எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெந்தழல் நயனங்கள் -கதை திரி

Status
Not open for further replies.

NNK-28

Moderator

வணக்கம் நட்பூஸ்,

"வெந்தழல் நயனங்கள்" இது தான் நம்ம கதையோட தலைப்பு. முழுக்க முழுக்க புன்னையப் பட்ட கற்பனை கதை. கதை மாந்தர்கள் மற்றும் கதையைப் பற்றிய அறிவிப்பெல்லாம் கூடிய விரைவில் வந்து சேரும்💜 நன்றி.

 

NNK-28

Moderator

நயனம் -1

“வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன்

மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கைமுடி மேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே”

என்று சீர்காழி கோவிந்தராஜரின் கணீர் குரலுக்கு இணையாக, கண்ணை மூடிக்கொண்டு “கோளாறு திருப்பதிகத்தின்” முதல் பாடல் தொடங்கி, பதினோறாம் பாடல் வரை தனது சிம்மக் குரலில் பாடிக் கொண்டிருந்தார் மெய்யப்பன்.

வயது எழுபது இருக்கும். ஆனால் அவர் முகத்தில் இருக்கும் தேஜசே அவரை மூப்படைய விடாமல், இன்னுமும் பொலிவாக வைத்திருந்தது.

நன்றாக விடியலை தட்டிய காலைப் பொழுது அது. வீடு முழுவதும் சாம்பிராணியின் நறுமணத்தில் தான் கமழ்ந்திருந்தது. மஞ்சள் பூசிய முகத்தோடு கணவன் உச்சரித்துக் கொண்டிருந்த சிவ பாடல்களை எல்லாம் முணுமுணுத்துக் கொண்டே குளம்பியை ஆற்றிக் கொண்டிருந்தார் கோமதி. வீட்டுவேலைகளுக்கென்று ஆட்கள் இருந்தாலும் கூட காலைப் பொழுதுகளில் அவர் தான் அடுப்பை மூட்ட வேண்டும் என்ற கொள்கையை வழக்கமாகக் கடைபிடிப்பவர்.

ஆற்றி வைத்த குளம்பிகளை எல்லாம் ஒரு ட்ரேயில் அடுக்கியவர். அப்போது தான் வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டக் கையோடு சமையல் வேலைகளைப் பார்க்க வந்திருந்த, அவர்கள் வீட்டுவேலை செய்யும் பெண் கனகாவை நோக்கி ஒரு கோப்பையை நீட்டினார்.

அவரிடம் மறுப்பு சொன்னாலும் கேட்கமாட்டார் என்றறிந்திருந்த கனகா, நீட்டிய கோப்பையை பெற்றுக் கொண்டு ஒரே மடக்கில் அருந்தினாள்.

"சுட போகுது டி என்று வழக்கம்போல அமைதியான குரலில் கண்டித்த பெரியவரை நோக்கி. அத விடுங்க ம்மா... குடுங்க நான் குடுத்துட்டு வந்திடுறேன் என்று அவசரம் அவசரமாகக் கோமதியிடமிருந்து ட்ரேவை பெற்றுக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டார்".

இவ இருக்காளே... என்று தலையை உலுக்கியவர். பூக்கூடையை எடுத்துக் கொண்டு தோட்டத்திருக்கு சென்றார்.

மாடி அறைக்குச் சென்ற கனகா இத்துடன் நான்காவது முறையாகக் கதவுக்குக் கூட வலிக்காமல் அதனைத் தட்டிக் கொண்டிருந்தார். ஏன்னெனில் காலை வேளையில் உரக்க பேசுவதோ அல்லது சத்தம் போட்டு கூச்சலிடுவதோ, மெய்யப்பனுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதுவும் அவர் அந்தச் சிவனே கதியென்று கிடக்கும் காலங்களில் எல்லாம் மெல்லமாக பேசும் சத்தம் கூட அவர் செவிகளில் விழுந்து விட்டால் போதும் ருத்ரமூர்த்தியாக மாறி விடுவார்.

அதற்குப் பயந்தே மெல்லமாகக் கதவை தட்டிக் கொண்டிருந்தார் கனகா. இந்த புள்ளைக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? காப்பி வேற ஆறுது என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே கதவு திறந்தது.

தூக்கம் சொருகிய விழிகளை நன்றாக கசக்கியப் படி நின்றிருந்த பெண்ணவளை பார்த்தவுடன் தான் சற்று நிம்மதியடைந்தார்.

“என்ன கண்ணு இது, எம்புட்டு நேரமா கதவை தட்டுறேன் காலை சாப்பாடு வேற செய்யணும். இந்தா புடி குடிச்சு பார்த்துட்டு சூடு சரியா இருக்கான்னு வெரசா சொல்லு. இந்த சூடு பாப்பாவுக்கு சரியா தான் இருக்கும். உனக்கு சரியில்லைனா சொல்லு மறுபடியும் போட்டு கொண்டாந்து தாரேன்(தரேன்). ஆமா பாப்பா எங்க? தூங்கிட்டு இருந்தா எழுப்பிடுலே. ஐயா பூசை முடிச்சுட்டு வர நேரம் என்று அவர் பாட்டுக்கு கேள்வியும், பதிலுமாக பேசிக் கொண்டிருக்க”.

ஆன்ட்டி... ஆன்ட்டி ரிலாக்ஸ் என்று அவர் பேச்சை நிறுத்தியவள். இதை கொடுங்க நான் பார்த்துக்கிறேன் என்று ட்ரேவை வாங்கிக்கொண்டாள்.

“ஆத்தாடி கேப் விடாம எப்படி தான் இப்படி பேசுறீங்களோ? என்று போலியாக அவரை பார்த்து சலித்துக் கொண்டவள். அவர் முறைப்பதை கண்டு, உங்க பாப்பா குளிச்சுட்டு இருக்கா. நீங்க போங்க நான் போய் அவளுக்கு டிரஸ் மாத்தி, தலசீவி, பொட்டு வெச்சு கூட்டிட்டு வரேன் என்று அவரை மேலும் வெறுப்பேற்ற”.

அவரோ இந்தாலே லந்தா என்று அவளோடு வாய் தர்க்கம் புரிய தயாராக இருக்கும் வேளையில். கீழே மணி அடிக்கும் ஓசை கேட்டது.

ஆத்தி! ஐய்யா பூசை முடிச்சுட்டாரு போல. உன் கிட்ட பேசிட்டு இருந்ததுல பொழுது போனதே தெரில. இன்னும் சமைக்க கூட தொடங்கலையே என்று பதறியவாரே கீழே ஓடினார் அந்த வெள்ளந்தி மனிதி.

ஓடும் அவரைக் கண்டு முறுவலித்த கீர்த்தனா, அறையின் உள்ளே செல்ல. அங்கு அவள் தோழி குளித்து முடித்த கையுடன் டெனிம் நிற சட்டைக்கு ஏற்றவாறு கருப்பு நிற ஆங்கில்(ankle) ஃபிட்டை அணிந்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று சிகை அலங்காரம் மேற்கொண்டிருந்தாள்.

டீபாயில் குளம்பி கோப்பைகளை வைத்தவள். தோழியின் முன் நின்று அப்படியும், இப்படியும் அவளது தாடையை திருப்பிவிட்டு. “எந்த ஆங்கில பார்த்தாலும் நீ பாப்பா மாறி தெரிலயே டி. ச்ச இந்த உலகத்துக்கு கண் இல்ல கோபால் என்று தலையில் கை வைத்து மேல் நோக்கியவாறு சரோஜாதேவியை போலக் கூறிய கீர்த்தனாவைக் கண்டு”.

“இப்போ எதுக்கு டி இந்த அலப்பறை? என்று கண்ணாடியில் தனது விம்பத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆத்யாவோ, தனது நீல நிற விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்க மையை பூசியவாரே வினவ”

“பாப்பா... பாப்பான்னு எத்தனை பாப்பா? இங்க வந்த அன்னிலைருந்து உன் புராணம் தான் பாப்பா கேட்டுட்டு இருக்கேன். பாப்பாவுக்கு அது புடிக்காது, பாப்பாவுக்கு இது புடிக்காதுன்னு மூச்சுக்கு முந்நூறு தடவை அவங்க உன்னை பாப்பான்னு கூப்பிடும்போது ஆத்தி... கேட்டுட்டு இருக்கிற என் காது ரெண்டும் அவிஞ்சுடுச்சு டா”.

“இப்போ கூட பாரு உன்னை ஆத்யான்னு கூபிடாம பாப்பான்னு கூபிட்டுட்டு இருக்கேன் டார்ளு. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உன்னை பாப்பான்னு சொல்லுறாங்க. பீப்பா மாறி இருக்க நீ பாப்பான்னா அப்போ நாங்க எல்லாம் யாராம்? என்றுரைக்க. அதற்கு அவளோ லேசாக முறைத்து பார்த்தாள்”.

என்னடா முறைப்பு? என்ற கீர்த்தனாவை சட்டை செய்யாது தனது காபியை அருந்திக் கொண்டே. சஞ்சய் சார் கால் பண்ணாரு இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வரணுமாம். அதனால உன் டிராமாவை பார்க்க எனக்கு டைமில்ல. நான் கீழ போறேன் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. பை என்று பேச்சை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாள் ஆத்யா.

“பூஜையறைக்கு சென்றவள் கண்மூடி நின்றுவிட்டு தன் இமைகளை திறந்தபொழுது தீபாராதனை தட்டுடன் நின்றிருந்தார் மெய்யப்பன்.”

அவரை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தவள் கற்பூரத்தை கண்களில் ஒற்ற. கோமதி அவளுக்கு நெற்றியில் குங்குமத்தையும், திருநீரையும் பூசி விட்டார். அவளது கன்னத்தை தட்டியவரை நோக்கி அப்பத்தா இன்னிக்கு வரக் கொஞ்சம் நேரம் ஆகும் முழிச்சுட்டு இருக்காம ஒழுங்கா படுத்து தூங்குங்க என்றவள் மெய்யப்பனை நோக்கி தாத்தா உங்களுக்கும் தான் என்று கண்டிப்பாக கூற.

“சரி டா கண்ணு என்று அவளுக்காக கூறினர் பெரியவர்கள் இருவரும்”.

அவளுக்கு தெரியும் எப்படியும் அவளது அறிவுரையை காற்றில் தான் பறக்க விடுவார்கள் என்று இருந்தாலும் சொல்ல வேண்டியது அவளுடைய கடமை ஆகிற்றே. பெரியவர்களின் நலனில் எப்போதும் அவளுக்கு அவளுடைய தாய்,தந்தையை காட்டிலும் அதிகமான அக்கறை உண்டு.

சற்று நேரத்தில் கீர்த்தனாவும் தயாராகி கீழே வர. அதற்குள் கனகாவும் முருங்க அடை வார்த்து கூடவே சுடசுட கதம்ப சாம்பாரையும் சேர்த்து உணவு மேஜையில் அடுக்கி வைத்திருந்தார்.

சுட சுடவென்று இருந்த அந்த அடையை கீர்த்தனா உச்சுக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் வேளையில், அவர்களின் ஜூனியர் ரவியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டங்க என்று புலம்பிக் கொண்டே அழைப்பை ஏற்றவள். இதோ ஒரு 15 மினிட்ஸ்ல கிளம்பிடுவோம் என்று கூறியப் படியே அழைப்பை துண்டித்து விட்டு. டார்ளு நமக்காக வெயிட்டிங்காம் சீக்கிரம் ரெயடியாகு என்று கூறிவிட்டு. முழு அடையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்திருந்தவள் மென்றவாரே தண்ணீருடன் சேர்த்து விழுங்க.”

“பார்த்து டி... அடச்சிக்க போகுது என்று கூறிய ஆத்யாவிடமும், பொறுமையா சாப்பிடு ம்மா என்று கூறிய கோமதியையும் கண்டு. பொறுமையா வா?? லேட்டா போனா ரெண்டு காதும் கேட்காதது போல அடச்சிக்கும். சீக்கிரம் வா ஆதி என்று பொதுவாக கூறிவிட்டு பரபரப்பாக தயாராகினாள்”.

போய்ட்டு வரோம் அப்பத்தா, பை தாத்தா என்று ஆத்யா முறையாக விடைபெறும் வரைக் கூட பொறுக்காமல். எல்லாருக்கும் பை என்று தோழியை இழுத்துக் கொண்டு சென்றிருந்தாள் கீர்த்தனா.

“அப்பா மழை பேஞ்சு ஓஞ்ச மாறி இருக்கு. கொஞ்சம் நேரத்துக்குள்ள எவ்வளவு அக்கப்போரு என்று கனகா கூற”.

அதனை ஆமோதித்த கோமதி, இந்த பொண்ணு நம்ப சின்னக் குட்டி போல நல்ல துருதுருப்பு இல்லைங்க என்று மெய்யப்பனிடம் கூற. அவரோ சின்னவளை நினைத்து சிரித்துக் கொண்டே, ஆமா கோமதி என்று ஆமோதிப்பாக தலையசைத்தார்.

Cartographers என்று அழைக்கபடும் வரைபட வல்லுநர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் தலைமை தொல்பொருளியலாளர் சஞ்சய் கிருஷ்ணா.

அவர் முன்நிலையில் பாவமான முகத்துடன் இருந்தனர் ஆத்யா மற்றும் கீர்த்தனா.

அவர்களை ஒரு பார்வை பார்த்து வைத்தாரே தவிர ஒன்றும் பேசவில்லை. அவருக்கு எப்போதும் நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அதில் சிறு பிசிறு ஏற்பட்டது என்றால் கூட கோபம் வந்துவிடும். அவரது கோபத்திருக்கு அஞ்சியே பரபரத்தாள் கீர்த்தனா. இத்தனைக்கும் அவளது தூரத்து முறை சித்தப்பா தான் அவர். அந்த விடயமே அவளுக்கு இங்கு பணியாற்றும் போது தான் தெரியும்.

“விதுரன் என் மூஞ்சில என்ன படமா ஓடுது. போய் வேலையை பார்க்க சொல்லுங்க என்று அருகில் இருந்த விதுரனிடம் கூற”.

“அப்பாடா என்று பெருமூச்சுடன், அவர்களது பணியை தொடர சென்றனர். ரவி தான், தன்னை ஆசுவாசம் செய்துக் கொண்டிருந்த கீர்த்தானவை கண்டு. என்ன க்கா இன்னிக்கு உங்களுக்கு கம்மியான அர்ச்சனை தான் போல? என்று குறும்புக் கொப்பளிக்க வம்பிழுத்தான். இத்தனைக்கும் அவன் இவர்களை விட ஒரு வயது தான் இளையவன் இருந்தாலும் அக்கா என்று தான் இருவரையும் விளிப்பான்”.

அதுல உனக்கு வருத்தம் பாரு போடா அங்குட்டு என்றுக் கூறிய கீர்த்தனா, தனது பணியை நோக்க. சிரித்துக் கொண்ட ஆத்யாவோ அப்போது தான் ரவி தயார் செய்துக் கொண்டிருந்த அந்த ஆவணத்தின் முகப்பைக் கண்டாள்.

“ரவி இது என்ன டாக்குமென்ட் என்று வினவ. இது போன மாசம் கண்டுப் பிடிச்ச பானையோடுகளோட குறிப்புகள் க்கா… சப்மிட் பண்ண டீடெயில்ஸ் எல்லாம் சிஸ்டம்ல சரியா பதியலைன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. அதான் இன்னொரு காப்பியே ரீ-செக் பண்ணி அனுப்ப சொல்லிருக்காங்க என்றுக் கூற”.

“அப்படி நடக்க சான்ஸ் இல்லயே என்று யோசித்தவள். சரி நல்லா செக் பண்ணிட்டு சென்ட் பண்ணிடுங்க என்று மட்டும் கூறிவிட்டு சற்று தூரமாக இருக்கும் அந்த excavation சைட்டிருக்கு சென்றாள்”.

அங்கு ஓரமாக அமைத்திருந்த கூடாரத்தில் தான், தற்சமயம் அவர்களின் ஆராய்ச்சிகள் மூலம் சிதைந்த நிலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட “அரசு முத்திரைகள், பானையோடுகள், சதுரங்கக் காய்கள், பகடைக் காய்கள், மண் குடுவைகள், பவள மணிகள், தங்க அணிகலன்கள், மற்றும் கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள் எல்லாம் இருந்தது”.

ஸ்ட்ராடிகிராஃபிக் பகுப்பாய்வில்(Stratigraphic Analysis) இதுவரை அவர்களுக்கு கிடைத்த பொருட்கள் எல்லாம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்க கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு இருந்த பொருட்களுக்கும் அந்த வகையிலே, பழமையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

அங்கு முகத்திருக்கு முகக்கவசம், கைகளுக்கு கையுறை அணிந்து தூரிகைகளை கொண்டு ஏதோ அச்சுகளை கவனமாக சுத்தம் செய்துக் கொண்டிருந்த சமீராவை காண தான் ஆத்யா வந்திருந்தாள்.

“ஹாய் சமீ என்றுக் கூறியவளுக்கு. முகமூடியை கழட்டி விட்டு ‘ஹலோ ஆதி’ என்று புன்னகை முகமாகவே அவளை வரவேற்க”.

என்னோட கிட் நான் வைக்கிற இடத்துல இல்ல. அதான் உங்க கிட்ட கேட்க வந்தேன்.


“ஓ.. அதுவா கிளீன் பண்ணும் போது நான் தான் எடுத்து வெச்சேன் இருங்க எடுத்துட்டு வரேன் என்றவள் எழுந்து செல்ல. அவள் சுத்தம் செய்துக் கொண்டிருந்த அச்சுகளை தான் ஆத்யா நோக்கினாள்”.

அதில் அவளது மிழிகளுக்கு வாகை பூவின் பின்னே சூரியன் உதயமாவது போல் தெரிய வர.


அவளுக்கு அதனை எங்கோ பார்த்தது போன்று இருந்தது. ஆனால் அதற்கு வாய்பே கிடையாதே? ஏனெனில் அது மண்ணிலிருந்து எடுத்தே இரண்டு நாட்கள் தான் ஆகி இருக்கும். இத்தனை காலமும் அது பொக்கிஷமாக மண்ணுக்கடியில் புதைந்திருந்தது. அத்துடன் அந்த அச்சுகளை பற்றி இதுவரை குறிப்புகள் கூட ஏதும் கிடைத்திருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி அவளது மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஏதோவொன்று போல தோன்றியது என்று தான் தெரியவில்லை?

“இந்தாங்க ஆதி என்று சமீரா அவளது உடைமையை நீட்டும் வரை, அவள் தனது நீல நிற விழிகளால் அவளது பார்வையை அதனை விட்டு இம்மியளவும் திருப்பவில்லை. ஆதி என்று சமீரா மீண்டும் அழைக்க. அவள் நீட்டியவற்றை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் ஆத்யா”.

உன் நீல நிற நயனங்களால் என்னை மீண்டும் உயிர்பித்து விடு யுவராணியே!!

 

NNK-28

Moderator

நயனம்-2


“ஆட்சிமுறையில் தவறு நடந்திருந்தால் அரசராக இல்லை... இல்லை... மக்களை காக்கும் தலைவனாக முன்னிருந்து, குற்றம் புரிந்தவருக்கு இரக்கமின்றி கொடுந்தண்டனையை அளிக்க வேண்டும் என்பது தானே நம் மூதாதையர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தவை? ஒழுக்கம் அறிந்து மக்களின் துயரை போக்குவதற்க்கு அது தானே சிறந்த வழி? தண்டனைகள் கொடூரமாக இருந்தால் தானே குற்றங்கள் குறையும்? அப்படி இருக்கையில் என் தந்தை நின் தந்தைக்கு கொடுத்த தண்டனை சரி தானே? கூறுங்கள் வீரரே சரி தானே? என்று ஆக்ரோஷமாக அந்த பழுப்பு நிறமுடைய விழிகளில் அனலை கக்கிய படி அவள் வினவ. கூனல் விழுந்தது போல பேதை முன்னே கூனிக் கூறுகியிருந்தான் அவன்”.

“அக வாழ்வின் சாராம்சமே உண்மை, நம்பிக்கை, அன்பு போன்ற பண்புகளினால் நிறைந்து வாழும் வாழ்க்கையில் தான் உயர்ந்துள்ளது. ஆனால் தாங்கள் இதில் ஒன்றைக் கூட கடைபிடிக்காமல். என்னையும் உங்களின் மாயைக்குள் சிக்க வைத்து, இந்த கொடும் பாவத்தையும் சுமக்கும் படி செய்து விட்டீரே என்று கதறினாள்”.

“ஐயோ! அவளது நிலைக்கு நானும் காரணமாகிவிட்டேனே. இந்த பாவத்தை வாழ்நாள் முழுவதும் எப்படி சுமப்பேன்? என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை அவன் ஆறுதல் படுத்தவில்லை மாறாக தலைக் கவிழ்ந்த படி தான் அவள் முன்நிலையில் மண்டியிட்டிருந்தான். அது பெண்ணவளிடம் பாவ மன்னிப்பு வேண்டுவது போல் இருந்தது”.

விழிகளை நனைத்த கண்ணீரை அழுந்த துடைத்த காரிகையவளோ. ஒரு முடிவெடுத்தவளாக, அவனது இடையில் சொருகி இருந்த வாளை கண நேரத்தில் உருவி விட்டு.

“இந்த உயிர் இதற்கு மேல் வாழ தகுதியற்றது. அறம் தவறிய உமக்கு என் மரணம் தான் வீரரே சிறந்த பரிசு என்று கூறிக் கொண்டே தன் வயிற்றில் ஓங்கி பாய்ச்சியிருந்தாள்”.

இதழா... என்று அலறியடித்துக் கொண்டு எழுந்தவனுக்கு குப்பென்று அந்த குளிரிலும் வியர்த்திருந்தது.

இது அவன் முதல்முறை காணும் கனவல்ல. பல முறைகள் அவனை வாட்டி வதைத்து, வதைத்துக் கொண்டே இருக்கும் கனவு தான்.


ஆனால், ஒவ்வொரு முறையும் அவனது உடலை கூறு போடும் வலியை புதிதாக காண்பிப்பது போல் உணர்த்துவது தான் இந்த கனவின் கூடுதல் சிறப்பு.

படுக்கையை விட்டு எழுந்தவன் தன்னை சுத்த படுத்திவிட்டு. ஒரு கோப்பை சூடான தேநீருடன் ஜன்னலினூடே தெரிந்துக் கொண்டிருந்த அந்த பனிப்பொழிவுகளை தான் வெறித்துக் கொண்டிருந்தான்.


உள்ளிருந்து பார்க்கும் பொழுது இரசிக்க வைக்கும் இந்த பனிப்பொழிவுகள் தான், வெளியே உடலை உறைய வைத்து, பின் உயிரை குடிக்கும் அளவு ஆக்ரோஷமானது.

இந்த பனியை போன்று தான் நம் வாழ்வில் சந்திக்கும் மக்களும். உள்ளே ஒரு முகமும், வெளியே ஒரு முகத்துடனும் தான் நம் முன்னே வளம் வந்துக் கொண்டிருக்கின்றனர். தீர விசாரிக்கமால் செவியில் விழுந்த செய்தியை மட்டுமே பற்றிக் கொண்டு அன்று அவன் செய்த செயல்கள் தான் இன்று வரை அவனுக்கு கர்ம வினையாக கனவிலும் வந்து பாடம் புகட்டிக் கொண்டிருக்கின்றது.

ஜன்னலினூடே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு இன்றுவரை பிடிப்படாமல் இருப்பது அவனது தூக்கத்தை பறிக்கும் அந்த சொப்பனமும், அதில் வரும் காரிகையும் தான். இன்றுவரை அவனுக்கு புரியாத புதிராக இருப்பதும் அது மட்டுமே. அவள் உருவம் தெரியவில்லை ஆனால் அவள் இறுதியாக கூறிய வரிகள் மட்டும் காலம் கடந்தும் நினைவில் இருந்தது.

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் அன்றைய தினத்தில் அவனுடைய நிம்மதி பரிபோகிவிடும் என்றுணர்ந்தவன். எப்போதும் போல அமைதியை வேண்டி தியானத்திருக்கு சென்றிருந்தான்.

அவன் உதய்கிரண். வயது முப்பதுக்கு மேல் இருக்கும். உளவியலாளர் மற்றும் கைத் தேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட்(Hypnotherapist). அவனை அனைவரும் டாக்டர் ஹீலர்(healer) என்று தான் அழைப்பார்கள். ஏன்னெனில் அவனிடம் சிகிச்சைக்கு வரும் முக்கால்வாசி நபர்களையும் ஒரே செஷனில் குணமடைய வைத்து விட்டு, நல்ல மன ஆரோக்கியத்துடன் தான் வழியனுப்பி வைப்பான்.

மற்றவர்களை குணப்படுத்தும் குணாளன், எப்போது தன்னை வாட்டும் இந்த கனவை குணப்படுத்த போகின்றானோ? காலம் தான் அதற்கான பதிலைக் கூற வேண்டும்.

குளித்து முடித்துவிட்டு, குளிருக்கு இதமான ஆடைகளை உடுத்தியவன். தனது காரை எடுத்துக் கொண்டு கனடாவின் ‘ஒட்டாவா’ நகரில் அமைந்திருந்த அந்த புகழ்மிக்க கல்லூரிக்கு தான் சென்றுக் கொண்டிருந்தான்.

அவன் வருவதற்க்கு முன்பே அந்த அரங்கத்தில் அவன் சொற்பொழிவை கேட்கும் ஆர்வத்தில் தான் அனைவரும் குழுமியிருந்தனர். அவன் அங்கு நுழைந்த போது. பலத்த கரகோஷம் எழுந்தது.

நவி மிஸ்டர் ‘சார்ம்’ வந்துட்டாரு என்று அவிரா கூற. அதற்கு அவளை முறைத்து பார்த்தாள் நவ்யா.

“சரி சரி முறைச்சு பார்க்காத, மூஞ்சு ரொம்ப கேவலமா இருக்கு என்று தோழியை சமாதானப் படுத்த. அதற்குள், நிமிர்ந்த நடையுடன் மேடை மீது ஏறியவன் ஒலிவாங்கியை சரி செய்துவிட்டு தனது மனோகர புன்னகையால், நோக்குநிலை திட்டத்தை(orientation program) தொடங்கி வைத்தான்”.

“ஹலோ எவ்ரி ஒன், தாங்க்ஸ் ஃபார் ஜாயினிங் என்று ஆரம்பித்தவன் மெல்ல மெல்ல மன ஆரோக்கியத்தின் மகத்துவத்தை பற்றி அங்குள்ளவர்களிடம் அழகிய உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் தெளிவுப்படுத்திக் கொண்டிருக்க. அவன் வந்ததிலிருந்து அவனது ஒவ்வொரு செய்கைகளையும், புருவத்தை ஏற்றி இருக்கும் பொழுதெல்லாம் அவன் புரியும் பாவத்தையும் தான் படம்பிடித்துக் கொண்டிருந்தாள் நவ்யா. இருபத்தாறு வயது மங்கை. மனநல படிப்பை முடித்துவிட்டு. இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி ஒன்றிருக்காக வந்திருக்கும் பெண். தற்போது அவனுடனும் தனது தோழி அவிராவுடனும் சேர்ந்து தான் பணியாற்றிக் கொண்டு வருகிறாள்”.

“நவி... போதும் சைட் அடிச்சது. டேக் டவுன் ஹிஸ் ஸ்பீச் என்று அவிரா கூறியவுடன் தான் ஏதோ மாயத்திலிருந்து விடுப்பட்டது போல் அவனிடமிருந்து பார்வையை திருப்பிவிட்டு பேனாவை எடுத்துக் கொண்டு அவன் கூறுவதை குறிக்க தொடங்கினாள்”.

இன்னிக்கு உங்க கிட்ட ஷேர் பண்ண நினைச்ச டாபிக் என்னதுன்னா “சக்ராஸ்”.

“மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்புரா, அனாஹதா, விசுத்தா, அஜ்னா, சஹஸ்ரரா இப்படி ஏழு சக்கரங்கள் நம்ம உடம்புல இருக்கு. இதோட பர்ப்பஸே ஹீலிங் அண்ட் எனர்ஜி மேக்கிங் தான். தலை பகுதியில் தொடங்கி நம்முடைய தொப்புளுக்கு கீழ், அதாவது மூலாதாரம் வரை இந்த சக்கரங்கள் நேர்கோட்டில் இருக்கும். ஒவ்வொரு சக்கரங்களும் ஒவ்வொரு படிநிலையை குறிக்குது. ஒவ்வொரு சக்கரங்களுக்கும் ஒவ்வொரு நிறங்கள் உண்டு. ஒவ்வொரு சக்கரங்களின் நிலையும் நம்ம வாழ்வியலுக்கு தேவையானது எல்லாம் நம்ம கிட்டடையே இருக்குன்னு இந்த உலகத்துக்கு சொல்லுது”.

“சில சக்கரங்கள் நம்ம பிறந்த முதல் நமக்கு ஆறு வயசு இருக்கும் வரை, எந்த ஒரு யோக கலைகளையும் நாம மேற்கொள்ளமால் இயல்பாவே குழந்தை பருவத்திலே ஆக்டிவேட் ஆகி இருக்கும். பட் நார்மல் ஹியூமனா ஒரு குழந்தை இந்த சமூகத்துடன் சேர்ந்து வளர வளர அதை உணர முடியாமல் போய் இருக்கும். இன்ஃபாக்ட் அப்படி ஒண்ணு இருக்குன்னே நம்மில் சிலருக்கு நம்ம வாழ்க்கையோட கடைசி நொடி வரை தெரியறது கிடையாது”.

ஏழு சக்கரத்தையும் முழுதாக கட்டுபடுத்த தெரிந்த மனிதர்களை தான் நாம துறவி, முனிவர்கள், ஞானிகள்ன்னு சொல்லிட்டு இருக்கோம். இப்போ இருக்கிற மனிதர்களுக்கு அந்த ஏழு சக்கரத்தையும் ஆக்டிவேட் பண்ண முடியுமான்னு கேட்டால்? இன்க்ளூடிங் மீ, அது ரொம்பவே கஷ்டமான விஷயம்.

ஆனால், நல்ல குருவும் அதுக்குன்னு இருக்கிற சில விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தால் கண்டிப்பா சாத்தியமாகும்.

“பட் ரிமெம்பர் ஒன் திங்க். நீங்க முறையா செய்தால் தான் அதற்குண்டான பலன்களும், ஆற்றல்களும் கிடைக்கும். இல்லைனா நீங்க செய்யக் கூடிய பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு பதாகமாகவும் அமைய வாய்பிருக்கு என்றுரைத்தவன். மேலும் சிலவற்றை சுமார் இரண்டு மணி நேரமாக அசராமல் பேசிவிட்டு. எனி டவுட்ஸ்? என்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து வினவ”.

Good morning, healer. My question is, "Do you believe that the activation of the chakras or engaging in certain meditations can truly help to remove all the sins we've carried for so long?" (எனது கேள்வி என்னவென்றால், சக்கரங்களை செயல்படுத்துவது அல்லது சில தியானங்களில் ஈடுபடுவது என்று கூறுவது. இவ்வளவு காலமாக நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அகற்ற உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?") என்று ஒரு மாணவி வினவ”.

அந்த கேள்வி கேட்ட பெண்ணை பார்த்து மெல்ல புன்னகைத்தான்.

செய்த பாவத்திருக்கான பலன்களை எந்த ஒரு யோகநிலையை மேற்க்கொள்ள விழைந்தாலும் கூட சிறிதேனும் அதற்குறிய தண்டனைகளை அனுபவிக்காமல் அதனை கடப்பது என்பது கண்டிப்பாக இயலாத ஒரு காரியமாகும்.

ஏன் அவனுக்கு கூட, அவன் என்றோ செய்த தீங்கு தானே இன்றுவரை அவனை தூங்க விடாமல் துரத்துகின்றது?

“அந்த பெண்ணை நோக்கிவிட்டு, கண்டிப்பா இல்லை என்று தலையசைத்தவன். இந்த பயிற்ச்சிகள் எல்லாம் செய்றதால ‘பர்ப்பஸ் ஆஃப் லிவிங்’ என்னன்னு நம்மலால் கண்டு பிடிக்க முடியும். முதல மனிதர்களோட பிழைகள் எங்கிருந்து தொடங்குது? ஒவ்வொரு பிழைகளுக்கு பின்னாடி அவனோட சூழல், உணர்ச்சிகள், வளர்ந்த முறைகள், கூட இருக்கும் மனிதர்கள்ன்னு பல விஷயங்களை கைக்காட்டினாலும், அவன் வாழ்க்கைல நடக்கும் ஒவ்வொரு அடிகளுக்கும் அவன் மட்டும் தான் முழுக்காரணமா இருப்பான்”.

கண்டிப்பா சூழ்நிலைகளையோ அல்லது அவன் சுற்றத்தையோ காரணம் சொல்லி அவனோட தண்டனைகளிலிருந்து அவன் தப்ப முடியாது. தெரிஞ்சு செஞ்ச தவறோ, இல்ல தெரியாம செஞ்ச தவறோ எதுனாலும் அதற்குண்டான பலன்கள் நிச்சயமா அவனுக்கு கிட்டும். பிகாஸ் கர்மா இஸ் பூமராங் என்று தீர்க்கமான பார்வையுடன் கூறி முடித்தவன்.

“வேற ஏதாவுது சந்தேகம் இருக்கா? என்று அந்த மாணவியை தொடர்ந்து மற்றவர்களை பார்த்து அவன் வினவ. சிலர் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்தனர். பின் நேரமாவதை உணர்ந்து, i think i have taken your time so long have a nice day guys என்று மீண்டும் ஒரு புன்னகையை சிந்திவிட்டு விடைப்பெற்றுக் கொண்டான். அவனை தொடர்ந்து அடுத்தடுத்து சிலபேர் அவர்களின் விளக்கக்காட்சியை தொடர்ந்தனர்.

“இன்னிக்கு மனுஷன் நல்லா மூச்சு முட்ட பிராக்டிஸ் பண்ணிட்டு வந்திருப்பாரு போல. நல்லவேளை இப்போவாது நன்றி, நமக்கத்துடன் கிளம்பினாரே என்று பெருமூச்சுடன் அவிரா கூற. சும்மா கலாய்க்காத அவி. பிசிரில்லாம சொல்ல வந்த கருத்தை எத்தனை நேரம் ஆனாலும் எவ்வளவு டீப்பா நமக்கு புரியும்படி சொல்லி தராறுன்னு பாரு என்றுக் கூறியவள் அடுத்து பேசிக் கொண்டிருந்தவர்களை நோக்க. இப்போது அவளை முறைப்பது அவிராவின் முறையாகிற்று”.

****

இரவு வீட்டிருக்கு தாமதமாக வந்திருந்த ஆத்யா மற்றும் கீர்த்தனா தங்களிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்துக் கொண்டு பெரியவர்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என்றெண்ணி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் மெல்லிய நடையுடன் சென்றிருந்தனர்.

இரவு பத்தை தாண்டிய போதே தனக்காக கண்ணயராமல் காத்திருக்கும் பெரியவர்களிடம் ஃபோன் செய்த ஆத்யா, அவர்களிடம் கண் விழிக்காமல் சீக்கிரம் உறங்குமாறு பணித்திருந்தாள். பேத்தியின் பேச்சுக்கு மறுப்பேச்சு ஏது? அவர்களும் சற்று நேரத்திருக்கு முன்பு தான் கண்ணயர்ந்தனர்.

குளித்து முடித்துவிட்டு இரவு உடைக்கு மாறிய கீர்த்தனா. “பேபி லைட்டா பசிக்குது, கீழ போய் பால் இருந்தா சூடு பண்ணி குடிச்சுட்டு வந்திடுறேன். உனக்கு ஏதாவது வேணுமா? என்று வினவ.

தலைவலிக்குது கீர்த்து ஒரு பிளாக் காப்பி மட்டும் போதும் என்றவள். “பி கேர்ஃபுல் தாத்தா,அப்பத்தா தூங்கிருப்பாங்க அதனால பாத்திரத்தை போட்டு உருட்டாத. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன் என்று கூறியபடி குளியலறைக்கு சென்றிருந்தாள்”.

சிறிது நேரத்திருக்கு பின் உடை மாற்றி விட்டு ஆத்யா வெளியே வர அதற்குள் பிளாக் காபியுடன் வந்திருந்தாள் கீர்த்தனா.

ஆத்யா சில குறிப்பேடுகளையும், மடிக்கணினியையும் அவளது ஸ்டடி டேபிலில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவள்.

“ஆரம்பிச்சுட்டா என்று எண்ணியவாறே. ரொம்ப நேரம் முழிக்காம சீக்கிரம் தூங்கு ஆதி. எப்படியும் நான் சொன்னா கேட்க மாட்ட என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு. கூடவே கையில் வைத்திருந்த கோப்பையை கொடுத்துவிட்டு தூங்க செல்ல, அவள் சென்ற திசையை பார்த்து மெல்ல புன்னைகைத்தவள் அவள் கொடுத்த கோப்பையிலிருந்த ஒரு மிடறு குடித்தவாறே, இன்று அவள் பார்த்த அந்த அச்சுகளின் குறிப்புகளை பற்றி எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.”

வெகு நேரம் தேடியவளின் மிழிகளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. அதற்காக அவளது தேடல்களையும் நிறுத்தவில்லை.

வாகை பூக்களுக்கு பின்னே சூரியன் உதயமாவது போன்று இருந்த அச்சுகளை அவள் எங்கோ பார்த்திருப்பதாக தான் அவளுடைய மனம் அடித்துக் கூறியது.

“இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்கன்னு தான் தெரில என்று தனக்குள் பேசியவள். இன்னும் சில குறிப்புகளை வெகுநேரமாக ஆராய்ந்துக் கொண்டிருக்க. அவளது நீல நிற கண்களோ ஓய்வுக்கு கெஞ்சியது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தனது தேடலை தொடர்ந்தாள் காரிகையவள்”.

ஆனாலும், அவளுடைய தேடலுக்கான பலன் என்னவோ பூஜியம் தான். சரி இதை பத்தி அப்புறம் பார்ப்போம் என்று நினைத்தவாறே. மடிக்கணினியை மூடிவிட்டு படுக்கைக்கு செல்ல நினைக்க. அவளது அலைபேசி குறுஞ்செய்திகளை தாங்கி வந்திருப்பதாக ஒலியெழுப்பியது.

“மிஸ்ஸிங் யு பேட்லி ஸ்வீடி... இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான் ஆனா அதெல்லாம் சொல்ல முடியாது. நல்லா... ஜாலியா... ஹாப்பியா... நான் இங்க எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு இருக்கேன் என்று ஒவ்வொரு வரிகளுக்கும் அழுத்தம் கொடுத்தது போல் வந்திருந்த குறுஞ்செய்தியில் கடைசியாக ஒரு உதட்டை கோணையாக வளைக்கும் இமோஜியுடன் நிறைவடைந்திருந்தது”.

டிராமா குவீன் என்று முணுமுணுத்த ஆத்யாவுக்கு அவளது தங்கையை நினைத்து சிரிப்பு தான் வந்தது. இன்னிக்கு மட்டும் ஒரு மெசேஜ் போடுவோம் என்று நினைத்தவள் குறுஞ்செய்தியை தட்டுவதற்க்குள் சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. சுத்தம் சார்ஜ் போடலையா, சரி காலையிலே பார்த்துக்கலாம் என்று நினைத்தவள். சார்ஜை போட்டுவிட்டு படுக்கையில் விழுந்திருந்தாள்.

அங்கு அலைபேசியை பார்த்த நவ்யாவோ, அவளனுப்பிய செய்திகளை படித்துவிட்டதாக வந்திருந்த அந்த இரு நீல நிற கோடுகளை தான் வெறித்துக் கொண்டிருந்தாள். கண்களில் வேறு கண்ணீர் வருவது போல இருந்தது.

“இன்னிக்கு எனக்கு நீ விஷ் பண்ணலை தானே? அவ்வளவு என்ன உனக்கு ஈகோ? போ... போ… நானும் உன் பர்த்டேக்கு விஷ் பண்ண மாட்டேன். உன்னால மட்டும் தான் யார் கிட்டடையும் பேச முடியாமல் இருக்க முடியுமா. என்னாலையும் முடியும் மிஸ் ஆத்யா என்று மனதில் நினைத்தவளுக்கு உடன்பிறந்த சகோதிரையை நினைத்து சற்று சோர்வாக தான் இருந்தது. அவள் தாய், தந்தை மற்றும் அவளுடன் ஆத்யா பேசியே கிட்டதட்ட இரு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

“என்ன நவி... ஆதி என்ன சொன்னா என்று அவிரா கேட்க. ரெண்டு பிளேட் பிரியாணி ஆர்டர் பண்ண சொன்னா. அட போடி... நீ வேற என்றவள் ஆர்டர் செய்திருந்த பீட்ஸாவை விழுங்கியப்படி தன் கண்ணீரையும் சேர்த்து விழுங்க.”

தோழியை நன்குணர்ந்தவளோ. அவளது மனக்கவலையை போக்குவாதற்காக, “ஆமா எப்போ உன் ஆளுக்கு ப்ரபோஸ் பண்ண போற? சீக்கிரம் சொல்லிடு டி. இன்னிக்கு லீனா வேற அவர் கிட்ட பெர்சனல, ஏதோ பேசணும்னு குதிச்சுட்டே கிளம்பி போனா என்று கூற. ஜூஸைக் குடித்து கொண்டிருந்தவளுக்கோ புரை ஏறியது. மெல்ல தலையை தட்டியவள்".

“இதை ஏன் நீ முன்னாடியே சொல்லலை? இரு அவளுக்கு இருக்கு என்று தனது ஜெர்க்கின்னை மடக்கியவாறு அடியாள்போல நவ்யா கூற அவள் நின்றிருந்த விதத்தைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்திருந்தாள் அவிரா. அடியே கொஞ்சம் அமைதியா உட்காரு. சும்மா தான் உன் மூஞ்சு எப்படி போகுதுன்னு பார்க்கத் தான் அப்படி சொன்னேன். ஆனால் சத்தியமா சொல்லுறேன் டி. டாம் & ஜெர்ரில வர குட்டி ட்டஃபி(tuffy) சண்டைக்கு போற மாதிரியே உன்னோட ரியாக்ஷன் இருந்தது தெரியுமா? என்று மீண்டும் சிரிக்க. அவளை முறைத்து பார்த்த நவ்யாவுக்கு கூட லேசான சிரிப்பு வந்திருந்தது.

“நினது மையல் தான்,

அவனது வையம்,
என்றறிய நேர்ந்தால்,
வௌவிக் கொண்டு,
அவனுக்கு நிவாரணியாகி -விடு இளையவளே!!”


 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-3​


என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே,
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்,
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ,
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

(ப.பொ: நல்ல நபர்களும், நூல்களையும், குருவையும் கொண்டு என்னில் இருக்கும் மெய்ப்பொருளை உணர்ந்துக் கொண்டேன். அதையே என் உள்ளத்தில் இருத்தி, தியானத்திலிருந்து, அந்த உண்மையை நான் உணர்ந்துக் கொண்டேனே.)

“தமிழ்ல மட்டும் தான் இந்த அளவுக்கு மீனிங்ஃபுல்லான சித்தர் படைப்புகள் எல்லாம் இருக்க முடியும்ல?” என்று அந்தப் பிளேவில் ஒலித்துக் கொண்டிருந்த சிவவாக்கியாரின் பாடலை மெய் மறந்து கேட்டப்படி உதயிடம் கூறிக்கொண்டிருந்தார் “வீர் பத்ரா”. உதய்கிரணின் தலைமை அதிகாரி. ஒரு வகையில் அவனது குரு, வழிகாட்டி, தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என்றுக் கூட கூறலாம்.

அவன் ஒன்றும் பேசவில்லை ஆனாலும் அவனது தலை அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக ‘ஆமென்று’ மேலும் கீழும் ஆடியது. அவர் கண்ணாடியைச் சரி செய்தப்படி அவனைக் கண்டுவிட்டு மீண்டும் பாடலில் மூழ்கினார். அவரும் அவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார். அவன் ஏதோ பேச வருவதும், பின் தயங்குவதமாக இருக்க. எப்போது தான் அவனது இதழ் பிரித்து மௌனம் களைவான் என்று காத்துக் கொண்டிருந்தார்.

“வீர் அது வந்து. எனக்குக் கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்பா இருக்கு. சோ, இன்னிக்கு ஆஃப் எடுத்துக்கிறேன்” என்று கூற.

இதைக் கூற தான் இவன் இவ்வளவு நேரம் மௌனம் சாதித்தானா? என்று அவருக்கு சந்தேகமாக இருந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் ஒரு கூர் பார்வையுடன் அவனை நோக்கி விட்டு. “ம்ம்” என்றதுடன் முடித்துக் கொண்டவர் அவனையே துளைக்கும் படி கூர்மையாக நோக்க.

உதயோ அவரது பார்வையின் வீரியம் தாங்காது. “அது... இந்த வாரம் நீங்க ஃபிரீயா இருந்தால் சொல்லுங்க வீர். எனக்கு கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்பா இருக்கு. சோ, ஒரு சிட்டிங்க் இருந்தால் பெட்டர்ன்னு தோணுது” என்றுக் கூற.

இதை எதிர்ப்பார்த்தது போல் “ஓகே உதய். Let’s have a session on Friday” என்று அவரும் கூற.

அவன் ஆமோதிப்பாகத் தலையசைத்து விட்டு விடைப்பெற்றுக் கொண்டான். அவன் சென்ற திசையைத் தான் தாடியை வருடியவாறே நோக்கியிருந்தார். “டாக்டர் ஹீலருக்கே மனசு சரி இல்லை? ம்ம்... இன்டெரெஸ்ட்டிங். இப்போ உன்னை பார்க்கும் போது முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்னை பார்த்தது போலவே இருக்கு. வில் சீ உன் கிட்ட என்ன கதை இருக்குன்னு” என்று தனக்குள் உரைத்தவர், மீண்டும் பாடலைப் பிளே செய்து விட்டுக் கண்களை மூடியப்படி அதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பொதுவாகவே அவரவர் துறைகளில் எத்துணை பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் கூட தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மற்றவர்களைத் தான் நாடுவார்கள். அப்போது ‘நான்’ தான் சிறந்தவன் என்ற ஆங்காரம் அவர்களுக்கு கண்டிப்பாக இருக்காது. அதிலும் தனது குருவிடமே பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டால் அதைவிட சிறப்பு வேறேதும் இருக்குமா என்ன? அது தான் உதயின் நினைப்பும் கூட. அவனால் சில நுண்ணுணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். அதில் அவன் கைத் தேர்ந்தவனும் கூட. ஆனால், அவனுக்கு தற்பொழுது தேவை ஓர் நிரந்திர தீர்வு. அதை வீரால் தான் சரி செய்ய இயலும் என்று நம்பினான். ஆனால், வீர் பத்ராவின் எண்ணம் தான் என்னவோ? அதற்கான பதில் அவரிடமே.

“ஆழினி” என்று இதழினி அவளின் தோலைத் தட்ட. முகிலினங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முயல் போன்று காட்சியளித்ததை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவளோ, உடன் பிறந்தவளின் தொடுகைக்கு திரும்பி விட்டு, அவளைக் கண்டு மென்னகைத்தாள்.

“இன்னும் நீ தயாராகமல் இருப்பது நியாயமா?” என்று அவளை முறைத்து பார்த்த இதழினி. சீக்கிரம் வா என்று அவளை அழைத்துக் கொண்டு அலங்காரங்களை மேற்கொள்வதற்காக சென்றாள்.”

இவர்கள் வருவதருக்கு முன்பே வாயிலில் இழையினி, அமரா, அமராவின் தங்கை அனிச்சா மற்றும் செவிலித்தாய்மார்கள் என்று அனைவரும் பாதுகாவலர்கள் சூழ பல்லக்கு சதவீதமாக தயாராக நின்றிருந்தனர்.

அவர்களை எல்லாம் மேலும் காக்க வைக்காமல் சகோதரிகள் இருவரும் தேவ கன்னிகளை போன்று தங்களை அழகுப்படுத்திக் கொண்டு மெல்லமாக அன்ன நடையிட்டு வந்துக் கொண்டிருந்தனர்.

தூரத்திலிருந்தே அவர்களை பார்த்திருந்த ஏழு வயது இழையினி அமராவை நோக்கி, “இதழினிக்கு தானே இன்று ஜனன தினம்? பின்பு எதற்காக ஊமையும் அவளை போன்றே முழு அலங்காரத்துடன் இருக்கின்றாள்?‌‌” என்று
பத்து வயதான ஆழினியை நோக்கியப்படி கிசுகிசுப்பான குரலில் அமராவிடம் வினவ.

அமராவோ கனலை வார்த்தையில் தேக்கி வைத்து அதனை கக்கும் முன், அருகிலிருந்த அனிச்சாவிருக்கும் இழையினி பேசியது கேட்டுவிட. “இருவரும் வேறுவேறு தினத்தில் உதித்திருந்தாலும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தானே? அதோடு இதழினி இரண்டு தினங்களையும் சேர்த்து தானே கொண்டாடுகின்றாள்? அப்போது ஆழினியும் அதே போன்று கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லையே என்று வெகுளியாகக் கூற.”

இழையினியின் காதை பிடித்து நன்கு திருகியிருந்த அமராவோ. “இன்னொரு முறை எனது தோழியை நீ ‘ஊமை’ என்று விளித்தால் சிவதளத்தை நோக்கி செல்லும் வழியில் உன்னை அந்தக் கரடி குகைக்கு முன் நிறுத்திவிடுவேன் என்று கண்டிப்பான குரலில் கூறினாள்”.

“வேண்டாம்…‌ வேண்டாம்… என்று இழையினி கதை திருகியதில் ஏற்பட்ட வலியாலும், கரடியின் மீது இருக்கும் பயத்தினாலும், கண்களில் நீர் வைத்து மன்றாடியவள்.‌


“அம்மா அப்படி தான் ஆழினியைப் பற்றி மற்றவர்களிடம் உரையாடும்போது விளிப்பார்கள். அதனால் எனக்கும் பழகிவிட்டது போல. என்னை மன்னித்து விடு அமரா. இனி உமையாள் என்றுக் கூட அவளை நான் அழைக்க மாட்டேன். எனக்கு கரடிகள் என்றால் மிகவும் பயம். என்னை தனியாக மட்டும் விட்டுவிடாதீர்கள்” என்று கெஞ்சும் குரலில் குழந்தையானவள் கேட்க. அவளை முறைத்து பார்த்தாள் அமரா. அவளுக்கு இப்போது அவளது தாயின் மீதும் கோபம் துளிர்ந்தது.

மிக அருகில் வந்திருந்த ஆழினி மற்றும் இதழினியை கண்டுவிட்டு எங்கே அமரா உண்மையில் தன்னை தனியே விட்டுவிடுவாளோ என்று அஞ்சிய இழையினி. வேகமாக ஓடிச் சென்று ஆழினியின் வயிற்றில் முகத்தை புதைத்தபடி “மனித்து விடு ஆழினி, இனிமேல் உன்னை என்றும் அவ்வாறு விளிக்க மாட்டேன். யவரேனும் உன்னை ஊமையென்று கூறினால் கூட அவர்களை உப்பரிகையிலிருந்து தூக்கி போட்டுவிடுவேன்” என்று கரைந்தப் படி அவளது இடையை சுற்றியவாறு விசும்ப.

திடீரென்று அணைத்துக் கொண்டு அழும் இழையினியைக் கண்டு அழினிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சற்று நிமிர்ந்து பேசியிருந்தால் கூட வாய் அசவை வைத்து என்ன கூறிக் கொண்டிருகிறாள் என்று புரிந்துக் கொண்டிருப்பாள். ஆனால், அவள் தான் முகத்தை காட்டாமலே மன்னிப்பு யாசித்துக் கொண்டிருந்தாளே?

ஆனால், இதழினிக்கு அவள் எதற்காக அழுகிறாள் என்று புரிந்துவிட, அமராவை நோக்கி புருவம் உயர்த்த அவள் இழையினியை முறைத்தப்படி கண்மூடி தலையை ஆட்டினாள்.

மெல்ல இழையினியின் தலையை நிமிர்த்திய ஆழினி ‘அழாதே’ என்று செய்கை செய்தபடி அவளது கண்ணீரையும் சேர்த்து துடைத்து விட. அவளது செய்கைக்கு பிறகு தான் அவளுக்கு இன்னும் அதிகமாக கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.

ஆனால், அந்த சம்பவத்திருக்கு பின்பு தான் தோழிகளிடையே நல்லதொரு பிணைப்பும் ஏற்பட்டிருந்தது. அதன்பின்பு தான் அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வளம் வந்தனர். அவர்கள் சிரித்து பேசி, மகிழ்ந்து, களித்த தருணங்களெல்லாம் தூக்கத்தில் நினைவலைகளாக வந்தது ஆத்யாவிருக்கு.

தூக்கத்திலே சிரித்துக் கொண்டாள்.

“ஆதி.. ஆதி... எழுந்திடு டார்ளூ” என்று கீர்த்தனா அவளை எழுப்ப. அவளோ முடிந்த நிகழ்வுகளை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


“பயப்புள்ள எந்த காமெடியை நினைச்சு கனவுல கூட சிரிச்சு தொலையுதோ” என்று தலையில் அடித்தவள் “இதுக்கு மேல முடியாதுடா சாமி. உனக்கெல்லாம் கனகா ஆண்ட்டி தான் கரெக்ட்டான ஆளு” என்று புலம்பியப் படி குளியலறைக்கு சென்றாள்.

அவள் சென்ற பிறகு சிரிப்பை உதிர்த்த உதடுகளிரண்டும் இப்பொழுது அழுத்தமாக பற்களுக்கிடையில் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. அதோடு மட்டும் நில்லாமல் ஆத்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வேறு துளிர்த்தது.


காரணம் தற்பொழுது அவளது மிழிகளுக்கு உடலசைவற்ற அனிச்சா தான் காட்சியாக தெரிந்திருந்தாள்.

அமராவின் தங்கை அனிச்சா, ஆழினியின் பனிரெண்டாவது பிறந்த தினத்தில் இதே போல் சிவனை தரிசிக்க காட்டு வழியாக அவர்களெல்லாம் ஒன்றாக சென்றப்பொழுது, கொடிய நாகம் தீண்டி அதனின் விஷம் வேகமாக பரவியதில் இறந்திருந்தாள். அது கனவில் உதிரி உதிரியாக காட்சியளிக்க அவளது நீல நயனங்களிலிருந்து கண்ணீர் சொறிந்து தற்போது வேகமாக கன்னத்தை நனைத்திருந்தது.

இன்றும் அந்த துக்கம் அவளை துரத்துகின்றது போலும்!

அரைமணி நேரத்திருக்கு பிறகு தயாராகி வந்திருந்த கீர்த்தனா. இன்னுமும் உறங்கிக் கொண்டிருந்த தோழியை கண்டுவிட்டு.

“ஆதி...” என்று சத்தமாக குரலெழுப்பியவாறு அவளை உலுக்க. அடித்துபிடித்து எழுந்திருந்தாள் ஆத்யா.

பெரியபெரிய மூச்சுகளாக இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசம் செய்துக் கொண்டிருந்தவளை நோக்கி. “அச்சச்சோ.. சாரி டார்ளூ” என்று கூறிய கீர்த்தனா அவளது முதுகை தேய்த்துவிட.

ஆத்யாவிருக்கு சிலநிமிடங்கள் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. கனவில் நடந்த காட்சிகள் கூட தற்போது நினைவுக்கு வரவில்லை. கண்களை மூடி மூடி முழித்துக் கொண்டே இருந்தாள். ஒருவேளை கனவில் கண்டதை மீட்டுப் பார்த்துக் கொண்டிருகின்றாளோ என்னவோ?

“ஹேய் பர்த்டே பேபி இப்படி முழிச்சுட்டே இருக்காம சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா” என்று அவளை குளியலறைக்கு தள்ளினாள் கீர்த்தனா. அவளும் ஒன்றும் பேசாமல் குளியலறைக்கு சென்றாள்.

“அத்தை இந்த பொண்ணு எப்போ தான் எங்ககிட்ட பேசுவா? நேத்திக்கு நவ்யாவோட பர்த்டேக்கு கூட விஷ் பண்ணலையாம். அப்படி என்ன கூடப்பிறந்தவ மேலையும், எங்க மேலையும் அவளுக்கு கோவம்” என்று மலர்விழி அவருடைய ஆதங்கத்தை மாமியாரிடம் தெரியப்படுத்த.

அதற்கு கோமதியோ மற்றதை பின்னுக்கு தள்ளிவிட்டு, “முதல உங்கள யாரு ஒரு நாள் அவளுக்கு, இன்னொரு நாள் இவளுக்குன்னு பிறந்தநாள் கொண்டாட சொன்னாங்க? இதுனால தான் அவங்க இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டையே வருது என்று சமந்தமில்லாமல் கூற” அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மெய்யப்பனோ தலையில் அடித்துக் கொண்டார்.

“ஏன் த்தை ஒருத்தி புதன் கிழமை பதினொன்னு அம்பத்தஞ்சுக்கும் இன்னொருத்தி சரியா பன்னெண்டு மணிக்கு வியாழக்கிழமை பிறக்கும் போது அதுக்கூடவே சேர்ந்து பிறந்திருக்கா. அப்போ அடுத்தடுத்து நாள் கணக்கு தானே வரும்? அதோட நீங்க தானே ஒரே ராசி, வேறவேற நட்சத்திரத்திலே பிறந்திருக்காங்கன்னு அடிக்கடி சொல்லுவீங்க?” என்று மலர்விழி நியாயமாக வினவ.

“அது..” என்று அவர் பதில் பேசுவதற்க்கு முன் கோமதியிடமிருந்து அலைபேசியை வாங்கிய மெய்யப்பன்.

“அவளை விடு ம்மா. பாப்பா நேத்திக்கு ரொம்ப சீக்கிரமே கிளம்பி போய்ட்டா. அதோட வேலை முடிஞ்சு திரும்பி வந்ததும் கொஞ்சம் லேட் தான். ஒருவேளை சின்னக்குட்டி கிட்ட நைட் பேசலாமுன்னு இருந்து, அசதில சீக்கிரம் தூங்கிருப்பாளோ என்னவோ?” என்று பெரிய பேத்திக்காக அவர் பரிந்து பேச.

“இருக்கட்டும் மாமா. எவ்வளவு காரணம் வேணாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, ஒரு மெசேஜ் போட ஒரு நிமிஷம் ஆகிட போகுதா என்ன? இப்போ கூட நான் ஃபோன் பண்ணினேன் ‘ஸ்விட்ச் ஆஃப்ன்னு’ வருது. ” என்று மனதிலிருந்த ஆதங்கத்தை வெளிபடையாக கூற.

“அவ இன்னும் தூங்கிட்டு இருக்காலாம் ம்மா.. கொஞ்ச நேரமுன்ன தான் கீர்த்தனா புள்ள சொல்லிட்டு போச்சு. அவ எழுந்தவுடனே பேச சொல்லுறேன்” என்று மருமகளின் ஆதங்கத்தை அவரது பேசும் தொனியிலே கண்டுக் கொண்டுவிட்டு அவர் உரைக்க.

“ஆமா பெருசா என்ன பேசிட போறா? உம்.. ஹான் தவிர ஒண்ணும் பேச மாட்டா” என்று அதற்கும் குறைப்பட அவருக்கு தான் ‘ஐயோவென்று’ இருந்தது.

“சரி மாமா உங்க புள்ள இப்போதான் ஹாஸ்பிடல இருந்து வந்திருக்காரு. அவர் ஃபிரெஷ் ஆயிட்டு வந்ததுக்கப்புறம் நாங்க பேசுறோம். நைட்டு முடிஞ்சா அவளை வீடியோ கால் பண்ண சொல்லுங்க. அப்படியே நவ்யா கிட்டடையும் பேச சொல்லிடுங்க” என்றுக் கூறிவிட்டு அலைபேசியை துண்டித்து விட்டார்.

மெய்யப்பனுக்கு ஏதோ புயலில் இருந்து தப்பியது போன்ற உணர்வெழுந்தது.
ஒவ்வொரு முறையும் மலர்விழியின் மனதை சங்கடப்படுத்தாமல் அவர் ஆத்யாவை பற்றி நயமாக பேசி முடிப்பதற்குள் அவரது தொண்டை தண்ணீர் தான் வற்றி போகின்றது.

“ஏன் டி ஏற்கனவே பொண்ணு பேசலைன்னு வருத்ததில இருக்கிற புள்ள கிட்ட போய், உன்னோட வியாக்கியானத்தை சொல்லிட்டு இருக்க” என்று கடியாக கோமதியை பார்த்து பெரியவர் உறும.

“நான் என்ன இல்லாததையா சொன்னேன். ரெண்டு பேரையும் இப்படி அருணும், மலரும் பிரிச்சு பிரிச்சு பார்க்கிறதால தான் ஒத்துமை இல்லாம இருக்காங்க” என்று முறைத்துக் கொண்டே கூறினார் கோமதி.

அடுத்து மெய்யப்பன் பேச வாய் திறப்பதற்க்கு முன், அனைத்தையும் கேட்டபடி கீழே வந்த ஆத்யாவோ. “அப்பத்தா என் ஃபோன்ல சார்ஜ் நிக்க மாட்டேங்குது. இன்னிக்கு சர்வீஸ் கொடுத்து என்னன்னு பார்க்கணும். உங்க சின்னப் பேத்திக்கு அதனால தான் மெசேஜ் போடலைன்னு நீங்களே உங்க மருமக கிட்ட சொல்லிடுங்க” என்றுரைத்தவள்.

கீர்த்தனா சீக்கிரம் வா என்று கூறியப்படி சாமியறைக்கு சென்று ஒரு நிமிடம் கண்ணை மூடிவிட்டு பின் சாப்பாடு மேஜைக்கு சென்றாள்.

அவள் சென்ற திசையை பார்த்த மெய்யப்பன் அதற்கும் மனைவியை தான் முறைத்தார்.

கீர்த்தனா மற்றும் ஆத்யா அமர்ந்திருக்க. கனகா கேசரி நிறைந்த கிண்ணங்களை எடுத்து வந்திருந்தார்.

அவரிடமிருந்து ஒரு கிண்ணத்தை பெற்றுக் கொண்ட கோமதியோ, அவளுக்கு ஒரு வாய் கேசரியை கொடுத்தப்படி “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா” என்றுக் கூற, மெய்யப்பனும் அவளது தலையை தடவி அவரது வாழ்த்தை கூறினார்.

“தாங்க்ஸ் அப்பத்தா, தாங்க்ஸ் தாத்தா” என்று அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே கூறினாள் பெண்ணவள். அதன் பின் கனகாவும் அவரது பங்கிருக்கு வாழ்த்தைக் கூற.

“ஹேய் கோல்டிஸ்(goldies) உங்க செண்டீஸ் முடிஞ்சுதுன்னா, இந்த மொரு மொரு கிரன்ச்சிஸை(crunchies) சாப்பிடலாமா? வயிறு பசிக்குது அதான்...” என்று கீர்த்தனா பூரிகள் நிரம்பிய தட்டை பார்த்துக் கொண்டே கூற.

“வாங்க சாப்பிடலாம்... பாவம் புள்ள” என்று கீர்த்தனாவின் கன்னத்தை தட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.

சாப்பிட்டு முடித்த பின் மெய்யப்பன், “கோமதி அதை எடுத்துட்டு வந்து கொடும்மா” என்று கூற. அவரது பேச்சுக்கு இணங்கியப்படி அவரும் அறைக்கு சென்று ஒரு பரிசு பெட்டியை எடுத்து வந்து மெய்யப்பனிடம் நீட்டினார்.

மெய்யப்பன் ஒரு கண்ணை மனைவியிடம் காட்ட அதை புரிந்துக் கொண்டவரோ பேத்தியிடம் அவருடன் சேர்ந்து ஜோடியாக அவளது கையில் அந்த பரிசை திணித்திருந்தனர். அதில் அவர்களது அன்பும், பாசமும் நிறைந்திருந்தது.

“ஆஹா பொட்டி நல்லா இருக்கே” என்று கீர்த்தனா கூற. “எதுக்கு இதெல்லாம்?” என்றாள் ஆதி.

“பொறந்த நாள் அதுவுமா, என்ன கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லாத பாப்பா” என்று கனகாவும் “ஆமா டா என்ன கொடுத்தாலும் வேண்டாம்ன்னு சொல்ல கூடாது என்று கோமதியும்” கூற.

“சரி சரி சொல்லலை” என்று சிரித்துக் கொண்டாள்.

“பாப்பா இன்னிக்கு, நாளைக்கு ஒரு ரெண்டு நாள் சேர்ந்தப் போல விடுப்பு எடுக்க முடியுமா? பக்கத்து ஊர்ல இருக்கிற கோவிலுக்கு போய்ட்டு அப்படியே என் ஸ்நேகிதன் ஒருத்தன் வீட்டுக்கு போய்ட்டு வந்திடுவோம்” என்று மெய்யப்பன் கூற.

“அபச்சாரம்.. அபச்சாரம்... தாத்தா லீவ் பத்தி எல்லாம் பேசினால் என் சித்தப்பு மலை ஏறிடுவாறு” என்று கன்னத்தை தட்டியவாரே கீர்த்தனா கூற.

“நம்ம இந்த சனி கிழமை போலாம் தாத்தா, எனக்கும் லீவ் எடுக்கிறதில விருப்பமில்லை” என்று அவள் தன்மையாக கூற.

“சரி டா” என்றுக் கேட்டுக் கொண்டார்.

அவள் அன்றே சென்றிருந்தால், முன்னதாகவே அவளது பிறவியின் நோக்கத்தை அறிந்திருக்கலாம்.

வில்லாளின் மனதை கொய்தவளா? அல்லது

வேய்ங்குழல் நாதனைக் கவர்ந்தவளா?
காலம் கூறும் முன்னே,
என் காதில் கூறிவிடு உமையவளே!

 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-4


“இதோ பக்கத்திலே வந்திட்டோம் ம்மா. ஜஸ்ட் ‘தோ’ கிலோமீட்டர் தான்” என்று கவியன் இதையே கடந்த ஒரு மணி நேரமாக கூற.

அலைபேசிக்கு அடுத்த பக்கத்திலிருந்த நீலகண்டேஷ்வரியோ ”கவியா மொதல அவன் கிட்ட ஃபோனைக் கொடு. பக்கத்திலேன்னு தான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கீங்க. சரியா எங்க இருக்கீங்கன்னு? லொகேஷன் அனுப்பு” என்று காரமாக கூற.

“ம்மா சிக்னல் சரியா இல்லை. ஹலோ... ம்மா... வாய்ஸ் பிரேக் ஆகுது. ஏதாவுது சொன்னீங்களா? ஹலோ...” என்று அலைபேசியை காதிலிருந்து எடுத்தவன் சற்று தூரமாக பிடித்தப் படி, வேகமாக பேசிக் கொண்டே அழைப்பை துண்டித்துவிட்டான்.

எதிர்முனையில் “ஹலோ... ஹலோ...” என்று கத்திய நீலகண்டேஷ்வரியை பார்த்த அவரது கணவன் மகாதேவனோ. “அவன் காலைக் கட் பண்ணி அரை மணி ஆவுது நீலா” என்று சிரித்தப்படி கூற.

கணவனை முறைத்துக் கொண்டே “எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான். அவன் தான் சொல் பேச்சு கேக்கமா சுத்திட்டு இருக்கான்னா, அவன் கூட இருக்கிற அந்த கவி பையலையும் அப்பாவும், புள்ளையுமா சேர்ந்து கெடுத்து வெச்சுறுக்கீங்க” என்று காட்டமாக கூறியவர்.

“என்னமோ பண்ணிட்டு போங்க. அங்க உங்க அப்பா நொடிக்கொரு முறை வாசலை பார்த்துட்டு இருக்கிறாரு. அடுத்து அவரு ஏதாவுது கேட்டா நீங்களே சமாளிச்சுக்கோங்க” என்று கணவனை கடிந்தப்படியே கோவிலுக்கு வல புறமாக இருக்கும் குளக்கரைக்கு செல்ல.

மனைவி சென்ற திசையை பார்த்தவரோ “மிஸ்டர் ஆவுடையப்பன், உங்க தங்கச்சி பொண்ணை கட்டிட்டு நான் படும்பாடு இருக்கே” என்று தந்தையிடம் மானசீகமாக உரையாட ஆரம்பித்தவர், “டேய் மகனே சீக்கிரம் உங்க அம்மா கிட்ட இருந்து என்ன காப்பத்து டா” என்று மகனிடம் முடித்தார்.

“ருத்ரா ஏன் டா இப்படி பண்ணுற? மேட்ச் முடிஞ்ச உடனேயே கிளம்பிருக்கலாம்ல? இப்போ பாரு அம்மாவை வேற சமாளிக்க முடியல” என்று பாவமாக கவியன் கூற.

பின்னிருக்கையில் கண்களை மூடி படுத்திருந்தவனோ, ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“டேய் பஃபலோ நடிக்காத டா. நான் பேசிட்டு இருக்கிறது எல்லாம் கேட்டுட்டு தானே இருக்கே?” என்று மீண்டும் பல்லைக் கடித்தப் படி கவியன் வினவ.

அவனது புறமோ அமைதியாக இருந்தது. “ஆனால் ஒண்ணு டா. நீ அகாடமி வெச்சதுக்கு பதிலா, ஒரு டிராமா கம்பெனி வெச்சிருக்கலாம். கைதேர்ந்த நடிகன் டா. உன் ஆக்டிங்க்கு அந்த சிவாஜி தாத்தாவே நேர்ல வந்து அவார்ட் கொடுத்திருப்பாரு போல” என்று நண்பனைக் கண்டு புலம்பியவன். “எப்பா டிரைவர் கொஞ்சம் சீக்கிரம் போப்பா மனுஷனோட அவசரம் புரியாம நீ வேற உருட்டிக்கிட்டு இருக்க” என்று நண்பன் மேலிருக்கும் கடுப்பில் ஓட்டுநரை துரிதப்படுத்தினான்.

கவியனின் புலம்பல்களை தேவகானம் போல உதட்டில் பூத்த குறுநகையுடன் கேட்டுக்கொண்டிருந்தான் “அக்னி ருத்ரன்”. பெயரை போல தான் அவனும். தகிக்கும் சூரியணைப் போல் கண்களில் ஒரு தீட்சண்யத்துடன் வளம் வருபவன்.

குடும்ப தொழில் பல இருந்தும் கூட அதில் விருப்பம் கொள்ளாமல், தனியே ஒரு அகாடமி வைத்து அதில் சிலம்பம் மற்றும் வில் வித்தையை சிறப்பாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருகின்றான். அது தான் அவனது லட்சியமும் கூட. அதற்கு தாய் நீலகண்டேஷ்வரி, தந்தை மகாதேவன், தாத்தா ஆவுடையப்பன் மற்றும் பெரியப்பா, பெரியம்மா என்று குடும்பமே சேர்ந்து அவர்களது விருப்பமின்மையை ஒன்று போல் காட்டியது. அதனை எல்லாம் சட்டை செய்யாது வளம் வந்துக் கொண்டிருகின்றான் ‘அக்னி’.


அவனுக்கு பதில் எப்போதுமே அவனது குடும்ப உறுபினர்களிடம் சிக்கிய பலியாடு தான் “கவியன்”. ருத்ரனின் உயிரை வாங்கும்/கொடுக்கும் நண்பன்.

கீழக்குயில்குடியில் இருக்கும் அக்னியின் குலதெய்வ வழிப்பாட்டிருக்கு தான் தற்போது அவர்களது மகிழுந்து சென்றுக் கொண்டிருந்தது. இன்னும் அந்த இடத்திருக்கு செல்ல குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகக் கூடும். அது தான் கவியன் பதட்டமாக இருப்பதற்கான காரணம்.

அக்னி மட்டும் சற்று சீக்கிரமாக கிளம்பியிருந்தால் அவனது தாயிடமிருந்து வாங்கும் அர்ச்சனையிலிருந்து, தான் தப்பித்திருக்கலாம் என்பதை குறித்து கவியனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. எப்போதுமே வாங்கும் நல்ல பெயர் சற்று மங்கி விட்டால் ஏற்படும் கடுப்பு தான் அவனிடத்தில். அதனால், அந்த பயணம் முழுவதும் அவனது புலம்பல்களுடன் சேர்த்து அக்னி ருத்ரனை வசைப் பாடிக் கொண்டே வந்திருந்தான்.

அக்னி அவனது அகாடமியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணாக்கர்களுடன் சேர்ந்து, கலந்துக் கொண்ட தேசிய அளவிலான வில்வித்தை போட்டியின் இறுதிக் கட்டம் முடிவதற்கு சற்று தமாதமாகியது.
அதோடு அதில் அவனிடம் பயின்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு வேறு தொடர்ந்து அம்புகளை எய்தியதால் விரல்கள் வெட்டி அதற்கு முதற்கட்ட முதலுதவி செய்திருந்தும் இரத்தம் வழிந்துக் கொண்டே இருந்த காரணத்தால், அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சையை அளித்து விட்டு, அவனுடன் சேர்த்து பிற மாணவர்களையும் சென்னை விமான நிலையத்திருக்கு பத்திரமாக அழைத்து வந்து, அவர்களையெல்லாம் பத்திரமாக அவர்களது வீட்டிருக்கு சேர்பித்து மீண்டும் அவன் மதுரை விமானத்தை பிடித்து வருவதற்குள் என்னென்ன பாடுபட்டான் என்று அவனுக்கு தான் தெரியும். அதனை விளக்கமாக கவியனிடம் கூற அவனுக்கு தற்போது சுத்தமாக பொறுமையில்லை அதோடு அவனது வீட்டினரை வேறு சமாளிக்க வேண்டும் அல்லவா? அதனால் தான் அமைதியாக கவியனின் பிபியை ஏற்றிக் கொண்டு, வாய் ஓயாத அவனது புலம்பல்களையும் சேர்த்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

பச்சைப்பசேல் என்றிருந்த சோலைகளை எல்லாம் கடந்து அப்படி இப்படியென்று அவர்களது மகிழுந்து ஒரு வழியாக அவர்கள் சேர வேண்டிய இடத்திருக்கு சேர்ந்திருந்தது.

முதலில் கவியன் இஷ்டதெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு கீழிருங்க, அதன்பின்பு அக்னி இறங்கினான்.


ஆவுடையப்பன் பேரனை பார்த்தவுடன் துள்ளி குதிக்காத குறையாக அவனிடம் வேகமாக சென்று “படுவா எவ்வளவு நேரம் டா உனக்காக காத்திட்டு இருக்கணும் ?” என்று கூறிக் கொண்டே பட்டென்று அவரது கைத் தடியால் ஒன்று போட. அதை சிரித்துக் கொண்டே வாங்கியிருந்தான் அவன். “நல்லா கேளுங்க தாத்தா ஏன் லேட்டுன்னு” என்று கூறிய கவியனுக்கும் பெரியவர் ஒரு அடியை போட.

“ஒய் மீ?” என்று பாவம் போல் அவரை பார்த்தான்.

“அவனை கையோட கூட்டிட்டு போய் கூடவே இருந்து பத்திரமா அழைச்சுட்டு வாடான்னு சொன்னா? நீ ஊர் ஊரா... ஊர் சுத்திட்டு என் பேரன் பத்தி என் கிட்டடையே குறை சொல்லுற” என்று பெரியவர் கூற.

“ஆமா இதெல்லாம் நம்ம கிட்ட எப்போ சொன்னாரு? அப்படியே சொல்லிருந்தாலும் இவரோட பேரன் கிரீன் சாண்ட் பாரு” என்று கவியன் குழம்பியவாறே அவரை நோக்க.

“கவியா” என்று அழைத்தப்படி மகனை முறைத்தவாறு அங்கு நின்றிருந்தார் நீலா.

“உனக்கெல்லாம் எதுக்கு டா ஃபோன்னு” என்று ஆரம்பித்து சரமாரியாக திட்ட. ஆவுடையப்பனோ “நீ வா ருத்ரா இனி உங்கம்மா உன்னை கண்டுக்க மாட்டா. புது உடுப்பு தரேன் அங்க இருக்கிற குளக்கரைக்கு போய்ட்டு குளிச்சுட்டு வந்திடு” என்று தன்மையாக கூற. அவனும் சரியென்று சென்றிருந்தான்.

இங்கு நீலகண்டேஷ்வரியிடம் காரசாரமாக திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் கவியன். “அடேய் ருத்ரா எல்லாம் உன்னால தான்” என்று மனதில் அவனைக் கடிந்தவாறு நீலகண்டேஷ்வரியை சமாளித்துக் கொண்டிருந்தான்.

குளக்கரைக்கு சென்று தண்ணீரில் முழுதாக ஒருமுறை மூழ்கிவிட்டு வெளிவந்த அக்னி மீண்டும் மூக்கை பிடித்து ஒரு முங்கு முங்கி விட்டு எழ. படிக்கு அருகே இருக்கும் ஒரு பாறையில் காலை மடக்கியவாறு அவனை நோக்கி சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

மங்கிய வெள்ளை வேட்டியில், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் நெற்றியில் பட்டையுடன் இருந்தவரை ஆண்டியென்று அவ்வளவு எளிதில் கூறி விட இயலாது. ஏன்னெனில் அவரது முகத்தில் இருக்கும் தேஜஸ் அவரை அவ்வாறு கூற அனுமதிக்கவில்லை.

அக்னி ருத்ரன் அவரை கண்டுக் கொண்டும் சட்டை செய்யாது மீண்டும் குளத்தில் முங்கினான் ஆனால் அவர் பேசியது மட்டும் தெளிவாக கேட்டது.

“பஞ்சாட்சரம் துதித்து, பல நற்காரியங்கள் செய்து என்ன பலன்? இன்னுமும் ஜென்மம் கடந்த பெண் பாவத்திருக்கு நீயும், அந்த மாயோனும் விமோச்சனம் தேடாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்? கோமானாக ஆட்சியை சிறப்புற செய்த நீ, தலைவனாக உந்தன் தலைவியை கைவிட்டதேன்? பதர்களை நம்பி நட்டாற்றில் அவளை விட்டதால் அவள் இழந்தது எத்துணை என்று அறிவாயோ? அவளை சந்திக்கும் பொழுதுகளெல்லாம் அறிவாயடா முட்டாள் அரசே. அதுவரை எத்துணை கைங்கர்யம் செய்தாலும் உனக்கு முழு பலன் கிட்டாது” என்று சத்தமாக உரைத்தப்படி கூறினார்.

அவன் மீண்டும் நீரிலிருந்து எழுந்தப் போது அவர் அங்கிருக்கவில்லை ஆனால் அவர் கூறிய சொற்கள் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஈர உடலுடன் நீர் வடிய மேலே வந்தவன் அந்த மனிதரை தேட. அதற்கு பலன் என்னவோ பூஜியத்தில் தான் முடிந்தது. அதன்பின் அவன் உடுப்பை உடுத்திக் கொண்டு யோசனையுடனே குடும்பத்தாருடன் ஐக்கியம் ஆகிவிட்டான்.

***
“Our mortal body may perish, but our immortal soul lives on.” (நமது உடல் அழிய கூடலாம், ஆனால் ஆத்மா என்றும் அழியாமல் வாழ்கிறது).

அன்றுக் காலை ஆன்ம இலக்கியத்தின் தத்துவத்துடன் தான் அவிரா மற்றும் நவ்யாவின் நாள் தொடங்கியது.

“நவி நான் வேணா இப்படியே இந்த ஜன்னல் வழியா குதிச்சு ஓடிட்ட?” என்று அவிரா நவ்யாவிடம் வினவ.

“ஏன் டி?” என்று புரியாமல் வினாவினாள் அவள்.

“அடிக்கிற குளிருல ஆவிய பத்தியெல்லாம் பேசுறாங்க பாவிங்க. நாளப் பின்ன குளிர் மோகினி என்னை பிடிச்சுக்கிட்டா?” என்று நடுங்கியவாறு கூற.

“அது என்ன குளிர் மோகினி?” என்று புரியாமல் வினவினால் நவ்யா.

“அந்த மோகினியெல்லாம் குளிர்ல தான் புடிக்குமாம். அதான் அது பேரு குளிர் மோகினி. எங்க அம்மும்மா சொல்லிருக்காங்க” என்றுக் கூற.

“எது? சென்னையில அடிக்கிற வெயிலுக்கு, உங்க அம்மும்மா குளிர் மோகினி பத்தி சொல்லிருக்காங்களா?” என்று சிரித்தவாறு வினவ.

“அதெல்லாம் மார்கழி மாசம் பொறந்தா சொல்லுவாங்க” என்று சிலுப்பிக் கொண்டே அவிரா கூற. அதற்கு சிரித்துவிட்டாள் நவ்யா. இவர்களைக் கண்ட உரையாளரோ, மிஸ் அவிரா&மிஸ் நவ்யா என்று அழைத்து “அவுட்” என்று கத்தினார்.

“ரொம்ப நன்றி கடவுளே” என்று கையை கூப்பி கடவுளுக்கு நன்றி சொன்ன அவிரா, நவ்யாவை இழுத்துக் கொண்டு இது தான் சாக்கென்று வேகமாக சென்று விட்டாள்.

“அடியே…” என்று முறைத்தவாறு நவ்யா அவிராவை நோக்க. “விடு மாமே அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா, சரி... சரி சூடா இருக்கே ஐஸ்கிரீம் செப்பட்டா?” என்று குதூக்கலத்துடன் வினவ.

“இப்போ மட்டும் உங்க தாய்கிழவி சொன்ன குளிர்மோகினி துரத்தாது பாரு?” என்று அவள் போட்ட பந்தை அவளிடமே நவ்யா திருப்ப.

“அது... ஐஸ்கிரீம் சாப்பிட்டா மோகினிக்கு சளி புடிக்குமாம். அதனால நம்ம சாப்பிடலாம். நீ இங்கயே இரு நான் வாங்கிட்டு வந்திடுறேன்” என்றுக் கூறியவாறு சிட்டாக பறந்துவிட்டாள் அவிரா. அவள் சென்ற திசையை தலையில் அடித்தப்படி நோக்கினாள் அவளது உற்ற தோழி.

பின் அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவள் உட்கார்ந்துக் கொண்டு அருகிலிருக்கும் புத்தக ஸ்டாண்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து புரட்ட தொடங்கினாள். ஒரு பக்கம் தான் திருப்பியிருப்பாள் அதற்குள் “எக்ஸ்க்யூஸ் மீ, புக்?” என்று கையை நீட்டியப்படி நின்றிருந்தான் உதய்கிரண்.

அவனை ஏறிட்டு பார்த்தவளுக்கோ மனதில் சொல்லொண்ணா உணர்வு வந்துப்போனது. பலமுறை சிலபல சந்தேகளுக்காக அவனிடம் பேசியவள் தான். ஆனால், இத்தனை அருகில் இன்று தான் அவனை முழுதாக காண்கின்றாள். அவள் மொழியரியா குமரியாய் அவனிடம் பதிலைக் கோர்த்து பேசுவதற்க்கு முன். “தாங்க்ஸ்” என்றப்படி அவள் கையிலிருந்த புத்தகத்தை அவளை பார்க்காமலே எடுத்துக் கொண்டு நகர்ந்திருந்தான்.

அவன் செல்லும் பாதையை தான் அவள் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் இதயம் அவனிடம் இடமாறி பல மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னுமும் அவளது வெளிப்படையான நுண்ணிய உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் அவன் தான் சுற்றிக் கொண்டு இருக்கின்றான். பல முறை சந்தேகம் கேட்பது போல் அவள் எவ்வளவு பேச்சுக் கொடுத்தாலும். அவன் தான் பிடி கொடுத்து பேசாமல் இருக்கின்றான். இப்போது கூட அவளை கண்டும் காணாமல் முன்னேறிக் கொண்டிருந்தவனை நினைத்து அவளுக்கு கடுப்பாக இருந்தது.

“இந்த மாங்கா மண்டையன் கண்ணுக்கு நான் தெரியுறேன்னா இல்லையா? ஊர்ல இருக்கிற அத்தனை பேர் கூடவும் பேசுறான். ஆனா, என்னை மட்டும் கண்டுக்க மாட்டேங்குறான். ஒரு வேல மணி கணக்கா தியானம் பண்ணுறதால மனுஷன் துறுவியா மாறிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரா என்ன?” என்று எக்கு தப்பாக நினைத்தவள்.

"மிஸ்டர் உதய் கொஞ்சம் நில்லுங்க” என்று கணீர் குரலில் அவனை அழைக்க. அந்த காரிடோரில் உள்ள அனைவரும் அவள் கத்திய கத்தலில் அவளையே பார்த்திருக்கும் போது. அவளது எண்ணத்தின் நாயகன் மட்டும் எப்படி தற்போது திரும்பாமல் இருப்பான்? பின்னால் திரும்பி அவளை தான் பார்த்தான். இல்லை... இல்லை முறைத்தான்.

அவன் முறைப்பை கண்டுக் கொண்ட பின்புதான் தனது செயல் பெண்ணவளுக்கு உரைத்தது. “ஆத்தி! ரொம்ப சத்தம்மா கூப்பிட்டிடோம் போல” என்று நாக்கை கடித்தவளின் முன் தான் அவன் என்ன வேண்டும் என்பது போல கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"அது...அது…”என்று திணறியவளை கண்டு. “ஹலோ மிஸ் நிறைய வேலை இருக்கு கொஞ்சம் எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லுறீங்களா?” என்று வினவ. அது வந்து இன்னிக்கு உங்க ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது என்று கூற(உளற).

"ஓ... தாங்க்ஸ் என்று மட்டுமே கூறினான்.

அவ்வளவு தான் ரியாக்சனா?” என்று நினைத்தவள் அப்போது தான் உணர்ந்தாள் அவன் இப்போதும் அவளை நேருக்கு நேராக பார்க்கவில்லை என்று. அதனை நினைத்து கடுப்பானவள்.

“அது ஒரு டவுட்டு பாஸ். நீங்க தான் டவுட்டுன்னா கேட்க சொல்லிருக்கீங்களே” என்று கூற. “அவனோ சீரியஸான குரலில் சொல்லுங்க என்ன டவுட்?” என்று கேட்க.

“தியானம் பண்ணினால் வெயிட் லாஸ் ஆகும்ன்னு சொன்னீங்க தானே? நானும் ரெண்டு வாரம் தொடர்ந்து பண்ணினேன் ரெண்டு இன்ச் கூட குறையல” என்று குறைப்பட.

அவளை ஏற இறங்க பார்த்தவன். “ஐ திங்க் நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். மெடிட்டேஷன் செய்யும் போது, உங்க கிராவிங்க்சை(cravings) அது கண்ட்ரோல் பண்ணும்ன்னு தான் நான் சொன்னேன்”. அப்புறம் ஃபோர் யுவர் கன்சர்ன் "நாவை அடக்கினால் நாட்டையும் ஆளலாம்" என்று மட்டும் கூறிவிட்டு அவன் நடையை கட்டினான்.
அவன் கூறியது சாதாரணமான சொல்லாக தான் இருந்தது. ஆனால் அதில் எத்தனை உண்மை பொதிந்துக் கிடக்கிறது என்று அவளது விதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.

லிட்டச்சீ ஃப்ளேவர் ஐஸ்கிரீமை நன்றாக கூழாக்கி கொண்டே நவ்யா நடந்ததை அவிராவுடன் பகிர.

“இப்படியா உளறி வைப்ப?” என்று தோழியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“பேசியே ஆகணும்னு ஒரு வெறி வந்தது டி. அதுல டங்க்கு ரொம்ப ஸ்லிப்பாகிடுச்சு” என்றாள் அப்பாவியாக.

“மீதி நேரம் எல்லாம் என் கிட்ட எப்படி வாய் கிழிப்ப? கருமம், அந்த மனுஷன் பத்துநாள் முன்னாடி ஓரியென்டேஷன்ல பேசின டாபிக்கை காலையிலே பேசினாருன்னு ஆரம்பிச்சு, ரெண்டு நாள் முன்னாடி இந்த மார்க்கு நம்மகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த ‘பெனிஃபிட்ஸ் ஆஃப் கண்ட்ரோலிங்க் கிராவிங்ஸ்’ டாபிக்கை போய் அவர் பேசின மாதிரி போய் டவுட் கேட்டிருக்க” என்று கூற.

அப்போது தான் நவ்யாவின் மண்டையில் மணியடித்தது “அவி லாஜிக்கா நீ சொல்லுறதெல்லாம் கரெக்ட் தான். ஆனால், நான் சொன்னதுக்கெல்லாம் அவரும் ரெஸ்பான்ஸ் பண்ணினாறே?” என்று கண்கள் மின்னிய படி வினவ.

“ஒரு ஸ்டூடண்ட் டீச்சர் கிட்ட டவுட் கேட்கும் போது எப்படி பீல் ஆவாங்க? அப்படியா தான் இருக்கும். இல்லைன்னா இதே டாபிக்கை அவரு வேற எங்கையாவது பேசியிருப்பாரு. ரொம்ப கற்பனையில மிதக்காம இரு” என்றுக் கூறியப் படி நவ்யாவின் நொடி நேர வானில் பறந்த கற்பனை குதிரையையும் படக்கென்று கத்தரித்து விட்டாள் அவிரா.

மையல் கொண்ட இருதயத்தை,
மீட்டெடுக்க தெரியாமல் அலைகின்றேன்,
உயிருடன் சேர்த்து உனையும் கண்டெடுக்க,
ஏதேனும் ஓர் வழி இருந்தால் சொல்லிவிடு?
என் இதயராணியே!”


 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-5


சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையித்தை யீன்றவித்தில் விளைந்ததே சிவாயமே!!

கடுமையாக பனிப்பொழிவுகள் பொழிந்துக் கொண்டிருந்த காலை பொழுது அது. நகரங்களில் பல இடங்கள் மந்தமாக தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பனியின் கோர தாண்டவம் அவ்வாறாக இருந்தது. ஒருவேளை நிகழ்காலம் பின்னுக்கு செல்ல இருப்பதை குறித்து சூசகமாக செயலில் உணர்த்துகின்றதோ?

அந்த ஆளுயர்ந்த கட்டிடத்தில் பதினைந்தாம் தளத்தில் இருந்த அறை. மங்கிய வெளிச்சத்துடனும், நறுமணம் கமழும் லாவேண்டர் டிப்ஃபுயூசரின்(diffuser) வாசத்துடனும், ஆங்காங்கே மனதை பார்த்தவுடன் அமைதியாக்கும் படங்களுடனும், பிளேயரிலிருந்து மெல்லிய மனதை வருடும் பாடல்களுடனும் என்று காண்பதற்கு அத்தனை அழகாக, இரம்மியமாக காட்சியளித்தது.

அந்த அறையில் வீர்பத்ரா, லீனா மற்றும் உதய்கிரண் தான் இருந்தனர்.

“ஆர் யு ரெடி?” என்று வீர்பத்ரா உதயை பார்த்து வினவ.

“எஸ் வீர்” என்றான் அவன்.

வீர் அவனை சற்று பதட்டமில்லாமல், மனதை அமைதியான மனநிலையில் ஒருமுகமாக வைக்கும்படி கூறிவிட்டு. அவனது சாய்வு இருக்கையை மேலும் சற்று சாய்த்தவாறு வைத்தார். பின் அவர் அவனிடம் பேச்சுக் கொடுக்க தொடங்க. லீனா அந்த செஷனை ரெகார்ட் செய்வதற்கு தேவையான கருவிகளை ஆன் செய்துவிட்டு, ஒரு நோட்பேடில் குறிப்புகளை எடுக்க ஆயுத்தமானாள்.

“லிசன் உதய். கிளோஸ் யுவர் ஐஸ். கீப் யுவர் மைண்ட் காம். எஸ் அப்படி தான். இப்போ மெதுவா மூச்சு இழுத்து விடு” என்று உருகும் குரலில் மனதை வருடுமாறு இதமாக வீர் அவனுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டிருக்க. அவனும் அவர் சொன்னவற்றை செய்தான்.

“இப்போ நான் ஃபைவ் கவுண்ட் பண்ணுவேன் அப்போ நீ உன்னோட டீப் ஸ்லீப் ஸ்டெட்டுக்கு போயிருப்ப”.

“ரெடி 5...4...3...2...1” என்று எண்ணியப்படியே அவர் ஒரு சொடுக்கு போட அவன் ஆழ்ந்த உறக்கத்திருக்கு சென்றிருந்தான்.

“யு ஆர் டூயிங்க் யுவர் ஜாப் ரியல்லி குட் உதய்” என்றவர் அவனது நெற்றியையும், நெஞ்சையும் நீவி விட. உதய் இன்னும் ஆழமான தூக்கத்திருக்கு சென்றிருந்தான்.

“I don’t want you to rush, பொறுமையா நான் கேட்க கேட்க ஆன்சர் பண்ணு சரியா?” என்று அவர் மிகமிக பொறுமையாக அவனை கையாண்ட படி கேள்வியெழுப்பினார். அந்த பொறுமை இம்மாதிரியான செஷன்களில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதில் சிறிது பிசரினால் கூட அவனுடைய மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்தது போல் ஆகி விடும்.


“நௌ அகெயின் கவுண்ட் பண்ணுறேன். 5...4...3...2...1” ஒரு சொடுக்குடன் “அப்படி தான் உதய். உன் மனசு இப்போ அமைதியா இருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாம சொல்லு, எது உன்னை மெண்டலி வொர்ரி பண்ணது?” என்று அவனது பதிலை எதிர்நோக்கியவாறு வினவ.

“எனக்கு தெரில” என்றான்.

“ஓகே... ஓகே... ரிலாக்ஸ். இதுக்கு முன்னாடி இப்போ இருக்கிற மாதிரி டிஸ்டர்ப்பா இருந்திருக்கியா?”

“இந்த மாதிரி... இல்லை” என்று அவன் பாதி பாதியாக உரைக்க.

“வாவ் தட்ஸ் க்ரேட். காம் டவுன் உதய். நீ நல்லா கோ-ஆப்ரேட் பண்ணுற” என்றவர் சிறிது இடைவேளை விட்டு.

“ஓகே லிசன், ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இப்போ உன்னோட நினைவுகள் பயணிச்சுட்டு இருக்கு. இப்போ நீ அந்த நாட்களில் சந்தோஷமா இருக்க. ஹவ் டூ யு ஃபீல் நௌ? ”

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... ஃபிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்... அம்மா,அப்பா தம்பிக்கூட இன்னுமும் கம்பேர் பண்ணிட்டு இருப்பாங்க. அது எல்லாம் கேர் பண்ணாம இருக்கேன்... மீரா எனக்கு ப்ரபோஸ் பண்ணா… மாஸ்டர்ஸ் பண்ண பெங்களூர் போனேன்...” என்று உதய் ஒவ்வொரு சந்தோஷமான நிகழ்வுகளையும் அவனது நினைவலைகளிலிருந்து தேடி தேடி ஓர் அளவு கோர்வையாக கூற. லீனாவுக்கு அவன் கூறும் விதத்தில் குறுநகை பூத்தது.

“ஓகே உதய். இப்போ உன்னை டிஸ்டர்ப் பண்ணுற கனவு எந்த ஏஜ்ல இருந்து வந்ததுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று வீர் அவரிடம் இதற்கு முன்பு உதய் கூறிய காரணங்களை வைத்து நைச்சியமாக கேள்வியெழுப்ப.

“நான் கனடா வந்தப்போது... அப்புறம் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி” என்றுக் கூற.

“ஓ... ஓகே உன்னோட கனவு எப்படி வரும்? அதுல யார் யாரெல்லாம் வருவாங்க? ஒரு சாதாரண கனவு அதுக்கு ஏன் நீ ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்ணுற?”

அவனது கண்ணின் மணிகள் அலைப்புறதாக உருண்டோட “ரிலாக்ஸ் உதய்” என்று அவனை சமாதானப் படுத்திவிட்டு.

“பொறுமையா சொல்லு” என்க.

“என் கனவுல வர இடம் எங்கன்னு எனக்கு சொல்ல தெரியல. அதுல ஒரு ஆளும் ஒரு பொண்ணும் வருவா. அந்த பொண்ணு என் கண்ணு முன்னாடியே செத்து போய்டுச்சு, என்னால அந்த நிகழ்வை தடுக்க முடியல” என்று வீரின் வினாக்களுக்கு உடைந்து உடைந்து அவன் மனக் கண்ணில் வழியும் காட்சிகளை கோர்வையாக்கி மீண்டும் ஒருவித அலைப்புறதலோடு அவன் கூற.

“ரிலாக்ஸ் மை பாய். ரிலாக்ஸ்” என்றவர் சில கணங்களை அவனது சீரான நிலைப்பாட்டிற்காக விட்டிருந்தார். பின் மெல்ல மெல்ல அவனது வயது நிலையை குறைத்துக் கொண்டே வந்தவர் கடைசியாக, “உதய் இப்போ நீ உங்க அம்மாவோட வயித்துக்குள்ள இருக்க. ஹவ் டூ யு ஃபீல்?” என்று கூறியவுடன் லீனாவுக்கு புரிந்துவிட்டது அவர் அவனது பிந்தைய வாழ்க்கையை அறிய முற்படுகிறார் என்று.

“ஐ அம் ஃபீல்லிங் ஸ்ட்ரெஸ்ஃபுல்”. என்று அவன் கூற.

“ஏன்?” என்றார் அவர்.


“வீட்ல ஏதோ சண்டை” என்றுக் கூற.

“ரிலாக்ஸ்” என்றுக் கூறியபடி சொடுக்கு போட்டவர்.

“இப்போ நீ பிறக்கிறதுக்கு முன்னாடி எங்க இருந்தன்னு ஞாபகம் இருக்கா? அங்க என்னெவெல்லாம் பார்த்திட்டு இருக்க?”

“வெளிச்சம்...” என்று மட்டும் கூறினான்.

“ஓகே தட்ஸ் க்ரேட். நௌ யு ஆர் இன் யுவர் ஸ்ப்ரிச்சுவல்(spiritual) வேர்ல்ட். அங்க உன்னோட கைட்ஸ்(guide) முதல் முதல உன்னை எப்படி கூட்டிட்டு வந்தாங்கன்னு ஞாபகம் இருக்கா?” என்று மிகவும் கவனமாக கேட்க.

“அ...து மலை உச்சியிலிருந்து கீழ குதிச்சுட்டேன். அப்...போ ஏதோ ஒரு அழுத்தம் என்னை நோக்கி இழுத்தது அப்படி தான் என்னை கூட்டிட்டு வந்தாங்க. இல்லை... ஏதோ விசைக்கு ஏற்ப நான் தான் போனேன்” என்றுக் கூற.

அவன் கூறிய பதிலில் முற்பிறவியில் அவன் தற்கொலை செய்திருக்கின்றான் என்று புரிந்தது அவருக்கு.

“காம் டவுன் பாய், நீ இப்போ உன்னோட முற்பிறவி நினைவுகளோட பயணிச்சுட்டு இருக்க. அப்படியே முன்னாடி போ” என்ற வீர் “உன்னோட பிறப்பு, நீ வாழ்ந்த சூழ்நிலைகளிலிருந்து உன் வாழ்க்கை வரலாற்றை முடிந்தளவு சொல்லு” என்று அதனை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவர் கேள்வியெழுப்ப.


உதய்யும் காட்சிகளை கோர்வையாக முடிந்தவரை கோர்த்துக் கொண்டு கூற தொடங்கினான்.

*********
மதலை நாடு,

கண்களுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பச்சைப் பசேலென்று செழிப்புடன் சீரும் சிறப்புமாக இருக்கும் நாடு. சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்து விளங்கிய நாடு என்றும் கூறலாம். ஒருவேளை அதனால் தான் அந்த நாட்டின் பெயர் ‘மதலை ’ என்று வைத்திருப்பார்கள் போலும்!

செழித்துக் கிடக்கும் சோலைகள், கொழுத்துக் கிடக்கும் ஆந்நிறைகள், பூத்துக் குலுங்கும் மலர் வகைகள், வகைவகையாக மூன்று வேளைக்கும் அரண்மனை அன்னக் கூடத்தில் பாரபட்சமின்றி ஒரே போல் உணவுகளை உண்ணும் மக்கள் என்று அங்கு காட்சியளித்துக் கொண்டிருந்தததை வைத்தே அந்த நாட்டின் அரசனான ‘மகிழையன்’ எந்த அளவுக்கு தனது மக்களை இன்புற வைத்திருக்கிறார் என்று நம்மால் உணர முடிகின்றது.

‘மகிழையன்’ பெயருக்கு ஏற்றவாறு அனைவரையும் மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பது தான் அவரது தலையான குறிக்கோள் ஆகும். சிறு வயது முதலே அரசருக்கென்று இருக்கும் கோட்பாடுகளை கடுமையாக கடைப்பிடிப்பவர். அத்தோடு மக்களின் நலன்களிலும் அதிகம் அக்கறைக் கொண்டவர். யாரேனும் அவரது சபையில் கையேந்தி வந்தால் முதலில் அவர்களது வயிறை நிரப்பிவிட்டு, பின் அவர்களது இரண்டு தலைமுறைகளுக்கு சேர்த்து நன்கொடைகளையும், அவர்களால் செய்யக் கூடும் அளவுக்கு தக்க வேலைகளையும் வழங்கும் தாராளபிரபு! அது மட்டுமா? கைம்பெண்ணான அவரது தங்கை மகிழழகியின் மைந்தனை அவர் தான் வளர்த்து வருகின்றார்.

மகிழையன் எப்படி மக்களின் வாழ்வில் மகிழ்வுறு செய்கின்றாரோ அதே போன்று அவரது வாழ்வை மகிழ்விக்க வந்த பெண், அவரது பட்டத்தரசி “நச்சினி மெலியாள்”. பெயரைப் போல மெல்லிய மனம் கொண்டவர். திருமணம் முடிந்து ஈராண்டு கழிந்த நிலையில் தற்பொழுது தான் சூல் கொண்டிருந்தார்.

அன்று, ராணி நச்சினி மெலியாளுக்கு காப்பணியும் விழா. பெண்டீர் அனைவரும் அவரது அழகிய முகத்திருக்கு சந்தனம் பூசி, காப்பணிந்து, அவருடன் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“அத்தை... அத்தை...” என்று நச்சினி மெலியாளினிடம் வந்திருந்தான் மகிழழகியின் மைந்தன் “இளம்பரிதி”. பத்து வயதான சிறுவனின் துருதுருப்பு காண்பவர்களை எல்லாம் சொக்க வைக்கும். அவனுக்கு அவனுடைய அத்தை என்றால் கொள்ளை பிரியம். பாடப் பயிற்சிகளை எல்லாம் முடித்தவுடன் எப்போதுமே சிட்டாக நச்சினி மெலியாளிடம் தஞ்சம் புகுந்து விடுவான்.

“கூறுங்கள் குட்டி வீரரே” என்று வயிற்றை பிடித்ததப்படி நச்சினி வினவ. “தாங்கள் மிகவும் களைப்பாக தெரிகிறீர்கள். இந்தாருங்கள் இந்த நீரை அருந்துங்கள்” என்று சோர்வாக இருந்த அவரது முகத்தை கண்டுக் கொண்டு அவன் அவரிடம் குவலையை நீட்ட.

“பார்த்தீர்களா தோழிகளே? எனது மருமகனின் அக்கறையை. கண் இமைக்கும் நேரத்தில் கூட என்னுடைய அசௌகரியத்தை கண்டுக் கொண்டு என்னை தாங்கிக் கொள்கின்றான்” என்று கூறியவாறு குவலையை பெற்றுக் கொண்டு நீரை அருந்தினார்.

“எல்லாம் தங்களின் வளர்ப்பு அரசி” என்று தோழிகளும் பெருமிதத்தோடு அந்த சிறுவனைக் கண்டு கூற. அவர்கள் கூறியதற்க்கு ஏற்ப அவனும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பல்வேறு போரை வென்ற வீரன் போல நின்றிருந்தான்.

அதற்கு கிண்கிணி நாதமாய் சிரித்திருந்தார் நச்சினி மெலியாள்.

“பரிதி” என்று அவர் அவனை அழைக்க.

“கூறுங்கள் அத்தை” என்றான் அவன்.

“ஒன்றை மட்டும் நினைவில் நன்கு வைத்துக் கொள். எப்போதும் இந்த அத்தையை காக்கும் வீரனாக எல்லாம் நீ இருக்க தேவையில்லை. அன்பான மருமகனாக, இந்த வயிற்றில் உதித்திருக்கும் குழந்தைகளுக்கு அரணாக அவர்களுக்கு உற்ற நண்பனாக மட்டும் இரு, அது போதும் எனக்கு” என்று கூற.

“உங்களுடன் சேர்த்து இந்த குழந்தைகளுக்கும் நான் அரணாக எப்போதும் வீற்றிருபேன்” என்று பெரிய மனிதராக வாக்களிக்க.

பாவம் அந்த சிறுவனுக்கு தெரியாது. அவன் கொடுத்த வாக்கு என்றுமே நிறைவேறாத ஒன்று என.

மதலை நாட்டு அரசன் வருகிறார் என்று முரசொலி எழுப்பும் சத்தம் கேட்டவுடன். அங்கிருந்த பெண்கள் கூட்டம் பவ்வியமாக இருந்தது.

அரசருக்கு உரிய ராஜத் தோரணையில் வந்துக் கொண்டிருந்த மகிழையனிடம் ஒரு மூதாட்டி சந்தன கிண்ணத்தை கொடுக்க அவரும் நச்சினி மெலியாளின் மஞ்சள் முகத்திருக்கு மேலும் எழிலை சேர்க்கும் விதமாக சந்தனம் பூசினார். அதில் நாணத்தால் சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் அரசி நிலத்தை நோக்க, மகிழையன் உதட்டில் பூத்த இளநகையை அடக்கிவிட்டு, அங்கு கூடியிருந்த அனைவரையும் கண்டு ‘ம்ம்’ என்று செய்கை செய்ய ஆடல், பாடல் என்று விழா மேலும் சிறப்புற நடந்தது.

நிகழ்ச்சிகளுக்கு நடுவே பெரியவர்கள் அனைவரும் தம்பதி இருவருக்கும் ஆலம் சுற்றி பிற சடங்குகளையும் கழிக்க. அப்போது அங்கு அவர்களுக்கு ஆசி வழங்குவதற்க்காக வந்திருந்தார் சிவ ஞானி ‘ஆத்மநாதர்’.

அவரைக் கண்டவுடன் அரசரும், அரசியும் வணங்கி நிற்க. அவர் இருவருக்கும் தனது ஆசிர்வாதத்தை அளித்து விட்டு.

அரசியின் வயிற்றை நோக்கிவிட்டு. எம்பெருமானே என்று மேல் நோக்கியவாறு கைக் கூப்பினார்.

“அடியேன் தங்களை போன்ற சிவபக்தன் வந்ததில் மகிழ்வுற்றேன் சுவாமி” என்று மகிழையன் சிரம் தாழ்ந்து கூறிவிட்டு, மெலியாள் வா… இவரின் பாதம் பதிந்து ஆசி வாங்குவோம். நாம் இவர் போன்ற சிவ முனிவர்களிடம் ஆசிப்பெற்றால் நம் குலமே செழித்தோங்கும்” என்று கூறியவாறு தம்பதி இருவரும் அவரது பாதம் பணிந்தனர்.

அவரால் அவர்கள் இருவருக்கும் பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாய் நிறைய வாழ்த்தி ஆசியை அள்ளி வழங்க இயலவில்லை. அதனை நினைத்து ‘சிவபெருமானே’ என்று உள்ளம் வருந்தினார். மேடிட்ட வயிற்றுடன் குனிந்த நச்சினி மெலியாளை நோக்கி கண்ணை மூடியவாறு ஏதோ மந்திரங்களை உச்சரித்து விட்டு. அவரது இடுப்பில் முடிந்திருந்த பச்சிலையை கொடுக்க அதை பயபக்தியுடன் வாங்கி இருந்தார் நச்சினி.

“விரைவாக உட்கொள் தாயே” என்று நச்சினியிடம் உரைத்தவர். நச்சினி அதனை உட்கொண்டவுடன். “ஒரு சோதி அணைந்து தான் புது வரவுகள் இத்தரணியில் வருகை தர காத்துக் கொண்டிருகின்றது போலும்” என்று மனதோடு உரைத்தவரே. மகிழையினை நோக்கி “மகிழையா உன்னுடைய புத்திரிகள் உதிக்கும் வேளை வந்து விட்டது” என்று அவர் கூறிய கணம். நச்சினி மெலியாளுக்கு சுளீரென்று வலி வந்து விட்டது. அனைவரும் பதறி போய் அரசியை காண. அவரது வாயிலிருந்து இரத்தமும், உடையை நனைத்தவாறு நீரும் வெளியேறிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டுவிட்டு “அனைவரும் விரையுங்கள், பாதுகாவலரே மருத்துவச்சியை அழைத்து வாருங்கள்” என்று அங்கும் இங்கும் தோழிகள் கூக்குரலிட்டப் படி நகர. உறைந்த நிலையில் இருந்த மகிழையன் உடனே மெலியாளை தூக்கிக் கொண்டு சென்றிருந்தார்.

கலகலவென இருந்த இடம் நொடியில், கலவர பூமியாக மாறியிருந்தது.

உள்ளே மருத்துவச்சிகள் நச்சினிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருக்க வெளியே படபடப்புடன் நின்றிருந்தார் மதலை நாட்டு மன்னன்.

அனைத்தையும் கண்டு மருண்ட விழிகளுடன் நின்றிருந்த இளம்பரிதிக்கு அந்த துறவி வந்த பிறகு தான் அவனது அத்தைக்கு இப்படி ஆகிவிட்டது என்றெண்ணிக் கொண்டு அவரை நோக்கி கோவமாக சென்றான்.

“உங்களால் தான் எனது அத்தைக்கு ஏதோ ஆகிவிட்டது” என்றுக் கூற.

அவனை பார்த்து கசப்பாக சிரித்தவரோ “எம்பெருமான் என்னை இங்கு சரியான நேரத்திருக்கு வரவிடாமல் செய்திருந்தால். அந்த இரண்டு பிஞ்சுகளின் வாழ்வும் இப்புவியில் உதிப்பதற்க்கு முன்பே சென்றிருக்கும். நமச்சிவாய” என்று சிவபெருமானுக்கு நன்றிக் கூறியவர்.

“பஞ்சாட்சரத்தை கூற பழகிக் கொள் இளம்பரிதி. அப்போது தான் பல அனர்த்தங்கள் புரிய விடாமல் தடுக்க இயலும்” என்று மேலும் கூற.

அவர் கூறிய தொனியில் இளம்பரிதிக்கு ஒருப்புறம் கோவமாகவும், இன்னொரு புறம் பயமாகவும் இருந்தது.

வெகு நேரமாக மெலியாளுக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர் மருத்துவச்சிகள். ஆனால் இன்னுமும் குழந்தைகள் வெளியே வரவில்லை.

“சற்று முயற்சி செய்யுங்கள் அரசியாரே” என்று மருத்துவச்சி கூற.

நச்சினி வெகுவாக வலியில் அலறிக் கொண்டிருந்தார்.

பின் ஒரு வழியாக கடும் போராட்டத்திருக்கு பிறகு ஒரு மகளை நள்ளிரவில் பெற்றுவிட்டாள். “இந்தாருங்கள் அரசே ஒரு குழந்தை பிறந்துவிட்டது” என்று ஒருவள் பருத்தி துணியில் குழந்தையை சுற்றி பூக்குவியலாக அவரிடம் தர. அவருக்கோ கைகள் நடுக்கம் கண்டது. ஆனால் குழந்தையை கவனமாக பிடித்திருந்தார்.

“மெலியாள்?” என்று அந்த பெண்ணிடம் குழந்தையை பிடித்தப் படியே வினவ.

“இன்னொரு பிள்ளையை ஈன்றெடுக்கும் முயற்சியில் இருக்கின்றார். ஆனால், குழந்தை இன்னுமும் வராமல் இருக்கின்றது” என்றுக் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

சரியாக அடுத்த நாளின் தொடக்கத்தில் தான் நச்சினி மெலியாளுக்கு இன்னொரு மகள் பிறந்திருந்தாள். அந்த பிள்ளையை இவ்வுலகுக்கு சேர்பித்து விட்டு கடமை முடிந்தது என்று சென்றுவிட்டார் மதலையின் அரசி.

பிறந்த குழந்தையை அரசனிடம் காண்பித்துவிட்டு மருத்துவச்சி செய்தியை சொல்ல. கையில் இருந்த குழந்தையுடன் ஓடினார் அரசர். ஈன்ற தாயையும், தந்தையின் அரவணைப்பையும் ஒரே நேரத்தில் இழந்தது அந்த குழந்தை, அதோடு சேர்ந்து பிறந்ததிலிருந்து பேசும் தன்மையையும் இழந்திருந்தது. அக்குழந்தை தான் “ஆழினி உமையாள்”.

அழினிக்கு பின் அவளது தாயின் கருவறையில் உதித்து அவளுக்கு முன் பிறந்தது தான் அவளின் தங்கை “இதழினி இளையாள்”.

மகிழையனிடமிருந்த இதழினியும், மருத்துவ பெண்ணிடமிருந்த ஆழினியும் சிணுங்கிக் கொண்டே இருந்தனர். ஒருவேளை அமுதூட்டாமலே பிரிந்த அன்னையை எண்ணி இருக்குமோ?

மதலை நாட்டின் பட்டத்தரசி நச்சினி மெலியாளின் இறப்பு அரசர் மகிழையன்னுக்கும் சரி, அந்நாட்டு மக்களுக்கும் சரி கடும் அதிர்ச்சியை தான் கொடுத்தது. அவர்களை எல்லாம் காட்டிலும் மிகவும் வேதனையுற்றது இளம்பரிதி தான். அந்த தாக்கம் அனைத்து பிறவிகளிலும் அவனை துரத்தியது.

என்றோ நடந்த நிகழ்வுகளை நினைவூட்டிக் கொண்டிருந்த உதய்கிரணுக்கு தற்போது வேகமாக மூச்செடுத்தது“காம் டவுன் உதய்... காம் டவுன் மை பாய்...” என்று வீர்பத்ரா அவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்க லீனா அவன் துடிப்பதைக் கண்டு மிரண்டு போனாள். அந்த ஒரு நிகழ்விற்கே அவனது மனம் இப்படி துடிக்கிறது என்றால் அடுத்தடுத்து சம்பவங்கள் அறிய நேர்ந்தால்?

“அநந்தமாய் நம் மையல் வீற்றிருக்கும் என்று நான் நினைக்க,
அது அனர்த்தமாய் கனத்து பின் பொய்த்து போனது இளையவளே!!”


 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-6


குளக்கரையில் சலசலத்துக் கொண்டிருந்த நீரில் கரையிலிருந்தப் படியே கைகளை நீட்டி, அது தரும் குறுகுறுப்பில் செப்பிதழ்கள் பிரித்து கிளுக்கி சிரித்தாள் ஐந்து வயதான ஆழினி உமையாள். ஆழி நிற கண்களால் சொக்கி போடும் அழகுடையவள். அமைதியின் உருவமாக இருந்தால் கூட அவளிடத்தில் அவப்பொழுது குறும்புகள் சற்று அதிகமாகவே கொப்பளிப்பக்கும்.

அவள் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே குதிரையை மரத்தில் கட்டிவிட்டு அதனது கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பதினைந்து வயதான இளம்பரிதி. வயதுக்கேற்ற உயரம், அரும்பு மீசை, அடங்காத கேசம், பயிற்சிகளால் முறுக்கேறிக் கொண்டிருக்கும் புஜங்கள் என்று பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருக்கும் தோற்றம் தான் அவனுடையது.

“ஓடாதே இதழினி சற்று நில். எங்களால் இதற்கு மேல் ஓட இயலாது” என்று செவிலித் தாய்மார்கள் தூரமாக கத்திக் கொண்டிருக்கும் சத்தம் இங்கு வரைக் கேட்க. அவன் அங்கு சென்றிருந்தான்.

அங்கே, செவிலித்தாய்மார்கள் அவள் பின்னே ஓட. அந்த மொட்டு யாருக்கும் அடங்காமல் துள்ளி மானாக சிலம்பு சத்தம், அந்த கானகம் முழுவதையும் நிறைத்தப் படி ஓடிக் கொண்டிருந்தது.

அனைவருக்கும் போக்குக் காட்டிக் கொண்டிருந்த இதழினியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட இளம்பரிதியோ, “இதழா...” என்று கணீரென்று அழைக்க.

அவனை திரும்பிப் பார்த்தவளோ “கூறுங்கள் வீரரே” என்றாள் செப்பு வாய் திறந்து பிஞ்சு மொழியில்.

“ஓடாமல் ஓரிடத்தில் நில். தற்போது தானே கால்களுக்கு வைத்தியர் பச்சிலை பூசியிருக்கிறார்” என்றான் கண்டிப்பான குரலில்.

அவன் கூறிய குரலுக்கு அவனை முறைத்து விட்டு மீண்டும் ஓட தொடங்கிவிட்டாள் அந்த குறும்புக்காரி.

மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழந்தையானவள் கால் தடுக்கி மாடியிலிருந்து கீழே விழுந்திருந்தாள். அதில் உண்டான காயத்திருக்கு வைத்தியம் பார்ப்பதற்காக தான் அவர்கள் அந்த கானகத்தில் இரண்டு வார காலமாக தங்கியிருந்தனர். அவர்களுக்கு துணையாக இளம்பரிதியும் உடனிருந்தான். தற்போது தான் இதழினிக்கும் கால்கள் குணமாகியிருந்தன. அதற்குள் அவளது குறும்புகளை மீண்டும் அரம்பித்திருந்ததில், பொறுமை இழந்தவன்.
“இதழினி…” என்று இம்முறை குரலில் கடினத்தை கூட்ட.

அவனை ஒருமுறை நன்றாக முறைத்து விட்டு அவள் பின்னே வந்த பெண்களுடன் சென்றுவிட்டாள்.

அவள் அவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற விதத்தைக் கண்டு மெல்லிய சிரிப்பொன்றை வெளிப்படையாக உதித்திருந்தான்.

அவனது நண்பன் அந்துவனோ “பார்த்தியாடா நண்பா இந்த குட்டி மோகினி சுத்தமாக உன்னை மதிக்கவில்லை” என்று சிரித்தப் படி கேலிப் பேச.

“அது என்னவோ உண்மை தான் அந்துவா” என்று வெகுவாக சலிப்பது போல் போலிக் குரலில் கூறியவன். “அதைவிடு வா... சற்று நீராடிவிட்டு வருவோம்” என்றுக் கூறிய இளம்பரிதிக்கு அப்போது தான் ஆழினியை குறித்து நினைவு எழுந்தது.

அவன் சடாரென்று தள்ளியிருந்த குளக்கரையை திரும்பி பார்க்க. அங்கு ஆழினியை காணவில்லை.

“ஆழினி...” என்று அவளை அழைத்துக் கொண்டே அவளை சுற்றிலும் தேட. அந்தோ! பாவம் அவளோ ஓடும் நீரில் தத்தளித்தபடி சென்றுக் கொண்டிருந்தாள்.

“ஆழினி...” என்று அலறியவன் வேகமாக அங்கு சென்றான்.

அவள் எப்பொழுது விழுந்தாள் என்றும் தெரியவில்லை, அவள் விழுந்த சத்தமும் மற்றவருக்கு கேட்கவில்லை. ஒருவேளை அப்பொழுது இதழினி மேல் அனைவரது கவனம் இருந்ததால் ஆழினியை மறந்திருந்தனரோ?

உடனே இளம்பரிதியும் நீரில் குதித்து அவளை ஒருவழியாக கரை சேர்த்திருந்தான். அதற்குள் அந்துவன் மற்றவர்களை கூக்குரலிட்டப் படியே அழைக்க. அனைவரும் விரைந்திருந்தனர்.

பேச்சு மூச்சில்லாமல் இருக்கும் ஆழினியை கண்டு அனைவரும் பயப்பட. வைத்தியர் முதலுதவி செய்து உயிர் காப்பாற்றினார்.

“ஆழி... எழுந்திரு” என்று வைத்தியர் மருத்துவம் பார்ப்பதற்குள் ஓராயிரம் முறை கரைந்தப் படி அவளை அழைத்திருந்தாள் இதழினி.

ஆழினி விழிகளை திறந்து சுற்றியிருந்தவர்களை பார்த்த பின்பு தான் அனைவரது விழிகளும் நிம்மதியுற்றது.

உடனே மதலை நாட்டு மன்னன் மகிழையனுக்கும் செய்தி சொல்லப் பட. அவர் புறத்திலிருந்து ஒரு தகவலும் வரவே இல்லை.

இதே இதழினிக்கு இவ்வாறு ஆகியுள்ளது என்ற செய்தி மட்டும் அவரது செவிகளுக்கு இந்நேரம் விழுந்திருந்தால் அடுத்த நிமிடமே அரச பணிகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வந்திடுவார்.

இதழினி சிகிச்சையில் இருந்தப்பொழுது கூட அவர் அடைக் காக்கும் கோழி போல் அவளுடன் தான் இருந்தார். ஆனால், ராஜ்ஜிய பணிகள் அவரது தலையை நெருக்கியதின் காரணமாக, அவரால் தொடர்ந்து அங்கு தங்க முடியவில்லை. இதழினி நிலையை காட்டிலும் தற்போது உயிர் போய் மீண்டிருக்கும் ஆழினிக்கு குறைந்தது ஒரு பதில் மடல் கூட அவரிடமிருந்து வரவில்லை என்பது தான் வேதனையான விடயம்.

ஆழினியின் விடயத்தில் அவள் பிறந்ததிலிருந்து அவர் காட்டும் அலட்சியம் தான் இளம்பரிதிக்கு அவனது மாமாவின் மீது சிறிது சிறிதாக கசப்பை விதைத்திருந்தது. இதே மெலியாள் இன்று அவர்களுடன் இருந்திருந்தால் இத்தகைய நிலை அவளுக்கு வந்திருக்குமா? என்ற வினாவை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த சம்பவத்திருக்கு பிறகு மேலும் ஒரு வார காலம் அவர்கள் அங்கு தங்கிவிட்டு. முழுதாக இதழினியின் கால்களுக்கும் இனி வைத்தியம் பார்க்க தேவையில்லை என்று கூறியவுடன் தான் அவர்கள் நாடு திரும்பியிருந்தனர்.

அவர்கள் அரண்மனை வந்தப்பொழுது ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றார் மகிழையன். அதோடு இதழினியை தூக்கிக் கொண்டு அவர் சுற்றிய சுற்றலில் அனைவரும் அவரையே தான் வாய் மீது கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பார்வைக் கூட்டத்தில், ஏக்க விழிகளுடன் ஆழினி பார்ப்பது போன்று இருந்தது இளம்பரிதிக்கு. அதில் இன்னுமுமே அவனது மாமன் மீது அவனுக்கு கோவம் துளிர்ந்தது என்பது தான் உண்மை.

அவனது அத்தைக்கு கொடுத்த வாக்குப் படி அவன் கடந்த ஐந்து வருடங்களாக சகோதிரிகள் இருவருக்கும் உற்ற நண்பனாக, சிறந்த பாதுகாவலனாக இருவரையும் ஒன்றுப் போல் சமமாக தான் பார்த்துக் கொண்டிருகின்றான். ஆனால், குழந்தைகளின் தந்தையாக அவர் இவ்வாறு அவர்களிடம் பாகுப்பாடு காண்பிப்பதில் தான் அவனுக்கு சற்று உவப்பாக இருந்தது.

இதுக் குறித்து அவன் அவரிடம் பேசலாம் என்று நினைத்திருக்கும் பொழுது.

“பரிதி, திரிசங்க நாட்டில் நமது ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஏதோ குளறுபடிகள் நடந்துக் கொண்டிருப்பதாக செய்தி கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்று என்னவென்று பார்த்து வா. எப்படியும் அங்குள்ள நிலைமை சீராக காலம் கூடலாம். அதனால் உன்னுடன் முதன்மை வணிக மந்திரி தீகன்னும் உடன் வருவார்” என்றுக் கூற. அவனும் சரியென்று கூற வந்ததை கூறாமலே பயணம் செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.

அவன் கிளம்பும் நாளன்று அவனது அன்னை, பெயரில் மட்டுமே மகிழ்ச்சியை வைத்திருக்கும் ‘மகிழழகி’ அவனைக் காண வந்திருந்தார்.

மகிழழகி அவரது கணவனை இழந்ததிலிருந்து தனிமையில் தான் வசித்து வருகிறார். அவரின் இழப்பு புரிந்ததால், அவரை யாரும் தொந்தரவு செய்திருக்கவில்லை. நாட்டின் புறப்பகுதியில் அவருக்கென்று ஒரு தங்குமிடத்தை அமைத்து தந்து சகல வசதிகளையும் செய்துக் கொடுத்திருந்தார் அவரது சகோதரன் மகிழையன்.

மகிழழகியும் அங்கையே தான் தனிமையில் முக்கால்வாசி பொழுதை கழிப்பார். அதோடு பிள்ளையை வளர்க்கும அளவு அவரிடம் அப்போது தெம்பில்லாமல் இருந்திருக்க. மகிழையன் தான் பரிதியை வளர்க்கும் பொறுப்பையும் சேர்த்து அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

மெலியாள் இறந்தவுடன் தான் தன்னை ஓர்ரளவு தேற்றிக் கொண்ட மகிழழகி. மகன், சகோதரன் மற்றும் அவரது பிள்ளைகள் என்று அனைவரையும் காணும் பொருட்டு மெல்ல மெல்ல அரண்மனை பக்கம் வந்து போகிறார். வந்த வேகத்தில் சென்றும் விடுவார். அங்கு தங்கவதெல்லாம் அரிது தான்.

அன்றும் அத்தி பூத்தாற் போல அப்படி தான் வந்திருந்தார்.

அவர் முகத்தில் இப்பொழுது தான் வாழ்வின் வெறுமையை தாண்டிய சாந்தம் குடிக்கொண்டிருகின்றது. மனக்காயம் வடுவானதால் வந்த அமைதியோ?

எது எப்படியோ அவரது முகத்தில் இருக்கும் தெளிவை திருப்தியுற பார்த்த இளம்பரிதி அவரிடம் கூறிக் கொண்டு சந்தோஷமாகவே விடைப்பெற்றுக் கொள்ள. அவரும் அவனது கன்னம் வழித்து உச்சி முகர்ந்தார்.

தனது தாயிடத்திலேயே நல்லதொரு மாற்றம் தெரியும் போது. மாமனிடத்திலும் அனைத்தும் இயல்பாகிவிடும் என்று அவன் எண்ணியிருக்க. அவ்வாறு நினைத்த அவனது எண்ணம் தான் தவறாகி போனது.

எப்போதும் அவனை முறைத்துக் கொண்டே இருக்கும் இதழினி இன்று உதட்டை பிதுக்கி அழ, ஆழினியோ சிரித்தப்படி வழியனிப்பிருந்தாள்.

“வீரரே... ” என்று அழது இதழினியின் அழுகை இன்றும் பசுமரத்து ஆணியாய் நெஞ்சில் நிறைந்தது.

*****
“உதய்… பரிதி… வீரரே...” என்று பல்வேறு அழைப்புகள் அவனது செவிகளில். இதில் எது நிஜம் எது பொய் என்று பிரித்தறிய முடியாதப் படி ஒரு சுழலில் சிக்குண்டான் அன்றைய இளம்பரிதி இல்லை... இல்லை இன்றைய உதய்கிரண்.

வீர்பத்ரா அவனை பொறுமையாக கையாண்டும் அவப்பொழுது அவன் உணர்ச்சி வசத்தில் நடுங்கும் போதெல்லாம், அவருக்கும் பயமாக தான் இருந்தது.

அதனால், “ச்சில் பாய், உன்னோட கடந்தக் கால நினைவுகளிலிருந்து நிகழக்கலாத்துக்கு வா”. என்று பொறுமையாக கூறி அவனை இயல்பாக்க, அவனிடமும் முன்னேற்றம் தெரிந்தது.

“அப்படி தான் கம்மான். நான் ஃபைவ் கவுண்ட் பண்ணுவேன் நீ உன்னோட ப்ரெசெண்ட்க்கு டிராவல் பண்ணு உதய். இப்போ இருக்கிறது தான் நிஜம் 5...4...3...2...1” என்றுக் கூறியப் படியே அவர் சொடுக்கிட. உதய் ஆழ்நிலை உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுப்பட்டுக் கொண்டிருந்தான்.

நேரம் வேகமாக சென்றது போல் இருந்தது.

அந்த அமர்வை நடத்தி கிட்டதட்ட ஐந்து மணி நேரம் ஆயிற்று. உதய் மேலும் ஒரு மணி நேரம் கழித்து தான் கண்களை திறந்திருந்தான்.

“இப்போ எப்படி இருக்கு உதய்” என்று வீர் வினவ.

“ஐ ஆம் ஓகே” வீர் என்றான். ஆனால் இன்னுமும் அவனுக்கு நிகழ்வுக்கு வர சற்று நேரம் பிடித்திருந்தது.

“லீனா யு மே லீவ். டேக் யுவர் பிரேக்” என்று வீர் கூற, கால் கடுக்க அத்தனை நேரம் நின்றிருந்த லீனாவும் சரியென்று தலையசைத்து விட்டு. ஆன் செய்திருந்த கருவிகளையெல்லாம் அணைத்து விட்டு “டேக் கேர் உதய்” என்றப்படி விடைப்பெற்றுக் கொண்டாள்.

“இப்போ எப்படி ஃபீல் பண்ணுற உதய்?” என்று வினவ.

“இட்ஸ் பேயினிங் வீர். நான் இதுக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது” என்று அவன் இப்போதும் நச்சினி மெலியாளின் இறப்பை நினைவில் வைத்தப் படி அவரிடம் கூற.

“கம்மான் உதய். உன்னை மாதிரியே தான் நானும் ஒரு காலத்திலே haunted by this f*** dream. திமிரு பிடிச்ச ஒரு ஸ்டூடண்ட்ன்னு பேர் வாங்கினதால, யாரும் எனக்கு ஹெல்ப் பண்ணலை. When I found my mentors என்னை அதுலயிருந்து மீட்டு எடுக்கிறதுக்குள்ள என்னோட இளமை காலமே முடிஞ்சிடுச்சு. அன்னிக்கு உன் முகத்திலே இருந்த தடுமாற்றம், குரலில் இருந்த ஏதோ ஒண்ணு? இதெல்லாம் என்னோட ஆரம்ப காலத்திலே நான் ஃபேஸ் பண்ண மாறியே இருந்தது. என்னால என் கண்ணு முன்னாடியே இன்னொரு வீரை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது” என்று அழுத்தமாக உரைத்தவர்.

“உன்னோட கேப்பாசிட்டி என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும் உதய். அது நீ மத்தவங்களை குணப்படுத்தும் வித்தத்திலையே நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். நீ வளர்ந்து வரும் பெஸ்ட் ஹிப்னோ தெரபிஸ்ட். உன்னையே ஒரு விஷயம் பாதிக்குதுன்னா? அது உனக்கும் நல்லதில்லை, உன் கேரியருக்கும் நல்லதில்லை” என்றுக் கூறி முடிக்க. உதய் புரிந்தது என்று தலையசைத்தான்.

****
சஞ்சய்கிருஷ்ணாவுடன் ஆத்யா மற்றும் கீர்த்தனாவின் குழுவில் உள்ள சில முக்கிய நபர்களும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சில நபர்களும், அந்த ஊர் தலைவரின் வீட்டில் தான் அமர்ந்திருந்தனர்.

“சார் கவர்மெண்ட் கைடன்ஸோட தான் எங்க வேலையை நாங்க இத்தனை வருஷமா செஞ்சிட்டு இருக்கோம். சுத்தி உள்ள ஊர்ல எல்லாம் இந்த ஐந்து வருஷத்திலே எங்க ஆராய்ச்சி மூலமா எத்தனை பழம்பெரும் பொருட்கள் கிடைச்சிருக்குன்னு, நியூஸ் பார்த்திருப்பீங்க தானே? அப்படி இருக்கும் பொழுது இப்போ உங்க ஊர்ல ரிசர்ச் பண்ண வரும் போது. அதை செய்ய விடாம தடுக்கிறது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. எங்களால போலீஸ் உதவியோட இதை மூவ் பண்ண முடியும் அதை ஞாபகத்தில வெச்சுக்கோங்க” என்றுக் கூற.

“புரியுது சார். ஆனால் நீங்க ஆராய்ச்சி பண்ண போறதா சொல்லுறது. ஆலமரத்துக்கு அடுத்து, தெக்கு பக்கத்து கிட்ட இருக்கிற நிலங்கள் மேல. அந்த பூமி இப்போ தான் தரிசு நிலம். ஆனா, இருபது வருஷம் முன்ன, அது தான் சுத்தி இருக்கிற பத்து ஊருக்கும் சோறு போட்ட பூமி. அந்த நன்றி தலைமுறை தலைமுறையா இந்த மக்கள் கிட்ட எப்பவும் இருக்கும் ஒண்ணு. அதான் சார் கொஞ்சம் யோசிக்கிறாங்க” என்று அவர் கூற.

“எங்களுக்கும் புரியுது சார். பட் கொஞ்சம் எங்க சைட்ல இருந்தும் யோசிச்சுப் பாருங்க” என்று கூறிய சஞ்சய்கிருஷ்ணா மேலும். “இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள அவங்கள கன்வைன்ஸ் பண்ணுங்க. அப்படி அவங்க ஒத்துக்கலைன்னா எங்க கைல எதுவும் இல்ல” என்று குரலில் அழுத்தத்தை தேக்கி அவர் கூறிவிட்டு மற்றவற்களுடன் விடைப்பெற்றிருந்தார்.

ஊர் தலைவரிடம் “என்னங்கய்யா இப்படி சொல்லிட்டு போராவுங்க” என்று அவரது உதவியாள் கூற.

“அவங்க தரப்பை சொல்லிட்டு போறாங்க டா” என்று பெரும்மூச்சை விட்டவர்.

அடுத்து அந்த ஊரில் இருக்கும் பெரியகட்டுகளுடன் சேர்ந்து, அந்த நில உரிமையாளர்களுடன் பேசி ஒரு வழியாக சம்மதம் பெற்றிருந்தார்.

அனுமதி கிடைத்தவுடன் ஆய்வாளர்களும் அவர்களது வேலையை தொடங்கியிருந்தனர்.

ஊருக்குள் வரிசையாக நுழைந்த ஜேசிபியை தான் வண்டியில் செல்லும் போது அக்னி ருத்ரன் மற்றும் கவியன் புருவ முடிச்சுடன் கண்டிருந்தனர்.

அக்னியும், கவியனும் பக்கத்து ஊரில் இருக்கும் கவியனின் ஆச்சியை அவனது தாய்,தந்தை பார்க்க சொன்னதின் பொருட்டு பார்த்துவிட்டு வரும்பொழுது தான் இந்த காட்சிகள் அவர்களது கண்ணில் சிக்கியது.

அதன்பின் வழக்கமாக ஊருக்குள் வந்தால் அவர்கள் செல்லும் தேனீர் கடையில் நின்று தேனீர் பருகிக் கொண்டிருக்கும் பொழுது.
இரண்டு பெருசுகள் நாட்டுநடப்புடன், ஊரில் நடந்துக் கொண்டிருக்கும் நிலவரங்களையும் வடையுடன் சேர்த்து மென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் அக்னி மற்றும் கவியனுக்கு அந்த வண்டிகள் வந்ததற்கான காரணமே தெரிந்திருந்தது. எப்படியும் தனது குடும்பத்தினரிடமும் ஊர் பெரியவர்கள் கலந்து ஆலோசித்திருப்பார்கள் என்றுணர்ந்த அக்னி மௌனமாக தேனீரை பருகினான்.

“நீ என்ன நினைக்கிற அப்பு” என்று அக்னியையும் பேச்சில் இழுத்த ஒரு பெரியவரைக் கண்டு.

“இதுல நான் நினைக்க என்ன இருக்கு? நான் ஒண்ணும் நினைக்கல தாத்தா” என்றான் புன்னகை முகமாக.

“பெரியவரே அவன் கிட்ட மட்டும் தான் கருத்தை கேப்பீங்களா? ஏன் எங்க கிட்ட எல்லாம் கேட்டால், எங்க கருத்தை சொல்ல மாட்டோமாக்கும்” என்று கவியன் அவனது வேலையை தொடங்க, அந்த பெரியவரோ “அதுக்கு எல்லாம் ஒரு முக ராசி வேணும் டா. மொச புடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா. எது தேறும், எது தேறாதுன்னு” என்று அந்த பெரியவரிடம் தானாக போய் குட்டும் வாங்கிக் கொண்டிருந்தான்.

“ரைட்டு பெருசுல இருந்து சிறுசு வரை மதிக்க மாட்டேங்குது. இந்த இன்சல்ட் உனக்கு தேவையா கவியா” என்று சுட்டு விரல் நீட்டி தனக்கு தானே அவன் வினவ. அக்னியோ சத்தமாக சிரித்துக் கொண்டான்.

பின் அவர்கள் இருவரும் வீடு வந்தப்பொழுது, வீட்டின் முன் ஒரு வெள்ளை நிற கார் நின்றிருக்க. அதனை பார்த்தப் படியே அவர்கள் உள்ளே சென்றனர்.

அங்கோ பழங்கள் நிரம்பிய தட்டை புன்னகை முகமாக நீலாவிடம் கொடுத்துக் கொண்டிருந்த கோமதியையும், சில்வர் டம்பளரில் குளம்பியை உறிஞ்சி கொண்டிருந்த மெய்யப்பனையும் தான் கண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும்.

அளவளாவிக் கொள்ளவில்லை தான்,

இருப்பினும் உனது மௌன மொழியுடனும்,
நினது நயனம் கூறிய செய்தியிலும்,

யாருமறியாமல் வீழ்ந்தேனடி உமையவளே!!

 

NNK-28

Moderator

நயனம்-7


“வாங்க பசங்களா. சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க. இங்க வந்து உட்காருங்க” என்று ஆவுடையப்பன் ருத்ரன் மற்றும் கவியனை வரவேற்க. அவர்களும் பெரியவர்களுக்கு புன்முறுவலை பரிசளித்துவிட்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

“வாங்க பசங்களா இப்போ தான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தோம். உங்களையெல்லாம் பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சில்ல?” என்று மெய்யப்பன் உதட்டு சிரிப்புடன் சேர்த்து எப்போதும் போல கணீர் குரலில் அவர்களிடம் வினவ.

“ரொம்ப வருஷமெல்லாம் ஆகிடலை தாத்தா. ஜஸ்ட் ஒரு ஐஞ்சு வருஷம் தான் ஆகியிருக்கும். அதுக்கு முன்னாடி வரை, நீங்களும் உங்க ஃப்ரெண்டு கூட கடலை வறுக்க அடிக்கடி இந்த பக்கம் வருவீங்க. நானும் இந்த பையன் கூட சேர்ந்து, வறுத்த கடலையை திங்க அடிக்கடி இங்க வருவேன்” என்று கவியன் கூற.

ருத்ரன் படக்கென்று அவனது தொடையை கிள்ளினான்.

“ஆ…” என்று கவியன் வலியில் அலறியப்படி அவனைக் காண. அவனோ “கொஞ்சம் நேரம் வாய மூடிட்டு இரு” என்றான் அடிக் குரலில்.

“அது சரி வயசாகிடுச்சுல கவியா, அதான் முன்ன மாதிரி வந்துப்போக முடியல. ஆமா உன் தாத்தன் இப்போ எப்படி இருக்கான்?” என்று மெய்யப்பன் அவர்களுடைய மற்றொரு நண்பரும், கவியனின் தாத்தாவுமான சாரதியைப் பற்றி வினவ.

“அவருக்கு என்ன ஜம்முன்னு கல்லு குண்டு மாதிரி ஸ்ட்ராங்கா தான் இருக்கிறாரு. இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்ன பெங்களூர்ல இருக்கிற அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்தாரு” என்றுக் கூற.

“ஓ... அப்படியா” என்ற மெய்யப்பன். “அவனை பார்த்து நாளாகிடுச்சு. ம்ம்... நானு, இவன், உங்க தாத்தன் எல்லாம் பிஞ்சுல இருந்து ஒண்ணா சுத்தினவங்க. ஊர்ல நாங்க அடிக்காத கேலிக் கூத்தே கிடையாது தெரியுமா?” என்று பெருமூச்சை விட்டுக் கொண்டு கதைப் பேச தொடங்க.

“அய்யய்யோ! 1950ல ஆரம்பிச்சு 60,80ன்னு ஒன்னு ஒன்னா போவாறே” என்று கவியன் கலவரமாக மனதில் நினைக்க. மெய்யப்பனும் அவனை மேலும் கலவரப்படுத்துவதற்காகவே, அவர், ஆவுடையப்பன், கவியனின் தாத்தா சாரதியை குறித்த பால்யகால நினைவுகளை எல்லாம் முதலிலிருந்து ஒப்பிக்க தொடங்கினார்.

“ருத்ரா ஏதாவுது பண்ணு டா” என்று ருத்ரனின் காதை கடிக்க.

அவனோ வலதுக் கையால் வாய்யை மூடிக் கொண்டு ஓரக் கண்ணால் அவனிடம் சற்று புலம்பாமல் அடங்கும் படி சைகை செய்தான்.

“ஏங்க புள்ளைங்க ரெண்டும் பாவம்ங்க. இப்போ தான் கொளுத்திற வெயிலிருந்து வந்திருக்காங்க. அதுக்குள்ள உங்க நினைவூட்டல எல்லாம் தொடங்கிடாதீங்க” என்று கோமதி அவர்களை ரட்சிக்கும் அன்னையாக கூற, “அது சரி பசங்க சலிச்சுக்கிறாங்களோ இல்லையோ. நீ ரொம்ப தான் சலிச்சுக்கிற. உனக்கெல்லாம் நாங்க எப்படி இருந்தோம்ன்னு எங்க தெரிய போகுது” என்று கூறியவர்.

அதற்கு பிறகு வேறு பேச்சு பேசினார்.

ஆவுடையப்பன் “ஆமா அருணு என்ன பண்ணுறான்? ஆடிக்கொரு முறையாவது ஊரு பக்கம் வரான்னா இல்லையா? உன் பேத்திங்க ரெண்டையும் குழந்தைல பார்த்தது. நல்லா வளர்ந்திருப்பாங்கல. என்ன பண்ணுறாங்க ரெண்டு பேரும்?” என்று வினவ.

“அவன் இன்னும் காலிலே சக்கரம் கட்டிட்டு தான் சுத்திட்டு இருக்கான். மருமகளும் எதுவும் கேட்கிறது இல்லை. மூத்தவ தொல்லியல் பொருட்களை எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா, சின்னவ கனடால போய் மனநலம் சமந்தமா ஏதோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பெரியவ ஆத்யா இப்போ எங்க கூட தான் இருக்கா” என்று மொத்த வரலாற்றையும் அவர் கூற.

“பெரியவே உங்க கூட தான் இருக்காளா? ஏன் ப்பா நீங்க வரும்போது அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? ” என்று நீலா அங்குள்ள அனைவருக்கும் நொறுக்குகளை வழகியப்படி வினவ.

“அட நீ வேற ஏன் ம்மா. அவ பொறந்த நாளுக்கு நாங்க எல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலுக்கு வந்து ஒரு அர்ச்சனை பண்ணிட்டு கையோட உங்க வீட்டுக்கு வரதா தான் இருந்தது. ஆனா, புள்ளைக்கு தான் விடுப்பு எடுக்க முடியாம வேலை இழுத்தடிச்சிடுச்சு. இப்பவும் நேரங்காலம் இல்லாம வேலை இருக்குன்னு தான் சொல்லிட்டு இருக்கா. சாமியை பார்க்க வரோம்ன்னு சொல்லிட்டு அதை தட்டி கழிக்க கூடாதுன்னு இவ சொன்னதுனால தான், சாமியே பார்க்கும் சாக்கோட உங்களை பார்க்கவும் வந்தோம்” என்று நீளமாக கூற.

“என்னமோ போடா இந்த பசங்க எல்லாம் வேலை வேலைன்னு அது பின்னடியே தான் திரியுறாங்க. இதோ இந்த ருத்ரன்னும் வீட்ல இருக்கிறது கிடையாது. என் பெரிய பையன்னும் அவன் குடும்பமும் ரெண்டு நாள் சேர்ந்த மாதிரி இங்க தங்குறது கிடையாது. எல்லாருக்கும் அப்படி என்ன தான் வேலையோ?” என்று ஆற்றாமையாக ஆவுடையப்பன் கூற.

“ப்ச்சு... விடுங்களேன் ப்பா” என்றார் மகாதேவன்.

“சரி... சரி... சாப்பாடு ரெடியா இருக்கு. வாங்க சாப்பிடலாம்” என்று நீலா அவர்களின் பேச்சை திசை திருப்பும் பொருட்டு கூற. அனைவரும் உணவு கூடத்திருக்கு சென்றிருந்தனர்.


உணவு முடிந்தப் பின் நீலாவுடன் கோமதி அளவளாவிக் கொண்டிருக்க. மகாதேவன் ஒரு வேலை விடயமாக வெளியே செல்ல அவருடனே கவியனும் சென்று விட்டான்.

“ஆவுடை, நான் நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வந்திடுறேன். அங்க பழங்கள் எல்லாம் நல்லா பழுத்து கிடக்கிறதா சொன்னாங்க. போய் பாப்பாக்கு கொடுத்தா நல்லா சாப்பிடுவா” என்று கூறிய நண்பனைக் கண்டு. “நானும் வரேன் டா. நம்ம ஜீப்லையே போகலாம். ருத்ரா ஜீப்பை எடு” என்று ஆவுடையப்பன் ருத்ரனையும் துணைக்கு அழைக்க. ருத்ரனும் அவர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டான்.

நன்கு பழுத்துக் கிடந்த கொய்யா, மாதுளை, பப்பாளி என்று பார்ப்பதற்கே கண்ணை கவரும் வண்ணம் இருந்தது அந்த தோட்டம்.

நடந்துக் கொண்டே, கடந்த வந்த பாதைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

“பாப்பாவை நினைச்சா தான் கவலையா இருக்கு” என்று மெய்யப்பன் ஆவுடையப்பனிடம் ஆதங்கமாக கூற.

“ஏன் டா?” என்றார் அவர்.

“உன் கிட்ட சொல்றதுக்கு என்ன டா. அவ எங்களை தவிர அவளோட அம்மா, அப்பா, தங்கச்சின்னு எல்லார் கிட்டடையும் பேசி வருஷம் ஆச்சு ” என்று கூற.

அவரை தான் கேள்வியாக பார்த்தனர் ஆவுடையப்பனும், அவர்களுடன் வந்துக் கொண்டிருந்த அக்னி ருத்ரன்னும்.

“ஏன் என்ன ஆச்சு? ஏதாவுது தகராறா?” என்று ஆவுடையப்பன் வினவ. மெய்யப்பன்னும் கதையை கூற ஆரம்பித்தார்.

****
மூன்று வருடங்களுக்கு முன்பு,

ஆத்யா தொல்லியல் கள(field) அனுபவத்தைப் பெறும் மாணவியாக காஞ்சிப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் உத்திரமேரூரிக்கு கீர்த்தனா மற்றும் சக மாணவர்களுடன் ஆறு மாத பயிற்சிக்கு வந்திருந்தாள். தொல்லியல் ஆராய்ச்சிக்கு பேர் போனது அந்த ஊர். அது மட்டுமா? கண்ணை கவரும் வண்ணமாக இயற்கை எழில்களையும் உள்ளடக்கியிருந்தது. உத்திரமேரூரிக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் தான் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்படி அவள் அங்கு தங்கியிருந்த பொழுது அவளுக்கு கிடைத்த அனுபவம் தான் அவள் வாழ்வில் இன்றுவரை மறக்க இயலாதவை. அது அவளுக்கு சில நேரம் மனதை நெருடும் வலியும் கூட.


தாட்சாயிணி என்ற பதினைந்து வயது பெண் அவளது வாழ்வில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பாள் என்று இன்றுவரை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவர்கள் தங்கியிருந்த இடத்திருக்கு அருகில் தான் வசித்துக் கொண்டிருந்தனர் தாட்சாயிணியின் குடும்பத்தினர். அவளது தந்தை தான் இவர்களை தினமும் உத்திரமேரூரிக்கு அழைத்து செல்லும் ஓட்டுநர். ஆகையால் அவ்வப்பொழுது அவளை காண நேரிடும்.

அவளை காணும் பொழுதெல்லாம் அவள் முகத்தில் எப்போதுமே ஒட்ட வைத்த ஒரு புண்சிரிப்பு தத்தளித்துக் கொண்டிருக்கும்.

அந்த சிரித்த முகத்திற்காகவே ஆத்யா மற்றும் கீர்த்தனாவுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.

ஒருமுறை, “உன் பேரு என்ன? என்ன படிக்கிற?” என்று கீர்த்தனா அவளுடன் நட்பு பாராட்டும் பொருட்டு வினவ.

அவள் சைகையால் தனது பெயரைக் கூறிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அவளுக்கு வாய் மற்றும் ஒரு காது கேட்காது என்ற விடையமே அவர்களுக்கு தெரிய வரும். ஏதோ திசுக்களின் கோளாறால் ஐந்து வயதில் திடீரென்று பேசும் தன்மையையும், அதற்கடுத்து வந்த காய்ச்சலால் ஒரு காதைக் கேட்கும் தன்மையையும் இழந்து விட்டாள் சிறுமியானவள்.

வளர்ந்து வரும் அழகு பதுமையாக, கணக்கில் புலியாக இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு குறையா? என்று இந்த செய்தியைக் கேட்டு அவர்களுக்கு சுருக்கென்று மனதை நெருடினாலும். அவளை கருணை பார்வை பார்த்து தாழ்த்த விரும்பவில்லை தோழிகள் இருவரும்.


எப்போதும் போல அவளை காணும் நேரமெல்லாம் அவளிடம் உரையாடினர். அதிலும் ஆத்யா இயல்பாக சைகை மொழியில் அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பாள்.

அப்போதெல்லாம் கீர்த்தனா தான் “என்ன ஆதி இவ்வளவு சீக்கிரமா சைன் லாங்குவேஜ் கத்துக்கிட்ட?” என்று ஆச்சரியமாக கேட்பாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை டி. நான் ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி அவ கிட்ட பேச ட்ரை பண்ணுறேன். ஆனால், அதுக்கு அவ நல்லாவே ரெஸ்போன்ஸ் பண்ணுறா அவ்வளவு தான்” என்று கூறுவாள் ஆத்யா.

ஒருவேளை விட்ட குறை, தொட்ட குறையாக முற்பிறவியின் மௌன மொழிக் கூட இன்றளவும் அவள் மனதில் பதிந்திருக்கின்றன போலும்!

அவர்களது நாட்கள் கூட இப்படியே நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது. அந்த நாள் வரும் வரை.

தாட்சாயிணியின் தந்தை தனஞ்ஜெயன் ஊர் முழுவதும் அவளது மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடிப் போக, வட்டிக்காரர்களும் அதற்கு மேல் தாக்கு பிடிக்காமல் ஊர் பஞ்சாயத்தை கூட்டினர்.

“வருஷம் ஆச்சுங்க, ஆனா இந்தாளு அசலும், வட்டியும் இன்னும் கொடுத்த பாடில்ல” என்று ஒருவர் குற்றம் சாட்ட.

“நாங்களும் பஞ்சாயம் பண்ண வேண்டாம்ன்னு தான் பார்த்தோம். ஆனா, இது இப்படியே போச்சுன்னா சரிப் படாது. ஊர் பெரியவங்களா பார்த்து ஏதாவுது பண்ணுங்க” என்று கூற.

தனஞ்ஜெயனோ “இன்னும் ஒரு வருஷம் அவகாசம் கொடுங்கய்யா. நான் எப்படியாவுது அடைச்சிடுறேன். ஒரே நேரத்தில மொத்தம்மா கேட்டா நான் எங்கய்யா போக?” என்று தனது நிலையைக் கூற.

“இன்னும் அவகாசமா? இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன். இதே கதையை தான் நீ இன்னமும் சொல்லிட்டு திரியுற. அசலை விடு வட்டியை கொடுக்க கூட வழி சொல்ல மாட்டேங்குற. ஊர்ல இருக்கும் பெரியவங்களே இதுக்கு ஒரு நல்லதொரு தீர்ப்பை சீக்கிரம் சொல்லுங்கய்யா. இல்லன்னா இவன் இன்னும் இழுத்தடிச்சுட்டு இருப்பான்” என்று மற்றொருவர் கூற.

“ஆமாங்க சீக்கிரம் சொல்லுங்க” என்று கூடி இருந்தவர்கள் நச்சரித்தனர்.

ஊர் பெரியவர்கள் பேச வாய் திறப்பதற்க்கு முன்னே இது தான் சாக்கென்று வாய்யை திறந்தான் அந்த ஊரின் பெரும்புள்ளியின் மைந்தனான மூர்த்தி என்பவன்.

“இதுக்கு நான் ஒரு வழி சொல்லுறேன். அந்த புள்ளையோட செலவுக்காக தானே இவரு கடன் வாங்கி வெச்சிருக்காரு. பேசாம அந்த புள்ளையே எனக்கு கண்ணாலம் கட்டிக் கொடுத்திடுங்க. அந்த கடனை எல்லாம் நான் மொத்தமா அடைச்சிடுறேன்” என்று கூற. அதற்கு இரண்டு, மூன்று பேர் “இதுக் கூட நல்ல யோசனையா இருக்கே?” என்று ஒத்து ஓதியவுடன் தான் அவளது வயதையும் கருத்தில் கொள்ளாமல் அனைவரும் சரியென்று அதையே தீர்ப்பாக கூறியிருந்தனர்.

அதற்கு மேல் பெண்ணை பெற்றவராக அவராலும் என்ன செய்ய இயலும்? மறுப்பு தெரிவித்தால் கண்டிப்பாக ஒரு போராட்டம் நடக்கும் என்று உணர்ந்தவர் சரியென்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார்.

அப்போது தான் செய்தியறிந்து ஆத்யாவிடம் அனைத்தையும் கூறியிருந்தாள் கீர்த்தனா.

“என்ன சொல்லுற கீர்த்து? சின்ன பொண்ணு டி அவ. அவளுக்கு போய்...? ச்ச இந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் பைத்தியமா?” என்று ஆவேசமாக கூற.

“பைத்தியம் தான் போல. அதோட அந்த ஆளு நம்ம தாச்சூவை விட பதினஞ்சு வயசு அதிகம் டி...” என்றுக் கூற.

“இப்போ என்ன டி பண்ணலாம்?” என்றாள் ஆற்றாமையாக.

“பேசாம போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணலாம். எப்படியும் நாம போய் பேச்சு வார்த்தை நடத்தினால் சுத்தமா வேலைக்கு ஆகாது. நீ என்ன சொல்லுற?” என்று கீர்த்தனா வினவ.

சற்று தயங்கிய ஆத்யாவின், நீல நயனங்களில் அந்த குட்டி பெண் சிரித்தப் படி தோன்ற. அதற்குமேல் யோசிக்காமல் சரியென்று ஒப்புக் கொண்டாள்.

காஞ்சிபுரம் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அவர்கள் நடந்த நிலவரங்களை கூற. அவர்களும் பெண் பிள்ளையின் நலனை கருதி அவர்கள் கேட்டதற்கு இணங்க, புகார் கொடுத்தவர்களின் பெயரை தெரிவிக்காமல் உடனே நடவடிக்கை எடுத்திருந்தனர். இதில் தனஞ்ஜெயனிருக்கு எச்சரிக்கையும், மூர்த்தியின் மீது பதினெட்டு வயது நிரம்பாத பிள்ளையை திருமணம் செய்ய விழைந்ததால் அதற்குண்டான வழக்கையும் ஃபைல் செய்திருந்தனர்.

அதன்பின் அவர்கள் பிரச்சனை முடிந்தது என்று நினைக்கையில் தான் அது பூதாகரமாக வெடித்தது.

அன்றொரு இரவில் ஆத்யா மற்றும் கீர்த்தனா அவர்களது மேல்மாடியில் இருக்கும் அறையில் இருந்தபோது. வெளியில் ஏதோ ஆட்கள் பொருட்களையெல்லாம் போட்டுடைக்கும் சத்தமும், ஆக்ரோஷமாக குரலை எழுப்பும் சத்தமும் கேட்டிருந்தது. அதுவும் தட்சாயிணியின் தாயின் அழுகுரல் தான் ஓங்கி ஒலித்தது.

ஆத்யா மற்றும் கீர்த்தனாவுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் கீழிறங்கி நடப்பதை பார்க்க விழைய. அவர்களை தடுத்து அவரவர் அறைகளில் ஒதுங்கும் படி கூறியிருந்தனர் அவர்களது பொறுப்பாளர்கள். அதோடு மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தர எண்ணி முன் ஏற்பாடாக, அடியாட்கள் வந்தபோதே முன் பக்க கேட்டை இழுத்து சாத்தியிருந்தனர்.

“என் புள்ள என்ன உன் சொத்தையா கேட்டான்? இல்லை தானே. நீ ஊர் பூரா வாங்கி இருக்கிற கடனுக்கு காசையும் தந்து, இந்த ஊமைச்சியை ஆசைப் பட்டதால கட்டி தொலையுறேன்னு தானே சொன்னான். அப்புறம் என்ன ****க்கு என் மவன் மேல கேஸை போட்ட” என்று மூர்த்தியின் தந்தை தனஞ்ஜெயனை போட்டு அடிக்க.

“ஐயா நான் எதுவும் பண்ணலைங்க” என்று அவர் வலியில் கதறிக் கொண்டிருந்தார்.

“டேய் இவனை அடிங்க டா” என்று கூறிய மூர்த்தியின் தந்தை. கொடூரமாக அவரது மனைவி மற்றும் தாட்சாயிணியின் தலைமுடியை பிடித்து இழுக்க. அதை காண்பவர்களின் கண்கள் குளமாகி போனது.

“ஆதி நிலைமை கை மீறி போகுது, நீ போலீஸ்க்கு கால் பண்ணு. நான் எவிடென்ஸ்க்கு வீடியோ எடுக்கிறேன்” என்று விழிகளில் நிறைந்த நீருடன் கீர்த்தனா கூற துரிதமாக ஃபோன்னை எடுத்து காவலர்களிடம் செய்தியைக் கூறினாள் ஆத்யா.

“என் வீட்டு மானத்தை குடும்பமா சேர்ந்து வாங்கிட்டீங்களே”என்று அரக்கனாக மாறி கர்ஜித்துக் கொண்டிருந்த மூர்த்தியின் தந்தை ஒருக்கட்டத்தில் தாச்சூவை ஓங்கி அறைந்ததில் அவள் உதடு கிழிந்து இரத்தம் கசிந்துக் கொண்டு வந்தது.

“தாட்ச்சூ...” என்று அவள் அலறியதைக் கண்ட ஒருவன். “அண்ணே அந்த பொண்ணு வீடியோ எடுக்குது” என்று கீர்த்தனாவைக் கண்டு கூற.

“அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்காம போய் ஃபோன்னை பிடிங்கி எறிங்க டா” என்றுக் கூறியவர். “யேய்...” என்று நாக்கை துருக்கி சைகை செய்ய அவளுக்கு ஈரக்குலையே நடங்கியது.

“ஆதி” என்று கீர்த்தனா பயமாக அவளை அழைக்க. அதற்குள் அந்த அடியாட்களும் அவர்கள் அறை கதவை உடைத்து கொண்டு வந்திருந்தனர்.

“ஏய்... ஃபோன்னைக் கொடு” என்று கீர்த்தனாவைக் கண்டு ஒருவன் மிரட்ட.

அவளோ பதட்டத்தில் மேலும் அதனை கெட்டியாக பிடித்திருந்தாள்.

“அடிங்க ****...” சொல்லிட்டே இருக்கேன் கொடுக்க மாட்டேங்குற என்று கூறியவன் அவளிடமிருந்து பகிரங்கமாக பிடித்து அவளது அலைபேசியை பறிக்க. ஆத்யா அவனை பின்னிருந்து “அவளை விடு...” என்றப் படி தடுத்துக் கொண்டிருக்க. அவளை மற்றொரு அடியாள் பிரம்பினால் ஓங்கி தலையில் அடித்திருந்தான்.

இரத்தம் வழியே கீழே தலை கிறுகிறுத்து மயங்கியவளை கண்டு கீர்த்தனா தன்னிடம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அடியாளை தள்ளிவிட்டு அவளிடம் ஓட முனைய.

அவனோ அவளது தலைமுடியை பற்றிக் கொண்டு, அந்த அலைப்பேசியில் அவள் பதிந்து வைத்திருக்கும் காணொளியையும் சேர்த்து அழித்து விட்டு. “பெரிய வூட்டு விவாகரத்தில எதுக்குடி மூக்கை நுழைக்கிறீங்க. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி இருங்க. இன்னிக்கு எங்க அண்ணன் மட்டும் கூட வந்திருக்கிலன்னா இப்போ நடக்கிறதே வேற” என்று அவளது வயிற்றில் ஒரு எத்து விட்டப் படி அவன் உடனிருந்தவர்களையும் கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான்.

அவன் அடித்த அடியிலும், உதைத்த உதையிலும் வலியில் துடித்த கீர்த்தனா, ஆத்யாவை பார்க்க அவளோ இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அடியாட்கள் சென்றவுடனே தோழிகளுடன் இருப்பவர்கள் அவர்களைக் காண வேகமாக வந்து, பின்வாசல் வழியாக அவர்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதற்கடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு அருண்குமார் பணிப்புரியும் மருத்துவமனையில் கண் விழித்த ஆத்யாவுக்கு தனஜெயனின் குடும்பம் கடனை அடைக்க முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்து இறந்து விட்டதாக தான் செய்திக் கிடைத்தது.

“இல்லை… அப்படியெல்லாம் இருக்காது. அவ...ங்கள கொன்னிருப்பாங்க” என்று ஆணித்தரமாக கூறியப்படி கதறினாள் பெண்ணவள்.

கன்றி சிவந்த முகத்துடன் அவள் முன் வந்த கீர்த்தனாவை, அன்று ஆத்யா கட்டிக் கொண்டு அழுதது இன்று நினைத்தாலும் கூட அனைவருக்கும் அழுகையில் கண்கள் நிறையும்.

அதன் பிறகு ஆத்யாவை அருண்குமார் மற்றும் மலர்விழி தனியாக விடவில்லை. யாரேனும் ஒருவர் அவளுடனே தான் இருந்தனர்.

அவளது காயம் சற்று ஆழமானதாக இருந்ததால் அப்சர்வேஷனில் வைக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் தலை வலியை அவள் உணரும் பொழுதெல்லாம் அந்த குடும்பம் எப்படி துடிதுடித்து இறந்திருக்குமோ என்று யோசித்துக் கொண்டு இவள் துடித்துக் கொண்டிருப்பாள்.

ஒரு மாதம் பிறகு தன்னை முழுதாக தேற்றிக் கொண்டவள். முதற்கட்ட வேலையாக அவர்களின் இறப்புக் குறித்த செய்தியை திரட்ட தொடங்கினாள்.


அன்று, மூன்று பேரையும் கொடூரமாக தாக்கிய மூர்த்தியின் தந்தை. அதன்பின் தனஞ்ஜெயனின் மனைவியை அனைவரின் முன்பும் மானபங்கம் படுத்திவிட்டு. அடுத்த நாள் தாட்சாயணிக்கும் அவரது மகன் மூர்த்திக்கும் திருமணம் என்று கூறியப்படி கிளம்பியிருக்க. அவமானம் தாங்காது அதன் பின் தான் தனஞ்ஜெயன் குடும்பத்துடன் தற்கொலை செய்திருந்தார்.

ஆத்யாவால் இந்த செய்தியை கேட்டு ஜீரணிக்க இயலவில்லை. பின் ஒரு முடிவெடுத்தவளாக அவள் தந்தையிடம் அவர்கள் அனைவரது மீதும் வழக்கு பதிவு செய்ய போவதாக கூற.

“வேண்டாம் ஆதி. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?” என்று அவர் கேள்வியெழுப்ப.

“அப்பா அந்த பொண்ணு சின்ன பொண்ணு ப்பா... உங்களுக்கு தெரியுமா அவளால வாய் பேச முடியாது. ஆனா அது ஒரு குறையா தெரியாம எப்போதுமே சிரிச்சுக்கிட்டே இருப்பா. பாவம் ப்பா... அவங்க” என்று கண்ணில் நீர் வழிய கூறினாள் ஆத்யா.

“ஆதி... பிளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப். எங்களுக்கு எல்லாம் தெரியும். பட் பிரச்சனை வேண்டாமேன்னு தான் அப்பா அப்படி சொல்லுறாரு” என்று நவ்யா அவளை சமாதானப் படுத்தினாள்.

“பிரச்சனைக்கு காரணமே நாங்க தான் நவி. நான் மட்டும் கீர்த்துவோட சேர்ந்து போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலன்னா. அந்த பொண்ணும் அவ குடும்பமும் அட்லீஸ்ட் உயிரோடவது இருந்திருப்பாங்க” என்று குற்ற உணர்வில் பரிதவித்தவளாக தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

****
“அதுக்கப்புறம் என் மகன், அவ எவ்வளவு கெஞ்சியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க உதவி பண்ணல, அதேபோல அவளையும் எடுக்க விடல. அவனை மீறி ஏதாவுது பண்ணினால் என் மருமக செத்திடுவேன்னு மிரட்டி இருந்தாளாம். ஏற்கனவே குற்ற உணர்ச்சில தத்தளிச்சுட்டு இருக்கிற புள்ள மனசுல இதெல்லாம் சேர்ந்து மேலும் மேலும் வெறுப்பா ஆழ பதிஞ்சு போய்டுச்சு. ஒரு கட்டத்தில அவ எல்லார் கிட்டடையும் பேசுறதையே கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டா”.

“ஏதோ தெய்வாதீனமா நாங்க இருக்கிற இடத்திலையே அவளுக்கும், அவளுக்கு துணையா அந்த கீர்த்தனா புள்ளைக்கும் வேலை கிடைச்சு எங்க கூடவே தங்குற மாதிரி அமைஞ்சதால, எங்கள தவிக்க விடக் கூடாதுன்னு, எங்க கிட்ட மட்டும் பேசிட்டு இருக்கா” என்று மொத்த கதையையும் மெய்யப்பன் கூறி முடிக்க. ஆவுடையப்பன் மற்றும் ருத்ரன்னுக்கு பேச்சு வரவில்லை.

அதோடு ருத்ரன்னுக்கு காரணமின்றி துக்கம் தொண்டையை அடைத்தது. ஏன் என்று புரியாமல் அன்று குளக்கரையில் அந்த பெரியவர் கூறிய வார்த்தைகள் வேறு ஆசிரீரியாக காதில் ஒலித்தது.


"தணலாக தகிக்கும் உண்மைகள்,
அணைந்த பின்னும் சுடுவதேனோ?"


 
Last edited:

NNK-28

Moderator
நயனம்-8

தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்கிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்கிலீர்
பறையறைந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்கிலீர்
புறையிலாத வீசரோடு பொருதுமாற தெங்ஙனே -சிவவாக்கியர்.

[(ப.பொ) குழந்தை பிறந்து தரையில் வீழ்ந்தவுடன் தீட்டு என்கிறீர். நீர்த்துறை சென்று நீங்கள் குளித்தபோது தூய்மையாகி விட்டோம் என்கிறீர். “நீங்கள் பிறந்தபோது அத்தீட்டு எங்கே சென்றது?”, என நான் பறையை அடித்துக் கேட்கிறேன். இதுபோல் நாட்களில், இந்த நாள் (தீட்டு) ஆகாது. அந்த நாள் ஆகாது. இப்படிக் கூறிக்கொண்டு நாட்களை வீணடிக்கிறீர்களே! நீங்கள் எப்படிக் குற்றமே (தீட்டே) இல்லாத இறைவனை அடையப் போகிறீர்கள்?]

சஞ்சய் கிருஷ்ணாவின் குழு அக்னி ருத்ரனின் ஊருக்கு வந்து தங்களது வேலைகளை அடுத்தடுத்து தொடங்கியிருந்தது. முதற்கட்ட தேடுதலில் அவர்களுக்கு சிலபல பவள நிற மற்றும் நீல நிற கற்கள் பதிந்த அணிகலன்களும், செம்பு மற்றும் மண் பாத்திரங்களும் அதனூடே சில ஓலை சுவடிகள், மற்றும் போரில் இறந்த சில வீரர்களின் நடுகற்களும்(நடுகல்) கிடைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் உடைந்த சில பானைகளில் இருந்த குறிப்பேடுகளில் ‘கொடுங்கை நாடு’, ‘மகிழரசி’, ‘நுதலழகி’, என்று எழுதப்பட்ட சில பெயர்களும் கிடைத்திருந்தது.

அங்கு இருக்கும் பொழுதெல்லாம் ஆத்யா, மெய்யப்பனின் உந்துதலில் ஆவுடையப்பனின் வீட்டிருக்கு செல்ல அவளுக்கு கிடைக்கும் ஓய்வு நேரமெல்லாம் முயற்சி எடுத்திருந்தாள்.

இத்தனைக்கும் கோமதி கூட ஒருமுறை அவளிடம், “நாங்க உன்னை பத்தி சொன்ன அப்போமே உன்னை கேட்டாங்க பாப்பா. உனக்கு, சின்ன குட்டிக்கு எல்லாம் மகாதேவன் தான் தாய் மாமன் சீர் செஞ்சு மடில உட்கார வெச்சு மொட்டை போட்டு, காது குத்தினது. ஏதோ உங்கப்பன் பட்டணத்துக்கு போன பொறவு இங்க இருக்கிற யார் கூடவும் அவ்வளவா பேசுறது இல்லை. இப்போ அந்த ஊருக்கு தானே வேலை பார்க்க போற? அப்படியே ஒரு எட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டு வந்திடு. நீ அங்க இருந்தும் அவங்களை ஒரு தடவை கூட பார்க்கலைன்னா நல்லா இருக்காது டா” என்று கூறி வைக்க. சரியென்று தலையசைத்தாள்.

ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் தடை வந்து அவர்களை சந்திக்க முடியாமலே சென்றது.

சிலரை சந்திப்பதற்கு கூட காலம் கனிய வேண்டும் போல.

அளவில் மாறுப்பட்ட சற்று அழுத்தமான இதழ்கள் கொண்ட தூரிகைகளை கொண்டு மிகவும் கவனமாக ஒரு பெரிய மண் பாண்டத்தை கீர்த்தனா, ஆத்யா மற்றும் சமீரா என்று மூவராக சேர்ந்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர்.

“வெயில் மண்டைய பொலக்குது… பாவம் என் ப்யூடி ஸ்கின். இந்த மாசு தூசுனால ரொம்பவே டேமேஜ் ஆகுது” என்று கீர்த்தனா அங்கலாய்க்க.

ஏற்கனவே கடும் வெயிலில் அந்த ஆஸ்பெட்டாஸ் சீட் அமைப்பிற்குள் வியர்வை வழிய சுத்தம் செய்துக் கொண்டு, கண்களுக்கு தூசி படாமல் இருப்பதற்காக கிளாசும், முகத்திருக்கு மாஸ்கையும் அணிந்திருந்த சமீரா மற்றும் ஆத்யாவோ இதைக் கேட்டு கீர்த்தனாவை ஒருசேர நன்கு முறைத்திருந்தனர்.

“ஏன் கேர்ள்ஸ் பாசமா லுக் விடுறீங்க?” என்று அவள் அப்பாவியான பாவத்துடன் வினவ.

“பேசாம சும்மா இரு டி... உனக்கு அடிக்குற அதே வெயில் தான் எங்களையும் போட்டு வதைக்குது” என்று கூறியப்படி ஆத்யாவும் வேலையில் கவனமானாள்.

அந்த மண் பானை மீது தண்ணீர் நிரம்பிய வாட்டர்-ஸ்ப்ரேவை, வைத்து அதில் பதிந்திருக்கும் மண் படிமத்தில் அடித்துவிட்டு. அதனின் கடினமான தடங்கள் சற்று இளகியவுடன், ஹாண்ட் ஷோவெலால்(hand-shovel, கைக்கு அடக்கமாக இருக்கும் மண்வெட்டி) அந்த பானையின் அடிப் பகுதியை கவனமாக தேய்த்து, மீண்டும் wax brush என்று கூறப் படும் பிரஷினால் அதை பொறுமையாக சுத்தம் செய்ய என்று அவர்களுக்கு நேரம் நீண்டுக் கொண்டே தான் சென்றது.

சரியாக பகலவன் உச்சிக்கு வரும் வேளையில் அவர்கள் வேலையும் முடிந்திருந்தது.

அப்பொழுது, “ஏய் இதுல என்னமோ எழுதிருக்கு பாருங்களேன்” என்று கீர்த்து அந்த பானையில் இருந்த எழுத்துக்களை கண்டு கூற.

“எப்படியும் நமக்கு புரிய போறது கிடையாது” என்றாள் சமீரா.

“அதுவும் சரி தான். கோண கோணையா எழுதிருக்கு, எந்த வகை எழுத்துன்னு சரியா கெஸ் பண்ண முடியல” என்று பெருமூச்சை விட்டவள். “சரி டைம் ஆச்சு சாப்பிட்டு வருவோமா?” என்று மற்ற இருவரையும் பார்த்து அவள் வினவ.

“ஓ... சூர்” என்றாள் சமீரா.

“நீங்க முன்னாடி போங்க நான் இந்த டூல்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டு வந்திடுறேன்” என்ற ஆத்யாவிருக்கு சரியென்று தலையசைத்து விட்டு அவர்களும் சென்றுவிட்டனர்.

அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்களை எல்லாம் அதற்குறிய பையில் அடுக்கி கொண்டிருந்தவள்.

அந்த வேலை முடிந்தப் பின் கையுரையையும், முக கவசத்தையும் கழட்டிவிட்டு அவளுடைய பாதுகாப்பு கண்ணாடியையும் கழட்டும் பொழுது கண்ணில் ஏதோ தூசு விழுந்திருக்க, கண்ணை கசக்கிக் கொண்டே தற்செயலாக அந்த பானையை கண்டாள். அதை கண்ட நொடி அவளது நீல மிழிகளுக்கு அந்த வரிகள் நன்றாகவே புரியும்படி தெரியவந்தது.

கொடுங்கை நாட்டு கோமானின் வருகையில் தணலும் குளிர்ந்தது, தகிப்பும் அணைந்தது!

ஆத்யா அவ்வரிகளை மீண்டும் கண்ணை சிமிட்டு விட்டு படிக்க முயன்றாள். மீண்டும் அதே வரிகள் அச்சு பிசறாமல் மிழிகளுக்கு தெரிந்தது. ஏனோ, ‘கொடுங்கை நாடு’ என்பதை மட்டும் அவளது மனம் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக் கொண்டே இருந்து. ஒரு கட்டத்தில் அவளது ஆழி நிற கண்கள் இருட்டிக் கொண்டு வர.

வெளியிலும் திடீரென்று வானிலை மாற்றம் நடந்துக் கொண்டிருந்தது. அத்தனை நேரமும் சுட்டெறித்துக் கொண்டிருந்த வெயில் எங்கே சென்றது? என்று கேள்வியெழும் படி மழையின் வரவு பூமியை குளிர வைத்துக் கொண்டிருந்தது.


ஆத்யா தன்னை சமாளிப்பதற்குள் மொத்தமாக மயங்கி கீழே விழுந்தாள். அப்போது “ஏய்...” என்ற அழைப்புடன் அவளை தாங்கியிருந்தது ஒரு வலிய கரம்.

அவளது நீல நயனங்கள் தனது இமைக் குடையை மொத்தமாக மூடும் முன், தன்னை தாங்கிக் கொண்டிருந்த அந்த உருவத்தை கண்ணில் முழுவதமாக நிரப்பிக் கொண்டு முழுதாக மூடியிருந்தது.


“ஹலோ... ஹலோ...” என்று அவளது கன்னத்தை தட்டிய அக்னிக்கு தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

*******

“ஆர் யு ரெடி உதய்?” என்று வீர் கேட்க.

நவ்யாவை முறைத்துக் கொண்டே “வீர் ஒரு நிமிஷம்” என்று அவரை தனியாக அழைத்து வந்து “லீனா எங்க? நான் லீனாவையே உங்களுக்கு அசிஸ்ட் பண்ண வேண்டாம்ன்னு சொன்னேன். இப்போ இந்த பொண்ணு. ப்ச்… ஏன் வீர்?” என்று அவன் வீரிடம் எடுக்கும் செஷன் பற்றி அனைவருக்கும் தெரிய வருகின்றதே என்று கடுப்பில் வினவ.

“கம்மான் உதய். லீனா பிரான்ஸ் போயிருக்கா. அதோட நவ்யாவோட ரிசர்ச் கைட் நான் தான். சோ, அவ அசிஸ்ட் பண்ணுறதுல ஒரு ப்ராப்ளமும் வராது” என்று கூற.

அவனோ சலிப்பாக சரியென்று தலையசைத்தான்.

நவ்யா அவர்கள் வருவதற்கு முன்பு அவிராவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“இந்த ஒராங்குட்டான் ஓவரா முறைக்கிறான் டி” என்றவளின் செய்தியை படித்து.

“எல்லாம் உன் விதி... என்ஜாய்...” என்று நடனமாடும் இமோஜியை அனுப்பி வைத்திருந்தாள்.

“எவ்வளவு கஷ்டப்பட்டு வீரை சமதிக்க வெச்சிருப்பேன்னு எனக்கு தான் தெரியும்” என்று மனதுக்குள் நினைத்தவளோ வீரிடம் பேசியதை நினைவுக் கூர்ந்தாள்.

“சீஃப் இந்த சப்ஜெக்ட்(பேஷண்ட்) பத்தின டீடெயில்ஸ் கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்களேன்” என்று நவ்யா கையில் இருக்கும் கோப்பையை வீர் பத்ராவின் முன் நீட்டியப் படி நிற்க.

“இந்த கேஸ் மிஸ்டர் ரிச்சர்ட் ட்ரீட் பண்ண சீனா பேசண்ட் பத்தியது தானே?” என்று அவர் அந்த கோப்பை வாங்கி பார்த்துக் கொண்டே அவளிடம் வினவ.

“எஸ் சீஃப். எனக்கு இது படிக்கும் போது ரொம்ப இண்டரெஸ்ட்டிங்கா இருந்தது, அதான் இதை பத்தி இன்னும் ப்ரீஃப்பா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்” என்றாள் அவள்.

“சென் சௌ ஃபெங்(chen chao feng)... ம்ம்... இந்த கேஸ் என்னோட மென்டார் மிஸ்டர் ‘ரிச்சர்ட் பீட்டர்சன்’ முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஹாண்டில் பண்ணினது. அவருக்கு நல்ல பேர் வாங்கி தந்த கேஸூம் கூட” என்றுக் கூறியவர் அதனின் விவரங்களை தெளிவாக விவரிக்க தொடங்கினார்.

முப்பது வருடத்துக்கு முன்பு நடுத்தர வயது மிக்க சீனாவை சேர்ந்த “சென் சௌ ஃபெங்” அன்றைய காலக் கட்டத்தில் பிரபல மனோ தத்துவ மருத்துவரான ரிச்சர்ட்டிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். ஃபெங்கின் பிரச்சனை என்னவென்றால் திருமணம் முடிந்து ஐந்தாண்டு ஆன பிறகும் கூட அவரால் மனைவியுடன் ஒரு இயல்பான வாழ்கையை வாழ முடியவில்லை. சராசரியாக பெண்களை கண்டால் தோன்றும் பாலின ஈர்ப்போ அல்லது வயது கோளாறால் ஏற்படும் கிளர்ச்சிகள் கூட அவருக்கு இதுவரை எந்த பெண்களை கண்டும் எழுந்தது கிடையாது என்பது குறித்து அவருக்கு திருமணத்துக்கு பின்பு தான் தெரிந்தது. பலமுறை ‘தான்’ ஒரு ஓரினப் பிரிவினரா? அல்லது திருநங்கையா? என்று நினைத்தும் பார்த்தாயிற்று. ஆனால், அதற்கும் வாய்ப்பில்லை என்று அவருக்கே தெரிந்திருக்க. கடைசியில் அவர், அன்றைய காலக் கட்டத்தில் மனோவியல் உலகில் கோலோசிச்சிக் கொண்டிருந்த ரிச்சர்ட்டிடம் தான் சிகிச்சைக்கு வந்திருந்தார். ரிச்சர்ட் அவரது உடல் சார்ந்த விடயங்களை கேட்டுவிட்டு அதில் ஒரு குறையும் இல்லை என்று தெரிந்த பின் மன சார்ந்த விடயங்களை ஆராய்ந்தார். அப்படி அவர் ஆராயும் பொருட்டு அவர் ஃபெங்கிருக்கு தெரிவு செய்த யுக்தி தான் லைப் ரெக்ரெஷன் தெரப்பி(life regression- வாழ்க்கை பின்னடைவு).

இது நீண்ட காலமாக மன மற்றும் உடல் வலியில் துடித்துக் கொண்டிருப்பவர்கள், தீர்க்கவே முடியாத மனோ நிலை பிரச்சனைகள், சிறு வயது தாக்கங்களினால் ஏற்படும் அழுத்தங்கள் போன்ற நிலையில் இருப்பவர்களுக்காக. நன்கு பயிற்சி பெற்ற ஹிப்னோ தெரபிஸ்ட், உளவியலாளர், மனோ தத்துவ நிபுணர்கள் போன்ற நபர்களால் மட்டுமே கொடுக்கப்படும் சிகிச்சை.

ஹீலிங்க் பர்ப்பஸ் என்று கூறப்படும் வலி நிவாரணிக்காக தான் பெரும்பாலும் இந்த சிகிச்சை அளிக்க படுகின்றது. ஒரு வகையில் முள்ளை முள்ளால் எடுத்து மருந்து போடும் வித்தையை உள்ளடக்கிய சிகிச்சையாகும்.

அப்படி தான் ஃபெங்கிருக்கும் அந்த சிகிச்சையை தொடங்கியிருந்தார் ரிச்சரட். ஃபெங்கின் நினைவு கூடத்தில் தேங்கியிருந்த நினைவுகளை மெல்ல மெல்ல பின்னோக்கி விட்டு, அவரது முந்தைய பிறவிக்கு பயணம் செய்ய வைத்தவர். அவரது பிரச்சனையை ஆராய்ந்தார். அதில் ஃபெங் முற்பிறவியில் மெக்ஸிகோவை சேர்ந்த பெண் என்றும் அவரது கணவரால் உடல் ரீதியாக தினம் தினம் கொடுமைக்கு ஆளாகப் பட்டு கடைசியாக துடிதுடித்து இறந்து போனதாக தெரிய வந்தது. அந்த தாக்கம் இந்த பிறவியிலும் அவரது ஆழ் மன பெட்டகத்தில் அழுந்த பதிந்திருப்பதால் தான் அவரால் திருமண வாழ்வை சந்தோஷமாக எதிர்கொள்ள முடியவில்லை என்று சிகிச்சையில் பலனில் அறிந்தவர். அதற்கடுத்து கொடுத்த தொடர் சிகிச்சைகளில் அவரது மனநிலையை மாற்றியிருந்தார். இந்த தெரப்பி அடுத்து தான் ரிச்சர்ட் அவர் குணப்படுத்திய நபர்களை குறித்து ஒரு தொகுப்பாக அவரது ஆய்வுக் கட்டுரையில் எழுதி வெளியிட்டு பிரபலம் அடைந்தார். அதில் ஃபெங் பற்றிய குறிப்பை மட்டும் தான் நவ்யா எடுத்து வந்து வீரிடம் கொடுத்திருந்தாள்.

“இந்த ட்ரீட்மெண்ட் மூலம் பேசண்ட்ஸோட கடந்தகால வாழ்க்கையில நடந்த தருணங்கள் காட்சிகள் அல்லது ஏதாவுது நினைவுகளை திருப்ப முடியும். அப்படி தான் அதிக மனஉளைச்சலில் இருந்த ஃபெங்கை ரிச்சர்ட் ட்ரீட் பண்ணி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தார்”

“இந்த life-regression தெரபி எல்லாம் ஓகே தான் சீஃப். நான் இதை பத்தி கேள்வி பட்டிருக்கேன். பட் அதுல ஜென்டர் மாறி இருக்கிறதுன்னு குறிப்பிட்டு இருக்கிறது அன்பிலீவபில்” என்று தான் மருந்து அளிக்கும் மனநல மருத்துவர் மட்டுமே என்ற ரீதியில் அவள் கூற.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்துக் கொண்ட வீரோ, “இப்போ கொஞ்சம் ஸ்பிரிச்சுவாலிட்டியா சொல்லுறேன். இட் மே சவுண்ட்ஸ் ஆர்டிபிஷியல். ஆன்மாக்களுக்கு ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. கர்மங்கள் தீரும் வரை அது எடுக்கும் பிறவிகள் எல்லாம் மனிதர்களா இருக்க கூட அவசியம் கிடையாது. சோ, ஃபெங் அவரோட முந்திய பிறவில தான் ஒரு பெண் தான்னு குறிப்பிடுறதல ஆச்சரியப்பட தேவையில்லை” என்றுக் கூற.

அதற்கு நவ்யாவோ “சீஃப் என்னால சயின்சோட சேர்த்து ஸ்பிரிச்சுவல கனெக்ட் முடியல” என்றுக் கூறினாள்.


“மைக்கேல் நியூட்டன் ஹாண்டில் பண்ண கேஸ் பத்தி படிச்சிருக்கியா? அதுல கூட இப்படி தான் ஒரு சப்ஜெக்ட் தொண்டை பகுதில இருக்கும் தீராத வலியால பேயின் ரிலீஃப் ட்ரீட்மெண்ட்க்கு வந்திருப்பாங்க. அறுபது வயசு இருக்கிற அந்த ஆளு தன்னோட முற்பிறவியில் தான் ஒரு பொண்ணுன்னும், 1866ல சரக்கு ரயில பயணிச்சுட்டு இருந்த பொழுது கியோவா இந்தியர்களால் கொல்லப்பட்டதா ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பாரு. அவர் கொல்லப்பட்ட விதம் எப்படி தெரியுமா? தொண்டை பகுதில கூர்மையான அம்பை செலுத்தப் பட்டதால் தான், அதோட தாக்கம் அடுத்த பிறவியிலும் தொடர்ந்திருக்கு. அதனால தான் அவரோட தொண்டை பகுதி கூட பல காலமா வலிச்சுட்டே இருந்திருக்கு” என்று கூற.

“வாவ் என்னால இன்னுமும் நம்ப முடியல ஆனால் ஆச்சரியமா இருக்கு” என்றாள் அவள்.

“Every small actions, sufferings or recurring dreams are connected with our past lives. (ஒவ்வொரு சிறிய செயல்களும், துன்பங்களும் அல்லது தொடர்ச்சியான கனவுகளும் நமது கடந்தகால வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது)” என்று அவர் கூற.

அதைக் கேட்டு அவளுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு.

“சீஃப் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க தான் வந்தேன். லீனா பிரான்ஸ் போக போறதா சொல்லிட்டு இருந்தா. இப் யு டோன்ட் மைண்ட் நான் உங்களுக்கு அசிஸ்டண்டா இருக்கவா? நீங்க ஹாண்டில் பண்ணுற செஷன் கூடவே என்னோட ரிசர்ச் பத்தின டவுட்ஸ் கேட்க வசதியா இருக்கும்” என்று நவ்யா கேட்க.

சற்று யோசித்த வீரோ “இப்போ நான் ஹாண்டில் பண்ணுறது ஒரே ஒரு கேஸ் தான். அதை நான் தனியாவே ஹாண்டில் பண்ணவேன்” என்றுக் கூற.

“பிளீஸ் சீஃப்...” என்று கெஞ்சி கெஞ்சியே அவரை சம்மதிக்க வைத்திருந்தாள் அவள்.


முந்திய மாலை லீனா அவளுடைய தோழியிடம் கேஃப்டீரியாவில் வைத்து அவளது பிரான்ஸ் பயணத்தை பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள். அதோடு உதயின் அமர்வை பற்றியும் சேர்த்து கூறிக் கொண்டிருக்க, அடுத்த மேஜையில் இருந்த நவ்யா மற்றும் அவிராவுக்கு இந்த விஷயம் நன்றாகவே செவியில் விழுந்தது.

“அச்சோ பாவம் அவி. என் பிராணன் வாங்கிட்டு இருக்கிற மனுஷனுக்கு என்ன பிரசன்னைன்னு தெரியல” என்று நவ்யா அவிராவிடம் புலம்ப.

அவளை ஏற இறங்க பார்த்தவளோ போபாவை(boba) உரிந்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் ஏதோ யோசனையில் இருந்த நவ்யா “அவி இப்படி பண்ணா என்ன?” என்று வில்லங்கமாக சிரிக்க அவளுடைய யோசனையில் தான் வீரிடம் கெஞ்சி தற்போது உதயின் அமர்வில் அவருடன் இணைதிருந்தாள்.

அவள் விளையாட்டாக செய்திருந்த செயலில் அவளும் பாதிக்கப்பட போவது உறுதியென்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

****

“பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை கொஞ்சம் லோ பிரஷர் ஆகிருக்கு. அதோட சரியா சாப்பிடுல போல அதான் மயங்கிட்டாங்க. குளுக்கோஸ் கொடுத்திருக்கு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவாங்க” என்றார் ஆத்யாவை பரிசோதித்த மருத்துவர்.

வெளியே இன்னமும் மழை பொழிந்துக் கொண்டு தான் இருந்தது. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அக்னி தான் ஆத்யாவை தூக்கிக் கொண்டு சேர்ப்பித்திருந்தான். அவன் கூடவே செய்தி கேட்டு விதுரன் மற்றும் கீர்த்தனா உடன் சென்றனர். “நீங்க உள்ள அந்த பொண்ணுக் கூட துணைக்கு இருங்க. நாங்க இங்க இருக்கோம்” என்று கீர்த்தனாவை பார்த்து அக்னி கூற அவளும் சரியென்று தலையசைத்தாள்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஆத்யா மீண்டும் கண் விழிக்கையில் ஏதோ கனவிலிருந்து எழுவது போல் எழுந்தாள். கண்களை முழுவதுமாக திறந்தவளுக்கு அருகில் கீர்த்தனா இருக்க.

தலையை பிடித்துக் கொண்டு,”என்னாச்சு கீர்த்து?” என்று வினவ.

“ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னா கேக்குறியா? அதோட பிரஷர் லோ ஆயிடுச்சு அதான் மயங்கிட்ட” என்றவள். “அப்பத்தா, தாத்தா கிட்ட எல்லாம் எதுவும் சொல்லல” என்று ஆத்யாவின் பார்வை தொடுத்த கேள்விக்கும் சேர்த்து பதிலளித்தாள்.

ஆத்யாவுக்கு கடைசியாக பார்த்த முகத்தை பற்றி கேட்க வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் கீர்த்தனாவிடம் எப்படி வினவ என்று தெரியாமல் முழிக்க.

“நீ ரெஸ்ட் எடு. நான் போய் விதுரன் கிட்டடையும் அந்த அண்ணா கிட்டடையும் நீ முழிச்சுட்டேன்னு சொல்லிட்டு வந்திடுறேன்” என்று கூறியவள் வெளியே செல்ல.

இவளுக்கு தான் மனதில் பல குழப்பங்கள்.

யாருமறியா நினது கன்னக்குழி முறுவலுக்கு,

யாழிசைக்கும் பாவை நான்.
கள்ளமில்லாத வனிதையின் மையலுக்கு,

சற்று வளைந்து கொடு மாயோனே!!

 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-9​

மதலை நாடு,

கால சக்கரம் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக சுழன்றுக் கொண்டிருந்தது. அதனூடே பலரது கைப் பாவையாக இருக்கும் மனிதர்களும் தான் ஓடிக் கொண்டிருந்தனர்.

இயல்பிலேயே எழிலை உள்ளடக்கி இருக்கும் நாடு, தற்போது முன்பைக் காட்டிலும் கண்ணை கவரும் வண்ணம் கூடுதல் அழகுடன் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது.

அதோடு சிற்ப கலையில் சிறந்த ‘மதலை’, தற்போது அண்டை நாடுகள் எல்லாம் வாய்பிளக்கும் அளவு வான்முட்டும் கட்டிடங்களிலும், கடற்கடந்த அயல் நாட்டினரோடு வணிக தொடர்பிலும் சிறந்து விளங்கியது.

நச்சினி மெலியாளின் இறப்புக்கு பிறகு மதலையின் அரசன் மகிழையன் சோர்ந்து கிடந்ததெல்லாம் சிறிது காலம் தான். அதன்பின் அவர் சந்தித்த பல பிரச்சனைகள் அவரை முடக்கி விடாமல் நாட்டு மக்களின் நலனுக்காக மீண்டும் அல்லும் பகலாக அவரை இன்றுவரை ஓட வைத்துக் கொண்டிருந்தது. அவருக்கு துணையாக இளம்பரிதியும் மதலையின் அரணாக, உற்ற காவலனாக ஓடிக் கொண்டிருந்தான்.

விம்மி புடைத்த புஜத்துடன், காற்றிலாடும் கட்டுக்கடங்காத கேசத்துடன், எப்பொழுதுமே விழிகளில் கொண்டிருக்கும் கூர்மையுடனும், அனைத்திலும் சிறந்த வீரனாக காண்போரை பிரமிக்க வைத்து தன் வசம் கட்டி இழுத்துக் கொண்டிருந்தான் மதலையின் மருமகன்.


அரசரின் பிரியமானவன் என்று கூற வேண்டுமோ?

வாட்பயிற்சியில் சூரன், வில் எய்துவதில் வீரன், குழல் ஊதுவதில் அந்த மாய கண்ணன், என்று அவனுக்குள்ளே பல திறமைகள் உண்டு.

உப்பரிகையில் நின்றுக் கொண்டு மகிழையன், தவழ்ந்து செல்லும் மேகத்தை பார்த்துக் கொண்டிருக்க. ஜோதிடரோ அவருக்கு ஆருடம் கூறிக் கொண்டிருந்தார்.

“என்னை மன்னித்து விடுங்கள் அரசே. ஆனால், எனது கட்டியம் கூறியதனைத்தும் நிச்சயமாக நடந்தே தீரும்” என்று உறுதிப்பட கூற.

மகிழையன் மனதில் வருத்தத்தை தேக்கி வைத்து, அது விழிகளில் கசியாமல் பார்த்துக் கொண்டே “இதற்கு தீர்வுண்டோ?” என்று அரசர்குரிய கம்பீர குரலில் அவரிடம் வினவ.

“காலம் கை கூடினால் தீர்வுக்கு வழி பிறக்கும் அரசே” என்று பெரும்மூச்சை விட்டுவிட்டு “நான் விடை பெறுகிறேன்” என்று பவ்யமாக கூற. அவருக்கு தலையசைப்பை வழங்கினார்.

ஜோதிடர் கிளம்பிய பின் மகிழையனைக் காண வந்த இளம்பரிதிக்கு தனது மாமனின் சோகமான முகமே வரவேற்க.

“என்னவாயிற்று அரசே? ஏன் தங்களின் முகம் சோர்வை வெளிப்படுத்துகின்றது?” என்று நொடியில் கண்டுபிடித்து வினவ.

கசந்த முறுவலை பரிசளித்தவரோ அவன் தோளை தட்டி விட்டு ஜோதிடர் கூறியதை கூற தொடங்கினார்.

மதலை நாட்டின் நலனுக்காக அவப்பொழுது மகிழையனுக்கு ஜோதிடரிடம் ஜோதிட பலன்களை கேட்கும் பழக்கமுண்டு. சில காலங்களாக அவருக்கு மனதில் திடீரென்று எழும் அழுத்ததில் அவர் இன்றும் அந்த மனிதரிடம் பலனை கேட்க அழைத்திருக்க. வெகுநேரமாக கட்டங்களையே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஜோதிடரோ, மதலை நாட்டிருக்கு வெகு சீக்கிரம் ஒரு பெண்ணால் அழிவு ஏற்பட போவதாக கூறி, மகிழையன் தலையில் இடியை இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

நடந்ததை பரிதியிடம் கூறியவரோ “இப்பொழுது என்ன செய்ய வேண்டும். எந்த பெண்ணால் அழிவு வரக் கூடும் என்று ஒன்றுமறியாமல் தவித்துக் கொண்டிருகின்றேன் பரிதி” என்று அவர் வருத்தம் தோய்ந்த குரலில் கூற.

“நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள் அரசே. உங்களின் நல் மனதிருக்கு அனைத்தும் நன்றாகவே நிகழ்ந்தேறும்” என்று அவரை வார்த்தைகளால் தேற்றியவன். அதன்பின் அரச காரியங்களைப் பற்றி அவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தான்.

“கிழக்கு மன்னர்கள் அனைவரும் நம்முடன் வணிக தொடர்பை வைத்துக் கொள்ள பேர் ஆவல் கொண்டிருகின்றனர் அரசே” என்று அவன் அவரிடம் கூறிக் கொண்டிருக்கையில்.

“ஏன்? மேற்கில் யாரும் நம்முடன் வணிகம் தொடர விரும்பவில்லையா?” என்று குதர்க்கமாக கேட்டப்படி, உதட்டில் சிரிப்பை தேக்கி, நிலத்தில் சிலம்போசை அதிர, கையில் அணிந்திருந்த வளையல்கள் குலுங்கும் சத்தத்துடன், அழகு பதுமையாக தந்தையைக் காண வந்திருந்தாள் இதழினி இளையாள்.

“நான் விடைபெறுகிறேன் அரசே” என்று பரிதி கூற.

“மதலை நாட்டு மகிழையனின் மருமகன், போரில் சிறந்த மாவீரர், ஒரு சிறு பெண் வந்தவுடன் தலைதெறிக்க ஓடுவதேனோ?” என்று குறும்பாக வாயாட.

“இளையா...” என்று குரலில் கண்டிப்பை காட்டினார் மகிழையன்.

“தந்தையே அவர் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த பாடம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள் தங்களுடன் அரசியல் பேச வந்துவிட்டார்” என்று அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு கண்டனமாக குற்றம் கூற.

“பரிதி...” என்று மகிழையன் அவனுக்கு கண்ணை காட்ட. “இதோ செல்கிறேன் அரசே” என்று அவன் இதழினியை முறைத்துவிட்டு முன்னே சென்றுவிட்டான்.

“எங்காவது கற்றுக் கொடுக்கும் ஆசாணை தேடி இவ்வளவு பயபக்தியாக மாணவர்கள் வருவார்களா? ஆனால், உங்களது மகளை பாருங்கள். இதற்கே தாங்கள் என்னை நினைத்து கர்வம் கொள்ள வேண்டும்” என்று கிண்கிணி நாதமாய் சிரிக்க.

“சரி... சரி... விரைந்து செல் இளையா. இந்நேரம் பரிதி வெகு தூரம் சென்றிருப்பான்” என்றுக் கூற. சரியென்ற படி அவரிடம் விடைபெற்றவள் ஆடி அசைந்து மெதுவாக தான் சென்றாள்.

அரண்மனைக்கு வெளியே காட்டுப் பகுதிக்கு செல்லும் முகப்பில் குதிரை கொட்டிலிருந்து, அவளுக்காகவே தயாராக காத்திருந்த வெண்ணிற குதிரையுடன் அதனின் பிடியை பிடித்தப்படி நின்றுக் கொண்டிருந்தான் இளம்பரிதி.

அங்கு குதிரையோட்ட ஏதுவான உடை அணிந்தப்படி வந்து சேர்ந்த இதழினியோ அவனை கண்ட பிறகு, உதட்டில் பூத்த மோகன புன்னகையை அவனறியாமல் மறைத்து விட்டு.


பவ்யமாக வாய்மேல் கைவைத்தபடி, அவன் முன் மரியாதையாக நிற்க. அவனுக்கோ அவளது பணிவில் சிரிப்பு வந்தது, இருந்தாலும் அதை வெளி காட்டாமல்.

“ஏறுங்கள் இளவரசி” என்று கணீரென்று கூற.

“அச்சமாக உள்ளது… இளவரே” என்று அவள் நிஜமான பயத்துடன் கூறினாள்.

“அரசரையே வாய்பிளக்க வைக்கும் தங்களுக்கு அச்சமா?” என்று அவன் ஏளனமாக வினவ.

அவள் அவனை முறைத்துக் கொண்டே கடினப்பட்டு அதில் ஏறினாள்.

அவள் ஏறியப்பின் அவளது வெண்ணிற குதிரையை மெல்லமாக இயக்க சொல்ல. அவளும் மெதுவாக அதனை கையாள தொடங்கினாள்.

நன்றாக ஓட்டியவள் ஒரு கட்டத்தில் தடுமாற. குதிரை வேகமாக ஓட தொடங்கியது.

“பொறுமையாக செல் இதழா” என்று அவன் குதிரையின் துள்ளலை கண்டு கூற.

“வேகமாக நான் இயக்கவில்லை. அதுவாகவே செல்கின்றது” என்றுக் கூறியவளின் குரலில் தடுமாற்றும் தெரிந்தது.

குதிரையும் அங்கும் இங்குமாக துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. ஒருக்கட்டத்தில் அதனின் பிடிக் கயிற்றையும் அவள் விட்டிருக்க. குதிரை இலக்கில்லாமல் சென்றுக் கொண்டிருந்தது.

நிலமை சீரில்லாமல் சென்றதை உணர்ந்தவன் குதிரைக்கு இணையாக பின்னால் ஓடி அதனின் கயிற்றை பிடித்து ஒருவழியாக அதன் மீது அவளுக்கு பின்னே ஏறி அமர்ந்தான். அவளுக்கு பின்னால் அரணாக அமர்ந்துக் கொண்டவன். சில நிமிடங்களிலே குதிரையின் வேகத்தையும் தடுத்து நிறுத்தினான்.


அச்சத்தில் கண்களை இறுக மூடியவளின் செவிகளுக்கு, அவளது பின்னே மேனியுரச குதிரையை கையாண்டுக் கொண்டிருக்கும் அவனது பரந்த மார்பின் தடதடக்கும் ஓசை நன்றாகவே கேட்டது.

பொறுமையாக குதிரையின் இயக்கத்தை நிறுத்தியவன். அவனும் இறங்கி, அவளையும் இறங்க சொல்லி அந்த புரவியை ஒரு மரத்தில் கட்டி வைத்தான்.

மூச்சு வாங்கியப்படி , தன் முன் நின்ற அவளை கண்டு வாயில் உதித்த அனைத்து நல்வார்த்தைகளையும் அவன் பாசமாக சிந்த தொடங்கினான்.

“எவ்வளவு காலமாக என்னிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறாய். குதிரையை கையாள இன்னுமா தெரியவில்லை? அனைத்திலும் வாயடித்துக் கொண்டே இருந்தால் இப்படி தான் நடக்கும். பிடிக்கயிற்றை விட்டுவிட்டால் அது அதன் விருப்பத்திருக்கு செல்லும் என்று கூட உனக்கு தெரியவில்லையா? அது சரி நர்த்தனத்தில் அபிநயம் பிடிக்கும் கைகளுக்கு, புரவியின் விசையை சரிவர பிடித்து இழுக்க தெரியுமா என்ன? என்னதான் போர் கலைகள் கற்று கொண்டாலும், முரசொலி சத்தம் கேட்டவுடன், மாடமளிகைக்குள் அலங்கார பொருளாக ஒளிந்துக் கொள்வதற்கு தானே தங்களை போன்ற பெண்கள் சரி வருவீர்கள்” என்று ஏளனமாக கூற.

ஏற்கனவே கண்களில் துளிர்த்த நீருடன் அவனது வசைவுகளை கேட்டுக் கொண்டிருந்தவள். “போதும் நிறுத்துங்கள்” என்று அவன் பேசுவதை தடுத்து விட்டு கண்கள் சிவக்க அவனைக் கண்டு முறைத்தப்படி வேகவேகமாக சிலம்பு சத்தம் அதிர வந்த திசைக்கே கண்களை துடைத்துக் கொண்டே சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பிறகு தான் ‘தான்’ பேசியது அதிகப்படியோ என்று அவனுக்கு தோன்றியது.

“இதழா” என்று அவன் அவள் சென்ற திசையை பார்த்து அழைக்க, கடைசியில் அது காற்றில் தான் கரைந்தது.

****
அந்தி தொடங்கும் பொழுதில் ஆற்றங்கரை ஓரத்தில் சலசலக்கும் நீரின் மீது கைவைத்துக் கொண்டு. வழக்கம் போல, அது தரும் அதிர்வில் அதன் தன்மையை கவனமாக மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தாள் ஆழினி.

நீருக்கு மற்றவர்களின் ரிஷிமூலம் அறியும் தன்மை உண்டாம். அவளது சிறப்பு ஆசிரியர் அவளுக்கு கற்பித்தது.


அதனால், ஒவ்வொரு முறையும் அவள் நீரை பார்த்தால் அதன் அதிர்வை மனதார உணர அதில் கைகளை நனைத்துக் கொள்வாள்.

ஆழி கவனமாக இரு என்று ஒவ்வொரு முறையும் சிறுவயதில் அவள் தவறி விழுந்ததை நினைவில் வைத்தபடி அவளின் தோழிகள் கூற. எங்கே அவள் கேட்டால் தானே?

இயற்கை சூழல் ஒவ்வொன்றையும் கண்களால் படம்பிடித்து, கைகளால் தொட்டு பார்த்து, மனதால் அதனுடன் உரையாடிக் கொள்வாள்.

அவளுக்கு வாய் பேசும் திறன் மட்டும் தான் கிடையாது. ஆனால், சிறு வயது முதலே சிறப்பு ஆசிரியர்களின் துணையோடும், தோழிகளின் துணையோடும் யுவராணிகளுக்கென்று அவசியமாக கற்க வேண்டிய, பாடங்களனைத்தையும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.

இதுவரை அவளின் குறையை நினைத்து இளப்பம் கொண்டோ அல்லது பரிதாப பார்வை வீசும் நபர்களை நினைத்தோ அவள் என்றுமே தோய்வடைந்தது கிடையாது. ஏன்னெனில் ஒட்டி பிறந்த இதழினி, தீகனின் மகள் இழையினி மற்றும் தானைத் தலைவரின் மகள் அமரா அதற்கு என்றுமே அவளுக்கு வாய்ப்பளித்தது கிடையாது.

அவளது தந்தை என்றாவது மனம் நோகும் படி செய்துவிட்டு அன்றைய தினத்தில் அவளுடைய முகம் சிறிதேனும் வாடிவிட்டால் போதும். உடனே மூவரும் சேர்ந்து இதோ அவளை இந்த குளக்கரைக்கு அழைத்து வந்து பாச மழையில் குளிக்க வைத்தே... அவளது மனநிலையை மாற்றி விடுவர்.

சுருங்க சொல்ல போனால் அவளை குறையுள்ள பெண்ணாக அவர்கள் என்றுமே நடத்தியது கிடையாது. சராசரி பெண்ணை போல வம்பிழுத்துக் கொண்டு, கேலி பேசி கலகலத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

சில சமயங்களில் வெந்திறல் மொழியை காட்டிலும், மௌன மொழி சிறந்தது தானே?
இந்த உண்மையை இளம் வயதிலிருந்தே அம்மூவரும் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அனுபவ ரீதியிலும் சரி, வயதிலும் சரி எவ்வளவு மூப்படைந்திருந்தாலும் ஏனோ சிலருக்கு அந்த உண்மை மட்டும் இன்னமும் விளங்கவில்லை.

“ஆழி” என்று அமரா அவளது தோளை தட்ட. நீரிலிருந்து கையை எடுத்துவிட்டு, அவளும் அமராவை நோக்கி, என்னவென்று ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி நோக்க.

“அங்கே… பார்” என்றாள் அமரா அவளது தாடையை திருப்பியப்படி.

அவள் காட்டிய திசையில் ஏதோ புதர்கள் அசைந்தாடுவது போன்று நன்றாகவே தெரிந்தது. கண்களை கூர்மையாக நோக்கி அதனை அவள் உற்று பார்க்க.

“வா... அருகே சென்று பார்க்கலாம்” என்றப்படி அவளை அழைத்து சென்றாள் அமரா.

“யார் அங்கே?” என்று குரலில் கடினத்தை தேக்கி அமரா அழைக்க.

ஆழியோ இடுப்பில் சொருகியிருந்த குறுவாளை கெட்டியாக பிடித்திருந்தாள்.
காட்டு பகுதி ஆதலால் தற்காப்புக்கு எப்போதுமே ஒரு ஆயுதம் கையில் வைத்திருக்கும்படி அவளிடம் அந்த குறுவாளை தந்ததே இளம்பரிதி தான்.

அமராவின் குரலுக்கு செவி சாய்த்து வெளியே வந்தாள் இதழினி, அவளுடன் சேர்ந்து இழையினியும் தான்.

“இழையா நீ நர்த்தன பயிற்சிக்கு செல்லவில்லையா?” என்று இழையினியை பார்த்தும், “இளையா உனது குதிரை பயிற்சி என்னவாயிற்று?” என்று இதழினியை பார்த்தும் கேள்விகளை எழுப்பியிருந்தாள் அமரா.

“இன்று எங்களின் பயிற்சிகளுக்கு பெரிய மனதுடன் ஓய்வளித்து விட்டோம்” என்று இழையினி சிரித்தப்படி கூற. “ஆமாம்... ஆமாம்” என்று ஒத்து ஓதி கூறினாள் இதழினி.

பரிதியிடம் கோபித்துக் கொண்டு, வேற்று பாதையில் வந்த இதழினி, சிறிது நேரத்துக்கு முன்பு தான் தனியாக புதரில் ஒழிந்துக் கொண்டிருந்த இழையினியை கண்டிருந்தாள். இழையினி அவளது நாட்டிய பயிற்சிக்கு வழக்கம் போல இன்றும் முடக்கு போட்டிருக்க. அதை குறித்து அவள் விவாதித்துக் கொண்டிருக்கையில் தான் அமரா, ஆழியிடம் சிக்கியிருந்தனர்.

“அது சரி...” என்று நொடித்துக் கொண்ட அமரா. இழையினிடம் “கூடிய சீக்கிரம் நீ உனது அன்னையிடம் சிக்க போவதாக என் உள்ளுணர்வு கூறுகிறது தோழியே” என்று இழையினியை கண்டு கூற.

“அதை வேறு ஏன் அமரா நினைவு படுத்துகிறாய்? எனக்கு வராத நாட்டியத்தை என் அன்னை வலுக்கட்டாயமாக வர வைத்துக் கொண்டிருக்கிறார். இதில் அவரிடம் சிக்கினினேன் அவ்வளவு தான்” என்று சோகமாக கூற.

தோழியை சமாதானப் படுத்துவதற்காக “உடலை கரைப்பதற்காக இல்லை...இல்லை குறைப்பதற்காக தானே அவர்கள் உன்னை நாட்டியம் பயில கூறுவது” என்று கேலி பேச.

“அமரா...” என்றப்படி அவளை துரத்தினாள் இழையினி. அவர்களை இதழினி சிரிப்புடன் நோக்க, வந்ததிலிருந்து இதழினியை தான் ஆழினி பார்த்துக் கொண்டிருந்தாள். இதழினியின் உதடுகள் மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால், கண்களில் தெரிந்த துளி நிற சிவப்பு, மருந்துக்கும் அதை பிரதிபலிக்கவில்லை. மெல்ல ஆழினி அவளின் தோளை தொட.

“எனக்கு ஒரு குறையுமில்லை ஆழி. என்னை நினைத்து கவலை கொள்ளாதே” என்று தமக்கை கேட்காமலே அவள் எண்ண ஓட்டத்திருக்கு பதிலளித்தாள் இதழினி.


அகம் மகிழும் நினது பசப்பு சொற்கள் எனக்கு தேவையில்லை,

ஆனால் ஈட்டியை பாய்ச்சும் உமது கூர் சொற்களை மட்டும் சற்று நிறுத்திக்கொண்டால் நலமாக இருக்கும்
மாயோனே!!

 
Last edited:

NNK-28

Moderator

நயனம்-10​


கொடுங்கை நாடு,

கற்கூரையின் வளைந்த மேற்பகுதி போன்ற அமைப்பு அந்த நாட்டின் கட்டமைப்புகளில் பெரும்பாலும் இடம்பெற்றிருப்பதால் தான் அதற்கு கொடுங்கை என்று பெயர் வந்தது.

ஒருவகையில் கட்டிட கலைகளுக்கும், வில் மற்றும் சிலம்ப பயிற்சிகளுக்கும் பெயர் போன நாடு. மதலை நாட்டிருக்கு அடுத்து, தெற்கில் அமைந்திருக்கும் பெரிய நாடும் இது தான்.

அந்நாட்டின் மன்னன் இளந்திரையனுக்கும், மதலையின் மன்னன் மகிழையனுக்கும் மிகவும் நெருக்கமான ஒரு அழகிய நட்புறவு இடம்பெற்றிருந்தது. அதனால் தான் மதலை இன்றுவரை தனியாட்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. இல்லையெனில் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள பல இடங்களை போல மதலையும் என்றோ இவர்களின் கட்டுக்குள் வந்திருக்கும். இப்படி சிறப்பாக சூரிய ஒலியாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் கொடுங்கை, சில வருடங்களாக அதனின் பொலிவை சற்று இழந்திருந்தது என்று கூறினால் அது உண்மை தான். காரணம் மன்னன் இளந்திரையன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்து கிடப்பது தான்.

திடீரென்று மன்னரின் எதிர்பாராத தோய்வில், மக்கள் அனைவரும் சற்று பதறி தான் இருந்தனர். அவருக்கடுத்து ஆட்சியை அமைத்து முடிசூட போகும் மன்னன் யார்? என்பதை குறித்து வெகு தீவிரமாக சிறிது காலத்திற்குளே யோசிக்க தொடங்கி விட்டனர்.

ஏனெனில் இளந்திரையனின் தமையனான நெடுந்திரையனின் மைந்தன், இளங்கீரனுக்கு தான் நியாயமாக அவருக்கடுத்து அனைத்து பொறுப்புகளும் கைசேர வேண்டும்.

இளம் வயதிலே நெடுந்திரையன் போரில் வீர மரணம் அடைந்திருக்காவிட்டால், இளந்திரையனுக்கு கொடுங்கையில் ஆட்சி புரிவது என்பது கானல் நீராக தான் இருந்திருக்கும்.

ஏனெனில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களின்படி, மூத்த வாரிசுகள் தான் ராஜாங்கம் ஆள வேண்டும். எதிர்பாரா சூழலில் தலைச்சனின் மரணம் நிகழ்ந்துவிட்டால், இளையோன் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்படுவர். ஒருவேளை தலைச்சனின் குலம் அடுத்த ஆண் வாரிசுக்கு வித்திட்டால் நியாயமாக தற்போது ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் மன்னன்னுக்கு பின் மூத்தவரின் வாரிசு தான் அடுத்து அரசாள்வது என்பது அவர்களது குல வழக்கம். பெரும்பாலான இடத்தில் இது நடைமுறையில் இருந்தாலும். அதை தற்போது வரை சீராக கடைப்பிடிப்பது இவர்கள் ஒருவரே.

ஆனால், தற்போது கொடுங்கையின் மக்களுக்கு இளங்கீரனின் நடவடிக்கைகள் முற்றிலும் பிடிக்காத காரணத்தால் அவனை பொறுப்பில் அமர்த்த வெளிப்படையாகவே பிடித்தமின்மையை காண்பித்து வருகின்றனர்.

இளங்கீரன் அவனது சிறிய தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து முழுநேரமும் மது, மாது என்று ஒருவித போதை பிடியில் சிக்கிக் கொண்டிருகின்றான். அவனிடம் ஆட்சி செல்ல நேர்ந்தால் அடுத்த சில நாட்களிலே கொடுங்கையின் நிலை சீர்கேடாக தான் அமையும் என்று மக்கள் உறுதிபட தீர்மானித்து விட்டனர்.

அதனால், இளந்திரையனின் தலை(வ)ப் புதல்வனான அழலேந்தியை ஆட்சி பீடத்தில் அமர்த்த வெகுவாக பேராவல் கொண்டிருந்தனர்.

‘அழலேந்தி’, அக்னி பிழம்பாய் காண்பவர்களின் கண்களுக்கு மருட்சியை உண்டு பண்ணும் தீர்க்கமான விழிகள் உடையவன். சிலம்பம், வாள், வில்லேந்துதல், ஈட்டி பாய்ச்சல், குத்து சண்டை போன்ற பல கலைகளை இளம்வயதிலிருந்தே கற்று நன்றாக தேர்ச்சி அடைந்தவன். ஒரே சமயத்தில் பத்து செயல்களை செய்யும் தசாவதானி என்றெல்லாம் குறிப்பிடும் மாவீரன். மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பெற்றவன். பெயருக்கு ஏற்றவாறு விழிகளில் அனலையும், செயல்களில் உக்கிரத்தையும் கொண்டவன் என்று அவன் புகழ் பாட வாய் ஓயாது.

தந்தையை முழுவர சரியவிடாமல் அவரது கொள்கையை வைத்துக் கொண்டு ராஜ்ஜிய காரியங்களை நம்பிக்கையான மந்திரிகளின் தலைமையில் பார்த்துக் கொண்டிருகின்றான்.

ஒருவகையில் இளங்கீரன் செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் அழலேந்தி பொறுப்பேற்று செய்து வருவதால் தான் மக்களுக்கு அவனை பிடித்து போனது என்று கூறலாம்.

அரண்மனையில் மன்னன் இளந்திரையனிடம் அவரது மனைவி குழல்மொழி பேசிக் கொண்டிருந்தார்.

“அரசே, தங்களிடம் ஒரு செய்தி கூற வேண்டும்” என்று அவர் என்றும் இல்லாத திருநாளாக கண்களில் பளபளப்புடன் அவரது கணவரிடம் அனுமதி வேண்டி இருக்க. இளந்திரையனும் கண்களை மூடி அவரை பேச ஊகினார்.

“மதலையின் மன்னன் தங்களது நண்பரும், அரசரருமான மகிழையன் செய்தி அனுப்பியிருக்கிறார். நமது அழலேந்திக்கு, அவரது மகளை சம்மந்தம் பேச ஆவலாக இருக்கிறாராம். அன்று போரில் தாங்கள் உதவி செய்ததால் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று எப்போதும் கூறுவார் இல்லையா? அதற்கு பிரதியாக தான் நம் அழலேந்திக்கு கொள்ளை அழகை தேக்கி வைத்த இதழினியை மணம் முடிக்க கேட்கிறார் போலும். பெண்ணின் சித்திரம் கூட ஓலையுடன் சேர்த்து அனுப்பி வைத்திருகிறார்”.

“அந்த அமைதியான வதனம் ஆகா... நம் அழலேந்திக்கு ஏற்றவள் இவள் தான். அதோடு அந்த நீல நிற நயனங்கள். நிரமி குறைபாடு இருக்கும் போல அது ஓன்று தான் குறையாக இருக்கின்றது” என்று முகத்தை சுருக்கி பேசியவர். “இருந்தாலும் அவளுக்கு அந்த மிழிகள் தான் பேர் அழகை தருகிறது. தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? உடனே பதில் ஓலை அனுப்பலாமா?” என்று கூறிக் கொண்டே சென்றவர் கணவனை பார்க்க. மனைவி இத்தனை நாள் தனது உடல் நிலையை குறித்து கவலையில் கிடந்து, இன்று மகனின் திருமண பேச்சு எழுந்தவுடன் அவரது முகத்தில் தெரியும் ஆயிரம் மின்னல்களை கணவனாக குறித்துக் கொண்டவர், முழு ஒப்புதலுடன் சரியென்று தலையசைத்தார். அதோடு இளங்கீரனுக்கும் அவர்கள் முறையாக திருமணம் முடித்து வைத்ததால் அவனைக் குறித்த சஞ்சலம் அவர்களுக்கு ஏற்படவில்லை.

கணவனிடமிருந்து சம்மதம் கிடைத்த மகிழ்வில் ராணி குழல்மொழியும் சிரித்த முகத்துடனே விரைவாக பதில் ஓலை அனுப்பும்படி கட்டளையிட்டார்.

இன்று சிரித்த முகத்துடன் தங்களின் வருங்கால குலவதுவாக யாரை எண்ணுகிறாரோ அந்த பெயரும், அவர் கையில் கிடைத்த சித்திரமும் வேறு வேறு நபருடையது என்று அறிய நேர்ந்தால், அவரது வெளிப்பாடு எவ்வாறு இருக்குமோ?

****
அந்த அந்தக்கார பொழுதை ரம்மியமக்கிக் கொண்டிருந்தது பௌர்ணமி பொழுது. நிலவு தாரகை, அந்த இருளை தன் மையலால் விரட்டிவிட்டு தன் வெள்ளிக் கதிர்களை பாரெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அதனை அந்த சலசலக்கும் அருவியுடன் சேர்ந்தது போல் ஒன்றாக காண்பதற்கே அத்தனை அழகாக இருந்தது.

அங்கு அருவிக்கு கீழே அமைந்திருக்கும் பாறை போன்ற அமைப்பில், மன்னவனின் இதயத் துடிப்பை கேட்டப்படி அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாள் மதலையின் செல்வ(ல) மகள்.

இரும்பு கரங்கள் இரண்டும் பெண்ணவளின் கொடியிடையை வளைத்திருக்க, அவளோ தன்னவனின் மார்பில் லாவகமாக சாய்ந்திருந்து அவனது இதயத் துடிப்பை கானம் போல கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நேரமாகிறது இதழா... விரைந்து செல்” என்று பரிதி அந்த மோன நிலையை கலைக்க மனமில்லாமல் கூற.

“முடியாது எனக்கு இவ்வாறு, இப்படியே தங்களுடன், என் வாழ்நாள் முழுவதும் பொழுதை கரைக்க வேண்டும்” என்று முரண்டு பிடித்துக் கொண்டே அவனிடம் மேலும் தஞ்சம் புகுந்தாள் பெண்ணவள்.

அவனோ “என்னை வதைத்துக் கொண்டிருக்கிறாய் மோகினி” என்றப்படி அவளது இதழை சுவைத்து விட்டு அவளை விட்டு விலக. அவளோ நாணத்தில் முகம் சிவந்தாள்.

“ஒன்று என்னை பேசியே வதைக்கிறாய், இல்லையென்றால் என்னால் பேசமுடியாத அளவு உன் மோகினி எழிலால் என்னை மயக்குகிறாய்” என்று அவளது குழலை ஒதுக்கி விட்டு அவன் நொந்தப்படி கூற”. அவளோ செந்தூர வதனத்தை அவனுக்கு காட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தாள். “ஆண்பாவம் பொல்லாதது இதழா... இதுவரை இந்த இதழினியின், மென்மையான இதழ்களில் மட்டுமே கவி தீட்டிக் கொண்டிருகின்றேன்” என்று பெருமூச்சுடன் அவன் கூற.

மாலையாக அவன் தோள்களை சுற்றி கையை போட்டவள் அவனது மிழிகளுடன் தனது மிழிகளை கலக்கியப்படி “மன்னவனுக்காக வெகு காலமாக காத்துக் கிடக்கும் இந்த பெண் பாவமும் பொல்லாதது தான் வீரரே” என்று சிரிப்புடன் கூறியவள். “விரைந்து வந்து என் தந்தையிடம் நம் திருமணத்தை குறித்து உரையாடுங்கள். என் மனதுக்கு ஏதோ நெருடலாக உள்ளது” என்று கண்களில் முணுக்கென்று கோர்த்த நீருடன் அவனின் நெஞ்சில் சாய்ந்து அவள் கூற. அவனுக்கும் ஏதோ நெருடலாக தான் இருந்தது. இருந்தும் அவளை சமாளிப்பதற்காக “களவு வெளிப்பட்டால் கூடிய விரைவில் திருமணம் நடைபெறுமாம்.” என்றுக் கூறி சிரிக்க.

“இல்லை... இல்லை... எனக்கு எனது மன்னவனின் சிரம் எங்கும் தாழ்ந்து போக கூடாது. அதே சமயம் என் தந்தையின் கௌரவமும் காற்றில் மிதக்க கூடாது. களவொழுக்கம் என்று இந்த பொழுதை நாம் கூறிக் கொண்டால் கூட. நம் இருவரும் மட்டுமே இருக்கும் இந்த பொழுதுகளை நான் மணம் புரிந்த பிறகு கடக்கும் பொழுதுகளாகவே தான் பாவிக்கின்றேன். அது நமக்கு புரிந்த விடயம். ஆனால், மற்றவருக்கு புரியாது இல்லையா? அதனால், சீக்கிரமாக உங்களின் இதழாவை ஊர்ரறிய திருமணம் செய்துக் கொண்டு. காதல் புரியுங்கள். அப்பொழுது காண்பவர் அனைவருக்கும் தாங்கள் கள்வனாக இல்லாமல் எனது கணவனாக தெரிவீர்கள்” என்றுக் கூற. அவளை மெச்சுதலுடன் மையலாக பார்த்திருந்தான் அவன். திடீரென்று அவனது பார்வையில் கூடிப் போன காதலின் வீரியத்தை தாங்காதவளோ.

“அது இருக்கட்டும் இன்று தங்களின் மீது எழுந்த கோபம் எனக்கு இன்னுமும் தீரவில்லை” என்று முறைத்தப்படி மீண்டும் கூற.

வந்ததிலிருந்து ஆயிரம் முறை அவளிடம் செல்லம் கொஞ்சி மன்னிப்பை கூறியவனுக்கு மீண்டும் முதலில் இருந்தா? என்று சலிப்பாக தோன்றியது. இருந்தாலும் அதனை மீறியும் உதட்டில் மென்னகை தோன்றியது. அவனுக்கு தெரியும் அவள் இன்னும் சற்று நேரம் அவனுடன் இருப்பதற்காக தான் பொய் கோபம் கொள்கிறாள் என்று. அதனால் விரும்பியே தனது தலைவியின் துயரை நீக்கிவிட்டு பத்திரமாக அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டிருந்தான்.

அறைக்குள் மெதுவாக வந்து சேர்ந்த இதழினி ஆடியில்(கண்ணாடி) தனது விம்பத்தை பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

அங்கே அவள் வந்த பொழுதே உறக்கம் கலைந்திருந்த ஆழினிக்கு தங்கையின் சிரிப்பை பார்த்த பிறகு தான் மனம் நிம்மதியானது. கூடவே அவள் முகத்திலும் ஒரு அழகிய சிரிப்பு துளிர்ந்தது.

இதழினியின் பின்னே குறும்பாக சிரித்தப்படி நின்றவள் அவளது கன்னத்தை வழித்து உச்சிமுகர.

“ஆழி... இவ்வாறெல்லாம் என்னை நாணம் கொள்ள செய்யாதே” என்று சிணுங்கிக் கொண்டே கூறிய இதழினியை கண்டு மேலும் உதடுகள் பிரிய நன்றாகவே சிரித்து வைத்தாள் ஆழினி உமையாள்.

****
“உமையாளை மருமகளாக ஏற்க எனக்கு பரிபூரண சம்மதம் அண்ணா” என்று மகிழழகி முத்து பற்கள் தெரிய கூற.

“ஆகட்டும் மகிழா, வரும் சுபவேளையில் இளம்பரிதிக்கும், உமையாளுக்கும் நிச்சய ஓலை வாசிக்கும் வைபவத்தை ஏற்பாடு செய்கிறேன். அதே சுபவேளையில் கொடுங்கை நாட்டின் இளவரசருக்கும் நமது இளையாவிற்கும் பெண் பார்க்கும் வைபவம் நிகழந்தேறும்” என்று மகிழையன் கூற. அதற்கு சம்மதமாக தலையசைத்தார் மகிழழகி.

கொடுங்கையிலிருந்து தற்போது தான் அவர்களுக்கு செய்தி கிடைத்தது. அதில் மகிழ்ந்தவர் துரிதமாக வேலைகளை தொடங்கி வைத்தார். இருப்பினும் ஏதோ தவறுதலாக நடக்க போவதாக அவரது மனமும் உரைத்துக் கொண்டே இருந்தது.

அன்று கட்டம் பிரித்து மதலையின் கண்டத்தை கூறிய ஜோதிடர், அந்திபொழுதுக்குள் அவரே அதற்கான தீர்வையும் கூறியிருந்தார்.

எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவில் இருபிள்ளைகளுக்கும் திருமணம் நடத்தி அவர்கள் இருவரது கையால், நிறைந்த சுமங்கலிகளுக்கு இருபத்தியொரு நாள் கைங்கரியம் செய்து வந்தால் மதலை நாடு சீரும் சிறப்புமாக அதன்பின் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஆட்சிப்புரியும் என்றுக் கூற.

மகிழையனுக்கு மணம் சுணங்கியது. அத்தனை விரைவில் அவரது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமா? என்று தந்தையாக யோசித்தார்.

அவருக்கு ஆழினியை குறித்து என்றுமே கவலை எழுந்தது கிடையாது ஏனெனில் வாய்பேசாத மடந்தைக்கு இளம்பரிதியை காட்டிலும் யாவராலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது என்பது அவருடைய நீண்டக் கால எண்ணம். அவரின் கவலையே இதழினியை குறித்து தான்.

எப்பொழுதுமே குறும்புக் கூத்தாட தந்தை பின்னே பூனைப் போல் சுற்றும் இதழினியை பிரியப் போவதை குறித்து தான் தற்போது அவருக்கு வருத்தம் மேலோங்கியது.

இருந்தும் நாட்டின் மன்னன்னாக சிந்தித்தவர் தனது தங்கைக்கு சந்திக்க அழைப்பு விடுத்த கையுடன் தனது நண்பருக்கும் ஓலை அனுப்பி விஷயத்தை கூறியிருந்தார்.

அவர் ஒன்றை நினைத்துக் கொண்டு துரித கதியில் செயல்பட. அந்த செயலுக்கு உரியவர்களோ அதைப் பற்றி அறியாமல் தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

****
“இல்லை.. இல்லை.. என்னால் இதை ஏற்றுக் கொள்ள இயலாது” என்று கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தாள் நுதலழகி.

அழலேந்தியின் திருமணம் செய்தி அவளுக்கு தோழிகள் மூலம் கூறப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுகையில் மூழ்கினாள்.

“அழாதே நுதலா” என்று தோழிகள் அவளை சமாளிக்க.

“இத்தனை ஆண்டுகள் மனதில் ஒரு அரும்பை பூக்க செய்துவிட்டு, இப்பொழுது அடியோடு அதனை பிடுங்கி எறிய கூறினால் இருதயம் வெகுவாக வலிக்கின்றது அள்ளி” என்று ஒருவளை பார்த்துக் கூற.

தோழியை நினைத்து அவளுக்கும் கவலையாக தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய இயலும்? இந்த மனிதர்களெல்லாம் தங்களின் காரியத்திருக்காகவும், மகிழ்வுக்காகவும் பல மனங்களை உடைத்து விட்டு, அதனை மேலும்...மேலும்... அறிந்தோ,அறியாமலோ காயம் செய்துக் கொண்டு தானே இருக்கின்றனர். இந்த உண்மையை நுதலும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த அள்ளி.

“இப்பொழுது உனக்கு வலித்தால் கூட எந்தவொரு பயனும் இல்லை தோழி. பயனற்ற பூக்களுக்கு வீணாக தண்ணீர் ஊற்றி என்ன பயன்? அதனால் உன் மனதை இறுக்கிக் கொண்டு ஆக வேண்டிய வேலையை பாரு” என்றுக் கூற.

“இந்நேரம் தாய், தந்தை உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இத்தகைய நிலை அமைந்திருக்குமா?” என்று பாவமாக வினவிய நுதலழகிக்கு அழுகை மேலும் முட்டியது.

குழல்மொழியின் சகோதரனின் மகள் தான் நுதலழகி கடல் கடந்து வணிக விடையமாக அண்டை நாட்டுக்கு சென்ற அவளது தந்தை நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறால் மாய்ந்து விட்டார். இந்த செய்தியை அறிந்த அவளது தாயும் அதிர்ச்சியில் இறந்திருக்க நுதலழகியின் பொறுப்பை குழல்மொழி தான் எடுத்திருந்தார். ஆனால், அவருக்கு இதுநாள் வரை அவளை தனது மகனுக்கு மணம் முடிக்கும் எண்ணம் துளியும் இருந்திருக்கவில்லை. ஒருவேளை மகளை போல பாவித்ததால் தான் அந்த எண்ணம் வரவில்லை போலும். ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லையே? அது தானே இங்கே சிக்கலாகி போனது. அதுமட்டுமில்லாமல் அழலேந்திக்கு கூட அவளது மேல் அவனுடைய விடலை பருவத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அதை அவன் பகிரவில்லை என்னினும் அவனுடைய தோழர்கள் அவப்பொழுது அவளிடம் கூறி கூறியே அவளது பிள்ளை மனதை சலனம் படுத்தியிருந்தனர். அவர்கள் கேலிக்கு பேசிய பேச்சுக்கள் அவளிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று யாருமறியாமல் போனது பிழையாகியிருந்தது. அதனால் தான் இன்று ஏமாற்றப் பட்ட உணர்வில் வெதும்பிக் கொண்டிருக்கிறாள்.

அழகிய கனவுகளை சுமந்துக் கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் மேலும் அமிலத்தை வாரி இரைக்க அந்த விதி அடுத்தடுத்து வரிசையாக தனது கணக்குகளை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டு கிடக்கின்றது என்று யார் கூறுவர்?.

“சிருங்கார உணர்வுகளால் பிணைந்திருந்த நம் வாழ்வு,

அபகீர்த்தியாய் பல கயவர்களின் ஸ்வர வரிசைகளில் ஒலித்ததேனோ?”

 

NNK-28

Moderator

நயனம்-11


“என்ன?” என்று அமரா கூறிய செய்தியை கேட்டு அதிர்ச்சியாக உறைந்திருந்தாள் இதழினி. கண்களில் கண்ணீரும் பொழிந்துக் கொண்டிருந்தது. இதயத்தில் ஈட்டி பாய்ச்சிய வலி யாதென்பதை, தற்போது தான் உளமார உணர்கின்றாள்.

சிவந்த மிழிகளுடன் அமராவை கண்டு “நீ கூறிய செய்தி உண்...மை இல்...லை, அப்படி தானே? நீ கூறுவது பொய் தானே? நிச்சயம் பொய் தான். என்னை சீண்டுவதற்காக கூறுகிறாய். நான் அந்துவன் அண்ணாவை கேலி செய்வது பொறுக்காமல் இன்று என்னை அழ வைக்கும் நோக்கத்துடன் கூறுகிறாய், அப்படி தானே? வேண்டாம் அமரா விளையாட்டிற்கு கூட அவ்வாறு பொய்யுரைக்காதே, எனக்கு இதயத்தை பிளந்தது போல் வலிக்கிறது” என்று வலியுடன் இன்னுமும் அமரா அவளை பரிகாசம் செய்வதாக நினைத்தப்படி பிதற்ற.

“இல்லை இளையா. வரும் திங்களன்று உனக்கு பெண் பார்க்கும் வைபவம். கொடுங்கை நாட்டு இளவரசரும் அவரது பரிவாரங்களுடன் நாளை மறுநாள் வந்துவிடுவாராம். அதோடு அன்றே ஆழினிக்கும் இளம்பரிதிக்கும் நிட்சய நிகழ்வு பெரியோர்களால் நடைபெறுமாம். இன்று காலை தான் உன் தந்தை இத்தகைய முடிவினை உன் அத்தை மகிழழகியுடன் சேர்ந்து கலந்தாலோசித்தார். இழையினியின் அன்னை என் அன்னையிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது என் இரு செவிகளால் நான் கேட்டேன். இதில் நான் எதற்காக பொய்யுரைக்க வேண்டும்” என்று தவிப்பாக அமரா கூற.

“தந்தை என்னிடம் ஆலோசிக்காமல், எதற்காக இந்த ஏற்பாடுகளை செய்தார்” என்று நொந்து போனவளோ தொப்பென்று அமர்ந்து விட்டாள்.

தோழியின் துயரை கண்டு வருந்திய அமரா அவளுக்கு ஆறுதல் அளிக்க அவளுடனே அவளது தலையை கோதியப்படி அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்திருக்குப் பின் கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவை எடுத்திருந்த இதழினியோ “நான் அவரை சந்திக்க வேண்டும் அமரா. இப்பொழுது பயிற்சி களத்தில் தானே இருப்பார்? உடனே அவரை ஆற்றங்கரைக்கு வர கூறு” என்று உத்தரவிட. அமரா அவள் கூறியதை கேட்டு திகைத்தாள்.

அரசர் அவளது தமக்கைக்கு அவளது இதய கள்வனை மணவாளனாக தேர்ந்தெடுத்த இத்தருணத்தில் அவள் அவனை சந்திக்க கேட்பது சற்று கிலியை உண்டாக்கியது.

“இளையா நீ…” என்று அமரா வெகுவாக தடுமாற. “நன்கு யோசித்து தான் கூறுகிறேன்” என்று தீர்க்கமாக கூறினாள் இதழினி. இது எதில் சென்று முடியப் போகிறதோ என்று அமராவுக்கு தான் அச்சமாக இருந்தது.

இதழினியின் மனதிலோ அவளது தந்தை தனது விருப்பத்தை கேட்காமல் ஒரு விடயத்தை செய்கிறார் என்றால் அதற்கு பெரும் காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று ஒருசில நொடிகளிலே முடிவாக உணர்ந்துக் கொண்டாள். இருப்பினும் மையல் கொண்ட மனது அதனை ஏற்க மறுக்கிறது அல்லவா? ஆதாலால் முதலில் பரிதியிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். தற்போது அவள் இருக்கும் நிலையில் தெளிவான முடிவுகளை ஏற்க இயலாது என்று உணர்ந்ததால் தான், அவனை காண துடித்துக் கொண்டிருந்தாள்.

அமரா இதழினியின் தீர்க்கமான குரலுக்கு கட்டுப்பட்டு வெளியே செல்ல. அப்பொழுது, தான் இழையினியின் மூலமாக செய்தியறிந்த ஆழினி, இதழினியை காண வேக வேகமாக அங்கு வந்து சேர்ந்தாள்.

அழுது சிவந்த கண்களுடன் இதழினியை காண்பதற்கு ஆழினிக்கு வெகுவாக வலித்தது.

மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைக்க. அவளை ஏரெடுத்து பார்த்த இதழினியோ “வேண்டாம் ஆழி என்னருகில் தற்போது வராதே. எனக்கு இந்த நிமிடம் யாருடைய ஆறுதலும் தேவையில்லை. உன்னிடம் பேசுவதற்கும் எனக்கு ஒன்றுமில்லை” என்று காரமாக கூற.

ஆழினி தான் நொந்துப் போனாள். அவளுக்கு தெரியும் அவளது மையலின் ஆழத்தைப் பற்றி. அவள் தான் அவர்கள் இருவருக்கும் காதல் பூத்த தருணத்தில் இருந்து கண்டு வருகிறாளே.

இதழினி கெஞ்சும் பொழுது அவன் மிஞ்சுவதும். அவன் தன் இடத்திலிருந்து இறங்கி வந்து அவளிடம் அடிப்பணியும் பொழுது, அவள் மிஞ்சுவதும் என்று அவர்களுடைய பிணைப்பை காணவே உதட்டில் புன்னகை அரும்பும்.
அதே வேளையில் அத்தை மைந்தனான அந்துவனை மணக்க போகும் அமராவை காணும் பொழுது கூட அழினிக்கு அத்தனை சுவாரசியமாக இருக்கும். அதுவே சில நேரங்களில் அவளை சலிப்படையவும் செய்யும். என்ன தான் சாதாரணப் பெண் போல அழினியை அவளது தோழிகள் நடத்தினாலும், ஒரு கட்டத்தில் அவளுக்கே உரைத்திருந்தது இவர்களை போன்ற இயல்பான வாழ்வுக்கு ‘தான்’ தகுதியற்றவள் என்ற தாழ்வு மனப்பான்மை. இதுவரை அழினிக்கு இந்த காதல் ஜோடிகள் மீது பொறாமையோ அல்லது வெறுப்போ வந்தது கிடையாது. அப்படி இருக்கையில் இன்று அவள் அறிந்த செய்தி அவளை சீர்குலைய வைத்தது.

ஒருவேளை மனதின் இடுக்கில் ஒளிந்திருக்கும் அவளுடைய ஏக்கம் தான் தற்போது கண் திருஷ்டியாக, இவர்களை தவிப்புக்கு உள்ளாக்கியதோ என்றெல்லாம் சிறிது நிமிடத்திருக்குள்ளே நினைத்துவிட்டு, உள்ளம் குமறினாள். அவளால் கற்பனைக்கு கூட இளம்பரிதியை கணவனாக நினைக்க இயலாது. அந்த உண்மை தங்கைக்கு தெரிந்தபோதும் தற்போது அவள் இருக்கும் நிலையில் அதனை புரிந்துக் கொள்ள வேண்டுமே என்று தவிப்பாக இளையவளை கண்டாள்.

ஆனால் அவள் தான் அவளை காண கூடாது என்று தீர்க்கமாக வேறு திசையில் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு இருந்தாளே.

வேதனை ததும்பிய முகத்தை தங்கைக்கு பரிசளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் ஆழினி.

****
குல வதுவிற்கு என்று பார்த்து...பார்த்து தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் இழைக்கப்பட்ட பட்டாடைகள், அயல் நாட்டினரோடு ஏற்றுமதி/இறக்குமதியால் உண்டான நட்புக்கு வெகுமதியாக கிடைத்த விலை உயர்ந்த நீலநிற கற்கல் பதிந்த ஆபரணங்கள், கொடுங்கையின் சிறப்பாக அமையபெற்ற பண்டங்கள், அவர்களது பெண்கள் அணியும் உயர்ரக பவள நிற கற்கள் பதிந்த ஆபரணங்கள் என்று கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட பல்லக்குகள், பல சீர் வரிசைகளை சுமந்துக் கொண்டு மதலை செல்ல தயாராக இருந்தது.

“கவிநிலவா... பார்த்து கவனமாக செல்லுங்கள். நாளை மறுநாள் மதலையை அடைந்திருப்பீர். அதற்கு நடுவில் அழலேந்தியை எவ்வித தீங்கும் அண்டாமல் கவனமாக பார்த்துக்கொள். மணமகன் தோரணையில் செல்பவன். அதே பொலிவுடன் இந்த கொடுங்கை நாட்டு வருங்கால பட்டத்தரசியின் மனதை கவர்ந்துக் கொண்டு வரவேண்டும். புரிகிறதா?” என்று குழல்மொழி கூற.

அவனோ, “இவர்களே அழலேந்திக்கு தனது மனக்கண்ணில் முடிசூட்டு விழா நடத்திவிட்டு, இன்னும் கண்களால் கூட, காணாத அந்த மதலை நாட்டு இளவரிசியை அவனது வருங்கால மனைவியாகவும், இந்நாட்டின் பட்டத்தரசியாகவும் இணைத்து கூறவதோடு நிறுத்தாமல், அதற்கு எவ்வித தீங்கும் நடந்தேறிடக் கூடாது என்று எனக்கு வேறு எச்சரிக்கை அளிக்கிறாரே. இறைவா... இது எவ்விதத்தில் தகும்?” என்று மனதோடு நொந்துக் கொண்டான் அழலேந்தியின் ஒன்றுவீட்டு தம்பியும் அவனது நெருங்கிய நண்பனுமான “கவிநிலவன்”.

“கவிநிலவா...” என்று குழல்மொழி அவரது குரலை உயர்த்த.

“தாங்கள் கூறியது போலவே நான் கவனமாக இருக்கின்றேன் அன்னையே” என்றான் பணிவாக.

“ம்ம்... அரசர் மட்டும் தற்பொழுது நலமாக இருந்திருந்தால் நாங்கள் இருவரும் தம்பதி சகிதமாக முன்நின்று அனைத்து வேலைகளையும் செய்திருப்போம்” என்று குரலில் வருத்தத்தை கூட்ட.

“வருந்தாதீர்கள் அத்தை. அது தான் தங்களின் ஸ்தானத்தில் நானும் எனது கணவரும் முன்னிருக்கிறோம் அல்லவா? தாங்கள் கவலைக் கொள்ளாமல் இருங்கள்” என்று உதட்டில் தேக்கிய பசப்பு நகையுடன் கூறினாள் ‘உசிதா’. இளங்கீரனின் மனைவி. வேண்டாத மனைவி என்று கூற வேண்டுமோ?

அவளை எரிச்சலாக பார்த்தவரும் அதனை வெளிக் காட்டாமல். “ஆகட்டும்...” என்று கூறியப்படி நகர்ந்துக் கொண்டு, அழலேந்தியின் வரவிற்காக காத்துக் கிடந்தார்.

உசிதாவிருக்கும் அவரிடம் புன்னகையுடன் பேசுவதற்கு எரிச்சலாக தான் இருந்தது. இருந்தும் அவளின் தற்போதிய சூழல், அவரிடம் பாசாங்கு தனத்தை வாரி இரைக்க வேண்டும்! இல்லையெனில் நாளை அவளது கணவனுக்கு நடக்கும் அநியாயம் போன்று தான் அவளுக்கும் நடக்கும்.

கொடுங்கை நாட்டின் அடுத்த அரசன் ‘இளங்கீரன்’ தான் என்று ஆசை வார்த்தை கூறி தான் உசிதாவிருக்கு திருமணம் முடித்திருந்தனர் அவளது பெற்றவர்கள். ஆனால் வந்த நாள் முதல் இன்றுவரை அவளை அவன் ஒரு பொருட்டாக கூட கண்டுக் கொள்ளவில்லை. கட்டிய கடனுக்கு கணவன் என்று உரிமை மட்டுமே எடுத்துக் கொண்டான்.

மது பிடியிலும், மாது பிடியிலும் சிக்குண்டு கிடக்கும் இளங்கீரனை நினைத்து அவளுக்கும் வெறுத்து விட்டது. சிறிது சிறிதாக அனைவரின் மீதும் வஞ்சம் வளர்த்துக் கொண்டதோடு அல்லாமல் தனது கணவன் இப்படி இருப்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளுக்கு கிடைத்த செய்தி அவளுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

மன்னன் இளந்திரையன் படுக்கையில் விழுந்தவுடன். ஆட்சிப் பொறுப்புகள் யாவும் இளங்கீரனுக்கு செல்ல வேண்டும் என்று ஒருபுறம் பேச்சுகள் எழுந்தவுடனே, இராணி குழல்மொழி தான் தினமும் அவன் அருந்தும் நீர் முதல் அவனுக்கு வழங்கப்படும் உணவு வரை அனைத்திலும் போதை வஸ்துக்களை வழங்கும்படி கூறியிருந்ததாக ஒருமுறை உசிதாவிடம் சிக்கிய பணிப்பெண் உளறியிருந்தாள். அதோடு அவனுக்கு சில காலம் போதை வஸ்துக்களை தராமல் தடுத்து நிறுத்திய ராணி, அந்த சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கு மாதுவின் போதையையும் அறிமுகம் செய்ய வைத்ததாக அந்தப் பெண் அவளிடம் கூற. அதிலிருந்து உசிதாவின் வஞ்சம் பன்மடங்கு கூடியது. தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் செயலா இது? எந்த அளவு தனது மைந்தன் தான் அடுத்து, ராஜ்ஜியம் அமைக்க வேண்டுமென்ற நோக்கம் அவருடைய இரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும் என்று நினைத்தவள் அமைதி காத்தாள்.

வளர்த்த மகனுக்கே இந்த கதியென்றால்? அவளோ குறுநில மன்னனின் மகள். அவளை கருவறுத்து போட்டால் கூட அத்துணை பெரிய ராஜ்ஜியத்தை எதிர்த்து கேள்வி கேட்க யாவரும் வரமாட்டார்கள் என்று எண்ணினாள். அதோடு அவள் திருமணம் முடிந்த ஐந்தாண்டுக்கு பிறகு இப்பொழுது தான் ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தாள். தனக்கு ஒரு மகன் பிறக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டுமென்றும், அதே சமயம் அழலேந்திக்கு திருமணம் முடிய விடாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவள். பதுங்கி தான் இருந்தாள். புலியின் பதுக்கம் விரைவில் பாய்வதற்காக தான் இருக்குமே தவிர ஓடி ஒளிவதற்கு அல்ல என்று தனக்கு தானே கூறிக் கொண்டு பதுங்கியிருந்தாள். அவள் புலியா? அல்லது நரியா? என்று காலம் தான் கூற வேண்டும்.

அழலேந்தி ராஜத் தோரணையுடன் வந்துக் கொண்டிருந்தான்.

அவன் வருகையைக் கண்டு அனைவரது முகமும் புன்னகையில் அலர்ந்தது.

“மகனே...” என்று புன்னகை முகமாக அவனது கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார் குழல்மொழி. அவன் அவரிடத்தில் ஒரு மென்னகையை மட்டுமே ஒப்புக்கு சிந்தினான்.

“தந்தையிடம் உரைத்து விட்டாயா?” என்று குழல்மொழி வினவ. அவனது கண்களில் ஒரு அனல். இயல்பிலேயே அவனுடைய கண்கள் தான் அதிகம் பேசும். அதனின் கூர்வீச்சுக்கு பயந்தே யாவரும் பேச தயங்குவர். இன்றும் அவனது விழிவீச்சுக்கு பயந்து குழமொழி அமைதிக் காத்தார். அதில் அர்த்தம் உண்டு என்பதை தாய், மகன் இருவர் மட்டுமே அறிவார்கள்.

குழல்மொழி தன்னை சமாளித்துக் கொண்டு மற்றவர்கள் அவர்களையே காண்கிறார்கள் என்ற குறுகுறுப்பில் “நல்ல நேரம் தொடங்கிவிட்டது, விரைந்து செல்லுங்கள்” என்று அனைவரையும் வழியனுப்ப.

அவர்களும் புறப்பட்டு இருந்தனர்.

முதலில் சீர் வரிசை பல்லக்குகள் செல்ல அதன் பின்னே ஒவ்வொருவராக செல்ல தொடங்கியிருந்தனர். அம்பாரியின் மீது இளங்கீரனும் அவனது மனைவியும் உட்காரந்திருக்க. அவர்களுக்கு பின்னே குதிரையில் அமர்ந்தப்படி ராஜத் தோற்றத்துடன் வந்துக் கொண்டிருந்தான் அழலேந்தி.

“நண்பா... பெண் பார்க்க செல்வது உனக்கு. ஆனால் பரிவாரங்கள் சூழ புது மாப்பிள்ளையாக காட்சியாளிப்பதோ உனது அண்ணன் இளங்கீரன் தான்” என்று கவிநிலவன் அழலேந்திக்கு இணையாக அவனது கருப்பு நிற குதிரையில் சென்றப்படி அவனிடம் வெதும்ப.

அவனைக் கண்டு அழகாய் முறுவலித்தான் அழலேந்தி.

“சிரிக்காதே… இந்த சிரிப்புக்கு நான் மயங்க மாட்டேன்” என்று கவிநிலவன் கூற.

“நீ என்ன அந்த மதலை நாட்டு இளவரசியா? அல்லது எனது காதலியா? என்னைக் கண்டு மயங்க” என்று அவன் அதிசயமாக அவனிடம் கேலிப் பேச.

“அடேய்... நண்பா” என்று கடியானான் கவிநிலவன்.

“ஒரு வீரனாக நாம் எப்பொழுதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கவியா. நாம் செல்ல இருப்பது காட்டுப் பாதையில். அங்கு காட்டு விலங்குகளும் வரக் கூடும், பரிவாரங்களுடன் வரும் நம்மை தாக்குவதற்கு கள்வர்களும் வரக் கூடலாம். ஆதலால் எப்பொழுதுமே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அழலேந்தி விளையாட்டைக் கைவிட்டு அவனுக்கு புரியும்படிக் கூற.

“இதெல்லாம் இந்த இளங்கீரன் தமையனுக்கும் சற்று தெரிந்திருக்கலாம். அங்கு பாரு சோமாபானத்தை குடித்துக் கொண்டு போதை நிலையிலே செல்வதை” என்று அவன் வெறுப்பாக கூற.

பெருமூச்சை விட்ட அழலேந்தி “கவிநிலவா, அவர்கள் இப்பொழுது தாய், தந்தை ஸ்தானத்தில் நம்முடன் பயணித்துக் கொண்டிருகின்றனர். அதனால், வார்த்தைகளை அதிகம் வீசாதே. ம்ஹூம்... இது சரியல்ல நீ முன்னே செல், நான் பின்னே பார்த்துக் கொள்கிறேன்” என்றப்படி கவிநிலவனை துரத்தியவனோ, அவனது கூர் விழிகளால் அவர்கள் செல்லும் வாழியனைத்தையும் நோட்டமிட தொடங்கினான்.

****
அந்த பிரமாண்ட அறைக்கு பின்னே இருக்கும் சுரங்கம் தீ பந்துகளின் வெளிச்சத்துடன் சற்று மிரட்டும் படியாக தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

“ம்ம்...கூறியது போல் செய்துவிட்டதால், அதற்குறிய சன்மானம். பிழைத்துக்கொள்” என்று இரண்டு பொன்முடிப்புகளை முதன்மை வணிக மந்திரி ‘தீகன்’ ஒருவனிடம் கூறியப்படியே தூக்கியெறிய. அந்த நபரும் அவரை வணங்கிவிட்டு, அதனைப் பெற்றுக் கொண்டு மாற்றுப்பாதை வழியாக சென்றுவிட்டான்.

“நம்மீது இதுவரை அந்த மகிழையனுக்கு சந்தேகம் வந்திருக்கவில்லை தானே?” என்று துணியால் முகத்தை மூடியப்படி தீகனுக்கு அருகிலிருக்கும் ஒரு நபர் அவரிடம் வினவ.

“நிச்சயம் இருக்காது. கொடுங்கைக்கு ஓலையை எழுதும் பொறுப்பு என் கண்முன் தான் நடந்தேறியது. தக்க சமயம் கிடைத்தப்பொழுது இதழினியின் சித்திரத்திருக்கு பதிலாக அந்த ஊமையின் சித்திரத்தை மாற்றிவிட்டேன்” என்றுக் கூற.

“நல்லது. ஒருபுறம் இளம்பரிதியுடன் களவொழுக்கம் புரிந்துக் கொண்டிருக்கும் இதழினி, மறுப்புறம் அவளது காதலன் அவளது தமக்கையின் வருங்கால கணவன். அது மட்டுமா அந்த கொடுங்கையின் இளவரசன் அவளுக்கு மாலை சூட்டப்போகும் மணவாளன். ம்ம்... சிக்கலான உறவுமுறை தான். அப்படி தானே?” என்று கோரமாக அந்த உருவம் கூறி சிரிக்க. அதற்கு ஒத்திசைத்தப்படி சிரித்துக் கொண்டார் இழையினியின் தந்தையும், மதலையின் மந்திரியுமான தீகன்.

“நமது இத்தனை வருட காத்திருப்புக்கு பலனாக அந்த மகிழையன். தவறு... தவறு... மதலையின் மன்னன் விரைவாக அனைவரது முன்பும் கூனிகுறுகி நிற்கப் போகும் காட்சி இப்பொழுதே எனது மனக்கண்களில் தெரிய வருகின்றது” என்று தீகன் பாவம் போல வருத்தக் குரலில் ஒருவித எள்ளலுடன் கூற.

“அதுமட்டுமா எனது இத்தனை வருட அழுகைக்கும், ஏக்கத்திருக்கும் காரணமான அவனுக்கு சரியான தண்டனையே, அவையோர் முன்நிலையில் கூனிக்குறுகி, புழுவாக துடிதுடித்து கடைசியில் அந்நிலையிலே மாண்டு போகும், அவனது அநாதரவற்ற மரணம் தான்” என்று வார்த்தையில் அனலையும், வெறுப்பையும் உமிழ்ந்த அந்த உருவம், கோணலாக சிரித்தப்படி “ஒருவேளை இப்படி நடந்தால் எப்படியென்று சற்று யோசித்துப் பார் தீகா, இளம்பரிதியை மணம் முடிக்க முடியாத ஏக்கத்திலும் அந்த கொடுங்கை இளவரசனை ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தினாலும், இதழினி தன் உயிரை துறந்துவிட்டால்? அந்த குற்ற உணர்வு அந்த மகிழையனை எவ்வாறு தாக்கும் என்று யோசி? தனது செல்ல மகளின் இறப்பை நினைத்து அவன் வருந்தாத நாட்களே அடுத்து கிடையாது தானே? அதுமட்டுமில்லாமல் இந்த இளம்பரிதியும் நிச்சயமாக தனது காதலியின் முகஜாடையில் இருக்கும் அந்த ஆழினியுடன் எந்த சூழ்நிலையிலும் இணைந்து வாழ மாட்டான். என்ன தான் மகிழையன் அந்த இதழினியிடம் காண்பிப்பது போல் வெளிப்படையான பாசத்தை அந்த அழினியிடம் பொழியவில்லை என்றாலும், அவனுக்கு அந்த ஊமை மீது அக்கறை நிரம்ப உண்டு என்பதை யான் அறிவேன். ஆதலால், அதனை நினைத்தும் ஒருபுறம் அவன் வெதும்பிக் கொண்டு தானே இருப்பான்?” என்று நடக்காத நிகழ்வுகளுக்கு எல்லாம் நடந்தது போல் அந்த உருவம் வர்ணம் பூசிக்கொண்டு உற்சாகமாக தீகனிடம் கூற.

அதற்கு தீகனோ “நீ கூறிய அனைத்தும் சரி தான். ஆனால், இதழினி இறந்துவிட்டாள் அந்த முட்டாள் பெண்ணும் உடன் மடிந்து விடுவாளே தவிர, வாழ்வது.... எல்லாம்... ” என்று உதட்டை பிதுக்கியப்படி கூற.

மீண்டும் சத்தமாக சிரித்த உருவமோ, “அப்படியெனில் ஒருபுறம் இருபுதல்வியின் மரணம், மறுப்புறமோ அந்த கொடுங்கை நாட்டிலிருந்து அவர்களது இளவரசனை அவமதித்ததற்காக எழும் போர். ஆக மொத்தம் மகிழையனின் நிலை தடுமாற்றத்தில் தான் முடியும்” என்று சிரிக்க.

“ஆம்! தமக்கையே, எது நடந்தாலும் அந்த மகிழையனின் மனம் நிம்மதியற்று தவிக்க போவது உறுதி” என்று தீகனின் சிரிப்புக்கு, நாராசமாக இணைந்தது அந்த உருவத்தின் சிரிப்பொலியும்.


****

கைகள் கட்டிக் கொண்டு அவனையே தீர்க்கமாக பார்த்தப்படி அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் பாறையில் சாய்ந்தப்படி நின்றிருந்தாள் இதழினி இளையாள்.

அவள் அருகில் நின்றுக்கொண்டு எங்கோ வானத்தில் இலக்கின்றி மெதுவாக ஊர்ந்து செல்லும் முகிலினங்களை வெறித்துக் கொண்டிருந்தான் பரிதி.

அவர்களுக்கு தனிமை கொடுத்தப்படி வெகு தொலைவில் அந்துவனும், அமராவும் நின்றிருந்தனர்.

“தங்களுக்கு நிச்சயமாக செய்திக் கிடைத்திருக்கும். அப்படிதானே?” என்று வறண்டக் குரலில் பெண்ணவளே முதலில் பேச்சை துவக்கி வைக்க.

“ம்ம்...” என்றான் அமைதியாக.

“என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?” என்று அவள் அழுகையை விழுங்கியப்படி வினவ.

“என்னால் என்ன செய்ய முடியுமென்று நினைக்கிறாய்? உனது தந்தை நம்மிடம் கலந்தாலோசிக்காமல், என் தாயிடம் நேரடியாக சம்மதம் பேசிவிட்டார்” என்றான் வேதனை ததும்பும் குரலிலும், அவளது தந்தையின் முடிவு மீது ஏற்பட்ட கோபத்திலும்.

“ஓ... அப்பொழுது எனது தமக்கையை திருமணம் செய்ய தயாராகி விட்டீர். அப்படி தானே?” என்று அவனது பதிலில் அதிருப்தியை உணர்ந்தவளாக உடனே அவள் வெடிக்க.

“இதழா...” என்று கடிந்துக் கொண்டான் அவன்.

பின் மெல்ல சுதாரித்துக் கொண்டு “ஆழினி எனக்கு உற்ற தோழி, அவளை நான் அரவணைக்கும் பொழுது அவள் எனக்கு மகளாக தான் தெரிகிறாள், என்னிடம் அவளது குறும்புகளை காட்டும் பொழுது எனது தங்கை போன்றவளாக தான் எனது மிழிகளுக்கு அவள் தெரிகிறாள். இன்னொரு முறை அவளுடன் என்னை இணைத்து கூறாதே. உனக்கும் அவளுக்கும் முக ஒற்றுமைகள் இருந்தால் கூட. எனக்கு அவள் வேறு, நீ வேறு. நம் உறவுமுறைகளும் வேறு...வேறு புரிகிறதா?” என்றுக் காட்டமாக கூற.

அவனது குரலிலுள்ள கடினத் தன்மைக்கு பிறகு தான் இதழினிக்கு அவளது அர்த்தமற்ற கோபமே புரிய வந்தது. அதோடு ஆழினியை உதாசீனப்படுத்தியதும் நினைவெழ. அவன் முன்பே மண்டியிட்டப்படி வெடித்து அழுதாள் “எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை வீரரே. ஒருபுறம் நம் காதல், மறுப்புறம் இந்த திருமண ஏற்பாடுகள்...” என்று கேவியப்படி முகத்தை மூடி அழ.

அதுவரை இளம்பரிதியிடம் இருந்த கடினம் மறைந்தது. உடனே அவளது வேதனையை போக்கும் காதலனாக உருமாற்றினான்.

“அழாதே இதழா…” என்று அவளை ஆரத்தழுவி அவளது கண்ணீரை களைந்தவன்.

கண்ணீர் சுரந்த கொண்டிருந்த அவளது இமைகளை கண்டப்படி தீர்க்கமான குரலில், “இதற்கு நான் ஒருவழியைக் கூறுகிறேன். அதன்படியே நீ நடந்துக்கொள்வாயா?” என்று வினவ.

அவள் அவனது கண்களுக்குள் ஊடுருவியப்படி சம்மதமாக தலையசைத்தாள்.

"வஞ்சம் சூழ்ந்த தரணியில்,
அலரவளின் துயரை களையும்,
காதலானக ஓர் வழியை கூறுவானா?
அந்த கிள்ளை மொழியான்".

 

NNK-28

Moderator

நயனம்-12

காலை கதிரவன் தனது மஞ்சளை அந்த மேகத்தில் புகுத்திவிட்டு அழகாக புலர்ந்திருக்க. அன்று அந்த மதலையும் சிறப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்னே இரு இளவரசிகளின் திருமணமாயிற்றே. நாடு முழுவதும் ஒருவித கோலாகலமான காட்சியில் தான் திளைத்திருந்தது.

சாதாரண நாட்களிலேயே வருபவருக்கு இல்லை என்று கூறாத வகையில் சமமாக உணவு வழங்கும் அரண்மனையின் அன்னக்கூடம். தற்போது காட்சியளிக்கும் விதத்தை பற்றி விவரித்துக் கூற வேண்டுமா? இரண்டு வார முன்பிலிருந்தே களைக்கட்டி இருந்தது ராஜவிருந்து. அப்பொழுதிலிருந்தே வயிறார உண்டுவிட்டு மக்கள் அனைவரும் வரிசையாக மன்னனையும், இளவரசிகளையும் மனதார வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

அரண்மனையின் நீர் தடாகத்தில் பெண்கள் இருவரின் நீண்ட கூந்தலுக்கு அரைப்பு, உசிலைத் தூள், பாசி பயிற்றுமா போன்றவற்றை தேய்த்து. துருக்கம், கோட்டம், அகில், சந்தனம்
தகரம் போன்ற நறுமண பொருட்களுடன், துவரும், காசறை(கஸ்தூரி), வேரி, பதுமுகம், தான்றி, புன்னை நறுந்தாது, தமாலம், மதாவரிசி, மாஞ்சி, இலாமிச்சம், நெல்லி, கொடுவேரி, ஓமாலிகை போன்ற முப்பத்திரு வகைக் கொண்ட பொருட்களையும் சரியான விதத்தில் ஒன்றாக கலந்து, பன்னீரில் குழைத்து அந்த கலவை நன்கு ஊறிய பின், ஆழினி மற்றும் இதழினியின் மேனிகளுக்கு பூசத் தொடங்கியிருந்தனர் பணிப்பெண்கள்.

அதன்பின் முதல் நீராக அவர்களுக்கு மஞ்சள் கலந்த மங்கள நீரை ஊற்றிவிட்டு, சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளி குடங்களில் நன்னீரை ஊற்றிக் கொண்டே அவர்கள் இருவரையும் சுத்தம் செய்ய. இளவரசிகள் இருவருக்கும் மறுப்புறம் நின்ற சில பெண்களோ நீராடல் பாடல்களை பாடிக் கொண்டு வெகு விரைவிலே குளியல் படலத்தை அவர்களுக்கு முடித்து வைத்தனர்.

பின் அங்குள்ள பிற பெண்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணமாக, விரைவாக மணமகளுக்கு உரிய அலங்காரங்களை இருவருக்கும் செய்ய தொடங்கியிருந்தனர்.

சிகப்பு பட்டில் பட்டாடை உடுத்தி, மணப்பெண்களுக்கு உரிய நெத்திச்சுட்டி, ஜடை நாகம், அட்டிகை, மூணடுக்கு மணி, காசு மாலை, வங்கி, தங்க வளவி, அரைச்சலங்கை, உடியானம், தண்டை போன்ற சர்வ அலங்காரத்தை தலை முதல் பாதம் வரை அவர்கள் இருவரும் அணிந்து கொண்டதில். தேக்கி வைத்த மொத்த அழகையும் இன்று தான் மற்றவரின் மிழிகளுக்கு வெளிப்படுவது போல, பளபளவென்று பொலிவாக ஜொலித்துக் கொண்டிருந்தனர் மதலையின் இளவரசிகள்.

ஆனால், அவர்களின் நகைகளுக்கு இணையாக வதனத்தில் மருந்துக்கும் புன்னகை இடம் பெற்றிருக்கவில்லை என்பது தான் உண்மை.

ஆழினியின் மனது நடப்பது அனைத்தும் விதியே என்று எவ்வித ஆர்ப்பாட்டமின்றி இருக்க. இதழினியின் மனதோ இனம்புரியா வருத்தத்தில் இருந்தது.

எது எப்படியோ ஆழினி தற்போது மனதை இறுகி பிடித்துக் கொண்டு உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்படி தான் பிறருக்கு காட்சியாளித்துக் கொண்டிருந்தாள். ஆனால், இதழினியின் முகமோ மனதில் இடம்பெற்றிருக்கும் சோர்வை அப்பட்டமாக வெளிக்காட்டியது. அவப்பொழுது சிரித்துக் கொண்டாலும் அது கடனே என்று தான் இருந்தது. அது மற்றவர்களின் விழிகளுக்கு திருமணத்தினால் உண்டாகும் படபடப்பு போல தெரிவர. அவளை நன்கு கவனித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அது அவளது பசப்பு நகையென்று.

பெண்கள் இருவரும் இங்கு அலங்கார மோகினியாக இவ்வாறான ஒரு குழப்ப நிலையிலே தயாராகி இருக்க.

அங்கு கொடுங்கையின் மைந்தனான அழலேந்தியோ மணமகனுக்கு உரிய அலங்காரத்துடன் வலது புறம் அமையப்பெற்ற மணப்பந்தலில், முகத்தில் தீர்க்கமான பாவத்துடன் ராஜத்தோரணையில் அமர்ந்திருந்தான்.

துரித கதியில் நடந்துக் கொண்டிருந்த சம்பிரதாயங்களை கண்டு அவனுக்கும் சற்று மலைப்பாக தான் இருந்தது.

அவன் பரிவாரங்களுடன் மதலையின் யுவராணியை பெண் பார்த்து, பின் அவர்களது வழக்குப்படி கருகுமணியை உசிதாவின் மூலம் அவளுக்கு அணிவித்துவிட்டு, கொண்டு வந்த பரிசுகளை சேர்பித்து திருமணத்தை உறுதி செய்து, மீண்டும் நாடு திரும்பி என்று அதற்குள் ஒரு திங்கள் நிறைவை பெற்றிருந்தது. சில நிகழ்வுகளை அவனது மனம் மீட்டி பார்க்க அதனின் விளைவுகளை குறித்து அடுத்து யோசிப்போம் என்று உறுதியுடன் இருந்தான்.

நோய்வாய்ப்பட்ட கொடுங்கையின் அரசருக்கு துணையாக, ராணி குழல்மொழி கொடுங்கையிலே இருக்க. மீண்டும் பெரியவர்களின் கடமையை நிறுப்ப இளங்கீரனும், உசிதாவும் தான் முன் வந்திருந்தனர். உசிதாவின் வதனத்தில் தெரிந்த கடுகடுப்பே அவளது நல்லெண்ணத்தை அழகாக படம்பிடித்துக் காட்டியது. பின்னே அவளும் ஏதேதோ தடையை உண்டு பண்ணி திருமணத்தை நிறுத்தப் பார்த்தாள் அல்லவா? ஆனால், அதெல்லாம் நிறவேறினால் தானே? அழலேந்திக்காக அழுது கரைந்த நுதலழகியிடம் கூட அவள் நைச்சியமாக பேசிப் பார்த்தாள். ஆனால் அதுவும் எடுப்படாமல் போனது தான் அவளது துரதிஷ்டம். கையாலாகாத தனத்துடன் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அழலேந்திக்கு இடப்புறத்தில் அமையபெற்ற அதே போன்ற மணப்பந்தலில் சாந்தமான மனநிலையில், கண்களில் தெரியும் கூர்மையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் இளம்பரிதி. அவன் பார்வை படும் தூரத்தில் அவனின் தாய் மகிழழகி சிரித்தப்படி, மகனின் திருமணத்தை காணப் போகிறோம் என்ற பூரிப்பில் நின்றிருந்தார்.

அவனது நயனங்களுக்கு தான், அவரது சந்தோஷ பாவங்களை கண்டு என்னவென்று பிரித்தறியாதப்படி உணர்வுகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

தாய்யைக் கண்டு விட்டு அப்படியே அவனது விழிகள் அவனது மாமன் மகிழையனைக் காண. அவரோ நெற்றி சுருங்க, மனதை வாட்டும் கவலையை வெளிக்காட்டமல், அதே கம்பீர தோற்றத்துடன் பிறருக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனமோ திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலை தான் வைத்துக் கொண்டிருந்தது. அது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ இளமையிலிருந்து அவருடன் வளர்ந்திருந்த பரிதிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அவரவர் எண்ணங்கள் இவ்வாறு இருக்கும் வேளையில். நல்ல நாழிகை தொடங்கியிருந்தது. ஆதலால், மணப் பெண்கள் இருவரையும் பெருமக்கள் அனைவரும் சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ஆழினியின் மனதில் இனி எது நடந்தாலும் அதை நாம் தான் தனியாளாக எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பில் அன்ன நடையிட்டு மணவறை நோக்கி, தோழிகள் படைசூழ மெதுவாக செல்ல. இங்கு இதழினியின் எண்ணமோ வேறாக இருந்தது. பயம், பதட்டம், இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் இனம்புரியா வலியென்று, அவள் சமைந்து நின்ற பொழுதில் அவளை முன்னேறி நடக்குமாறு ஊகினர் மற்றவர்கள்.

வலதுப்புற மணவறையில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் அசாத்திய வீரனாக இருக்கும் அழலேந்திக்கு அருகில், புள்ளிமான் தோற்றத்துடன் அவனுடன் அமர்ந்திருக்கும் படபடப்பில் மருண்ட மிழிகளுடன் அதனை சுற்றத்திருக்கு காட்டாத வகையில் தலைகுனிந்தபடி ஆழினி உமையாள் அடக்கமாக அமர்ந்திருக்க. அவனுக்கோ அதெல்லாம் பொருட்டே இல்லாதது போல் பெண்ணவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இங்கு இளம்பரிதியின் அருகில் அமர்ந்திருந்த இதழினிக்கோ மகிழ்ச்சிக்கு பதில் மேலும் மேலும் அவளை வலுவாக தாக்கிக் கொண்டிருந்தது மனதின் வலியொன்று. ஆதலால், அவள் இளம்பரிதியை நிமிர்ந்தும் காணாமல் நிலத்தை நோக்கியிருந்தாள்.

சற்று நேரத்தில் மங்கள இசை முழங்க உறவினர் சூழ, பிரஜைகள் கூட, ஆன்றோர் சான்றோர் முன்நிலையில் இளம்பரிதி இதழினியின் கழுத்தில் மாலைசூடி அனைவரது முன்பும் இயற்கை சாட்சியாக வைத்து அவளை தன்னின் மணவாட்டியாக ஏற்க.

அதே வேளையில் உற்றவர் முன்நிலையில் ஆழினியை, கொடுங்கையின் சிறப்பான பவள ஆபரணத்தில் அவர்களது வழக்கப்படி அதில் வேட்டையாடிய புலிப் பல்லை கோர்த்து, அவளது சங்கு கழுத்தில் அணிவித்து தனது சரிபாதியாக்கிக் கொண்டான் அழலேந்தி.

மனநிறைவுடன் இங்கு இரு பெண்களின் திருமணமும் தங்கு தடையின்றி நன்முறையில் நடந்ததும் தான், மகிழையனுக்கு மூச்சே வந்தது.

அமரா, இழையினி, அந்துவன், கவிநிலவன் என்று நண்பர்களுக்காக அவர்களது நலனில்அக்கறை கொள்ளும் நல்லுள்ளங்கள் அனைத்தும், அவர்களது வாழ்வுக்கு ஒரு பிரார்த்தனை விடுத்துவிட்டு அந்த தருணத்தை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

திருமணம் மதலையிலுள்ள சிவாலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில் தான் நடைபெற்றது. சடங்குகள் முடிந்த கையுடன் அவர்கள் அந்த கையிலைநாதனை நேராக சந்திக்கும் பொருட்டு தான் மணவறையும் அங்கயே அமைக்கப்பட்டிருந்தது. அதோடு இருப்பத்தொரு நாட்கள் அழலேந்தியும், ஆழினியும் மதலையில் தான் தங்க போகின்றனர். ஏனெனில் ஜோதிடர் கூறிய சடங்குகளை ஆழினி-இதழினி இருவருமாக சேர்ந்து கழிக்கும் ஏற்பாடுகள் அடுத்த நாளிலிருந்து தொடங்க போகின்றது. அதன் பிறகு தான் ஆழினிக்கு புகுந்தகம் செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்ள போவதாக அரசர் கூறியிருந்தார்.

இந்த விவரங்களை பற்றி முன்பே கொடுங்கை மன்னன் இளந்திரையன், இராணி குழல்மொழி என்று இருவருக்கும் செய்தியாகவும், நேரில் சென்றும் மகிழையன் முறையாக கூறியிருந்தார். இராணி குழல் மொழிக்கு அனைத்திலும் சம்மதம் தான். அவருக்கு அந்த நிமிடம் அவரது புதல்வனுக்கு நடக்க போகும் திருமணத்தை பற்றிய கனவுகள் தான் அதிகமாக மிதந்திருந்தது. ஆதலால் அனைத்திருக்கும் ஒப்புக்கொண்டார்.

அத்துடன் அவரும் அவரது குலவதுவை குறித்து, அவர் நியமித்திருந்த நம்பிக்கைகுரிய பணிப்பெண்களிடம், பரிவாரங்களுடன் சென்று மீண்டும் நாடு திரும்பிய பொழுதே செய்தி திரட்டியிருக்க, அவர்களும் இராணியின் மனம் குளிரும் நற்சான்றிதழ்களே மதலையின் இளவரசியைக் குறித்து அளித்திருந்தனர்.

ஆதலால், மகிழையனின் கோரிக்கைகளுக்கு அவருக்கு எவ்விதத்திலும் கசப்பை உண்டு பண்ணவில்லை. ஆனால், அவருக்கு கவலையளித்த ஒரே விடயம் தம்பதி சகிதமாக அவரால் மகனின் திருமணத்தை முன்நின்று காண முடியவில்லையென்பது மட்டும் தான்.

கொடுங்கையில் வைத்து அவர்களின் திருமணத்தை நடத்தினால் கூட அவரால் இளந்திரையனை தனியாக விட்டுவிட்டு கண்குளிர அந்த வைபவத்தை இரசித்துக் காண இயலாதே. அவரின் அந்த கவலையைக் கூட அழலேந்தி கொடுங்கை விட்டு மதலையை நோக்கி செல்லும் முன் களைந்திருந்தான்.

என்றுமில்லாத திருநாளாக அவன் அவனது அன்னைக்கு ஆறுதலாக இருவார்த்தைகள் பேசிவிட்டு சென்றிருக்க. மைந்தனின் இலகுவான பேச்சுக்கு உருகிய தாயோ மருமகள் வரவிருக்கும் நேரத்தில் தான் இந்த மாயம் எல்லாம் நடக்கின்றது என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டவர், அவரது குலவதுவிற்காக அப்பொழுதிலிருந்தே ஆவலாக காக்க தொடங்கியிருந்தார்.

இதே மகிழ்வு அவரது மருமகள், கொடுங்கையில் அடி எடுத்து வைக்கும் பொழுது இருக்குமா? என்று கேட்டால் சந்தேகம் தான்.

ஏனென்றால் அழலேந்தி திருமணம் செய்திருப்பது இதழினியல்ல, ஆழினி தான் என்ற உண்மை இன்னமும் அவருக்கு தெரிய வரவில்லை. அவருக்கு மட்டுமா? திருமண பொறுப்புகளை நடத்தி வைத்த உசிதாவுக்கும் சரி, கூடியிருந்த மற்ற கொடுங்கை உறவுகளுக்கும் சரி ஆழினி தான் அழலேந்தியின் மனைவி என்று தெரியவில்லை. தெரியவில்லை என்று கூறுவதை விட அவன் அவ்வாறு சாமர்த்தியமாக திருமணம் வரை அனைவரையும் சமாளித்துக் கொண்டு இன்று அவளுடனான திருமணத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டான் என்று தான் கூற வேண்டும். அவன் அவ்வாறு செய்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், அதனின் எதிர்வினையோ அந்த வாய்யில்லா மடந்தையை எப்படியெல்லாம் புரட்டிப்போட போகின்றது என்று தான் அவன் அறிந்திருக்கவில்லை.

****
மீதமுள்ள திருமண சடங்கை இங்கு ஆழினி-அழலேந்தியுடனும், இதழினி-இளம்பரிதியுடனும் செய்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக அந்த பரம்பொருளை இரண்டு ஜோடிகளும் சேர்ந்து தரிசித்துவிட்டு அரண்மனை திரும்ப.

மகிழையன் இரு மாப்பிள்ளைகளையும் உடனடியாக தனியே சந்திப்பதற்காக அழைத்திருந்தார். அவர்களும் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு உடனடியாக சென்றிருந்தனர்.

இதழினி மற்றும் ஆழினியை அடுத்த சடங்குக்காக தயார் செய்ய அழைத்து சென்றனர் இழையினி மற்றும் அமராவின் தாய்மார்கள்.

“ம்ம்... நம் தோழிகள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது அமரா. என்னால் இன்னமும் அதை நம்ப இயலவில்லை. இனி நான் எப்படி இதழினியுடன் சேர்ந்துக் கொண்டு எனது நர்த்தன வகுப்பிலிருந்து தப்புவேன்? யார் என்னை அன்னையிடமிருந்து காப்பாற்றுவார்கள்? ஆழினியின் வேய்ங்குழல் கானத்தை நினைத்த நேரத்தில் எல்லாம் இனி கேட்க முடியாது தானே?” என்று இழையினி நேராக நடந்துக் கொண்டே புலம்பிக் கொண்டிருக்க.

எங்கே? அவளது மற்றொரு தோழியான அமரா அவள் கூறுவதை கேட்க அருகில் இருந்தால் தானே. அவள் தான் எப்போதோ அவளது அத்தை மைந்தன் அந்துவனின் விழியசைவுக்கு கட்டுப்பட்டு இழையினியை பாதியில் இவ்வாறு தனியாக புலம்பவிட்டு அவனுடன் காதல் பேச சென்றுவிட்டாளே. இது அறியாமல் இழையினி மேலும் அரற்றிக் கொண்டிருக்க.

“இந்த பெண் வணிக மந்திரி தீகனின் மகள் தானே? எதற்கு இவ்வாறு தனியாக பேசிக் கொண்டு வருகிறாள்” என்று கவிநிலவன் அவளைக் கண்டுவிட்டு மனதில் நினைக்க. அவளோ இன்னமும் நிறுத்தாமல் அவளது குறைகளை புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தெரியாத காரணத்தால் எவ்வாறு அழைத்து அவளை நிறுத்த என்று கவிநிலவன் யோசித்துக் கொண்டே அவள் பின்னே அவளை அழைப்பதும் பின் அமைதி அடைவதுமாக சென்றுக் கொண்டிருக்க.

“அமரா நான் எனது கவலைகளை எவ்வளவு நேரமாக செவிகள் கிழிய கூறிக் கொண்டிருகின்றேன். நீ என்ன அமைதியாக இருக்கிறாய்” என்று அப்போது தான் தனது நடையை நிறுத்தி பின்னே திரும்பினாள்.

அங்கு கவிநிலவனோ சுட்டு விரலை நீட்டியவாறு அவளது நடை தளர்ந்தவுடன் அப்படியே சமைந்திருந்தான்.

அவனைக் கண்டுவிட்டு இழையினி அவளது கண்களை உருட்டி அமராவை தேட. அவனோ அந்த அலைபாயும் கண்களுக்கு நொடியில் தனது மனதை பாரிக்கொடுத்திருந்தான்.

“எனது தோழி அமராவை தாங்கள் கண்டீர்களா?” என்று வினவ.

அவனோ “அது.. ஆம்.. இல்லை...” என்று உளறலாக கூற. அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

இந்த காதல் தான் எத்தனை விச்சித்திரமானது. ஒருவர் மீது எப்படி எந்த தருணத்தில் வருகின்றது என்று தெரியாமலே நொடியில் இரு மனங்களை கோர்க்க நூலாக மாறிவிடுகின்றது.

இதே மையலுக்காக தான் அன்று இதழினியும் பரிதி கூறியது போல் உடனே தனது தந்தையிடம், திரித்த சில விடயங்களை கூறினாள். அது தான் இன்று மனதை கொண்டவனுடன் கரம் சேர்ந்தும் அவளை நிலைக்கொள்ள முடியாதபடி குற்ற உணர்வில் தத்தளிக்க செய்து கொண்டிருந்தது.

“மரிக்கும் ரணங்களை காட்டிலும்,
வலிக்கிறது நினது பொய்யான பிம்பங்கள்”


 
Last edited:
Status
Not open for further replies.
Top