எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வீழ்வேனென்று நினைத்தாயோ! - கதைத் திரி

NNK34

Moderator

வீழ்வேனென்று நினைத்தாயோ?

இரவு இருளில் தனித்து உலகை ரசித்து சிரித்த நிலவு தோய்ந்து உறங்கச் சென்றிட, இரவின் உறக்கம் போதாது சிவந்த கண்களுடன் ஆழ் உவரியில் குளித்து, மலை முகட்டில் தலைகோதி,மெல்ல எழுந்தான் பாற்கரன். சொர்க்கம் என்றால் என்ன? என்று கேட்டால் அவரவருக்கு பிடித்த இடத்தயே சொர்க்க என்பர்.


அதேபோல் தான் இவ்வூர் மக்களுக்கும். கோவை மாவட்டதில் உள்ள அழகிய கிராமம். பச்சை கம்பலதை போர்த்திய அழகிய மலைகிராமம் . கோடையோ வாடையோ குளிர்புகை மெல்ல தீண்டிச்செல்லும் வானிலை கொண்ட கிராமம். அக்கிராமத்தில் அழகிய பழங்கால கட்டுமானத்தை கொண்ட வீட்டின் வாயில் கோலத்தினை காணவே, வானம் மேகத்தினை கலைத்து விட்டு கோலத்தினை கண்டு சிரிக்கும்.


சாணம் கரைத்து தெளித்து அரிசிமாவில் ரங்கோலி வரையபட்டு வாயிலே மங்கலகரமாக இருந்தது.வீட்டை சுற்றிய அழகிய தோட்டதில் மலர்களும் கணிகளும் கொத்து கொத்தாய் பூத்தும்,காய்ந்தும், தொங்கியது. அகலமான திண்ணையதில் தூண்கள் கூரையினை தாங்கி பிடிக்க ,உள்ளே விசாலமான கூடம். பழமையான வீடென்று பறைசாற்றும் விதம் தூண்களும் ,முத்தமும், பெரிய சமயலரையும் மேலும், தங்கும் அறைகள் சிலவும் இருந்தன.


மாடியில் மணம் வீசும் முல்லைப் பந்தலும் அதனடியில் தேக்குமர ஊஞ்சலும் இருக்க, அதில் அமர்ந்து ஒரு கையால் அதன் பிடியை பிடித்துக்கொண்டு மற்றய கரத்தில் உள்ள மண் குவலையில் இருக்கும் வெதுவெதுப்பான தேநீரை அருந்தியபடி " குட் மார்நிங். தூங்கி எழுந்தாச்சா?" என கேட்டு ஒரு இடைவேளை விட்டு "ம்ம்.. நமக்கு பிடிச்ச பாட்ட போட்டா முழிச்சுபீங்க'' என்றாள்; மொழியினியால். " மலரே மௌனமா? மௌனமே கீதமா?.." என்ற எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி அம்மாள் பாடிய பாடலை ஒலிக்க விட்டவள், அதனுடனே தன் மென் குரலில் பாட, காதில் கதகதப்பான தன்னவனின் குரல் ஒலிக்கும் பிரம்மை ஒலித்தது.


பிரம்மையா? ஆம் பிரம்மையே. அது பிரம்மை என தெரிந்தும் திடுக்கிட்டு எழாது , மென்புன்னகையுடன் கண்மூடி அந்த சுகந்தத்தை ரசித்தபடி தேநீரை அருந்தி முடித்தவள், கண்விழித்து தன் முன் இருக்கும் ரோஜா செடியை பார்த்து " இப்ப தூக்கம் போச்சா? என் கூடவே பாடினீங்க போல? குரல் கேட்டுச்சு" என்றாள் மொழியினியாள். தன் கை கடிகாரத்தை கண்டவாள் " ம்ம்.. உங்க பொண்ணு முழிச்சுறுப்பா" என கூறி முடிக்கும் முன் "அம்மா" என கண்ணை கசக்கிய படி வந்தால் மொழியினியாளின் ஆறு வயது மகள், தூரிகா.


தானும் ஊஞ்சலில் ஏறி அமர்ந்து அன்னையை இடையோடு வளைத்து தூரிகா அணைத்துக்கொள்ள, மகளின் தலை கோதியபடி " குட் மார்நிங்க தூரி குட்டி" என்றாள், மொழியினியாள். தாயை நிமிர்ந்து பார்த்த பிஞ்சு, அன்னையின் முகம் பற்றி அவள் மூக்குடன் தன் மூக்கை உரசி " குட் மார்னிங் மா" என்றாள். அதில் மெல்ல புன்னகைத்த மொழி " சரி சரி, வா டா. ரெடி ஆகணும்ல? ஸ்கூல்க்கு லேட் ஆகிட போகுது" என கூற " மா அப்பா இப்ப எளிந்திருப்பாங்களா மா?" என தூரிகா கேட்டாள்.


அதில் மொழியின் முகம் ஒரு நொடி கசந்துபோக தன்னை சமண் செய்தவள் ரோஜா செடியை கண்டு புன்னகைத்து " முழிச்சுறுப்பாங்க டா " என்றாள். "சாப்டிரூபாங்களா மா?" என தூரிகா கேட்க " இப்ப தானே குட்டி எழுந்தாங்க ? அப்றம் சாப்பிடுவாங்க. அப்பாவும் தூரி குட்டி எழுந்தாச்சா? சாப்பிட்டாச்சானு யோசிபாங்கள? வாடா" என கூறி மகளை கீழே அழைத்து செல்ல கையில் சத்துமாவு காஞ்சியுடன் வந்தார்; சரஸ்வதி. " பாட்டி .." என்றபடி அவரை கட்டியனைத்த பேத்தியின் தலை கோதியவர் " தூரி குட்டி எழுந்தாச்சா?" என கேட்டதற்கு வேகமாக தலையசைத்து " தாத்தா எங்க பாட்டி?" என தூரிகா கேட்டாள். "தோட்டத்துல டா" என சரஸ்வதி கூற ஒரே ஓட்டமாக ஓடியவள் அங்கு உடர்பயிர்ச்சியை முடித்து நடை மேற்கொண்டு இருந்த அகமகிழனிடம் ஓடி "தாத்தா" என அவரை கட்டிக்கொண்டாள்; தாத்தாவின் செல்ல பேத்தி.


அகமகிழன் அவள் கன்னத்தில் முத்தமிட தாத்தாவிற்கு பதில்முத்தம் வழங்கியவள் அவர் புஜங்களை தட்டி "ஸ்ட்ராங்க் தாத்தா" என்றாள். அதில் வாய்விட்டு சிரித்தவர் பேத்தியை தூக்கிக்கொண்டு உள்ளே வர, மகளை தங்கள் அறைக்கு தூக்கி சென்று அவளை குளிக்க வைத்து தயார் செய்தாள் மொழி. மகளை தயார் செய்தவள், ஒரு டேப் ரெகாடரய் போட " குட் மார்னிங் அப்புகுட்டி. அப்புக்குட்டி குளிச்சாசா?" என மொழியின் அவனது கதகதப்பான பதிவு செய்யபட்ட குரல் ஒலித்தது.


ஒரு பொத்தானை அழுத்தி மொழி அந்த பதிவை நிறுத்த " குட் மார்னிங் பா. நா குளிச்சுடேன் ப்பா. எனக்கு இன்னிக்கு டெஸ்ட் இருக்கு பா. நா நல்லா படிச்சுறுக்கேன் ப்பா." என தூரிக்கா கூறினாள். மொழி மீண்டும் அதை இயக்க "குட். நல்லா படிக்கணும் டா அப்புக்குட்டி. அப்பா அப்புவ பாக்க சீக்கரம் வருவேன். நல்லா சாப்பிடுடா. " என்றதொடு மீண்டும் நிறுத்தபட " ம்ம் பா" என தூரிக்கா கூறினாள் . மொழி மீண்டும் அதை இயக்க "லவ் யு அப்புக்குட்டி. அப்பா சீக்ரம் வரேன்" என்றதொடு பதிவு முடிந்தது. " லவ் யு பா" என தூரிகா கூற மகளை கூடாதிற்கு அழைத்து வந்தாள்.


வழமை போல் அகமகிழன் பேத்திக்கு உணவூட்டி முடித்தவர் "சரஸ்வதி.. தூரிய ஸ்கூல்ல விட்டுட்டு, வயலு வார போய்ட்டு வாரேன்." என மனைவியிடம் கூறி" போய்ட்டு வாரேன் டாமா" என மருமகளிடம் கூற "ம்ம் மாமா" என மொழி கூறினாள். தனது கைபையை எடுத்தவள் "வேலைக்கு போய்ட்டு வரேன் த்தை" என கூறி சென்றாள். அந்த கிராமத்தில் உள்ள சிரு நிறுவனம் ஒன்றில் தட்டச்சாளராக பணிபுரிகிறாள் மொழியினியாள்.


கிராமம் என்றாலே சுற்றி முற்றி யாவரும் சொந்தம் தான். அப்படியான சித்தப்பா முறைக்கு வரும் சங்கரன் என்பவர் நடத்தும் நிறுவனமே அது. "என்னம்மா வெள்ளனவே வந்துபுட்ட?" என சங்கரர் கேட்க "நேத்திக்கு வேலையை ஏதும் பாக்கல சித்தப்பா. அதான் வெள்ளனவே வந்து அத முடிச்சுபுடலாம்னு.." என்றாள். "சரி மா, சரிமா " என அவர் கூற தன் இடம் சென்று அமர்ந்தவள் தன் வேலையை பாக்கலானாள்.


அப்படியே நேரம் ஓட அவ்வூரின் பிரசித்திபெற்ற அம்பாளின் திருக்கோவில் தர்மக்கர்த்தாகள் வந்தனர். "என்ன அண்ணாச்சி, சாமியலாம் கூட்டியாந்திருக்கீங்க? என்ன விடயம்?" என சங்கரர் கேட்க "அட என்ன ப்பா சங்கரா? நம்ம அம்பாளுக்கு திருவிழா வாருது, என்ன விடயமுனு கேக்க?" என சுந்தரர் கேட்டார். "அட ஆமா அண்ணாச்சி. நேத்து கூட மாரிகிட்ட பேசிக்கிட்டு கேடந்தேன், இன்னிக்கி மறந்துட்டேன். நான் ஒரு நல்ல நாள் பாத்து திருவிழாக்கு செய்ய வேண்டியத வந்து செய்யணும்னு இருந்தேன்." என சங்கரர் கூற "அததான் ப்பா நானு கேக்க வந்தேன். அப்ப சரி நல்ல நாள் பாத்து வீட்டம்மாவோட வாரும். நாள் நெருங்குது வெள்ளனவே வாரும்." என சுந்தரர் கூறி புறப்பட்டார். "திருவிழா வருது, இனி ஊர் கலக்கட்டும் போ" என சங்கரர் கூறி செல்ல பாவையின் நினைவு படலம் சில வருடங்களுக்கு முன்னே சென்று அழகிய நினைவுகளை தூசி தட்டி எடுத்தது.


அம்பாள் பல்லக்கில் ஏற்றபட்டு ஊர்வலம் வர, எங்கும் மேல சத்தமே. வீதிதோரும் கடைகள், எத்திசையிலும் வண்ண தாவணிகள் வண்டாய் ரீங்காரித்து பிரவேசிக்க, மேல சத்தத்தில் தவற விட்ட ஒலிகளாய் பெண்களின் வளையல் மற்றும் கொலுசின் ஒலி ஒலித்தன. இருபத்து ஓரு வயதான பருவ பெண், மொழியினியாள் அழகிய மாம்பழ நிற தாவனியும் அரக்கு நிற பாவடையும் அணிந்து, கையில் கலகலக்கும் அரக்கு நிற கண்ணாடி வளையலும், காலில் கொத்துமல்லி கொலுசும், மூக்கில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் எட்டுக்கல் பேசரியும் என அழகு பாவையாக தன் தோழிகளுடன் சுற்றிவந்தால்.


இரண்டாயிரமாம் ஆண்டை சேர்ந்த இளையர்களின் விரும்ப தகுந்த பொருட்கள் பஞ்சுமிட்டாய், தேன்மிட்டாய், சீனிமிட்டாய், முறுக்கு, சீடை, தட்டை, கண்ணாடி வளையல், மல்லிகை பூ ஆகியவையே. அப்போது இதைவிட அரிதாக தங்கம் கூட கருத படவில்லை என தான் கூறபடவேண்டும். "ஏ.. இனியா தேன்மிட்டாய்" என தோழிகளில் ஒரு பெண் கூற யாவரும் சென்ற ஆளுக்கு பத்து அள்ளிக்கொண்டனர். அப்போதெல்லாம் பெரிதாக கருதபட்ட ஐஸ், சேமியா ஐஸ் தான். அதை ஆளுக்கு ஒன்று வாங்கி சப்பிவிட்டு யாவரும் கோவிலுக்கு சென்றனர்.


அபிஷேக மண்டபத்தினுள் பல்லக்கில் அழைத்துவரப்பட்ட அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தபட அனைவரும் பக்தியில் பரவசித்து அம்பாளை வணங்கினர். அம்பாளை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்தவள் பிரகார முனையில் யார்மீதோ இடித்திட "அச்சோ மன்னிச்சுடுங்க ம்மா" என்றாள். அவள் இடித்த பெண்மணி வேறு யாரும் அல்ல, சரஸ்வதியே. சரஸ்வதியும் அதே ஊர் தான். ஆனால் சற்று தள்ளி வசிப்பவர்.

அதுமட்டுமல்லாமல் மொழியினியாளும் வேலைக்கு செல்வதை தவிர வேறு எதற்கும் வெளியே சென்றதில்லாததால், அவளை அவர் கண்டதில்லை.


"இருக்கட்டும் தாயி" என்றவர் "உன் பேரு என்னமா?" என கேட்க "மொழியினியாள்" என்றாள். அவளின் பேரழகில் கவரப்பட்டவர், பணிவான குரலிலும், அழகான தமிழ் பெயரிலும் மேலும் ஈர்க்கப்பட்டர். "அழகான பேரு. அம்மா,அப்பா யாரு? எந்த ஊர் நீ? இதுக்கு முன்ன பாத்த மாறி இல்லயே" என சரஸ்வதி கூற "இந்த ஊர் தான் மா. தொட்டி பாறைக்கு வடக்காலா உள்ள நிலத்லதேன் அப்பா விவசாயம் பண்றாக" என மொழி கூறினாள்.


"அட.. நம்ம தமிழண்ணே புள்ளையா ஆத்தா நீயு?" என சரஸ்வதி கேட்க "ஆமா ம்மா" என்றாள். அதற்குள் அங்கு வந்த அகமகிழன், "சரசு.." என்க கணவரை திரும்பி பார்த்தவர் "ஏங்க.. நம்ம தமிழண்ணே புள்ளைங்க.. சின்ன புள்ளைல பாத்தது.." என கூறினார். மொழியை கண்டு புன்னகைத்தவர் "அப்படியா? நல்லா இருக்கியா ஆத்தா?" என கேட்க "ம்ம்.. நல்லா இருக்கேனுங்க.." என்றாள். பின் பெரியவர்கள் இருவரும் வீடு திரும்ப "ஏங்க.." என கையில் குழம்பியுடன் வந்தார், சரஸ்வதி. "என்னடி சரசு.. நல்ல நாள்ல காப்பி தண்ணி கேட்டா கூட, இன்னும் புள்ள கல்யாணம் பாக்கணும்.. காப்பியா குடிக்காதீகனு வையுவ.. இன்னிக்கி நீயே காப்பியோட வருர?" என நாளிதழை பிரட்டியபடி கூறினார்.


"அ.. அது.. அப்படி இல்லைங்க.. இன்னிக்கி உங்களுக்கு குடுக்களைல அதான்" என சரஸ்வதி தடுமாற "காலைலயே குடுத்துட்டியே" என்றார். "அ.. அப்படியா? மறந்துபுத்டேன். இப்போ போட்டத கோட்டவா முடியும். குடிங்க" என அவர் கூற குறும்பு புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார். குரலை செருமிக் கொண்டவர், "ஏங்க.. இன்னிக்கி கோவில்ல அந்த புள்ளைய பயத்தோம்ல?" என இழுக்க "எந்த புள்ளை?" என தெரியாததை போல் கேட்டார். "ம்ப்ச்.. என்னங்க? அதான்.. அந்த புள்ள மொழி.. நம்ம தமிழண்ணே பொண்ணு" என சரஸ்வதி கூற "ஓ.. அந்த புள்ளையா? ஆமா அந்த புள்ளைக்கு என்ன?" என கேட்டார்.


"அ.. அது அந்த புள்ளைய பாத்ததும் எனக்கு என்னவோ மனசுக்கு புடிச்சு போச்சு.." என அவர் இழுக்க "சரி.. அதுக்கென்ன?" என்றார். 'ம்கும்.. புரியாத போலவே பேசுவாரு' என நொந்துக் கொண்டவர் "அது.. நம்ம தேவனுக்கு அந்த புள்ளைய.." என்றார். மனைவியை வருத்தம் தொனிக்க பார்த்தவர் "சரசு.. என்னைய பேச வைக்கனே பேசுவியோ? அந்த புள்ள, தமிழுக்கும் அமிர்தாவுக்கும் ஆறு வருஷ தவத்துக்கு ஒத்தையா கிடைச்ச கொழுந்து. அம்புட்டு சொத்துக்கும் ஒத்த வாரிசு. படிச்சு போட்டு ஏதோ வேலைக்கும் போவுது. ஒரே புள்ளைய, நம்ம புள்ளைக்கு அவுக எப்படி கட்டிக் கொடுப்பாக? அவுகள விடு புள்ள, நமக்கு ஒரு பொம்பளப் புள்ளை இருந்து இத மாரி யாரும் வந்து கேட்டா ஒத்துக்கிடுவோமா?" என சற்று காட்டமாக கேட்டார்.


"ஏங்க.. அப்போ அவனுக்கு கல்யாணமே பண்ணிவைக்க மாட்டீகளா?" என கண்ணீரை முந்தியில் துடைத்தபடி சரஸ்வதி கேட்க "நான் அப்படி சொல்லலை புள்ள.. இந்த புள்ளைக்கு வேணாம்னுதேன் சொல்லுதேன்.. நாளைக்கே நம்ம புள்ளைக்கு எதும் ஒன்னுனா சின்ன வயசுலயே இந்த புள்ளைக்கு அந்த நிலமை தேவையா சொல்லு?" என கணவர் கூறியதில் முகம் கண்றி சிவக்க விழித்தவர் "இந்தாருங்க.. அந்த புள்ள வேணாமுன்னு சொல்லுங்க விட்டுபுடுறேன்.. அத வுட்டுபுட்டு என் பிள்ளைக்கு எதும் ஆகிடும்னு சொன்னீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.." என பொறிந்துவிட்டு மூக்கை சிந்திவிட்டு சென்றார்.


பிறகு எதார்த்தமாகவோ, வேண்டுமென்றோ? எடுக்கும் பாத்திரம் யாவும் 'டனார்.. டனார்' என கீழே உருண்டது. மனைவி பற்றி நன்கு அறிந்தவர் ஒரு பெருமூச்சு விட, அங்கு இவர்களின் பிரச்சனைக்கு காரணமானவனோ முழங்கால் வரை வளறந்துகிடக்கும் புல்வெளிக்குள் படுத்துக் கொண்டு தன் எதிரியை குறிவைத்தவாறு இருந்தான். இந்திரனின் வஜராயுதம் கூட குறிதப்பும். ஆனால் ஆடவனின் கூறி என்றும் தவாறது. அதே போல அவன் வைத்த குறிக்கு அவர்களின் எதிரி பலியாகிப் போக,தங்கள் குழுவுடன் இன்பக் குதூகலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தான், அந்த ஆறடி ராணுவன், வந்தியாதேவன்.


இவ்வாறு சிந்தனையில் இருந்தப் பெண், சுயம் வர, தனது பணியை தொடர்ந்தாள். பொழுதுகள் இன்பமாய் கலிய, மாலை வீடு திரும்பியவள், தனது அத்தையுடன் கீரையை ஆய்ந்தபடி, வீடு திரும்பும் மகள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாள். தாயவளின் கூற்று தவறுமா? அவள் எண்ணம் போல் வீட்டினுள் நுழைந்த மகள் அன்னையை தாவி வந்து அனைத்து முத்தமிட்டு "அம்மா.. அப்பா எப்போ ம்மா வருவாங்க?" என்றாள்.


"ஏன்டா என்ன?" என மொழி கேட்க "நாளைக்கு பேரண்ட்ஸ் வர சொல்லி ஸ்கூல்ல சொல்லிறுக்காங்க ம்மா.. இந்த வாட்டியும் அப்பா வரமாட்டாங்களா?" என ஏக்கத்துடன் கேட்டது அந்த ஆறு வயது பிஞ்சு. அதில் சரஸ்வதி கண்கள் கலங்கிவிட, மருமகள் கூறப் போகும் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார், அகமகிழன். "தூரி குட்டி.. அம்மா உனக்கு ராஜா கதைலாம் சொல்லிறுக்கேன் தானே? அப்பா இங்க இல்லாம நம்மலால இருக்க முடியும். ஆனா அப்பா அங்க இல்லாம நம்ம இந்தியாவாள இருக்க முடியாதுடா" என மொழி கூற "அப்பா ராஜாவா ம்மா?" என மகள் விழிகள் விரிய கேட்டாள்.


அதில் மென் புன்னகையுடன் 'இல்லை' என தலையசைத்த மொழி "அப்பா ராணுவர் டா.. ராஜாக்கும் மேல" என கூற அச்சிருமியின் வயதின் பக்குவத்திற்கு 'அப்பா யாரோ பெரிய ஆள்' என்பது மட்டும் புரிந்தது.

அவ்வாறே கழிந்த பொழுதுகளில் இரவுணவை முடித்துக் கொண்டு மகளை படுக்க வைக்க வந்த மொழி ஏதோ சிந்தனையில் அவளை படுக்க வைக்க "ம்மா.. அப்பா பாட்டு ம்மா" என தூரிகா கேட்டாள். மகளின் குரலில் சுயம் வந்தவள் "அச்சுச்சோ.. மறந்துட்டேன் தூரி குட்டி.. இரு.." என கூறி ஒரு டேப்பை போட அதில் அவளவனின் கதாகதப்பான குரலில் அப்பாடல் ஒலித்தது.


"ஒரு தெய்வம் தந்த பூவே.. கண்ணில் தேடல் என்ன தாயே.." என்ற பாடல் அவளவன் குரலில் குழைந்து ஒலிக்க பாவையின் நினைவுகள் அதை அவன் குரலில் பதிவு செய்த நாளிற்கு சென்றது.

சரஸ்வதியின் பிடிவாதம் வீண் போகவில்லை.. ஆம் நமது வந்தியாதேவனுக்கும் மொழியினியாளுக்கும் திருமணம் நடந்தேறிவிட்டது அல்லவா.. ஒரே ஊர், ஒரே சனம், வீடு வரை வந்து கேட்டுவிட்டனர் என மொழியின் தந்தை மறுக்கமுடியாமல் தவித்தபோது, தாயவளுக்கு தான் கஷ்டமாக இருந்தது.


ஒரே மகள்..தன் உயிருக்கு தான் பொறுப்பில்லை என்னும் ஒருவனுக்கு கட்டிக் கொடுக்க மனம் அடித்துக் கொண்டது. இருப்பினும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அம்முறை விடுமுறைக்கு வந்தவனுக்கு தனது சொந்தக் கல்யாணமே ஒரு செய்தியாக சொல்லப்பட்டது. மொழி அவள் வீட்டின் ஒற்றைப் பெண், சொத்து, படிப்பு, என அனைத்திலும் நல்ல நிலைக் கொண்ட பெண் என தெரிந்தவனுக்கு மனம் சற்று சங்கடமுற்றது. அவளைப் பெண் பார்க்கும் அன்று பார்த்து பேசியவனுக்கு அவள் மற்றவர் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்யவில்லை எனினும் சற்று கவலையாக தான் இருந்தது.


ஆனால் அதுவும் கல்யாண ஏற்பாடுகளில் தொலைந்தே போனது. இப்போது உள்ளது போல் அலைப்பேசியிலேயே பாதி வாழ்க்கையை நடத்திவிடும் படி எல்லாம் அப்போது கிடையாது. சொல்லப் போனாள் மொழியிடம் அலைப்பேசியே கிடையாது. கிராமங்களில் எல்லாம் பரிசம் போடபட்ட பெண்ணை வெளியேவும் அனுப்ப மாட்டர். அவள் சந்தித்த ஒரே கனத்தை மட்டுமே கொண்டு வண்ண வண்ண கனவுகள் கண்டு, அவள் கரம் பிடித்து மனையாளாகவும் ஆக்கிக் கொண்டான்.


திருமணம் முடிந்து ஒரு மாத காலம் மனைவியுடன் இன்பாய் களித்தான். அக்கறைகளும், அழகழகான ஊடல்களும், அதை முடித்துவைக்கும் சாக்காக தொடங்கும் காதல் சில்மிஷங்களும், அதில் முடிவுப் பெரும் கூடல் லீலைகளும் என சென்றது. இதோ இன்று ஊர் திரும்புகின்றான். இனி எப்போது வருவானோ? யார் அறிவார்?? இளம் தம்பதிகள் இருவர் மனமும் கணத்து போனது. மொழிக்கு அத்தனை வேதனையாக இருந்தது. சில நொடிகள் பிரிவின் தாக்கம், தவறு செய்துவிட்டோமோ? இப்படி ஒரு பிரிவை பழகிக்க வேண்டிய சூழலை கொடுப்பவரை மணாளனாக ஏற்றிருக்க கூடாதோ? எனவெல்லாம் தோன்றியது. அதுவும் சில விநாடிகளே. கணவன் மீதான பாசம்.. தன்னையே கடிந்துக் கொண்டாள்.


இரவு அவன் மாரில் தலை வைத்துக் கொண்டு படுத்திருந்தவள், "நாளைக்கு கீழம்புரீகல?" என கேட்க மனைவியை சிறு வேதனையுடன் பார்த்தான். "அழரியா?" என அவன் கேட்க அவன் மாரில் முகம் புதைத்து 'இல்லை' என்பதுப் போல் தலையசைத்தாள். அவள் கன்னத்தில் கரம் பதித்து உயர்த்தியவன், தங்கள் பால்கனியில் இருவரும் வாங்கி வைத்திருந்த ரோஜா செடியை காட்டி, "அதுல நாளைக்கு ரோஜா பூத்தா என்ன பண்ணுவ?" என கேட்டான். "இதென்ன கேள்வி? ஒன்னு தலையில வச்சிப்பேன், இல்ல சாமிக்கு வைப்பேன்" என கூறினாள்.


"ஏன்?? அது செடிலயே இருக்கலாமே?" என அவன் கேட்க "செடியிலயே வாடி போகுறதுக்கு எதுக்கு அத வழக்கணும்? சாமிக்கோ, தலைக்கோ வச்சு அழகு பாக்க தானே பூ?" என கேட்டாள். "அதே போல தான்.. நான் இருக்கும் இடத்திலயே இருந்தா கொஞ்ச நேரம் ரசிக்கலாம்? ஆனா ஒரு பயனும் இல்ல. இந்த நாட்டுக்கு போய் நான் செய்யும் பணியில் தான் நான் இருக்குறதுக்கு பயன்" என அவன் கூற மென்மையான புன்னகையுடன் தலையசைத்து சிரித்தாள். அப்போது "ஏங்க.. நீங்க இந்த கன்னத்தில் முத்தமிட்டாள் பாட்டு சூப்பரா பாடுவீங்கள்ல? எனக்கு அத பாடி ரேகார்ட் பண்ணி தந்துட்டு போங்களேன்?" என ஆசையாக கேட்டாள்.


"இவ்ளோ லவ்வா என் பொண்டாட்டி கேட்கும்போது இல்லையினு சொல்லுவேனா புள்ள நானு?" என கூறியவன் மனைவிக்காக அந்த பாட்டை பாடி பதிவு செய்துக் கொடுத்தான். அந்த பொன்னான நினைவுகளில் இருந்து மீண்டவள், உறங்கிய மகளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு உறங்கினாள். அங்கு அந்த ராணுவன், மனைவியின் நினைவுகளில் தான் இருந்தான். கையில் ஒரு சிறு குறிப்பேடு..


அவள் இல்லாத தருணங்களின் ஏக்கத்தையும், தாபத்தையும் அந்த புத்தகம் தான் சுமக்கும். அதன் முதல் பக்கத்திலேயே "கூடல் சரித்திரங்களையும், காதல் சில்மிஷங்களையும், தாபங்களையும் தாங்கிய அழகிய மஞ்சமாகிப் போனாய் என் புத்தகமே" என இருந்தது. ஆடவன் அவளை பிரிந்து இருக்கும் ஏக்கம் யாவும் அந்த புத்தகத்தில் அழகிய கவிதையாக மாறிப் போகும்.


அதில் ஒரு பக்கத்தில் "ஆசை ஆசையாய் உன்னை காண வந்தேன். உன்னை கண்டவுடன் அதிர்ந்து போனேன். எட்டு மாத சூழ் தாங்கிய வயிற்றுடன் இருந்த உன்னை கண்டு என் மனம் அனுபவித்த வேதனையை என்னவென்று கூற? என் உயிரை உன் மணிவயிற்றில் சுமக்கின்றாய். ஆனால் பார் பெண்ணே, மகவே பிறக்கப் போகும் நிலையில் தான் செய்தியே எனக்கு தெரிகிறது. உன் மணிவயிற்றில் நான் கரம் வைத்த தருணம்.. இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும். நம் காதலின் சாட்சி அசைந்துக் கொடுக்க, அதை உணர்ந்த இருவர் விழிகளிலும் கண்ணீர்... ஏன் சொல்லவில்லை? எப்போதாவது பேசும்போது கூறியிருக்கலாமே? செய்தி அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டேன். அதற்கு அந்த பேதையின் பதில் செய்தி அறிந்து உடன் இருக்க முடியவில்லையே என நான் வருந்தக் கூடாது என்பது தான். ஆனால் கேள் பெண்ணே, உன்னுடன் இருக்கும் தருணத்தை விட இந்த பிரிவு மிகுந்த ராசனையாக உள்ளது. கற்பனை என்னும் பெரும்வரம், நம்மக்கான தனி உலகையே உருவாக்கிக் கொடுத்துள்ளது. உன் காதலை நொடி நொடிக்கும் ரசித்துப் பார்க்க தூண்டுகிறது. அருகில் இருக்கையில் இவை இல்லை.. உன் அருகில் இருந்தால் பரவசம்.. தொலைவில் இருந்தால் என்வசம்.. தூர இருந்து காதலிப்பதும் தனி சுகம் தானடி.." என்று இருந்தது, அந்த வீர ராணுவனின் காதல் ஓவியங்கள்..


அந்த பொன்னான புத்தகங்கலை படித்து இன்புற்ற அந்த பெண்மணி தலை நிமிற, ராணுவ உடையில் கம்பீரம் என்பதற்கு சாட்சியாக நின்றுக் கொண்டிருந்தாள், அந்த பெண் புலி தூரிகா. கண்களில் கண்ணீர், இதழில் புன்னகை. மகள் பத்து வயதை எட்டிய பொழுது சடலமாக வீடு வந்த கணவனின் முகம் இன்றும் நினைவு வந்தது. "அம்மா.. அப்பாக்கு என்ன?" என புரிந்தும் புரியாமல் கேட்ட மகளை கண்ணீருடன் பார்த்த மொழியினியாள், "அப்பா பெரிய போராளிடா.. இவ்வளவு பெரிய இந்தியா நிம்மதியா இருக்கணும்னு அப்பா ஆசை பட்டாங்கள்ல? அதுபடி அவர் பணியை செஞ்சுட்டு ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்ட்டார்" என கூற "இனிமே வரமாட்டாரா?" என மகள் கேட்டாள்.


அதில் பெருக்கெடுத்த கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டு "அப்பா தூங்கிட்டார்னு தானே அம்மா சொன்னேன்.. அப்பா நினைவுகள் மூலமா நம்ம மக்கள் மனசுல எப்பவும் இருப்பார்" என கம்பீரத்துடன் கூறினாள். அந்த நினைவு இன்றும் படம் போல் கண்முன் வந்து போனது. அன்னையை வணங்கிய தூரிகா "ம்மா.." என்க மகளை ஆசீர்வதித்து "பத்திரமா போய்ட்டு வாடா" என கூறினாள். அன்னை, தாத்தா, பாட்டி மூவரையும் அனைத்து விடைபெற்ற மகள் கன்னைவிட்டு மறைய கையில் உள்ள புத்தகத்தை பார்த்தாள்.


'தேடிச் சோறுநிதந் தின்று- பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்

வாடித் துன்பமிகவுழன்று- பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போல- நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்று இருக்க, "நீங்க வீழலை.. முளைக்கும் விதைய விட்டுட்டு போய்ருக்கீங்க" என கூறிக் கொண்டாள்.

முகமறியாத நமக்காகவும், நமது நாட்டிற்காகவும் தங்கள் இன்னுயிர் துறக்கவும் தயங்காத வீர ராணுவர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்!!🙏

உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் தங்கம்ஸ்🥰👇

 
Last edited:
வீழ்வேனென்று நினைத்தாயோ.....

தவமாய் பிறந்தவளை
தாரமாய் ஆக்கியவன்.....

எல்லையில்லா இன்பம் தந்தவன் எல்லைக்கோட்டில் உயிரைத் துறந்தவன்

அப்பாவின் நேசத்தில் விளைந்தவள் அன்னையின் பாசத்தில் வளர்ந்தவள்

தந்தையின் பணியை
தவமாய் எண்ணி
தன் பணி என செல்லும்
வீரமங்கையே வாழ்க.....

மனதை கணக்க செய்த கதை...அல்ல
ஒவ்வொரு ராணுவ வீரனின்
வாழ்க்கை(காதல்) சரித்திரம் ....
கண்ணீருடன் 💐💐💐💐💐வாழ்த்துக்கள்.....
😭😭😭😭😭
 
வீழ்வேனென்று நினைத்தாயோ.....

தவமாய் பிறந்தவளை
தாரமாய் ஆக்கியவன்.....

எல்லையில்லா இன்பம் தந்தவன் எல்லைக்கோட்டில் உயிரைத் துறந்தவன்

அப்பாவின் நேசத்தில் விளைந்தவள் அன்னையின் பாசத்தில் வளர்ந்தவள்

தந்தையின் பணியை
தவமாய் எண்ணி
தன் பணி என செல்லும்
வீரமங்கையே வாழ்க.....

மனதை கணக்க செய்த கதை...அல்ல
ஒவ்வொரு ராணுவ வீரனின்
வாழ்க்கை(காதல்) சரித்திரம் ....
கண்ணீருடன் 💐💐💐💐💐வாழ்த்துக்கள்.....
😭😭😭😭😭
மிக்க நன்றி அக்கா ❤️.. உங்கள் வரிகளுக்கு எப்போதுமே நான் அடிமை❤️❤️.. மிக்க நன்றி ❤️
 
Top