அத்தியாயம் 10
அனிருத் அவளிடம் "நீ தான் என் அம்மாவோட தம்பி பொண்ணா?"
அவள், "ஆமா.. இது எப்பிடி உனக்குத் தெரியும்?"
அவன், "இப்போ தான் என் அம்மா உனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நான் தான் எடுத்தேன். அப்போ அவங்க பேசுனத வச்சுதான் கண்டு பிடிச்சேன் நீ தான் அந்த பொண்ணுன்னு.
சரி நான் தான் யார்னு உனக்கு முன்னாடியே தெரியும்ல அப்புறம் ஏன் என் கிட்ட உன்னப் பத்தி சொல்லவே இல்ல?"
அவள் அதற்கு "அது.. வந்து.. நான்.. ஏன் உன்கிட்ட சொல்லல்லைன்னா.. எங்க உன்மைய சொன்ன நீங்க பேசாமல் போயிடுவிங்களோன்னு தான் நான் சொல்லாமல் இருந்துட்டேன்"
அவன் "இப்பிடி நீ நினைச்சதுதான் தப்பு, இனி இப்பிடியெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட குணம் எனக்கில்லை நீ தான் இப்போ புதுசா வாங்க போங்கனு பேசிகிட்டு இருக்க."
அவள், "உப்ஸ்.. அப்பிடியா..? என்ன நீ மன்னிச்சுடு"
அவன், "ஓயாம சாரி கேக்காத அப்புறம் நான் மன்னிக்கமாட்டேன். தேவைப்படுற விஷயத்துக்கு மட்டுமே மன்னிப்புக் கேட்டா போதும். வா.. படிக்கலாம் எக்ஸாம் வரப்போகுது"
அவள், "இரு எனக்கு வேலைகள் இருக்கு முடிச்சுட்டு வரேன்"
அவள் கீழே இறங்கி சென்றாள். அப்போது துரைராஜ் அவளுக்கு ஃபோன் செய்திருந்தார்.
அவன், "அனு.. அனு.. இங்க வா உனக்கு ஃபோன் வருது"
அவள் கீழே இருந்தவாறு "அனிருத் நீ பேசுறது எனக்கு கேக்கல்ல.."
அவன், 'இப்போ என்ன செய்ய சரி நம்ம பேசுவோம்' என்று நினைத்து கொண்டு ஃபோனை அட்டன் செய்தான்.
அனுவின் தந்தை "அனுகுட்டி எப்பிடி இருக்க மா.. நல்லா இருக்கியா? இப்போ தான் தேவ் அண்ணா வந்தான். நீ ரெம்ப சந்தோஷமா இருக்கன்னு சொன்னான். ரொம்ப சந்தோஷம் மா.. மகிமா எப்பிடி இருக்கா? என்ன ஒன்னுமே பேசாமல் இருக்க?"
அவன், "அங்கிள்.. நான் அனுவோட ஃப்ரண்டு அனிருத் பேசுறேன்."
அவர், ஓ.. அப்பிடியா ப்பா எப்பிடியிருக்க? அம்மா அப்பா எல்லோரும் எப்பிடி இருக்காங்க?"
இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவள் அனிருத்தை அழைப்பதற்கு மாடிக்கு வந்தாள்.
அவள், "அனிருத்.. வா கீழே போகலாம்.. ரொம்ப நேரமாச்சு.."
அவன், "அனு.. வா இந்தா உன்னுடைய அப்பா லைன்ல இருக்காரு."
அவள், அவனிடமிருந்து ஃபோனை வாங்கி பேச ஆரம்பித்தாள்.
அவள், "அப்பா.. எப்பிடி இருக்கீங்க?அம்மா பாட்டி பெரியம்மா எல்லாம் எப்பிடி இருக்காங்க?"
அவர், "எல்லோரும் நல்லா இருக்காங்க. நீ எப்பிடி இருக்க?அங்க உன்ன எல்லோரும் நல்லா பாத்துக்குறாங்களா?" அவள் "உம்.. ரொம்ப நல்லாவே பாத்துக்குறாங்க அப்பா. சரி ப்பா எனக்கு வேலைகள் இருக்கு நான் வேலை முடிச்சுட்டு உங்ககிட்ட பேசுறேன்" என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்.
இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.
திவ்யா மகிமாவை அழைத்துகொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
அனுஷியா அவளுக்கு ஆராய்த்தி எடுத்தாள்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் மகிமாவோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
அன்று இரவு..
திவ்யா அனைவருக்கும் உணவு தயாரித்து வைத்திருந்தாள். அனைவரும் கீழே இறங்கி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் அனிருத் உட்பட எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.
மறுநாள் காலை..
அனைவரும் கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கிழம்பினர். அதை பார்த்த திவ்யாவினுடைய மனமானது மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. அவனும் அவளும் கைகோர்த்து நடந்து சென்றனர்.
கல்லூரியில்..
அவர்கள் இருவரும் அதேபோல் கைக்கோர்த்து நடந்தனர். அதை பார்த்த அனைவரும் சிரித்துக்கொண்டும் அவர்களை பற்றி பேசிக்கொண்டும் இருந்தனர்.
அந்த நாள் முழுவதும் கல்லூரியில் இவர்கள் இருவர் பற்றிய பேச்சுத் தான்.
கல்லூரி முடிந்ததும் இருவரும் அதே காஃபி ஷாப்க்கு சென்றனர்.
அங்கு இருவரும் நேர் எதிரில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு கண்களால் இருவரும் சில நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த மகிமா, அனுஷியாவையும் அனிருத்தையும் பார்த்ததும் அவள் வீட்டிற்கு சென்றாள்.
வீட்டில் இருக்கும் திவ்யாவிடம், "ஆன்டி.. ஆன்டி.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?"
அவள், "என்ன மகிமா?" என்றாள்.
உடனே அவள், "அனுவும் அனிருத்தும் காஃபி ஷாப்புல ஒன்னா இருக்காங்க" என்றாள்.
திவ்யா மகிழ்ச்சயடைந்தாள்.
காஃபி ஷாப்பில்..
"அனு.." என்றான்.
அவள், "என்ன விஷயம் ?"
அவன், "நான் இந்த மோதிரத்தை உன் பிறந்தநாள் அன்னைக்கு கொடுக்கணும்னு வந்தேன். உனக்கு கிஃப்ட் பண்ணணும்னு எவ்வளவோ தடவ முயற்சி பண்ணேன் ஆனா முடியல்ல, இப்போ தரேன் வாங்கிக்குவியா?" என்றான்.
அவள் அந்த மோதிரத்தை பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.
நீ வருவாய் என..?