எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 27

Privi

Moderator

ருத்ரன் அவன் அன்னை கேட்ட கேள்விக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் "அம்மா தூக்கம் வருகிறது நான் சென்று படுகிறேன்." என கூறி அங்கிருந்து அவனது அறைக்கு விரைந்தான்.​

அவன் பதில் சொல்லாமல் போனாலும் அவர் கேட்ட கேள்விக்கு அவன் முக மாறுதலை வைத்தே பார்வதிக்கு நம்பிக்கை வந்திருந்தது. அறைக்குள் வந்தவன், படுக்கையில் படுத்துக்கொண்டே சுய ஆராய்ச்சியில் இறங்கினான்.​

‘இதுநாள் வரை அம்மா மறுகல்யாணம் பற்றி என்னிடம் நிறைய முறை பேசியதுண்டு அப்போதெல்லாம் கோபப்படும் நான் இன்று ஏன் அவர்களின் இந்த கேள்விக்கு பின் கோபப்படவில்லை?​

ஏன் என் மனம் சட்டென்று அம்மா சொன்ன கூற்றுக்கு அவ்வாறு நினைத்தது? எனக்கு அவளை பிடித்திருக்கிறதா? கல்யாணம் கட்டினாள் அவளுடனான வாழ்க்கை நல்ல படி இருக்குமா? இதற்கு அவள் சம்மதிப்பாளா? அவள் சம்மதிக்க வில்லை என்றால் எப்படி அவள் சம்மதத்தை பெறுவது?' என பலவாறு யோசித்து கொண்டிருந்தவன்,​

கடைசி யோசனைகளில் சட்டென்று 'அடேய் ருத்ர அவள் சம்மதிப்பாளா என்று யோசிக்கிறாயே அப்போது உனக்கு சம்மதமா? இதில் அவள் சம்மதிக்க வில்லை என்றால் எப்படி சம்மதிக்க வைப்பது என்று வேறு உனக்கு யோசனை. என்னடா இப்படி மாறிவிட்டாய்.....​

மறுபடியும் உன் வாழ்வில் ஒரு பெண். இது சரியா வருமா?" என பல விதமாக யோசித்தவன். அந்த யோசனையுடன் தூங்கி போனான். மறுநாள் அவன் காலை உணவை முடித்து விட்டு அலுவலகத்துக்கு செல்ல புறப்படும் போது பார்வதி, " ருத்ர நேற்று நான் சொன்னதை யோசித்தாயப்ப?" என கேட்டார்.​

அவன் அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே "எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்மா." என கூறி வேலைக்கு புறப்பட்டு சென்றான். அலுவலகத்திற்கு சென்றவனால் ஏனோ வேலை செய்ய முடியவில்லை.​

அவன் தாய் கேட்டதே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. சட்டெனெ அவன் நினைவுக்கு வந்தது நீலன்தான். உடனே அவனுக்கு அழைத்தவன் "நீலன் வேலையா என கேட்டான் அதற்கு நீலன் "இல்லை நாளைத்தான் வேலை. இன்று விடுமுறையில் உள்ளேன்.” என கூறினான்.​

“உங்களை சந்திக்க முடியுமா முடிந்தால் மகிழையும் அழைத்து வாருங்கள்.” என கூறினான் ருத்ரன். அவன் இப்படி மகிழை காண வழமையாக அழைப்பதுதான் அதனால் நீலனும் ஏதும் தோன்றாமல் உடனே​

"சரி மாலை ஐந்து மணிக்கு நான் பார்க்குக்கு மகிழுடன் வருகிறேன்." என கூறினான்.​

ருத்ரனும் "சரி அப்படி என்றால் பிறகு சந்திப்போம்." என கூறி அழைப்பை துண்டித்தான்.​

அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் ' நான் ஏன் நீலனை சந்திக்க நினைத்தேன். அப்படி சந்தித்தால் என்ன பேசுவது' என நினைத்து மனக்குழப்பங்களுடனே வேலயில் ஈடுபட்டான். மறுபடி அவள் வாழ்வில் ஒரு தடுமாற்றம்.​

குழப்பங்களுடனே வேலை செய்துகொண்டிருந்தவன் திறன்பேசி சிணுங்கி கொண்டிருந்தது. திறன்பேசியை எடுத்து பார்த்தாள் உமையாள் தான் தொடர்பு கொண்டிருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.​

மறு முனையில் "வணக்கம் ருத்ரன், ஒரு சின்ன சந்தேகம் அதனை தீர்க்கவே உங்களுக்கு அழைத்தேன்." என கூறினாள்.​

"ஹ்ம்ம்…, கேளுங்க" என ருத்ரனும் கூறியிருந்தான்.​

"ருத்ரன் உங்கள் க்ளயன்ட், ஓம் வடிவில் ஒரு கலைப்பொருள் பூஜை அறையில் வைப்பதற்குத்தானே கேட்டார்?" என கேட்டாள்.​

அவனும் "ஆம்" என கூறினான்.​

எனக்கு ஒரு சின்ன யோசனை, ஓவல் வடிவம் கொடுத்து, அதில் சுத்தி நிஜமான மயில் இறகு கொண்டு வடிவமைத்து, நடுவில் ஓம் என்னும் எழுத்தை வைத்து, அதில் ஒரு வேல்லை ஓம் எழுத்தின் நடுவில் வைத்து, அந்த வேலின் முகப்பில் மூன்று வெள்ளை நிற கோட்டை கீத்தாக வைத்து அதன் மேல் சிகப்பு நிறத்தில் போட்டு ஒன்றையும் வைத்து விடலாம். நன்றாக இருக்கும் தானே?" என கேட்டாள்.​

அவன் எங்கே அவள் கூறியதை கேட்டான் தன்னவளின் குரலை அல்லவா ரசித்து கொண்டிருந்தான். அவன் மனமோ நேற்று அன்னை கேட்ட கேள்வியில் வந்து நின்றது. கேள்விக்கு பதில் வராமல் மறுமுனையில் மௌனம் தொடரவே​

"ருத்ரன்” என அழைத்தாள்.​

அப்போதும் மௌனம் தொடரவே காதில் இருந்து தொலைபேசி நின்று விட்டதா என பார்த்தள். அழைப்பில் தான் இருந்தான். கொஞ்சம் வேகமெடுத்து ருத்ரன் என அழுத்தி கூறினான். உடனே அவள் குரலின் அழுத்தம் அவனை சென்றடையா​

"இரு… இருக்கேன்" என தடுமாற்றமாக கூறினான்.​

ஒரு சிறு அமைதிக்கு பின் அழுத்தமாக "ருத்ரன் என்ன குழப்பம்” என கேட்டாள்.​

அவனுக்கு அவளின் இக்கேள்வி ஆச்சரியம் தான். ‘குரலின் பதத்தை வைத்தே தன் மனநிலையை கணித்து விட்டாளே’ என எண்ணியவன். அவளிடம்​

"ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்க வேண்டும். என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை.” என்று கூறினான்.​

அதற்கு அவள் "சில சமயம் இப்படி குழப்பங்கள் வருவது இயல்புதான். எல்லா கேள்விக்கும் இரண்டு விதமான தீர்வு கண்டிப்பாக நம்மிடம் இருக்கும். அதில் எதனை தேர்வு செய்வது என்பதே நம் குழப்பமாக இருக்கும்.​

அப்போதெல்லாம் மூச்சை இழுத்து விட்டு நமக்கு பிடித்த கடவுளை மனதில் நினைத்து கொண்டு கண்களை மூடுங்கள். உங்களுக்கு சரி எனப்படும் முடிவு உங்கள் கண் முன் வரும். அந்த முடிவு எப்போதும் தவறாக இருக்காது." என கூறினாள்.​

இதனை கேட்ட அவன் இதழ்களில் சிறு புன்னகை... 'யார் என்று தெரியாத முன்பே அவள் சொல்லை கேட்டவன் நான், இப்போது கேட்கமலா இருப்பேன்'. என நினைத்தவன் அவளிடம் வாய்மொழியாக "ஹ்ம்ம் சரி செய்து பார்க்கிறேன்." என கூறினான்.​

அவளும் அதன் பின் அவளின் சந்தேகங்களையும், புது புது ஐடியாக்களையும் கூறி தெளிவுபடுத்திக்கொண்டு அழைப்பை துண்டித்தாள். அவள் அழைப்பை துண்டித்தவுடன், இவனும் சிறிது நேரம் அவன் சாய்வு நாற்காலியில் கண் மூடி அமர்ந்திருந்தான்.​

‘வேலை செய்யலாம் என நினைத்தால், வேலை செய்ய முடியவில்லை.’ என எண்ணியவன், கண் திறந்து மணியை பார்த்தான். காலை மணி பத்தை காட்டியது.​

இருக்கையில் இருந்து எழுந்தவன் அவன் அலுவலகம் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றான். பல வருடம் கழித்து அவன் கோவிலுக்கு செல்கிறான்.​

சன்னிதானம் முன் நின்று மூலஸ்தானத்தில் இருக்கும் சுப்ரமணியாரை பார்த்து மானசீகமாக​

'பல வருடம் கழித்து உன்னை பார்க்க வந்துள்ளேன், என் மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்து வை. பல வருடம் கழித்து உன்னை நாடி வந்துருக்கேன். இந்த முறை என்னை கை விட மாட்ட என்று நம்புகிறேன்' என மனதில் வேண்டிக்கொண்டிருந்தான்.​

அர்ச்சகரிடம் திருநீர் பெற்றுக்கொண்டு ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தான்.மூச்சை நன்கு இழுத்து மனதினை ஒரு நிலை படுத்தி மனதில் முருகனை நினைத்து கண்களை மூடினான்.​

முடிய கண்களில் வழியே ஒரு பெண் உருவம் நடந்து செல்கிறது அதனை ஒரு ஆண் உருவம் பின் தொடர்ந்து செல்கிறது. சட்டெனெ அந்த ஆண் உருவம் அந்த பெண் உருவத்தின் அருகினில் வந்து அதன் தோளில் கை வைக்கிறது.​

உடனே அந்த பெண் உருவம் திரும்புகிறது. அந்த பெண் உருவம் வேறு யாரும் இல்லை உமையாள் தான். இப்போது அந்த ஆன் உருவமும் தெரிகிறது, அது ருத்ரனின் உருவம்.​

அதே சமயம் அவனின் கையை கோர்த்துக்கொண்டு இருந்தது மகிழின் கைகள்.​

பட்டென்று கண்களை திறந்தான். மனம் நிறைவாக இருப்பதைப்போல் இருந்தது. அவன் இதழ்களில் ஒரு புன்னகை. எழுந்து முருகனை இரு கை கூப்பி வணங்கி விட்டு கோவிலிருந்து புறப்பட்டான்.​

மாலை ஐந்து மணி பூங்காவில் ருத்ரன், நீலனுக்கும் மகிழுக்கும் காத்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு நீலனும் மகிழும் வந்திருந்தனர். மகிழ் ருத்ரனை பார்த்தவுடன் ஓடி சென்று அவன் கால்களை கட்டிக்கொண்டாள்.​

ருத்ரனும் அவளை அல்லி அனைத்து தூக்கி கன்னத்தில் முத்தம் பதித்தான். இருவரை பார்த்த நீலனுக்கு மனம் நிறைத்து போனது உடனே முருகனிடம்​

'முருக இது காலம் முழுக்க நிலைக்க வேண்டும்.' என மனதில் வேண்டிக்கொண்டான்.​

ருத்ரன் மகிழிடம் " ஹனி பீ! நீங்க ஊஞ்சல், சறுக்குமரம் எல்லாம் விளையாடுவீங்களா நானும் மாமா இதோ இங்க அமர்ந்து நீங்க விளையாடுவதை பார்த்துக்கொண்டே பேசுவோமா." என கூறினான்.​

மகிழும் சமத்தாக தலை ஆட்டி விட்டு விளையாடுவதற்கு அவனிடம் இருந்து இறங்கி ஓடி சென்றாள். அவள் போவதையே இருவரும் பார்த்து கொண்டிருந்தனர்.​

ருத்ரன் அவன் பார்வையை மாற்றாமல் "நீலன் எனக்கு மகிழ் அப்பாவுக்கு என்ன ஆனது என்று தெரிஞ்சிக்கணும்." என்று கேட்டான்.​

நீலன் சட்டெனெ திரும்பி அவனை பார்த்தான். இப்போது ருத்ரனும் அவன் புறம் திரும்பி, “அன்று நீங்க வீட்ல அம்மாகிட்ட சொன்னது எல்லாமே நான் கேட்டேன் ஆனால் எதாவது மிஸ் பண்ணிட்டேனா என தெரிய வில்லை.​

இன்னும் ஒரு முறை உங்க வாழ்க்கையிலும் உமையாள் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என கூற முடியுமா?" என கேட்டான்.​

அதற்கு நீலன் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு “இங்கு அமர்ந்து பேசலாமா?”என கேட்டான் அங்கு போடப்பட்டிருக்கும் சீமெந்து பெஞ்சை காண்பித்து.​

ருத்ரனும் ஏதும் பேசாமல் அங்கு சென்று அமர்ந்து அவன் அருகினில் இருக்கும் இடத்தை அவனுக்கு காண்பித்தான். அங்கு வந்து அமர்ந்த நீலன், உமையாள் மற்றும் அவன் வாழ்க்கையில் என்ன என்ன நடந்தது என்று ஒன்று விடாமல் ருத்ரனிடம் கூறினான்.​

எல்லாவற்றையும் கேட்டவனுக்கு கண்கள் கலங்கி விட்டது. பின் குரலை சரி செய்து விட்டு​

"மகிழுக்கு அவள் தந்தையை பற்றி தெரியுமா?" என கேட்டான்.​

அதற்கு நீலன் "இல்லை ருத்ரன் இந்த நிமிடம் வரை அவளுக்கு அவள் அப்பா யார் என்று தெரியாது." என கூறினான்.​

அப்போ சரி என இருக்கையிலிருந்து எழுந்தவன், நேற்று அம்மா உன் கல்யாண விஷயத்தை பற்றி சொன்னாங்க வாழ்த்துக்கள். ஆனால் உங்க அக்கா கல்யாணம் பண்ணாமல் நீ கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்று கூறினாயாமே?" என கேட்டான்.​

அதற்கு நீலன் அவனுடன் இருக்கையில் இருந்து எழுந்த வண்ணமே "ஆம்" எனும் விதமாக தலை ஆட்டினான். உடனே அவன் தோளில் கைபோட்டு. நான் இருக்கும் போது என்ன கவலை. விடு மச்சான் உங்க அக்கா கழுத்துல நான் தாலிய கட்டுறேன்." என கூறினான்.​

அவன் சொன்னதையும் அவன் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து நீலனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. பின் நீலன் கழுத்திலிருந்து கையாய் எடுத்தவன்,​

நீலனை நோக்கி “என்னை பற்றி ஏதேனும் தெரிய வேண்டுமா?” என கேட்டான்.​

நீலன் அமைதியாக இருந்தான், பின் அன்று நாங்கள் வீட்டிற்கு வந்த சமயமே அம்மா உங்களுக்கு நடந்த அனைத்தையும் என்னிடமும் அக்காவிடமும் கூறினார்கள்.​

எந்த ஆண் மகனுக்கும் வரக்கூடாத இழுக்கு" என அவன் கூறி முடிப்பதற்குள் இடையிட்ட ருத்ரன்​

"என்ன பரிதாபமா பேசபோறிய?" என சற்று கட்டமாகவே கேட்டான்.​

சட்டென சிரித்த நீலன் "பரிதாபமா வாய்ப்பே இல்லை உங்களை கண்டு எனக்கு ஆச்சரியம் தான் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையில் உள்ளவர்கள் டெப்ரேஷியனுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கு ஆனால் நீங்கள் எப்படித்தான் இதனை பொசிட்டிவாக எதிர்கொண்டு இந்த உயரத்தில் நிக்குறீங்க? நானா இருந்த ஓடியே போயிருவேன்." என கூறினான்.​

ருத்ரன் உடனே அவன் முக பாவனையை மாற்றி சத்தமாக சிரித்தான்.​

"சொன்னால் நம்புவாயா என்று தெரியவில்லை. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் உன் அக்காதான்" என கூறினான். நீலனின் முகம் யோசனையில் சுருங்கியது.​

ருத்ரன் சுபா விட்டு சென்றவுடன் அவன் என்ன நினைத்தான். அவன் நிலைமை எப்படி இருந்தது, வேலை விட்டு நின்றது, என்ன செய்வது என்று தெரியாமல் இதே பார்க்கு வந்தது, அங்கு ஒரு பெண்ணையும் ஒரு குழந்தையையும் பார்த்தது, அந்த பெண் கூறிய வார்த்தைகள் என எல்லாமே கூறினான்.​

"அந்த பெண்ணின் வார்த்தைகளை கேட்ட பிறகுதான் நான் கொஞ்சம் தெளிந்தேன். பின் ஒரு முடிவெடுத்து வாழ்க்கையை பொசிட்டிவ் வெய்யில் காண ஆரம்பித்தேன். இதோ இப்போது இங்கு இருக்கிறேன்" என கூறி முடித்தான்.​

நீலனும் "ஆமாம் இதனை என் அக்கா தான் அடிக்கடி கூறுவாள் அது அவளுக்கே அவள் கொடுக்கும் ஊக்கம்." என்றான்.​

தொடர்ந்து ருத்ரன் "நான் நல்லவன் இல்லை எனக்குள் அந்த கசப்பான சம்பவத்திற்கு பின் நிறைய கெட்ட பழக்கங்கள் மது, மாது என என்னை நானே கெடுத்துக்கொண்டேன்.​

நல்லவனாக வாழ்ந்து என்ன கிடைத்தது என்று. ஆனால் இனி அப்படி இருக்க மாட்டேன். உன் அக்காவுக்கு உண்மையாக இருப்பேன்." என கூறினான்.​

நீலனும் "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு நீங்கள் அவளை திருமணம் செய்தாள் மகிழ்ச்சிதான் ஆனால் அவள் சுலபத்தில் சம்மதிக்க மாட்டாள்.​

அவள் வாழ்க்கையே மகிழ் மட்டும் தான் என வாழ்த்து கொண்டிருக்கிறாள். இனி அவள் வாழ்வில் வேறு ஒருவருக்கு இடமில்லை என்றும் கூறி கொண்டிருக்கிறாள்.” என வருத்தத்துடன் கூறினான்.​

அதற்கு ருத்ரனோ “அது என் பிரச்சனை நான் பார்த்து கொள்கிறேன்."என கூறினான். இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கும்போதே அவர்களிடம் மகிழ் ஓடி வந்தாள்.​

ஓடி வந்தவள் நேரே ருத்ரன் முன் நின்றாள். அவளை ருத்ரன் தூக்கிக்கொண்டான். " என்ன வேண்டும் என்னுடைய ஹனி பீக்கு?" என்று கேட்டான்.​

அவளோ "ஐஸ்கிரீம் வேண்டும் ருத்து" என சொன்னாள். உடனே அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க அழைத்து சென்றான் ருத்ரன். சிறு அமைதியின் பின் மனதில் உள்ளதை கேட்டு விடலாம் என தீர்மானித்த நீலன்,​

"ருத்ரன் ஒரு நிமிடம்" என்றான்.​

ருத்ரனும் திரும்பி அவனை பார்த்தான். மேலும் தொடர்ந்து "ருத்ரன், மகிழ் என கூற வந்தவனை இடை மறைத்த ருத்ரன் “அவள் என் மகள். அவளுக்கு அப்பா நான் மட்டும் தான். அவள் வேறு ஒருவர் மூலம் இந்த உலகிற்கு வந்தாலும் அவளின் அப்பா என்னும் சொல்லுக்கு நான்தான் உரிமை உள்ளவனாய் இருப்பேன்.” என கூறினான்.​

கண்கள் கலங்க நீலன் நெகிழ்ந்து போய் அவனை தழுவிக்கொண்டான்.​

 
Top