எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிரியாதிருக்க பிறிதொரு நாள் சந்திப்போம் - கதை திரி

Status
Not open for further replies.

Nila 45

Moderator
நாயகன் - கதிரோன்
நாயகி - முகிலினி

காதல் எப்பொழுதும் அழகான தருணங்களால் பின்னப்பட்ட நினைவுகளின் நூலாடை. தலைவனும் தலைவியும் இரு உயிர் ஓர் உயிராக ஒர் உயிரோவியம் உருவாக ஊடல் காதல் வீம்பு கோபம் கூடல் என எத்தனை எத்தனை வண்ணங்கள் அதில் !! அத்தனையும் நிரப்பி நிற்கும் கலை காதல்!! கதிரரோன் முகிலினி வாழ்வில் அந்த தூரிகை வரையும் காதல் கதையாக என் எழுதுகோலில்.

இது எனது முதல் முயற்சி. உங்கள் விருப்பம் தேடி..
 

Nila 45

Moderator
பிரியாதிருக்க பிறிதொரு நாள் சந்திப்போம்

அத்தியாயம் 1

முகிலினி தன் அருகில் படுக்கையில் இருந்த மூதாட்டிக்கு மருந்துகளைக் கொடுத்து விட்டு மெல்ல எழுந்தாள். அமெரிக்காவின் வெர்மான்ட் மாகாணத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் இருந்தாள் முகிலினி. அந்த வீட்டில் இருக்கும் வயதான மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கும் செவிலியர் பணியில் இருந்தாள். அவளுடைய புன்னகை மாறாத சேவையும் சாந்த முகமும் இயல்பாகவே எல்லோருக்கும் உதவிடும் மனமும் அவளை செவிலிமர் தொழிலை தேர்ந்தெடுக்க வைத்தது. முக்கியமாக அவளுடைய பணித்திறனும் பணிவும் படைப்பாற்றலுடன் கூடிய கனிவான அணுகுமுறையும் அவளை மரண நோயர் மருத்துவ செவிலியர் ஆக மாற்றியது.
மரண நோயர் செவிலியர் தொழில் என்பது இதற்கு மேல் மருத்துவத்தால் எதுவும் இயலாது என்ற கைவிடப்பட்ட நோயாளிகளின் கடைசி ஆறு மாதங்களில் அவர்களை இறப்புக்கு தைரியமாக எதிர்கொள்ள வைப்பதும் சந்தோஷமாக வைத்திருப்பதும் மருத்துவ உதவி செய்வதுமே. இதோ இப்போது இருக்கும் குளோரியா மூதாட்டி கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக படுக்கையில் தான் இருக்கிறார். அவருக்கு நான்கு மகன்கள் இரு பெண்கள். மாதத்திற்கு இரு முறை அவரவர் தங்கள் குழந்தைகளுடன் வந்து அவரை பார்த்துவிட்டு செல்வார்கள். குளோரியா அவருடைய கணவர் இறந்த பின்னர் உடல்நலம் குன்றி அவருடைய மூத்த மகன் சாம்ரிச்சர்ட்ஸ் கண்காணிப்பில் வசித்து வருகிறார். மூத்த மகன் சாம் இங்கிருந்து சற்று தள்ளி இன்னொரு வீட்டில் வசித்து வருகிறார். வழக்கம் போல் அன்று முகிலினி அவருக்கு மருந்துகளை கொடுத்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அறையில் சத்தம் கேட்க திரும்பினாள். நான்கு மாதம் படுக்கையில் இருந்த குளோரியா எழுந்திருந்தார். மெல்ல அவர் நடக்க முகிலினியின் பார்வை தீவிரமானது. அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் வினவினாள்.

“என்ன ஆச்சு பாட்டிமா ? ஏன் என்ன பண்ண போறீங்க?”

“ரிச்சர்ட்ஸ் அவருக்கு பிடிச்ச சான்விச் செய்ய சொன்னாரு, மஸ்ட்ர்ட் சாஸ் எடு”


முகிலினி அதை அவர் கையில் கொடுத்து விட்டு சாம் ரிச்சர்ட்ஸ் கு அலைபேசியில் அழைத்தாள்.
அவரை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் முகிலினி. குளோரியா சமையல் முடித்து களைப்பாக வந்து அமர முகிலினி அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள்.


“ஹலோ மிஸ்டர் சாம் ரிச்சர்ட்ஸ் உங்க அம்மா எழுந்து நடக்கிறாங்க, இன்று இரவு இல்லைனா நாளை அவங்களோட முடிவு எதிர்பார்க்கலாம் நீங்க எல்லாரும் வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்”

அவள் சொல்லி முடித்து கிட்டத்தட்ட ஆறு ஏழு மணி நேரத்தில் அந்த குடும்பத்தினரில் அத்தனை பேரும் அங்கே இருந்தனர். அந்த வயதான மூதாட்டியுடன் அனைவரும் நேரம் செலவிட்டனர். முகிலினி அவர்கள் அனைவரையும் பார்த்திருந்தாள். அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு மெலிதாக திரும்ப மீண்டும் கிளோரியாவின் குரல் கேட்டது.

“ரிச்சர்ட்ஸ் ரிச்சர்ட்ஸ் இங்க பாருங்க நம்ம பசங்க எல்லாம்”


அவர் பேசிக் கொண்டே நடக்க ஆச்சரியமாகி ரிச்சர்ட்ஸ் திரும்பினார்.

“அம்மா நடக்குறாங்க,ஆனா அவங்க கடைசி நாள்ல இருக்கிறாங்கனு சொல்றீங்க புரியலையே”


முகிலினி புன்னகைத்தாள்.

“இப்ப நீங்க அவங்களோட கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழிக்கிறது தான் முக்கியம், இந்த ஆராய்ச்சி எல்லாம் பிறகு சொல்றேன்”


முகிலினி சொல்ல அன்றிரவு விருந்து பெரும் கொண்டாட்டமாக இருக்க முகிலினி அனைத்து ஏற்பாடும் செய்தாள். குளோரியா அவளது கரங்களைப் பற்றி நன்றி சொல்லி உறங்கச் சென்றார். மறுநாள் முகிலினி சொன்னது போல அந்த மூதாட்டி இறந்திருந்தார். முகிலினி அந்த இறப்பில் கலந்து கொள்ளவில்லை மெல்ல அங்கு இருந்து புறப்பட்டாள். அவள் வேலை செய்யும் ஏஜென்சிக்கு வந்து இரு வாரங்கள் விடுப்புக்கு விண்ணப்பித்து வந்தாள். அவளது உடம்பும் மனதும் களைத்து போய் இருந்தது. என்னதான் இந்த தொழிலை ஆத்மார்த்தமாக விரும்பி வந்தாலும் ஆறு மாதம் தன்னுடன் பழகிய அந்த மூதாட்டியின் முகமும் மனமும் மனதை ஏதோ செய்தது. இந்த செவிலியர் பணிக்கு மட்டும் அளப்பரிய மனத்திடனும் அசாத்திய துணிவும் தேவையாக இருந்தது. முகிலினி இருபத்தாறு வயது இந்திய நாட்டு இளம்பெண். அவளை வளர்த்த அவளது அப்பா வழி பாட்டி ராசம்மா உடல்நலன் குன்றிய போது அவருக்கு நிகழ்ந்த உதாசீனங்களால் உந்தப்பட்டு இந்த பணியை தேர்ந்தெடுத்து இருந்தாள். அதற்காகவே படித்தாள். அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை கிடைத்து அமெரிக்கா வந்தாள். செவிலியர் படிப்பு முடிந்த பின் மரண நோயர் செவிலியருக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் சிறந்து விளங்குகிறாள்.
ஏனோ குளோரியா இறப்புக்கு பிறகு தனது மனதை சாந்தப்படுத்திக் கொள்ள அவள் இருவாரம் இந்தியா சென்றாக வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட இரு வாரங்கள் இந்தியா சென்ற பின் அவளது மெயிலில் அவளுக்கான பணி சுவிர்ட்சலாந்து ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லி ஏஜென்சி பயணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளுடன் செய்தி அனுப்பியிருந்நது. அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில் நோயாளியின் கோப்புகளைக் கூட ஆராயாது கடவுச்சீட்டு பயணச்சீட்டு மட்டும் பார்வையிட்டு கிளம்பினாள். குளோரியாவின் இறப்பு இன்னும் அவளை இயல்பு நிலைக்கு திரும்ப விடாதிருந்தது. இருப்பினும் அவளுக்கு பேசப்பட்ட ஊதியம் பல மடங்கு அதிகமாக இருக்க சம்மதித்திருந்தாள்.
சுவிட்சர்லாந்து வந்து இறங்கியாயிற்று.

சுவிட்சர்லாந்து பனி இல்லாது மிதமான தட்பவெப்ப நிலை நிலவியது. ஆரஞ்சு இலை மரங்கள் வானுயர்ந்து நிற்க விமான நிலையத்தில் இருந்து அந்த சொகுசு மகிழ்வுந்து அவளை அழைத்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய வீட்டின் முன்பு நிறுத்தியது. மிகப்பெரிய மரங்கள் சூழ நடுவில் அழகான கட்டமைப்பு உள்ள ஒரு பிரம்மாண்ட கண்ணாடி வீடு அது. சுவர் முழுவதும் முற்றிலும் கண்ணாடியினால் இருந்தது. வெளியே தெரிந்த காட்டின் அழகை ரசித்துக் கொண்டே வருடக்கணக்கில் அமரக்கூடும் ஒரு ரசனையுள்ள கவிஞன் எழுதிய கவிதை போலிருந்தது அதன் அழகு.


அவளுடைய அனுபவத்தில் இவ்வளவு ரசனையோடு இயற்கை ரசித்த வயதானவர்கள் இருப்பார்களா? அவள் யோசித்தபடியே உள்ளே சென்றாள். வேலையாட்கள் இருவர் அவளை வரவேற்று அமர வைத்தனர். சிறிது நேரத்தில் அவளிடத்தில் வந்த அந்த வீட்டின் மேலாளர் அவளை ஒரு அறைக்கு அனுப்பி வைத்தார். அங்கே காத்துக் கொண்டு இருந்த முகிலினி சத்தம் கேட்டு சற்றே திரும்பினாள். அங்கே பதினைந்து வயதிற்கு ஒரு இளைஞன் வீல்சேரில் அமர்ந்திருத்தான். மிகச்சிறுவன் ஆனால் அவன் முகச்சாயல் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே??! முகிலினி திகைத்து போய் மீண்டும் அவனை உற்று நோக்கினாள்.
அவள் மேற்கொண்டு அவனை ஆராய்வதற்குள் அந்த இளைஞன் வாய் திறந்து பேசினான்.


“நீ தான் புதுசா வந்திருக்க கேர் டேக்கர் ஆ? தமிழ் தெரியுமா?”

அவனுடைய ஏகவசனத்தில் யாராக இருந்தாலும் கோபம் வந்திருக்க வேண்டும் ஆனால் முகிலினிக்கோ புன்னகை வந்தது. பதினான்கு வயது சிறுவன் ஆனால் எவ்வளவு பெரிய மனுஷ தோரணை அவள் புன்னகை மாறாமலே பதிலளித்தாள்.

“ஆமா,நான் தான் உங்க கேர் டேக்கர் மிஸ்டர் நிலவன். எனக்கு நல்லாவே தமிழ் தெரியும்”

முகிலினி முறுவலிக்க அந்த சிறுவன் சிரத்தையற்ற குரலில் அவளிடம் பேசினான்.

“நீ ரொம்பவே அழகா இருக்க? எதுக்கு இந்த ஆயா வேலைக்கு வந்த? ஏன் லூசு மாதிரி சிரிச்சுட்டே இருக்கே?”

அந்த கேள்வி முகிலினிக்கு புதிததல்ல முதிர்ந்து விழப் போகும் இலைகளுக்கே சாவின் மீது கோபம் விரக்தி இருக்கையில் துளிர் விடாத தளிருக்கு தான் ஏன் முளையிடுவதற்குள் பிடுங்கப்பட வேண்டும் என்ற வெஞ்சினம் வார்த்தைகளில் வெளிப்படுவது இயல்பு தானே. முகிலினி மீண்டும் பதில் பேசிக் கொண்டே வேறு யாராவது வருகிறார்களா என விழிகளில் தேடினாள்.

“ஏன்னா எனக்கு நீ சொல்ற ஆயா வேலை அவ்வளவு பிடிக்கும், சிரிக்கறது என் இயல்பு ஒரு வகை அழகு, நீ கூட சிரிச்சா இன்னும் அழகாத் தெரிவ”

“பிடிச்சது எல்லாம் செஞ்சிர முடியும் னா உன்னை மாதிரி சிரிச்சுட்டே இருக்கலாம்”

அவன் சொல்லிக் கொண்டே சக்கர நாற்காலியில் அறையை விட்டு வெளியேறத் துவங்க முகிலினி அடுத்து என்ன செய்வது அவனைத் தொடரலாமா? என யோசித்து நிற்கையில் அந்த பெண்மணி நுழைந்தார். அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம் ஆனால் இளமையைத் தக்க வைப்பதில் நன்றாகவே ஜெயித்து இருந்தார். அவர் வந்ததும் சக்கர நாற்காலியில் இருந்த நிலவனை அணைத்துக் கொண்டார்.

“நிலா, என் பட்டு"

அவர் அணைக்க நிலவன் பெரிதாக அந்த அணைப்பையும் பேச்சையும் ரசிக்காது தனது சக்கர நாற்காலியில் இருந்த பட்டனை அழுத்த ஒரு பெண் வந்து நிலவனை அழைத்துச் சென்றாள். அவனது உதாசீனத்தை ஒரு நொடி மிகுந்த வலியோடு எதிர்க்கொண்ட அந்த பெண் மறுகணமே அதை தனது கர்வ முகத்தில் மறைத்தவராக முகிலினி முன் வந்து அந்த இருக்கையில் கம்பீரத்தோடு அமர்ந்தார். அதே நேரம் அவரது பார்வை முகிலினியை அவர் முன் அமராதிருக்குமாறு அறிவுறுத்தியது. சாவின் விளிம்பில் மனிதர்களைக் கண்டு கண்டு சளித்தவளுக்கு சரிநிகர், உயர்வு, தாழ்வு என அத்தனையும் அர்த்தமற்றதாகத் தோன்ற அமைதியாகவே நின்றாள் முகிலினி.


“நான் ரஞ்சனி, நிலவனோட அம்மா. அவனோட ரிப்போர்ட் படிச்சிருப்ப, அவனுக்கு டாக்டர் குறிச்சிருக்க நாட்கள் மூணு மாசம் தான்”

அதை சொல்லி விட்டு ரஞ்சனி தன் வலியை விழுங்க சில விநாடிகளே எடுத்துக் கொண்டார். பின் தொடர்ந்தார்.

“அவன் எங்க அருகாமையை சுத்தமா வெறுக்கறான், அதனால தான் உன்னை வர வைச்சேன். இங்க கேர் டேக்கர்ஸ் மூணு பேர் இருக்காங்க, நீ மனரீதியா அவனை சாவை எதிர்கொள்ள சந்தோசமா இருக்க உதவ சரியான ஆளு னு நிறைய டாக்டர்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணாங்க. பார்த்துக்க”

சொல்லி விட்டு எழுந்தவர் அந்த அறையின் வாயிலை நோக்கி சென்று திரும்பினார்.

“இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை நானோ , அவன் அண்ணணோ அவனைப் பார்க்க வருவோம், அடுத்த தடவை அவன் எங்களைப் பார்க்க வரும் போது அவனை சிரிக்க வைச்சுடு. உன்னோட பேமெண்ட் ட்ரிபிள் பண்ணிடறேன்"

என்று சொல்லி தன் மகனின் அறையை நோக்கி விட்டு பெருமூச்செறிந்து விட்டு வெளியே சென்றார். முகிலினி ரஞ்சனியின் எண்ணத்தை நினைத்து சிரித்தாள்.


‘எல்லாமே பணத்தால் வாங்கி விடக் கூடுமா என்ன? அவளுடைய சம்பளம் மிகப் பெரியதாக இருக்கத் தான் தன்னுடைய தொழில் முதலீட்டுக்கு வேண்டி சுவிஸ் வர சம்மதித்தாள். அதையே மும்மடங்கு தருகிறேன் என்கிறாரே? இவ்வளவு பணம் நிலவனின் புன்னகையைப் பெற முடியாத வறுமையை தான் வைத்து இருக்கிறது! இவர்கள் வருவதற்குள் அவனிடம் மாற்றம் வர வைக்க நான் என்ன மந்திரம் செய்வது? இதில் இன்னொரு அண்ணன் வேறு!’

யோசித்தப்படியே திரும்பி நடந்தவள் சட்டென்று நின்றாள். நிலவனின் முகம் போன்று தான் கண்ட ஒருவன்! ஒரு வேளை அவனாக இருக்குமா? அப்படியும் ஒரு அதிசயம் நிகழக் கூடுமா?
 
Last edited:

Nila 45

Moderator
அத்தியாயம் 2

முகிலினி சிந்தனையில் இருக்கையில் சான்ட்ரா வந்து நின்றாள். அவள் நிலவனின் பகல் நேர செவிலியர் பொறுப்பில் இருந்தாள். நன்றாகவே ஆங்கிலம் பேசினாள்.


“மிஸ் முகிலினி இது நிலவனின் இன்றைய நாட்குறிப்பு, மதிய உணவுக்கு பிறகு நான் அவரை வெளியே கூட்டிட்டு போகணும், உங்க அறை நிலவனின் அறைக்கு அருகில் ஒதுக்கப்பட்டிருக்கு, பயணக்களைப்பு தீர்ந்தால் மாலை நடைப்பயிற்சிக்கு நாங்கள் செல்லும் போது வாருங்கள்?”

முகிலினி சரி எனக் கூறி விட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்தாள். அறை மிகவும் பெரிதாக தான் இருந்தது. முகிலினிக்கு பணி சார்பில் அறை ஒதுக்குவது இயல்பு தான் எனவே தன்னுடைய பொருட்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி விட்டு குளித்து படுக்கையில் சிறிது நேரம் உறக்கம் வராது கிடந்தாள்.

மீண்டும் நிலவனின் முகச்சாயல் கொண்டவன் அவள் நினைவுகளில் எட்டிப் பார்த்தான். ஓய்வு வேண்டி இந்தியா சென்றவள் தனது நண்பன் தியோடரை சந்தித்து இருந்தாள். தியோடர் அவளுடன் பள்ளியில் படித்தவன் இன்று வரை நட்பு பாராட்டும் மிக நெருங்கிய நண்பன்.


“ஹே முகில், என்னடி இவ்வளவு கலராகிட்ட?”

“அப்படியா சொல்ற?”

முகிலினி புன்னகைக்கவும்

“சரி சரி சொன்ன பொய்க்கு சந்தோசமாகிட்டாயா? இப்ப சொல்லு எதுக்கு வரச் சொன்ன?”


“தியோ எருமை, நீ திருந்தவே மாட்டீயா டா? நாளை ஸ்வேதா கல்யாணம் கேரளால நியாபகம் இருக்கா? வர்றீயா?”

“க்ரஷோட கல்யாணத்தைப் பார்க்கற அளவுக்கு எல்லாம் எனக்கு கல் மனசில்ல?”

“என்ன? அவளும் உன் க்ரெசா?”

“ஆமா!”

தியோடர் வெட்கப்படுவது போல போலி நடிப்பு நடிக்க முகிலினி அவனது தோளில் அடித்து கத்தினாள்.

“டேய் எருமை, என் ப்ரண்டை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு இப்படி அக்கிரமம் பண்றீயே டா”

“அவ கிடக்கறா நீ சொல்லு ஸ்வேதா கல்யாணம்,”

தியோடர் மேலும் வம்பிழுக்க முகிலினி முறைத்துக் கொண்டே பேசினாள்.

“எருமைமாடு, அங்கே போய்ட்டு அப்படியே ஒரு வகேசன் போலாம் னு இருக்கேன், என் கதை எழுத அமைதியா பாதுகாப்பா தனிமைல இருக்கற மாதிரி ஒரு இடம் சொல்லு கேரளால”

“இன்னுமா நீ அந்த கதையை எழுதி முடிக்கல?”

“தியோ, உன்னால செய்ய முடியுமா முடியாதா?!”

“சரி , சரி கோவிச்சுக்காதே ஏற்பாடு பண்றேன்”

“அப்புறம் தியோ உன்னை மாதிரி ‘ரிச் பீபள்’ பார்ட்டி பழக்கம் பத்தி சொல்லு. என் கதைக்கு ஒரு சீன் வேணும்”

அவள் சொல்லி முடிக்கும் முன் தியோடர் பேசினான்.

“உன் கதைக்கு நான் சொல்றது எல்லாம் செட்டே ஆகாது. உன் ‘வயநாடு ஸ்டே’ லயே ஒரு பெரிய பிஸினஸ் மீட் பார்ட்டி இன்வைட் இருக்கு, அட்டெண்ட் பண்ணு”

“நான் எப்படிடா தனியா?”

“ஒண்ணும் கவலைப்படாதே , என் பொண்டாட்டி அதான் உன் உயிர் தோழி ரோசலின்னோட நானும் வந்துடுவேன். நீ தங்கற ரிசாட் என் ப்ரண்டுது தான் ரொம்ப ஃசேப்”

தியோடர் சொல்ல அடுத்த நாள் முகிலினி கேரளா சென்றாள். காலையில் ஸ்வேதாவின் கல்யாணம் முடிந்து தியோடர் வயநாடில் புக் செய்திருந்த வாடகை காரில் அந்த ரிசாட்கு வந்திருந்தாள். இரவு நேரம் என்றாலும் அழகிய நீர்குமிழி போல் இருந்த அந்த கண்ணாடி அறை அவள் மனதை திருடியது.

‘கதை எழுத இதை விட அழகிய சூழல் ஏது? தியோ ‘டன்ஸ் ஆஃப் தேங்க்ஸ் ‘ டா’

முகிலினி தனது நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லி விட்டு வெகு நேரம் இருண்ட அந்த மலை உச்சிகளை மெழுகுவர்த்தி போல் மங்கிய அந்த அறையின் விளக்கொளியில் ரசித்துக் கொண்டு இருந்தாள். மறுநாள் காலை சூரிய உதயம் காண வேண்டும் என மனதிற்குள் எண்ணிக் கொண்டே உடல் அசதியில் அப்படியே உறங்கியும் போனாள்.

மறுநாள் அதிகாலையில் சூரிய வெளிச்சம் மெல்ல எழும்ப படுக்கையில் இருந்து எழுந்து நின்றவள் தனது கலைந்த குழலை அள்ளிக் கொண்டையிட்டு நிமிர்ந்தாள். அப்போது தான் அவன் தெரிந்தான்.

அருகே இருந்த கண்ணாடி குவளை அறையில் தனது நீண்ட கால்கள் தெரிய சார்ட்ஸ் ல் அவளையே வெறித்துக் கொண்டு நின்றவன் ஒரு நொடியில் அவளிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டான்.


அவனது விழிகள் பார்க்கத் தயங்கி திரும்பிய இடங்களை உணர்ந்து தன் ஆடையை நோக்க இரவு அணிந்து இருந்த சிகப்பு வண்ண சேலை இடையை சிறிது தழுவாது நழுவியிருந்தது.

முகிலினி மீண்டும் சூரிய உதயத்தை ரசித்து திரும்புவது போல் திரைச்சீலையை மூட அவனது முகம் மெல்ல மறைந்தது. அந்த முகம் அப்படியே நினைவில்லாது மறைந்துப் போனது இன்று நிலவனைக் கண்டதும் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.

‘அவன் பார்வை தவிர்த்த நாகரீகம் தான் அவனை நினைவுக்குள் பொத்தி வைத்ததா? ஒரு வேளை நிலவனின் சகோதரன், ச்சே ச்சே இருக்காது பணத்தை எங்கு கொட்டி வைக்க என யோசிக்கும் இவர்கள் இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்கத்து பொழுதுபோக்கு தங்குமிடத்தில் தானிருக்கக் கூடுமா?’
முகிலினி நினைவுகளில் தன்னை தொலைத்துக் கொள்ள மனமின்றி மெல்ல எழுந்தாள். பசிக்கவில்லை வயிறு. அந்த வீட்டின் அறைகளுக்குள் நிலவனைப் பற்றிய குறிப்பு சொல்லும் ரசனை ஏதேனும் உள்ளதா? என தேடிக் கொண்டு இருந்தாள். அறைகளுக்குள் ஓரிடத்தில் கூட நிலவனின் குடும்ப புகைப்படங்களோ அவனது புகைப்படமோ இல்லை. நிலவனின் கடந்த காலத்தைக் குறிக்கும் அனைத்திலிருந்தும் தன்னை ஒளித்து வைத்துக் கொள்ள முயல்வதற்கு வெறுமனே நின்றிருந்த சுவர்கள் சாட்சிகளாக நின்றது. முகிலினி அங்கிருந்த நிலவனின் பராமரிப்பு செவிலியரிடம் அவனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி தெரிந்துக் கொண்டாள்.

இரு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் நிலவன் விபத்தில் சிக்கியதாகவும் நிலவனின் இந்த நிலைமைக்கு தான் காரணமென அவனது தந்தை மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது நலமடைந்து வருவதாக சொன்னாள் அந்த செவிலியப் பெண்மணி கேத்தரீன்.

‘முதலில் நிலவனின் முழு விடயங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்’

முகிலினி மீண்டும் தனது அறைக்குச் சென்று நிலவனின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து விட்டு அவனது மனநல ஆலோசகரின் குறிப்புகளை வாசித்தாள். அவளது முகம் சிறிது தெளிவுற்றது. அவள் அந்த கோப்பை மூடி வைத்து நிற்கையில் கேத்தரீன் வந்திருந்தார். நிலவனை செவிலியர் வெளியே அழைத்துச் செல்வதாக கூற முகிலினி அவரோடு செல்ல வெளிநடந்தாள்.

சான்ட்ரா, முகிலினி, நிலவன் மூவரும் சற்றே இளஞ்சூட்டான அந்த தட்வெப்பத்தை அனுபவித்தப்படி சுற்றிலும் சிவப்பு நிற இலைகளை உதிர்த்து நின்ற மரங்களுக்கு இடையே சென்றனர். சான்ட்ரா நடக்க நிலவன் முகிலினியிடம் தமிழில் பேசினான்.

“ஆமா உனக்கு டயர்டாவே இல்லையா?”

“இல்லை” முகிலினி பதில் சொல்ல நிலவன் மீண்டும் சீண்டினான்.

“உன்னை மரியாதை இல்லாம நீ வா போ னு பேசறேன் , கோபம் வரலையா?”

“எதுக்கு வரணும்? நீ, நீ வா போ னு கூப்பிட்டா எனக்கு நாலு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு. நல்லா தானே இருக்கு”

முகிலினி பேச நிலவன் சான்ட்ராவை அங்கேயே சக்கர நாற்காலியை நிறுத்த சொல்லி எதிரே இருந்த வெளிர்சிவப்பு வண்ண இலையுதிர்த்த மரங்களை வெறித்தான். முகிலினி அங்கிருந்த மரமேசையில் சென்று கால் நீட்டி அமர்ந்தாள்.
நிலவன் அவளைப் பார்த்தான். இதுவரை வந்த செவிலியர்கள் அவர்கள் பணியை பணியாளராகச் செய்ய இவள் முற்றிலும் மாறுப்பட்டு நிற்பதாகவே உணர்ந்தான். வந்திறங்கி ஒரு நாள் ஆவதற்குள் தன்னை ஈர்க்கும் அவள் பேச்சு அவனுக்கு புதிராகவே இருந்தது.

‘ஒரு வேளை இவள் நம் மொழி பேசுவதால் இவள் பேசுவது நமக்கு பிடிக்கிறதா?’

அவனது சிந்தனையைக் கலைக்க முகிலினியே பேசினாள்.

“உனக்கு பிடிச்ச கலர் என்ன?”

“பிங்க்”

அவளது கேள்விக்கு தானாகப் பதில் சொன்ன தனது உதடுகளை நினைத்து ஆச்சர்யமாகி அவளைப் பார்த்தான் நிலவன்.

“அப்புரம் ஏன் உன் ரூம் ல ஒரு பொருள் கூட பிங்க்ல இல்லை”

அந்த கேள்வி அவனது தாயுடன் அவன் பேசிய வார்த்தைகளை அவனுக்கு கண்முன் நிறுத்தியது.

“இந்த கலர் சரியில்லை, மாத்துங்க”

“மாம் இது என் ரூம்”

“நிலா, இது கேர்லி கலர்”

“எனக்கு தெரியும் மா, என் டேஸ்ட் படி”


“உனக்கு ஒண்ணும் தெரியாது நிலா, பீபள் வுட் காஸிப் ப்ளா ப்ளா ப்ளா”

ரஞ்சனி சொன்னப்படியே அறையின் சுவரை கரும்பச்சை நிறத்திற்கு மாற்றி இருந்தார். அந்த அறையின் பொருட்கள் உட்பட அனைத்தும் ரஞ்சனி மாற்றியிருந்தார். அந்த நிகழ்வுக்கு பின் தான் தனது தாய் தன்னை வேவு பார்த்தது தெரிய வர...

நிலவன் சட்டென்று முகம் மாறினான். சான்ட்ராவிடம் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அதிகாரமாக கூற சான்ட்ரா முகிலினியை நோக்கி வேறு எதுவும் பேசாதே என்பதாக சைகை செய்து அந்த சக்கர நாற்காலியைத் திருப்பினாள். முகிலினி அவனுடன் அமைதியாக நடந்தாள்.
அன்றிரவு சான்ட்ரா முகிலினியிடம் பேசி விட்டுச் சென்றாள்.

“மிஸ் முகிலினி, நிலவன் தன்னைப் பற்றிய எந்த பேச்சுக்களையும் பேச மாட்டான். தனிமை விரும்பி. அவனிடம் அவனது எல்லை மீறி பேச முனைந்த மூவர் இந்த ஆறு மாதங்களில் வேலையை விட்டுச் சென்றிருக்கின்றனர். என்ன தான் நீங்கள் ஒரே நாட்டினர் என்றாலும் உங்களுக்கு இது தொழில், உணர்வு சார்ந்து செயல்படுவதற்கு முன் எச்சரிக்கை ஆக இருங்கள்”

முகிலினி தலையாட்டி வைத்தாள். சான்ட்ராவின் பேச்சில் இருந்த உண்மையும் அக்கறையும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

மறுநாள் காலை முகிலினி நிலவனின் அறைக்குச் சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளுடன் இணைந்துக் கொண்டாள். மதியம் வரை நிலவனும் அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அவள் பேசாதிருக்க நிலவன் கேட்டான்.

“ஆமா நீ என்னைப் பார்த்ததும் ஏன் திகைச்சு நின்ன?”

அந்த கேள்விக்கு பதில் சொல்ல நிமிர்ந்தவள் நிலவனைக் கண்டாள்.

'நான் இந்த சிறு வயதில் இந்த நிலையில் இருக்கிறேன் என்ற பரிதாபப் பார்வை தானே காரணம்'
என்பது போல் அவளை ஆராய்ந்து கொண்டு இருந்தான் நிலவன்.

நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாவிடில் எளிதாக தப்பிக்க சம்பந்தமேயற்ற வார்த்தைகளைப் பேசும் திறனற்ற அரசியல்வாதியின் யுக்தியை அவளும் சற்று பயன்படுத்தினான்.

“நான் திகைச்ச நிற்கற அளவுக்கு நீ அழகா எல்லாம் இல்லை ?”

முகிலினி சொல்ல
நிலவன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பார்வையில் பரிதாபமின்றி அவனை அவனாக கடந்து சென்று முதன் முதலாக தன் வயதிற்கேற்ற வகையில் தன்னை சீண்டி கேலி செய்யும் ஒருத்தியைக் கண்டு புன்னகைத்து நொடியில் முகம் மாற்றினான்.

ஆனால் அந்த புன்னகையை இரு விழிகள் கண்களில் நீர் வழிய தனது அலுவலக மேஜையில் இருந்த கணினித் திரையில் கண்டுக் கொண்டு இருந்தது.
 
Last edited:

Nila 45

Moderator
அத்தியாயம் 3

முகிலினி அன்றிரவு தனது தாய் லட்சுமியிடம் வீடியோ காலில் பேசி விட்டு உறங்க வந்தாள். மனதில் நிலவனின் குரல் ஒலித்தது.

“ஆமா நீ என்னைப் பார்த்ததும் ஏன் திகைச்சு நின்ன?”

அவனைப் பார்த்ததும் அந்த மெல்லிய மேகத்திரையில் தன் விழியை ஊடுருவி நின்றவன் ஏன் வந்துப் போனான் முகிலினி மீண்டும் அவன் முகத்தை நினைவுகூர முயன்றாள்.

அதே சமயம் அவளது நினைவுகளின் நாயகன் சர்வதேச விமானத்தில் பயணித்துக் கொண்டே முகிலினியின் முகத்தை நினைவுகளில் அகற்ற முடியாது திணறிக் கொண்டு இருந்தான். தன்னுடைய தனிப்பட்ட உதவியாளர் சோனியாவிடம் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி விட்டு உறங்க வந்திருந்தான்.

“மிஸ்டர் கதிரோன்”

அந்த பிஸினஸ் க்ளாஸ் விமானத்தின் கேபினில் உள்ளே நுழைந்த தொழிலதிபர் ஒருவர் அழைக்க அவரைக் கண்டு பேசத் தொடங்கினான்‌ அவனிடம் வெகு நேரம் பேசி விட்டுச் சென்றார். அதன் பின் கண்களை மறைக்கும் உறையை மாட்டி படுத்தான் கதிரோன். நினைவுகளில் அவள் சதிராடினாள்.

அவளைச் சந்தித்த நாள்

கேரள மாநிலத்தின் மலைக் குன்றுகளில் உள்ள ரிசார்ட்கள் மலை முகட்டில் கண்ணாடி குவளை போன்ற அறைகளை கட்டி இயற்கையின் அழகை மழை குளிர் பனி என அத்தனை அழகையும் கண்ணாடி வழியே ரசிக்கும் புதுமை புகுத்தியிருந்தது. திரைச்சீலை விலக்கினால் வெளியே இயற்கை காட்சியை மலையுச்சியில் இருந்து காண்பது போன்ற அமைப்பு. தனித்தனியே ஒரு மரத்தின் கிளையில் கண்ணாடி பழங்கள் அறைகளாக தொங்கிக் கொண்டிருந்தால் அதனுள் இருந்து வான்மேகம் கீழ் இருக்கும் நில மகளின் அழகை ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. அதில் ஒரு அறையில் அன்று தனது கால்களை நீட்டிய படி அமர்ந்திருந்தான் கதிரோன். தனது தொழில் அலுவலகங்களில் இருந்து வருடத்தில் ஒரு வாரம் எப்பொழுதும் மன அமைதிக்காக இப்படி தனித்து வந்து விடுவான். மலைப் பிரதேசங்கள் குன்றுகள் என இந்தியாவின் ஒவ்வொரு இடத்திற்கும் செல்வது வழக்கம். இப்போது கேரளாவுக்கு வந்திருந்தான் 6 நாட்கள் முடிந்து விட்டது இன்னும் ஒரே நாள்தான் நாளை கிளம்பி விட வேண்டும் கதிரோன் மனதில் தோன்ற திரைச்சீலை விலக்கினான். அதிகாலை சூரிய வெளிச்சம் வருவதை காண்பது தான் அந்த கண்ணாடி குவளை அறையின் அழகே. மெல்ல திரைச்சீலை விலக சூரியன் எழும் அழகை அவன் காண முயற்சிக்க அவன் அருகே இருந்த இன்னொரு கண்ணாடி அறையின் திரைச்சீலை விலகியது. அங்கே அவள் நின்று இருந்தாள். கதிரவனின் வெளிச்சம் பட்டு, பூ ஒன்று மலர்ந்து அன்றே அவன் முன் நிற்பது போல் அவளும் அன்றலர்ந்த மலர் போல் அவன் முன்னே நின்றாள். அதிகாலையில் சிகப்பு வண்ணச் சேலையில், புதுமணத் தம்பதியா? இல்லை? இருக்காது! அவன் மனம் எண்ணங்களோடு ஒத்து வர மறுக்க அவளோ தனது கலைந்து குழலை வாரி எடுக்க வளைவுகளில் கொடியிடை அவனது இளமையை இன்னும் சீண்டியது.
அவன் திகைத்து தன் பார்வையைத் திருப்ப முயன்று தோற்க அவளோ தன்குழலை எடுத்துக் கொண்டையிட்டு நிமிர்ந்தாள். இருவரின் பார்வைகளும் ஒரு நிமிடம் திகைத்து பின் நிதானித்துக் கொண்டது அவளோ திரும்பி பகலவனின் கதிரை ரசிக்கத் தொடங்கினாள். பின் ஒரு நிமிட இடைவேளையில் திரைச்சீலையை சரிய விட இருவரும் ஒருவர் ஒருவர் முகத்தை ஓரப்பார்வைகளில் நகலெடுத்துக் கொண்டனர்.

அதன் பின் கதிரோன் மலையேற்றப் பயிற்சிக்கு சென்று விட்டு மாலை வருகையில் அவளது அறையில் வேறொருவர் இருக்கக் கண்டான். அவளிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் அவன் மனது வருத்தமுற அவளது பெயரில் அறை எடுக்கப்பட்டதா என விசாரிக்க தியோடர் என்ற பெயர் தான் இருந்தது. கணவனாக இருப்பானோ? அவன் மனம் எண்ண அதற்கு மேல் அந்த சிந்தனையை வளர வொட்டாது அன்றிரவு நடக்கும் பிஸினஸ் பார்ட்டிக்கு தயாரானான் கதிரோன். அவனுடைய சிறு வயது தோழன் சுகுமாரன் நடத்தும் பார்ட்டி அது.

பார்ட்டி முடிந்ததும் மறுநாள் அவன் கிளம்ப வேண்டும். அவன் மது விருந்தில் கலந்துக் கொள்ளாது அங்கு குழுமியிருந்த மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது மீண்டும் அவள் தெரிந்தாள். இம்முறை மஞ்சள் நிற சேலையில் அழகான பச்சை நிற ஜாக்கெட் ஆடும் தொங்கட்டான்கள் அப்பொழுதே அவள் மடி சாய்ந்துக் கொள்ள கெஞ்சிய மனதை இன்னும் மயக்கும் கூந்தல் அழகு. கதிரோனுக்கு‌ மூச்சு விட சிறிது சிரமப்பட வைத்தது தூரத்தில் தெரிந்த அவளது பிம்பத்தின் அழகு.
கதிரோன் அன்று காலை அந்த ரிசாட் அறை நிகழ்வைப் போல் திரைச்சீலை மூடும் அளவுக்கு தனது விழிகளின் தரம் தாழ்ந்து போகாது சற்று தூரத்திலேயே நின்று ரசித்திருந்தான்.

அவள் தனித்தே வந்திருந்தாள் நிச்சயம் அவள் திருமணம் ஆகாதவளாக தான் இருக்க வேண்டும்! இல்லை அப்படி தான் இருக்கும்! என்று ஆணையிட்ட மனதை நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அவன் அவளை ரசிக்க, அவளும் தன்னை போல் தனியே அமர்ந்து கூட்டத்தை கவனிப்பதைக் கண்டான். பின் ஏதோ குறிப்புகளை அவள் எழுத கதிரோனின் கண்களில் அவள் என்ன செய்கிறாள் என்பதை ஆய்ந்து பார்க்கும் ஆர்வம் மேலிட்டது.
‘அதான் கல்யாணம் ஆகலை இல்ல கதிரா, போ போய் பேசு’.
அவனது உள்மனம் தைரியமூட்ட அவன் நடந்த சமயம் சுகுமாரன் குரல் கேட்டது.
“டேய் கதிர், என்னடா பார்ட்டில இல்லாம இங்க நிக்கற?”

“நாளைக்கு கிளம்பறேன் டா, அதான் கொஞ்சம்”

தனது நண்பனிடம் பேசிக் கொண்டே நொடிக்கொரு தரம் அவனது பார்வை முகிலினியை தீண்டிக் கொண்டே இருந்தது.
சுகுமாரன் அவனது பார்வைகளை அளவிட்டு சிரித்தான்.

“யாருனு விசாரிச்சு சொல்லட்டா டா?”

சுகுமாரன் கேட்க, கதிரோன் சமாளித்தான்.

“டேய் சும்மா இருடா, ஆளு அழகா இருக்கானு சும்மா பார்த்தேன்”

“ஓ அப்ப நீ பார்க்கல, சரி விடு என் கண்ணுக்கும் அழகா தான் தெரியறா நானும் அப்ளிகேசன் போடறேன்”

என்று சொன்ன தனது நண்பனை முறைத்தான் கதிரோன். அவனது முறைப்பில் கோவை கே ஜி தியேட்டர் முன்பு பள்ளிக் காலத்தில் கதிரோனிடம் தர்ம அடி வாங்கிய நினைவு வர சுகுமாரன் கை உயர்த்தினான்.

“மாப்ள, பொண்ணு யாருனு டீடெய்லோட வரேன், பொசுக்குனு கோவப்பட்டு அடிச்சிடாதேடா. இது நான் கொடுக்கிற பார்ட்டி”

சுகுமாரன் சொல்ல கதிரோன் புன்னகை முகத்திற்கு மாறினான். அதே சமயம் அங்கே முகிலினி யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள். பின் அவள் வெளியே நடக்க கதிரோன் அவளைப் பின்தொடர்வதற்குள் சுகுமாரனின் தந்தை வந்திருந்தார்.

“ஹே கதிர் எப்படா வந்த? அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க அங்கிள்”

இருவரும் நலம் விசாரித்து பேசிக் கொண்டு இருக்க முகிலினி வெளி வந்திருந்தாள்.

“டேய் எருமைமாடு, ரெண்டு பேரும் எங்கடா இருக்கீங்க?”

அலைபேசியில் முகிலினியின் கேள்விக்கு தனது ஒரு வயது மகனை மடியில் வைத்து அமர்த்திக் கொண்டே பதிலளித்தாள் தியோடரின் மனைவி ரோசலின்.

“முகி கொஞ்சம் வெய்ட் பண்ணுடி வந்துட்டோம்”

“சீக்கிரம் வாங்கடி, எனக்கு ஒரு முகமும் தெரிஞ்ச முகம் இல்லை ஆனா எல்லாரும் தெரிஞ்ச மாதிரியே சிரிக்கறானுக”

முகிலினி சொல்ல தியோடர் பேசினான்.

“அடிக்கடி தலையை சொறிஞ்சுட்டு பார்ட்டில பேப்பர் பேனாவை வைச்சுட்டு உட்கார்ந்தா பார்க்கறவங்க சிரிக்கத் தான் செய்வாங்க"

“டேய் நீ மட்டும் என் கைல கிடைச்ச”

முகிலினி கத்த இதோ வந்துட்டேன் என்று சொல்லி அவள் முன் வந்து நின்றான் தியோடர்.அருகே ரோசலின் தனது குழந்தையுடன் நின்றிருந்தாள்.

முகிலினி ரோசலினின் கைககளில் இருந்து குழந்தையை வாங்கினாள்.

“ஹே அஜூம்மா, அழகு குட்டி”

முகிலினி கொஞ்ச ரோசலின் பேசினாள்.

“கொஞ்ச நேரம் இவனை பிடிடி, இவன் திங்க்ஸ் எடுத்துட்டு வரேன்”

ரோசலின் குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு சொன்னாள்.

“சரி நீங்க ரெண்டு பேரும் மெதுவா வாங்க, நான் முன்னே போறேன்”

தியோடர் விளையாட்டு பேசி நடக்க ரோசலின் கேலி பேசினாள்.

“டேய் ஜொள்ளு பார்ட்டி, ஒழுங்கா பையனைத் தூக்கிட்டு நட, நான் பின்னாடியே வரேன்”

தியோடர் முகிலினியின் கரங்களில் குழந்தையை வாங்க ரோசலின் அலைபேசி சத்தமிட்டது.

ரோசலின் அதை எடுத்து பேசியவள் முகிலினியையும் தியோடரையும் முன்னே செல்ல சைகை செய்தாள்.
தியோடர் தோளைக் குலுக்கி விட்டு, முன் செல்ல முகிலினி பின்னே நடந்தாள்.

கதிரோன் வெளியே சென்ற அந்த அழகி இன்னும் திரும்பவில்லை எனத் வெளிப்புற தோட்டத்திற்கு வந்தவன் அங்கே கையில் குழந்தையுடன் அவள் வேறொரு ஆடவனுடன் நடந்து வருவதைக் கண்டு அப்படியே நின்றான்.
அவன் தயக்கத்திற்கு வலு சேர்க்க சுகுமாரனின் குரல் கேட்டது.

“ஹே தியோடர், மைக்கேல் வரலையா?”

சுகுமாரன் பேசியதில் தியோடர் என்ற வார்த்தை கதிரோனின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது. இதே தான் அந்த ரிசாட்ல் அவள் தங்கியிருந்த அறையினை புக் செய்தவன் பேர். அதற்கு மேல் அந்த அழகியை ரசிப்பது தவறு என்று மனது சொல்ல கதிரோன் அப்போதே அந்த இடத்தில் இருந்து கிளம்பினான். தனது நண்பனுக்கு அவனது அலைபேசியில் தகவல் தெரிவித்திருந்தான். அன்று கடைசியாக அவளைப் பார்த்தது மஞ்சள் நிற சேலையில் தேவதை என ஆனால் கையில் குழந்தையுடன் அந்த நினைவில் சட்டென்று கோபம் வர நிகழ் காலத்துக்கு வந்தவனாக தனது அசிஸ்டன்ட் ஐ வரச் செய்தான்.

“யாரும் கேபினுக்குள்ள வரக் கூடாது னு சொன்னேன் ல"

"இல்லை சார் உங்க ஏஐ பிஸினஸ் மீட்ல"

சோனியா ஏதோ சொல்ல வந்து அவனது பார்வையில் வாய் மூடினாள்.

"ஐ நீட் கம்ப்ளீட் ரெஸ்ட். ஏற்கனவே ஏர்டிக்கெட் சொதப்பின மாதிரி சொதப்பிராத”

கதிரோனின் அசிஸ்டன்ட் சோனியா சரி எனத் தலையசைத்து வெளிவந்தாள்.

ஏன் இந்த இரு வாரம் தன்னுடைய முதலாளி கோபத்தின் உச்சியிலேயே வீற்றிருக்கிறான் எனப் புரியாது அவளும் இரு வாரம் பொறுமையின் உச்சியிலேயே வீற்றிருக்கிறாள். முக்கியமாக மஞ்சள் வண்ணத்தில் ஏதாவது கண்டு விட்டால் அவனது கோபம் இரு மடங்காகிறது. சோனியா பெருமூச்செறிந்து தன் இருக்கையில் அமர்ந்து கண் அயர அவளுடைய முதலாளியோ தன் நினைவுகளில் வந்து போகும் ஒருத்தியை நினைவுகளில் சுமப்பது தவறென நொடிக்கு நூறு முறை தனது உள்ளத்திற்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தான். இரவு மெதுவாக ரகசியங்களைச் சுமந்து நகர்ந்தது.

மறுநாள் முகிலினி தனது அன்றாட அலுவலாக நிலவன் அறையில் அவனுக்குரிய உணவு மருந்துகளை சரிபார்த்துக் கொண்டு இருந்தாள். நிலவன் தனது கண்முன் இருந்த தொலைக்காட்சி திரையில் படம் பார்த்துக் கொண்டு இருந்தான். முகிலினி மருந்துகளைக் கொடுக்க அவன் அருகில் வர அவனது முகம் மாறியது.

“சான்ட்ரா எங்கே?” நிலவன் வினவ

“அவங்க இன்னைக்கு ஆஃப்?” என்று புன்னகை மாறாமலே பதிலளித்தாள் முகிலினி.

“யாரு அவங்களுக்கு லீவு கொடுத்தது? என்னைக் கேட்காமலே லீவு எடுப்பாங்களா? சம்பளத்துக்கு சரியா வேலை செய்ய முடியாது, ச்சை! யாரு நீ லீவு கொடுத்தியா? எனக்கு தெரியும் நீ தான் கொடுத்து இருப்பேனு”

அவன் படபடவென பொறிந்து தள்ள அதற்கு முகிலினி வாய் விட்டு சிரித்தாள்.

‘தன்னுடைய கேள்விகளுக்கு ஒன்னா கோபம் வர வேண்டும் இல்லை அழுகை வர வேண்டும் அப்படி தானே இதுவரை வந்த செவிலியர்கள் எல்லாரும் இல்லை யாராக இருந்தாலும் செய்திருப்பார்கள் இவள் எதை தான் இயற்கையாக மனிதர்கள் நடப்பது போல் நடப்பாள்? தன்னைப் பற்றி எப்போதும் எப்படி ஒரு எதிர்பார்ப்பை பின்னிக் கொண்டே இவளால் மனிதர்களிடம் இயங்க முடிகிறது!’ நிலவன் அவளது புகழ் பாடும் தனது சிந்தனையைக் கலைத்துக் கேட்டான்.

“இப்ப எதுக்கு சிரிக்கிற? நீ சிரிக்கறதுக்கு எல்லாம் உனக்கு சம்பளம் தரலை!”

அவனது மறுகேள்வி இன்னும் கூராக அதற்கும் ஒரு சிரிப்பைத் தருவித்தாள் முகிலினி.

‘முப்பதுகளில் இருக்கும் பெண்களை ஏக வசனத்தில் பேசுவது, அடிமை போல் நடத்துவது, அவர்களது பொறுமை தேயும் மனநிலையில் அவர்களது சம்பளம், வேலை எனத் தாழ்வாக பேசி தன்மானத்தை தீண்டி வேலையை விட்டு போக வைப்பது! மீசை கூட சரியா முளைக்கல ஆனா என்ன மேனிபுலேசன்’

அவனது செயல்களை உணர்ந்துக் கொண்டவாக தன்னைக் காட்டிக் கொள்ளாது பதில் சொன்னாள் முகிலினி.

“இல்லை இரண்டு மூணு வார்த்தை தான் பேசத் தெரியும் உனக்குனு நினைச்சேன். ஆனா உனக்கு கூட இவ்ளோ நீளமா பேச வருமா? அதுவும் கோபத்தில”

“ஏய்! யாரை நீ னு சொல்ற?”

அவளது பேச்சில் கோபமாகி முகம் சிவந்து கத்திய நிலவனை அவனது கண்களை நேராக நோக்கி பதில் சொன்னாள் முகிலினி.

“உன்னைத் தான், சரியா மீசை கூட முளைக்காம பெரிய மனுசனாட்டம் நடக்க ட்ரை பணற ஒரு குட்டி பையனைத் தான் சொல்றேன்”

அவளது கை குறுகி மிகச் சிறியதென சைகை காட்ட நிலவன் வெறிக் கொண்டவனாக கத்தினான்.

“என்ன திமிறு உனக்கு? இப்பவே உன்னை வேலையை விட்டு போக வைக்கிறேன் பாரு?”

“யாருக்கு ஃபோன் பண்ணுவ? இதுவரை நீ பேசவே பேசாத உன் அம்மாவுக்கா இல்லை உன் அண்ணனுக்கா?”

அந்த கேள்வி அவனது சக்கர நாற்காலியின் நகர்வை நிறுத்தியது. முகிலினி தன் திட்டம் வேலை செய்வதை உணர்ந்து அமைதியாக அவன் முன் வந்து நின்றாள். இதுவரை வேலையை விட்டு நின்ற செவிலியர்கள் அனைவரும் அவர்களாகவே வேலையை விட்டு சென்றிருக்கின்றனர் மேலும் நிலவன் தன் தாயிடமோ அண்ணனிடமோ பேசியதே இல்லை எதுவும் கேட்டதில்லை என்று அறிந்து வைத்திருந்தவள் அதை சரியாக பயன்படுத்தினாள். நிலவன் செய்வதறியாது நிற்க முகிலினி பேசினாள்.

“உன்னால அவங்ககிட்ட ஈகோ விட்டு பேச முடியாதில்ல அதனால இப்பத்திக்கு ஈகோவை விட்டு என்னோட நீ வா போ வை அஜ்ஜஸ் செஞ்சிக்கலாம் தானே நிலவன்?”

அவன் முன் கைகளைக் கட்டி கண்களைச் சுருக்கிக் கேட்டாள் முகிலினி.
 
Last edited by a moderator:

Nila 45

Moderator
அத்தியாயம் 4

முகிலினியின் கேள்வியில் ஒரு நிமிடம் திடுக்கிட்ட நிலவன் அவளை வெறுப்புடன் பார்த்தான் ஆனால் அவனது பார்வையை அப்படியே பிரதிபலிக்காது தனக்கே உரிய புன்னகையோடு அவனுக்கு கொடுக்கும் உணவை அவனது முகத்திற்கு நேராக நீட்டினாள்.
நிலவன் ஒன்றும் பேசாது உதடுகளைத் திறந்தான். அதன் பின் இரு நாட்கள் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. சான்ட்ரா மேலும் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்ததால் நிலவனிடம் அதிக நேரம் செலவிடும் நபராக முகிலினி இருந்தாள். முகிலினி அன்று வழக்கம் போல் நிலவனை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல இதமான காலநிலை இருவரிடமும் இயற்கையின் அழகை ரசிக்க வைத்திருந்தது. நிலவன் இம்முறை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல சொல்லியிருந்தான். அது ட்ரீ ஹவுஸ் தாண்டி சிறிது உள்ளே மரங்களுக்கு இடையில் நடைபாதையாக இருந்தது.

நிலவன் அவளிடம் பேசக் கூடாதென முடிவெடுத்திருந்தவன் கடந்த ஒரு வாரமாக அவளிடம் எதுவுமே பேசவில்லை. ஆனால் முகிலினியோ அவனைப் பார்த்துக் கொள்வது, அவனை கவனித்துக் கொள்கையில் அவனது சௌகரியத்தை அதிகம் விசாரிப்பது, முக்கியமாக எப்போதும் புன்னகையுடனே இருப்பதுமாக இருந்தாள். இன்று நிலவனுக்கு அவளிடம் பேச்சுத் தொடங்குவதைத் தவிர்க்க முடியாது தனது உள்ளத்தில் தோன்றிய கேள்வியை சட்டென்று கேட்டான்.

“நீ நர்ஸ் தானே, ஹாஸ்பிடல் ல வொர்க் பண்ணிருக்கியா?”

முகிலினி மெல்லத் தகிக்கும் சூரியனை ரசித்துக் கொண்டே அவனது கேள்விக்கு பதிலளித்தாள்.

“அப்ப நிறைய சாவைப் பார்த்திருக்கல, சாவு உண்மையில அர்த்தமுள்ளதா?”

இந்த கேள்வியைக் கேட்டதும் முகிலினி அவனிடம் திரும்பினாள். நிலவனிடம் அவன் இறந்து விடுவான் என்ற செய்தி சென்றடைந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. தன்னை நோக்கி அவனது பரிதாப பார்வையை எதிர்நோக்கியிருந்த நிலவனுக்கு வழமைப் போலவே வேறொரு பதிலை வைத்திருந்தாள் முகிலினி.

“நிலவன் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமானு தெரியலை ஆனா நான் படிச்சதுல வேறொரு பதிலிருக்கு சொல்லவா ‘ரிலேடபிள் ஆன்ஸர்’ மாதிரி?”

அவள் சிறிது இடைவெளி விட நிலவன் மௌனமாக அவளது கேள்வியை எதிர்க்கொண்டான்.

“இந்த உலகத்தில் இது வரை எத்தனை பேர் வாழ்ந்திருப்பாங்கனு நினைக்கிற?”

முகிலினி கேட்க நிலவன் அவளது கேள்விக்கு அவளே பதிலளிக்க காத்திருந்தான்.

“பத்தாயிரம் கோடி, ஆனா ஒரு உயிர் உருவாகறதுக்கான டிஎன்ஐ ஜீன்ஸ்ன் பிராபளிட்டி( டிஎன்ஏ மூலக்கூறு இணைவதற்கான சாத்தியக்கூறு) எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம் கோடிக்கு மிக மிக அதிகம்? அப்ப இத்தனை பேர் முயற்சித்தும் பெற முடியாத இந்த உயிரை உடலைப் பெற்று இதோ இப்ப இந்த சூரியனை ரசிச்சு இந்த காற்றை சுவாசிச்சு வாழ்றோம்! இது பத்தாயிரம் கோடி பேருக்கு கிடைக்காத நிஜம் இதை, இந்த வாழ்க்கையை எப்போ வரும் னு தெரியாத சாவை வைச்சு எடைப் போடறது சரினு நினைக்கிறீயா?”

நிலவன் அந்த பதில் கேள்வியில் அமைதியாக இருந்தான். பின் மெதுவாக முணுமுணுத்தான்.

“இதை வேற யாராவது சொல்லியிருந்தா நான் பாசிடிவ் ஆ எடுத்திருப்பேனானு தெரியலை, நீ சொன்னா பொய்யும் நம்பிக்கைக்குரியதா மாறுது! ஏன் னு தெரியலை?”

நிலவன் பேசிய குரல் தெளளிவாக கேட்கவில்லை முகிலினிக்கு. நிலவன் முகிலினியிடம் அந்த சில்வர் ட்ரீ மரத்தின் மேலிருந்த பட்டையை சிறிது எடுத்து வரச் சொன்னான். அது அவனது சிறுவயது நினைவுகள், தான் மகிழ்ச்சியாக தனது அண்ணணுடன் செலவிட்ட நினைவுகளின் உருவம் தாங்கிகள் அவை. அந்த பட்டைகளில் எத்தனை வகையில் உருவங்கள் சொல்ல முடியும் என்பதே போட்டி. சில சமயங்களில் தோர், சூப்பர் மேன் கார். அந்த பட்டையை அவன் வெறித்திருக்க அவனுடைய தமையனின் புன்னகை முகம் வந்துப் போனது.

‘ஆனால் அவனும்!’

நிலவன் நினைவுகளில் காயம் கொள்ள அவன் அங்கிருக்கும் மரநிழலில் சற்று நேரம் இயற்கையை ரசிக்கிறான் எனத் தானும் அந்த இயற்கை அழகை ரசித்திருந்தாள் முகிலினி.

அன்றிரவு நிலவனுக்கு காய்ச்சல் அதீதமாக அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட அவனது உடல் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மூச்சு விட அதிக சிரமப்பட்ட நிலவன் கண்களில் நீர்வழிய வலிகளைப் பொறுக்க அவனது கண்களில் அப்போதும் பதட்டமில்லாது அவனுக்கு உதவிகளைச் செய்த முகிலினி தெரிந்தாள். நிலவனின் மனநிலையில் பரவிய நம்பிக்கை அவனது உடலிலும் பரவ அவன் உடல் மெல்ல அந்த மருந்துகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. முகிலினி மருந்துகளின் வீரியத்தில் அவன் கண்மூடி உறங்கத் தொடங்கியதும் பெருமூச்சு விட்டு அமர்ந்தாள். எதையும் இதயத்திற்குள் எடுத்துச் செல்லாத அவளது இயல்பு இந்த சிறுவனிடம் சற்று தடுமாறவே செய்தது. இவன் தன்னை நிச்சயம் காயப்படுத்துவான் என அவள் மனது ஆருடம் சொல்ல அதை ஆமாம் என்று ஆமோதிக்க மறுநாள் வந்தது.

மறுநாள் காலை சான்ட்ரா வந்ததும் முகிலினி நிலவனின் அறையில் இருந்து வெளிவர ரஞ்சனி வந்திருந்தார். அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“நீ நல்ல ஹோஸ்பைஸ் நர்ஸ் னு சொன்னாங்க, யூ நோ ஹௌ மச் ஐ பே யூ? இப்படி பொறுப்பில்லாம நடந்திருக்க!”

ரஞ்சனியின் சத்தத்தில் விழித்திருந்தான் நிலவன். அவன் அருகில் சான்ட்ரா நின்றிருக்க தன்னை சக்கர நாற்காலியில் அமர வைக்கப் பணித்தான்.

“இல்லை மேடம் புரியலை, எதுக்காக கோபப்படறீங்க?”

முகிலினியின் கேள்வியில் ரஞ்சனிக்கு மேலும் கோபம் வந்தது.

“நீ நிலவனை இந்த ஒரு வாரத்தில பத்து தடவை வெளியே கூட்டிட்டு போயிருக்க அதுவும் இந்த கோல்ட் ஏர்ல. இப்ப நிமோனியா அட்டாக் னு டாக்டர் ரிப்போர்ட் அனுப்பியிருக்கார். என்ன படிச்ச நீ? இல்லை சாகறவங்கள சீக்கிரம் சாகற வைக்க படிப்புத் தான் படிச்சீயா?”

ரஞ்சனியின் வார்த்தைகள் தீப்பிழம்பாக வெளியேற முகிலினி அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்து பின் பேசினாள்.

“இப்ப வெளியே கூட்டிட்டு போனதால த் நிமோனியா அட்டாக் னு டாக்டர் சொன்னாரா?”

முகிலினி கேட்க ரஞ்சனி அவளைப் பார்த்தார். அவர் ஒன்றும் பேசாது இருக்க முகிலினி பேசினாள்.

“நீங்க நினைக்கிற மாதிரி வெளியே குளிர் காற்றினால நிமோனியா முக்கியமா அட்டாக் ஆகாது. நான் நிலவனை மதிய நேரம் மட்டும் தான் அழைச்சுட்டுப் போவேன். நிமோனியா அட்டாக் கு முக்கியக் காரணம் ஒரே அறையில அடைஞ்சுக் கிடக்கறதால வர்ற பேக்டீரியா ஃபங்கை பரவல் தான்”

முகிலினி சொல்ல ரஞ்சனி கோபமுற்று பேசத் தொடங்கினார். அவருக்கு பதில் பேசும் வேலையாட்கள் நிச்சயம் வெளியேறி ஆக வேண்டும். இவள் திறமைசாலியுமில்லை இவளைத் துரத்துவதில் என்ன பிரச்சினை என்று நினைத்தவராக மேலும் பேசினார்.

“நேத்து சாயங்காலம் நீ நிலவனைக் கூட்டிட்டு போன வெளியே இல்லையா. அதுவும் அவன் கேட்டதும் ஏதோ மரத்துகளை எடுத்துட்டு வந்து அவன் கையில ?”
அவர் கேட்க முகிலினி ஆமாம் என்று பதில் சொல்வதற்கு முன் நிலவனிடமிருந்து வேறோரு கேள்வி அவனது தாய்க்கு வந்தடைந்தது.

“நான் மரத்துகளை கையில வாங்கினது உங்களுக்கு எப்படி தெரியும்?”

அந்த கேள்வியில் ரஞ்சனி ஒரே ஒரு நொடி முகம் மாறியவர் பின் குரலில் கோபம் கலைந்துப் பேசினார்.

“அது. சான்ட்ரா சொன்னாங்க”

நிலவன் தனது தாயின் பொய்யில் அருவெறுப்பு முகம் காட்டிப் பேசினான்.

“சான்ட்ரா இன்னைக்கு காலையில தான் வந்தாங்க”

ரஞ்சனி மீண்டும் சமாளித்தார்.

“அவங்க இல்லை பட்டூ, வேற சர்வன்டீஸ் சொன்னாங்க”

நிலவன் கண்களில் கோபம் கொப்பளிக்க மீண்டும் கத்தினான்.

“நான் போனது நானும் அண்ணணும் மட்டும் போற வுட்ஸ் ஸ்பாட். அங்கே முகில் நான் தவிர யாரும் இருக்க வாய்பில்லை"

சொன்னவன் சான்ட்ரா என கர்ஜிக்க சான்ட்ரா வெளிவந்தாள்.

“ஃபார் காட்ஸ்சேக் ரிமூவ் த கேமரா அவுட் ஆஃப் திஸ் **ட் ( இந்த நாற்காலியில் இருந்து கேமராவை எடுத்து விடு)”

சான்ட்ரா ரஞ்சனியை நோக்கி விட்டு அவர் கண்களில் இருந்து இசைவைப் பெற்றவராக அந்த சக்கர நாற்காலியில் இருந்து ஒரு நவீன கேமராவும் ஃபக் எனப்படும் கருவியும் அவர் எடுத்திருக்க நிலவன் கடுமையான குரலில் கத்தினான்.

“நீங்க திருந்தவே மாட்டீங்களா? நான் எந்திரிச்சு நடமாடக் கூட முடியாது இப்பவும் உங்க உளவு வேலை நிற்காது இல்லை. சாகும் போது கூட நிம்மதியா சாக விட மாட்டீங்க இல்லை?”

ரஞ்சனி முகத்தில் வலிப் பரவ தனது மகனை நோக்கினாள்.

“சான்ட்ரா, ஐ ப்ளீவ்ட் யூ. பட்”

அவனது முகத்தில் தெரிந்த வலி சான்ட்ரா கண்களிலும் பரவியது. இட்ட வேலையை செய்தே ஆக வேண்டும் என வாழ்வின் தேவைகள் விதி எழுதியிருப்பது தானே பல மனிதர்களின் கனவுஙளும் நியாயங்களும் சுயமும் எரிக்கப்படும் கொட்டகை. வேகமாக பேசியதில் மூச்சு வாங்க முகிலினி அவனுக்கு கொடுக்கும் மருந்தை எடுக்க நிலவன் அதை சுவாசித்து விட்டுப் பேசினான்.

“இனி என்னை பத்தி உங்களுக்கு தெரியற விஷயம் என் சாவா மட்டும் இருக்கட்டும். முகிலினி ப்ளீஸ் என்னை உள்ளே கூட்டிட்டு போ”

முகிலினி அமைதியாக நிற்க நிலவன் உறுமினான்.

“இப்ப கூட்டிட்டு போறீயா இல்லையா? இப்படி உங்க தயவை எதிர்பார்த்து சாகறதுக்கு, யூ ***ங் காட் யூ மேட் மீ”

நிலவன் மேலும் பேசுவதற்கு முன் முகிலினி அவனை நெருங்கி சக்கர நாற்காலியைத் திருப்ப ரஞ்சனி பேசினார்.

“நான் அண்ணன் வரும் போது அண்ணன் கூடவாவது வரேனே நிலா”

தாய்மை பலம் பலவீனம் இரண்டின் உச்சம் என்பதை ரஞ்சனியின் அழுகைக் குரலில் உணர்ந்தாள் முகிலினி.

“அண்ணன் என்ன நீ, அப்பா அண்ணா யாரையும் நான் பார்க்க விரும்பலை. என்னை நிம்மதியா சாகவாது விடுங்க. யாரும் வர்றாதீங்க.”

நிலவன் சொல்ல முகிலினி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். அவனுக்கு உணவு மருந்து கொடுக்கப்பட அவன் உறக்கத்திற்கு சென்றதும் முகிலினி வெளிவர ரஞ்சனி அறையின் வாயிலில் தனது மகனின் முகத்தை முடிந்த அளவு தனது நினைவுகளில் நிரப்பிக் கொண்டு நின்றிருந்தார். முகிலினிக்கு அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது‌ ஆனால் தனது உள்ளார்ந்த அன்பு கூட அவரின் ஆணவப் பார்வையில் வேறு மாதிரியாக அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் தனது பார்வையைத் தவிர்த்து வெளிவந்தாள்.

சான்ட்ரா இம்முறை ரஞ்சனியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். ரஞ்சனி வீட்டை விட்டு வெளியேறுகையில் முகிலினியிடம் பெயரளவுக்கு வருத்தம் தெரிவித்து நிலவனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு பணித்து விட்டுச் சென்றார்.

அன்றிரவு சான்ட்ராவிடம் நிலவனின் சகோதரன் பேசியிருந்தான் தொடர்ந்து வேலையில் இருக்குமாறு சான்ட்ராவையும் முகிலினியையும் கேட்டுக் கொண்டு இருந்தான். சான்ட்ரா ரஞ்சனியின் தலையீட்டில் காரணமாக நிலவனின் வருத்தத்தைச் சம்பாதித்து இருந்ததால் வேலையைத் துறக்க முடிவு செய்திருந்தாள். ஆனால் நிலவனின் அண்ணன் கொஞ்சம் கூட கௌரவம் பாராது தனிப்பட்ட முறையில் அவருக்கு விடுத்திருந்த அலைப்பேசி அழைப்பு நிலவனின் மீது அவன் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தியிருந்தது. அவன் நிலவனின் கோபம் தீர்ந்ததும் நேரில் வருவதாகச் சொல்லியிருந்தான்.

முகிலினி சான்ட்ரா இருவரும் நிலவனை மகிழ்ச்சியாக இருக்க வைக்க முயற்சித்தனர். அடுத்து வந்த நாட்கள் நிலவன் நிமோனியா சிகிச்சை பெற்று குணமாக அதன் பின்னும் இறுக்கத்துடனே இருக்க முகிலினி அன்று அவன் முன் வந்து இரு ஜீன்ஸ் பேண்ட்களை காட்டி நின்றாள்.

“இந்த ஜீன்ஸ் ல எது நல்லாருக்கு?”

நிலவன் அவளைப் பார்த்து விட்டு பின் பேசினான்.

“ஏன் எங்கேவாவது வெளியே போறீயா?”

*ஆமாம் எப்ப பார்த்தாலும் சிரிக்காமலே இருக்கீங்க எல்லாரும் அதான் வெளியே போய் சிரிச்ச முகமா நாலு பேரைப் பார்த்துட்டு வரலாம் னு இருக்கேன்”

நிலவன் அவளது முகப்பாவத்தில் சிரித்தவன் பின் பேசினான்.

“பொய் சொல்லாதே. நீ ஒண்ணும் ஜீன்ஸ் போட்டு போகப் போறதில்ல கல்யாணத்துக்கு கவுன் செலக்ட் பண்ணுன தானே. நீ சான்ட்ரா கிட்ட பாரீஸ் போறேன் னு சொன்னேல. அங்கே ஒரு ஃபிரண்ட் மேரேஜ் இன்வைட்”

முகிலினி சிரித்தாள் எல்லாமே கேட்டு விட்டு தான் இன்னும் சிடுசிடுப்பில் இருக்கிறான். அவளுடன் பணியில் அறிமுகமான ஜூலியா என்ற ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணின் திருமணம் பாரிஸில் நடக்கிறது. அருகில் இருப்பதால் சென்று வர வேண்டும் என முடிவு செய்திருந்தாள். சான்ட்ராவும் நிலவனைப் பார்த்துக் கொள்வதால் ஒரு நாள் பொழுது மட்டும் தானே என நினைத்திருந்தாள்.

“சரி நான் போறதில?”

அவள் கேள்வியை பாதியோடு நிறுத்த நிலவன் புன்னகைத்தான்.

“போயிட்டு வா முகில். அங்கே எட்வர்ட் சாக்லட்டியர் ல எனக்கு லிட்டில் பிரிக் ராக் வாங்கிட்டு வா”

அவன் சொல்ல முகிலினி புன்னகையுடன் தலையசைத்தாள். மறுநாள் காலை பாரீஸ் நகர் சென்றவள் நாட்ர டார்மே கதீட்ரல் சர்ச் ல் ஜூலியா திருமணத்தைக் கண்டு விட்டு எட்வர்ட் சாக்லெட் எனும் அந்த கடையின் முன் வந்து நின்றாள். நெருக்கமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய கடையாக எட்வர்ட் சாக்லேட் இருந்தது.

தங்க நிற சான்டின் கவுனில் காரில் இருந்து கீழிறங்கியவள் ஆர்ச் போலிருந்த சிறிய கதவின் நுழைவாயிலில் அவள் நுழைய மெல்லிய மணியோசை சத்தமிட்டது. அவள் மெல்ல ஒவ்வொரு சாக்லெட்களாக கண்ணாடி திரை வழியாகப் பார்வையிட்டுக் கொண்டே வந்தவள்

“எ லிட்டில் பிரிக் ராக் ப்ளீஸ்”

அவள் சொல்ல அதே வார்த்தைகளைச் சொல்லி அருகிலிருந்தவன் அவளை நோக்கி திரும்பினான். அவன் அன்று வயநாடில் கண்ணாடி திரையில் அவளை ரசிக்க நிறுத்தி திரும்பியவன் மீண்டும் பார்வைகளில் காணவே முடியாது என நினைத்திருந்தவன் அவன் கதிரோன்.
 
Last edited:

Nila 45

Moderator
அத்தியாயம் 4

முகிலினி இம்முறை அவனை வைத்த கண் வாங்காது பார்த்து நின்றாள். கதிரோன் அவளது பார்வையை எப்படி எடுத்துக் கொள்வது எனத் திகைத்து நின்ற நொடி இருவரும் ஒரே கேள்வியைக் சிறிது மாற்றிக் கேட்டுக் கொண்டனர்.

“உங்களுக்கு அக்கா இருக்காங்களா?”

“உங்களுக்கு தம்பி இருக்காங்களா?”

இருவரும் கேட்டு விட்டு மேலும் ஆச்சர்யமாகி நின்றனர். நீங்க இந்தியாவா ? இல்லை உங்க பேர் என்ன என்ற கேள்விகளைத் தாண்டி அவர்கள் இருவருக்கும் அப்பொழுதே இருவருக்கும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்களா என்பதை அறிந்துக் கொள்வதே முக்கியமாக இருந்தது.
முகிலினியின் கேள்விக்குப் பின்னான ஆர்வம் வேறாக இருக்க கதிரோனின் கேள்விக்கு பின்னான காரணம் காதலாக மட்டுமே இருந்தது. அவனை இப்படி ஒருத்தி ஈர்த்து பித்தாக அடித்ததில்லை இதுவரை .
அதென்ன இப்படி ஒரு சொல்லாடல் காதலைச் சொல்லும் போது மட்டும் எடுத்தாளப்படுகிறது என எழுத்தாளரை நோக்கி வாசகர்கள் கேள்விகள் தொடுக்கலாம்? உண்மையில் உயிர் தொடும் தீண்டலுக்காக எப்பொழுதும் ஒரு தேடல் இருப்பிலேயே இருக்கிறது அது காணப் பெறுகையில் இல்லை உணரும் நொடியில் மாயமோ காயமோ ஏதோ ஒரு அதிசயம் நிகழ்கிறது. கதைக்கு வருவோம்.
அப்பொழுது தான் முகிலினி கதிரோனைக் முழுமையாகக் கண்டாள். செஃப் உடையில் விற்பனையாளராக அந்த கடையில் நின்றிருந்தான்.
இப்போது கதிரோன் பேசினான்.


“சாரி, என் பேர் கதிரோன். இங்கே சின்னதா பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்தியால உங்களை மாதிரியே ஒருத்தரைப் பார்த்து இருக்கேன். சினிமால வர்ற மாதிரி உங்ககிட்ட பேசறதுக்காக பொய் எல்லாம் சொல்லல”

“இல்லை. அப்படி பார்த்தா நானும் அதே கேள்வி தானே கேட்டேன்”

முகிலினி புன்னகைக்க அது கதிரோனின் முகத்திலும் பரவியது.

“இந்தியால என்னை மாதிரியே ஒருத்தரைப் பார்த்தீங்களா?”


முகிலினி அவனை நோக்கிக் கேட்டாள்.

“ஆமா கேரளா ல ஒரு ரிசாட் ல அப்புறம் ஒரு பார்டில அப்படியே உங்களை மாதிரி”

கதிரோன் முகிலினிக்கு பதில் சொல்ல ‘ரிசார்ட் சரி பார்ட்டிலயா?’ முகிலினி மனதில் பரவிய கேள்வியை முகத்தில் காட்டாது மேலும் கேட்டாள்.

“அது ஏன் மாதிரி? இந்தியால இருக்கறவங்க பாரீஸ் வர்ற மாட்டாங்களா?”

அவளது கேள்வியில் அன்று காலை சுகுமாரன் அனுப்பிய வாய்ஸ் செசேஜ் நினைவு வந்தது.

“கதிர். அந்த பொண்ணு அப்பாவோட ‘சைல்ட்ஹூட் ப்ரண்ட்’ பொண்ணாம். கல்யாணம் ஆயிடுச்சு, ஒரு பையன் கூட இருக்கானாம். இங்க தான் கேரளால இருக்காங்க. அப்பா வர்ற வாரம் அவங்கள வீட்டுக்கு கூப்பிட்ருக்கார் வந்ததும் இன்னும் டிடெய்லா சொல்றேன். சாரிடா மாப்பிள்ளை உனக்கு லவ் என் பார்டில புட்டுகிச்சு”

‘ஓ அன்னைக்கு பார்த்த அவளே தானா?! சுகுமார் அவ கேரளால இருக்கா வர்ற வாரம் வீட்டுக்கு வர்றதா சொன்னான். டேய் சுமார் மூஞ்சி சுகுமாரு யாரைப் பத்திடா சொன்ன, புறம்போக்கு’
கதிரோன் நினைவுகளில் இருந்து மீண்டு அவளைச் சமாளிக்க தான் பார்த்தக் காட்சியை கதைத்தான்.


“சாரி நீங்களா இருப்பீங்க னு எதிர்பார்க்கல. அங்கே கையில குழந்தையோட இருந்தீங்க கூட உங்க ஹஸ்பன்ட்ம்”

முகிலினி அவனது பதிலில் அன்று தியோடருடன் சென்ற பார்ட்டி நினைவு வர அவனை நோக்கினாள். அவனோ அவள் பின்னே அவளது கற்பனைக் குடும்பத்தைத் தேடிக் கொண்டு இருந்தான்.

“ஹலோ! நீங்க நினைக்கிற ஹஸ்பன்ட், பையன் எல்லாம் எனக்கு இல்லை. அது என் பிரண்டு தியோடர் அது அவன் பையன். என் பேர் முகிலினி.”

அவள் சொல்லி புன்னகைக்க கதிரோன் தான் இருவாரமாக சுமந்த இதயத்தின் சிலுவையை வெறும் இதழ் வளைவில் அவள் இறக்கி விட்டதாக உணர்ந்தான்.

“சரி நீங்க ஏன் எனக்கு தம்பி இருக்கானானு”

கதிர் கேட்க முகிலினி பதிலளித்தாள்.

“உங்க சாயலில ..”

முகிலினி முழுவதும் சொல்லாது நிற்க கதிர் அவளது கைகளில் இருந்த ஆர்டரை பார்த்தவன் சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தான் பின் முகிலினியின் பேச்சில் மீண்டு வந்தான்.

"நான் முகிலினி. ஹோஸ்பைஸ் நர்ஸ் எனக்கு தெரிஞ்ச பையன் உங்க சாயல் ல இருப்பான் அதான் கேட்டேன். நீங்க இங்க..?”


முகிலினி கேள்வியாக கேட்க

“நான் இங்க தான் ரெஸ்டாரன்ட் ல வேலை செய்யறேன்”

கதிர் உரைக்க முகிலினி அவனது பதிலை நிறைவு செய்தாள்.

“ஓ சாரி அது நீங்க இல்லை.”

அவ்ளோ பெரிய பணக்காரன் முக்கியமாக ரஞ்சனியின் மகன் இந்த சிறிய கடையில் வியாபாரியாக நிற்க வாய்ப்பு இல்லையே. முகிலினி யோசிக்க கதிர் கேட்டான்.

“அந்த பையன் என்னை மாதிரியே இருப்பானா?”

“ம், உங்களை மாதிரியே இல்லை உங்களை விட இன்னும் அழகா இருப்பான். சோ ஸ்வீட் பாய்”

முகிலினி சொல்ல கதிருக்கு சிரிப்பும் மெலிதான பொறாமையும் ஒருங்கே வந்தது.
அவன் மேலும் பேசுவதற்குள் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் விமான நிலையம் செல்ல நேரமாகும் என்பதை உணர்ந்து கிளம்பினாள்.


“நான் கிளம்பறேன். வாய்பிருந்தா மீண்டும் பார்க்கலாம்”

முகிலினி செல்ல, கதிர் ஒன்றும் பேசாது அவளுக்கு கையசைத்து நின்றான். அவன் தன்னிடம் எந்த தகவலையும் கேட்காது மீண்டும் எப்போ எப்படி சந்திக்கலாம் என பேச முயற்சிக்காது இருந்தது முகிலினிக்கு சின்ன ஏமாற்றத்தையேக் கொடுத்தது. கதிரோனோ அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் விழியில் இருந்து மறைந்ததும் தனது ஏப்ரானைக் கழட்டி கீழ் வைக்க அவனது நண்பன் பிலிப் கடையின் விற்பனை மேஜை தாண்டி வெளிவந்தான்.

“யாருடா இந்த பொண்ணு?”


அவன் ஆங்கிலத்தில் வினவ கதிரோன் புன்னகையுடன் பதிலளித்தான்.

“இனிமேல் தான் தெரிஞ்சுக்கணும்”

அதே சமயம் முகிலினி விமானத்தில் வெகு சீக்கிரமாகவே சுவிஸ் வந்திருந்தாள். வந்ததும் நேராக நிலவன் இல்லம் வந்தவள் தனது அறையில் குளித்து உடை மாற்றி இரவு நிலவனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு வந்தாள். சான்ட்ரா அவளை ஓய்வெடுக்கச் சொல்லியும் அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து நிலவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.
மறுநாள் நிலவன் துயில் எழுகையில் அவன் முன் தனக்கே உரிய புன்னகையுடன் அமர்ந்திருந்த முகிலினியைக் கண்டு நிலவனுக்கும் புன்னகை அரும்பியது. அவன் எழுந்ததும் சமீமா எனும் செவிலியர் அவனுக்கு அன்றாட பணிவிடை செய்து முடிக்க ஒரு மணி நேரம் கழித்து முகிலினி அவனுக்கு மருந்துகளை கொடுத்தாள். அவனுக்கு மாத்திரை என்றாலே பிடிக்காது இரு வருடத்திற்கு முன்பு அந்த வாசனைக் கண்டு முகம் சுளித்தவன் இன்று அதனால் தான் உயிர் வாழ்கிறான். நிலவன் கண்களை இறுக மூட அழகான இசை அவன் காதுகளை நிரப்பி இதயத்தை வருடியது. அவனுக்கு பிடித்த இசைக் கலைஞன் சாம் சிமித்ன் யூ ஆர் மை டிசையர் பாடல் ஒலித்தது. அடுத்து ஸ்டே வித் மீ பாடல் ஒலிக்க நிலவன் முகிலினியைக் கேட்டான்.


“உனக்கு சாம் சிமித் பிடிக்குமா?”

“பிடிக்கும். ஐ அம் குட் அட் சேயிங் குட்பைஸ் ரொம்ப பிடிச்ச பாட்டு”

நிலவனின் கேள்விக்கு முகிலினி பதிலளிக்க நிலவன் மீண்டும் கேள்வி கேட்டான்.

“சாம் சிமித் ரீசன்டா இருக்கிற அப்பியரன்ஸ் (தோற்றம்) பற்றி என்ன நினைக்கிற?”

சாம் சிமித் பெண் உடையில் தோன்றியிருந்தைச் சொல்லுகிறான். மிக மிக ஆபாசமான பெண் உடையில் சாம் சிமித் பாடிய பாடல் தான் சமீபத்திய ஒன்று.

“உணவு, உடை, நம்பிக்கை ன்ற அடிப்படை விஷயங்களில் அடுத்தவங்க கருத்து சொல்ல என்ன இருக்கு நிலவன்? யார் எப்படி இருக்கணும் ன்ற விதியை நம்ம விருப்பு வெறுப்புக்கு போட்டுக்கலாம் நிலவன். பிடிச்சிருந்தா ரசிக்கலாம் பிடிக்கலனா விலகிடலாம். நம்ம கருத்தை அங்கே திணிக்கக் கூடாது. அவன் அவனுக்கே உரிய தனி மனுசன். எனக்கு அவன் இசை பிடிக்கும். அவனைப் பார்க்க பிடிக்கலைனா கண்ணை மூடிண்டு கூட இசையைக் கேட்பேன்”

முகிலினி சொல்லி முடிக்க நிலவன் அவள் பதிலளிக்க தடுமாறி நிற்கும் மறுகேள்வி கேட்டான்.

“தவிர்க்க முடிஞ்ச மனுசங்கனா பரவாயில்ல. தவிர்க்க முடியாத உறவுன்னா என்ன பண்ணுவ இதே டயலாக் பேசுவியா? தனிமனித சுதந்திரம், தப்பே இல்லைனு பேசுவியா?”

முகிலினி ஒரு நிமிடம் தடுமாற நிலவன் வெற்றிப் பெற்ற பார்வையில் பேசினான்.

“இங்கே எதுவுமே அவனவனுக்கு நடக்கும் வரை தப்பு இல்லை. ஜட்ஜ்மெண்டல் பீபள், பிராட் மைண்டட் பீபள் எல்லாமே இங்க முகமூடி தான். மனுசங்களோட முகமூடி இல்லாத முகம் ரொம்ப ரொம்ப அருவெறுப்பானது முகில்”

நிலவன் சொல்லி விட்டு சான்ட்ராவை அழைத்து தனது நூலகத்திற்கு அழைத்துச் செல்ல பணித்தான்.
அவன் அடிக்கடி புத்தகங்களுடன் நேரம் செலவிட்டான். ஒரு மாதமாக அவன் உடல்நிலை மோசமாக இருக்க நூலகம் செல்லவில்லை. கதைசொல்லி மென்பொருளில் ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டே அமர்ந்திருப்பான்.


அவன் நூலகம் சென்ற அரை மணி நேரத்தில் முகிலினி அங்கு சென்றாள். மனிதரின் உள்ளத்தின் அழகும் எண்ணமும் அவரது புத்தகத் தேர்வில் தெரிந்துக் கொள்ளலாம். நிலவனைப் பற்றி அவனது புத்தகங்கள் கூறும் விளக்கவுரையைக் கேட்க அவ்விடம் சென்றாள் முகிலினி.

நிலவன் புத்தகங்கள் எதையும் எடுக்காது அங்கிருந்த புத்தகங்களை வெறித்துக் கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தான். முகிலினி அந்த புத்தக அலமாரிகளைத் தேட அங்கே அதிகம் ஆங்கில நூல்கள், தொழில், தகவல்தொழில்நுட்பம், தனிமனித மேலாண்மை பற்றிய புத்தகங்கள் நிறைந்து இருந்தது‌. அதைப் பார்த்துக் கொண்டே அவனிடம் கேட்டாள் முகிலினி.


“வாசிக்கப்படாது இருப்பதே புத்தகங்களுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி தெரியுமா?”

“சரி அப்படின்னா அந்த நாலாவது ரேக் ல வெள்ளை அட்டைல ஒரு புக் இருக்கும் எடு”
நிலவன் சொல்ல முகிலினி அதைத் தேட அங்கே தமிழ் புத்தகங்கள் இருந்தது. அவன் சொன்ன புத்தகம் கலீல் ஜிப்ரானின் கவிதைகள். அதில் புத்தககுறிப்பு அட்டை இருந்தப் பக்கத்தை எடுக்க நிலவன் அதை வாசிக்கச் சொன்னான். முகிலினி அதை உரக்க வாசித்தாள்.


“உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்.
வாழ்க்கையின் உயிர்சக்தி தன்மேல் உள்ள வேட்கையினால்
தோற்றுவித்த மக்கள் அவர்கள்.
உங்களை ஊடகமாகக் கொண்டு அவர்கள் தோன்றினார்களேயன்றி
உங்களிடமிருந்து அவர்கள் தோன்றவில்லை.
குழந்தைகள் உங்களுடன் வசித்துவந்தாலும்,
உங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
உங்கள் அன்பினை அவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்,
ஆனால் உங்கள் சிந்தனைகளை அவர்கள்மீது திணிக்காதீர்கள்.
ஏனெனில், அவர்களுக்கென்று தனியாக எண்ணங்கள் உண்டு.
அவர்கள் உடலுக்கு நீங்கள் உறைவிடம் கொடுக்கலாம்;
அவர்களது ஆன்மாக்களுக்கல்ல.
ஏனென்றால், அவர்களது ஆன்மாக்கள் நாளை என்னும் மாளிகையில் வசிக்கின்றன. அத்தகைய மாளிகையில் நீங்கள் யாரும் கனவிலும் கூட நுழைய முடியாது.
நீங்கள் அவர்களைப் போல இருக்க பிரயத்தனம் செய்யலாம்;
ஆனால், உங்களைப்போல அவர்களை மாற்ற முயலாதீர்கள்.
ஏனென்றால்,முன்னோக்கிச் செல்வதே வாழ்க்கையின் தன்மை;
பின்னடைந்துக் கெடுவதல்ல.
குழந்தைகள என்னும் உயிர்மிக்க அம்புகளைச் செலுத்தப் பயன்படும் வில்லாக நீங்கள் இருக்கவேண்டும்.
(கடவுளெனும்) வில்லாளி
ஆதியும் அந்தமும் இல்லாத காலத்திடலில்
கண்ணுக்குப் புலப்படாத இலக்கினை நோக்கி
அம்புகளை வேகமாகச் செலுத்த
வில்லாகிய உங்களைத் தன் வலிமையெலாம் சேர்த்து வளைத்திடுவான்.
அவன் வளைக்கும் வளைப்புக்கு மகிழ்வோடு இணங்குங்கள்.
ஏனெனில், தன்னால் செலுத்தப்படும் அம்புகளின் மீது பேரன்பு கொள்ளும் இறைவன், அவனது ஆற்றலுக்கு இணங்கி நின்று உதவும் விற்களாகிய உங்கள் மீதும் அன்புடையவனாகவே இருப்பான்.”


அவள் அதை வாசித்து முடிக்க, நிலவன் கண்களை மூடிக் கேட்டுக் கொண்டு இருந்தவன் அழகான கவிதை ஒன்றை உதிர்த்தான்.

“அன்பு தருவதுமில்லை, பெறுவதுமில்லை
அன்பு சொந்தமானதுமில்லை, சொந்தமாக்கிக் கொள்வதுமில்லை.
அன்புக்கு அன்பே போதுமானது. கலீல் ஜிப்ரான் எப்பேர்ப்பட்ட கவிஞன்”


நிலவன் சொல்ல, வெளிப்படுத்த இயலா சோகத்தின் வலி மூடிய அவனது விழிகளில் இருந்து கண்ணீர் துளிகளாக அவனது கன்னங்களில் உருண்டோடியது.
முகிலினி பதினாறு வயதில் இப்படி மன முதிர்ச்சியாகும் அளவுக்கு என்ன வலிகளை இவன் தாங்கியிருக்கக் கூடும். இந்த விபத்தைத் தாண்டி இவன் மனதிற்கு காயம் செய்த வேறொன்று எதுவாக இருக்கும்?! முகிலினி சிந்தனை கொண்டவளாக நிற்க, அதே சமயம் மிலனின் மிகப் பெரிய பங்களாவில் ரஞ்சனி தனது பெரிய மகனின் தனிப்பட்ட அலுவலக அறையில் நுழைத்தார்.


“யாரையுமே வரக் கூடாது னு சொல்லிருக்கான். கேமரால கூட பார்க்க முடியல. நீயும் அவனை போய் பார்த்துட்டு வர மாட்டீயா? அண்ணணும் தம்பியும் என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?”

அவரது கோபமான கேள்வியில் கணினி திரையில் இருந்து தலை நிமிர்ந்தான் கதிரோன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top