எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீர்த்தக் கரையினிலே - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
தீர்த்த கரையினிலே

அம்புலியின் பாலொளி பட்டுத் தெறிக்கும் இடமெல்லாம் குளிர்மையை சேர்க்க, இரவின் மனமும், தும்பைப்பூ நிறத்தில் பனி போர்வையும் ஏற்காட்டில் மூலைமுடுக்கெல்லாம் புகுந்து காதல் செய்யும் ரம்மியமான நிலா பொழுது…

அருகருகே இருக்கும் தேயிலை தோட்டத்தில் பச்சை கொழுந்தின் மனமும், குளுமையில் படர்ந்த மண்ணின் மணமும் நாசியை நிறைக்க தவமுனி விசுவாமித்திரனுக்கும் அந்த நேரத்தில் மேனகையை கண்டு இருந்தாள் கண்ட நொடி காதல் பூத்திருக்குமோ??? அப்படி ஒரு ரம்மியம் சேர்க்கும் அழகிய ஏற்காட்டின் இயற்க்கையின் மோக சுவைதனை கிஞ்சிதமும் ஏற்காது கல்லிலும், மண்ணிலும் செய்து வைத்த சிற்பம் போல் விழியும், உள்ளமும், உடலும்
உணர்ச்சியின்று குளிரையும் பொருட்படுத்தாது பால்கனியில் நின்று கொண்டு வெளிப்புறத்தை வெறித்தன…

நோடியில் என்ன தோன்றியதோ அவன் இதழ்கள்…

"தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே.
பார்த்திருந்த தால்வருவேன்- வெண்ணிலாவிலே பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!"

என்ற பாரதியின் வரிகளை சற்று சப்தமாய் முணுமுணுத்தவன் முடியடர்ந்த மார்பு அவன் விட்ட பெருமூச்சில் அதிகமாய் ஏறிஇறங்கியது அதேநேரம் காரிருள் மறைத்தது அவன் கருமணிகள் சுரந்த நீரை…

அவன் வாழ்வில் வார்த்தை தவறியது யார்??? பார்த்த இடமெல்லாம் அவன் காணும் பார்வை யார்??? அந்த வெண்ணிலவில் அவன் கண்ட மதிமுகம் யாரது??? இதற்க்கு விடை அந்த விஜயனின் வீணை அறிவாளா??? அறிந்த பின் அவள் நிலை???

அவன் சிந்தை கலைந்து கழுத்து வளைவு ஒரு உஷ்ணமான மூச்சுக் காற்றினை உணர, அவன் இடையோடு இரு மலர்கரங்கள் பின்னிருந்து முன்னாக முடிந்த மட்டும் அந்த முரட்டு கடோத்கஜனை இறுக அணைத்துக் கொண்டது. அணைத்தது வேறுயாருமல்ல அவன் இதயக்கனி அவனோ திடீரெனத் தோன்றிய அவ் ஸ்பரிசத்தை ஏற்க முடியாது அவள் கையை அவனிலிருந்து வலுக்கட்டாயமாய் நீக்கி விட்டான்…

"ம்ச்...என்ன மச்சான் எதுக்கு இவ்வளவு பீலிங் அதுக்குதான் நான் பக்கத்திலேயே இருக்கிறேனே??? நீங்கதான் என்னைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள்…"

"ஏய் முதல்ல மச்சான்னு கூப்பிடுவதை நிறுத்து கேட்க்க நாராசமா இருக்கு…"

"ஓஓஓவ் இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது??? பொண்டாட்டி ஆசையா கூப்பிட்டா அனுபவிக்கனும் ஆராய கூடாது மச்சான்…"

"இடியட்!!! இப்போது தானே சொன்னேன் அப்படி கூப்பிடாதே என்று சொல்வதை கேட்க்கவே மாட்டியாடீ??? அப்படியே மச்சான்னு கூப்பிடுற உன் வாயை பொளக்கனு போல தோனுது. பிடிக்கலனா புரிஞ்சிக்க மாட்டியா???"

"உங்களுக்கு பிடிக்கலைனா என்ன மச்சான் எனக்கு பிடிக்குதே மச்சான். மச்சான்!!! மச்சான்!!! அடடா என்ன சுகம் செம கிக்கா இருக்கு மச்சான்.."

"ச்சே… போடி இம்சை…"

"ஹம்… அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சனை ஒன்னு மௌன சாமியார் ரோல் இல்லை அடிதடினு ரவுடி ரோல் பட் யூ நோ பேபி நான் உங்களிடம் விழுந்ததே இந்த ரவுடி ரோலை பார்த்து தான்…

அதுவும் ஷேர்ட் கையை மடித்து விட்டுக் கொண்டு, கையிலிருக்கும் காப்பை சற்று மேலே தூக்கி இறுக்கி, கைமுஸ்டியை மடக்கி ஒரு குத்து விட்டீங்க பாருங்க... ஓ மை காட்!!! யூ கில்ட் மீ மேன். அன்றைக்கு அங்க விழுந்தவ தான் இன்னும் எழுந்தரிக்கலை…"

என்றால் அளவில்லாத மயக்கம் ததும்பும் விழிகளோடு. இது எந்த வகையான காதல் ஒருவனின் ஆங்காரத்தை, அகந்தையை, முரட்டுதனத்தை மெல்லிய உணர்வுகள் கொண்ட மென்பூவால் இத்தனை ஆழமாய் நேசிக்க முடியுமா??? இதோ நேசிக்கிறாளே. அந்த நொடி அந்த முரடனின் இதயத்திலும்.சற்று ஈரம் கசிந்தது…

அதற்கு நேர்மாறாக அவன் இதயம் அளவில்லா வேதனையில் துடித்தது. துடித்த இதயத்தில் வடிந்த குருதியை எதிரில் இருப்பவள் எங்கனம் அறிவாள்???

'இல்லை இவளுக்கு நான் பொருத்தமே இல்லாதவன். இவள் அந்த தேவர்களின் தீர்த்தம், நான் அழுக்கு, அசிங்கம். எனக்கு யோக்கியதை இல்லை என்னால் இவளை அல்ல எந்த பெண்ணையுமே தொட முடியாது…

வேண்டாம் எனக்கு இந்த பச்சாதாபம் இவள்மீது வேண்டாம்…'

என மீண்டும் மீண்டும் அவனுள்ளம் மரணம் ஓலமிட்டது. அவன் நிலை அறியாதவளோ மீண்டும்…

"மச்சான் ரொம்ப நாளாக கேட்க்க நினைத்தேன் உங்களுக்கு ஏதும் லவ் ஃபெயிலியர் ப்ராப்ளமா??? இப்படி வந்து தனியா புலம்ப வேண்டியதன் அவசியம் என்ன??? இதே என்ன பார்த்து ரொமான்டிக்கா ஒரு கவிதை சொல்லியிருந்தா மீ எவ்வளவு ஹேப்பி தெரியுமா??? அப்படியே கிஸ்மிஸ்சா தந்திருப்பேன்…"

என்று சீண்டும் குரலில் பேசயவள் மீண்டும் அவனை முன்பறம் நெருங்கி அணைக்க...

அந்த மௌனத்தின் நாயகனோ உடல் விரைக்க, அவள் தொடுகையில் தேகமெல்லாம் அடர் தீயில் எரியும் உணர்வை உணர, தன்னால் ஒரு சகிக்க முடியாத அருவருப்பு, அவள் பெண் வாசனை ஒவ்வாத நெடியாய் மாற அவள் கையை ஆங்காரமாய் விடுவித்து சட்டென அவன் பலமான இரு உள்ளங்கைகளால் அவளை பின் நோக்கி தள்ளினான்…

இதை எதிர்பார்க்காதவளோ சட்டென கீழே விழுந்துவிட்டாள். அதில் அவளுடைய கைமுட்டி சற்று பலமாகவே நிலத்தில் மோதிவிட்டது…

"ஆ… அம்மா!!!..."

என்ற ஓசையின் பிறகு தான், என்ன செய்தோம் என்பதை உணர்ந்தவன் கர்ஞனையாக…

"இதற்க்கு, இதற்க்கு தான் சொன்னேன் என்னை விட்டு தள்ளியே இரு என்று... இது எல்லாம் நடக்கும் என்பதால் தான் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கவில்லை…

ஏன்டீ தினம்தினம் என்னை டார்ச்சர் பண்ற. ஜஸ்ட் லீவ் மீ ஹலோன். உன் மூஞ்சியை பார்க்கக்கூட எனக்கு விருப்பமில்லை. இதோ அலங்கரித்துக் கொண்டு வந்து நிக்கிறாயே என் முன்னால், உன்னோட இந்த கோலத்தையும் உன் கழுத்துலே இருக்கும் இந்த தாலியையும் பார்க்கும்போது என் மனசாட்சி என் மூஞ்சி முன்னால் வந்து காரித்துப்பி…

டேய் நீ ஒரு துப்பு கெட்டவன்டா!!! உன்னால் உன் கல்யாணத்தை கூட நிறுத்த முடியவில்லை. நீ ஒரு கையாலாகாதவன், ஆம்பளையே இல்லைன்னு கத்தி சொல்வதுபோல் தோணுது…

தினம் தினம் என்னை நீ தொடுவதும், சீண்டுவதும்ன்னு எவ்வளவு நெருங்க நினைத்தாலும் என் நிழலை கூட உன்னால் தொட முடியாது. அதேமாதிரி என்னாலும் என் தளைகளை மீறி உன்னை நெருங்க முடியாது. உன்னை நான் தொட்டால் அந்த நொடி நான் செத்தாலும் செத்துவிடுவேன்டீ அப்படி ஒரு சாபத்தை வாங்கியவண்டீ நான்..

இதற்குதான் அன்றைக்கே தலையில் அடித்துக் கொண்டேன். இதோ இப்போது கூட பார் என் முன்னாலேயே விழுந்து கிடக்கிறாய் ஆனால் என்னால் என் கை நீட்டி உன்னை தூக்கி விட என் மனம் விளையவில்லை...

நான் மண்ணுடீ, மரம் எனக்குள் உணர்ச்சியை தேடாதே கிடைக்காது. ஏய் இங்க பாருடீ நீயாவே எழுந்துக்க இல்லைனா நீ இப்படியே இருக்க வேண்டியது தான். என்னால உன்னை தூக்குவது என்ன விரல் நுனியில் தொட கூட முடியாது. இனிமேலாவது என்னை புரிந்துக்கொள். எந்த சுகத்தையும் என்னால் கொடுக்க முடியாது இதை முதல் இரவு அன்றைக்கே உனக்கு நிரூபித்து விட்டேன். இனியும் கேட்கலைனா எப்படியே போய்த்தொலை…"

என்று கழுத்து நரம்புகள் பின்னி புடைக்க கத்தியவன் விறுவிறுவென அறையை விட்டு அகன்றான்.என்ன மாதிரியான வார்த்தைகள் எவ்வளவு வலிமையான சொல்லம்புகள் அந்த நேரம் பெண்ணின் நிலை கௌதவ முனியிடம் சாபம் பெற்ற அகலிகையாய் மாறினால் என்பதே பொருந்தும்…

பேய் அடித்ததை போல முகம் வெளிறி கண்கள் கலங்க அவன் விட்டுச் சென்ற நிலையிலேயே இரு முழங்காலையும் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இதுபோல வார்த்தை பிரயோகங்கள், வலிச்சொற்கள் அத்தனையும் அவளுக்கு புதிது. வாய்விட்டு அழக்கூட அவள் இதயத்துக்கு தெம்பிருக்கவில்லை ஆனாலும் உடல் குறையால் வாடும் தன்னவன் உள்ளத்தில் குறை இல்லையே என்று அவள் இன்னொரு மனம் வெகுவாய் வாதிட்டது…

கண்டிப்பாக அவள் முட்டாளும் அல்ல கோழையும் அல்ல, பெண் சாணக்கியன் என்பதே அவள் குணத்திற்கு பொருந்தும். ஆயினும் அவளின் இந்த காதலை எதில் சேர்ப்பது??? வம்பாய் அவனை மணந்தவள், அவன் குறையை இன்றுவரை பெரிதாய் நினைக்காதவள், இந்நெடிவரை அவள் உள்ளமெல்லாம் நிறைந்திருப்பது காதல் மட்டுமே… ஆனால் காதல் காயங்களை கொடுக்க வல்லதே இவள் மட்டும் விதிவிலக்கா என்ன???...

அவனுக்காய் வாதிட்ட அவள் உள்ளமோ…

'ஏன் கலங்குகிறாய் இதை நீ எதிர்பார்த்தாய் தானே. அவன் உன்னை பேசினான் என்பதற்காக அவனை விட்டு விடுவாயா??? அவ்வளவு பலவீனமானவளா நீ??? உன் காதலின் எல்லை அவ்வளவுதானா??? தொட மாட்டேன் என்றவன் உன்னை தொட்டு தாலியே கட்டியிருக்கான்... உன்னோடு வாழ மாட்டேன் என்பவனோடு வாழ முடியாதா என்ன??? அவ்வளவுதானா உன் காதல்???

காதலையோ, காமத்தையோ யாசிக்க ஆண்மகன் மட்டும்தான் துணியனுமா என்ன??? ஏன் பெண் யாசிக்க கூடாதா??? பெண்ணின் காதல் ஆணின் காதலில் எவ்வகையில் குறைந்துவிட்டது…

கட்டியவன் துணையோடு மோகத்தை வென்று விடு. அது உன்னால் முடியும் உன் இதயம் முழுவதும் காதல் இருக்கும்பொழுது ஏன் முடியாது காதலில் முடியாது என்ற வார்த்தைக்கே இடமில்லை. முடியும் கண்டிப்பாக முடியும்…'

என அந்த நிலையிலும் அவள் உள்ளம் ஜெபத்தை போல கூறிக் கொண்டது. அந்த வீணையின் இந்த தைரியம் நிலைக்குமா??? ஆண்மகன் காதலெனும் தீர்த்தத்தை ஏற்பானா??? மறுப்பானா???

முடிவு காதலின் கையிலா??? அல்லது காலத்தின் கையிலா???


"இவரு பெரிய தொட்டாசினுங்கி நாங்க தொட்டதும் அப்படியே சுருங்கிற போறாரு. என்ன அப்படி பார்க்கிறீங்க இன்றைக்கு என்ன பேசி இவளை ஓட விடலாம்னு பார்க்கிறீர்களா???...

என்ன வேணாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஒரு கணவனிடம் மனைவி காதலை பகிர்ந்து கொள்வது தவறல்ல, அப்படி பகிர்ந்து கொள்ளைனா தான் அது தவறு…"

"ஏண்டி இம்சை உனக்கு வேற பொழப்பே இல்லையா??? என் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய். உங்க அப்பன் பிசினஸை கவனிக்கவாவது போவியா இல்லையா ???"

என்றவன் வாயில் அவன் உயரத்திற்க்கு காலை எக்கி நின்று ஒரு அடி போட்டள்…

"அது என்ன உன் அப்பன்னு மாரியாதை இல்லாத பேச்சி… யேவ் என்னை அமைதியான பொண்ணு, இவள் அடிச்சாலும் வாங்கிப்பான்ற மாதிரி என் அப்பாவை திட்டினாலும் வாங்குவேன் என்று நினைத்தாயா…

மாச்சான் நான் என் டாடியோட லிட்டில் பிரின்சஸ் ஆக்கும். நீர் என் லவர் பாய்ங்கிறதனால உங்களை சும்மா விடுகிறேன்…"

"இதுக்கெல்லாம் ஒரு குறைச்சலில்லை. பேச்சு மட்டும் இல்லைனா உன்னை எல்லாம் நாய் தாண்டி தூக்கிட்டு போகும். இப்ப எதற்கு கிட்டே நெருங்கி இருக்கிறாய் எதுவா இருந்தாலும் தள்ளி நின்றே பேசு. நீ எல்லாம் திருந்தவே மாட்டியா உனக்கு எத்தனை தடவை சொல்வது இப்படி உரசிக் கொண்டு வராதேயென்று…"

"நான் ஏன் தள்ளி நின்னு பேசணும். நீங்க என் புருஷ்ஷ்ஷ்... நான் இப்படித்தான் பேசுவேன், இப்படி கட்டிப்பிடிப்பேன், இதோ இந்த கன்னத்தில் முத்தம் கொடுப்பேன், எப்போ பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருக்கும் மூக்கை இப்படி பிடிச்சு இழுப்பேன்…"

என்று அவள் சொன்னதை எல்லாம் அவனில் செய்து காட்டிக்கொண்டிருந்தாள். உணர்வுகள் அற்று இருந்த அவன் மறுத்த உடலுக்குள் காதல் தன் வேலையை காட்டத் தொடங்கியது. ஹார்மோன்கள் செத்துவிட்டது என தன் குறையையும் ஓங்காரமாய் கூறியவன் இன்று காதல் ஹார்மோன்கள் இயக்கத்தில் அதில் சிக்குண்டு சின்னாபின்னமாக போய்க்கொண்டிருந்தான்…

தன்னை நெருங்கி நின்று தோள்களை பற்றிக்கொண்டு தீமூட்டுபவளை பார்த்து…

"ஏய் என்னடீ செய்கிறாய்…"

என்றவன் கைகளோ அவன் வாய்க்கு எதிரி என்பது போல் அவள் இடையை இறுக்கிப் பிடித்தது அவன் இரு பெருவிரலும் அவள் இடையில் பதிந்து அழுத்தமாய் கோலமிட்டது…

"ஹம்... என்ன செய்யறாங்க லவ் பண்றாங்க…"

"அடியேய் இம்சை இப்படியே பண்ணிக்கொண்டு இருந்தாய் என்றால் அப்படியே ஒரு அப்பு அப்பிவிடுவேன்…"

"ஆமா ஆமா மச்சான் ஊருக்குள்ள சொல்லிக்கொண்டார்கள் உங்க புருஷனுக்கு வாயை விட கை தான் அதிகம் பேசும்னு. அதுதான் நல்லாவேதெரியுதே…"

என்றவளின் பார்வை அவன் இரு பெருவிரல் அழுத்த வருடும அவள் இடைக்கு சென்றது. அவள் பார்வை அடுத்து கையை விழக்க போனவனின் எண்ணம் அறிந்தவளாய் அவன் பாதத்தின் மீது தன் பாதத்தை பதித்து அவன் அதரங்களை தன் செவ்விதழாழ் ஆழமாய் பதித்துக் கொண்டாள்…

ஒரு ஆழ் முத்தம் அழகிய தியானத்தைப் போல ஆழ்ந்து அனுபவிக்கும் உயிர் முத்தம், காதலாய், தாபமாய், சத்தமாய் ஒரு வன் முத்தம்…

அவள் வல கரம் எழுந்து அவன் சிகைக்குள் நுழைந்து தன்னை நோக்கி நெருக்கி பிடிக்க மற்ற கரமோ அவன் இடையை இறுக்க... அவனோ ஒரு படி மேலே அவளை தன் உயரத்துக்கு ஏற்றாற்போல் சற்று உயர்த்திப் பிடித்து சத்தமிட்டபடி உமிழ்நீர் தெறிக்க, தெறிக்க ஒரு முத்த யுத்தம் செய்தான். அவன் இரு விழிகளை மூடி அந்த முத்தத்தின் சுகத்தை உயிர் தாண்டி அனுபவிக்க, அந்த விஜயனின் வீணையோ, கிறங்கி இருந்த அவன் முகம் பார்த்தவாறே தன் உதட்டை அவன் உதட்டிலிருந்து அகற்றிய வண்ணம் தன் பெருவிரலால் அவள் காதை வருடியவாறு…

" காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும். காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்;
சிற்பக் கலைகளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!"

என்றும் மென் குரலில் பாடியவள்…

"மச்சான் இதை உங்க கவிஞர்தான் சொல்லி இருக்கிறார் தெரியுமா??? ஆதலினால் காதலும் செய்வோம், காலவியும் செய்வோம், கவலைகளை தீர்த்துப்போம் மச்சான்…"

என்றவளின் குரலும், அவள் விழி பேசிய காதலும், அதில் குறையாது தேஜஷ்ம் நான் சொன்னதை செய்ய என்ற கட்டளையோடு அந்த வரண்ட வெற்று நிலமானது அந்நொடி ஈர காற்று வீச, அருவியின் குளிர்ச்சியை உணரத் தொடங்கிய…

அக்கணமே அவள் கந்தவர்னின் அகங்காரத்தில் ஒளிந்திருந்த நேசம் பூவாய் பூக்க தொடங்க, காதல் கொண்டான் கலவி செய்ய தயாரானான்.
அவள் இடையை இறுகப் பற்றி தனக்கு அருகில் இழுத்தவன் மூட்டையை தூக்குவதை போல் அவளை தோளில் தூக்கிக்கொண்டு மஞ்சத்தை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் இரு விழிகளில் அந்த நொடி வழிந்தது காதலா??? காமமா??? காயமா??? அறிந்தவன் படைத்தவன் மட்டுமே
 
Status
Not open for further replies.
Top