எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வாழ்வில் பேரானந்தம் நீ - டீசர்

NNO7

Moderator
டீசர் - 1

நலுங்கிய தோற்றத்துடன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவனைப் பார்த்து, “நீங்க சொல்றதை கேட்கணும்னு எனக்கு அவசியம் இல்லை கவிதன்.” என்றாள் கண்களை நெருங்கி வைத்தபடி.

“என் வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுக்க மாட்டியா கோசலா?” என்றான் கெஞ்சல் குரலில்.

“கண்டிப்பா கொடுப்பேன் கவி.” என்றதும் முகத்தை இலகுவாக்கியன், பின் அவள் சொன்ன, “ஆனா அது என் குழந்தை விஷயத்தில் நடக்காது. திடீர்னு நேத்து முளைத்த அக்கா உங்களுக்குப் பெருசுன்னா, பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு நான் பெற்றெடுத்த குழந்தை எனக்கு பெருசு. என் குழந்தையை நான் யார்கிட்டையும் கொடுக்கமாட்டேன்.” என்று கோசலா சொன்னதும், திரும்பவும் அவன் முகம் வாடியது.

அவன் முகம் கசங்கியதைக் கண்டு பொறுக்காதவள், “இதை வச்சி நமக்குள்ள சண்டை வேண்டாம் கவி. வாங்க நாம திரும்ப இந்தியா போயிடுவோம். இனி அந்த பொம்பள முகத்தில் முழிக்க வேண்டாம்.” என்று சொன்னதும், எதற்கும் கோபப்படாத கவிதனுக்கே கோபம் வந்துவிட்டது.

“ஏய்... மரியாதையா பேசு. உன்கிட்ட போய் கேட்குறேன் பாரு. நீ என்ன சொல்றது, நான் சொல்றேன். துருவன் எனக்கும் பையன் தான் அவனை நான் என் அக்காவிற்கு தத்து கொடுக்கத்தான் போகிறேன்.” என்றான் ஆவேசமாக.

அவன் ஆவேசத்திற்கு ஈடுகொடுத்து, “அப்ப நீங்களும் நல்ல கேட்டுக்கோங்க. உங்களை நான் விவாகரத்துப் பண்றேன். குழந்தை யார்கிட்ட இருக்கணும்னு கோர்ட் முடிவு பண்ணட்டும்.” என்று கூறி அவனுக்கு அதிர்ச்சியளித்தாள்.
 

NNO7

Moderator
Teaser 2

“துருவ் இனி உன்னை அப்பான்னு கூப்பிடக்கூடாது கவி. அவன் உனக்கு மருமகன் முறை. அவன் இனி உன்னையும் கோசலாவையும் அத்தை மாமான்னு தான் கூப்பிடணும்.” என்று மிகவும் கடினமாக பேசினாள் நிலா.

*******************************************

“நீ என்ன செய்வன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ரெண்டு வாரத்தில் அவங்க பிரியணும். அதுக்கு என்ன வேணாலும் செய். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனா என்ன ஆனாலும் கவிதனும், கோசலாவும் கண்டிப்பா பிரியணும்.” என்று ஆவேசமாக கட்டளையிட்டுக் கொண்டு இருந்தாள் நிலா.

அதற்கு எதுவும் மறுமொழி கூறாமல் தன் மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டாள் பார்பி.
 
Top