எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கேது? - கதை திரி

Status
Not open for further replies.

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்தி ஏழாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 28

இறுதி அத்தியாயம்

சாதுரியன் மற்றும் அகஸ்தியாவின் குடும்பத்தார்கள் கூடியிருந்த இடம் அவர்களது,’ஜா’ பதிப்பகத்தில் தான்!

அங்கே, அவர்களிருவருடைய நண்பர்களும் கூட வந்திருந்தார்கள்.

அதில், கனிஷாவும், வராகனும், சாதுரியன் மற்றும் அகஸ்தியாவைக் கிண்டல் செய்து கொண்டிருக்க, ஹரித் மற்றும் ஜெய்சிகாவோ, அவர்களைப் பற்றி தன்மயாவிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

குணசுந்தரிக்கும், பவதாரிணிக்கும் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தால், அவர்களோ தங்களது கணவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய வேலை மற்றும் இதர தகவல்களைப் பகிர்ந்து விட்டு, விஷயத்திற்கு வரும் விதமாக,”இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை எல்லாம் நம்மகிட்ட சொல்லியாச்சு. இப்போ அவங்களைப் பத்தி நாம‌ பேசிக்கலாமா?” என்று அவர்களிடம் வினவினார் உலகேசன்.

“ம்ம். அதுக்குத் தானே வந்திருக்கோம்” என்றார் யுதிர்ஷ்டன்.

இதற்கிடையில், ‘என்ன நடக்கப் போகுதோ?!’ என்று தங்களது ஆர்வத்தையும், பதட்டத்தையும் வெளிக்காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் சாதுரியன் மற்றும் அகஸ்தியா.

“இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் சின்னப் பிள்ளைங்க இல்லை. நல்லது, கெட்டதைச் சொல்லித் தான் வளர்த்து இருக்கோம். என்ன தான், அப்படி வளர்ந்தாலும், அவங்க தங்களோட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு முக்கியமான விஷயத்துக்கும் நம்மகிட்ட தான் வந்து சஜஷன்ஸ் கேட்பாங்க. இதிலேயும் அப்படியே தான் நடந்திருக்காங்க! இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அகஸ்தியாவின் பெற்றோர், சாதுரியனின் தாய் மற்றும் தந்தையிடம் கேட்டனர்.

“அதனால் தான் அவங்களோட காதலை நம்மகிட்ட வந்து சொல்லி அட்வைஸ் கேட்டுட்டு அப்பறமாக ஒருத்தருக்கொருத்தர் பேசி இருக்காங்க! நாங்க தியா கிட்டே விசாரிச்ச வரையில் உங்கப் பையன் சாதுரியன் மேலே அவளுக்கு நம்பிக்கையும், காதலும் நிறையவே இருக்குன்னு எங்களுக்குப் புரிஞ்சுது” என அவ்வாறு குணசுந்தரி கூறவும்,

அகஸ்தியாவின் விழிகளோ தன்னவன் மீது படிந்தது.

அதில், தனது வெண்பற்கள் தெரிய அழகானதொரு புன்னகையை உதிர்த்தான் சாதுரியன்.

அதேபோலவே, அவனைப் பெருமிதத்துடன் பார்த்தனர் அவனது குடும்பத்தார்.

“எங்கப் பையனும் அதே விஷயங்களை எங்ககிட்ட சொல்லி இருக்கான் ங்க. அது மட்டுமில்லாமல், உங்கப் பொண்ணைப் பத்தி தனுவும் நல்லவிதமாக சொல்லி இருக்கா! அதனால், எங்க எல்லாருக்குமே அகஸ்தியா மேலேயும், உங்க மேலேயும் நல்ல அபிப்பிராயம் வந்திருச்சு” என்று கூறினார் பவதாரிணி.

“இதைப் பார்த்தால், சாதுவுக்குப் பொண்ணுப் பார்க்கிற ஃபங்க்ஷன் நடக்கிற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது” என்றாள் கனிஷா.

“எங்களுக்கும் அதே தான் தோனுது ப்பா!” என்று இளையவர்கள் அனைவரும் கோரஸாக உரைத்தனர்.

“எங்க தியா எப்படி இவ்வளவு சீக்கிரம் லவ்வில் விழுந்தான்னு இப்போ வரைக்கும் எங்களுக்கு ஷாக் ஆகத் தான் இருக்கு!” என்று அவர்களிடம் சொன்னான் ஹரித்.

“என் அண்ணா கூட ஒரே வீட்டில் இருந்த எனக்கே அப்படித்தான் இருந்துச்சு. உங்களுக்கு அப்படி இல்லைன்னா தான் ஆச்சரியம்” என்றாள் தன்மயா.

“எங்களுக்கு அப்படியில்லை” என்று நண்பன் தங்களிடம் பரிமாறிக் கொண்டதை எல்லாம் அகஸ்தியாவின் தோழமைகளிடம் பகிர்ந்து கொண்டான் வராகன்.

“ஓஹோ! இவ்வளவு நடந்திருக்கா? நாங்க அகஸ்தியா சொன்னதை மட்டும் தான் கேட்டிருந்தோம். இப்போ நீங்க சொல்றதைக் கேட்டதுக்கு அப்பறம் இன்னும் நல்லாவே புரியுது!” என்று கூறி விட்டார்கள் ஹரித் மற்றும் ஜெய்சிகா.

தங்களது விஷயம் இவ்வளவு தூரம் வந்து, குடும்பம் மற்றும் நண்பர்கள் சந்திப்பிலும் கூட, நாகரீகத்தைக் கடைப்பிடித்து, இருவரும் அருகருகே அமர்ந்திருக்காமல், எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு தங்களது காதல் பார்வையை வஞ்சனை இல்லாமல் பரிமாறிக் கொண்டார்கள் சாதுரியன் மற்றும் அகஸ்தியா.

“பதுவுக்குப் பொண்ணுப் பார்த்தாச்சு ங்க. அவனுக்குக் கூடிய சீக்கிரத்தில் நிச்சயத்தை நடத்தப் போறோம். இவனோட கல்யாணத்துக்குப் பிறகு, இவங்களோட கல்யாணத்தைப் பத்திப் பேசலாமா?” என்று வினவினார் யுதிர்ஷ்டன்.

“சரிங்க. நாங்களும் எங்கப் பொண்ணோட கல்யாணத்தை உடனே நடத்தனும்னு நினைக்கலை. எல்லாத்தையும் பொறுமையாகவே நடத்துவோம். முதல்ல உங்க மூத்தப் பையனோட கல்யாணத்தை முடிப்போம்” என்று அவரிடம் கூறினார் உலகேசன்.

அந்த தருணத்தில்,”இவங்க எங்களுக்குப் பெரிய பல்பு கொடுத்துட்டாங்க ப்பா!” என்று அவரிடம் முறையிட்டனர் அகஸ்தியாவின் தோழமைகள்.

“அப்படியா? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அதைவிட பெருசா பல்பு கொடுத்தோம்! அதைப் பத்தி சொல்லுவோமா ங்க?” எனக் குணசுந்தரியைப் பார்த்து அர்த்தப் புன்னகை புரிந்தவாறே அவரிடம் வினவினார் பவதாரிணி.

அதைப் புரிந்து கொண்டவரோ,”சொல்லலாம் ங்க!” எனக் கூறி விட்டுத் தாங்கள் இருவரும்,’ஜா’ பதிப்பகத்தில் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கூட்டத்தின் போது பேசிக் கொண்டவற்றை எல்லாம் பொதுவில் வெளியிட்டார்கள்.

உடனே அந்த அறையே அதிரும் படியான சிரிப்பலை பரவியது.

அதைக் கண்ட சாதுரியன் மற்றும் அகஸ்தியாவும் அசடு வழிந்தபடியே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்போ அன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சா? வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் தெரியுமா ம்மா?” என்றான் அவரது இரண்டாவது மகன்.

பவதாரிணி,“ஆமாம் டா. உன்னையும், தனுவையும் கலாய்ச்சுட்டு இருந்தோம்!” என்று கூறிச் சிரிக்கவும்,

அவருடன் இணைந்து தானும் புன்னகைத்தார் குணசுந்தரி.

“அப்போ நீங்களும், அப்பாவும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்களா?” எனத் தன் பெற்றோரிடம் கேட்டுச் சினுங்கினாள் அகஸ்தியா.

“யெஸ், அஃப்கோர்ஸ்!” என்றார் உலகேசன்.

“இதில் என்ன ஒரு பியூட்டி தெரியுமா? அன்னைக்கு நாங்க இதைப் பேசிட்டு இருந்தப்போ சீதாதேவியும், ஜமுனாவும் கூட எங்களோட இருந்தாங்க” என்று கூறி அவர்களுக்குக் கடுப்பை அதிகமாக்கினர் குணசுந்தரி மற்றும் பவதாரிணி.

“ஹைய்யோ! என்னடா இவங்க நம்மளை விட மாஸ்டர் பிளான் போட்டிருக்காங்க! இதில் நம்ம பேரன்ட்ஸையும் கூட்டு சேர்ந்திருக்காங்க பாரு! இதெல்லாம் நம்மளோட அம்மாக்கள் சொல்லவே இல்லை பாரேன் டா!” என்று தன் நண்பனிடம் கூறிப் பொருமினாள் ஜெய்சிகா.

“ம்ஹ்ம்! அது ஒன்னு தான் குறைச்சல்! அட! எல்லாமே நமக்குத் தெரியாமலேயே நடந்திருக்கு! அதைக் கேட்டால் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிட்றாங்க!” என்று அவளிடம் சொல்லிப் புலம்பினான் ஹரித்.

“சரி, சரி. விடுங்க ப்பா. அது தான், எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சே? நீங்க ரெண்டு பேரும் வெளியே போயிட்டு வாங்க. ஆனால், ஈவ்னிங் ஆறு மணிக்குள்ளே வந்துடனும்” எனச் சாதுரியன் மற்றும் அகஸ்தியாவை, வெளியே அனுப்பி வைத்து விட்டு,

“நீங்க உங்க அப்பா, அம்மா கிட்டே கால் செஞ்சு இதையெல்லாம் ஷேர் பண்ணுங்க” என்றவுடன்,

அவர்கள் சென்றதும், தன்மயா எழுதும் கதைகள், பவதாரிணியின் கதை எழுதும் ஆசை மற்றும் அங்கேயிருந்த அனைவருடைய வாழ்விலிருந்த தேடல்களைப் பற்றிய உரையாடல்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ஜெய்சிகா, ஹரித், கனிஷா மற்றும் வராகனோ, தங்களது பெற்றோரிடம் பேசி‌ விட, விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தாங்களும் மகிழ்ச்சி அடைந்து தங்களது வாழ்த்தை தெரிவிக்கச் சொல்லி விட்டார்கள்.

இதே நேரத்தில்,”கார் வேண்டாம். நடந்து போகலாம் சாது” என்றுரைத்தாள் அகஸ்தியா.

அவளது கோரிக்கைக்கு இணங்கி, அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான் சாதுரியன்.

சற்று இடைவெளி விட்டு கால்களை எட்டிப் போட்டுக் கொண்டிருந்த, அவ்விருவரும் ஒரே சமயத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள,

அவனோ,”உங்க கையைப் பிடிச்சுட்டு நடக்கும்னு எனக்கு ஆசையாக இருக்கு!” என்று அவனிடம் வினவினாள் அகஸ்தியா.

அதைக் கேட்டதுமே, தன்னவளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைத்தவனோ, அவளது தளிர் விரல்களைத் தனது கரத்தில் பற்றிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டான் சாதுரியன்.

அதில் வெளிப்பட்ட கனிவை உள்ளூர அனுபவித்தவாறே நடந்தப் பெண்ணவளோ,

“நாம அவ்வளவாக நேரில் பார்த்துக்கிட்டதே இல்லை. ஆனாலும், இப்போ லவ் பண்ணிக் கல்யாணம் செய்துக்கப் போறோம்! இந்த ஃபீல் நல்லா இருக்குல்ல?” என்று அவனிடம் கேட்டாள்.

“யெஸ் ம்மா. எனக்குமே இது பிடிச்சிருக்கு! அதுவும் நம்ம லவ்வை வீட்டாளுங்க ஒத்துக்கிட்டதை நினைச்சா இன்னும் சந்தோஷமாக இருக்கு ம்மா” என்றான் சாதுரியன்.

“ஆமாங்க. நமக்கு நல்லதை மட்டுமே யோசிச்சு, நாம எதைப் பண்ணாலும் அதுக்குச் சப்போர்ட் செய்ற ஃபேமிலியையும், ஃப்ரண்ட்ஸூம் கிடைச்சதுக்கு அவங்களை நினைச்சு நாம தான், பெருமையும், கர்வமும் படனும்!” என்று அவனிடம் மனதார உரைத்தாள்.

இப்படியாகப் பேசிக் கொண்டே தங்களது நடையைத் தொடர்ந்தனர் சாதுரியன் மற்றும் அகஸ்தியா.

அவ்விருவருடைய இந்த நடை வேண்டுமானால் முற்றுப் பெறலாம்!

ஆனால், அவர்களுடைய அன்பு உறவுகளுடன், காதல், மகிழ்ச்சி மற்றும் திருப்தி நிறைந்த அவர்களது வாழ்க்கைப் பயணம் எப்போதும் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர்களை வாழ்த்தி விட்டு நாம் அனைவரும் விடைபெறுவோமாக!

- முற்றும்

ஒரு ஃபீல் குட் ஸ்டோரி எழுதனும்னு தான் நினைச்சு இந்தக் கதையை எழுதி முடிச்சிருக்கேன். அப்படி இருந்துச்சான்னு கதையைப் படிச்சு முடிச்சு நீங்க தான் சொல்லனும். உங்களோட கமெண்ட்ஸையும், ரிவ்யூஸையும் என்கிட்ட ஷேர் செய்துக்கோங்க.


இன்னும் எபிலாக் மட்டும் இருக்கு அதையும் சேர்த்துப் போடலாம்னு இருந்தேன். ஆனால், இன்னைக்கும், நாளைக்கும் விட்டுட்டு, புதன்கிழமை அதைப் போஸ்ட் பண்றேன் டியர்ஸ் 😍😍😍

 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்தி எட்டாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
எபிலாக் :

அந்தக் கூட்டம் நிரம்பி வழிந்த மண்டபத்தை வந்து அடைந்தார்கள் குணசுந்தரி, உலகேசன் மற்றும் அகஸ்தியா.

சாதுரியன் மற்றும் தன்மயாவின் தமையன் பதுமனுடைய நிச்சயத்திற்குத் தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆம். அகஸ்தியாவின் பெற்றோருடன் அனைவரும் பேசி விட்டுச் சென்ற பிறகு, தாங்கள் கலந்துரையாடி வைத்ததைப் போல, பதுமனின் நிச்சயதார்த்த வேலைகளைச் செய்து முடித்து விட்டார்கள் இரு வீட்டாரும்.

அதை அகஸ்தியா மற்றும் அவளது பெற்றோருக்கும், அவளது மற்ற இரண்டு நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களை அந்த வைபவத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள் சாதுரியனும், அவனது குடும்பத்தாரும்.

அந்த மண்டபத்தின் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்த தன்மயாவோ, தனது குடும்பத்துடன் வந்திருந்த அகஸ்தியா மற்றும் அவளது நண்பர்களான ஜெய்சிகா மற்றும் ஹரித்தையும் பார்த்தவுடனேயே,”வாங்க ம்மா, ப்பா! ஹாய்!” என அவர்களிடம் இன்முகத்துடன் பேச்சுக் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

தனது தமையனின் நிச்சயம் என்பதால், அங்கே மண்டபத்திற்குள் பம்பரமாய்ச் சுழன்று வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான் சாதுரியன்.

அப்போது தான், பதுமனின் அறையிலிருந்து வெளியேறி வந்தவனோ, இவர்களைக் கண்டதுமே,”வாங்க! வாங்க! உங்களைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம்” என அவர்களை இருக்கைகளில் அமர வைத்தான்.

“பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டீங்களா ப்பா?” என்றார் குணசுந்தரி.

“வந்தாச்சு அத்தை!” என்று அவருக்குப் பதிலளித்து விட்டு,”உங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்” என்று கூறி விட்டுச் சென்றவனோ, சிறிது நேரம் கழித்து, அவர்களுக்கான குளிர்பானத்துடன் வந்து சேர்ந்தான் சாதுரியன்.

அந்த சமயத்தில், அவர்களிடம் வந்த கனிஷாவும், வராகனும்,”ஹாய்!” என்று உற்சாகத்துடன் பேசினார்கள்.

“உன்னோட ஹோட்டலில் இருந்து தானே ம்மா சாப்பாடு சொல்லி இருக்காங்க?” என்று அவளிடம் கேட்டார் உலகேசன்.

“ஆமாம் அங்கிள்” என்று அவரிடம் கூறினாள் கனிஷா.

“அப்போ நாங்க சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சிருவோம்!” என்று சொன்னார் குணசுந்தரி.

ஹரித்,“நானும், வராகனும் போய் பதுமன் சார் கூட இருக்கோம். நீயும், கனிஷாவும், வாசலுக்குப் போய்த் தன்மயா கூட இருங்க”

அவன் அவ்வாறு கூறியதும், அந்தந்த வேலையைச் செய்யச் சென்று விட்டனர் அனைவரும்.

“நீயும், சாதுவும் போய் மத்த அரேன்ட்ஜ்மெண்ட்ஸைப் பாருங்க” எனக் கூறி அகஸ்தியாவின் பெற்றோர் அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அவளுடன் சேர்ந்து போன சாதுரியனோ, ஞாபகம் வந்தவனாகத் தனது அன்னை, தந்தையிடம் அகஸ்தியாவைக் கூட்டிச் சென்று இவர்களுடைய வருகையைப் பற்றித் தெரிவித்தான்.

“வாடா ம்மா? எப்படி இருக்க?” என்று அவளிடம் வினவினார் யுதிர்ஷ்டன்.

“நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?” என அவர்களையும் விசாரித்துக் கொண்டாள் அகஸ்தியா.

சாதுரியனிடம்,“அவங்க வந்தவுடனேயே சொல்ல மாட்டியா டா?” என்று சொல்லி அவனை மெல்லக் கடித்து கொண்டவர்களோ, அவர்களிடம் பேச சென்று விட்டு,

அவர்களைப் பெண் வீட்டாரிடமும் அறிமுகப்படுத்தியும் வைத்தார்கள் யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணி.

“ம்ஹ்ம்! நாம கொஞ்ச நேரம் பேசிட்டு அப்பறம் வேலையைப் பார்ப்போமா?” என்று கூறிக் கொண்டே, தன்னவளுடைய புடவை உடுத்திய வதனத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான் ஆடவன்.

அதில் அவளது கன்னங்களும், காது மடல்களும் சிவப்பேறி போய் விட,”சாது!” என மெல்லிய குரலில் அவனிடம் சினுங்கினாள் அகஸ்தியா.

“சொல்லு ம்மா?” என்று அவளிடம் வினவினான் சாதுரியன்.

“என்னை வெட்கப்பட வைக்காதீங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அண்ணாவோட நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகுது. முதல்ல அதைப் பார்க்கலாம்! வாங்க” எனத் தன் மேல் பதித்தப் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் இருந்தவனுடைய கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவர்களது ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்ததுமே,”அந்தப் பையன் மாப்பிள்ளையோட தம்பி. அது அவன் கட்டிக்கப் போறப் பொண்ணு!” என்று அந்த விழாவில் இருந்த அனைவரும் சரியாக கணித்து விட்டு அதை தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அதன் பின்னர், தங்களுடைய நிச்சயத்தார்த்த மோதிரங்களை மாற்றிக் கொள்வதற்காக, பதுமனும், ரிதிமாவும், மேடையேறியதைக் கண்டதும், அனைவரும் கீழே வந்து ஆஜர் ஆயினர்.

“இந்தாங்க” எனத் தங்கள் கரங்களில் கொடுத்த கணையாழிகளை தமது இணையின் மோதிர விரல்களில் மாட்டி விட்டார்கள் இருவரும்.

பதுமன்,“கங்கிராட்ஸ்!” எனவும்,

“தாங்க்ஸ் ங்க‌. உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்!” என்று கூறிப் புன்னகைத்தாள் ரிதிமா.

அந்த வைபவம் நடந்து முடிந்ததும், அவர்கள் இருவருக்கும் மற்ற அனைவரும் வாழ்த்துச் சொல்லியதும், விருந்தாளிகளை உணவருந்த அனுப்பி வைத்தனர்.

“நீங்களும், தனுவும் எங்க கூட வந்து சாப்பிடுங்க” என அவ்விருவரையும் அழைத்தாள் அகஸ்தியா.

“இல்லை ம்மா. நாங்க எல்லாரையும் கவனிச்சிட்டு லேட் ஆகத் தான் சாப்பிடுவோம். நீங்க முதல்ல போயிட்டு வாங்க” என்று அவர்களை உணவுண்ண வைத்தான் சாதுரியன்.

இப்போது புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் நேரம் வந்து விட,”எல்லாரும் குரூப் ஃபோட்டோ எடுத்துக்கலாம்!” என்று சாதுரியன் மற்றும் அவனது குடும்பம் மற்றும் அகஸ்தியா மற்றும் அவளது குடும்பம், அவர்களுடன் இணைந்து கனிஷா, வராகன், ஜெய்சிகா மற்றும் ஹரித் என மணமக்களுடன் சேர்ந்து குழுவாக நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.

அந்த மகிழ்ச்சியான தருணத்திலேயே, அகஸ்தியாவைத் தவிர, அவளது நண்பர்கள் மட்டும் மணமக்களிடம் பரிசுகளைக் கொடுத்து விட்டு அங்கேயிருந்து விடைபெற்றுக் கிளம்பிச் சென்று விட்டதும்,

அவளுடைய பெற்றோரும் கூடத், தங்கள் மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும், மாலையில் அவளைத் தங்களது வீட்டில் சேர்ப்பித்து விடுமாறும் சாதுரியனிடம் கேட்டுக் கொண்டு சென்று விட்டனர்.

“ஏன் என் கூடவே இருக்கீங்க? சாப்பிடப் போகலையா? தன்மயா பந்திக்குப் போயாச்சு பாருங்க” என்று அவனிடம் வினவினாள் அகஸ்தியா.

“நான் இப்போதைக்கு உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் ம்மா. ஏன்னா?” என்று கூறி நிறுத்தி விட்டான்.

“ஏன்னா? என்னன்னு சொல்லுங்க?” என அவள் வினவவும்,

“நீ இல்லா இடமும் எனக்கேது?” என அவளைத் திகட்டாத காதலுடன் பார்த்தவாறே மொழிந்தான் சாதுரியன்.

அதைக் கேட்டவுடனே நாணம் மேலிட அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அகஸ்தியா.

- சுபம்

இந்தக் கதையை முதலிலிருந்து இறுதி வரை வாசித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் டியர்ஸ் 😍😍😍
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த எபிலாக்கிற்கான கருத்துகளை இந்த இணைப்பிற்குள் சென்று வழங்குங்கள்...

 
Status
Not open for further replies.
Top