எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தாய்மை - கதைத்திரி

Status
Not open for further replies.

Habi

Moderator
அத்தியாயம் 01



சிறு அணுவாய் தன் கருவறையில் தடம்பதித்த உருவமற்ற உயிரை
ஈர் ஐந்து மாதம் தன் கருவறைப் பெட்டகத்தில் பாதுகாத்து
தொப்புள் கொடி வழியே தன் சக்தியை வழங்கி மனித உருவாய் பூரணமடையச் செய்யுது

இறுதியில்

தாங்க முடியாத உயிர்வலியையும் தாங்கி தன்னுயிரிலிருந்து ஓர் உயிரை உதிக்கச் செய்யும் பெண்மையின் மாபெரும் வலிமையே தாய்மை



இன்று..


வானமே கரிருளில் மூழ்கியிருக்க வானத்திலோ இடியோடும் இடையிடையே வெட்டும் மின்னல் கீற்றுக்களோடும் பேவென பொழிந்தது அடைமழை
மழையின் பேரிரிச்சலிலுமே சிறு ஒலியாய் ஒலித்தது அவள் குரல்.


பிரசவத்தின் உச்சவலியில் துடித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

பவித்ரா பெயருக்கு ஏற்றாள் போல் பவித்ரமான அழகுடைய பெண்.
அந்த அழகும் கூடியிருந்தது அவள் தாய்மையின் வலியில் சிந்தும் கண்ணீரால்.

தாய்மையில் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் மகத்துவமானது அதை அறிவீரோ மானிடரே.
அவர்கள் அறிவர்
ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வர வலியோடு போராடும் அந்த பெண்கள் அறிவர் அந்த கண்ணீரின் மகிமை எத்தகையது என்று.


அந்த லேபர் அறையிலே வலியோடு போராடிக் கொண்டிருந்த பவித்ரா மனதிலே
தாய்மையை அடையப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியிருந்த போதிலும்
தாம் இந்த கொடூர வலியிலிருந்து பிழைப்போமா இல்லை உயிர் நீப்போமா நான் இறந்துவிட்டாள் என் குழந்தையின் நிலை அய்யோ என்ற கோர எண்ணங்களின் ஆட்சியும் சூழ்ந்து கொள்ள பிரவசவலியோடு கூடவே இந்த எண்ணங்களின் தாக்கத்திலும் பலமடங்கு வலியை அனுபவித்தவளோ "அம்மா ஆஆஆஆஆ" என்றலறித் துடித்தாள்.

இடுப்பென்மை உடைத்து நொருக்கி தொடை இரண்டும் கனத்து இறுகி அடிவயிற்றில் எழும் விபரிக்கவே முடியாத ஓர் உயர்வலியில் ஆயிரம் வாற் மின்சாரம் பாய்ந்தது போன்று உடல் தூக்கிப்போடுவது போலிருந்த வலியில் நிமிடத்திற்கு நிமிடம் ஓர் பெரும் அலறலோடு துடித்தாள் பெண்ணவள்.

இங்கே அறையினுள் அவள் வலியில் அலறித் துடிக்க அறைக்கு வெளியே துடித்துக் கொண்டிருந்தது மறு உயிர்.

அவள் குரலின் ஒலியில் மடிந்து தரையில் வீழ்ந்து கண்ணீர் சிந்தினான் அந்த ஆண்மகன்.

அவன் மனமோ குற்றம் புரிந்த குற்றவுணர்ச்சியில் தவித்தது

அவன் பெயர் கௌதம்.

பவித்ராவின் காதல் கணவன் காதலால் கரம்பிடித்தவன் அவன்.

தன்னை நம்பிவந்தவளை காயப்படச் செய்துவிட்டோமே என்ற எண்ணத்திலும் அவள் வலியில் துடிப்பதை செவிவழியே விழும் அவள் அலறலில் வலியை உணர்ந்ததிலும் துடித்துப் போனான்.

அழுது கொண்டே தரையில் வீழ்ந்தவன் வாய் உச்சரித்த வார்த்தைகள் யாவும் மன்னிப்பு ஒன்றே.

" ஐ ம் ஸாரி பவி தப்பு பண்ணிட்டேன் ஐ ம் ரியலி ஸாரி என்ன மன்னிச்சிடுடி ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிடு என்கிட்ட திரும்ப வந்திடு.. உன்ன புரிஞ்சிக்காம நடந்திக்கிட்டேன் ஸாரிடி" என கதறியழுதான்…

அவன் கதறலும் அவள் கதறலும் அந்த அடைமழையின் பேரிரைச்சலில் அடங்கிப் போக எண்ணங்கள் மெதுவாய் சுழன்று பின்னோக்கிச் சென்றது.



கௌதம் பவித்ரா இருவரும் ஐந்து வருடமாய் உயிருக்குயிராய் காதலித்தனர்.

அவர்கள் காதலுக்கு எந்த எதிர்ப்புமின்றி வீட்டில் சம்மதித்த கணமே இருவீட்டிலும் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் அமோகமாக நிறைவேறியது.

கௌதம் பவித்ராவின் மீது கொண்ட அளவில்லாத காதலின் தாக்கத்தால் அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது அவள் காதல் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான் இதன் விளைவு திருமணம் ஆன புதிதில் கூட்டுக்குடும்பமாய் இருந்த தன் வீட்டிலிருந்து அவளை பிரித்து தனியே அழைத்துச் சென்றான்.

வீட்டினர் அனைவரிடமும் வேலை மாற்றம் என பொய்யுரைத்து அவளை வேறு ஊர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.

கௌதமின் இந்த அளவில்லா காதலில் கட்டுண்ட பவித்ராவும் அவன் போக்கிற்கு அவனோடு மகிழ்ச்சியாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியிருந்தாள்.

அவள் அறிவாள் அவன் தன் மீது கொண்ட பொஸஸ்ஸிவை காதலித்த காலங்களில் தன் மீது அவன் கொண்ட இந்த பைத்தியகாரத்தனமான காதலை நண்பர்கள் கேலி செய்த போதிலும் அதை பொருட்டாகவே கொள்ளாது தான் தான் எல்லாம் என தன்னிடம் குறையாத காதலை காட்டிய கௌதம் மீது எப்போதும் போல் அவளுக்கு அளவுகடந்த காதல் பூத்தது.

பவித்ரா கௌதம் இருவரும்
தனிவீட்டிற்கு வந்த நாள் தொடக்கம் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் தாரக மந்திரம் என்பதுபோல் வலம் வந்தவர்களின் வாழ்க்கையில் வந்து வீழ்ந்தது ஓர் அதிர்ச்சி.

அது பவித்ராவிற்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்க கௌதமிற்கோ என்னவென்று கூற முடியாதோர் அதிர்ச்சி.

இவ்விருவரின் வேறுபட்ட மனநிலைக்கு காரணமானது ஒன்றே ஒன்று அது தாய்மை பவித்ராவின் வயிற்றில் காதலால் கருவாகி உருவாகி நின்ற கௌதமின் உயிரால் பவித்ராவின் பெண் என்ற ஸ்தானத்தில் இருந்து தாய் என்ற ஸ்தானத்திற்கு கிடைத்த பதவியுயர்வு.

தாய்மை என்ற நிலையை மகிழ்வாய் எண்ணி மகிழ்ந்தவள் தன் பதியின் (கணவனின்) வார்த்தைகளில் கலங்கிப் போனாள் அன்று.

அன்று.

காதல் திருமண வாழ்க்கை மெதுவாய் நகர என்றும் போல் காலையில் கௌதம் வேலைக்கு சென்றிவிட..தன் அன்றாட வேலைகளை கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தாள் பவித்ரா.

தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு வாந்தியும் தலை சுற்றலுமாய் இருக்க துவண்டு போனவள் காலையுணவை முடித்துவிட்டமர்ந்த சில நிமிடத்திலே
குடலே முழுவதுமாய் உருவி வெளியே வீழ்வது போன்று அனைத்தையும் வெளியே தள்ளியிருந்தாள்.

"அய்யோ என்னாச்சு எனக்கு ஏன் இப்பிடி வாமிட் வருது" என தலையை தன் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று ஏதோ தோன்ற
நாட்குறிப்பை பார்த்தவள் உணர்ந்து கொண்டாள்.

தன் எண்ணம் சரியா என்பதை மேலும் உறுதி செய்ய சில பொருட்களை வாங்கி வந்து சோதித்து பார்க்க அதுவோ அவள் நினைப்பை உறுதிப்படுத்த ஆனந்தமாய் அதிர்ந்தாள்.

கண்களில் கண்ணீர் நிரம்பிவழிய தன் அடிவயிற்றை தடவியவள் இதழ்களிலும் முகத்திலும் தாய்மையின் பூரிப்பில் பூத்தது.

"கௌதம் நம்ம குழந்தை இப்போ என் வயிற்றில இருக்குடா நான் எவ்வளவு ஹெப்பியா இருக்கேன் தெரியுமா என் கௌதமோட குழந்தை என் வயித்துல என் உயிரோடு உயிரா கலந்து என் வயித்துல இருக்கு கௌதம் நம்ம காதலோட சின்னம் என் வயித்துல இருக்குடா" என்றவள் மனமோ இப்போதே தன்னவனிடன் இதை கூற வேண்டும் என்ற எண்ணம் உதிர்க்க அவசரமாய் அவனிற்கு அழைக்க மறுபுறமோ அழைப்பு ஏற்கப்படாமல் இருந்தது....

"ப்ப்ச்ச் என்ன பண்றான் இவன்" என்றபடியே மீண்டும் மீண்டும் அவனை அழைபேசியில் தொடர்பு கொண்டு தோற்றவள் சலிப்போடு கட்டிலில் அமர்ந்தாள்.

"ப்ப்ச் எங்கடா போய்ட்ட எவ்வளவு சந்தோஷமா உனக்கு இந்த விசயத்தை சொல்லனும்னு கால் பண்ணேன்…ப்ப்ச் போடா லூசு" என எதிரில் மாட்டப்பட்ட அவன் போட்டோவை பார்த்துசெல்லமாய் அழுத்துக் கொண்டவள் பின்..

"ம் இது நல்லது தான்டா மாமா நீ நேர்ல வா உன்கிட்ட இந்த விசயத்தை சொல்லி உன் முகத்துல உண்டாகுற அந்த சந்தோஷத்தை நான் பார்க்கனும்" என்றவள் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

ஆபிஸில் வேலை அனைத்தையும் முடித்த கௌதமோ அப்போதுதான் சைலென்ட் மூடில் போட்டு வைத்திருந்த தன் மொபைலை ஆராய்ந்தவன் பவியின் அழைப்புகளை பார்த்து.

"என்னது பவிக்குட்டி இத்தனை வாட்டி கால் பண்ணியிருக்கா"என்றபடி அவளை அழைக்க அவளோ அழைப்பை துண்டித்தாள்.

"ஆஹா என் பவிக்குட்டி ரொம்ப கோபமாயிருக்கா போலயே டேய் கௌதம் இன்னைக்கு உனக்கு சங்கு தான்" என புலம்பியபடி தன் அறையை விட்டு வெளியேற எதிர்பட்டான் அவன் நண்பன் தினேஸ்.

"டேய் மச்சான் என்ன இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இருக்க" என்க.

அவனோ முகத்தில் அசூசையுடன்
"அடப்போடா வீட்ட போய் என்ன பண்ண சொல்ற" என்ற சலிப்போடு நண்பனை பார்த்தான்.

நண்பனின் சலிப்பில் அவன் தோள் மேல் கரம் பதித்தவன்"என்ன மச்சான் இப்பிடி சலிச்சுக்குற என்னாச்சு உனக்கு" என்க..

தினேஸோ"பின்ன என்னடா இந்த வாழ்க்கையை நினைச்சாலே வெறுப்பா இருக்கு" என எரிச்சலோடு மொழிந்தவனை ஆழமாய் பார்த்த கௌதம்.
"என்னாச்சு தினேஸ் வீட்ட எதும் பிரச்சனையாடா"என வீட்டில் ஏதும் பிரச்சனையோ என்ற எண்ணத்தில் கேள்வியெழுப்ப அவனோ "ஆமா பிரச்சனை தான் மச்சி" என்றிருந்தான்..

"டேய் என்னடா என்னாச்சு காவ்யா (தினேஸ் மனைவி) ஏதும் சண்ட போட்டாளா என்றவனிடம்

"அட போ மச்சி இங்க ஒழுங்கா பேசியே ஒருவாரமா ஆகுது இதுல எங்க சண்டை போடுறது" என அலுப்போடு சொன்னவனை புரியாமல் பார்த்தவாறு "ஏன்டா காவ்யா அம்மா வீட்டுக்கு போய்ட்டாளா? அதான் இப்பிடி சலிச்சுக்குறியா"என்றிட.

"அவ எங்கேயும் போகல வீட்ட தான் இருக்கா"என்றவனை முறைத்தபடி"

டேய் எரும ஒரே வீட்டுக்க இருந்தா ஒருவாரமா பேசாமயிருக்கிங்க" என்று கேட்க.

தினேஸோ "டேய் மச்சான் உனக்கு என் பீலிங்ஸ் புரியாது மச்சி உனக்குன்னு ஒரு பையன் வரும் போது தெரியும் இந்த அப்பாவியின் நிலைமை" என பாவமாய் கூற.

அவன் பேச்சு புரியாத கௌதமோ குழப்பத்துடன் "என்ன தான்டா சொல்ல வர இப்போ ஒழுங்கா சொல்லு எரும" என்றிட..

தினேஸோ நண்பனுக்கு புரிய வைக்கும் முகமா
"டேய் கௌதம் என் பிரச்சனை என்னன்னு தானே கேக்குற என் பிரச்சனையே என் பையன் தான்டா அவனால தான் என் பொண்டாட்டி கூட பேசி ஒரு வாரம் ஆகிடுச்சு" என்றான்..

"என்னடா சொல்ற உன் பையனாலயா நீ காவ்யா கூட பேசாம இருக்க" என யோசனையா கேட்க..

அவனோ"அட ஆமா மச்சி இந்த பொண்ணுங்க எல்லாம் காதலிக்கும் போதும் கல்யாணம் பண்ண புதுசுலயும் மட்டும் தான் நம்ம பின்னாடியே குட்டி போட்ட பூனைங்க போல சுத்துவாளுங்க அப்புறமா குழந்தை பிறந்துச்சுனு வை நம்மள கண்டுக்கவே மாட்டாங்கடா.
என் பொண்டாட்டி என் பையன் பண்ற சேட்டையிலே அவன் பின்னாடி ஓடி கலைச்சி போயிடுறா நானும் ஆசையா போய் பேசுனா அவன் மேலே காட்ட முடியாத கோபத்தை என் மேலே காட்டிர்ரா மச்சி" என அழுதுவிடுபவன் போல கூறிய நண்பனின் தோற்றம் கௌதமிற்கு சிரிப்பூட்ட பக்கென அவனை பார்த்து சிரித்தவன் அவன் முதுகில் தட்டியபடி "டேய் எரும இதெல்லாம் ஒரு காரணமா போட டேய்" என்க.

நண்பனின் சிரிப்பில் காண்டானவனோ"இப்போ நீ எல்லாம் சொல்லுவடா உனக்குன்னு ஒரு குழந்தை வரும்போது தெரியும் உன்னை விட்டுட்டு ஆல் டைம் அவன் பின்னாடியே தான் சுத்துவா பவித்ரா.

நீ வேற ஓவர் பொஸஸ்ஸிவ் உனக்கு போட்டியாவே உன் பையன் இல்ல பொண்ணு வருவா பாரு அப்போ தெரியும் இந்த நண்பனின் நிலைமை" என கேலி போல் அவனிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றுவிட.


கௌதமோ கோபத்துடன் நின்றிருந்தான்.

"என் பவி எனக்கு தான் அவ எனக்கு அப்புறமா தான் யாரயும் பார்ப்பா அது என்குழந்தையாவே இருந்தாலும்" என்றவனின் மனதிலோ பவித்ராவின் மீதான பொஸஸ்ஸிவ் தலை தூக்கி நின்றது.




தொடரும்.
 

Habi

Moderator
அத்தியாயம் 02



தினேஸ் கூறிய வார்த்தைகளில் குழம்பிப் போனவன் வீடு நோக்கி புறப்பட்டான்..


வீட்டின் முன்னே தன் வண்டியை நிறுத்தியவனோ வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்கவிட கதவு திறக்கப்படாமலே இருப்பதை கண்டவனோ "அய்யோ பவி குட்டி கோபமா இருக்கா போலயே" என தன்னவள் அழைப்பை ஏற்காததினால் கோபம் கொண்டுள்ளாளோ என்று எண்ணிக் கொண்டவன் அவளை அழைக்கும் முகமாய் கதவில் தட்ட கை வைக்க கதவோ தானாய் திறந்து கொண்டது.

"அட என் பவி குட்டி என் மேல கோபமாயிருந்தாலும் புருஷனுக்காக கதவெல்லாம் திறந்து வெச்சியிருக்காளே என் ஸ்வீட் பவி" என மனதில் கொஞ்சிக் கொண்டே வீட்டினில் நுழைந்தான்..


"பவி..பவிக் குட்டி எங்கடி இருக்க குட்டி மா எங்கடி இருக்க ஐ ம் ஸாரி மா நான் கொஞ்சம் பிஸி ஆ இருந்துட்டேன்.. அதான்மா உன் போன் கால் ஆன்ஸர் பண்ண கிடைக்கல.. ஸாரி குட்டி" என்றவாறு அவளை தேடியவாறு அறைக்குள் நுழைந்தவனை இருள் சூழ்ந்த அறையே வரவேற்றது.


"பவி என்னடா இது லைட் கூட போடாம இருக்க" என்றவாறு தட்டுத் தடுமாறி லைட் ஓன் செய்யவும் அவனை பின்னே இருந்து பவித்ரா அணைக்கவும் சரியாய் இருந்தது.


அவள் அணைப்பில் "பவி என்ற மகிழ்வான அழைப்போடு திரும்ப அவனை திரும்ப விடாது அவன் கண்களை தன் கரம் கொண்டு மூடினாள் பவித்ரா.


"ஹேய் பவி என்னமா பண்ற தன் விழிமேல் பதிந்த அவள் கரங்களில் கரம் பதிக்க அவளோ"ஸ்ஸ்ஸ் பேசாத அப்பிடியே என்கூட வா என்றவள் அவனை மெதுவாய் அழைத்துச் செல்ல

"ஹேய் எங்கப் போற பவி என்று அவளுடன் நடந்தவாறே கேட்டவனிடம்..

அவளோ"ஸ்ஸ்ஸ் உன்ன பேசவேணாம்னு சொன்னென்ல சூ"என மிரட்டலுடன் அழைத்துச் செல்ல..

அவள் மிரட்டலில் கௌதம் இதழ்களோ புன்னகைக்க அமைதியாய் அவள் இழுப்பிற்குள் சென்றான்.


ஓர் இடத்தில் அவனை அமர வைத்தவள் மெதுவாய் அவன் கண்ணிலிருந்து தன் கைகளை விலக்கினாள்.


அவள் கைகளை அகற்றிய நொடி தன் கண்களை தேய்த்தவாறு அவளை பார்த்து "வாவ் பவி" என ஆனந்தமாய் கூவியபடி எழுந்து நின்றான்...


தன் திருமணத் தன்று தன்னவளுக்காகவென்று அவன் ப்ரத்யோகமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த பட்டுப்புடவையை நேர்த்தியாய் கட்டி சர்வ அலங்காரங்களுடன் மின்னியவளை பார்த்தே அகம் மகிழ்ந்து போனான்....


ஏதாவது ஓர் உச்ச மகிழ்ச்சியின் போதே அவள் இவ்வாறு தனக்கு பிடித்த ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வதே என்பதை அறிந்திருந்தான் கௌதம்… இன்றும் ஏதோ மகிழ்வான செய்தியை மனைவி கொண்டுள்ளால் என்பதை அறிந்து" ஓய் பவி குட்டி இன்னைக்கு என்ன ஹெப்பி நியூஸ் வெச்சியிருக்க"என்றவறு அவளை நெருங்க விலகினாள் அவள்.


அவள் விலகலில் இவனோ"ஹேய் என்ன பவிமா" என அப்பாவியாய் முகத்தை தொங்க போட அவன் முகம் போன போக்கை கண்டு

கின்கினியாய் சிரித்தவள் அவன் கன்னம் கிள்ளி"அச்சோ என் கண்ணன் சோகமாயிட்டாங்களா ச்ச்சூ ச்ச்சூ" என கொஞ்ச அவன் சிறுபிள்ளை தனத்தில் கௌதம் சிரித்துவிட..


"ஹப்பா என் கண்ணனுக்கு சிரிப்பு வந்திடுச்சு என்றுசந்தோஷமாய் கூவியபடி அவன் கன்னம் கிள்ளி முத்தம் பதித்தவளின் செய்கையை ரசித்தபடி" ஏய் பவிக் குட்டி இன்னைக்கு என்னடி ஸ்பெஸல்" என அவள் அலங்காரங்களை விழிகளால் ரசித்தபடியே கேட்க....


அவளோ"வெய்ட் சொல்றேன் அதுக்கு முதல் நான் வைக்குற டெஸ்ட்ல நீ பாஸ் ஆகனும் ஓகே" என்றிட..

அவனோ அவள் கூறியதில்"என்னது டெஸ்ட் ஆ" என விழிவிரித்து அவளை பார்த்திட அவளும்"ஆமா டெஸ்டே தான்..போ போய் உட்கார்" என அவனை அமரவைத்தவள் அவன் முன்னெ சில பொருட்களை கடை பரப்பினாள்.


அனைத்தும் அழகாய் ஜோடி ஜோடியாய் கலர் பேப்ர்களில் சுற்றப்பட்டு இருந்தது...


அனைத்தையும் பார்வையால் அலசியவனோ"ஹேய் என்னடி இதெல்லாம் ஏது இவ்வளவு கிப்ட் ஷாப்பிங் எதும் போனியா"என கேள்வியாய் கேட்க. அவன் குறுக்குக் கேள்வியில் அவனை முறைத்தவள்

"டேய் கௌதம் பேசாதடா என மிரட்டிவிட்டு தன் வேலையை பார்க்க அவனோ "ரொம்பத்தான்பண்ற இருடி உன்னை பார்த்துக்குறேன் என செல்லமாய் மிரட்டியபடி முணுமுணுக்க அவளோ"வெவ்வே வெவ்வே என உதட்டைக் குவித்து பழிப்புக் காட்டிச் சிரித்தாள்....


அவனோ உதட்டை வளைத்து"ம்ம் சொல்லுங்க மேடம் இப்போ உங்கள் அடிமை என்ன பண்ணணும் என்றிட..


"ஆஆ அதுவா இங்க இருக்குற கிப்ட்ல ஒவ்வொரு கலர்ஸ்ல ஒரு கிப்ட் எடுக்கனும் ஓகே என்க.


"ம்ம்ம் அவ்வளவுதானே ஓகே எடுத்துட்டா போச்சு" என்றவன் மூன்று நிறங்களில் இருந்தும் மூன்றை தெரிந்தெடுத்து அவளிடம் கொடுக்க பவித்ராவோ மகிழ்வோடு அதை வாங்கியவள் அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.

அவனுக்கோ இவள் என்னதான் செய்கிறாள் என்று தெரியாததில் பொறுமையின்றி போக..


"ஹேய் பவி சொல்லுடி எதுக்கு இதெல்லாம் பண்ற என்ன ஹெப்பி நீயூஸ்...ப்ளீஸ் என் செல்ல குட்டில சொல்லுடி என அவள் நாடி பிடித்துக் கெஞ்ச...


அவளோ"இரு இருடா மாமா சொல்றேன் அதுக்கு முதல் இதெல்லாம் ஒவ்வொன்னா பிரி .என அவனிடம் நீட்டினாள்.


அவள் தந்தவற்றை வாங்கி மெதுவாய் பிரிக்க ஆரம்பிக்க பவித்ராவோ கண்களை மூடி வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.


கௌதமோ அவள் செய்கைகளை எல்லாம் வினோதமாய் பார்த்தவாறு அவைகள் அனைத்தையும் பிரித்திருந்தான்.


கௌதமோ தன் கையிலிருந்த பொருட்களை பார்த்தபடி

"என்னடி இதெல்லாம் யார்ட குழந்தைக்கு வாங்கின என்றபடி தன் கையில் வைத்திருந்த பொருட்களை காட்டி கேட்க...


அவளோ"கடவுளே கடவுளே கடவுளே" என்ற முணுமுணுப்போடு கண்திறந்தவள் ஆனந்ததில் துள்ளினாள்.


ஹேய் தைங்ஸ் கடவுளே..தைங்யூ தைங்யூ தைங்யூ சோ மச் என அன்னார்ந்து தன் வேண்டுதல் பழித்ததில் கடவுளுக்கு நன்றி சொல்ல கௌதமோ அவளை பார்த்து முழித்தான்.


"அடியேய் என்னடி பண்ற எதுக்கு லூசு மாதிரி எல்லாம் பண்ற என்க.


அவனை அணைத்தவளோ"என் செல்ல மக்கு புருஷா ஐ லவ் யூ என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...


என்ன ஏது என்று கூறாது அவள் செய்யும் செய்கையில் குழம்பி

"அய்யோ என் பொண்டாட்டிக்கு என்னமோ ஆகிடுச்சே"என உதட்டை பிதுக்கி அழுவது போன்று செய்கை செய்ய பவித்ராவோ கலகலத்து சிரித்தாள்.


"அய்யோ என் செல்ல குட்டி.. உன் பொண்டாட்டிக்கு ஏதோ ஆகிடுச்சு ஆனா இங்க இல்ல இங்க" என தலையை சுட்டிக் காட்டியவள் பின் வயிற்றை சுட்டிக் காட்ட..


"என்ன பவி சொல்ற வயிறு வலியா இத ஏன் முன்னாடியே சொல்லல கிளம்பு ஹாஸ்பிடல் போலாம்" என அவள் கூறியது புரியாது என்னவோ ஏதோ என்று புரிந்து கொண்டு பதட்டப்பட அவனின் செய்கையில் சிறு கடுப்பானவள் அவன் தலையில் கொட்டிவிட்டு

"டேய் மக்கு புருஷா தத்தி தடிமாடு போடா" என திட்டிவிட ..


அவனோ ஏதும் புரியாமல் முழித்து நின்றவன் அவளிடமே "பவி குட்டி என் செல்லம்ல சத்தியமா எனக்கு நீ என்ன சொல்றேன்னு புரியலடி.. ப்ளீஸ் செல்லம் இன்னொருவாட்டி சொல்லு…"என கெஞ்சலில் இறங்கிவிட அதில் மனமிறங்கியவள்

"ம்ம்ம் இந்த ஒரு வாட்டி தான் சொல்வேன் ஓகே" என்றிட


அவனும்"ஓகே டன்…"என்றவாறு அவள் கூறுவதை கவனித்தான்..


"பிங் ட்ரெஸ் வந்தா பொண்ணு பிறக்கும் புளூ ட்ரெஸ் வந்தா பையன் பிறக்கும்.."

"பார்பி டோல் வந்தா பொண்ணு ஸ்பைடர் மேன் வந்தா பையன் புரிஞ்சுதா??" என்க..


அவனோ தலையை சொறிந்தபடி

"பவி என்னடி குழப்புற.. சத்தியமா ஒன்னுமே புரியலடி என பாவமாய் கூற ..

அவளோ"மக்கு மாமா..போடா நான் போறேன்" என எழ முயல அவளை தடுத்து அவளை சமாளித்து மீண்டும் பேச வைத்தான்...


"லட்டு வந்தா.. உன்ன போல ஸ்வீட் ஆன குட்டி கௌதம் ரசகுல்லா வந்தா என்ன மாதிரி சப்பியானா குட்டி பவி..என்றவள் பின்

நீ செலெக்ட் பண்ண எல்லாத்துலயுமே குட்டி கௌதம் வரத்தான் சான்ஸ் கூட இருக்கு கடவுள் என் வேண்டுதல நிறைவேற்றிட்டாரு அதான் அவருக்கு தைங்ஸ் சொன்னேன்" என சொல்லிவிட்டு அமைதியாகி அவனை பார்க்க அவனோ அவள் கூறிய வார்த்தைகளை செவிமடுத்தவன் அசையாது அமைதியாய் இருந்தான்..


அவன் அமைதியை பார்த்தவளுக்கோ சந்தோஷம் எல்லாம் வடிய கண்கள் மெலிதாய் கலங்க "லூசு லூசு இது கூட புரியல போடா" என முனுமுனுத்துவிட்டு எழுந்தவள் அடுத்த நொடி அந்தரத்தில் மிதந்தாள்..


"அய்யோ அம்மா" என பயத்தில் கத்த போனவள் கௌதமின் கூச்சலில் அடங்கிப் போனாள்...


"ஹேய் பவி தைங்ஸ்டி.. லவ்யூடி ஹேய் நான் அப்பாவாகிட்டேன்...என் பவி அம்மாவாகிட்டா ஹூரே என சந்தோஷக் கூச்சலிட்டு கூறியபடி அவளை தூக்கிச் சுற்ற...அவன் சந்தோஷத்தில் வாயடைத்து போனாள்..

"பவி..தைங்ஸ்டி..தைங்யூ.."என்றபடி அவள் முகம் முழுதும் தன் முத்ததால் நிறைத்தான்...


பவியும் அவனின் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனாள்..

அவளை தன் கரங்களில் ஏந்தியவன் அவளை அணைத்தவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரச் செய்து அவள் தலையில் மென் முத்தம் பதித்து அமைதியானான்...


"என் செல்ல மாமாக்கு இப்போவாச்சும் புரிஞ்சிதே என கேலி பேசி சிரிக்க அவனும் சிரித்தவன் பின் சிறு முறைப்புடன் "போடி ராங்கி எவ்வளவு ஹெப்பி நீயூஸ் அத பட்டுனு சொல்லாம இப்பிடி சுத்தி வளைச்சா எனக்கு எப்பிடி தெரியும்" என்று அவள் கன்னத்தில் கடித்தான்...


அதில் உண்டான வலியில்"ஸ்ஸ் என்றவாறு தன் கன்னத்தை தடவ அவள் கரம் விலக்கி அவ்விடத்தில் முத்தமிட்டவனின் முத்தத்தை ரசித்தபடி அவளோ"இது தெரிஞ்சவுடனே சொல்லாம்னு தான் போன் பண்ணேன் ஆனா நீ தான் மாமா ஆன்ஸர் பண்ணல அதான் உன்ன குழப்பி விட்டு இத சொல்லனும்னு இப்பிடி ஒரு ப்ளான்" என்று சிரித்தபடி கூற..


அவள் கன்னம் தாங்கியவனோ அவள் விழியோடு விழி நோக்கியவாறு"தைங்ஸ்டி.. நான் இன்னைக்கு எவ்வளவு ஹெப்பியா இருக்கேன் தெரியுமா எல்லாத்துக்கும் என் பவி குட்டி தான் காரணம் தைங்ஸ்டி" என அவள் நெற்றி முட்டி கூறியவன் அவளை தன்னோடு அணைத்துக் கொள்ள அவளும் அவன் அணைப்பில் கட்டுண்டவளாய் அந்த இனிமையில் லயித்தாள்.


சற்று முன்னே தினேஸ் என்றவனால் தன் மனதில் உண்டான பொஸஸ்ஸிவ்னெஸ் கூட கௌதமின் மனதிலே தங்கவில்லை..அதை அவன் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை..

பவித்ராவின் மனம் நிறைந்த புன்னகையிலும் தன் உயிர்நீரில் உண்டான கரு தன்னவள் வயிற்றில்மொட்டாய் மலர்ந்துவிட்டது என்ற உண்மையான மகிழ்ச்சியிலும் அனைத்தையும் மறந்து அவனும் அவளும் மட்டுமேயான உலகத்தில் மூழ்கிப் போனான் கௌதம்.



இதே மகிழ்ச்சி நிலைக்குமா....????

இல்லை தேவையற்ற ....உணர்ச்சிகளால் ....கலைந்து போகுமா ...?????


 
Status
Not open for further replies.
Top