எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -3

Padma rahavi

Moderator
தினமும் காலை அலுவலகத்திற்கு வந்ததும் சிவகர்ணிகா வந்துவிட்டாளா என பார்த்துக் கொள்வது வாடிக்கையாகிப் போனது சிவநந்தனுக்கு.

வந்துவிட்டாள் என்றால், அவள் ஒரு வெற்றிப் புன்னகை தருவதும், சரியான நேரத்திற்கு அடித்துப் பிடித்து வந்தால் அவன் கேலிப் புன்னகை தருவதும் சகஜமகிப் போனது.

நாளடைவில் இவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தால் இயல்பாக புன்னகைக்கத் தொடங்கினர்.

எப்போதும் பேக் கிரௌண்டில் யாரேனும் வயலின் வாசிப்பது போல் சோகம் அப்பிய முகத்தில் வலம் வரும் சிவநந்தன் இப்போதெல்லாம் அடிக்கடி சிரிப்பது அலுவலகத்திற்கே புதிதாக இருந்தது. ஆனால் அது நன்றாக இருந்தது.

ஒரு நாள் மாலை வேலை சீக்கிரம் முடிந்ததால் சிவநந்தனும் அனைவருடனும் கிளம்பி விட்டான்.

காரில் வரும் வழியில் பேருந்து நிலையத்தில் சிவகர்ணிகா நிற்பதைப் பார்த்தான். சிக்னல் போட்டு இருந்ததால் காரும் நின்று விட, காரில் இருந்து இறங்கினான்.

கண் இமைக்கும் நேரத்தில் சிவகர்ணிகாவின் கைப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட, ஐயோ என் பேக் என்று கூச்சலிட்டால் சிவகர்ணிகா.

சிலர் திருடன் பின்னால் ஓட, அடக்க முடியாத சிரிப்புடன் அவள் அருகில் வந்து நின்றான் சிவநந்தன்.

சார், ஒருத்தன் பேக்கை தூக்கிட்டு போறான், அவன் பின்னாடி ஓடி போய் அதை கொண்டு வருவீங்களா அதை விட்டுட்டு இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க என்றாள்.

ஏது! நீங்க கொழுப்பு எடுத்து அவ்ளோ வசதியை விட்டுட்டு நான் மக்களோடு மக்களா தான் பயணிப்பேன்னு வீர வசனம் பேசுனீங்க. மக்கள்ல இவனும் ஒருத்தன் தான். இதுவும் ஒரு அனுபவம் தானே. பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல பயணம் பண்றவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி ரோட்டை பராக்கு பாத்துட்டு இருந்தா இப்படி தான் நடக்கும் என்றான் சிவநந்தன்.

இப்ப என் பேக் போச்சே. நான் எப்படி வீட்டுக்கு போவேன் என்றாள் சிவகர்ணிகா.

அதுக்காக என் கார்ல கொண்டு போய் எல்லாம் விட முடியாதுமா என்றான் விரைப்புடன்.

நீங்களே கூப்புட்டாலும் நான் வரல. பஸ் காசு மட்டும் கடனா குடுத்தீங்கன்னா போதும் என்றாள்.

அவளை புதிதாக பார்ப்பவனைப் போல் பார்த்த சிவநந்தன், நான் பர்ஸில் இருந்து 10 ரூபாயை நீட்டினான.

என்னது இது? என்றாள் சிவகர்ணிகா.

உங்க வீட்டுக்குப் போக இதானே பஸ் சார்ஜ் என்றான்.

அதுக்காக கரெக்டா அது மட்டும் தான் குடுப்பிங்களா. என கஞ்ச பிஸ்னாரியா இருக்கீங்க சார் நீங்க. எனக்கு இன்னும் 30 ருபாய் வேணும் என்றாள்.

அதென்ன முப்பது ருபாய்?

அது! எங்க வீட்டுக்கு போற வழில காளான் ரொம்ப நல்ல இருக்கும். இன்னிக்கு சாப்பிடணும்னு முடிவு பண்ணிருக்கேன். அதுக்கும் சேர்த்து குடுங்க. நாளைக்கு திருப்பி தரேன் என்றாள்.

கடன் வாங்கியவது காளான் சாப்பிடுவ, பேக் போனதுக்கு வருத்தப்பட மாட்ட அப்படி தானே என்று கூறியபடி மேலும் 100 ரூபாய் கொடுத்தவன், இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என் நண்பன் தான். நாளைக்கு உன் பேக் கிடைச்சிரும் என்று கூறிவிட்டு சென்றான் சிவநந்தன்.

இவ்ளோ பெரிய கம்பெனிக்கு முதலாளியாகவே இருந்தாலும் மனசு வருதான்னு பாரு காசு குடுக்க என்று மனதில் முணகியபடி சென்றாள் சிவகர்ணிகா.

மறுநாள் அவன் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்தபோது மறுபின்றி வாங்கிக் கொண்டவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் சிவகர்ணிகா.

என்ன! இவ்ளோ பெரிய கம்பெனி நடத்துறான், 100 ருபாய் கூட விட மாட்றானேனு பாக்கறியா! இதை நண்பனா கொடுத்திருந்தா நீயே m
கொடுத்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். பர்சனல் வேற வேலை வேற!

அப்ப நான் வெறும் ஆபீஸ் ஸ்டாப் தானா சார் என்று கேட்டவள்,வாய் தவறி வந்துவிட்டதை சட்டென அடக்கினாள்.

ஆனால் அந்த வரிகள் சிவநந்தனின் செவிகளை எட்டி விட, அவன் கண்களில் கலவையான உணர்ச்சி தோன்றி மறைந்தது.

நான் வரேன் சார் என்று உடனே வெளியேறினாள் சிவகர்ணிகா.

அன்று முழுவதும் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள். அவசரப்பட்டு ஏதோ கேட்டு விட்டேன். என்னை என்ன நினைத்துக் கொள்வார் என்று நினைத்து நினைத்து அவள் மனம் தவித்தது.

கேன்டீன் செல்ல அலுவலக லிப்டில் நுழைந்தவள் அங்கு சிவநந்தன் இருப்பதைப் பார்த்து தயங்கி நின்று வெளியே செல்ல முயல்வதற்குள் லிப்ட் மூடி விட்டது.

அவஸ்தையாக நின்று இருந்தவளை பார்த்தவன்,

சிவகர்ணிகா என்று அழைத்தான்.

சொல்லுங்க சார் என்றாள்.

நீ ஏதோ டிஸ்டர்ப் ஆகிருக்கனு புரியுது. நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லை. நான் எல்லா ஆபிஸ் ஸ்டாப் கிட்ட இருக்கிற மாதிரி உன் கிட்ட இல்லை. உன் இயல்பான கோவம் என்னையும் இயல்பா மாத்திருச்சு.மத்தபடி நீ கேட்டதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீ எப்பவும் போல இரு அதான் எனக்கு பிடிக்கும் என்றான்.

மனதில் இருந்த பெரிய பாரம் குறைந்ததில் நிம்மதி அடைந்த சிவகர்ணிகா, அவனைப் பார்த்து சிரித்து விட்டு , சொல்ல மறந்துட்டேன், கடன் வாங்கி சாப்பிட்டதுனாலையோ என்னமோ நேத்து காளான் எக்ஸ்ட்ரா டேஸ்ட்டா இருந்துச்சு என்று கூறிவிட்டு சென்றாள்.

தன்னை மீறி சிரித்தவன், அதுக்குன்னு டெய்லி கடன் குடுக்க முடியாது. இன்னிக்காவது கண்ணை பேக்ல வச்சிக்கோ என்று கூறினான்.

அங்கு ஒரு இயல்பான உறவு பூக்கத் தொடங்கி இருந்தது.
 

Kalijana

Member
😍😍😍MEME-20220829-070712.jpgMEME-20220829-070712.jpg
 

Attachments

  • MEME-20220829-072750.jpg
    MEME-20220829-072750.jpg
    259.6 KB · Views: 1
  • MEME-20220829-073747.jpg
    MEME-20220829-073747.jpg
    279.3 KB · Views: 1
  • MEME-20220829-074458.jpg
    MEME-20220829-074458.jpg
    256.1 KB · Views: 1
  • MEME-20220829-082500.jpg
    MEME-20220829-082500.jpg
    245 KB · Views: 1
  • MEME-20220829-080801.jpg
    MEME-20220829-080801.jpg
    274.5 KB · Views: 1
  • Picsart_22-08-29_20-41-01-144.jpg
    Picsart_22-08-29_20-41-01-144.jpg
    242.8 KB · Views: 1
  • MEME-20220829-075708.jpg
    MEME-20220829-075708.jpg
    335.4 KB · Views: 1
  • MEME-20220829-083524.jpg
    MEME-20220829-083524.jpg
    230 KB · Views: 1
Top