எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -6

Padma rahavi

Moderator
மகேஷிடம் பேசிய பின் இருவரும் வெளியே வர,

என்ன சார்! இதை போய் அபீசியல் மீட்டிங்னு சொல்றீங்க. நாளைக்கு வேற என்னனு சொல்றதா சொல்லிருக்கீங்க. என்ன முடிவு வச்சிருக்கீங்க.?

கொஞ்சம் தொண தொணனு பேசாம வரியா! எனக்கே ஒன்னும் புரியல. யோசிச்சிட்டு நாளைக்கு வந்து சொல்றேன் இப்ப வீட்டுக்கு கிளம்பு.

ஓகே ஓகே என்று கூறிவிட்டு கொஞ்சம் அந்த ரயில்வே ஸ்டேஷன் வரை இறக்கி விட முடியுமா என்றாள்.

அவளை முறைத்தவன் , ஏற்கனவே உன்னோட இருந்ததை பார்த்ததுக்கு என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுல உன்னை கார்ல வச்சிட்டு ஊர் சுத்துனா அவ்ளோ தான். இந்தா இந்த ஷேர் ஆட்டோ பிடிச்சு கிளம்பு என்று அவளை ஏற்றி விட்டான்.

ஹ்ம் இவன் சரியான கஞ்சன்னு தெரிஞ்சும் இவன்ட போய் உதவி கேட்டேன் பாரு என்று நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் சிவகர்ணிகா.

வீட்டுக்குள் நுழைந்ததும்,

ஏண்டி. இது என்ன புது பழக்கம். கண்டவனோட வெளியே சாப்பிடுறது? அதையும் உன் தோழிகள் மூலமா சொல்லி விடறது என்று பட படவென பொரிந்தார்.

அய்யயோ அம்மா இப்ப என்ன ஆச்சு! அது கண்டவன் இல்லை எங்க பாஸ் தான். அன்னிக்கு காளான் சாப்பிட குடுத்த காசை கூட எப்படி வாங்குனான். அதுக்குன்னு இன்னிக்கு பத்தாயிரம் ருபாய்க்கு பில்லு வச்சிட்டு வந்திருக்கேன்ல என்று பெருமையாகக் கூறினாள்.

அட போடி லூசு. இன்னிக்கு சாப்பாடு வாங்கி குடுப்பான். அப்படியே வீட்டுல ட்ராப் பன்றேன்னு வருவான். நாளைக்கு யாரும் இல்லாத நேரத்துல வீட்டுக்குள்ள வந்து எதாவது பண்ண மாட்டானு என்ன நிச்சயம்?

யாரு அவன் ட்ராப் பண்ணுவானா? ரயில்வே ஸ்டேஷன்ல விடுங்கனு சொன்னதுக்கே உன்னை வச்சிட்டு ஊரு சுத்துனா கேக்கறவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு சொல்லிட்டு ஷேர் ஆட்டோ ஏத்தி விட்டான் மா. சரியான கஞ்சன், முசுடு, சிடுமூஞ்சி என்று அடுக்கி கொண்டே சென்றாள்.

இந்த காலத்துல இப்படி ஒரு பையனா? நீ திட்டுறனா கண்டிப்பா நல்ல பையனா தான் இருப்பான் என்று அசால்ட்டாக கூறி விட்டு உள்ளே சென்ற அம்மாவை முறைத்த சிவகர்ணிகா,

நல்லவன் தானோ! சும்மா வழிஞ்சு பேசுற பையனை கண்டுக்காத மனசு கண்டுக்காம போற இவனை மட்டும் நினைக்குதே என்று எண்ணினாள்.

மறுநாள் காலை மிக ஆர்வமுடன் கிளம்பினாள் அலுவலத்திற்கு. என்ன அறிவிப்பு செய்யப் போகிறான் என்று எண்ணியபடியே பயணம் செய்தாள்.

சுமார் பத்தரை மணிக்கு அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு அழைத்தவன், அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு பேசத் தொடங்கினான்.

குட் மார்னிங் எவ்ரிஒன். இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வர சொன்னேன். நேத்து சிவகர்ணிகா கூட ஹோட்டல் ராயல் இன் க்கு போயிருந்தேன். மகேஷ் கூட பார்த்தரு என்று ஒரு நிமிடம் நிறுத்தினான்.

அதற்குள் அத்தனை கண்களும் சிவகர்ணிகாவை திரும்பிப் பார்க்க, இவன் வேற சொல்ல வந்ததை முழுசா சொல்லாம எதுக்கு இப்ப பிரேக் போடறான். விக்ஸ் மாத்திரை போட்டா தான் தடங்கல் இல்லாம சொல்லுவானோ என்று கோபப்பட்டாள்.

அது எதுக்குன்னா, நம்ம கம்பெனில இருந்து நாம டிசைன் பண்ணி அனுப்புன ஆர்டர்ல சிவகர்ணிகா டிசைன் பண்ணது ஜெர்மன் கம்பெனிக்கு ரொம்ப புடிச்சு போச்சு. ஆர்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க என்றான்.

அனைவரும் கைத்தட்டி சிவகர்ணிகாவை உற்சாகப்படுத்தினர்.

அப்ப தான் ஒரு யோசனை வந்துச்சு. இது போல திறமையா வேலை செய்யுறவங்களுக்கு ஒரு ஊக்கமா இருக்கட்டுமேனு 5 ஸ்டார் ஹோட்டல்ல டின்னர் குடுத்தேன். இது சிவகர்ணிகானு இல்லை, ஒவ்வொரு மாசமும் கம்பெனிக்கு லாபம் வர்றது போல் வேலை செய்யுற இரண்டு பேரை தேர்வு செஞ்சு அவங்களுக்கு ராயல் இன்ல டின்னர் கூபன் கொடுக்கலாம்னு இருக்கேன் என்றான் சிவநந்தன்.

சிவகர்ணிகா அசந்து போனாள். எவ்வளவு தெளிவாக பிளான் செய்து செயல் படுகிறான் என்று.

இந்த முறை கை தட்டல் விண்ணைப் பிளந்தது.

நேத்து முதல் தடவைனால நானே தொடங்கி வச்சேன். மாதா மாதம் செலக்ட் ஆகுறவங்க நீங்க உங்க குடும்பத்தோடு போலாம். இது என் சார்பாக கொடுக்கிற சின்ன ஊக்கம் தான். இப்ப நீங்க உங்க இடத்துக்கு போகலாம் என்று கூறி முடித்தான்.

மனம் முழுக்க திருப்தியோடு அனைவரும் தான் இடத்தை அடைய, சிவகர்ணிகா மட்டும் சிவநந்தனை தேடிச் சென்றாள்.

சார் சூப்பர். சாதாரண ஒரு டின்னர். அதுல என் பேர் கெடக் கூடாதுனு எவ்வளவு பெரிய வேலை பார்திருக்கீங்க. உண்மையாவே ரொம்ப கிரேட். ஆனா நீங்க பணமா தாரேன்னு சொல்லிருக்கலாமே. குடும்பத்தோடு சாப்பிடுறதுக்கு பதிலா அது கம்மியா தானே செலவு ஆகும் என்றாள்.

பன்னிருக்கலாம் தான். ஆனா காசா கொடுத்தோம்னா சேர்த்து வைக்க தான் நினைப்பாங்க. கண்டிப்பா இப்படி 5 ஸ்டார் ஹோட்டல் போகணும்னு யோசிக்க மாட்டாங்க. அப்புறம் அவங்க வாழ்க்கையில எப்ப தான் அவங்க இதெல்லாம் அனுபவிப்பாங்க. நான் இப்படி பண்ணா தான் உண்டு என்றான்.

சார், இப்ப தான் எனக்கு ஒரு சந்தேகம் வருது என்றாள் சிவகர்ணிகா.

நினைச்சேன்! கேளு.

நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுக்க ரூம், கேப், பஸ், இவளோ ஏன் தூங்கிட்டு வர கூட அனுமதிக்கிறீங்க. இதெல்லாம் பாத்தா, நேத்து எனக்கு நடந்த மாதிரி எதாவது ஒரு பொண்ணுக்கு உதவி பண்ண போய் அதை ஆபிஸ்ல யாராவது பாத்துட்டு, அதுக்கு பின்னாடி இப்படி எல்லாருக்கும் பயன்படுற மாதிரி பண்ணிட்டேங்களோ என்றாள்.

அடி பாவி உன்னால எனக்கு மாசா மாசம் பத்தாயிரம் செலவு வச்சதும் இல்லாம, என்னையே கிண்டல் பண்றியா என்றான் சிவநந்தன்.

இப்போது அவள் நிஜமாகவே கவலைப்பட்டாள்.

சாரி சார். என்னால தான் உங்களுக்கு எக்ஸ்ட்ரா செலவு. நான் கொஞ்சம் வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்.

அதான் உன்னால முடியாதே! பரவால்ல விடு. ஒர்க்கர்ஸ்க்கு நல்லதுனா இந்த சின்ன செலவு பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. உன் சந்தேகம் தீர்ந்துச்சுன்னா போய் வேலையை பார்க்கலாம் என்றான் சிவநந்தன்.

அவன் கருத்துக்கள் அவள் சிந்தனையை ஆக்கிரமித்திருக்க, அப்படியே சீட்டிற்கு வந்தாள் சிவகர்ணிகா.

அவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. கையில் பத்தாயிரம் கொடுத்தால் அதற்கான செலவுகள் தான் நினைவுக்கு வரும். எப்படி தொழிலாளிகள் மனம் உணர்ந்து செயல் படுகிறான்.!

ஹலோ மேடம்! இப்ப எல்லாம் நாங்க கண்ணுக்கே தெரியுறது இல்லை போல என்றாள் மாயா.

ச்சை! என்ன மாயா நீ! ந வேற ஏதோ நினைப்புல இருந்தேன் என்றாள் சிவகர்ணிகா.

அதான் என்ன நினைப்புனு தெரியுதே என்று சிரித்தாள் மாயா.

ஒரு உண்மையா சொல்லவா கர்ணிகா! பாஸ் முகத்துல அப்ப அப்ப சிரிப்பு தெரியுதுனா அது உன்னால தான். நீ வந்ததுக்கு பிறகு தான்.

அது நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை மாயா. நான் சும்மா தான் பேசுனேன். நான்னு இல்லை வேற யாராலயும் கூட இது நடந்திருக்கும்.

ஆனா நடக்கலையே கர்ணிகா! உன்னால மட்டும் தானே முடிஞ்சது. அதுக்கு பேர் என்னவா வேணாலும் இருக்கட்டும். நேசம், பாசம், நட்பு இல்லை காதல் ஆனா நம்மலாள ஒருத்தவங்க முகத்துல சிரிப்பு வருதுன்னா அது நல்லது தானே. சில பேரோட வட்டத்தை உடைச்சு உள்ளே போகிற வலிமை சிலருக்குத் தான் இருக்கும். அது உனக்கு இருக்கு என்று கூறினாள் மாயா.

சின்ன சிரிப்பு உதிர்த்த சிவகர்ணிகா, வேலையை தொடர்ந்தாள்.

மறுநாள் காலை அலுவலகம் வந்தவள்
எம். டி அறையில் அவன் இல்லாததைப் பார்த்து சட்டென முகம் வாடி போனது அவளுக்கு. எப்போதும் தனக்கு முன்னாள் வருபவன்! இப்போது என்ன ஆச்சு என்று நினைத்தாள்.

அலுவலகத்தில் மற்ற அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, இவள் மட்டும் யாரிடம் சென்று அவன் வரவில்லையா என்று கேட்பாள்?

அனைவருக்கும் ஏதோ விஷயம் தெரிந்திருக்குமோ என்று அவளுக்குத் தோன்றியது. இல்லையெனில் இப்படி சாதாரணமாக வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?

மணி 10, 10.30, 11 என்று ஆனதே தவிர அவன் வரவில்லை. ஒரு வேலை உடம்பு சரி இல்லையோ? என்னவாக இருக்கும் என்று அவளுக்கு வேலையே ஓட வில்லை.

சரி மாயாவிடம் கேட்கலாம் என்று நினைத்த போதே, கும்பிட போனா தெய்வம் குறுக்கே வந்தது போல் அவளே வந்தாள்.

பாத்தேன் மேடம். குட்டி போனா பூனை மாதிரி சுத்துறதை! பாக்கவே பாவமா இருந்துச்சு அதான் வந்தேன் என்றாள் மாயா.

மாயா. பில்டப் பண்ணாம விஷத்தை சொல்லு. நான் என்ன கேக்க போறேன்னு உனக்கே தெரியும்.

நல்லாவே தெரியும். சார் அழுவாக வேலையா ஜெர்மனி போயிருக்காரு. வர்றதுக்கு ஒரு வாரம் ஆகலாம் என்றாள் பொறுமையாக.

என்னது என்று அதிர்ந்து எழுந்து விட்டாள்!

இந்த அதிர்ச்சி எதற்காக?

அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தனக்கு தெரியவில்லையே என்பதாலா?

அவன் வருவதற்கு ஒரு வாரம் ஆகுமே. அது வரை அவனைப் பார்க்க முடியாதே என்பதா?

தன்னிடம் கூறாமல் அவன் சென்று விட்டானே என்பதா?

உண்மையில் காரணம் என்ன என்பதை அவளே அறியாள்!
 

Kalijana

Member
Ulimate Episode 🔥🔥🔥🔥Picsart_22-09-23_02-21-07-870.jpg
 

Attachments

  • Picsart_22-09-23_02-19-58-519.jpg
    Picsart_22-09-23_02-19-58-519.jpg
    285.5 KB · Views: 1
  • MEME-20220923-014043.jpg
    MEME-20220923-014043.jpg
    322.6 KB · Views: 1
  • MEME-20220923-012705.jpg
    MEME-20220923-012705.jpg
    272 KB · Views: 1
  • MEME-20220923-010323.jpg
    MEME-20220923-010323.jpg
    253.1 KB · Views: 1
  • MEME-20220923-125554.jpg
    MEME-20220923-125554.jpg
    327.5 KB · Views: 1
  • MEME-20220923-124123.jpg
    MEME-20220923-124123.jpg
    265 KB · Views: 1
  • MEME-20220923-123608.jpg
    MEME-20220923-123608.jpg
    264.9 KB · Views: 1
  • MEME-20220923-121417.jpg
    MEME-20220923-121417.jpg
    280.4 KB · Views: 1
  • MEME-20220923-120045.jpg
    MEME-20220923-120045.jpg
    348.3 KB · Views: 1

Kalijana

Member
😍
 

Attachments

  • MEME-20220922-113625.jpg
    MEME-20220922-113625.jpg
    326.8 KB · Views: 0
  • MEME-20220922-114706.jpg
    MEME-20220922-114706.jpg
    241.8 KB · Views: 0
  • MEME-20220923-015327.jpg
    MEME-20220923-015327.jpg
    299.9 KB · Views: 0
  • MEME-20220923-123109.jpg
    MEME-20220923-123109.jpg
    315 KB · Views: 0
  • MEME-20220923-021302.jpg
    MEME-20220923-021302.jpg
    228.9 KB · Views: 0
Top