எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

🌧️ ஆலியில் நனையும் ஆதவன் !! ☀️ - டீஸர் 1

NNK-34

Moderator
டீஸர் 1
MergedImages (3).jpg
"கட் கட் கட்" என்றவன், ஒருவித எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கி நடந்து வந்த அந்த படத்தின் புதுமுக கதாநாயகனான ஜிக்னேஷின் தோள்களைத் தட்டி,
"வெல் டன் ஜிக்னேஷ் சீன்ஸ் எல்லாமே ஃபெர்பெக்ட்டா வந்திருக்கு, யு ஹவ் அ ப்ரைட் ஃபியூச்சர்" என்றான்.

"தேங்க் யு ஸோ மச் சார் நீங்க இல்லன்னா என்னால இவ்வளவு பெட்டரா பெர்ஃபார்ம் பண்ணிருக்க முடியாது." என்று சொல்ல, மீண்டும் அவனது தோள்களைத் தட்டி மெலிதாக புன்னகைத்து தனது கழுத்தில் கரத்தை வைத்து நெட்டி முறித்தபடி தன் கேரவேனுக்குள் நுழைந்தவன் தொடர்ந்து ஒருவாரமாக ஓய்வின்றி வேலை பார்த்ததின் காரணமாக உண்டான சோர்வில் அப்படியே நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிய தருணம் அவனது அலைபேசி தன் இருப்பிடத்தைச் சொல்ல,

"ப்ச்" சலிப்புடன் நெற்றியை நீவியவன் தனது அலைபேசி தன் கையில் எடுத்து தொடுதிரையை பார்த்த நொடி அவ்வளவு நேரம் அவனிடம் இருந்த சோர்வு மொத்தமும் எங்கோ மாயமாய் மறைந்து போக அவனது இதழ் புன்னகையில் விரிந்தது.

@@@@@@@
அலைபேசியை எடுத்து டையல் செய்து,

"வரு நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?" தான் அணிந்திருந்த சன்கிளாஸை கழட்டியபடி அவன் வினவினான்.

"மேல தான் இருக்கேன், டோர் ஓபன்ல தான் இருக்கு மாடிக்கு வா" என்றாள் பெண்ணவள்,

"நான் எப்படி உன் ஃப்ரண்ட் வீட்டுக்குள் வர்றது விளையாடாம நீ முதல்ல கீழ வா"

"அதெல்லாம் வரலாம், நீ வா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"

"ப்ச் வரு என்ன இது"

"நான் சொன்னா வரமாட்டியா?" உரிமையான கோபத்துடன் பெண்ணவள் கேட்க, மறுக்கத் தோன்றாது அவள் சொன்னது போல மாடிக்குச் சென்றான்.

ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த LED விளக்கின் ஒளியில் மொட்டை மாடி மின்ன, அழகுக்கு வைக்கப்பட்டிருந்த சிவப்பு ரோஜா மலர்கள் மற்றும் அவற்றின் நறுமணம் அவனது நாசியைத் தீண்டினாலும் அவன் கண்கள் அவளைத் தேட அலங்கரிக்கப்பட்ட பொம்மை போல அவனை நோக்கி நடந்து வந்தாள் அவள்.

வெள்ளை நிற பால் வதனம்! செயற்கை சாயம் பூசிய செக்க சிவந்த இதழ்கள்! தோளில் துவண்டு விழுந்த சுருட்டிவிடப்பட்ட கற்றைக் குழல்! வேறு பிடிமானம் இல்லாமல் அவள் உடலை இறுக்கமாய் பற்றியிருந்த கருப்பு நிற குட்டை உடை அவளது வனப்பைத் தெளிவாய் காட்ட அழகியாக அவன் எதிரே நூலளவு இடைவெளியில் வந்து நின்றவள், தனது அலைபேசியில் ஏதோ செய்தபடி அவனைப் பார்த்துக் கண்ணசைக்க, சில நொடிகளில் அவள் தன் அலைபேசியை எடுத்துப் பார்க்கச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் தனது பாக்கெட்டில் இருந்த தனது அலைபேசியை எடுத்து, அவளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் படித்து விட்டு தன் முன்னே தனது மார்புக்குக் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு முகத்தில் சிறு கோபத்துடன் நின்றிருந்தவளை பார்த்தவன், நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தாங்கள் ஒருவருக்கொருவர் தங்களின் காதலைப் பரிமாறிக்கொண்டதை எண்ணிப் பார்த்து,

"சாரி" என்று அவளிடம் கெஞ்சுதலாக கேட்டான்.

அதற்கு, "இதை நான் சொல்லலைன்னா உனக்கு ஞாபகமே இருந்திருக்காதுல" செல்ல கோபத்துடன் பெண்ணவள் சண்டையிட்டாள்.

"சாரி வரு, ரியலி சாரி ஷூட்ல பிசியா இருந்துட்டேன்"

"என் ஞாபகம் கூட இல்லாத அளவுக்கு பிசி" முகத்தைத் திருப்பிக் கொள்ள,

"நினைக்கலைன்னு உனக்குத் தெரியுமா ஹான்? உன்னை நினைக்காம என்னால எப்படி இருக்க முடியும்" பின்னால் இருந்து மெதுவாக அவன் அணைக்கவும், அவன் கரங்களைத் தட்டி விட்டவள்,

"ஒன்னும் வேண்டாம்" என்று முகத்தை தூக்கிவைத்தபடி கூறவும்,

"நிறைய நாள் கழிச்சு நமக்கு இப்படி ஒரு அழகான மொமெண்ட் கிடைச்சிருக்கு, இது நமக்கான மொமெண்ட் இப்போ இந்த கோபம் தேவையா?" என்றவனை அவள் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

சில நொடிகள் பார்வை பரிமாற்றத்திற்கு பிறகு அவனது கரம் மெதுவாக அவளை அணைத்துக்கொள்ள, அப்படியே அவன் மீது சாய்ந்தவள் தன் தலையை மட்டும் சற்று உயர்த்தி,

"ஹாப்பி ஃபோர்த் லவ் அனிவேர்சரி மை ஹன்சம்" தன் விழிகளில் மோகம் ததும்ப அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தபடி கூறியவள் அப்படியே திரும்பி அவன் விழிகளை நோக்கினாள். அவனும் தான், என்ன பார்வை அது? பெண்ணவளின் காதல் பார்வையில் சற்று தடுமாறிய ஆணவனோ,

"எதோ சரியில்ல வா வீட்டுக்கு போகலாம்" தடுமாற்றத்தை மறைத்தபடி கூறியவன் அங்கிருந்து செல்லப் போக, அவனது கரத்தை பிடித்து அவனைத் தடுத்தவள் அவன் சுதாரிக்கும் முன்பு மறுக்கன்னத்திலும் முத்தம் பதிக்க,

"வரு கிளம்பலாம்" என்றவனின் இதழில் மறுப்பாக விரல் வைத்தவள், அவனது அதரத்தைக் கவ்விக்கொள்ள, தனக்கு உரிமைப்பட்டவளின் நெருக்கத்தில் ஆணவனோ மொத்தமாகத் தடுமாறினான்.

இருவருக்கும் இடையே இருந்த நூலளவு இடைவெளி கூட இப்பொழுது இல்லாமல் போக, தன் வதனத்தை இருகரங்களால் பற்றியிருந்த ஆணவனின் உஷ்ண மூச்சுக் காற்று தனது முகத்தில் பட்டு உணர்வுகள் பெறுக அவனது சட்டையின் காலரை இறுக்கமாகப் பற்றியபடி விழிகள் மூடி நின்றிருந்தவளின் சாயம் பூசிய செவ்விதழ்களை ஆணவன் நிதானமாகச் சிறையெடுக்க உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்த பெண்ணவளோ ஆர்ப்பரிக்கும் ஆவலுடன் அவனது இதழ் மீது தனது இதழால் போர்தொடுத்து இறுதியில் தன் வசமாக்கினாள்.

காதலுக்கும், காதலர்களுக்கும் தேவைப்படும் தனிமை! பனி பொழியும் இரவு! கவிதை பாடவைக்கும் பூரண சந்திரன்!

அருகே அவளுக்கு உரிமையாகப் போகின்றவன்! வேறு என்ன வேண்டும் இதற்கு தானே இந்த இனிமையான தருணத்திற்கு தானே பல நாட்கள் காதலோடு காத்திருந்தாள். அந்த தருணம் பல வருடங்கள் கழித்துக் கிடைக்கவும் அவளது உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓட ஆரம்பித்துவிட, அவனது அகண்ட தோள்களைப் பிடித்திருந்த அவளது கரமோ மெல்ல நகர்ந்து அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை பொத்தானை ஒவ்வொன்றாக விடுவிக்க, ஏற்கனவே பெண்ணவளுக்கு நிகராக உணர்வுகளின் பிடியில் சிறை பட்டுக்கிடந்தவனின் கரமோ பெண்ணவளின் இடையை அழுத்தமாக வருட ஆரம்பிக்க, தொடர் அலைபேசியின் அழைப்பால் தன்னிலைக்கு முதலில் வந்தவன், திடுக்கிட்டான்!
@@@@@@
"அச்சோ வேண்டாம்" என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவளின் கரம் பற்றியவன்,

"ப்ச் இப்போ ஏன் எழுந்த உட்கார்" என்றான் அதட்டலாக,

"ப்ச் நீங்க முதல்ல கீழ இருந்து எழுந்துக்கோங்க உங்க தங்கச்சி வந்திட போறாங்க" சிறு பதற்றத்துடன் கூறியவளின் விழியசைவுகளை புன்னகையுடன் ரசித்தவன்,

"அதெல்லாம் வரமாட்டா நீ முதல்ல உட்காரு" கண்களைக் காட்டி அமருமாறு கூறினான்.

"ப்ளீஸ்" தன் கரிய விழிகளை சுருக்கி பெண்ணவள் கெஞ்சவும், தரையில் இருந்து எழுந்தவன், அவளை மீண்டும் இருக்கையில் அமரச்செய்து, அவன் முன்பு ஒற்றை காலை மட்டும் தரையில் ஊன்றி மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் மறுக்க மறுக்க, அவளது கால்களைப் பற்றி தன் தொடை மீது வைத்து அவளுக்காகத் தான் பார்த்துப் பார்த்து வாங்கி கொண்டுவந்த தங்கக் கொலுசை அணிவித்தவன்,

"இப்போ தான் இந்த கொலுசுக்கே மதிப்பு வந்திருக்கு" என்று கூறி அவளது கண்களை பார்த்துப் புன்னகைத்து அப்படியே குனிந்து அதில் முத்தம் பதிக்க முனைந்த நேரம்,

"வீட்டில பேசிட்டிங்களா?" என்று கேட்ட பெண்ணவள் ஒருவித எதிர்பார்ப்புடன் அவனைப் பார்க்க, சில நொடிகள் தயக்கத்திற்குப் பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவள் முகம் பார்த்தவன் அவளது மென்மையான கரங்களைப் பற்றி,

"அன்னைக்குச் சொன்னது தான் இப்பொழுதும் சொல்றேன், உன் கனவுக்கும் ஆசைக்கும் என்றைக்கும் நானோ என் குடும்பமோ தடையா இருக்க மாட்டோம்.

நீ இப்போ இருக்கிறது போல எப்பவும் இருக்கலாம், இப்போ பிடிச்ச உன் கைய நான் எப்பொழுதும் விடமாட்டேன். என் சப்போர்ட் உனக்கு எப்பொழுதும் உண்டு" என்றவனை மகிழ்ச்சி பொங்கப் பார்த்துப் புன்னகைத்தவளின் கரம் ஒருமுறை அவன் அணிவித்த கொலுசை வருடிக்கொண்டது.
@@@@@@
அனைத்து அணிகலன்களையும் கழற்றிவிட்டு இறுதியாக தன் கழுத்தில் இருந்த பெரிய மாலையை தன் அறையில் உள்ள கண்ணாடியின் முன்பு அமர்ந்து கழற்றிக் கொண்டிருந்தவனின் விழிகள், கண்ணாடியில் தெரிந்தவனைப் பார்த்து அதிர்ந்து விரிய, அவளது அறையின் கதவை அடித்துச் சாற்றியபடி உள்ளே வந்த அவனோ அவளை அனல் தெறிக்கப் பார்க்க, மிகவும் குழம்பிப் போன பெண்ணவளோ தன் இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம்,

"நீங்க இங்க என்ன பண்றீங்க? யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க ப்ளீஸ் வெளில போறீங்களா?" என்று கேட்ட மறுநிமிடம்,

வேகமாக அவளை நெருங்கி அவளது இரு கரங்களையும் தன் நகக்கண்கள் பதிய அழுத்திப் பிடித்தவன், தனது வெப்பமான மூச்சு காற்று அவள் முகத்தில் மோத அவளது அதிர்ந்த விழிகளைப் பார்த்து, "ஐ டோன்ட் கேர்" என்று பயங்கரமாகக் கத்தினான்.

Last edited:

admin

Administrator
Staff member
டீஸர் 1
View attachment 2119

அணைத்து அணிகலன்களையும் கழற்றிவிட்டு இறுதியாக தன் கழுத்தில் இருந்த பெரிய மாலையை தன் அறையில் உள்ள கண்ணாடியின் முன்பு அமர்ந்து கழற்றிக் கொண்டிருந்தவனின் விழிகள், கண்ணாடியில் தெரிந்தவனைப் பார்த்து அதிர்ந்து விரிய, அவளது அறையின் கதவை அடித்துச் சாற்றியபடி உள்ளே வந்த அவனோ அவளை அனல் தெறிக்கப் பார்க்க, மிகவும் குழம்பிப் போன பெண்ணவளோ தன் இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம்,

"நீங்க இங்க என்ன பண்றீங்க? யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க ப்ளீஸ் வெளில போறீங்களா?" என்று கேட்ட மறுநிமிடம்,

வேகமாக அவளை நெருங்கி அவளது இரு கரங்களையும் தன் நகக்கண்கள் பதிய அழுத்திப் பிடித்தவன், தனது வெப்பமான மூச்சு காற்று அவள் முகத்தில் மோத அவளது அதிர்ந்த விழிகளைப் பார்த்து, "ஐ டோன்ட் கேர்" என்று பயங்கரமாகக் கத்தினான்.

அருமையான தொடக்கம்.. வாழ்த்துக்கள் டியர்
 
Top