இது முழுக்க முழுக்க ஆன்டி ஹீரோ கதை. கதையில் லாஜிக் எல்லாம் பார்க்கப்பிடாது. ஒன்லி மேஜிக் மட்டுமே.
இது எல்லாரும் படிக்கத் தகுந்ததல்ல!!
சரி வளவளன்னு பேசாம மேட்டருக்கு வாம்மா!! னு சொல்லுறது காதுல விழுது..
இதோ வந்துட்டேன் உங்களுக்கான டீஸர் :
இருட்டறையில் அடைப்பட்டிருந்த மதியின் கைகளையும், கால்களையும் கட்டி வைத்திருந்தான் சௌபாலன்..
இருட்டான அறையிலும், தன் கண்களுக்குப் புலப்பட்ட வெளிச்சத்தில், “பாலா.. பாலா” என கத்திக் கொண்டே இருந்தாள். அவளின் நா வறண்டு போகும் வரை..
அவளின் நீண்ட நேர கத்தலின் பலனாக வந்து நின்றான் சௌபாலன். ஆறடியை தாண்டிய உயரம் கொண்டவன், கம்பீரம் மாறா நடையில் உள்ளே நுழைந்தான்..
யாரோ அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைவது மதியின் கண்களுக்கு தெரிந்தது.. “பாலா என்னை விடு.. நான் போகணும். உன்னை பத்தின உண்மையை நான் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன். ப்ளீஸ் என்னை விட்டுடு. நான் நகுல் கிட்ட போகணும்” என கண்ணீர்க்குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மதி..
“என்னடி நகுல்.. நகுல்னு அவன் பெயரையே சொல்லிட்டு இருக்க?.. பாலா உன் வாய்ல இருந்து வர்ற ஒரே பேரு பாலனா மட்டும்தான் இருக்கணும். புரியுதா?. நீ இங்கே தான் இனி இருக்கப் போற. இந்தப் பாலனோட பொண்டாட்டியா” என்றவனின் வார்த்தையில் முகத்தை சுழித்தாள் மதி..
“ச்சீ. இந்த வார்த்தையை என்கிட்ட சொல்ல உனக்கு வெட்கமா இல்லை.. நான் உன் அண்ணனோட பொண்டாட்டி. உனக்கு அண்ணி. என்னை அடையணும்னு நினைக்கிறீயே. நீயெல்லாம் த்த்தூஊஊஊஊஊ” என காரி உமிழ்ந்து விட..
அவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா? என்பதை போல் சாதாரணமாக அவளை விட்டு எழுந்து நின்றான்..
“பாலா. ப்ளீஸ் என்னை விட்டுடு.. ப்ளீஸ் பாலா.. நான் போகணும்.. நகுல் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. ப்ளீஸ் பாலா லீவ் மீ” என மறுபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள்..
அவனோ அவள் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அறையை விட்டு வெளியேற முயன்றிட, “நான் ப்ரெக்னன்டா இருக்கேன் பாலா.. நீ சித்தப்பா ஆகிட்ட. நகுல் அப்பா ஆகிட்டான்” என்றவளின் வார்த்தையில் அதுவரை சாதாரணமாக இருந்த அவன் முகம் விகாரமாக மாறிட.. வேகமாக திரும்பி வந்தவன்,
“அவன் உயிரை சுமக்கிறன்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை” என கர்ஜித்தவன்… தன் ஷு காலினால் அவளின் வயிற்றில் எட்டி உதைத்தான்…
“அம்ம்மாஆஆஆஆ” என்ற மதியின் அலறலில், இன்னும் பூமி தொடாத சின்னஞ்சிறு மழலை ஒன்று தாயின் வயி
ற்றிலேயே சிதைந்து போனது..