எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழிகள் வரையும் காதல் ஓவியம்- கதை திரி

Status
Not open for further replies.

NNK 55

Moderator

1​

TRAIN.jpg

ஆதிதேவ் இரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் (நடைபாதை) எண் ஐந்தில் சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் வரை செல்லும் AC SUPER FAST EXPRESS எண்:20601 ரயிலில் ஏறுவதற்காகக் காத்திருந்தான்.​

அப்பொழுது அவனது அருகினில் நின்றிருந்த பெண்ணொருத்தி, "இந்தச் சாலையில் போகின்ற மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே." என்கிற பாடலின் வரியினை தனது கைப்பேசியில் ஒலிக்கவிட்டு இருந்தாள்.​

அந்தப் பாடலின் வரியை தனது காதினில் வாங்கியதும் சற்று திரும்பி அந்தப் பெண்ணினை தான் பார்வையிட்டான் ஆதிதேவ்.​

அந்தப் பெண்ணின் பார்வை முழுவதும் ஆதியை சுற்றியே இருந்தது. அவளது பாதம் வேறு தரையில் கோலமிட்டது.​

அந்தப் பெண் பார்க்க அழகாகத் தான் அவனது கண்களுக்குத் தெரிந்தாள். ஆனால் அந்தப் பெண்ணிடத்தில் தான் அவனுக்கு விருப்பம் இருக்கவே இல்லையே.​

ஆதிதேவ் தன் கையில் இருந்த கைப்பேசியை இயக்கி தன்னுடன் பணிபுரியும் நண்பனான தயகரை கைப்பேசியில் அழைத்தான்.​

"ஹலோ சொல்லுங்க தல என்ன விஷயமா எனக்கு கால் பண்ணீங்க?" என்று கேட்டான் தயகர்.​

"இல்ல மச்சான் நான் தான் கமிட்டட் ஆயிட்டேன்னு உனக்குத் தெரியும்ல?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"என்ன தல இப்படி பண்றீங்களே? இத கேக்கவா இப்போ எனக்கு கால் பண்ணீங்க? எனக்கு இன்னும் கல்யாணம் நடக்க மூணு நாள் தான் இருக்குனு உங்களுக்குத் தெரியும்ல? அவ கூடத் தான் இவ்ளோ நேரமா பேசிட்டு இருந்தேன் இப்போ தான் உங்க கால் வந்தத பார்த்ததும் அவ லைன்னை கட் பண்ணிட்டு உங்க லைன்னுக்கு வந்து பேசுறேன். அது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான் தயகர்.​

"அதெல்லாம் தெரியாது தெரியாது. சரி நீ இப்போ பேசு. நான் லைன்னை கட் பண்றேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"இப்போ நீங்க எதுக்கு கால் பண்ணுனீங்க எதுக்கு பேசுனீங்கனே புரிலயே தல." என்று சொன்னான் தயகர்.​

"அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது. நான் இப்போ கட் பண்றேன்." என்று சொன்ன ஆதிதேவ் அழைப்பைத் துண்டித்து விட்டான்.​

ஆதிதேவ் தனது கைப்பேசியில் பேசியதைக் கேட்டதுமே அந்தப் பெண் மனதினில் எழுந்த சிறு வருத்ததுடன் அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்று விட்டாள்.​

அந்தப் பெண் இனிமேல் தன்னைப் பின்தொடர்ந்து வர மாட்டாள், புரிந்துக் கொள்வாள் என்கிற எண்ணத்துடன் மேற்கொண்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டான்.​

ஐந்து நிமிடத்தில் ரயில் பெட்டிகள் அனைத்தும் தண்டவாளத்தில் வந்து நின்றிருந்தது.​

ஆதிதேவ் தான் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த A2 என்னும் இரண்டு அடுக்குகள் கொண்ட குளிர்சாதன ரயில் பெட்டியில் போய் ஏறிக் கொண்டான். அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பத்து(10) என்கிற எண்ணினை தேடிப் போய் கண்டுப்பிடித்து அந்தப் படுக்கைக்கு கீழே இருந்த இடத்தினில் தனது பெட்டிகளை வைத்துக் கொண்டான்.​

அவனுக்கென்று மேலடுக்கில் தான் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.​

கீழடுக்கில் உள்ள படுக்கையில் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.​

ரயில் புறப்படும் வரை அந்தப் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த ஆதியும் அந்த முதியவரிடம் அனுமதிக் கேட்டு நின்றான்.​

"சார் ட்ரெயின் எடுக்குற வரைக்கும் நான் இங்க உட்காரட்டுமா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"அதெல்லாம் உட்காருங்க தம்பி ஒரு பிரச்சனையும் இல்ல." என்று சொன்னார் அந்த முதியவர்.​

ஆதியும் அந்தப் படுக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான்.​

"நீங்க எந்த இடத்துக்குப் போறீங்க தம்பி?" என்று கேட்டார் அந்த முதியவர்.​

"போடிநாயக்கனூர் வரை போய் அப்படியே அந்த வழில மூணார் வரைக்கும் போகணும்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"உங்க கூட ஃபிரண்ட்ஸ் , ஃபேமிலில இருந்து யாருமே வரலையா?" என்று கேட்டார் அந்த முதியவர்.​

"என் ஃபிரண்டோட கல்யாணத்துல அட்டென்ட் பண்ணத் தான் மூணார் வரைக்கும் போறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா?" என்று கேட்டார் அந்த முதியவர்.​

"எதுவா இருந்தாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் சொல்லுங்க." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"கீழ பிளாட்ஃபார்ம்ல நின்னுட்டு இருந்தப்போ அந்தப் பொண்ணு உங்களையே பார்த்துட்டு நின்னதையும், அத பார்த்து நீங்க யாருக்கோ கால் பண்ணி நீங்க கமிட்டட் சொன்னதையும், அத கேட்டுட்டு அந்தப் பொண்ணு அந்த இடத்த விட்டு அப்படியே விலகி ஓடிப் போனதையும் நான் பார்த்துட்டு தான் இருந்தேன். நீங்க கமிட்டட் சொன்னதும் அந்தப் பொண்ணோட முகத்த பார்க்கணுமே அப்படியே மாறி போயிருச்சு. பார்க்கவே பாவமா இருந்தது. நீங்க அந்தப் பொண்ணுக் கிட்ட பேசி புரிய வெக்க முயற்சி பண்ணி இருந்தா அத அந்தப் பொண்ணு புரிஞ்சிகிட்டு விலகிப் போயிருக்குமே." என்று சொன்னார் அந்த முதியவர்.​

"அந்தப் பொண்ணுக்கு நான் சொல்லிப் புரிய வெக்க முயற்சி பண்ணி இருந்தா அது அந்தப் பொண்ணுக்கு என்ன ஹீரோவாக தான் காட்டியிருக்கும். அந்தப் பொண்ண பார்த்தா காலேஜ் படிக்கிற சின்ன பொண்ணு மாதிரித் தான் தெரியுது. அப்படி மட்டும் நான் பண்ணி இருந்தா அது எல்லாருக்கும் பிரச்சனையா தான் போய் முடிஞ்சிருக்கும். அத யோசிச்சு தான் நான் அப்படி பண்ணேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நீங்க போன்ல சொன்ன மாதிரி நிஜமாவே கமிட்டட்டா ?" என்று கேட்டார் அந்த முதியவர்.​

முதியவர் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு ஆதிதேவ் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. முதியவர் தான் கேட்டிருந்த கேள்விக்கு ஆதியிடம் இருந்து எந்தப் பதிலுமே வரவில்லை என்றதும் அவனது முகத்தினை தான் பார்வையிட்டார். அவனது முகத்தினில் அப்படியொரு வலி, சோகம் தெரிந்திருந்தது. தான் மேலும் மேலும் பேசி அவனது வலியினை, சோகத்தினை அதிகரிக்கச் செய்ய வேண்டாம் என்று மனதினில் நினைத்திருந்தவர் மெளனமாக இருந்து கொண்டார்.​

அந்த நேரத்தில் ரயிலும் புறப்பட்டது. ரயில் சரியாக இரவு 10:30 மணிக்கு கிளம்பி இருந்தது.​

மேற்கொண்டு ஐந்து நிமிடங்கள் மட்டும் கீழ் படுக்கையில் அமர்ந்திருந்தவன், "நீங்க படுங்க சார். நான் மேல போய் படுக்குறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

மேலேறி மேலடுக்கு படுக்கையில் போய் படுத்துக் கொண்டான்.​

அப்பொழுது அவனது தங்கையிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது.​

"ஹலோ.நீ, ஜெயன், பாப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம். நான் இப்போ ஒரு விஷயம் பேசணும். அத நான் இப்போ பேசலாமா?" என்று கேட்டாள் தங்கை ரக்ஷிதா.​

"என்ன விஷயம்னு சொல்லுடி." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அம்மாவும், அப்பாவும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கவானு கேட்டதுக்கு நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லனு சொல்லிருக்கீங்க?" என்று கேட்டாள் ரக்ஷிதா.​

"ஐடியா இல்ல. அவ்ளோ தான் சொல்ல முடியும். வேற எதுவும் சொல்ற மூட்ல நான் இப்போ இல்ல. என்ன எதுவும் நீயும், அம்மாவும் கேட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் இப்போ கட் பண்றேன்." என்று சொன்ன ஆதிதேவ் அழைப்பினை துண்டித்து விட்டான்.​

தூங்கலாம் என்று நினைத்த ஆதிதேவ் கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சி செய்தான்.​

ஆதிதேவ் தனது வாழ்க்கையினில் நடந்து முடிந்திருந்த சில சம்பவங்களை, நினைவுகளை மறக்கத் தான் வெளிநாட்டுக்குப் பயணத்தை மேற்கொண்டு அங்கு மூன்று ஆண்டுகள் வேலைப் பார்த்து முடித்துவிட்டு தற்பொழுது தான் தாய்நாட்டுக்கு திரும்பி இருக்கிறான்.​

எதை விட்டு விலகி தனது வாழ்க்கையினில் அடுத்தப் படியினை அடியெடுத்து வைக்க விருப்பினானோ அதில் ஒரு அடி கூட அவனால் அடியெடுத்து வைக்க இயலவில்லை. அங்கேயே தான் அவன் தேங்கி நிற்கின்றான்.​

வாழ்க்கையினில் அடுத்தப் படியினை அடியெடுத்து வைக்க விரும்புகிறான் என்றால் பழையதை மறந்து புதியதை தேடுகிறான் என்கிற அர்த்தம் ஆகாது. பழைய நினைவுகளை, அது ஏற்படுத்தி விட்டுச் சென்ற காயங்களை தான் மறக்க நினைக்கிறான்.​

உன்னில் தொலைந்த என்னை​

உடனே மீட்டுகொடு.​

இல்லை என்னுள் நீயும்​

அழகாய் உடனே தொலைந்துவிடு.​

***​

சான்விகா இரவு 10:10 மணிக்கு நடைபாதை ஐந்தில் வந்து நின்றிருந்தாள். அங்கே சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் வரை செல்லும் AC SUPER FAST EXPRESS எண்:20601 தண்டவாளத்தினில் வந்து நின்றிருந்தது.​

அவளுடன் அவளது தந்தை இஷான் மற்றும் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிற ரித்விக் அவளை ரயிலில் ஏற்றி விட உடன் வந்திருந்தனர்.​

"நீயும், மாப்பிள்ளயும் மட்டும் தனியா போக ஒரு கார் ஏற்பாடு பண்ணித் தாரேன்னு சொன்னதுக்கு நீ தான் ஒத்துக்கல. ட்ரைன்ல தான் போக போறேன்னு சொல்லிட்ட. மாப்பிள்ளயையும் உன் கூட அனுப்ப ஏற்பாடு பண்றேன்னு சொன்னேன் அதுக்கும் நீ என்ன அனுமதிக்கல. இப்போ நீ மட்டும் தனியா போற. கடைசில தான் இந்த டிக்கெட்ட என்னால புக் பண்ண முடிஞ்சது. நீ முன்னாடியே சொல்லி இருந்தா உனக்காக ஃபிரஸ்ட் கிளாஸ் டிக்கெட்டே புக் பண்ணி இருப்பேன். ஃபிரஸ்ட் கிளாஸ் டிக்கெட் நான் புக் பண்ணப்ப கிடைக்கல. நீ காலைல போடிநாயக்கனூர் போய் இறங்குனதும் உனக்காக நீ மூணார் போக கார் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன். எந்தப் பிரச்சன வந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ட்ரைன் கிளம்ப இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. நீ போய் மாப்பிள்ள கிட்டத் தனியாப் பேசிட்டு இரு. நான் இங்க ஓரமா நிக்குறேன்."என்று சொன்ன இஷான் அவர்களை விட்டு நகர்ந்துச் சென்று சற்றுத் தள்ளி நின்று கொண்டார்.​

இஷான் அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளி நகர்ந்துச் சென்றதுமே ரித்விக் சான்விகாவின் அருகினில் போய் நின்று கொண்டு, "பேபி நானும் உன் கூடவே அப்படியே உன்ன ஒட்டிட்டே வாரேன்னு சொன்னேன் நீ தான் ஒத்துக்கல. அப்படி மட்டும் பண்ணி இருந்தா உன்ன அப்படியே அணைச்சிக்கிட்டு என்ன என்னமோ பண்ணிட்டு உன் கூடவே இருந்து இருப்பேன். போ பேபி உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னே தெரில." என்று சொன்ன ரித்விக் அவளை அணைத்துக் கொள்ள அவளது அருகினில் போய் முயற்சி செய்தான்.​

சான்விகா தன்னை அணைத்துக் கொள்ள தனது அருகினில் வந்த ரித்விக்கை தடுத்து நிறுத்தி, "இப்படிலாம் பப்ளிக் ப்ளேஸ்ல பண்ணாதீங்கனு எத்தனை வாட்டி சொல்றது." என்று சொன்னாள்.​

"போ பேபி நீ எப்போ பார்த்தாலும் இப்படித் தான் சொல்லிட்டு இருக்க. எப்போ பார்த்தாலும் உன்ன நான் பப்ளிக் ப்ளேஸ்ல இருந்துட்டு தான் பார்த்துட்டு இருக்கேன். நீ எப்போ என்னை பிரைவேட் ப்ளேஸ்ல பார்க்க அனுமதிப்ப?" என்று இரட்டை அர்த்தத்தில் பேசினான் ரித்விக்.​

அவன் சொல்லி இருந்த அர்த்தத்தினைப் புரிந்து கொண்ட சான்விகாவுக்கு அவனை கன்னம் பழுக்க அப்படியே கன்னத்தில் அறையலாம் என்று தோன்றியது. ஆனால் அவளது தந்தை அங்கே அருகினில் தான் இருக்கிறார் என்கிற காரணத்தினால் அப்படியே விட்டுவிட்டாள்.​

அங்கேயே நின்று கொண்டு இருந்தால் அப்படியே குமட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது அவளுக்கு.​

பார்வையில் கூட கண்ணியத்தை காட்டும் ஒருவனின் ஞாபகம் அவளுக்கு அப்பொழுது வந்து போனது தான்.​

சான்விகா சற்றுத் தள்ளி நின்றிருந்த தந்தையிடம் போய் நின்று கொண்டு, "டேடி வண்டி கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. நான் போய் ட்ரைன்ல உட்கார்ந்துக்குறேன்." என்று சொன்னாள்.​

"சரி நீ போய் பத்திரமா இருந்துக்கோ. எதாவது தேவைனா சொல்லு நான் பண்றேன்." என்று சொன்னார் இஷாந்த்.​

அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட A2 என்னும் இரண்டு அடுக்குகள் கொண்ட குளிர்சாதன ரயில் பெட்டியில் போய் ஏறிக் கொண்டாள். அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட பதினான்கு(14) என்கிற எண்ணினை தேடிப் போய் கண்டுப்பிடித்து அந்தப் படுக்கைக்கு கீழே இருந்த இடத்தினில் தனது பெட்டிகளை வைத்துக் கொண்டாள்.​

அவளுக்கென்று மேலடுக்கில் தான் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மேலேறி மேலடுக்கு படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள்.​

ரித்விக்கிடம் பேசியதில் இருந்து அவளுக்கு எரிச்சலாகவே இருந்தது. அந்த எரிச்சலைப் போக்க சற்று நேரம் தனது கைப்பேசியினை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். அப்படியும் அந்த எரிச்சல் அவளை விட்டு விலகுவது போல் இல்லை. தூங்கலாம் என்று நினைத்த சான்விகா கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சி செய்தாள்.​

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். சட்டென்று தனது மூடிய விழிகளைத் திறந்துப் பார்த்தவள் திகைப்பாக உணர்ந்தாள். மனதுக்கு நெருங்கியவர்கள் யாரோ தனது அருகினில் இருந்து கொண்டு ஆறுதல் கொடுப்பது போல் உணர்ந்தாள், பாதுகாப்பாக உணர்ந்தாள்.​

1.jpeg

 
Last edited:

NNK 55

Moderator

2​

ரயில் சரியாக காலை ஒன்பது முப்பது மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடைந்தது. ரயிலில் இருந்து சான்விகா தான் முதலில் வெளியேறினாள்.​

ரயில் நிலையத்துக்கு வெளியில் சான்விகாவுக்கு அவளது தந்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது.​

வாகனத்தின் எண்ணினை சான்விகாவின் தந்தை முன்னதாகவே அவளுக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தார்.​

குறுஞ்செய்தியில் தந்தையால் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணினை பார்த்து அந்த வாகனத்தைத் தேடி அடையாளம் கண்டு பிடித்து அதில் ஏறியும் கொண்டாள்.​

ஆதிதேவ் இரவில் நெடு நேரம் கழித்து தூங்கியதால் அந்த ரயில் போடிநாயக்கனூர் சென்றடைந்த பொழுது அவனால் கண் விழிக்க இயலவில்லை.​

அவனது படுக்கைக்கு கீழடுக்கில் படுக்கையில் படுத்திருந்த அந்த முதியவர் தான் அவனைத் தட்டி எழுப்பி தூக்கத்தை கலைத்தார்.​

"தம்பி போடிநாயக்கனூர் வந்துருச்சு. நான் கிளம்புறேன். நீங்களும் வாரீங்களா?" என்று கேட்டார்.​

"இல்ல சார். எல்லாரும் இறங்குன அப்புறம் நான் இறங்குறேன். எழுப்பி விட்டதுக்கு ரொம்ப நன்றி சார். நீங்க போயிட்டு வாங்க." என்று சொன்னான் ஆதிதேவ்.​

அனைவரும் ரயிலை விட்டுக் கீழே இறங்கிச் சென்ற பிறகு அவனும் கீழே படி இறங்கிச் சென்றான்.​

ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி வெளியில் சென்று பார்த்தப் பொழுது பேருந்து நிலையம் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே தான் இருந்தது. அங்குச் சென்று மூணாருக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தான்.​

ஐந்து நிமிடத்தில் மூணாருக்குச் செல்லும் பேருந்து ஒன்று அங்கு வந்து நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய பலர் அந்தப் பேருந்தில் தான் ஏறினர். பேருந்தில் இருக்கும் அனைத்து இருக்கைகளும் வேகமாக நிரம்பியது. எனவே அந்தப் பேருந்தில் ஏறாமல் தவிர்த்து விட்டான் ஆதிதேவ்.​

அடுத்ததாக சில நிமிடங்களில் மூணாருக்குச் செல்லும் அடுத்த பேருந்து ஒன்று அந்தப் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. அந்தப் பேருந்தில் சில இருக்கைகள் மட்டுமே மக்களால் நிரப்பப்பட்டு இருந்தது. எனவே அந்தப் பேருந்தில் போய் ஏறிக் கொண்டு பயணப்பட்டான் ஆதிதேவ்.​

ksrtc-theni-munnar-6.jpg

கடைசியாக இருந்த இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான் ஆதிதேவ். இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பயணப்பட்டான்.​

முக்கால் மணி நேரத்தில் பேருந்து போடிமெட்டை அடைந்தது. அங்குக் கிடைக்கும் தேநீர் மிகவும் சுவையாக இருக்கும் என்கிற காரணத்தினால் பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்றதும் பேருந்தில் இருந்து இறங்கினான். அங்குக் கிடைத்த தேநீரை வாங்கி குடித்து சுவை பார்த்து விட்டுத் தான் திரும்பவும் பேருந்தில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தான்.​

போடி மெட்டு தமிழ்நாடு- கேரளா எல்லையில் இருக்கும் பகுதி ஆகும். அங்கிருந்து தான் கேரளா பகுதி ஆரம்பம் ஆகும்.​

Bodi_Mettu.jpg

பேருந்து போடிமெட்டை தாண்டி கேரளா பகுதிக்குள் நுழைந்ததுமே மேகங்கள் உருவாகி மழையை லேசான தூறலாய் வானத்தில் இருந்து பொழிய ஆரம்பித்து இருந்தது.​

அவன் பயணம் செய்தது கேரளா மாநிலத்துக்குச் சொந்தமான பேருந்து ஆகும். அந்தப் பேருந்தில் ஜன்னல் கம்பிகள் எதுவும் கிடையாது. எந்தவித இடையூறும் இல்லாமல் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே பயணம் செல்லலாம்.​

ஆதிதேவ் தனது முகத்தினை வெளியே ஜன்னலில் நீட்டி இயற்கையை, வானிலையை ரசிக்க ஆரம்பித்தான். மழைத்துளிகள் அவனது முகத்தினில் வந்து பட்டுத் தெறித்து விட்டுச் சென்றது.​

அந்த மழை அவனுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தியை ஞாபகப்படுத்தியது. அவளுடன் ஒன்றாக சென்ற பயணங்களும் அவன் ஞாபகத்துக்கு வந்து போனது தான்.​

அந்த மழை இந்தப் பூமியை குளிர்வித்து விட்டு போனதுப் போல அவன் மனதையும் சேர்த்து குளிர்வித்து விட்டுத் தான் சென்றது. அவளின் நினைவுகளுடன் சந்தோஷ மனநிலையில் தான் பயணத்தை மேற்கொண்டான்.​

சிறிது நேரத்தில் ஆதியின் நண்பன் தயகர் கைப்பேசியில் அழைத்திருந்தான்.​

ஆதிதேவ் அந்த அழைப்பினை ஏற்று காதில் வைத்து ஹலோ சொன்னான்.​

"ஹலோ தல இன்னும் எவ்ளோ நேரத்துல இங்க மூணாருக்கு வருவீங்க?" என்று கேட்டான் தயகர்.​

"இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்னு நினைக்கிறேன்."என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அப்போ நான் கிளம்பி கரெக்ட்டா பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குறேன்." என்று சொன்னான் தயகர்.​

"கல்யாணத்த வெச்சிட்டு உனக்கு எதுக்கு வீண் அலைச்சல். நானே போய்க்கிறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அப்டிலாம் இல்ல. நான் உங்கள நேர்ல பார்த்து மூணு வருஷம் ஆகப் போகுது. நான் உங்கள மீட் பண்ணனும்னு தோணுது. நான் கிளம்பி வாரேன். இப்போ கட் பண்றேன்." என்று சொன்ன தயகர் அழைப்பைத் துண்டித்து விட்டான்.​

இரண்டே முக்கால் மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து மூணாரை சென்றடைந்தான். அங்கு அவனுக்காக பேருந்து நிலையத்தில் தயகர் காத்துக் கொண்டு நின்றிருந்தான்.​

MUNNAR.jpg

நின்றிருந்த பேருந்தில் இருந்து இறங்கினான் ஆதிதேவ். ஆதியை கண்டதும் அவனை நோக்கி ஓடி வந்த தயகர் அவனை அணைத்துக் கொண்டான்.​

ஆதிதேவ் மூன்று வருடங்களாகப் பார்க்காமல், தான் பார்க்க வராமல் விட்டிருந்த தன் நண்பனைக் கண்டதும் அவன் தன்னை நோக்கி ஓடி வந்து கட்டிப்பிடித்து கொண்டதும் கண்களில் கண்ணீரை நிறைக்க தான் செய்திருந்தது.​

ஆதிதேவ் தன் வாழ்க்கையில் நடந்திருந்த சில சம்பவங்களை மறக்கத் தான் நண்பனை பிரிந்து வெளிநாட்டுக்கு சென்றிருந்தான். மறக்க நினைத்திருந்த சம்பவங்கள் மட்டும் தன் வாழ்க்கையில் நடக்காமல் இருந்திருந்தால் நண்பனை இணை பிரியாமல் இருந்திருப்பான். இன்று மூன்று வருடங்கள் கழித்து நண்பனை கண்டதும் கண்ணீர் விட்டிருக்கவும் மாட்டான்.​

தயகரும் மூன்று வருடங்கள் கழித்து ஆதியை கண்டதும் மனம் முழுக்க சந்தோஷத்தில் ஆரத்தழுவி கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீரை பொழிந்தான் தான்.​

"தல உங்கள பார்த்து எவ்ளோ நாளாச்சு. உங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணேன்." என்று சொன்னான் தயகர்.​

சில நிமிடங்களில் தான் இருக்கும் இடத்தினை உணர்ந்து கொண்டு சகஜ நிலைமைக்கு திரும்பியிருந்த ஆதிதேவ் கண்களில் வழிந்திருந்த நீரை விரல்களால் துடைத்துக் கொண்டான். தயகரை கலாய்க்கவும் தொடங்கி இருந்தான்.​

"கல்யாணத்த வெச்சிக்கிட்டு அவள கட்டிப்பிடிக்க வேண்டியத கண்ணு தெரியாம இங்க வந்து என்ன கட்டிப்பிடிச்சிட்டு நிக்குறீயா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"அவளா இருந்தா கட்டிப்பிடிக்கிறதோட நிறுத்தி இருக்க மாட்டேன்." என்று சொன்னான் தயகர்.​

"அடிப்பாவி இப்படிலாம் என் கிட்டப் போய்ப் பேசிட்டு இருக்க." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"ஆமா இப்படிலாம் உங்க கிட்ட பேசாம வேற யாரு கிட்ட பேசுவேன் சொல்லுங்க." என்று சொன்னான் தயகர்.​

"நானும் உன் கிட்ட மனசு விட்டுப் பேசுவேன்னு எதிர்பார்க்கக் கூடாது." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நாம மனசு விட்டுப் பேசி எவ்ளோ நாளாச்சு தெரியுமா?" என்று கேட்டான் தயகர்.​

"சரி சரி கொஞ்சம் விட்டா மூணு வருஷம் நேர்ல பேசாதத இப்போவே, இங்கயே பேசி முடிச்சிருவோம் போலயே. வா அப்படியே போயிட்டு ரூம்ல போய்ப் பேசிக்கலாம்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"சரி வாங்க தல நல்ல ஹோட்டல்ல வண்டிய விடுறேன். நாம அங்க போய் சாப்பாட்ட நல்ல கட்டு கட்டிட்டுப் போகலாம்." என்று சொல்லி ஆதியை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றான் தயகர்.​

தயகர் ஆதியை நேராக நல்ல உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். அங்குச் சென்று தங்களின் மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினர்.​

அடுத்து நேராக ஆதிதேவ் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதிக்குச் செல்ல எண்ணி தங்களின் பயணத்தை இருவரும் மேற்கொண்டனர்.​

ஆதிதேவ் முன்பதிவு செய்திருந்த லவ்டேல்(LOVEDALE) தங்கும் விடுதிக்கு தயகர் அழைத்துச் சென்றான். அங்கிருந்த விடுதிக்குள் இருவரும் நுழைந்தனர். விடுதி பணியாளரிடம் தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டித் தான் ஏற்கனவே அறையை முன்பதிவு செய்து வைத்திருந்ததை உறுதிப் படுத்திக் கொண்டான் ஆதிதேவ்.​

அங்கிருந்த பணியாளர் ஒருவர் இருவரையும் மேற்கொண்டு தங்க போகிற அறைக்குள் அழைத்துச் சென்று விட்டார். பின்னர் அந்தப் பணியாளர் விடைப் பெற்றுச் சென்று விட்டார்.​

"நேத்து நைட் சரியாத் தூங்கல இப்போ நல்ல சாப்பிட்டு வேறு முடிச்சுட்டேன். நல்ல தூக்கம் வருது. நான் போய்த் தூங்கப் போறேன். சாரி உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு தான் இருந்தேன். கோச்சுக்காத." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"தூங்குங்க தல. ஆனா இன்னைக்கு நைட் உங்க கூட இருந்து நல்ல என்ஜாய் பண்ணிட்டு நாளைக்கு மத்யானம் உங்களையும் கூட்டிட்டு அப்படியே மண்டபம் போகலாம்னு இருக்கேன். அதனால் எத பத்தியும் யோசிக்காம நல்ல தூங்குங்க." என்று சொன்னான் தயகர்.​

"வாவ் சூப்பர். அப்போ நான் தூங்கி எந்திருச்சதும் நம்ம ரெண்டுப் பேரும் நல்ல என்ஜாய் பண்ணலாம்." என்று சொன்ன ஆதிதேவ் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டான்.​

சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று விட்டான் ஆதிதேவ்.​

தயகர் சிறிது நேரம் தனது கைப்பேசியினை பார்த்துக் கொண்டிருந்தவன் அது அலுத்துப் போகவே தூங்கிக் கொண்டிருந்த ஆதியை தான் பார்வையிட்டான்.​

அன்றொரு நாள் ஆதியை கண்களில் கண்ணீருடன் பார்த்தது தான் அவன் நினைவுக்கு வந்தது.​

'ரொம்ப நல்லவரான இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவ இவரோட வாழ்க்கையில வராமலே இருந்து இருக்கலாம். சந்தோஷமா இருந்துருப்பார். எங்க விதி யார விட்டு வெச்சது. வசமா மாட்டிக்கிட்டார்.​

இவர் கிட்டப் பேசி எப்படியாவது நம்ம கம்பெனிலயே திரும்ப வேலைக்கு ஜாயின் பண்ண வெக்கணும். இவருக்கு எதாவது நல்லது நடக்குமானு பாக்கணும். ஆனா நம்ம கூட இவரு இருக்கணும்னு எதிர்பார்த்து அவருக்கு எதாவது ஹுர்ட் ஆகுற மாதிரி நடந்துடுமோனு மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு.​

இவரு நம்ம கம்பெனிலயே திரும்பவும் ஒர்க் பண்றதுல அவளுக்கு எதாவது பிரச்சனையானு வேற தெரிஞ்சிக்கணும்.' என மனதில் நினைத்துக் கொண்டான் தயகர்.​

ஆதிக்கும், தயகருக்கும் ஏழு வயது வித்யாசம் இருக்கும். ஆதிதேவ் ஏற்கனவே வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மென்பொருள் நிறுவனத்தில் தான் தயகர் தனது பொறியியல் படிப்பினை படித்து முடித்ததும் வேலைக்குச் சேர்ந்தான்.​

தயகர் வேலைப் பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த குழுவில் தான் ஆதிதேவ் அந்தக் குழுவை வழி நடத்துகிற பொறுப்பை ஏற்று நடத்தி வந்திருந்தான். அப்பொழுது தான் அவர்களின் நட்பு தொடங்கியது. அங்குத் தான் அவர்கள் இருவரும் தங்களின் நட்பை வளர்த்துக் கொண்டனர்.​

ஆதிதேவ் தயகருக்கு வேலையில் மட்டும் இன்றி அவனது வாழ்க்கையிலும் நல்ல வழிகாட்டியாக இருந்தான். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பழகுவதில் எப்பொழுதும் நேர்மறையான அதிர்வை (POSITIVE VIBES) மட்டுமே உணர்ந்து இருக்கின்றனர். ஆதிதேவ் என்ன செய்யச் சொன்னாலும் காரணத்தைக் கூடக் கேட்காமல் தயகர் அப்படியே செய்து விடுவான். ஆதிதேவ் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.​

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். அப்பொழுதுத் தான் கண் விழித்திருந்தான் ஆதிதேவ்.​

அதற்கு சற்று முன்பு தான் தயகர் தொலைப்பேசியில் அழைத்து இருவருக்கும் காஃபியை அறைக்கு எடுத்துக் கொண்டு வரும்படி சொல்லி இருந்தான்.​

ஆதிதேவ் கண் விழிக்கும் பொழுது சொல்லி இருந்த காஃபியும் சரியாக அறைக்கு வந்திருந்தது.​

படுக்கையில் இருந்து எழுந்த ஆதிதேவ் தன் முகத்தினை மட்டும் கழுவி விட்டு வருவதாகச் சொல்லி விட்டு குளியலறைக்குச் சென்றான்.​

சில நிமிடங்களில் திரும்பி வந்த ஆதிதேவ் தயகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.​

அவர்களுக்கு முன்பாக இரண்டு குவளைகள்(TUMBLER) வைக்கப் பட்டு இருந்தது. அந்த இரண்டிலும் காஃபியை நிரப்பி வைத்திருந்தான் தயகர்.​

இருவரும் அவர்களுக்கான காஃபி குவளையை எடுத்துக் கொண்டனர். இருவரும் இருக்கையில் இருந்து எழுந்து பால்கனிக்கு போய் நின்றுக் கொண்டனர்.​

"நல்ல தூக்கம் போல தல." என்று சொன்னான் தயகர்.​

"ஆமா ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல தூங்குனேன். நம்ம ரெண்டுப் பேரும் ரொம்ப நாளைக்கு அப்புறம் சேர்ந்து காஃபி குடிக்கிறோம்ல." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"ஆமா தல. நீங்க இல்லாம நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா. கம்பெனில ஒவ்வொரு வாட்டி காஃபி குடிக்கப் போகும் போதும் உங்க ஞாபகம் தான் எனக்கு வரும். நீங்க திரும்பவும் நம்ம கம்பெனிலயே ஜாயின் பண்ணிக்கோங்களேன். பண்றீங்களா?" என்று கேட்டான் தயகர்.​

தயகர் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு ஆதியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.​

தயகர் அந்த அறையில் போடப்பட்டிருந்த கடிகாரத்தை பார்வையிட்டான்.​

"தல இப்போ ஏழு மணி ஆகப் போகுது. இன்னைக்கு கரெக்டா ஏழு மணிக்கு யூடியூப்ல நிவர்த்திகா வருவாங்க. நான் அந்தச் சேனலுக்கு போய் அந்த வீடியோவ போட்டு விடவா? நாம ரெண்டுப் பேரும் அத கேட்கலாம்." என்று சொன்னான் தயகர்.​

தயகர் தனது கைப்பேசியை எடுத்து நேராக யூடியூப் சென்று அங்கு மனம் விட்டு பேசலாம் சேனலுக்கு போய் லேட்டஸ்ட்டாக அப்லோட் செய்யப் பட்டிருந்த வீடியோவை திறந்து பார்த்து அதனை ஒலிக்க விட்டான்.​

"நான் மனம் விட்டுப் பேசலாம் நிவர்த்திகா பேசுறேன். இன்னைக்கு உங்க எல்லாரையும் நூறாவது முறையாக அதாவது நூறாவது வீடியோவுல சந்திக்குறதுல ரொம்ப சந்தோஷப்படுறேன்.​

இன்னைக்கு நா ஒரு குட்டி கத அதுவும் ஒரு பொண்ண பத்தி தான் சொல்லப் போறேன். எல்லாரும் கேட்டுக்கோங்க. அவளோட அப்பா அவள லிட்டில் பிரின்சஸ் மாதிரித் தான் வளர்த்தாங்க, பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் அவ படிச்சு முடிச்சதும் வேலைக்கு போனா. அங்க ஒருத்தர பார்த்து அவளுக்கு பிடிச்சு போய் கல்யாணமும் பண்ணிக்கிட்டா.​

அவங்க கல்யாண காஸ்ட்யூம்ஸ்ல இருந்து ஃபர்ஸ்ட் நைட், ஹனிமூன் வரைக்கும் அவங்களுக்குள்ள பிரச்சனை தான் வந்தது. பல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், கருத்து வேறுபாடுகள் அவங்களுக்குள்ள வந்துச்சு. கணவரை புரிஞ்சிகிட்டு, அவர் குடும்பத்தோட ஒத்து போய், அட்ஜஸ்ட் பண்ணி போக அந்தப் பொண்ணுக்கு தெரியல, புரியல.​

உன்ன எனக்கு பிடிக்கல, உன் கூட வாழ பிடிக்கல, உன் கூட வாழறதுக்கே எனக்கு வெறுப்பா இருக்குனு சொல்லிட்டு அந்தப் பொண்ணு பிரிந்து வந்துட்டா. டிவோர்ஸும் வாங்கிட்டா.​

இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு எல்லாத்திலயும் அவசரம். காதல்ல அவசரம், கல்யாணத்துல அவசரம், பிரிந்து போறதுலயும் அவசரம். அந்த அவசரத்த அவங்க வாழக்க துணைய புரிஞ்சிக்க முயற்சி செய்றதுல காட்றதே இல்ல.​

அந்தப் பொண்ணு தன்னோட வாழ்க்க துணைய புரிஞ்சிக்க தனக்கு தேவப்படுற நேரத்தயும் எடுத்துக்கவே இல்ல. அப்படியே தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா.​

அவ கணவர் எத சொன்னாலும் அத பண்ணாத, இத பண்ணாதனு நீ எப்படிச் சொல்லலாம். நான் படிச்ச பொண்ணு, தைரியமான பொண்ணு எனக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கு. ஆண் ஆதிக்கத்த காட்டாத. என்ன அடக்கி ஆள நீ நினைக்காதனு சொல்லிட்டு பெண்ணியம் பேசுறது. இதுவா பெண்ணியம்? இல்லவே இல்ல.​

அந்தப் பொண்ணுக்கு அவ அப்பா அவ்ளோ செல்லம் கொடுத்து வளர்த்து கெடுத்து வெச்சிருந்தாங்க. அவ்ளோ பிடிவாதம் அவளுக்கு. அந்தப் பையனோட குடும்பத்த அட்ஜஸ்ட் பண்ணி போகவும் அந்தப் பொண்ணுக்கு தெரியல.​

அந்தப் பொண்ணோட குடும்பமும் அவளுக்கு அட்வைஸ் பண்ணாம சப்போர்ட் பண்ணிட்டுத் தான் நின்னாங்க. இங்க ஒரு வேள அந்தப் பொண்ணோட ஃபேமிலி சப்போர்ட் பண்ணாம, தலையிடாம இருந்து இருந்தா அந்தப் பொண்ணு தன்னோட தப்ப உணர்ந்து இருக்கலாம். இத்தனைக்கும் அவ கணவரும், அவ புகுந்த வீட்டில் இருக்குறவங்களும் ரொம்ப நல்ல டைப் தான்.​

அவ கணவர் மேலயும் தப்பு இருக்கத் தான் செய்யுது. இல்லனு சொல்ல முடியாது. அந்தப் பொண்ணு தன்னை சரியா புரிஞ்சிக்கல. அத தெரிஞ்சி அந்தப் பொண்ணுக்கு தன்னை புரிய வெக்க முயற்சி செஞ்சி இருக்கணும்.​

அந்தப் பெண்ணை எல்லாத்திலயும் இப்படித் தான் பண்ணனும், இப்படித் தான் நடந்துக்கணும்னு பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வெக்க அந்த கணவர் முயற்சி செஞ்சிருக்கணும்.​

அந்தப் பொண்ணு கோபத்துல பேசுறப்ப அந்த கணவரும் கோபத்துல வார்த்தைய விடாம பொறுமையா எடுத்துச் சொல்லிப் புரிய வெச்சிருக்கணும். அப்படி மட்டும் பண்ணி இருந்தா அந்தப் பொண்ணு புரிஞ்சிருக்குமோ என்னவோ.​

அந்தப் பொண்ண டிவோர்ஸுக்கு அப்புறம் பல ஆண்கள் அவள தப்பான முறைல தான் பாத்தாங்க. அதயும் தாண்டித் தான் அவ இப்போ வந்திருக்கா.​

அந்தப் பொண்ணுக்கு அடுத்து வேறு வாழ்க்கை அமைஞ்சாலும் அது அவளுக்கு நல்ல வாழ்க்கையா அமையுமானு தெரில. அவ அதயாவது நல்ல முறைல பயன்படுத்திப்பாளானு தெரில.​

எல்லாருக்கும் லைஃப்ல செகண்ட் சான்ஸ் கிடைக்குமானு தெரில. அப்படி மட்டும் கிடச்சா அத யாருமே மிஸ் பண்ண கூடாதுனு தான் சொல்லுவேன். ஒரு வேள அவ மிஸ் பண்ண கல்யாண வாழ்க்க திரும்பவும் அவ கைல கிடச்சா கிடைக்க சான்ஸ் கம்மி தான் ஆனாலும் கிடச்சா அத அவ பயன்படுத்திக்கணும்னு தான் சொல்லுவேன்.​

உங்க எல்லாருக்கும் ஒரு டவுட் இருக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களுக்குள்ள பிரச்சனை இல்லையா? கல்யாணத்துக்குப் பிறகு தான் பிரச்சனை வந்ததானு? மறுபடியும் சந்திக்கலாம். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் நிவர்த்திகா" என்று சொல்லி தனது பேச்சினை முடித்துக் கொண்டாள் நிவர்த்திகா.​

"நீங்க அவள மறக்க தான, உங்க வாழ்க்கைல நடந்த எல்லாத்தயும் மறக்க தான வெளிநாட்டுக்கு போனீங்க. எல்லாத்தயும் மறந்துட்டீங்களா?" என்று கேட்டான் தயகர்.​

"இல்ல." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"உங்க அம்மாவும், அப்பாவும் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டோம். கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னா நீங்க பண்ணிப்பீங்களா?" என்று கேட்டான் தயகர்.​

"இல்ல பண்ணிக்க மாட்டேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"எப்போவும் நாம தொலைத்த பொருளை தொலைத்த இடத்துல தான் தேடணும்." என்று சொன்னான் தயகர்.​

"இல்ல எனக்கு புரியல." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நீங்க மறுபடியும் நம்ம கம்பெனில ஜாயின் பண்ணி கூட ஒர்க் பண்ற சிட்டுவேஷன் அமஞ்சா நீங்க ரொம்ப நாளாத் தேடிட்டு இருக்குற விடை கூட உங்களுக்கு கிடைக்கலாம்." என்று சொன்னான் தயகர்.​

ஆதிதேவ் எதையோ மனதுக்குள் வைத்துக் கொண்டு ரொம்ப நேரமாக அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தானே தவிர தயகரின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.​

'என் மேலயும் தப்பு இருக்கா? நானும் அவள சரியா புரிஞ்சி, அவளயும் புரிய வெக்க நா ட்ரை பண்ணி இருக்கணுமோ. இப்போ பேசுன இவங்க பேச்ச கேட்குறப்ப ஏன் எனக்குக் கோபம் வேற வந்தது.​

அதெப்படி அவள பத்தி இவங்க தப்பா பேச முடியும்? நம்ம மனசுக்கு பிடிச்சவங்க பத்தி அப்படி, இப்படினு வேற யாராவது குறை சொல்லும் போது அத கேட்குற நமக்குக் கோபம் வருமே அது மாதிரித் தான் எனக்கு இப்போ கோபம் வந்ததா?​

அப்போ அவளுக்கு அவ எதிர்பார்க்குற மாதிரி அடுத்த வாழ்க்கயும் சரியா அமையாதா? அப்படி அவளுக்கு அடுத்த வாழ்க்க அமஞ்சா அத என்னால தாங்கிக்க முடியுமா?​

தயகர் சொல்ற மாதிரி அந்த கம்பெனில ஜாயின் பண்ணா அது அவள டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகாதா? வேற மாதிரி எதாவது நடந்தா அத என்னால தாங்கிக்க முடியுமா? தயகர் சொல்ற மாதிரி நான் இவ்ளோ நாளா தேடிட்டு இருக்குற விடை தான் கிடைக்குமா?' என்பது போல பலவற்றை மனதுக்குள் வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ்.​

ஆதியால் எவ்ளோ யோசித்தும் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை.​

தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த ஆதிக்கு திடீரென தயகரின் ஞாபகமும் வந்தது. ஆதிதேவ் தயகரை தான் திரும்பிப் பார்த்தான்.​

தயகரும் ஆதியை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.​

'இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வெச்சிட்டு நம்ம கூட இருந்துட்டு நம்மள பத்தியே யோசிச்சிட்டு இருக்கானே. இவன நான் என்ன சொல்றது. இப்போ இவன் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்.' என்று மனதினில் நினைத்துக் கொண்டான் ஆதிதேவ்.​

"வா நாம போய் லைட்டா சாப்பிட்டுட்டு வந்துரலாம். வந்து நாம பாட்டு போட்டு ஆடி, பாடினு சந்தோஷமா கொண்டாடலாம்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

'எனக்காக தல தன்னோட மனநிலைய காட்டாம மறச்சிட்டு என்ன சந்தோஷமா வெச்சிக்க பாக்குறார். எனக்காகவாவது அவரு சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவேப் போதும்.' என்று மனதினில் நினைத்துக் கொண்ட தயகர் இரவு உணவை சாப்பிட உணவகத்துக்கு செல்ல அறையை விட்டு வெளியேறினான்.​

அவனுக்கு பின்னாடியே ஆதியும் அறையை விட்டு வெளியேறினான்.​

ஆதிதேவ் தயகரை உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு அறையின் நுழைவாயிலில் அவனை முன் நிறுத்தி வைத்துவிட்டு அவனுக்குப் பின்னால் போய் நேராக நின்று கொண்டு அவனின் கண்களை தனது கைகளால் மூடி மறைத்துக் கொண்டான்.​

"ஏன் தல என் கண்ண மூடிட்டீங்க? என்ன பண்ணப் போறீங்க?" என்று கேட்டான் தயகர்.​

"சர்ப்ரைஸ்." என்று சொன்ன ஆதிதேவ் அவனை அந்த அறைக்குள்ளே அழைத்துச் சென்றான். தயகரின் கண்களை மூடி இருந்த தனது கைகளை விலக்க செய்தான் ஆதிதேவ்.​

அங்கே சுவரில் 'GROOM TO BE' என்கிற வாசகம் பலூன்களால் நிரப்பப்பட்டு அலங்கரிக்கப் பட்டு இருந்தது.​

தயகருடன் பள்ளியில், கல்லூரியில் பயின்ற அவனது தோழர்கள் அனைவரும் அங்குக் குழுமி இருந்தனர்.​

தயகரின் நண்பர்கள் சிலர் அவனுக்கு முன்பாக வந்து நின்று கொண்டு வெள்ளை நிறத்தில் இருந்த டீ-ஷர்ட்டை அவனுக்குப் பரிசாகத் தந்தனர்.​

அந்த டீ-ஷர்ட்டை அப்பொழுதே அணிந்து கொள்ளச் சொன்னார்கள். அந்த டீ-ஷர்ட்டை அவன் அணிந்திருந்த சட்டைக்கு மேலேயே அணிந்து கொண்டான் தயகர். அந்த டீ-ஷர்ட்டில் 'GROOM TO BE' என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது.​

ஆதிதேவ் உட்பட அங்கு வந்திருந்த அனைத்து நண்பர்களுமே வெள்ளை நிறத்தில் தான் டீ-ஷர்ட் அல்லது சட்டை அணிந்திருந்தனர்.​

அவர்கள் அனைவரும் சேர்ந்து நின்று கொண்டு புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினர்.​

பிரபலமான டிஜே(DJ) ஒருவரை அங்கு அழைத்து வர முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தான் ஆதிதேவ்.​

ஆட்டம், பாட்டம் என்று அங்குக் குழுமி இருந்த அனைவரும் கொண்டாடினார்கள். பிறகு சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்களுக்கு குளிர்பானம் மற்றும் இரவு உணவு வகைகள் பஃபே(BUFFET) முறையில் பரிமாறப்பட்டது.​

இரவு உணவை சாப்பிட்டு முடித்துக் கொண்டதும் வந்திருந்த அனைத்து நண்பர்களையும் வழியனுப்பி வைத்துவிட்டு ஆதிதேவ் மற்றும் தயகர் மட்டுமே தங்கியிருந்த அறைக்குத் திரும்பினர்.​

இருவரும் ஆடையை மாற்றிக் கொண்டு வந்து படுக்கையில் படுத்துக் கொண்டனர்.​

உடல் அசதியாக இருந்த காரணத்தினால் தயகர் படுத்ததும் உறங்கியும் விட்டான்.​

மதியம் தூங்கி விட்ட காரணத்தினாலும், நிவர்த்திகாவின் பேச்சைக் கேட்டதில் இருந்து இருக்கிற குழப்பத்தினாலும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு படுத்திருந்தான் ஆதிதேவ்.​

***​

 
Last edited:

NNK 55

Moderator

3​

சான்விகா போடிநாயக்கனூரில் இருந்து மூணார் வரைக்கும் நான்கு சக்கர வாகனத்தில் தான் பயணம் செய்து வந்தாள். அவள் முன்பதிவு செய்திருந்த லவ்டேல்(LOVEDALE) தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லுமாறு ஓட்டுனரிடம் கேட்டுக் கொண்டாள்.​

அந்த ஓட்டுனரும் அவளை அழைத்துச் சென்று அந்தத் தங்கும் விடுதியில் விட்டுவிட்டுச் சென்று விட்டார். அங்கிருந்த விடுதிக்குள் நுழைந்தாள்.​

விடுதிப் பணியாளரிடம் தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டித் தான் ஏற்கனவே அறையை முன்பதிவு செய்து வைத்திருந்ததை உறுதிப் படுத்திக் கொண்டாள் சான்விகா.​

அங்கிருந்த பணியாளர் ஒருவர் அவளை மேற்கொண்டு தங்க போகிற அறைக்குள் அழைத்துச் சென்று விட்டார். பின்னர் அந்தப் பணியாளர் அவளிடம் விடைப் பெற்றுச் சென்று விட்டார்.​

அறைக்குள் நுழைந்ததும் சான்விகா முதலில் தனது தந்தைக்கு கைப்பேசியில் அழைத்துத் தான் மூணார் சென்றடைந்து விட்டதை தெரிவித்தாள்.​

"நீ மூணாருக்கு போயிட்டனு மாப்பிள்ளய கூப்டு சொல்லிட்டீயா?" என்று கேட்டார் தந்தை இஷான்.​

"இல்ல டேடி இன்னும் சொல்லல." என்று சொன்னாள் சான்விகா.​

"முதல்ல போன் பண்ணிச் சொல்லிரு. உனக்கு தான் காத்துட்டு இருப்பாரு." என்று சொன்னார் இஷான்.​

"சரி டேடி. நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் சான்விகா.​

"இன்னும் இல்ல. உன் போனுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ தான் சாப்பிட போகணும். நீ சாப்பிட்டீயா?" என்று கேட்டார் இஷான்.​

"இன்னும் இல்ல டேடி. பேசிட்டு லைட்டா சாப்பிட்டுட்டு வந்து தூங்கப் போறேன். இப்போ வெச்சிடுறேன். அப்புறமா பேசுறேன்." என்று சொன்ன சான்விகா அழைப்பைத் துண்டித்து விட்டாள்.​

தனது அன்னையிடமும் கைப்பேசியில் அழைத்துப் பேசி முடித்து விட்டு ரித்விக்கை கைப்பேசியில் அழைத்தாள்.​

"சொல்லு பேபி இப்போ தான் உனக்கு என் ஞாபகமே வந்ததா? நான் உன்ன தான் எப்போவும் நினைச்சிட்டு இருக்கேன்." என்று சொன்னான் ரித்விக்.​

"நான் இப்போ மூணார் வந்து சேர்ந்துட்டேன். அத சொல்ல தான் போன் பண்ணேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"அப்போ இத சொல்ல மட்டும் தான் கால் பண்ணேன்னு சொல்றீயா பேபி? நீ எப்போவும் என்ன விலக்கி வெச்சிட்டே இருக்க. ஆனா நான் உன்ன விலக்கி வெக்கவே மாட்டேன். இப்போ நான் அங்க உன் கூட இருந்து இருந்தா அந்த குளிருக்கு உன்ன அப்படியே கட்டிப்பிடிச்சு என் குளிர போக்கி இருப்பேன்." என்று சொன்னான் ரித்விக்.​

ரித்விக்கின் பேச்சை கேட்ககேட்க சான்விகாவுக்கு அப்படியே குமட்டிக் கொண்டு வருவது போலவே இருந்தது. எனவே அவனது அழைப்பினை துண்டிக்க நினைத்தாள்.​

"எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"பேபி.", என்று எதிர்புறம் ரித்விக் சொன்னதைக் கேட்கிற பொறுமை கூட இல்லாமல் அழைப்பைத் துண்டித்து விட்டாள் சான்விகா.​

ரித்விக்கிடம் பேசியதில் இருந்து, அவனுடைய பேச்சைக் கேட்டதில் இருந்து அவளுக்கு சாப்பிட போகக் கூடப் பிடிக்கவில்லை.​

படுக்கையில் படுத்துக் கொண்டு பலவற்றினை யோசித்துக் கொண்டிருந்தாள்.​

'கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இவரு பேசுறது இவ்ளோ தொல்லையா இருக்கே. இவர நான் எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தெரிலயே. இவர எனக்கு பிடிச்சு இருந்தா இவரு பேசுற எந்த ரொமான்டிக் டயலாக்கும் எனக்கு தப்பா இருந்து இருக்காது. ஆனா எனக்கு பிடிக்கல. அப்படியே குமட்டிட்டு வர மாதிரி இருக்கு.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சான்விகா.​

தந்தை இஷாந்த் தனக்கு மாப்பிள்ளையாக ரித்விக்கை தேர்ந்தெடுத்த அன்று சொன்னது தான் அவளது ஞாபகத்துக்கு வந்து போனது.​

ரித்விக்கின் புகைப்படத்தை அவளிடம் காட்டி, "ரித்விக் இவரு தான் நா உனக்கு சூஸ் பண்ணியிருக்குற மாப்பிள்ள. பணம், அழகு எல்லாத்திலயும் மத்தவங்கள விட பெஸ்ட்டா இருக்குறவர தான் நா உனக்கு சூஸ் பண்ணிக் கொடுத்து இருக்கேன். இவரு நம்மள விடப் பெரிய பணக்கார ஃபேமிலில இருந்து வந்தவரு தான். அவரு ஃபேமிலில இருக்குற யாரும் உன்ன எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டாங்க. நீ அங்க போனா உனக்காக வேல பாக்கவே நிறையப் பேர் அங்க இருக்காங்க. எந்த கமிட்மென்ட் பிரச்சனயும் உனக்கு அங்க இருக்காது. எந்த பண பிரச்சனயும் உனக்கு அங்க இருக்காது. நீ ஜாலியா எங்கனாலும் சுத்தி பாக்க போகலாம்." என்று இஷாந்த் அன்று சொன்னது அவளுக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வந்தது.​

இப்படி எதை எதையோ யோசித்துக் கொண்டு படுத்திருந்தவள் பயணக் களைப்பினால் அப்படியே கண் அயர்ந்து உறங்கியும் விட்டாள்.​

மாலை ஐந்து மணிக்கு அவளது தோழிகள் இரண்டு பேர் வந்து தான் எழுப்பி விட்டனர்.​

மூன்று தோழிகளும் பேசியே பொழுதைப் போக்கினார்கள்.​

இரவு பொழுதும் வந்தது. மூன்று தோழிகளும் அந்த விடுதியில் உள்ள உணவகத்திலேயே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர்.​

மூன்று தோழிகளும் அறைக்குத் திரும்பினார்கள்.​

சான்விகாவின் இரு தோழிகளில் ஒருத்திக்கு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருக்கிறது.​

சான்விகா தனக்கும் சேர்த்து மூன்று ஆடைகளை பெட்டியில் இருந்து எடுத்து வந்து தனக்கென்று ஒரு ஆடையை வைத்துக் கொண்டு மற்ற இரண்டு ஆடைகளையும் தனது இரண்டு தோழிகளுக்கும் கொடுத்து அணிந்து கொண்டு வரச் சொன்னாள்.​

சான்விகா மூன்று ஆடைகளையும் ஒரே மாதிரித் தான் எடுத்திருந்தாள். ஆடையை எடுத்து அணிந்து கொண்டால் தொடை வரை மட்டுமே வரக் கூடிய ஜம்ப்சூட் வகையைச் சேர்ந்த ஆடையைத் தான் தேர்ந்தெடுத்து வாங்கி இருந்தாள். மூன்று ஆடைகளுமே பர்பிள் நிறத்தில் இருந்தது.​

மூன்று தோழிகளும் அணிந்து கொண்டு வந்து நின்றனர். பர்பிள் நிறத்தில் உள்ள சால்வை பெட்டியில் இருந்து எடுத்து வந்து திருமணம் ஆகப் போகிற தோழிக்கு முன்பு வந்து நின்று கொண்டு அந்த சால்வை எடுத்து அவளுக்கு அணியச் செய்தாள். அந்த சால்வில் 'BRIDE TO BE' என்கிற வாசகம் எழுதப் பட்டிருந்தது.​

மூன்று தோழிகளும் விதவிதமான புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினர்.​

மூன்று தோழிகளும் தங்களின் கைப்பேசியில் உள்ள பாடல்களை ஒலிக்க விட்டு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.​

சிறிது நேரத்தில் மூன்று பேரும் ஆடையை மாற்றிக் கொண்டனர்.​

அங்குப் போடப்பட்டிருந்த கட்டிலில் இருவர் மட்டுமே படுக்க முடியும் என்கிற காரணத்தினால் சான்விகாவின் தோழி ஒருத்தி மட்டும் கூடுதலாக படுக்கையை ஒன்று மட்டும் வாங்கி அதில் படுத்து உறங்கியும் விட்டாள்.​

மற்ற இருவரும் கட்டிலில் படுத்துக் கொண்டனர். சான்விகாவின் அருகினில் படுத்திருந்த தோழியும் உடல் களைப்பினால் படுத்ததும் உறங்கி விட்டாள்.​

மதியம் தூங்கிய காரணத்தினாலும், மனதினில் இருக்கிற சில குழப்பத்தினாலும் தூக்கத்தை தொலைத்தாள் சான்விகா.​

சான்விகாவும் இரவு ஏழு மணிக்கு யூடியூப் வீடியோவில் மனம் விட்டுப் பேசலாம் நிவர்த்திகா பேசிய பொழுது கேட்டிருந்தாள்.​

"எல்லாருக்கும் செகண்ட் சான்ஸ் கிடைக்காது. அப்படிக் கிடைச்சா அத மிஸ் பண்ணவே கூடாது." என்று நிவர்த்திகா சொல்லி இருந்ததே சான்விகாவின் மனசுக்குள் ஓடிக் கொண்டு தூக்கத்தை தடுத்து நின்றது.​

***​

ஆதிதேவ் காலை நான்கு மணிக்கே எழுந்து, குளித்து உடையை மாற்றி விட்டு அறையை விட்டு வெளியேறினான். தங்கும் விடுதியை விட்டு வெளியேறி அங்கிருந்து நேராக சூரியநெல்லி என்கிற இடத்தினை அடைந்தான்.​

கொழுக்குமலை போக ஜீப்பை பிடித்தான். ஒரு ஜீப் பயணத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒரு ஜீப்பில் ஆறு பேர் வரை பயணம் செய்யலாம். அங்கு வந்திருந்த ஐந்து பேர் ஆதியுடன் சேர்ந்து கொண்டு ஜீப் பயணத்துக்கான செலவைப் பகிர்ந்துக் கொண்டனர்.​

அனுமதிக்கப்பட்ட ஜீப்களை தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அங்கு அனுமதி இல்லை.​

ஓட்டுநர் சரியாக காலை நாலரை மணிக்கு வண்டியை எடுத்தார். ஆதிதேவ் பயணம் செய்த வண்டிக்கு முன்னாடியும், பின்னாடியும் வண்டிகள் சென்று கொண்டு தான் இருந்தது.​

அந்த ஜீப் பயணம் செய்த பாதை கிட்டத்தட்ட ஒன்பது கிலோ மீட்டர் வரை குண்டும், குழியுமாக(OFF ROAD) தான் இருந்தது.​

காலை நேரப் பயணம் என்பதால் சூரிய வெளிச்சமே படாத காரணத்தினால் வழியெங்கும் இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை.​

சரியாக முக்கால் மணி நேரத்தில் சூரியன் உதயம் ஆகப் போகிற நேரத்தில் அங்கு சன்ரைஸ் வியூ பாயிண்ட்டில் வண்டியை நிறுத்தினர்.​

ஆதிதேவ் வார நாட்களில் அதுவும் ஆஃப் சீசனில் வந்து இருப்பதினால் கூட்டமும் அவ்வளவாக இல்லை. சூரியன் மெல்ல மெல்ல உதயமாகிற பொழுதினில் சுற்றி இருக்கிற இடங்களின் வண்ணத்தை, வெளிச்சத்தினை பார்க்கிற பொழுது கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று என்று மனதினில் நினைத்துக் கொண்டான்.​

அந்த இயற்கை காட்சிகளைப் பார்க்கப் பார்க்க மனதில் உள்ள பாரம், மன அழுத்தம், மன உளைச்சல் அனைத்தும் மெல்ல மெல்ல விலகிச் செல்வது போல இருந்தது.​

சூரியன் உதயமாகிறதை பார்க்க சற்று தொலைவினில் தான் நின்றிருந்தான் ஆதிதேவ். அவனுக்கு முன்பாக வேறு யாரும் நின்றிருக்கவில்லை. அதனால் எந்த இடையூறும் இல்லாமல் அவனால் பார்க்க, ரசிக்க முடிந்திருந்தது.​

திடீரென ஒரு பெண் அவனுக்கு முன்பாக வந்து நின்றுக் கொண்டாள். சூரியன் உதயமாகிறதை பார்க்கிறதுக்காக அந்தத் திசை நோக்கித் திரும்பி தான் நின்றிருந்தாள். அந்தப் பெண் ஜீன்ஸும், மஞ்சள் நிற டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அந்தப் பெண் திரும்பி நின்றிருந்ததால் அந்த பெண்ணின் முகத்தினை அவனால் பார்த்திருக்க முடியவில்லை.​

ஆதிதேவ் தனக்கு முன்பாக ஒரு பெண் வந்து நின்றுக் கொண்டதை பார்த்ததும், "அடிடா அவள. உதைடா அவள." என்கிற பாடலின் வரியினை தான் பாடத் தோன்றியது.​

'காலைல சீக்கிரம் எந்திரிச்சு சூரியன பாக்கலாம்னு வந்து நின்னா கடைசில இந்தப் பொண்ணு வந்து நிக்குறா. இந்தப் பொண்ண பாக்கவா இவ்ளோ தூரம், இந்த அதிகாலை வேளல குண்டும், குழியுமான ரோட்டுல டிராவல் பண்ணி வந்து நிக்குறேன். அதும் சூரியன் கலர்ல டிரஸ் போட்டுட்டு வந்து நிக்குறா. இந்தப் பொண்ணு நமக்கு என்ன செய்தி சொல்ல காத்துருக்கானு தெரிலயே.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஆதிதேவ்.​

'சூரியன பாக்க வந்துட்டு என்னோட முழுக் கவனமும் இவ மேல தான் இருக்கு. இவள தான் பாத்துட்டு நிக்குறேன். இது சரியில்லயே ஆதி.' என்று நினைத்து தன்னைத் தானே கேலி செய்து கொண்டான் ஆதிதேவ்.​

அப்பொழுது அவனுக்கு அருகினில் நின்றிருந்த ஒருவர், "சூரியன் முகத்த காட்டிருச்சு." என்று சொன்னார்.​

அப்பொழுது அந்தப் பெண் தனது இடது புறத்தினில் திரும்பி நின்றுக் கொண்டாள்.​

அப்பொழுதுத் தான் அந்தப் பெண்ணின் முகத்தினை அவனால் பார்க்க முடிந்திருந்தது.​

உதயமாகிருந்த சூரியனின் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் முகத்தினைப் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். அவளை அந்த இடத்தினில் பார்ப்பான் என்பதினை ஆதிதேவ் எதிர்பார்த்திருக்கவே இல்லை.​

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவளை நேரில் பார்க்கிறான். சற்று மெலிந்து காணப்பட்டாள். அவளது அழகு சற்று அதிகரித்தது போல அவனுடைய கண்களுக்குத் தெரிந்தது.​

KOZHUKKUMALAI.jpg

அதிகாலை வந்தால்.​

அழகாய் என் வானில் நீ.​

அணையாத சூரியன் ஆகிறாய்.​

'உன்ன பாக்க பாக்க அப்படியே இழுத்து வெச்சி கன்னம் கன்னமா அறையணும்னு தோணுது. உன்ன மறந்துட்டு அடுத்து போனேன்னா அதான்டி இல்ல. நீ எங்க என்ன விட்டுட்டு போனீயோ அங்கிருந்து என்னால ஒரு அடி கூட எடுத்து வெக்க முடியல. அங்கயே தான் தேங்கி நின்னுட்டு இருக்கேன். எல்லாத்தயும் மறக்கத் தான் போன்னேன். ஆனா என்னால எதயும் மறக்க முடியலடி. மறக்க முடியும்னு எனக்கு தோணல. எதுக்குடி இப்போ என் கண்ணு முன்னாடி வந்து நிக்குற. அன்னைக்கும் நீ தான் என்ன அழ வெச்ச. இப்போவும் நீ தான்டி என்ன அழ வெக்குற. இன்னும் உன்ன பாத்து ஓடுறதுல என்னடி இருக்கு. இழக்குறதுக்கு என்கிட்ட ஒண்ணுமே இல்லையேடி. இப்போ உன்ன இங்க பார்த்ததுல காலம் என்ன மெசேஜ் சொல்ல நினைக்குதுனு தெரியல. வாரேன்டி. திரும்பவும் உன் கிட்ட படு மட்டமா தோற்க போறேன்னா தெரியல. எப்படியோ போய் தொலையிறேன். இப்போ மட்டும் நல்லவா இருக்கேன்.' என்று மனதினில் நினைத்து வருத்திக் கொண்டான் ஆதிதேவ்.​

சிறிது நேரத்தில் அந்தப் பெண் அப்படியே தனது இடது புறத்தினில் திரும்பி நேருக்கு நேராக ஆதியை பார்ப்பது போல நின்றிருந்தாள்.​

முதலில் அந்தப் பெண் தனக்கு நேராக நின்றிருந்த ஆதியை கவனிக்காமல் விட்டுவிட்டாள். பின்பு தான் தனக்கு நேராக நின்றிருந்த ஆதியை கண்டுக் கொண்டவள் அதிர்ந்து நின்றாள். அந்தப் பெண் ஆதியை அந்த இடத்தினில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.​

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.​

'அன்னைக்கு என்ன பிரிஞ்சு போனப்ப வெறுப்பா பாத்துட்டு போனீயே.இன்னைக்கு அப்படி ஒன்னும் என்ன வெறுப்பா பாக்குற மாதிரி இல்லையே. இன்னைக்கு உன்ன பாக்குறப்ப உன் மனசுல என்ன இருக்கு, நீ என்ன நினைக்கிறனு புரியல, தெரிலயே. ஆனா நா நாம பிரிஞ்ச அன்னைக்கு பாத்தப்போ உன் மேல எவ்ளோ கோவம் இருந்தாலும் உன்ன கெஞ்சிட்டு தான் இருந்தேன். அதே மாதிரித் தான் இன்னைக்கும் அதே கோபம் தான் உன் மேல இருக்கு. உன்ன விட்டுட்டு போகாம, போக முடியாம கெஞ்சிட்டு உன் காலடியிலேயே விழுந்து கிடக்குறேனே.' என்று மனதினில் நினைத்துக் கொண்டான் ஆதிதேவ்.​

'நாங்க ரெண்டுப் பேரும் பிரிஞ்சு போன அன்னைக்கு அவர பாத்தப்போ எனக்கு அவரு மேல வெறுப்பா தான் இருந்தது. ஆனா இன்னைக்கு பாக்குறப்ப எனக்கு வெறுப்பா இல்ல. காலம் ஒருத்தங்கள இப்படிக் கூட மாத்த முடியுமா என்ன? இந்த இடைப்பட்ட காலத்துல அவரு லைஃப்ல என்ன நடந்ததுனு எனக்கு தெரியல. அன்னைக்கு அவரு என்ன கெஞ்சுற மாதிரி இருந்தாலும் கோபமா தான் பாத்தாரு. இன்னைக்கும் என்ன கோபமா தான் பாக்குறாரு.' என்று அந்தப் பெண் மனதினில் நினைத்துக் கொண்டாள்.​

சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தனர். இருவருமே ஒரு வார்த்தைக் கூட பேசிக்கவில்லை.​

இருவருமே அந்த இடத்தை விட்டு நகருவது போலவும் இல்லை.​

அப்பொழுது அங்கு வந்த நிவர்த்திகா அந்தப் பெண்ணுக்கு அருகினில் போய் நின்று கொண்டு, "சான்வி இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்க. இங்க டீ ரொம்ப நல்ல இருக்குமாம். நாம போய் சாப்பிட்டுட்டு, குடிச்சிட்டு வரலாம்." என்று சொல்லி ஆதியை பார்த்துக் கொண்டு நின்றிருந்த சான்விகாவை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.​

 
Last edited:

NNK 55

Moderator

4​

ஆதிதேவ் வயது: 33(90's KID) சேலம் மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவன். தனன்ஜெயன்-இந்துவதனி தம்பதிகளுக்கு பிறந்த ஒரே புதல்வன். அவனுடன் பிறந்தவர்கள் ஒரு அக்காவும், ஒரு தங்கையும் ஆவார்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அழகான, வெள்ளை நிற தோற்றத்தை உடையவன். மென்பொருள் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறான்.​

சான்விகா வயது: 24 (2K KID) சென்னை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். இஷான்- சாதனா தம்பதிகளுக்கு பிறந்த ஒரே புதல்வி. அவளுடன் கூடப் பிறந்தவர்கள் என எவரும் இல்லை. அதனால் செல்லமாக வளர்க்கப்பட்டவள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அழகான, வெள்ளை நிற தோற்றத்தை உடையவள். இந்த காலத்து மாடர்ன் யுவதி. மென்பொருள் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறாள்.​

சான்விகாவும், அவளது தோழி நிவர்த்திகாவும் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து முடித்து உடையை மாற்றிவிட்டு சூரியநெல்லி என்கிற இடத்துக்குச் சென்று நாலரை மணிக்கு ஜீப்பில் ஏறி தங்களது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.​

ஆதிதேவ் பயணம் செய்து வந்திருந்த வண்டிக்குப் பின்னால் இருந்த வண்டியில் தான் இருவரும் பயணம் செய்து வந்திருக்கின்றனர்.​

ஆதிதேவ் சன்ரைஸ் வியூ பாயிண்ட்டில் சிறிது நேரம் நின்றிருந்து பார்த்துவிட்டு நேராக அருகிலிருந்த உணவகத்துக்கு சென்றான்.​

அந்த உணவகத்தில் தான் சான்விகாவும், நிவர்த்திகாவும் ஏற்கனவே இடம் பிடித்துப் கொண்டு போய் நாற்காலிகளில் அமர்ந்திருக்கின்றனர்.​

ஆதியும் அவர்களை கண்டுக்கவே இல்லாதது போல அவர்களுக்கு அருகினில் கிடந்திருந்த நாற்காலியில் இடத்தினைப் பிடித்துக் கொண்டு போய் அமர்ந்து கொண்டான்.​

கொழுக்குமலையை சுற்றிலும் தேயிலை தோட்டம் தான் எங்கும் காணப்படும். எந்தக் கலப்படமும் இல்லாத தேயிலை தான் அங்குக் கிடைக்கும்.​

அங்குக் கிடைக்கும் தேயிலையை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தேநீரை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி உணவக பணியாளரிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டான். அதனுடன் பிரட் ஆம்லெட்டும் எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டுக் கொண்டான்.​

சான்விகாவும் தேநீர் மற்றும் பிரட் ஆம்லெட் தான் எடுத்துக் கொண்டு வந்து தரும்படி ஏற்கனவே சொல்லி இருந்தாள்.​

அந்தப் பணியாளர் இரு மேஜைகளிலும் அவர்கள் கேட்டு கொண்டதினை எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டுத் தான் சென்றிருந்தார்.​

ஆதிதேவ் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகினில் கிடந்த மேஜையில் உள்ள உணவினை தான் பார்வையிட்டாள் நிவர்த்திகா.​

"உங்க ரெண்டுப் பேருக்கும் எதுல ஒத்து போகுதோ இல்லயோ இப்போ இங்க சாப்புடுறதுல மட்டும் நல்லவே ஒத்து போகுது." என்று அருகினில் அமர்ந்திருக்கும் ஆதிக்கு கேட்காத படிக்கு மெலிதாகச் சொன்னாள் நிவர்த்திகா.​

சான்விகாவும், நிவர்த்திகாவும் சாப்பிட்டு முடித்து உணவகத்தை விட்டு முதலில் வெளியேறினார்கள்.​

நிவர்த்திகா தான் சான்விகாவை இழுத்துக் கொண்டு போய் வெளியேறச் செய்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ சான்விகாவுக்கு அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் செல்லவே மனம் இல்லை.​

சான்விகாவை வெளியில் இழுத்துக் கொண்டு போய் உணவகத்தை விட்டு வெளியேற்றியதும் தான் பிடித்திருந்த கரத்தினை விட்டாள் நிவர்த்திகா.​

அருகினில் இவர்களைத் தவிர தெரிந்தவர்கள் யாருமே நின்றிருக்கவில்லை என்பதினை உறுதிப்படுத்திக் கொண்ட நிவர்த்திகா சான்விகாவிடம், "விட்டா ரெண்டுப் பேரும் பசை போட்டு ஒட்டிக்கிட்ட மாதிரி அங்கயே நின்னுட்டு இருப்பீங்க போலயே. அப்படியே ரெண்டுப் பேரும் சேர்ந்தா கூட பரவால்ல. ரெண்டுப் பேரும் நெருங்கிப் போகவும் மாட்டேன், விலகிப் போகவும் மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு அங்கயே நின்னுட்டு இருக்கீங்க. ரெண்டுப் பேரையும் தனியா விட்டா பேசிப்பீங்க பார்த்தா அதான் நடக்கல. நீ முழிச்சிட்டு நிக்குற, அவரு உன்ன முறச்சிட்டு நிக்குறாரு. உங்க ரெண்டுப் பேருல யாரா இருந்தாலும் ஒருத்தங்க அந்த இடத்த விட்டு பேசாம விலகிப் போய் இருந்தா அது மத்தவங்கள ரொம்ப ஹுர்ட் பண்ணி இருக்கும். அந்த சான்ஸ யாருக்கும் கொடுக்க வேணாம்னு தான் உன்ன அந்த இடத்த விட்டு நகர்த்தி சாப்பிட கூட்டிட்டு வந்துட்டேன். அப்போ அவர பிரிஞ்சு போனப்ப தான் நீ என் பேச்ச கேட்கல. இப்பவாவது என் பேச்ச கேளு. என் பேச்ச கேட்கலனாலும் பரவால்ல. உன் மனசு சொல்றதயாவது கேளு." என்று சொன்னாள்.​

'நான் தான் அவரு கூட இருக்க பிடிக்கலனு அவர விட்டுட்டு விலகி வந்துட்டேனே. இப்போ ஒரு வேள அவரு அந்த இடத்துல இருந்து முதல்ல விலகிப் போய் இருந்தா அது என்ன ஹுர்ட் பண்ணிருக்குமா என்ன? இவ என்ன இப்படி சொல்றா? எனக்கு ஒரே குழப்பமா இருக்கே.' என்று மனதினில் நினைத்துக் கொண்டாள் சான்விகா.​

சான்விகா நிமிடத்துக்கு ஒரு முறை உணவகத்தின் நுழைவாயிலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.​

அதனை பார்த்துவிட்ட நிவர்த்திகா, "யாரு வருவாங்கனு வாசலயே பாத்துட்டு நிக்குற?" என்று கேட்டாள்.​

"அப்டிலாம் இல்லயே ஏன் அப்படி கேட்குற?" என்று கேட்டாள் சான்விகா.​

"இல்லனு உன் வாய் தான் சொல்லுது. ஆனா உன் மனசு அப்படி சொல்ற மாதிரி தெரிலயே. இந்த இடத்த விட்டு வர உனக்கு மனசே இல்லனு சொல்ற மாதிரி இருக்கே." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"நீ சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்ல. முதல்ல இந்த இடத்த விட்டு போயிரலாம் வா. சும்மா எதுவும் உளராம இரு." என்று சொன்னாள் சான்விகா.​

"யாரு நானா உளறுறேன் நீ தான் எதோ உளறுற மாதிரி எனக்கு தெரியுது." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

சான்விகா நிவர்த்திகாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.​

நிவர்த்திகா சான்விகாவை பார்த்து, "சரி முறைக்காத தாயே. நாம இந்த இடத்த விட்டுப் போய் ஜீப்ல ஏறலாம்." என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.​

அங்கு உணவகத்தில் அமர்ந்திருந்த ஆதிதேவ், "நல்ல வேள அவ ஃப்ரண்ட் வந்து அவள இழுத்துட்டு போயிட்டாள் இல்லனா அப்போ போல இப்போவும் அவளா என்ன விட்டுட்டுப் போயிருந்தா நான் கடுப்பாயிருப்பேன். ஒரு வேள அவள கடுப்பேத்த நான் அவள விட்டு விலகி போயிருந்தா அவ ஃபீல் பண்ணப் போறாளா என்ன. அவ எங்க ஃபீல் பண்ணியிருக்கப் போறா. நான் தான் ஃபீல் பண்ணி இருப்பேன். இப்போ கூட அவள விட்டுட்டு போக எனக்கு மனசு இல்லல. அவளா என்ன விட்டுட்டு போற வரைக்கும் நானா அவள விட்டுட்டு வந்துருக்க மாட்டேன். இப்போவும் அவ தான் என்ன விட்டுட்டு போறானு ஹுர்ட் ஆயிருப்பேன்.' என மனதினில் நினைத்துக் கொண்டான் ஆதிதேவ்.​

பின்னர் அந்த நாற்காலியில் இருந்து எழுந்து நின்று நகர்ந்துச் சென்று அந்த உணவகத்தை விட்டு வெளியேறினான் ஆதிதேவ்.​

உணவகத்தை விட்டு வெளியில் வந்தவனின் கண்கள் சான்விகாவை தான் தேடியது. கிடைக்காததால் தவித்துத் தான் போனது.​

'என்ன வேணாம்னு சொல்லிட்டு போனவ எனக்காக, என்ன பாக்க இங்க எப்படி நின்னுட்டு இருப்பா? அதான் போயிட்டாள். எப்படியும் அவ ஃப்ரண்ட் மேரேஜ் அட்டென்ட் பண்ணத் தான் வந்துருப்பா. அப்போ அவள பாத்துக்கலாம். ஆனா ஒன்னு நான் தான் எப்போவும் பைத்தியம் மாதிரி அவள தேடிட்டு இருக்கேன்ல. ஆனா அவ என்ன ஒரு பொருட்டா கூட மதிக்கலல.' என்று மனதினில் நினைத்துக் கொண்ட ஆதிதேவ் அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்று ஜீப்பில் போய் ஏறிக் கொண்டான்.​

கீழே மலை இறங்கிய பொழுதுக் கூடச் சில சுற்றுலா இடங்களைக் காட்டி விட்டுத் தான் வண்டியில் இருந்து இறக்கி விட்டனர். ஆதிதேவ் வண்டியில் இருந்து இறங்கியதும் நேராக தங்கும் விடுதிக்கு தான் சென்றான்.​

ஆதிதேவ் தான் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தப் பொழுது தயகர் அப்பொழுது தான் கண் விழித்திருந்தான்.​

தயகர் ஆதியை கண்டதும், "வாங்க தல. காலைலயே எங்க போயிட்டு வாறீங்க?" என்று கேட்டான்.​

"சன்ரைஸ் பாத்துட்டு வாறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"கொழுக்குமலைக்கா போயிட்டு வந்தீங்க. என்ன எழுப்பி விட்ருந்தா நானும் வந்துருப்பேன்ல." என்று சொன்னான் தயகர்.​

"நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ள நீ. நல்ல தூங்கி எழுந்தா தான் நாளைக்கு ஸ்டேஜ்ல நிக்குறப்ப ஃபிரஷா இருப்ப." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நீங்க அப்படி சொல்றீங்களா? நீங்க சன்ரைஸ் பாத்துட்டீங்களா?" என்று கேட்டான் தயகர்.​

"பாத்துட்டேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"உங்க பர்சனல் லைஃப்ல எப்போ உதயம் வரப் போகுது? நீங்க தேடுற விடை எப்போ கிடைக்கப் போகுதுனு தெரில." என்று சொன்னான் தயகர்.​

"எப்போ என் பர்சனல் லைஃப்ல உதயம் வரப் போகுதுனு தெரியல. எப்போ நான் தேடுற விடையும் கிடைக்கப் போகுதுனு தெரியல. ஆனா நா ஒரு முடிவு எடுத்திருக்கேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அப்படி என்ன தல முடிவு எடுத்து இருக்கீங்க?"என்று கேட்டான் தயகர்.​

"நீ இப்போ வேல பார்த்துட்டு இருக்குற நம்ம கம்பெனில ஜாயின் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அதுல அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லனு உறுதிப்படுத்திட்டு தான் என்னால ஜாயின் பண்ண முடியும்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

ஆதிதேவ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் முதல் தடவையாக அவளுக்காகத் தான் நினைக்கிறதை தயகரிடம் மனம்விட்டுச் சொல்லி இருக்கிறான்.​

"சூப்பர் தல. நான் கேட்டுச் சொல்றேன். நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்." என்று சொன்னான் தயகர்.​

"இப்போ சொல்லு நான் கேக்குறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"சான்வி இப்போ இங்க தான் இருக்கா." என்று சொன்னான் தயகர்.​

"எனக்குத் தெரியும்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"என்னது தெரியுமா. உங்களுக்கு எப்படித் தெரியும் தல?" என்று கேட்டான் தயகர்.​

"அவள நானு கொழுக்குமலைல பாத்துட்டு தான் வாரேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அவள பாத்ததும் எதாவது பேசுனீங்களா?" என்று கேட்டான் தயகர்.​

"இல்ல எதுவும் பேசல. அவள பாத்தேன் அவ்ளோ தான்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"தல இன்னைக்கு ஈவினிங் நம்ம ரெண்டு பேரு, அக்னிகா, அவ ஃப்ரண்ட்ஸ், எங்க ஃபேமிலில இருக்குற சில சொந்தக்காரங்க எல்லாரும் சேர்ந்து மண்டபத்துக்கு போகணும். அதுக்கு பஸ் ஏற்பாடு பண்ணி இருக்கோம்." என்று சொன்னான் தயகர்.​

"அக்னிகா அவளோட ஃப்ரண்ட்ஸ்னு நீ சொன்னது சான்வியையா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

ஆதிதேவ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் முதல் தடவையாக சான்விகாவின் பெயரினை உச்சரித்து தயகர் கேட்டிருக்கிறான்.​

"நீங்க அறிவாளி தல. சான்வியும், நிவர்த்திகாவையும் தான் சொல்றேன். அவங்க மூணு பேரும் இங்க இந்த ஹோட்டல்ல தான் தங்கி இருக்காங்க." என்று சொன்னான் தயகர்.​

"ஏன் நீ இத முன்னாடியே என் கிட்ட சொல்லாம விட்டுட்ட?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"நீங்க எப்படி, எந்த மூட்ல இருக்கீங்கனு தெரில. அதான் சொல்லாம விட்டுடேன். சாரி என் மேல எதாவது கோபமா இருக்கீங்களா தல." என்று கேட்டான் தயகர்.​

"அதெலாம் இல்ல. ரொம்ப நாள் பழகுன நட்பயே எனக்காக விட்டுட்டு வந்து இருக்கீயே. உன் மேல நா எப்டி கோபப் பட முடியும்னு சொல்லு." என்று கேட்டான் ஆதிதேவ்.​

'அவ கிட்டச் சொல்லி பாத்தேன் அவ என் பேச்ச கேட்கல. உங்களுக்கு நான் தேவப்பட்டேன். அதனால நீங்க தான்னு முடிவுப் பண்ணி வந்துட்டேன்.' என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் தயகர்.​

ஆதிதேவ் மேற்கொண்டு எதுவுமே பேசிக்கவில்லை.​

தயகர் ஆதியை பார்வையிட்டான். ஆதிதேவ் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது போல அவனுக்கு தெரிந்தது. ஆதிதேவ் எதையோ தன்னிடம் கேட்க யோசிப்பது போல அவனுக்கு இருந்தது.​

"எதாவது என் கிட்ட கேட்க யோசிக்கிறீங்களா தல?" என்று கேட்டான் தயகர்.​

"இல்ல அது வந்து." என்று சொன்ன ஆதிதேவ் மேற்கொண்டு கேட்கத் தயங்கிக் கொண்டே நின்றிருந்தான்.​

"சொல்லுங்க தல. என் கிட்ட கேட்க ஏன் தயங்குறீங்க?" என்று கேட்டான் தயகர்.​

"அவளுக்கு கல்யாணம் அப்படி எதாவது?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

சான்விகாவை பற்றித் தெரிந்து கொள்ள முழுவதுமாகக் கேட்க கூட ஆதியால் இயலவில்லை.​

"இல்ல தல. ஆனா இப்போ அவளுக்காக அவ அப்பா மாப்பிள்ளனு சொல்லிட்டு ஒருத்தன்ன அவ கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்கார்." என்று சொன்னான் தயகர்.​

ஆதிதேவ் எதுவும் பேசாமல் அமைதியாகத் தான் நின்றிருந்தான்.​

"திரும்பவும் என்ன தல யோசிக்கிறீங்க?" என்று கேட்டான் தயகர்.​

"இப்போ இந்த நிலைமைல அவ கண்ணு முன்னாடி நிக்குறது, நம்ம கம்பெனில ஜாயின் பண்றது தப்பில்லையா? நா என்ன எதிர்பாக்குறேன் எனக்கே தெரில, புரில. என் காதலுக்கு இங்க எதிர்காலமே இல்லல." என்று கேட்டான் ஆதிதேவ்.​

ஆதிதேவ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் முதல் தடவையாக மனம் விட்டுப் பேசி இருக்கிறான்.​

"தப்பா இருக்குற மாதிரி எனக்கு தோணல. நீங்க பழச மறந்துட்டு அப்படியே கடந்து போன மாதிரி தெரில. கடந்து போக முடியலனு சொல்றீங்க. அப்படியே தடுமாறிட்டு தான் நிக்குறீங்க. இப்போ நீங்க நம்ம கம்பெனில ஜாயின் பண்ணிட்டு அவ கண்ணு முன்னாடி நடமாடிட்டு இருந்து அவ கிட்ட எந்த மாறுதலும் இல்லாம அவ வேற வாழ்க்கையை நோக்கி தேர்ந்தெடுத்து போயிட்டா அந்த நிதர்சனத்த நீங்களும் புரிஞ்சுக்கிட்டு, ஒத்துக்கிட்டு மேற்கொண்டு அடுத்து என்ன பண்ணலாம்னு உங்களால யோசிக்க முடியும். நா அவ கிட்ட இத பத்தி கேக்க சொல்லி விசாரிக்க சொல்றேன். முன்னாடி இருந்த என் தல இப்படி கிடையாது தெரியுமா. எல்லா இடத்திலயும், எந்த விஷயத்திலயும் அதிகமா அலட்டிக்காம, பெருசா எடுத்துக்காம உங்கள நீங்களே எந்தவித மன உளச்சலுக்கும் ஆளாக்கி கொள்ளாமல் அவ்ளோ அழகா, ரொம்ப கூலா அந்த சூழ்நிலைய கையாள்வீங்க. அந்த தல தான் இப்போ எனக்கு வேணும்." என்று சொன்னான் தயகர்.​

தயகர் பேசியதைக் கேட்டதும் அவனை நோக்கி புன்னகை செய்த ஆதிதேவ் தனது வலது கரத்தினை எடுத்து அவனின் தோளில் போட்டு, " இனிமேல் அந்த தலய தான் நீ பாக்க போற." என்று சொன்னான்.​

"தட்ஸ் மை தல." என்று சொன்னான் தயகர்.​

இருவரும் மதிய உணவினை அந்தத் தங்கும் விடுதியில் இருக்கிற உணவகத்தில் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினர்.​

சிறிது நேரம் அறையிலேயே பொழுதினை போக்கி விட்டு எடுத்து வந்திருந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி முடித்து, உடையினை மாற்றிக் கொண்டு மண்டபத்துக்கு செல்ல கிளம்பி ஆயத்தமானார்கள்.​

 
Last edited:

NNK 55

Moderator

5​

சான்விகாவும், நிவர்த்திகாவும் விடுதியில் தங்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் நுழைந்து இருந்தனர்.​

அப்பொழுது அந்த அறையினில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்து இருந்து தொலைக்காட்சியினை பார்த்துக் கொண்டிருந்த அக்னிகா அறைக்குள் நுழைந்த இருவரையும் பார்த்து, "கல்யாண பொண்ணு ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி என்ன விட்டுட்டு நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்க. எனக்கு ரொம்ப போர் அடிச்சது தெரியுமா?" என்று சொன்னாள்.​

"போர் அடிச்சதா உன் அவரு கிட்ட பேசிட்டு இருக்க வேண்டியது தான." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"அவன் கிட்ட இப்போ தான் பேசி முடிச்சி வெச்சேன். இப்போ அவன் அவனோட லவ்வர் கூட ரொம்ப பிஸியா இருப்பான்." என்று சொன்னாள் அக்னிகா.​

"லவ்வரா யார சொல்ற நீ?" என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"தல, ஃப்ரண்ட், ரோல் மாடல், வெல்-விஷர்னு எல்லாமுமா இருக்குற ஆதி அண்ணாவ தான் சொல்றேன். நான் கூட அவன் கிட்ட பல தடவ சொல்லி இருக்கேன் ஆதி அண்ணா மட்டும் பொண்ணா பிறந்திருந்தா நீ ஆதி அண்ணாவ தான் கல்யாணம் பண்ணி இருப்பனு. அவனும் அதுக்கு ஆமானு சொல்லி ஒத்துக்கிட்டான்." என்று சொன்னாள் அக்னிகா.​

"நீ சொல்றது உண்ம தான். அவனுக்கு அவன் ஃப்ரண்ட் இருந்தா மட்டும் போதும். வேறு யாரும், எதுவும் தேவப்படாது." என்று சொன்னாள் சான்விகா.​

சான்விகா சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியான இரு தோழிகளும் அவளை தான் திரும்பி பார்த்திருந்தார்கள்.​

இரு தோழிகளும் தன்னை அதிர்ச்சியுடன் பார்த்திருந்ததை கண்டதும் சான்விகா, "நீ சொன்னதுக்கு தான் நானும் சும்மா சொன்னேன். ஏன் நீங்க ரெண்டுப் பேரும் என்ன இப்படி அதிர்ச்சியா பாக்குறீங்க?" என்று கேட்டாள்.​

"நாங்களும் உன்ன சும்மா தான் பாத்தோம்." என்று இரு தோழிகளும் அவளுக்குப் பதில் சொன்னார்கள்.​

"நாங்க ரெண்டுப் பேரும் ஆதி அண்ணாவ நேர்ல பாத்தோம்." என்று அக்னிகாவிடம் சொன்னாள் நிவர்த்திகா.​

"அவங்களும் அங்க கொழுக்குமலைக்கு வந்துருந்தாங்களா? எங்க மேரேஜ அட்டென்ட் பண்ண தான் இங்க மூணாருக்கு வந்துருக்காங்க." என்று சொன்னாள் அக்னிகா.​

"ஏன் நீ அத முன்னாடியே என் கிட்ட சொல்லல?" என்று கேட்டாள் சான்விகா.​

"நீ என்ன மனநிலைல இருக்கனு எனக்கு தெரியாம சொல்ல ரொம்ப தயக்கமா இருந்தது. அதான் சொல்லல." என்று சொன்னாள் அக்னிகா.​

"அப்போ இப்போ மட்டும் ஏன் அத சொன்ன?" என்று கேட்டாள் சான்விகா.​

"அப்டியே பேச்சு வாக்குல எனக்கு தெரியாமலே வந்துருச்சு. தயகரும், ஆதி அண்ணாவும் இப்போ இங்க நாம ஸ்டே பண்ணி இருக்குற இதே ஹோட்டல்ல தான் தங்கி இருக்காங்க. நான் ஒன்னு கேட்டா நீ அதுக்கு பதில் சொல்வீயா?" என்று கேட்டாள் அக்னிகா.​

"என்ன கேட்கப் போற? கேளு. நா பதில் சொல்றேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"ஆதி அண்ணா பழையபடி நாம ஒர்க் பண்ற கம்பெனிலயே ஜாயின் பண்ணா உனக்கு அதுல ஓகே தான. எந்தப் பிரச்சனையும் இல்லல." என்று கேட்டாள் அக்னிகா.​

"எனக்கு இதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுதுனு நீ நினைக்குற?" என்று கேட்டாள் சான்விகா.​

"ஆதி அண்ணா கூட நீ திரும்பவும் ஒர்க் பண்ற சிட்டுவேஷன் வந்தா அது வந்து நான் உனக்கு அத எப்படிச் சொல்றதுனு தெரில மனசுல எந்தக் குழப்பமும் இல்லாம அத சாதாரணமா எடுத்துட்டு உன்னால ஒர்க் பண்ண முடியுமானு கேக்குறேன்." என்று கேட்டாள் அக்னிகா.​

"இந்த வாழ்க்கைல எது நடந்தாலும் அத தைரியமா ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும். அதனால எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல." என்று சொன்னாள் சான்விகா.​

ஆதியுடன் சேர்ந்து வேலைச் செய்வதை சான்விகாவின் மனமும் விரும்பியதோ என்னவோ.​

"அப்படினா அத இப்பவே ஃபேஸ் பண்ண கத்துக்கோ. நாம எல்லாரும் சேர்ந்து தான் பஸ்ல மண்டபத்துக்குப் போகப் போறோம்." என்று சொன்னாள் அக்னிகா.​

"உன் கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சிருந்தேன் அத நா இப்போ கேக்குறேன். அன்னைக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி அவரு மேல இருக்குற வெறுப்பு, கோபத்துல அவர விட்டுட்டு விலகி வந்துட்ட. இன்னைக்கும் அதே கோபம், வெறுப்பு இருந்திருந்தா இன்னைக்கு நீ அவர பாத்ததும் முகத்த திருப்பிட்டு விலகி வந்துருக்கணும். இன்னைக்கும் ஆதி அண்ணா மேல அதே வெறுப்பு, கோபம்லாம் உனக்கு இருக்கா?" என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"இல்ல." என்று பதில் சொன்னாள் சான்விகா.​

"அன்னைக்கு இருந்தது எப்படி இன்னைக்கு இல்லாம போகும்?" என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"தெரில. காலம் கூட எல்லாத்தயும் மாத்திருக்கும். நேத்து நீ பேசுன வீடியோவ கேட்டதுனால கூட இருக்கலாம்." என்று சொன்னாள் சான்விகா.​

"நான் தான் உன் கூட அப்போல இருந்து இப்போ வரைக்கும் பேசிட்டு தான இருக்கேன். மாறுதல் ஏன் உனக்கு அப்போவே வரல?" என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"உன் பேச்ச கேட்குற நிலைல நான் அன்னைக்கு இல்ல." என்று சொன்னாள் சான்விகா.​

"இப்போ சொன்ன பாரு அதான் உண்ம. நமக்கு தான் எல்லாம் தெரியும், நாம பண்றது தான் கரெக்ட்னு நினைச்சிட்டு எல்லாத்தயும் பண்ண. இப்போ நீ குழப்பத்துல இருக்குறதால என் பேச்செல்லாம் உன் காதுல விழுது." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"வெறுப்பு, கோபம்லாம் இல்ல ஓகே. அவர பாத்துட்டு அப்படியே நின்னுட்டு இருந்த. நா தான் உன்ன அங்க இருந்து இழுத்துட்டு சாப்பிட கூட்டிட்டு போனேன். சாப்ட்டு முடிச்சிட்டு அந்த இடத்த விட்டு நகராமலே இருந்த. நா தான் உன்ன வெளில இழுத்துட்டு போனேன். வெளில போயும் கூட நீ அவர தான் தேடுன மாதிரி எனக்கு தோணுச்சு. கேட்டா இல்லனு சொல்வ. ஆனா அதான் உண்ம. அவர விட்டுட்டு நீ மூவ் ஆன் பண்ணிட்டேன்னு சொன்னனா அவர நீ கண்டுக்கவே இல்லாம போயிருக்கனும். ஆனா நீ அத பண்ணல. ஏன்னு பதில் சொல்லு?" என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"உண்மய சொல்லணும்னா நா ஏன் அப்டி பண்ணேன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரில, புரில." என்று சொன்னாள் சான்விகா.​

"தெளிவே இல்லாம எப்டி உன்னால அடுத்த வாழ்க்கைய தேடி போக முடியும்னு சொல்லு. உங்க அப்பா ஒருத்தரை மாப்பிள்ளயா உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்காரே. அவர கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பம் தானா? உண்மய இப்போவாவது சொல்லு சான்வி." என்று கேட்டாள் நிவர்த்திகா.​

"நா சூஸ் பண்ண வாழ்க்க தான் சரியா அமையாம போயிட்டு. இப்போ டாடி சூஸ் பண்ணதுக்கு என்னால மறுக்க முடியல, என்ன மறுக்க விடல. விருப்பம் அப்டிலாம் எதும் இல்ல." என்று சொன்னாள் சான்விகா.​

"ஒன் கரெக்ஷன் நீ சூஸ் பண்ண வாழ்க்கய நீ தான் சரியா அமைய விடாம விட்டுட்ட. என்ன நீ இப்டி சொல்ற? இது உன் வாழ்க்க. நீ தான் உன் வாழ்க்கய வாழனும். உங்க டாடி வந்து உன் வாழ்க்கய வாழப் போறது இல்ல. அத நீ புரிஞ்சிக்கோ." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"அப்போ என்ன தான் பண்ணச் சொல்ற நீ? அவர வேணாம்னு சொல்லிட்டுத் தான் பிரிஞ்சு வந்துட்டேன். இப்போ நா என்ன தான் பண்ண முடியும்னு சொல்லு." என்று சொன்னாள் சான்விகா.​

"உன்னால உங்க டாடி சொல்ற மாப்பிள்ளய கல்யாணம் பண்ணிக்க முடியும்னு எனக்கு தோணல. உனக்கு என்ன வேணும்னு உனக்கே தெரில. எனக்கு உன்ன நினச்சா ரொம்பப் பயமா இருக்கு. அவரு உனக்கு வேணாம்னு தப்பான முடிவ எடுத்தாலும் அத நீ தெளிவா இருந்து தான் முடிவு எடுத்த. இப்போ அந்த தெளிவு ஏன் உன் கிட்ட இல்ல சான்வி. இப்போ உன்ன நா எதுவும் பண்ண சொல்லல. நீ தெளிவான பிறகு, உன்னால தெளிவான முடிவெடுத்த பிறகு உனக்கு பிடிச்ச கல்யாணத்த பண்ணிக்கோனு தான் சொல்றேன். மனசுல எதயோ வெச்சிட்டு நீயே குழப்பிட்டு, தவிச்சிட்டு இருக்க." என்று சொல்லித் தன் பேச்சினை முடித்துக் கொண்டாள் நிவர்த்திகா.​

தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உன்னை தேடுமே​

அது உனக்கான காலம் வந்தால் உன்னை சேருமே​

மூவரும் மதிய உணவினை அந்த தங்கும் விடுதியில் இருக்கிற உணவகத்தில் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினர்.​

சிறிது நேரம் அறையிலேயே பொழுதினை போக்கி விட்டு பொருட்களை பெட்டியில் அடுக்கி முடித்து, உடையினை மாற்றிக் கொண்டு மண்டபத்துக்குச் செல்ல கிளம்பி ஆயத்தமானார்கள்.​

சரியாக மாலை நான்கு மணிக்கு இவர்களை ஏற்றிக் கொண்டு பயணம் செல்ல வேண்டிய பேருந்தும் விடுதிக்கு வெளியில் வந்து தயாராக நின்றிருந்தது.​

முதலில் மூன்று தோழிகளும் போய் பேருந்தில் ஏறினார்கள். பின்னர் உறவினர்கள் சில பேர் அந்தப் பேருந்தில் ஏறிக் கொண்டனர். கடைசியாகத் தான் ஆண்கள் இரண்டு பேரும் போய் பேருந்தில் ஏறினார்கள்.​

சான்விகாவும், நிவர்த்திகாவும் அருகருகே இருக்கிற இருக்கைகளில் போய் அமர்ந்துக் கொண்டனர்.​

தயகர் வந்து தன் அருகினில் அமர்ந்துக் கொள்வான் என்கிற நினைப்பினில் அக்னிகா போய் தனியாக இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவளது அருகினில் வேறு யாரும் போய் அமர்ந்திருக்கவில்லை.​

ஆண்கள் இரண்டு பேரில் தயகர் தான் முதலில் பேருந்தில் ஏறினான்.​

தனக்காக அக்னிகா வேறு யாரையும் அவள் அருகினில் அமர்த்திக் கொள்ளாமல் காத்துக் கொண்டிருப்பதை, தனித்து அமர்ந்திருப்பதைக் கண்டதும் மனதில் எழுந்த சிறு தயக்கத்துடன் தனக்குப் பின்னால் பேருந்தில் ஏறி நின்றிருந்த ஆதியை தான் பார்வையிட்டான்.​

அதனைப் புரிந்து கொண்ட ஆதியும் தயகரிடம், "நீ இங்க உட்காந்துக்கோ. நான் பின்னாடி இருக்குற சீட்ல போய் உட்காந்துக்குறேன். அப்டியே வேடிக்க பாத்துட்டே போனா எனக்கு பொழுது போயிரும்." என்று சொன்னான்.​

நண்பனை தனித்து விடுவதில் சிறு தயக்கம் இருந்தாலும் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் அக்னிகாவை கருத்தில் கொண்டு அவளுக்கு அருகினில் கிடந்த இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான் தயகர்.​

ஆதிக்கு கடைசியாக இருக்கும் இருக்கையில் தான் அமர்ந்துக் கொள்ள இடம் கிடைத்திருந்தது. அந்த இருக்கையில் போய் அமர்ந்தும் கொண்டான்.​

ஆதிக்கு அருகினில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.தனியாகத் தான் அமர்ந்திருந்தான்.​

நிவர்த்திகாவுக்கு ஆதிதேவ் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவனை பார்க்கவே பாவமாக தான் இருந்தது.​

"ஆதி அண்ணாவ பாக்கவே பாவமா இருக்கு. எப்போவும் தனிமைலயே இருக்கணும்னு வரம் வாங்கிட்டு வந்துருக்கார் போல." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

ஆனால் ஆதிதேவ் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தனிமையில் தனியாக அமர்ந்திருந்தான்.​

சான்விகாவும், நிவிர்த்திகாவும் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் போடப்பட்டிருந்த இருக்கைகளில் இரு பெண்கள் அமர்ந்திருந்தனர்.​

அதில் இளமையாக இருக்கிற பெண்ணொருத்தி தன் அருகினில் அமர்ந்திருக்கும் மற்றொரு பெண்ணை பார்த்து, "பின்னாடி கடைசி சீட்ல தனியா ஒருத்தன் உட்காந்துருக்கான்ல அவன பாத்ததுமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் அவன் கிட்ட போய்ப் பேசி பாக்கலாம்னு இருக்கேன்." என்று சொன்னாள்.​

அந்தப் பெண் பேசியது முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த சான்விகாவுக்கும், நிவர்த்திகாவுக்கும் கேட்கவே செய்தது.​

அந்தப் பெண் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நேராகச் சென்று கடைசியில் போடப்பட்டிருந்த இருக்கைக்கு அருகினில் போய் நின்றுக் கொண்டாள்.​

"எக்ஸ்க்யூஸ் மீ." என்று சொல்லி ஆதியை அழைத்து நின்றிருந்தாள்.​

வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதியும் அவளது குரலினை கேட்டதும் அவளை திரும்பிப் பார்த்தான்.​

தன்னை நோக்கித் திரும்பிப் பார்த்த ஆதியிடம், "நான் இங்க உங்க பக்கம் இருக்குற சீட்ல உட்காரட்டுமா?" என்று கேள்வி கேட்டு நின்றிருந்தாள்.​

"எனக்கு எந்த பிரச்சனயும் இல்ல. நீங்க உட்காந்துக்கோங்க." என்று சொன்னான் ஆதிதேவ்.​

அந்தப் பெண்ணும் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆதிதேவ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகினில் கிடந்த இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.​

அப்பொழுது அந்தப் பேருந்தும் சற்று நகர்ந்துச் சென்று தனது பயணத்தினை ஆரம்பித்து இருந்தது.​

வழியில் வந்த ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவைகளை பற்றி விளக்கமாக ஆதியிடம் சொல்லிக் கொண்டே அந்தப் பெண் வந்தாள்.​

ஆதியும் முகத்தினில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் கேட்டுக் கொண்டே தான் பயணத்தை மேற்கொண்டான்.​

அப்படியே பேசி கொண்டே அவனை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தினால் அந்தப் பெண் ஆதியிடம், "உங்க ஊரு என்ன? நீங்க எங்கருந்து வந்துருக்கீங்க?" என்று கேட்டாள்.​

"நான் தமிழ்நாட்ல இருந்து தான் வந்துருக்கேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

ஆதியை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமே என்கிற ஆர்வத்தினால் தான் அந்தப் பெண் கேள்வியே கேட்டது. ஆனால் அந்தக் கேள்விக்கான பதிலாக பொதுவான பதிலை அந்தப் பெண்ணிடம் சொல்லி முடித்துக் கொண்டான்.​

"சூப்பர். நீங்களும் நம்ம ஊரு தான. நான் எந்த ஊருனு உங்களுக்குத் தெரிய வேண்டாமா?" என்று கேட்டாள் அந்தப் பெண்.​

"நீங்க இந்த ஊர பத்தி விவரமா சொல்றப்பவே நீங்க இந்த ஊரா தான் இருப்பீங்கனு புரிஞ்சு போச்சு." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"எங்க ஊரும் தமிழ்நாட்ல தான் இருக்கு. ஆனா நான் இங்க தான் வளர்ந்ததுனால இந்த ஊர பத்தி எல்லா விவரமும் எனக்கு தெரியுது." என்று சொன்னாள் அந்தப் பெண்.​

"நீங்க யாரு வீட்டு சார்பா வந்துருக்கீங்க? மாப்பிள்ள வீடா? பொண்ணு வீடா?" என்று கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.​

"ரெண்டு பேரையுமே எனக்குத் தெரியும். ஆனா நா மாப்பிள்ள வீட்டு சார்பா தான் வந்துருக்கேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நீங்க மாப்பிள்ளக்கு சொந்தமா?" என்று கேட்டாள் அந்தப் பெண்.​

"சொந்தம்லாம் இல்ல. நா அவனோட ஃப்ரண்ட்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் சான்விகா நிவர்த்திகாவிடம், "இவரையா இப்போ நீ பாவம் பார்த்த? இப்போ எப்படி அந்தப் பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்காரு பாரு." என்று சொல்லி முறைத்துப் பார்த்தாள்.​

"நீங்க மேரீட்டா இல்ல சிங்கிள்ளா?" என்று அடுத்த கேள்வியினை ஆதியிடம் அந்தப் பெண் கேட்டிருந்தாள்.​

"டிவோர்ஸி." என்று பதில் சொன்னான் ஆதிதேவ்.​

இப்படியொரு பதிலை ஆதியிடம் அந்தப் பெண் எதிர்பார்த்திருக்கவே இல்லை போல. அதிர்ச்சியில் அவளுக்கு பேச்சு கூட வரவில்லை.​

அடுத்ததாக வெளி பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் ஆதிதேவ்.​

அந்தப் பெண் அடுத்த ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆதியின் அருகினில் அமர்ந்திருப்பாள்.​

அடுத்ததாக அந்தப் பெண் ஆதியிடம், "முன்னாடி சீட்ல அக்கா தனியா உட்காந்துட்டு இருக்காங்க. நான் அங்க போறேன்." என்று சொன்னவள் இருக்கையில் இருந்து எழுந்துச் சென்றுவிட்டாள்.​

அந்தப் பெண் முன்னால் போடப்பட்டிருந்த, சற்று நேரத்துக்கு முன்பு தான் அமர்ந்திருந்த இருக்கைகே போய் அமர்ந்துக் கொண்டாள்.​

அந்தப் பெண்ணுக்கு அருகினில் அமர்ந்திருந்த மற்றொரு பெண், "பிடிச்சிருக்குனு சொல்லிட்டு அந்த பையன் கூட பேச போனீயே? இப்போ அவன் என்ன சொல்றான்?" என்று கேட்டாள்.​

அந்தப் பெண்ணும் மற்றொரு பெண்ணிடம், "நல்ல தான் இருக்கான். நல்ல தான் பேசுறான். ஆனா அவன் டிவோர்ஸியாம்." என்று சொன்னாள்.​

மற்றொரு பெண் பதிலுக்கு அந்தப் பெண்ணிடம், "என்னது டிவோர்ஸியா. என்னென்ன கொடும அந்தப் பொண்ணுக்கு பண்ணானோ? அந்தப் பொண்ணு இவன வேணாம்னு சொல்லிட்டு போனதுக்கு. நல்ல வேள முழுசா நீ அவன் கிட்ட மனச பறி கொடுக்குறதுக்கு முன்னாடி அவன் லச்சனத்த பத்தி தெரிஞ்சதுனால தப்பிச்ச. இல்லனா கஷ்டமா போயிருக்கும். நல்ல வேள தெரிஞ்சதும் அவன விட்டுட்டு விலகி ஓடி வந்துட்ட." என்று சொன்னாள்.​

இவர்கள் பேசியது முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த சான்விகாவுக்கும், நிவர்த்திகாவுக்கும் நன்றாகவே காதில் விழுந்தது.​

அவர்கள் பேசியதை கேட்டிருந்த சான்விகாவுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.​

'ஒருவன பத்தி தெரியாம, அவன பத்தி அவங்களா கற்பன பண்ணி இப்படி பேசுறாங்களே. அப்டியே அவங்கள இழுத்து வெச்சு கன்னத்துல அறையனும்னு தோணுது.' என்று மனதினில் நினைத்துக் கொண்டாள் சான்விகா.​

அவர்கள் பேசியதை கேட்டிருந்த நிவர்த்திகாவுக்கும் கோபம் வர தான் செய்தது.​

"ஒருத்தர் எப்டினு விசாரிக்காம, அவர பத்தி எதுவுமே தெரியாம எப்படி வாய்க்கு வந்தத பேசுறாங்க பாரேன். என்னைய பொருத்து ஆதி அண்ணாவ இந்த பொண்ணு தான் மிஸ் பண்ணிட்டானு சொல்லணும். வீட்லயே தீர்க்க வேண்டிய பிரச்சனய பெரிசாக்கி வெளி உலகத்துக்கே தெரிற மாதிரி பண்ணா இப்படி தான் யாரோ ஒருத்தங்க இப்படி அவமானப்பட்டு தான் நிக்கணும்." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

நிவர்த்திகா பேசிய வார்த்தைகளைக் கேட்டதுமே தலையைத் தாழ்த்திக் கொண்டாள் சான்விகா. அவளால் தோழியின் முகத்தினை நிமிர்த்து பார்க்க கூட இயலவில்லை.​

அவளுக்கும் ஆதியின் நிலையைப் பற்றி நினைக்கையில் கவலையாகத் தான் இருந்தது.​

பக்கத்தில் இருக்கிற இருக்கைகளில் அமர்ந்திருந்த அக்னிகாவுக்கும், தயகருக்கும் எதோ பிரச்சனை என்பது போல மட்டும் தான் புரிந்தது.​

தயகர் நிமிடத்துக்கு ஒரு முறை ஆதியை பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். அக்னிகா பேசிய வார்த்தைகள் எதுவுமே அவன் காதினில் வாங்கிக்கவில்லை, அவனுக்கு பதியவும் இல்லை.​

அவனது நிலையை வாய் வார்த்தைகளால் சொல்லாமலே புரிந்து கொண்ட அக்னிகா தயகரிடம், "இன்னும் கொஞ்சம் நேரம் தான் நாம மண்டபத்துக்கு போயிரலாம். என் பக்கத்துல தான் சான்வியும், நிவர்த்திகாவும் இருக்காங்கல. நான் அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க ஆதி அண்ணா பக்கத்துல போய் உட்காந்துக்கோங்க." என்று சொன்னாள்.​

"நீ இத கோபத்துல சொல்லல தான?" என்று கேட்டான் தயகர்.​

"அப்டிலாம் இல்ல. ஆதி அண்ணா எனக்கும் முக்கியம் தான்." என்று சொன்னாள் அக்னிகா.​

"ஐ லவ் யூ டி." என்று சொன்னான் தயகர்.​

தயகர் சொன்னதைக் கேட்டதும் அவனைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகை செய்த அக்னிகா, "ஐ லவ் யூ டூ." என்று சொன்னாள்.​

தயகர் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நின்று நேராக ஆதிதேவ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகினில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான்.​

 
Last edited:

NNK 55

Moderator

6​

"அந்தப் பொண்ணு உங்க கிட்டப் பேசிட்டு இருந்தத நா அங்க இருந்து பாத்துட்டு தான் இருந்தேன். திடீர்னு என்ன ஆச்சு அந்தப் பொண்ணு இங்க இருந்து எழுந்து போயிட்டா?" என்று கேட்டான் தயகர்.​

"நீ அக்னிகா பக்கத்துல தான உட்காந்துட்டு இருந்த. நீ ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்க அத முதல்ல சொல்லு?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"அவ பக்கத்துல ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அவள அவங்க பாத்துப்பாங்க. நான் முதல்ல உங்கள பாக்குறேன். என்ன நடந்ததுனு இப்போ சொல்லுங்க?" என்று கேட்டான் தயகர்.​

"நீ கவல படுற அளவுக்கு எதுவும் பெருசா நடக்கல. எப்போவும் நடக்குறது தான் இப்போவும் நடந்துருக்கு. இத நீ பெருசா எடுத்துக்காத. நா பாத்துக்குறேன். நீ இப்போ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். எதயும் மனசுல போட்டு குழப்பிக்காத." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நீங்க முதல்ல சொல்லுங்க. பெருசா? சின்னதானு? நா அத கேட்டுட்டு சொல்றேன். உங்க கிட்ட இருந்து இந்த விஷயத்த கேக்காம நா இந்த இடத்த விட்டு நகரவும் மாட்டேன். என்ன இப்போவும் உங்க கிட்ட இருந்து விலக்கி வெக்குறீங்க பாருங்க." என்று சொன்னான் தயகர்.​

"இல்ல அந்தப் பொண்ணு நான் மேரீட்டா? இல்ல சிங்கிள்ளானு? கேட்டா. நா அதுக்கு டிவோர்ஸினு சொன்னேன். அந்தப் பொண்ணு கொஞ்ச நேரத்துல எழுந்து போயிட்டா." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"இருங்க நா போய் அந்தப் பொண்ணு கிட்ட நியாயம் கேட்டுட்டு வாரேன். அவளா வந்தா. இப்போ அவ பாட்டுக்கு போறா. உங்க மனச கஷ்டப்படுத்திட்டு வேற போயிருக்கா." என்று சொன்ன தயகர் எழுந்துச் செல்ல போனான்.​

அவனை தடுத்து நிறுத்திய ஆதிதேவ், "நில்லு. என்ன சொல்லி நியாயம் கேட்கப் போற? அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்ல. அவ எதார்த்தமா தான் அந்த கேள்விய கேட்டா. நானும் உண்மய தான் பதில் சொன்னேன். நா இதே மாதிரி கேள்விய நிறைய தடவ என் காதுல கேட்டுட்டு தான் இருக்கேன். பதில் சொல்லி அத கடந்து போயிட்டு தான் இருக்கேன்." என்று சொன்னான்.​

"அவ கிடக்குறா விடுங்க தல. அவளுக்கு என்ன தெரியும் உங்கள பத்தி? நா உங்க கூடத் தான் எப்போவும் இருக்கேன். இருப்பேன்." என்று சொன்ன தயகர் ஆதியை ஆறுதலாய், ஆறுதலுக்காய் அணைத்துக் கொண்டான்.​

தயகர் அக்னிகாவை விட்டு எழுந்துச் சென்று ஆதியின் அருகினில் போய் அமர்ந்து கொண்டதை பார்த்திருந்த நிவர்த்திகா சான்விகாவிடம், "அக்னிகா தனியா உட்காந்துட்டு இருக்கா. அவ கல்யாண பொண்ணு வேற. அவ தனியா இருக்குறத பாத்துட்டு எதாவது வீண் பேச்சுகள் வரலாம். நீ போய் அவ பக்கத்துல போய் உட்காந்துக்கோ." என்று சொன்னாள்.​

"சரி நா போய் உட்காந்துக்குறேன்." என்று சொன்ன சான்விகா அக்னிகா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகினில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.​

சான்விகா அங்கு அமர்ந்திருந்தாலும் அவளது பார்வை முழுவதும் கடைசியாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவரையும் நோக்கியே இருந்தது.​

ஆதியும், தயகரும் அணைத்துக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அவளுக்கு கண்களில் கண்ணீராக பொழிய ஆரம்பித்து இருந்தது.​

அதை தன் இரு தோழிகளுக்கும் மறைக்க எண்ணி தலையைக் குனிந்துக் கொண்டாள். ஆனாலும் இரு தோழிகளின் முழுக் கவனமும் அவளை நோக்கியே இருந்ததால் அவளது கண்களில் வழிந்திருந்த கண்ணீரைக் கண்டு இருந்தனர்.​

நிவர்த்திகாவும், அக்னிகாவும் ஒருவரை ஒருவர் பார்வையை பரிமாற்றிக் கொண்டனர்.​

சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து மண்டபத்தை சென்றடைந்தது.​

அனைவரும் அந்தப் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.​

தயகரும், ஆதியும் மணமகனுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்று விட்டனர்.​

சான்விகா, அக்னிகா, நிவர்த்திகா என மூவரும் மணமகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்று விட்டனர்.​

அன்று இரவு தயகர்- அக்னிகாவுக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க இரு வீட்டுப் பெரியவர்களும் ஏற்பாடு செய்து இருந்தனர்.​

அக்னிகாவுக்கு முக அலங்காரமும், சிகை அலங்காரமும் செய்ய அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.​

சான்விகாவும், நிவர்த்திகாவும் அக்னிகாவை நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தயார் படுத்த உதவி செய்தனர்.​

அக்னிகா அணிந்திருந்த புடவைக்கு பொருத்தமாக அதே நிறத்திலேயே தனக்கும், நிவர்த்திகாவுக்கும் அனார்கலி சுடிதாரை தேர்வு செய்து வாங்கி இருந்தாள் சான்விகா.​

அதற்குப் பொருத்தமாக கவரிங் நகைகளையும் இருவருக்கும் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சான்விகா.​

தேர்ந்தெடுத்திருந்த ஆடையையும், நகைகளையும் பெட்டியில் இருந்து எடுத்து வந்து அதை அணிந்தும் கொண்டாள்.​

தனது கூந்தலில் உள்ள மேல் முடிகளை மட்டும் சீவி எடுத்து அதை மட்டும் தனது இரு கைகளால் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு ஹேர் கிளிப் உபயோகித்து அந்த முடிகளை கட்டி முடித்து தனது இரு கைகளை விடுவித்தாள் சான்விகா.​

முகத்துக்கு தேவையான சில அலங்காரங்களையும் செய்து முடித்தாள்.​

அக்னிகாவின் அன்னை கொடுத்திருந்த ஒரு முழம் மல்லிகைப் பூவையும் எடுத்துத் தனது தலையில் சூடிக் கொண்டாள் சான்விகா.​

அவள் அணிந்திருந்த ஆடையின் நிறத்திலேயே நெற்றியில் வைக்க பொட்டையும் தேர்ந்தெடுத்திருந்து அதை எடுத்துத் தனது நெற்றியில் வைத்துக் கொண்டாள்.​

குங்குமத்தையும் கையில் எடுத்து அதை தனது நெற்றியில் வைத்துக் கொண்டாள்.​

அப்பொழுது அவளுக்கு ஒருவனின் ஞாபகம் வந்து போனது தான்.​

"நா பாத்து பாத்து உனக்கு வாங்கிக் கொடுத்த இந்த புடவைல வந்து நின்னு அப்டியே என்ன மயக்குறீயேடி. அப்டியே தலைல ஒரு முழம் பூவ வெச்சி, நெத்தில பொட்டு வெச்சி, குங்குமத்த எடுத்து நெத்திலயும், வகிட்டிலும் வெச்சிட்டு என் கண்ணு முன்னாடி வந்து நின்ன அப்டியே உன் அழகுல மயங்கி உன் காலடில தான் விழுந்து கிடப்பேன். ஜோக்ஸ் அபார்ட். உனக்கு உண்மலயே நல்ல இருக்கும். எப்போவும் வேணாம். இந்த மாதிரி ஃபங்சன் அட்டென்ட் பண்றப்ப மட்டும் வெச்சா போதும்." என்று ஆதிதேவ் அன்று சொன்னது அவள் ஞாபகத்துக்கு இன்று வந்து போனது.​

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அப்படியே கண்ணாடிக்கு முன்பாக வந்து நின்று கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.​

'அவரு சொன்ன மாதிரி நிஜமாவே அழகா தான் இருக்கேன். ரசனைக்காரர் தான் அவரு.' என்று மனதினில் நினைத்துக் கொண்டாள்.​

கண்ணாடிக்கு முன்பாக நின்று கொண்டு தன்னைப் பார்த்தப் பொழுது அன்று ஆதிதேவ் தன்னை கண்ணாடிக்கு முன்பாக நிறுத்தி வைத்து அவன் செய்தவைகளும் சேர்த்துத் தான் இன்று அவள் ஞாபகத்துக்கு வந்து போனது.​

அன்று ஆதிதேவ் சொன்னது போல எல்லாவற்றையும் செய்து முடித்தாள்.​

ஆதிதேவ் கண்ணாடிக்கு முன்பாக சான்விகாவை நிறுத்தி வைத்து அப்படியே அவளைத் தன்னோடு சேர்த்து வைத்து அணைத்துக் கொண்டு, "நான் சொன்ன மாதிரி எல்லாத்தயும் பண்ண. இப்போ பாரு பாக்க எவ்ளோ அழகா இருக்கனு. ஆனா ஒரே ஒரு குறை மட்டும் தான் இருக்கு." என்று சொன்னான்.​

"குறையா அப்படி என்ன இருக்கு?" என்று கேட்டாள் சான்விகா.​

"உதட்டுல ரெட் கலர்ல லிப்ஸ்டிக் போட்டு இருக்க. அப்படியே சிவந்து போய் இருக்கு. உன் கன்னம் மட்டும் சிவக்காம இருக்கு." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அதுக்கு நா என்ன செய்ய முடியும்? லிப்ஸ்டிக்க எடுத்து முகத்துலயா என்னால பூசிக்க முடியும். அதுக்குனு சில மேக்கப் ஐட்டம்ஸ் வாங்கணும். அது என்கிட்ட இப்போ இல்லயே." என்று சொன்னாள் சான்விகா.​

"அதெல்லாம் தேவ இல்ல. என்ன பாக்குற மாதிரி அப்படியே திரும்பி நில்லு." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"என்ன மேக்கப் ஐட்டம்ஸ் யூஸ் பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்டி என்ன எனக்கு தரப் போறீங்க?" என்று சொன்ன சான்விகா அவன் அணைப்பினில் இருந்து விலகாமல் அப்படியே அவனைப் பார்க்கிற மாதிரி திரும்பி நின்றுக் கொண்டாள்.​

ஆதிதேவ் தனது முகத்தினை அவளது முகத்துக்கு அருகினில் கொண்டு போய் அவளது இடுப்பினை கட்டிக் கொண்டிருந்த இரு கரங்களில் ஒரு கரத்தினை விலக்கி அந்த கையை அவளது கன்னத்துக்கு எடுத்துக் கொண்டு போய் மிருதுவாக தடவிக் கொடுத்து, "எனக்கு இப்போவே மல்கோவா மாம்பழம் வேணும்." என்று சொன்னான்.​

Malgova-Mango.png

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கா தெரியாது. இருந்தாலும் தெரியாது என்பது போலவே அவனிடம் காட்டிக் கொண்டவள், "அதுக்கு நீங்க கடைக்குப் போய்த் தான் வாங்கணும்." என்று சொன்னாள் சான்விகா.​

"அதெல்லாம் கடைக்குப் போக முடியாது. எனக்கு இப்போவே, இங்கயே வேணும்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"இங்கயே எப்படிக் கிடைக்கும் உங்களுக்கு?" என்று கேட்டாள் சான்விகா.​

"இப்படித் தான்." என்று சொன்னவன் அவனது இதழ்களை கன்னத்தில் பொருத்தி வைத்து சுவைத்துப் பார்க்க ஆரம்பித்தான்.​

சுவை பார்த்த இதழ்களால் விலக்கிக் கொள்ள மனமே இல்லாமல் அந்த சுவையிலே மெய் மறந்து போய் அங்கேயே தங்கியும் கொண்டது.​

அப்படியே அவனது இதழ்களை நகர்த்திச் சென்று லிப்ஸ்டிக் போடப்பட்டிருந்த அவளது செவ்விதழ்களில் தனது இதழ்களை பதித்து சுவை பார்க்க ஆரம்பித்தான்.​

அப்படியே இதழ்களை நகர்த்திச் சென்று போய் மறு கன்னத்திலும் இதழ்களை பொருத்தி வைத்து சுவை பார்த்தான். அப்படியே கன்னம் முழுவதும் சுவை பார்த்தான். பின்பு அவளை பாவம் பார்த்து பிரிய மனமே இல்லாமல் இதழ்களை பிரித்தெடுத்து அவளை விடுவித்தான் ஆதிதேவ்.​

அவளை கண்ணாடிக்கு முன்பாக அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி வைத்து அவளை கண்ணாடியை பார்க்கச் செய்தான்.​

வெட்கத்திலும், ஆதியின் செயலினாலும் அவளது கன்னம் முழுவதும் சிவப்பாகி காட்சியளித்திருந்தது.​

"இப்போ பார்த்தீயா மேக்கப் ஐட்டம்ஸ் எதும் யூஸ் பண்ணாமலே கன்னம் முழுக்க சிவப்பா மாறிருச்சு. மேக்கப் பிரஷ் கூட நீ யூஸ் பண்ண தேவயில்ல." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அடிப்பாவி எப்படி இப்படி?" என்று கேட்டாள் சான்விகா.​

"அது அப்படித் தான்." என்று பதிலளித்தான் ஆதிதேவ்.​

சிறிது லூஸ் பவுடரை கையில் எடுத்து கன்னத்தில் பூசி சரி செய்து கொண்டாள்.​

அன்று அவளை பார்த்திருந்த அனைவரும் அவளிடம் வந்து அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சென்றிருந்தனர்.​

அதைக் கண்ட ஆதிதேவ் அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு வேறு சென்றான். அதில் வெட்கப்பட்ட அவளுக்கு கன்னங்கள் மேலும் சிவப்பாகி அழகுக்கு அழகு சேர்த்தது.​

"சான்வி கண்ணாடி முன்னாடி நீயே இப்டி நின்னு பாத்துட்டு இருந்தா எப்டி? நாங்கலாம் எப்போ பாக்குறது நீ வரதுக்குள்ள ஃபங்சன் முடிஞ்சிடும் போலயே." என்று சொல்லி கேலி செய்த நிவர்த்திகா சான்விகாவை மலரும் நினைவுகளில் இருந்து வெளியேற செய்திருந்தாள்.​

"ஆமா சான்வி எனக்கு ஒரு டவுட் நீ மேக்கப் பண்ணத நான் பாத்தேன் தான். ஆனா இப்போ உன்ன பாக்கும் போது முகத்துல மேக்கப்பையும் தாண்டி இன்னும் எதுவோ உன்ன ரொம்ப அழகா காட்டுது. என்னனு தான் இன்னும் புரில." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"தெரியும் தெரியும் நீ முதல்ல இங்க வந்த வேலய பாரு. கண்ணாடிய பாக்க தான வந்த. அத போய் பாரு. அத விட்டுட்டு என்ன போய் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க." என்று சொன்னாள் சான்விகா.​

"அதுக்கு முதல்ல நீ கண்ணாடிய விட்டு தள்ளி நிக்கணும். நீ அங்கயே நின்னுட்டு இருந்தா நான் எப்படி என் முகத்த கண்ணாடில பாக்க முடியும்." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

சான்விகா நிவர்த்திகாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்றாள்.​

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டு இருந்தது.​

ஆதிதேவ் தயகரின் தம்பியுடன் மூன்றாவது பந்தியில் தான் சாப்பிட அமர்ந்திருந்தான்.​

அவனுக்கு எதிரில் கிடந்திருந்த இருக்கைகளில் தான் சான்விகாவும், நிவர்த்திகாவும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.​

சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் கடைசியாக மல்கோவா மாம்பழத்தை உபயோகித்து செய்யப்பட்டிருந்த டெசர்ட்(DESSERT) உணவு ஒன்று பரிமாறப்பட்டு இருந்தது.​

அந்த உணவினை சாப்பிட்டு ருசி பார்த்த ஆதிக்கு சான்விகாவை வம்புக்கு இழுக்க தோன்றியது. எனவே எதிர்புறத்தில் அமர்ந்திருந்த சான்விகாவுக்கு கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அருகினில் அமர்ந்திருந்த தயகரின் தம்பியிடம், "எனக்கு இந்த மாம்பழம் தான் வேணும்." என்று சத்தமாகவே கேட்டான்.​

'என்ன இவரு இப்படி கேக்குறாரு? நம்மள வெறுப்பேத்த தான் இப்படி கேக்குறாரோ. இல்ல அவரு சாதாரணமா கேட்டு நா தான் அத தப்பா புரிஞ்சிக்கிட்டேனோ.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சான்விகா தலையை நிமிர்த்தி வைத்து ஆதியை தான் பார்வையிட்டாள்.​

ஆதியும் சான்விகாவை தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

'அடிப்பாவி என்ன பாத்து தான் அப்படி சொல்றாரு. எவ்ளோ தைரியம் அவருக்கு.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சான்விகா ஆதியை முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.​

தயகரின் தம்பி அங்கு நின்றிருந்த பரிமாறுகிற நபரை அழைத்து ஆதிதேவ் கேட்டிருந்த மல்கோவா மாம்பழம் உபயோகித்து செய்யப்பட்டிருந்த டெசர்ட் உணவினை கூடுதலாக எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டுக் கொண்டான்.​

சிறிது நேரத்திலேயே எடுத்துக் கொண்டு வந்த பரிமாறுகிற நபரிடம் உணவினை வாங்கி பெற்றுக் கொண்டு அவரிடம், "தேங்க்ஸ்." என்று சொன்ன ஆதிதேவ் சான்விகாவை குறிப்பிட்டுக் காட்டி, "மேடமுக்கும் ஒன்னு எக்ஸ்ட்ராவா கொடுங்க. ரொம்ப சூடா இருக்காங்க. கொடுத்து கூல் பண்ணலாம்." என்று சொன்னான்.​

அந்த நபரும் சான்விகாவுக்கு கொடுத்து விட்டே சென்றிருந்தார்.​

சான்விகா ஆதியை முறைத்து பார்த்திருந்தாலும் அந்த உணவினை வாங்கிக் கொண்டவள் அதை சாப்பிட்டு சுவை பார்க்கத் தான் செய்தாள்.​

அந்த உணவு அவளுக்கு தித்திப்பாக இருந்தது. தித்திப்பை கொடுத்தது. மனதுக்குள் புன்னகைத்தும் கொண்டாள். அவள் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டது வெளியில் தெரியாவிட்டாலும் அவளது வெளித் தோற்றம், அவளது முகம் அவளுக்கு எதிராக அமைந்து காட்டிக் கொடுக்க தான் செய்தது.​

"நடக்கட்டும்." என்று சொல்லி குரல் கொடுத்தாள் நிவர்த்திகா.​

'இவள நான் எப்டி மறந்தேன்? இவ வேற என்ன கலாய்ப்பாளே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சான்விகா நிவர்த்திகாவிடம், "என்ன நடந்தது இங்க?" என்று கேட்டாள்.​

"ஏனோ வானிலை மாறுதே." என்று சொன்னாள் நிவர்த்திகா.​

"என்ன உளர்ற? நீ என்ன சொல்றனு எனக்கு புரியல." என்று சொன்னாள் சான்விகா.​

"கொஞ்ச நேரமா வெயிலா அடிச்சிட்டு இருந்தது. அப்டியே மாறி இப்போ மழையா பொழிஞ்சிட்டு இருக்கு." என்று சொன்னாள் சான்விகா.​

'இவ நம்மள தான் சொல்லிட்டு இருக்கா. புரியாத மாதிரி பேசிட்டு இருந்த இவள நாம தான் கேள்வி கேட்டு இவ இப்போ விளக்கமா சொல்லிட்டு இருக்காளே. இவள முதல்ல இந்த இடத்த விட்டு கூட்டிட்டு போகணும்.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சான்விகா நிவர்த்திகாவிடம், "நம்மள அக்னிகா தேடுவா. இப்போ போலாம் வாரீயா?" என்று கேட்டாள்.​

நிவர்த்திகாவும் சான்விகாவை பாவம் பார்த்து அந்த இடத்தினை விட்டு அவளுடன் வெளியேறினாள்.​

 
Last edited:

NNK 55

Moderator

7​

அன்று இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் சான்விகா தனக்கு பொழுது போகவில்லை என்று மண்டபத்தினில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அப்பொழுது அவளுக்கு ரித்விக்கிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வந்திருந்தது.​

அவளுக்கு ரித்விக்கிடம் பேசிக் கொள்ள விருப்பம் இருக்கவில்லை. எனவே அழைப்பினை ஏற்காமல் தவிர்த்துவிட்டாள்.​

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.​

தந்தை இஷானிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது.​

அழைப்பினை ஏற்று காதில் வைத்து, "ஹலோ." என்று சொன்னாள் சான்விகா.​

"இப்போ எங்க இருக்க?" என்று கேட்டார் இஷான்.​

"இப்போ மண்டபத்துல தான் இருக்கேன் டாடி." என்று பதில் சொன்னாள் சான்விகா.​

"மாப்பிள்ள இப்போ தான் என்ன கூப்பிட்டு பேசுனாரு. உனக்கு கால் பண்ணி இருக்காரு. ஆனா நீ அத எடுக்கல. நீ ஏன் அத அட்டென்ட் பண்ணி பேசல?" என்று கேட்டார் இஷான்.​

"அவரு கூப்பிட்டப்போ நா கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் பேச முடியல." என்று சொன்னாள் சான்விகா.​

"இப்போ கூப்பிட்டு பேசிரு. நான் இப்போ வெக்குறேன்." என்று சொன்ன இஷான் கைப்பேசி அழைப்பினை துண்டித்து விட்டார்.​

'இப்படி சொல்லி டாடிய ஏமாத்துற மாதிரி என்னையும் சேர்த்துத் தான் ஏமாத்திட்டு இருக்கேன்.' என்று அவளது மனசாட்சியே எடுத்துரைத்தது.​

'டாடி இப்போ அவரு(ரித்விக்) கிட்ட பேசு, அப்படிப் பண்ணு, இப்படிப் பண்ணுனு சொல்லி பல அட்வைஸ் பண்றாரே. ஆனா அப்போ நா கல்யாணத்துக்கு அப்புறம் அவரு(ஆதிதேவ்) மேல உள்ள கோபத்த டாடி கிட்ட சொல்லும் போது டாடி எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு எந்த அட்வைஸும் பண்ணல. நிவர்த்திகா சொன்ன மாதிரி டாடி, மம்மி மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணாம அட்வைஸ் பண்ணி இருந்தா எனக்கு இப்போ இந்த நிலைமை வந்திருக்காதோ.' என்று மனதினில் நினைத்துக் கொண்டாள் சான்விகா.​

அப்பொழுது பேருந்தினில் ஆதியை பற்றிப் பேசி இருந்த இரு பெண்களும் அந்த இடத்தினில் வந்து, சான்விகா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகினில் கிடந்திருந்த இருக்கைகளில் போய் அமர்ந்திருந்தனர்.​

சான்விகாவும் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.​

அவர்களைப் பார்க்க பார்க்க சான்விகாவுக்கு கோபம் கோபமாக வந்தது.​

அவர்களிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்த சான்விகா அவர்களை பார்ப்பது போல் திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.​

அந்த இரு பெண்களும் தங்களை நோக்கித் திரும்பி அமர்ந்து கொண்ட சான்விகாவை பார்த்து இருந்தனர்.​

"ஒருத்தர பத்தி எதுமே தெரியாம நீங்க எப்டி அவர பத்தி அப்டி பேசலாம்?" என்று கேட்டாள் சான்விகா.​

"புரியல. நாங்க யார பத்தி பேசுனோம்? நீங்க என்ன சொல்றீங்கனு புரியல?" என்று கேட்டாள் அந்த இரு பெண்களில் ஒருத்தி.​

"நீங்க பஸ்ல பேசிட்டு இருந்தத நான் கேட்டுட்டு தான் இருந்தேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"நாங்க அவர பத்தி பேசுனத நீங்க கேட்டீங்களா? நாங்க அவர பத்தி பேசுனது உண்மயா கூட இருக்லாமே. நீங்க ஏன் அத பத்தி இப்போ கேக்றீங்க?" என்று கேட்டாள் அந்த இரு பெண்களில் ஒருத்தி.​

"நீங்க அவர பத்தி சொன்னதுல எதும் உண்ம இல்ல." என்று சொன்னாள் சான்விகா.​

"அத எப்டி நீங்க சொல்றீங்க? அத அவரோட மனைவி சொன்னா கூட பரவால்ல." என்று கேட்டாள் அந்த இரு பெண்களில் ஒருத்தி.​

"நா அவரு கூட அவரு மனைவியா வாழ்ந்தவ. எனக்கு அவர பத்தி தெரியும் அதான் சொல்றேன். ஒருத்தர பத்தி எதும் தெரியாம நீங்களா ஒன்ன நினைச்சிட்டு அவங்கள பத்தி எதுவும் சொல்லாதீங்க. உங்களுக்கு அவர பத்தி பேச எந்த ரைட்ஸும் இல்ல." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்று விட்டாள்.​

'அப்போ உனக்கு மட்டும் எல்லாவித ரைட்ஸும் இருக்கா?' என்று அவளது மனசாட்சியே கேள்வி கேட்டது.​

மனசாட்சி கேட்டக் கேள்விக்கு அவளிடத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.​

மணமகள் அறைக்குள் திரும்பியவள் தந்தை சொன்னது போல ரித்விக்கை அழைத்துப் பேசிக் கொள்ள அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.​

தந்தை கேட்டால் எதையாவது சொல்லிச் சமாளித்து விடலாம் என்று எண்ணியவள் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்தாள்.​

நோ மீன்ஸ் நோ என்று சொல்லி விலக்கி வைத்தவள் அவள் தான். அழகாக தொடர வேண்டிய திருமண பந்ததினை முற்றுப்புள்ளி இட்டு முடித்துக் கொண்டவள் அவள் தான்.​

ஆனால் இப்பொழுது மனதுக்குள் பல குழப்பங்களை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறாள்.​

அடுத்த நாளும் விடிந்தது.​

காலை ஐந்தரை மணிக்கு மூன்று தோழிகளையும் வந்து எழுப்பிவிட்டனர். அக்னிகாவை குளித்து முடித்து உடையை மாற்றி கொண்டு வரச் சொன்னார்கள். அவளும் குளித்து முடித்து உடையை மாற்றி கொண்டு வந்தாள். அடுத்தது ஒவ்வொருத்தராக குளித்து உடையை மாற்றி கொண்டு வந்தனர்.​

ஆறு மணிக்கு மணமகளுக்கு முக அலங்காரமும், சிகை அலங்காரமும் பண்ண அழகு நிலையத்தில் இருந்து பெண்களும் வந்து விட்டனர்.​

முதலில் அக்னிகாவுக்கு முக அலங்காரமும், சிகை அலங்காரமும் செய்து முடித்து விட்டு புடவையை அணிந்து கொள்ள உதவி செய்தனர். அதை முடித்துவிட்டு தங்க நகைகளை அவளுக்கு அணிவிக்க உதவி செய்தனர்.​

எல்லாவற்றையும் முடித்ததும் புகைப்படங்களை எடுக்க புகைப்படகாரர்களும் வந்து விட்டனர்.​

அந்த நேரத்தில் சான்விகாவும், நிவர்த்திகாவும் முக அலங்காரத்தையும், சிகை அலங்காரத்தையும் முடித்துக் கொண்டு அவர்கள் அணிந்திருந்த புடவைக்கு பொருத்தமாக தங்க நகைகளை எடுத்து அணிந்துக் கொண்டனர்.​

புகைப்படங்களை எடுத்ததும் மணமகள் அக்னிகாவை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே தயகர் மணமேடையில் தான் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகினில் அக்னிகாவை அமர வைத்தனர்.​

அமர்ந்திருந்த தயகரின் அருகினில் தான் ஆதிதேவ் நின்றிருந்தான்.​

மணமேடைக்கு ஏறி வந்து நின்றிருந்த சான்விகாவின் பார்வை முதலில் ஆதியிடம் தான் சென்றது.​

ஆதியின் பார்வையும் சான்விகாவிடம் தான் இருந்தது.​

சான்விகா பீச் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்.​

நெற்றியில் பொட்டையும், குங்குமத்தையும் வைத்திருந்தாள். முகத்தினை நன்றாக அலங்கரித்து இருந்தாள். அனைத்து முடிகளையும் எடுத்து அதை கொண்டை போல் போட்டு கட்டி அதில் மல்லிகைப் பூக்களால் சுற்றி அலங்கரித்து இருந்தாள்.​

அவளது அழகினை பார்த்திருந்த ஆதிதேவ் சொக்கிப் போய்த் தான் நின்றிருந்தான். அவனால் அவனது பார்வையை வேறெங்கும் நகர்த்த கூட இயலவில்லை.​

ஆதிதேவ் அதே பீச் நிறத்தில் சட்டையும், வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்திருந்தான்.​

தயகர்-அக்னிகாவுக்கு முகூர்த்த நேரம் காலை எட்டு மணிக்கு குறிக்கப்பட்டிருந்தது.​

முகூர்த்த நேரத்தில் அங்கு குழுமி இருந்த அனைவரின் ஆசிகளுடன் தயகர் அக்னிகாவின் கழுத்தில் தாலியை கட்டி தனது வாழ்க்கைத் துணையாக அவளை ஏற்றுக் கொண்டான்.​

சிறிது நேரத்தில் சான்விகாவும், நிவர்த்திகாவும் காலை உணவினை சாப்பிட்டு முடித்துக் கொண்டு திருமண பரிசுனை கொடுக்க மேடையில் ஏறினார்கள்.​

மணமேடையில் நின்றிருந்த மணமக்கள் இருவரிடமும் பரிசுனை கொடுத்து விட்டு புகைப்படமாக எடுப்பதற்காக நிவர்த்திகா அக்னிகாவின் அருகிலும், சான்விகா தயகரின் அருகிலும் போய் நின்றுக் கொண்டனர்.​

புகைப்படக்காரர் அதை புகைப்படமாக எடுப்பதற்கு முன்பு அவரைத் தடுத்து நிறுத்திய தயகர் மணமேடைக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆதியை மேடைக்கு அழைத்தான்.​

தயகர் அக்னிகாவிடம், "நீ உன் ஃப்ரண்ட்ஸ் கூட நிக்குற மாதிரி நானும் என் ஃப்ரண்டோட நின்னு எடுக்கணும்." என்று சொன்னான்.​

மேடையேறி வந்திருந்த ஆதியிடம் தயகர், "வாங்க தல வந்து என் பக்கத்துல நின்னுக்கோங்க." என்று சொன்னான்.​

'இவரு வந்து நிக்குறாருனு நா அந்தப் பக்கம் போய் அக்னிகா பக்கத்துல போய் நின்னுக்கிட்டா அது அவர உதாசீனப்படுத்துற மாதிரி ஆகாதா? பேசாம அவருக்கு வழிய விட்டுட்டு அவரு பக்கத்துல நின்னுக்கலாம்.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சான்விகாவும் ஆதிதேவ் வந்து தயகரின் அருகினில் போய் நின்று கொள்ள சற்று இடைவெளி விட்டு நகர்ந்துச் சென்று நின்றுக் கொண்டாள்.​

ஆதியும் தயகரின் அருகினில் போய் நின்று கொண்டான்.​

அவர்கள் அனைவரையும் சேர்த்து நிற்க வைத்து அதை புகைப்படக்காரரும் அழகான புகைப்படமாக அதைப் பதிவு செய்திருந்தார்.​

சான்விகாவுக்கு ஆதியின் மேல் அப்பொழுது அன்று இருந்த வெறுப்பு எதுவும் இப்பொழுது இல்லை என்றதாலும், அவனது அருகினில் போய் நின்று கொள்ள தயக்கம், அசௌகரியம் எதுவும் இல்லை என்பதாலும் அதே புன்னகையுடன் அந்தப் புகைப்படத்தில் அழகாகக் காட்சியளித்திருந்தாள்.​

அந்த புகைப்படத்தினை புகைப்படக்காரர் எடுத்து முடித்ததும் மூவரும் அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்றுவிட்டனர்.​

'அக்னிகா இவரு நாம வொர்க் பண்ற கம்பெனில தான் வொர்க் பண்ண போறாருனு சொன்னா. அவ சொன்னது உண்மயா தெரில. இவர இனிமேல் நா எங்க பாக்க போறேன்னு தெரில?' என்பது போல யோசித்த சான்விகா அவனைப் பார்த்துக் கொண்டே தான் நகர்ந்துச் சென்றாள்.​

'அவர பாக்க முடியாதுனு ஃபீல் பண்ற போல. அப்போ அவரு கூட வொர்க் பண்றதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல போல.' என்பது போல மனசாட்சி எடுத்துரைத்தது.​

சான்விகா இரவு 8:10 மணிக்கு போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் AC SUPER FAST EXPRESS எண்:20602 ரயிலில் ஏறி அமர்ந்திருந்தாள்.​

சான்விகா தயகர்-அக்னிகாவின் திருமணத்தில் கலந்து கொண்டு முடித்து அன்று மாலை நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்து வந்து போடிநாயக்கனூர் சென்றடைந்தாள்.​

சான்விகா தான் முன்பதிவு செய்திருந்த A1 என்னும் இரண்டு அடுக்குகள் கொண்ட குளிர்சாதன ரயில் பெட்டியில் போய் ஏறிக் கொண்டாள்.​

அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பத்து(10) என்கிற எண்ணினை தேடிப் போய் கண்டுப்பிடித்து அந்தப் படுக்கைக்கு கீழே இருந்த இடத்தினில் தனது பெட்டிகளை வைத்துக் கொண்டாள்.​

அவளுக்கென்று மேலடுக்கில் தான் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.​

இரவுக்கு தேவையான உணவினை வரும் வழியிலேயே நல்ல உணவகத்தில் வண்டியை நிறுத்த சொல்லி வாங்கியும் கொண்டாள்.​

அவளுக்கு அருகிலிருக்கும் இருக்கைகளில் முன்பதிவு செய்திருந்த நபர்கள் யாருமே வந்திருக்கவில்லை, அமர்ந்திருக்கவில்லை.​

அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு அடியில் கீழடுக்கில் உள்ள இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.​

அவள் ரயிலில் ஏறி அமர்ந்திருந்து பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.​

இரவு 8:20 மணிக்கு போல ஆதிதேவ் தான் முன்பதிவு செய்திருந்த A1 என்னும் இரண்டு அடுக்குகள் கொண்ட குளிர்சாதன ரயில் பெட்டியில் போய் ஏறிக் கொண்டான்.​

அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஏழு(7) என்கிற எண்ணினை தேடிப் போய் கண்டுப்பிடித்து அந்தப் படுக்கைக்கு கீழே இருந்த இடத்தினில் தனது பெட்டிகளை வைத்துக் கொண்டான்.​

அவனுக்கென்று மேலடுக்கில் தான் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.​

அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு அடியில் கீழடுக்கில் உள்ள இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த சான்விகாவை அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை.​

இருக்கையில் அமர்ந்திருந்த சான்விகாவும் எதிர்பாரா அதிர்ச்சியுடன் தான் அவனைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.​

ஆதிதேவ் சான்விகாவை கண்டுக்கவே இல்லாதது போல, அவளை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லாதது போல் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு அடியில் கீழடுக்கில் உள்ள இருக்கையில், சான்விகா அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.​

ரயில் கிளம்புவதற்கு முன்பு உணவினை சாப்பிட்டு முடித்து விடலாம் என்று நினைத்திருந்த சான்விகாவும் கையை கழுவதற்காக அந்த இடத்தினை விட்டு வெளியேறினாள்.​

சில நிமிடத்தில் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தவள் உணவுப் பொட்டலத்தை பிரித்துப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.​

ஏனென்றால் சான்விகா இரவில் உண்பதற்காக உணவகத்தில் இருந்து இரண்டு இட்லியும், இரண்டு சப்பாத்தியும் மட்டுமே வாங்கி வந்திருந்தாள். ஆனால் அந்தப் பொட்டலத்தில் கூடுதலாக அவளுக்கு மிகவும் பிடித்த பாசுந்தியை கொண்ட டப்பாவும் அதில் இருந்தது. அந்த டப்பாவை யார் அந்த உணவுப் பொட்டலத்துடன் வைத்திருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியாமல் இல்லை.​

Basundi.jpg

ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இட்லி பொட்டலத்தையும், சப்பாத்தி பொட்டலத்தையும் எடுத்துப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.​

சான்விகா என்ன பண்ணுகிறாள் என்பதினை பார்க்காதது போலக் காட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதிதேவ், 'நா இங்க இருந்தா அவ பாசுந்திய சாப்பிட மாட்டா. கொஞ்ச நேரம் வெளில போய் நிக்குறேன். அப்போ தான் அவ சாப்பிட சான்ஸ் இருக்கு.' என்று மனதினில் நினைத்துக் கொண்டவன் அந்த இடத்தினை விட்டு வெளியேறினான்.​

சான்விகா வேகமாக இட்லியையும், சப்பாத்தியையும் சாப்பிட்டு முடித்தாள். ஆதிதேவ் வெளியில் எங்கேயாவது நின்று கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறானா? என்பதினை தெரிந்து கொள்ள வெளியில் முகத்தினை திருப்பி தேடிப் பார்த்தாள்.​

அவன் வெளியில் எங்கும் நிற்கவில்லை என்பதினை உறுதிப்படுத்திக் கொண்டவள் அந்த பாசுந்தி டப்பாவை பிரித்து அதை கையால் எடுத்து வாயில் வைத்து சுவை பார்த்தாள். அந்த பாசுந்தியின் சுவை அவளுக்கு தித்திப்பை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.​

அந்த பாசுந்தியை முழுவதுமாக வாயில் வைத்து சுவைத்து ருசிப் பார்த்து முடித்தவள் அந்த டப்பாவினை குப்பையில் போட மனம் இல்லாமல் அதைத் தன் பெட்டியில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டாள்.​

அந்த ரயில் சென்னையை நோக்கித் தன் பயணத்தினை ஆரம்பித்து விட்ட பொழுதுக் கூட அவனது இருக்கையைத் தேடி அவன் வந்திருக்கவில்லை.​

'என்ன பாத்ததும் எஸ்கேப் ஆயிட்டாரா? இந்த ட்ரெயின மிஸ் பண்ணிட்டாரா? இல்ல இந்த ட்ரைன்ல தான் இருந்துட்டு இங்க வராம இருக்காரானு தெரிலயே.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சான்விகா.​

அவளின் கண்கள் அவனைத் தேடி தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது.​

ரயில் கிளம்பி ஐந்து நிமிடங்கள் கழித்துத் தான் ஆதிதேவ் தனது இருக்கையைத் தேடி வந்து அதில் அமர்ந்து கொண்டான்.​

அவனை தேடியே அலைபாய்ந்து கொண்டிருந்த அவளது கண்கள் அவனைக் கண்டதும் தான் திருப்தி அடைந்தது.​

தலையினை வேறு பக்கம் திருப்பி வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.​

அந்த ரயில் தேனியை சென்றடைந்தது.​

ஆதிதேவ், சான்விகா அமர்ந்திருந்த இருக்கைகளை முன்பதிவு செய்து இருந்தவர்கள் அந்த இடத்தினைத் தேடி வந்துவிட்டனர். எனவே அவர்களுக்கு வழி விட்டுவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்துக் கொண்டனர்.​

சுமார் ஒன்பது மணிக்கு மேல் சான்விகா அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து படியின் உதவியுடன் மேலேறி அந்த படுக்கையில் படுத்தும் கொண்டாள்.​

யாரின் உதவியும் இன்றி மேலேறி போய்ப் படுத்துக் கொண்ட சான்விகாவை தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

'கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி நா அவளுக்கு ஹெல்ப் பண்ணி தான் அவள மேல ஏத்தி விடுவேன். ஆனா இப்போலாம் நம்ம ஹெல்ப் அவளுக்கு தேவ இல்லல.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஆதிதேவ்.​

ஆதியும் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து படியின் உதவியுடன் மேலேறி அந்த படுக்கையில் படுத்துக் கொண்டான்.​

எதிரெதிரில் படுத்திருந்தவர்கள் உறங்காமல், ஒருவரை ஒருவர் பார்க்காதது போல பாவ்லா பண்ணிக் கொண்டு கைப்பேசியினை கையில் வைத்து நோண்டி கொண்டு பொழுதினை போக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர்களது முழு சிந்தனையும் வேறு எதிலோ இருந்தது.​

'ரெண்டு நாளைக்கு முன்னாடி ட்ரைன்ல வந்தப்போ மனசுக்கு நெருங்கிய யாரோ என் கூடவே இருந்த மாதிரி இருந்தது. இவரும் அதே ட்ரைன்ல நா வந்த கோச்ல தான் வந்துருப்பார் போல. அதுவும் என் பக்கத்துல தான் இருந்துருப்பார் போல. அன்னைக்கு அவரு மேல உள்ள வெறுப்புல உங்க கூட என்னால வாழ முடியாது, இருக்க முடியாதுனு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டேன். இப்போவும் என் மேல கோபத்துல தான் இருப்பாரு. என் கூட பேச கூட யோசிக்க தான் செய்வாரு. டாடி எனக்குனு ஒருத்தன பாத்து, தேர்ந்தெடுத்து என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருக்காரு. அவரயும் என்னால ஏத்துக்க முடியல. அவரு என் கூட பேச ட்ரை பண்றப்போ நா சரியா பேசுறது இல்ல. பல சமயம் நா எடுக்குறது கூட இல்ல.' என்பது போல சான்விகாவின் எண்ணம் இருந்தது.​

'அவ மேல கோபம், கடுப்பு எல்லாமே இன்னைக்கும் இருக்கு. அவ என்ன பிடிக்கல, என் கூட இருக்கவே வெறுப்பா இருக்குனு சொல்லிட்டு என்ன தூக்கி எறிஞ்சிட்டு, என்ன விட்டுட்டு போனவ அவ. ஆனா அப்படிப்பட்ட அவ மேல என்னோட கோபத்த கூட காட்ட முடியாம இன்னைக்கும் நா திணறிட்டு நிக்குறேன். எல்லாத்தயும் விட என் காதல் தான் அதிகமா இருக்கு, என்ன தடுத்து நிறுத்திட்டு இருக்கு.' என்பது போல ஆதியின் எண்ணம் இருந்தது.​

யோசித்துக் கொண்டு படுத்திருந்த சான்விகா எப்படியோ அவளை அறியாமலே கண் அயர்ந்து தூங்கி இருந்தாள்.​

அவள் கண் மூடி தூங்கி இருந்ததும் அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த ஆதியும் எப்படியோ அவனை அறியாமலே தூங்கி இருந்தான்.​

காலை 7:50 மணிக்கு சான்விகாவின் தந்தை இஷான் கைப்பேசியில் அழைத்து இருந்தார்.​

"சான்வி ட்ரைன் நின்ன அப்பறம் நா எப்டியும் அங்க வர பத்து நிமிஷம் ஆகும். நீ அங்கயே நில்லு. டாடி வந்து உன்ன கூட்டிட்டு போறேன்." என்று கைப்பேசியில் அழைத்து சொல்லி இருந்தார்.​

அந்த ரயில் காலை எட்டு மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது.​

ரயில் நின்றதும் சான்விகா தனது பெட்டிகளை இழுத்துக் கொண்டு போய் படியிறங்கி போய் ஓரமாக நின்று கொண்டு தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தாள்.​

பின்னாடியே பெட்டிகளை எடுத்துக் கொண்டு போய் படியிறங்கியவன் தனியாக நின்றிருந்த சான்விகாவை ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு அப்படியே அந்த நடைபாதையில் நடந்து சென்றிருந்தான்.​

அவளை விட்டு சிறிது தூரம் தான் நடந்து சென்றிருப்பான். அவளைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல அவனுக்கு மனசே இல்லை.​

அவளுக்குத் தெரியாமல் ஓரமாக மறைந்து நின்று கொண்டான் ஆதிதேவ்.​

சரியாக பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு தான் சான்விகாவின் தந்தை அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.​

சான்விகா பாதுகாப்பாக தந்தையுடன் சென்றிருந்ததை பார்த்ததும் தான் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து சென்றான் ஆதிதேவ்.​

 
Last edited:

NNK 55

Moderator

8​


தயகர்-அக்னிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்கும்.​

சான்விகா தினசரி நாட்காட்டியில் ஏழாம் தேதியை பார்த்ததும் அன்றைய நாளில் தான் ஆதியின் பிறந்த நாள் வரும் என்பது அவளது நினைவுக்கு வந்தது.​

'கல்யாணம் நடந்து முடிஞ்சு ரெண்டு வாரம் ஆயிருச்சு. அக்னிகா சொன்ன மாதிரி கம்பெனிக்கு வந்து அவரு இன்னும் ஜாயின் பண்ணல. அப்போ நா அவர இன்னும் பாக்கவே முடியாதா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.​

'நீ இப்டி ஃபீல் பண்ணனா அவரு வீடு உனக்கு தெரியும்ல அப்போ அவர பாக்க நேரா அவரு வீட்டுக்குப் போக வேண்டியது தான.' என்று அவளது மனசாட்சி எடுத்துரைத்தது.​

'எதும் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். எந்த உரிமைல நா அவரு வீட்டுக்குப் போய் அவர பாக்க முடியும்?' என்று மனதினில் நினைத்துக் கொண்டாள்.​

அப்பொழுது அவளது கைப்பேசிக்கு அக்னிகா ஒரு புகைப்படத்தினை அனுப்பி இருந்தாள். அந்தப் புகைப்படத்தினை திறந்துப் பார்த்தவள் இனிதாக அதிர்ந்து தான் போனாள்.​

தயகர்-அக்னிகா திருமணத்தன்று அனைவரும் சேர்ந்து நின்றிருந்த பொழுது எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தினை தான் அனுப்பி இருந்தாள்.​

அந்தப் புகைப்படத்தில் சான்விகா ஆதியின் அருகினில் தான் நின்றிருந்தாள்.​

அந்தப் புகைப்படத்தினை பார்த்துக் கொண்டே சென்று இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.​

அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்க்கவே பிரமாதமாக இருப்பது போலவே அவள் கண்களுக்கு தெரிந்தது. அவளது விரல்கள் அவர்கள் இருவரும் சேர்ந்து நின்றிருந்த அந்த புகைப்படத்தினை தான் வருடி கொடுத்திருந்தது. பார்க்கவே அழகான ஓவியம் போலத் தான் அவள் கண்களுக்குக் காட்சியளித்தது. அந்தப் புகைப்படத்தினை அவளது கண்கள் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.​

அந்த நேரத்தில் யாரோ தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு, தன்னை வருடிக் கொடுத்தது போல அவள் உணர்ந்திருந்தாள்.​

சான்விகா இருக்கையில் அமர்ந்திருந்து ஆதியை சந்தித்ததில் இருந்து இருவரும் பிரிந்தது வரை நடந்தவற்றினை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.​

அதே நேரத்தில் ஆதியும் தன் வீட்டினில் அமர்ந்திருந்து தயகர் அனுப்பி இருந்த புகைப்படத்தினை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.​

ஆதிதேவ் தன் அருகினில் நின்றிருந்த சான்விகாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.​

அவனது விரல்கள் அந்த புகைப்படத்தினில் இருந்த சான்விகாவை தான் வருடிக் கொண்டிருந்தது.​

அவனது நினைவுகளோ அவளை சந்தித்ததில் இருந்து இருவரும் பிரிந்தது வரை நடந்தவற்றினை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது.​

***​


நான்கு வருடங்களுக்கு முன்பு:​


BLOOSOM TECHNO SOLUTIONS:​

"இவங்க பெயர் தான் சான்விகா. இவங்க தான் நம்ம ப்ராஜெக்ட்ல புதுசா ஜாயின் பண்ணிருக்காங்க. இவங்க இனிமேல் உங்க டீம்ல தான் வொர்க் பண்ணப் போறாங்க. இவங்க ஃபிரெஷர் தான் ஜாப்ல எந்த முன் அனுபவமும் இல்ல. ஆனா ரொம்ப இண்டலிஜெண்ட். இப்போதைக்கு இவங்க நீங்க வேல பாக்குற ஷிப்ட்லயே வேல பாக்கட்டும். நீங்களே இவங்கள ட்ரைன் பண்ணுங்க." என்று சொன்னார் ஆதிதேவ் வேலை பார்க்கிற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற ப்ராஜெக்ட் மேனேஜர் சுமந்த்.​

"ஹாய் சான்விகா." என்று சொல்லி கை குலுக்கத் தன் கையை நீட்டி இருந்தான் ஆதிதேவ்.​

"ஹாய்." என்று சொன்ன சான்விகா அவனின் பெயர் தெரியாது என்பதினால் பெயரினைச் சொல்லி கூப்பிடாமல் ஹாய் என்பதினை மட்டும் சொல்லி அவனது நீட்டிய கரங்களைக் குலுக்கி நின்றாள்.​

"ஆதிதேவ்." என்று சொல்லி தனது பெயரினை அறிவித்து இருந்தான் ஆதிதேவ்.​

கம்பீரமிக்க ஆண்மகனாக தான் ஆதிதேவ் அவள் கண்களுக்கு தெரிந்தான்.​

அவனது ப்ராஜெக்ட் மேனேஜர் சுமந்த் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து சென்றிருந்தார்.​

மஞ்சள் நிறத்தில் குர்தாவும், நீல நிறத்தில் ஜீன்ஸும் அணிந்திருந்தாள் சான்விகா. அந்த ஆடை அவளுக்கு அழகாகவும், பொருத்தமாகவும் இருந்தது.​

கணினி வைக்கப்பட்டிருந்த மேஜைக்கு அடியில் கிடந்திருந்த நாற்காலியை வெளியில் இழுத்துப் போட்டு, "இங்க உட்காந்துக்கோங்க." என்று சொன்ன ஆதிதேவ் எப்பொழுதும் தான் அமர்ந்துக் கொண்டு வேலை செய்கிற நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டான்.​

"தேங்க்ஸ்." என்று சொன்ன சான்விகா தனக்கு அருகினில் அவனால் நகர்த்தப்பட்டு போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டாள்.​

எப்பொழுதும் இருக்கும் வேலை போலப் பெரிதாக வேலை எதுவும் இல்லை என்பதால் அவனால் சான்விகாவுக்கு வேலையினை கற்றுக் கொடுக்க முடிந்திருந்தது.​

மதிய வேளையும் வந்தது.​

மதிய உணவு வேளையில் ஆதியும், சான்விகாவும் அந்த வளாகத்திலேயே இருந்த கேஃப்டீரியாவுக்கு சென்று உணவருந்தினர்.​

ஆதிதேவ் லெமன் ரைஸ், சாம்பார், உருளைகிழங்கு பட்டாணி கூட்டு, தயிர் சாதம் என அனைத்தையும் மதிய உணவுக்காக எடுத்து வந்திருந்தான்.​

சான்விகா வெஜிடபிள் புலாவ் மற்றும் பன்னீர் கபாப் உணவினை மதிய உணவுக்காக எடுத்து வந்திருந்தாள்.​

இருவரும் சேர்ந்தே உணவருந்தினர். உணவருந்திவிட்டு வந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.​

இடைவெளி நேரத்தில் ஆதிதேவ் சான்விகாவிடம், "நீங்க எந்த காலேஜ்ல படிச்சு முடிச்சிட்டு வந்து இருக்கீங்க?" என்று கேட்டான்.​

"CHENNAI COLLEGE OF ENGINEERING." என்று பதில் சொன்னாள் சான்விகா.​

"அந்த காலேஜ்ல படிச்சு முடிச்சவன் ஒருத்தன் இங்க நம்ம டீம்ல தான் இப்போ ஒர்க் பன்றான்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"தெரியும். தயகர் அவன் என் சீனியர் ஃப்ரண்ட் தான்." என்று சொன்னாள் சான்விகா.​

"அப்டியா. அவன் இன்னைக்கு லீவு. நாளைக்கு அவனுக்கு மதியம் ஷிப்ட் தான். மதியம் ஒரு மணிக்கு வந்துருவான். அவன் உங்கள பத்தி, நீங்க இங்க ஜாயின் பண்றத பத்தி ஒண்ணுமே என்கிட்ட சொல்லலயே." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"அவன் கிட்ட இந்த கம்பெனில தான் அதுவும் அவன் டீம்ல தான் ஜாயின் பண்ணப் போறேன்னு இன்னும் நா சொல்லவே இல்ல. சர்ப்ரைஸாக இருக்கட்டும்னு விட்டுட்டேன். காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூல எனக்கு வேற கம்பெனில தான் வேலை கிடைச்சு இருந்தது. ஆனா அவங்க ஜாயின் பண்ண இன்னும் என்ன கூப்பிடல. அதனால இங்க வந்து நானும், என் காலேஜ் ஃப்ரண்ட் அக்னிகாவும் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகி இங்க வந்து ஜாயின் பண்ணிட்டோம்." என்று சொன்னாள் சான்விகா.​

"குட். அக்னிகா அவங்கள தான தயகர் லவ் பண்றான்?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"ஆமா. உங்க கிட்டச் சொல்லி இருக்கானா? அவ இதே ப்ராஜெக்ட் தான் ஆனா வேற டீம்ல தான் அவளுக்கு வேல கிடைச்சிருக்கு. அவ நாளைக்கு தான் ஜாயின் பண்ண போறா." என்று சொன்னாள் சான்விகா.​

"அவன பத்தி எல்லாத்தயுமே என் கிட்டச் சொல்லி இருக்கான். என்ன பத்தி எதாவது உங்க கிட்டச் சொல்லி இருக்கானா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"அதெல்லாம் நிறைய தடவ சொல்லி இருக்கான். நீங்க அப்டி, நீங்க இப்டினு பல தடவ உங்கள பத்தி சொல்லி இருக்கான். உங்களுக்கு சில சமயம் கோபம் வந்தாலும் தட்டிக் கொடுத்து வேல வாங்குறதுல உங்கள மாதிரி வரவே வராதுனு சொல்லி இருக்கான். உங்கள தல தான கூப்பிடுவான்." என்று சொன்னாள் சான்விகா.​

"எஸ். அவனுக்கு என்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவன ரொம்ப ரொம்ப பிடிக்கும். சில பேர் கூட பழகும் போது நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். அப்டி தான் அவன் கூட பழகும் போது நான் ஃபீல் பண்ணி இருக்கேன். அவனுக்கு என் கூட காஃபி குடிக்கணும்னா ரொம்ப பிடிக்கும். இப்போ நாம போய் காஃபி குடிச்சிட்டு வரலாமா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"போகலாம் வாங்க." என்று சொன்னாள் சான்விகா.​

ஆதிதேவ் சான்விகாவை அழைத்துக் கொண்டு காஃபி குடிக்க கேஃப்டீரியாவுக்கு சென்றான்.​

அங்குச் சென்று தனக்கும், அவளுக்கும் என இரு காஃபிகளை சொல்லி வரவழைக்கச் செய்தான்.​

இருவரும் தங்களுக்கென்று வரவழைக்கப் பட்டிருந்த காஃபியை எடுத்துக் கொண்டு நாற்காலிகளில் போய் அமர்ந்துக் கொண்டனர்.​

"உங்க வீடு எங்க இருக்கு?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"அண்ணாநகர்." என்று பதில் சொன்னாள் சான்விகா.​

"நீங்க அண்ணாநகரா. எங்க வீடு முகப்பேர்ல தான் இருக்கு. அங்கருந்து எப்டி வாறீங்க?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"இன்னைக்கு என் டூவீலர எடுத்துட்டு இங்கயே வந்துட்டேன். ஈவினிங் என் டூவீலர எடுத்துட்டு மீனம்பாக்கம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு, அப்டியே ட்ரெயின் ஏறி அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் போயிருவேன். டாடி ஃப்ரீயா இருந்தா வந்து என்ன கூட்டிட்டுப் போயிருவாரு." என்று சொன்னாள் சான்விகா.​

"அப்டியா நானும் அதே மாதிரி தான் பண்ணிட்டு இருக்கேன். வீட்ல இருந்து அண்ணாநகர் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வரை என் பைக்ல வந்து அங்கருந்து மெட்ரோ ட்ரெயின்ல வந்து இங்க மீனம்பாக்கத்துல இறங்கி அங்கருந்து ஆட்டோ இல்ல பஸ் பிடிச்சு இங்க வந்துருவேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"உங்க வீட்ல உங்க கூடப் பிறந்தவங்க?"என்று கேட்டான் ஆதிதேவ்.​

"இல்ல. நா எங்க வீட்ல ஒரே பொண்ணு தான். உங்க கூடப் பிறந்தவங்க?" என்று கேட்டாள் சான்விகா.​

"அப்டியா. என் கூடப் பிறந்தவங்க ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. அக்கா கல்யாணம் பண்ணி போயிட்டாங்க." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"படிச்சு முடிச்சதும் வேலைக்கு வந்துட்டீங்க. ஹையர் ஸ்டடீஸ் படிக்க உங்களுக்கு ஆசை இல்லையா." என்று கேட்டான் ஆதிதேவ்.​

"ஆசை இருக்கு. படிச்சு முடிச்சிட்டு ஒரு வருஷம் மட்டும் வேல பாத்துட்டு வெளிநாட்டுக்குப் போய்ப் படிக்கணும்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்." என்று சொன்னாள் சான்விகா.​

சான்விகாவின் வெளிநாட்டுக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்கிற ஆசையே பின்நாளில் அவர்களுக்குள் பிரச்சனை வர அதுவும் ஒரு காரணமாய் அமையப் போகிறது என்று அவள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.​


ஆதியும், சான்விகாவும் சில நிமிடங்களில் பேசி முடித்ததும் கேஃப்டீரியாவை விட்டு வெளியேறினார்கள்.​

சிறிது நேரம் கணினியில் வேலையைப் பார்த்து முடித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள்.​

சான்விகா தன்னுடன் நட்பாக பழகிய சில ஆண்களை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பயணம் செய்து இருக்கிறாள் தான். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆதியிடம், "என் டூ வீலர்லயே வாங்க நாம போகலாம். மீனம்பாக்கம் மெட்ரோவுக்கு தான நீங்க போகணும்." என்று சொன்னாள்.​

ஆதிக்கு அவளது வாகனத்தில் ஏறிப் பயணம் செய்ய சிறு தயக்கம் இருந்தாலும் அவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னை ஏறச் சொன்னதால் அவனும் அந்தத் தயக்கத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவளது வாகனத்தில் போய் ஏறிக் கொண்டான்.​

மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வந்ததும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாள். அதிலிருந்து இருவரும் இறங்கினர்.​

மெட்ரோ ரயில் நிலைய நடைபாதையில் போய் நின்றுக் கொண்டனர். ரயில் வந்ததும் அதில் போய் ஏறி இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர்.​

இருவரும் அருகருகே தான் அமர்ந்திருந்தனர்.​

ஓட்டுநர் ரயிலை இயக்க ஆரம்பித்ததும் சான்விகா தன்னிடம் இருந்த இயர்பேட்டை(EARPOD) எடுத்து அதை காதுகளில் வைத்துக் கொண்டு பாடல்களைக் கேட்க ஆரம்பித்தாள். பதினைந்து நிமிடங்கள் மட்டும் பாடல்களை கேட்டவள் இயர்பேட்டை(EARPOD) தனது காதுகளில் இருந்து அகற்றி கைப்பையில் வைத்துக் கொண்டாள்.​

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிதேவ் அவளிடம், "உங்களுக்கு மியூசிக்னா ரொம்பப் பிடிக்குமா?" என்று கேட்டான்.​

"ரொம்பப் பிடிக்கும். தல ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிருச்சு. அதான் நிறுத்திட்டேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"உங்க ஃபேவரைட் மியூசிக் டைரக்டர்?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"தமிழ்ல ஜி.வி.பிரகாஷ். நா இங்கிலீஷ் சாங்ஸ் தான் அதிகமா கேட்பேன்." என்று பதில் சொன்னாள் சான்விகா.​

"நைஸ். எனக்கு பெரிய லிஸ்ட்டே இருக்காங்க. எனக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா மியூசிக் பிடிக்கும்னாலும் மை ஃபேவரைட்னா அது ஹாரிஸ் ஜெயராஜும், வித்யாசாகரும் தான்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் கேட்டு இருக்கேன். வித்யாசாகர் அவரு மியூசிக் கேட்டு இருக்கேன்னா தெரிலயே." என்று சொன்னாள் சான்விகா.​


"நிறைய ஹிட்ஸ் கொடுத்து இருக்கார். மலரே மௌனமா, நூறாண்டுக்கு ஒரு முறை, நீ காற்று நான் மரம் இதெல்லாம் அவரு மியூசிக் பண்ண பாடல்கள் தான். அவரு மெலோடிஸ் எல்லாமே கேட்க ரொம்பவே நல்ல இருக்கும்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"இந்தப் பாட்டெல்லாம் நா கேட்ட மாதிரி இல்லயே." என்று சொன்னாள் சான்விகா.​

"நீங்க 2K கிட்ல அதான் கேட்டு இருக்க மாட்டீங்க. என் மொபைல்ல இருக்கு. நா போட்டு விடுறேன்." என்று சொன்னான் ஆதிதேவ்.​

ஆதிதேவ் தன் கையில் இருந்த கைப்பேசியை இயக்கி அதில் வித்யாசாகர் இசை அமைத்திருந்த பாடல்களைத் தேடிக் கண்டு பிடித்து அதனை ஒலிக்க விட்டான்.​

இருவருமே வித்யாசாகரின் இசையில் ஒலித்திருந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டப்படியே பயணத்தை மேற்கொண்டனர்.​

நாற்பது நிமிடங்கள் பயணம் செய்து அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தனர்.​

ஆதிதேவ் தனது இரு சக்கர வாகனத்தை அங்கு தான் நிறுத்தி வைத்திருந்தான். எப்பொழுதும் அதில் பயணம் செய்து தான் தன் வீட்டுக்குச் செல்வான்.​

"வாங்க சான்விகா உங்கள நா உங்க வீட்ல விட்டுட்டு நா என் வீட்டுக்கு போறேன்." என்று சொல்லி அவளை அழைத்தான் ஆதிதேவ்.​

சான்விகா எந்த மறுப்பும் சொல்லாமல் அவனின் இரு சக்கர வாகனத்தில் போய் ஏறிக் கொண்டாள்.​

சான்விகா தன் வீட்டிற்குச் செல்வதற்கான வழியை சொல்ல அந்த வழியில் பயணம் செய்து அவளின் வீடு வந்ததும் அவளை இறக்கி விட்டான்.​

அவளது வீட்டினை மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிதாக அவனுக்கு காட்சியளித்திருந்தது.​

அந்த மாளிகையைப் பார்த்ததும் வியந்து போய்த் தான் நின்றிருந்தான்.​

சான்விகா வாகனத்தில் இருந்து இறங்கியதும் அவளிடம், "உங்கள காண்டாக்ட் பண்ண எதாவது தேவைப்பட்டு காண்டாக்ட் பண்ணனும்னா பேச உங்க நம்பர் கொடுக்க முடியுமா?" என்று கேட்டான் ஆதிதேவ்.​

"ஷ்யூர். சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க." என்று சொன்ன சான்விகா அவளுடைய கைப்பேசி எண்ணினை அவனிடம் கொடுத்தாள்.​

"நாளைக்கு நீங்க சாப்பாடு கொண்டு வர வேண்டாம். அக்னிகா உங்களுக்கும் ட்ரீட் கொடுக்குறேன்னு சொல்லி இருக்கா. அவ அப்பவே உங்க கிட்டச் சொல்ல சொன்னா. நா தான் சொல்ல மறந்துட்டேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"ட்ரீட்டா எதுக்கு?ஜாயினிங் ட்ரீட்டா? நீங்க இன்னும் ஜாயினிங் ட்ரீட் எனக்கு கொடுக்கவே இல்ல." என்று சொன்னான் ஆதிதேவ்.​

"நாளைக்கு அவளுக்கு பர்த்டே அதான் கொடுக்குறா. நெக்ஸ்ட் வீக் நா உங்க எல்லாருக்கும் தாரேன். நாளைக்கு பாக்கலாம் தேவ்." என்று சொன்ன சான்விகா ஆதியிடம் இருந்து விடைப்பெற்று தன் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போனாள்.​

"வெயிட் இப்போ நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்டு அவளைத் தடுத்து நிறுத்தி இருந்தான்.​

"தேவ்னு சொன்னேன். ஏன் நா உங்கள அப்டி கூப்பிடுறது பிடிக்கலையா?" என்று கேட்டாள் சான்விகா.​

"அப்டிலாம் இல்ல. என்ன வீட்ல, வெளிலனு எல்லாரும் ஆதினு கூப்பிடுறத கேட்டே பழகிட்டேன். அதான் நீங்க என்ன தேவ்னு கூப்பிட்டதும் எனக்கு புதுசா இருந்தது. டைம் ஆயிருச்சு நீங்க போங்க. நான் அப்டியே கிளம்புறேன்." என்று சொன்ன ஆதிதேவ் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்றான்.​

சான்விகாவும் அந்த இடத்தினை விட்டு நகர்ந்துச் சென்று தன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பொழுது தான் தந்தை இஷானிடம் கைப்பேசியில் அழைப்பு வந்தது.​

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், "இப்போ எங்க இருக்க? நான் உன்ன கூட்டிட்டு போக வரவா?" என்று கேட்டார் இஷான்.​

"இல்ல டாடி. இப்போ வீட்டு வாசல்ல தான் நிக்குறேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"நீயா வந்துட்டீயா? என் கிட்டச் சொல்லி இருந்தா நா வந்து கூட்டிட்டு போயிருப்பேன்ல. இனிமேல் இப்டி பண்ணாத." என்று சொன்னார் இஷான்.​

"இல்ல டாடி எங்க டீம் லீட் இந்தப் பக்கம் தான் போனாரு. அவரு கூட வந்து தான் இங்க நம்ம வீட்ல இறங்கிட்டேன்." என்று சொன்னாள் சான்விகா.​

"அங்க கம்பெனில இருந்தேவா அவரு கூட வந்த?" என்று கேட்டார் இஷான்.​

"ஆமா டாடி. அங்க இருந்து என் டூ வீலர்ல மீனம்பாக்கம் போயிட்டு அங்க இருந்து ட்ரெயின் பிடிச்சு அண்ணாநகர் வந்துட்டேன். அவரோட பைக்ல ஏறி இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டேன் டாடி." என்று சொன்னாள் சான்விகா.​

இஷான் சந்தேகம்லாம் படவில்லை. ஆனால் தந்தைக்கான கடமையாக அவளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கேட்டு விசாரித்துக் கொண்டார்.​

 
Last edited:

NNK 55

Moderator

9​

மறுநாளும் விடிந்தது:

ஆதிதேவ் காலையில் எழுந்ததும் பற்களை துலக்கி காஃபியை குடித்து முடித்து, குளித்து உடையை மாற்றிவிட்டு அலுவலகத்துக்குச் செல்ல கிளம்பினான்..​

அறையை விட்டு வெளியேறியவன் காலை உணவினை சாப்பிட்டு விட்டுச் செல்ல நேராக உணவு உண்ணும் அறைக்குச் சென்றான்..​

அங்கு அவனது அன்னை இந்துவதனி அவனுக்காக உணவு மேஜையில் இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி, வடை, கேசரி என அனைத்தையும் செய்து தயாராக வைத்திருந்தார்..​

அங்குக் கிடந்த நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டவன் அருகினில் நின்றிருந்த அன்னையிடம், "சாப்ட்டா இப்டி தான் சாப்டணும் அத விட்டுட்டு பாஸ்தா, பிட்சானு எப்டி தான் சாப்டுறாங்களோ.." என்று சொன்னவன் அனைத்து உணவுகளையும் எடுத்து வாயில் வைத்து முழுவதுமாக ருசி பார்த்தப் பிறகே அந்த நாற்காலியில் இருந்து எழுந்து போய் கையைக் கழுவிவிட்டு வந்தவன் அங்குக் குழுமி இருந்த அனைவரிடமும் சொல்லிவிட்டு அலுவலகத்துக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறினான்..​

ஆதியின் வீடு முகப்பேரில் இருக்கிறது.. அவனது அலுவலகம் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள MEPZ பகுதியில் இருக்கிறது..​

அவனது வீட்டில் இருந்து அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து வந்து அங்கிருந்து ரயிலேறி மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோவைப் பிடித்து MEPZ பகுதியில் இருக்கிற தனது அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்..​

இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கிய பொழுது தான் அவனுக்கு சான்விகாவின் ஞாபகம் வந்தது..​

அவள் கிளம்பித் தயாராக இருந்தால் அவளையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருந்தவன் அவளை கைப்பேசியில் அழைத்தான்..​

அன்று காலை சற்றுத் தாமதமாகத் தான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தாள் சான்விகா.. குளித்து உடையை மாற்றிவிட்டு வேகமாகக் கிளம்பினாள்..​

அவளுக்கான காலை உணவாக பாஸ்தாவை தான் அவளது அன்னை சாதனா அவளுக்கு சாப்பிடக் கொடுத்தார்.. அதையும் சாப்பிட்டு முடித்து அன்னையிடம் சொல்லிக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறினாள் சான்விகா..​

தந்தை வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தார்.. இல்லையென்றால் அவர் அவளை அழைத்துக் கொண்டு போய் அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு இருப்பார்..​

வீட்டை விட்டு வெளியில் வந்தவள் ஆட்டோ அல்லது கேப் புக் பண்ணி சென்று விடலாம் என்று நினைத்தவள் கைப்பேசியை கைப்பையில் இருந்து வெளியில் எடுத்தாள் சான்விகா..​

அப்பொழுதுத் தான் ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது..​

அழைப்பை ஏற்று காதில் வைத்து, "சொல்லுங்க தேவ்.." என்று சொன்னாள் சான்விகா..​

"நா கிளம்பிட்டேன்.. நீங்க கிளம்பி ரெடியா இருந்தா உங்களயும் கூட்டிட்டு போயிருவேன்.. அதான் கால் பண்ணேன்.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

"நா இப்போ கிளம்பி ரெடியா வெளில தான் நின்னுட்டு இருக்கேன்.. இப்போ தான் புக் பண்ணலாம்னு மொபைல்ல கைல எடுத்தேன்.. அதுக்குள்ளே நீங்களே கால் பண்ணிட்டீங்க.." என்று சொன்னாள் சான்விகா..​

"பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா? நானே வந்து உங்கள கூட்டிட்டுப் போறேன்.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

ஆதிதேவ் இதுவரை எந்தப் பெண்ணிடமும் வழியச் சென்று பேசியதே கிடையாது.. முதல் முறையாக சான்விகாவிடம் வழியச் சென்று பேசி இருக்கிறான்..​

சான்விகா அவனை தேவ் என்று அழைப்பது புதியதொரு உணர்வினை அவனுக்கு கொடுத்தது..​

சரியாக பத்து நிமிடத்தில் வாகனத்தினை சான்விகாவின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி இருந்தான்..​

அந்தக் காலை வேளையில் அவளைப் பார்த்தவன் அவளது அழகினில் சொக்கிப் போய் நின்றிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..​

சான்விகா லிலாக்(LILAC) நிறத்தில் புடவை தான் அணிந்திருந்தாள்.. அந்தப் புடவை அவளுக்கு அழகாகவும், பொருத்தமாகவும் இருந்தது.. அந்தப் புடவைக்குப் பொருத்தமாக காதணியை அணிந்து இருந்தாள்..​

முகத்தினில் சில ஒப்பனைகளை மட்டும் செய்து இருந்தாள்.. நெற்றியில் பொட்டு, குங்குமம் என எதையுமே வைத்துக் கொள்ளாமல் வெறுமையாக விட்டிருந்தாள்.. தலை முடியை விரித்துப் போட்டிருந்தாள்..​

நெற்றியில் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டால் இன்னும் அழகாக இருப்பாள் என்பதே அவனது எண்ணமாக இருந்தது..​

அவன் மனதினில் தோன்றியவற்றை அவளிடம் சொல்லவும் செய்தான்..​

"நீங்க இந்தப் புடவைல ரொம்ப அழகா இருக்கீங்க.. நெத்தில பொட்டு மட்டும் வெச்சிக்கிட்டா இன்னும் அழகா தெரிவீங்க.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

'ஆமா நீ அஜித் அந்தம்மா சுவலட்சுமி இவரு பொட்டு வெக்க சொல்றாரு.. ஆமா நீ இந்த மாதிரி அழகா இருக்கனு எந்தப் பொண்ணு கிட்ட பேசியும் நா பாத்ததே இல்லயே..' என்று அவனது மனசாட்சி கேலி செய்தது..​

சான்விகா பல ஆண்களிடம் நட்பு ரீதியாகப் பழகி இருக்கிறாள்.. அவர்கள்லாம் ஆதிதேவ் சொன்னது போலச் சொல்லி இருக்கின்றனர் தான்.. அதனால் அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..​

ஆதிதேவ் சொல்லி இருந்ததை சிறு பாராட்டுதலாக எடுத்துக் கொண்டாள்..​

ஆனால் ஆதிக்கு தான் அவளிடம் அவ்வாறு பேசியது புதுமையான உணர்வினைக் கொடுத்தது.. ஆதிதேவ் இது போல எந்தப் பெண்ணிடத்திலும் பேசியது, சொன்னது கிடையாது.. புதுமையாக உணர்ந்தான்..​

"தேங்க்ஸ்.. இப்போ என் கிட்ட வெச்சிக்க பொட்டு இல்ல.." என்று சொன்னாள் சான்விகா..​

அன்று தனது தோழி அக்னிகாவுக்கு பிறந்தநாள் என்று தான் சான்விகா புடவையை அணிந்திருந்தாள்..​

ஆதிதேவ் சான்விகாவிடம் தனக்குப் பின்னால் அமர்ந்துக் கொள்ளச் சொல்லி அவளையும் ஏற்றிக் கொண்டு பயணத்தினை தொடங்கி இருந்தான்..​

சில நிமிடத்தில் அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றடைந்தவன் அங்குத் தனது வாகனத்தை விட்டுவிட்டு அவளுடன் ரயிலில் பயணம் செய்து மீனம்பாக்கம் சென்று அங்கிருந்து சான்விகாவின் இரு சக்கர வாகனத்தில் அவளுடன் பயணம் செய்து அலுவலகத்துக்கு சென்றடைந்தான்..​

மதியம் பனிரெண்டரை மணி வரை எந்த இடைவெளியும் எடுத்துக் கொள்ளாமல் வேலைப் பார்த்து வந்தனர்..​

சான்விகா ஆதியிடம், "இப்போ டைம் 12:50 ஆகுது.. தயகர் ஒரு மணிக்கு வந்துருவான்.. இன்னைக்கு அக்னிகாவுக்கு பர்த்டே.. நானும், அவளும் இங்க ஜாயின் பண்ணது அவனுக்குத் தெரியாது.. சர்ப்ரைஸாக இருக்கட்டும்னு சொல்லாம விட்டுட்டோம்.. அவன் வந்ததும் அவன கூட்டிட்டு நீங்க பக்கத்துல இருக்குற பனானா லீஃப் ரெஸ்டாரண்டுக்கு(BANANA LEAF RESTAURANT) வாங்க.. உங்களுக்கு லஞ்ச் அங்க தான்.. அதான் சாப்பாடு எடுத்துட்டு வர வேணாம்னு சொல்லிருந்தேன்.. நமக்கு அக்னிகா கொடுக்குற ட்ரீட்.. உங்களையும் சேர்த்துத் தான் அவ வர சொல்லிருந்தா.. சரி நா இப்போ கிளம்புறேன்.. இப்போ கிளம்புனா தான் கரெக்டா இருக்கும்.." என்று சொன்னவள் அந்த இடத்தினை விட்டு வெளியேறினாள்..​

மதியம் ஒரு மணிக்கு சரியாக தயகர் அலுவலகத்துக்கு வந்து விட்டான்..​

அவனிடம் வந்த ஆதிதேவ், "இன்னைக்கு நானும் சாப்பாடு எடுத்துட்டு வரல.. பக்கத்துல இருக்குற பனானா லீஃப் ரெஸ்டாரண்டுக்கு நாம ரெண்டுப் பேரும் போய் சாப்ட்டுட்டு வரலாம்.." என்று சொன்னான்..​

"வாங்க தல.. எனக்கும் ரொம்ப பசிக்குது.." என்று சொன்னான் தயகர்..​

ஆதியும், தயகரும் நிறுவனத்துக்கு அருகிலேயே இருக்கும் பனானா லீஃப் ரெஸ்டாரண்டுக்கு சென்றார்கள்..​

அங்குப் போய் இருக்கைகளில் அமர்ந்துக் கொண்டனர்..​

தயகர் ஆதியிடம், "இன்னைக்கு அக்னிகாவோட பர்த்டே.. நா அவள ரொம்ப மிஸ் பண்றேன்.. அவ வேற கம்பெனில செலக்ட் ஆயிட்டா.. அந்த கம்பெனிலயும் இன்னும் அவள கூப்டல.. அவள நம்ம கம்பெனிலயே ஜாயின் பண்ண சொல்லிருக்கலாம்னு தோணுது.." என்று சொன்னான்..​

"நீ அவள போய் மீட் பண்ணீயா?" என்று கேட்டான் ஆதிதேவ்..​

"அவ கிட்ட பேசுனேன் அவ்ளோ தான்.. இன்னைக்கு நைட் தான் அவள போய்ப் பார்க்கணும்னு பிளான் பண்ணிருக்கேன்.." என்று சொன்னான் தயகர்..​

"சரி ரெண்டு நிமிஷம் கண்ண மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

"அப்டி என்ன தல சர்ப்ரைஸ் கொடுக்கப் போறீங்க? சரி நா கண்ண மூடிக்குறேன்.." என்று சொன்ன தயகர் தனது இரண்டு கண்களையும் மூடிக் கொண்டான்..​

அதைப் பயன்படுத்திக் கொண்ட அக்னிகாவும் தயகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராகப் போய் நின்றுக் கொண்டாள்..​

"இப்போ கண்ண திறந்து பாரு.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

கண்ணை திறந்துப் பார்த்த தயகர் தனக்கு நேராக நின்றிருந்த அக்னிகாவை முதலில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.. பிறகு அவளிடம் விரைந்துச் சென்று அவளை லேசாக அணைத்துக் கொண்டவன், "நீ நம்ம கம்பெனிலயே ஜாயின் பண்ணிட்டனு என் கிட்ட சொல்லவே இல்ல பாரு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என்று சொன்னான் தயகர்..​

அக்னிகா தனது கழுத்தினில் தயகர் வேலைப் பார்த்து வரும் நிறுவனத்தின் அடையாள அட்டையினை அணிந்து இருந்தாள்.. அதைப் பார்த்துத் தான் கண்டுப்பிடித்து இருந்தான்..​

அப்பொழுது ஆதிதேவ் தயகரிடம், "நானும் இப்போ இங்க தான் நிக்குறேன்.." என்று சொன்னான்..​

அதைக் கேட்டிருந்த தயகரும் அசடு வழிந்து கொண்டே, "சாரி தல இவள பார்த்ததும் இவள உங்க கிட்ட அறிமுகம் படுத்தி வெக்க மறந்துட்டேன்.." என்று சொன்னான்..​

"இவ தான் அக்னிகா.. இவள பத்தி நிறைய தடவ உங்க கிட்டச் சொல்லி இருக்கேன்ல.." என்று வெட்கப்பட்டுக் கொண்டே அக்னிகாவை ஆதிக்கு அறிமுகம் செய்து வைத்தான்..​

"நீ கூட வெட்கப்படுவனு இப்போ தான் எனக்குத் தெரியும்.." என்று சொல்லி தயகரை கலாய்த்தான்..​

"காதல்ல விழுந்தா எல்லாருமே வெட்கப்பட தான் செய்வாங்க.. நீங்களும் காதல்ல விழுந்து பாருங்க அப்போ தெரியும் உங்களுக்கு" என்று சொன்னான் தயகர்..​

ஆதிதேவ் தான் காதலில் விழுவதைப் பற்றி தயகர் பேசினதைக் கேட்டதும் சான்விகா தான் அவன் மனக்கண்ணில் வந்து போனாள்..​

தயகர் அக்னிகாவை பார்த்து ஆதியை குறிப்பிட்டுக் காட்டி, "இவரு தான் நா சொன்ன ஆதிதேவ்.. எங்க டீம் லீட்.." என்று சொல்லி அறிமுகம் செய்து வைத்தான்..​

அக்னிகாவும் ஆதியை பார்த்து, "ஹாய்.." என்று சொன்னாள்..​

பதிலுக்கு ஆதியும் அக்னிகாவிடம், "ஹாய்.. ஹேப்பி பர்த்டே.." என்று சொன்னான்..​

"தேங்க்ஸ்.." என்று சொன்னாள் அக்னிகா..​

ஆதிதேவ் தயகர் பக்கம் திரும்பிப் பார்த்து அவனிடம், "ஆமா ரொம்ப சீக்கிரம் என்ன அறிமுக படுத்திட்ட போல.." என்று சொல்லி கலாய்த்தான்..​

அதைக் கேட்ட தயகரும் அசடு வழிந்து கொண்டே நின்றிருந்தான்..​

தயகர் அக்னிகாவின் பக்கம் திரும்பிப் பார்த்து, "வந்ததும் தான் வந்த உன் கூடவே அலைற நம்ம ஃப்ரண்ட் சான்விகாவையும் சேர்த்து இங்க நம்ம கம்பெனிக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்.." என்று சொன்னான்..​

அப்பொழுது அந்த இடத்துக்கு வந்த சான்விகா, "நீங்க ரெண்டுப் பேரும் இங்க இருக்கும் போது நா மட்டும் எப்டி வராமல் இருப்பேன்.." என்று சொல்லி ஆதியின் அருகினில் போய் நின்றுக் கொண்டாள்.. அவளுடன் நிவர்த்திகாவும் உடன் வந்திருந்தாள்..​

சான்விகாவும் அங்கு அந்த இடத்துக்கு வந்திருப்பாள், தாங்கள் வேலைப் பார்த்து வருகிற நிறுவனத்திலே சேர்ந்து இருப்பாள் என்பதினை தயகர் எதிர்பார்த்திருக்கவே இல்லை..​

எனவே அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து அவளிடம் சென்று, "டாலி(DOLLY) நீயும் இங்க எங்க கூட வந்து ஜாயின் பண்ணுவனு எதிர்பாக்கவே இல்ல.." என்று சொன்னான் தயகர்..​

அதைக் கேட்டிருந்த ஆதிதேவ் தயகரிடம், "என்னது டாலியா?" என்று கேட்டான்..​

"ஆமா நா இவள பாத்தப்ப டால்(DOLL) மாதிரி தான் எனக்கு தெரிஞ்சா.. அதான் இவள நா டாலினு சொல்லித் தான் கூப்பிடுவேன்.." என்று சொன்னான் தயகர்..

'இவளையாவது நம்ம தல கிட்ட முதல்லயே அறிமுகப் படுத்தி வெக்கலாம்' என்று நினைத்துக் கொண்ட தயகர் ஆதியின் பக்கம் திரும்பி சான்விகாவை குறிப்பிட்டுக் காட்டி, "இவ தான்.." என்று ஆரம்பித்துத் தான் இருப்பான்..​

அதற்குள் ஆதிதேவ், "தெரியும் இவங்க தான் சான்விகா.." என்று சொன்னான்..​

"உங்களுக்கு எப்டி இவள தெரியும் தல?" என்று கேட்டான் தயகர்..​

"இவங்க நேத்தே நம்ம டீம்ல ஜாயின் பண்ணிட்டாங்க.. அப்டி தான் இவங்கள தெரியும்.." என்று சொன்னான் ஆதிதேவ்..​

"அப்போ நீங்க ரெண்டுப் பேரும் ஏற்கனவே அறிமுகம் ஆயிட்டீங்களா.. சான்விகா நம்ம டீம்னா அப்போ அக்னிகா நம்ம டீம்ல ஒர்க் பண்ணலயா?" என்று கேட்டான் தயகர்..​

தயகர் கேட்டிருந்த அந்தக் கேள்விக்குப் பதிலாக அக்னிகா, "இல்ல.. ஒரே ப்ராஜெக்ட்ல ஆனா வேற டீம்ல ஒர்க் பண்ணப் போறேன்.." என்று சொன்னாள்..​

தயகர் ஆதியிடம், "அப்போ நா சான்விகாவையும் உங்க கிட்ட சரியா அறிமுகப்படுத்தி வெக்கலையா.." என்று சொன்னவன் சான்விகாவின் அருகினில் நின்றிருந்த நிவர்த்திகாவை குறிப்பிட்டுக் காட்டி, "சரி நான் இவங்களையாவது சரியா அறிமுகப்படுத்தி வெக்குறேன்.. இவங்க தான் நிவர்த்திகா.. எங்க மூணு பேருக்கும் இவங்க ஃப்ரண்ட் தான்.." என்று சொன்னான்..​

தயகர் ஆதியை குறிப்பிட்டுக் காட்டி தனது டீம் லீட் என்று பொதுவாகவே எல்லாரிடமும் சொல்லி விட்டதால் தனியாக நிவர்த்திகாவிடம் மட்டும் ஆதியை அறிமுகப்படுத்துகிற தேவை இருக்கவில்லை..​

"நா, அக்னிகா, நிவர்த்திகா மூணு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா தான் வளர்ந்தோம்.. எங்க மூலமா தான் இவனுக்கு அவள தெரியும்.." என்று ஆதியிடம் சொன்னாள் சான்விகா..​

தயகர் நிவர்த்திகாவை அறிமுகம் செய்து வைத்ததும் ஆதிதேவ் நிவர்த்திகாவை பார்த்து, "ஹாய்.." என்று சொன்னான்..​

நிவர்த்திகாவும் பதிலுக்கு, "ஹாய்.." என்று சொன்னாள்..​

தயகர், "சரி எல்லாரும் அறிமுகம் ஆயாச்சு.. எனக்கு பசிக்குது.. வாங்க சாப்பிட போகலாம்.." என்று சொல்லி அங்கு வந்திருந்த அனைவரையும் இருக்கைகளில் அமரச் சொன்னான்..​

அனைவரும் இருக்கைகளில் போய் அமர்ந்துக் கொண்டனர்.. ஆதியும், சான்விகாவும் எதிரெதிரில் அமர்ந்திருந்தனர்..​

அப்பொழுதுத் தான் ஆதிதேவ் சான்விகாவின் முகத்தினை கவனித்துப் பார்த்தான்.. காலையில் அவளை பார்த்ததுக்கும், இப்பொழுது அவளை பார்ப்பதுக்கும் அவள் முகத்தினில் தெரிந்திருந்த வித்தியாசத்தினை கண்டு கொண்டான்.. காலையில் வெறுமையாக இருந்த அவளது நெற்றியில் இப்பொழுது பார்க்கையில் பொட்டு வைக்கப் பட்டிருந்தது..​

அவள் அணிந்திருந்த புடவையின் நிறத்திலேயே நெற்றியில் பொட்டையும் வைத்திருந்தாள்..​

அமர்ந்திருந்தே உணவகத்தை சுற்றிலும் வேடிக்கைப் பார்த்திருந்த சான்விகா திடீரென ஆதியை பார்த்தவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்ததை கண்டுக் கொண்டாள்..​

ஆதியிடம் என்னவென்று செய்கை செய்து காட்டிக் கேட்டாள் சான்விகா..​

அவள் கேட்ட அந்தக் கேள்விக்குப் பதிலாக ஆதிதேவ் தனது நெற்றிக்கு நடுவில் ஒரு விரலினை வைத்துக் காட்டி, சூப்பர் என்பதை செய்கை செய்து காட்டிச் சொன்னான்..​

தயகரும், அக்னிகாவும் அருகருகே அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்ததினால் இவர்கள் இருவரின் செய்கை மொழி பாஷையை கவனித்திருக்கவில்லை..​

ஆனால் சான்விகாவின் அருகினில் அமர்ந்திருந்த நிவர்த்திகா இவர்கள் இருவரின் செய்கை மொழி பாஷையை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்..​

நிவர்த்திகா தங்களை யாருமே கவனிக்காத பொழுதினில், யாருக்குமே கேட்காதபடிக்கு சான்விகாவின் காதினில், "ஆமா இங்க ஒரு காதல் படம் தான் ஓடிட்டு இருக்குனு நினைச்சேன்.. ஆனா இங்க மொத்தம் ரெண்டு காதல் படம் ஓடிட்டு இருக்கு.." என்று சொல்லி கலாய்த்தாள்..​

நிவர்த்திகாவை முறைத்துப் பார்த்த சான்விகா, "அப்டிலாம் எதுவும் இல்ல.. நீயா ஒளராத.." என்று சொன்னாள்..​

ஆதிதேவ் சொன்னான் என்று தான் சான்விகா அக்னிகாவிடம் பொட்டினை வாங்கி நெற்றியில் வைத்திருந்தாள்..​

சொல்லப்பட்ட உணவு வகைகள் வந்ததும் அனைவரும் சாப்பிட்டு முடித்து அலுவலகத்துக்குச் சென்றனர்.. நிவர்த்திகா மட்டும் சாப்பிட்டு முடித்ததும் அனைவரிடமும் விடைப் பெற்றுச் சென்றுவிட்டாள்..​

ஆதிதேவ், சான்விகா, தயகர், அக்னிகா என நால்வரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் திரையரங்கம், உணவகம், மால் என்று போய் சுற்றி வந்தனர்..

ஆதியும், சான்விகாவும் ஒன்றாகத் தான் பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்தனர், அலுவலகத்தை விட்டுச் சென்றனர்..

அவர்களுக்குள் அழகான நட்பு உருவாகி இருந்தது..​

 
Status
Not open for further replies.
Top