எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேடி வந்த தேவதை - கதை திரி

Status
Not open for further replies.

Rishaba Bharathi

New member
🎶..நானே..வருவேன் இன்றும் அன்றும்...🎶 என்பது அன்றிலிருந்து இன்று வரை ஏறக்குறைய ஆறடி உயரமாய் கம்பீரமும் அழகும் கலந்தவனாய் தூய மனதுடன்..அவளுடனான வாழ்வை வாழ்ந்து வருகிறான்.


ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் உறவுகள் ஏதும் எவரும் இன்றி. அப்படி உறவுகளை விட்டு நாடு விட்டு நாடு கடத்தப்பட்ட அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள் விதுரனும் நிஹாரிக்காவும்.


இவர்கள் உறவுகளை தோழர்களை விட்டு இப்படி தன்னந்தனியாக வாழ்வதற்கான காரணம் என்ன? இவர்களின் வாழ்க்கை பயணத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இனி வருகிற அத்தியாயங்கள் மூலமாக தெரிந்த கொள்ளுங்கள்😻😻
 

Rishaba Bharathi

New member
பயணம்-1✨
அழகிய காலை பொழுது.. ஒருவன் மாடமாளிகை போல் இருக்கும் வீட்டினுள் கம்பீரமான நடையுடன் தன் இரண்டு கைகளில் ஒரு கையை பாக்கட்டில் வைத்து கொண்டு மற்றொரு கையில் ஃபோனை அழுத்தமாக பிடித்து கொண்டு அவன் வீர நடையுடன் அந்த வீட்டின் மேம்மாடிக்கு செல்ல, அங்கு சற்று தொலைவில் ஒரு அழகு தேவதை ஓடோடி வந்து அவனுடைய கால்களை கட்டி அணைக்க அவன் அவளை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றான்.


****************

அங்கு அந்த அறையினுள் ஐந்தடி உயரத்தில் வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு புடவையை அணிந்து கொண்டு தன் மார்ப்புக்கு மேல் இருக்கும் கழுத்தை அழகு படுத்திய அந்த அலங்கார நகை, அதோடு அவர்கள் இருவரின் உறவிற்கு அடையாளமாக திகழும் அந்த தாலியும், உச்சியில் வைத்த அடற் சிவப்பு குங்குமமும், வாசனை கமழும் மதுரை மல்லிகையும்,கைகளில் சிவப்பு வண்ண வளையல்ளும், கால்களில் வெள்ளி கொலுசுகள் ஜல்ஜல் என நடக்கும் போது சத்தமிட, அவளை பார்த்த அவன் குழந்தையை கையில் ஏந்தியவாறு அவளின் பார்வையில் சற்று மயங்கிய ஆணவன்

அழகோ..அழகு..அவள் கண்ணழகு😍 அவள் போல் இல்லை ஒரு பேரழகு..அழகோ அழகோ அவள் பேச்சழகு..அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு..தத்தி நடக்கும்..அவள் நடையழகு..பற்றி எரியும்..அவள் உடையழகு...ஐய்யய்யோ!!!!!!!!!!

அவளிடம் "நிஹாரிகா.." என்று கூப்பிட சட்டென்று திரும்பியவள் "வி..விதுரன்..வ..
வந்துட்டியா."

அவன் "ம்ம்..இப்போ தான் வந்தேன்."
அவள் "ஏய்..பட்டு உன்ன நான் படிக்க தானே சொன்னேன். என்ன பண்ற?"

அந்த குழந்தை "அ..அ..அது நான்.. விது அப்பா கூட சேர்ந்து தான் ப..படிப்பேன். போய் காஃபி கொண்டு வா அம்மா."

அவள் "நானே செல்லப்பெயர் சொல்லி கூப்பிடுரது இல்ல நீ.. செல்ல பெயர் வச்சு என் புருஷன கூப்பிடுவியா?"

அவன் "நிஹாரி.. விடு டி.. சின்ன பொண்ணு தான கூப்பிட்டுட்டு போறா.வாங்க வாங்க நம்ம படிப்போமா ஆருத்ரா குட்டி?"

அந்த குழந்தை தலை ஆசையோடு 'சம்மதம்' என்றவாறு அசைத்தால்.

************

சில நேரம் படித்து முடித்துவிட்டு அவன் அவளை உறங்க வைத்து விட்டு, நிஹாரிக்காவை காண்பதற்கு செல்கிறான். அவள் பெல்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து தன் கைகளை வைத்து நாடியை தாங்கியவாறு முகத்தை சுருக்கிக்கொண்டு அமர்ந்தவள்.

பார்க்க பச்சிளம் குழந்தை போல அவனுக்கு காட்சி அளித்தால்.

அவளை பார்த்ததும் அவன் "ஹேய்.. நீ இங்க தான் இருக்கியா?"


அவள் ஊஞ்சலில் இருந்து எழுந்து, அவனை பார்க்காமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டால்.


அவன் தன் கைகளால் அவளுடைய முகத்தை திருப்பி "ஏய்.. என்ன என் மேல கோவமா?"

அவள் 'ஆமாம்' என்றவாறு ஒரு பார்வை பதிக்க அவன் "சரி.. சாரி..ஏய்! அதான் சாரி சொல்லிட்டேன்ல டி பொண்டாட்டி பேசு ஏதாவது.?"


அவள் "விதுரன்.. உங்களுக்கு தெரியாத விஷயம் எதுவும் இல்ல நா.. நான் நாளைக்கு விசாகப்பட்டினம் போகலாம்னு இருக்கேன் இ..இங்க இந்த ஊர் பிடிச்சியிருக்கு இருந்தாலும்.."என தொடராமல் நிறுத்த.


அவன் "விசாகப்பட்டினம்.. ஏன்? நம்ம தான் அந்த ஊர் வேண்டாம்னு இங்க தூரமா வந்துட்டோம்ல"


அவள் "ஆமா விது எ..எனக்கு என் தோழி நக்ஸத்ரா அப்புறம் என் அம்மா அப்பா வ பாக்கணும்னு தோணுது."


அவளின் வார்த்தைகளும் பார்வைகளும் அவனை கட்டிப்போட்டு. அவளுடைய ஆசைக்கு சம்மதத்தை தெரிவிக்க அவனுடைய மனம் சம்மததித்தது.


அவன் "சரி.. ஒரு வாரம் தான் அப்புறம் நம்ம இங்க தஞ்சாவூர்க்கு திரும்பிடுவோம்."


அவள் "ஓகே!" என்றால் உற்சாகத்தோடு.


அவன் கே பி என் டிராவல்ஸ் பஸ்ஸில் டிக்கட் விசாகப்பட்டினத்திற்கு புக் செய்தான்.


மறுநாள் அவர்கள் பேருந்தில் செல்லும் போது ஆருத்ரா அவனிடம் "ப்பா..எனக்கு ஒரு கதை சொல்லுங்க."


அவள் "அ..விது
சொல்லுங்க."


அவன் "ஹம்..ஆ.. நான் ஒரு கதை சொல்லப்போரேன் அது வந்து உண்மை கதை."


அவள் "என்ன..உண்மை கதையா? யாருடைய வாழ்க்கை கதை?"


அவன் அவளிடம் மெல்லமாக "நம்ம கதை தான்." என்றான் கிசுகிசுப்பாக அதில் அவள் வியந்து "ஆ..என்ன?" என்று மெல்லிய குரலில் பேச அவன் அவளுடைய வாயில் ஒற்றை விரலை கொண்டு "ஸ்..ஸ்.."

அவன் அவர்களிடம் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளை கூற ஆரம்பித்தான்.

***************

ஐந்து வருடத்திற்கு முன்..

விதுரனுக்கு அப்போது இருபத்தி ஏழு வயது.அவன் பிஎஸ் எம்எஸ் சி முடித்து பிஹச்டி அல்ஜிபராவில் முடித்து பிரபலமான ஆந்திரா யூனிவர்சிட்டியில் வேலை கிடைத்தது.

அவனுக்கு ஒரு தங்கை உண்டு அவள் தான் நக்ஸத்ரா அவளுக்கு வயது இருபத்தி மூன்று.

இவர்கள் இருவருக்கும் தாய் தந்தை கிடையாது எல்லாம் அவர்களுடைய தாய்மாமா தான் இன்று வரை அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொடுத்து வருகிறார்.

ஒரு நாள் விதுரன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர அப்போது நக்ஸத்ரா அவனிடம் "அண்ணா..அண்ணா.. மாமா உன்ன கிளம்ப சொன்னார் சீக்கிரம் கிளம்பு நம்ம போகலாம்"

மூவ்வரும் கோபாலபட்டினத்திற்கு சென்றனர் அது ஒரு கிராமம் அங்கு..

அவர்களுடைய கார் கிருஷ்ணா இல்லத்தின் வாசலில் நின்றது. இவர்களை வரவேற்க நிஹாரிகாவின் தாயார் வரவேற்றார்.

வீட்டினுள் நுழைந்தவர்கள் நக்ஸத்ராவை பார்த்து "ஹேய்.. நக்ஸத்ரா எப்பிடி இருக்க? நிஹாரிகா உன்ன பத்தி நிறைய சொல்லியிருக்கா."

அவள் "ஹா.. அப்பிடியா.!"

அவன் வீட்டை முழுவதுமாக சுற்றி பார்த்தான். அங்கு அவன் கிச்சனுக்கு எதிரே இருந்த அறையினுள் ஏதார்தமாக நுழைந்தான் அப்போது அங்கு இருந்த நபர் "யா..யாரு?"

அவன் "ஓ..சாரி.." அவனை பார்த்தவன் "வி..விதுரன்..நீயா?"

அவன் "நீ..யாருனு எனக்கு தெரியவே இல்ல" என்றான்

அவன் "ஹஸ்வந்த் டா.. உன் யூஜி காலேஜ் மேட் மறந்துட்டியா?"

அவன் "அட..ஹர்ஸா! எப்படி இருக்க?" இருவரும் பேசிக்கொண்டு இருக்க அவனை அவன் அழைத்து ஹாலுக்கு கூட்டி வந்தான்.

மாடி படியில் மெல்ல மெல்ல பொடி நடையிட்டு வந்த நிஹாரிகா இராமர் பச்சை நிறத்தில் இருக்கும் அந்த புடவையில் தங்க நிற இலை டிசைன் செய்து அவள் அணிந்திருந்த அந்த ஜிமிக்கி அவளுடைய அழகை மேலும் மெழுகூட்ட.

அவளுடைய சிரிப்பும்,பொடிநடை அழகும் அவனை கவர்ந்திழுத்தது.

அந்த நிமிடம் அந்த நேரம். விதுரன் தன்னையே மறந்து அவளை வைத்த கண்வாங்காது மெய் மறந்து பார்த்தான்.

அவள் அவனுக்கு காஃபியை கொண்டு வர ஹஸ்வனந்த் அவனிடம் "ஹேய்..மச்சி..காஃபி எடுத்துக்கோ" என்றான் மெல்லிய குரலில்.
அவன் "ஹா..தாங்க்ஸ்"

அவன் "என்ன மச்சி என் தங்கச்சி எப்பிடி?"
அவன் "உன் தங்கச்சியா? என்ன பண்ணுறா?"

அவன் "பி.டெக் படிச்சுட்டு இப்போ தான் ரிலாக்ஸ இருக்கா."

அவன் "ஓ..நான் தனியா பேசலாமா?" என்றான் சத்தமாக.

அவள் அவனை ஒரு வித புன்னகையும் வெட்கமும் இல்லாமல் அதிர்ந்து பார்க்க.

இருவரும் மேல்இருந்த பெண்ணின் அறைக்கு சென்றனர் அங்கு..

அவன் "எக்யூஸ்மி.." அவள் அவனை பார்க்க அவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்

"நான் விதுரன் இப்போ தான் பிஹச்டி முடிச்சுட்டு ஆந்திரா யூனிவர்சிட்டி ல ப்ரஃவரசர் வேலை பார்த்துட்டு வரேன். எனக்கு எல்லாமே என் தங்கச்சி அப்புறம் என் மாமா தான். அப்பா எனக்கு மூனு வயசு இருக்கும் போது அக்சிடென்ல இறந்துட்டார். அம்மா பிரசவத்தில் இறந்து போயிட்டாங்க. எனக்கு என் வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் தான் அது என் மொத்த அன்பு,பாசம் எல்லாத்தையும் என் தங்கச்சி பிறகு என் மனைவியா வரப்போகும் பெண்ணுக்கு தான்."


இந்த வார்த்தையை கேட்ட நிஹாரிகா அவனை வியந்து பார்த்து கண்களால் அவனிடம் 'நீ..தான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவ.' என்றால் மனதோடு மனதாக.


அவன் அவளை பார்த்து "ஹேய்..!ஏதாவது பேசு?"

அப்போது அவனுடைய தங்கை "அண்ணா..இவள பத்தி உனக்கு தெரியணும் அவ்வளவு தானா. நான் சொல்லுரேன் இவ பெயர் நிஹாரிகா,இவளுக்கு நிறைய படிக்கணும்னு ஆசை.நல்ல பொண்ணு என்னோட பெஸ்டு ப்ரண்டு னா அது இவ மட்டும் தான்."

அவள் "ஆமா..நக்ஸூ என் செல்ல தோழி."

சபையில்..

அவன் "எனக்கு நிஹாரிகாவ ரொம்ப பிடிச்சிருக்கு."

அப்போது அவளுடைய தாயார் "நான் ஒரு விஷயம் கேக்கலாமா?" அவன் "ஓ..என்ன விஷயம்?"

அவள் "அது வந்து சம்மந்தி என் பையன் ஹஸ்வந்த்கும் உங்க பொண்ணு நக்ஸத்ராவுக்கும் திருமணம் செஞ்சு வைச்சா நல்லா இருக்கும்."

அவன் அவளை பார்த்து "நக்ஸா உனக்கு சம்மதமா டா?" என்று விதுரன் கேட்க அவள் "அ..அது நா..அவர்கிட்ட கொஞ்சம்..தனியா பேசணும்."

ஹஸ்வன்ந்த் அறையில்..

அவன் "நா..அது வந்து நக்ஸத்ரா, நான் ஹஸ்வன்ந்த் இப்போ தான் எஸ் ஐ ஆனேன். எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்கும் இந்த வேலை பண்ணுவது என்னுடைய உயிர் அத யாருக்காவும் ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன். உனக்கும் சம்மதம்னா?"

அவள் "அ..அது..வந்து.. எனக்கு.. இந்த திருமணத்தில் இஷ்டம் தான் ஆனா மூனு கன்டிசன் இருக்கு ஒன்னு எனக்கு மேலும் பி.ஜி பண்ண ஆசை இருக்கு. இரண்டு எனக்கு என் புருஷன் உண்மையா இருக்கணும் நானும் அவனுக்கு உண்மையா தான் இருப்பேன். மூனாவது எனக்கு பிடிக்காத விஷயத்தை எப்போதும் ஃபோர்ஸ் பண்ணி செய்ய வைக்க கூடாது. இதுக்கெல்லாம் ஓகே சொன்னா நான் திருமணம் செஞ்சுக்கிறேன்."

அவன் அவளை கண்டு "இங்க பாரு.. நீ.. வெளிப்படையா பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்காகவே நீ சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறேன்."

இரண்டு ஜோடிகளுக்கான திருமண ஏற்பாடுகள் துவங்கின..😍

இனி என்ன நடக்கும் நிஹாரிகா தன் வாழ்விற்கு இவன் தான் வெளிச்சம் தரப்போகிறான் என்று ஏன் கூறுகிறாள்? என்னவாக இருந்திருக்கும்?


என்னிடம் ஓடோடி வா...❤
 
Last edited:

Rishaba Bharathi

New member

பயணம் 2✨

திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயம் நடந்தது..

அப்போது விதுரன் நிஹாரிகா இருவரும் ஃபார்மல் டிரஸ் அணிந்திருந்தார்கள்.


நிஹாரிகா ஒரு ஃவயிட் ஃபேரி போல லாங் கவூன் அணிந்திருந்தால். அதோடு, அவளுடைய அழகானது எந்த வித கூடுதலும் குறைச்சலும் இன்றி இயற்கை அழகாக விதுரனை கவர்ந்து இழுக்கிறது.

அவன் "நிஹாரி..நீ..ரொம்ப அழகா இருக்க!" அவள் எதுவும் சொல்லாமல் வெறும் ஒரு புன்னகை புரிய அந்த புன்னகையில் வெட்கம் தென்படவில்லை.

அவனும் அதை சரியாக கவனிக்கவில்லை. நக்ஸத்ரா பீச் நிறத்தில் இருக்கும் லெகங்கா போட்டு அதற்கு எடுப்பாக அமையும் நெற்றிசூடியும் தோடு,வளையல்கள் என தன்னை தானே மேலும் அழகு படுத்திக்கொண்டு மேடையில் வர. அவனோ கருப்பு நிறத்தில் கோட்சூட் அதில் கட்டம்போட்ட டிசைன் பார்க்க சற்று சாதாரணமாக இருந்தாலும் அவனுக்கு அந்த உடை முற்றிலும் அற்புதமாக இருந்தது.


இரண்டு ஜோடிகளுக்கும் நிச்சயம் நன்றாக முடிந்தது.

*****************

அன்று இரவு நக்ஸத்ராவும் நிஹாரிகாவும் தனியாக பெல்கனியில் பேசிக்கொண்டு இருக்க. அங்கு விதுரன் தூரத்தில் இருந்து தன் தங்கையை பார்த்த வண்ணமாக நின்று கவனிக்க அவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ச்சியுடன் பேசவில்லை என்பது அவனுக்கு அன்று அந்நேரத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவனும் அவனுடைய தோழனும் அவர்கள் பக்கம் சென்று அவர்களை பார்த்த நக்ஸூ "ஹேய்..நிஹாரி..விது அண்ணாவும் ஹஸ்வந்த்தும் வந்திருக்காங்க."


இதை கேட்டவள் சட்டென்று தன் கண்களை துடைத்து கொண்டு திரும்ப அவன் அவளை பார்த்து "நிஹாரிகா..இந்த டிரஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இனி நான் உன்ன நிலானு தான் கூப்பிடுவேன்."


அவள் "அ..அ..அது..நீங்களும்.. இந்த டிரஸ்ல பார்க்க அழகா தான் இருக்கீங்க." என்றால் திக்கிய வார்த்தைகளுடன்.


அவனுக்கு மகிழ்ச்சி..பொங்க கோதாவரி ஆறும் மலையிலிருந்து புறப்பட்டு வரும் குளிர்ந்த அருவியும், தன் நெஞ்சை குளுகுளுக்கவைத்தது போல் அந்த ஓரிரு வார்த்தைகள் அவனுக்கு மனதிற்கு இதமானதாக இருந்தது.


அவன் "சந்தோஷம் நிலா..நீ என் கிட்ட பேசிட்ட என்..மனசு..ரொ..ரொம்ப..ரொம்ப..ரொம்ப சந்தோஷமா இருக்கு."


அவள் அவனை பரிதாபத்தோடு பார்த்தாலும், அவளுடைய ஆழ்மனதில் அவள் எதையோ இழந்த வேதனை,அதுமட்டுமல்ல மறக்க முடியாத துக்கமும் சோதனையில் நடமாடும் ஒரு ஜடமாக தான். அவள் விதுரனோடு மறுநாள் திருமண அரங்கில் அமர்ந்தால் என்பது தான் உண்மை.

இது தானா...இது தானா...எதிர்பார்த்த அன்..நாளும் இது தானா...இவன் தானா...இவன் தானா!!!! மலர் சூடும்..மனவாரன் இவன் தானா....!😻

விதுரன் வெள்ளை வேஸ்டி சட்டை அணிந்து முகத்தில் புன்னகையுடன் அத்தனை மகிழ்ச்சி, அவனது வாழ்வில் இதனால் வரை அனுபவிக்காத ஒரு பொழுது. புது வாழ்வு ஆரம்பிக்கும் பயணத்தில் தன்னுடன் வாழ வருபவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு. அவனை மேலும் ஒரு புது அத்தியாயத்திற்கு, அதுவும் தன்னவளுடன் என்ற ஆனந்ததில் அவன் திருமண அரங்கில் அமர்ந்தான்.


அவளை வாழ்க்கை துணைவி ஆக்க ஐயர்களின் மந்திரம் ஓதி அவளுடைய கழுத்தில் அவனுடைய கரங்களால் தாலி ஏறியது.


அதே சமயம் நக்ஸத்ராவின் கழுத்திலும் ஹஸ்வந்த்தின் கரங்களின் மூலம் தாலி ஏறியது.


இரண்டு ஜோடிகளும் ஓமகுண்டந்த்தை மூன்று முறை சுற்றி வந்தனர்.


மற்ற சடங்குகள் நல்லபடியாக நிஹாரிகாவின் வீட்டில் நடந்தது.


விதுரனின் மாமாவிற்கு அத்தனை மகிழ்ச்சி! அவரது தங்கையின் பிள்ளைகளை நல்ல முறையாக படிக்க வைத்து கரை சேர்த்து விட்டோம் என்ற நிறைவு, அவர் மனதிற்கு நிம்மதியை தந்தது.


அன்று இரவு..


அந்த இருவரும் தங்களுடைய தேவதையின் வருகைகாக மனதில் ஒரு வித காதலோடும், கண்களில் ஆசையோடும், புது வாழ்வை தொடர அவர்கள் அத்தகைய புன்னகையுடன் காத்திருந்தனர்.

***************

நக்ஸத்ரா அவளின் அவனை காண அறையினுள் நுழைந்தால்.


தன்னவளை கண்டவன் அவளிடம் "வா..தென்றல்" என்று கூற அவள் "யாரு தென்றல்?"


அவன் "அது..நான் உன்ன தான் கூப்பிட்டேன்." அவள் "நான் தென்றல் இல்ல நக்ஸத்ரா" என்றால் அழுத்தமாக.

அவன் "அட..என்ன நீ இப்பிடி பேசுற என் மனைவிக்கு நான் செல்ல பெயர் வைக்க கூடாதா?"


அவள் "அ.. அப்பிடி வைக்கணும்னு ஆசை இருந்தால் என் பெயர் செல்லமா கூப்பிடலாமே இது என்ன புதுசா?" அவன் "ஆமா..புதுசு தான்.. நீ உள்ளே வந்ததும் என் மீது வீசிய மல்லிகை மனமோடு காற்றிலே கலந்து என் மீது விழுந்த தென்றல் காற்று இருக்கே..!அது..அது..அது தான் என்ன தென்றல்னு கூப்பிடவைச்சது."

என்றான் காதலோடு அவள் "அடேங்..கப்பா..! வாரே வா..போலிஸ் சார்க்கு கவிதை எல்லாம் வருது..!! எப்பிடி?"

அவன் "எல்லா உன்னால தான் டி என் பொண்டாட்டி.." என்று அவளை தன் பக்கம் இழுத்து கொண்டு அவள் காதோடு வாய் வைத்து அவன் ஊத அந்த காற்றானது அவளை அவன் மார்போடு அணைக்க வைத்தது.

***************

நிஹாரிகாவின் அறையில்..

அவன் 'நிஹாரி..நீ..எப்போ தான் வருவ? நான் வெயிட் பண்ணுரேன்' என்று அவளின் வருகைக்காக காத்து இருக்க அவளும் வந்தால்.


அவளை பார்த்த அவன் "நிலா..வா வந்து உட்காரு.." அவள் கையில் இருந்த பால் செம்பை வாங்கிக்கொண்டு குடிக்கும் வேளையில்..

அவள் தன் இரு கைகளை முந்தியை பிடித்து இறுக்கி, கொண்டு இருப்பதை கண்ட அவன். அவள் தோள் மீது கையை வைக்க அவள் அவன் கையில் இருந்த செம்பை தட்டி விட அவன் அதிர்ந்து போய் நின்றான்.!


அவன் "ஏய்..நிலா.. என்னாச்சு..ஏன் இப்பிடி நடந்துக்கிற?"


அவள் "அ..அ..அது ச..சா..சாரி. விது..தெ..தெ..
தெரியாமல் நடந்துடுச்சு." என்றால் பதட்டமாக


அவன் அவளுடைய கையை தன்னுடைய நெஞ்சில் வைத்து அவளிடம் அவன் "நிலா..இப்போனு இல்ல இனிமே என் மனசுல என் வாழ்க்கைல நீ தான் எல்லாமே. நீ மட்டும் தான். உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பராவாஇல்ல என்கிட்ட சொல்லு..உன் ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்."

**************

இன்று..

ஆருத்ரா அவனிடம் "ஹா..அதுக்கு ஹிரோயின் என்ன சொன்னாங்க விது அப்பா.?"

அவள் "போதும் விதுரன் கதை சொன்னது பட்டு வா தூங்கலாம். அப்பா ரெஸ்ட்
எடுக்கட்டும்"


அவள் "நிஹாரி..அம்மா பிளிஸ் ப்பா.. எனக்கு கதை சொல்லு ம்மா இப்பிடி தான்! நீ சொல்லு" என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தால்.


அவன் "நிஹாரி.." என்று அவளை கூப்பிட அவள் அவனை பார்த்து சொல்ல வேண்டாம்!! என்று ஜாடை காட்ட அப்போது அவன் அவளை "அப்பா இனிமே உன்ன நிலா னு கூப்பிடுரேன்." என்று கூறி நிலா என்ற வார்த்தையை அழுத்தம் கொடுத்தான்.


அவள் சட்டென்று திரும்பி அவனிடம் நெருங்கி சென்று, அவனுடைய காதோரத்தில் மெல்லிய குரலில் "நான் தான் உன் நிலா.. சரியா..இப்போ நீ நம்ம பொண்ணுகிட்ட கதையை சொல்லு." என்று கூறிவிட்டு படுத்து உறங்க ஆரம்பித்தால்.


அன்று..

அந்த இரவு வேளையில்..

அவன் "சொல்லு நிலா..அப்பிடி என்ன பிரச்சனை,உதவி எதுவாக இருந்தாலும் சொல்லு."

அவள் "அ..அது..நான் எம்.டெக் பண்ணனும் ஆசையாக இருக்கு. மேலும் என்ன படிக்க வைப்பியா?"
என்றால் ஆசையாக.

அவன் "அடச்..சி இது தான் விஷயமா. கண்டிப்பா படிக்க வைக்கிறேன்."

அவள் "அது மட்டும் இல்ல நான் நக்ஸூவோட சேர்ந்து தான் பி.ஜி பண்ணுவேன்."


அவன் "சரி..நான் நாளைக்கு ஹர்ஸாகிட்ட பேசுரேன். கண்டிபா படிக்க வைக்கிறேன்."


அவள் "எ..எனக்கும்..தூக்கம் வருது..நான் தூங்கவா?" அவன் "இது..என்ன கேள்வி தூங்கு நிலா.."


அவன் 'கடைசி வரைக்கும் ஒன்னுமே நடக்கல' என்றான் மனதோடு மனதாக.


மறுநாள் காலை..


நிஹாரிகா நக்ஸத்ரா இருவரும் தங்களை சுத்தம் செய்து விட்டு, இறைவனை வழிபட்டுவிட்டு, அவர்கள் மறுவீட்டு சடங்கு செய்ய வேண்டும் என்ற காரணத்தால் அவர்கள் விதுரன் வீட்டிற்கு சென்றனர்.


மறுவீட்டு சடங்கு என்பது திருமணம் முடிந்த பெண்ணவள் தன் கணவன் வீட்டிற்கு சென்ற பின் தன்னுடைய உறவினர்கள், தன் கணவனினுடைய உறவினர்களுக்கு கறி கோழி எடுத்து சமைத்து அவர்களுக்கு விருந்து படைக்க வேண்டும். இது தான் மறுவீட்டு சடங்கு இச்சடங்கினை செய்ய இரண்டு மருமகளும் தயாராகினார்கள்.


நிஹாரிகாவின் குடும்பத்தினர். அத்தை, மாமா,சித்தி,சித்தப்பா, ஒன்று விட்ட மாமா, என பலர் கூடி அவனுடைய வீட்டிற்கு ஊர்வலம் வருகிறவர்கள் போல வந்தனர்.


அவர்கள் அனைவரையும் கண்ட அவன் தன் மனதினுள் 'என்ன இவ்வளவு சொந்தகாரர்கள் இத்தனை பேர் என் வீட்டிற்கு வருவது இது தான் முதல் முறை' என்று தன் மனதோடு மனதாக வியந்து போய் பேசியவன் பின்னால் நின்ற ஹஸ்வன்ந்த் அவன் தோள் மீது வைக்க திடுக்கென்று திரும்பிவனை பார்த்தவன்.

அவனிடம் "என்ன மச்சி..இப்பிடி ஆச்சிரியமா பார்க்குற?" என்று அவன் கேள்வி எழுப்ப அவள் "ஹஸ்வன்ந்த் இங்க கொஞ்சம் வாங்க.."

என்று அவனின் தென்றல் அவனை அழைக்க. இவனின் இவளான நிலா காஃபியை கொண்டு வந்து நீட்டினால் அவன் அவளிடம் "நிலா.. உனக்கு இத்தனை சொந்தகாரர்களா?" என்று மனதில் கூறியதை வியப்போடு கேட்டான்.

அவள் "ஆ..ஆமா..வி..விது..ஏன் அதோ பி..பின்னாடி வருகிறவர் அத்தனை பேரும் என் கூட படிச்சவங்க இவங்க எல்லோரும் நக்ஸூவோட ப்ரண்டஸ்."

என்று அங்கு வந்தவர்கள் அனைவரையும் அவனிடம் அறிமுகம் செய்து வைத்தால் அவனின் நிலா.


ஆனாலும் அவளின் புன்னகை மற்றுமள்ள அவளின் பேச்சிலும் சில வித மாற்றங்கள் இருக்கிறது என்பதை அவனால் அன்று புரிந்து கொள்ள முடியவில்லை காரணம் அவர்கள் இன்னும் மனம் விட்டு பேசவில்லை என்பது தான்.


என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 3✨


அவனிடம் பேசிவிட்டு கிச்சனுக்குள் செல்ல அங்கு..

ஹஸ்வந்த் தன்னவளுடன்..

அவன் "ஹேய்..தென்றல் நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க..இந்த சேரி..உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கு." என்று கூறி அவளின் சுருன்டு தொங்கும் தலைமுடியை தன் ஒற்றை விரலால் அவளின் நெற்றியில் கைப்பட்டு ஒதுக்க.. அவளும் அவனுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்தால்.

அதன் விளைவாக இருவரும் இணைந்து இழோடு இதழ் குவித்து பேசியதை, கண்ட அவனது தங்கை தன்னிரு கண்களை முடிக்கொண்டு.. சில வினாடிகள் காத்தியிருக்க.


அவளை தேடி வந்தவன் அவளுடைய வெட்கத்தை பார்த்து! மூடி மறைத்து வைத்திருந்த அவளது விழிகளை தன் கைகளால் திறந்து பார்க்க. அவளும் வேடவேடத்து போய் நின்றால்.


அவளின் அவன் அவளை பார்த்தாலும், அவளுடைய கண்களும் அவனும் மௌன மொழியும் இருவருக்கும் இடையே ஆரம்பிக்க போகும் உறவிற்கு அடித்தளம் ஆகும்.


கண் விழித்த அந்த தென்றல், அவனை பார்க்கும் போது தன்னிலை மறந்து முன்னே நான்கு அடிகள் வைத்து நடக்க.. பின்னிருக்கும் அவன் அவளுடைய முந்தியை பிடித்து இழுக்க அவனுடைய மார்போடு அவள் சுற்றி கொண்டால்..


இருவரும் மெய் மறந்து வேறு உலகில் மிதக்க ஆரம்பித்தனர்..

*************

இங்கு கிச்சனுக்கு வெளியே நிற்கும் இவர்கள் இருவரும் கண்னோடு கண் பேச. அவன் அவளின் கைகளை மெல்லமாக பிடித்து தன் இதழ் பக்கம் கொண்டு வந்த அவளுடைய புறங்கையில் ஒரு மெல்லிய முத்தமிட அந்த முத்தம்!அவர்களின் வாழ்வின் அவன் அவளுக்கு முதல் சைவமுத்தம் என்றாலும்..


அவள் அந்த முத்தத்தை அனுபவித்த பின். அவனிடம் தன்னை மறந்து நெருங்க தொடங்கியவள்.


எந்த வித கவலையும் இல்லாமல் அவனுடைய இலை போன்ற இதழில் தன் சிவந்த உதட்டை வைத்து அவனிடம் பேசினால்..!


அதுவே அவள் அவனிடம் தந்த முதல் முத்தம் மட்டுமல்ல கடைசி முத்தம் என்று பாவம் அன்று அவனுக்கு தெரியவில்லை..


படியில் இருந்து விளையாடி வந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகள். கையில் வைத்திருந்த பாத்திரத்தில் ஒன்று தெரியாமல் கீழே விழ அந்த சத்தத்தை கேட்டு இரு ஜோடிகளும் தங்களுடைய கனவு உலகை விட்டு வெளிவந்தனர்.

***********

அவள் "நிஹாரி.. வா..நமக்கு வேலை இருக்கு அங்க என்ன பண்ணுர?" என்றால்..

அவள் "ஹ..ஹான்..வரேன் எ..எனக்கு வேலை இருக்கு. நீங்க வெயிட் பண்ண முடியுமா? நா..நான் ஈவினிங் உங்ககிட்ட மனசுவிட்டு எல்லா விஷயத்தையும் சொல்லுரேன்."


அவன் "ஒரு பிரச்சனையும் இல்ல" என்று சொல்லிவிட்டு சென்றான்.


ஹஸ்வந்த் அவள் கையை பிடிக்க அவள் அவனிடம் "ஹஸ்வந்த்.. விடு.. எனக்கு வேலை இருக்கு நிஹாரி பார்க்க போறா" என்று மெல்லமாக கூற அவன் "நான் உன் கையை விடனும் னு நீ நிசைச்சா என்ன இனி நீ ஹர்ஸூனு கூப்பிடணும்."

அவள் சட்டென்று திரும்பி "ஆ..மாட்டேன்." என்று வேகமாக அவன் "அப்ப நானும் விட மாட்டேன்." என்றான் அதட்டலாக.

அவள் "ச..சரி..ஹ..ஹ.." என்று அவள் கூற ஆரம்பிக்க அவன் அவளுடைய இதழ்களையே பார்க்க அவள் "ஹர்ஸூ..எனக்கு வேலை இருக்கு..சோ..பிளிஸ்.." என்று அவனிடம் குழந்தை தனமாக கேட்க அவள் முகத்தை பார்த்தவன் தன்னுடைய கைகளை எடுத்தான்.

***********

அவளும் நிஹாரிக்காவும் வேலைகளை ஆரம்பித்தனர்..


விதுரன் தன் தோழர்களின் வருகையை கண்டு அவர்களை அன்போடு வரவேற்றான்.


அவன் "ஹேய்..பிரனாவ் என்ன டா..? அவன் என் கல்யாணத்துக்கு கூட வரவே இல்ல."

அவன் "ஆமாம்..டா..அவனுக்கு உன் கல்யாணத்துக்கு மட்டும் இல்ல என் கல்யாணம், இதோ அவனுடைய கல்யாணம்.இரண்டு வருஷமா யாருடைய விஷேசத்திற்கும் அவன் வரவே இல்ல."

அவன் "அப்பிடியா.."

அவன் "ஆமா.."அப்போது நக்ஸத்ரா அங்கு வந்தால்.அவளை கண்டதும் அவனுடைய தோழன் "நக்ஸத்ரா எப்பிடி இருக்க?என் அன்பு தோழனுடைய பாசமலர்."

அவள் "ம்ம்..நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க?" அவன் "நல்லா இருக்கேன். எங்க உன்னுடைய அண்ணி.?"

அவள் "அண்ணி..ஹா..அவங்க கிச்சன்ல இருக்காங்க டூ மினிட்ஸ் நான் இதோ வரேன்"

அவள் கிச்சனுக்கு செல்ல அங்கு அவள் வேலை பார்த்து கொண்டு இருந்தால். அப்போது அவள் பக்கம் நெருங்கிய நக்ஸத்ரா அவளுடைய கையை மெல்லமாக பிடிக்க அவள் சட்டென்று "விடுங்க விது..எனக்கு வேலை இருக்கு. நான் தான் ஈவினிங் உங்ககிட்ட பேசுரேனு சொல்லியிருக்கேன்ல மறந்துட்டீங்க." என்று கூறிவாறு திரும்பி பார்க்க அவள் "சூப்பர்.. ஈவினிங் மறக்காம சொல்லிடு இப்போ வா..என்கூட. சிரிச்ச முகத்தோட வரணும்."

அவள் அவளை ஒரு வித பார்வையோடும்.. கண்களில் கண்ணீரோரும் அவளை அவள் கட்டியணைத்து "ந..நக்ஸூ..நா..உனக்கு எப்பிடி..நன்றி சொல்வது னு தெரியவில்லை டி..எந்த ஜென்மத்தில் பண்ணின புன்னியம்னு தெரியல தாங்க்ஸ் டி..தாங்க் யூ வெறி மச்." என்று கூறினால்.

அவள் "சி..என்ன இது..? புது பழக்கம்.நீ..இப்போ என் அண்ணி மட்டும் இல்ல என் பெஸ்டு பிரண்டு டி.." என்று கூறினால்.

அவளை அவள் சமாதானம் செய்ய அச்சமயம் அங்கு வந்த அவளின் அண்ணன்.

"நிலா..வா..நான் உனக்கு என் பிரண்ட்ஸ் எல்லோரையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்".

என்று அவளை தன்னுடன் அழைத்து செல்ல அவள் தனியே அவனுடன் செல்வதற்கு மனமில்லாமல். அவளையே திரும்பி பார்க்க அவளும் அவளை பின்தொடர்ந்து வந்தாள்.

அவன் "நிலா..இவங்க நாலு பேரும் என்னுடைய ஸ்கூல் ப்ரண்ட்ஸ்,மாறன், உன் அண்ணா எல்லாம் என்னுடைய யூ.ஜி ப்ரண்ட்ஸ். டேய் நீங்க ஐஞ்சு பேர் தான் இருக்கீங்க. பிரனாவ் எங்க?"


அவன் "அவேன் ஒரு இரண்டு வருஷமா யார் கூடையும் தொடர்பில் இல்லைடா. எங்க போனானு தெரியவே இல்ல.நக்ஸூ செல்லம் உன் ஹஸ்பண்ட் எங்க?"


அவள் "அ..அது..அவரு ரூம்ல ஃபோன் பேசிகிட்டு இருக்கார்."
அவளது சகோதரனிடம் "விது..அப்புறம் என்ன உன் மனைவி பேசவே மாட்டேங்கிரா. எங்ககிட்ட மட்டும் தான் பேசமாட்டாலா. இல்ல உன்கிட்டையும் அப்படி தானா.?"
என்றான் அதட்டலாக, விளையாட்டாகவும் கூட.

அவன் "இப்போ தானா..மீட் பண்ணியிருக்கா. அது மட்டுமல்ல இவ என்கிட்ட ரொம்ப நல்லா பேசுவா. நேத்து நைட் கூட என்ன தூங்கவே விடவே இல்ல."


அவள் அவனை அதிர்ச்சியோடு பார்க்க அவள் தன் மனதினுள் 'நான் இவன்கிட்ட எதுவுமே பேசல? ஆனா!இவன் என்ன பத்தி யாரும் தப்பா சொல்லகூடாதுனு நினைச்சு இவ்வளவு பொய் என் நல்லதுக்காக சொல்லுறான். தாங்க்ஸ் நக்ஸூ.' என்றால் மனதோடு மனதாக.

அவனுடைய நண்பர்கள் அனைவருக்கும் நிஹாரிகாவும் நக்ஸத்ராவும் உணவு பரிமாறினர்.

அப்போது தூரத்தில் ஒரு நபர் கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு நடந்து வருகிறான்.


அவனை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி விட்டு மௌனம் காத்து வந்தனர்.


அந்த இடமே மௌனத்தில் இருக்கும் அளவிற்கு யார் வருகிறான்? அவன் யார்? இவனுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்மதம் இருக்குமா? இனி, வரும் பயணங்கள் மூலமாக தெரிந்த கொள்ளுங்கள்😉

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம்-4✨


அவனை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி விட்டு மௌனம் காத்து வந்தனர்.


அந்த வேளையில் விதுரன் "எ..என்னாச்சு?ஏ..ஏன் இ..இப்பிடி.." என்று கேட்டதுக்கு அவனுடைய நண்பன் ஒருவன் "மச்சி.. பிரனாவ்..டா?"

அவன் வியந்தான்..சட்டென்று எழுந்த விதுரன் தன் கைகளை கழுவிக்கொண்டு.. அவனிடம் பேசுவதற்கு விரைந்து செல்கிறான்.


அவன் செல்வதை பார்த்த அவனுடைய பெண்ணவள் அந்த நபரை கண்டதும்.

அவளும் உள்ளுர அதிர்ச்சி அடைந்தால். அதை கவனித்த நக்ஸூவும் பயந்து நிற்க.


அவன் "டேய்..பிரனாவ்..எப்பிடி இருக்க? ரொம்ப பிசி போல.. யாருடைய விஷேசத்துக்கும் நீ போகலனு ப்ரண்ட்ஸ் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்காங்க. உண்மையா?"
என்று அவன் கேள்வி எழுப்ப.

அவன்"அ..அ..அது..விது..எனக்கு திருமணம் ஆன பிறகு கு..குடும்ப சூழ்நிலை..அது. மட்டுமா.. என் பொண்டாட்டி. அவ தான் எல்லாத்துக்கும் காரணம்.." என்று அவளை பற்றி கூறியதும் தன் முகத்தை சுளித்து தலையை இடதுபுறமாக திருப்பி பேசினான்.


அவன் "சரி..மச்சி..உள்ளே வா..நான் என் மனைவியையும் என் தங்கச்சி புருஷன் எல்லோரையும் அறிமுகம் படுத்தி வைக்கிறேன்."

அடுத்த சில வினாடிகளிலே வீட்டில் இருக்கும் அனைவரும் அவனிடம் பேசபேச வீடே திருவிழா கோவில் போல காட்சி அளித்தது.

இப்படி இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க.

தோழிகள் இருவரும் கிச்சனுக்கு சென்றனர்.. அங்கு..


அவள் "நிஹாரி..ஏய்..
என்னாச்சு?" அவள்"அ..அது..வந்து நக்ஸூ.."என்று கூறியபடி அவள் மயங்கி விழுந்தால்.

அப்போது அவன் விதுரனிடம் சென்று "அ..அ..அண்ணா!!! அ..அண்ணி..அண்ணி... மயங்கி விழுந்துட்டாங்க. சீ..சீக்கிரம் வாங்க"
என்றால் பதட்டமாக.

இதை கேட்டதும் அவன் ஓடோடி கிச்சனுக்கு சென்று அவளை தூக்கிக்கொண்டு மாடியில் இருக்கும் அவனுடைய அறையில் படுக்க வைக்க நக்ஸத்ரா அவளுடைய கால் கையை பிடித்து இதமாக தடவ..அவ்வேளை அவள் "அண்ணி...அண்ணி.... என்னாச்சு..?நிஹாரி அண்ணி...என்ன பாருங்கள்.." என்றால் பதட்டமாக.


அவளை கவனித்த நிஹாரியினுடைய தாயார் 'நக்ஸத்ரா..என் பொண்ணு நிஹாரிக்காகு ஒன்னுனா துடிச்சு போயிட்டா..இவ என் வீட்டுக்கு மறுமகளா வர நான் குடுத்து வைச்சிருக்கணும்.' என்றார்.


அவன் அவளிடம் "நக்ஸூ..நிஹாரிக்கு என்ன ஆச்சு.?"

அவள் "அ..அது..அண்ணா.. அண்ணி காலைல இருந்து எதுவும் சாப்பிடவே இல்ல." என்றாள் வருத்தமாக.

அவன் "ஏன்..இவ இப்பிடி? அதோட, இவ வேண்டாம்னு சொன்னால். நீ சரிசரினு விட்டுவிடுவியா.?"

அவள் "அ..அப்பிடி எல்லாம் இல்ல..அண்ணா. நா..வந்து..இனி இப்பிடி செய்ய மாட்டேன்."

அவன் "நீ..போய் இவளுக்கு சாப்பாடு எடுத்திட்டு வா."


அவள் மின்னல் வேகத்தில் கிச்சனுக்கு சென்று ஒரு தட்டில் பிரியாணியும், தயிர்வெங்காயம் அதோடு ஒரு செம்பு நிறைய தண்ணீர் எடுத்து வந்தால்.

அவள் அந்த அறையின் கதவை திறக்க, அவள் எழுந்து தலையனை மீது சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தால்.

அவளை பார்த்த அவளின் அவள் பக்கம் சென்று, அவளுக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பிக்க. அதை, பார்த்த விதுரன் மற்றும் அவளுடைய தாயார் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.


அவர்கள் வெளியே சென்றதும் அவள் அந்த அறையின் கதவை சாத்தி மேல்தாள்பால் போட்டாள்.

பின் அவள் மெத்தையில் அமர்ந்து அவளிடம் "ஏய்..நிலா..ஏன்? இப்பிடிலாம் நடக்கணும்.?"

அவள் "தாங்க்ஸ் நக்ஸூ..உன்ன மாதிரி ஒரு தோழி கிடைக்க நா..என்ன தவம் செஞ்சேனு தெரியாது."

அவள் "ஹேய்..என்ன நீ..என்னனமோ பேசிகிட்டு இருக்க.? இதோ பார். நிஹாரி..நீ எனக்கு பண்ண ஹெல்ப்புக்கு முன்னாடி இதெல்லாம் தூசுக்கு சமாணம். பார்..என்ன பார்..நீ..முதல்ல எல்லாத்தையும் என் அண்ணன் கிட்ட சொல்லு. அவர் கண்டிப்பாக புரிஞ்சிப்பார்.நான் உனக்கு பண்ண சத்தியத்தை என்னைக்கும் மீற போவதில்லை. நீ எனக்கு பண்ண சத்தியம் ஞாபகம் இருக்குல. மறந்துடாத." என்றால்.

இன்று..

ஆருத்ரா அவனிடம் "விது..ப்பா அப்பிடி அந்த ஹிரோயின் தோழி கிட்ட பண்ண சத்தியம் தான் என்ன?"

அவள் அவனுக்கு கண்களால் ஜாடை காட்ட அவனும் அதை புரியும் வண்ணமாக அவளிடம் "ஆ..ஆருத்ரா குட்டி. ஒரு உண்மையான தோழர்கள் அவங்களுக்குள்ள இருக்கிற சில தனிப்பட்ட விஷயங்களை யார்கிட்டையும் சொல்லாமல் மனசுகுள்ள பூட்டு வைக்கும் வண்ணம் தான் இந்த சத்தியம்."

அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. குண்டு கண்முளியை உருட்டி உருட்டி தலையை சொறிந்தவாறு அவனை பார்க்க அவள் அவளிடம் "அது..இப்ப அம்மா உனக்கு ஒரு சாக்லெட் தரேன். அத அப்பாவுக்கு தெரியாமல் தரேன். தரும்போது அம்மா அப்பா கிட்ட சாக்லெட் சாப்பிட்ட விஷயத்த சொல்லாதனு சொல்லுரேன். அதுக்கு பெயர் தான் சத்தியம்."


அவள் "ஹா..!!எனக்கு புரிஞ்சுடுச்சு. ப்பா..நீங்க கூட ஒரு நாள் அம்மாவுக்கு தெரியாமல் அவங்க புடவையில் மை ஊத்தினீங்க. அத சொல்லாதனு என்கிட்ட.." என்று இழுத்தவள்.

தன் வாயை ஒற்றை விரலை கொண்டு மூடி. அவனை பாவமாக ஒரு பார்வை பார்க்க. அவள், அவனை முறைத்து ஒரு பார்வை பதிக்க அவனோ அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்தான்.

"நிலா.." என்றான் மெல்லிய குரலில். அவள் சட்டென்று புன்னகை புரிந்தாள்.

அவள் "விது..அப்போ இதுக்கு தான் புது புடவை வாங்கி தந்தீங்க.? அப்படி தானே?"

அவன் "அதான் வாங்கி கொடுத்துட்டேன்ல." என்றான்.

அந்த குழந்தை "ப்பா..சீக்கிரம் சொல்லுங்கள்"என்றால் வேகமாக. அவனுடைய கையை பிடித்து கொண்டு அப்போது வண்டியானது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிற பழவேலி என்ற ஊரிலுள்ள ஆனந்த பவன் சைவம் கடையில் உணவிற்காக நின்றது.


அப்போது வண்டியில் இருப்பவர்கள் சீக்கிரமாக இறங்க தொடங்கினர்.


விதுரன் அவளை தூக்கிக்கொண்டு அவளிடம் "நிலா..வா நம்ம இப்போ சாப்பிட்டால் தான். மணி பதினொன்னு இன்னும் விசாகப்பட்டினம் போக நிறைய நேரம் இருக்கு. வா..வா..சாப்பிட போகலாம்." என்றான் மிகுந்த பசியோடு.

அவர்கள் அந்த கடையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.


சாப்பிட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் அவள் "ப்பா..ப்பா..எ..எனக்கு அந்த..கதை சொல்லுங்க பீலிஸ்." என்றால் உதட்டை கீழே சுலித்த வண்ணமாக.


அவன் "அ..அ.." என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே இடையில் புகுந்தவள் அவர்களிடம் "ஷூ..சுப்..!சாப்பிடும்போது பேசக்கூடாது."

அந்த குழந்தை "ஆ..நேத்து மட்டும் இரண்டு பேசிகிட்டு இருந்தீங்க." என்றால் குசும்பான கோபத்தோடு.

அவள் "அ..அது..வந்து..நாங்க முக்கியமான விஷயத்த பேசினோம். இ..இப்பிடி குறுக்க குறுக்க பேசாத. சாப்பிடு அப்பிடி..உன்ன மாரி." என்றாள் அவனை ஒரு முறைப்பாக பார்த்துக்கொண்டு.

அவன் 'கடைசியில் அமைதியா இருந்த என்ன போய் பலி ஆடா ஆக்கிடியே.' என்றான் மனதோடு மனதாக.

அனைவரும் சாப்பிட்டு விட்டு வண்டியில் ஏறுவதற்கு முன். குழந்தைக்கு தேவையாக ப்ருட்ஸ்,தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள், தேவையான வேலைகளை முடித்து விட்ட பின்னரே வண்டியில் நுழைந்தனர்.


அவள் "ப்பா..அதான் சாப்பிட்டாச்சுல இப்போவாவது சொல்லுப்பா." அவள் "ஏய்..என்ன வா போனு சொல்ற பழக்கம்.?"என்றாள் நிஹாரிகா.


அவன் "குழந்தை டி..அவகிட்ட போய்." என்றான் பின் அவளை அவன் தூக்கிய மடியில் அமர வைத்துக்கொண்டு.

அவள் "சரி..சரி..அப்பாவும் மகளும் என்னமாவது பண்ணிட்டு போங்க எனக்கு தூக்கம் வருது." என்று அவள் கூறி முடித்து கொட்டாவிட்ட படி உறங்க ஆரம்பித்தாள்.


என்னிடம் ஓடோடி வா💞


 

Rishaba Bharathi

New member

பயணம் 5✨

அன்று..

அவள் "அது..தெரிஞ்ச விஷயம் தான் நக்ஸூ நீ சொல்லணும்னு தேவையில்லை. ஆனா..எனக்கு.." என்றால் அவளை கண்ணீரோடு பார்த்த வண்ணமாக.

அவள் "ஹேய்..!என்ன நீ..புதுசா அழுகலாம் ஆரம்பிச்சுட்ட. கண்ணை துடை. எ..என்ன..இப்போ..நான் என்ன தப்பா சொல்லிட்டேன். உன் புருஷன்கிட்ட எதையும் மறைக்க வேண்டாம்னு தான சொன்னேன்."

அவள் "அ..நா..இந்த..விஷயம் உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச ஒன்னு. இத போய்."

அவள் "..இப்போ..நீ சொல்லாமல் விட்டு நாளப்பின்ன வேற யாரோ மூனாவது மனுஷன் மூலமாக தெரியவந்தா..?என்ன நடக்கும்..?இன்னொன்னு என் அண்ணனுக்கு த்ரோகம் செய்யபவர்கள் கண்டாலே பிடிக்காது."

அவள் "அப்பிடி நான்.." என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே அவள் தொடர ஆரம்பித்தாள். "புரியுது..நிஹாரி..நீ.. இப்போ என் அண்ணனுடைய பொறுப்பில் இருக்க. உன் தனிப்பட்ட விஷயத்த எப்பிடி என்கிட்ட பகிர்ந்து சொல்லியிருக்கியோ. அதமாதிரி. இனி,என்கிட்ட சொல்லாமல் அவர்கிட்ட சொல்லு."

அவள் சில நேரம் யோசித்துவிட்டு அவளிடம் "ச..சரி..நான் சொல்லிடுரேன்."

விருந்து முடிந்தவுடன் அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

நிஹாரிகாவின் தாயார் மட்டுமே விதுரனுடன் இருந்தால்.


ஹஸ்வந்த் நக்ஸத்ரா இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

மாலை நேரத்தில்.. அவனுடைய மாமா அவனிடம் "விதுரன் கண்ணா.அப்போ, மாமா கிளம்புரேன். இனி வரமாட்டேன்."

அவன் "ஏன்?மாமா எதுக்கு?" அவர் "ஹா..!விது கண்ணா..இனி நான் இங்க இருக்க தேவையில்லை..உன் அம்மா, என் தங்கச்சிக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்த நிறைவேத்திட்டேன்." கூறிவாறு அவர் ஒரு பெரு மூச்சு விட்டப்பின் மீண்டும் தொடர்ந்தார்.

"நக்ஸூவ நீ நல்லா பார்த்துக்கணும். அவ இனி உன்னுடைய பொறுப்பு. கல்யாணம் ஆனாலும் கூட ஒரு அண்ணன் என்கிற முறையில் நீ அவள எப்போதும் பத்திரமாக பார்த்துப்பேனு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில் நான் கிளம்புரேன்."

அவன் "எ..எங்க..தங்க போரீங்க?மாமா." அவர் "நா.. என் நண்பனோடு கொஞ்ச நாள் ஆன்மிக சுற்றுலா போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். வர ஒரு வருஷம். இல்லேனா. நாலு,ஐஞ்சு வருஷம் கூட ஆக வாயிப்புகள் இருக்கு."

அவன் "சச..சரி..பத்திரமா போயிட்டு வாங்க மாமா. ந..நக்ஸூகிட்ட சொல்லிட்டீங்களா?" அவர் "சொன்னேன். சமாதானம் பண்ணினேன். இருந்தாலும் அழுதுகிட்டு தான் போனாள்."


அப்பிடி அவர் ஒரு சூட்கேஸில் காவி உடைகளை எடுத்து கொண்டு. கழுத்தில் காவி துண்டு ஒன்றை அணிந்தவாறு வீட்டை விட்டு வெளியேறினார். அவனுடைய மாமா.

அவன் அவரை வழி அனுப்பி வைக்க..படியில் இருந்த இறங்கி வந்தவள் அவனை "வி..விது..நா..உங்ககிட்ட பேச வேண்டியது இருக்கு." என்றால் நிதானமான பார்வையுடன்.

அவன் சட்டென்று கவலையோடு திரும்ப அவனை கண்டவள் அவனிடம் "வி..விது என்னாச்சு?"

அவன் அவளிடம் விஷயத்தை கூற அவள் "ச..சரி.. வருத்தப்படாத விது.. மாமாவ கூப்பிட்டா வந்துடபோரார். இதுக்கு போய்.." என்று அவனுடைய கண்களை அவள் தன் சேலை நுனியால் துடைக்க. அவளை அவன் இறுககட்டி கொண்டு அழத்தொடங்கினான்.

அவளுக்கோ அவன் தன்னை கவலையோடு தான் கட்டிக்கொண்டு இருகிறான். என்பதை தெரிந்து கொண்டு. அவன் முதுகை தடவி விட, அவன் அழுது கொண்டு அவளிடம் "நிலா..நா..என் அம்மா அப்பாவ பார்த்தது இல்ல. எல்லாம் எனக்கு நிக்ஸூவும் மாமாவும் தான். இப்போ மாமா என்ன விட்டு போயிட்டார். ந..நக்ஸூக்கு குடும்ப வாழக்கைனு புருஷனோடு அவளும் போயிட்டா.. நீ..நீ..எ..என் கூடவே இருக்கணும்.நீ மட்டும் தான் எனக்கு இனி எனக்கு எல்லாம்." என்று அவன் தன் ஆள் மனதில் இருக்கும் சோகத்தை அவளோடு பகிர.

அவள் தன் மனதினுள் 'என்..வாழ்க்கையில் நடந்த மறக்கவே முடியாத அந்த பக்கங்களை இவன் கிட்ட சொல்ல நினைச்சேன். என் சோகத்தை போகிக்க வந்தா..!இவனே கவலையில் இருக்கான். நான் எப்பிடி இவன்கிட்ட..?'என்றாள் தன் மனதோடு மனதாக.


இரவு உணவு முடித்த பிறகு.அவள் அவனுக்காக ஒரு தட்டில் டின்னர் வைத்து எடுத்து சென்றால்.

அவன் அறையில் தலையனையை கட்டிக்கொண்டு விட்டைத்தை பார்த்தவாறு அமர்ந்திருக்க. அவள் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்‌


அவள் அவன் பக்கம் சென்று அமர அவனிடம் "விது..இப்பிடி கவலைபடுவதால் என்ன லாபம்.சொல்லுங்க? வயித்த பட்டினி போடக்கூடாதானு என் அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. அதனால, சாப்பிடுங்க." என்று அவள் அவனிடம் ஒரு வாய் நீட்ட அவன் "எனக்கு எதுவும் வேண்டாம் நிலா.." என்றான் மெல்லிய குரலில்.

அவள் "பிளீஸ்..எனக்காக சாப்பிடு விது.." அவன் அவளை பார்த்து "என்ன..விதுனு கூப்பிடாத..!!" என்றான் கோபத்தோடு.

அவள் அவனை கண்டு பயந்து போய் விட! அவள் அவனிடம் "அ..அ..அ..அப்ப..நா..எ.. எப்பிடி..தான் கூப்பிட.?" என்று அவள் இந்த கேள்வியை கேட்கவே பத்து நிமிடம் முழுமையாக எடுத்தால்.


அவன் "நீ..என்கிட்ட இப்போ பேசாத என்ன கொஞ்சம் தனியாக விடு." என்றான் மீண்டும் மெல்லிய குரலில்.

அவள் சா்பபாட்டை உண்டபின். கிச்சனுக்கு சென்று வேலைகளை முடித்து விட்டு. அவள் தன் இடத்தில் படுத்து உறங்கிவிட்டாள்.


நடு இரவு ஒருமணி அளவில்..

அவனுக்கு பசிஎடுத்தது. காலை பத்து மணிக்கு இறுதியாக உண்ட உணவு. மதிய உணவு உண்பதற்குள் பிரனாவ் வந்து அவனுடன் பேச, இதற்கிடையே தன்னவள் பசி மயக்கத்தில் கீழே விழ, மாமா சன்யாசம் செல்ல, என கவலைகளை ஒரே நாளில் கண்டவனுக்கு மனதானது மிகவும் வேதனை அடைந்தது.

அதோடு திருமணம் முடிந்த இந்த சிறிது காலம். அவள் தன்னிடம் எதுவும் மனம் விட்டு பேசவில்லை.

'ஆசையாக பேசுகிறேன்! என்று வந்தவளை நான் இப்பிடி கடுங்சொல் கொண்டு பேசிவிட்டோமே!!' என்ற மற்றொரு கவலை மறுபுறம்.

முதலில் அவன் பசியை போக்க கீழே கிச்சனுக்கு சென்றான்.


அங்கு அவன் டைனிங் ஹாலில் சென்று எதாவது பழம் கிடைக்குமா என்று தேட ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் இருந்தது.


அதை வெட்டி சாப்பிட தொடங்கினான்.

பின் அவன் சாப்பிட்டு கொண்டு மேலே அறைக்கு செல்ல, அவன் அந்த கதவை திறக்க அவள் எழுந்து அமர்ந்த இருந்தாள்.

அவளை கண்டவன் "ஏய்..! நிலா என்ன நீ..தூங்காமல் இருக்க?"

அவள் "நி..நீ..நீங்க..எ..எங்க போனீங்க? நா..நா..பயந்துட்டேன்." என்றாள் பயத்தோடு.

அவன் அவள் பக்கம் அமர்ந்து "ஹேய்..என்ன..இது நீ..சின்னப்பிள்ளையா?" அவள் அழுக அழுக அவனுடைய மனம் வலித்தது.


அவன் அவளின் கண்ணீரை துடைத்து விட..அவள் அவனை மார்ப்போடு அணைக்க.

அவள் முதுகை தடவியவாறு அவளிடம்
"நிலா..இங்க..பார்..நான் எ..எங்கேயும் உன்ன விட்டுட்டு போக மாட்டேன்."

அவள் அவனை பார்த்தவாறு "எப்பையும்..என்ன விட்டுட்டு போகவே கூடாது."என்றால் அழுத்தமாக.

அவன் அவளை கண்களோடு கண் பார்த்து "நா..உன்..விது.. உன்னுடைய விதுரன்..உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன். அதே போல உன்ன எந்த சூழ்நிலையிலும் கைவிடவே மாட்டேன்." என்றான் ஆனிதனமான அழுத்த குரலில்.

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 6 ✨

அவள் தன் மனதளவில் உறுதியாக நின்றால்.அது என்னவென்றால்..ஒரு போதும் அவனிடம் பொய் கூறிவிட கூடாது..இத்தனை நாட்கள் தன் மனதில் மறைத்த வைத்த விஷயம்..வாழ்நாள் முழுதும் அது அவளுக்கு மறவாச்சம்பவம்..அதை தன்னவனிடம் கூறிவிடலாம் என்ற நம்பிக்கை.


அவனின் வார்த்தைகளானது அவளுக்கு தைரியத்தை தந்தாலும்..ஏதோ..ஒரு குழப்பம் அவளுள் வந்து வாட்டியது..அவள் அப்பிடி இருந்ததை உணர்ந்தவன்..
தானாகவே முன் வந்து பேச ஆரம்பித்தான்..

"நிலா..சொல்லு. என்ன ஏதும் பேச மிச்சம் இருக்கா?"

அவள் "அ..அ..அது வந்து விது..நான்..உங்ககிட்ட ஒரு.." என்று அவள் தொடங்கு வேளை அவனுக்கு பிரனாவிடம் இருந்து ஃபோன் வந்தது அதை பார்த்த அவள் அப்படியே பேட்சை நிறுத்திவிட..அவன் ஃபோன் எடுத்து தூரம் செல்லாமல். அவள் பக்கம் அமர்ந்து இருந்தவாறு பேசத் தொடங்கினான்.

"ஹேய்..என்னடா.
ஃபோன் பண்ணியிருக்க?அதுவும் இந்த நேரத்தில்?"

அவன் "...."

விது "ஓ..சரி..பத்திரமா போயிட்டில?"

அவன் "...."

அவனும் ஃபோனை கட் செய்தான்.

அவள் "என்ன என்னாச்சு? விது?"அவன் "அ..அது பிரனாவ் ஊருக்கு போய்ட்டானா. அத சொல்ல ஃபோன் பண்ணியிருக்கான். நிலா.. நீ என்கிட்ட மனசுவிட்டு பேசணும்னு சொன்ன நானும் மறந்துட்டேன் சொல்லு..என்ன?"

அவன் அவள் கண்களை பார்த்த வண்ணமாக அமர்ந்து இருக்க. அவளின் இதழ்களையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவள் "ஹ..நா.."

இன்று..

"அப்புறம் என்ன அச்சு விது அப்பா? உண்மைய ஹிரோயின் சொன்னாங்க?"அவனின் தேவதை

அவன் "ஆ..ஆருத்ரா..!அப்பா்ககு டயடா இருக்கு ஹா..நம்ம தூங்கலாமா?"

அவள் அவனை பார்க்க அவன் அவளிடம் "தூங்கி எழுந்த பிறகு கண்டிப்பா சொல்லுரேன்"

குழந்தை தன் முத்துப்பற்கள் கொண்டு பலபலக்க சிரித்தது.


அவள் அப்போது தான் எழுந்தால் "ஆரு..என்ன உன் அப்பா என்ன செய்யிறார்?"


அவள் "விது அப்பா..தூங்கிட்டு இருக்கார். ஆமா..மா நம்ம போகிகிட்டு இருக்கோம்ல அந்த ஊர்ல அப்பிடி யார பார்க்க போறோம்."


அவள் "அ..பட்டு. நீ உன் பாட்டி,தாத்தாவ அப்புறம் மாமா அத்தைய பார்க்க போற. அதனால படுத்து தூங்கு."


என்று அவளை மடியில் படுக்க வைத்து. அவளது தலைமுடியை வருடி எடுத்துக்கொண்டு. அவளுக்காக ஒரு பாடல் பாடினால் நிஹாரிகா.


(ஆராரோ ஆரிராரோ..அம்புலிக்க நேர் இவளோ..தாயான தாய் இவளோ..
தங்க ரத தேர் இவளோ..முச்சுப்பட்டா..நோகும்னு..
முச்சடைக்கி முத்தமிட்டேன்..நிழலு பட்ட நோகும்முனு..நிழலடங்க முத்தமிட்டேன்..தூங்கா மணிவிளக்கே..
தூங்காமல் தூங்கு கண்னே..ஆச வெல்விளக்கே..
அசையாமல் தூங்கு கண்னே.)


அவள் இந்த பாட்டை பாடி முடித்த அடுத்த வினாடி. அவளின் நாயகன் வந்து அவள் முன் நின்றான்.


அவளிடம் "நிலா.பாப்பா தூங்கிட்டா போல.சரி..நீ சாப்பிடு" என அவன் ஒரு ஆப்பிள் பழத்தை நீட்டவும்.
அவளும் சாப்பிட்டால்.அந்த பழத்தை சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது..


அவளுக்கு அன்று மறுவீட்டு சடங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஞாபகம் வந்தது.


அவனிடம் "மணி ஒன்னு ஆயிடுச்சா விது..?" அவள் கேட்ட கேள்வியில் அவனும் புரிந்துகொண்டு அவளிடம் "மணி இரண்டரை. இப்போ வண்டி பெட்ரோல் பல்க்ல நிக்கபோகுது. அதனால் நீ.. பாப்பாவோட சேர்ந்து அத்தியாவசிய வேலைகள் எல்லாம் அவளுக்கும் செஞ்சுட்டு. அப்பிடியே நீயும் செஞ்சுட்டு வா."


அவள் "சரி வது..நான் பார்த்துக்கிறேன்."



சிறிது நேரத்திற்கு பின்..



குழந்தையை எழுப்பினால் நிஹாரிகா.


"ப..பட்டு. பட்டுமா..ஆருத்ரா குட்டி..எழுந்திரு..விது அப்பா சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கார்." என்று அவள் கூறியதும்.


சாக்லேட் என்ற வார்த்தை கேட்ட குழந்தை விடுக்கென்று எழுந்து அமர்ந்து அவளிடம் "நிஹாரி..மா சா..சாக்லேட்.." என்று கூறிபடி கைகளை நீட்டிய குழந்தையை பார்த்த நிஹாரிகா.


அவள் அவளை நிஹாரி என்று அழைத்ததை கவனித்த சிறு தேவதையிடம் அவள் "என்ன நிஹாரினு கூப்பிடாதே!!!!". என்றால் கோபமாக.


அதில், அவள் அவளை பார்த்து அழுது கொண்டே விது அப்பாவை தேட..அப்போது பஸ் சரியாக பெட்ரோல் பங்கில் நிற்க.


விதுரன் வண்டிக்கு வெளியே நின்று ஒரு நபரிடம் ஃபோன் பேசிக்கொண்டு இருந்தான்.

******


இங்கு தாயின் கோபத்தை கண்ட பச்சிளம் குழந்தை. அழுதவாறு பஸ்ஸை விட்டு வெளியே இறங்கி விறுவிறுவென நடக்க.


தூரத்தில் வந்த ஒரு கார் ஆருத்ராவை கண்டதும் பிரேக் போடப்பட்டு நின்றது.
அதிலிருந்து இறங்கி வந்தவர்.


குழந்தையை கையில் ஏந்தியடி..அவளை பெற்றோர்களிடம் தரவேண்டும் என விசாரிக்க.

*******
அவன் ஃபோனை கட் செய்ய அவள் வெளியே இறங்கி வருவதை பார்த்தவன்

நிஹாரி அவனிடம் "வி..வி..விது நம்ம..குழந்தைய காணோம்..எங்க போனானு தெரியள.." என அவள் அழுதவாறு கூறினால்.



இதை கேட்ட அவன் "..என்ன சொல்லுற நிலா!!!!! ஆரு..குட்டி..எங்க போனா" என அவன் ஆக்ரோஷமாக கத்தியதை பார்த்தவள்.


ஒரு நிமிடம் சிலை போல நிற்க.

சரியாக இந்த நேரம் தான் அவனின் தோள் மீது ஒரு கை வந்து தொட்டதது.


உடனே திரும்பிய ஆண்மகன். குழந்தையிடம் "ஆரு..பட்டுகுட்டி எங்க போனடா? என்னாச்சு?" என கேட்கவும்.


அந்த குழந்தை "விது..ப்பா..அம்மாவ நான் நிஹாரி அம்மானு கூப்பிட்டேன். என்ன திட்டிட்டாங்க. உடனே அழுதுகிட்டே வெளியே வந்து..நடந்தேன். திடீர்னு ஒரு வண்டி என் பக்கத்தில் வந்தது. அப்புறம் இதோ இந்த தாத்தா தான் காப்பாத்தினார்."


என அந்த குழந்தை அவரை பார்க்கவும். அவள் பார்த்த பக்கமே அவனும் பார்க்க அவளும் சேர்ந்து பார்த்தால்.

அவரை கண்டவன் "ம..ம..மாமா..நீங்க எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டான் கலங்கிய கண்களுடன்.


அவளும் "மாமா..உங்க வாழ்க்கை ஆன்மீக பயணம் எல்லாம் எப்படி போகுது?"
என இருவரும் கேள்வி கேட்க.

அவர் "விதுரன் கண்ணா. நிஹாரிகா. நான் நல்லா இருக்கேன். ஆன்மீக பயணம் எல்லாம் நல்லா போகுது.இந்த குழந்தை என் பேத்தியா?"
அவள் "ஆமா..மாமா இவ உங்க பேத்தி."


அவர் அவளை தூக்கி சிறிது கொஞ்சி பேசிவிட்டு. இறுதியாக, அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிட்டு குழந்தையை நிஹாரிகாவிடம் கொடுத்துவிட்டு. அவர்களிடம் "கண்ணா,நிஹாரிகா நா போயிட்டு வரேன்."

அவன் "ம..மாமா எங்க போறிங்க?" என்று கேட்டான்.


அவர் "நான் சபரிமலை போறேன். அப்புறம் விசாகப்பட்டினம் வரமாட்டேன். அப்போ சொன்னது தான் இப்பவும். இது உன் வாழ்க்கை கண்ணா. இவங்க உன் பொறுப்பு ஒரு போதும் உன் கடமைகளில் இருந்து தவறாமல் இரு."

என்று கூறியபடி அவர் அவன் குழந்தை தலையை வருடிவிட்டு. அவனை கட்டியணைத்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு சென்றார்.



வண்டியில் ஏறி அமர்ந்தவர் தன் மனதில் 'நக்ஸத்ராவ பார்க்கும்னு போல இருக்கே! என் தங்கச்சி மறுபிறவி எடுத்து. அவ மகனுக்கே மகளா பிறந்திருக்கா.'
என்று நினைத்தபடி சபரிமலை நோக்கி சென்றார்.


***********


இவர்கள் வண்டியில் ஏறி அமர்ந்ததும். அவள் "விது..மாமா ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கோம்ல." என்று அவள் கூறி முடிக்கும் போது.


அவன் அவளது மடியில் தலையை வைத்து படுக்க.. அதை கவனித்த அவர்களின் லிட்டில் ப்ரின்ஷஸ் (little Princess) அவன் மீது படுத்து கொண்டால்.


மூவ்வரும் அசதியில் உறங்கிவிட்டார்கள்.


வண்டி இப்போது சின்னஓபுலபுரம் கடந்து வந்தது ஆந்திராவிற்குள் நுழைந்தது.


இப்போது மாலை நேரத்தில் எழுந்த நிஹாரிகா. ஜன்னல் வழியே தெலுங்கு வார்த்தைகளை பார்க்கவும்.


அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தால் காரணம்.

அவளின் தோழி நக்ஸத்ராவை காணபோகிறோம் என்பதில்.


அவள் அவர்கள் இருவருக்கும் பிடித்த பாட்டை பாடினால்.


(மாலை மங்கும் நேரம்..விழி மோகம் கண்ணின் ஓரம்..உனை பார்த்துக்கொண்டே நின்றாலே..போதும் என்று தோன்றும்..காலை வந்தால் என்ன..வெயில் எட்டி பார்த்தால் என்ன..கடிகாரம் காட்டும் நேரம்..அதை நம்பமாட்டேன் நானும்..பூங்காற்றும்..போர்வை கேட்கும் நேரம் நேரம்..தீயாய் மாறும் தேகம்..தேகம்..உன் கைகள் என்னை தொட்டும் போடும் கோலம்..வாழ்வின் எல்லை தேடும்..தேடும்..)



என அவள் அந்த பாடலின் வரிகள் பாடிக்கொண்டு இருக்கும் போது..


அவளை அறியாமல் அவளது கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.


அவள் தன் மனதினுள் 'நக்ஸூ..நா..உன் அண்ணனோடு வந்திருக்கேன்..டி உன் குழந்தை எப்படி இருப்பான். மகன் னா என் பொண்ணு ஆருத்ராவ அவனுக்கு தான் கட்டிவைப்பேன். மகள் பிறந்தால் அவளையும், உன்னையும் ஏன் என் அண்ணனைனு எல்லோரையும்..கூட்டுட்டு தஞ்சாவூர் போயிடுவோம். இனி, நான் உன்ன விட்டு ஒரு போதும் செல்லவே மாட்டேன் என் அன்பு தோழியே..!' என நினைத்த படியே அவளது கடந்த காலத்தை பற்றி நினைத்து வந்தால்.

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 7✨

அன்று அந்த இரவில்

விதுரன் அவளிடம் "ம்ம் சொல்லு..என்கிட்ட மனசுவிட்டு பேசணும்னு சொன்ன..என்ன விஷயம்?"
அவள் "ஹ..நா.."

அவன் அவளுடைய கண்களை பார்க்க அவன் மீண்டும் கேட்டான்.

"நிலா. உன்ன இதுக்கு முன்னோடி, ஐ மின் கல்யாணத்துக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?" என்று அவன் சந்தேகத்தை கேட்கவும் அவள் திகைதது வார்த்தை வராது தவித்து கொண்டு இருந்தால்.


அவள் தட்டுதடுமாறி "ஆ..ஆ..அது..விது..என்ன..சொ..சொல்லுற?" என அவள் தக்கிதிணறி கேட்டால்.


அவன் அவள் புறங்கைகளை பிடித்து இழுக்க. அவனுக்கு அவளுடைய பதட்டம் புரிந்து அவளை தன் மார்ப்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன். அவள் தலையில் தன் நாடியை வைத்து பாட்டு பாடிக்கொண்டு இருந்தான்.


(நீ..எப்போ பிள்ள சொல்ல போற..எப்போ!! நீ..எப்போ!!!)


என அவன் தன் கேள்வியை கேள்வியாக கேட்காமல் பாட்டாக பாடினான்.


*****

இரவு பதினொரு மணி..

ஹஸ்வந்த் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தான்.


இங்கு நக்ஸத்ரா வீட்டை சுத்தம் செய்துவிட்டு குளிக்க பாத்ரூமிற்கு சென்றவள்.


தால்பால் போட்டு தான் குளித்தால். இருந்தும் அந்த தால்பாலை சரியாக அவள் லாக் செய்யவில்லை வேலையை முடித்த அசதியில்..அவள் சீக்கிரம் தன்னை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக குளித்து கொண்டு இருக்கும் போது.


அவளுடைய தோழி சஞ்சனா ஃபோன் செய்தால்.


அவள் அவனிடம் "என்னங்க..என் ஃபோன எடுத்து கொடுங்க. ஹர்ஸூ..எடுத்து கொடு." என அவள் அவனை சத்தம் போட்டு கூப்பிட. அவன் அப்போது அறையில் இல்லை.


உடனே தன் உடம்பை டவலால் (Towel) கொண்டு சுற்றியவள். அவ்வேளையில் தான் பார்கிறாள் லாக் செய்யவில்லை என்று.
அவள் வெளியே வர ஃபோன் கட்டாகிவிட்டது.

அவள் கடுப்பில் "ஆ..இவன..!!!!" என கடும்கோபத்தில் பூ போன்ற கால்களால் அந்த தரையை அடித்தவள்.


உள்ளே செல்ல..அப்போது மீண்டும் சஞ்சனாவிடம் இருந்து ஃபோன் வந்தது.


அந்த சத்தத்தை கேட்டு அவள் ஃபோன் எடுத்து அட்டன் செய்தால்.

அவள் "ஹலோ..என்ன சஞ்சு..எப்பிடி இருக்க?இப்போ தான் என் ஞாபகம் வந்துச்சா?" என அவள் கேள்வி மேல் கேள்வி அடுக்கி கொண்டே போனால்.


அவளுடைய தோழி "என்ன..நிஹாரியும் நீயும் கல்யாணம் செஞ்சதா..அந்த வானதி சொன்னா. உண்மையா?"

அவள் 'இவ எப்பிடியும் சீக்கிரம் விடப்போகுறது கிடையாது' என நினைதவள் பெட்டில் அமர்ந்தால்.


அவள் "வானதி கூட என் கல்யிணத்துக்கு வர முடியலனாலும்..மறுவீட்டு சடங்குக்கு வந்தா. ஆனா..நீ அதுக்கும் வரவே இல்ல.ம்ஹூ!"
என்று அவள் அவளிடம் கோபமாக கூறினால்.


இதை கேட்டதும் அவள் ஃபோனை கட் செய்து விட்டால்.


அவள் "சரி..குளிக்க போகலாம்."


என்று அவள் செல்வதற்காக எழும்போது..சரியாக அந்த நேரத்தில்..அவளின் கணவன் அறையினுள் வந்தான்.



அவனை கண்டவள் வெடவெடத்தவள், நடக்க முடியாமல் திணறி நின்றால்.


அவனுக்கும் வார்த்தைகள் வராது அப்படியே அவன்..சில நிமிடம் நின்றான்.


அவ்வேளை அவன் தன்னை சுயநினைவு பெற்று அவனிடம் "ஹ..ஹ..ஹர்ஸூ..ம்ப்ச்!.. நா. கு..குளிச்சுட்டு வ..வரேன்.." என்று அவள் குனிந்த படியே கூறினால் வெட்கப்பட்டு கொண்டே.



அவனோ அவளது வார்த்தைகள் எதையும் காதுகளில் வாங்காது.


சந்தன கட்டை போல் வெண்ணிலாவின் நிறத்தை ஆடையாக அணிந்த அவளது தோள் போல இருக்கும் அவனின் அவளது கால்களை ஈற்புடன் மெய் மறந்து பார்த்துக்கொண்டு இருக்க..



அவள் 'ஹா..ஹர்ஸூ..இப்பிடியே இரு..நா..
குளிக்கப்போறேன்.' என்று மனதோடு மனதாக பேசியவள்.


மான் போல அவள் பாத்ரூமிற்குள் சென்று கதவை பூட்ட.


இங்கு அவள் கால்களை பார்த்துக்கொண்டே வந்தவன்.


அவள் கதவை சாத்திய போது பட்டென முகத்தில் அடித்தது கதவு.


அதில் அவன் "ஸ்ஆ!!!!!!!!" என வலியோடு துடித்தான்."
அப்போது தான் அவன் தன்னிலைக்கே வந்தான்.


வலியோடு பெட்லில் அமர்ந்த ஹஸ்வந்த் மூக்கில் வந்த ரத்தத்தை துணிகளை கொண்டு துடைக்க.


அவ்வேளை அவள் கதவை திறந்து அவனை பார்த்த போது.

அவன் ரத்தத்தை துடைத்த துணி வேறு யாருடையதும் கிடையாது.


அது நக்ஸூவின் கர்சீவ். அது..அந்த கர்சீவ் நிஹாரிகா ஆசையாக கொடுத்தது.


ஆதலால் அவள் "ஹர்ஸூ!! என்ன பண்ணுரீங்க? ஐயோ!!என்ன பெவரேட் கர்சீவ்.! இப்பிடி பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என அவள் கேள்வியை கேட்டால்.

அவன் "தென்றல்..அது..நீ என்ன மன்னிக்கணும். என் மூக்குல ரத்தம் வருது. அதுக்கு தான்.."


அவனுக்கு ரத்தம் வருவதை பார்த்தவள். அவன் பக்கம் சென்று நெருங்கி, அவள் கபோடில் இருந்து இயர் பட்ஸ் எடுத்து கொடுத்து அவனது காயத்திற்கு சிகிச்சை அளித்தால்.



அவன் "போ..போ. போய் படு தென்றல். நா..பார்த்துக்கிறேன். காலையில் இருந்து நிறைய வேலை பார்த்திருப்ப டயர்டா இருக்கும். இதுல நா வேற உனக்கு சிரமம் கொடுத்துட்டேன்."


என்று அவன் அவளது நிலையை புரிந்து பேசியதை உணர்ந்த அவள் "அச்சோ! அப்பிடிலாம் இல்ல ஹர்ஸூ. நா.." என அவள் சொல்ல வருவதற்கு முன்பே குறுக்கே திரை போடுவது போல.. அவள் வார்த்தைக்கு தடைவிடுத்தான்.


பின் அவன் தொடர்ந்தான் "இதோ பார்..இப்படி என் ஹெல்த்த பத்தி யோசிச்சு யோசிச்சு உன் ஹெல்த்த கெடுத்துக்காத. நா சொல்றேன்ல. போ..போய் படு. நா பார்த்துக்கிறேன்." என அவன் லைட்டை ஆப் செய்து படுத்து தூங்கும் போது மணி சரியாக ஒன்று.


***********


விதுரன் மனதில் பாடுவது போல நினைத்து வாய் விட்டு பாடியதை கேட்டவள்.


"விது..நா கண்டிப்பா நாளைக்கு சொல்லுரேன்." அவனின் நிலா கூறியதை கேட்டதும்.
அவன் திகைத்து விழித்து பார்க்க.


அவள் அவனது உள்ளங்கையில் மேல் தன் கையை வைத்து சத்தியம் செய்கிறேன் என்று சொல்லாமல் செய்ய.


அதை உணர்ந்தவன் "ச..சரி நிலா. வா தூங்கலாம்.. ரொம்ப நேரம் ஆச்சு. நாளைக்கு நம்ம கோயிலுக்கு போவோம்.இல்ல..
உனக்கு எந்த இடம் பிடிக்குமோ அங்கே போவோம்."


இப்படி இருவரும் அவர்களது பேச்சிற்கு முடிவு கொடுத்து. ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்
அவளின் நாயகன்.


ஆனால், அவளுக்கோ நிம்மதியான உறக்கம் உறங்கி ஒரு வருடம் ஆகிறது.

இப்போதெல்லாம் அவளின் நிலையை கண்டு அதற்கு ஏற்றவாறு..நடந்து கொள்ளும் அவளின் கணவன்.


விதுரன் அவளுக்கு துணை என்ற உணர்வு, அந்த ஒரு நம்பிக்கை. அன்று, அந்த இரவு நேரத்தில் அவள் உணர்ந்த காரணத்தினால் தான் அவள், அவனது கைவளைவிற்குள். தன் இடது கரத்தை வைத்து வரல்களோடு வரல் சேர்த்து படுத்தால்.


அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால். அவன் உணரவில்லை.


ஆனால், அவள் தன் மனதில் ஒரு பாடலை நினைத்து அவன் முகத்தையே பார்த்து. ரசித்தவாறு அவள்..


(அக்கம் பக்கம் யாருமிலா..பூலோகம்.. வேண்டும். அந்தி பகல்..உன்னருகே..நான் வாழ..வேண்டும்..என்.. ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே..என் ஆயுள் வரை..உன் அணைப்பினிலே.. வேறென்ன வேண்டும்..உலகத்திலே..இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே..ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்..)


என இப்பாடலை..நினைத்த படியே தூக்கத்தை தழுவினால் நிஹாரிகா.

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 8✨

மறுநாள்..✨


அவள் சிறு பிள்ளை போல உறங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்.


தன் மனதில் 'நிலா..நீ..தூங்கும் போது பச்சை குழந்தை மாதிரி இருக்க.' என நினைத்து ஒரு புன்னகை புரிந்தவன் நேராக தன்னை சுத்தப்படுத்தி கொள்ள குளியல் அறைக்கு சென்றான்.


அவன் குளித்து முடித்து உடை மாற்றி அவள் எழுவதற்கு காத்திருந்தான்.


மணி ஒன்பதாக அப்போது தான் அவள் எழுந்தால்.


நிஹாரிகா உடனே "அச்சோ! சாரி..விது என்ன மன்னிசுடுங்க. நா..அசந்து தூங்கிட்டேன்..ஆமா, கோயிலுக்கு போகலையா விது.?"


அவன் "ஹம்..நீ கிளம்பு. நா சாப்பாடு செஞ்சு வைச்சிருக்கேன்."

அவளுக்கோ அதிர்ச்சி, அதோடு வருத்தமும் கூட சேர்ந்து வாட்டியது.


அவள் தனது வேலைகளை ஆரம்பித்தால்.


விதுரனுக்கு ஃபோன் வந்தது.
அதை எடுத்து அட்டன் செய்து பேசினான்.


அந்த பக்கம் பேசியது வேறு யாரும் அல்ல நம் விதுரனின் பாசமலர்.


அவளும் அவனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


நிஹாரிகா குளித்து முடித்து வெளியே வரவும்.


அவன் நக்ஸூவிடம் பேசி முடித்து ஃபோனை கட் செய்தான்.


அவள் தன் தலையை துவட்டி கொண்டு இருந்தவாறு.


அவனிடம் பேச தொடங்கினால் அவனின் நிலா.


"விது..சாரி..நா..அசந்து தூங்கிட்டேன். அதான் டிபன் செய்ய முடியாம போச்சு. நீங்க எவ்வளவு பசியோட இருந்திருப்பீங்க? நா ஒரு லூசு." என அவள் கூறியதை கேட்டதும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி காரணம் வீட்டில் பார்த்த பெண்ணாக இருந்தாலும்.


தன் மீது இத்தனை பாசம்,அன்பு,அக்கறை என அவள் அவனிடம் நடந்து கொள்ளும் விதம். அது,அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.


இப்படியே நான்கு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் மறைந்தது.

கோயில், பார்க், பீச், என ஊரை சுற்றினார்கள் விடுமுறை தினத்தில். அவன் கல்லூரிக்கு செல்லும் போது அவளை நக்ஸத்ராவுடன் விட்டுவிடுவான். சில சமயம் அவளின் ஹர்ஸூ வேலைக்கு சென்று இரவு வர மாட்டேன் என்று சொன்ன, மறுகணம் நிஹாரியை தன்னுடன் வைத்து கொண்டு தமையனோடு இரவு வேலை முடிந்ததும் அவனுடன் இருந்து கொள்ளுங்கள். என கூறிவிடுவால்.



ஒரு நாள் நிஹாரிகாவும் விதுரனும் அவர்களுடைய சகோதர,சகோதரியை காண கோபாலப்பட்டனத்திற்கு சென்றனர்.



அங்கு.. அவர்களின் வருகையை கண்டதும் அவளுடைய தாயார் "நிஹாரி..குட்டிமா எப்பிடி இருக்க?"


அவள் "ஹம் நல்லா இருக்கேன் மா. அப்புறம் நீங்க, அப்பா, எல்லோரும் எப்படி இருக்கீங்க?"


இப்படி தாயும் மகளும் பேசும் போது நக்ஸத்ரா கீழே இறங்கி வந்தால்.


அவள் தோழியை கண்டதும். ஓடோடி சென்று "அண்ணி!!!!!!எப்பிடி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?" என அவள் அவளுடனே பேசுவதை பார்த்து கொண்டு இருந்தவன்.



"நக்ஸத்ரா..!உன்னை பார்க்க ஆசையா ஆசையா வந்தேன்." அடுத்த நொடி "இந்த அண்ணன மறந்துட்டீயே மா" என்றான் விளையாட்டாக.


அவள் "அண்ணா..என்ன நீங்க இப்படி பேசுறீங்க.வா..நா..
ரூம்க்கு கூட்டிட்டு போரேன்." என அவன் அவர்கள் இருவரையும் தன்னுடைய அறைக்கு கூட்டி சென்றால்.


பிறகு அவள் அவர்களுடைய கைகளை அவளது வயிற்றில் வைத்த படியே சிரித்தால்.


அதனை புரிந்து கொண்ட அவளுடைய தோழி "வாழ்த்துக்கள் நக்ஸூ..ஹாஸ்பிட்டல் போனியா?" என நிஹாரிகா மிகவும் சந்தோஷத்தோடு கேட்க.


அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் "நிலா..என்ன விஷயம்?" என அவன் கேட்டதும்.



அவனின் நிலா "விது..உனக்கு மருமகன் பிறக்க போறான்." என்று அவளின் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. வார்த்தைகள் வராமல் போனது.



சந்தோஷத்தில், அவன் என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டு இருக்கும் வேளை.


அவனின் தோழன் ஏதார்த்தமாக அறையினுள் வர.


விதுரன் அவனிடம் "ஹர்ஸா!!! வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம்." என தன்னிரு கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டவன்.


தன்னவள் மீது தன் பார்வை செலுத்த..அவளிடம் நான்கு மாதங்கள் முன்பு கூறிய வார்த்தைகள்.
அவனுக்கு நினைவு வந்தது.


நான்கு மாதங்களுக்கு முன்பு..


அந்த முழு நிலவு காயும் வேளையில்..தன்னவள் தன்னிடம் மனம் விட்டு பேசப்போகிறால்.


என்பதை நினைத்து அறையின் கதவை சாத்தினான் அவளின் நம்பிக்கை நாயகன்.


அவன் அவள் பக்கம் அமர்ந்து அவளிடம் "..சொல்லு நிலா இன்னைக்கு சொல்லுரேன்னு சொன்ன. ஹம்."


என அவன் கூற அவள் "ஹூம்..ஃபஸ்ட் நீங்க தான் சொல்லணும்." என்றால் உரிமையோடு.


அவன் "சரி..ஹா!! உனக்கு ஒன்னு தெரியுமா நா ஒரு நாள் தெட் இயர் (Third Year) பி.எஸ்.சி கிலாஸ்க்கு டீச் பண்ண போனேன். அப்புறம்..ஹான்.! எல்லோரும் நா டீச் பண்ண சம்ஸ்ச நோட்ஸ் எடுத்தாங்க. ஆனா,ஓரே ஒருத்தி மட்டும். என்ன சைட் அடிச்சிட்டு இருந்தது கூட தெரியாம, நா..கிலாஸ் எடுத்துட்டு ஸ்டாஃப் ரூம் வந்தேன். அந்த பொண்ணு கொஞ்சம் கூட ஸ்டாஃப் ரூம்னு பார்க்காமல். என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணினா." என அவன் கூறி முடித்ததும்.


அவள் அவனை கோபமாக பார்க்கவும் அவன்"ஹே..ஹேய்!!!! ரிலாக்ஸ்..அப்புறம் தனியா கூட்டிட்டு போய் அட்வைஸ் பண்ணினேன். புரிஞ்சுகிட்டா."

என கூறவும் தான் அவள் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால்.


அவளிடம் அவன் "இப்போ..நீ தான் சொல்லணும்." என அவன் பேச்சை அவள் பக்கம் திரும்பினான்.


அவள் மௌனமாகவே இருந்தாலும்..அவளது மனதில் ஒரு மாற்றம்..இருப்பதை அவன் அன்று தான் உணர்ந்தான்.


ஆதலால் அவன் "ஹூம்..சரி உனக்கு எப்போ என் மேல நம்பிக்கை வருதோ. அப்போ நீ என்கிட்ட சொல்லு. அதுவரைக்கும் உன் விது இந்த விஷயத்தை கேட்கவே மாட்டான்." என்றான் தீர்மானமாக.


இப்போது அவளை அந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டு வரும் வண்ணமாக.


அவளுக்கு நக்ஸத்ராவின் ஸ்பரிசம் சாட்சியாக அமைய அவளோ அவளிடம் "ஏய்..என்ன எல்லோரும் சேர்ந்து கோயிலுக்கு போவோம்." என்று அவள் நிஹாரியின் கையை பிடித்து இழுக்க.


அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும்,அவள் அவனுடன் செல்வதற்கு மனம் இருந்த ஒரே காரணம் தான்! அவளை அங்கு அழைத்து செல்ல சம்மதம் தெவித்து உள்ளது.
அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் சென்றார்கள் தங்கையவளும் உடன் வந்தால்.



அங்கு அவர்கள் இருவரும் கடவுளை வழிபட்டு கோவிலை சுற்றி பார்க்க சென்றார்கள்.


நீண்ட வருடங்களுக்கு பின் இங்கு வருவதால், அவர்கள் மிகவும் ஆர்வமாக அனைத்து பிரகாரத்தை வழிபட்டு வருகையில்.
நிஹாரிகாவின் தோள் மீது ஒரு கரம் பட்டது.


அவள் சட்டென திரும்ப. அவள் வேறு யாரும் அல்ல அவர்களுடைய தோழி சஞ்சனா தான்.



அவளை கண்ட நம் நாயகி அவளை பார்க்காமல் நக்ஸூவிடம் "ஹேய்!!இவ எதுக்கு இங்க வந்தா? இதோ பார் நக்ஸூ. சாமி கும்பிட தான் வந்திருக்கோம். கண்டவங்கிட்ட பேச நா ஒன்னும் வரவே இல்ல." என எகத்தாளமாக சீண்டி பேச.


சஞ்சனா "நிஹாரி..எ..என் மேல..தான் தப்பு. எ..என்ன மன்னிச்சிடு. நா..நா..உ..உன்னை பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல.." என்றால் திக்கித்தடுமாறிய குரலில்.



நகஸ்தரா பேச்சை மாற்றும் பொருட்டு "அட..இந்த குழந்தை க்யூட்டா இருக்கே.?"


அவள் "ஆமா..நக்ஸி இவன் என் பையன் தான்." என கூறவும் அவளுக்கு ஆச்சரியம்.


அவளோ"ஹேய்! உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"

அவளும் நக்ஸூவும் நீண்ட நேரம் பேச. இவளுக்கு கோபம் இல்லை.
இறுதியாக அவள் நிஹாரியிடம்.


"உன் வாழ்க்கை இப்ப எப்பிடி போகுது.?"
சஞ்சனா அந்த கேள்வி மட்டுமே கேட்டால். இதை அவள் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று.


அதோடு நிஹாரிகா கோயில் என்று கூட பார்க்காமல் அவளிடம் "சொல்லுவடி..சொல்லுவ.. நக்ஸூ இதோ பார். நா இப்போ. இந்த நாலு மாசம் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு வரேன். ஒரு நாள் இரண்டு நாள் உறக்கம் இல்லாமல் இருந்தால் சரி. ஒரு..ஒரு வருஷம் டி..!சரியா சாப்பிடாமல்,தூங்காம, என்ன நானே கேர் எடுத்து பார்த்து ரொம்ப நாளாச்சு. இதோ,இந்த பிசாசு,இவளுக்கெல்லாம் தாலி,புருஷன்,குழந்தை. ஏய்! பாவம் இல்லை..துரோகம் பண்ண உனக்கெல்லாம் எல்லாம் நல்ல வாழ்க்கைய அந்த கடவுள் கொடுத்திருக்கார்னு நினைக்கும் போது தான் எனக்கு வலிக்குது. ந..ந..நக்ஸூ தயவு செய்து இவள போகசொல்லு. இனியும் நா உன்ன பார்த்தா..எனக்கு..ச்ச..சி.. உன்கிட்ட போய் இவ்வளவு நேரம் பேசியிருக்கேன்னு நினைச்சாலே அறுவெறுப்பா இருக்கு."



என அவள் பேசிவிட்டு நக்ஸத்ராவின் கைகளை பிடித்து அழைத்து சென்ற போது.
அவளுக்கு தலை விலக்க தொடங்கியது.


தடுமாறி விழுந்தவளை கண்டதும் நக்ஸத்ரா விதுரன் கூப்பிட சென்றால்.



சஞ்சனாவோ அவள் பக்கம் சென்று அவளை கைத்தாங்கலாக நிமிட வைத்தது பார்த்ததும் அவளுக்கு தூக்கிவாரி போட்டது.


கோபத்தில் அவள் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினால்.

அவள் தோழியிடம் "நீ எல்லாம்..மனுஷியா? இதோ பார் ஏற்கனவே சொன்னது தான். உன் கை என் மேல பட்டதுக்கு நா என் உடம்பை சூடு வைக்க கூட தயங்கவே மாட்டேன். போடி!!!!!!!!! துரோகி. இப்போ நீ போகபோறியா இல்ல..நீ சரிபட்டு வர மாட்ட. நா போறேன்." என கோபத்தில் அவள் எழுந்து செல்ல.
என்னவோ அவளிடம் அவளுடைய மனம் இல்லை.


அவளது மனம் அந்த நேரத்தில் கூட அவளின் விதுரன் மீதே தான் இருந்தது.


ஆதலால் அவளது மனதில் நன்கு பதிந்திருந்த அவனுடைய பெயரை முனுமுனுக்க ஆரம்பித்தால்.


"விது..விது..விதுரன்.." என அவளது புலம்பல்..மற்றும் அவளுடைய நிலைமையை கண்ட சஞ்சனா எங்கும் செல்லாமல் குழந்தையை இடுப்பில் ஏந்தியவாறு அவள் தன் தோழியோடு அமர்ந்து இருந்தால்.

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 9 ✨

விதுரன் எங்கும் காணவில்லை என்று தெரிந்து கொண்ட அவனுடைய தங்கை நேராக கோயிலுக்கு வெளியே சென்று பார்க்க.


அவன் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான்.
அதை கவனித்த அவனுடைய தங்கை.

அவன் பக்கம் சென்று அவனிடம் "அண்ணா..அண்ணா.." என அவள் விடாமல் கூப்பிட்டு கொண்டே இருந்தால்.


அவன் "சார் நான் உங்ககிட்ட அப்புறம் பேசுரேன்." என அவன் ஃபோனை கட் செய்தான்.


பிறகு அவன் "என்ன நக்ஸூ..நிலா வந்துட்டாலா? வா வீட்டுக்கு போவோம்." என அவன் அவளை பேச விடாமல் கார் கதவை திறக்க.



அப்போது அவள் அழுதவாறு "...அண்ணா..அ.. அண்ணி..ம..மயங்கி விழுந்துட்டாங்க." என்றால் கவலையுடன்.



தன்னவள் மயங்கி விழுந்த செய்தியை அறிந்த அடுத்த வினாடி. அவனது பாதங்கள் இரண்டும் ஓட்டப்பந்தயத்திற்கு ஓடும் உசைன்போல்ட் போல அவன் அவளை தேடி ஓடினான்.


நிஹாரியின் நிலையை கண்டதும் அவனுக்கு கண்ணீர் அருவி போல பெருக்கெடுத்தது.


அவளை தன் கையில் ஏந்தியபடி, கார் பின் சீட்டு கதவை திறக்க சஞ்சனாவை அங்கு அமர வைத்து அவளுடைய குழந்தையை வாங்கிக்கொண்ட நக்ஸத்ரா. முன் சீட்டில் அமர்ந்து கொண்டால்.


இறுதியாக அவன் காரில் ஏறி அமரவும். கண்ணாடியில் அவனுடைய நிலாவின் முகம் தெரியும் படியாக வைக்க.


காரை ஸ்டார் செய்து ஓட்ட தொடங்கினான்..🚙🚙


இன்று..


தனது கடந்து வந்த பாதைகளில் சில நினைவுகளை நினைத்து வந்தவளுக்கு.



தன்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.


அதனை கவனித்த அவளின் துணைவன் "ஹேய்! நிலா. என்ன..ஆச்சு? ஏன் நீ..அழுகுற?" என அவன் கேள்வியை கேட்டதும்.



அவள் "ஹ..ஹா..ஒன்னுமில்ல விது..ஆமா..பட்டு எங்க?"


அவன் "என்ன..அவ இதோ உன் பக்கத்துல தான் படுத்து உறங்கிட்டு இருக்கா.இது கூட தெரியாம.." என அவன் அவளை பார்த்து கேட்கவும்.



அவள் அவனது மடியில் படுத்து அழுதவாறு..பேசத் தொடங்கினால்.



"வி.விதுரன் நக்ஸூ..நம்மல பார்த்தா. என்ன நினைப்பா? ஏனா..யார்கிட்டையும் தகவல் சொல்லாம கோபாலப்பட்டனம் போறத நினைச்சாலே..எனக்கு பயமா இருக்கு. ஹஸ்வந்த் அண்ணா..அவர் நம்மல மன்னிப்பாரா? பழைய படி நம்ம எல்லோரும் சந்தோஷமா, நிம்மதியான வாழ்க்கை வாழ முடியுமா?" என அவள் தன் மனதில் பட்ட அத்துனை கேள்விகளையும் கேட்கவும்.




அவன் மனதில் 'நீ..சொல்றதும் ஒரு வகையில சரி தான் நிலா. ஆனா?சரி விடு பார்த்துக்கலாம்.' என்றான் அவனது மனதை ஆறுதல் படுத்தும் விதமாக.


விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தனர்..


அவன் "ஹேய்..நிலா! மணி ஏழு எப்பிடியும் விசாகப்பட்டினம் போய் சேர பதினொரு இல்ல பன்னிரண்டு மணியாவது ஆகும். அதனால தூங்கு. நா..ஹோட்டல் வந்தா சொல்றேன்."


அவளும் சரி என்றவாறு தன்தலையை ஆட்டினால்.


பிறகு (Cross Rods Family Restaurant) கிராஸ் ரோஸ்ட் ஃபேமிலி ரேசாட்டில் அவர்களுடைய பஸ் நின்றதும்.


விதுரன் ஆருத்ராவை தன் தோளில் தூக்கி, அவளது முதுகை இதமாக வருடிய படியே..நிஹாரியை கூட்டி சென்றான்.


சரியாக அவர்கள் ஹோட்டலில் அமர்ந்ததும்.


அவள் "ஆ..விது..ப்பா நம்ம ஊர்க்கு வந்தாச்சா?" என அந்த குட்டி தேவதை கேட்கவும்.


அவன் "ஹா..இன்னும் கொஞ்ச நேரத்துல ஊர் வந்துடும்." என அவன் ஆருத்ராவிற்கு உணவை ஊட்ட ஆரம்பிக்க.


இந்த பக்கம் அவனின் நிலா 'விது..எனக்கெல்லாம் ஊட்டியே விடமாட்டேங்கிற?' என்பது போல கேள்வியாக பார்க்க.


அவன் அவளது கண் பார்வை பார்த்து புரிந்து கொண்டு அவளிடம் "சரி..பொறாம படாத. நா என்ன வேற யாருக்கோவா ஊட்டிகிட்டு இருக்கேன்? நம்ம ஆருத்ராக்கு தான்..ஊட்டினேன். இதுக்கு போய்.." என அவன் அவளுக்கு ஊட்டிவிட.


சாப்பிட்டு முடிந்தவுடன் வண்டியில் ஏறி அமர்ந்தவள்.


ஆருத்ராவை தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடி தூங்க வைக்க அவனும் மெல்ல..மெல்ல..தூங்க ஆரம்பித்தால்.

அவள் தூங்கிய பிறகு நிஹாரியும் தூங்க ஆரம்பிக்க..அவள் அவளிடம் "தூங்கு நிலா..விசாகப்பட்டினம் வந்ததும் எழுப்பிவிடுரேன்."


என அவன் அவளிடம் சிரித்த படியே கூறினான். பின் அவளை நீண்ட நேரம் ரசித்து வந்தவனின் கண்களில் கண்ணீர் வந்தது.


அந்த கண்ணீர் அவனை அவர்களுடைய கடந்து காலத்தை சென்றடைந்தது.

அன்று..


..🏨..

மருத்துவமனை வந்தடைந்தவன் நேராக அவளை கையில் தூக்கி கொண்டு அவளை செட்சரில் படுக்க வைத்த படி சிலர் அவளை எமர்ஜன்ஸி ரூம்க்கு அழைத்து சென்றனர்.


ஒரு சில மணி துளி நேரத்தில் டாக்டர் வெளிவந்தார்.


அவரை பார்த்த விதுரன் "ட..டாக்டர் நிலாக்கு என்னாச்சு?"


அவர் "அவங்க..ரொம்ப டிப்ரசன்ல இருந்திருக்காங்க. இந்த டிப்ரசன் அவங்கள ஆழ்ந்த மயக்க நிலைக்கு கொண்டு போயிடுச்சு. எழுந்திரிக்க எப்பிடியும் இரண்டு நாள் ஆகும்." என அவர் கூறிவிட்டு சென்றார்.


அவன் கலங்கிய இதயத்துடன். அறையினுள் சென்று அவள் பக்கவாட்டில் இருந்த அந்த நாற்காலியின் மீது அமர்ந்து.அவளுடைய முகத்தை பார்த்தவன் அவளிடம் "..நிலா! எனக்காக சீக்கிரம் எழுந்து வா..உனக்கு அப்படி என்ன தான் பிரச்சனை.? என்ட சொல்ல மனசு வராத அளவுக்கு நா உனக்கு என்ன துரோகம் செஞ்சேன்.?" என அவன் வாய்விட்டு பேசிய வார்த்தைகளை அறையின் வெளியே நின்று கேட்டால் சஞ்சனா.


பிறகு நக்ஸூ அவளிடம் "ச..சஞ்சு நா..வீட்டுக்கு போறேன். அண்ணா கேட்டா சொல்லிடு." என கூறிவிட்டு சென்றால்.


அவன் அவளை சிறிது நேரம் பார்த்துவிட்டு நேராக வெளியே வந்து போது அவன் தெரியாமல் சஞ்சனாவின் கைகளை இடித்து விட்டான்.


உடனே அவன் "சா..சாரி.." என அவன் கூறிவிட்டு செல்லும் வேளையில் அவனை அழைத்தால் சஞ்சனா.

அவன் "என்ன..விஷயம்?" என அவன் படக்கென கேட்க அவள் "அ..அது வந்து நா நிஹாரி நிலைமையை தெரிஞ்சுக்க.." என அவள் தன் பேச்சை முழுவதுமாக கூறாமல் முடிக்க.


அவன் "நிலாவ பத்தி தெரிஞ்சிக்க நீ யார்?" என அவன் கேட்க அவள் "நா..அவளோட காலேஜ் ப்ரண்ட்." என்று மட்டுமே அவள் பதிலளிக்க.
அவனால் அதை நம்பவே முடியவில்லை.


இருப்பினும் கூறினான். அவனின் அவளது நிலையை அவளிடம்.


அவன் கூறி முடித்ததும் சஞ்சனாவின் குழந்தை அவளிடம் " ம்மா..என்ன ஆ..து(தூ)க்கு" என்று அந்த குழந்தை மழலையில் பேசவும்.


அவன் அவளிடம் "ஏமா..இந்த குழந்தைய நா..எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?" என அவன் சந்திக்கும் வேளை.


பிரனாவிடம் இருந்து சஞ்சனாவிற்கு ஃபோன் வந்தது. அதை எடுத்து அட்டன் செய்தவள்.


"சொல்லு பிரனாவ் என்ன விஷயம்?" என அவள் பேசிய வார்த்தைகளை வைத்து அவன் கண்டு பிடித்து விட்டான்.


அவள் அவனிடம் பேசி முடித்து விட்டதும் அவளிடம் "ஹா! எக்ஸ்கூஸ்மி சஞ்சனா. நா..உன்ட கொஞ்சம் பேசலாமா?" என அவன் அன்புடன் கேட்டதை புரிந்து கொண்ட அவள்.


சம்மதம் தெரிவிக்க..ஒரு நர்ஸை தன்னவளுக்கு துணையாக இருக்க வைத்து விட்டு அவளோடு அவன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் அவளுக்கு காஃபி போட்டு தந்தான்.


பிறகு அவள் "ஆ..என்கிட்ட என்னவோ பேசணும்னு சொன்னீங்க என்ன விஷயம்?" என அவள் கேட்க.


அவன் "அ..அது நா..நிஹாரிகா பத்தி தெரிஞ்சிக்க ஆசை படுரேன். என்னடா இவன் இப்படி கேக்குறானேனு தயவு செய்து நினைக்காத.. கல்யாணம் ஆன நாள்ல இருந்து இதனால் வர நா..அவள பத்தி அவளா என்ட சொல்லி தெரிஞ்சுக்க நினைச்சேன். அவளும் பேசணும்லாம் சொன்னா. சூழ்நிலை எங்களால மனசு விட்டு பேசிக்க முடியாமல் போயிடுச்சு." என அவன் அவளிடம் கூறினான்.


அதற்கு அவள் "..உங்க நிலைம எனக்கு புரியுது..அதோட, நிஹாரி இப்படி நடை பணமாக வாழ்ந்து வர காரணம் நான் தான்." என்று அவள் கூறி முடித்தவுடன் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக்கொட்டியது.


என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 10✨

விதுரனுக்கு குழப்பம் அந்த குழப்பத்திலே அவன் "..நீ. எனக்கு புரியள?கொஞ்சம் தெளிவா சொல்லு" என அவன் அவளிடம் கேட்க.


சரியாக அந்த வேளையில் வானதி காலிங் பெல் அடிக்க.
அவன் சென்று கதவை திறக்க.


அவளை கண்டதும் அவன் "நீ..யார்மா?" என அவன் கேள்வி கேட்டான்.



அதற்கு அவள் "அண்ணா..என்ன போய் மறந்துட்டீங்க! நா..தான் வானதி" என அவள் கூறியதை கேட்டதும்.



அவன் அவளை உள்ளே வர வைத்து டைநிங் ஹாலில் அமரச்சொன்னான்.


பிறகு அவள் "சஞ்சனா! நீ..எப்பிடி இங்க? அண்ணா! இவள போகசொல்லுங்க. எனக்கே தெரியாம இவளால நானும் நிஹாரிக்கு பாவம் பண்ணிட்டேன். நா செஞ்சது பாவம்னு தெரிஞ்ச பிறகு அவகிட்ட மன்னிப்பு கேட்டேன். இவ..ஓடுகாளி எங்கேயோ ஓடிபோய்ட்டா." என வானதி தன் தோழியை காரமான வார்த்தைகளை கொண்டு திட்டுவதை கண் கொண்டு பார்த்தவன் ஒன்றும் புரியாமல்.



அவர்களிடம் "நிஹாரிகாவுக்கு அப்படி என்ன தான் துரோகம் பண்ணிங்க? அவள் இப்படி இருக்க காரணம் தான் என்ன? சஞ்சனா நீ சொல்லு?" என அவன் அவள் பக்கம் திரும்ப அப்போது பிரனாவ் "நா..சொல்றேன் மச்சான்!" என கையில் குழந்தையை தூக்கியவாறு பதிலளித்தான்.


அவனை கண்டதும் சஞ்சனா ஓடோடி சென்று அவனுடைய மார்பில் புதைந்து கொண்டு அழத்தொடங்கினால்.


அவன் "..சஞ்சுமா..இவன நீ கூட்டிட்டு வீட்டுக்கு போ. நா..விதுரன் பேசுரேன். வா..வானதி எப்பிடி இருக்க? மாறன் என்ன நல்லா இருக்கானா?" என அவன் நலங்கு விசாரித்தான்.



அவள் "ஹான்! நல்லா இருக்கோம் அண்ணா." என அவளும் அவனது கேள்விக்கு பதிலளித்தான்.

வானதி விதுரனிடம் கேட்டு நிஹாரியை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு சென்றால். மறுபுறம், அவனின் மனைவி சஞ்சனா குழந்தையோடு வீட்டிற்கு சென்றால்.


பிரனாவ் விதுரனின் கைகளை பிடித்தவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

இன்று..

என இவன் அந்த கோரமான நினைவுகளை நினைத்து கொண்டு வரும் போது "விது..விசாகப்பட்டினம் வந்தாச்சு." அவளின் சத்தத்தை கேட்டதும் தன்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தவன்.


"...வா..போவோம்" என எழுந்து சென்றான்.


அவர்கள் மூவ்வரும் ஒரு ஆட்டோவை பிடித்து..வீட்டிற்கு வந்தார்கள்.


அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டை பார்த்ததும் அவனுக்கு அழுகை வந்தது.


அவளின் அவன் கண்கலங்கியதை பார்த்தவள்.


"வி..விது. ஏன்..அழுகுறீங்க?.... நம்ம இப்படி திரும்பி வருவோம்னு நினைச்சதே இல்லையே."என தன்னவள் பேசிய வார்த்தைகளை கேட்டதும் அவனின் கண்களில் வழிந்தோடிய கண்ணீர் அவளுடைய கண்களிலும்..வழிந்தது.


இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.வீடு மிகவும் தூய்மையாக இருப்பதும்,தூசு எதுவும் இல்லாத படி பராமரித்து வந்தது அப்பட்டமாக தெரிய அவன் மிகவும் மகிழ்ச்சியில் "ந..ந..நக்ஸூ.!.....தான் நம்ம வீட்ட இப்படி.?" என அவன் கூற அதை கேட்டவள் அவனிடம் "பார்த்தீங்களா! விது..நக்ஸத்ரா இதோ. இங்க கோபாலப்பட்னத்துல தான் இருக்கா. நாம நாளைக்கு போய் பார்ப்போம்" என அவள் அப்பொழுது கூறியது என்னவோ உண்மை தான் என்றாலும்..அவளின் நிலையில்..இன்றும் அவள் இதே இடத்தில் இருப்பாளா என்ன? என சிறிதும் யோசிக்கவில்லை.


மறுநாள் கதிரவன் தன் ஒளியை உலகெங்கும் ஒளிக்க தொடங்கினான்.


மக்கள் அனைவரும் தங்களின் அன்றாடம் பயணங்களை ஆரம்பித்தார்கள்.


அவள் அவர்களுக்கு பால்பாக்கேட் வாங்கி வந்து தங்கள் இருவர்க்கும் காஃபி போட்டு வைத்து குழந்தைக்கு சுடசுட பால் என ஒரு டீரேயில் வைத்து கொண்டு வந்தால் அவனின் நிஹாரிகா.



அவன் அப்போது தன்னை சுத்தம்செய்து கொண்டு பெட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து. பெல்கனியை வெறித்து பார்த்து கொண்டு இருக்கவும்.
அவள் கதவை திறக்கவும் நேரம் சரியாக இருந்தது.


அவள் "விது..பட்டு எழுந்தாச்சா?" என ஆருத்ராவை கேட்டுக்கொண்டே நுழைய.


அவன் "நம்ம பட்டு இன்னுமும் தூங்கிட்டு தான் இருக்கா நிலா. வா..வந்து
உட்காரு" என அவளை அவன் அமர வைத்தான்.


அவன் "காஃபி சூப்பர் நிலா! உன் கைபக்குவமே தனி." என அவன் அவளை புகழ்ந்து கொண்டே இருக்க..


ஆருத்ராவோ எழுந்தவள் நேராக எதிரே இருக்கும் அறையினுள் நுழைந்து. சுற்றி பார்க்க அவள் கைகளில் ஒரு ஃபோடோவை எடுத்து கொண்டு ஓடோடி வந்து விதுரனின் மடியில் அமர்ந்தால் அவர்களின் அந்த குட்டி தேவதை.


அவள் "பட்டு என்ன இது புது பழக்கம் போய் பிரஸ் பண்ணிட்டு வா." என அவளை தூக்க.


அவன் "குட்டிமா! என்ன உன் கையில? எங்க தா?" என அவளிடம் கேட்க குழந்தவள் அவனிடம் அதை தர.
அவன் கண்களில் இருந்த கண்ணீர் வந்தது.


அதனை கவனித்தவள் அவன் பக்கம் சென்று பார்க்க.


அவள் "இ..இந்த ஃபோடோ நக்ஸத்ராவோட பேபி ஸவர்ப்ப எடுத்தது. நா..முதன்முதலா சந்தோஷத்தோட கொண்டாடின ஒரு ஃபங்சன். நம்ம கல்யாணத்தப்ப கூட சந்தோஷமா இருந்ததில்ல விது.." என வார்த்தைகளை அவனிடம் கொட்டி தீர்த்தபடி தன் தலையை குனிந்து கொண்டால் பெண்ணவள்.


அவள் "விது..ப்பா. ஏன் நிஹாரி மா அழுகுறா? அவளுக்கு என்ன தான் ஆச்சு? நிஹாரி மா! என்னனு சொல்லு!" என அவளின் பட்டு அவள் தொடையை தட்டியபடி கேட்டால்.


அவன் "ஆருத்ரா குட்டி.!...அம்மாவ டிஸ்டப் பண்ணாம அப்பாகிட்ட வாங்க" என அவன் தன் பக்கம் அவளை வரச்சொல்லவும். அவளோ ஓடோடி சென்று அவன் அவளை தூக்கி கொண்டு அவளிடம் "நிலா..நாங்க கீழே இருக்கோம் நீ..ஃபேஸ் வாஸ் பண்ணிட்டு வா." என கூறி முடித்து விட்டு வெளியே சென்றான்.



அப்போது நிஹாரிகாவின் தோழி அங்கு வந்து காலிங் பெல் அழுத்தினால்.



சத்தத்தை கேட்டவன் நேராக கதவை திறக்க சென்றான்.


கதவை திறந்ததும் அவன் கதவை அழுத்து மூடச்சென்ற போது "அ..அ..அண்ணா..பி..பி..பிளீஸ் க..கதவ துறங்க..நா.. உங்ககிட்ட பே.. பேசணும்."

அவள் மீண்டும் தட்டினால். அந்த சத்தத்தை பொறுக்க முடியாமல் இருந்தவன்.


கதவை பட்டென திறந்து அவளிடம் "வ..வானதி!!!!!உனக்கு இப்போ என்ன வேணும்" என சத்தம் திக்கெங்கும் கேட்டது.
அதில் வெடவெடத்து நின்றால் பெண்ணவள்.


இந்த சத்தத்தை கேட்டதும் கீழே இறங்கி வந்த அவனின் அவள் அவளிடம் "..அட. வானு. நீ எப்பிடி இங்க?" என விசாரிக்க.


அவள் "..விதுரன். பிளீஸ் நா..சொல்றத கேளுங்கள்." என கெஞ்சினால்.


அவன் கேட்கவில்லை அவளும் அவளுக்கு சப்போர்ட் செய்யவில்லை.
பிறகு வீட்டை விட்டு கிளம்பினால்.


மூவ்வரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அவர்களின் ஆருத்ரா அவனிடம் "..விதுப்பா! இப்ப..வந்துட்டு போனவங்க..யாரு?" என தன் தந்தையிடம் கேட்க..அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.



பின் அவள் "..பட்டு..இதோ!! இப்ப போனவங்க என்னோட தோழி..அவங்க இத்தனை நாள் என் கூட பேசவே இல்ல. அதான், அப்பா அவ்வளவா அவங்க கிட்ட பேச்சு வைச்சுக்கவே இல்ல." என கூறி முடித்த பிறகு.



ஆருத்ராவை டிவி பார்க்க வைத்துவிட்டு. சிறிது தொலைவில் வந்து அவளுடைய கண் எதிரே இருவரும் நின்று பேசத்தொடங்கினார்கள்.


"ஏன்..நிலா நீ..ஆரு பாப்பா கிட்ட அவ உன் பிரண்டு னு சொன்ன?" என அவன் மெல்லிய கடுப்பில் கேட்டான்.


அவள் "..உங்களுக்கு..பட்டுவ பத்தி தெரியாது..அவகிட்ட வானு யாரோனு சொன்னா..விதுப்பாவும் நீங்களும் அவங்க பெயர்ர சொன்னீங்கனு கேள்வி கேட்பா. அவ..அப்பிடியே..உங்கள மாதிரி..நீங்க மத்தவங்கிட்ட என்னலாம், எப்பிடிஎல்லாம் கேள்வி கேப்பீங்க. அதே..தான் இப்ப. உங்க ஆருயிர் மகளும் செய்யிறா. இதுல என்ன இருக்கு? வாத்தியார் மகள். வாத்தியார் போலவே தான இருப்பாள்.?" என அவள் பேசிக்கொண்டே இருக்க.


அவன் "சரி..சரி..சரி..போதும் போதும் நிலா. இப்ப புரியுது..ஏன் நீ..அவகிட்ட அப்படி சொன்னனு. சரி நேரமாச்சு. இவ்வளவு நாள் யார பார்க்கணும்னு ஆசப்பட்டியோ. அவங்க எல்லோரையும் பார்க்க போரோம். கிளம்பலாமா?" என்றான் புன்னகை முகமாக.



அவளும் ஆனந்தக்கண்ணீரோடு 'சரி' என தலையை ஆட்ட..மூவ்வரும் கோபாலப்பட்டனம் நோக்கி புறப்பட்டனர்.



அவர்கள் மூவ்வரையும் ஆட்டோவானது வீதியின் வாசலில் வந்து இறக்கிவிட்டது.


அவர்கள் நடந்தே சென்றார்கள்..அப்போது நிஹாரிகாவிற்கு பழைய மலரும் நினைவுகள் தன்னுள் வந்து சென்றது.


இறுதியாக அவர்கள் வீட்டை அடைய..ஆர்வத்தோடு அவள் "நக்ஸூ..! ஹஸ்வத் அண்ணா! அம்மா!" என அழைக்க..வீட்டில் கதவை திறந்து வெளியே வந்தார் ஒருவர்.

என்னிடம் ஓடோடி வா💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 11✨

அவரை கண்டவன் "..நீங்க யாரு?" என விதுரன் கேட்கவும் அவர் "நா..இங்க தான் நாலு வருஷமா இருக்கேன். ஆமா..நீங்க யாரு?" என அவர் கேள்வி கேட்கவும் அவள் "..ஆ..ஆ..இந்த வீட்ல இதுக்கு முன்னால் தங்கியிருந்தவங்க. இப்போ எங்க இருக்காங்கனு தெரியுமா?" என கவலையோடு கேட்டால்.



அவர் "..ஹா..பாவம் அந்த பொண்ணு. கையில ஒரு வயசு பெண் குழந்தையோட இந்த வீட்ட விட்டு போக மனசே இல்லாமல் போனால்..அவ புருஷன்..அவனால் கூட அவள சமாதானம் செய்ய முடியள..வேறு வழி இல்லாம தான் வீட என்கிட்ட பத்து லட்சத்து வித்துட்டு போனாங்க."



இதை எல்லாம் கேட்டதும் அவர்கள் இருவருக்கும் மனது மிகவும் வலித்தது.



அவர் "..ஆமா..நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?" என கேள்வியை எழுப்பினார்.


அவள் "நா..அவளோட தோழி நிஹாரிகா." என அவள் தன்னை அறிமுகம் செய்யவும்.


அவர் "ஓ..அது நீங்க தானா..ஒரு நிமிஷம்.." என அவர் உள்ளே சென்று ஒரு பெட்டியோடு வெளியே வந்தார்.



அந்த பெட்டியை திறந்து அதிலிருக்கும் ஒரு டைரியை அவளிடம் தந்து "இது..அந்த பொண்ணு. நீங்க எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணனும். என் தோழி நிஹாரிகா எத்தனை வருஷம் ஆனாலும் சரி. என்னைக்காவது ஒரு நாள் என்ன பார்க்க வருவா. அப்போ, இந்த டைரிய நீங்க அவளுக்கு தரணும். எனக்காக இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கனு அந்த பொண்ணு சொன்னா." என அவர் கூறி முடித்த அடுத்த வினாடி அவன் "அப்போ..என் தங்கச்சி இத தவற வேற எதுவும் சொல்லாமல் போயிட்டாலா?" என தன் கேள்வியை கேட்டான் ஆண்மகன்.



அவர் "ஆ..எனக்கு இத மட்டும் தர சொல்லி சொன்னாங்க." என மட்டுமே அவர் கூற அவர்கள் "நன்றி" என பதில் கூறிவிட்டு சென்றனர்.



வீட்டிற்கு வந்த பிறகு தான் வானதி ஏதோ கூற வந்தவளை எதுவும் பேசவிடாமல் தடுத்து நிறுத்தி அனுப்பி விட்டோம் என அவர்கள் இருவர் மனமும் சஞ்சளித்து கொண்டே இருந்தது.


அவனிடம் "..வி..விது..வானு ஏதோ..சொல்ல வந்தா.?...நம்ம தான் சொல்ல விடாமல் அனுப்பிட்டோம். இப்போ என்ன நம்பர் யூஸ் பண்ணுறானு கூட தெரியள?" என தன் மனதில் பட்ட விஷயத்தை பட்டென உடைத்து கூறினாள் அவனின் நிலா.


அவன் "...சரி..வானதியோட பழைய நம்பர் இப்போது உன்ட இருக்கா?" என்றான்.

அவள் உடனே தன்னுடைய ஃபோனை எடுத்து தன்னுடைய கான்டக்ட் (Contact s) தேடினாள்.



அதில் அவளுக்கு தன் தோழினின் பழைய நம்பர் கிடைத்தது.


அவள் "வி..விது வானுவோட நம்பர் இருக்கு. எதுக்கும் ஒரு தடவ ஃபோன் பண்ணி பார்க்கட்டா?" என்றால் தன்னவனிடம் கேள்வியோடு.


அவன் எதுவும் பேசாது. "சரி" என்றவாறு தலையை ஆட்டினான்.


நிஹாரிகா அவளை அழைக்க..அந்த பக்கம் இருக்கும் நபர் ஃபோனை எடுத்த பேசவும் அவளது குரல் ஒரு வித புது மாற்றத்தை தர..அவளின் குரலை வைத்து அந்த பக்கத்தில் யார் என்று அறிந்து கொண்டான் அவளின் அவன்.



அவள் பேசட்டும் என தனிமையில் அவளை விட்டுவிட்டு தன் மகளுடன் பொழுதை சிறது நேரம் கழித்தான்.



பேசிவிட்டு வந்தவளிடம் அவன் "..நிலா! என்னாச்சு?" என்றான் கேள்வியாக.



அவள் "..வானு இன்னும் நம்பர் மாத்தாம தான் வைச்சிருந்திருக்கா. அவள நா இங்க நம்ம வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன்." என அவள் கூறிய தகவல்கள் அவனது மனதிற்கு ஒரு நம்பிக்கை தந்தது.


காரணம் 'அவளிடம் தன் தங்கை ஏதேனும் கூறி இருக்க கூடுமோ? அப்படி இருந்திருந்தால். கண்டிப்பாக அவற்றை தெரிந்து கொண்டு..நக்ஸூவை தேடி செல்ல வேண்டும்' என்றே ஒன்று தான் அவனின் மனதில் ஆழமாக வேரூன்றி நின்றது.


சரியாக அந்த தருணம் டிவி பார்த்து கொண்டு இருந்தால் அவனின் அவள்.


அதில் எதிரொலித்த பாட்டு அதன் வரிகள் அவனின் கண்களை கலங்க வைத்தது.


(என் வீட்டு தலைவி! இந்த ஜில்லாவோட அழகி! அண்ணங்காரன் அன்றாட நெனையும் அன்பான அருவி! மை தங்க. மை தங்க. வெள்ள மனசு கொண்ட நல்ல தங்கை!........)


என்ற பாடலின் வரிகள் அவனது நினைவை எங்கோ செல்ல வைத்தது.


அன்று.



விதுரனின் கைகளை ஒரு முறை நட்போடு பிடித்து விட்டு.


அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான் அவனின் நண்பன் பிரனாவ்.



அவனிடம் "சொல்லு மச்சான். என்ன விஷயம்?" என கேட்க.




அவனை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்தவன் "நிஹாரிகாவோட இந்த நிலைக்கு காரணம் என்னனு உனக்கு சொல்ல வந்திருக்கேன்." என்றான்.



அப்போது வானதி "ஆமா அண்ணா! நிஹாரிகாவுடைய நிலைமைக்கு காரணமே நீங்க தான்." என்றால் உறுதியாக.



அவனுக்கு குழப்பம் இவள் என்ன சொல்லுகிறாள்? "என்னது!!!! நிலாவுடைய இந்த நிலை காரணம் நானா? வாட் இஸ் திஸ்.? ஹௌ!..அவளை நான் இப்போ தான் பார்த்தேன். அவளை பற்றி இப்போ கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டு இருக்கேன். பிரனாவ். ஹௌ இஸ் திஸ் பாசிபில்!!!!!!?????" என்றான் கேள்வியாக.



அவனும் "பொறுமை ஓ. இப்படி எடுத்த உடனே சொன்னால் பாவம். விதுரனுக்கு எப்படி புரியும்?...நிறுத்தி நிதானமா சொன்னா தானே..அவனும் புரிஞ்சுப்பான்." என அவனிடம் தோழன் கூறினான்.



அவனின் மனைவி "ப்ரவி!...நான் தான் தப்பு பண்ணினேன். இதுக்கு விதுரன் எப்பிடி காரணம்?...சொல்லுங்க?" என அவனின் சஞ்சு கேட்க.




அவனும் "அட..என்ன தான் சொல்லு தப்புக்கெல்லாம் காரணம் இதோ, இவன் தான்." என பிரனாவ் அவனை சுட்டி காட்டினான்.



விதுரனுக்கு பொறுமை தாங்க முடியவில்லை
"பிரனாவ், வானதி யாராவது எதாவது சொல்றீங்களா? நிஹாரிகாவை இப்போ தான் எனக்கு தெரியும். அதோட, ஐ.." என சொன்னவனுக்கு அதற்கு வார்த்தைகள் சொல்ல வராமல் போனது.



அவனிடம் "விடு மச்சி..அது வேண்டாத கதை. அதோட, இஸ் நாட் யூஸ்ஃபூல் ஃபார் யூ. " என்றான் அவன் இதற்கு மேல் எதுவும் கேட்க மாட்டான் என்று.



ஆனால், அவன் கேட்காமலா இருப்பான்? அவனின் துணைவிக்கு இந்த நிலைமை ஏன் வந்தது? என நினைத்து கொண்டு இருந்தவனிடம். அவளின் இந்நிலை காரணம் நீ தான் என்று கூறினால்.? அவன் விடுவானா என்ன.?



பிரனாவை நேருக்கு நேர் பார்வை பார்த்து அவனிடம் "என் நிலா வாழ்க்கையில் என்ன நடந்ததுனு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும். அவளுடைய மனசு ஏன் இப்படி? சொல்லு பிரனாவ்!!!!!!!!!!!" என் அவன் கர்ஜித்தான்.


இன்று..



வானதி அவர்களை காண வந்த இருந்தால். அவளை பார்த்தவுடன் அவன் "சாரி. வானதி நா..ஏதோ தெரியாமல் கோபத்தில்." என சோகம் கலந்த குரலில் பேசினான்.



அவளை வீட்டினுள் வரவைத்து அவளை அன்பாக கவனித்து கொண்டான்.



அப்போது தான் அவனின் நிலா அவர்களின் குழந்தையை உறங்க வைத்து விட்டு கீழே இறங்கி வந்தால்.



அவளின் பக்கம் அமர்ந்தவள் "வானு..நக்ஸூ." என கூறிவளின் வார்த்தைகள் அவளின் கேள்வியை உணர்த்தியது.



அவர்களிடம் "நக்ஸத்ரா பாவம். அவ தான் என்னைக்காவது ஒரு நாள் அண்ணாவும் அண்ணியும் வருவாங்க. அதனால், நீ இந்த வீட்டை அடிக்கடி பராமரிச்சுட்டு வா..எனக்கு சொன்னதோட மட்டுமில்லை. இதோ, என் ஃபோன் நம்பரையும் மாத்தவே மாத்தாதுனு சொன்னால். அப்புறம்.." என இழுத்தவளின் கண்களில் கண்ணீர்..அன்றொரு நாள்..


"நக்ஸத்ரா போகாத டி..வேண்டாம்.! விதுரன் அண்ணா உன்னை தேடி வருவார். நீ..ஏன் இப்படி..வேண்டாம் டி..போகாத..வேண்டாம் ந..ந..நக்ஸத்ரா! உன் அண்ணா வந்தார்னா நா..அவங்ககிட்ட என்ன பதில் சொல்ல? இது தான் நீ அவர் மேல் வைச்சிருக்கும் பாசமா?" என்றால் வானதி கோபமாக.



அவளிடம் "என்ன பேசிகிட்டு இருக்க நீ..? இதோ, என் குழந்தை மேல் சத்தியமா சொல்லுறேன். என் அண்ணன் வருவார். அவர் வரும் போது நீ நான் இருக்கிற இடத்தை சொல்லணும் இதோ, இது தான் அட்ரஸ். அப்புறம், முக்கியமான விஷயம். நீ..அவர்கிட்ட சொல்லிடு நீங்க அவளை தேடி போனாலும் அவ நீங்க வரும்போது உயிரோட இருப்பாலானு அவளுக்கே தெரியாதுனு சொல்லிடு." என அன்று அவள் சொல்லி விட்டு சென்றது இன்று அவர்களிடம் கூறவிடாமல் அவளை வாட்டி வதைத்தது.

என்னிடம் ஓடோடி வா..💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 12✨


அவளிடம் "ஆ..அண்ணா நக்ஸத்ரா இப்போ கேரளால இருக்கா.இதோ, இது தான் அட்ரஸ்." என அவள் கொடுக்க.


அப்போது அவள் "இத தவிர்த்து வேற ஏதாவது சொன்னாலா?" என அவனின் நிலா கேட்க.



அவள் சொல்லவில்லை என்பது போல் தலையை அசைத்தால் காரணம்..நக்ஸத்ரா தன்னை தேடி வருகிற போது 'தான் உயிருடன் இருக்க மாட்டேன்' என்பதை அவள் இவர்களிடம் கூற மறுத்தால்.



எங்கே.. இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நேரும்.? இவர்கள் இருவரின் மனதும் நொந்து விடும் என இவள் நினைக்க கடவுள்..அவர்கள் நக்ஸத்ராவை காணும் போது அவள் இருக்கும் நிலை..அது மிகவும் கொடூரமான இருக்கும் என வானதி உணரவில்லை அதுவே, இங்கு அவர்களின் மனதில் நக்ஸூவும் ஹஸ்வந்தும் சந்தோஷமாக தான் இருந்து வருகிறார்கள் என்ற எண்ணத்தை தந்து மனதில் சற்று ஆனந்தத்தை தந்தது.



அவளின் இந்த பதிலை கேட்டு "விது..விது வாங்க கிளம்பலாம். இப்போ நம்ம கேரளா போறோம். அண்ணியையும் அண்ணாவையும் கூட்டிட்டு தான் விசாகப்பட்டினம் வரணும்." என தன்னவளின் ஆனந்தத்தை கண்குளிர ரசித்தவனுக்கு என்ன செய்வது என தெரியாமல் போனது.



வானதி அவர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு "சரி டி வரேன். அண்ணா வரேன்." என அவளிடம் சொல்லி விட்டு சென்றால்.


அவர்கள் இருவரும் கேரளாவிற்கு செல்ல டிக்கெட் புக் செய்தனர்..



அன்று..



பிரனாவ் "சொல்லு சொல்லுனா என்ன சொல்ல.? சொல்றதுக்கு ஒன்னுமில்லை. போதுமா!" என்றான் அவனுக்கு இளைகாத கோபத்தின் வேகத்துடன்.



அப்போது தன் தமையனை காண வந்திருந்தால் நக்ஸத்ரா "அண்ணா! இந்தா சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்." என அவனை அழைத்த படி உள்ளே வந்தவள். அங்கு பிரனாவை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த கூடையை கீழே போட்டால்.



கண்களில் கண்ணீர் மழ்க..அவனையும் அவனுக்கு பக்கத்தில் குழந்தையோடு நிற்கும் தோழியையும் பார்த்த படி "அடாயேய்!!!!! உனக்கு அறிவில்லை. இதோ, பாருங்க பிரனாவ். நா..உங்களை திட்டவே மாட்டேன். ஏனா, நீங்க என்ன பொறுத்த வரை என் ப்ரோவுடைய ப்ரண்டு. என்ன தண்டனையா இருந்தாலும் அதை என் அண்ணா தான் தரணும். இப்போ நா பேசிகிட்டு இருக்கிறது உங்க மனைவிகிட்ட." என அவனுக்கு பதில் கூற அவள் "ஐயம் சாரி..நான் பண்ணின தப்புக்கு தான் கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கார். தயவு செய்து என்னை நொகடிக்காதீங்க டி." என கதறும் அன்னையை பார்த்த அவளின் குழந்தையை அவளுடைய மூந்தியை பிடித்து "அம்மா!..." என இழுக்கும் குழந்தையை பார்த்த விதுரன்.



"நக்ஸத்ரா போதும்! எப்படி பேசணும்னு ஒரு எல்லை. சரி..நிஹாரிகாவுக்கு என்ன நடந்தது.? ஏன் நீ என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லை.?" என கூறியவனின் வார்த்தைகள் அவளை விழிக்க வைத்தது 'அச்சோ!... நா நிஹாரிக்கு சத்தியம் செஞ்சு தந்திருக்கேன். இப்போ, நா அண்ணாகிட்ட விஷயத்தை சொன்னால்..அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்து..தப்பாகிடுமே.?' என தோழியின் நிலையில் சிந்தித்து பார்த்தாலும்.




அவளுக்கு அண்ணி என்கிற முறையிலும், நாத்தனார் என்கிற உறவின் பிணைப்பிலும், நினைத்து பார்க்கையில் தமையினிடம் இருந்து மறைப்பது தவறு! என அவளின் மற்றொரு மனம் அடித்து கூறுயது.



அவனிடம் "நா..சொல்றேன்." என்றால் உறுதியாக.


அப்போது வானதி "அது..நக்ஸத்ரா நா.." என சொல்ல வந்தவளை தன் பார்வையினால் நிறுத்தம் செய்தவள் அவர்களை பார்த்து "இங்க பாருங்கள். இது..எங்க குடும்ப பிரச்சனை. நிஹாரி என் அண்ணி. இந்த விஷயத்தை நா சொல்லாமல் மறைக்க நீங்க தான் காரணம். வானதி.! போதும் டி. பாவம் நீ அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணத்தை வைச்சுட்டு இப்படி..வேண்டாம், அண்ணாகிட்ட நா சொல்லிகிறேன். இப்போ நீங்க எல்லோரும் கிளம்பலாம்." என்றால்.




பிறகு இதற்கு மேல் என்ன செய்ய முடியும். தன் மனையாளுடன் வீட்டிற்கு சென்றான் பிரனாவ்.


அவர்களை தொடர்ந்து வானதியும் கிளம்பி சென்றால்.


அவளை பார்த்து "நக்ஸத்ரா!" என்றான் கவலை நிறைந்த குரலில்.



அவள் "அண்ணா!.. நிஹாரி இப்படி நடைபிணமா சுத்துறதுக்கு முக்கிய காரணம் நான் தான். எனக்கு வந்த வினையை அவள் வாங்கிகிட்ட ஒரே காரணம் தான். உள்ளே வைச்சுகிட்டு புலுங்கிகிட்டும் வெளியே மத்தவங்க கிட்ட சொல்ல முடியாமல் தவிச்சுகிட்டும் இருக்கா." என்ற நக்ஸத்ராவின் அழுகை..அவளை தன் கல்லூரி காலத்திற்கு கொண்டு சென்றது.


********


அவளின் இந்த குரல் அவனை கவலையடைய வைத்தது.


"என்ன சொல்ற?" என்றான் எதுவும் புரியாதவனாக.


அவனை பார்த்து "வா சொல்றேன்." என்றால் அவனை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்த படி.


மற்றவர்கள் அனைவரும் கிளம்பினார்கள். அவர்கள் சென்ற பின் அவனிடம் "அண்ணா. நீயும் நானும் சேர்ந்து ஒன்னா ஒரே காலேஜ் ல படிச்சோம்ல. அப்போ கூட நீ என்னை ஹாஸ்டல் தங்க வைச்சு படிக்க வைச்சீல. அப்போ தான் நான் நிஹாரியை பார்த்தேன்." என்றால் அவர்களின் கடந்த காலத்தில் முழுவதுமாய் சென்றவளாக.



ஆம், அப்போது தான் விதுரன் முதுகலை படிக்க. தங்கையுடன் ஒரே கல்லூரியில் சேர்ந்தான். ஹஸ்வந்த் தவிர இவர்களின் கூட்டத்தில் இன்னும் இருவர் இருக்கிறார்கள்.



விதுரன், பிரனாவ், மாறன் என மூவ்வரும் ஒன்றாக இணைந்து எம்.எஸ்.சி மெக்ஸ் சேர்ந்தார்கள்.


அந்த சமயம் தான் இவர்கள் மூவ்வரும் ஒன்றாக இளங்கலை முதலாம் வருடம் சேர்ந்தார்கள்.


நக்ஸத்ராவும் வானதியும் பள்ளி பருவத்தில் இருந்து பழக்கமானவர்கள். அதே போல் தான் சஞ்சனாவும் நிஹாரிகாவும்.


"அண்ணா..நா வானுவோட சேர்ந்து ஹாஸ்டல்ல இருக்கலாம்னு பிலான். பிலிஸ் ணா. பிலிஸ்" என தங்கையவள் செல்லமாக கேட்க அதனை புரிந்து கொண்டவன் "ஹான். நோ பிராபிலம். உனக்கு பிடிச்சிருக்கு தானே.?" என அவளிடம் மீண்டும் ஒரு தெரிவுபடுத்தி கொண்டான்.



அவளும் "ஆமா!!!!!" என்றால் சத்தமாக. கல்லூரியின் முதல் நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரம்பம் ஆக..விதுரன் தன்னுடைய வகுப்பறைக்கு சென்றவன் "மச்சி!! விதுரா வந்துட்ட..என்னமோ சொன்ன இனி உங்க கூட சுத்தினா..நானும் மக்குப்பிசாகிடுவேன். இப்போது கடைசியில் எங்களோட சேர்ந்து படிக்க வந்திருக்க.?" என அவனின் குறும்பு தனம் நிறைந்த மாறன் தோழன் கேட்க.


அவனை தொடர்ந்து "மாம்ஸ் விடுடா. சரி விதுரன் உன் தங்கச்சி அதான். நக்ஸத் அவ எந்த காலேஜ்ல சேர்த்திருக்க.?" என பிரனாவ் கேட்க.



அவனிடம் "இங்க தான் மச்சான் சேர்த்திருக்கேன். சரி..நம்ம இந்த காலேஜில் ஆவது ஒழுங்க படிச்சு வாழ்க்கையில் செட்டிலாக பார்ப்போம்." என விதுரன் பொறுப்பாக கேட்க.



மாறனோ "அட..செட்டில் னா படிச்சும் ஆவோம். இன்னொன்னு இதோ, யூஜில தான் கமிட்டாகாமல் சிங்கிளா சுத்திட்டு இருந்தோம். பி.ஜிலயாவது கிமிட்டாவோமே.! எங்க இவன் கூட சேர்ந்தா திரும்ப கமிட்டாக முடியாமல் போயிடுமோனு தான் ஹர்ஸன்(ஹஸ்வந்த்) நாசூக்கா எஸ்ஸாகிட்டான்." என மாறன் தன் மனதில் இருக்கிற விஷயத்தை விதுரன் படிப்பு படிப்பு என அவர்களை அன்புடன் கவனிப்பதையும் குத்திக்காட்டி பேசினான் அவனின் தோழன்.


**********


தங்கையவள் அவளுடைய வகுப்பிற்கு செல்ல அங்கு அவள் அருகே "ஹாய். ஐயம் நிஹாரிகா உன் பெயர்?" என கேட்டவளின் பார்வை சற்று புன்னகை பூக்க அவளிடம் தன் கைகளை கோர்த்தபடி "ஐயம் நக்ஸத்ரா. ஷி இஸ் மை பிரண்ட் வானதி." என தன் பள்ளி தோழியையும் சேர்த்து அறிமுகம் செய்து வைத்தவள்.



"நைஸ் டு மீட் யூ. ஆப் கோர்ஸ் ஷி இஸ் மை கிலாஸ் மேட் சஞ்சனா.( Nice To Meet You Of Course She is My Classmate Sanjana)" என அவளையும் அறிமுகம் செய்து வைத்தால்.



முதல் நாள் இனிதே முடிந்தது..இப்படியே ஒரு மாதம் கண் இமைப்பதற்குள் செல்ல..பிரனாவ் நக்ஸத்ராவை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுபக்கம் மாறன் தன்னை எந்த பெண்ணாவது திரும்பி பார்க்க மாட்டாளா? என கேள்வி எழுந்து நிற்க விதுரன் தன் கவனத்தை படிப்பில் செலுத்தினான். மூவ்வரும் மூன்று திசையில் இருக்க..ஒரு நாள் இடைவேளை சமயம் கேண்டீன் சென்றார்கள்.


மாறனும் பிரனாவுடன் சென்றான். அப்போது சஞ்சனாவும், நக்ஸத்ராவும் ஜூஸ் மற்றும் ஷினாக்ஸ் வாங்கி கொண்டு ஒரு மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க சட்டென்று அவர்கள் மேஜையை தட்டினான் பிரனாவ்.


அதில் கோபம் அடைந்த நக்ஸத்ரா "ஹலோ! மிஸ்டர் என்ன நீங்க இப்படி தட்டுறீங்க. கொஞ்சம் கூட மேனஸ் தெரியாதா? இப்படியா செய்வீங்க.?" என அவனை வாய் மூடாமல் திட்டிக்கொண்டு இருப்பவளை தீ விழிகள் கொண்டு பார்த்தவன் அவளுக்கு குறையாது "என்ன நீ..நா இப்படி பண்றது சரியில்லைனு எப்பிடி சொல்லலாம்?இது எங்க டேபிள். இங்க நானும் என் நண்பனும் தான் உட்காருவோம். கேட் ஆப்." என்றான் கட்டளையாக.


அவள் "சஞ்சனா! வா டி போகலாம்." என்றால் அவனுக்கு இளைக்காத கோபத்துடன்.

என்னிடம் ஓடோடி வா..💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 13✨

அவளுக்கு பின்னாலே குட்டிப்போட்ட பூனையாக சென்றவள் அவ்வப்போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தாலும் அவளின் பார்வை தூரத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிரனாவை தொட்டு மீளும்.


ஆனால், அவனின் பார்வை தீ விழிகள் அவளுக்கு எதிரே அமர்ந்து இருக்கும் நக்ஸத்ராவை தொட்டு செல்லும்.



நாட்கள் செல்லச்செல்ல பிரனாவ் நக்ஸத்ராவை தன் காதலியாக பாவிக்க ஆரம்பித்தான். ஆனாலும், அவனின் அந்த மனம் மறுபுறம் விதுரனின் தங்கையை பார்க்க வேண்டும் என துடித்தது.



அதற்காக அவன் "விதுரன். உன் தங்கச்சி இங்க தான் படிக்கிறானு சொன்ன. எந்த டிப்பாட்மென்ட்.?" என கேட்க அவன் "அடேய்! என்ன டா உன் தங்கச்சி அவளை நீ இன்னுமா பார்க்கவே இல்லை?" என கேட்டான்.


ஆம், நக்ஸத்ராவை அவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது பார்த்து அவளை தன் தங்கையாக பாவித்து வந்தவன். ஆதலால், அவளின் பெயரை மறந்து போனான். பிரனாவிற்கு சற்று பிடிவாத குணம் அதிகம். நினைத்தை முடித்தே தீர வேண்டும் என நினைப்பவன் அவன்.



அவன் "மச்சான். என்கூட கடைக்கு வரீயா. என் தங்கச்சியை பார்க்க போறேன்." என்ற வார்த்தையை கேட்டதும் அவன் "வா..வா..போகலாம்." என பிரனாவ் அவன் பின்னே சென்றான்.

********

இங்கு மறுபக்கத்தில் தன் தமையனை காண்பதற்கு தயாராகி கொண்டு இருந்தால் அவனின் பாசமலர்.


அவள் "நிஹாரி! என் கூட கடைக்கு வரீயா?" என கேள்வி எழுப்ப அவளோ "அடேய்! நக்ஸூ ஐயம் சாரி டி அசைன்மென்ட் நான் இன்னும் முடிக்கலை நீ நேத்து நைட் முடிச்சுட்ட. உன் கூட இப்போ நா வந்துட்டு பிறகு நாளைக்கு அந்த பத்ரகாளி என்னை திட்டிதீர்த்துவா என்னால் முடியாது ப்பா" என்றால் நாளைக்கு நடக்கவிருக்கும் சம்பவத்தை நினைத்து பயந்தவளாக.


"வரேன்! இல்லை இத சொன்னா முடிஞ்சுப்போச்சு ஏன் இப்படி பெருசா லிஸ்ட் போடுற." என கூறிய படியே அங்கிருந்த தண்ணீரை பருகியவள் "சஞ்சு என் கூட வரீயா?" என அவள் பக்கம் திரும்ப "ஹா ஷரேன் டி ஐயம் ஆன் தி வே." என்றபடியே அவளுடன் கிளம்பினால்.


இன்று..


"விது இப்போ எப்பிடி தேடுறது. நேர்ல போய் பார்த்தா அவ நம்ம கூடவே சேர்ந்து வந்துடுவாளா விது." என தன்னவளின் வார்த்தைகளுக்கு பதில் அறியாதவனா அவன் "அட..அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது." என அவளது மனதிற்கு ஆறுதல் கூறினாலும் அவனின் மனம் 'நிலா! உன் மனசுக்கு ஆறுதல் சொல்லி திடத்தை என்னால் என் மனசுக்கு கொண்டு வர முடியள டி.' என அவனின் தவிப்பு அவர்களின் குட்டிக்கு கேட்டதோ என்னவோ "விதுப்பா! ஒன்னும் கவலை படாத உன்னை பார்த்தவுடனே அத்தை ஓடி வந்து கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க போறாங்க. நிஹாரிக்கு தான் அடி விழுகும்."என குட்டிக்குழந்தையின் சுட்டித்தனமான பேச்சு அவர்களுக்கு சற்றுநேரம் ஆனந்தத்தை தந்தது.



"அப்பா! நம்ம பக்கத்து வீட்டு அக்கா என் கூட விளையாட வருவாங்க. இதோ, நம்ம வீட்டுக்கு போகபோறோம். நா, அந்த அக்காவோட சேர்ந்து விளையாட போறேன்." என குதூகலமாக பேசும் குழந்தையிடம் "சரி..சரி..போதும் போதும் தூங்கு ஊர் வந்ததும் எழுப்புறேன்." என தன் மடியில் படுக்க வைத்து அவளுக்கு தாலாட்டு பாடி உறங்க வைத்து கொண்டு இருந்தவளை ரசித்தவாறே அவளின் தலையை வருடியவன்



அவளிடம் "நம்ம ஆருக்கும் ஒரு குட்டி பாப்பாவோ இல்ல தம்பியோ இருந்தால் நல்லா இருக்கும்ல." என கேட்ட தன் கணவனின் குரலை கேட்ட பெண்ணவளுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது.


அவளின் பார்வை அர்த்தம் புரியாதவனா அவன் "என்ன நீ அப்படி பார்க்கிற..இது எல்லா பேரன்ஸூம் வழக்கம் போல் ஆசைப்படும் விஷயம் தானே. இவ்வளவு ஏன் நம்ம பேரன்ஸ் கூட நினைச்சு இருந்திருக்கலாம்." என்றான் நன்கு புரிந்தவனாக.



அவளும் அதற்கு சலைத்தவள் அல்ல அவனிடம் "எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறக்கணும்னு ஆசை விது. இது எனக்கு எப்போது இருந்தோ இருக்கு." என கூறிய தன்னவளின் கூரிய பார்வையும் அவளின் ஆசையகளைங்குயும் கேட்டவனுக்கு சட்டென்று மனம் பதில் சொல் என்றாலும் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டது.


"சரி..சரி..நம்ம ஊர் கொஞ்ச நேரத்தில் வந்துடும் உடனே எல்லாம் கேளரா போக வேண்டாம் நிலா. பாப்பாவுக்கு ஸ்கூல் இருக்கு. நம்ம விசாகப்பட்டினம் வந்ததும் வன் வீக் லீவ் கேட்போம்னு இருந்தேன். இப்போ அதுக்கு தேவையில்லை. நா ஒரு நாள் மட்டும் ரேஸ்ட் எடுத்துட்டு ஒரு வாரம் கழிச்சு போகலாம்." என்றான் நிதானமான குரலில்.



அதில் பெண்ணவளுக்கு புரிந்து போனது தன் கணவன் வேறு விதமாக முடிவெடுத்து இருக்கலாம் என்று.



"பட்டு பட்டு வா தூங்கு" என தன் மகளை மடியில் வைத்து தட்டி கொடுக்க அவளிடம் "நிலா!..நா சொன்னது போலவே செய்யலாம் தானே?" என்றான் மீண்டும் ஒரு முறை.


அவளும் 'சரி' என்பது போல் தலையை அசைக்க. தாயவளிடம் "நிஹாரி மா. நா அந்த அக்காகிட்ட சொல்லாமல் வந்துட்டேன். அக்கா பாவம் வருத்தப்பட போறாங்க!" என கூறும் தன் பட்டுவை பார்த்தவர் "அட..அடேய்! பட்டுகூட ஒரு அக்காவை பிரண்ட் பிடிச்சுட்ட. அந்த அக்கா தான் பாவம். நம்ம ஆருத்ரா கிட்ட தவிக்கப்போறால் விது" என தன் பிள்ளையிடம் ஆரம்பித்து தன் மன்னவனிடம் முடித்தாள் பாவை.



அவனும் "அட..போயிட்டு வரட்டும் நீ விடுமா." என அவன் தன் மகளுக்கு சப்போர்ட் செய்ய அது தான் உண்மை. அப்பாக்கள் அனைவருக்கும் பெண் பிள்ளை என்றாலே தனி பாசம்.


அவள் "அதான பார்த்தேன். என்னடா இன்னும் சப்போர்ட் பண்ணாமல் இருக்கீங்களேனு." என அவளும் கூற தன் மகளுடனே அவர்கள் இருவரும் சென்றார்கள்.


என்னிடம் ஓடோடி வா...💞
 

Rishaba Bharathi

New member
பயணம் 14✨

அந்த குழந்தையின் வீடு அவர்களுடைய வீட்டை விட்டு நான்கு வீடுகளுக்கு அடுத்து இருந்தது.



அங்கு அந்த பிஞ்சு குழந்தை "அக்கா..!" என கூப்பிட அவளின் குரல் கேட்டு வெளிவந்தால் ஆறு வயது குழந்தை.



கொளுகொளுவென கன்னங்கள் இரண்டும் பளபளக்க, உருண்ட விழிகள்,பார்ப்பதற்கு குட்டி தேவதை போல் அவள் காட்சி தர.


"ஆருத்ரா! இவங்க தான் உன் அம்மா அப்பாவா?" என்றால் முத்து முத்தான குறும்பு கலந்த பேச்சில்.


அவளிடம் "ஆமா அக்கா. இவங்க தான்மா. என் பெஸ்ட் பிரண்டு." என கூற அவளிடம் "உன் பெயர் என்ன?" என நிஹாரிகா கேட்க அவள் தன் பெயரை கூற வரும் முன்னரே அவர்களை வீட்டிற்குள் அழைத்து சென்றால்.



அங்கு அவளிடம் "பாப்பா உன் அம்மா அப்பா எங்க போனாங்க? நீ மட்டும் தனியா இருக்க?" என விதுரன் கேட்டான்.



அந்த குழந்தை "அ..அ..அது அங்கிள் என் அம்மா என்கிட்ட பேசி வருஷகணக்காச்சு. அப்பா இப்போ வந்துடுவார். வீட்ல யாரும் இல்லாத போது ஆரு பாப்பா கூட தான் இருப்பேன்." என அந்த பிஞ்சு குழந்தை சொல்ல அவளிடம் "அப்போ உன் அப்பா வர வரை நாங்க இங்கயே இருக்கோம்." என தன்னவள் கூறிய வார்த்தைகளுக்கு அவனும் சம்மதம் தெரிவித்தான்.



அப்படியே..அவர்கள் வீட்டின் நடு ஹால்லை சுற்றி பார்த்து கொண்டு இருக்க..நிஹாரியின் கண்களில் சிக்கியது ஒரு அதிர்ச்சியான காட்சி.



"வி..வி..விது!!!!!!!!!"என கத்தும் தன் மனையாளின் குரல் வந்த திசை நோக்கி சென்றவனும், அந்த காட்சியை கண்டு வார்த்தை வாராது போனது அவனுக்கு.


"அ..அ..பாப்பா! இ..இவங்க இரண்டு பேரும் யாரு?" என அந்த சின்ன பிள்ளையிடம் கேட்க அவள் "இவங்க தான் என் அம்மா,அப்பா. ஏன் அங்கிள் என் அம்மா அப்பாவை உங்களுக்கு தெரியுமா?" என்றால் கேள்வியாக.


அவளிடம் "பாப்பா உன் அம்மா இப்போ எங்க? நீ சம்மதிச்சா நாங்க போய் பார்க்கலாமா?" என்றால் பதட்டமாக.




அவளும் அவர்களை ஒரு அறைக்கு கூட்டி சென்றால். அங்கு, அந்த அறையானது மௌனமாக இருந்தது. சுற்றிலும் மருந்தும், மருத்துவ கருவிகளும் அமைந்திருக்க நிலவு போல் ஜோலித்து இருக்க வேண்டிய, புன்னகை பூத்து குழுங்க கூடிய முகத்தில், அன்னையாய் குழந்தையை கொஞ்சி மகிழும் இந்த அற்புத தருணத்தில்..ஆக்ஷி்ஜன் மாஸ்க்குடன். உயிரோடு இவ்வுலகில் வலம் வருகிறேன். என்பதை கூறும் வகையில் இதயத்துடிப்பு காட்டும் கருவியுடன், படுக்கையில் படுத்திருந்தவளை பார்த்த. அவளின் கண்கள் கலங்கியது..அவளது கண்கள் கலங்கியது என்றால் அவனோ தன் நெற்றியை அடித்து கொண்டு அழுக தொடங்கினான்.



"ஐயோ!!!!!!! இப்படி இவ்வளவு பக்கத்தில் இருந்துட்டு உன்னை நா பார்த்துகாமல் போயிட்டேனே!!!!!!!" என கதறும் தன் மன்னனை பார்த்தவள் அவனிடம் "ஏங்க!! நம்ம பாவம் பண்ணிட்டோம்..இது பெரிய பாவம். நா..நாம..இப்படி இருந்திருக்க கூடாது." என அவளும் அவனுக்கு குறையாது கதறினால்.



"ந..ந..நக்ஸத்ரா!" என தன் தாயாரின் பெயரை கேட்டவள் "உங்களுக்கு என் அம்மாவை தெரியுமா ஆன்டி.?"


அந்த பிஞ்சு குழந்தையை தூக்கியவாறே அவளிடம் "உன் பெயர் என்ன பாப்பா?" என ஆனந்தத்துடன் கேட்டால்.


அவளிடம் "விதுரிகா! ஆன்டி என் அப்பா அடிக்கடி சொல்லுவார். உன் அம்மாகிட்ட நா எத்தனையோ பெயர் சொன்னேன். அது எல்லாம் வேண்டாம். என் அண்ணன் பெயரும் என் அண்ணி பெயரையும் சேர்த்து விதுரிகா-னு இருக்கிற இந்த பெயரை தான் வைக்கணும்னு சொல்லுவாங்கனு சொன்னார். அதோட, என்னை பார்க்கும் போதெல்லாம் என் அத்தையுடைய ஞாபகம் வருமா. நான் தான் இன்னும் என் அத்தையையும் மாமாவையும் பார்க்கவே இல்லை." என அந்த குழந்தை உற்சாகத்துடன் ஆரம்பித்து இறுதியில் சோகத்துடன் முடிக்கும் வேளை வீட்டினுள் நுழைந்தான் நம் விதுரிகாவின் தந்தை.


"பப்புமா!...இங்க வா அப்பா உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு." என தன் தமையனின் குரலை ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பின் கேட்டதில் ஓடோடி வந்தால் அவனின் தங்கை.



அவளை பார்த்ததில் திடுக்கிட்டு நின்றான் ஆணவன், அவளின் உடன்பிறந்தவன்.



கல்லூரி காலத்தில்..


தன் தமையனை காண சென்றால் அவனின் ஆசை தங்கை சஞ்சனாவுடன்.


அவர்கள் இருவரும் "டேய்!!! விதுரா உன் தங்கச்சி எங்க தான் வந்துகிட்டு இருக்கா.? இவ்வளவு நேரம் ஆக்கிட்டு இருக்கா." என அவன் பொறுமை தாங்காமல் கூற அவனிடம் "மச்சான். பொறுடா இப்போ தான் ஃபோன் பண்ணினேன். வந்துகிட்டு இருக்கேன்னு சொன்னால். வந்துடுவா."


சஞ்சனாவுடன் அங்கு வந்தவள் தன் சகோதரன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு விரைந்து சென்று அமர்ந்தவள் "அண்ணா!..எப்பிடி இருக்க?" என கேள்வியை எழுப்பினால்.


"நக்ஸா இவன் தான் என் பிரண்டு பிரனாவ்." என விதுரன் அவனை அறிமுகம் செய்து வைத்த பின்னர் தான் அவளது விழி அவன் பக்கம் சென்றது.


அவளை பார்த்தவன் 'இவளா?????' என நினைக்க. அவளும் அதையே தான் நினைத்தால்.


இதனை கண்டு கொண்ட அவளுடைய சகோதரன் "என்ன. இரண்டு பேரும் ஏற்கனவே மீட் பண்ணிருக்கீங்க போல?" என சரியாக யூகித்தான்.


அவனிடம் "ஆமா அண்ணா. நானும் நக்ஸத்ரா இவரை ஏற்கனவே மீட் பண்ணோம்." என அவனிடம் கேண்டீன் விஷயத்தை கூறினால் சஞ்சனா.


அதை கேட்டதும் "மச்சான்!..நம்ம சீனியர்ல கெத்த மெய்டேன் பண்ண வேண்டாமா?" என தன் சட்டை காலரை தூக்கி விட்ட படி கூறினான்.


அவனின் அந்த அலட்சிய பார்வை அவளுக்கு கோபத்தை வரவழைத்தது. "அண்ணா! எங்களுக்கு ஹாஸ்டல்ல இருக்க முடியள. இங்க நிஹாரியுடைய மாமா வீடு சும்மா தான் இருக்குனு சொல்றா. அதனால், நாங்க அங்க போய் இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். இந்த விஷயத்தை நேர்ல கேட்கணும்னு தோணுச்சு அண்ணா." என தன் சகோதரியின் வார்த்தைகள் அவனுக்கு சரி என தோன்றியது.

அவளிடம் "சரிமா. உன் இஷ்டம் நக்ஸா! ச..சஞ்சனா! என் தங்கச்சியை நல்லபடியா பார்த்துக்கோங்க." என தங்கையிடம் தொடங்கி அவளின் தோழியிடம் முடித்தான்.


தமையவன் சரி சொன்ன அடுத்த வினாடி சஞ்சனா நிஹாரிகாவிற்கு குறுஞ்செய்தி அனுப்ப. அவள் தன் மாமாவிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டால்.


இதோ, தோழிகள் தனிக்குடித்தினம் வந்து இன்றோடு இரண்டு மாதங்களாக. இன்னும் மூன்று வாரங்களில் தேர்வு. படிக்க வேண்டும் என்ன செய்ய? என தோன்றியது நக்ஸத்ராவிற்கு. நக்ஸத்ராவிற்கோ கடந்த சில நாட்களாக ஏதோ, ஒரு நம்பரில் இருந்து தேவையில்லாத குறுஞ்செய்தி வந்து அவளை அணுஅணுவாக மிரட்ட செய்தது. அதனை அவள் நிஹாரிகாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வதுண்டு.


என்னிடம் ஓடோடி வா..💞


இந்த அத்தியாயம் சற்று சிறிதாக இருக்கும் என நினைக்கிறேன்🤔

 

Rishaba Bharathi

New member
பயணம் 15✨


அவள் "அண்ணா! நாங்க பண்ணினது தப்பு தான் இல்லைனு சொல்லவே இல்லை. ந..நகஸ்தராக்கு என்னாச்சு? ஏன் இப்படி இருக்கா?" என தன் சகோதரி கேட்க அவன் "ஓ!!! மேடம்க்கு இப்போ தான், அண்ணன் அண்ணினு ஒரு உறவு இருக்குனு தெரிய வந்திருக்கோ? போதும் மிஸ்.சஸ். நிஹாரிகா விதுரன்!! என் தென்றல் நிலை பற்றி நீங்க ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம்." என தன் தந்தை 'மிஸ்.சஸ்.நிஹாரிகா விதுரன்' என்ற பெயரை கேட்க அந்த ஆறு வயது பிள்ளை அவளை கட்டியணைத்து "அத்தே! மாமா!" என அவர்களை ஒரு முறை ஆசையோடு பார்க்க.



தன் மகள் அவர்களை உரிமை உறவோடு அழைத்தது அவனுக்கு மனதில் ஒரு வலியை தந்தது. "பப்புமா வா! அப்பா சொல்றேன்ல வா. எப்படி உங்களுக்கு தெரிஞ்சது எனக்கு தெரியாது? ஆனா, ஒன்னு மட்டும் உறுதி! என் தென்றல் எழுந்திடுவா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு." என அவன் முடிக்க.



சகோதரனிடம் "அண்ணா! நா ஒரே ஒரு தடவை நக்ஸத்ராவை பார்க்கணும். தோழியா! அவகிட்ட பேசணும். பிளீஸ் ணா?" என அவள் கேட்க.


"அஞ்சு நிமிஷம் தான். அதுக்கு மேல் நேரம் தர மாட்டேன்." என கூறிய அடுத்த நொடி அவளது கால்கள் அந்த அறைக்கு சென்று. அங்கிருந்த நாற்காலியில் அவள் அமர்ந்து அவளின் கைகளை மென்மையாக பிடித்து "ந..நக்ஸூ! நான் தான் உன் நிஹாரி. அ..அன்னைக்கு நா உன்னை திரும்பி பார்க்காமல் வந்துட்டேன். ஏ..ஏனா! அந்த சூழ்நிலை அப்படி. உ..உனக்கு தெரியாதது எதுவும் இல்லை. இத்தனை பக்கத்தில் இருந்தும் நா உன்னை பார்க்காமல் போயிட்டேன்னு வருத்தம் தான் எனக்கு." என கூறியவள் மறு கரத்தினால் அழுகையை துடைத்தபடி மீண்டும் தொடர்ந்தால்.


"வாழ்க்கையில் நா..எத்தனையோ தோழிகள்கிட்ட பழகி இருக்கேன். நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டி. ஏன் தெரியுமா? நம்ம உறவுடைய ஆழம் அப்படி. நடைபிணமா, நரகத்தில் இருந்த எனக்கு. இந்த வாழ்க்கையை கொடுத்தது நீ. நக்ஸூ! நிம்மதியான வாழ்க்கை உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகு விது..என்னை ஏத்துப்பாரானு மனசு உடைஞ்சு போய் இருக்கும் போது. எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து இந்த நிம்மதியான வாழ்க்கையை கொடுத்தது நீ..நக்ஸூ.! தற்கொலை செய்ய போனேன். அந்த ஏழு மாத வயிற்றோடு வந்து என்னை காப்பாத்தினது யார்? நீ தானடி! இதெல்லாம் எனக்கு அப்போ தோணவே இல்லை. நீ..அனுபவிக்கும் இந்த தண்டனையை பார்க்கபோனால் நான் தான் டி அனுபவிக்கணும்."

கல்லூரி காலம்

அந்த மார்ஃபிங் ஃபோட்டோவில் இருப்பது யார் என்று தெரியவில்லை? ஆனால், எப்படியோ நிஹாரிகாவிற்கு தன் கல்லூரி தோழியின் மூலமாகத்தான் வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டாள். அதை தெரிந்து கொண்டவளுக்கு அந்த படத்தில் இருப்பது நக்ஸத்ரா தான் என்று தெரியும். இருப்பினும், அவளால் உண்மையை கூற இயலவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை? அன்று விதிரனும் அவர்களைக் காண வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது நக்ஸத்ரா "ஏதாவது சாப்பிடுறியா அண்ணா?" என கேட்க அப்போது வானதி "வானதி எப்படி இருக்க? நல்லா இருக்கியா?" என வானதியிடம் நலம் விசாரித்தான் விதுரன். அதில்,அவளுக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது பிறகு தன் தங்கையின் பக்கம் பார்த்து "நக்ஸா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? வந்து உட்காரு. ஆமா! எங்க நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்க? சஞ்சனாவும் அந்த இன்னொரு பொண்ணும் எங்கம்மா?" என்று அவன் கேட்க அவள் "வெளியே போயிருக்காங்க அண்ணா." என கூறினாள் . அப்போது வீட்டில் அறையில் உள்ளிருந்து வெளிவர "என்னம்மா சஞ்சனா வெளியே போயி இருக்கான்னு சொன்ன. வீட்டுக்குள்ள தான் இருந்திருக்கா. இது கூட தெரியாமல் பொம்பள புள்ள வீட்ல இருக்கலாமா?" என கேட்க தன் அண்ணனிடம் 'என்ன கூறுவது?' என்று தெரியாமல் விழித்துக் கொண்டும் மனதில் புலம்பிக் கொண்டும் கிடந்தால் நக்ஸத்ரா. வீட்டிற்கு வந்த நிஹாரிக்காவை பார்த்த நக்ஸத்ரா "நிஹாரி வா. வா வந்து உட்காரு. இவர் தான் விதுரன் அண்ணா." அவன் அவளை பார்க்க அவளும் சரிவர பார்க்காமல். " சொல்லு என்ன விஷயம்?" என கேட்க அவளும் "அதான், சொன்னேன்ல என் அண்ணா வந்திருக்காரு." என தன் தமையனை அவள் அறிமுகம் செய்து வைக்க. ஆனால் அவள் அவனை பாராமல் சென்றுவிட்டாள். அறைக்கு சென்று விட்டதும். தன் அறையின் கதவை பூட்டிக் கொண்டவள். கதவை சாத்திக்கிட்டு "நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? ஏன் உள்ள போயிட்டாள்?" என விதுரன் மேலும் மேலும் கேட்க அவளை,அவள் நிலையை உணர்ந்தவள் தன் மனதளவில். 'நான் தான் அந்த ஃமார்பிங் போட்டோல இருந்தேன். எனக்கு, எனக்காக தானா என் பிரண்டு நிஹாரி அந்த ஃபோடோல இருக்கேன்னு சொன்னா. எனக்காக இவ்ளோ பெரிய அவமானத்தை அவ வாங்கிக்கறத நினைக்கும்போது.. நா அ..அவளுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்குன்னா. செய்யாத தப்பை ஒருத்தர் மேல பழி போடுவது எவ்வளவு பெரிய பாவம்னு எனக்கு தெரியும். நான் ஆனா அந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டானா என்ன செய்றதுன்னு எனக்கு தெரியலனா. ரொம்ப வருத்தமா இருக்கு. நான் விஷயத்தை உள்ள புளிங்கிட்டு வெளியே சொல்ல முடியாம நான்! இப்படி இருக்கிறது. எனக்கு சுத்தமா பிடிக்கலன்னா.' என அவள் தன் மனதின் வழியாகவே தன்னுடைய சோகத்தை பரிமாற்றம் செய்து கொண்டிருக்க. அதனை விளிவழியே புரிந்த அவளது சகோதரன். "என்னம்மா? ஏதாவது கவலையில் இருக்கிற மாதிரி தெரியுது? இல்ல, ஏதாவது பிரச்சனையா? சொல்லு அண்ணன் நான் இருக்கேன். எதுவா இருந்தாலும் பார்த்து பேசி சமாதானம் செஞ்சு வச்சிடலாம்." என கேட்க அப்போது சஞ்சனா "அண்ணா இப்போ நம்ம காலேஜ் குரூப்ல. ஒரு போட்டோ ஒன்னு வந்துருக்கு. யார் முகத்தையோ ஃமொர்ப்கிங் பண்ணி வைச்சு இருக்காங்க. ஆனா அந்த போட்டோ ரொம்ப கேவலமா இருக்குனா. யாருடைய போட்டோனே தெரியல? இருந்தாலும் அந்த போட்டோல இருக்குற பொண்ணு எந்த டிப்பாட்மெண்ட் சேர்ந்தவனு தெரியல? அது தெரிய வந்துச்சுன்னா.. நம்ம காலேஜுக்கு.. காலேஜ் விடுங்க அண்ணா. அந்த பொண்ணோட மானம், மரியாதை அவங்க குடும்பத்தில் இருக்கிறவர்கள். எல்லாரையும் இந்த சமூகம் எப்படி பார்க்கும். சொல்லுங்க? எனக்கு அதை நினைச்சா தானே ரொம்ப கவலையா இருக்கு." என சஞ்சனா பிரனாவவின் மனதை கவர்வதற்காக ஆவலோ ஏனோதானோ என்று பேசினால். அதைப் பார்த்த வானதி "சஞ்சு கொஞ்சம் அப்படி வரியா." என அவளை தனியாக கூட்டி சென்றால். இங்கு விதுரனுக்கு ஏதும் புரியவில்லை. பிரனாவ் "ஆமாடா மச்சான். நம்ம குரூப்ல அந்த போட்டோ கூட தான்டா வந்திருந்துச்சு. யாரு? எந்த பொண்ணு? எப்படி எடுத்தாங்க? எதுவுமே எனக்கு தெரியல. ஆனா இந்த போட்டோ கிட்டத்தட்ட கொஞ்சம்?? என்ன சொல்றது? ஒரு மாதிரியா தாண்டா இருக்கு. இப்படி ஒரு போட்டோஸ்.. நம்ம குரூப்ல யாருமே ஷேர் பண்ணினது இல்ல. டீச்சர்ஸ் எல்லாருமே திட்டுறாங்க. எந்த நம்பர்ல இருந்து அந்த போட்டோ வந்துச்சு? எப்படி நீங்க இந்த மாதிரியான போட்டோஸ் எல்லாம் குரூப்ல போடுறீங்க? அப்படின்னு சொல்லும். ஆனா குரூப்ல போட்ட கொஞ்ச நேரத்திலேயே! அந்த போட்டோ எல்லா டிபார்ட்மென்க்கும் பரவ ஆரம்பிச்சிடுச்சுடா. இதுல என்ன ஒரு பிளஸ் பாயிண்ட் என்னனா! அந்த பொண்ணோட முகம் தெளிவா தெரியாத அளவுக்கு இருக்கு. அது ரொம்ப ரொம்ப நல்லதா போயிடுச்சு. அந்த பொண்ணோட முகம் ஃமார்ப் பண்ணாம இருந்திருந்தா இந்நேரத்துக்கு. ஐயோ!! அந்த பொண்ணு. அவ வாழ்க்கை அவளோட பிறந்தவங்க, அவளுடைய சொந்தம் எல்லாரும் எல்லார் பெயரும் கெட்டுப் போயிருந்திருக்கும். அதனால இப்போதைக்கு ஸ்டாப்ஸ் யாரும் காலேஜுக்கு கூப்பிட வாய்ப்பில்லை. அப்படி கூப்பிட்டாலும்.. ஏன அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கணும். அப்படிங்கறதுக்காக காலேஜ் ஓட கௌரவம் சுத்தமா போச்சு இந்த இந்த ஒரு விஷயத்தினால. சோ நேக் வரலாம்ண்டு முடிவு பண்ணி வெளிய இருந்து ஆட்கள் நம்ம காலேஜ் சோதனை போட வந்திருக்காங்க. நம்ம காலேஜ் குரூப்ல தெரியல ஆனா இந்த போட்டோவை போஸ்ட் பண்ண வேணா கண்டிப்பா. நான் ஏதாவது செஞ்சே தீர்வேன் மச்சான்! செஞ்சே தீருவேன்!" என பிரனாவ் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட நிஹாரிக்கா அரைக்கத வைத்திருந்து வெளியே வந்தால். "எனக்கு தெரியும். அந்த போட்டோவை யாரு அப்லோட் பண்ணாங்கன்னு." என அவள் கூறவும் பிரனாவின் பார்வை அவளது முகத்தை நோக்கி பாய்ந்தது. உடனே அவன் "என தெரியுமா? எப்படி?"என அவன் கேட்க அவள் "அந்த போட்டோல இருந்த டிபிய வச்சு. நான் என் பிரண்ட்ஸ் மூலமா விசாரிச்சேன். அப்போ அந்த போட்டோவ அப்லோட் பண்ணது என்னுடைய காலேஜ் கிளாஸ்மேட் யுகி அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. உடனே அவளுடைய வீட்டுக்கு போய் விசாரிச்ச போ. அவ சொன்னா நான் போட்டோ அப்லோட் பண்ணல என்னோட லவ்வர் அப்லோட் பண்ணினான்னு." என்றால் வருத்தமாக. அவளின் வருத்தம், அது யாருக்கும் தெரியாத ஒன்று. புரியாத ஒன்றும் கூட.

என்னிடம் ஓடோடி வா....💞
 

Rishaba Bharathi

New member

பயணம் 16✨

"என்ன சொல்ற? யுகியோட ஓட லவ்வர். அவளுக்கு தெரியாம போட்டோவ அப்லோட் பண்ணானா?" என பிரனாவ் தன் கேள்வியை எழுப்பினான். விதுரனுக்கும் சற்று குழப்பம் தான். "எனக்கு இவ்வளவு தான் தெரியும். அந்த லவ்வர் யாரு? என்னை? ஏதுன்னு தெரியல? பட், அவனை பற்றி விசாரிச்சப்போ. அவன் பிஜி மேக்ஸ் அப்படின்னு தெரிய வந்துச்சு. உங்க கிளாஸ்மேட்ல ஒருத்தனா இருக்க வாய்ப்பு இருக்கு. நீங்க உங்க கிளாஸ்ல விசாரிச்சு பாத்தீங்கன்னா.. அந்த பொண்ணு யாருன்னு தெரியும்." என அவள் திக்கி திணறி அந்த வாக்கியத்தை முடித்துவிட்டு.

எவரையும் பாராமல் கதவை தாய்ப்பால் போட்டு அழத் தொடங்கினாள். அவளின் அந்த அழுகுரல் அந்த அறை முழுவதும் கேட்கவில்லை. மனதில் உள்ளே அழுது புலம்பி தவித்துக் கொண்டு இருந்தவள். 'என்ன செய்வது? ஏது செய்வது?' என தெரியாமல் விழிக்க அப்போது அறையினுள் வந்தால் அவளது அன்பு தோழி நக்ஸத்ரா. "நிஹாரி ஏன் இப்படி பண்ணுன? ஏன்? எதுக்காக? நான் தான் சொன்னேன்ல அந்த போட்டோல நான் இருக்கேன்னு. அப்புறம், ஏன்!! என்னை நீனு சொல்லி உலகத்துக்கு காட்டணும்னு ஆசைப்பட்ட? வேண்டாம்! இது மூலமா பெரிய பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே அன்னைக்கு நடந்த சம்பவத்தில் இருக்கிறது தெரிய வந்தா!!! ஐயோ!!! வேண்டாம் டி வேண்டாம்! ஏற்கனவே, கேண்டின்ல பிரனாவ்வுக்கும் எனக்கும் சண்டை நடந்தது. உண்மைதான் நான் இல்லைன்னு சொல்லல. என் பாரத்தை உன்கிட்ட கொடுக்க நா விரும்பல பிளீஸ்!!" என அவளின் தோழி கண் முன்னே கதறி அழுது கொண்டவள் இறுதியில் அவள் கூறிய வார்த்தைகளை கேட்டவள் அவளிடம் "ஏன் இந்த விஷயத்தை பிரனாவ் பண்ணி இருக்க கூடாது? யோசிச்சு பாரு? கேண்டின்ல உன்கூட சண்டை போட்டாரு. உன் அண்ணாவை பார்க்க சஞ்சனாவும் கூட போன தானே? அப்போ, நீ சொன்ன தானே? அவர் என்னை தங்கச்சினு சொல்லவே இல்லனு. எங்களுக்குள்ள நடந்த அந்த சின்ன சிக்கலான சண்டை வந்திருக்குனு சொல்லிருக்க தானே? அனேகமா உன் அண்ணாவுடைய பிரண்ட் பிரனாவ் இந்த விஷயத்தை பண்ணிருக்கலான்னு தோணுது." என அவள் யூகித்து கூற தோழியவள் "பிரனாவ் அண்ணாவுக்கும் இந்த சம்பவத்துக்கும்.. அவர் அப்படிலாம் செய்யிற ஆள் இல்லை நிஹாரிகா. எனக்கு தெரியல! ஆனா, அவருக்கு என்ன இப்படி வச்சு செய்வதற்கு என்ன ரீசன் இருக்கும்னு கேட்டால் அதுக்கும் பதில் இல்லை? எனக்கு தெரியல. என் மனசு ரொம்ப கவலையா இருக்குடி இந்த விஷயத்த. யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி சத்தியம் வேற வாங்கிட்ட. நான் யார் கிட்ட சொல்லுறேன். யோசிச்சு பாரு. இனி எந்த பிரச்சனை வந்தாலும் என்னை நீ தான்னு எப்படி ஹஸ்வந்த் உன் சகோதரன்கிட்ட..? அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததுன்னா??? அவ்வளவுதான் முடிஞ்சது!! என்ன செய்வார். நீ யோசிப்பாருடி. உன் படிப்பு, கனவெல்லாம் சாம்பல் ஆகிடும்." என அவளுக்கு நிகராக இவளும் கூற திடீரென அவளிடம் "நம்ம வேணும்னா பிரனாவ். அவரை சீக்ரெட்டா வாட்ச் பண்ண ஆரம்பிக்கலாம். ப்ளீஸ்!! எனக்காக தன் தோழி இத்தனை நேரம் அவர்கள் மாற்றி மாற்றி பேசியதில் ஒரு ஒரு விஷயம் புரிந்தது. 'ஏற்கனவே சின்ன சின்ன சண்டைகள் இருந்ததென்னவோ உண்மைதான்! கேண்டினில் ஆரம்பித்து சண்டை. அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு இடங்களில் கல்லூரியில் வைத்து சிறு சிறு சண்டைகளாக வளர்ந்து இருக்கின்றது. இவள் விதுரனின் தங்கை என அவன் அறியாதபோது. ஆதலால், இந்த விஷயத்தை அவள் தன் மனதில் வைத்துக்கொண்டு பிரனாவ் இந்த விஷயத்திற்கு பின்னால் இருக்க வாய்ப்பு உண்டு.' என தன் மனதளவில் நினைத்த நிஹாரிகா தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தால். 'எப்படி பிரனாவிடம் இருந்து உண்மையை வாங்குவது?' என்பதை அவள் நினைக்கத் தொடங்கினால்.
*****
அடுத்து என்ன செய்வதென்று நிஹாரிகா யோசிக்க தொடங்கியனாள். அப்போது௲தான் அவளுக்கு யுகியின் ஞாபகம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. உடனே யுகியின் வீட்டிற்கு இருவரும் சென்றார்கள். அங்கு அவளோ தற்கொலை செய்ய முயன்றால். அவளைக் காப்பாற்றியவர்கள் அவளிடம் "ஏன் இப்படி பண்ற? எதுனால?" என கேள்வி எழுப்பினால் நக்ஸத்ரா உடனே அவளும் "நக்ஸத்ரா ஐ அம் வெரி சாரி! நான் இப்படி என் என்னோட ஆள் இப்படி பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல. இந்த விஷயம் வெளிய வந்துச்சுன்னா. அவன் தன்னை காப்பாற்றிக் என் நம்பர்ல இருந்து அந்த போட்டோ வெளியே வந்து இருக்கு. மார்பிங்க்கா வந்திருந்தாலும் எப்படியும் யூனிவர்சிட்டில எல்லாரும் விசாரிக்க ஆரம்பிப்பாங்க. எல்லா ப்ரொபசர்கிட்டையும், இந்த விஷயம் போய் சேர்ந்திடுச்சு. ஏற்கனவே, அந்த நம்பர் யாருடையது? யாரோடதுன்னு? தேடித்தேடி இப்போ எங்க வீட்டுக்கு வந்து. எங்க அம்மா அப்பா என்னை உட்பட எல்லாருக்குமே அசிங்கமா போயிடுச்சு!. எனக்கு ரொம்ப கில்டீ பீலிங்கா இருக்கு. இப்படிப்பட்ட ஒருத்தனை காதலிச்சுட்டோம்னு. ஆனா அவன் என்னடான்னா நம்மளை இப்படி சூதானமா என்னை யார்னு கேட்டான்.." என அவள் புலம்பிக்கொண்டே இருக்க அவளிடம் "சி நீ உண்மையிலேயே கமிட்டா தான் இருக்கீயா? ஏனா, உன்னை பற்றி உன் பெஸ்ட் பிரண்ட்கிட்ட விசாரிச்ச போது அவள் உனக்கு பாய்பிரண்டே இல்லனு சொன்னா. உண்மையை சொல்லு யுகிதேவி. நீ சிங்கிள் தானே?" என்றால் நிஹாரிக்கா. இந்த கேள்வியை கேட்டதும் அவளின் உடல் சிலிர்க்க. நெற்றியில் வேர்வை பூக்க ஆரம்பித்தது. அவள் திக்கித் திணறி "அது.. வந்து.. நான்.. நா.. என்.. நான்.. நா சிங்கிள் தான். கமி..கமிட்..கமிட்டாகல. அ..அதோடு. எனக்கு பி.ஜி மேக்ஸ் டிபார்ட்மெண்ட்ல யாரையும் தெரியாது." என்றால் ஒரே வார்த்தையில் அந்த வார்த்தையானது அவர்களுக்கு ஒரு விஷயத்தை தூண்டச் செய்தது. "அப்போ அந்த மார்ஃபிங் பிக்சர் அப்லோட் பண்ண சொன்னது யாரு?" என கேட்டால் அவளின் தோழி "ஒரு பொண்ணு வந்தா. அவ என்கிட்ட இந்த பிச்சர காட்டி ஃமார்ப்பிங் பண்ணி முகத்தை மறைச்ச பண்ணி அனுப்பி இருந்தா. என்ன ஏதுன்னு கேட்டா. உனக்கு அது தேவையில்லைனு சொன்னால். அப்புறம் என் கழுத்தில் கத்திய வச்சு ரொம்ப பிளாக்மெயில் பண்ணா. நா என் உயிரை காப்பாற்ற வேறு வழி இல்லாம ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சேன். இந்த பாவத்தை நான் பண்ணினது. அசிங்கமா இருக்கு. அந்த பொண்ணு என்கிட்ட வந்து இந்த போட்டோவை நீ கல்லூரி குரூப்ல போடடாச்சு. கண்டிப்பா உனக்கு பிரச்சனை வரும். ஹெல்ப் பண்றேன்னு சொன்னா. பட், கடைசி நேரத்தில் கால வாரிவிட்டுட்டால். ஆனா, அவளோட ஒரு பையனும் வந்திருந்தான்." என அவள் சொல்ல "அந்தப் பையன் யாரு?" என கேட்டால் நிஹாரிக்கா "தெரியல? ரெண்டு பேருமே ஹெல்மெட் போட்டுட்டு இருந்ததனால. நான் வந்து சரியா கவனிக்கல. ஆனா எனக்கு வாய்ஸ் ஞாபகம் இருக்கு." என "என்ன பண்றதுன்னு தெரியல பட் அவ என்கிட்ட வந்து சொல்லி இருந்தாங்க. உனக்கு எந்த ஒரு பிராப்ளம் வராமல் நான் பார்த்துக்கிறேன்னு. ஆனா இப்படி காரியம் ஆனதும் கைவிடுவாங்கனு நினைச்சு பாக்கல. அநேகமா அந்த பொண்ணு உங்கள்ள ஒருத்தியா கூட இருக்க வாய்ப்பு இருக்கு." என யுகி கூறியது 'சரியாக இருக்கும்' என நிஹாரிகாவின் மனதில் பட்டது. "என்னது எங்கள்ல ஒருத்தரா இருக்க வாய்ப்பு இருக்குமா? நாங்க நாலு பேருமே கிளோஸ் பிரண்ட்ஸ்." என் நக்ஸத்ரா தன் தோழிகளுக்காக வாதாடினாள். ஆனால் நிஹாரிகா "நக்ஸூ! சி எவனோ ஒருத்தன் நம்ம வீட்டுக்கு வந்து. அதுவும் ரூமுக்கு வந்து. இப்படி போட்டோ எடுக்க முடியுமா? யோசிச்சு பாரு. அந்த போட்டோவை மார்ப்பிங் பண்ண முடியுமா யோசிச்சு பாரு யாருன்னே. தெரியாதவங்களுக்கு நம்மல என்ன தெரியும்? நம்மலா போய் ச ரேஞ்சர் அவங்க கிட்ட நம்ம எல்லாம் போய் பேசினா தான் அவங்களுக்கு நம்மள பற்றின விஷயங்கள் தெரிய வரும். சோ, யுகி சொல்றதுல தப்பே இல்ல. அவ கரெக்டாதான் சொல்றா. ஏன்னா நம்ம நாலு பேர் தான் இந்த வீட்டில் இருக்கும். சமையல்காரங்க அப்படின்னு சொல்லி நம்மை யாரும் வீட்டுக்கு ஆள் போடல. சமையல் வேலையை நான் பாத்துட்டு வரேன். கிளீனிங் வேலையே நீ பார்த்துட்டு வர. மிச்சம் மிச்ச சின்ன சின்ன வேலைகள் எல்லாத்தையும் சஞ்சனாவும் வானதியும் பார்த்துட்டு வராங்க. சோ இப்படி நம்ம இருக்குற வீடு. நம்ம நாலு பேர் மட்டும் தான் மாத்தி மாத்தி பாத்துக்குறோம். அப்படிங்கற நம்ம நாலு பேர்ல ஒருத்தரா இருக்கலாம். அந்த ஒருத்தர் கமிட்டாய் இருக்கலாம். இல்ல ஒன்சைட் லவ்வரா கூட இருக்கலாம். அவனோட ஆள் வேணா கூட கூட்டிட்டு வந்து. இந்த மாதிரி விஷயங்கள் செய்ய சொல்லி இருக்கலாம். எனக்கு தெரியாது? நீ நல்லா யோசிச்சு பாத்தியா?" என அவள் கேட்டால் "என்னத்தடி யோசிக்க சொல்ற? சி கொஞ்சம் யோசிச்சு பாரு? நம்ம நாலு பேருமே ரொம்ப நல்லா அந்த வீட்டுல வந்து வாழ்ந்துட்டு வந்துட்டு இருக்கோம். இத்தனைக்கும் என் அண்ணா யாருமே வந்தது இல்ல. அந்த வீட்டுக்கு யாருமே இதுநாள் வரை வந்தது கிடையாது. இன்னைக்கு தான் வந்திருக்காங்க. அதுவும் விஷயம் தெரிஞ்சா? தெரியாமலா? எனக்கு தெரியல? பட் ஆனால் இன்னைக்கு தான் பஸ்ட் டயம் வீட்டுக்கு வந்து இருக்காங்க. நீ ஏன் இப்படி நம்ம நாலு பேர்ல ஒருத்தரா இருக்கலான்னு சொல்ற? சரி நம்ம ரெண்டு பேரும் இல்ல. அப்பனா சஞ்சனாவும், வானதியையும் சேர்ந்து பண்ணாங்க சொல்லுறீயா? ஆனா, இவ என்னடான்னா ஒரு பையனும் சேர்ந்து வந்தானு சொல்றா?" என நக்ஸத்ரா மீண்டும் கேள்வி எழுப்பினால். "ஆமா நக்ஸத்ரா யோசிச்சு பாரு? கேன்டின்ல நடக்குற சண்டை அப்போ? உன்கூட இருந்தது யாரு?" என கேட்கவும் அவள் "சஞ்சனா" என்றால் "எஸ்! சண்டை நடக்கும் போது உன் கூட இருந்தது சஞ்சனா. அப்புறம் உன் அண்ணாவ பார்க்க போனப்ப உன் கூட வந்தது யாரு?" என அவள் கேட்கவும் அப்போதும் அவள் "சஞ்சனா" என பதில் அளித்தால். "பார்த்தியா. ரெண்டு இடத்திலேயுமே காமனா இருக்குற பர்சன் சஞ்சனா. அதே மாதிரி கேண்டின்ல யார் கூட நீ பிரச்சினை ஆச்சுனு சொன்ன?" "பிரனாவ்" "ஓகே, உன் அண்ணன் பார்க்க வரும்போது அவர் கூட வந்தது யாரு?" அப்போதும் அவள் "பிரனாவ்" என்றே பதில் அளித்தால். "சி அப்போ நான் இந்த விஷயம் பிரனாவ் சஞ்சனா செஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. சஞ்சனாவை நீ கவனிச்சு இருக்கியானு எனக்கு தெரியல பட். நான் கவனிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அவ தன்னுடைய ரூம்ல தனியா பேசினா. வானதி வெளியே வேலையா காய்கறி வாங்க போகிருந்தா. தன்னுடைய ரூம்ல ஒரு போட்டோ பார்த்து அப்படியே பேசிகிட்டு இருந்தா." நிஹாரிகாவும் நக்ஸத்ராவும் சேர்ந்து பேசியதில் ஒரு உண்மை வெளிச்சத்தில் வந்தது நக்ஸத்ராவின் வார்த்தைகள் மூலமாக. என அவள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்றால்.

கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு..
"ஹேய் ஸ்வீட்டிக் பேபி! எவ்வளவு அழகா இருக்க! பாரு, உன்னோட அந்த புருவமும், கூலிங் கிளாஸ், லுக் அன்ட் ஸ்டையில்! வேற லெவல். பார்க்கும் போது போலீஸ் மாதிரியே தெரியுது மப்டில வர போலீஸ் மாதிரியே தெரியுது. நீ எனக்கு மட்டும்தான். இந்த ஹபி! எனக்கு மட்டும்தான்! மை மேகபூபா!" என அவள் புலம்பிய வார்த்தைகள் தன்னரைக்கு தண்ணீர் சேர்த்து எடுத்துச் செல்லும்போது நிஹாரிகாவின் காதில் எதார்த்தமாய் விழுந்தது. கதவை திறக்காமல் அப்படியே அவள் என்ன பேச வருகிறாள் என்பதை உற்று நோற்க ஆரம்பித்தால்

என்னிடம் ஓடோடி வா...💞
 
Status
Not open for further replies.
Top