எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கோலி ஃப்ளவர் பக்கோடா

admin

Administrator
Staff member
வணக்கம்!
தேவையான பொருட்கள்

காலி ஃப்ளவர் - 1
கடலை மா - 1கப்
அரிசி மா - கால் கப்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
காலி ஃப்ளவரை சிறு துண்டுகளாக வெட்டி சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் ஊற விட வேண்டும்.

வேற ஒரு பௌலில் கடலை மா, அரிசி மா,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீரில் பிசறி வைக்க வேண்டும். அதில் காலி ப்ளவரை சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்த காலி ப்ளவரை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறு மொறு காலி ப்ளவர் பக்கோடா ரெடி.

அன்புடன்

ப்ரஷா
 
Top