எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி

Status
Not open for further replies.

NNK07

Moderator
வணக்கம் நண்பர்களே,

நான் உங்கள் #NNK_07. கதையின் தலைப்பு #ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்.

நாயகன் - ரிஷிவரதன்
நாயகி - பல்லவி


டீசர் 1

“பல்லவி உனக்கு ஓவர் ஆயிடுச்சு ரூமுக்கு போய் தூங்கு”

“என்னை ரூமுக்கு போய் தூங்க சொல்லுரத்துக்கு நீ யாரு டா?, நீ என்ன என்னோட அப்பாவா? அவர் தான் உயிரோட இல்லையே.” என்று அழ அரம்பித்து விட்டாள்.

ஆதரவாக ரிஷி அவள் கையை பிடித்தவன் அவளிடம் பேச முதல், அவன் உதட்டில் விரலை வைத்தவள்,
“ஆனா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் ஏன் சொல்லு.. ஜ லவ் யூ மிஸ்டர் ரிஷிவரதன் குமாரசாமி”
என்றவள் போதையின் தாக்கத்தில் மேசையில் மயங்கி சரிந்தாள்.

**********
ஷாலினி வாசல் கதவை திறந்த நொடியில் உள்ளே நுழைத்தவன் விழிகள் இரண்டும்
அவனுடைய தேவதையை தேடியது.

“ டேய்.. என்னடா என்னை பார்த்தா உனக்கு ஓரு மனுஷியா தெரியலையா? ஓரு ஹாய் கூட சொல்லாமா உள்ள வார.. ஆமா யாருக்கு இந்த பொக்கே?” என்று ஷாலினி அவனை வழிமறித்து கேட்க,

பொக்கே பற்றி ஷாலினி கேட்டதும் என்ன சொல்லவது என்று தெரியாமல் முழித்தவன்..

“அண்ணா! ஆனந்த அண்ணா தான் வாங்கிட்டு வர சொன்னாரு.” என்று சமாளித்தான்.

“ அப்படியா.. பல்லவிய பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு வாங்க சொல்லி இருப்பாரு போல நீ உள்ள வா.” என்று ஷாலினி சொன்னதும், அவன் கையில் இருந்த பொக்கே தரையில் விழுந்தது.


டீசர் 2

அனைவரும் ஆர்வமாக அவர்கள் பெயர் போட்ட பரிசை எடுத்த பின், ஒரே ஒரு பரிசு பெட்டி அனாதையாக கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் இருந்தது.

எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு ஒரமாக அமர்ந்து இருந்த பல்லவி கண்ட ஷாலினி, அவள் பெயர் போட்டு இருந்த அந்த பெட்டியை எடுத்து பல்லவியிடம் கொடுத்தாள்.

"பல்லவி கிப்ட திறந்து பார்" என்றவள் மதிய உணவை பற்றி சுகன்யாவிடம் கலந்து அலோசிக்க சென்றாள்.

பல்லவியின் அருகில் இருந்த விக்கி, “சித்தி.. எனக்கு டைனோ வந்து இருக்கு. உங்க கிப்ட் என்ன” என்று அவள் செல்ல மருமகன் கேட்க, மனமே இல்லாமல் பரிசை பிரித்தாள்.

உள்ளே அவள் எதிர்பார்த்து போல அவள் கேட்ட போஸ் ஹெட்போனும் ஒரு பெரிய என்வெலப் இருக்க, அதை திருந்து பார்த்தவளின் கண்கள் இரண்டும் கலங்க தொடங்கியது.

“அக்கா.. அக்கா இங்க வாயேன், இதை பாரு."
என்று தன் கைகளில் இருந்த புகைப்படத்தை காட்டினாள்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் பல்லவி மற்றும் ஸ்ருதி அவர்களின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டவை. ஒரு வாரமாக தொலைந்து போனதாக நினைத்த பொக்கிஷம் கிடைத்தவுடன் அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

குடும்பமாய், போன வருடம் ஸ்ருதி இந்தியா வந்த போது எடுத்த புகைப்படத்தை எடுத்தவள், புகைப்படத்தில் இருக்கும் அம்மா, அப்பாவின் முகத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள் பல்லவி.

“இந்த கிப்ட் யாரு கொடுத்திங்கனு தெரியல, உண்மையாவே சொல்லுறன் என் வாழ்க்கையில் இனிமே இதை விட ஒரு சிறந்த கிப்ட் எனக்கு யாரும் கொடுத்திட முடியாது. ரொம்ப நன்றி.”
என்று கூறியவள் அப்பொது தான் தன் அக்காவின் முகத்தில் இருக்கும் மர்ம புன்னகையை கவனித்தாள்.

“பல்லவி இந்த போட்டோவ நேற்றே நானும் உங்க மாமாவும் பார்த்துடோம். உன்னை சப்ரைஸ் பண்ண தான் இப்படி பண்ணோம். உன்னோட சீக்ரெட் சாண்டா ரிஷி தான் உனக்காக இந்த கிப்ட் ரெடி பண்ணுனான். அவன் கிட்ட உன்னோட நன்றியை சொல்லு.” என்று ஸ்ருதி சொல்ல, முதல் முறையாக பல்லவி ரிஷியை பார்த்து புன்னகைத்தாள்..

டீசர் 3

ரிஷியை ‘எ’ என்ற எழுத்தில் பாட சொல்ல, தன் எதிரில் இருந்த பல்லவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே, “என் காதல் சொல்ல நேரம் இல்லை.. உன் காதல் சொல்ல தேவை இல்லை.. நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை.. உன்மை மறைத்தாலும் மறையாதடி” என்று ரிஷி பாட, இவன் பாடிய கடைசி எழுத்திலிருந்து சேகர் பாடத் தொடங்கினான்.

ரிஷயின் அருகில் இருந்த ஷாலினி,"டேய்! இப்ப நீ பாடினியா? இல்ல அவ கிட்ட பேசினியா? ” என்று அவன் காதில் அவள் கிசுகிசுக்க,

“வேற என்ன பண்ண சொல்லுற? ட்ரிப் முடிச்சு வந்ததிலிருந்து எனக்கு பல்லவி கூட தனியாவே பேச சந்தர்ப்பம் அமையலை. இப்படி பேசினா தான் உண்டு” என்று புலம்பினான் அவன்.

“ உனக்கு பல்லவி கிட்ட இருந்து பதில் பாட்டு வரும் நினைக்கிறியா?"

“ நிச்சயம் வரும்”

பல்லவி முறை வர அவளுக்கு வந்த எழுத்து ‘ம’.
ரிஷியும், ஷாலினியும் ஆர்வமாக அவளைப் பார்க்க,

“முன்பே வா! என் அன்பே வா! ஊனே வா! உயிரே வா! முன்பே வா! என் அன்பே வா! பூப்பூவாய் பூப்போம் வா! நான் நானா கேட்டேன் என்னை நானே.. நான் நீயா நெஞ்சம் சொன்னதே.” என்று பாடிய பல்லவியின் விழிகளில் முழுவதும் ரிஷியே நிறைந்திருந்தான்.

உங்களுக்கு டீஸர் பிடித்திருந்தால் comment ல் தெரியபடுத்துங்கள்.
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 01எடல்வீஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஸ்சூரிச் விமான நிலையத்தில் தரையிரங்க, விமானத்திலிருந்து இறங்கிய மக்கள் கூட்டம் இமிகிரேஷன் வரிசையில் நின்றனர்.நீண்ட வரிசையின் கடைசியில் ஐந்தரை அடி உயரத்தில் ஒருத்தி நின்றிருந்தாள். அவள் பெயர் பல்லவி, வயது இருபத்து ஐந்து. அழகே பொறாமைப்படும் பேரழகு ஆனால் இவ்வுளவு அழகாய் இருப்பவளின் முகத்தில் சிரிப்பு தொலைந்து எட்டு மாதங்கள் ஆகி இருந்தது.ஓரு வருடத்துக்கு முன் யாராவது பல்லவியிடம் பொறுமை என்றால் என்ன என்று கேட்டு இருந்தால் தெரியாது என்றே சொல்லி இருப்பாள், ஆனால் இன்று ஒவ்வோரு விஷயத்தையும் பல முறை யோசித்து பொறுமையாக செயல்பட விதி வலிக்க, வலிக்க அவளுக்கு கற்று கொடுத்திருக்கிறது.தனக்கென இந்த உலகத்தில் மிச்சம் இருக்கும் தன் அக்காவின் குடும்பத்தை காண கடல் கடந்து வந்திருக்கிறாள் .இமிகிரேஷன் சம்பிரதாயங்கள் முடிய பெட்டிகளை சேகரித்தவள், தள்ளுவண்டியில் வைத்து தள்ளி கொண்டு வந்தாள். வாயிலில் ஆங்கிலத்தில் பல்லவி என எழுத்தியிருந்த பலகையை பிடித்து கொண்டு நின்று இருந்த நபரை கண்டு அவரை நெருங்கினாள்.ஒரு கையில் பலகையும், மறுகையில் அலைபேசியை காதில் வைத்து பேசி கொண்டு, பார்க்க வசிகரமாக இருந்தவனின் முகத்தில் எறிச்சல் மேலோங்கி இருந்தது, யாரிடமோ கோவமாக அவன் உரையாடியது பல்லவிக்கு நன்றாக கேட்டது.“ஃப்ரோவ் பல்லவி குயினிகின் கொம்ற் நீ புக்ற்லிஷ். பின் இஷ் இய(ர்) டீனர்? ( மிஸ் பல்லவி ராணி சரியான நேரத்துக்கு வாரதில்லையா? நான் என்ன அவளுடைய வேளைக்காரனா? )”என்று டொச் மொழியில் பல்லவியை திட்டியவன், தன் அருகில் ஜீன்ஸ் டி ஷர்ட் சகிதம் நிற்கும் மங்கையை அப்பொழுது தான் கவனித்தான்.“நீங்க ரிஷிவரதன்! நான் தான் பல்லவி”என்றவளின் முகம் இறுக்கமாக இருந்தது.பல்லவியை பார்த்து ‘ஆம்’ என்று தலை அசைத்தவன் அவளின் தள்ளுவண்டியில் கை வைக்க, “இல்ல நானே வண்டிய தள்ளிக்குறேன்.” அவன் உதவியை மறுத்தாள்.ரிஷிக்கு தான் பேசியது பல்லவிக்கு புரிந்து இருக்குமோ என்று யோசித்தபடி முன்னே நடக்க, பல்லவி வண்டியை தள்ளிக்கொண்டு அவன் பின்னே சென்றாள்.காரின் டிக்கியை திறந்து பெட்டியை தூக்க போனவனை தடுத்தவள் தானே எடுத்து வைக்க பொறுமை இழந்தவன்,“ஏங்க நான் உங்க பெட்டியை தொட கூட கூடாதா.” அவளிடம் ரிஷி கேட்க,“அப்படி இல்லங்க என்னோட வேலையை நானே செய்றது தான் நல்லது, இந்தியால இருந்த போது இது எல்லாம் தனியா நான் தான் செய்தேன். ஏன்னா யாரும் கடைசி வரை நம்ம கூடவே இருப்பாங்கனு இல்லைல.” என்று கூறியவள் பெட்டியை எடுத்து வைத்து கார் டிக்கியை மூடினாள்.ரிஷி ஓட்டுநர் இருக்கையில் அமர அருகில் பல்லவி அமர்ந்திருந்தாள். வோல்க்ஸ்வேகனை பாதையில் லாவகமாக ஒட்டிக்கொண்டு இருந்தவனை பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் எழும்ப மற்ற பக்கம் பார்வை திருப்பினாள்.எதோ ஒரு தூண்டுதலில் பல்லவியின் பக்கம் ரிஷி பார்க்க, அவள் கண்ணீர் வடிப்பதை காண அவன் மனம் பிசைய தொடங்கியது.
காரில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து ரிஷி அவள் முன் நீட்ட, நிமிர்ந்து பார்த்தவள் டிஷ்யூவை கொண்டு கண்களை துடைத்தாள்.அரை மணிநேரம் பயணத்தின் முடிவில் இருவரும் கிளாட்ஃபெல்டன் வந்தடைந்தனர். பல்லவிக்கு முன் அவரசமாக இருங்கிய ரிஷி டிக்கியை திருந்து பெட்டியை எடுத்து வைக்க, அவனை முறைத்து பார்த்தவள் பெட்டியை தள்ளிக்கொண்டு வாசலில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்தினாள் பல்லவி.கதவை திறந்த பல்லவியின் அக்கா கணவர் ஆனந்த் அவளை கண்டது ஆரவாரமாக அவளை வீட்டினுள் வரவேற்றார்.“பல்லவி எப்படி இருக்க. ரொம்ப நேரமா நீ வருவனு பார்த்துட்டு இருந்தா உன் அக்கா இப்ப தான் குளிக்க போனா இப்ப வந்துடுவா. பிளைட் ஜர்னி எப்படி இருந்துச்சு?” என்று அக்கறையாக விசாரித்தார் ஆனந்த்.“ரொம்ப நல்லா இருக்கேன். பிளைட் ஜர்னி ஒகே தான் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க? விக்கி உள்ள தூங்கிட்டு இருக்கானா?” என்று கேட்டவள் குளிருக்கு அணிந்திருந்த ஜாக்கெட்டை கலட்டினாள்.“எல்லாரும் நல்லா இருக்கோம். சித்தி வர போறாங்கனு ராத்திரி எல்லா விக்கி ஆட்டம் போட்டு காலையில தான் தூங்கினான்.” என்றவர் ரிஷியிடம் திரும்பி, “ டேய் ரிஷி ரொம்ப தாங்ஸ்டா நானே வந்து இருப்பேன் ஆனா காலையிலே ஒரு ஜூம் மீட்டிங் அது தான் பல்லவி பிளைட் டிக்கெட் போட்ட உடனே உன்ன போக சொன்னேன்.” என்று ஆனந்த் கூறவும்,“பரவால அண்ணா” என்ற ரிஷி குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தான்.அதேநேரம் குளியலறையில் இருந்து மேடிட்ட வயிற்றுடன் வெளியே வந்த ஸ்ருதி தங்கையை கண்டதும் கட்டிப்பிடுத்து அழ தொடங்கினாள்.“அக்கா தயவு செய்து அழாதே குழந்தைக்கு நல்லது இல்லை” என்று பல்லவி சொல்லவுமே ஸ்ருதியின் அழுகை குறைந்தது.“நான் கூட நீ கோவத்துல என்னை பார்க்க வர மாட்டேன்னு நினைச்சேன்.”“அக்கா நான் ஏன் உன் மேல கோவப்படனும். உன்னால வர முடிஞ்சு இருந்தா கண்டிப்பா நீ வந்திருப்ப.”“கடைசியா அம்மா அப்பாவை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கலையே.” என்று பல்லவியின் கையை பிடித்து வருத்தபட்டாள் ஸ்ருதி.“அது எல்லாம் விடு. எப்போ டேட் கொடுத்திருக்காங்க டெலிவரிக்கு?” என்று பல்லவி பேச்சை மாற்ற கவலையாக இருந்த ஆண்கள் இருவரின் முகமும் தெளிந்தது.“28 டிசம்பர் சொன்னாங்க.” என்று ஸ்ருதி சொல்ல,“இன்னும் 10 நாள் தான் இருக்கா.” என்று கூறி பல்லவி குதூகலித்தாள்.“தங்க யூ ரிஷி, பல்லவிய பிக் பண்ணதுக்கு. இருங்க உங்க எல்லாருக்கும் டீ போடுறேன்.”என்ற ஸ்ருதி சமையலறைக்குள் செல்ல ரிஷியும் அவள் பின் சென்றான்.ஐந்து வருடமாக சுவிஸ் வந்ததும் ஸ்ருதிக்கு கிடைத்த முதல் உறவு தான் ரிஷி. ஆனந்தின் அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த குமாரசாமியின் மகன் ரிஷியை ஆனந்துக்கு மிகவும் பிடிக்கும். ஆனந்த் திருமணம் முடிந்து ஸ்ருதியை அழைத்து வந்த பின், ஸ்ருதிக்கு தேவையான அனைத்து உதவி செய்வதில் ஆரம்பித்து அவர்கள் வீட்டில் ஓருவனாகவே மாறி போனான்.ஹீட்டரில் தண்ணீரை பிடித்து வைத்த ஸ்ருதி அருகில் நின்ற ரிஷியிடம் திரும்பி,“சொல்லு உனக்கு என்ன கேட்கனும்.” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.“பல்லவிக்கு டொச் தெரியுமா அண்ணி.” ரிஷி கேட்டதும் சிரித்துக்கொண்டே ஆம் என்று தலையாட்டினாள் ஸ்ருதி.“ஆனந்த கூட எனக்கு கல்யாணம் முடிவு பண்ணதும் நான் டொச் படிக்க தொடங்கினேன். அப்போ எனக்கு கம்பெனி கொடுக்க அவளும் படிச்சா கடைசில என்னை விட அவ நல்லா டொச் பேச ஆரம்பிச்சுட்டா” என்று ஸ்ருதி கூறவும், பல்லவியின் ஒதுக்கத்தின் காரணத்தை புரிந்து கொண்டான் ரிஷி.ரிஷியும், ஸ்ருதியும் இரண்டு கைகளிலும் டீ கப்களுடன் வந்து மேசையில் வைக்க, கண்ணை கசக்கிக்கொண்டு இரவு உடையில் நடந்து வந்தான் மூன்று வயதேயான விக்கி, ஆனந்த மற்றும் ஸ்ருதியின் புதல்வன்.பல்லவியை கண்டதும் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டவன் அவள் கன்னங்களில் முத்த மழை பொழிந்தான்.இந்த காட்சியை கண்ட ரிஷிக்கு பொறாமை பொங்கியது. விக்கி எங்கே சென்றாளும் பெற்றோருக்கு அடுத்து ரிஷியிடம் மட்டுமே அதிக நேரம் செலவழிப்பான். பல்லவியுடனான நெருக்கத்தை முதல் முறை கண்டவனுக்கு சந்தோஷமும் பொறாமையும் சேர்ந்தே வந்தது.“விக்கி, உன் சித்தி வந்ததும் இந்த சித்தப்பாவ மறந்திட்ட பார்த்தியா.” என்று ரிஷி சொன்னதும் பல்லவியின் மடியில் இருந்த விக்கி வாயை திறந்து சிரிந்தான்.ரிஷி பேசியதை கேட்டதும் பல்லவியின் முகம் மறுபடியும் சுருங்கியத்தை கவனித்த ரிஷி நேரமாகுவாதக கூறி கிளம்பினான்.வீட்டை விட்டு வெளியே வந்தவன் காரில் எரியதும் ஏதோ ஓர் வெறுமை சூழ்வதை உணர்ந்தான். மறுபடியும் வீட்டுக்குள் செல்ல அடம்பிடித்த மனதை அடக்கியவன் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினான்.பல்லவி, அக்கா மாமாவோடு சிறிது நேரம் பேசியவள் மடியில் உறங்கிக்கொண்டு இருக்கும் அக்கா மகனை தூக்கியவள் அறைக்குள் நுழைந்தாள். படுக்கையில் விக்கியை கிடத்தியவள் தன்னை குளியலறையில் சுத்தபடுத்திக்கொண்டு வந்தாள். அலைபேசியின் சத்தம் கேட்க அதை கையில் எடுத்தவள் ஆகாஷிடம் இருந்து அழைப்புகள் மற்றும் குறுச்செய்தி வந்திருப்பதை கண்டதும் அலைபேசியை படுக்கையில் ஓரமாக வைத்தாள்.
மறுபடியும் சத்தம் கேட்கவும் அலைபேசியை கையில் எடுத்தவள், ‘7 மாசமா நான் இருக்கனா இல்லையானு கூட பார்க்காத நீங்க, இப்ப என்ன தீடீர்னு அக்கறை காட்டுறிங்க. உங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன் எனக்கு கொஞ்சம் டைம் தாங்க, நான் பிப்ரவரி 25 உங்கள பார்க்க வாரேன்.. அதுவரைக்கு என்னை தொந்தரவு பண்ணாதிங்க.’என்று ஆகாஷிற்கு குறுஞ்செய்தி அனுப்பியவள் விக்கியின் அருகில் படுத்து உறங்கினாள்.

தொடரும்…
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 02


வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்திருந்த பல்லவி பனியில் ரிஷியை நோக்கி நடந்து வந்தாள்.அவள் ரிஷியின் அருகில் வந்ததும் அவனை அணைத்து தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.அவள் கண்களில் காதல் அருவியாய் வழிந்தோடுவதைக் கண்டதும் அவள் முகத்தை நோக்கி ரிஷி குனிய, யாரோ தூரத்தில்,“டீனர் டெர் பல்லவி குயினிகின்( பல்லவி ராணியின் வேலையாள்.)” என்று சொல்வது கேட்க, தூக்கத்தில் இருத்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.“அப்போ எல்லாம் கனவா.” என்று புலம்பியவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து சென்று திறந்தான்.அறை வாசலில் ஷாலினி நின்றிருந்தாள். ரிஷியும் ஷாலினியும் பள்ளி நண்பர்கள். இருவருக்கும் நடுவே எந்த ஒளிவு மறைவு இது நாள் வரை இருந்தது இல்லை. 28 வயதாகியும் இருவரும் யாரையும் காதலோ, திருமணமோ செய்யாத காரணத்தால் ஒரு வேளை இவர்கள் காதலிக்கிறார்களோ என்று ஒரு வதந்தி பரவ, ஷாலினியின் தாயார் அவளை ரிஷியை திருமணம் செய்ய சொல்லி நச்சரிக்க இருவரும் மறுத்தனர்.ஷாலினியை கண்டதும், “நீயா?” என்று கூறியவன் கட்டிலில் வந்து அமர்ந்தான்.“வேற யாரை ஏதிர்ப்பாத்த? பல்லவி ராணியையா?”என்று ஷாலினி நக்கலாய் சொன்னதும் ரிஷியின் முகம் பிரகாசம் அடைந்ததை கண்டவள்,“என்ன சார் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது ஆனா சம்மந்தமே இல்லாமா தலை எல்லாம் கலைஞ்சு இருக்கு. எதாச்சு பேய் கனவு கண்டியா?”என்று அவனை ஆராய்ந்து பார்த்துக்கொண்டே கேட்டாள்.“பேய் கனவு எல்லாம் இல்ல நல்ல கனவு தான்.”“நல்ல கனவா! கனவுல என்ன பல்லவி கூட டூயட்டோ.”“எப்படி சரியா சொல்லுற.” என்று ரிஷி ஆச்சரியபட,“டேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா. உண்மையா அது தான் நடந்துச்சா.” என்று கேட்டவள் அவன் அருகில் அமர்ந்தாள்.“நேத்து உன் கிட்ட பேசிட்டு போன் கால் கட் பண்ணிட்டு திரும்புறேன் ஒரு அழகான பொண்ணு என் பக்கத்தில நிக்குறா, பார்த்தா அவ தான் பல்லவி. போட்டோஸ்ல பார்க்கும் போது கூட அவ இவ்வளவு அழகா தெரியல, அவளை பார்த்த உடனே என் காதுல,‘கங்கையிலே ஒரு வண்ண பறவை மூழ்கியதே நீரோடு அந்த பறவை கரை வந்ததே அந்த பறவை கரை வந்ததே அதிசயமான தேவதையா.’ அப்படின்னு ஏஆர் ரகுமான் பாட்டு கேட்டுச்சு ஷாலினி.” என்று அவன் சொன்னதை கேட்ட ஷாலினி தலையில் கை வைத்தாள்.“டேய் உனக்கு மூளை ஏதாச்சும் இருக்கா?அவ கல்யாணம் நிச்சயமான பொண்ணுடா”“அது தான் நின்னுடுச்சே.”இவன் கூற்றில் ஷாலினியின் மனம் யோசனைக்கு செல்ல.“ஷாலினி ரொம்ப யோசிக்காத, நான் பல்லவியை என்னை லவ் பண்ண சொல்லி வற்புறுத்த மாட்டேன். அவ கூட இருக்குறது எனக்கு பிடிச்சு இருக்கு. நான் அவளை நல்லா பார்த்துப்பேன்.” என்று தீவிரமான குரலில் ரிஷி பேசவும்,“டேய் ரிஷி இப்படி எல்லாம் நீ பேசி நான் பார்த்ததே இல்லையே, என்னடா ஆச்சு உனக்கு ?” என்று அவன் நெற்றியில் ஷாலினி கை வைக்க, அவள் கையை தட்டி விட்டான் ரிஷி.“அப்புறம் சார் தப்பான பாட்டு தான் உங்க காதுல கேட்டு இருக்கு, அந்த பாடத்தில ஹீரோ ஹீரோயின் கடைசியில சேர மாட்டாங்க.”என்றவள் எழுந்து நிற்கவும், தலையணையை தூக்கி ஷாலினி முகத்தில் எரிந்தான் ரிஷி.“வாய வைக்காத ஆல்ரெடி என் கனவ நீ கலைச்சுட்டனு கோவத்தில் இருக்கேன் நான்.” என்றவன் அவளை அறையை விட்டு வெளியே தள்ள,“உண்மைய சொன்னா உனக்கு கோவம் வருதா. சரி நேரமாச்சு கிளம்பு ஸ்ருதி அக்கா! இல்ல, இல்ல பல்லவிய பார்க்க வா. கிறிஸ்மஸ் மீட்டிங் இருக்கு நியாபகம் இருக்கா காதல் மன்னா.” என்று ஷாலினி சொன்னதும் தயாராகி அவளையும் அழைத்துக்கொண்டு ஸ்ருதி வீட்டிற்கு வந்தடைந்தான்.பல்லவி கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்க அவளுக்கு விக்கியும் ஆனந்தின் சகோதரன் (சாமிநாதன்) சாம் உதவியாளராக இருந்தனர்.கிறிஸ்மஸ் கொண்டாடும் வழக்கம் பல்லவி குடும்பத்துக்கு இல்லை. ஸ்ருதி சுவிஸ் வந்த பிறகு ரிஷியும் ஸ்ருதியும் அதை செயற்படுத்த தொடங்கினார்கள். ஆனந்த் மற்றும் ரிஷிக்கு பொதுவாக இருக்கும் நபர்களை அழைத்து அந்த நாளை விமர்சையாக கொண்டாடுவர்.சாப்பாடு மற்றும் அலங்காரத்துக்கு டிசம்பர் முதல் வாரமே ஆட்களை பிரித்து மூடிவு செய்திருப்பார்கள், இந்த முறை தாமதம் ஆனதற்கு காரணம் பல்லவியின் வருகை.ஸ்ருதி கர்ப்பிணியாக இருப்பதனால் பல்லவியே வீட்டியின் அலங்காரத்தை முன் நின்று செய்தாள்.வந்ததில் இருந்து பல்லவியின் கடைக்கண் பார்வைக்காக எதிர்பார்த்திருந்த ரிஷிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று இருந்ததை விட இன்று பல்லவியின் முகத்தில் சோர்வும் கவலையும் அதிகமாக இருக்க, ஸ்ருதியிடம் நலம் விசாரிப்பது போல ஆரம்பித்து பல்லவியை பற்றி கேட்டான்.“அண்ணி பல்லவி ஏன் டல்லா இருக்கா.” என்று ரிஷி வினவ,“அது ஏன் கேக்குற நேத்து நான் வாய வச்சிட்டு சும்மா இல்லாம அப்பாவோட கூகுள் டிரைவ்ல அல்பத்தில் இல்லாத நிறைய போட்டோஸ் இருக்குனு அதை ஓப்பன் பண்ண முயற்சி பண்ணோம் முடியல. அதுல இருந்து அப்படி தான் இருக்கா. நீ அவளை நாளைக்கு வெளிய கூட்டிட்டு போறியா?” என்று ஸ்ருதி கேட்டதும் கரும்பு தின்ன கூலியா என்று இருந்தது ரிஷிக்கு.முகத்தில் எந்த ஆர்வமும் காட்டாமல் சரி என்றான். மாலை ஆனதும் கிறிஸ்மஸ் பார்ட்டி மீட்டிங்க்கு அனைவரும் கூடியிருக்கவும் ஆனந்த் நடுவில் நின்று பேச தொடங்கினான்.“எல்லாருக்கும் மாலை வணக்கம். இந்த மீட்டிங் கடைசி நிமிடத்தில் நடத்துவதற்கு மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை என்னோட மனைவியின் தங்கச்சி எங்களோடு கிறிஸ்மஸ் கொண்டாட வந்திருக்காங்க.” என்று சொன்னதும் சாம் கைத்தட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த தொடர்ந்து ஆனந்த பேசினார்,“அதனால் இந்த முறை அவர்களும் நம்மோடு சீக்ரெட் சாண்டாவில் கலந்துக்கொள்வார். இந்த தடவை உணவு பொறுப்பு ஷாலினி, சேகர், சுகன்யா, சஞ்சய் மற்றும் தருண்.”சேகர் ஆனந்தின் நெருங்கிய நண்பன், சுகன்யா சேகரின் மனைவி. சஞ்சய் ஷாலினியின் தம்பி. தருண் ரிஷியின் தம்பி.“அலங்காரம் பல்லவி, நான், சாம் மற்றும் ரிஷி. அடுத்து சீக்ரெட் சாண்டாக்கு சீட்டு குலுக்குவோம்” என்றவர் பெயர் எழுதி சுருட்டி இருந்த காகிதங்களை தரையில் கொட்ட, அனைவரும் தங்களுக்கு என்று ஒரு காகித துண்டை எடுத்தனர்.காகித துண்டில் வரும் நபருக்கு பரசளிக்க வேண்டிய பொருளும் எழுதி இருக்கும், அதை அவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே விதி மற்றும் ஒழுங்குமுறை.சேகரும் சுகன்யாவும் உடனே கிளம்ப வேண்டி இருக்க, மற்றவர்கள் இரவு உணவு பிட்ஸா ஆர்டர் செய்து ஹாலில் கதையடித்துக்கொண்டு இருத்தனர்.“பல்லவி உனக்கு தெரியுமா நான் தான் நீ இங்க வரும் வரைக்கும் கிறிஸ்மஸ் மீட்டிங் வைக்க கூடாதுனு சொன்னேன். ரிஷி கூட வேண்டாம் நம்ம மட்டும் சீக்ரெட் சாண்டா நடத்தலாம்னு சொன்னான் தெரியுமா?” என்று சாம் ரிஷியை மாட்டி விட அங்கே மற்றவர்களும் வழிமொழிந்தனர்.‘சுத்தம் சும்மாவே நம்ம கிட்ட பேச மாட்டா. இதுக்கு அப்புறம் நான் இருக்க திசை பக்கமே வர மாட்டா’ என்று நினைத்த ரிஷி பல்லவி பக்கம் பார்க்க, அவள் அவனை கண்டுகொள்ளவே இல்லை.பின்னர் பிட்ஸா வந்ததும் எல்லாரும் சாப்பிட,“எனக்கு மட்டும் கஞ்சி நீங்க எல்லாம் ஜோலியா பிட்ஸா சாப்பிடுறிங்களா?” என்று ஸ்ருதி புலம்பினாள்.விக்கிக்கு பிட்ஸாவை ஊட்டிய பல்லவி மீதம் இருந்த கஞ்சியை அவள் உண்ண எடுக்க, அவளை தடுத்த ஆனந்த் கஞ்சியை தானே உண்ண தொடங்கினான்.இவர்கள் சின்ன சின்ன செய்கையில் இருக்கும் அக்கறையும் காதலை கண்ட பல்லவி ஏக்க பெருமுச்சு விட்டவள் ஷாலினியின் அருகில் அமர்ந்தாள்.அடுத்த நாள் காலை தருணுக்கு பாடசாலை இருப்பதால் தருண் ரிஷியை அழைக்க, தம்பியின் நச்சரிப்பை தாங்கமால் எழுந்து கார் சாவியை எடுத்தான்.“ரிஷி நாளைக்கு மறக்காத பத்து மணிக்கு வந்திடு பல்லவிய ரெடியா இருக்க சொல்லுறேன்” என்று ஸ்ருதி நினைவுபடுத்த,“அக்கா அது எல்லாம் அவன் மறக்க மாட்டான்.” என்று ஷாலினி சொல்லவும் ரிஷி அவளை முறைத்து பார்த்தான்.சமயலைறையிலிருந்து வந்த பல்லவி ஸ்ருதி பார்த்ததும்..“அக்கா கூப்பிட்டியா?” என்று பல்லவி கேட்க,“ஆமா நாளைக்கு ரிஷி உன்னை வெளிய கூட்டிடு போவான்” என்றாள். பல்லவி மறுத்து பேச முதலே ரிஷி முந்திக்கொண்டு,“அண்ணி நான் டைம்முக்கு வந்திடுறேன். நாளைக்கு தருணுக்கு ஸ்சுலே ( பாடசாலை) நான் கிளப்புறேன்” என்ற ரிஷி தருணை அழைத்து இல்லை இழுத்துக்கொண்டு கிளம்பினான். அனைவரும் வெளியேறியதும் அறைக்கு வந்த பல்லவி படுக்கையில் படுத்ததும் உறங்கிவிட்டாள்.ஊட்டி மலைப்பாதையில் கார் வேகமாக செல்ல காரின் வேகத்தை குறைக்க சொல்லி கணவரை மாலா எச்சரிக்கவும் கேட்காமல் மேலும் அவர் வேகத்தை கூட்ட பின் இருக்கையில் இருந்த பல்லவி, “டாட் சூப்பர்.” என்றவள் எதிரில் வந்த வாகத்தை அப்போது தான் கண்டாள். அவள் வாய் திறந்து எச்சரிக்கும் முன் அந்த வாகனத்தோடு மோதிய அவர்கள் வாகனம் பள்ளத்தில் விழுந்து உருண்டோடியது. கார் மொத்தமும் கதறல் சத்தம் நிறைத்திருக்க, தீடிர் என்று காரை விட்டு வெளியே விழுந்தாள் பல்லவி. மலையிலிருந்து விழுந்த கார் சத்தத்தில் பறவைகள் பறக்க, பல்லவி மயங்கி சரிந்தாள்.தூக்கத்திலிருந்து எழுந்த பல்லவி முகத்தில் முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்க தண்ணீர் குடித்து தன்னை சமாளித்தாள். பால்கனி கண்ணாடியில் பனியை பார்த்திருந்தவளுக்கு கனவு தந்த தாக்கதில் தூக்கம் தூர சென்றது.


கடந்த கால வலிகள்

நிகழ்காலத்தில் தொடர்ந்தால்

எதிர் காலம் என்னாகுமோ?


தொடரும்…
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 03உலகிலே பதினோராவது இடத்தில் அனைவராலும் விரும்பப்படும் சாக்லேட் லிண்ட்(Lindt). அதன் அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்ததுமே பெரிய பீட்டரிலிருந்து (beater) சாக்லேட் வழிவது போல வடிவமைத்திருந்தது.சுத்தி பார்க்க வந்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்குக் கழுத்தில் ரெடியோ போன்ற ஒன்றை அணியக் கொடுப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் லிண்ட் சாக்லேட் வரலாறு சம்மந்தமான தகவல்களைப் கேட்டுக்கொள்ளலாம்.பல்லவி விக்கியோடு முன்னே செல்ல ரிஷி சோகமாக அவர்களை பின் தொடர்ந்தான்.காலையில் ஆனந்தமாகப் பல்லவியை அழைக்க வந்தவனுக்கு இடியாக வந்த செய்தி விக்கியும் அவர்களோடு வருவது. ஆனந்துக்கு காலையிலே ஒரு மீட்டிங் இருக்க, பல்லவிக்கு ஸ்ருதியின் இந்த உடல் நிலையில் தனியாக விக்கியை சமாளிக்க முடியாது என்று அவனை அழைத்து செல்வதாக கூறி விக்கியை தயார் படுத்தினாள்.விக்கி வருவது ரிஷிக்கு பிடிக்கவில்லை என்று எல்லாம் இல்லை, பல்லவியை பற்றி புரிந்துகொள்ள இந்த சந்திப்பை பயன்படுத்த நினைத்தவனுக்கு ஏமாற்றமாக முடிந்தது.விக்கிக்கு தேவையான பொருட்கள் கொண்ட பையை தோளில் மாட்டியிருந்தவனை கண்ட ஒரு தமிழ் பெண் “ நீங்க தழிழே” என்று அவர் கேட்டதும் அவர் இலங்கை தமிழ் என புரிந்தவன் ‘ஆம்’ என்றான்.விக்கி தண்ணீர் கேட்கவும் பல்லவி திரும்பி ரிஷியை பார்க்க, அவசரமாக பையை திறந்து தண்ணீர் போத்தலை எடுத்து கொடுத்தான். இதை கண்டதும் பல்லவியை ரிஷியின் மனைவி என்று அவர் நினைத்து கொண்டார்.“உங்கட மனுஷி நல்ல வடிவா இருக்கிறா. உங்களுக்கு பெண்டாட்டி என்டா பயமே?” என்று அந்த பெண்மணி ரிஷியின் அருகில் குரலை தாழ்த்தி கூறினார்.அந்த பெண் பல்லவியை அவனின் மனைவி என்று சொன்னதில் வானத்தில் பறந்தவனுக்கு அவர் பேசிய சத்தம் பல்லவிக்கு கேட்கவில்லை என்பதில் நிம்மதி அடைந்தான். அவரிடம் இல்லையென சொல்ல மனது வராமல் எல்லா பக்கமும் தலையாட்டி வைக்க, அவர் சத்தமாக சிரித்துவிட்டார்.அதில் அங்கு நின்ற மக்கள் பல்லவி உட்பட அனைவரும் அவர்களை திரும்பி பார்க்க, அந்த பெண்மணி தன் குடும்பத்தினர்களுடன் இணைந்து ரிஷி மற்றும் பல்லவியை காட்டி சிரித்து பேச ஐயோவென இருந்தது ரிஷிக்கு.சாக்லேட்டை ஒவ்வொன்றாக ருசிப்பார்த்து விக்கிக்கு ஊட்டியவள் அடிக்கடி ரிஷியை திரும்பி பார்த்துக்கொண்டே வர, ரிஷி உடனே பல்லவி அருகில் சென்று நின்றான்.“பல்லவி எதாச்சும் வேணுமா?” என்று ரிஷி கேட்டதும், கூச்சமாக நெளிந்தவள் பெண்கள் கழிப்பறை பக்கம் பார்க்கவும் நிலைமையை புரிந்தவனாக,“நீங்க போயிட்டு வாங்க நான் விக்கிய பார்த்துக்கிறேன்” என்றான்.பல்லவியோ விக்கியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கழிப்பறைக்குள் சென்றாள். விக்கிக்கு வேடிக்கை காட்டிகொண்டுயருந்தவனிடம் மறுபடியும் அதே பெண்மணி ரிஷியின் அருகில் வந்து தன்னை புகைப்படம் எடுத்து தருமாறு கேட்டார்.பல்லவி வந்ததும் விக்கியை அவளிடம் கொடுத்தவன் அவரை புகைப்படம் எடுத்து கொடுக்க, பதிலுக்கு அவரும் குடும்ப புகைப்படம் எடுத்து தருவதாக சொல்ல, ரிஷி கை எடுத்து கும்பிட்டு வேண்டாம் என்றான்.அருங்காட்சியகத்தின் கூடவே இருக்கும் சாக்லேட் கடையில் நுழைந்தவர்கள் தங்களுக்கு தேவையான சாக்லேட்களை தனி, தனியா வாங்கிக் கொண்டார்கள்.காரின் பின் இருக்கையில் பேபி சீட்டரில் விக்கி அமர்ந்து இருக்க, அவன் அருகில் பல்லவி இருப்பதை காரின் கண்ணாடில் பார்த்த ரிஷி சலிப்பாக காரை ஓட்டினான்.மத்திய உணவுக்கு ஒரு இத்தாலியன் உணவகத்தின் வாசலில் காரை நிறுத்தியவன் இருவரையும் வாசலில் இறக்கிவிட்டு காரை பார்க் செய்தவன் உள்ளே நுழைய, அப்போது தான் பல்லவி வெயிட்டரிடம் ஆர்டர் செய்துக்கொண்டு இருந்தாள்.ரிஷியை கண்டதும், “நான் எனக்கும் விக்கிக்கு ஆர்டர் பண்ணிட்டேன். மெனுவை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க." என்றவள் மெனு கார்டை அவன் பக்கம் நகர்த்தினாள். மெனு கார்டை கையில் எடுத்தவனோ அவனுக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்தான்.பல்லவி விக்கியை கொஞ்சி விளையாட்டு காட்டி நேரத்தை தள்ள, ரிஷி அலைபேசியும், கையுமாக இருந்தான்.உணவு வருவதற்கு எப்படியும் இருபது நிமிடங்களாவது ஆகும் என்று பல தடவை இதே உணவகத்திற்கு வந்திருப்பதால் தெரிந்த ரிஷிக்கு இந்த பொன்னான நேரத்தை வீணடிக்காமல் எதாவது செய்து பல்லவியின் மனதில் தன்னை பற்றி நல்ல எண்ணத்தை ஏற்படுத்த நினைத்தான்.குரலை செறுமியவன், “பல்லவி நீங்க எங்க வேலைபார்க்கிறீங்க?” என்று கேட்டதும் அவன் பக்கம் திரும்பியவள்,“ஐ டீ சொலுஷன்ஸ்னு ஒரு கம்பெனில எச் ஆர்ரா இருத்தேன் இப்ப வேலைய ரிசைன் பண்ணிட்டேன்.” என்றாள்.அடுத்தடுத்து அவன் கேள்வி கேட்க, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தவளை ஒரு வார்த்தை அதிகமாக பேச வைக்கமுடியாமல் வெற்றிகரமாக தோல்வியை தழுவினான் ரிஷி.வெயிட்டர் வந்து மேசையில் உணவு பதார்த்தங்களை அடுக்கியதும் சாப்பிட தொடங்கினார்கள்.பாதி உணவில் கழிப்பறைக்கு வந்த ரிஷி கண்ணாடில் தெரிந்த பிம்பத்திடம் பேச ஆரம்பித்தான், ‘டேய் நல்ல சான்ஸ் எல்லாம் இப்படி சொதப்புறியே, ஏழு கழுதை வயசு ஆச்சு இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ண உனக்கு பிடிச்சு இருக்கு, அவ கிட்ட ஒரு கன்வெர்சஷன் உருப்படியா பண்ண முடியலை. நீ சுத்த வேஸ்ட் டா’ என்று தனக்கு தானே திட்டியவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது…அம்மாவிடம் இருந்து அழைப்பு வரவும் உடனே எடுத்தான்,“தம்பி எங்க இருக்கப்பா? சாப்பிட்டியா?” என்று அக்கறையாக மகனை விசாரித்தார் பார்வதி.“ஹம்ம்! சாப்பிட்டேன்மா. நீங்க சாப்பிட்டிங்களா? மருந்து சாப்பிட்டிங்களா?” என்று வினவினான்.”சாப்பிட்டு மருந்து போட்டுட்டேன்பா. ஸ்ருதி தங்கச்சி அந்த பொண்ணு பெயர் என்ன?”“பல்லவிமா..”“ஆமா பல்லவி அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரியாப்பா.”“நான் அவங்க கிட்ட கேட்டுட்டு கூட்டிட்டு வரேன்மா.”“சரிப்பா வச்சுடுறேன்.” என்று இணைப்பை துண்டித்தார் பார்வதி.ரிஷியும் அலைபேசியை பாண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு கழிப்பறையை விட்டு வெளியே வந்தான்.விக்கி மற்றும் பல்லவியை சாப்பிட்டு முடித்ததும் அவர்களை அழைத்து கொண்டு மாலுக்கு சென்றவன் விக்கியை பார்த்துக்கொள்ள பல்லவி தனக்கு தேவையான பொருட்களை வாங்கினாள்.வாங்கி வந்த பொருட்களை காரில் ஏற்றியதும் பல்லவி தயக்கத்தோடு அவன் அருகில் வந்தவள்,“நான் முன்னாடி இருக்கவா?” என்று கேட்டதும் ‘சரி’ என்று ரிஷி தலை அசைக்க, உறங்கிக்கொண்டு இருந்த விக்கியை பின்னாடி இருக்கையில் கிடத்தியவள் முன் இருக்கையில் அமர்ந்தாள்.“பல்லவி என் வீட்டுக்கு வரீங்களா?” என்று ரிஷி கேட்டதும் குழப்பமாக அவனை பார்த்தாள்.“ஐ மீன் என் அம்மா உங்கள வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க.” என்று அவன் கூறியதும் ஒரு நிமிடம் யோசித்தவள் பிறகு சரி என்றாள்.அப்படியே அவர்கள் ரிஷியின் வீட்டை வந்தடைய, வீட்டுக்கு வந்த பல்லவியை புன்னகையோடு வரவேற்றார் பார்வதி. பல்லவிக்கு கூட பார்வதியை பார்த்த உடனே பிடித்து விட்டது. இருவரும் பேச ஆரம்பித்த கொஞ்சம் நேரத்திலே நிறைய வருடம் தெரிந்தவர்கள் போல நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பல்லவிக்கு என விசேஷமாக அவர் இரவு உணவை தயாரிக்க அவளும் அவருக்கு உதவிக்கு செய்தாள். பார்வதி அன்பானவர் தான் ஆனால் முதல் முறை பார்க்கும் ஒருவரையையும் இப்படி கவனித்தது இல்லை.தருணும் தன் சின்ன வயது புகைப்படங்களை பல்லவிக்கு காட்ட அவர்கள் இணைந்திருந்த அந்த காட்சியை கண்ட ரிஷிக்கு பல்லவி தங்கள் வீட்டினரிடம் இணக்கமாக இருப்பதை அவன் நினைவு பெட்டகத்தில் சேமித்தான்.பல்லவி மாலையிட்டு இருந்த குமராசாமியின் படத்தை விரல்களினால் வருடியவள்.“அம்மா ரிஷி அப்பாவுக்கு என்னாச்சு?” என்று கேட்க,“மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாருமா.” என்று அவளிடம் கூறி சாப்பிட அழைத்தார்.விக்கியும் ரிஷியின் அறையில் தூங்கி எழுந்ததும் பல்லவியிடம் மட்டும் ஒட்டிக்கொண்டவன் மற்றவரிடம் செல்ல மறுத்தான். அனைவரும் ஒன்றாக உணவருத்தியவர்கள். நேரம் ஆகவும் பல்லவி மற்றும் விக்கியை வீட்டில் விட கிளம்பினான் ரிஷி.பார்வதியை கட்டியணைத்து விடைபெற்ற பல்லவி காரின் முன் இருக்கையில் அமர்ந்தாள். ஸ்ருதியின் வீட்டை நோக்கி ரிஷி காரை செலுத்த அசதியில் பல்லவி உறங்கிவிட்டாள். அவள் உறங்குவதை கண்டவன் திரும்பி விக்கியை பார்க்க அவனும் உறக்கத்தில் இருந்தான். காரை ஓரமாக நிறுத்தியவன், காரை விட்டு இறங்கி பல்லவியின் இருக்கையை உறங்குவதற்கு ஏதுவாக செய்தவன் மறுபடியும் காரை செலுத்தினான்.அடிக்கடி இருவரையும் திரும்பி பார்த்து கொண்டே காரை ஓட்டியவன் ஸ்ருதி வீட்டை வந்தடைந்தான். டிக்கியில் இருந்த பைகளை எடுத்து வீட்டினுள் ரிஷி வைக்க, ஆனந்த் வந்து விக்கியை தூக்கினான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பல்லவியை கண்ட ரிஷி அவளை எழுப்ப மனமில்லாமல் வீட்டுக்குள் வர ஆனந்த் அவர்கள் அறைக்குள் இருப்பதை கண்டான். வேகமாக வெளியே வந்து பல்லவியை கைகளில் அள்ளியவன் ஆனந்த் கண்ணில் படாமல் அவளை அவள் அறைக்கு தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான்.ரிஷியின் தங்க சங்கிலி பல்லவியின் சட்டையில் மாட்டி இருக்க, கஷ்டப்பட்டு கழட்ட முயன்றான். அது முடியாமல் போகவும் சங்கிலியின் கொக்கியை கழட்டி அவள் கழுத்தில் மாட்டியவன். வீட்டின் வாசலுக்கு வரவும் ஆனந்த் அறையில் இருந்து வெளியே வர,“பல்லவி உள்ள போய் படுத்துட்டாளா ரிஷி?” என்று கேட்டதும்,,“ஆமா அண்ணா நான் கிளம்புறன்.” என்றவன் காருக்குள் வந்ததும் இழுத்து பிடித்த மூச்சை விட்டான்.அலைபேசியை எடுத்தவன் காலையில் பல்லவிக்கு தெரியாமல் அவன் எடுத்த புகைப்படங்களை பார்வையிட அவனையும் அறியாமல் அவன் முகத்தில் மகிழ்ச்சி வந்து குடி கொண்டது.அவள் முகத்தை விரல்களால் படத்தில் வருடிவன் சந்தோஷமான மனநிலையில் வீட்டை நோக்கி பயணித்தவன் உள்ளமோ..‘என் உறவுகள் உனதாய் மாறிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் கண்ணே!’ என்று ஏங்கியது.தொடரும்…IMG_3270.jpeg
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 4சமயலைறையில் மதிய உணவு தயாரித்து கொண்டிருந்தாள் பல்லவி. அலைபேசி சத்தம் கேட்க அழைப்பை இணைத்து காதில் வைத்தாள்.“சொல்லு டாக் எப்படி இருக்க?” என்று பல்லவி கேட்டதும் கொதித்து எழுந்தாள் தொடர்பின் அடுத்த முனையில் இருந்த ஸ்வாதி..“என் பொறுமைய ரொம்ப சோதிக்குற பல்ஸ். நான் உனக்கு என்ன சொல்லி அனுப்பினேன்? டெய்லி கால் இல்லாட்டி மெசேஜ் பண்ணுனு சொன்னேனா இல்லையா? அப்புறம் ஏன் பண்ணல?” என்று பேசியவளின் குரலில் அக்கறையும் ஆதங்கமும் வெளிப்பட்டது.“ஐ அம் சாரி டாக். லேண்ட் ஆகி அக்கா வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலையே ஆகாஷ் கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சா அது தான் போன் நோட்டிபிகேஷன் ஆப் பண்ணி வச்சுட்டேன். அதனால தான் உன் மெசஜ்ஸ் பார்க்க முடியல.” என்றாள் பல்லவி.“ஆகாஷா என்ன சொன்னார்?” என்று விசாரித்தாள் ஸ்வாதி.“வேற என்ன சொல்லிட போறாரு எனக்கு இன்னொரு சான்ஸ் தா. நான் என் அம்மாவை கன்வின்ஸ் பண்ணிடுறேன். அதே தான் திருப்பி, திருப்பி சொல்லுறாரு. என்னால முடியல டாக் அவர் கிட்ட மெசேஜ் வந்தாலே எனக்கு இப்போலாம் பயமா இருக்கு எங்க நான் மறுபடியும் ஏமாந்திடுவேனோனு.” என்று பேசிக்கொண்டு இருந்தவளின் குரலில் சொல்லொண்ணா வேதனை நிறைந்து இருந்தது.“பல்லவி ரிலாக்ஸ் இப்படி எமோஷனல் ஆகாத. முக்கியமா ஆகாஷ் கூட பேசுறத பத்தி இப்போதைக்கு யோசிக்காத. முதல்ல உன்னோட ஸ்லீப் சைக்கிள் எப்படி இருக்கு நல்லா தூங்குறியா?” என்று ஒரு மருத்துவராக பேச தொடங்கினாள் ஸ்வாதி.“வந்த டூ டேய்ஸ் டிஸ்டர்ப் அனா ஸ்லீப் தான். நேத்து நைட் நல்லா தூங்கினேன்.” என்று பல்லவி சொன்னதும் இந்த நிலைமையில் பல்லவியை சுவிஸ் அனுப்பியதை நினைத்து பயத்திலிருந்த ஸ்வாதிக்கு பல்லவியிடம் ஒரு முன்னேற்றம் தெரிவதில் நிம்மதி அடைந்தாள்.“அப்படியா எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. நியூ இயர் முடிச்சதும் ஒவ்வொரு வாரமும் தெரப்பிய வச்சுப்போம் பல்லவி. நீ என் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணதால தான் இது நாள் வரைக்கும் ஸ்ருதி கிட்ட உன்னோட பிரச்சனைய பத்தி நான் எதுவும் சொல்லல, உனக்கு எமர்ஜென்சினா என்ன டைமா இருந்தாலும் பரவாயில்லை கூப்பிடு. முக்கியமா கார் பின் சீட் ல தனியா இருக்காதா. முதல்ல இந்த ஆகாஷ் நம்பர பிளாக் பண்ணு நீ இந்தியா வந்ததும் பாத்துக்கலாம். டெய்லி நைட் உன்னோட டே எப்படி போச்சுனு அப்டேட் பண்ணிட்டு தூங்கு, நான் உனக்கு மோர்னிங் ஹாஸ்பிடல் கெளம்புறதுக்கு முன்னாடி ரிப்ளை பண்ணுறேன். மெடிசின் மறக்காம எடுத்துக்கோ. அப்புறம்..” என்று ஸ்வாதி அடுக்கிக்கொண்டே போக,"போதும், போதும் நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் மறக்காம செய்யுறன். நீங்க அண்ணாவை நல்லா பாத்துக்கோங்க." என்று பல்லவி சொல்ல,"முக்கியமா உங்க அண்ணா என் புருஷன் ராஜேஷுக்கு கால் பண்ணி பேசிடு ரெண்டு நாளா என்னை நிம்மதியாவே விடல. பல்லவி யாரோ வார மாதிரி இருக்கு நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன்." என்று அழைப்பை தூண்டித்தாள்.அலைபேசியை ஓரமாக வைத்த பல்லவியோ திரும்பவும், அவளையே பார்த்து நின்று கொண்டுடிருந்தான் சாம்.ஸ்வாதி உடனான உரையாடலை சாம் கேட்டு இருக்க கூடாது என்று எல்லா கடவுளிடமும் வேண்டுதல் வைத்தவள்,"சாம் எப்போ வந்த?" என்று எதுவுமே நடக்காதது போல சிரித்த முகமாக பேசினாள். முதல் இருந்ததை விடவும் சாமின் பார்வை கூர்மையாக பல்லவியை அளவிட்டது. சமையல் மேடையில் அவளை பார்த்தபடி அமர்ந்தவன் அவள் உதட்டில் இருக்கும் புன்னகை அவள் கண்களை எட்டவில்லை என்பதை கண்டுகொண்டான்."சொல்லு சாம் எப்போ வந்த?" என்று பல்லவி திரும்பவும் கேட்க,"யார் கூட பேசிட்டு இருந்த பல்லவி?"

என நேரடியாக கேட்டான்.

"அது.." என்று அவள் தடுமாற, "எங்ககிட்ட இருந்து என்ன மறைக்கிற?" என்று தீவிரமாக அவன் பேசவும் பதில் கூற முடியாமல் பயத்தில் பல்லவியின் உள்ளங்கை இரண்டும் வியர்த்தது.ஆனந்த் ஸ்ருதி கல்யாணத்திலிருந்து சாமும் பல்லவியும் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். பல்லவி ஆகாஷை விரும்புவதை கூட முதலில் சாமிடம் தான் கூறினாள். சுவிஸ் வந்ததில் இருந்து பல்லவி சந்தோஷமாக இருப்பது போல தெரிந்தாலும் சாம் கண்களுக்கு அவளுடைய போலியான சிரிப்பு தனியாக தெரிந்தது. அவளாகவே சொல்லட்டும் என்று நினைத்தவன் கடைசியில் சிரித்து சமாளித்தான்."சும்மா உன்ன கலாட்டா பண்ணன். சீரியஸா எடுத்துக்காத பல்லவி" என்று சாம் சொன்னதும் நிம்மதியடைந்தாள்.

"அண்ணா அண்ணி எங்க பல்லவி யாரையும் காணுமே? " என்று கேட்டான்."அக்கா ரூம்ல இருக்கா. மாமா கிரோசரிஸ் வாங்க தமிழ் கடைக்கு போனாரு இன்னும் வரல. நீ எப்போ கல்யாணம் பண்ண போற சாம்" என பல்லவி கேட்டதும்,"நீ ஒகே சொல்லு பல்லவி நம்ம இன்னைக்கே கல்யாணம் பண்ணிப்போம்." என்றான்."எனக்கு ஒகே தான் ஒரு வார்த்தை ராஜி கிட்ட சொல்லிடு." என்றாள் நமட்டு சிரிப்போடு."அம்மா தாயே ராஜி கிட்ட எதுவும் சொல்லிடாத." என்று பல்லவியின் கையை பிடித்து கெஞ்ச,"அப்படி வா வழிக்கு." என கூறியவள் சமைத்த உணவை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.உணவை ரசித்து உண்டவன்.."பல்லவி வர வர உன் சமையல் எங்கயோ போயிடிச்சு"பல்லவியோ எல்லா இடமும் திரும்பி பார்த்தவள், " எங்க போச்சு?" என்று அப்பாவியாக கேட்க,"இந்த நக்கல் தான் வேண்டாங்கிறது." என்றவன் குரலை தாழ்த்தி,"அண்ணி சமையலை விட வேற லெவல்ல இருக்கு." என்றான்.சாமின் பாராட்டை கேட்டு பெருமையாக இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.பல்லவியின் காதில் தோடு இல்லாததை கவனித்தவன்,"எங்க உன் தோடை காணோம்." என்று சாம் கேட்க, குளிக்க போகும் முன் நகைகளை கழட்டிய நியாபகம் வர அறைக்கு சென்றவள் கையில் தங்க சங்கலியோடு வந்தாள்."இந்த செயின் யாரோடது உனக்கு தெரியுமா?" என்று சாமின் கையில் கொடுத்தாள்.

கையில் இருந்த தங்க சங்கிலியை நன்றாக பார்த்தவன்,"இது நம்ம ராஸ்கல் ரிஷியோடது உன் கிட்ட எப்படி வந்துச்சு." என்று வினவ,"அது காலையில க... கையில இருந்துச்சு" என்றவள் உண்மையை மறைத்தாள்."ஆமா அது என்ன ராஸ்கல் ரிஷி?”என பல்லவி கேட்க.."அதுவா அவன் என்னை சுமார் சாம்னு சொல்லுவான் நான் அவனை ராஸ்கல் ரிஷி சொல்லுவேன். செம்ம மூளைக்காரன் தெரியுமா என்னோட ஒரு மாச சம்பளத்தை அவன் ஒரு வாரத்துல சம்பாதிச்சுடுவான்." என்று ரிஷியின் பெருமைகளை எடுத்து விட்டான் ."யாரு ரிஷியா நான் பார்த்த வரைக்கும் சார் வேலைக்கு போற மாறியே தெரியலையே. அப்புறம் எப்படி இவ்வளோ சம்பளம்." என்று மலைப்பாக கேட்டாள்."அவன் ரொம்ப புத்திசாலி பல்லவி. ஃபர்ஸ்ட் ஒரு ஐ டீ கம்பெனில ஒர்க் பண்ணான். அவன் அப்பா இறந்ததும் அவரோட இன்சூரன்ஸ் பணத்தை வச்சு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கினான், கோடிங் மூளையை வச்சு சம்பாதிக்கரான் அண்ட் நிறைய இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செஞ்சு வச்சு அதுலையும் காசு பார்க்கிறான். நானே அவன் கிட்ட தான் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஐடியாஸ் கேட்பேன். இவ்வளவு சம்பாதிக்கிறான் ஆனா கொஞ்சம் கூட ஹெட் வெயிட் இல்ல. அவனை நான் விளையாட்டுக்கு ராஸ்கல்னு சொன்னாலும் உண்மையாவே நல்ல பையன்."
என்று சாம் ரிஷி புராணம் பாட அமைதியாக கேட்டாள்.செயினை காலையில் கழுத்தில் பார்த்ததும் யாருடையது எப்படி வந்தது குழப்பத்தில் இருந்தாள். சாம் செயின் ரிஷியுடைது என்றதும் முதலில் கோவத்தின் உச்சத்துக்கு சென்றவள் அவனை பற்றி சாம் சொன்னதை கேட்டதும் கோவம் கொஞ்சம் தணிந்தது. இருந்தாலும் ரிஷியை ஒரு வழி செய்ய வேண்டும் என்று அவன் வரவுக்காக காத்திருக்க தொடங்கினாள்.கிறிஸ்மஸ் அலங்காரம் செய்ய கூட வராமல் ஆனந்தத்திடம் நொண்டி சாக்கு சொல்லி தப்பித்தவன், அப்படியே அந்த வாரம் ஓடி விட திங்கட்கிழமை கிறிஸ்மஸ் அன்று வசமாக பல்லவியின் கையில் சிக்கினான்.ஆனந்த் வீட்டுக்கு தம்பியையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு வந்தவன் அவர்களை முன்னாடி அனுப்பி விட்டு மெதுவாக பல்லவி கண்ணில் படாமல் வீட்டுக்குள் நுழைந்தான்.ரிஷியை முதலில் கண்ட ஷாலினி,"பல்லவி நீ தேடிகிட்டு இருந்த ஆள் வந்திடுச்சு சீக்கிரம் வா " என்று குரல் கொடுக்க, ரிஷி துரோகி என்று வாயில் முணுமுணுத்தான்.வெள்ளை நிலா போல வெள்ளை நிற சுடிதாரில் நடந்து வந்த பல்லவி ஷாலினியிடம் நன்றியோடு தலையசைத்தவள் ரிஷியின் அருகில் வந்தாள்.கதவை திறந்துகொண்டு வெளியே போக எண்ணியவன் திரும்ப, கதவின் பக்கத்தில் சாம் ரிஷியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான்.'இப்படி எல்லா பக்கமும் அணைக்கட்டின்னா நான் என்ன பண்ணுறது' என்று நினைத்தவன் பல்லவியை பார்க்க, அவன் கையை பிடித்து அவன் கையில் செயினை வைத்தாள்.அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்," பார்ட்டி முடிய என் ரூம்க்கு வரணும்" என்று பல்லவி சொன்னதும் ஏதோ மறுத்து சொல்ல வந்தவனிடம்,“ஏன் என்னை தூக்கிட்டு போக மட்டும் தான் வருவீங்களா சார்?" என்று அவள் கேட்டதும் ரிஷியின் முகத்தில் ஈ ஆடவில்லை.
பல்லவியை பார்த்து பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவனை பார்வதி அழைக்க, போ என்பது போல பல்லவி செய்கை செய்யவும் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடினான் ரிஷி.


தொடரும்…
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 05அனைவரும் ஆர்வமாக அவர்கள் பெயர் போட்ட பரிசை எடுத்த பின், ஒரே ஒரு பரிசு பெட்டி அனாதையாக கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் இருந்தது.எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு ஒரமாக அமர்ந்து இருந்த பல்லவியை கண்ட ஷாலினி பல்லவி பெயர் போட்டு இருந்த அந்த பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து,“பல்லவி உன்னோட கிப்டை திறந்து பாரு.”என்றவள் மதிய உணவை பற்றி சுகன்யாவிடம் கலந்து ஆலோசிக்க சென்றாள்.பல்லவியின் அருகில் இருந்த விக்கி, “சித்தி! எனக்கு டைனோ வந்து இருக்கு. உங்க கிப்ட் என்ன?” என்று அவளிடம் கேட்க, மனமே இல்லாமல் பரிசை பிரித்தாள்.உள்ளே அவள் எதிர்பார்த்து போல அவள் கேட்ட போஸ் ஹெட்போனும் ஒரு பெரிய என்வெலப் இருக்க, முதலில் என்வெலப்பை திறந்து பார்த்தவளின் கண்கள் இரண்டும் கலங்க தொடங்கியது.“அக்கா.. அக்கா இங்க வாயேன், இதை பாரு.”என்று ஸ்ருதியை கத்தி அழைத்தவள் தன் கைகளில் இருந்த புகைப்படத்தை காட்டினாள்.அந்த புகைப்படங்கள் அனைத்தும் பல்லவி மற்றும் ஸ்ருதி அவர்களின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டவை. ஒரு வாரமாக தொலைந்து போனதாக நினைத்த பொக்கிஷம் கிடைத்தவுடன் அவள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.குடும்பமாய் போன வருடம் ஸ்ருதி இந்தியா வந்த போது எடுத்த புகைப்படத்தை எடுத்தவள், புகைப்படத்தில் இருக்கும் அம்மா, அப்பாவின் முகத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.“இந்த கிப்ட் யாரு கொடுத்திங்கனு தெரியல, உண்மையாவே சொல்லுறேன் என் வாழ்க்கையில் இனிமே இதை விட ஒரு சிறந்த கிப்ட் எனக்கு யாரும் கொடுத்திட முடியாது. ரொம்ப நன்றி.” என்று கூறியவள் அப்பொழுது தான் தன் அக்காவின் முகத்தில் இருக்கும் மர்ம புன்னகையை கவனித்தாள்.“பல்லவி இந்த போட்டோ நேற்றே நானும் உங்க மாமாவும் பார்த்துடோம். உன்னை சப்ரைஸ் பண்ண தான் இப்படி பண்ணோம். உன்னோட சீக்ரெட் சாண்டா ரிஷி தான் உனக்காக இந்த கிப்ட் ரெடி பண்ணான். அவன் கிட்ட உன்னோட நன்றியை சொல்லு.” என்று ஸ்ருதி சொல்ல, முதல் முறையாக பல்லவி ரிஷியை பார்த்து நன்றியோடு புன்னகைத்தாள்.பல்லவியை கண்டவனுக்கு வாழ்க்கை முழுதும் இந்த புன்னகை அவள் முகத்தில் நிரந்தரமாக இருக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று முடிவு எடுத்தான் அவன்.மதிய உணவுக்கு உணவு மேசையில் பெரியவர்கள் அமர்ந்து இருக்க, இளைஞர்கள் பட்டாளம் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு சாப்பிட தொடங்கினார்கள்."அக்கா உங்க அளவுக்கு இல்லாட்டியும் நான், தருண், சுகன்யாவும் கஷ்டப்பட்டு சமைச்சு இருக்கோம் எப்படி இருக்கு?" என்று ஷாலினி ஸ்ருதியிடம் சொன்னதும் சண்டைக்கு வந்தார்கள் சேகர் மற்றும் சஞ்சய்."அப்போ நாங்க ஒண்ணுமே பண்ணலனு சொல்லுறியா அக்கா. நான் தானே உனக்கு ரைஸ் வாஷ் பண்ணி கொடுத்தேன்." என்று சஞ்சய் சொல்ல சேகரும் தன் பங்குக்கு,"ஆமா நான் தான் சிக்கனுக்கு மசாலா தடவினேன்." என்றார்.சேகரின் கையில் அடித்த சுகன்யா, "வெக்கமா இல்ல உங்களுக்கு இப்படி சொல்ல, பெரிய செஃப்னு பெருமையா இனி வெளிய சொல்லிக்காதிங்க. பொண்டாட்டி கஷ்டப்படுறாளே நம்ம ஒரு டிஷ் செஞ்சு ஹெல்ப் பண்ணுவோம்னு இல்லாம, சிக்கென்க்கு மசாலா பூசிட்டு நைஸ் ஆஹ் எஸ்கேப் ஆகிட்டிங்க. வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு." என்றவள் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் செல்ல, மனைவியை சமாதானமாக்க பின்னாடியே சென்றார் சேகர்.அப்போது வீட்டின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க, எழுந்து சென்று அழைப்பை ஏற்றார் ஆனந்த். ஆனந்த் விடுமுறை நாட்களில் அலைபேசி பாவிப்பது இல்லை, அவரின் கைபேசிக்கு அழைத்து பார்த்த அலுவலகத்தினர் வீட்டின் தொலைபேசிக்கு கடைசியாக எடுத்தனர்.அலுவலகத்தினரிடம் பேசிக்கொண்டு இருந்தவரின் முகம் கடுமையாக மாறி விவாதிக்க தொடங்கினார். கடைசியில் ஆனந்த் முகம் கவலையாக மாறுவதை எல்லாரும் கவனித்தனர்.அழைப்பை துண்டித்ததும் சிரமப்பட்டு வயிற்றை தள்ளிக்கொண்டு கணவர் அருகில் வந்த ஸ்ருதி,

“என்ன ஆச்சு ஏன் உங்க முகமே சரி இல்ல ஏதாச்சும் பிரச்சனையா?" கனிவாக கேட்க, மனைவியின் கையை ஆதரவாக பிடித்து விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்.மனைவியின் பிரசவத்துக்காக இரண்டு வாரமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்துகொண்டு இருந்தவரை அலுவலகத்தினர் எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. இன்று காலையில் முக்கியமான துபாய் வாடிக்கையாளரின் மீட்டிங் நடத்த வேண்டிய நபருக்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்க, அவருக்கு அடுத்து அந்த வடிக்கையாளருடன் நிறைய தடவை பேசி அவருடைய ப்ராஜெக்ட் பற்றி நன்றாக தெரிந்த ஆனந்தை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று அழைத்தனர்.
கோபத்தில் முதலில் மறுத்த ஆனந்த் பின்பு சரி என்று சொல்லும் அளவுக்கு பேசி மனசை மாற்றினார்கள். இப்பொது மீட்டிங்கிற்காக பெர்ன்க்கு (bern) ஆனந்த் செல்ல வேண்டிய கட்டாயம்.கணவரின் கவலை புரிந்ததும் அவரை சமாதானம் செய்து பெர்ன் செல்ல தயாராக்கினாள் ஸ்ருதி. ஆயிரம் ஜாக்கிரதை மற்றும் மீட்டிங் முடிந்த உடனே திரும்பி வந்திடுவேன் என்று மனைவியிடம் சொல்லி விடைபெற்றார்.ஆனந்த் சென்றதும் பார்ட்டி கொண்டாடும் மனநிலைமை யாருக்கும் இருக்கவில்லை. மாலையாக ஒருவர் பின் ஒருவராக கிளம்ப தொடங்கினர். ரிஷி வாசலை நோக்கி சென்றவன் பல்லவி தன்னிடம் தனிமையில் பேச வேண்டும் என சொன்னது நியாபகம் வரவும் அம்மா மற்றும் தம்பியை வீட்டில் விடும் பொறுப்பை ஷாலினியிடம் கொடுத்தான்.அனைவரும் கிளம்பியதும் வீட்டுக்குள் வந்தவன் மூடி இருந்த பல்லவி அறையை தட்டினான். கதவை திறந்த பல்லவி ரிஷியை உள்ளே அழைத்து கதவை சாற்றினாள்.இவ்வளவு நேரம் தைரியமாக பல்லவியிடம் பேச வந்தவனுக்கு அவள் கதவை சாற்றிய தோரணையில் அச்சம் வந்தது."தங்க யூ அந்த போட்டோஸ் எல்லாம் டிரைவ்ல இருந்து எடுத்து தந்ததுக்கு." என்றாள்.அவள் அப்படி சொன்னதும் நிம்மதி அடைந்தவன்,"கெய்ன் ப்ரோப்லேம்." (பரவாயில்லை) என்றவன் கிளம்ப எத்தனிக்கவும் அவனை மறித்தாள்.கேள்வியாக ரிஷி அவளை பார்க்க, "அதுக்காக நான் உங்கள சும்மா விட முடியாது. என்னை எதுக்கு தூக்கினீங்க ரிஷி. உங்க மேல செம்ம கோவத்துல தான் இருந்தேன். சாம் உங்கள பத்தி நல்ல விதமா சொன்னதால தான் என் கோவம் குறைச்சிச்சு."
"சாமுக்கு விஷயம் தெரியுமா?""இல்ல.""தயவு செஞ்சு சொல்லிடாதீங்க.""அது நீங்க நடந்துகிறத பொறுத்து இருக்கு." என்றாள் மிரட்டலாக,பல்லவியின் இந்த பரிணாமத்தை ரிஷி எதிர்பார்த்திருக்கவில்லை.தயக்கத்தோடு அவளை ரிஷி காண, "அப்புறம் அந்த செயின் என் கழுத்துல நீங்க தானே மாட்டி விட்டிங்க." என்று அவள் கேட்டதும்,"பல்லவி எதோ சத்தம் கேக்குதுல." என்றான் ரிஷி."இல்லையே." என்று ஆரம்பித்தவளுக்கு குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டகவும் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தவர்கள் கண்ட காட்சியில் இருவரின் கண்களும் விரிந்தன.இரத்த வெள்ளத்தின் மத்தியில் மயக்கத்தில் ஸ்ருதி தரையில் விழுந்து கிடக்க, அவளின் அருகில் விக்கி அம்மாவை கட்டிக்கொண்டு பயத்தில் அழுதுகொண்டு இருந்தான்.பல்லவி அக்காவை இந்த கோலத்தில் கண்டதும்,"அக்கா!" என்று கத்திக்கொண்டே மயங்கிச் சரிந்தாள்.ஒரு நிமிடம் ரிஷிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. நிலைமையின் வீரியம் புரியவும் விக்கியை தூக்கி சமாதானம் செய்து காரில் ஏற்றியவன், ஸ்ருதி மற்றும் பல்லவியை ஒருவர் பின் ஒருவராக ஏற்றியவன் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.முதலில் ஸ்ருதியை மருத்துவமனையில் அனுமதித்தவன் பின் மயக்கத்தில் இருந்த பல்லவியை எழுப்பினான்.கண்விழித்தவள் முதலில் கேட்டது,"அக்கா எங்க?" என்று தான்.பல்லவியையும், விக்கியையும் சமாளிக்க முடியாமல் சாமுக்கு அழைக்க, அவனுடைய அலைபேசி அணைத்து வைத்திருப்பதாக வரவும் கெட்டவார்த்தையில் அவனக்கு அர்ச்சனை வைத்தவன் அடுத்ததாக ஷாலினிக்கு அழைத்தான். விவரம் அறிந்த உடனே ஓடி வந்த ஷாலினி பல்லவியை வீட்டுக்கு வரும்படி அழைக்க, அக்காவை விட்டு எங்கேயும் வரமாட்டேன் என்று அழுதாள்.பல்லவியின் கோரிக்கைக்கிணங்க ஷாலினி விக்கியை மட்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வந்து பெண் குழந்தை பிறந்ததிருப்பதாகவும் மற்றும் ஸ்ருதி இன்னும் கண்விழிக்கவில்லை என்றதும் பல்லவி பைத்தியம் பிடித்தவள் போல பிதற்றத் தொடங்கினாள்.ரிஷியின் கறைபடிந்த சட்டையை பிடித்து உள்ளுக்கியவள்,"எனக்கு மட்டும் என் இப்படி நடக்குது! நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்! நான் அப்போவே டாக் கிட்ட சொன்னேன் 'நான் ஒரு ராசி கெட்டவள் அக்கா பிரசவத்துக்கு நான் போகலனு' என்னோட பேச்சை யாருமே கேக்கல, இப்ப பார்த்தியா என்ன நடந்து இருக்குனு. என்னால யாருக்குமே சந்தோசம் இல்ல. ஆகாஷ் அம்மா சொன்னது தான் சரி." என்ற பல்லவி கண்ணீரை கைகளினால் துடைத்துக்கொண்டு ,"ப்ளீஸ் எனக்கு இந்தியாவுக்கு டிக்கெட் போட முடியுமா?" என்று யாசகம் கேட்பது போல கெஞ்சி கேட்டாள்.தீவிரமாக யோசித்த ரிஷி, "அக்சிடன்ட் அப்புறம் என்ன நடந்துச்சு சொல்லு. அப்பறம் உன்னை நான் நெஸ்ட் ப்ளைட்ல இந்தியாவுக்கு அனுப்புறேன்." என்று சொல்லவும் தடுமாறினாள்."நீங்க டிக்கெட் போடலனா என்ன நானே…" என்று அவள் கைபேசியை தேட வீட்டில் மயக்கத்தில் இருந்த போது அழைத்து வந்தது நியாபகம் வரவே, ஒன்றுமே செய்யமுடியாத இயலாமையில் மருத்துவமனை இருக்கையில் அமர்ந்தாள்.சிறிது நேரம் கண்ணை முடி யோசித்தவள்," சரி நான் சொல்லறேன் ஆனா யாருகிட்டயும் சொல்ல கூடாது சரியா?" என்று கேட்கவும் சம்மதமாக தலை அசைத்தான்.தன் வாழ்நாளில் மீண்டும் நினைக்கக்கூட விரும்பாத ஒரு நிகழ்வை சொல்ல தொடங்கியவள் இதயம் வேதனையில் குமைந்தது. அந்த வேதனை கொடுத்த தாக்கம் நெஞ்சத்தை வெகுவாக அழுத்தியது.சில நினைவுகள் வலியோடு!
சில நினைவுகள் காயங்களோடு!
சில நினைவுகள் ஆறாத வடுக்களோடு! எண்ணங்களுக்குள் செல்ல தொடங்கினாள் பெண்.

தொடரும்…
 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 06எட்டு மாதங்களுக்கு முன்..கண்ணிமைகளைப் பிரிக்கமுடியாமல் பிரித்தாள் பல்லவி. உடம்பு முழுவதும் அடித்துப்போட்ட மாதிரி வலித்தது. அவள் விழித்ததை அறிந்த செவிலியர் வெளியே யாரையோ அழைக்கச் செல்வது தெரிய, ஆகாஷ் மற்றும் அவனின் தாயார் ஹேமாவதி உள்ளே நுழைந்தனர்.ஆகாஷின் முகத்தில் கவலை நீங்கி மகிழ்ச்சி நிறைந்திருந்தது,"பல்ஸ்! ஆர் யூ ஒகே?" என்று ஆகாஷ் அவள் கன்னத்தில் கைவைத்து கேட்க, வலியின் மிகுதியிலும் ஆம் என்று இதழ் அசைத்தாள்."ஆஷ்! அம்மா, அப்பா எங்க?" என்று மெல்லிய கரகரப்பான குரலில் பல்லவி கேட்டதும், என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தான்."பல்லவி எமோஷனல் ஆகாதா ப்ளீஸ் உனக்கு நல்லது இல்லைனு டாக்டர் சொன்னார். அங்கிள், ஆண்ட்டிய இன்னும் தேடிட்டு இருக்காங்க, அங்க இருந்த நிறைய பேர் அவங்க.. ஹம்ச்! பல்ஸ் ஐ திங்க் தே ஆர் நோ மோர்."என்று ஆகாஷ் கூறி முடித்ததும் கதறி அழ கூட முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தாள்.அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் அவளுடைய கவலையை போக்க வழி தெரியாமல் தவித்தான்.அந்த ஒரு வாரமும் பல்லவிக்கு மருத்துவமனையில் நரகமாக கழிந்தன. பெற்ற தாய் தந்தை உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்று புரியாமல் தவித்து போனாள்.கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த பல்லவிக்கு உணவை ஸ்வாதி கரண்டியில் ஊட்டி விட, அறையின் வாயிலில் சத்தம் கேட்டது. செவிலியர் கதவை திறந்து வெளியே செல்லவும் பல்லவிக்கு அவர்களின் உரையாடல் நன்றாக கேட்டது."நான் அவங்க மருமகன் தான். நான் பார்த்து ஐடென்டிபியை பண்ணுறன் சார்." என்று ஆகாஷ் போலீசிடம் பேசுவது கேட்க, பல்லவி ஸ்வாதியிடம் அவர்களை உள்ளே அழைத்து வர சொன்னாள்.அறையின் உள்ளே நுழைந்த போலீஸ்காரர் பல்லவியை பார்த்து,"மேடம் உங்களுக்கு ஆக்சிடேன்ட் அனா இடத்துல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு காரை கண்டுபிடிச்சு இருக்கோம். சார் சொன்ன டீடெயில்ஸ் வச்சு பார்க்கும் போது உங்க கார் தான். இருந்தாலும் நீங்க ஒரு வாட்டி பார்த்து கான்போர்ம் பண்ணிங்கனா சரியா இருக்கும்" என்று அவர் சொன்னதும் பல்லவியிடம் ஆகாஷ் வேண்டாம் என்று தலையாட்டினான்.சிறிது நேரம் யோசித்தவள் ‘சரி’ என்றதும் ஆகாஷ் மற்றும் ஸ்வாதியின் உதவியோடு பிணவறை வாசலுக்கு அழைத்து செல்லப்பட்டாள்.பல்லவி இருக்கும் நிலையில் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்த ஆகாஷ் அங்கே வேலை செய்யும் நபர் மூலம் சடலங்களை வெளியே எடுத்து வர சொன்னான்.வெள்ளை நிற துணியில் சுற்றிய சடலங்கள் முகம் மட்டும் தெரிய ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு வந்தனர்.தன்னை ஈன்று எடுத்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தாய் தந்தையை உயிரற்ற உடல்களாக கண்டதும் கதறி அழ தொடங்கினாள் பெண்.மனித மனம் வித்தியாசமானது ஒரு நபர் இறந்துவிட்டார் என்று தெரியும் போது வரும் வலியை விட அதை நேரில் கண்ணால் பார்க்கும் போது அந்த வலி பலமடங்காக அதிகரிக்கின்றது.அவளை அணைத்து ஆறுதலாக தலையை தடவிய ஆகாஷ் அங்கே இருந்த உதவியாளருக்கு கண் காட்ட சடலங்களை உள்ளே மீண்டும் எடுத்து சென்றனர்.

பல்லவியை ஸ்வாதியின் பொறுப்பில் விட்டவன் இறுதி சடங்குக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தான்.தங்கையை காண அவரசமாக கிளம்பிய ஸ்ருதிக்கு தலைச்சுற்று வரவும் குடும்ப வைத்தியரை அணுக அவள் கர்ப்பம் தரித்திருப்பதை கூறியவர் மேலும் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் இந்த சூழ்நிலையில் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.சுவிஸ்ஸிலிருந்து மூன்று வார விடுப்பில் வந்த ஆனந்தும், சாமும் தங்களால் முடிந்த வேலையை முன் நின்று செய்தனர்.பல்லவியின் பெற்றோரை ஊட்டியில் இருக்கும் அவர்களுடைய சொந்த நிலத்திலே அடக்கம் செய்து பதினாறாம் நாள் காரியம் முடிய சாமும், ஆனந்தும் நாடு திரும்பினார்கள்.ஒரு மாதம் மருத்துவமனை வாசம் முடிந்து பல்லவி வீடு செல்ல அனுமதித்தார் வைத்தியர்.ஒரு வாரத்துக்கு முதலே அவளை தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான் ஆகாஷ், ஆரம்பித்தில் மறுத்தவளை திருமணம் முடிந்து எப்படியும் அங்கே தான் வந்தாக வேண்டும் என்று அவன் கூறவும் சம்மதித்தாள்.ஆகாஷ் அவசர வேலையாக மூன்று மாதம் டெல்லிக்கு அன்று விடிய காலையில் செல்வதால் ஹேமாவதியிடம் பல்லவியை வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னான்.மதியமாக மருத்துவனைக்கு வந்த ஹேமாவதி அறைக்குள் நுழைந்தவர் வீட்டுக்கு செல்ல தயாராகி இருந்த பல்லவியை கண்டவர், அவள் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார்.பல்லவியும் ஹேமாவதியும் இது நாள் வரையில் தனிமையில் பெரிதாக பேசியது இல்லை, அதற்கு சந்தர்ப்பமும் அமைந்தது இல்லை இருவரும் சந்திக்கும்போது நலம் விசாரிப்பதோடு நிறுத்திக்கொள்வர். இப்படி முதல் முறை தனிமையில் அவரோடு என்ன பேசுவது என்று புரியாமல் பல்லவி இருக்க அவரே தொடங்கினார்.

“பல்லவி உனக்கு என் அண்ணன் பொண்ணு பிரம்மவதனிய தெரியும்ல . அவளை தான் ஆகாஷுக்கு கட்டி வைக்கணும்னு இருந்தேன். ஒரு நாள் ஆகாஷ் வந்து உன்னை பிடிச்சு இருக்குனு சொல்லவும் அவன் ஆசை தான் முக்கியமுன்னு நானும் சம்மதிச்சேன். கல்யாணம் பேச வரும்போது உன் குடும்பத்தை பார்க்க எனக்கு திருப்தியா இருந்துச்சு ஆனா இப்போ..” என்று அவர் இழுத்து பேச பல்லவிக்கு ஒன்றுமே புரியவில்லை.“இப்போ என்ன ஆச்சு ஆண்ட்டி?”“நான் சுத்திவளைச்சு பேச விரும்பல.. நம்ம இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்.” என்று கூறி அவள் தலையில் கல்லை தூக்கி போட்டார்.“ஏன் ஆண்ட்டி?” என்றவளின் குரல் நடுங்கி கண்ணில் கண்ணீர் பெருகியது.“இந்த கல்யாணத்த பேசும்போது உங்க அம்மா, அப்பா இருந்தாங்க இப்போ அவங்க இல்லை. ஒரு அனாதை பொண்ணுக்கு என் பையன என்னால கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது.” என்றார்.அவர் அனாதை என்று சொன்னதும் உணர்ச்சிவசப்பட்டவள்,“நான் அனாதை இல்ல ஆண்ட்டி எனக்கு ஒரு அக்கா இருக்கா.” என்று பல்லவி சொன்னதும் கேலியாக சிரித்தார்.

“பல்லவி நீ இன்னும் சின்ன பொண்ணாவே இருக்க, உன் அக்கா வேற ஒரு நாட்டில இருக்கா அவளுக்குனு குடும்பம் இருக்கு. உங்க அம்மா, அப்பாவோட காரியத்துக்கே அவளால வர முடியல நாளைக்கு உனக்கு நல்லது கெட்டதுனா யாருமே வர மாட்டாங்க புரியுதா. உன்னை நான் அனாதை என்ற காரணத்துக்காக மட்டும் வேண்டாம்னு சொல்லல.” என்றவர் எழுந்து நின்றார்."என்கூட கொஞ்சம் வாரியா?.” என்று பல்லவியை அழைக்க,இருவருமாக அதே மருத்துவமனையில் இருக்கும் மகப்பேறு மருத்துவரை காண சென்றனர். ஒன்றுமே புரியாமல் பல்லவி மருத்துவர் முன் அமர்ந்து இருக்க, மருத்துவரோ கையை பிசைத்து கொண்டு இருந்தார்."டாக்டர் ரிலாக்ஸ், பல்லவி ஆகாஷ் கிட்ட எதுவும் சொல்ல மாட்டா. அவளுக்கு உண்மை தெரியணும்ல. நீங்க என் கிட்ட என்ன சொன்னிங்களோ அதை பல்லவி கிட்ட சொல்லுங்க." என்றார்.“பல்லவி உங்க ரிப்போர்ட்ல உங்களால குழந்தை பெத்துக்க முடியாதுனு ரிசால்ட் வந்து இருக்கு இதை உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு ஆகாஷ் சொன்னாரு.” என்றவர் அவள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அறிவியல் காரணங்களை சொல்லவும் அது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை.
நடந்த விபத்தில் பல்லவிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்பதை ஆகாஷிடம் மருத்துவர் கூறவும் இதை ஏக்காரணம் கொண்டும் பல்லவிக்கு தெரியக்கூடாது என்று அவன் கேட்டுக்கொள்ள இந்த விஷயம் எப்படியோ அவனின் அன்னைக்கு தெரிந்துவிட்டது.முதலே பல்லவியை பெரிதாக ஹேமாவதிக்கு பிடிக்காது. மகனுக்காக அரைமனதாக சரி என்றார். நிச்சயம் முடிந்து நான்கு மாதத்தில் திருமணம் என்று இருக்க, கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன் இந்த விபத்து நடந்திருக்க அவருடைய மனம் மாற தொடங்கியது. பல்லவியை பார்க்கும்போது எல்லாம் ஆகாஷுக்கு அவள் பாரமாக இருப்பதாக நினைத்தார்.பல்லவி ஆகாஷின் வாழ்க்கையில் இருந்து விலகினாள் தான் அவன் சந்தோஷமாக இருப்பான் என்று முடிவு செய்தவருக்கு பாவம் தெரியவில்லை அவரின் மகனின் வாழ்க்கையில் அவரே மண் அள்ளிப்போட்டார் என்று.மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்ததும்,“பல்லவி நான் ஒரு அம்மாவாக என் பையன் வாழ்க்கை சரியாக இருக்கனும்னு நினைக்கிறேன். தயவு செய்து இனிமே என் மகனை பார்க்க முயற்சிக்காத” என்றவர் திரும்பி பார்க்காமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.மனம் துடிக்க, துடிக்க உள்ளுக்குள் கதறியவள் தன் கடந்த கால தீராத வேதனையை சொல்லி முடித்து நிமிரவும் தூரத்தில் ஆனந்த் வருவது தெரியவே பேசுவதை நிறுத்திய பல்லவி கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து நிற்க, ரிஷியும் திரும்பி பார்த்தான்.இருவரையும் நெறுங்கிய ஆனந்த் பதட்டத்தோடு மனைவியின் உடல் நிலையை பற்றி விசாரிக்க, சரியாக அந்த தருணம் வந்த மருத்துவர் ஸ்ருதி மயக்கத்தில் இருப்பதாகவும் சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவார் என்றார்.ஸ்ருதி மயக்கத்தில் இருப்பதாய் மருத்துவர் டொச்சில் சொல்ல பதட்டத்தில் தவறாக புரிந்துகொண்டாள் பல்லவி. அதை விளக்கப்படுத்த ரிஷி முயலும் போது பல்லவி என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்று புரிந்துகொண்டவன், அவளிடம் பேச்சு வளர்த்து நிதானப் படுத்த முயற்சிக்க அவளாகவே நிதானமும் ஆகிவிட்டாள்.இதை கேட்டதும் நிம்மதி அடைந்த பல்லவி ரிஷியை முறைத்து பார்க்க,"ஹே இது உனக்கு புரியவைக்க தான் ட்ரை பண்ணேன் நீ தான் அவசரப்பட்டு…" என்று சொல்லவந்தவனுக்கு அவள் ஆனந்த் இருப்பதாக கண் ஜாடை காட்டவும் மறுபடியும் இருக்கையில் சென்று நிம்மதியாக அமர்ந்தாள்.அவசரமாக மருத்துவமனை வந்ததில் குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்து வர மறந்த ஆனந்த் ரிஷியை எடுத்துக்கொண்டு வர சொல்ல, அவர்கள் வீட்டுக்கு தனியாக கிளம்பினான்.இருவரின் விழிகளுக்குள்ளும் பெயர் தெரியாத உணர்வுகள் உலா வந்த நொடி அது ஏகாந்தமோ, ஏமாற்றமோ விழிகளை மூடி உணர்வுகளை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்த விடையில்லா வினாவோடு இருவரும் ஓர் பயணம்.

தொடரும்…
 
Last edited:

admin

Administrator
Staff member

அத்தியாயம் 07​

வீட்டுக்கு வந்தவன் நேராக ஆனந்த் ஸ்ருதி அறைக்கு செல்லாமல் முதலில் ஸ்ருதி விழுந்து கிடந்த இடத்தில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்தான். பின் குளித்து உடை மாற்றி தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பும் தருவாயில் அலைபேசி அழைப்பு சத்தம் பல்லவியின் அறையில் கேட்க உள்ளே சென்றான்.​

அழைப்பு ஏற்று காதில் வைக்க,​

"பல்ஸ் உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?" என்று யாரோ கோவமாக பேசுவது கேட்க,​

"ஹலோ நான் பல்லவி இல்லைங்க, நான் ரிஷி. ஆனந்த் அண்ண்னோட..."​

"அட நீங்களா?" என்று ஸ்வாதி தெரிந்தவர் போல கேட்கவும்,​

“உங்களுக்கு என்னை தெரியுமா?” என்றான் ஆச்சரியமாக​

"உங்கள தெரியாம எப்படி ரிஷி. உங்கள பற்றி நிறைய தெரியும். ஆனா, பேசினது தான் இல்ல. நான் ஸ்ருதியோட ஸ்கூல் ஃபிரண்ட் ஸ்வாதி"​

"ஸ்வாதி அக்காவா… உங்கள பத்தி அண்ணியும் நிறைய சொல்லி இருக்காங்க"​

"பார்த்திங்களா நம்ம ஒருத்தர்க்கு இன்னொருத்தர் பேசிக்கிட்டதே இல்ல ஆனா ரொம்ப தெரிஞ்சவங்க மாறி பேச ஸ்டார்ட் பண்ணிட்டோம்"​

"ஆமா அக்கா" என்று சிரித்தான்.​

"போன் பண்ண விஷயத்தை மறந்துட்டேன் பாருங்க. கொஞ்சம் பல்லவி கிட்ட போன் கொடுக்குறீங்களா"என ஸ்வாதி கேட்கவும் அவளிடம் நடந்த அனைத்தையும் சொன்னான்.​

"ஓ மை காட், தங்க் யூ ரிஷி நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணிங்க"​

"அது எல்லாம் எதுக்குங்க, என் அண்ணிக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா? நீங்க பல்லவிக்கு செய்ததை பார்க்கும் போது நான் பண்ணினது எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க"என்று ரிஷி சொன்னதும் குழம்பி போனாள்.​

"நான் என்ன பண்ணேன்?"​

"பல்லவி என்கிட்ட அக்சிடண்ட் ஆனதுக்கு அப்புறம் நடந்ததை எல்லாமே சொல்லிட்டா. நீங்க தான் அவளை ஹாஸ்பிடல்ல பார்த்துக்கிட்டிங்கனு."​

"சொல்லிட்டாளா?"​

"ஆமா!"​

ரிஷி சொன்னதை நம்ப முடியாமலிருந்த ஸ்வாதி அமைதியாக யோசிக்கவும்,​

"ஹலோ லைன்ல இருக்கீங்களா?"என்றான்.​

"எஸ் ரிஷி, எப்போ இதை உங்ககிட்ட சொன்னா?"​

"அது அண்ணி மயக்கத்துல இருக்குறத தப்பா புரிஞ்சுகிட்டு எமோஷனலா பேசினா. அப்போ நான் கேட்டதும் சொன்னா."​

"இது வேற யாருக்கும் தெரியாதே..."​

"இல்ல தெரியாது. அப்போ நான் மட்டும் தான் இருந்தேன்"​

"தேங்க்ஸ் ரிஷி. ஹாஸ்பிடல் போனதும் அவளை என்கிட்ட பேச சொல்லுங்க."​

"அக்கா, ஆகாஷ் அம்மா பல்லவியை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு சொல்லுறிங்களா…"​

'அதுதானே பார்த்தேன் அவளாவது முழு கதையை சொல்லிட்டாலும்' என்று மனதில் நினைத்துக்கொண்டவள்,​

"ரிஷி அது வந்து.. பல்லவி இந்த விஷயம் ஸ்ருதி, ஆனந்த், சாம் யார்க்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னா" என்றாள் தயங்கியபடி.​

"அவங்க கிட்ட தானே சொல்லக்கூடாது என் கிட்ட சொல்லுங்க அக்கா, ப்ளீஸ்" என ரிஷி கெஞ்சவும் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.​

ஹேமாவதி சென்ற திசையையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் பல்லவி. அவளை கடந்து சென்றவர்கள் அவளையே குழப்பமாக பார்த்து விட்டு செல்ல, அந்த வழியாக வந்த பல்லவி அறையில் இருந்த செவிலியர் அவள் இப்படி நிற்கவும் முதலில் அவளை ஓர் இடத்தில் அமர்த்தியவர் ஸ்வாதிக்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தார்.​

ஹேமாவதி பல்லவியை அவர் வீட்டுக்கு அழைத்து செல்வதால் ஸ்வாதி சென்னை வந்துவிட்டாள். ஒன்றுமே புரியாவிடினும் பல்லவியை காண விரைந்து சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பயணித்து அங்கிருந்து ஊட்டிக்கு காரில் வந்த ஸ்வாதி கண்டது மருத்துவமனையில் சிலை என அமர்ந்திருந்த பல்லவியையே.​

பல்லவியை நெருங்கியவள் அவள் கன்னத்தில் தட்டி அழைக்கவும், திடீர் என்று தூக்கத்திலிருந்து விழித்தவள் போல தன்னை சுற்றி பார்த்தாள்.​

"பல்லவி என்னாச்சுடா?" என்று அவள் பல்லவியிடம் கேட்க,​

“டாக்! டாக்! நான் அனாதையா.. நான் ஆகாஷ்க்கு பொருத்தமானவள் இல்லையா? எனக்கு குழந்தை பிறக்காதா?" என்றவள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை அதற்கு மேலும் அடக்க முடியாமல் கதறி அழ தொடங்கினாள்.​

பல்லவியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறிய ஸ்வாதி, அவளை கஷ்டப்பட்டு சமாதானபடுத்தி ஒருவழியாக சென்னை கூட்டிக்கொண்டு வந்தாள்.​

சென்னைக்கு வந்ததிலிருந்து பல்லவியின் நடவடிக்கையை பார்த்து பயந்த ஸ்வாதி அவளுடனே இருந்தாள். ஒரு மனநல மருத்துவராக ஸ்வாதி யோசிக்க ராஜேஷ் தான் அவள் பெற்றோரை இழந்த சோகத்தில் இருக்கிறாள் என்று மனைவியிடம் கூறவும் ஒரு வேளை இருக்குமோ என்று அமைதியாக இருந்தாள்.​

மனைவி மருத்துவமனை செல்லாமல் இருப்பதை கண்ட ராஜேஷ் கேள்வி எழுப்பவும் பல்லவியை காரணம் காட்ட விரும்பாமல் வேலைக்கு சென்றாள் ஸ்வாதி.​

வேலை முடிந்து வழமையாக வரும் நேரத்தை விட நேரத்துக்கே வீட்டுக்கு வந்தவள் பல்லவி அறைக்கு சென்றாள். அங்கே கையை கத்தியால் அருத்த நிலையில் படுக்கையில் விழுந்து கிடந்த பல்லவியை கண்டதும் மருத்துவராக முதல் உதவிகளை செய்தவள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.​

கை ஆழமாக வெட்டுப்படாததாலும் சரியான நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதித்ததாலும் மருத்துவர்களால் பல்லவியை காப்பாற்ற முடிந்தது.​

ஸ்வாதி தனக்குள் இருக்கும் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதற்காக பல்லவியை பரிசோதிக்கவே, சோதனை முடிவில் அவளுக்கு அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (Post-traumatic stress disorder PTSD) பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது.​

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (PTSD) என்பது ஒரு நபர் ஒரு பயங்கரமான, அதிர்ச்சியூட்டும், திகிலூட்டும் அல்லது ஆபத்தான நிகழ்வை அனுபவிக்கும் போது அல்லது நேரில் கண்டால் உருவாகும் ஒரு உண்மையான கோளாறு ஆகும். போர், இயற்கை பேரழிவு, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துஷ்பிரயோகம் அல்லது மோசமான விபத்து போன்ற ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை வாழ்ந்த பிறகு அல்லது பார்த்த பிறகு இந்த PTSD உண்டாகளாம். ஆபத்து முடிந்த பிறகு PTSD ஒரு நயருக்குள் மன அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் பொதுவாக ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது கடுமையான காயம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குகிறது. PTSD உடைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லாவிட்டாலும் கவலை அல்லது மன அழுத்தத்தை உணரலாம்.​

PTSD அறிகுறிகள் உள்ள எவரும் PTSD சிகிச்சையில் அனுபவம் உள்ள ஒரு மனநல நிபுணருடன் இணைந்து பணியாற்றுவது முக்கியம். முக்கிய சிகிச்சைகள் உளவியல் சிகிச்சை, மருந்துகள் அல்லது உளவியல் மற்றும் மருந்துகளின் கலவையாகும். ஒரு மனநல நிபுணர் மக்களுக்கு அவர்களின் அறிகுறிகள் மற்றும் தேவைகளுக்கு சிறந்த சிகிச்சை திட்டத்தை கண்டறிய உதவ முடியும்.​

PTSD உடைய சிலர் தொடர்ந்து அதிர்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில், அதிர்ச்சிகரமான சூழ்நிலை மற்றும் PTSD இன் அறிகுறிகள் இரண்டையும் நிவர்த்தி செய்யும் போது சிகிச்சையானது பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை அனுபவிப்பவர்கள் அல்லது PTSD உடையவர்கள் பீதி நோய், மனச்சோர்வு, பொருள் பயன்பாடு அல்லது தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கலாம். இந்த நிலைமைகளுக்கான சிகிச்சையானது அதிர்ச்சிக்குப் பிறகு மீட்க உதவும். குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும் மீட்புக்கு ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.​

ஸ்வாதியே ஒரு மனநல மருத்துவர் என்பதால் பல்லவிக்கு தேவையான சிகிச்சைகளை அவரே பார்த்துக்கொண்டார்.​

ஸ்வாதி ராஜேஷ் இருவரும் பல்லவியை குழந்தை போல பார்த்துக்கொண்டனர். பல்லவி நடந்தவற்றை எக்காரணம் கொண்டும் ஸ்ருதியிடம் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கியவள் சிகிச்சைக்கு ஒத்துழைத்தாள்.​

நடந்த அனைத்தையும் ஸ்வாதி கூறியதும் ரிஷி மருத்துவமனை செல்ல நேரமாவதை உணர்ந்தவன் ஸ்வாதியிடம் பல்லவி தன் பொறுப்பு என்று வாக்குறுதி அளித்தவன் அழைப்பை துண்டித்தான்.​

***​

ஆனந்த் விட்ட அறையில் சாமின் காது ‘குய்!’ என்று கேட்டுக்கொண்டு இருந்தது. கன்னம் சிவந்து போய் இருக்க, முகத்தை தொங்கபோட்டபடி இருந்தவனை பல்லவி சமாதானம் செய்ய எதிரில் கோவமாக நின்று கொண்டு இருந்தார் ஆனந்த்.​

ஆனந்த் பெர்ன் கிளம்பியதும் நண்பர்களின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு சென்று மது அருத்தியவன் போதையின் பிடியில் யார் அழைத்தும் அலைபேசி எடுக்காமல் இருந்ததால் அந்த கோபத்தில் தம்பியை ஆனந்த் அடித்துவிட்டார்.​

ரிஷி வீட்டிலிருந்து எடுத்து வந்த பையை ஆனந்திடம் தந்தவன் சோக சித்திரமாக இருந்த நண்பனின் தோளில் கையை போட்டு தனியாக அழைத்து வந்தான்.​

ஆனந்த் அடித்ததில் சாமின் சட்டை கலைந்து இருக்க அதை சரி செய்த ரிஷி,​

“எங்க மச்சான் போய் இருந்த..” என கேட்கவும் முழித்தான் சாம்.​

ஓங்கி மறு கன்னத்தில் ரிஷி அறைய அவனின் கைரேகை முழுதும் சாமின் கன்னத்தில் பதிந்தது.​

நண்பன் அடித்ததும்,​

“நீயும் ஏன்டா அடிச்ச?” என்று பாவமாக கேட்டான் சாம்.​

“ஏன்டா விட்டுட்டு போன?” என ரிஷி மறுபடியும் கை ஒங்க கண்ணை மூடிய சாம்,​

“மச்சான் சாரி, இனிமேல் அண்ணிய இப்படி தனியா விட்டுட்டு போக மாட்டேன்.” என்றான்.​

“அண்ணியா?” என்று ரிஷி புருவம் சுருக்கி கேட்க.​

“அப்போ நீ அண்ணியை விட்டுட்டு போனதுக்கு அடிக்கலையா?” என்றான் சாம் கேள்வியாக,​

ரிஷி அடித்தது என்னவொ பல்லவியை தனியாக விட்டு விட்டு சுவிஸ்க்கு சாம் சீக்கிரம் வந்ததற்காக தான். சாம் பல்லவிக்கு நெருக்கமான நண்பன் என்று ரிஷியும் அறிவான் அவன் அவளுக்கு துணையாக இருந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது என்று நினைத்தான்.​

“நான் அடிச்ச அடியில் உனக்கு காது கேட்காம போயிடுச்சு. நான் அண்ணியை சொன்னது உன் காதுல தப்பா கேட்டுருச்சு” என்று சொல்லி ரிஷி சமாளித்தான்.​

பல்லவிக்காக அடித்தேன் என சொன்னால் ஏன் பல்லவிக்கு என்ன நடந்தது என்று கேட்பான். சாமுக்கு தெரிய வந்தால் கண்டிப்பாக ஆனந்திடம் சொல்லுவான். அதனால் உண்மையை சொல்லாமல் மூடி மறைத்தான் ரிஷி.​

“காதும் போச்சா...” என்று புலம்பிக்கொண்டு சாம் வெளியே செல்ல, ஷாலினி விக்கியை கூட்டிக்கொண்டு எதிரில் வந்தவள் அவனை கண்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.​

“டேய் என்னடா ரெண்டு கன்னத்துலையும் ப்ளஷ் (blush) அப்ளை பண்ணியா?” என்றதும்,​

“உங்க யாருக்கும் இது என்னனு தெரியல அப்படி தானே…சும்மா, சும்மா என்னை அசிங்கப்படுத்தினா என்னோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க”​

“அதாச்சும் பார்க்கிற மாறி இருக்குமா?” என்றவள் உள்ளே செல்ல,​

“கிரேட் இன்சல்ட் சாம்” என்று புலம்பியவன் ஆனந்த் அழைக்கவும் அடித்துப்படித்துக்கொண்டு உள்ளே சென்றான்.​

‘வானவில் என் வாழ்க்கையில் தோன்றும் முன்பு மறைந்து போன தேன் துளி பூக்களில் தேடும் தேனீ நான் என​

காதலே என் காதலே எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன் தேவ(தை)ன் உன்னை தேடியே…’​

- இன்று நேற்று நாளை பாடல்​

 
Last edited:

NNK07

Moderator
அத்தியாயம் 08

குழந்தை ஒரு வரம் என்றால் பெண் குழந்தையாய் பிறப்பது அந்த தெய்வமே வந்து பிறப்பது போல் ஆகும்.விக்கியை கையில் தூக்கி வைத்திருந்த ஆனந்த் பார்வை முழுதும் ஸ்ருதியின் கையில் இருந்த அவருடைய பெண் அரிசியிடமே இருந்தது.

குழந்தையை முதலில் ஸ்ருதி தான் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஆனந்த் அவள் மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும் வரை காத்திருந்தார்.குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்வத்தில் சாமை பார்க்க மறந்த ஸ்ருதியின் கண்களுக்கு இப்பொழுது அவனுடைய வீங்கிய கன்னம் நன்றாக தெரிந்தது.“சாம் உன் கன்னம் ஏன் இப்படி வீங்கி இருக்கு.” என்று ஸ்ருதி கேட்டதும் ஆனந்தை பார்த்தான் சாம்.சாமின் பார்வை சென்ற திசையை கண்ட ஸ்ருதி கோபமாக கணவரை முறைத்து பார்த்தாள்.

“ஆனந்த் இப்ப எதுக்கு சாமை அடிச்சீங்க?” என்று கணவரை முறைத்து கொண்டே கேட்டாள்.“இவன் பண்ண வேளைக்கு இவன மொத்தி இருக்கணும், ஒரு அறையோட விட்டுட்டேன்னு சந்தோஷப்படு.” என்றார் அவரும் கோபம் குறையாமல்.“ஒரு அறைலயா ரெண்டு கன்னமும் வீங்கி இருக்கு?” என்ற ஸ்ருதியின் கேள்விக்கு பதிலாக சாம் அருகில் நிற்கும் ரிஷியை பார்த்தான்.“ரிஷி நீயும் அவனை அடிச்சியா?”“சாரி அண்ணி. நான் இனிமே அப்படி பண்ண மாட்டேன்,சாரிடா” என்றான் ரிஷி.“சரி விடு ரிஷி. ஆனந்த் இப்ப சொல்லுங்க நீங்க அவன ஏன் அடிச்சிங்க?”என்று கணவரின் பக்கம் திரும்பினாள் ஸ்ருதி.“இது என்ன டா அநியாயமா இருக்கு. ரிஷியும் தான் அடிச்சான், அவன ஒன்னுமே சொல்லல என்ன மட்டும் ஏன் கேள்வி கேட்கிற?” என்று ஆதங்கமாக கேட்டார்.“அவன் செஞ்ச தப்புக்கு அவன் சாரி சொல்லிட்ட பின்னும் நீங்க அடிப்பிங்களா?”என்று கேட்ட மனைவியை முறைத்து பார்த்தார் ஆனந்த்.“ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா. குழந்தையை பார்க்காம சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அக்கா குழந்தை என்கிட்ட தாங்கக்கா" என்று கூறினாள் ஷாலினி.

ஷாலினியின் கையில் குழந்தை வந்ததும் குழந்தையை கொஞ்சியவள்,"என்ன பெயர் அக்கா யோசிச்சு இருக்கீங்க?" என்றாள்."லவிஷி!"“லவிஷியா? அப்படின்னா?”என்றான் சாம்.“எனக்கு புடிச்ச ரெண்டு பேரோட பெயரை ஜாயின் பண்ணி வச்சிருக்கேன்.” என்று ஸ்ருதி கூறியதும் ஆனந்த் உட்பட அனைவரும் குழம்பி போயினர்.“யாருன்னு சொல்லுங்கக்கா சத்தியமா ஒண்ணுமே புரியல” என்றாள் ஷாலினி.

“ரொம்ப சிம்பிளா தான் வச்சிருக்கேன் அதுவே உங்களுக்கெல்லாம் புரியலையா? சரி நானே சொல்றேன். பல்லவியோட லவி. ரிஷியோட ஷி. ரெண்டும் சேர்த்து தான் லவிஷி”

இவ்வளவு நேரம் நடந்த கலவரங்களை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த பல்லவி,"ஏன்க்கா என் பேரு வச்ச?" என்றாள் தவிப்பாக."ஏன் இப்போ உன் பேரு வச்சதுக்கு என்ன?" என்றான் ரிஷி."நான் உன்கிட்ட பேசல. நான் அக்கா கிட்ட பேசிட்டு இருக்கேன்." என்றாள் முறைத்துக் கொண்டு."உனக்கு இப்ப என்ன பிராப்ளம்? என் பெயர் கூட உன் பெயர் இருக்கு, இதுதான் பிராப்ளமா சொல்லு?" என்று பிரச்சனையை திசை மாற்றினான் ரிஷி."நான் அப்படி சொல்லல, நீ தப்பா புரிஞ்சுக்கிற" என்றவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.“நான் சரியா தான் புரிஞ்சுக்கிறேன். ஷாலினி குழந்தையை கொடு” என்றவன் குழந்தையை கையில் வாங்கியதும் பல்லவியின் அருகில் சென்றான். ரிஷி என்ன செய்யப் போகிறான் என்று புரிந்ததும்.“வேண்டாம் ரிஷி குழந்தையை எங்கிட்ட கொண்டு வராத. நான் அவளை தூக்க மாட்டேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.நடப்பது புரியாமல் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பல்லவியை நெருங்கியவன் அவள் கைகளில் குழந்தையை வைக்க, நடுங்கியக் கைகளுடன் குழந்தையை இறுகப்பற்றியவள் பயத்தில் ரிஷியின் கைகளை விடாமல் குழந்தையோடு சேர்த்து பிடித்து வைத்திருந்தாள்.“பாரு பல்லவி, அது உங்க அக்கா குழந்தை எவ்ளோ அழகா இருக்கா பாரு. கண்ணு அப்படியே உன்ன மாதிரி இல்ல" என்று ரிஷி கேட்டதும் அவன் கண் பார்த்து ‘ஆம்’ என்று தலையசைத்தவள் குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.சிறிது நேரம் குழந்தையோடு அப்படியே நின்றவர்கள் நிலைமை புரிந்ததும் விலகி குழந்தையை மறுபடியும் ஸ்ருதியிடம் ஒப்படைத்தான் ரிஷி.எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்த அந்த ஒரு கேள்வியை ஆனந்த் தன் மனைவியிடம் கேட்டார்.”நீ எப்படி ஷார்ட்ஸ் (அன்பே) கீழ விழுந்த?”“இப்ப அது ரொம்ப முக்கியமா? எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க?”“இல்ல பரவால்ல அண்ணி,ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்றான் சாம்."அது… ரிஷி, பல்லவி ரூமுக்கு போறத பார்த்தேன். அதுதான் ஏதோ பிரச்சனையா இருக்குமோன்னு அவங்க பின்னாடி போனப்போ தான் விக்கி ஜூஸ குடிச்சிட்டே தரையில கொட்டிட்டான் அதை கவனிக்காம விழுந்துட்டேன்"என்றாள்.இதைக் கேட்டதும் பல்லவி மற்றும் ரிஷிக்கு சங்கடமாக இருந்தது. தங்களால் தான் இந்த நிலைமை ஸ்ருதிக்கு நேர்ந்தது என்று. இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருப்பதைக் கண்ட சாம் "சரி நடந்தது நடந்து போச்சு இதெல்லாம் எதுக்கு பேசிக்கிட்டு? பாப்பாக்கு எவ்ளோ அழகான பேரு? லவிஷி. ஆனா சாமையும் கொஞ்சம் ஆட் பண்ணி இருந்தா நல்லா வந்து இருக்கும் ”என்றான்.இவ்வளவு நேரமும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த விக்கி..“அம்மா பாப்பாக்கு பசிக்கும் என்கிட்ட இருக்க பிஸ்கட்டை கொடுக்கிறீங்களா” என்று தன் கையில் இருந்த பிஸ்கட் கவரை நீட்டினான்.இதை கேட்டதும் அறையில் இருந்த அனைவரின் முகத்திலும் புன்முறுவல் தோன்றியது.தாயும் சேயும் நலமாக இருப்பதால் இரண்டு நாட்களிலே இருவரையும் பத்திரமாக ஆனந்த் வீட்டுக்கு அழைத்து வந்தார்.ஸ்ருதிக்கு என்று பிரத்தியேகமாக பத்திய உணவுகளை சமைத்து தினமும் கொண்டு வந்து கொடுத்தார் பார்வதி.ரிஷி தினமும் ஒரு வேளையாவது வந்து குழந்தையையும், பல்லவியையும் பார்த்துவிட்டு செல்வான்.இன்னும் இரண்டு நாட்களில் புது வருடம் என்ற நிலையில் அன்றே பெயர் சூட்டு விழாவை நடத்த ஆனந்தும் ஸ்ருதியும் முடிவெடுத்தனர்.மிகவும் நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து வீட்டிலே நடத்துவதாக முடிவு செய்ததால் பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை.

முதலில் குழந்தையை தூக்க தயங்கிய பல்லவியை கொஞ்சம், கொஞ்சமாக தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான் ரிஷி. குழந்தைக்கும் அவளுக்குமான நேரத்தை வேண்டுமென்றே ஸ்ருதியும் அமைத்துக் கொடுத்தார்.வேளையில் நேரம் சரியாக இருப்பதால் பல்லவி தன்னைத் தானே வருத்தும் நினைவுகளை யோசிக்க மறந்தாள்.பெயர் சூட்டும் விழாவுக்கு ரிஷியின் குடும்பம், ஷாலினியின் குடும்பம், சேகர், சுகன்யா, சாமின் ஒரு சில நண்பர்கள் இப்படி மிகவும் நெருக்கமான சில உறவினர்களை மட்டும் அழைத்தார்கள்.ஸ்ருதி ஆசைப்படி வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிய திட்டமிட்டிருந்தனர். அதில் சாம் பல்லவி, ரிஷியும் அடங்கினர்.ஸ்கை ப்ளூ எனப்படும் நீல நிறத்தில் உடை அணிந்தனர். ஸ்ருதி சாரியும், பல்லவி லெஹங்காவும், ஆனந்த், சாம், ரிஷி மற்றும் விக்கி ஒன்றுபோல் குர்த்தி அணிந்தனர்.ஆனந்த் ஏற்பாடு செய்திருந்த போட்டோகிராபர் இவர்கள் அனைவரையும் வைத்து வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.ஸ்ருதி ஷாலினியையும் ஸ்கை ப்ளூ நிறத்தில் உடை அணிய சொன்னபோது வேலை காரணத்தால் அவளால் அந்த நேரத்தில் உடைய வாங்க முடியவில்லை.ஷாலினி தான் வாங்கிய உடையை தவிர வேறு யாரும் வாங்கி கொடுத்த உடைகளை அணிய பெரும்பாலும் விரும்ப மாட்டாள். அதனால் ஸ்ருதியும் அவளை வற்புறுத்தவில்லை.போட்டோகிராபர்களில் ஒருவன் ரிஷியின் பள்ளி நண்பன் என்பதால் அவனிடம் சொல்லி பல்லவியை மட்டும் அவளுக்கே தெரியாமல் நிறைய புகைப்படங்கள் எடுக்க சொன்னான்.

பல்லவியை சுற்றிக் கொண்டிருக்கும் ரிஷியின் பார்வை, ஷாலினியின் தாயாரான பத்மாவின் கண்களில் இருந்து தப்பவில்லை.புது வருடம் என்பதால் விழாவை சுருக்கமாக முடித்து அனைவரையும் மதியமே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.****

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக தன் கேள்விக்கணைகளை மகளிடம் தொடுத்துக் கொண்டிருந்தார் பத்மா.“ஷாலு நம்ம ரிஷி அந்த பொண்ணு பல்லவிய லவ் பண்றானா?”என்று தன் விசாரணையை தொடங்கினார்.“தெரியலையேமா, எனக்கு எப்படி தெரியும்?” என்றாள் ஷாலினி.“உன் பிரண்ட் என்ன பண்றான்னு உனக்கு தெரியாதா?”“நான் அவன் பிரண்டு தான், பிஏ இல்ல.” என ஷாலு நக்கலாக சொல்லவும்,“கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்ல பழகு. அத விட்டுட்டு இப்படி எடுத்தெரிஞ்சி பேசிட்டு இருக்காத” என்றார் கோவமாக.“உன் கூட அஞ்சு நிமிஷம் பேசினாலே சண்டை தான் வருது”என நகைகளை கழட்டினாள்.“நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு என் கூட சண்டை போடுற?” என்றவர் அவளுடைய நகைகளை பெட்டியில் வைத்து மூடினார்.“ஆள விடுங்கம்மா” என்றவள் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.“இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு ஒரு நிமிஷம் அம்மா அப்பா கிட்ட பதில் சொல்றதுக்கு முடியல, இவ்வளவு அழுத்துக்கிறாங்க. இந்த மாதிரியெல்லாம் நாங்கள் பண்ணி இருந்தா எங்க அம்மா, அப்பா கன்னம் பழுக்க, பழுக்க அடிச்சிருப்பாங்க" என்று புலம்பியவர் திரும்பி மகனை பார்த்து"சஞ்சய் உனக்காச்சும் ஏதும் தெரியுமா?" என்றார்."ஆள விடுங்கம்மா"என்று ஓடியெவிட்டான் அவன்.“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இவங்க எல்லாம் ஓடுறாங்க? பேசாம ரிஷி அம்மா பார்வதி கிட்ட கேட்போமா? வேணாம் அந்த அம்மா சொல்லிட்டாலும்” என்றவர் அப்போதைக்கு தன் விசாரணையை நிறுத்தினார்.****

லெகங்காவில் இருந்து வீட்டுக்கு அணியும் உடையை மாற்றியதும் தான் பல்லவியால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.

அறையை விட்டு வெளிய வந்ததும் ரிஷியின் கையில் இருக்கும் விக்கியை தூக்கியவள் அவனுக்கு உடை மாற்ற அழைத்து சென்றாள்.போட்டோகிராபர்ஸ் கிளம்ப தயாராக இருக்கவும் அதில் ரிஷியின் நண்பன்..

"மச்சான் சூப்பரா இருக்காங்கடா உன் பியான்சி" என்றான்.பல்லவியோடு அவன் நெருக்கமாக சிரித்து பேசுவதை கண்டதும் அவனே இவர்கள் கட்டிக்கப் போகிறவர்கள் என்று நினைத்துக் கொண்டான்.‘அவ கண்ணுக்கு தவிர வெளியில மத்த எல்லார் கண்ணுக்கும் அவளுக்கும், எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுனோ இல்ல நான் அவ பியான்சினோ தான் தெரியுது போல’ என்று நினைத்தவன் நண்பனோடு பேசிக் கொண்டிருக்க

“ரிஷி இங்க வாயேன்” என அறையில் இருந்து பல்லவி அழைக்கவும் நண்பனை வழி அனுப்பி விட்டு அறைக்கு சென்றான்.விக்கியோடு போராடிக் கொண்டிருந்த பல்லவியை கண்டவனுக்கு சிரிப்பு வந்தது.

“என் நிலைமை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றாள் பல்லவி.“சரி சிரிக்கல, இப்ப ஏன் கூப்பிட்டேன்னு சொல்லு?” என்று ரிஷி கேட்டதும்,“டெய்லி அவனுக்கு நான் தான் டிரஸ் மாத்துறேன். இன்னைக்கு மட்டும் திடீர்னு நான் டிரஸ் மாத்த கூடாதாம் அவரோட சித்தா வந்து தான் டிரஸ் மாத்தணுமாம். நீயே அவனை பார்த்துக்கோ போ…" என்று அவள் கோபமாக வெளியேற சிரித்துக் கொண்டே விக்கிக்கு உடையை மாற்றி விட்டான்.இந்த விளங்க மறுக்கும் உறவுக்கு உயிர் உண்டா தெரியவில்லை. ஆனால் அழகான கொல்லும் உணர்வுகள் உண்டு.ஒரு கணம் ஒரு
போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே நீ கண்ட
கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே

கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

-கண்ணான கண்ணே நீ ( நானும் ரவுடி தான்)

தொடரும்…
 

NNK07

Moderator
அத்தியாயம் 9


காலையில் அலுவலக அறையில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த ரிஷியின் கைபேசி அலறியது. அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டான்.


“ரிஷி, உன்னோட ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி. கொஞ்சம் பல்லவியை போய் பார்த்துக்கிறியா?” என ஸ்ருதி கேட்டதும்,


“ஏன் அண்ணி, பல்லவிக்கு என்ன ஆச்சு?” என்றான் பாத்தட்டமாக.


“அது…வயிறு வலிக்குதுன்னு சொன்னா. நான் இங்க லவிஷிய ஆனந்த் கூட ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். விக்கியும் எங்க கூட தான் இருக்கான். லவிஷிக்கு 2 டேஸா கோல்டா இருக்கு. டாக்டர்கிட்ட போனா பெட்டர்ன்னு தோணுது அதுதான் நாங்க போயிகிட்டு இருக்கோம். பட், வரதுக்கு ரொம்ப லேட் ஆகும். இந்த நேரம் பார்த்து சாம் வேற ட்ரிப் போயிருக்கான் பிரண்ட்ஸோட. கொஞ்சம் சிரமம் பாக்காம வீட்டுக்கு போறியா? வேணும்னா லெப்பை அங்க கொண்டு போய் கூட இருந்து வேலை பாத்துக்கோ ப்ளீஸ்”என்றாள் ஸ்ருதி.


ஸ்ருதிக்குமே பல்லவிக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போல மனதுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. அதைக் கேட்டு அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறாள். அவளை தனியே விட விரும்பாமல் ரிஷியின் உதவியை நாடினாள்.


****

அரை மணி நேரத்தில் ஆனந்த் வீட்டை வந்தடைந்த ரிஷி தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு உள்ளே நுழைந்தான்.


பல்லவி அறைக் கதவை தட்டியவன் குரல் கொடுக்க ஆள் இருக்கும் அரவமே இருக்கவில்லை. சுவாதி கூறிய விடயங்கள் ஒவ்வொன்றாக ஞாபகம் வர பயத்தில் ரிஷிக்கு குளிர் பரவியது. கதவை உடைக்க தயாரானவன் ஒரு நிமிடம் நிதானித்து கைப்பிடியில் கை வைத்து திறக்க முயற்சிக்கவும் அது தானாக திறந்தது.


கட்டிலில் வயிற்றைக் கட்டிக் கொண்டு வலியில் உறங்கிக் கொண்டிருக்கும் பல்லவியை கண்டவன் அவளை நெருங்கினான்.


“பல்லவி எந்திரி. என்ன ஆச்சு உனக்கு?”என்று அவளை எழுப்ப முயற்சி செய்தான்.


அத்தனை வலியிலும் தன் தூக்கத்தைக் கெடுத்த கோவத்திலும் எரிச்சலாக


“என்ன உனக்கு பிரச்சனை? மனுஷனை நிம்மதியா தூங்க விட மாட்டியா?” என்று கத்தினாள்.


“தூங்குறது பிரச்சினை இல்ல பல்லவி, ஆனா உனக்கு வயிறு வலிக்குது. அது உன் முகத்திலேயே நல்லா தெரியுது. அதனால வா டாக்டர் கிட்ட போலாம்.” என்றான் சமாதானமாக.


“டாக்டர்கிட்ட எல்லாம் போகத் தேவையில்லை எப்பவும் வர வலி தான்” என்று அவள் சாதாரணமாக சொன்னதும்,


“அது எப்படி எப்பவும் வர வலியா இருக்கும்?” என கேட்டவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.


“உனக்கு பீரியட்ஸா?”


“ஆமா, கொஞ்சம் என்னை நிம்மதியா விடு” என்று அவள் கெஞ்சவும் வெளியே சென்றான்.


மறுபடியும் அரை மணி நேரம் கழித்து அறைக்குள் நுழைந்தவன் அவளை மறுபடியும் எழுப்ப,


“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” என்றவள் எழுந்து அமர்ந்தாள்.


“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் வெளியே வா” அவளை அழைக்க


“ஓ காட்! ரிஷி ஆல்ரெடி வலியில் இருக்கேன். என்னை டார்ச்சர் பண்ணாத ப்ளீஸ்” என கெஞ்சலாக கேட்டாள்.


“ஒரே ஒரு வாட்டி வா, ப்ளீஸ்”


“ஃபைன்… இப்ப நான் வெளியில வரணும் அவ்வளவுதானே?” என்றவள் கோவமாக எழுந்து வெளியே ஹாலுக்கு சென்றாள்.


சோபாவில் தலகாணிகள் அடக்கப்பட்டு போர்வையும் வைக்கப்பட்டிருந்தது. மேசையில் பாப்கார்ன் மற்றும் சிலிக்கான் ஹீட்டிங் பேட் (silicon heating pad) இருந்தது.


கேள்வியாக அவள் ரிஷியை திரும்பிப் பார்க்க.


“இதெல்லாம் கூகுள்ல சஜ்ஜஷன்ஸ்ல காட்டுச்சு. பீரியடஸ்ல இருக்கும்போது ஹீட்டிங் பேட் வச்சா கொஞ்சம் பெட்ரா ஃபில் பண்ணுவாங்கன்னு எழுதி இருந்துச்சு. அண்ட் எனக்கும் போர் அடிக்கும் வா ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்ப்போம்” என்றவன் சோபாவில் வந்தமர அவளும் ஹீட்டிங் பேடோடு சோபாவில் அமர்ந்தாள்.


யூடியூப்பில் உன்னாலே உன்னாலே திரைப்படம் எடுத்து வைத்திருப்பதை கண்டவள் “உனக்கு எப்படி எனக்கு இந்த படம் பிடிக்கும்னு தெரியும்?” என்று கேட்டாள்.


அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன் “அதுதான் உன் பேஸ்புக் ப்ரொபைல்ல இருக்கே” என்றான் சாதாரணமாக.


“என்னை ஸ்டாக் பண்றியா நீ?”


“போர் யூர் இன்பர்மேஷன் நீங்கதான் உங்க பேஸ்புக் ப்ரொபைல்ல போட்டு இருக்கீங்க. யாராவது பார்க்கணும்னு தானே போடுவாங்க” என்று அவன் சொன்னதும் உதட்டை சுழித்தவள் ரிமோட் எடுத்து படத்தை பிளே செய்தாள்.


ஆயிரம் முறை பார்த்த படம் என்றாலும் பிடித்த படத்தை மறுபடியும் பார்ப்பதிலும் ஒரு சுகம் உண்டு. முழு படத்தையும் எந்த சண்டையும் போடாமல் அமைதியாக இருந்து பார்த்து முடித்தனர்.


படம் பார்த்து முடிந்ததும்,


“உனக்கு இந்த படம் ஏன் ரொம்ப பிடிக்கும்?” எனக் கேட்டான்.


“இந்த படம் ரிலீஸ் ஆன அப்போ எனக்கு ஒன்பது வயசு தான். நான் தியேட்டர்ல பார்த்த ஃபர்ஸ்ட் படம். எனக்கு அந்த படம் அப்போ ரொம்ப புடிச்சிருந்துச்சு. அந்த பாட்டு எல்லாம் என் வீட்ல டெய்லி போடுவேன். அம்மா ஒரு பாயிண்ட்ல டென்ஷன் ஆகி என்னை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அப்பா தான் அவளுக்கு என்ன புடிச்சிருக்கோ அதை பண்ண விடு. படமும் நல்லா தானே இருக்குன்னு சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணுவார் தெரியுமா… இந்த படத்த நான் திரும்பத் திரும்ப பார்க்கும் போது தான் கதையே புரிய ஆரம்பிச்சுது.


என் ரூம்ல வினயோட ஒரு போட்டோ கூட இருந்துச்சு. அந்த டைரக்டர் ஜீவா இறந்து போயிட்டாருன்னு தெரிஞ்சதும் நான் ரொம்ப வருத்தப்பட்டேன் தெரியுமா... இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த படத்தை நான் திரும்பி பார்த்துக்கிட்டே இருப்பேன்” என்றாள்.


“நான் கூட இந்த படத்தை நிறைய வாட்டி பார்த்து இருக்கேன். ஆனா, உன் அளவுக்கு ரசிச்சு பார்த்ததில்லை பல்லவி” என்றவனை பார்த்து நட்பாக புன்னகைத்தாள்.


சிறிது நேரத்திலேயே ஸ்ருதியும் ஆனந்தும் வந்துவிட அனைவரிடமும் சொல்லி விட்டு ரிஷி வீட்டுக்கு கிளம்பினான்.


****


மகன் ஹாலில் அமர்ந்திருப்பதை விசித்திரமாக பார்த்த பார்வதி அவன் அருகில் வந்தமர்ந்தார்.


“என்ன ரிஷி ஏதாச்சும் பிரச்சனையா, ஒரு மாதிரி இருக்க?”என்றார் அக்கறையாக.


“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லம்மா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் பீடிகையாக.


“சரி பேசு ரிஷி, என்ன பேசணும்?”


“பல்லவியை பற்றி என்ன நினைக்கிறீங்க?”


“பல்லவியா… நல்ல பொண்ணு ஏன் கேட்குற?”என்றார் மகனின் மனதில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொள்வதற்காக.


“அம்மா நான் பல்லவிய லவ் பண்றேன். ஃபர்ஸ்ட் அவ மேல ஒரு அட்ராக்ஷன் வந்துச்சு. அழகா இருக்கான்னு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. ஆனா, அப்புறம் நான் அவளை பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க தான் எனக்கு அவளை ரொம்ப புடிச்சுது. ஷி இஸ் பியூட்டிஃபுல் இன்சைட் தென் அவுட் மா. அழகு என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் நான் அவளை செலக்ட் பண்ணல்ல மா. அப்படின்னா அழகு தான் முக்கியம்னு நினைச்சிருந்தா எப்பயோ கல்யாணம் பண்ணி இருப்பனே. இல்லை யாரையாச்சும் லவ்வாவது பண்ணி இருப்பேன். ஷி இஸ் சம்திங் டிஃபரண்ட்மா. அவ கூட எனக்கு ஒரு சோல் கனெக்ஷன் தெரியுது. நீங்க கூட சொல்லுவீங்களே அப்பாவ பார்த்த ஃபர்ஸ்ட் டைமே அவரதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணுனேன்னு அதேதான் எனக்கும். உங்ககிட்ட இத சொல்லி உங்க பெர்மிஷனோட தான் நான் அவகிட்ட என்னோட லவ்வையும் என்னோட ப்ரொபோசலையும் சொல்லணும்னு நினைக்கிறேன்“ என கூறி முடித்தான்.


பெருமையாக மகனைப் பார்த்தவர் “நான் என் பையன சரியா வளர்த்து இருக்கேன்னு எனக்கு தோணுதுப்பா. உங்க அப்பா இறந்ததும் ஒரு மகனா நீ அவருக்கு எல்லாத்தையும் பார்த்து, பார்த்து செஞ்சதுல இருந்து ஆரம்பிச்சு, வீட்ல இருக்க எல்லாருக்கும் அப்பா இல்லையேன்னு குறை மட்டும் தான் இருக்கே தவிர மத்தபடி எல்லாரையும் சந்தோஷமா வச்சிருக்க. உனக்குள் ஆயிரம் கவலை இருந்தாலும் அதை நீ யாருகிட்டயும் காட்டிக்கிட்டது இல்லை. பல்லவி கிட்ட முதல் வாட்டி பேசும்போது எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருச்சு. ஸ்ருதிக்கு இது தெரிஞ்சா சண்டைக்கு வருவா. எனக்கு ஸ்ருதிய விட பல்லவியைத்தான் ரொம்ப பிடிக்கும். அவ உன்னோட லவ் அக்செப்ட் பண்ணி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா எனக்கு சந்தோஷம் தான்பா.” என்று அவர் கூறி முடித்ததும் அன்னையை கட்டியணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் ரிஷி.


”சரி நம்ம ஒரு விஷயம் பண்ணலாமா? பல்லவிக்கு பொங்கலுக்கு சாரி வாங்கி கொடுக்கலாமா?“ என்றார் பார்வதி யோசனையாக.


பின் இருவரும் ஒன்றாக சென்று சந்தன நிறம் பட்டு கரையில் சிவப்பு போட்ட சாரியை தேர்ந்தெடுத்தனர்.


வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக பார்வதி பல்லவியை அழைத்தார்.


“சொல்லுங்கம்மா திடீர்னு கூப்பிட்டு இருக்கீங்க?”


“ஏன் பல்லவி நான் உன்னை கூப்பிட கூடாதா?”


“அப்படியெல்லாம் இல்ல, தாராளமா கூப்பிடுங்க”


“பல்லவி ஒரு பிளவுஸ் ஆர்டர் வந்து இருக்கு. அந்த பொண்ணு அளவு கொடுக்காமல் போயிடுச்சு. நம்பரும் என்கிட்ட இல்ல. அந்தப் பொண்ணும் கிட்டத்தட்ட உன்ன மாதிரி தான் இருப்பா. உன்னோட சைஸ் மட்டும் சொல்றியா?” என நசுக்காக பொய் உரைத்தார்.


அவர் கேட்டதும் தட்ட முடியாமல் அவர் கேட்ட அளவுகளை சொன்னாள். இவர்களுடைய உரையாடல் முடிய எதிரில் இருந்த ரிஷி தன் தாய்க்கு கைகளை மடக்கி கட்டை விரல்களை காட்டினான்.


பல்லவி சொன்ன அளவுகளைக் கொண்டு அவளுக்கு சாரிக்கு பொருத்தமான ஜாக்கெட்டை தைத்தவர் பொங்கலுக்கு முதல் நாள் இரவு அவளிடம் சாரியை கொடுக்க,


“ஐயோ அம்மா இதெல்லாம் எனக்கு எதுக்கு.” என்று அவள் மறுக்க,


“நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதாம்மா. எப்படி எனக்கு ரிஷியும் தருணுமோ அது மாறி தான் நீயும் அதனால அம்மா சொல்றது தட்டாம செய்யணும் இத நாளைக்கு அழகா கட்டிக்கோ.“ என்றார் உண்மையான அன்போடு.


”அப்ப நீங்க நாளைக்கு என் கையில தான் சாப்பிடணும். நான் உங்க எல்லாருக்கும் சமைச்சு வைப்பேன் வருவீங்களா?“ பாசமாக அழைத்தாள் பல்லவி.


”இதெல்லாம் ஒரு கேள்வியா? கண்டிப்பா நான், ரிஷி, தருண் எல்லாரும் வருவோம்.” என்றவர் அனைவரிடம் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினார்.


பல்லவிக்கும் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாக மாறிடும் நாளும் இந்த போகி தானோ!

தொடரும்…
 
Status
Not open for further replies.
Top