சு சொல்லு அவர பிடிச்சிருக்கா…"

"ஆ… தெரில…"

"தெரியாம தான்… அவரு அவருன்னு வாய்ல வருதோ..??"

"அய்யோ சும்மா இருடா பிளீஸ்… யாரும் கேட்டுட போறாங்க…"

"யாரு‌ம் கேக்க மாட்டாங்க ஆனா அங்க பாரு எங்க அண்ணா நாம பேசறத தான் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கார்…"
கேட்டதே அவன் தான் எனத் தெரியாமல் அவளிடம் சொல்லி விட அடுத்த நொடி அங்கிருந்து ஓடி விட்டாள்…
அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது அவளுக்கு…
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் நேரே தருணிடம் போனவள்…

"போ புஜ்ஜி நீ என்னைய சும்மா சும்மா குழப்பி விடாத… இதெல்லாம் கல்யாணம் பண்ற வயசா என்ன… நான் அவர் கூட இனி பேசவே மாட்டேன் நீயும் என்கிட்ட இத பத்தி பேசாத…."

"அடியேய் பாபி நீ தான் ஒரு பக்கம் விடிய முன்ன அவர பத்தி பேச வந்திருக்க… நான் இன்னும் பிரஷ் பண்ண கூட இல்ல…"

"அய்யோ… சாரிடா… நான் கீழ போறேன் நீ குளிச்சிட்டு வா…"

"பாபி… இது கல்யாணம் பண்ற வயசா இல்லாம இருக்கலாம்… ஆனா உன் மனசு உனக்கு தெரியும் தானே…யாரு உன் கிட்ட இத கேட்டதுன்னு தெரில… மனச போட்டு குழப்பிகாத கொஞ்சம் யோசி… உன் அப்பா, அம்மா பத்தி நான் சொல்ல தேவையில்லை ஏதும் சிக்கல்ல மாட்டிக்கிட்டு கஷ்டப்படாத…"

"அட போடா எனக்கே பயமா இருக்கு… நீ வேற இன்னும் பயமுறுத்துற… நான் போறேன் போ… நான் எதுவும் யோசிக்கறதா இல்ல… எனக்கு இதெல்லாம் தேவையே இல்ல…"

"சரி சொல்லு யாரது…" அவள் மனதைக் கலைத்தது யாரென அறிந்து கொள்ளக் கேட்டான்….அவளின் கண்ணில் என்றும் இல்லாத ஒரு பளபளப்பு அவளின் ஆழ் மனதின் விருப்பத்தை தருணுக்கு படம் போட்டுக் காட்டிவிட்டது

சொல்ல முடியாது என மறுப்பாக தலையாட்டி விட்டு கீழே போய்விட்டாள்…
முன் வாசலுக்கு சென்றவளை கண்டு பின்னோடு வந்து

"என்ன மேடம் என் தம்பிகிட்ட என்னைய போட்டு குடுத்துட்டீங்க போல…"
முன்தினம் மாலை அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது கரணை காட்டி தருண் ஏதோ சொல்ல சாரு எழுந்து ஓடியதை வைத்து கேட்டான்…
மெல்லிய குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்ப…

"ப்ளீஸ் கொஞ்சம் மேல வா…" சொல்லி விட்டு வெளிப்புறம் இருக்கும் படியால் மேலேறினான்…

"இல்ல நான் வரமாட்டேன்…தீப்தி அக்கா…"
பேசவிடாமல் இடையிட்டவன்…

"யாரும் இங்க இல்ல கல்யாண வீட்டில தான் இருக்காங்க… எங்க அம்மாவும் ரேணுகா அத்தையும் ரூம்ல பேசிட்டு இருக்காங்க…"

என்ன என்று உணரமுடியாத மனநிலையில் அவளும் அவன் பின்னால் போக… மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து நின்றவன் …

"என்னை உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு நான் உன்ன வற்புறுத்த மாட்டேன்…" சொன்னவன் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்து…
"பிடிக்காதா… ??" எனக் கேட்டிருந்தான்…

"இ… இல்ல அத்… தான் பிடிக்கும்…ஆனா…. கல்… கல்யாணம் பண்ண… முடியாது அத்...தான்னு பிடிக்கும் அவ்..வளவு தான்…"
வார்த்தைகள் சிக்கிக் கொண்டன அவளுக்கு…

மந்தகாசப் புன்னகை அவன் இதழில்…
"பிடிக்கும் தானே…??
நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது இப்போ இல்ல… நான் படிப்ப முடிக்கணும், வேலைக்கு போகணும், அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்… இன்னும் ஒரு நாலு வருஷம் கழிச்சு தான் அது…ஆனா அது வரை உன்ன லவ் பண்ணனும்… ஆசையா இருக்கு…"

அவனின் கடைசி வாக்கியத்தைக் கேட்டு அவளின் இதயம் தாறுமாறாக துடித்தது… தீப்தி பேசியதெல்லாம் மூளையில் எங்கோ போய் ஒழிந்து கொண்டது… அவள் பேசியதை இவனிடம் சொல்லி விட வேண்டும் என நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு அந்த ஞாபகமே வரவில்லை… அவளுக்கு முன்னின்று பேசிக் கொண்டிருக்கும் அவனின் பிம்பத்தைத் தவிர மற்ற எல்லாம் மறைந்து விட்டது போல அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்…

"பாபி" எனும் குரல் கேட்கும் வரை…

"நான் போறேன்…"

"கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ…"
அவள் தலை குனிந்து நிற்க
"பிளீஸ் சாரு… லவ் பண்ணலாமா…?? அத்த பொண்ண சுத்தி சுத்தி வந்து லவ் பண்ண யாருக்கு தான் கசக்கும்…"

குறும்புக் குரல் அவனிடம் வெட்கப் புன்னகை அவளிடம்…

அவளை பேச விடாமல் மீண்டும் கேட்டது தருணின் குரல்…

"வா போகலாம்…"

"இல்ல…" மறுப்பாக தலையாட்டினாள்

"ஏன்…"

"அவனுக்கு நீங்க கேட்டது மட்டும் தான் தெரியும்… நீங்க தான் கேட்டீங்கன்னு நான் சொல்லல்ல… எனக்கு ஏனோ நீங்கன்னு சொல்ல தயக்கமா இருந்துச்சு அதான்…"

லேசான புன்னகையுடன்… "நீ சொல்லி இருந்தாலும் பரவாயில்லை நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்… சும்மா கேலிக்கு தான் போட்டுக் கொடுத்தியான்னு கேட்டேன்… சரி நீ போ… நான் அப்புறம் வர்றேன்…"

அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போய்விட்டாள்…கீழே போனவளுடன் தருண் பேசும் சத்தம் கரணுக்கும் கேட்டது

"எங்க போன பாபி…??"

"அது மேல…"

"மேல என்னடீ..??"

"மேல அவர்…" சொல்லிக் கொண்டு மேலே பார்த்தவளின் பார்வையைப் பின் தொடர்ந்து பார்த்தவன் வாயைப் பிளந்து நின்று விட்டான்… மேலே இருந்து இவர்களை எட்டிப் பார்த்துப் புன்னகை முகமாக நின்றிருந்த கரணைக் கண்டு…

"அண்ணாவா உன் அவரு…?? அவனா உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணான்…"
மகிழ்ச்சி குரல் அவனிடம்… தயக்கமாக ஆமென்று தலையசைப்பு இவளிடம்…

"என்கிட்ட சொல்லவே இல்ல நீ.."அவளுடன் நடந்து கொண்டே கேட்டான்…

"போ புஜ்ஜி… எனக்கு பயமா இருக்கு.. என்னவோ எல்லாம் யோசனையா இருக்கு… நான் இன்னும் ஒண்ணும் சொல்லல்ல அவர்கிட்ட…"

"சரி சொல்லு அண்ணா கிட்ட ஓகே சொல்ல என்ன ப்ராப்ளம். உனக்கு…??"

"அம்மா, அப்பா,மாமா… என்ன சொல்லுவாங்களோன்னு.. "

"அதெல்லாம் பாத்துக்கலாம் பாபி… உனக்கு அண்ணாவ பிடிச்சிருக்கா, இல்லையா அத மட்டும் சொல்லு… பிடிக்கலைன்னா விட்டுடலாம்… பிடிச்சிருக்கா ஓகே சொல்லிடு… மத்தத அவர் பார்த்துப்பார்…"

"பிடிச்சிருக்கு தான்… எனக்கு எப்போதும் அவர பிடிக்கும் தான்… ஆனா காதல், கல்யாணம்ன்னு கேட்கும் போது.. என்னோட படிப்பு தகுதி எல்லாம் என் கண்முன்னே வருதுடா…"
அப்பாவிப் பார்வை அவள் பார்க்க…

முறைத்துக் கொண்டு நின்றான் தோழனாக… "லூசு… அதெல்லாம் ஒரு ப்ராப்ளம்ன்னு சொல்ற… அண்ணா அதெல்லாம் பார்த்து இருந்தா கல்யாணம் பண்ணிக்க கேட்பானா… நீ தேவையில்லாம அதெல்லாம் யோசிக்காத… அவருக்கு அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல… எல்லாம் சரியா வரும்… நீ ஓகே சொல்லு…"

அன்று மாலையே கரணுக்கு ப்ராஜக்ட் வேலை என அழைப்பு வர அவசரமாக கிளம்பி விட்டான்…அவசரமாக அவன் கிளம்ப… தான் நினைத்தது போல கரணுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அன்று நாள் முழுதும் ரேகாவிடம் புலம்பித் தீர்த்தாள் தீப்தி…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 8

*காதலுடன் நீ கொடுத்த முதல் முத்தம்… நெற்றியில் இறங்கி என் உயிர் வரை தித்தித்தது…*

கரண் சொன்னது போல அத்தை மகளை சுத்திச் சுத்தி காதல் செய்ய சந்தர்ப்பங்கள் இல்லை… தொலைபேசி அழைப்புகள் கூட இல்லை…
ஆனால் இவர்கள் அங்கே போகும் போது அல்லது அவர்கள் இங்கே வரும் போது என சந்தித்த ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் இருவரும் காதலை சிறு சிறு செயல்களால் மட்டும் பரிமாறிக் கொண்டனர்…

எ‌ல்லா‌ம் நன்றாகத் தான் இருந்தது… இவன் காதல் சொல்லி சில மாதங்களில் நதியாவின் மஞ்சள் நீராட்டு விழாவில் மீண்டும் குடும்பங்கள் ஒன்றாக சேரும் வரை…

எல்லோரும் இங்கு இருக்க...
எம்பிஏ படிப்பில் கடைசி ஆண்டில் இருந்தவனுக்கு அவனின் வேலைகள் தலைக்கு மேல் இருந்தால் இரண்டு நாளில் திரும்பி வருவதாக கூறி கிளம்பத் தயாரானான்…

அவன் கிளம்புவதற்கு முதல் நாள் சூரியன் மறைந்த முன்னிரவுப் பொழுது… அவனுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைக்க உதவுகிறேன் என அவன் கூடவே இருந்தவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றவன்…

"ஏன்டா ஒரு மாதிரி டல்லா இருக்க…"

"இல்ல ஒண்ணும் இல்ல அத்தான்… நான் நல்லா தான் இருக்கேன்…"

"அப்பிடியா..?? ஆனா எனக்கு என்னவோ… எங்கேயும் போகாம உன் கூடவே இருக்க சொல்லி நீ மனசுக்குள்ள என் கூட சண்ட போடுறன்னு தோணுது…"

"சண்டையெல்லாம் போடல்ல அத்தான்… ஆனா நீங்க போறது கஷ்டமா தான் இருக்கு…"

மென்புன்னகையுடன் அவளை அருகில் இழுத்து நிறுத்தியவன்…
" நான் இல்லன்னா என்ன அதான் உனக்கு உன் புஜ்ஜி இருக்கானே…?" கேலி செய்தான்…

"அவன் இருக்கான் தான் எப்பவும் இருப்பான் தான்… ஆனா நான் இங்க வரும் போது இந்த பத்து நாளும் உங்க கூட இருக்கலாம்னு ஆசையா வந்தேன்… திடீர்ன்னு நீங்க போறது கஷ்டமா இருக்கு அதான் வேற ஒண்ணும் இல்ல… நீங்க வந்து அடுத்த நாள் நான் போய்டுவேன்…அடுத்து எப்போ பார்க்க, பேசக் கிடைக்குமோ..??"
கவலைக் குரல் அவளிடம்…

" எனக்கு அங்க நிறைய வேல இருக்கு அதெல்லாம் போட்டுட்டு இங்க இருக்க முடியாதுடா…"

"ஹ்ம்ம்… எனக்கு புரியுது தான்… என்ன ஒரு சின்ன ஏமாற்றம் அதான்… நீங்க போய்ட்டு வாங்க…" தலை குனிந்து அவள் சொல்ல

"அத இப்படி தான் கவலையா சொல்லறதா… கொஞ்சம் சிரிச்சுட்டே சொன்னா எவ்ளோ நல்லா இருக்கும்…"

முயன்று புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவளின் கலங்கி இருந்த முகம் நேசம் துளிர்த்த அவன் மனதை ஏதோ செய்ய… அவள் முகத்தை அவனின் இரு கைகளுக்குள் எடுத்து இருந்தான்…

"நான் போய் வரும் வர என்னையே நினைச்சு சந்தோஷமா இருக்க இத வெச்சுக்க…"
சொன்னவன் முதல் முத்தத்தை ஆழமாக அவளது நெற்றியில் பதித்திருந்தான்…

திகைப்பும் சந்தோஷமுகம் மாறி மாறி வந்து போன அவள் கண்களில் அடுத்து இரண்டு முத்தங்கள் வைத்தவன்… அவளை அழைத்துக் கொண்டு கீழே போய்விட்டான்…

தான் வந்த இந்த இரண்டு நாட்களில் அவர்களின் பார்வை சொன்ன செய்தியில் சந்தேகத்தில் இருந்த தீப்தி… இருவரும் மொட்டை மாடிக்குச் செல்ல மெதுவாக வந்து ஒழிந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவள் இந்த முத்தக் காட்சியில் உறைந்து விட்டாள்….

படி இறங்கும் போது அவளை பார்த்து விட்ட சாரு கரணிடம் சொல்ல நினைத்த போது விடாமல் ஒலித்த அவனது கைபேசி அவளைத் தடுத்து சதி செய்தது…

சாரு தன்னை பார்த்ததை தீப்தி கவனிக்கவில்லை…

இரவு சாப்பாட்டின் பின் எல்லோரும் அவரவர் இடத்தில் உறங்கச் செல்ல… சாருவும் நதியாவும் இருந்த முன்னறைக்கு வந்தவள்… நதியா உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு உறங்காமல் இருந்த சாருவிற்கு ஒரு முறைத்த பார்வை வீசி விட்டு வெளியே சென்றுவிட்டாள்…

'அத்தான் திரும்பி வந்ததும் அன்னைக்கு பெரியம்மா கிட்ட தீப்தி அக்கா பேசினதையும் இன்னைக்கு மொட்ட மாடில ஒளிஞ்சி இருந்து பார்த்ததையும் சொல்லிடணும்' அவன் மனதோடு நினைத்துக் கொண்ட நேரம்…

"ஏன் தீப்தி இங்க கூட்டிட்டு வர்ற??" சாரு இருந்த அறை ஜன்னல் அருகில் கரணின் குரல் கேட்டது

"ஒரு விஷயம் கேட்கணும் கரண் எல்லாரும் தூங்குறாங்க நாம பேசறது டிஸ்டர்ப்பா இருக்கும் அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்…"
அந்த அறையில் இருப்பவள் தூங்கவில்லை என்று அறிந்து சொன்னாள்…

அவளின் குரல் கேட்டதும் திகைத்தாள் சாரு 'இப்போ தானே என்னைய பார்த்து முறச்சிட்டு போனா'

"சரி கேளு என்ன விஷயம்..?"

"சாரு மேல ஒரு கண் வெச்சிட்டு இருக்க போல என்ன விஷயம்…??"

கட்டிலில் சாய்ந்து படுத்து இருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்… ஏனோ மனம் படபடப்பாக இருந்தது…

"ஓஹ் அதுவா..??"

"யெஸ் அதே தான்"

"ரெண்டு பேரும் லவ் பண்றோம்"

"ஓஹ் ரியலி..? "
கிண்டல் குரலில் கேட்டாள்

"என்ன கிண்டல் பண்ற… லூசா நீ..?"

"யாரு கிண்டல் பண்றாங்க
நானா நீயா…?யாரு லூசு நானா அவளா..??"

"ஏய்…" கோபப் பார்வையும் குரலும் அவனிடம்

தனக்காவே இந்த கோபக் குரல் என்று பெருமிதம் இந்த அப்பாவி சாருவிடம்…

"கோபப்படாத… நான் சொல்றத கேளு.. உட்காரு…"
புட்தரையைக் காட்டினாள்

"நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க ஒண்ணும் தேவையில்லை நான் போறேன்…"

"ப்ளீஸ் கரண்… உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… புரிஞ்சிக்க"

"சரி சொல்லு அப்பிடி என்ன நல்லதுன்னு பார்க்கலாம்… தவறான நேரத்தில் தணிந்து; உட்கார்ந்து அவள் பேச்சைக் கேட்டான்"

"கோபப்படாம கொஞ்சம் யோசி… நீ எம்பிஏ படிச்சிட்டு இருக்க இன்னும் சில மாசம் தான் அது முடிய…
அதுக்கு பிறகு வேலைக்கு போவ நல்லா சம்பாதிப்ப உன் லெவல் கூட்டிகிட்டே போகும் ஆனா அவ…??
ஸ்கூல் படிப்போட வீட்டில இருக்கா…
உனக்கும் அவளுக்கும் ஏணி வெச்சி கூட பார்க்க முடியாது…"

"அது என்னோட ப்ராப்ளம்… அதுல உனக்கு என்ன கஷ்டம் வந்துச்சி..?"

"எனக்கு இல்ல மொத்த குடும்பத்துக்கும் கஷ்டம் வந்துடாம இருக்கணும்னு தான் சொல்றேன்டா..."
கெஞ்சல் குரலில் கொஞ்சினாள்… சாத்தான் அழகாக வேதம் ஓதியது

"என்ன உளறல் இது…"

"உளறல் இல்ல இது தான் உண்ம…கொஞ்சம் யோசிச்சு பாரு…
உன் லவ்வ கொஞ்சம் ஓரமா வெச்சுட்டு யோசி… உனக்கு அவ மேல காதல்ன்னு சொல்ற… ஓகே என்னைல இருந்து லவ் பண்ற..??"

"உங்க பெரியப்பா பையன் கல்யாணத்துக்கு வந்தப்போ தான் ப்ரபோஸ் பண்ணேன்…"

'எனக்கு உன் கூட பேசவே டைம் கிடைக்கல்ல,நீ அவள ப்ரபோஸ் பண்ற அளவு ஃப்ரீயா இருந்து இருக்க..'
மனதில் கருவிக் கொண்டே…
"உடனே ஓகே சொல்லி இருப்பா…" நக்கல் சிரிப்போடு தொடர்ந்தாள்

"அது ஒரு லூசு… அவ தருண் கூட லைப் லாங் இருக்கலாம்ன்னு சின்ன புள்ள தனமா யோசிச்சி தான் உனக்கு ஓகே சொல்லி இருப்பா…, அவளுக்கு தான் தருண் இருந்தா சாப்பாடு கூட தேவையில்லையே…அதோட இந்த சொத்து,பணம், கிராமத்துல அவ பார்க்காத வசதிவாய்ப்பு இதையெல்லாம் அனுபவிக்க ஆசைப்பட்டுருப்பா…
நீயும் அவள நம்பி அவ பின்னால சுத்திட்டு இருக்க…"

" சும்மா உளறாதே தீப்தி" கோபம் எட்டிப் பார்த்தது குரலில்

"நான் உளறல்ல நீ தான் புரிஞ்சிகாம கோவப்படற…
லவ் பண்ற வயசா அவளுக்கு…?? இப்ப தான் எய்ட்டீன் இயர்ஸ்…எதையும் டீப்பா யோசிக்க தெரியாம சின்ன புள்ள போல இருக்கா…ஒண்ணும் தெரியாம ஒண்ணுக்கும் உதவாம சுத்திட்டு இருக்கா அவ…
ஆறு மாசம் இருக்குமா இந்த லவ் ஸ்டோரிக்கு… அத பார்த்து ஆயுசுக்கும் பொருத்தம் இல்லாத ஒருத்திக் கூட குப்ப கொட்ட போறியா…

உன் தகுதி என்னன்னு மக்கு அவளுக்கு தான் தெரியாது உனக்குமா தெரில??
அவ அழகு தான், நான் இல்லன்னு சொல்லல்ல பட் அது மட்டும் போதுமா…?? "
கேள்வியாக நிறுத்தினாள்…
அவன் யோசிப்பது கண்டு மனதில் துள்ளலோடு

"சரி வேற ஒண்ணும் தேவையில்லை இத யோசிச்சு பாரு… நீ இங்லிஷ்ல பேசற ஸ்பீட்டுக்கு அவளுக்கு அல்பபட் கூட ஒழுங்கா தெரியாது… பங்ஷன் பார்ட்டின்னு கூட்டிட்டுப் போனா உனக்கு தான் சங்கடம்… இதே போதுமே சண்ட ஆரம்பிக்க.. அவளுக்கு ஒரு மெசேஜ் கூட டைப் பண்ண தெரியுமோ என்னவோ…?? டெஸ்ட் பண்ணிப் பார்க்க அவ கிட்ட ஃபோன் கூட இல்ல…
அழக பார்த்து உன் மனசுல வந்த இந்த சலனம் அவ கூட வாழும் போது உன் நிம்மதிய பறிச்சிடும்…

நீங்க ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு நின்னா அத்த,மாமா பாவம் அவங்க நிம்மதி இல்லாம தவிப்பாங்க…
என் சித்தி பொண்ணு தான், தங்கச்சி தான்… அதெல்லாம் விட, உனக்கு ப்ராப்ளம், உன் பேமிலிக்கு ப்ராப்ளம்ன்னு ஒண்ணு இருக்கே… கல்யாணத்துக்கப்றம் அவளுக்கு கூட சந்தோஷம் இல்லாம போய்டும்ல...

இப்பவே ஒதுங்கிட்டா… இந்த கொஞ்ச நாள் பழக்கம் மனச விட்டு போய்டும் உனக்கு தகுதியான, படிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்கலாம்… அவளுக்கு ஊர்லயே அவக்கு ஏத்த மாப்பிள்ள பார்ப்பாங்க…

நான் என் மனசுக்கு சரின்னு பட்டத சொல்லிட்டேன் நீ உன் லவ்வ கொஞ்சம் தூரப் போட்டுட்டு ரியாலிட்டிய யோசிச்சு பாரு…
வா… போய் தூங்கலாம்…"

அவ்வளவு தான் என்று எழுந்து சென்றவள் திரும்பி… யோசனையாக உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்து கேலியாக புன்னகைத்துக் கொண்டாள்…

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சாருவிற்கு அழுகை மட்டுமே…இப்படி எல்லாம் தாழ்த்திப் பேசுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே அவள்… 'புஜ்ஜிக்காகவா அத்தான் காதலுக்கு ஓகே சொன்னேன்.. இந்த பணம் வசதிவாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டா ஓகே சொன்னேன்… இந்த தீப்திக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு…'
அக்கா என்ற சொல் மனதளவில் கூட வரவில்லை…
'மெசேஜ் டைப் பண்ண தெரியாதாமா அப்பா ஃபோன் வாங்கி தராம நான் யாருக்கு, எப்பிடி மெசேஜ் அனுப்புறதாம்…'
வரட்சிப் புன்னகை அவள் இதழில்

'ஆனா இதெல்லாம் கேட்டு அத்தான் ஏன் ஒண்ணும் சொல்லாம இருந்தாங்க…
என்னப் போல அவங்களும் கவலையா இருக்காங்களோ.?? எங்க காதலையே தப்பு, சின்னபுள்ள தனமா இருக்குன்னு சொன்னா கவல வரும் தானே…
அத்தான் முத்தமே கொடுத்துட்டார் இவங்களுக்கு சின்னபுள்ள விளையாட்டாம்ல…' வெட்கப் புன்னகை முகத்தில் படர

அவன் சித்தம் கலைத்து பித்தனாக உட்கார வைக்கப்பட்டது அறியாதவள்… அவன் கொடுத்த முத்தத்தை நினைத்துப் பித்தனாள்…

'அத்தான் ரூம்ல போய் பாத்துட்டு வரலாம் ஆனா இந்த டைம்ல நான் போறத தீப்தி பார்த்தா அதுக்கும் ஏதும் சொல்லுவா காலைல பேசிக்கலாம்…'
கரணை நினைத்தவளுக்கு மற்றதெல்லாம் மறந்து போனது….

தூக்கம் கண்ணை வருட தூங்கியும் விட்டாள்….
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 9


*புரிதலே பொய்த்து போன பின்… காதல் இருந்தென்ன; இறந்தென்ன… *



"இங்க பாருங்கம்மா என்னோட கதைய எடுக்கவே எடுக்காதீங்க…
பர்ஸ்ட் சாருவ அவங்கிட்ட இருந்து ஓரம் கட்டணும்
மத்தத அப்றம் பார்த்துக்கலாம்…"

சரியாக தீப்தி கரணிடம் வேதம் ஓதிய அதே நேரம் மகளின் சொல் கேட்டு ரேகா, நாதனிடம் பேசி இருந்தார்…

"நாதா நீ ஒண்ணு கவனிக்கல்ல போல… கரண் சாரு இடையில என்னவோ இருக்கு அவங்க பார்வையே சரியில்ல… கரணுக்கு வாரவ தான் இந்தக் குடும்பத்த தாங்குற மூத்த மருமக… அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்ல…??"

ஆமோதிப்பாக தலையசைத்து அக்கா பேச தூபம் போய்ட்டார் நாதன்…

"நம்ம தங்கச்சி பொண்ணு தான் இருந்தாலும்… அவ ஒரு குடும்பத்த பார்த்து நடத்தக் கூடிய அளவுக்கு இல்ல… சின்ன புள்ளதனமா சுத்திக்கிட்டு இருக்கா… ரேணுகாவும் அப்பிடியே விட்டு வெச்சுருக்கா…
இப்போ கூட நாம எல்லாரும் இங்க இருக்க..
கரணுக்கு ஹெல்ப் பண்றேன்னு அவன் ரூமுக்கு போய்ட்டா… வளர்ந்த ஒரு பொண்ணு இப்பிடி இருப்பாளா…?? இன்னும் அவ மெச்சூரிட்டி இல்லாம தான் இருக்கா…
அவளோட வெகுளித்தனம் பார்த்து நம்ம கரண் மனசுலயும் சலனம் வந்து இருக்கும்…
நீ அவன்கிட்ட பேசு புரிஞ்சிப்பான்…
நம்ம புள்ள தான் நானே சொல்லிடுவேன்… ஆனா அப்பா நீ சொல்ற மாதிரி வராதுல்ல…??
குடும்பம், அவனோட தகுதி, அவளோட வெகுளித்தனம் எல்லாம் எடுத்து சொல்லு புரிஞ்சிப்பான்…
நாம அவனுக்கு தகுந்த பொண்ணா பார்த்து கட்டி வைக்கலாம் அவன் சந்தோஷமா இருப்பான்…
இல்ல அவ உங்க குடும்பத்துக்கு ஒத்து வருவான்னு நெனக்கிறியா சொல்லு சந்தோஷமா நாம கல்யாணத்த பண்ணி வைப்போம்…"

அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்று எழுந்து சென்று விட்டார்…

நாதன் மறுத்து யோசிக்கவே இல்லை
அவருக்கு எண்ணம் எல்லாம் ஒன்று தான் 'சாரு அவர் குடும்பத்துக்கோ, கரணுக்கோ சற்றும் பொருத்தமில்லை… கரணுக்கு மனைவியாக தகுதியே இல்லை…
நாளைக்கே கரண் கூட பேசிடணும்…' நினைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தவர்...மேலறைக்குச் செல்ல படியேறிய மகனை கண்டு கொண்டார்…

"கரண்"

குரல் கேட்டு நின்றவன்…
"என்னப்பா…" இறங்கி வந்தான்…

"தூக்கம் வருதா…?? உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…"

ஏற்கனவே தூக்கம் தூரப்போன உணர்வு இப்போது இவர் ஆழ்ந்த பார்வை பார்த்து பேச வேண்டும் எனும் போதே என்ன வரப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்ல… தூக்கம் பிடரியில் கால் பட ஓடி விடுமா இல்லையா…

" இல்லப்பா.. சொல்லுங்க"

"வா ரூம்ல போய் பேசலாம்…"

" சொல்லுங்கப்பா…"

"சாருவ ரொம்ப பிடிச்சிருக்கா…" எடுத்த எடுப்பிலேயே கேட்டு விட…

இதயம் மத்தளம் கொட்டும் உணர்வு அவனுக்கு…

"அது வந்து… புடிச்சிருக்குப்பா…" யோசனையாக சொல்ல

"அவ உனக்குப் பொருத்தமா இருப்பான்னா நினைக்கிற…??"

" நான் அதெல்லாம் யோசிக்கவே இல்லப்பா…அவள பிடிச்சிருக்குன்னு தான்…" 'லவ் பண்றேன்' என்று வந்த வார்த்தைகளை விழுங்கினான்…
"இப்போ தீப்தி என்னல்லாமோ சொல்றா… நீங்க கூட இப்பிடி கேட்கறீங்க…"

"உண்மைய தானே கேக்கறேன்… இப்போ மனசுல இருக்க சலனம் வாழ்க்கைல சந்தோஷத்தத் தராது சலிப்ப தான் தரும்… இது இப்போ உனக்கு புரியாது… புரியும் போது நீ கஷ்டப்பட கூடாதுன்னு தான் சொல்றேன்… அவ உனக்கு வேணாம்…
இந்த வீட்டுக்கு மருமகளா வர ஒரு தகுதி வேணும்ப்பா… வாரவ இந்த குடும்பத்த வழி நடத்தக் கூடியவளா இருக்கணும்… அது அவளுக்கு இருக்கான்னு நீயே யோசி…
அத்தைப் பொண்ணுன்னு இருந்தா ஆச வர்றது சகஜம் தான் ஆனா இது சரி வராது… புரியுதுல…??"

யோசனையாக ஆவரைப் பார்த்து வைத்தான்…

"இதெல்லாம் விட்டுட்டு படிக்கற வழியப் பாருப்பா...நீ படிச்சி முடிக்கும் வர நம்ம கம்பனில வேல உனக்காக வைட் பண்ணுது…
கொஞ்சம் நாள் போனா உனக்கே இத நெனச்சா சிரிப்பு வரும்…" மென்புன்னகையுடன் அவர் சொல்லி முடிக்க…

அடுத்து என்ன என்பதை யோசிக்க மறந்தது அவன் மூளை…

"நாளைக்கு சாயந்திரம் உன் காலைஜ்க்கு போகணும்ன்னு சொன்னல்ல காலைலயே போ… அங்க போய் தனியா இருந்து யோசி… இங்க இவ முகத்த பார்த்துட்டு இருந்தா உன்னால ஒரு முடிவு எடுக்க முடியாது… ரெண்டு நாள்ல திரும்ப வந்து நீயே அவகிட்ட பேசு… இப்போ போய் தூங்கு…"
அவர் முடிவு இது தான் என அவனின் மனதில் பதித்துவிட்டு அவனுக்கு விடை கொடுத்தார்…

அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் விழுந்தான்… 'அப்பாவே சொல்றாங்கன்னா அத இன்னும் என்ன யோசிக்க இருக்கு…
இது அவள பார்த்து நம்ம மனசுல வந்த சலனம் தான்… விட்டுப் பிரிஞ்சிட்டா கொஞ்ச நாள்ல மறந்துடும்… அப்பா சொன்ன மாதிரி அவளுக்கு இந்த குடும்பத்த பார்த்துக்க முடியாது தான் அந்த தகுதியும் இல்ல தான்…
எனக்கும் இது புரியாம காதல்ன்னு நெனச்சி சொல்லி இருக்கேன் அவளும் சைல்ட்டிஷ்ஷா ஓகே சொல்லி இருப்பா போல… சின்னவ தானே நானே யோசிக்கல்ல அவ எங்க இதெல்லாம் யோசிக்கப் போறா… ஸோ பன்னி லவ் ஸ்டோரி….'
மனதில் தோன்றியதை தலையணைக்கடியில் இருந்த நாட்குறிப்பில் கிறுக்கி விட்டு…

'நாளைக்கு போய் வந்து அவக்கிட்ட பேசிடணும்…'
நினைத்துக் கொண்டு தூங்கினான்…

காலை எழுந்து குளித்து விட்டு காப்பி குடிக்க சமையலறைக்குள் நுழைந்தவளின் கையில் ஒரு கோப்பையைக் கொடுத்த கமலா..
"சாரு இத எடுத்துட்டு போய் கரணுக்கு குடுடா… அவன் ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்கான்…"

"அத்தான் எங்க போக ரெடி ஆகுறாங்க அத்த..??"

"காலேஜுக்கு தான் இப்பவே வர சொல்லி இருக்காங்க போல…"

"ஓஹ்…" குரல் சோர்ந்து வந்தது…

படி ஏறி போனவளைப் பார்த்து அர்த்தப் பார்வைப் பரிமாற்றம் ரேகா, நாதனிடையில்

" அத்தான்… அத்தான்…"

"வா சாரு…"

"நீங்க இப்பவே போகணும்ன்னு அத்த சொல்றாங்க… ?? "
காப்பியுடன் கேள்வியும் கொடுத்தாள்…

"ஹ்ம்ம்… அவசரமா போற வேல…
ரெண்டு நாள்ல வந்து உன்கிட்ட பேசறேன்…"
லாப்டாப்பில் ஏதோ டைப் செய்து கொண்டே பேசினான்

"சரி அத்தான்…"

அவன் காப்பி குடிச்சி முடிந்து பார்க்க… அவள் பால்கனியில் நின்றிருந்தாள்…அவளுக்கு தீப்தி பேசியதைப் பற்றி கேட்க இருந்தது… ஆனால் அவன் கிளம்பும் போது அதைப் பேச முடியாதே…

" நீ கீழ போ… நான் குளிச்சிட்டு வர்றேன்…"

அவன் சொன்னது அவளுக்குக் கேட்கவில்லை…

அவன் குளித்து விட்டு வந்து பார்க்க ஜன்னல் அருகில் குனிந்து நின்றவளின் முதுகுப் புறம் தெரிய…
"ஏய் நீ இன்னும் இங்க என்ன பண்ற…?? கீழ போக சொன்னேன்ல…??"

"ஆமால்ல இனி இந்த ரூம்ல எனக்கு என்ன வேல..??"
சொல்லிக் கொண்டு திரும்பியவளின் கையில் இரவு அவன் கட்டிலில் வைத்த நாட்குறிப்பு…
"ஏய் அத ஏன் எடுத்த..?? அடுத்தவங்க டயறி எடுக்கவோ படிக்கவோ கூடாதுன்னு தெரியாதா…??
சரி தான் உனக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது"

சுருக்கென்ற வலி மறுபடியும் மனதில் பரவ….
"படிச்சதால தானே உங்க மனசுல இருக்கது எனக்குத் தெரிஞ்சது… உங்களுக்கு கஷ்டம் இல்லாம நானே தெரிஞ்சிகிட்டேன்…"

"அது… ரெண்டு நாள்ல திரும்ப வந்து நானே உங்கிட்ட சொல்ல தான் இருந்தேன்…
நமக்குள்ள ஒண்ணுமே சரியா வராது… பொருத்தம் இல்லாம…"

அவனைப் பேச விடாமல் கை நீட்டித் தடுத்து…
"அதான் எல்லாம் தெளிவா எழுதி இருக்கீங்களே… வேற ஒண்ணும் சொல்ல வேணாம்… எனக்குப் புரியுது…"

"அப்பாடா…. எங்கடா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவியோன்னு நெனச்சேன்…
பிரிஞ்சிக்கிட்ட…"

"தகுதியே இல்லைன்னு சொல்லும் போது அழுது புலம்பி தக்க வெச்சி என்ன சாதிக்கப் போறேன்…?? "

"ஆனா சின்ன புள்ள உன் மனச தேவையில்லா குழப்பி விட்டுட்டேன்ல சாரிடா… என் மேல கோவமா??"

"கோவம்லாம் இல்ல சின்ன வருத்தம் தான்… அதெல்லாம் கடந்து போய்டும்"

சொல்லிக் கொண்டு கதவு வரை போனவள் திரும்பி…
"நீங்க எழுதிட்டு பேனாவ செருகி வெச்சிருந்தது பார்த்து ஒரு ஆர்வத்துல தான் அந்த பக்கத்த படிச்சேன்… வேற ஒண்ணும் படிக்கல்ல…
இதுக்கப்புறம் இப்டி கவனமில்லாம இருக்காதீங்க…
நான் படிச்சது நம்ம ரெண்டு பேருக்கும் நல்லதா போச்சி ஆனா எந்த நாளும் ஒரே மாதிரி இருக்காதுல்ல…"

கீழே சென்றவள் நதியின் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்…

" ஏன் சாரு ஒரு மாதிரி இருக்க..??"

" ஒண்ணும் இல்ல நதி தல வலிக்கிது…" விழுந்த அடி மனதை வலிக்கச் செய்ய பொய் சொன்னால்…

கரண் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது… அடுத்த அரை மணி நேரம் கழித்து தருணிடம் போய் நின்றாள்…

"உன் ஃபோன் கொஞ்சம் தர்றியா புஜ்ஜி பிளீஸ்"

"அதுக்கு எதுக்கு பிளீஸ் எல்லாம் இந்தா
பிடி…"
அவளை யோசனையாகப் பார்த்தவன்… 'இவ முகமே சரி இல்லையே… அண்ணா போகும் போது கூட ரூம்ல தான் இருந்தா'
நினைத்துக் கொண்டே…
"அண்ணாட்டயா பேசப் போற…??"

"ஆமா உன் அண்ணாட்ட இல்ல என்னோட அண்ணா…"

" ஓஹ்…"

"நான் இங்க இருந்தே பேசட்டுமா புஜ்ஜி.. வெளிய யாரும் பேசறத கேட்டுட்டா…??"

"என்ன தான் ஆச்சு உனக்கு…?!
உன் முகமும் சரியில்ல முழியும் சரியில்ல…
ரகு அத்தான் கிட்ட தானே பேசப் போற இங்க இருந்தே பேசு நான் வேணும்னா வெளிய போகவா…??"

"இல்லடா நீ இங்கயே இரு நான் பேசறேன்…" உள்ளே போன குரலில் சொன்னவள்… ரகுவை அழைத்திருந்தாள்…

" ஹலோ தருண்… எப்பிடி இருக்க…?? "

"அண்ணா நான் சாரு பேசறேன்…"

" ஓஹ்… சாரு நீயா… எப்பிடி இருக்க.. அம்மா என்ன பண்றாங்க…??"

" நான் இருக்கேன்…அது வ.. வந்து அண்ணா உங்க கிட்ட இதுவர எதுவும் கேட்டதில்லல்ல முதல் முறையா ஒண்ணு கேக்கறேன்…"

"என்ன பீடிகையெல்லாம் பலமா இருக்கு…" அவன் கேட்டான்

அதையே தான் நினைத்துக் கொண்டான் தருண்…

"இல்ல… நீங்க அம்மாவுக்கு கால் பண்ணி ஊருக்கு வர சொல்றீங்களா…??"

" ஏன் சாரு…??"

"இல்ல இங்க இருக்க எனக்கு கஷ்டமா இருக்குண்ணா…
அத்தையோட தம்பி குடும்பம் எல்லாம் வந்திருக்காங்க… ஏதோ கட்டிப் போட்டிருக்க மாதிரி இருக்கு, மூச்சு முட்டுது அதான்… நான் சொன்னா அம்மா திட்டுவாங்க அதான் தயவு செஞ்சு நீங்க கூப்பிடுங்க…"

" ஹேய் சாரு அம்மா இல்லாத இந்த அஞ்சாறு நாள் ரொம்ப கஷ்டம்தான்…பத்து நாள் தங்க போனவங்கள எப்பிடி வர சொல்றதுன்னு யோசனையா இருந்துச்சு
இப்போ நீயே சொல்ற…
சரி நீ வை நான் அவங்க கிட்ட பேசறேன்…"
வைத்து விட்டான்…

அவள் பேசியதைக் கேட்டு கொண்டிருந்தவன்..

" என்ன ப்ராப்ளம் பாபி…??"

மறிப்பாக தலையசைத்தாள்…

" உனக்கும் அண்ணாவுக்கும் என்ன ப்ராப்ளம்..??"

அதிர்ந்து விழிப்பது அவள் முறை…

"இப்ப சொல்லப் போறியா இல்ல நான் அண்ணாகிட்டயே கேட்கட்டுமா…??"

" உன் அண்ணா கூட ப்ராப்ளம்…"
முடிக்க விடாமல்

"இல்லன்னு சொல்ல போறியா…??"
கோபம் குரல்வழி வந்தது

"அத வேற யாரும் நம்புவாங்க… பாபியோட புஜ்ஜி நம்ப மாட்டேன்…
அண்ணா ரூம்ல இருந்து வந்து நதி ரூமுக்குள் போனப்ப உன் மூஞ்சே சரியில்ல… அவன் போறதால டல்லா இருக்கன்னு நெனச்சா அவன் போகும் போது நீ வெளிய வரவேயில்லை, அவன் என்னடான்னா நீ எங்கன்னு கூட கேட்காம போறான் … இப்போ என்னன்னா நீ ஊருக்கு போக பிளான் பண்ற…
சொல்லு என்ன நடந்திச்சு…??"

"உன் அண்ணாவுக்கு நான் பொருத்தமில்ல… எனக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வர தகுதி இல்ல…அவர விட்டு விழகிப் போகப் போறேன்… அதான் அண்ணாக்கு கால் பண்ணேன்…
இப்போ என்னோட மனநிலையில இங்க இருக்கக் கஷ்டமா இருக்கு…"

"அய்யோ பாபி… என்ன பேசற நீ லூசுதனமா ஏதாவது செல்லாத… என்ன தகுதி இல்லாம போச்சி உனக்கு…?? இதெல்லாம் யாரு சொன்னா…"

"உங்க அண்ணாவுக்கே புரிஞ்சிருக்கு நான் என்ன லெவல்ல இருக்கேன்னு… மாமா கூட இதத் தான் சொல்றாங்க போல…"

" அவனுக்கு புரிஞ்சி கிழிச்சது… இரு நான் அவன் கிட்ட பேசறேன்…"

" பேசி…??"

அவன் புரியாது பார்க்க

"சொல்லு புஜ்ஜி பேசி என்ன செய்யப் போற… என் பாபிய கட்டிக்கன்னு சொல்லப் போறியா…என் மேல காதலே இல்ல சலனம் மட்டும் தான்னு சொல்றவர் கிட்ட போய் பேசுறது அசிங்கமாகிடும்…
வேணாம்டா விட்டுடலாம்...இது இப்போவே உங்கண்ணனுக்குப் புரிஞ்சது ஒரு வகையில சந்தோஷம் எனக்கு
இதே கல்யாணத்துக்கு அப்புறம் இப்பிடி ஏதாவதுன்னா அது நரகம்ல…??
விழகிப் போய்டறேன்… எப்பவும் உன் பாபியா மட்டுமே இருக்கேன்…"

" எப்பிடி விட முடியும்…உனக்குக் கஷ்டமா இல்ல…??"

" விடத் தான் வேணும் புஜ்ஜி… நான் பொருத்தமில்லன்னு தெளிவா சொல்றாங்களே…"

"உனக்கு அண்ணா மேல கோவம், வெறுப்பு இல்லையா…??"

"எங்களுக்குள்ள இந்த லவ்ன்னு ஒண்ணு இப்போ தான் வந்தது...ஆனா நாங்க அத்தை மாமா பசங்கன்றது எப்போதுமே இருக்குறது…
அது நிலையானது…
வெறுப்ப வெச்சிட்டு இருக்க முடியாது…
உண்மையான அன்பு வெறுப்பு வர விடாது… சின்ன வருத்தம் தான் இருக்கு அத கடந்து வந்துடலாம்…நீ எங்கிட்டயோ உங்க அண்ணாக்கிட்டயோ இனி இதப் பத்திப் பேசவே கூடாது…"
சொல்லி விட்டு அவள் வெளியேற

" பாபி உங்க லவ்வ பத்தி உங்ககிட்ட பேசவே கூடாதுன்னு சொல்லிட்டா… ஆனா உங்க மேல எனக்கு வருத்தம் இருக்கு… லவ்ன்னு சொல்லி அவ மனச கஷ்டப்படுத்தாம…என்னோட பாபியா அவள சந்தோஷமா இருக்க விட்டுருக்கலாம்…
இத பத்தி இதுக்கப்புறம் நாம எப்போதுமே பேசக்கூடாது அதான் என் பாபியோட விருப்பம்… இதான் கடைசி இனிப் பேச மாட்டேன்… "
குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டான்…

அன்று மதியமே சாரு,ரேணுகாவுடன் ஊருக்குப் போய் விட்டாள்…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 10


*நீயே அறியாது உன்னுள் புதைந்திருந்த காதல் துளிர்த்து; ஒரே வார்த்தையில் வெளிவந்து என் ஒட்டு மொத்த உயிர்ப்பையும் திருப்பித் தந்து விட்டது *



அடுத்த இரண்டு வாரங்களில் அவளின் முன் போய் நின்றான் தருண்…

அவள் சாதாரணமாகத் தான் இருந்தாள்,ஆனால் அவளின் புஜ்ஜியால் அப்படி இருக்க முடியாதே… அவள் மனதில் இருக்கும் வலி அவனுக்கு தெரியாது போய் விடுமா என்ன…??

"பாபி…"
பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவள் அவன் குரலில் புன்னகையுடன் நிமிர்ந்து

"ஹேய் புஜ்ஜி என்னடா திடீர்ன்னு வந்து நிக்குற… எப்பிடி இருக்க…??"

"நான் நல்லா இருக்கேன்… நீ??"

"நல்லா இருக்கேன்டா வா உள்ள போகலாம்…"

நல விசாரிப்புடன் காப்பியும் குடித்து முடித்தவன்…

"அத்த நான் ஒண்ணு சொல்லுவேன்… நீங்க மறுக்காம ஒத்துக்கணும்…"

"என்ன புஜ்ஜி என்ன கேட்கப் போற…?"
அவளிடம் பதற்றம்… ஏதாவது ஏடாகூடமாக கேட்டு வைப்பானோ என…

அவளை ஒரு அழுத்தப் பார்வை பார்த்தவன்

"சொல்லுப்பா என்ன விஷயம்…??"
என்ற கேள்வியில் ரேணுகா பக்கம் திரும்பி

"அத்த இவளுக்கு வீட்டில இருந்தே படிக்க ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு…"

"நான் படிச்சு என்ன செய்யப் போறேன்டா…??"

"நீ கொஞ்சம் பேசாம இருக்கியா…
நான் அத்தக் கூடத் தானே பேசிட்டு இருக்கேன்…"
முறைத்துக் கொண்டு சொன்னான்

"என்ன படிப்பு தருண்… ??
மாமா என்ன சொல்லுவாங்களோன்னு இருக்குப்பா…"

"இங்லிஷ் கோர்ஸ் ஒண்ணு அத்த…
சாரு மாதிரி வீட்ல இருக்கவங்க…
படிக்க விரும்பும் பெரியவங்கன்னு எல்லாருக்கும் செய்றாங்க என்னோட காலைஜ்ல ஒரு மேடம் தான் ஆரம்பிச்சிருக்காங்க…
புக்ஸ், தேவையான மத்த நோட்ஸ் எல்லாம் கூரியர்ல அனுப்பிடுவாங்க… ஆறு மாசம் தான்…
வீட்ல இருந்தே படிக்கலாம்…
கடைசியா ஒரு மூணு நாள் எக்ஸாம் மட்டும் அங்க போய் எழுதணும்…

நானே எல்லாப் பணமும் கட்டிட்டேன்…
நீங்க மாமா கிட்ட பேசிடுங்க…
இவ படிக்கட்டும்… எக்ஸாம் பத்தி மாமா கிட்ட சொல்ல வேணாம் அனுப்ப விரும்புவாரான்னு தெரில… அந்த டைம் எங்க வீட்டுக்கு வர்ற மாதிரி வந்து எக்ஸாம் செய்யட்டும்…
இப்போ கல்யாணம் பண்ணக் கூட இங்லிஷ் தெரியுமான்னு பார்க்கறாங்க அத்த… அவள படிக்க விடுங்க…"

அவனையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தொண்டை அடைத்தது…
'அன்னைக்கு தீப்தி பேசுனது இவனுக்கு எப்பிடித் தெரியும்…
கேட்டா சொல்ல மாட்டான்…' யோசனையாக இருந்தவளை இழுத்துக் கொண்டு வெளியே போனான்…

"என்ன யோசிக்கிற…??
மொத்தப் பணமும் கட்டிட்டேன் நீ படிச்சித்தான் ஆகணும்…"

"அது இல்லடா… இது முடியுமான்னு…"

"எ‌ல்லா‌ம் முடியும்…
நீ ஒண்ணும் மக்கு இல்ல…
உன்னால முடியும்…
இங்லிஷ் சப்ஜெக்ட்ல நல்ல மார்க்ஸ் தானே எடுப்ப..??
இருக்க நொலேஜ கொஞ்சம் மேம்படுத்த தான் இந்த கோர்ஸ்..
இத படிச்சு முடிச்சிட்டா நீ ஆசைப்பட்ட வேலய பெரிய அளவுல செய்யலாம்…"

" என்னடா சொல்ற..?"
சந்தோஷம் அவள் குரலில்…

"எஸ்… அதே தான் இப்போ அந்த பொண்ணுக்கு மட்டும் செய்றத விரிவா செய்யலாம்…
பிளீஸ் படிப்ப தானே…??"

"படிக்கறேன்… ஆனா அப்பா…"

" அவர் ஒண்ணும் சொல்லாம இருக்கணும்னு தான் மொத்த பணத்தையும் கட்டிட்டு வந்து இருக்கேன்…
பணம் வேஸ்ட்டா போகும்ன்னு ட்ராப் வைக்கலாம்ல…"

"கேடிடா நீ"

"பரவாயில்ல உன்னோடு புஜ்ஜி உனக்காக கொஞ்சம் கேடி ஆகுறது தப்பில்ல"

படித்தாள்… ஆறு மாதம் கழித்து அவனே வந்து அவளை அழைத்துச் சென்று பரீட்சை எழுத வைத்தவன் அடுத்த ஒரு வாரத்தில் அவளுடைய சான்றிதழ்களுடன் வந்து நின்றான்…

அதை கையில் வாங்கியவள்…
"நீ இல்லன்னா இது சாத்தியமே இல்லடா…"

"இதுல என்னடி இருக்கு பாபி… நீ ஒரு இடத்தில ஒடுங்கிடக் கூடாது…
என்னை மாதிரி உனக்கு வெளிய போய் ஷோஸியல் சர்வீஸ் எல்லாம் பண்ண முடியாது…
நீ செய்ற சர்வீஸ் பெரிய அளவுல செய்ய வைக்கணும்னு நினைச்சேன் அதுக்கு வாய்ப்ப உருவாக்கி தந்து என்னால முடியுமானத செய்திருக்கேன்…
இதுக்கப்புறம் நிறைய வாய்ப்புகள் வரும்.. பணமும் சேர்ந்து வரும்…
அப்பிடி பணம் வரும் போது அத வீட்ல யாருக்கும் சொல்லாத …புரிஞ்சுதா…??"

ஆமென்ற தலையசைப்பு அவளிடம்…
அதோடு சேர்த்து…
"நீ ஆசைப்பட்ட மாதிரியே நான் படிச்சேன்ல இப்போ நான் கேக்கறேன் சொல்லு தீப்தி பேசினது உனக்கு எப்பிடித் தெரியும்…??"
கேள்வியாக அவள் நிறுத்த…

"நீங்க இங்க வந்த பிறகு அவளும் ரேகா அத்தையும் ஒரு மார்க்கமா நடந்துகிட்டாங்க…

அடுத்த நாள்"நான் அவகிட்ட பேசிட்டு வந்துடறேன்" ன்னு அத்தைக் கிட்ட சொல்லிட்டு மொட்டை மாடிக்குப் போனா நானும் பின்னாடி போய் அவ உங்கிட்ட பேசினத கேட்டேன்…

உன் தகுதி என்னன்னு உனக்கே தெரியனும்னு நீ கேட்கணும்ன்னே அங்க நின்னு அண்ணா கிட்ட பேசினான்னு சொன்னது இங்லிஷ் அல்பபட் கூட தெரியாத உனக்கு வயல் வேல செய்ற ஒருத்தன் தான் பொருத்தமா இருப்பான்னு சொன்னது எல்லாம் கேட்டேன்… அதான் நீ படிக்கணும்னு நெனச்சேன்….
என் அண்ணா கிட்ட மாதிரி நீ வேற யார்கிட்டயும் தாழ்ந்து போகக் கூடாதுல…??

இப்போ நீ சொல்லு அண்ணாவுக்கும் உனக்கும் இடைல தீப்தி எப்பிடி வந்தா என்ன தான் நடந்திச்சு…??"
இப்போது கேள்வி அவனிடமிருந்து…

ஒரு பெருமூச்சு விட்டவள்… முழுவதும் கொட்டிவிட்டாள்…

கோபம் அவன் கண்களை சிவப்பாக்கி..பற்களை கடிக்க வைத்தது…

"அண்ணா ஒரு அடி முட்டாளே தான்… ஏன் சொல்றேன்னு புரியுதா…??"

ஆமென்று தலையசைத்தவளின் முகத்தில் ஒரு வெற்றுப் புன்னகை…

அதன் பிறகு
அடுத்தடுத்து அவளை தேடி வந்த வாய்ப்புக்கள் இன்று வரை தொடர்கிறது…

மொத்தமும் சொல்லும் வரை இதயம் வலிக்க வலிக்க வாயடைத்துப் போய் கேட்டுக் கொண்டு இருந்தான் கரண்…

"இது ஒண்ணுமே எனக்குத் தெரியாதே… உனக்குப் பேசக்கூட சந்தர்ப்பம் தராம முட்டாள் மாதிரி இருந்திருக்கேன்…
ஆனா தீப்தி அவ விரும்புறத கடைசி வர எங்கிட்ட சொல்லவே இல்லயே…??"

அவழிதளின் கசந்த முறுவல் அவளுக்கு இன்னும் என்னவோ தெரியும் என்பதை கூற…

"ஏன் அவ ஒண்ணும் சொல்லல…?? அதுவும் உனக்கு தெரிஞ்சி தான் இருக்கு…"

"மாமா உடம்பு முடியாம போகவும் உடனே
நானும் அம்மாவும் வந்துட்டோம்… மாமா ஹாஸ்பிடல் இருந்து வந்த அடுத்த நாள் பெரியம்மா பெரியப்பா தீப்தி எல்லாரும் இங்க வந்தாங்கல்ல…??"

ஆமென்று அவன் தலையசைக்க…

"அப்போ பெரியம்மா தீப்திய இங்க கொஞ்ச நாள் இருக்க சொன்னாங்க…
அதுக்கு அவ இல்ல முடியாதுன்னு சொல்லிட்டா…"

"நீ இங்க இருந்து கூடமாட ஒத்தாச பண்ணினா மாமா அத்த மனசுல இடம்பிடிக்கலாம்ல??" ன்னு கேட்டதுக்கு

"இடம் பிடிச்சு வாழ்நாள் பூராவும் உங்க தம்பிக்கும் அவர் வீட்லயும் வேல செய்யணுமா…
சித்திக்கு அப்பிடி தானே கல்யாணம் நடந்தது அது போல நானும் வாழ்நாள் முழுக்க இருக்கணுமா??"
அப்பிடின்னு கேட்டா பாருங்க.. எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு…

"அப்போ கடவுள் முடிச்சு அது இதுன்னு உளறிட்டு இருந்தியே"ன்னு… நான் நெனச்சத பெரியம்மா கேட்டாங்க

"இதுவும் கடவுளோட கருணை தான்
நல்ல நேரம் நான் கரண் கிட்ட எதுவும் சொல்லல்ல
கல்யாணத்துக்கு அப்புறம் மாமாவுக்கு இப்பிடி ஏதாவதுன்னா எவ்ளோ கஷ்டம் அதான் அதுக்கு முன்னாடியே இப்பிடி ஆயிட்டார்"
அவ சொல்ல
"நீ எல்லாம் என்ன பொண்ணு என்னமா பேசுற…??
நீ சொல்லித் தானே நான் சாரு விஷயம் கூட மாமாகிட்ட பேசினேன்… அதுக்கு என்ன சொல்ல போற…??" ன்னு பெரியம்மா கேட்டாங்க..

அதுக்கு "நாம ஒண்ணும் பொய் சொல்லல்லயே… அவ கரணுக்கு பொருத்தம் இல்ல தானே.. அதனால தானே மாமா கூட அவங்கிட்ட பேசி இருக்காங்க… இல்லைன்னா பேசி கரண அவ கிட்ட இருந்து பிரிச்சிப்பாங்களா…" ன்னு கேட்டா

"மாமாவ உங்க கிட்ட பேச வெச்சதும் இவங்க தான்னு தெரியவும் எனக்கு மனசு முழுக்க வெறும மட்டும் தான்…
உண்மைய தான் சொல்லி இருக்காங்கன்னு புரிஞ்சும் மனசு ரொம்ப வலிச்சது
அப்போ நான் மாமா ரூம்ல அவருக்கு மருந்து கொடுக்க போய் இருந்தேன்…. அன்னைக்கு தீப்தி உங்ககிட்ட பேசின அதே இடத்தில இருந்து தான் பேசிட்டு இருந்தாங்க இவங்க பேசி முடிய தான் மாமாவோட நினைவு வந்து திரும்பிப் பார்த்தா முழிச்சிட்டு இருந்து எல்லாம் கேட்டுட்டு இருந்திருக்காங்க கண்ணெல்லாம் கலங்கி…என்னையே பார்த்துட்டு இருந்தாங்க…
எனக்கும் ரொம்ப கவலையா இருந்துச்சு…
அவர் நிலமைய சொல்லி தீப்தி அப்பிடி பேசுனது…. எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்…தன் மனக் கஷ்டத்த சொல்ல கூட முடியாம தவிச்சுருப்பாங்கல…??"

"எங்க அப்பா மேல உனக்கு கோபமே இல்லையா…??"
இத்தனை மாதங்கள் தொண்டையில் உருண்டு கொண்டிருந்த கேள்வி வெளியே வந்தது…

"கோபம் இல்ல வருத்தம் தான்…"
சற்றேனும் தாமதிக்காமல் பதில் வந்தது

"வருத்தமா…?"

"ஹ்ம்ம்… முற்றுப்புள்ளி வெச்ச ஒரு அத்தியாயத்த தாலியோட மூன்று முடிச்சுகள் மூலம் தொடர்புள்ளியாக்கி மறுபடியும் ஆரம்பிச்சு வெச்சுட்டார்… ஒதுக்கி நிறுத்தினவள ஒதுங்கி இருக்க விட்டிருக்கலாம்ன்னு ஒரு வருத்தம் தான்… பொருத்தம் இல்லாம இருந்தவ இப்போ மட்டும் எப்பிடி பொருத்தமானேன்…??
ஊர்ல வேற பொண்ணயே இல்லையா…??"
சடுதியில் வார்த்தைகள் வந்து கொட்டின

"என்னடீ சொல்ற…??"
அதிர்ச்சிக் குரல் அவனிடம்

"கஷ்டமா இருக்குன்னு சொல்றேன்…
தகுதியே இல்லன்னு என்னை உதறித் தள்ளிட்டு போன உங்க கிட்டயே திரும்ப வந்து நிக்கிறது வலிக்குதுன்னு சொல்றேன்
உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியாம வாழ்றது ஏதோ ஒரு கட்டாயத்துல வாழ்றது மாதிரி மூச்சு முட்டுதுன்னு சொல்றேன்…"
தன்னை மீறி கத்தியே பேசிவிட்டாள்

"ஏய் என்ன பேசற நீ…??"

"வேற என்ன சொல்லணும்…??
இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுக்கு பொருத்தமானவ தானா...
உங்களுக்கு பிடிச்ச மனைவியா வாழ தகுதி இருக்கான்னு கூட தெரியாதே…??
இன்னைக்கு வர நீங்க அதப்பத்தி ஒண்ணுமே சொல்லலயே…
நம்ம கல்யாணம் கூட என்னைய ஒரு வார்த்த பேசவிடாம ஏதோ ஒரு பாரத்த தள்ளி விடற மாதிரி தானே எங்க வீட்டுலயும் செஞ்சாங்க…
புஜ்ஜி கிட்ட கூட பேசவே விடல்லயே"

"அப்போ உங்கிட்ட சம்மதம் கேட்கவே இல்லயா…??"
அவள் தோலைப் பிடித்துக் கொண்டு கேட்க

இல்லை என்ற தலையசைப்பு அவளிடம்…

"ஆனா எங்கிட்ட நீ சரி சொன்னதா தானே சொன்னாங்க…"

அவன் கையைத் தட்டிவிட்டவள்
"எப்பிடி சரின்னு சொல்லுவேன்…??
அவங்க சொன்னா உங்களுக்கு எங்க போச்சி புத்தி…??
ஒதுக்கி தள்ளிட்டு போன நீங்க ஒரு வார்த்த எங்கிட்ட கேட்டு இருக்கணுமா இல்லையா…??"
கோபக் குரலில் கேட்டவள்

"யாரோ தெரியாத ஒருத்தர கல்யாணம் பண்ணி வாழ்றது வேற… காதல், பிடித்தம் எல்லாம் தானா வரும்….வராமக் கூட இருக்கும்… அப்பிடியே வராமப் போனாக் கூட பரவால்ல… ஆனா மனசு முழுக்க காதல வெச்சிட்டு இருந்த என் கிட்ட…
எனக்கு உன் மேல காதலே இல்ல சலனம் மட்டும் தான்… நீ எனக்கு பெருத்தமே இல்ல… தகுதியே இல்லன்னு சொல்லி விலகி போனவர் கூட கல்யாணம்னா எப்பிடி சரின்னு சொல்லுவேன்…??
அவங்க கேட்டு இருந்தா கூட உங்க கிட்ட பேசணும்ன்னு தான் சொல்லி இருப்பேன்… உங்க கிட்ட பேசி எதுக்கு மறுபடியும் என்னய உங்க வாழ்க்கைல இழுத்து விட்டுக்க போறீங்கன்னு கேட்டு இருப்பேன்… அதுக்கெல்லாம் வழி இல்லாம பண்ணி இன்னைக்கு வர என்னோட நிம்மதி கெடுத்து வெச்சுருக்காங்க…உங்கள விட்டு விழகி இருக்கவும் முடியாம மனசார ஒன்றவும் முடியாம அதெல்லாம் கொடும…" வெருமைக் குரல் அவளிடம்…

"அடியேய் பைத்தியம் மாதிரி உளறாத
பிடிக்காமத் தான் நம்ம குழந்த உருவாகி இருக்கா…??"

"இல்ல பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல்ல எனக்கு… இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் நடந்து இருக்குமோ என்னவோ… என் நல்ல நேரம் இவன் எனக்குள்ள வந்து என் மனசுக்கு ஆருதலா இருக்கான்…"
அவளை அறியாமலேயே கை வயிற்றில் இடம் பிடித்திருந்தது…

"உனக்குள்ள இருக்க உயிர் எனக்கு உன் மேல பிரியம் இல்லாம தான் வந்ததா…??"
அவனுக்கே பதில் தெரியாத கேள்வி அவளை நோக்கி

"அது எப்பிடி எனக்குத் தெரியும்…
நீங்க உங்க உரிமைய கேட்டீங்க நான் என் கடமைய செஞ்சேன்… இடைல பிடித்தமும் காதலும் எங்க வந்திச்சு…
கட்டாயத்துல வாழ்றதுன்னாலும் இந்த வாழ்க்கைக்கு ஒரு பிடித்தம் வேணும்ல அதான் இந்த குழந்தைய கடவுள் உருவாக்கினார் போல… பிடித்தம் இருந்தா தான் குழந்தைன்னா எத்தனையோ பேர் குழந்தை இல்லாமத் தான் இருப்பாங்க…"
உள்மனதின் ஆற்றாமை எல்லாம் காட்டாற்று வெள்ளமாக அவள் குரல்வழி வெளி வந்தது

"ஆனா உங்க மேல நான் வெச்ச காதலோட மிச்சம் என்னோட ஆழ் மனசுல இருந்திருக்கு அதுதான் உங்க அருகாமையையும் தொடுகைகளையும்
அருவருப்பு இல்லாம ஏத்துக்க வெச்சது…"

"அப்போ என் காதலே இல்லாமத் தான் நம்ம குழந்த உருவாகி இருக்குன்னு சொல்ற… அப்பிடி தானே??"

மீண்டும் அதே கேள்வி…
அவனே உணராது ஆழ்மனதில் புதைந்த காதல் கேள்விகளை வேறு வேறு கோணத்தில் கேட்க வைக்க… அவனுக்கே புரியாத காதல் அவளுக்கு எங்கே புரியுமாம்…

"காதலா… அது இருந்துச்சு…
மனசு முழுக்க என் மேல பிரியமும் நேசமும் மட்டுமே வெச்சி… எனக்கு நீங்க நெற்றில தந்து என் உயிர் வர இனிப்பா இறங்கிச்சே முதல் முத்தம் அதுல இருந்துச்சு முழுக்க முழுக்க எனக்கே எனக்கான காதல்…
நீங்களே உணராத காதல நான் உணர்ந்தேன் அன்னைக்கு…
அத தான் எழுதி இருப்பீங்கன்னு நெனச்சு தான் அந்த டயரிய ஆர்வமா படிச்சேன்… ஆனா நீங்க அதையே சலனம்ன்னு எழுதி இருந்தீங்க…"
வெற்றுப் புன்னகை சிந்தினாள்

" ஏற்கனவே நான் உணர்ந்த உண்மையான காதல சலனம்ன்னு தூக்கிப் போட்டுட்டு போனவர் தானே நீங்க அப்பிடி இருக்கும் போது காதல், பிடித்தம் எல்லாம் நீங்க உணர்த்தாம எனக்கு எப்பிடி புரியுமாம்…??"

இத்தனை மாதங்கள் அவளின் மனதில் கனன்று கொண்டிருந்த வலிகள் எல்லாம் எரிமலையாக வெடித்துச் சிதற
அனல் முழுவதும் தாக்கியது கரணைத்தான்…

"ஆனா நீங்க சொன்ன சலனம் தகுதி எல்லாத்தையும் தாண்டி இவன் எனக்குள்ள வந்து இருக்கான்…
என்னோட வாழ்க்கையோட பிடிமானம் பற்றுக்கோல் எல்லாம் இவன் தான்…" இத்தனை நேரம் இருந்த கடினம் மாறி குரலில் அப்படி ஒரு மென்மை…

"இவன் இவன்னு சொல்ற அது
பையன் இல்லை பொண்ணு…"
அடுத்த போருக்கு அம்பு விட்டான்

என்னவென்று சொல்ல முடியாத உணர்வு தாக்க புரியாத பார்வை பார்த்தவள்…
"ஏன் எதுக்கு பொண்ணாப் பொறந்து நான் பட்டது பத்தாதுன்னு என் வயித்துல வளர்றதும் பொண்ணுன்னு சொல்றீங்களா…?"

"இப்போ இல்ல நீ கர்ப்பமா இருக்கன்னு தெரிஞ்ச அந்த நிமிஷத்துல இருந்து நான் மனசுல உருப்போட்டத தான் சொல்றேன்…
எனக்கு உன்ன மாதிரியே ஒரு பொண்ணு தான் வேணும்…"

அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்…
'என்..னை மாதிரி பொ…ண்ணா...ஏன்…??'
கேள்வி மனதில்…

அவள் மனம் புரிந்தவன் போல…
"ஏன்னு எல்லாம் தெரியாது சாரு ஆனா எனக்கு உன்ன மாதிரியே ஒரு பொண்ணு தான் வேணும்… நான் ஆசப்பட்டத போல ஒரு பொண்ணு தான் உனக்குள்ள இருக்கான்னு தோணுது…"

'ஒட்டு மொத்த பிடித்தத்தையும் ஒரு வார்த்தையில் கொட்டிவிட்டானா…?'
புரியாத பார்வை பார்த்த அவள் கண்களில் நீர்ப்படலம்…

"அன்னைக்கு சொன்னது தான் இப்போவும் சொல்றேன்… உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்டீ…"

அவ்வளவு தான்…இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளிப்பட கதறி விட்டாள்…இதைத் தானே தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது அவளுக்கு….
பிடிக்காத தன்னோடு கட்டாயத்தில் ஒரு வாழ்க்கை வாழ்கிறான்…தன் காதல் பொய்த்து விட்டது என்றெல்லாம் அவள் நினைத்திருக்க….
அவள் நினைப்பையெல்லாம் பொய்யாக்கி… உயிர்ப்பைக் கொடுத்து விட்டான் அவள் காதலுக்கு…

"ஹேய் இப்பிடி அழாதடீ…
நான் உன்மேல இருந்தது காதல் இல்லன்னு தான் சொன்னேனே தவிர உன்ன பிடிக்கவே இல்லன்னா சொன்னேன்…??
இன்னைக்கு வர உன் கிட்ட வெறுப்பாக கடுமையாக ஒரு வார்த்த பேசினதோ இல்ல அப்பிடி நடந்துகிட்டுதோ இல்லைல்ல…??"
அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்… முகம் பற்றி நிமிர வைத்துக் கேள்வி கேட்டான்…

இடம் வலமாக தலையசைத்தவளிடம்…

"உன் மேல பிடித்தம் இல்லாம என் கையால உன் கழுத்துல தாலி கட்டி இருக்கவும் மாட்டேன்… மனசார உன்ன என்னவளா நினைக்காம உன்ன தொட்டும் இருக்க மாட்டேன்… கட்டாயத்துல இல்லடா உன்ன பிடிச்சி தான் வாழ்ந்துட்டு இருக்கேன்…"

"நீங்க சொல்லாம எனக்கு எப்பிடி தெரியும்…?? இத்தன மாசம் கழிச்சு இன்னைக்கு தானே சொல்றீங்க…" அவன் கை வளைவிலிருந்து வெளி வந்து கேட்டாள்…

"தப்புத் தான் நான் சொல்லி இருக்கணும்… உங்கிட்ட பேசி உன் மனசுல இருக்குறத கேட்டு இருக்கணும்… உன்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணி இருக்கணும்…
ஒண்ணுமே பண்ணாம இருந்துட்டேன்…
சாரிடா… ரியல்லி சாரி…"

மௌனம் ஆட்சி செய்த பல நிமிடத் துளிகள் கடந்து சென்ற பின்…

"வா கீழ போகலாம்…"

"இல்ல நீங்க போங்க நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வர்றேன்…"

"ஏன்… இவ்வளவு நேரம் பேசிட்டு உன்ன தனியா விட்டுட்டு போக அத பார்த்து அவன் என் மேல காண்டாகணுமா…??"

புரியாமல் அவள் விழிக்க

"எனக்கு தம்பியா பொறந்து உனக்கு ஃபிரண்ட்டா இருக்கானே அவனத் தான் சொல்றேன்…"
அவள் முகத்தில் ஒரு மென்னகை…

"இந்த நாலு வருஷமா சிரிச்சுப் பேசுனாலும் எங்கிட்ட ஒட்டுதல் இல்லாம தான் இருக்கான்…
எங்கிட்ட அவன் எந்த விளக்கமும் கேட்கல்ல… நீ சொன்னத மீறாம இருக்கான்னு புரிஞ்சது… ஆனா என்னய விட்டு தள்ளி நின்னுட்டான்…"

புருவம் சுருங்கியது அவளுக்கு எனக்காக தானே இவர் கிட்ட இருந்து தள்ளி இருக்கான்…

"அவன் ஏன் என்னய முட்டாள்ன்னு சொன்னான்…??"
விட்டுப் போனது ஒன்று ஞாபகம் வந்தது…கேட்டு விட்டான்

சொல்ல முடியாது எனும் தலையசைப்பு அவளிடம்…
"அவங்கிட்டயே கேளுங்க…"

"ஹ்ம்ம் கேட்கறேன் இப்போ வா கீழ போகலாம்…"

மனதில் ஆயிரம் சிந்தனைகள் மாறி மாறி சுழன்றடிக்க அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது அவளுக்கு…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 11

"மனதோடு நெருங்கிய நீ தூரம் போகிறாய்; ஆழ்மனதின் நேசத்தை புடம் போட்டுக் காட்டவே.."


"அண்ணா நாளைக்கு மீட்டிங்க்கு நான் போறேன் நீ இங்க இரு…"

மாடி பால்கனியில் உட்கார்ந்து லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து கொண்டு இருந்தவனிடம் தருண் சொல்ல…

இல்லடா நானே போறேன்…
நீ இங்க ஆபிஸ பார்த்துக்க…

"மூணு நாள் ஆகும்ல திரும்பி வர…
எனக்கு என்னமோ நீ இங்க இருக்க, நான் போறது தான் சரின்னு தோணுது அதான் சொன்னேன்…"

சில நேரங்களில் நம் உள்ளுணர்வு நமக்கு சொல்லும் விடயங்கள் மிகச் சரியாக இருக்கும்…

"இல்ல இந்த ட்ரிப் நான் தான் போகணும்… அங்க இன்னுமொரு வேலையும் இருக்குடா…"

"ஆமா புஜ்ஜி… அவர் போகட்டும்… நீ போனா மீட்டிங் முடிஞ்சி வந்துடுவ… ஆனா உங்க அண்ணா இன்னொரு ஆளையும் மீட் பண்ற வேலயா போறாங்க போல…"

அதிர்ச்சிப் பார்வையுடன் கரண்
புரியாத பார்வையுடன் தருண்

"ஏய் உனக்கு எப்பிடித் தெரியும்…??"

"அவ அங்க தானே இருக்கா…??"

"எவ அங்க இருக்கா பாபி…??"

"தீப்தி"….
கரணை பார்த்துக் கொண்டு தருணுக்கு பதில் தந்தாள்…

"என்னது அவளா…??
அவளப் பார்க்க நீ எதுக்கு போறண்ணா…?? அவள் பண்ணது எல்லாம் பத்தாதுன்னு இன்னும் ஏன் அவள பார்க்கப் போற…
இவ்வளவு நாள் உனக்கு ஒண்ணும் தெரியாது ஆனா இப்போ தான் எல்லாம் பாபி சொல்லிட்டால்ல…
இன்னும் எதுக்கு…?"

"இல்ல அவகிட்ட ஏன் இப்பிடி செஞ்சன்னு கேட்கணும்…நாலு வார்த்த நல்லா திட்டிவிடணும் அப்போ தான் என் மனசு ஆரும்"

"கேட்டு, திட்டி என்ன பிரயோஜனம்…??
கடந்து போன நாலு வருஷமும் திரும்பக் கிடைக்குமா…??
அப்பிடிக் கிடைக்கும்ன்னா… போய்க் கேளுங்க நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்… ஆனா அப்பிடி இல்லன்னும் போது வேஸ்ட் தானே…
அப்புறம் இத கேட்கப் போய்… நீங்க இதுவர பண்ற ஹெல்ப் இதுக்குப்புறம் வேணான்னு சொல்லிட்டான்னா…
அந்த குழந்தையும் சேர்ந்து கஷ்டப்படும்ல…
கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா…??"

"அதுவும் உனக்கு தெரிஞ்சு தான் இருக்கு… ஆனா நீ ஒண்ணும்
தெரியாத மாதிரி இருக்க…!!"

"பெரியம்மா அப்பவே
ஒரு நாள் அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க…
அத உங்க கிட்ட கேட்டு என்ன ஆகப் போகுது… பண்றது நல்ல விஷயம்னும் போது எதுக்கு கேள்வி கேட்கணும்…"

"ஹேய்… என்ன ரெண்டு பேரும் என்னமோ பேசிட்டு இருக்கீங்க…
என்ன நடக்குதுன்னு சொல்லப் போறீங்களா இல்லயா…??"
தருண் கேட்க…

"அதுக்கு மொத தீப்தி அண்ணி என்ன பண்ணான்னு சொல்லுங்க…"
நதியின் குரல் குறுக்கே வந்தது யாரும் எதிர்பாராத நேரத்தில்…

"அண்ணி பெரிய அண்ணி…
அவள கொன்னு பொதச்சிருப்பேன்…
தப்பிச்சிட்டா…"

"ஹேய் புஜ்ஜி என்னடா இது…??"

"வேற என்ன சொல்ல பாபி…"

மலங்க மலங்க முழித்துக் கொண்டு இரு‌ந்தது என்னவோ நதி தான்…

"ஏய் ரிலாக்ஸ் புஜ்ஜி… அங்க பாரு அவ பயந்துட்டா போல…"

"இல்லண்ணி… ஏதோ பெருசா நடந்து இருக்குன்னு நினைக்கிறேன்…"

"ஹ்ம்ம்… அத விடு நதிம்மா…"

"இல்லண்ணி… சொல்லுங்க என்ன நடந்ததுன்னு நானும் தெரிஞ்சிக்கறேன்…"

"சொல்றேன்…"
என்றவன் முழுவதும் சொல்லி விட்டு கரணை முறைத்துக் கொண்டே பெரு மூச்சொன்றை வெளியிட…

"அண்ணா முட்டாளா நீ..??
உனக்கு கிறுக்கா புடிச்சி இருந்துச்சு…??
அறிவ தூக்கி வாடகைக்கு கொடுத்து இருந்தியா…??
கொஞ்சம் கூட யோசிக்காம இருந்திருக்க…??"

நதியில் இந்த சொல்லாடல்களை மற்ற மூவரும் சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை…
தருணுடன் வம்பு வளர்ப்பது தான் ஆனால் கரண் மீது பாசமும் மரியாதையும் சரி சமமாக கொண்டவளின் கோபம்…
முதலில் திகைக்க வைத்து பிறகு புன்னகைக்க வைத்தது…

"ரிலாக்ஸ் நதிம்மா ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற…
அதான் எல்லாம் சரியாகி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ல…"

"நீங்க கொஞ்சம் சும்மா இருங்கண்ணி…"

"அண்ணா… ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு…
அப்பா சொன்னாங்க ஓகே தேவையே இல்லாம என்னவோ எல்லாம் யோசிச்சி இருக்காங்க சரி…
ஆனா தீப்தி சொன்னத
நீ ஏன் கொஞ்சம் கூட யோசிக்கல்ல…??
யோசிச்சி இருந்தன்னா தருண்ணா பண்ணத நீ பண்ணி இருக்கலாம்ல…"

அவள் சொல்ல…
மர்மப் புன்னகையுடன் ஒரு பார்வை பரிமாற்றம் தருண், சாருவிடம்...
வழக்கம் போல புரியாத பார்வை கரணிடம்…

"என்ன சொல்ற புரியல…"

"நான் சொன்னேன்ல பாபி இந்த அறிவாளிக்கு நாம சொல்லும் வர புரியாதுன்னு…
இதுல கம்பெனி எம்டின்னு பேரு வேற…"

கண்ணீர் வர சிரித்து விட்டாள் சாரு…

"டேய் என்னடா… என்னனு சொன்னா தானே புரியும்…"

"நீ முன்ன எல்லாம் நோட் புக்ல புடிச்ச சாங் லிரிக்ஸ் எல்லாம் எழுதி வைப்ப ஞாபகம் இருக்கா…??"

நதியின் கேள்வியில்
ஆமோதிப்பாக தலையசைத்து வைத்தான் கரண்…

"தமிழ இங்லிஷ்ல எழுதுவ…
சாங் லிரிக்ஸ்ஸே அப்பிடின்னா டயறி…??"
அவனை ஆழ்ந்த பார்வை பார்த்து கேட்டு வைக்க

பொட்டில் அறைந்தது உண்மை…
"அய்யோ இத நான் யோசிக்கவே இல்லப்பா…"
சொல்லி நெற்றியில் அறைந்து கொண்டு எழுந்து நின்றான்

"அதான் எனக்கு அப்பவே தெரியுமே…
அதுக்குத்தான் உன்ன முட்டாள்ன்னு சொன்னேன்…"

"அறிவ வாடகைக்கு விட்டா இப்பிடி தான்…
கண் முன்ன இருக்க விஷயம் கூட தெரியாது…"
கரணிடம் கத்தி விட்டு
இருங்க வர்றேன்…

"எங்க போற நதி…??"
கீழே போகப் போனவளைப் பிடித்து நிறுத்தினாள் சாரு

"அப்பா கிட்ட போய் கேட்கப் போறேன்…"
இ‌ன்னு‌ம் மனது ஆறவில்லை நதிக்கு…

"வேணாம்டா… இது நம்ம மூனு பேரையும் தவிர வேற யார்க்கும் தெரிய வேணாம்டா…
மாமாகிட்ட பேசணும்ன்னா ஃபர்ஸ்ட்ல இருந்து நடந்த எல்லாம் சொல்லணும்
அத்த பாட்டி எல்லாருக்கும் தெரிய வரும் அப்புறம் உங்க அண்ணாவையும் தான் தப்பு சொல்லுவாங்கல்ல…??
நான் உனக்குக் கூட தெரியக் கூடாதுன்னு நெனச்சேன்…"

"ராங் டைம்ல கரெக்ட்டா வந்ததால தெரிஞ்சிக்கிட்டேன் அப்பிடித்தானே…??"
நக்கல் வழிந்தது குரலில்…

"தெரிஞ்சா இப்பிடி ஏதாவது செய்வன்னு தான் சொல்லல்ல…
இதுக்கப்புறம் இதப்பத்திப் பேசவே கூடாது ஓகேயா…"

"ஆனா இவன இன்னும் நாலு திட்டு திட்ட…"
சொல்லிக் கொண்டு திரும்பியவள் பேச்சு பாதியிலேயே நிற்க…

மற்ற இருவரும் திரும்பி அவனைத் தான் பார்க்க… குனிந்த தலை நிமிராமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்…

சாரு அருகில் சென்று தோல் பற்ற…
அவள் கையைப் பிடித்தவன் நிமிர்ந்து தப்பு செய்த குழந்தை போல ஒரு பார்வை பார்த்து…
"என்ன மன்னிச்சிடு சாரு…
ரியல்லி சாரி…"
குரல் கலங்கி வந்தது…

"அய்யோ அத விடுங்க…
அதான் எல்லாம் சரியாகிடுச்சே…"
அவனருகில் அமர்ந்து கொண்டாள்…

"இல்ல இன்னும் ஒண்ணு இருக்கு…"
மீண்டும் நதியாவே ஆரம்பித்தாள்…

'என்ன…?' எனும் பார்வை கரணிடம்…

"தீப்திக்கு எதுக்கு ஹெல்ப் பண்ணுறீங்க…
அதான் அவ இஷ்டம் போல யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டால்ல…"

"கல்யாணம் பண்ணிகிட்டா தான் ஆனா அவ எதிர்பார்த்த அளவு லைப் கிடைக்கல்ல…"
தருணின் குரலுக்கு அவன் பக்கம் திரும்பினாள்…

"கல்யாணம் பண்ண ரெண்டு மாசத்துல தனிக்குடித்தனம் போய்ட்டா…
அப்புறம் கொஞ்ச நாள்ல அவனுக்கு ஆக்ஸிடெண்ட்…
படுத்த படுக்கையாகிட்டான்…
அவ குணத்துக்கு அப்பவே அறுத்துக் கிட்டு வந்திருப்பா
ஆறு மாசம் ப்ரக்னென்டா இருந்ததனால
அப்பிடியே இருந்திருப்பா போல…"
கோபமும் யோசனையுமாக சொன்னவன்…
திரும்பி கருணைப் பார்த்து…
"அண்ணா நீ எப்போல இருந்து ஹெல்ப் பண்ற…??"
கேள்வியாக நிறுத்தினான்…

"குழந்த பிறந்த நேரம் பணம் கேட்டு அத்த கால் பண்ணாங்க…
தீப்தியோட மாமா வீட்ல இருந்து கொஞ்சம் பணம் தான் கொடுத்தாங்க போல…
எந்த சப்போர்ட்டும் இல்லன்னு சொல்லி கவலப்பட்டாங்க…"

"ஆமா அவ செய்ற வேலைக்கு தலைல தூக்கி வெச்சிட்டா இருப்பாங்க…
பணத்த கொடுத்துட்டு ஒதுங்கி இருப்பாங்க…"
நதி எரிந்து விழுந்தாள்…

"அப்போ தான் நானும் ஹெல்ப் பண்ணேன்…
அப்புறம் அவ குழந்தையோட ரொம்ப கஷ்டப்படறான்னு அம்மா சொன்னாங்க
அப்போல இருந்து அடிக்கடி பணம் அனுப்பி விடுவேன்…

ஆனா இப்போ எல்லாம் தெரிஞ்ச பிறகு போய் அவள நாலு கேள்வி கேட்கத் தான் தோணுது…
ஆனா இவ விட மாட்டாளே…"
சாருவின் புறம் பார்வை திரும்பியது…

"அண்ணி உண்மைய தான் சொல்றாங்க…
வேணாம் விடுங்க…
அதான் கடவுள் உங்ககிட்டயே ஹெல்ப் கேட்க வெச்சுட்டாரே…
இப்போ அவ மனசு உருத்தும் தானே…"

"அத தான் நானும் சொல்றேன்…
முடிஞ்சதெல்லாம் விட்டுட்டு இவ்வளவு நாள் செஞ்சது போல இதுக்கப்புறமும் செய்ங்க…
அந்தக் குழந்தைக்காக…"

"நாளைக்கு போற நீங்க அவள சும்மா பார்த்துட்டு பணம் ஏதும் கொடுத்துட்டு வாங்க…
ஒண்ணும் கேட்காதீங்க…
அவ செஞ்சது அவளுக்கு… நாம செய்றது நமக்கு…"

"இதெல்லாம் நல்லா பேசு…
எனக்கு என்னவோ…
அவள நாலு சாத்து சாத்தியெடுக்கத் தான் நெனக்குது பாபி…"

"அடேய் நீ வேற… சும்மா இருடா கொஞ்சம்…"

"அவன் சொல்றது என்ன தப்பு…
அந்த குழந்த பாவம்ன்னு நீங்க சொல்ற பாயிண்ட் கொஞ்சம் உருத்துது அண்ணி… இல்லன்னா நானே அவள கேட்பேன்…"

"அய்யோ போதும் நிறுத்துங்கப்பா என்னால முடியல…
தலை வலிக்குது…
முடிஞ்சி போனத புடிச்சி இழுக்குறீங்க…
இதுக்கப்புறம் இத பேசிப் பாருங்க அன்னைல இருந்து நான் உங்க யார்கிட்டயும் பேச மாட்டேன்…"
சாரு சொல்லி விட்டு முறைக்க முயல…

"யாரு நீங்க தானே…?? என்னையும் அண்ணாவையும் டீல்ல விட்டாலும்
தருண்ணாவ விட மாட்டீங்க…"
அவளின் வார்த்தைகளின் உண்மை எல்லோரையும் சிரிக்க வைத்தது…

இரவு பயணத்திற்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சாருவை பின்னால் இருந்து அணைத்து இருந்தான் கரண்…

"என்ன சார்…"

"அய்யோ சாரு நீ இத விட மாட்டியா…??"

"பத்து நாட்களுக்கு முன் மொட்டை மாடியில் வைத்து அனைத்தையும் பேசித் தீர்த்து விட்ட பின்னர் மனம் வெகுவாக சாந்தப்பட அவனுடன் ஒரு நெருக்கம் இயல்பாக வந்திருந்தது…அதன்பிறகு அவர்களின் அறையில் மட்டும் அவள் அழைக்கும் சார் என்ற இந்த வார்த்தை அவனை அலைக்கழித்தது…"

"இல்லயே… விடவே மாட்டேன்…
கம்பனி எம்டி வேற…இப்பிடி கூப்ட்டா தான் நல்லா இருக்கு…" மாலை தருண் சொன்னதை வைத்தும்
கிண்டல் செய்தவள் திரும்பி அவன் முகம் பார்த்து…
" சாரி.. " என்றிருந்தாள்…

"எதுக்கு இப்போ…??"

"நீங்க தீப்திக்கு ஹெல்ப் பண்றத புஜ்ஜி எப்பவாச்சும் தெரிஞ்சிக்கிட்டன்னா அதோட எனக்கும் தெரியும்ன்னா சொல்லல்லன்னு சண்ட போடுவான்…
அவனுக்கு நாமலே சொல்லணும்னு சந்தர்ப்பம் பார்த்துட்டு இருந்தேன்…
ஆனா நாம பேசிட்டு இருக்கும் போது நதி வருவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல…
அதோட அவ அப்பிடி பேசினது என்னால நம்பவே முடியல…"
கவலையுடன் குற்ற உணர்வும் சேர்ந்த கொள்ள குரல் தணிந்திருந்தது

"அது அவ உன் மேல வெச்சிருக்க பாசம்… இல்லைன்னா அவ என்கிட்ட அப்பிடி பேசுற ஆளே இல்ல…
இந்த கோபம் தருண் கிட்ட இருந்து வரும்னு தெரியும் ஆனா நதி கிட்ட இருந்து வந்திருக்கு…"
புன்னகைத்துக் கொண்டான்…

"ஆமா உங்க மேல பாசம் இருக்க அளவு மரியாதையும் இருக்கு அவளுக்கு….ஆனா இன்னைக்கு அத நானே கெடுத்து…"

அவளை முடிக்க விடாமல் தடுத்து
"ஹேய் அப்பிடில்லாம் இல்ல….
அவளாவது டயறி விஷயத்த சொன்னாளேன்னு இருக்கு எனக்கு…"
அவள் நெற்றி முட்டி சொன்னான்…

"நான் அத யோசிக்கவே இல்ல…"
ஆதங்கமாக வந்தது அவனது குரல்

"அத விடுங்க சார்…"
அவனைக் கலைத்தாள்…

"ஏய் வேணாம்டீ…"

"வேணும் எம்டி சார்…"

"அப்போ ஏன் இங்க மட்டும் சொல்ற…
எல்லாரும் இருக்கும் போதும் சொல்ல வேண்டியது தானே…"
வம்பிழுத்தான்…

"எனக்கென்ன... நான் சொல்லுவேன் …
நம்ம பசங்க கிட்ட கூட சொல்லுவேன்…
இது மட்டுமில்ல பரம்பரைக்கே தெரியட்டும் சாரோட காதல் கதை…. கல்வெட்டுல செதுக்கப் போறேன்…"
சொல்லி முடிய

"அப்போ இதையும் சேர்த்து செதுக்கி வை…"
என்றவன்
அவளின் இதழ்களை சிறையெடுத்திருந்தான்…

கருவண்டாக திருதிருத்த அவள் விழிகளை பூவிதழ்களாக மூடியது இமைகள்…
ஆத்மார்த்தமாக இறங்கியது அந்த முத்தம் அவளுள்…

அவளை தன்னை விட்டு பிரித்தவன்…
"நான் வந்து அடுத்து ரெண்டு நாள்ல தானே உனக்கு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு…"
அவள் வயிற்றில் கைவைத்து கேட்டான்...

"ம்ம் ஆமா…"

"இது பொண்ணு தானே…"
ஆர்வமா கேட்க

"இல்ல"

"பிளீஸ்… பொண்ணு தான்னு சொல்லு…"

"இல்ல… முடியாது…"
சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள்…

"ப்ளீஸ்டீ…"

மறுப்பாக தலையாட்டினாள்…

இது இவர்கள் இடையில் இருக்கும் இ‌ன்னு‌மொரு யுத்தம்…
முடிவு தம் கையில் இல்லை என்று அறிந்தும் நடக்கும் செல்ல யுத்தம்…

அடுத்த நாள் கிளம்பிக் கொண்டிருந்தவனிடம்…

"பிளீஸ் தீப்தி கிட்ட ஒண்ணும் கேட்காதீங்க…"
கெஞ்சல் குரலில் கேட்க…

"இத எத்தன முறை கேட்ப… ப்ராமிஸ் பண்றேன் ஒண்ணும் பேசவே மாட்டேன் சரியா…
நீ இவ்வளவு சொல்லும் போது
போகாமலே இருக்கலாம்…
அத்த அங்க தான் இருக்காங்க ரெண்டு நாள் முன்ன பேசும் போது நான் வர்றேன்னு சொல்லிட்டேன் இப்போ போகல்லன்னா
ஏதாவது சொல்லுவாங்க…
அதான் போய் பார்த்துட்டு இந்த மாசம் அவளுக்கு பணம் அனுப்பல்ல அதையும் கொடுத்துட்டு வர்றேன்…
இது வர நான் ஹெல்ப் பண்ணது நம்ம அத்த பொண்ணு கஷ்டப் படறாளாலேன்னு தான்…
இதுக்கப்புறம் அந்த எண்ணம்லாம் இல்ல அந்த குழந்தய யோசிச்சி நீ சொன்னதுக்கும், அதோட எங்க அப்பாவுக்காகவும் மட்டும் தான்… இல்லைன்னா எனக்கு அவ மேல இப்போ வெறுப்பு தான் இருக்கு…"

குரலில் ஓய்ந்த நிலை அவன் மனதை படம் போட்டுக் காட்டியது…

தயாராகி முடிய
அவளை இறுக்கி அணைத்து…
"அம்மாவும் பொண்ணும் சமத்தா இருங்க மூணு நாள்ல வந்து பாக்குறேன்…"
சொல்லி விடுவிக்க…

"முடியாது சார்… ரகள பண்ணிட்டு தான் இருப்போம் அம்மாவும் பிள்ளையும்…" குறும்புக் குரல்…

"உன்ன வந்து கவனிக்கிறேன் இப்போ எனக்கு லேட்டாகுது…"
சொன்னவன்…
அவள் கன்னத்தில் முத்தமிட்டு சந்தோஷமாகக் கிளம்பினான்…

இப்போது இருக்கும் இந்த ஒட்டு மொத்த சந்தோஷமும் கைவிட்டுப் போக...வலி நிறைந்த மனதுடனும், விழி நிறைய கண்ணீருடனும் ஒரு உயிரை இழந்த நிலையில் தான் வந்து சேருவோம் என்று அறியாது…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 12


"உரிமைப்பட்டவன் நீ தூரம் சென்ற தருணம் உயிர் ஒன்று அல்லாடுகிறது…
தன் உயிர்ப்பை தொலைத்து விட்டு…"



அவனது நேசமும் பிடித்தமும் அறிந்து கொண்ட இந்த சொற்ப நாட்களில்… ஒன்றியே இருந்தவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்க…
அவனில்லாத இந்த இரண்டு இரவும் தூக்கம் தூரம் அவளுக்கு…
திருமணம் முடிந்த இந்த பத்து மாதங்களில் முதல் முறையாக அவனைப் பிரிந்து அவள் இருக்கும் இந்த இரண்டு நாட்களை நெட்டித் தள்ளும் படி இருந்தது…


கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தவள் சிந்தையில் வந்து நின்றான் அவன்…

அன்று மொட்டை மாடியில் இருந்து கீழே வந்து ஏதோ சிந்தனையிலே சாப்பிட்டு முடித்து…. இரவு தூக்கம் வராமல் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு படுத்திருந்தவளை

"உனக்குத் தெரியுமா சாரு"

அவன் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது…

விட்டத்தைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்…

"எனக்கு எத்தன பொண்ணு பார்த்தாங்கன்னு உனக்குத் தெரியுமா…??

பத்துக்கும் மேல பொண்ணுங்க… வீட்ல அவங்களே பார்ப்பாங்க பேசிக்குவாங்க அப்புறம்… அது சரிவரல்ல வேற ஒன்னு பார்க்கலாம்ன்னு சொல்லுவாங்க…

நான் என்னன்னு கூட கேட்க மாட்டேன்… கேட்க கூடிய அளவு எதுவும் மனசுல பதிஞ்சதுமில்ல பாதிச்சதுமில்ல…

ஒரு நாள் எங்க அம்மாவோட, தம்பி பொண்ணு தெ‌ரியும்ல உனக்கு அவள எங்க பாட்டி, பொண்ணு கேட்க…
அப்பாவ காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லிருக்காங்க…"

சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்…
இது அவளுக்கு புதுச் செய்தி

"அன்னைக்கு பாட்டி அழுது புலம்பி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க…
மொத பார்த்த சில பொண்ணுங்க வீட்லயும் இதயே தான் சொல்லியிருந்தது அன்னைக்கு தான் எனக்குத் தெரிஞ்சது…"

'தீப்தி ஆரம்பிச்சி வெச்சது தொடர் கதையாகியிருக்கு…'
மனம் நினைத்துக் கொண்டது…

"அப்போவே சொல்லிட்டேன் இனி யாரும் கல்யாணப் பேச்சே எடுக்கக் கூடாதுன்னு…
அப்பாவும் மனசளவுல ரொம்பவே ஓய்ஞ்சி இருக்கும் போது இப்பிடியான பேச்சு இன்னும் அவர பீல் பண்ண வைக்கும்னு கவல எனக்கு…

அப்புறம் திடீருன்னு ஒருநாள் ஆபீஸ்ல இருந்த எனக்கு அம்மா கால்…
உன்ன, அப்பா பொண்ணு கேட்டு உங்க வீட்ல… எல்லாரும் சம்மதம் சொன்னாங்கன்னு…

உடனே வந்து அப்பா, அம்மா கிட்ட பேச
முழுமனசா, சந்தோஷமா தான் பொண்ணு கேட்டேன்னு அப்பாவும்…
நீயும் சம்மதிச்சதா அம்மாவும் சொன்னாங்க…

எனக்கு அதத் தாண்டி வேற எதுவும் யோசிக்கக் கூடத் தோணல்ல…
மனசு நெறஞ்சி போச்சி…
அத்தன நாள் இல்லாத ஏதோ ஒரு உணர்வு…
நம்ம கல்யாணம் நடந்துட்டா போதும்ன்னு ஒரு எண்ணம் மட்டுமே இருந்துச்சு…
அது ஏன்னு கூட புரியல்ல…"

திரும்பி அவளைப் பார்த்தவன்

"கல்யாணத்தன்னைக்கு உன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கவும் தான்… ஒரு வேள உன் வீட்ல கேட்டத மறுக்க முடியாம கல்யாணம் பண்ணிக்கிட்டியோன்னு யோசிச்சேன்…
அத உங்கிட்ட கேட்கணும்ன்னா கூட ஒரு தயக்கம்…
ஆனா கொஞ்ச நாள்லயே நீ இயல்பா இருக்கவும்… நான் அத பத்தி யோசிக்கவேயில்ல… மறந்துட்டேன்…"

அவள் திரும்பி முறைக்கவும்…

"உண்மைய சொல்லணும்ல…"
கெஞ்சிக் கொண்டு வந்தது குரல்

"ஆனா நீ இன்னைக்கு வர மனசுலயே வெச்சி ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்க… சாரிடி…
நம்ம வாழ ஆரம்பிக்கும் போதாவது நீ சொல்லி இருக்கலாம்ல…??"

"இல்ல இது தான் நிதர்சனம்,
இத ஏத்துகிட்டு வாழ பழகிக்கணும்ன்னு புரிஞ்சது…
நான் அனுபவிச்ச அவமானம், புறக்கணிப்பு, ஏமாத்தம் எல்லாம் எனக்கு பெரியளவு மனமுதிர்ச்சிய தந்திருக்கு…
எத்தனையோ கஷ்டங்கள கடந்து வந்திருக்கேன்…
அந்த மெச்சூரிட்டிய வெச்சே இந்த வாழ்க்கைய ஏத்துகிட்டேன்…"

முன்னால் இருந்த சுவற்றை வெறித்தவள்…. வறண்ட குரலில் பேசி இருந்தாள்…

குரலுக்கு மாற்றமாக ஈரமான கண்களை கண்டு கொண்டவன்…
அவளை இழுத்து அணைத்து…

"ஊர்ல பொண்ணுங்களே இல்லையான்னு கேட்ட தானே நீ…??
நிறைய இருக்காங்க ஆனா உன்ன மாதிரி, என்னய ஏத்துக்க வேற யாருமே இருக்கல்ல…"

அவளின் உச்சந்தலையில் கன்னம் வைத்துக் கொண்டான்…

அவனின் இறுகிய அணைப்பு அவளிடம் இதுவரை அவன் செல்லாத தவிப்பையும் காதலையும் சேர்த்து வைத்துச் சொல்ல…
முற்றிலும் கரைந்து விட்டாள் காதலுடன்…

அதன் பின்னர் இன்று வரையான நாட்களில் மனதில் நிறைந்திருந்த நிம்மதியும், சந்தோஷமும் இந்த நொடி கூட அவளை புன்னகைக்க வைத்தது…

"நாளை இந்நேரம் இங்க வந்துடுவாங்க உன் அப்பா…"
வயிற்றில் கைவைத்துக் கொண்டாள்…

"சாரு என் ப்ரண்ட்டோட அம்மா இறந்துட்டாங்க இப்போ தான் கால் வந்தது"

காலை காப்பி குடித்தவளிடம் சொல்ல

"நீங்களும் பாட்டியும் போய்ட்டு வாங்க அத்த நான் இருக்கேன்…"

"தனியா இருக்கணுமேடா…
நான் வர கொஞ்சம் லேட்டாகும்
நதிய காலேஜ் கட் பண்ண சொல்லலாம்…"

"தேவையில்ல அத்த நான் இருப்பேன்…
நீங்க கெளம்புங்க…"

"கரண் எப்போ வர்றான் சாரு…??"

"இன்னைக்கு ஈவினிங் அங்க இருந்து கெளம்புவாங்க போல நைட் தான் வருவாங்க பாட்டி…"

"ஓஹ்…
நீ இருப்பல்ல…??
இல்லைன்னா சொல்லு உன் அத்தைய மட்டும் போக சொல்லிட்டு நான் இருக்கேன்…"

"இல்ல… இல்ல… நீங்க போங்க பாட்டி
நான் இருப்பேன்…
எனக்கு தனியா இருக்க முடியும்…
இப்போ சாப்பிடுங்க…
வா நதி… நீயும் வந்து சாப்பிடு…"

"அண்ணி நான் காலேஜ் போகாம உங்க கூட இருக்கட்டுமா…??"

"வேணாம்டா நான் இருப்பேன்…
நீ சாப்ட்டு கெளம்பு…"

"எங்கம்மா போறீங்க…??"
கேட்டுக் கொண்டே கீழே வந்தான்…

கமலா விஷயம் சொல்ல…

"நீ தனியா இருப்ப தானே பாபி…?? நான் கொஞ்சம் ஏர்லியா வரப் பார்க்குறேன்…
ஏய் நீயும் வந்துடு…
லைப்ரரி, கேன்டீன்னு சுத்திட்டு இருக்காம"

"ஆமா நான் சுத்திட்டு இருக்கத நீ பார்த்த தானே…??"
கையில் கிடைத்த சர்வியட்டை அவன் மேல் தூக்கி எறிந்தாள்…

"ஆ… அத பார்த்து வேற கன்பர்ம் பண்ணனுமா…??"

"சும்மா இருக்க சொல்லுங்கம்மா இவன…"

"காலைலயே ஆரம்பிச்சுட்டாங்க இன்னைக்கு நைட் தூங்கப் போகும் வரைக்கும் சண்டை ஜக ஜோதியா இருக்கும்…"
உண்மை அறியாது வந்தது பாட்டியின் குரல்…

'என் அண்ணனும் இப்பிடி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…
அவங்களுக்கு எங்கிட்ட நின்னு பேசக் கூட பொறும இல்ல…'
என்றும் இல்லாது இன்று தானாக மனம் நினைத்துக் கொண்டது…

ஏதோ நினைத்து அவள் யோசனையாக முகம் சுளித்து,பின் தனக்குள்ளே சிரித்துக் கொண்டது கண்டு அவளிடமும் வம்பு செய்தான்

"என்ன பாபி கனவு பலமா இருக்கு போல…??"

மழுப்பலாக அவள் சிரிக்க

"நீ டூயட் பாடினது போதும் எனக்கு சாப்பாட்ட போடு…"

"ஆமா பாடறாங்க டூயட் நீ பார்த்துட்ட…"


"நீ இருப்பல்ல எனக்கு உன்ன தனியா விட என்னவோ போல இருக்கு பாபி…"

"நீயும் சாப்பிடு சாரு… இல்லன்னா அப்புறம் தனியா சாப்பிடணும்ல…"

வாணியம்மா சொல்ல
தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்தவளிடம் கேட்டான்…

"ஆமா நான் சின்ன பாப்பா பாரு…
பேசாம சாப்பிட்டு கெளம்பு…"

அனைவரும் போன பிறகு
சமையல் மற்றும் இதர வேலைகள் சிலதை முடித்தவள்….
நாதனின் அறைக்குள் புத்தகத்துடன் போய் பார்க்க அவர் தூங்கி இருப்பது கண்டு வெளியேறினாள்…. வரவேற்பறையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை…

திடீரென கேட்ட அலைபேசி ஒலியில் எழுந்து போய்ப் பார்க்க….
கமலா தன் ஃபோனை வீட்டிலே வைத்து விட்டு போய் இருக்க… கரண் தான் அழைத்துக் கொண்டிருந்தான்

"ஹலோ…"

"ஹலோ சாரு…"

"என்ன பண்றீங்க…??"

"இன்னைக்கு மதியம் தான் மீட்டிங் இருக்கு ஈவினிங் தான் முடியும்…
அதனால தீப்தி வீட்டுக்கு போனேன் அவங்க ஹாஸ்பிடல் போய் இருக்காங்க…
நான் போய் அத்தைய பார்த்துட்டு பணத்த கொடுத்துட்டு இப்போ தான் வந்தேன்…
நீ என்ன பண்ற…??"

"இருக்கேன்…
நீங்க மீட்டிங்ல இருப்பீங்கன்னு நெனச்சு தான் நான் கால் பண்ணல்ல…"

"அம்மா கால் பண்ணி இருக்காங்க… நான் இப்போ தான் பாத்தேன்…
எங்க அவங்க…??"

"அவங்க ப்ரண்டோட அம்மா இறந்துட்டாங்க
அவங்களும் பாட்டியும் போனாங்க…
அத சொல்லத் தான் கால் பண்ணாங்க"

"ஓஹ்… நீ தனியாவா இருக்க… நதி இருக்காளா…??"

" +அவ இருக்கட்டும்ன்னு அத்தையும், சொன்னாங்க…
காலேஜ் கட் பண்றேன்னு அவளும் சொன்னா தான்…
நான் தான் வேணாம்னு அனுப்பி வெச்சேன்…"

"அப்பா….??"
கேள்வியாக நிறுத்த

" தூங்குறாங்க…"

"என் பொண்ணு…??"
ஆசைக் குரலில் கேட்க…

"என் புள்ள…"
குறும்பாக சொன்னாள்…

"நீ இப்பிடியே சொல்லிட்டு இரு…
பொண்ணு வந்து உன்ன ஏமாத்த போறா…"

வர இருக்கும் ஏமாற்றம் அறியாமல் செல்ல யுத்தம் நடந்தது இருவருக்கிடையே…

"அத அப்புறம் பார்க்கலாம் இப்போ நீங்க ஃபோன வைங்க… மாமாவுக்கு சாப்பாடு குடுத்து மருந்தும் குடுக்கணும்…
நீங்க வர லேட் நைட் ஆகுமா..??"

"அவ்ளோ லேட் ஆகாதுன்னு நெனக்கிறேன்…
மீட்டிங் ரெண்டு மணி நேரம் தான் இருக்கும்…
இங்க இருந்து கெளம்பும் போது கால் பண்றேன்…"

அழைப்பைத் துண்டித்தவளுக்கு…
மனதில் ஏதோ ஒரு நெருடல்…
மற்ற நாட்களில் இல்லாத ஏதோ ஒரு அசௌகரியம் உடம்பில் உணர முடிந்தது நாதனுக்கு சாப்பாடு ஊட்டி முடியும் வர அது தொடர…

'காலைல நல்லா தானே இருந்தேன்…
இப்போ மட்டும் ஏன் இப்படி பண்ணுது…
சும்மாவா இருக்கும்… ஒரு நாள் நல்லா இருக்கு...இன்னொரு நாள் எதாவது பண்ணுது…'

நினைத்துக் கொண்டே அவருக்கு மருந்தையும் கொடுத்தவள் அப்படியே கட்டிலின் அருகே அமர…

"சா… ரு.. நீ… சாப்…"

திக்கித் திக்கி அவர் சொல்ல வருவது புரிய

"இல்ல மாமா பசியில்ல…
அப்புறமா சாப்பிடறேன்…
இப்போ புக் படிக்கறேன் கேக்கறீங்களா…??"

கேட்டவள்…அவர் தலையசைக்க
படிக்க ஆரம்பித்து இருந்தாள்…

சிறிது நேரத்தில் திடீரென அடிவயிற்றில் உண்டான வலியில்
கையில் இருந்த புத்தகத்தை கீழே போட்டவள்…வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விட்டாள்…

அவள் படிப்பதைக் கேட்டுக் கொண்டே… சாய்ந்து இருந்த நாதன்
அவளின் முனகல் சத்தத்தில் கண் திறந்து பார்த்தவர்

"சா… சார்...சா…"
பதற்றமாக குரல் கேட்க… நிமிர்ந்தவள்…

"முடில மாமா…"

"அத்...த… கா…"
அவர் திக்கத் திக்கிப் பேச

"அத்த ஃபோன் இங்க தான் இருக்கு…"
சொன்னவள்
அவளது அலைபேசியை கையில் எடுக்க…
அது கரணின் அழைப்பையும் ஏற்று வந்தது…


"ஹல்… லோ…"

"ஹலோ சாரு… ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு… என்ன பண்ணுது… உனக்கு"

கேள்விக்கு பதிலாக அவள் மயங்கி விழ…
நாதனின் "சாரு"
என்ற பிசிறில்லாத கூக்குரல் தான் கிடைத்தது…

அடுத்த வினாடி…

"ஹலோ அண்ணா…"

"டேய் தருண்…
நீ… நீ… எங்க இருக்க… அங்க… அங்க…
சாரு… சாருவுக்கு…"
தடுமாற்றமும் கலக்குமாக அவன் சொல்ல ஆரம்பித்த வினாடி அலைபேசி துண்டித்து வண்டியைக் கிளப்பி இருந்தான்…

எந்த வேகத்தில் எப்பிடி வந்து சேர்ந்தான் என்றெல்லாம் கேட்டால்
அவன் அறிவுக்கு பதில் தெரியாது…

"சாரு… சாரு…
எழுந்துரு…எழுந்துரு…"

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கேட்டது…
தந்தையின் குரலே…

"பாபீ…."
கத்திக்கொண்டே ஓடியவன்…
கீழே விழுந்திருந்தவளைத் தூக்க…

"ஆம்புலன்ஸ்… கால் பண்ணு…"

தந்தை தெளிவாகப் பேசுவதைக் கூட உணரவில்லை அவன்…

"பாபி… பாபி… எழுந்துரு… கண்ண முழிச்சி பாருடி… பாபி…"
கண்கள் கலங்க
அறையில் இருந்த மற்ற சிறிய கட்டிலில் அவளைக் கிடத்தியவன்… முகத்தில் தண்ணீரைத் தெளித்த படியே கேட்டான்…

"என்ன நடந்ததுப்பா…?"

"வயிறு வலின்னு சொன்னவ மயங்கி விழுந்துட்டா…
குழந்தைக்கு எதுவும் ஆகிடமோன்னு பயமா இருக்கு…
ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுடா…"

ஏகப்பட்ட அழைப்புகள் தவறியிருக்க…
இப்போது வந்த அவனது அழைப்பை ஏற்றவன்…

"அண்ணா… பாபி மயங்கி விழுந்துருக்கா…
நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணிட்டேன்…
நீ கிளம்பி வந்துடு…
எனக்கு பயமா இருக்கு…"
அழைப்பைத் துண்டித்தவன்…

ஆம்புலன்ஸ் வரவே கிளம்பி…
பாதித் தூரம் போகும் போது தான் மற்றவை புத்திக்கு உறைத்தது…
கமலாவின் அலைபேசி வீட்டிலிருப்பது தெரியாமல் அழைத்து ஓய்ந்தவன்…
நதியாவை அழைத்து

"நதி… ஹலோ நதி…
நான்…ஹாஸ்பிடல்…
பாபி மயங்கி விழுந்துட்டா…"

திக்கித் திணறி வந்த அவன் குரல்
திக்குமுக்காட வைத்தது நதியாவை…

"நீ… வீட்டுக்கு போ… அப்பா தனியா இருக்காங்க… அம்மா ஃபோன் எடுக்கறாங்கல்ல…"

"ஓகே… நான்… போறேன்…
நீ… என்னன்னு பார்த்து கால் பண்ணு…
அண்ணாக்கு சொல்லிட்டியா…??"

"அவன் தான் எனக்கு சொன்னான்…
அப்புறம் பேசறேன்…"
ஹாஸ்பிடல் வந்துட்டோம்…

மருத்துவமனையில் அவளை அனுமதித்தவனுக்கு…
சுற்றம் மறந்தது…
சில நிமிடங்கள் வெளியே இருந்தவன்…
தாதி வந்து வைத்தியர் அழைப்பதாக சொல்ல…

"டாக்டர் பாபிக்கு…??"
அறைக்குள் நுழைந்தவன் பதறிக் கொண்டு கேட்க

"உட்காருங்க தருண்…"
தன் முன்னிருக்கும் இருக்கை காட்டி விட்டு…

"இப்போவும் மயக்கமா தான் இருக்காங்க…
ஸ்கேன் ஒண்ணு செய்து பார்க்கணும்…
உங்க அண்ணா…??"

கேள்வியாக நிறுத்த…

"அண்ணா மீட்டிங் ஒண்ணுக்கு போய் இருந்தார்…
இப்போ தான் வந்துட்டு இருக்கார்…

ஏன் டாக்டர் ஏதும் ப்ராப்ளம்…"
என்றவன் யோசனையாக

"குழ… ந்தை… குழந்தைக்கு ஒண்ணும் இல்லைல்ல…?"

பயந்த குரல் அவனிடம்…

இங்கு
அறைக்குள் நுழைந்தவள் கண்டது…
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கண்ணீர் வடிய ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் தந்தையை…

அவர் அருகில் செல்ல…
"சாருவுக்கோ குழந்தைக்கோ ஒண்ணும் ஆகாம காப்பாத்திடு ஆண்டவா…"

பிசிறில்லாத குரல் கேட்டதும்

"அப்பா…"
அதிர்ந்து அழைக்க…

"வா… வா… நதி
சாரு… மயங்கி விழுந்து….
தருண்… ஹாஸ்பிடல் கூட்டிட்டு…"

"தருண்ணா… சொல்லித் தான் வந்தேன்…
ஆனா உங்களுக்குப் பேச… பேச வருதுப்பா…"

கண்ணீர் மல்க அவரின் கை பிடித்து அவரருகே உட்கார…

"சாரு மயங்கி விழவும்…
அந்த அதிர்ச்சில கத்திட்டேன்…"

"இங்கேயா விழுந்தாங்க…??
தலை ஏதும் பட்டிச்சா… தருண்ணா கிட்ட சொன்னீங்களா…??"

"இல்லடா இல்ல…"
என்றவர் அவளிடம் அனைத்தும் கூற…

'அப்போ பாப்பா…'
யோசித்தவளுக்கு… ஐந்து நாட்களுக்கு முன் சாருவிற்கு ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்…இன்னும் ஏழு நாட்களில் கட்டாயம் மறுபடியும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதாகச் சொன்னது ஞாபகம் வர…
மனதில் கிலி பிடித்துக் கொண்டது…

கமலாவிற்கு அழைக்க… வீட்டில் இருந்து அலைபேசி ஒலி கேட்க அதை எடுத்தவள்…
அதிலிருந்து அவர்
நண்பியை அழைத்து விபரம் சொன்னவள்…
அடுத்து அழைத்தது கல்லூரிக்கு வராது விடுமுறையில் இருந்த தன் நண்பியை…

"ஹலோ...நதியா"

"ஹலோ… தேவி"

"எங்க அண்ணி… உங்க அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க…"

"ஏய்… என்னடி சொல்ற…
என்னாச்சு அவங்களுக்கு…??"

"வயிறு வலிக்க மயங்கி விழுந்திருக்காங்க…
எனக்கு பயமா இருக்கு…
தருண்ணா தான் ஹாஸ்பிடல்ல இருக்காங்க…
ஃபோன எடுக்கவே இல்ல…
ப்ளீஸ்டி எனக்கு ஆண்டி கிட்ட விபரம் கேட்டு சொல்றியா…
வீட்ல யாரும் இல்ல…
என்னால இப்போ ஹாஸ்பிடல் போகவும் முடியாது…"
அழுது அழுது பேசி முடிய…

"சரி… நீ வை
நான் கேட்டு சொல்றேன்…"

அவ்வளவு தான் அடுத்து வந்த செய்தி…
அத்தனை பேரின் மொத்த உயிர்ப்பையும் துடைத்தெறிந்து இருந்தது…

"என்ன சொல்றீங்க டாக்டர்…??"

"யெஸ் தருண்…
சாரி ட்டு சே…"

"அய்யோ…" தலையைப் பிடித்துக் கொண்டவன்…
கதறிய கதறல் அடுத்த அறையில் இருந்த… தேவியின் அண்ணன் தீரனை இங்கு வர வைத்தது…

"வாட் ஹெப்பன் மாம்…??"
கேள்வியோடு நுழைந்து
தருணைக் கண்டு…

"ஹேய்… தருண்…
என்னாச்சு… ஏன் இப்பிடி…??
என்ன மாம்…"

"கரணோட வைப் அட்மிட்டாகி இருக்கா…"

"வை.. மாம்..??"
கேள்வி எழுப்ப

"பிரக்னென்ட்…
பட் நவ் பேபி இஸ் நோ மோர்…"

"வாட்… என்ன சொல்றீங்க….??"

"யெஸ் தீரா…
இப்போ தான் ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு வர்றேன்…"

"இப்போ என்ன பண்றது டாக்டர்…"
கொஞ்சம் நடப்புக்கு வந்தான்…

"கரண் வரும் வர வெயிட் பண்ண முடியாது லேட் ஆகும் தருண்…
அதுக்கு முன்னாடி நாம ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணனும் இல்லன்னா உங்க அண்ணிக்கு எதாவது ஆகிடும்…
மயக்கமா வேற இருக்கா…"

புரியாத பார்வை அவன் பார்க்க …

"கரணுக்கு கால் பண்ணுங்க நான் பேசறேன்…"

"ஹலோ… தருண்…"

"அண்ணா டாக்டர் உங்… உங்கிட்ட…"

"ஹலோ… கரண்"
போனை வாங்கியவர்… பேச ஆரம்பிக்க…

சூறாவளிக்குள் சிக்கிய உணர்வு அவனுக்கு…

"இப்போ என்ன பண்றது டாக்டர்…
அவளுக்கு எதுவும் இல்லைல்ல…??"

"இல்ல கரண்…
இப்போ வர அவ மயக்கமாத் தான் இருக்கா… வெயிட் பண்ண முடியாது
நாங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்றோம்…
நீங்க வந்தப்புறம் ஹாஸ்பிடல் ஃபோர்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்…"

"ஓகே டாக்டர்… நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க… "
மறத்த குரலில் ஒப்புதல் கொடுத்தவன்…

'பொண்ணு வந்து உன்ன ஏமாத்த போறான்னு சொன்னேன்ல…
இப்போ ஒண்ணுமே இல்லாம எல்லாரையும் ஏமாத்திட்டா பாரு...

அம்மாவும் புள்ளையும் ரகள பண்ணுவோம்ன்னு சொல்லி… இப்போ என்னைய கதற வெச்சிட்டீங்கல்ல…??'

இப்படியே மனதோடு அவளுடன் பேசிக் கொண்டே முழுப் பயண நேரத்தையும் கழித்துக் கொண்டிருந்தான்…

"தருண்… சாரு எங்க…??"
"இப்போ எப்பிடி இருக்கா…?"

இருவரும் ஆளுக்கொரு கேள்வி பதற்றமாகக் கேட்க…
பதறிக் கொண்டு வந்தது இவனுக்கும்…

எப்படி சொல்வது என்றே புரியாமல் விழித்தவன்… தீரனின்அறையைக் காட்டி விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான்…

"டாக்டர்…"
கதவை லேசாகத் தட்ட

"யெஸ்… கம் இன்…"
அனுமதி கிடைத்த அடுத்த நொடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றது

"சாரு… சாரு…"
என்ற அழைப்புடன் வாணியம்மா தான்…

"பாட்டி… பாட்டி…
ரிலாக்ஸ்… முதல்ல உட்காருங்க…
நீங்களும் உட்காருங்க ஆண்டீ…"
எழுந்து வந்து வாணியம்மாவைப் பிடித்து… உட்கார வைத்தவன் காமலாவிடம் சொன்னான்…

"சாரு… எங்க…??
எப்பிடி இருக்கா…??"

"அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு ஆண்டீ… அம்மா பார்த்துட்டு இருக்காங்க…"

அடுத்த வார்த்தை தொண்டையில் சிக்கிக் கொண்டது டாக்டர் தீரனுக்கு…

'பேபி மேட்டர் சொன்னா இவங்க டென்ஷன் ஆகிடுவாங்களே…
இந்த தருண் எங்க போனார்…'

நினைத்ததைக் கேட்க…

" அவன் வெளிய உட்கார்ந்து இருக்கான்ப்பா… கூப்பிடணுமா…??"

"இல்ல வேணாம் ஆண்டீ…
இருக்கட்டும்…"

இவனும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான் அவன் பதறியதையும்,கதறியதையும்…

"குழந்தைக்கு ஒண்ணும் இல்லையேப்பா…??"
இவன் சொல்லத் தயங்கியதை… கேட்டே விட்டார் வாணியம்மா…

"அது வந்து…
குழந்தையோட ஹார்ட் ரொம்ப வீக்கா தான் இருந்து இருக்கு…
இப்போ குழந்த இறந்துடுச்சி…
பாட்டி…"

திக்கித் திணறி சொல்லி முடிக்க
திகைத்துப் போய் பார்த்தனர் இருவரும்…

உடனடியாக வெளியே இருந்த தாதியை அழைத்தவன்…

"இவங்களுக்கு தண்ணீ கொஞ்சம் குடிக்க குடுங்க…"

"தருண் இங்க வாங்க கொஞ்சம்…
அவனே வெளியே சென்று அழைத்தான்…"

"யெஸ்… சொல்லுங்க டாக்டர்…"

"இவங்க கிட்ட குழந்த மேட்டர் சொல்லிட்டேன்…
கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க…
நீங்க கொஞ்சம் பேசுங்க…"

சொல்லி முடிய…ஒலித்த தன் அலைபேசியை காதில் வைத்தவன்…

"சொல்லு தேவி…"


"..... "

"ஆமா… அவங்க வந்து இருக்காங்க…"

".... "

"இல்ல இன்னும் ட்ரீட்மெண்ட் நடக்குது…"

".... "

"தருணைத் திரும்பிப் பார்த்தவன்…
நீயே கால் பண்ணி அவகிட்ட சொல்லுடா…"

அவன் வைக்க…
அழைப்பு போனது நதிக்கு…

"சொல்லு தேவி…
அண்ணி எப்பிடி இருக்காங்களாம்…
அம்மா பாட்டி எல்லாம் ஹாஸ்பிடல் போய் இருக்காங்க ஆனா யாரும் ஃபோன் எடுக்கல…"

"கொஞ்சம் ரிலாக்ஸா கேளு நதி…
உங்க அண்ணிக்கு ட்ரீட்மெண்ட் நடக்குது
பேபி மிஸ்கறேஜ் ஆகிடுச்சு"

"என்னடீ சொல்ற…
எப்பிடி…??"

"சரியான வளர்ச்சி இல்ல… ஹார்ட் ரொம்ப வீக்கா தான் இருந்ததாம்…"

"நதி நதி பேசறது கேட்குதா…
ஏய் எதாவது பேசு…"


கத்திப் பார்த்தவள் அழைப்பை துண்டிக்க…

"நதி நதி… நதிம்மா
என்னாச்சு…??"

தந்தையின் குரலில் சுயம் பெற்றவள்…

"பாப்பா… பாப்பா…
இல்ல…"

"என்ன சொல்ற…"
அதிர்ச்சியாக வந்த
கேள்வியைப் புரக்கணித்து
தருணுக்கு அழைக்க…

இந்த முறை அழைப்பை ஏற்றவன்
"சொல்லு நதி…"

"நீ என்னன்னு சொல்லு…
தேவி என்னமோ சொல்றா…
பாப்பா இல்லயா…
நான்… நான் அங்க வரணும்…
வந்து கூட்டிட்டுப் போ…"

அழுதழுது அவள் பேசியது… அலைபேசியைக் கடந்து வெளியே கேட்டது…

ஆனால் அவளுக்கு பதில் சொல்ல தான் யாரும் தயாரில்லை…

"தருண்ணா…
எதாவது பேசு…"

"ஹலோ… நான் தீரன்…"
தருணிடமிருந்து அலைபேசி கைமாறி இருந்தது

"டாக்டர்… டாக்டர்…
அண்ணி… பாப்பா…"

"ரிலாக்ஸ் நதியா…
அழாதீங்க…
தேவி சொன்னது தான் உங்க அண்ணிக்கு ட்ரீட்மெண்ட் நடக்குது…
இப்போ நீங்க வந்தாலும் அவங்கள பார்க்க முடியாது…
நீங்க அப்பாக் கூட இருங்க அப்புறம் வரலாம்…"

மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல
அழுகையை சற்றென நிறுத்தி

"ஓகே டாக்டர்…
அண்ணி வெளிய வந்ததும் தருண்ணாவ கால் பண்ண சொல்றீங்களா…"

"சரி சொல்றேன்…
இப்போ கொஞ்சம் தண்ணீ குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகுங்க…
அப்பா டென்ஷன் ஆகிட்டா ப்ராப்ளம் அவர நீங்க தான் இப்போ கவனிச்சுக்கணும்ல??"

"ஓகே டாக்டர்…
தேங்க் யூ…"
சொல்லவள் அழைப்பைத் துண்டிக்க

அவள் அழுகையைக் கேட்டு…
தாறுமாறாக துடிக்கத் தொடங்கிய இவன் இதயம் சற்றே சமன்பட்டிருந்தது…


"தருண் ரேணுகாவுக்கு கால் பண்ணனும்…"

அவர்களுக்கென ஒதுக்கியிருந்த அறையில் இருந்து ஒருவாறாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட கமலா சொல்ல…

அழைப்பெடுக்க…

அலறிய தொலைபேசியை எடுத்து காதில் வைத்து

"ஹலோ யாரு…??"

"ரேணுகா நான் அண்ணி பேசறேன்…"
பதற்றக் குரலில் இவர் பேச

"ஆ… அண்ணி நல்லா இருக்கீங்களா…அண்ணா எப்பிடி இருக்கார்…??"
ஆற அமர வந்தது ரேணுகாவின் குரல்…

"நாங்க இருக்கோம்…
ஆனா சாருவுக்கு தான் உடம்பு சரியில்லை…
ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் இப்போ தான் முடிஞ்சிருக்கு… இன்னும் ரூம்கு வரல்ல"

"ஏன் அண்ணி என்னாச்சு…??"
அதே சாதாரணக் குரல்…

இவர் விபரம் சொல்ல

"ஓஹ்… அவளுக்கு ஒண்ணும் இல்லையே… நான் இப்போ வர முடியாது அண்ணி… இங்க அவ அப்பா வெளியூர் போய் இருக்காங்க நைட் தான் வருவாங்க…
ரகுவுக்கு கூட உடம்பு சரியில்லை…
நான் நாளைக்கு காலைல வர்றேன்…"

"சரி ரேணுகா… நான் தகவல் சொல்ல தான் எடுத்தேன் நீ நாளைக்கே வா…"

மனதில் இருந்த ஆற்றாமையை மறைத்துப் பேச… பற்றிக் கொண்டு வந்தது என்னவோ தருணுக்குத் தான்…

"அவங்கெல்லாம் என் தாயோ…
வேற யாரும்னா இன்னேரம் பதறி அடிச்சி வண்டி புடிச்சிருப்பாங்க… ச்சே…"

"ஏய்...விடுடா… உன் அத்த குணம் தெரியாதா…
நாம அவள பார்த்துக்கலாம்…
ஏன் நீ பார்த்துக்க மாட்டியா உன் பாபிய…??"

"ஏன் இல்லாம…
நாம பார்த்துக்கலாம்…
என்ன மாதிரி யாரும் அவள பார்த்துக்க முடியாது…"

"இத உன் அண்ணன் கேட்கணும்….

"ஆமா அவன் கிளிச்சான்…
நான் சொல்றத கேக்காம போனான்…
இப்போ இன்னும் வந்து சேரவும் இல்ல…"

"டேய்… இது உனக்கே ஞாயமா இருக்கா… அவன் நாலு மணி நேரம் பயணம் பண்ணனும்டா…"

இவர்களின் வாக்கு வாதத்தில் இடைபுக

"அட.. .ஆமால்ல பாட்டி எனக்கு இருக்க டென்ஷன்ல அத யோசிக்கவே இல்ல…"

"அவன் தனியா யோசிச்சுட்டே வண்டி ஓட்டிட்டு வரணும்னு வேற யோசனையா இருக்கு…"

"இல்ல பாட்டி ட்ரைவர் கூட்டிட்டு தான் போய் இருக்கான்…"

பேசிக் கொண்டிருந்தவர்களை கலைத்தது கதவு தட்டும் ஒலி…

"யெஸ்…"

"சார் உங்கள டாக்டர் சீதா வர சொன்னாங்க…"
கதவைத் திறந்த தாதி சொல்ல…

"நீங்க இங்கயே இருங்க பாட்டி…
அம்மா வாங்க நாம போய் என்னன்னு பார்க்கலாம்… "
பேசிக் கொண்ட நடந்தவனின் பின்னே சென்றார் கமலா…

உள்ளே வந்து உட்கார்ந்தவர்களிடம்
பேச ஆரம்பிக்க முன்…

"பாபி எப்பிடி இருக்கா…
அவளுக்கு ஒண்ணும் இல்லையே….?"

அவன் பதற்றத்தை கண்டு மென்னகை வந்தது அவருக்கு

டோண்ட் வொர்ரி ஷீ இஸ் ஓகே நவ்… இன்னும் ஒரு மணி நேரத்தில ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடலாம்…

ஒழுங்கா மயக்கம் தெளியல்ல…
சோ… கொஞ்சம் ஆப்ஸவேஷன்ல வெச்சிருந்தோம்…
இப்போ கூட அவ டென்ஷன் ஆகிட கூடாது…
சோ… உடனே பேபி மேட்டர உங்க பாபி கிட்ட சொல்லாதீங்க…"

கடைசி வாக்கியம் சிரிப்புடன் வர…

"பழக்க தோஷம் எங்க போனாலும் அவள பாபி தான் சொல்லுவான் டாக்டர்…"

பாவமாய் பார்த்தவனிடம்…

"பாபி மேல அதிக பாசமா தருண்…
இங்க வந்ததுல இருந்து டென்ஷன்ல தான் இருக்கீங்க…"

"அவ பர்ஸ்ட் எனக்கு பாபி அப்புறம் தான் மத்தவங்களுக்கு…"

"சரி டாக்டர் தேங்க் யூ சோ மச்...
நாங்க ரூம்ல இருக்கோம்…"
அவனைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்துக்க கொண்டே
சொன்னவர் அவனை கிளப்பிக் கொண்டு செல்ல…
அவர்களின் பேச்சு சீதாவை சிரிக்க வைத்தது…

"டேய்… நீ அடங்க மாட்டியா…
டாக்டர் கிட்ட கூட சண்டைக்கு தான் போற… என்னவோ நல்லா பழக்கமானவங்க அதனால சரி…
இல்லன்னா…??"

"நான் என்ன தப்பா சொன்னேன்…
உண்மைய தான் சொன்னேன்…
அவ என் பாபி…"

"அய்யோ போதும் வா…"

அவளை அறைக்கு மாற்றி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான் கரண்…
வந்தவன் யாருடனும் எதுவும் பேசவில்லை…
நேராகச் சென்று கட்டில் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவள் முகத்தையே இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தான்…

மனதில் அவளுடன் பேசிக் கொண்டே…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 13

"நம் உயிர்ப்பை பறித்துக் கொண்டு பிரிந்து சென்றது ஓருயிர்; நீயாவது கண் திறந்து ஒரு வார்த்தை பேசி;
என் உணர்வை மீட்டுக் கொடு…"


"கரண் கொஞ்சம் எழுந்திரு இப்பிடியே ஒரே இடமா விடியும் வர உட்கார்ந்து இருந்திருக்க…
அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்தது எல்லாம் சேர்ந்து உடம்புக்கு ஏதாவது வந்துடும்…"

கமலா இவ்வளவு பேச… அது அவன் காதில் விழவுமில்லை… அறிவு உணரவும் இல்லை…
மயக்கமும் தூக்கமும் கலந்த ஒருநிலையில் கண் மூடி இருக்கும் அவளைப் பார்த்தது பார்த்த படி அப்படியே இருந்தான்…

"பாட்டி நீங்க வீட்ல இருக்கீங்களா, நான் தருண்ணாக் கூடப் போய் அண்ணியப் பார்த்துட்டு வர்றேன்…"

காலையிலேயே ஆரம்பித்திருந்தவளின்
புலம்பலுக்கு முடிவாக அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்…

"நதிம்மா… பாபிக்கு இன்னும் பாப்பா மேட்டர் தெரிஞ்சிருக்காது… கண் முழிச்சிட்டாக் கூட உடனே சொல்லி இருக்க மாட்டாங்க…"

வண்டியை விட்டு இறங்கி நடந்து வரும் போது சொல்ல

"புரியுதுண்ணா…
நான் ஒண்ணும் கேட்க மாட்டேன்…
ஆனா மனசு தாங்குதே இல்லயே…"

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு…

"மனசு ரொம்ப பாரமா இருக்கு…
பாப்பா இப்பிடி ஆகாம நம்ம கிட்ட வந்திருக்கலாம்…"

இரவு தருண் வாணியம்மாவுடன் வீட்டுக்குச் சென்றதில் இருந்து இதோ இப்போது வரை
நொடிக்கொரு முறை இதே புலம்பலைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறான்…

"என்ன பண்ண முடியும்…??
கடவுள் நமக்கு அந்த பாப்பா வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டார் போல…"

சாரு இருந்த அறைக்கு வெளியே அவளை அமர வைத்தவன்…

"ப்ளீஸ் அழுகைய கண்ட்ரோல் பண்ணு…
உள்ள போயும் அழாத…"

"சரி நான் அழுகல்ல…"

துடைக்கத் துடைக்க வழிந்தது கண்ணீர்…

"வா ரெஸ்ட் ரூம் போய் ஃபேஸ் வாஷ் பண்ணு அப்புறம் உள்ள போகலாம்"

"என் ரூம்ல வாஷ் பண்ணட்டும் தருண் கூட்டிட்டு வாங்க…"

இவர்களை பார்த்துக் கொண்டே வந்த தீரனுக்கு…
தருண் சொன்னது கேட்க அவளைப் பார்த்துக் கொண்டு சொல்லி இருந்தான்…

"தேங்க் யூ டாக்டர்…
வா நதி…"

தீரனின் பின்னால் சென்றவர்கள் உள் நுழைய…
"அங்க போய் வாஷ் பண்ணுங்க…"

அவன் கை நீட்டிய பக்கம் அவள் போக…

"உட்காருங்க தருண்…"

"தாங்க்ஸ் டாக்டர்…"

"நைட் ஃபுல்லா அழுதுட்டே இருந்தாங்க போல…"

அமர்ந்தவனிடம் கேள்வி எழுப்ப…

"ஆமா டாக்டர்…
விட்டா நைட்டே இங்க வந்துருப்பா…
இப்போ கூட புலம்பிக்கிட்டுத் தான் இருந்தா…"

சொல்லும் போது வந்தவள்…

"தேங்க் யூ டாக்டர்…
தருண்ணா போகலாமா…??"

அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து…

"அழுது உங்க அண்ணிய டென்ஷன் பண்ணா அவங்க உடம்பு…"

"இல்ல… இல்ல… அழுக மாட்டேன் டாக்டர்…"

இடை வெட்டியவள் மென்னகையுடன் முடிக்க…

"பொய் தான் பட் இந்த ஸ்மைல் நல்லா இருக்கு இப்பிடியே போய் உங்க அண்ணியப் பாருங்க…"

அதிர்ந்து விழித்தவள்…
'சமாளிக்கத் தான் சிரிச்சேன்னு எப்பிடி கண்டு புடிச்சார்…'

யோசித்தபடி வெளியேறினாள்…

டாக்டர் தீரனின் முகத்தில் நிறைவான ஒரு புன்னகை…

அறைக்குள் நுழைந்தவர்கள்…
சாருவை நெருங்க அவள் தூங்கி இருப்பது தெரிய…
கரணைக் காணாது…

"அம்மா, அண்ணா எங்க…??"

"டாக்டர் சீதா வந்துட்டாங்களான்னு பார்க்க போய் இருக்கான்…"

"அவங்க வர இன்னும் வன் ஹவர் ஆகுமாம் தீரன் சொன்னார்…
பாபி இன்னும் கண் முழிக்கவே இல்லையா…??"

"முழிச்சிட்டு முழிச்சிட்டு தூங்குறா…
இன்னும் சரியான தெளிவோ, முழிப்போ இல்ல…
கண்ண முழிச்சி குழந்தன்னு ஏதாவது கேட்டான்னா என்ன பண்றதுன்னு தான் தெரில…"

சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கப்பட…
உள்ளே வந்த கரணிடம் ஓடி அவனை அணைத்துக் கொண்டவள்…

" அண்ணா… பாப்பா…"

"நதி…
மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாத…
இப்போ டாக்டர் என்ன சொன்னார் உங்கிட்ட…??"

அவனது குரலில் அடங்கியவள் அமர்ந்து சாருவைக் பார்க்க…

சாரு கண் விழித்திருந்தாள்…

"அண்ணி…"
"சாரு…"
"பாபி…"
"சாரும்மா…"

குரல்களுக்கு பதிலாக கஷ்டப்பட்டு சிறு புன்னகை…

"என்ன பண்ணுதுடா…??"
மறுப்பாக தலையாட்டியவள்…

"குழந்தைக்கு என்னாச்சு..??"

கரணையே பார்த்திருந்தவள்…
அவளருகில் சென்று கைகளைப் பிடித்தவனிடம் கேட்க…

பதில் சொல்ல முடியாது. அவன் முழிக்கவே…

"அத்த…"
எட்டி அவரைப் பார்க்க

"என்னடா…"

"குழந்தைக்கு...என்னவோ ஆகி…ஆகியிருக்கு…
என்னன்னு சொல்லுங்க…"

"இல்லடா… ஒண்ணும் இல்ல…"

"இல்ல எனக்கு… புரியுது…
உடம்புல என்னவோ வித்தியாசம்…
புஜ்ஜீ…."

அடுத்து அவனை அழைக்கவும்…
கதவு தட்டும் ஒலி கேட்டது…

"யெஸ்…"
தருண் குரல் கொடுக்க கதவு திறந்து உள்ளே வந்தவர்…

"குட் மார்னிங்…"

"குட் மார்னிங் டாக்டர்…"

"ஹேய் நதியா நீயும் இங்க தான் இருக்கியா…??"

"ஆமா ஆண்டீ…"

பேசிக்கொண்டே சாரு அருகில் சென்று மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க…

குறிப்பறிந்து எல்லோரும் வெளியேறினர்…

"நீங்க இருங்க கரண்…"

"எப்பிடி இருக்க சாரு…"

"ரொம்ப டயர்டா இருக்கு டாக்டர்…
என் குழந்தைக்கு என்னவோ ஆகியிருக்குனு தோணுது…
ப்ளீஸ் நீங்களாச்சும் சொல்லுங்க டாக்டர்…"

அவளையே விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்த கரணைத் திரும்பிப் பார்த்தவர்…
மறுபடியும் அவளிடம் திரும்பி…

"லாஸ்ட் வீக் நாம ஒரு ஸ்கேன் பண்ணோம்ல…??"

ஆமென்று தலையசைக்க…

"அப்போவே எனக்கு ஒரு டவுட்… பேபி சரியான ஃபார்ம்ல இருக்கல்ல எண்ட் ஹார்ட் கூட வீக்கா தான் இருந்தது…
பேபி மிஸ்கறேஜ் ஆக சான்ஸ் இருந்தது
அத சொன்னா நீங்க ரெண்டு பேரும் டென்ஷன் ஆகுவீங்க…
அதான் மறுபடியும் ஒரு ஸ்கேன் பண்ண வர சொன்னேன்…
இப்போ அது தான் ஆகி இருக்கு…"

"இப்போ இல்லைன்னாலும் நெக்ஸ்ட் டூ வீக்ஸ்க்குள்ள இதான் நடந்திருக்கும்…"

"ரீஸன் என்ன டாக்டர்…
ஏன் இப்பிடி…??"

அதிர்ச்சி மாறாமல் வெறிக்கும் அவளை அணைத்துக் கொண்டு கரண் கேட்க

"நெறைய ரீஸன் இருக்கு…
அது இப்போ தேவையில்லை…
இப்போ இவங்க பேக் டு நார்மல் வரணும்…
அது தான் முக்கியம்…
நெக்ஸ்ட் பேபி சிக்ஸ் மந்த்துக்கு அப்புறம் எஸ்க்பெக்ட் பண்ணலாம் அதுக்கு
பிசிக்கலி எண்ட் மென்டலி ஸ்ட்ராங்கா இருக்கணும்ல…"

திரும்பி அதிர்ச்சிப் பார்வை பார்த்தவளை கண்டு புன்னகையுடன்

"யெஸ்…
இது இல்லைன்னா என்ன ப்யூசர்ல பேபீஸ் நிறைய பெத்துக்கலாம்…
பட் அதுக்கு நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும்…
நான் டேப்லட்ஸ் எழுதித் தர்றேன் அப்புறமா என் ரூம்ல வந்து பாருங்க…"

கரணைக் குறிப்பாக ஒரு பார்வை பார்த்து வெளியேறினார்…

அவள் கண்ணீரின் ஈரம் அவன் கை பட…

"ப்ளீஸ் அழாத சாரு…"

"ஏன் உங்களுக்கு கஷ்டமா இல்லயா…??"

"ஏன் இல்ல… கஷ்டம் தான் ஏமாத்தம் தான்… இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம கைல இருக்கும்னு நெனச்ச பொக்கிஷம்...இப்போ இல்லன்னு நெனச்சா கவலையா தான் இருக்கு…
ஆனா எல்லாத்துக்கும் மேல நீ எனக்கு முக்கியம்டீ…
உனக்கு ஏதாவதுன்னா என்னால இப்பிடி இருக்க முடியுமா…
நீ கண் முழிச்சு ஒரு வார்த்த பேசும் வர…
எனக்கு எப்பிடி சொல்லனு தெரில…
பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சி…

நீ ஒரு வார்த்த பேசிட்டா போதும்ன்னு தான் தோணிச்சி…"

"ஆனா…. நம்ம…"

"வேணாம்டா அதையே நெனச்சா கஷ்டம் தான்…
நீ தானே சொன்ன…??"

நிறுத்தி அவள் முகம் பார்த்தவன்…

"அந்தக் குழந்தை தான் உன் வாழ்க்கையோட பிடிமானம், பற்றுக்கோல் எல்லாம்ன்னு…"

புரியாத பார்வை அவளிடம்…
அவளது பார்வையை உள்வாங்க முடியாது சுவற்றை வெறித்தவன்…

குரலை செருமிக் கொண்டு தொடர்ந்தான்…

"அப்பிடி உனக்கு பிடிமானமா இருக்கப் போற குழந்தை…
முழுக்க முழுக்க நம்ம காதலால மட்டும் உருவானதா இருக்கட்டும்…

எங்கிட்ட நீ காதல உணராத போது உருவான குழந்தை நமக்கு வேணாம்னு கடவுளே முடிவு பண்ணிட்டார் போல"

சொன்னவனுக்கு…. இத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை அவனையும் மீறி வெளி வந்திருக்க…
அவளை அணைத்துக் கொண்டு அழுது தீர்க்க…

செய்வதறியாது திகைத்து இருந்தவளுக்கு அவனை ஆறுதல் படுத்த வேண்டியிருந்தது….

"ப்ளீஸ் அழாதீங்க…

போதும் நீங்க இப்பிடி அழுகுறத என்னால பார்க்க் கூட முடியல…

ப்ளீஸ் வேணாமே…

ப்ளீஸ் அத்தான்…"

சட்டென்று அவளை விட்டு நீங்கியவன்…

"என்னய அத்தான்னு சொல்ல உனக்கு இவ்ளோ நாள் எடுத்திருக்கு…
அவ்ளோ கோவம் என் மேல அப்பிடி தானே…"
அவளை ஆழ்ந்து பார்த்து கேட்க

"கோவம்லாம் இல்ல… அப்பிடி கூப்பிட தோணல்ல…"
மெலிதாகச் சிரித்தவாறே சொல்ல…

"கொழுப்புடீ உனக்கு…"

ரணம் மறையாவிடினும் மறைத்துக் கொண்டு வார்த்தையாடினர்…

"சொல்லுங்கம்மா…"
அலைபேசி ஒலிக்க பதில் கொடுத்தார்…

"கமலா… இங்க
ரேணுகா வந்திருக்காம்மா…"

"ஓஹ்… அவக்கிட்ட ஃபோன் குடுங்க…"

"அண்ணி…"

"ரேணுகா… நீ எப்பிடி வந்த…??"

"டேக்ஸில தான் அண்ணி…
தெரிஞ்ச பையன் தான் ட்ரைவர்…"

"அப்போ அதுலயே ஹாஸ்பிடல் வந்துடு
ரூம் நம்பர் இருநூத்தி நாலு…
ரிசப்ஷன்ல கேட்டுட்டு வா…"

"சரி அண்ணி…"

"என்னவாம்…??"
கடுப்புடன் கேட்க

"ஏன்டா… இப்பிடி காயுற…
வர்றேன்னு சொன்னா…"

"பொண்ணு இந்த கண்டிஷன்ல இருக்கா மகாராணி இப்போ தான் வர்றாங்க…
எனக்கு வர்ற கோவத்துக்கு…"

"ஏன் தருண்ணா…
அத்த இப்பிடி பண்றாங்க…??"

"அவங்களுக்கு புருஷனும் மகனும் தான் எல்லாம்…"

அவன் பேச்சுத் தடைப்பட்டது கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த கரணைப் பார்த்து…

"பாபி…??"
கேள்வியாக நிறுத்த

"தூங்குறாடா…

டாக்டர் சீதா வர சொன்னாங்க…
நான் பார்த்துட்டு வர்றேன்…"

"இரு நானும் வர்றேன்…
அம்மா பார்த்துக்கங்க…"

தருண் வெளியே இருக்க

உள்ளே போன கரணிடம்

"அவங்க கொஞ்ச நாளைக்கு
டென்ஷனா ரெஸ்ட்லெஸ்ஸா தான் இருப்பாங்க…
கொஞ்சம் கேர் பண்ணி பார்த்துக்கணும்…
தனிய இருந்தா யோசிச்சுட்டே இருப்பாங்க சோ எப்பவும் யாராவது கூட இருக்க மாதிரி பார்த்துக்கங்க…
வேற…
பெரிசா சொல்ற அளவு பாடி வீக்கா எல்லாம் இல்ல…
மைண்ட் தான் வீக்… அத கொஞ்சம் கவனிக்கணும்…
அவங்கள கேரிங்கா பார்த்துக்க நான் சொல்லத் தேவையேயில்லை…
எல்லாரும் எப்பிடி தாங்குறீங்கன்னு நேத்து பார்த்தேனே…
ஷீ வில் பீ நார்மல் சூன்…"

தன் முன் இருந்தவனிடம்…
சொன்னவர்…
மருந்துத் துண்டை நீட்டி…

"இதெல்லாம் விட்டமின் டேப்லட்ஸ் தான் த்ரீ மந்த்ஸ்க்கு கன்டினியூவா குடுங்க …
இ‌ன்னு‌ம் டூ வீக்ஸ்ல கூட்டிட்டு வாங்க…
ஒரு செக் அப் இருக்கு…
இடைல ஏதும் தேவைன்னா கூட்டிட்டு வாங்க…"

"தேங்க் யூ சோ மச் டாக்டர்…
ஹாஸ்பிடல் ஃபோர்மாலிடீஸ் இன்னும் முடிக்கல்ல…"

கேள்வியுடன் அவரை பார்க்க

"ரிசப்ஷன்ல போய் கேளுங்க…
என் பேஷன்ட்ன்னு சாரு நேம் சொல்லுங்க…"

புன்னகை முகமாக சொன்னவரிடம் மீண்டும் நன்றி கூறி விடை பெற்றான்…

"என்ன சொன்னாங்க டாக்டர்…??"

கேட்ட தருணிடம் எல்லாம் சொன்னவன் நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்வாங்க…

"நல்ல நேரம் இன்னைக்கு சண்டே இல்லைன்னா ஆபீஸ்க்கு ஓடணும் இப்போ…
நேத்து ரமேஷ பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்…
நைட் இங்கயிருந்து போய் தான் கால் பண்ணி பேசினேன்…
அவன் இருந்ததனால் ஓகே…"

பேசிக்கொண்டே ரிசப்ஷன் வந்தவர்கள் வேலையை முடித்து அறைக்குள் நுழைய…

அங்கு ரேணுகா சாருவின் அருகில்…

"வாங்க அத்த…
சொன்னவன்
இன்னும் எந்திரிக்கல்லையா…??"
தாயிடம் கேள்வி எழுப்ப…

"இல்ல… தருண் எங்க…??"

"கேன்டின் போனான்மா…
நீங்களும் போய் எதாவது குடிச்சிட்டு வாங்க அத்த…
அம்மா கூட்டிட்டு போங்க"

"இல்ல கரண் நான் வீட்ல குடிச்சிட்டு தான் வந்தேன்…"

அப்போ நதிய கூட்டிட்டு போங்க தருண் பார்த்துட்டு இருப்பான்…"

"இவ பொறந்து இப்பிடிக் கஷ்டப்படுறதுக்கு பொறக்காமலே இருந்திருக்கலாம்…"

சிறிது நேரத்தில்
அறைக்குள் நுழைந்த தருணின் காதில் அட்சர சுத்தமாக விழுந்த வார்த்தைகள் அவனை கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது…

"அத்த… தன்னை மீறி கத்தியவன்
என்ன பேச்சு பேசுறீங்க…??
அவன்னா மட்டும் ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது…??
சின்ன வயசுல இருந்தே அவள தள்ளித் தானே வெச்சிருக்கீங்க…??
அவளும் ஒதுங்கியே தானே இருக்கா… இருந்தும் ஏன் இப்பிடி…??
ச்சே…"

பேயாட்டம் ஆடித் தீர்க்கவும் தான்
தான் சொன்னது மண்டைக்கு
உறைத்தது ரேணுகாவிற்கு

"இல்லப்பா…
அவளுக்குத் தானே கஷ்டம் அதான் …"
தொண்டையில் சிக்கிக் கொண்டன வார்த்தைகள்.

"நீங்க அப்பிடி சொல்லியே இருக்கக் கூடாது அத்த…
அவ பாவம்…
அவள நாங்க பார்த்துக்குறோம்…
நீங்க கிளம்புங்க…"

ரேணுகாவின் வார்த்தைகளை கேட்டு கல்லாக சமைந்து நின்ற கரண்…
தருணின் வார்த்தைகளில் நடப்புக்கு வந்தான்…

"நீ கொஞ்சம் சும்மா இருடா…"

என்ன பேச்சு பேசறாங்க
சும்மா இருக்கா சொல்ற…
என்னால முடியாது…"

"நீ கத்துற கத்துக்கு அவ முழிச்சிக்க போறா…"
சாருவைக் காட்டி சொல்ல

"அவ முழிச்சதும் பார்த்துட்டு கிளம்புங்க…
இப்பிடி ஏதாவது பேசி வெச்சிடாதீங்க…"

சாருவைத் திரும்பிப் பார்த்து சொன்னவன்…
கதவைத் திறந்து வெளியேற…

"சாரிப்பா கரண்…
நான் என்னவோ ஒரு நெனப்புல…"

"விடுங்க அத்த பேசும் போது வார்த்தைகளோட பாரதூரம் புரிஞ்சி பேசணும்…
பெரியவங்க நீங்க…
நாங்க சொல்லத் தேவையில்லை…"

வெறுமையாக வந்தது இடை வெட்டியவன் குரல்…

கடந்து போனது மௌனமே ஆட்சி செய்த சில நிமிடங்கள்…

"அம்மா…"
கண் விழித்தவள் அழைக்க…

"சாரு எப்பிடி இருக்கு இப்போ…??"

"இப்போ கொஞ்சம் பரவால்லம்மா…

அப்பா… அண்ணா… யாருமே வரல்லையாம்மா…??"

அறையை கண்களால் துழாவிய படி கேட்டிருந்தாள்…

அந்தக் குரலின் இருந்த எதோ ஒரு உணர்வு
கரணை அவள் முகத்தை இமை வெட்டாமல் பார்க்க வைத்தது…

"இல்ல சாரு…
ரகுவுக்கு உடம்பு சரியில்லை…
மூனு நாளா காச்சல், தலைவலின்னு இருக்கான்…
உங்க அப்பா…
ஒரு வேலையா வெளிய போய்ட்டு நைட் தான் வந்தாங்க…
அதான் நான் தனியா வந்தேன்…"

"ஓஹ்… சரிம்மா…"
ஓய்ந்து வந்தது குரல்…

"நான் வெளிய இருக்கேன் நீங்க பேசிட்டு இருங்க…"

சொன்னவன் வெளியே போய்…
யோசனையாக அமர்ந்து கொண்டான்…

"என்ன கரண்…??"

"ஒண்ணும் இல்லம்மா…"

"இல்ல எதோ யோசிச்சுட்டே இருக்க…
இந்தா இவனும் அப்பிடி தான் இருக்கான்…"

தருணை சுட்டியவர்…
"எதுவும் ப்ராப்ளமா…??"

"இல்லம்மா…
நீங்க இப்போ வீட்டுக்கு போறீங்களா…??"

"ம்ம்… போகணும்ப்பா…
அப்பா என்ன பண்றாங்கன்னு தெரில…
நதியும் தருணம் சாரு கூட இருக்கட்டும்…
நீயும் வா…
குளிச்சி, சாப்பிட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்…"

"அம்மா….
அப்பாக்கு இப்போ பேச்சு வந்துருச்சி…"

சட்டென்று ஞாபகம் வந்ததை சொல்லி விட…

"என்னடி சொல்ற…"

"ஆமா…
நேற்று அண்ணி மயங்கி விழவும் கத்தி இருக்கார்…"

"எனக்கு அப்பா கத்தினது கேட்டுச்சு…"
கரண் சொல்ல…

"ஆமா… என் கிட்ட கூட பேசினாங்க…
ஆனா இருந்த டென்ஷன்ல அத நான் கவனிக்கல்ல…
இப்போ தான்ம்மா யோசன வருது…
நைட் வீட்டுக்கு போனப்போ கூட நான் அப்பா கூட பேசல்ல…"

"தருண்ணா நீ ஆபிஸ் கால் பேசிட்டு இருக்கும் போதே அப்பா தூங்கிட்டாங்க…"

"டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிடு தருண்…
எதுக்கும் அப்பாவ ஒரு தரம் கூட்டிட்டு வரலாம்…"

"ம்ம்… ஓகே…
ஈவினிங் நீ வரும் போது கூட்டிட்டு வா நான் அப்பாயின்மென்ட் வாங்கி வைக்கிறேன்…"


"சாரு…"

"வாங்க அத்த…"

"நான் வீட்டுக்கு போய்ட்டு ஈவினிங் வர்றேன்…
பாட்டி சமைக்கிறாங்க போல…
நான் நேற்று இங்க வந்தது மாமா என்ன பண்றாங்களோ தெரில…
இங்க உங்கூட நதி இருப்பா…"

"சரி அத்த…
நீங்க போங்க…"

"அம்மா நீங்க…??"
கேள்வியுடன் பார்க்க…

"நானும் கிளம்புறேன் சாரு…
வீட்ல உன் அண்ணி பாப்பாவோட என்ன பண்றாளோ..??"

"சரிம்மா…
நீங்க போங்க…"

அவள் அழுகையை அடக்கிக் கொண்டது உள்ளே வந்த கரணுக்கு புரிந்து விட…

"அம்மா… நீங்க கெளம்புங்க நான் இருக்கேன்…"
அவளருகில் வந்தவன் கூற…

"இல்ல கரண்…
நீயும் வா…"

"நீங்க போங்க…
ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் வாங்க
நான் இருப்பேன்…"

கமலா ரேணுகாவுடன் வெளியேற…

"நீ ஒண்ணும் யோசிக்காம இருப்பன்னா
நான் போறேன்…
இல்லைன்னா சொல்லு நானும் உன்கூட இருக்கேன்…"

"இல்ல நான் எதுவும் யோசிக்கறதா இல்ல…
தூக்கம் தான் வருது தூங்கப் போறேன்…"

அவள் மெல்லிய புன்னகையுடன் கூற…

"குட்… நல்லா தூங்கு…
ஈவினிங் வர்றேன்…"

நெற்றி முட்டி சொன்னவன்…

கிளம்பியிருந்தான்…
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 14

''மற்றவர் போல் உற்றவன் நானும்
உன்னை வருத்தியிருக்க;
யாரும் தராதளவு நேசத்தை உன் கையில் சேர்த்து;
காதலை புதுப்பிக்கிறேன் உன்னவனாக…
உனக்கே உரியவனாக''


பரபரப்பு அடங்கிய இரவுப் பொழுது…
மனது பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தது சாருவின் அருகே அமர்ந்திருந்த கரணுக்கு…

அன்று காலையில் ரேணுகா வந்ததில் இருந்து நடந்தது எல்லாம் யோசித்துப் பார்த்தவனின் மூளை

''சின்ன வயசுல இருந்தே அவள தள்ளித் தானே வெச்சிருக்கீங்க…??
அவளும் ஒதுங்கியே தானே இருக்கா… இருந்தும் ஏன் இப்பிடி…??''

என்ற தருணின் வார்த்தைகளிலே நின்று விட்டது…

'அவன் ஏன் அப்பிடி சொன்னான்…
அவன் சும்மா எல்லாம் அப்பிடி சொல்ல மாட்டானே…
அத்த கூட அதுக்கு ஒண்ணுமே சொல்லல்ல…
அப்போ அது உண்மை தானே…
அவங்கிட்டயே கேட்டுடணும்…'

மனதில் நினைத்துக் கொண்டு…
சாருவைப் பார்த்தவன்…

''அத்த உன்கூட இருக்கணும்னு பீல் பண்ணுன தானே…அதனால தான் அவங்க போறேன்னு சொன்னதும் உன் முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு..
ஆனா நீ அத அவங்க கிட்ட சொல்லல்ல…
ஏன் எங்கிட்ட கூட சொல்லல…
உன் புஜ்ஜி கிட்டன்னா சொல்லியிருப்ப தானே…
இ‌ன்னு‌ம் என்னல்லாம் உன் மனசுல வெச்சி மருகிக்கிட்டு இருக்க…

கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா..
உன் கிட்ட ஏதாவது கேட்டா பெரிய பெரிய இடியா என் தலைல விழும்…''


உறங்கிக் கொண்டிருந்தவளின் தலையை வருடியவாறே மனதில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவன் சிந்தை கலைந்தது…

கதவு தட்டப்பட்டு
''அண்ணா'' என்று வந்த குரலில்…

''உள்ள வா தருண்…''

''இன்னுமா தூங்குறா இவ…?''

''ஹ்ம்ம்…
டயர்ட்னஸ் எண்ட் குடிக்கிற டேப்லட்ஸ் எல்லாம் சேர்ந்து தூக்கம் தான் வரும்னு டாக்டர் சொன்னாங்க…
இப்போ தான் வந்து பேசிட்டு போறாங்க…
அப்பா என்ன பண்றாங்க…??''

''இருக்காங்க…
நான் வரும் போது சாப்பிடறாங்க…
டேப்லட்ஸ் எல்லாம் நதி குடுத்துடுவா…

இட்லி இருக்கு நீ சாப்பிடுண்ணா…''

''நீ??''

''நான் சாப்ட்டு தான் வந்தேன்…
பாபிக்கு சூப் இருக்கு எழுந்தா குடுக்கலாம்…''

தொண்டையில் இறங்காத உணவை கஷ்டப்பட்டு இறக்கிவிட்டு…
கை கழுவி வந்தவன்…
தருண் அருகில் அமர்ந்து….

''அத்தைக் கிட்ட ஏன் அப்பிடி பேசின தருண்….??"

"வேற எப்பிடி பேசணும்ன்னு சொல்றண்ணா…?"

கடுகடுவென வந்தது குரல்

"பாபிக்கு இப்படின்னு சொல்லியும் வராம இருந்தாங்கன்னு கடுப்புல தான் இருந்தேன்…
அதோடு அவங்க பேசினதும் சேர்ந்து கோவம் வந்துருச்சி…
அத்த, மாமான்னு பார்க்க வேண்டியிருக்கு இல்லன்னா நாக்க புடுங்கிக்கிற மாதிரி நல்லா கேட்டு வைப்பேன்…"

"நீ இவ்ளோ கோபப்படுறன்னா அதுல என்னவோ இருக்கு…"
யோசனையாக சொல்ல

ஆமென்று தலையசைத்து பேச ஆரம்பித்தான்…

"மாமாவோட அம்மாவுக்கு சுகமில்லாமல் இருந்தப்ப அவங்கள கவனிச்சுக்க ஆள் இல்லைன்னு கல்யாணம் பண்ண பொண்ணு தேடி இருக்கார்…
அது தெரிஞ்சி நம்ம அப்பா தான் அத்தைய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க…
மாமாவுக்கு அந்த நன்றி விசுவாசம் தான் இன்னைக்கு வர நம்ம அப்பா மேல இருக்கு…

அத்தையும் அந்தப் பாட்டி இறக்கும் வர அவங்கள நல்லா தான் கவனிச்சுட்டு இருந்திருக்காங்க…


ரகு அத்தான் பொறந்து அஞ்சு வருஷம் கழிச்சு அத்த மறுபடி ப்ரக்னென்ட் ஆகி இருக்காங்க…
அது மாமாவுக்கு பிடிக்காம அபார்ஷன் பண்றதுக்கு நாட்டு மருந்தெல்லாம் குடிச்சி இருக்காங்க…
அதையெல்லாம் தட்டித் தூக்கி இவ பொறந்துட்டா…

ஏன்ணா…??
வேணாம்னா அவங்க தானே கவனமா இருந்திருக்கணும்… அதெல்லாம் இல்லாம இவள அப்போவே கொல பண்ண பார்த்து இருக்காங்களே…"

கண்ணீர் எட்டிப்பார்த்தது அவன் கண்களில்…

"பொறந்தது பொண்ணுன்னு வேற மாமாவுக்கு இவள சுத்தமா பிடிக்கல்ல… மாமாவோட அப்பா ஆசப்பட்டு சாரதான்னு அந்த பாட்டி பெயர இவளுக்கு வெச்சிருக்காங்க…

இவளுக்கு ஆறு மாசம் இருக்குமாம் அந்த தாத்தா இறக்கும் போது…
அதுவும் இவ பொறந்த நேரம்ன்னு சொல்லி மாமா கரிச்சி கொட்டுவாராம்
இவ வளர வளர… இவளோட சுட்டிக் தனம் எல்லாம் ரசிக்காம…
அடிக்க ஆரம்பிச்சுட்டார்…
ரகு அத்தான கூட இவளோட நெருங்கிப் பழகவோ சேர்ந்து விளையாடவோ விட மாட்டார்…

அவ அண்ணனுக்கிட்ட உரிமையா எதுவும் கேட்டதே இல்ல…

ஆனா மாமா எதிர்பார்க்காதது இவ படிப்பு…
ரகு அத்தான விட இவ படிப்புல கெட்டி…
அவருக்கு படிப்பு அவ்வளவா வராது…
தன் மகன விட பொண்ணு படிச்சு நல்லா வந்துடுவான்னு ஒரு ஈகோ அவருக்கு….
பொண்ணுங்களுக்கு படிப்பு தேவையில்லன்னு சொல்லி இவள மேல படிக்க விடாம டென்த்தோட வீட்டுல தடுத்து வெச்சது தான் இவளுக்கு செஞ்ச பெரிய கொடுமண்ணா…

இல்லைனா இவ எங்கேயோ போய் இருப்பா…
நானே அவ கிட்ட டவுட் கேட்டு கிளியர் பண்ணிப்பேன்…

படிக்கலன்னு சொல்லி மாமா ஃபேமிலில, ஏன் இவ ப்ரண்ட்ஸ் கூட கேலி கிண்டல் பண்ணாங்க…நம்ம அப்பா கூட இவள கொஞ்சம் தள்ளித் தானே வெச்சிருப்பார்…
அதுலெல்லாம் இருந்து தப்பிக்க கொஞ்சம் கொஞ்சமா எல்லாரையும் விட்டு விழகினா…

அத்தை கூட இவள ஒழுங்கா பார்த்துக்க மாட்டாங்க…
அவங்களுக்கும் ரகு அத்தான் மேல தான் பாசம்…
இவகிட்ட அவங்க பாசமா பேசி நான் பார்த்ததே இல்ல…
திட்டும் அடியும் தான்…
அது புரியவும் இவளை தள்ளி நின்னுட்டா…"

"இதெல்லாம் உனக்கு எப்பிடி…??"
கேள்வியாய் நிறுத்த…

"இவள ஒதுக்கி வைக்கறது புரியவும்
அத்தைக்கிட்ட நானே கேட்டேன்…
அவங்க நாசுக்கா பட்டும் படாமலும் சொன்னதுல தெரிஞ்சிகிட்டேன்…"


"அதான் நீ இவ மேல இவ்ளோ பாசமா இருக்கியா…??"
ஆதுரமாக கரண் கேட்க

இல்லையென்றவன்…
"இதெல்லாம் எனக்கு பதினாறு வயசுல தான் தெரியும் ஆனா…
இந்த புஜ்ஜி சின்ன வயசுல இருந்தே பாபி மேல பாசமா தான் இருக்கேன்…"

அவள் மீது தருணின் பார்வை நிலைத்திருந்தது…

"இடைல காதல்ன்னு கொஞ்சம் நாள் சந்தோஷமா இருந்தா… ஆனா அதுவும் அவளுக்கு நிலைக்கல்ல…

நீ இவ கிட்ட கேட்டப்போ, உன்னோட தகுதிக்கு தான் பொருத்தம் இல்லன்னு ஃபர்ஸ்ட் இவ தயங்கினா…
நான் தான் கன்வின்ஸ் பண்ணேன்…
என்னோட அண்ணா அதெல்லாம் பார்க்க மாட்டாங்கன்னு நம்பினேன்…
ஆனா…
அத முழுசா பொய்யாக்கி இவள ஒதுக்கன…
இவளுக்கான காதல உன் கண்ணுல பார்த்திருக்கேன்…
சோ… அத வெச்சு உங்கிட்ட பேசலாம்ன்னு நெனச்சேன் வேணாம்ன்னு சொல்லிட்டா…
என்னால கூட உணர முடிஞ்ச காதல எப்பிடி சலனம்ன்னு உன்னால சொல்ல முடிஞ்சது…??
அவ கீழ விழுந்திருக்கான்னு தெரிஞ்சதும்,நீ கை பிடிச்சி தூக்கி விட்டிருக்கணும்… ஆனா அங்கயே விட்டிட்டு போய்ட்ட…

நான் செஞ்சத நீ செய்து அவளுக்கு சப்போர்ட்டா இருந்திருக்கணும்…
ஆனா நீ… அந்த இடத்தில பொய்யாகிட்ட…"

ஆதங்கமாக பேசியவன் அவசரமாக கரண் முகம் பார்க்க…

அடிபட்ட பார்வை கரணிடம்…

"சாரிண்ணா…
நான் உன்ன ஹர்ட் பண்ணனும்னு சொல்லல்ல…
ஒரு ப்ளோல வந்துருச்சு…"

என்ன பதில் சொல்வதெனத் தெரியாது மொழி மறந்து முழித்துக் கொண்டிருந்தவன்…

"பரவால்ல விடுடா…
அது உண்ம தானே…
என் பங்குக்கு நானும் இவளுக்கு கஷ்டம் கொடுத்து இருக்கேன்…" சொன்னவன்…

'வர இருந்த புலி இன்னைக்கு தான் வெளிய வந்து இருக்கு…'
மனதோடு நினைத்துக் கொண்டான்

மீண்டும் தொடர்ந்தான் பாபியின் புஜ்ஜி…

"ஆனா இவ தனக்கான தனி உலகத்த செதுக்கிக்கிட்டா…
அது ரொம்பவே பெருசு…
வேற யாரும் உள்ள வர முடியாது…
அந்த உலகத்துல திருப்தியா, சந்தோஷமா உலா வர்றா…
பணமும் சேர்ந்து வருது…
ஆனா அவ ஏர்ண் பண்றது மாமாவுக்கு தெரியாது… தெரியும்ன்னா அதக் கூட செய்ய விடாம தடுப்பார் இல்லைன்னா பணத்த முழுக்க அவர் கைல எடுத்துப்பார்…
அதனால பணம் எல்லாம் என் அக்கவுண்ட்ல தான் வெச்சிருந்தேன்…
உங்க கல்யாணம் முடிஞ்சு அடுத்த வாரம் தான் அவ பெயருக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணினோம்…

இப்போ கூட அவள ஏதாவது படிக்க சொல்றேன்…
முடியாதுன்னு…

குழந்தைய வளர்க்கவும், நம்ம குடும்பத்த
பார்த்துக்கவும் நேரம் சரியா இருக்கும்
நீயாச்சும் மாமா ஆசப்பட்டத போல…
நல்லா படிச்ச, ஜாப் செய்ற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க புஜ்ஜி…உன் பசங்களையும் சேர்த்து நான் வளர்த்து தர்றேன்னு சொல்றா…

சின்ன வயசுல இருந்து மனசளவுல ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கா…
இப்போ கொஞ்ச நாளா தான் …
உன்கூட நல்ல ஒரு ஒட்டுதல் இருக்கு…
அவ ரொம்ப எதிர்பார்த்ததும் ஆசப்பட்டதும்…
பாப்பாவத் தான் ஆனா…
அதுவும் இப்போ இல்ல…
கடவுள் ஏன் தான் இவள இந்தப் பாடு படுத்தணும்…

அவளுக்கு அத்த, மாமா செஞ்ச நல்லது ஒண்ணு…
எங்க ப்ரண்ட் ஷிப்க்கு இடைல வராம இருந்தது தான்…"

கரண், இவன் முகம் பார்க்க…

"என்ன பார்க்குற…??
உனக்கு இவள கல்யாணம் பண்ணி வச்சது கூட…
நம்ம அப்பா மேல மாமாவுக்கு இருந்த நன்றி விசுவாசத்துனால தான்… அதெல்லாம் நல்லதுங்குற கேட்டகரில வராது…
இவ கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம…
எங்கிட்ட கூட பேச விடாம… அவசர அவசரமா கல்யாணத்த நடத்தி வெச்சுட்டாங்க…

இப்போ நீங்க ரெண்டு பேரும் நல்லா தான் இருக்கீங்க…
ஆனா யோசிச்சு பாருண்ணா…
வேணாம்னு சொன்ன நீ இவள வெறுத்து இருந்தன்னா…
இவ லைப் நரகம் தானே…

அத யோசிச்சி அத்தைகிட்ட போய் கேட்டேன்…
ஏன் அப்பிடி பண்ணாங்கன்னு…"

"நீங்கல்லாம் அவள நல்லா பார்த்துப்பீங்க…
அவளுக்கு ஒண்ணுன்னா நானே வந்து நிக்கணும்னு இல்ல…
அதெல்லாம் யோசிச்சி பார்த்தா எனக்கும் மாமா செய்றது சரிதான்னு தோணிச்சிப்பா…" ன்னு எங்கிட்டயே சொல்றாங்க…

"இப்போ கூட பாரு இவ ஹாஸ்பிடல்ல இருக்கான்னு சொல்லியும் ஆடி அசைஞ்சு அடுத்த நாள் தானே வந்தாங்க…
அதுவும் மாமாவோ அத்தானோ கூட வரல்ல…

நம்ம நதிக்கு எதாவதுன்னா நாம எப்பிடித் துடிப்போம் ஆனா அவங்களுக்கு இவ ஒரு பொருட்டே இல்ல…"

"ஆனா தருண்… இன்னைக்கு இவ அத்த இங்க இருக்கணும்னு எதிர்பாத்தாடா…"

ஹ்ம்ம்… இவ அவங்க கிட்ட அப்படியெல்லாம் எதிர்பார்க்க மாட்டா….
ஆனா இப்பிடி ஒரு ஸிடுவேஷன்ல வர்ற ஞாயமான எதிர்பார்ப்பு தானேண்ணா அது…
ஆனா அது கூட அவளுக்கு கிடைக்கல்ல பாரேன்…"

"ஆனா தருண் நான் உணராத காதல்…
என் ஆழ்மனசுல இருந்திருக்கு…
இவ கூட தான் கல்யாணம்ன்னு சொன்னதும்…
என் மனசுல ஒரு ஆறுதல்,
ஒரு நிறைவு இருந்துச்சு…"

மென்புன்னகையுடன் கரண் சொல்ல…

"இருந்து என்ன பண்றது…
கல்யாணத்துக்கு பிறகு கூட நீ இவள…
நல்லா பாத்துக்கல்ல…
இவள புரிஞ்சிக்கல்ல…
டீல்ல தான் விட்டுட்ட…"

காரசாரமாக வந்தது குரல்…

ஆமோதிப்பாக தலையசைத்து…

"இனிமேல் விட்டத பிடிக்கிறேன்…
இவள நல்லபடியா பார்த்துக்கறேன்…
சந்தோஷமா வெச்சிக்கிறேன்…"
புன்னகையுடன் சொல்ல…

"சொல்லாத… செய்…"

"போதும் டா… நான் பாவம்… விட்டுடு…"

"விட்டுத் தான் வெச்சிருந்தேன்…
இன்னைக்குத்தான் பிடிச்சிருக்கேன்…"

சகஜ நிலைக்கு வந்திருந்தனர் இருவரும்…

"அது உண்ம தான்…
உன் பாபிக்காக… என்ன விட்டு ஒதுங்கி நின்னவன் தானே நீ…"

"ஆமா அப்பிடி தான்… இவளுக்கு கஷ்டம் குடுக்குறது யாரா இருந்தாலும்…
அவங்க எனக்கு தூரம் தான்…
இப்போ கொஞ்ச நாளா உங்க ரெண்டு பேருக்கும் இடைல
நல்லொரு ஒட்டுதல் இருந்ததப் பார்த்து ஹாப்பியா இருக்கேன் …
அது கடைசி வரைக்கும் இருக்கும்ன்னு நம்புறேன்…"

"நிச்சயமா டா…
உன் நம்பிக்க இந்த தடவ பொய்யாகாது…
ஆழ் மனசுல இருந்த அவளுக்கான காதல நான் புரிஞ்சிக்கிட்டேன்…"


இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தவள்…
மனதளவில் சோர்வுடன் தான் இருந்தாள்…

''கரண் உனக்கு ஆபீஸ்ல ரொம்ப வேலை இல்லைன்னா ரெண்டு நாள் சாருவ எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போப்பா அவ ரொம்ப சோர்ந்து இருக்கா…''

இரவு சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த கரணிடம் கமலா சொல்ல…

''ஆமாண்ணா…
நான் கூட நெனச்சேன்…
ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க…
அவளுக்கு ரிலாக்ஸா இருக்கும்…
இப்போ டிராவல் பண்றது ஓகேயான்னு ஒரு தடவ டாக்டர் கிட்ட கேட்டுடு''

''சரிடா…
போகலாம்…
நீயும் நதியும் கூட வாங்க நாலு பேரும் போகலாம்…
எங்க போகலாம்னு சாரு கிட்டயே கேட்டு இந்த வீக் எண்டுல போய்ட்டு வரலாம்…
அதான் வன் மந்த்தாச்சே
ட்ராவலிங் ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்…
எதுக்கும் டாக்டர் கிட்ட கேட்டுடலாம்…''

''நாங்க எதுக்குண்ணா…
நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க…''

''இல்லடா…
அப்பாவுக்கு இப்பிடி ஆனதுல இருந்து நாம எங்கேயும் போகவேயில்ல…
நதி ஒரு முறை காலேஜ் ட்ரிப் போனது மட்டும் தான் சோ எல்லாரும் சேர்ந்தே போயிட்டு வரலாம்…
சாருவும் அதத் தான் விரும்புவா…''


''ஆனா இங்க அப்பா கூட இவங்க மட்டும்…''

''அதெல்லாம் நாங்க இருப்போம்டா ஒரு நாள் தானே கரண் சொல்றதும் சரி தான் போயிட்டு வாங்க…''

யோசனையாக சொன்னவனை இடைவெட்டி வாணியம்மா சொல்ல….
சம்மதமாக தலையசைத்தான்…

''அத்தையும் பாட்டியும் மட்டும் இருப்பாங்களா…??
மாமாவுக்கு டைம்க்கு எல்லாம் செய்யணும்…"
யோசனையாக சொன்னவளை

"அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க நீ யோசிக்காத…
நாங்களும் வெளிய போய் ரொம்ப நாளாச்சு…"

ஒருவாறு பேசி அவளை சமாதானம் செய்து…
திட்டமிட்டபடி சனிக்கிழமை மாலை சென்று ஞாயிறுக்கிழமை இரவு வந்து சேர்ந்தனர்…

போகும் போது இருந்ததை விட அனைவரது மனதையும் ஆசுவாசப்படுத்தி அனுப்பி இருந்தது…
இவர்கள் சென்ற இயற்கை சூழ் சுற்றுலாத் தலம்…

சில வாரங்கள் கடந்து மறுபடியும் முன் போல தன் அன்றாட வேலைகளை செய்து கொண்டு வளைய வந்த சாரு…
அவளது ஆசிரமத்திற்கான பணிகளையும் ஆரம்பித்து விட…
குழந்தை பற்றிய மன சஞ்சலங்கள் கூட தானாகப் போய் எங்கோ முடங்கிக் கொண்டன…

முற்று முழுதாக காதலை மட்டுமே வைத்து அழகிய வாழ்க்கை
கை சேர்ந்திருக்க…
தான் எதிர்பார்த்த சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்த நிறைவில்…
வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் கரண் தம்பதி…

ஆறு மாதங்கள் கடந்த நிலையில்…
ஒரு காலைப் பொழுதில்…
திடீரென வந்து குதித்தான்…
அவன்…

''தீரன்''...
 
Last edited:

Fa.Shafana

Moderator
அத்தியாயம் 15

"மூடி மறைத்த நேசங்கள் அதற்கு உரிமையானவரைத் தேடி முட்டி மோதி வெளியே வர…அழகானதாக, அர்த்தமுள்ளதாக மாறி வலம் வருகிறது வாழ்க்கை…"

புத்துணர்ச்சி மிக்க மனதுடன் ஆரம்பமாகும் ஒரு நாள் எல்லாவற்றையும் அழகாக ரசிக்க வைக்கும்…
அன்றைய காலைப் பொழுதும் கூட மிக அழகாகவே மொட்டவிழ்ந்து மலர்ந்தது…

வீட்டில் அனைவரும் கலகலத்துப் பேசியபடியே காலை உணவருந்திக் கொண்டிருக்க…

இடையில் ஒலித்தது தருணின் அலைபேசி…

''ஹலோ…''

''ஹலோ தருண் இட்ஸ் தீரன் ஹியர்…''

''ஓஹ் சொல்லுங்க டாக்டர்…''

''இட்ஸ் சண்டே டுடே…
நீங்க வீட்ல தான் இருப்பீங்கன்னு நெனக்கிறேன்…''

"யெஸ் டாக்டர்…
வீட்ல தான்…"

"உங்க அண்ணா…??"

"அவரும் இருக்கார்…
எனிதிங்க்…??"

"ஹேய் நத்திங்… சீரியஸ்… உங்க வீட்டுக்கு வரணும் அதான் கேட்டேன்…"

யோசனையாக பேசியவனை இடை வெட்டி சொல்ல…

"ஒஹ் ஓகே வாங்க டாக்டர்…"


"உன் ப்ரண்ட் தேவி எங்கேஜ்மெண்ட் எப்போ…??"
அழைப்பைத் துண்டித்து
நதியிடம் கேட்க…

"இ‌ன்னு‌ம் த்ரீ வீக்ஸ்ல… ஏன்ணா…??"

"இல்ல டாக்டர் தீரன் தான் ஃபோன்…
இங்க வரணும்ன்னு சொல்றாங்க…
இன்விடேஷன் குடுக்க வர்றாங்க போல…"

அடுத்த அரை மணி நேரம் கழித்து
வந்திருந்த தீரன் சீதா மற்றும் தீரனின் அப்பா கருணாகரைப் பார்க்க
அழைப்பு விடுக்க வந்தது போல் தெரியவில்லை எவருக்கும்…

நல விசாரிப்புகள் முடிய…
நேரம் கடத்தாமல் நேராக விஷயத்திற்கு வந்திருந்தார் கருணாகரன்…

"உங்க பொண்ணு நதியாவ என் பையனுக்கு கேட்டு வந்திருக்கோம்…"

சக்கர நாட்காலியில் இருந்த
நாதனை பார்த்துக் கேட்க…

அவ்வளவு நேரமும் தன் தோழியின் வீட்டினர் என்ற நினைப்பில் நின்றிருந்த நதியா சட்டென பின் வாங்கி நாதனின் அறைக்குள் தஞ்சமடைந்து…
கதவோரம் நின்று பெரியவர்களின் பேச்சுக்களின் கவனம் வைக்க…

திடீரென வந்த கல்யாணப் பேச்சுக்கு பதில் பேசுவதற்கு மொழி மறந்த நிலையில் இவள் வீட்டினர்…

"அப்பிடி உங்களுக்கு சம்மதம்னா இன்னும் த்ரீ வீக்ஸ்ல ரெண்டு எங்கேஜ்மெண்ட்டையும் வெச்சுக்கலாம்…"

தடாலடியாக அவர் கேட்க மிரண்டு நின்ற நதியாவின் அருகில் சென்று ஆதரவாக, அரணாகப் தன் தோலோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்ட சாரு…

"உனக்கு இவர புடிச்சிருக்கா நதிம்மா…
உங்க அண்ணனுங்க அத தான் கேட்க சொல்றாங்க…"

விடையறியாது முழித்துக் கொண்டிருந்தவள் சாருவின் முகம் பார்க்க…

"சொல்லு டா…
உன் விருப்பம் என்னன்னு தெரியாம சம்மதம் சொல்ல மாட்டாங்க…"

"புடிச்சிருக்கண்ணி ஆனா…
இப்போ வேணாம்…"

"இன்னைக்கே முடிவு சொல்லணும்னு இல்ல…
ஆனா யோசிச்சி நல்ல முடிவா சொல்லுங்க…"

சீதா பேசிக் கொண்டிருக்க…

"சாரி… பெரியவங்க பேசும் போது இடைல பேசுறேன்னு நினைக்காதீங்க…"

அனைவரின் சம்மதத்தை கலந்து பேசி அறிந்திருக்க
நதியாவின் விருப்பமும் தயக்கமும் எதனால் என்று தெரிந்து கொண்டு அவளே பேச முன் வந்தாள்…

"அதுக்கு என்னம்மா…
நாங்க ஒன்னும் நெனைக்கல்ல.."
கருணாகரன் சொல்ல…

"இப்போ தான் அவ காலேஜ் முடிச்சிருக்கா…
திடீருன்னு கல்யாணம்ன்னு கேட்கவும் பயந்துட்டா…
மத்தப்படி அண்ணாவ அவளுக்கு புடிச்சுத் தான் இருக்கு…"

புன்னகையுடன் உரிமையாக அண்ணா என்று
தீரனின் மகிழ்ச்சி பொங்கும் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னவள்…

"ஆனா அவ மேல படிக்கணும்னு ஆசையா இருக்கா…
அதனால…"

அவள் யோசனையாக இழுக்க…

"பரவாயில்ல அவ படிக்கட்டும்…
தேவியோட கல்யாணத்தப்ப எங்க எங்கேஜ்மெண்ட் வெச்சிட்டு…
அப்புறம் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்…"

முடிவை தீரனே சொல்ல…

மறுபடியும் நதியாவின் முகம் பார்த்து அண்ணன்மார் இருக்க…
சம்மதமாக அவள் தலையசைத்து நின்றாள்…

இரண்டு வருட காத்திருப்பு நேர்மறை முடிவைத் தந்திருக்க வீடு நோக்கி வண்டியை ஓட்டியவன் மனம் பின்னோக்கி ஓடியது….

"தேவி இன்னைக்கு வந்தால்ல உன் ப்ரண்ட்…"

"ஆமா நதியா… அவளுக்கு என்ன…??"

புருவம் இடுக்கி போலிக் கோபம் குரலில் காட்டிக் கேட்க

"அவளுக்கு ஒண்ணுமில்ல…
அவளைப் பார்த்தா எனக்குத் தான் என்னவோ எல்லாம் பண்ணுது…"
குறும்பாக சிரித்து வைத்தான்
காதல் கொண்டவன்…

"அதான் தெரியுமே…
அவ்ளோ நாள் ஸ்கூல்ல பார்த்து தான் இருக்க… ஆனா அன்னைக்கு அவள காலேஜ்ல பார்த்த உன் பார்வையே சரியில்ல…
இன்னைக்கும் உன்ன கவனிச்சுட்டு தான் இருந்தேன் நீயே சரி இல்ல…"

" ஹேய்… நான் என்ன பண்ணேன்…
நானே சரி இல்லன்னு சொல்ற…"

"ஆ… வீட்டுக்கு வந்த என் ப்ரண்ட்ட சைட் அடிச்சிட்டு நிக்கிறது நல்லாவா இருக்கு…"

"நீ ப்ரண்ட்டா கூட்டிட்டு வந்தவள நான் உனக்கு அண்ணியா கூட்டிட்டு வர போறேன்…"

"ஆமா இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…
அவ வீட்டுல பேசி கல்யாணம் பண்ணனும் தம்பி…"

"நான் அவ கிட்டயே பேசப் போறேன்…"

ஏன்…??
இல்ல ஏன்னு கேக்கறேன் நீயே உன் காதல் மேல மண்ணள்ளி போட்டுக்க போறியா…
அவ பேமிலி மேல ரொம்பவே அட்டாச் அவளுக்கு…
லவ் எல்லாம் செட்டே ஆகாது
அவங்க வீட்ல சொல்ற ஆள தான் கல்யாணம் பண்ணிப்பா
நீ மட்டும் லவ்ன்னு போய் சொல்லு நம்ம வீட்டு பக்கம் இல்ல என் பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டா…
பொறுமையா இரு காலேஜ் முடிஞ்சதும் அவங்க வீட்ல போய் பேசலாம்…"

அன்று மனதில் போட்டு மூடியவன்…
நேற்று கருணாகரன் பக்க உறவில் யாரோ தன்னை மாப்பிள்ளை கேட்டு வர இருப்பது அறிந்து திறந்து விட்டான் தன் காதலை…

உடனே சம்மதித்த பெற்றார் காலையில் கிளம்பி இருந்தனர்…
பேசி முடித்து கல்யாணம் பண்ணி விடும் ஆவல் அவர்களுக்கு…

"தீரன் அண்ணா உன்ன லவ் பண்ணி இருக்காரு…
நதியாவின் அறையில் இருந்த சாரு சொல்ல…"

"இல்ல எனக்கு தெரியாது…
நீங்க எப்பிடி சொல்றீங்கண்ணீ…??"

"அவர் முகத்த பார்த்தாலே புரியுது…"
அவள் சொல்ல…

"யெஸ்…
அன்னைக்கு பாபி ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நீ கால் பண்ணி அழுதது கேட்டுத் தான் என் கைல இருந்த ஃபோன வாங்கி உன்கிட்ட பேசி
சமாதானம் பண்ணார்…
அடுத்த நாள் ஹாஸ்பிடல் போனப்ப கூட அவர் உன் மேல ஒரு கண் வெச்சிட்டு தான் இருந்தார்…
அழாம போய் அண்ணியப் பாருங்கன்னு சொன்னார்ல…
ஒரு வேள நீ அழுதா அவருக்கு வலிக்குதுன்னு நெனக்கிறேன்…"

குரலில் இல்லாத கிண்டல் வார்த்தையில்
தெரிய

"சும்மா இரு தருண்ணா…"
சிணுங்கல் குரல் வந்தது அவளிடமிருந்து…


தேவி, சிவா கல்யாண வரவேற்புடன்…
தீரன், நதியா நிச்சயதார்த்தம் முடிந்திருக்க…

அவள் காலேஜ் அருகில் இருந்த பூங்காவில் சந்தித்தவன்…

"உனக்காக ரெண்டு வருஷம் காத்திருந்து வீட்டில வந்து பேசினா இப்போ கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்ட…
இதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாது இன்னும் ஆறுமாசத்துல நம்ம கல்யாணம் பண்ணிப்போம் ரெடியா இரு பேபி…"

அதிர்ந்து விழித்துப் பின் வெட்கிச் சிவந்து தலை குனிந்தவள்…
"நான் ரெடி.."
என்று சொல்லி இருந்தாள்…

சிறப்பாக நடந்து முடிந்தது
திருமண‌ம்…

ஞாயிற்றுக்கிழமை கரண், தருண் ஓய்வாக வீட்டில் இருக்க நதியாவுடன் இங்கே வந்து விடுவான் தீரன்…
திருமணம் முடிந்த இந்த ஒரு வருடத்தில் இது வழமை...

அன்றும் எல்லோரும் இங்கு கூடியிருக்க…

தங்கள் மூன்று மாதக் குழந்தை வானதியை முன் அறையில் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் சாரு…
கரண் ஆசைப்பட்டது போல தன் தாயின் மறு பிம்பமாக பிறந்த அந்த வீட்டின் குட்டி தேவதை அவள்…
தூங்கும் அவளை தொட்டிலில் போட

"குட்டி தூங்கிட்டான்னா கொஞ்சம் வாங்களேன் அண்ணி…"

கதவு திறக்கப்பட்டு நதியாவின் குரல் கேட்டது…

"ஏன் நதி…??"

"ஒரு பொண்ணு வந்து உங்கள பார்க்கணும்னு சொல்றாங்க…"

'யாரா இருக்கும்…?'
யோசனையாக வெளியே வந்தவளுக்கு அருகில் ஓடி வந்தவள்…

"சாரு அக்கா…"
என்றிருந்தாள்…

"யாரும்மா நீ…??"

புரியாமல் அவள் கேட்க…
அங்கிருந்த கரண், வாணியம்மா, நதியா யாருக்கும் சில வருடங்கள் கழித்து பார்த்த அவளை அடையாளம் தெரியவில்லை…

"நான் தருண் ப்ரண்ட் கார்த்திக்கோட தங்கச்சி
அஞ்சலி…
உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்க்கா…"

கெஞ்சலாக அவள் பேச
ஏதோ புரிவது போல் இருந்தது இவளுக்கு…


"சரி சொல்லும்மா என்ன விஷயம்…"

"அது வந்து க்கா …
தயங்கி நிறுத்தியவள்

எனக்கு வீட்ல கல்யாணம் பேசுறாங்க…
ஆனா எனக்கு தருண தான் புடிச்சிருக்கு…"
தலை குனிந்து சொன்னவள் குரல் ஏகத்துக்கும் கலங்கியிருக்க…

அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் வெளியே போய் இருந்த தருண்…

"ஏய்… நீ இங்க என்ன பண்ற…??"
அவன் குரலில் விழுக்கென நிமிர்ந்து பார்த்தவள்…
கெஞ்சும் பார்வை சாருவைக் பார்த்து வைக்க…

"டேய் ஏண்டா கத்துற…??"
கேட்டு வைத்தான் கரண்…

"வேற என்ன பண்ண சொல்ற…"

"அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுண்ணா…"

"இவ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது… "
இடை புகுந்த நதியாவை முறைத்துக் கொண்டு பேச…

புரியாது விழித்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்து…
"இவ அப்பாவும் அண்ணனும் வீட்டோட மாப்பிள்ளை தேடுறாங்க இவ அதுக்கு என்ன கோர்த்து விடப் பார்க்குறா…"

"அவங்களுக்கு அறிவே இல்ல…
அதுக்கு நான் பலியா…"
கலங்கிய குரலில் அஞ்சலி முணுமுணுக்க…

"என்ன சொல்ற புஜ்ஜி…??"

"ஏன் இப்போ நான் சொன்னது புரியலையா உனக்கு…"

இவனின் சத்தம் கேட்டு நாதன், கமலா கூட அறையில் இருந்து வெளியே வர…

"எங்கப்பா, அண்ணா புரிஞ்சிக்காம இருக்காங்க அக்கா…
ஆனா எனக்கு எங்க வீட்டுல மூச்சு முட்டுது…
என் சின்ன வயசுல அம்மா இறந்து போய்ட்டாங்க
பிஸ்னஸ் பின்னாடி அப்பா ஓடிட்டே இருப்பாங்க…
நான் தனியா தான் இருந்தேன்…
வீட்டுல வேல செய்றவங்க கூடத் தான் அதிக டைம் இருப்பேன்…
எனக்கு அது புடிக்கவே இல்ல…

உங்க பேமிலில வந்து உங்க எல்லார் கூடவும் வாழத் தான் புடிச்சிருக்கு எனக்கு…
ஆனா அப்பா கிட்டயோ அண்ணா கிட்டயோ சொல்ற தைரியம் இல்ல…
அண்ணா இவங்கள தப்பா நெனச்சுடுவானோன்னு பயமா இருக்கு…"

அவள் நீட்டி முழங்க…

"அப்போ என்னை இல்ல என் ஃபேமிலிய தான் பிடிச்சிருக்கு உனக்கு அப்பிடித் தானே…??"

இடை வெட்டியவன் கேட்டு வைக்க…
மறு மொழி பேச மறந்து விழித்து வைத்தாள் அஞ்சலி…

"டேய்…"
என்ற அழைப்புடன் கரண் சிரிக்க…
கை கொட்டி கலகலவென சிரித்து வைத்தாள் நதியா…

'அண்ணா சீக்கிரம் கீழ வாங்க நம்ம வருங்கால தங்கச்சி வந்திருக்கா…'

சாருவின் குறுஞ்செய்தி தீரனையும் அழைத்து வர…

என்ன என்ற பார்வை பார்த்தவனுக்கு கண்களாலே சைகை காட்டி…
கவனிக்க சொல்ல…
அமைதியாக நின்று கொண்டான்…

"சொல்லு எங்க ஃபேமிலிய பத்தி என்ன தெரியும் உனக்கு…??"

"எ‌ல்லா‌ம் தெரியும்…
அண்ணா சொல்லியிருக்கான்…"

"இவ யாருன்னும் தெரியுமாம்மா…"

கேட்ட வாணியம்மாவைப் பார்த்து…

"தெரியும் பாட்டிம்மா…
இவங்களோட பாபி…"
என்று அவர்களின் நட்பைக் கூட அறிந்து வைத்துத் தான் இருக்குறேன் என சொல்லாமல் சொல்ல…

"ஓஹ் அதான் வந்த உடனே அண்ணிய கேட்டீங்களா…??
அங்க பால் போட்டு இங்க விக்கெட் எடுக்க ட்ரை பண்ணி இருக்கீங்க…
நீங்க கிரேட்…"
நதியா சொல்லி சிரிக்க…

"அப்பிடி இல்ல…
அக்கா கிட்ட பேசி என்னை புரிய வைக்க முடியும்னு தோணிச்சி அதான்…"

"சரி சொல்லு உன் அண்ணா இல்லாத டைம் இங்க வந்திருக்க…
இது தெரிஞ்சா அவன் கோபப்பட மாட்டானா…??"

ஆழ்ந்து பார்த்து கேட்ட தருணின் பார்வையை தவிர்த்து…

"அண்ணா ஈவினிங் தான் வருவான்…
நான் கேப் புக் பண்ணித் தான் வந்தேன்…
யாருக்கும் தெரியாது…"
மாட்டிக் கொண்ட திருடனாய் நலிந்து வந்தது குரல்…

"அப்பா எங்க…??"

" அப்பா மீட்டிங் ஒண்ணு இருக்குன்னு போய் இருக்காங்க…"

"சரி நீ கிளம்பு இப்போ…"

தடாலடியாக தருண் சொல்ல…
கண்கள் கலங்க பார்த்தவள்…

"எங்க வீட்டுல வந்து பேசுங்க ப்ளீஸ் என்றிருந்தாள்…"

"உங்க வீட்டுல என்ன எதிர்பார்க்கறாங்கன்னு தெரிஞ்சும் நீ இப்பிடி சொல்றது முட்டாள் தனமா இருக்கு…"

"அ...அப்பிடி இல்ல…
நீ...நீங்க கேட்டா அண்ணாவும் அப்பாவும்
ச… சரி சொல்லுவாங்க…"

"எப்பிடி அவ்ளோ உறுதியா சொல்ற…??"

"தெரில…
எனக்கு அப்பிடி தோணுது அதான் இங்க வந்திருக்கேன்…"

"இவள உனக்கு பிடிச்சு தானே இருக்கு…
அப்புறம் எதுக்குடா இவ்ளோ கேள்வி கேக்குற…"

வாணியம்மா குரல் இடையில் வர

"நீ பார்த்தியா பாட்டி…
எனக்கு பிடிச்சிருக்குன்னு…"

"ஆமா பிடிக்காமத் தான் இவள இத்தன கேள்வி கேட்கற…
அட போடா…
நீ கவலைப்படாதம்மா…
அவன் கெடக்குறான்…
நாங்க வந்து பேசி கல்யாணம் பண்ணி வைக்குறோம்…"

ஆதுரமாக தலை தடவியவரின் கைகளில் அடங்கியவள்…
மொத்தக் காதலையும் கண்ணில் வைத்து தருணைப் பார்த்து வைக்க…

அந்தப் பார்வைக்கு பதில் பார்வை பார்த்து வைத்தான் அவன்…

"நீ என்ன படிச்சிருக்கம்மா…
ஏதும் ஜாப் பண்ணிட்டு இருக்கியா…??"
நாதனின் கேள்விக்கு

"எம்பீஏ முடிச்சுட்டு அவங்க கம்பெனி ஒண்ணுல வேல செய்றா…
கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வந்தபின்ன எம்டி சீட் மேடமுக்குத் தான்…"

பதில் தருணிடமிருந்து வந்தது…

"இவள நல்லா தெரிஞ்சி வெச்சிட்டு தான் இப்பிடி முறுக்கிக்கிட்டு நிக்குற நீ…"

கமலா கேட்க…

"இல்லம்மா…
நம்ம ஃபேமிலில இருந்து பிரிஞ்சு போகணும்ன்னா அது யாரா இருந்தாலும் எனக்கு வேணாம்…"

"பிரிஞ்சு வர சொல்லல்ல
என்னையும் உங்க கூட சேர்த்துக்கங்கன்னு தான் சொல்றேன்…"

"சரிம்மா நானே வந்து உங்க அப்பா கிட்ட பேசறேன்…
இப்போ ரிலாக்ஸா இரு…"

"அண்ணா நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா…"

"இங்க பாரு தருண்…
அஞ்சலி சொல்றது சரின்னு தான் எனக்கும் தோணுது…
நாம ஒரு தரம் கேட்டுப் பாக்கலாம்டா…"

நாதன் சொல்ல ஏதோ பண்ணுங்க என்ற மன நிலையில் சரி என்றிருந்தான்…

அன்று மாலை…
கரணும் சாருவும் அஞ்சலி வீட்டுக்குப் புறப்பட…

"அம்முவ வெச்சிட்டு கிளம்பு பாபி…
சும்மா அவளையும் அலைய வைக்காத…
நீங்க போறதே வேஸ்ட் இதுல அவளும் எதுக்கு…"

நடக்கவே நடக்காது என்று தெரிந்து மனதில் வைத்து மறைத்த நேசம்…
அஞ்சலி மனதிலும் இருந்தது தான் அவன் சற்றும் எதிர்பாராதது…
இன்று அவள் வந்து பேசும் வரை இவனுக்குத் தெரியாமல் தான் இருந்தது இவன் மீதான அவளின் நேசம்…

எது எப்படியோ இதோ அதற்கு நிரந்தர முடிவாக அவள் வீட்டின் மறுப்பை வாங்கி வரப் போகும் அண்ணன் மேல் கோபம் வந்திருக்க…
என்னவென்று தெரியாது மனம் உள்ளுக்குள் பிரளயம் செய்து
கொண்டு இருந்தது…

"வாங்க மாமா…
வாங்க அக்கா…"

"இன்னும் உங்க அப்பா வரலியா…??"

"வந்துட்டாங்க குளிச்சிட்டு இருக்காங்க…
நீங்க உட்காருங்க…"

அஞ்சலியின் படபடப்பு அப்பட்டமாகத் தெரிந்தது…

"ஹேய்…
ரிலாக்ஸ்… நீயே காட்டி குடுத்துடுவ போலயே…"

"இல்ல க்கா …
அப்பா என்ன சொல்லுவாங்களோன்னு கொஞ்சம் யோசனையாக இருக்கு அதான்…
எங்க பாப்பாவ…?? "

"உன் ஆளு வெச்சுட்டு இருக்கான்…
இங்க வந்து பேசும் போது டிஸ்டர்ப் பண்ணுவான்னு பயந்துட்டான் போல…"

கேலி பேசியவள்…

"நீ உங்க அப்பா கிட்ட போய் நாங்க வந்திருக்குறத சொல்லி கூட்டிட்டு வா…
மத்தத நாங்க பேசிக்கிறோம்…"

அடுத்த சில வினாடிகளில்
அவளின் அப்பா வர அதே நொடி கார்த்திக்கும் உள்ளே வந்திருந்தான்…

"ஹாய்…
கரண் அண்ணா எப்பிடி இருக்கீங்க…
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…"

"நல்லா இருக்கேன் கார்த்திக்…
நானும் கொஞ்சம் பிசி அதான் முன்ன மாதிரி மீட் பண்ண முடில…"

"அப்பா எப்பிடி இருக்கார் கரண்…"

"நல்லா இருக்காங்க…
ஆக்சுவலி அப்பா தான் இன்னைக்கு வந்திருக்கணும் அவங்களுக்கு முடியாதுன்னு தான் நாங்க வந்தோம்…"

பீடிகை போட…

நெற்றி சுருக்கி பார்த்து வைத்தார்கள் கார்த்திக்கும் அவன் அப்பா தாமோதரனும்…

"அது வந்து உங்க பொண்ணு அஞ்சலிய தருணுக்கு கேட்டு வந்து இருக்கோம்…"

"உண்மையாவா சொல்றப்பா…??"
மகிழ்ச்சியில் அகமும் முகமும் மலர கேட்டு இருந்தார்..
தாமோதரன்…

"ஆமா…
ஆனா நீங்க வீட்டோட மாப்பிள்ளை தேடறதா அவன் சொல்லிட்டு இருக்கான்…"

"ஆமா அப்பிடி தான் தேடிட்டு இருந்தோம்…
ஆனா என் பொண்ணு வாழப் போறது உங்க வீடு எனும் போது நான் வேற ஒண்ணும் யோசிக்க மாட்டேன்…
அவ நிம்மதியா சந்தோஷமா இருப்பான்னு தெரியுமே…"

வந்த வேலை சீக்கிரம் முடிய…
ஓடிச் சென்று வண்டியில் இருந்த பெரிய பரிசுப் பொதியை எடுத்து வந்தவள்…

அதில் இருந்த பூவை சின்னவள் தலையில் வைத்து வாங்கி வந்த தங்கச் சங்கிலியை அணிவித்து…
புடவையையும் இனிப்புப் பதார்த்தங்களையும்
அவள் கையில் தந்து உச்சி முகர்ந்து விழக சிறு நீர்த்துளி பெண்ணவள் கண்ணில்…

சந்தோஷமாகப் பார்த்து இருந்தார்கள் மற்ற மூவரும்…

அடுத்து வரும் முகூர்த்தம் இவர்கள் திருமணம் என்று முடிவாக…

சந்தோஷமாகக் கைப்பிடித்தான்…
தன் ஆழ் மனதில் ஒளித்து வைத்த நேசத்திற்கு உரிமைப்பட்டவளை…

ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் தன் வீட்டில் ஒன்றாகக் கூடி இருந்த தன் பிள்ளைகளின் நிறைவான வாழ்வை நினைத்து… மகிழ்ச்சி கண்களில் கண்ணீரை நிரப்ப…
விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்த நாதனைக் கலைத்தது…
வாணியம்மாவின் குரல்…

"இன்னைக்குப் போலவே நீங்க எல்லாரும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும் கண்ணுங்களா…"

"அதுக்கு தானே பாட்டிம்மா வம்பு பண்ணி உங்க பேரன கட்டிக்கிட்டு வந்தேன்…"
என்ற குரலுக்கு…

"அடியேய் ஜெர்ரி குட்டி அடங்கு…"
என்றவனை அவள் முறைக்க…

"இல்லையா பின்ன அவ வந்து பேசாம இருந்திருந்தா நீ அவ கழுத்துல தாலி கட்டி இருப்பியா மச்சி…"
என்றான் தீரன்…

"அப்பிடி கேளுங்கண்ணா என்றவள்…"
கர்ணின் கையிலிருந்த வானதியைத் தூக்கிக் கொண்டு எழ…

"எங்க போறீங்கக்கா…"

"இவ தூங்கிட்டா...கொட்ல போட்டுட்டு எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துட்டு வர்றேன்டா…"

"நீங்க இருங்க நான் காப்பி போடுறேன்…"
சொன்னவள் உள்ளே செல்ல…

"அம்முவ இங்க தா பாபி…"

"எதுக்கு இல்ல எதுக்குன்னு கேக்குறேன்…
தூங்குற குழந்தைய ஆசையா கொஞ்சாதன்னு சொன்னா கேக்க மாட்டியா நீ…"

முறைத்துப் பார்த்த வாணியம்மா…

"குழந்தைய உள்ள தொட்டில்ல போடு சாரு…"
என்றிருந்தார்…

"நீ சரியான பழைய பஞ்சாங்கம் பாட்டி…"

"ஆமா நான் அப்பிடியே இருக்கேன் நீ ஏதாவது புதுசா கண்டுபிடி…"

"ஆமா… இல்லையா பின்ன அடுத்து இவளுக்கு ஏதாவது சொல்ல தொடங்குவ நீ…"

நான்கு மாத கருவை சுமக்கும் நதியாவை கைகாட்ட…

"இருடா…
உன் பொண்டாட்டி மட்டும் கர்ப்பமாகட்டும் உன்ன வீட்ட விட்டு ஏதாவது கோயிலுக்கு தொரத்தி விடுறேனா இல்லையா பாரு…"
அவனோடு மல்லுக்கு நிற்க …

"நீ சரியான வில்லி அவதாரம் எடுத்திருக்க பாட்டீ…."

என்று கூவி இருந்தான் தருண்…

இவர்கள் சண்டையில் மற்றவர்கள் அனைவரும் கலகலவென்று சிரிக்க…
அந்த சத்தம் அடங்க வெகு நேரம் எடுத்தது…

லட்டு முறுக்கு சகிதம் அஞ்சலி எடுத்து வந்த காப்பியைக் குடித்து கொண்டே சிறியவர்கள் அரட்டையைத் தொடர….
அவர்களைப் பார்த்து நிறைவான புன்னகை பெரியவர்களிடம்…

**************************************

(அதை விடவும் மன நிறைவு முதல் கதையை வெற்றிகரமாக முடித்து வைத்த என்னிடம்…)
 
Last edited:
Status
Not open for further replies.
Top