எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்மூடி திறக்கும் போது - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
அவசரமாகக் காரை நிறுத்தி விட்டு மின்தூக்கியை நோக்கி நகர்ந்தாள் அனு. வெளியே பார்க்க அமைதியாக இருந்தாலும் அவள் கண்களில் கோபக் கனல் எரிந்து கொண்டு இருந்தது.

மின்தூக்கி வந்ததும் உள்ளே சென்று தன்னுடைய வீடு இருக்கும் தளத்திற்கான எண்ணை அழுக்கினாள். அவளுடைய தளம் வந்ததும் தன்னுடைய கைப்பையில் இருக்கும் வீட்டுச் சாவியைத் தேடி எடுத்துக் கொண்டே மின்தூக்கியை விட்டு வெளியேறினாள். சாவியை வைத்துக் கதவைத் திறக்க முயன்ற போது சாவி உள்ளே செல்ல மறுத்தது.

'ஓஹோ நீ உள்ள தான் இருக்கியா உன்ன இன்னைக்கு சும்மா விட மாட்டேன்டா' என மனதில் நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு, கணவன் அறையில் தான் இருப்பான் என்று அங்கே சென்றாள். கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் ஹெட்செட் (headset) போட்டு படம் பாக்கும் கணவனை முறைத்துப் பார்த்தாள் பெண்.

வந்த கோபத்திற்குக் கைப்பையைக் கணவனை நோக்கி வீசினாள். திடீரென்று தான் மேல் என்ன விழுந்தது என்று புரியாமல், தன்னையே முறைத்துப் பார்க்கும் மனைவியை என்ன ஆயிற்று இவளுக்கு என்று யோசித்தான்.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? நீங்க என்ன செஞ்சாலும் அமைதியா இருப்பேனு நினைச்சிட்டீங்களா? மாட்டேன்.. இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். உங்கள இப்படி விட்டது என் தப்பு. பொண்டாட்டி நான் ஒருத்தி இருக்கும் போதே இப்படி பண்ணுவிங்களா? உங்கள சும்மா விட மாட்டேன்” என்று சொல்லி கணவனை நெருங்கி அவன் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் வைத்தாள்.
வாழ்த்துக்கள் பேபி புது ஆரம்பம் நல் ஆரம்பம் ஆகட்டும்
 

jeeona

Moderator
டீஸர் 1

அவசரமாகக் காரை நிறுத்தி விட்டு மின்தூக்கியை நோக்கி நகர்ந்தாள் அனு. வெளியே பார்க்க அமைதியாக இருந்தாலும் அவள் கண்களில் கோபக் கனல் எரிந்து கொண்டு இருந்தது.

மின்தூக்கி வந்ததும் உள்ளே சென்று தன்னுடைய வீடு இருக்கும் தளத்திற்கான எண்ணை அழுக்கினாள். அவளுடைய தளம் வந்ததும் தன்னுடைய கைப்பையில் இருக்கும் வீட்டுச் சாவியைத் தேடி எடுத்துக் கொண்டே மின்தூக்கியை விட்டு வெளியேறினாள். சாவியை வைத்துக் கதவைத் திறக்க முயன்ற போது சாவி உள்ளே செல்ல மறுத்தது.

'ஓஹோ நீ உள்ள தான் இருக்கியா உன்ன இன்னைக்கு சும்மா விட மாட்டேன்டா' என மனதில் நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு, கணவன் அறையில் தான் இருப்பான் என்று அங்கே சென்றாள். கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் ஹெட்செட் (headset) போட்டு படம் பாக்கும் கணவனை முறைத்துப் பார்த்தாள் பெண்.

வந்த கோபத்திற்குக் கைப்பையைக் கணவனை நோக்கி வீசினாள். திடீரென்று தான் மேல் என்ன விழுந்தது என்று புரியாமல், தன்னையே முறைத்துப் பார்க்கும் மனைவியை என்ன ஆயிற்று இவளுக்கு என்று யோசித்தான்.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? நீங்க என்ன செஞ்சாலும் அமைதியா இருப்பேனு நினைச்சிட்டீங்களா? மாட்டேன்.. இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். உங்கள இப்படி விட்டது என் தப்பு. பொண்டாட்டி நான் ஒருத்தி இருக்கும் போதே இப்படி பண்ணுவிங்களா? உங்கள சும்மா விட மாட்டேன்” என்று சொல்லி கணவனை நெருங்கி அவன் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் வைத்தாள்.
 
Last edited:

jeeona

Moderator
டீஸர் 2

“இது மேல் ஒரு வார்த்தை பேசாத அனு. நான் உன்ன லவ் பண்ணுற மாறி இந்த ஜென்மத்தில யாராலையும் உன்ன லவ் பண்ண முடியாது. எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு இன்னுமா உனக்கு புரியல..? எல்லாம் எல்லாம் இதால வந்தது” என்று அவர்கள் அறையில் இருந்த புத்தக அலமாரியைக் காட்டினான்.

“நான் நீ படிக்குறத புக்ஸ், பாக்குற மூவிஸ்ஸ குறை சொல்லல, அதுல வர ஹீரோஸ் மாறி நடக்கணும்னு ஆசைப்படுறியே அது தான் தப்புன்னு சொல்லுற. இதுக்கு அப்புறமும் எனக்கு உன் மேல அன்பு இல்லன்னு சொன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கூறி கதவை அடித்துச் சாற்றி விட்டுச் சென்றான்.

————————————————
“இனிமே பயப்பட ஒன்னும் இல்ல கொஞ்ச நேரத்துல அவங்க கண் முழிச்சிடுவாங்க நீங்க போய் பாக்கலாம்” என்று மருத்துவர் சொன்னதும் அனுவைப் பார்க்க ஆதி அறைக்குள் நுழைந்தான்.

நெற்றியிலும் காலிலும் கட்டுகளுடன் மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக் கிடந்தாள் அனு. கட்டில் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து மனைவியின் கையைத் தன் கரங்களால் பற்றிக் கொண்டான். மூடி இருந்த மனைவியின் விழிகளில் அசைவு தெரிந்தது. அவளின் நெற்றியில் மென்மையாக இதழை ஒற்றி எடுத்தான்.

மெல்லக் கண்களைத் திறந்த அனு கணவனின் முகத்தைப் பார்த்து “பயந்துடியா?” என்று மிக கமறிய குரலில் கேட்டாள். மனைவின் தலை தடவிக் கொண்டே “உயிரே போயிடுச்சு” என்றான். “மாதவன் அளவுக்கு இல்லைனாலும் பரவால நல்லா தான் சொன்ன ” என்று கூறி புன்னகைத்தாள்.
 

jeeona

Moderator
டீஸர் 3

“அனு உண்மையாவே உனக்கு சமைக்க தெரியுமா..?” என்று தட்டிலிருந்த வெண்ணெய் பூசிய ரொட்டியைப் பார்த்து அவளிடம் கேட்டான்.

“ ஏன் இப்படி கேக்குறீங்க? அது எல்லாம் நல்லா தான் சமைப்பேன். வேணுமுன்னா உங்க செல்லத்துக்கிட்ட கேட்டுக்கோங்க” என்றவள் உள்ளே சென்று தனக்கும் தட்டை எடுத்து வந்தவள் ஆதிக்கு எதிரில் அமர்ந்தாள்.

“இல்ல.. நானும் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாளா பாக்குறேன் நீ காலையில பிரட் தான் குடுக்குற, இந்த தோசை இட்லி இது எல்லாம் சாப்பிட மாட்டியா” என்றவன் ரொட்டியைச் சாப்பிடத் தொடங்கினான்.

“நேத்து நைட் என்ன சொன்னீங்க? உனக்காக நான் என்ன வேணுமுன்னாலும் செய்வேன் சொன்னிங்களே, அது எல்லாம் பொய்யா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

‘அடிப்பாவி நைட் ரொமான்டிக்கா இருக்கட்டுமேன்னு பேசினத எல்லாம் இப்ப உனக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்க பாக்குறியா? இனிமேல் உன்கிட்ட பாத்து தான் பேசணும்’ என்று மனதிலே நினைத்தவன் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தான்.

“ஒகே அனு எனக்கு லேட் ஆகுது” என்று கூறி கையைக் கழுவி வந்தவன் மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்து கதவை நோக்கிச் சென்றான்.

கதவின் பிடியில் கையை வைத்தவன் திரும்பி மனைவியை பார்த்து “நைட் ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா பேபி?” என்று எதிர்பார்ப்போடு கேட்டான்.

“ஆமா.. பிரட் வாங்கிட்டு வாங்க” என்று அனு சொன்னதும் 'ஆளை விடும்மா சாமி' என்று ஓடிவிட்டான்.
 

jeeona

Moderator
அத்தியாயம் 1

அதிகாலை வேளையில் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் வாயிலில் ஆதித்யன் வெட்ஸ் அனுராதா (Adhithyan Weds Anuradha) என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பலகையில் எழுதியிருந்தது.

வாசலிலேயே சிரித்த முகமாகவே அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் செந்தில்நாதன். அவர் முகத்திலிருந்த சிரிப்புக்கு காரணம் இன்று அவருடைய ஒரே மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

செந்தில்நாதன் அன்பானவர் அனைவரையும் சமமாக நடத்துபவர். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் கடந்து இந்த திருமண மண்டபத்தை இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர் இப்பொழுது சென்னையில் மூன்று மண்டபங்களின் உரிமையாளராக மாறி இருக்கிறார். தான் முதலில் ஆரம்பித்த இந்த திருமண மண்டபத்திலேயே தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்த நினைக்கும் காரணம் இந்த மண்டபத்துக்கும் அவர் மகள் அனுவுக்கும் ஒரே வயது.

மகளின் திருமணத்தைப் பற்றி எப்பொழுதுமே பெற்றோருக்கு கனவுகள் உண்டு. தன் ஆசை மகளுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்த செந்தில் மண்டபத்தை சுற்றி பார்வை செலுத்தியவர் கடைசியாக மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு பட்டு வேட்டியில் கம்பிரமாக அமர்ந்து இருக்கும் தன் வருங்கால மாப்பிள்ளையைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தார்.

“என்னங்க என்ன மணமேடைய பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கீங்க?” என கணவரைப் பார்த்துக் கேட்டார் கவிதா.

“இல்லம்மா சும்மா தான் டெகரேஷன்ஸ் எல்லாம் எப்படி இருக்குனு பாத்துட்டு இருக்குறன்” என்றவரை, அப்படியா? என்று ஓர் நம்பா பார்வை பார்த்தார்.

மனைவி தன்னை நம்பவில்லை எனப் புரிந்ததும் உண்மையை கூறினார் அவர், “இல்ல மா மாப்பிள்ளை பத்தி மத்தவங்க பேசுறதை கேக்கும் போது அவளோ சந்தோஷமா இருக்கு என் பொண்ண..” என சொல்ல வந்தவரை மனைவி முறைத்துப் பார்த்ததும் தன் தவறைத் திருத்திக் கொண்டு, “நம்ம பொண்ண ஒரு நல்லவர் கிட்ட ஒப்படைக்கிறத நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு கவி” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர் கண் கலங்கியது.

“ஆமாங்க.. எனக்கும் சந்தோஷம் தான். சரி சின்ன பையன் மாதிரி கண் கலங்காம வாங்க மீரா உங்கள கூப்பிடுறா” என்று கணவரிடம் கூறி அவரை திசைதிருப்பினார்.

கைக்குட்டையால் கண்களை துடைத்த செந்தில் கவிதாவின் சித்தப்பா மகள் மீராவைத் தேடிக் கிளம்பினார்.

கணவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்த கவிதா முகூர்த்த நேரம் நெருங்குவதை உணர்ந்து மகளைக் காண விரைந்தார்.

அறையில் அடர் சிவப்பு வண்ண முகூர்த்தப் பட்டு உடுத்தி மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் மகளை ரசித்துக் கொண்டே கண்ணாடி மேசை முன் அமர்ந்து இருந்தவளை நெருங்கி நின்று “ என் கண்ணே பட்டிடும் செல்லம்.. அவ்வளோ அழகா இருக்க” என்று கூறி நெட்டி முறித்தார்.

அனு கண்ணாடியில் தெரிந்த அன்னையின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தவள் அறையின் வாசலில் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

“பெரியம்மா.. அக்காவ அழைச்சிட்டு வர சொல்லி ஐயர் சொன்னாரு” என்று வந்து அழைத்தாள் தேன்மொழி, மீராவின் மகள். மகளை அழைத்துக் கொண்டு வந்து மணமேடையில் அமர வைத்த கவிதா கணவரின் அருகில் நின்று கொண்டார்.

தன் அருகில் அமர்ந்திருந்த ஆதியை மெல்லத் திருப்பிப் பார்த்த அனு ‘எப்படி இந்த கல்யாணம் நடக்குதுனு எனக்கே தெரியல. இதோ என் பக்கத்துல இருக்ககுறவன இப்ப தான் மூணாவது வாட்டி பாக்குறன். எல்லாம் இந்த அம்மம்மாவால வந்தது’ என்று முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அம்மம்மாவை மனதுக்குள் திட்டிக் கொண்டு ஆதித்யன் உடனான தன் முதல் சந்திப்பைத் தான் நினைத்துப் பார்த்தாள்.

இரண்டு மாதங்களுக்கு முன் -

காபி ஷாப்பிற்கு வந்து அன்னை கொடுத்த எண்ணிற்கு பல முறை அழைத்தவள் யாரும் எடுத்த பாடு இல்லை என்றதும் கண்களை மூடி சிந்தித்துக் கொண்டிருந்தாள் அனு.

கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலேபாட்டு சத்தத்தில் கண்ணை விழித்தவள் பார்த்தது ஆதி முகத்தைத் தான். "ஐ அம் சாரி நீங்க வந்தத பார்க்கல.. ஐ அம் அனுராதா" என சிரித்த முகமாக தன்னை அறிமுகம் செய்தாள். “நோ இஸ்ஸுஸ் நான் ஆதித்யன்” என அவனும் பதிலுக்குக் கூறினான்.

‘இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்சதுக்கு சாரி கேப்பான்னு பார்த்தா.. இவன் நான் சாரி சொன்னதுக்கு நோ இஸ்ஸுஸ்ன்னு சொல்லுறான்.. இத வச்சே அப்பாகிட்ட உன்னை பிடிக்கலன்னு சொல்லுறேன் பாரு..’ என்று நினைத்தவள், பேச ஆரம்பிக்கவும் உடனே அனுவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பை ஏற்றாள், அந்த பக்கம் என்ன சொன்னார்களோ பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அனுவுடைய கண்கள் கண்ணீர் சொரிந்தன. என்ன நடந்தது என புருவத்தை உயர்த்தி ஆதி வினவ "எமெர்ஜென்சி ஐ ஹவ் டு லீவ்"(emergency I have to leave) என்றவள் அவன் பதிலுக்கு சொல்ல வருவதைக் கேட்காமல் காரைக் கிளப்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டுக்குள் வந்தும் “அம்மா.. அம்மா.. எங்க இருக்கிங்க?” என்று அழைத்துக் கொண்டே அம்மம்மாவின் அறை நோக்கிச் சென்றாள். கட்டிலில் சோர்வாக படுத்துக் கிடந்த அம்மம்மாவின் அருகே நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கி “இப்ப எப்படி இருக்காங்க.. எப்படி விழுந்தாங்க?’’ என்று வினவினாள்.

காலையில் அனு கிளம்பிய பிறகு குளியலறையில் விழுந்தவரைத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவர்கள் மருத்துவருக்கு அழைத்தனர். மகளை நச்சரித்து பேத்தியை வீட்டுக்கு சீக்கிரம் வரவைக்கச் சொன்னார். அவரின் நச்சரிப்புத் தாங்காமல் கடைசியாக மகளை அழைத்து விட்டார் கவிதா. மருத்துவர் சோதித்துப் பார்த்து பெரிய அடி ஒன்றும் இல்லை எனக் கூறி ஓய்வு எடுத்தால் போதும் என்றார். அவர் சென்று ஐந்து நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிட்டாள் அனு.

நடந்த அனைத்தையும் தாய் சொன்ன பின்பு அப்பாவியாக முகத்தை வைத்திருந்த பாட்டியை முறைத்துப் பார்த்தாள். “ கவிதா பாரு புள்ள களைச்சு போய் வந்திருக்கு எனக்கும் அனுக்கும் ஜூஸ் எடுத்திட்டு வா” என்று மகளை வேலை சொல்லி அந்த இடத்தை விட்டு துரத்தினார் அனுவின் அம்மம்மா செல்வி.

அம்மா அறையை விட்டு செல்லும் வரை காத்து இருந்துவள் “உண்மையாவே கீழ விழுந்தீங்களா..? எதுக்கு இப்படி பண்ணுணிங்க..? சொல்லுங்க அம்மம்மா” என்று கோவமாகக் கேட்டாள் அனு.

இதுக்கு மேல் பொய் சொன்னால் பேத்தி விட மாட்டாள் எனப் புரிந்து, 'இல்லை' என்று தலையை ஆட்டி உண்மையைச் சொல்லத் தொடங்கினார்.

“ அனு குட்டி.. மாஸ்டர்ஸ் கால்யாணம் பண்ணிட்டு கூட படிக்கலாம்டா. நான் உயிரோட இருக்கும் போதே உன்னோட கல்யாணத்த பார்க்கணும்னு ஆசைப்படுறன்டா.. அம்மம்மாக்காக கால்யாணத்துக்கு சம்மதம் சொல்லு செல்லம்” என்று பேத்தியிடம் கெஞ்சி கேட்டார்.

அனுவுக்கு சின்ன வயதில் இருந்து அம்மம்மா என்றால் உயிர். அவர் தன்னிடம் இப்படி கெஞ்சிக் கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வாள். அம்மம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “சரி நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுறன். இந்த கேவலமா ஐடியாவ அந்த தேன் தானே குடுத்தா” என்று கேட்டதுக்கு ஆமாம் என தலை அசைத்தார்.

சரியாக அந்த நேரம் “அம்மம்மா ஜூஸ்” என்று அறையில் நுழைந்தாள் தேன்மொழி. அக்காவைப் பார்த்தும் எதுவும் தெரியாதவள் போல “அக்கா இங்க என்ன பண்ணுற, அத்தானை பார்க்க போகல?” என்று கேட்டவளை அடிக்கத் துரத்தினாள் அனு. வீட்டை சுற்றி ஓடி கடைசியாக வசமாக அனுவிடம் சிக்கிக் கொண்டாள் தேன்மொழி.

தங்கையின் காதைத் திருகியவள் “ அம்மம்மாக்கு ஐடியாவா கொடுக்குற..? அவங்க ஹெல்த்தோட விளையாடாத. உண்மையா அடிபட்டிருந்தா என்ன பண்ணி இருப்ப?” என்று கோபமாகக் கேட்டாள்.

“சாரி க்கா, அம்மம்மா தான் ஏதாச்சும் ஐடியா சொல்ல சொன்னாங்க அதுதான். இனிமே இப்படி பண்ண மாட்டேன் “ என்று காதைப் பிடித்து மன்னிப்புக் கேட்பவளை மன்னித்தாள் அனு.

தேன்மொழி, சித்தியின் மகள் என்றாளும் தன் சொந்த தங்கையாவே நடத்துவாள் அனு. ஒரு அக்காவாக பாசத்தையும் கண்டிப்பையும் காட்ட அவள் தவறியதே இல்லை. தேன்மொழி கூட அனுவை தன் சொந்த அக்காவாகவே பார்த்தாள்.

“சரி நானே இன்னும் கன்ஃப்ர்ம் பண்ணல அதுக்குள்ள என்ன அத்தான் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட என்ன விஷயம்?” என்று தங்கையைக் கேட்டாள்.

“இல்ல கா.. அவருக்கும்.. அப்பாவுக்கும்.. (அனுவின் சித்தப்பா) ஒரே பெயரா அதனால தான்” என்று சொன்ன தங்கையை “அடிப்பாவி” என்று மறுபடியும் அடிக்கத் துரத்தினாள்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த அனு ஆதித்யனைத் திரும்பிப் பார்த்தாள். தன்னைப் பார்த்து புன்னகைக்கும் ஆதியிடம் பதிலுக்கு தானும் புன்கைத்தாள். சரியாக அந்த தருணத்தில் போட்டோகிராஃபர் அதை அழகாக படம் பிடித்தார்.

ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று மாங்கல்யத்தை ஆதியின் கையில் கொடுத்தும் மங்கள வாத்தியம் முழங்க பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு மாங்கல்யத்தை அனுவுக்கு அணிவித்து அவளை தன்னுடைய சரிபாதி ஆக்கினான்.
 
Last edited:

jeeona

Moderator
அத்தியாயம் 2

கழுத்திலிருந்த மாங்கல்யத்தை பார்த்த அனு எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. திரும்பி பெற்றோரையும் அம்மம்மாவையும் பார்த்தவள் அவர்கள் முகத்திலிருந்த மகிழ்ச்சியைக் கண்டதும் அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

குங்குமத்தை மனைவியின் நெற்றி வகிடிலிட்டதும் அவளுடைய முகத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தவனைப் பின்னாடி இருந்து சுரண்டினான் பிரவின். ஆதியின் உயிர்த் தோழன்( பல நேரங்களில் உயிரெடுக்கும் தோழன்).

“என்னடா..?” என்று கடுப்பாகத் தன் மனைவியைப் பார்க்கவிடாமல் தொல்லை செய்யும் நண்பனை எரிச்சலோடு கேட்டான். “மச்சான் தங்கச்சிக்கு அப்படியே நெத்தியில ஒரு கிஸ் கொடு டா” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தான்.

“டேய்.. அவ கையக் கூட புடிச்சது இல்ல டா. இப்ப கிஸ் பண்ணினா என்ன நினைப்பா? மரியாதையா வாய முடிட்டு நில்லு” என்றான் ஆதி.

‘நெத்தியில் கிஸ் கொடுக்கவே யோசிக்கிறான் இவனுக்குப் போய் பொண்ணு கொடுத்து இருக்காறே இந்த புண்ணியவான்’ என்று மனதில் நினைத்தவன், தனக்கு எதிரில் இருந்த செந்தில்நாதனைப் பார்த்துப் புன்னகைத்தான் பிரவின்.

மணமக்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின் திருமண சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறி முடிந்தது.

காலையிலிருந்து திருமணத்துக்காக விரதம் இருந்ததால் ஆதிக்கும் அனுவுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. இருவரின் முகத்தைப் பார்த்தே பசியில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ஆதியின் தாயார் மீனாட்சி பிள்ளைகளை உணவருந்த அழைத்து சென்றவர், இருவருக்கும் தேவையான உணவைப் பரிமாற வைத்துப் பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டார்.

“சார் மேடமுக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க ஃபோட்டோ எடுக்கணும்” என்று ஃபோட்டோகிராஃபர் சொல்ல அனுவின் பக்கம் திரும்பி ஆதி உணவை அவள் வாய் அருகில் கொண்டு வர சங்கடமாக இருந்தாலும் உணவை ஊட்ட வாங்கிகொண்டாள் அனு.

“அனு நீயும் ஊட்டி விடுமா” என்று மீனாட்சி கூறவும் அனு ஆதியின் வாய் அருகே உணவைக் கொண்டு சென்ற நேரம் பந்தியில் உணவு பரிமாறிக் கொண்டிருந்த நபர் கால் தடுக்கிக் கீழே விழ எல்லோர் கவனமும் அந்தப் பக்கம் திரும்பியது.

அந்தக் குழப்பத்தில் ஆதிக்கு ஊட்டுவதை அனைவரும் மறந்து விட்டார்கள். சரியாக அந்த நேரம் பிரவின் வந்து ஆதியின் மற்ற பக்கம் இருந்த காலியான இருக்கையில் அமர்ந்தவன் ஆதியின் இலையிலிருந்த வடையை எடுத்து “வட போச்சே” என்று சொல்லி அவனைக் கடுப்பாக்க ‘எல்லாம் என் நேரம்’ என்று அமைதியாக இருந்தான்.

நேரமாகக் கூட்டம் குறைந்து இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தம் மட்டுமே மண்டபத்தில் எஞ்சி இருந்தனர். அனுவின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து கவலை வந்து குடிகொண்டது. அம்மம்மாவின் கையை பிடித்துக் கொண்டு மண்டபத்தில் ஓரமாக அமர்ந்து இருந்தாள்.

கவிதா வந்து மகளைக் கண்டதும் அவளின் நிலமை நன்றாகப் புரிந்தது. எல்லாப் பெண்களுக்கும் திருமணம் முடிந்து பெற்றோரைப் பிரிந்து செல்லும் தருணம் மிகக் கொடுமையான ஒன்று என்று அவரும் அறிவார். அனுவின் மனநிலையை மாற்ற தன்னால் முயன்ற வரை முயற்சி செய்தார்.

வீட்டுக்கு நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று மருமகளை அழைக்க வந்த மீனாட்சி அனுவை அழைத்துச் செல்ல அவர்களின் பின்னோடு அம்மம்மாவும் கவிதாவும் சென்றனர்.


வாசலில் வாகனம் பக்கத்தில் ஆதியுடன் உரையாடிக் கொண்டு இருந்த தந்தையை நெருங்கிய அனு, அவரை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.

“செல்லம் ஏன்டா நல்ல நாள் அதுவுமா அழுற? நாங்க எல்லாரும் வந்து உன்னை அடிக்கடி பாத்துக்குவம் அப்புறம் என்ன டா..? கண்ணத் துடை. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணுறாங்க ..போயிட்டு வா மா” என்று மகளைத் தேற்றி வாகனத்தில் ஏற்றினார்.

வாகனத்தின் மறுபுறம் ஆதி ஏறியதும் வண்டி கிளம்பியது. வாகனத்தின் கண்ணாடியைக் கீழே இறக்கி, தன் மொத்த குடும்பத்தையும் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தவளின் கையின் மேல் தன் கையை வைத்து ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் ஆதி. அந்த நேரத்தில் அவளுக்கு அந்த ஆறுதல் மிகவும் தேவையாக இருந்தது.

வாகனம் மண்டபத்திலிருந்து மறைந்ததும் எல்லாருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

தேன்மொழியையும் மீராவையும் ஆதியின் குடும்பத்தினரோடு அனுவுக்கு துணையாக அவர்கள் இல்லத்துக்கு வழியனுப்பி விட்டு மண்டபத்திலிருந்து வீடு செல்ல ஆயத்தமானார்கள் அனுவின் குடும்பத்தினர்.

வாசலில் ஆரத்தி சுற்றி மணமக்களை உள்ளே அழைத்துச் சென்றார் மீனாட்சி. பூஜை அறையில் அனுவை விளக்கேற்ற வைத்து சாமி கும்பிட்டு, தம்பதியினருக்குப் பால் பழம் சாப்பிட வைத்து மீதம் உள்ள சம்பிரதாயங்களை நடத்தி முடித்ததும் இருவரையும் ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தார்கள்.

அனுவுக்கு உதவியாக மீராவும் தேன்மொழியும் அவளுடனே கீழ் அறையில் தங்கிக் கொண்டனர். ஆதி மாடியில் இருக்கும் தன் அறையில் ஓய்வு எடுக்கச் சென்றவன் அப்படியே அசதியில் உறங்கிவிட்டான்.

கவலையாக இருந்த அனுவை சிரித்துக் கதை பேசியே சாதாரணமாக மாற்றினாள் தேன்மொழி. மதிய உணவை அனு தங்கி இருந்த அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார் மீனாட்சி.

“என்ன சுந்தரம் மருமக வீட்டுக்கு வந்ததுல இருந்து கண்ணுலயே கட்டலையே ப்பா? சாப்பாட்டக் கூட உன் பொண்டாட்டி மருமக ரூம்கே தூக்கிட்டுப் போய் சேவகம் பண்ணிட்டு இருக்கா. ஆரம்பத்திலிருந்தே கண்டிப்பா இருக்கணும் ப்பா. இல்லன்னா நாளப்பின்ன நம்மள மதிக்க மாட்டாங்க யா. பார்த்து சூதானமா நடந்துக்க சொல்லு உன் பொண்டாட்டிய” என்று வயதில் மூத்த சொந்தகார பெண்மணி இது தான் சந்தர்ப்பம் என அவருடைய அறிவுரையை அருவியாகத் திறந்துவிட்டார்.

“எங்களுக்கு இருக்குறது ஒரே மகன். அவன் பொண்டாட்டி எங்களுக்கு மருமக மட்டும் இல்ல மகளும் கூட. அவளை நாங்க கவனிக்காம யாரு கவனிப்பாங்க? இன்னொரு வாட்டி இப்படி எங்க வீட்டுப் பொண்ணப் பத்தி பேசாதிங்க ம்மா”என்று மருமகளுக்காகப் பரிந்து பேசினார் சுந்தரம்.

இவை அனைத்தையும் சமையலறையில் கையை கழுவ வந்த அனுவின் காதில் தெளிவாகக் கேட்கவும் மாமனாரின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது.

அனு வெளியே செல்ல கிளம்பும் போது ஆதி எதிரே வந்து நின்றான். தனிமையில் மனைவியைக் கண்டதும் என்ன பேசுவது என்று புரியாமல் “சாப்பிட்டியா?” என்று கேட்டான். ஆம் எனும் விதமாகத் தலையை அசைத்தாள் அனு. ‘அத வாயை திறந்து சொன்னா தான் என்ன?’ மனதில் நினைத்துக் கொண்டு மனைவி வெளியே செல்ல வழியை விட்டான்.

ஆறு மணியளவில் மீனாட்சி அவர் கையில் புதுப் புடவை, நகைப் பெட்டியோடு அறையில் நுழைந்தார். “அனு இங்க வா ம்மா. இது எங்க அத்தை எனக்குக் கொடுத்த நகை. இத இப்ப உனக்கு கொடுக்குறேன். இனி இது உன்னோடது சரியா? பத்திரமா வச்சிக்கோ” என்று அனுவிடம் நகைப் பெட்டியை ஒப்படைத்தவர் “இந்த சாரிய அனுக்கு கட்டிவிடுங்க. பத்து மணிக்கு நல்ல நேரமுன்னு ஜோசியர் சொன்னாரு. நான் சொந்தகாரங்கள கவனிச்சு அனுப்பிட்டு வாரன். அதுக்குள்ள நீங்க சாப்பிட்டு அனுவ பொறுமையா ரெடி பண்ணுங்க” என்று மீராவிடம் கூறிவிட்டு புடவையைக் கட்டிலில் வைத்து விட்டுச் சென்றார்.

ஒன்பதரைக்கே அனுவைத் தயார் செய்து இருந்தார் மீரா. சாப்பிட்டதுமே கட்டிலில் படுத்துத் தூங்கிவிட்ட தேன்மொழியைக் கண்டதும் ‘டைம் ஆக ஆக பயமா இருக்கே. பேசாம சின்ன பொண்ணாவே இருந்து இருக்கலாம். இவளை மாறி நிம்மதியா தூங்கி இருக்கலாம்’ என்று மனதுக்குள் புலம்பினாள் அனு.

மீரா அனுவை அறையை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்ததும் சமையலறையில் இருந்து பெரிய டம்ளரில் பால் எடுத்துக் கொண்டு வந்த மீனாட்சி அதை அனுவின் கையில் கொடுத்து “நீயும் ஆதியும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்மா” என்று அவளின் தலையைத் தடவிக் கூறினார்.

ஆதியின் அறையின் வாசலில் வந்து நின்றவள் உள்ளே செல்வோமா வேண்டாமா எனப் பட்டிமன்றமே மனதுகுள் நடத்திக் கொண்டு இருந்தாள் அனு.

திடீர் என அறைக் கதவு திறந்து கொண்டது. “விடிய விடிய இப்படியே நிற்க போறியா? இல்ல உள்ள வரியா..?” என்று ஆதி கதவில் சாய்ந்து நின்று கேட்டவன் உள்ளே சென்றான்.

தயங்கியபடியே கட்டிலில் அமர்ந்து இருந்த ஆதியின் அருகே வந்து நின்றவள் கையிலிருந்த டம்ளரை “பால்” என்று நீட்டினாள்.

“ஆமா.. பால்.. அதுக்கு இப்ப என்ன..?” என்று கேட்டான் அவளை வம்பிளுக்கும் விதமாக.

“அத்தை கொடுக்க சொன்னாங்க..”

“ஓஹோ.. வேற என்ன சொன்னாங்க உங்க அத்தை?”

“வேற ஒன்னும் சொல்லலையே..”

“கால்ல விழ சொல்லலையா உங்க அத்தை?”

இல்லை என்று தலையை ஆட்டியவளை பார்த்தவன் அருகில் அமருமாறு கட்டிலைத் தட்டிக் காட்டினான். ஆதி அமர்ந்து இருக்கும் இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி அமர்ந்தவள் 'அடுத்து என்ன கேட்க போறானோ?' என்று அவன் முகத்தை பார்த்தாள்.

அன்று காபி ஷாப்பில் கண்ட அனுவுக்கும் இன்று தன் எதிரில் இருப்பவளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த ஆதி அவள் பயத்தில் இருக்கின்றாள் என்று புரிந்து கொண்டான்.

“சரி.. நீ தூங்கு இந்த முதலிரவு எல்லாம் நம்ம வீட்ட போய் பார்த்துபோம்” என்று கூறினான்.

“அப்ப நம்ம இங்க இருக்க மாட்டமா?” என்று கணவனைக் கேட்டாள்.

“இல்ல நமக்குனு தனியா பிளாட் பார்த்து வச்சிருக்கேன். இந்த வீக்கெண்ட் அங்க போயிருவோம் சோ கப்போர்டல எல்லாம் டிரஸ் வைக்காத.. ஒகே” என்று விளக்கப் படுத்தியவன் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டான்.

அனுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வர, போர்வையைப் போர்த்திப் படுத்ததும் உடனே உறங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் படுத்த ஆதி உறங்கும் மனையாளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளை பார்த்தபடியே தானும் உறங்கிப் போனான்.
 
Last edited:

jeeona

Moderator
அத்தியாயம் 3

காலையில் கண்விழித்த அனு அலைப்பேசியை எடுப்பதற்காக கட்டிலின் அருகில் இருக்கும் மேசையை கண்ணை மூடி கொண்டே தடவினாள். கையில் கணமான பொருள் சிக்கவும் என்ன என்று எடுத்து கண்ணை திறந்து பார்த்ததும் “ ஐயோ.. அம்மா..” என்று கத்தினாள்.

“அனு என்ன ஆச்சு ஏன் கத்துற?” என்று குளியலறையிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட இடையில் துண்டை கட்டிக்கொண்டு வந்து நின்றான் ஆதி.

கணவனை இந்த கோலத்தில் பார்த்ததும் கையிலிருந்ததை தூக்கி போட்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

மனைவின் செயல்களை கண்டு புரியாமல் குழம்பியவன் “அனு என்ன ஆச்சு உனக்கு? முதல் கத்தின.. இப்ப என்னடானா கண்ண முடுற என்ன பிரச்சனை உனக்கு?” என்று எரிச்சலான குரலில் கேட்டான் ஆதி.

“நீங்க.. முதல்ல டி சர்ட் போட்டுட்டு வாங்க” என்று அனு கூறியதும் தான் ஆதிக்கு அவள் ஏன் கண்களை மூடினாள் என்று புரிந்தது.

அவளை பார்த்து சிரித்து கொண்டே குளியலறையில் எடுத்து வைத்திருந்த உடையை அணிந்து வந்தவன் “சரி இப்ப சொல்லு ஏன் கத்தின?” என்றான்.

“அது.. கன் பார்த்த பயத்தில கத்திட்டேன்” என்று சொன்னவளை யோசனையோடு பார்த்தவன் அவள் தூக்கி போட்ட துப்பாக்கியை எடுத்தான்.

“இது எப்படி உன் கிட்ட வந்துச்சு?” என்று துப்பாக்கியை பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அது.. ஃபோன்.. எடுக்க கண்ண மூடிட்டு தேடினேனா அப்போ இது தான் கையில கிடைச்சுச்சு” என்று அசடு வழிய சொன்னாள் அனு.

“உன் ஃபோன் என்னோட சைடு டேபிள்ல தேடினா எப்படிக் கிடைக்கும்?”என்று புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும் தான் இரவு வலது பக்கம் படுத்து இருந்ததும் இப்போது இடது பக்கத்தில் இருப்பதும் புரிய மறுபடியும் அசடு வழிந்தாள்.

“சரி லேட் ஆகுது ரெடி ஆகிட்டு கீழ வா” என்று கூறியவன் துப்பாக்கியை அலமாரியில் வைத்துவிட்டு அறையின் கதவை சாத்திவிட்டு சென்றான்

“லேட் ஆகிடிச்சா..? டைம் என்ன ஆச்சு..?” என்று வாய்விட்டு புலம்பியவள் நேரம் பத்து மணி எனக் கடிகாரத்தில் கண்டதும் விரைந்து பெட்டியில் இருக்கும் தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறையினுள் புகுந்தாள்.

கீழே ஹாலுக்கு வந்த ஆதி செய்தித்தாள் படித்தபடி காஃபி பருகும் தந்தைக்கு அருகில் அமர்ந்து அலைபேசியைப் பார்க்கத் தொடங்கினான்.

“குட் மோர்னிங் அத்தான்” என்று சிரித்த முகமாக தேன்மொழி ஆதி முன் வந்து நின்றவள் அவனுக்கு எதிரிலிருக்கும் ஒற்றை சோபாவில் உட்கார்ந்தாள்.

“குட் மோர்னிங்.. சாப்பிட்டியா?” என்று கேட்டவன் அலைபேசியை தனக்கு அருகில் இருக்கும் கண்ணாடி மேசையில் வைத்துவிட்டு அவளுடன் உரையாடத் தொடங்கினான்.

சமையலறையிலிருந்து இரண்டு கப் காஃபிகள்ளோடு வந்த மீரா மகளுக்கும் ஆதிக்குக் காஃபி கப்கள்ளை கொடுத்தவர் மகளின் காதை திருகி,

“ஹே வாயாடி காலையில உன் வேலைய ஆரம்பிச்சிட்டியா? போய் இந்த காபிய உங்க அக்கா கிட்ட கொடுத்திட்டு கோவில் போக ரெடியாக சொல்லு” என்றவர் திரும்பி,

“தம்பி அப்புடியே நீங்களும் ரெடியாகுங்க” என்று ஆதியிடம் கூறியவர் மறுபடியும் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

“தேனு அந்த காஃபிய என்கிட்ட கொடு நான் போய் கொடுக்குறன்” என்றவன் காஃபி கப்களை மாடியில் அவன் அறைக்கு எடுத்து வந்து அனுவுடைய காபியை மேசையில் வைத்தவன், “அனு உன் சித்தி உன்ன கோவில் போக ரெடியாக சொன்னாங்க.. உன் காஃபி டேபிள்ல இருக்கு மறக்காம குடி” என்று குளியலறையில் இருக்கும் மனையாளிடம் கூறி மொட்டை மாடிக்கு சென்றான்.

குளித்து தலையில் துண்டோடு வந்த அனு தலையைத் துவட்டியவள், ஆறிப் போன காஃபியைக் குடித்து கொண்டே அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள்.

விசாலமான அறையில் பெரிய கட்டில் அதன் இரண்டு பக்கமும் பக்கமேசை இருந்தது. கட்டிலுக்கு மேல் ஆதியின் அழகிய புகைப்படமும் அவளின் இடது பக்கம் கண்ணாடி மேசை கூடிய சுவர் அலமாரி இருந்தது. கண்ணாடி மேசையில் கீழ் இருக்கும் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தவள், முக ஒப்பனை செய்யத் தொடங்கினாள்.

பெட்டியில் இருக்கும் மஞ்சள் வண்ணப் பட்டும் அதுக்கு பொருத்தமான நகைகளை எடுத்தவள் தயாராகினாள்.

படியில் கீழ் இறங்கி வந்தவளைக் கண்ட மீனாட்சி,,“ரெடி ஆகிட்டியா மா.. இரு உனக்கு பூ எடுத்துட்டு வரேன்” என்றவர் காலையில் வாங்கிய மல்லிகைப்பூவைக் கொண்டு வந்து அனுவின் தலையில் வைத்துவிட்டார்.

“அக்கா கொஞ்சம் எனக்கு இந்த காஜல் போட்டு விடு” என்று வந்த தேன்மொழி அவளைக் கையோடு அழைத்து சென்றாள்.

மாடியில் இருந்து அறைக்கு வந்த ஆதி தானும் தயாராகி படியில் தாவி இறங்கியவன் ஹாலில் அனுவை கண்டதும் சிலையென நிற்க, கணவனின் பார்வையை உணர்ந்தவள் திரும்பி பார்த்து ‘என்ன’ என்று புருவத்தை உயர்த்தினாள் அனு. நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன் தந்தையின் அருகில் வந்து நின்றான்.

அனைவரும் கிளம்பி இரண்டு கார்களில் முருகன் கோவிலுக்கு வந்து சேரந்தனர். சாமியை தரிசித்து விட்டு அனுவின் வீட்டுக்கு மறுவீடு விருந்துக்கு எல்லோரும் வந்தடைந்தனர்.

சாப்பாடு மேசையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் நிரம்பி வழிந்தது.

ஆதி உணவில் அசைவப் பிரியர். காலை உணவுக்கு கூட இட்லியும் மீன் குழம்பும் சாப்பிடும் ரகம்.

மருமகனுக்கு பிடித்தமான உணவுப் பதார்த்தங்கள் இலையில் காலியாகவும் பார்த்துப் பார்த்து பரிமாரிய கவிதாவை கண்ட அனுவுக்கு காதில் புகை வராத குறை.

வந்ததும் ஆரவாரமாக வரவேற்ற அன்னையும் தந்தையும் தன்னை கண்டுகொள்ளாமல் மருமகனைக் கவனிக்றார்களே என்ற சிந்தனையில் உழன்றவள் ஆதியைப் பார்த்துக் கொண்டே சாப்பாட்டை பிசைந்து கொண்டு இருந்தாள்.

“அக்கா மாமாவ சைட் அடிச்சது போதும்” என்று கூறிய தங்கையின் தலையில் வலிக்கக் கொட்ட வேண்டும் போல இருந்தது அனுவுக்கு.

விருந்து உபசாரம் முடிந்ததும் பெரியவர்கள் ஒன்றாக சேர்ந்து கதை ஊர் உலக நடப்பு பேசினர். ஆதி அலைபேசியில் வேலையாக இருந்தவன் அது முடிந்ததும் பெரியவர்களுடன் அமர்ந்து அவர்கள் உரையாடலைக் கவனித்தான்.

“மாப்பிள்ள.. திரும்ப கேக்குறனேன்று நினைக்காதிங்க ஒரு நாள் இருந்துட்டு போங்களேன்” என்றார் செந்தில்.

“இல்ல மாமா.. கஷ்டம் நாளைக்கே வேலைக்கு போக வேண்டி இருக்கு. கொஞ்சம் வேலை மிச்சம் இருக்கு. சிக்கிரமே தங்குற மாறி வர முயற்சி பண்ணுறேன்” என்றான் ஆதி சமாதானப்படுத்தும் விதமாக.

“நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் அனுவ பார்த்துட்டு வாரன்” என்று கூறியவன் அனுவைத் தேடிச் சென்றான்.

அனுவின் அறையின் வாசலில் நின்ற ஆதி, அவள் கட்டிலில் அம்மம்மாவின் மடியில் தலை வைத்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவர்களின் பேச்சை கேட்கத் தொடங்கினான்.

“அனு மாப்பிள்ள எல்லார்கிட்டையும் பாசமா நடத்துகிறாரு இல்லமா.. என்கிட்ட கூட சாப்பிட்டிங்களா கேட்டாரு” என்று அம்மம்மா சொன்னதும் அனுவும் அறையில் இருந்த தேன்மொழியும் வெடித்துச் சிரித்தனர்.

பேத்திகள் ஏன் சிரிக்கிறார்கள் என்று புரியாமல், “ஹே இப்ப என்ன சொல்லிட்டேன்னு இரண்டு பேரும் இப்படி விழுந்து விழுந்து சிரிக்குறிங்க?” என்று கேட்டார்.

“அக்கா நீ சொல்லுறியா இல்ல நான் சொல்லட்டுமா?” என்றாள் தேன்மொழி சிரிப்பை அடக்கியபடி.

“இல்ல நானே சொல்லுறன். அம்மம்மா உங்க மாப்பிள்ள கால்யாணம் முடிஞ்சதும் வீட்டில வெச்சு சாப்பிட்டியா தான் என்கிட்ட கேட்டாரு. அடுத்த நாள் தேனு கிட்டையும் அதே தான் கேட்டு இருக்காரு” என்று விளக்கியவள் மறுபடியும் கைகளை அடித்துச் சிரித்துக் கொண்டாள்.

“அது என்ன பேசுறன்னு தெரியுமா அப்படி கேட்டு இருக்கு தம்பி அதுக்கு இப்படியா சிரிக்கிறது? உண்மையாவே நல்ல பையன்” என்றவர் வாசலில் ஆதி நிற்பத்தை அப்பொது தான் கண்டார்.

“அம்மம்மா எனக்கு அத்தானை பிடிக்கும் சும்மா விளையாட்டுக்கு கேலி பண்ணோம்” என்று அவரிடம் கூறி அவர் பார்வை செல்லும் இடத்தை நோக்கியவள் அனுவைத் தட்டி வாசலில் ஆதி நிற்பதைக் காட்டினாள்.

நிலைமையை கையில் எடுத்த அம்மம்மா “தம்பி வா ப்பா உள்ள. சின்ன பிள்ளைகள் ஏதோ தெரியாம பேசிட்டாங்க” என்றவர் ஆதியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்து அனுவின் அருகில் உட்கார வைத்தார்.

“நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க பாட்டி. நம்ம ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்துப்போமா?” என்று கேட்டவன் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள, அனுவும் தேனும் என்ன நடக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

மாலையாக ஆதியின் வீட்டார் கிளம்பத் தயாராகி வாசலுக்கு வந்தனர்.

வீட்டினர் அனைவரையும் அணைத்து அனு விடைபெற போக “அக்கா மண்டபத்தில் அழுத மாறி மறுபடியும் ப்ளீஸ் அழுதிடாத” என்று தேனு அனுவை காலாட்டா செய்யவும் உதட்டை சுழித்தவள் காரின் முன் இருக்கையில் ஆதியின் அருகில் அமர்ந்தாள்.

வாகன நெரிசலில் வீடு வந்து சேரும் வரை காரில் அளந்த மௌனம் நிலவியது.

வீட்டுக்கு வந்ததும் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றியவள் வெளியே வர ஆதி அறையில் உடைமாற்றுவதைக் கண்டு திரும்பி நின்றாள்.

“பரவல ஒரே நாள்ல இம்ப்ரூவ் ஆகிட்ட” என்று காதுக்கு அருகில் ஆதியின் குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள் நேரே ஆதியின் முகத்தைப் பார்த்து இரண்டு அடி பின்னே நகர்ந்து நின்றாள்.

“என்ன..? என்ன இம்ப்ரூவ் ஆகிட்டேன் சொல்லுங்க” என்று உள்ளே உதறல் எடுத்தாலும் வெளியே தைரியமானவள் போல் காட்டிக் கொள்ள அவன் விழிகளை நேராகப் பார்த்து கேட்டாள்.

“காலையில் கண்ண மூடின இப்ப திரும்பி நிக்குற அதை சொன்னேன்” என்றவன் அவள் கையைப் பிடித்தவன் கட்டிலில் உட்கார வைத்து எதிரில் தானும் அமர்ந்தான்.

பிடித்த கையை விடாமல் ஆதி இருக்கவும் அவன் முகத்தையும் கையையும் மாறி மாறிப் பார்த்தவள் ஏதோ பேச போகிறான் என்று புரிந்து கொண்டாள்.

தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தவன் “நான் இப்ப நம்மள பத்தி பேசணும்னு நினைக்குறேன். நான் டிபார்ட்மெண்ட்ல டி எஸ் பி யா இருக்கேன்னு உங்க வீட்டுல உனக்கு சொல்லி இருப்பாங்க. நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில தான். உன்னோட பேரெண்ட்ஸ் நேட்டிவ் கூட அது தான்னு தெரியும். காலேஜ்ல இன்ஜினியரிங் சென்னைல தான் பண்ணேன். அப்புறம் ஐ பி ஸ் எக்ஸாம் ,போஸ்டிங், ட்ரான்ஸபர், பிரோமோஷன் அப்படியே லைப் போயிடிச்சு. லவ் ரிலேஷன்ஷிப் எதுவும் இருந்தது இல்ல. அதுக்கெல்லாம் டைமும் கிடைக்கல அது தான் உண்மை. அம்மா தான் உன்ன ஒரு கல்யாணத்துல பார்த்தாங்க அப்பவே அவங்களுக்கு உன்ன ரொம்பப் புடிச்சுருச்சு. அப்புறம் உன்னோட வீட்டுல பேசி இப்ப கல்யாணமும் முடிச்சது” என்று தன்னைப் பற்றி சுருக்கமாகக் கூறி முடித்தான்.

“நான்..” என்று அனு ஆரம்பிக்கவும் “இரு.. இரு நான் இன்னும் முடிக்கல” என்றவன் தொடர்ந்து பேசினான்.

“நீ பி ஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு இருக்க. இப்ப ஒரு கம்பெனில ஒர்க் பண்ணுற, ஆனா உனக்கு ஒர்க் பண்ண புடிக்கல சும்மா போர் அடிக்குதுன்னு பண்ணிட்டு இருக்க. உனக்கு ஒரு காஃபி ஷாப் ஸ்டார்ட் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு தான் வேலைக்குப் போய் காசு சேக்குற. நீ பிறந்ததுக்கு அப்புறமா தான் உங்க அப்பாவுக்கு எல்லாமே நல்லதா நடக்க ஆரம்பிச்சது.உனக்கு உன்னொட அம்மம்மான்னா உயிர் அவங்க சொன்னா என்ன வேண்ணாலும் நீ செய்வ. இப்ப இந்த கல்யாணம் கூட அவங்க ஆசைப்பட்டாங்கன்னு பண்ணிகிட்ட. உனக்கு ரஜனின்னா ரொம்ப புடிக்கும், ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு தான் கேப்ப.. சரியா?” என்று கேட்டதும் பிரமித்து போய்விட்டாள்.

“இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவள் ஆச்சரியமாக அவனை பார்க்க,

“இத விட இன்னும் நிறைய தெரியும்..” என்றவனின் அலைபேசி சத்தம் எழுப்பவும், “இம்போர்ட்டண்ட் கால் பேசிட்டு வரேன். நீ கீழ போய் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இரு” என்றபடி அலைபேசி அழைப்பை எடுத்தான்.

குழப்பமான மனநிலையில் அறையை விட்டு படியில் கீழ் இறங்கி வந்தாள்.

அத்தை மாமாவோடு இரவு நேரத்தை செலவிட்டவளின் பார்வை அடிக்கடி மாடியைத் தொட்டு மீண்டது.

நேரம் ஆக பெரியவர்களுக்கு சாப்பிட்டதும் உறக்கம் வரவும் அவர்களை அறைக்கு சென்று உறங்க சொன்னவள் ஆதிக்கு தண்ணீர் மற்றும் பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.

இரவு பதினோறு மணி அகிய பின்னும் இன்னுமும் பால்கனியில் அலைபேசி அழைப்பில் இருப்பவனைக் கண்டதும் ஒரு காகித்தை எடுத்து குறிப்பு ஒன்றை எழுதியவள் உறங்கச் சென்றாள்.

ஒரு வழியாக அலைபேசியை வைத்தவன் அறைக்குள் வரவும் தூங்கும் மனைவியைக் கண்டவன் கதவை மூடச் சென்றவனின் காண்ணில் மேசையில் இருந்த காகிதம் தென்பட்டது.

கையில் அதை எடுத்து வாசித்தான், “ரொம்ப லேட் ஆச்சு இப்ப போய் சப்பிடாம இதை சாப்பிட்டு படுங்க. மிச்சம் வைக்காம சாப்பிடுங்க சரியா?” என வாசித்தவனின் முகத்தியில் புனமுறுவல் தோன்றியது. அவள் எழுதி இருந்ததை செய்து மூடித்தவன் அளந்த உறக்கத்தில் இருக்கும் மனையாளை கட்டி அணைத்தபடி உறங்க தொடங்கினான்.
 
Last edited:

jeeona

Moderator
அத்தியாயம் 4

மாடியில் காலை உடற்பயிற்சிகளை முடித்த ஆதியின் பனியன் மொத்தமும் வியர்வையில் குளித்திருந்தது.

கீழே அறைக்கு வந்தவன் கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குபவளைக் கண்டதும், அறையின் திரைச்சீலைகளைத் திறந்துவிட்டான்.

வெளிச்சம் கண்களில் படவும் தூக்கம் கலைந்தும் கலையா நிலையில் கண்களை இறுக மூடிக்கொண்டு மற்றப் பக்கம் திரும்பிப் படுத்தாள் அனு.

அவள் செயல்களைக் கண்டு சிரித்தவன் குளிக்கச் சென்றான்.

காவல் சீருடையில் தாயாராகியவனின் புஜங்கள் இரண்டும் கட்டுமஸ்தாக காட்சியளிக்க ஆண்மையின் இலக்கணமாகவே இருந்தான் அவன்.

தூக்கம் கலைந்த நிலையில் அனுவுக்கு அறையில் சத்தம் கேட்கவும் கண்கள் திறந்தவள் கணவனை சீருடையில் முதல்முறை கண்டதும் அவளையும் அறியாமலே வஞ்சனையில்லாமல் அவனை சைட் அடித்தாள்.

கண்ணாடியைப் பார்த்து மீசையை முறுக்கி விட்டுக்கொண்டவன் கண்ணாடி ஓரத்தில் அனு அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது தெரியவும் அவன் உதட்டில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

‘ஓஹோ.. புருஷனை சைட் அடிக்குறியா.. வாரன் இரு ’ என நினைத்தவன் திரும்ப, பார்வையை மாற்றிக் கொண்டு அப்பொழுது தான் எழுந்தவள் போல பாவ்லா செய்தாள் அனு.

கட்டிலில் நெருங்கி வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

“என்னை சைட் அடிக்க லைசன்ஸ் வச்சுகிட்டு இப்படி நீ ஒளிஞ்சு பாக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு..? போலீஸ்காரன் பொண்டாட்டியா இருந்துட்டு எதுக்கு இந்த திருட்டுத்தனம்” என்றவன் அவள் முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டு அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து அவளை இறுக்கிக் கட்டி அணைத்தான்.

அவன் கட்டி அணைப்பான் என்று எதிர்பார்க்காதவள் மருண்டு விழிக்க அவளிடம் இருந்து விலகியவன் சட்டை கசங்கியிருக்கிறதா பார்வையிட்டான். தன் குளிர் கண்ணாடியைக் கண்களில் மாட்டியவன் உற்சாகமாக வேலைக்குக் கிளம்பிவிட்டான்.

அவன் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவளின் சிந்தனையை மாமியாரின் குரலில் கலைக்கவும் தயாராகி கீழே சென்றாள்.

“வா மா அனு.. காஃபியா இல்ல டீ குடிக்குறியா?” என்று கேட்கும் மாமியாரைக் கண்டதும், வாழ்வில் மாமியார் என்ற உறவைப் பற்றி தனக்கு இருக்கும் கணிப்புகள் கூட சில நேரம் பொய்த்துப் போகும் எனப் புரிந்து கொண்டாள்.

“காஃபி.. ” என்று கூறியவளுக்கு கப்பில் காஃபி கொண்டு வந்தவர் அவள் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

“அனு உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லும்மா நானும் தெரிச்சுப்பன் இல்ல” என்று அவர் சொன்னதும் ‘உங்க மகன் கிட்ட கேழுங்க அத்தை அக்குவேறா ஆணிவேறா சொல்வார்’ மனதிற்குள் சொன்னவள் தன் விருப்பு வெறுப்புகளைக் கூறி அவருடையதையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

கையில் செய்தித்தாளுடன் வீட்டிக்குள் நுழைந்த சுந்தரம், “என்னம்மா மாமியாரும் மருமகளும் சிரிச்சு பேசிட்டு இருக்கிங்க.. சொன்னா நானும் சிரிப்பேனே” என்றார்.

“சும்மா தான் பேசிட்டு இருக்கோம் மாமா” என்றவளின் மறுபக்கம் அமர்ந்தவர், பேச்சில் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

இனிமையாக பழகும் மாமா அத்தையோடு பேச ஆரம்பித்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

பதினோறு மணியளவில் சுந்தரம் அவர் நடத்தும் சூப்பர் மார்கட்டுக்கு செல்ல, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை கடையில் வேலை செய்யும் பையனிடம் குடுத்து அனுப்பினார்.

மதிய உணவை தயாரிக்க மீனாட்சி சமையல் வேலையை ஆயத்தப்படுத்த அனுவும் அவருக்கு உதவி செய்தாள். சமையல் மூடிந்ததும் இருவரும் இணைந்தே உணவருந்தினர்.

காலையில் இருந்து தன்னுடனே இருக்கும் மருமகளிடம் ஓய்வு எடுக்க அறைக்கு செல்வதாக கூறியவர் அவளையும் அறைக்கு சென்று ஓய்வு எடுக்கச் சொன்னார்.

அறைக்கு வந்த அனு அலைபேசியை எடுக்கவும் தோழிகளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கண்டவள் அவர்களுக்கு கான்ஃபெரென்ஸ் அழைப்பை எற்படுத்தினாள்.

அனுவுக்கு பள்ளியில் இருந்து நெருக்கமான தோழிகள் சோனிகா, மெலனி இருவர் மட்டுமே. சந்தோஷமோ துக்கமோ வீட்டில் இருப்பவர்களுக்கு அடுத்து அவர்களிடம் மட்டுமே பகிரும் பழக்கம் கொண்டவள்.

“மேடம் எங்கள நியாபகம் இருக்கா?” என்று சோனிகா, மெலனி இருவரும் ஒன்று போல கேட்க, சிரித்து மலுப்பினாள் அனு.

“மெலனி ஒருத்தி கல்யாணம் பண்ணவே அவ்ளோ பயந்தா இப்ப என்னடான்னா ஒன்னும் தெரியாத மாறி பேசுறா. புருஷன் வந்ததும் பிரண்ட்ஸ் எல்லாம் மறந்துட்டா” என கூறி சோனிகா குறைப்பட்டுக் கொண்டாள்.

மெலனியும் சோனிகா சொன்ன கூற்றை ஆமோதிக்க, “நானே குழப்புத்தல இருக்கேன். இதுல நீங்க ரெண்டு பேரும் என்ன வச்சு செய்யாதீங்கடா” என்றவள் நேற்று ஆதி தன்னைப் பற்றிக் கூறியதை ஒப்பித்தாள்.

அமைதியாக அனைத்தையும் கேட்ட நண்பிகளும் அனுவைப் போலவே குழம்பிப் போனார்கள்.

அனுவே தொடர்ந்து பேசினாள், “ஃபர்ஸ்ட் இது எல்லாம் கேட்டதும் நீங்களோ இல்ல தேனுவோ சொல்லி இருப்பிங்க நினைச்சேன். ஆனா காஃபி ஷாப் ஸ்டார்ட் பண்ண காசு சேக்குறது உங்க யாருக்குமே தெரியாதே. இத நினைச்சு ராத்திரி எல்லாம் எனக்கு தூக்கமே இல்ல தெரியுமா?” என்று சொன்னவளை இடைமறித்தனர் இருவரும்.

“ஹேய் அனு கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியும் சொல்லுவாங்க. உன்ன பத்தி நல்லா தெரிஞ்ச எங்க கிட்டையே பொய் சொல்லுற பாத்தியா? நீ தூங்கலையா இத நாங்க நம்பணும்..?

நீ தூங்க ஆரம்பிச்சா எட்டு மணித்தியாலம் கழிச்சு தான் உன்னை எழுப்ப முடியும். இதுல மேடம் இதை நினைச்சு நீ தூங்கலையா?” என்று கூறியவர்கள் அவள் பெருமைகளை பற்றிப் பேச,

சரியா அந்த நேரம் அலைபேசியில் வாட்ஸாப்பில் ஆதி அழைக்கவும் “அவர் கால் பண்ணுறாரு நான் உங்க ரெண்டு பேருக்கும் அப்புறம் கால் பண்ணுறேன்” என்று அனு சொன்னதும் அவளுடைய அவர் என்ற அழைப்பை கேட்டு சிரித்தபடியே அழைப்பைத் துண்டித்தனர்.

அழைப்பை ஏற்றதும் “ஹலோ அனு பிஸியா இருக்கியா? லோக்கல் கால் ட்ரை பண்ணன் லைன் எங்கேஜ்ட் இருந்தது அது தான் வாட்ஸாப்பில கால் பண்ணேன் “என்று ஆதி கேட்க,

“இல்லை.. ஃபிரண்டஸ் கூட பேசிட்டு இருந்தேன். நீங்க சொல்லுங்க. எதாச்சும் முக்கியமான விஷயமா?” என்று வினவினாள் அனு.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை, இன்னைகே ஷிப்ட்டிங் ஸ்டார்ட் பண்ணா சரியா இருக்கும்.

கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவேன் உன்

திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிடு.. ஒகே?” என்று ஆதி சொல்லவும்,

“ஒகே” என்று சுவரமே இல்லாதா குரலில் பதில் அளித்த அனு அழைப்பைத் துண்டித்தாள்.

இரண்டு மணிநேரத்துக்கு பின் ஆதியும் அனுவும் ஆதி தங்களுக்காக வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டின் வாசலில் நின்றார்கள்.

சாவியை அனுவின் கையில் கொடுத்த ஆதி அவளையே கதவைத் திறக்கக் கூறினார்.

கதவை திறந்த அனுவின் கண்கள் இரண்டும் தாமாக ஆச்சரியத்தில் விரிந்தது. எதிரில் இருந்த சுவர் முழுக்க அனுவும் ஆதியின் சிறு வயது புகைப்படங்கள் அழகாக மாட்டியிருந்தன.

அனுவின் தோளில் கையை வைத்து அழைத்து வந்தவன் வீட்டை மொத்தமும் சுற்றிக் காட்டினான்.

இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு. வீட்டுக்கு தேவையான அனைத்து தளபாடங்கள் இருந்தன. ஒரு அறையை விருந்தினருக்காகவும் மற்ற அறையை தங்களுக்கான அறை என தயார்படுத்தி இருந்தான் ஆதி.

அவர்கள் அறையில் திருமணத்தின் போது எடுத்த அந்த அழகிய புகைப்படம் கட்டிலுக்கு மேல் மாட்டி இருந்தது.

அறையை உற்றுக் கவனித்தவளுக்கு அப்பொழுது தான் விளங்கியது தந்தை வீட்டிலிருக்கும் தன் அறையை போலவே ஆதி வடிவமைத்திருந்தான் என்று.

அனைத்தையும் பார்த்தவளுக்கு கண்களில் நீர் திரண்டு இருந்தது.

“பிடிச்சிருக்கா? “ என்று மெல்லிய குரலில் ஆதி கேட்கவும்,

“பிடிச்சிருக்கு.. வீட்ட விட உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு” என்றபடி ஆதியை கட்டிக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஆதியின் சட்டையை நனைத்தது.

அனு அழுகிறாள் என்று உணர்ந்ததும் அவளின் தோளை அணைத்தவன், “அனு நம்ம வீட்டுக்கு வந்த முதல் நாள் அதுவுமா ஏன் இப்படி அழற? சந்தோஷாமா இரு பாப்போம்..” என்றவன் அவள் தலையை ஆதரவாகத் தடவினான்.

“மச்சான் கதவ தொறந்து போட்டுட்டு எங்கடா இருக்க?” என்று கத்தியபடியே வீடுக்குள் நுழைந்தான் பிரவின்.

ஆதியின் அணைப்பில் இருந்த அனு பிரவினின் சத்தத்தில் விலக “வந்துட்டான் கரடி” என்று ஆதி முணுமுணுக்க அனுவிற்கு அது தெளிவாகக் கேட்க பொங்கி வந்த சிரிப்பை மறைத்தாள்.

ஆதி நண்பனைக் காண ஹாலுக்கு வரவும் அனுவும் அவன் பின்னோடு வந்தாள்.

“டேய் என்னடா கதவை தொறந்து போட்டுட்டு இருக்க? அதுவும் சாவி கதவிலேயே இருக்கு” என்று ஆதியிடம் பேசியவன் அனுவிடம் திரும்பி, “எப்படி மா இருக்குற அனு? வீடு எல்லாம் பிடிச்சு இருக்கா? “ என்றான்.

“வீடு சூப்பரா இருக்கு அண்ணா. சாரி உங்களுக்கு குடிக்க குடுக்குறதுக்கு கூட வீட்டில எதுவும் இல்ல” என்று அனு கூறவும்.

“அதனால என்ன மா.. உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு என்னொட ரெஸ்டூரண்ட்ல ட்ரீட். அதுக்கு கூப்பிட தான் வந்தேன்” என்று பிரவின் சொன்னதும் ஆதியின் முகத்தைப் பார்த்தாள் அனு.

“ஹே.. ஏன் என்ன பாக்குற? எனக்கு எதுவும் தெரியாது.. இப்ப தான் எனக்கும் தெரியும்” என்றான் ஆதி.

கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த பிரவின் நண்பனிடம் “சரி.. கிளம்புவோமா? டிராபிக் டைம்ல இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்று கூறியதும் இருவரும் சம்மதமாக தலையசைத்தனர்.

அனு ஹாலில் இருந்த தன் பெட்டிகளை எடுத்து அறையில் வைக்கப் போக ஆதியும் பிரவினும் அவளோடு சேர்ந்து பெட்டிகளை அறையில் வைத்து கதவை மூடிக்கொண்டு ஆதியின் காரில் பயணமானார்கள்.

கடற்கரைக் காற்று முகத்தில் அடிக்க காற்றில் பறக்கும் கூந்தலை கிளிப்பினுள் அடக்கிய அனு கடல் காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள்.

மேசையின் ஒருபுறம் ஆதியும் அனுவும் அமர்ந்திருக்க மறுபுறம் பிரவினும் அமர்ந்திருந்தான்.

“ரொம்ப அழகான இருக்குல.. பீச் பக்கத்திலையே ரெஸ்டூரண்ட்?” என்றவள் அலைபேசியில் புகைப்படங்கள் எடுக்க தட்டுக்களில் உணவோடு வந்தனர் வெயிட்டர்கள்.

மேசையில் மட்டன் பிரியாணி, பிளாக் பேப்பர் சிக்கன், தந்தூரி சிக்கன், மீன் பொளிச்சது, நல்லி எலும்பு குழம்பு, கறி தோசை மற்றும் இன்னும் சில உணவுப் பதார்த்தங்களைக் கண்ட ஆதியும் அனுவும் மலைத்துப் போயினர்.

“டேய்.. எத்தனை நாள் இந்த ரெஸ்டூரண்ட் வந்து இருப்பேன் அப்ப எல்லாம் எப்போவும் நீ இப்படி என்ன கவனிச்சதே இல்லையே” என்று ஆதி போலியாக வருத்தப்பட பிரவின் ஆதியை முறைத்துப் பார்த்தான்.

“மாசத்துல பத்து நாள் இங்க தான் சாப்புடுற டெய்லி உனக்கு இப்படி சாப்பாடு போட்டா நான் கடையை மூடிட்டு போக வேண்டியது தான் “ என்று பிரவின் கூறியதும் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த அனுவுக்கு சிரிப்பு வரவும் கஷ்டப்பட்டு சமாளித்தாள்.

சாப்பாட்டின் சுவையில் மெய் மறந்திருந்தவர்கள் உணவில் கவனமாகினர்.

சாப்பிட்டு முடித்து கைகளை கழுவியவர்களுக்கு இனிப்புகள் சாப்பிட வயிற்றுக்குள் துளியும் இடமிருக்கவில்லை.

ரெஸ்டூரண்ட் முழுவதையும் பிரவின் சுற்றிக் காட்ட அனு மிகவும் ஆர்வமாக அவனிடம் நிறைய கேள்விகள் கேட்க, பொறுமையாக பதிலளித்தான்.

பலமுறை வந்த இடம் என்பதால் ஆதி இவர்கள் பேச்சில் பெரிதாக கலந்து கொள்ளவில்லை.

“அனு நான் உனக்கு இவ்வளோ நேரம் சொன்ன தகவலை வைத்து நீயே எனக்கு போட்டியா ஒரு

ரெஸ்டூரண்ட்ல ஆரம்பிக்கலாம்” என்று பிரவின் கூற, “கவலைப்படாதிங்க அண்ணா உங்களுக்கு போட்டியா ரெஸ்டூரண்ட் இல்ல காஃபி ஷாப் தான் ஆரம்பிப்பேன்” என்றவள் சிறிது நேரம் பிரவினுடன் உரையாடி விட்டு வீட்டுக்கு ஆதியோடு கிளம்பினாள்.


குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததும் வாசலில் இருக்கும் சிறிய சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் காரை நிறுத்த இருவருமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்றனர். அத்தியாவசியமான பொருட்களை வாங்கியவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
 
Last edited:

jeeona

Moderator
அத்தியாயம் 5

இருவரும் குளித்து உடைமாற்றி வந்ததும், வாங்கி வந்த பொருட்களை அடுக்கியவர்கள் ஹாலில் அமர்ந்து தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருக்க, திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருவரின் அலைபேசியும் அறையில் இருக்க, இருட்டிலிருந்த அனுவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. “ஆதி எனக்கு பயமா இருக்கு. ரூம்ல இருந்து என் ஃபோனை எடுத்து வந்து தருவிங்களா?” என்று பயம் கலந்த குரலில் கேட்டாள்.

இருட்டில் குத்துமதிப்பாக அனுவை நெருங்கியவன், அவளின் கையைப் பிடித்து,

“அனு ரெண்டு ஃபோன்லையும் சார்ஜ் இல்ல. பயப்படாதே ம்மா நான் உன் கூட இருக்கிறேன்” என்றான்.

ஆதியின் கரத்தை இறுக்கிப் பிடித்தவள் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள்.

வானத்திலிருந்த நிலவை மேகக் கூட்டம் மறைக்க, மழைத்துளி மண்ணை சேர காத்திருந்த தருணம். பெரிய இடி விழ அதன் ஒளி பால்கனி கண்ணாடியில் பட, அதைப் பார்த்ததும் ஆதியை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

அவளுடைய திடீர் அணைப்பில் தடுமாறியவன் மெல்ல அவள் முதுகைத் தடவிவிட்டான்.

தொலைக்காட்சியின் சத்தம் கேட்கவும் மின்சாரம் வந்ததை உணர்ந்தவள் கண்களைத் திறக்க, அவள் ஆதியின் அணைப்பிலிருப்பது புரிந்து அவனிடம் இருந்து விலகினாள்.

வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருக்க, அறைக்குச் செல்ல எழுந்தவளை நகரவிடாமல் அவள் கையைப் பற்றி பூப்போல தன் கைகளில் ஏந்தியவன், அறைக்குத் தூக்கிச் சென்றான்.

கணவன் அதிரடியில் வெட்கமும் கூச்சமும் போட்டி போட விழிகளை மூடினாள்.

அவள் வெட்கத்தை ரசித்தவன் மஞ்சத்தில் அவளை இறக்கி விட்டதும் அறையின் ஓரம் இருந்த பைகளை எடுத்து வந்தான்.

பையில் இருந்தை அவள் தலையில் மேல் பிடித்துக் கொட்ட ரோஜா இதழ் மழையில் நனைந்தாள் அனு.

இன்ப அதிர்ச்சியில் இருந்தவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் இதழ் கொண்டு அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் கண், மூக்கு, கன்னம் என்று படிப்படியாக இறங்கி அவள் இதழில் முத்த யுத்ததைத் தொடுக்கத் தொடங்கினான்.

ஒரு நீண்ட இதழ் முத்ததில் உருகியவளை ஆதி திடீர் என்று விலகவும் நிமிர்ந்து அவனைப் பார்ததாள், “அனு உனக்கு இதில் சம்மதம் தானே?” என்று அவன் கேட்டதும், நாணத்தோடு ஆம் என்று தலை அசைத்தாள்.

அவளின் சம்மதம் தெரிந்தும் தங்கள் உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றனர்.

காலையில் நேரத்துக்கே அனுவுக்கு விழிப்புத் தட்டவும், தன்னை இறுக்கிக் கட்டியணைத்து உறங்கும் கணவனைக் கண்டதும் நேற்று நடந்த கூடல் நினைவு வர வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. ஆதியின் முகத்தையே ரசனையாக பார்த்தவள், அவன் தலைமூடியைக் கோதிவிட்டாள்.

அறையில் அலைபேசி சத்தம் கேட்க, மேசையில் இருக்கும் கணவனின் கைபேசியை எடுத்தவள் திரையை நோக்க, “செல்லம் கால்லிங்” என்று இருந்தது.

அவள் கையிலிருந்த அலைபேசியை மேசையில் வைத்துவிட்டு தன் மேல் இருந்த ஆதியின் கரத்தை விலக்கியவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

குளித்து வெளியே வந்த அனு அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களை கண்டதும், இன்னும் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் என்ன வாங்க வேண்டும் குறித்து வைத்துக்கொண்டாள்.

நேற்று இரவு வாங்கி வந்த பாலைக் காய்ச்சியவள் நினைவு மொத்தமும் யார் அந்த செல்லம் என்பதிலேயே இருந்தது.

பின்னால் இருந்து ஆதி கட்டி அணைக்கவும், “குட் மொர்னிங்.. காஃபி குடிக்கிறிங்களா?” என்று அனு கேட்க,

அவள் தோளில் தாடையை வைத்தவன், “ ஒகே பேபி. நான் குளிச்சிட்டு வாரேன்” என்று கூறி அவள் தோளில் முத்தமிட்டவன் அறைக்குச் சென்றான்.

ஆதி குளித்து வந்ததும் காலை உணவுக்கு முட்டை சான்விச்சை இருவருமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வீட்டின் அழைப்பு மணி அடிக்க, இந்த நேரத்தில் யார் என்று யோசித்தப்படியே கதவை நோக்கிச் சென்றாள் அனு.

கதவைத் திறந்ததும் ஆச்சரியத்தில் அனுவின் விழிகள் விரிய, “சித்தப்பா நீங்க எப்போ வந்தீங்க” என்று கேட்ட அனுவிற்கு சந்தோஷத்தில் அதற்கு மேல் பேச்சு வரவில்லை. “ஏர்லி மோர்னிங் பிளைட்ல வந்தேன் டா தங்கம்.. நீ எப்படி இருக்க?” என்றார்.

“நான் நல்லா இருக்குகிறேன்” என்றவள் வாசலில் நின்றவரை கையைப் பிடித்து உள்ளே அழைத்து வர, “அக்கா, நானும் அம்மாவாவும் கூட இங்க தான் இருக்கோம். உன் சித்தப்பா பார்த்ததும் எங்களை மறுந்திட்ட” என்று குறைபட்டாள் தேன்மொழி.

சித்தப்பாவைக் கண்டது சந்தோஷத்தில் மற்றவர்களைக் கவனிக்கத் தவறியவள், தங்கையை சமாளித்து உள்ளே அனைவரையும் அழைத்து வந்தாள்.

அனுவின் சித்தப்பா வந்திருப்பது தெரிந்ததும் கைகளைக் கழுவிக் கொண்டு வந்த ஆதியைப் பார்த்த தேன்மொழி, “வாங்க அத்தான்.. ஆதித்யன் ப்ளீஸ் மீட் ஆதித்யன்” என்று தன் தந்தையை அறிமுகப்படுத்த, இருவரும் கைகுலுக்கிக் கட்டியணைத்துக் கொண்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் பிஸ்னஸ் விஷயமாக சென்றவர், அனுவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் வேலையில் அங்கே மாட்டிக்கொண்டார். ஆதியின் வீட்டில் திருமணத்தை அவசரப்படுத்த வேறு வழியில்லாமல் திருமணத்துக்கு அனுவின் குடும்பத்தினர் சம்மதம் சொல்ல, சித்தப்பா வரும் வரை ரிசப்ஷன் வைக்கக்கூடாது என்று பெற்றோரிடம் வேண்டுகோள் வைத்தாள் அனு.

வீட்டுக்கு வந்த அனைவருக்கும் காஃபி போடுவதற்காக அனு செல்லவும், அவள் பின்னோடு மீராவும் சென்றார்.

தந்தைக்கும் அத்தானுக்கும் நடுவில் தேன்மொழி அமர்ந்திருக்க, அனுவின் சித்தப்பா பேசத் தொடங்கினார்.

“ஆதி எப்படி இருக்கீங்க? உங்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம். உங்க பிஸ்னஸ் ட்ரிப் எப்படி இருந்தது?”

“எல்லாம் நல்லா இருந்தது. சாரி என்னால உங்க கல்யாணத்துக்கு வர முடியல. எப்படியாவது கல்யாணத்துக்கு வரணும்னு நானும் முயற்சி செய்தேன் ஆனால் மூடியல”

“நான் தான் சாரி சொல்லணும். எனக்கு லீவ் எடுக்குறது ரொம்ப கஷ்டம் அதனால எனக்கு லீவ் கிடைத்த டைம்ல கல்யாணத்தை சிக்கிரமா வைக்க சொல்லிட்டேன்”

“அதனால என்ன? அது தான் இன்னும் ரிசப்ஷன் இருக்கே” என்று இருவரின் உரையாடலில் இடையிட்டாள் தேன்.

“அப்பா.. அக்கா ரிசப்ஷனுக்கு எனக்கு லெஹெங்கா வேணும், அப்புறம் நம்ம எல்லாரும் ஒரே கலர்ல டிரஸ் பண்ணனும் சொல்லிட்டேன்” என்று தன் தந்தையிடம் கட்டளையிட்டாள்.

“சரி தேன் குட்டி. நீ ஆசைப்பட்ட மாறியே செய்வோம்” என்று சம்மதம் சொன்னார்.

அதே நேரம் சமயலறையில் இருந்த மீரா அனுவிடம் தன் விசாரிப்புக்களை நடத்தினார்.

“அனு மா மாப்பிள்ளை உன்கிட்ட அன்பா நடந்துக்குறாரா?” என்று கேட்க,

“சித்தி நான் சந்தோஷமா இருக்கேன். அவர் என்னை அன்பா பாத்துக்கிறார். அம்மா, அப்பா,

அம்மாம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க? ஏன் அவங்க யாரும் வரலை?” என்று விசாரித்தாள்.

“எங்களுக்கே நாங்க இன்னைக்கு உன் வீட்டுக்கு வருவோம் தெரியாதுடா, வீட்டுக்கு வந்த உடனே உன் சித்தப்பா தான் உன்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டாரு. உங்க அப்பா மண்டபத்தில் ஏதோ முக்கியமான வேலைன்னு அங்க போக, இன்னைக்கு உன்னோட அம்மாம்மா டாக்டர் அப்பாயிண்ட்மென்ட் அது முடிய பெரியம்மாவும் அக்காவும் வருவாங்க ம்மா” என்று சித்தி சொன்னதும் அவள் சந்தோஷம் இரு மடங்கானது.

ஹாலில் இருந்து காஃபியை அருந்திய பின்னர் வீட்டைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினர். அனு, ஆதியின் அறைக் கதவை மீரா திறக்க, தரையிலும் கட்டிலிலும் ரோஜா இதழ்களைக் கண்டவர் அனுவை திரும்பி பார்த்தார்.

ஆதி உறங்கிக் கொண்டு இருந்தனால் அறையை சுத்தம் செய்யாமல் விட்ட மடத்தனத்தை நினைத்து நொந்தவள் பால்கனியில் இருந்து அறைக்கு வரும் மூவரையும் பார்த்தவள் சித்தியிடம் உதவச் சொல்லி கண்காட்டினாள்.

அறையின் கதவை மூடிவிட்டு தங்களை நோக்கி வருபவர்களின் அருகில் சென்ற மீரா, “எல்லாரும் வாங்க நம்ம போய் கெஸ்ட் ரூம் பார்ப்போம்” என்று கூறவும்,

“இல்லை ம்மா நான் அக்கா ரூம் தான் முதல் பார்க்கணும்” என்று தேன் அடம்பிடிக்க, மீரா தன் கணவருக்கு கண் ஜாடை காட்டினார். பதினேழு வருட திருமண வாழ்க்கையில் அந்த கண் ஜாடைக்கு அர்த்தம் புரிந்தவர், “தேன் கெஸ்ட் ரூம் தான்டா ரொம்ப முக்கியமா பார்க்கணும் நாம இங்க வந்தா அங்க தானே தங்கணும்” என்று அவர் அவளை சமாளிக்க,

“நான் ஏன் பா அங்க தங்கணும் நான் அக்கா ரூம்ல தங்குவேன்” என்றாள்.

தேன்மொழி இப்படி சொன்னால் கேட்கமாட்டாள் என்று புரிந்த அனு, “நீ தான் வீட்டில் தனி ரூம் வேணும் சண்ட போடுவ, இப்ப இப்படி சொல்லுற? ஆதி இவ தங்க வரும் போது நீங்க அந்த பெரிய கட்டில் இருக்க கெஸ்ட் ரூம் எடுத்துக்கொங்க” என்று அனு கூறவும் எதுவும் புரியவில்லை என்றாலும் சரி என்று தலையை ஆட்டினான் ஆதி.

தனி அறை, பெரிய கட்டில் என்று அனு சொன்னதைக் கேட்டதும் தேன்மொழியின் மனது மாற, விருந்தினர் அறைக்கு தந்தையை இழுத்துக்கொண்டு அவள் நுழையவும் அனு ஒரு பெருமுச்சை விட்டாள்.

“நான் அவளை பார்த்துக்குறேன். ரூம் சுத்தம் பண்ணிட்டு கூப்பிடு” என்று மீரா அனுவிடம் சொல்லிவிட்டுச் செல்ல, கதவைத் திறந்து அனு சுத்தம் செய்யவும் ஆதிக்கு அனைத்தும் புரிந்தது. தானும் அனுவோடு சேர்ந்து அறையை சுத்தம் செய்ய உதவினான்.


வீடு மொத்தமும் சுற்றிப் பார்த்துக் களைத்து இருப்பதாக அனுவிடம் சொல்லி தனக்கு ஜூஸ் வேண்டும் என்று தேன் அடம்பிடிக்க, ஜூஸ் வாங்குவதற்கு பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்றான் ஆதி. ஆதியின் அலைபேசியில் காலையில் அழைத்த அதே நபர் மறுபடியும் அழைக்கவும் எடுத்துப் பேசினாள் அனு.
 
Last edited:
Status
Not open for further replies.
Top