எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சந்திரனை மீட்டிடும் மகரந்தயாழ் - பாகம் 2

அத்தியாயம் - 23


ஆறு வருடங்களுக்கு முன்...

“ஹே ஹே ஹே

ரிமெம்பர் மீ பார் செஞ்சுரீஸ்

அண்ட் ஐ கான்ட் ஸ்டாப் டில் த ஹோல் வோர்ல்ட் நோஸ் மை நேம்

பிகாஸ் ஐ வாஸ் ஒன்லி பார்ன் இன்சைட் மை ட்ரீம்ஸ்”

உச்ச டெசிபெல்லில் பாடிக் கொண்டிருந்த கார் ஸ்டீரியோவைத தாண்டி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்த பூர்ணவ் சந்திரனை பார்த்து காதுகளைப் பொத்தியும், தலையைக் குனிந்தும், கண்களைச் சுருக்கியும் பார்த்து “அடேய் நிறுத்துடா!!!!!!” என்று அமித்ரா கத்த

காரை லாவகமாக ஒட்டிக் கொண்டே அமித்ராவின் காதுக்கு அருகே வந்து

“அன்டில் யூ டை பார் மீ, அஸ் லாங் அஸ்தேர் இஸ் லைட்

மை சேடோ இஸ் ஓவர் யூ பிகாஸ் ஐ அம் த ஆப்போசிட் ஆப் அம்னீசியா” என்று இன்னும் கத்தி சத்தமாகப் பாடினானே தவிர நிறுத்தவில்லை.

அவனது முகத்தில் அத்தனை உற்சாகம், சந்தோஷம்.

இருபத்து மூன்று வயதிற்கே உரிய துள்ளல்,இன்னும் வாழ்க்கையில் எந்தப் பெரிய அனுபவத்தையும் அனுபவித்து இராத நிலையில் வரும் குழந்தையின் அப்பழுக்கற்ற சந்தோஷம், இதையெல்லாம் தாண்டி எந்த ஒரு கவலையும் இல்லாத வாழ்க்கை என்பதற்கான பொலிவு இருந்தது அவனது முகத்தில்.

கார் பெங்களூரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

அமித்ரா “அடேய் நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? உனக்கு எல்லாம் காதுல சொரணை இருக்கா... இல்ல சும்மா தான இருக்குன்னு கடன் குடுத்திட்டையா?” என்று கத்தியவளுக்கு அவனிடம் இருந்து பதிலாகக் கிடைத்தது என்னவோ ஸ்டீரியோவின் சத்தம் இன்னும் அதிகமாக்கப்பட்டது தான்.

இதைப் பார்த்தவள் “பகவானே... என்னைய யாராச்சும் இந்தக் காதில்லாதவன் கிட்ட இருந்து காப்பாத்துங்களேன்” என்று மேல் நோக்கி கும்பிட்டுவிட்டுத் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தாள்.

வலது கை முட்டியை வலது தொடையில் அழுத்தி ,நெற்றியை உள்ளங்கையில் தாங்கி அமர்ந்து இருந்தவள் தலையைக் கொஞ்சமே கொஞ்சமாகத் திருப்பி அவனைப் பார்த்தாள்.

அமித்ராவும், பூர்ணவ்வும் வெளிநாட்டில் ஒரே பல்கலைகழகத்தில், ஒரே வகுப்பில் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு நான்கு நாட்களுக்கு முன் தான் இந்தியா வந்திருந்தனர்.

அந்தப் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது இவர்களுடன் மித்ரா, சிக்கந்தர், அஞ்சிதா, வித்யுத், குஷி எனக் கூடப் படித்த ஐவரும் சேர்ந்து ஒரு கேங். இவர்கள் எழுவரும் ஓர் இடத்தில் குழுமிவிட்டார்கள் என்றால் அவ்விடம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்.

இவர்களில் பூர்ணவ்வும் அமித்ராவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க சிக்கந்தர்- பஞ்சாப், அஞ்சிதா- கேரளா,வித்யுத் – மகாராஷ்டிரா, குஷி – டெல்லி,மற்றும் மித்ரா – ஹைதராபாத் எனக் கிட்டத்தட்ட பாதி இந்தியாவே ஒன்றுக் கூடி அந்தப் பெயர் போன லண்டன் பல்கலைகழகத்தை ஆட்டி எடுத்த அமால் டுமால்களைச் சொல்லி மாளாது.

இன்னும் இவர்கள் கொஞ்ச நாட்கள் அங்கே இருந்திருந்தால் அங்கு ஓர் “இந்தியனே வெளியேறு” இயக்கம் தொடங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அவர்கள் குழுவில் குஷியும், வித்யுத்தும் மட்டுமே காதல் கிளிகளாக இருந்தனர். ஒரு ஜோடி இரு ஜோடியாக மாறக் காரணம் - “அன்று நடந்த பார்ட்டியும், அஞ்சிதா குரங்கும்” ஏதோ தமிழ் பட டைட்டில் போல இருக்குல..

மேனேஜ்மென்ட் படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே பூர்ணவ் மீது அமித்ராவிற்கு ஓர் ஈர்ப்பு இருந்து அது காலப் போக்கில் காதலாக மாறி, மூன்று வாரங்களுக்கு முன் நடந்த ஒரு பார்ட்டியில் அமித்ரா தான் பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்தாள்.

படிப்பின் ஆரம்பத்தில் இருந்தே எழுவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்தவர்கள் தான் என்றாலும் படிப்பு முடியப் போகும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கூட அமித்ராவிற்குத் தனது காதலை வெளிப்படுத்த தைரியம் வந்திருக்கவில்லை... ஆனால் ஆசை மட்டும் ஆழி அளவு இருந்தது. அவளை அவளது காதலை சொல்ல விடாமல் தடுத்த காரணம் பூர்ணவ் என்றுமே இவளை நல்ல தோழியாக மட்டும் தான் பார்க்கிறான் என்பதே. எங்கே தன்னை மறுத்துவிடுவானோ என்ற பயம் அவளுள் இருந்தாலும் அவளது இயல்பான பிடிவாத குணம் பூர்ணவ் வேண்டும் என்று கரகாட்டம் போட ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பார்ட்டியில் எல்லோர் முன்பும் வைத்து பூர்ணவ்விற்கு ப்ரொபோஸ் செய்துவிட்டாள்.

சுற்றி இருந்த இவர்களின் ஐந்து நண்பர்களும்

“ஓ..................ஹோ”

“ஹே கைஸ்... வென் டிட் இட் ஹெப்பென்?”

“பூர்ணவ் வொய் ஆர் யூ சைலன்ட்? காமன் மேன்” என்று எல்லோரும் குதூகலிக்க

பூர்ணவ்வின் பார்வை முழுக்க அமித்ராவின் முகத்திலேயே இருந்தது.

“எங்கே தன்னை நிராகரித்துவிடுவானோ?, எல்லோர் முன்பும் அவமானம் ஆகி விடுமோ? ஒருவேளை காதலோடு சேர்த்து நட்பையும் உதறிவிட்டால் என்ன ஆவது? ப்ரொபோஸ் செய்திருக்கக் கூடாதோ” என இன்னும் பல வகையான பயக் கலவைகளை அமித்ராவின் முகத்தில் பார்த்தவனுக்கு “எத்தனை தைரியமான பெண்... காதல் இப்படி கோளை ஆக்கிவிட்டதே” என்ற எண்ணம் தோன்ற சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.

அவன் முகத்தில் படர்ந்த புன்னகையைப் பார்த்த அஞ்சிதா, பூர்ணவ்விற்கும் சம்மதம் என்று நினைத்துக் கொண்டு “ஹே, அனதர் கப்பில் இன் அவர் கேங்.... கமான் லெட்ஸ் பார்ட்டி ” என்று துள்ளிக் குதித்தாள்

இதைக் கேட்டுத் திகைத்த பூர்ணவ் “எதே?????!!!! நா எப்படா ஆமான்னே?” என்ற எண்ணம் ஓட அஞ்சிதாவைத் திரும்பிப் பார்த்தபடி அமித்ராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே வெட்கத்தில் குளித்து எழுந்தவள் போல் நின்று இருந்தாள்.

“இது வேறையா?” என்று நினைத்தவனுக்கு “நம்மளுக்குப் பிடிச்ச பொண்ண விட நம்மள பிடிச்ச பொண்ண கல்யாணம் பணிகிட்டா லைப் நல்லாருக்கும்” என்ற டைலாக் பேக் கிரவுண்டில் ஓட “சரி நாமளும் சிங்கிளா தான் இருக்கோம், எப்டியும் கல்யாணம் பண்ணி தான் ஆகணும், அமித்ராவையே பண்ணிப்போம்” என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அமித்ராவின் தந்தைக்கும் அவனது தந்தைக்கும் இருக்கும் தொழில் பகைக் கூட இதனால் தீர்ந்து போக வாய்ப்பு இருக்கின்றது... மேலும் அவள் மேனேஜ்மென்ட் படித்து இருப்பதால் பிசினஸ் டிவலப் பண்ண ஈசியா இருக்கும்..” என இந்தக் காதலினால் உண்டாகும் பயன்கள் மட்டுமே அந்தப் பொறுப்பான குணம் கொண்டவனின் மனக் கண்ணுக்கு தெரிய “ஹ்ம்ம்... ஓகே” என்ற ஒரு தோள் குலுக்கலோடு சம்மதம் தெரிவித்துவிட்டான்.

அதெப்படி காதலே இல்லாமல் ஒத்துக் கொண்டான் என்று தோன்றுகின்றதா? லாஜிக் இல்லாத விசயமாகத் தெரிகின்றதா?

ஏதோ ஒரு வகையில் பூர்ணவ்வின் இந்தக் குணத்தை எனக்கு “பக்கா இந்திய அர்ரெஞ் மேர்ரேஜ்”க்களோடு ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

நம்முடைய இந்தியாவில் அதிகம் நடக்கும் ‘பக்கா’ அர்ரெஞ் மேரேஜ்ஜுக்களில் காதல் என்பது திருமணத்துக்குப் பின்னான ஒன்றானதாகத் தான் இருந்து வருகின்றது... இணையும் இரு மனமும் காதலின் அடிப்படியில் இணைவதில்லை.. “இணை வேண்டும்” என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், பெற்றவர்களின் கைகளில் இருக்கும் பொறுப்புகளின் பெயரிலும் தான் முக்கால்வாசி திருமணங்கள் நடக்கின்றன... அப்படிப் பார்த்தால் இதே சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் எண்ணங்கள் வெளிநாடு போய்ப் படித்த பின்பும் மாறுபடாமல் போனதில் ஆச்சரியப் படுவதற்கில்லை... இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் பூர்ணவ்விற்கு நடப்பது அர்ரேஜ்ட் லவ் அவ்வளவு தான். அதே நேரத்தில் பல வெற்றிகரமான அறேஞ்ட் மேரேஜூகளைப் பார்த்தவனுக்கு இது எதில் போய் முடியுமோ என்ற பயமெல்லாம் எழவே இல்லை. மொத்தத்தில் பக்கா ப்ராக்டிக்கல் மேன் என்று டேக் குத்தும் மன நிலையில் இருந்தான் பூர்ணவ் சந்திரன். அவனைப் பொறுத்தவரையில் திருமணம் செய்யப் போவது யாராக வேண்டும் என்றாலும் இருக்காலாம், மற்றபடி அது ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதில் விதி விலக்கு.

இன்னொரு பக்கம் அமித்ராவை எடுத்துக் கொள்ளலாம், பூர்ணவ்வின் சம்மதத்திலேயே அவளது காதல் வெற்றி அடைந்து விட்டதாக தான் அவளுக்குத் தோன்றியது... எதையும் பதிலுக்கு எதிர்பாராமல் கொடுக்கும் மனது அவளுடையது... அவள் பூர்ணவ் மீது அளவற்ற காதல் வைத்திருக்கிறாள்... அதே நேரத்தில் பூர்ணவ்வும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்று எண்ணும் அளவிற்கு அவள் முட்டாளும் அல்ல... அவன் ஏற்றுக் கொண்டது அவளுடைய காதலை மட்டுமே என்பதையும் அவனை அணு அணுவாக இத்தனை நாட்கள் ரசித்துப் புரிந்து வைத்திருந்தவள் இதையும் புரிந்து கொண்டாள் தான்.

“இப்போ அவன் லவ் பண்ணலைன்னா என்ன? என்னோட லவ்வே எங்க ரெண்டு பேருக்கும் போதுமானது... “ என்று நினைத்தவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

இது நடந்து மூன்று வாரங்கள் + நான்கு நாட்கள் ஆகி இருந்தது. பெங்களூரில் நடக்கும் மித்ராவின் திருமணத்திற்குத் தான் இருவரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். பின் குறிப்பு - மித்ரா ஹைதராபாத் தான், மாப்பிள்ளை பெங்களூர்.

தனது முகத்தை லேசாகத் திருப்பிப் பூர்ணவ்வைப் பார்த்தவளின் கண்கள் அவன் மீதே மையல் கொண்டு நின்றன. அவனே மனது மூளை இரண்டிலும் நிரம்பி இருக்க இத்தனை நேரம் இருந்த ஹை டெசிபெல் சத்தம் இப்பொழுது அவளுக்குக் கேட்கவில்லை.

பூர்ணவ்வை அவள் ரசிக்க ஆரம்பித்த மறுநொடி அவளது உடலில் சுரந்த ஹார்மோன்கள் அவளைச் செவிடாக்கி இருந்தது.

கண்கள் மட்டுமே ஒழுங்காக வேலை செய்ய, அவை பூர்ணவ்வின் முகத்தை இன்ச் இஞ்சாக ரசிக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன.

பாட்டோடு சேர்ந்து சத்தமாகப் பாடும் போது மின்னும் அவனது வெண்ணிற பற்கள், பிடித்த பாடல் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உண்டான உற்சாகத்தில் விரிந்து இருந்த அவனது இதழ்களும், கன்ன தசை விரிந்ததால் அவைகளுக்கு முரணாகச் சுருங்கி இருந்த அவனது கண்களும் கூடச் சிரித்தன.

அவனுடன் படித்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு செயலாலும், நிகழ்வாலும் பாதிக்கப்பட்ட சிறு சுணக்கத்தைக் கூட அவனது முகத்தில் பார்த்தது இல்லை அமித்ரா.

அதே வாழ்வை வாழ்பவள் தான் அவளும். ஆனால் அதைப் பூர்ணவ்வுடன் வாழ்ந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொல்லியது அவளது மனது.

நாளுக்கு நாள் அவன் மீது கொண்ட காதல் அதிகமாகக் காரணம் அறியாள் அப்பேதைப் பெண்.

தான் கொடுத்த எதையும் திருப்பி எதிர்பார்க்கா அட்சயப்பாத்திரம் போல அவளது காதல்.. எடுக்க எடுக்க நிரம்பி வழியும், அதனை வைத்திருப்பவருக்கு மட்டுமே பயன், அள்ள அள்ள கொடுப்பதால் அட்சயப்பாத்திரத்திற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? ஒன்றும் இல்லை. எதையும் பிரதிபலன் இல்லாமல் செய்யாத மக்கள் பெருக ஆரம்பித்து இருக்கும் மனித உலகில் அவள் வேறானவள்.

அவனுடன் இருப்பது மட்டுமே அவளுக்குச் சந்தோசத்தை அளிக்கப் போதுமானதாக இருக்க

அவள் உயிராக நினைக்கும் அக்காதலில் காலம் கல்லாட்டம் ஆடப் போகிறது என்று நமக்குத் தெரியும்....

அவளுக்குத் தெரியுமா?

தெரிந்திருந்தால் அன்றே அவனை விட்டு விலகியிருப்பளா?

இந்தக் காதல் வேண்டாம் என்று தூக்கி எரிந்திருப்பளா?

அவனைச் சுலபமாக மறந்திருப்பாளா?
 
அத்தியாயம் - 24




பூர்ணவ்வின் ஆடி கார் திருமண மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிற்க அஞ்சிதாவிற்குப் போனில் அழைப்பு விடுத்தபடி இறங்கினாள் அமித்ரா.

தானும் இறங்கிவிட்டு காரை லாக் செய்த பூர்ணவ் சுற்றியும் முற்றியும் பார்த்தான்... ஒரு இருநூறுகார்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். கம்மி தான். மாப்பிள்ளை கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதியின் மகன். அப்படிப் பார்த்தால் இன்னும் அதிகம் பேர் வந்திருக்கவில்லை, இவர்கள் சீக்கிரமாகவே வந்துவிட்டனர் என்பதை அந்த அகன்ற பார்க்கிங்கில் இருக்கும் காலி இடங்கள் புரியவைக்க அவனுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது..

“நல்லவேள சீக்கிரமா வந்துட்டோம், இல்லன்னா மித்ரா ஆடுற ஆட்டத்துல இவளோ பெரிய மண்டபமும் இன்னைக்கு மண்ணுக்குள்ள போயிருக்கும்” என்று நினைத்தவனுக்குத் தானாக ஒரு சிரிப்பு எழ அமித்ராவைப் பார்த்து “என்ன ஆச்சு அமி?” என்றான்.

“ரிங் போயிட்டு இருக்குப் பூர்ணவ், இந்த அஞ்சிதா கொரங்கு எடுக்கவே மாட்டேங்குறா.. எங்கியாச்சும் பொந்துக்குள்ள உக்காந்து ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருப்பான்னு நெனைக்குறேன்” என்று அவள் சலித்துக் கொள்ளத் தன்னுடைய போனை எடுத்து மேலாக இருந்த குஷியின் நம்பருக்கு கால் செய்தான் பூர்ணவ்.

மறுபக்கம் அட்டென்ட் செய்யப்பட இவன் “குஷி..” எனும் போதே

“தும் தோனோ கஹா ஹோ பூர்ணவ்?(நீங்கள் இருவரும் எங்கு இருக்குறீர்கள் பூர்ணவ்) ஸ்டில் இன் டிரைவ்?” என்று அவள் கத்தும் சத்தம் கேட்க

“ஆ... குஷி எதுக்கு இப்டி கத்துற... என் காதே போச்சு” என்று இவன் ஒற்றை விரலால் காதைக் குடைந்து கொண்டே கத்த

இவ்வளவு நேரம் அஞ்சிதாவிற்குப் போன் செய்து கொண்டிருந்த அமித்ரா திகைப்புடன் சராலென்று திரும்பி இவனைப் பார்த்தாள்.

“என்னடா சொன்ன இப்போ?” என்று அதட்டுவது போல் கேட்க

அவள் கேட்க வருவதைப் புரிந்து கொண்ட பூர்ணவ் “ஹி ஹி ஹி... ஏதும் சொல்லலையே” என்று பற்கள் முழுவதையும் காண்பித்துச் சொல்ல

“ஏன்டா சென்னைல இருந்து பெங்களூர் வந்த அஞ்சு மணி நேரத்துல ஆபரேஷன் பண்ணாமையே என் காத செவிடாக்கிட்டு, அப்போலாம் சொரணையே இல்லாது இருந்த உன் காதுக்கு இப்போ எங்கிருந்துடா வந்துச்சு சொரண?” என்று அவன் காதை பிடித்து அமித்ரா திருகப் போக, அவள் செய்ய வருவதைப் புரிந்துக் கொண்டவன் துள்ளிக் குதித்து மண்டபத்தின் வாயிலை நோக்கி ஓடினான்.

இவளும் பின்னாலையே துரத்திக் கொண்டு ஓட

“ஏய் அமி, வேணாம், வேணாம்” என்று தன் பின்னால் வரும் அமித்ராவைப் பார்த்துக் கொண்டே வந்தவன் உள்ளே இருந்த ஒரு பெண்ணின் மீது இடித்து விட “ஊப்ஸ்... சாரிங்க.. சாரி” என்று சொன்னவன்

“பொண்ணு ரூம் எங்க இருக்குங்க?”என்று அவன் இடித்த பெண்ணிடமே கால்கள் தரையில் படாமல் ஓடிக் கொண்டே கேட்க அந்தப் பெண்ணின் கை தானாக உயர்ந்து மணப்பெண் அறை இருக்கும் திசையைக் காட்டியது.

தான் பேசிய தமிழ் பெங்களூருவில் இருக்கும் பெண்ணிற்கு எப்படிப் புரிந்தது என்று கூட யோசிக்காமல் போடப்பட்டிருந்த சேர்களுக்கு நடுவில் புகுந்து ஓடினான் பூர்ணவ் சந்திரன்.

இவன் இடித்த பெண்ணோ குழந்தையெனத் துள்ளி துள்ளி ஓடிக் கொண்டிருக்கும் அவனையே கண்கள் மின்ன பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“டேய் லூசு, நில்லுடா, இன்னைக்கு மட்டும் என் கைல சிக்குனே நீ சிக்ஸ்டி பைவ் தான்டா” என்றுக் கத்திக் கொண்டே பூர்ணவ்விற்குப் பின்னால் ஓடி போனாள் அமித்ரா.

கிட்டத்தட்ட ஆறு மணி நேரம், சென்னையிலிருந்து பெங்களூருக்குக் காரில் அவனும் ஸ்டீரியோவும் படுத்திய பாட்டை அவள் மட்டுமே அறிவாள்.

பூர்ணவ்வோ சரியாக மணப்பெண் அறைக்குள் சென்று படாரெனக் கதவைத் திறந்து ஜங்கென்று நின்றான்.. இதை எதிர்பார்த்து இருக்காத உள்ளே இருந்த மணப்பெண் மித்ரா கண்ணாடி முன் இருந்து எழுந்து நின்று அவனைப் பார்க்க, பேயைப் பார்த்தது போல் கையின் மேல்பாகத்தை வாயருகே வைத்து பழைய கால நடிகைகள் போல் வீலெனக் கத்தினான் பூர்ணவ் சந்திரன்.

அவனுக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த அமித்ரா அவனது கத்தல் சத்தத்தைக் கேட்டு “டேய் என்னடா ஆச்சு? “ என்று பதறியபடி வரவும், மித்ரா இவனை நோக்கி அடிக்க வரவும் சரியாக இருந்தது.

“பூர்ணவ் சட் யுவர் மவுத், திஸ் இஸ் மீ, மித்ரா” என்று அவனது தோள்பட்டையில் அடித்தப்டி அவள் சிணுங்கிக் கொண்டே சொல்ல, உள்ளே வந்திருந்த அமித்ரா இவளைப் பார்த்து நமட்டுக்குள் சிரித்தபடி நின்றாள்.

மித்ரா மணப்பெண் பேசியல் போட்டு, படுபயங்கரமாக இருந்ததே அவன் அப்படிக் கத்தியதற்குக் காரணம்.

அவனோ வீட்டிற்கு ஒரே பையன், அவனது அம்மாவிற்குப் பேசியல் செய்யும் பழக்கம் எல்லாம் கிடையாது, படங்களில், விளம்பரங்களில் பார்த்து இருந்தாலும் நேரில், அதுவும் திடீரென பார்க்கும் பொழுது உண்மையாலுமே கொஞ்சம் பயங்கரமாக இருப்பதாகத் தான் தோன்றியது அவனுக்கு.

அப்பொழுது அறையின் வலது புறம் இருந்து ஒருவர் வெடித்துச் சிரிக்கும் சத்தம் கேட்க மூவரின் பார்வையும் அங்குத் திரும்பியது.

அங்கு அஞ்சிதா அமித்ரா சொன்னது சொல் “கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்” என்று பேக்ரவுண்ட் சாங் போடும் அளவிற்குத் தன்னைச் சுற்றி உணவுக் கடை பரப்பி அமர்ந்து ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தாள்.

“எங்கியாச்சும் பொந்துக்குள்ள உக்காந்து ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருப்பான்னு நெனைக்குறேன்” என்று அமித்ரா சொன்ன வார்த்தைகள் பூர்ணவ்விற்கு நினைவு வர “இது தான் ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்கு தான் தெரியும்னு சொல்லுறதா?” என்று கேட்டபடி பீரிட்டுச் சிரித்தான் பூர்ணவ்.

அதன் பின் வித்யுத், சிகந்தர், குஷி என மற்ற மூவரும் வந்து இவர்களோடு சேர்ந்து கொள்ள அரை மணி நேரம் போல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பூர்ணவ், அமித்ராவைத் தவிர மற்ற ஐவருக்கும் தமிழ் பேச தெரியாது என்றாலும் இத்தனை வருட பிணைப்பில் தமிழைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு வந்திருந்தனர்.

சிறிது நேரத்தில் மித்ராவிற்கு அலங்காரம் செய்யப் போகும் பெண்கள் வந்துவிட, ட்ராவல் என்பதினால் பங்க்ஷனுக்கு இங்கு வந்து உடை மாற்றிக் கொள்ளலாம் என்று அமித்ராவிற்கும் தனக்குமான உடையைக் காரில் இருந்து எடுத்து வந்து கொடுத்தவன், தானும் உடை மாற்றிக்கொள்ள ஆண்கள் எல்லோரும் வெளியே வந்து ஸ்டேஜுக்கு முன் வரிசைக்குக் கொஞ்சம் தள்ளி வட்டம் போட்டு அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து இருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த ஒரு குட்டிப் பெண் “அங்கிள், அங்கிள்” என்று பூர்ணவ்வை தட்டி அழைத்தாள்.

“யார்ரா அது” என்று திரும்பிப் பார்த்தவன் அவன் அமர்ந்திருந்த சேருக்குப் பின் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்தவுடன் அவளுக்கு வாகாகத் திரும்பி அமர்ந்து கொண்டு

“ஹே குட்டி பேபி... யார் நீங்க? என்ன வேணும்? என்ன விசயம்?” என்று படபடவெனக் கேட்டவன் திடீரென அந்தச் சிறுமிக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டு முன்னர்ச் சொன்னதை மீண்டும் மொழி பெயர்க்க வாய் எடுக்க “இந்தாங்க அங்கிள்” என்றபடி அவனது உள்ளங்கைக்குள் ஒரு துண்டு சீட்டை திணித்தாள் அந்தக் குட்டி பேபி.

“பார்ரா தமிழ் புள்ளையா நீ?” என்று இவன் கேட்க அந்தக் குட்டி பேபி டிங்கு டிங்கு என்று மேலும் கீழுமாகத் தலை ஆட்டியது.

கையிலிருந்த துண்டு சீட்டை பிரித்துப் பார்த்தான்.

“ஹே! மிஸ்டர்.ஹேன்சம், எப்டி இருக்கீங்க? எப்போ லண்டன்ல இருந்து வந்திங்க?” என்ற வாசகம் எழுதி ஓர் இதயம் வரைந்து அம்புகுறி வேறு போடப்பட்டிருக்க அவன் யோசனையோடு அதையே பார்த்துக் கொண்டிருக்க அவன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் குட்டி பேபி நாக்கை சுழட்டி “ட்லக் ட்லக்” என்பது போன்ற சத்தத்தை ஏற்படுத்தியது.

அதில் பூர்ணவ் நிமிர்ந்து பார்க்க இரண்டடி பின்னால் நகர்ந்த அந்தக் குட்டி பேபி இவனைப் பார்த்துக் கண்களைச் சுருக்கி உதட்டைக் குவித்து முத்தம் குடுப்பது போல் சைகை செய்துவிட்டு குடுகுடுவென ஓடிவிட்டது.

பூர்ணவ்வோ ஒன்றும் புரியாமல் திகைத்து அமர்ந்து இருக்க அவனது நண்பர்கள் தோளில் தட்ட திரும்பியவனின் எண்ணத்தில் “யாரு இத குடுத்துருப்பாங்க? அமியா இருக்குமோ? இல்ல இல்ல அவ எதுக்கு லண்டன்ல இருந்து எப்போ வந்தேன்னு கேக்க போறா. ரெண்டு பேரும் சேர்ந்து தான இந்தியா வந்தோம்... வேற யாரா இருக்கும்? அதும் தமிழ் ஆளுங்க?” என்று யோசித்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மண்டபத்தில் கூட்டம் அதிகமாக ஆரம்பித்து இருந்தது.

“பூர்ணவ்வ்வ்வ்வ்” என்றபடி ரிஷப்ஷனுக்கு ஏதுவாக எடுத்து வந்திருந்த லெஹெங்காவை உடுத்தி அவனிடம் காட்டலாம் என்று ஆசை ஆசையாக வந்து அவன் முன் நின்ற அமித்ராவின் மீது அவனது கவனம் படியவே இல்லை.

சிகந்தர், வித்யுத், குஷி என அவளது நண்பர்கள் அனைவரும் அவளது பேரழகில் மயங்கி பாராட்டினாலும் அந்தப் பாராட்டுகள் எதுவுமே அவளுக்குச் சுவைக்கவில்லை, அவளது மனது எதிர்பார்த்ததும், ஏங்கியதும் பூர்ணவ்வின் வார்த்தைகளுக்கு மட்டும் தான். இவன் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்து இருக்க இவள் முகம் விழுந்தவிட்டது.

தனது ஏமாற்றத்தை ஒதுக்கியவள் அவனருகே சென்று “என்னாச்சுப் பூர்ணவ்? ஏ ஒரு மாதிரி இருக்க?” என்று அக்கறையோடு கேட்டாள்.

அதிலும் சிந்தனை உலகில் இருந்து வெளிவராதவன் “ஹ்ம்ம்.. இத பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றபடி அந்தத் துண்டு சீட்டை காட்ட அதை மெதுவாக வாங்கினாள் அமித்ரா.

அவள் வாங்கியதும் தான் “என்ன நினைத்துக் கொள்வாளோ?” என்ற எண்ணம் தோன்ற சிந்தனை உலகில் இருந்து வெளிவந்தவன் முதலில் பார்த்தது அந்தத் துண்டு காகிதத்தில் எழுதி இருந்த வார்த்தைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை தான்.

“அமி” என்றபடி அவன் லேசாக அவளது தோளில் தட்ட நிமிர்ந்து இவனைப் பார்த்தவள் “யா.. யாரிது பூர்ண..வ்?” ஏதோ ஓர் இனம் புரியாத பயத்துடன் கேட்டாள்.

அந்த நேரம் மணப்பெண்ணான மித்ரா அவளது அறையில் இருந்து வெளி வர எல்லோரது பார்வையும் விழாவின் நாயகியான அவள் மீது திரும்பிவிட்டது.. அதில் இவளை ஆழ கவனிக்காதவன் “யாரா இருந்தா என்ன? அத தூக்கி தூர வீசு.. அங்க பாரு மித்ரா வந்துட்டா... வா போய் பொண்ணையும் மாப்பிள்ளையையும் கலாய்க்கலாம்” என்று கூறி கையோடு சேர்த்து இவளையும் இழுத்துப் போனான்.

சும்மாவே எழுவரும் கூடிவிட்டால் அமால் டுமால் தான், இதில் திருமண நிகழ்ச்சி வேறு என்றால் சொல்லவா வேண்டும்? ஆட்டம் பாட்டம் என்று எழுவரும் சேர்ந்து மேடையில் பிச்சு உதறினார்கள்... இதில் பாவம் தனியாக நின்று போனது என்னவோ மித்ராவின் மாப்பிள்ளை தான். இவர்கள் அடித்த கூத்தில் அங்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் “வந்திருப்பது ரிஷப்ஷனுக்கா இல்லை காலேஜ் கல்சுரல்சிற்கா?” என்று குழம்பி போய் அழைய ஒருவழியாக தெய்வங்கள் மனமிறங்கி ஸ்டேஜை விட்டு இறங்கி மித்ராவின் வருங்காலக் கணவனின் வயிற்றில் பாலை வார்த்தனர்.

மித்ராவையும் மாப்பிள்ளையையும் வாழ்த்தி பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு அறுவரும் கீழே இறங்க “கம் லெட்ஸ் கோ அண்ட் ஈட்” என்று அஞ்சிதா நாக்கை சுழற்றியபடி முன்னே நடக்க அவளைப் பிடித்துப் பின்னால் இழுத்த பூர்ணவ் “சரியான சோத்துக்குப் பொறந்தது, நின்னு தொல... நீ இப்போயே போனா அடுத்தப் பந்திக்கு சாப்பாடு இருக்காது.. நம்ம மித்ரா கல்யாணம் வேற, யாரும் எந்தக் கொறையும் சொல்லிடக் கூடாது” என்று பூர்ணவ் நமட்டுச் சிரித்துக் கொண்டே பார்வையைப் சுழல விட மாப்பிள்ளை, பெண் இருவரும் மேடையில் நின்று இருக்கப் பக்கத்தில் ஒரு மேடைப் போட்டு இருக்க அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

“என்னடா இது.. பொண்ணு மாப்ள அங்க இருக்காங்க.. இங்க எதுக்கு எல்லாரும் இப்டி முந்தி அடிச்சுகிட்டு நிக்க முடியாம நின்னுட்டு இருக்காங்க?” என்று பூர்ணவ் கேட்க “அது மாப்பிள்ளைக்குக் கர்நாட்டிக் சங்கீதம்ன்னா ரொம்பப் பிடிக்குமாம், அதனால பேமசான கர்னாடிக் சிங்கர் ஒருத்தவுங்கள கச்சேரிப் பண்ண வரவச்சுருகாங்கலாம்,அவுங்க பேன்ஸ் தான் போல இவங்க எல்லாம்” என்று அமி அவளுக்கு மித்ரா கொடுத்த விளக்கத்தை இங்கே அள்ளி விட

“அப்போ நாம பந்திக்கே போயிடலாம் வாங்க” என்று முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டான் பூர்ணவ்.

தமிழ் பாட்டு என்றாலே அசட்டையாக உதட்டை சுழிப்பவன், கர்நாட்டிக் சங்கீதம் என்றால் தலை தெறித்துத் தான் ஓடுவான் என்று அவனை நன்றாகப் புரிந்து வைத்திருந்த மற்ற நண்பர்களும் சிரித்துக் கொண்டே அவன் பின்னால் சென்றனர்.

பப்பே, பந்தி இரண்டுமே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.. பூர்ணவ் பந்தி பக்கம் போகச் சிக்கந்தரோ “பூர்ணவ் வொய் ஆர் யு கோயிங் தேர், கம் டு பப்பே” என்று கூறுவது கேட்க, நின்ற பூர்ணவ் சிக்கந்தரையும், வித்யுத்தையும் பார்த்து

“அடடே உங்கள மறந்துட்டேன்ல, டேய் சிங்கு, டேய் பங்கு.. நீங்க ரெண்டு பேரும் இப்போ தான பர்ஸ்ட் டைம் சவுத் இந்தியன் வெட்டிங்க்கு வந்துருக்கிங்க... வாங்கடா இன்னைக்கு உங்கள வச்சு செய்றேன்...” என்றபடி இருவரது பின்னகழுத்திலும் கைகளை வைத்து அழைத்துச் செல்ல இரண்டு மூன்று அடிகளை எடுத்து வைத்துவிட்டவனுக்கு ஏதோ நியாபகம் வர நின்று திரும்பியவன் “அம்மா.... குஷிஈஈஈ” என்று ராகமாக இழுத்தான் “நம்மை மறந்து விட்டான், எப்படியாவது தப்பித்து விடலாம்” என்று தீவிரமாகத் திட்டம் போட்டுக் கொண்டிருந்த குஷியைப் பார்த்து.

அவன் தன்னைக் கண்டு கொண்டதை புரிந்து கொண்ட குஷி “ஹி ஹி ஹி அம் டூ கம்மிங் வித் யூ ஒன்லி பூர்ணவ்” என்றாள் ஈ என்று இளித்தபடி “ஆங்.. அது!” என்றவன் “அமி, அஜி எதுக்கு இருந்தாலும் நீங்க அவ கையப் பிடிச்சுக் கூட்டிட்டுவாங்க ஓடிர போறா... வாங்கடா உங்களுக்கெல்லாம் இன்னைக்கு வாழை இலைல தான் சோறு... அதுவும் ரசமா ஊத்த சொல்றேன்... எப்டி சாப்பிட்டு எந்திருக்கிரிங்கன்னு பாத்துடுறேன்” என்று சபதம் போட்டுக் கொண்டு பந்தியில் அமர வைத்தவன், தானே அவர்கள் மூவருக்கும் இலை போட்டு, சோறு போட்டு ரச வாளியை எடுத்துக் கொண்டு “ஆங்... உள்ள குழி பறிங்க பாக்கலாம்” என்று கூற மூவரும் திருதிருவென விழித்தனர்.

இலையிலேயே சாப்பிட்டுப் பழக்கம் இல்லாத அந்த மூன்று வட இந்தியர்களுக்கும் ரசத்துக்குக் குழி பறிக்க வேண்டும் என்று சொன்னால் எங்ஙனம் புரியும்? அமியும் அஜியும் அவர்களுக்கு உதவி செய்ய ரசம் மட்டுமே அவர்களுக்குப் போட்டுச் சாவடித்தான் பூர்ணவ்.

ஆனான தமிழ் நாட்டு ஆளுங்க பாதிப் பேத்துக்கே இன்னும் ரசத்தை இலையில் ஊற்றிச் சிந்தாமல் சாப்பிட தெரியாது.. வட இந்தியர்கள் அவர்களும் தான் பாவம் என்ன செய்வார்கள்.

ஒருவழியாக அவர்கள் மூவரும் சாப்பிட்டு எழும் பொழுது மூவரின் உடை முழுக்க ரசமாகத் தான் இருந்தது.

திருப்தியாக அதைப் பார்த்தவன் “ஆங்... ஒரு ரவுண்ட் முடிஞ்சுச்சு.. அடுத்து எங்க கல்யாணத்துலையும், அஜி கல்யாணத்துலையும் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட அவர்கள் மூவரும் ஆள விடுடா சாமி என்று கும்பிடு போடாத குறையாக எழுந்து கை கழுவ ஓடினார்கள்.

இதையெல்லாம் சில நிமிடங்களுக்கு முன் அங்கு வந்த அந்த இருகண்களும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அஜி, பூர்ணவ், அமித்ரா மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.

அப்பொழுது மீண்டும் தத்தி தத்தி நடந்து வந்தாள் அந்த குட்டி பேபி.. மீண்டும் நாவை மேலன்னத்தில் தொட்டு “ட்லக் ட்லக்” என்று சத்தம் கொடுக்கத் திகைப்புடன் நிமிர்ந்தது சாப்பிட்டுக் கொண்டிருந்த பூர்ணவ் சந்திரனின் தலை.

“அய்யோ இந்தக் குட்டி சாத்தானா?!” என்ற உணர்வோடு அவன் பார்த்துக் கொண்டிருக்க

அவனது இலைக்கு அருகே வந்து முன்னரை விடச் சற்று நீளமான துண்டு சீட்டு ஒன்றை வைத்துவிட்டு மீண்டும் அவனிடம் கண்களை மூடி உதட்டைக் குவித்துக் காண்பித்துவிட்டு கிழுக்கிக் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டது.

அவன் பக்கத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த அமித்ராவின் பார்வை அந்தக் காகிதத்தின் மீது படிந்தன.. இவ்வளவு நேரம் திக்குத் தெரியாமல் காணாமல் போயிருந்த அந்த இனம்புரியா பயம் மீண்டும் வந்து அவளது மனதில் அமர நடுங்கிக் கொண்டிருந்த இடது கையோடு மடித்து இருந்த அந்தத் துண்டு காகிதத்தைப் பிரித்தாள்.

காகிதத்தில் உள்ள வார்த்தைகள் பூர்ணவ், அமித்ரா இருவரின் கண்களுக்கும் தெரிந்தன.

“உனைப் பார்க்காத நாட்களில்

பாலைவனத்தில் ஓடையாய் நான்...

பார்த்தவிட்ட வினாடி

சந்திரனைக் கண்ட அல்லியாய் இந்த மான்

மன்மதனே உனை அடைந்திட

மாபெரும் தவங்கள் கூடச் செய்திடுவேன்

எனது இசை இரவில்

இந்திரனாய் வந்து சேர்ந்திடு சந்திரா....

என்றும் உனை மீட்டிட துடிக்கும் இசை நான்

வரம் தருவாயா?

நான் யாரென்று உணர்வாயா?”
 
அத்தியாயம் - 25

பூர்ணவ் சந்திரனின் கார் சென்னையை நோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. வந்த போது இருந்த வேகமோ, அட்டகாஷமோ எதையும் காணவில்லை. காரே அமைதியைத் தத்தெடுத்து இருந்தது.

அமித்ரா டிரைவருக்குப் பக்கத்துச் சீட்டில் கண் மூடி சாய்ந்து இருக்க, டிரைவர் சீட்டில் இருந்த பூர்ணவ் ரோட்டையும், அமித்ராவையும் என மாறி மாறி பாத்தபடி ஒட்டிக் கொண்டிருந்தான்.

மண்டபத்தில் நடந்த விசயங்கள் அவனது மனக்கண்ணில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது.

அந்தக் காகிதத்தில் எழுதி இருந்த கவிதையைப் பூர்ணவ், அமித்ரா இருவருமே படித்திருக்க, ‘என்ன பேப்பர் அது?’ என்று அமித்ராவை இடித்துக் கொண்டு பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்த அஜிதாவிற்குத் தமிழ் எழுத்துக்கள் கண்களுக்குத் தெரிய, அது எங்கே புரியப் போகிறது என்று நினைத்தவள் “இது எந்தாணு அமித்ரா?” என்று வாயில் குலோப் ஜாமுனை அமுக்கிக் கொண்டே அஜிதா கேட்க

அந்தக் காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்த அமித்ராவின் வாயில் இருந்து “சாப்ட்டியா பூர்ணவ்?” என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

யார் இப்படி விளையாடிக் கொண்டிருப்பது என்ற யோசனையோடு “ஆங்.. ஆச்சு அமி” என்று அவன் கூறிய வினாடி “ஏந்திரி” என்றாள் தானும் எழுந்தபடி.

“ஏய் அமி நீ இன்னும் சரியா சாப்டல” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவனை இடது கையால் பிடித்துக் கூப்பிட்டு வந்தவள் தானும் கை கழுவி அவனும் கை கழுவி முடிந்ததும் தங்கள் பின்னாடியே ஓடி வந்த அஞ்சிதாவைப் பார்த்து “அஜி, எங்களுக்கு ஒரு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு... சோ வீ ஆர் லீவிங்,... மித்ரா கிட்டயும் மத்தவுங்க கிட்டயும் சொல்லிடு” என்று கூறிவிட்டு பூர்ணவ்வின் கையைப் பிடித்து மண்டபத்தை விட்டு இழுத்துப் போனாள் அமித்ரா.

அந்தக் குட்டி பேபியிடம் காகிதத்தைக் கொடுத்துவிட்டு பூர்ணவ்வின் அதைப் படிக்கப் போகும் பூர்ணவ்வின் எதிர்வினையைப் பார்க்க ஆவலாகக் கதவிற்கு அருகே நின்றுக் காத்துக் கொண்டிருந்த யாழிசையை “மேடம். வேற மைக் மாத்தியாச்சு.. வாங்க ஆரம்பிக்கலாம்” என்று வயலின் வாசிப்பவன் வந்து கூப்பிட்டு விட அங்குப் போய்விட்டவளால் இங்கு நடந்த எதையும் பார்க்கமுடியவில்லை.

பூர்ணவ் எவ்வளவு பேசிப் பார்த்தும் சென்னைக்குப் போக வேண்டும் என்பதில் அமித்ரா பிடிவாதமாக இருந்து விட அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.அதன் பிறகு வந்து காரில் ஏறியதில் இருந்து இப்பொழுது வரை அமித்ரா அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை.

ஒரு கட்டத்தில் இவனும் அலுத்துப் போய் அமைதியாகிவிட்டான்.

அவன் தனது சொந்தக்காரப் பிள்ளைகளிடம் கூட அதிகம் ஒட்டுதலாக இருந்ததில்லை... உடன் பிறந்தவர்களும் இல்லை.. வெளிநாடு வந்த பிறகே பெண்கள் நட்பெல்லாம். ஆனால் இப்படி, இந்த மாதிரியான சூழ்நிலை அவனுக்குப் புதிது.

இதை எப்படிக் கையாள வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை.

நடுவில் ஏதாவது காபியோ, ஜூசோ குடிக்கலாம் என்று இவன் காரை நிறுத்தியபடி அழைத்த போது கூட அமித்ரா எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

அதற்கு மேல் பயணம் அப்படியே போக அமித்ராவின் வீடு வந்ததும் “அமி வீடு வந்துருச்சு” என்று அவளது தோளை தட்டினான்.

இத்தனை நேரம் கண்களை மூடியே இருந்தவள் இப்பொழுது திறக்க, வடிகால் கிடைத்துவிட்ட வெள்ளம் என அவளது கண்களில் இருந்து கண்ணீர் கடகடவெனக் கன்னத்திற்கு இறங்கியது.

இதைப் பார்த்துப் பதறியவன் “ஏய், அமி, என்னாச்சு? ஏ அழுகுற?” என்று கேட்க

“பூர்..ணவ், நீ.. என்னைய.. என்னைய.. விட்டுட்டுப் போயிட மாட்டில்ல...” அழுகையைத் தொண்டைக்குள் அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“அமித்ரா... என்ன இது சின்னக் கொழந்தையாட்டம்... எதுக்கு இப்டி எல்லாம்” என்று அவளது கண்களைத் துடைத்து விட்டப்படிக் கேட்க நடுவில் இருந்த கியரைத் தாண்டி அவனை அணைத்துக் கொண்டாள்.

இவனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை.

இப்படி எல்லாம் அழுகும் பெண்ணைச் சமாதானம் படுத்தும் நிலையில் அவன் இதற்கும் முன் இருந்ததில்லை.

அவன் அவளது தலையைக் கோதியபடி “அமி, வாட்ஸ் த ப்ராப்ளம்?” என்று பொறுமையாகக் கேட்க “பூர்ணவ், ஐ க்னோ... நீ என்னைய லவ் பண்ணவே இல்ல... நாளைக்கே நம்மளுக்குக் கல்யாணம் நடந்துட்டாலும் அது உனக்கு ஜஸ்ட் அர்ரேஞ் மேரேஜ் மாதிரி தான்.. பட்,, இட்ஸ் நாட் சேம் பார் மீ பூர்ணவ்... ஐ.. ஐ.. லவ் யூ பூர்ணவ், ஐ லவ் யூ சோ மச்.. எனக்குத் தெரியும் என்மேல உனக்கு லவ்ன்ற பீலிங்லாம் இன்னும் வரலைன்னு... நாளைக்கு வருமா.. வராதான்னு எனக்குத் தெரியல.. பட் ஸ்டில் ஐ லவ் யூ” என்று அழுகையில் குழுங்கியபடி அவனை மேலும் இறுக்கிக் கொள்ள

முதல் முறையாக அமித்ராவின் வார்த்தைகள் பூர்ணவ்வின் இதயத்தை அசைத்துப் பார்த்தன.

அவளது தோளில் தட்டியபடி “அமி.. ஐ க்னோ.. ஐ க்னோ... காம் டவுன்.. இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்ற?” என்று கேட்டான் புரியாமல்

அவனை விட்டு நிமிர்ந்தவள் “நீ இதுவரைக்கும் என்கிட்ட திருப்பி ஐ லவ் யூன்னு சொன்னது இல்ல.. அது என்னைக்கும் எனக்குப் பெருசா தெரிஞ்சதே இல்ல.. பிகாஸ் நீ என் லவ்வ ஒத்துக்கிட்டதே போதும்ன்னு எனக்குத் தோணிச்சு... என்னோட லவ் மட்டுமே நம்ம ரெண்டு பேத்துக்கும் போதுமானதுன்னு தோணிச்சு... ஆனா இன்னைக்கு.. இன்னைக்கு நடந்த சம்பவங்கள், என் மனசுக்குள்ள ஒரு இன்செக்யூரிட்டிய உண்டாக்கிருச்சுப் பூர்ணவ்... நீ என்னைய விட்டுப் போய்டக்கூடாதுன்ற சுயநலத்த உருவாக்குது பூர்ணவ்... நீ சுதந்திரமானவன்,,, நா உன்னைய லவ் பண்றதுக்காக நீயும் என்னைய லவ் பண்ணனும்னு என்னால உன்னைய என்னைக்கும் போர்ஸ் பண்ண முடியாது.. ஆனா அது மூளைக்குப் புரிஞ்சாலும், மனசுக்குப் புரியமாட்டேங்குது பூர்ணவ்... ஐ டோன்ட் க்னோ வாட் டூ டூ” என்று அவள் மேலும் பைத்தியக்காரி போல் பிதற்ற ஆரம்பிக்க நெஞ்சம் உருக அவளைத் தன்னோடு, தன் நெஞ்சோடு சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான் பூர்ணவ்.

“அமி.. காம் டவுன்.. ஏ இப்டிலாம் யோசிக்குற..” என்று அவன் என்ன சொன்னாலும் அவளது பிதற்றல் நிற்கவில்லை.

அவளது தலையை ஆதுரமாகத் தடவி கொண்டிருந்த பூர்ணவ்வின் கையையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவள் “பூர்ணவ்... நாளைக்கு உனக்கு வேற யார் மேலையாச்சு லவ் வந்துருச்சுன்னா என்னைய விட்டுட்டுப் போய்டுவ தான.. என்னால என்னைக்கும் உன்னைய போர்ஸ் பண்ணி என் கூடவே இருக்க முடியாது தான” என்று அவள் பேசிக் கொண்டே அழுது கொண்டிருக்க அவளது கண்களில் இருந்து இறங்கிய கண்ணீர் அவள் தன்னோடு சேர்த்து இறுக்கிப் பிடித்திருந்த அவனது வலது கையில் விழுந்தது.

அவளை நிமிர்த்தியவ்ன் “அமி... என்னைய பாரு” என்றான்.

“.....”

“அமி... என்னைய பாரு” அழுத்தமாக வெளிவந்தன வார்த்தைகள்.

நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளது கண்கள் அவள் அணிந்து இருந்த லெஹெங்காவின் அடர் சிவப்பு நிறத்தை தன்னில் எடுத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தான் அவளது உடையைக் கவனித்தான்.

செர்ரி பழங்களின் மேல் தேனை ஊற்றினால் சிவப்போடு சேர்த்து ஒரு மினுமினுப்பு தெரியுமே அதை அப்படியே எடுத்து நூலாக்கி உடையாக்கினால் எப்படி இருக்குமோ அதே அந்த லெஹெங்காவின் நிறமாக இருக்க, வட இந்தியர்கள் பாணியில் உடுத்தி இருந்தாள்.

கழுத்தில் வெள்ளை வைரக் கற்கள் பதித்த சோக்கர், காதுகளில் அதற்கு ஏற்ற கம்மல்கள், அவற்றி இருந்து வெளிவந்திருந்த முத்து கோர்க்கப்பட்டு இருந்த மாட்டல்கள் பின்னால் இடப்பட்டிருந்த மெஸ்ஸி பன் எனப்படும் முடிகள் அங்கு இங்குக் கசகசவென தொங்கிக் கொண்டிருக்கும் போலானதொரு கொண்டையில் சொருகப்பட்டிருக்க, உதட்டில் லிப் பால்ம் மட்டுமே.. கண்களின் மேலே மட்டும் இடப் பட்டிருந்த மை, ‘இன்னும் கொஞ்சம் கசக்கின கன்ன அவளோதான் பாத்துக்கோ’ என்று மிரட்டிக் கொண்டிருக்க, என்னையும் பாரேன் என்று மினுங்கிக் கொண்டிருந்தது அவளது கையில் போட பட்டிருந்த வைர ப்ரெஸ்லெட்.

மொத்தத்தில் நிகரில்லா பேரழகி அமித்ரா.

வீட்டிற்கு ஒரே வாரிசு.

பல நூறு கோடி சொத்திற்கு அதிபதியான தொழிலதிபர் சிவசாமியின் ஒரே மகள்.

பெயர் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கியவள், அளவுக்கு அதிகமாக இருந்தாலும் தெளிவான அறிவு, அவளது தொழில் ஞானத்தைப் பார்த்துப் பலமுறை பூர்ணவ்வே ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தி இருக்கிறான்,அதிகம் யாரையும் கடிந்துக் கூடப் பேசாத பொறுமையான சுபாவம், இதையெல்லாம் தாண்டி அவளின் பின்னால் சுற்றி வெளிநாட்டவரிலிருந்து, உள் நாட்டவர் வரை எத்தனையோ பேர் ப்ரோபோஸ் செய்வதைப் பார்த்து பூர்ணவ்வே நிறைய முறை கலாய்த்திருக்கிறான்.

ஆனால் அவளது உள்ளம் உருகுவது பூர்ணவ் சந்திரனுக்காக மட்டுமே.

எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் மனம் கொண்டவள் தடுமாறித் தத்தளிப்பது அவனிடம் மட்டுமே.

இதையெல்லாம் நினைத்தவனுக்கு ஏனோ மனது பிசைந்தது.

அவள் அவனுக்கு அளித்த எல்லா காதலையும் அவளுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் எழுந்தது.. ஆனால் அதே நேரத்தில் அந்த எண்ணத்தின் பேர் தான் காதலா? என்று அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை.

கடமைக்காக காதல் செய்ய முடியாது அல்லவா...?

நீண்ட ஒரு மூச்சை இழுத்து விட்டவன், அவனையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் அவளின் சிவந்த கண்களைப் பார்த்து “அமி.. என்னைய கேட்டா நீ இப்போ பீல் பண்றது எல்லாம் தேவையே இல்லாததுதான்னு சொல்லுவேன்.. பிகாஸ் நாம மேர்ரேஜ் பண்ணிக்கப் போறோம்... நீ தேவையில்லாம எதுக்கும் பயப்படாதா.. ஜஸ்ட் சியர் கேர்ள்.. அடுத்த ஒரு மாசத்துக்கு நாம ஸ்டார்ட் பண்ண போற புதுக் கம்பனி சம்பந்தமா அமெரிக்கா போகப் போறோம்.. லெட்ஸ் தின்க் அபவுட் தட்.. அம் ஸ்யூர் வீ வில் கோயிங் டு ஹேவ் பன்...” என்று அவளைத் தேற்றத் தெரியாமல் தேற்றுகிறேன் என்ற பெயரில் ஒரு பெரிய புன்னகையோடு சொன்னவன் “அண்ட் இந்த ஒன் மன்த் ட்ரிப் முடிஞ்சுட்டு வந்த உடனேயே நா அப்பாகிட்ட நம்ம மேரேஜ் பத்திப் பேசுறேன்.. ஓகே...? அண்ட் தென் ஐ வில் பி ஆல் யுவர்ஸ்” என்று அவன் சொன்னவுடன் தான் அவளது முகத்தில் ஏதோ ஒரு நிம்மதி பிறந்தது.

அதைக் கண்டு தானும் நிம்மதி உற்றவன் “சரி கெளம்பு, நாளைக்குக் காலைல சீக்கிரம் ரெடி ஆகி இரு.. நா வந்து உன்ன பிக் அப் பண்ணிட்டுப் போறேன் ஏர்போர்ட்டுக்கு” என்று சொல்ல சரி என்பது போல் தலை ஆட்டியவள் காரை விட்டு இறங்கி மெல்ல நகர்ந்து அவனுக்குக் கை அசைத்துவிட்டுப் போய்க் கேட்டை திறந்து கொண்டு உள்ளே போய்விட்டாள்.

அவளது முகத்தில் இத்தனை நேரம் இருந்த குழப்பம் இப்பொழுது தீர்ந்து இருப்பதைப் பார்த்து நிம்மதி உற்றவன் தானும் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

காரை போர்டிகோவில் பார்க் செய்துவிட்டுப் பூர்ணவ் வீட்டிற்குள் நுழையும் போதே “மா........மா” என்றபடி ஓடிவந்து பூர்ணவ்வைக் கட்டிக் கொண்டாள் ஆத்விகா.

“ஹே ஆத்வி எப்போ வந்தடா?” என்று பூர்ணவ்வும் சந்தோசமாகக் கேட்க

அவனை விட்டு நகர்ந்தவள் “நேத்து தான் மாமா.. அம்மா இந்தியா வர சொல்லி நச்சரிச்சுட்டே இருந்தாங்க... நானும் அப்போ இப்போன்னு தள்ளிப் போட்டுகிட்டே இருந்தேன்.. அப்ரோ நாலு நாளைக்கு முன்னாடி தான் அம்மா கால் பண்ணி நீங்க படிப்பு முடிச்சு லண்டன்ல இருந்து வந்துட்டிங்கன்னு சொன்னாங்க.. நீங்க வந்துட்டிங்கன்னு நா நியுசிலாந்துல இருந்து கெளம்பி வந்தா,, உங்களக் காணோம்... ஐ வாஸ் வெரி அப்செட்.. இதுக்கு நா உங்களுக்கு நல்ல ஒரு பெரிய பணிஷ்மன்ட் குடுக்கப் போறேன்..” என்று அவள் பேசிக் கொண்டே போக

அவள் பேசுவதையே முகம் நிறைந்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்த பூர்ணவ் இடை புகுந்து “போதும் போதும் போதும்.. வா உள்ள போய்ப் பேசலாம்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே

அங்கே வந்த ஆத்விகாவின் அம்மாவும், இளையசந்திரனின் ஒரே தங்கையுமான காந்திமதி “வந்ததுல இருந்து உன்னோட புராணமே தான்பா பூர்ணவ்..” என்று சொல்ல

“ம்ஹூம்..” என்றபடி ஆத்விகாவின் தலையை லேசாகக் களைத்துவிட்டவன் “மாமன் மேல அவளோ பாசமா ஆத்வி?” என்று நடிகர் திலகம் சிவாஜி குரலில் அவன் சிரித்துக் கொண்டே கேட்க

ஆத்விக்கு முன்னர் முந்திக் கொண்ட காந்திமதி “பின்ன இருக்காதாப்பா.. இத்தன நாளா நா எத்தனக்கூப்பிட்டும் இந்தியா வராதவ.. நீ வந்துட்டன்னு சொன்ன உடனேயே கெளம்பி வந்து நிக்குறா பாரு... ஆயிரம் இருந்தாலும் கட்டிக்கப் போறவன் மவுசு வருமா?” என்று சலித்துக் கொள்வது போல் புன்னகையோடு பேசி வைக்கக் கேட்டுக் கொண்டிருந்த பூர்ணவ்வின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்துவிட்டது....

ஆத்வியிடம் திரும்பி “ஆத்வி... தாகமா இருக்கு.. தண்ணி எடுத்துட்டு வா” என்று சொல்ல அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு சமயலறைக்கு ஓடியதைப் பார்த்தவன், காந்திமதியிடம் திரும்பி

“அத்த நா எத்தன தடவ உங்ககிட்ட சொல்லிட்டே... நா ஆத்விய என்னைக்கும் அப்டிப் பாத்தது இல்ல.... தேவை இல்லாம சின்னப் பொண்ணு மனசுல ஆசைய விதைக்காதிங்க” என்று அடிக்குரலில் சீர உதட்டை சுழித்துக் கொண்டார் காந்திமதி.

காந்திமதியை நியுசிலாந்தில் பணி புரிபவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார் இளைய சந்திரன். இரு வருடங்களுக்கு முன் காந்திமதியின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட அன்று வந்து அண்ணன் வீட்டில் அமர்ந்தவர் தான் காந்திமதி.

ஆத்விகாவிற்குப் படிப்பு முடியாமல் இருக்க, அவள் மட்டும் நியுசிலாந்தில் தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

காந்திமதிக்கு ஆத்விகாவிற்குப் பூர்ணவ்வை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை. அது தான் அண்ணன் வீட்டில் அவர் தங்கி இருப்பதற்கான மூலக் காரணம் என்று கூடச் சொல்லலாம்.

ஆத்வியைத் திருமணம் செய்து வைத்துவிட்டு காலத்திற்கும் மகளோடு அண்ணன் வீட்டிலேயே இருக்கும் எண்ணமும் அவரது மனதில் இருக்கின்றது.

அதன் பொருட்டே அடிக்கடி இப்படி “கட்டிக்கப்போறவன், முறைப்பையன்” போன்ற வார்த்தைகளைப் போட்டு வைப்பார். ஒவ்வொரு முறையும் பூர்ணவ் அதைக் கவனிக்கும் பொழுது கண்டித்தாலும், சேலையில் விழுந்த தூசைப் போல் தட்டிவிட்டுவிட்டு மீண்டும் அதையே சொல்லி வைக்கும் வழமைக் கொண்டவர்.

அது சமயம் பூர்ணவ்வை எடுத்துக் கொண்டால் எப்பொழுதாவது தான் ஆத்வி அவனது வீட்டில் வந்து தங்கி இருந்தாலும், அவர்களுக்குள் நல்ல ஒரு பாசப்பினைப்பு இருந்தது... தங்கை பாசம் கிடைக்காத தனது உலகத்தில் தங்கையாகவும், முதல் பெண் நட்பாகவும் வந்த ஆத்வியின் மீது அளவில்லா பாசத்தைத் தாண்டி வேறு எந்த எண்ணமும் அவனுக்குத் தோன்றவில்லை. ஆத்விகாவிற்கும் அதே மனநிலை தான்.

தண்ணியோடு வந்தவள் “இந்தாங்க மாமா” என்றுவிட்டு “நா உங்களுக்கு என்ன பணிஷ்மன்ட் குடுக்கப் போறேன்னு கேளுங்க” என்று சிணுங்க

தண்ணியை அருந்தியவாறே புருவத்தை உயர்த்திக் கேட்டான்

“அது என்னன்னா.. நா இங்க இருக்கப் போற ஒரு மாசமும் நீங்க புல்லா என் கூடவே தான் இருக்கணும்.... அண்ட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து மொத்த தமிழ்நாட்டையும் சுத்த போறோம்” என்று அவள் ஆர்பாட்டமாக அறிவிக்க

கண்களை விரித்தபடி தண்ணி கிளாசை வாயில் இருந்து எடுத்தவன் “ஐயையோ, ஆத்வி... நா ஒன் மன்த்துக்கு வெளிநாடு போறேன்” என்று சொன்னதும் அவளது முகம் சப்பென்று சுருங்கிவிட்டது.

பூர்ணவ் வெளிநாடு போவானா?

இல்லை இங்கேயே இருப்பானா?

அவனது தந்தையிடம் அமித்ராவைப் பற்றிப் பேசுவானா?

யாழிசைக்கும் அவனுக்கும் திருமணம் ஆகப் போவது எப்படி?

அடுத்த அத்தியாத்தில் காண்போம்.
 
அத்தியாயம் - 26

காலையிலேயே பூர்ணவ்வும், ஆத்விகாவும் விமான நிலையம் செல்ல தயாராகி இருந்தார்கள்.

நேற்று பூர்ணவ் வெளிநாடு செல்லப்போவதாக சொன்னதும் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆத்விகாவும் காந்திமதியும். தத்தா காலத்து வீடு வேறு ஆட்டம் கண்டுவிடுமோ என்று பயந்து பூர்ணவ் அவர்களைச் சமாதானப்படுத்தத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க அப்பொழுது “என்னமா ஆத்வி என்ன விசயம்? எதுக்கு இப்படி வீடு அதிருது?” என்று கேட்டபடி உள்ளே வந்தார் இளையசந்திரன் கூடவே யசோதாவும்.

உடனே அவர் பக்கம் போன ஆத்வி “பாருங்க மாமா, பூர்ணவ் மாமா இப்போ தான் வீட்டுக்கு வந்தாரு, அவரு இந்தியா வந்துருக்காருன்னு தான நானும் இந்தியா வந்தேன்.. இப்போ பாருங்க பூர்ணவ் மாமா திருப்பியும் வெளிநாடு போறாராம்” என்று சிணுங்க, அவளது தலையைப் பாசத்தோடு வருடிய இளையச்சந்திரன் “அவன் புதுசா கம்பனி ஆரம்பிக்கப் போறான்டா.. அந்த வேல சம்பந்தமா தான் வெளிநாடு போறான்” என்று எடுத்துரைக்க இதைக் கேட்டு ஆச்சரியத்தோடு பூர்ணவ்விடம் திரும்பினாள் ஆத்விகா. காந்திமதிக்குமே இது புதிய செய்தி தான்.

“வாவ் மாமா.. புது கம்பனியா... கங்கிராட்ஸ்” என்று அவனுக்குக் கைக் குடுத்தபடி துள்ளிக் குதித்தாள் ஆத்விகா.

“முன்னாடியே பூர்ணவ் இந்தியா வர்றான்னு தான் நீயும் இங்க வர்றேன்னு தெரிஞ்சுருந்தா, அவன் கிளம்பறத பத்தி உனக்குச் சொல்லிருப்போம் ஆத்விமா” என்று ஆத்விகாவின் கள்ளமற்ற சந்தோசத்தைப் பார்த்து புன்னகையோடு யசோதா சொல்ல

“அப்போ அண்ணா, அண்ணி ரெண்டு பேருக்குமே பூர்ணவ் அமேரிக்கா போறதப் பத்தி தெரிஞ்சுருக்குது... எனக்கு மட்டும் தான் தெரியல” என்று புழுங்கிக் கொண்டிருந்தார் காந்திமதி.

பூர்ணவ் வேலை விசயமாக வெளிநாடு போகிறான் என்று தெரிந்ததற்குப் பின்னும் ஆத்வியால் ‘அவன் இங்கே இருந்தே ஆக வேண்டும்’ என்று அடம்பிடிக்க முடியவில்லை.

அதனால் “அப்போ நா மட்டும் எதுக்கு இங்க இருந்துட்டு.. நானும் நியூசிலாந்து கெளம்புறேன்” என்று அவள் அவளது திடீர் முடிவை அறிவிக்க

ஆத்வியின் தலையில் நங்கெனக் கொட்டிய பூர்ணவ் “ஏய் அறுந்தவாலு, இப்போ தான வந்த கொஞ்ச நாள் இருந்துட்டு போ” என்று அவன் வேண்டுமென்றே வம்பு இழுக்க

“நீங்களும் இப்போ தான வந்திங்க... அப்போ நீங்களும் இருங்க” வெடுக்கெனப் பதில் சொன்னாள் ஆத்வி.

“வாய், வாய், வாய்.. இந்த வாய் மட்டும் இல்லைன்னா...” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “வாய் மட்டும் இல்லைன்னா நாய் தூக்கிட்டுப் போயிடும்.. அதான மாமா சொல்ல வர்ரிங்க?” அமர்த்தலாக வலது கையைத் தூக்கிக் காட்டி சொன்னவள் “இங்க செம்ம போர் பூர்ணவ் மாமா.. மாமாவும் ஆபிஸ் போயிடுவாங்க... அத்தையும் அம்மாவும் கோவில் கோவிலா சுத்திட்டு இருப்பாங்க.. நா இங்க இருந்து என்ன பண்றது.. அதுக்கு நா நியுசிலாந்தே போயிக்கிறேன்” என்று அறிவித்தவள் அப்பொழுதே விமானத்திற்கும் புக் செய்து விட்டாள்.

அடுத்த நாள் காலையான இன்று விமான நிலையம் செல்ல பூர்ணவ்வோடு காரில் கிளம்பி இருந்தாள்.

கார் வேறு திசையில் செல்வதைக் கவனித்தவள் “எங்க மாமா போறோம்? கோயம்பத்தூருக்கு ரைட் கட்ல தான திரும்பனும்?” என்று புரியாமல் கேட்க

“இன்னைக்கு ஒரு ஆள உனக்கு இன்ட்ரோ குடுக்குறேன்” என்று சொல்லி பூர்ணவ் கண்ணடிக்க, வாயைப் பிளந்தாள் ஆத்விகா.

“மாமா.. கண்ணெல்லாம் அடிக்குறிங்க?! அப்போ நாம மீட் பண்ண போறது ஒரு பொண்ணா?” என்று இவள் கேட்க எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே தலையை மட்டும் அசைத்தான் பூர்ணவ்.

“அடேய் மாமா.. உன்னைய படிக்க வெளிநாடு அனுப்புனா நீ பொண்ண கரெக்ட் பண்ணிட்டு வந்துருக்கியா?” என்று அவள் சிரித்துக் கொண்டே பூர்ணவ்வின் தோளில் அடிக்க

“ஏய் குட்டி சாத்தான் என்ன மரியாதை எல்லாம் கொறையுது?” என்றான் பூர்ணவ் வீராப்பாக

“அச்சோ அத விடுங்க மாமா.. பொண்ணு யாரு? பேரு என்ன? எப்படி இருப்பாங்க?” என்று அவள் அடுக்க அவளது ஆர்வம் நிரம்பிய விழிகளைப் பார்த்து சிரித்தவன்

“பாக்க தான போற” என்றான் அதே மயக்கும் புன்னகையோடு..

இப்படியே அமித்ராவின் வீடு வந்துவிட அவளுக்குப் போன் செய்து வெளியில் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு காரின் பேனட்டில் வந்து அமர்ந்தான் பூர்ணவ் உடன் ஆத்வியும் ஆர்வமாக நின்று கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் கேட் திறக்கப்பட ட்யூனிக் டாப்ஸ், டெனிம் ஜீன் என நவீன தேவதையாக வந்தவளைப் பார்த்து மாமனின் செலக்ஷனை மெச்சிக் கொண்டவள் “ஹாய் அக்கா” என்று துள்ளிக் குதித்துப் போய் அமித்ராவைக் கட்டிக் கொண்டாள்.

“யாரடா எனக்கே தெரியாத இந்தப் புதுச் தங்கச்சி” என்று குழம்பிய அமித்ரா பூர்ணவ்வை பார்த்துப் புருவத்தை அசைக்க, சிரித்துக் கொண்டே இவர்களிடம் வந்தவன் “ஏய் அறுந்தவாலு.. போதும் போதும்.. கெளம்பலாம்” என்று ஆத்வியின் தலையில் நங்கெனக் கொட்டிவிட்டு “அத்தப் பொண்ணு – ஆத்விகா” என்று ஆமித்ராவிற்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கக் கொட்டு வாங்கியவளோ சிலிர்த்துக் கொண்டு “இப்போ எதுக்கு மாமா கொட்டுனிங்க? உங்களுக்கு வகுரு எரிஞ்சா நீங்களும் அக்காவ கட்டிக்கோங்க” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே சொல்ல அமித்ராவிற்கு வெட்கத்தில் முகம் செந்தூரமாய்ச் சிவந்துவிட்டது.

அதை ரசனையாய் பார்த்துச் சிரித்த பூர்ணவ் “சரி சரி வாங்க.. இப்போயே கெளம்புனா தான், கோயம்பத்தூர் போய் ப்ளைட்ட புடிக்க முடியும்” என்று அவசரப்படுத்த, அமித்ராவின் பெட்டியை அள்ளி வண்டியில் போட்டுக் கொண்டு கோயம்பத்தூரை நோக்கி பயணமானார்கள் மூவரும்.

அதுவும் ஆத்விகா அமித்ராவிடம் ஆதி காலத்துத் கதையில் தொடங்கி அன்று நடந்த விஷயம் வரை பேசிக் கொண்டும் இவர்களின் காதல் பற்றிக் கேட்டுக் கொண்டும் வர, பூர்ணவ்வின் காது இரும்பு மெசினில் மாட்டிய கரும்பெனச் சக்கை ஆகிப் போனது. இதை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் அமித்ரா.

-----

மூன்று வாரங்கள் கழித்து...

யாழிசை ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளிக்கச் சென்றிருந்தாள்.

அவள் குளித்து முடித்து வெளியே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வந்த வினாடி “யாழ்.................... இங்க வா யாழ்” என்று திடீரெனக் காதில் பாய்ந்த அவளது தாய் மீனாட்சியின் குரலில் பதறி அடித்துக் கொண்டு தனது அறையில் இருந்து கீழே ஓடினாள் யாழிசை.

பெற்றோரின் அறைக்குள் வந்து அவளது தந்தை சிதம்பரம் நெஞ்சு வலியால் துடிப்பதும், தாய் மீனாட்சி பதறிக் கொண்டும் இருப்பதைப் பார்த்தவளுக்கு மேலும் பதட்டம் அதிகமானது.

“அம்மா என்னம்மா.. அப்பா என்னாச்சு” என்று அவள் பதற

“திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு படுத்துட்டாரு யாழு” என்று கலங்கிய கண்களோடு சொன்ன தாயைப் பார்த்தவளுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரும் போல் இருந்தது.

“இருமா... நா போய்ச் செந்தில் அண்ணாவ கார் எடுக்கச் சொல்றேன்” என்று அவள் விரைய “அவன் தான் ஊருக்குப் போயிருக்கானேமா.. வீட்ல செல்வி மட்டும் தான் சமையல் செய்றதுக்காக இருக்குறா” என்று அவர் தேம்பிக் கொண்டே சொல்ல

“சரி இரும்மா.. வர்றேன்” என்றுவிட்டுப் போர்டிகோவில் இருந்த காரை தானே கொண்டு வந்து வாசலில் நிறுத்தியவள் பெற்றோரின் அறைக்கு ஓடி வந்து “அப்டியே கை தாங்களா தூக்குமா” என்று சொல்ல, இருபெண்களும் சேர்ந்து எப்படியோ காரில் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.

போனில் மருத்துவமனைக்கு அழைத்துவிட்டு ப்ளுடூத்தை எடுத்துக் காதில் சொருகிக் கொண்டு காரை இயக்கினாள் யாழிசை. பதட்டம் அதிகம் இருந்தாலும் தந்தையின் உயிர் தன் கையில் இருக்கின்றது என்பதே அவளுக்கு ஒரு தெளிவைக் கொடுத்து இருந்தது.

அந்தப் பெரிய நவீன ரக மருத்துவமனையின் முன் கார் நிற்க, இவள் போனில் சொல்லி இருந்ததால் ஸ்ட்ரெட்சரை எடுத்துக் கொண்டு ஆட்கள் எல்லாரும் தயாராக மருத்துவமனை முன் நின்று இருந்தனர்.

சிதம்பரத்தை ஸ்ட்ரெட்சரில் கிடத்த, அவரைத் தூக்கிக் கொண்டு வார்டுக்கு விரைந்தனர் மருத்துவமனை ஆட்கள்.

கூடவே ஓடிக் கொண்டிருந்தனர் யாழும், மீனாட்சியும்.

வார்டுக்குள் சிதம்பரத்தை எடுத்துச் சென்றதும் வார்ட் கதவு மூடி விடக் கதறி அழுதார் சிதம்பரத்தின் சகதர்மணி.

எதிரில் இருந்த இருக்கையில் அவரை அமர்த்தி “அம்மா.. அழாதம்மா.. அப்பாக்கு ஒன்னும் ஆகாது” தேற்ற முயன்று தோற்றுப் போனாள் யாழிசை.

நிமிடங்கள் கரைந்தன.

கண்ணீர் மட்டும் கோடுகளாய் வடிந்து கொண்டிருந்தது மீனாட்சியின் கன்னங்களில்.

பக்கத்தில் இரு கைகளையும் காதுகளோடு சேர்த்துத் தலையில் வைத்தபடி வளைந்து அமர்ந்து இருந்த யாழிசைக்கு மேலும் அழுகையை அடக்க முடியுமா என்று தெரியவில்லை.. எங்கே உடல் குழுங்கினால் கூட தாய் தான் உடைந்து போயிருப்பதைக் கண்டு பிடித்துவிடுவாரோ என்ற பயத்தில் தனது உடல் அசைவுகளை அடக்க முயன்றுக் கொண்டிருந்தாள் யாழிசை. மனமெல்லாம் தந்தையின் சிறு வயது முதலான ஞாபக பெட்டகங்கள் திறந்து மின்னலாய் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன. கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிக்க, கைகளில் துடைத்து அவற்றை உயிர்த்த இடத்திலேயே கொல்ல முயன்றாள்.

கிடைத்தது என்னவோ தோல்வி தான்..

அடக்கி அடக்கி நெஞ்சு வெடித்து விடுமோ என்று நினைத்த வினாடியில் “குட்டிமா” என்ற காதில் விழுந்த குரலில், முட்டையில் இருந்து வெளிவந்த கோழிகுஞ்சாய் நிமிர்ந்துப் பார்த்தாள்.

யசோதாவும், இளையசந்திரன் சுருங்கிய புருவங்களோடு இவளை நோக்கி வருவதைக் கண்டவுடன் வடிகால் கிடைத்த நீராய் “மா.....மா” என்ற கூச்சலோடுப் பாய்ந்துப் போய் அவரைக் கட்டிக் கொண்டாள் யாழிசை.

யசோதா போய் மீனாட்சியின் அருகில் அமர்ந்தார்.

யாழிசை இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ரணமெல்லாம் கண்ணீர் கடலாய் மாறி இளையச்சந்திரனின் மாரில் சங்கமித்துக் கொண்டிருந்தன. என்ன ஆனது என்று புரியாமல் பதறியவர் அவளை நிமிர்த்த முற்பட மேலும் இளையச்சந்திரனை இறுக்க அணைத்தவள் “மா..மா அப்பாக்கு எது...ஏதும் ஆகாது தான.. ஏதும் ஆகாது தான மாமா” என்று அழுக யாழிசையின் கண்ணீரை விட வேகமாய்ப் பலமாய் இளையசந்திரனின் நெஞ்சினில் இறங்கின அவளின் வார்த்தைகள்.

“டேய் என்னடா சொல்ற? சித்துக்கு என்ன ஆச்சு?” என்று அவரும் பதற, அவரது உடலில் உண்டான நடுக்கத்தை உணர்ந்த யாழிசை கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து “அப்பா.. அப்பாக்கு” எத்தனை முயன்றும் அவளால் சொல்ல முடியவில்லை. தொண்டை வரையில் அடைத்து இருந்த துயரம் வார்த்தைகளை வெளிவராமல் தடுத்து நின்றது.

இடிந்துப் போய் யசோதாவின் நெஞ்சினில் சாய்ந்து இருக்கும் மீனாட்சியைப் பார்த்தார் இளையசந்திரன்.

வயது ஐம்பதை தாண்டிவிட்டதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை “புல் பாடி செக் அப்” செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் இளையசந்திரன். அதற்காகத் தான் யசோதாவையும் கூட அழைத்து வந்திருந்தார்.

அவர் முதலில் பார்த்ததும் கூட மீனாட்சியைத் தான், உடலை வளைத்து முகத்தைக் கைகளால் மறைத்து அமர்ந்து இருந்த யாழிசையை அவர் முதலில் கவனிக்கவில்லை. மீனாட்சியைப் பார்த்ததும் தான் அவருடன் அமர்ந்திருந்த யாழ் மீது பார்வை விழ இவர்களை நோக்கி வந்திருந்தார்.

அப்பொழுது மருத்துவர் அறையினுள் இருந்து வெளியே வர எல்லோரது பார்வையும் அங்கே இடம் பெயர்ந்தது.

மருத்துவரை நோக்கி சென்றவர்கள் பரபரக்க “கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.. பேஷன்ட் ஓட சிச்சுவேஷன்.. கொஞ்சம் இல்ல.. ரொம்பவே க்ரிட்டிகல் தான்... ரெண்டாவது அட்டாக் வேற..” என்று சொல்லிக் கொண்டிருக்க வீரிட்டுக் கதறி அழுதார் மீனாட்சி.

யசோதா மீனாட்சியைப் பிடித்துக் கொண்டு போய் இருக்கையில் அமர வைக்க மருத்துவரை அழைத்துக் கொண்டு இளையசந்திரன் தனியே போகத் தானும் உடன் போனாள் யாழிசை.

“சார்.. எதா இருந்தாலும் வெளிப்படையா சொல்லி ஆகணும்ல சார்.. அப்போ தான உங்களுக்கும் நிதர்சனம் தெரியும்” என்று அழுகும் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டே மருத்துவர் சொல்ல “புரியுது டாக்டர்... சொல்லுங்க” என்றார் இளை எச்சிலை விழுங்கிக் கொண்டே

“பேஷன்ட் பிழைக்குறதுக்குப் தேர்ட்டி பெர்சென்ட் தான் சான்ஸ் இருக்கு... விச் இஸ் நாட் பேட்.. பட் ஸ்டில் பாதிக்கு பாதிய பிப்ட்டி பெர்சென்ட் கூட இல்ல.. அதான்” என்று அவர் இழுக்க

“தேர்ட்டி பெர்சென்ட் சான்ஸ் இருக்குல டாக்டர்.. நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணுங்க... எவளோ செலவானாலும் பிரச்சனை இல்ல டாக்டர்” என்று நம்பிக்கை ஒளி நிரம்பிய கண்களோடு இளை சொல்ல, அவரின் நேர்மறை எனெர்ஜி டாக்டருக்குள் கூட ஊடுருவ “ஓகே சார்... வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்” என்றார் மருத்துவர்.

“டாக்டர் நாங்க சித்துவப் பாக்கலாமா?” என்று அவர் கேட்க

“ஸ்யூர்... பட் ஒவ்வொருத்தவுங்களா போறது பெட்டர்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் மருத்துவர்.

யாழிசையிடம் திரும்பியவன் “குட்டிமா என் சித்துக்கு எதுவும் ஆகாதுடா.. நீயும் தேவையில்லாம பயந்து என்னையும் பயமுறுத்திவிட்டுட்ட... பாரு என் சித்து எப்டி எழுந்து வர்றான்னு... இரு நா போய் மொதல்ல பாத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சிதம்பரம் இருக்கும் அறைக்குச் சென்றார் இளையச்சந்திரன்.

இளையசந்திரன் அறைக்குள் வந்து பதினைந்து நிமிடங்கள் ஆகி இருந்தன.

சிதம்பரம் இன்னும் மயக்கத்திலேயே தான் இருந்தார்.

இளையச்சந்திரனோ அருகே அமர்ந்து அவர்கள் இருவரும் ஒன்றாகச் சந்தோசமாகக் கழித்த நாட்களை எல்லாம் நினைவு கூர்ந்து தானாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நிமிடங்கள் கரைய சிதம்பரத்திற்கு மயக்கம் தெளிய ஆரம்பிக்க, “சித்து” என்றபடி எழுந்த இளையசந்திரனின் கண்களில் இருந்து இத்தனை நேரம் இல்லாத கண்ணீர்!

“எனக்கு அப்பவே தெரியும்டா உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு” என்று சிதம்பரத்தின் கையைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு சொல்ல “இளை, கு..குட்டிமா... குட்டிமா கல்யாணம்” என்று எடுத்ததும் சிதம்பரம் சொல்ல

“குட்டிமா கல்யாணமா.. அது நாம பேசி வச்ச மாதிரியே பூர்ணவ்க்கும் குட்டிமாவுக்கும் நடக்கும்டா நீ எழுந்து வாடா.. ஊரே மெச்ச ஜாம் ஜாம்ன்னு நடத்தலாம்” என்று இளையசந்திரனின் சொல்ல

“சீக்கி.. சீக்கிரமா ஏற்பாடு பண்ணு... ச..சந்திரா.. என் உயிர் என் குட்டிமா.. கல்யாணத்த பாக்காமையே போயிடுமோனு பயமா இருக்கு” என்று சொன்ன சிதம்பரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடி கீழே விழுந்தன
 
அத்தியாயம் – 27

பூர்ணவ்விற்கும் யாழிசைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது பல வருடங்களாகவே இளையசந்திரன் – யசோதா மற்றும் சிதம்பரம் – மீனாட்சி என நால்வரின் விருப்பமும் முடிவாகவும் இருந்தது.

தங்களது விருப்பத்தைப் பதின் பருவத்தில் இருக்கும் பூர்ணவ் யாழிடம் ஏன் சொல்ல வேண்டும்? சில வருடங்கள் போகட்டும்.. திருமணம் என்று பேச்சு வரும்போது இதுபற்றி அவர்களிடம் பேசுவோம் என்று தான் நால்வரும் பேசி முடிவெடுத்து இருந்தனர்.

இதையெல்லாம் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது யாழ் கேட்டுவிட்டாள் என்பது இவர்கள் யாருக்குமே தெரியாது.. இவர்களின் பேச்சே ஈர்ப்பாக மனதினுள் மறைத்து வைத்திருந்த பூர்ணவ்வின் மேல் காதல் எனும் பிரவாகத்தை எடுக்க வைத்திருந்தது பதினாறு வயதான யாழிசையினுள்.. அது காலப்போக்கில் காதல் விருட்சமாக வளர்ந்து அவளது மனதில் ஆழ வேரூன்றி கிளைப் பரப்பிவிட்டது என்பது வேறு கதை.

இப்பொழுது பாதி உயிராகத் தன் முன் இறைஞ்சிக் கொண்டிருக்கும் தனது ஆருயிர் நண்பனுக்காக இப்பொழுதே பூர்ணவ்விற்கும் யாழுக்குமான திருமணத்தை நடத்தி வைத்து விடலாம் என்ற எண்ணம் இளையசந்திரனுள் உதிக்க, சிதம்பரத்தின் கையைப் பற்றியவர் “சித்து... என்னைக்கு இருந்தாலும் குட்டிமா தான் என் மருமக.. இன்னும் ஒருவாரத்துல பூர்ணவ்க்கும் குட்டிமாக்கும் கல்யாணத்த நா நடத்திக் காட்டுறேன்.. ஆனா அதுக்குப் பதிலா நீ.. நீ நல்லபடியா தேறி வரணும்.. என்னடா புரிஞ்சதா?” தீர்க்கமாக ஆரம்பித்தவரின் குரல் இறுதி வார்த்தைகளில் சிறு குழந்தை பொம்மைக்கும் ஏங்கும் குழந்தையாய் மாறிவிட்டது.

சிதம்பரம் தலையை மட்டும் அசைக்க அதிலேயே திருப்திக் கொண்டவர் சில நிமிடங்களில் தீர்க்கமான ஒரு முடிவுடன் அறையை விட்டு வெளியே வந்து யாழைப் பார்த்து “குட்டிமா, யசோ, தங்கச்சி எல்லாரும் கேட்டுகோங்க.. வர்ற வெள்ளிக் கிழம பூர்ணவ்வுக்கும் குட்டிமாக்கும் கல்யாணம்“ ஏற்கனவே கலங்கி போயிருந்தவர்களின் மனதில் அடுத்த வெடிகுண்டை அள்ளி போட்டார் இளையசந்திரன்.

பூர்ணவ் யாழ் திருமண முடிவு இவர்கள் மூவருக்கும் ஒரு செய்தியாக மட்டுமே இளையசந்திரனிடம் இருந்து வெளிபடுகிறது, கேள்வியாக அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெண்கள் மூவருக்கும் அடுத்து என்ன பேசுவது என்றே தெரியாமல் திடீர் அதிர்ச்சியிலேயே நிற்க

“குட்டிமா போ... போய்ச் சித்துவப் பாரு, அவன் கண்ணு முழிச்சுட்டான்.. தங்கச்சி நீயும் போமா” என்று யாழிசையையும், மீனாட்சியையும் பார்த்து சொன்னவர் “யசோ! என்கூட வா” என்றபடி அவரைத் தன்னுடனேயே அழைத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார்.

இளையசந்திரன் திடுதிப்பென எல்லாம் ஒரு விஷயத்தை முடிவாக அறிவிப்பவர் கிடையாது.. நிறைய யோசித்த பின்னரே தீர்மானமாக அதைத் தெரிவிப்பார்.

ஆனால் அப்படி ஒரு விஷயத்தை முடிவாகச் சொல்லிவிட்டார் என்றால் அதற்குப் பின் அதில் மாற்றம் இராது என்பது அவரை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

யாழும், மீனாட்சியும் இன்னும் அவரது திருமண முடிவில் இருந்தே வெளிவராமல் இருக்க, சிதம்பரம் எழுந்துவிட்டார் என்று அடித்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கக் கடகடவெனச் சிதம்பரத்தின் அறைக்குள் நுழைந்து இருந்தனர்.

மறுபக்கம் பல ஆண்டுகளாக மனதில் இருந்த யாழ் பூர்ணவ் திருமணம் நடக்கப் போவதில் ஒருபக்கம் யசோதாவிற்குச் சந்தோசமாக இருந்தாலும்,இன்னொரு பக்கம் ஏதோ ஓர் உறுத்தல்..

பூர்ணவ், யாழ் என எல்லோரும் சேர்ந்து குடும்பமாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கூடப் பிறக்கவில்லை என்றாலும் சொந்த அண்ணனாக நினைக்கும் சிதம்பரத்தின் உயிர் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கேட்ட ஆசையை ஒதுக்கி மறுத்து பேச யசோவால் முடியவில்லை.

பூர்ணவ் சந்திரனுக்கும் யாழிசைக்குமான திருமண ஏற்பாடுகள் துரிதமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் நடந்து கொண்டிருந்தன.

இளையசந்திரனும், சிதம்பரமும் அவர்களது செல்வாக்கை எல்லாம் பயன்படுத்திக் காரியத்தைத் துரிதமாக்கி இருந்தனர்.

அமெரிக்காவில்.....

பூர்ணவ் அவன் தங்கியிருந்த ஹோட்டலில் அவனது அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையின் கதவை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்தான்.

கதவு திறக்கப்பட “என்னாச்சுப் பூர்ணவ்.. மீட்டிங்க்கு இன்னும் நேரம் இருக்குல?” என்றபடி வெளியே வந்தாள் அமித்ரா.

“அமி... அப்பா கால் பண்ணாங்க... உடனே என்னைய கிளம்பி இந்தியாவுக்கு வர சொன்னாங்க?” என்று கடகடவெனச் சொல்ல
புருவம் சுருக்கிய அமித்ரா “என்னாச்சுப் பூர்ணவ்? இஸ் எவரிதிங் ஓகே?” என்று கேட்க

“தெரில அமித்ரா.. ஒன்னும் சொல்லமாட்டேங்குறாரு... உடனே கிளம்பி வா பூர்ணவ்ன்னு சொல்லி அவரே ப்ளைட் டிக்கெட்டும் புக் பண்ணிட்டாரு” என்று அவன் சொல்ல

“அப்போ ஏதோ ரொம்ப எமர்ஜென்சியா தான் இருக்கும் போலப் பூர்ணவ்... நீ போயிட்டு வா.. நா மீட்டிங் எல்லாத்தையும் பாத்துக்குறேன்” என்று அவள் பொறுமையாகச் சொல்ல

“ஹவ் கம்.. நீ மட்டும் எப்படி தனியா?” என்று அவன் புருவத்தைச் சுருக்க
அவனது கையை எடுத்து தனது கைகளில் வைத்தவள்

“பூர்ணவ்... நா ஒன்னும் சின்னப் புள்ள இல்ல... ஐ கேன் மேனேஜ்... இன்னும் மூணு நாள் மட்டும் தான் நம்ம அமேரிக்கா வந்த வேல முடிய போகுது.. இப்போ நாம ரெண்டு பேருமே கிளம்பிட்டோம்ன்னா மூணு வாரமா நாம பண்ண வொர்க் எல்லாம் வேஸ்ட்.. சோ நீ பத்திரமா போயிட்டு வா.. ஐ கேன் மேனேஜ்” என்று கண்களை மூடி திறக்க
ஏனோ அந்த நிமிடம் அவன் வாழ்வில் மிகவும் நேசிக்கக் கூடிய, அவனது வாழ்வில் முக்கியமான நபர்களில் இளையசந்திரனுக்கும், யசோதாவிற்கும் அடுத்தபடியான இடத்தில் அமித்ரா வந்து அமர்ந்தது போல் தோன்றியது அவனுக்கு.

அவனுள் மீண்டும் எப்பொழுதும் எழும் அதே கேள்வி..

இதற்குப் பெயர் தான் காதலா?

அவனுக்குப் பதில் தெரியவில்லை.

ஆனால் அமித்ரா மீது வைத்திருந்த மரியாதை இன்னும் உயர்ந்து இருந்தது.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சென்னையில் இருந்து
கோயம்பத்தூர் விமான நிலையம் வந்து அங்குத் தனக்காகக் காத்திருந்த காரில் ஏறி அமர்ந்த பூர்ணவ்வின் மூளைக்குள் பல குழப்பங்கள் வந்து வந்து போன வண்ணம் இருக்க, நிமிர்ந்தவனின் கண்களுக்கு வண்டியை சிரத்தையாக ஒட்டிக் கொண்டிருக்கும் சௌந்தர் தெரிய வீட்டு விஷயத்தை எப்படி ஒட்டினரிடம் போய்க் கேட்க என்று நினைத்தவனுள் மீண்டும் குழப்பமும் பயமும் ஒரு சேர போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி வர

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்கள்ள?” என்று கேட்டான் தயங்கி தயங்கி

“நல்லருகாங்க சார்” பவ்யமாகச் சொன்னான் சௌந்தர்.

யாருக்கேனும் எதாவது ஆகியுருக்குமோ என்று இவ்வளவு நேரம் இருந்த பயம் போக ஓர் ஆசுவாச பெருமூச்சு எழுந்தது பூர்ணவ்வினுள்.

மீதம் இருந்த குழப்பம் மட்டும் நகர்வேனா என்று அடம் பிடித்து அமர்ந்திருக்க இதே நிலையில் மற்ற ஒருவரும் திருமண மண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.

அது பூர்ணவ்வின் அத்தை காந்திமதி.

இத்தனை நாட்களாகப் பூர்ணவ் தான்
என் பெண்ணுக்கு மணவாளன் என்று அவர் கண்ட கனவுகள் எல்லாம் அவரது கண்களுக்கு முன்னேயே களைந்து கொண்டிருக்க, எப்பொழுது, என்று, எதற்காக இந்தத் திடீர் திருமணம் முடிவாகியது என்று கூட அவருக்குத் தெரியவில்லை.

இரண்டு மூன்று தினங்களுக்குள் திருமணக் காரியங்கள் ஏற்பாடாகி இருக்க வேலையின் மும்முரத்தில் இருந்த இளையசந்திரனின் மூலம் நேற்று இரவு தான் அவருக்குத் திருமணம் பற்றிய விசயமே சொல்லப்பட்டது.

“மூணாவது மனுஷங்களுக்குச் சொல்றது போல இப்டி கடைசியா பத்திரிக்க வச்சி சொல்ற அளவுக்கு நம்ம நிலம ஆகிப் போச்சே?!” குமுறியது காந்திமதியின் மனது.

“அந்த அளவுக்கு நா இளக்காரமா போயிட்டானா?” என்ற கோப சுவாலை வேறு அவரது மனதினுள் சுடர்விட்டிருக்க அது யாரை எரிக்க என்று வழி தெரியாமல் பரவி கொண்டிருந்தது.

தவறான புரிதல்களே நிறைய வகையானப் பிரச்சனைகளின் அடித்தளம்!

மண்டபத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மனநிலை...

திருமணமாகப் போகிறவனுக்கே திருமணத்திற்குச் சில நிமிடங்களுக்கு முன் தான் அதைப் பற்றிய தகவல் சொல்லப்படுகிறது அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? இல்லை ஒரு தகவலாகவும் முடிவாகவும் சொல்லப்படப் போகிறதே அப்பொழுது அவனின் மனநிலை என்னவாக இருக்கும் என்று இன்னும் பல எண்ணங்கள் இளையசந்திரனின் மூளையைப் பூவைக் கண்ட வண்டாகச் சுற்றி வந்துக் கொண்டிருக்க, இதே எண்ணங்கள் தான் மணப்பெண் அறையில் யாழிசையின் அருகில் நின்று கொண்டிருந்த யசோதாவின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

யாழிசையை எடுத்துக் கொண்டால் மனதில் நினைத்தவனையே மணவாளனாகக் கைப்பற்ற போகும் சந்தோசமும் பூரிப்பும் ஒரு பக்கம் இருக்க, தந்தையின் உடல்நிலை மனதின் ஓரம் இருந்து அரித்துக் கொண்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் மூலமான சிதம்பரமோ மணமேடையின் முன் வரிசையில் அமர்ந்து மகளின் திருமண ஏற்பாடுகளைக் கண்களோடு சேர்த்து மனமும் குளிர பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த மீனாட்சியின் ஒரு பார்வை திருமண ஏற்பாடுகளிலும், மறுபார்வை சிதம்பரத்தின் உடல்நிலையின் மீதும் கவனம் பதித்து இருந்தன.

பூர்ணவ் வந்த கார் மண்டபத்தின் முன் க்ரீச் எனும் சத்தத்தோடு நிறுத்தப்பட்டது.

குடும்பத்தினருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற சிறு நிம்மதியோடு இருக்கையில் தலை சாய்த்திருந்த பூர்ணவ்வின் கண்கள் அதிர்ச்சியைக் காணப்போகும் எதிர்பார்ப்பின்றித் திறக்கப்பட்டன.

எதிர்பார்க்காத விசயங்களை நிகழ்த்திக் காண்பிப்பதில் வாழ்க்கைக்கு நிகர் வாழ்க்கை தானே!

அது பூர்ணவ்விடமும் பொய் ஆகவில்லை.

கண்களைத் திறந்தவுடன் அவன் கண்டது “பூர்ணவ் சந்திரன் வெட்ஸ் யாழிசை சிதம்பரம்” என்னும் வார்த்தைகளைத் தான்.

அவனது கண்கள் அதிலேயே நிலைகுத்தி நிற்க, அதிர்ச்சியில் மூச்சு விடக் கூட மறந்து அமர்ந்திருந்தான் பூர்ணவ் சந்திரன்.

காரை நிறுத்தியவுடன் இளையச்சந்திரன் சௌந்தருக்கு சொல்லி வைத்திருந்தது போலவே, அவருக்குப் போன் செய்து பூர்ணவ்வை மண்டபத்திற்கு அழைத்து வந்துவிட்ட செய்தியைக் கேட்டு வெளியே வந்திருந்த இளையச்சந்திரனின் மீது கூடப் பூர்ணவ்வின் கவனம் செல்லவில்லை.

காருக்கு அருகே வந்தவர் கதவை திறந்தபடி பூர்ணவ்வின் தோளில் கைவைத்து “பூர்ணவ்” என்று உலுக்கினார்.

அதில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து அவனது தந்தையின் பக்கம் திரும்பியவனின் கண்கள் ஓராயிரம் கேள்விகள் வந்து நின்றன.

“வெளிய வாப்பா” – இளையச்சந்திரன்.

“ப்..ப்பா.. என்ன? என்ன இதெ..ல்லாம்?”

“வெளிய வா பூர்ணவ் உள்ள போய்ப் பேசிக்கலாம்” பூர்ணவ் இன்னும் ஒருவித பிரமையிலேயே இருக்க அவனது கையைப் பிடித்து வேறு யாரின் கவனமும் தங்கள் மீது படாதபடி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் இளையச்சந்திரன்.

பூர்ணவ்வை தனி அறையில் உள்ளே விட்டு கதவை சாத்தியவர் சிதம்பரத்திற்கு நடந்தவற்றையும், அவரது முடிவையும் பற்றி எடுத்து சொன்னார்.

பூர்ணவ்வின் முகம் இன்னுமே பேய் அறைந்ததைப் போலத் தான் இருந்தது... அவனுக்கு எப்படி எதிர்வினைப் புரிவது என்றே தெரியவில்லை.

“பூர்ணவ் நீ என்னைய விட்டுட்டு போயிட மாட்டில்ல?” என்று அழுது வடிந்த கண்களோடும் நடுங்கும் உடலோடும் கேட்ட அமித்ராவின் கேள்வியே மீண்டும் மீண்டும் அவனது மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் எதார்த்தமும் அவனது கண் முன் விரிந்தது.

இளையசந்திரன் மட்டுமின்றிச் சிதம்பரமும் திருப்பூரில் பெரிய செல்வாக்கை உடையவர்கள். இதோடு நில்லாமல் திருநெல்வேலியில் இருந்து சிதம்பரத்தின் சொந்தக்காரர்களும் திருமணத்திற்கு வந்து இருப்பதை இளையசந்திரன் சொன்னதின் மூலம் அறிந்திருந்தான்.

மண்டபத்தில் கிட்டத்தட்ட திருப்பூரின் மொத்த பணக்கார வர்க்கமும், அதற்கு ஈடாகப் பாதித் திருநெல்வேலி சனமும் கூடி இருக்கின்றது. இந்நிலையில் அவன் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தினான் என்றால் இளையச்சந்திரன் மட்டுமின்றிச் சிதம்பரத்தாலும் வெளியே தலை காட்ட முடியாது. வெளியில் என்ன வெளியே சிதம்பரத்தின் முகத்தையே இளையசந்திரனால் நேரே பார்த்து பேச முடியுமா? அதோடு அவனது அப்பா சிதம்பரத்தின் மீது எத்தனை உயிராக இருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும்... இருபத்து ஆறு வருட நட்பு இவனது ஒரு மறுப்பால் முடிவுக்கு வரப் போகிறதா?

இளைமைகக்கே உரிய துள்ளலும், விளையாட்டு தனமும் இருந்தாலும் எந்த ஒரு விசயத்தையும் மிகுந்த பொறுப்புணர்வோடு கையாள்பவன் பூர்ணவ்.

அமித்ராவிற்கு மட்டும் வாக்கு குடுத்திருக்கவில்லை என்றால் இந்தத் திடீர் திருமணத்திற்கு எல்லாம் மறுத்துக் கூறி இருக்க மாட்டான் என்பது திண்ணம். அமித்ரா இவனைக் காதலிக்கிறாள் என்பதைப் பயன்படுத்தி எல்லை மீறியவன் கிடையாது இவன், அவள் மீதான காதல் உணர்வு இவனுக்கு இதுவரை இருந்ததில்லை என்பதையும் தெளிவாக அவளிடம் சொல்லி விட்டவன், ஆனால்.. ஆனால் அங்கு ஒரு பெண்ணுக்கு வாக்கு குடுத்துவிட்டு, இங்கு ஒரு பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொள்வது? அவனது மனசாட்சி இடம் கொடுக்க மறுத்துக் கொண்டிருக்கிறது.

குனிந்துக் கண்களை அழுந்த தேய்த்தான்.

அமித்ராவா?
அப்பாவின் கௌரவமும் நட்புமா?

அவனது மனது இருதலைக் கொல்லி எறும்பாக இரண்டிற்கும் இடையில் துடித்துக் கொண்டிருக்க
அமித்ராவின் அழுது வடிந்த முகம், சிதம்பரத்தின் உயிர்,இளையச்சந்திரனின் மரியாதை, சிதம்பரம் இளையச்சந்திரனின் இருபத்து ஆறு வருட நட்பு என எல்லாம் அவனது மனதில் ரீங்காரமிட, தலையைப் பியித்துக் கொள்ளலாம் போல் இருந்தது பூர்ணவ்விற்கு.

“முகுர்த்தத்துக்கு இன்னும் அரை மணி நேரம் தான்பா இருக்கு” இறைஞ்சும் கண்களோடு சொன்னார் இளையச்சந்திரன்.

“இல்லப்பா... என்னால முடியாது... எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்” ஏனோ அந்த நிமிடம் அப்பாவின் கௌரவத்தை விட அமித்ரா என்னும் பெண்ணின் மனது அவனுக்குப் பெரிதாகப் பட்டது.

மறுபக்கம் இதுவரை தனது பேச்சிற்கு மறுபேச்சு பேசிராத மகனின் இந்த எதிர்வினை தந்த அதிர்ச்சியில் உறைந்து போனார் இளையச்சந்திரன்.

மகன் நிலைமையை உணர்ந்து பொறுப்பாக முடிவை எடுப்பான் என்று எண்ணி தான் பூர்ணவ் வரும் முன்னரே திருமணத்திற்கான எல்லா ஏற்பாடையும் செய்திருந்தார் இளையச்சந்திரன்.

“டேய் என்னடா சொல்ற???? பூர்ணவ் பாருப்பா, அப்பா உனக்கு எதாச்சும் தப்பா நடக்க விடுவேனா? குட்டிமா தங்கண்டா.. தங்கமான பொண்ணு.. உனக்கு ஈக்வலான படிப்பு படிச்சுருக்கா... ஒரு குறை சொல்ல முடியாதுடா.... சிதம்பரத்த பத்தி உனக்கே’ நல்லா தெரியும் தான.. அப்பறம் மீனாட்சி...அந்த புள்...”

“போதும் நிறுத்துங்கப்பா!!!!!” அறையே அதிர கத்தினான் பூர்ணவ்.
அவரது அதிர்ந்த கண்களைப் பார்த்த பூர்ணவ் “அப்பா... நா.. எனக்குத் தெரியும் சிதம்பரம் அங்கிள் குடும்பத்த பத்தி... நல்லாவே தெரியும்... பட் விசயம் அது இல்ல...” என்று சொன்னவனால் அதற்கும் மேல் சொல்லமுடியவில்லை.

அமித்ராவின் அப்பா சிவசாமிக்கும் இளையசந்திரனுக்கும் உள்ள தொழில் பகைப் பற்றி அவனுக்கு மிக நன்றாகவே தெரியும்... இந்த நிலையில் அமித்ராவை கல்யாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் விவகாரம் வேறு மாதிரி நகர ஆரம்பிக்கும்... இத்தனை நேரம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கெஞ்சுபவர், இப்படியே போனால் கூட மனதை மாற்றிக் கொள்ள ஏதும் சந்தர்ப்பம் வருமோ வராதோ ஆனால் அமித்ராவைப் பற்றிச் சொல்லிவிட்டால் நிச்சயம் இந்தக் கல்யாணத்தை நடத்தாமல் விடமாட்டார் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்து சொல்லி காரியம் சாதிக்கலாம் என்று அவன் நினைத்த நினைவெல்லாம் விதியின் வேகத்தில் சிக்கி தவிடு பொடியாகிக் கொண்டிருந்தது.

“பூர்ணவ் உன்ன கெஞ்சிக் கேக்குறேன்டா... நீ பொறுப்பான பையன்... கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிடுவ... நா கிழிச்ச கோட்ட தாண்டமாட்டன்னு நெனச்சு தாண்டா இத்தன ஏற்பாடையும் பண்ணி இருக்கேன்.. இது நடக்கலைன்னா என்னோட கௌரவம் காத்துல பறந்துடும்... ஆனா நா அதப் பத்தி கவலைப் படலடா... சித்து... அவனோட நட்பு... இருபத்தாறு வருஷ நட்புடா... நா சறுக்கி விழுந்த காலத்துல எல்லாம் என்கூடவே இருந்து என்னைய தூக்கி நிருத்துனவண்டா அவன்,, இப்போ நீ கல்யாணத்த நிறுத்தி அதிர்ச்சில அவனோட உயிருக்கு எதாவது ஆகிருச்சுன்னா அப்ரோ காலத்துக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாதுடா” காலில் விழுகாத குறையாகக் கண்களில் நீரோடு பூர்ணவ்வின் கையைத் தனது கைகளுக்குள் அடக்கிக் கொண்டு கெஞ்சினார் இளையசந்திரன்.
பார்த்துக் கொண்டிருந்த பூர்ணவ்விற்குத் தாளவில்லை..
யாரால் தான் பெற்றவர் அழுவதைப் பார்க்க முடியும்.

“அப்பா... நீங்க ஒரு பத்து நிமிஷம் வெளிய இருங்க... ஐ வான்ட் டூ பி அலோன் பார் ப்யூ மினிட்ஸ்...” நிமிர்ந்தும் பாராமல் கூறினான் பூர்ணவ் சந்திரன்.

“நா உன்ன டிஸ்டர்ப் பண்ணலப்பா.. யோசி... பட் டைம் ரொம்பக் கம்மியா இருக்குன்னு ஞாபாகம் வச்சுக்கோ பூர்ணவ்... அப்பா இப்டி உன்னைய ஒரு இக்கட்டான சிச்சுவேஷன்ல நிக்க வச்சுட்டேன்னு நெனைக்காத பூர்ணவ்.. ஒன்னு மட்டும் ஞாபாகம் வச்சுக்கோ அப்பா என்னைக்கும் உனக்குத் தப்பான ஒரு விசயத்த பண்ணமாட்டேன்” என்று சொல்லியபடி கதவை சாற்றிவிட்டு வெளியேறினார் இளையசந்திரன்.

பூர்ணவ்வின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தச் சில நிமிடங்கள் தான் அவனது வாழ்வின் திசையையே மாற்றி அமைக்கப் போகும் நிமிடங்கள் என்று பூர்ணவ்விற்குத் தெரியும்.

தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தான். தனிமையில் அவனது மூளை வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது.

இந்த நிமிடம் அவன் எடுக்கப்போகும் முடிவால் அவனது அப்பாவிற்கும் மண்டபத்தில்’ இருப்பவர்களுக்கு முன் எந்தத் தலை குனிவும் ஏற்படக் கூடாது.. அமித்ராவிற்கு அவன் கொடுத்த வாக்கும் நிறைவேற வேண்டும்... எப்படி? யோசித்தான் சில நிமிடங்கள்..

அத்தியாயம் – 28

இங்கு மணப்பெண் அறையில் இருக்கும் தனது மகளின் மணப்பெண் கோலத்தைக் காண கண்களில் கோடி சூரியனை தேக்கி மீனாட்சியின் துணையோடு மெல்ல நடந்து வந்தார் சிதம்பரம்.

கடந்த சில நாட்களில் ஓரளவுக்குச் சிதம்பரத்தின் உடல்நிலை தேறி இருந்தாலும் மீனாட்சி எச்சரிக்கை உணர்வோடு அவர் கூடவே இருந்தார்.
இவர் கதவதைத் திறந்து கொண்டு வருவதைக் கண்ணாடி வழிப் பார்த்த யாழ் மின்னும் கண்களோடு எழுந்து திரும்பியபடி “அப்பா” என்றாள் ஆசையாக

“குட்டிமா!!” கோடி சூரியன்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தன சிதம்பரத்தின் முகத்தில்.

“அழகா இருக்கடா குட்டிமா” தகப்பனின் கண்கள் பெண்ணின் மணப்பெண் கோலத்தைக் கீழிருந்து மேலாகப் பாசக் கண்களோடு வருடியது.

அவரை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள் யாழ்.

“என் மருமக என்னைக்குமே தேவதை தான ண்ணா” என்றார் யசோ பெருமிதக் கண்களோடு..
அதற்கு மென்மையாகச் சிரித்த சிதம்பரம் “சரியா சொன்ன தங்கச்சி... எங்க வீட்டு இளவரசி.... இனி உங்க வீட்டு மகாராணி... பாத்ததில்ல கல்யாணத்த திருப்பூரும் திருநெல்வேலியும் மூக்கு மேல வெரல வைக்குற மாதிரி நானும் இளையச்சந்திரனும் சேர்ந்து ஏற்பாடு பண்ணிருக்கோம்” என்று சிதம்பரம் மீசையை முறுக்க

“எதுக்குப்பா இவ்வளவு செலவு” சிணுங்கினாள் யாழிசை.

அவளது குழந்தை சிணுங்கலைக் கண்டு சத்தமாகச் சிரித்த சிதம்பரம்

“என்னம்மா நீ... இதெல்லாம் என் கடமைம்மா” என்றார் அவளைப் பார்வையாலேயே அன்பால் பருகியபடி

“அண்ணி பூர்ணவ் வர இன்னும் எவளோ நேரம் ஆகும்?” என்று கேட்டார் மீனாட்சி யசோதாவைப் பார்த்து

“உங்கண்ணன் சொன்னத வச்சுப் பாத்தா இந்நேரம் வந்துருக்கணுமே மீனாட்சி” என்று யசோதா சொல்லிக் கொண்டிருக்க

“அப்போ வா மீனாட்சி.. நாம போய் மாப்பிள ரூம்ல போய்ப் பாப்போம்” என்றபடி எழுந்தார் சிதம்பரம்.

இவர்கள் இங்கே பாசப்பிணைப்பை பறைசாற்றிக் கொண்டிருக்க அங்கே பூர்ணவ்வோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அவசரத்தில் எடுத்த முடிவாக இருந்தாலும் இது தான் இருபக்கமும் சரியாக இருக்கும் என்று அவனது மனது அடித்துச் சொல்ல அந்த நம்பிக்கையோடு போனை கையில் எடுத்தவன் அழைத்தது இப்பொழுது லாயராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் அவனது நண்பன் மாதவனுக்கு!

மடமடவெனத் தனக்கு வேண்டியவற்றை மாதவனிடம் போனில் சொல்லி முடித்தவன் கட்டிலில் இருந்த பட்டுவேட்டி சட்டையைக் கைகளில் எடுத்தான்.

இவனது அறைக்கு வெளியே இளையசந்திரன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருக்க “டேய் சந்திரா.. ஏண்டா இப்டி பேயறஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கே? மாப்ள வந்துட்டாரா?” என்று சிதம்பரம் கேட்க இளையசந்திரன் திருதிருவென விழித்தார்.

அப்பொழுது அறையின் கதவு திறக்கப்படப் பட்டு வெட்டி சட்டையில் மணமகனின் மிடுக்குடன் வெளிவந்தான் பூர்ணவ் சந்திரன்.

அவனைப் பார்த்த இளையசந்திரன், சிதம்பரம், மீனாட்சி என மூவரின் கண்களும் ஒளிர்ந்தன.

“பூர்ணவ் எப்டி இருக்கப்பா?” என்று கேட்டார் சிதம்பரம்.

“நல்லாருக்கேன் அங்கிள்” என்று அவன் சொன்ன நேரம் ?”மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோஎன்ற ஐயரின் குரல் கேட்க மணமேடையில் நின்று இவ்வளவு நேரம் ஐயர் கேட்டதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த காந்திமதி

“அதான் பூர்ணவ் இன்னும் வரவேயில்லையே.. அப்ரோ என்ன மாப்பிள்ளைய அழைச்சுட்டு வாங்க” என்று காந்திமதி உதட்டை சுழித்துக் கொண்டிருக்க

இளையச்சந்திரன் “வாப்பா.. ஐயர் கூப்பிட்டுடாரு” என்றபடி இளையச்சந்திரனும், சிதம்பரமும், மீனாட்சியும் வழி நடத்த கம்பீரம் குறையா தோரணையில் மணமேடையை நோக்கி நடந்து வந்தான் பூர்ணவ் சந்திரன்.

இதைப் பார்த்த காந்திமதி தான் அதிர்ச்சியில் விழி பிதுங்கி நின்றார்.

அவர் என்ன நினைத்துக்கொண்டிருந்தார் என்றால் பூர்ணவ் வந்ததும் அவனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தும்படி செய்துவிட வேண்டும் என்று தான் வழி மேல் விழி வைத்து மண்டபத்தின் முன் காத்திருந்தார்.

ஆனால் இளையச்சந்திரன் தான் வந்து “மதி.. அங்கே ஐயர்கிட்ட போய் நின்னு அவரு கேக்குறத எல்லாம் கொஞ்சம் எடுத்துக் குடும்மா” என்று சொல்லியிருந்தார்.

ஆனாலும் இவரது பார்வை கண்கொத்தி பாம்பாக வாசலின் மீதே தான் இருந்தது. அப்படி இருந்தும் இவரது சர்ப்ப கண்களில்படாமல் பூர்ணவ் எப்படி உள்ளே நுழைந்தான் என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

இவர் இதை யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே பூர்ணவ் வந்து மணமேடையில் அமர்ந்து சம்பிரதாயங்கள் நடக்க ஆரம்பித்து இருந்தன.

காந்திமதிக்கு கையாலாகாத நிலை.
“பொண்ண அழைச்சுட்டு வாங்கோ” என்று ஐயர் அறிவிக்க
யாழிசை அழைத்துவரப்பட்டாள்.

அரக்கு நிற அகல பார்டர் வைத்த மஞ்சள் வண்ண பட்டுப்புடவை எடுப்பாக அவளுடலுன் பொருந்தியிருந்த அழகைப் பார்க்கும் பெண்களுக்கு ஏக்க பெருமூச்சு.

அங்கு அவளது அங்கங்களுக்கு இடையில் ஒரு போட்டியே நடந்து கொண்டிருந்தன.. ஒவ்வொன்றும் நம் கண்கள் வழி மனதை மயக்க களத்தில் இறங்கி இருந்துன. இடுப்பில் மாட்டியிருந்த ஒட்டியாணம் அவளது நடையின் ஏற்ற இறக்க அசைவுக்கு ஏற்ப, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை ஞாபாகம் படுத்த, அவளது நெஞ்சில் பதிந்து கிடந்த நகைகள் பளீரிட்டு கண்ணடிக்க, குடையென விரிந்த ஜிம்மிகிகள் அவளது காதுகளில் கதகளி புரிந்து கொண்டிருக்க, இவை யாவையும் தோற்கடித்துப் போட்டியின் பரிசாகிய பார்ப்பவரின் மனதையும் தட்டி சென்றது பூர்ணவ்வை மேடையில் கண்டதும் யாழிசையின் முகத்தில் தோன்றிய பளீச் புன்னகை! மஞ்சள் புடவையில் மலர்ந்த சூரியகாந்தியாய் அவள் பூர்ணவ் சந்திரனைக் கண்டபடி நடந்து வர அவனைத் தவிர அங்கிருந்த அனைவரின் கண்களும் அழகுப் பதுமையாய் நடந்து வரும் யாழிசை மீது தான்.

அவள் அவனருகே வந்து அமர்ந்த பொழுதும் சைட் ஸ்டாண்ட் போட்ட டூ வீலராய் முகத்தைத் திருப்பிக் கொண்டே அமர்ந்திருந்தான் பூர்ணவ்.

மந்திரங்கள் சொல்லப்பட, மங்கள நாண் கொண்டுவரபட்டது.

அதைக் கைகளில் ஏந்திய ஐயர்
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை”

“இது நம்ம சங்க இலக்கியங்கள்ள ஒன்றான அகநானூற்றுப் பாடல், இதன் அர்த்தம் என்னன்னா ‘கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க’ என்பது தான்... இந்த எண்ணங்களோட மணமக்கள வாழ்த்துங்கோ... கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்றபடி மந்திரங்கள் சொல்லப்பட, மங்கள வாத்தியங்கள் இசைக்க, மண்டபத்தில் கூடியிருந்த உள்ளங்கள் எல்லாம் மனமார வாழ்த்த கைகளில் கொடுக்கபட்ட மங்கள நாணை யாழிசையின் கழுத்தினில் பூட்டி யாழிசையைத் தனது சகதர்மிணியாக்கிக் கொண்டான் பூர்ணவ் சந்திரன்.

அந்தச் சில வினாடிகள் மட்டுமே அவனது பார்வை அவளில் பதிந்தது.

அதன்பிறகு மற்ற சம்பரதாயங்கள் எல்லாம் நடக்க, எல்லாவற்றையும் முடிக்கவே மதியத்திற்கு மேல் ஆகி இருக்க யாழிசையும் பூர்ணவ்வும் யாழிசையின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

புதுமணத் தம்பதியை ஆரத்தி எடுத்து வரவேற்க அவர்கள் உள்ளே நுழைந்த பொழுது மண்டபத்தில் இருந்த பாதித் திருநெல்வேலியும் இங்கே இடம் பெயர்ந்தது.

பூர்ணவ்வின் உர்ரென்ற முகத்தைப் பார்த்த சிதம்பரம் அவனுக்கு

“ஜெட்லேக்”கா இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு “கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுப்பா பூர்ணவ்... ப்ளைட் டிராவல்ல ரொம்ப டயர்ட்டா இருப்ப.. மத்த சம்பிரதாயத்த எல்லாம் அப்பறமா வச்சுக்கலாம்” என்று பரிவாக சொல்ல
“இல்ல அங்கிள்... அதெல்லாம் ஒன்னும் இல்ல... எனக்குக் கொஞ்சம் வெளிய போகணும், ரொம்ப முக்கியமான வேல.. கொஞ்ச நேரம் தான்.. வந்துருவேன்...” என்று அவன் தயங்கிக் கொண்டே கேட்க, கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் தான் சங்கடமாக நெளிந்தார்.

மொத்த சொந்தத்தின் முன்னும் வந்ததும் வராததுமாக.. இப்படி வேலை இருக்கிறது கிளம்புகிறேன் என்று சொல்கிறானே என்று நினைத்தார்..

அவர் கவலை அவருக்கு..

ஒரு மாதிரியாகச் சங்கடத்தோடு சிரித்தவர் “சரிப்பா.. நீ இவளோ தூரம் முக்கியமான வேலைன்னு சொல்றின்னா.. போயிட்டு வா.. இந்த இது சில்வர் ரோல்ஸ்ராய்ஸ்சோட கீ.. ” என்று சாவியையும் கொடுத்துவிட்டார்.
வேறு என்ன சொல்ல முடியும் அவரால்.. மருமகனாவிட்டானே.. சிரித்துத் தானே ஆகவேண்டும்.

அவர் சம்மதம் சொன்ன வினாடி “ஆள விடுங்கடா சாமி” என்பது போல் விரைந்துவிட்டான் பூர்ணவ்.
இத்தனை நேரமாக அவனுக்கு அருகில் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த யாழிசையைக் கூட அவன் கவனிக்கவில்லை.

“திடீர் கல்யாணம் தான், அவனும் பாவம் என்ன தான் செய்வான்..? அவனுக்குக் கொஞ்சம் டைம் கொடு யாழ்” என்று அவளது மூளை எடுத்து சொன்னாலும் அவளது முகத்தில் முன்னர் இருந்த பொழிவில்லை.. இதைச் சிதம்பரமும் கவனிக்கத் தவறவில்லை.

பூர்ணவ் இயக்கிக் கொண்டிருந்த கார் வேகம் எடுத்து அவனது வக்கீல் நண்பனின் அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
அவன் செய்யப் போவது சரியா தவறா என்று அவனது மனதில் வினாக்கள் எழவில்லை.

அவன் இளையச்சந்திரனுக்கான கடமையை நிறைவேற்றிவிட்டான்.

அடுத்து அமித்ராவிற்கான கடமை.

மாதவன் இருக்கும் அலுவலகத்திற்கு முன் காரை நிறுத்தியவன் கடகடவென உள்ளே நுழைந்து கதவை தட்ட

“கம் இன்” என்றான் மாதவன்.

உள்ளே வந்த பூர்ணவ்வைப் பார்த்தவன் “வா பூர்ணவ்.. எப்போ லண்டன்ல இருந்து வந்த?” என்று அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்தபடி கேட்க

“நா சொன்னத எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” பார்மாலிட்டீஸ்சை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக விசயத்திற்கு வந்தான் பூர்ணவ்.

மாதவன் பூர்ணவ்விற்கு அவனது வேறு ஒரு நண்பன் மூலம் பழக்கம் ஆனவன்.

பூர்ணவ்வின் பணசெழிப்பின் மீது மாதவன் கண்களில் தெரியும் பொறாமையை எப்பொழுதுமே பூர்ணவ்வின் கண்கள் கண்டு கொள்ளும். அதனாலேயே அவனோடு “என்ன என்றால் என்ன” என்பதோடு வைத்துக் கொள்வான்.

இன்று மாதவனின் உதவியை நாடியதன் காரணமும் மாதவனைப் பூர்ணவ்வின் குடும்ப வட்டாரத்தில் இருக்கும் யாருக்கும் அதிகம் தெரியாது என்பதால் தான்.

“ஹ்ம்ம் பண்ணிட்டேன் பண்ணிட்டேன்.. நீங்கல்லாம் பெரிய தல.. நீங்க சொல்லி பண்ணாம இருப்பனா?” என்று மாதவன் சிரிக்க

“பேப்பர்ஸ்ச குடு” – பூர்ணவ்.

“தர்றேன்.. தர்றேன்.. சரி என்ன பூர்ணவ்.. வெள்ள வெட்டி சட்டை எல்லாம்.. திடீர்ன்னு எதாவது திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டயா? டிவோர்ஸ் பேப்பர்ஸ்லாம் ரெடி பண்ணி வைக்கச் சொல்லிருக்க?” சிரித்துக் கொண்டே கொக்கிப் போட்டான் மாதவன்.

அவசர கல்யாணம் என்பதால் பூர்ணவ்வின் நண்பர்கள் யாருக்கும் திருமணம் பற்றிய தகல்வகள் இளையச்சந்திரன் மூலம் செல்லபடவில்லை.

“பேப்பர்ஸ்ச குடு” அழுத்தமாக வெளிவந்தது பூர்ணவ்வின் குரல்.
“ஒன்னையும் கறக்க முடியலையே” என்று மனதிற்குள்ளேயே புலம்பிய மாதவன் டேபிளை திறந்து டிவோர்ஸ் பேப்பர்ஸ்சை எடுத்து பூர்ணவ்வின் கைகளில் குடுத்தான்.

அதைக் கைகளில் வாங்கி ஒருமுறை சரி பார்த்த பூர்ணவ் “ஹ்ம்ம்... பணத்த உனக்கு உன்னோட அக்கவுன்ட்ல செட்டில் பண்ண சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே கிளம்பிவிட்டான்.
 
அத்தியாயம் – 29

காரை நிறுத்திவிட்டு யாழிசையின் வீட்டினுள் நுழைந்த போது அந்த வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த ஜனத்திரளைப் பார்த்து ஒரு வினாடி மூச்சுவிடவும் மறந்தான் பூர்ணவ்.

“இதென்னடா இவளோ கூட்டம்” என்று நினைத்தவன்

ஒரு வித சங்கடத்தோடு உள்ளே வந்தவனுக்குப் பார்க்கும் எந்த முகமும் தெரிந்த முகம் போல் தெரியவில்லை.

அப்பொழுது ஒரு குழந்தை இவனை நோக்கி

“வழிய விடுங்க சித்தப்..........பா” என்றபடி ஓடி வந்தான்.. இந்தத் திடீர் அழைப்பில் பூர்ணவ் திக்கென விழித்துக் கொண்டிருக்க

“அவன விடாதிங்க மச்சா................ன்.. புடிங்க” என்றபடி இன்னொருத்தன் முன் வந்து கொண்டிருந்த சிறுவன் பின்னாலேயே ஓடி வந்தான்.

இவன் நகர்ந்து நின்றபடி “சித்தப்பாவ.. மச்சானா?” என்று முனங்கியவாறு புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க

“என்ன பேராண்டி.. புது உறவு முறையில மெரண்டு போய் நிக்கிரீயோ?” என்று கேட்டார் பல் விழுகப் போகும் தருவாயில் இருந்த ஒரு பாட்டி.

இதைக் கேட்டவன் ஏதும் பதில் சொல்லாமல் டிங்கு டிங்கென்று மண்டையை மட்டும் ஆட்டினான்.

“அந்தா முன்னால போறானே சத்தி (சக்தி) அவன் யாழிசையோட மூணு விட்டு மாமனோட மாமியாரோட பொண்ணோட பையன்” என்று நீட்டி முழக்க “பே”வென விழித்தான் பூர்ணவ்.

“அடுத்து அந்த பின்னால..”

“பாட்டி போதும் பாட்டி அவன் என்னைய மச்சான்னு கூபிடுறான்னா அவன் யாழிசைக்குத் தம்பி முறையாகனும் அத தான சொல்ல வர்ரிங்க?” என்று கடகவெனச் கேட்க சத்தமாகச் சிரித்த பாட்டி

“ஆமாண்டா பேராண்டி.. நா உனக்கு எந்த வகையில பாட்டின்னு....”

“சின்னம்மா... மாப்பிள தம்பி பாவம்... வேலையா போயிட்டு இப்போ தான் வந்துருக்காரு விடுங்க பாவம்” என்று சொல்லியபடி “நீ வா பா” என்றபடி முன் நடந்தார்.

மேல் தளத்திற்குப் படிக்கட்டு ஏறிக் கொண்டிருக்கும் பொழுது “ஏலே சிதம்பரம் இங்க வாம்ல” என்றபடி அழைத்தார் ஒரு பெரியவர்.

அதற்குத் திரும்பியவர் “பர்ஸ்ட் ப்ளோர், லெப்ட்ல இருந்து மூணாவது ரூம் தான் குட்டிமாவோடது அங்க போ பூர்ணவ்.. நா வர்றேன்” என்றுவிட்டுக் கடகடவெனக் கீழிறங்கிப் போய்விட்டார் சிதம்பரம்.

மெல்ல மெல்ல மாடியேறி வந்தவனின் கண்களுக்கு முதல் தளத்தின் ஹாலில் இருந்த பெண்கள் கூட்டம் தெரிய அவனது நடை இன்னும் மெதுவானது.

புது இடம் புது மனிதர்கள் என்றால் பூர்ணவ்விற்குக் கொஞ்சம் அலர்ஜி.

பழகிவிட்டால் பாசமாகிவிடுவான்.

“ஏய் அத்தான பாருடி... வெள்ள வேட்டி சட்டையில சும்மா அரசம்பட்டி காளையாட்டம் இல்ல...”

“அடியே அது அலங்காநல்லூர் காளைடி.. அரசம்பட்டி கெடையாது”

“ஏதோ ஒன்னு... அத்தான் வாங்க பாட்டுக்கு பாட்டு விளையாடலாம்”
இவன் ஒரு மாதிரியாக விழித்துக் கொண்டு நிற்க,

மீனாட்சி தான் வந்து “பூர்ணவ் நீ வாப்பா” என்றபடி யாழிசையின் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

போனை எடுத்து டேபிள் மீது வைத்தவன் அங்கு ஜெட்லாக்கில் அடித்துப் போட்ட மாதிரி ஆறு மணி நேரம் தூங்கியவன் எழுந்திருக்கும் பொழுது மணி ஏழு.

திருமண மண்டபத்திலேயே சிதம்பரம் யாழ் பூர்ணவ்விற்கான சாந்தி முகூர்த்தத்தைப் பெண் வீட்டிலேயே வைத்துக் கொள்வதற்குக் கேட்டிருந்தார்.

சிதம்பரம் கேட்டு இளையச்சந்திரன் மறுப்பாரா? ஒத்துக் கொண்டார்.

அதனால் பூர்ணவ் எழுந்தவுடன் நிறைய ஆட்கள் வந்து சாந்தி முகுத்தத்திற்காக அறையை அலங்கரிக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இப்படியே நேரம் நகர யாழிசைக்கு அலங்காரம் முடித்து அவளின் அழகில் அதிசயித்தும், அந்தி மாலை நேரத்திற்கு மேல் நடக்கபோகிற நிகழ்வுகளைப் பற்றிக் கேலி பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் நகர யாழிசை அவளது அறைக்குள் பெண்களால் தள்ளப்பட்டுத் தாழிடபட்டாள்.

பின்னால் கிண்கிணி சத்தமாகப் பெண்களின் கேலி சிரிப்பு.

“இன்று எல்லாவற்றையும் யாழிசையிடம் தெளிவாகப் பேசிவிட வேண்டும்” என்று உருட்போட்டப்டி யாழிசை வரும் வாசல் பக்கம் திரும்பினான்.

பூர்ணவ்வின் கண்களும் யாழிசையின் கண்களும் சந்தித்துக் கொண்ட வினாடி

“மல்லிகைபூ வாசம் என்னைக் கிள்ளுகிறது
அடி பஞ்சுமெத்தை முல்லைப் போலக் குத்துகிறது..
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது”

என்ற பின்னணி வாசிக்கப்பட, இருவரின் கண்களும் கவ்வி இருந்த அந்த வினாடிகள் அந்தப் பாடலின் வரிகளில் லயித்திருந்தது என்னவோ உண்மை.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் பூர்ணவ்.. அந்தப் பாடல் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது..

எங்கிருந்து வருகிறது என்று தான் இருவருக்குமே புரியவில்லை.

டேபிளில், பெட்டிற்கு அடியில் என எல்லாப் பக்கமும் தேடியவன் இறுதியாகத் தலையணைக்கு அடியில் போனைக் கண்டுப்பிடித்தான். அவனது போனில் தான் அலாரம் ட்யூனாக அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
எப்படி என்றும் மட்டும் அவனுக்குப் புரியவில்லை.

அவன் அலாரத்தை நிறுத்திய வினாடி வெளியில் இருந்து மீண்டும் பெண்களின் அந்த கிண்கிணி கேலி இசை.

“என்ன அத்தான்.. ஒருவழியா கண்டுபிடிச்சுட்டிங்க போல.. என்ஜாய்” என்று சொன்ன குரலுக்குப் பின் பல சிரிக்கும் குரல்கள்.

இதைக் கேட்ட யாழிசையின் முகத்தில் கூடப் பூர்ணவ்வின் முகப் பாவனையைப் பார்த்து சுவாரசிய புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன் “ஒரு முக்கியமான விசயம்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கையில் இருந்த போன் அடித்தது.

அமித்ரா தான் போன் செய்து கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்தவுடன் “ஒன் மினுட்.. வந்தர்றேன்” என்றுவிட்டு பால்கனி பக்கம் போய்விட்டான்.

யாழிசையின் முகம் சுருங்கிவிட்டது..

அவளும் இந்தத் திடீர் திருமணத்தைப் பற்றியும்... இனி அவனுடனான எதிர்கால வாழ்க்கைப் பற்றியும் நிறையப் பேச எண்ணியிருந்தாள்.

இங்குப் பூர்ணவ்விற்கோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது... காலையில் விவாகரத்து பற்றி முடிவு எடுத்த போதெல்லாம் இல்லாத பதற்றம், விவாகரத்துப் பத்திரத்தை கைகளில் ஏந்திய போது இல்லாத பதற்றம்..

இப்பொழுது அவளிடம்
அந்த விசயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்ற நேரத்தில் வந்து ஒட்டிக் கொண்டது .

அதனாலேயே போன் வந்ததைச் சாக்காக வைத்து இங்கு வந்துவிட்டான்.

”உப்” என்றபடி மூச்சை இழுத்து வெளிவிட்டவன் இன்னும் அடித்துக் கொண்டு இருக்கும் போனை ஆன் செய்து காதிற்குக் கொடுத்து இவன் பேச வாயெடுக்கும் முன்னேயே

“பூர்ணவ் இஸ் எவெரிஒன் பைன் தேர்?” என்ற அமித்ராவின் கேள்வி அவனது காதில் பாய்ந்தது.

“ஹ்ம்ம் பைன்”

“நானும் காலைல இருந்து நீ போன் பண்ணுவேன்னு பாத்துகிட்டே இருந்தேன்.. சரி திருப்பூர் ரீச் ஆகிட்டாச்சும் பண்ணுவேன்னு பார்த்தேன்..ஆனா நீ பண்ற மாதிரி தெரியல.. அதான் நானே பண்ணிட்டேன்.. “

“ஓ”

“....?” “என்னாச்சுப் பூர்ணவ்.. ஏன் ஒரு மாதிரி பேசுற.. இஸ் எவெரிதிங் ஆல்ரைட்?”

“ஆங்.. அதெல்லாம்.. ஆல்ரைட் தான்... சரி நீ எப்போ வர்ற? வொர்க் என்னாச்சு?”

“ஹா.. இப்போதான் நீ பார்ம்க்கே வந்துருக்க.. கெஸ் வாட்.. நா அட்டென்ட் பண்ண எல்லா மீட்டிங்க்ஸ்சுமே ஹண்ட்ரட் பெர்சென்ட் சக்சஸ் ஆகிடுச்சு.. ஹுர்ரே” என்று சந்தோசமாகச் சொல்ல
அவளது சந்தோஷம் இவனைத் தொற்றிக் கொண்டது. சொந்த முயற்சியில் தொழில் தொடங்க வேண்டும் என்பது அவனது பல நாள் கனவு.

“ரியல்லி??!!!!!! எல்லா மீட்டிங்க்ஸ்சுமேவா? தட்ஸ் ஆன் ஆசாம் ந்யூஸ்.. ஆனா அந்த ஹென்றி அவரு சரியான சிடுமூஞ்சியா இருப்பாரே.. அவர எப்டி அமி சம்மதிக்க வச்ச? ஹொவ் டிட் யூ மேக் தட் பாசிபிள்?” ஆச்சரியமாகக் கேட்டான்.

பிசினஸ் பேச ஆரம்பித்ததும் நாளைய தொழில் அதிபர்களுக்கு நேரம் போவது தெரியவில்லை.

போனவனை இன்னும் காணுமே என்ற நினைப்போடு பாலக்னிக்கு வந்த யாழிசைக்கு அவன் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ மீண்டும் உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

தந்தையின் உடல்நிலை, கல்யாண வேலை என்று கிட்டத்தட்ட ஒரு வாரமாகச் சரியான இரவு உறக்கம் இல்லாமல் இருந்தவளுக்குப் படுத்தவுடன் கண்கள் சொக்கி உறக்கமும் வந்துவிட்டது.

பேச்சு முடியும் தருவாய்க்கு வந்திருக்க “எதுக்காகப் பூர்ணவ் அங்கிள் உன்ன அவசர அவசரமா இந்தியா போகவச்சாரு? என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லையா?” உள்ளே போய்விட்ட சிறு குரலில் கேட்டாள் அமித்ரா.

கண்களை மூடி நிதானித்த பூர்ணவ்

“நாளைக்கு நீ இந்தியா வந்துருவ தான.. அப்போ பேசிக்கலாம்..” என்றுவிட்டான் முடிவாக

“ஹ்ம்ம்ம்”

“எப்போ வருவ‌ திருப்பூருக்கு?”

“நாளைக்கு மதியமே”

“ஹ்ம்ம் சரி வந்துவுடனே கால் பண்ணு”

“ஓகே பூர்ணவ்”

“சரி வைக்குறே”

“பூர்ணவ்...”

“ஹ்ம்ம் சொல்லு அமித்ரா”

“லவ் யூ”

“.....”

எப்பொழுதும் அவள் சொல்லுவது தான் என்றாலும் முதல் முறையாகக் கசந்தது அவளது வார்த்தைகள் இவனுள்.

கண்களை ஒரு முறை மூடி திறந்தவன் “டேக் கேர் அண்ட் கம் சூன்...” என்றுவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

மறுபக்கம் இருந்த அமித்ராவிற்கு இது பெரிதாக எல்லாம் தெரியவில்லை.

முதல் முறை நடந்தால் தானே பெரிதாகத் தெரிவதற்கு. அவளது அடுத்தப் பிளைட்டிற்கான அழைப்பு வர.. கவனத்தை அதில் திருப்பிவிட்டாள்.

இங்குப் பூர்ணவ்வோ இருளை வெறித்தபடி அமர்ந்து இருந்தான்.

பல விதமான குழப்பங்கள் மீண்டும் அவனது மனதினுள் சூழ்வது போல் ஒரு பிரம்மை.. தலையை உதறி அதைக் களைத்தவன் “நா இப்போ எடுத்துருக்க முடிவு தான் எல்லாருக்கும் சரியானது” என்று மீண்டும் மீண்டும் உருட்போட்டுவிட்டு எழுந்து உள்ளே வந்தான்.

கடிகாரத்தில் மணி இரவு ஒன்று எனக் காட்டிக் கொண்டிருந்தது.

யாழிசை தூங்கிவிட்டதைப் பார்த்தவன், போர்வையைத் தேட யாழிசை போர்த்தி இருந்ததைத் தவிர அங்கு வேறு போர்வை இல்லை.. கட்டிலில் இருந்த தலைகாணி ஒன்றை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்து அவன் ஏற்கனவே அமர்ந்து இருந்த சோபாவிலேயே தலைகாணியைக் குளிருக்கு இதமாக அணைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்.

காலையில் யாழிசையை வீட்டினர் கலங்கிய கண்களோடு வழி அனுப்பி வைத்துவிட பூர்ணவ்வின் வீட்டில் அடுத்தச் சடங்கு முறைகள் ஆரம்பித்தது. எல்லாமும் முடிந்து அவர்கள் சாப்பிட அமர்ந்த நேரம் பூர்ணவ்விற்குப் போன் வந்தது அமித்ராவிடம் இருந்து.
அட்டென்ட் செய்தவன் “ஹெலோ” என
“திருப்பூர் வந்துட்டேன் பூர்ணவ்” என்றாள்.

“ஓகே நீ நம்ம புதுப் பில்டிங்க்கு வந்துடு... நானும் வந்தர்றேன்” என்றுவிட்டு எழ
“டேய் எங்கடா எழுந்துட்ட... காலைல இருந்து சாப்பிடவே இல்ல... ஒழுங்கா உக்காந்து சாப்டு” என்று யசோ அதட்ட
“அம்மா அம்மா... ஒரு முக்கியமான விஷயம்மா வந்தர்றேன்” என்றுவிட்டு கிளம்பி போய்விட்டான்.

யாழிசையைப் பார்க்கவே யசோவிற்குச் சங்கடமாக இருந்தது.

“அது.. அது.. புதுசா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறான்டா யாழ்.. அதான் வேலையாவே அழைஞ்சிட்டு இருக்கான்” என்று சங்கடமாகச் சிரித்துக் கொண்டே சொல்ல

“பரவால்ல அத்த.. திடீர் கல்யாணம்... பூர்ணவ்க்கும் நாம கொஞ்சம் டைம் தரணும்” என்றாள் யாழ்.
அப்பொழுது தனது அறையில் இருந்து சாப்பிட வெளிவந்த இளையச்சந்திரன்

“பூர்ணவ் எங்க யசோ.. இன்னும் ரூம்ல இருக்கானா?” என்று சேரில் அமர்ந்தபடி கேட்க

“அவன் ஏதோ முக்கியமான விசயம்ன்னு கிளம்பி போய்ட்டானுங்க” என்றார் யசோ வேதனையாக

ஒருவேளை பூர்ணவ்விற்கு யாழை பிடிக்கவில்லையோ என்ற பயம் காலையில் அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தும் தோன்றியிருந்தது.

பூர்ணவ் அவர்களது புதுப் பில்டிங்கிற்கு வந்த நேரம் ஏற்கனவே அமித்ராவின் கார் அங்கு வந்து நின்று இருந்தது.
அதைக் கவனித்தவன் விவாகரத்துப் பத்திரங்களைக் கையில் எடுத்தபடி உள்ளே நடந்தான்.

அத்தியாயம் – 30

யாழிசை, இளையச்சந்திரன், யசோதா மூவரும் ஹாலில் கூடி இருந்தனர்.
சிதம்பரமும், மீனாட்சியும் கூட வந்திருந்தார்கள்.

எல்லோரும் கூடியிருக்க இடம் ஒரே கலகலப்பு ஆனது.

பேச்சுப் போக்கில் எல்லோரும் சேர்ந்து அந்தாக்ஷரி விளையாடிக் கொண்டிருக்க

“டேய் சந்திரா... நீ பாடுடா... உன் குரல்ல பாட்டக் கேட்டு எத்தன நாளாச்சு” என்று சிதம்பரம் கேட்க இயல்பாகவே அழகான குரல் கொண்ட இளையச்சந்திரனும் பாட ஆரம்பித்தார்.

இங்கே கட்டிடத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பூர்ணவ்வின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது... ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டபடி நடந்தான்.

அந்தக் கட்டிடம் இன்னும் பூசப்படாமல் இருந்தது.. ஏதோ ஒரு வகையான ஈர வாசனை அந்த இடத்தை நிரப்பி இருந்தது.

உள்ளே நின்று இருந்த அமித்ராவின் கண்கள் அந்தக் கட்டிடத்தை அன்பாகத் தழுவி கொண்டிருந்தது. அவளது சொந்த தொழில் இடம் ஆகப் போகிறது அல்லவே இன்னும் சில நாட்களில்.. அந்தப் பாசம்.

ஆள் அரவம் இல்லா அந்தக் கட்டிடத்தில் பூர்ணவ்வின் காலடி ஓசை கேட்க கண்களில் காதல், மலர்ச்சி, துள்ளல், சந்தோஷம் எல்லாம் போட்டி போட திரும்பி பார்த்தாள்.

அவள் மனம் விரும்பும் மாயவன் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவளது கண்கள் அவனது முகத்தில் பதிய, அவனது கண்களில் இருந்த சோகமும், பதட்டமும் இவளது கண்களுக்கு இடம் பெயர்ந்தது.

“ஏ இவளோ அனீசியா இருக்கான்?” என்று யோசித்தவள் வேகக் காலடிகளை அவனை நோக்கி எடுத்து வைத்தபடி “என்னாச்சு பூர்ணவ்?” என்றாள்.

இருவரும் அருகே வந்து எதிர் எதிரே நின்று இருந்தனர்.

“அது... அது...” இவ்வளவு தூரம் வந்துவிட்டவனுக்கு எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

“என்னாச்சுப் பூர்ணவ்? ஏன் ஒருமாதிரி இருக்க?” அமித்ராவிற்குக் குரல் கமறியது... பூர்ணவ்வின் முகத்தில் தெரிந்த பதட்டமும், தயக்கமும் அவனைச் சேர்ந்தவர்களுக்கோ, அவனுக்கோ எதாவது நடந்திருக்குமோ என்ற பயத்தை அமித்ராவினுள் விதைத்தது.

இப்படி ஒரு பதட்டமான மனநிலையில் அவனை இத்தனை வருடங்களில் அவன் பார்த்ததே இல்லை.

“பூர்ணவ்.. என்னாச்சு.. ஏ இப்டி இருக்க? எவெரிதிங் இஸ் ஓகேனா?”

“டேய் லூசு என்னாச்சுனு சொல்லுடா” அவள் பதறியபடி கேட்க

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன் “அது அப்பா அமெரிக்கல இருந்து டிக்கெட் போட்டு என்னைய..” என்று ஆரம்பித்து எல்லா விசயத்தையும் திக்கி திணறி சொல்லி முடித்துவிட்டான்.

அமித்ரா எதுவும் பேசாமல் அமைதியாகவே எல்லாவற்றையும் கேட்டாலும்,அவனது ஒவ்வொரு வார்த்தைகளுக்கு அமித்ராவின் முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளைப் பூர்ணவ்வின் கண்கள் கவனித்துக் கொண்டே இருந்தன..

இறுதியாக அவன் திருமணம் நடந்துவிட்டது என்று சொல்லி முடித்த பொழுது தரையை வெறித்த நிலையில் இருந்த அமித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி அவளது கன்னங்களில் வழிந்தன.

அதைக் கண்டு பதறிய பூர்ணவ் “அமி.. அமி.. ப்ளீஸ் அழுகாத” என்று அவள் கன்னத்தைத் துடைத்து விட அவனது கைகளைத் தட்டிவிட்டாள்.

அதைக் கண்டு கொள்ளாதவன் தனது கைகளில் இருந்த விவாகரத்துப் பத்திரத்தை விரித்துக் காண்பித்து “பாரு இங்க பாரு... நா ஒரு சொல்யூசனோட தான் வந்துருக்கேன்..” என்றுக் காட்ட அவனைப் புரியாமல் பார்த்தாள் அமித்ரா.

“இப்போ தான் எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் மேரேஜ் ஆகிருக்கு.. சோ இப்போயே டிவோர்ஸ் கேட்டா கோர்ட்ல கெடைக்காது.. ஆறு மாசமாச்சும் ஆகணும்... சோ டிவோர்ஸ் வாங்குன உடனே அப்பாகிட்ட நம்ம கல்யாணத்த பத்தி நா பேசு..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பளார் எனப் பூர்ணவ்வை அறைந்தாள் அமித்ரா.

அவள் அறைந்த ஒலி அந்தக் காலி கட்டிடம் முழுக்க எதிரொலித்தது.
பூர்ணவ் அமித்ராவை அதிர்ந்து பார்க்க அவனது சட்டையின் காலரை கொத்தாகக் கைகளில் பற்றி இழுத்தவள் “என்னடா நெனச்சுட்டு இருக்கே என்னைய பத்தி? ஹா? யூ ப்ளடி சீப்... எப்டி எப்டி... அந்தப் பொண்ணுக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு என்னைய மேரேஜ் பண்ணிக்குவியா? ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சுட்டு அந்த வாழ்க்கைய நா சந்தோசமா எத்துக்குவேன்னு எப்டி எதிர் பார்த்த பூர்ணவ் சந்திரன்?” என்றபடி அவனது காலரைப் பிடித்து ஆட்டியவள் அவனை உதறிவிட்டு

“அந்தப் பொண்ண பத்தி கொஞ்சமாச்சும் நெனச்சு பாத்தியா? ஊரறிய அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிட்ட.. இப்போ ஆறு மாசம் அவ கூடவே ஒன்னா ஒரே வீட்ல வாழ்ந்துட்டு அவளுக்கு டிவோர்ஸ்சும் குடுத்துருவ... எல்லாமே உன்னோட விருப்பபடி நடக்கணுமா? எதுக்கு? ஹா? அவளும் மனுஷி தான் ரோபோட் இல்ல.. நீ உங்கப்பா ஆசைக்காக வச்சு விளையாண்டுட்டு தூக்கிப் போடுற பொம்ம கிடையாது அவ... உயிரும் உணர்வுமுள்ள ஒரு மனுஷி...” என்று அமித்ரா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அந்தக் கட்டிடத்தில் பட்டு எதிரொலித்தன.

“இல்...இல்ல அமித்ரா.. அவளும் கட்டாயத்தால தான் கல்யாணம் பண்ணிகிட்டா” என்று பூர்ணவ் சொல்ல
“நீ கேட்டியா அவகிட்ட? ஹா நீ கேட்டியா? அட்லீஸ்ட் ஒரு வார்த்த அவகிட்ட பேசுனியா?” என்று அவள் கேட்க அவளது கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலை உணர்ந்தவன் தலை குனிந்து நின்றான்.

“இதோ.. இதுலையே தெரியுதே.. எல்லாம் தெளிவா.. எல்லா விசயத்தையும் ஒரு பக்கமா இருந்து பாக்க கூடாது பூர்ணவ்... உன் கூட பொண்டாட்டின்னு வீட்ல வந்து உக்காந்துகிட்டு இருக்காளே அவளுக்கும் நம்மளுக்கு இருக்க மாதிரியே மனசுன்னு ஒன்னு இருக்குன்னு யோசி...”

“அப்ரோ என்ன சொன்ன? அவளுக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னில? அந்த முடிவையும் நீ தான் எடுத்துருக்கே இல்ல.. நா? என்னோட முடிவு? அது எங்க? இப்டி ஒரு விசயத்துக்கு நா சம்மப்திப்பனான்னு நீ யோசிச்சு பாத்தியா?” மீண்டும் ஒரு தலைகுனிவு அவனிடம்

“இத்தன வருஷத்துல இவளோ தான் நீ என்னைய புரிஞ்சு வச்சுருக்கே இல்ல... அம் அஷேம்ட்... இத்தன வருஷத்துல முதல் முறைய உன்ன லவ் பண்ணத நெனச்சு நா வெக்கப் படுறே... சக மனுஷியா இருக்குற ஒரு பொண்ணு உணர்வுக்குக் கூட மதிப்பளிக்கத் தெரியாத ஒரு மேல் சாவுனிஸ்ட்ட போய் லவ் பண்ணிட்டேன்னு முதல் நா வெக்கப் படுறேன்”

“நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு தூக்கி எரிஞ்ச பின்னாடி அந்தப் பொண்ணோட நிலைம? அதப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பாத்தியா பூர்ணவ்? அந்தப் பொண்ணோட வாழ்க்கைய சீரலச்சிட்டுக் கொஞ்சம் கூட மனசாட்சி குத்தாம உன் கூட நா சந்தோசமா வாழ்வேன்னு எப்டி நெனச்ச பூர்ணவ்? உங்கப்பாவும் அந்தப் பொண்ணோட அப்பாவும் அந்தப் பொண்ணு மேல அவளோ பாசம் வச்சுருக்காங்கன்னு சொல்றே.. அவ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. இல்ல நா வேற ஒருத்தர லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா.. கண்டிப்பா அவுங்க அந்தப் பொண்ணோட ஆசைய நிறைவேத்தி இருப்பாங்க.. ஆனா அவ அப்டி எதுவுமே சொல்லல... இதுல இருந்தே தெரியலையா? அவ இந்தக் கல்யாணத்த விருப்ப பட்டு தான் பண்ணி இருக்கான்னு? கல்யாணம்ன்றது காலைல சாப்ட்ட டிபன் மாதிரி சகஜமா கடந்து போகுற ஒரு விசயம் கிடையாது.. நானும் ஒரு பொண்ணு தான்.. இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சு நா வாழ போற வாழ்க்க எனக்கு வேண்டாம்.. என்னைக்கும் வேண்டாம்” தீர்மானமாகச் சொன்னவள் திரும்பி கூட பார்க்காமல் வேக நடையிட்டு காரை எடுத்துக் கொண்டு பபுறபட்டு போய்விட்டாள்.
இவ்வளவு நேரமும் அமித்ராவின் வார்த்தைகளின் வீரியம் புரிந்து இருந்த பூர்ணவ் அதிர்ந்து அங்கேயே அமர்ந்தான்.

அவசரத்தில் எடுத்த முடிவு எவ்வளவு தப்பாகப் போயிருக்கிறது என்று அவனுக்குப் புரிய ஆரம்பித்து இருந்தது.
இந்த பக்கம் அமித்ராவோ வேகமாக காரை செழுத்திக் கொண்டு இருந்தாள்.

காரின் வேகம் எல்லையைத் தாண்டிக் கொண்டு இருக்க, அவள் வந்து நிறுத்திய இடம் அவள் எப்பொழுதும் தனிமை தேவைப்படும் பொழுது எல்லாம் வரும் நஞ்சராயன் குளம்.
காரை நிறுத்திவிட்டுப் பள்ளமாக இருந்த இடத்தில் இறங்கி குலத்திற்கு அருகே வந்தவள் அப்படியே குளத்தை வெறித்தாள்.

கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.
மனமோ நடந்த சம்பவங்களை எல்லாம் அசைப்போட மூளை நடந்த எல்லாவற்றையும் ஒளிப்பதிவாக வெளியிட்டுக் கொண்டிருந்தது.

“அவ்வளவு தானா? இத்தனை வருட எனது காதல் முடிந்துவிட்டதா?” உடலில் உள்ள பலம் மொத்தமும் போய்விட்ட பிரம்மையில் உடல் தளர்ந்து அப்படியே சரிந்து முட்டி போட்டபடி அமர்ந்தாள்.

அவள் நித்தம் நித்தம் ரசித்த அவனது சத்தமான சிரிப்புச் சத்தம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
காதுகளை இரு கைகளாலும் பொத்திக் கொண்டு கதறினாள்... அவளது உயிர் காதல் இனி அவளுக்கு இல்லை என்று உணர்வில் அவளது மனது வெடித்து அழுத்தத்து.

மீண்டும் மீண்டும் அவனது சிரிப்பலைகள் அவனது காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்க

“ஏ? நா என்ன தப்பு பண்ணேன்? ஏ எனக்கு இந்தத் தண்டன? உண்மையா ஒருத்தன நேசிச்சது குத்தமா?” திக்கற்று கேள்விகளைத் தொடுத்தாள்.

அவள் கதறி அழுது கொண்டிருந்த அந்த இடத்தில் அவளை மாரோடு சாய்த்து தேற்ற ஆளில்லை...

இதை உணர்ந்த இயற்கை சடசடவென மழையைப் பொழிந்து அவளது வேதனை தாங்க முடியா கண்ணீரில் தானும் துயரம் கொண்டு தனது கண்ணீரால் அவளை அணைத்தது.

ஆனாலும் அவளது கண்ணீர் நிற்கவில்லை.. அவன் மேல் அவள் கொண்ட அன்பும், காதலும் அவளது உடலை இப்பொழுது தழுவி கொண்டிருக்கும் அந்த மழை நீரைப் போலவே தூய்மையானது.

பூர்ணவ் சந்திரனை முழுக்க முழுக்க, திகட்ட திகட்ட ரசித்து நேசித்த அவளது கண்களும் இதயமும் மீண்டும் மீண்டும் அவனது பெயரையே ரீங்காரமிட, அவன் இனி அவளுக்கில்லை என்ற வேதனை தாளாமல் “பூர்ர்ர்ர்ர்ர்ணவ்வ்வ்” என்று கத்தினாள் விட்டத்தைப் பார்த்தபடி
எதற்காகச் சொல்கிறாள் என்று தெரியவில்லை.. மனது உதிர்த்துக் கொண்டே இருக்கும் அவனது பெயரை வாய் வழி வெளி தள்ள நினைக்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.

பாசமான குடும்பம், பணக்கார வாழ்க்கை, நினைத்தது நினைத்த நிமிடத்தில் கிடைக்கும் பாக்கியம் எனப் பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருந்தவள் அவள்.. பூர்ணவ் வேண்டும் என்று நினைத்ததும் அவளே தான்.. இப்பொழுது அவன் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வந்ததும் அவளே தான்... முடிவு சரியானதாக அவளது மனதிற்குப் பட்டாலும் அது அளித்த வலி மரண வலியாக இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகா...

“மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மானங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே....”

இங்குப் பூர்ணவ்வோ மழையில் பெருகி ஓடிக் கொண்டிருக்கும் நீரை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் செய்த தவறுகள் எல்லாம் அவன் மனக் கண்ணில் பட்டியலிட்டு அவனைச் சவுக்கால் அடிக்க, வாழ்வில் முதல் முறையாகக் குற்றவுணர்சசியின் வலி எப்படி இருக்கும் என்று அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

“கிழக்கினில் தினம் கதிரனாது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறு வாசல் வைப்பான் இறைவன்...
ம்ம்ம்ம்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்”

என்று இதோடு சேர்த்து சிதம்பரத்தின் விருப்பத்திற்கேற்ப மூன்று பாட்டுகளைப் பாடி முடித்திருந்தார் இளையச்சந்திரன்.
 
Top