எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானவில்லாய் என்னுள் வந்தாயே!! - கதைத்திரி

Status
Not open for further replies.

NNK 59

Moderator
அனைவருக்கும் வணக்கம் வந்தனம்!! நமஸ்தே!! நமோஸ்கார்!!

கதையோட முன்னோட்டத்தை பதிவிட்டுருக்கேன்.. படித்து விட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க ப்ரண்ட்ஸ்..

#வானவில்லாய்_என்னுள்_வந்தாயே!!

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றவளை பார்த்து மண்டபமே ஒரு நொடி திகைத்து நின்றது…


"உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு அம்மணி… கல்யாணம் வேண்டாம்னு சொல்ற??" என உரிமையோடு அதட்டிட,


"இல்லை எனக்கு இவனோடு நடக்கிற கல்யாணம் வேண்டாம்… ஒரு பொண்ணை ஏமாத்தி என் வாழ்க்கையையும் அழிக்க வந்த இவனோடு வாழுறதுக்கு எனக்கு இஷ்டமில்லை" என தெளிவான குரலில் சொல்லிவிட்டு பரஞ்ஜோதியை தான் நிமிர்ந்து பார்த்தாள்…


"அம்மணி" என்பவனை கையை உயர்த்தி தடுத்து நிறுத்தியவள்,


"எனக்குத் தெரியும் ஒரு பொண்ணுக்கு கல்யாண மேடை வந்து கல்யாணம் நின்னுப் போச்சின்னா அது பெத்தவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்னு" என்றவள் எதிரில் இருந்தவனை அழுத்தமாக பார்த்தாள்….


"இப்போ சொல்றேன்… எனக்கு இவனை மாதிரி ஒரு பொறம்போக்கை கட்டிக்க இஷ்டமில்லை… என் மாமாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என்றதும் பரமுவுக்கு எதுவும் புரியவில்லை…


"சரி அம்மணி… உன் மாமன் எங்கேன்னு சொல்லு… அவன் கையை காலை கட்டியாவது மணமேடைக்கு இழுத்துட்டு வர்றேன்" என்றவனின் வார்த்தையில் சிறு சிரிப்புடன் அவனை தான் பார்த்தாள்…


மணிமேகலைக்கோ அப்படியொரு சந்தோஷம்… எங்கே தன் மகளும் செயற்கையான புன்னகை முகத்தில் ஏந்திக் கொண்டு வாழ்வாளோ? என நினைத்து வருத்தப்பட்டவருக்கு அவள் சொன்ன வார்த்தையும், அவள் பார்வை பரமுவின் மேல் தீர்க்கமாக விழுந்ததையும் பார்த்தவருக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்தது…


"எல்லாமே நன்றாக நடக்கவேண்டும் கடவுளே" என அவசர வேண்டுதல் ஒன்றையும் வைத்தார்…


"நான் மாமான்னு சொன்னது உங்களைத் தான்" என பரஞ்ஜோதியை நோக்கி கை நீட்டிட ஊரில் வந்திருந்த சொந்தங்கள் அனைத்தும் வாயைப் பிளந்து நின்றது…


அய்யனாரின் பக்கத்தில் பார்ஃபி டாலை நிற்க வைத்தால் எப்படியிருக்கும் அதைப் போலத்தான் இருவரின் தோற்றமும் இருந்தது…


"என்னடா அதிசியமாக இருக்கிறது?" என தவித்தபடி நிற்க… அவனோ அவள் சொன்ன வார்த்தையில் இருந்த அதிர்ச்சியில் இருந்தே மீளவில்லை…


"உனக்கு ஏதும் கூறு கீறு கெட்டுப் போச்சா?? நீ நல்லா படிச்சவ… பட்டணத்துல சொகுசா வாழ்ந்த புள்ளை… ஆனா என்னை கண்ணாலம் பண்ணிக்கிறேன்னு சொல்லுற" என கோபத்துடன் கேட்க நினைத்த வார்த்தைகள் அமைதியாக வந்தது…


"இல்லை மாமா. நான் தெளிவா யோசிச்சி தான் சொல்றேன்… நான் இந்த மண்டபத்தை விட்டு போகணும்னா.. அது உங்க பொண்டாட்டியா தான் போகணும்" என்றவளை கண்டு ஒட்டு மொத்த கும்பலும் அதிசியத்திலும் பேரதிசியமாக பார்த்தது…‌


"என்னடா நடக்குது இங்கே?" என வேடிக்கை பார்த்த ஊர் ஜனம் முழுவதும் இப்பொழுது பரமுவை சமாதானம் பண்ணிட… அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை…


"இல்லை என்ற ஆத்தாவுக்கும் அப்பத்தாவுக்கும் உங்கம்மாவை கண்டாலே புடிக்காது" என தன் நிலையை சொல்ல முயன்றான்..


"உங்களுக்கு என்னை புடிச்சிருக்குல்ல" என கேட்டவளை கண்டு நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது..


இப்படி ஒரு அழகு சிலையை யாரும் வேண்டாம் என்று சொல்வார்களா??"


அவனின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டவள், மணமேடையில் அமர்ந்திருந்த ஆகாஷை பார்த்து, "டேய்ய்ய்.. எழுந்திருடா??" என மிரட்டிட… அவனோ பரஞ்சோதியை தான் திரும்பி பார்த்தான்…


"ப்ச்ச்‌. என் புருஷன் எதுவும் சொல்ல மாட்டாரு… எந்திரிடா முதல்ல‌… உன்னை பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கு?" என சிடுசிடுத்தவளை கண்டு முறைத்துக் கொண்டு வெளியேறினான்…
 
Status
Not open for further replies.
Top