எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -8

Padma rahavi

Moderator
அவன் ஜெர்மனியில் இருந்த ஒரு வாரமும் காலை குறுஞ்செய்தி, மாலை அலைபேசியில் பேச்சு என நாட்கள் கழிந்தது. முதலில் யார் செய்தி அனுப்புவது, போன் செய்வது என்ற தயக்கம் எல்லாம் சென்று, வெகு காலம் பழகியவர்கள் போல் பேசத் தொடங்கினர்.

ஜெர்மனி பயணம் முடிந்து அன்று அலுவலகத்திற்கு வந்த சிவநந்தன் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக காணப்பட்டான்.

எத்தனையோ நாடுகளுக்குச் சென்று எத்தனையோ டீல்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறான். ஆனால் இதற்கு மட்டும் என்ன இத்தனை உற்சாகம் என்று அலுவலகமே ஆச்சரியமாக பார்த்தது.

அன்று அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு அழைத்தவன் டீல் வெற்றிகரமாக முடிந்ததைக் கூறிவிட்டு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருபதாகக் கூறினான்.

அனைவர் மனதில் இருந்த சந்தேகத்தையும் மகேஷ் கேட்டே விட்டான்.

சார்! பிதுக்கிய முன்னாடி இதை விட பெரிய டீல் எல்லாம் முடிச்சிருக்கோம். ஆனா நீங்க இப்படி இருந்து நாங்க பாத்ததே இல்லையே!

கரெக்ட் மகேஷ்! வாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்தைக் கூட கொண்டாடணும்னு இப்ப தான் கத்துக்கிட்டேன் என்று ஓரக் கண்ணால் சிவகர்ணிகாவைப் பார்த்தவன்,

எனக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும் தானே. அதான் இனி எல்லா சந்தோசத்தையும் உங்க எல்லார் கூடவும் கொண்டாட முடிவு பண்ணிட்டேன். பார்ட்டிக்கு தேவையான ஏற்பாடு பண்ணுங்க. தீம் வெள்ளை கலர் வச்சிக்கலாம் என்றான்.

ஹோட்டல் க்ரீன் பார்க்!

பார்ட்டி அறை முழுவதும் வெள்ளை நிற பூக்களாலும், பலூன்களாலும் அலங்காரிகப்பட்டு இருந்தது. அனைவரும் வெள்ளை நிற உடையில் வலம் வந்த வண்ணம் இருந்தனர்.

அங்கு அங்கு இருந்த வெள்ளை நிற புகைப் போக்கி மேகம் போல புகைகளைக் கக்கிக் கொண்டு இருந்தது. அவற்றிற்கு நடுவில் வெள்ளை நிற உடையில் பெண்களைப் பார்ப்பதற்கு சொர்க்க லோகம் போல் காட்சி அளித்தது.

வெள்ளை நிற கோட், பான்ட் அணிந்து அதற்கு போட்டி போடுவது போல தான் வெண் பற்கள் வெளியில் தெரியும்படி பேசிக் கொண்டிருந்த சிவநந்தன் வாயிலை பார்த்தபடி இருந்தான்.

அவன் எதிர் பார்த்தபடியே வெள்ளை நிற சேலையில் அம்சமாக வந்து இறங்கினாள் சிவகர்ணிகா.

வெள்ளை நிற டிசைனர் புடவை. அங்கு அங்கு கற்கள் பதித்து மினிமின்னுத்தது. கழுத்திலும், காதிலும் வெள்ளை நிற கிறிஸ்டல் பதித்த நகைகள் பார்ட்டி அறையின் வண்ண விளக்குகளுடன் போட்டி இட்டது. தலையை வாராமல் ஒரு கிளிப் போட்டு விரித்து விட்டிருப்பது,
வெண் மேகத்தின் மீது படர்ந்த கரு மேகம் போல இருந்தது.

இவை அனைத்தையும் தனித் தனியாக ஒரு நிமிடம் பார்த்த சிவநந்தன் அவள் அருகில் வருவதற்குள் பார்வையை மாற்றிக் கொண்டு கொஞ்சம் கெத்தாக நின்றான்.

குட் ஈவினிங் சார் என்றாள்.

புண் சிரிப்பை உதிர்த்தவன், என்ன மேடம் மேக்கப் போட லேட்டா ஆகிருச்சா என்றான்.

அவள் மறுப்பாள். மேக்கப் போடவில்லை என்பாள். அதை வைத்து அவளை வம்பு செய்யலாம் என்று இருந்தான். ஆனால் அவளோ கூலாக,

ஆமா சார். வாங்கி வச்ச மேக்கப் ஐட்டம் எல்லாம் வேற எப்ப போடுறது. மேக்கப் போட்டா நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும் என்று கூறி அவன் வாயை அடைத்தாள்.

சரி. ஜெர்மன்ல இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க என்றாள்.

அங்க பீர் தான் ரொம்ப பிரபலம். பல வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச பழமையான பீர் எல்லாம் இருக்கு. உனக்கு என்ன பிராண்ட் புடிக்கும்னு தெரிலையா அதான் எல்லாத்துலயும் ஒன்னொன்னு வாங்கியிருக்கேன். வேணுமா என்று கண்ணடித்தான்.

அவனை முறைத்தவள், தினமும் ஒன்னொன்னா நீங்களே குடிங்க என்று கூறிவிட்டு நகர்ந்து மாயாவிடம் சென்றாள்.

பார்ட்டி என்றால் கண்ட பாடல்களை போட்டு நடனம் ஆடுவது போல் இல்லாமல் அருமையான குரூப் பாடகர்களை வைத்து இசைக் கச்சேரி வைந்திருந்தான்.

குழந்தைகள் விளையாட என தனி பகுதி இருந்தது.

பஃப்பே முறையில் சாப்பாடு.

அவனும் அவளும் எங்கு இருந்தாலும் இவருவரின் கடைக்கண் பார்வைகள் மட்டும் கள்ளத்தனமாக சந்தித்துக் கொண்டு இருந்தன.

கண்கள் சந்திக்கும் போது இதழ்கள் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும்! தான் பங்கிற்கு கடையிதழ் குறுநகை புரிந்தது.

பார்ட்டிக்கு வந்திருந்த மற்ற தொழிலாதிபர்களுடன் பேசிக் கொண்டிருந்த சிவநந்தனிடம் ஒவ்வொருவராக விடை பெறத் தொடங்கினர்.

வழக்கம் போல் அலுவலக வண்டி, ஒரு கூட்டமாக மக்கள் சேர்ந்ததும் அவர்களை வீட்டில் இறக்கும் வேலையைப் பார்த்தது.

சிவகர்ணிகாவும் அவனிடம் விடை பெற்று பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்தே இதை உணர்ந்த சிவநந்தன் காரை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் விரைந்தான்.

அவன் எதிர் பார்த்தபடியே பேந்த பேந்த விழித்தபடி ஒற்றை ஆளாய் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள் சிவகர்ணிகா.

கோபத்துடன் அவள் முன் காரை புயல் வேகத்தில் நிறுத்தினான்.

தன் முன் நின்ற காரைப் பார்த்து ஒரு நிமிடம் பயந்தவள் அதிலிருந்து இறங்கிய சிவநந்தனைக் கண்டு நிம்மதி மூச்சு விட்டாள்.

கண்களில் கோபம் கொப்பளிக்க,

உனக்கு அறிவு இருக்கா? மணி என்ன ஆகுது? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு இதுல தான் போவேன்னு அடம் புடிக்கிற என்றான்.

இல்லை சார் எப்பவும் போல போகலாம்னு என்று தடுமாறினாள். அவன் கோபம் அவளுக்கு புதிதல்லவா!

ஆமா மண்ணாங்கட்டி! இன்னிக்கு சண்டே. பஸ் எல்லாம் எவளோ கூட்டமா இருக்கும்! எத்தனை பசங்க இந்த நேரம் வண்டில சுத்துவாங்க இதெல்லாம் தெரியாதா உனக்கு. இப்ப நான் வரலைனா எத்தனை நேர. இப்டியே நின்னுருப்பியோ. அதோட இந்த இடம் சிட்டில இருந்து ஒதுகுப்புறமான இடம்.

அதான் ரொம்ப நேரமா பஸ்சே வரல கூறும் போதே அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அதைக் கண்டதும் சற்று மனம் இளகியவன்,

எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல என்றான்.

நீங்களே இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க. ஏன் தொந்தரவு பண்ணனும்னு தான் என்றாள்.

லூசு! இந்த சந்தோசமே உன்னால தான். உன்னை விட அதெல்லாம் எனக்கு பெருசே இல்லை என்றான் சிரிப்போடு.

அதன் அர்த்தம் என்ன. தெரிந்து தான் கூறினானா? இல்லை நட்புடன் கூறினானா? எதற்கு தெரிய வேண்டும்! அவன் கூறிய வார்த்தைகளினால் உண்டான திகைப்பும், மகிழ்ச்சியும் அவள் முகத்தில் தெரிய, தன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அவனே சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்க, மொத்தத்தில் ஒரு அழகான காதல் அங்கு துளிர் விட்ட மகிழ்ச்சியில் வானம் பொன்மழை தூவி அர்ச்சித்தது.

சட சடவென பெய்யும் மழை இருவரின் சிந்தனையை கலைக்க,

சரி வா முதல்ல கார்ல ஏறு என்று அவனும் ஏறினான்.

பிகு செய்யாமல் அவளும் அமர்ந்து விட,

இதான் சாக்குன்னு எம். டி கூட கார்ல போனேன்னு நாளைக்கு அலுவலகத்துல பீதிக்கக் கூடாது என்றான் வழக்கமான நக்கல் தொனியில்.

அவனை முறைத்தவள்,

ஆமா பெரிய மைனர்னு நினைப்பு என்று முணுமுணுத்தாள்.

அமைதியான சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த வண்டியில் மயான அமைதி நிலவியது.

இருவருக்கும் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

நட்பாக இருந்திருந்தால் வை ஓயாமல் பேசிருப்பார்கள். காதலர்களாக இருந்திருந்தால் கண்களாவது பேசியிருக்கும்.

நட்புக்கும், காதலுக்கும் இடையில் அது என்னவென்றே தெரியாமல் இருப்பவர்கள் மௌனமாக இருப்பது இயற்கை தானே!

அவள் வழி மட்டும் கூற அவனும் பெரிதாக ஒன்றும் கேட்காமல் அவள் வீட்டை அடைந்தான்.

இறங்கிய இருவரும் ஒருவரை ஒரிவர் பார்க்காமல் தவிர்க்க முதலில் அவனே,

அப்ப நான் கிளம்புறேன் சிவகர்ணிகா என்றான்.

ஐயோ என்ன சார். இவளோ தூரம் வந்துட்டு உள்ள வராம என்றாள்.

இல்லை இந்த நேரத்துல உள்ள வந்தா என்ன நினைப்பாங்க உங்க வீட்ல என்று தயங்கிக் கொண்டிருந்த போதே பேச்சுக் குரல் கேட்டு அவள் அம்மா கதவைத் திறந்தார்.

வீட்டுக்கு வர்ற நேரமாடி இது? ஒரு தடவை சொன்னா உனக்கு புரியவே புரியாதா? இதுக்கு தன் உன்னை வேலைக்கு எல்லாம் போக வேணாம்னு சொன்னேன் என்று பொறிந்து கொண்டே போனார்.

என் மானத்தை வாங்க அம்மாவே போதும் என்று நினைத்தவள், அம்மா அம்மா கொஞ்சம் பொறு. இது தான் எங்க எம். டி. லேட்ட ஆச்சுன்னு வீட்ல விட வந்திருக்காரு என்றாள்.

ஐயோ நான் கவனிக்கவே இல்லையே. ஏதோ கேப்னு நினைச்சிடேன். சாரி சார். உள்ள வாங்க என்றார் வாசுகி.

வாயிலில் இருட்டாக இருந்ததால் சரியாக முகமும் தெரியவில்லை.

சரி என உள்ளே வந்த சிவநந்தன், வாசுகியையும், அறையில் இருந்து வந்த வாசனையும் பார்த்து அதிரிச்சியின் உச்சத்திற்குப் போனான்.

இவர்களா சிவகர்ணிகாவின் பெற்றோர்? அப்போது தான் ஹாலில் தொங்கிய வேதிகாவின் படத்தை நன்கு பார்த்தான். முன்பு சிவகாரணிகவின் பர்ஸில் பார்த்தது எப்போதோ எடுத்த பழைய படம் ஆதலால் அவனுக்கு சரியாக தெரியவில்லை. இப்போது நன்றாக பார்த்தவனுக்கு எல்லாம் விளங்கியது.

இந்த உலகில் யாரை மீண்டும் பார்க்க பயந்து கொண்டு இருந்தானோ, யாரைப் பார்க்காமலே வாழ்க்கையை கடந்து விட வேண்டும் என்று பிரையர்த்தனைப் பட்டுக் கொண்டு இருக்கிறானோ அவர்களின் குடும்பமா இது!

இந்த உண்மை இப்போதா தெரிய வேண்டும். அதுவும் சிவகர்ணிகாவின் மேல் நட்புக்கும் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றி அதை காதல் என்று அவன் உறுதி செய்த வேளையில்!

அதன் பின் அவர்கள் பேசியது எதுவும் அவன் காதில் விழவில்லை. அவன் உலகமே சுழன்றது.
 

Kalijana

Member
Superb episode 👌👌👌
 

Attachments

  • MEME-20221004-023900.jpg
    MEME-20221004-023900.jpg
    303.2 KB · Views: 1
  • Picsart_22-10-04_03-11-03-941.jpg
    Picsart_22-10-04_03-11-03-941.jpg
    329.6 KB · Views: 1
  • Picsart_22-10-04_03-11-52-540.jpg
    Picsart_22-10-04_03-11-52-540.jpg
    314.8 KB · Views: 1
  • Picsart_22-10-04_03-10-31-373.jpg
    Picsart_22-10-04_03-10-31-373.jpg
    419.2 KB · Views: 0
  • Picsart_22-10-04_03-10-17-057.jpg
    Picsart_22-10-04_03-10-17-057.jpg
    325 KB · Views: 0
  • MEME-20221004-025120.jpg
    MEME-20221004-025120.jpg
    292.2 KB · Views: 0
  • Picsart_22-10-04_03-13-33-617.jpg
    Picsart_22-10-04_03-13-33-617.jpg
    375.8 KB · Views: 0
  • MEME-20221004-030415.jpg
    MEME-20221004-030415.jpg
    206.5 KB · Views: 0
  • Picsart_22-10-04_03-12-54-979.jpg
    Picsart_22-10-04_03-12-54-979.jpg
    330.1 KB · Views: 0
  • MEME-20221004-014036.jpg
    MEME-20221004-014036.jpg
    311.3 KB · Views: 0
Top