எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -5

Padma rahavi

Moderator
அந்த பெரிய மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில் இருந்த ஒரு அறையில் கண் மூடி படுத்திருந்தான் சிவா. அவன் அருகில் சோகம் மாறாத முகத்துடன் அவன் பெற்றோர் அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான் சிவநந்தன்.

டாக்டர் வந்தார்.

எதாவது முன்னேற்றம் இருக்கா டாக்டர் என்றான் சிவநந்தன்.

மிஸ்டர் நந்தன். கோமால இருக்கிறவங்களுக்கு தினமும் முன்னேற்றம்னு ஒன்னு இருக்காது. அவங்க உடல் நல்ல நிலையில இருக்கு. மூளை தான் இன்னும் எந்திரிக்கல. எப்ப வேணா அது நடக்கலாம். உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டு சென்றார்.

இரண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. பேசாம நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் பா. இவன் என்னிக்கு கண்ணு முழிக்கிறானோ முழிக்கட்டும். நீ ஏன் செலவு பண்ணி பாத்துக்குற என்றார்கள் அவன் பெற்றோர்கள் .

இல்லம்மா. ஒரு வகைல அவனோட இந்த நிலைக்கு என் தம்பியும் ஒரு காரணம். அவனோட இறுதியாக கார்ல போனது சிவா தான். இன்னிக்கு என் தம்பி இல்லனு நான் அனுதாபம் தேடிட்டு இவனை அப்டியே விட முடியாது. சிவா கண்டிப்பா கண்ணு முழிப்பான். பாத்துக்கோங்க. என்று கூறிவிட்டு மருத்துவமனை விட்டு வெளியில் வந்தான் சிவநந்தன்.

விஷ்வா காதலிச்ச பொண்ணைப் பற்றி தெரிஞ்சது சிவா மட்டும் தான். அதுக்காகவது நீ கண்ணு முழிக்கணும் சிவா என்று நினைத்தான்.


அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்கள் சிவநந்தனுக்கு மிகவும் பிடிக்கும். சனி, ஞாயிறு ஏன்டா வருகிறது என்று நினைப்பான்.

அனைத்து சொந்தங்களும் இருப்பவர்கள் தனிமைக்காக ஏங்குவர். அவர்களுக்கு கிடைக்கும் தனிமை சுகமாக இருக்கும். ஒரு சொந்தமும் இல்லாதவர்களுக்கு கிடைக்கும் தனிமை கொடூரமாக இருக்கும்.

சனிக்கிழமையாவது மீதி இருக்கும் வேலைகளை தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்து விடுவான். இந்த ஞாயிறு மட்டும் நகரவே நகராது அவனுக்கு. அன்று வீட்டு வேலை செய்பவர்களுக்கும் பணி ஓய்வு நாள்.

விஷ்வா இருந்த வரையில் அவனுடன் கடைக்குச் செல்வது, மால் செல்வது, கடற்கரை செல்வது என்று பொழுதை ஓட்டி விடுவான். இன்று யாருமில்லா தனிமை அவனை வாட்டியது.

எப்போது சென்றாலும் அன்னை மடி போல் சுகம் தரும் கடற்கரைகுச் சென்றான்.

அந்த அலைகள் காலில் வந்து மோதும் போது கிடைக்கும் சுகம் வேறு எதிலும் வராது. அந்த அலை மீண்டும் நம் காலை விட்டுச் செல்லும் போது நம் துன்பங்கள் அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு போனது போல் மனம் ஒரு அமைதி பெரும்.

கடற்கரையின் அலாதி இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கையில் சில பெண்களின் சிரிப்புச் சத்தம் அவனை ஈர்த்தது.

சத்தம் வந்தா திசையை நோக்க அங்கு தன் தோழிகளுடன் அலைகளில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள் சிவகர்ணிகா.

அவளைப் பார்த்ததும் ஏதோ நெடு நாள் பழகிய நண்பனைப் பார்த்தது போல அகமும், முகமும் மலர்ந்தது சிவநந்தனுக்கு.

ஆனால் தோழிகள் புடை சூழ இருக்கும் அவளிடம் என்னவென்று பேசுவது!. ஒரு எம். டி இப்படி சென்று பேசுவது முறையாக இருக்காது என்று எண்ணி சற்று தள்ளி அமர்ந்து அவளை வேடிக்கைப் பார்க்க, இல்லை இல்லை ரசிக்கத் தொடங்கினான்.

பெண்கள் பட்டாம்பூச்சி போல் என்பது உண்மையோ என்று தோன்றியது அவனுக்கு. சிறகுகள் இல்லாமலே பறப்பது போல் இருக்கிறது என்று எண்ணினான்.

சிறிது நேரத்தில் அவனைப் பார்த்து விட்ட சிவகர்ணிகா அவனைப் போல் யோசிக்கவெல்லாம் இல்லை. நேராக அவனிடம் வந்தாள்.

ஹாய் என்று கூறியவள் அவள் தோழியரிடம் அவனை அறிமுகம் செய்தாள்.

தான் செய்யத் தயங்கிய விஷயத்தை அவள் தயங்காமல் செய்ததின் மூலம், ஒரு பெண்ணுக்கு இருக்கும் தைரியம் கூட தனக்கு இல்லையே என்று வெட்கமாக இருந்தது அவனுக்கு.

இவர்களுக்கு தனிமை கொடுத்து அனைவரும் விலகிச் செல்ல,

என்ன சார் தனியா வந்திருக்கீங்க என்றாள்.

தனியா வந்திருக்கேன்னா, கூட வர்றதுக்கு யாரும் இல்லனு அர்த்தம் என்றான்.

எப்ப பாரு சிடு சிடுன்னு இருந்தா யாரு வருவா?

ஏன் இப்ப நீ வரலையா பேச!

எல்லாரும் இந்த சிவகர்ணிகா மாதிரி நல்லவளா, பெருந்தன்மையா இருக்க முடியுமா சொல்லுங்க!

ஆனாலும் வெக்கமே இல்லாம இப்படி உன்னை பத்தி நீயே பேசிக்கிற பாரு என்று சிரித்தான் சிவநந்தன்.

சரி நாங்க எல்லாரும் டின்னர் வெளியே போறோம். நீங்களும் வரிங்களா என்றாள்.

ஐயோ. இத்தனை லேடீஸ் கூடவா? என்னால முடியாது என்று அலறினான்.

அது சரி! நீங்க எல்லாம் எலைட் பீப்பிள். எங்க கூட சாப்பிடுவீங்களா! 5 ஸ்டார் ஹோட்டல்ல பெரிய மாடல் கூடத்தான் சாப்பிடுவீங்க என்றாள் சிவகர்ணிகா.

5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுற அளவுக்கு பணம் இருந்தாலும் கூட வர ஒரு பொண்ணும் இல்லை. அதான் உண்மை.

அடடா இதுக்குத்தான் கவலை படுறீங்களா? இப்ப என்ன 5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட துணைக்கு ஆள் வேணும் அவ்ளோ தானே! நான் வரேன் கிளம்புங்க என்று அசால்ட்டாக கூறினாள் சிவகர்ணிகா.

ஹேய்! என்ன சொல்ற நிஜமாவா? இல்லை சும்மா விளையாடுறியா? என்று அதிர்ந்தான் சிவநந்தன்.

அட நாங்க விளையாடி முடிச்சிட்டோம். உங்க கிட்ட தனியா விளையாட எனக்கு நேரம் இல்லை. சீக்கிரம் வாங்க இப்ப ஆர்டர் குடுத்தா தான் எல்லாம் நிதானமா சாப்பிடலாம் என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர் பாராது அவள் தோழியரிடம் சென்று ஏதோ பேசியவள், அவர்களை அனுப்பி விட்டு இவனிடம் வந்தாள்.

போகலாமா என்றாள்.

இன்னும் திகைப்பில் இருந்து மீளாத அவன், தலையை மட்டும் ஆட்டியப்படி அவளை காரில் ஏற்றினான்.

பிரபலமான ஐந்து நட்சத்திர உணவகத்திற்குள் சென்றவர்கள் டேபிளில் அமர்ந்தனர்

முதல் முறை இங்கு வந்த ப்ரம்மிப்பு அவள் கண்களை விட்டு அகலவில்லை. சின்ன குழந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல் சுற்றி சுற்றி பார்த்தவள், அடுத்தவர்கள் சாப்பிடும் உணவையும் பார்த்தாள்.

உணவு ஆர்டர் எடுக்க ஆள் வர,

சிவகர்ணிகா! உனக்கு என்ன வேணுமோ சொல்லு. கூச்சப்படாத என்றான் சிவநந்தன்.

ஏது!நான் கூச்சப்படுறனா? இந்த சப்பாட்டை வாழ் நாள் முழுக்க மறக்க முடியாதபடி சாப்பிட பிளான் பண்ணிருக்கேன். சும்மா காமெடி பண்ணிக்கிட்டு என்று நினைத்தவள்,

ஓகே சார் என்று கூறிவிட்டு

ரெண்டு இட்லி என்றாள்.

அவன் வியப்பாக பார்த்து, "என்ன! இட்லி யா? வேற எதுவும் வேணாமா? வீட்ல சாப்பிடற அதே இட்லி போதுமா என்றான்!

ஹாஹாஹா எசுரு சிரித்தவள்,

சார் உங்களுக்கு எல்லாம் சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பிடுற ஸ்டார்டர், கோபி மஞ்சுரியன், பனீர் 65, கோபி 65 இப்படி. எங்களுக்கு ஸ்டார்டரே இட்லி தான். அதான் முதல்ல வரும். யோசிக்கிற நேரம் கூட சாப்பிட்டுக்கிட்டே யோசிக்கலாம்.
என்று கூறி முடிப்பதற்குள் இட்லி வர அடுத்து அடுத்து ஆர்டர் செய்தாள்.

அவள் சாப்பிடுவதைப் பார்த்தே அவனுக்கு வயிறு நிரம்பி விடும் போல.

சரியாக அந்த நேரத்தில் நந்தன் அலுவலகத்தில் சி. இ. ஓ வாக இருக்கும் மகேஷ் தான் மனைவியுடன் வர, இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு தயங்கி நின்றான்.

குட் ஈவினிங் சார். இது என் மனைவி. இன்னிக்கு பிறந்தநாள் அதான் சின்ன ட்ரீட் என்றான்.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் இப்படி ஹோட்டலில் அமர்ந்து இருப்பது இருவருக்குமே சங்கடத்தை தர,

அதை புரிந்து கொண்ட மகேஷ்,

சார். விடுமுறை நாட்கள்ல அலுவலகம் இல்லாத வேலைக்கு நீங்க விளக்கம் தர தேவை இல்லை சார் என்றான்.

இதுவும் அபிசியல் தான். அலுவலக சம்மந்தம் தான். அது என்னனு நாளைக்கு சொல்றேன் என்று கூறினான் சிவநந்தன்.

சிவகர்ணிக்கவும் குழம்பி போனாள். என்ன செய்யப் போகிறான் இவன்?
 

Kalijana

Member
😍😍😍MEME-20220921-125557.jpg
 

Attachments

 • MEME-20220921-010143.jpg
  MEME-20220921-010143.jpg
  233.7 KB · Views: 0
 • MEME-20220921-011852.jpg
  MEME-20220921-011852.jpg
  288.8 KB · Views: 0
 • MEME-20220921-012926.jpg
  MEME-20220921-012926.jpg
  371.6 KB · Views: 0
 • MEME-20220921-013856.jpg
  MEME-20220921-013856.jpg
  333.3 KB · Views: 0
 • MEME-20220921-014739.jpg
  MEME-20220921-014739.jpg
  359.6 KB · Views: 0
 • MEME-20220921-020944.jpg
  MEME-20220921-020944.jpg
  334.6 KB · Views: 0
 • MEME-20220921-022039.jpg
  MEME-20220921-022039.jpg
  227.9 KB · Views: 0
 • MEME-20220921-022624.jpg
  MEME-20220921-022624.jpg
  222.9 KB · Views: 0
 • Picsart_22-09-21_02-46-11-107.jpg
  Picsart_22-09-21_02-46-11-107.jpg
  310.8 KB · Views: 0
Top