எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவின் மகனே தீயாக தகிப்பதேனோ? - கதை திரி

Status
Not open for further replies.

NNK76

நிலவின்மகனே தீயாக தகிப்பதேனோ - NNK76
டீசர் 01
குட்டி பிட்

ஒரே ஒரு அறையில் மட்டும் சிறிய மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்று எறிந்து கொண்டிருந்தது. தனது வேக எட்டுக்களுடன் தனது வெள்ளை நிற கைசட்டையை மடித்து விட்டப்படியே கோபத்துடன் அந்த அறையை நெருங்கியவனின் காதுகளுக்கு எட்டியது என்னவோ அந்த மனிதர்களின் அழுக்குரல் மற்றும் நாசியை துளைக்கும் இரத்த வாடை தான். எனக்கு இது பழகியது தான் எனும் விதத்தில் எதையும் சட்டை செய்யாமல் கோபமாக அறைக்குள் சென்றான் அவன்.
 
Last edited:

NNK76

நிலவின்மகனே தீயாக தகிப்பதேனோ - NNK76
டீசர் - 02

"எப்படி மச்சான்... இந்த பையன் உன்னை போலவே இருக்கான்?.." கேட்டுக் கொண்ட ஜே.கே,வை பார்க்க,

அவனோ வீயை முறைத்துக்கொண்டிரந்தான். அதே சமயம் அவனது அறையினுள் தடாலடியாக நுழைந்த யாஷ்வினியோ, அவனது நெற்றியிலேயே துப்பாக்கியை வைத்து இருந்தாள்.

அவனோ முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி பபிள் கம்மை மென்றவாறே புழுவைப் பார்ப்பது போன்று யாஷ்வினியை பார்த்துக் கொண்டிருக்க...

அவளோ அழுத்தமாக
" என் பையன் ரித்விக் எங்கே மிஸ்டர் ஜே.கே, இவ்வளவு ஃசீப்பாஹ் இருப்பிங்கனு நான் எதிர்பாக்கல... " என்று நக்கலா சிரித்துக் கொண்ட அவனை பார்த்து கூற..

அவனோ தனது உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து
" ஷ்ஷ்ஷ் என் ஆபிஸ் வந்து என் நெத்தியிலயே துப்பாக்கி வைக்க ஒரு தைரியம் வேணும் அண்ட், அதே சமயம் உங்க குழந்தைய பார்த்துக்க முடியாத ஒரு அம்மாவா இருக்கிங்க நீங்க மிஸ் யாஷ்வினி ... குட்... , " என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தி கூறியவனோ அந்த 'மிஸ்' என்ற வார்த்தையிலும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தான்...

அதே சமயம் அவன் பேச்சில் சரியாக அவள் தடுமாறவே அதை பயன்படுத்திக் கொண்டு துப்பாக்கியை அவள் கையில் இருந்த தன் கைக்கு மாற்றி அவளது நெற்றிப்பொட்டின் மீதே சரியாக குறி வைத்திருந்தான்....


அதே நேரம் அலுவலக அறைக்குள் இருக்கும் மற்றுமொரு அறைக்குள் இருந்து கதவை திறந்துக் கொண்டு "அம்மாஆஆஆ" என கத்திக் கொண்ட ஓடி ரித்விக் ஓடி வர... யாஷ்வினியோ "ரித்விக் " என கூறிக் கொண்ட அவனை தன் நெஞ்சோடு அணைத்துப்பிடித்தப்படி முத்த மழையை பொழிந்திருந்தாள்...
அவர்களை தான் ஒரு வித வெருப்பு நிறைந்த கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top