எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷாவின் " மயக்காதே மாயா" - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்,
மீண்டும் ஒரு புது கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது என்னுடைய கற்பனை கதை . கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

கதையை படிங்க கருத்தை சொல்லுங்க
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் :1
புகழ் பெற்ற ஏழு நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதியில் பகலா? இரவா? என்று சந்தேகப்படுமளவுக்கு இரவை பகலாக்கும் தீவிர முயற்சியில் விளக்குகள் ஒளிவெளிச்சத்தை வாரி இரைத்துக் கொண்டிருந்தன.

மேல்தட்டு மக்களின் கூட்டம்! பண முதலைகளின் பலதும் கலந்த பரிவர்த்தனைகளை மீட்டிங் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் பிஸ்னஸ் மேன்கள் ஒரு புறம். பணத்தின் செழுமையை ஆடைகளை குறைவாக அணிந்து காட்டிக் கொண்டிருந்த இளவட்டங்கள் மறு புறம்!

அதற்கு நேர்மாறாக பப்பில் டி ஜே வின் காதை அடைக்கும் இசையில் விட்டு விட்டு எரியும் கண்ணை பறிக்கும் ஒளியில்! ஆண் பெண் பாகுபாடு இல்லாது, குடியும் கும்மாளமாக வயது வித்யாசமில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர்.

சிலர் எல்லை மீறி பிரச்சனை செய்யும் நிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றானதால் பவுன்சர்கள் ஆங்காங்கே நின்றிருப்பர். அது சண்டையை தடுக்க முயற்சிப்பர். அவர்களது தோற்றமும் உடல் மொழியும் இளவட்டங்களை தடுக்க போதுமானதாக இருக்கும். பப்பில் வழக்கம் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென கூட்டம் கலைக் கட்டிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென இசையின் அதிரடி சத்தத்தையும் மீறி, கூட்டத்தில் சலசலப்பு! அது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, அங்கிருந்த பொருட்களை எடுத்து அடிக்கும் நிலையை எட்டியிருந்தது.

டிஜே இசை உடனடியாக நிறுத்தப்பட்டது. பவுன்சர்கள் உடன் வர, " என்னாச்சு?" என்றபடி கோட் சூட்டுடன் நடுத்தர வயதுடைய மேனேஜர் அங்கு வந்தார்.

கூட்டத்தை விலக்கி பார்க்க! இரு இளைஞர்கள் சட்டை கிழிந்து, தலைகலைந்து உடம்பில் ஆங்காங்கே சில நக கீறல்களுடன் மூச்சு வாங்க ஒருவருக்கொருவர் முறைத்தபடி நின்றிருந்தனர்.

அருகில் இரு பெண்கள். அதில் ஒரு பெண்ணின் ஆடை கை பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. அவள் அழுகையை அடக்கியபடி நின்றிருந்தாள்.

"வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்? இப்படி யார் செய்தது?" என்றார் சற்று அதட்டலாக

"அவ கூட வந்த நாதாரி தான். அது பண்ணிட்டு, இப்போ என் மேல பழியை போடுது" என்றான் சண்டையிட்டவர்களில் ஒருவன் காட்டமாக

"டேய்! உன்னை மாதிரி நினைச்சியா?" என்றபடி அவனை மீண்டும் அடிக்க பாய்ந்தான் மற்றொருவன்.

இதையே கூட்டம் வேடிக்க பார்க்க ஆரம்பிக்க! " நீங்க வெளியில் வாங்க, பேசி தீர்த்துக்கலாம்" என்றபடி பவுன்சர்களிடம் கண்ணை காட்டி விட்டு நகர, இரண்டு ஆண்களையும் கையோடு அந்த பெண்ணையும் அழைத்து வந்தனர். உடன் மற்றொரு பெண்ணும் வந்தாள்.

அந்த பெண்ணிடம், "நீங்க யாரு?" என்று விசாரிக்க!

"நான் இவ பிரண்ட் " என்று அருகில் நின்றிருந்த மற்றவளை கை காட்டினாள்.

"நா.. நான் தான் இவளை வற்புறுத்தி அழைச்சிட்டு வந்தேன். இதெல்லாம் இவளுக்கு பழக்கமில்லை " என்றாள் மற்றொருவள்.

கடைசி வரை பெயரையோ விவரத்தையோ சொல்ல போவதில்லை என்பது புரிந்தது.

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? இவளிடம் மிஸ் பிகேவ் பண்ண இவன் டிரை பண்ணான். அதை கேளுங்க? " என்றான் சண்டையிட்டவர்களின் ஒருவன்.

"ஏன் டா? நீ பண்ணிட்டு என் மேல பழியை போடுறியா?" என்றான் மற்றொருவன்.

மீண்டும் வாக்குவாதம் அடிதடி என்று ஆரம்பித்தது. இதே சாதாரணமானவர்களாக இருந்தால் கன்னத்தில் இரு அப்பு அப்பி ஒழுங்கா இருக்கனும் என்று கண்டித்து இருக்க முடியும். பெரிய இடத்து பசங்க ஒன்றும் செய்ய முடியவில்லை.

கண்டிக்காமல் விடவும் முடியாது. ஏனென்றால் இந்த பெண்களும் பெரிய இடத்து பெண்களாக இருக்கும். பின்னாடி எதும் பிரச்சனையானால் போலீஸ் கேஸ் என்று வந்து நிற்கும்.

அப்போது பவுன்சரில் ஒருவன். "சார் மாயா மேடம் வராங்க " என்றான்.

சாதாரணமாக நின்றிருந்தவரின் உடல் மொழி பரபரப்பை காட்டியது.அவள் அந்த அறைக்குள் நுழைவதை அனைவரும் பார்த்தபடி நின்றிருந்தனர்.

அடர்த்தியான கேசம் அவளது தோள்களையும் தாண்டி புரண்டு அவளது நடைக்கேற்ப அழகாக ஆடிக் கொண்டிருந்தது. கையில்லா ரவிக்கை. அவளது நீண்ட வழவழப்பான கைகளின் அழகை காட்டியது. காதில் புளூடூத் வைத்திருந்தாள். இள மஞ்சள் நிற ப்ளைன் புடவை அவளது நிறத்திற்கு போட்டி போட்டு கொண்டிருந்தது.

இடையில் தெரியும் இடைவெளி பார்ப்பவரை நிச்சயம் பித்தம் கொள்ள வைக்கும்!. ஆனால் அதை பார்க்கும் தைரியம் தான் இதுவரை யாருக்கும் வரவில்லை. அவள் நடக்கும் போது பாதத்தின் முன் வந்து விழும் புடவையின் கொசுவம் துள்ளாட்டமாக ஒரு இலயத்துடன் அலைபோல வந்து வந்து போனது.

அளவான நெற்றி, மையிட்ட அழகிய கண்கள், கூர்மையான மூக்கு, லிப்கிளாஸில் பளபளக்கும் உதடுகள், கண்ணுக்கே தெரியாமல் கழுத்தில் தொங்கும் செயின் அதில் டாலரின் கற்கள் சற்றே பெரிதாக விளக்கின் வெளிச்சம் ஜொலித்தலித்தது.

"இங்கே என்ன பிரச்சனை வெங்கட்?" என்று அனைவரையும் பார்த்தபடி வந்து நின்றவளின் உயரம் சராசரிக்கும் சற்று அதிகமே!

அங்கு நடந்தவைகளை வெங்கட் கடகடவென ஒப்பிக்க! "போலீஸில் கம்பளைண்ட் கொடுக்குறீங்களா?" என்றாள் அந்த பெண்ணிடம்.

இருவரும் தயங்கியபடி நிற்க, "அப்புறம் என்ன? டிரஸை சரி பண்ணிட்டு போங்க " என்றவள்.

அந்த பையன்கள் பக்கம் திரும்பி, " சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை போட்டு கொண்டு, என்ஜாய் யுவர் டே " என்றவள் பப்பின் பக்கம் கையை சிரித்தபடி காண்பிக்க

தலையசைத்தவர்கள் உள்ளே சென்று விட்டனர். மீண்டும் காதை அடைக்கும் இசை.. அவர்களை அந்த உலகத்தில் இழுத்துக் கொண்டது.

'இது ஏன் நமக்கு தோணலை?' என்று! வெங்கட்டுக்கு தோன்றாமல் இல்லை. 'இருந்தாலும் இந்த பொண்ணும் பாவம் இல்லையா? இதையே நாம செய்திருந்தால் மனசாட்சி இல்லாதவன் அக்கா தங்கச்சி கூட பிறக்கலையான்னு கேட்பாங்க' என்று மனம் இடித்துரைத்தது. ஆனால் இதையெல்லாம் இவளை பார்த்து கேட்டு விட முடியுமா?

"நீங்க போங்க வெங்கட்" என்றவளின் இன்முகமான பேச்சில் தலையசைத்து சென்று விட்டான்.

அந்த பெண்களும் அவளும் மட்டும் தான் நின்றிருந்தனர். " என்ன ஆள் பிடிக்க வந்தீங்களா?" என்றாள் நக்கலாக

"மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மேடம். நாங்களும் பெரிய வீட்டு பசங்க தான். நீங்க சொன்னதற்கு எந்த அவசியமும் இல்லை" என்றாள் அதுவரை அழுகையை அடக்கிக் கொண்டிருந்த பெண்.

"யாரு டிரஸை கிழிச்சதுன்னு கூடவா தெரியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிறாங்க. பேசாம நிக்கிற?"

"எனக்கு யார் பண்ணதுன்னு தெரியலை " என்றாள் ஆதங்கமாக

"ஆள் தெரியாம நின்னீங்களோ! இல்லை ஆள் பிடிக்க நின்னீங்களோ! எஞ்சாய் யுவர் டே " என்று அதே போன்று கையை பப்பின் பக்கம் சிரித்த முகத்தோடு காட்டி சொன்னாள்.

"ச்சே..நீங்களும் ஒரு பொண்ணா?" என்றாள் கோவமாக

"நிச்சயமா " என்றவள். " போகும் போது டேபிள் சேர் உடைந்ததற்கான பில்லை செட்டில் பண்ணிட்டு போங்க, மறக்காமல் " என்றபடி திரும்ப

"அதெல்லாம் முடியாது. நாங்க எதற்கு பண்ணனும்?"

"அப்போ நீ பே பண்ணு . பண்ணுவதானே?" என்று அருகிலிருந்த மற்றவளை பார்த்து அழுத்தமாக

"பண்றேன் " என்றாள் பயந்து போய்

"கவுண்ட்டர் அந்த பக்கம் இருக்கு " என்ற அவளது டிரேட் மார்க் சிரிப்போடு சொன்னவள். "ஹேவ் எ குட் டே" என்றபடி அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றதும். "நீ எதுக்கு ஒத்துக்கிட்ட நாம என்ன தப்பு செய்தோம்?" என்றாள் ஆதங்கமாக

"நித்து காம்டவுன். அவ சொன்னால் நாம செய்து தான் ஆகனும். பணம் கட்டாமல் நாம இங்கிருந்து போக முடியாது. போக விட மாட்டாள்"

"ஏன்?"

"ஏனென்றால்! அவ மாயா. "மாயாவதி".

"என்ன நீ தாதா ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிற?"

"அதை விட அவ மோசம். வா நாம பணம் கட்டிட்டு கிளம்பலாம்" என்றபடி வேகமாக அங்கிருந்து கிளம்பினர்.

காரிடாரில் நடந்து கொண்டிருந்தவளை வழிமறித்த ஒருவன். "என்ன மாயா? பார்க்கவே முடியலை. இன்னைக்கு நைட் அப்பாய்மெண்ட் கிடைக்குமா?" என்றான் கண்ணடித்து

"டுடே சுக்லாவோட அப்பாய்மெண்ட். சீ யூ லேட்டர்" என்று அவன் கன்னத்தை தட்டி விட்டு சென்றாள்.

"ஐயோ! கொல்றாளே! பார்த்தாலே பரவசமாக்குறா! கொடுத்து வைச்சவன் டா சுக்லா நீ . கிழவனுக்கெல்லாம் சின்ன வீடு!" என்று புலம்பியபடி அங்கிருந்து சென்றான்.


யாரிந்த மாயா?உங்களையும் மயக்குவாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 2
அந்த நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஆடம்பர ஷுட்டின் உள்ளே நுழைந்தவளை கண்ட சுக்லா, அவளின் பிரமிக்க வைக்கும் அழகை கண்டு, " வாவ்! மாயா! " என்று வார்த்தையிலேயே அவளது அழகை ஆராதித்தார்.

"ம்ஹும்.. சுக்லா ஜி " என்று சிணுங்கியவளை

" மாயா! " என்றபடி வெளுத்த பரங்கி பழமாக இருக்கும் உடம்பை தூக்கிக் கொண்டு, வேகமாக வந்து, அவளை அணைத்துக் கொண்டவர்.

"கீழே பப்பில் ஏதோ பிரச்சனையாமே! நீ அங்கே போனேன்னு சொன்னதும்! எனக்கு உயிரே இல்லை மாயா" என்றவரின் கைகள் அவளது கைகளை வருடியது.

இடுப்போடு அவரை கட்டிக் கொண்டவள். "எனக்கு எதும் ஆகாது. நீங்க தேவையில்லாமல் வொரி ஆகாதீங்க சுக்லா ஜி " என்றபடி அவரின் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தாள்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரத்தை உணர்ந்தவர். "இங்கே மட்டும் தானா?" என்றார் ஏக்கமாக!

"குளிச்சிட்டு வரேன் " என்றவள் சிரித்தபடி, அங்கிருந்த வார்ட் ரோப் நோக்கி சென்றவள். அவள் உடுத்தியிருந்த புடவையை கழற்றி கட்டிலில் போட்டு விட்டு, குளித்து விட்டு அணிய, வேறு இரவு உடையை தேடிய போது, அறையின் காலிங் பெல் அடித்தது.

"ம்ச்ச் " என்று சலித்துக் கொண்டவள். " நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே" என்றபடியே உடையை தேட,

"நான் போய் பார்க்கிறேன் " என்றபடியே சுக்லா கதவு நோக்கி செல்ல,

"நோ டியர். நீங்க போகாதீங்க " என்றபடியே வர,

"இப்படியே போகப் போறியா?" என்றபடி அவளது தோற்றத்தை கண்களில் குறும்பு பின்ன காட்டினார்.

முறைத்தவள். சுக்லா அணியும் , இரவு கோட்டை எடுத்து அவசரமாக அணிந்து கொள்ள! மீண்டும் காலிங் பெல் அடித்தது.

"கமிங் கமிங் " என்றபடியே சென்று கதவை திறந்தாள்.

உணவு டிராலியுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். உணவையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்தவள். 'என்ன இது?' என்பது போல பார்வையை அவள் புறம் அழுத்தமாக பதிக்க!

"மேடம்.. சார் தான் இந்த டைம்க்கு ஃபுட் வந்து கொடுக்க சொன்னாங்க " என்றாள் தயங்கியபடி

திரும்பி, சுக்லாவை பார்க்க! அவர் ஆம் என்பது போல தலையசைத்தார்.

"கமின் " என்றபடி நகர, அந்த பெண்ணும் உணவு டிரேலியுடன் உள்ளே வந்தாள். கதவை சாற்றவும்! ஆட்டோமெடிக் கதவு லாக்காகி கொண்டது.

"நான் குளிச்சிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க" என்றபடியே இரவு கோட்டை கழற்றியபடி செல்ல, பின்னோடு சென்ற சுக்லாவும், "உனக்காக தான் சாப்பாடு எடுத்து வர சொன்னேன்" என்றார் அவசரமாக

"நான் முதலில் குளிக்கனும். ஜாக்கெட் பின்னை கழட்டி விடுங்க" என்ற மாயாவின் குரலும்!

"நானே வந்து குளிக்க வைக்கிறேனே!" என்ற சுக்லாவின் சரசமான குரலும் கேட்க, உணவு கொண்டு வந்த பெண்! 'இதெல்லாம் பார்க்கனும் கேட்கனுமென்ற தலையெழுத்தா?' என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

இருவரது பேச்சு பெரும்பாலும் ஹிந்தியிலேயே இருக்கும். தமிழ், ஆங்கிலம் சரளமாக பேசக் கூடியவர்கள் அங்கு பணியில் அதிகம். வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு. இந்த பெண்ணும் அதில் ஒருத்தி போலும்!

இருவரும் உள்ளறையில் இருக்க, " இந்த வயசுல இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா?. இந்த மாயா கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ஜாக்கெட், பாவாடையோட உடம்பை காண்பித்து கொண்டு நிற்கிறா!
அவர் வயசு என்ன? இவ வயசு என்ன? காசுக்காக எதுவும் செய்வா போலிருக்கு!

'ஒரு பெண்ணா இதை பார்த்த எனக்கே அதிர்ச்சி யா இருக்கே? இதையே வேறு ஆண் பார்த்திருந்தால்!. அதான் நிறைய பேர் பார்த்து! கழுவி கழுவி ஊத்துறாங்களே!

'இவர், அவளுக்கு கால் அழுத்தி விட்டதை கூட பார்த்திருக்காங்களே! இவரோட பொண்டாட்டி பிள்ளையெல்லாம் அங்கே எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறாங்க! இவர் இந்த மாயா தான் உலகம்னு கெடக்கிறார்' என்று பல சிந்தனைகளுடன் நின்றிருக்க!

அறையிலிருந்து வெளியே வந்த சுக்லா, " மாயா, அரைமணி நேரம் கழித்து வந்து எடுத்துக் கொள்ள சொன்னாங்க " என்றார்.

'இது கூட மாயா தான் சொல்லனுமா?' என்று தோன்றாமலில்லை. " ஒ.கே சார்" என்றதும், கார்டின் மூலம் சுக்லா கதவை திறக்க, அந்த பெண் சென்று விட்டாள்.

குளித்து விட்டு வந்தவள். இடுப்பு வரை இருந்த ஒரு பனியனையும், முட்டியை தொடாத டவுசரையும் அணிந்து வந்தாள். பெயருக்கு உண்டு விட்டு, சிறிது நேரம் நடந்ததும், உறக்கம் வர, சுக்லாவுடன் உறங்க சென்றாள்.

மறு நாள் காலை, மாயா கண்விழித்த போது, சுக்லா வெளியே தெரிந்த புகையில்லா நகரை திரையாக இருந்த கண்ணாடியின் ஊடாக பார்த்த படி, காபி அருந்திக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்து எழுந்தவள். ரெஸ்ட் ரூம் சென்று குளித்து, டர்க்கி கவுனை அணிந்த படி வந்து யோசனையூடன் அமர்ந்திருந்த சுக்லாவின் முன் வந்து அமர்ந்தாள்.

காலையில் பூத்த புத்தம் புது ரோஜாவாக எதிரில் அமர்ந்திருக்கும் மாயாவை பார்த்தவரின் முகத்தில் ரசனையுடன் கூடிய புன்சிரிப்பு!

"என்ன யோசனையெல்லாம் பலமாக இருக்கு?" என்று தனக்கும் ஒரு காபியை கலந்தபடி கேட்டாள்.

"வக்கீல் செழியன் வருகிறாராம். சொத்து விசயமாக பேச " என்றார் சுக்லா

காபி கப்பை கையிலெடுத்துக் கொண்டவள். கால் மேல் கால் போட்டுக் கொண்டு, நிதானமாக அதை குடிக்க ஆரம்பித்தாள்.

அவளது அமைதியை அனுமதியாக எடுத்துக் கொண்டவர். " எனக்கு சொத்தை நந்திதாவுக்கோ ராக்கிக்கோ கொடுக்க விருப்பமில்லை " என்றவரின் முகம் இறுகியிருந்தது.

"உங்க சொத்துக்கள் மனைவி மகளுக்கு போவது தானே சரியாக இருக்கும் " என்றாள் எழுந்து சென்று கண்ணாடியின் வழியாக வெளியில் பார்த்து காபியை அருந்தியபடி

"அப்படியொரு வார்த்தையை சொல்லாதே மாயா! கேட்கவே முடியலை "

"இதற்கு தான் அப்போதே சொன்னேன்! டைவர்ஸ் அப்பளை பண்ணுங்கன்னு. கேட்டிருந்தால் இப்படியொரு நிலையே வந்திருக்காதே!" என்றாள் அவரை திரும்பிப் பார்த்து!

"இப்போ என்ன செய்யலாம்? சொல்லு! ஊ.. ஊ.. னு அழுது மூக்கை உறிஞ்சுக் கொண்டு அழுபவளை பார்க்கவே பிடிக்கலை" என்றார் முகத்தை சுழித்து

"சரி விடுங்க! செழியன் வரட்டும். வந்து பேசட்டும். என்ன பேசுறாங்கன்னு தெரிந்த பிறகு, நாம ஒரு முடிவெடுக்கலாம் " என்றாள்.

"அவங்க சொத்து விசயமாகத்தான் பேச வராங்க. எனக்கு 100% நல்லா தெரியும் " என்றார் சுக்லா.

"அப்போ! அவங்க வரும் போது டைவர்ஸ் பேப்பரிலும் சேர்த்தே கையெழுத்து வாங்கிடலாம். டோன்ட் வொரி. சுக்லா டியர். நான் உங்க கூட இருக்கும் போது, எதற்குமே கவலைப்பட கூடாது " என்றபடியே மீண்டும் வந்து அமர,

அவளது கால்களை பார்த்தவர். அதில் லேசாக கீறல் இருந்ததை கண்டு, மாயாவின் கால்களை பற்றி, தனது தொடையில் வைத்துக் கொண்டு, " இது என்ன கீறல்? எப்படி வந்தது?" என்றார் மெதுவாக அவளது கெண்டை காலை வருடியபடி

"நீங்க தான்! உங்க நகம் தான் கீறி விட்டுடிச்சு " என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.

"என் கையில் நகம் இல்லையே மாயா?" என்றார் அப்பாவியாக

"கையில் இல்லையென்றால் உங்கள் கால் நகத்தை பாருங்க!" என்றதும். அவரது கால் விரலில் நகம் சற்று வளர்ந்திருந்தது.

"ஓ! சாரி மாயா!" என்றபடி நக கீறலை லேசாக வருடி அதில் முத்தமிட, அறைக்கதவு திறக்கப்பட்டது.

அவளது மற்றொரு காலையும் தூக்கி, அவர் தொடையில் வைக்க! அவளது மற்றொரு பாதத்திற்கும் முத்தமொன்றை வைக்க,

"இப்படியொரு காட்சியை காண நேரும் என்று சற்றும் எதிர்பாராத ராக்கி, " ட்ட டி " என்றாள் அறை அதிர!

தகப்பன் வேறொரு பெண்ணின் காலை பிடித்து சரசமாடுவதை யாராலும் ஜீரணிக்கவே முடியாது. என்ன செய்ய போகிறாள்? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 3
எந்த ஒரு பெண்ணும் பார்க்க கூடாத காட்சி! தன் தந்தை வேறோரு பெண்ணின் காலை பிடித்து முத்தமிடுவது! அதுவும் சரசமாக

"ட்டடி " என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்த்தனர். கோவத்தில் முகம் சிவக்க, ரௌத்திரமாக நின்றிருந்தாள் ராக்கி.

மாயா, அலட்சிய பாவனையுடனேயே கால்களை சுக்லாவின் தொடையிலிருந்து எடுத்துக் கொண்டவள். " நான் டிரஸ் மாற்றி விட்டு வருகிறேன் சுக்லா ஜி " என்று விட்டு உதட்டு சுழிப்போடு நகர்ந்தாள்.

மாயா நகர்ந்ததும். வேகமாக உள்ளே வந்த ராக்கி, " என்ன ட்டேடி இது? எதுக்கு அவ காலை பிடித்துக் கொண்டு இருக்கீங்க? மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டிய நீங்க! உன்னொருத்திக்கு மாப்பிள்ளையாக இருக்க நினைக்கிறீங்க! பார்க்கவே அசிங்கமா இருக்கு ட்டேடி " என்றாள் நறுக்கென்று

அதையெல்லாம் சுக்லா கண்டு கொண்டாதகவே தெரியவில்லை. "கதவை தட்டி விட்டு, அனுமதி கேட்டு உள்ளே வரனும் என்கிற அடிப்படை நாகரீகம் கூட தெரியாதா?. பாரு, மாயா எவ்வளவு நாகரீகமா நாம பேசட்டுமென்று நகர்ந்து விட்டாள். இதை கற்றுக் கொள்! என்ன படிச்சு? என்ன பிரயோஜனம்! " என்றார் காட்டமாக

"ஆமாமாம் . யூனிவர்சீட்டில இதெல்லாம் தான் சொல்லி தராங்க" என்றாள் நக்கலாக

"ம்ச்ச் . இதெல்லாம் பேசிக் மேனர்ஸ் ராக்கி. மகளே ஆனாலும் நான் உன் பர்ஸ்னலில் எப்படி தலையிட முடியாதோ! அது போல நீயும் என்னுடைய பர்ஸ்னலில் தலையிட கூடாது " என்றார் அழுத்தமாக

"எது ட்டடி பர்ஸ்னல்? அம்மா இருக்க வேண்டிய இடத்தில் உன்னொரு பொண்ணு கூட இருக்கிறது தான் உங்க பர்ஸ்னலா?" என்றாள் இன்னும் கோபம் குறையாமல்

"அது எனக்கும் நந்திதாவுக்கும் உள்ள விசயம்? இதில் நீ தலையிடாதே! உனக்கு அப்பாவா நான் எதிலாவது குறை வைத்திருக்கிறேனா? இல்லையே!. என் கடமையை நான் என்றைக்குமே மறந்தது இல்லை. மறக்கவும் மாட்டேன் " என்றவர்.

"சரி என்ன வேண்டும் சொல்லு? ஏதாவது ஷாப்பிங் பண்ணணுமா? பணம் வேணுமா? உன் பிரண்ட்க்கு ஏதோ கஷ்டம் நல்ல வேலை வேண்டுமென்று கேட்டியே! ஏற்பாடு பண்ணிட்டேன். அதற்கான டீட்டெய்ல்ஸ் தரேன். ஒ.கே என்றால் அந்த பெண்ணை போய் ஜாயின் பண்ணிக்க சொல்லு. ரொம்ப பாதுகாப்பான இடம் " என்றார் பேச்சை மாற்றும் விதமாக

"ஏன் ட்டடி? " என்றாள் ஆற்றாமையாக. " எல்லா விசயத்தில் சரியா இருக்கிற நீங்க! அம்மா விசயத்தில் மட்டும் எப்படி தவறி போனீங்க? அம்மா வெளிப்பார்வைக்கு தைரியமாக இருந்தாலும்! உள்ளுக்குள் ரொம்பவே உடைந்து போயிருக்காங்க. கொஞ்சம் கூடவா அவங்க மேல அன்பு இல்லை " என்றாள் கோபத்தை விடுத்து , நயமாக எடுத்து கூறினாள்.

" என்னோட பர்ஸ்னல் பற்றி பேசாதேன்னு சொன்னேன் ராக்கி " என்றார் அழுத்தமாக அவர் முகம் இறுகியிருந்தது.

அதற்கு மேல் ராக்கியால் அவரிடம் எதுவும் பேச முடியவில்லை.

அப்போது காலிங் பெல் அடிக்க,
"எஸ். கமின் " என்றார் சுக்லா. அவர்களுக்கான காலை உணவை கொண்டு வந்து வைத்தனர்.

"வா ராக்கி. வந்து சாப்பிடு " என்றார்.

"இல்லை ட்டடி. நான் காலையில் டிபன் சாப்பிட்டு தான் வந்தேன்" என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.

"பரவாயில்லை என்னோடு வந்து கொஞ்சம் சாப்பிடு" என்றவர். டென் மினிட்ஸ் நான் குளித்து விட்டு வந்துவிடுகிறேன் " என்றபடி எழுந்தார்.

ராக்கி எதுவும் சொல்லவில்லை. சுக்லாவின் செயல் அவளுக்கு மனகசப்பை கொடுத்தது. தந்தையாக அவர் தனக்கு வேண்டிய அன்பை, பராமரிப்பை, பாதுகாப்பை கொடுத்தாலும்! குடும்ப தலைவனாக அவர் நடந்து கொள்ளவில்லையே!

ராக்கி யோசனையுடன் அமர்ந்திருக்க! மாயா அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தாள். கரு நீல நிற ப்ளையின் ஸ்சரி. அவளது வெள்ளை நிறத்தை இன்னும் அதிகமாக்கி காட்டியது. கையில்லா ரவிக்கை. முதுகு அப்பட்டமாக தெரிய கொக்கிக்கு பதிலாக மாடனாக முடிச்சு போட்டிருந்தாள். அது கூட தற்போதைய டிசைன் தான்!. காற்றில் பறந்த முடிகள். உச்சியில் பஃவ் வைத்து கல் பதித்த, கிளிப். மையிட்ட கண்கள். கண்ணுக்கே தெரியாத தோடு, அளவான மேக்கப் உதட்டு சாயத்திற்கு பதிலாக லிப் கிளாஸ் . அது பளபளத்து பார்ப்பவர்களை சற்று நேரம் அதில் மூழ்கடிக்கும். அழகான கைக்கு! கைகடிகாரம்.

அதே நிற கல்பதித்த செறுப்பு அணிந்து, புடவை கொசுவம் நடைக்கேற்ப துள்ள வெளியே வந்தவளை தலை முதல் கால் வரை அளவிட்டாள் ராக்கி.

நேராக டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தவள். பிரட் மற்றும் சேலட்டுகளை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். சுக்லா சொன்னது போல சரியாக பத்து நிமிடத்தில், கரு நீல நிற கோட் சூட்டுடன் வெளியே வந்தவர்.

"வா ராக்கி சாப்பிடலாம் " என்று அழைத்தபடி டைனிங் டேபிள் நோக்கி சென்றார்.

அப்போது ராக்கியின் செல்போன் இசைத்தது. திரையில் ' அம்மா ' என்று பெயர் வர,

"ட்டட்.. அம்மா பேசறாங்க. நான் போய் பேசி விட்டு வந்து விடுகிறேன். நீங்க சாப்பிடுங்க " என்று வேகமாக வெளியே நடந்தவள். அப்போது எதையோ சொல்ல நினைத்து, ராக்கி எதேச்சையாக திரும்ப, ராக்கி சென்று விட்டதாக நினைத்து,

சுக்லா மாயாவின் முதுகில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்து அழுத்தமாக மீண்டும் போட்டுக் கொண்டிருந்தார். ராக்கிக்கு வெறுத்து விட்டது.

"ச்சே " என்று முகத்தை திருப்பி , வேகமாக அங்கிருந்து சென்றாள். இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

சரியாக ஒன்பது மணிக்கு வக்கீல் செழியன் சுக்லாவின் அலுவலக அறைக்குள் நுழைந்தார். ஐம்பதுக்கு சற்று கூடுதலான வயது. தோற்றத்தில் நிச்சயமாக அதை கணித்திட முடியாது. சிட்டியின் மிக பிரபலமான லாயர். கூடவே அவருடன் இன்னொரு வக்கீல். அவரது அசிஸ்டெண்ட்டாக இருக்கலாம்.

அலுவலக அறையில் தனியாக போடப்பட்டிருந்த குஷனில் அமர்ந்திருந்தார் சுக்லா. உள்ளே நுழைந்த செழியன் " ஹலோ சுக்லா ஜி " என்றார் கை குலுக்கி இன்முகமாக.

"ஹலோ "என்று கை குலுக்கியவர். " உட்காருங்க " என்று மற்றொரு இருக்கையை காட்டியவர். நீங்களும் உட்காருங்க மிஸ்டர். வாசு " என்றார் அவரது அசிஸ்டெண்ட் வக்கீலையும். "நன்றி சார் " என்றபடி வாசுவும் அமர்ந்து கொண்டான்.

" எப்படி இருக்கீங்க சுக்லா ஜி?" என்றார் செழியன்.

"குட் " என்றவர். " சொல்லுங்க செழியன். முக்கியமான விசயம் எதுவுமில்லை என்றால் என்னை தேடி வர மாட்டீங்களே! " என்றார்.

"நேரா விசயத்துக்கு வாங்கன்னு சொல்றீங்க " என்றவர். நன்றாக அமர்ந்து, " சுக்லா ஜி , ராக்கிக்கு நல்ல வரன் வந்திருக்கு!. இன்டஸ்ரியலிஸ்ட் ராம் குடும்பத்திலிருந்து அவங்க மகனுக்கு கேட்டிருக்காங்க " என்றார்.

"அவருக்கு இரண்டு பசங்க தானே?"

"ஆமாம். ராக்கியை கேட்டிருப்பது இரண்டாவது பையனுக்கு பெயர் தேவ். வெளிநாடு போய் படிச்சிட்டு வந்து, இப்போ அவங்க அப்பா அண்ணனோடு சேர்ந்து அவரும் பிசினஸ் பார்க்கிறார் "

"ம்ம்ம் "

"நல்ல வரன். ராக்கியை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேச வரேன்னு சொல்லியிருந்தாங்க.. " என்று அவர் பேச்சை நிறுத்த

"இப்போ என்ன ஆச்சு?"

" முதலில் உங்களை பற்றி தெரிந்து, அவங்களோட ஸ்டெடஸோட ஒத்து போகுமென்று தான் வந்திருக்காங்க. ஆனால் இப்போ நீங்க, வீட்டுக்கே வராமல் இருக்கிறதும், இங்கே இன்னொரு பொண்ணு கூட தொடர்பில் இருக்கிறதும் தெரிந்து யோசிக்கிறாங்க " என்றார் தயங்கி

"அப்போ வேற இடம் பாருங்க " என்றார் சுக்லா டக்கென்று

"ஏற்கனவே இரண்டு இடம் இப்படித்தான் தட்டி போச்சு . நீங்க உங்களை மாற்றிக்க மாட்டேங்கிறீங்க . ஆனால் வருகிற நல்ல வரனை தட்டி கழிக்க சொல்றீங்க? இது உங்களுக்கே சரியாக படுதா?" என்றார் ஆற்றாமையாக

"சி மிஸ்டர். செழியன். அவங்க கல்யாணம் செய்ய கேட்கிறது ராக்கியை. அவளை பற்றி மட்டும் நல்ல பெண்ணென்று தெரிந்தால் போதும். இதில் என்னை பற்றின விசயம் எதற்கு? " என்றார்.

"என்ன பேசுறீங்க ? பொண்ணு எடுக்கிறவங்க நல்ல பெண்ணா? நல்ல குடும்பமா? தாய் தகப்பன் எப்படி இதெல்லாம் விசாரிக்க மாட்டாங்களா?" என்றார் ஆற்றாமையாக

சுக்லா கடகடவென சிரிக்க ஆரம்பித்து விட்டார். செழியனும் வாசுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். எதற்கு இந்த சிரிப்பு என்பது போல!

ஒரு வழியாக சிரித்து முடித்தவர். "நல்ல பெண், நல்ல குடும்பம், நல்ல தாய் தகப்பன் உள்ள குடும்பத்து பெண் தான் வேண்டுமென்றால் இந்த நாட்டில் நீங்க சொல்ற குவாலிட்டாயில் பெண் கிடைப்பதற்கா பஞ்சம். அவங்க எதிர்பார்க்கிறது பணம் !" என்று பணத்தை எண்ணுவதை போல கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் தேய்த்து சொன்னவர்.

"சொல்லுங்க என்ன டிமாண்ட் பண்றாங்க?" என்றார்.

வாசு தான், 'ச்சே! என்ன மனுசய்யா? இவரு வழவழ கொழ கொழன்னு இழுத்த விசயத்தை, கம் டூ த பாயிண்ட்னு நேரடியாக விசயத்தை சுட்டி காட்டி விட்டாரே!. சும்மாவா இவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி இருக்க முடியும்!' என்று அவரது புத்திசாலி தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

" சரி. நான் நேரடியாக விசயத்தை சொல்லிவிடுகிறேன். அவங்க ராக்கிக்கு நீங்க என்னென்ன செய்வீங்கன்னு கேட்குறாங்க. ஐ. மீன். அவளுக்கான சொத்துக்கள் என்ன தரப் போறீங்கன்னு?

அவரோட ஒரே வாரிசு ராக்கி தானே! அவருக்கு பிறகு எல்லாம் அவளுக்கு தானேன்னு கூட சொன்னேன். ஆனால் அதை அவங்க ஏற்றுக் கொள்ளலை. எதெதுன்னு தெளிவா கேட்கிறாங்க. அதற்கென்று இப்போதே எழுதி கொடுங்கன்னு கேட்கலை. உங்க வாயால சொன்னாலே போதும்னு சொல்றாங்க" என்றார்.

"ஓ!" என்றவர். "சரி. மிஸ்டர் ராமுடன் ஒரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணுங்க இது பற்றி பேசலாம்" என்றார்.

"நான் இப்போதே கேட்டு சொல்கிறேன் " என்று விட்டு செழியன் போனுடன் சற்று தள்ளி நின்று பேச,

சுக்லாவின் செல்போன் இசைத்தது. அழைப்பை இணைத்தவரின் முகத்தில் மென் சிரிப்பு, "சொல்லு மாயா "

"................. "

"ம்ம்ம். மீட்டிங் போயிட்டிருக்கு "

"ம்ம்ம்"

"..........."

" என்ன கலர்? "

"....... .... "

"சரி. வேறு எதுவும் வேணுமா?"

".............. "

"இல்லை. நானே போய் வாங்கிடுறேன். போன முறை ஆர்டர் பண்ண மாதிரி வரலை. நேரில் பார்த்து வாங்கினால் தான் சரியாக இருக்கும் " என்றார்.

"............ "

"ஒ. கே. டேக் கேர்" என்று அழைப்பை துண்டித்தார்.

"மாயா மேடமா சார் " என்றான் வாசு.

"ம்ம்ம் " என்றவர். "ஸ்சரி ஒன்னு பார்த்தாங்களாம். நல்லா இருந்ததாம். டிரபிக்கில் காரை விட்டு இறங்க முடியலையாம். யாரையாவது விட்டு வாங்கிட்டு வர சொன்னாங்க " என்றார்.

"ஏன் சார்? அவங்களே யாரிடமாவது சொல்லி வாங்கிட்டு வர சொல்லலாமே? ஏன்? உங்களிடம் சொல்லி வாங்கிட்டு வர சொல்லனும்? . நீங்க எவ்வளவு பெரிய ஆளு. ஏற்கனவே உங்க விசயம் பலபேருக்கு தெரிந்திருக்கு, இப்படி நீங்க அவங்களுக்கு போன் புடவை வாங்கினால் உங்க இமேஜ் குறையாதா? இல்லை எல்லாருக்கும் விசயம் தெரியனுமென்று தான் வாங்கிட்டு வர சொல்றாங்களா? " என்று மனதில் பட்ட விசயத்தை கேட்டு விட்டான் வாசு.

"உங்க வீட்டில் உங்க அம்மா புடவை வேண்டுமென்றால் யாரிடம் கேட்பாங்க?" என்றார்.

"எனக்கு அம்மா இல்லை சார் "

"சரி. உங்க வீட்டு பெண்கள்?"

"அப்பாவுக்கு பழக்கமில்லை. பெரும்பாலும் அவங்களே வாங்கிடுவாங்க. சில சமயம் என்னிடம் கேட்பாங்க " என்றான்.

"அது தவறென்றா சொல்றீங்க?"

"அது எப்படி சார்!. எங்க வீட்டு பெண்கள் என்னிடம் கேட்டால் அதெப்படி தப்பாகும்" என்றான் வேகமாக

"அதை மற்றவங்க தப்பென்று சொன்னால்?"

"என் வீட்டு பெண்ணுக்கு வாங்கி தருவதை எவன் சார் தப்பு சொல்ல முடியும். நான் என்ன அடுத்தவங்க வீட்டு பெண்ணுக்கா வாங்கி தரேன் " என்றான் கோவத்தை மறைத்து.

"நீங்க செய்தால் சரி. நான் செய்தால் தப்பா?" என்றார்.

'என்ன சரி? என்ன தப்பு? ' என்று யோசித்தவனுக்கு, அடுத்தவர்களுக்கு மாயா யாரோவாக இருக்கலாம். ஆனால் சுக்லாவுக்கு அப்படியில்லை என்பதை தான் அவன் பேச்சை வைத்தே புரிய வைத்திருக்கிறார் ' என்று தெரிந்தது.

"சாரி சார் " என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

பேசிவிட்டு வந்த செழியன். "மதியம் லஞ்ச் டைம் ல மீட் பண்ணலாமான்னு கேட்டார்" என்றார்.

"ஒ. கே னு சொல்லிடுங்க " என்றவர். வரும் போது அந்த பையனை அழைச்சிட்டு வர சொல்லுங்க " என்றார்.

"ஒ. கே. கோர்ட்டுக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன் " என்று விட்டு செழியன் கிளம்பி விட்டார். உடன் வாசுவும்!

மதியம் சொன்னது போலவே, ராம் மற்றும் சுக்லா சந்திப்பு பொதுவான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செழியன், ராம் மற்றும் தேவ் வந்து அமர, அப்போது சரியாக சுக்லாவும் வந்து விட்டார்.

"ஹலோ " என்று பரஸ்பரம் கை குலுக்கி கொண்டனர். பொதுவான விசயங்கள் தேவ்வின் படிப்பு பிசினஸில் அவனது செயல்பாடு என பேச்சுக்கள் சென்றன. தேவ்விடம் அசட்டு தனமான பேச்சுகள் இல்லை. பேச்சில் தெளிவும், தொலை நோக்கு சிந்தனையும் இருந்தது. விசாரித்தவகையில் திருப்தி என்றதும்!

சுக்லா, திருமண விசயத்தை ஆரம்பித்தார். ராக்கிக்கு நகைகள் ஏற்கனவே 500 பவுன்கள் இருக்கு, இது நார்மலா வீட்டில் அணிந்து கொள்வதை சேர்க்காமல் நான் சொல்வது. நந்திதா தனியாக அவங்க பரம்பரை நகை மகளுக்கென்று சேர்த்து வைத்திருக்காங்க. மேற்கொண்டு 500 பவுன்கள், சில முக்கிய ஷேர்கள் அதோட மதிப்பு தற்போது 5 சி இன்னும் மதிப்பு ஏற வாய்ப்பிருக்கு, அடையாறு வீடு, அண்ணா நகரில் உள்ள காம்ப்ளக்ஸ், ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ், கார் ஷோ ரூம், ஸ்பேர் பார்ட்ஸ் புரொடக்ஷன் கம்பெனி இது தான் ராக்கிக்கு நான் கொடுக்க போறது" என்றார் சுக்லா

"அப்போ! ஸ்டார் ஹோட்டல்ஸ், புட் புரொடக்ஸன்ஸ் கம்பெனி எக்ஸக்ட்ரா எக்ஸக்ட்ரா " என்றார் செழியன் இடைபுகுந்து

"எப்படி ராக்கிக்கு எல்லாத்தையும் எழுதி கொடுத்து விட்டு, நான் ஒன்றுமில்லாமல் நிக்கனுமா?" என்றார் சுக்லா காட்டமாக

"அதில்லை சுக்லா ஜி.. " என்று செழியன் ஏதோ கூற வர,

கையுயர்த்தி தடுத்தவர். "எல்லாமே என்னோட தனிப்பட்ட உழைப்பு மிஸ்டர். செழியன். ராக்கிக்கு என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டீங்க? சொல்லிட்டேன். மற்றதை பற்றி பேசவோ? கேட்கவோ யாருக்குமே உரிமையில்லை " என்றவர்.

ராம் பக்கம் திரும்பி, "சி மிஸ்டர். ராம். ராக்கிக்கு நான் கொடுக்க போறது என் வகையில் இது தான். நந்திதா என்ன செய்ய போறாங்கன்னு அவங்களிடம் நீங்க கேட்டுக்கோங்க. நந்திதா பெயரில் உள்ள சில சொத்துக்களை கொடுக்கலாம் .

அதோடு, மிஸ்டர் தேவ்க்கு , என்னென்ன பிராபர்டீஸ் கொடுக்க போறீங்க என்பதையும் சொல்லிடுங்க. எழுதி வைங்க என்றெல்லாம் சொல்ல மாட்டேன். வாய் வார்த்தையாக சொன்னாலே போதும். பெரிய மனுசங்க வாக்கு மாற மாட்டாங்கன்னு தெரியும்" என்றவர்.

மேற்கொண்டு உங்களுக்கு ராக்கி, மருமகளாக வர விருப்பமென்றால் நந்திதாவிடமே எல்லாம் பேசிக் கொள்ளுங்கள். செழியன் உடன் இருந்து எல்லாத்தையும் செய்து கொடுப்பார். பை த பை எனக்கு உங்க பையனை ரொம்ப பிடிச்சிருக்கு! நல்ல பியூச்சர் இருக்கு! எதிர்காலத்தில் என் மருமகனாக வந்தால் இன்னுமே நிறைய சாதிக்கலாம் " என்றவர்.

"ஒ. கே. எனக்கு டைம் ஆச்சு. எதுவாக இருந்தாலும் செழியனிடம் சொல்லி அனுப்புங்க" என்று விடைபெற்று கிளம்பி விட்டார்.

"என்ன இப்படி பேசறார்? அக்கறை இல்லாத மாதிரி?" என்றான் தேவ்.

சிறுது நேரம் யோசித்த ராம், "ராக்கி தானே நம்ம வீட்டுக்கு வர போகிறாள். அவ நல்ல பொண்ணு. அது மட்டும் பார்ப்போம். ஆனால் கல்யாணம் முடியும் வரை அம்மாவிடம் சுக்லாவுடைய இல்லீகல் அஃபேர் பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் " என்றவர். திருமணம் பற்றி பேச, நல்ல நாள் பார்க்க சொன்னார் செழியனிடம்.

எதை மறைக்க நினைக்கிறோமோ? அது தான் சபையில் அனைவருக்கும் தெரிய வரும்!. மாயாவை பற்றி தெரிய வந்தால்! திருமணம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 4
ராக்கி மற்றும் தேவ்வுக்கு திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. முதலில் திருமண நிச்சயதார்த்தம், பொண்ணு வீட்டில் நடத்தி விடலாம். அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் என்று தேதி குறிக்கப்பட்டது. இதில் செழியன் தான் திருமண விசயத்தில் முழுக்க முழுக்க மெனக்கெட்டு கொண்டிருந்தார். சுக்லா, இது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது . எதுவென்றாலும் நந்திதாவிடமே பேசிக் கொள்ளுங்கள் என்று நழுவிக் கொண்டார்.

நிச்சயத்திற்கு ஒரு வாரம் இருக்க, நந்திதா மற்றும் ராக்கி இருவரும், உணவு ஆர்டர் செய்வதற்கான பிரத்யேக கேட்டரிங் சர்வீஸ் தேடி வந்திருந்தனர்.

"என்ன மாதிரியான உணவுகள்? எத்தனை வகைகள்? எத்தனை நபர்களுக்கு " என்று கேட்டுக் கொண்டு, உணவுகளை நந்திதா ஆர்டர் செய்து கொண்டிருந்தார். குடும்ப பாங்கான தோற்றம்! அளவான உடலமைப்பு, அவர் அணிந்திருக்கும் உடையில் அவர்களது வளமையும் அதோடு அவரது ஆளுமை திறனும் தெரிந்தது .வயது ஐம்பதின் ஆரம்பம் என்றால்! யாருமே நம்ப மாட்டார்கள். முகத்தில் பணக்காரக் கலை. மரியாதையான தோற்றம்!

ஆர்டர் கொடுத்து விட்டு வர அடுத்து, நகரின் பிரபலமான நகைக்கடைக்கு சென்றனர். நந்திதாவை அறிந்தவர்கள் ஆதலால்! அவர்களுக்காக பிரத்யேகமாக வைர நகைகள் கொண்டு வந்து காண்பிக்கப்பட்டது. அதை மகளின் கழுத்தில் வைத்து அழகு பார்த்தார். " ரொம்ப நல்லாயிருக்கு மா " என்றாள் ராக்கியும். அங்கே பல லட்சங்களுக்கு நகை வாங்கப்பட்டது.

"வேறு ஏதாவது வேண்டுமா ராக்கி?" என்றார் கனிவாக.

அடுத்து, புடவைகள் வாங்க செல்ல வேண்டும். ஏற்கனவே முடிவு செய்து தான் கிளம்பினர். ஆனால் தாயின் சோர்வை கண்டவள். " நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம் மா. இப்போ வீட்டுக்கு போகலாம்" என்றாள் தாயின் சோர்வை கண்டு,

நந்திதாவுக்கு, மனச்சோர்வு என்று ராக்கிக்கு புரியாமல் இல்லை. இதே சுக்லா அருகே இருந்திருந்தால்! இப்படி ஒவ்வொன்றிற்கும் இவர்கள் அலைய வேண்டியிருக்காது. சொன்ன அடுத்த நொடி அனைத்தும் அவர்கள் வீடு தேடி வந்திருக்கும். அனைத்துக்கும் மேலாக சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காதே! எவ்வளவு அன்பான குடும்பமாக இருந்தது. எப்போது மாயா சுக்லாவுடன் இங்கே வந்தாளோ அடுத்த மாதமே அனைத்தும் தலைகீழ் ஆனது.

மாயா மாயா என்று உருக ஆரம்பித்தார். வீட்டுக்கு வராமல் ஹோட்டலிலேயே சூட் ஒன்றில் தங்கிக் கொண்டார். எப்போதும் அவருக்கென்று ஒரு ஆடம்பரமான அறை இருக்கத்தான் செய்தது. ஆனால் அதிலேயே மாயாவையும் உடன் தங்க வைத்துக் கொண்டது தான் உச்சபட்ச அதிர்ச்சி!. வீட்டிற்கு வருவது குறைந்து, பகல் பொழுதுகளில் பெயருக்கென்று எட்டி பார்த்து வந்தார். கேட்டால் வேலை பளு என்று சமாளித்துக் கொண்டிருந்தார்.

நந்திதாவுக்கு அரசல் புரசலாக மாயாவை பற்றி தெரிய வர, முதலில் அவர் அதை நம்பவில்லை. பிறகு, ஒரு நாள் வெளியூர் செல்வதாக சொன்ன சுக்லா, எங்கேயும் செல்லாமல் ஹோட்டலில் தான் மாயாவுடன் இருப்பதாக தெரிய வர, சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நேரடியாகவே கிளம்பி விட்டார்.

இரவு 11மணி, வழக்கமான அவரது ஆடம்பர அறையில் கதவு குமிழின் வெளியே டோன்ட் டிஸ்டர்ப் என்று சிகப்பும் மஞ்சளும் கலந்த பளபளப்புடன் கூடிய, கார்ட் தொங்கிக் கொண்டிருந்தது. அதையே வெறித்து பார்த்தவர். ஒரு முடிவெடுத்தவராக அந்த அறையின் காலிங் பெல்லை அழுத்தினார்.

ஐந்து நிமிடத்திற்கு பிறகே, அறைக்கதவு திறக்கப்பட்டது. அழகிய இளம் பெண் நின்றிருந்தால்! அவள் நின்றிருந்த கோலமே அவசரமே உடையை அணிந்து வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.

"யார் நீங்க? " என்றாள்

"சுக்லா இருக்காரா? அவர நான் பார்க்கனும் " என்றார் நந்திதா. குரலில் அவ்வளவு கடுமை.

நந்திதாவை மேலும் கீழும் பார்த்தவள். " உங்க பெயரை சொல்லவே இல்லையே?" என்றாள் அப்போதும்.

"மிஸஸ். சுக்லா " என்றார் அழுத்தமாக

"ஓ! " என்றவளின் பார்வையில் தடுமாற்றமோ பதட்டமோ இல்லை. "நீங்க அவர் நம்பருக்கு போன் செய்து பேசுங்களேன் " என்றாள் சாதாரணமாக.

அதுவரை பொறுமை காத்தவர். அதற்கு மேல் முடியாது. "முதலில் நீ யாரு? அவர் ரூமில் உனக்கென்ன வேலை? " என்றபடி சற்றும் எதிர்பாராமல் அவளை தள்ளியபடி உள்ளே நுழைந்து விட்டார்.

"ம்ப்ச்ச் " என்று சலித்துக் கொண்டவள். அவர் வேகமாக உள்ளே வருவதை கண்டு, குறுக்கே கை நீட்டி தடுத்த மாயா. இங்கேயே நில்லுங்க! கூப்பிடுறேன் " என்றபடி வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில் அறைக்கதவை திறந்து சுக்லா வெளியே வந்தவர். நந்திதாவை கண்டு, " நீ இங்கே என்ன பண்ற?" என்றார் அழுத்தமாக.

"அதை நான் கேட்கனும்? வெளியூர் போகிறேன்.. வெளியூர் போகிறேன்னு.. சொல்லிட்டு, இங்கே இவ கூடத்தான் தினமும் கூத்தடிக்கிறீங்களா? " என்றார் கோபமாக

சற்று நேரம் அமைதியாக இருந்தவர். " இதுக்கு மேல மறைத்து பிரயோஜனமில்லை. எனக்கு மாயாவை பிடிச்சிருக்கு! இனி அவ கூடத்தான் என் வாழ்க்கை" என்று விட்டார்.

நந்திதாவுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அவர் தடுமாற, தாங்கி பிடிக்க கூட இருவரும் முன் வரவில்லை. தடுமாறியவர், கீழே விழாமல் அங்கிருந்த குஷனில் அப்படியே சரிந்து அமர்த்து விட்டார். இன்னுமே அவர் கேட்டதை , அவரால் நம்ப முடியவில்லை!

கோபமும் ஆதங்கமும் போட்டி போட, "என்ன சொல்றீங்க? . ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா? உங்க வயசு என்ன? இவ வயசு என்ன? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? அதை விடுங்க! உங்களையே நம்பி இருக்கிற, என்னோட நிலமையும் நம்ம பொண்ணோட நிலையும் என்னாகிறது? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? எனக்கு பயமாயிருக்குங்க " என்றவரின் குரல் ஆரம்பத்தில் கோபத்தில் அதிகரித்து உச்சஸ்துதியில் கத்தி! பின்பு இயலாமையில் தொண்டையடைக்க அழுகையூடு பார்த்தார்.

சுக்லாவின் முகத்தில் நந்திதாவின் கோபமான கத்தலுக்கோ, கலக்கமான குரலுக்கோ, அழுகைக்கோ எந்தவிதமான பதிலும் இல்லை. பார்வையில் சிறு சலனம் கூட இல்லை. இத்தனை வருடம் வாழ்ந்த மனைவி, துரோகத்தினால் கதறிக் கொண்டிருக்க! அதற்கு அவரிடத்தில் எந்த வித எதிர்வினையும் இல்லை. அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவர்.

"நீ வீட்டுக்கு போ. எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம். ராக்கி தனியா இருப்பாள் " என்று அவளை இங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

"நீங்களும் வீட்டுக்கு வாங்க " என்றார் அப்போதும்

"இதுவரை டைவர்ஸ் பற்றி நான் எதுவும் முடிவு செய்யலை நந்திதா. அதை இப்போதே செய்ய வைத்து விடாதே. உன் பொண்ணுக்கு கல்யாணம், காட்சின்னு நடக்குற வரைக்குமாவது இந்த கணவன் மனைவி என்கிற உறவை இழுத்து பிடிக்க நினைத்திருக்கேன். அப்படி வேண்டாமென்றால் சொல்லு, நாளைக்கே டைவர்ஸ்க்கு அப்பளை பண்றேன்" என்றார். கட்டிய மனைவியை நோகடிக்கிறோமே என்ற! எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. மகளது பெயரை சொல்லி, மனைவியின் வாயை அடைத்து இங்கிருந்து அனுப்பி விட நினைத்து விட்டார்.

'என்ன தான் சொந்தங்கள் பந்தங்கள் என்று பலரும் இருந்தாலும்! கல்லூரியில் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இளபெண்ணின் எதிர்காலத்தை நினைத்தால் அடிவயிறு கலங்கியது. அப்போதும் ஒரு நப்பாசை! மகளின் திருமணம் வரை ,விவாகரத்து பற்றிய எண்ணம் இல்லை எனும் போது!
அந்த இடைப்பட்ட நாட்களில் கணவர் திருந்தி விட மாட்டாரா? ' என்ற எதிர்பார்ப்போடு தான். நந்திதா அங்கிருந்து கிளம்பியது. ஆனால் இத்தனை வருடங்கள் கடந்தாலும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக செய்ய வேண்டிய மகளின் திருமண வேலைகளை இப்படி தனியாக ஒவ்வொன்றையும் யோசித்து செய்வது! மனச்சோர்வையே கொடுத்தது. தாயும் மகளுமே வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இதோ நிச்சயத்தார்த்த நாளும் வந்து விட்டது. மாப்பிள்ளை வீட்டில் நெருங்கிய உறவுகள் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். நந்திதாவின் குடும்ப உறவுகளில் அவருடைய அம்மா, அப்பா, உடன் பிறவா உறவுகள் வந்திருந்தனர். "பொண்ணு மாப்பிள்ளையை வர சொல்லுங்க " என்றதும்

ராக்கி, கல் பதித்த கருநீல லெஹங்கா அணிந்து அழகு தேவதையாக வர, தேவ் ஷெர்வானி அணிந்து வந்து நின்றான். நிச்சய பத்திரிக்கை வாசிக்கலாமா? நேரமாயிடுச்சு என்றார் பெரியவர் ஒருவர்.

"கொஞ்சம் நேரம் இருங்க பொண்ணோட அப்பா வந்து கொண்டிருக்கார் " என்றார் நந்திதாவின் உறவினர் ஒருவர்.

தேவ் அவனுடைய அப்பா ராம், அம்மா லெஷ்மி நின்று கொண்டிருந்தனர். அவனது அண்ணன் சரண் அவன் மனைவி பிள்ளைகள் நின்றிருந்தனர். " பொண்ணோட நிச்சயத்திற்கு வர இவ்வளவு நேரமா? " என லெஷ்மி தனது அதிருப்தியை தெரிவித்தார்.

"டிராபிக் போல! " என்று சமாளித்தார் வக்கீல் செழியன்.

அப்போது சரியாக சுக்லா உள்ளே நுழைந்தார். உடன் மாயாவும்!. சிகப்பு நிற பட்டுபுடவை தங்க நிற ஜரிகையில் நெய்யப்பட்டிருந்தது. அதே போன்று ஜாக்கெட்! . கைகளில் தங்க வளையல், கழுத்தை ஒட்டி சிகப்பு கல் பதித்த நெக்லஸ். உச்சியை முடியை பஃப் வைத்து சிகப்பு கல் பதித்த கிளிப் போட்டிருந்தாள்! அதே போன்று கல் பதித்த செறுப்பு அணிந்திருந்தாள்.

கண்ணுக்கு மை, அளவான மேக்கப், உதட்டுக்கு பளபளக்கும் லிப் கிளாஸ், அழகை தூக்கி காட்டுவது போல புன்னகை முகமாக வந்து நின்றவளை அனைவரும் "ஆஆ " என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

"வணக்கம் " என்று அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்த சுக்லா. நிச்சய பத்திரிக்கை வாசிங்க " என்றார். அவர் வந்ததும் மகிழ்ந்திருக்க வேண்டிய நந்திதாவும் ராக்கியும், உடன் வந்திருந்த மாயாவை கண்டு மனம் நொந்து போய் இருந்தனர். ராக்கி, அழுவது போல நந்தாதாவை பார்க்க, தன் வேதனையை மறைத்து, கண்ணை மூடி திறந்து ஆறுதல் படுத்தினார்.

நிச்சய பத்திரிக்கை வாசித்து முடிக்க, மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அப்போது, லெஷ்மி தான் ராமிடம், "யாருங்க அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு" என்றார் ஆவலாக

"சுக்லாவோட சொந்தம் " என்றதோடு நிறுத்திக் கொண்டார்.

"கல்யாணம் ஆயிடுச்சா?" என்றார் மீண்டும் விடாமல் ஆவலாக

"உன் பையனுக்கு நிச்சயம் நடக்குது. அதை பாரு முதலில்! பிறகு மற்றதை பார்க்கலாம்! " என்று விட்டார்.

கணவனது சிடுசிடுப்புக்கு பயந்து அமைதி காத்தவரின் பார்வை மட்டும் மாயாவை தொட்டு தொட்டு மீண்டது. மோதிரம் மாற்றி, மணமக்கள் தங்களுக்குள் அன்பை பார்வையாலும் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர். அனைத்தும் முடிந்ததும், முக்கிய அப்பாய்மெண்ட் இருப்பதாக கூறி, சுக்லா கிளம்ப,

"வந்தவுடனே கிளம்புறீங்களே. இது உங்க பொண்ணு நிச்சயதார்த்தம் . கொஞ்சம் நேரம் இருங்க " என்றார் ராம்.

"எஸ். சுக்லா ஜி. நீங்க இருங்க. உடனே வர வேண்டாம். நான் போய் பார்த்துக் கொள்கிறேன் " என்று மாயா கிளம்ப,

"இல்லை மாயா " என்று அவள் கையை பிடித்தவர். " நீ தனியாக போக வேண்டாம். நானும் வருகிறேன்" என்றார்.

"ராக்கி ரொம்ப பீல் பண்ணுவா சுக்லா ஜி. வேலையை முடித்து விட்டு, வரும் போது உங்களை பிக் அப் பண்ணிக்கிறேன்." என்றதும்

சுக்லாவின் முகத்தில் அவ்வளவு வருத்தம்!. "அப்போ நான் வேண்டாமா? " என்றார் வருத்தமாம

"வேணும் வேணும்!. இப்போதைக்கு இவங்களுக்கும் நீங்க வேணுமே" என்றவள். "போய் சாப்பிடுங்க, நான் வெஜ்ஜும் இருக்கு. சாப்பாடு எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பாடுங்க. தனிப்பட்ட முறையில் எதுவும் வேண்டாம். ஐஸ்கிரீம் இது போல!" என்றவள்.

அருகில் நின்றிருந்த ராமிடம், "பார்த்துக்கோங்க சார் " என்று விட்டு கிளம்பி விட்டாள்.

'பார்த்துக்கனுமா! இது என்னடா? எனக்கு வந்த சோதனை!. இவர் என்ன பாபாவா?' என்று மனதில் நொடித்துக் கொண்டார்.

"மாயாவுக்கு நானென்றால் ரொம்ப இஷ்டம்" என்றார் போகும் மாயாவையே பார்த்து,

எல்லா பக்கமும் தலையை உருட்டி வைத்தார் ராம். அனைவரும் சாப்பிட நகர, "எக்ஸ்கியூஸ் மீ " என்றவர். ராமிடம் இருந்து விடைபெற்று, மாயாவிடம் ஓடினார். அவள் அப்போது தான் காரில் ஏறி அமர, " நானும் வருகிறேன் " என்று காரில் ஏறிக் கொண்டு,

" டிரைவர் வண்டியை எடு " என்றதும் வண்டி புறப்பட்டு விட்டது. அந்த பொண்ணு சும்மா இருந்தாலும், இவர் சும்மா இருக்க மாட்டார் போலவே!" என்று தான் தோன்றியது.

மேலும் இரண்டு நாள் கடந்திருக்க, மாயா வண்டியில் ஹோட்டலை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இரவு நேரம் வேறு, கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் ஓரு இளைஞனை கட்டையால் அடித்து கொண்டிருந்தனர். அடிபட்டதோடு அவர்களை தள்ளி விட்டு, அவனும் ஓட, விடாமல் துரத்த, ஓடி வந்த வேகத்தில் காரின் முன் விழுந்து விட்டான்.

காரின் வெளிச்சத்தை கண்டே, அடித்தவர்கள் ஓடி விட்டனர். இவன் தான் துரத்துவதாக நினைத்து, பயத்தில் ஓடி வந்து காரில் விழுந்து விட்டான். டிரைவர் பதட்டத்தில் அமர்ந்திருக்க இருக்க,

"அடிபட்டதில் மயக்கமாகிட்டான். போய் தூக்கிட்டு வந்து, பின்சீட்டில் போடுங்க. ஹாஸ்பிடல் எங்கேயாவது விட்டுட்டு போகலாம்" என்றாள் சாதரணமாக.

டிரைவரும் அரை மயக்கத்தில் கிடந்தவனை தூக்க முடியாமல் தூக்கி வந்து காரின் பின் சீட்டில் படுக்க போட்டவர். " எப்பா இவ்வளவு உயரம் ஆளு வேற பல்க்கா இருந்துட்டு, அடிக்க அடிக்க ஓடி வரான். இவனோட நீளமான காலால் உதைத்தாலே எட்டூருக்கு குட்டிக்கரணம் அடிக்கனும் " என்று முணுமுணுத்தபடி மீண்டும் காரில் ஏறி வண்டியை எடுத்தார்.

போகும் வழியில் மருத்துவமனையில் சேர்த்து விட்டு மாயா கிளம்பி விட்டாள். அதன் பிறகு, அவனை மறந்தும் விட்டாள்.
நான்கு நாட்கள் கழித்து, அவனை சேர்த்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.

" உங்க பேஷண்ட் டிஸ்டர்ஜ் பண்ணி அழைச்சுட்டு போங்க. இதில் தனியா இருக்க வேறு பயப்படுறாரு. யாராவது பக்கத்திலேயே இருக்கனுமாம். ஒரே தொல்லையா போச்சு" என்று மறுமுனை சிடுசிடுக்க

புருவத்தை சுழித்து யோசித்தவளுக்கு நினைவு வரவில்லை. " எந்த ஹாஸ்பிட்டல்?" என்றாள்.

விவரம் கூற ..

"ஓ! . வரேன் "என்றவள். அழைப்பை துண்டித்து, டிரைவருக்கு அழைத்தாள். அவன் சுக்லாவுடன் சென்றிருக்க, தானே செல்ல வேண்டிய நிலை!

அதே வழியாக வேறொரு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், நாமே போய் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று கிளம்பி விட்டாள்.

அங்கே ஹாஸ்பிட்டல் சென்று, டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூற, " பணம் கட்ட வேண்டும் மேடம்" என்றனர்.

"அதுக்காக தானே பேசண்ட்ட வெளியில் விடாம வைச்சிருக்கீங்க" என்று முணுமுணுத்தவள். பணத்தை கட்டி நகர முற்பட,

"ரூம் நம்பர் 36 மேடம் " என்றார்.

தலையசைத்தவள். அறை எண் 36 சென்று கதவை திறக்க, யாருமே இல்லை.

"சிஸ்டர் இங்கே யாருமே இல்லை?" என்றாள் வழியில் சென்ற சிஸ்டரிடம்.

"ரூம் நம்பரை பார்த்தவர். கௌதம் வெளியில் வா " என்றார்.

குரல் கேட்டதும் ,தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்தவன். "ஹி.. ஹி.. ஹி. கீழே கிடந்த குப்பையை எடுத்தேன் " என்று சமாளித்தபடி எழுந்து நின்றான்.

அவன் பார்வையில் மாயாவை கண்டதும், எந்த சலனமோ! ஆர்வமோ! அழகான பெண்ணை கண்ட வியப்போ! எதுவும் இல்லை.

"நீங்க? " என்றான்.

"நான் தான் ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தேன்"

"ஏன் மேடம்? அப்படியே விட்டிருக்கலாமில்ல? " என்றான் முகம் கசங்கி

"நான் பார்த்துக்கிறேன்" என்று நர்ஸை அனுப்பி வைத்தவள்.

"என்னாச்சு?"

"படிப்பு சரியா வரல.. அதனால படிக்கலை. மெக்கானிக் வேலை தெரியும். இப்போ தான் சம்தாதித்த பணத்தில் சொந்தமா கடை போடலாமென்று கடை வாடகை பேசி அட்வான்ஸ் கொடுத்தேன். இன்னும் அதிகமா தரேன்னு யாரோ சொன்னதும் ! அவங்களுக்கு கொடுத்துட்டாங்க. கேட்டதற்கு ஆள் வைச்சு அடிக்கிறாங்க! இப்போ பணமுமில்லை. கையில் வேலையுமில்லை" என்றான் வருத்தமாக.

"நான் உனக்கு ஆஸ்பிட்டலுக்கு கட்டின பணத்தை எப்போ திருப்பி கொடுப்ப?" என்றாள் கராராக

"தந்திடுறேனெல்லாம் பொய் சொல்ல விரும்பலை. வேலை எதுவும் இல்லை. வேலை ஏதாவது கொடுங்க. டிரைவர் வேலை, மெக்கானிக் வேலை நல்லா வரும். வேலை செய்து கழிச்சிடறேன். விசுவாசமா இருப்பேன் மேடம்" என்றான் அவன் கண்களை பார்த்து!

"சரி வா " என்று முன்னே சென்றாள். மருந்து மாத்திரை பைகளை எடுத்துக் கொண்டு அவசரமாக பின்னோடு சென்றான்.

கௌதம் வாங்கிய காசுக்காக தன்னை நெருப்பில் குளிக்க வைக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை அறிவானா? அறிந்தால்? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 5
மருத்துவமனையிலிருந்து வேகமாக வெளியே வந்த மாயாவின் நடைக்கு தகுந்த போல கௌதம் வந்தாலும் , அவளுக்கு சரிக்கு சரியாக ஏன்? அவளை விட வேகமாக நடக்க முடியுமென்றாலும், அவனுக்கு வேலை கொடுக்க போகும் முதலாளி என்று நினைத்து, அவளுக்கு பின்னாலேயே நடந்து வந்தான்.

காரினை நோக்கி சென்றவள். நடந்தபடியே, கையிலிருந்த கார் கீயை தூக்கி, " கேட்ச் " என்றபடி கௌதம் பக்கம் தூக்கிப் போட, இதை எதிர்பார்க்காததினால் சற்றே தடுமாறினாலும், கார் கீயை சரியான நேரத்தில் பிடித்து விட்டு, அவளை பார்க்க!

அந்த நவீன ரக காரின் டிரைவர் சீட்டின் மறுபுறமுள்ள கதவை திறந்து அவள் அமர, தானும் வேகமாக வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான். அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வர,

சுக்லாவின் உணவு பேக்ட்ரீ இருக்கும் ஏரியாவை சொல்ல, கார் வேகமெடுத்தது. நகரை விட்டு சற்று ஓதுக்கு புறமான ஏரியா அது. தொழிற்சாலைகள் பல அங்கே இயங்கிக் கொண்டிருந்தன. அங்கே சென்ற பிறகு, புட் பேக்ட்ரீ இருக்கும் இடத்திற்கு வழி சொல்ல, மெல்ல ஊர்ந்தபடி சென்றது.

மாயாவின் காரினை கண்டதும். காவலாளிகள் வாயில் கதவை அவசரமாக திறந்து விட்டனர். 'கார் பார்க்கிங் ' என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் சென்று காரினை நிறுத்த!

"என் கூட வா " என்றபடி காரிலிருந்து இறங்கினாள். கௌதமும் அவசரமாக இறங்கி, அவளை தொடர்ந்தான். எதிர்ப்பட்ட பல நபர்கள் மாயாவை கண்டு,

"வணக்கம் மேடம். குட் மார்னிங் மேடம். வணக்கம் மா " என்று காலை வணக்கத்தை மரியாதை நிமித்தமாக சொல்ல, அனைத்திற்கும் சிறு தலையசைப்புடனேயே ஏற்றபடி நடந்தாள்.

மிஸ்டர். சுக்லா சி. இ. ஓ என்று தங்க நிற எழுத்துக்களால் ஜொலித்த பெயர் பலகை பதியப்பட்டிருந்த அறை கதவை நாசுக்காக தட்டி விட்டு, உள்ளே செல்லும் போது, கௌதம் பக்கம் திரும்பி, " உள்ளே வா " என்றாள்.

கதவு தட்டும் ஒலியில் மாயா என்று உள்ளுணர்வு சொல்ல, மென்னகையுடனேயே நிமிர்ந்த போது, அவருடைய நினைப்பை பொய்யாக்காமல், " சுக்லா ஜீ " என்றபடியே மாயா அவர் முன்பு வந்து நின்றிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்தவரின் பார்வை, அவள் பின்னேயே வந்து நின்று இளைஞனின் பக்கம் வந்து அளவிடும் பார்வை பார்த்து விட்டு, மீண்டும் மாயாவின் பக்கம் திரும்பியது.

" சுக்லா ஜி, இவருக்கு மனிதமான அடிப்படையில் ஹெல்ப் பண்ண போய், ஹாஸ்பிட்டல் பில்லையும் சேர்த்து கட்ட வேண்டியதாக போச்சு " என்றவள். கடகடவென அன்று நடந்தது முதல் தற்போது அழைத்து வந்தது வரை கூறியவள்.

" டூ மன்த். உங்களிடம் வேலை பார்க்கட்டும். பணத்தை சேலரியில் கழித்து விடலாம் " என்றாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவர். " உன் பெயர் என்ன தம்பி?"

"கௌதம் சார் " என்றான் பணிவாக

"உனக்கு வேலை பார்க்க சம்மதமா? " என்றார்.

"சம்மதம் சார் " என்றான்.

அருகே இருந்த போனிலிருந்து மேனேஜரை அழைத்தார். அவர் உள்ளே வந்ததும். " இவர் பெயர் கௌதம். டிரைனி. பேக்கிங் அண்ட் சப்ளையிங் டிபார்ட்மெண்டில் வேலை கொடுங்க " என்றார் சுக்லா.

"ஒ. கே சார் " என்று விட்டு, " வாங்க" என்று கௌதமை அழைத்து சென்றார். தயக்கத்துடனேயே அங்கிருந்து சென்றான் கௌதம்.

முதலில், பதிவு தாள் ஒன்றை கொடுத்து, இதை நிரப்ப சொல்லி கொடுத்தார். பெயர், படிப்பு, வயது என அதில் கேட்டிருந்தவற்றை தெரிந்த வரையில் நிரப்பிக் கொடுத்தான். தெரியாதவற்றை அப்படியே விட, அதை மேனேஜர் அவனிடமே கேட்டு நிரப்பினார்.

அடுத்து, " அங்கே ஐ. டி கார்ட்டுக்கு போட்டோ எடுப்பாங்க, போய் எடுத்து விட்டு வாங்க " என்றதும். அந்த அறையை நோக்கி சென்றான். போகும் போது, சுக்லாவின் அறையை கடந்து தான் செல்ல வேண்டும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே எதுவும் தெரியாது. ஆனால் உள்ளே இருந்து பார்த்த போது, கௌதம் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

" டிரைவருக்கு எதற்கு பேக்கிங் டிபார்ட்மெண்டில் வேலை கொடுத்தீங்க?" என்றாள் மாயா சுக்லாவை பார்த்து

"ஆள் எப்படி வேலை பார்க்கிறாரென்று பார்ப்போம். பணம் வசூல் ஆகும் வரை நம்ம கண் முன்னாடியே இருக்கட்டும் " என்றார்.

"ஓ! அப்போ சரி " என்றவள். " நான் கிளம்பறேன் . டைம் ஆச்சு " என்றபடி அங்கிருந்து விடைபெற்று கிளம்பினாள்.

நாட்கள் நகர, ராக்கி மற்றும் தேவ்வின் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருந்தன. திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று வக்கீல் செழியன் தான் பார்த்துக் கொண்டார். சுக்லாவிடம், திருமணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவும் , என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதை நந்திதாவின் சார்பாக கேட்டு, அதன் படி செய்து கொண்டிருந்தார்.

அன்று பட்டுபுடவைகள் மற்றும் திருமண நகைகள் எடுப்பதற்காக தேவ் வீட்டிலிருந்து நந்திதா மற்றும் ராக்கியை பிரபலமான நகை கடைக்கு அழைத்திருந்தனர். சுக்லா, நிச்சயத்தின் போது, பாதியிலேயே சென்று விட்டதும், மற்ற திருமண விசயங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல் பிசினஸ் பிசினஸ் என்று காரணம் சொல்லி வராமல் இருப்பது போன்றவை ராமின் குடும்பத்திற்கு முக்கியமாக அவரின் மனைவி லெஷ்மிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அதனால் இந்த முறை கண்டிப்பாக சுக்லாவும் வர வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கம் போல் வேலை என்று காரணம் கூற, "எப்போது அவருக்கு வேலை இல்லையென்று சொல்லுங்க! அப்போதே துணி நகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லவும், வேறு வழியில்லாமல் சுக்லா வர வேண்டியதாகி விட்டது.

அன்று வழக்கமான டிரைவர் மாயாவுடன் சென்றிருந்ததால்! சுக்லா, வேலை செய்து கொண்டிருந்த கௌதமை டிரைவராக அமர்த்திக் கொண்டார். வழியிலேயே வக்கீல் செழியனை அழைத்துக் கொண்டார்.

கார் டிராபிக்கில் மாட்டிக் கொள்ள, மெதுவாக நகர்ந்தது. எப்படியும் கடைக்கு செல்ல ஒரு மணிநேரத்துக்கு மேலேயே ஆகும் என்பது புரிந்து விட்டது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த செழியன்!

"சார் நான் ஒன்னு சொன்னால் வருத்தப்பட மாட்டீங்களே?" என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் .

"சொல்லுங்க" என்றார் சுக்லாவும்

"உங்க பொண்ணு ராக்கிக்கு கல்யாணம் ஆக போகுது. கடவுள் அருளால் நல்ல குடும்பத்திலிருந்த நல்ல பையன் மருமகனாக கிடைக்க போகிறார் ... " என்றதும்

இடையிட்ட சுக்லா, சுற்றி வளைக்காதீங்க செழியன். "கம் டூ த பாயிண்ட் " என்றார் நேரடியாக

"அதான் அதான் சார். லெஷ்மி அம்மாவுக்கு , உங்க குடும்பத்தில் நடக்கிற விசயம் எதுவும் தெரியாது. அதாவது நந்திதா மேடமை நீங்க பிரிந்து இருக்கிறதோ! மாயா கூட சேர்ந்து இருப்பதெல்லாம் தெரியாது . அது தெரிந்தால் கல்யாணம் கூட நிற்க வாய்ப்பிருக்கு " என்றவரை மேற்கொண்டு பேசவிடாமல்,

" இதை பற்றியெல்லாம் ராம், தேவ்வுக்கு தெரியுமே. தெரிந்து தானே கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க " என்றார் சுக்லா விட்டேற்றியாக

"தெரியும் தான் சார். ஆனால் அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாது. இப்போது தெரியவில்லை என்றாலும் கல்யாணத்துக்கு பிறகு எப்படியும் தெரிந்து விடும். அப்போது, நம்ம ராக்கியை மதிப்பார்களா? விசயம் தெரிந்த பிறகு, இப்போது கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அப்போது கிடைக்குமா? அந்த வீட்டில் இன்னொரு மருமகள் இருக்காங்க. அந்த பொண்ணு தான் நம்ம வீட்டு பெண்ணுக்கு மரியாதை கொடுக்குமா?

நீங்க நினைக்கலாம்! என்னுடைய தனிப்பட்ட விருப்பத்திற்கும் ராக்கியோட வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தமென்று? ஒரு வீட்டில் உள்ள ஆண்கள் வெளியிடத்தில் நடந்து கொள்வதை வைத்து தான் சார் அந்த வீட்டு பெண்களுக்கும் மரியாதை. இதே தான் பெண்ணுக்கும்.
 

Sirajunisha

Moderator
கொஞ்சம் யோசிங்க சார். ராக்கி அந்த வீட்டில் மதிப்பும் மரியாதையோடும் வாழ வேண்டாமா?" என்று பாயிண்ட் பாயிண்டாக மாயாவினுடனான உறவு வேண்டாமென்று செழியன் எடுத்து கூற,

அத்தனையும் பொறுமையாகவே கேட்டுக் கொண்ட சுக்லா, " நீங்க சொல்வதும் சரிதான் செழியன். இந்த மாதிரியான கேள்வி எல்லாம் வர நாம் அனுமதிக்கவே கூடாது. நீங்க என்ன செய்றீங்க? நந்திதாவுக்கும் எனக்கும் இப்பவே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுங்க " என்றார் கூலாக

"சார்! " என்று செழியன் அதிர்ச்சியாக

"ஆமாம் மிஸ்டர். செழியன். நந்திதாவுடைய கணவன் என்ற உறவு இருப்பதால் தான் இந்த மாதிரியான கேள்விகள் என்னை நோக்கி வரும். சட்டப்படி விவாகரத்தாகி விட்டால்! ராக்கியோட பேரெண்ட்ஸ் பிரிஞ்சுட்டாங்க என்பதோடு முடிந்து விடும். மேற்கொண்டு நான் என்ன செய்கிறேன் னு ஆராய வேண்டியிருக்காது " என்றார் சாதாரணமாக எந்தவிதமான தாக்கமும் இல்லாமல்

செழியனுக்கு, ' இவரிடம் போய் பேச வந்தோமே என்று தான் தோன்றியது. அதையும் அவர் வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார். " நான் தெரியாமல் பேசி விட்டேன் சார். சாரி " என்றார் எரிச்சலாக

"நீங்க சாரியெல்லாம் சொல்ல வேண்டாம் செழியன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால்! நான் ஏற்கனவே யோசித்த வைத்திருந்த விசயம் தான். ராக்கியின் திருமணத்திற்கு பிறகு, விவாகரத்து சம்பந்தமான வேலையை ஆரம்பித்து இருப்பேன். இப்போது நீங்கள் பேசுவதிலிருந்து, அதற்கான வேலையை உடனே ஆரம்பிப்பது தான் நல்லது " என்றார் தீவிரமாக யோசித்தபடி

'அச்சோ! என்னடா இது. சும்மா இருந்தவரை சொரிந்து விட்ட மாதிரி ஆகிடுச்சே! ' என்று நொந்து போய் விட்டார் செழியன்.

அதன் பிறகு மௌனமே! சுக்லா எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது கார் நகைக்கடை வாயிலில் வந்து நிற்க, இருவரும் இறங்கி கொண்டனர். காரினை பார்க்கிங் நோக்கி செலுத்தினான் கௌதம்.

இவர்களுக்கே என்று பிரத்யேகமான தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. என்ன தான்! வீட்டிற்கே புடவைகளை வரவழைத்து வாங்க முடியும் என்றாலும், இப்படி கடைகளில் வந்து பார்த்து வாங்குவதை போன்று திருப்தி இருப்பதில்லை என்பது அவர்களின் எண்ணம்.

அதை நிறைவேற்றும் பொருட்டு, அனைவரும் வந்து விட்டனர். தேவ்வின் குடும்பத்தில் அவனது அம்மா, அண்ணி, சித்தி, பாட்டி, தேவ் மற்றும் ராம் வந்திருந்தனர். இங்கே நந்திதா, ராக்கி, நந்திதாவுடைய அண்ணி, அத்தை என வந்திருந்தனர்.

தேவும், ராக்கியும் கல்யாண கனவுகளில் பார்வையாளேயே ஒருவரை ஒருவர் காதல் கதை பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் புடவைகளை பார்க்க ஆரம்பித்திருந்தனர். ராம், சுக்லா மற்றும் செழியன் மூவரும் அங்கு போடப்பட்டிருந்த சேரில் அமர,

பிறகு ஏதேதோ பேசி, ஒரு மணி நேரத்தை நெட்டித்தள்ள அதற்கு மேல் அங்கே வெட்டியாக அமர முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் புலம்ப ஆரம்பித்து விட்டார் சுக்லா.

"எவ்வளவு நேரம் தான். வெட்டியாகவே உட்கார்ந்து இருப்பது. புடவையெல்லாம் எடுத்து முடித்தாங்களா இல்லையா? என்றார் எரிச்சலை மறைக்காது.

"சார். சாதாரணமாக புடவை எடுத்தாலே ரொம்ப நேரம் எடுப்பாங்க! இதில் கல்யாண புடவை வேறு சும்மாவா? இன்னும் நேரம் ஆகும் " என்றார் செழியன்.

"இதுவே மாயாவாக இருந்தால் இரண்டே நிமிசத்தில் புடவை எடுத்திடுவா! இவ்வளவு நேரமே ஆகாது " என்றார் ராமிடம்.

இதை கேட்டு ராமோ, செழியனை தான் முறைத்தார். ' இவர பற்றி தெரிந்தும் பெண்ணை பிடித்திருந்ததால் திருமணம் பேசினால்! அது தான் சாதகம் என்று! இவர் கூடவே வைத்திருக்கும் பெண்ணை பற்றியெல்லாம் என்னிடமே பெருமை பேசுவாரா? ' என்பது போல தான் ராமின் பார்வை இருந்தது.

ராம் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். பிரமாண்டமான புடவை மாளிகையின் பட்டு பிரிவு, அங்காங்கே ஊழியர்கள் இருந்தாலும் பெண்களின் பேச்சுக் குரல்கள் கேட்க, சன்னமாக அங்கே இதமான பாடல்களும் அந்த தளத்தில் கேட்டுக் கொண்டிருந்தன.

அப்போது இசைத்தட்டில்,

"இராப்பகலா அழுதாச்சு கண்ணுரெண்டும் ஆடிப்போச்சு
நாப்பதுனால் விடிஞ்சாச்சு
துரும்பென இளச்சாச்சு
ஆச... நோய் ஆறாதயா " என்ற பாடல் மெதுவாக இசைத்தட்டில் கசிய,

அதே நேரம் அந்த தளத்திற்கு அந்த பாடலில் நடிக்கும் கதாநாயகி போன்றே, கையில்லா ரவிக்கையும், கருநீல நிற கல்பதித்த புடவை அவளது இளரோஜா நிறத்தை மேலும் எடுத்துக் காட்ட, புடவை கொசுவம் அவள் நடைக்கேற்ப முன்னே துள்ளி வர, தலைமுடியின் உச்சியில் கல்பதித்த சிறிய கிளிப் போட்டு, முடி முகத்தில் படாமல் அடக்கியிருக்க, அதே நிற கல்பதித்த பாதணிகளை அணிந்து, பார்க்கும் அனைவரையும் சில நொடிகளாவது , மதிகெட்டான் வனத்தில் இருக்கும் மூலிகை போல அவளை பார்த்தபடியே நிற்க வைத்து, மயக்கும் மோகினியாக, சுக்லாவை நோக்கி வந்து கொண்டிருந்த மாயாவின் மீது தான் அங்கிருந்தவர்களின் ஒட்டுமொத்தம் பார்வையும் இருந்தது.

சுக்லாவுக்கோ சொல்லவே வேண்டாம். எதிர்பாரா நேரத்தில் அங்கே மாயாவை கண்டு விட்டு, எழுந்து ஆச்சரியமும் ஆவலுமாக! " என்ன மாயா?" என்றார் முகம் பூரிக்க

" சுக்லா ஜி , ஏன் இப்படி பண்ணீங்க? இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை!" என்றாள் ஆதங்கமாக. அவசரமாக வந்திருப்பாள் போலும்! பேச்சில் படபடப்பு தெரிந்தது.

இடையிட்ட செழியன். " ராக்கிக்கு புடவை, நகை வாங்க வந்திருக்கார். இதுக்கு கூட அவர தனியாக வர கூடாதா? " என்றவர். "பின்னாடியே வந்திட வேண்டியது எந்த காரணத்தையாவது சொல்லிக் கொண்டு " என்று அவர் முணுமுணுப்பதும் நன்றாகவே கேட்டது.

அங்கே, உள்ளே வந்த மாயாவை கண்டதுமே! ராக்கி மற்றும் நந்திதா குடும்பத்தினரின் முகம் சுருங்கி விட்டது. மாயாவை கண்ட லெஷ்மி , " அது உங்க சொந்தகார பொண்ணு தானே நந்திதா " என்றார் ஆர்வமாக

நந்திதா காதில் வாங்காதது போல புடவைகளை கவனிக்க ஆரம்பித்து இருந்தார். சுக்லா, மாயாவுடன் பேசியபடி இவர்கள் பக்கம் வருவது தெரிய, அவர்களை தவிர்ப்பதற்காக, முகத்தை நந்திதாவும் அவளது குடும்பத்தினரும் ரொம்ப தீவிரமாக, பட்டுப்புடவையின் பார்டரை பற்றி தீவிரமாக பேச ஆரம்பித்திருந்தனர்.

அவர்கள் அருகில் வந்ததும், " மாயா தானே உன் பேரு? எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேன் பார்த்தியா?" என்றார் லெஷ்மி பெருமையாக

"வணக்கம் மேம் " என்றவள். "சுக்லா ஜி சொல்லுவாங்க, ராக்கியோடு புகுந்த வீடு, கோவில் மாதிரி. அதிலும் அவளோட மாமனார் மாமியார் அப்படியே தெய்வகடாட்சமாக இருப்பாங்கன்னு! சுக்லா ஜி சொன்னது போல சாட்ஷாத் நீங்க மகாலெஷ்மி மாதிரியே இருக்கீங்க" என்றவள்.

அருகில் நின்றிருந்த அவரது பெரிய மருமகளை கண்டு, எதேர்ச்சையாக அப்போது தான் பார்ப்பதை போல ! அப்படியே விழிகளை ஆச்சரியமாக விரித்து,
" யூ லுக் கார்ச்சியஸ்!! " என்றாள் அவளது அழகில் வாயடைத்து நின்று விட்டது போல!!

மாயா கண்களை விரித்து சொன்ன விதத்தில், அவரது பெரிய மருமகளுக்கு, அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது.

சந்தோஷமாக, " நன்றி " என்றாள்.

" என்னுடைய பெரிய மருமகள் கீதா " என்றார் லெஷ்மி அறிமுகப்படுத்தினார். அவளுக்கு கை குலுக்கி, " ஹலோ " என்றாள் மாயாவும்.
 

Sirajunisha

Moderator
" உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சு போச்சு. நிச்சயதார்த்தம் அன்றைக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்டியே? . உன்னிடம் பேசலாமென்று நினைத்தேன். பேச முடியலை " என்றார் லெஷ்மி ஆதங்கமாக

"அதானலென்ன இனிமேல் பேசலாம் " என்றவள். "புடவை எல்லாம் செலக்ட் பண்ணியாச்சா?" என்றாள் அங்கே இருந்த புடவைகளையெல்லாம் பார்வையிட்டபடி

"கல்யாண புடவை தான் செலக்ட் பண்ணிட்டு இருக்கோம். நீ சொன்னால் உனக்கும் சேர்த்து எடுத்து விடுகிறோம் " என்றார் பூடகமாக

மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்து பேச்சு, புத்திசாலியான மாயாவுக்கு அப்படி தெரியவில்லை போலும்! புருவத்தை சுருக்கி யோசனையாக பார்க்க!

"என்ன பார்க்கிறீங்க மாயா? அத்தை, உங்களுக்கு ஏற்கனவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? இல்லை. நாங்க பார்க்கவா னு கேட்குறாங்க" என்றாள் கீதா சிரித்தபடி

'இப்போது சமாளிக்க வில்லை என்றால்! பின்னாளில் இதே பேச்சு வளரும்! என்பதை யூகித்தவள். "அல்ரெடி பார்த்தாச்சு மேம் " என்றாள் சட்டென்று

"அச்சோ! எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிடுச்சே!" என்று வருத்தப்பட்டவர். " என்ன பண்றது? யாருக்கு யாருக்கென்று கடவுள் முடிச்சு போட்டிருக்கிறாரோ அவங்களுக்கு தான் முடியும்" என்றவர். " என்ன செய்யறார்? . பெயர் என்ன?" என்றார்.

அதே சமயம் " கௌதம்?" என்றிருந்தார் சுக்லா. அந்த பிரத்யேக தளத்தின் வாயிலை திறந்து இவர்களை நோக்கி வந்த
கௌதமை கண்டு, ' என்ன விசயம்? என்று தெரிந்து கொள்ள, அவனை நோக்கி மாயா செல்ல,

இசைத்தட்டில்,
"கார்த்திகை போச்சு மார்க்கழி ஆச்சு
பனிக்காத்தும் கொதிக்குதே
அனல் அடிக்குதே
நதி துடிக்குதே பறி தவிக்குதே
பாயாமத்தான்

பாவையின் தாபம் யாருக்கு இலாபம்
புயலோடு எழ போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாமத்தான்
வாழாதே பூங்கொடி
காற்றே.. வருடாமல்..

என்ற பாடல் வரிகள் பாட, மாயாவும் கௌதமும் ஒருவரையொருவர் பார்த்தபடி வர,வரிகளும் மாயா மற்றும் கௌதமின் நடை சுற்றியிருந்தவர்களுக்கு சினிமாவை விட மிஞ்சும் காதலும் தாபமும் கூடிய காட்சியாக இருந்தது.

கௌதமிற்கு, அந்த இடமும் பாடலும் அப்படியொரு தோற்றத்தை கொடுத்ததா? அல்லது இதுவரை கவனிக்காமல் விட்ட, அவனது தோற்றத்தை எடுத்துக் காட்டும் விதமாக பாடல் அமைந்ததா? என்று பட்டிமன்றம் வைத்தது தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

கருநீல நிற முழுக்கட்டை சட்டை, வெளிர் சந்தன நிற பேண்ட் டக் இன் செய்ததில் அவனது தோற்றம் இயற்கையாகவே அழகையும் மதிப்பான தோற்றத்தை கொடுத்தது. மாயாவின் அருகே நின்று அவன் பேசிய போது, அங்கிருந்தவர்களின் கண்கள் அவர்களின் இருவரையும் பொருத்திப்பார்க்க ஆரம்பித்தது.

இருவருமே சராசரிக்கு சற்று உயரம் தான். கௌதம், மெதுவாக மாயாவுக்கு மட்டும் கேட்டும் படி விசயத்தை கூறிக் கொண்டிருந்தான். விசயத்தை கேட்டபடியே, மாயாவின் பார்வை ஒரு முறை சுக்லாவை தொட்டு சென்றது.

அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தது போல, அவர் வேகமாக மாயாவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே போல, மாயா ஏதோ விசயத்தை கூற, சற்றே குனிந்து கௌதம் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். அநாவசிய பேச்சுக்கள் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை மேடமோ, சாரோ போடுவதில்லை. இது தான் விசயம் என்பது போல கௌதமின் நடவடிக்கை இருக்கும்.

சுக்லா அருகில் வர, "வேதாச்சலம் னு யாரோ வந்திருக்கிறாராம். ஆபிஸிலிருந்து போன் வந்திருக்கு. நீங்க அட்டென் பண்ணலை னு சொன்னதும். இன்னைக்கு உங்க கார் எடுத்துட்டு வந்த கௌதம்க்கு போன் வந்திருக்கு " என்றவள்.

"ஏன்? இது பற்றி யாரும் எனக்கு இன்பார்ம் பண்ணலை " என்றாள்.

"சின்ன விசயம் தான் மாயா. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

"இல்லை. அவர் உங்களை தான் பார்க்கனுமென்று சொன்னாராம். என்ன விசயமென்று கேட்டதற்கு, பர்சனல் னு சொல்லியிருக்கார். எனக்கு தெரியாமல் அப்படியென்ன உங்களுக்கு பர்சனல்? " என்றாள் அழுத்தமாக

"அது வேதாச்சலத்தோடு பர்சனல் " என்றார் சுக்லா.

"ஓ! ஒ. கே " என்றவள். அதற்கு மேல் தோண்டவில்லை. இருவருக்குமே அது எப்போதும் பழக்கமில்லை. சொன்னால் சொன்னது தான். மறைத்து பேச எதுவும் இதுவரை இருந்ததில்லை.

"சரி. நான் கிளம்பறேன் சுக்லா ஜி. டைம் ஆச்சு. நீங்க ராக்கிக்கு பர்சேஸிங் முடிச்சிட்டு வாங்க. நைட் பேசிப்போம் " என்றவள். அங்கிருந்த அனைவரிடமும் பொதுவாகவே விடைபெற்று கிளம்பி விட்டாள்.

இங்கிருந்து பார்த்த அனைவருக்குமே, மாயாவின் வருங்கால கணவன் கௌதம் என்பது போல தோற்றத்தை உருவாக்கியிருந்தது. அதை அவர்களுக்குள் பேசியபடியே அப்படித்தான் என்று முடிவும் எடுத்துக் கொண்டனர். மாயா, கௌதமை கண்டதும் நாகரீகமாக விடைபெறாமல் வேகமாக அவனை நோக்கி செல்ல, அவளது நடவடிக்கை லெஷ்மியின் குடும்பத்தினரை உறுதியாகவே நம்ப வைத்து விட்டது.

மாயா வந்ததுமே தேவ், ராமோடு போய் நின்று கொண்டான். இங்கு நடப்பதை பார்வையாளராக ராம், தேவ் மற்றும் செழியன் பார்த்துக் கொண்டிருந்தனர். சுக்லா மீண்டும் வந்து இவர்களோடு அமரவும்,

"இதெல்லாம் ஹோட்டலியே வைத்துக் கொள்ள கூடாதா சார். சம்மந்தி வீட்டுக்கு முன்னே இதென்ன அசிங்கம் " என்று வார்த்தையை விட்டு விட்டார் செழியன்.

சுக்லா நிமிர்ந்து பார்த்த சுட்டெறிக்கும் பார்வையில், செழியன் உண்மையிலேயே வெளவெளத்து போய் விட்டார். பார்வையையும் தாண்டி அவர் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று செழியனுக்கு மரண பயத்தை கொடுத்தது. அப்படியொரு பார்வையை பார்க்க முடியுமா? ஆம்! நிச்சயமாக முடியும். அது சுக்லா மற்றும் மாயாவினால் மட்டுமே முடியும்!

ஏசியிலும் முகத்தில் வியர்வை சுரக்க, அதை துடைக்க கூட தோன்றாமல்! " அது.. அது.. " என்று செழியன் திக்கித் திணற, அதை பொருட்படுத்தாமல்,

"எனக்கு மாயா கூட முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன் ராம் " என்றவர். அருகில் நின்றிருந்த தேவ்விடமும், " வரேன் தேவ் . கல்யாணத்தில் சந்திப்போம்" என்று விடை பெற்றவர்.

நேராக பெண்கள் பக்கம் சென்று லெஷ்மியிடம், " ஒரு முக்கியமான மீட்டிங் அவாய்ட் பண்ண முடியலை. நான் கிளம்பறேன் " என்றவர். தனது மகள் பக்கம் திரும்பி, " ராக்கி, உனக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணி வாங்கிக்கோ. வேறு எதுவும் பிடித்திருந்தாலும், அம்மாவோட பில்லில் சேர்த்துக் கொள். நான் அம்மா அக்கௌண்டில் பணம் , அல்ரெடி டிரான்பர் பண்ணியிருக்கேன்" என்றதும்.

வேறு வழியில்லாமல் " ஒ.கே. டேடி " என்றாள். அதற்கு மேல் என்ன பேச முடியும்? வேலை உள்ளது என்று கிளம்புபவரிடம். நந்திதா குடும்பத்தினரிடமும் பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்றவர்.

"வரேன் நந்திதா. டேக் கேர் " என்று சம்பிரதாயமாக பேசிவிட்டு, அனைவரிடமும் சின்ன தலையசைப்போடு சென்று விட்டார்.

சுக்லா வெளியே வந்ததை கண்டு, கௌதம் அவர் முன் வந்து காரினை நிறுத்த, அதில் ஏறிக் கொண்டவர். " ஸ்டீல் பேக்ட்ரிக்கு போ கௌதம் " என்றார்.

வண்டியை நகர்த்திய படியே, " எந்த ஏரியா சார்?" என்றான்.

அவர் ஏரியாவை சொல்ல, அடுத்த நிமிடம் கார் வேகமெடுத்தது. சரியான நேரத்தில் ஸ்டீல் பேக்கட்ரிக்குள் வண்டி உள்ளே வர, அங்கே வேதாச்சலத்தின் கார் நின்றிருந்தது.

காரிலிருந்து இறங்கி, சுக்லா உள்ளே சென்று விட்டார். கௌதமும், உள்ளே நின்றிருந்த வேதாச்சலத்தை கவனித்தான். வேதாச்சலம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அரசின் சட்ட ஆலோசனை பிரிவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். இவர் எதற்கு இங்கே? என்று யோசனை வந்தாலும் நமக்கெதுக்கு என்று கண்டுக் கொள்ளாமல் இருந்து கொண்டான்.

சுக்லாவும், வேதாச்சலமும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். ராக்கிக்கு தர வேண்டிய சொத்துக்கள் முதலில் தனியாக குறிக்கப்பட்டது. " இதை செழியன் மூலம் செய்ய வேண்டும். அப்போது தான் சந்தேகம் வராது " என்றவர்.

அடுத்து, இரண்டாவதாக நந்திதாவுடனான விவாகரத்து. அதில் மிக தீவிரமாகவே இருந்தார் சுக்லா.

"சுக்லா சார். விவாகரத்து பற்றி கொஞ்சம் பொறுமையாகவே ஸ்டெப் எடுக்கலாமே " என்றார் வேதாச்சலம்.

"இல்லை வேதா சார். இந்த ஸ்டெப் நான் உடனே எடுத்தாகனும். எல்லோர் கவனமும் இந்த விவாகரத்து விசயத்தில் இருக்கும் போது, மற்றவைகளை ஆராய முற்பட மாட்டாங்க. செழியன், நந்திதாவுக்கு சாதகமாகத்தான் எல்லாவற்றையும் கொண்டு போவார்.

அதற்கு முன்பே, நான் சொன்ன விசயம் நடந்து முடிந்திருக்கனும். யாரும் கிட்ட நெருங்க முடியாத இடத்தில் நானும் மாயாவும் இருக்கனும் " என்றார் தெளிவாக

"ராக்கி மற்றும் நந்திதா விசயம் செழியனோடது. அதற்கானவற்றை தவிர்த்து, மற்றவைகள் என்று" பெரிய கட்டுகளை எடுத்து வேதாச்சலத்தின் முன் வைத்தவர்.

"இவற்றில் எந்த வில்லங்கமும் இல்லை. ஆனால் நாளை எங்களுக்கு தொல்லை கொடுக்க சட்டத்தின் ஓட்டைகள் கூட இருக்கக் கூடாது. அதனால் தான் உங்களை கூப்பிட்டது " என்றார் தீவிரமாக

"சரி. எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க. அனைத்தையும் முடித்து விட்டு கூப்பிடுகிறேன் " என்று வேதாச்சலம் எழ,

"இந்த விசயம்.. " என்று சுக்லா எதுவோ சொல்ல வர,

"என்னை தாண்டி எங்கேயும் போகாது. என்னை நம்பலாம் " என்று விட்டு அங்கிருந்து விடைபெற்றார் வேதாச்சலம்.

மகளுக்கு திருமணம்! தாய்க்கு விவாகரத்து! குடும்பத்தை தாண்டியும் மாயாவே தனக்கு முக்கியமாக நினைக்கிறார் சுக்லா. குடும்பம் சகித்தாலும், சமூகம் சும்மா விடுமா? அதற்கும் காரணம் வைத்திருப்பார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 6
வேதாச்சலம் எதிர்பார்த்ததை விட மிக விரைவிலேயே வேலையை முடித்து கொடுத்து விட்டார். அதில் சுக்லாவுக்கு மிகுந்த சந்தோஷம். ரிஜிஸ்டரேசன் கூட சத்தமில்லாமல் நடந்து முடிந்து விட்டது.

ராக்கியின் திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும் போது சுக்லா, வக்கீல் செழியனை ! மோட்டார் வண்டிகளை டீலர்சிப் எடுத்து நடத்தும் சுக்லா குரூப் ஆப் கம்பெனிஸின் கிளை ஒன்றிற்கு அழைத்திருந்தார்.

அன்றைய சந்திப்பிற்கு பிறகு, இப்போது தான் சுக்லாவை நேரில் சந்திக்கிறார் செழியன். அழைத்தவுடனேயே சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட்டார்.

அவருக்கான பிரத்யேக அறையில் உள்ள நீள இருக்கையில் எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தார் சுக்லா. கதவை நாகரீகமாக தட்டி அனுமதி கேட்டு, உள்ளே வந்தார் செழியன்.

"வாங்க செழியன். உட்காருங்க" என்று இன்முகமாகவே வரவேற்றார் சுக்லா. ' அப்பாடா! பரவாயில்லை. ஆள் கூலாகத்தான் இருக்கிறார் ' என்று ஆசுவாசமடைந்த படி வந்தவர்.

" ஹலோ சார் " என்றபடி , சுக்லா கை காட்டிய இருக்கையில் அமர்ந்தார்.

"செழியன், நானொரு முடிவு செய்திருக்கேன். ராக்கிக்கு கொடுப்பதாக சொன்ன சொத்துக்களை திருமணத்திற்கு முன்பே ராக்கி பெயருக்கு மாற்றி எழுதறதாக. நீங்க என்ன நினைக்கிறீங்க? " என்று செழியனுடைய கருத்தையும் கேட்டார்.

"ராக்கிக்கு கொடுக்கிறேன் என்று சொன்னதிலிருந்து நீங்க மாறப் போவதில்லை. என்றைக்கு இருந்தாலும் நீங்க கொடுத்து விடுவீங்க. இதில் சந்தேகப்பட கூட எதுவும் இல்லை. ஆனால் ஏன்? இவ்வளவு அவசரம்?" என்றார் புரியாமல்

" பெண்ணுக்கு செய்ய வேண்டியதை கையோடு செய்திடனுமென்று நினைக்கிறேன் செழியன். என்றைக்கிருந்தாலும் ராக்கிக்கு உரியது தானே! எப்போது கொடுத்தால் என்ன? . நீங்க அதற்குரிய ஏற்பாட்டை பாருங்க " என்றவர்.

சொத்து பத்திரங்களுக்கான நகலை கொடுத்து, அதில் எப்படி எழுத வேண்டும் என்று விளக்கினார். அதாவது அதன் முழு உரிமையும் ராக்கிக்கு மட்டுமே உரியது. அவள் அதை விற்கவோ மாற்றவோ நினைக்கும் பட்சத்தில் அது பத்து ஆண்டுகள் பிறகே செய்ய முடியும் " என்று குறிப்பிட சொன்னார்.

" ஏன் சார் இப்படி?" என்ற செழியனுக்கு,

"காரணமாகத்தான். இந்த சொத்து விவரம் இப்போதைக்கு உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும். நான் சொல்லும் போது, ராக்கிக்கும் நந்திதாவுக்கும் தெரியப்படுத்தலாம் " என்றார்.

" ஒ. கே சார் " என்று செழியனும் நகலை வாங்கிக் கொண்டார்.

"ராக்கி கல்யாணத்துக்கு முன்னாடி இந்த வேலையை முடிச்சிடுங்க " என்று கை குலுக்கி விடை கொடுத்தார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு, அன்று இரவு மாயா சென்னையை நோக்கி, பைபாஸ் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தாள். இது வழக்கமான ஒன்று தான். நான்கு வழிச்சாலை என்பதால் உயர்தரமான ஹோட்டல் ஒன்றிற்றுக்கான கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அதில் அடிக்கடி பிரச்சனை என்று தகவல் வர , இன்று மாயாவே நேரடியாக வந்து விட்டாள்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும், சிலர் தன்னை பெரிய ஆட்கள் என்று காட்டிக் கொள்ளவும், தங்களது ஆதரவு இருந்தால் மட்டுமே இங்கு ஹோட்டலை நடத்த முடியும் என்பதை தெரியப்படுத்தி, கமிஷன் பெறுவதற்காக அவ்வப்போது ஏதாவது பிரச்சனையை செய்ய வைத்துக் கொண்டிருந்தனர்.

இன்று நேரடியாகவே மாயா வந்து விட, அவர்களுக்கு வசதியாகி விட்டது. " இங்கு என்ன பிரச்சனை?" என்று மாயா விசாரித்து கொண்டிருந்த போது தான் சிலர் உள்ளே நுழைத்தனர்.
அவர்களது பேச்சும் உடல் மொழியுமே பிரச்சனை செய்யக் கூடியவர் என்று தெரியப்படுத்த,

" யார் நீங்க? இங்கே எல்லாம் வெளியாட்கள் வர கூடாது" என்றவள். அருகே நின்றிருந்த இஞ்சினியரிடம், " வாட்ஸ் கோயிங் ஆன் சரண்?. எப்போது பார்த்தாலும் அவங்க வரலை இவங்க வரலை னு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கீங்க? சொன்ன நேரத்தில் எனக்கு வேலையை முடித்து கொடுக்கவில்லை என்றால்? நீங்க தான் எனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். அதோடு, வேறு ஆள் வைத்து என்னுடைய வேலையை முடித்துக் கொள்வேன்" என்றாள் கோபமாக

"யார் வந்தாலும் எங்களுக்கு வேண்டியது வரலை னா வேலை நடக்காது மேடம் " என்ற குரலில் அனைவரது கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

உள்ளே வந்தவர்களை யோசனையாக பார்த்தவள். அடுத்து கேள்வியாக சரணை பார்க்க,

"இவங்க தான் மேடம் பிரச்சனை பண்றாங்க. சைட்டுக்கு தேவையான ஜல்லி, சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வரும் லாரியை மடக்கி, இரண்டு நாள் அவங்க கஸ்டடியில் வைச்சுக்கிறாங்க. வேலையை நடந்து கொண்டிருக்கும் போது, மெட்டீரியல்ஸ் வராம்ல் அப்படியே வேலை பாதியில் நிக்குது.

வொர்க்கர்ஸும் இரண்டு நாள் மூன்று நாள் வேலை இல்லையென்றால்! கிளம்பிடுறாங்க. திரும்ப கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறாங்க! இவங்களால் எனக்கு தான் மேம் கஷ்டம். என் கை காசு போட்டு, அதிக சம்பளத்திற்கு ஆட்களை வரவழைத்து வேலை பார்க்கிறேன். இன்றைக்கும் கம்பிகள் கொண்டு வந்த லாரியை மடக்கியிருக்காங்க,,

இங்கே வேலை அப்படியே நிற்குது. ஆபிஸூக்கு போன் போட்டாலும் யாரும் விசயத்தை புரிந்து கொள்ளாமல், உங்க பிரச்சனையை நீங்க தான் பார்த்துக் கொள்ளனுமென்று சொல்றாங்க. இது என் பிரச்சனையா மேடம். நீங்களே சொல்லுங்க?" என்றார் ஆதங்கமாக

சரண் சொன்னதை முழுமையாக கேட்டவள். " சரி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க " என்றவள். கமிஷன் கேட்டு பிரச்சனை செய்பவர்களின் பக்கம் திரும்பி,

"லாரியை கொண்டு வந்து நிறுத்தி விட்டு, என்ன வேண்டுமென்று என்னிடம் உள்ளே வந்து பேசுங்க " என்றவள்.

"சரண், காரில் என்னுடைய சூட்கேஸ் இருக்கும் எடுத்துட்டு வாங்க " என்று விட்டு மூன்றாவது தளத்தை பார்வையிட சென்றாள்.

மாயா, சூட்கேஸ் எடுத்துக் கொண்டு வரச் சொன்னதை வைத்து, தங்களுக்கு இப்போதே பணம் கொடுப்பாள் என்று நினைத்து, பெரிய தொகையை கறந்துடனும் என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்து, லாரியை கொண்டு வரச் சொன்னார்கள்.

அடுத்த, ஐந்தாவது நிமிடம் லாரி கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு, வந்து நின்றது. பிறகு, மாயாவை காண மூன்றாவது தளத்திற்கு வந்தனர்.

காதில் ப்ளுடூத் மாட்டியபடி, ஆங்கிலத்தில் சரளமாக யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தவள். பேச்சை நிறுத்தி விட்டு,

அங்கிருந்த மேசையுடனான நாற்காலியில் அமர்ந்தவள். பக்கத்தில் கலவை கலந்து கொண்டிருந்த ஒருவரிடம், " தம்பி, இவங்க உட்கார நாற்காலி கொண்டு வந்து போடுப்பா " என்றவள்.

இவர்கள் பக்கம் திரும்பி, " சொல்லுங்க " என்றாள்.

" எங்களுக்கு " என்று ஒருவன் ஆரம்பிக்க,

" முதலில் உங்க பெயர் என்ன? என்ன செய்றீங்க? ஏதாவது கட்சியில் இருக்கீங்களா? இல்லை கட்ட பஞ்சாயத்து செய்றவங்களா? தெளிவா சொல்லுங்க " என்றாள்.

ஒவ்வொருவரும் படத்தில் சண்டை காட்சிகளில் வரும் அடியாட்களை போல, ஆஜானுபாகுவாக இருந்தார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் பவுன்சர்களை வைத்திருப்பதால்! மாயாவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை போலும்!

" என் பெயர் கணேசன். அடிதடி கணேசன்னா இங்கே எல்லாருக்கும் தெரியும் " என்றதும், " அடுத்து நீங்க சொல்லுங்க.. " என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்க ஆரம்பித்தாள். யாரும் தங்களது பெருமையை பேசவிடவில்லை. அனைவரது விவரத்தையும் முழுமையாக கேட்டுக் கொண்டவள்.

" இன்னுமா நாற்காலி எடுத்துட்டு வரலை " என்று அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் சிடுசிடுத்தாள்.

" நாங்க.. நாங்க போய் பார்க்கிறோம் மேடம் " என்று இருவர், என்னானது என்று! வேகமாக பார்க்க சென்றனர்.

"சொல்லுங்க? " என்றாள். மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பி

" எங்களுக்கு கமிஷன் வேணும்?" என்றான் கணேசன்.

"கமிஷனா? எதற்கு? " என்றாள் புரியாமல்

"இங்கே வேலை ஒழுங்காக நடக்க வேண்டாமா? இப்போதே பார்த்தீங்களே , சரக்கு வண்டியை அப்படியே கொண்டு போய்விட்டோம். எங்களுக்கான பணம் வரலையென்றால்! இனி ஒரு வண்டி கூட, வேலை செய்யற இடத்துக்கு வராது. பாதியிலேயே மடக்கி அப்படியே எங்க இடத்துக்கு கொண்டு போய்விடுவோம். தெரியுமில்ல !" என்றான் வீராப்பாக

"ம்ச்ச். கமிஷன் கொடுப்பதற்கெல்லாம் ஒரு தகுதி வேணும் . முதலில் என்ன தகுதி இருக்கு உங்களுக்கு? இதில் யாராவது ஜெயிலுக்கு போயிருக்கீங்களா?" என்றாள் நக்கலாக
 

Sirajunisha

Moderator
"எங்களை எல்லாம் சாதாரண ஆட்களுன்னு நினைச்சு பேசிட்டு இருக்கம்மா!. இதோ! இவன் கூட நேத்து தான் ஜெயிலில் இருந்து ரிலீசாகி வந்தான் " என்றான் கணேசன் கெத்தாக

" எது! சுவர் ஏறி குதிச்சு. புடவை திருடிட்டு போன கேசுதானே?. இதெல்லாம் ஒரு கேசா?! என்றவள்.
" வேற, கடத்தல், கொலை, போதை பொருள் இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் ஜெயிலுக்கு போனவங்க இருக்கீங்களா?" என்றாள்.

ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனரே தவிர, யாரும் பதில் சொல்லவில்லை. முதலில் சுதாரித்த கணேசன்!

"அதுக்கெல்லாம் தனி ஆளு இருக்கு. நாங்க கட்டபஞ்சாயத்து, கமிஷன் தான் எங்க வேலை " என்றவன். " அதெல்லாம் உங்களுக்கெதுக்கு பணம் தந்தால் தான் மேற்கொண்டு வேலையை பார்க்க முடியும். இல்லையென்றால் பிரச்சனை உங்களுக்கு தான். இது எங்க ஊரு. என்றைக்கு இருந்தாலும் எங்க தயவு உங்களுக்கு வேணும் " என்றான் மிரட்டலாக

"ஹா.. ஹா..ஹா " என்று சத்தமாக சிரித்தவள். " உங்களுடைய ஊரு இது மட்டும் தான் கணேசன். ஆனால் நாங்க கால் பதிக்கிற அத்தனை ஊரும் எங்களுக்கு சொந்தமான ஊரு தான். சேம்பில் காட்டவா? " என்றவள்.

" உங்க பொண்ணு காலேஜ் போயிருக்கு தானே? பெயர் கூட கமலா வோ விமலா வோ சொன்னாங்களே? " என்று யோசிக்க,

"விமலா. என் பொண்ணை பற்றி உங்களுக்கெப்படி தெரியும்? " என்றார் பதட்டத்தை மறைத்து

"இதோ இப்போ தானே உங்க பெயரெல்லாம் சொன்னீங்க! அப்போதே உங்க ஜாதகத்தை எடுத்து விட்டேனே! " என்றவள். " உங்களை பற்றி மட்டுமில்லை. இங்க நிற்கிற ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும் தெரியும்!

நிறை மாதமாக இருக்கிறவரோட மனைவி, கல்யாணம் ஆகாமல், இப்போது தான் நல்ல வரன் அமைந்திருக்கிற பொண்ணு இன்னொருத்தருக்கு, அப்புறம் காலையில் இரண்டு சின்ன பசங்களை ஸ்கூலில் விட்டுட்டு வந்திருக்கிறவர்.

பெரிய இடத்து பெண்ணை காதலிக்கிற ஒருத்தர்" என்று ஒவ்வொருத்தர் பற்றியும் பெயர் குறிப்பிடாமல் சொல்ல! நின்றிருந்த அனைவரது கண்களிலும் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"இவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா வெளியில் போயிருக்காங்க. அவங்க அப்படியே திரும்ப வரணுமென்றால்! இனியொரு தரம் உங்களை நான் இங்கே பார்க்க கூடாது " என்றவளின் வார்த்தைகளில் அவ்வளவு கடுமை!

"என்ன? என்ன? . எங்களை மிரட்டி பார்க்குறீங்களா?" என்று ஒருவன் குரல் உயர்த்த,

"காதில் இருந்த ப்ளூ டூத்தை ஆன் செய்தவள். " மாரி, எத்தனை பெயர் இருக்கீங்க? " என்றாள்.

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டது, "அந்த பொண்ணை முடிச்சு விட்டுடுங்க. கல்யாணத்தில் விருப்பமில்லாமல் அந்த பொண்ணு ஓடி போனதாக விசயத்தை பரப்பி விட்டுடலாம்." என்றதும்

"............ "

"ஓ! பொண்ணு தனியாகத்தான் போகுதா! " என்று யோசித்தவள். " அந்த பொண்ணை வீடியோ எடுத்து அனுப்பி விடு, கடைசியா அவங்க அப்பா பார்த்துக்கட்டும் " என்று அழைப்பை துண்டித்தாள்.

உடனேயே அவளது போனுக்கு மெசேஜ் வரும் சத்தம் கேட்டது. செல்போனை ஆன் செய்து பார்த்தவள். " இதானே உங்க பொண்ணு?" என்று சம்மந்தப்பட்ட பெண்ணின் தகப்பன் முன் வீடியோவை காட்ட,

பயத்தில் திரும்பி திரும்பி பார்த்தபடி உயிரை கையில் பிடித்தபடி ஓடும் மகளை கண்டு, அப்படியே மாயா காலில் விழுந்து விட்டார்.

"அம்மா விட்டுவிடுங்க மா. ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் என் பொண்ணுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு. என் பொண்ணை எதுவும் பண்ணிடாதீங்க மா " என்று சாஷ்டாங்கமாக அந்த மேசையின் முன்னே அவள் காலிலேயே விழுந்து விட்டார்.

"மாரி அந்த பொண்ணை விட்டு விடு " என்றவள். "வேற யாருக்கும் அவங்க குடும்பத்து ஆட்களை பார்க்கனுமா?" என்றாள் ஆராயும் பார்வையுடன்.

" இல்லை வேண்டாம் " என்றபடி அனைவரும் வேகமாக நகர,

"சொடுக்கிட்டாள் ". அந்த சப்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தனர். "இனி யாரும் கமிஷன் கேட்டுக் கொண்டு இங்கே வர கூடாது. வேற யாரும் வேலை நடக்கும் இடத்தில் தொந்தரவு கொடுத்தாலும், சரி செய்ய வேண்டியது உங்க பொறுப்பு " என்றதும்.

தலையாட்டி விட்டு, தங்களது குடும்பத்தை காண ஓடி விட்டனர். ஒவ்வொருவரின் பலவீன புள்ளியே அவளது இலக்காக இருக்கும்.

வேலைகளை எல்லாம் மேற்பார்வையிட்டு, அவள் கிளம்பும் போது, தாமதம் ஆகி விட்டது. இதில் சுக்லா நான்கு முறை போனில் அழைத்து விட்டார்.
"ஏன் தனியாக போனாய்? நான் வர வா?" என்ற கேள்வியை தான் வேறு வேறு மாதிரி கேட்டுக் கொண்டிருந்தார்.

"கிளம்பி விட்டேன் சுக்லா ஜி. வந்து கொண்டே இருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்க முன்னாடி நிற்பேன் " என்று அவரை சமாதானம் செய்தபடி பயணத்தை தொடர்ந்தாள்.

வரும் வழியில் சுக்லாவின் உணவு தயாரிப்பு தொழிற்சாலை இருந்தது. அதை கடந்து தான் வந்தாள். கௌதம், லோடு வண்டியை அனுப்புவது தெரிந்தது.
' இவன் என்ன ஓவர் டைம் பார்க்கிறானா?' என்று ஒரு நொடி நினைத்தாலும், அதை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

மேலும் ஒரு 5கி.மீ சென்றிருப்பாள். அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. வந்து கொண்டிருந்த அவள் காரின் மீது, பெரிய கட்டை ஒன்று வந்து விழ, முன் கண்ணாடியில் விரிசல் விழுந்தது. கார் சடென் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தாள்.

அடுத்து சடசடன எதுவோ முறியும் சத்தம். சுதாரிக்கும் முன் அவளது காரின் பேனட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. கண்ணாடி நொறுங்கியதில் முகத்தில் ஆங்காங்கே இரத்தக் கீறல்கள். கால் வேறு கீழே மாட்டிக் கொண்டது.

பின்னால் வந்த வாகனங்கள் , மரம் விழுந்ததை கண்டு, காரின் உள்ளே இருந்தவர்களுக்கு, உதவி செய்ய அப்படியே நிப்பாட்டி விட்டு, ஓடி வந்தனர். வெளிச்சம் இல்லாததால் உள்ளே எதுவும் தெரியவில்லை. கையிலிருந்த செல்பேசியை வைத்து உள்ளே பார்க்க, பெண் என்பதும் அதோடு அவள் சுய நினைவில் இருப்பதை கண்டு பரபரப்பாயினர்.

தனது பைக்கில் வந்து கொண்டிருந்த கௌதம், ஏதோ விபத்து என்று தெரிய வர, ஏதும் உதவி தேவைப்படுமோ என்று நெருங்கி செல்ல, சுக்லா காரினை கண்டு அதிர்ந்து. பைக்கை அவசரமாக நிறுத்தி விட்டு காரினருகே ஓடினான்.

அதற்குள் உதவி செய்ய வந்தவர்கள் முன் கதவை திறந்து, மாயா காரிலிருந்த இறங்க உதவி செய்ய முனைந்து கொண்டிருந்தனர்.

" சார்.. நகருங்க , வழி விடுங்க " என்றபடி காரினருகே வந்தவன். அங்கே மாயாவை கண்டு, மேலும் அதிர்ந்தான். அதோடு உதவி செய்கிறேன் என்று சிலர் அவளது முதுகிலும், கையிலும் வேண்டுமென்றே அத்து மீறி தொட்டுக் கொண்டிருந்தனர். அவள் அரை மயக்கத்திலும், "டோன்ட் டச் மீ " என்று கையை தட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

"மாயா மேடம் " என்ற கௌதமின் அழைப்பில், நெற்றியிலிருந்த வழிந்த இரத்தம் கண்ணிமையில் பட்டு சொட்ட, கண்ணை திறந்து திறந்து மூடி தன்னை நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தவளின் உதடுகள், அவனை கண்டதும்! " கௌதம் " என்று மெல்ல முணுமுணுத்தது.

"சார். நகருங்க " என்றவன். அவர்களை வேகமாக தள்ளாத குறையாக நகர்த்தி விட்டு, அருகே நின்று கொண்டு, " தண்ணீர் யாராவது வைத்திருக்கீங்களா?" என்றான் அவசரமாக

தண்ணீர் பாட்டிலை, யாரோ கொடுத்து உதவ, நன்றி சொன்னவன். அடுத்து பாட்டிலை திறந்து, தண்ணீரை கைகளில் கொஞ்சம் ஊற்றி, வேகமாக அவள் முகத்தில் அடித்தான். மயக்கத்திற்கும் வியர்வைக்கும் ஜில்லென்ற தண்ணீர் ஆசுவாசத்தை கொடுத்தது. கொஞ்சம் பருக கொடுக்க, ஓரளவு தெளிந்து விட்டாள்.

"மேடம் கொஞ்சம் இறங்க முடியுமா பாருங்க?" என்றான் உதவி செய்ய!

"இல்லை. என் கால் மாட்டிக்குச்சு. நகர்த்த முடியலை "

"உட்கார்ந்து இருக்கும் சீட்டை பின்னாடி நகர்ந்த முடியுமா?" என்றான்.

விபத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. கைகளில் நடுக்கமும், இதய துடிப்பும் எகிறி கொண்டிருந்தது. எதையும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

"ம்கூம். கையை நகர்த்த கூட முடியலை "

"இருங்க மேடம் " என்றவன். நின்றபடியே, அவளது இடதுகை பக்கம் இருந்த லாக்கை எடுத்து, சீட்டை கைகளாலேயே தம் கொடுத்து, பின்னால் நகர்த்தினான். கால் சற்று அசைந்தது! " ஆஆ " என்று அலறினாள். வலி உயிர் போனது.
காலினை நகர்த்த முடியாமல், புடவை வேறு எங்கோ மாட்டியிருந்தது.

"மேடம் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க. கால நகர்த்தி இறங்க முயற்சி செய்யுங்க " என்றான் கௌதம் மீண்டும்.

"நீங்க எதில் வந்தீங்க? " என்றாள் சம்மந்தமே இல்லாமல்

" ஏன்? பைக்கில் " என்றான்.

"உங்களிடம் ஷேர்ட் இருக்கா?" என்றாள் அடுத்து

" இப்போ போட்டிருக்கும் ஷர்ட் தான்! " என்றதும்

"கழட்டி கொடுங்க " என்றாள்

வேறு வழியில்லாமல் கழட்டி, அவளிடம் கொடுத்து, உள்ளே போட்டிருந்த ரவுண்ட் நெக் பணியனுடன் நின்றிருந்தான்.

"அந்த ப்ளூ ஷர்ட் போட்டவனை கூப்பிடுங்க " என்றாள்.

" எந்த ப்ளூ ஷர்ட்? " என்றபடி திரும்பி கூட்டத்தில் தேட, அப்படியாரும் இருப்பதாக தெரியவில்லை. அருகில் நின்றிருந்த ஒருவர், "தம்பி வேறு ஏதும் வேணுமா? அவங்களால் இறங்க முடியுமா?" என்றார்.

"இப்போ முடியும்னு நினைக்கிறேன் சார் " என்றபடி மாயா பக்கம் திரும்ப, அவன் பார்வை திகைத்து நின்றது.

ஆம்! மாயா அவனுடைய சட்டையை அணிந்திருந்தாள். புடவை கையிலிருந்தது. அப்போது தான் பேண்ட் அணிந்திருப்பதை கண்டு, 'அப்போ இத்தனை நாளா பேண்ட் போட்டு தான் புடவை கட்டினாங்களா?' என்று தோன்றாமல் இல்லை.

மெல்ல கால்களை நகர்த்த முயற்சிக்க, வலி உயிர் போனது." ஆஆஆ " என்று வலியை பொறுத்தபடி மெல்ல நகர்த்த முயற்ச்சிக்க,அடுத்த நொடி, மாயாவை அழகாக கையில் தூக்கியிருந்தான் கௌதம்.

மாயா திகைத்து பார்க்க! அதை கண்டு கொள்ளாமல், தூக்கியபடி வந்து, தனது பைக்கின் அருகே சாய்த்து நிற்க வைத்தவன் . " வண்டியில் உங்க பொருள் என்னென்ன இருக்கு?" என்றான்

"சூட்கேஸ், பேக், செல்போன் " என்றாள். மாயா, காரிலிருந்து வெளியே வந்து விட்டதால் கூட்டம் கலைய தொடங்கி, வாகனங்களை நகர்த்த ஆரம்பித்து இருந்தன. சிலரின் உதவியோடு, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, உள்ளிருந்தவற்றை எடுத்துக் கொண்டு, முடிந்த அளவு காரினை லாக் செய்து விட்டு வந்தவனிடம்

" சீக்கிரமா ஹோட்டல் போயிடலாம்" என்றாள்.

" மேடம்! முதலில் ஹாஸ்பிடல் போகலாம்" என்றான் அவள் நிலையை கருத்தில் கொண்டு,

"நோ! ஹோட்டல் போங்க" என்றபடி மிகுந்த சிரமப்பட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

கௌதமும், மாயாவை ஒரு வழியாக ஹோட்டலுக்கு அழைத்து வந்தவன். " எங்கே? " என்று விபரம் கேட்டு ,அறை எண்ணை சொல்லவும்! லிப்டின் உதவியுடன் அழைத்து வந்து விட்டான்.

அறைக்கதவை தட்ட, " சுக்லா தான் கதவை திறந்தார். முதலில் மாயாவின் தோற்றம் கண்டு, பதட்டமாகி!

"என்னாச்சு மாயா?" என்றார் ஒரு சேர இருவரிடம்.

"சின்ன ஆக்ஸிடெண்ட் சுக்லா ஜி " என்றடி, அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அப்படியே மயங்கி சுக்லாவின் தோளில் சரிந்திருந்தாள்.

" மாயா மாயா" என்ற சுக்லாவின் அழைப்பிற்கோ, " மேடம் மேடம்" என்ற கௌதமின் அழைப்பிற்கோ சிறிதும் செவி சாய்க்கவில்லை. ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.

இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்ற நிலையில் சுக்லாவை தேடி வந்து விட்டாள். அவர் மேல் அப்படியென்ன ஒரு நம்பிக்கை? அப்படியென்ன ஒரு பிணைப்பு!

இதோ சுக்லா கூட தான்! மயங்கியவளை மடியில் கிடத்திக் கொண்டு, "மாயா மாயா மா. கண்ணு முழிச்சிடு டா. எனக்கு பயமாயிருக்கு. மாயா மா " என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

மயங்கி விழுந்த உடனே, அரைமணி நேரமாக இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கார். மருத்துவர் வந்ததோ! அவளை படுக்கையில் கிடத்த சொன்னதோ கூட அவருக்கு புரியவுமில்லை! தெரியவுமில்லை. அவள் முகத்தில் கண்ணாடியால் கீறியிருந்த இரத்தத்தை மருத்துவர் துடைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க,
அதை கூட உணராமல், அவளிடம் தன்னிலை இழந்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் சுக்லா.

சிகிச்சையின் பலனாக சற்று நேரத்தில் கண்ணை திறந்து, "சுக்லா ஜி " என்று அவர் கைகளை பற்றி கன்னத்தில் வைத்திக் கொண்டாள். மாயாவின் குரல் கேட்டதும் தான் அவருக்கு சுற்று புறமே உரைத்தது.

குரல் அடைக்க! " மாயா! " என்றவர். அவள் தலையோடு தன் கன்னத்தை பதித்து அழுது விட்டார். இப்படியொரு சுக்லாவை யாரும் பார்த்திருக்கவே முடியாது. எப்போதும் கம்பீரமும் ஆளுமையுடன் கூடியவர். சிறிது நேரத்தில் எப்படியெல்லாம் ஆகி விட்டார்.

"எனக்கு ஒன்னும் இல்லை சுக்லா ஜி " என்றாள் மெதுவாக

" மேடம், உங்க கால காண்பிங்க " என்ற மருத்துவரின் குரலில் இருவரின் கவனமும் மருத்துவர் பக்கம் திரும்பியது. " எங்கு வலிக்குது? என்பதை எல்லாம் மருத்துவர் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல எழுந்தவர். யாருக்கு அழைத்தாரோ!

அடுத்த பத்து நிமிடத்தில், மாரி அவர் முன் நின்றிருந்தான். இன்று நடந்த அத்தனையும், ஏன்? மாயா ஒரு பெண்ணை துரத்த சொன்னது வரை , பள்ளிக்கூடம், மருத்துவமனை என ஆங்காங்கே ஆட்களை நிற்க வைத்திருந்த வரை சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் பணியவில்லை என்றால்? எந்த எல்லைக்கும் சென்றிருப்பாள் என்பது நிச்சயமே! யாராவது இதை கேட்டால்? 'இவளெல்லாம் ஒரு பெண்ணா?' என்று தான் கேட்டிருப்பர்.

"சார் வரும்போது, மேடம் வண்டியை பார்த்துட்டு தான் வந்தேன். மரம் முறிந்து விழுந்திருக்கு. பட்டுப் போன மரம் சார். இது தற்செயலானது தான்" என்றான் மாரி.

இங்கு நடப்பதை, கைகளை கட்டியபடி கேட்டுக் கொண்டும், வைத்தக் கண் வாங்காமல் மாயாவை பார்த்தபடி நின்றிருந்தான் கௌதம். அவன் கண்களில் ஒரு நொடிக்கும் குறைவாக மாயாவை பார்த்த போது, வந்து போனது என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த பதிவு செவ்வாய் கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 7
மருத்துவர் சிகிச்சையை முடித்திருந்தார். முகத்தில் ஏற்பட்ட கீறல்களுக்கு மருத்திட்டிருந்தனர். அடுத்து கால்கள் இடுக்கில் மாட்டிக் கொண்டதால், தொட்டாலே அதிக வலி ஏற்பட்டது. அதற்கு தற்காலிக பேன்டேஜ் ஒன்றை போட்டு விட்டு, மருந்துகளை சாப்பிட சொல்லி எழுதி கொடுத்தார் மருத்துவர்.

அடுத்து சுக்லா வர, " கண்ணாடியினால் ஏற்பட்ட கீறலுக்கு மருந்து போட்டிருக்கேன். அடுத்து காலில் முறிவு மாதிரி எதுவும் தெரியவில்லை. பேன்டேஜ் போட்டு விட்டிருக்கேன். எதற்கும் காலையில் ஸ்கேன் எடுத்து பார்த்து விடலாம். மற்றபடி பயப்படும் படியாக எழுதுவும் இல்லை. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். மாத்திரைகளை மறக்காமல் கொடுங்க " என்று விட்டு மருத்துவர் கிளம்பி விட்டார்.

அடுத்து மாரியிடம் பேசி அனுப்பி விட்டு, கௌதம் பக்கம் சுக்லா திரும்ப, வெறித்த பார்வையை சாதாரணமாக மாற்றி! 'என்ன? என்பது போல பார்த்தான்.

" ரொம்ப தேங்க்ஸ் கௌதம். நீங்க செய்த இந்த உதவியை வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்" என்றார் நெகிழ்ந்து

"தெரிந்தவர்களுக்கு நாம செய்யிற உதவி தான். இதில் நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லை சார் . மேடம் அன்றைக்கு நான் யாரென்று தெரியாத போது, உதவி செய்யலையா? அதை விட இது ஒன்னும் பெரிதில்லை சார் " என்றவன்.

"அப்புறம்.. சார்.. " என்று தயங்கி, எதையோ கேட்க சங்கடப்படுவது போல! பின்னங்கழுத்தை தேய்த்து கொண்டு நிற்க,

இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தவள். அவன் எதையோ கேட்க தயங்குவதை கண்டு, தானே யூகித்து , " பணம் ஏதாவது கொடுத்து விடுங்க சுக்லா ஜி! " என்றாள்.

"அதெல்லாம் வேணாங்க! " என்றவனின் குரலில் அப்பட்டமாக கோபம் இருந்தது.

"வேற என்ன வேணும் கௌதம். தயங்காமல் கேளு " என்று சுக்லா ஊக்கப்படுத்த,

"என்ளோட ஷர்ட் வேணும் " என்றான் தயக்கமாக

"உன்னோட ஷர்ட்டா? " என்றவர். அப்போது தான் மாயா அணிந்திருப்பது, கௌதம் உடைய சட்டை என்பது புரிய, திரும்பி மாயாவை பார்க்க! அதற்குள் சட்டையை வேக வேகமாக கழற்றி, " உன்னோட ஷர்ட்! " என்று நீட்டியிருந்தாள்.

" தேங்க்ஸ் மேடம் " என்றவன். " அதை அப்படியே ஷோபாவில் வைத்திடுங்க " என்றான்.

ஷோபாவின் இருக்கையில் சட்டை தூக்கி போட்டவள். கைகளை கட்டிக் கொண்டு, காலை நீட்டி, நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

சுற்றிலும் பார்லையை ஓட்டியவன். டீ மேசையில் கிடந்த நியூஸ் பேப்பர் தாளை சுருட்டி, மாயா தூக்கி போட்ட சட்டையை, அந்த சுருட்டிய பேப்பரை கொண்டு, ஏதோ பாம்பை தூக்குவது போலவே எடுக்க, மாயா கடுப்பாகி விட்டாள்.

"என்ன செய்ய்ற? " என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு

"சட்டையை எடுக்கறேன் மேடம்"

" இப்படித்தான் எடுப்பாங்கலா?"

"மேடம், நானெல்லாம் முரட்டு சிங்கில் ! நீங்க போட்ட சட்டையை கையால கூட தொட மாட்டேன் " என்றபடி சுருட்டிய பேப்பரின் முனையை காலரின் உள்ளே கொடுத்து தூக்கியவன். " ஏதாவது கேரி பேக் இருக்கா சார். இதை வைக்கனும் " என்றான் சுக்லாவை பார்த்து

"அடிங் கொய்யால " என்று ஆவேசமாக அவ்வளவு வலியையும் பொருட்படுத்தாது எழுந்தே விட்டாள் மாயா!

அவளது கோபத்தை கண்டு, கௌதம் ஒரு அடி பின் வாங்க! சுக்லா தான், அவளால் தனியாக நிற்க முடியாது என்பதை உணர்ந்து அவள் தடுமாறும் முன் வேகமாக வந்து அவளை தாங்கிக் கொண்டவர். " காம் டவுன் மாயா " என்று அமைதிபடுத்தவும் தவறவில்லை.

"நீங்க விடுங்க சுக்லா ஜி " என்று திமிறியவள். "சாதாரணமாக நான் போட்ட சட்டைக்கு இவ்வளவு பில்டப் பண்ற ? இப்போ நீ தானே என்னை காப்பாத்தி தூக்கிட்டு வந்த? அப்போ தெரியலையா? நீ முரட்டு சிங்கிள் னு ?"

"மேடம் ஒருத்தருக்கு உதவி செய்யும் போது இதெல்லாம் தோணாது. அப்போதைக்கு காப்பாத்தனும் என்கிற எண்ணம் மட்டும் தான் இருக்கும். அப்போதைக்கு விருப்பு வெறுப்பை தாண்டிய நிலையில் மூளை வேலை செய்யும் " என்று விளக்கம் கொடுத்தான்.

"ஓ! அப்படியா? உனக்கு கல்யாணம் பண்ணும் போது, ஒரு பொண்ணை பார்த்து தானே கல்யாணம் பண்ணுவே? குடும்பம் நடத்தனுமில்லை . அப்போ எப்படி பொண்ணை தொடுறது? நான் முரட்டு சிங்கிள் னு அவ கூட ப.......... ம போயிடுவியா?" என்றாள் கோபத்தில் தன்னிலை மறந்து

இவளது பேச்சை கேட்டு, " என்ன மாயா பேச்சு இது? லீவ் இட் " என்றவர்.

கௌதம் பக்கம் திரும்பி, " நீ தவறாக நினைக்காதே பா . அவளுக்கு எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்து தான் பழக்கம். இப்படி சட்டையை பேப்பரை கொடுத்து தூக்கினது அவளை அவமானப்படுத்துவது மாதிரி தோணிடுச்சு. மாயா பேசின எதையும் மனதில் வைச்சுக்காதே! . முரட்டு சிங்கிளோட மூளை எப்படி வேலை செய்யுமென்று எனக்கு நல்லாவே தெரியும் " என்றார்.

" ரொம்ப நன்றி சார் " என்றவன். " மேடமோட கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லிடுறேன் சார் " என்றபடி மாயாவின் பக்கம் பார்வையை திருப்பியவன்.

"மேடம், இப்போதைக்கு சிங்கிள் தான். கல்யாணத்துக்கு பிறகு என் மனைவி கூட இருக்க! . அவ கூட படு...... " என்று முழுதாக சொல்லாமல் இடைவெளி விட்டவன். " எனக்கு எந்த தயக்கமும் வராது. ஏனென்றால் அவ என்னுடைய மனைவி. அடுத்த பொண்ணை தொட தான் வெட்கப்படனும் " என்றவன். " வரேன் சார். வரேன் மேடம் " என்றபடி திரும்ப!

"நில்லு! " என்றாள் மாயா. ' இப்போ என்ன என்பது போல் திரும்பி பார்த்தான் கௌதம்.

"அந்த சட்டையை வைச்சிட்டு அரைமணி நேரம் கழித்து வா. லாண்ட்ரீக்கு போட்டு துவைச்சு கொடுக்க சொல்றேன். நான் போட்ட சட்டையை நீ தொடுவதை கூட நான் விரும்பலை " என்றவள்.

" சுக்லா ஜி. லாண்ட்ரி ஆளை வர சொல்லுங்க " என்றபடி, சுக்லாவின் உதவியோடு மீண்டும் நீள இருக்கையில் அமர்ந்தாள்.

" பரவாயில்லை ... " என்று கௌதம் ஏதோ கூற வர, " கொஞ்சம் நேரம் கழித்து வா பா " என்றார் சுக்லா அழுத்தமாக.

அதற்கு மேல் மறுக்க முடியாமல், " ஒ. கே சார் " என்றவன். கையில்லா ரவிக்கை இடுப்பு வரை மட்டுமே இருக்க! முன்னழகின் தனங்கள் லேசாக வெளிய எட்டிப்பார்க்க முயல, கீழே பேண்ட் அணிந்தபடி, கோவத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளை, ஒரு பார்வை பார்த்து விட்டு, எதுவும் பேசாமர் சுக்லாவிடம் மட்டும் சின்ன தலையசைப்போடு விடைபெற்று சென்றான்.

அடுத்த அரைமணி நேரம் கழித்து மீண்டும் வந்த போது, கௌதமின் சட்டை துவைத்து இஸ்திரி போட்டு அழகாக வைக்கப்பட்டிருந்தது. மாயா அவர்களது கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சுக்லாவிடம் விடைபெற்று சென்ற போது, பொழுது புலர தொடங்கி விட்டது.

மாயாவுக்கு காலில் அடிபட்டிருந்ததால், அவளால் வெளியில் வர முடியவில்லை. முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று சுக்லா சொல்லி விட்டார். நேரா நேரத்திற்கு உணவுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் உதவிக்கென்று ஒரு ஆளை கூட, சுக்லா நியமிக்கவில்லை. அவளும் கேட்கவில்லை. அவளுடைய அடிப்படை தேவைகளுக்கு செல்ல , சுக்லாவே உதவி செய்வார். அவர் வரும் வரை தனியாகத்தான் இருக்க வேண்டும்.

சுக்லாவுக்கு வேலை பளு அதிகமாகவே இருந்தது. ராக்கிக்கு, கொடுப்பதாக சொன்ன சொத்துக்களை செழியனின் உதவியோடு அவளது பெயருக்கு திருமணத்திற்கு முன்பே மாற்றி விட்டார். ராக்கியின் திருமணத்திற்கு பிறகு, நந்திதாவுடனான தனது திருமண வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்.

நந்திதாவுடனான விவாகரத்து நடக்குமா? அதற்கு முன்னரே அவர் கட்டம் கட்டப்படுவார் என்பதை அறிவாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்..

அடுத்த பதிவு சனிக்கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 8
நந்திதா மகளின் திருமணத்திற்கு ஒற்றை பெண்மணியாக நின்று வேலைகளை ஏவிக் கொண்டிருந்தார். இன்று மாலையே பெண்ணை மண்டபத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். வீடு முழுக்க உறவினர்கள்! யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்பதை கேட்டு செய்வதற்கென்று தனித்தனியாக ஆட்களை நியமித்து இருந்தார்.

நந்திதாவின் தாய் வீடும் சாதாரணமானவர்கள் அல்ல. சில மனஸ்தாபம் காரணமாக அவரது உடன் பிறந்த அண்ணனிடமிருந்து பிரிந்து இருக்கிறார். மற்ற உறவுகள் நந்திதாவுடன் தொடர்பில் இருந்தாலும், அண்ணன் குடும்பத்திடம் அவர் உறவை பேணவில்லை. சுக்லாவின் விசயத்தை பற்றி அண்ணன் சேதுபதியிடம் கூறியிருந்தால்! மாயா என்கிற பெண் அப்போதே மாயமாகி இருப்பாள்.

ஆனால் நந்திதா அதை செய்யவில்லை. என் குடும்ப விசயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இருந்து விட்டார். இப்போது தனது ஒரே மகளான ராக்கியின் திருமணத்திற்கு சேதுபதியை நேரில் சென்று பெயருக்கு அழைக்க நினைத்து,

சேதுதிபதி, மகன் விஜய சேனாதிபதியுடன் வெளிநாட்டிற்கு தனது வருங்கால மருமகளை பார்க்க சென்றிருப்பதாக தகவல் தெரிந்த பிறகே சென்றார். பிரமாண்டமான மாளிகை, வளம் கொழிக்கும் தொழில் சாம்ராஜ்யம்! அசைக்க முடியா ஆளுமையாக இருக்கின்றனர்.

நந்திதா, தங்களது உறவு வேண்டாமென்று ஒதுங்கியிருப்பதை புரிந்து கொண்ட சேதுபதியும் விலகிக் கொண்டார். தனது மகள் சம்யுக்தாவின் திருமணத்திற்கு மட்டும் பொதுவான உறவினர் மூலமாக , மூன்றாம் மனிதருக்கு வைப்பது போல பத்திரிக்கை வந்தது. நந்திதா செல்லவில்லை.

சேதுபதி உண்மையில் தங்கை நந்திதா மீது அன்பு இருந்திருந்தால், தனது மகன் சேனாதிபதிக்கு , ராக்கியை பேசியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. தாய் தந்தை இருக்கும் வரை தான் உடன் பிறந்த உறவெல்லாம் நிலைக்கும் போலும்!

ராக்கியின் நிச்சயத்தார்த்தம் நடக்கும் போது வந்தது கூட, நந்திதாவின் சித்தியும் சித்தப்பாவுமே. சிறு வயதிலிருந்தே அம்மா அப்பா என்று கூப்பிட்டு பழகியதால் பெரும்பாலானோர் நந்திதாவின் சொந்த அப்பா அம்மா என்றே நினைத்து கொள்வர்.

ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கின்றதா? என்று பார்வையிட்டு கொண்டே வந்தவர். அடுத்து மகள் ராக்கியின் அறையை திறந்தார். அங்கே மகள், மணமகளாக அமர்ந்திருப்பதை கண்டு மனம் பூரித்தது.

ஆனால் ராக்கியின் முகத்தில், மணபெண்ணுக்கான மகிழ்ச்சியை தாண்டி, ஏதோ சோகம் இழையோடுவதை அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பாட்டிக்கும் மற்ற உறவுகளுக்கும் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் நந்திதாவுக்கு தெரியாமல் இருக்குமா? தாயறியாத சூலா?

வேகமாக மகளருகே வந்தவர். எதையும் காட்டிக் கொள்ளாமல், " எல்லோரும் சாப்பிட்டீங்களா? " என்றார் இன்முகமாக

"சாப்பிட்டோம் நந்திதா " என்றார் அவரது சித்தி

"நீ சாப்டியா டா? " என்றார் மகளது தலையை ஆதூரமாக வருடி

"நீங்க சாப்பிட்டீங்களா மா?" என்ற மகளின் கேள்வியில் இருவருக்குமே கண்கள் கலங்கியது. ' இனி இதுபோல அவரது நிலையறிந்து யார் கேட்பார்கள். சுக்லா, வீட்டிற்கு வராமல் தனித்து விடப்பட்டதிலிருந்தே, தாய்க்கும் மகளுக்கும் ஒருவருக்கொருவர் தானே ஆதரவு.

இனி யார் அவரது நலத்தை உடன் இருந்து விசாரிப்பார். உண்மையை சொல்லப் போனால்! சுக்லாவின் பிரிவை விட, மகளின் பிரிவு தான் நந்திதாவை பெரிதும் வாட்டப் போகிறது.

"சாப்பிடுறேன் மா " என்றவர்.

மகளது கையை பிடித்துக் கொண்டு, " அம்மா சொல்றதை கவனமா கேட்டு நடக்கனும் சரியா?" என்றவர். "இப்போ உனக்கு கல்யாணம் ஆகப் போகுது ராக்கி மா. இங்கே இருந்த மாதிரி பொறுப்பான பெண்ணாக அங்கேயும் நடந்து கொள்ளனும். மாப்பிள்ளை தங்கமான குணம் உடையவராக இருக்கிறார். அவரோட அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க.

நீ கொடுத்து வைச்சிருக்கனும். இப்படியொரு குடும்பம் கிடைக்க. அங்க போன பிறகு, சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரிச்சு நடக்கனும். நான் எங்க வீட்டில் இப்படித்தான் இருந்தேன் அதே போலத்தான் இருப்பேன்னு நடந்து கொள்ள கூடாது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நடைமுறை இருக்கும். அதை முடிந்தவரை நீயும் கடைப்பிடிக்கனும். உனக்கு சில விசயம் பிடிக்கலையென்றால், அதை காரணத்தோடு சொல்லி விடு. புரிந்து கொள்வாங்க. அவங்கவங்களுக்கான ஸ்பேஸ் கொடு. இப்போ மாப்பிள்ளை, அவங்க அப்பா கூட பேசிக் கொண்டிருந்தால்!

நான் தான் உங்களுக்கு முக்கியம். எப்படி ? என்னிடம் வந்து பேசாமல் உங்க அப்பா அம்மாவிடம் போய் பேசுறீங்கன்னு ஓவர் பொசசிவ்னஸ் இருக்கக் கூடாது. உன்னால் ஒரு பிரச்சனை வந்ததென்று இருக்கக் கூடாது.

மற்றபடி எந்த விசயமாக இருந்தாலும்! அம்மா உனக்கு சப்போர்ட்டா இருப்பேன். பிடிக்காததை சகித்துக் கொண்டோ, கட்டாயத்திலோ செய்ய வேண்டாம். மற்றவங்களுக்கு மரியாதை கொடு. அதே மரியாதை உனக்கும் கொடுப்பது போல நடந்து கொள்ளனும் " என்றார் ஆதூரமாக

பாசத்தில் கண்கள் கலங்க, பேசும் நந்திதாவை கண்டதும்! பிரிவுத் துயர் ராக்கியையும் தாக்க அமர்ந்த வாக்கிலேயே நந்திதாவின் இடுப்பை கட்டிக் கொண்டாள். எதுவும் பேச முடியவில்லை.

அருகில் இருந்த பாட்டி தான், "சரி சரி அம்மாவும் பொண்ணும் கொஞ்சியது போதும். வரவங்கலை கவனிக்க வேணாமா?" என்று அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தார்.

மெல்ல புன்னகைத்தவர். " சரி மா. பார்த்துக்கோங்க " என்றவர். " உன் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ வராங்க ராக்கி?" என்றார்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க மா " என்றாள்.

"நந்திதா மாப்பிள்ளை இங்கே தானே வருவார்? இல்லை அந்த மேனாமினுக்கியோட சேர்ந்து வருவாரா? நிச்சயத்தார்த்தம் அன்றைக்கு அவளை பார்த்த போதே பத்திக்கிட்டு வந்துச்சு.

ராக்கி கல்யாணத்துக்கு உன் அண்ணன் சேதுபதி வருவதாக கேள்வி பட்டேன். உன் அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. தெரிஞ்சுது என்னப் பண்ணுவான்னு எனக்கு தெரியாது" என்றார் எச்சரிப்பது போல

"ராக்கி, நீ ரெடியாகு " என்று அவளை அங்கிருந்து நகர்த்தியவர். சித்தியின் பக்கம் திரும்பி,
 

Sirajunisha

Moderator
"தெரிந்தால்? தெரிந்தால் என்ன செய்திடுவார் மா?. அவருக்கு உண்மையிலேயே என் மேல் அக்கறை இருந்திருந்தால்! இத்தனை காலம் என்னிடமிருந்து விலகி இருந்திருப்பாரா?. இல்லை அவரோட மகள் கல்யாணத்துக்கு மூன்றாம் மனிதரை விட்டு பத்திரிக்கை வைக்க செய்திருப்பாரா?

உண்மையிலேயே அவருக்கு , தங்கை என்று பிரியம் இருந்திருந்தால்! அவரோட மகனுக்கு என் மகளை தானே பேசியிருப்பார். இப்படி வெளிநாட்டிலா தேடியிருப்பார்" என்றார் ஆதங்கமாக. இதுவரை உறவு வேண்டாமென்று ஒதுங்கி இருந்தவருக்கு, கணவன் துணையில்லாமல் தனியாக இருந்து செய்வது மனச்சோர்வை கொடுக்கிறது போலும்!

"யாரு? நீ சேனாவையா சொல்ற?" என்றவர். "உன் அண்ணனோட நடவடிக்கையாவது வெளிப்படையாகவே தெரியும் நந்திதா. ஆனால் உன் மருமகன் விஜய சேனாதிபதி கணிப்பிற்கு அப்பாற்பட்டவன். புள்ளிமான் போல உன் பொண்ணு. அவனுக்கெல்லாம் ஈடு கொடுக்க முடியாது. " எனும் போதே

செழியன் வந்திருக்கிறார் என்று ஒருவர் வந்து சொல்ல, அந்த பேச்சு! அத்தோடு தடைப்பட்டது.

இங்கே சுக்லா, மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். மாயாவுக்கு கால்கள் சரியாகி விட்டாலும், முகத்தில் விழுந்த கண்ணாடியின் கீறல்கள் இன்னும் முழுதாக சரியாகவில்லை. அதனால் வெளியில் செல்லாமல், அறையிலேயே இருந்தாள்.

சுக்லா, கிளம்புவதற்காக தேவையான உதவிகளை செய்தபடி, அங்கே இங்கே அழைந்து கொண்டிருந்தாள்.

"மாயா நீயும் கிளம்பி வா? நீ மட்டும் தனியாக இங்கே இருந்து என்ன செய்ய போற? . அதோடு நீ வந்தால் தான் எனக்கும் பெருமை!" என்றார். அவரும் எப்படியெல்லாமோ பேசிப் பார்க்கிறார். மாயா கிளம்புவதாக தெரியவில்லை.

"சுக்லா ஜி. எனக்கு முகம் சரியாக இருந்தால் நானே வர மாட்டேனா? இங்கே பாருங்க, எவ்வளவு கண்ணாடி கிழித்திருக்கு !" என்று முகத்தை காண்பித்தாள்.

ஆங்காங்கே சில காயங்கள் தெரிந்தது. ஆனால் அவை நன்றாகவே ஆறிவிட்டிருந்தன. மேலே காய்ந்த தோள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. முகத்தை, உள்ளங்கையில் தாங்கிப் பிடித்தவர். " நிலாவில் இருக்கிற கரை கூட அழகு தான். அது போலத்தான் உன் முகமும் " என்றார்.

"போதுமே!" என்று சிரித்தபடி நகர்ந்தவள். அவருக்கு கோட்டை பின்னிருந்து மாட்டி விட்டாள். " பங்சன் முடிந்ததும் உடனே வந்திடுவேன் " என்றார் தகவலாக

"அதெல்லாம் ஒன்னும் அவசரமில்லை. முடித்து விட்டே வாங்க. நாளைக்கான பட்டு வேஷ்டி சட்டையை டிரைவரிடம் கொடுத்து விடுகிறேன் " என்றாள்.

"பரவாயில்லை டா. நைட் எவ்வளவு நேரமானாலும் நான் வந்திடுறேன். நீ இல்லாமல் எனக்கு தூக்கமே வராது "

"எனக்கும் தான் நீங்க இல்லாமல் தூக்கம் வராது. பட் ஒரு நாள் தானே? அட்ஜஸ் பண்ணிப்போம் " என்றாள்.

" ராக்கிக்காக பார்க்கிறியா மாயா?" என்றார் அவள் கண்களை பார்த்து

பெருமூச்சு விட்டவள். அவர் நெஞ்சோடு சாய்ந்து அவரது இடுப்போடு கட்டிக் கொண்டு, " ஆமாம். ராக்கிக்கு அப்பாவாக நிற்க போகிற கடைசி விசேஷம். அடுத்து, நந்திதாவுக்கு டைவர்ஸ் அப்ளை பண்ணி, அந்த உறவும் முடிந்த பிறகு, நீங்க யாரோ! அவங்க யாரோ!.

எனக்கு , உங்க அன்பு முழுதாக வேணும் சுக்லா ஜி. உறுத்தல் கொடுக்கிற ராக்கி, நந்திதாவோட உறவு வேணாம் னு தோணுது " என்றவள்.

தலையை நிமிர்த்தி அவர் முகத்தை பார்த்து, " ரொம்ப சுயநலமா யோசிக்கிறேன் தானே?" என்றாள்.

"எனக்கு, என்னோட மாயா தான் எல்லாமே. அதே போல நீனும் நினைப்பதில் தப்பு என்ன இருக்கு? " என்றபடி , அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

அப்போது தான், " சார்.. மேடம்.. " என்று டிரைவர் செல்வம் அழைப்பது காதில் விழ நடப்புக்கு வந்து, செல்வத்தை கண்டதும். "வரேன் மாயா. கவனமா இரு. மேரேஜ் முடிந்த கையோடு வந்து விடுவேன் " என்று விடை பெற

அதே சமயம் கௌதம் வந்து நின்றான். சுக்லா, மகள் திருமணத்துக்கு கிளம்புவது புரிய, " மேடமை பார்க்க வந்தேன் சார் " என்றான்.

சுக்லா திரும்பி மாயாவை பார்க்க! ' தான் பார்த்துக் கொள்வதாக கண்ணை மூடி திறந்தாள்.

" ஒ. கே " என்றவர். மாயாவிடம் சிறு தலையசைப்போட விடைபெற்றார்.

சுக்லா சென்றதும். " சொல்லுங்க கௌதம் . என்ன விசயம்? " என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்.

பாக்கெட்டிலிருந்து சிறு தொகையை எடுத்து அவள் முன்னிருந்த டீப்பாயில் வைத்தவன். " எனக்கு நீங்க ஹாஸ்பிட்டல்ல செலவு பண்ண பணம் மேடம் " என்றவன். " நான் ரிலீவ் ஆகிக்கிறேன் " என்றான்.

" ஓ! " என்றவள். அந்த பணத்தை எடுத்து, அருகேயிருந்த தனது ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டே, " என்னாச்சு? வந்த வேலை முடிஞ்சிடுச்சா?" என்றாள் அவளது வழக்கமான டிரேட் மார்க் புன்னகையுடன்.

கௌதம் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும்! " என்ன சொல்றீங்க? " என்று ஒன்றும் தெரியாதது போல!

" வேவு பார்க்க, யார் சொல்லியோ வந்திருக்கீங்க? அது மட்டும் நல்லாவே தெரியும்! " என்றாள் நக்கல் சிரிப்போடு

"அப்படி நீங்க நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது மேடம் " என்றான்.

"நான் ஏன் அப்படி நினைத்தேன்னு நீங்க கேட்கவே இல்லையே? சரி நானே சொல்கிறேன். நீங்க சொன்ன கதை பொய். அதாவது அனாதை, பணத்தை ஏமாத்திட்டாங்க.. ப்ளா ப்ளா ப்ளா எல்லாமே!. பிறகு ஏன் உங்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன் என்றால்? உங்க பார்வையில் தெரிந்த கண்ணியத்திற்காக மட்டுமே.

வேறு ஏதும் காரணம் இருக்கலாமென்று! பொறுமையாக இருந்தேன். அதோடு, வேலைக்கு சேர இதுவரை எந்த ப்ரூப்பையும் நீங்க கொடுக்கலை " என்றபடியே எழுந்தவள்.

கைகளில் வைத்திருந்த அவள் போனின் கேமராவை ஆன் செய்து, அவனருகே வந்து நின்றபடி, "அங்கே பாருங்க " என்று செல்போனை உயர்த்த, 'என்ன என்பது போல! நேராக பார்க்க!'

இருவரும் சேர்ந்து நிற்பது போல! நொடிக்கும் குறைவான நேரத்தில் செல்பி எடுத்திருந்தாள்.

"உங்க பணத்தை நான் கொடுத்துட்டு போகிறேன். உங்களை ஏமாற்றலையே?" என்றான் கோபமாக

"நீங்க வந்த காரணத்தை இன்னும் சொல்லலையே? யார் அனுப்பினா? என்ன தெரிந்து கொண்டீங்க?" என்றாள். அந்த செபியை சுக்லா போனுக்கு அனுப்பி விட்டு டைப் செய்தபடி

"கீழ் தரமான பொம்பளையிடம் வேலை செய்ய பிடிக்கலை. போகிறேன் " என்றவன். "குட் பை " என்று கிளம்பி விட்டான்.

கௌதம் முகத்தில் அவ்வளவு கோபம். செல்வத்துடன் தான் அவனும் வந்திருந்தான். ஆனால் அவர்கள் பேசியதை கேட்ட பிறகு, சீ என்றாகி விட்டது.

தனது போனை எடுத்து யாருக்கோ அழைத்தவன். " நாம கேள்விபட்டதெல்லாம் உண்மை தான். சுக்லா, மாயாவிடம் முழு மயக்கத்தில் இருக்கிறார். அவர் திருந்தும் எல்லையை தாண்டி விட்டார். அவரோட மனைவி நந்திதாவை டைவர்ஸ் பண்ணிட்டு, மாயாவோட செட்டில் ஆக போகிறார்" என்றான் படபடவென

மறு முனையில் என்ன கேட்கப்பட்டதோ! ".......... ........ "

"வெரி டேஞ்சரஸ் லேடி. நான் வந்ததை கூட கெஸ் பண்ணியிருக்கா!. ஆனால் முழுதாக விவரம் கேட்கலை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது போல! தெனாவட்டடு " என்றான் குமுறலாக

"............ ......... "

" மாயா இல்லையென்றால் சுக்லா நிலைகுலைந்து போயிடுறார். இதை நானே என் கண்ணால பார்த்தேன்"

மறுமுனை கேட்ட விசயத்தில்,நடை அப்படியே தடைபட நின்று விட்டான்.

"......... .......... "

"இனி எப்படி வேண்டுமானாலும் செய். நான் நியாயம் தர்மம்னு பேச மாட்டேன். இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் தான் சரி " என்று அழைப்பை துண்டித்து விட்டான் கௌதம்.

எப்போதும் கவனமாக இருக்கும் மாயா! கௌதம் விடயத்தில் அலட்சியமாக இருந்து விட்டாள். ஆனால் அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்க போகிறது என்பதை அறிவாளா? அரக்கியாக அடையாளம் சொல்லப்படுபவள். நிஜமான அரக்க குணம் உடையவனை கண்டால்? பொறுத்திருந்து பார்ப்போம்..

 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 9
ராக்கியின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தினருமே தொழில் துறையின் ஜாம்பவான்கள் என்பதால் அதை சார்ந்த தொழிலதிபர்கள், நண்பர்கள், அதிகாரிகளின் வருகை அதிகமாக இருந்தது. உணவு கேட்டரிங்களை ஒவ்வொரு வேலைக்கு என சிறப்பு வல்லுனர்களிடம் கொடுத்திருந்தார் ராம்.

கூட்ட நெரிசல்கள் ஏற்படா வண்ணம் ஆங்காங்கே விருந்தினர்களை வரிசைப்படுத்தி சிரமம் ஏற்படாத வகையில் ஆட்களை நியமித்து இருந்தார் சுக்லா. மிகுந்த மகிழ்ச்சியோடு, மணப்பெண்ணாக மகளை பார்த்த போது, நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

வரவேற்பு, விருந்து உபசரிப்பு, வழியனுப்புதல் என ஒவ்வொன்றாக செய்து முடித்த போது மணி இரவு பனிரெண்டை தொட்டிருந்தது. நந்திதா இன்னும் விருந்தினர்களிடமும், நாளை செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், அதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆட்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மணமக்கள் அவரவர் அறைக்கு சென்று விட, சுக்லா தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றவருக்கு, அங்கே ஓய்வெடுக்க தோன்றவில்லை. போனை எடுத்து, மாயாவுக்கு அழைத்து விட்டார். ஒரே ரிங்கியிலேயே அழைப்பை இணைத்திருந்தாள் மாயா.

"ஹலோ " என்றதும்

"ஹலோ சுக்லா ஜி. என்ன? ரிசப்ஷன் நல்லபடி முடிந்ததா?" என்றாள் ஆர்வமாக

"ம்ம். முடிந்தது. இப்போதான் ரூமிற்கு வந்தேன் " என்றவர். " நீ இப்போ எங்கே இருக்க?" என்றார்.

"நம்ம ஹோட்டலில் தான்! ஏன் கேட்குறீங்க? "

"என்னிடம் பேசியபடியே போய், டோர் லாக் பண்ணியிருக்கான்னு பாரு! " என்றார் கட்டளையாக

"ஏன் சுக்லா ஜி. லாக் பண்ணிட்டு தான் வந்தேன் " என்றாலும் அவர் சொன்னதற்காக மறுக்காமல் போய் பரிசோதனை செய்ய, கதவு தானியங்கி முறையில் பூட்டியிருந்தது.

"ம்ம். லாக் ஆகி இருக்கு"

"எதற்கும் மேல் தாழ்பாளையும் போட்டுக் கொள் " என்றார்.

"என்னாச்சு? ஏன் இன்னைக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க? " என்றாள் புரியாமல். இருந்தும் அவர் சொன்னபடி தாழிட்டாள்.

"மனசு ஏதோ சரியில்லை மாயா. ஏதோ உள்ளுக்குள்ள பிசையிது. என்னென்னு சரியா சொல்ல முடியலை. உன்னோட பாதுகாப்பு முக்கியம் னு திரும்ப திரும்ப மனசுக்குள்ள தோணிட்டே இருக்கு" என்றார்.

"என்ன திடீர்னு? "

"இப்போ இல்லை மாயா. கொஞ்ச நாளாகவே! ராக்கி கல்யாணத்துக்கு, நந்திதா அவங்க அண்ணனுக்கு சொல்ல முடிவெடுத்தது தெரிந்ததிலிருந்தே! " என்றார்.

"சொன்னால் என்ன? உங்களை கேள்வி கேட்பாரென்று நினைக்கிறீங்களா?"

" யார் கேள்வி கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியும். அதை தூசு போல் தட்டி விட்டு செல்லவும் முடியும். ஆனால் அவங்க யாரும் என்னிடம் நெருங்க மாட்டாங்க. அவங்க இலக்கு, நீயாக தான் இருப்ப மாயா. அது தான் பயமாக இருக்கு " என்றார்.

"சுக்லாவுக்கு பயமா! அதுவும் என்ன நினைத்தா? கேட்கவே காமெடியா இருக்கு சுக்லா ஜி. எனக்கு நீங்க பக்கத்தில் இருப்பதே போதும் . எதையும் சமாளிப்பேன். இந்த மாயாவோட உயிர் சுக்லாவிடம் இருக்கு. அதனால , நீங்க ஸ்ட்ராங்கா இருங்க. நான் பாதுகாப்பா இருப்பேன் " என்றாள் அவருக்கு தைரியமூட்டும் விதமாக

"ம்ம்ம் " என்றார் சுரத்தே இல்லாமல்

" நீங்க இவ்வளவு கவலைப்பட அவசியமே இல்லையே சுக்லா ஜி. இதில் வேறென்னமோ இருக்கு. என்னிடம் மறைக்கிறீங்க? என்னென்னு சொல்லுங்க?" என்றாள்.

"அது தெரிந்தால் உன்னிடம் சொல்லாமல் இருப்பேனா? இது உள்ளுணர்வு மாயா " என்றார் தன்னிலை விளக்கமாக

"எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதை நினைத்துக் கொண்டே இருந்திருப்பீங்க! அதனால கூட அப்படி இருக்கலாம். என்னுடைய காரின் மேல் மரம் விழுந்தது தற்செயலானது. தேவையில்லாமல் கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. இப்போ நல்லா ரெஸ்ட் எடுங்க. மார்னிங் செல்வத்திடம் டிரஸ் கொடுத்து விடறேன் .இப்போ தூங்குங்க. குட் நைட் " என்றாள்.

"குட் நைட் " என்றபடி அழைப்பை துண்டித்தார். ' எப்போதும் உள்ளுணர்வு பொய் சொல்வதில்லை. அதை உணர்ந்து கொள்ளாமல் அலட்சியபடுத்துவதே பல இன்னல்களுக்கு வழி வகுக்கிறது.

மறு நாள் அதிகாலையிலேயே ராக்கியின் திருமண நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பித்தன. பெண்ணை மணப்பெண்ணாக, மாற்றிக் கொண்டிருந்தனர் அழகுகலை நிபுணர்கள். விருந்தினர்களை வரவேற்பதும், அவர்களுக்கான காலை உணவுக்கு அழைத்து செல்வதும் என திருமணம் கலைகட்ட ஆரம்பித்தது.

முகூர்த்த நேரம் நெருங்க, மண்டபமே மக்களால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. யாருக்கும் சிறு சங்கடம் கூட இல்லாமல், சுக்லா நியமித்திருந்த ஆட்கள் அன்பாகவும் கனிவாகவும் வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து செய்து கொண்டிருந்தனர்.

சுக்லாவுக்கு காலையிலேயே ஆடைகளை அனுப்பி விட்டிருந்தாள் மாயா. அதை எடுத்து அணிந்து கண்ணாடியில் பார்த்த போது, மாயாவின் நினைவும் கூடவே வந்தது. அவள் இந்த பட்டு வேஷ்டி சட்டையில் பார்த்தாள்! நிச்சயம் கிண்டல் செய்வாள்.

'ஏன்?.இளமை திரும்புதே!' என்று பாடக் கூட செய்வாள் என்று மனம் மாயாவை நினைக்க, மெல்ல சிரித்துக் கொண்டார். பின்பு சற்று சிரத்தை எடுத்து கிளம்பி வந்தவர். நேராக ராக்கி தயாராகிக் கொண்டிருக்கும் அறைக்குச் செல்ல, அங்கே நந்திதா அருகில் இருக்க, ராக்கி யாரோ ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்தபடியே உள்ளே சென்றார்.

எழுந்தவள். சுக்லாவை கண்டு விட, " ட்டேடி " என்றவளுக்கு மனம் நெகிழ்ந்தது. அப்போது ராக்கி , ஆசிர்வாதம் வாங்கிய நபர் திரும்பி, சுக்லாவை கண்டு விட்டு, " சுக்லா " என்றார் சந்தோஷமாக.

"சேதுபதி " என்றபடி வரவேற்கும் விதமாக தழுவிக் கொண்டவரின் குரல் கரகரத்தது.

"எப்படி இருக்க? பார்த்து எவ்வளவு நாளாச்சு?" என்றார் சேதுபதி சந்தோஷ மிகுதியில்

"நாட்கள் இல்லை மச்சான். பல வருசமாச்சு " என்று சுக்லா பதிலளிக்க, அங்கே சூழலை இலகுவாக்கினர்.

பொதுவான நல விசாரிப்புகள் முடிய, ராக்கியின் பக்கம் திரும்பி, " உன்னோட தாய் மாமன் எப்போ வரார் பாரு உன்னை பார்க்க" என்றார்.

"போனது போகட்டும். இனி என் மருமகளை எப்படி பார்த்துக் கொள்கிறேன் பாரு " என்றார்.

"அவ இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமதி ராக்கி தேவ் ஆகிடுவா. இப்போது போய் இவர் பார்த்துக்க போறாராம்" என்று அதற்கும் சுக்லா வார

"அப்போ என் தங்கச்சியை நான் பார்த்துக் கொள்கிறேன். என் கூடவே அழைத்து கொண்டு போகிறேன்" என்றார்.

"உங்க அண்ணன், தங்கை பாசத்தில் நான் இடையில வர மாட்டேன் பா. தாராளமாக செய் " என்றார் சுக்லா. விளையாட்டு போல பேசினாலும் , அவர் பேசுவதின் அர்த்தம் நந்திதாவுக்கு நன்றாகவே புரிந்தது.

அப்போது பெண்ணை மேடைக்கு அழைத்து வர சொல்வதாக கூற, ராக்கியை நந்திதா அழைத்து சென்றார். பேசியபடியே வந்த சேதுபதியின் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவருக்கு முகம் பளிச்சிட்டது.

பெண்ணோட அப்பா அம்மாவ வர சொல்லுங்க என்றதும், சுக்லா மேடையை நோக்கி சென்று விட்டார். பிறகு, திருமண நிகழ்வுக்கான பெற்றோருக்கான பாத பூஜையை தேவ் அவனுடைய அப்பா அம்மாவுக்கு செய்ய, அதே போன்று ராக்கியும் சுக்லா மற்றும் நந்திதாவுக்கு செய்தாள். சுக்லாவுக்கு தனது முகம் மாறாமல் பார்த்துக் கொள்வது பெரும் சவாலாகவே இருந்தது.

அடுத்து மாங்கல்யம் அனைவரது ஆசிர்வாதத்தோடு வர, தேவ் மனப்பூர்வமாக ராக்கியை மங்கல நாணை பூட்டி, தனது மனைவியாக்கி கொண்டான். அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் தொடர, சுக்லா மெதுவாக மேடையிலிருந்து கீழறங்கி வர,

 

Sirajunisha

Moderator
முதல் வரிசையில் சேதுபதியின் அருகில் அமர்ந்து, வெட்டும் பார்வையுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞனை கண்டு, மனம் ஏனோ திடுக்கிட்டது.

கழுத்தை வரை வளர்ந்திருந்த கேசம், சினிமாவில் வரும் ராஜாக்களை நினைவுபடுத்தியது. தீர்க்கமான பார்வை, செதுக்கியதை போல மூக்கு, அளவான மீசையுடன் கூடிய அழுத்தமான தாடைகள், அமர்ந்திருக்கும் போதே உயரமாக இருப்பான் என்று ஊர்ஜிதமானது. சுக்லாவே அவனது கம்பீரமான தோற்றத்தில் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வருகிறார் என்றால்! அங்கிருந்த பல பெண்களின் கண்களும் அவனை தான் வட்டமடித்து கொண்டிருந்தது.
பட்டு வேஷ்டி சட்டையுடன் கால் மேல் கால் போட்டு அவன் அமர்ந்திருந்த தோரணை! அப்பப்பா! காண கண் கோடி வேண்டும்.

தலையில் கிறீடமும் கையில் செங்கோள் மட்டும் தான் இல்லை. அதையும் அவனுக்கு அணிவித்திருந்தால்! புராண கதைகளில் சொல்லப்படும் ராஜாவை தற்போது நேரில் பார்த்தது போல் இருந்திருக்கும். வீரத்தை பறைசாற்ற அளவெடுத்த தோள்களும், திண்ணிய மார்பும், திடகாத்திரமான கால்களும் என்று வர்ணணைக்கு உரியவனாக இருந்தான். அவனை பார்த்தது பார்த்தபடி, அவரறியாமல், அவன் முன்னே வந்து நின்றிருந்தார் சுக்லா.

அவனது வெட்டும் பார்வையை கலைக்கும் விதமாக, அருகில் அமர்ந்த சேதுபதி அவனிடம் ஏதோ சொல்ல, சற்றே காதை அவர் பக்கம் சாய்த்து கேட்டபடி, கண்களாலேயே அவரய் அளவிட்டு, பின்பு ஆமோதிப்பாக தலையசைத்தபடி எழுந்து நின்றான். உடன் சேதுபதியும் எழுந்தார்.

சேதுபதியை புரியாமல் சுக்லா பார்க்க, " என்ன சுக்லா யாரென்று அடையாளம் தெரியலையா?" என்றார் சிரித்தபடி

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! " என்றார் மழுப்பலாக

"என்னோட மகன் விஜய சேனாதிபதி. சின்ன வயசில பார்த்திருப்ப! அதான் இப்போ அடையாளம் தெரியலை " என்றவர். மகன் பக்கம் திரும்பி, " சேனா இது சுக்லா. நந்திதா அத்தையோடு கணவர். " என்று முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

" ஹலோ மிஸ்டர். சுக்லா " என்று கைகுலுக்க கையை நீட்டினான்.

இதமாக சிரித்தபடியே, அவன் கையை பற்றிக் கொண்டவர். "சின்ன வயதில் பார்த்தது!. இப்போ வளர்ந்து பெரியாளாகிட்டீங்க. உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் " என்றார் உளமாற

'ஹலோ மிஸ்டர். சுக்லா ' என்ற போதே! உங்கள் குடும்ப உறவு இல்லை என்று சொல்லாமல் சொல்லியது போலிருந்தது. ஒற்றை வார்த்தையிலேயே விலகி நின்று கொண்டார்.

அதே நேரம் சரியாக மாயாவிடமிருந்து அழைப்பு வந்தது. மாயா என்ற பெயரை பார்த்ததுமே நடப்புக்கு வந்தவர். அழைப்பை இணைத்து, " சொல்லு மாயா " என்றவர். " எக்ஸ்கியூஸ் மீ " என்றபடி போனை காதில் வைத்து பேசியபடியே அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

பிறகு நந்திதா வர, சேனாவிடம் நலம் விசாரித்தவர்! அண்ணணையும் மருமகனையும் உணவு உண்ண அழைத்து சென்றார். போகும் போது, சுக்லா போன் பேசியதை பார்த்து, பெருமூச்சு விட்டபடி நகர்ந்து விட்டார் நந்திதா.

திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. யாருக்கும் எந்தவித குறையுமில்லை. நாட்கள் நகர, ராக்கி மற்றும் தேவ் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்று வந்தனர். நந்திதா தற்போது தனது அண்ணன் குடும்பத்துடன் நன்றாகவே உறவாடினார். அவரது மருமகள் சம்யுக்தா, எந்தவித விகல்பமும் இல்லாமல் பழகுவது அவருக்கு ராக்கியை நினைவுபடுத்தியது.

சம்யுக்தா வெளிநாட்டில் கணவன் குடும்பத்தினருடன் வசிப்பதால், அங்கே நந்திதாவை வருமாறு வற்புறுத்திக் கொண்டிருக்க, ஒருவாரு மனம் மாறி அடுத்த மாதம் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இங்கே சுக்லா மற்றும் மாயாவுக்கு வழக்கம் போல இயல்பாகி விட்டிருந்தது. நட்சத்திர ஹோட்டல், பப், கிளப் என தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன் வளைய வந்து கொண்டிருந்தாள் மாயா.

புதிதாக கட்டப்பட்டிருந்த நட்சத்திர விடுதியை பார்வையிட்டு விட்டு, சுக்லாவும் மாயாவும் வந்து கொண்டிருந்தனர். அன்று டிரைவர் செல்வம் விடுமுறை என்பதால்! மாயாவே கார் ஓட்டிக் கொண்டிருந்தால்! அப்போது சுக்லாவுக்கு அழைப்பு வர, எடுத்து பேசியவர். பிறகு, தான் வருவதாக கூறி அழைப்பை துண்டித்தார்.

"என்ன சுக்லா ஜி? யார் போனில்? " என்றாள்.

"ஒரு முக்கியமான ஆளை பார்க்கனும். ரொம்ப அவசரம். நீ நம்ம காரில் ஹோட்டல் போய் விடு. நான் ஏதாவது கார் புக் செய்து போகிறேன் " என்றார்.

"நீங்க எதற்கு தனியாக போகனும். நானும் வரேன் " என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம். பிறகு போகலாம் " என்றவர். " கார் புக் பண்ணு மாயா " என்றார்.

" வேண்டாம். நீங்க இந்த காரை எடுத்துட்டு போங்க. ஹோட்டல் பக்கம் தான். கார் புக் பண்ணி போகிறேன் " என்றவள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காரை ஓரமாக நிறுத்தினாள்.

"சரி. பத்திரமாக போ மாயா. என்ன விசயமென்று வந்து சொல்கிறேன்" என்றவர். காரை திருப்பி சென்று விட்டார்.

' என்ன அவசரமாக இருக்கும்!' என்று உள்ளுக்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. வந்ததும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டாள். போனில் டவரும் இல்லை. கார் எதுவும் புக் செய்ய முடியவில்லை. வெகு நேரம் ஆட்டோவுக்கு நின்றவள். கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஆட்டோ கிடைத்து ஒரு வழியாக ஹோட்டலை வந்தடைந்தாள்.

மாலையானதும் அடுத்தடுத்த நட்சத்திர ஹோட்டலின் மேற்பார்வை வேலைகள் ஆரம்பமாயின. வழக்கம் போல அங்கே இங்கே என்று சில பிரச்சனைகளை சரிசெய்து விட்டு வரும் போது நேரம் நள்ளிரவு இரண்டு மணி.

காலையிலிருந்து அலைச்சல் வேறு! தூக்கம் கண்களை சுழற்ற, தங்களது அறைக்கு சென்றாள். கதவு லாக் செய்யப்பட்டிருந்தது. 'தூக்கிட்டாரா?' என்று யோசித்தபடி தன் கையில் இருந்த கார்டின் மூலம் கதவை திறந்து உள்ளே சென்ற போது, கண்ணில் படுமாறு குறிப்பு காகிதம் இருந்தது. ' கிரவுண்ட் ப்ளோரில் இருக்கிறேன். உணவு ஆர்டர் செய்து சாப்பிடு. நண்பருடன் வருகிறேன் ' என்று!

உணவை ஆர்டர் செய்தவள். குளித்து விட்டு இளரோஜா நிற புடவை அணிந்து கொண்டாள். சில நேரம் சுக்லாவின் நலம் விரும்பிகள் வரும் போது, நண்பர் என்ற முறையில் அறிமுகப்படுத்துவது வழக்கம். அதற்காக கீழே செல்ல வேண்டி இருக்கலாம்!

ஆர்டர் செய்த உணவு வர, உணவை எடுத்துக் வைத்துக் கொண்டவள். சாப்பிட வாயருகே கொண்டு சென்ற போது, காலிங் பெல் இசைத்தது.

" சுக்லா " என்றபடி உணவை அப்படியே வைத்து விட்டு, ஓடிச் சென்று கதவை திறக்க, வெளியில் போலீசார் பெண் காவர்கள் உட்பட ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். புருவத்தை சுருக்கியவள்.

"என்ன வேணும் சார்? " என்றாள்.

"மேடம் எங்க கூட வர முடியுமா? ஒரு ஐடெண்டி பிகேசனுக்கு " என்றார் இன்ஸ்பெக்டர்.

"என்ன ஐடெண்டிபிகேசன்?" என்றாள்.

"நீங்க வாங்க நான் சொல்கிறேன்" என்றவர். அவளை மேலும் ஏதும் யோசிக்க விடாது, "சீக்கிரம் வாங்க மேடம் " என்று எதையும் யோசிக்க விடாது அழைத்து சென்றனர்.

போலிஸ் ஜீப்பில் ஏற, "சார் நீங்க போங்க. நான் காரில் வருகிறேன் " என்றதற்கு,

"மேடம் டைம் இல்லை. சீக்கிரம் வாங்க" என்று எதையும் யோசிக்க விடாமல் விசயத்தையும் சொல்லாமல்! அழைத்து சென்றனர்.

மாயாவுக்கு எதுவும் புரியவில்லை. சுக்லாவிடம் சொல்லலாம் என்றால்! இவர்கள் செய்த அவசரத்தில் போனை ரூமிலேயே வைத்து விட்டு வந்திருந்தாள். சரி, எதுவாக இருந்தாலும் சுக்லா பார்த்துக் கொள்வார்' என்று நினைத்து சாதாரணமாக இருந்தாள்.

போலீஸ் ஜீப் காலையில் சுக்லாவை இறக்கி விட்ட, இடத்திற்கு சற்று தூரமாக போய் நின்றது. ஆங்காங்கே போலீஸ் வண்டிகளும், ஆம்புலென்சும் நின்று கொண்டிருந்தன. என்ன? ஏது? என்று புரியாமல் அவர்களுடன் நடந்தபடி முன்னேறி செல்ல,

அங்கே நந்திதா தலையில் அடித்தபடி அழுது கொண்டிருந்தார். அருகில் ராக்கி, தேவ் , வேறு சிலரும் நின்று கொண்டிருந்தனர்.

'யாருக்கு என்னாச்சு?' என்று உள்ளம் படபடத்தபடியே நடக்க, அங்கே காலையில் சுக்லா வந்த கார், கவிழ்ந்து தலைக்குப்புற கிடந்தது. கார் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கு? சுக்லா எதில் வந்தார்? என்று யோசிக்க,

"மேடம். இது சுக்லா சார் கார் தானே?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஆமாம் சார் " என்றவளுக்கு குரல் உள்ளே போயிருந்தது. கார் ஓட்டும் போது ஏதும் ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டாரா? என்று யோசித்தபடியே பதிலளித்தாள்.

"இந்த கார யார் ஓட்டிட்டு வந்தது?" என்றார் அடுத்ததாக

"நான் தான்! " என்றாள் தயக்கமாக

இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் கண்கள் கூர்மையானது.

"கார் ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. நீங்க நல்லா ஹோட்டல் ரூமில் இருந்தீங்க! சுக்லா சார் எங்கே?" என்ற அடுத்த கேள்வியில் அவள் திகைக்க!

"எங்கிருந்தோ ஆவேசமாக வந்த நந்திதா. " பாவி பாவி நல்லாயிருப்பியா? நல்லாயிருப்பியா நீ. அவர என்ன டி பண்ண? இருக்காரா? இல்லை கொன்னுட்டியா?. எங்க வாழ்க்கையில் புகுந்து பணத்துக்காக எங்களை பிரிச்ச? இன்னும் வேண்டுமென்றாலும் கேளு நான் தரேன். அவர் எங்கே டி?" என்றவர். அவளுடைய இரு கன்னத்திலும் மாறி மாறி தனது கை வலிக்கும் மட்டும் அறைந்தார். போலீஸாரால் கூட தடுக்க முடியவில்லை.

நந்திதா அடித்த அடி கூட அவளுக்கு உறைக்கவில்லை. " இல்லை. சுக்லா ஜி ஹோட்டலுக்கு" என்ற போது, " சார் இங்கே ஒரு பாடி கிடக்குது " என்று ஒரு போலீசார் சொன்ன போது,

புதிய மொழியை கேட்டது போல, மாயா கண்களில் அலைபாய்தலுடன் நிற்க, நந்திதா இந்த செய்தியை கேட்டு அப்படியே மயங்கி விழ,

அவரை கீழே விழாமல், அடுத்த நொடி கைகளில் தாங்கியிருந்தான் விஜய சேனாதிபதி.

முதல் முறையாக நேருக்கு நேராக அவனை சந்திக்கின்றாள். அவன் கண்களில் தெரிவது என்ன?

"நந்திதா அத்தை படுற கஷ்டத்துக்கு, நீ பதில் சொல்லியே ஆகனும். சொல்ல வைப்பேன் " என்றவன். கண்ணசைக்க போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவளை கைது செய்து இழுத்து சென்றனர்.

மறுநாள் அனைத்து ஊடகத்திலும், தொழிலதிபர் சுக்லாவை கொலை செய்த குற்றத்திற்காக மாயா என்கிற பெண் கைது என்பது தலைப்பு செய்தியாக கொட்டை எழுத்துக்களில் வெளியானது.

என்ன நடக்கிறது? அப்போ ஹோட்டலில் குறிப்பு எழுதி வைத்தது யார்? சுக்லாவுக்கு என்னானது? அதற்கு மேல் மூளை யோசிக்கும் திறனை இழக்க, இறுகி போய் அமர்ந்திருந்தாள்.

சுக்லாவுக்கு என்னானது? மாயாவுக்கு இனி நரகம் என்னவென்பதை காண்பிக்க போகிறான் சேனா.தப்பிப்பாளா? அல்லது தவிப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 10
மாயா கைது செய்யப்பட்ட, பின்னரே நீதிபதியின் வீட்டிற்கு சென்று கைதுக்கான ஆணையை போலிஸார் பெற்றுக் கொண்டனர். இதை செய்யலாம் என்று நினைக்கும் முன்னரே, அங்கே காரியங்கள் நடந்து முடிந்து கொண்டிருந்தது. அங்கு கிடைத்த உடலை ஆம்புலன்சின் மூலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸார் முன்பு, மாயா அமர வைக்கப்பட்டிருந்தாள்.
"சொல்லுங்க? அன்றைக்கு என்ன நடந்தது? " என்றார் போலீஸ் அதிகாரி பாலா

எந்தவிதமான பதிலும் அவளிடமிருந்து வரவில்லை. வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

"சொல்லுங்க மாயா? இப்படி பதிலே சொல்லாமல் இன்னும் எத்தனை மணி நேரம் இருக்க போறீங்க? பதில் சொல்லுங்க. இல்லையென்றால் வர வைப்போம் " என்றார்.

அப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே!

" வாயை திறந்து பேசுங்க மாயா. அப்போது தான் உண்மை என்னென்னும் தெரியும்!. உங்க மேலே தவறு இல்லாமல் கூட இருக்கலாம். அதை நீங்க வாயை திறந்து பேசினால் மட்டும் மற்றவர்களுக்கும் புரியும் " என்று அவளை பேச வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

மாயாவுக்கு தான் சிக்க வைக்கப்பட்டிருப்பது புரிந்தாலும்! அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி, அவளது கருத்தில் பதியவில்லை. அவளுடைய நினைவுகள் முழுவதும் சுக்லாவுக்கு, என்ன ஆனது? என்பதிலேயே சிந்தனைகள் உழன்று கொண்டிருந்தது. இங்கே விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டிருப்பதை கண்களால் பார்த்தாலும், கருத்தில் துளியும் பதியவில்லை. சுய சிந்தனை இல்லாதவளை போலவே அமர்ந்திருந்தாள் மாயா!.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் அதிகாரி, " இவக்கிட்ட இப்படியெல்லாம் பேசினால் பதில் வராது சார். நாம விசாரிக்கிற மாதிரி விசாரிப்போம்" என்றார் கோபமாக.

அதற்கு மேல் அவருக்கும் பொறுமை இல்லை போலும், " சரி. விசாரிங்க. ஆனால் வெளியில் எந்த தடயமும் தெரியக் கூடாது " என்றபடி அவர், அந்த அறையை விட்டு வெளியே சென்று விட,

" இங்க பாரு! இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு , ஒழுங்கா உண்மையை சொல்லிடு! . இல்லை! போலீஸ் அடி எப்படி இருக்குமென்று காட்ட வேண்டியிருக்கும் " என்றார்.

அப்போதும் மாயா அப்படியே அமர்ந்திருக்க, அடுத்த நொடி அந்த அதிகாரியின் கை, இடியென மாயவின் கன்னத்தில் இறங்கியது. அடியின் தாக்கத்தில் நடப்புக்கு வந்தவள். அப்போது தான் அவரை புதிதாக பார்ப்பது போல பார்த்து வைத்தாள்.

"என்ன அப்பாவி மாதிரி பார்க்கிற? ஒழுங்கா உண்மையை சொல்லிடு. நாங்களாக கண்டுபிடித்தோம் என்றால்! உனக்கு தான் சேதாரம் ஜாஸ்தி " என்றார் கடுமையாக

" நீங்க எதை பற்றி கேட்குறீங்க? " என்றால் முதன் முறையாக வாயை திறந்து.

"பார்ரா! நாம எதை பற்றி கேட்குறோம் னு தெரியாதாம்! " என்று அருகில் நின்றிருந்த மற்றொரு பெண் காவலரிடம் கூறி, நக்கலடித்தவர்.

"நேற்று என்ன நடந்துச்சு? " என்றார் மீண்டும்.

" நானும் , சுக்லாஜியும் கன்ஸ்ட்ரெக்ஷன் வொர்க் நடக்கிற இடத்துக்கு போய்ட்டு வந்தோம். வரும்போது, சுக்லாஜிக்கு போன் வந்தது. அவர் உடனே, என்னை காரிலேயே ஹோட்டலுக்கு போய் விடு. நான் முக்கியமான ஆளை பார்த்து விட்டு வரேன்னு சொன்னார் "

" யாரிடம் பேசினார் னு தெரியுமா?"

"தெரியாது "

"நீங்க கேட்கலையா?"

"கேட்டதுக்கு வந்து சொல்றேன்னு சொன்னாங்க "

"உனக்கும் சுக்லா சாருக்கும் உள்ள ரிலேஷன் சிப் எப்படி? நீ அவரோட சின்ன வீடு னு சொல்றாங்க? உன்னை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாராமே? நீ கிலிச்ச கோட்டை கூட தாண்ட மாட்டாராமே?" என்றார்.

மாயா அதற்கு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.

" சுக்லா சார் சமீபத்தில் அவருடைய சொத்தை மகளுக்கு எழுதி வைத்திருக்கார். அது தெரியுமா?"

"தெரியாது " என்றாள் மறுப்பாக

"அவர் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தாரா? அது பற்றி எதாவது தெரியுமா?"

"அவரோட குடும்ப விசயங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதை பற்றி என்னிடம் எதுவும் பேசியதில்லை "

"எதுவுமே தெரியாதா?. அவருக்கு பொண்டாட்டி , மகள் இருப்பதாவது தெரியுமா? தெரியாதா?" என்றார் நக்கலாக

"தெரியும் " என்றாள் தயக்கமாக

" பொண்டாட்டி, மகள் இருக்கிறது தெரிந்தும். அவர் கூட நீ ஏன் தங்குற? நல்ல பணக்காரன் னா?" என்றார் காட்டமாக

அதற்கு அவள் பதிலளிக்கவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

"குடும்பத்தை கெடுக்கன்னு உன்னை மாதிரி கழிசடைங்க எங்கிருந்து தான் வர்றீங்களோ? இப்போ அதற்கு மேலாக கொலையும் செய்திருக்க!

"நான் எதுவும் செய்யலை. என்னை மாட்டி விட யாரோ டிரை பண்றாங்க" என்றாள் ஆதங்கமாக

"கொலை செய்து விட்டு, தப்பிக்க முயற்சி செய்யறதாக நாங்களும் சொல்லலாம் ல" என்றவர்.

"நான் கேட்பதற்கு சரியான பதிலை சொல்லு? சுக்லா சார், உன்னை தானே கார் எடுத்து போக சொன்னார். பிறகு எப்படி? அந்த காரில் அவர் இருந்தார்.

" நான் கார் புக் செய்து போய் கொள்கிறேன்னு சொன்னதால்! சுக்லா அதே காரில் போனார் ".

"சரி. அதன்பிறகு அவரிடம் நீங்க பேச முயற்சி செய்யலையா?"

"எனக்கு அங்கிருந்து ஆட்டோ கிடைக்க, ரொம்ப டைம் ஆகிடுச்சு. அதோடு, வந்தவுடனேயே ஹோட்டல் சூப்பர்வைசிங் வேலை இருந்ததால்! என்னால பேச முடியலை " என்றாள்.

"எப்போ திரும்ப வந்தீங்க? "

" லேட் நைட் ஆகிடுச்சு "

"அதுவரையும் அவரிடம் நீங்க பேச முயற்சிக்கவில்லையா?"

" இல்லை " என்றாள் மறுப்பாக

"நீ சொல்றதை யாராவது நம்புவாங்களா? அவசரமாக கிளம்பி போயிருக்கார்னு சொல்ற! நீ ஹோட்டலுக்கு வரவே நேரமியிடுச்சுன்னு சொல்ற? அப்போ வந்தவுடனேயே நீ போன் செய்திருக்கலாம். போன் செய்யலை.

இரண்டாவது, வேலைக்கு போய்ட்டேன்னு சொல்ற, வந்தவுடனேயே, சுக்லா சார் இன்னும் வரலைனு தெரிந்திருக்கும். ஏன்? இன்னும் வரலைனு அட்லீஸ்ட் போன் செய்தாவது கேட்டிருக்கலாம்! அப்படி எந்ந போனும் பேசியதாக தெரியலையே!" என்றார்.

மாயா எந்த பதிலும் சொல்லவில்லை.
 

Sirajunisha

Moderator
"நான் சொல்லவா? என்ன காரணம் னு " என்றவர். " சுக்லா தனது மகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பிடிக்கலை. அதோடு, நீ அவரோட மனைவியை விவாகரத்து செய்ய சொல்லி வற்புறுத்தி கொண்டே இருந்திருக்க! அவர் இதுவரைக்கும் சம்மதிக்கவில்லை. அந்த கோபம் வேறு சேர்ந்து கொள்ள!. எங்கே? இப்படியே விட்டால் சொத்தில் நமக்கு எதுவும் கிடைக்காதென்று நினைத்து, அவர தனியாக அழைத்து போய் கொலை செய்து விட்டு, இப்போ ஒன்றுமே தெரியாதது போல நாடகம் ஆடுற " என்றார்.

கண்ணை இறுக மூடி திறந்தாள். அவளால், இந்த போலீஸ் அதிகாரி பேசுவதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பல்லைக்கடித்துக் அமர்ந்திருந்தாள்.

அந்த அதிகாரி திரும்பிப் பார்க்க, அவரிடம் , எழுதப்பட்ட காகிதம் ஒன்று நீட்டப்பட்டது. அதை படித்து பார்த்தாள். சற்று முன் அவர் கூறிய விசயத்தை சில பல மசாலாக்களுடன் சேர்த்து எழுதப்பட்டிருந்தது.

" இதில் கையெழுத்து போடு "

"முடியாது " என்றாள் மறுப்பாக

"இப்பவே கையெழுத்து போட்டேனா? அடி மிச்சம். இல்லைனா சேதாரம் உனக்கு தான் " என்றார்.

அழுத்தமாக மறுப்பை தெரிவித்தாள்.

"ஒழுங்கா கையெழுத்து போடு. இல்லையென்றால் அடி வாங்கியே செத்திடுவ " என்றார் அவளுடைய தலையில் இருந்த முடியை கொத்தாக பிடித்து ஆட்டியபடி

வலித்தாலும்! அவர் கையொப்பம் இட மறுத்தாள்.

"என்ன டி? என்னிடமா உன்னுடைய திமிரை காட்ட ற ?" என்றவர். அடுத்த நிமிடம், நாற்காலி கால்களோடு, அவளது கால்கள் சேர்த்து கட்டப்பட்டன. கைகளை பின்னால் மடக்கி இழுத்து வைத்து, நாற்காலியோடு சேர்த்து கட்டினர். கட்டியதற்றே வலி உயிர் போனது.

"கடைசி வாய்ப்பு தரேன். கையெழுத்து போடப் போறியா? இல்லையா?"

"இல்லை " என்று மறுப்பாக தலையசைக்க!

அவளுடைய முடியை வலிக்க பிடித்துக் கொண்டவர். இரு கால் பாதங்களையும் தனது பூட்ஸ் காலால் அழுத்திக் கொண்டு, கைகளில் விரல்களுக்கிடையே முள்ளால் ஆன எதையோ கொடுத்து நெறிக்க,

"ஆஆஆ! " என அலறினால் மாயா. வலி தாங்கவே முடியவில்லை. இயலாமையில் கத்த, அவள் வாயில் துணியை வைத்து அடைத்தனர்.

வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டாள் மாயா. ஒரு கட்டத்தில் எதையுமே தாங்க முடியாமல், கையெழுத்து போடுவதாக சம்மதிக்க, அடுத்த நொடி அவள் முன் வாக்குமூலம் எழுதிய காதிதம் நீட்டப்பட்டது.

என்ன எழுதியிருக்கின்றது என்று, படிக்க கூட முடியவில்லை. கண்ணீர் பார்வையை மறைக்க, மயக்கம் வேறு கண்களை சுழற்ற ஆரம்பித்திருந்தது. பேனாவை அவள் முன் நீட்டி,

"ம்ம். இங்கே கையெழுத்து போடு "என்றனர் அதட்டலாக

கையெழுத்து போடுவதற்கு, பேனாவை அழுத்தி கூட பிடிக்க முடியவில்லை. விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சிரமப்பட்டு தனது கையொப்பமிட, அடுத்த நொடி அதை பறித்தவர்.

"பரவாயில்லை தப்பிச்சிட்ட ! இல்லை. சனி, ஞாயிறு இரண்டு நாளும் வைச்சு செய்திருப்போம் " என்றபடி, அங்கிருந்து நகர்ந்தவர். அதை தனது மேலதிகாரியிடம் கொடுத்து விட்டு,

சற்றே நகர்ந்து சென்று, மறைத்து வைத்திருந்த காமிராவை ஆப் செய்து விட்டு, யாருக்கோ அழைத்தார். மறுமுனையில் அழைப்பு இணைக்கப்பட,

"சார். பார்த்தீங்களா? அடி பின்னியாச்சு. அவளால இரண்டு நாளைக்கு கை, காலை கூட அசைக்க முடியாது" என்றார் பெருமையாக

அவ்வளவு நேரம் ஒரு பெண் பலவித சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை, சலனமே இல்லாமல் பார்த்தவனிடமிருந்து பாராட்டா கிடைக்கும்?

"ம்ம் " என்று விட்டு அழைப்பை துண்டித்தான். அந்த "ம்ம் க்கு என்ன பலன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

(இது என் கற்பனை மட்டுமே மக்களே. இது யாரையும் குறிப்பிடுவன அல்ல)

திங்கள் கிழமை கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது. குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், குற்றம் நடந்த இரண்டே நாட்களில் வழக்கு முடிவுக்கு வந்து விட்டது என அரைகுறையாக செய்திகளை சமூக வலைதளங்களிலும், சில தொலைக்காட்சிகளும் கூறிக் கொண்டிருந்தன.

மாயா, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாள். வரும்போது, அவளது கண்கள் அவசரமாக யாரையோ தேடி அலசியது . அவள் தேடுவது தெரிந்தே, அவளது கண்பார்வையில் படும் விதமாக வந்து நின்றார் டிரைவர் செல்வம். அவள் கேள்வியாக நோக்க, மறுப்பாக தலையசைத்தவர். எதுவோ சமிஞை செய்து விட்டு சென்றார்.

மாயா திடமாகவே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் கண்களால் அலசியதையோ, அதற்கான பதிலை செல்வம் சொல்லியதையோ கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கூட கவனிக்கவில்லை. அப்படியே கவனித்தாலும், ஒருவர் கூட அதை உணர்ந்திருக்க முடியாது.

நீதிபதியின் முன், மாயா கூண்டில் ஏற்றப்பட்டாள். போலீஸ் தரப்பில் ,
"மாயாவே, சுக்லாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு, வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், மேலும் சில தகவல்களை பெற போலீஸார் விசாரிக்க பதினைந்து நாட்கள் தருமாறு அனுமதி கோரினர்.

நீதிபதி, மாயாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பினர். " மாயாவதி, நீங்க தான் சுக்லாவை கொலை செய்ததாக ஒப்புக் கொள்றீங்களா?" என்றார்.

"இல்லை " என்றாள்.

"அப்போ நீங்க கொடுத்த வாக்குமூலம்?"

"நாற்காலியில் உட்கார வைச்சு, அதில் கையை காலயும் சேர்த்து வைச்சு கட்டி, வாயில துணியை வைச்சு அடைச்சு, சொல்ல முடியாத சித்ரவதை பண்ணிணால்! யாராக இருந்தாலும், நீட்டின பேப்பரில் எல்லாம் கையெழுத்து போடுவாங்க " என்றாள்.

" என்ன இதெல்லாம்? கொடுமை பண்ணி கையெழுத்து வாங்கி இருக்கீங்க? விசாரிக்க தான் உங்களுக்கு அனுமதியே தவிர, கொடுமை படுத்த யார் அனுமதி கொடுத்தது?" என்றார் நீதிபதி கடுமையாக

"யுவர் ஆனர். இவங்க கூட தான் சுக்லா இருந்திருக்கார் " என்று எதிர் தரப்பினர் கூற,

இடையிட்ட மாயா, " சுக்லா தான் இறந்தார் னு உங்களுக்கு கன்பார்மா தெரியுமா?" என்றாள் கேள்வியாக

அந்த இடமே பரபரப்பானது. " சுக்லா தான்னு உறுதிபடுத்தியது யாரு? " என்று நீதிபதி அடுத்த கேள்வியை கேட்க,

எதிர்தரப்பரப்பு வக்கீல் போலீஸாரை பார்க்க, " அன்று பாடி கிடைத்தவுடனே நந்திதா, மாயாவை பார்த்து திட்டியது. அவர கொன்னுட்டியா? னு கூறி மயங்கிய விழுந்ததை பற்றி கூற,

" எனக்கு அதெல்லாம் தேவையில்லை. சுக்லாவுடைய பாடி தான்னு கன்பார்ம் பண்ணீங்களா?" என்றார் நீதிபதி.

"இன்னும் இல்லை யுவர். ஆனர்" என்றதும்

"கோர்ட் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க? யாரு இறந்தார் கூட உறுதிசெய்யாமல், எப்படி? இன்னாரை தான் இவர் கொன்றார் னு வாக்குமூலம் வாங்கியிருக்கீங்க. நீங்களெல்லாம் எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க? ஆரம்ப விசாரணை பற்றி கூட தெரியாதா?" என்றார் எரிச்சலாக

"சுக்லாவுடைய மனைவி மயங்கி விழுந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்க. அதிர்ச்சியில் மயக்க நிலையிலேயே இருக்காங்க "

அடுத்து, அவங்க குடும்பத்தில் யாரையாவது பார்க்க சொல்லலாம் என்றால்! உடல் ஊறிபோயிருக்கு " என்றனர் எதிர்தரப்பினர்.

"அப்போ டி. என்.ஏ ஸேம்பில் எடுங்க? டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்திருக்கிற இந்த காலத்தில் இன்னுமும் அடையாளம் காட்ட ஆள் தேடிட்டு இருக்கீங்க? " என்றார் நீதிபதி.

போலீஸார், இறந்தவரை யார் என்பதை உறுதி செய்ய கால அவகாசம் கோரினர். அதோடு, மாயாவை விசாரிக்கவும் சேர்த்து அனுமதி கோர,

"குற்றம் நடந்ததாக உறுதியாக தெரியாமல், ஒருவரை குற்றம் செய்தவராக விசாரணைக்கு எப்படி உட்படுத்த முடியம்?" என்ற நீதிபதியின் கேள்விக்கு

"மாயா வெளியில் இருந்தால் , ஆதாரங்களை அழிக்க முற்படுவார் " என்று எவ்வளவோ எடுத்து கூறியும்! நீதிபதி அனுமதியளிக்க மறுத்து விட்டார்.
இறந்தவர் யார்? என்று தெரிந்த பிறகே, மேற்கொண்டு அனுமதியளிக்க முடியும் என்றும்! மாயாவிடமும், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறி, மாயாவை விடுவித்தார்.

(கோர்ட் ப்ரொசீஜரூல்லாம் தெரியாது மக்களே. விசாரணை பற்றியும் தெரியாது. பிழையிருந்தால் மன்னிச்சு)

மாயா, கோர்டிலிருந்து வெளியே வர, அதற்குள் பத்திரிக்கை துறையினர் சூழ முயன்றனர். அதற்குள், அவளுடைய விசுவாசிகளான மாரியும் அவன் ஆட்களும் சூழ்ந்து கொண்டு, அவளை பத்திரமாக காரில் ஏற்றி விட, மாரி மட்டும் உடன் ஏறிக் கொண்டான்.
 

Sirajunisha

Moderator
சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. முதலில் மாயா தான் பேச்சை ஆரம்பித்தாள். "அது நம்ம சுக்லா ஜி இல்லை தானே செல்வம்?" என்றாள் கலகலக்கமாக

"இல்லை மா. அங்கு கிடைத்த பாடிக்கும் நம்ம ஐயாவுக்கும் சம்மந்தமே இல்லை" என்றார் திடமாக

"நானும் பார்த்தேன் மா. வேணுமென்றே ஏதோ ஒரு பிணத்தை காமிச்சு, ஐயா னு ஒரு நம்பவைச்சு நாடகமாடி உங்களை அரெஸ்ட் பண்ண வைச்சிருக்காங்க" என்றான் மாரியும் ஆதங்கமாக

"சுக்லாஜி எங்கே போனார்? அவர் எங்கே இருக்காருன்னு ஒரு விவரமும் தெரியலை. கார் மட்டும் ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கு. பக்கத்தில் எதுவும் ஹாஸ்பிட்டலில் விசாரிச்சீங்களா? யாராவது புதுசா அட்மிட் ஆகியிருக்காங்களான்னு. சுக்லாஜியுடைய போன வைச்சு, எதுவும் ட்ராக் பண்ண முடிஞ்சுதா" என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.

"ஐயாவையும் ஒரு பக்கம் தேடிட்டு தான்மா இருக்கோம். இதில் உங்களை எங்கே கொண்டு போனாங்க என்கிற தகவலே எங்களுக்கு கிடைக்கலை. இரண்டு பேரும் இல்லாமல் கண்ணை கட்டி, காட்டுல விட்டது போல! ஆயிடுச்சு மா. இனி நீங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க. செய்திடலாம்" என்றான் மாரி நம்பிக்கையுடன்.

மாரியிடம், செய்ய வேண்டியதை பற்றியும், யாரை சென்று பார்க்க வேண்டும். எங்கே தகவல் பெற வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கூறினாள்.

"ஹோட்டலுக்கு போகவா மா?" என்றார் செல்வம்.

" முதலில் நான் குளிச்சு டிரஸ் மாத்தனும். கெஸ்ட்ஹவுஸ் போங்க" என்றாள்.

கார் நேராக , மாயா சொன்ன வீட்டின் முன் வந்து நின்றது. அது ஹெஸ்ட் ஹவுஸ் என்று பெயர் மட்டுமே. அது நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவாக காட்சியளித்தன. காரிலிருந்து இறங்கி உள்ளே சென்று விட்டாள். மாரி, மாயா சொன்ன வேலைகளை செய்ய சொல்லி, தனது நம்பிக்கையான ஆட்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

அரைமணி நேரத்தில், மாயா வெளியே வந்தாள். வெள்ளை நிற முழுக்கை சட்டை, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த அவளது முன்னழகை ,எடுப்பாக எடுத்து காட்டியது. கரு நீல நிற ஜீன்ஸ், அவளது நீண்ட கால்களுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. முன்னுச்சி முடியை பஃப் வைத்து ஹேர்பின் குத்தியிருந்தவள். பின்னால் எல்லாம் முடியையும் சேர்த்து, அழகாக போனிடைல் போட்டிருந்தாள்.

பளிச்சென்ற முகம், கண்இமைமுடிகள் நீண்டு, கடைக்கண் பார்வைக்கு ஏங்க வைக்கும்! கண்ணுக்கே தெரியாத அளவு, வைரக்கல் பதித்து சிறு தோடு, , கழுத்தில் சிறு செயின் வலது கையில் தங்க பிரேஸ்லெட், இடது கையில் கைகடிகாரம், காலில் வெள்ளை நிற லேடீஸ் ஷூ அணிந்து வெளியே வந்தவளை கண்டு, செல்வத்துக்கும் மாரிக்கும் முகம் பளிச்சிட்டது.

"நாம போகலாம் " என்று காரில் ஏறிக் கொண்டாள்.

"இந்த இரண்டு நாளில் ஹோட்டலை யார் கவனிச்சுக்கிறாங்க? புரொவிசன்ஸ், மெயிண்டென்ஸ் பற்றி எல்லாம் யார் பார்த்துக்கிறாங்க?" என்றாள்.

"நந்திதா அம்மாவுடைய அண்ணன் சேதுபதியும் அவங்க பையனும் மா" என்றார் செல்வம்.

"நந்திதா எங்கே? இன்னுமா அந்த அம்மா ஹாஸ்பிட்டலில் படுத்து கெடக்கு?" என்றாள் நக்கலாக

"அன்றைக்கு, பாடின்னு சொன்னதுமே சுக்லா ஐயானு நினைச்சு மயங்கி விழுந்தவங்க தான்! இன்னும் எழும்பலை " என்றான் மாரி தகவலாக

"அன்றைக்கு நந்திதா அப்படி ரியாக்ட் பண்ணலைனா! பிரச்சனையே வந்திருக்காது. சுக்லாஜி னு அவங்களா முடிவு பண்ணி, ஓவர் ரியாக்ட் செய்ததில், என்னாலையுமே எதையும் யோசிக்க முடியலை" என்றாள் எரிச்சலாக

"அவங்க புருஷன்னு நினைச்சு பயந்துட்டாங்க மா " என்றான் மாரி

"ஆமாமாம் பயந்திருப்பாங்க. வாஸ்தவம் தான் " என்றாள் நக்கலாக

"சரி, மயங்கி விழுந்த தங்கச்சியை பார்க்காமல், அவங்க அண்ணன் இங்கே என்ன பண்றாரு?"

"அவர் மட்டுமா? வக்கீல் செழியனும் அவங்க கூட சேர்ந்து ஆடறார் மா. ராக்கிமா சொல்லவே வேணாம். எல்லாத்துக்கும் மேல அந்த 'சேனா' !.ஹப்பா ! பேசவே மாட்றார் மா. ஆனால் ஒரு விசயத்தை முடிக்கிறதில் ரொம்பவும் கெட்டி. கேள்விப்பட்ட வரை, உங்களுக்கு எதிராக அவர் தான் நிற்பார்னு நினைக்கிறேன். கவனம் மா . விசாரித்தவரை ஆண், பெண்ணுன்னு பாரபட்சமெல்லாம் பார்க்க மாட்டாராம். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தானாம். அது பேச்சா இருந்தாலும், வீச்சா இருந்தாலும்! ஐயா வரும்வரை நீங்க கவனமா இருக்கனும் " என்றான் மாரியும்

ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டவள். "இன்னைக்கு ஈவினிங் ஏழு மணிக்கு கமிஷனரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிடு. பர்சனலா பேசனும் சொல்லு" என்றாள்.

"சரி " என்று தலையாட்டிக் கொண்டான் மாரியும். கார், சரியாக நட்சத்திர விடுதியில் வந்து நின்றது. இதற்கு முன் எதுவுமே நடக்காதது போல, சாதாரணமாக உள்ளே நுழைந்தாள் மாயா.

சிலர் அதிர்ச்சியில் நிற்க, பலர் பழக்கத்தில், குட் மார்னிங்கும், வணக்கமும் மாறி மாறி வைத்தனர். அனைத்தையும் சிறு தலையசைப்போடு ஏற்றபடி நடந்து வந்தாள். அவளது வழக்கமான பணியான மேற்பார்வையிட்டபடி, சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்த படி மேனேஜர் அறைக்கு செல்ல,

அங்கே அவர் இல்லை. விசாரித்த போது, மீட்டிங் நடப்பதாக தகவல் வர, கோபத்தை அடக்கியபடி வேகமாக மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றாள்.

மீட்டிங் நடக்கும் அறையின் உள்ளே செல்ல , அங்கே இருபுறமும் வரிசையாக ஹோட்டலின் ,ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ள நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். இருபுறமும் பார்த்தபடி நடுநாயகமாக ராக்கி அமர்ந்திருக்க, அவள் கணவன் தேவ் இடது பக்கமும், செழியன் இடது பக்கமும் அமர்ந்திருந்தார்.

சேதுபதி பேசிக் கொண்டிருந்தார். இனிமே, இந்த நிர்வாகத்தை ராக்கி தான் சுக்லாவுடைய இடத்தில் இருந்து கவனித்து கொள்வார். நந்திதா குணமாகி வந்த பிறகு, அவரும் இதில் பங்கெடுத்து கொள்வார். சுக்லாவுக்கு கொடுத்த ஆதரவை, அவருடைய மகளுக்கும் நீங்க கொடுக்கனும். செழியன், எப்போதும் போல சட்ட ஆலோசகராக இருப்பார் " என்று சேதுபதி சொல்லி முடிக்கும் போது, மாயா உள்ளே நுழைந்தாள்.

 

Sirajunisha

Moderator
மாயாவை கண்டதும், அனிச்சையாக அனைவரும் எழுந்து விட்டனர். "குட் மார்னிங் " என்று சிலர் கூற!

கையிலிருந்த கடிகாரத்தை ஒரு முறை பார்த்தவள். "குட் ஆப்டர் நூன் டூ ஆல்" என்றவள்.

"கிட்சனுக்கான ப்ரொவிசன் மேனேஜர் மிஸ்டர். சுதாகர். எங்கே?" என்றாள் கண்முன்னே நின்று கொண்டிருந்த சுதாகரை காணாதது போல,

"மேடம் " என்றார். பயந்து போய். புரொவிசன் நிறைய குறையதா கம்ப்ளைன் வந்திருக்கு, போய் என்னென்னு பாருங்க! இல்லை. உங்க சம்பளத்தில் பிடிக்க வேண்டியிருக்கும் " என்றதும். அடுத்து ஏன்? அவர் அங்கே நிற்கிறார்!.

மற்றவர்களிடம், "உங்களுக்கெல்லாம் தனியாக சொல்லனுமா?" என்றதும்.

சிலர் தயங்க, சிலர் நகர, "ஒரு நிமிஷம் " என்றார் சேதுபதி.

அனைவரது கவனமும் அவர் பக்கம் திரும்ப, " சுக்லாவுடைய பொண்ணுக்கு உள்ள உரிமையும் அதிகாரத்தை விட, வேறு யாருக்கும் இங்கே எந்த அதிகாரமும் இல்லை. உன்னையும் சேர்த்து " என்றார் திடமாக

"ஆஹான்! அப்படியா? ராக்கிக்கு சேர வேண்டியதை சுக்லாஜி அப்பவே எழுதி கொடுத்துட்டாரே? என்ன? செழியன் சார் இன்னும் சொல்லலையா? " என்றவள்.

அருகில் நின்றிருந்த தேவ்விடம், "என்ன தேவ் சார். மருமகனுக்கு ஆசை இருக்கலாம். பேராசை இருக்க கூடாது. மாமனாருக்கு என்னாச்சுன்னு கவலை இல்லாமல், சொத்துக்கு அதிகாரம் பண்ண மனைவியோட வந்துட்டீங்க? இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை" என்றாள் பொய்யாக வருத்தப்பட்டு

ராக்கியை முறைத்தவன். வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். தேவ் வெளியேறிய அடுத்த நிமிடம், சேனா உள்ளே வந்திருந்தான்.

மாயா, அனைவரிடமும் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னே கதவோரத்தில் நின்று கொண்டிருந்தவன்.
"அவங்க உரிமையை சொல்வது இருக்கட்டும்!. உங்களுக்கு இங்கே என்ன இருக்கு மாயாவதி?" என்ற கம்பீர குரலில் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

நெடுநெடுவென ,கழுத்து வரை முடி வளர்த்து, அதை கோனல் வாக்கெடுத்து அழகாக சீவி, குத்தீட்டும் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் சேனா என்று அழைக்கப்படும் விஜய சேனாதிபதி.

"வேறேன்ன சுக்லாவுடைய செட்டப்பு என்கிற உரிமையை நிலைநாட்ட வந்திருப்பாங்க!" என்று வாயை விட்டார் செழியன்.

"அப்போ நீங்க யாரோட செட்டப்பு மிஸ்டர். செழியன்?. நீங்களா வந்து எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்கிறீங்க?" என்றாள் நக்கலாக

"மாயா, வார்த்தையை அளந்து பேசு" என்றார் செழியன்.

"இன்றைக்கு ஸ்கேல் எடுத்துட்டு வரலை. இன்னொரு நாள் அளந்துக்கலாம் " என்றவள்.

"அண்ட் எல்லாருக்கும் சொல்லிக்கிறேன். என்னை கேள்வி கேட்கிற அதிகாரம் இங்கே யாருக்கும் இல்லை. நந்திதாவுடைய சொந்தமென்றால் அவரோட வைச்சுக்கனும், என்னிடம் வரக் கூடாது." என்றவள்.

"சுக்லா ஜி, எந்த முடிவெடுப்பதற்கும் எனக்கான பவர அல்ரெடி கொடுத்திருக்கார். அதன்படி தான் இங்கே எல்லாம் இத்தனை நாளா நடந்து கொண்டிருக்கு! இதை வேறு எந்த கொம்பனும் மாற்ற முடியாது " என்றதும். அடுத்த நிமிடம் தயங்கிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியேறி விட்டனர்.

வாயிலை நோக்கி நடந்தவள். சேனாவை கடந்து செல்லும் போது, "வந்துட்டானுங்க, அதிகாரம் பண்ற நீ யாருன்னு கேட்டுக்கிட்டு " என்று அவன் காதுபடவே முணுமுணுத்து விட்டு சென்றாள்.

சுக்லாவுக்கு என்ன ஆனது என்ற பதட்டமோ? கவலையோ இல்லாமல்! இப்படி சொத்துக்கு உரிமை தேடுபவர்களை கொல்லும் வெறியே வந்தது. ஆனால் பேச கூடாதவனிடம் வார்த்தையை விட்டு விட்டாள்.

சேனாவின் பேச்சை விட, மௌனம் ஆபத்தானது. வேட்டை மிருகங்கள் இரண்டுமே! ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஆட்டம் கலைகட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

அடுத்த பதிவு செவ்வாய்க்கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 11
மாயா வெளியேறி விட, "பார்த்தீங்களா சேது சார்! எப்படி பேசிட்டு போறான்னு?" என்று குமுறினார் செழியன்.

"தேவையில்லாமல் வார்த்தையை விட்டது நீங்க தான் செழியன். சேனா, கேள்வி கேட்டபோது, இடையில் எதற்கு பேசி நக்கலடிக்கிறீங்க? இப்போ அதையே உங்களுக்கு திருப்பி விட்டுட்டு எஸ்கேப்பாயிட்டாள். இரண்டு பேர் பேசும் போது குறுக்கே பேசக் கூடாதுன்னு பேசிக் மேனர்ஸ் தெரியாத ஆள நீங்க?

இல்லை! இது கோர்ட்ன்னு நினைச்சு குறுக்கு கேள்வி கேட்டீங்களா?" என்றார் சேது கோபமாக

"ஐ அம் ரியலி சாரி சார். போலீஸுக்கு போயும், கொஞ்ச கூட பயமோ! பதட்டமோ! உறுத்தலோ இல்லாமல் வந்து நின்றதை பார்த்ததும் கொஞ்சம் டென்சனாகிட்டேன்" என்றார் தன்னிலை விளக்கமாக

"இப்போ என்ன மாமா பண்றது? தேவையில்லாமல் தேவ்வை வேற, மாமனார் சொத்துக்கு ஆசைப்பட்டு வந்து நிற்கிறீங்களேன்னு கேட்டுட்டாங்க. அவர் கோவமாக போறார். வரலைனு சொன்னவரை நான் தான் கட்டாயப்படுத்தி, நீங்க சொன்னீங்கன்னு அழைச்சிட்டு வந்தேன். இப்போ, என்ன சொல்வாங்களோ! " என்றாள் சேதுபதியை பார்த்தபடி

ராக்கிக்கு, சேனாவை பார்த்தாலே பயமாக இருந்தது. வசீகரிக்கும் ஆணழகன் தான்!. ஆனால் அதையும் தாண்டி, ராஜாவை போல அவனது தீட்சண்யமான பார்வையும், கம்பீரமான தோற்றமும்! அவளை குடிமகளை போலவே பயபக்தியுடன் அவன் முன் நிற்க வைக்கிறது என்றால்!

இந்த மாயா, வெகு அலட்சியமாக அவனது கேள்விக்கு நக்கலடித்து பேசி சென்றதை பார்த்த விட்டு, என்ன மாதிரி ஆளுடா இவ! என்று திகைக்காமல் இருக்க முடியவில்லை.

"அத்தை எப்போ டிஸ்சார்ஜ் ஆகுறாங்க?" என்றான் ராக்கியிடம்.

அவனது கேள்வியில் நடப்புக்கு வந்தவள். "நாளைக்கு, நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறாங்க " என்றாள் அவசரமாக

"டிஸ்சார்ஜ் ஆனதும் அத்தையை, மாமா இருந்த ரூமிலேயே தங்க வைங்க " என்றான் சேனா

"அம்மா, இதற்கு ஒத்துக்க மாட்டாங்க மாமா. அதோடு, அப்பாவும் மாயாவும் தங்கிய அறையில் இப்போ அம்மா போய் பார்த்தாலே அவங்களுக்கு திரும்ப நெஞ்சுவலி வந்திடும் " என்றாள் ஆதங்கமாக

"இழந்ததை திரும்ப பெறனுமென்றால்! சில விசயங்களை நாம செய்து தான் ஆகனும் ராக்கி. சொன்னதை மட்டும் செய் " என்றவன். " பார்த்துக்கோங்க பா " என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

சேனா சென்ற பிறகு, " என்ன மாமா இப்படி சொல்றாங்க? அம்மா எப்படி இதற்கு ஒத்துப்பாங்க. அதோடு, அப்பாவுக்கு என்னாச்சுன்னு நான் தெரிஞ்சுக்காமல், இப்படி சொத்துக்காக உரிமை போராட்டம் நடத்துறது சரியா?" என்றாள்

"சுக்லாவுக்கு என்னாச்சுன்னு நமக்கும் தெரியலையே மா. நந்திதா மயங்கி விழுந்த, நினைவே இல்லாமல் கிடந்ததில், யார் தான் யோசிக்க முடிந்தது.

சேனா, உங்க அப்பா விசயத்தை பார்த்துப்பான் மா. நீ கவலைப்படாதே. எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டான் . அவன் சொன்னபடி நடந்து கொண்டாலே போதும்" என்றார் சேதுபதி அவளை தேற்றும் விதமாக

" சுக்லா சீக்கிரமே கிடைக்க, எல்லா முயற்சியும் செய்து கொண்டு தானே இருக்காங்க ராக்கி. நீ கவலைப்படாதே மா. சீக்கிரமே கிடைத்துடுவார்" என்றார் செழியன்.

"அப்பாவுக்கு என்னவாகியிருக்கும் மாமா? ஏன் அப்பாவை நாம ட்ரேஸ் பண்ண முடியலை. அப்பாவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது தானே?" என்றாள் கவலையாக

"சுக்லா கூட கடைசியாக இருந்தது மாயா தான். அவளுக்கு தான் என்னாச்சுன்னு தெரியும். ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி தப்பிச்சிட்டாள். அந்த தைரியம் தான் இங்கே வந்து கேள்வி கேட்கிறதும் " என்ற சேது.

" சீக்கிரமே சுக்லாவை கண்டுபிடிச்சிடலாம் மா. அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. சமூகத்தில் பெரிய புள்ளி. போலீஸூம் அலெட்சியமாக விட மாட்டாங்க " என்று நிதர்சனத்தையும் எடுத்து கூறினார்.

ஒருவாறு சமாதானமாக அங்கிருந்து, நந்திதாவை பார்க்க கிளம்பினாள்.

மாயாவுக்கு அன்றைய நாள் முழுவதுமே வேலைபளு அதிகமாக இருந்தது. என்னதான் வேலையில் மூழ்கினாலும், சுக்லாவுடைய நினைவு மனதை அரித்துக் கொண்டே இருந்தது. இடையிடையே மாரி போன் செய்து, கமிஷனரின் அப்பாய்மெண்டை உறுதி செய்து கொண்டாள்.
 

Sirajunisha

Moderator
அன்று மாலை கமிஷனரை சந்தித்து, அன்று நடந்ததை பற்றி கூறினாள். அதோடு, அன்று வந்த காகித குறிப்பை எடுத்து வந்தும் கமிஷனரிடம் காட்டினாள்.
"சுக்லா ஜி வந்து விட்டார் னு நினைச்சு தான் சார். நான் கால் கூட பண்ணலை. போலீஸ் கூப்பிடும் போது கூட, வேற ஏதோ காரணமென்று நினைச்சு தான் வந்தேன். கார் ஆக்ஸிடெண்ட் ஆகி கிடந்ததை பார்த்து, சுக்லா யாரிடமாவது கார் கொடுத்திருந்தாரான்னு தான் யோசித்தேன் " என்றவள்.

அவர் ஆக்ஸிடெண்ட் செய்து விட்டாரோ? என்று நினைத்ததை மறைத்து விட்டாள். ஏனென்றால் பின்னாளில் அவருக்கே அது பாதகமாக அமையலாம் என்று!

சுக்லா, இறக்கி விட்ட இடத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டவர். அவருக்கு வந்த போன் கால் பற்றி எதுவும் தெரியுமா? " என்றார்.

"இல்லை சார். கேட்டதற்கு வந்து சொல்றேன்னு சொன்னார்"

"உங்களுக்கு எதும் யூகம் இருக்கா? யார் போன் செய்திருப்பாங்கன்று?"

"இல்லை சார்"

"எதிரிகள் பற்றி விவரம் ஏதும்! யார் மேலாவது சந்தேகம் இருக்கா?"

"யார் நல்லவங்க கெட்டவங்கன்னு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது சார். பிஸ்னஸில் எப்போதும் எதிரிகள் இருக்கத்தானே செய்யறாங்க. இத்தனை வருசமும் " என்றவள். மேலும் சில விவரங்களை தெரிந்த வரை கூறிவிட்டு, விரைவில் கண்டு பிடித்து தருமாறு கோரிக்கையும் வைத்து விட்டு வந்தாள்.

திரும்ப வந்து, மீண்டும் மற்ற கம்பெனி வேலைகளை நாளை வந்து பார்ப்பதாக போனிலேயே விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு இரவு அறைக்கு வர, அதிகாலை மணி 4 ஆனது.

சுக்லா இல்லாத வெறுமையான அறை தான் அவளை வரவேற்றது. சோர்வு, களைப்பு, பசியோடு தூக்கமா?மயக்கமா என பிரித்தறியா நிலையில் அப்படியே உறங்கி போனாள்.

மறுநாள் காலை, வழக்கமான நேரத்தில் விழிப்பு வர, கைகள் தன்னிச்சையாக அருகே சுக்லாவை தேடின. வெறுமையான படுக்கையே இருந்தது. நடப்பை மறந்தவளாக, " சுக்லா ஜி " என்றழைத்தாள்.

பதில் இல்லை. அதன் பிறகே, சுற்றுப்புறம் உரைக்க, சுக்லா இல்லாததன் நிதர்சனம் புரிய, பெருமூச்சு விட்டவள்ள் மெல்ல எழுந்து, அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

குளித்து, இளரோஜா நிற ப்ளைன் ச்சேரி அணிந்தவள். வழக்கம் போல, அதே நிற கிளிப், கையில்லா ரவிக்கை, இளரோஜா நிற கல்பதித்த புடவை, அதே நிற செறுப்பு அணிந்து தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வெளியே வர,

மாரி அவளுடன் இணைந்து கொண்டான். " மாரி, புட் பேக்ட்ரிக்கு போகனும். செல்வத்திடம் சொல்லி வர சொல்லு " என்றதும்.

"கார் தயாராக தான் மா இருக்கு. நாம போகலாம் " என்ற போது, கார் பார்க்கிங்க்கு வந்து விட்டாள். இப்போது சுக்லா பார்த்திருந்த வேலைகளை மாயா பார்க்க வேண்டிய கட்டாயம்.

மாயாவுக்கு கிளம்பும் போதே, நெருடல் இருந்து கொண்டே இருந்தது. தான் சொல்வதை ஊழியர்கள் ஏற்று செய்வார்களா? சுக்லா தொழில் ஜாம்பவான். என்ன செய்தால்? எங்கே காரியம் நடக்கும்? என்ற நுணுக்கம் அவருக்கு தெரியும். அருகிலிருந்து அனைத்தையும் பார்த்து தெரிந்திருந்தாலும், இப்போது தொழிலில் தன்னுடைய தலையீடை ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசனை வேறு ஓடிக் கொண்டிருந்தது.

இதில் நந்திதாவின் அண்ணன் குடும்பம் வேறு! என்று எரிச்சலாக இருந்தது. இத்தனை நாள் எங்கிருந்தானுங்க? சுக்லா இல்லையென்றதும், தங்கச்சி, சொத்தை னு உறவு கொண்டாடிட்டு வரானுங்க' என்று மனதில் அவர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கார் புட் பேக்ட்ரியை வந்தடைந்தது. காரிலிருந்து இறங்கியவள். தொழிற்சாலையின் உள்ளே நுழைய, அதன் மேனேஜர், மாயாவை கண்டதும், வேகமாக அருகே வந்து வரவேற்றார்.

பொதுவான விவரங்களை கேட்டபடியே, பேக்ட்ரிக்குள் நுழைந்தாள். அவள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. சுக்லாவுக்கு கொடுத்த மரியாதையை மாயாவுக்கு கொடுத்தனர். ஓரளவு திருப்தியாகவே இருந்தது.

தினமும் நடக்கும் வரவு செலவுகள் பற்றி தனக்கு உடனே தெரிவிக்கப்பட வேண்டும் என்றவள். சிசிடிவியில் வேலை நடக்கும் விதத்தை அவ்வப்போது கவனிப்பேன். என்ன தேவையென்றாலும் , சந்தேகமிருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க " என்று விட்டு

மேலும் அங்கேயே மதியம் வரை இருந்து விட்டே அங்கிருந்து கிளம்பினாள். அதோடு, தினமும் எந்த நேரத்துக்கு வேண்டுமானாலும் வருவேன் என்று அறிவுறுத்தவும் மறக்கவில்லை.

மேலும் சில கம்பெனிகளுக்கு சென்று, நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டு விட்டு, மாரி வாங்கி தந்த உணவை சாப்பிட்டு முடித்து மீண்டும் அவள் ஹோட்டலுக்கு வந்தபோது மணி ஆறு.

சற்று நேர ஓய்வு, அப்போதே சுக்லாவை பற்றி தகவல் ஏதும் கிடைத்ததா? என்று விசாரித்தவள். ரிப்ரெஷ் செய்து கொண்டு, வேறு புடவையை மாற்றிக் கொண்டு மிதமான அலங்காரத்துடன் வழக்கமான வேலைக்கான ஹோட்டலை மேற்பார்வையிட கிளம்பி விட்டாள்.

வார இறுதி நாட்கள் இல்லாததால்,பப்பில் சற்றே கூட்டம் குறைவே. அதை ஈடுக்கட்டும் விதமாக, ஹோட்டலில் பெரிய மனிதர்களின் மீட்டிங், பார்ட்டி, பிசினஸ் டீலிங் என அறைகள் புக்காகி கொண்டிருந்தது. அனைத்தையும் சரிபார்த்து, வேறு எதுவும் வேண்டுமா? என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வளைய வந்தவள். அனைத்தும் முடிய நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அறைக்கு திரும்பினாள்.

கார்டை உரசி, கதவை திறந்தவள். அங்கிருந்த போனிலேயே உணவை ஆர்டர் செய்து விட்டு, தனக்கும் சுக்லாவுக்குமான அறையில் உள்ள பாத்ரூமிற்கு குளிக்கச் சென்றாள்.

மாயா குளித்து விட்டு வந்த போது, அறைக்கான காலிங்பெல் அடித்தது. டவலுடன் குளியலறையிலிருந்து வந்திருந்தவள். அதை கழற்றி, மாற்றாக ஈரத்தை உறியும், கோட் போல், தொடைக்கு மேல் வரை மட்டுமே அணிந்த கவுனுடன் கதவை திறந்தாள்.

கையில் செல்போனை குனிந்து பார்த்தபடி, எதிரே சேனா நின்றிருந்தான். புருவ சுழிப்புடன் அவள் ஏறிட ,

" வா சேனா" என்ற குரல் அவள் முதுகுக்கு பின்னிருந்து கேட்டது. ' யாரது?. அறைக்குள் என்று தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, நந்திதா நின்றிருந்தார். மாயா, அவரையே யோசனையாக பார்ப்பதை கண்டு, " உள்ளே வா சேனா" என்றார் மீண்டும்.

ஆமோதிப்பாக தலையசைத்தபடி சேனா, நந்திதாவை பார்த்தபடி உள்ளே வர, சற்றே நகர்ந்து வழி விட்டவளின் இதழ்கள் சற்று நேரத்திலேயே ஏளனத்தில் வளைந்தது.

கதவை சாற்றுவதற்கு முன், அவளுக்கான உணவு ட்ராலியில் வந்தது. " உள்ளே வாங்க " என்று அந்த ஊழியரை அழைத்தவள்.

"இந்த ரூமை, ஏன் இன்னும் கிளீன் பண்ணலை?. ரூம் சர்வீஸை வர சொல்லுங்க " என்றாள்.

"சாரி மேம். யாரும் இந்த ரூமுக்குள் போகக் கூடாது. போலீஸ் ஆர்டர் அப்படி இப்படின்னு சொன்னாங்க. அதனால யாருமே உள்ளே வரலை" என்றார்.

" சரி. இப்போ வரச் சொல்லுங்க. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள், என் பெட்ரூம் கிளீன் பண்ணியிருக்கனும் " என்றபடி சாப்பிட அமர்ந்தாள்.

தலையில் பெரிதாக சுற்றியிருந்த டவலையும் தான்டி, நீர் திவலைகள் கோடுகளாக, அவள் தொண்டை குழியிலிருந்து கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே தொடைக்கு மேல் இருந்த டர்க்கி கவுன். அவள் அமர்ந்திருந்த விதத்தில் இன்னும் மேலே ஏறி, நீர்த்துவலைகளுடன் கூடிய வாழைத்தண்டு கால்களை வெளிச்சம் போட்டு காட்ட,

அவளது அழகை கண்ட, ஊழியர் எச்சில் கூட்டி விழுங்கினார். நந்திதா, இங்கே தங்க மறுக்க, அவரிடம் சமாதானம் பேசியபடியே எதேர்ச்சையாக திரும்பிய சேனா,

ஊழியரின் விழுங்கும் பார்வையை கண்டு, அவரது பார்வையை தொடர, ' தலைநிமிராமல் சாப்பிட்ட மாயாவும், என்னை பார் என் அழகை பார்! என்று அவள் அமர்ந்திருந்த விதத்தையும் பார்த்தவன். எந்த உணர்வுமில்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சேனா திரும்பிய அடுத்த நொடி, பொளீர் என்ற சத்தத்தில், மீண்டும் சேனா திரும்ப, நந்திதாவின் கவனமும் மாயா பக்கம் திரும்பியது.

"இங்கே என்ன அவு... ப் போட்டா நிக்குறாங்க. அப்படியே நிற்கிற. போய் ரூம் கிளினிங்க வரச் சொல்லு " என்றாள்.

கன்னத்தில் கை வைத்தபடி, ," ச..சரிங்க மேடம் " என்றபடி அங்கிருந்து சென்று விட்டான்.

ரூம் கிளினிங் வந்து, அந்த அறை முழுவதையும் சுத்தம் செய்து விட்டு, மாயா சாப்பிட்டு முடித்த உணவு கப்புகளையும் எடுத்து சென்றனர்.

இப்போது அறையில் சேனா மற்றும் நந்திதா இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மாயா தங்களது படுக்கையறைக்கு சென்று, ரவுண்டு நெக் டீசர்ட்டும், தொடை வரையுள்ள சில்வார் அணிந்து வந்தவள்.

கால் மேல் கால் போட்டு, தனியிருக்கையில் அமர்ந்து, "என்ன விசயம் நந்திதா அக்க்க்கா. எங்க பர்சனல் ரூமுக்கு வந்திருக்கீங்க?" என்றாள் கிண்டலாக

"ஏன்? வரக் கூடாதா? இது என்னுடைய புருஷனுடைய ரூம் " என்றார் . அவளது அக்க்காவில் ஏக கடுப்பாகி விட்டார்.

"அச்சோ! அவர் இப்போ இங்க இல்லை. இப்போ என் ரூம் மட்டும் தான் " என்றவள். " ஒன்று செய்வோமா? சுக்லா ஜி வரட்டும். வந்தவுடன் நீங்க ஒரு பக்கம் நானொரு பக்கம் " என்று கண்ணடிக்க!

"சீ! வாயை மூடு " என்றார் அருவருப்பாக

"என்ன அக்க்கா இப்படி சொல்றீங்க? அப்போ அவர் வேண்டாமா? அவர் இல்லாத ரூம் மட்டும் எதற்கு? போங்க போங்க போங்க " என்றாள் படு கிண்டலாக

"அவரோட மனைவியே இங்கே தங்காத போது, உனக்கு மட்டும் இங்கே என்ன வேலை?" என்றான் சேனா குத்தீட்டும் பார்வையுடன்

"மனைவி இல்லையென்றால் என்ன? நான் இருக்கலாம் . நந்திதா அக்க்காவை விட மதிப்பு, மரியாதை, ஆஸ்தி, அந்தஸ்து என கெல்லாமே சுக்லா எனக்கு கொடுத்திருக்கார்" என்றாள் சேனாவின் கேள்விக்கு நந்திதாவை பார்த்தபடி

"அவர விட்டு போகனுமென்றால் என்ன டிமாண்ட் பண்ற? ஆஸ்தி, அந்தஸ்தை நானே தரேன். என்ன வேணும்னு கேளு " என்றார் நந்திதா வேகமாக

"சுக்லா! சுக்லா ஜி. அவர் மட்டும் போதும். அவர் என் கூட இருந்தல் நீங்க கொடுக்கிறதை விட, அதிகமாகவே எனக்கு எல்லாமே கிடைக்கும் " என்றவள். " கிளம்புங்க நான் தூங்கனும் " என்றபடி எழுந்து அறையை நோக்கி நடக்க!

"விபச்சாரியோட மகளுக்கு, இதெல்லாம் அதிகமென்று தெரியலையா? மாயாவதி " என்றான் சேனா அழுத்தமாக

அவளது நடை அப்படியே நின்றது. அவளது மனக்கண்ணில் 'விடுங்க டா. அவளை விடுங்க டா ' என்ற கதறல் குரல் அசரீரியாக கேட்டது.

பழுக்க காய்ச்சிய கம்பியை நெஞ்சில் வைத்து இழுத்தது போல இருந்தது. அவனது வார்த்தை.

முகத்தை திருப்பாமலேயே, " இன்னும் நிறைய கொடுக்கலாம். தப்பில்லை" என்று தெனாவெட்டாக பேசி விட்டே சென்று கதவடைத்துக் கொண்டாள்.

படுத்தவள் அழுகிறாளோ! கலங்குகிறாளோ? என்றால் எதுவும் இல்லை. நன்றாக உறங்க ஆரம்பித்து இருந்தாள். அவளை உடைக்க, ,சுக்லாவால் மட்டுமே முடியும். ஆனால் ஒரு வார்த்தையில் அவளை அசைத்து விட்டான் சேனா!.

காயம்பட்ட மிருகம் பலிதீர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 12
அடைத்த கதவையே வெறித்து பார்த்தபடி நின்ற நந்திதா. " எப்படி பேசிட்டு போறா பார் சேனா. ஏன்? என்னை இங்க தங்க சொல்ற? இவளை பார்த்தாலே பத்திக்கிட்டுது வருது. எனக்கு அவர் திரும்ப கிடைத்தால் மட்டும் போதும்! வேறெதுவும் வேணாம் " என்றார் நொந்து போய்

"நாளைக்கு தெரிஞ்சுடும் அத்தை. உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கிறார் என்று!" என்றான் சாதாரணமாக

"நிஜமாவா? நிஜமாவா சேனா!. அவருக்கு ஒன்றும் இல்லையே. நல்லாயிருக்காரில்ல! " என்றார் பரபரப்பாக

" தெரியுமென்று தான் சொன்னேன். மற்றதை எல்லாம் நேரில் பார்த்து தான் தெரிந்து கொள்ளனும்" என்றான் சேனா விட்டேற்றியாக

"என்ன சேனா இப்படி சொல்ற? அவர பற்றி நல்ல வார்த்தை சொல்லேன். அன்றைக்கு கார் கவுந்து கிடந்ததை பார்த்த போதே, ரொம்பவே பயந்துட்டேன். பிறகு அதில் , அவர் இல்லையென்று தெரித்த பிறகு தான்!. போன உயிரே திரும்ப வந்திருக்கு. மீண்டும் என்னை அலைக்கழிக்காதே சேனா" என்றார் பரிதாபமாக

"எனக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும் அத்தை " என்று பிடிக்கொடுக்காமல் பேசியவன். நந்திதாவின் பரிதாபமான முகத்தை கண்டு, "அவர் பிரண்ட் கூட ஏதோ டவர் இல்லாத இடத்தில் மாட்டிக்கிட்டார் போல!. இன்னைக்கு மார்னிங் தான் ரீச்சாகி இருக்காங்க." என்றான் சாதாரணமாக

"அப்போ அவருக்கு ஒன்றுமில்லைனு நேற்றே தெரியுமா? " என்றவர். "ஐயோ! இந்த போலீஸ்காரங்க வேறு இவளை அரெஸ் பண்ணுட்டு போனாங்களே!. அதுவும் அவர கொலை பண்ணிட்டதா? இப்போ அவர் வந்து கேட்டால் என்ன சொல்றது?" என்றார் படபடப்பாக

" அது போலீஸ்காரங்க பாடு. நமக்கென்ன?" என்றான்.

"அதில்லை சேனா. அவர் நல்லாயிருக்காருன்னு தெரிந்திருந்தால் சொல்லியிருக்கலாமே.. போலீஸ் மட்டுமில்லாமல் கோர்ட் வரைக்கும் போயிருக்கே" என்றார்

"நம்பிக்கையான இடத்திலிருந்து தகவல் வந்தாலும், கண்ணால் பார்க்கும் வரை எதையும் உறுதியா சொல்ல முடியாது அத்தை " என்றவன். " நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் கிளம்பறேன் " என்றபடி அங்கிருந்து சென்று விட்டான்.

'நாளை சுக்லா வந்தவுடன் என்ன நடக்குமோ? ' என்ற பீதியில் நந்திதா இரவு தூக்கத்தை தொலைத்தார்.

மறுநாள் காலை மாயா வழக்கமான நாளை போலவே தொடங்கினாள். எந்த வித பரபரப்பும் இல்லாமல், காலை உணவு அறைக்கு வர, குளித்து அதை உண்டு விட்டு, தனது வழக்கமான டிரேட் மார்க் சிரிப்புடன் கிளம்பினாள். அங்கே நந்திதா என்ற ஒருவர் இருப்பதை போலவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அன்று மதியமே சுக்லாவை பற்றிய செய்திகள் சூடு பிடிக்க தொடங்கின. உயிரோட இருப்பவரை இறந்து விட்டதாக கூறி, மாயாவை அரெஸ்ட் செய்தது பற்றியும். இது போலீஸாரின் மெத்தனப் போக்கு என பலதரப்பட்ட அமைப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

சுக்லா தெளிவாக தனது விளக்கத்தை கொடுத்தார். என் நண்பரை பார்க்க சென்றிருந்தேன். வழியிலே நண்பரும் வந்து விட்டாதால் என் காரை அங்கேயே பார்க் செய்து விட்டேன். அவருடைய தொழில் விசயமாக சில ஆலோசனைகளை கேட்டிருந்தார். சில இடங்களை நேரில் சென்று தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

நாங்கள் சென்றது மலைப்பகுதி. அங்கிருந்த கெஸ்ட் ஹவுசில் தான் இருந்தோம். டவர் அங்கே கிடைக்கவில்லை. இரவானதால் அங்கேயே தங்க வேண்டியதாகி விட்டது. அதோடு, நான் டிரைவர் மூலம் வர இரண்டு நாட்களாகும் என்ற தகவலை தெரிவிக்கவும் சொல்லியிருந்தேன். அதன்படி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க,

"எப்படி நான் இறந்ததாக பொய் செய்தியை பரப்பி மாயாவை கைது செய்தீர்கள்?" என்று கேள்வி எழுப்ப

"அப்படி எந்த அழைப்பும் வரவில்லை " என்று உறுதியாக மறுத்தனர். ஊழியர்களும் உறவுகளும்!.

"எங்கேயோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் நடந்திருக்கு. சாரி சார் " என்று பலவகையில் காலில் விழாத குறையாக கெஞ்சி, சுக்லாவை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பலவாறு சமாதானமும் செய்தனர்.

இதில் ஏற்கனவே இரு காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறி, மன்னிப்பு கேட்க, இதை மாயாதான் முடிவு செய்ய வேண்டும் என்று கிளம்பி விட்டார்.

சுக்லா, சென்னை வந்ததுமே செய்திகளில் இது தான் முதன்மையாக இருக்க, சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் இருக்குமா?

சுக்லாவை நேரில் சந்திக்க வந்து விட்டனர். ராக்கி, தேவின் குடும்பத்தினர் அவருடைய நலனை விசாரித்து சென்றனர். சுக்லா, சற்று நேர ஓய்வுக்காக தனது அறைக்கு வந்திருந்தார். மாயாவை அழைத்து, அவளுடைய நலத்தை விசாரித்து விட்டு, அன்று நடந்தவைகளை பற்றி கூற,

"எதையும் நேரில் பேசிக் கொள்ளலாம் சுக்லா ஜி. நீங்க நல்லபடியாக வந்ததே போதும்" என்று விட்டாள்.
 

Sirajunisha

Moderator
சுக்லா, தங்களது பிரத்யேக அறையில் அமர்ந்திருந்தார். செழியன், சேதுபதி, நந்திதா அமர்ந்து, அவருடைய நலம் விசாரித்தனர்.

"நான் வருவதற்குள் என்னென்ன பண்ணி வைச்சிருக்காங்க! இப்படி ஆகுமென்று நினைக்கவே இல்லை. இதில் மாயா தான் பாவம். தேவையில்லாமல் அரெஸ்ட் பண்ணி.. " என்றவருக்கு தொண்டை அடைத்தது.

"விடுங்க மச்சான். எங்களுக்கு நீங்க நல்லபடியாக வந்ததே போதும். எவ்வளவு பயந்து விட்டோம். நந்திதா இரண்டு நாள் ஹாஸ்பிட்டலில் மயக்கத்திலேயே இருந்தது. எங்களுக்கு எதையுமே யோசிக்க முடியலை " என்றார் சேதுபதி

"இப்போ எப்படி இருக்கு நந்திதா? பரவாயில்லையா? .அதான் நான் வந்துட்டேனே. நீ போய் வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளேன் " என்றார் சுக்லா காரியத்திலேயே கண்ணாக

"இப்போ பரவாயில்லை. நல்லாயிருக்கேன் " என்றவர். "நீங்க நல்லாயிருக்கீங்க தானே? எதற்கும் டாக்டரிடம் ஃபுல் செக்அப் பண்ணிடுறீங்களா?" என்றார் கவலையாக

"அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் போல நல்லாதான் இருக்கேன் " என்றார் .

மேற்கொண்டு பொதுவான பேச்சுக்கள் தொடர்ந்தன. இடையில் இருமுறை மாயா போன் செய்து சில தகவல்களை சுக்லாவிடம் கேட்டுக் கொண்டாள். சுக்லா வந்ததற்காக அவளிடம் எந்த பரபரப்பும் இல்லை. மிக இயல்பாகவே இருந்தாள்.

மற்ற தொழில்துறை சார்ந்த நண்பர்களும் வர, அவர்களுடனும் உரையாட வேண்டி இருந்தது. நேரம் ஓடிக் கொண்டிருக்க, விருந்தினர் கிளம்பி இருந்தனர். சுக்லா, அன்று ஹோட்டலிலேயே இருந்து விட்டார். வெளியே செல்லவில்லை.

மாயா, வழக்கம் போல தனது வேலையை முடித்து விட்டு வந்த போது முன்னிரவு ஆகி இருந்தது. வேகமாக கதவை திறந்து உள்ளே வர, சுக்லா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். புருவத்தை ஆச்சரியமாக உயர்த்தியபடி உள்ளே வர, எதிர் இருக்கையில் சுக்லாவுடன் சேனா அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான்.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது, " சுக்லா ஜி " என்றாள் சிரிப்போடு

பேச்சின் சுவாரசியத்தில் மாயா வந்ததை கவனிக்காதவர். அவளது குரலில் திரும்ப, மாயாவை கண்டவர். ஆதூரமாக அவர் கையை நீட்டினார். வேக எட்டுக்களில் அவரது கையை பற்றிக் கொண்டவள். அவரளவுக்கு குனிந்து, அணைத்தவள். " மிஸ் யூ பேட்லி " என்றாள்.

அமர்ந்தவாக்கிலேயே அவளது முதுகை வருடிக் கொடுத்து, சமாதனப்படுத்தியவர். " வா மாயா. சாப்பிடலாம் " என்றார்.

"இல்லை. நீங்க சாப்பிடுங்க. நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வந்திடுறேன்" என்று விட்டு துள்ளி குதிக்காத குறையாக அறைக்கு சென்று விட்டாள். அங்கு சேனா என்ற ஒருவன் அமர்ந்திருப்பதாக கூட அவள் காட்டிக் கொள்ளவில்லை.

சேனாவுமே, அங்கே ஒருத்தி வந்து சுக்லாவை அணைத்து விடுவித்து விட்டு சென்றதை பார்த்ததாக கூட காட்டிக் கொள்ளவில்லை. அதை அப்படியே சுக்லாவும் காணாதது போல விட்டிருக்கலாம்!

"இந்த இரண்டு நாளில் மாயா தான் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் சேனா. போலீஸ் அரெஸ்ட் அது இதென்று ரொம்பவே அலைக்கழிக்கப்பட்டிருக்கிறாள்!" என்றவரை

சேனா கேள்வியாக பார்க்க! "எனக்கெப்படி தெரியும் னு பார்க்கிறாயா? செல்வமும், மாரியும் சொன்னாங்க!. மாயா ரொம்பவே நல்ல பொண்ணு. என்ன கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி. அது கூட நியாயமாக தான் இருக்கும் " என்று மாயாவை பற்றி சுக்லா பெருமையாக பேசிக் கொண்டிருக்க,

சேனா , உணவில் முழு கவனத்தையும் செலுத்தி அதை சாப்பிட்டு முடித்த போது! மாயா குளித்து ரவுண்ட் பனியன் மட்டும் தொடைவரையிலான ட்ரவுசருடன் வந்தவள்.

"சுக்லா ஜி சிக்கன் பிரைட் ரைஸ் ஆர்டர் பண்ணுங்க. ரொம்ப பசிக்குது " என்றபடி வந்தமர்ந்தாள்.
அவள் சொன்னது போலவே போனில் ஆர்டர் செய்தவர். மாயா பக்கம் திரும்பி,

"மாயா, இவர் யாருன்னு உனக்கு தெரியுமா? ராக்கியோட மாமா பையன் . சேதுபதியோட மகன் விஜய சேனாதிபதி. பெரிய பிஸ்னஸ்மேன் மா. இந்த சின்ன வயசில் நிறைய சாதிச்சு இருக்கார்" என்றார் பெருமையாக

சுக்லாவை பார்த்து பெயருக்கு தலையாட்டினாலும், மாயாவின் பக்கம் மறந்தும் தலையை திருப்பவில்லை.

"ஆள் யாரென்று தெரியாது சுக்லா ஜி. ஆனால் நந்திதா மேடம் கூட இருக்கும் போது பார்த்தேன். போலீஸ் என்னை அரெஸ் பண்ணும் போது, இவரும் அங்கே இருந்தார். பார்த்தேன் " என்றாள்.

"என்ன சேனா? நீ அங்க இருந்துமா மாயாவை அரெஸ் பண்ணாங்க " என்றார் ஆதங்கமாக

மெல்ல சிரித்தவன். " ஒரு விசயம் எனக்கு புரியவே இல்லை . போலீஸ் அரெஸ் பண்ணினால் நான் ஏன் தடுக்கனும்? சந்தேகத்தின் பேரில் அரெஸ் பண்றாங்க!. நீங்க வரும்வரை சந்தேகப்பட்டவர்கள் எல்லாருக்கும் அதே நிலை தான்.

இன்னும் சொல்லப் போனால், உங்க கூட இருந்த கடைசி ஆளு யாரோ? அவங்களிடம் போலீஸ் முறைப்படி விசாரிக்க தானே செய்வாங்க!" என்றான்.

"ஆனால் மாயாவை அடிச்சிருக்காங்க சேனா " என்றார் ஆதங்கமாக

"ஏன்? அடிக்கக் கூடாதா? அடித்தால் என்ன தப்பு ?. சந்தேகப்படாமல் இருக்க, இவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? பெற்ற பொண்ணா? இல்லை கட்டின மனைவியா? எதுவுமே இல்லையே?
காசுக்காக வந்தவளுக்கு என்ன மரியாதை கொடுக்க முடியுமோ! அதை தானே அரசாங்கமும் உறவும் கொடுக்கும். இதில் யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாதே " என்றான் ஆணித்தரமாக. தயவுதாட்சணை இல்லாமல் வார்த்தைகள் கூர்வாளாக வந்தன.

சுக்லா வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்க, அறை வாசலில் காலிங்பெல் அடித்தது. எதையும் காதில் வாங்காதது போல! எழுந்து சென்று, உணவை வாங்கி வந்து சாப்பிட அமர்ந்தாள்.

மாயா சாப்பிட ஆரம்பித்ததும் சுயத்திற்கு வந்தவர். " மாயாவை அப்படி சொல்லாதே சேனா! " என்றார் வருத்தமாக

"விபச்சாரியோட மகளை நீங்க தூக்கி வைச்சு கொண்டாடலாம். ஏன்? உங்க அறையிலும் இடம் கொடுக்கலாம். ஆனால் அதையே மற்றவர்களும் செய்யனுமென்று எதிர்பார்ப்பது ரொம்ப பெரிய தவறு" என்றான்.

மாயா அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் எதற்குமே அவள் எந்த உணர்வையும் அவள் முகத்தில் காட்டவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

திரும்பி மாயாவை பார்த்தவரின் கண்களில், அவளது விரல்களுக்கிடையேயான காயங்கள் தெரிந்தன. முழு ஆடை போட்டிருந்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கழிகளின் தடிப்புகள். அப்பட்டமாக தெரிந்து அவரை நிலைகுலைய வைத்தது.

சுக்லாவின் நிலையை உணர்ந்தவன் போன்று! " எதற்கு இந்த தேவையில்லாத டென்சன்!. பணத்தை கொடுத்து செட்டில் பண்ணிடுங்க. கவுரமாவது மிஞ்சும் " என்றான் உதட்டு சுழிப்போடு

அதுவரை அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள். " சார் சொல்றதும் சரி தான் சுக்லா ஜி. எனக்கொரு செட்டில்மெண்ட் பண்ணிடுங்க. நானும் என் வழியே பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்" என்றாள். அவள் குரலில் எந்த வருத்தமும் தென்படவில்லை.

சுக்லா, வருத்தமாக மாயாவை பார்க்க! " நான் வேண்டுமென்றால் செட்டில்மெண்ட்க்கு என்ன புரொசீஜர் பார்க்க சொல்லவா?" என்றான் சேனா விடாமல்

" என்ன கொடுக்கலாமென்று நீங்க தான் சொல்லுங்களேன் சேனா சார் " என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்

" கேட்டு கொடுத்து பழக்கமில்லை. கேட்கிறதை கொடுத்து தான் பழக்கம். என்ன வேணும்? " என்றான் அழுத்தமாக. ஆனால் பார்வை ஒரு முறை கூட அவளை சீண்டவில்லை.

" சில ப்ராபர்டீஸ் அதை சுக்லா கொடுப்பார். கூடவே, எனக்கு தெரிந்தவங்களை எனக்கு மீட்டு தரணும். உங்க பாஷையில் சொல்லனுமென்றால் விபச்.. " என்று முழுதாக வார்த்தையை சொல்ல விடாமல் அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டார் சுக்லா.

"இதென்ன புதுசா! ரெட் லயிட் ஏரியாவா போய் தேட சொல்லி, உன் குலப்பெருமையை வேற நாங்க தெரிஞ்சுக்கனுமா?" என்றான் கேவலமாக

"கேட்டது கிடைக்கும் னு சொன்னதெல்லாம் சும்மா வா? " என்றாள் அவளும் நக்கலாக

கண்ணை இறுகமூடி திறந்தவன். "டீட்டெய்ல் கொடுக்க சொல்லுங்க. ஆளை விட்டு தேட சொல்றேன்" என்றான் எரிச்சலாக

"இல்லை. நீங்களே தான் போய் அழைச்சிட்டு வரனும். நான் இங்கிருந்து போகனுமென்றால் நீங்களே இறங்கி வேலை செய்யனும்" என்றவளின் கண்கள் பளபளத்தது.

"நந்திதா அத்தைக்காக செய்யறேன். பத்து நாளில் நான் கிளம்பறேன். டீட்டெய்ல் ரெடியா இருக்கனும். இதில் வேறு எதுவும் இருந்துச்சு. இருந்த இடம் தெரியாம அழிச்சிடுவேன் " என்றவன். விடைபெற்று கிளம்பி விட்டான்.

"இதெல்லாம் சரியா வருமா மாயா?" என்றார் சுக்லா ஆதங்கமாக

"எனக்கு வேற வழி தெரியலை சுக்லா ஜி. எங்கம்மா எனக்கு வேணும். சேனா போனால் கண்டிப்பாக விடிவு கிடைக்குமென்று என் உள்மனசு சொல்லுது. இதை தடுக்காதீங்க " என்று எழுந்து சென்று விட்டாள்.

இவ்வளவு வருடம் கிடைக்காத விடுதலை சேனாவால் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 13
இன்று விடுமுறை நாள் , சேனாவிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி , முன் அனுமதி பெற்று அவனுடைய மாளிகையில் மாயாவும் சுக்லாவும் அவனுக்காக காத்திருந்தனர். இன்னும் அரைமணி நேரத்தில் சார் வருவாங்க. வெயிட் பண்ணுங்க " என்று அவனுடைய காரியதரிசி சொல்ல, அலுவலக அறையின் முன் காத்திருந்தனர்.

சுக்லாவுக்கு மட்டும் வீட்டினுள் வர, அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாயாவுக்கு அழைப்பு இல்லாததால், அவளுடனே சுக்லாவும் அலுவலக அறையின் முன் அமர்ந்து விட்டார்.

சரியாக சொன்ன நேரத்திற்கு சேனா அலுவலக அறைக்குள் நுழைந்தான். உடனடியாக சுக்லாவும், மாயாவும் அழைக்கப்பட்டனர்.

"வாங்க அங்கிள் " என்றவன். " நேராக என்னை பார்த்திருக்கலாமே? எதற்கு அப்பாய்மெண்ட்லாம்!. வெளியாட்களுக்கு தான் இதெல்லாம் " என்றவன்.

"அத்தை, ராக்கி எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்றான்.

"ம்ம். நல்லாயிருக்காங்க " என்றவர். " மாயா டீட்டெய்ல் கொண்டு வந்திருக்கா சேனா. அதை கொடுத்துட்டு போகலாமென்று வந்தோம் " என்றார்.

"ஓ! " என்றவன். " அப்பா உங்க கூட பேசனுமென்று சொன்னாங்க . நீங்க அப்பா கூட பேசிட்டு இருங்களேன் " என்றதும்.

சுக்லா, திரும்பி மாயாவை பார்க்க! சம்மதமாக தலையசைத்தாள். இதை கண்டு, சேனாவின் தாடை இறுகியது. இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

சுக்லா எழுந்து கொள்ள, அதே நேரம் அலுவலக அறைக்கு வந்த சேதுபதியும், " அடடே! வாங்க மச்சான் " என்றபடி சுக்லாவிடம் நலம் விசாரித்தபடி அழைத்து சென்று விட்டார்.

சுக்லா செல்வதை பார்த்து பெருமூச்சு விட்டவள். பிறகு, தனது கையிலிருந்த சிறிய அளவிலான பைல் ஒன்றை, சேனா முன் இருந்த டேபிளில் வைத்தவள்.

"இதில் , நீங்க தேடித்தர வேண்டியவங்க பற்றிய, எனக்கு தெரிந்தவரையிலான விவரம் இருக்கு " என்றாள்.

அருகிலிருந்த இன்டர்காமை எடுத்தவன். அதில் ஒரு எண்ணை அழுத்தி, " கம் டூ மை கேபின் " என்று விட்டு மீண்டும் அதே இடத்தில் பேசியை வைத்து விட்டு, சுழல் நாற்காலியை லேசாக ஒரு காலால் மெதுவாக சுழற்றியபடி அமர்ந்திருந்தான்.

மாயா அடுத்து ஏதோ சொல்ல வர, அதற்குள் " மே ஐ கமின் சார் " என்று அனுமதி கேட்க,

"எஸ். கமின் " என்ற சேனாவின் குரல் கேட்டு உள்ளே வந்தான் அவனது காரியதரிசி ராஜன்.

"எஸ் சார் " என்றதும்.

மேசை மேலிருந்த பைலை கண்களால் சுட்டிக்காட்டியவன். " அதில் உள்ள விவரங்களை பாருங்க " என்றான்.

மாயா வைத்த பைலை கையிலெடுத்தவர். அதிலுள்ள விவரங்களை பார்வையிட ஆரம்பித்தார். சேனா தனது செல்போனில் எதையோ பார்வையிட ஆரம்பித்து இருந்தான். வந்ததிலிருந்து இருவரும் ஒருவரையொருவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

முழுமையாக பார்த்து முடித்தவர். " இதில் யாரை நீங்க வெளியில் கொண்டு வரணும். இரண்டு பேர் இருக்காங்களே? " என்றார் சேனாவிடம்.

சேனா தலையை நிமிர்த்தாமல், கையை மாயாவின் புறம் நீட்ட, அவளிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவது புரிய, கேள்வியாக மாயாவை நோக்கினார்.

" அதில் கொஞ்சம் உயரமாக இருக்காங்களே! அவங்களை தான்" என்றாள் அவசரமாக

"பெயர் : தாரா தேவி. சரியா?" என்றார்.

"ம்ம்" என்றாள்.

"நீங்க அவங்களை கடைசியா எப்போ பார்த்தீங்க?"

"ஏழு வருசத்துக்கு முன்னே "

"ம்ம். அப்போ அவங்க இதே தொழிலில் தான் இருந்தாங்களா? ஐ மீன் பிராசிட்..யூட்? "

முகம் கருக்க, ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

"கேட்கிறேன்னு தவறாக எடுத்துக்க கூடாது. அப்போதைக்கு, அவங்களுக்கான டிமாண்ட் இருந்ததா?" என்றார்.

கண்ணை இறுக மூடி திறந்தவள். " தெரியாது " என்றாள். உதட்டை கடித்தபடி

" சார், மும்பையில் இருந்திருக்காங்க. அங்கே நமக்கு தெரிந்த ஆட்களை வைத்து விபரங்களை சேகரிக்கலாம். எனக்கு தெரிந்தவரை இந்த தாரா தேவியை கண்டுபிடித்தால் கூட, அவங்களை கொண்டு வர முடியுமா? என்பது சந்தேகம் தான்.

"ஏனென்றால் ஒரு தடவை மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். திரும்பி வர வாய்ப்பே இல்லை. அந்த இடத்தை விட்டு வரணுமென்றால்! பிணமாகத்தான் வர முடியும்" என்றார்.

" வேறு ஏதும் ஆப்சன் இருக்கா ராஜன்? . பணம் கொடுத்தால் விடுவாங்களா? அல்லது வேறெதும் எதிர்பார்ப்பாங்களா?" என்றான் சேனா.

"ஆட்கள் மூலம் விசாரிச்சு சொல்றேன் சார். ஒரு அரைமணி நேரம் டைம் கொடுங்க " என்றதும்.

"ஒ. கே " என்று விட்டு ராஜன் வெளியில் சென்றார். மாயாவுக்கு அங்கேயே அமர்வதா? அல்லது எழுந்து செல்வதா என்று யோசிக்க, அதே நேரம் அவளது செல்பேசி இசைத்தது.

' மாரி ' என்ற பெயரை பார்த்ததுமே அழைப்பை இணைத்தவள். " ஹலோ சொல்லு " என்றபடி எழுந்து சற்றே நகர்ந்து அந்த அறையின் ஜன்னல் புறமாக நின்று பேச ஆரம்பித்தாள்.
 

Sirajunisha

Moderator
"ம்ம்ம் .. ம்ம்ம் "

".................... ... "

"அப்புறம் என்ன மயி..... ஒத்துக்கிட்டு வந்தானாம்! " என்றவள். மேலும் பல வண்ண வண்ண வார்த்தைகளை உதிர்த்து கொண்டிருக்க "

இதையெல்லாம் கேட்க விரும்பாவிட்டாலும், தானாக காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் விழுக்கென்று நிமிர்ந்தவனின் தாடை இறுகி அழுத்தத்தை கூட்டியது. மாயா, அவள் தன்போல போனில் பேசிக் கொண்டிருக்க! ஓரளவுக்கு மேல் பொறுமை இழந்தவன். அடுத்து என்ன செய்திருப்பானோ?

அறைக்கதவை திறந்து கொண்டு மீண்டும் ராஜன் உள்ளே வந்தார்.
பொறுமையை கையிலெடுத்தவன். " என்னாச்சு?" என்றான்.

ராஜனை கண்டு மாயாவும் அழைப்பை துண்டித்து விட்டு, வேகமாக அங்கே வந்து நின்றாள். மாயாவை ஒரு பார்வை பார்த்தவர்.

" சார். சம்மந்தபட்ட ஆளிடம் நேரடியாக பேச முடியலை. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஏஜண்ட் இருக்கான். அதில் முக்கியமான ஆளிடம் தாராதேவியை பற்றி விசாரித்தேன்.

முதலில் அவன் பிடிகொடுக்கலை. பிறகு, என்ன வேண்டுமென்றாலும் கேளு. வாங்கித்தரேன்னு பலமாதிரி பேசினேன். ஒருவாறு அவங்களிடம் பேசுறேன்னு சொல்லி ஒப்புக் கொண்டான். விவரங்களை அனுப்புயிருக்கேன். இன்னும் பத்து நிமிசத்தில் போன் வரும் " எனும் போதே

ராஜனின் போனுக்கு அழைப்பு வந்தது. ஸ்பீக்கரில் போட்டு விட்டு அழைப்பை இணைக்க!

"ஹலோ சொல்லு. பேசிட்டியா?" என்றார் ராஜன்.

"ஹாங்.. பேசிட்டேன். அவங்க அந்த பொம்பளைய விடுறாங்களாம். ஆனால் அதற்கு பதிலா வேறொன்னை எதிர்பார்க்கிறாங்கோ " என்றான் உடைந்த தமிழில்

"என்ன கேட்கிறாங்க? நகையாவா?" என்றார்.

"ம்ஹும். நஹி நஹி. அவங்க கேட்கிறதூ மாயா.. மாயாவதி " என்றது மறுமுனை

"அது யாரு மாயாவதி?" என்றார் தெரியாதது போல

"நீ யாரை கேட்கிறியோ! அவளோட பொண்ணு மாயாவதி. அவளுக்கும் எங்க ஆளுங்களுக்கும் முடிக்காத கணக்கொன்னு இருக்கு. அதை முடிக்கனும் " என்றான் மறுமுனையில் இருந்தவன்.

"எனக்கு இவங்களை தேடி தரச் சொல்லி தான் மேலிடத்து உத்தரவு. மற்றபடி நீ தேடுற மாயாவதியை பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியாது. தகவல் தெரிந்தால் கண்டிப்பாக சொல்லுகிறேன். அந்த மாயாவதி போட்டோவை எதற்கும் அனுப்பி வை. ஆளை விட்டு தேடச் சொல்கிறேன்." என்றவர்.

"தாரா தேவியை அனுப்ப என்ன வேணும் அதை கேட்டுச் சொல்" என்றார்.

மறுமுனை சற்று நேரம் அமைதியாக இருந்தது. பிறகு, "உங்களுக்கு எதற்கு தாரா தேவி " என்று கேள்வி எழுப்பியது.

" எல்லா காரணத்தையும் உன்னிடம் சொல்ல முடியாது. என்ன எதிர்பார்க்கிற? அதை மட்டும் கேளு " என்றார் பிடி கொடுக்காமல்.

" சரி. 2 கோடி கொடுத்துட்டு , வந்து கூட்டிட்டு போ "

"எதே! 2 கோடியா? அந்த அளவுக்கெல்லாம் அந்த ஆளு வொர்த் இல்லை. வயசான பொம்பளைக்கு அவ்வளவு பணமெல்லாம் ரொம்ப அதிகம் " என்றார் ராஜன்.

" எவ்வளவு கேட்டாலும் தரேன்னு சொன்னே?. இப்போ இப்படி பேசுற?"

"அதெற்கென்று கேட்கிறதுக்கு ஒரு அளவில்லை? "

"சரி. எவ்வளவு கொடுப்ப?"

"இருபத்தஞ்சு லட்சம். இதுவே அதிகம். உன்னிடம் சொன்ன வாக்கு மாறக் கூடாதுன்னு தரேன்" என்றார்.

"சரி. நான் பேசிட்டு சொல்றேன் " என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

" ஏன் சார் பேரம் பேசுனீங்க? கேட்கிற பணத்தை கொடுத்து, அழைத்து வரலாமே!" என்றாள் மாயா ஆதங்கமாக.

"ஆமாமா! இவங்க வியர்வை சிந்தி இராப்பகலா உழைச்ச காசை கேட்கிறாங்கல்ல கொடுத்திருக்க வேண்டியது தான்!' என்றான் சேனா படு நக்கலாக

சேனாவின் இரண்டு அர்தத்துடன் கூடிய வார்த்தையை கேட்டும்! முகம் மாறாமல் காப்பது பெரும்பாடாக இருந்தது. சேனா பேசியதை காதில் வாங்காதது போல, ராஜனை பார்க்க!

"அவங்க சொன்ன தொகைக்கு ஒப்புக் கொண்டால்! இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பாங்க. அதற்காக அப்படி பேசினேன். நமக்கு அவங்க வேணும் என்கிறது தெரிந்தாலும், பெரிய பணமெல்லாம் இவங்களிடம் பெயராது என்பதை போல காட்டிக்கனும். இல்லையென்றால், ஆளை விடாமல், பணம் பறிக்கிற முயற்சியில் ஈடுபடுவாங்க " என்றார் புரியும் விதமாக.

பெருமூச்சு விட்டவள். ஆமோதிப்பாக தலையைசைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.

மேலும் கால்மணி நேரம் கழிய, மீண்டும் ராஜனின் செல்பேசி இசைத்தது. " அந்த ஆளு தான் " என்றபடி அழைப்பை இணைத்து ஸ்பீக்கரில் போட்டு, பேச ஆரம்பித்தார்.

"ஹலோ சொல்லு "

"நீ சொன்ன பணத்துக்கு ஒத்துக் கொள்கிறோம்" என்றது மறுமுனை

" சரி. அவங்களை இப்போ போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி விடுங்க. அவங்க தானான்னு கன்பார்ம் பண்ணிக்கிறேன். பிறகு, எங்கே வரனுமென்று சொல்லுங்க " என்றார்.

தாரா தேவியின் தற்போதைய நிழல்படம் அவருடைய வாட்சப் நம்பருக்கு அனுப்பப்பட்டது. " இவங்க தானா பாருங்க?" என்றார்.

முகத்தில் முழு மேக்கப்புடன், கண்ணில் உயிர்ப்பில்லாமல், உதட்டில் பொய்யான புன்னகையுடன் இருந்தவரை! பார்த்தவுடனே தெரிந்து விட்டது தாரா தேவி என்று! ஆமோதிப்பாக தலையசைக்க, அடுத்தடுத்த வேலைகள் வேகமாக நடக்கத் தொடங்கின.

பல வருடங்களுக்கு பிறகு, தாயை பார்க்க போகும் பரபரப்பு மாயாவை தொற்ற! அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியாமல் எழுந்தவள்.

" நா.. நான் கொஞ்ச நேரம் வெளியில் இருக்கேன் " என்றவள். யாரையும் நிமிர்ந்து பாராது வேகமாக வெளியில் வந்து முன் வராண்டாவில் உள்ள கார்டன் ஏரியாவில் நின்றாள்.

மூச்சடெடடுப்பதே சற்று சிரமமாக இருந்தது. சுக்லா, சேதுபதியுடன் அமர்ந்து வெகு நாட்கள் கழித்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

மாயாவுக்கு தனிமை தேவைப்பட்டது. மனக்கண்ணில் ஏதேதோ காட்சிகள் சம்பவங்கள் வரிசைக்கட்ட, அதிலேயே மூழ்கி விட்டாள். எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ தெரியாது.

"மாயா " என்றபடி தோளை தொட்ட, சுக்லாவின் அழைப்பில் தான் சுயத்திற்கு வந்து, திரும்ப

"இங்கே தனியா என்ன பண்ற?. பேசிட்டியா? தகவல் தெரிந்ததா?" என்றார்.

ஆமோதிப்பாக தலையசைத்தாளே தவிர எதுவும் பேசவில்லை.

ஏதோ! அவளது நிலையை உணர்ந்தது போல! வாஞ்சையாக கலைந்து காற்றிலாடிக் கொண்டிருந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டபடி,

"எல்லாமே நல்லபடியாக நடக்கும் மாயா" என்றார் கனிவாக

"நடக்கனும் சுக்லா ஜி. நடந்தே ஆகனும் " என்றாள் கண்களில் தீவிரத்துடன்.

இவர்களுடைய நெருக்கத்தை பார்த்து முகம் சுளித்தபடி சேனா உள்ளே சென்று விட்டான். ஆனால் அங்கேயே நின்றிருந்த சேதுபதியின் கண்கள் இருவரையும் யோசனையுடனே நோட்டமிட்டது.

அனைவரையும் விட சுக்லா , மாயாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? யார் என்ன சொன்னாலும் அவளை யாரும் எதுவும் செய்து விடக் கூடாது, ஏதும் சொல்லி விடக் கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்பதே!

சேனா, அலுவலக அறையை விட்டு வெளியே வந்ததுமே, விசயம் என்னவென்று கூட தெரிந்து கொள்ளாமல் மாயாவிடம் ஓடிவருபவரை என்ன நினைப்பது! என்னவென்று சொல்வது?

இவர்களை பிரிப்பது சாத்தியமா? சேனாவின் மூலம் காரியம் சாதித்து கொண்டு, பிறகு அதன்படி நடக்கவில்லையென்றால் சேனாவின் அதிரடி வேறு மாதிரியாக இருக்கும் என்பதை கூட இருந்தே பார்த்தவருக்கு,

இருவரும் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தனியாக சந்தித்து எச்சரிக்கை விதமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் சேதுபதி.

நினைப்பதெல்லாம் நடக்குமா? சொன்ன வாக்கை மாயா காப்பாற்றலாம்! சுக்லா காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 14
ராஜனிடம், அந்த ஏஜண்ட் பணத்தை எங்கு வந்து கொடுக்க வேண்டும். தாரா தேவியை எங்கு வந்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற தகவலை தெளிவாக கூறியிருந்தான்.

அதன்படி, எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு, சேனா அவர்களுடன் கிளம்பினான். சேனாவுக்கு மும்பை அத்துபடி, அவன் தன்னுடைய பள்ளிப்படடிப்பை அங்கே தான் படித்து முடித்திருந்தான்.

எனவே இடத்தையும் ஆட்களையும் கண்டுபிடிப்பது அவனுக்கு தெரிந்த ஆட்களை வைத்து கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தன.

சேனா, இதில் நேரடியாக இறங்காமல் பின்னால் இருந்தே செயல்பட்டான். அந்த ஏஜண்ட் சொன்னது போல, பணத்தை ஓரிடத்தில் வாங்கிக் கொண்டு, தாரா தேவியை வேறொரிடத்தில் ஒப்படைத்தனர்.

தாரா, கையில் வந்து சேரும் வரை பணத்தை அவர்களிடம் கொடுக்காமல் தன் பொறுப்பில் வைத்திருந்த ராஜன். தாராவை ஆட்கள் பார்த்து விட்டதாக கூறிய பிறகே, சொன்னது போல பணத்தை கொடுத்தார். தாரா தேவியை அழைத்துக் கொண்டு ஆட்கள் கிளம்பி விட்டனர்.

' என்ன நடக்கிறது? என்று புரியாத நிலையிலும், புரிந்தாலும் என்ன நடந்து விடப் போகிறது என்ற விரக்தி நிலையிலும் ராஜன் அனுப்பியிருந்த ஆட்களோடு பயணித்துக் கொண்டிருந்தார்.

சேனாவின் அறிவுறுத்தலின் படி, ராஜன் மருத்துவமனையில் அவரை பரிசோதிப்பதற்காக சேர்த்திருந்தார்.

"ஏன் சார்? மாயாவுடன் அனுப்பி விடலாமே. எதற்காக ஹாஸ்பிட்டல் அது இதென்று தேவையில்லாத வேலை " என்றார்

"அவங்க ஒன்னும் சாதாரண ஆட்கள் இல்லை ராஜன். கேட்டவுடனே பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்புவதற்கு! அவங்க தாரா தேவிக்கு பின்னால் ஆட்களை அனுப்பி, அவங்களை எங்கு கொண்டு போறீங்க? யாரிடம் ஓப்படைக்க போகிறீங்கன்னு தெரிந்து கொள்ள ஆட்கள் கண்டிப்பாக இரண்டு பேரையும் பாலோ பண்ணுவாங்க. நம்ப முடியாது. பொறுமையாக இருங்க " என்று விட்டான் சேனா.

தாரா தேவிக்கு, மாதாந்திர இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் என்பதால்! மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு சிகிச்சை கூட, மும்பை எல்லையை தான்டி வேறு இடத்தில் தான் நடந்து கொண்டிருந்தது.

ராஜன் மீண்டும் சென்னை வந்து விட, தாரா தேவி தொடர் சிகிச்சையில் இருந்தார். இங்கே, மாயாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியும் பார்த்தே ஆக வேண்டும் என்று சுக்லாவை நச்சரிக்க தொடங்கினாள்.

"சேனா, வேலையை முடிச்சுட்டு அழைத்து வரும் வரை பொறுமையாக இரு மாயா" என்று அவர் செய்த சமதானம் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்கு பிடிக்கவில்லை.

மீண்டும் அவள் ஆரம்பிக்க, சுக்லாவால் எதுவும் சொல்ல முடியாமல், சேனாவுக்கு அழைத்து விட்டார்.

"ஹலோ " என்றவன். " என்ன திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?" என்றான்.

" அது வந்து சேனா.. மாயா, தாராவை பார்க்கனுமென்று.. " என்றவரை இடைமறித்தவன்.

"இப்போ அவங்களுக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு. வர ஒரு வாரம் ஆகலாம். நானே அழைத்து வருகிறேன் " என்றான்.

"டிரீட்மென்ட்டா எதற்கு டீரீட்ட்மெண்ட் ? " என்றார் புரியாமல்

"சாதாரணமான செக்கப் அப் தான். பயப்படும் விதமாக எதும் இல்லை " என்றான்.

"சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே "

"அங்கே இப்போ வேண்டாம். டீரீட்மெண்ட் கூட ஆந்திரா பார்டர்ல உள்ள எனக்கு தெரிந்த மருத்துவமனையில் வைத்து தான் பார்க்கிறேன். நிலைமை சரியானதும் நானே அழைத்து வருகிறேன் " என்று விட்டான்.

"எந்த மருத்துவமனை? பாதுகாப்பானதா? என்று பொதுவான விவரங்களை தெரிந்து கொண்டு அழைப்பை துண்டித்தவர். மாயாவிடம் தகவலை சொல்லி, சேனா அழைத்து வந்து விடுவான். கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் மாயா அதை கேட்டால் தானே? " சரி " என நல்லபிள்ளை போல தலையாட்டியவள். சுக்லாவுக்கு தெரியாமல் அந்த நிமிடமே கிளம்பி விட்டாள். இது சுக்லாவுக்கு தெரிந்த போது, அவள் அந்த மருத்துவமனையினையை நெருங்கி இருந்தாள்.

பதட்டமானவர் நேராக சேனாவுக்கு அழைக்க, " என்ன அவசரம்? அழைத்து வர மாட்டேனா?" என்று கடிந்து கொண்டவன். தானும் மருத்துவமனைக்கு நள்ளிரவு நேரத்தில் கிளம்பி விட்டான். கிளம்பும் போதும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்களிடம் , எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று விசாரித்தவன். கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினான்.

சேனா அங்கே வந்த போது , வார்ட் பாய் உடையில் இருவர் தாராவின் அறைபக்கமாக சுற்றிக் கொண்டிருந்தனர். சேனாவை கண்டதும் தலையசைத்து விட்டு நகர்ந்து சென்றனர். அவர்கள் , சேனாவினால் நியமிக்கப்பட்டவர்கள் தான்!.

தாரா தேவியின் அறைக்குள் சென்றான். கைகளில் டிரிப்ஸ்க்கான ஊசி குத்தப்பட்டு, ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தலையில் முடிக்கற்றைகள் மின் விசிறியின் காற்றுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தன. முகத்தில் கல்மிஷமில்லா குழந்தை போல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார். இதுவரை அவருடைய புகைப்படத்தை கூட சேனா பார்த்ததில்லை. பார்க்க விரும்பவில்லை என்பதே நிஜம்.

ஏனோ! தாரா தேவியின் மீது நல்லபிப்ராயம் ஏற்படவில்லை. அவர் செய்த தொழில், நடத்தை சரியில்லாதவராக காட்டியது. கட்டாயத்தினால் இந்த சாக்கடைக்குள் தள்ளப்பட்டவர்களில் தாராவும் ஒருவர் என்பதை யார் இவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது.

அந்த அறையை சுற்றி பார்வையிட, மன உந்துதலில் டக்கென்று தாரா தேவி விழித்துக் கொண்டார். அருகில் நின்றிருந்த இளைஞனை கண்டு, கண்கள் மிரட்சியை காட்ட! அதை உணர்ந்தது போல!

"ஹேய்.. ரிலாக்ஸ் . பயப்படாதீங்க. நீங்க பத்திரமா இருக்கீங்க? " என்றான் அவசரமாக

அவனது தமிழை விழிவிரித்து பார்த்தவர். " நீங்க தமிழா?" என்றார் கண்களில் மகிழ்ச்சி மின்ன

"ம்ம்ம் " என்றான் ஆமோதிப்பாக

"என்.. என்னையும் தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா? அங்கே தான்.. என்.. என் பொண்ணு இருக்கா?" என்றார் பரவசமாக

"மாயாவதி?" என்றான்.

"ஆ.. ஆமாம்.. மாயா.. என் பெண்ணை உங்களுக்கு தெரியுமா? நீங்க அவளை பார்த்திருக்கீங்களா? நல்லா இருக்காளா?" என்று கேட்டவரின் கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென கொட்டியது.

"ம்ம்ம் " என்றான்.

"அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றார் ஒரு தாயின் எதிர்பார்ப்பாக

சேனா, பதில் சொல்லாது கடிகாரத்தை பார்க்க! " ம்ஹும்.. கல்யாணமெல்லாம் எங்கே நடக்கப் போகுது?. சின்ன வயசிலேயே, அவ கண் முன்னாடியே பல ஆண்களால் நான் சீரழிக்கப்படுவதை பார்த்தவளுக்கு, காதல் கல்யாணம் என்கிற என்னமெல்லாம் வருமா? " என்றார் விரக்தியாக

சேனாவுக்கு அவரது பேச்சில் ஏனோ இரக்கம் வரவில்லை. நந்திதாவின் வலி நிறைந்த முகமே மனக்கண்ணில் வந்து போக, அவரது பேச்சை மேலும் கேட்க விரும்பாமல்,

"நான் ரெஸ்ட்ரூம் போய்விட்டு வரேன்" என்று அந்த அறையிலிருந்த பால்கனிக்கு சென்று விட்டான். சுற்றிலும் இருட்டு , கண்ணை இறுக மூடி கம்பிகளை இறுக பற்றியபடி நின்று கொண்டிருந்தான்.

காற்றும், அமைதியும் சற்றே ஆசுவாசப்படுத்த, மீண்டும் அறைக்குள் வந்த போது! யாரோ அவனை இழுத்து சுவரோரம் சாய்த்து, அவன் வாயை கைகளால் அழுந்த மூடினர்.

சேனா, பார்வையால் சுட்டெறித்தபடி நிமிர, எதிரே மாயா! சிறு குழந்தைபோல் ஒரு விரலை அவள் உதட்டின் மேல் வைத்து, சத்தம் போடாதீங்க ' என்று மிக மெதுவாக ஷ்ஷ்.. ஷ்ஷ்.. " என்று காட்டிக் கொண்டிருந்தாள்.

இருவருக்கும் இடையே, இடைவெளி என்பது சிறிதும் இல்லை. இருவருமே நேருக்கு நேராக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். அவன் கண்களில் தெரிவது கோபம் என்றால்! மாயாவின் கண்களில் தெரிவது கெஞ்சல் மட்டுமே.

நேருக்கு நேராக அனல் தெறிக்க அவள் கண்களை பார்க்க, மாயாவின் கண்கள் வேறு எதையோ அவனுக்கு குறிப்பு காட்டியது. புருவத்தை சுருக்கி, அவள் விழி காட்டிய திசையில் பார்வையை செலுத்த,

"ஒருவன் அறையின் உள்ளே வந்து நின்றபடி, போனில் யாருடனோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான்.

"ம்ம். அவள் மாதிரி தான் இருந்தது. பின்தொடர்ந்து தான் வந்தேன். இப்போ ஆளை காணல"

".............. ...... "

"இல்லை. இதுவரையும் யாரும் தாராவை பார்க்க வரலை " எனும் போதே, யாரோ கதவை திறக்க,

திரும்பிப் பார்த்தான். " சீக்கிரம் வா. பையாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம் "

"என்ன? எப்படி டா?"

"தெரியலை. மாயா மாதிரி இருந்ததும் பாலோ பண்ணிட்டு போயிருந்திருக்கார். எதிரே வந்த லாரியில் போய் கவனமில்லாமல் விட்டுட்டார் போல!. ஸ்பாட் அவுட்டாம் " என்றான் மற்றொருவன் வருத்தமாக

"என்ன! மாயா மாதிரி இருக்கேன்னு ஒரு பொண்ணை பாலோ பண்ணிட்டு வந்தேன். இப்போ ஆளையே காணலை!" என்றான் அதிர்ச்சியாக

"அவளை தேட ஆரம்பிச்சாலே, நம்ம ஆளுங்க இறந்துடறாங்க. விட்டு தொலைங்கடான்னா யார் கேட்கிறா? இப்போ பாரு தலையே போய் சேர்ந்திடுச்சு " என்றவன். "சரி.. சரி.. சீக்கிரம் வா " என்றபடி அங்கிருந்து அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றதும் ஆசுவாச மூச்சு விட, " இப்போ எதற்கு இங்கே வந்த?" என்ற சேனாவின் குரல் சீறலாக வெளி வந்தது.

"அத.. தாராம்மா " என்று தடுமாற, அவளிடமிருந்து இரண்டடி விலகி நின்றவன். "அது தான் அவங்களை அழைச்சிட்டு வரேன்னு சொன்னேன் ல. அதுக்குள்ள என்ன அவசரம். இடியட். " என்றான் காட்டமாக

மாயா அவனை முறைக்க!

அதை பொருட்டாக கூட மதிக்காமல், " என்னை நம்பி என் பிரண்ட் ரிஸ்க் எடுத்திருக்கான். இந்தம்மாவை இங்கே வைத்து டிரீட்மென்ட் கொடுப்பது ரிஸ்க் என தெரிந்தும்!. உன் இஷ்டத்துக்கு வந்து நிற்கிற? இங்கே ஏதும் அசம்பாவிதம் நடந்தால்! யார் பொறுப்பேற்பது? நீயும் உன் அம்மாவுமா?

லுக் மாயாவதி. இது எங்களுக்கு ரிஸ்க் என்கிறதால் மட்டுமில்லை. எந்த சின்ன விசயத்தில் கூட, உன் பெயரோ உன் அம்மாவினுடைய பெயரோ? எங்களோட சேர்ந்து வந்துவிட கூடாது என்பதில் கவனமா இருக்கோம்.

என்ன தான் நந்திதா அத்தைக்காக உதவி செய்ய வந்தாலும், எனக்கு என்னுடைய மரியாதை ரொம்ப முக்கியம். எங்க மரியாதை கெட்ட போகிற மாதரியோ! உன் பெயரை சம்மந்தபடுத்தியோ ஏதாவது செய்தி வெளிவர மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்தது! உங்க அம்மாவை , அனுப்பினங்களிடமே ஒப்படைத்து விட்டு வந்து விடுவேன் " என்று கடுமையாக எச்சரித்தவன். வேகமாக வெளியில் சென்று விட்டான்.

மாயாவுக்கு, சேனா தங்களை எவ்வளவு கீழானவனாக நினைக்கிறான் என்று புரியாமலில்லை. ஆனால் தாய்பாசம் அவளை அங்கே பொறுமையாக இருக்க விடவில்லை. கிளம்பி வந்து விட்டாள்.

வழியில் அவளை கண்டு ஒருவன் பின்தொடர, அறைக்குள் போக்கு காட்டி நுழைந்து விட்டாள். அங்கே நிச்சயமாக சேனாவை எதிர்பார்க்கவில்லை. அவள் பின்பக்கமாக வந்திருந்தாள். அப்போ! உள்ளே படுத்திருப்பது அம்மாவா! என்று எண்ணம் எழ, உள்ளே சென்று பார்க்க!

வெட்டியெறியப்பட்ட செடியாக ஓய்ந்து போய் கிடந்தார் தாரா தேவி. பல வருடங்களாக தேடி தேடி ஓய்ந்து போன கண்கள். நொடிக் கூட அசையாமல் அவரது தோற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தன. மெதுவாக அடி எடுத்து வைத்தவள். கைகள் நடுங்க, தாராவை தொட,

அத்துணை வருட பிரிவிலும், மகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன். தூக்கத்திலேயே ' மாயா!: என்றார் முனங்கலமாக

வெடித்து அழுகை வர, அதை வாயை இறுக மூடி சத்தத்தை குறைத்தாள்.ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. எத்தனை வருட ஏக்கம், எத்தனை வருட தேடல், துன்பம், துயரம் அனைத்திற்கும் இதோ விடிவு கிடைத்தாகி விட்டது.

இனி ஒரு போதும் மாயா எதற்கும் கலங்கி நிற்கப் போவதில்லை. அவளது வேண்டுகோளின் படி, சேனா அவளது கொண்டு வந்து ஒப்படைத்து விட்டான். இனி, அவன் சொன்னது போல மாயா விலகிக் கொள்வாள்.

ஆனால் சுக்லா மாறுவாரா? இதோ! நந்திதாவுக்கு விவாகரத்து பத்திரத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை! அது தெரிந்து தான் மாயா, சுக்லாவை பிரியா ஒப்புக் கொண்டாளா? இதை பற்றி சேனாவுக்கு தெரிய வரும் போது என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 15
தனது ஸ்பரிசத்திலேயே தன்னை கண்டு கொண்ட தாயை நினைத்து நெஞ்சம் விம்பியது. கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட, அதை துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தவளின் கவனத்தை, மீண்டும் உள்ளே வந்த சேனாவின் " கிளம்பு " என்ற குரல் மெதுவாக இருந்தாலும், அழுத்தமான வார்த்தை உச்சரிப்பு கலைக்க, திரும்பி சேனாவை பார்த்தாள்.

கையில் கட்டியிருந்த வாட்சை ஒரு முறை பார்த்தவன். " டைம் ஆச்சு கிளம்பு. இதற்கு மேல் பேச நேரமில்லை " என்றான் அழுத்தமாக

"அம்மா?" என்றாள் மெதுவாக வார்த்தை வரவில்லை. உதட்டசைவை வைத்தே புரிந்து கொண்டவன்.

"நானே அழைச்சிட்டு வருவேன். இப்போ நீ கிளம்பு முதலில் " என்ற போது அறைக்கதவு தட்டப்பட, அதை திறந்தான்.

வார்ட் பாய் உடை அணிந்திருந்த ஒருவன் உள்ளே வர, " இவங்களை தான் அழைச்சிட்டு போகனும். பத்திரம். யார் கண்ணிலும் படாமல்.. " என்று அறிவுறுத்தினான்.

"பின் பக்கமா அழைத்து போகிறேன் சார் " என்றான் அவனும்.

"ம்ம் " என்றவன். " இவர் கூட போ " என்றான் மாயாவிடம்.

தாயை பார்த்தபடி மெதுவாக அவள் அறை வாயிலை அடைய,

"வொன் செகண்ட் " என்றவன். அங்கிருந்த மாஸ்க் ஒன்றை எடுத்து, தானே அவள் முகத்தை மறைக்கும் விதமாக அணிவித்து விட்டவன். தான் அணிவதற்காக வாங்கி வந்திருந்த தொப்பியை அவளுக்கு போட்டு விட்டு பார்க்க,

அவள் முடி கலைந்து முன்னே ஒன்றிரண்டு சிலும்பலாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு, அணிவித்த தொப்பியை எடுத்து விட்டு, சிலுப்பலாக தொங்கிக் கொண்டிருந்த முடியை எல்லாம் ஓன்றாக தலையை கோதிவிடுவது போல, சரிசெய்து விட்டவன். மீண்டும் தொப்பியை அவளுக்கு அணிவித்து விட்டு, மாஸ்க்கையும் ஒரு முறை சரிசெய்து விட்டு,

" பத்திரமாக அழைச்சிட்டு போங்க " என்றான். அருகில் நின்றிருந்த வார்டு பாயிடம்.

"சரிங்க சார் " என்றவன். " வாங்க " என்று மாயாவை அழைக்க,

விழியசைக்காமல் சேனாவையே பார்த்துக் கொண்டிருந்தவள். பிறகு, மெல்ல தலையசைத்து வார்ட்டு பாய் பின்னால் செல்ல,

சேனாவை கடக்கும் போது, " நீ போனதும் அங்கிளை என்னிடம் பேச சொல்லு " என்றான். ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு, அவனை கடந்து சென்றாள்.

ஒரு வழியாக மாயா சென்னை வந்த போது, மறு நாள் காலை ஆகி விட்டது. அறைகதவை திறந்து உள்ளே செல்ல, சுக்லா ஷோபாவில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார்.

சொல்லாமல் சென்றதில் குற்றவுணர்ச்சி எழ, நேராக சென்றவள். சுக்லாவின் காலடியில் அமர்ந்து , அவரது தொடையில் தலைசாய்த்துக் கொண்டாள்.

மெதுவாக கண்விழித்தவருக்கு மாயாவின் வருத்தமான ஒரு பக்க முகமே தெரிந்தது. தலையை ஆதூரமாக வருடிக் கொடுத்தார்.

அதில் தலைநிமிர்த்தி பார்த்தவள். " சாரி சுக்லா ஜி. உங்களிடம் சொல்லாமல் போனதுக்கு " என்றாள் வருத்தமாக

"நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் தனியாக போயிருக்க? " என்றார் குற்றம் சாட்டும் விதமாக

"எனக்கு சேனாவை நினைச்சு பயம் சுக்லா ஜி. எங்கே அம்மாவை காப்பாற்றுவதாக சொல்லி விட்டு, பிறகு என் மேல் உள்ள கோவத்தில் அவங்களை ஏதும் செய்திடுவாரோ என்று!" என்றாள் மறைக்காமல்

"அப்படி நினைத்திருந்தால்? உங்க அம்மாவை காப்பாற்றியே இருக்க மாட்டானே? . அங்கேயே இருக்கட்டும் என்று விட்டிருப்பானே?" என்றார் ஆதங்கமாக

" ஒரு வேளை அம்மாவை காப்பாற்றி விட்டு, எனக்கு எதிராக ட்ரம்கார்ட் போல அம்மாவை பயன்படுத்திக் கொண்டால்!" என்றாள்.

"சேனா சொன்ன வாக்கை தவற மாட்டான் மாயா" என்று பொறுமையாக எடுத்து கூறினார்.

"பிறகு ஏன்? அம்மாவை என் கூட அனுப்பலை? என்னதான் பாதுகாப்பு பற்றி யோசித்தாலும்! இத்தனை நாட்கள் மருத்துவமனையில் அம்மா இருக்கனுமா?. இப்போது கூட என் கூடவே அனுப்பி வைத்திருக்கலாமே?" என்றாள் சந்தேகமாக

"மாயா! நீ சொன்னது போல் செய்ய ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் சேனா, ஒரு விசயத்தை தள்ளி போடுகிறான் என்றால்! நிச்சயம் அதற்கு பின் ஒரு நியாயமான காரணம் இருக்கும்! " என்றார் சுக்லா, சேனாவுக்கு ஆதரவாக

"எப்படி சுக்லாஜி? போலீஸை விட்டு என்னை அடிக்க வைத்தது போலவா?" என்றாள் பட்டென்று

சற்று நேரம் மௌனமாக இருந்தவர். பிறகு பெருமூச்சு விட்டபடி, " சீக்கிரமே நம்மை புரிந்து கொள்வான் மாயா" என்றார் அவள் தலையை ஆதூரமாக வருடியபடி. சுக்லாவுக்கும், சேனா சொன்னதின் பேரில் தான் மாயா கைது செய்யப்பட்டு, போலீஸாரால் துன்புறுத்தப்பட்டாள் என்பதை சமீபத்தில் அறிந்திருந்தார். அதனாலேயே அவளை, தனியே விட சுக்லாவுக்கு பயம்.

"யாரும் நம்மை புரிந்து கொள்ள வேண்டாம் சுக்லா ஜி. தாராம்மா வந்த பிறகு, நான் அவனிடம் சொன்னது போல! இங்கிருந்து கிளம்பி கெஸ்ட்ஹவுஸ் போயிடுவேன். அதோடு, அவனுக்கும் எனக்குமான டீலிங் முடிந்தது.

அவன் என்னை போலீஸில் அடி வாங்க வைத்ததற்காக, நந்திதாவுக்கு விரைவிலேயே நீங்க டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பனும் " என்றாள் கண்கள் பளபளக்க

"ஷ்ஷ் " என்றவர். " காரியம் முடியும் வரை நாம என்ன செய்ய போகிறோம் என்பதை தவறி கூட, நமக்குள் பேச கூடாது. அல்ரெடி எல்லாம் தயாராகிடுச்சு. தாரா நம்மிடம் வந்த பிறகு, சேனாவுக்கும் எனக்குமானது தான் பேச்சு. என் மாயா தங்கம் பட்ட கஷ்டத்துக்கு யாராக இருந்தாலும் அதற்கான பலனை அனுபவித்தே ஆகனும் " என்றார் எங்கோ வெறித்தபடி. சுக்லாவின் கண்களில் அப்படியொரு பழிவெறி!
 

Sirajunisha

Moderator

மனம் சமாதனமடைய மென்னகை புரிந்தவள். அவளது கால்களை கட்டிக் கொண்டு, " எனக்கு பசிக்குது " என்றாள் சலுகையாக

"நீ குளிச்சிட்டு வா. புட் ஆர்டர் பண்றேன் " என்றார் கன்னத்தை கிள்ளி

" ஷ்ஷ் .. ஆஆ " என்று சிணுங்கியபடி எழுந்தவள். குளிக்கச் செல்ல, ஞாபகம் வந்தவளாக, "சுக்லா ஜி. சேனா உங்களை போன் பண்ண சொன்னான் " என்றவள். பிறகு சொன்னார் " என்று கண்ணடித்து விட்டு சென்றாள்.

மாயாவுக்கு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வராது. அது அவளது குணம். சேனாவின் உதாசீனங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பற்கு காரணம்! அவளது தாராம்மாவுக்காக மட்டுமே

தனது செல்போனை எடுத்தவர். சேனாவுக்கு அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்தில் அழைப்பு எடுக்கப்பட்டது.

"ஹலோ "

"ஹலோ .. நான் சுக்லா பேசுகிறேன். மாயா வந்து விட்டாள் சேனா. ரொம்ப தேங்க்ஸ் " என்றார்.

"ம்ம்ம். அவளை இனி நான் எங்கேயும் பார்க்கக் கூடாது. தாராவை இன்னும் இரண்டு நாளில் ஒப்படைப்பேன். பிறகு, அவளுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை. காரியம் சாதித்து விட்டு, எதையாவது செய்து வாலாட்டினாள்? அவங்க அம்மாவோடு அவளை சேர்த்து கொண்டு போய் வாங்கினவங்களிடமே விட்டுட்டு வந்துடுவேன் " என்றான் அழுத்தமாக. அவனது பேச்சில் சொன்னதை செய்வேன் என்ற உறுதி இருந்தது.

நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவர். " ம்ம்ம் " என்று முணங்கினார்.

"உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இனிமேலாவது குடும்பத்துடன் இருக்க பாருங்க. ராக்கி கர்ப்பமாக இருக்கிறாள். தாத்தாவாக போறீங்க. இனிமேலாவது குடும்ப மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுங்க " என்று சுக்லாவிடம் நாசுக்கு பார்க்காமல் அவரது தவறை சுட்டிக்காட்டி விட்டு, அழைப்பை துண்டித்தான்.

ராக்கி கர்ப்பமாக இருக்கிறாள் என்பது சந்தோஷம் தான். அதற்காக எல்லாம் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ள போவதில்லை என்பது சேனா அறியாத உண்மை.

சொன்னது போலவே அடுத்த இரண்டு நாட்களில் தாரா தேவியை, மாயாவதியிடம் ஒப்படைத்தவன். கூடவே, அங்கே மாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்கள் பலரையும் காப்பாற்றி இருந்தான். அந்த கூட்டத்தின் தலைவன் விபத்தில் இறந்து விட, தாரா தேவி இருந்த இடத்தில் இருந்தவர்களை மீட்பது எளிதாகி விட்டது.

எத்தனை பெண்கள், எத்ததை சிறுமிகள். இதில் காதலித்தவனை நம்பி ஓடிவந்த பல இளம் பெண்கள் இரூந்தனர். இதில் பலர் வேறு வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள். வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை அவர்களது வீட்டிற்கே அனுப்ப முடிவு செய்து கேட்ட போது, யாருமே அதற்கு முன் வரவில்லை.

அங்கிருந்து வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இனியும் குடும்பத்தில் நுழைந்து தேவையில்லாத குழப்பத்தை செய்ய அவர்கள் முன்வரவில்லை.
தங்குவதற்கு பாதுகாப்பான இடமும், வயிற்றுப் பாட்டுக்கு வேலை மட்டுமே கேட்டனர்.

மொத்தமாக அனைவரையும் அழைத்து வரவே, சேனா அங்கே தங்கியிருந்தான். முதலில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பூரண நலத்தில் உள்ளவர்கள், அவர்களது நிறுவனத்திலேயே வேலைக்கு அமர்த்திக் கொள்ள நினைத்திருந்தான்.

முதலில் தாரா தேவியை மாயாவிடம் ஒப்படைக்க நினைத்து அழைத்து வந்திருந்தான். மாயாவை கண்டதும், ஒரு தாயாக தாரா கண் கலங்கினார் தான். மகளது தோற்றத்தை கண்டு, அவள் நலமாக இருப்பது புரிய, மனம் அமைதியானது.

" நல்லா இருக்கியா மாயா? " என்றவர். ஆரத்தழுவிக் கொண்டார். தானும் அணைத்துக் கொண்டவள். அவரது முதுகை ஆதூரமாக தடவிக் கொடுத்தாள்.

சற்று நேரத்திலேயே சுதாரித்து கொண்டவர். தன்னுடன் விடுப்பட்ட பெண்களுக்கு, ஏதாவது உதவி கிடைக்குமா? என்று மகளிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.

"அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க உங்க பொண்ணு கூட போங்க " என்றான் சேனாதிபதி.

" இல்லை. நான் அவங்களை விட்டுவிட்டு போக மாட்டேன். மாயா கண்டிப்பாக ஏதாவது ஏற்பாடு செய்திருப்பாள். நீங்க எங்க எல்லாருக்கும் அந்த நரகத்திலிருந்து விடுதலை வாங்கி கொடுத்ததே போதும் தம்பி. தலைமுறை தலைமுறைக்கே புண்ணியம் சேர்த்திட்டீங்க. நீங்க நினைச்ச காரியமெல்லாம் நடக்கும். உங்க ஏழேழு தலைமுறையும் நல்லா இருப்பாங்க " என்று மனதார அவனை ஆசிர்வதித்தவர்.

காப்பாற்றி உங்களுக்கு மேலும் மேலும் தொல்லை கொடுக்கக் கூடாது. மாயா பார்த்துக் கொள்வாள். அவளால் முடியலை என்றால்? கண்டிப்பாக உங்களிடம் தான் வருவோம் " என்று விட்டார்.

சேனா, புருவம் சுருக்கி பார்க்க! " எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டேன். வாங்கம்மா " என்றவள். சேனாவிடம் திரும்பி, பல பெண்களோட வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் சொன்ன வாக்கை காப்பாற்றுவேன் " என்றவள். தனது தாயுடன் மற்றவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விட்டாள்.

சொன்னது போலவே, சுக்லாவிடமிருந்து விலகி, தாரா மற்றும் மற்ற பெண்களுடன் தங்கிக் கொண்டாள். யார் யாருக்கு எதிலெதில் விரும்பம் என்று கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கான வகுப்புகள் அவர்கள் தங்குமிடத்திற்கே வந்து சொல்லிக் கொடுத்து, பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் பெரும்பாலும் உதவியாக இருந்தது மாரியும், செல்வமும் தான். சிலருக்கு தையல், சிலருக்கு கணிணி கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தது. பலருக்கு அவர்களது பெயரை மாற்றி விட்டாள். சிறு வயது பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு, அவர்களுக்கு கவுன்சிவிங் கொடுக்கப்பட்டது. சூழ்நிலைகள் மாறலாம்! ஆனால் மனக் காயங்கள் ஆறாத புண்ணாகவே மனதில் தேங்கி நிற்குமே!.

இதில் சில பெரிய மனிதர்களின் குறுக்கீடுகள் இருந்தாலும், அதை சுக்லாவின் உதவி கொண்டு சரி செய்து விட்டாள். இவற்றையெல்லாம் ஓரளவு சரிசெய்ய மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.

அன்று முக்கியமான மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதில் மிக முக்கிய தொழில் ஒப்பந்தம் . இரு பக்கமும் பெரிய அளவில் இலாபத்தை கொடுக்க கூடியது. அதில் உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து! குறைகளை சரி செய்வதற்கான தீர்வுகள் என்ன? என்பதை பற்றி பேசி முடிக்க சில மணி நேரங்கள் ஆகி விட்டன. அனைத்தும் பேசி முடித்து, ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். இதில் இலாபம் மட்டுமே பல நூறு கோடிகள்.

மகிழ்ச்சியாக மீட்டிங்கை முடித்து சேதுபதியும், சேனாவும் வர, அழுதழுது வீங்கிய முகத்துடன் கையில் ஏதோ பேப்பருடன் நந்திதா வந்து நின்றார்.

" அத்தை என்னாச்சு?" என்றான் சேனா பதட்டமாக

" என்னாச்சும்மா? எதற்கு அழற?" என்ற சேது பரிதவிப்பாக கேட்க, அவரிடம் தன் கையிலுள்ளதை கொடுக்க,
அதை அவசரமாக வாங்கி பிரித்து பார்த்தான். சுக்லா, நந்திதாவுக்கு அனுப்பிய விவாகரத்து பத்திரம் அது!

எதற்கு இது? என்ற குழப்பமே பிராதனமாக இருந்தது சேனாவுக்கு.

" அந்த மாயா தான் போயிட்டாளே? பிறகு எதற்கு இந்த நோட்டீஸ் என்றான் புரியாமல்!"

" மாயாவை அவரிடமிருந்து பிரிச்சுட்டோம் என்பதற்காகத்தான் இந்த நோட்டீஸ்! " என்றார் அழுகையினூடே சரியாக கணித்து கூறினார் நந்திதா.

இனி, மாயா சுக்லாவின் பின்னால் இருந்து ஆட்டுவிப்பாள் என்பதை அறிவார் யாரோ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 16
மாயாவை சுக்லாவிடமிருந்து பிரித்ததற்காகத்தான் இந்த விவாகரத்து பத்திரத்தை அனுப்பியிருக்கிறார் என்று நந்திதா சொன்னதை சேனாவினால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"என்ன சொல்றீங்க? அப்படி செய்வதென்றால்! மாயா அங்கிருந்து கிளம்பினவுடனேயே செய்திருக்கலாமே? எதற்கு இத்தனை மாதம் கழித்து அனுப்பனும்?" என்றான் சேனா

"உடனே அனுப்பியிருந்தால், மாயாவை பிரித்தது தான் காரணம் என்று எல்லோருக்குமே தெரிந்து விடும். பலரது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்! அதனால் தான் இப்போது அனுப்பியிருக்கிறார் " என்றார் நந்திதா மூக்கை உறிஞ்சியபடி

நந்திதாவின் அழுகையை கண்ட சேது, "நீ அழாதே மா. நான் மச்சானிடம் பேசுகிறேன் " என்று சமாதானம் செய்தவர்.

" சேனா!. வா நாம போய் மச்சானிடம் நேரிலேயே பேசிவிட்டு வந்து விடலாம் " என்றார்.

பெருமூச்சு விட்டவன். சம்மதமாக தலையசைத்தான். அப்போதே கிளம்பி சுக்லாவை சந்திக்க சென்றனர்.

சுக்லா மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இருந்தார். துறைமுகத்திலிருந்து மீன்கள் வண்டிகளில் தொழிற்சாலைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். மேலே உள்ள அறையிலிருந்தபடியே கீழே வேலை நடப்பதை பார்க்கும் படி தளம் அமைக்கப்பட்டிருந்தது.

தூரத்தே தெரியும் கடல் ஒரு பக்கம் நின்று பார்த்தால் தெரியும். ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தபடி, மாயா வெகுநேரம் இங்கே நின்றிருப்பாள். அதை பார்த்து பழகிக் கொண்டவர் தான் சுக்லா.

இப்போதும் அதே போல கடலை பார்த்தபடி நின்றிருந்தார். அவரது கவனத்தை கலைக்கும் விதமாக அறைக்கதவு தட்டப்பட்டது. திரும்பி பார்க்க, அவரது பி. ஏ நின்றிருந்ததார்.

கேள்வியாக பார்க்க, " சார் உங்களை பார்க்க சேனா சாரும், சேதுபதி சாரும் வந்திருக்காங்க " என்றார்.

"ஓ! நானே வரேன் " என்றவர். உள்ளே வந்து கொண்டிருந்த சேனா மற்றும் சேதுபதியை எதிர் கொண்டு வந்து அழைத்தார்.

"வாங்க வாங்க " என்றவர். சேனாவை ஆற தழுவி, " வாங்க யங் மேன். எப்படி இருக்கீங்க ?" என்று புன்னகையோடு சேனாவை ஆரத்தழுவி வரவேற்றார். அதில் அவருடைய உண்மையான அன்பு வெளிப்பட்டது.

" ம்ம் .. குட் அங்கிள் " என்றவனின் முகத்தில் சிரிப்புக் கூட இல்லை.

" வாங்க ஆபீஸ் ரூம் போய் பேசலாம் " என்று அவர்களை அழைத்து சென்றார். போகும் போது, சுற்றிலும் பார்வையிட்டபடியே சென்றான் சேனா.

முறையாக அவர்களை வரவேற்று, அமர வைத்தார். பொதுவான நலம் விசாரிப்புக்கு பிறகு, சேதுபதி தான் பேச்சை ஆரம்பித்தார்.

"நீங்க நந்திதாவுக்கு டிரைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினீங்களா?" என்றார்.

"ஆமாம் " என்றார் சாதாரணமாக

" ஏன்?"

"சேர்ந்து வாழ விருப்பமில்லை "

"இது என்ன பேச்சு மச்சான்?. இத்தனை வருஷமா அந்த பொண்ணு மாயா கூட இருந்தீங்க? அதுவே நீங்க நந்திதாவுக்கு செய்த துரோகம். இப்போ அதையும் தான்டி, டைவர்ஸ் வரை ஏற்பாடு செய்திருக்கீங்க? என்ன இதெல்லாம்? உங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள்? நாளைக்கு அவங்க வீட்டில் இதை பற்றி தோண்டி துருவினால்! அவளுக்கு தானே அவமானம். அவளை பிறகு யார் மதிப்பா?. இத்தனை வயதில் இதெல்லாம் நல்லா இல்லை. வாபஸ் வாங்கீடுங்க " என்றார் சேதுபதி படபடப்பாக.

"இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இந்த முடிவை எடுத்து ரொம்ப வருசமாச்சு. உண்மையை சொல்லப்போனால் ராக்கியோடு கல்யாணத்துக்காக மட்டும் தான் இவ்வளவு வருடம் தள்ளி போட்டதே!

அதோடு, என்னை பற்றி தேவ் குடும்பத்துக்கு நல்லாவே தெரியும். அதனால் , என்னை காரணமாக வைத்து ராக்கியை எதுவும் சொல்ல மாட்டாங்க.

நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை. எதை செய்யனும்! எதை செய்யக்கூடாது என்று எனக்கும் நல்லாவே தெரியும் " என்றார் சுக்லா முடிந்தவரை நாசுக்காக

இடையிட்ட சேனா, " அத்தையை எதுக்கு டைவர்ஸ் பண்ணணுமென்று நினைக்கிறீங்க? எனக்கு காரணம் சொல்லுங்க?" என்றான் யோசனையாக

"இப்போ அத்தை, தங்கச்சின்னு சொல்ற நீங்க? எதற்காக ராக்கி இருக்கும் போது, உங்க குடும்பத்துக்கு வெளிநாட்டில் பெண் பேசி முடிந்தீங்க?" என்றார் பதிலுக்கு

" அது என் பர்சனல். அதை பற்றி இங்கே நாங்க பேச வரலை " என்றான் எரிச்சலாக

"அதே மாதிரி இது என் பர்சனல் யங் மேன். அதை பற்றி நானும் விளக்கம் கொடுக்கனுமென்று அவசியமில்லையே!" என்றார் கூலாக

" இங்கே இல்லையென்றாலும் குடும்ப நீதிமன்றத்தில் கேட்கும் போது, பதில் சொல்லித் தானே ஆக வேண்டும். அப்போ எப்படி? ஜட்ஜிடமே கேள்வி கேட்க கூடாதுன்னு சொல்லுவீங்களா?" என்று நிதர்சனத்தை எடுத்து கூறினான்.

பெருமூச்சு விட்டவர். " எனக்கு பெரிதாக நந்திதாவோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை சேனா. அதனால் தான் விலகி இருக்கிறேன். இப்போது அந்த உறவுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறேன். அதற்கு தான் இந்த ஏற்பாடு " என்றார்.

"அதெப்படி கல்யாணமாகி குழந்தை பிறந்து பதினைந்து வருசத்துக்கும் மேலேயே சேர்ந்து வாழ்ந்த பிறகு, பிடிக்காமல் போகும் " என்றான் சேனா இடையிட்டு

"மனம் ஒரு குரங்கு சேனா!. அது எப்போ எப்படி மாறுமென்று கணிக்கவே முடியாது " என்று தத்துவம் பேசியவர். " ஏன்? உனக்கே கூட அந்த லண்டன் பெண்ணை கொஞ்ச நாளில் பிடிக்காமல் போகலாம்! " என்றார் கிண்டலாக

'ஐயோ! நானே கஷ்டப்பட்டு சேனாவை சம்மதிக்க வைத்திருக்கிறேன்! இவரோட குடும்பத்துக்கு பேச வந்தால்! என் பையன் கல்யாணத்தை நிறுத்திடுவார் போலிருக்கே! ' என்று சேது மனதிற்குள் அலறினார்.

சேனா, சுக்லாவையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். பணம் பணத்தோடு சேரும் என்ற பார்முலாவை தான் சேது இங்கே பயன்படுத்திக் கொண்டார்.

சேனாவின் அறிவும், பிரமாண்ட வளர்ச்சியும் லண்டன் சம்மந்தத்தை வழிய கொண்டு வந்தது என்றால்! சேனாவின் அழகும், இளமையும், கம்பீரமும் அந்த பெண்ணை சேனாவுக்காக பிடிவாதமாக காத்திருக்க வைத்தது.

"இப்போது உங்க விசயத்தை மட்டும் பேசுங்க " என்றார் சேதுபதி அழுத்தமாக

"நீங்க கேட்டதுக்கு அல்ரெடி நான் பதில் சொல்லிட்டேன் " என்றார் அவரும் விடாமல்

" இந்த டைவர்ஸ் முடிவுக்கு மாயாவை விட்டு பிரிந்தது தான் காரணமா?. எனக்கு நேரடியான பதில் வேணும்! " என்றான் சேனா. சுக்லாவை தீர்க்கமாக பார்த்தபடி

" மாயாவுக்காக நான் எதையும் செய்வேன். அது எல்லாருக்குமே தெரியும். ஆனால் மாயா என்னை விட்டு போனதிற்கு காரணம்! உனக்கும் அவளுக்கான டீல். அவ உன்னிடம் ஒரு உதவி கேட்டாள். அதை நீ செய்து கொடுத்தால்! என்னை விட்டு போகனுமென்று கேட்டாய். அதை அவளே தான் ஒப்புக் கொண்டாள். மறுக்க வில்லை. அதன்படி, அவள் அம்மாவை மட்டுமில்லாமல், இன்னும் நிறைய பேரை காப்பாற்றி கொடுத்திருக்க!

அதனால் அவள் சொன்னபடியே நடந்தும் கொண்டாள். இது முழுமையும் அவளோட முடிவு தான். அவளுடைய முடிவில் நான் தலையிடவே இல்லையே.

அதே போல என்னுடைய இந்த முடிவுக்கும் மாயாவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு " என்று விளக்கம் கொடுத்தார்.

சேனாவுக்கு அவருடைய பதில் தெளிவாக இருப்பது போல இருந்தாலும்! வேறு ஏதோ அதில் குறையிருப்பது போல உணர முடிந்தது. ஆனால் அவை என்னவென்று சரியாக புரிபடவில்லை.

சேனா , நெற்றியை வருடி யோசிக்க, " என்ன சேனா? அதெப்படி சொன்னவுடனே பிரிந்து விட்டார்களென்று தோணுதா?" என்று அவனது யோசனைக்கான காரணத்தை சரியாக கண்டுபிடித்து கேட்டார்.

வெடுக்கென்று நிமிர்ந்தவன். " அது மட்டுமில்லை. சொன்னவுடனே ஒ.கே சொல்லி, அதன்படி இரண்டு பேருமே விலகிக் கொண்டீங்க என்கிறதை நம்புவதா வேண்டுமான்னு யோசிக்கிறேன் " என்றான் சுக்லாவை ஆராய்ச்சியாக பார்த்தபடி

" நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம் " என்றார் சாதாரணமாக

"என்னிடம் சொன்ன வாக்கை மிறியிருந்தால்! அவளுக்கு இருக்கு! என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் " என்றவன். " வாங்கப்பா போகலாம். இனி எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்" என்று சேதுவையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

'ஹப்பா! டக்குன்னு பாயிண்ட்டை பிடிக்கிறானே! ' என்று சுக்லாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

சுக்லாவுக்கும் நந்திதாவுக்கும் விவாகரத்து வழக்கு கோர்டில் பதிவு செய்யப்பட்டடு விட்டது. நாட்கள் நகர, சேனாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த லண்டன் பெண்ணான நதியா கைலாஷ் என்கிற கேண்டி , தனது தகப்பானருடன் இந்தியா வருவதாக செய்தி வந்தது.

சேதுபதிக்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விரைவிலேயே தனது மகனுக்கு திருமணம் முடித்து வைத்து விடலாம்! என்று கற்பனையில் மிதக்க ஆரம்பித்தார்.

அவர்கள் வருவதற்கான காரணம் சேதுபதிக்கும் ஓரளவு தெரியும். திருமணத்துக்கு ஒப்புக் கொண்ட சேனா, அதை எப்போது என்று சொல்லாமல் காலம் தாழ்த்தி கொண்டிருந்தால்? என்ன செய்வது?. எனவே நேரிலேயே வர முடிவு செய்து கிளம்பி விட்டனர்.

கைலாஷ் மகளின் திருமணம் விசயமாக வருபவர் மாயாவை சீண்டி விட்டு, தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதை அறிவார் யாரோ? (ரைட்டரை தவிர) பொறுத்திருந்து பார்ப்போம்..

மாயாவின் சேட்டைகள் இப்போது சேனாவின் வாழ்க்கையிலும் தொடரும்...
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 17
நதியா மற்றும் கைலாஷ் சென்னை வந்து இறங்கி விட்டனர். அவர்களை தங்கள் வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு ஆகியிருந்தது. இதை கடைசி நேரத்தில் தெரிந்த கொண்ட சேனா, அவர்களுக்கிருந்த மற்றொரு வீட்டில் தங்க வைக்க சொல்லி விட்டான்.

சேதுபதி தான் விமான நிலையத்திற்கே, அழைக்க வந்திருந்தார். சேனா வராதது இருவருக்குமே ஏமாற்றமாக இருக்க, அவர் வரவேற்றப்பார்க கொடுத்த பொக்கேவை வாங்கிக் கொண்டு,

"சேனா வரலையா அங்கிள் " என்றாள் வருத்தமாக

"சேனா, முக்கிய வேலையில் இருக்கான் மா. அவ்வளவு வேலைக்கு நடுவிலும் உங்களை இன்றைக்கு மீட் பண்ண வருவான்" என்றார் மிகைப்படுத்தி

"அப்படியென்ன முக்கியமான வேலை? எங்களை விட? " என்றார் கைலாஷ்

" தாரா மற்றும் அவன் உடன் இருந்தவர்களை காப்பாற்றியதை பற்றி விளக்கமாக கூறியவர். அவர்களுக்கு சில உதவிகள் அரசாங்கத்திடமிருந்து தேவைப்படுவதால்! அதற்கான வேலையில் இருப்பதால் வர முடியவில்லை " என்றார். முன்பு நடந்து முடிந்த கதையை

அதோடு மாயா சில அரசாங்கம் சம்மந்தமான உதவிகளை ராஜனிடம் கூறி, சேனாவினால் செய்து தர முடியுமா? என்று கேட்டதை, இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ராஜன், சேனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் அனைத்தையும் இணைத்து மகன் உதவி செய்ய சென்றிருப்பதாக சொல்லி விட்டார்.

உண்மையை சொல்லப் போனால், நந்திதாவின் விவாகரத்து சம்மந்தமாக வக்கீலிடம் பேசிக் கொண்டிருக்கிறான். லண்டனிலிருந்து நதியா மற்றும் கைலாஷ் இருவரும் வருவது பற்றி தகவல் சொல்லியும் , நேரம் கிடைக்கும் போது வருவதாக கூறி விட்டான். அதை அப்படியே சொல்லமுடியுமா? வியாபாரியாக நாசுக்காக பூசி மொழுகி விட்டார்.

அங்கிருந்து வந்தவர்களுக்கு, ஜெட்லாக் இருக்க, ஓரிரு நாளில் இந்திய நேரத்திற்கு பொருந்திக் கொண்டனர். சேனா, மறுநாள் நேரிலேயே இவர்களை சந்திக்க வந்திருந்தான். அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வர, ஆசுவாச மூச்சு விட்டவன். தான் வந்து விட்டு போனதாக எழும் போது, தகவல் சொல்லுமாறு சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

சேனாவிடம் உதவி கேட்டிருந்த மாயா, அதற்கான பதில் எதுவும் வராததால்! தானே களத்தில் இறங்கி விட்டாள்.

"என்ன அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா?"

"தெளிஞ்சிடுச்சு மாயா?" என்றாள் பார்வதி

"சரி. அந்த ரூமில் போய் விட்டுட்டு வாங்க?"

"அவ பயந்து கத்தறா?"

"ம்ச்ச்.. சின்ன பொண்ணை சமாளிச்சு அனுப்ப தெரியாது!" என்று சிடுசிடுத்தவள். "எங்கே அவ? " என்றபடியே அவள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

அழுதழுது முகம் சிவந்து,தலை கலைந்து ஸ்கூல் யூனிபார்மில் இருந்தாள்.

"இங்கே வா " என்றழைக்க,

மறுப்பாக தலையசைத்த அந்த சிறு பெண்ணின் முகம் பயத்தில் வெளிறி போய் இருந்தது.

"இங்கே வா னு சொன்னேன்" என்ற அதட்டலில் அவள் அழுகையில் உடல் வெடவெடக்க நடந்து அவளருகே வந்தாள்.

"என்ன படிக்கிற?"

"12 வது" என்றாள் விசும்பலோட

"நான் சொல்றதை கேட்டாள். நீ இங்கே இருந்து போக முடியும்.
"கேட்குறியா?"

பயந்து போய் பார்க்க!

"அந்த அறைக்கு போனேன்னா.. உள்ளே ஒருத்தர் இருப்பார். அவரிடம் போய் மாமான்னு சொல்லி கூப்பிடு "

"கூப்பிட்டால்?"

"கூப்பிட்டு பாரேன். என்ன நடக்குதென்று!"

அவள் சொல்ல வருவதன் அர்த்தம் ஓரளவு புரிந்தது போல இருந்தது. எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறாள்..

மாட்டேன் என்று மறுப்பாக தலையசைக்க

" நீயாக போனால் உனக்கு நல்லது. இல்லையென்றால்! .. "

அப்போதும் அப்படியே நிற்க!

அந்த சிறுமியின் கையை பிடித்து தரதரவென அந்த அறைக்குள் இழுத்து சென்று தள்ளி விட்டவளின் முகத்தில் குரூர திருப்தி

உள்ளே சென்ற அந்த சிறுமிக்கு விடிவிளக்கின் 95% இருட்டாக இருந்த அறையில் முதலில் எதுவுமே தெரியவில்லை. போக போக இருட்டுக்கு கண் பழக்கப்பட, அந்த சிறு வெளிச்சத்தில் ஒரு ஆள் திரும்பி நிற்பது தெரிந்தது.

விசும்பல் சத்தத்தில் தள்ளாடியபடியே வந்தவர். இரண்டடிக்கு மேல் எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே தரையில் விழுந்து, பிறகு மெல்ல எழுந்தவர். இடது கையை தரையில் ஊன்றி, ஒரு கால் நீட்டி, மற்றொரு காலினை பாதியாக மடக்கி ஏனொ தானோவென்று அமர்ந்திருந்தார். செம போதை!

அந்த சின்ன பெண் பயத்தில் வெடவெடத்து கொண்டிருக்க, அவள் பக்கம் தலையை திருப்பியவர். " ஏய், இங்கே வா " என்றார் குழளறாக

" நான் வீட்டுக்கு போகனும் " என்றாள் அழுகையூடே

"புதியில " என்றார் அவள் பேசுவது புரியவில்லை என்றார் கைகளை ஆட்டி

அப்போது அவரது பாக்கெட்டிலிருந்த செல்போன் இசைத்தது. "ச்ச்ச.. இதூ வேத " என்றவர். செல்போனை எடுத்து பார்க்க, செல்போன் வெளிச்சத்தில் அவர் முகத்தை பார்த்த அந்த சிறு பெண்ணுக்கு பலத்த அதிர்ச்சி!

அப்படியே, உறைந்து போய் நிற்க! அப்போது சரியாக அறைக்கதவை திறந்து கொண்டு மாயா உள்ளே வந்தாள். அந்த பெண் அதிர்ந்து நிற்பதை கண்டு, தோளில் தொட, திடுக்கிட்டு திருப்பிப் பார்க்க!

கையை பிடித்து வெளியே அழைத்து வந்தவள். "அவர் உங்க மாமாவா?" என்றாள் தெரியாதது போல

மறுப்பாக தலையசைத்தவள். " இல்லை. அப்பா " என்றாள் எங்கேயோ வெறித்தபடி

" சாரி டூ சே திஸ். உங்க மாமான்னு நினைச்சு தான். நீயாவது புத்தி சொல்லுவேன்னு அழைச்சிட்டு வந்தேன் " என்றாள் மாயா நெற்றியை வருடியபடி

அந்த பெண் புரியாமல் பார்க்க! " இது பெண்கள் மறுவாழ்வு மையம். கணவனால், பிள்ளைகளால், காதலனால், கைவிடப்பட்ட பெண்கள் இங்கே இருக்காங்க. அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுங்கன்னு தினமும் வந்து நிற்கிறார் " என்றதும் அந்த பெண்ணிற்கு பெரிய அதிர்ச்சி

" அவருக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னாரே!' என்று அருகிலிருந்த பார்வதியும் எடுத்து கொடுக்க,

"உங்க அம்மாவை போன் போட்டு இங்கே வர சொல்றியா? " என்றாள் பார்வதி

"அம்மா இங்கே தனியா வர தெரியாது. கடைக்கு கூட தனியாக போனதில்லை " என்றாள்.

" அப்போ! வீட்டில் தாத்தா, சித்தப்பா, மாமா இப்படியாரும் ஆண்கள் இருக்காங்களா?" என்றாள் மாயா

" எங்க தாத்தா இருக்கார். அப்பாவோட அப்பா. அவரோட வர சொல்கிறேன் " என்றவள். பார்வதி போனை கொடுக்க, அதை வாங்கி தனது அன்னைக்கு அழைத்தாள். கால் ஈஸ் வெயிட்டிங் என்றே வந்து கொண்டிருந்தது.

இங்கே அறையினுள்ளே, " என்ன தி பொண்ண காணும் பொண்ண வரலைன்னு பினாத்தி, உயிர எடுக்குற. எங்கேயாவது பிரண்ட் கூட போயிருப்பா வருவா. சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணாத. பட்டிக்காடு " என்று எரிந்து விழுந்தவர். இணைப்பை துண்டித்து விட்டார்.

இப்போது மீண்டும் அழைப்பு விடுக்க, அழைப்பு போக! பிறகு அணைப்பு இணைக்கப்பட,

" ஹலோ " என்றதும் தான் தாமதம்.

" அம்மா, தாத்தா அழைத்துக் கொண்டு நான் சொல்ற இடத்துக்கு உடனே வாங்க " என்றவள். பார்வதி சொல்ல சொல்ல, அட்ரஸை சொன்னவள். பத்திரமா இருக்கேன். பயப்படாமல் வாங்க " என்று தைரியம் கூறி அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் வர, மகளை பார்த்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. பெண்ணின் நலத்தை அறிந்த பின்பே ஆசுவாசமாக மூச்சு விட்டனர். பிறகு, அந்த பெண்ணிடம் சொன்ன கதையையே சொல்லி,
அவரது மனைவியை மட்டும் உள்ளே அனுப்பி அழைத்து வர சொன்னாள்.

உள்ளே செல்ல அங்கே, " ஏய் என்னா ஆட்டம் காட்டுறீங்களா? நான் ஆர் தெர்மா? ஒதுங்க நான் சொல்ற மாதிரி சின்ன பொண்ணா அனுப்புத. இல்ல இங்கே இருக்குத பொண்ணுங்களுக்கு என்ன உதவியும் கிதைக்காம பண்ணிதுவேன் " என்றபடி நிமிர

எதிரில் நின்ற பெண்ணை கண்டார். " வா வா வா.. வந்துட்டிட்யா? மேலும் ஆபாசமாக பேச " அதை கேட்க முடியாதவருக்கு, வேகமாக வந்து அங்கேயிருந்த ஜாடியில் உள்ள தண்ணீரை அவரது முகத்தில் அடிப்பது போல ஊற்றினார்.

" ஏய் " என்றவருக்கு சற்றே நிதானம் வர, நன்றாக விழித்து பார்த்தவர். அங்கே நின்ற மனைவியை கண்டு முதலில் அதிர்ந்து! " இங்கே என்ன பண்ற?" என்றார் பல்லைக் கடித்தபடி

" மாமா, செளமி " என்று தொண்டையடைக்க கத்த, குரல் கேட்டு, இருவரும் உள்ளே வந்து விட்டனர். பார்க்க கூடாது நிலையில், மகள் மற்றும் தந்தையின் முன் நிற்பதை கண்டு கூனிக் குறுகினார்.

அந்த இடத்திலேயே அவனது தந்தை ஓங்கி அறை விட்டு, " ச்சீசீ.. தூ " என்று காரி துப்பி. நீயெல்லாம் மனுசனே இல்லை. வெறிபிடிச்ச மிருகம் " என்றவர். தன் பேத்தியின் கையை பிடித்து அழைத்து சென்று விட்டார்.

அவருக்கு, சற்று முன் பேத்தி சொன்ன நிகழ்வை கேட்டு, உடலெள்ளாம் நடுங்கியது. மாயா மற்றும் பார்வதி சொன்ன கதையை அந்த சிறு பெண் தற்போது நம்பியிருக்கலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெரியவருக்கு தெரியாமல் போகுமா? தன் பேத்தி பணையம் வைக்கப்பட்டது தெரிந்து அவருக்கு ஈர குலையே நடுங்கி விட்டது.

இப்போது அந்த பெண்ணுக்கு புரியாமல் இருக்கலாம். பின்னாளில் நிச்சயம் புரியும். அப்போது அவள், தந்தை என்று கூப்பிடுவாளா? ஆறாத வடுவாக அல்லவா இந்த நிகழ்வு அவள் மனதில் பதிந்து போகும்.

சற்று நேரத்தில் அந்த ஆளோட வெளியே இழுத்து வந்த அவரது மனைவி, மாயா மற்றும் பார்வதியை பார்த்து, " இந்த ஆள் இனிமே உங்களை தொல்லை செய்தான்னா ! போலீஸை வரவழைச்சிடுங்க. நானே வந்து சாட்சி சொல்கிறேன் " என்றவர். அவர் சட்டையை பிடித்து இழுத்து சென்றார்.

வழக்கமான சிரிப்புடன் அவர்களை பார்க்க! " இந்த ஆள் ஏதாவது பிரச்சனை பண்ணுவானா?" என்றாள் பார்வதி

"இவன் செய்ய மாட்டான். ஆனால் வேறு ஆள் மூலமாக செய்ய வைப்பான். அதை அப்படியே சேனா பக்கம் திருப்பி விட்டிடுவோம் " என்றாள் கூலாக

" நீ ஏன் மாயா? அவர் கூடவே மல்லுக்கு நிற்கிற? எங்களை எல்லாம் காப்பாற்றினவர் அவர் தான்!. மறந்து போச்சா?" என்றாள் ஆதங்கமாக

" அந்த சேனாவை பற்றி உனக்கு தெரியாது. அன்றைக்கு அம்மாவை எவ்வளவு கேவலமா பேசினான் தெரியுமா? அவன் கூட எந்த விதத்திலும் நம்மை பற்றின செய்தி வந்திடக் கூடாதாம். அது அவனுக்கு கேவலமாம் " என்றவள். " இனி நமக்கு பிரச்சனை என்றால்? அவன் தான் பார்க்கனும். பார்க்க வைக்கிறேன் " என்றபடி வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

மறுநாள் மற்றொரு அதிகாரி வந்து, " இங்கே எத்தனை பேர் இருக்கீங்க? திரும்ப செக் பண்ணணும். இதில் போதை மறுந்து விற்கிறவங்க இருக்கீங்கன்னு தகவல் வந்திருக்கு " என்று கூற

"இவங்களை எல்லாரையும் அழைச்சுட்டு வந்தது கிரேட் பிசினஸ் மேன் விஜயசேனாதிபதி தான். உங்களுக்கு தைரியம் இருந்தால் அவர கூப்பிட்டு கேளுங்க பார்ப்போம். சும்மா வெட்டி பந்தாக்கு கத்திக்கிட்டு. போங்க அந்த பக்கம் . பணம் கொடுப்பாங்க வாங்கிட்டு போங்க" என்று படு கேவலமாக மாயா பேச,

அங்கே இருந்த எல்லாப் பெண்களும் சிரிக்க, புது அதிகாரி யாரென்று தெரியாமல் சேனாவை விசாரணைக்கு வர வேண்டும் என்று விட்டார். செய்தி சேனாவை அடைய, முகம் இறுக வருவதாக தகவல் அனுப்பினான்.

இங்கே, சுக்லாவையும் அதே நேரம் வருமாறு மாரி மூலம் தகவல் சொல்லி விட்டாள் மாயா.
அவர் சுக்லாஜியை வர சொல்லவே இல்லையே மாயா? என்று பார்வதி கேட்டற்கு

"அந்த அதிகாரி தான் வர சொன்னதாக சொல்லிக் கொள்ளலாம் . அவன் இரத்த அழுத்தம் எகிறுவது பார்க்கனும் னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கும் மேல் சுக்லா ஜியை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அவர பார்த்த மாதிரியும் ஆச்சு. சேனா Bpயும் எகிற வைச்சாச்சு. எப்படி? நம்ம பிளான் " என்றபடி கெத்தாக பார்த்தபடி சென்று விட்டாள்.

மாயா சொன்னது போல! இருவரையும் ஒன்றாக பார்த்த கோவம் அனைத்தும் அதிகாரி பக்கம் திரும்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 18

சொன்னது போலவே, அந்த அதிகாரி விசாரணைக்கு சேனாவை வரவழைத்திருந்தார். அன்று கைலாஷ் மற்றும் நதியாவை பார்க்க வருவதாக கூறியிருக்க, அதை மாற்றம் செய்ய வேண்டியதாகி விட்டது.

" சாரி அங்கிள். முக்கியமான வேலை . நான் தான் போயாகனும். இன்றைக்கு ஈவினிங் வந்து பார்க்க டிரை பண்றேன் " என்றான் தன்னிலை விளக்கமாக

"என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றீங்க? நாங்க வந்து இரண்டு நாள் ஆச்சு. ஏர்போர்ட் வருவீங்கன்னு எதிர்பார்த்தோம் வரலை. இப்பவும் வரன்னு சொல்லிட்டு இப்போ, ஈவினிங் வர டிரை பண்றேன்னு சொன்னால் எப்படி? கேன்டி ரொம்ப வருத்தமா இருக்கிறாள். அவளை அப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றார் கைலாஷ்.

"நீங்க இந்தியா வரேன்னு சொல்லி விட்டு வந்தீங்களா? என்னோட ஷெட்யூலில் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி வைக்க? அதோடு, நீங்க வந்த மறுநாள் உங்களை பார்க்க வந்தேன். நீங்க தூங்கி கொண்டிருந்தீங்க. அதற்கு உங்களை குறை சொல்லவா? ஜெட்லாக் இருக்குமென்று புரிந்து கொண்டேன் தானே? நான் வந்தபோது நீங்க என்னை பார்க்காமல் தூங்கிக் கொண்டிருந்தீங்கன்னு குறை சொல்லியிருக்கனுமோ?" என்றான் காட்டமாக

" அப்படியெல்லாம் இல்லை மாப்பிள்ளை. கேன்டி வருத்தப்படுறான்னு உங்களுக்கு தெரியப்படுத்த தான் சொன்னேன்" என்று உடனே பின்வாங்கினார்.

" ம்ம்ம் " என்று அழுத்தமாக

" அப்புறம், வேலை முடிய நேரமாகுமா? ஏதாவது மீட்டிங்கா? ஈவினிங்காவது வர முடியும் தானே?" என்று மேலும் பணிந்தது போல கேட்க,

"தெரியலை அங்கிள் . இங்கே சிலர் பிரச்சனைகள். அதை சரி செய்ய, நேரில் தான் போயாகனும்" என்றவன். மேலோட்டமாக விசயத்தை சொல்லி, அது முடிந்த பிறகு வருவதாக தன்மையாகவே கூறி அழைப்பை துண்டித்தான்.

அதை கைலாஷ் மகளிடம் பகிர, " சேனா வரவில்லை என்றால் என்ன டேட்! நாமே போய் அவர பார்ப்போம்" என்றாள்.

" எப்படி? "

" சேது அங்கிளை அழைத்து கொண்டு போவோம் " என்றாள் சிரித்தபடி

கைலாஷிற்கும் சரியென்றே தோன்றியது.

மறுநாள் பெண்கள் மறுவாழ்வு மையத்திலேயே விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விசாரணை அதிகாரிகள் என்று நான்கு பேர் வந்திருந்தனர்.

சேனா, தனது உயர் ரக காரினை நிறுத்தி விட்டு தூய வெள்ளை நிற முழுக்கை சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்து, அதற்கேற்ற காலணிகளுடன் உயரத்திற்கேற்ப கம்பீரமும் ஆளுமையான தோற்றத்துடன் நடந்து வந்தவனை கண்ட அத்தனை கண்களில் தெய்வத்தை நேரில் கண்டது போல அவ்வளவு மகிழ்ச்சி! பரவசம்.

தங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றியவன் அல்லவா! சாதாரண பெண்களாக இருந்திருந்தால், அவனை ரசித்திருப்பார்கள். காதலனாக நினைத்து ஏங்கியிருப்பார்கள். ஆனால் அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படியெந்த உணர்வும் வரவில்லை. தங்களை காப்பாற்றிய தெய்வமாகத்தான் தெரிந்தான் சேனா!

ராஜனுடன் பேசியபடியே வந்து கொண்டிருந்தவனை, " வாங்க சேனா சார். வாங்க ராஜன் சார் " என்று முறையாக வரவேற்றாள் மாயா.

திடீரென குறுக்கே வந்து வரவேற்றவளை கண்டு எரிச்சல் வர, மாயாவை நேரடியாக முறைத்தவன். " அன்றைக்கு இந்த பெண்கள் விசயத்தில் தலையிட வேண்டாம். நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு ஜம்பமா பேசின? பிறகு எதற்கு ராஜனுக்கு போன் செய்து என்னிடம் உதவி கேட்கிற?" என்றான் எரிச்சலாக

"நான் சொன்னது மாதிரி, அவங்களுக்கான தனிப்பட்ட எந்த பண உதவியோ, மருத்துவ உதவியோ! உங்களிடம் கேட்கலையே சேனா சார். இங்கே சில எச்ச பொறுக்கிங்க, தவறாக பேசி அவங்களை தொல்லை பண்றானுங்க. அதுவும் அதிகாரிகள். அதற்கு கூட, வேறு வழியில்லாமல் தான் உங்களிடம் கேட்க வேண்டியதாக போச்சு.

இதே சுக்லாஜியிடம் கேட்டிருந்தால்! அடுத்த நிமிடமே செய்து முடித்திருப்பார். ஆனால் சொன்ன சொல்லுக்காக அவரிடம் இந்த இக்கட்டான நிலையில் கூட அவரிடம் பேசவும் இல்லை. உதவியும் கேட்கலை" என்றாள் அங்கலாய்ப்பாக

"ரொம்ப பில்டப்பெல்லாம் வேண்டாம். நீ ஒன்னும் அவ்வளவு நல்லவ இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்!' என்று நக்கலாக பேசியவன்.

" சொல்லு! என்ன பண்ணி வைச்ச? எதற்காக என்னை கூப்பிட்டு இருக்காங்க? அதுவும் போதை மருந்து பயன்படுத்திற பெண்களையும் சேர்த்து அழைத்து வந்திருக்கன்னு சொல்லியிருக்காங்க?" என்றான் அழுத்தமாக

"நீங்களும் உதவி செய்யலை. அதனால் நானே டீல் பண்ணிக்கலாமென்று! " என்றவள். கடகடவென்று அவள் செய்து வைத்த வேலையை சொல்ல!

ராஜனோ, " அச்சோ! என்னம்மா பண்ணி வைச்சிருக்கீங்க?" என்று தலையில் அடித்துக் கொண்டார் என்றால்! சேனாவோ! விட்டால், மாயாவை பார்வையாலயே சாம்பாலாக்கி விடுபவன் போல! தீயாய் முறைத்தான்.

வெளியில் சாதாரணமாக இருப்பது போல நின்றாலும், உள்ளுக்குள் மாயாவின் உள்மனம், ' ஏ! இந்தா இந்தா! ' என்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

எல்லாம் செய்து விட்டு, சாதாரணமாக நிற்பவளை கண்டு கோபம் மேலும் எழ, ஏதோ! சொல்வதற்கு சேனா வாயை திறக்கும் முன்,

"என்ன சார்? உங்க அப்பா வரார்?" என்று அவனது முதுகுக்கு பின்னால் பார்த்து பேச,

சேனா, டக்கென்று தலையை திருப்பி பார்த்தான்.

" கூடவே ஒரு லேடீயும், இன்னொரு ஆளும் வராங்க. அவங்களையும் விசாரிக்க கூப்பிட்டிருப்பாங்களோ?" என்று மாயா தனது சந்தேகத்தை வாய்விட்டே பேச,

' ஏற்கனவே! இங்கே ஏன் இவர்களை அப்பா அழைத்து வருகிறார்!' என்று சொல்லமுடியா ஒவ்வாமையில் பார்த்தவன். அடுத்து, மாயா பேசிய பேச்சில் மேலும் கடுப்பாகி நிற்க, அதை வெளிக்காட்டாமல் அவர்கள் அருகில் வரும் வரை வெகு அமைதியாக நின்றிருந்தான்.

சேனா கண்டதும்! முகம் கொள்ளா சிரிப்பில் வேகமாக முன்னே வந்த நதியா, " ஹாய் டார்லிங் " என்றபடி, அவனை வெளிநாட்டு முறையில் இரு கன்னத்தோடு கன்னம் வைத்து ஒற்றி விட்டு, அவனது கைகளை கோர்த்துக் கொண்டாள். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

சேனாவும் அதை ஏற்றுக் கொண்டதை போல, மென்னகை புரிய, கைலாஷும் சேனாவும் அருகில் வந்து விட்டனர்.

" ஹலோ அங்கிள். வாங்கப்பா " என்று இருவரையும் வரவேற்றவன். " நானே ஈவினிங் வரேன்னு சொல்லியிருந்தேனே!. இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நதியாவை ஏன் அழைச்சிட்டு வந்தீங்க?" என்றான் பொதுவாக இருவரிடம்.

மாயா, சேனாவை வெறித்து பார்த்தாள்.

" எந்த இடமாக இருந்தால் என்ன? நீங்க அங்கே இருக்கீங்களே! அது போதும் எனக்கு! " என்றாள் நதியா. அவன் முழங்கையோட அவளது கைகளை சேர்த்து பிடித்தபடி
 

Sirajunisha

Moderator
" சேனா பையா! " என்ற குரலில் அவன் திரும்ப, " எப்படி இருக்கீங்க? " என்று சிறு பெண்ணொருத்தி ஆர்வமே உருவாக நின்று கேட்டாள்.

அவள் பேசியது ஹிந்தி மொழியாதலால், அதற்கு நன்றாக இருப்பதாக அதே போன்று பதிலளித்தான். அந்த பெண்ணை பார்த்து, மேலும் சில பெண்கள் அங்கே வந்து விட்டனர்.

வயதில் சிறிய பெண்கள் சேனாவின் காலில் விழுந்து வேறு ஆசிர்வாதம் வாங்க, மாயா சேனாவை வெறுப்பாக பார்த்தாள். அவளால் அங்கே எதுவும் பேச முடியவில்லை. சேனாவுக்குமே அவர்களது செயல் தர்மசங்கடமான நிலையை தான் ஏற்படுத்தியிருந்தது.

அப்போது, " என்னிடமெல்லாம் ஆசிர்வாதம் வாங்க மாட்டீங்களா?" என்ற குரலில்

" சுக்லா ஜி " என்று மாயா மகிழ்ச்சியோட திரும்ப,

" அது நாமே!" என்றபடி ஆசிர்வதிப்பது போல கைகளை உயர்த்தி புன்சிரிப்போடு நின்றிருந்தார். அருகில் நின்றிருந்த , சேனா, சேது, நதியா, கைலாஷ் என யாரையும் அவள் பொருட்படுத்தவில்லை.

வேகமாக ஒரடி எடுத்து வைக்க! " இங்கே என்ன பண்றீங்க? " என்ற அவ்வளவு அழுத்தமான குரல் சேனாவிடமிருந்து ஒலித்தது. அவனது அழுத்தமான குரலில், நதியா கூட கோர்த்திருந்த அவளது கையை அவனிடமிருந்து பட்டென்று எடுத்துக் கொண்டாள்.

" ஹலோ சேனா " என்றவர். " ஏதோ! விசாரிக்கனுமாம். இங்கே வர சொல்லியிருந்தாங்க. அதான் வந்திருக்கேன்" என்றவர். " இங்கே தான் நீ காப்பாற்றின பெண்களெல்லாம் இருக்காங்களா சேனா? ரொம்ப நல்ல காரியம் செய்திருக்க நீ. சேதுபதி வாரிசு என்றால் சும்மாவா!" என்று அவர் சேனா, சேது என்று அனைவரையும் புகழ,

சேனாவுக்கு எரிச்சல் என்றால்! சேது சந்தோஷமாக மீசையை முறுக்கி விட்டபடி நின்றார். தன் மகன் என்ற பெருமை அவருக்கு!

" என்ன மாயா? இப்படி இளைச்சு போயிருக்க? சாப்பிடுகிறாயா இல்லையா? " என்று பேசியபடியே, அவளது ஜாக்கெட்டை விட்டு , தோள்ப்பட்டை பகுதியில் வெளியே தெரிந்த, உள்ளாடையின் பட்டையை வெளியே தெரியாத படி, உள்ளே நகர்த்தி விட்டவர்.

" இப்படி புடவை கட்டியிருந்தால்! வேகமாக நடந்து வரும் போது, துணி எதிலாவது மாட்டிக் கொள்ளாதா?" என்று கடிந்து கொள்வது போல!

அவள் ஒற்றையாக விட்டு பின் குத்தியிருந்த புடவை முந்தானையை, பேசியபடியே ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, அதை அழகாக அவளது இடுப்போடு சுற்றியவர். " இங்கே இடுப்பில் சொருகும் இடத்தில் பிடித்துக் கொள். அல்லது பின் குத்திக் கொள் " என்றார் சாதாரணம் போல!

சேனா, இப்போது மாயாவை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.

" என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சுக்லா ஜி " என்று எதிர்பாராமல் மாயா அவர் காலில் விழ,

" உன் குணத்துக்கு நீ தங்கமாக இருப்பாய் " என்று மனமார அவர் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தார்.

அப்போது தான்! அந்த எதிர்பாரா சம்பவம் நடந்தது. அவளது கையில் பற்றி வைத்திருந்த முந்தானையை, ஆசிர்வாதம் வாங்குவதற்கு, பாதத்தை தொடுவதற்காக அதை விட்டிருக்க!

அப்போது சற்றே நகர்ந்து நின்ற, கைலாஷின் காலினடியில் சிக்கி இருந்தது. மாயா வேகமாக எழுந்து விட, சுக்லா வைத்து விட்டு புடவை மடிப்பும் சரிந்து, குத்தியிருந்த பின், புடவையை கிழித்து விட, முந்தானை உடலை விட்டு, மார்பு வரை சரிந்து விட்டது.

மாயா, எதிர்பாராததால் திகைக்க! சேனா, புடவை கீழே இழுபடுவதை உணர்ந்து ஓரடி எடுத்து வைத்திருக்க! அருகில் நின்றிருந்த சுக்லா தான்! புடவை மேலும் சரியாமல் அதை பிடித்துக் கொண்டு, கைலாஷை எரிக்கும் பார்வை பார்த்தார்.

" ஓ! சாரி. நான் கவனிக்கலை. ஐ அம் எக்ஸ்டிரீம்லி சாரி " என்றார் கைலாஷ் சுக்லாவின் பார்வையை கண்டு,

"கீழே கவனிக்க மாட்டீங்களா அங்கிள்? " என்று எரிந்து விழுந்திருந்தான் சேனாவும்.

"போய் வேறு புடவை மாத்திக்கோ மா. போ " என்றார் சேது.

தலையசைத்தவள் புடவை சரியாக போட்டுக் கொண்டு, " உங்களை அதிகாரி கூப்பிட்டால்! எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை னு கரெக்டா சொல்லிடுங்க சுக்லா ஜி. என்னால உங்களுக்கு இனி எந்த தொல்லையும் இருக்காதென்று! நான் சேனா சார்க்கு வாக்கு கொடுத்திருக்கேன் " என்று அப்பாவியாக சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

" என்ன சொல்றா இந்த பொண்ணு?" என்று சேது புரியாமல் கேட்க

" ம்ம்ம்? இதில் உங்களுக்கு சம்மந்தம் எதுவும் இல்ல!. வேறு யாருக்கு இருக்கிறதென்று கேட்டால்? சேனாவாகி என்னையும், அதற்கு போதவில்லை னா சேதுவாகிய உங்களையும் கோர்த்து விட்டுவிடுங்கன்னு சொல்லாமல் சொல்லிட்டு போறாங்க மேடம்!" என்றான் படு நக்கலாக

சுக்லாவுக்கு சிரிப்புடன் ஆச்சரியமும் வந்தது. ஆமாம்! அவள் சொன்னதன் அர்த்தமும் அது தான்!'

"நான் என்ன பண்ணேண்?" என்று சேது பரிதாபமாக கேட்க

"ம்ம். என்னை பெத்தீங்களே!. அது ஒன்னு போதாது" என்று சிடுசிடுவென்று விட்டு, ராஜன் வைத்திருந்த பைலை வாங்கிக் கொண்டு, அதிகாரியின் அறை நோக்கி சென்றான் சேனா.

"என்ன மச்சான்? இப்போதானே என்னை புகழ்ந்து பேசுனீங்க? இப்போ சேனா இப்படி சொல்கிறான்?" என்றார் புரியாமல்.

"சேனாவுக்கு, என்னை இங்கே பார்த்ததும் கோபம். அந்த கோபத்தை உங்களிடம் காட்டி விட்டு செல்கிறான். நான் என்ன செய்ய முடியும்? கூப்பிட்டாங்க வந்தேன். வந்த இடத்தில் மாயாவை பார்த்ததும் பேசாமல் இருக்க முடியலை. பேசினேன். அது தப்பா? என்னமோ? வேண்டுமென்றே வந்தது போல சேனா பேசுவது முறையா மச்சான்" என்றார் சுக்லாவும் பதிலுக்கு

எல்லாப்பக்கமும் தலையாட்டி வைத்தார் சேதுபதி. அப்போது " இது யாரென்று சொல்லவே இல்லையே அங்கிள் " என்று நதியா இடையிட்டு கேட்க

"என்னோட ப்ரதர் இன் லா மா " என்றார் சேது.

"ஓ! . பிறகு எதற்கு? இங்கே வந்திருக்காங்க? சேனா தானே காப்பாத்தினாங்க?" என்றாள் நதியா புரியாமல். எங்கே சேனாவுக்கு கிடைக்கும் மரியாதையை பங்கு போட்டு கொள்வாரோ?" என்று ஆதங்கமாக இருந்தது.

" இவங்க தான் சேனாவுக்கு பார்த்திருக்கும் பெண்ணா?" என்றார் சுக்லா.

" ஆமாம் " என்றார் சேதுவும்.

" இருந்தாலும்! மாயா மாதிரி .. " என்றவரை முழுதாக பேசவிடாமல், இடையிட்ட கைலாஷ். " கண்ட பொம்பளையோட என் பெண்ணை சம்மந்தபடுத்தாதீங்க?" என்றார் வெடுக்கென்று

அவரது பேச்சு சேதுவுக்கே ஒவ்வாமையாக இருந்தது என்றால்! சுக்லாவுக்கு கேட்கவும் வேண்டுமா?

" அதனால் தான் மாயா புடவை முந்தானையை வேண்டுமென்றே மிதிச்சீங்களா?" என்றார் காட்டமாக

"இதென்ன அபாண்டமான பேச்சு சார்?. சொல்லப் போனால் உங்களுக்கு தான் அந்த மாதிரியான எண்ணம் இருந்திருக்கு! அதனால் தான் அந்த பெண்ணை புடவை சரி செய் என்பது போல, தொட்டு தடவி பேசுனீங்க. கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அப்படியே நிற்குது அந்த பெண்ணும் " என்றார் கைலாஷ்.

" மைண்ட் யுவர் வேர்ட்ஸ் " என்ற மாயாவின் அதட்டலான குரலில், அனைவரும் திரும்பி பார்க்க! மாயா பத்ரகாளி போல நின்றிருந்தாள். " வார்த்தையை கவனிச்சு பேசனும். அதுவும் தெரியாத பெண்ணை பற்றி பேசும் போது இன்னும் கவனமாக பேசனும். சேது சார் கூட வந்ததால்! இதோட விடுறேன். இல்லை நடப்பதே வேறு " என்று கைலாஷை கடுமையாகவே எச்சரித்தாள் மாயா.

"என் அப்பா சொன்னதில் என்ன தப்பு? உள்ளதை தானே சொன்னாங்க?" என்று நதியா தந்தைக்கு சாதகமாக பேச

அதுவரை நதியாவை ஒரு பொருட்டாக கூட பார்க்காது நின்றிருந்த மாயா. சட்டென்று திரும்பி பார்த்து, " அப்போ நானும் சொல்லலாமா? கல்யாணம் நிச்சயம் தானே ஆகியிருக்கு! அதுக்கு முன்னாடியே சுற்றி அத்தனை பேர் நிற்கும் போது, கன்னத்தோடு கன்னம் வைச்சு உரசி, உனக்கு நிற்கவே தெரியாத மாதிரி! உன் உடம்பு முழுவதும் படும்படி சேனா சார் மேல் விழற மாதிரி நிற்கிற! அதை நான் தப்பா பேசி உன்னை கொச்சைப்படுத்தவா?" என்றாள் மாயா.

"அவர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவர்"

"இன்னும் கல்யாணம் ஆகலையே? அதுக்குள்ள என்ன அவசரம்? இப்படி எல்லார் முன்னாடியுமே இப்படி என்றால்? தனியாக இருந்தீங்கன்னா..இன்னும் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்!" என்று புருவத்தை மேலேற்றி இரட்டை அர்த்தத்தில் பேச

நதியாக்கு அவமானத்தில் முகம் சிவந்து விட்டது. கைலாஷ் மகளை அவமானப்படுத்துவது கோபத்தை எழுப்ப, " நாகரீகமா ஹக் பண்றது. நாங்க இருந்த நாட்டில் வழக்கம். அதை போய் கொச்சைப்படுத்துற?" என்றார் குரல் உயர

"ஒரு பெண்ணோட உடையை சரி செய்தவரை நீங்க பேசியதை விடவா?" என்றார் பதிலுக்கு விடாமல்

" பேசியது நான். நீ என்னை பற்றி மட்டும் பேசியிருக்கனும். எதற்கு கேன்டியை பேசுற? . அவ என்ன செய்தாள். நாகரீகமாக ஹக் பண்றதையும் , கட்டிக்க போறவர் கை பிடிச்சு நிற்கிறதையும் இவ்வளவு கேவலமாக பேசுற? நீ பேசுவது சேனா மாப்பிள்ளையையும் சேர்த்து கேவலப்படுத்துவது போல இருக்கு? இது தான் நீங்க அவருக்கு செய்யும் பிரதிபலனா?" என்றார் ஆதங்கமாக

"பிரதிபலனா? அதனால் அல்ரெடி செய்து கொடுத்தாச்சு. அதோடு அவரும் பேசாமல் தானே நின்றிருந்தார் என்ஜாய் பண்ணிக் கொண்டு, ஊருக்கு தான் உபதேசம். அவருக்கெல்லாம் இல்லை போல!" என்று சற்றுமுன் இந்த மாதிரியான இடத்துக்கு எல்லாம் எதற்கு நதியாவை அழைத்து வந்தீங்க? என்று வார்த்தை சூடாக உள்ளே கொதித்துக் கொண்டிருக்க, சேனாவையும் சேர்த்து பேசிவிட,

அவளது கை வேகமாக இழுப்பட்ட, அதன் விசைக்கு ஏற்பு இழுபட்டவளின் கன்னம் திகுதிகுவென்று எரிந்தது. அனிச்சையாக கை அவளது கன்னத்தில் பதித்தது. சேனா, கன்னத்தில் அறைந்து விட்டான் என்பதை கிரகிக்கவே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது.

" யூ ப்ளடி ***** . உன் தெரு பொறுக்கி புத்தியை என்னிடமே காட்டுறியா?" என்று மீண்டும் கையை ஓங்க!

" சேனா! " என்று அதிர்ந்து நின்றிருந்தவர்கள் அவனிடம் நெருங்க,

சேனா மீண்டும் அறையும் முன், ஒரு விரலை எச்சரிப்பது போல, அவன் முன் நீட்டி, கலங்கிய கண்களும் சிவந்த முகத்துடனும் அவனை கடுமையாக முறைத்தபடி நின்றாள் மாயாவும்.

சுக்லா, சேது, ராஜன் என அனைவரும் அவனை அமைதிப்படுத்த முயல, அவளது எச்சரிக்கையும் செயலை பொறுத்துக் கொள்ள இயலாதவன். அவளது கைகளை பற்றி, அவள் முதுகுக்கு பின்னால் முறுக்கி, அழுத்தம் கொடுக்க, தோள்பட்டையில் வலி உயிர் போனது.

மாயா திமிற, அவளது கையை விடாமல் பற்றி பிடிக்க, கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் நொருங்கியது.

சுக்லா தான், மாயாவை விடு சேனா. அவளுக்கு வலிக்குது. அவ கஷ்டப்படுறா. விடு சேனா. அவ கையை விடு " என்று பரிதவிப்போடு கூற, நந்திதாவின் முகம் அவன் மனக்கண்ணில் வர,

"ஏன்? வலிக்கட்டுமே. இவ எல்லாம் ஒரு ஜென்மம். மிருகத்தை விட கேவலமான ஈனப் பிறவி. உதவி செய்றவங்களை மேலேயே சேற்றை வாரி பூசுறவ " என்றவன்.

" சேனா, அவ கையை விட போறியா இல்லையா?" என்ற அதட்டலில். " ச்சீ " என்று மாயாவை அழுத்தமாக சற்றே அவனை விட்ட தள்ள, எதிர்பாராத தள்ளலில் கீழே விழுந்து விட்டாள்.

ஏற்கனவே அங்கே நின்றிருந்த பெண்கள் . பேசும் மொழி புரியாததால் பெரியவர்களை அழைத்து வர உள்ளே ஓடியிருந்தனர். அவர்கள் வரும் முன்பே அனைத்தும் முடிந்து விட்டது.

சுக்லாவும், சேதுவும் அவளை தூக்கி விட, " இனிமேல் இவ என் கண்ணில் பட்டால் நரகமென்றால் என்னன்னு காண்பிக்க வேண்டியிருக்கும் " என்றவன். விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான். அவன் நடைக்கு ஈடு கொடுக்க, முடியாமல் ராஜன், நதியா மற்றும் கைலாஷ் அவன் பின்னாலேயே ஓடினர்.

கைலாஷினால் வந்த சண்டை. மீண்டும் அவராலேயே தொடர் கதையாகும் என்பதை இருவருமே அறியவில்லை. முதல் தடவை சுதாரிக்கவில்லை. இரண்டாவது தடவை விடுவாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 19
மாயா எழுந்திருக்க, சுக்லாவும் சேதுவுமே உதவி செய்தனர். மெதுவாக எழுந்து நின்றவளுக்கு, கையை பிடித்து பின்பக்கமாக முறுக்கியதில் வலி கொடுக்க, மற்றொரு கையால் மெதுவாக தேய்த்து விட்டுக் கொண்டாள்.

மாயாவின் கலங்கிய கண்களும், வலியில் சுருங்கும் முகத்தை கண்டு, " என்ன மாயா? ரொம்ப வலிக்குதாடா?" என்றார் சுக்லா பரிதவிப்பாக. அவரது கைகள் அவசரமாக அவளது தோள்பட்டையை அனிச்சையாக தடவிக் விட்டுக் கொண்டிருந்தது.

"நல்லா முறுக்கி விட்டுட்டான் சுக்லா ஜி. ரொம்ப வலிக்குது " என்றாள் வலியில் சிணுங்கி

" உங்க பையன் என்ன செய்து வைச்சிருக்கான் பாருங்க சேது !" என்றார் சுக்லா ஆதங்கமாக

" நான் கண்டிக்கிறேன் மச்சான் " என்றார் சேதுவும் வருத்தமாக

அப்போது, அங்கே விசாரணைக்கு வந்த அதிகாரிகள் கிளம்பி வெளியில் வந்தனர். மாயா நிற்பதை கண்டு, வேகமாக வந்த அதிகாரி ஒருவர்.

" மேடம் " என்றார்.

குரல் வந்த திசையில் திரும்ப, மிரட்டி ஏகப்பட்ட விதிமுறைகளை பேசிய அதிகாரி நிற்பதை கண்டு, கேள்வியாக பார்க்க!

" சாரி மேடம். உங்களை எல்லோரையும் தேவையில்லாமல் தொந்தரவு பண்ணி விட்டோம்!. விஜய சேனா சார் இவங்களை காப்பாற்றினாங்க ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே ?" என்றார் வருத்தமாக

" சொன்னேனே சார் " என்றாள் .

" அது வேறு யாரோன்னு நினைச்சிட்டேன் மேடம் " என்றவர். " ரொம்ப கோவமாக பேசிட்டு போனார்!. மேலிடத்தில் செல்வாக்கு அதிகம் அவருக்கு. கேட்க கூடாதவங்க பேச்சை கேட்டு இப்படி நடந்து நாங்க கொண்டதுக்கு மன்னித்து கொள்ள சொல்லுங்க " என்றார் அந்த அதிகாரி முகம் வெளிறி

" நான் சொன்னேன் எல்லாம் கேட்க மாட்டார் சார். ஆனால் அவரோட ரொம்ப நெருங்கின ஆலோசகர் ஒருத்தர் இருக்கார். அவர் சொன்னால் உடனே கேட்பார் " என்றாள்.

" யாரென்று சொல்லுங்க. நாங்க அவரிடம் பேசுகிறோம் " என்றார் அவசரமாக

" சொல்கிறேன்ன். ஆனால் நான் தான் சொன்னேன்னு விசயத்தை யாரிடமும் சொல்ல கூடாது. பிறகு, நீங்களே வந்து என்னை காட்டிக் கொடுத்தாலும்! எனக்கு தெரியவே தெரியாதுன்னு சாதிச்சிடுவேன் " என்றாள் மாயா.

"சத்தியமா யாரிடமும் சொல்ல மாட்டோம்" என்றவரிடம்.

" சேனா கூடவே கைலாஷ் னு ஒருத்தர் சுற்றி கொண்டிருப்பார். அவர் சொன்னால் சேனா, எது வேண்டுமென்றாலும் செய்வார். ஆளு தண்ணிவாலா. நல்ல காஸ்ட்லி சரக்கா வாங்கி கொண்டு போங்க " என்றவள் .

" சுக்லா ஜி, சேது அங்கிள் வாங்க சாப்பிட்டு போகலாம் " என்றபடி திரும்பியவள். தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டிருந்த அதிகாரியிடம், " சார் நீங்களும் சாப்பிடுறீங்களா?" என்றாள்.

அவர்கள் ஏதோ சொல்லும் முன், " நீங்களே டென்சனில் இருப்பீங்க? சாப்பிட முடியாது. சீக்கிரமே போய் பார்க்கவரை பார்த்து பிரச்சனையாகாமல் பார்த்துக்கோங்க " என்று விட்டு மற்றவர்களுடன் வீடு நோக்கி சென்றாள்.

சேது, மாயாவின் பேச்சை கேட்டு அதிர்ந்து பார்க்க! சுக்லாவோ, " ஏன் மாயா? திரும்பவும் அவனிடமே போய் மல்லுக்கு நிற்கிற?" என்றார்.

"பின்னே! என் கையை பிடிச்சு முறுக்குறான். கை நீட்டி அடிக்கிறான். தள்ளி விடுறான். இதெல்லாம் திரும்பவும் அவனை செய்ய முடியுமா? முடியாது தானே? அதனால சின்னதா ஒரு தொல்லை கொடுக்கலாமென்று செய்கிறேன். இது கூட, சேது சார்க்காக தான் கம்மி பண்ணிக் கொண்டேன். இப்படியொரு பிள்ளையை பெற்றுருக்கிறதை நினைத்தாலே! பாவமா இருக்கு " என்று பதில் சொல்லியபடியே உள்ளே சென்றாள்.

சுக்லா எதுவும் பேசாமல் அமர, சேது தீவிரமான யோசனையில் அமர்ந்திருக்க, " என்ன மச்சான்? " என்றார் சுக்லா சேதுவின் முக மாறுதலை கண்டு,

"சேனாவை பெற்றதால்! நான் கொடுத்து வைத்தவனா? இல்லை பாவமானவா?" என்றார் புரியாமல்

சுக்லாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. சேதுவின் பேச்சில்! பிறகு, தான் சொன்னதையும் மாயா சொன்னதையும் கேட்டு குழம்பியிருக்கார் என்று புரிய, மாயா பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீங்க! . கோவத்தில் பேசுகிறாள் " என்று சமாதானம் செய்தார்.

பிறகு, சேதுவுக்கும் சுக்லாவுக்கும் அங்கிருந்தவர்களை அறிமுகப்படுத்தினாள் மாயா. பொதுவான பேச்சுகளுடனும் , மாயா அங்கிருந்த பெண்களின் வருமானத்திற்கு , தானே சுயமாக என்னென்ன செய்கிறார்கள்! அதற்கு, எந்த முறையில் உதவி செய்யப்படுகிறது என்பதை மாயா தெளிவாக எடுத்து கூறினாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட சுக்லா. பிறகு , சில ஆலோசனைகளை கூறினர். சரி என்று ஏற்றுக் கொண்டாள். இதையெல்லாம் சேது பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர எதிலும் தலையிடவில்லை. மாலை நேரம் தான் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அன்று இரவு சுமார் ஏழு மணியளவில் அங்கே தங்கியிருந்த சிறு பெண்ணை காணவில்லை என்று உடனிருந்த பெண்கள் மாயாவிடம் தகவல் தெரிவித்தனர்.

மாயா திகைக்க! "என்ன? உங்க கூட தானே இருந்தாள். பிறகு உங்களுக்கெப்படி தெரியாமல் போகும்?. இதனால் எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமா? அவ எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் போயிருக்க மாட்டாள். ஒழுங்கா உண்மையை சொல்லுங்க. நீங்க மறைப்பது அவளுக்கு ஆபத்தாக கூட அமையலாம். புரிந்து கொள்ளுங்கள் " என்றார் தாரா அழுத்தமாக

"யாரையோ பார்க்க போகனுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்! .. " என்று ஒரு பெண் தயங்கிய படி கூற

"யாரை பார்க்க போகனுமென்று சொன்னாள்? அவளுக்கு இங்கே யாரையும் தெரியாதே? ஒரு வேளை மும்பையில் ஆட்கள் யாரும் இவளுக்கு பழக்கமா? அதனால் போயிருப்பாளா?" என்றாள் மாயா பதற்றமாக

" அவங்க இல்லை மாயாக்கா. காலையில் வந்தவர். நான் கூட சொன்னேன் கா. அக்காவிடம் சொல்லென்று! இல்லை. அக்காவிடம் சொன்னால் வேண்டாம்னு சொல்லுவாங்க. நான் மட்டும் போய் பார்த்துட்டு வரேன்னு சொல்லி விட்டு போனாள். இன்னும் காணும்!" என்றாள் அவளும் தவிப்பாக

" எத்தனை மணிக்கு போனாள்? எங்கே போறேன்னு சொன்னாளா?" என்றவளின் முகம் இறுகியது.

" ஐந்து மணிக்கு கிளம்பினாள். இங்கே இருந்து அவருக்கு போன் கூட செய்தாள் கா. அந்த சார் ஏதோ ஹோட்டலுக்கு வர சொன்னாராம் "

" எந்த சார் டி வர சொன்னார். அப்படியே சொன்னாலும்! எங்களிடம் விசயத்தை சொல்ல மாட்டீங்களா? உங்க இஷ்டத்துக்கு செய்வீங்களா? இப்போ அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?" என்ற தாராவின் குரலில் கோபமும் ஆதங்கமும் ஒருங்கே இருந்தது.

காலையில் வந்ததில் யாரென்று விசாரித்தாலும், அவள் சொல்வதில் யார் அந்த நபரென்று சரியாக அடையாளம் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் காலையில் சேனா, சேது, சுக்லா கைலாஷ், . ராஜன், அதிகாரிகள் ஐந்து பேர் என வந்திருந்தனர். இதில் யாரென்று நினைப்பது. அதிலும் சிலர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை சந்தேகிக்க முடியாது!.

"சரி. எந்த நம்பருக்கு போன் செய்தாள்? " என்றதும். போனை மாயா கையீலேயே கொடுத்து விட்டாள் அந்த பெண். அதை வாங்கிக் கொண்டவள். நான் போய் அழைத்து வரேன். நீங்க கொஞ்சம் இவங்களிடம் எப்படி இருக்கனுமென்று புத்தி சொல்லுங்க " என்று தாராவிடம் சொல்லி விட்டு, வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

மாயா, முதலில் அங்கு சென்ற பெண்ணுக்கு தான் தொடர்ந்து அழைத்திருந்தாள். பல முறை அழைத்த பிறகு, அழைப்பு இணைக்கப்பட்டது.

" ஹலோ தீப்தி " என்றதும்.

" சாரி மேடம். அவங்க போனை இங்கே லாபியிலேயே மறந்து வைச்சிட்டாங்க " என்றது மறுமுனை

" நீங்க யாரு? எந்த ஹோட்டல் இது?"

"ஹோட்டல் பேரடைஸ் " என்றாள் அந்த ஊழியரும்.

" ஓ! ஒ. கே " என்றவள். அழைப்பை துண்டித்து விட்டு, வேகமாக அங்கு விரைந்தவள். ஹோட்டலின் உள்ளே சென்று, தீப்தியின் புகைப்படத்தை காட்டி விசாரிக்க, அப்போது தான் அங்கே பயிற்சி பணிக்காக வந்து வேலை செய்த இளைஞன் ஒருவன்.

" இந்த பொண்ணு ரூம் நம்பர் 205 ல இருந்துச்சு. இப்போது தான் அங்கே புட் டெலிவரி பண்ணிட்டு வந்தேன் " என்றதும். " எந்த தளம்?" என்று விசாரித்தவள். அறையை நோக்கி ஓடினாள்.

ஏதோ சொல்ல முடியா கலக்கம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. லிப்ட் இருப்பதை மறந்து படியில் ஏறி, வேகமாக அந்த தளத்திற்கு சென்று, ஒவ்வொரு அறை எண்ணாக பார்த்து கடைசியாக அந்த அறையின் முன் நின்றிருந்தாள். வேகமாக ஓடி வந்ததில் வியர்க்க விறுவிறுத்து தொண்டை வரண்டு , மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பேச கூட முடியாத நிலையில் கதவை தட்டினாள்.

எந்த சத்தமும் இல்லை. மீண்டும் மீண்டும் கதவை தட்டி, அந்த அறைக்கு இருந்த பெல்லை அழுத்த, எந்த சத்தமும் இல்லை. கைப்பிடியில் டோண்ட் டிஸ்டர்ப் என்ற கார்டும் தொங்கியதை கண்டு, ஏனோ பயப்பந்து தொண்டைக்குள் உருள தொடங்கியது. திரும்ப திரும்ப கதவை தட்டியும் , பெல்லை அழுத்தியும் கதவு திறக்காமல் போக!

"ஏய்! யாரது? கதவை திறங்க. தீப்தி தீப்தி " என்று கதவை மீண்டும் தட்ட ஆரம்பித்து விட்டாள். அவளிட்ட சப்தத்தில் மற்ற அறையில் இருந்தவர்கள் வெளியே வந்து விட்டனர். அங்கிருந்த ஊழியர்களும் வர, கதவை திறக்க சொல்லி பிரச்சனையாகியது.
 

Sirajunisha

Moderator
பிரச்சனை மேனேஜர் வரை செல்ல, அவர் மாயாவையே சமாதானப்படுத்த முயன்றார். அவருக்கு, அறையில் இருக்கும் வாடிக்கையாளரின் நலனே பெரிதாக இருந்தது. பெரிய வி.வி.ஐ. பிக்கள் மட்டுமே தங்கும் அறை அது!. மாயாவினால் எந்த அவப்பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

இருவருக்கான பேச்சுவார்த்தை மேலும் வலுக்க! " இவ்வளவு தட்டியும் கதவை திறக்கலை. உள்ளே யாரும் செத்து கிடந்தால் என்ன செய்வ?" என்று மாயா எகிற

அதில் மேனேஜரும் சற்றே குழம்பினார். லாபியிலிருந்து அறைக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. போன் அதன் தாங்கியில் இல்லாததால் என்கேஜ்ட் சத்தமே வந்தது. வேறு வழி இல்லாததால் , யார் பெயரில் அறை புக் செய்யப்பட்டுள்ளது என்பதை ரிசப்சனில் இருந்தவரிடம் விசாரித்தார்.

" மிஸ்டர். விஜய சேனாதிபதி ' என்ற பெயரில் பதிவு செய்திருக்காங்க சார். அவரோட பி. ஏ. ராஜன் தான் மதியம் வந்து அறையை புக் செய்தார் ' என்று விவரம் கூறினர்.

" சரி. நீங்க மிஸ்டர். ராஜனுக்கு போன் செய்து அவர் புக் செய்திருந்த அறையில் இருப்பவருக்கு பிரச்சனை என்று சொல்லி வர சொல்லுங்க. அதோடு, இந்த அறையோட மாற்று சாவியும் எடுத்துட்டு வாங்க" என்று விட்டார்.

அறை சாவி வரும் வரை மாயாவின் நிலை தான் படுமோசமாக இருந்தது. அவளும் அவர் பேசியதை கேட்டுக் கொண்டு தானே அருகே நின்றிருந்தாள். ஏதோ! ஒரு நடுக்கம். அதில் வெளிப்படையாகவே அவளது கைகள் நடுங்க ஆரம்பித்து இருந்தது. ' இல்லை . அப்படி எதுவும் இருக்காது. நான் தான் ஓவர் எமோசனில் டென்சன் ஆகிட்டு இருக்கேன் ' என்று தனக்கு தானே ஏதோ சமாதானப்படுத்திக் கொள்கிறாள். எதற்காக இந்த சமாதானம் என்று கேட்டாலும்! அவளுக்குமே அது தெரிந்திருந்தால் தானே!.

மேலும் பத்து நிமிடங்கள் கழித்தே, மாற்று சாவி வந்தது. உடன் ராஜனும் வந்திருந்தார். மேனேஜரை கண்டு, " பக்கத்தில் தான் இருந்தோம். அதனால் நானே வந்துட்டேன். என்ன பிரச்சனை சார்?" என்றார் ராஜன் அருகில் நின்ற மாயாவை பார்த்தபடி,

" சார் " என்று விசயத்தை மேனேஜர் சொல்ல வர,

" முதலில் கதவை திறந்து விட்டு, பிறகு நீங்க பேசுங்க " என்றாள் மாயா பரிதவிப்பாக

மாற்று சாவி போட்டு கதவை திறக்க! மாயா அறைக்குள் ஓடியிருந்தாள்.

அங்கே அவள் கண்ட காட்சி, வாழ்நாளில் மனதில் வடுவாக இருந்த இரணம் தற்போது மீண்டும் புண்ணாகி இரணமாக கூடிய மற்றொரு காட்சி! தீப்தி என்ற அந்த சிறு பெண் கண்கள் வெறித்த நிலையில் விட்டத்தை பார்த்து படுத்திருக்க! அவள் கழுத்தினடியில் தன் முகத்தை பதித்தபடி தனது இச்சைக்காக முகத்தை பதித்திருந்தான் ஒருவன்.

தீப்தியின் கண்களிலிருந்து விடாமல் கண்ணீர் கோடுகளாக வழிந்து கொண்டிருக்க! அதையெல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லை. மேலும் அவள் மேல் மூர்க்கமாக படற!

"தீப்தீதீ! " என்று அலறினாள் மாயா.

மாயாவின் குரலில் தீப்தி திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் என்றால்! தனது சல்லாபத்துக்கு இடைஞ்சலாக வந்ததில் எரிச்சலாக முகத்தை திருப்பி, " கெட் அவுட் " என்று சீறியிருந்தான் அந்த பெண் பித்தன். 'அவன் கைலாஷ்!'

கைலாஷை கண்ட அதிர்ச்சியில், மாயா விக்கித்து போய் நின்றது சில நொடிகளே! சேய் பறவையை காக்கும், தாய் பறவையாக வெகுண்டவள். " ஏய்! " என்றபடி வேகமாக சென்று , அவன் தலை முடியை பிடித்து பின்னால் இழுக்க! தலை பின்பக்கமாக வளைய, வலி தாங்க முடியாமல் கட்டிலை விட்டு இறங்கினான்.

அலங்கோலமாக கிடந்த தீப்தியை கண்டு, மனம் பதறியவள். அவளது ஆடைகளை அவசரமாக சரி செய்து, எழுந்திரு தீப்தி எனும் போது தான்! அவளது கைகள் கட்டப்பட்டதே தெரிந்தது. கை கட்டை அவிழ்க்க முற்பட,

"அவள விடு " என்றவன். மாயாவை பின்பக்கமாக இழுக்க முற்பட்டான். அவனிடமிருந்து திமிறியபடியே தீப்தியின் ஒரு கை கட்டை அவிழ்த்து விட்டிருந்தவள். மற்றொரு கையையும் அவிழ்த்து விட முற்பட,

" அவ இல்லையென்றால் என்ன? நீ வா. காலையில் உன்ன பார்த்ததிலிருந்தே நான் நானாவே இல்லை " என்றபடி, மேலும் அசிங்க அசிங்கமாக பேச,

" ச்சீ போடா பொறுக்கி " என்றபடி திமிறியபடி, " தீப்தி கட்டை அவிழ்த்துட்டு நீ போ. நான் எப்படியும் வந்துடுவேன் " என்றாள் அவசரமாக

ஆனால் கைலாஷின் பிடி அழுத்தமாக இருந்தது. அவனிடமிருந்து தப்பிப்பது நிச்சயம் பெரும் பாடாகவே இருக்கும் என்பதை அவளால் உணர்ந்து கொள்ளவும் முடிந்தது. தீப்தி கை கட்டுகளை அவிழ்த்து, காலில் நகர விடாமல் சுற்றியிருந்த போர்வையையும் விலக்கி விட்டு, எழுந்தவள். மாயாவை காப்பாற்ற முற்பட்டாள்.

" அக்காவை விடு டா " என்றபடி கைலாஷை அடிக்க, அதற்கெல்லாம் அவன் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

அதே நேரம் சேனா அங்கே வந்து, "என்னாச்சு ராஜன்? எதற்கு போன் செய்தாங்க? என்ன பிரச்சனை ?" என்று கேட்டபடி அந்த காரிடரில் வந்து கொண்டிருந்தான்.

சேனாவை கண்டதும், அவனை நோக்கி செல்ல, உள்ளே நடப்பவை அவர்களுக்கு தெரியவே இல்லை. வி.வி.ஐ. பி சூட் சகல வசதிகளுடன் தனி வீடு போன்றே அமைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ளறையில் நடப்பது எதுவும் வெளியில் சற்று தள்ளி நின்றவர்களுக்கு தெரியவில்லை.

"சார். இங்கே ஒரு லேடி வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க. உங்களை பார்க்கனுமென்று!" என்றார் மேனேஜர்.

" என்னையா? யாரது?. அதோடு என்னை பார்க்க இங்கே ஏன் வரணும்?" என்றான் சேனா புரியாமல்.

இப்போது ராஜன் இடையிட்டு, " சார். உங்க வருங்கால மாமனார் கைலாஷ் சார் தான் ஹெல்ப் கேட்டார். பிஸ்னஸ் பேச ஆட்கள் வராங்க. எனக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி கேட்டார். நீங்களும் அவங்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கன்னு சொன்னதால்! ரூம் புக் பண்ணி கொடுத்தேன்" என்றார் ராஜன்.

"ராஜன் சாரை பார்த்ததும்! உங்களுக்கென்று நினைத்து உங்க பெயரில் தான் ரூம் புக் பண்ணியிருக்காங்க சார் " என்றார் மேனேஜரும்.

" சரி. இதில் என்ன குழப்பம்?" என்றான் மீண்டும்.

"வந்திருப்பது மாயா மேடம் சார் " என்றார் ராஜன் தயங்கி

மாயாவின் பெயரை கேட்டதும், சேனாவின் முகம் இறுகியது. " அவ எதற்கு இங்கே வந்தாள்?" என்றவன். " நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று கூற,

"சார் அவங்க ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்க. மற்ற கஸ்டமருக்கும் இதனால் தொல்லை " என்று அந்த மேனேஜர் கூற,

ராஜனிடம் அந்த மேனேஜரை சமாளிக்கும் படி கண்ணை காட்டி விட்டு, வேகமாக மாயா சென்றிருந்த அறைக்குள் நுழைந்தான்.

கோபமாக சென்றிருந்தவனுக்கு, அங்கே நடப்பதை கண்டு, சூடான இரத்தம் மண்டைக்குள் பாய்ந்தது. இந்த அளவுக்கான கோபம் வாழ்நாளில் இதுவரை அவனுக்கு வந்ததில்லை! வரப்போவதும் இல்லை.

கைலாஷ், திமிறிக் கொண்டிருந்த மாயாவை விடாமல் கட்டிப்பிடித்தபடி நின்றிருக்க, அவனது கையை கடித்து காப்பாற்ற வந்த சிறு பெண்ணை வேகமாக தள்ளி விட்டிருந்தார். தீப்தி கீழே விழுந்திருக்க,

" ச்சீ விடுடா பொறுக்கி " என்றதும்!.

"ஆமான் டி. நான் பொறுக்கி தான். என்ன அழகு டி நீ!. உன்னை பார்த்ததிலிருந்து நான் நானாவே இல்லை" என்றபடி மேலும் அசிங்கமாக பேசிய போது தான் சேனா அங்கே வந்து நின்றிருந்தான்.

அதற்கு மேல் அவன் பேச்சை கேட்க முடியாமல், " கைலாஷ் அவளை விடுங்க " என்றபடி வேக எட்டு வைத்து நெருங்க!

அதற்குள் அவளை தன் பக்கமாக திருப்பியிருந்தவர். அவள் உதட்டினருகே சென்று முத்தம் கொடுக்க, ' என்ன!' என்று அவர் சிந்திப்பதற்கு முன்பேயே,

சேனாவின் உள்ளங்கையில் முத்தம் வைத்திருந்த அவரது உதடுகளோடு சேர்த்து அவரது முகத்தை ஆக்டோபஸ் போல விரல்கள் பற்றியவன். முழு வேகத்திற்கு பின்னோக்கி தள்ளியிருந்தான் கைலாஷை. நிலைதடுமாறி சுவற்றில் முற்றி அதே வேகத்தில் கார்பெட் தடுக்கி, அப்படியே தலைகுப்புற தரையில் விழுந்திருந்தார்.

" யூ ப்ளடி **** " என்றவன். அவன் முதுகில் சூ காலினாலேயே மிதித்தவன். " இந்த கை தானே எங்க பொண்ணை தொட்டுச்சு" என்றபடி கைகளையும் மிதிக்க,

" ம்ம். " என்று முணங்கிய கைலாஷ். அப்படியே மயங்கி விட்டான்.

உள்ளே வந்த ராஜன் சேனா, கைலாஷை மிதிப்பதை கண்டு, " சார் சார் விடுங்க சார் " என்று பதட்டமாக அவனை பிடித்துக் கொண்டவர். அங்கிருந்து இரு பெண்களின் கோலமும், அந்த சிறு பெண் மாயாவின் அரவணைப்பில் நடுங்கியபடி அமர்ந்திருப்பதையும், மாயா வெறித்து பார்த்தபடி, நடுங்கிய படி அமர்ந்திருப்பதும், சேனாவின் கோபமும், கைலாஷை தாக்கியதை கண்டு, என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் அவரால் முடியவில்லை. கைலாஷ் செய்த செயலை ஜீரணிக்க முடியாமல், தலையை இருகைகளாலும் தாங்கியபடி அப்படியே அமர்ந்து விட்டான் சேனா. ' எப்படி? இவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது?. ஆதங்கமும் கோவமுமான கேள்விகள் உள்ளுக்குளே சீறி வந்தது.

" நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க மா. உங்களை தாராம்மாவிடம் கொண்டு போய் விடறேன். " என்றார் ராஜன்.

வெடுக்கென்று நிமிர்ந்தவன். "வேண்டாம். நீங்க முதலில் இங்கே டாக்டர் யாரையாவது வர சொல்லுங்க. லேடி டாக்டராக இருந்தால் இன்னும் நல்லது. வெளியில் யாருக்கும் எதுவும் தெரியாமல் " என்றான் சேனா கட்டளையாக.

" சரி " என்றவர். நம்பிக்கையான மருத்துவர் ஒருவரை வரச் சொல்லி அழைத்திருந்தார். இன்னும் பதினைந்து நிமிடத்தில் வருவதாக கூறினார்.

" நான் கீழேயே போய் அழைத்து வரேன் சார் " என்று ராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.

அதன் பிறகு, அங்கே அப்படியொரு அமைதி. யாரும் எதுவும் பேசவில்லை.

" நீ ஏன் மா இங்கே வந்த?" என்று சேனா தான் முதலில் கேட்டது.

" இவர் தான் பையா காலையில் அங்கே ஹோமுக்கு வந்த போது, அவரோட போன் நம்பர் கொடுத்து, ஈவினிங் டைம் பேசு. இந்த ஹோம்க்கு நிறைய உதவி செய்யனுமென்று நினைக்கிறேன். வெளிநாட்டில் உள்ள பிரண்ட்ஸிடமும் சொல்கிறேன். நிறைய ஹெல்ப் பண்ணறவங்க இருக்காங்கன்னு சொன்னார்.

சேனா, அந்த பெண் பேசுவதை கவனித்தாலும், பார்வையை அசைக்காது வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த மாயாவை தான் நொடிக்கொரு முறை பார்த்தான். அவனால் அவள் முகத்தை விட்டு பார்வையை நகர்த்துவது பெரும் பாடாக இருந்தது. அவள் அமர்ந்திருந்த கோலம்! அவன் மனதை பிசைய செய்தது.

மாயா அக்காவிடம் சொல்ல சொன்னேன். அவங்களிடம் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு அமவுண்ட் தரேன். அதை ஈவினிங் வந்து வாங்கிக்கோன்னு சொன்னார். முதலில் வீட்டுக்கு வர சொன்னார். பிறகு, நீ அழைய வேண்டாம். ஹோட்டலுக்கு பிரண்ட பார்க்க வந்தேன். இப்போ கிளம்பிடுவேன். வந்து வாங்கிட்டு போயிடு. எனக்கு முக்கியமான வேலையிருக்கு கிளம்பனும் னு அவசரப்படுத்தினார்.

சரி. பாதிக்கப்பட்ட எங்களை போல உள்ளவங்களுக்கு, உதவி கிடைப்பதை ஏன் மறுக்கனுமென்று! இங்கே வந்தேன். முதலில் நன்றாக தான் பேசினார். பிறகு , கொஞ்சம் கொஞ்சமா என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. மேலே பேச விடாமல் தன்னில் அவளை தாய் பறவையின் இறக்கைக்குள் புகுந்து கொள்ளும் குஞ்சு போல! புதைத்து கொண்டாள்.
சேனாவுக்கு, கைலாஷை பார்க்க பார்க்க, கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இப்போதே உயிர் நாடியில் மிதித்தே கொன்று விடலாம் என்ற எண்ணம் வலுப்பெற, அதை செயல்படுத்த எழுந்தவனை தடுப்பது போல ராஜன் மருத்துவரோடு உள்ளே நுழைந்தார்.

கைலாஷ் கைலாசம் போகாமல் காப்பாற்றிய பெருமை ராஜன் மற்றும் மருத்துவரையே சாரும். ஆனால் இங்கே ஒருத்தி, வடுவாகி விட்ட காயத்தின் தழும்பிலேயே மீண்டும் சூட்டு கோலால் இழுத்து புண்ணாக்கி விட்டதை போன்று மீண்டும் துடிதுடித்து கிடக்கிறாளே! அவள் அதிலிருந்து மீள்வது எப்போது? உடல் காயத்திற்கான மருத்துவரை வரவழைத்து விட்டான்! மனக்காயத்திற்கு தானே மருந்திடுவானோ! பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 20
பெண் மருத்துவரும் உடன் துணையாக அவருடைய நர்ஸூம் ராஜனுடன் உள்ளே வந்தனர். வரும் போதே ராஜன் சொல்லியிருப்பார் போலும்! என்ன? ஏது? என்று எதையும் விசாரிக்கவில்லை.

அந்த சிறு பெண்ணை " நீ வா மா " என்று முதலில் அழைத்தவர். சேனாவிடம் திரும்பி, " சார். நீங்க கொஞ்சம் லிவ்விங் ஹாலில் இருங்க. இவங்களை செக் பண்ணணும் " என்றார்.

தலையசைத்தபடி எழுந்து கொண்ட சேனா! மாயாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, மயக்கத்தில் கிடந்த கைலாஷின் காலரை பிடித்து அப்படியே தரையில் இழுத்தபடி அறையை விட்டு வெளியே இழுத்து வந்தவன். ஹாலில் அப்படியே போட்டான். அவனை தாண்டி செல்லும் போது, ராஜன் கூட தெரியாமல் பட்டது போல கைலாஷை நான்கு மிதி மிதித்து விட்டு சென்றார்.

முதலில் தீப்திக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. ஆங்காங்கே இருந்த நகக்கீறல்களுக்கு மருந்திட்டு, ஊசி போட்டு விட்டனர். பயப்படும் விதமாக எதுவும் இல்லை. கையில் இருந்த காயத்திற்கு களிம்பு மருந்து போட சொல்லி எழுதி கொடுத்தார். முழுதாக பரிசோதனை செய்து ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகே, மற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

அப்போது மாயாவின் போன் அடித்தது. சப்தத்தை வைத்து தேட, முதலில் போன் எங்கே என்றே தெரியவில்லை. பிறகு, கீழே விழுந்து கிடப்பது தீப்தி கண்ணில் பட , தாரா தான் அழைப்பு விடுத்தார்.

"மாயாக்கா, தாராம்மா போன் பண்றாங்க " என்றாள் தீப்தி தயங்கி

"ஹாங் " என்றவளுக்கு எதையும் உணர முடியவில்லை. புரியாதது போல சுற்றி சுற்றி பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மற்றவர்கள் பேசுவது கூட அவளுக்கு புரிகிறதா? என்பது சந்தேகம் தான். தெரியாத இடத்தில் புரியாது மொழியில் பேசுவதை போல சுற்றி சுற்றி பார்த்தபடி அமர்ந்திருந்தவளை கண்டு, பார்த்திருந்த அனைவருக்கும் இரக்கம் சுரந்தது. அதை அவர்கள் முகமும் பிரதிபலித்தது.

ஆனால் சேனாவின் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. தீப்தியின் கையிலிருந்த போனை வாங்கியவன்!

"ஹலோ நான் சேனா பேசறேன் " என்றான்.

"............ ............ "

" ம்ம். இரண்டு பேரும் இங்கே தான் இருக்காங்க. ஒன்னும் பயமில்லை. கொஞ்சம் மெடிக்கல் எமர்ஜென்சி, ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க. முடிந்தவுடன் நானே கொண்டு வந்து விட சொல்கிறேன் " என்றான் சரளமாக

" ................ ......... "

" இவங்களுக்கு ஒன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்காங்க" என்றவன். தீப்தியை அவர்களுடன் பேச வைத்தான். மாயா சிறிது நேரம் சென்று பேச சொல்கிறேன் " என்றபடி அழைப்பை துண்டித்தான்.

மாயாவுக்கு முன் கைலாஷ்க்கு பார்க்க வேண்டிய நிலை!. அவர் முனக ஆரம்பித்திருந்தார். நதியாவிடமிருந்து வேறு, தொடர் அழைப்பு வந்து கொண்டிருக்க! ராஜன் தான் கைலாஷ்க்கு மருந்துவம் பார்க்க பரிந்துரைந்தார்.

வேறு வழி இல்லாது அமைதியாக இருக்க வேண்டிய சூழல். மருத்துவர் முதலில் அடிபட்ட இடத்திற்கு மருந்திட்டு, மயக்கம் தெளியவும் ஊசி போட்டு விடவும். கைலாஷை முதலில் கொண்டு போய் வீட்டில் விட்டு விடுமாறு கூறி அனுப்பி வைத்தான். ஒரு முறை கூட, அவர் முகத்தை சேனா திரும்பியும் பார்க்கவில்லை.

" நீங்க வாங்க மேடம் " என்று தற்போது மாயாவை அழைத்தார் மருத்துவர்.

அப்படியே அமர்ந்திருந்தவள். சுற்றம் உறைக்க, மெல்ல தள்ளாடியபடி எழுந்து வந்தாள். தீப்தி கைதாங்கலாக பிடித்துக் கொள்ள! சிறு சிறு காயங்களுக்கு மருந்துட்டவர். பயப்படும்படி இல்லை. ரொம்ப மன அழுத்தத்தில் இருக்காங்க! நல்லா தூங்கி எழுந்தால் சரியாகிடுவாங்க. அதற்கான மருந்து எழுதி தரேன். சாப்பிட்ட பிறகு கொடுங்க " என்றவர். மருந்தை எழுதிக் கொடுத்து விட்டு, தாமதமாவதால் உடனே கிளம்பியும் விட்டார்.

மாயா இப்போது சற்று தெளித்திருந்தாள். அறையை சுற்றி பார்வையிட்டவள். அங்கிருந்த ரெஸ்ட் ரூம் சென்று, தண்ணீரை முகத்திலடித்து கழுவ! சில்லென்ற தண்ணீர் சற்று ஆசுவாசப்படுத்தியது.

வெளியே வந்தவள். " போகலாம் தீப்தி " என்றபடி வர, அங்கே சேனா போனில் பேசியபடி நிற்பதை கண்டு கொள்ளாமல் அவனை கடந்து செல்ல முயன்றாள்.

இருவரும் வெளியே செல்வதை கண்டு, " இரண்டு பேரும் நில்லுங்க" என்றான் அதட்டலாக

வெடுக்கென திரும்பியவள். சேனாவை முறைத்தாள்.

"ராஜன் வரட்டும். அவர் உங்களை கொண்டு போய் விடுவார்" என்றான் மாயாவின் முறைப்பை பொருட்படுத்தாது.

"ஓ! . ராஜன் எங்கே போயிருக்கார்? எப்போ வருவார்?" என்றாள் நக்கலாக

"இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். வெயிட் பண்ணுங்க " என்றான்

" என்ன அவசரம்? பொறுமையாக உங்க மாமனாரை போலீஸில் காட்டிக் கொடுக்காமல், காப்பாற்றி அவர பத்திரமா விட்டுட்டு வர வேணாமா? ஒன்றும் அவசரமில்லை. பொறுமையாக வரச் சொல்லுங்க.

உங்களுக்கென்ன! உங்க அந்தஸ்து கௌரவம் பாதிக்கக் கூடாது. நாங்களெல்லாம் யாரு? நாங்க எங்கேடு கெட்டு சீரழிஞ்சு போனால் உங்களுக்கென்ன வந்தது. உங்க வீட்டு பொண்ணு கிடையாது பாருங்க?

ஏற்கனவே பழக்கப்பட்ட விசயம் தானே? இப்போ மட்டும் புதுசா என்ன நடந்திடுச்சுன்னு, உங்க மாமனார காப்பாற்றி விட்டிருக்கீங்க! " என்றாள் வார்த்தைகள் சாட்டைபோல இருந்தாலும் அவர்களது வலியை அப்படியே பிரதிபலித்தது.

" ம்ச்ச். மாயா! எப்போ என்ன செய்யனுமென்று எனக்கு தெரியும். அவர நான் வேறு மாதிரி டீல் பண்ணிப்பேன்" என்றான் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து

கோவம் தலைக்கேற, வேகமாக அவன் முன் வந்து நின்றவள். " என்ன? என்ன டீல் பண்ணிக்குவீங்க? எப்படி டீல் பண்ணிவீங்க? மாமா இதெல்லாம் தப்பு. இப்படியெல்லாம் செய்ய கூடாதுன்னு அறிவுரை சொல்லி டீல் பண்ணுவீங்களோ? " என்றாள் படு நக்கலாக.

தீப்தி அங்கேயே நிற்பதை கண்டு, " நீ உள்ளே போய் உட்காரு மா. நான் பேசிவிட்டு கூப்பிடுகிறேன் " என்று சேனா சொன்னதும். தலையசைத்தபடி உள்ளே சென்று விட்டாள்.

தீப்தி சென்றதும். "அறிவிருக்கா உனக்கு? அந்த பெண்ணை பக்கத்தில் நிக்க வைத்துக் கொண்டே இப்படி பேசுற?" என்றான் கண்டிக்கும் விதமாக

" அந்த பெண்ணிடம் தான் உங்க மாமனார் மிருகம் மாதிரி நடந்து கொண்டான். கையெல்லாம் கட்டிப்போட்டு , அவளால தன்னை காப்பாத்திக் கொள்ள எந்த முயற்சியும் பண்ண முடியாமல், வெறித்து பார்த்தபடி இருந்தவளை என் வாழ்நாளில் மறக்க முடியாது! " என்றவளுக்கு தொண்டை அழுகையில் அடைத்தது.

" நான்.. " என்று ஏதோ சொல்ல வந்தவனை பேச விடாது

"அது மட்டுமா? காப்பாற்ற போன என்னிடமும் தகாத முறையில் நடந்து கொள்ள பார்க்கிறான்? எப்படி வந்துச்சு அப்படியொரு தைரியம்! உங்களால் தான். உங்களால் தான் அவனுக்கு எதையும் செய்யலாம் மருமகன் காப்பாற்றி விட்டுவிடுவார் என்கிற தைரியம். இதோ! இப்பக் கூட அவன் நினைத்ததை தானே நீங்களும் செய்து இருக்கீங்க!" என்றாள் கோபமும் ஆதங்கமுமாக

" மாயாவதி! " என்று கோபத்தை அடக்கியபடி

" ஏன்? உண்மையை சொன்னால் கோபம் வருதோ? உங்க மாமனார பிடிச்சு ஜெயிலில் போட எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. இந்த அறை உங்க பெயரில் புக்காகி இருக்கு, என்கிற ஒரே காரணத்தால் தான் இப்போதைக்கு அமைதியாக போகிறேன்.

இத்தனை பெண்களை காப்பாற்றி கொடுத்து உங்களுக்கு, நான் செய்யும் சிறு கைமாறு. இன்னொரு தடவை அந்த கைலாஷ் என் கண்ணில் பட்டான் கைலாஷம் போயிடுவான் " என்றாள் எச்சரிக்கை விதமாக

மாயாவையே கூர்ந்து பார்த்தவன். " என் பெயரில் அறை பதிவானதுக்காகவா போலீஸ் போகாமல் இருக்க!" என்றான் போலியாக ஆச்சரியத்தை காட்டி

"ஆமாம் . அதோடு சுக்லா ஜிக்காகவும் தான். அவருக்கு மட்டும் விசயம் தெரிந்தது! உங்க மாமனார் இந்நேரம் பரலோகம் போயிருப்பார். அவர் சப்போர்ட் இல்லையென்று தானே? உங்க இஷ்டத்துக்கு அவனை காப்பாற்றியிருக்கீங்க?" என்றாள் ஆதங்கமாக

"ஓ! அப்படியென்ன பெரிய ஆளு உங்க சுக்லா ஜி. ஓல்ட்மேன் " என்றான் படு நக்கலாக

" இங்கே பாருங்க! என்ன எதுவேணாலும் சொல்லுங்க? அவர ஏதாவது சொன்னீங்க! எனக்கு கெட்ட கோபம் வரும்?" என்றவளுக்கு கோவத்தில் முகம் சிவந்தது. அக்மார்க் குடும்ப தலைவி போல! சண்டை போட தயாரானாள்.

"பார்ரா! என் மாமன் மேல் எனக்கில்லாத உரிமையை விடவா உனக்கு வந்துடுச்சு?"

" உங்களுக்கு மாமன் இல்லை மாமனாரு அந்த கபோதி கைலாஷம் மட்டும் தான். சுக்லா ஜி இல்லை " என்றாள் கராராக. உரிமை போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள்.

" மாமனோ! மாமானரோ யாராக இருந்தாலும் எனக்கு மட்டும் தான். சுக்லா ஜிக்கும் உனக்கும் எந்த ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இதை நீ என்றைக்குமே மறக்கக் கூடாது " என்றவனின் வார்த்தையில் தான் எவ்வளவு அழுத்தம்!

ஆசையாக வைத்திருந்த இரவல் பொம்மையை உரியவர் வந்து பிடிங்கி சென்றால் என்ன மனநிலை இருக்குமோ? அந்த மனநிலையில் தான் மாயா பாவமாக நின்றிருந்தாள்.

அப்போது அங்கே மேனேஜர் கதவை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே வந்தவர். " ஏதும் ப்ராப்ளம் இல்லையே?" என்றார்.

சேனாவை பார்த்தபடி நின்றிருந்தவள். இப்போது அவர் பக்கம் நன்றாக திரும்பி, " நத்திங் " என்ற போது சேனாவும் அதே வார்த்தையை அதே நேரத்தில் உதிர்த்திருந்தான்.

" ஓ! ஒ. கே சார் . என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க " என்று வழவழத்துக் கொண்டிருந்தவனின் பார்வை அடிக்கடி அவர்களுக்கு பின்னால் இருந்த கண்ணாடியில் பதிய, மாயா இதை உணரவில்லை.
ஆனால் சேனாவுக்கு ஏதோ புரிய, டக்கென்று அவள் முதுகுக்கு பின்னால் வந்து நின்று, மேனேஜரை அழுத்தமாக பார்க்க!

" ஓ. கே சார். எதுவும் வேண்டுமென்றால் கூப்பிடுங்க. பை மேடம் " என்று கிளம்பி விட,

" ஏன் டி? உனக்கு டிரஸ் மேல கவனமே இருக்காதா? ஜாக்கெட் ஊக் கழண்டு இருக்கிறத, வெறிக்க வெறிக்க அந்த மேனேஜர் பார்த்துட்டு போகிறான் " என்றபடியே அனிச்சையாக அவளது ஜாக்கெட்டின் பின்புற கொக்கியை சரியாக மாட்டி விட்டவன். முன்னாடி வைச்சு தானே ஜாக்கெட் பின் போடுவாங்க? நீ என்ன பின்னாடி வைச்சு.. " என்றபடி நிமிர்ந்தவன். அவளது அதிர்ச்சியும் திகைப்புமான பார்வையை கண்டே, தான் செய்து கொண்டிருந்த செயல் புரிய,
ஓரடி பின்னே நகர்ந்து விட்டான்!.

பின்னங்கழுத்தை அவஸ்தையாக தேய்த்து விட்டவன். உடனே சுதாரித்து, " ஒழுங்கா டிரஸ் போடு. இனி கவனமில்லாமல் அடுத்தவனுக்கு ஷோ காட்டுற மாதிரி நிற்காதே! " என்று அதற்கும் அவளையே சாட,

அதே நேரம் ராஜனும் வர, அவனது பேச்சினால் மனம் காயம் பட, அடிபட்ட பார்வையொன்றை பார்த்து விட்டு தீப்தியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.


மனம் வலிக்க வலிக்க மாயாவை வார்த்தையால் அடிக்கிறோம் என்று அவனுக்கு புரிந்து தான் இருந்தது. காலையிலிருந்து அவன் படும் அவஸ்தை அவனை பேச வைக்கிறது. அப்படியென்ன அவஸ்தை பட்டுவிட்டான்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Last edited:

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 21
ராஜன், இரு பெண்களையும் அழைத்து சென்று அவர்களது இருப்பிடத்தில் விட்டுவிட்டதாக சொன்ன பிறகே, அவரை வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டு, தன்னுடைய வீட்டுக்கு வந்த போது பின்னிரவாகி விட்டது.

கைலாஷ் இப்போது சுய நினைவில் இருக்க மாட்டார் என்பதால்! காலையில் போய் சந்திக்க நினைத்திருந்தான். கூடவே அப்பாவையும் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

தனது அறைக்கு சென்று, கட்டிலில் அமர்ந்தவன். உடையை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்த வாக்கிலேயே மெத்தையில் சாய்ந்தான். மீண்டும் மீண்டும் மாயாவிடமே போய் பேசுவது போல்! இருக்கும் சூழ்நிலையை அறவே வெறுத்தான்.

அவளை பற்றின விசயங்களை கேள்விபட்டதிலிருந்தே நல்ல அபிப்ராயம் சிறிதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் முழுதும் வெறுத்தான். போலீஸில் அடி வாங்க வைத்து அதை கண்ணார வீடியோவில் பார்த்தபோது கூட, ஒரு சிறு வருத்தமோ பரிதாபம் கூட அவள் மீது ஏற்படவில்லை.

நந்திதாவின் வருத்தத்தை போக்க வேண்டும்! அவருக்கு அவள் கொடுத்த மனவலிக்கு , இவளுக்கு இன்னும் ஏதாவது நடந்தால் கூட பரவாயில்லை என்று தான் தோன்றியது. ஆனால் அதற்கு மற்றொரு காரணமும் , ஏன் முக்கியமான காரணமே சுக்லா தானே! என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.

அதன் பிறகே, சுக்லாவை சந்தித்து பேசிய போது மாயா கேட்ட உதவி, அதற்கு அவன் சுக்லாவை விட்டு போக வேண்டும் என்றதற்கு இலகுவாகவே ஒப்புக் கொண்டாள். சுக்லா கூட அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வெளியிலிருந்த இவர்களை பற்றி கேள்விபட்ட விசயத்திற்கும், நேரில் பார்க்கும் போது ஏகப்பட்ட முரண்பாடுகள்!.

பிறகு, சொன்னது போலவே அவன் கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுத்து விட்டான். அவரவர் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். திரும்பவும் அதிகாரியிடம் மாயா செய்த வைத்த வேலை , பிறகு விசாரணைக்கும் இவனையும் சேர்த்து இழுத்து விட்டது போன்றவை, தன்னை சீண்டுகிறாளோ என்று தான் தோன்றியது.

விசாரணை முடித்து வெளியே வந்த போது, தன்னையும் நதியாவையும் சேர்த்து வைத்து பேசியதில் ருத்ர மூர்த்தியாகவே மாற்றியிருந்தாள். இவள் எப்படி என்னை பேசலாம்? என்ற கோபம் இப்பவுமே அவனுக்கு உண்டு. ஆனால் அதன் பிறகு! கையை பிடித்து முறுக்கியபோது, முழுதாகவே அவன் மேல் அவளுடைய சாய்த்திருந்தாள். மிக மிக நெருக்கமான நிலைதான். ஆனாலும் கோபமான பேச்சுக்களால் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில்!

சூழ்நிலைக்கு சற்றும் பொறுந்தாமல் அவளுக்கே உரித்தான மணம் அவன் நாசியில் ஏற, சற்று நேரம் மூளை அந்த மணத்தை ஆழ்ந்து சுவாசித்தது. மல்லிகை பந்ததில் எதிர்பாராமல் நுழையும் போது, பூந்திருக்கும் மல்லிகை மொட்டுகளின் நறுமணத்தில் எப்படி ஆழ்ந்து நின்று விடுவோமோ! அப்படித்தான் நின்று விட்டான் சேனா!. சில நொடிகள் யாருடைய கெஞ்சல்களோ, கோவமான பேச்சுக்கள் கூட, அவன் காதிலேயே விழவில்லை.

மாயாவின் திமிறலில் சுயத்துக்கு வந்தவன். ஒரு நொடியேனும் அவளருகே தான் சுயநினைவின்றி நின்றதில் , அதே கோவத்தை அவள் மேல் காட்டி தள்ளி விட்டிருந்தான்.

பிறகு, வீட்டுக்கு வந்ததும் அவன் செய்த முதல் வேலையே ஷவரின் அடியில் நின்று நீரில் தலையை காட்டியது தான்.

அவளை தொட்டது பாவமென்று நினைத்து குளித்தானா? அப்படியென்றால் தன்னை மறந்து அவளுடன் மனம்லயித்து ஒன்றினானே! அதற்கு என்ன செய்வான்? அதை நினைத்தாலே அவனுக்கு தன்னை நினைத்து அசிங்கமாக இருந்தது. இவளிடம் போய் இப்படி நின்றிருக்கிறோமே என்று! ஏதோ சொல்ல முடியா வெறுப்பு இருந்து கொண்டே இருக்கின்றது. அவள் பெயரை கேட்டது முதல். சுக்லாவுடன் சம்மந்தபடுத்தி பேசிக் கொண்டதாலா? என்றாள் நிச்சயம் இல்லை.

இதெல்லாம் அவன் சொல்லும் சாக்கு தான். மாயாவை வெறுக்கிறான்!. மனதின் அடி ஆழத்திலிருந்து வெறுக்கிறான். ஏன்? என்று கேட்டால் நிச்சயம் அவனுக்கே தெரியாது. சிலரை பார்த்தவுடன் பிடித்து விடும். ஆனால் சேனாவுக்கு, மாயாவின் பெயரை கேட்டதிலிருந்து பிடிக்காமல் போய் விட்டது. எண்ணங்கள் விசித்திரமானது தான்!.

ஏதேதோ யோசித்தபடி இருந்தவன். அவனறியாமல் உறங்கியும் விட்டான். மறு நாள் காலை வழக்கம் போல எழுந்து, தனது அன்றாட வேலைகளை முடித்து கீழே இறங்கி வந்தவன். சாப்பிட்டபடி அமர்ந்திருந்த சேதுவுடன் இணைந்து கொண்டான்.

சாப்பிட்டபடியே, தொழில் சம்மந்தமான சில முடிவுகள், அடுத்த செய்யப் போவது போன்ற நடைமுறைகளை கலந்தாலோசித்து கொண்டனர். அப்போது ராஜன் அங்கு வர,

"வாங்க ராஜன் சாப்பிடலாம் " என்றார் சேனா.

"வீட்டில் சாப்பிட்டு தான் வந்தேன். கேட்டதற்கு நன்றி சார் " என்றார் ராஜன்.

"என்ன ராஜன்? ஆபிஸ் போகாமல் இங்கே வந்திருக்கீங்க?" என்றார் சேது.

"அது சார் தான் வர சொல்லியிருந்தார் ".

"ஓ! " என்றவர். சாப்பிடுவதில் கவனம் செலுத்தினர். இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தவுடன், " அப்பா வாங்க நதியாவையும் அவங்க அப்பாவையும் பார்த்து விட்டு வந்து விடுவோம் " என்றான்.

" சரி " என்று சந்தோஷப்பட்டவர். மாயா, அதிகாரிகளை கைலாஷை போய் பார்க்க சொன்னது நினைவுக்கு வர, ' அச்சோ! ஏதும் பிரச்சனையாயிடுச்சா? இல்லையே. நாம தான் போன் செய்து போக வேண்டாமென்று சொல்லி விட்டோமே!. ஒரு வேளை திரும்பவும் போய் பார்த்து இருப்பார்களோ?' என்று பலவாறு யோசனை ஓட

" என்ன விசயமா சேனா போய் பார்க்க போகிறோம்?" என்று மெதுவாக விசயத்தை கேட்க முயன்றார்.

" கைலாஷ் " என்றவன். "நேரில் பார்க்கும் போது உங்களுக்கே புரியும் " என்று விட்டான்.

"ம்க்கும் " என்று நொடிக்க, சேனா, திரும்பி பார்த்து விட, " ஹுக்கும் ஹுக்கும்.. இருமல் பா " என்று வராத இருமலை இருமி வேறு காண்பித்தார் சேது.

மூவரும் கிளம்பி, கைலாஷ் மற்றும் நதியாவை பார்க்க சென்றனர். வீட்டில் இருவருமே ஹாலில் அமர்ந்தபடி தான் பேசிக் கொண்டிருந்தனர். நதியாவின் முகத்தில் கோவம், இயலாமை என்ற உணர்வுகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

கைலாஷ் எதையும் முகத்தில் காண்பிக்காமல் அமர்ந்திருந்தார். நேற்று, மருத்துவர் மூக்கில் அடிப்பட்டதால் போட்டு விட்டிருந்த பிளாஸ்த்திரியை அப்போது தான் எடுத்திருந்தார். இதனால் அந்த இடம் மட்டும் சற்று அதிக சிவப்பாக தடித்து இருந்தது.

" எப்படிம்மா இருக்க?" என்று கேட்டபடியே வந்த சேது. கைலாஷின் மூக்கு பகுதி சிவந்திருப்பதை கண்டு,

" என்னாச்சு சம்மந்தி? மூக்கு சிவந்திருக்கு! கொசு கடிச்சிடுச்சா?" என்றார் தெரிந்து கொள்ளும் பொருட்டு

கேட்டதே போதும் என்பது போல! " எல்லாம் அந்த மாயாவால் வந்தது அங்கிள். அவ தான். அவளால் தான்! எங்க டேடிக்கு இப்படி ஆயிடுச்சு " என்றாள் ஆங்காரமாக.

"மாயாவா? அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு?" என்றார் சேது புரியாமல்.

" என்ன செய்தாளா? நேற்று நம்மிடம் எப்படியெல்லாம் பேசினாள்! உத்தமி மாதிரி!. அவ என்ன செய்திருக்கா தெரியுமா அங்கிள்? அங்கே இருக்கிற சின்ன பொண்ணுங்களை பெரிய பெரிய ஹோட்டலுக்கு அனுப்பி விட்டிருக்கிறாள்.

டேடி, அந்த ஹோட்டலுக்கு பிஸ்னஸ் சம்மந்தமாக ஒருத்தர பார்க்க போயிருக்காங்க. அவர பார்த்து விட்டு, அங்கேயே சாப்பிடும் போது, அந்த ஹோமில் உள்ள பெண் வந்து, ட்டேட்டோட பிரண்டு கூட, ஸ்டே பண்ண பேசியிருக்காள்.

மார்னிங் பார்த்ததால்! அந்த பெண்ணை ட்டேட் நல்லாவே தெரிந்திருக்கு, அவ சொன்னதை கேட்டதும் ஷாக்காகி இருக்காங்க. அந்த பெண்ண விசாரித்ததலில் மாயா தான் இப்படி செய்ய சொல்லியிருக்கிறான்னு தெரிந்திருக்கு!
 

Sirajunisha

Moderator
ட்டேட், விஜயிடம் சொல்றேன்னு சொன்ன உடனேயே உசாரானவ. மாயாவுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி விட்டாள். பிறகு, அவ வந்து பிரச்சனை பண்ணி மிரட்டியிருக்கிறாள். இந்த விசயம் வெளியில் போனுச்சு! நீ தான் பெண்ணை இங்கே வரவழைத்தேன்னு சொல்லி, உன் மானத்தை வாங்குவேன்னு மிரட்டியிருக்கிறாள்.

நான் விஜயிடம் சொல்லுவேன். உன் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்னு சொல்லும் போது, இரண்டு பெண்களும் சேர்ந்து ட்டேட்ட அடிச்சிருக்காங்க. அப்போது யாரோ வந்து ட்டேட்ட தள்ளி விட, சுவற்றில் மோதி, கீழே விழுந்து மயக்கமாயிருக்காங்க. அதற்கு பிறகு, ட்டேட்க்கு எதுவுமே நினைவில் இல்லை. ராஜன் தான் நைட் கொண்டு வந்து விட்டுட்டு போனார் " என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள் நதியா.

ராஜன் அப்படியே அசந்து போய் நின்று விட்டார்! கண்களை மூடி மூடி திறந்து, கேட்டதெல்லாம் உண்மை தானா? என்ற நிலையில் இருந்தார்.

சேனா கூட கிட்டதட்ட அதே நிலை தான்!. மாயாவிடம் அவர் தகாத முறையில் நடக்க, முயற்சிக்கும் போது! உன்னை பார்த்ததிலிருந்து நான் நானாகவே இல்லை என்றதும்! அவளை வலுக்கட்டாயப்படுத்தியதை நேரில் பார்க்கவில்லை என்றால்! சேனா கூட, அப்படியும் இருக்குமோ! உண்மை தான் போல!' என்று நினைத்திருப்பான். அந்த அளவு நடந்த அத்தனை விசயத்தையும் திரித்து கூறியிருந்தார் கைலாஷ். தெரியாத நபர்கள் உண்மை என்று தான் நம்பியிருப்பர்.

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக, " நீ சொல்ற மாதிரி நடக்க வாய்ப்பில்லை மா. மாயா அப்படிபட்ட பெண் இல்லை. அந்த பெண் வேறு ஏதும் காரணமாக கூட அங்கே வந்திருக்கலாம்!. அதற்கும் மாயாவுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில், அந்த பெண்களை வெளியே விடவே மாட்டாள். அப்படியே வந்தாலும் அதற்கான கண்காணிப்பு ஆட்கள் உண்டு . தவறாக புரிந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன்" என்றார் சேதுபதி.

இப்போது சேதுவை ஆச்சரியமாக திரும்பி பார்த்தனர் சேனாவும், ராஜனும்.

" அப்போ நான் பொய் சொல்கிறேனா? கேன்டி சொன்ன அத்தனையும் உண்மை " என்றார் கைலாஷ்.

" சரி நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க " என்று இடைபுகுந்த சேனா. " எந்த பிரண்ட பார்க்க போனீங்க? . அவர எப்படி உங்களுக்கு தெரியும்?" என்றான்.

" அவன் என்னுடைய பிரண்ட். பிஸ்னஸ் சம்மந்தமாக மீட் பண்ணி டிஸ்கஸ் செய்து கொள்வோம். நான் சென்னை வந்திருப்பது தெரியும். அதனால் என்னை பார்க்கனுமென்று கூப்பிட்டான். போனேன் ".

" உங்களை அடிக்கும் போது உங்க பிரண்ட் தடுக்க வரலையா?. அவ்வளவு பெரிய ஹோட்டலில் சுற்றிலும் ஆட்கள் நடமாடிக் கொண்டே இருப்பாங்களே?. ஒருத்தர் கூடவா தடுக்கலை?" என்றான் சேனா.

" நான் பிரண்ட் ரூமில் இருந்த போது தான். இப்படி நடந்தது. 'அடுத்து பிரண்ட் எங்கே என்று கேள்வி வரும்!' என்று யூகித்து, என்னுடைய பிரண்ட் அப்போது அறையில் இல்லை. பாரில் இருந்தான்! " என்றான்.

" உங்களை அடிச்சது யாரென்று தெரியுமா?" என்றான் கடைசியாக.

" ம்ஹும். யாருன்னு தெரியலை. தள்ளி விட்டதில் மயக்கமாகி விட்டேன். முதுகிலேயே மிதி மிதி மிதித்தான் " எனும் போது, இப்போதே வலிப்பது போல இருந்தது.

" ஆள் யாரென்று கண்டுபிடிச்சு அவனோட கையை கால உடைக்கனும் விஜய் " என்றாள் நதியா.

" ஆமாம் மாப்பிள்ளை. அவன மட்டும் என் கையில் கொண்டு வந்து ஒப்படைங்க.. " என்றான் கைலாஷும் விடாமல்

" உங்க முன்னாடியே நிற்கிறேனே? என்ன செய்ய முடியும் உங்களால?" என்ற அழுத்தமான சேனாவின் வார்த்தையில் கைலாஷிற்கு உடலெல்லாம் வெலவெலத்து விட்டது.

" நீங்களா!" என்றாள் நதியா அதிர்ச்சியில்.

ராஜனிடம் கண்காட்ட! நேற்று நடந்த அத்தனையும் ஒரு வரி மாறாமல் சொல்லி விட்டார்.

அதற்குள் சுதாரித்து விட்ட கைலாஷ், " மாயாவிடம் மயங்கி நீங்களும் அவ காலடியில் விழுந்திட்டீங்களா விஜய்? " என்று வருத்தமாக பேசி, சேனாவின் ஈகோவை கிளறி விட்டார் கைலாஷ்.

" நேற்று, காலில் விழ வைத்திருந்தால்! இன்றைக்கு இப்படி பேசி இருக்க மாட்டீங்க கைலாஷ் " என்றவன். " இதுக்கு மேல ஒரு நிமிசம் கூட இங்கே நிற்க கூடாது. உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க. மேரேஜ் ப்ரோபோசல் எல்லாத்தையும் நான் இப்பவே நிறுத்தறேன் " என்றான் உறுதியாக

" நான் எந்த தப்புமே செய்யலை. அதை காலம் உங்களுக்கு உணர்த்தும். அப்போ உங்களுக்கு எல்லாமே புரியும். ஆனால் கல்யாணத்தை ஏன் நிறுத்தறீங்க? என் பொண்ணு என்ன தப்பு செய்தாள்? "என்றார் சேது, சேனா இருவரையும் பார்த்தபடி

" உங்க பொண்ணோட ஹஸ்பெண்ட் மிஸ்டர். மேத்யூ போன் செய்திருந்தார் " என்றதும்.

" என்ன? மேத்யூ உயிரோட இருக்காரா?" என்றாள் நதியா அதிர்ச்சியாக.

" அதெல்லாம் இருக்கார். என்ன விவரமென்று உங்க ட்டேட் ட கேளு சொல்லுவார் . மறுமணம் ஒன்னும் தப்பில்லை. ஆனால் அதை மறைக்க முயற்சி செய்தது தப்பு. சீக்கிரமே இடத்தை காலி பண்ணுங்க " என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக பேசி அனுப்பி விட்டே சென்றான்.

சேது அதிர்ச்சியிலிருந்து மீளாமல் காரில் அப்படியே அமர்ந்திருந்தார். " என்னப்பா? " என்றான். கையை பற்றி குலுக்கி

" நதியாக்கு கல்யாணம் ஆயிடுச்சா!" என்றார் மீண்டும்.

" ஆமாம். கைலாஷ்க்கு பிடிக்கலை. அக்ரிமெண்டில் வெளிநாட்டுக்கு போனவரை செத்து விட்டதாக நம்ப வைத்து விட்டான். அவன் பேச்சை விடுங்க எரிச்சலாக வருது " என்றான் முகத்தை சுளித்து.

" நல்ல வேளை தப்பித்தோம்!" என்றார் சேது ஆசுவாசமாக. பிறகு மனநிலை சற்று இலகுவாகவும். காற்று மெல்ல குதூகலத்தை கொடுக்க! ஏதேதோ ராஜனுடன் பேசியபடி வந்தவர். கடைசியாக

" நான் கூட காலையில் கைலாஷை பார்க்க போகனுமென்று சொன்ன போது! கொஞ்சம் டென்சனாகிட்டேன். ஏனென்றால் அந்த அதிகாரிகளிடம், கைலாஷ் சொன்னால் சேனா சார் கேட்பாரு. நீங்க கைலாஷை பாருங்கன்னு சொன்னதால்! இவங்க போய் பார்த்து! பிரச்சனையாகிடுச்சோன்னு!.

பிறகும் யோசித்தேன்! நாம போன் பண்ணி அந்த அதிகாரிகளிடம் போக வேண்டாமென்று சொன்னோமே! அதை மீறி போயிருக்க வாய்ப்பில்லையேன்னு எனக்கு பல சிந்தனை .. !" என்று சொல்லிக் கொண்டே இருந்தவர்.

சேனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை கண்டு! அப்படியே வாயை மூடி விட்டார். சொல்ல வேண்டிய விசயத்தை சொன்ன பிறகு! வாயை மூடினால் என்ன? மூடாவிட்டால் என்ன?

" என்னை ஆபிஸ் இறக்கி விடுங்க" என்றவன். அதன்படி அங்கேயே இறங்கி கொண்டு, அடுத்த நிமிடம் மாயாவுக்கு அழைத்தான்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள். அழைப்பின் சத்தத்தில், ஆன் செய்து விட்டு, " ஹலோ " என்றது தான் தாமதம்

மறுபுறம் சேனா பொறிய தொடங்கி விட்டான். உலகில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கெல்லாம் டிஸ்னெரி போடும் அளவுக்கு இருந்தது. அவனது பேச்சு!

மறுபுறம் எந்த சப்தமும் இல்லை. ஆனால் லைனில் தான் இருந்தாள். " இனிமே ஏதாவது இது மாதிரி செய்தன்னு வைச்சுக்கோ!" என்று அவன் இறுதி எச்சரிக்கை கொடுக்கும் போது!

" ஹலோ யாருங்க பேசுறது?" என்றது ஒரு குரல்.

" மாயா எங்கே?. போனை கொடுத்துட்டு ஓடிட்டாங்களா?" என்றான் கடுப்பாக. அவன் பேசிய வார்த்தையின் வீரியம் தாற் தெரியுமே!

" இல்லீங்க. மாயாவுக்கு ஜீரம். போனை டேபிள்ல வைச்சிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கு. நீங்க நாளைக்கு பேசுங்க" என்று அழைப்பை தூண்டித்து விட்டார்.

ஏற்கனவே கோபத்தில் இருப்பவனுக்கு, கொலைவெறியே வந்தது. இவ போனை பேசாமல் டேபிளில் வைச்சிட்டு தூங்குவாளாம். இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த நான் கேனையனா? இருக்கு டி உனக்கு. உன் லிமிட்ட ரொம்பவே தாண்டிட்ட! சரியான நேரத்தில் உனக்கு வைக்கிறேன் டி வேட்டு " என்று முடிவெத்து விட்டான்.

சொன்னதை செய்வானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 22
மாயாவுக்கு நல்ல காய்ச்சல். இரண்டு நாட்களாக அவள் கண்ணையே திறக்கவில்லை. அன்று கைலாஷிடம் ஒரு சில நிமிட நேரமாக இருந்தாலும் அவனிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பெரிதும் பாடுபட்டிருந்தாள்!. அதுவே அவளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதன் விளைவே இந்த காய்ச்சல்!.

வெளிப்படையாக எல்லா விதத்திலும் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அவளுக்கு ஏற்பட்ட இந்த நேரடி பாதிப்பில் சற்று நிலைக்குலைந்து போயிருக்கிறாள் என்பதே உண்மை.

ஒரு வாரம் கடந்த நிலையில், மாயா பூரண குணமடைந்திருந்தாள். பிறகு, அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்தவள். மாரியை அழைத்துக் கொண்டு, அதிகாரியின் இல்லத்திற்கு சென்றாள்.

அவரின் மனைவி மற்றும் மாமனார் தான் இருந்தனர். தீடீரென மாயாவை கண்டதும் உள்ளம் பதைக்க!

" என்னாச்சு? திரும்பவும் உங்களை தொந்தரவு செய்தாரா?" என்றார் அந்த பெண்மணி

" இல்லை " என்றவள். கையெடுத்து கும்பிட்டு, " என்னை மன்னிச்சிடுங்க . என்ன இருந்தாலும், உங்க கணவர் செய்த தப்புக்கு, உங்க மகளை நான் இழுத்திறுக்க கூடாது. அதற்காக என்னை மன்னித்து விடுங்க" என்றாள். இவர்கள் பேசுவதை கேட்டபடி வந்த அந்த பெரியவரையும் பார்த்து!

" பெற்றவர்கள் செய்வது பிள்ளைக்கு சொல்வாங்க!. இவர் செய்த வினை தான் மா. அவளை அங்கே கொண்டு வந்தது " என்றார் அந்த பெண்மணி நொந்து போய்

" இதில் எனக்கு உடன்பாடு இல்லை மா. இந்த உலகத்தில் பல பெண்கள் பெற்ற தாய் தகப்பனின் பொறுப்பில்லாத தனத்திலும், உறவுகளாலேயேயும் பல இன்னல்களையும் பாதிப்புக்கும் உள்ளாகுறாங்க. அதற்கு என்ன சொல்ல முடியும்?" என்றவளுக்கு,

என்ன பதில் சொல்வது என்று இருவருக்குமே புரியவில்லை. உண்மை தானே!

"ஆனாலும் நான் செய்த தவறுக்கு என்னை மன்னிச்சிடுங்க. உங்க பெண்ணிடமும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க. அவளிடம் நேரிலேயே சொல்லியிருப்பேன்!. ஆனால் அவளுக்கு அங்கே வேறு மாதிரியான சூழ்நிலையை தான் சொல்லியிருந்தேன். இருந்தாலும்! முதலில் அவ பயந்திருப்பாள் தானே!. அதற்காகத்தான் " என்று விளக்கம் கொடுத்தவள். விரைவிலேயே விடைபெற்று கிளம்பி விட்டாள்.

காரில் ஏறியதும். கார் மெல்ல வேகமெடுக்க, தலையை பின்புறம் சாய்த்து கண்ணை மூடினாள். மனம் இலேசான உணர்வு. பிறகு, மாரியிடம் பொதுவான விசயங்களை பேசியவள். தனது போனில் வந்த அழைப்புகளை பார்வையிட ஆரம்பித்தாள். உடல் நிலை சரியில்லாத போது, போனை அவள் பயன்படுத்தவில்லை. அழைப்பு வந்தால், வேறு யாரேனும் எடுத்து, உடல் நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர்.

எனவே, அழைத்தவர்களிடம் என்ன விவரமென்று கேட்க, கால்ஸ் ஹிஸ்டிரியை பார்த்தாள். அவளது போன் கால் ரெக்கார்ட் ஆகுமாறு செட் செய்து வைத்திருந்தாள். எனவே யார் அழைத்திருந்தது? என்ன விவரம்? என்று மறுபடி அழைத்து, விவரம் கேட்டு கொண்டாள்.

கடைசியாக, சேனாவிடமிருந்து அழைப்பு வந்திருந்ததை கண்டாள். அதோடு, வெகு நேரம் பேசியிருப்பது புரிய, யாரிடம் பேசி இருப்பார்!. அதுவும் இவ்வளவு நேரம் என்று யோசித்தவள். கால் ரெக்கார்டில் உள்ள அவனது பேச்சை, காதில் ஹெட்போனில் பொருத்தி கேட்க ஆரம்பித்தாள்.

சாதாரணமாக பேசினாலே தேள் போல கொட்டுவான்!. இப்போது அவள் மற்ற அதிகாரிகளிடம் கைலாஷை பார்க்க சொன்னது தெரிந்திருக்க! வார்த்தைகளால் ருத்ர தாண்டவம் ஆடியிருந்தான். மாயாவை தரக்குறைவாக அவ்வளவு பேச்சுக்கள்!. அவளை கேவலமாக, மனம் நோகும்படியான பேச்சுகளை கேட்டவளுக்கு, அதற்கு மேல் அதை கேட்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் முழுதாகவே கேட்டு முடித்தாள்.

கார் ஓட்டியபடியே எதார்த்தமாக திரும்பிய மாரி. சற்று முன் மாயா முகத்தில் இருந்த தெளிவு, தற்போது இல்லாதிருப்பதை கண்டு, " என்னாச்சு மேடம்?. ஏன் டல்லா இருக்கிறீங்க? மேலுக்கு எதுவும் செய்யுதா?" என்றான்.

மறுப்பாக தலையசைத்தவள். பிறகு, " நம்மை மாதிரி ஆட்களை ஏன் மாரி சமூகத்தில் சக மனுசனா மனுசியா மதிக்க மாட்டேங்கிறாங்க? நாம என்ன தப்பு செய்து விட்டோம். நல்ல அப்பா அம்மாவுக்கு பிறந்து, நல்ல சூழ்நிலையில் வளர்ந்து, படிச்சு, ஆளாகி நல்ல நிலைக்கு வந்தவளுக்கு, நம்மை பார்த்தால்! ரொம்ப கேவலமாக, கீழ் தரமாக தோணுமோ?

நாமளும் அவங்கள மாதிரியே நல்ல சூழ்நிலை கிடைத்திருந்தால்! நாமும் அப்படி தானே இருந்திருப்போம். நல்ல சூழ்நிலை அமையாதது. நம்ம தப்பா? " என்றாள் ஆதங்கமாக

" அட! என்னம்மா நீங்க!. இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் நாம நேர்மையை தான் கடைபிடிக்கிறோம். சில சமயத்தில் தான் அப்படி செய்ய முடியாமல் போயிடுது.

ஆனால் கடவுள் நல்ல விதமான சூழ்நிலையில் வாழ வைச்சு, வாழ்க்கையை கொடுத்தாலும்! எத்தனை பேர் ஒழுங்கா இருக்கானுங்க! மனுச வேஷத்தில் பல குள்ள நரிகளும் ஓநாய்களும் தான் இங்கே ஜாஸ்தி மா. அடுத்தவன் வாழ்ந்தால் பொறாமை. வசதி வந்து விட்டால் வயிற்றெரிச்சல் !. அடுத்தவனை நம்மள விட வளர்ந்திட கூடாது. கூடயிருந்தே குழிபறிக்கும் துரோகியா இருக்கிறாங்க!

இதில் இவங்க நமக்கு கொடுக்கிற மரியாதை யாருக்கு வேணும்? இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம கூட இல்லைனு சந்தோஷப்படுங்க. அவ நம்மை வேண்டாங்குறான். நாமளும், நீ இருக்கிற திசை பக்கம் கூட தலைவைச்சு படுக்க மாட்டேன்னு ஓடியாந்துடுனும் மேடம் " என்று மாரி ரகசியம் போல பேசிய மாடுலேசனில் மாயாவுக்கு சிரிப்பு வர, அவள் கலகலவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

மாரி பேசியதை நினைக்க நினைக்க, மீண்டும் மீண்டும் சிரிப்பு வந்தது. ஏனோ! மனம் லேசாவது போல இருந்தது. மாரி சொல்வதும் சரிதானே!. அவன் நிலையிலிருந்து பார்த்தவற்றை கூறுகிறான். அவரவர்க்கு ஏற்றபடி பொருந்திக் கொள்ள வேண்டியது தான்.

நாட்கள் நகர, மாயாவும் சேனாவும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையை இருவருமே உருவாக்கி கொள்ளவில்லை.

அன்று, நந்திதா மற்றும் சுக்லா இருவருக்குமான விவாகரத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைக்காக வக்கீல் முன் அமர்ந்திருந்தனர். நந்திதா விவாகரத்து கொடுக்க, மறுத்துக் கொண்டிருந்தார். சுக்லா திடமாக விவாகரத்து வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர். " சரி நந்திதா. என்ன டிமாண்ட் பண்ற? ஐ மீன் எத்தனை கோடி எதிர்பார்க்கிற " என்றார் சுக்லா அழுத்தமாக

" எனக்கு எந்த சொத்தோ, பணமோ வேணாம். நாம சேர்ந்து வாழ்ந்தாலே போதும் " என்றார் நந்திதாவும் விடாமல்

பேச்சுவார்த்தையின் போது, சேனா மற்றும் சேதுபதி இருவரும் அங்கே தான் இருந்தனர். குடும்ப விசயமாதலால் அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

" நாம சேர்ந்து இருக்கனுமென்றால்! ஒரு கண்டிஷன் " என்றார் சுக்லா விடாமல்

" என்ன? "

"மாயாவும் என் கூட நான் இருக்கிற வீட்டில் தான் இருப்பாள். அதற்கு சம்மதமென்றால் சொல்லு " என்றார் வில்லங்கமாக

" ஏன் அங்கிள் கங்காரு குட்டி போல! அவளை சுமந்துகிட்டே இருக்கனுமென்று நினைக்கிறீங்க? யாருக்காவது கல்யாணம் பண்ணி அவளை அனுப்ப வேண்டியது தானே?" என்றான் சேனா இடைப்புகுந்து எரிச்சலாக

கண்கள் மின்ன அவனை திரும்பிப் பார்த்தார் சேனா!. ஏதோவொரு ஆசுவாசம் அவர் முகத்தில்!. கண்கள் கூட கலங்க, அதை வெளியில் தெரியாமல் மறைத்தார்.

அதற்குள், " இதை எப்படி நான் ஒப்புக் கொள்ள முடியும்?. நிச்சயமாக முடியாது " என்றார் நந்திதா ஆதங்கமாக

" அப்போ! டைவர்ஸ் பேப்பரில் சைன் பண்ணிட்டு , நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு போ " என்றார் சுக்லாவும் தெனாவட்டாக

" சார், இப்படி பேசினால் எப்படி? மனைவி கூட வாழ விருப்பமில்லை என்று சொல்வதற்கு காரணம் என்னென்ன ஜட்ஜ் கேட்பாங்க? இங்கே பேசிவது போல அங்கே பேச முடியாது. மாயா என் கூட இருப்பான்னு அங்கேயும் போய் பேசுவீங்களா?" என்றார் செழியன் சற்று காட்டமாகவே

" மிஸ்டர். செழியன். அங்கே போய் பேச முடியாது தான். அதற்கான அவசியமும் இல்லை. நானும் நந்திதாவும் கடந்த பத்து வருடமாக பிரிந்து தான் வாழறோம். எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை னு சொல்வேன். இது ஏற்புடையதா இருக்கும் ல?" என்றார் நக்கலாக

சேதுவுக்கோ, சுக்லாவை இதற்கு மேல் சேர்ந்து வாழ சொல்ல முடியாது. அப்படி சொல்வதற்கு, அவர் ஒன்றும் தெரியாத குழந்தையும் அல்ல. மனம் வேதனையடைய எழுந்து, அந்த அறையை விட்டு வெளியே வந்தார். ஏற்கனவே சேனா, வெளியில் தான் நின்றிருந்தான்.

சேதுவை கண்டு, " ஏன் பா? இந்த டைவர்ஸ்க்கும் மாயாவுக்கும் சம்மந்தம் இருக்குமோ?. அவ சொல்லித்தான் இதை செய்யறாரோ?" என்றான் கேள்வியாக

" உனக்கு மாயாவை எதிலாவது இழுத்து வைத்து பேசவில்லையென்றால் அன்றைய பொழுது போகாதா சேனா?. அவ தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்கிறாள்" என்று கடிந்து கொண்டவர். " இது இவங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட பிரச்சனை. யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும், சுக்லா இந்த முடிவை தான் எடுப்பார் " என்றார் சேது தீர்க்கமாக

" அப்போ! இதற்கும் மாயாவுக்கும் எந்த சம்மந்தம் இருக்காதென்று சொல்றீங்களா?" என்றான் மீண்டும்

"திரும்பவும் மாயாவை ஏன் சேனா இழுக்கிற?" என்றார் பொறுமையை இழுத்துப் பிடித்து

" பிறகு ஏன்? மாயா அவர் கூட வந்து இருந்தால்! சேர்ந்து வாழறேன்னு அத்தையிடம் சொல்லனும்?"

"ஏனென்றால்! நந்திதா அதற்கு சம்மதிக்க மாட்டாள் னு நன்றாகவே தெரியும். அதனால் தான் "

" சம்மதிக்க வேண்டியது தானே!. நந்திதா அத்தை வீட்டிலேயே இருந்து, ராக்கியை போல மாயாவுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாமே?. பிரச்சனையே இல்லையே. இவங்களும் பிரிய மாட்டாங்களே! " என்றான் சிறு பிள்ளை போல

" முதலில் உனக்கொரு கல்யாணத்தை பண்ணனும். அப்போது தான் வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியும் " என்றவர். சேனாவின் முறைப்பை கண்டு,

" இது ஒன்றும் பிஸ்னஸ் இல்லை சேனா. ஒன்னும் ஒன்னும் இரண்டு தான் னு பேசுவதற்கு, இது வாழ்க்கை. பிஸ்னஸில், இலாப நஷ்ட கணக்கில் இரண்டு பக்கமும் சரியாக கொண்டு போகனும்.

ஆனால் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவில் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்க தெரியனும். இன்னொன்றில் அதை பெற கத்துக்கனும். எல்லாத்திலும் சமம் தானென்று போனால்! இப்படித்தான் வந்து நிற்க வேண்டியிருக்கும் " என்றார் கோர்ட் வாயிலை காட்டி

சேனா புருவம் சுழித்தபடி நிற்பதை கண்டு, " என்ன புரியலை யா?" என்றார்.

அலட்சியமாக தோளை குலுக்கினான்.

" கல்யாணம் பண்ணு மகனே! எல்லாம் புரியும்! " என்று விட்டு நகர்ந்தவரை கண்டு,

" கொழுப்பு " என்று முணுமுணுத்து விட்டு வெளிப்பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டான்.

சற்று நேரத்தில், சுக்லா வெளியில் வந்தவர். " ரொம்ப தேங்க்ஸ் சேனா" என்றார் மனமார

"எதற்கு? " என்றான் புரியாமல்

" அன்றைக்கு ஹோட்டலில் மாயாவுக்கு உதவி செய்ததற்கு!. மாயா அதில் ரொம்பவே அதிர்ந்து போய் விட்டாள். ஜுரமே வந்துடுச்சு. ஒரு வாரமா ஹாஸ்பிடலில் இருந்து, இப்போது தான் குணமாகி வந்திருக்கிறாள். எனி வே! ரொம்ப ரொம்ப நன்றி " என்றார். அவன் கையை பற்றிக் கொண்டு,

பிறகு, " ராக்கிக்கு எப்போ வளைகாப்பு. தேதி எதுவும் சொன்னாங்களா?" என்றார் எதுவும் நடவாவது போல!

"இன்னும் பதினைந்து நாளில் இருக்கும் " என்றான் எங்கோ பார்த்தபடி

" ஓ! ஒ.கே. ஒ.கே. வளைக்காப்புக்கு உன் சிஸ்டரையும் பேமிலியோட வர சொல்லு. நான் சம்யுக்தாவை பார்த்ததே இல்லை " என்றார்.

ஆமோதிப்பாக தலையசைத்தவன். " ராக்கி இப்போ இருக்கிற நிலையில், இந்த டிவேர்ஸ் தேவையா? அவ சந்தோஷம் பாதிக்காதா?" என்றான்.

" யாரோட சந்தோஷத்துக்காகவோ! வற்புறுத்தலுக்காகவோ, ஈகோவுக்காகவோ! ஏன்? சமுதாயத்துக்காகவோ பிடிக்காத உறவோட வாழ முடியாது சேனா. அது தன்னை தானே அழித்துக் கொல்வதற்கு சமம். வேண்டாம் சேனா. இதை விட்டு விடு " என்றார்.

" இவ்வளவு பிடிவாதமாக வேண்டாமென்று சொல்ல வலுவான காரணம் இருக்கனும். என்ன காரணம்? " என்றான் சரியாக பாயிண்ட்டை பிடித்து

மெல்ல சிரித்தவர். " கண்டிப்பாக சொல்வேன். டிவேர்ஸ்க்கு பிறகு " என்றவர். அவனிடம் விடை பெற்று சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் நந்திதாவும் வெளியில் வர, அங்கே எதுவும் பேசாமல் அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான். காரில் பயணம் செய்யும் போது, சேது தான் விவரம் கேட்டார்.

" என்ன மா முடிவு செய்திருக்க? சுக்லா அவரோட முடிவில் இவ்வளவு உறுதியாக இருக்கிறாரே?" என்றார் .

"எனக்கும் அவர் கூட வாழ விருப்பம் இல்லை அண்ணா. இத்தனை வருசம் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்து விட்டு போயிடுவேன். ஆனால் டைவர்ஸ்க்கு நான் ஒப்புக் கொண்டால் அடுத்த நிமிடம் அவர் அந்த மாயா கூட போயிடுவார். அவளிடம் நான் தோற்க கூடாது " என்றார் எங்கோ வெறித்தபடி

" அத்தை, எனக்கென்னமோ அவங்க இரண்டு பேரையும் கவனித்தவரை தப்பான ரிலேசன்சிப்பா தெரியலை. நல்ல பிரண்சிப் இருக்கு! அன்பு இருக்கு! ஏன்? ஒருத்தருக்காக ஒருத்தர் உயிரோட கொடுப்பாங்க போல! ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அப்பா பொண்ணு உறவுக்கு சொல்வாங்களே, டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் னு அது போல இருக்காங்க " என்றபடியே திரும்பியவன்.

நந்திதாவின் எரிக்கும் பார்வையும், சேதுவின் ஆராயும் பார்வையையும் கண்டு, கப்பென்று வாயை மூடிக் கொண்டான். சேதுவுமே இதை உணர்ந்ததால் தான் அவர் மாயாவிடம் வெறுப்பு காட்டவில்லை.

"பொண்ணுன்னு நினைக்கிறவர் தான். ஒரே ரூமில் தங்குறாங்களா? உனக்கு தெரியுமா சேனா?. நைட் நேரத்தில் ரூம் சர்வீஸ்க்கு, சாப்பாடு கொடுக்க போனவங்க கூட, இவர் அவளுக்கு பார்த்து பார்த்து சேவகம் செய்வதை பார்த்து, வேதனை பட்டு என்னிடம் சொல்லியிருக்காங்க. டிரெஸ்ஸ சரி பண்ணி விடுறதும். அக்கம் பக்கம் யாரும் இல்லாத மாதிரி, தானே சரி பண்ணி விடுறதும்.. " என்று வரிசையாக நந்திதா அடுக்கியபடி பேசிக் கொண்டே போக,

சேது மற்றும் சேனாவுக்கு, அன்று மாயாவின் ஆடையை சரி பண்ணி விட்டது மனக்கண்ணில் வந்து போனது. கூடுதலாக, சேனாவுக்கோ அன்று ஹோட்டலில் அவளது ஜாக்கெட் கொக்கியை மாட்டி விட்டது நினைவில் வர, ஏசி காரிலும் குப்பென்று வியர்த்து போனது. தலையை அழுந்த கோதி தன்னை சமாளிக்க முயன்றான்.

நந்திதா பேச்சை முடிக்கவில்லை போலும், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவர். " இப்போ சொல்லு அவ நல்லவளா?" என்ற கேள்வியோட முடித்தவர்.

சேனாவின் பதிலையும் எதிர்பார்க்க! அவன் நினைவு தான் இங்கேயே இல்லையே! தன்னுள்ளேயே மூழ்கி மௌனமாக வர,

அவனது தோளை தட்டியவர். " என்ன சேனா? பதிலே சொல்ல மாட்டேங்கிற? நீயும் அவளிடம் மயங்கிட்ட போல!. மாயாவே சரணாகதின்னு அவ காலிலேயே... " என்று படு நக்கலாக பேச முயன்றவரை

சேனா, பொறுக்க முடியாமல் கோபமாக ஏதும் சொல்லும் முன்,

" ஷெட் அப் நந்திதா. நீ பேசுற முறை சரியில்லை. சேனா அவனோட ஒப்பீனியனை சொன்னான். அவ்வளவு தான். அதற்கென்று எதுவேனாலும் பேசுவாயா? உனக்காக தான் இவ்வளவு தூரம் வேலையை விட்டுட்டு அலைந்து கொண்டிருக்கிறின். அவனயே இவ்வளவு கேவலமாக பேசுவாயா?

அன்று , மாயா ஏதோ தவறாக சொல்லி விட்டாள் என்று அந்த பெண்ணை கை நீட்டி அடித்தே விட்டான். நீயோ? அதை விட ரொம்பவும் மோசமாக பேசுற.. உனக்காக வந்ததற்கு நல்ல மரியாதை கொடுக்கிற " என்று சேது கண்டித்தார்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவர். " என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா. எல்லோரும் ஒரு வி.. ப.. ரி யோட பொண்ணுக்கு, நடத்தை சரியில்லாதவளுக்கு சப்போர்ட் பண்றதை என்னால தாங்க முடியலை " என்றவருக்கு குரல் தழுதழுத்தது.

"அப்பா நான் ஆபிஸில் இறங்கிக் கொள்கிறேன். என்னை டிராப் பண்ணிடுங்க " என்றான். சிறிது தூரத்தில் இருந்த தனது கட்டிடத்தை பார்த்தபடி

" சாரி சேனா. அவ மேல் உள்ள கோவத்தில் .. " என்றவரின் பேச்சை இடையிட்டவன்.

"இன்னொரு நாள் பார்க்கலாம்" என்று இறுக்கமான முகத்துடனே இறங்கிக் கொண்டான்.

இன்று நடந்த அத்தனையும் சுக்லாஜி, போனில் மாயாவிடம் கூறிக் கொண்டிருந்தார். சேனா பேசியது உள்பட!.

" இவன் எனக்கு, கல்யாணம் செய்து வைக்க சொல்றானா? முதலில் அவனுக்கு பொண்ணு பார்த்து முடிக்க சொல்லுங்க. வந்த லண்டன் பொண்ணும், அவ அப்பனோட திருவிளையாடல்ல ஓடிப் போச்சு! . வேற நல்ல பொண்ணா சீக்கிரம் பாருங்க. அப்போதுதான் தேவையில்லாமல் எல்லா விசயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டான் " என்றாள் எரிச்சலாக

மேலும் பேச்சு வளர, " ராக்கி வளக்காப்புக்கு போக வேண்டியிருக்கும் மாயா. டேட் பிக்ஸ் பண்ணதும் சொல்றேன்." என்றார் சுக்லா.

"ம்ம். சரி " என்றவள். நலத்தை விசாரித்து விட்டு அழைப்பை துண்டித்தாள்.

ராக்கியின் வளைக்காப்பில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர போகிறது. இதில் சேனா நிலைகுலைந்து போவான் என்பதை அறிவார் எவரோ!
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 23
ராக்கியின் வளைகாப்புக்கு தேதி குறிக்கப்பட்டது. அதை முறையாக ராம் போன் செய்து, சுக்லாவிடம் தெரிவித்தார். சுக்லா மற்றும் நந்திதாவின் விவாகரத்து விசயம் ராமிற்கு தெரிந்து தான் இருந்தது. ஆனால் அது எதுவும் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை.

வளைக்காப்புக்கு, நந்திதாவின் விருப்பத்தின் பேரில் சம்யுக்தா அவள் குடும்பத்துடன் வருகிறாள். எல்லா உறவுகளையும் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி ராக்கியையும் தொற்றிக் கொண்டது. நந்திதா தேடி தேடி உறவுகளுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

பெரிய மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா முடிந்த பிறகு நந்திதாவின் வீட்டுக்கு அழைத்து செல்லவதாக முடிவு செய்யப்பட்டது.

மாயா முக்கியமான மீட்டிங் ஒன்றை முடித்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, சுக்லாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை இணைத்தவள்.

" சொல்லுங்க சுக்லா ஜி" என்றாள்.

பிரபலமான பட்டுப்புடவை கடையின் பெயரை சொல்லி, " மாயா, இப்போ நீ இங்கே வர முடியுமா?" என்றார்.

" 15 நிமிசத்தில் அங்கே இருப்பேன்" என்றாள்.

" மூன்றாவது தளத்திற்கு வந்து விடு " என்று அழைப்பை துண்டித்தார்.

சுக்லா சொன்ன, நகரின் பிரபலமான துணிக்கடையில் பார்க்கிங்கில் காரினை நிறுத்தி விட்டு, அவர் சொன்ன தளத்திற்கு லிப்டில் ஏறி சென்றாள் .

அது பட்டுப்புடவைகளுக்கான பிரத்யேக தளம். மாயா உள்ளே செல்ல, சுக்லா புடவைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவள் வருகையை உணர்ந்து நிமிர்ந்தவர். மாயாவை கண்டதும் முகம் விகசிக்க,

" வா மாயா " என்றார்.

" ஹாய் டார்லிங் " என்றவள். சுக்லாவை அணைத்து அவர் நெஞ்சில் லேசாக சாய, அவளது உச்சந்தலையில் முத்தமிட்டவர்.

" எப்படி இருக்க? பீவரெல்லாம் இப்போ இல்லையே?" என்றார் ஆதூரமாக

" நோ டார்லிங். இப்போ நல்லாயிருக்கேன் " என்றாள் சிரித்தபடி

" புது கலெக்சன் வந்திருக்கிறதா சொன்னாங்க .. " என்றவர். " புடவையை எடுத்து காண்பி பா " என்றார் விற்பனை பிரதிநிதியிடம்.

அவரும் வரிசையாக புடவைகளை எடுத்து மேசையில் அடுக்கி வைத்தார். " எந்த கலர் ல வேணும் மேடம் " என்றார்.

" நீங்க புடவையை எடுத்து காண்பிங்க! பிடிச்சதை எடுத்துப்பாங்க " என்றார் சுக்லா.

மாயா ஒவ்வொன்றாக பார்க்க! " இதில் பார்ட்டர் சின்னதா இருக்கு. இது கலர் அடிக்கிற மாதிரி இருக்கு, முந்தானை டிசைன் சரியில்லை " என்று ஒவ்வொன்றாக சுக்லா குறை சொல்ல!

" கொஞ்சம் சும்மா இருங்களேன். என்னால எதையுமே செலக்ட் பண்ண முடியலை " என்றாள் பொய்யாக முறைத்து

" சரி சரி நீயே பாரு! அப்படியே இன்னொரு புடவையும் சேர்த்து எடுத்துக் கொடுத்திடு " என்றார்.

" யாருக்கு? " என்றாள் புரியாமல்

" சம்யுக்தாவுக்கு "

"அது யாரு சம்யுக்தா?" என்றாள் . புடவையை பிரித்து காட்டும் படி சேல்ஸ்மேனிடம் சொல்லிக் கொண்டே

" சேதுவோட பொண்ணு! " என்றார் தயங்கியபடி

வெடுக்கென்று திரும்பியவள். " சேனாவோட சிஸ்டர்! " என்றாள் அழுத்தமாக

" இரண்டும் தான் " என்றவர். " ராக்கியோட வளைகாப்புக்கு பேமிலியோட வராளாம். அவளை நான் பார்த்ததே இல்லை. முதல் தடவை பார்க்கும் போது, குழந்தையை வெறும் கையோடு எப்படி பார்க்கிறது! அதனால் தான் அவளுக்கும் புடவை வாங்கி கொடுக்கலாமென்று .." என்றார் தன்னிலை விளக்கமாக

ஆமோதிப்பாக தலையசைத்தவள். " இதில் உனக்கேதும் வருத்தமில்லையே? " என்றார் அவசரமாக

" இதில் இவ வருத்தப்பட, என்ன இருக்கு அங்கிள்? " என்ற சேனாவின் குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர்.

சேனாவை கண்டதும்! " வா சேனா. என்ன இந்த பக்கம் " என்றார்.

" அதை நான் கேட்கனும் அங்கிள்?. மாயா மேடம் , உங்க கூட பேசவே மாட்டேன்னு எல்லாம் சொன்னாங்க.. இப்போ என்ன புடவை வாங்க வந்திருக்காங்க!. காரியம் ஆகனுமென்றால் எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்லுவாங்க போல! " என்றான் குத்தீட்டியான பார்வையுடன்.

" நான் தான் கூப்பிட்டேன் சேனா. புடவை வாங்க. வளைகாப்பு வருதே "

"ஆமாம். அதற்கு யாருக்கு புடவை வாங்க வந்திருக்கீங்க " என்றான். அங்குள்ள புடவைகளை பார்வையிட்டபடி

மாயா, சேனாவை பார்த்ததுமே திரும்பிக் கொண்டால்! ஏனோ பேச பிடிக்கவில்லை. ஆனால் அவன் விடனுமே!

" புடவை நன்றாக இருந்தது. மாயாவுக்கு வாங்க வந்தேன். அப்படியே நம்ம சம்யுக்தாவுக்கும் வாங்கி விடலாமென்று பார்க்கிறேன் " என்றார்.

" மாயாவுக்கு பட்டுப்புடவையா?. ஏன்? "

"ராக்கி பங்சனுக்கு கட்டிக் கொள்ள"

" இவளுக்கு எதுக்கு அங்கிள் பட்டு புடவை எல்லாம். அதுவும் இவ்வளவு காஸ்ட்லியா! . சிலர் புடவை கட்டினால் நன்றாக இருக்கும் புடவை கூட, நல்லா இல்லாமல் போய் விடும்! சாதாரணமான புடவையே போதும் எடுத்துக் கொடுங்க! தர்மம் பண்றதுக்கு ஒரு அளவு இருக்கு அங்கிள் " என்றான் வேண்டுமென்றே!

மாயா அனைத்தையும் காதில் வாங்கினாலும், எதையும் கேட்டதாக கூட காட்டிக் கொள்ளவில்லை. நேரம் செல்ல,

சேனா சில புடவைகளை பார்வையிட்டு, அதன் நிறம் பிடிக்காமல் வேண்டாமென்று நகர்த்தி வைத்துக் கொண்டிருக்க! அதில் இரண்டு புடவையை எடுத்தவள்.

" டார்லிங். இதை வாங்கலாம் " என்றபடி நிமிர, சேனா அவளது 'டார்லிங்' என்ற அழைப்பில் தீயாய் முறைத்தான். அவனது பார்வையை கண்டு, அதிர்ந்தவள். கண்களில் கலவரத்துடன் சுக்லாவை தேட, சுக்லா அருகில் இல்லை. சற்று தள்ளி நின்றிருந்தவரை மாயா கவனிக்கவில்லை.

சேனாவின் எரிக்கும் பார்வை, அவளை விட்டு சற்றும் விலகவில்லை. " நான் சுக்லா ஜி னு நினைச்சு.. " என்றாள் குரல் உள்ளே போயிருந்தது. வார்த்தைகள் மெதுவாக தான் வந்தன. சேனாவை தவிர வேறு யாருக்கும் கேட்டிருக்காது.

" வேறு ஏதும் புடவை பார்க்கிறீங்களா மேடம் " என்ற விற்பனை பிரதிநிதியின் குரலில், அவர் பக்கம் கவனம் திரும்ப! சுக்லாவும் இதை கேட்டு வந்து விட்டார்.

" புடவை வாங்கியாச்சா மாயா?" என்றபடி

" ஆங்.. ம்ம்.. இதை செலக்ட் பண்ணியிருக்கேன். பிடித்திருந்தால் பில் போடுங்க " என்றவள். " நான் கிளம்பட்டுமா? எனக்கு வீட்டுக்கு போகனும் " என்றவளின் முகம் கலங்கி போய் இருந்தது.

" என்னாச்சு டா? உடம்பு ஏதும் பண்ணுதா? " என்றபடி, அவசரமாக அவளது நெற்றியில் பூத்திருக்கும் வியர்வையை லேசாக ஒற்றி எடுத்தார். மறுப்பாக தலையசைத்தவளின் உள்ளம்! சுக்லாஜியின் அன்பான அரவணைப்புக்கு ஏங்கியது. அதை அவர் அறிந்தது போல, அவளது தலையை , தோளில் சாய்த்து ஆதூரமாக தலையை வருடி, உச்சந் தலையில் மீண்டும் ஒரு முத்தத்தை பதித்தவர். " ஒன்னும் இல்ல டா" என்றார் கனிவாக.

" ம்ம்ம் " என்றவள். சூழல் உணர்ந்து, நிமிர்ந்தவள். " நான் கிளம்பறேன். டைம் ஆச்சு . இன்றைக்கு, ரெகுலர் செக் அப்க்கு டாக்டர்ஸ் வரேன்னு சொல்லியிருக்காங்க " என்றாள். அவளுக்கு உடனடியாக, சேனாவின் பார்வையிலிருந்து விலக வேண்டும் என்று இருந்தது. அவனது எரிக்கும் பார்வையை அவளால் நன்றாகவே உணர முடிந்தது.
 

Sirajunisha

Moderator
" சரி. நீ பார்த்து போ. சேர்ந்தும் போன் பண்ணு. நான் புடவை அதற்கேற்ற சட்டை எல்லாம் வழக்கமான டிசைனரிடமே தைக்க கொடுக்கறேன். தைத்த பிறகு, அவரயே உன்னிடம் கொண்டு வந்து கொடு சொல்கிறேன் " என்றார்.

" சரி சுக்லா ஜி. உடம்பை பார்த்துக் கோங்க! மாரி நைட் உங்க கூட தானே இருக்கார் " என்றாள்.

" ஆமாம். தனியா விட மாட்டேங்கிறான் " என்றார் சிரித்தபடி

" அப்போ சரி. நான் வரேன் " என்று புன்னகைத்தபடி , விடைபெற்று கிளம்பினாள். பெயருக்கு கூட, சேனாவிடம் விடை பெறவில்லை.

அதுவரை பொறுமை காத்தவன். " என்ன அங்கிள் இதெல்லாம்? அவ யாரு? அவளுக்கு எதுக்கு, நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? பிஸ்னஸ் மேன் சுக்லா என்றால்! எத்தனை மரியாதை! எவ்வளவு மதிப்பு! . எத்தனை பேர் உங்க அப்பாய்மெண்ட்க்கு காத்துக் கொண்டிருக்காங்க!

ஆனால், நீங்க போயும் போயும் இவளுக்கு, புடவை வாங்குவதும் ஜாக்கெட் தைக்க கொடுக்கிறேன்னு சொல்வதும்! கேட்கவே எரிச்சலாக வருது " என்றான் சூழ்நிலை கருதி வார்த்தைகளில் கோபத்தை அடக்கியபடி

" இதில் என்ன இருக்கு சேனா? நாட்டுக்கே ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளை தான்னு சொல்லுவாங்க. அது போல தான், வெளியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், என் வீட்டு பெண்ணுக்கு நான் வெறும் சுக்லா தான்! " என்று பதிலளித்தவர்.

" மேடம், எந்த புடவை செலக்ட் பண்ணாங்க " என்றார் விற்பனை பிரதிநிதியிடம்.

சேனா, அவள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இரண்டு புடவைகளை எடுத்து, " இதை பில் போடுங்க " என்றான்.

சுக்லா அது தான் மாயா எடுத்து வைத்தது என்று நினைத்துக் கொண்டார். அவர் புடவையை சரியாக கவனிக்கவில்லை.

" சரி அங்கிள். நீங்க வந்ததை பார்த்து விட்டு தான், உள்ளே வந்தேன். இப்போ மூட் அவுட் . நான் கிளம்பறேன்." என்று விடைபெற்று சேனாவும் கிளம்பி விட்டான்.

பில் போடும் போது, " சார், இது தான் மேடம் செலக்ட் பண்ணி வைத்தாங்க " என்று மாயாவின் தேர்வை எடுத்து வந்து கொடுக்க,

மாயா வாங்கியதை தனது தங்கைக்கு கொடுக்க விரும்பாமல், தானே தேர்ந்வு செய்து கொடுத்து விட்டு செல்வதாக நினைத்த சுக்லா! இருவரும் தேர்வு செய்து வைத்திருந்த நான்கு புடவைகளையும் வாங்கிக் கொண்டார்.

மாயாவின் தேர்வில் அவள் நிறத்திற்கு, ஏற்ற புடவையை டிசைனரிடம் தைக்கவும் கொடுத்து விட்டார். எல்லாரும் எதிர்பார்த்த ராக்கியின் வளைகாப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, சம்யுக்தா இந்தியா வந்து விட்டாள். உடன் அவளது கணவன் பிரவீனும் வந்திருந்தான். முக்கியமாக அவர்களது தவப் புதல்வன் அமிர்தனும்.

வந்தவுடனேயே தனது அத்தை நந்திதாவை காண சென்று விட்டாள். நந்திதாவுக்கு திருமணம் ஆகும் போது, சேனாவுக்கு ஐந்து வயது இருக்கும். சம்யுக்தா அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் தனது அன்னை தந்தை மூலமும் , உறவுகள் மற்றும் புகைப்படம் வாயிலாக நந்திதாவை கண்டிருக்கிறாள். இப்போது உறவுகள் புதுப்பிக்கப்பட, அத்தை வீட்டுக்கு தான் மட்டும் கிளம்பி விட்டாள்.

அமிர்தன், பிரவீனுடன் இருந்து கொள்ளவான். உடன் தாத்தாவும் தாய் மாமனும் இருக்க, கேட்கவா வேண்டும். ஜெட் லாக் இருக்கும், விழா அன்று செல்லலாம் என்பதை எல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை. கிளம்பி விட்டாள். இங்கே தந்தையும் மகனும் தான் பகலிலும் இரவிலும் மாற்றி மாற்றி தூங்கி, இந்தியா நேரத்திற்கு தங்களை கொண்டு வந்தனர்.

இதோ இன்று ராக்கியின் வளைகாப்பு நாள். காலை ஒன்பது மணியிலிருந்து, மண்டபம் விருந்தினர்களால் நிறைய ஆரம்பித்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களுக்கு, தனியாக காலை விருந்து ஒரு பக்கம் வழங்கப்பட்டிருந்தது.

சேது, பிரவீன், சேனா அவன் மடியில் அமிர்தன், ராம், செழியன் என வரிசையாக அமர்ந்திருக்க! சுக்லா சரியாக பத்து மணியளவில் அங்கே வந்தார். உடன் மாயாவையும் அழைத்துக் கொண்டு!

நந்திதாவுடனேயே சம்யுக்தா சுற்றிக் கொண்டு, தேவையான உதவிகளை செய்து கொண்டு, அவ்வப்போது ராக்கியுடன், அவளது குடும்பத்தினரான கீதா மற்றும் லெஷ்மியுடன் பேசிக் கொண்டு இருப்பதும், அவள் முகத்தில் இருந்த சிரிப்பை கண்டு, சேனாவுக்கு மனம் நிறைந்து போனது. அதை பார்க்கும் போது, சேனாவின் முகத்திலும் மென்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

" வாங்க சம்மந்தி " என்ற அழைப்பில் கவனம் சிதற, திரும்பி பார்த்தான். சுக்லாவை வரவேற்றுக் கொண்டிருந்தார் ராம். " வா மா " என்று அருகில் நின்றிருந்தவளை அழைக்க!

' யார்?' என்று பார்த்தவனுக்கு, மாயா நிற்பதை கண்டவன். முதலில் அவள் புடவையை கவனித்தான். அது , அவன் தேர்வு செய்த புடவையில்லை. தான் வேண்டாமென்று நகர்த்தியது, பிறகு அவள் தேர்வு செய்தது.
ஏனோ! சுள்ளென்று கோபம் ஏறியது!.

ராமை அடுத்து, தேவ்வும், " வாங்க அங்கிள் " என்றவன். " வாங்க " என்று மாயாவை வரவேற்றான்.

" வா மச்சான் " என்ற சேதுவும். " வாம்மா மாயா " என்றவர். " இவர் தான் என் மருமகன் பிரவீன். இவர் எங்க வீட்டு இளவரசர் அமிர்தன் " என்று பெருமையாக அறிமுகப்படுத்தினார்.

" ஹலோ அங்கிள் " என்று சுக்லாவிடம் கை குலுக்கினான் பிரவீன். சுக்லாவும், " ஹலோ யங் மேன் " என்றார் புன்னகை முகமாக

அடுத்து மாயாவை பார்க்க! " வணக்கம் " என்றாள் இரு கை கூப்பி மென்னகை புரிந்து,

அடுத்து, அமிர்தனை கண்டவர். " இந்த பெரிய மனுசன் என்னிடம் வருவாரா?" என்றார். குழந்தையின் கை பிடித்து

" இப்போ தானே பார்க்கிறான். கொஞ்சம் டைம் ஆகும் அங்கிள் " என்றான் பிரவீன்.

" என்னிடம் வர்றீங்களா?" என்றாள் மாயா குழந்தையின் முன் கையை நீட்டி,

அவளையே பார்த்திருந்தவன். முன் பக்கம் பஃப் வைத்து, அதில் கிளிப் குத்தி, பின்னால் முடியை ஓன்று சேர்த்து, ரப்பர் பேண்டில் அடங்கியிருந்தாள். அதில் இருபக்கமும் சரமாக அழகாக தொங்கிக் கொண்டிருந்த பூவை கண்டு, குழந்தைக்கு புதுமையாக இருந்தது. அழகாக நீண்டு தொங்கும் குடை ஜிமிக்கி, அவளது தலையசைப்புக்கேற்ப ஆட, அதை தொட்டுப் பார்க்க ஆசை வந்தது.

காலையிலிருந்து எல்லோரையும் பார்க்கிறான். எல்லோரும் ஒவ்வொரு விதமாக பூ வைத்து, அலங்கரித்து இருந்தனர். புதிதாக இருந்தது. இது போல அவன் பார்த்ததில்லை. ஆர்வம் மிக, அவள் வலது தோளில் தொங்கி கொண்டிருந்த பூவை பற்றி இழுத்தான்.

" டக்கென்று குழந்தையின் கையை பிடித்து தடுத்த சேனா. அப்படி பண்ணக் கூடாது கண்ணா " என்றான் கனிவாக
 

Sirajunisha

Moderator
சேனாவின் குரலில் இருந்த குழைவும், கொஞ்சலையும் கண்டு, ' இவனுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?' என்று ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள், " வாங்க அங்கிள். சாப்பிட்டு போய் ராக்கியை பார்க்கலாம் " என்றான் தேவ்.

" வாங்க மாயா " என்று பிரவீனும் இயல்பாக அழைக்க!

சேனாவோ , பிரவீனை முறைத்தான். ' இவன் எதுக்கு? என்னை இவ்வளவு பாசமா முறைக்கிறான் ' என்று குழம்பியவன். சேனா அமர்வதை கண்டு, தானுமே உடன் அமர்ந்து கொண்டான்.

சுக்லாவும் மாயாவும் சாப்பிட்டு வர தாமதமாகியது. சுக்லா, ராக்கியை பார்க்க செல்வதாக கூற, " நீங்க போய் பார்த்து விட்டு வாங்க சுக்லா ஜி " என்றவள். இரண்டு புடவைகளை அழகாக பேக் செய்து, அதில் அவரவர் பெயரையும் அழகாக ஒட்டி வைத்திருந்து பேக்கில் வைத்து, சுக்லாவின் கையில் கொடுத்திருந்தாள்.

" சேது , சம்யுக்தாவையும் எனக்கு அறிமுகப்படுத்தி வை " என்றதும். சேது, ராம், தேவ், பிரவீன் என எல்லோரும் சுக்லாவுடன் சென்று விட்டனர். செழியனும் அங்கே இல்லை. கூட்டம் அதிகமாகியது. ஆங்காங்கே விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். முன்னாடி சென்றால்! சேனாவை பார்க்க வேண்டி வரும் என்று நினைத்தவள்.

தாராவுக்கு போன் பேசியபடி, கடைசி வரிசையில் அமர்ந்திருந்தாள். அப்போது, யாரோ புடவையை பிடித்து இழுப்பது போல இருக்க! திரும்பிப் பார்த்தாள். அமிர்தன் நின்றிருந்தான்.

" ஹேய்! குட்டி பையன் தனியாகவா வந்தீங்க?" என்றபடி அவனை கையில் தூக்கிக் கொண்டாள்.

நின்றபடி சுற்றிலும் பார்வையை ஓட்டியடி, " உங்க மாமா கூட தானே இருந்தீங்க? எப்படி தனியா வந்தீங்க?. தனியா விட மாட்டாங்களே உங்களை! " என்றபடியே பார்வையால் மீண்டும் அலசினால் சேனாவை. அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

" சரி, உங்க வீட்டு ஆளுங்க யாராவது வரும் வரைக்கும். என் கூட இருப்பியாம் " என்றபடி அவனிடம் பேச, அதையெல்லாம் குழந்தை கவனித்தாக தெரியவில்லை. அவள் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பூவை தொட்டு தொட்டு பார்ப்பதும்! பிறகு, அவளது காதில் அசைந்தாடும் ஜிமிக்கியை ஒரு விரலால் ஆட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏனோ! அவளது புரியாத பேச்சும் அவளும் குழந்தைக்கு பிடித்து போக, இரு கைகளாலும் கழுத்தை சுற்றிக் கொண்டவன். அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

இதை சற்றும் எதிர்பாராதவள்! விழி விரித்து பார்த்தாள். அவளது அகல விரியும் கண்களை கண்டவன். அவள் கண்களிலும் முத்த மிட, குழந்தையின் அன்பில் நெகிழ்ந்து, அழுத்தமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அதில் அவளது உதட்டு சாயம் கன்னத்தில் அப்படியே ஒட்டிக் கொண்டது.

குழந்தை மீண்டும், அவள் பூவை பிடித்து விளையாட, " அமிர். உன்னை எங்கே எல்லாம் தேடுறது?" என்ற பதட்டமான குரலில் கவனத்தை திரும்பினாள்.

" மாம்! " என்றபடி, தாயிடம் தாவி விட்டான்.

"உங்க குழந்தையா? " என்றாள்.

" ஆமாம். கையை பிடிச்சிட்டு நின்று கொண்டே இருந்தான். திடீரென காணல, பயந்துட்டேன். இவ்வளவு கூட்டத்தில் எங்கே போய் தேடுறது " என்றாள் படபடப்பாக

" ரிலாக்ஸ்!. அப்படி எங்கேயும் வெளியில போக முடியாது. சுற்றிலும் ஆளுங்க கண்காணித்து கொண்டே இருப்பாங்க. அதுவும் சேது சார் வீட்டு இளவரசர விட்டுவாங்களா?" என்றாள்.

" அப்பாவ உங்களுக்கு தெரியுமா?" என்றாள் ஆச்சரியமாக

" ஓ!. தெரியுமே. என் யூகம் சரியாக இருந்தால்! நீங்க சம்யுக்தா? ரைட்?" என்றாள்.

" ஆமாம் " என்றவள். " உங்க பெயர் என்ன? நீங்க யார் வீட்டு சொந்தம்?" என்றாள் சம்யு நட்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி,

" நான் மாயா.. மாயாவதி. சுக்லா ஜி யோடு கெஸ்ட் " என்றாள். குழந்தையின் முதுகை வருடியபடி

" சுக்லாஜி... நந்திதா அத்தையோட ஹஸ்பெண்ட்.. ?." என்ற கேள்விக்கு மாயா பதிலளிக்கவில்லை.

' மாயா.. !' என்று யோசித்தவளுக்கு, யார் என்று தெரிந்து விட, முகம் மாறியது.


மாயா எதையும் கவனிக்கவில்லை. குழந்தையின் முடியை அன்பாக கோதி விட்டாள்.

" இங்கே என்ன பண்ற சம்யு? " என்றபடி வந்தான் சேனா. கேள்வி தங்கையிடமிருந்தாலும், பார்வை மாயாவிடமிருந்தது.

" இவங்க .." என்று சம்யு ஏதோ சொல்ல வர,

" கிளம்பிட்டாங்க.. " என்றவன். " சுக்லா அங்கிளிடம் நான் சொல்லிக்கிறேன். நீங்க போங்க " என்று வாசலை நோக்கி கை காட்டினான் சேனா.

கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக, வெளியில் போகச் சொல்கிறான்!. அவமானத்தில் முகம் சிவக்க, கண்கள் கலங்கி பார்வையை மறைக்க! தாயை தேடும் பிள்ளையாக, பரிதவிப்போடு சுக்லா எங்கேனும் தென்படுகிறாரா? என்று பார்வையால் அலசினாள். எங்கேயும் தென்படவில்லை.

" உன் டார்லிங் ரொம்ப பிசியா இருக்கார். நீ கிளம்பு " என்றான் அழுத்தமாக. அவள் மனதை உடைக்க போகிறான்! என்பதை அறிவார் யாரோ?

அத்தியாயம் : 24
வரும் அழுகையை உதட்டை கடித்து வெளியில் வராமல் தடுக்க முயன்றவள். உயிர்ப்பில்லா புன்னகையோடு, " நான் வரேங்க " என்று கை கூப்பி விடைபெற்றவள். வாயிலை நோக்கி நகர,

" கார் அரேஜ் பண்ணியிருக்கேன். என் பின்னாடி வா " என்றபடி வாயிலை நோக்கி சென்றான்.

சம்யுவுக்கே, மாயாவின் கலங்கிய முகமும், பரிதவிப்பான பார்வையும் மனதை பிசைந்தது. எதுவும் செய்ய முடியாத நிலையில் குழந்தையை தூக்கியபடி உள்ளே சென்று விட்டாள்.

மாயாவுக்கு , தன் வாழ்நாளில் கண்டிராத அவமானத்தை பட்டிருந்தாள். இங்கிருந்து போயே ஆக வேண்டும். யாரின் முகத்தையும் அவள் நிமிர்ந்து பார்க்க தோன்றவில்லை. அழுகையை அடக்க அடக்க, நெஞ்சு அடைப்பது போல! இருந்தது.

நடந்து கொண்டிருந்த சேனா நிற்க, அவளும் அப்படியே நின்றாள். அருகிலிருந்த கார் கதவை திறந்தவன். " ஏறு " என்றான். மறுப்பேதும் சொல்லாமல், முன்னிருக்கையில் அமர்ந்தாள். கதவை அறைந்து சாத்தியவன். மறுபக்கம் வந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன்.
" டிரைவர் இப்போ வந்திடுவார் " என்றான்.

மாயா வாயே திறக்கவில்லை. கைகளில் உள்ள விரல்களின் நகத்தை ஆராய்வது போல பார்வையை விரல்களில் பதித்திருந்தாள். அவளது மௌனம்! இன்னும் இவளை ஏதாவது சொல்!. அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறாள் பார்!. என்ன நெஞ்சழுத்தம்! ' என்று கோபத்தை விசிறி விட,

" நான் கேட்கனுமென்று நினைத்தேன்!. உங்க அம்மா எப்படி? அந்த ரெட் லைட் ஏரியாவுக்கு போனாங்க?. யாராவது கடத்திட்டு போயிட்டாங்களா?" என்றான் சாதாரணமாக

அவள் மனக்கண்ணில் ஏதேதோ காட்சிகள் வந்து போனது. கதறல்கள், அழுகை, அடி, உதை, சித்ரவதை, காணக் கூடாது காட்சிகள் வரிசை கட்டி வர, கண்ணை இறுக மூடி திறந்தாள்.

" உன்னை தான் கேட்கிறேன்!" என்ற குரலில் திடுக்கிட்டு , சேனாவை பார்த்தவள். பிறகு அவனது கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பது புரிய,

மறுப்பாக தலையசைத்தவள். " காசு கிடைக்கும் னு கொண்டு போய் அம்மாவை வித்துட்டான் " என்றாள்.

" யாரு?"

" எ.. என்.. அம்.. அம்மாவோட.. பு..புருசன் " என்றாள் திணறி

" ஓ! அப்போ! நீயும் அங்கே தான் பிறந்தியா? உன்னோட ஒரிஜினல் அப்பா யாருன்னாவது தெரியுமா?" என்றான். அவனது கேள்வி, அவளுக்கு எவ்வளவு வலிக்கும் என்பது தெரியும்!. தெரிந்தே தான் கேட்டான்.

" நான்.. பி.. பிறந்த பிறகு தான்.. எங்களை.. அங்கே போய் .. விட்டாரு " என்றவளின் பார்வை எங்கோ வெறித்தது. உள்ளுக்குள் சிதைய ஆரம்பித்தாள். இத்தனை காலம் சுக்லா காப்பாற்றி வந்திருந்ததை வார்த்தைகளால் சிதைத்து கொண்டிருந்தான் சேனா.

" நீ எத்தனை வருசம் அங்கே இருந்த? அங்கிளிடம் எப்படி வந்த? " என்றான் அடுத்ததாக.

" ஆங்.. " என்றவளுக்கு, அவனது கேள்வி புரியவில்லை. பழைய அதிர்வுகள் கண் முன் வந்து போக! மூளை தன்னை காப்பாற்றிக் கொள்ள! அவனது கேள்விகளை கிரகிக்க மறுத்தது.

" நீ எத்தனை வருசம் அங்கே இருந்த? அங்கிளிடம் எப்படி வந்தன்னு கேட்டேன்? " என்றான் மீண்டும்.

" ஆங்.. " என்றவள். புரியாத மொழியை பேசுவது போல! சுற்றி சுற்றி பார்வையை ஓட்டியபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு, எங்கே இருக்கிறோம் என்பதை கூட மூளை உணர்த்த முயலவில்லை. அங்கே தானே, அவளை அவமதித்து வெளியில் அழைத்து வந்தான். எனவே தற்காலிகமாக அதை மறக்க வைத்தது. அழுதிருந்தால் கூட, உணர்வுகள் கட்டுக்குள் வந்திருக்கும். அதை அடக்கியது வேறு! நெஞ்சை அடைப்பது போல இருக்க!

மாயா, சுற்றி சுற்றி பார்ப்பதும், தொண்டையை வருடுவதையும் கண்டு,

" என்ன? " என்றான்.

" அது.. தெரியலை.. நெஞ்சை தொட்டு காட்டி, தேய்த்து விட்டபடியே, " இ.. இங்கே ரொம்ப வலிக்குது. த.. தண்ணி வேணும் " என்றாள்.

அவளது உடல் மொழியும், கலங்கிய முகமும், தெளிவில்லாத பேச்சையும் கண்டு, ' ரொம்பவும் காயப்படுத்தி விட்டோமோ!' என்று தோன்றியது. கைகள் அனிச்சையாக, காரில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை திறந்து கொடுத்தது.

வாங்கியவள். தண்ணீரை வாயில் ஊற்றி, முழுங்க முயற்சி செய்தாள். தண்ணீர் உள்ளே போகவில்லை. அப்படியே வெளியே துப்பி விட்டாள்.

" என்ன பண்ணுது?" என்றான் படபடப்பை மறைத்து,

"எப்படி குடிக்கனும்? மறந்து போச்சு. தண்ணீர் உள்ளே போக மாட்டேங்குது " என்றாள். கையில் உள்ள பாட்டிலையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடி,

" என்ன! " என்றவனுக்கு, உச்சகட்ட அதிர்ச்சி! அவள் முகத்தை பார்த்தவனுக்கு, பொய் சொல்வது போல தோன்றவில்லை. அவளிடம் இப்போது சேனா யார்? என்று கேட்டால்! முழிப்பாளே தவிர, தெரியாது. அந்த அளவுக்கான நியாபகம் திறனை தற்போது இழந்திருக்கிறாள்.
 
Last edited:

Sirajunisha

Moderator
" இங்கே பாரு. வாயை திற " என்றவன். வாயில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, " முழுங்கு ! இப்படி முழுங்கனும் " என்று அவன் தொண்டையை அசைத்து காண்பிக்க!

அதே போல செய்யவும், தண்ணீர் உள்ளே சென்றது. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் கொடுத்து, குடிக்க வைத்த போது, ஓட்டுனர் வந்து விட, காரிலிருந்து மனமே இல்லாமல் இறங்கியவன்.

" எங்கே விடனும் னு தெரியும் தானே?" என்றான் ஓட்டுனரிடம்.

" தெரியும் சார். ஹோமில் " என்றார்.

" போய் விட்டதும். உடனே எனக்கு, போன் பண்ணணும் " என்றவன். மறுபுறம் வந்து, அவளுக்கு சீட் பெல்ட்டை போட்டு விட்டு , கதவை மூடினான். கார் நகர ஆரம்பித்ததுமே! மாயா மன உளைச்சலினால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள். சில நேரங்களில் உறக்கம் கூட, வரமே!

அடுத்த அரைமணி நேரத்தில், மாயாவை கொண்டு போய் விட்டு விட்டதாக, ஓட்டுனரிடம் இருந்து தகவல் வந்து விட்டது. மாயா இங்கே இல்லை. எல்லோரும் விழாவில் சந்தோஷமாக கலந்து கொண்டிருக்கின்றனர். ராக்கிக்கு மேடையில் அமர வைத்து, வளையல் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் சேனாவால் எதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. மாயாவின் முகமே! ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலித்து, கலங்க செய்தது. அங்கே நிற்க முடியவில்லை. தனிமை தேவைப்பட மண்டபத்தின் பின்பகுதியில் உள்ள மாடிப்படி வழியாக , விருந்தினர் அறை பால்கனியில் வந்து நின்றான்.

தவறு செய்து விட்டதாக! மனசாட்சி குத்திக் காண்பிக்க, தலையை அழுந்த கோதியவன். பின்பக்கம் உள்ள வெட்ட வெளியை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான். உள்ளே யாரோ வரும் அரவம் கேட்டது. யாரென்று கேட்கும் நிலையில் இல்லை. அதுவும் பொதுவான பால்கனியாதலால், பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

" ஹலோ.. எங்கே இருக்கீங்க? " என்ற பரிச்சயமான பெண் குரல்.

'யார்? ' என்று யோசிக்கும் முன்பே! பேச்சு தொடர்ந்தது.

" வரேன். வரேன்னு எவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கீங்க? பேருக்கு தலையை காமிச்சிட்டு ஓடிடுறீங்க. அங்கே மணமேடையில் உட்கார்ந்து இருப்பது. நம்ம பொண்ணுங்க!. அவளுக்கு, நம்ம ஆசிர்வாதம் வேண்டாமா? " என்றார் ஆதங்கமாக

' மணமேடையில் யார்? ராக்கி உட்கார்ந்து இருக்கிறாள். இது! அத்தை குரல் தான். யாரிடம் பேசுறாங்க? அங்கிளிடமா?. அவரிடம் இவ்வளவு உரிமையா பேசுவாங்களா? இல்லையே! வரும் போது, அப்பா கூட தானே சுக்லா அங்கிளும், மேடைக்கு ஏறினார் ' என்று யோசித்தபடியே நிற்க,

" ஊருக்கு வேண்டுமென்றால்! அவர் தகப்பன்னு சொல்லிக்கலாம். ஆனால், உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். அவ உங்க பொண்ணு!. நம்ம பொண்ணு!. யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. மேடைக்கு வரும் போது, நீங்க என் பக்கத்தில் வந்து நிக்கனும் " என்றவர். போனை கட் செய்து விட்டு, அறையிலிருந்து வெளியேறி விட்டார்.

சேனாவுக்கு, தலையை சுற்றுவது போல இருந்தது. தான் கேட்டதெல்லாம் நிஜமா? உண்மை தானா? ஏதாவது கனவில் இருக்கிறோமா?' என்று நினைத்தவன். வேகமாக வந்த வழியே மேடையை நோக்கி ஓடினான்.

அவன் கேட்ட அனைத்தும் உண்மை என்பது போல! சுக்லா, சேவுடன் கீழே அமர்ந்திருக்க! கொஞ்சமும் எதிர்பாராத வகையில் செழியம் நந்திதாவும் சேர்ந்து நின்று, ராக்கியை ஆசிர்வதித்து கொண்டிருந்தனர். தான், தவறாக எதுவும் புரிந்து கொண்டிருக்கிறோமோ? நந்திதா அத்தை அப்படியெல்லாம் இல்லை. இது உண்மை இல்லை என்று அவன் காண்பதை நம்ப மறுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்த விசயம். உண்மையை தெரிந்து பார்ப்பவனுக்கு, பட்டவர்த்தனமாக தெரிந்தது. நந்திதாவும் செழியனும் ஆனந்த கண்ணீர் வடிப்பதும். அர்த்தமான பார்வை பரிமாற்றங்களையும் கண்டவனுக்கு, நிற்கவே முடியாமல்! நிலைகுலைந்து போனான்.

' எவ்வளவு பெரிய துரோகம்!' என்று நினைத்தவனுக்கு, மனம் ஆறவே இல்லை.

கணவன் சரியில்லாமல், தாயையும் பிள்ளையையும் கொண்டு போய் வி.. ப.. சா.. ர விடுதியில் விற்று விட்டு, ஓடி விட்டான். விருப்பமில்லாமல் தப்பிக்க மார்க்கம் இல்லாமல், சித்ரவதை அனுபவித்தவர்களை , இரக்கமே இல்லாமல் வெறுத்து, தகாதவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கினான். வலிக்கும் என்று தெரிந்தே! வார்த்தைகளால் விளாசினான். ஒருத்தியை பேசி பேசி, குற்றுயுராய் அனுப்பி விட்டு வந்தான்.

எல்லாம் யாருக்காக? இந்த அத்தைக்காக! இந்த நந்திதாவுக்காக!. சூழ்நிலையால் மாட்டிக் கொண்டவர்களை கூட மன்னிக்கலாம். ஆனால் நல்ல வாழ்க்கை அமைந்தும், இது போல துரோகத்தால் வாழ்க்கை துணையை காலமெல்லாம் ஏமாற்றுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் விவாகரத்து கொடுக்காமல், சுக்லா அங்கிளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி! கடவுளே! இவளும் ஒரு ஜென்மமா!.

சுக்லாவை, தனது தகப்பனாக நம்பிக் கொண்டு, அவர் விலகியிருப்பதால் வருத்தப்படும் ராக்கி ஒரு புறம். தன் பிள்ளை இல்லையென்று தெரிந்தோ, தெரியாமலோ! தகப்பன் என்னும் கடமையை சரியாக செய்யும் சுக்லா மறுபுறம். அனைவரையும் ஏமாற்றும் நந்திதா, செழியன் இன்னொரு புறம். எல்லாம் யோசிக்க யோசிக்க தலை வெடிப்பது போல இருக்க! உடல் நிலை சரியில்லை என்று கூறி, சேனா வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

ஆனால்! மாயாவின் நிலையை படுமோசமாக மாற்றி விட்டான் என்பதை அறிவானா? அவளது பக்கத்தை புரட்டி பார்த்திருந்தாள்! கல்நெஞ்சும் கலங்குமே! அறியும் காலம் வாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 25
சேனா, நேராக தங்களது வீட்டிற்கு வந்து விட்டான். அவனுக்கு தனிமை தேவைப்பட்டது. யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை. முக்கியமாக நந்திதாவின் முகத்தை பார்த்து பேச முடியும் என்று தோன்றவில்லை. மேடையில் நின்று, அவர் தன்னிடம் உரிமை பாராட்டினால்! அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, சகஜமாக பேசும் மனநிலையில் அவன் இல்லை. எனவே வீட்டுக்கு வந்தவன். ஹாலில் உள்ள இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டான்.

எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்காங்க! இந்த நந்திதா? அதையும் இத்தனை நாள் மறைத்து! நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. தலையை இரு கைகளாலும் தாங்கி பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் மனக் கண்ணில் அனிச்சையாக, அடிவாங்கிய குழந்தையாக அழுகையை அடக்கியபடி, பரிதவிக்கும் பார்வை பார்த்து! பின்பு மலமலங்க விழிக்கும் கண்களோடு, இங்கே ரொம்ப வலிக்குது என்று எதற்கென்று தெரியாமல் சொன்னவளின் கலங்கிய முகமும், தண்ணி குடிக்க மறந்து போச்சு என்றவளின் தெளிவில்லா வார்த்தைகள் நினைவுக்கு வர, மனம் நொந்தே விட்டான்.

அவளை காயப்படுத்துவதாக நினைத்து, இப்போது இவன் காயப்பட்டு நிற்கிறான். சில நாட்களாக அவளை தேடும் கண்களையும், சீண்டீ பார்த்து வம்பு வளர்க்க நினைக்கும் மனத்திற்கு கடிவாளமிட முடியாமல்! அந்த இயலாமையை, திரும்ப மாயா மேலேயே காட்ட நினைத்து! அதையும் செயல்படுத்தி விட்டு, இப்போது குற்றவுணர்ச்சியில் குன்றி நிற்கிறான்!

எப்போதுமே விஜய சேனாவுக்கு, பணம், அதிகாரம், குடும்ப கௌரவம் , கண்ணியம், அந்தஸ்து என இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்து பால பாடமாக கடைபிடிக்க சொல்லித் தரப்பட்டது. அப்படிப்பட்டவர்களிடம் தான் பழகவும் செய்வான்.

கண்ணியம் குறைவான பெண்களை திரும்பி கூட பார்க்க மாட்டான். இயல்பாக அந்த மாதிரியான நபர்களிடம் பழகுவதில் அவனுக்கு ஒவ்வாமை உண்டு. மாயா பற்றி தெரிந்து கொண்டதிலிருந்தே, அவளை தனது அத்தை குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தவே நினைத்தான்!. அதனாலேயே அவமானப்படுத்தி, அவளது தாயை இழுத்து பேசி , மனம் நோக வைத்தே அனுப்பினான்.

வெளியிலிருந்து வந்தவளை அனுப்பி வைத்து விட்டான். ஆனால் தன் குடும்பத்திலேயே இப்படியொரு ஆள் இருக்கிறதே! அதற்கு என்ன செய்யப் போகிறான்?

அதோடு , மாயாவை பற்றி கேள்விபட்டதற்கும் நேரில் பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள்! பல முரண்பாடுகள்!. இப்போதும் அவளை பற்றி முழு விவரமும் தெரியவில்லை தான். உள்ளுணர்வு சொல்படி நம்பியிருக்க வேண்டுமோ? என காலம் தாழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.

விழா முடிந்து, அன்று மாலையே சேதுவும், சம்யுவும் வந்து விட்டனர். சம்யு வந்தவுடனேயே தனது மாமியார் வீட்டிற்கு கிளம்பி விட்டாள். விழாவை காரணம் காட்டி தான்! அவள் இங்கே இருந்ததே. இல்லையென்றால் ! முதலில் அவள் கணவன் வீட்டிற்கு தான் சென்றிருப்பாள்.

அடுத்த இரண்டு நாட்கள் , சாதாரணமாகவே கடந்தது. ஆனால் சேனா இயல்பாக இல்லை. ஏதோவொரு அலைக்கழிப்பு!. மாயாவின் முகமே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டிருந்தது. ஏதேனும் காரணம் சொல்லிக் கொண்டு போய் , அவளை பார்த்து விட்டு வரலாமா?' என்று மனம் தன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க!

தனது யோசனையை நினைத்து! தன்னையே நிந்தித்து கொண்டான். ' இதெல்லாம் உனக்கு தேவையில்லாத சிந்தனை சேனா!. உனக்கு அத்தை என்ற உறவும் வேண்டாம். அதே போன்று மாயாவின் நினைவும் வேண்டாம்!. அது தான் உனக்கு மன நிம்மதியை கொடுக்கும்!' என்று தனக்கு தானே பலமுறை சொல்லிக் கொள்ள! பிறகு, ஓரளவு தன்னிலைக்கு வந்து, லேலையில் கவனத்தை திருப்பினான் .

வேலையில் மூழ்கியவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம் ராஜன் வந்து நின்றார்.

" சொல்லுங்க ராஜன் " என்றான்.

" சார், நாளைக்கு நடக்கிற ஏ. வி குரூப்ஸ் உடனான மீட்டிங்கில் உங்களை மட்டும் கலந்து கொள்ள சொல்லி, பெரிய சார் சொன்னாங்க" என்றார்.

" ஏன்? அப்பா வரலையா? . வேறு ஏதும் அப்பாவுக்கு மீட்டிங் இருக்கிறதா? " என்றான். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சந்திப்புகள் வந்து விடும். ' அது போன்று எதுவுமோ?' என நினைத்து

"இல்லை சார். சுக்லா சார பார்க்க போய் விட்டு வந்தாங்க. நாளைக்கு போகனும் னு சொன்னாங்க " என்றார். சேனா, கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னால்! மீட்டிங் கலந்து கொள்ள வேண்டி தான்! முன் கூட்டிய கேட்டுக் கொள்கிறார் ' என்பது புரிந்தது.

" சரி. நான் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன் " என்பதோடு நிறுத்திக் கொண்டான். அவனுக்கும் என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
 

Sirajunisha

Moderator
அன்று தாமதாகவே, சேனா வீட்டிற்கு வந்தான். சேது உறங்க சென்று விட்டார். மறு நாள் காலை அவன் கிளம்பி வந்த போது, சேது சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தந்தையோடு தானும் இணைந்து கொள்ள!

" என்ன சேனா, மீட்டிங்கில் நீ மட்டும் கலந்து கொள்கிறாயா? அல்லது நானும் வர வேண்டுமா? " என்றார்.

"நானே பார்த்துக் கொள்கிறேன் பா" என்றவன். " அங்கிளை பார்க்க போகனுமென்று சொன்னீங்களாம்? என்ன விசயம் பா? " என்றான் கிச்சடியை சாப்பிட்டபடியே

பெருமூச்சு விட்டவர். " மீட்டிங் முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணு. லஞ்ச் சேர்ந்தே சாப்பிடுவோம். அப்போது சொல்கிறேன் " என்று விட்டார்.

அதற்கு மேல் சேனாவும் வற்புறுத்தவில்லை. பொதுவான அன்றைய சந்திப்புகளை பற்றி கலந்தாலோசித்து கொண்டு , தங்களது வேலையை பார்க்க கிளம்பி விட்டனர்.

அன்றைய தொழில் நிமித்தமான சந்திப்பு, பயனுள்ளதாக மிகுந்த இலாபம் தரக் கூடிக் கூடியதாக இருவருக்குமே இருந்தது. ஏ. வி குரூப்ஸின் மேனேஜிங் டைரக்டர்களில் மூன்று நபர்கள் வந்திருந்தனர். இருவர் தந்தையும் மகனும். மூன்றாவதாக அவரது மகளும் வந்திருந்தாள். அழகு, அறிவு என அனைத்துமே இருந்தது. அதோடு! அவளது ஆர்வமான பார்வையும் அடிக்கடி சேனாவின் மேல் படியத்தான் செய்தது. அதை பேசிக் கொண்டிருந்த, சில நிமிடங்களிலேயே சேனா உணர்ந்து கொண்டான். அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மீட்டிங் முடிந்து, இருபுறமும் பேசி ஒப்பந்தங்கள் முழு வடிவுக்கு வந்து விட்டன. நாளை மறுநாள் முறையாக கையெழுத்துக்கள் இடப்பட்டு, வேலை தொடங்கும். அனைத்தும் முடிந்த பின்,

" ஒ. கே சார் " என்று கை கொடுத்து விடைபெறுமுகமாக சேனா எழுந்தான்.

" சேர்ந்து சாப்பிட்ட பிறகு போகலாமே மிஸ்டர். விஜய சேனாதிபதி. லஞ்ச் டைம் தானே?" என்றாள் அந்த பெண்.

"இன்றைக்கு அப்பாவோடு லஞ்ச். நேற்றே சொல்லிட்டாங்க. டைம் ஆச்சு. வெயிட் பண்ணுவாங்க " என்றபடியே ராஜனிடம் பைலை கொடுத்தான்.

" அங்கிள் கூட தானே? பிஸ்னஸ் மீட்டிங் , அவர்களோடு லஞ்ச் அப்படி எதுவும் இல்லையே? எங்களோட சாப்பிட்டேன்னு சொல்லுங்க! எதுவும் சொல்ல மாட்டாங்க! " என்றவள். " இதில் அவர் வருத்தப்பட எதுவும் இல்லையே ! சில சமயம் இது போல மீட்டிங் முடிந்த பிறகு சாப்பிட்டு செல்வதும் உண்டு! . தொழில் முறையில் இது சாதாரணமாக நடப்பது தானே!" என்று சொல்ல,

சேனாவின் முகம் இறுகியது. அதை அவளது தந்தை கவனித்து விட்டார். மேலும் இந்த பெண் எதுவும் பேசி விடக் கூடாது என்ற பதட்டமே வந்து விட்டது.

தனது முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன். " எனக்கு எங்க அப்பாவை விட்டு விட்டு, உங்க கூட சாப்பிட வேண்டுமென்று எந்த வித தேவையுமில்லை " என்று முகத்திலடிப்பது போல சொன்னவன். " பை சார் " என்றபடி நகர முற்பட,

தங்கையின் முகம் சுருங்கி விட்டதை கண்டு பொறுக்க முடியாமல், " இவ்வளவு ஹார்சா சொல்லனுமா?" என்றான் தமையன்.

புருவம் சுருக்கி பார்த்தவன். " வேற எப்படி சொல்லனும்?" என்றான் புரியாதது போல!

தடுமாறினான் எதிரில் நின்றிருந்தவன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.

" ஸ்டே யுவர் லிமிட்!" என்று நேரிடையாகவே எச்சரித்தவன். " என்ன சார்? உங்க பசங்க இவ்வளவு பேசறாங்க? அடுத்தவங்க பர்சனல் விசயத்தில் மூக்கை நுழைக்கிறோம் னு தெரியாமல்! இதையே தான் பிஸ்னசிலும் செய்வீங்களோ?" என்றான் அழுத்தமாக

தன் பிள்ளைகளை முறைத்தவர். " சாரி சேனா சார். ஏதோ ஆர்வக் கோளாரு! உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது போல! இரண்டு பேருக்கும். அது தான் உரிமையா பேசிட்டாங்க " என்றார் சமாளிப்பாக

" நீங்களா அடுத்தவர்களிடம் உரிமை எடுக்க கூடாது " என்று காட்டமாகவே பேசியவன். " இது மாதிரி அதிக பிரசங்கி தனமாக பிஸ்னசிலும் நடந்துப்பீங்களோன்னு யோசிக்க வைக்கிறீங்க " என்றவன். " பிஸ்னஸ் பற்றி யோசித்து சொல்கிறேன் " என்று கிளம்பி விட்டான்.

மூன்று பேருமே அதிர்ச்சியில் நின்று விட்டனர். " என்ன பா இப்படி சொல்லிட்டு போறார்? " என்றாள் அந்த பெண்.

" விடு டா. இவர் இல்லையென்றால் இன்னொரு பிஸ்னஸ்! " என்றான் தமையனும் அலட்சியமாக

"ஆமாம்! இன்னொரு பிஸ்னஸ்! " என்றவர். " நமக்கில்லை அவருக்கு!. அவங்க கம்பனீஸோட வொர்த் என்னென்னு தெரியுமா? நாம அவங்களோடு டீல் பேசி முடிச்சிருக்கோம் னு தெரிந்தாலே! நம்மளோட ஷேர் எவ்வளவு விலைக்கு போகும் தெரியுமா?

ஆனால் இப்போ! இப்படி பேசி முடியும் தருவாயில் நிறுத்தப்பட்டிருக்கு என்று தெரிந்தாலே! ஷேரோட மதிப்பு படு பாதாளத்திற்கு போய் விடும் " என்றவர்.

" உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? அவர் கிளம்பறார் என்றால்! விட வேண்டியது தானே? அவர் அப்பாவோடு லஞ்ச் னு சொன்ன பிறகும், இங்கே நம்மோட சாப்பிட சொல்றீங்க? இது தான் மரியாதையா? பிஸ்னஸை பிஸ்னஸா மட்டும் பார்க்கிறவங்க அவங்க. சாப்பிடும் நேரத்திற்கு வந்து விட்டாய் சாப்பிட்டு போ என்றெல்லாம் பேசிட முடியாது.
ஏன்? நாம அப்படி சாப்பிட்டு விட்டு வந்து விடுவோமா? " என்று எகிற

ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றிருந்தனர். " இப்போ என்னப்பா பண்றது?" என்றாள் மகள் பயந்து போய்

"என்ன பண்றது! இரண்டு நாள் கழித்து தான் எதுவும் தெரியவரும். ஒ. கே வா? இல்லையானு !" என்றபடி அவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

இங்கே காரில் வந்து கொண்டிருந்த சேனாவுக்கு, அந்த பெண்ணின் பார்வை இன்னமும் எரிச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. இது அவனுக்கு வழக்கமான ஒன்று தான்!. பணம், அழகு, அதிகாரம், அந்தஸ்து என எல்லாவற்றிலும் சிறந்ததாக இன்னும் திருமணமாகாமல் இருப்பவனை ஆர்வமாகத்தான் பார்த்து வைப்பர்.

ஆனால் தற்போதைய எரிச்சலுக்கு காரணம்! அந்த பெண்ணை போல! ஒரு முறை கூட, மாயா இவனை ஆர்வமாக பார்த்ததில்லை. அவளுடைய கோவம், அழுகை, ஆதங்கம், வருத்தம், பயம் என பலவற்றை அவள் முகத்தில் கண்டிருக்கிறான். ஏன்? அவனை அலட்சியமான சிரிப்பை இல்லை இல்லை! உதட்டு சுளிப்பை கூட கண்டிருக்கிறான். ஆனால் அவன் மீதான ஆர்வமான பார்வையை துளி கூட கண்டதில்லை . எண்ணம் எங்கங்கோ செல்ல, தலையை உலுக்கி நிதர்சனத்திற்கு வந்தவன். சேதுவுக்கு அழைத்தான். அழைப்பு இணைக்கப்பட,

" ஹலோ " என்றதும்.

" சேனா, நீ சாரதா ஹெல்த் கேர்க்கு வந்து விடு " என்று அழைப்பை துண்டித்து விட்டார். சேனாவை எந்த கேள்வியும் கேட்க விடவில்லை.

' யாருக்கு? என்ன ஆச்சு? ஒரு வேளை அங்கிளுக்கும் எதுவும் உடம்பு முடியலையோ?' என்று பலவாறு சிந்தனைவோட , அந்த மருத்துவமனை நோக்கி பயணமானான். வழியில் ராஜனை அலுவலக்திற்கு அனுப்பி வைத்து விட்டான்.
 

Sirajunisha

Moderator
மருத்துவமனை பார்க்கிங்கில், தனது காரினை நிறுத்தி விட்டு, வேகமாக உள்ளே செல்ல, அங்கிருந்த வெயிட் ஹாலில் சேதுவும் , சுக்லாவும் அமர்ந்திருந்தனர். சுக்லா மிகவும் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். கண்ணெல்லாம் சிவப்பேறி, தலையெல்லாம் களைந்து, இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்துடன், எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவரை கண்டு பதறியவன்.

" அங்கிள் என்னாச்சு? ஏன்? இப்படி இருக்கீங்க? " என்றான் படபடப்பாக
அவனை நிமிர்ந்து பார்த்தாரே தவிர, எதுவும் பேச வில்லை.

" என்னாச்சு பா?" என்றான் அருகிலிருந்த தந்தையிடம்

" பேசுவோம் பா " என்ற போது, " சுக்லா சார்?." என்றபடி வந்த செவிலியர். அவர் அமர்ந்திருப்பதை கண்டு விட்டு, " நீங்க வாங்க " என்று சொன்னதும், வேகமாக மருத்துவர் அறைக்கு சென்றார். சேதுவும் உடன் செல்ல, என்னவென்றே புரியாமல் சேனாவும் அவர்களுடன் சென்றான்.

டாக்டர். சாரதா தேவி ,மன நல மருத்துவர். என்ற பெயர்பலகை சிறிய அளவில் அவர் மேசையில் இருந்தது. வயது சுமார் ஐம்பது இருக்கலாம். முகத்தில் ஆளுமையும், கண்களில் கனிவும் ஒருங்கே இருந்தது.

மூவரையும் கண்டு, இருக்கையை காட்டி அமர சொன்னவர். சற்று நேரம் மௌனமாக இருந்தவர். சுக்லாவின் பரிதவிக்கும் பார்வையை கண்டு, பெருமூச்சு விட்டு,

"கவுன்சிலிங் கொடுத்திருக்கேன். ஆனால் அதை கவனிக்க கூடியே நிலையில் இல்லை. அதிகமான மன உளைச்சலினால் தூக்கம் இல்லை. இப்போது தூக்கத்திற்கு ஊசி போட்டிருக்கேன். நன்றாக தூங்கி எழட்டும். மனது சற்று அமைதி பெறட்டும்!. பிறகு கவுன்சிலிங்கை தொடரலாம் " என்றார்.

" நான் போய் பார்க்கவா?" என்றார் தொண்டையடைக்க

" சரியாகட்டும் பார்க்கலாம் " என்றார் கறாராக

"ப்ளீஸ் " என்றார் வேண்டுதல் போல!

"உங்களிடம் எவ்வளவு எடுத்து சொல்லியிருப்பேன். கவனமாக இருங்க. கவனமாக கையாளுங்க என்று!" என்றார் ஆதங்கமாக

சேனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தெரியாத நாட்டில், புரியாத மொழியை கேட்டுக் கொண்டிருப்பது போல அமர்ந்திருந்தான்.

" என்ன நடந்ததுன்னே தெரியலை" என்று மேலும் பேச முயன்றவரை தடுத்தவர்.

" இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் சுக்லா. நன்றாக தூங்கி எழட்டும். பிறகு இது பற்றி பேசலாம். நீங்களும், முதலில் நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுங்க. அப்போது தான் சமாளிக்க முடியும்" என்றார்.

அதற்கு மேல் எதுவும் பேசிவிட முடியாது அவரிடம். " நான் எப்போ போய் பார்க்கலாம்?. விழிப்பு எப்போது வரும்?" என்றார் விடாக் கண்டனாக

" மார்னிங் வாங்க. அதுவரை யாராவது ஒருவர் இருந்தால் போதும்" என்றவர். சுக்லாவை முகத்தை வைத்தே அவர் என்ன கூற வருகிறார் என்பதை யூகித்து, " நீங்க வேண்டாம். வேற யாரும் இருக்கட்டும்" என்று விட்டார். இது சுக்லாவின் உடல் நலனும் முக்கியம் என்பதால் கூறுகிறார் என்பது நன்றாகவே புரிந்தது. ஆமோதிப்பாக தலையசைக்க, மூவரும் வெளியே வந்தனர்.

அப்போது சேனாவுக்கு பசியெடுக்க, " லஞ்ச் டைமாச்சு பா . சாப்பிடலாம். வாங்க அங்கிள் " என்றான் சுக்லாவையும்

எதுவும் பேசாமல் அவர்களுடன் நடந்தவர். பிறகு, " நாம இங்கே ஹாஸ்பிடல் கேன்டினிலேயே சாப்பிடலாம் " என்றார்.

சேனா புருவம் சுழித்து பார்க்க! " சரி " என்று சேதுவும் உடன் நடக்க, வேறு வழியில்லாமல் சேனாவும் சென்றான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது யார்? என்று தெரியவில்லை. சுக்லாவை அருகே வைத்துக் கொண்டு விசாரித்தால்! அவர் பெரிதும் வருந்தக் கூடும் என்பதால்! எதை பற்றியும் பேசாமல், உணவு வாங்கி வந்து கொடுக்க, சாப்பிட்டனர்.

சேனாவிடம் இன்று நடந்த மீட்டிங்கை பற்றி விசாரிக்க, நடந்த எதை பற்றியும் மறைக்காமல் கூறியவன். " ராஜனிடம் பைல் இருக்கு. என்னிடமும் ஒரு காப்பி இருக்கு. மேற்கொண்டு அவங்க கூட, பேசனுமென்றால் நீங்களே மூவ் பண்ணுங்க. பின்னாடி வந்து நான் ஜாயின் பண்ணிக்கிறேன் " என்றான்.

" ம்ம். சரி " என்றவர். மெதுவாக சாப்பிட்ட முடிக்கவும்.

" உனக்கு எப்போ வேலை முடியும் சேனா?" என்றார் சேது.

"இப்போ கூட நான் ப்ரீ தான் பா. ஏன்? " என்றான்.

" அப்போ ஒ.கே. நான் வரும் வரை. நீ விசிட்டரா இருக்கியா. நான் நைட் வரேன் அல்லது வேறு யாரையும் அனுப்பறேன் " என்றார்.

'இப்படியெல்லாம் அவர் கேட்டது இல்லை !'. சுக்லாவின் முகம் பார்த்தவன். வேறு எதுவும் பேசவில்லை. ஆமோதிப்பாக தலையசைத்தான்.

"ரொம்ப நல்லது சேனா. நான் சுக்லாவை நம்ம வீட்டுக்கு அழைத்து போகிறேன். வி.ஐ. பி ரூம் தான். எல்லா வசதிகளும் இருக்கு. நீயும் கூட நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் " என்று விட்டு,

" நாம கிளம்பலாம் மச்சான். சேனா பார்த்துப்பான்" என்றார் சுக்லாவிடம்.

சேனாவை நிமிர்ந்து பார்த்தவர். எந்த பதிலும் சொல்லவில்லை. கிளம்பினர்.

சேனாவுக்கு, சிறிது நேரத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. யார் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த அறை? எதுவுமே தெரியாமல் நின்றிருந்தான்.

அப்போது செவிலியர் ஒருவர் வந்து, " சார், ரூம் மாத்தியாச்சு. ரூம் நம்பர் 105. முதல் தளம்" என்றார். தலையை மட்டும் அசைத்தவன். லேப் டாப் பேக் சகிதம் சென்றான்.

தளத்திற்கு சென்று, அறை எண்ணை தேடி, கதவை திறந்தான். நல்ல விசாலமான அறை. ஏசி வசதியுடன், தூய்மையாக இருந்தது. சற்று உள்ளே செல்ல, அட்டெண்டருக்கான படுக்கை, அதையடுத்து மருந்து வைப்பதற்கான மேசை,

பார்வையிட்டபடியே, நோயாளியின் கட்டிலை நெருங்கும் போது, அவன் புருவம் சுருங்கியது. வேகமாக செல்ல! ஆழ்ந்த நித்திரையில் கையில் ஒரு பக்கம் சிலைன் ஏற, பதுமையாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாயா!.

' இவளுக்கு நான் சேவகம் பண்ணணுமா? சொன்னால் தங்க மாட்டேன் என்று தெரியும்!. அதனால் தான் ,யாரென்று சொல்லாமலே மூடி மறைத்து விட்டார்.

ஏன்? இவங்க அம்மாவை வர சொல்ல வேண்டியது தானே!. இவளுக்கு நான் காவல் என்று வெளிமனம் கூப்பாடு போட! ஆழ் மனமோ அமைதியாக இருந்தது.

பிறகு, மாயாவுக்கு போர்த்திருந்த போர்வையை கழுத்துவரை நன்றாக போர்த்தி விட்டு, அங்கிருந்த செல்பில், தனது லேப்டாப் பேக்கை வைத்தவன். செல்போன், பர்ஸ் போன்றவற்றை, மேசையில் வைத்து விட்டு, அங்கிருந்த மற்றொரு படுக்கையில் நன்றாக கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.

இரண்டு நாட்களாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த தூக்கம். சற்று நேரத்திலேயே அவனை வாரி அணைத்துக் கொண்டது. அவனுக்கு, ஏன் இங்கே அனுமதிக்க பட்டிருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அன்று பார்த்த பரிதவிப்பான முகம்! இப்போது அமைதியாக இருப்பதை கண்டு, மனம் ஆசுவாசமடைந்திருக்க வேண்டும்! அதன் பொருட்டே தற்போதைய உடனடி உறக்கம்.

அமைதிக்கு பின்னான பூகம்பத்தை அறிய நேரிடும் பொழுது! அவள் அருகில் இருந்தாலும் உறக்கம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 26
நன்றாக உறங்கியவனுக்கு, விழிப்பு தட்டியது. நேரத்தை பார்க்க! மணி மாலை 5 என்று காண்பித்தது. உடம்பை முறுக்கி சோம்பல் முறித்தவன். பிறகு, ரெஸ்ட் ரூம் சென்று தன்னை ரெப்ரெஷ் செய்து விட்டு வந்தான்.

அப்போது , அங்கே வந்த வார்ட் பாய் ஒருவன். " சார் டீ எதுவும் வாங்கிட்டு வரட்டுங்களா?. ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால் வாங்கிட்டு வந்து தருகிறேன் " என்றான்.

சேனாவுக்கும் டீ குடிக்க வேண்டும் போல இருந்தது. டீ, ஸ்நேக்ஸ்க்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தான்.

செவிலியர் ஒருவர் வந்தவர். மாயாவுக்கு, டிரிப்ஸ் முடியும் தருவாயில் இருப்பதை கண்டு, அதை எடுத்து விட,

"இவங்க எப்போ விழிப்பாங்க?" என்றான்.

கையில் உள்ள கடிகாரத்தில் மணியை பார்த்தவள். " இன்னும் ஒன் அவர்ல விழிக்க வாய்ப்பிருக்கு சார் " என்று விட்டு சென்றார்.

பிறகு, டீ வர சுவை பார்க்காமல் அதை குடித்தவன். பிஸ்கட்ஸ்ஸை அப்படியே வைத்து விட்டான். கூடுதலாக ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகே, மாயா மெல்ல கண் விழித்தாள்.

சுற்றிலும் பார்த்தவளுக்கு, தான் தனியறையில் இருப்பது தெரிந்தது. அருகிலிருந்த மேசையில் இருந்த, வாலெட், செல்போன் போன்றவை ஒரு ஆனுடையது என்பதை பறைசாற்ற! மெல்ல எழுந்து அமர்ந்தவளுக்கு, மனதில் ஒரு பதற்றம்.

அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு, சேனா உள்ளே வந்தான். அவனை கண்டதும், கண்கள் அதிர்ச்சியில் விரிய, அது அவனது கண்களிலிருந்து தப்பவில்லை.

சாதாரணமாக வந்தவன். " இப்போ உடம்பு எப்படி இருக்கு? பரவாயில்லையா?" என்றவன். " என்னாச்சு உடம்புக்கு, எதுவும் ஃபீபவரா? டெஸ்ட் எடுத்தாங்களா? ஒரு வேளை வைரல் ஃபீவரோ? அதனால் தான் அட்மிட் பண்ற அளவுக்கு வந்திருக்கோ?" என்று வரிசையாக கேள்வி எழுப்பினான்.

சேனாவை இங்கே பார்த்ததே அதிர்ச்சி என்றால்! அடுத்து, இவனது சரளமான பேச்சில் திகைத்து போய் அமர்ந்திருந்தாள். எதுவுமே பேச முடியவில்லை.

மாயாவின் அதிர்ந்த முகத்தை கண்டு, " உன்னை தான் கேட்கிறேன்? பதில் சொல்லு " என்றான் அழுத்தமாக

" தெரியலை " என்றாள் எங்கோ பார்த்தபடி

"என்ன தெரியலை?"

"நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலை" என்றாள்.

"வாய் கிழிய பேச தெரியுமா?" என்றான் அவளை முறைத்து,

நிமிர்ந்து பார்த்தவள். முகத்தை திருப்பிக் கொண்டாள். அப்போது சரியாக மருத்துவர் சாரதா தேவி உள்ளே வந்தார்.

"எப்படிம்மா இருக்கே? நன்றாக தூங்கினாயா?" என்றார்.

"ம்ம் " என்றாள் ஆமோதிப்பாக

" கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ! ஏதாவது புக்ஸ் படி. பிடித்தவர்களிடம் பிடித்த விசயத்தை பேசு!" என்றவர். மேலும் சில அறிவுரைகளை கூறி விட்டு, " காலையில் வந்து பார்க்கிறேன் " என்று சொல்லி விட்டு சென்றார்.

அவர் சென்றதும். " ஏதாவது சாப்பிடுறியா?" என்றான்.

"வேண்டாம் " என்று மறுப்பாக தலையசைத்தாள்.

" நல்லது. அப்படியே இரு . பிறகு, மயக்கம் போட்டு விழு. உன்னை தூக்கி ஹாஸ்பிட்டல வைத்துக் கொண்டு, நான் தேவுடு காத்துக் கொண்டு உட்