எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

டிஸ்டண்ஸ் மெயின்டெயின் பண்ணுடா(டி) - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

Moderator
இது என்னுடைய முதலாவது சிறுகதை சிறு முயற்சி ?

நன்றி.
ரிஷி.
 

Rishi24

Moderator
DB1E08D0-6E29-4052-A6DA-9E51F067023D.jpeg

டிஸ்டண்ஸ் மெயின்டெயின் பண்ணு டா (டி)

நீண்டு கொண்டே இருந்த அந்த நெடுஞ்சாலை வீதியில் ஓய்ந்து போய் நடந்து கொண்டிருந்தாள் ஓர் காரிகை....

அவள் மகிழினி பிரியா!!!

அழுது ஓய்ந்த தோற்றமே ஆனாலும் அவள் மதி முகத்தில் எந்த உணர்ச்சியுமே இல்லை என்று தான் கூற வேண்டும் போலும்..

உச்சி வகிட்டில் இருந்த குங்குமமே அவளை அவளவனின் மனைவி என பறைசாற்ற கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவளுக்கு நிகழ்கால வலிகளில் தாக்கமே அப்பட்டமாய்..

அவனுக்கு வீட்டாரால் முடிவு செய்யப்பட்ட பிடிக்காத திருமணமாக இருக்கலாம்... ஆனால் அவளுக்கு அப்படியா என்று கேட்டால்?

சிறு வயது முதல் உயிர் நண்பனாக இருந்தவன் எப்போது மனதிற்குள் நுழைந்து உயிர் காதலனாகி கணவனானான் என்று அவளுக்கே சரியாக சொல்லத் தெரியாத ஒன்றை எப்படிக் கூறுவாள்?

காணும் நேரமெல்லாம் கீரியும் பாம்புமாக இருப்பவர்களுக்குள் அவளுக்கு மட்டும் ஏன் அவன் மீது காதல் வந்தது?

தன்னை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் தன் காதலால் மாற்றி விடலாம் என எண்ணி இருந்தாளே!
எல்லாம் கானல் நீராகிப் போனதுவோ!

அவள் நட்புக்கு துரோகம் செய்து விட்டாளாம்.... சம்மதம் கேட்கும் போதே முடியாதென சொல்லி விட்டிருந்தால் அவனுடன் வாழத் தேவை இருந்திருக்காதாம்...

நட்பை தாண்டி காதல் வந்தே நாளாயிற்று டா... உன்னோடு மட்டும் தானே வாழ துடிக்கிறேன் என எப்படி சொல்வாள் அவனிடம்?

அவன் மறுப்பை தாங்கும் சக்தி அவள் காதல் கொண்ட மனதிற்கு அல்லவே!

அவ்வளவு தானா?

அவன் தனக்கு இல்லையா?

பாவை மனம் முன் நாட்கள் நினைவில் சுழலத் துவங்கி இருந்தது.


......


"இவன் இருந்தா என்னால இருக்க முடியாது சார்..."

"நீ என்னடி சொல்றது... இவ இருந்தா என்னால தான் இருக்க முடியாது சார்... குட்டிப் பிசாசு"

"யாருடா குட்டிப் பிசாசு.. நீ தான் காட்டேரி"

"நீ பன்னிடி"

"நீ எரும மாடு டா"

"ஏய் டா போட்டு பேசுன... பல்ல தட்டிடுவேன் ஆமா"

"அய்யோ பயமா இருக்கே..."

"உன்ன..." கழுத்தை நெறிக்கப் போனவன் "ஸ்டாப் இட்..." என்ற கல்லூரி அதிபரின் குரலில் சமத்தாய் நின்று விட்டான்.

சஞ்சய் ஆதித்யன்!!!

"ஸ்டுடென்ட் சேர்மன்னா பக்குவமா இருக்கணும்... நீங்க ரெண்டு பேரும் இருக்கறவன குழப்பி விட்டுடுவீங்க போல... லாஸ்ட் டெஸிஷன் என்ன தான் சொல்ல வர்றீங்க?" அவருக்கு அதற்கு மேல் முடியவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே தெரிந்தது.

தலைவர், உப தலைவர் இருவரும்...

அவன் இருந்தால் நான் இருக்க மாட்டேன் அவள் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி சொல்லியே அவர் உயிரை வாங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்...

வயதான மனிதர் வேறு ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை அவரால்...

"இவன் இருக்கற இடத்துல நான் இருக்க மாட்டேன் சார்" மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டவளை உறுத்து விழித்தவன்

"இவ இருக்கற இடத்துல நானும் இருக்க மாட்டேன் சார்" தானும் கைகளை கட்டிக் கொள்ள அவனை முறைத்தாள் பெண்.

"அட ஏன்யா முதல்ல இருந்து ஆரம்பிக்குறீங்க?"

"நீங்க தானே சார் பைனல் டெஸிஷன் கேட்டீங்க" இருவரும் கோரசாக சொல்லி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முகத்தைத் திருப்ப

"இதுங்கள திருத்தவே முடியாது" தலையிலடித்துக் கொண்டார் மனிதர்.

"அப்போ சஞ்சய்... உன் கூட இந்த தடவ ஆர்த்தி இருக்கட்டும்... அம்மாடி பிரியா... உன் கூட சிவா இருக்கட்டும்..." அவர் முடிவு கேட்டு அவர்களை நோக்க "ஓகே சார்..." தோளை குழுக்கிக் கொண்டு நடந்தவர்களை பார்த்து அவர் பெருமூச்சு விடுவதற்குள் "நாங்க ரெண்டு பேருமே இருந்துக்கறோம் சார்" மறுபடியும் கோரசாக சொல்லி விட்டு முறைத்துக் கொண்டு நின்றவர்களை பார்த்து நெஞ்சில் கை வைத்தார் அவர்.

'என்னையே வேணாம்னு சொல்றல்ல... இருடி (டா)' மனதிற்குள் கூட ஒரே எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது இருவருக்கும்...

"சரி போங்க... ஆனா திரும்பி வந்துடாதீங்க" கையெடுத்து கும்பிட்டவரை பார்க்க சிரிப்பு பீறிட்டாலும் அடக்கிக் கொண்டவர்கள் திரும்பி நடக்க வாசலில் வெளியேறுவதில் மீண்டும் முட்டிக் கொண்டனர்.

"நான் தான் முதல்ல போவேன்..."

"போடி..." அவளை இடித்துக் கொண்டு முன்னே சென்றவனை

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டா" தள்ளி விட்டு இடுப்பில் கை குற்றி முறைத்தாள் மாது.

"ஆமா இவ பெரிய உலக அழகி... போவியா" மீண்டும் ஒரு முறை இடித்து விட்டு அவன் ஓட

"உன்ன.... நில்லுடா எரும" பின்னால் கத்திக் கொண்டே ஓடினாள் அவள்.

......

இடைவேளை....

கேன்டீனில் நண்பர்களுடன் வெகு சுவாரஸ்யமாக கதைத்துக் கொண்டிருந்தவனிடம் வந்தான் ஜூனியர் ஒருவன்.

"என்னடா?" அவன் புருவம் உயர்த்த

"அ... அது மேடம் அவங்களுக்கான பணத்தை சேத்து கொடுக்க சொன்னாங்க" என்ன சொல்வானோ என்ற திக் திக் உணர்வு வந்தவனுக்கு...

"ஹௌ டேர்... எவ அவ...?" அவன் மேசையை தட்டி விட்டு பல்லை கடிக்க

"பிரியா மேடம்" அவன் பதிலில் விழித்தவன் பக்கென சிரித்து விட்டான்.

"ஹாஹா... பிரியா... மேடமா... குட் ஜோக்... அவளுக்கு மரியாத கொடுக்குற ஒரே ஆள் நீதான்... போடா போயி உன் மேடத்து கிட்ட சொல்லு நான் முடியாதுன்னு சொன்னேன்னு.." அலட்சியமாய் தோளை குழுக்கிக் கொண்டவன் மீண்டும் நண்பர்கள் புறம் திரும்பி விட்டான்.

....

"ரவி... கெளம்பலாம் டா... " அவன் எழும் நேரம் அனைவரும் சென்று விட்டிருக்க நண்பனையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவனிடம் வந்தார் அதிபர்.

"சார் நீங்க எங்கே இங்க?" உண்மையில் ஆச்சரியம் அவன் குரலில்...

"மிஸ்டர். சஞ்சய்... ஏன் இப்பிடி ப்ராப்ளம் பண்றீங்க... கேன்டீனில் வாங்குன சாப்பாட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்னு ரகளை பண்ணிகிட்டு இருக்கீங்களாம்னு கம்ப்ளைன்ட் வந்திருக்கு... வாட் இஸ் திஸ்?"

"வாட்....?" அதிர்ந்து கத்தியவன் தூரத்தில் ஹைபை போட்டுக் கொண்டு அவனை பார்த்து பழிப்புக் காட்டிய பிரியாவை கண்டு நடந்தது ஊகித்துக் கொண்டான்.

"யார் சார் கம்ப்ளைன்ட் கொடுத்தது? "

"யாரு கொடுத்தா என்ன... நீங்களே இப்பிடி நடந்து கிட்டா என்ன அர்த்தம்?"

"சாரி சார் இனிமே இப்படி நடக்காது... நீங்க போங்க நா பாத்துக்கறேன்...." கை முஷ்டி இறுக்கி கண்களை இறுக மூடித் திறந்தவன் அவர் சென்று விட

"இவளுக்கு இன்னிக்கு இருக்கு... குட்டி பிசாசு... என் மானமே போச்சு " பல்லைக் கடித்தவன் கோபமாக வெளியேறினான்.

.......

"அய்யோ அம்மா... " கையில் சின்ன சிராய்ப்பு... நெற்றியில் காயம் என்றிருக்க இடுப்பில் கை வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி டீவியில் கண்களை பதித்திருந்தான் சஞ்சய் ஆதித்யன்.

அவன் தானே அவள் ஸ்கூட்டியின் பிரேக் வயரை கட் பண்ணி விட்டது... சிரிப்பு வராமல் என்ன செய்யும்???

"ப்ரி... என்னாச்சு மா?" பதறிக் கொண்டே அருகில் வந்தார் அவனுக்கு தாயும் அவளுக்கு அத்தையுமான செல்வி....

"வண்டியோட பிரேக் பிடிக்கல்ல அத்த..." பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்ல அதற்கு மேல் முடியாதென வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கி விட்டான் சஞ்சய்.

"ஹாஹா... அம்மா... இந்த குட்டி பிசாசுக்கு கண்ணு தெரியாதுன்னு நான் சொன்னத நீங்க நம்பலல்ல... இப்போ பாருங்க" அவன் சிரிக்க

"காட்டேரி...." அருகில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடியை எடுத்து அவன் மண்டைக்கே வீச நூலிழையில் தப்பித்து விட்டாலும் நெற்றியில் உரசிச் சென்றதில் இலேசாக கீறி விட்டிருக்க இரத்தம் கசிந்தது அவனுக்கு....

"அம்மா... குட்டி பிசாசு... கொலகாரி" நெற்றியை பிடித்துக் கொண்டு அவன் கத்த

"நீ தான் டா கொலகார காட்டேரி.... பிரேக் வயரை கட் பண்ணி விட்டது நீதான்னு உன் ப்ரண்டு ரவி சொல்லிட்டான்... அத்த உங்க மகனுக்கு நான் தான் சமாதி கட்டுவேன்... ரத்தக் காட்டேரி" படபடவென பொரிந்து விட்டு உள்ளே நுழைய " ஏன்டா இப்பிடி பண்ண...?" அவனுக்கு இரண்டு போடு போட்டு விட்டே மருந்திட்டு விட்டார்.

"அம்மா... அடிச்ச அவளுக்கு சப்போர்ட் பண்ற நீ"

"உன்ன அடிக்க கூடாது டா... கொல்லணும்"

"அம்மா நான் உன் புள்ள மா" நெஞ்சில் கை வைத்தவனுக்கு பின்னால் பேக் ரவுண்ட் மியூசிக் ஆரம்பமாக

"அதனால தான் இன்னும் உயிரோட இருக்க" அவர் வார்த்தைகளில் அது அப்படியே அடங்கிப் போனது.

"கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆகுது... ஏன்டா அவள இன்னும் கஷ்டப்படுத்தி கிட்டு இருக்க?"

"நானா அவள கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேன்... எல்லோருமா சேந்து என் தலைல கட்டி வெச்சிட்டு இப்போ அவள கஷ்டப்படுத்தறேன்னு சொல்றீங்க... ஆறு மாசம் முடிஞ்சிடுச்சு... இன்னும் ஆறு தான் இருக்கு... மியூச்சுவல் டிவோர்ஸுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து அப்ளை பண்ணி இருக்கோம்... அவளுக்கு என்ன பிடிக்கல எனக்கு அவள பிடிக்கல... சோ இப்பிடி இருக்கறதுல என்ன இருக்கு?" விட்டேற்றியாய் கேட்டுக் கொண்டே எழுந்து சென்றவனை அதிர்ந்து பார்த்திருந்தார் தாய்!!!

செல்வியின் அண்ணன் மகள் மகிழினி.

பெற்றோர் இருவரும் சிறு வயதிலேயே இறந்து போக தாத்தாவிடம் வளர்ந்திருந்தவளானாலும் அவளுக்கு எல்லாமே செல்வி தான்.

செல்விக்கும் மகிழினி என்றால் உயிர்.

தன் வீட்டு மருமகளாக வர வேண்டுமென்ற எண்ணம் இருக்க தந்தைக்கும் அதே எண்ணம் இருந்ததில் மகன் முடிவை பற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை...

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

மகிழினியை அவன் பாதுகாக்கும் விதம் அவரை அசைத்திருந்தது.

ஆனால் இந்த ஆறு மாதாமாக ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என அவருக்குமே யோசனையாய்...

உண்மை தான்... சஞ்சய்க்கு மகிழினியை பிடிக்கும்... மனைவியாக அல்ல... உயிர் தோழியாக...

அவளை தோழி ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருந்தவனுக்கு அவள் மனைவியாய் வந்ததை ஏற்றுக் கொள்ள முடியா கோபம் ஒரு புறமிருக்க மரணத்தை வைத்து மிரட்டி அவனுக்கு திருமணம் நடத்தி வைத்த தாத்தாவின் மீதே அதிக கோபம்.

முதலிரவன்று அறைக்குள் நுழைந்தவளிடம் "நீ நட்புக்கு துரோகம் செஞ்சிட்ட மகி... கேக்கும் போதே முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே... பிடிக்காத கல்யாணத்தை எதுக்கு பண்ணிக்கிட்ட?" எரிந்து விழுந்தவன் அன்றிலிருந்து அவளை அப்படி அழைப்பதை விட்டு விட்டு தோழியாகவே தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

இப்போதும் அவனுக்கு அவளைப் பிடிக்கும்... உயிர் தோழியாய் மட்டும்... அதை தாண்டி அவன் மனம் செல்லவே இல்லை...

ஆனால் அவளுக்கு அப்படி அல்லவே!!!

தாத்தா அத்தை இருவரும் சம்மதம் கேட்கும் முன்னே அவன் மீது காதலில் விழுந்து விட்டாளே...

அவளை காப்பது தொடக்கம் அவளுக்கானதை பார்த்துப் பார்த்து வாங்கி கொடுப்பது வரை அவன் அன்பு அவளை வீழ்த்தி இருந்தது.

அல்லது அவன் அக்கறையை அவள் தான் தவறாக புரிந்து கொண்டு விட்டாளா???

நிச்சயமாக இல்லை என்று தான் கூறுவாள்... அவளுக்கும் ஆண் நண்பர்கள் இருக்கின்றனர் தான்... ஆனால் சிறு வயதிலிருந்து அவனிடம் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை அவள் வேறு யாரிடமும் உணர்ந்ததே இல்லை...

அவன் பேசும் போது ஓர் மனைவியாய் அவள் அமைதியாக இருக்க முடியும்... ஆனால் அவன் தோழியாய் முடியவே முடியாதே...

இருவருக்கும் அன்பு, பாசம், அக்கறை இருக்கிறது ஒருமேல் ஒருவருக்கு...

இருந்தும் அந்த சிறு வயது பழக்கமே அவர்களை ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றி மகிழச் சொல்லிக் கொடுத்திருந்தது.

அவனுக்கு அவளை அழ வைப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.

சிறு வயதில் அழுது புகார் சொல்லிக் கொண்டிருந்தவள் ஓர் வயதுக்கு மேல் அவனை தானும் சீண்டத் துவங்க இருவருக்கும் தீரா பகை...

அப்போது கோபமெல்லாம் இல்லை அவனுக்கு... ஆனால் இந்த திருமணம் அவனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்திருக்க அவள் மீது கோபப்பட தொடங்கி இருந்தவனுக்கு நிஜம் உறைக்கவே இல்லை என்பது தான் மறுக்க முடியா உண்மை...

எப்போதும் அவனுக்கோ அவளுக்கோ ஒருவரை விட்டு ஒருவர் இருக்கவே முடியாது... அந்த வகையில் அவள் அவனுடன் ஒரே அறையில் இருப்பதில் அவனுக்கு எந்த பாதிப்புமே இல்லை தான்.... ஆனால் அந்த விட்டுக் கொடுக்க முடியா உணர்வை அவன் நட்பு என்ற வட்டத்திற்குள் மட்டும் வைத்தது தான் இங்கு பிழையானதோ???

.....

"சாப்டியாடி குட்டி பிசாசு?" மேசை முன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவளின் தலையை தட்டி விட்டு அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தான் ஆதித்யன்.

"ஏன் சாப்புடலன்னா ஊட்டி விட போறியா காட்டேரி... சும்மா அக்கறை இருக்குறா மாதிரி நடிக்காதடா" உதட்டை வளைத்தவளுடன் மீண்டும் மல்லுக்கு நின்றான் கணவன்.

"உவ்வேக்... உனக்கு ஊட்டி விடணுமா... அதுக்கு நாலு பாட்டில் விஷம் குடிச்சிட்டு சாகலாம்... ஆர்த்தி கேட்டாலாவது பரவாயில்ல... ஆசயா ஊட்டி விட்ருப்பேன்... ஹும் நமக்கு வாய்ச்சது அவ்வளவு தான்" பதிலுக்கு அவள் எதுவும் பேசாதது எப்போதும் போல் அவனை உறுத்தியது.

ஆர்த்தி பற்றி பேசும் போது மட்டும் இவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்???

புரியவே இல்லை அவனுக்கு... மரமண்டை!

"ப்ச்... " எரிச்சலாய் மொழிந்து விட்டு அவள் எழ

"என்னாச்சு? " என்றான் யோசனையாய்....

"ஒன்னில்ல... எனக்கு தூக்கம் வருது" நகரப் போனவளின் கையை எட்டிப் பிடித்தவன்

"ஆமா உன் முகம் ஏன் டல்லா இருக்கு... காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளமா?" மீண்டும் கேட்டான்.

"இல்ல... ஒன்னும் இல்ல... ஆல் தி பெஸ்ட்"

"எதுக்கு?" புரியாமல் அவன் அவளை ஏறிட

"ஆர்த்தி சொன்னா இன்னும் ஆறு மாசத்துல அவளுக்கு வெட்டிங்னு.... நீ கூட சம்மதம் சொல்லிட்டதா சொன்னா" வரவழைத்த புன்கையுடன் ஏறிட்டவளது கண்கள் இல்லை அது பொய் என்று சொல்லேன் என மன்றாடிக் கொண்டிருக்க

"எஸ்... எஸ்... ஷிட்... மறந்தே போயிட்டேன் பாரு... அதுவும் உன்னால தான்டி குட்டி பிசாசு... என் மண்டைக்குள்ள வந்து ஆட்டி படைக்குற என்னை... உனக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே எனக்கு எல்லாம் மறந்து போயிடுது..." அவன் வார்த்தைகளில் வெளி வரத் துடித்த கண்ணீரை

"நீ போடா இரத்த காட்டேரி...." கோபத்தில் அடக்கிக் கொண்டவள் அவனை பிடித்து தள்ளி விடப் போக

"ஏய்... டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டி" தள்ளி நின்றவன் அவளைத் தாண்டிச் செல்ல அவன் பின் மண்டையில் மோதி விழுந்தது ஓர் தலையணை...

"எதுக்குடி அடிச்ச...?"

"நீ ஏன் என் கைய பிடிச்சடா லூசு... அதுக்கு தான் அடிச்சேன்..."

"அதுக்கு அடிப்பியாடி...நீ கூட தான் என்ன தொட வந்த?" அவன் கோபமாய் முன்னேற

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டா" இருவருக்குமுள்ள இடைவெளியை சைகை செய்தவள் அவனுக்கு பழிப்புக் காட்ட

"எனக்கே அடிக்கிறியா நீ... என் மண்டைல அடிச்சது மட்டுமில்லாம ஒரு சாரி கூட கேக்கல... உன்ன... இருடி" அவனை பிடித்து தள்ளி விட்டு ஓடியவளை கொலைவெறியுடன் துரத்தினான் அவளவன்....

......

காலை...

"பிரியா தானே டா அது... கிளி இன்னிக்கு தனியா வருது... வெச்சி செஞ்சிட வேண்டியது தான்" தன் நண்பர்களிடம் திரும்பி கேட்டு விட்டு

"பிரியா.... கம் ஹியர் " கத்தி அழைத்தான் சிவா....

அவனுக்கும் சஞ்சய்க்கும் ஆவதே இல்லை.... எப்போதும் சண்டை சண்டை தான்... சஞ்சயின் வளர்ச்சி அழகு எல்லாவற்றிற்கும் அவன் மீது ஒரு பொறாமை உணர்வு இவனுக்கு...

அதை விட தன் நண்பர்கள் யாரையும் தவிர வேறு எந்த ஆணையும் ஏறிட்டுப் பார்க்காதவள் அவனுடன் மட்டும் ஒட்டிக் கொண்டே இருப்பதில் ஏக கடுப்பில் தான் இருந்தான்.

"என்ன சிவா?" அவன் முன்பு ஒரு தடவை சொல்லி இருந்தான் என்னை பெயர் சொல்லியே அழை என...

சஞ்சய்யை வெறுப்பேற்றவென்றே அவனுடன் அவளுக்கு இளித்துக் கொண்டு பேச வருமே! அவள் கணவணுக்கு ஓர் கோபம்....

"எங்க உன் வாலை காணோமே?"

"நான் மனுஷன் சிவா.. மிருகம் இல்ல"

"என்ன நக்கலா?"

"இல்லயா பின்ன?"

"அவன் இருக்காங்குற தைரியாமாடி உனக்கு...?"

"ஆமா"

"அவன் கூட இருக்கல்ல... அவன் துரத்தி விட்டா என் கிட்ட வர்றியா.... நா உன்ன சந்தோஷமா வெச்சிப்பேன்" அவன் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் அவள் கண்கள் சட்டென கலங்கி விட கண்களை இறுக மூடித் திறந்தாள் பெண்...

திருமண செய்தியை வெளியே சொல்லக் கூடாது என அவனல்லவா சொன்னான்...

சொல்லி இருந்தால் அவள் உறவுக்கு இப்படி வார்த்தைகள் வந்திருக்காதே...

அவன் மனைவியான அவளுக்கு... அவனுடன் **காக இருப்பவளென்ற பட்டம் தானே கிடைத்திருக்கிறது.

"பிரியா" கடவுள் போல் கேட்ட நண்பன் ரவியின் குரலில் தப்பித்தோம் என அவள் விலகி நடக்க அவளை குரூரமாய் நோக்கின அவன் பார்வை...

அதன் பின் ரவி என்ன கேட்டும் வாயே திறக்காதவள் அப்படியே அமைதியாகிப் போக காலேஜிலும் அவளை காணாது தேடியவன் அவள் அறைக்குள் ஒடுங்கி இருப்பது கண்டு
"என்ன ஆச்சுன்னு தெரில சஞ்சய்... வந்ததுலருந்து இப்பிடி தான் இருக்கா" தாயின் குரல் காதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்க உள்ளே நுழைந்தவன் அவளருகில் அமர நிமிர்ந்து பார்த்தவளின் முகம் அழுது சிவந்திருந்தது.

"ஹே... என்னாச்சு மகி... ஏன்டி அழற?" அவளை அழுது கண்டிராதவனுக்கு உண்மையில் அதிர்ச்சி தான்.

"ஆதி... " அவன் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொண்டவள் அழுகையில் குழுங்க அதிர்ந்து கலைந்தவன்

"என்னாச்சு... ஏன் அழற?" மீண்டும் கேட்டான் பதற்றத்துடன்....

"அந்த சிவா என் கிட்ட வம்பு பண்ணான்?"

"அவன் கூப்டா போகாதன்னு சொல்லி இருக்கேன்ல.... எதுக்கு போன... என் பேச்சுக்கு மரியாதையே இல்ல... அப்பிடி தானே?"

"அப்பிடி இல்லடா..." அவளை விலக்கி இருந்தவன் அவள் கையை தட்டி விட்டு

"என் பேச்சுக்கு மரியாத தராத உனக்கு தேவைடி இது... அவன் சொன்னத பண்ணிக் கொடு" ரேகிங் பண்ணி இருப்பான் என அவன் வார்த்தைகளை நஞ்சாக்க, அதிர்ந்து அமர்ந்திருந்தவளுக்கு அவன் தன்னிடம் ஓர் வார்த்தை கூட கேட்காதது தான் அதிகமாய் வலித்தது.


"ஆமா... உன்ன உண்மையிலேயே வம்பு பண்ணானாடி குட்டி பிசாசு?" கோபித்துக் கொண்டு சென்று ஒரு நிமிடம் கூட முழுதாய் முடிந்திருக்காது உள்ளே நுழைந்து சந்தேகம் கேட்டவனை பார்த்து சிரிப்பு வந்தாலும் விலுக்கென நிமிர்ந்து முறைத்தாள் கணவனை...

"இல்ல... சும்மா கொஞ்சி பேசிகிட்டு இருந்தான்... " கட்டிலை விட்டு இறங்கியவள் கண்களை அழுத்தத் துடைத்துக் கொண்டு மல்லுக்கு நிற்க அவள் அழுகை நிறுத்தி விட்டது கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டான் அவன்.

"ஓஹ்... ஒரே லவ்ஸ் தானா?" கண்ணடித்துக் கேட்டவனை ஏகத்திற்கும் முறைத்தவள் அவனை மொத்தி எடுக்க

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டி" சிரித்துக் கொண்டே தடுத்தான் காளை...

"நீ முதல்ல மெயின்டெய்ன் பண்ண விடுடா காட்டேரி... என் கிட்ட மட்டும் இந்த டயலாக சொல்லி கிட்டு திரியுற... ஆனா உன் அத்தை பெத்த ரத்தினம் அந்த கிறுக்கி ஆர்த்திய மட்டும் பக்கத்துல விடுவ..." நன்றாக அடித்துக் கொண்டிருந்தவளின் வார்த்தைகளில் வாய் விட்டுச் சிரித்தவன்

"கோபத்துல கூட ஒருத்தர வர்ணிக்க உன்னால தான்டி முடியும்" கலாய்த்தான்.

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டா... போடா" அவனை கட்டிலில் தள்ளி விட்டு அவள் வெளியேற அப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தான் அவன்.

இருவரும் கடைசி வருடம்... முதலாம் வருட கடைசியில் தாத்தா இறந்து விட இறக்கும் முன் திருமணம் நடந்து விட்டிருந்தாலும் அவள் படிப்பு தடைபடக் கூடாது என்றதில் உறுதியாக இருந்தவன் அவள் போக்கிலேயே விட்டு விட்டாலும் திருமண செய்தியை யாருக்கும் வெளியிட கூடாது என்றதில் அவ்வளவு தீவிரமாக இருந்தான்.

அதற்கு முழு முதற் காரணம் அவள் படிப்பு மட்டுமேயாக இருக்க அவள் தான் தன்னை பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டாளோ???

.....

"சஞ்சய்... நேத்து அந்த சிவா உன் பொண்டாட்டி கிட்ட வம்பு பண்ணி இருக்கான்...." அவன் தனியே அமர்ந்திருக்க அருகில் வந்தமர்ந்தாள் ஆர்த்தி.

மகிழினி பிரியா மாமன் மகள் என்றால் ஆர்த்தி அத்தை மகள்...

சிறு வயது முதல் நண்பனாக இருக்கப் போய் அவன் திருமண விடயம் அவளுக்கு தெரிந்திருக்க அவள் யாருக்கும் மூச்சு கூட விடவில்லை...

ஆனால் அவன் அறியாத ஒன்று... ஆர்த்தியும் மகிழினியும் நண்பர்கள் என்பது...

"என்ன வம்பு பண்ணான்?"

"அந்த சஞ்சய் கூட மட்டும் இருக்க... என் கிட்ட வா நான் சந்தோஷமா உன்ன பாத்துப்பேன்னு சொல்லி இருக்கான்"

"வாட்...?" சாதாரணமாக இருந்தவன் கோபத்தில் கொந்தளிக்க அவனை சிரிப்புடன் பார்த்தாள் அவள்...

அவளுக்கு யாரும் ஏதும் சொல்லி விடக் கூடாதாம்... ஆனால் காதல் இல்லையாம்.... அடப்போடா....

மகிழினியின் காதல் விடயம் கொஞ்ச நாள் முன்னால் அவளே கண்டு பிடித்திருக்க வேண்டுமென்றே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

அது அவளுக்கு தெரிந்த விடயம் மகிழினிக்கே தெரியாது.

"சஞ்சய்... நிதானமா இரு..." எழுந்து செல்லப் போனவனை இழுத்து அமர வைத்து சமாதானப்படுத்த முயல அதற்கும் வெடித்தான்.

"என் மகி கிட்ட அப்பிடி சொல்ல என்ன தைரியம் அவனுக்கு... அந்த குட்டி பிசாசு கூட இது பத்தி சொல்லலயே"
அப்போது தான் அவள் ஏதோ சொல்லப் போனது நினைவு வந்தவன் "ஷிட்... " தலையிலடித்துக் கொண்டான்.

"உன் மகியா?" பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கேட்டாள் பெண்.

"ஆமா என் மகி தான்... " ஏதோ நினைவில் சொல்லி விட்டவன் அதிர்ந்து நிற்க

"உன் மகி தான் சஞ்சய்.... ஆனா நீ புரிஞ்சிக்க மறுக்குற... நட்பு நட்புன்னுட்டு உனக்கான அவளோட அன்ப காயப்படுத்தற... நீ வேணா நல்லா யோசிச்சு பாரு... அவ மேல உனக்கு இருக்குறது நட்பு இல்ல காதல்னு புரியும்” விளக்கி விட முயன்றவளுக்கு

"அது அப்பறமா பாக்கலாம்... ஆமா நேத்து ஏன் உன்ன நா கல்யாணம் பண்ணிக்க போறதா மகி கிட்ட பொய் சொன்ன?" அவன் வார்த்தைகளில் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

புரிந்து கொண்டானா இல்லை நடிக்கிறானா???

"சும்மா அவள சீண்டி பாக்க"

"பாவம் அவ... இப்பிடி பண்ணாத... அவள வெறுப்பேத்த நானும் ஆமான்னு சொல்லிட்டேன்"

"வாட் லூசாடா நீ... எதுக்கு அப்பிடி சொன்ன?"

"அவள கடுப்பேத்தடி"

"அவள கடுப்பேத்துறேன்னு அவள ஹேர்ட் ஆக்கி இருக்க சஞ்சய்... உன் மரமண்டைக்கு எப்போ தான் எல்லாம் புரிய போகுதோ... முதல்ல நீ உன்னை புரிஞ்சிக்கோ... பொண்டாட்டிய கடுப்பேத்துறானாம்... சரியான டியூப் லைட்" தலையிலடித்துக் கொண்டவள் அவன் தலையில் தட்டி விட்டு செல்ல புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான் அவன்...

அவள் சொன்னது போல் குழந்தை பருவம் துவங்கி அவளுடனான நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அலைமோத அவன் உதடுகள் தானாய் விரிந்து கொண்டன.

அவனுக்கு எப்போதும் அவளுடன் பேசாமல் இருந்து விட முடியாது என இப்போது உணர்வதாய்...

சில நேரங்களில் கோபித்தாலும் அடுத்த நிமிடம் அவனே போய் பேசி சிரிக்க வைப்பதற்கு அவள் முகம் சுருங்குவது அவனுக்கு பிடிக்காததே காரணமாய் இருக்க தன்னையே ஏமாற்றி அதற்கு நட்பு என பெயர் வைத்து விட்டானா???

திருமணம் கூட அவளுக்கு பிடிக்கவில்லை என்று தானே கோபப்பட்டான்.... அப்போது அவனுக்கு பிடிக்குமா???

திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு எல்லாமே புரிவதாய்...

ஆம் அவன் அவள் மனைவியை காதலிக்கிறான்...

அவளும் காதலிக்கிறாளா???

சிந்தித்தால் ஆர்த்தியின் பெயரை கூறும் போது அவள் அமைதிக்கான காரணம் புரிந்தது...

அவளுக்கு ஆர்த்தியை பிடிக்குமென்றாலும் அவனுடன் இருப்பது பிடிக்கவில்லை...

"ஓ காட்... மகி... அப்போ என்ன லவ் பண்றியாடி" தனக்குள் கேட்டுக் கொண்டவன் எழுந்து ஓடினான்.

.....

தன் புத்தகங்களை கைகளுக்குள் அடக்கி விட்டு எழப்போனவளின் முன் மூச்சு விட்டுக் கொண்டே நின்றான் சஞ்சய் ஆதித்யன்.

"ஏன் என்னாச்சு ஆதி... எதுக்கு மூச்சு வாங்கற?" புரியாமல் கேட்டவளை நிமிர்ந்து பார்த்து சிரிக்க லூசாயிட்டானா எனும் ரீதியில் பார்த்தாள் பெண்...

"உன் கிட்ட பேசணும்"

"அட காட்டேரிக்கு பேச கூட வருமா.... பட் எனக்கு டைமில்ல... நீ தானே சொன்ன சிவா கேக்கறத பண்ண சொல்லி... இப்போ கூப்புட்டு இருக்கான்" என்றாள் வெடுக்கென...

"ஆர்த்தி சொன்னா... ஐ அம் சாரிடி"

"ஓஹ்.. நான் சொல்லும் போது கேக்க தோனல... அவ சொன்ன உடனே நீ நம்பிட்ட?"

"மகி ப்ளீஸ்டி... சாரி"

"உங்க மன்னிப்பு எனக்கு தேவயில்ல சஞ்சய் ஆதித்யன்... நீங்க யாரா வேணா நம்புங்க நம்பாம இருங்க... ஆனா என்ன விட்டுடுங்க... டிவோர்ஸுக்கு இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு... அதுக்குள்ள எதுக்கு உங்க கிட்ட வம்பு... இனி உங்க வழியில நான் வர மாட்டேன்... பெஸ்ட் ஆப் லக்" பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு நா தழுதழுக்க பேசியவளை இயலாமையுடன் பார்த்தவன் விலக எத்தனித்தவளின் கையை இறுக்கப் பற்ற

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டா " உதறி விட்டு விலகி நடந்தவளை பார்த்து சிரித்தவன் மீண்டும் அவள் கையை எட்டிப் பிடிக்கவும் சிவா வரவும் சரியாக இருந்தது.

"ஓஓ... ஹீரோ கூட இருக்கீங்களா மேடம்?" அவன் நக்கலாய் கேட்க

"ஏய்..." அவன் மீது பாய்ந்த சஞ்சய்யை ஒரு நிமிடம் வெறித்தவள் விலகி நடந்தாள்...


சிவாவை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தவன் அவன் முகத்திலேயே ஒரு குத்து விட்டதில் பீரிட்டுக் கிளம்பியது இரத்தம்...

"என் மகிய பத்தி பேசறதுக்கு உனக்கு அவ்வளவு நெஞ்சழுத்தமாடா இடியட்... என் நிழல தாண்டி அவள சீண்டுடா பாக்கலாம்... சந்தோஷத்த கொடுப்பியா நீ... நீ எப்பிடி கொடுக்கறேன்னு நானும் பாக்கறேன்...." வெறி பிடித்தவன் போல் அடித்துக் கொண்டிருந்தவன் எழுந்து அவன் உயிர் நாடிக்கே ஓர் உதை விட்டான்.

"அவ மேல உன் பார்வை திரும்பிச்சு... உயிரோட சமாதி கட்டிடுவேன் ஜாக்கிரதை.... " விரல் நீட்டி எச்சரித்து விட்டு தன்னவளை தேடி மீண்டும் ஓடினான்.

......

கடற்கரையில் கால் புதைய கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்தவள் ஓர் ஓரமாய் அமர்ந்து கால்களை கட்டிக் கொண்டு கடலை வெறித்தாள்.

தான் சொல்லும் போது எதற்காக அவனிடம் பேசினாய் என கோபப்பட்டு விட்டு அந்த ஆர்த்தி சொல்லும் போது மட்டும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்...

ஆறு மாதத்தில் திருமணம் செய்ய இருப்பவளுக்கு இப்போதிருந்தே மரியாதையா???

கன்னம் தொட்டது கண்ணீர்!

கடைசி வரை அவள் காதலை அவன் புரிந்து கொள்ளவே இல்லையே...

அவன் அவளுக்கானவன் என அவள் நினைத்திருக்க நான் ஆர்த்தியை திருமணம் செய்யப் போகிறேன்... அவளுக்கானவன் தான் நான் என அவன் குரல் ஒலிப்பது போல் இருக்க காதை பொத்திக் கொண்டவள் கண்களை இறுக மூடித் திறந்து சட்டென எழுந்து கிளம்பி விட்டாள்...

இனி அவள் அவன் இருக்கும் இடத்தில் இருக்க முடியாது... கணவன் என்ற உரிமையோ அத்தை மகன் உரிமையோ... எதுவும் தேவையில்லை அவளுக்கு....

.....

செல்வி பேசுவது காதில் விழாதது போல் உள்ளே நுழைந்தவள் ட்ரஸ்ஸிங் டேபிளின் முன் இருந்த அந்த குட்டி இருக்கையில் அமர்ந்து தன்னை நிமிர்ந்து பார்த்தாள்.

நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லை...

கல்லூரி செல்லும் போது வைத்துக் கொள்ளா விட்டாலும் வீட்டில் இருக்கும் போது வைத்துக் கொள்வது வழக்கம் தான்...

கைகள் அனிச்சையாய் குங்கும டப்பாவை திறந்து நெற்றியில் இட மீண்டும் தன்னை ஏறெடுத்துப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாமற் போக முகத்தை மூடிக் கொண்டு கொஞ்ச நேரம் கதறி அழுதவள் சுடிதாருக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை முகத்துக்கு நேரே உயர்த்திப் பார்த்தாள்.

இதற்கு கூட அவன் நட்பு என்று தான் சொல்லப் போகிறானா???

முகத்தை அழுத்தத் தேய்த்துக் கொண்டவள் வீட்டை விட்டு வெளியே வந்து இறங்கி அந்த நெடுஞ்சாலையில் நடக்கத் துவங்கினாள்.

அவளுக்கு கொஞ்ச நேர தனிமை நிச்சயம் வேண்டும்...

......

"அம்மாஆஆ" பதற்றமாய் கத்தினான் அவன்...

"ஏன்டா கத்துற?"

"மகிய பாத்தியா மா?"

"இப்போ தான் வந்து ரூமுக்குள்ள போனா.... நீ பாக்கல?"

"ரூம்ல இல்லமா" தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்துக் கொண்டவன்

"சும்மா வெளியில போயிருப்பானு நெனக்கிறேன்.... இரு பாத்துட்டு வந்தட்றேன்" தாய்க்கு சந்தேகம் வராதவாறு மெதுவாக வெளியே வந்த அடுத்த நிமிடம் அந்த நெடுஞ்சாலையில் ஓடத் துவங்கியவனுக்கு அவனவள் தூரத்தே சென்று கொண்டிருப்பது கண்டு தான் வேகம் சற்று மட்டுப்பட்டதோ???

......

"மகி... " அருகில் மோத வந்த வாகனத்திடமிருந்து அவளை இழுத்தெடுத்தவன் அவள் முகம் தாங்கி அடுத்த நிமிடம் அவள் அதரங்களை தனக்குள் பொருத்தியிருக்க ஏதேதோ எண்ணங்களில் உழன்று நடந்து கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டன போலும்...

கோபமாய் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியதில் விழப்போய் தன்னை சமநிலைப் படுத்தி நின்றவன் அவளிடம் கண்களாலேயே மன்னிப்பு யாசிக்க அவனை உறுத்து விழித்தாள் அவள்...

"இடியட்... டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்னு தெரியாது உனக்கு?" அவள் இடையூடு கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன் தன் மேல் வந்து மோதியவளின் கண்களை ஊடுறுவியவாறே பேசினான்...

"இனிமே பண்ண முடியாதுடி குட்டி பிசாசு... என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ"

"ப்ச் விடு என்ன.... காட்டேரி"

"முடியாது... இனி ஒரு நிமிஷம் கூட உன்ன விட்டு விலகி இருக்க முடியாது... விலகி இருக்க மாட்டேன்... உன்னையும் விலக விட மாட்டேன்"

"விடு ஆதி" அவன் கைகளில் திமிறியவளின் திமிறல்கள்

"ஐ லவ் யூ மகி... சாரிடி" அவன் வார்த்தை தந்த தாக்கத்தில் அப்படியே அதிர்ந்து அடங்க மீண்டும் ஓர் ஆழ்ந்த முத்தத்தை பரிசளித்தவனின் செயலில் சிந்தை கலைந்தாள் பெண்...

"விளையாட்டுக்கு ஒரு அளவு இருக்கு ஆதி... ப்ளீஸ் என்ன விடு"

"நிஜமா ஐ லவ் யூ மகி... நான் இந்த விஷயத்துல விளையாட மாட்டேன்னு உனக்கே தெரியும்"

"ப்ச் விடு"

"உன் மேல எனக்கு இருக்கறது நட்பு இல்ல... காதல் தான்னு புரிஞ்சி கிட்டேன்டி... ப்ளீஸ் மகி சாரிடி"

"ஆர்த்திக்கு என்ன பதில் சொல்ல போறடா பொறுக்கி... "

"உனக்கு நான் பொறுக்கி தான்டி" கண் சிமிட்டிச் சொன்னவனை பார்த்து கொலை வெறியில் முறைந்தவள்

"ஆர்த்தி உன்ன கடுப்பேத்த தான் அப்பிடி சொன்னா... நிஜமா அப்பிடி எதுவும் நடக்கல மகி... நம்பு மா" சந்தேகமாய் பார்த்து வைத்தாள்.

"ஆர்த்தி லவ் பண்றது என் ப்ரெண்ட் ரவி இருக்கான்ல... அவன... "

"பொய்… மியூச்சுவல் டிவோர்ஸுக்கு கூட அப்ளை பண்ணிட்டேன்னு சொன்ன?”

"காட்... அது சும்மா சொன்னதுடி… ஏன்டி புரிஞ்சிக்க மாட்டேங்குற?"

"உன்ன நான் எதுக்குடா புரிஞ்சிக்கணும்... முதல்ல விடு என்ன" அவனிலிருந்து அரும்பாடு பட்டு பிரிந்தவள் விலகி நடக்க கையை பிடித்தான் கணவன்.

"ஐ லவ் யூ"

"விடு... " கையை உதறி விட்டு அவள் நடக்க பின்னால் கெஞ்சிக் கொண்டே சென்றான் அவளவன்...

"டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டா " அவள் கோபமாக கத்த

"முடியாதுடி பொண்டாட்டி" அவன் சிரித்துக் கொண்டே சொல்வது தூரத்தே கேட்டுக் கொண்டிருந்தது.

முற்றும்.

நன்றி.
ரிஷி.

09-02-2022.
 
Status
Not open for further replies.
Top