எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தகிக்கும் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்தவளே - கதை திரி

Status
Not open for further replies.

Sriraj

Moderator
வணக்கம் தோழமைகளே,

நான் உங்கள் நல்லிசை நாச்சியார்.

முதலில் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ???

இத்தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த என் நட்பு ப்ரஷாவிற்கு முதலில் என் மனமார்ந்த அன்புகளும் நன்றிகளும்...??

கதை வாசித்து விமர்சனம் பதியும் வாசகராக இருந்த என்னை எழுத ஊக்குவித்து அவர்களின் தளத்தில் வாய்ப்பும் கொடுத்த உங்களுக்கு என் இதயம் கனிந்த அன்பு ப்ரஷா...??

இதுவரை வாசகராக இருந்த நான் ஓர் எழுத்தாளராக மாற விழைகிறேன். என்னுள் தோன்றிய சிறு சிறு கற்பனைகளும் நான் வியந்து - ரசித்து - ஆதங்கப்பட்ட காட்சிகளுக்கும் என் எழுத்தின் மூலம் உயிர் கொடுக்கும் எண்ணமாகவே என் கதைகள்.?

உங்களுடன் நானும் என் எழுத்தும்...??


இன்று இவ்வழகிய நன்நாளில் என் கதையின் முன்னோட்டத்துடன் நான்... ?


தகிக்கும் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்தவளே…??


முன்னோட்டம்:

"சார், நீங்க சொன்னதை செய்து முடிச்சாச்சு… இந்நேரம் அவங்க பயணத்தில் இருப்பாங்க… எல்லாம் முடிஞ்சிரும் சார்."

என்றவனை நோக்கி, "குட்" என்றதுடன்
நிறுத்திக் கொண்டு பார்வையை கணிணி புறம் திருப்பினான்.

அவனின் பார்வை திரும்பியதும், இன்னும் அங்கிருந்து செல்லாமல், மீண்டும் ஏதோ கேட்க வருவதும், பின் கேட்காது தயங்குவதும் என அவன் யோசனை செய்ய…

அவனின் செயல்களை கணிணியில் வேலைப் பார்த்து கொண்டே, அவதாணித்து கொண்டிருந்தவன் அகில் என்றான்.

அவனின் திடீர் குரலில் திடுக்கிட்டு தன் யோசனையில் இருந்து வெளிவந்தவன் "எஸ் சார்", என்றவனை அமைதியாக பார்த்தவன்…

"என்ன யோசனை அகில் ரொம்ப தயங்கிட்டே இருக்கீங்க… கமான் ஸ்பீக் அவுட், என்ன கேட்கனுமோ கேளுங்க…" என,

அவனின் சொல்லில், அமைதி காக்க முடியாது தான் கேட்க வந்ததை வேக வேகமாக கேட்டே விட்டான்.

"சார் அந்த ஷித்தல் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவை தானா, நம் கோட்டேஷன்(Quotations) திருடி நம் போட்டி கம்பெனிக்கு கொடுத்தால் தான்.. இருந்தும் இவ்வளோ பெரிய தண்டனை எதுக்கு? அவளை நம் போலிஸ்ஸில் பிடித்து கொடுத்து இருக்கலாமே, ஆனால் இந்த அளவிற்கு போக வேண்டுமா… ஏன்னா அவளும் ஒரு பெண் தானே சார்.. ஏன் இப்படி?"

என்று கேட்டவனை கூர்மையாக பார்த்தவன், பின் பலமாக சிரித்தான்.

தன் சிரிப்பை நிறுத்தி, "லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், கில் அட் ஃபர்ஸ்ட் பெட்ரேயால்..(love at first sight, Kill at first betrayal..) என்றான்.


அவனின் பதிலில் புரியாது நின்ற அகிலைப் பார்த்தவன், "அகில், அவள் எதுக்காக நம்ம கோட்டேஷனை திருடி கொடுக்கனும்.. வெறும் பணத்துக்காகவும், சுகத்துக்காகவும் தானே.. அதான் அதை இரண்டும் வேறு மாதிரி அனுபவிக்கட்டும்ன்னு தான் நான் அவளை மூம்பைக்கு அனுப்பி வைற்றேன்…

அங்கே இருக்கின்ற மற்ற பெண்களுடன் சேர்ந்து அவள் அந்த சுகத்த்த்தை அனுபவிக்கட்டும் என்றான்.. அந்த சுகத்தில் சற்று அழுத்தத்தை கூட்டி…

இவளைப் போன்ற துரோகிகளுக்கு இது தான் என்னிடத்தில் தண்டனை…

நான் எப்படி என்று தெரிந்தும் அவள் இதை செய்து இருக்கிறாள் என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும். அதனால் தான் நான் யார் என்று காட்டினேன்." என்று அவன் கூறிட..

இவன் அதிரடியில் வழக்கம் போல் அகில் தான் திகைத்து நின்றான்.

இவர் உண்மையில் ரட்சகன்னா அல்ல ராட்ச்சனா என்ற எண்ணத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.


***************************************************


அது ஒரு அடர்ந்த வனாந்தரம். அந்த வனாந்தரத்திற்குள்ளே, "மாமா...மாமா..மாமா.. என்னை காப்பாதுங்க..என்னை காப்பாத்துங்க.." என அலறிக் கொண்டு ஓடி கொண்டிருந்தாள் பெண்ணோருத்தி. அவளின் அலறல் அந்த காடெங்கும் கேட்க…

ஆனால் அங்கே இவள் அலறலை கேட்டு அவளை காப்பாற்ற கூடியவன் தான் இல்லாது போனான்..

அவளின் அலறலை மிகவும் சுவாரஸ்யாமாய் கேட்டு கொண்டிருந்தது அந்த உருவம்..

அந்த உருவமோ அவளை நெருங்கி, "இதோ பார், என் எண்ணத்திற்கு நீ சரி என்றால் உன்னை நசுங்காமல் மென்மையாய் கையாள்வேன் இல்லையென்றால் உன்னை வன்மையாய் கையாள வேண்டி வரும்.." என கூறிக் கொண்டே அவளின் பெண்மையை களவாட முனைய…


திடீர் என்று வந்த ஒரு ஓசை, அவ் உருவத்தை திசை திருப்ப அந்த ஒரு நொடியில் அந்த பெண் அங்கிருந்து தன்னை காத்து கொண்டு ஓடினாள்..


ஓடியவள் திரும்பி பார்க்க, அங்கே யாரும் இல்லை என்பதை அறிந்து திகைத்து விழித்தாள் பெண்ணவள்..


பெண்ணவளின் திகைப்பில் இருக்க, அந்நேரம் அவளின் தோலை தொட்டது ஒரு மென்கரம் அதில் மேலும் திடுக்கிட்டு திரும்ப, "என்ன ம்மா" என்றார் அக்குரலுக்கு சொந்தகாரர்.


அவளோ அந்த திகைப்பில் இருந்து வெளி வராது தன்னை நிலைப்படுத்தி கொள்ள, அவரை அணைத்திருந்தாள்..


மெல்ல ஆசுவாசம் அடைந்தவள், பின் ஏதோ நினைத்து, "ஏன் இப்படி.. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.. நான் என்ன தவறு செய்தேன்.." என கதறி அழுதாள்…

அவளின் கதறலை கேட்கும், அவரும் மனம் தாங்காது அவளை அணைத்திருந்தார்.


அவரின் அணைப்பில் இனி இவள் என்றும் அழ கூடாது என்ற உறுதி இருந்ததோ…


அவ் உறுதி அவளை அவளவனிடம் சேர்க்கும் உறுதியா இல்லை வேறா…

***************************************************


பலரை அலற வைக்கும் இடத்தில் அவன்..
பலரால் அலற வைக்கப்படும் இடத்தில் இவள்..
இரு துருவங்கள் வெவ்வறு மனநிலையில் வலம் வர...

இவர்களின் மனநிலையில் தான் மாற்றம் வருமா...

தகிக்கும் சூரியவனின் நெஞ்சமதில் நீக்கமற நிறைவாளா இவள்…

***************************************************


இக்கதை அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கப்படும். முடிந்தால் முன்னெவே வர முயற்சிக்கிறேன்...?


இப்போது கதையின் முன்னோட்டத்தை வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை

இந்த கருத்து திரியில் பகிருங்கள்...

Thread 'நல்லிசை நாச்சியாரின் தகிக்கும் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்தவளே - கருத்து திரி' https://narumugai.ink/index.php?thr...ஞ்சமதில்-நீக்கமற-நிறைந்தவளே-கருத்து-திரி.288/


உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும் நான்.


அன்புடன் உங்கள்
நல்லிசை நாச்சியார் (NN) ?
 

Attachments

  • 20211104_184445.jpg
    20211104_184445.jpg
    66.4 KB · Views: 0
Last edited:
Status
Not open for further replies.
Top