எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சிலே நீ வந்தாய் கதை திரி

NNK64

Moderator
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்..

நெஞ்சிலே நீ வந்தாய் கதை இங்கு பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

வரட்டா..டா..ஆ..
 
Last edited:

NNK64

Moderator
அத்தியாயம் 01

அதிகாலை 6 மணியளவில் திருநெல்வேலி டு சென்னை ஹைவே வழித்தடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் GLS காரை ட்ரைவ் செய்துக்கொண்டு வந்திருந்தான் வெற்றிசெழியன். இவன் பெயருக்கு ஏற்றார் போலவே இவன் எதை தொட்டாலும் அவனுக்கு வெற்றியே.. ஆம், இவன் இதுவரை தோல்வியை கண்டதில்லை.


வெற்றிசெழியன், இவன் வெற்றி டெக்ஸ் அன்ட் கார்மெண்ட்ஸ் என்ற ஸ்தாபனத்தின் தற்போதைய சேர்மனான வரதராஜனின் இரண்டாவது மகனின் வழிவந்த பேரன். இவன் குணத்தில் சிம்மம். குடும்பம் மீது அலாதி பற்றுக் கொண்டவன் இவனுக்கு பெரிய தந்தை வழிவந்த இரு அண்ணன்மார்கள் மற்றும் இவனுடன் பிறந்த ஒரு தங்கை என ஒரு அழகான அண்ணன் தங்கை உறவுகளுக்குள் மத்தியில் வளர்ந்தவன். அவன் தங்கைக்கும் இரு அண்ணன்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. இதோ இப்போது இவனுக்கும் அவனுக்கு அருகில் ஐந்து வயது ஆண்பிள்ளையுடன் அமர்ந்துள்ள யாழினிக்கும் தற்போதே திருமணம் முடிந்தது.


ஆம் உங்கள் இதழ்கள் உதிர்தது சரியே ஏற்கனவே பக்கத்தில் ஐந்து வயது ஆண்பிள்ளையுடன் உள்ள யாழினியையே இவன் தற்போது திருமணம் முடித்து அழைத்து வந்துக் கொண்டிருக்கிறான். எனக்கு புரிகிறது இவனையா குணத்தில் சிம்மம் என்றீர்கள் என்று உங்கள் மனதில் நீங்கள் எழுப்பும் கேள்வி எனக்கு கேட்கிறது சரி வாருங்கள் அவன் குணத்தின் மீதான உங்கள் கேள்வி சந்தேகமாக மாறுவதற்குள் அவனை பற்றியும் அவளை பற்றியும் படித்துவிட்டு வருவோம்..


இந்த கதை பல வருடங்களுக்கு முன்பு வெற்றிசெழியனின் தாத்தா வரதராஜனின் ஊரான திருநெல்வேலி மாவட்டம் கங்கைக்கொண்டான் கிராமத்தில் துவங்கியது


கங்கைகொண்டான் இப்பேருக்கு ஏற்றார்ப்போலவே அவ்வூரின் குலத்திற்கு நடுவே கங்காதேவியுடன் சிவபெருமான் சேர்ந்து தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. அதேபோல கங்கைக்கு எக்குறையுமின்றி இயற்கை செழிப்புடன் பச்சை பசேலென்று காணப்படும் ஊர் இது. இவ்வூரின் பெரியவீட்டு பிள்ளைகளான வரதராஜனும் சுந்தர்ரானும் பால்ய சிநேகிதர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததேயில்லை அதேசமயம் இவர்களின் நட்பை பற்றி தெரியாதோர் இவ்வூரில் எவருமில்லை.


எப்போதும் கலகலப்பாக சிரித்து பேசி கொண்டிருக்கும் தன் நண்பன் இன்று ஏதும் பேசாமல் தன்னிடம் எதையோ சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையில் தன்னையே பார்த்தப்படி தன் அருகில் அமர்ந்துக் கொண்டிருப்பதை பார்த்து


“என்னடா நானும் அப்போதையில இருந்து பார்த்துட்டு இருக்கேன் எதோ யோசனையிலயே இருக்க.. என்னாச்சு??”


என்று சுந்தர்ராஜன் கேட்க அதற்கு வரதராஜனோ


“அதுதான்.. எப்படி சொல்றதுன்னு..”


என்று தயங்க அதற்கு சுந்தர்ராஜனோ


“டேய் என்கிட்ட சொல்றத்துக்கு என்னடா தயக்கம்..”


என்றவன் ஏதோ யூகித்தவனாய்


“டேய் நல்லவனே, வீட்ல எதுவும் பிரச்சனை பண்ணலைல..”


என்று கேட்க அதற்கு வரதராஜ் திருட்டு தனம் செய்த குழந்தையைப் போல சுந்தரத்தை பார்த்து ஆம் என்றபடி தலையசைக்க அதை பார்த்த சுந்தர்ராஜன்


“நெனச்சேன் டா நீ இப்படி கமுக்கமா உட்கார்ந்துட்டு இருக்கும்போதே நெனச்சேன் இப்படி தான் எதையோ செய்துட்டு வந்திருப்பன்னு”


என்று கூற அதற்கு வரதராஜனோ


“டேய்.. உனக்கே நல்லா தெரியும்ல நான் வீம்புக்கு சண்டை போடுறவன் இல்லைன்னு நடந்ததுல என் தப்பு எதுவும் இல்ல டா எல்லாம் என் பெரியப்பாவோடது தான்”


என்று கூற அதை கேட்ட சுந்தர்ராஜனோ


“சரிடா அப்படி என்ன நடந்துச்சுன்னு சொல்றியா..”


என்று கேட்க அதற்கு வரதராஜனோ


“நீயே சொல்லு மாப்ள உனக்கே நல்லா தெரியும் நான் சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிக்க எவ்வளவு வருசமா முயற்சி செய்துட்டு இருக்கேன்னு அது இப்ப தான் கை கூடி வந்துருக்குன்னு நான் சந்தோசப்பட்டுட்டு இருந்தேன் ஆனா அதுக்குள்ள என் பெரியப்பன் அதை அடியோட அழிச்சுட்டு வந்து வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்காரு”


என்று கூற அதை கேட்ட சுந்தரராஜன்


“ஏன்டா அவரு உன்னைய முன்னேறவே விடமாட்டாராடா..”


என்று கூறிவிட்டு


“சரி இப்ப என்ன செஞ்சாரு..”


என்று கேட்க அதற்கு வரதராஜன்


“போன வாரம் டவுனுக்கு போனப்ப நம்ம ஊரு எம்.எல்.ஏ வை பார்த்தேன் அவரு இந்த வருசம் ரோடு காண்ட்ராக்ட் உங்களுக்கு தான் தம்பின்னு சொன்னாரு ஆனா இப்ப போய் கேட்டா அதை எங்க பெரியப்பா அவரு பையனுக்கு பேசிருக்காருன்னு சொல்றாரு அதான் எனக்கு கோவம் வந்துடுச்சு ஆனாலும் நான் நிதானமா போய் நியாயம் கேட்டேன் அதுக்கு அவரு என்னை திட்டிருந்தா கூட பரவாயில்லடா என் அப்பா அம்மாவை அசிங்கமா பேசிட்டாரு அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு கோபத்துல என்ன பண்றோம்ன்னு தெரியாம அவர் சட்டைய புடிச்சிட்டேன்”


என்று கூற அதை கேட்ட சுந்தர்ராஜன் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு


“சரி நீ சாப்டியா..”


என்று கேட்க அதற்கு வரதராஜன் ஒன்றும் பேசாமல் இருக்க அதை புரிந்துக்கொண்ட சுந்தரம்


“சரி வா போகலாம்..”


என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றவன் தன் அன்னையிடம் கூறி அவனுக்கு உணவளிக்க அவனும் அதை உண்டு முடித்தான். பின்பு இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜனின் தந்தைக்கு சொந்தமான கரும்பு காட்டிற்கு செல்ல அங்கு சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டிய கரும்புகளை பொழுது சாய்வதற்குள் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு இருவரும் நடந்தபடி ஊருக்குள் வரவே வரதராஜன்


“மாப்ள, வீட்டுக்கு போகவே ஒரு மாதிரி இருக்குடா..”


என்று கூற அதற்கு சுந்தரம்


“டேய் இன்னும் நீ அதை மறக்கலயா..??”


என்று கேட்க அதற்கு வரதராஜன்


“என்ன மாப்ள பேசுற மறக்க கூடிய காரியத்தையா நான் பண்ணிட்டு வந்திருக்கேன் என் பெரியப்பா சட்டையை பிடிச்சுட்டு வந்திருக்கேன் டா இது எவ்வளவு பெரிய பிரச்சனைன்னு தெரியும்ல”


என்று கூற அதற்கு சுந்தரமோ


“புரியுதுடா அதுக்கு என்ன பண்ண முடியும்.. சரி அவ்வளவு பயமா இருந்தா இன்னைக்கு ராத்திரி எங்க வீட்டுல படுத்திருந்துட்டு நாளைக்கு காலையில எழுந்து போறியா..”


என்று கேட்க அதற்கு சிறிது நேரம் யோசித்தவனோ


“இல்லடா நான் போய் என் வீட்டுலயே படுத்துக்குறேன்”


என்று கூறிவிட்டு தன் வீடு இருக்கும் திசையை நோக்கி நடக்க அவன் வீட்டை அடையும் வரை அவனையே பார்த்து நின்ற சுந்தரம் அதன்பின் அங்கிருந்து நகர


“ஆ.. அய்யோ.. அம்மா..”


என்ற தன் நண்பனின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வர அங்கு வரதராஜனை சில காவல் அதிகாரிகள் அடித்து இழுத்துக்கொண்டு செல்வதை பார்த்து சுந்தரம் அவர்கள் முன்‌ சென்று அவர்களை வழிமறித்து விசாரிக்க அவர்களோ


“எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் வந்து பேசுங்க”


என்று கூறிவிட்டு வரதராஜனை ஜீப்பில் ஏற்றி அழைத்துக்கொண்டு செல்ல உடனே சுந்தரம் அவன் வீட்டிற்கு சென்று தன் தந்தையை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வர அங்கு இருந்த அதிகாரி அவருக்கு மரியாதை கொடுத்து அமர வைத்து


“ஐயா உங்களுக்கு தெரியாதது இல்ல இந்த பையன் அவன் பெரியப்பா மேல கை வச்சுட்டான் அதுல கோவப்பட்டவரு இவன் மேல நகையை திருடிட்டான்னு பிராது கொடுத்துருக்காரு எனக்கு ஒன்னும் இல்ல இப்ப கூட நீங்க இவனை கூட்டிட்டு போறதுன்னா தாராளமா கூட்டிட்டு போகலாம்”


என்று சுந்தரத்தின் தந்தையிடம் கூற அதை கேட்ட சுந்தரம்


“அதுதான் உங்களுக்கே எல்லாம் தெரியுதே சார் அப்புறம் ஏன் அவனை அடிச்சு இழுத்துட்டு வந்தீங்க”


என்று கேட்க அதற்கு ஆய்வாளரோ


“தம்பி.. இந்த பையன அடிக்கனும்ன்னு எங்களுக்கு என்ன ஆசையா சொல்லுங்க.. இவன் அண்ணனுக்கு எஸ்பி ய தெரிஞ்சுருக்கு அதனால பிராதை நேரா அங்கயே கொடுத்துட்டாரு அங்க இருந்து ப்ரஷர் வந்ததுனால நாங்க அடிக்க வேண்டியதா போச்சு அதான் கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன வேணும் உங்களுக்கு”


என்று கேட்க உடனே சுந்தரத்தின் தந்தை சுந்தரத்தை பார்த்து


“டேய்..”


என்று கூறிவிட்டு ஆய்வாளரை பார்த்து


“சரி அப்ப அவனை நாங்க கூட்டிட்டு போறோம்”


என்று கூறி வரதராஜனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.


வெளியே வந்த வரதராஜன் சுந்தரத்தின் காரில் ஏற மறுக்க


“வண்டில ஏறுடா வீட்டுக்கு போகலாம்”


என்று சுந்தரம் கூற அதற்கு வரதனோ


“இல்லடா நான் இனிமே அந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்”


என்று சொல்ல அதற்கு சுந்தரம்


“சரி நீ உன் வீட்டுக்கு போக வேண்டாம் என் வீட்டுக்கு போகலாம் வா..”


என்று அழைக்க அதற்கும் வரதராஜன் ஒற்றுக் கொள்ளாது


“எவ்வளவு நாளைக்கு உன் வீட்டுல தங்குவேன் ஒரு வாரம், ஒரு மாசம், ஒரு வருசம் அதுக்கப்புறம்..”


என்று கேட்க அதற்கு சுந்தரம்


“சரி இப்ப நீ எங்கபோற”


என்று கேட்க அதற்கு வரதராஜன்


“தெரியல.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இனி செத்தாலும் அந்த வீட்டு படிய மட்டும் மிதிக்க மாட்டேன்”


என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர அவனை தடுத்து நிறுத்திய சுந்தரம்


“டேய் என்னைய விட்டுட்டு போய்டுவியாடா நீ..”


என்று கேட்க அதற்கு வரதராஜனோ தன் எதிரே நின்றிருந்த நண்பனை கட்டியணைத்த வண்ணம்


“சத்தியமா உன்னை விட்டுட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியலடா”


என்று கூறி கண்ணீர்விட்டவன் தன் நண்பனை பார்த்து


“தயவுசெய்து கெஞ்சி கேட்டுக்கிறேன்டா என்னைய கோழையாக்கிடாதடா..”


என்று கூறும் வேளையில் பட்டணம் செல்லும் கடைசி பேருந்து அங்கு வர அதை நிறுத்தி ஏறியவன் தன் நண்பனை பார்த்து


“நான் உயிரோட இருந்தா உன்னை பார்க்க கண்டிப்பா வருவேன்டா அப்படி நான் வரலேன்னா..”


என்ற வாக்கியத்தை முடிக்காமல் பேருந்தில் ஏற பின்னாலிருந்து அவன் கையை பிடித்த சுந்தரம் அவன் கையில் சில பத்து ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு மேலும் தன் சட்டை பையை தடவிய வண்ணம் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வரதராஜனின் கைகளில் கொடுத்த வண்ணம் அவனை பார்த்து


“இதை செலவுக்கு வச்சுக்கடா.. நான் இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது ஆகவும் விடமாட்டேன்.”


என்று கூறி தன் நண்பனை வழியனுப்பி வைத்துவிட்டு அவன் சென்ற பேருந்தின் வழித்தடத்தையே நோக்கிக் கொண்டிருந்தான்.


அன்று ஊரை விட்டு சென்ற வரதராஜன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் மதராசபட்டினம் வந்து சேர்ந்ததாகவும், அங்கு ஒரு சலவை செய்யும் இடத்தில் தனக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், தான் அங்கு நல்ல மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் கடிதம் எழுதி அனுப்ப அதை படித்துவிட்டு அதற்கு சுந்தரம் பதில் கடிதம் எழுத அன்றிலிருந்து இப்படியாக இவர்களின் உரையாடல் நிகழ்ந்தது.


அடுத்த இரண்டு வருடங்களில் மதராசபட்டினம் சென்ற வரதராஜன் தனியாக தொழில் துவங்கும் அளவிற்கு துணிகளின் தன்மை பற்றியும் அதன் உபயோகம் பற்றியும் தெரிந்து கொண்டான். அவனுடைய அப்போதைய முதலாளியே அவனின் வேலையின் நேர்த்தியை கண்டு அவனை அழைத்து தனியே தொழில் துவங்கும் யோசனையை கூற அதை அடுத்த கடிதத்திலேயே தன் நண்பணுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தான் அதை படித்த சுந்தர்ராஜனுக்கும் அளவில்லா ஆனந்தம் ஆனால் அதே கடிதத்தின் கடைசியில் வரதராஜன் என்ன தான் தொழில் துவங்கும் அளவிற்கு யுக்தி இருந்தாலும் அதை துவங்க பணம் வேணுமே அதுதான் என்னிடம் இல்லையே என்று அவன் பணக் கஷ்டத்தை கூறி எழுதியிருக்க அதை படித்த சுந்தர்ராஜன் அடுத்த நாளே இரயில் ஏறி தன் நண்பனை காண மதராசபட்டினம் வந்தடைந்தான்.


தன் நண்பணின் திடீர் வருகையில் திக்கு முக்காடிப்போன வரதராஜன் அங்கயே அனைவர் முன்பும் தன் நண்பனை தூங்கி சுத்த அதை அங்கிருந்தோர் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அதை பார்த்த சுந்தர்ராஜன்


“மாப்ள இறக்கி விடுயா எல்லோரும் பார்க்குறாங்க”


என்று கூற உடனே இத்தனை வருடங்களாக அங்கு வேலை பார்த்த அனைவரிடத்திலும்


“அண்ணா.. நான் சொல்லுவேன்ல என் நண்பன் சுந்தரம் அது இவன் தான்”


என்று பார்க்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். அதேசமயம் அங்கு வந்த அவனது முதலாளியிடமும் சுந்தரத்தை அறிமுகம் செய்து வைக்க அவர் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று சுந்தரத்தை அமர வைத்து


“நீங்கதான் அந்த சுந்தரமா தம்பி.. இவன் இருக்கானே எப்ப வாயை திறந்தாலும் உங்களை பத்தி மட்டும் தான் பேசிட்டே இருப்பான்.. நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து அவ்வளவு நெருங்கின நண்பர்கள்ன்னு உங்கள பத்திதான் பேசிட்டே இருப்பான். சாப்பிட மறந்தாலும் மறப்பானே தவிர உங்கள பத்தி மட்டும் பேச மறந்ததில்லை.”


என்று அவர் கூற கூற தன் நண்பனை பார்த்தவன் அவரை பார்த்து


“ஆமாங்க நானும் அவனும் சின்ன வயசுல இருந்து பிரிந்ததே இல்ல எங்க போனாலும் ஒன்னா தான் போவோம் இப்ப தான் இவன் இங்கேயும் நான் அங்கேயும்..”


என்று மன வருத்தத்துடன் கூற அதை பார்த்த வரதனின் முதலாளி


“சரி தம்பி ரொம்ப தூரத்துல இருந்து உங்க நண்பனை பார்க்க வந்துருக்கீங்க தொலைத்தூர ப்ரயாணம் அலுப்பா இருக்கும் நீங்க போய் குளிச்சுட்டு ஓய்வெடுத்துக்கங்க நான் அப்புறமா வந்து பார்க்குறேன்.”


என்று கூறி வரதனை பார்த்து


“வரதா தம்பிய கூட்டிட்டு போயா”


என்று கூற அதற்கு சுந்தரமோ


“இல்லங்க ஐயா, ஓய்வெடுக்க எல்லாம் நேரம் இல்லிங்க நான் வந்த வேலைய முடிச்சிட்டு ராத்திரி ரயிலுக்கு வண்டி ஏறனும்”


என்று கூற இதை கேட்ட வரதராஜன்


“மாப்ள, என்னையா சொல்ற அப்ப நீ என்னைய பார்க்க வரலையா??”


என்று வரதன் கேட்க அதற்கு சுந்தரம்


“என்னயா பேசுற.. உன்னைய விட்டா இந்த பட்டணத்துல எனக்கு யார தெரியும் உன்னை பார்க்க தான் வந்தேன் ஆனா உன் கடுதாசிய படிச்சு நீ தொழில் துவங்க காசு இல்லாததால எங்க தொழில் துவங்காம இருந்துடுவியோன்னு ஊர்ல போட்டது போட்டபடி வந்துட்டேன்”


என்று கூறி தன் வேட்டியை தூக்கி உள்ளே அணிந்திருந்த பட்டாபட்டியின் பாக்கெட்டிலிருந்து ஒரு மஞ்சபையை எடுத்து அதை தன் நண்பன் கையில் கொடுத்து


“இந்தா மாப்ள, இதுல ரூபாய் பத்தாயிரம் இருக்கு இதை வச்சு நீ ஆசைப்பட்ட துணி கடை தொழில அமோகமா துவங்கு இனி உன் வாழ்க்கையில எல்லாமே வெற்றி தான்.”


என்று தன் நண்பனுக்கு தேவைப்பட்ட பணத்தை கொடுக்க அதற்கு அவனோ‌ எதுவும் பேசாமல் சுந்தரத்தையே பார்க்க உடனே சுந்தரம்


“என்னயா அப்படி பாக்குற..??”


என்று கேட்க அதற்கு வரதன்


“நான் உனக்கு அப்படி என்ன செய்துட்டேன்னு எனக்கு இவ்வளவு பண்ற”


என்று கேட்க அதற்கு சுந்தரம்


“என்னையா பேசுற.. நீ என் நண்பன்யா அது ஒன்னு போதாது நான் உனக்கு பணம் கொடுக்க..”


என்று கூற அவ்விடத்திலேயே இருவரும் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் விட இவை அனைத்தையும் பார்வையாளராய் நின்று பார்த்த வரதனின் முதலாளிக்கும் தன்னை அறியாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. சில நாழிகைகளுக்கு பிறகு சுந்தரம்


“சரி மாப்ள, எனக்கு ரயிலுக்கு நேரமாச்சு நான் இப்ப கிளம்புனாதான் சரியா இருக்கும்”


என்று கூறிவிட்டு ஒருமுறை வரதனை பார்த்து


“மாப்ள ஒருநாள் ஊருக்கு வாயா”


என்று அழைக்க அதற்கு சில நிமிடங்கள் மௌனமாய் இருந்த வரதன் சுந்தரத்தை பார்த்து


“ம்.. வரேன் மாப்ள.. உனக்காக மட்டும் வரேன்..”


என்று கூற அதை கேட்ட சுந்தரம் முழு மனநிறைவுடன் ஊர் திரும்பினார்.

IMG_20220803_005828.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 02

தன் நண்பனுக்கு தேவைப்பட்ட பணத்தை கொடுத்துவிட்டு

“இனி உன் வாழ்க்கையில எல்லாமே வெற்றி தான்.”

என்று கூறி அவனை வாழ்த்தி ஊர் திரும்பினான் சுந்தரம். அன்றிலிருந்து தன் நண்பன் நாவிலிருந்து வந்த

“வெற்றி” என்ற சொல்லையே அவன் துவங்கவிருக்கும் சலவையகத்திற்கு “வெற்றி சலவையகம்” என பெயரிட்டு அதை ஆரம்பிக்க அது அவன் நண்பன் கூறியதை போலவே வெற்றியை கண்டது.

அதன் பின்னர் சில ஆண்டுகளில் அவன் ஆரம்பித்த ஒரு கிளை இரண்டு கிளையாகவும் அது நான்காகவும் என பெருகிக் கொண்டே போனது.

அதேசமயம் வரதராஜனுக்கு ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பிடித்துப்போக அவள் மீது காதல் வர அதை அடுத்த கடிதத்திலேயே தன் நண்பன் சுந்தரத்துக்கு தெரிவித்தான். அதை படித்த சுந்தரம் தன் நண்பன் அவனுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைந்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் கொண்டான். அதேவேளை அவளும் இவன் மீது காதல் வயப்பட அடுத்த கட்டமாக இவ்விடயம் அப்பெண்ணின் தந்தையிடம் சென்றது. இவனும் ஊரிலிருந்த தன் நண்பனை வரவழைத்து அவன் விரும்பும் பெண்ணின் வீட்டு படியேறி அவள் தந்தையிடம் மரியாதையுடன் அவர் பெண்ணை கேட்க அவரும் தன் மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து வரதனின் குணத்தின் மீது மரியாதைக் கொண்டு அவரது மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

அதன் பிறகு வரதன் அவன் வாழ்க்கையில் ஏற்றம் ஒன்றையே கண்டான். அடுத்த சில வருடங்களில் சுந்தரத்திற்கு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நடக்க தம்பதி சமேதராக வந்திருந்தனர் வரதராஜனும் அவனது மனைவி வனஜாவும்.

காலங்கள் உருண்டோடின.. வரதஜானுக்கு வெற்றிமாறன் மற்றும் வெற்றிகுமரன் என இரு மகன்களும் சுந்தர்ராஜனுக்கு வசந்தகுமார் என்ற மகனும் பிறந்தனர். விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது கடிதம் டெலிபோனானது இருவர் மகன்களும் நன்றாக படித்தனர் வருடங்கள் செல்ல செல்ல வரதராஜனின் தொழில் சாம்ராஜ்யமும் வளர்ந்துக் கொண்டே போனது நிர்வாகம் அவர் மகன்கள் கைக்கு செல்ல வெற்றி சலவையகம் வெற்றி கார்மெண்ட்ஸ் என அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி சென்றது.

தொழிலில் முழுநேர கவனம் செலுத்துவதால் இவர்களால் பல வருடங்களுக்கு ஊர் பக்கமே போகமுடியவில்லை. இன்று வரதராஜனுக்கும் சுந்தர்ராஜனுக்கும் பேரக் குழந்தைகள் கூட வந்துவிட்டனர். ஆம் சுந்தர்ராஜனின் மகன் வசந்தகுமாருக்கு தமிழ்செல்வன் என்ற மகனும் யாழினி என்ற மகளும் பிறக்க வரதராஜனின் பெரிய மகன் வெற்றிமாறனுக்கு வெற்றிவேந்தன் மற்றும் வெற்றிவேலன் என இரு மகன்களும் இளைய மகன் வெற்றிகுமரனுக்கு வெற்றிசெழியன் என்ற மகனும் வெற்றிசெல்வி என்ற மகளும் பிறந்தனர். அதோடு இவர்கள் இருவரின் உரையாடலும் டெலிபோனிலிருந்து மொபைலுக்கு மாறியது‌. மேம்பட்டது இவர்களின் உரையாடல் மட்டுமல்ல வரதராஜனின் கார்மெண்ட்ஸ் பிசினஸும் தான் ஆம் பேரப் பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் கையில் நிர்வாகம் செல்ல வெற்றி கார்மெண்ட்ஸை வெற்றி டெக்ஸ் & பேஷன் என முன்னேற்றம் கண்டது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல கிளைகள் உருவானது.

அதேசமயம் சுந்தர்ராஜனின் வளர்ச்சியும் அமோகமாக இருந்தது என்றே கூறவேண்டும். ஆம் அன்று ஒரு சிறு கிராமத்துக்கு மட்டுமே பெரிய மனிதராக இருந்த சுந்தர்ராஜன் இன்று அவரின் சொந்த மாவட்டமான திருநெல்வேலியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒரு முன்மாதிரி வேளான் விவசாயியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது அதுமட்டுமின்றி போன வருடம் அம்மாவட்ட ஆட்சியரின் கைகளால் பசுமை வேளாண் புரட்சி நாயகன் என அரசாங்க விருதும் வழங்கப்பட்டு இன்று அந்த மாவட்டமே மரியாதையுடன் வணங்கும் பெரிய மனிதராய் வளம் வருகிறார்.

சரியாக காலை 8 மணி..

“என் ப்ரெண்ட போல யாரு மச்சான்..
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என ஏங்கி ஏங்கி ஏங்க வச்சான்..”

என்ற நடிகர் விஜய்ன் நண்பன் படப் பாடல் அலைபேசியில் ரிங்டோனாக ஒலிக்க அதை எடுத்து

“மாப்ள.. எப்டியா இருக்கயா..”

என்ற தன் நண்பன் சுந்தரத்தின் குரலை கேட்டு மகிழ்ந்த வரதன்

“நான் நல்லா இருக்கேன் மாப்ள, நீ எப்டியா இருக்க..”

என்று கேட்க அதற்கு சுந்தரம்

“எனக்கென்னயா நான் ஜம்முன்னு இருக்கேன்..”

என்று கூற உடனே வரதன்

“ஆமா மாப்ள போன தடவை பேசும்போது நம்ம தமிழு கலெக்டருக்கு படிக்குறான்னு சொன்னியே பரிட்சை எழுதிட்டானா..”

என்று கேட்க அதற்கு சுந்தரமோ

“ஆ.. அவன் எழுதிட்டான் மாப்ள.. இண்டர்வ்யூ வர சொல்லி கடுதாசி வந்திருக்கு அதான் திருவிழா முடிஞ்சு டெல்லிக்கு போக தயாராகிட்டு இருக்கான். அப்புறம் அங்க புள்ளைங்க எல்லாம் எப்டி இருக்காங்க..”

என்று விசாரிக்க அதற்கு வரதனோ

“ஆ.. இங்க எல்லாரும் நல்லா இருக்காங்கயா.. அங்க எல்லாரும் சுகமா இருக்காங்களா..”

என்று கேட்க அதற்கு சுந்தரம்

“இங்கயும் எல்லாரும் நல்லா இருக்காங்க மாப்ள..”

என்று இவ்வளவு நேரம் கலகலவென்று பேசியவர்

“ஏன்யா அடிக்கடி ஊருக்கு வரமுடியல சரி மூணு வருசத்துக்கு ஒரு தடவை வர்ற ஊர் திருவிழாவுக்காவது வரலாம்ல..”

என்று கேட்க சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

“சரி மாப்ள.. இந்த திருவிழாவுக்கு குடும்பத்தோட ஊருக்கு வர்றேன்..”

என்று கூற இதை கேட்ட சுந்தரத்திற்கு மகிழ்ச்சியில் மனம் திக்கு முக்காடி போக, உடனே தன் நண்பனிடம்

“சரி மாப்ள நான் அப்ப வசந்த்கிட்ட சொல்லி எல்லா வேலையும் பார்க்க சொல்றேன்”

என்று கூறி அழைப்பை துண்டித்தவர்

“வசந்த்.. வசந்த்..”

என்று தன் மகனை அவசர அவசரமாக அழைக்க அதற்குள் அங்கு வந்த அவரது பேரன் தமிழ்ச்செல்வன்

“சொலலுங்க தாத்தா.. ”

என்று கேட்க அதற்கு அவரோ

“டேய் தமிழு.. வசந்த் எங்கடா..”

என்று கேட்க அதற்கு அவனோ

“காலைல களத்துமேட்டுக்கு போயிட்டு வரேன்னு போனாரு தாத்தா இப்ப வர்ற நேரம் தான் என்ன விஷயம் தாத்தா”

என்று கேட்க அவர் அதற்கு பதில் சொல்வதற்குள் அங்கு வந்த யாழினி

“என்ன பெருசா இருக்கப்போகுது மணி எட்டாச்சு வழக்கம்போல போன் வந்துருக்கும் அதை எடுத்து பேசியிருப்பாரு.. ”

என்று அவள் கூற கூற சுந்தர்ராஜனின் கண்கள் மின்னின

“அதுக்கப்புறம் அவரு நம்ம குடும்பத்துல இருக்குற ஒருத்தர் விடாம எல்லார் பத்தியும் கேட்ருப்பாரு.. அதுக்கு இவரு பதில் சொல்லிட்டு இவரும் அவங்க குடும்பத்துல இருக்க எல்லார் பத்தியும் விசாரிச்சுருப்பாரு.. அதுக்கு அவரும் பதில் சொல்லிருப்பாரு, அப்ப சமீபத்துல கல்யாணமான அவரோட ரெண்டு பேரன்களுக்கும் இப்ப ஏதாவது நல்ல விசயம் இருக்கும் அப்படி இல்லாட்டி அவரோட பிசினஸ்ல புது ப்ராஞ்ச் ஓபன் பண்ணப்போறதா சொல்லிருப்பாரு அப்புறம் லாஸ்ட்டா போனை வைக்கும்போது..”

என்று யோசித்தவள் பக்கத்தில் நின்றிருந்த தன் அண்ணனை பார்த்து

“அது என்ன படம்னா 90'ஸ் கிட்ஸ் படம்”

என்று கேட்க அதற்கு அவனும் தன் தங்கை பேசுவதை கேட்டு வரும் சிரிப்பை வாயில் கை வைத்து கட்டுப்படுத்தியபடி

“நட்புக்காக..”

என்று கூற அதை கேட்டு அவளும்

“ஆ.. நட்புக்காக படத்துல வர்ற விஜயகுமார், சரத்குமார் மாதிரி பாச உரையை முடிச்சுட்டு போன வச்சுருப்பாரு.. இவருக்கு அவர குடும்பத்தோட இங்க வந்து தங்கிட்டு போகனும்னு ஆசை ஆனா கூப்பிட்டா தன் நண்பன் மனசு கஷ்டப்படும்ன்னு கூப்பிட மாட்டாரு அவரும் வர்றா மாதிரி தெரியல.. ”

என்று கூறி முடித்தவள் தனக்கு எதிரில் நின்றிருந்த தன் தாத்தாவை பார்த்து

“என்ன பெர்சு.. நான் சொன்னது கரெக்ட்டு தானே.. இன்னைக்கும் இதானே நடந்துச்சு..”

என்று கேட்க அதே சமயம் பின்னாலிருந்து ஒருவர் யாழினியின் காதை பிடித்து திருவ

“ஆ..”

என்றவள் தன் தலையை திரும்பி பார்க்க அவளின் காதை பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்தார் யாழினியின் தந்தை வசந்தகுமார்

“என்ன ஆள் வீட்ல இல்லைன்னதும் குளிர்விட்டு போச்சா.. ”

என்று காதை திருவியபடி கேட்க அதற்கு அவளோ

“ஆ.. இல்லப்பா.. இல்லப்பா.. நானும் தாத்தாவும் சும்மா விளையாடிட்டு இருந்தோம்பா அவ்வளவுதான் ”

என்று கூற அதை பார்த்து தாத்தாவும் பேரனும் சிரிக்க உடனே வசந்தகுமார் தன் தந்தையிடம்

“அப்டியாப்பா.. ”

என்று கேட்க அதற்கு அவர் பதில் கூற தாமதமாக்க அதற்குள் யாழினி

“யோவ்.. பெர்சு.. சீக்கிரம் சொல்லுயா.. ”

என்று கூற அதை கேட்ட வசந்தகுமார்

“என்ன சொன்ன.. ”

என்றபடி மேலும் அவளது காதை திருவ

“ஐயோ தாத்தா சார்.. சொல்லுங்க சார்.. நாம விளையாட்டா தான பேசிட்டு இருந்தோம் சொல்லுங்க சார்..”

என்று கேட்க அதற்கு அவரோ

“டேய் வசந்தா.. அந்த கொரங்க விடுடா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசனும்..”

என்று கூற

“கொரங்கா.. ”

என்றபடி தன் தாத்தாவை பார்த்து முறைக்க வசந்தகுமாரும் தன் தந்தையின் பேச்சை கேட்டு தன் மகளின் காதுகளிலிருந்து கை எடுக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்து அவ்வறையின் வாசல் வரை வந்தவள் தன் தாத்தாவை பார்த்து மெல்லிய குரலில்

“போயா கிழவா..”

என்று கூற அதை கவனித்த சுந்தர்ராஜன் உடனே தன் மகனை பார்த்து

“வசந்தா அவள் ஏதோ சொல்றா பாரு..”

என்று கூற அதை கேட்டு அவர் திரும்பி பார்ப்பதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டாள் அந்த வீட்டின் செல்லக் குட்டி ராட்சசி யாழினி.

ஒல்லியான தேகமும் எலும்புடன் ஒட்டிய தசையும் எண்ணெய் வடியும் முகமும் என பார்க்கவே ஒரு முழு பட்டிகாட்டு பெண்ணை போலவே இருப்பாளவள். வயதோ 20 ஆகிறது ஆனால் இன்னமும் சிறுபிள்ளை குறும்பு மட்டும் அவளைவிட்டு போகவில்லை என்றே கூறவேண்டும். இந்த மாதம் தான் பி‌.காம் ஜெனரல் கடைசி செமஸ்டரை எழுதி முடித்தாள் அதற்கு வரும் மதிப்பெண்களை வைத்தே எந்த கல்லூரியில் எம்.காம் சேரவேண்டும் என்று முடிவு செய்ய இருக்கிறாள். படிப்பில் எக்குறையுமில்லை சேட்டை தான் அதிகம்.

இவ்வீட்டின் கடைசி பிள்ளை என்பதாலும் பெண்பிள்ளை என்பதாலும் அவளுக்கு இங்குள்ள அனைவரிடமும் ஏகபோக சலுகை உண்டு. குறிப்பாக அவளது தந்தை தாத்தா மற்றும் அண்ணனிடம் அதுவும் அவளது அண்ணன் அவளை இன்னொரு அன்னையாகவே பாவித்து வருகிறான் என்பதே சரியாகும்.

யாழினிக்கும் தமிழுக்கும் கிட்டதட்ட 8 வயது வித்தியாசம் ஆம் தமிழ் பிறந்து 8 வருடங்களுக்கு பிறகே இவள் பிறந்தாள். அதேபோல இவ்வீட்டின் கணக்கு வழக்குகளையும் தாத்தா அப்பாவின் ரைஸ் மில் கரும்பு காடு விவசாய நிலங்கள் ஆகியவற்றையும் அதில் வரும் வருமானத்திற்கும் இவளே கணக்கு வழக்கு பார்ப்பாள். அதுமட்டுமின்றி இவ்வூரில் எந்த ஒரு நற்காரியம் தொடங்கினாலும் அதை ஊர் மக்கள் இவளை முன்நிறுத்தியே செய்வார்கள். இதனால் இவள் இவ்வீட்டிற்கு மட்டுமல்ல இவ்வூருக்கும் செல்ல பிள்ளை தான்.

அவளின் அறிமுகத்தை தொடர்ந்து..

அவள் சென்றதும் வசந்த் தன் தந்தையை பார்த்து

“சொல்லுங்கப்பா..”

என்று கேட்க அதற்கு அவரோ

“இன்னைக்கு காலைல வரதன் போன் பண்ணிருந்தான்யா அப்ப நான் அவனை ஊருக்கு வரச்சொல்லி கூப்பிட்டேன்.. அதுக்கு அவனும் அதிசயமா சரிப்பா இந்த திருவிழாவுக்கு நான் குடும்பத்தோட வரேன்னு சொல்லிட்டான்.. அதனால நீ என்ன பண்ற அவங்க வந்தா தங்க இடமும் அவங்களுக்கு ஒத்தாசைக்கு ஆட்களும் சாப்பாடு சமைச்சு போட ஆளும்ன்னு எல்லாம் ஏற்பாடு செய்துடு”

என்று கூற அதற்கு அவரது மகனோ

“என்னப்பா சொல்றீங்க வரதன் மாமா குடும்பத்தோட ஊருக்கு வர்றாங்களா..”

என்று ஆச்சரியமாக கேட்க அதற்கு அவரும்

“ஆமா யா..”

என்று குதுக்கலமாக சொல்ல உடனே வசந்தோ

“தோ.. நான்‌ போய் எல்லாத்தையும் ரெடி பண்றேன் பா..”

என்று கூறிவிட்டு அவர் செல்ல, இங்கு இவரோ தன் நண்பனின் வருகையை எண்ணி மனதிலேயே மகிழ்ந்துக் கொண்டிருந்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு..

பல நாட்களாக சுந்தர்ராஜன் காத்திருந்த நாள் வந்தது ஆம் ஊர் திருவிழாவன்று பல வருடங்களுக்கு பிறகு தன் உறவுகளை அழைத்துக் கொண்டு கங்கைகொண்டானுக்கு வந்திருந்தார் வரதராஜன்.

அவர்களை அழைத்துக்கொண்டு வர சென்ற வசந்த் அவர்களை நேராக திருவிழா நடக்கும் கோவிலுக்கே அழைத்து வர அங்கே ஏற்கனவே வந்து காத்துக் கொண்டிருந்த சுந்தர்ராஜன் குடும்பமும் அங்கு இருக்க வெகு நாட்களுக்கு பிறகு இரு குடும்பத்தாரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டனர்.

முக்கியமாக வரதராஜனும் சுந்தர்ராஜனும் பார்த்தவுடனே கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சுந்தர்ராஜன் நண்பனின் மனைவியை பார்த்து

“எப்படிம்மா இருக்க..”

என்று கேட்க அதற்கு அவரும்

“ம்.. நான் நல்லா இருக்கேன் அண்ணா..”

என்று கூற, வரதராஜனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பார்த்து சுந்தர்ராஜன்

“உங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு வருசமாச்சுப்பா..”

என்று அவர்கள் முகத்தில் வாஞ்சையாக தடவியபடி கூற அதற்கு அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அதனால் மௌனமாக ஒரு புன்னகையுடன் நின்றனர்.

அதேபோல வரதராஜன், சுந்தர்ராஜன் குடும்பத்தாரை நலம் விசாரிக்க, அங்கு ஒரு தனி ட்ராக் ஓடிக் கொண்டிருந்தது ஆம் நம் கதையின் இரண்டாவது நாயகன் அவனது நாயகியை பார்க்க அவளும் வைத்த கண் வாங்காது அவனை பார்த்து வைத்தாள் இருவரும் ஒருவரை ஒருவர் விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவர்களை தொந்தரவு செய்யும் விதமாய் வரதராஜன் தமிழ்செல்வனை பார்த்து

“என்னப்பா தமிழ்.. கலெக்டர் படிப்பெல்லாம் எப்படி போகுது..”

என்று கேட்க, அதை கேட்டு சுயத்திற்கு வந்த தமிழ்

“ம்.. நல்லா போகுது தாத்தா.. படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சு இன்னும் ஒரு பத்து நாள்ல இன்டர்வ்யூக்காக டெல்லி போகனும் அதுல செலக்ட் ஆகிட்டா அப்புறம் ட்ரெய்னிங் கம்ப்லிட் பண்ணதும் போஸ்டிங் போட்ருவாங்க..”

என்று கூற அப்போது சுந்தர்ராஜன்

“என்ன மாப்ள.. உன் பேத்திக்கு பொண்ணு பார்க்கிறேன்னு சொன்னியே வரன் ஏதாச்சும் வந்துச்சா..”

என்று அவர் கேட்க, அதற்கு வரதராஜனோ

“எங்க மாப்ள ஒன்னு ஜாதகம் பொருத்தம் சரி இருக்க மாட்டேங்குது.. அப்படி இல்லாட்டி வர்ற மாப்பிள்ளையை பேத்தி பிடிக்கலைன்னு சொல்லிடுறா..”

என்று கூற உடனே சுந்தர்ராஜன்

“அப்ப நான் வேணும்னா நம்ம ஊர்ல பார்த்து சொல்லட்டும்மா..”

என்று கேட்க அதற்கு அவரும்

“அட ஆமா மாப்ள சொன்னா மாதிரி நீயும் இங்க பாரு நானும் அங்க பார்க்குறேன்..”

என்று கூறி தன் மகன் வெற்றிகுமரனை பார்த்து

“என்னப்பா நீ என்ன சொல்ற..”

என்று கேட்க அதற்கு அவரும்

“உங்க இஷ்டம் பா..”

என்க உடனே சுந்தர்ராஜன்

“அப்புறம் என்ன..”

என்று கூறிவிட்டு எதிரில் நின்றிருந்த தன் நண்பனை பார்த்து

“சொல்லுய்யா.. நம்ம செல்விக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்.. டாக்டர் மாப்பிள்ளையா.. பிசினஸ் பண்ற மாப்பிள்ளையா..”

என்று கேட்க அதற்கு சுந்தர்ராஜனோ

“அதை அவக்கிட்டயே கேளு..”

என்றவர் தன் பேத்தியை பார்த்து

“செல்விம்மா.. தாத்தா கேட்குறார்ல சொல்லுடா உனக்கு எந்தமாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்..”

என்று கேட்க அதற்கு அவளோ

“எனக்கு கலெக்டர் மாப்ளன்னா ஓகே தாத்தா..”

என்றாள் வெளிப்படையாக.

IMG_20220803_005828.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 03

சுந்தர்ராஜன் எதிரில் நின்றிருந்த தன் நண்பனை பார்த்து


“சொல்லுடா.. நம்ம செல்விக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்.. டாக்டர் மாப்பிள்ளையா.. பிசினஸ் பண்ற மாப்பிள்ளையா..”


என்று கேட்க அதற்கு சுந்தர்ராஜனோ


“அதை அவக்கிட்டயே நீயே கேளுடா..”


என்றவர் தன் பேத்தியை பார்த்து


“செல்விம்மா.. தாத்தா கேட்குறார்ல சொல்லுடா உனக்கு எந்தமாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்..”


என்று கேட்க அதற்கு அவளோ


“எனக்கு கலெக்டர் மாப்ளன்னா ஓகே தாத்தா..”


என்றாள் வெளிப்படையாக இதை கேட்ட சுந்தர்ராஜன்


“அட என் பேத்திக்கு கலெக்டர் மாப்பிள்ளை தானே பார்த்துட்டா போச்சு..”


என்று சொல்ல அதற்கு அவளோ


“மாப்பிள்ளை இங்கேயே இருக்கும்போது ஏன் வெளியே பார்க்கனும்”


என்றாள் இன்னும் வெளிப்படையாக இதை கேட்ட அனைவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்தபடி


“என்ன சொல்றா இவ.. அதானே..”


என்று பேசிக் கொள்ள, உடனே சுந்தர்ராஜன் வரதராஜனைப் பார்த்து


“அட.. இதை நாம யாரும் யோசிக்கலயே.. என்ன மாப்ள, இதுவரைக்கும் நண்பர்களா இருந்த நாம குடும்பம்மா ஆகிடலாமா..”


என்று கேட்க அதற்கு வரதராஜன்


“எனக்கு சந்தோசம் தான் மாப்ள.. ஆனா எதுக்கும்”


என்றபடி தன் இளைய மகனையும் மருமகளையும் ஏறிட்டு பார்க்க, அவரின் பார்வை புரிந்து கொண்டோர் உடனே தன் மகளை பார்த்து


“ஏய் செல்வி.. இது விளையாட்டு இல்ல வாழ்க்கை பார்த்து கவனமா சொல்லு இந்த பையனை இப்ப தானே பார்த்த இன்னும் பேச கூட இல்லை சோ டைம் வேணும்னா எடுத்துக்கோ ஆனா நல்லா யோசிச்சு சொல்லு..”


என்று அவளின் காதுகளில் மெல்லிய குரலில் கூற அதற்கு அவளோ


“அதெல்லாம் தேவை இல்லைப்பா எனக்கு அவர் ஓகே தான்..”


என்று கூறியதும் உடனே அவர் தன் தந்தையை பார்த்து


“எங்களுக்கு சம்மதம்ப்பா..”


என்று கூற உடனே மலர்ந்த முகத்துடன் தன் நண்பனை பார்த்து


“எங்களுக்கு சம்மதம்ப்பா எதுக்கும் பையனை ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க..”


என்று கூற உடனே அவர் பக்கத்தில் நின்றிருந்த மகனையும் பேரனையும் பார்க்க அந்நேரம் மகன் பக்கத்தில் நின்றிருந்த மகனின் மனைவியோ தன்னவரின் சட்டையை பிடித்து இழுத்தபடி வேண்டாம் என்று கூறுங்கள் என்றபடி இழுக்க அவரோ என்ன சொல்வதென்று புரியாமல் மௌனம் காக்க அச்சமயம் தமிழ்செல்வனோ


“எனக்கு சம்மதம் தாத்தா.. ஆனா பர்ஸ்ட் வேலைல ஜாய்ன் செய்துட்டு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் நான் கல்யாணம் செய்துப்பேன் இதுக்கு சம்மதம்னா எனக்கும் ஓகே..”


என்று கூறிவிட அதை கேட்ட சுந்தர்ராஜனுக்கு வாயெல்லாம் பல்லாக தன் நண்பனை பார்த்து


“அப்புறம் என்ன மாப்ள.. இனி நாம ஒரே குடும்பமாகியாச்சு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க வேண்டியது தானே..”


என்க அதற்கு வரதராஜனும்


“அதே தான் மாப்ள நானும் சொல்லலாம்ன்னு இருந்தேன்..”


என்க அப்போது அங்கு வந்த பூசாரி சுந்தர்ராஜனிடம் பூஜைக்கு நேரமாகிறது என்று தெரிவிக்க, உடனே சுந்தர்ராஜன்


“சரி எல்லோரும் வாங்க சாமி கும்பிட்டு வீட்டுக்கு போகலாம்..”


என்று இரு குடும்பத்தினரும் முகம் முழுதும் மகிழ்ச்சியுடன் சென்று சாமி கும்பிட சென்றனர். அங்கு ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் சுந்தர்ராஜனுக்கும் அவரது மகன் வசந்தகுமாருக்கும் அக்கோவில் பூசாரியும் நிர்வாகிகளும் பரிவட்டம் கட்டி கௌரவப்படுத்தினர். அதன்பின் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப வரும் வழியெங்கும் வசந்தகுமார் மனைவி அர்ச்சனா மணாளனையும் மகனையும் முறைத்துக் கொண்டே வந்தார். அதில் தந்தைக்கும் மகனுக்கும் கிலி உண்டானது.


அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்தடைய அனைவரும் அவர்கள் வீட்டின் ஹாலில் அமர வசந்தகுமாரின் மனைவி நேராக தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார் பின்னாலேயே சென்ற மகனும் மணாளனும் உள்ளே வர கண்களை கசக்கியபடி தன் அலைபேசியை எடுத்து தன் அண்ணனுக்கு அழைத்து


“அண்ணா நீயும் அண்ணியும் கிளம்பி உடனே இங்க வாங்க..”


என்று கூற அவரும் தங்கையின் குரலை வைத்து இங்கு ஏதோ பிரச்சினை என்பதை புரிந்துக் கொண்டு தன் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு உடனே கிளம்பினார். அழைப்பை துண்டித்த அர்ச்சனா எதிரில் நின்றிருந்த இருவரையும் பார்க்க மகனோ


“ம்மா.. எனக்கு அவள பிடிச்சுருக்கும்மா..”


என்று கூற அதற்கு அவரோ


“அப்ப மலர்கொடி.. அவளுக்கு என்ன பதில் சொல்லப்போற சின்ன வயசுல இருந்து அவளுக்கு நீ உனக்கு அவன்னு சொல்லி சொல்லி அவ மனசுல ஆசைய வளர்த்துட்டோம் இப்ப வந்து எனக்கு அவள புடிச்சிருக்கு இவள புடிச்சிருக்குன்னு சின்னபுள்ள மாதிரி சொல்ற..”


என்று கூறிக்கொண்டிருக்க அச்சமயம் கதவை திறந்து உள்ளே வந்த யாழினி


“ம்மா.. அங்க எல்லாரும் உட்கார்ந்துட்டு இருக்காங்க சாப்பிட ஏதாவது கொடும்மா..”


என்று கூற அதற்கு அவரோ


“ஏ.. போடி..”


என்று கூறி அங்கேயே மெத்தையில் அமர உடனே வசந்தகுமார்


“அம்மாடி.. நீங்க போயி காபி போடுங்க.. அம்மா வந்துடுவா..”


என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு தன் மனைவியின் பக்கத்தில் அமர்ந்தவர் அவரின் கைகளை பற்ற அதை அவர் உதற மீண்டும் அவர் கையை பற்றியபடி


“அர்ச்சனா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.. இது நம்ம பையனோட வாழ்க்கை இதை அவன் தான் முடிவு பண்ணணும் நாளைக்கு ஒன்னா சேர்ந்து வாழப்போறது அவங்க தான் நீயோ நானோ இதுல முடிவு எடுக்க ஒன்னுமில்ல அதனால இதை புரிஞ்சுட்டு இதுக்கு சம்மதம் சொல்லுடா.. உன் அண்ணன் பொண்ணுக்கு வேணும்னா நாமலே ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கலாம்..”


என்று கூற இதை கேட்டு ஆத்திரமடைந்த அர்ச்சனா


“ஏன் என் அண்ணன் என்ன ஒன்னும் இல்லாதவரா அவர் பொண்ணுக்கு நீங்க கல்யாணம் செய்து வைக்க.. அவர் நினைச்சா வண்டி வண்டியா சீர் கொடுத்து சீமான் வீட்டு பையன அவர் பொண்ணுக்கு கட்ட முடியும் ஏன் இதெல்லாம் நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன..”


என்றவர் உடனே


“நான் ஒருத்தி உங்ககிட்ட போய் எதுக்கு இதெல்லாம் சொல்லிகிட்டு..”


என்றபடி தனக்கு எதிரில் நின்றிருந்த மகனை பார்த்து


“எல்லாம் இவன சொல்லனும்..”


என்று தன் மகனை எழுந்து இரண்டடி போட்டார்.


அதேவேளை சுந்தர்ராஜன் வந்த நண்பன் குடும்பத்தாரிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு தன் மகன் குடும்பம் இல்லாததை கவனித்தவர்


“வசந்தா..”


என்று தன் மகனை அழைக்க அவர் தந்தையின் குரலை கேட்டு ஓடி வர


“என்னங்கப்பா..”


என்று கேட்டார் அவர் கேட்டதும்


“அர்ச்சனா, தமிழ் எங்கடா..”


என்று கேட்க அதற்கு அவரோ


“அர்ச்சனா சமைக்குறாப்பா தமிழும் நானும் திருவிழா பத்தி பேசிட்டு இருந்தோம்பா..”


என்று கூறி சமாளித்துக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தனர் அர்ச்சனாவின் அண்ணன் குமாரசாமியும் அவரது குடும்பமும். உள்ளே நுழைந்ததும் அங்கு அமர்ந்திருந்த வரதராஜன் குடும்பத்தை பார்த்து


“அடடே.. நம்ம வரதன் மாமா.. வாங்க மாமா.. எப்படி இருக்கீங்க..”


என்றவர் உடனே தன் மனைவியை பார்த்து


“ஏ..புள்ள.. நான் சொல்லிருக்கேன்ல வரதன் மாமா..”


என்க அது அவ்வளவு சீக்கிரத்தில் அவரது மனைவியின் நினைவுகளில் விழாமல் போக உடனே


“அதான் புள்ள சின்ன வயசுலயே இந்த ஊரைவிட்டு போய் சென்னைல வேலை செஞ்சு இன்னைக்கு அங்கேயே பெரிய கம்பெனி வச்சாருன்னு..”


என்று அதை அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே நெற்றியில் கைவைத்து நினைவு வந்தவராய்


“ஆ.. ஆமாங்க.. சுந்தரம் அப்பாவும் இவங்களும் கூட சின்ன வயசு சிநேகிதங்கன்னு சொல்லுவீங்களே..”


என்று கூற அதற்கு குமாரசாமி


“ஆ.. அவுகளே தான் புள்ள.."


என்று கூறும்போதே தன் அண்ணணின் குரலை கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் அர்ச்சனா. அவரை பார்த்த குமாரசாமி


“நல்லவேளம்மா.. நீ போன் பண்ண இல்லைனா வரதன் மாமா குடும்பத்தோட வந்ததே எங்களுக்கு தெரிந்திருக்காது”


என்று கூறி பக்கத்தில் நின்ற தன் மனைவி மகளை அழைத்துக்கொண்டு வரதராஜன் அவரது மனைவியின் கால்களில் விழுந்து


“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா..”


என்று கேட்க அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தனர். அப்போது குமாரசாமியின் மகள்


“ஏன்.. அத்தை.. இதுக்குதான் அவ்வளவு அவசரமா கூப்டீங்களா.. எங்கப்பா வேற என் தங்கச்சி குரலே சரியில்லை எல்லோரும் கிளம்புங்கன்னு அவசர அவசரமாக கூட்டிட்டு வந்துட்டார்..”


என்று கூற உடனே குமாரசாமி


“ஏ.. சும்மா இரு..”


என்று தன் மகளை அடக்கியவர் எதிரில் இருந்த சுந்தர்ராஜனை பார்த்து


“மன்னிச்சுக்கங்க மாமா.. இவளுக்கு கொஞ்சம் வாய்ன்னு உங்களுக்கு தான் தெரியுமே..”


என்று கூற இவர்கள் வந்ததிலிருந்து இவர்கள் பேசிய அனைத்தையும் உன்னிப்பாக கேட்ட சுந்தர்ராஜனுக்கு புரிந்துவிட்டது அடுத்த சில நிமிடங்களில் இங்கு என்ன நடக்கப்போகிறதென்று அதனால் முதலில் தன் மகனை பார்த்து


“வசந்தா.. சாப்பாடு ஆகும்போது ஆகட்டும் முதல்ல இவங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் நம்ம தோப்பு வீட்ல தங்கவைப்பா.. கொஞ்ச நேரம் களைப்பாறட்டும்”


என்று கூற வரதராஜன் குடும்பமும் வெகு நேரமாக இதையே எதிர்பார்த்தது போலவே அவர் சொன்னவுடன் அவ்வீட்டு குட்டீஸ்கள் முதலில் சட்டென்று எழுந்துக்கொள்ள பின்னர் ஒவ்வொருவராக எழுந்துக்கொண்டனர். அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் வசந்தகுமார்.


அவர் சென்றதும் அர்ச்சனா உள்ளே செல்ல அவரது அண்ணன் வீட்டாரும் கிளம்ப அவர்களை பார்த்து


ஒருநிமிடம்


என்று கூறி சுந்தர்ராஜன் நிறுத்த அவரை பார்த்து குமாரசாமி


“என்னங்க மாமா..”


என்க அதற்கு சுந்தர்ராஜன்


“நீங்க வசந்த் வர்ற வரைக்கும் உட்காருங்க கொஞ்சம் பேசணும்..”


என்க அவர் வார்த்தையை மதித்து மூவரும் அங்கு அமர்ந்தனர். உள்ளே செல்ல திரும்பிய அர்ச்சனாவும் அப்படியே நிற்க அவரை பார்த்து சுந்தர்ராஜன்


“என்னம்மா பார்க்குற இவங்களுக்கு காஃபி குடு”


என்று கூற அதற்கு சம்மதமாய் அவரும் உள்ளே சென்று காஃபி போட்டு எடுத்துவர அதேசமயம் வரதராஜன் குடும்பத்தை விட்டுவர சென்ற வசந்தகுமாரும் வந்தடைய, சுந்தர்ராஜன் அங்கு கூடியிருந்த அனைவரையும் ஒரு மேலோட்ட பார்வை பார்க்க உடனே குமாரசாமி


“என்னங்க மாமா.. அத்தான் வந்துடட்டும் ஏதோ சொல்றேன்னு சொன்னீங்க”


என்று கேட்க அதற்கு லேசாக தொண்டையை செருமியபடி


“நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையா கேட்கனும் குமாரசாமி.. சம்மதமா..”


என்று கேட்க அதற்கு அவரோ


“என்ன மாமா பேசுறீங்க.. நீங்க சொன்னா இந்த ஜில்லாவே கேட்கும்போது நான் கேட்க மாட்டேனா என்ன..??”


என்று கூற அதற்கு அவரோ


“அப்ப சரி..”


என்று தன் பேரனை பார்த்து


“அய்யா தமிழு.. இங்க வாங்க..”


என்று அழைக்க அவனும் மௌனமாக அவர் பக்கத்தில் வந்து நிற்க உடனே குமாரசாமி


“என்ன மாமா.. மாப்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு ஏதாவது வேணும்மாம்மா தயங்கிட்டு உங்கட்ட கேட்டாறா.. சொல்லுங்க.. எதுனாலும் செஞ்சிடலாம் அவருக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறேன்..”


என்று கேட்டபடி தமிழை பார்த்து


“என்ன மாப்ள.. புதுசா பிசினஸ் எதாச்சும்‌ வச்சு தரனுமா..??”


என்று அவர் கேட்க அப்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு ஏனோ இங்கு கூடி உள்ளவர்களின் முகங்களில் எதுவும் சரியாகபடவில்லை போலும் உடனே தன் கணவரின் கையை பிடித்து


“என்னங்க வாய்க்கு வந்ததை உளறாதீங்க அவங்கட்ட இல்லாத சொத்தா.. பணமா.. இது வேற ஏதோ நல்லா பாருங்க இங்க இருக்க யார் முகமும் சரியில்ல முதல்ல அப்பா என்ன சொல்றார்ன்னு கேளுங்க..”


என்று கூற அப்போது தான் குமாரசாமி அங்குள்ளவர்களின் முகங்களை கவனித்து தன் மனைவி சொன்னது சரியென்று புரிந்துக் கொண்டவர் அமைதியாகி சுந்தர்ராஜனை பார்த்து


“சரிங்க மாமா சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வந்தீங்க..”


என்று கேட்க, அதன்பிறகு சுந்தர்ராஜன் தன் மகன் குடும்பத்தையும் குமாரசாமி குடும்பத்தையும் பார்த்து


நான்‌ முன்னாடியே இதை எல்லாருக்கும் சொல்லிடுறேன் தமிழ், யாழினி இவங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படியோ அதை போலவே தான் எனக்கு மலரும் மாணிக்கமும்.. நான் அவங்கள எப்படி பார்க்கிறேனோ அப்படி தான் உங்க பிள்ளைகளான மலரையும் மாணிக்கத்தையும் பார்க்குறேன்னு உங்களுக்கு தெரியும்ன்னு நான் நம்புறேன்..”


என்று கூறி அங்கு அமர்ந்திருந்தவர்களை ஏறிட்டு பார்க்க, குமாரசாமியும் அவரது மனைவியும் ஒன்றாக


“என்னப்பா.. என்னங்க மாமா.. உங்கள பத்தி எங்களுக்கு தெரியாதா..


என்று கூற அதற்கு அவர்


“அப்படின்னா நான் சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நான் நம்புறேன்”


என்றவர் குமாரசாமியை பார்த்து


“எனக்கு நல்லா தெரியும் உனக்கு தமிழை மாப்பிள்ளையாக்கிக்க எவ்வளவு ஆசைன்னு.. ஆனா..”


என்று இழுக்க உடனே குமாரசாமி


“என்ன மாமா ஆனான்னு இழுக்குறீங்க..”


என்று கேட்க அதற்கு சுந்தர்ராஜன்


“அது.. இப்ப வந்து அவனுக்கு வரதா பேத்தி செல்விய பிடிச்சுருக்குன்னு சொல்றான்.”


என்று கூற இதைக் கேட்ட குமாரசாமியும் அவரது மனைவியும் அதிர்ச்சியுடன் தமிழை பார்க்க அவனும்


“ஆமா மாமா.. எனக்கு அவங்கள பிடிச்சுருக்கு..”


என்று கூற அதை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உடனே வசந்தகுமார்


“ஆமா மச்சான் திடீர்ன்னு அந்த பொண்ணு இவன புடிச்சிருக்குன்னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டா இவனும் உடனே எனக்கும் புடிச்சுருக்குன்னு சொல்லிட்டான் எங்களால எதுவும் சொல்ல முடியல..”


என்றவர் சிறு இடைவெளி மௌனம் காத்து


“நாம வேணும்னா நம்ம மலருக்கு வேற ஒரு நல்ல இடமா பார்க்கலாம் மச்சான்..”


என்று கூற சட்டென நாற்காலியிலிருந்து எழுந்த குமாரசாமி


“என்னத்தான் பேசுறீங்க.. என் பொண்ணுக்கு வெளியில மாப்பிள்ளை கிடைக்காமயா உங்க பையன கேட்டுட்டு வந்தேன் இப்ப நினைச்சா கூட என் பொண்ணுக்கு நூறு மாப்பிள்ளைய கொண்டு வர என்னால முடியும். ஆனா அதை விட்டுட்டு இவ வயசுக்கு வந்ததுல இருந்து அவளுக்கு கட்டுனா உங்க வீட்டு பையன தான் கட்டுவேன்னு எதுக்காக நிக்குறேன்.. ஏன் உங்களுக்கு தெரியாதா..”


என்றவர் திரும்பி தன் தங்கையை பார்த்து


“ஏன்மா உனக்கு தெரியாது..”


என்று கேட்க உடனே அர்ச்சனா


“நான் சொல்றதை எங்கண்ணா..”


என்று சொல்ல வரும்போதே அவர் கையை பிடித்து அவரது அத்தை (சுந்தர்ராஜனின் மனைவி) நிறுத்த, அவரும் அமைதியானார். மீண்டும் குமாரசாமி


“எல்லாம் எதுக்காக என் தங்கச்சி வீட்டோட சொந்தம் எனக்கு எப்பவும் நிலைச்சுயிருக்கனும்ன்னு தான் ஆனா இப்ப வந்து அது நடக்காதுன்னு சொல்றீங்க..”


என்றவர்


“சரி.. அந்த பொண்ணு மாப்ள மேல ஆசைப்பட்டான்னு அவள கட்டுறீங்களே அப்ப என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்.. ?? இத்தனை நாளா மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி சொல்லி அவ மனசுல ஆசையை வளர்த்துட்டோமே அதுக்கு என்ன சொல்லப்போறீங்க..”


என்று கேட்க அதற்கு அவரது மகள் மலர்கொடியோ


“எனக்கு மாமா வேணாம் பா..”


என்றாள் வெளிப்படையாக.

IMG_20220803_004712.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 4

குமாரசாமி தன் மகள் மலருக்கும் அவரது தங்கையின் மகன் தமிழ்செல்வனுக்கும் பேசி முடித்த திருமண பேச்சுவார்த்தை இப்போது இல்லை என்று தெரிந்தபின்பு மனமுடைந்தவர் எதிரில் அமர்ந்திருந்த அனைவரிடமும் தன் மகளின் மனதில் தமிழ் தான் உன் கணவன் என்று கூறி கூறி ஆசையை வளர்த்துவிட்டு இப்போது வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றீர்களே இது எந்த வகையில் நியாயம் என்று கேட்க அதற்கு அங்கிருந்தவர்கள் பதில் சொல்வதற்கு முன்பாகவே இதில் முழுதாக சம்பந்தப்பட்ட மலரோ


“எனக்கு மாமா ‌வேணாம்பா..”


என்று வெளிப்படையாக அங்கிருந்தவர்கள் முன் கூற ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாகிப்போனது யாரும் அதை எதிர்ப்பார்க்கவில்லை குறிப்பாக தமிழின் அம்மாவும் மலரின் பெற்றோரும். சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு மலரின் அம்மா


“ஏ.. என்னடி பேசுறவ..”


என்று கேட்க அதற்கு அவளோ


“ஆமாம்மா.. நான் நீங்க சொன்னதுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் அதை தவிர எனக்கு மாமாவை கட்டிக்குறதுல எந்த எதிர்பார்ப்பும் இல்லம்மா.. ஆனா இப்ப மாமாவுக்கும் இதுல அவ்வளவா விருப்பமில்லன்னு தெரிஞ்ச அப்புறமும் இந்த கல்யாணத்தை யாருக்காக நாங்க பண்ணிக்கனும்..”


என்று கேட்க அதற்கு அவளது அத்தையோ


“ஏன்டாம்மா எங்களுக்காக பண்ணிக்க மாட்டியா..”


என்று கேட்க அதற்கு அவளோ


“புரிஞ்சுக்கங்க அத்தை இது ஒன்னும் விளையாட்டு இல்ல எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை.. இதை இன்னைக்கு உங்களுக்காக பண்ணிகிட்டா நாளைக்கு நாங்க தான் கஷ்டப்படனும்..”


என்று தெளிவாக கூற உடனே வசந்தகுமார் தன் மனைவியை பார்த்து


“அர்ச்சனா.. மலர் சொல்றது தான் சரி.. நல்லவேளை இது இப்பவே தெரிஞ்சுடுச்சு.. இதோட இதை இங்கயே விடுறது தான் நம்ம பிள்ளைங்க வாழ்க்கைக்கு நல்லது..”


என்று கூற உடனே குமாரசாமி


“அதெப்படிங்கத்தான் விடுறது அவ எதோ சின்ன புள்ள புரியாம பேசுறா பெரியவங்க நாம தான் அவங்களுக்கு புத்திமதி சொல்லனும் அதை செய்வீங்களா அதை விட்டுட்டு இதோட‌ இதை இங்கயே விடுன்னு சொல்றீங்க..”


என்றவர் கலங்கிய கண்களை தன் கரம் கொண்டு துடைக்க தன் அண்ணன் கண்ணில் நீரை பார்த்த மங்கைக்கு உள்ளுக்கு எரிமலைபோல போல கொதித்தது. மீண்டும் பேச்சை தொடர்ந்த குமாரசாமி


“இதுவே உங்க பொண்ணுக்கு நடந்திருந்தா உங்களுக்கு தெரியும் அந்த வலி எப்படி இருக்கும்ன்னு என் பொண்ணுக்கு தானே நடக்குது.. உங்களுக்கு என்ன கவலை..”


என்று கூறி அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு இந்த தலைமுறையுடன் முடிவதை எண்ணி மனதினுள் வருத்தப்பட்டவர் தன் தங்கையின் முகத்தை பார்த்தபடி தன் உறவுகளை அழைத்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்க, இவ்வளவு நேரம் இங்கு நடந்த அனைத்தையும் கண்டும் கேட்டும் அமர்ந்திருந்த சுந்தர்ராஜன் இப்போது குமாரசாமியை பார்த்து


“குமாரசாமி.. ஒரு நிமிஷம் நில்லுப்பா..”


என்று கூற அங்கேயே அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டவராய் நின்ற குமாரசாமி திரும்பி அவரை பார்க்க அவரோ


“நான் கேட்குறத்துக்கு பதில் சொல்லு..”


என்க அதற்கு குமாரசாமியோ


“என்ன மாமா..”


என்ற மெல்லிய குரலில் அவரது முகத்தை பார்க்க விரும்பாது எங்கேயோ பார்த்தபடி கேட்க அதற்கு அவரோ


“நீ ஏன் என் பேரன் தமிழை உன் பொண்ணுக்கு கட்டணும்ன்னு ஆசைப்படுறன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..”


என்று கேட்க அதற்கு அவரோ


“ஏன் உங்களுக்கு தெரியாதா நான் ஏன் கேட்குறேன்னு..”


என்க அதற்கு அவரோ


“அதை ஏன்னு உன் வாயால ஒரு தடவை நீயே தான் சொல்லேன்பா கேட்டுக்குறேன்..”


என்று சுந்தரம் கூற அதற்கு குமாரசாமி


“எல்லாம் என் தங்கச்சி உறவு எனக்கு என்னைக்கும் நிலைக்கனும்ன்னு தான்.. நாளைக்கே என் மாப்பிளைக்கு நீங்க வெளிய பொண்ணு எடுத்தீங்கன்னா நான் மூனாவது மனுஷனாகிடுவேன்ல அதுக்கப்புறம் இப்ப வர்றா மாதிரி உரிமையோட இந்த வீட்டுக்கு தான் வரமுடியுமா என் தங்கச்சிய பார்க்க முடியுமா.. அதுவே என் பொண்ண இந்த வீட்டுக்கு மருமகளா கொடுத்தா இப்ப போல எப்பவும் நான் வந்துட்டு போவேன்ல என்னைய யார் கேள்வி கேட்க முடியும்ங்குறேன்”


என்று அவர் மனதிலிருந்த அனைத்தையும் கொட்டிவிட இவர் பேசியதை கேட்டு தன் மீது தன் அண்ணன் வைத்துள்ள பாசத்தை நினைத்து மங்கை இன்றும் நெஞ்சுக்குள் நெகிழ மற்றவர் அனைவரும் ஒரு நிமிடம் ஊமையாகிபோகினர் என்றே கூறவேண்டும். உடனே அந்த அமைதியை உடைத்த சுந்தர்ராஜன் குமாரசாமியை பார்த்து


“இதுக்கு நீ என் பேரனை மட்டும் தான் உன் மவளுக்கு கட்டணுமா..?? ஏன் என் பேத்தியை உன் மவனுக்கு கட்டுனா அதே உறவு நீடிக்காதா..??”


என்று கேட்க அவர் கேட்ட கேள்வி குமாரசாமியையும் அங்குள்ள பலரையும் யோசிக்க வைக்க உடனே அர்ச்சனாவுக்கு இது சரியென்று பட‌ தன் அண்ணனை பார்த்து


“ஆமாண்ணே.. யாழினிய நம்ம மாணிக்கத்துக்கு கட்டி வைக்கலாமே..”


என்று கூற அதையே‌ குமாரசாமியின் மனைவியும் அவரிடம்


“ஆமாங்க அப்பா சொல்றது சரிதான் யாழினிய நம்ம பையனுக்கு கட்டலாம்ங்க..”


என்க அது அவருக்கும் சரியென்று பட உடனே குமாரசாமி


“இதுக்கு எனக்கு சம்மதம்.. ஆனா நிச்சயத்தை இன்னைக்கே இப்பவே வச்சுக்கலாமா..?? என்ன சொல்றீங்க..”


என்று கேட்க உடனே வசந்தகுமார்


“ஏன் மச்சான் உன் பையனை கேட்க வேணாமா..?? அவன் விருப்பம் தெரிஞ்சுகிட்டு நிதானமா சொல்லுங்க அப்புறம் நிச்சயம் வச்சுக்கலாம்..”


என்று கூற அதற்கு குமாரசாமியோ


“அத்தான்.. என் பையன் ஒன்னும் உங்க பையன் மாதிரி இல்ல நீங்க வேணும்னா உங்க பொண்ணுகிட்ட கேளுங்க..”


என்று சட்டென்று பேசிவிட அதை கேட்ட வசந்தகுமாருக்கு மனம் வலிக்க, அதே வலியுடன் தன் மகளை பார்த்தார். அதே நேரம் தன் கணவனை பார்த்து இப்படி ஒரு வார்த்தை பேசிய தன் அண்ணனை கோபக்கனலுடன் பார்த்தார் அர்ச்சனா.


இவ்வளவு நேரம் அவளது விருப்பத்தை நாடாமலே முடிவு செய்துக் கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் இருக்க இப்போது குமாரசாமி சொன்ன வார்த்தையால் தன் தந்தையின் கௌரவத்திற்கு பங்கம் வர கூடாதென்று


“ம்.. உங்க இஷ்டம்ப்பா..”


என்று கூறினாள் யாழினி. அடுத்த நொடியே குமாரசாமியின் மனைவி அவரது கையை பிடித்து


“என்னங்க.. யார்கிட்ட என்ன பேசுறோம்ன்னு உணர்ந்து தான் பேசுறீங்களா..?? அங்க பாருங்க உங்க தங்கச்சி எப்படி பார்க்குறாங்கன்னு..”


என்று கூறியபடி வசந்தகுமாரை பார்த்து


“மன்னிச்சுடுங்கண்ணா.. அவர் ஏதோ கோபத்துல தெரியாம வார்த்தையை விட்டுட்டார்”


என்று கூற உடனே தன் தங்கையை பார்த்துவிட்டு வசந்தகுமாரை பார்த்து


“என்னை மன்னிச்சுடுங்க அத்தான்..”


என்று மன்னிப்பு கேட்க அதை அவரும் ஏற்றுக் கொண்டார். அதன்பின் அன்று மாலையே தமிழ்செல்வன் - வெற்றிசெல்வி ; மாணிக்கம் - யாழினி என நால்வருக்கும் வீட்டு பெரியவர்கள், ஊர் பெரியவர்கள் முன்னே தாம்பூலம் மாற்றி நிச்சயம் செய்யப்பட்டது. முதலில் தன் அண்ணன் செழியன் இல்லாமல் இந்த நிச்சயத்தை நடத்திக்கொள்ள செல்வி விரும்பவில்லை என்றாலும் அவளது பெற்றோர் அவளை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் செழியனுடன் பேச வைக்க அவளும் சம்மதித்தாள்.


(அட ஆமா ப்ரெண்ட்ஸ்.. அன்னைக்கே செல்வி - தமிழுக்கும் நிச்சயம் வச்சுட்டேன் அவங்களுக்கு தனியா ஒரு யூடி எழுதுனா வேர்ட்ஸ் லிமிட் அதிகம் வரும் அதான் இங்கயே முடிச்சுட்டேன் கோபிச்சுக்காதீங்க 😁😁)


ஏற்கனவே தமிழ் தன்‌ படிப்பும் தங்கையின் திருமணமும் முடிந்தப்பிறகு தான் தன் திருமணம் என்று கூறியிருந்ததால் முதலில் யாழினிக்கும் மாணிக்கத்திற்கும் திருமணம் செய்ய வேலைகள் ஆரம்பமாகின அதன் முதற்கட்டமாக வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணிக்கத்தை வரவழைத்தார் அவனது தந்தை.


அவனும் வர, வரதராஜன் குடும்பமும் அவர்ளுடன் இம்முறை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அவரது பேரன் செழியனும் வந்திருந்தான் அடுத்த சில நாட்களிலேயே சுந்தர்ராஜன் வீட்டு திருமணம் இவ்வூரையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய சீறும் சினத்தியும் அடுக்க அடுக்க வந்துக் கொண்டே இருந்தது.


ஊரின் முக்கியஸ்தர்கள் மட்டுமின்றி ஜில்லாவின் முக்கியஸ்தர்களும் ஜில்லா கலெக்டரும் வந்திருந்தனர். அனைவரும் வாழ்த்த மாணிக்கம் யாழினியின் திருமணம் இனிதாக நிறைவுற்றது.


அன்றைய நாளின் சம்பிரதாயங்கள் இனிதே நடைபெற ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரம் இரவு 09:20க்கு சரியாக பெண்ணை அழைத்துக் கொண்டு முதலிரவு அறையில் விட்டுவிட்டு கதவை சாற்றிவிட்டனர். அங்கே பருத்தியில் நெய்த புடவையில் தலை முழுதும் மல்லிகை பூக்களுடன் முகம் முழுக்க வெட்கம் கலந்த பயத்துடன் தன்னவன் எதிரில் நிற்க அவனோ அவளை அழைத்து மலர் அலங்காரம் செய்து வைத்திருந்த மெத்தையில் அமர வைத்து விளக்கை அணைக்க அடுத்த நாள் காலையில் நேற்றைய இரவு அலங்காரம் கலைந்து தங்களை மறந்து உறங்கி கொண்டிருந்தனர் இருவரும்.


அன்றையிலிருந்து 15 வது நாள்..


“ம்மா.. அப்பாட்ட சொல்லி புரியவைம்மா.. நான் அங்க போய் படிப்பை முடிக்கலைன்னா எனக்கு வேலை கிடைக்காதும்மா இவ்வளவு நாளா நான் படிச்சதெல்லாம் வீணாகிடும்..”


என்று மாணிக்கம் தன் அம்மாவிடம் கூறிக்கொண்டிருக்க அவரோ


“ஏன்டா அதுக்குன்னு கட்டிக்கிட்டவள இங்கயே விட்டுட்டு போவியா..?? அதெல்லாம் நீ ஒன்னும் அங்க போய் சம்பாரிச்சு கொட்டிதான் நாம சாப்பிடனும்ன்னு இல்ல இங்க நமக்கு இருக்குறதை கவனிச்சுகிட்டாலே இந்த ஊருக்கே நாம சோறு போடலாம்.. போடா போயி அந்த பொட்டிய தட்டி நான் வரமாட்டேன்னு எழுதி போடு..”


என்று அவனது மடிகணிணியை காண்பித்து கூற அவனோ


“ம்மா.. அங்க போய் வேலை செய்யுறது என்னோட கனவும்மா.. அதுவும் நான் என்ன இவள இங்கயே அப்டியே விட்டுடவா போறேன்.. அங்க போனதும் படிப்பை முடிச்சுட்டு வேலையில சேர்ந்துட்டு இவளை அங்க வரவைக்க என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் ஏற்பாடு செய்து நானே வந்து கூட்டிட்டு போறேன்னு தானே சொல்றேன்.. ஏன்மா புரிஞ்சுக்க மாட்றீங்க..”


என்று கேட்க அதற்கு அவரோ


“டேய் சும்மா பேசுனதையே பேசிட்டு.. இனி எதுவா இருந்தாலும் உங்கப்பாட்ட பேசிக்க எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு நான் போய் அதை பார்க்குறேன்..”


என்று கூறி அங்கிருந்து சென்றார். அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த யாழினி தன் அத்தையிடம் சென்று தன் மணாளனுக்காக பேச அதற்கு அவரோ


“சரிம்மா அவர் வரட்டும் நான் பேசி பார்க்குறேன்”


என்று கூற அடுத்த சில மணி துளிகளில் குமாரசாமி வீட்டிற்கு வந்துவிட அவரிடம் மருமகளும் மனைவியும் சென்று அவரது மகன் வெளிநாடு செல்லும் விருப்பத்தை தெரிவிக்க அதற்கு அவர் யாழினியை பார்த்து


“சரிம்மா நான் எதுக்கும் உங்க அம்மா அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்”


என்று கூறி தன் மனைவியை உள்ளே வரும்படி கண் ஜாடை செய்துவிட்டு சென்றார். அவர் உள்ளே வந்ததும்


“ஏன்டீ மருமவ தான் புரியாம பேசுதுன்னா எல்லாம் தெரிஞ்ச நீயும் அவனுக்கு வக்காலத்து வாங்குற.. அவன் ஏன் அங்க போவனும்ன்னு குதிக்குறான்னு உனக்கு தெரியாதா..?? இல்ல மறந்துட்டியா..??”


என்று கேட்க அதற்கு அவரோ


“இல்லிங்க அவனால இதுக்கு மேல என்ன செய்ய முடியும் சொல்லுங்க அதான் கல்யாணமே முடிஞ்சுடுச்சே.. அனுப்பி விடுவோம்ங்க அதுவும் இல்லாம அவன் மட்டும் தான் போவேன்னா சொல்றான் அங்க போய் எல்லாத்தையும் பார்த்துகிட்டு ஒரு உத்யோகம் கிடைச்சதும் இவளையும் வந்து கூட்டிட்டு போறேன்னு தான சொல்றான்.. எனக்கு என்னமோ என் புள்ள மாறிட்டான்னு தோனுதுங்க..”


என்று கூற அதற்கு அவரோ


“நெசமாவா சொல்ற.. அவன் மாறிட்டானா டீ..”


என்று கேட்க அதற்கு குமாரசாமியின் மனைவியோ


“அட ஆமாங்க நீங்க பாக்கலயே எப்ப பார்த்தாலும் அவ குறுக்க நெடுக்க நடக்குறப்ப எல்லாம் அவளை பார்த்துட்டு கெடக்குறான்..”


என்று கூற அதற்கு அவரோ


“அடியேய் நீ சொன்னது மட்டும் என்னைக்கும் போல உன் வாய் முகூர்த்தம் நெசமாகி நீ சொன்ன மாதிரி அவன் மாறிட்டான்னா நம்ம ஊர் எல்லைகாரிக்கு இதுவரைக்கும் யாரும் போடாதளவுக்கு படையல் போட்டு அவளை அசத்திபுடுறேன் பாரு..”


என்று மகிழ்ச்சியுடன் கூற உடனே அவரது மனைவியோ


“ம்க்கும்..”


என்று முகத்தை சுளிக்க அதை பார்த்த குமாரசாமி


“என்னடீ மொகத்த அப்புடி சுளிக்கிறவ..”


என்று கேட்க அதற்கு அவரோ


“சொன்னது நானு சன்மானம் அவளுக்கா..”


என்று கேட்க உடனே அவர் தன் மனைவியை ஒரு ரொமான்டிக் லுக்குடன் அவரது முகத்திற்கு நேராக பார்த்து சிரித்தபடி


“அடிபோடி இவளே.. பேரன் பேத்தி எடுக்குற வயசுல கிழவிக்கு ஆசைய பாரு..”


என்று கூறி அங்கிருந்து மெல்லிய புன்னகையுடன் செல்ல


“ஆ.. குமாரசாமி..”


என்று மெல்லிய குரலில் கத்தியவர் அங்கிருந்த மெத்தையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தார். அடுத்த சில நாழிகைகளில் தன் மனையாளை சமாதானப்படுத்தி நேராக தன் தங்கையின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் மாணிக்கம் கூறியதை சொல்ல அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். எனவே அனைவரின் சம்மதமும் கிடைத்துவிட அடுத்த ஓரிரு நாட்களிலேயே மாணிக்கம் தடையின்றி வெளிநாட்டிற்கு பறந்து சென்றான்.


குமாரசாமிக்கு மட்டும் தன் மனையாள் கூறியது கானல் நீர் போல எதிர்காலத்தில் மறைந்துவிடும் என்று தெரிந்தால் அவரது மனது என்ன பாடு படுமோ அது அந்த எல்லைகாரி கங்காதேவிக்கு தான் வெளிச்சம்.

IMG_20220803_005828.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 5

இதோ மாணிக்கம் வெளிநாட்டிற்கு சென்று இன்றோடு ஆறு மாத காலம் முடிந்துவிட்டது. ஐஏஎஸ் இன்டர்வ்வியூக்காக டெல்லிக்கு சென்ற தமிழும் அதில் வெற்றிப்பெற்று டிரெய்னிங் முடித்து அவனது சொந்த மாவட்டத்திற்கே சப் கலெக்டராக வந்துவிட்டான்.


காலை 08:30 மணி..


காலையில் எழுந்த தமிழ் குளித்து முடித்து 08:30 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்ப அவனை பார்த்து அவனது அம்மா


“டேய்.. என்னடா மணி இன்னும் 9 கூட ஆகலை அதுக்குள்ள கிளம்பி நிக்குற.. கொஞ்சம் பொறுடா டிபன் ரெடியாகிடுச்சு சாப்பிட்டு போய்டுவ..”


என்று கூற அதற்கு அவனோ


“இல்லம்மா.. நான் வழியில பார்த்துக்குறேன் எனக்கு டைம் ஆச்சு..”


என்று கூறியபடி அரசாங்க காரில் ஏறியவன் டிரைவரிடம்


“டிரைவர்.. ஆபிஸ்க்கு போக வேணாம் நேரா என் தங்கச்சி வீட்டுக்கு போங்க..”


என்க அதற்கு அவரும்


“சரிங்க சார்..”


என்றபடி வண்டியை கிளப்ப அடுத்த சில நிமிடங்களில் யாழினி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனை பார்த்ததும் குமாரசாமி எழுந்து நின்று


“வாங்க மாப்ள.. எப்டி இருக்கீங்க..”


என்று வரவேற்று நலம் விசாரிக்க, அவனோ


“நல்லா இருக்கேன் மாமா..”


என்றவன் வீட்டில் தன் தங்கையை தேடியபடி


“தங்கச்சி வீட்டுல இல்லையா மாமா..”


என்று கேட்க அதற்கு அவரோ


“ஆமா மாப்ள.. இன்னைக்கு ஆடி வெள்ளில அதான் ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ருக்காங்க.. வர்ற நேரம் தான் கொஞ்சம் இருங்க மாமன் போய் டீ போட்டு எடுத்தாறேன்..”


என்க அதை கேட்ட தமிழோ


“அய்யோ.. வேணாம் மாமா உங்களுக்கு எதுக்கு சிரமம்..”


என்று சொல்ல அதற்கு அவரோ


“இதுல என்ன மாப்ள சிரமம் இருக்கு சித்த இருங்க வந்துர்றேன்..”


என்று கிச்சன் உள்ளே புகுந்தவர் சிறிது நாழிகைகளில் இரண்டு குவளை சூடான தேநீரை எடுத்து வந்து ஒன்றை தமிழிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவர் எடுத்துக்கொண்டு சரியாக இருவரும் பருகி முடிக்க யாழினியும் அவளது அத்தையும் உள்ளே நுழைந்தனர்.


மேடேறிய வயிற்றை பிடித்தபடி ஆடி அசைந்து நடந்து வந்தாள் யாழினி. ஆம் இது அவளுக்கு 6வது மாதம். வெளியிலேயே அண்ணணின் காரை பார்த்துவிட்டு அண்ணணின் வருகையை அறிந்தவள் உள்ளே நுழைந்ததும் முகம் முழுதும் புன்னகையுடன் வாய் நிறைய


“அண்ணே..”


என்று அழைக்க அவளது அந்த ஒற்றை அழைப்பில் தன் தங்கையை பார்த்தவன் அவளின் அருகில் சென்று அவளை தாங்கியவனாய் அழைத்து வந்து சோபாவில் அமர வைக்க அவளோ


“எண்ணண்னே காலையிலயே ஒரு போன் போட்டு சொல்லிருந்தா நான் வீட்டுலயே இருந்துருப்பேன்ல..”


என்று கூற அதற்கு அவனோ


“நான் வரேன்னு சொன்னா நீ எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்துட்டு இருப்ப அதான் சொல்லலைடாம்மா..”


என்று கூற அதற்கு அவளோ


“சரிண்ணே.. என்ன விசயம் இவ்வளவு காலையில வந்துருக்க..”


என்று கேட்க அதற்கு அவனோ


“அது ஒன்னும் இல்லடாம்மா புதுசா நம்ம ஜில்லாவுல ஒரு கவர்மென்ட் ஸ்கூல் திறக்கப்போறாங்க அதுக்கு கலெக்டர் என்கிட்ட வந்து நீங்க இந்த ஊரு தானே நீங்களே சொல்லுங்க எங்க திறந்தா சரியா இருக்கும்ன்னு கேட்டாரு.. அதான் நான் ஒரு மூனு இடம் யோசிச்சு வச்சிருக்கேன் போற வழியில உன்ட்ட கேட்டுட்டு போயிடலாம்ன்னு வந்தேன்..”


என்று சொல்ல உடனே அவளும்


“எங்க காட்டுண்ணே..”


என்று கேட்டு வாங்கி பார்த்தவள் சிறிது நேரத்திலேயே


“அண்ணே.. இந்த ஊருக்கு கொண்டுவந்தா நல்லாருக்கும்ண்ணே..”


என்று கூற அதை வாங்கி பார்த்தவன்


“ஆமாம்மா நானும் அதையே தான் யோசிச்சேன் நீயும் அதையே சொல்லிட்ட..”


என்று கூறி தன் தங்கையின் வயிற்றை பார்த்தபடி அவளின் முகத்தை பார்த்து


“செக்அப் போனீயாடாம்மா..”


என்று கேட்க அதற்கு அவளோ


“ம்.. இப்பதான் ரெண்டு நாள் முன்னாடி போனேன்.. பாப்பா நல்லா ஹெல்தியா இருக்குன்னு சொன்னாங்கண்ணே..”


என்று கூற அதை கேட்டு புன்னகைத்தவனுக்கு ஏனோ தன் தங்கையின் முகத்தில் சிறு வாட்டம் தெரிய அதை பற்றி வினவாமலேயே அதை புரிந்தவனாய்


“சரிடாம்மா.. எனக்கு நேரமாச்சு அப்ப நான் கிளம்புறேன்.."


என்று கூறி எழுந்துக்கொள்ள அவனுடனே அவனது தங்கையும் எழுந்துக்கொள்ள உடனே அவளை அமர வைத்து


“நீ உட்காருடாம்மா.. நான் போய்க்குறேன்..”


என்று கூறி அங்கிருந்து வெளியே வர அவன் பின்னாலேயே வழியனுப்ப வந்த குமாரசாமியை பார்த்து


“மச்சான் எப்ப வறார்ன்னு ஏதாச்சும் சொன்னாரா மாமா.. ஏன் கேட்குறேன்னா தங்கச்சி முகம் வாட்டமா இருக்குறதை பார்த்தா அவ மச்சான மிஸ் பண்றாளோன்னு தோனுது..”


என்று கூற அதை புரிந்துக் கொண்டவர்


“ம்.. எனக்கு புரியுது மாப்ள.. நான் என்ன ஏதுன்னு அவனுக்கு போன் போட்டு விசாரிக்குறேன்..”


என்று கூற அவனும்


“சரிங்க மாமா அப்ப நான் போயிட்டு வரேன்..”


என்று கூறி வண்டியில் ஏறி கிளம்பினான். தமிழ் கூறியதை கேட்ட குமாரசாமி உடனே உள்ளே சென்று தன் அலைபேசியை எடுத்து மகனை அழைத்து உடனே ஊருக்கு வரும்படி கூற அவனோ


“இப்பதான்ப்பா வேலையில சேர்ந்திருக்கேன் உடனே லீவ் கேட்டா குடுக்கமாட்டாங்கப்பா புரிஞ்சுக்கோங்கப்பா..”


என்று கூற அதற்கு அவரோ


“தோ பாருடா கடைசியா சொல்லிக்குறேன் ஒன்னு அந்த வேலையே வேணாம்ன்னு தலைமுழுகிட்டு ஊர் வந்து சேரு.. இல்ல வந்து என் மருமவள கூட்டிட்டுப்போ..”


என்க அதை கேட்டும் கேட்காதவாறு


“ஹலோ.. ஹலோ.. ப்பா.. நீங்க பேசுறது எனக்கு சரியா கேட்கல நான் அப்புறம் பேசுறேன்ப்பா..”


என்று கூறி அழைப்பை துண்டிக்க அதில் கோபமடைந்தவர் கையிலிருந்த அலைபேசியை தூக்கி வீசிவிட்டு அருகில் நின்ற தன் மனையாளை பார்க்க அவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அங்கேயே மௌனமாக நின்றார்.


அடுத்த ஒரு சில மாதங்களில் யாழினிக்கு வளைகாப்பு நடக்க அதற்கும் அவளுடைய கணவன் வரவில்லை. வளைகாப்பிற்கு வந்தவர்கள் அனைவரும்


“மாப்பிள்ளை இன்னும் வரலயா..”


என்று கேட்க அதற்கு பதில் சொல்ல இயலாது ஊர் மக்கள் முன்பும் தங்கை வீட்டினர் முன்பும் தலைகுனிந்தது என்னமோ குமாரசாமியும் அவரது மனைவியும் தான்.


இதோ சரியாக பத்தாவது மாதம் அருகிலுள்ள மருத்துவமனையில் சுப பிரசவத்தில் யாழினி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதற்கும் வெளிநாட்டிலுள்ள அவளது கணவன் வரவில்லை. இதனால் கோபமடைந்த தமிழும் அவனது குடும்பமும் யாழினியை திரும்ப அவளது கணவன் வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர். மாப்பிள்ளை வந்து அழைத்து செல்லட்டும் என்று கூறி அவளை அவர்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டனர். இதில் கலங்கிய கண்களுடன் நின்றது என்னமோ குமாரசாமியும் அவரது மனைவியும் தான்.


யாழினியின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவும் அரங்கேறியது ஆனால் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி சிம்பிளாக நடந்தது அதில் அக்குழந்தைக்கு


“நவநீத கிருஷ்ணன்”


என்ற பெயர் சூட்டப்பட்டது. தன் சொந்த பேரனின் பெயர் சூட்டும் விழாவிற்கு மூன்றாவது நபர் போல் குமாரசாமியும் அவரது மனைவியும் வந்து ஓர் ஓரமாய் நிற்க அதை பார்த்து யாழினியும் அர்ச்சனாவும் அவர்களை சென்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று குழந்தையை காட்ட யாரும் எதுவும் பேசவில்லை.


மாதங்கள் உருண்டோட சுந்தர்ராஜன் வீட்டினர் தமிழ்ச்செல்வன் - வெற்றிச்செல்வி திருமண பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று எண்ணி இதுவரை வரதராஜன் குடும்பம் எதுவும் பேசாமல் இருந்தனர். ஆனால் அவர்கள் பேசுவதை போல தெரியாததால் இதற்கு பின்பும் மௌனம் காப்பது சரிவராது என்று வரதராஜனே சுந்தர்ராஜனை தொடர்பு கொண்டு இவர்களின் திருமண பேச்சை ஆரம்பித்தார்.


ஆனால் தமிழோ தன் தங்கையின் வாழ்க்கையை முதலில் சரிசெய்வதே இப்போது அவனின் தலயாய கடமை என்றென்னி இன்னும் சிறிது காலம் அவகாசம் கேட்டு தன் திருமணத்தை தள்ளி போட்டான். அதேநேரம் குமாரசாமியின் மகள் மலர்கொடிக்கு படிப்பு முடியவும் அவளுக்கு நல்ல வரன் வந்தது. அது அவளுக்கும் பிடித்திருந்தது எனவே அதை தள்ளி போடாமல் மலருக்கு திருமணம் முடிக்க குமாரசாமி முடிவெடுத்தார். அதேசமயம் இதை வைத்து தன் மகனை ஊருக்கு வர வைக்கலாம் என்றும் திட்டமிட்டார்.


அவர் திட்டமிட்டதுப்போலவே வெளிநாட்டிலிருந்த மாணிக்கம் முதலில் வர தயங்கினாலும் அதன்பிறகு ஊருக்கு வர ஒத்துக்கொண்டான். ஆனால் குறிப்பிட்ட தேதியில் மலர்கொடியின் திருமணம் நடைப்பெற எப்போதும் போல இதிலும் அவன் கலந்துக் கொள்ளவில்லை. எனவே அவனை எதிர்பார்த்து காத்திருந்த சொந்தங்கள், ஊர் மக்கள் அனைவரும் இம்முறையும் அவன் வரமாட்டான் என்றெண்ணிருக்க திருமணம் முடிந்த மறுநாள் ஊருக்கு உள்ளே புதிதாக ஒரு டாக்சி நுழைந்தது.


அந்த கருப்பு நிற ஏர்போர்ட் டாக்சியிலிருந்து கீழிறங்கினான் மாணிக்கம். ஆனால் சென்ற முறை போல இம்முறை அவன் தனியாக வரவில்லை கூடவே தான் வெளிநாட்டில் திருமணம் செய்த பெண்ணையும் அழைத்து வந்திருந்தான். இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் வீட்டின் வாசல் முன் நின்ற காரிலிருந்து அப்பெண்ணை கீழிறக்கி தன் தாய் தந்தையிடம்


“இவதான் என் வைப் லூனா..”


என்று அறிமுகம் செய்துவிட்டு அதேபோல் அவர்களை அவளிடம் அறிமுகம் செய்ய அவனது அறிமுகத்தில் கற்சிலை போல் நின்றனர் குமாரசாமியும் அவரது மனைவியும் மகளும். அங்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் இவ்விடயம் ஊர்காரர்களால் யாழினியின் வீட்டிற்கு தெரியவர அடுத்த சில நாழிகைகளில் அனைவரும் அங்கு வந்து குமாரசாமி குடும்பத்தையும் அவரது மகனையும் சரமாரியாக கேள்விகளை கேட்க அவனோ சாதாரணமாக


“தோ பாருங்க.. நான் அப்பவே எங்கப்பா.. அம்மாட்ட.. எல்லாத்தையும் சொல்லிட்டேன். வெளிநாட்டுல நான் இந்த பொண்ண லவ் பண்றேன்னும் அவளை தான் கட்டிக்கப்போறேன்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன். ஆனா எங்கப்பா தான் நீ மட்டும் என் தங்கச்சி பொண்ண கட்டிக்கலைன்னா அப்புறம் உன் படிப்பு உன் சாப்பாடுன்னு எல்லாத்தையும் நீயே பார்த்துக்கனும் இந்த வீட்டுல இருந்து ஒருபைசா வராதுன்னு என்னை மிரட்டி தான் இந்த கல்யாணத்தை எனக்கு செஞ்சு வச்சார். இங்க வந்தா எனக்கு கல்யாணம் செய்து வச்சுடுவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதனால தான் இங்க வர்றத்துக்கு முன்னாடியே இவளை நான் அங்கேயே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துட்டேன்.”


என்று அவ்வளவு பெரிய விடயத்தை சாதாரணமாக சொன்னான் மாணிக்கம். இதை கேட்டு கோபமடைந்த தமிழ் அவனை அடிக்க பாய அவனை நிறுத்திய அவளது தங்கை யாழினி


“அண்ணே.. ஒரு நிமிசம்..”


என்று கூறி அவளது அத்தை மாமாவை பார்த்து


“இவர் சொல்றது நெசமா மாமா..”


என்று கேட்க இதுவரை மௌனமாக இருந்தவரோ அவளை பார்க்க முடியாமல் தலைகுனிந்து நிற்க மீண்டும் அவள் அதே கேள்வியை தன் அத்தையிடம் கேட்க அவரும் ஏதும் கூறாது மௌனம் காத்தார். உடனே குமாரசாமியின் தங்கை


“வாய திறந்து சொல்லுண்ணே.. உன் பையன் சொல்றது நெசமா அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சு தான் உன் பையனை என் பொண்ணுக்கு கட்டிவச்சியா..??”


என்று ஒரு தாயின் மன குமுறலுடன் கண்களில் செந்நீருடன் கேட்க அதற்கு அவரோ தன் தங்கையை பார்த்து கை கூப்பியபடி


“இல்லடாம்மா.. உன் மேல சத்தியமா எனக்கு இவன் கல்யாண பண்ண விடயம் தெரியாது வெளிநாட்டுல ஒருத்திய காதலிக்கிறேன்னு தான் சொன்னான்‌. ஆனா இந்த பாவி இப்படி பண்ணிருப்பான்னு நான் கனவுலயும் நினைக்கல..”


என்று கூற உடனே யாழினி தன் கண்களில் தன்னை அறியாமலேயே வடிந்த கண்ணீரை துடைத்தபடி தன் கணவனை பார்த்து


“நீங்க சொல்றதை நான் ஏத்துக்குறேன் மாமா கட்டாயப்படுத்தினதால தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணீங்க சரி.. ஆனா இந்த குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க.. என் மேல ஆசை இல்லாம தான் அன்னைக்கு என் கூட இருந்தீங்களா..”


என்று ஒரு ஏமாற்றப்பட்ட பெண்ணின் மனக் குமுறலுடன் அவனை பார்த்து கேட்க அதற்கு அவனோ


“ம்ச்.. அதுவா..”


என்று அலட்சியமாக சொன்னவன் மேற்கொண்டு அவளை பார்த்து


“உனக்கே நல்லா தெரியும் நான் பாரின்ல படிச்சவன்னு அங்க இதெல்லாம் சாதாரணம்.. ஏன் நானே பல தடவை எத்தனையோ பொண்ணுங்க கூட இருந்துருக்கேன் அதுமாதிரி தான் அன்னைக்கு நைட்டும்..”


என்று கூலாக சொல்லிவிட்டு


“லைட் ஆப் பண்ணா எல்லாம் ஒன்னு தானே..”


என்று அவன் அவளை வேசிகளுடன் ஒப்பிட்டு பேச இதை கேட்டு கொதித்தெழுந்த தமிழ் அனைவரின் தடைகளையும் மீறி அவன் மீது பாய்ந்து


“என்னடா சொன்ன யூ ப்ளடி ராஸ்கல்..”


என்று கூறி அவனது கன்னத்தில் பளார் பளாரென்று இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்.

IMG_20220803_005828.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 6

குமாரசாமி அவரது மகளின் திருமணத்தை வைத்து தன் மகனை இந்தியா வரவைக்க திட்டமிட அவனும் வந்து சேர்ந்தான். ஆனால் எப்போதும் போல தனியாக அல்ல இம்முறை தன் வெளிநாட்டு காதல் மனைவியுடன். ஆம் உங்கள் செவிகளில் விழுந்தது சரியே. ஊருக்கு வந்தவன் பேச கூடாததை எல்லாம் பேசி அனைவர் மனதையும் ரணமாக்கினான்.


அதுமட்டுமா யாழினியை வே*யோடு ஒப்பிட அதில் தமிழுக்கு கோபம் கொப்பளிக்க அதில் இதுவரை அவனை தடுத்து நிறுத்திய அனைவரையும் மீறி அவனை அனைவர் முன்பும் அறைந்தான்.


அதேசமயம் அவன் கூறியதை கேட்டு கொதித்தெழுந்தது தமிழும் அவனது குடும்பமும் மட்டுமல்ல அந்த ஊர் மொத்தமும் தான். அவன் கூறியதை கேட்ட ஊர் மக்கள், ஊர் பெரியவர்கள் தமிழையும் அவனது குடும்பத்தையும் பார்த்து


“தம்பி.. இங்கயே இவன வெட்டி போடுங்க.. மத்ததை நாங்க பார்த்துக்குறோம்..”


என்று தமிழை பார்த்து சிலரும்


“ஐயா நீங்க மட்டும் ம்ன்னு.. சொல்லுங்க இவனை இங்கயே வச்சு எரிச்சுடுறோம்..”


என்று சுந்தர்ராஜன், வசந்தகுமாரை பார்த்து மற்றவரும் அவர்வர்களது மனதிலிருந்தை கூற, அங்கு அவன் பேசிய பேச்சில் இடிந்துப் போய் நின்றது என்னமோ யாழினியும் அவளது குடும்பமும் தான். ஊர் மக்கள் கொதித்தெழுந்ததை பார்த்து மிரண்டு போன மாணிக்கம் என்ன பேசுவது என்று தெரியாமல்


“எ..என்ன..ய்யா.. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறீங்க.. நீங்க நினைச்சதும் கை வைக்க நான் என்ன சாதாரண ஆள்னு நெனச்சீங்களா..?? இப்ப நான் அமெரிக்கா நாட்டு க்ரீன் கார்டு ஹோல்டர் என் மேல சின்ன கீறல் விழுந்தாலும் இதோ உங்க கலெக்டர் வரைக்கும் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு பதில் சொல்லனும்..”


என்று கூறியவன் மீண்டும் அவர்களை பார்த்து


“எ..ங்க.. இப்ப என் மேல கை வைங்க பார்க்கலாம்..”


என்க அனைவரும் அவன் கூறியதை கேட்டு சில விநாடிகள் யோசிக்க, அந்த இடம் சலசலப்பானது. இதில் அவனுக்கு பயம் விட்டு போக அனைவரையும் பார்த்து ஏளனமாய் புன்னகைக்க அதை கவனித்த தமிழ் நேராக வந்து அவனை பிடித்து மீண்டும் பளார் பளாரென்று அறைந்துவிட்டு


“யூ.. ப்ளடி பாஸ்**ட்.. உன்ன கொன்னா கூட அதை எப்படி பேஸ் பண்ணணும்ன்னு எனக்கு தெரியும்டா.. பண்ணட்டும்மா.. பண்ணட்டுமா..”


என்று உருமியவனாய் நேரே குமாரசாமியின் வீட்டினுள் புகுந்து அங்குமிங்கும் எதையோ தேட கடைசியில் அவர் வீட்டிலிருந்த வெட்டருவாளை எடுத்துவந்தவன் கையில் அருவாளுடன் முகம் சிவந்தவனாய் உடம்பில் வேகத்துடன் கருப்பசாமி போன்று வாசலில் வந்து நிற்க அதை கண்டு மிரண்டு போன அவனது அன்னை அவனை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவனோ எவரையும் பொருட்படுத்தாது அனைவரையும் மீறி மாணிக்கத்தை நோக்கி முன்னேறியவன் அவன் மீது அருவாளை வீச


“வேணாண்ணே..”


என்ற இறுகிய குரலுடன் அவனது கரத்தை பிடித்து நிறுத்தியது அவனது தங்கை யாழினியின் கரம். அவன் கரத்தை நிறுத்திய தங்கையின் இடிந்துப்போன முகத்தை பார்க்க, அவளோ கண்களில் கண்ணீரோடு, மனம் முழுக்க வேதனையுடன் அவனை பார்த்து


“வேணாம்ணே.. அவன கொன்னு உன் கையை நீ அழுக்காகிக்காத..”


என்று கூற, அதை கேட்டு


“என்னம்மா சொல்ற.. உன் வாழ்க்கைய கேள்விகுறியாக்கி உன்ன வே*யோட சேர்த்து வச்சு பேசுறான் இவனப்போய் விட்டுடுன்னு சொல்ற..”


என்று கேட்க அதற்கு அவளோ


“அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கும்ணே.. அவன கொல்றேன்னு நீ இன்னும் ஆரம்பிக்காத உன் வாழ்க்கைய எனக்காக கோவப்பட்டு இழந்துறாதண்ணே..”


என்று கூற அதில் கலங்கியவன் அவளை பார்த்து


“என்னடா பேசுற உனக்காக தானடாம்மா நான் இருக்கேன்.. நீ என் அம்மாடா.. நம்ம வீட்டு சாமிடா.. உன் வாழ்க்கைய கெடுத்து இப்படி பேசுனவன இப்படியே உசுரோட இதே ஊர்ல நடமாடவிட்டா அப்புறம் நான் இருந்தா என்ன இறந்தா என்ன..”


என்று மனதிலிருந்து ஆதங்கத்துடன் பேசி மீண்டும் அவன் மாணிக்கத்தை பார்க்க கோபத்தில் கொப்பளித்தவனாய்


“இவன கொண்ணா தான்டா என் மனசு ஆரும்..”


என்று கூறி மீண்டும் அவன் மீது அருவாளை வீசபோக அவள் மீண்டும் அவனை தடுத்து


“வேணாம்ணே..”


என்று கூற இம்முறை அவளுடன் அவளது அன்னையும் சேர்ந்து கொண்டு


“ஆமாய்யா தங்கச்சி சொல்றத கேளு ராசா.. இவன கங்கம்மா பார்த்துப்பாய்யா..”


என்று கூறி அருகிலிருந்த தன் கணவனை பார்த்து


“ஏங்க.. சொல்லுங்க…”


என்று கூற அவர் ஏதும் சொல்லாது சிலைபோல் உடல் முழுக்க வேர்வையில் நினைந்தவராய் மனம் முழுக்க வேதனையுடன் நிற்க உடனே அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த சுந்தர்ராஜனை பார்த்து


“மாமா.. நீங்களாவது சொல்லுங்க மாமா..”


என்று கூற தன் பேத்தியின் வாழ்க்கை இப்படி கேள்விகுறியானதை எண்ணி நின்றிருந்தவர் தன் மருமகளின் குரலில் சுயத்திற்கு வந்தவராய் தன் பேரன் அருகில் சென்று அவன் கையிலிருந்த வெட்டருவாளை பிடுங்கி கீழே போட்டார். உடனே தமிழ் தன் தாத்தாவை பார்த்து


“என்ன தாத்தா நீங்களுமா.. இவன அப்படியே விட்டுட சொல்றீங்க.. அப்ப என் தங்கச்சி வாழ்க்கைக்கு என்ன பதில்.. சொல்லுங்க தாத்தா..”


என்று அந்த இளம் சிங்கம் கிழட்டு சிங்கம் முன் உரும அதற்கு அந்த கிழட்டு சிங்கமோ


“சரி நீ இப்ப அவன கொண்ணுட்டா உன் தங்கச்சி வாழ்க்கை சரியாகிடுமா.. சொல்லு.. நானே உன் கையில அந்த அருவாள எடுத்து கொடுக்கிறேன்..”


என்று அவர் கேட்க அதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை உடனே சுந்தர்ராஜன்


“சரியாகாதுல்ல..”


என்றவர் இம்முறை சாந்தமாக அவனை பார்த்து


“ஒரு அரசு அதிகாரியான நீயே ஆவேசத்துல சட்டத்தை உன் கையில எடுத்துகிட்டா.. அப்புறம் நாங்கலாம் என்ன பண்றது.. நான் உன்ன தப்பு சொல்லனும்ன்னு இதை சொல்லலய்யா எனக்கும் இவன் செஞ்ச காரியத்துக்கு இந்த வயசுலயும் இவன வெட்டி போடனும்ன்னு தான் இருக்கு, ஆனா கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருய்யா அப்படி பண்ணா நம்ம பொண்ணு வாழ்க்கை சரியாகிடும்மா ஆகாது அதுக்கு பதிலா கொலைகாரன்ற பழியும் சேர்ந்து வரும்..”


என்று அவர் அவனுக்கு எடுத்துரைக்கும் போதே அக்கூட்டத்தில் ஒருவர்


“அய்யா..”


என்று அலற அனைவரும் திரும்பி பார்க்க அங்கு வசந்தகுமார் மண்ணில் சரிந்து கிடந்தார். ஆம் தன் மகளின் வாழ்க்கை கேள்விகுறியானதை நினைத்து அவருக்கு சடனாக ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் தாமதிக்காமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து வந்த மாணிக்கம் அன்றே தன் காதல் மனைவியுடன் மீண்டும் வெளிநாட்டிற்கே பறந்து சென்றான்.


மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வசந்தகுமாருக்கு ஐசியூ வில் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. ஐசியூ விற்கு வெளியே அவரது சொந்தங்களும், ஊர் மக்களும் அச்சத்தில் அமர்ந்திருந்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அவரது குடும்பமே. முதலில் யாழினியின் வாழ்க்கை கேள்விகுறியாக அடுத்த சில நாழிகைகளில் வசந்தகுமார் நெஞ்சு வலியில் விழுந்துவிட என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடந்துவிட்டது.


அடுத்த சில மணிநேரங்களில் ஐசியூ-வில் இருந்து மருத்துவர் வெளியே வர, அவரை ஊர் பெரியவர்களும் தமிழும் சூழ்ந்துக்கொண்டு வசந்தகுமாரின் உடல் நலத்தை விசாரித்தனர். மருத்துவர் ஏதும் பேசாமல் தமிழை மட்டும் தன் அறைக்கு வருமாறு அழைத்தார்.


தமிழ் உள்ளே செல்ல அவனை அமர சொன்னவர் அவனை பார்த்து


“இங்க பாருங்க மிஸ்டர். தமிழ் நான் சொல்றதை கேட்டு பேனிக் ஆகாதீங்க..”


என்க அதற்கு அவனோ


“என்ன ஆச்சு டாக்டர் அப்பாவுக்கு எதுவும் சீரியஸ் இல்லையே..??”


என்று கேட்க அதற்கு அவரோ


“காம் டவுன் மிஸ்டர். தமிழ்.. நான் சொல்றதை முதல்ல கேளுங்க..”


என்றவர் அவனை பார்த்து


“காட்ஸ் க்ரேஸ்.. நல்ல வேளை.. இந்த தடவை உங்க அப்பாவுக்கு எதுவும் ஆகலை. மைல்ட் அட்டாக் தான் பட் இதே சிட்சுவேஷன் உங்க பேமிலில நீடிச்சா அயம் நாட் சுவர் உங்க அப்பாவுக்கு செகன்ட் அட்டாக் வர நிறைய வாய்ப்பிருக்கு. அப்படி செகன்ட் அட்டாக் வந்தா அது அவர் உயிருக்கே கூட ஆபத்தாகலாம்..”


“சோ இனி நீங்க தான் அவரை பார்த்துக்கனும் அவர் மனசுக்கும் மூளைக்கும் ஸ்ட்ரெஸ் தர்றா மாதிரி எந்த விடயத்தையும் நீங்க சொல்ல கூடாது.. செய்ய கூடாது..”


என்க அவர் சொன்னதை கேட்டு தமிழ் எதுவும் பேசாதிருக்க அதை புரிந்துக் கொண்ட மருத்துவர் அவனை பார்த்து


“உங்களுக்கு புரிஞ்சுருக்கும்ன்னு நம்புறேன்..”


என்று கூறி


“இதுல சில மருந்து மாத்திரை எழுதிருக்கேன் டைம் தவறாம அவருக்கு கொடுங்க.. அடுத்த மாசம் மறக்காம செக்அப் அழைச்சிட்டு வாங்க..”


என்று கூறி முடிக்க, அவன் ஏதும் பேசாது எழுந்து வெளியே வந்தான்.


வருடங்கள் உருண்டோடின.. முதல் சில நாட்கள் வீடு அமைதியாக இருந்தாலும் வீட்டிற்கு வந்த குட்டி கிருஷ்ணன் செய்த குறும்பில் அவர்களின் அழுகை கலைந்து ஆனந்தம் பொங்கியது. வசந்தகுமாரின் உடல் நலனில் முன்னேற்றம் தெரிந்தது.


இப்போதெல்லாம் வசந்தகுமாருக்கும் சுந்தர்ராஜனுக்கும் குட்டி கிருஷ்ணணை கொஞ்சிடவே நேரம் சரியாக இருக்கிறது. அதேபோல் அர்ச்சனாவும் வீட்டையும் குழந்தையையும் கவனித்து கொள்கிறார். யாழினி திருமணத்திற்கு முன்பு போலவே இப்போதும் அவளே தன் தாத்தா, அப்பாவின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டு அப்படியே தன் பழைய வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள்.


இறுதியாக தமிழோ உத்யோக ரீதியாக வெளி மாவட்டத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றப்பட்டான். அவனுக்கும் இந்த தனிமை தேவை தானே.. ஆனால் அவன் அங்கு எந்நேரமும் தனிமையில் இருப்பதை கண்டு அவனுடைய அம்மா வருத்தப்பட அதேசமயம் இவ்வளவு காலம் பொறுமையாக காத்திருந்த வரதராஜன் மீண்டும் தன் பேத்தியின் திருமண பேச்சை பேச இம்முறை தன் நண்பன் வீட்டிற்கே நேரில் வந்தார்.


அர்ச்சனாவும் இந்த சமயத்தில் தன் மகனுக்கு ஒரு துணை தேவை என்பதறிந்து முதலில் தன் மகனிடம் பேசினார். அவர் பேசியதும் அவன் நேராக வெற்றி செல்வியின் வீட்டிற்கு சென்று அவளிடம் தன் வீட்டின் நிலைமையை விரிவாக விவரித்து அவன் தங்கை இதன்பிறகு தன் வீட்டிலேயே வசிப்பாள் என்றும் அதில் இவளுக்கு ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்க சிறிது நேரம் யோசித்தவள் யாழினி தன்னோடு ஒரே வீட்டில் இருப்பது அவளுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டாள்.


அதன்பின் தான் தமிழ் தன் அன்னைக்கு கால் செய்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். இதில் மகிழ்ச்சியுற்ற அவனது அன்னை இருவீட்டிலும் கூடி பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே தன் மகனுக்கும் வெற்றி செல்விக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார்.


திருமணத்தை சிம்பிளாக நடத்த சுந்தர்ராஜன் குடும்பம் நினைத்தாலும் இது வரதராஜனின் ஒரே பேத்தியின் திருமணம் அல்லவா அதனால் ஊரையும் உலகையும் (வெளிநாட்டு நண்பர்கள்) கூட்டி 64 வகை உணவு பரிமாறி, இசை நடனம் என கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வருவோர் அனைவரும் கண்டு வியக்கும் அளவிற்கு மணப்பெண்ணை திருமண பட்டாடை, தங்க வைர அணிகலன்களால் அலங்கரித்து வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தினர். திருமணம் முடிந்ததும் தமிழ் செல்வனும் வெற்றி செல்வியும் திருவள்ளூர் கலெக்டர் கெஸ்ட் அவுசில் குடியேற அவர்களின் வாழ்க்கை காதலில் திளைத்தது.


என்னதான் தமிழ் தன் காதல் மனைவியுடன் திருவள்ளுர் கலெக்டர் கெஸ்ட் அவுசில் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ அவனுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன..? அதனால் தான் தன் மாவட்டத்திற்கே மாற்றம் வாங்க முயற்சி எடுத்தான் அப்படி முயற்சி எடுத்ததில் அது அவனுக்கு கை கூடிட தன் மனைவியோடு தன் வீட்டிற்கே வந்து சேர்ந்துவிட்டான்.


சப் கலெக்டராக சென்றவன் கலெக்டராக திரும்பி இருந்தான். அன்று காலை எப்போதும் போல எழுந்தவன் நேராக தன் கடமைகளை முடித்துக்கொண்டு வெளியே வர அங்கு அந்த வீட்டின் குட்டி கிருஷ்ணன் அவனை பார்த்து


“மாமா..”


என்று வாஞ்சையுடன் அழைத்தான் அதை கேட்டு அவனை அள்ளி தூக்கியவன் அந்த இரண்டரை வயது குழந்தையை பார்த்து


“என் செல்லம் என்னை என்னன்னு கூப்டீங்க..”


என்று தன் தலைக்கு மேல் தூக்கி கேட்க அதில் ஆனந்தமடைந்த குழந்தை அவனை பார்த்து சிரிக்க அதை ரசித்துக் கொண்டே மீண்டும்


“எங்க இன்னொரு தடவை மாமா.. ன்னு கூப்டுங்க பார்ப்போம்..”


என்று ஆசையாக கேட்க அந்த பாலகனும்


“மாமா..”


என்று அழைக்க அதில் உச்சி குளிர்ந்தவனாய் அன்று காலை தன் தங்கை மகனை அழைத்துக் கொண்டு ஊர் மொத்தமும் சுற்றி வந்து அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தான். மாமனும் மச்சானும் ஊர் சுற்றிவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

IMG_20220803_005828.jpg
 

NNK64

Moderator
அத்தியாயம் 7
காலை எட்டு மணிக்கு தன் தங்கை மகன் நவநீத கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் திரும்பி வர மணி பத்தாகிவிட்டது. அவன் வருவதை பார்த்து அவனது அன்னை

“டேய்.. காலையிலயே குழந்தைய தூக்கிட்டு எங்கடா போன..??”

என்று கேட்க அதற்கு அவனோ

“நான் என் மாப்ளைக்கு ஊர் சுத்தி காட்டி கூட்டிட்டு வந்தேன்ம்மா..”

என்று கூற அதற்கு அவரோ

“டேய் அதை சொல்லிட்டு கூட்டிட்டு போக மாட்டியா.. குழந்தைக்கு பசிக்கும்ல..”

என்று கூறியபடி குழந்தை கைகளில் இருந்த விளையாட்டு சொப்பு சாமான்களை பார்த்து

“என்னடா இது.. ஏற்கனவே உன் அப்பா, தாத்தா வாங்கி கொடுத்ததே அவ்வளவு இருக்கு இதுல நீ வேற இன்னும் வாங்கி கொடுத்திருக்க..”

என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு தன் மனைவி மகளுடன் வந்த நபர்

“தம்பி..”

என்று குரல் கொடுக்க, திரும்பி பார்த்த தமிழ் அவரை பார்த்து

“உள்ள வாங்கண்ணே.. வாங்க க்கா..”

என்றவன் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து தன் அம்மாவிடம் தன் தந்தை அல்லது தாத்தாவை அழைக்க சொல்ல, அவரும் அழைக்க சென்றார்.

சில நாழிகைகளில் சுந்தர்ராஜன் வந்ததும் மூவரும் அவர் முன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர்கள் மூவரையும் அமர சொன்ன சுந்தர்ராஜன் அந்நபரை பார்த்து

“சொல்லு சண்முகம்..”

என்று கூற அதற்கு அவரோ

“ஐயா போன தடவை வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிருந்தேன்.. உங்க ஆசிர்வாதத்தால அறுவடை அமோகமா நடந்து இந்த வருசம் கை நிறைய லாபம் பார்த்தேன்.. அதான் உங்ககிட்ட வாங்குன பணத்தை குடுத்துட்டு அப்படியே என் மவளுக்கு கல்யாணம் பேசி இருந்தேன் அது கூடி வந்துடவே உங்களுக்கு பத்திரிகை வச்சுட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்..”

என்று கூற அதற்கு அவரோ

“அப்டியா சண்முகம்.. எல்லாம் உன் மனசு மாதிரி நல்லதாவே நடக்கும்.. இது உன் உழைப்புக்கு கிடைச்ச பலன் தான் இதுல நான் எங்கிருந்து வந்தேன்..”

என்றபடி அவர் கொடுத்த பத்திரிகையை வாங்கி பார்த்துவிட்டு மெல்ல எழுந்து தன் மனைவியுடன் சேர்ந்து நிற்க, சண்முகமும் அவரது குடும்பமும் அவரிடம் ஆசி பெற்றனர். அதன்பின் சில நாழிகைகள் பேசியவர்கள் கிளம்பும் நேரம் வர

“அய்யா பணம்..”

என்று ஞாபகமாக பணத்தை கொடுக்க, அதற்கு சுந்தர்ராஜனோ

“ஆஹ்.. ஒரு நிமிசம் சண்முகம்..”

என்றவர் திரும்பியவாறு

“அம்மா.. யாழினி..”

என்று தன் பேத்தியை அழைக்க

“தோ.. வரேன் தாத்தா..”

என்று பதில் கொடுத்தபடி வந்தவளை பார்த்து

“இந்தாம்மா.. சண்முகத்துக்கிட்ட அந்த பணத்தை வாங்கிக்க..”

என்று கூற உடனே அவளும் அதை வாங்கிக் கொண்டு தன் தாத்தாவை பார்த்து

“என்ன பணம் தாத்தா இது..”

என்று கேட்டாள் அதற்கு அவரோ

“போன வருசம் வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிட்டு போனதும்மா இப்ப அறுவடை முடிஞ்சு திரும்ப கொடுக்குறாங்க..”

என்று கூறியதும் அதை அவள் உள்ளே எடுத்துச் செல்ல உடனே சண்முகம் அவளை பார்த்து

“ஒரு நிமிசம்மா..”

என்க அவள் அங்கேய நிற்க உடனே அவர் சுந்தர்ராஜனை பார்த்து

“அய்யா.. அப்படியே உங்க பேத்தி கையால கல்யாணம் ஆகப்போற என் மவளுக்கு குங்குமம் கொடுக்க சொன்னீங்கன்னா..”

என்று கூற அதற்கு சுந்தர்ராஜன் தன் பேத்தி யாழினியை பார்த்தார். உடனே அவளது அம்மா அர்ச்சனாவும் பூஜை அறையிலிருந்து குங்கும சிமிழ் எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி அந்த பெண்ணின் நெற்றியில் யாழினி திலகமிட அடுத்து அர்ச்சனா ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைத்து அதை யாழினியிடம் கொடுக்க அதில் அந்த பெண்ணின் தந்தை சண்முகம் கொடுத்த பணத்தையும் உடன் வைத்து அதை அந்த பெண்ணிடம் கொடுத்து

“இந்தாம்மா.. வாங்கிக்கோ..”

என்று கொடுக்க அதை அந்த பெண் வாங்க தயங்கியபடி தன் தந்தையை பார்க்க உடனே யாழினி

“இது பெரிய வீட்டுல இருந்து கொடுக்குற சீறு வாங்கிக்கோ உங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார்..”

என்று கூறி தன் தாத்தாவை பார்த்து

“என்ன தாத்தா நான் சொல்றது சரிதானே..”

என்க அதற்கு அவரும்

“நீ சொன்னா சரிதான்டாம்மா..”

என்க அந்த பெண்ணின் தந்தையும் சம்மதமாய் தலையசைக்க அந்த பெண் அதை வாங்கி கொண்டாள். அதன்பின் அவளது தந்தை

“ரொம்ப சந்தோசம்ய்யா..”

என்று கூறி அங்கிருந்து தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு மனநிறைவுடன் கிளம்பினார்.

இப்போது இங்கு நடந்த அனைத்தையும் தன் அறையிலிருந்து வெளியே வந்த வெற்றி செல்வி பார்க்க அவளுக்கோ ஏகப்போகமாக கோபம் வர மனதுக்குள்ளே

‘யார் வீட்டு பணத்தை யாரு யாருக்கு தானமா கொடுக்குறது..’

என்று நினைத்து கொண்டு மீண்டும் தன் அறைக்குள்ளேயே சென்று கதவை சாற்றி கொண்டாள்.

உள்ளே சென்றவள் தனக்கு தானே

‘என்ன இது..?? நானும் வந்த நாள்ல இருந்து பார்க்குறேன் எல்லாத்தையும் அவக்கிட்டேயே சொல்றாங்க.. ஏன் அவ குங்குமம் கொடுத்தா தான் அந்த பெண்ணுக்கு நல்லது நடக்குமா..?? நான் குடுத்தா நடக்காதா..??’

‘இவரும் என்னடான்னா ஒன்னுமே பேசாம கல்லு மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்காரு..’

‘வீட்டுக்கு வந்த மருமக என்னைய விட்டுட்டு வாழப்போன வீட்லருந்து வாழாவெட்டியா வந்தவள இப்டி கவனிக்குறாங்க.. எதை சொன்னாலும், எதை கேட்டாலும் அவ பேரை தான் சொல்றாங்க.. என்னதான் நடக்குது.. அப்ப நான் எதுக்கு இங்க மருமகளா வந்துருக்கேன்..’

என்று அவளை அவளே கேட்டுக் கொண்டிருக்க கதவை திறந்து பால் டம்ளருடன் உள்ளே நுழைந்தான் அவள் ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவளது காதல் கணவன் தமிழ்ச் செல்வன்.

உள்ளே வந்தவன் அவளிடம் எடுத்து வந்த பால் டம்ளரை நீட்டியபடி

“என்ன மேடம்க்கு இன்னும் தூக்கம் கலையலியோ..”

என்று கேட்க அதற்கு அவளோ

“ம்ஹூம்..”

என்றபடி அவன் நீட்டிய பால் டம்ளரை வாங்காது முகத்தை வேறுபக்கமாக திருப்பி கொண்டாள். அதை பார்த்து சிரித்தவன் அந்த டம்ளரை பக்கத்திலிருந்த டேபிளில் வைத்துவிட்டு அவளின் பின்னால் அமர்ந்து அவளின் இடையை சுற்றி தன் கையால் வளைத்தவன் அவளது மேடேறிய வயிற்றில் தன்னவள் சுமக்கும் தன் குழந்தையை தடவிக் கொடுத்துக்கொண்டே அவளை லேசாக வலிக்காதவாறு இறுக்கி அணைத்தபடி அவள் தோள் மீது தன் தாடையை பதித்தவாறு

“காலையிலயே மேடம்க்கு என்ன ஆச்சு.. ஏன் மூட் அவுட்டா இருக்கீங்க..??”

என்று கேட்க அதற்கு அவள் மீண்டும் முகத்தை திருப்பியவாறு

“நீங்க என்கிட்ட பேசாதீங்க..”

என்க அதற்கு அவனோ

“ம்ச்.. என்னனு சொன்னா தானே எனக்கு தெரியும்.. அப்பதானே அடுத்த தடவை அதை திருத்திக்க முடியும்..”

என்று அவளது தோளில் முகத்தை பதித்தவாறு கூற அதற்கு அவளோ

“ம்ஹூம்.. பின்ன என்ன நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் எல்லாத்துக்கும் இந்த வீட்ல உங்க தங்கச்சியையே முன்ன நிறுத்தி பேசுறாங்க.. சரி அவங்க தான் பேசுறாங்கன்னா நீங்களும் அதை பத்தி ஒன்னுமே கேட்க மாட்றீங்க..அப்ப நான் எதுக்கு இங்க இருக்கேனாம்..”

என்று கேட்க அதை கேட்டு முதலில் அவளது இடையிலிருந்த பிடியை லேசாக தளர்த்தியவன் பின்பு அவள் சொன்னதை சிறுபிள்ளை பேச்சாக எண்ணி அவளை மீண்டும் அணைத்தபடி

“இதோ பாருங்க மேடம்.. அது இந்த வீட்டோட பழக்கம் எந்த நல்லகாரியமாக இருந்தாலும் அதை அவள முன்ன வச்சு தான் செய்வாங்க.. இன்னைக்கு வரைக்கும் அது அப்படி தான் நடக்குது இனிமேலும் அது அப்படி தான் நடக்கும்.”

என்று அவன் கூற அதை கேட்டவுடன் அவளுக்கு கோபம் இன்னும் ஏறியது அதில் அவனின் பிடியை தளர்த்தி அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அவனை பார்த்து

“எல்லாத்துக்கும் அவதான் முன்ன நிப்பான்னா நான் எதுக்கு உங்கள கட்டிகிட்டு இங்க மருமகளா வந்தேனாம்.. அதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருப்பேனே..”

என்று அவள் கூற அவள் பேசிய பேச்சில் லேசாக அவனுக்கு கோபம் வந்தாலும் அதை அவள் முன் காட்டாதவன் அவளை அழைத்து பக்கத்தில் அமர வைத்து

“இங்க பாரு ஆரம்பத்துல இருந்தே இங்க எல்லாத்தையும் என் தங்கச்சி தான் கவனிச்சுட்டு வர்றா.. அவ இல்லைனா இங்க எதுவுமே ஓடாது.. அதுவுமில்லாம எங்க குடும்பத்துல ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிறந்த பெண்பிள்ளை அவ, அதனால எங்க வீட்ல எந்த நல்லது நடந்தாலும் அவளை முன்ன வச்சு தான் செய்வோம் நீ எப்படி உங்க வீட்டுக்கு ஒரே பெண்பிள்ளையோ அதேபோல தான் இங்க அவளும்..”

“அதனால தேவையில்லாம நீ இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் இந்த நேரத்துல கோபப்படாம இந்த பால குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு.. ”

என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே வந்தவன் ட்ரெஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். அன்றிலிருந்து இதேபோல் அவ்வப்போது வெற்றிச் செல்வி, யாழினியை பற்றி தமிழிடம் பேசப்போக அது அவர்கள் இருவருக்குமான உறவை தூரமாக்கியது.

அதுமட்டுமின்றி இத்தனை வருடங்களாக தன் பிறந்த வீட்டில் ஒரு இளவரசியை போல வளர்ந்துவிட்டு அதன் பிறகு தன் கணவனோடு கலெக்டர் கெஸ்ட் அவுசில் கலெக்டர் மனைவியாக வாழ்ந்தவளுக்கு ஏனோ இப்போது இந்த வீட்டில் தனக்கான அங்கிகாரம் இல்லாதது போல் அவள் உணர ஆரம்பித்தாள்.

அதனால் இனி இங்கு இருப்பது தனக்கு தான் அவமானம் என்று எண்ணியபடி ஒருநாள் இரவு தன் கணவனிடம் மீண்டும் நாம் ஏன் கலெக்டர் கெஸ்ட் அவுசுக்கே போக கூடாது என்று கேட்க, அதற்கு அவன் சம்மதிக்கவில்லை.

இதனால் மேலும் கோபமடைந்த செல்வி அடுத்த நாள் காலையிலேயே தனியாக கிளம்பி தன் அம்மா வீட்டிற்கு சென்றாள். வீட்டிற்கு வந்த வெற்றி செல்வியை அழைத்துச் சென்று அவளது அறையில் அமர்த்திய அவளது அன்னை

“ஏய்.. என்னடீ.. ஏன் ஒருமாதிரி இருக்க என்னாச்சு.. நீ மட்டும் தனியா வந்து இருக்க மாப்ள வர்லயா..??”

என்று கேட்க அதற்கு அவளோ

“இல்லம்மா.. நான் வந்தது அவருக்கு தெரியாது..”

என்க உடனே அவரது அன்னை சாரதா

“ஏய்.. என்னடீ சொல்ற.. வயித்துபுள்ளக்காரி இந்த சமயத்துல மாப்ளைக்கு தெரியாம தனியா வந்தேன்னு சொல்ற..”

என்றவர் உடனே அருகில் நின்றுக் கொண்டிருந்த தன் மகன் செழியனை பார்த்து

“டேய் செழியா.. இவ என்னடா சொல்றா..?? மாப்ளைக்கு போன் போடு..”

என்க அதற்கு அவனோ

“அம்மா.. ஒரு நிமிஷம் இருங்கம்மா..”

என்று கூறி தன் தங்கை பக்கத்தில் அமர்ந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தியவாறு

“என்னாச்சுடாம்மா..”

என்று கேட்க உடனே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது அதை பார்த்தவன் மனமோ உள்ளுக்குள் வேதனையில் துடித்தது. மீண்டும் ஒருமுறை அவளை பார்த்து

“என்னாச்சுடாம்மா..”

என்க உடனே அவள் அங்கு நடந்த அனைத்தையும் தன் அண்ணன் முன் கூறி அழுதுவிட்டு

“எல்லாத்துக்கும் அவள தான் கூப்பிடுறாங்க.. அவ ஆசிர்வாதம் பண்ணா தான் நல்லது நடக்குமா..?? நான் பண்ணா நடக்காதா..?? அவ தொட்டு கொடுத்தா தான் விளங்குமா..?? ஏன் நான் தொட்டு குடுத்தா விளங்காதா..?? இப்படி எதுக்கு எடுத்தாலும் யாழினி.. யாழினி.. யாழினின்னு அவ பேரையே சொல்றாங்கண்ணா..”

“அந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லன்னா.. அந்த வீட்டுல இருக்கவங்க தான் அப்படி இருக்காங்கன்னா என்னை கட்டுனவரும் அப்படி தான் இருக்கார் அவ எது சொன்னாலும் அதுக்கு அப்படியே தலையசைக்குறார் எதுனாலும் அவளை கேட்டு தான் முடிவெடுக்குறார் எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலைன்னா.. நான் இங்கயே இருந்துடுறேன்..”

என்க அதை கேட்ட செழியனுக்கு யாழினி மீதும் தன் தங்கையின் கணவன் தமிழ்செல்வன் மீதும் கோபம் வந்திட அதில் அவனது புஜங்கள் இரண்டும் புடைத்துக் கொண்டது.

வெற்றிச் செழியன் பற்றி சிறிய இன்ட்ரோ பார்த்துட்டு கதைக்கு உள்ள போகலாம்.. 😁😁

இதோ.. இவன் தான் நம்ம கதையோட பர்ஸ்ட் ஹீரோன்னு நான் நம்பிட்டு இருக்கேன் ப்ரெண்ட்ஸ்🤭🤭 பேரு வெற்றிச் செழியன். இவர் எதை தொட்டாலும் அதுல வெற்றி தான் தோல்வி இவருக்கு பழக்கமே இல்லை.

வெளிநாட்டுல பேஷன் டிசைனிங் ல மாஸ்டர்ஸ் முடிச்சுட்டு அப்படியே அங்க ஒரு லீடிங் ப்ராண்டட் பேப்ரிக் கம்பெனியில் (அதாங்க துணிகடை) பேஷன் டிசைனராக வேலை செய்துட்டே அப்படியே அந்த ஊரிலேயே உள்ள பெரிய யூனிவர்சிட்டியில் சேல்ஸ் & மார்க்கெட்டிங் கோர்ஸ் தேர்ந்தெடுத்து படிச்சுட்டு இருந்தார்.

அதுமட்டுமா இவர் வெளிநாட்டு காலேஜ்ல படிக்கும்போது இவரை போலவே தமிழ்நாட்டுல இருந்து வந்த ஒரு ஜூனியர் பொண்ணு இவர் மனசை கேட்க இவரும் அதை கொடைவள்ளல் கர்ணன் போல தூக்கி தந்துட்டார்.. இப்ப ரெண்டு பேரும் லவ்வாங்கியோ லவ்வாங்கி செய்ய அதை ரெண்டு பேர் வீட்டுக்கும் சொல்லி இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்கும் நிச்சய தாம்பூலம் பண்ணப்போறாங்க 😁😁

வெளிநாட்டு படிப்பை முடிச்சுட்டு அனுபவ ரீதியா வேலையை கத்துகிட்டு ஊர் திரும்பிய நம்ம ஹீரோ இப்ப அவரோட தாத்தா வரதராஜனோட கம்பெனில எம்.டி யா வேலை பார்க்குறார் புதுசா திறந்து இருக்குற கார்மென்ட் செக்சனுக்கு அய்யா தான் ஹெட்டு..

தாத்தாவுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்துக்கே செல்லபிள்ளை இவர்தான்.. தங்கச்சி மேல உயிரு.. அதேபோல செல்விக்கும் அண்ணனா அவ்ளோ பிடிக்கும்.. அம்மா, அப்பாட்ட சொல்லாததை கூட அண்ணன்கிட்ட ஒப்பிச்சுடுவா.. இதுதான் இவரோட எஸ்.டி.டி..

ரைட்டு இப்ப கதைக்கு வருவோம்..

கோபத்தில் அவனது புஜங்கள் விரிவதை கவனித்த அவனது அம்மா சாரதா அவனை பார்த்து

“டேய்.. இவ சொல்றதை கேட்டு நீ எதுவும் செய்து வைக்காத இது அவ லைப் மேட்டர். இதை பொறுமையா தான் ஹேன்டில் பண்ணணும்.. தாத்தா வந்ததும் பேசலாம்..

என்க அவனுக்கும் அது சரியென்று தோன்ற தன் தங்கையை பார்த்து

“சரிடாம்மா நீ ரெஸ்ட் எடுத்துக்க.. நான் பார்த்துக்குறேன்..”

என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அன்று மாலையே தமிழ் தன் மனைவியை தேடி அவளது பிறந்த வீட்டிற்கு வந்தான். அங்கு வந்தவனை சாரதா உபசரிக்க

“அத்தை, செல்வி..”

என்க அதற்கு அவரோ

“செல்வி அவ ரூம்ல இருக்கா மாப்ள.. நான் போய் வர சொல்றேன் நீங்க உட்காருங்க மாப்ள..”

என்க அதற்கு அவனோ

“இல்ல அத்தை நானே போய் பார்த்துக்குறேன்..”

என்று கூறி அந்த முதலாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாண்டியவன் நேராக அவள் அறை கதவை தட்ட வெளியே தட்டுவது தன்னவன் எனதறியாது செல்வி கதவை திறக்க தன்னவளை பார்த்தவன் அக்கணமே அவளை கட்டியணைத்து கொண்டு அவளது தோளில் சாய்ந்தவாறு கண்கலங்கியபடி அவளை பார்த்து

“ஏன்டீ ஒருவார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..”

என்க தன்னவன் அணைப்பில் தன்னை மறந்தவளுக்கு இப்போது அவன் அணைத்திருக்கும் பிடியில் வலி உணர அதை வெளிப்படுத்தியவளாய்

“ஆ..”

என்று கத்த அப்போது தான் தன்னவளை அவன் எப்படி அணைத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தவன் அவளை விட்டு விலகி அவள் முன்னே மண்டியிட்டு அவளது வயிற்றை தடவி கொடுத்துவிட்டு அதில் தன் இதழ் பதித்தவனாய் அவளை பார்த்து

“வலிக்குதாடீ..”

என்று கேட்க அவளோ அவனை பார்த்து தன்னை மறந்தவளாய் லேசாக புன்னகைத்து

“இல்ல..”

என்று கூற அவளை அப்படியே இடையோடு கட்டியணைத்து அவள் வயிற்றின் மேல் தலை வைத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அவளது அம்மாவும் அண்ணனும் அதை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைய அதை கவனித்த செல்வி உடனே அவளது கணவனை தட்டியவாறு அவனுக்கு அவர்களின் வருகையை உணர்த்த அவர்களை பார்த்த அவனும் சட்டென்று எழுந்து கொண்டு

“சரி நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம் நீ காணோம்ன்னு தெரிஞ்சதும் பதறியடிச்சு ஓடி வந்துட்டேன்..”

என்க அதற்கு அவளும்

“சரி நான் ரெடியாகிட்டு வர்றேன் நீங்க கீழ வெயிட் பண்ணுங்க..”

என்று கூறி தன்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளே சென்றாள். அதேசமயம் அங்கு கையில் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்த சாரதா அவனிடம் அதை கொடுக்க அதை வாங்கிக்கொண்டு கீழே வந்தவன் அதை பருகி கொண்டிருந்தான். அப்போது அவனருகில் அமர்ந்திருந்த செழியனுக்கு என்னதான் தன் தங்கையை தமிழ் அழைத்துச் செல்ல வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ அவன் மனதின் ஓரத்தில் அவனது தங்கை யாழினியை பற்றி கூறியது உறுத்தலாகவே இருந்தது.

அதனால் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் தமிழிடம் பேச்சு கொடுத்த வண்ணம் அப்படியே அவனிடம்

“மச்சான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..”

என்க அதற்கு அவனும்

“என்ன மச்சான் சொல்லுங்க..”

என்க உடனே செழியன் தமிழை பார்த்து

“வீட்டுக்கு வந்ததும் தங்கச்சி எல்லாம் சொன்னா.. நீங்க ஏன் அவ கேட்டா மாதிரி கலெக்டர் கெஸ்ட் அவுஸ்க்கு போய் கொஞ்ச நாள் தங்க கூடாது.. இந்த டைம்ல அவ சந்தோசம் தானே நமக்கு முக்கியம்..”

என்க அதை கேட்ட தமிழ், செழியனை பார்க்க உடனே செழியன்

“அப்படி உங்களுக்கு கெஸ்ட் அவுஸ்ல தங்க விருப்பமில்லைனா சொல்லுங்க அந்த மாவட்டத்துலயே ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து வாங்கிடலாம் அதுல நீங்க என் தங்கச்சி உங்க அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் தங்கிக்கங்க..”

என்க அதற்கு தமிழோ

“அப்ப என் தங்கச்சி..”

என்க அதற்கு செழியனோ

“அவங்க இப்ப இருக்க உங்க வீட்லயே இருக்கட்டும் மச்சான் வேணும்னா அதை அவங்களுக்கே கூட கொடுத்துடுங்க.. அப்படி அந்த வீடு பழைய வீடா இருக்குன்னு பீல் பண்ணாங்கன்னா சொல்லுங்க அவங்களுக்கும் ஒரு புது வீடு பார்த்து என்ன தேவையோ அதை ஏ டூ இசட் வரை செய்து கொடுத்துடலாம்.. நீங்க எப்பயாவது அவங்கள பார்க்கனும்னா போய் பார்த்துட்டு வாங்க..”

என்று கூற இதை கேட்ட தமிழ் செழியனை பார்த்து

“சரி மச்சான் நீங்க சொல்றதை நான் யோசிக்குறேன் இப்ப நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?? அதுக்கு நீங்க பதில் சொல்லுவீங்களா..??”

என்று கேட்க அதற்கு செழியன்

“ம்.. கேளுங்க மச்சான்”

என்க உடனே தமிழ் அவனை பார்த்து

“இப்ப நீங்க விரும்புற உங்க வருங்கால மனைவிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்த பின்னாடியும் இதே போல உங்க தங்கச்சி உங்க வீட்டுல வந்து தங்க அது ஒருவேளை உங்க மனைவிக்கு பிடிக்கலைன்னு சொன்னா உங்க தங்கச்சியை நீங்க தனியா வச்சுடுவீங்களா..”

என்று கேட்க அதை கேட்டதும் சுர்ரென்று சீறியவனாய்

“அது எப்படி.. அவ அண்ணன் நான் இருக்கும்போது அவளை ஏன் நான் தனியா வைக்கனும்..”

என்று கேட்க அதற்கு தமிழோ

“அதேபோல நான் மட்டும் ஏன் என் தங்கச்சிய தனியா வைக்கனும்..”

என்க தமிழ் கேட்ட கேள்விக்கு செழியன் வாயடைத்து போக மீண்டும் தமிழ்

“சும்மா புருஷன் கிட்ட கோவிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு போற உங்க தங்கச்சிய பார்க்கும்போதே உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றீங்களே..”

“கல்யாணமான ஒரே வருசத்துல இனி தனக்கு வாழ்க்கையே இல்லைன்னு உட்கார்ந்து இருக்க என் தங்கச்சிய பார்க்கும்போது எனக்கு எப்படி இருக்கும்ன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்..”

என்று கூறி தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் மீண்டும் செழியனை பார்த்து

“அதேபோல நான் ஒன்னும் என் தங்கச்சி விசயத்தை மறைச்சு உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணல.. முதல்லயே எல்லாத்தையும் சொல்லி அவ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் கல்யாணம் கட்டுனேன்..”

என்று கூறி தன் மனைவி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
IMG_20220803_005828.jpg
 

yugarasha

Member
அத்தியாயம் 7
காலை எட்டு மணிக்கு தன் தங்கை மகன் நவநீத கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் திரும்பி வர மணி பத்தாகிவிட்டது. அவன் வருவதை பார்த்து அவனது அன்னை

“டேய்.. காலையிலயே குழந்தைய தூக்கிட்டு எங்கடா போன..??”

என்று கேட்க அதற்கு அவனோ

“நான் என் மாப்ளைக்கு ஊர் சுத்தி காட்டி கூட்டிட்டு வந்தேன்ம்மா..”

என்று கூற அதற்கு அவரோ

“டேய் அதை சொல்லிட்டு கூட்டிட்டு போக மாட்டியா.. குழந்தைக்கு பசிக்கும்ல..”

என்று கூறியபடி குழந்தை கைகளில் இருந்த விளையாட்டு சொப்பு சாமான்களை பார்த்து

“என்னடா இது.. ஏற்கனவே உன் அப்பா, தாத்தா வாங்கி கொடுத்ததே அவ்வளவு இருக்கு இதுல நீ வேற இன்னும் வாங்கி கொடுத்திருக்க..”

என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு தன் மனைவி மகளுடன் வந்த நபர்

“தம்பி..”

என்று குரல் கொடுக்க, திரும்பி பார்த்த தமிழ் அவரை பார்த்து

“உள்ள வாங்கண்ணே.. வாங்க க்கா..”

என்றவன் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து தன் அம்மாவிடம் தன் தந்தை அல்லது தாத்தாவை அழைக்க சொல்ல, அவரும் அழைக்க சென்றார்.

சில நாழிகைகளில் சுந்தர்ராஜன் வந்ததும் மூவரும் அவர் முன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர்கள் மூவரையும் அமர சொன்ன சுந்தர்ராஜன் அந்நபரை பார்த்து

“சொல்லு சண்முகம்..”

என்று கூற அதற்கு அவரோ

“ஐயா போன தடவை வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிருந்தேன்.. உங்க ஆசிர்வாதத்தால அறுவடை அமோகமா நடந்து இந்த வருசம் கை நிறைய லாபம் பார்த்தேன்.. அதான் உங்ககிட்ட வாங்குன பணத்தை குடுத்துட்டு அப்படியே என் மவளுக்கு கல்யாணம் பேசி இருந்தேன் அது கூடி வந்துடவே உங்களுக்கு பத்திரிகை வச்சுட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்..”

என்று கூற அதற்கு அவரோ

“அப்டியா சண்முகம்.. எல்லாம் உன் மனசு மாதிரி நல்லதாவே நடக்கும்.. இது உன் உழைப்புக்கு கிடைச்ச பலன் தான் இதுல நான் எங்கிருந்து வந்தேன்..”

என்றபடி அவர் கொடுத்த பத்திரிகையை வாங்கி பார்த்துவிட்டு மெல்ல எழுந்து தன் மனைவியுடன் சேர்ந்து நிற்க, சண்முகமும் அவரது குடும்பமும் அவரிடம் ஆசி பெற்றனர். அதன்பின் சில நாழிகைகள் பேசியவர்கள் கிளம்பும் நேரம் வர

“அய்யா பணம்..”

என்று ஞாபகமாக பணத்தை கொடுக்க, அதற்கு சுந்தர்ராஜனோ

“ஆஹ்.. ஒரு நிமிசம் சண்முகம்..”

என்றவர் திரும்பியவாறு

“அம்மா.. யாழினி..”

என்று தன் பேத்தியை அழைக்க

“தோ.. வரேன் தாத்தா..”

என்று பதில் கொடுத்தபடி வந்தவளை பார்த்து

“இந்தாம்மா.. சண்முகத்துக்கிட்ட அந்த பணத்தை வாங்கிக்க..”

என்று கூற உடனே அவளும் அதை வாங்கிக் கொண்டு தன் தாத்தாவை பார்த்து

“என்ன பணம் தாத்தா இது..”

என்று கேட்டாள் அதற்கு அவரோ

“போன வருசம் வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிட்டு போனதும்மா இப்ப அறுவடை முடிஞ்சு திரும்ப கொடுக்குறாங்க..”

என்று கூறியதும் அதை அவள் உள்ளே எடுத்துச் செல்ல உடனே சண்முகம் அவளை பார்த்து

“ஒரு நிமிசம்மா..”

என்க அவள் அங்கேய நிற்க உடனே அவர் சுந்தர்ராஜனை பார்த்து

“அய்யா.. அப்படியே உங்க பேத்தி கையால கல்யாணம் ஆகப்போற என் மவளுக்கு குங்குமம் கொடுக்க சொன்னீங்கன்னா..”

என்று கூற அதற்கு சுந்தர்ராஜன் தன் பேத்தி யாழினியை பார்த்தார். உடனே அவளது அம்மா அர்ச்சனாவும் பூஜை அறையிலிருந்து குங்கும சிமிழ் எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி அந்த பெண்ணின் நெற்றியில் யாழினி திலகமிட அடுத்து அர்ச்சனா ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைத்து அதை யாழினியிடம் கொடுக்க அதில் அந்த பெண்ணின் தந்தை சண்முகம் கொடுத்த பணத்தையும் உடன் வைத்து அதை அந்த பெண்ணிடம் கொடுத்து

“இந்தாம்மா.. வாங்கிக்கோ..”

என்று கொடுக்க அதை அந்த பெண் வாங்க தயங்கியபடி தன் தந்தையை பார்க்க உடனே யாழினி

“இது பெரிய வீட்டுல இருந்து கொடுக்குற சீறு வாங்கிக்கோ உங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார்..”

என்று கூறி தன் தாத்தாவை பார்த்து

“என்ன தாத்தா நான் சொல்றது சரிதானே..”

என்க அதற்கு அவரும்

“நீ சொன்னா சரிதான்டாம்மா..”

என்க அந்த பெண்ணின் தந்தையும் சம்மதமாய் தலையசைக்க அந்த பெண் அதை வாங்கி கொண்டாள். அதன்பின் அவளது தந்தை

“ரொம்ப சந்தோசம்ய்யா..”

என்று கூறி அங்கிருந்து தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு மனநிறைவுடன் கிளம்பினார்.

இப்போது இங்கு நடந்த அனைத்தையும் தன் அறையிலிருந்து வெளியே வந்த வெற்றி செல்வி பார்க்க அவளுக்கோ ஏகப்போகமாக கோபம் வர மனதுக்குள்ளே

‘யார் வீட்டு பணத்தை யாரு யாருக்கு தானமா கொடுக்குறது..’

என்று நினைத்து கொண்டு மீண்டும் தன் அறைக்குள்ளேயே சென்று கதவை சாற்றி கொண்டாள்.

உள்ளே சென்றவள் தனக்கு தானே

‘என்ன இது..?? நானும் வந்த நாள்ல இருந்து பார்க்குறேன் எல்லாத்தையும் அவக்கிட்டேயே சொல்றாங்க.. ஏன் அவ குங்குமம் கொடுத்தா தான் அந்த பெண்ணுக்கு நல்லது நடக்குமா..?? நான் குடுத்தா நடக்காதா..??’

‘இவரும் என்னடான்னா ஒன்னுமே பேசாம கல்லு மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்காரு..’

‘வீட்டுக்கு வந்த மருமக என்னைய விட்டுட்டு வாழப்போன வீட்லருந்து வாழாவெட்டியா வந்தவள இப்டி கவனிக்குறாங்க.. எதை சொன்னாலும், எதை கேட்டாலும் அவ பேரை தான் சொல்றாங்க.. என்னதான் நடக்குது.. அப்ப நான் எதுக்கு இங்க மருமகளா வந்துருக்கேன்..’

என்று அவளை அவளே கேட்டுக் கொண்டிருக்க கதவை திறந்து பால் டம்ளருடன் உள்ளே நுழைந்தான் அவள் ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவளது காதல் கணவன் தமிழ்ச் செல்வன்.

உள்ளே வந்தவன் அவளிடம் எடுத்து வந்த பால் டம்ளரை நீட்டியபடி

“என்ன மேடம்க்கு இன்னும் தூக்கம் கலையலியோ..”

என்று கேட்க அதற்கு அவளோ

“ம்ஹூம்..”

என்றபடி அவன் நீட்டிய பால் டம்ளரை வாங்காது முகத்தை வேறுபக்கமாக திருப்பி கொண்டாள். அதை பார்த்து சிரித்தவன் அந்த டம்ளரை பக்கத்திலிருந்த டேபிளில் வைத்துவிட்டு அவளின் பின்னால் அமர்ந்து அவளின் இடையை சுற்றி தன் கையால் வளைத்தவன் அவளது மேடேறிய வயிற்றில் தன்னவள் சுமக்கும் தன் குழந்தையை தடவிக் கொடுத்துக்கொண்டே அவளை லேசாக வலிக்காதவாறு இறுக்கி அணைத்தபடி அவள் தோள் மீது தன் தாடையை பதித்தவாறு

“காலையிலயே மேடம்க்கு என்ன ஆச்சு.. ஏன் மூட் அவுட்டா இருக்கீங்க..??”

என்று கேட்க அதற்கு அவள் மீண்டும் முகத்தை திருப்பியவாறு

“நீங்க என்கிட்ட பேசாதீங்க..”

என்க அதற்கு அவனோ

“ம்ச்.. என்னனு சொன்னா தானே எனக்கு தெரியும்.. அப்பதானே அடுத்த தடவை அதை திருத்திக்க முடியும்..”

என்று அவளது தோளில் முகத்தை பதித்தவாறு கூற அதற்கு அவளோ

“ம்ஹூம்.. பின்ன என்ன நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் எல்லாத்துக்கும் இந்த வீட்ல உங்க தங்கச்சியையே முன்ன நிறுத்தி பேசுறாங்க.. சரி அவங்க தான் பேசுறாங்கன்னா நீங்களும் அதை பத்தி ஒன்னுமே கேட்க மாட்றீங்க..அப்ப நான் எதுக்கு இங்க இருக்கேனாம்..”

என்று கேட்க அதை கேட்டு முதலில் அவளது இடையிலிருந்த பிடியை லேசாக தளர்த்தியவன் பின்பு அவள் சொன்னதை சிறுபிள்ளை பேச்சாக எண்ணி அவளை மீண்டும் அணைத்தபடி

“இதோ பாருங்க மேடம்.. அது இந்த வீட்டோட பழக்கம் எந்த நல்லகாரியமாக இருந்தாலும் அதை அவள முன்ன வச்சு தான் செய்வாங்க.. இன்னைக்கு வரைக்கும் அது அப்படி தான் நடக்குது இனிமேலும் அது அப்படி தான் நடக்கும்.”

என்று அவன் கூற அதை கேட்டவுடன் அவளுக்கு கோபம் இன்னும் ஏறியது அதில் அவனின் பிடியை தளர்த்தி அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அவனை பார்த்து

“எல்லாத்துக்கும் அவதான் முன்ன நிப்பான்னா நான் எதுக்கு உங்கள கட்டிகிட்டு இங்க மருமகளா வந்தேனாம்.. அதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருப்பேனே..”

என்று அவள் கூற அவள் பேசிய பேச்சில் லேசாக அவனுக்கு கோபம் வந்தாலும் அதை அவள் முன் காட்டாதவன் அவளை அழைத்து பக்கத்தில் அமர வைத்து

“இங்க பாரு ஆரம்பத்துல இருந்தே இங்க எல்லாத்தையும் என் தங்கச்சி தான் கவனிச்சுட்டு வர்றா.. அவ இல்லைனா இங்க எதுவுமே ஓடாது.. அதுவுமில்லாம எங்க குடும்பத்துல ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிறந்த பெண்பிள்ளை அவ, அதனால எங்க வீட்ல எந்த நல்லது நடந்தாலும் அவளை முன்ன வச்சு தான் செய்வோம் நீ எப்படி உங்க வீட்டுக்கு ஒரே பெண்பிள்ளையோ அதேபோல தான் இங்க அவளும்..”

“அதனால தேவையில்லாம நீ இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் இந்த நேரத்துல கோபப்படாம இந்த பால குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு.. ”

என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே வந்தவன் ட்ரெஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். அன்றிலிருந்து இதேபோல் அவ்வப்போது வெற்றிச் செல்வி, யாழினியை பற்றி தமிழிடம் பேசப்போக அது அவர்கள் இருவருக்குமான உறவை தூரமாக்கியது.

அதுமட்டுமின்றி இத்தனை வருடங்களாக தன் பிறந்த வீட்டில் ஒரு இளவரசியை போல வளர்ந்துவிட்டு அதன் பிறகு தன் கணவனோடு கலெக்டர் கெஸ்ட் அவுசில் கலெக்டர் மனைவியாக வாழ்ந்தவளுக்கு ஏனோ இப்போது இந்த வீட்டில் தனக்கான அங்கிகாரம் இல்லாதது போல் அவள் உணர ஆரம்பித்தாள்.

அதனால் இனி இங்கு இருப்பது தனக்கு தான் அவமானம் என்று எண்ணியபடி ஒருநாள் இரவு தன் கணவனிடம் மீண்டும் நாம் ஏன் கலெக்டர் கெஸ்ட் அவுசுக்கே போக கூடாது என்று கேட்க, அதற்கு அவன் சம்மதிக்கவில்லை.

இதனால் மேலும் கோபமடைந்த செல்வி அடுத்த நாள் காலையிலேயே தனியாக கிளம்பி தன் அம்மா வீட்டிற்கு சென்றாள். வீட்டிற்கு வந்த வெற்றி செல்வியை அழைத்துச் சென்று அவளது அறையில் அமர்த்திய அவளது அன்னை

“ஏய்.. என்னடீ.. ஏன் ஒருமாதிரி இருக்க என்னாச்சு.. நீ மட்டும் தனியா வந்து இருக்க மாப்ள வர்லயா..??”

என்று கேட்க அதற்கு அவளோ

“இல்லம்மா.. நான் வந்தது அவருக்கு தெரியாது..”

என்க உடனே அவரது அன்னை சாரதா

“ஏய்.. என்னடீ சொல்ற.. வயித்துபுள்ளக்காரி இந்த சமயத்துல மாப்ளைக்கு தெரியாம தனியா வந்தேன்னு சொல்ற..”

என்றவர் உடனே அருகில் நின்றுக் கொண்டிருந்த தன் மகன் செழியனை பார்த்து

“டேய் செழியா.. இவ என்னடா சொல்றா..?? மாப்ளைக்கு போன் போடு..”

என்க அதற்கு அவனோ

“அம்மா.. ஒரு நிமிஷம் இருங்கம்மா..”

என்று கூறி தன் தங்கை பக்கத்தில் அமர்ந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தியவாறு

“என்னாச்சுடாம்மா..”

என்று கேட்க உடனே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது அதை பார்த்தவன் மனமோ உள்ளுக்குள் வேதனையில் துடித்தது. மீண்டும் ஒருமுறை அவளை பார்த்து

“என்னாச்சுடாம்மா..”

என்க உடனே அவள் அங்கு நடந்த அனைத்தையும் தன் அண்ணன் முன் கூறி அழுதுவிட்டு

“எல்லாத்துக்கும் அவள தான் கூப்பிடுறாங்க.. அவ ஆசிர்வாதம் பண்ணா தான் நல்லது நடக்குமா..?? நான் பண்ணா நடக்காதா..?? அவ தொட்டு கொடுத்தா தான் விளங்குமா..?? ஏன் நான் தொட்டு குடுத்தா விளங்காதா..?? இப்படி எதுக்கு எடுத்தாலும் யாழினி.. யாழினி.. யாழினின்னு அவ பேரையே சொல்றாங்கண்ணா..”

“அந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லன்னா.. அந்த வீட்டுல இருக்கவங்க தான் அப்படி இருக்காங்கன்னா என்னை கட்டுனவரும் அப்படி தான் இருக்கார் அவ எது சொன்னாலும் அதுக்கு அப்படியே தலையசைக்குறார் எதுனாலும் அவளை கேட்டு தான் முடிவெடுக்குறார் எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலைன்னா.. நான் இங்கயே இருந்துடுறேன்..”

என்க அதை கேட்ட செழியனுக்கு யாழினி மீதும் தன் தங்கையின் கணவன் தமிழ்செல்வன் மீதும் கோபம் வந்திட அதில் அவனது புஜங்கள் இரண்டும் புடைத்துக் கொண்டது.

வெற்றிச் செழியன் பற்றி சிறிய இன்ட்ரோ பார்த்துட்டு கதைக்கு உள்ள போகலாம்.. 😁😁

இதோ.. இவன் தான் நம்ம கதையோட பர்ஸ்ட் ஹீரோன்னு நான் நம்பிட்டு இருக்கேன் ப்ரெண்ட்ஸ்🤭🤭 பேரு வெற்றிச் செழியன். இவர் எதை தொட்டாலும் அதுல வெற்றி தான் தோல்வி இவருக்கு பழக்கமே இல்லை.

வெளிநாட்டுல பேஷன் டிசைனிங் ல மாஸ்டர்ஸ் முடிச்சுட்டு அப்படியே அங்க ஒரு லீடிங் ப்ராண்டட் பேப்ரிக் கம்பெனியில் (அதாங்க துணிகடை) பேஷன் டிசைனராக வேலை செய்துட்டே அப்படியே அந்த ஊரிலேயே உள்ள பெரிய யூனிவர்சிட்டியில் சேல்ஸ் & மார்க்கெட்டிங் கோர்ஸ் தேர்ந்தெடுத்து படிச்சுட்டு இருந்தார்.

அதுமட்டுமா இவர் வெளிநாட்டு காலேஜ்ல படிக்கும்போது இவரை போலவே தமிழ்நாட்டுல இருந்து வந்த ஒரு ஜூனியர் பொண்ணு இவர் மனசை கேட்க இவரும் அதை கொடைவள்ளல் கர்ணன் போல தூக்கி தந்துட்டார்.. இப்ப ரெண்டு பேரும் லவ்வாங்கியோ லவ்வாங்கி செய்ய அதை ரெண்டு பேர் வீட்டுக்கும் சொல்லி இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்கும் நிச்சய தாம்பூலம் பண்ணப்போறாங்க 😁😁

வெளிநாட்டு படிப்பை முடிச்சுட்டு அனுபவ ரீதியா வேலையை கத்துகிட்டு ஊர் திரும்பிய நம்ம ஹீரோ இப்ப அவரோட தாத்தா வரதராஜனோட கம்பெனில எம்.டி யா வேலை பார்க்குறார் புதுசா திறந்து இருக்குற கார்மென்ட் செக்சனுக்கு அய்யா தான் ஹெட்டு..

தாத்தாவுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்துக்கே செல்லபிள்ளை இவர்தான்.. தங்கச்சி மேல உயிரு.. அதேபோல செல்விக்கும் அண்ணனா அவ்ளோ பிடிக்கும்.. அம்மா, அப்பாட்ட சொல்லாததை கூட அண்ணன்கிட்ட ஒப்பிச்சுடுவா.. இதுதான் இவரோட எஸ்.டி.டி..

ரைட்டு இப்ப கதைக்கு வருவோம்..

கோபத்தில் அவனது புஜங்கள் விரிவதை கவனித்த அவனது அம்மா சாரதா அவனை பார்த்து

“டேய்.. இவ சொல்றதை கேட்டு நீ எதுவும் செய்து வைக்காத இது அவ லைப் மேட்டர். இதை பொறுமையா தான் ஹேன்டில் பண்ணணும்.. தாத்தா வந்ததும் பேசலாம்..

என்க அவனுக்கும் அது சரியென்று தோன்ற தன் தங்கையை பார்த்து

“சரிடாம்மா நீ ரெஸ்ட் எடுத்துக்க.. நான் பார்த்துக்குறேன்..”

என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அன்று மாலையே தமிழ் தன் மனைவியை தேடி அவளது பிறந்த வீட்டிற்கு வந்தான். அங்கு வந்தவனை சாரதா உபசரிக்க

“அத்தை, செல்வி..”

என்க அதற்கு அவரோ

“செல்வி அவ ரூம்ல இருக்கா மாப்ள.. நான் போய் வர சொல்றேன் நீங்க உட்காருங்க மாப்ள..”

என்க அதற்கு அவனோ

“இல்ல அத்தை நானே போய் பார்த்துக்குறேன்..”

என்று கூறி அந்த முதலாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாண்டியவன் நேராக அவள் அறை கதவை தட்ட வெளியே தட்டுவது தன்னவன் எனதறியாது செல்வி கதவை திறக்க தன்னவளை பார்த்தவன் அக்கணமே அவளை கட்டியணைத்து கொண்டு அவளது தோளில் சாய்ந்தவாறு கண்கலங்கியபடி அவளை பார்த்து

“ஏன்டீ ஒருவார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..”

என்க தன்னவன் அணைப்பில் தன்னை மறந்தவளுக்கு இப்போது அவன் அணைத்திருக்கும் பிடியில் வலி உணர அதை வெளிப்படுத்தியவளாய்

“ஆ..”

என்று கத்த அப்போது தான் தன்னவளை அவன் எப்படி அணைத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தவன் அவளை விட்டு விலகி அவள் முன்னே மண்டியிட்டு அவளது வயிற்றை தடவி கொடுத்துவிட்டு அதில் தன் இதழ் பதித்தவனாய் அவளை பார்த்து

“வலிக்குதாடீ..”

என்று கேட்க அவளோ அவனை பார்த்து தன்னை மறந்தவளாய் லேசாக புன்னகைத்து

“இல்ல..”

என்று கூற அவளை அப்படியே இடையோடு கட்டியணைத்து அவள் வயிற்றின் மேல் தலை வைத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அவளது அம்மாவும் அண்ணனும் அதை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைய அதை கவனித்த செல்வி உடனே அவளது கணவனை தட்டியவாறு அவனுக்கு அவர்களின் வருகையை உணர்த்த அவர்களை பார்த்த அவனும் சட்டென்று எழுந்து கொண்டு

“சரி நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம் நீ காணோம்ன்னு தெரிஞ்சதும் பதறியடிச்சு ஓடி வந்துட்டேன்..”

என்க அதற்கு அவளும்

“சரி நான் ரெடியாகிட்டு வர்றேன் நீங்க கீழ வெயிட் பண்ணுங்க..”

என்று கூறி தன்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளே சென்றாள். அதேசமயம் அங்கு கையில் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்த சாரதா அவனிடம் அதை கொடுக்க அதை வாங்கிக்கொண்டு கீழே வந்தவன் அதை பருகி கொண்டிருந்தான். அப்போது அவனருகில் அமர்ந்திருந்த செழியனுக்கு என்னதான் தன் தங்கையை தமிழ் அழைத்துச் செல்ல வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ அவன் மனதின் ஓரத்தில் அவனது தங்கை யாழினியை பற்றி கூறியது உறுத்தலாகவே இருந்தது.

அதனால் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் தமிழிடம் பேச்சு கொடுத்த வண்ணம் அப்படியே அவனிடம்

“மச்சான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..”

என்க அதற்கு அவனும்

“என்ன மச்சான் சொல்லுங்க..”

என்க உடனே செழியன் தமிழை பார்த்து

“வீட்டுக்கு வந்ததும் தங்கச்சி எல்லாம் சொன்னா.. நீங்க ஏன் அவ கேட்டா மாதிரி கலெக்டர் கெஸ்ட் அவுஸ்க்கு போய் கொஞ்ச நாள் தங்க கூடாது.. இந்த டைம்ல அவ சந்தோசம் தானே நமக்கு முக்கியம்..”

என்க அதை கேட்ட தமிழ், செழியனை பார்க்க உடனே செழியன்

“அப்படி உங்களுக்கு கெஸ்ட் அவுஸ்ல தங்க விருப்பமில்லைனா சொல்லுங்க அந்த மாவட்டத்துலயே ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து வாங்கிடலாம் அதுல நீங்க என் தங்கச்சி உங்க அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் தங்கிக்கங்க..”

என்க அதற்கு தமிழோ

“அப்ப என் தங்கச்சி..”

என்க அதற்கு செழியனோ

“அவங்க இப்ப இருக்க உங்க வீட்லயே இருக்கட்டும் மச்சான் வேணும்னா அதை அவங்களுக்கே கூட கொடுத்துடுங்க.. அப்படி அந்த வீடு பழைய வீடா இருக்குன்னு பீல் பண்ணாங்கன்னா சொல்லுங்க அவங்களுக்கும் ஒரு புது வீடு பார்த்து என்ன தேவையோ அதை ஏ டூ இசட் வரை செய்து கொடுத்துடலாம்.. நீங்க எப்பயாவது அவங்கள பார்க்கனும்னா போய் பார்த்துட்டு வாங்க..”

என்று கூற இதை கேட்ட தமிழ் செழியனை பார்த்து

“சரி மச்சான் நீங்க சொல்றதை நான் யோசிக்குறேன் இப்ப நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?? அதுக்கு நீங்க பதில் சொல்லுவீங்களா..??”

என்று கேட்க அதற்கு செழியன்

“ம்.. கேளுங்க மச்சான்”

என்க உடனே தமிழ் அவனை பார்த்து

“இப்ப நீங்க விரும்புற உங்க வருங்கால மனைவிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்த பின்னாடியும் இதே போல உங்க தங்கச்சி உங்க வீட்டுல வந்து தங்க அது ஒருவேளை உங்க மனைவிக்கு பிடிக்கலைன்னு சொன்னா உங்க தங்கச்சியை நீங்க தனியா வச்சுடுவீங்களா..”

என்று கேட்க அதை கேட்டதும் சுர்ரென்று சீறியவனாய்

“அது எப்படி.. அவ அண்ணன் நான் இருக்கும்போது அவளை ஏன் நான் தனியா வைக்கனும்..”

என்று கேட்க அதற்கு தமிழோ

“அதேபோல நான் மட்டும் ஏன் என் தங்கச்சிய தனியா வைக்கனும்..”

என்க தமிழ் கேட்ட கேள்விக்கு செழியன் வாயடைத்து போக மீண்டும் தமிழ்

“சும்மா புருஷன் கிட்ட கோவிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு போற உங்க தங்கச்சிய பார்க்கும்போதே உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றீங்களே..”

“கல்யாணமான ஒரே வருசத்துல இனி தனக்கு வாழ்க்கையே இல்லைன்னு உட்கார்ந்து இருக்க என் தங்கச்சிய பார்க்கும்போது எனக்கு எப்படி இருக்கும்ன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்..”

என்று கூறி தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் மீண்டும் செழியனை பார்த்து

“அதேபோல நான் ஒன்னும் என் தங்கச்சி விசயத்தை மறைச்சு உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணல.. முதல்லயே எல்லாத்தையும் சொல்லி அவ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் கல்யாணம் கட்டுனேன்..”

என்று கூறி தன் மனைவி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
View attachment 1197
அவருக்கு அவரு தங்கச்சி உசத்தி எண்டா தமிழுக்கும் அவன தங்கச்சி உசத்தி தான்.
இங்க ஹீரோ சேழியன் இல்ல தமிழ் தான்
 
Top