எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் பொம்மை-2

காதல் பொம்மை -2

மீண்டும் ஈஸ்வரின் அருகில் வந்த ராகவி இம்முறை அவனிடம் கெஞ்சும் குரலில் ண்ணா அப்போ நீ இன்னைக்கு என்னை கூட்டிட்டு போக மாட்டியா எனக்கேட்டபடி அவனின் போர்வையை இழுத்தாள்.

முதல் முறையே தங்கை வந்து எழுப்பி விடவுமே விழித்திருந்த ஈஸ்வரன் இம்முறை அவளின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த உடன் வேகமாக எழுந்தமர்ந்தான்.


ஏய் வாலு காலையிலேயே ஏன் என்னை போட்டு இப்படி படுத்தி எடுக்கற
பத்து மணிக்கு மேல தான் எல்லா ஷாப்பிங் மாலும் ஓபன் பண்ணுவாங்க.. மணி இப்போ தான் ஏழு ஆயிருக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கு பத்து நிமிஷத்துல நான் கிளம்பிடுவேன் நீ தான் லேட் பண்ணுவ.



அதனால முதல்ல இங்கிருந்து ஓடு.. நீ இப்போ கிளம்ப ஆரம்பிச்சாலே பத்து மணி வரைக்கும் டைம் எடுத்துப்ப..
என்கிட்ட கெஞ்சுறதை விட்டுட்டு போய் கெளம்பற வழியை பாரு என்று சற்று சிடுசிடு குரலில் கூறியபடி குப்புற படுக்கவும்.



அண்ணா..


ம்ப்ச்…என்ன அம்மு.


ஷாப்பிங் மால் பத்து மணிக்கு தான் ஓபன் பண்ணுவாங்க ஆனா கோவில் காலையிலேயே ஓபன் பண்ணிடுவாங்க.


பெரிய கண்டுபிடிப்பு தான்.. நீ சொல்லித்தான் கோவில் காலைல திறப்பாங்க என்கிற விஷயமே எனக்கு தெரிஞ்சது.. போ அம்மு ஏதாவது சொல்லிட போறேன்.


அதான் உனக்கே தெரியுது இல்ல அப்புறம் என்ன.. எந்திரிச்சி கிளம்பு கோவில் போகணும்.


ஏய் உனக்கு கோவிலுக்கு போகணும்னு தோணுச்சுன்னா அம்மாவ கூட்டிட்டு போ எதுக்கு என்னை போட்டு தொல்லை பண்ற.. ஆமா இன்னைக்கு என்ன ஞாயிற்றுக்கிழமை கோவில்.


மறந்துட்டியா அண்ணா இன்னைக்கு என்ன நாள்னு என் கூறியபடி ஈஸ்வரின் கால் அருகே அமரவும் .


யோசனையுடன் தங்கையின் முகத்தை திரும்பிப் பார்க்க .



கலக்கமான முகத்துடன் இன்னைக்கு அண்ணியோட பிறந்தநாள்.. எப்பவும் இந்த நாள் அன்னைக்கு நீ தான் என்னை வம்பு பண்ணி கோவில் கூட்டிட்டு போவ.


நான் வரமாட்டேன்னு பிகு பண்ணுவேன் ஆனா இன்னைக்கு நான் உனக்கு நியாபகப்படுத்தி கூப்பிடுறேன் நீ இந்த நாளையே மறந்துட்டு இருக்க.


அம்மா கிட்ட சொன்னா கோவில் அனுப்ப மாட்டாங்க.. அதான் ஷாப்பிங் போறேன்னு பொய் சொல்லிட்டு கோவில் போக பிளான் பண்ணிருக்கேன்..


நிஜமாவே அண்ணியோட பிறந்தநாளை மறந்துட்டியா இல்ல அண்ணியையே மறந்துட்டியா என்று தமயனின் முகத்தை பார்த்துக் கேட்கவும்.


இங்க பாரு அம்மு முடிஞ்சு போன விஷயத்தை தயவு செய்து கிளறாத.


முதல்ல அவளை அண்ணின்னு சொல்றதை நிறுத்து..


அவ உனக்கு அண்ணியும் இல்லை.. எனக்கு யாருமே இல்ல..புரிஞ்சிதா.
அவளுக்காக கோயில் போகனும்னு நீ நினைக்கறதே தப்பு.. இதுல என்ன வேற கூப்பிடற முதல்ல எந்திரிச்சு போ.. சென்று கத்தியவன்.


வாய்க்குள் காலையிலேயே வந்து மூடை ஸ்பாயில் பண்ணிட்டு.. என்றப்படி தலையணையின் முகத்தை மூடியவனின் விழிகள் இருந்து ஒரு துளி கண்ணீர் தலையணையை நனைத்தது.


அவனாள் எப்படி அவளை மறக்க முடியும்..அவனது ஒவ்வொரு அணுவிலும் . வாழ்ந்து கொண்டிருக்கிறாளே.. அது மட்டுமா தினம் தினம் உறங்கவிடாமல் கனவில் வேறு வந்து தொல்லை செய்கிறாள்.
அப்படிப்பட்டவளின் பிறந்த நாளை மறந்தால் தான் அதிசயம்.


இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தன்னுடைய அத்தனை ஈகோவையும் குழி தோண்டி புதைத்து விட்டு அவளை அழைத்து பிறந்தநாள் வாழ்த்தை சொல்லி விடலாமா.. அல்லது பரிசு பொருள் ஒன்றை வாங்கி அவளுக்கு சர்ப்ரைஸாக அனுப்பி விடலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறான்.


ஆனால் அவனவள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே.


கடந்தாண்டு இதே சமயத்தில் தான் இருவருக்குமான கருத்து வேறுபாடு முற்றி பரஸ்பரம் அவர்களின் காதலை தடுப்பொடியாக்கிவிட்டு பிரிந்து சென்றார்கள்.


ஆசை ஆசையாக வாங்கி பரிசளித்த பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.


இவன் கோபத்தில் அவளுடைய அலைபேசி எண்ணை ப்ளாக் செய்ய
அவளோ ஓரு படி மேலே சென்று அவனின் சமூக வலைத்தளத்தில் உள்ள அத்தனை பக்கத்தையும் ப்ளாக் செய்தாள்.


இவனே நினைத்தால் கூட அவளைத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு.. நம்பரையும் மாற்றி விட்டாள்.


இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு ஈகோ பிரச்சனை இருக்க இது எதையும் அறியாத அவனுடைய செல்ல தங்கை.



காதலியின் பிறந்த நாளுக்காக கோவில் அழைத்துக் கொண்டிருக்கிறாள் .

தங்கைக்கு எப்படி புரிய வைப்பது.. என்றுமே எனக்கும் அவளுக்கும் ஒத்து வராது இந்த குடும்பத்திற்கு மருமகளாக வருவதற்கோ அல்லது உனது அண்ணியாக இருப்பதற்கோ துளி கூட தகுதி இல்லாத பெண் அவளென்று.


கடந்த வருடமே மரணித்து விட்ட அவனது காதல் ஒவ்வொரு கணமும் பல ஞாபகங்களை அள்ளி வீசிக் கொண்டே தான் இருக்கிறது.


மூன்று வருட காதல் அல்லவா அதை எப்படி ஒரே நாளில் குழி தோண்டி புதைக்க முடியும் .



எத்தனை குறும்பு பார்வைகள், எத்தனை செல்லச் சண்டைகள், எத்தனை திருட்டு முத்தங்கள் அத்தனையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டுப் போக அவளால் முடிந்தது.


ஆனால் அவனால் முடியவில்லை .
வாழ்க்கை ஏனோ அவனை பின்னோக்கி இழுத்துச் செல்வது போல அவ்வப்போது உணர்ந்து கொண்டே தான் இருக்கிறான்.


அதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் அவனவளின் வாழ்க்கை படு வேகத்தில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை.


தொடரும்.
 
Top