எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
லகை உற்று நோக்கும் மனிதா!
முதலில், சுயம் நோக்கு.
சுயத்தை சுத்தம் செய்து
அகத்தை மலரச் செய்.

அணு, அணுவாய் அகழ்ந்தாய்ந்து
மானுடத்தின் பொக்கிஷத்தை மீட்டெடுக்க
சுயத்தை சுயம் வர செய்.

சுயம் நோக்கி நடந்து பார்
சுயநலம் மறந்து போகும்
சிந்தனை தெளிந்து போகும்
உலகத்தவர்களின் கைகள்
உனக்குள்ளே அடங்கிப் போகும்.

மறந்து போன மனிதம்,
மக்கிப் போன புனிதம்,
அழிந்து போகும் அன்பு,
ஆற்ற முடியாப் பிழைகள்,
அனைத்தும் கரைந்து போக,
சுயத்தை சலவை செய்.

மகிழ்ச்சி மலர்களால்,
மலர வேண்டிய மனிதம்
சாக்கடையாய், நாற்றமெடுக்க,
மூக்கைப் பிடித்தே பழகி விட்டோம்.
முடியாது என்னால் என
முடிவே கட்டி விட்டோம்.

சுயத்தில் களைநீக்கி
அகமெனும் நிலத்தில்
அன்பெனும் விதையை
அழகாய்த் தூவி விடு.

இருக்க இடம் தந்து,
பருக நீர் தந்து,
உயிர் வளியும் உனக்களித்து
உனை ஈன்ற அன்னையாய்
தாங்கி நிற்கும் இப்பூமிப்பந்து
தரித்திர கோலத்தில்
உன்னால்,
உருத்தெரியாமல் அழிந்தது .
உன்னை எரித்து எரியாமல்
சுழன்றது.

நோயின் கொடுமையால்
பாயில் வீழ்ந்துள்ளோம்.
இஷ்டம் போல் வாழ்ந்து கொண்டு
குஷ்ட ரோகியாய் சிதைந்துள்ளோம்.

மேன்மையாய் வாழாமல்
மேலுக்கு பூச்சிட்டால்
யாருக்கும் பயனில்லை
ஊருக்கும் வாழ்வில்லை.

அதர்மச் சிதறல்கள்
அடியோடு அழிந்து போக,
சுயத்தை தெளியச் செய் .
அதன் சுடர் மிகும் ஒளியால்
இப்பூமிப்பந்தை பிரகாசமாக்கு.
 
Top