எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால பந்தம்-கதை திரி

Status
Not open for further replies.

Anitha G

Moderator
காலை அம்மாவின் சத்தம் கேட்டது. அகல்யா எழுந்திரு.

என்னம்மா அதுக்குள்ள மணி ஏழு ஆயிடுச்சா?

இல்ல மணி ஆறுதான் ஆகுது.

அப்புறம் ஏன்ம்மா என்ன எழுப்பின.

அது அந்த மாரியில்ல அவன் நம்ம தெருவில இருக்குற மளிகைக்கடையில தான் நின்னுக்கிட்டு இருக்கான்.

அதுக்கென்னம்மா என தூக்கக் கழக்கத்தில் பதி சொல்ல.

என்னடி இப்படி சொல்ற. தினேஷ் பத்தி அவங்கிட்ட கேட்டா தெரியும்.

ஓ ஆமாம்மா நான் மறந்தே போயிட்டேன். அம்மா அப்பா இல்லல்ல.

இருக்கார், ஆனால் நல்லா தூங்கிட்டு இருக்கார். எழ மாட்டார். நீ போய் பேசிட்டு வா.

அம்மா அப்பா பார்த்துட்டா என்னம்மா பண்றது?

எழுந்தா அவர்கிட்ட நான் பேசிக்கறேன். வெளிய வரமாட்டார் போதுமா.

சரிம்மா நான் போய் அவனைப் பார்த்துட்டு வந்துடறேன் என அகல்யா உடையை மாற்றிவிட்டு வெளியே வந்தாள்.

அம்மா பார்த்துக்க அப்பா பார்த்துட்டா அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும், பார்த்துக்க என்ன?

சரி நீ போ,

மளிகைக் கடையில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் மாரி. அவன் அருகில் செல்லவே என்னவோ போல் இருந்தது.

இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை, தினேஷ் பற்றி அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அண்ணா என அழைக்க, அவன் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாரி அண்ணா.

என்னையா கூப்பிட்ட.

ஆமா அண்ணா.

என்ன?

நான் அகல்யா, தினேஷ் அக்கா.

அதுக்கு?

இல்ல அவன் வீட்டுக்கு வந்து பத்து நாளுக்கு மேல ஆச்சு, எல்லா இடத்திலையும் தேடிட்டேன். அவன் கிடைக்கலை.

உங்களுக்கு ஏதாவது அவனைப் பத்தி தெரியுமா?

ஆமா எந்த தினேஷ் அக்கா நீ?

அது?

யாருன்னு சொல்லு?

அவன் இன்ஜினியரிங் முடிச்சிருக்கான், அப்புறம்.

ஓ அவனா, அடிக்கடி எங்கிட்ட கஞ்சா கேட்டு வருவான் ஞாபகம் இருக்கு.

அவனைக் காணோம் அண்ணா, உங்களுக்கு ஏதாவது தெரியுமா.

இல்ல, அவனை கடைசியா போன வாரம் பார்த்தேன். நிறைய பொருள் வாங்கிட்டு போனான். அப்புறம் நான் அவனைப் பார்க்கலை.

அண்ணா நான் என்னோட நம்பர் தரேன், தம்பி பத்தி ஏதாவது தெரிஞ்சா எனக்கு கால் பண்றிங்களா.

சரி குடு உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு.

கடையில் இருந்த துண்டுப் பேப்பரில் நம்பர் எழுதி கொடுத்தாள்.

சரி போ, நம்ம பசங்ககிட்ட விசாரிச்சிட்டு உனக்கு சொல்றேன்.

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா என சொல்லிவிட்டு நடந்தாள்.

மாரியிடம் அகல்யா பேசுவதை எல்லோரும் வியப்பாக பார்த்தார்கள். சிலர் என்ன என்ற வினாவோடு பார்த்தார்கள்.

ஆனால் பார்வைகள் எதுவும் சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

அகல்யா உள்ளே வர சுஜாதா அவளை பின்னால் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தாள்.

அவன் என்ன சொன்னான் அகல்யா.

அவனுக்கு தம்பி பத்தி எதுவும் தெரியலைம்மா.

என்னடி சொல்ற, இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சா.

இல்லம்மா என் நம்பர் கொடுத்திட்டு வந்திருக்கேன். தினேஷ் பத்தி விசாரிச்சிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கான்.

அவனே சரியான் பொறுக்கி, அவங்கிட்ட போய் உன்னோட நம்பர் கொடுத்திட்டு வந்திருக்க. அறிவிருக்கா உனக்கு?

வேற என்னம்மா என்ன பண்ண சொல்ற.

இல்ல அகல்யா, இதையே சாக்கா வச்சிக்கிட்டு உங்கிட்ட பேச ஆரம்பிச்சிட்ட என்ன பண்றது.

அப்படி எல்லாம் அதுவும் நடக்காதும்மா. அப்படி பேசினா நான் பார்த்துக்கறேன் நீ கவலைப்படாதே.

அவனுக்கு தினேஷ் பத்தி எதுவுமே தெரியலையா.

இல்லம்மா போன வாரம் மாரிகிட்ட நிறைய போதைப் பொருள் வாங்கிட்டு போயிருக்கா. அதுக்கப்புறம் அவனைப் பார்க்கலைன்னு சொல்றான்.

அவன் எதுக்கு போதைப் பொருள் வாங்கணும்.

என்னமோ தெரியாத மாதிரி கேக்கற, உன் பையன் அந்த வேலைதான பண்ணிட்டு இருக்கான்.

தெரியும் ஆனால்?

என்ன இந்த முறை கொஞ்சம் அதிகமா வாங்கிட்டு போயிருக்கான் அவ்வளவுதான். மத்தபடி எந்த வித்தியாசமும் இல்லை.

அகல்யா அவ ஏதாவது பிரச்சனையில மாடிக்கப் போறான்.

மாட்டினா தான்ம்மா அவனுக்கெல்லாம் புத்தி வரும். இல்லன்னா இப்படிதான் சுத்திக்கிட்டு இருப்பான்.

ஏன் அகல்யா இப்படியெல்லாம் பேசற. மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா.

அப்புறம் என்னம்மா. அவனுக்கு சீக்கிரம் பணக்காரன் ஆகணும் என்ற ஆசை, அதான் இப்படி குறுக்கு வழியில போயிட்டு இருக்கான். அது தப்புன்னு அவனுக்கு எப்பதான் புரியப் போகுதோ தெரியலை.

எத்தனை தடவை அவனுக்கு நான் சொல்லியிருக்கேன் தெரியுமா அகல்யா. கேட்டா தானே.

சரி விடும்மா. காலையில அவனைப் பத்தி பேசி, மூட் ஆஃப் ஆக வேண்டாம். நான் போய் குளிக்கறேன்.

அப்புறம் நான் மாரிகிட்ட பேசறதை நிறைய பேர் பார்த்தாங்க. அப்பாகிட்ட கண்டிப்பா சொல்லுவாங்க.

அப்பா உங்கிட்ட கேட்டா, ஏதாவது சொல்லி சமாளி.

இது வேறயா, சரி விடு அவர் கேட்டா பார்த்துக்கலாம்.

அகல்யா குளித்துவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள். இன்று ஸ்வாதிக்கு பிறந்தநாள் போன வாரம் சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

நாம ரெண்டு பேரும் வெளிய போலாம் அகல்யா. ஜாலியா இருக்கும்.

அம்மா இன்னைக்கு வர லேட் ஆனாலும், தேடாதே.

ஏன் என்ன?

ஸ்வாதிக்கு இன்னைக்கு பிறந்தநாள் மா, அவ என்னை வெளிய போலாமான்னு கேட்டா, பார்க்கலாம் என சொல்லிட்டு வந்தேன்.

சரி சீக்கிரம் வா என சுஜாதா சொல்லி அனுப்பினாள்.

ஸ்வாதிக்கு பிறந்தநாள் வாழ்த்தை சொல்லலாம் என தேட அவள் அங்கு இல்லை.

அகல்யா தனது இடத்திற்கு வர, ஹெச் ஆர் அவளை அழைத்தார்.

அகல்யா இன்னைக்கு செகண்ட் ப்ளோர்ல இருக்கற ஹால்ல பிசினஸ் பார்ட்டி ஒண்ணு நடக்கப் போது, உங்களால மேனேஜ் பண்ண முடியுமா.

முடியும் சார், ஆனா பார்ட்டி எல்லாம் கம்பெனி தான பார்த்துப்பாங்க, நம்மளை கூப்பிட மாட்டாங்களே.

இல்ல அகல்யா இது நம்ம ஏபி சார் தரும் பார்ட்டி. அதனால நம்மதான் பார்த்தாகணும்.

மனதுக்கும் ஒரு நொடி மகிழ்ச்சி வந்தது.

ஓ அப்படியா பார்ட்டி எத்தனை மணிக்கு சார்.

ரெண்டு மணிக்குதான். நீங்க போய் அரேஜ்மெண்ட் பார்த்துட்டு வந்திடுங்க. பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாம் சரியா இருக்கணும்.

ஏதாவது மிஸ் பண்ணினா அப்புறம் ஏபி சார் உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்.

நல்லா பண்ணியிருந்தா, இது உங்களுக்கு மிகப்பெரிய ஆப்பர்சூனிட்டி. நல்ல கெரியர் உங்களுக்காக காத்திக்கிட்டு இருக்கு.

நீங்க நல்லா பண்ணுவிங்கன்னு தான் நான் உங்களை ரெபர் பண்ணியிருக்கேன்.

கண்டிப்பா சார். பார்ட்டியில எந்த தப்பும் நடக்காம நான் பார்த்துக்கறேன்.

குட் அகல்யா. இன்னைக்கு முழுக்க உங்களுக்கு வொர்க் அங்கதான். நீங்க போலாம்.

ஓகே சார் என சொல்லிவிட்டு வெளியே வர ஸ்வாதி, அகல்யாவை தேடிக் கொண்டு அவள் இடத்துக்கு வந்தாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேடம்.

நன்றி அகல்யா அவர்களே.

ஸ்வாதி ரிசப்சன்ல ஆள் இருக்காங்களா இல்லையா, நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட.

யாரும் இல்லதான், ஆனாலும் பிரச்சனையில்ல.

அது எப்படி?

ஏன்னா ஏபி சார் நேத்துதான் வந்துட்டு போயிருக்கார், அதனால இன்னைக்கு வரமாட்டார் இல்ல.

வருவாரே?

என்னடி சொல்ற. பர்த் டே அதுவுமா நல்ல வார்த்தை சொல்லு.

நிஜமாத்தான் சொல்றேன், நம்ம ஹோட்டல் ஹால்ல பார்ட்டி நடக்குது ஏபி சாரும் வரார். ரெண்டு மணிக்கு பார்ட்டி.

ஆமா உனக்கு எப்படி தெரியும்.

ஏன்னா பார்ட்டிக்கு அரேன்ஞ்மெண்ட் நாந்தான்.

சொல்லவே இல்ல பாரு.

எனக்கே இப்பதான் ஹெச் ஆர் சொன்னார். இன்னைக்கு முழுக்க ஹால்ல தான் இருப்பேன்.

ஒரு நிமிஷம் இரு, என ஸ்வாதி போனை எடுத்து ரிசப்சனில் ஆள் உள்ளதா என செக் செய்தாள்.

நல்ல வேளை கிறிஸ்டி வந்துட்டா, பிரச்சனை இல்லை. இப்ப சொல்லு.

என்ன சொல்றது அவ்வளவுதான்.

அகல்யா அந்த மனுஷனுக்கு எல்லாம் சரியா இருக்கணும் இல்ல நீ அவ்வளவுதான்.

தெரியும்.

என்னடி இவ்வலவு அசால்டா சொல்ற. இன்னும் நீ அவர்கிட்ட திட்டு வாங்கினது இல்லை அதான்.

அப்படி இல்ல, என்னால நல்லா பண்ண முடியும் என்ற நம்பிக்கை.

சரி விடு உன்னோட தலைவிதியை யார் மாத்த முடியும். போயிட்டு வா. நீயும் அவரைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டல்ல.

அதுக்காக இல்ல, இந்த ஆபிஸ்க்கு நான் வந்து இருபது நாள் ஆச்சு.

ஆனா ஒருத்தர் கூட அவனைப் பத்தி நல்லவிதமா சொல்லலை. அதான் அப்படி என்னதான் அவ்ங்கிட்ட இருக்குன்னு பார்க்கணும் வேற ஒண்ணுமில்ல.

அப்பூரம் ஈவ்னிங் வெளிய போலாம்ன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா.

நல்லா இருக்கு, அம்மாகிட்ட கூட சொல்லிட்டு வந்துட்டேன்.

சூப்பர் அப்ப வேலை முடிஞ்சதும் சொல்லு ரெண்டு பேரும் போலாம். சரி மேடம் உன்னோட வேலையை நல்லபடியா பண்ணு குட்லக் என சொல்லி ஸ்வாதி சென்றாள்.

அகல்யா ஹாலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஹாலில் பார்ட்டிக்கான வேலைகள் வேகமாக நடந்து கோண்டிருந்தது.

மேடம் நீங்கதான் அகல்யாவா, என ஒருவன் கேட்டு அருகில் வந்தான்.

ஆமா. நீங்க?

நான் மாறன், நான் ஹெட் சார் இப்பதான் சொன்னார் உங்களைப்பத்தி. வேலை நடந்துட்டு இருக்கு. இதான் ப்ளான்.

அகல்யா அனைத்தையும் ஒரு முறை இரு முறை பார்த்தாள். எல்லாம் புதிதாக இருந்தாலும், பார்த்தவுடன் புரிந்தது.

இதப்பாருங்க சீட்டிங்க மட்டும் ஓரமா மாத்திடுங்க, அப்பதான் பார்க்க நல்லா இருக்கும்.

இல்ல மேடம் எப்பவும் இப்படிதான் நாங்க பண்ணூவோம்.

ஆனால் இன்னைக்கு மாத்தலாமே. எப்படி இருக்கணும்ன்னு நான் ப்ளாம் தரேன் அதுபடி பண்ணுங்க நல்லா இருக்கும்.

ஆனா மேடம் சார்.

அவர்கிட்ட நான் பேசிக்கறேன் என அந்த சார்ட்டில் ஒவ்வொன்றையும் வரைய ஆரம்பித்தாள்.

மாறன் இந்தாங்க ப்ளான், இந்த மாதிரி செட்டிங்க் பண்ணுங்க நல்லா இருக்கும்.

ஓகே மேடம்.

மாறன் இங்க ஹவுஸ் கீப்பிங் யாரு அன கேட்க ஆட்கள் யார் யார் எந்தெந்த வேலைக்கு என அறிமுகப்படுத்தினான்.

ஓகே இனி நான் பார்த்துக்கறேன் நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க என அனுப்பி வைத்தாள்.

அங்கு வைக்கவேண்டிய பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. பார்த்தவளுக்கு தலையே சுற்றியது. காரணம் அனைத்தும் மதுபாட்டில்கள்.

இத்தனை பாட்டில்களா, அப்படி எத்தனை பேர்தான் வரப்போகிறார்கள். அந்த ஹாலில் அதிகபட்சமாக ஐநூறு பேர் இருக்கலாம்.

அப்படி பார்த்தாலும் அங்கு இரண்டாயிரம் பாட்டிலுக்கு மேல் இருந்தது. அனைத்து\ம் விலை உயர்ந்த பொருட்கள். அலங்கார பொருட்கள், லைட்டிங்க், என அனைத்தும் கண்ணைப் பரித்தது.

வேலை அனைத்தும் ஓரளவு முடிந்திருந்தது. வேலை செய்தவர்கள் லன்சுக்கு சென்று விட்டார்கள்.

அப்பாடா என அப்போதுதான் உட்காந்தாள். பசிக்கவில்லை வேலையை முடித்துவிட்டு சாப்பிட செல்லலாம் என உட்காந்தாள்.

வேலை முடிஞ்சதா என்ற குரல் கேட்டு திரும்பினாள்.

பார்க்க மேலாளர் போல இருந்தான்.

இன்னும் இருக்கு, நீங்க பார்ட்டிக்கு வந்திருக்கிங்களா.

ஆமா.

ஓகே அங்க உட்காருங்க. இல்லன்னா கெஸ்ட் ரூம் இருக்கு அங்க போயிக்கலாம்.

இல்ல நான் இங்கேயே இருக்கேன்.

அப்படியா ஓகே அங்க பொய் உட்காருங்க. இன்னும் வேலை இருக்கு.

ஆனால் ரெண்டு மணிக்கு பார்ட்டி, இன்னும் எதுவும் ரெடி ஆகலைன்னு சொல்றிங்க.

இல்ல சார் ரெடியாயிடும், வொர்க்கர்ஸ் சாப்பிட போயிருக்காங்க. வந்ததும் ஆரம்பிச்சிடுவாங்க.

வேலையை முடிச்சிட்டு சாப்பிச அனுப்ப வேண்டியதுதான.

ஹலோ சார், நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லதிங்க. காலையில எட்டு மணியில இருந்து வேலை பார்க்கறாங்க. அதுவும் பிரேக் இல்லாம. அவங்க சாப்பிட வேண்டாமா.

உங்களுக்கு பார்ட்டி சரியான நேரத்துக்கு ஆரம்பிக்கணும் அதுதான. கண்டிப்பா நடக்கும் போய் உட்காருங்க. உங்களுக்கு ஏதாவது தேவைன்னா சொல்லுங்க நான் கொண்டு வரசொல்றேன்.

இல்ல அதெல்லாம் எதுவும் வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க என கோபமாக அவன் சொல்ல,

ஆமாம் சார் எனக்கு தெரியும். அதுக்குள்ள ரெடியாயிடும் சார் போங்க.

சும்மா என்ன தொல்லை பண்ணிட்டு என முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள். அது அவன் காதில் நன்றாகவே விழுந்தது.

வேலைகள் அனைத்தும் நிறைய பாக்கி இருந்தது. எப்படி செய்கிறாள் என பார்க்கலாம் என அவனும் அமர்ந்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து அனைவரும் வந்தார்கள்.

அகல்யாவிற்கு தலையே சுற்றியது. எல்லாம் சின்ன சின்ன வேலைகள் தான், ஆனால் சீக்கிரம் செய்ய வேண்டும் எப்படி என யோசித்தவள்.

அனைவருக்கும் முன்னால் இருந்த டேபிள் மேல் ஏறி நின்றாள்.

எல்லாரும் ஒரு நிமிஷம் என்னப் பாருங்க.

அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு திரும்ப.

இதப்பாருங்க இன்னும் நம்மகிட்ட நாற்பது நிமிஷம் மட்டும்தான் இருக்கு.

ரெண்டு மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்கப் போகுது, அதுக்குள்ள எல்லாம் ரெடி ஆகணும். நாம எல்லாரும் சேர்ந்து செஞ்சா மட்டும் தான் வேலை முடியும்.

நாங்க எல்லாரும் பண்ணிட்டுதான் இருக்கோம் என ஒருவன் குரல் கொடுக்க.

உண்மைதான், நான் நினைச்சதை விட நீங்க ரொம்ப வேகமாக செய்யறிங்க. பிரச்சனை அது இல்ல. முடியாத வேலையை முடிச்சவங்க செய்ங்க.

அப்பதான் வேலை முடியும். உதாரணமா டெக்கரேஷன் முடிச்சவங்க டேபிள் அரேன்ஞ்மெண்ட் பண்ணுங்க.

வேலையை பிரிச்சுக்கிட்டா சீக்கிரம் முடியும்.

அகல்யா சொன்னபடியே அனைவரும் செய்ய ஆரம்பித்தார்கள்.

அகல்யாவும் வேலை செய்ய ஆரம்பித்தாள். சின்ன சின்ன வேலைகள் தான் உதவி செய்து கொண்டே செய்தாள்.

இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருந்தது. அனைத்து வேலைகளும் முடிந்தது.

அப்பாடா என உட்கார அருகில் அவன்.

அச்சோ மறந்து போயிட்டேன் பாரு, வீரா இங்க வாங்க

மேடம், வாஷ்ரூம் எல்லாம் க்ளீனா இருக்கான்னு பாருங்க. சுத்தமா இருக்கணும். இன்னைக்கு பெரிய பெரிய ஆளுங்க இங்க வராங்க.

வீரா செல்ல, இல்ல நீங்க இருங்க நான் போய் பாத்துட்டு வரேன் என அகல்யா உள்ளே சென்றாள்.

பார்த்தவள் திரும்பி வந்து., என்ன வீரா ஸ்மெல் இப்படி வருது, ஆளை அனுப்பி இப்பவே க்ளீன் பண்ணுங்க.

ஆனா மேடம் பார்ட்டிக்கு டைம் ஆச்சு.

பரவாயில்ல சார், வாஷ்ரூம் தான் ரொம்ப முக்கியம் க்ளீன் பண்ணுங்க பத்து நிமிஷத்துல ரெடி ஆகணும். க்ளீன் பண்ணிட்டு பின்னாடி வழியா போக சொல்லுங்க.

இப்படி வரக்கூடாது சரியா.

சரி மேடம் என நடந்தான்.

அகல்யா எல்லாம் முடிஞ்சிதா என ஹெச் ஆர் உள்ளே வந்தார்.

வந்தவர் சற்று யோசித்தவாறு அருகில் வந்தார்.

என்ன அகல்யா பிளான்ல மாதிரி இல்லையே.

ஆமா கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணினேன்.

ஆனா யார் உங்களை அப்படி பண்ண சொன்னா?

ஏன் அதுல என்ன பிரச்சனை. நல்லாதானே இருக்கு.

ஆனா அகல்யா அது ஏபி சாரோட ப்ளான் அதை எப்படி நீங்க மாத்தலாம்.

யார் ப்ளானா இருந்தா என்ன சார், பார்க்க நல்லா இருந்தாதானே நல்லா இருக்கும். இப்படி இருந்தா தான் ரிச் லுக் வருது.

கண்டிப்பா ஏபி சாருக்கு இது பிடிக்கும் பாருங்க.

ஹெச் ஆர் எதுவும் திருப்பி பேசவில்லை. அகல்யாவிற்கு சந்தேகமாக இருந்தது.

ஏன் சார் ஏதாவது பிரச்சனையா, உங்க முகமே சரியில்ல.

அது கொஞ்சம் டென்சனா இருக்கு அகல்யா.

டென்சன் எதுக்கு சார், நம்ம வேலையை சரியா செய்துட்டா எதுக்காக டென்ஷன் ஆகணும்.

சரி நீங்க போங்க.

ஏன் சார் பார்ட்டி முடியற வரைக்கும் நான் இங்க இருக்கணும்னு சொன்னிங்க. இப்ப போக சொல்றிங்க.

இல்ல அகல்யா கெஸ்ட் வர ஆரம்பிச்சிடுவாங்க. அதனால நான் பார்த்துக்கறேன். நீங்க போகலாம்.

அவனை இன்று எப்படியும் பார்த்துவிடலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

சரி சார் நான் வரேன் என சொல்லிவிட்டு அகல்யா நகர்ந்தாள். அங்கிருந்து செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

நடக்கும் போதே அனைவரும் வர ஆரம்பிக்க, இவனாக இருக்குமோ அவனாக இருக்குமோ என ஒவ்வொருத்தர் முகத்தையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.

இருக்கைக்கு வந்தவளுக்கு வேலை செய்ய மனம் வரவில்லை.

கால் வர யார் என பார்க்க அது ஸ்வாதியின் அழைப்பு.

என்ன ஸ்வாதி.

சாப்பிட்டியா.

இல்ல ஸ்வாதி இனிதான்.

பார்ட்டி ஹால்ல இருந்து வெளிய வரமுடியுமா.

ஏன் கேக்கற.

இல்ல பிரியாணி அம்மா உனக்கும் சேர்த்துதான் கொடுத்தாங்க, அதான் ஓண்ணா சாப்பிடலாமா என கேட்டேன்.

இரு நான் வரேன்.

ம் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

போனை வைத்த ஐந்தாவது நிமிடம் அகல்யா வந்தாள்.

என்னடி மின்னல் மாதிரி வர,

ஏன்.

இல்ல ஹால் மூணாவது ப்ளோர்ல இருக்கு, எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்த.

நான் அரைமணி நேரத்துக்கு முன்னாடியே என் ரூம்க்கு வந்துட்டேன்.

ஏன் இன்னைக்கு முழுக்க உனக்கு ஹால்ல தான வேலைன்னு சொன்ன.

ஆமா அப்படிதான் ஹெச் ஆர் எங்கிட்ட சொன்னார். ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியலை, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் நீங்க போகலாம் என சொல்லிட்டார்.

எதுக்கு அப்படி சொல்லணும்?

எனக்கும் தெரியலை ஸ்வாதி.

அச்சச்சோ இன்னைக்கும் உன்னால ஏபி சாரை பார்க்க முடியலையா.

ஆமா. நீ அவரைப் பார்த்தா சொல்லு.

அவர் மதியம் இங்க வந்ததா எல்லாம் சொன்னாங்க, ஆனால் நான் பார்க்கலை. நேரா அவர் ரூமுக்கு போயிருப்பார்.

அவர் ரூம் எங்க இருக்கு.

அது பத்தாவது மாடி. அங்க எங்கயாவது அவரைப் பார்க்கணும் என்ற ஆர்வத்தில போயிடாத. அப்புறம் இருக்கற வேலையும் போயிடும்.

இல்ல போக மாட்டேன், சும்மா கேட்டேன்.

இல்ல அகல்யா, உன் ஆர்வத்தை பார்த்தா எனக்கு பயமா இருக்கு, அதான் சொன்னேன். பேசியபடியே சாப்பாடு எடுத்து வைத்தாள்.

சாப்பிடு மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.

ஸ்வாதி, என்னோட வேலையை நான் சரியாதான் பண்ணினேன், இருந்தாலும் என்ன ஏன் போக சொன்னாங்க.

இப்படி இருக்குமா அகல்யா?

எப்படி?

அதாவது உன் வேலை ஹெச் ஆர்க்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கும். அதான் நல்ல பேரை ஏபி சார்கிட்ட அவர் வாங்கிக்கலாம் என நினைத்து உன்னை அனுப்பி இருப்பார்.

போடி, அட்லீஸ்ட் ஏபி சார் வந்ததுக்கு அப்புறம் அனுப்பி இருந்தா, மனசுக்கு திருப்தியா இருந்திருக்கும்.

போதும்மா உன் பொலம்பள நிறுத்து. சாப்பிடு.

ஸ்வாதி என்னோட ரிஅரேன்ஸ்மெண்ட் அவனுக்கு பிடிச்சிருக்குமா.

ரிஅரேன்ஸ்மெண்ட்டா? அப்படி என்ன பண்ணின.

அவங்க கொடுத்த ப்ளானை நான் பண்ணலை.

பின்ன என்ன பண்ணிட்டு வந்த.

நான் ஒரு ப்ளான் போட்டு அதுபடி பண்ணிட்டு வந்திருக்கேன்.

அடிப்பாவி அதான் ஹெச்ஆர் டென்சனாகி வெளிய அனுப்பி இருக்கார். உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை. சொன்ன வேலையை செய்துட்டு வரலாமில்ல.

அதிக பிரசங்கி மாதிரி வேலை பண்ணிட்டு வந்திருக்க.

இல்ல ஸ்வாதி அது ஏபி சார் ப்ளானாம், சுத்தமா நல்லாயில்ல. அதான் மாத்திட்டேன்.

லூசா நீ, ஏபி சார் ப்ளானை மாத்தியிருக்க. அந்த மனுஷனுக்கு நல்ல காலத்துலயே கோபம் அதிகமா வரும். இப்படி பண்ணிட்டு வந்திருக்க, என்ன ஆகப் போகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.

என்னமோ சொல்ற,

இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்க்ள். நடக்கும் போது, எதிரில் பார்ட்டிக்கு நிறைய பேர் போய்க் கொண்டிருந்தார்கள்.

அகல்யா சாயங்காலம் கிளம்பும் போது, கால் பண்ணு ரெண்டும் பேரும் ரெஸ்டாரண்ட் போலாம். இன்னைக்கு என்னோட ட்ரீட்.

தலையாட்டிவிட்டு இடத்திற்கு வந்து உட்காந்தாள்.

எப்போதும் போல வேலையை செய்ய ஆரம்பித்தாள். மாலை நேரம் வர அனைத்து வேலைகலையும் முடித்து விட்டு கிளம்பினாள்.

கால் வர எடுத்து பேச, ஹெச் ஆர் லைனில் இருந்தார்.

அகல்யா வேலை இருக்கு கிளம்பாதிங்க என சொல்லிவிட்டு போனை வைத்தார்.

என்ன இது கிளம்பும் போது என்ன வேலையாக இருக்கும் என யோசித்தபடியே இருக்கையில் அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சும்மாகத்தான் உட்காந்திருந்தாள்.

ஸ்வாதி விஷயத்தை சொல்ல, என்னடி இப்படி சொல்ற.

நான் என்ன பண்றது ஸ்வாதி, வேலை இருக்கு இருங்கன்னு ஹெர்ஆச் சொல்லிட்டார். நான் என்ன பண்றது.

போடி என்ன ஏமாத்திட்ட என சோகமா போனை வைத்து விட்டாள்.

வேலை இல்லாமல் சும்மா இருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஏழு மணிக்கு தான் மெயில் வந்தது. அது ஒன்றும் பெரிய வேலை இல்லை.

பழைய எம்பிளாயி லிஸ்ட் மற்றும் இப்போதைய ஆட்களின் சம்பளம் விவரம் கேட்கப்பட்டிருந்தது.

அரை மணி நேரத்தில் முடித்து விட்டாள்.

மறுபடியும் ஒரு மெயில் வந்தது. இந்த முறை பழைய ஆட்கள் முழு விவரம் கேட்கப்பட்டிருந்தது. அதையும் அரை மணி நேரத்தில் முடித்து அனுப்பினாள்.

மீண்டும் இன்னொரு வேலை. இப்போது அகல்யாவுக்கு சந்தேகம் வந்தது. தன்னை வேண்டுமென்றே இருக்க வைக்கத்தான் இந்த வேலையைத் தருகிறார்களா.

முடிக்க முடிக்க அடுத்தடுத்த வேலைகள் வந்து கொண்டே இருந்தது. மணி சரியாக ஒன்பது. அம்மா கால் செய்து விவரத்தை சொன்னாள்.

ஹெச்ஆர் மிகவும் நல்ல சுபாவம் கொண்டவர், இப்படி நடக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ஏபி ப்ளானை மாற்றியதற்கான தண்டனையாக இருக்குமோ,

என நினைத்தவள் இருக்காது, அப்படி இருந்தால் கண்டிப்பாக அப்போதே வந்து திட்டி இருப்பார். இவ்வளவு நேரம் ஏன் ஆகவேண்டும்.

யோசிக்க யோசிக்க தலை வலித்தது. அவர்கள் கொடுத்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும் போது மணி 11.30.

அம்மா கொடுத்த பணம் இப்போது உதவியது. டாக்சி பிடித்து சென்றாள். வீட்டிக்கு வரும் போது மணி 12.30

சுஜாதா பயந்து போய்விட்டாள்.

என்ன இவ்வளவு நேரமா, ஸ்வாதி கூட வெளிய போயிட்டு வந்தியா.

இல்லம்மா. அப்படித்தான் நானும் நினைச்சேன், ஆனால் போகும் போது வேலை கொடுத்து உட்கார வச்சிட்டாங்க.

நல்ல வேளை அம்மா நேத்து நீங்க கொடுத்த பணம் கையில இருந்துச்சு. அதனால கார் பிடிச்சு வந்துட்டேன்.

உங்க சாருக்கு அறிவு இல்லையா, பொம்பள புள்ளைய இவ்வளவு நேரம் இருக்க வைக்கலாமா.

வேலை பார்க்கற இடத்துல அப்படியெல்லாம் சொல்ல முடியதும்மா. அம்மா ரொம்ப பசிக்குதும்மா, சாப்பாடு போடு.

வா என அழைத்து வந்து சாப்பாடு போட்டாள்.

அகல்யாவுக்கு தலைவலி அதிகமாக இருந்தது. தூக்கம் கண்களைக் கட்டியது. காலையில் இருந்து வேலை அதிகம்.

அசதியில் படுத்தவுடன் உறங்கிப் போனாள். காலையில எழ அவ்வாவு கஷ்டமாக இருந்தது. லீவ் போடலாம என யோசித்தவள் வேலைக்குப் போய் ஒரு மாதம் கூட முழுதாய் முடியவில்லை.

அதற்குள் லீவ் போட்டால் நன்றாக இருக்காது என நினைத்தவள் கிளம்பினாள்.

உன் முகம் ரொம்ப அசதியா தெரியுது, இன்னைக்கு லீவ் போட்டுக்கலாம் இல்லையா.

இல்லம்மா போட்டா நல்லா இருக்காது. வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகலை. எப்படி கேக்கறது.

சரிம்மா நான் கிளம்பறேன்.

பஸ் ஸ்டாண்டில் மாரியைப் பார்த்தாள். அவனிடம் பேசலாமா என தோன்றியது. ஆனால் பல பேர் அங்கு நின்றிருக்க பேச தயக்கமாக இருந்தது.

ஆனால் இவளின் பார்வைக்கான அர்த்தத்தை பார்த்தவுடன் மாரி புரிந்து கொண்டான்.

பக்கத்தில் பேசுவது போல, இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறினான். அகல்யா குழப்பத்துடன் பஸ் ஏறினாள்.

ஹோட்டலை அடையும் போது, மணி பத்து, லேட் தான் இருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்தவள் உள்ளே சென்றாள்.

அவளது டேபிளில் அழகிய பிளவர் போக்கே இருந்தது. பார்க்க அழகாக இருந்தது. டேபிள் மாறி வந்திருக்கிறது என புரிந்தது.

அத்துடன் ஒரு சிறிய கவர் இருக்க, திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அதில் இருபதாயிரம் ரூபாய்க்கான செக் இருந்தது.

செக்கில் இவள் பெயர்தான் இருந்தது. ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது.

பக்கத்தில் யாரும் இல்லை, யாரிடம் கேட்பதென்று தெரியாமல் ஹெச்ஆர் அறைக்கு சென்றாள்.

சார் உள்ள வரலாமா?
 
Status
Not open for further replies.
Top