எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -4

Padma rahavi

Moderator
இரவு உணவு உண்டு கொண்டிருந்த சிவகர்ணிகாவை பார்த்தபடியே இருந்தார் வாசுகி.

என்னமா அப்படி பாக்கிற?

இல்லடி. நீங்க ரெண்டு பேருமே இப்ப தான் பொறந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள வளர்ந்து ஒருத்தி நம்மளை விட்டு போய் என்ன என்னமோ நடந்து போச்சு என்று கண்ணீரை துடைத்தார்.

அவருக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள் சிவகர்ணிகா.

வாசுகி. ஏன் சாப்பிடுற புள்ளையை என்ன என்னமோ சொல்லி கஷ்டப்படுத்துற. நமக்கு இதெல்லாம் நடக்கும்னு தெரியுமா என்று கேட்டார் வாசன்.

அது இல்லைங்க. இவளுக்கு வயசு 23 ஆகுது. வேதிகா இருந்திருந்தா இந்நேரம் ஒரு குழந்தை சத்தம் கேட்ருக்கும் வீட்ல. இப்ப இப்ப மூலமாவது அது நடக்கும்னு மனசு தவிக்குது என்றார் வாசுகி.

அம்மா. இப்ப அதுக்கு என்ன அவசரம். கொஞ்ச நாள் வேலைக்கு போய்ட்டு உங்க இஷ்டப்படியே பண்ணிக்குறேன். அது வரை கொஞ்சம் பொறுமையா இருங்க என்று எழுந்து சென்றாள் சிவகர்ணிகா.

இரவு அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,

ஏண்டி கேக்கணும்னு நினைச்சேன். கொண்டு போன டிபன் பாக்ஸ் எங்க? பையும் வேற மாதிரி வச்சிருக்க? இன்னிக்கு லஞ்சும் எடுத்துட்டு போல. முதல் நாள் கொண்டு போனா பாக்ஸ் எங்கடி என்று கேட்டார் வாசுகி.

அம்மா அது வந்து, என்று நடந்ததைக் கூறினாள் சிவகர்ணிகா.

பாத்திங்களா! நான் பேசுறப்ப எல்லாம் தேவ இல்லாம கவலை படுறேன், அப்படி இப்படினு என் வாயை அடைப்பீங்களே! இப்ப என்ன நடந்திருக்குனு பாருங்க. இப்ப இதையும் சொல்லாம அமுக்கமா இருந்திருக்கா. பை தூக்கிட்டு போனதோட இல்லாம இவளுக்கு எதாவது ஆகிருந்தா என்ன ஆயிருக்கும். ஏற்கனவே ஒருத்தியை பறிகொடுத்துட்டு இருக்கேன் என்று நிறுத்தாமல் வாசுகி பேச,

கொஞ்சம் இருடி. அவ சொல்லி முடிக்குறதுகுள்ளேயே ஏன் இப்படி பறக்குற என்று அதட்டிய வாசன்,

இதை ஏன் மா அப்பவே சொல்லல என்று கேட்டார்.

இல்லைப்பா. சும்மா பயப்படுவீங்கனு தான் சொல்லல. பேக் கூட எங்க எம். டி பாத்து வங்கி தாரேன்னு சொல்லிருக்காரு. சென்னைல பேக் அடிக்குறது எல்லாம் சகஜம் தானே பா. நல்ல வேளையா போன் கைல இருந்துச்சு என்றாள்.

ஆமா போனாடி இப்ப முக்கியம். உனக்கு ஒன்னும் ஆகலயேனு சந்தோஷப்படாம போன் இவ கிட்ட இருந்துச்சாம். அதான் உங்க ஆபிஸ்லேயே பஸ் இருக்குன்னு சொன்னில. பேசாம அதுல வந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? ஒன்னு நாங்க சொல்றதை கேட்டுட்டு வீட்ல இருக்கணும். இல்லனா பாதுகாப்பா இருக்கிறதுக்கு என்ன வழியோ அதை பாக்கணும். ரெண்டும் இல்லாம இது என்ன ஜென்மமோ என்று திட்டியபடி சென்றார் வாசுகி.

அம்மா சொல்றதை மனசுல வசிக்காத மா. பெத்தவளுக்கு தானே வலி தெரியும். அம்மா சொல்ற மாதிரி உங்க ஆபீஸ் பஸ் இல்லனா கேபில் வந்தா என்ன?

ஐயையோ. என்ன ஒட்டு மொத்தமா எல்லாரும் அவனுக்கே சாதகமா பேசுறாங்க. அப்ப நம்ம சபதம் பலிக்காது போலயே என்று யோசித்தவள்,

பாக்கறேன் பா என்று பட்டும் படாமல் கூட்டி விட்டு சென்றாள்.

மறுநாள் காலை அலுவலகம் வந்ததும் சிவநந்தனை பார்க்கச் சென்றாள்.

ஹலோ சார்! என்னமோ நாளைக்கு பேக் வந்துரும்னு சொன்னிங்க. ரெண்டு நாள் ஆகுது என்னாச்சு?

பேக் வரலைன்னு யார் சொன்னது? நேத்தே வந்திருச்சே என்றான்

அப்ப என் கிட்ட சொல்லவே இல்லை?

உன் பேக் வந்துருச்சானு நீ தான் அக்கறையா கேக்கணும். இந்தம்மா மஹாராணி. உங்க பேக்னு நானா கொண்டு வந்து தர முடியும்?

பேக் வச்சிக்கிட்டதும் இல்லாம எவ்ளோ திமிரா பேசுறான் பாரு என்று மனதிற்குள் திட்டியவள்,

அய்யா சாமி! என் பையை கொஞ்சம் தரிங்களா என்று நக்கலாக கேட்டாள்.

ஹ்ம்ம் சரி என்று மேஜையின் டிராயரில் இருந்த அவள் கைப் பையை அவளிடம் கொடுத்தான்.

தேங்க்ஸ் என்று கூறிவிட்டு திரும்பியவளை நிறுத்தினான்.

ஹேய் என்ன நீ பாட்டுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போற!

வேற என்ன பண்ணனும்? கோவில் கட்டணுமா? நியாயமா உங்க நண்பர் போலீஸ் ஆபிசர் அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். என்னமோ நீங்களே கண்டு புடிச்ச மாதிரி சீன் போடறீங்க என்றாள்.

நான் கண்டு புடிக்கல தான். ஆனா உன் பேக்ல கழுவாம வச்சிருந்த டிபன் பாக்சை அப்டியே தராம கழுவி தந்ததுக்கே நீ கோவில் கட்டலாம் என்றான்.

ஏது? பாக்ஸ் கழுவாம இருந்துச்சா என்றாள் சிவகர்ணிகா.

ஆமா பின்ன திருடன் இதெல்லாம பண்ணுவான் இல்லை போலீஸ் பண்ணுமா? என் வீட்டு வேலை செய்ற வசந்திம்மா செஞ்சாங்க. இதுக்காக 200 ருபாய் இந்த மாசம் அதிகமாக கேட்ருக்காங்க அதை உன் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்க போறேன் என்றான்.

காளான் சாப்பிட குடுத்த காசையே திருப்பி வாங்குனவன் இதை விடுவானா என்று நினைத்தபடி, ஒன்னும் பிரச்சனை இல்லை சார். 500 ரூபாயா கூட எடுத்துக்கோங்க என்றாள்.

அது இருக்கட்டும். உன் பர்ஸ்ல இருந்த ஒரு அழகான பொண்ணோட போட்டோ யாரோடது? முடிஞ்சா அந்த பொண்ணை இங்க சேர்த்து விடலாம்ல என்றான் சிவநந்தன்.

முகத்தில் கோபம் கொப்பளிக்க, என் பேக்கை நோண்டி பாத்தீங்களா? மேன்னர்ஸ் வேணாம்! என்றாள் சிவகர்ணிகா.

கண்களில் சிரிப்போடு, அதான் நீயே மேன்னர்ஸ் வேணாம்னு சொல்லிட்டியே ! அப்புறம் என்ன என்று கேட்டவன், பர்ஸ்ல எல்லாம் இருக்கானு செக் பண்ண தான் பாத்தேன் என்றான்.

என் பர்ஸ்ல என்ன இருந்துச்சுனு உங்களுக்கு தெரிஞ்சா தானே செக் பண்ண முடியும். சும்மா சமாளிக்கிறதை பாரு என்று நினைத்தவள், அவ எங்க அக்கா! பேர் வேதிகா என்றாள்.

உனக்கும் உங்க அக்காகும் சம்மந்தமே இல்லையே! அவங்க அழகா இருக்காங்களே. வேலை ஏதும் பாக்றாங்களா?

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, அவ இப்ப இல்லை. 2 வருஷத்துக்கு முன்ன ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துட்டா என்றாள்.

அது வரை அவளை சீண்டிக் கொண்டிருந்த சிவநந்தன் முகம் சட்டென்று கணமான முகபவத்தைக் காட்டியது. இதை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை என்று புரிந்தது.

உன் சந்தோஷத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கும்னு நான் நினைக்கல. சாரி. ஆனா உன்னை பார்த்தா ஒண்ணுமே தெரிலயே என்றான்.

என்ன தெரியணும்? என் அக்கா இல்லனு நான் சோகமா மூஞ்சிய வச்சிட்டு இருந்தா அவ வந்திருவாளா? அவ கூட இருந்த நாட்கள் எனக்கு மகிழ்ச்சியா மட்டுமே இருந்துச்சு. அதை மட்டுமே நினைவு வச்சிட்டு அவ இல்லாத நாட்களை கடத்துறேன். என் முகத்தில் தெரியுற சந்தோசதுக்காக தான் எங்க அம்மா அப்பா இருகாங்க. நானும் கஷ்டப்பட்டு, அவங்களையும் கஷ்டப்படுத்தி, என்ன கிடைக்கப் போகுது.

என் அக்கா இல்லாத இடம் வெறுமையா தான் இருக்கு. ஆனா யாரும் இல்லனா கூட நம்ம வாழ்க்கை நகர்ந்துத்துகிட்டு தான் இருக்கும். அவ எப்போதுமே எல்லாரையும் சந்தோசமா வச்சுக்கணும்னு நினைப்பா. இப்ப அவ இல்லாத வாழ்க்கையில அதை நான் செய்யுறது மூலமா அவ என் கூட இருக்கிற மாதிரி இருக்கு என்ற சிவகர்ணிகா, பேக்கை கண்டுபிடிச்சதுக்கு நன்றி எட்டு கூறிவிட்டு சென்றாள்.

ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. எப்படியும் நம்மை விட 5,6 வயது குறைந்த பெண் தான் இவள். இவளுக்கு இருக்கும் பக்குவத்தில் ஒரு % கூட நமக்கு இல்லையே? என்னைப் போலவே உடன்பிறப்பை இழந்தவள். ஆனால் இருவரின் நிலையில் எத்தனை வேறுபாடு!

விஷ்வாவைப் பற்றி நினைத்ததும் முகம் அறியா அந்த பெண்ணின் மேல் கோபமாக வந்தது. அந்த பெண்ணால் தானே இன்று எனக்கு எல்லாமுமாக இருந்த என் தம்பி இல்லை என்று பல்லைக் கடித்தான்.

அவனை அறியாமலே அவன் முகம் இருகியது.

யார் அந்தப் பெண்?
 

Kalijana

Member
Next Episode seekiram podunga ???
 

Attachments

  • IMG-20220913-WA0013.jpg
    IMG-20220913-WA0013.jpg
    180.4 KB · Views: 1
  • IMG-20220913-WA0003.jpg
    IMG-20220913-WA0003.jpg
    213.3 KB · Views: 1
  • IMG-20220913-WA0001.jpg
    IMG-20220913-WA0001.jpg
    245.7 KB · Views: 1
  • IMG-20220913-WA0004.jpg
    IMG-20220913-WA0004.jpg
    199 KB · Views: 1
  • IMG-20220913-WA0005.jpg
    IMG-20220913-WA0005.jpg
    171.8 KB · Views: 1
  • IMG-20220913-WA0006.jpg
    IMG-20220913-WA0006.jpg
    212.7 KB · Views: 1
  • IMG-20220913-WA0008.jpg
    IMG-20220913-WA0008.jpg
    250.2 KB · Views: 1
  • IMG-20220913-WA0009.jpg
    IMG-20220913-WA0009.jpg
    248.4 KB · Views: 1
  • IMG-20220913-WA0010.jpg
    IMG-20220913-WA0010.jpg
    157.4 KB · Views: 1
  • IMG-20220913-WA0012.jpg
    IMG-20220913-WA0012.jpg
    224.5 KB · Views: 1
Top