எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவளே இவளே! இவளே அவளே! கதை திரி

Status
Not open for further replies.

Sriraj

Moderator
வணக்கம் தோழமைகளே!

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்நன்நாளில் நான் ஒரு புது கதையின் முன்னோட்டத்துடன் வந்துள்ளேன்.

கதை எப்படி எப்போது ஆரம்பிப்பேன் மற்ற இதர தகவல்கள் எல்லாம் விரைவில்.

இன்று ஓர் சிறிய முன்னோட்டம் மட்டுமே.


அவளே இவளே! இவளே அவளே!


முன்னோட்டம்: 01


அதிகாலை வேளை உதயன் உதிக்கும் நேரமதில் அவ்வீட்டின் பெண்மணி தன் வீட்டிற்கு லட்சுமியை அழைக்க காலை சம்பிரதாயமாய் கோல மாவும், வாளி, துடைப்பத்தோடு வெளியே வந்தாள்.


வாசற்படியில் காலை வைற்றியவள் காலில் ஏதோ பட.. என்னவென்று கீழே பார்க்க..

"ஆஆஆஆஆ..." என விலென்று கத்தினாள்.

அப்படி அவள் என்ன தான் கண்டாள்..

அங்கு அவள் கண்டது அவளின் சிமந்த புத்திரனின் உயிர் இருந்தும் சடலமாய் கிடந்தவனை.

"எய்யா சாமி! உனக்கு என்னாச்சு ப்பா.. நான் என்ன பண்ணுவேன்.. என் மகன் இப்படி ஒரு கோலத்தில் பார்க்க என்னாலையே சகிக்க முடியலை.. கண்ணா.." தாயவள் கதற..

அவள் பெரும் சத்தத்தில் அவ்வீட்டின் உறுப்பினர்கள் அங்கு கூடினர்.

"ஏய்! என்னடி ஆச்சு.. இப்படி காலங்கார்த்தால பேய் மாதிரி கத்திக்கிட்டு இருக்க.. அறிவிருக்காடி உனக்கு.." என அவ்வீட்டின் தலைவர் கத்த..

"யோவ் என்கிட்ட கத்தாத.. முதல்ல நீர் இங்க வந்து பாரும் அப்புறம் பேசும்." என அவரின் மனைவி ஏச..

"இவ என்னத்த சொல்றா.." என வந்தவர் கண்டது தன் ஆருயிர் மகனின் அக்கோலத்தை.

"ஆஆஆ.." என ஆண் ஆன அவருமே அலறி விட்டார் அவ்வளவு அழகனாய் இருந்தான் அவரின் அருமை மகன்.

*************"வணக்கம்.
இன்று அதிகாலை நாதன் குரூப்ஸ் சேர்மனின் மகன் சந்தோஷ் அகோரமாய் சிதைந்து அவர்களின் வீட்டின் வாசலில் கிடந்தார்.

அவரின் மகன் உயிர் பிழைப்பாரா மாட்டாரா என மருத்துவர் எதுவும் கூற முடியா நிலையில் இருக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்..

சந்தோஷை யார் அப்படி பண்ணியது? ஒரு வளர்ந்த தொழிலதிபரின் மகனை இவ்வாறு செய்ய காரணம் என்ன?

அவரின் தொழில் போட்டியாளர்களின் பகையா? இல்லை வேற ஏதாவது காரணமா?

தொடர்ந்து பாருங்கள் A one தொலைகாட்சியை.. என செய்தி வாசிப்பாளர் தங்களுக்கு கிடைத்த செய்தியை கொண்டு டிஆர்பியை ஏத்தி கொண்டனர்.

அதை அலட்சியமாக பார்த்தது ஒரு ஜோடி கண்கள். அக்கண்களில் தான் எத்தனை சிவப்பு.. மிளகாய்யை அள்ளி பூசியது போல் கண்ணின் நிறம் சொன்னது அவ் உருவத்தின் சினத்தை.

சினம் கொண்ட வேங்கையாய் கர்ஜிக்கும் அரிமாவாய் தன் இறையை வேட்டையாடியது இன்னும் போதாது என்றே கூறிற்று.

"ஸாகிஹீர்.." என அக்குரல் ஆக்ரோஷமாய் வெளி வர..

"ஜி.." என வந்தான் ஸாகிஹீர்.

"The Hunts starts now.Lets begin the next shot." என தன் அடுத்த இறையை வேட்டையாட சிலிர்த்து கொண்டு நின்றது அவ்வுருவம்.

**********

"ஆஆஆ..அப்பத்தா.. இப்போ எதுக்கு என்னைய கொட்டுன்ன.. சும்மா சும்மா அடிச்சிட்டே இருக்க.. இப்ப நான் என்ன பண்ணேன்னு அடிச்ச.. ஹான்.." என பதின் வயது பெண்ணவள் தன் அப்பத்தாவிடம் சண்டைக்கு செல்ல..

"ஹான்.. எதுக்கு அடிச்சேன்னா.. பின்னே சும்மா ஒரு இடத்து நிக்காம இங்குட்டும் அங்குட்டும் ஓடிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம். வயசு பொண்ணு மாதிரியா இருக்க.. சும்மா ராக்கோழியாட்டம் சுத்திட்டே இருக்குறது.." என அவர் நொடிக்க..

"நான் ஒண்ணும் ராக்கோழியாட்டம் சுத்துறது கிடையாது. நீ தான் அப்படி சுத்துற பாரு இப்போ கூட தோட்டத்துக்கு போற.." என வாயாட..

"ஏய்! நான் உங்க தாத்தாக்கு சாப்பாடு கொண்டு போறது உனக்கு சுத்துறதாட்டம் தெரியுதாடி.." என அவரும் எகுற..

"போ..அப்பத்தா நீ பொய் சொல்ற.." என அதுக்கும் நொரநாட்டியம் பண்ண..

"அத்தை அவ அப்படி தான் தெரியும்ல.. நீங்க போய் மாமாக்கு சாப்பாட்டு கொடுத்துட்டு வாங்க.. அவர் பசியோடு இருப்பாரு.. அப்புறம் வந்து இவகிட்ட பேசுங்க.." என அவர் மருமகள் கூற..

"அதுவும் சரி தாண்டி ஆத்தா. இவகிட்ட பேசுன்னா என்ற புருஷர் தான் பசியோட இருபாக.. நான் போயிவாறேன்.." என்று விட்டு இவ்வயதிலும் தானே தன் கணவனுக்கு சாப்பாடு எடுத்து சென்றார்.

"ஏண்டி! அத்தையை அப்படி சொல்லைன்னா உனக்கு தூக்கம் வராதோ.. சும்மா ஏட்டிக்கு போட்டி பேசிட்டே இருக்க வேண்டியது.." என தாயவளும் நொடிக்க..

"எம்மா.. சும்மா இரும்.. அது எனக்கும் அவங்களுக்கும் உள்ளது. நீ தலையிடாத.." என தாயையும் விட்டு வைக்காது வாயாடி விட்டு சென்றாள் அவள்.

"என்ன தான் பண்றதோ இந்த சின்னதை வச்சிக்கிட்டு.. எப்ப பாரு யார் கிட்டையாவது ஓரண்டை இழுத்துட்டே இருக்க வேண்டியது." என அவர் பெருமூச்சு விட்டு தன் வேலைகளை பார்க்க சென்றார்.

அவளின் இவ்வாயாடலும் புள்ளிமான் போல் திரிவதும் ஒரு நாள் அல்ல ஒரு நாள் அவளின் வாழ்வையே சூணியமாக்கும் என இன்று அக்குமரியவள் அறியவில்லை!

அறியும் நேரம் அனைத்தும் கைமீறி சென்றிருக்கும் என விதியை தவீர வேறு எவரால் கூற இயலும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

இங்கு யாரால் ஆவர் யாரால் அழிவார் என அவ்வாடலரசனை தவீர வேறு யார் அறிவரோ.

மனித வாழ்வின் பொம்மலாட்டம் அவ்வாடலரசனின் ஆட்டத்தில். இனிதே தொடங்கியது பொம்மலாட்டம்.

********

 

Sriraj

Moderator
கதையின் முன்னோட்டத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இக்கருத்து திரியில் கூறுங்கள்.👇👇👇

Thread 'அவளே இவளே! இவளே அவளே! - கருத்து திரி' https://www.narumugainovels.com/index.php?threads/அவளே-இவளே-இவளே-அவளே-கருத்து-திரி.10409/

உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி ஆவலாய் நான்.

அன்புடன்

நல்லிசை நாச்சியார்.
 
Status
Not open for further replies.
Top