எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனலாக நீ கைக்கிளையாக நான்💞

Status
Not open for further replies.
அனலாக நீ
கைக்கிளையாக நான்💞

அனல் 1 ✨

நிசப்தமா? இல்லை சத்தமா? இல்லை ஒரு வேளை இரண்டும் கலந்து வரும் ஒரு விரோத நேரமா? இல்லை நிசப்தமும்,அமைதியும் ஒரு சேர மனிதர்களின் உணர்வுகளினாலும்,
சுற்றத்தாலும் வருகிற ஒரு மந்திரமா? வெறும் நிசப்தம் மற்றும் சத்தம் எனும் வாழ்க்கை ஒரு வாழ்வா? யோசித்து பாருங்கள் என்று நான் சொல்வதை விட கற்பனை கண்ணோட்டத்தில் சிந்தை செய்து பாருங்கள்! இதை ஏன் இத்தனை நேரம் கூறுகிறேன்.

💞அனலாக நீ கைக்கிளையாக நான்💞 கதையினுள் செல்லலாம்.

"நா வீட்டுக்கு வந்துட்டேன்." என்ற வருகையோடு வீட்டினுள் நுழைந்தவளை ஒரு பொருட்டாக நினைக்காது அவளிடம் "அதுக்கு என்ன இப்போ! இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கு தானே?" என ஆடவன் கேட்க "ஆமா, உனக்கும் எனக்கும் இன்னையோட ஒரு வருஷம் ஆகுது. இந்த லிவ்விங் ரிலேஷன்ஷிப்." "கரெக்ட், டிவோஸ் பண்ணிகலாமா?" "என்னது ஒரு வருஷத்துக்கு நம்ம ரிலேஷன்ஷிப்ல இருப்போம். ஒரு வருஷம் முடிஞ்சதும் அன்டர்ஸ்டாடிங் ஏற்பட்டதும் கல்யாணம் செஞ்சு வாழலாம்னு நீ தான சொன்ன?" என அவள் சீறினால். "அட நீ இன்னும் அந்த காலத்து பொண்ணாவே இருக்க. கமான்யா, சந்தோஷமா நீ என்னை விட்டு போவியாம். நானும் உன்னை நாளைக்கு பார்த்தா, யார்னு கேட்பேன். ஓகே, இப்ப வந்து டிவோஸ்ல சயின் பண்ணு." என அங்கு சுற்றி இங்கு சுற்றி அதே இடத்திற்கு வந்தான்.

அவள் பேசுவதற்கு அங்கு இடமில்லை. காரணம், அவள் ஏமாந்து போனால். மெய்யாக விரும்பியவனே தன்னை வேண்டாம் என கூறிவிட்டான். மனதில் 'நல்ல வேள நா இவேன் கூட ரிலேஷன்ஷிப் வைச்சது அப்பா அம்மாவுக்கு தெரியாது. இன்னும் சொல்லணும்னா தாலி கட்டி வாழ்க்கை வாழவே இல்ல. அதனால, போயிட வேண்டியது தான்.' என்ற முடிவோடு அவ்வீட்டை விட்டு சென்றால்.

மூன்று வருடத்திற்கு பின்..

மலைப்பகுதி பச்சைபசு புள்வழிகள், எங்கும் இயற்கையின் காற்றும் அதன் அழகும் இவர்களோடு ஒரு சேர்ந்த குளிரும் வந்து சேர்ந்து செல்லும் அழகிய இடம் தான் முசிறி.

அனிஸ்குப்தா என்கிற வீட்டில் ஐந்து பேர் பாட்டு பாடி கொண்டு இருக்க அவர்கள் அந்த நாட்டு மொழியில் பாடல் பாடினாலும். அவர்அவர்கள் தங்களது முதன்மை மொழியான தாய்மொழி பாடல்களையே நேசிப்பதுவே வழக்கம்.

அனைவரும் தங்களுள் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி கொள்வது வழக்கம்.

பாட்டு பாடி முடிதாலும் பாட்டு சத்தம் கேட்டு கொண்டே தான் இருந்தது. 'அவள் என்ன பாட்டு பாடுகிறாள்?' என மற்றொரு நங்கை அந்த அறைக்கு சென்று பார்க்க அவள் "மின்சாரமாய்! உன் கன்னிமை பாய்கின்றதே நான் என்ன செய்வேனோ? பொல்லாத காதல் ஒன்று, தீமூட்டி கொள்ளுதே! போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே? என் நெஞ்சத்தை? கால்பந்தை போல்! நீ மோதவே நான் விண்ணை தாண்டினேன்.!”என பாடல் பாடிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தவளை பார்த்து "உன் பாட்டு சூப்பரா இருக்குது. எங்கட மொழி பாட்டுமே அத்தனை அழகா இருக்கும் பூரணி." என துர்கபூரணியை பார்த்து கேட்க "தமிழ் பொண்ணா பிறந்து இங்க வந்து பழகி, இப்போ தெளிவா பேச மாட்டேகிற." என அறிவுரை செய்தால்.
IMG_20240101_100151.jpg
"அவந்திகா. இங்க வா, வந்து உட்கார்." என தன் தோழியை பக்கத்தில் அமர வைத்து "இது என்ன இடம்?" "முசிறி." என அவந்திகா பதில் கூற "இது நம்ம இடம் கிடையாது." "ஆமா, பூரணி நம்ம ஊருக்கு போக சொன்னாலும் நீ விடமாட்டேங்கிற?" என பதிலுக்கு கேள்வி எழுப்ப பின் ஆழ மூச்செடுத்து விட்டு அவளிடம் "பூரணி, ஏன் இந்த பதிலை எத்தனை தடவை சொல்லிருப்பேன்! வா போவோம் நம்ம தமிழ்நாட்டுக்கு போவோம்." என அழுத்தமாக கூற "எங்க போறீங்க?" என ஒரு பெண் கேட்க "ஆமா, நாங்க எங்க ஊருக்கு போகப்போறோம்." என தோழி அன்பாக கூற "அப்பிடியா? எங்க ஊர்ல நீங்க இரண்டு பேரும் ஏறக்குறைய மூனு வருஷம் இருந்துட்டீங்க. நா இப்போ உங்க ஊருக்கு வரேன்." "அவந்திகா, என்ன ப்ரித்வி வரேன்னு சொல்றா?" என துர்கபூரணி அதிர்ச்சியாக கேட்டால். "எஸ் இந்த ப்ரித்வி குப்தா தமிழ் நாடுக்கு வரப்போறா. டிக்கட் போடுங்க போவோம்." என அவந்திகாவும், ப்ரித்வியும் கூற அவளது விழிகள் அங்கு சுகமாக படுத்துரங்கும் குழந்தையை தான் பார்த்து கொண்டு இருந்தது.
IMG_20240101_100206.jpg
"ஹர்ஷினிய பத்தி கவலை படாத." என ப்ரித்வி கூறினாலும் "ஹர்ஷினி பத்திலாம் கவலை இல்ல. இந்த முசிறியை விட்டு வர மனசு இல்ல. அவந்தியும் நீயும் போயிட்டு வாங்க." என கூறினால்.

"அப்புறம் என்ன பீலிங்ஸ் டி உனக்கு ? வா, நம்ம நாட்டை போய் பார்ப்போம். எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? முசிறில இருந்து, நம்ம அங்க போகணும்னு எனக்கு ஆசையா இருக்கு. தமிழ் பெயர் எல்லாம் கேட்கணும்னு ஆசையா இருக்கு, கண்குளிர பாக்கணும்னு ஆசையா இருக்கு, எவ்ளோ நாளைக்கு தான் இங்க இருக்குற பாஷைகளையே கேட்கிறது." என அவந்திகா ஆசையாக கூற மீண்டும் தொடர்ந்தால். "இப்போ நீ பாடினியே அந்த பாட்டு எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா? நம்ம மொழி பாட்டு கேட்கும் போது.. தனி சுகம் வருது. ஆனா? இதுவே வேறு மொழி பாட்டு கேக்கும் போது.. கேக்கணும் தான் தோணுது. ஒரு புதுவிதமான, ஒரு உணர்ச்சி வசம் வந்து மனசுக்குள்ளேயே நிரந்தரமாக அந்த நொடில வந்து சேர மாட்டேங்குது. வா! நாம் அங்க போவோம். ஒரு வாரமோ, பத்து நாளோ இருந்துட்டு திரும்பி வந்துடலாம்." "அதான் அவந்திகா இவ்வளவு தூரம் சொல்றால? எனக்கு உங்க நாட்ட பார்க்கணும்னு அவ்வளவு ஆசை இருந்தாலும், உங்க தமிழ்நாட்டு கலைச்ச(சார) ரத்து நான் வந்து பார்த்தே ஆகணும்." பிரித்வி குப்தாவின் தமிழை கேட்டதும் துர்கபூரணிக்கு சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

"சரி போவோம். மூணு பேரும் சேர்ந்து போவோம். இப்போ நா பாட்டு பாடுவேன் நீங்க ஆடணும்." "ஆடிட்டாபோச்சு. பாட்டு பாடு." என இருவரும் ஒன்றாக சொல்ல.

துர்கபூரணி பாடத் தொடங்கினாள்..
அவர்களும் ஆடத்தயாராக இருந்தார்கள்.

மைக்ரோ மினி போடட்டா? பூனை நடன நடக்கட்டா? ஜோலி சே பீச்சைனு சோக்கா பாடட்டா? இங்கிலீஷ் வேணாண்டி! ஹிந்தி தீர்ப்பு வேணாண்டி! கரகாட்டம் மாட்டிகிட்டே தமிழ் பாடேன்டி. விண்ணோடும் பலே பலே! முகிலோடும் பலே பலே! விளையாடும்.. வெண்ணிலாவே!

இதனை தொடர்ந்து..


அமிளி துமிளி நினைக்கும் வெழிஎனை கவ்விக்கொண்டதே.. அழகின் இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளிச் சென்றதே.. கொலம்பஸ் கனவிலும் நினைக்காத ஒரு தேசம் அழைக்குதே.. கொழுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே.. ரோஜாப்பூவும்..? இதில் முள்ளும் பூக்கும் என அறிவேன்! தீண்டாமுலில்? இந்த பூவும் பூத்தது ஒரு மாயம். மாறி மாறி.. உன்னைப் பார்க்கச் சொல்லி விழி கெஞ்சும். நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே.

இப்படி அந்நாளின் மாலைப்பொழுதான் அது அவ்வளவு அழகாக சென்றது. ஏனென்றால் தமிழ்நாட்டின் மண்ணில் இன்னும் சிறுது நாட்கள் கழித்து மகிழ்ந்து தமிழோடு உறவாட போகும் அந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டதின் முதல் அடித்தளமாக இவர்கள் தமிழ் பாட்டை மட்டுமே பாட அவந்திகாவும் ப்ரித்வியும் ஆடி மகிழ்ந்தார்கள்.

துர்கபூரணிக்கு அத்தனை சந்தோஷம் ஏனென்றால் வேறு ஒரு நாட்டின் பெண் தன்னுடைய தாய்மொழி தமிழ் கிடையாது ஆனாலும் அவளுக்கு அதன் மீது அத்தனை பற்று அதுவே அவளை அங்கு கூட்டிச்செல்ல ஒரு அடிகளைப் பாதையாகவும் இருந்தது இருந்தாலும் தமிழ்நாட்டில் நடந்த விஷயங்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து கொண்டு இருப்பதால் என்ன செய்வதென்று அறியாது அவர்களோடு பயணம் செல்ல முடிவு எடுத்தால்.

தன் மகள் ஹர்ஷினியை மார்போடு அணைத்துக் கொண்டவள் தன் மனதளவில் பேசத் தொடங்கினால். 'ஹர்ஷினி நீ தான் என் வாழ்க்கை, என் உலகம், நீ மட்டும் தான் எனக்கே எனக்காய் இருக்கிற ஒரு சொந்தம். அம்மாக்கு உன்ன தவிர வேற யாரும் இல்லை, உனக்கும் அம்மாவை தவிர வேற யாரும் இல்ல. நா தூரமா போகணும்னு தான் இங்க வந்தேன். வந்த புதுசுல அம்மாக்கு கடந்த இந்த ரெண்டு வருஷம் ரொம்ப கொடூரமா இருந்துச்சு. எனக்குன்னு சொல்லிக்க யாருமே இல்லையே?? என்னோட உறவாடிக் கொள்ள ஒரு உறவு இல்லை? எனக்கு ஒரு பரிசா நீ கிடைச்ச. இந்த பரிச நான் விடுறதா இல்ல. உனக்காகவாது இங்கே இருக்கணும்னு முடிவு பண்ணினேன். ஆனால், முடிவெடுத்த காரணமோ? என்னன்னு தெரியல, திரும்ப அங்க கூட்டிட்டு போக இந்த விதி என்னை விளையாட வைக்கிது, அங்க போனா.. என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது? ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உறுதி! பிரச்சனை வரும். எதுக்காக பிரச்சினை வரும்னு தெரியாது? ஆனால் வரும். என் வாழ்க்கை மாறும், உனக்கான இந்த உரிமை திரும்பியும் கிடைக்குமா எனக்கு தெரியல? ஹர்ஷினி பேச முடியாத குழந்தையா இருக்குற உன்ன. அங்க கூட்டிட்டு போறது நினைக்கும் போது.. மனசு கிடந்து வலிக்குது.’


*****
"அம்மா எனக்கு காலேஜ் போகணும் எங்க அந்த கரடி?" "அடியே இருடி கூப்பிடுறேன் நானு. இப்படி எல்லாம் பேசக்கூடாது மைதிலி." என அன்னை திருத்த "தர்ஷனா.. தர்ஷனா.." என தான் பெற்ற பிள்ளையை கூப்பிட்டு கொண்டே அறைக்கு சென்றார். "என்ன பண்ணிக்கிட்டு இருக்க தர்ஷனா? மைதிலிக்கு காலேஜ், நீ தான் போய் ட்ராப் பண்ணனும். அவ வேற ஏதோ செமினார் இருக்குன்னு சொல்றா தர்ஷனா நீயே தர்ஷனா இப்படி தினமும் லேட் ஆக்குற?" என திட்டிக்கொண்டே வர.

அந்த அறையில்

"ஆஹா! இவ்ளோ அழகா இருக்கு! எப்பா.. என்ன செய்ய? கொடுத்து வைக்கல? இப்படியா பண்ணனும் முடியலையே..!" என பேச அந்த வார்த்தைகளை கேட்டதும் "ஏய்! என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க? ஐயோ!! உன்னை சரியா வளக்காம போயிட்டேனே! நீ இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீயே தர்ஷனா." என அவர் புலம்ப ஆரம்பித்தார். "அம்மா உனக்கு ஹிருதயம் படம் போட்டு காட்டினது, நான் பண்ண பெரிய தப்பு. என்னை எதுக்கு நீ தர்ஷனானு கூப்பிட்டு கிட்டு இருக்க?" "அது வந்துடா. அந்த படத்துல தர்ஷனானு ஒரு கேரக்டர் வந்துச்சா. தர்ஷனான்னு கூப்பிட்டா நல்லா இருக்கும்னு இன்னைக்கு தான் கூப்பிட ஆரம்பிச்சேன். அது உனக்கு பொறுக்கலையா?" என பாவமாக கூற
"அம்மா நீ எனக்கு வச்ச பேரு ரொம்ப அழகா இருக்கு. எப்பவுமே என்ன மித்ரன்னு கூப்பிடுற நீங்க. இன்னைக்கு மட்டும் எதுக்கு புதுசா தர்ஷனானு கூப்பிடுற?" "அது இல்ல மித்ரா நான் வந்து சும்மா தான் கூப்பிட்டு பார்த்தேன் டா. இப்போ, மைதிலிக்கு காலேஜ். அவள கூட்டிட்டு போய் விட்டுட்டு வா. நம்ம மத்த வேலைகளை பாத்துக்கலாம்." தனது தினசரி வேலை தான் ஆகையால் கோபம் கொள்ளாமல் தன் தங்கை மைதிலியை கல்லூரிக்கு அழைத்துச் சென்றான் தர்ஷமித்ரன்.
IMG_20240101_100231.jpg
வரும் வழியில் அன்னைக்கு அழைப்பு விடுக்க, அன்னையோ ஏதோ விபரீதமாக நடந்து விட்டதோ? என்ற படபடப்பில் வேகமாக அலைபேசியை எடுத்து "சொல்லுடா தர்ஷமித்ரன். என்னாச்சு? மைதிலி கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டியா? எதுக்கு இப்ப கூப்பிடுற? என்ன விஷயம்?" என படபடப்பாக கேட்க. "மா ரிலாக்ஸ்.! எதுக்கு இப்படி படபடத்து பேசிகிட்டு இருக்கீங்க உங்கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லலாம் தான் கால் பண்ணேன். முக்கியமான கேஸ் ஒன்னு வந்திருக்குன்னு என்னை கூப்பிட்டு இருக்காங்க. வேலை முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் சாப்பிடுகிறேன் அம்மா." "இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன். உனக்கு இந்த வேலை வேண்டாம் விட்டுடு. கேட்டியா? நான் இந்த வேலைக்கு தான் போவேன்னு போயும் போயும் பாரன்சீக் ஆபிஸரா போயிட்ட, இப்போ என்ன செய்யறது. ஹேண்ட் ப்ரூப் அது,இதுன்னு நிறைய.. ஏம்பா இந்த வேலை எடுத்த?" "எதுக்குமா! ஃபாரன்சிக்கும் ஒரு வகையில நாட்டுல இருக்குற கெட்டவங்கள அழிக்கிறதுக்கான ஒரு ஆயுதம் தான்! நாங்களும் கிட்டத்தட்ட போலீஸ் மாதிரிதான். எதுக்கு நீ இது ஒரு விஷயமா சொல்ற? உன் மகன் போலீஸ் ஆகணும்னு தானே ஆசைப்பட்ட. என்னால போலீஸ் ஆக முடியல, கடைசியாக பாரன்சீக் ஆபிஸர் தான் ஆக முடிஞ்சது. இப்போ, ஒன்னும் கெட்டு போகல டிடெக்டிவ் வேலையா அப்பாய்ண்ட் பண்ணதா என்னை வச்சிருக்காங்க. ஆனா, அதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுமா. சரி.. சரி.. ரொம்ப நேரம் பேசிட்டேன் நா ஸ்பாட்டுக்கு போய் ஆகணும். என் டீம் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க, அப்புறம் பேசுறேன் மா பாய்.”என தன் வேலைக்கு சென்றான் தர்ஷமித்ரன்.

வருவேன்..💞

 
முசிறி

"அவந்தி அங்க உனக்கு யாரைத்தெரியும்?" என கேள்வி எழுப்பினாள் துர்கபூரணி "ஹேய் பூரணி என்ன கேள்வி இது! என் பிரண்ட் மைதிலி இருக்கா. அவகிட்ட தான் பேசப்போறேன்." அவளோ யோசனையில் சென்று 'மைதிலி!'
குழந்தையின் அழுகுரலின் சத்தம் கேட்டு "அச்சோ! ஹர்ஷினி சாரிமா. வாங்க வாங்க. அம்மா பசியாத்துறேன்." என தன் குழந்தையை கவனிக்க சென்றால்.

அவந்திகா தன் பள்ளித்தோழி மைதிலிக்கு தொடர்பு கொள்ள அவளோ "ஹலோ.." என வெளியே சென்று பேச ஆரம்பித்தால். "யாரு பேசுறது?" "அடியேய்! நா தான் அவந்திகா."என பெயரை கேட்டதும் "இப்போ தான் என்கிட்ட பேசணும்னு நினைச்சியா? முசோரில இருந்து எப்போ தான் வருவ?" என கோபமாக பேச "டிரேன் டிக்கெட் புக் பண்ணியாச்சு. நாளை மறு நாள் வரோம். உன் வீட்ல நாங்க தங்க இடம் கிடைக்குமா?" "அட! உனக்கு இல்லாமலா. ஈவினிங் ஃபோன் செய்றேன். கிலாஸ்க்கு போகணும்." என்றதோடு அழைப்பை துண்டித்தாள்.


***

தன் அலுவலகத்திற்கு வந்தவன் நேராக ஒருவர் "சார், இவன் கைரேகை தான் பதிஞ்சிருக்கு. ஆனா, இவர் பேயரஞ்சது மாதிரி பயந்திருக்கார். கார்ப்ஸ்ல மையினா டெஸ்ட் பண்ணும் போது சாம்பில்ஸ் கிடச்சது." "என்ன கிடச்சது?" "தர்ஷன் சார் இது தான்." என அவர் கொடுத்த பொருளை காட்ட "செயின்." என அந்த பொருளை பார்த்தோடு மட்டுமல்லாமல் உள்ளே அமர்ந்திருந்த அந்த நபரின் விழிகள் விரிந்தன பயத்தில் அவன் கரங்களை பிசைந்து கொண்டு இருப்பதையும் கவனித்து கொண்டான். "சார், இன்ஸ்பெக்டர் எரிஞ்சு விழுகுறார்." அந்த காவலர் "இந்த கேஸ்அ சீக்கிரம் முடிக்க எவ்வளவோ அடிச்சு விசாரிச்சாச்சு. இவேன், ஒரு பதில் சொல்லவே இல்ல. நாளைக்கு கோர்ட்ல இவன் உண்மை சொல்லற வாக்குமூலம் தேவை சார்." "தர்ஷமித்திரன் கிட்ட ஒரு கேஸ் வந்துடுச்சுனா அது சீக்கிரம் முடிஞ்சுடும். இன்னும் கொஞ்ச நேரம்..அவன் உண்மை சொல்லிடுவான்." என தன் கைக்கடிகாரத்தை கழற்றிய படியே அதில் இருந்த அவனது பேச்சுகளை காட்சிமயமாக படம்பிடிக்க தொடங்கினான்.

"நா கிடையாது!" என பேசுவதற்கு முன்னரே கதற "ரிலாக்ஸ், இந்த செயின் யாருடையது?" என கண்முன் காட்ட "இ..இ..இ..இது என்னது கிடையாது எனக்கும் தெரியாது." என திக்கி பேச "சரி, கூல்டவுண். இந்த பென்டுலத்தையே பார்." என அவனது பார்வையை திசை திருப்ப அவனது வேலையை செய்ய தொடங்கினான். அவனது கைரேகை,சட்டை வெள்ளை நிறத்தில் இருந்த தூள்கள் தர்ஷன் சுட்டிக்காட்டும் இடத்தில் இருந்து அவனுடைய வேலை ஆட்கள் செவ்வனவே செய்ய. "உன் பத்தி கொஞ்சம்..ஐ மின் உனக்கு தெரிஞ்சத சொல்லு?" "ஆ..ஆ..அவங்க என் உலகம்.." என ஆதி முதல் அந்தம் வரை அவன் கூறி முடிக்க.

சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ரேகையும் இதுவும் ஒன்று என உறுதியானது. வேலை முடித்ததும் அந்த காவலர் "சார், வயசுல சின்னவர் எப்படியும் உண்மைய வாங்க நேரம் எடுக்கும் நெனச்சேன். லத்தியில் வாங்காத உண்மைய சமயோஜித புத்திய கொண்டு எங்களுக்கு ஆதாரமும் எடுத்து கொடுத்ததுக்கு நன்றி தர்ஷமித்திரன்.” காவலரிடம் பேசி விட்டு வீட்டிற்கு வந்தவன் , தன்னடைக்குச் சென்று உறங்க தொடங்கினான். எப்போதும் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், என்ன நடந்தது? இல்லை ஏதேனும் சம்பவம் நடந்தது என்றால்.. அதைப் பற்றி அன்னையிடம் பகிர்ந்து கொள்வது தர்ஷமித்திரனின் வழக்கம். ஆனால், இன்று அவன் ஏதும் கூறாது படுக்கையறைக்குச் சென்று தூங்குதை கவனித்ததும்.. அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? மகன் எழுந்த பிறகு கேள்வி கேட்டு கொள்ளலாம். என்று தன் வேலையை பார்க்கச் சென்றார்.

முசிறி

"அவந்தி நேத்து விளையாட மாதிரியே இன்னைக்கும் விளையாடலாமா?" என ப்ரித்வி அவளிடம் கேட்க "பாட்டு பாடினவங்க வந்ததுக்கப்புறம் அவங்கிட்டேயே கேளு." என சிரிப்புடன் சொன்னால். "சரி எங்க பூரணி?" "அவ குழந்தைக்கு பசியாத்திட்டு இருக்கா. குழந்தை தூங்கினதுக்கு அப்புறம் வருவா." எனவும் இருவரும் கைக்கோர்த்து ஒன்றாக "தேனிடம் கேட்டேனே தேனை தந்தானா? உயிரிடம் கேட்டேனே உயிரை தந்தானா?உறவை கேட்டேன் உறவை கொடுத்தானா? அனலாய் நீ இருந்து.. கைக்கிளையாக நான் ஆனேன்... தந்தன தனனா தன தந்தன தான தந்தன தான தந்தன தான." இதை பார்த்த துர்கபூரணி மகிழ்ந்து "நானும் கூட வரேன் நீ மூணு பேரும் சேர்ந்து ஆடுவோம்." இப்போது மூவரும் இணைந்து.. "தேனை கேட்டேனே.." என பாடி ஆடி முடிந்தவுடன்.

துர்கபூரணி "ஹேய் இந்த பாட்ட பாடுனது யாருப்பா? எவ்வளவு நல்லா இருக்கு அதுல இந்த கடைசி வரி இருக்கீங்கப்பா வேற லெவல்." "எது ஆனால் நீ இருந்து கைக்கிளையாய் நான் ஆனேன்.. அதுதான?" என அவந்தி கேட்க "அத பாடுனது வேற யாரும் இல்ல.. இந்த பிரித்வி குப்தா தான்!" "பிரித்வி உன்னோட இந்த தமிழ் சாங் ரொம்ப பிடிச்சிருக்கு. அனல் மாதிரி யாராவது இருந்தா.. கைகிளையா இன்னொருத்தர் காதல் செய்தால் தான். அந்த அனலை கொஞ்சம் கொஞ்சமா.. கொஞ்சம் கொஞ்சமா.. காய வைக்க முடியும்." ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை? இது துர்கபூரணியின் வாழ்வையும் ப்ரித்விகுப்தாவின் வாழ்வையும் மாற்றப் போகிறது என.இரவு உணவு சாப்பிட தொலைகாட்சியை பார்த்துக்கொண்டு இருந்தார். தர்ஷனின் வருகை பார்த்தவர் அவனிடம் "மித்ரா என்ன ஆச்சு வந்ததும் சாப்புடாம படுத்து தூங்கிட்ட? என்னப்பா ஆச்சு?" என அவர் கேட்க "அம்மா, ஒரு பொண்ணும் பையனும் கல்யாண வாழ்க்கையை முறையில்லாம வாழ்ந்து, அவளை ஏமாத்தி..கடைசியா சம்மந்தமே இல்லாதவங்க போல பிரிஞ்சிபோறது." "என்ன சொல்ற மித்ரா?" "ஆமா மா. இன்னைக்கு கேஸ் வந்துச்சு போயி எங்க வேலையை தொடங்கினோம். வாக்குமூலம் வாங்கும் போது என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல." என கதறி கொண்டு அனைத்தையும் கூறினான்.

அவனை சமாளித்து "சரி சரி..வா சாப்புடலாம். மைதிலி!!" என தன் மகளை சாப்பிட அழைத்தார்.


"அம்மா நா கொஞ்ச நாள் என் தோழியோட கெஸ்ட் ஹவூஸ்ல இருக்கேனே?" என்றால் ஆசையாக. "எந்த பிரண்டு? இதுவரைக்கும் சொல்லாத ஃப்ரெண்ட்? யார் கூட நீ கெஸ்ட் ஹவுஸ்ல போய் எல்லாம் தங்கலாம் விடமாட்டேன். இது என்னோட கட்டளை." என தர்ஷமித்திரன் பட்டென்று கூற "மித்ரன் சொன்னது சரிதான். நீ எங்கும் போகக்கூடாது. நம்ம வீட்ல தான் இருக்கணும். உன் பிரண்டு வந்தா நம்ம வீட்ல கூட தங்க வச்சுக்கலாம், நோ ப்ராப்ளம்." 'அட என்ன பண்ண ஐடியா!!' என தான் நினைத்ததை முடித்தே தீர அவள் "அம்மா உங்களோட ஃபிரண்ட் ஒருத்தவங்க ஃபேமிலி நார்த் அண்ட் சைடுல இருக்காங்கன்னு சொன்னீங்கல அவங்க நேம் என்ன?" "அட கண்ணா! அவங்க பேர் வந்து பேமிலி நேம் தான் தெரியுமே குப்தா நினைக்கிறேன்." என யோசிக்க "அம்மா! என் ஸ்கூல் பிரண்ட் அவந்திகா, அப்புறம் உங்க பிரண்ட் பொண்ணும் இங்க வராங்க." எனவும் "அப்படியா! என் பிரண்டோட பொண்ணு வராளா? என் பிரண்டு ஏன் வரலியா?" என ஆசையாக கேட்க "அவங்களுக்கு என்ன மூத்த பையன் அனீஸ் இருக்கான், கல்யாண வயசு வந்துருச்சு, பொண்ணு தேடிட்டு இருப்பாங்களா இருக்கும். அதனாலதான், அவங்க தங்கச்சி,அவந்திகா அப்புறம் கூட இன்னொரு பொண்ணு பேர் சொன்னாங்க.. மறந்துடுச்சு. மூணு பேரும் தங்கவராங்க. இங்க நம்ம வீட்ல தாங்க முடியாது. ஏன்னா ஆல்ரெடி ஆளாளுக்கு ஒரு ஒரு ரூம்ல இருக்கோம். கெஸ்ட் ஹவுஸ்னா இன்னும் நல்லா இருக்குமே. சொன்னேன். இதுக்கு போய் பெருசா அப்படியே ஆர்டர் போடுற? வேணும்னா அந்த அனீஷ் ஓட தங்கச்சியை இவேன் தலையில கட்டி வைங்க." இதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மைத்திலியின் தாயாருக்கு, இப்போது அத்தனை சந்தோஷம், ஏனென்றால்.. தன் மகனுக்கு ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். என ஆர்வமாக மனதில் பூட்டிக் கொண்டு வைத்திருந்தவர்க்கு. எப்படி அவன் முன் சமர்ப்பிக்க வேண்டும்? என்பதற்கான வழியை மட்டுமே அவரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. எப்போது தன் மகளே இந்த விஷயத்தை கூறினாலோ.. அப்போதே இதே பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் என்ன? என்ற யோசனையும் அவரது மனதில் உருவெடுக்க ஆரம்பித்து விட்டது அதனால், அவர் "எங்கே அந்த பொண்ணோட போட்டோ காட்டு பாக்கலாம்." அதற்கு "வெயிட் பண்ணுங்க மா. என்கிட்ட இல்ல ரொம்ப ரேர் தான் அவந்திகா அந்த பொண்ணோட போட்டோ இருந்தது. இப்போ என்கிட்ட கிடையாது. நா அவகிட்ட கேட்டு அனுப்பிவிடு அனுப்ப சொல்றேன்." என அவந்திகாவிற்கு அழைத்தால்.

*****

முசிறி

"நைட்டு எப்ப பார்த்தாலும் ஒன்னு பாஸ்தா பண்ற! இல்லனா.. ஏதோ ஒரு நாஸ்தாண்டு என்னத்தையோ ஒன்ன கொண்டு வந்து கொடுக்கிற. சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சுடி." என அவந்திகா புலம்ப ப்ரித்விக்கு கோபம் "அடியேய்! நானே வைத்து பசியோட ஒரு சாப்பாடு சமைச்சு கொடுத்தா? நீ இதை குத்தம் வேற சொல்றியா? நீ நாளைக்கு தான் சமைக்கிற! டிராவலிங்க்கு சமைக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது." என தோழி அவள் கூறியதும் இவளுக்கு தூக்கி வாரி போட்டது உடனே "அடியேய்! அப்படி எல்லாமல் சொல்லலடி. சாப்பாடு நல்லா இருக்கு. இதே மாதிரி நல்லா செஞ்சு கொடுத்தீங்கன்னா.. உனக்கு நான் சாக்லேட் தருவேன். முழுசா சொல்றதுக்குள்ள, நீ பாட்டுக்கு குறுக்கால கோவப்பட்டா நான் என்ன பண்ண?" "உங்க சாப்பாடு சண்டைய ஆரம்பிச்சிட்டீங்களா? நான் சாப்பிட்டுட்டு போய் என் குழந்தையை பாக்குறேன். தயவு செஞ்சு என் ஆள விடுங்க சாமி! கடைசியா நீ தீர்ப்பை சொல்லுன்னு இந்த துர்கபூரணி கிட்ட கொண்டு வந்து நிறுத்திடுவீங்க. இப்பவே எஸ்கேபாக்குறேன்." என்றதோடு அவள் அறைக்கு செல்ல. ப்ரித்வி மற்றும் அவந்தியும் தான் உணவை உட்கொண்டு இருந்தார்கள். இந்த சமயத்தில் தான் தோழியின் அலைபேசி அலறியது.இரண்டு மூன்று முறை அழைப்பை ஏற்கவில்லை. இறுதியாக அழைப்பை ஏற்றாள் அவந்திகா அப்போது தான் துர்கபூரணியின் அறையில் இருந்தால்.


வருவேன்💞
 
அனல் 3✨

இங்கு மைதிலியின் தாயார் தொலைபேசியை ஸ்பீக்கரில் போடுமாறு ஜாடை காட்ட அவளும் அதற்கு ஏற்றவாறு செய்தால் "சொல்லு மைதிலி, என்ன விஷயம்?" என்றால் அவந்தி "அது ஒன்னும் இல்லடி. எங்க அம்மா உன்கிட்ட பேசணும்னு ஆசைப்படுறாங்க.. நான் வேணா கொடுக்கட்டா?" தோழியவள் "தாராளமா குடு ஆன்டிகிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு. அவங்க வாய்ஸ் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு." அவரும் பேசத்தொடங்கினார். "அவந்திகா, இங்க தமிழ்நாடு வரதா கேள்விப்பட்டேன். நீயும் ப்ரித்வியும் தான வரீங்க?" என்றார் ஆசையாக அதற்கு அவந்தி "இல்ல ஆண்ட்டி நானு,அப்புறம் என் பிரண்டு துர்கப்பூரணி,ப்ரித்வி மூணு பேரும் வர்றோம்." அவர் எதற்கு "சந்தோஷம், வாங்க. ஆனா, துர்கப்பூரணி..எதுக்குமா? அவ வர வேணாம்." என்றார் சற்று கரகரத்த குரலில். "ஆன்டி! ப்ரித்வியை விட துர்கப்பூரணி தான் என் கிளோஸ் பிரண்ட். அவ வர கூடாதுனா நா ப்ரித்வியை மட்டும் அனுப்புறேன்." என அவந்திகா கோபமாக பொங்கவும் அவர் "ஹய்யோ! என் பையன் மித்ரனுக்கு, என் பிரண்ட் மகள் ப்ரித்வியை கல்யாணம் செஞ்சு வைக்க ஆசைப்பட்டேன். அதுக்கு தான் ஃபோன் பண்ண சொல்லி ஃபோட்டோ கேக்குறேன் மா." என அவர் பேசியதை கேட்டவுடன் தர்ஷமித்திரன் கோபத்திற்கு சென்றான். அவனது கோப வார்த்தை வெளிவரும் முன்.. குழந்தையின் துணிகளை மடித்து கொண்டே பாட்டு பாடிய சத்தம் கேட்டது. அவன் அந்த குரலுக்கு அடிமையானான். அதற்கு பின், அவர்கள் பேசவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், அவந்திகா தன் தோழியின் புகைப்படத்தை மைதிலிக்கு அனுப்பி வைத்தால். மைதிலி அவளது புகைப்படத்தை பார்த்ததும் ஸ்தம்பித்து போனால். அதை அன்னையிடம் காட்ட "ஆஹா! எவ்வளவு அழகா இருக்கா. இவ கண்ணு பார்க்க கோலிக்குண்டு மாதிரி சூப்பரா இருக்கு." என அவர் சொல்ல அவன் "அவளுடைய ஃபோட்டோ பார்க்கலாமா? அப்பிடினு நா கேக்கவே மாட்டேன். நீங்களே ரசிச்சுக்கோங்க." என அவ்விடமிட்டு சென்றான் "மித்ரா! டேய்! என்ன டா இப்படி பண்ற." என்றதோடு பாத்திரத்தை எடுத்து கொண்டு அடுப்பங்கறைக்கு சென்றார்.
அவந்திகா ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, அதை கேட்க ஆரம்பித்தாள் மைதிலி "ஹேய்! சாரி பா. இது ப்ரித்வி கிடையாது. என் பெஸ்டி துர்கப்பூரணி. இத உன் அம்மாகிட்ட காட்டிடாத." என்ற தகவலை கூறினால்.

'ஹய்யோ! இப்ப நா என்ன சொல்லுவேன்? ப்ரித்வி ஃபோட்டோ அனுப்பாமல் இந்த லூசு துர்கா ஃபோடோவ அனுப்பி வைச்சு இப்படி என்னை புலம்ப வைக்க விட்டுட்டாளே!!! அடியேய்!!!' என மனதில் புலம்ப. மைதிலியின் சகோதரன் "இந்த அம்மாவுக்கு வேற வேலையே கிடையாது. எப்பபார்த்தாலும் கல்யாணம் செய்! கல்யாணம் செய்னு நச்சரிக்கிறாங்க." இப்படி மகனவன் புலம்புவது கேட்டவுடன் தாயார் "அம்மா உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும். பாத்திரத்தை விளக்கிட்டு உன் ரூம்க்கு வரேன்." என்ற வார்த்தைகள் கூட தர்ஷமித்திரன் செவியில் விழவில்லை. அந்த குரல் அவனை அந்த அளவிற்கு அடிமையாக்கியது தான் சத்யம்.
முசிறி..
அவந்திகாவிற்கு தூக்கம் வரவில்லை. ஆனால், கிளம்பவேண்டும். காலையில் தொடர்வண்டி நிலையத்திற்கு செல்ல வேண்டும். குழந்தையும் துர்கப்பூரணியும் உறங்கி கொண்டு இருக்க..துர்கப்பூரணி தூக்கத்தில் பேச ஆரம்பித்தால்.

"கடவுளே,என்ன தான் நா ஒரு தாயாக இருந்தாலும். நாளபின்ன என் குழந்தை ஹர்ஷினி அப்பா எங்கனு? கேட்டா..நா என்ன பதில் சொல்லுவேன்?எ..எ..எனக்கு ஒரு துணைவன் அமையுமா? அவன் என் குழந்தையை ஏத்துப்பானா? இவ பெயர் முன்னாடி இன்ஷியல் போட்டுக்க அப்பா இல்லாம போயிடுச்சே!" என்று புலம்புவதை கேட்ட அவந்திகா அவள் மனதில் 'பூரணி ஃபோட்டோ அவங்க வீட்ல இருக்குறவங்க பார்க்கணும். என் வாழ்க்கை முடிஞ்சுடுச்சுனு மனசொடஞ்சு இவ வாழ்ந்தாலும். குழந்தைக்காக, ஒரு திருமணம் செய்ய ஆசைப்படுறா. கடவுளே, ப்ரித்வி ஃபோடோ அனுப்பாமல் இருந்தது ஒரு வகையில் நல்லாத போச்சு.' என்ற யோசனையுடனே நித்திராதேவி வந்து அவளை தழுவி கொண்டது.
****
தர்ஷமித்ரன் அறைக்கு அவனது வந்தார். "அம்மா!" என அவர் அமர்ந்தவுடன் கேட்டான்.
அவர்."மித்ரா. ஏன் நீ சம்சார வாழ்க்கை வாழ விரும்பாமல் இருக்க காரணம் இருக்கா?" என அவர் கேட்க "அம்மா!" என அவன் மீண்டும் தொடர. "நீ பிறந்து இருபத்தொன்பது வயசாச்சு. என்னை போல உன் வாழ்க்கை இருக்க கூடாது. அதுக்காக தான் நா சொல்றேன்."தர்ஷமித்திரனுக்கு புரியவில்லை தாயவர் என்ன கூறுகிறார் என்று "ஏன்? என்னாச்சு மா?" என அவன் அவர் பக்கம் அமர்ந்து கேட்டான்.

"உன்கிட்ட நா உன் அப்பாவை பத்தி சொன்னதே இல்ல. அ..அதோட, நா அவர் பெயரை உனக்கு இன்ஷியலா வைச்சதும் கிடையாது." என தன் அன்னை இறுதியாக கூறிய வார்த்தையை கேட்டதும் அவனால் நம்ப முடியவில்லை. "அம்மா! என்ன சொல்றீங்க?" என்றான் அதிர்ச்சியாக. மீண்டும் அவர் தொடர்ந்தார் "நீ சின்ன பையனா இருக்கும் போது அப்பா எங்கனு கேப்ப. நா வெளியூர்ல இருக்கார்னு சொல்லி சமாளிச்சேன். விவரம் தெரிஞ்ச வயசுல நீ கேக்கும் போது திட்டுவேன் அதை பார்த்து மைதிலி பயந்து அழுதுடுவா. நீயும், அந்த சம்பவத்துக்கு பிறகு நீ உன் அப்பாவை பத்தி கேட்டதே கிடையாது." என அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்க ஆரம்பித்தான்.
"உன் அப்பா பெயரை நா சொல்ல மாட்டேன் என்கிறத விட, சொல்ல விருப்பம் இல்லை. பெத்தவங்க பார்த்து வைச்ச பையன் தான்.. ஆனா அவரு காணாமல் போய் ரொம்ப வருஷம் ஆச்சு. அப்போ மைதிலி சின்ன குழந்தை, உன் பாட்டி, இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி கேட்டாங்க. நா முடியாதுனு ஒத்தக்கால்ல நின்னு வேண்டாம்னு சொன்னேன். என்னோட பெயர் வித்யபாரதில இருக்குற பாரதியை உனக்கு இன்ஷியலா வைச்சேன். என்னை போல் பிடிவாதமா இருக்காத மித்ரா. ப்ரித்வியை கல்யாணம் பண்ணிக்கோ" என தன் தாயார் சொன்ன தகவல்களை கேட்டவன் யோசிக்க ஆரம்பித்தான். 'இந்த விஷயத்துல நா அம்மா மாதிரி பிடிவாதமா இருக்கிறது தப்பு. ப்ரித்வி கூட பழகின பிறகு முறையா காதல் சொல்லி பிறகு தான் கல்யாணம் செஞ்சுக்கணும்.' என உறுதியாக முடிவெடுத்தான். அவனது தங்கையின் அறைக்கு சென்று அவளுக்கு தெரியாமல் அவளது அலைபேசியில் இருக்கும் துர்கப்பூரணி புகைப்படத்தை தன் அலைபேசிக்கு அனுப்பிவைத்துவிட்டு. அவளது அலைபேசியில் அந்த பகிரப்பட்ட புகைப்படத்தை அழித்தான்.

அவனது கண்கள் அவளது புகைப்படத்தின் மீது இருந்தாலும். அவன் அவளது படத்தை பார்த்து "எல்லோருக்கு இருக்கிற மாதிரி தான் இவளுக்கும் கண் இருக்கு. எதற்கு கோலிக்குண்டு மாதிரி இருக்கானு சொல்றாங்க?" என அவன் யோசிக்க கழுத்தில் போட்டு இருந்து தங்க நகையும்,தாவணியும் அத்தனை அழகாக அவளுக்கு பொருந்திருந்தது.

******

IMG-20240106-WA0012.jpg
மச்சான பார்த்தீங்களா? மலவாழ தோப்புக்குள்ளே? எங்க மச்சான பார்த்தீங்களா? என்ற பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் நான்கு சக்கர வாகனத்தில் ஒருவர் ரசித்து கேட்டு கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் ஒரு வித சத்தம் கேட்க, அந்த பக்கத்தில் பார்வையை வீசியவர் "ஷூ!!!! அமைதியா பாட்டை ரசிக்க விடாமல் தொந்தரவு பண்ணிட்டு வர?" என கொடூரமான பார்வையில் மிரட்ட "அ..அ..அக்ம்..அ..அம்மாவ பார்க்கணும்." என கதறியதை அலட்சியமாக எடுத்து கொண்டவன். வாகனத்தை நிறுத்தி பின் புறம் சென்று அவளது முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு சென்று கத்தியை வைத்து, அவளது மதி முகத்தில் அழகாக வரைந்தான். அந்த சின்ன பெண்ணின் அலறல் அவனுக்கு அந்த பாட்டைவிட இன்னும் ரசிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. அந்த காமவெறி பிடித்த அரக்கனுக்கு. பின் அவன் அந்த சடலத்தை குப்பையில் அடையாளம் தெரியாதவாறு சிதறவிட்ட அபிரன் தன் வீட்டை நோக்கி சென்றான் நிம்மதியாக.

முசிறி..

தோழிகள் அனைவரும் தொடர்வண்டி நிலையத்திற்கு கிளம்பினார்கள். முந்தைய நாளே அவர், அவர் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து கொண்டார்கள். இரண்டு நாள் பயணம். ஆகையால், ஆடைகள் சற்று கூடுதலாக தான் எடுத்து வைத்திருந்தார்கள். ஹர்ஷினி அழுது கொண்டே இருந்ததனால்.. துர்கபூரணியால் தன்னிரு தோழிகளுக்கும் உதவி செய்ய முடியாமல் போனது.
தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி வருவதற்காக காத்திருந்தார்கள். அவந்திகா,ப்ரித்வி குப்தா இருவருக்கும் மகிழ்ச்சி. குழந்தை நன்கு உறங்கி கொண்டு இருந்ததால்.

ப்ரித்வியின் தமையன் அவளுக்கு அழைத்திருந்தான். "சொல்லுங்க அண்ணா?" என பேச ஆரம்பித்தால்.

"அது வந்து ப்ரித்வி அம்மாவோட ஃப்ரெண்ட் பையன் தர்ஷமித்ரனுக்கு, உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா நேத்து தான் அவங்க அம்மா பேசினாங்க. அது இப்போ உன்கிட்ட அம்மா சொல்ல சொன்னாங்க. ஊருக்கு போ, ஸ்டேஷன்லையே உன்ன வந்து பிக்கப் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கான். அவங்க வீட்டிலேயே உன்னையும் உன் பிரெண்ட்ஸ்யும் தங்க வைக்கிறேனு சொல்லி இருக்காங்க. அதனால, அவன் கூட நல்லா பழகு அவன் கேரக்டர் பிடித்திருந்தா பிறகு.. நீ அம்மா கிட்ட சொல்லு. அம்மா வந்து அவங்க வீட்ல சம்பந்தம் பேசுவாங்க. அவனும் உன் கேரக்டர் புரிஞ்சதுக்கப்புறம் தான் விருப்பத்தை சொல்லுவான்." என தன் தமையன் கூறியதை கேட்டு தான் அவளுக்கு சற்று வெக்கமும் புன்னகையும் முகத்தில் வந்து பூத்துக் கொண்டது.
****
வித்யபாரதி கவலையோடு தன் முகத்தை வைத்து கொண்டு சாப்பாடு பரிமாறினார். மகனவன் புரிந்து கொண்டான் அவர் எதற்கு அப்படி இருக்கிறார் என "அவகிட்ட பேசுறேன், பழகுறேன், அதுக்கப்புறம் சொல்லுங்கனு. உடனே.. நீங்க பாட்டுக்கு அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி எல்லா விஷயத்தையும் வாந்தி எடுத்துட்டீங்க மா."என தன் மகன் கூறியதை கேட்டதும் அன்னையவருக்கு அத்தனை மகிழ்ச்சி . "ரொம்ப சந்தோஷம் மித்ரா உனக்கு எப்போ அந்த பொண்ண பிடிக்குதோ அப்போ என்கிட்ட சொல்லு. நா அனிஷ்கிட்ட சொல்லிடுறேன் புன்னகையுடன்.

வருவேன்💞
 
Last edited:
அனல் 4✨

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா? நானும் ப்ரித்வி கூட பழகி, அவகிட்ட மனசு விட்டு பேசி, அதுக்கப்புறம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம்." என தர்ஷமித்திரன் கூறவும் வித்யபாரதிக்கு அத்தனை மகிழ்ச்சி அவன் மீண்டும் தொடர்ந்தான். "நீங்க இதை மட்டும் அவங்க கிட்ட சொல்லுங்க. கல்யாணம் உங்களுக்காக வேணா பண்ணிக்கிறேன்னு சொல்றத விட..வாழப்போறவங்க எங்க வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்." மகனது ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு அத்தனை இன்பத்தை தந்தது.

தமிழ்நாட்டிற்கு வரும் பயணமானது தொடர்ந்தது. அவந்திகா, ப்ரீத்வி மற்றும் துர்கபூரணியோடு ஹர்ஷினியும் சேர்ந்து தமிழ்நாட்டின் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில் அவந்திகா "நம்ம ஒரு கேம் பிளே பண்ணலாம்?" என தோழிகள் இருவரிடம் கூறவும் ப்ரித்வி உடனே "என்ன கேம்? ஒன்னு ஏதாவது பாட்டு பாடலாமா ன்னு சொல்ல போற, இல்லன்னா? டான்ஸ் ஆடலாமான்னு சொல்ல போற, வேற என்ன பெருசா சொல்ல போற அவந்தி?" அவந்திகாவின் குணத்தை குறித்து சொன்னால்.

"இது வேற கேம் இந்த கேம்ல நான்தான் ஜட்ஜ்(நடுவர்)." என அவந்திகா தன்னை நடுவர் என சொல்லவும் துர்கப்பூரணிக்கு சிரிப்பு வந்தது "காமெடி பண்ணாத. சி..சி..சிரிப்பு தாங்க முடியல..நீ..நடுவர் ஹ..ஹய்யோ." என அவள் நகைக்க "இதோ பார் பூரணி இனி நீ துர்கப்பூரணி கிடையாது. நீ தான் ப்ரித்வி குப்தா." என அவந்திகா கூறவும் "அப்போ நா துர்கப்பூரணி போல பண்ணணுமா? சூப்பர் ஹர்ஷினிய குடு." என ப்ரித்வி அவளிடம் இருந்து குழந்தை வாங்கி அவந்தியிடம் "இந்த விளையாட்டு நல்லா இருக்கு. அப்போ..நா இவளை போல புடவை கட்டிக்கணுமா?" என்றால் ப்ரத்வி.

"அப்போ நா மாடன் டிரஸ் போடனுமா?" என்றால் துர்கப்பூரணி. "இரண்டு பேரும் சும்மா இருக்கீங்களா?" என அவந்திகா கூற அவர்கள் இருவரும் ஒன்றாக அவளிடம் "அடியேய்! மக்குசாம்புராணி. நீ எங்களை ஆள்மாராட்டம் பண்ணுற மாதிரி நடிக்க சொல்ற. அப்போ, டிரஸ்ஸிங் அப்படி தான இருக்கணும்!!" அவர்களின் சத்தத்தில் அவள் தன் செவிகளை குடைந்தபடி "வெயிட்! பூரணி நீ தாவணிக்கு ஷிவ்ட் ஆகிடு. ப்ரித்வி நீயும் அதையே போட்டுக்கோ." என அவந்திகா ஒரு முடிவுகட்ட "என்கிட்ட தான் தாவணி கிடையாதே?" என மீண்டும் பிரச்சனை இழுத்தால் ப்ரித்வி. "அட சாமி!!! என் தாவணி ஏழு இருக்கு. அதை வைச்சுக்கோ. பூரணிட்ட ஆல்ரெடி நாலு தாவணியாவது இருக்கும். இந்த விளையாட்டு முடியும் போது. நம்ம இதே மாதிரி முசிறி போகும் போது தான் இந்த விளையாட்டு முடிவுக்கு வரும்." தோழிகள் இருவரும் ஆச்சரியமாக அவந்திகாவை பார்த்தார்கள்.

"எதுக்கு இப்படி பாக்குறீங்க? நா தாவணி கட்டக்கூடாதா?" என அவந்திகா தன் கேள்வியை முன்னெடுத்து வைத்தால். சில நேரங்கள் எப்படியோ ஓடிவிட்டன. ஆனால், மணித்துளிகள் ஓடினாலும்.. அந்த ரயில் பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும் தொடர் வண்டியின் பயணம் வந்து சற்று ஏனோ மனதில் ஒருவிதமான தவிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், பொழுதுபோக்கு என்று சொல்லிக் கொள்வதற்கு அலைபேசி மட்டுமே இருக்கிறது. அவந்திகாவின் அலைபேசி இறந்து போனதனால். அவந்திகாவிற்கு 'என்ன செய்வது?' என்று தெரியவில்லை. மூவருக்கும் தனித்தனி அலைபேசி இருந்தாலும், தன்னை தவிர்த்து மற்ற 'இருவரும் அலைபேசி பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!! அவர்களை என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தால்.

"ஓகே ப்ரித்வி, பூரணி ரெண்டு பேருக்கும் ஒரு கேம் கொடுக்கிறேன்." என மீண்டும் அவள் விளையாட்டு தொடங்கினால். அவ்வேளையில் ஹர்ஷினி அழகாக தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்ததனால் அவளும் 'சரி' என்ன தலையை ஆட்டினால்.

"ஒண்ணுமே இல்ல இப்போ பூரணி நல்லா பாடுவ இப்ப பூரணியா இருக்கிறது யாரு? ப்ரித்வி. அதனால பூரணி(ப்ரித்வி) வந்து ஹிந்தி சாங் பாடக்கூடாது. தமிழ் சாங் தான் பாடல். பிரித்வி(துர்கப்பூரணி) வந்து ஹிந்தி சாங் தான் பாடணும். நான் யாரு சொல்லி இருக்கேன் உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்." என தங்களது கச்சேரியை தொடங்கினார்கள்.

முதலில் துர்கப்பூரணியாக இருக்கும் ப்ரித்வி தான் தொடங்கினால். "யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணன்னோடு நான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட.. பாவை ராதையோ வாட.. இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட.. ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ??? ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ??? பாவம் ராதா..." என துர்கபூரணியாக இருக்கும் ப்ரித்வியின் பாடல் அவந்திகாவையும், துர்கபூரணியும் இழுத்தது அவளது அந்தக் குரலில்.

இப்போது தன்னுடைய மற்றொரு தோழி பாட வேண்டிய தருணம்.. ஆனால், அவள் தன் தாய் மொழியில் பாட முடியாது. ப்ரித்வியின் தாய்மொழியில் தான் பாட வேண்டும். அதனால், அவள் யோசிக்க தொடங்கினால். "வெயிட் நீ தமிழிலேயே பாடு அதான் நல்லா இருக்கும்." என அவந்திகா சொன்னது அவளுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. இருப்பினும், தமிழில் பாடல் பாட சொன்னது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக அவளும் பாட்டு பாட தொடங்கினால்.

அவந்திகாவோ இதை வேணும் என்றே தான் செய்தால். ஏனென்றால் இந்தப் பாடலையும், இவள் பாடும் விதத்தையும் மைத்திலிக்கு அனுப்ப வேண்டும். ஆகையால் தான் அவள் இந்த வேலையை செய்தால். இது அவள்(துர்கப்பூரணி) கவனிக்கவில்லை. பிரித்வின் மொத்த கவனமும் துர்கபூரணியின் பாடல் மீது இருந்தன. ஆகையால் பிரித்வியாக நடிக்கும் துர்கபூரணி பாடத்தொடங்கினால்.

"கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா!!!! கண்களுக்கு சொந்தமில்லை.. கண்களுக்கு சொந்தமில்லை.. கண்ணோடு மனியானால்.. எதனால்??? கண்ணை விட்டு பிரிவதில்லை!! நீ!! என்னை விட்டு பிரிவதில்லை. சலசலசல!!! ரெட்டைக்கிளவி.. தகதக!!! ரெட்டைக்கிளவி. உண்டல்லோ? தமிழில் உண்டல்ல? பிரித்து வைத்தல் நியாயம் இல்லை? பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை? இரண்டல்லோ.. ரெண்டும் ஒன்றல்லோ. இரவும்,பகலும் வந்தாலும். நாள் என்பது ஒன்றல்லோ! கால்கள் இரண்டு கொண்டாலும். பயணம் என்பது ஒன்றல்லோ! இதயம் இரண்டு என்றாலும். காதல் என்பது ஒன்றல்லோ!" "சூப்பர் அண்ட் ஐயம் பிளாட் ரொம்ப சூப்பரா பாடின ப்ரித்வி!!!" என துர்கபூரணியாக நடித்து வரும் பிருத்விகுப்தா அவளைப் பாராட்டு தள்ளினால் அவள் பாடி முடித்த மறுகணமே.

அவந்திகாவோ தன் மனதினுள் 'ஆஹா! கரெக்டா வந்துருச்சு. இப்போ இவங்க ரெண்டு பேரும் அந்தந்த கேரக்டருக்கு மாறிட்டாங்க. இனி, எந்த பிரச்சனையும் இல்ல. தர்ஷமித்ரனுக்கும், துர்கபூரணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சா போதும். ஹர்ஷினிக்கும் அப்பா கிடைச்சிடும். அப்புறம், அவளோட லைஃபும் சந்தோஷமா இருக்கும். எப்படியாவது.. மைதிலி கிட்ட நான் உண்மைய சொல்லி. நானும் மைதிலியும் சேர்ந்து துர்கபூரணியை அவங்க அண்ணன்கூட ஒன்னு சேர்த்து வைக்கணும்.' என அவள் தன் மனதோடு உறவாடிக் கொண்டால் ஆனால் தெரியவில்லை தர்ஷமித்திரனும் துர்கபூரணியும் ஒன்று சேர்வதற்கு பல இடஞ்சல்கள் இடையூறாக வரப்போகிறது என அப்படி தெரிந்திருந்தால் இந்த விளையாட்டை அவந்திகா ஆரம்பித்திருக்கவே மாட்டான் என்பது தான் சத்ய உண்மை.

தர்ஷமித்ரன் வீட்டில்..

"மித்ரா என்னடா இப்போ அவங்க இங்க வந்தாங்கன்னா நம்ம எங்க தங்க வைக்கிறது? என்கிறத பத்தி பேசவே இல்லையே? இப்போ இன்னும் ஒரு நாள்தான் இருக்கு அவங்க இவங்க வந்து சேர்ந்திடுவாங்க. அவங்கள நீ தான் பிக்கப் பண்ணி ஆகணும். என்ன பண்ண?" என வித்ய பாரதி புலம்பி தள்ள அவ்வேளையில் தான் ஏதோ ஒரு எண்ணில் இருந்து காணொளி ஒன்று வந்தது. அதை கவனித்த தர்ஷமித்ரன் அம்மாவின் அலைபேசியை எடுத்து அந்த காணொளியை பார்த்தான்.

"என்னடா நான் பாட்டுக்கு புலம்பி தள்ளிட்டு இருக்கேன்? என்னத்த என் போன்ல பார்த்துட்டு இருக்க?" என தன் மகன் என்ன பார்த்து வருகிறான் என்பதை அவனோடு சேர்ந்து பார்த்தார்.

"சூப்பரா பாடுறாளே டா நம்ம மருமக. இல்ல என் மருமக. இனிமே, நம்ம வீட்ல டிவில பாட்டு சேனல் எல்லாம் கட் பண்ணி விட்டரணும்." தாயார் கூறியதை கேட்டதும் அவன் "என்னமா நீ? லூசு மாதிரி பேசிட்டு இருக்க." அதோடு தன் மனதில் 'இவ்வளவு நல்லா பாடுறியே ப்ரித்வி. உன்னை என்னைக்கு என் கையால தூக்கிக் கொஞ்ச போறேன் தெரியலையே?? சீக்கிரம் வா! நம்ம காதலோடு பறக்கலாம். ஆனா.. நீ என்னை நேசிப்பியான்னு தெரியல? நான் எப்பவுமே கைக்கிளையாவே இருப்பேன். உனக்காக காத்துகிட்டு தான் இருப்பேன். இன்னும் ஒரு நாள் எப்படியாவது கடந்து போயிடனும் கடவுளோ!!! நான் என் பிரித்வியை பார்க்கணும்.’

வருவேன்💞
 
அனல் 5✨

வித்யபாரதிக்கு குழப்பம் இந்த எண் யாருடையதாக இருக்கும் என குழம்பி போய் இருந்தார். அவ்வேளை தான் "அம்மா! அவங்க நம்ம ரேன்ட்க்கு விட்ட ஹெவூஸ்ல இருக்கட்டும்." என தர்ஷமித்திரன் கூறவும் "மித்ரா அங்க தான் உன் ப்ரண்ட் அபிரன் இருக்கானே?" என தாயார் கூற "அர்ஜன்ட்டா என் ஆபிஸ்ல இருந்து ஃபோன்மா. சாதாரண கேஸ் இல்ல." என அவன் படபடப்பாக கூற "மித்ரா. அப்போ சைக்காலஜி வொர்க்கரா இல்லாம. துப்பரிவாளனா இந்த புது கேஸ்அ பார்க்க போற. பக்குவமா விசாரிச்சு. பாதிக்கப்பட்ட குடும்ப நபர்க்கு நீதி வழங்கு. சாமி கும்பிட்டு போப்பா." தர்ஷமித்திரனுக்கு பிடித்தமான தொழில் துப்பரிவாளனாக இருப்பது தான். இருப்பினும், அடுத்தவர்களது மனநிலை தெரிந்து கொள்வதற்கு தான் அவன் ஃபாரன்ஷீக் மனநில குழுவிலும் வேலை பார்த்து வருகிறான்.

*****

தன்னந்தனி வீடு. நாலாபுறம் யாருமிலாத ஒரு இடம். அந்த சிறிய அறையில் ஏதோ ஒரு புகைப்படத்தை பார்த்து, தன் கைகளில் மதுவை அருந்திய படி அபிரன் "ஆ!!!!! என்னை ஏன் இப்படி கதறவிட்டு வேடிக்கை பார்க்குற? என்ன தப்பு பண்ணினேன் நா!!!!" என புலம்பும் நேரம் சமையல் செய்யும் பெண் பாத்திரம் எடுக்க அவளது கைகளை பிடித்தவன் அவளது கண்களை பார்த்தான். பயம் தாண்டவமாடியது. "அ..அ.." என அவள் திக்க "என்ன டி பேசுற? நா என்ன சொன்னேன். இவ் யூ ஆர் ஹியர், யூ வான்ட்ஸ் டு பி க்குவயிட்(இங்க நீ இருக்கும் போது அமைதியா தான் இருக்கணும்.!)" என்றதோடு அவளது கையை இறுக்கமாக பற்றியதில் கண்கள் கலங்கின.

கலங்கிய கண்களை ரசித்தவன் அவளது இதழில் தன் கூர்மையான எழுதுகோலை வைத்து குத்தினான். பேதை பெண்ணவள், கத்த முடியவில்லை. வேறு என்ன செய்வாள். "இந்த காயம் எப்படி வந்துச்சு?" என அவன் கேட்க "அ..அ..அது நா தெரியாம சுட்டுக்கிட்டேன்." என அவள் கூறவும் "குட் கேல். இந்தா, மருந்து வாங்கிக்க காசு." என அவன் தர அதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டால் பாவை.

"ஓடுறா!!! ஓடி தான் ஆகனும். இந்த அபிரன்கிட்ட ஒரு வார்த்தை பேசீனா..அவன்/அவள்னு பாரபச்சம் பார்க்க மாட்டேன். வெட்டி போட்டு சாப்பிட்டாலும். சாப்பிட்டுவேன். பைத்தியம்!!!! பைத்தியம்!!!! இந்த நேரம் காவல் துறை அந்த குட்டி பொண்ணை கண்டு பிடிச்சுருக்க முடியாது!! நீ வர வரைக்கும்! நா இப்படி தான் இருப்பேன்." என்றான் அந்த புகைப்படத்தை பார்த்து.

அவனுக்கு தர்ஷமித்திரனிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்து பேச ஆரம்பித்தான். "அபி. கொஞ்சம் என்கூட வர முடியுமா? நா வெளிய வாசல் தான் இருக்கேன்." என தர்ஷமித்திரன் இறுதியாக கூறிய வார்த்தைகள் அபிரனை போதையில் இருந்து எழவைத்தது.

வீட்டை விட்டு வாசலுக்கு வந்தவுடன் அபிரனின் கண்களை பார்த்த தர்ஷமித்திரன். வண்டியிலிருந்து இறங்கி "என்னடா? அபி..உன்னை இப்படி தனியா இருக்க இனி நா விடமாட்டேன். உன்கூட இங்க இருக்கப்போறேன்." என கூறினாலும் தர்ஷமித்திரன் காரியகாரன் தான்.அபிரன் "பரவாயில்லை. நீயாவது என்கூட இருக்கேன்னு சொல்ற. சந்தோஷம். வா!" என அவன் கூற "சின்ன வேலை இருக்கு மச்சி. சின்ன பொண்ணு, அவளை சின்னாபின்னமா சிதைச்சு போட்டவனை கண்டு பிடிச்சு காணப்பிணமாக்கனும். சரி டா கிளம்புறேன். அப்புறம்,வரேன்." என்றதோடு கிளம்பிவிட்டான்.
அபிரன் தன் மனதில் 'என்ன சொல்றான்? நான் கொன்ன சின்ன பிள்ளையுடைய பிணத்தை கூட உங்களால் எடுத்து இருக்க முடியாது. ஆனா?? இவன் என்னமோ டிடெக்டிவ் வேலை பார்க்க போறேன்னு சொல்றான்? எங்கேயோ தப்பு நடக்குது. யாரு பண்றான்னு தெரியல? அத முதல்ல கண்டுபிடிக்கணும். இப்போ, தர்ஷமித்ரன் என் கூட இருக்க இந்த கேஸ் விஷயமா இருக்கலாமோ? தெரியலையே!! என் நிம்மதியை கெடுத்துக்கிட்டே இருக்கீங்களே!! வருவியல, வா.. அப்ப தெரிஞ்சுக்கிறேன். நீ கேஸ் விஷயத்துக்காக மட்டும் தான் வந்து இருக்கனு தெரிஞ்சா? உன் அப்படியே போட்டு தள்ளிடுறேன். இல்ல! வேற விஷயம் அப்படின்னா? கூட வச்சிருக்கேன். வாடா, தர்ஷமித்ரா.' என தன் மிருகமான குணத்தை வெளிக்காட்டியபடி மனதோடு மிருகத்தனமாக பேசிக் கொண்டிருந்தான்.

*****

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தர்ஷமித்ரன். அக்குழந்தையின் பெற்றோர்களிடம் "மா உங்க பொண்ண பத்தி கொஞ்சம் டீடைலா சொல்லுங்கம்மா. அப்போ தான் என்னால வந்து ஸ்டெப் எடுக்க முடியும்? ஒரு சின்ன துரும்பு, அப்போதான் அதை அலசி,ஆராய்ந்து கொலைகாரன் யாருன்னு, கண்டுபிடிச்சு உங்க கிட்ட கொண்டு வந்து நிறுத்த முடியும்?" என அவன் அத்தனை இலகுவாக அந்த தாயாரிடம் பேசினான்.

அவரது கணவன் "என் பொண்ணு தொலைஞ்சு போய் ரெண்டு நாள் ஆச்சு சார். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. அவங்களும் தேடிட்டு தான் இருந்தாங்க. அப்பவே உங்க கிட்ட வந்து இருந்தா.. இப்போ என் பொண்ணு உயிரோட கிடைத்து இருப்பாளோ? என்னவோ? எனக்கு தெரியல சார்?" தன் விழியில் விழுந்து கொண்டிருக்கும் விழி நீரை துடைத்தபடி மீண்டும் "பாப்பா செத்துப்போன செய்தியை கேட்டதும், இவ பித்து புடிச்ச மாதிரி இருக்கா. என் பொண்ணு உயிரோட தான் இருப்பா. வேற யார்கிட்டயாவது கூட்டிட்டு போங்கன்னு கதறுறா. அப்போதான் என் பிரண்ட் உங்கள பத்தி சொன்னான். உங்க கிட்ட வந்தா பிரச்சனை தீர்ந்திடும்னு சொன்னான். நம்பிக்கையோடு வந்திருக்கும் கைவிடாதீரங்க." என அவரும் கவலையோடு கூற இவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு அவன் தன் கேள்வியை எழுப்பினான் "ஓகே. நான் கேக்குறது ஒன்னு பெரிய விஷயம் இல்ல? சார் உங்க பொண்ணு காணாமபோன அன்னைக்கு. உங்க வீட்டு வாசல்ல ஏதாவது ஒரு சின்ன பொருள் வித்தியாசமா தென்படுச்சா?" என்ன தன் முதல் கேள்வியை முன்னெடுத்து வைத்தான் தர்ஷமித்ரன்.

"என் பொண்ணு தெருல பசங்களோட விளையாடிட்டு இருந்தா சார். ரொம்ப நேரம் ஆனதுக்கு.. அப்புறம் தான் என் பொண்ணு காணாம போனாங்கற விஷயம் தெரிய வந்துச்சு.சுத்திமுத்தி அவ கூட விளையாண்ட எல்லார்கிட்டயும் கேட்டு பார்த்துவிட்டோம். ஒரு விஷயம் கூட தென்படல சார். ஆனா.. என் பொண்ணு எப்பவுமே கழுத்துல இருக்குற செயின், அடிக்கடி கையில வச்சு சுத்திட்டு இருப்பா அது மட்டும் கொஞ்சம் தூரமா வாய்க்கால்குள்ள விழுந்து இருந்துச்சு சார்." என அவர் கடைசியாக கூறிய செய்தியை கேட்டதும் அவன்(தர்ஷமித்ரன்) மீண்டும் மற்றொரு செய்தியை எழுப்பினான். "வெயிட்! வாக்கேல்குள்ள விழுந்த உங்க பொண்ணோட செயினை, நீங்களா போய் எடுத்தீங்களா?" அவர் அதற்கு "இல்ல சார். டென்ஷன்ல எனக்கு அதெல்லாம் தேடணும்னு தோணல. பக்கத்துல இருக்குற ஒரு குட்டி பையன் தான் அக்கா விளையாடிடுட்டு இருக்கும்போது.. செயின் வாய்க்கால்ல விழுந்துடுச்சு. எடுக்க சொல்லிட்டு இருந்தேன். இது மட்டும் தான் அந்த பையன் மூலமா எங்களுக்கு தெரியும் வந்துச்சு அதுக்கப்புறம் அந்த செயின் அந்தப் பையனோட அம்மா தான் என்கிட்ட கொண்டு வந்து கொடுத்தாங்க." என அவர் நடந்த விஷயங்களை தர்ஷமித்திரனிடம் கூறினார். அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது, எங்கோ? ஏதோ ஒன்று நடந்திருக்கிறது? என்று இருப்பினும், அவன் அந்த சின்னப் பையனை பார்க்க வேண்டும். என்பதற்காக அவரிடம் "நா உங்க வீட்டுக்கு வரலாமா? அந்த சின்ன பையன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு." அவர்களோடு சேர்ந்து அவர்களது வீட்டிற்கு சென்ற தர்ஷமித்ரன். "அந்தப் பையனோட வீடு எது?" என கேள்வி எழுப்பினான். இன்று சனிக்கிழமை ஆகையால் பள்ளிக்குழந்தைகள் வீட்டில் தான் இருப்பார்கள். அந்தப் பையன் அது வீட்டிற்கு சென்றான் தர்ஷமித்ரன். அதிர்ஷ்டவசமாக அவன் வீட்டுக்கு வெளியே தான் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசித்து வந்தான். "குட்டி பையா! என்ன ஸ்கூல்ல படிக்கிற?" அவனிடம் பேச ஆரம்பித்தான். "உங்கள நான் இதுக்கு முன்னாடி எங்க வீட்ல பார்த்ததே இல்லையே? நீங்க யாரு? என் அம்மா தெரியாத அவங்க கிட்ட பேரோ, ஸ்கூல் பேரோ, எதையும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அதான் கேட்கிறேன்?" இதைக் கேட்டதும் தன் அன்னையின் வளர்ப்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. "அந்த வீட்ல இருப்பாங்கள ஒரு குட்டி பொண்ணு. அவங்க கூட நீ ரெண்டு நாளைக்கு முன்னாடி விளையாண்டுட்டு இருந்தியா?" "ஆமா அந்த அக்காவை உங்களுக்கு தெரியுமா?" "தெரியும்! அவங்களை தேடித்தான் நான் வந்து இருக்கேன் பா. அதான், உன்கிட்ட கேக்குறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க விளையாடிட்டு இருக்கும்போது என்ன நடந்துச்சுன்னு சொல்லு?" என கேட்க அந்த பையனுடைய தாயார் "புஜ்ஜி உள்ள போ. பேசாத யார்கூடயும்! என்ன உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு என் பையன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?" அந்த பையன் அன்னையிடம் "மா இவங்க அக்காவுக்கு தெரிஞ்சவங்க எல்லாம் அதான்.." முழுவதுமாக முடிப்பதற்குள் அவர் "எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து படிக்காத! வீட்டுக்கு வெளியே உட்காந்து படிக்காதனு! வரவங்க எல்லாரும் அந்த வீட்ல இருக்குற பொண்ணு அந்த வீட்ல இருக்குற பொண்ணுகூட நைட் விளையாட போகாதனு. உன் கிட்ட சொல்லி இருக்கேன்! பேசாம உள்ள போய் படி! சனி,ஞாயிறு வந்தாலே எனக்கு இதே வேலையா போச்சு! உன்னை இனிமேல் ஹாஸ்டல்ல தான் சேர்க்க போறேன் பாரு." என அவர் தன் மகனை அரட்டினார் "உங்ககிட்ட என் பையன் எந்த பதிலும் சொல்லணும்னு எதிர்பார்க்கல. நானும் சொல்ல விட மாட்டேன்! எத்தனையோ பேர் வந்து கேஸ் விஷயமா என் பையன இழுக்கிறாங்க. அவன் என்கிட்ட கேக்குறாங்க. ஏன்மா என்கிட்ட கேக்குறாங்கன்னு? நாங்க ஆர்த்தெடிக்ஸ் பேமிலி. எங்க ஆர்தோபிக்ஸ் பேமிலி. இதபத்தி என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சுச்சு என்ன போலி போற்றுவார். அந்தப் பொண்ண பத்தி எனக்கு எதுவும் தெரியாது? அந்த செயின் பத்தி எனக்கு தெரியாது? என் பையன் ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சிடுங்க. தயவு செஞ்சு விடுங்க." அவர் கோபமாக கொப்பளித்த வார்த்தைகளை அனைத்தும் வைத்து தர்ஷமித்ரன் கண்டுபிடித்து விட்டான். விசாரிக்க வேண்டியது அவர்களது பையனை அல்ல இவரைத்தான் என.

"எனிவேஷ் இது என்னுடைய ஐடி கார்டு. அந்த வீட்டு பொண்ணோட அப்பா, அம்மா என்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க. உங்க பையன் தான் கடைசியா வாய்க்காகுள்ள விழுந்த செயின் எடுங்க அக்கானு சொல்லி இருக்கான். நீங்களும் அத பாத்து இருக்கீங்கன்னு, நீங்க பேசின வார்த்தைகளை வைத்து நான் கன்ஃபார்ம் பண்ணிட்டேன். சொல்லுங்க அன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சு?" அவர் ஆச்சரியத்தில் வியந்து போய் தர்ஷமித்ரனிடம் "அது நான்.. அது நான் அது ஒன்னும் இல்ல.. சின்ன பிரச்சினைதான். கிடையாது!! நான் கிடையாது!! அது நான் கிடையாது!!" என அவர் பைத்தியம் பிடித்தார் போல் பயந்து வார்த்தைகளை உளறினார். 'அப்ப இவங்க கிட்ட வேற ரூட்ல போனா தான் சரியா வரும்.' என்றதோடு அவரிடம் "சாரி தெரியாம வந்துட்டேன்னு நினைக்கிறேன்.". அவ்விடம் விட்டு சென்றான்.

வீட்டிலிருந்த வித்யபாரதி காணொளி அனுப்பின அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால். அழைப்பை ஏற்ற ப்ரிதிவியாக நடிக்கும் துர்கபூரணி "ஹலோ யாரு?" என தன் வருங்கால மருமகளின் குரலை கேட்டதும் அவர் அத்தனை ஆனந்தமாக இருந்தது. "நான் தான் மைத்திலியோட அம்மா வித்யபாரதி பேசுறேன்." "ஓ மைதிலியா? சரி.. சரி இந்த நம்பர் என்னோடது. மறக்காம சேவ் பண்ணிக்கோங்க. நா தெரியாதவங்க நினைச்சேன் அவந்திக்கு தெரிஞ்சவங்க, அப்போ பிரச்சினை இல்லை." என அவள் தொடர்பை துண்டிக்கப் போகும் நேரம் பார்த்து "நீங்க எங்கம்மா வந்துட்டு இருக்கீங்க? எங்க வீட்ல தான் தங்கப் போறீங்க. ஆனா எங்க வீட்ல மூணு பேருக்கு தங்குவதற்கான இடம் இல்ல. கெஸ்ட் ஹவுஸ் ல தான் தங்க முடியும் பரவாயில்லையா?" "நாங்க வந்து இப்பதான் சூரட்ல( Surat) இருக்கோம். சூரட்ல இருந்து எப்படியும் வரத்துக்கு இன்னும் ஒரு நாள் ஆயிடும் ஆன்ட்டி. கெஸ்ட் ஹவுஸ், ஒரு ப்ராப்ளம் இல்ல. நாங்க இருந்திருப்போம். எங்களுக்கு பிரைவசி முக்கியம். எனிவேஸ், மைதிலிங்க கூட இருந்தா நல்லா இருக்கும் நானும் நெனைக்கிறேன். அவந்திகா..மைதிலி பத்தி சொன்னா? அவகூட இருக்கறதுல உங்களுக்கு அச்சபன இல்ல தான ஆன்ட்டி?" "ஒரு பிரச்சினையும் இல்லம்மா. உன்ன கூப்பிட வரும்போது மைதிலி கூட அப்படியே நீ நேரா வீட்டுக்கு போயிடலாம். ஓகேவா? அவ கிட்ட தான் சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் வந்து நீங்க எங்க வந்து இருப்பீங்க கண்டிப்பா போன் போடவா. நா முன்னாடியே சொல்லிடுவேன். நா வைச்சுடுறேன்." என அழைப்பை துண்டித்தார்.

வருவேன்💞
 
அனல் 6✨

"என்னடி பூரணி மைதிலி அம்மாகிட்ட அப்படி என்ன விஷயம் பேசிக்கிட்டு இருந்த?" என ப்ரித்வி கேட்க "அவங்களோட கெஸ்ட் ஹவுஸில் தான் நம்ம தங்க போறோம். நம்ம கூட மைதிலி அனுப்பி வைப்புறேன் சொல்லிட்டாங்க. நாம எங்க வந்துட்டு இருக்கோம்னு கேட்டாங்க. சூரட்ல இருக்கும் நம்ம ஊருக்கு வரதுக்கு எப்படி ஒன் டே ஆகணும்னு சொன்னேன்." குழந்தை அவள் தூக்கத்திலிருந்து எழுவதன் விதமாக அழத் தொடங்கினாள். அவளை தூக்கி ப்ரித்வி தன் தோளில் சாய்த்துக் கொண்டு. அவளை சமாதானம் செய்ய அவளோ மீண்டும் மீண்டும் அழுது கொண்டே இருந்தாள். "பாப்பாக்கு பசி வந்துருச்சு போல அதான் அழுகிறா." என அவள் குழந்தையை துர்கபூரணியிடம் கொடுக்க அவளும் குழந்தைக்கு பசியாற்ற தொடங்கினால். "இந்த ட்ரெயின் டிராவலிங் ரொம்ப தூரமா இருக்கு. பிளைட்ன்னா இந்நேரம் போய் இருந்திருக்கலாமோ என்னவோ?" அவந்தி தன் வம்பு பேச்சை ஆரம்பித்தால். "ஏய் அவந்தி கொஞ்சமாவது யோசிச்சு பேசு. மூணு வருஷமா நம்ம மூசோரியில் இருந்த போது ப்ரித்வி பேமிலி தான நம்மள கவனிச்சுக்கிட்டாங்க. நம்ம என்ன வேலைக்கு போனோம்? கிடையவே கிடையாதுல! அப்படி இருக்கையில், நீ இப்படி சொல்லலாமா? அவங்க நமக்கு ட்ரெயின் டிக்கெட் போட்டதே பெரிய விஷயம். ப்ரித்விக்கு ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கணும். அத விட்டுட்டு ஃப்ளைட் டிக்கெட் போட்டுக்கலாம் கேட்குற? நம்மளே சோத்துக்கு வழி தெரியாத ஆளு. இதுல நம்ம அவங்கள வேற குத்த சொல்லனுமா? நம்மள நல்லா பாத்துக்கிட்டவங்கள." என துர்கபூரணி தன்னுடைய அறிவுரையை தொடங்கினால். "உண்மைதான் பூரணி. நான் பேசினது தப்புதான். மன்னிச்சிரு. ஆனா.. என்ன செய்ய எப்பப்பாத்தாலும் இந்த உலறுவாய் ஏதாவது உலறு.. உலறி வச்சிக்கிட்டு இருக்கேன். இது பிறப்பிலேயே வந்துருச்சு என்னமோ?" என சற்று கவலையோடு கூற, தோழியின் கவலைக்கு தான் காரணமாகி விட்டோமே! என்கிற கவலை துர்கபூரணியை வந்து சுற்றிக்கொண்டது.

தர்ஷமித்ரன் வீட்டில்..

நேரம் கடந்துவிட்டன தர்ஷமித்ரன் வீட்டை விட்டுச் சென்று பல நேரம் ஆகிவிட்டன ஆனாலும் மகன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வரவில்லை. ஆகையால், தாயாரும் உணவு உண்ணாமல் அவனுக்காக காத்துக் கொண்டு வந்தார். மைதிலி கல்லூரி முடித்து வீடு வந்து சேரவும் "அம்மா! என்ன சாப்பிடாம உக்காந்து இருக்கீங்க? அண்ணா எங்க போய்ட்டான்?" என தன் தமையனை பற்றி கேட்க அவரும் "காலையில் ஏதோ ஒரு கேஸ் வருதுன்னு போனான்பா. இன்னும் காணோம்? மைதிலி, என் புள்ள சாப்பிடாம எங்க போய் சுத்திட்டு வரானோ தெரியல? எதுக்காக நான் இவன படிக்க வச்சேனே தெரியல? அவனுக்கு எப்படி துப்பறிவாளன் ஆக பிடிச்சதுன்னு தெரியல? எந்த நேரத்துல அவனுக்கு இப்படி ஃபாரன்சிக்ல வேலை கிடைக்கணும்னு ஆசைப்பட்டானோ தெரியல? எந்த கோவிலில் வேண்டிகிட்டானோ! தெரியல? இப்படி, எல்லாம் ஒரு வேலை கிடைக்கணுமா? சாப்பிட்டும் சாப்பிடாம, தூங்கியும் தூங்காமல், எந்த நேரத்தில், எந்த போன், வரும்னு. ஹப்பா! வேலையை நினைச்சாலே.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அவனிடத்திலிருந்தா அந்த வேலையை எப்பயோ ரிசைன் பண்ணி இருப்பேன்." என புலம்பி தள்ளினார்.

"சரி, விடுங்கமா. அண்ணா வேலை புடிச்சிருக்கு. ஆசையோட செய்றாரு. இதுல, என்ன இருக்கு? அதுக்காக நீங்க பட்டினியாவா இருப்பீங்க? அண்ணாக்கு போன் பண்ணிணா என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியும் தானே? எடுத்து சாப்பிடுங்க அம்மா." என தாய்க்கு அறிவுரை கூறினால் மைதிலி.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேலையில் தான் தர்ஷமித்ரன் வீட்டில் உள் நுழைந்தான். "என்னம்மா இப்ப வா மதிய சாப்பாடு சாப்பிடுறீங்க? ரொம்ப டைம் ஆச்சு! ஏன்மா இப்படி டயத்துக்கு சாப்பிடாம இருக்கீங்க?" "அத சொல்லு அண்ணா. நான் வந்தப்போ பட்னியா உக்காந்திருந்தாங்க. நீங்க வந்தா தான் சாப்பிடுவேன்னு, ஒத்த கால நின்னாங்க. கடைசியா.. நீங்க வந்தா என்ன நடக்கும்னு சொன்னேன். அதுக்கு, அப்புறம் தான் சாப்பிடவே ஆரம்பிச்சாங்க." என மைதிலி அவன் முன் தன்னுடைய மரியாதையை மேலும் ஏற்றுக் கொண்டால், அவளது தாயாரை வைத்து. "சின்ன பொண்ணு அவளுக்கே தெரிஞ்சிருக்கு. நீங்க ஏன் உங்க உடம்ப போட்டு வருத்திக்கிறீங்க?" என மீண்டும் கேட்க. "அதான் நான் சாப்டேன். இப்ப எதுக்கு திரும்பி அதே பேச்சு பேசிட்டு இருக்கீங்க நம்ம ப்ரித்வி சூரத்துல இருந்து வந்துட்டு இருக்காங்க. போன் பண்ணி பேசினேன்பா. எப்படியும் நாளைக்கு சாயங்காலம் வந்துருவாங்க. அவங்கள நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல வைக்கிறதா பிளான், துணைக்கு யாராவது போயிருந்தா.. நல்லா இருக்கும்னு எனக்கு படுதுபா. கீழ அபிரன் மட்டும் தனியா இருக்கான்னு நீ சொல்ற. அபிரின நம்பி நம்ம எப்படி விட முடியும்?" தர்ஷமித்ரன் அவரிடம் "மா அபிரனே பாவம். வருத்தமா இருக்கான். இதுல, நீங்க அவன போய் தப்பா நினைக்கலாமா? போன முறை அந்த வீட்ல இருந்தவங்க, அவங்க குழந்தை காணாம போனதுக்கு. அபி காரணம்னு ஒத்த காலில் இருந்து அடம் பிடிச்சாங்க. அப்புறம், குழந்தை வேற எங்கேயோ தனியா போய்யிருக்கா போலீசே ஒப்படைச்சுட்டாங்கல்ல. அதை நினைச்சுட்டு தான் நீங்க அபிரன் மேல குத்தும் சொல்லிட்டு இருக்கீங்க? என் பிரண்டு மேல நீங்க எப்ப குத்த சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களோ, அப்ப நான் முடிவு பண்ணிட்டேன்! நான் அவங்க துணைக்கு போய் அங்க இருப்பேன். இங்கே நான் வரமாட்டேன்! உங்க கூட மைதிலி இருப்பா." என தர்ஷமித்ரன் கூறியது மகிழ்ச்சியாக இருந்தாலும். 'மருமக மைதிலிய கூட இருக்க சொன்னா. இவேன் நா போறேன்னு சொல்றான். சந்தோஷம்.' என அவர் மனதோடு நினைத்து கொண்டார்.

"மித்ரா நீ எல்லாம் போகக்கூடாது? அவங்க மைதிலி தான் கூப்பிட்டு இருக்காங்க. மைதிலி தான் போவா.நீ என் கூட இருப்பியா?" என அவர் கூற 'என்ன இது நம்ம பிளான் சொதப்பதே! எப்படியாவது ப்ரித்வியை கரெக்ட் பண்ண பிளான் போட்டா. ஐயோ!மாதாஸி(அம்மா)' என தனக்குள் அழுத படி புலம்பினான்."அம்மா என்னம்மா! நீ பாட்டுக்க புரியாம மாதிரி பேசிட்டு இருக்க? நான் போயி அவங்கள நம்ம கெஸ்ட் ஹவுஸில் தங்க வச்சிட்டு வரேன். அண்ணன் அவனா போயி ப்ரத்வி மனசுல இடம் பிடிக்கணும்னு நினைக்கிறான். அதுக்காக தான், நான் போறேன்னு சொல்றான். நீயே காரியத்தை கெடுத்து விட்டுருவீங்க போல." "அச்சச்சோ சரிம்மா, இனிமே இந்த வித்யபாரதி குறுக்க வரமாட்டேன். அவனே போகட்டும்." என்றதும் மைதிலி தன் தமையனிடம் விஷயத்தை கூற அவனும் சம்மத்தித்தான்.

ஒரு வழியாக மூவரும் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள். மைதிலியை பார்க்க அவந்தி "மைதிலி கேம்ப் போனபோது ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். இப்பதான் பார்க்கிறோம். ஏன் போன் சார்ஜ் இல்லாம போய்யிடுச்சு. அதனால தான் பிரித்வி போன்ல இருந்து கூப்பிட்டேன்." என துர்கப்பூரணியை ப்ரித்வி என அறிமுகம் செய்ய. ப்ரித்வியை துர்கப்பூரணி என அறிமுகம் செய்தால். "வீட்டுக்கு போலாமா? ரெண்டு நாள் டிராவல் பண்ணி வந்திருக்கோம். அதுவும் ட்ரென்ஜர்னி வேற ரொம்ப தூரம்ல. சோ, பிரஷ்ஷப் ஆகணும்." என ப்ரித்வியாக நடிக்கும் துர்கபூரணி கூற "வாங்க அண்ணி, போலாம் உங்களுக்காக தான் வெயிட்டிங். வீட்ல எல்லாத்தையும் அடுக்கி வச்சாச்சு." என தன்னையறிமால் கூப்பிட அவள் "ஐயம் சாரி. ப்ரித்வி போவோமா?" அவர்களை அந்த வீட்டிற்கு கூட்டி சென்றால் மைதிலி.
தர்ஷமித்ரனுக்கு அவள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப அதை பார்த்தவன் "ஆஹா!!! ப்ரித்வி வந்துட்டா. அம்மா நா பொருள் எல்லாம் பேக் பண்ணிட்டு மைதிலி வீட்டுக்கு வந்ததும் நான் கிளம்புறேன்." என மகன் கூற தாயாருக்கு அத்தனை மகிழ்ச்சி.

மைதிலியோடு சில நேரம் பேச்சுக்கள், ஹர்ஷினி அவள் கொஞ்சி மகிழ என நேரங்கள் சென்ற போது "கீழ் வீட்ல யார் இருக்காங்க?" என துர்கப்பூரணி கேட்க "என் அண்ணாவோட பிரண்ட் அபிரன் மட்டும் தான் இருக்கார்." என அவளிடம் பேச அவந்திகா "என்ன அபிரனா?" என ஆச்சிரியமாக கேட்க "ஆமா. மணியாச்சு நா வீட்டுக்கு போகணும்." என மைதிலியை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தார்கள். ப்ரித்விகுப்தா குழந்தையோடு ஒரு அறையில் உறங்குவதாக கூற. அவளோடு சண்டை போட்டு கொண்டு அவந்திகா அந்த அறையில் தூங்க சென்றால்.

துர்கப்பூரணி மட்டும் தனியாக மற்றொரு அறையில் உறங்கச்சென்றால். மைதிலி வீட்டிற்கு வந்துவிட்டேன் என தகவல் கூற. அந்த நேரம் ஒருவன் கள்வன் போல் கதவை மூடும் நேரம் வர துர்கப்பூரணிக்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. அவன் தன் பையை பிடித்தபடி "ஹாய்! நானும் உங்க கூட தான் தங்க போறேன். எனிவெஸ் ஐயம் தர்ஷமித்ரன்." என தன்னை அன்பாக அறிமுகப்படுத்தி கொண்டான்.

"அர்த்த ராத்தில திருடன் மாதிரி வந்து பயப்புட வைச்சு. இன்ட்ரோ வேற. போயா." என அனலாக பேச "ஏய் பொண்ணு. இங்க தான் தங்குவேன். திஸ் இஸ் மை ஹவுஸ்." என உரிமையாக பேச "நா யார்னு தெரியுமா? துர்.." என கூற வரும் போது தான் அவந்திகா கூறிய வார்த்தைகள் அவளுக்கு நினைவு வந்தது. "நா ப்ரித்வி டா. இது என் பிரண்ட் வீடு. ஆளும்,தலைமுடியும் ரௌடி பையன் மாதிரி."

கைக்கிளையாக வந்துவிட்டேன்💓

Snapchat-9214292.jpg
 
அனல் 7✨

"யோவ்! போயா. மைதிலி வீட்ட எப்ப உன் வீடுனு சொல்லலாம்?" என கோபம் கொண்டு பேச "என் தங்கச்சிக்கு இது உரிமையுள்ள வீடு. அப்போ, அண்ணனான எனக்கும் உரிமை இருக்கு. விலகு நா போய் தூங்குறேன்." என தர்ஷமித்ரன் திறந்திருந்த அறையினுள் செல்ல அவளும் பின்னாலே சென்று வேகமாக பையை பஞ்சு போன்ற நாற்காலியின் மீது தூர வீசிவிட்டு, மெத்தையில் படுக்க திரும்ப.. பாவையவளின் வேகம், அவன் மீது மோத வைத்தது. தர்ஷமித்ரன் மீது துர்கப்பூரணி தடுக்கி விழ அவன் கீழே தரையில் படுத்தபடி அவளை பார்த்து கொண்டு மனதோடு வர்ணித்தான். அவளும் ஒரு நிமிடம் தன்னையறிமால் அவனை விழிகளால் சிறை செய்தால்.


வார்த்தை தேவையில்லை! வாழும் காலம் வரை பார்வை பார்வை மொழி பேசுமே!!! நேற்று தேவையில்லை! நாளை தேவையில்லை! இன்று இந்த நொடி போதுமே!!!

****

"என்ன இந்த தர்ஷமித்ரன் கார் நிக்குது. மச்சானை வெயிட் பண்ண வைச்சதுக்கு சாரி.." என்ற படி அபிரன் வீடு முழுவதும் தேட. வாசலில்‌ மகிழுந்து பார்த்த படி "என்ன இவன ஆளையே காணோம்? ஒரு வேலை மாடிக்கு போயிருப்பானோ?.. இருக்கலாம். மச்சான்! அட மச்சான்! என் மச்சான்!." என அவன் செல்ல காலணிகளை பார்த்தான். அதில் தர்ஷமித்ரனுடைய செருப்பும் இருந்தது. கதவு அப்பட்டமாக திறந்திருந்து. அபிரன் அச்சமின்றி உள்ளே சென்றான். வந்தவன் கண்களை அங்கும் இங்குமாக சுற்றி பார்க்க.

தோழனை பார்த்துவிட்டான். 'மச்சான். செமையா ரொமன்ஸ் பண்றான். போய் பயம்புடுத்தலாம்.' என்ற விளையாட்டு எண்ணத்தோடு அவன் செல்ல. "எழுந்திரி ரௌடி பையலே!." என துர்கப்பூரணி கூற. "ப்ரித்வி, சின்ன திருத்தம் நீ தான் என் மேல படுத்திருக்க." என அவன் கூற, அபிரன் அவர்கள் செவிகளில் விழும் படி, "இன்னொரு சின்ன திருத்தம். ராத்திரி நேரம் திருடன் வரும் படி இப்படியெல்லாம் கதவை திறந்து வைக்கலாமா?" குரல் கேட்ட திசையை நோக்கி இருவரும் அவனை பார்க்க. துர்கப்பூரணி எழுந்து கொண்டால். "மச்சான்! இவ தான் நா கட்டிக்கபோற பொண்ணு ப்ரித்வி குப்தா."என தர்ஷமித்ரன் கூறினாலும். துர்கப்பூரணியை பார்த்ததும் 'இவ ப்ரித்வியா? புதுசா இருக்கே? இங்க தான இருக்க போறாங்க. கண்டு பிடிக்குறேன்.' என மனதோடு உரையாடி கொண்டான்.

"ப்ரித்வி! யூ?" என சந்தேகத்தோடு கேட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இவேன எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனா..எங்கனு தான் நியாபகம் வர மாட்டேங்கிது.' என யோசனையில் இருக்க "ஹாய்!" என்றதோடு அவள் படுத்துக்கொண்டால்.

"மச்சான். இங்க ஏன் வந்தேன்னு இப்போ தெரிஞ்சிருச்சு." என்றான் அபிரன் "நான் காதல் வயப்பட்டு விட்டேன். அவளை எப்படி கரேக்ட் பண்றது?" என கேட்டான். "ஹய்யோ! நீ உண்மையாவே தர்ஷமித்ரன் தானா? இல்ல..உனக்கு பேய் பிடிச்சிருக்கு." என அபிரன் கூற தர்ஷமித்ரன் வெட்கத்தோடு "ஹூம்! எனக்கு அவள பிடிச்சிருக்கு." "இப்போ சொன்னியே இது சரியானது. உனக்கு அவளை பிடிச்சிருக்கு. அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு, எனக்கு இந்த கூத்தயெல்லாம் பார்த்ததில் மொத்தமா பைத்தியம் பிடிச்சுருச்சு." என்றான் கேலியாக. 'மச்சி. நீ தப்பான டிராக்ல போற. சீக்கிரம் உண்மைய உன்கிட்ட சொல்ல நினைக்கிறேன். ஆனா, கொஞ்சம் இப்படியே விளையாட்டு விளையாடி சொன்னா தான் எனக்கும் கிக்கா இருக்கும்.' என நினைத்து கொண்டே ஒரு சிறிய புன்னகையுடன் தன் வீட்டிற்கு சென்றான்.

'அபி சந்தோஷமா,கேலியா பேசி நா இன்னைக்கு தான் பார்க்குறேன். ப்ரித்வி வந்தது ஒரு வகையில் நல்லது தான்.' என்றதோடு அறைக்கு சென்று பார்க்க.

அவள் நன்றாக உறங்கி கொண்டு இருந்தால். அப்படியே அவள் பக்கம் வராமல், சற்று இடைவேளை விட்டு படுத்து உறங்கினான்.

காலைப் பொழுது இனிதாகவே விடிந்தது. "ஐயோ!!! ஏய்!!! அவந்திகா இந்த கூத்த பாருங்களே!!!! என்ன நடக்குதுனு?" என அவள் பதறவும் பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தர்ஷமித்திரனும் விடுக்கென எழுந்தான்.

"ப்ரித்வி என்னாச்சு டி! என்ன?" என அவந்திகாவோடு ப்ரித்தியும் சேர்ந்து வந்தால் துர்கபூரணி அறைக்கு வந்தால்.

ப்ரித்வி(துர்கபூரணி) அவனைப் பார்த்ததும், அவளது கண்கள் எங்கும் உருண்டோடவில்லை. தர்ஷமித்திரனையே அவளது விழிகள் கண்டெடுத்துக் கொண்டிருந்தன, ரசித்த வண்ணமாக.

"என்ன ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லு? எதுக்கு இப்படி காலங்காத்தால கத்துற? என்னடி ஆச்சு!" என அவந்திகா நிதானமாக கேட்க "என்ன ஆச்சா???? இதோ இந்த ரவுடி பையன் என் பக்கத்துல படுத்து இருக்கான். என்ன உரிமையில் என் பக்கத்துல படுக்கலாம்? இந்த ரூம.. இனிமே பார் என்ன செய்கிறேன் மட்டும் பாரு. இவனை எதுக்கு வர சொன்ன? மைதிலிக்கு இப்படி ஒரு அண்ணன்? அதுவும் ரவுடி பைய மாதிரி. யாராவது ஒரு பொண்ணு பக்கத்துல அதுவும்.. இப்படியெல்லாம் செய்யலாமா யோசிச்சு பாரு?" "அடச்சி இவ்ளோ தான் பிரச்சனையா? ஏன் இப்படி வந்து வராதுமா அவரே பாவம்! நைட் எத்தனை மணிக்கு வந்தார்னே தெரியல? வீட்டுக்கு போக முடியாதுன்னு கெஸ்ட் ஹவுஸ்ல வந்து படுத்து இருக்கலாம்? அதுக்கு நீ பாட்டுக்கு தையத்தக்கானு குதிக்கிற?" உடனே தர்ஷமித்ரன் "நல்லா சொல்லி புரிய வை அவந்திகா. என்ன மாதிரி ஒரு அழகான பையன இப்படி கெடுக்க பார்க்குறா? அதுக்காக தான் சொல்றேன்.. நான் இத்தனைக்கும் நைட்டு இவகிட்ட எவ்வளவு கெஞ்சினேன்னு தெரியுமா? இவதான் எகிரிகிட்டு வந்து பேசுனா! என்ன பாத்தா ரவுடி பையன் மாதிரியா தெரியுது?" இறுதியாக குழந்தை போல் பேசி முடித்தான். உடனே ப்ரித்வி "அச்சோ! இவ்ளோ ஹேண்ட்சம்மா இருக்குற உங்களை இவ ரவுடி பையன்னா சொல்லணும், இந்த து..சாரி ப்ரித்வி? ப்ரித்வி இது பால் வடியும் முகம் டி." தர்ஷமித்ரன் துர்கபூரணியாக இருக்கும் (ப்ரித்வி) பேசியதைக் கண்டு "உன்ன விட உன் பிரண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் என்ன பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. பாரு, என்ன போய் ரவுடி பையன்னு சொல்லிட்ட. அவங்க அவ்வளவு கஷ்டப்படுறாங்க. கவலைப்படுறாங்க. நீ என்னடா இப்படி பாக்குற?" என இவன் கூறிய பாவனையை கேட்டதும் அவளுக்கு சூளிர் என கோபமும், எரிச்சலும் வந்தது. ‘உனக்கு வைக்கிறேன் டா ட்விஸ்ட்.' ப்ரித்வி (துர்கபூரணி) "தர்ஷமித்ரன் எங்களுக்கு காலையில காபி, சாப்பாடு சாப்பிடணும் போய் பொருள் வாங்கிட்டு வர முடியுமா?" என அன்பாக பேச "இதோ, வரேன்." என அவன் எழுந்து கிளம்ப "மைதிலி நடந்து போற தூரத்துல தான் பால்பாக்கெட் கடை இருக்குனு நேத்து சொன்னா. நா போய் பால் வாங்கிடுறேன்." என்றாள் "டீல் டன்! நா சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வரேன்." என தர்ஷமித்ரன் முகத்தை கழுவிவிட்டு சென்றான்.

கீழ் வீட்டில் இருக்கும் அபிரன் அப்போது தான் பால் வாங்க செல்ல. அவனை பார்த்த அவந்திகா 'யாரா இருக்கும்? முகம் தெரியல? கீழ் வீட்டுக்காரர் தான. அவரோட சேர்ந்து போய் பால் வாங்கிட்டு வந்திடுவோம்.' என மனதோடு உரையாடி முடிவெடுத்தால். "ஹலோ! மிஸ்டர், எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்." என்ற அவந்திகாவின் குரல் திசையில் அவன் திரும்பி பார்த்தான்.

eiBC42B26332.jpg

கைக்கிளையாக

வந்துவிட்டேன்💓
 
அனல் 8✨
Snapchat-1718877195.jpg
'ஹான்! இவளா?..' என நினைத்த படியே "ஹா..சொல்லுங்க?" என்றான் ஏதும் தெரியாதவன் போல. "பால் வாங்க கடைக்கு போறீங்களா?" அபிரன் 'ஆம்' என தலையசைக்க. "அப்போ சரி நா வரேன்." என அவள் அவனோடு செல்ல "நீ அவந்திகா தானே?" என அவன் கேட்கவும் அவள் சற்று குழம்பி போனால். "என் பெயர்..?" என அவள் யோசிக்கும் போது தான். அவள் அவனிடம் "நீங்க?" என்ற கேள்வியை எழுப்பினாள். "அபிரன்." என்ற பெயரை கேட்டதும் "ச்சீ! உன் ஞாபகத்தை எல்லாம் ஒட்டுமொத்தமா அழிச்சுட்டேன். அதான், மறந்துடுச்சு. அது..என்ன சொன்ன? ஹான்! நம்ம ரிலேஷன்ஷிப் முடிஞ்சுபோச்சு. நாளைக்கே நா உன்னை பார்த்தால் கூட நீ யார்னு கேள்வி கேட்பேன். டிவொஸ் பண்ணிகலாமா? கையெழுத்து போடுனு சொன்ன?" என அவள் அழத்தொடங்கினாள் .

அபிரன் "வந்தி. என்னை மன்னிச்சிடு டி. நா..உனக்கு விபத்து நடந்துச்சு கேள்விப்பட்டேன். அப்போ உடைஞ்சு போயிட்டேன். அதிலிருந்து உன் ஞாபகம் தான் டி என்னை விட்டு போகவே இல்ல வந்தி. வா கல்யாணம் செய்யலாம்." என அவன் கேட்க "ஓ!! வீட்டை விட்டு வெளியே போன அஞ்சாவது நிமிஷம்.. எனக்கு விபத்து நடந்துச்சு. என் குடும்பம் என்னை கைவிட்டுட்டு அனாதை நின்ன எனக்கு, பூரணி தான் துணையா இருந்தா." "விபத்து பெருசா நடந்ததுனு சொன்னாங்க. நா நீ இறந்து போயிட்டனு நெனச்சு இத்தனை நாள் நடைபிணமா வாழ்ந்துட்டு வரேன் தெரியுமா?" இதை கேட்டதும் அவள் "அப்படியே வைச்சுக்கோ.வந்தி செத்து போய் மூனு வருஷம் ஆச்சு, சூப்பர். உன்னை பொறுத்த வரை நா செத்து போய் ரொம்ப நாள் ஆச்சு. ஆனா, என்னை பொறுத்த வரை நீ இன்னும் என் அபி தான்! அது தெரியுமா உனக்கு?" என்றாள் தன்னுள் மறைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக.

******

"ஹர்ஷினி! வாங்க டா அம்மாகிட்ட." என குழந்தையை தூக்கி கொண்டு குளியல் அறைக்கு சென்றால் துர்கபூரணி. "இந்த விளையாட்டை எத்தனை நாளைக்கு அவந்தி இழுக்க போறானு தெரியல பூரணி." என ப்ரித்வி பேச. "அவளுக்கு சும்மா இருந்தா பிடிக்காது. அதான், சின்ன குழந்தை மாதிரி பண்ணுறா. ஹர்ஷினிய குளிக்க வைச்சுட்டு அப்படியே நானும் குளிச்சிடுறேன்." என அவள் கூற "பூரணி பால் வாங்க போனா..ஆளையே காணோம். நா அதுவரை பாட்டு கேக்குறேன்." என தொலைக்காட்சியை பாடல் கேட்கும் பகுதிக்கு சென்று பாட்டு கேட்க அப்படியே லயந்து போனால் ப்ரித்வி.

ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன்..உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்? எனக்குள்ளே நானும்..தினம் கேட்கிறேன்..?இனிமேல் நானே நீயானேன் இவன் பின்னாலே போவேனே.. இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து!

"இதே, போல தர்ஷமித்ரன், நா எப்பவும் ஒன்னா காலம் பூராவும் காதலோட வாழ்க்கையை பயணிக்கனும்."

****

கடையில் பால் வாங்கிவிட்டு வேகமாக நடக்க அவன் மீண்டும் பேச தொடங்கினான். "வந்தி! அப்போ நீ இன்னும் என்னை காதலிச்சுட்டு தான் இருக்கீயா?" என அவள் கையை பிடித்து கேட்டான். "விடு என் கையை! நீ இன்னும் என் அபி தான்! ஆனா, உன் மேல காதலும் கிடையாது. அந்த மாதிரியான உணர்வும் கிடையாது. என் போட்டோ எனக்கு வேணும்." என தன்னை பற்றிய நினைவினை அவனிடம் இருந்து கைப்பற்றி ஆக வேண்டும் என முடிவு செய்தாள்.

பொருட்களை வாங்கிவிட்டு வரும் வழியில் தர்ஷமித்ரனுக்கு அழைப்பு வர. பிணவறைக்கு சென்றான். அங்கு அந்த மருத்துவரிடம் இறந்து போன குழந்தையின் நிலைபற்றி மருத்துவர் கூறி ஆரம்பித்தார்.


"கில்லர் ஒரு ஆர்டிஸ்ட்னு நினைக்கிறேன். அந்த பெண் குழந்தை உயிரோடு இருக்கும்போது அவ உடம்புல வரைஞ்சிருக்கான். ரொம்ப டீப்பா வரைஞ்சு வச்சதனால.. ஆர்கன்ஸ் எல்லாம் ரொம்ப வலியடைஞ்சு இருக்கா. ஈவேன் போஸ்ட் மாட்டம் பண்ணும் போது கூட.. என்னால இதுக்கு மேல பண்ண முடியுமான்னு ஒரு சில தயக்கம் வந்துச்சு. கில்லர் ஒரு ஆர்டிஸ்ட், நீங்க இந்த சைடுல போய் தேடி பார்த்திங்கனா நல்லா இருக்கும். டிடெக்டிவ் நீங்க உங்களுக்கு நான் சொல்லி புரிய வைக்கணும்னு தேவையில்ல. இன்னும் எத்தனை குழந்தைகளை காவு வாங்க போறான்னு தெரியல? ஓவியம் என்ற பேர்ல அவன் கொலை பண்ணிக்கிட்டு இருக்கான். அடுத்த ஓவியமா எதை நெனச்சு, எந்த பொண்ணோட தோள்ல வரைஞ்சு வைக்க போறான்னு எனக்கு தெரியல? இந்த பொண்ணோட வாய்ப்பகுதி கிட்ட நிறைய ஓவியம் வரைஞ்சு வச்சிருக்கான். அது சின்ன பிள்ளை அந்த சின்ன பிள்ளை பாவம் அதுல தான் கடைசியா செத்துப் போய் இருக்கா." இவை அனைத்தையும் கேட்டு அந்த பெண்ணின் தாயார், தந்தையாரும் அழ தொடங்கினார்கள். "ஐயோ!! எட்டு வருஷம் கழிச்சு எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம். எங்க பொக்கிஷத்தை நாங்களே தொலைக்க வச்சிட்டோம். இப்ப அது ரொம்ப தூரம் போயிருச்சு!! நான் என்ன செய்வேன்?? என் பொண்ணுக்கு ஏன் இப்படி ஆகணும்? ஏன் அந்த படுபாவி என் பொண்ணு எப்படி கொள்ளை துடிச்சா? எதனால செஞ்சான்? ஏன் சார் என் பொண்ணு செத்ததுக்கு காரணமானவங்களை கண்டுபிடிச்சு. என் கைல கொடுங்க!!! நாங்க அவன சட்டத்து முன்னாடி கொண்டு வந்து நிறுத்த நினைக்கிறேன். தயவு செஞ்சு கண்டுபிடிச்சு கொடுங்க சார்." என தாயார் தர்ஷமித்திரனின் முன் வந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினாள்.

மறுபக்கம் அவந்திகா பாலை வாங்கிக் கொண்டு மாடிப்படி ஏற அவளைப் பார்த்த ப்ரித்வி "என்னடி ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா ?" என பட்டாசு போல் படபடவென பேசினாள். அவளை பின்தொடர்ந்து வந்த அபிரன் "என் கூட வந்தாங்க. பேசிட்டே வந்தோம் அதனால, லேட் ஆயிடுச்சு." அபிரனை பார்த்ததும் பிரித்வி பூரித்து போய் "ஓ நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரீங்களா? அவந்தி ஏன் நீ சொல்லவே இல்ல? எப்போ நீ இவரோட சேர்ந்து பழக ஆரம்பிச்ச?" கிசுகிசுப்பாக. அபிரனை பார்த்த அவந்திகா "நீங்க உங்க வீட்டுக்கு போலாம். என் கூட வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்." என கோபமாக பேசினாள். ப்ரித்விக்கு கேட்காத அவந்திகாவின் படி அவளது காதருகே "தயவு செஞ்சு என்னை காதலி. ஐ அம் ஸ்டில் லவிங் யூ." இதை கேட்டதும் அவள் எதுவும் சொல்லாது வீட்டினுள் சென்று அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினாள் .

வீட்டினுள் நுழைந்த அபிரன் அவளது புகைப்படத்தை பார்த்து "ஏன்டி?? இத்தனை நாள்.. எனக்குள்ள என்ன நடக்குது? ஏது நடக்குதுன்னு தெரியல? ஆனா, உன்னையே நினைச்சுகிட்டு இருந்தேன். அன்னைக்கு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடுனு ஒரு வார்த்தை சொல்லவும். நீ பாட்டுக்கு போன. அடுத்த அஞ்சாது நிமிஷம்.. உன்னை தேடி வரணும்னு ஆசைப்பட்டு வரும்போது.. ஆக்சிடென்ட்ன்னு கேள்விப்பட்டேன். நீ திரும்பி வர முடியாது! வர முடியாதுன்னு!! நிறைய பேர் சொன்னது கேட்டாலும் மனதைரியமா நான் காத்துகிட்டு இருந்தேன். நீ வருவன்னு. ஆனா நீ வரவேயில்லை, எங்கேயோ தூரமா போயிட்டனு உன்னை நான் சித்திரம் கொண்டு என் பேனாவால் வரைஞ்சு. இதோ, இவ்ளோ பெரிய புகைப்படமா.. நீ சிரிக்கிறதில் மாலை போடும் போது கண்ணீர்,கைநடுக்கம். மூனு வருஷம் கழிச்சு உன்ன பார்க்கவும் என் ஆசையை சொன்னேன். ஏன்!!!!!" என்கிற சத்தம் வீடெங்கும் ஒளிக்க. தூங்கி கொண்டு இருந்த ஹர்ஷினி அழத்தொடங்கினாள்.

துர்கப்பூரணி ஹர்ஷினியை பார்க்க ப்ரித்வி சமையலுக்கு என்ன செய்வது என யோசிக்கும் போது தான் அபிரன் அவனது ஞாபகம் வர கீழே இருக்கும் அவனுடைய வீட்டிற்கு சென்றாள் . அவ்வேளை தான் அவன் சமையல் செய்ய வாசனையை நுகர்ந்த படி உள்ளே வந்தவள் ஒரு பேரதிர்ச்சியை கண்டாள் அதில் அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், அவள் தன் தோழி அவந்திகாவின் புகைப்படத்தில் இருந்த மாலைகளை கழற்றிவிட்டு நேராக அபிரனிடம் "எப்படி நீ என் பிரண்ட் போட்டோவுக்கு மாலை போடலாம்? முதல்ல அவளுக்கு நீ யாரு? அவ போட்டோ உனக்கு எப்படி கிடைச்சது? நா பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடானா சும்மா அமைதியா இருக்க? யார் டா நீ?" என ப்ரித்வியின் இறுதி வார்த்தை அவனை மிகவும் கொடூரமாக தாக்கியது. கீரையை கடையும் மரக்கம்பை கொண்டு தேங்காய் உடைப்பது போல் அவளது தலையில் மூன்று முறை ஓங்கி அடித்தவன். அவளை தனியாக ஒரு இருக்கையில் அமர வைத்து கயிறுகளை கொண்டு கட்டி இருந்தான். குருதி வழிய மயக்கத்தில் இருந்தால் ப்ரித்வி ஒரு பக்கம்.

அபிரனை தேடிக்கொண்டு தர்ஷமித்ரன் மற்றொரு பக்கம்.

துர்கப்பூரணியை தர்ஷமித்ரனுடன் சேர்த்து வைக்க அவந்திகா செய்யும் குறும்பு விளையாட்டு இன்னொரு பக்கம்.

தானாகவே வந்து பல உடல் மற்றும் மனவலியை தாங்கப்போகும் ப்ரித்விகுப்தா இறுதிபக்கம்.

இனி, நடக்கவிருப்பது தான் என்ன? துர்கபூரணி,தர்ஷமித்ரன் காதல் பயணம் தொடங்குமா? அபிரனை ஏற்பாளா அவந்திகா? தன் தோழன் தான் குற்றவாளி என கண்டெடுப்பானா தர்ஷன்? அவந்தியின் நாடகம் வெளிவருமா?


🔥...... அனலாக நீ!கைக்கிளையாக நான்!.....💓

IMG_20240125_155947.jpg
 
Last edited:
அனல் 9✨

"ஏய் அவந்தி அந்த பிரித்வி பிள்ளையும் காணோம்? எங்க போனனே தெரியல? வயிறு வேற ரொம்ப பசிக்குது." என பூரணி வாய் விட்டு கூற. மைதிலியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து தன் செவியில் வைத்து பேசத் தொடங்கினால் அவந்திகா. "ஹாய் மைதிலி! தமிழ்நாட்டுக்கு வந்து இப்படி ஃப்ரூட்ஸ் சாப்பிடலாம் நினைச்சா நீ.. என்னடான்னா ஃபுட் சாப்பிட முடியாமல் எங்கள பட்டினி போட்டுக்கிட்டே கிடக்க? போ! உன் கூட பேச மாட்டோம்." என்றால் சிறுபிள்ளைத்தனமாக. "ஏய் அண்ணனுக்கு பிசினஸ் விஷயமா வேலை வந்துருச்சுடி. அதான் பிணவறை இடத்துக்கு போய் இருக்காரு. இன்னைக்கு ஃபுல்லா எங்க வீட்ல தான். நைட்டு நானே கொண்டு போய் உங்கள கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுடுறேன். உங்களுக்காக அம்மா வெஜ் நல்லா பண்ணி வச்சிருக்காங்க." அவள் இறுதியாக கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவந்திகாவின் உடம்பு எங்கும் புல்லரிக்க நாவில் எச்சி உள்ளுறும்படியாக எப்போதாவது எடுத்துப் பருகி சாப்பிடுவோம் என்ற உணர்வு ஏற்பட்டது. "சரி நாங்க வாறோம்." என்றதோடு அவள் நிறுத்திக் கொண்டால், அழைப்பையும் துண்டித்து விட்டால்.

****

குருதி ஒழுக மயங்கி கிடந்த ப்ரித்வியை எழுப்பினான் அபிரன் "நீ எங்கனு உன் பிரண்ட் தேடிக்கிட்டு இருப்பாங்க, ஏய்! எந்திரி!!!" என அவளது முகத்தில் தண்ணீர் ஊற்ற அவள் பதறி எழுந்தால். எழுந்தவளிடம் அவன் கூர்மையாக இருக்கும் கத்தியை காட்டி "நான் யாருன்னு தானே கேட்டுட்டு இருந்த? இப்ப சொல்றேன் நான் யாருன்னு. அவந்திகாவ உனக்கு இந்த மூணு வருஷமா தான் தெரியும். ஆனா.. எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். அவ ஒரு புரியாத புதிர் மாதிரி தெரியுமா? ஏதாவது ஒரு தப்பு பண்ணிட்டா.. தடையமே இல்லாமல் எப்படியாவது தீர்த்திடுவா. இப்போ, ஏதோ ஒரு தப்பு பண்ணி இருக்கா. துர்கபூரணியை ப்ரித்வியாவும், பிரித்வியை துர்கபூரணியாகவும் நடிக்க வைச்சிருக்கா. இதெலாம், அவளுக்கு அத்துபிடி. எனக்கு தெரிஞ்சு உனக்கு வரவேண்டிய தர்ஷமித்ரன் தான்.. அவளுக்கு கொடுக்கப் போறான்னு நான் சொல்லுவேன்." அவன் இறுதியாக கூறிய வார்த்தைகளைக் கேட்டு பிரித்வி அரண்டு போய்விட்டாள். "என்ன சொல்ற? அவந்திகா.. கிடையவே கிடையாது! எனக்கு நல்லது செஞ்சவ. குறும்பு காரிதான், நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா.. என் வாழ்க்கையே கெடுக்கிற அளவுக்கு அவ என்னைக்குமே யோசிக்க மாட்டாள். அப்படிப்பட்ட கேரக்டரும் கிடையாது. நீதான் கொலைகாரன்! உயிருடன் இருக்கிற என் பிரண்டுக்கு, மாலை போட்டு இவ்ளோ நாள்!! அவளை செத்துப்போனதா மனசார நினைச்சுக்கிட்டு.. இந்த உலகத்துக்கும், உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட காட்டி இருக்க. இப்ப சொல்லு!! நீ தப்பானவனா? இல்ல அவ தப்பானவளா?" இதை கேட்டதும் அவன் நகைக்க ஆரம்பித்தான். "உனக்கு இந்த மூணு வருஷத்துல அவள பத்தி எதுவுமே தெரியல? அது இப்பவே தெரிஞ்சு போச்சு. எனக்கு ரொம்ப சிரிப்பா வருது.. தெரியுமா? அவந்திகா வேறு யாரும் கிடையாது ஒரு வருஷமா என் கூட கல்யாண பண்ணிட்டு வாழ வேண்டிய வாழ்க்கையை கல்யாணம் பண்ணாம வாழ்ந்தவ." "என்ன சொல்ற? அவ உன் கூட ஒரு வருஷம் வாழ்ந்து இருக்காளா?" "ஆமா ஒரு வருஷம் ஒன்னா சேர்ந்து ஒரே அறையில் வாழ்ந்து இருக்கோம். நாலு வருஷம் ஒரே மொபைல்ல லவ்வராவும் வாழ்ந்து இருக்கோம்! எனக்கு அவளை அஞ்சு வருஷம் தெரியும்! ஆனா.. அந்த அஞ்சு வருஷத்துல அவன் என்கிட்ட பல விளையாட்டு விளையாடி இருக்கா. அதுல, பிடிச்சு போய் தான் ஒரு வருஷம் நாங்க சேர்ந்திருந்தோம். அந்த ஒரு வருஷத்துல எனக்கு அவள ரொம்ப புடிச்சி இருந்தது!! ஆனா? இந்த சொசைட்டி, இங்க இருக்கிற பொண்ணுங்க, அவங்க பண்ற விளையாட்டுக்கள், எல்லாத்தையும் பார்த்ததும்..பிடிக்கலை!!அவகிட்ட ஒரே ஒரு நாள் சண்டை போட்டு டிவோர்ஸ் வாங்கினேன். அவ்வளவுதான்! டிவோர்ஸ் வாங்குன நேரமா என்னன்னு தெரியல? ஆக்சிடென்ட்ல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டா." என அவன் விலாவாரியாக அனைத்து விஷயத்தை கூறினாலும். முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் கூறாமல் போனான். ஆனால், அதுவே கடைசியில் அவனது வாழ்க்கையில் ஒரு இடியாக விழும்! என அவன் நினைத்திருந்தால்? பிரித்வியிடம் அதையும் சேர்த்து கூறியிருப்பான், மர்மமான விஷயத்தை.

"உனக்கு அவந்திகாவை பத்தி தெரிய வைக்கணும்னா.. நீ அவந்திகா கூட இருக்க கூடாது! இங்க தான் இருக்கணும். உனக்கு வேலைக்கு தண்ணீர்,சாப்பாடு கொடுத்து பார்த்துப்பேன். உன்னை சித்திரவதை எல்லாம் படுத்த மாட்டேன். உன் முன்னாடி இருக்கிற இவ்வளவு பெரிய டிவில, மேல நடக்குற எல்லாத்தையும் சிசிடிவி ஃபுட்டேஜால உன் முன்னாடி கொண்டுவந்து நிறுத்துவேன். அவ என்ன செய்றா? எல்லாம் வாய்ஸ்ல கூட உனக்கு கேட்கிற மாதிரி ஃபிட் பண்ணிடுவேன். கடைசியா, எல்லாம் தெரிஞ்ச பிறகு சொல்லு, அவ தப்பானவளா? நான் தப்பானவனானு."

படி இறங்கும் சத்தம் கேட்டவன் வெளியே வந்தான். துர்கப்பூரணி அவனிடம் "என் தோழி ப்ரித்வியை பார்த்தா நாங்க மைதிலி வீட்டுக்கு போயிருக்கோம்னு சொல்லிடுங்கள்." என்றால் தகவல் கூறும் விதமாக. மைதிலி என் வீட்டிற்கு செல்வதாக இருவரும் தகவல் கூறி அவ்விடம் விட்டு சென்றார்கள் பின் அபிரன் தன்னுடைய அறையில் வந்து ப்ரித்வியை பார்த்து "இங்க பாரு, ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே போய்ட்டாங்க. இனிமே நான் போய் சிசிடிவி கேமரா வாங்கிட்டு வருவேன். அந்த ரெண்டு கேமராவை எங்க வைக்கணுமோ.. அங்க கரெக்டா வைப்பேன். அவந்தி பேசறது இந்த டிவில வீடியோவா தெரியும், அவ எப்பவோ பேசினாலும் அப்பப்போ உன் கண் கட்ட அவிழ்த்து விடுவேன். ஏன் தெரியுமா? அவளோட முகத்துல வர உணர்வுகளை நீ பாக்கணும், பார்த்து என்னோட வலிய நீ புரிஞ்சுக்கணும். ஏன்னா? நீ ஏமாந்து இருக்க! அது உனக்கே தெரியல!" "நான் ஏமாந்து இருக்கேனா? சரி பார்க்கலாம், நீ உளவாலி வேலை பாக்குற, உன் கூட சேர்ந்து நானும் என் தோழி மேல வச்சிருக்கற நம்பிக்கையை உடையாமல் அப்படியே இருக்குங்குறத. நீ திரும்பியும் உன்னோட இந்த டிவில பாத்து புரிஞ்சுப்ப." "இந்த போட்டியில நான் ஜெயிச்சா, உனக்கு
கைக்கட்ட அவிழ்த்துவிட்டு அவங்களுக்கு வலிய புரிய வைக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன், நம்ம சேர்ந்து காதல அடைஞ்சிடலாம். அதுவே நீ ஜெயிச்சுட்டா, என் ரகசியமே உனக்கு தெரிஞ்சிருச்சுல!
அதனால, உன்னை நான் கண்ணா பின்னாமா செத்தச்சு, அதுவும்.. அழகா உன் தோள்ல வரைஞ்சு. அந்தக் குட்டிப் பிள்ளையை கொன்னு போட்ட மாதிரி, உன்ன கொன்னு போட்டுருவேன்." இந்த வார்த்தைகளை கேட்டவளுக்கு ஒரு நிமிடம் தன் உயிர் தன்னை விட்டுப் பிரிந்து மீண்டும் உடலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.


***

வித்யாபாரதி தன் வருங்கால மருமகளை ஆசையுடன் வரவேட்றாள் அவந்திக்காவும் அவளோடு சேர்ந்து வீட்டினுள் வருகை தந்தால்.

ஆனால் பிரியா நடித்துக் கொண்டிருக்கும் துர்கபூரணியின் குழந்தை ஹர்ஷினி எரிச்சலை உண்டாக்க அவளிடம் "என்னம்மா நீ? துர்கபூரணியுடைய குழந்தைய நீ தூக்கிட்டு வர?" "அது வந்து.. ஆன்ட்டி. அவளுக்கு பாவம், உடம்பு சரியில்ல. அதான், காலைல இருந்து குழந்தை என்கிட்ட இருக்கா." மைதிலி உடனே "உன் வாய்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது! தயவு செஞ்சு எங்களுக்காக ஒரு பாட்டு பாடுரியா? முழு பாட்டு பாடணும். பாதியோடு நிறுத்தக்கூடாது." "பாத்தியா ப்ரித்வி!(துர்கபூரணி) உன் பாட்டுக்கு ரசிகர் மன்றம் கூடிக்கிட்டே இருக்கு." என கேலி செய்தால் அவந்திகா. அவளும் பாடத்தொடங்கினால்.

"எப்படி இருந்த என் மனசு ! அட இப்படி மாறி போகிறது! உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா? எப்படி இருந்த என் வயசு! அட இப்படி மாறி போகிறது! உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா? உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே! அலையும் உனது விழியை பார்த்தால்! பயமாய் இருக்கிறதே! அரிது.. அரிது.. இளமை அரிது! விலகிப் போனால் நியாயமா? மழை வருதே? மழை வருதே? விழிமேகம் மோதும் பொழுதே! சுகம் தருதே! சுகம் தருதே! உன் சுவாசம் தீண்டும் பொழுதே! எதை எதையோ.. நினைக்கிறதே மனது..


ஏய்! சொட்டு சொட்டு தேனா.. என் நெஞ்சில் விட்டுப்போனா! ஏங்குதே என் மனம் துள்ளி துள்ளித்தானா! திட்டு திட்டுவேனா! ஏய் தில்லு முல்லு வேணா! தொட்டதும்.. பால் குடம் கெட்டுப்போகும் வீணா? அழகு என்பது பருக தானடி எனது ஆசைகள் தப்பா! நெருங்கும் காலம் தான் நெருங்கும் நாள் வரை நினைத்துக் கொள்எனை நட்பா! இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி!

ஏய் கிட்ட வந்து நின்னா! அதை குற்றம் என்று சொன்னா! ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா! கொக்கு வந்து போனா! அது நெஞ்சம் சொல்லும் தானா சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா! முறுக்கு போலவே இருக்கும் காதுகள் கடிக்கத் தூண்டுதே அன்பே! துடுப்பு போலவே இருக்கும் கைகளால் அடிக்க தோன்றுதே அன்பே! நடையோ? உடையோ? ஜடையோ? எடையோ? எதுவோ என்னை தாக்குதே!"

கைக்கிளையாக வந்துவிட்டேன்💓
 
அனல் 10✨

துர்கபூரணியின் பாட்டுக்கு கரங்கள் சத்தம் கேட்க, அவந்திகா மட்டும் கரகோஷம் செய்யாமல் இருந்தால். அவளது மனம் 'ஏனோ தவறு செய்து வருகிறோம்?' என உறுத்தியது. மெய்யை மைதிலியிடம் கூறுவதற்குத் தனியாக சென்றால்."என்ன சாப்பிட கூப்பிடுறாங்க? வா பசியில இருக்க தான வந்து சாப்புடு." என மைதிலி கூற "ப்ரித்வி, இவ கிடையாது." "தெரியும். நீ கொடுத்த ஆடியோவ நா கேட்டேன். ஆனா, என் அம்மாவுக்கும்,அண்ணனுக்கும் துர்கபூரணியை பிடிச்சுபோச்சு." என சரியாக யூகித்தாள். "மைதிலி, ஆன்டிக்கு பூரணி மேல நல்ல எண்ணம் வர்றதுக்கு தான் இந்த ஆள்மாராட்ட விளையாட்டு நடக்குது.." என அனைத்து விஷயங்களையும் கூறினாள். "இதுவும் நல்லது தான். ப்ரித்வி மனசுல ஆசை வளர்த்துக்காம இருந்தா, பிரச்சனை இல்ல." "அப்படியா? அது நடந்தது.. உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்." என வித்யபாரதி குரல் கேட்க "என்ன சொல்றீங்க மா?" என்றால் அதிர்ச்சியாக. "ப்ரித்வி மனசுல ஏன் ஆசை பட கூடாது? துர்கப்பூரணி தான் மனசுல ஆசையை வளத்துக்காம இருக்கணும். எப்பிடியோ, அவ வரவே இல்ல. சாப்பிட வாங்க." என அவந்திகாவையும் தன் மகளையும் அழைத்தார் மைதிலிக்கு அழைப்பு வர, தன்னுடைய அறைக்கு சென்றால்.

*****

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோர்களை பார்க்கும் போது தர்ஷமித்ரனுக்கு அத்தனை கோபம் 'அவன் எனவா இருந்தாலும். இந்த தர்ஷமித்ரன் எல்லோர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன்.' என அவன் நினைக்கும் போது அவனது அன்னையரிடம் இருந்து அழைப்பு வர, அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. வாங்கிய பொருட்களை கொடுக்க மறந்துவிட்டோம் என.

அன்னையின் அழைப்பை ஏற்றவன் "ஹூம் சொல்லுங்க மா?" என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். "மித்ரா ப்ரித்விகுப்தா வந்திருக்கா. சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வா." இவ்விஷயத்தை கேட்டவுடன். பறக்கும் ரதம் போல் வீட்டிற்கு வந்து சேர அவனது வேலை ஆள் ஒருவர் அழைக்க "சொல்லுங்க. ஏதாவது துப்பு கிடச்சதா?" என அவசரமாக கேட்க. "ஆமா சார். விக்டிம் அந்த செயின் எடுத்ததுல அவனுடைய இரண்டு கைகளிலும் ரெண்டு விரல் எக்ஸ்டரா இருக்கு." என அந்த ஆள் சந்தோஷத்துடன் கூற. "அப்பிடினா..விக்டிம்க்கு மொத்தம் பன்னிரண்டு விரல்னு சொல்றீங்க?" "எஸ் சார், இப்போ ரெஸ்ட் எடுங்க. நா ஃபோன் பண்ணதும் வேலைய ஸ்டாட் பண்ணுவோம்." என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு வீட்டினுள் அத்தனை உற்சாகத்துடன் "நான் துப்பறிவாளன்..பெயர் தர்ஷமித்ரன்..நா தப்பானவனை தட்டி கேட்பேன்!!" என அவன் பாட 'தப்ப தட்டி கேப்பானா? ரௌடி பையன்.' என அனல் பார்வையோடு அவனை எரிச்சலாக பார்த்தாள் துர்கபூரணி.


"அது சரி என்ன இங்க வந்திருக்காங்க?" என அவன் தோழிகள் இருவரையும் பார்த்து கேட்க "சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு, பசியோட தவிக்கவிட்டா. நாங்க என்ன பண்ணுவோம்?" என்றால் துர்கபூரணி. அவள் ஹர்ஷினியை கவனிக்க மறந்து போனாள். அவனது தாயார் சாப்பாட்டை எடுத்து வைக்க மைதிலியுடன் அவளது குழந்தை இருந்தால். அவளுக்கு பசியாற்றியதினால், அழுகாமல் கண்களை சுற்றி தவழ்ந்து கொண்டே பார்த்து வர. அலைபேசி கடலில் மூழ்கியிருந்தாள் மைதிலி. மெத்தையில் படுத்திருந்த குழந்தையோ தவழ்ந்து சென்று கொண்டே இருக்க, குழந்தை மெத்தையில் இருந்து விழுந்தது. அவளது அழுகுரல் கேட்டு துடிதுடித்து போனால் மைதிலி "அம்மா!!!!" என்கிற அவளது சத்தம் அனைவரையும் பதற வைத்தது. அனைவரும் அங்கு வந்து பார்க்க.

தான் பத்து மாதம் கருவில் சுமந்த குழந்தை தலையில் குருதி வழிய கதறுவதை பார்த்தவள் ஓடோடி சென்று தன் குழந்தையை அள்ளி அணைத்து கொண்ட படி "என்ன பண்ணிட்டு இருந்த மைதிலி? இப்படி குழந்தைய விழவைச்சு. ஐயோ!!!! ஆறு மாச குழந்தை அவ, சொல்லு மைதிலி?" என அவந்திகா கேட்டாலும். துர்கப்பூரணியினால் அவ்வேளையில் பேச இயலவில்லை. "வாங்க! ஹாஸ்பிட்டல் போவோம்." என்கிற வார்த்தை வரும் முன் அவ்விடம் விட்டு வெளியே சென்று வாசல் கதவை திறக்கும் முன்.."ஹர்ஷினி! ஹர்ஷினி மா! என்ன பார்? அம்மா உன்ன காப்பாத்திடுவேன். கண்டிப்பா! தைரியத்தை விட்டுடா.." என்கின்ற சொல் முடியும் கணம். குழந்தை மௌனமானாள், அதை அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மற்றவர்கள் அங்கு வர "ஹர்ஷினி!" என்ற அவந்திகாவை பார்த்த தோழி "போதும்!! உன் விளையாட்டு போதும் அவந்திகா! என்னை ப்ரித்விகுப்தாவா நடிக்க சொன்னது போதும்! நா நடிக்க ஒத்துகிட்டது, இவள விட்டு என்னை நீ கொஞ்ச நாள் தூரமா வைச்சிருந்த. ஆனா.. அந்த கடவுள் இவள ஓரேடியா பிரிச்சு வைச்சுட்டார்! நா துர்கபூரணி!! ஹர்ஷினி அம்மா. இப்போ..? அன்னைக்கே, நா தான் சொன்னேன்ல முசிறில இருக்கேன். நீயும் ப்ரித்வியும் போயிட்டு வாங்கனு கேட்டியா என் பேச்சை??" என அவள் கதற "நா..நல்லது தான் பண்ண நினைச்சேன்." என அவந்திகா பேசிய மறுகணம் "செத்து போயிட்டா டி! என் பொண்ணு செத்து போயிட்டாளே!! இது தான் நீ நடத்திவைச்ச விளையாட்டுல ஏற்படுற டுவிஸ்டா?" விழி நீரை ஒற்றை கையால் துடைத்து விட்டு "நீ ஆரம்பிச்ச விளையாட்டு எங்க வந்து நிக்கிது பார்! இவ தான் என் உலகம்னு இருந்தேன். இப்போ, ஹர்..ஹர்..ஹர்ஷினி போயிட்டா." என்றதோடு குழந்தைக்கு இறுதி சடங்கினை செய்து விட்டு வீடு திரும்ப வித்யபாரதி மற்றும் தர்ஷமித்ரன் இருவரிடம் மெய்யை கூறினால் மைதிலி.

தர்ஷமித்ரன் அவளை மனம்முழுவதுமாக நேசிக்க தொடங்கினான். காரணம், இப்போது அவளுக்கென்று ஒரு துணை தேவை.

*****

அபிரன் வீட்டை சுற்றி கேமராக்கள் பொருத்தியிருந்தான். ப்ரித்விக்கு ஒன்றும் புரியவில்லை. கட்டுண்டு இருக்கும் அவள் என்ன செய்வாள்? அவளிடம் வந்தவன் "பொழுது சாஞ்சுடுச்சு இன்னும் இரண்டு பேரும் வரவே இல்ல. எனக்கு தெரிந்து அவந்தி அங்க அவங்களை சேர்த்து வைக்க மாமா வேலை பார்த்துட்டு இருப்பா." என கூறவும் "ராஸ்கல்! நீ சொல்றத நா நம்ப மாட்டேன். ஆனா, நீ புரிஞ்சுக்கோ. அவந்தி நல்லவ. இந்த கேமரா அதை உனக்கு எடுத்து சொல்லும்." என்றால் திடமான குரலில். "பார்ப்போம்."

ஹர்ஷினி இறந்து ஒரு வாரமாகிவிட்டது.

தன் கருவில் வளர்ந்து, இத்தனை நாட்களாக பாசமாக வளர்த்து வந்த தன் பிள்ளை இப்படி திடீரென மறைந்து போனது. அவளை பேசவிடாது செய்தது.

இந்த ஒரு வாரமாக அவந்திகாவும்,துர்கபூரணியும் வீட்டிற்கு செல்லவில்லை. "அண்ணா. எனக்கு தெரியாமல் இப்படி நடந்துருச்சு." என அவள் பேச "என்ன??? தெரியாமல் நடந்ததா? இப்போ நீ செஞ்சிருக்கிற விஷயம் தப்பு கிடையாது, பாவம்! மிகப்பெரிய பாவம்!" என தர்ஷமித்ரன் தங்கையிடம் சீரினான். அவள் அழுத படியே கட்டிலில் அமர, ஹர்ஷினியின் ஆன்மா அங்கே வளம் வருவது போல் உணர்ந்து தன் தாயாரிடம் சென்றுவிட்டால்.

"துர்கப்பூரணி, நா உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?" என்றான் மிகவும் நிதானமாக. அவள் பேசும் நிலையிலும் இல்லை. ஆனால், அவள் அவன் பக்கம் திரும்பி பார்த்தான். "ஹர்ஷினி.. ஐ மீன், ஹர்ஷினிக்கு அம்மா நீ. அப்போ, அவளுடைய அப்பா யார்னு நா தெரிஞ்சுக்கலாமா?" என்றான் ஒரு வழியாக.

"அ..அ.. என்னை கெடுத்து யார்னு கூட எனக்கு தெரியாது." என்றாள் தகவல் கூறும் படியாக. "நீங்க எதுக்கு அதையெலாம் கேக்குறீங்க?" என தன்னுடைய குழப்பத்தை தீர்த்து கொள்ள கேட்டால். "எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. உன் வாழ்க்கை பூராவும் நா இருக்க ஆசை படுறேன். ஹர்ஷினினா எனக்கு கொல்லை ப்ரியம். இவ் யூ ஆர் வில்லிங் யூ மே." என அவளிடம் கூற.

"கண்ணாமூச்சி விளையாட்டு உங்களுக்கு பிடிக்குமா?"

"கண்ணாமூச்சி விளையாடுறதுல என்ன இருக்கு?" என சாதாரணமாக கேட்டான். "உங்களுக்கு அந்த விளையாட்டு சாதாரணமானது. பிடிச்சதும் கூட, ஆனா? ஹர்ஷினி என் வாழ்க்கையில் வந்ததுக்கு அந்த விளையாட்டு தான் காரணம்."

******

"என்ன பார்க்குற? ப்ரித்விகுப்தா. அவ வரமாட்டா?" ஆம், ஒரு வாரமாகிவிட்டது அவர்கள் சென்று. அபிரனின் கைபிடியில் இருக்கும் ப்ரித்வி செய்யகூடாத ஒன்றை செய்யதொடங்குவதற்கு நினைக்கிறாள். ஆனால் அதற்கு இன்னும் சற்று நேரம் எடுக்கும். "இப்போ, துர்கபூரணி, தர்ஷமித்ரன் இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்து கல்யாணம் பண்ணி, சாந்திமுகூர்த்தமே நடத்தி வைச்சிருப்பா அந்த அவந்திகா! இப்போ எனக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா?" என கூற அவள் "எ..எனக்கு..இன்னும் நம்பிக்கை இருக்கு." என்றாள் திக்கி திணறி. "பாரு, உன் குரல் திக்க ஆரம்பிச்சுடுச்சு. இது தான் உண்மை. பொம்மலாட்டம் ஒன்று நடக்கிறது..பொம்மைகள் இரண்டு இருக்கிறது..ஆட்டம் நன்றாக தொடங்கியது..ஆனால், ஒரு பொம்மையோ பாதி ஆட்டத்தில் காணாமல் போய், கள்வனிடம் சிக்கியது ஆடா(டு)க." என்கிற இந்த கவிதையை கேட்கவும் அவளுக்கு தன்னை பற்றி கூறுவது தெரிய வந்தது.


கைக்கிளையாக நான் வந்துவிட்டேன்💓
 
அனல்11✨

துர்கபூரணி கூறுவது ஏதும் அவனுக்கு புரியவில்லை. "எனக்கு நீ சொல்ல வர விஷயம் புரியவே இல்ல." "அது வந்து தர்ஷன்." என அவள் முதல் முதலாக இப்போது தான் அவனது பெயரை குறிப்பிடுகிறாள். 'எப்பையும் நா இருப்பேன்.' என மனதால் நினைத்து அவளது கரங்களை பிடித்து "நீ என்னை ரௌடி பையன்னு கூப்பிட்டாலும் சரி தான். தர்ஷன் சொல்லி கூப்பிட்டாலும் சரி தான்." என்றான்.அதுவே அவனை பற்றி அவளுக்கு நல்ல எண்ணம் தோன்றும் படி செய்தது.

*****

"ப்ரித்வி, உன் ப்ரண்டோட குழந்தை. அந்த குழந்தையோட அப்பா யாருனு தெரியுமா?" என்றான் கர்ஜனையாக. "என்ன?" என்றால் சந்தேக குரலாக. "ஹா!! சொப்பா!!! அந்த குழந்தையுடைய தந்தை. உன் மொழில சொல்லனும்னா பப்பா. அந்த குழந்தையுடைய அப்பா விச் மீன்ஸ் பப்பா(அப்பா) நான் தான்." என அபிரன் கூறவும் அவளுக்கு அத்தனை பெரிய அதிர்ச்சி.

******

"என்னை கெடுத்தவன நா பார்த்ததில்லை. கண்ணாமூச்சி விளையாடும் போது என்னை தனியா எங்கேயோ அவந்தி கூப்பிட்டானு சொன்னான். கதவ சாத்திய சத்தம் கேட்டதும் என் கைகளை கட்டி..வழுக்கட்டாயமா.." அவளால் அதற்கு மேல் கூற முடியவில்லை. "ஓ! ஐயம் சாரி. நா இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது." என்றான் கவலையாக.

****

"நீ ஹர்ஷினிக்கு அப்பாவா? பொய் மேல பொய்! என்னை கோப படுத்துறதே உன் முழுநேரம் வேலையா போச்சுல? இதோ, பார் எனக்கு அப்படியே தலையெல்லாம் வெடிச்சிடும் போல இருக்கு. யூ ஆர் பெவர்ட்!"

கண்ணாமூச்சி ரேரே..கண்டுபிடி யாரு??? கண்ணாமூச்சி ரேரே..கண்டுபிடி யாரு???

இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரிகிறது இப்போது!! இது ஆண்டவன்! ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது...! ஹய்யோ! இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ!! ஹய்யோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ!


"மி! நல்லா பேசுற போ. உன் ப்ரண்ட் அவந்திக்கு ஃபோன் பண்ணு." என அவன் கூற அவளை அவ்வாறே செய்ய வாரமாகிவிட்டது. இப்போது, ப்ரித்வியின் அழைப்பை பார்த்ததும் உடனடியாக அழைப்பை எடுக்க, அபிரன் கேட்கும் படி அவள் தனது அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு வைத்திருந்தால். "ப்ரித்வி." என அவளை எப்போதும் அழைத்தால். அதில் தேடல் இல்லை, கவலை இல்லை, சந்தோஷமும் இல்லை. ஜடம் போல் தான் அவள் தன் வார்த்தைகளை உச்சரித்தாள்."அவந்தி, என்னாச்சு? இஸ் தெர் எனி ப்ராப்ளம்?" என அவள் சரியாக யூகித்து கேட்க. "ஹ..ஹ..ஹர்ஷினி" என அழத்தொடங்கினாள். "ஹர்ஷினிக்கு என்னாச்சு?" என தோழியவளும் பதற. அபிரன் மீண்டும் பதட்டத்திற்கு தள்ளப்பட்டான். அவந்திகா தன்னை சமன்படுத்தி கொண்டு "ஹர்ஷினி இறந்து போயிட்டா. நா தான் தேவையில்லாமல் உங்க இரண்டு பேரையும் ஆள்மாராட்டம் விளையாட்டு நடத்தி துர்கபூரணி குழந்தையை ஓரேயடியா..அவ என்கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டா.

(தேனிடம் கேட்டேனே தேனை தந்தானா? உயிரிடம் கேட்டேனே உயிரை தந்தானா?உறவை கேட்டேன் உறவை கொடுத்தானா? அனலாய் நீ இருந்து.. கைக்கிளையாக நான் ஆனேன்..!..)

அவந்தி தொடர்ந்து "என்னால பூரணிய இப்போ பாக்க முடியல! ரொம்ப கஷ்டப்படுற தெரியுமா? மைதிலிகிட்ட கூட பேச மாட்டேங்குற? அவள முழு நேரம் கவனிச்சுக்கிறது தர்ஷமித்ரன் தான்." அவந்திகா இறுதியாக கூறிய வார்த்தைகளை கேட்டதும் அபிரன் சிரிக்க தொடங்கினான். ஆனாலும் அவந்திகா தன் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை, மீண்டும் தொடர்ந்தாள்."இப்ப கூட தர்ஷமித்ரன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கா. என்னை பாக்க மாட்டேங்குற. வித்யபாரதிமா அவளை சாப்பிட சொல்லி கூப்பிட்டு இருக்காங்க. பசி கூட அவளுக்கு இல்லை! ரொம்ப கவலையா இருக்கு. பிரித்வி, நீ வந்தா அவ கொஞ்சம் சரியாவான்னு தோணுது. ப்ளீஸ் வரியா?" "கண்டிப்பா நான் வரேன்." தன் தோழியின் குழந்தை இறந்து போய்விட்டது என்ற செய்தியை கேட்டதும்,ப்ரித்வி அதற்காக எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை, கவலைகளை அவள் அவந்திகாவிடம் இருந்து பகிர்ந்து கொள்ளவில்லை.

"தர்ஷன் என் வாழ்க்கையில நா படாத கஷ்டம் அப்படின்னு சொன்னா எதுவுமே கிடையாது. என்கிட்ட சொல்ல முடியாத, இதனால் வரைக்கும், ஒரு பொண்ணு யாராவது தப்பா தொட்டாங்கனா? அந்த பொண்ணுக்கு அடுத்து அந்த பையனை பார்க்கும்போது எரிச்சல் வரும், ஆனா.. என் விஷயத்துல அந்த கடவுள் ஒரு அதிர்ஷ்டம் பண்ணி இருக்கார். அந்த பையன் யாருன்னு என் கண்ணுல காட்டாம விட்டுருக்காரு. அதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அடுத்த சந்தோஷமான விஷயம் ஹர்ஷினி. அவளை தவிர வேற எதுவுமே இல்ல. பெத்தவங்களை என்ன ஒரு மாதிரி பார்த்தாங்க. எங்க தங்குறது? யார் கூட பேசி பழகுறது? எதுவுமே இல்லாத அனாதையா இருந்த எனக்கு அவந்திகா தான் துணையா இருந்தா." என தன் ஏக்கத்தை கொட்டி தீர்த்தால்."சரி அழாத, ராணி இங்க பார்! என்னை பாறேன்." என அவளது நாடி பிடித்து பூ போல நிமிர்த்தி விட அருவி போல் சிந்தும் கண்ணீர் துளிகளை துடைத்து விட்டவன் அவளிடம் "இப்போ, உனக்காக நா இருக்கேன். இனியும் இருப்பேன், நீ எனக்கு ப்ரித்வியா தான் அறிமுகமான..அவந்தி இந்த விளையாட்டை நடத்தினது எனக்கு இப்போ பிடிச்சிருக்கு." என்ற இந்த வார்த்தைகளை கேட்கவும் அவள் திரும்பி செல்ல முரட்டு கரம் கொண்டு அவளின் கரங்களை பிடிக்க துர்கபூரணி முயன்று பார்த்தால், முடியவில்லை இறுதியாக அவள் அவனை நோக்கி திரும்ப அவனது முரட்டு பிடி அவளை அவனோடு சேர்க்க வைத்தது. இருவரும், தடுமாறி விழுந்தார்கள். அதில் ஏற்பட்டது அவர்களது முதல் இதழ் பூட்டு.


ஒரு மனம் எங்கிளும்..ஏதோ, கணம் கணம் ஆனதே! தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே! அலைகளின் ஓசையில் இடஞ்சலாய் வாழ்கிறேன்!!! நீயோ? முழுமையாய்! நானோ? வெறுமையாய்! நாமோ? இனி சேர்வோமா? யாரோ மனதிலே! ஏனோ..கனவிலே நீயா உயிரிலே? தீயாய் தெரியவே..!

இக்காட்சியை பார்த்த வித்யபாரதி 'விதி ஏன் என் மகன் வாழ்க்கையில இப்படி விளையாடுது?'என்றார் இதற்கே. ஆனால், இனி அவர்கள் வாழ்வில் பற்பல பிரச்சனைகள் வரப்போகிறது என அவர்களுக்கு தெரியவில்லை.

*****


அபிரன் அவளை பார்த்து "நா உன்னை அங்க அனுப்பி.." என அவன் முழுவதுமாக கூற வர முன்னர். "நா துர்கபூரணிய சும்மா விட மாட்டேன்! என் வாழ்க்கைய, நா தான் காப்பாத்திக்கனும். உனக்கு தேவை அவந்திகா. எனக்கு தேவை என் தர்ஷமித்ரன். நம்ம இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துப்போமா?" என்றால் தானாக. "சரி, ஆனா..உனக்கு தர்ஷமித்ரன் கிடச்சதும், எனக்கு அவந்திகாவை எப்படி கல்யாணம் பண்ணி வைப்ப?" "அத பற்றிலாம் கவலையே வேணாம். ஹர்ஷினி இறந்து போன சோகத்துல எல்லாருமே கவலையாக தான் இருப்பாங்க. அதனால, என்னென்ன நடக்குதோ? எல்லாத்தையும் உன்கிட்ட காணொளியாக நான் காட்டுறேன்." என அவனிடம் கூறினால்.

"காணொளியாக காட்டுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா? நீ என் கூட கூட்டு சேர்ந்து கிட்ட விஷயம் வெளியே தெரிய வந்துச்சுன்னா.. ரொம்ப கஷ்டம், எனா ஐயம் கல்பிர்ட்.(குற்றவாளி)" இவன் இப்படி கூறியதாவது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "கொலைகாரனா? அப்படி என்ன கொலை? இப்படி கொலை பண்ற அளவுக்கு யாரு உன்ன தூண்டி விட்டா?" "அது உனக்கு தேவையில்லாதது. நீ அவந்திகாவோட என்னை சேர்த்து வைக்காமல் போனா? என்ன தண்டனை நா உனக்கு தர?" நொடியும் சிந்திக்காமல் "என்னை சாவடிச்சுடு." இப்படி ஒரு அதிரடியான பதிலை அவள் தருவாள் என கொலைகாரன் அபிரனுக்கு அதிர்ச்சியை தந்தது.


கைக்கிளையாக நான் வந்துவிட்டேன்💓
 
Last edited:
அனல் 12✨

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிகுச்சு. பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாத்து! பாருங்க டி, பொண்ண பாருங்க டி, வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திடுச்சு!

துர்கப்பூரணி தர்ஷமித்ரன் இருவருக்கும் இன்று திருமணம். அவளது வாழ்வில் இது அவள் எதிர்பாராத ஒன்று. வித்யபாரதி மற்றும் ப்ரித்வி இருவரும் சிலை போல் நின்று கொண்டு இருந்தார்கள். "அம்மா நீங்க இப்படியெலாம் இருக்குறது, எனக்கு ரொம்ப கவலையா இருக்கு." என அவள் அவரிடம் கெஞ்ச அவர் அவளை பார்க்காமல் "மித்ரா! இப்பவும் சொல்றேன். இந்த அழுக்கை உன் வாழ்க்கை பூரா வைச்சுக்கப்போறியா?" என்றார் அதிரடியாக. அவந்தி முன் வந்து "ஆன்டி யாரை பார்த்து அழுக்குனு சொன்னீங்க?" என சீரினால்.அதற்கு ஏற்றார் போல் "உன்னால தான் எல்லாமே! இப்படி இவளை அவேன் கூட சேர்த்து வைக்க தானே, ஆள்மாராட்டம் விளையாட்டு நடத்தி வைச்ச?இந்த லூசும் என் தர்ஷமித்ரன ஷாதி(கல்யாணம்) செய்ய வந்திருக்கு." என கோபம் கொண்டு பேச இதற்கு மேல் தான் அமைதியாக இருப்பது சரிவராது என அறிந்த தர்ஷமித்ரன் "போதும்! நிறுத்துங்க மா." என அவன் கத்தினான்.

"போதும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நல்ல நாளதுமா இப்படி ஆள் ஆளுக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க? இவ என்ன அழுக்கு பிடிச்சவளா? நீங்க பண்ணது உங்களுக்கு தெரியலையா? ஏம்மா இவ சொன்னான்னு, இவ காட்டுனான்னு, அதை போய்.. நீங்க தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஒரு பொண்ணோட மனச இப்படி இன்னொரு பொண்ணு கெடுக்கலாமா? இவள போய் நீங்க அழுக்குன்னு சொல்லி, என்னென்ன வார்த்தை பேசிட்டு இருக்கீங்க? அதுவும் முகூர்த்த நேரத்துல மணமேடையில் வந்து உட்கார்ந்ததுக்கு அப்புறம்." என தர்ஷமித்ரன் தனது வார்த்தைகளை வெளியில் தீர்த்து கொட்டினான். "மித்ரா நான் சொன்னது என்ன தப்பா? நீயே நினைச்சு பாரு! இவ பண்ண வேலைக்கு.. இவள நீ கல்யாணம் பண்ணி காலம் பூரா இருக்கணும்னு உனக்கென்ன தலையெழுத்தா? உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கணும்னு இருந்தேன், ப்ரித்வி பாரு, எவ்ளோ நல்ல பொன்னாட்டம் இருக்கா தப்பு தட்டு கேட்கிறாள். அவளை விட்டுட்டு நீ அழுக்கு புடிச்சி துர்க்கப்பூரணியை கல்யாணம் பண்ணி என் வீட்டு மருமகளா குத்து விளக்கு ஏத்த இது நியாயமா!! நான் ஒருபோதும் ஏத்துக்க மாட்டேன்!!" என அவர் அழுகையோடு தன் மகனிடம் எடுத்துரைக்க தன்னுடைய மகளும் வித்யபாரதியை பார்த்து "ஹேமா! அண்ணாக்கு இவ்வளவு பெரிய மனசு, துர்கபூரணிகுனு யார் இருக்கா? அவந்திகாவும், நம்மளும் தான் அம்மா இருக்கோம். பிறந்ததிலிருந்து குடும்பம்னா என்னனு, தெரியாம வளர்ந்த இவளுக்கு, அண்ணன் மூலமா ஒரு சின்ன குடும்பம். அழகா கிடைக்கப் போகுதுன்னு சந்தோஷத்துல இருக்கேம்மா. நீங்க இப்படி பேசுறீங்க! துர்கபூரணியை பாருங்க! எவ்வளவு கவலையா இருக்கான்னு, ஒரு பொண்ணு மனமேடைய்ல இப்படியா உட்கார்ந்து இருக்கணும்? அதுவும் கவலையோட, இப்படி ரெண்டு மனசையும் அழவெச்சுக்கிட்டு கல்யாணத்தை நீங்க இரண்டு பேர் பண்ணுற ஆசீர்வாதமும் சாபமாதமா இருக்கும். தயவு செஞ்சு இந்த இடத்தை விட்டு நீங்க போங்க!!" என மைதிலி தன் வாழ்நாளில் முதல் முறையாக சரியான இடத்தில் சரியான வார்த்தை கொண்டு பேசினால். "பாருங்கமா மைதிலிக்கு தெரிஞ்ச விஷயம் கூட உங்களுக்கு தெரியல? நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா? கல்யாணமே வேணானு இருந்த எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி, இவளை காட்டினீங்க. இவளை நீங்க ப்ரித்திவியா தானே ஏத்துக்கிட்டீங்க? இவ கண்ணு அழகா இருக்கு, இவ பாடுனது அழகா இருக்குன்னு, நீங்க ஒவ்வொன்னையும் ரசிக்கல? இப்போ இவ துர்கபூர்ணின்னு தெரிஞ்சதுக்கு. அப்புறம் இவள் அப்படியே ஒதுக்கி வைக்கிறதா? ஒரு சம்பவம் சின்ன சம்பவம், அது மறைமுகமாக நடந்துச்சா? நடக்கலையானே? தெரியாத ஒரு சம்பவம். அந்த சம்பவத்தையும் நாங்க கண்ணு முன்னாடி ஒப்படைச்சு. இது நிஜம் இல்ல பொய்யின்னு நிரூபிச்சாச்சு. அப்படி இருந்தும் நீங்க இன்னும் இந்த பிரித்வி கூட சேர்ந்து துணை போய்கிட்டு இருக்கீங்களே? இது நியாயமா? உங்க பையனோட கல்யாணத்த நீங்க பார்க்க வேண்டாமா?" "வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்!!!! இப்படி ஒரு கல்யாணம் உனக்கு வேண்டாம்!! அம்மா சொல்றேன் ப்ரித்வியை கட்டிக்கோ." என தாயும் மகனும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க.
துர்கபூரணி அழ தொடங்கினாள். அவளது சத்தத்தை கேட்டு மீண்டும் மனவரைக்கு சென்று அவளது பக்கத்தில் அமர்ந்து "ஐயரே, நீங்க மந்திரம் சொல்லுங்க. நாங்க கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கோம். எங்களுக்கு பிடிக்காதவங்க யாரும் இந்த கல்யாணத்துல இருக்கணும்னு அவசியம் இல்ல! அவங்க சாபத்தால எங்க வாழ்க்கை சீரழிக்க நாங்க விரும்பல! நல்லவங்க மட்டும் எங்க கூட இருந்தா போதும்." என மறைமுகமாக தன் தாயாருக்கு இடிப்போல் ஒரு அடியை கொடுத்தான் தர்ஷமித்திரன்.

ப்ரித்வியின் மனதில் ‘தேனிடம் கேட்டேனே தேனை தந்தானா? உயிரிடம் கேட்டேனே உயிரை தந்தானா?உறவை கேட்டேன் உறவை கொடுத்தானா? அனலாய் நீ இருந்து.. கைக்கிளையாக நான் ஆனேன்..’ "முடியாது! தர்ஷ் அத்த மனச காயப்படுத்தி நம்ம சேர்ந்து வாழ்றது ஒரு வாழ்க்கை இல்லை." என்றால் அவனது பூ "நா சொல்ல வர்றத புரிஞ்சுக்கோ பூ. அம்மாவுக்கு இப்போ, நம்மல வாழ்த்தும் எண்ணமும் கிடையாது. அதோட..நீ தேவையில்லாம மனச போட்டு குழப்பி எடுக்காத. என் பூ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்." என அவளது முகத்தில் புன்னகையை வரவழைத்தான்.

கெட்டி மேலம் கொட்டிட மணப்பெண்னை..
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை..
என்பது போல் அவளது கழுத்தில் மூன்று முடிச்சுகள். முதல் முடிச்சு 'நீ,நா எனும் வேறுபாடு நாம் என மாறிவிட்டது.' இரண்டாவது முடிச்சு 'இனி நா உன்னில் பாதி, நீ என்னில் மீதியாக.' இறுதி முடிச்சு 'என் ஆதியும் அந்தமும், என் சொந்தமும் பந்தமும், என் சந்தோஷமும் கவலையும், என் ஒட்டு மொத்தத்தில் இனி முதல் பங்கு உனக்கு.' என சொல்லும் வகையில் முடிச்சுகள். அனலை சுற்றி மூன்று முறை வளம் வருகையில் அவன் அவளிடம் "நா இரண்டு அனல்களை சுத்திட்டு வரேன்." என்றான் அவளுக்கு புரியாத படி "என்ன?" என்றால் அதை தீர்த்து கொள்ளும் விதமாக. "ஒரு அனலை நா மூனு முறை சுத்தி வந்தா போதும். இன்னொரு அனலை நா வாழ்க்கை பூரா பூ போல கூட்டிட்டு போகணும்." அப்போது தான் அவள் புரிந்து கொண்டால். தனக்கு அவன் அனல் எனும் பட்டை பெயர் வைத்துள்ளான் என்று. அம்மி மிதித்து மிஞ்சியின் முத்தம் பதிக்க அழகாக அதை புகைப்படம் எடுத்து கொண்டார்கள். வித்யபாரதி அங்கு இல்லாததால் கடவுளின் சிலைக்கு முன் அவர்கள் தங்களது ஆசியை பெற்று கொண்டார்கள்.

இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்? ப்ரித்வி என்ன தான் வசியம் வைத்து வித்யாபாரதியை மாற்றினால்? இடையில் நடந்த சம்பவம் தான் என்ன????

அன்று இரவு..

அபிரனுடன் பேசிவிட்டு தர்ஷமித்ரன் வீட்டிற்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. தர்ஷமித்ரன், துர்கபூரணியின் கண்ணோடு கண் பேசும் காட்சியை பார்த்ததில் கோபம் தலைக்கு மேல் எற. மனதளவில் மறுபக்கம் தன் மகனை பற்றி வருந்தி கொண்டு இருந்தார் வித்யபாரதி. அவரை பார்த்த ப்ரித்வி "ஆன்டி!" என்ற அவளது குரல் தான் இவர்கள் இருவரையும் தன்னிலைக்கு வரவழைத்தது. எழுந்தவள் தோழியை அணைத்து அழுத படி. "என் பொண்ணு, உனக்கு தான் அவ பிரச்சனை பத்தி தெரியும்ல. பிறக்கும் போதே கட்டி இருக்கு இவ வளர, வளர அதுவும் வளரும். சின்ன அடி ஆழமா நெஞ்சுல பட்டா இவ இறந்துடுவானு சொன்னாங்கல. கட்டில்ல இருந்து விழுந்துல கட்டி வேலையை காட்டிச்சு ப்ரித்வி." என கதறினால்.

தன்னிடம் அழுது புலம்பி வரும் தோழியை நினைத்து வருத்தம் வரவில்லை. அதற்கு, பதில் கோபம் தான் அவளுக்கு 'ஹர்ஷினி பிரிஞ்சிபோறது விதி. இதை என்ன பண்ண முடியும்? பெத்த தாய் போல இவ சோகத்துல இருக்கலையே? என் தர்ஷமித்ரன ரொமன்ஸ் பண்ணிட்டு தான வர. என்னை நீயும்,அவந்தியும் பகடை காயா உபயோகப்படுத்திட்டு. இங்க டூயட் பாடுட்டு இருக்க. நாளைக்கு இருக்கு.' என அவள் தன்னுள் பேசிக்கொள்ள. அவளது அலைபேசி அலறியது. அவளுக்கு வேறு யார் அழைப்பார்? அபிரன் தான். "சொல்லு வீட்டுக்கு போயிட்டியா?" என்றான் எடுத்த எடுப்பில். "வந்தேன், நீ சொன்னது சரிதான். அவ என் தர்ஷமித்ரன வலைச்சு போட்டா. நீ என்ன பண்ணுவீயோ,ஏது பண்ணுவீயோ தெரியாது? ஆனா, துர்கபூரணி அவ வாழ்க்கையில் நிம்மதிக்காக நாய் போல அலையணும். நாலு பேர் நாளைக்கு ஷாப்பிங் மால்க்கு வர வை. அந்த இடத்தில் நா அவங்க வர வரை தான். இருப்பேன்,அவங்க வந்த அடுத்த கணம் ஓடிடுவேன். அப்போ, அவளை தனியாக கூட்டிட்டு போய் அசிங்க படுத்துங்க. அவமான சின்னமா தான் வரணும். கடைசியா, ஒரு சில விஷயத்தை எனக்கு தெரியாத நம்பர்ல இருந்து ஃபார்வட் மெசேஜ் போல அனுப்புற." என அவளது ஒவ்வொரு வார்த்தையில் கர்வம் ஓங்கி நெருப்பு போல் கோபம் கொந்தளத்தது ப்ரித்வி குப்தாவிற்கு.

"உண்மையாவே நீ அவள.." என அவன் திக்க "ஹேய்!!!" என்ற கர்ஜனையை கேட்டதும் அவளது தர்ஷமித்ரன் வர பேச்சை மாற்றும் விதமாக "அதெலாம் ஒன்னும் இல்ல அண்ணா. மேரா ப்யாரிவாளா தோஸ்திகா பச்சா மர்கய் (என் அன்பு தோழியுடைய குழந்தை இறந்து போச்சு அண்ணா.)" என அனிஷ்கிட்ட பேசுவது போல் பேச "என்ன? இப்போ தான வெறித்தனமா மானத்த வாங்கணும்னு உருமிக்கிட்டு இருந்த?" என்றான் புரியாத படி. அவ்விடம் விட்டு அவன் சென்ற பின் ஆழ்ந்த மூச்சொன்று விட்டு "அபிரன். உன் பிரண்ட் வந்ததுட்டான். அதான், எனக்கு சொன்னது போல நடக்கணும். கல்யாண பேச்சு இருந்தாலும் இருந்திருக்கும்." இப்படி இவள் கொலையாளியோடு உரையாடினால்.

மறுபக்கம், "மித்ரா! கெட்டது நடந்த வீட்டுல நல்லது நடக்கணும். இவளுக்கு நம்ம கல்யாணம் பண்ணி வைக்கணும். நீ என்னப்பா சொல்ற?" என்றார் வித்யபாரதி. "ஆமாம்மா, நா பூவ ஐ மின் துர்கப்பூரணியை திருமணம் செஞ்சுக்கிறேன். ஜோசியர் கிட்ட நீங்க நல்ல நாள் பாருங்க." "உனக்கு ரொம்ப பெரிய மனசு மித்ரா. அம்மா ஜோசியர் கிட்ட பேசிடுறேன். நீ போய் மருமகளோட இரு." என அவர் அவளை மனதார ஏற்று கொள்ளாமல் இருந்தாலும். வேறு வழியில்லை. அனைத்திற்கும் தான் காரணம், அதனால் அவர் ஜோசியரிடம் பேசிக்கொண்டு இருந்தார் அலைபேசியில்.தன் பூவை பார்க்க சென்றான் அவளின் ரௌடி பையன். "பூ.." என அவளை அழைக்க அவள் அங்கு இல்லை. பதறி போனவன் அவளை தேட முகத்தை துடைத்து கொண்டு வந்தால். "தர்ஷன். என்ன இங்க? நீ கல்யாணம் பண்ண வேண்டிய உங்க ப்ரித்வி கீழ இருக்கா." என்றால் சாதாரணமாக. அவளது கரம் பிடித்து "என் கண்ண பார்த்து சொல்லு! பூ, நீ என்னை தர்ஷன்னு சொல்றது பிடிக்கல." "அப்புறம், எப்படி கூப்புடுறது?" "ரௌடி பையன்!" இதை கேட்டதும் அவள் சிரிக்க தொடங்கினால். "இது காதல் காலம். இன்னும் ஒரு வாரத்துல காதலர் தினம்." "அதுக்கு, எனக்கும் என்ன சம்மந்தம்?" என்றால் எப்போதும் போல். "சரி, போகட்டும். நீ என்ன வேலை பார்க்குற? உன்னை பத்தி நா எதுவும் கேட்கவே தோணல." என்றான் அவளோடு சற்று நேரம் கடக்க வேண்டும் என்பதற்காக. "என் அம்மா அப்பா லவ் மேரேஜ். எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. காதலிச்ச போது ஏற்பட்ட உணர்வு, கல்யாணம் பண்ணின பிறகு ரியாலிட்டி வேலை பார்க்க. அப்படியே டிவோஸ் வாங்கிட்டாங்க. அன்னைக்கு இரண்டு பேரும் என்னை வெறுத்தாங்க. உங்க காதல் சின்னம் எனக்கு வேணாம்னு, மாறி மாறி சண்டை. அப்போ, எனக்கு எட்டு வயசு. அப்புறம், ஆர்பனேஜ்ல டோனேசன் மூலமா டிரஸ்,படிப்புனு வாழ்க்கை ஓடுச்சு. அவந்திகாவும் அவ தங்கையும் தான் என் பெஸ்ட் பிரண்ட். இங்க தான் மெடிசன்ஸ் முடிச்சேன். போஸ்மாட்டம் டாக்டர் ஆனேன்,அப்படியே..சைட்ல குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் வேலையை மறைமுகமா பார்த்துட்டு வந்தோம். அவந்திக்கு அது தான் வேலை. எனக்கும் அப்படியே..பழகிடுச்சு. இது தான் என் வாழ்க்கை." என தன்னை பற்றி கூறினால்.
IMG_20240213_211356.jpg

கைக்கிளையாக நான் வந்துவிட்டேன்💓
 
அனல் 13✨

"சொந்தம்னா என்னனு தெரிஞ்சுக்காத வாழ்க்கை. அப்பிடியே என்னை போல." என அவன் கூறுவதை கேட்டவுடன் "சொந்தகாரவங்க எல்லாம் உங்களுக்கு கிடையாதா?" என கேள்வி எழுப்பினாள். "அப்பா கிடையாது. அம்மாவ ரெண்டாவது கல்யாணம் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்ணாங்க. பட், ஷி கான்ட் டு இட். நீ ஹர்ஷினி பாப்பா கூட சிங்கிள் லைஃப் வாழ்ந்துட்டு வந்தது. எனக்கு என் அம்மா தான் ஞாபகம் வந்தாங்க." என்றான் மெதுவான,கவலை நிறைந்த குரலில்.

"மித்ரா" எனா அவனை அழைத்தபடியே உள்ளே நுழைந்தார் வித்யபாரதி. "என்னம்மா என்ன விஷயம்?" என மகன் கேட்க அவரோ அதற்கு "மனசு நிறைஞ்சு இருக்குது. ஜோசியகார்கிட்ட விஷயத்தை எல்லாம் சொன்னேன், முகூர்த்தம் பார்க்க சொன்னேன், முகூர்த்தமும் பாத்தாச்சு. என்னைக்குன்னு தெரியுமா? வர பதினொன்னு. நாளெல்லாம் பாத்தாச்சு, நேரம் கூட பாத்தாச்சு, அவந்திகா தான் துர்கபூரணியுடைய பிறந்தநாள் சொன்னா. அத வச்சு கணிச்சு ஜோசியர் இந்த தேதியை கொடுத்தார்." என்றதோட விடம் விட்டு அவர் செல்ல "உன் பிறந்தநாள் என்னைக்கி?" என்றான் தர்ஷமித்ரன் துர்கபூரணியிடம். "ஏன்? என் பிறந்தநாள் தேதி தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?" "என்ன பண்ணுவேனா!!! இங்க பாரு, நீ தான் என் வாழ்க்கை துணைவியே! உன்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும் கிராண்டா ரிசப்ஷன் மாதிரி பெஸ்டிவலா கொண்டாடுவேன். அதுக்காக தான் கேட்கிறேன், சர்ப்ரைஸ் பண்ண வேண்டாமா நா என்னுடைய பூவை." என் சற்று காதலாக. "சொல்றேன் கேட்டுக்கோங்க. என் பர்த்டே வர்ஷ கடைசி மாசம் பதினாறு. போதுமா!" சரியாக இந்த நேரத்தில்தான் தர்ஷமித்ரனின் அலைபேசி அலறியது. அவன் எடுத்துப் பேச தொடங்கினான். "ஹலோ தர்க்ஷமித்ரன் ஸ்பீக்கிங்." அந்தப் பக்கத்தில் "....." அதற்கு அவன் " என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு? முதலிய சொல்ல கூடாதா? எல்லாத்தையும் கடைசி நேரத்தில் சொல்றது! மணி என்னன்னு தெரியும்ல?" மீண்டும் அந்த பக்கத்தில் "....." உடனே கோபமாக "வைங்க வரேன்." என அவன் கிளம்ப அவனது கரத்தை பிடித்தவள். "இதைக் கேட்கக் கூடாது தான்.. இருந்தாலும் கேட்டு தான் ஆகணும், என்ன விஷயம்? என்ன பிரச்சனை? எதுக்கு இவ்வளவு கோபமா வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க? எதுவும் பிரச்சனை ஆயிடுச்சா?" என அவள் கேட்க அவள் கேட்பதும் நியாயமான ஒன்று தானே! அதனால், அவன் "அ..அது வந்து ஒரு இடத்துல கொலை நடந்திருச்சு. சம்பவத்தை பார்த்தவங்க யாருமே இல்ல. இப்போ ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்காங்க. போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கு டாக்டர்ஸ் யாரும் கிடைக்கல. அதான், சீனியர் டாக்டர் ஒருத்தர கூப்பிடலாம்னு இருக்கேன். ஆனா? இந்த நேரத்துல அவர் எடுப்பாரான்னு தெரியல? ஒரே குழப்பமா இருக்கு!" என அவளிடம் பகிர.

அவன் மீண்டும் தொடர்ந்தான். "இந்த விஷயத்துக்கு போஸ்ட்மார்ட்டம் டாக்டர் கூப்பிடுறது நல்லது தான், இது வந்து நாங்க சீக்ரெட்டா பண்ற மெஷின்.. அதனால, சீனியர் டாக்டர் வர அதிகமா ஒத்துக்க மாட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியல பூ?" எனை இவ்வாறு இவன் குழம்பி போயிருக்கும் நிலையைக் கண்டு துர்கபூரணி மீண்டும் அவனிடம் "நான் வேணும்னா போஸ்ட்மார்ட்டம் பண்ணட்டுமா? ஏன் சொல்றேன் அப்படின்னா, எனக்கு இதுல ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதோட, சீக்ரெட் மிஷின்னு சொல்றீங்க. இனிமே, வாழ்க்கையில எனக்கு எல்லாமே நீங்க, உங்களுக்குன்னு ஒரு உதவி பண்றது சந்தோஷப்படுகிறேன். போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கு உங்களுக்குனு தனியா ஸ்பெசிபிக்கா இடம் ஏதாவது வச்சிருக்கீங்களா? ஏனா நான் வந்து ஜாப் விட்டு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு அதான் கேட்கிறேன்." இந்தக் கணத்தில் தான் அவன் யோசித்தான் துர்கபூரணியின் வேலையும் அதுதானே? அவள் தன் கடந்த காலத்தில் இந்த வேலையை தானே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாள்! ஆகையால் வெளியே எங்கும் தேடாமல் தன் உதவியாளருக்கு அழைத்து அவரிடம் அனைத்தையும் தெரிவித்தவன்,ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றான் அந்த ராத்திரி வேளையில். "எங்க போற?" என்ன ப்ரித்வி கேட்க "முக்கியமான விஷயமா ரெண்டு பேரும் வெளியே போயிட்டு இருக்கோம்." என அவளிடம் தகவலை கூறினான் தர்ஷமித்ரன். "இந்த ராத்திரி வெளியில் அப்படி என்ன முக்கியமான விஷயம்?" என மீண்டும் கேட்க அவனுக்கு உள்ளுற கோபமும் வந்தது. "வெளிய போகும்போது எங்க போறீங்கன்னு கேட்டதே மொத(முதல்) தப்பு. இதுல என்ன விஷயம் வேற கேக்குறியா? போய் தொல, தூங்குற வேலைய பாரு. அதை விட்டுட்டு நாங்க எங்க போறோம்? என்ன பண்றோம்னு நீ பாட்டுக்கு விசாரிச்சுக்கிட்டு இருக்காத சரியா?" என்ற தொடா விடத்தில் இல்லாமல் இருவரும் அங்கிருந்து சென்றார்கள். ஆனால் இது பிரித்வியினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் உடனே அபிரனுக்கு அழைத்தால்.

"நிம்மதியா தூங்கிட்டு இருக்கும்போது தான் எவனாவது ஃபோனை போட்டு இம்சை பண்றது." என தன் உறக்கத்திலிருந்து மீண்டு எழுந்தவன் அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான். "சொல்லு என்ன விஷயம்? ஏதாவது கிடைச்சுதா? இல்லனா அங்க வரட்டுமா? போய் எதுவும் அப்டேட் பண்ணாம இருக்க?" வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க "நிறுத்து முதல்ல!" இவளது சத்தத்தைக் கேட்டு அவந்திகா எழ அதை கவனிக்க தவறினால் ப்ரித்வி. "இங்க பாரு அபிரின் இந்த ராத்திரி வேலையா தர்ஷமித்ரனும் துர்கபூரணியும் எங்க போறன்னு சொல்லாம, முக்கியமான விஷயமா போறாங்க வர பதினொராம் தேதி கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க. இந்த சமயத்துல, ராத்திரி நேரத்திலே இவர்கள் வெளிய போறது எனக்கு தப்பா படுது, மணி வேற ரெண்டாச்சு. என்ன ஏதுன்னு எனக்கு தெரியல? நான் போனா வீட்ல இருக்குறவங்க சந்தேகப்படுவாங்கன்னு தான் உன்கிட்ட சொன்னேன். இடம் எனக்கு தெரியாது? அவன் எந்த வண்டில போறான் மட்டும் நான் நோட் பண்ணி வச்சிருக்கேன். அந்த தகவல உனக்கு அனுப்புறேன். நீ எப்படியாவது அவங்க எங்க போறாங்க என்ன செய்றாங்கன்னு கண்டுபிடிச்சுக்கோ." என பிரித்வி அனைத்து தகவல்களையும் அவனுக்கு அனுப்பி வைக்க அவந்திகாவினால் இதை நம்ப முடியவில்லை. 'ப்ரித்வி அபிரன் கூட கூட்டு சேர்ந்துட்டாளா? அபிரன் ஒரு ஆள கூட்டு சேர்த்துக்கறது, யூஸ் அன் த்ரோ கப் மாதிரிதான். இதுல இவ கோபப்பட்டா என்ன கொன்னுடுன்னு சும்மா விளையாட்டுக்கு சொல்வாளே? இவ கூட ஏதாவது ஒப்பந்தம் பண்ணி தான் அவன் இவளை இங்கு அனுப்பி வைத்திருக்கிறான்? என்னமோ தப்பா படுது? ப்ரித்விய காப்பாத்தியே ஆகணும்.' என சரியாக யூகித்து அவந்திகா ஒரு முடிவை எடுத்தாள்.
****

"சார், கொலை நடந்தது உங்க கெஸ்ட் ஹவூஸ்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்குற சுடுகாடு. இடம் சுடுகாடா இருந்தனால இந்த சாலையில கடந்த வண்டிகள் எதுவும் பார்க்கல." என அந்த நபர் கூற "அப்போ, யார் பார்த்தா?" என்றான் தர்ஷமித்ரன். "நாய் கத்தன சத்தம் கேட்டு வந்தேன். இவங்க யார் சார்?" என அவனது பூவை பார்த்து கேட்க "இவ துர்கபூரணி, போஸ்மாட்டம் டாக்டர். நா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு." என அவன் கூறியதை கேட்டதும் "கங்ராஜூலேசன்ஸ். மேம், இந்த இருக்கு டெட் பாடி. நாங்க வெயிட் பண்றோம்." என அவளிடம் தகவல்களை கூறிவிட்டு வெளியே நிற்க. மனதை ஒருநிலை படுத்தி கொண்டு 'மூனு வருஷம் ஆச்சு. என் வேலை நா கைவிட்டு. இப்போ, என் ரௌடி பையனுக்காக மறுபடியும் என் வேலையை நா பார்க்க போறேன்.' என்றதோடு மனதின் வழி உரையாடி சிறு புன்னகையோடு முகமுடியை அணிந்து வேலையை தொடங்க.
வெளியே நின்று கொண்டு இருந்தவன் அவனிடம் "அந்த குழந்தைய கொன்னவன் சிக்கும் படியா ஏதாவது தடையம் கிடச்சதா?" என கேள்வி எழுப்பினான் தர்ஷமித்ரன். "கிடச்ச தடயம் தான் சொன்னேனே சார். விக்டிம்க்கு பன்னிரண்டு விரல்னு." அப்போது, அவனுக்கு ஒரு வாரத்திற்கு முன் இவன் மூலமாக தெரிந்து கொண்டோம் என நினைவிற்கு வந்தது. "அ.." என அவன் கூற வரும் முன் தர்ஷமித்ரன் அலைபேசி அலற அழைத்திருந்தது அபிரன். "மச்சான்! என்ன வீடியோ கால் பண்ணிருக்க?" என்றான் சந்தோஷமாக "மச்சி தர்ஷா இதோ பார். என் கனவு நாயகியை எப்படி வரைஞ்சிருக்கேன்னு பார்." என அவன் காட்ட திகைத்து போனான் தோழன். "ஹேய்!! இவ..பூவோட ப்ரண்ட் அவந்திகா தான?" அவனது தோழன் தர்ஷன் அந்த படத்தை பார்க்க அவனுடன் இருந்த அந்த நபர் அவனது விரல்களை பார்க்க அதிர்ச்சியானான். அத்துடன், அவனது ஓவியம் இவ்விரண்டயையும் வைத்து அபிரன் தான் அந்த கொலைகாரனாக இருக்க முடியும் என சரியான பாதைக்கு வந்தான். துர்கபூரணி அறையை விட்டு வெளிவருவதை பார்த்து அழைப்பை துண்டித்தான்.

"ஐயம் வெறி டிஸ்அப்பான்ட். இன்னும் சொல்ல போனா, அந்த பொண்ண உயிரோட போஸ்மாட்டம் செஞ்சிருக்கான். உடல் உறுப்புகள் சிதையும் படி கத்தியால வரைஞ்சி, அவள் மேல் அந்த நபர் ஆசை தீர்த்து..இதெலாம், தாண்டி தான் அந்த பொண்ணு இறந்து போயிருக்கா. என் லைஃப்ல நா எதிர்ப்பார்காத கேஸ் இது." என தன்னவள் கூறிய வார்த்தைகள் அவனை மிகவும் கோபத்திற்கு உண்டாக்கியது.

******
அபிரன் ஒரு பெரிய மது கோப்பையை எடுத்து பருகிய உல்லாசத்தோடு "மியாவ் மியாவ்! மியாவ் ஒன்..நம் இதயம் ஒன்னு டூ..நம் உடல் தான் இரண்டு..த்ரீ..நம் ஒன்னாசேர்ந்தா..எங்க சேரந்தோம்! வந்தி(அவந்திகா) என் செல்லமே! நானே உன்னை ஓரேயடியா பிரிச்சுட்டேன். அந்த கவலையில என்ன செய்யுறதுனு தெரியாமல் இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு கெடச்ச வெட கோழி மாதிரி வேட்டையாடினேன். இந்த அபிரன் என்கிற எனக்கு அவந்திகா எனும் பெயரில் வாழும் பெண்களை கொலை செய்வதை தவிற, வேறு எந்த கிளைகளும் இல்லை." என்றான் தன்னந்தனி வீட்டில் அவளது புகைப்படத்தை பார்த்து.

******

"இப்படி கொலை பண்ணின அந்த கொலை காரன் யார்!" என கத்த "சார், அபிரன் தான் நம்ம தேடுற கொலைகாரன்." தர்ஷமித்ரன் அதிர்ச்சியாக மீண்டும் அவன் தொடர்ந்தான். "இரண்டு கைலையும் ஆறு விரல்கள், அதோட ஆர்ட்டிஸ்ட். அதனால அவன் தான் கொலைகாரன்." என கூறவும் அவனால் நம்ப முடியவில்லை.
IMG_20240107_074112.jpg

கைக்கிளையாக நான் வந்துவிட்டேன்💓
 
அனல் 14✨

"என்ன அபி கொலைகாரனா? யூ மேட்! அவனே ஒரு பெண்ணை காதலிச்சு தேவையில்லாமல், அவன் அவசரப்பட்டு அவளை விரட்டி அடிச்சுட்டோமேனு வருத்ததுல இருக்கான். அவனை போய்..யூ ஆர் நாட் மை சீனியர். அத மனசுல வைச்சுக்கோ." என தர்ஷமித்ரன் கோபமாக்க விடாமல் "முதல்ல கொலைகாரன் கொலை பண்ண பொண்ணுங்க பெயர் என்ன?" என அவர்களுக்கு துடுப்பு சீட்டு எடுத்து கொடுக்க. "இந்த பொண்ணு பெயர் தெரியாது. ஆனா, நாங்க இன்வஸ்டிகேட் பண்ண இடத்துல முதல் கொலை செய்யப்பட்ட பொண்ணுடைய பெயர் அவந்திகா." என அந்த நபர் அவந்திகா என அவளது பெயரை கேட்டதும். "நாளைக்கு அபிரன் வீட்டுக்கு போறோம். இப்போ லேட் ஆயிடுச்சு, நீ வீட்டுக்கு போ. நாங்க அப்படியே கிளம்புறோம்." என தன்னவளுடன் வீட்டிற்கு வருகிற வேளையில் அவந்திகாவிடம் இருந்து அழைப்பு வர அழைப்பை எடுத்தவள் "சாரி அவந்தி சொல்லாமல் வீட்டை விட்டு வந்ததுக்கு." என சொல்லவும் மொபைலை ஸ்பிக்கரில் போடும் படி அவளது ரௌடி பையன் ஜாடை காட்ட அவள் அப்படியே செய்தாள். "பூரணி.." என அவள் அழைக்க "சொல்லு, என்ன விஷயம்? தூங்கல?" என கேள்வி எழுப்பினாள். "தூங்கல பூரணி, ப்ரித்வி பண்ணக்கூடாதத் தப்பை எல்லாம் பண்றா." இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. மேலும் கேட்க தொடங்கினார்கள். "அவ அபிரன் கூட கூட்டு வைச்சிருக்கானு நினைக்கிறேன்? நீ எதுக்கும் கவனமா இரு. என் மேல இருக்கிற கோபத்தை உன்கிட்ட தான் காட்டுவா." என அவள் கூற "அபிரன்..அவன் யார்டி?" என்ற வார்த்தைகள் கேட்டதும் தான் அவந்திகாவிற்கு நினைவு வந்தது. தான் இதனால் வரை தன் காதலனின் பெயரை அவளிடம் கூறியதில்லை என்று. "அதான், மூனு வருஷம் முன்ன நா ஒரு பையனை காதலிச்சு இருந்தேன். அவன் கூட டிவோஸ் பண்ண சொல்லிட்டான்னு அழுதேன்ல அவன் தான் அபிரன்." என அவள் கூறவும் தர்ஷமித்ரனுக்கு ஒரு யோசனை உதித்தது. "அவந்திகா, அபிரனை நீ இன்னும் காதலிச்சுட்டு தான் இருக்கியா?" என்ற கேள்வியை கேட்க "ஆமா தர்ஷமித்ரன் ஆனா, அவன் இப்போ கூட என்கிட்ட கோபமா தான் இருக்கான். எனக்கு தெரிஞ்சு அவன் சாதாரணமா ஆட்களை கூட்டு சேர்க்க மாட்டான். எங்க காதல் கூட ஒரு வருஷ ஒப்பந்தம் தான். ப்ரித்வியை விட்டு வைச்சிருக்கான், அவ ஏதோ சொல்லிருக்கணும்.
அபி!!!!" என கதற "அவந்திகா அழுகாதீங்க. நா சொல்றது போல பண்ணு. அபிரன் இப்போ சைகோவா மாறிருக்க வாய்ப்பு இருக்கு. நீங்க அவனோடு நாளைக்கு ஷாப்பிங் போங்க. பூ ப்ரித்வி கூட கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போவா. நானும்,என் ஜூனியரும் அபிரன் வீட்டுக்கு போய் தடையம் கிடைக்குதானு தேடி பார்க்கணும்." என அவன் அபிரனை குறி வைக்க விதி வேறு வகையில் நாளை திட்டம் போட்டு விளையாடும் என கனவா கண்டார்கள்.

மறுநாள்..

காலை பொழுது இனிதே தொடங்கியது. ப்ரித்வியோ குளித்து விட்டு வந்த துர்கப்பூரணியைப் பார்த்து "என்ன தாவணிக்கு பதிலா புடவை வைச்சிருக்க?" என்றால் திமீர் பிடித்த குரலில். "ஏன் இந்த புடவைக்கு என்ன குறை. ஆமா ப்ரித்வி உன்கிட்ட ஏதோ மாற்றங்கள் தெரியுதே?" என அவள் பேசிய பேச்சை வைத்தும், அவந்திகா அலைபேசியில் கூறியதை வைத்து அவளிடம் கிளற ஆரம்பித்தாள்.

'என்ன இவ ஏதாவது கண்டு பிடிச்சுட்டாளா? போட்டு வாங்குவோம்.' என அவள் "இல்ல அவந்திகா. எப்பவும் துர்கபூரணி தாவணி தான கட்டுவா, அதான்..புதுசா புடவை கட்டுறாளேனு கேட்டா? நீ சந்தேகப்படுவியா?" என அவள் கூறவும் "ஐயோ! ப்ரித்வி அது சந்தேகப்படுறியா. இப்போ கொஞ்ச நாள் தமிழ் நல்லா பேசிட்டு இருந்த. இப்போ, மறுபடியும் சில் ஆக ஆரம்பிச்சுட்ட." என துர்கபூரணி சிரிப்பாக கூறியதை மிகவும் முக்கியமான விஷயமாக கருதினால் ப்ரித்விகுப்தா.

"பேசு, பேசு, உனக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசு. இன்னைக்கு, உனக்கு நான் கொடுக்கப் போறத் தண்டனையை நீ வாழ்நாள் முழுக்க மறக்க மாட்ட அந்த அளவுக்கு இருக்கும்.' என அவள் தன் மனதளவில் நினைத்துக் கொண்டு வந்தால்.

வீட்டில் தனியாக இருக்கும் அபிரன் சந்தோஷமாக புறப்பட்டு வந்தான். மூன்று வருடங்களுக்குப் பின்.. அவந்திகாவை 'இரண்டாவது முறையாக தான் சந்திக்கப் போகிறேன்' என்ற உற்சாகத்தில் அவளிடம் முன்கூட்டியே அலைபேசியில் பேச வேண்டும் என்ற ஒரு எண்ணம் அவனுள் வந்து கொண்டே இருந்ததனால்.. 'அவள் இப்போது தனது எண்ணை மாத்திருப்பாளா?' என்ற ஒரு சந்தேகம் அவனுக்கு வந்தது ஆனாலும் அவனது மனசாட்சி 'எதற்கும் ஒரு முறை அழைத்துப் பார்?' என கேள்வி கேட்டது அதன் விடையாகவே தான் அவன் அவளுக்கு அலைபேசி மூலம் அழைப்பு ஒன்றை விடுத்திருந்தாள். அவந்திகாவின் அலைபேசி பாட்டு ஒலிக்க தொடங்கியது.

நீ சொல்லும் பல நூறில் நானில்லையே! உன் அழகான பல பூவில் தேனில்லையே! உன் வில்வித்தில் நான் ஒன்றும் குறும்பில்லையே! நீ குசிப்பார்க்க தலைசாய்க்க கரும்பில்லையே!! "அவந்தி போன் அடிக்குது பாரு எடுத்து பேசு." என்றால் துர்கபூரணி.

அந்த அலைபேசியை பார்த்தவளுக்கு.. மூன்று வருடங்களுக்கு முன்பு அவளும் அபிரனும் ஒன்றாக இணைந்து காதலோடு சிரித்த புகைப்படத்தை பார்க்கவும் அழுகை வந்து சேர, துர்கபூரணிக்கு தெரியாமல் தன் விழிகளைத் துடைத்த படியே.. அவனிடம் அலைபேசியில் பேச ஆரம்பித்தாள் அவந்திகா. "ஹலோ!" என்றதும் "எனக்கு தெரியும் என் வந்தி அவளோட தொலைபேசி எண்ணை மாற்ற மாட்டான்னு. அது சரி இன்னைக்கு நான் உனக்கு ஒரு லொகேஷன் அனுப்பி வைக்கிறேன். அங்க நீ கண்டிப்பா வரணும்! நம்ம மீட் பண்றோம் என்ன சொல்ற?" பதிலுக்காக காத்திருந்தான் "நான் எங்கேயும் போறதா முடிவு பண்ணல. துர்கபூரணியைவே தனியா தான் அனுப்பி வைக்கப் போறேன். தயவு செஞ்சு வேண்டாம்! நம்ம மீட் பண்ண வேண்டாம்!!" இங்கு இவனிடம் பதில் சொல்லவும் துக்கபூரணிக்கு தூக்கி வாரி போட்டது அவள் உடனே என்ன சொல்ற "அவந்தி அப்ப நீ என்கூட மாலுக்கு வரமாட்டியா? ட்ரெஸ் எடுக்கிறதுக்கு." அபிராமிக்கு கேட்கும் வரை அவளது குரல் அத்தனை சத்தமாக ஒலித்தது. "அப்போ உன் பிரண்டோட ஷாப்பிங் மால் போக வேண்டியது தானே? அங்கே நாம் மீட் பண்றேன் சரியா வந்தி." என்றதோடு அழைப்பை துண்டித்தான். இங்கு அவந்திகா மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள். "உன் கூட ஷாப்பிங் மால் வரும் லொகேஷன் என்னன்னு அவனுக்கே தெரியாது. லொகேஷன் கேட்காமல் அவன் பாட்டுக்காக வச்சிட்டான்? என்னடி இவன் இப்படி இருக்கான்? தெரியாத்தனமா தப்பு பண்ணிட்டேன், இவன் கால(அழைப்பை) அட்டென்ட் பண்ணி இருந்திருக்கவே கூடாது." "ஏண்டி அவந்தி நீ பாடுக்க புலம்பிட்டு இருக்க, வா போவோம்." என துர்கபூரணி, ப்ரித்விகுப்தா, அவந்திகா மூவரும் ஒன்றாக சேர்ந்து தர்ஷமித்திரனோடு நான்கு சக்கர வாகனத்தில் துணிக் கடைக்குச் சென்றார்கள்.

வழியில் செல்லும் முன் இருக்கையில் துர்கபூரணிக்காக பாட்டை ஒலிக்க தொடங்கினான் தர்ஷமித்ரன்.


ஏய் சூரியகாந்தி பூவை போல முகத்தை திருப்பறியே நீ சொல்லுடி போட்ட சோலிய போல சிதறி ஓடுறியே! ஏய் அழகான நீயும் இதமா பேசி ஆழ உசுப்பிரியே ஓங்கிருந்தா மேல மெதுவா சாய என்னை தோறத்துரியே! மயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா? ஏ சொந்த ஊரு மதுர அடுத்த தள்ளி நில்லையா! உருகாத பொண்ணுமில்ல உடையாத பொண்ணுமில்ல சரிதான் போடி புள்ள! மேயாத ஆடு மெல்ல மேயாட்டி புள்ளும் இல்ல சவுடால் தேவையில்ல!


அந்த பாட்டை கேட்கவும் "ரௌடி பையா? என் பேபரேட் பாட்டு இதுனு உனக்கு யார் சொன்னது?" என தானாக அவள் கூற "என்னது உனக்கு பிடிச்ச பாட்டா? எனக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு தெரியுமா?" என அவன் கேட்க தன் தன்னவள் சிந்தை செய்ய ப்ரித்வி "எனக்கு பிடிச்ச பாட்டு கேசே பாத்தாவ்! சித் சூப்பரா இருப்பார். ஐ லவ் யூ.!" என அவள் கூற "என்னது?" என்றால் அவந்திகா. "விடுங்க அவந்தி, எத்தனை மொழிகள் பேசினாலும். அவஅவங்களுக்கு அவங்க தாய்மொழி பாட்டு தான் ரொம்ப பிடிக்கும்." "நா கண்டு பிடிச்சுட்டேன்." என்றால் குதூகலமாக.

"காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னாரே..அட மூலை கூட இல்ல என்று சொன்னேன் நானே. ஆனா இப்போ.. இது தான ரௌடி பையலே உனக்கு பிடிச்ச பாட்டு?" என அவள் கேட்க சிறு நகையோடு "இல்ல. அது எனக்கு பிடிக்கவே பிடிக்காத பாட்டு." அவ்வேளை 'உன்னால எல்லாம் என் தர்ஷமித்ரனுக்கு பிடிச்சத அவ்வளவு சுலபமா கண்டு பிடிக்க முடியாது.' என கடிந்து கொண்டால். "முந்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேனே.. மை ஆல் டயம் ஃபேவரேட். டிரைகட்ர் ஜீவிம் ஃபேன்." என்றான் காதலாக."காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னாரே..அட மூலை கூட இல்ல என்று சொன்னேன் நானே. ஆனா இப்போ.. இது தான ரௌடி பையலே உனக்கு பிடிச்ச பாட்டு?" என அவள் கேட்க சிறு நகையோடு "இல்ல. அது எனக்கு பிடிக்கவே பிடிக்காத பாட்டு." அவ்வேளை 'உன்னால எல்லாம் என் தர்ஷமித்ரனுக்கு பிடிச்சத அவ்வளவு சுலபமா கண்டு பிடிக்க முடியாது.' என கடிந்து கொண்டால். "முந்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேனே.. மை ஆல் டயம் ஃபேவரேட். டிரைகட்ர் ஜீவிம் ஃபேன்." என்றான் காதலாக. அப்படியே அவர்கள் வர வேண்டிய இடம் வந்தது. வண்டியை விட்டு இறங்கிய ப்ரித்வி தனது லொகேஷனை அபிரனுக்கு அனுப்பி வைக்க. அவள் ஒரு ஒலிதகவல் ஒன்றை அனுப்பி வைத்தால். அதை கேட்டான் அபிரன் "நாங்க புடவை வாங்க இந்த கடைக்கு வந்திருக்கோம். நாலு பேர் வர வைச்சு நாசூக்கா அந்த துர்கபூரணிய சிறப்பா வைச்சு செஞ்சுக்கோங்க. முக்கியமா அது எனக்கு வீடியோ வா தெரியாத நபர் போல எனக்கு நீ அனுப்பி வைக்கிற. ஓகே பைய் அவந்தி கூப்பிடுறா." என்றதோடு கடையினுள் சென்றாள்.

தர்ஷமித்ரன் "பூ நா என் பிரண்ட் அபிரன் வீட்டுக்கு போகணும். அவந்தி.." என பேசிக்கொண்டு இருக்கையில் "மச்சான்!" என்ற அபிரனின் குரல் கேட்டது. "மச்சி! இப்போ தான் ஒரு கேஸ் விஷயமா க்லூ ஒன்னு கெடச்சது. சோ, ஐ வான்ட்ஸ் டு கோ." என்றதோடு அவனது தோளில் பாசமாக தட்டு தட்டி கிளம்பினான்.

ப்ரித்விகுப்தா எதுவும் அறியாப் பேதை பெண் போல "துர்கபூரணி இந்த பிங்க் சூப்பரா இருக்கு. பாடர் பார்." என ஒரு புடவையைக் காட்ட "இந்த பச்சை எப்படி?" என அவந்திகா கேட்க "இது இரண்டும் வேணாம் இந்த ரோஸ் வித் பர்பிள்ல நா செலக்ட் பண்ணிட்டேன்." என்றால் ஆசையாக.

அவந்திகாவோ சற்று தூரம் தள்ளி இருக்கும் இடத்தில் லேகங்கா பார்ப்பதில் மும்முறமாக இருந்தால். இது தான் சரியான நேரம். ஆகையால் ப்ரித்வி அவந்திகா இருக்கும் இடத்திற்கு செல்ல. அவர்கள் அனுப்பிய ஆட்களில் ஒரு நபர் "மேம், எனக்கு இந்த சேலைய கொடுக்க முடியுமா?" கடைக்காரர் அதற்கு "இல்ல சார், அத அவங்க வாங்கிட்டாங்க." என துர்கபூரணியை கைக்காட்ட அவளிடம் சென்று "உங்க சேலைய தர முடியுமா?" என கேட்க "ஹலோ! தொட்டு பேசுற வேலை எல்லாம் வைச்சுக்காத." என்றால் கோபமாக.

IMG_20240222_090554.jpg
அனல் உருவாகிறது🔥
 
அனல் 15✨

"என்னாச்சு?" என அந்த கடையின் நிறுவர் கேட்க "நா எடுத்த புடவையை இவர் கேட்குறார். கண்ட இடத்துல தொட்டு கூப்பிட்டார்." என கோபமாக சொல்ல "மிஸ்டர், இந்த மாதிரி எல்லாம் நீங்க பிகேவ் பண்ண கூடாது." என அறிவுரை கூற "இல்ல சார். என் பொண்டாட்டிக்கு கண்ணு தெரியாது. அதோட, அவளுக்கு புடவை எடுத்து கொடுத்து சப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன். பரவாயில்லை, நா வரேன்." என அந்த நபர் நடிக்க அது உண்மை என நினைத்து "இருங்க. இந்த புடவையை உங்க மனைவிக்கு கொடுங்க." என அவள் கூறவும் "சந்தோஷம். நீங்களே வந்து கொடுங்க." என அவளை கூட்டி சென்றான். ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்கிங் ஏரியாவில் அவளது முகத்தில் மயக்க மருத்தை கொடுத்து அவளை தூக்கி சென்றார்கள்.

*****

"வந்தி, என்னை ஏன் இப்படி வதைக்கிற?" என்றான் அபிரன் கெஞ்சலாக. "அபீர்! என்னைக்காவது உனக்கு புரிஞ்சிருக்கா? நம்ம காதலிச்ச நாட்கள் இன்னும்..என் கண்ணுள்ள இருக்கு. கல்யாணத்தை பத்தி பேச ஆசையா வந்த போது. டிவோஸ் பண்ணிகலாமா? நீ கேட்ட வார்த்தை இன்னும் என்னை சின்னாபின்னமா சிதைச்சு போட்டுச்சு. அது புரிஞ்சதா உனக்கு??" என அவள் தன் ஆதங்கத்தை வெளிபடுத்த "சாரி டி. ஐயம் சாரி வந்தி. இப்ப ஒன்னும் கெட்டு போகல, நாம கணவன் மனைவியா வாழலாம்." என்றான் காதலாக. அந்த சமயத்தில் அங்கு இருந்த ப்ரித்வியினால் 'இவன் உண்மையாவே அவன் தானா? கொடூரமா இருந்தவன். இப்போ கால போடும் செருப்பு போல இவ சுமையை தான் மேல போட்டுக்குறான்.' என அவள் நினைக்க.

அபிரனின் வீட்டிற்கு தன் வேலை ஆளோடு வந்த தர்ஷமித்ரன் "இப்பவும் சொல்றேன். அபிரன் தான் சார் குற்றவாளி." என அவன் கூற "சந்தேகம் எனக்கு இல்லாமல் இல்ல. தேடிப்பார்ப்போம்." என அவர்கள் அவசரஅவசரமாக தேட ஆரம்பித்தார்கள். நீண்ட நேரம் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. "சார்!!" என்ற குரல் கேட்ட திசையை நோக்கி சென்றான். அவனால் நம்ப முடியவில்லை ஒரு சின்ன இடத்தில் நார்க்காலி முழுவதும் ரத்தக்கரையோடு இருக்க. அந்த இடத்தில் தேட ஆரம்பித்தார்கள்.

****

"டேய் மாம்ஸ் இந்த பொண்ணை எழுப்புடா!..எண்ணி ரெண்டு மணி நேரத்தில இவ..இவள முடிச்சு,ருசிச்சு ஆகணும். வாடி என் சொப்பணச்சுந்தரி." என அந்த நபர் கூற "அய..நீ சிறப்பா பண்ணு. பல்லானபிட்டு படம் போல சின்னதா பாஸூ வீடியோ எடுக்க சொன்னார். நீ அவள கவனி நா வீடியோ எடுக்குறேன்." என்றதும் மதுவை தண்ணீரென நினைத்து துர்கபூரணி மீது தெளிக்க. இன்னொருவனோ வாலி நிரம்ப தண்ணீரை அவளது முகத்தில் ஊற்ற "ஹா!!!" என கதறினால் பாவை. மூவரும் இணைந்து "ஔ!!! மாம்ஸூ என் சொப்பணச்சுந்தரி எழுந்துட்டா டா. நா தான் தூக்கினேன். முதல் வாய்ப்பு எனக்கு தான்." என அவள் பக்கம் நெருங்க பயத்தில் வெடவெடத்து போனால்.

"கிட்ட வராத.." என அவள் தள்ளி போக "ஹா! அப்புடிலாம் சொல்ல கூடாது. மாமா வரேன்ல..கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணு சொப்பணச்சுந்தரி." என அவளிடம் பாயச்செல்ல அவளோ உருண்டு கட்டிலில் இருந்து விழ ஒருவன் நகைத்தான். அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவளை பார்க்க 'இந்த வீடு..என் ரௌடி பையனுடைய இன்னொரு கெஸ்ட் ஹவுஸா?' என அங்கிருந்த அவனது புகைப்படத்தை வைத்து புரிந்து கொண்டால். "யாராவது காப்பாத்துங்க!!" என அவள் கத்த அவளது முந்தியை பிடித்தவன் பிடியை விடவில்லை. ஆடையில் இருந்த ஊக்கு மெல்ல தன் வேலையை காட்ட "ஆ!!! என்னை விட்டுங்க பிளீஸ்!" என அந்த கோர வலியில் கத்த அவளது முந்தியில் இருந்து கைகளை எடுத்தவுடன், பாவையவள் அருகில் கட்டை மீது மோதி விழ நெற்றியில் காயம். அதில் அவள் சில நிமிடம் மயக்கத்திற்கு தள்ளப்பட்டாள். "மாட்டிக்கா! இன்னைக்கு இந்த மானை நா வேட்டையாட போறேன்." என்றதோடு அவளின் மீது கையை வைக்க. அசைய இயலவில்லை துர்கபூரணியினால், இருப்பினும் தன் இடது கரத்தை கொண்டு அவனது கரங்களை தட்டிவிட அந்த காமக்கொடூரணுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அவளை ஓங்கி அடிக்க கத்தக்கூட முடியவில்லை. "ஐய, வீடியோ எடுக்க வேண்டியாதான மாம்ஸ்.?" என தன் தோழனுக்கு கூற சில மணி நேரம் அவளை தன்னுள் ஆட்டிவைக்க வலியில் துடித்தவள். மீண்டும் தன் இடது கரத்தை கொண்டு அவனை ஓங்கி அடிக்க.

தள்ளாடிய நிலையில் எழுந்தவளின் தாவணி சற்று அலங்கோலமாக இருந்தது. தலையில் கைகளை வைத்த படியே ஓரே ஓட்டமாக ஓடினால். அவர்கள் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. "விடு மாம்ஸ் இத நம்ம பாஸூக்கு அனுப்பி வைச்சி துட்ட வாங்குற வழிய பார்ப்போம்." என அபிரனுக்கு அழைத்தான்.

*****

கடையில் அபிரன் அவந்திகாவிடம் படாத பாடுப்பட்டான். "இந்த அண்ணா உன் மேல இவ்வளவு ப்யாரோட இருக்கார். அவந்திகா, துர்கபூரணி கூட சேர்ந்து உங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிடலாம்." என ப்ரித்வி கூற "நீ இதுல தலையிடாத ப்ரித்வி!! அ..அபீர், நா கல்யாணம்..குடும்ப வாழ்க்கை எல்லாம் செட் ஆகாது. அதுவும் நமக்கு நோ. லவ் பண்ணின முதல் வருஷமே டிவோஸ் பண்ணிகலாமா? கேட்ட. இப்போ கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் கழிச்சு விவாகரத்து செய்யலாம்னு சொல்லுவ! பொது இடம்னு பார்க்குறேன், இல்லேனா நீ இன்னொரு அவந்திகாவ பார்த்திருப்ப." "அவந்திகா, அபிரன் அண்ணா நல்லவர் டி." "என்ன ப்ரித்வி இப்படி பேசுற? உனக்கு அபிரனை பத்தி நா எதுவும் சொல்லவே இல்ல. எப்படி தெரியும் உனக்கு?" தவளை தன் வாயால் கெடும் என்பது மாட்டிக்கொண்டால் ப்ரித்விகுப்தா.

****

உயிரை கையில் பிடித்து ஓடி வந்தவள் தன் அலைபேசியை தேட "ஃபோன் அவந்திகிட்ட இருக்கு. என்ன பண்ண?" என யோசித்து கொண்டு இருக்கும் போது ஒரு டாக்ஸி வர துர்கபூரணி அந்த வண்டிக்கு முன் நின்று "நிறுத்துங்க!!!!" என சத்தமிட்டால். அந்த ஆள் பயந்து போனான். "சார், நா சொல்ற இடத்துக்கு போக முடியுமா?" என அவள் தர்ஷமித்ரன் இருக்கும் இடத்திற்கு செல்ல துடித்தால். "சரிமா. ஆனா..உன்ன பார்க்க பாவமா இருக்கே?" என அவர் கேட்க "ஆ..என்னால நிக்க முடியல. உ..உங்களுக்கு காசு தான வேணும். என் தர்ஷமித்ரன் தருவார்." என அவள் கூற "சரிமா வண்டில ஏறு." என அவளை அபிரனின் வீட்டிற்கு செல்லும் முகவரியை சொல்ல. அங்கு வந்த இறங்கினாள். "ஒரு உயிரை நா முதல் முறை காப்பாத்திருக்கேன். நீ எனக்கு காசு தர வேணாம்மா." என்றதோடு அவர் இருந்து கிளம்பிய அடுத்த நொடி "ரௌடி பையா!!!!!!!!" என கத்திய சத்தம் வீட்டின் ஏதோ ஒரு அறையில் தேடி கொண்டு இருந்தவனுக்கு கேட்க "பூ!!" என்ற சத்தத்தோடு ஓடினான் வாசலுக்கு.

அவளை பார்த்த அடுத்த கணம் "பூ என்னாச்சு?" என அவளை அவனால் அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை. அலைபேசியில் தன் வேலைஆளுக்கு புலனம் மூலம் 'வேலை நீ முடிச்சுடு. தடையம் கிடச்சா எனக்கு மெசேஜ் பண்ணு.' என்ற தகவலை அனுப்பிய மறுகணம் அவளை தன் வண்டியில் ஏற்றி வீட்டிற்கு வர.

அவளின் அதிஷ்டம் வித்யபாரதி தூங்கி கொண்டு இருந்தார். அவளை அழைத்து கொண்டு மாடிக்கு சென்று குளியலறையில் அவளை சுத்தப்படுத்தும் முன் வெள்ளை துணியை விழிகளில் கட்டினான் தர்ஷமித்ரன். அவளை குழந்தையாக பாவித்து தாயாக அவளை தாங்கினான். அவளுக்கு தேவையான அனைத்தும் செய்து முடித்த பின்னரே கட்டை அவிழ்த்து அவளது நெற்றியில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டான்.

****

"ப்ரித்வி பூரணி எங்க?" என அவந்திகா நாற்காலி விட்டு எழவும் அபிரனுக்கு காணொளி வர. அதை ப்ரித்விக்கு ஜாடையில் கூற 'சரி.' என இமைகளை மூடி திறந்தால். பின்னரே "ஹய்யோ! சார். என் உயிர் தோழியை காணோம். எல்லாரும் பார்த்தீங்களா? அவந்திகா துர்கபூரணிக்கு ஃபோன் போடு." என மார்ப்பில் அடித்து கதறியபடி நடித்து தள்ளினால் ப்ரித்வி. "மொபைல் என்கிட்ட இருக்கு." என கவலையோடு கூற "வா வீட்டுக்கு போவோம்." என்று அவள் கையை பிடித்து அழைக்க "தர்ஷமித்ரன் வீட்டிற்கு சொல்லுவோம் ப்ரித்வி.!" என்றால் சத்தமாக. "இதோ பார், வீட்டுக்கு போயிருக்க வாய்ப்பிருக்கும். நீ வானு சொல்றேன்ல." என்றதோடு அவளை கூட்டி சென்றால்.

வீட்டிற்கு வந்தவுடன் "பூரணி!!!!" என சத்தமிட்டால் அவந்திகா. அந்த சத்தத்தில் எழுந்தார் வித்யபாரதி. அபிரனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது ப்ரித்விக்கு 'வீடியோவ நா என் புது நம்பர்ல உனக்கு அனுப்பிட்டேன்.' என்ற செய்தியை பார்த்ததும் "நா போலீஸ்க்கு ஃபோன் பண்றேன்." என தோழியிடம் தகவல் கூறிவிட்டு நேராக வீட்டுவாசலுக்கு வந்து அபிரன் அனுப்பி இருந்த எழுத்து வடிவு தகவலை அழித்து விட்டு. புது எண்ணில் இருந்து வந்த காணொளியை பார்த்ததும் 'பலே இது தான் எனக்கு வேணும்.! ஃபைநலி தர்ஷமித்ரன் இஸ் மையின்.' என சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தால் ப்ரித்விகுப்தா.

அவள் தன் மனதில் ‘தேன் காற்று வந்தது தேம்பாவனியால் கொன்றது அது உன்னை மட்டும் தீண்டத்தானா வந்தது..அது என்னை ஏன்றோ தீண்டி தீண்டிக்கொண்றது!!! ஷாதி கி கிஸ்மத்து ஹோ ஏய்!!!!’

அனல் உருவாகுமா🔥
Snapchat-292154777.jpg
 
அனல் 16✨

சந்தோஷ வெள்ளத்தில் வீட்டினுள் நுழையும் ஆச்சரியமாக அவந்திகாவைப் பார்க்க "என்ன ஆச்சு ப்ரித்வி?" என அவசரமாக அவள் கேட்க "சொல்லுமா என்னாச்சு?" என வித்யபாரதியும் கேட்டார். அவள் அந்த காணொளியைக் காட்ட அதை பார்த்த இருவரும் அதிர்ந்து போனார்கள். மறுபக்கம் மேல்மாடியில் தர்ஷமித்ரன் "பூ இப்போ உனக்கு தேவை. நடந்ததெலாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடு." அதில் மீண்டவள் "முசிறி கேம்ப்ல இருந்தப்போ யார்னு தெரியாத ஒருத்தன்..என்னைச் சிதைச்சான். அவன் தன் முகத்தை என்கிட்ட காட்டாமல் போனத ஒரு கண நேரம் கனவுனு நானே நெனச்சுக்குட்டேன்." ஒரு பெருமூச்சு விட்டவள் தொடர்ந்து பேசினாள். "ஆனா..இன்னைக்கு நடந்தது..நா தடுத்தாலும், அந்த மரணவலி ஆ..அவ்வளவு சீக்கிரம் மறந்துருவேனா ரௌடி பையா???" என அவனது மார்பில் சாயந்து அழுதாள். அவளது முதுகை ஆறுதலா தடவ பெண்ணவள் கதறினால் "ஆ!!!! வ..வலிக்குது ரௌடி பையலே." என பாசத்தோடு அவனால் சின்ன சேதத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ன வருத்தம் அவனை வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது தான் அவனது அன்னை கதவை தட்ட "அம்மா வராங்க. எப்பையும் போல இரு." என்று ஆறுதல் கூறினான். கதவைத் திறக்கவும் அவனிடம் "துர்கபூரணி எங்க?" என கேட்க "என்ன அத்தே?" என அவள் தன் வலியை தாங்கிக்கொண்டு பேசினாள். "இங்க தான் இருக்கீயா! நாசம் பிடிச்சவளே, ஊராள் மேய்க்கிற ஆடு மாதிரி உன்னை ஒருத்தன் இப்படி நீயே மேய்க்க வைச்சிருக்க? நீயெலாம் குடும்ப குத்துவிளக்கா!" என அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவளை மீண்டும் அழ வைக்கும் நிலைக்கு சென்றது. "அம்மா! யார்கிட்ட என்ன பேசுறீங்க? சொல்ல கூடாத வார்த்தைகளைச் சொல்லாதீங்கமா. நெல்லும் சொல்லும் ஒன்னு, ஒரு தடவைக் கொட்டினால் அள்ளுறது கஷ்டம்." என குறுக்கே வர அன்னையவர் மகன் என கூட பாராது கைஓங்கி அடித்தார். "நீ சும்மா இரு!" என அவர் கூறிய அதே கணம் "அத்தே! கைநீட்டி அவரை எதுக்கு அடிக்குறீங்க?" என இவன் என்னவன் என்கிற திருமணம் செய்யும் முன்பே ஒட்டி கொண்டது அவளை அறியாமல்.


"மித்ரா! உனக்கு இவ சரிப்பட்டு வர மாட்டா." என அவர் கூற "அம்மா! கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத என்னை, கல்யாணம் பண்ண இவளைக் காட்டினீங்க. பூ வந்த போது கையில ஹர்ஷினியோட வந்தா. அப்போ தெரியலையா? அந்த நேரத்துல மட்டும் உங்களுக்கு இவ ராணி போல. இப்போ இவ உங்களுக்கு சாணி மாதிரி அழுக்கா? சொல்லுங்கமா?" என மகன் கேட்டதிலும் நியாயம் தானே.? அவள் என ப்ரித்வி போல் வந்தாலா? ஒரு தாயாக தானே வந்தால். அப்படி இருக்கையில் அந்த சமயத்தில் கூட ப்ரித்விகுப்தாவாக நடித்த துர்கபூரணியை அவருக்கு தேவதை போல் கண்ணிற்கு தெரிந்தால். இன்று மட்டும் அப்படி ஏன் பாராமல் போனார்? என்பது நீதிக்குறிய ஒன்று. "என் மகனை எப்படி மயக்கின? இவன் என் சொல்ல தட்டவும் மாட்டான். எதிர்த்து பேசவும் மாட்டான். ஆனா, நீ..இவன தலைகீழா மாத்திட்ட?" என துர்கபூரணியை தான் மீண்டும் குறி வைத்தார். 'என்ன சிக்க மாட்டேங்கிறா? நம்ம ஏதாவது பண்ணுவோம்.' "ஆன்டி, தர்ஷமித்ரன் வீடியோ பார்த்துட்டு நீங்க அவள கல்யாணம் செய்யலாமா?வேண்டாமானு சொல்லுங்க." என அவள் காட்ட இருவரின் விழிகளும் விரிந்தன. "இதோ, இதுக்கு தான் அம்மா சொன்னேன்." என அவர் மேலும் பேச. "போதும்!!! இதெலாம், என்ன நோக்கம்னு எனக்கு புரிஞ்சுடுச்சு. உனக்கு இது கேவலமா இல்ல ப்ரித்வி?" என அவளை இழிவாக கேட்டான்.

அதிர்ந்து விழித்த ப்ரித்வி அவனிடம் "தர்ஷ.."என அவள் கூற வரும் முன்னரே "ச்சி! இவ உன் ப்ரண்ட், எனக்கு ஒரு டவுட் இவளோட மூனு வருஷம் ஒன்னா இருந்த நீ ஏன் துர்கபூரணி மேல இப்படி..?" என அவன் சரியான கேள்வியை கேட்டதும் "அ..அ." காணொளி பார்த்த துர்கபூரணி தன்னவன் தன் தோளின் மீது கைவைத்திருப்பதை தடுத்து அறையினுள் ஓட சுவற்றில் முட்டி மயங்கினாள் பாவை.

தர்ஷமித்ரன், அவனின் கேள்வி அவந்திகாவைத் தூண்டியது. அதனால், ப்ரித்வியோடு அவள் பேச நினைத்தால். அவள் பேச வரும் முன் ப்ரித்வி யாருடனோடு அலைபேசியில் பேசுவதை உட்டு கேட்டால் அவளின் தோழி அவந்திகா.

"தாங்க்ஸ்! வேலை பக்காவா பண்ணிட்டாங்க. ஆனா..நாம ஒன்னு நினைச்ச? இங்க வேற ஒன்னு நடக்குது?" என அவளின் வார்த்தைக்கு "புரியலையே? என்ன நடந்தது?" என அந்த பக்கத்தில் அபிரன் கேள்வி எழுப்ப நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற "சரி விடு. நீ என் அவந்திகாவை என்னோடச் சேர்த்து வைக்கும் வேலையப் பார்." என அவன் கூறியதைக் கேட்டதும் "ஹலோ! மிஸ்டர் அபிரன்." என்றதும் 'அபிரன்?' என்ற அவனது பெயரைக் கேட்டதும் மனம் உடைந்து போனாள். இருப்பினும், கேட்க தொடங்கினாள்.

"ஐ வான்ட் தர்ஷமித்ரன்!!! தாலி எனக்கு தான் வேணும். எனக்கு வந்த பிரபோஸல உன் அவந்திகா அந்த ராட்சசி துர்கபூரணிக்கு கொடுத்துட்டா. “ அதற்கு அவன் “இதுல மேடம் புதுசா நடிக்க வேற ஆரம்பிச்சுட்டாங்க தர்ஷமித்ரன் முன்ன. என்ன பண்ணுவீயோ எனக்கு தெரியாது ப்ரித்வி. ஒரு நேரம் போல ஒரு நேரம் இந்த அபிரன் சும்மா இருக்க மாட்டான். திஸ் இஸ் மை டைம்." என்றதோடு அழைப்பை துண்டித்தான்.


தோழியவள் பேசி முடிந்தவுடன் திரும்ப "ச்சி! நீயெலாம் ஒரு ப்ரண்டா ப்ரித்வி? இப்படி ஒரு காரியம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?" என அவந்திகா கோபமாகக் கேட்க "எல்லாம் உன்னால தான்! உன் விளையாட்டு விதிய மாத்திடுச்சு." என கொற்றவையானாள் ப்ரித்வி "அதுவும் சரி தான். உன்னுடைய முகமுடி இப்போவாச்சு அவிழ்ந்துச்சு. விதி மாறிச்சுட்டு, பூரணி வாழ்க்கையில் தேவதை மாதிரி தர்ஷமித்ரன் வந்துட்டார்." என்றவள் மீண்டும் "நீ யாருகூட கூட்டு வைச்சிருக்க?" என அவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க "நா..நா..யார்க்கூட கூ..கூட்டு வைச்சா உ..உனக்கு என்னவாம்?" என்றால் திக்கி திணறி. அவந்திகாவின் கோபம் அடைந்தால் தன்னையே மறந்து தன் முன் நிற்பவர் அவரையே மறந்து கேள்வியை வேள்வியாக வைத்து மெய்யை தெரிந்து கொள்வாள்.

"நீ பொய் சொல்ற. பொல் லடுக்கீ!!!?" என்றதும் "அபிரன் என் பிரண்ட். அவனோடு கூட்டு வைச்சிருக்கேன். அந்த கொடூரன் உன்னை காதலிக்கிறான்." என அனைத்தையும் கூறினாள். அவந்திகாவினால் தாங்க முடியவில்லை. "உனக்கு அவனைப் பத்தி என்ன தெரியும்!!!!! அவன் கொடூரன் கிடையாது! நல்லவன், பொறுமையின் சிகரம் என் அபீர்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றாள்.

அதன் பின் தர்ஷமித்ரன் தன்னவளைத் தாங்கி வந்தான். அவந்திகாவோடு மைதிலி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வர. வித்யபாரதி மற்றும் ப்ரித்வி இருவரும் அவ்வபோது துர்கபூரணி பற்றி இழிவாக பேசுவது. அவளது செயலில் ஏதேனும் தவறு கண்டு கொண்டால் அதனை மீண்டும் மீண்டும் காயப்படுத்தவதையே ஒரு குறிக்கோளாக வைத்தனர். இன்று, தன் பேச்சை மீறி தான் பெற்ற மகன் அவளை திருமணம் செய்தது அவர்கள் இருவருக்கும் கோபம் தலைக்கு மேல் ஏறியது.

தன் தாய் மனது சரியாகும் வரை, அவன் அவர்களது விருந்தினர் மாளிகையில் தங்கலாம் என துர்கபூரணியை அங்கு கூட்டி சென்றான் தர்ஷமித்ரன். அவந்திகாவும், மைதிலியும் முன்பே வீட்டிற்கு வந்து விட்டனர். கடவுளின் கட்டமைப்பு அப்படி, அபிரனும் அப்போது தான் வீட்டை விட்டு வெளியே வர ஆரத்தி தட்டோடு அவந்திகா நின்றதைப் பார்க்கவும்.. அவனுக்கு அத்தனைச் சந்தோஷமாக இருந்தது. "அபிரன் அண்ணா என்ன இப்போ தான் வீட்டில் இருந்து கிளம்புறீங்க போல? உங்க ஆர்ச் வொர்க் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்றால் மைதிலி. அது அவளது மனதை அவன் பக்கம் திரும்ப வைத்தது. அவந்திகாவின் விழிகளைப் பார்த்த நேரம் அவன் தன் பதிலைக் கூற முடியாமல் "என்ன புதுசா ஆரத்தி தட்டோட வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?" என எப்போதும் போல் மைதிலி இடம் பேசினான். ஏனென்றால் அவந்திக்காவும் தானும் ஏற்கனவே சந்தித்த விஷயமோ அவர்களது காதல் காவியம் பற்றி எதுவும் மைத்துளிக்கு தெரியாததால் அவந்திகாவிடம் தனியாக பேசும் போது அனைத்தையும் கூறிவிடலாம் என்ற ஒரு நோக்கத்தின் காரணமாகவே அபிரன் இவ்வாறு பேசினான். "அதுவா உங்க பிரண்டு தர்ஷமித்ரனுக்கும் என் பிரண்டு துர்கபூரணிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. வீட்டுக்கு கூட்டிட்டு வரார். அங்க அம்மா கோபத்தால அண்ணிக்கு ரொம்ப மன உளைச்சல். அதான், அண்ணா இங்கே கூட்டிட்டு வந்துட்டு இருக்காரு. அம்மா மனசு மாறுற வரைக்கும் அம்மா கூட நான் அங்க இருப்பேன். அண்ணா,அண்ணி, அவந்திகா மூணு பேரு இங்க தான் இருப்பாங்க." அவன் ஒற்றை கேள்வி கேட்டதற்கு இவள் நான்கு பதிலைக் கூறினாள். என் தன் மனதின் வழியாக அப்போ "அவந்தி இங்க தான் இருப்பா. அவ கிட்ட எப்படியாவது ராத்திரி பேசிய ஆகணும்.!' என்று முடிவு செய்தான். அவளது விழிகள் அவனை விட்டு வேறு எங்கும் அசைவில்லை 'எனக்கு நீ என்ன நினைக்கிறனு புரியுது அபீர். என்னால இங்க இருக்க முடியும், ஆனா? நீ நினைக்கிற மாதிரி என்னால நடந்துக்க முடியாது அமீர்.' மனதோடு இவள் உரையாடி முடிக்க நான்கு சக்கர வாகனத்தின் ஒளி கேட்க அவர்கள் வாசலை நோக்கி சென்றார்கள்.

துர்கபூரணியின் கரத்தைப் பிடித்து தர்ஷமித்ரன் அவளை வெளியே வர.. அவளும் ராணி போல் இறங்கி வர. அவர்களுக்கு ஆராய்ச்சி சுற்றி அவர்களை மேலே அழைத்துச் செல்லும் போது, மைதிலி அபிரினை "வாங்கண்ணா வந்து பால் பழம் சடங்கு எல்லாம் பார்க்க?" மைதிலியின் சொற்களுக்கு இணங்க அவன் மேலே வந்தான்.


மைதிலி தன் அண்ணா, அண்ணியின் மீது கொண்ட அன்பினால் சடங்கினை ஒவ்வொன்றும் அழகாக நிகழ்த்தச் செய்ய. அவந்திகாவின் மனது அத்தனை சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஏக்கம் வராமல் இல்லை. அவளது கண்கள் கலங்கி இருந்தன. அதை வைத்து அபிரன் புரிந்து கொண்டான் 'என்னுடைய வார்த்தையானது அன்று வெளிவராமல் இருந்திருக்க வேண்டும். அப்படி சொல்லாமல் இருந்திருந்தால்.. எனக்கும் இவளுக்கும் ஒரு குடும்பம் என்று ஒன்று இருந்திருக்கும்.' என மனதளவில் அவனும் சங்கடப்பட்டான். நடந்தது யாராலும் மாற்ற முடியாது. நடந்து கொண்டிருப்பவை சூழ்ச்சியினால் மாற்ற முடியும். ஆனால் அவனுக்கோ அந்த சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்கு நேரமில்லை. ஏனென்றால்.. அவனது அவந்திகா அவனிடம் இப்பொழுது பேசுவாளா? என்று கேட்டால் கேள்வி தான்! ஆகையால் அவன் ஏதும் பேசாத அங்கிருந்து செல்ல பார்க்கும்போது.. "அபீர் ஒரு நிமிஷம் உன்கிட்ட பேச வேண்டியது இருக்கு." பெண்ணவள் தானாக தன்னிடம் பேச வருவதை மனப்பூர்வமான சந்தோஷத்தோடு அவள் இருக்கும் திசை நோக்கி சென்றால் அபிரன்.
எங்கே எங்கே உன் வாழ்வின் மேன்றோ நான் தான்! உன் கையின் காம்பில் பூ நான்! நம் காதல் யாவும் தேன் தான்! பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடல்.. மனம் காற்றை போல ஓடும் உனை காதல் கண்கள் தேடும்! ஆ..லைலைலைலைய் காதல் லீலை! ய்..செய் செய் செய் காலை மாலை! உன் சிலை அழகை.. வெளிவர நான் வியந்தேன் இவனோடு சேர்ந்தாடும் சிண்ட்ரெல்லா!!! வாராயோ வாராயோ காதல் கொள்ள?
IMG_20240229_104600.jpg
அனல் வளர்கிறது..🔥
 
Last edited:
அனல் 17✨

"நீ கூப்பிடுவனு நான் எதிர்பார்க்கவே இல்ல. மைதிலி பேசிட்டு இருந்தாளா.. சரி நீ இன்னும் என்னை ஒதுக்கி வைக்கிற நினைச்சேன், ஐ அம் சாரி வந்தி." அதற்கு அவள் "எதுக்கு அபீர் சாரி எல்லாம் சொல்லிட்டு. விட்டுடுங்க, இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப். ஆனா.. ஒன்னு மட்டும் உறுதியா சொல்லிக்கிறேன். என் வாழ்க்கைல நீங்க வந்தது எனக்கு சந்தோஷம் எனக்கு தான். திரும்பியும் நீங்க நினைக்கிற மாதிரி அதே காதலோட கைகோர்த்துட்டு ஒரு வாழ்க்கை வாழ்வோமானு தெரியாது? அதனால கற்பனை ரொம்ப பண்ணிக்காதீங்க." என்றதோடு அவ்விடம் செல்ல முயலும் பெண்ணின் கரத்தைப் பிடித்து அவன் "ஏன் வாழ முடியாது? எதுக்காக வாழ முடியாது? அன்னைக்கு சொன்னது உண்மைதான்! நான் இல்லைன்னு சொல்லல? ஆனா.. என் மனசுல இன்னும் நீ தான் இருக்க. அதையே நீங்களும் புரிஞ்சுக்க மாட்டேங்கிற?" சரியாக இந்த சமயத்தில் தான் பிரித்வியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அந்த அலைபேசியில் ஒலித்த பாடல் அவனது மனதை ஆழமாக தாக்கியது. ஏனென்றால், இவர்கள் காதலித்து வந்திருந்த நாட்களில் இந்தப் பாடலில் குறிப்பிட்ட இந்த வரிகள் அவர்களது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவத்தைதிற்கு நினைவு சின்னம்.

"இன்னும் நீ அந்த பாட்டை மாத்தவே இல்ல. புரிஞ்சுகிட்டன் உன்ன பத்தி. இனி, நீயே கூப்பிட்டாலும்.. நான் வரமாட்டேன். ராத்திரி மீட் பண்ணலாம்னு நினைச்சேன். இப்பவே மீட் பண்ணிட்டோம் வரேன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றான் அபிரன். அழைப்பை எடுத்தவள் "சொல்லு ப்ரித்வி." என்றால் மொட்டையாக.

"கல்யாணம் பண்ணின பொண்ணு மாப்பிள்ளை எங்க?" என்றால் கோபமாக. "இங்க பார் நாங்க அவங்க இரண்டு பேரையும் கெஸ்ட் ஹவுஸ் ல தங்க வைச்சிருக்கோம். இத துர்கபூரணி முடிவு செய்யவே இல்ல." என அவந்திகா அவள் கேட்க வேண்டிய அடுத்த கேள்விக்கும் சேர்த்தே பதிலை கூற "நாங்க அங்க வரோம்." என அவள் பேச தர்ஷமித்ரன் அவந்திகாவை பார்த்து 'என்ன?' என்பது போல் கேட்க அவனிடம் அலைபேசி தந்தவுடனே அந்த பக்கத்தில் கேட்பது தர்ஷமித்ரன் என்று கூட நினைக்காமல் "ஓ..அந்த அளவுக்கு அந்த துர்கப்பூரணி..இந்த ப்ரித்வியுடைய தர்ஷனை வலைச்சு போட்டா. வயிறு எரிஞ்சு சொல்றேன், அவளுக்கு சாதாரணமான சாவு வரக்கூடாது. உடல் முழுக்க ரத்தம் அருவியா கொட்டுற அளவு அவ சாவா. இல்ல நா சாவடிப்பேன்!" இப்படி அவள் பேசுவதை கேட்டவன் "அடச்சீ!!! நீயெலாம் ஒரு பொண்ணா? இன்னொரு பொண்ணு, அதுவும் உன் உயிர் தோழி அவளுக்கு இந்த அளவு சாபம் கொடுக்குற? உன் மேல எனக்கு கொஞ்சமா மரியாதை இருந்தது. இப்போ, அதுவும் கிடையாது. நீ தான் இப்போ மனுஷியே இல்லயே." என்றதோடு அழைப்பை துண்டித்தான்.

தன்னவனும் தோழியும் என்ன பேசி வருகிறார்கள் என அவள் அவர்களிடம் "என்ன விட்டுட்டு அப்படி என்னத்த பேசுறீங்க?" என உரிமையோடு தர்ஷமித்ரன் விழிகள் பார்த்து கேட்க "முட்ட கண்ணு பொண்டாட்டி." என்றபடி அவளை தூக்க அவந்திகா அடுப்பங்கறையை விட்டு வெளியே வந்தால். "அவந்தி.." என அவளை கூப்பிட "இன்னும் கொஞ்ச நாள்க்கு அவளும் மைதிலியும் இங்க வரமாட்டாங்கள்." "என்ன சொல்ற ரௌடி பையலே?" "ஆமா பூ, நமக்கு தனிமை கொடுக்குறாங்க." என்றான் காதலாக. "இல்ல அவந்தி என் கூடவே தான் தூங்குவா." என்றால் குட்டிப்பாப்பாவை போல. அப்போது, அவனுக்கு குறுஞ்செய்தி வர அதை பார்த்து நகைத்தான். "என்ன ரௌடி பையலே? அப்படி என்னத்த பார்த்து சிரிக்கிற?" என அவள் கேட்க "அவந்திகா மெசேஜ். நா இன்னும் ஒரு வாரம் இங்க இருக்கமாட்டேன். என்ஜாய் யூவர் ஹனிமூன் இன் திஸ் ஹவூஸ். அவளுக்கு தெரியுது, என் பூவுக்கு புரியல." என்றான் கொஞ்சலாக.

மீண்டும் அவளை விடாது..அவளது கரத்தை கோர்த்து கொண்டு தங்களுடைய முதல் சந்திப்பு நடந்த அறையினுள் வந்தவன் அவளது கன்னத்தில் கையை வைக்க. அது, அந்த ஸ்பரிசம் வெட்கத்தை வரவழைக்க "பூ..நீ வெட்கத்தில நல்லா இல்ல." என்றதும் செல்லப்கோபம் வர "ரௌடி பையலே!" என்ற அனல் போன்ற குரலும் அவளது பார்வையும் அவனை மொத்தமாக கவர்ந்து "இந்த கோபமான பார்வையில் தான், என் பூகுட்டி அழகா இருக்கா." என்றதும் "என்னை எங்கையாவது கூட்டிட்டு போறியா ரௌடி பையா?" இதை அவன் அவளிடம் இருந்து எதிர்ப்பார்ககவில்லை. "சொல்லு, நா பிளைட் டிக்கட் போடுறேன். பெரிஸ் போகணுமா? சுவஸ்சர்லன்ட் போகணுமா? இல்ல இத்தாலீ..வேர்எவர், உனக்கு எங்க போனா சந்தோஷப்படுவீயோ அங்க கூட்டிட்டு போறேன்." என்றான் தன் இணையவளின் பதிலை எதிர்ப்பார்த்து. "அ..அ..அது வந்து நம்ம முசிறி போவோமா? என்னை கூட்டிட்டு போறியா ரௌடி பையா?" என்றால் மென்மையாக.

அவனோ மௌனமாக இருக்க. அவளது பார்வை மொழி அவனை ஏதோ செய்ய "அங்க எதுக்கு போகணும்? வேற இடமே இல்லையா பூ சுத்திப்பார்க்க?" என்றான் செல்லமாக. "அது இல்ல. ப்ரித்விக்கு பார்த்த மாப்பிள்ளை நீ. இப்போ, அவந்தி பண்ணின சின்ன தப்பால என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்ட முறைப்படி அனிஷ்கிட்ட மன்னிப்பு கேட்டு, ஹர்ஷினி பாப்பா கூட சேர்ந்து எடுத்த ஞாபகங்களை அள்ளி எடுத்தபடியே..பேரிஸ் போவோம்." என்றாள் சந்தோஷமாக. "பூ நா ஒன்னு கேட்பேன்..எனக்கு ஒரு முத்தம் கிடைக்குமா?" என்றான் ஆசையாக. "முடியாது! முதல் ராத்திரி வரை பொறுத்துக்கோங்க." என்றவும் "பூவே..என் துர்கபூரணி. உன் பிளான் ரொம்ப பிடிச்சிருக்கு." என்றான் அவளை தன் நெஞ்சோடு கைத்தாங்களாய் அணைத்த படி.

"நீ சொன்ன மாதிரி உன்னை முசிறிக்கு கூட்டிட்டு போறேன்." என்றதும் அவளது அலைபேசி அலறியது. யாரென்று பார்க்க ப்ரித்வி அழைத்திருந்தால். அவனோ எடுக்காதே! என ஜாடை காட்ட அவள் 'இல்ல எடுப்பேன்.' என அவள் எடுக்க அவனோ அவளை இதழ் பூட்டு பூட்டினான் அவ்வேளையில் அவளது விரல் தானாக அழைப்பை ஏற்கவைத்தது. ப்ரித்வி "ஹலோ!" என கத்திக்கொண்டு இருந்தால். பிறகு அவர்கள் ஏதாவது பேசுவார்களா? என நீண்ட நேரமா அழைப்பில் காத்திருக்க ஏமாற்றம் அடைந்த ப்ரித்வி இறுதியில் அலைபேசியை துண்டித்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் தான்.தம்பதிகள் இருவரும் தன்னிலை மீண்டு வந்தார்கள். கதவை திறந்த துர்கபூரணியை பார்த்து "என்ன அண்ணி இது?" என்றால் மைதிலி. "என்னது.." என அவள் முகத்தில் கை வைக்க "பூரணி உன் உதட்டுல என்ன இரத்தம்?" என அவந்திகா தெரிவு படுத்த "உள்ள வாங்க." என அவர்களை வரவேற்க அபிரனும் இணைந்து கொண்டான். "அபி! என் கல்யாணத்துக்கு ஏன் வராமல் போன?" என தன் தோழன் தர்ஷமித்ரன் கூற "அதான், இப்போ வந்துட்டேன்ல. ஆமா, என்ன உன் உதட்டுல இப்படி இரத்தம் வந்திருக்கு?" என அவனை கேட்க "அபி அண்ணா! அண்ணி உதட்டுல கூட இரத்தம்." என்றதும் வெட்கத்தில் இருவரும் மௌனமாக. "ஓ!!! லிப்லாக்கா? ஹான்!" என அபிரன் தர்ஷமித்ரனை செல்லமாக இடிக்க "போ..ரூம்ம போய் டகரேட் பண்ண தானே வந்தீங்க. போங்க." என அவர்களை அனுப்ப குறுக்கே புகுந்த மைதிலி "அவ்வளவு சீக்கிரம் என் அண்ணிய அனுப்ப முடியாது. கொஞ்ச நேரம் தனியா விட்டதுக்கு லிப்லாக், அண்ணி வாங்க டரேஸ்க்கு போவோம்." என அவளது கைகளை பிடித்து கூடிச்செல்ல 'மைதிலி!' என்றான் மனதினுள் கோபமாக.

அதே சமயம் சரியாக அவன் "மச்சி நா ஒரு கேஸ் விஷயமா போயிட்டு வரேன்." எனவும் "உன்னை எப்படி விரட்டனு நினைச்சேன். போயிட்டு மெதுவா வா மச்சான்." என்றான் ஆனந்தமாக.

அவந்திகா மட்டும் அவனோடு "வந்தி..நம்மளும் இதே போல குடும்ப வாழ்க்கை வாழ்வோமா?" என அவன் வாக்கியத்தை முடிக்கும் முன் "அபீர்!!!!!!!!! அப்போ சொன்னது தான் எப்பவும். உன்ன கட்டிகிட்டு வாழலாம். ஆனா..திடீர்னு வயித்து பிள்ளைகாரியா என்னை அம்போனு விட்டா என்ன பண்ணுவேன்? சரிபட்டு வராது!" என்றபடியே வேலையை தொடங்கினால்.

அப்படி அவந்திகா அவனிடம் வெறுப்போடு பேசினாலும்..மனதளவில் அவனை இன்னும் காதலித்து வரும் அளவிற்கும், அதை மறைக்கும் அளவிற்கும் என்ன நடந்திருக்கும்?


மூன்று வருடங்களுக்கு முன்..

அபிரனும் தர்ஷமித்ரனும் ஒரே ஊரில் இருந்தாலும். தர்ஷமித்ரன் வேலையே கதி என எப்போதாவது தான் அபிரனை பார்க்க செல்லுவான். அபிரன் அப்படி அல்ல அவன் ஒரு கலை நயமோடு வரையும் ஓவியன்.

ஒரு நாள் அவன் சிறப்பு விருந்தாளியாக அவந்திகா படிக்கும் கல்லூரிக்கு சென்றான். அங்கு அவன் ஓவியத்தின் ஆதி முதல் அந்தம் அனைத்தையும் மேடையில் பேச அவந்திகாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் "ஓய்! அவரு எவ்ளோ ஹன்சமா இருக்காரு..அடேய், என் சோப் போட்டு குளிப்ப? அப்படினு கேட்க தோணுது டி." என்றாள் கிசுகிசுப்பாக. "லூசு, ஒரு பையனை பார்த்தா போதுமே. விடமா அவனை ரசிச்சுட்ட இருப்பியே." என்றாள் சரியாக இவ்வேளையில் தான் அபிரன் "நீ தான் முன்னாடி வரியா?" என அவந்திகாவை அவன் கூப்பிட அவளது தோழி எழுந்து நிற்க "உன்ன இல்ல, உன் பக்கத்தில் இருக்குற பொண்ணு." எனவும் அவள் "அவந்திகா போ. குடுத்து வைச்சவடி நீ." என்றபடி அவளது கையை பிடித்து எழ வைத்து மேடை வரை அவளோடு சென்றால் அவளது தோழி. "என்னை எதுக்கு கூப்பிட்டாங்க?" என்றாள் தோழியிடம் அது அபிரனின் செவியில் தெளிவாக விழுந்தது. "இந்த பொண்ணு தான் இப்போ என் ஓவியத்துக்கு மாடல். நா சொல்றது போல நில்லு." என அவன் கூறுவது அழகாக சிரித்த படி நின்றாள் அவந்திகா.

அழகோ அழகு உன் கண் அழகு.. அவள் போல் இல்லை ஒரு பேரழகு..அழகோ அழகு!

IMG_20240229_092554.jpg

கைக்கிளையோடு அனலும்..🔥
 
அனல் 18✨

அவந்திகா தன் தோழியோடு வீட்டிற்கு பேசிக்கொண்டு வர. வீட்டு வாசலில் காலணிகளைப் பார்த்தவள் ஓடோடி சென்று பார்ப்போம் என்று உள்ளே வர அங்கு அவளுக்கு ஆச்சரியம் அபிரனை அவள் எதிர்ப்பார்ககவில்லை.

"இவ தான் என் பொண்ணு அவந்திகா." என தாயார் அறிமுகம் செய்யும் முன் அபிரன் "அவந்திகா!" என்றான் ஒரே நேரத்தில். "நேத்தே ஃபோடோ கொடுத்தேன். உங்ககிட்ட பேசிருப்பா." என்றார் புரியாமல். "இல்ல அவளை இன்னைக்கி தான் பார்த்தேன்.." என பெற்றோரிடம் அனைத்து விஷயங்களையும் அபிரன் சொல்ல. "எனக்கு அவந்திகாவப் பிடிச்சிருக்கு. ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்..இந்த ஒரு வருஷத்துல இவ படிப்புக்கும் எந்த ஒரு இடஞ்சலும் வராது." என்றதும் அவளது தங்கை "மாமா! நீங்க வேற லெவல் போங்க." என்றாள் உற்சாகமாக. அவளும் "எனக்கு அபிரன்ன ரொம்ப பிடிச்சிருக்கு." என்றதோடு தன்னறையினுள் சென்று கதவைப் பூட்டி கொண்டு தன் பையைத் தூக்கி எரிந்தவள் "இனி என்னுடைய கமல் அபிரன் தான்." அவந்திகாவிற்கு எங்கேயும் காதல் படம் அவளுக்கு பிடித்தமான ஒன்று என சொல்வதை விட அவளது மூச்சு காற்று என சொல்லலாம். அவளது அலைபேசியில் ஒரு தகவலை பார்த்ததும் "சூப்பர்!!!! உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி பேசிடவேண்டியது தான்." என தன் தோழிக்கு அழைக்க. "அடியேய்!!! நாளைக்கு எங்கேயும் காதல் படம் போடுறாங்க. மூவி டேக்கு எனக்கு ரொம்ப ஹெப்பி. அந்த லூசு கண்டேன் காதலே படம் போட்ட போது என்ன ஆட்டம் ஆடினால்? நாளைக்கு நான் ஆடுறேன்ல. ஆனந்த தாண்டவம். அவ முன்னாடி என் வருங்கால புருஷன் அபிரன்ன கூட்டிட்டு வரத்தான் போறேன்." என அவந்திகா இறுதியாக கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவள் "என்னது?" என்றபடி தோழியிடம் வீட்டில் நடந்ததை ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறினாள்.

பிறகு அவள் தன் அபிரனுக்கு அழைக்க அவனோ மோதிர கடையில் இருப்பதாகக் கூற. தங்கையோடு அவன் அனுப்பிய இடத்திற்கு ஓடினாள் அவனின் வந்தி."அவந்திகா! மோதிரம் வாங்கினேன். பிடிச்சிருக்கா?" என அவன் கேட்க "மோதிரம் அழகா இருக்கு. நா ஒன்னு கேட்பேன் வர முடியாதுனு சொல்ல கூடாது." அவனோ அவள் என்ன தான் கூற வருகிறாள் என கேட்ட ஆரம்பித்தான். "நாளைக்கு மூவி டே. எங்க காலேஜ்ல புக் ஃபேர், ஷாப்பிங்னு எல்லாம் இருக்கு. அதோட, எனக்கு பிடிச்ச 'எங்கேயும் காதல்' படம் போடுறாங்க. எப்பையும் என் தங்கச்சிய தான் கூட்டிட்டுப் போயிருக்கேன்.. நாளைக்கு உங்களை கூட்டிட்டுப் போகலாம்னு..தோணுது. அதோட, நம்ம கல்யாண விஷயத்தைச் சொல்லிடலாம்." என்றாள். அவனிடம் இருந்து பதில் வரவில்லை. அவளது தோல் மீது கைப்போட்டவனைப் பார்த்தவளின் விழிகள் அவனது கழுத்தில் மாலையாகக் கோர்த்திருக்க. அவளை அப்படியே அள்ளித்தூக்கினான் அவளின் அபிரன். அந்தரத்தில் கால்கள் இரண்டும் பறக்க..அவனது நெற்றியில் ஆழமாக முத்தமிட்டாள். அவனது நெற்றியில் முத்தமிட இதழை எடுக்க முடியாமல் லயந்து போனாள். பின் அதை புகைப்படமாக எடுத்து வைத்தாள் அவந்திகாவின் தங்கை. "உங்க ரோமான்ஸ் சூப்பரா இருக்குது மாமா." என்கிற அவளது வார்த்தைகள் கேட்டதும் தான் அவர்கள் இருவரும் தன்னிலை மீண்டு இறக்கினான் அபிரன்.

வந்த உடன் தன் தோழிக்கு அழைத்து "சொல்லுடி என்னடி ஆச்சு ஏன் அவந்தி கூப்பிட்டுக்கிட்டே இருக்க?" "வாழ்க்கையில் முதல் முறையா ஒரு ரொமான்ஸ் நடந்திருக்கு தெரியுமா? அந்த ரொமான்ஸ்ச நான் மறக்கவே மாட்டேன்! அதுவும் பப்ளிக் பிளேஸ்ல அபிரன் என்ன உயர்த்த நான் நெத்தில முத்தம் கொடுக்க.. அத என்னால எடுக்க கூட முடியல! தெரியுமா? அப்படியே.. என் உதடுல இருக்கிற லிப்ஸ்டிக் அவன் நெத்தியில பட்டுருச்சு. அப்புறம், நான் தான் அதை தொடச்சு விட்டேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!! இந்த மாதிரி விஷயம் எல்லாம் என் வாழ்க்கையில நடக்கணும்னு நினைச்சதே இல்ல! இப்பதான் உண்மையிலேயே நான் கயல்விழிய உன் உணருறேன்." அவந்திகாவிற்கு ஏற்றது போல் அவளது தோழி "ஒரு வழியா உன் நெஞ்சில்.. நெஞ்சில்.." என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டாள். பிறகு டிவியில் தனக்குப் பிடித்த பாட்டைக் கேஸ்ட் செய்து மெய்மறந்து ஆடினால் அவளது அதிர்ஷ்டமோ என்னவோ வீட்டில் தாய் யாரும் தந்தையாரும் இல்லை வெளியே கோயிலுக்குச் சென்று இருந்தார்கள். தாயாரும் தந்தையாரும் காலை, மாலை இரண்டு வேளைகளுமே அவர்கள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். பாட்டானது ஒழிக்கத் தொடங்க தன் ஆட்டத்தையும் ஆடத் தொடங்கினாள் அவந்திகா.

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ! கொஞ்சம் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ! ஆளை வேலை.. வேலை காட்டுதோ? என் நீல வானம் ஜூவாலே மூட்டுதோ? என் நிலாவில் வெண்ணிலாவில்.. ஒரு மின்சாரம் தான் தூவுதோ? என் கனவில்.. என் கனவில் உன் பிம்பத்துகள் இன்பங்கள் புரிந்திட..

இப்படித்தான் சகோதரி பாட்டுக்கு ஆடியதைப் பார்த்ததும் அவளுக்கு படிக்க மனம் விரும்பவில்லை. பாட்டை மாற்றினாள்.

கண்கள் மட்டும் பேசுமா? கைகள் கூட பேசுமா? உன் காதல் கதை என்னம்மா? உன்னை பார்த்த மாமனின்.. கண்கள் என்ன சொன்னதோ? மறைக்காமல் அதைச் சொல்லம்மா? பக்கம் வந்தானா? முத்தம் தந்தானா? கட்டியணை தானா? கட்டிப்பிடித்தானா? மாமன் ஜாடை என்னடி? கொஞ்சம் சொல்லு கண்மணி.. புது வெட்கம் கூடாதடி..! "அக்கா ஆனா நீயும் மாமாவும் பண்ற ரொமான்ஸ் எல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன் வாழ்க்கை சந்தோஷமா நீண்ட காலம் நிலைக்குன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு ஏன்னா நீயும் மாமாவும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ காதல் வெச்சிருக்கீங்க மாமா ரொம்ப நல்லவர்க்கா கடைசி வரை கைவிடாத அவரை.”என்றாள் பாசமாக."எப்படி அம்லு நா அபீரை விடுவேன். அவன் என் உயிர்,உலகம் இத்தனை வருஷம் நா ஏங்கிட்டு இருந்த சில சுதந்திரமான ஆசைகளை அபிரன் செஞ்சு தருவான். நீ போய் தூங்கு." என அவளை செல்லமாக தட்ட அவ்வேளையில் தான் துர்கபூரணி அழைக்க அவளது அழைப்பை ஏற்று "பூரணி..எப்படி இருக்க?" என கேட்க "அவந்தி நா நல்லா இருக்கேன். ரொம்ப கேஸ் இருந்தது, நேத்து ஒரு போஸ்மாட்டம் செஞ்சேன்." என்றதும் "பூரணி!! எப்ப பேசினால் பிணம் பத்தியே தான் பேசுற. நா பேசுறத கேளு! எனக்கு கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு. இப்போ, அவன் கூட லிவ்விங் ரிலேஷன்ஷிப்." என துர்கபூரணியிடம் ஐந்து மாதங்கள் கழித்து பேசினாள்.

"ஹான்! ஆனா.." என அவந்திகா இழுக்க "என்ன?" என்றான் கேள்வியாக. "இல்ல..எனக்கு புடவை கட்ட தெரியாது அபீர். அம்மாவை கூப்பிட முடியுமா?" என தன்னவனிடம் கேட்க அவன் சிரித்து கொண்டே "ஹ..ஹய்யோ! அத்த மாமாவோட கோயிலுக்கு போயிருக்காங்க." அபிரன் வீட்டுக்கு வருகையில் அவனை பார்த்து அவந்திகாவின் தாயார் தகவல் கூறிவிட்டு சென்றார். தலையில் கையை வைத்து அமரவும் மூடியிருந்த வெண்ணிற ஆடை அவிழ.. கரங்களை கொண்டு தன் மார்ப்பை மறைத்தவளை பார்த்து "உனக்கு நா புடவை கட்டி விடுறேன். தப்பாலாம் எதுவும் நடக்காது." என்றபடி போர்வையை அவளுக்கு கொடுக்க. அதைத் தன் மார்ப்போடு சுற்றி கொண்டாள்.

அவ்வேளையில் அவளது மனதில் 'அசங்காப்ப அள்ளிப்புட்டானே..! அடிமனதில் அள்ளிப்புட்டானே..! மிளகாய் பூ போல என்னுள்ள..அழகா பூ பூக்கவிட்டானே! வெட்கத்துல விக்கவைச்சானே..
வெப்பத்துல சிக்கவைச்சானே..பசும்புறனே..மளுப்புறனே! சோதப்புறனே!'

"ஊக்கு கொடு வந்தி." என அவன் கேட்க "நா பாட்டுல சுத்தி வந்தேனே..நகம் கடிக்க கத்து தந்தாயே!" என்றாள் அவளை அறியாமல். "நகம் கடிக்க வைச்சேனா?" என்றான் புரியாத படி. "ஐயோ! என்ன அபீர் அழகா கட்டிவிடுற அபீர். இந்தா ஊக்கு." என அவனிடம் கொடுத்தாள்.

IMG_20240310_213916.jpg
காதல் மலர்கிறது 🔥
 
அனல் 19✨

"ஐஸ் நல்லாத் தான் வைக்கிற. எப்போ கேட்டேன் ஊக்க? நீ இப்போ தர." என்றான் குறும்பாக. "மெய்மறந்து போயிட்டேன் உன் அழகை ரசிச்சு." அவன் தன் மனதில் 'வந்தி!!! அனல் போல என்னை வதைக்கிற உன் காதலால.' என்றதோடு அவள் அனைத்து அலங்காரம் செய்ய பொம்மை போல் அமர்ந்திருந்தாள் நங்கை.அவளது தங்கை வெளியே வர "அக்கா!!! செமையா இருக்க. மாமா, அக்காவுக்கு யார் சேலை கட்டி விட்டா?" என்றாள் சந்தேகமாக. "என் அபீர் தான்." என்றாள் அவந்திகா.
தன்னவனின் தோள் மீது கைகளை போட்ட படி. ஜோடியாக கல்லூரி சென்றார்கள்..

அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவந்திகா அபிரனோடு கரம் கோர்த்து நடந்து வருவது ஆசிரியர்களை கூட வியக்க வைத்தது. "ஏய்! இவர் தான நேத்து கெஸ்ட்டா வந்தது?" என ஒருவன் சொல்ல "ஆமா, ஆனா..உன் க்ர்ஸ் சிரிச்சு சந்தோஷமா வரத பார்த்தா..?அவங்களுக்கு நிச்சயம் முடிஞ்சு இருக்கும்." என அவனது தோழன் கூற அந்த ஆண்மகன் அவந்திகாவைப் பார்த்து "அவூ!" என அழைக்க "சொல்லு பக்கி." என்றாள் அப்போதும் அவளது கைகளை வெளியே எடுக்காத படி. "இவர் எதுக்கு இங்க?" என குழம்பிப் போய் கேட்க "இவர் என் அபீர். வி ஆர் கோயிங் டு பி எ ஃபேமிலி சூனர், சரி பக்கி மூவி பார்க்க போறோம். எங்களுக்கு சீட் போட்டு வைச்சீயா?" என்றாள் நக்கலாக. 'என் காதலை இன்னைக்கு சொல்ல பார்த்தேன்..ஆனா? இவ எனக்கு ஷாக் கொடுத்துட்டு போயிட்டா.' என்றதோடு சோககீதம் பாடாமல் நிறுத்தி கொண்டான். "அவந்திகா! இங்க வா." என தோழி அழைக்க அங்கு இருந்த ஆசிரியர் "இன்னைக்கி எங்கேயும் காதல் படம் போடுறாங்கனு சொன்னோம். பட், அது நாங்க முடிவு பண்ணல. இது சப்ரைஸ் ஆ அபிரன் சார் என்கிட்ட சொன்னது. அவங்க கல்யாணம் பண்ணிக்கப் போற நம்ம ஸ்டுடன் அவந்திகாவுக்குப் பிடிச்சதை, அவளுடைய உயிர் தோழிகிட்ட நேத்து கேட்டுத்தன்னுடைய இணைக்கு சப்ரைஸ் பண்ண வாய்ப்பு கொடுத்தா தான்! நா கெஸ்ட் லேச்சர் எடுக்க வருவேன்னு சொன்னார். சோ, திஸ் மூவி டே வாஸ் ஸ்பெஷல்..படம் பார்ப்போமா?" என்றார் தகவலாக. "அபீர்!" என்கிறதோடு அவனது இதழ் மீது தன் இதழை குவிக்க முயன்று தோற்று போக. அவன் சரியான நேரத்தில் எழுந்து சென்று மேடையில் "எனக்கும் அவந்திகாவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம். நீங்க எல்லோரும் கண்டிப்பா வரணும்." இந்த தகவலை கூறிவிட்டு தன்னவள் பக்கம் அமர்ந்தான். படத்தை ரசித்து ரசித்து தன்னவனோடு பார்த்து வந்தாள். நாளுக்கு நாள் அவந்திகா அபிரன் மீது எல்லையற்ற காதலை வளர்த்து கொண்டாள். அது மட்டுமல்லாது அபிரனும் அவளுக்கு ஏற்றவாறு வாழ்க்கை நிலையை மாற்றினான். இப்படியே மாதங்களானது சென்றது.. தேர்வுகள் வந்து அவளை நொச்சரித்தது. ஒரு வழியாக காதலும் படிப்புமாக அவளது வாழ்க்கை செல்ல..நாட்கள் குறைந்து கொண்டே போனது. கண் இமைப்பதற்குள் இறுதி தேர்வு வந்தது. தேர்வு சமயத்தில் அவனிடம் பேசக்கூடாது! என்பது அவளிடம் அவன் வாங்கிய வாக்கு. தன்னால் தன்னவளின் படிப்புக்கு கேடு வரக்கூடாது என்பதை அபிரன் குறிக்கோளாக வைத்திருந்தான். இச்சமயம் தான் அவனது தாயார் இறைவனடி சேர.

அவந்திகாவினால் அவனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை. இப்படி இருகையில் பெண்ணவள் 'அபீர்! இப்படி உடைஞ்சு போய் இருக்கான். நா எப்படி என்னுடைய எக்ஸாம எழுத போவேன்?' என அவன் பற்றிய யோசனை தான் அவளுக்கு உதித்தது. "அவந்திகா. இன்னைக்கு உனக்கு கடைசி எக்ஸாம். போய் எழுதிட்டு வா." என அவளது தாயார் கூற "முடியாது! என் அபீர்..இப்படி மனசொடிஞ்சு இருக்கும் போது.. நா எப்படி மா எக்ஸாம் எழுத போவேன்?" என அவள் தன் அன்னையோடு சண்டை போட அவளது தங்கை "மாமா, அக்கா எக்ஸாம் எழுத போகமாட்டேன்னு அடம்பிடிக்காங்க. நீங்க சொன்னா தான் போவாங்க." என அவனிடம் தகவலை கூற அவள் இருக்கும் இடத்திற்கு சென்றவன் "வந்தி! எக்ஸாம் முடிச்சுட்டு வா." என அவன் மென்மையாக கூற "அது எப்படி..?" என்றாள் அழுத படியே. "சீக்கிரம் முடிச்சுட்டு வா. நீ வந்த பிறகு தான் என் அம்மாவை புதைக்க கொண்டு போவோம். அ..அதோட, என் கூட நீ கொஞ்ச நாள் துணைக்கு இருப்ப தானே?" என்றான் ஏக்கமாக. "கண்டிப்பா இருப்பேன். இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் இப்போ..இப்படி நடந்தது எனக்கு கவலை தான்." தன்னவள் பேசுவதை கேட்டவன் "சரி..விதி அப்படி இருக்கு. போய் எழுதிட்டு வா." என அவளை அனுப்பி வைத்தான்.

தன் கல்லூரி காலம் முடிந்தது. இதோ, ஊட்டியில் இருக்கிறார்கள். துர்கபூரணி வீட்டில்..அவள் வீட்டிற்கு தூங்குவதற்கு மட்டுமே வருவாள். ஆனால், அவந்திகா அவளிடம் அனைத்து விஷயங்களை கூறிய பின். அவள் தன் தோழியின் வீட்டில் தங்கயிருக்க. இப்படி ஒரு நாளில்..அவனை அறியாமல் வீட்டிற்கு வந்தவுடன் விவாகரத்து செய்யலாம் என விளையாட்டுக்கு கூறவும் மனம் உடைந்து போக. சிறிய விபத்தில் மருத்துவமனை தங்கி இருக்கும் தன் தோழியை பார்த்து "அவந்தி! என்னாச்சு?" என துர்கபூரணி கேட்க "பூரணி..என்னை அவன் வேண்டாம்னு சொல்லிட்டான். நா இனி இங்க இருக்க விரும்பல! என்னை கண்கானாத இடத்துக்கு கூட்டிட்டு போ. எனக்காக ஒரு உதவி பண்ண முடியுமா?" என தன் தோழி கூறியதை கேட்கவும் "என்ன உதவி வேணும்னாலும் சொல்லு." என அவள் பேச "ப..பூரணி நா இறந்து போய்ட்டதா அபீர்ல இருந்து என் அம்மா, அப்பா வரை நம்பணும். நடக்குமா?" என அவள் கேட்க அவளது நிலையை துர்கபூரணி உணர்ந்து கொண்டாலும், இப்போது அவள் கேட்பது சட்டத்திற்கு எதிரான ஒன்று. இருப்பினும், தோழியின் மனநிலை சரியில்லாத காரணத்தினால் வேறு வழியின்றி அவளுக்காக வேறு ஒரு பெண்ணின் சடலைத்தை அவந்திகாவுடையது என அனைவரையும் நம்ப வைத்து துர்கபூரணி மட்டும் போதும் என அவளுடன் முசிறி வந்து சேர்ந்தாள்.

நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டே சாந்தி முகூர்த்ததிற்கு ஏற்பாடு செய்து முடித்தவள் எழுந்து செல்ல. அபிரன் எதுவும் பேசாமல் இருக்க. மைதிலி அவந்திகாவின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்ப..'என்ன அவந்திகா டகரெஷன் எல்லாம் முடிஞ்சதா?' தகவல்களை படித்ததும் 'முடிஞ்சது மைதிலி. பூரணியை கூட்டிட்டு பக்கத்து அறைக்கு வா.' என தோழியவளுக்கு பதில் அனுப்பி வைத்தாள்.அபிரன் தன் நண்பனுக்கு தொடர் கொண்டான். "சொல்லு மச்சி." என்றான் மொட்டையாக. "மச்சான் டகரெஷன் எல்லாம் முடிஞ்சது. நா உன்னை கூப்பிட வரவா?" என்றான் ஆர்வமாக. "வேலை முடிஞ்சது மச்சி. சிட்டா பறந்து பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்." என்றதோடு வீட்டிற்கு படி இறங்கினான் அபிரன். "அண்ணி, அண்ணா வந்த பிறகு நீங்க ரூம்க்கு போகலாம்." என்றாள் கொஞ்சலாக. "ரௌடி பையன் எங்க போனான்?" என்றதும் "ஓ!!! என் அண்ணாவுக்கு நீங்க வைச்ச செல்ல பெயர் இது தானா? அவந்திகா சொன்ன போது கூட நா நம்பவே இல்ல." என்றாள் நகைச்சுவையாக. "பூரணி இன்னைக்கு நைட்டு..நம்ம கச்சேரி தான் ரொம்ப உற்சாகமா கலகட்டுதடி செல்லமேனு வேட்டை நடக்கும்." என அவளை செல்லமாக சீண்டி விட "ஏய்! அவந்தி உனக்கு கச்சேரி இல்ல. எனக்கும் என் ரௌடி பையனுக்கும் தான் வேட்டை, கூடல், கச்சேரி எல்லாம்." என்றாள் தன்னை அறியாமல். இருவரும் ஒன்று சேர்ந்து "அண்ணி!!!" "அவந்தி!!!" என அவளது இடையில் விளையாட..இடை குலுங்கியதில் வெட்கம் கொண்டவள் "இங்க எல்லாம் தொடுறதுக்கு என் புருஷன் ரௌடி பையலுக்கு தான் உரிமை." என்றாள் அவனது துணைவி போல. உண்மை தானே! தன்னவனை தவிர வேறு எவரையும் அவள் தொடவிட்டது கிடையாது. அனலாக ஆரம்பித்த காதல் இன்று, திருமணத்தில் இருமனமும் இணைந்து காமக்கூடல் ஒன்று இன்றிலிருந்து தர்ஷமித்ரன் துர்கபூரணி வாழ்வில் தொடங்க இருக்கிறது. நேரம் தாமதம் செய்யாமல் வீட்டிற்கு வந்தான் அவளின் கணவன் ரௌடி பையன் என்கிற தர்ஷமித்ரன்.

அபிரனுக்கு அவசரமான வேலை அதனால், அவன் வீட்டை விட்டு சென்றான். தர்ஷமித்ரன் வண்டி சத்தத்தை கேட்டவள் ஓடோடி பால்கனிக்கு வர. மைதிலி "அண்ணி! கன்ட்ரோல்." என்று கூறிய படி அவளை அறைக்கு அழைத்து செல்ல. வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்தவன் "அவந்திகா! எந்த ரூம்?" என கேள்வியை கேட்க அவள் கைக்காட்டும் திசை நோக்கி அவன் அறையினுள் புகுந்து கொண்டான். "பூ சீக்கிரம் வா. நமக்கான நேரம் வந்துடுச்சு." என தனியாக புலம்ப மஞ்சள் நிற சேலையில் நீல நிறத்தில் அழகிய பூக்கள் நெய்த புடவைக்கு ஏற்றவாறு நகைகள், அதோடு ஐந்து மொலம் மல்லிகை பூவை முடியளவு நீளமாக குத்திருக்க. சிவப்பு நிற பொட்டும் குங்குமமும், அதைவிட அவளது அழகிய வெட்கபுன்னகை இதையெல்லாம் பார்த்தவனுக்கு 'நீ என்னை கொல்றீயே!!!' என்கிற படி ரசித்தவன் சற்று மென்மையாக அமர்ந்திருந்த மனைவியிடம் "நீ செம அழகா இருக்க. குட் நியூஸ் சொல்லட்டா?" என்றான் அவளது காதருகே சென்று "என்ன விஷயம் ரௌடி பையா?" என்றாள் தெரிந்து கொள்ளும் எண்ணத்தோடு. "முசிறிக்கு ஃபிளைட் டிக்கட் நாளைக்கு ஈவினிங் போட்டு இருக்கேன். போனதும், அனிஷ்கிட்ட எல்லாம் சொல்லிட்டு நைட்டு அங்க ஸ்டே பண்ணிட்டு மறுநாள் காலையில பேரிஸ்க்கு ஃபிளைட். அப்புறம்..இரண்டு வாரம் நம்ம ஹனிமூன் அங்க தான்." இதையெல்லாம் கேட்டவளுக்கு "ஆ!! ரொம்ப நல்லது ரௌடி பையா. இந்தா பால் குடி, நா தூங்கணும்." என்றாள் அவன் என்ன பதில் சொல்லுவான் என்பதற்காக. பதில் ஏதும் சொல்லாமல் பாலை அருந்திவிட்டு அப்படியே படுக்க செல்ல முந்தியை பிடித்த இரு கைகளை கொண்டு "லூசு,முசடு சும்மா சொன்னா..இப்படி முதல் ஆளா தூங்க போயிட்டான். தூங்கிட்டானா?" என முனுமுனுத்த படியே அவன் பக்கம் நெருங்க எப்போதடா இவள் வருவாள் என காத்திருந்தான். அவள் வந்ததும் இறுக்கி அணைத்து முத்தமிட்டு மூச்சு காற்று விடாது..அந்த அனலை அழகாக களவாட தொடங்கினான்.

நகைகளும்,ஆடைகளும் முக்கியமாக ஒளி என இவை அனைத்தும் அவர்களுக்கு இடைஞ்சல்களை தர அவளது முந்தியை பிடித்தவுடன் அது சற்று அவிழ "பூ..அப்போ நீ ஊக்கு குத்தவே இல்லையா?" என்றதும் "எப்படியும்..அதுக்கு நம்ம நேரத்தை கெடுக்கும். அதான்.." என்றாள் வெட்கத்தோடு.

அன்பே உன் கைகள் தீண்ட..ஹார்மோன்கள் முங்கிலாக..சங்கீதம் படைக்குதே..சந்தோஷம் வெடிக்குதே..சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை..எதுதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே உன் நினைவில் நெனைய பிடிக்குதே!!! என்பதை இரு உடலும் ஒரு புது படைப்பை கொண்டு வருவதற்கான பயணத்தையும், அவர்களது காதலின் ஆழத்தையும் இது நாள் வரை தன் வாழ்வில் எந்த ஆசையெலாம் நிறைவு பெறாது என நினைத்த துர்கபூரணி வாழ்வில்..அவளது தோழி அவந்திகாவின் விளையாட்டும் தர்ஷமித்ரன் அவளை கைக்கிளையாக தாங்கியதும் தான் அவளது கவலைகள் பறந்து சென்றது தொலைதூரத்தில். இருப்பினும் அந்த அனல் இன்னும் முழுமையாகத் தீரவில்லை என்பதை அவர்கள் அந்நேரம் உணராமல் போனார்கள்.

தர்ஷமித்ரன் வீட்டில்..

"ஆன்டி இன்னைக்கி கல்யாணத்துல உங்க பேச்சை கூடக் கேட்ககூடாத அளவுக்கு அந்த அழுக்கு பிடிச்ச துர்கபூரணி என் தர்ஷனை மாத்திட்டா." என்றாள் கோபமாக மற்றும் ஏமாற்றம் நிறைந்த குரலில். "நீ ஒன்னும் கவலை படாத ப்ரித்வி. என் பையன் சொன்ன மாதிரி அவனுக்கு கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருந்தால்..உன் மனசுல ஆசை வளர்த்துக்காம இருந்திருப்ப. நா தான் தப்புப் பண்ணிட்டேன்." என்றார் உண்மையாக. 'ஆஹா! என்ன இவங்க இப்படி பல்டி அடிக்குறாங்க? இது நா எதிர்பார்த்தது கிடையாதே?' என்ற யோசனையில் "விடுங்க ஆன்டி நடந்ததை மாத்தவே முடியாது. ஆனா.. நடக்கப் போறதை மாத்திடலாம். அந்த துர்கப்பூரணிய என் தர்ஷன் வாழ்க்கையில இருந்து எப்படி காலிபண்றதுனு எனக்கு தெரியும். முதல்ல அவங்க இப்போ சந்தோஷமா இருக்கட்டும்." என்றாள் மனதில் ஒரு கொடூர திட்டத்தை வைத்து கொண்டு. "என்ன பண்ண போற? அவளை ஏன் இப்போ சந்தோஷமா இருக்கச் சொல்ற?" என்றார் வித்யபாரதி சந்தேகமாக. "இப்போவே நம்ம தடுக்கலாம். ஆனா.. அதைத் தர்ஷனுக்குச் சாதகமாக்க முடியும். கொஞ்ச நாள் சந்தோஷத்தை அனுபவிக்கட்டும்." என்றாள் சாதாரணமாக. வித்யபாரதி தான் குழம்பி போனார்.

*****

அபிரன் தன் வீட்டில் மாட்டி இருந்தவளின் ஓவியப் படத்தைப் பார்த்து ஒரு கோப்பையில் சாராயத்தை ஊற்றிய படி "வந்தி..இப்போலாம் எங்கேயும் காதல் பார்த்தா..உன்னோட நியாபகம் தான் வருது. இ..இன்னைக்கு நீ இங்க வந்ததும் ஐயம் வெறி ஹேப்பி." என்றான் போதையில்.சற்று நேரம் அமைதியில் இருந்தவனுக்கு திடீரென ஒரு விதமான சோகம் வந்து ஒட்டிக்கொண்டது. "என் அப்பா நா பிறக்குறதுக்கு முன்னவே இறந்து போயிட்டார். எ..என் அம்மா நமக்கு கல்யாணம் தேதி குறிச்ச கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க. தனிமையே இல்லாத படி நீ எனக்கு, நம்ம காதலால அன்பை வெளிப்படுத்தினது என்னை தனிமை பக்கம் போகவிடாம பண்ணினது. நீ விளையாட்டா பேசுறது போலவே நானும்..அன்னைக்கி விளையாட்டா பேசினேன். ஆனா? விளையாட்டு ஏற்பாடு பண்ண பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு தூரமா போயிட்ட. என்னுடைய இந்த தனிமை, நானா உருவாக்கிட்டது. உன்கிட்ட அப்படி பேசிருக்க கூடாது. தப்பு பண்ணிட்டேன் அவந்திகா. ஐயம் ஸ்டில் லவ்விங் யு." இறுதியாக அவன் அவளது ஓவிய படத்தில் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே அதை மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டிவிட்டு "உன்னுடைய இந்த அபீர்..உன் நினைப்பாலையே தவிக்கிறேன் டி."அப்படியே அவன் நித்தரையைத் தழுவினான்.

மறுநாள் காலை..

தர்ஷமித்ரன் துர்கபூரணியை தன்னுள் புதைத்த படி உறங்கிக்கொண்டு இருக்க. எப்போது உறங்கினார்களோ? அவர்களுக்கு தான் தெரியும். மைதிலியும் அவந்திகாவும் மெல்ல அவர்களது அறையை நோக்கிச் செல்ல..சூரிய வெளிச்சம் ஜன்னல் கண்ணாடியில் பட்டு தெரிக்க..அந்த வெளிச்சத்தில் கண்விழித்தாள் நங்கை. "அச்சோ! லேட் ஆகிடுச்சே? ரௌடி பையலே!! கையை எடு. நா போய் வேலையப் பார்க்கணும்." என அவனது கைகளை எடுக்க முயல அவனோ "உன்னை இப்படியே வைச்சிருக்க தோணுது என் பூ பொண்டாட்டி." என்றான் தூக்கத்திலும் காதலாக. "பூரணி.." என்ற குரலில் அவந்திகா கதவைத் தட்டத் தானாகக் கதவுத் திறந்தது. மைதிலி "அண்ணி இப்படியா? கதவைத் தாள் போடாம நைட்டு கச்சேரி பண்ணிங்க?" என்றாள் கூசத்தின் சிகரமான குரலில். தன் தங்கையின் குரலில் கண் விழித்தவன் "ஏய்! எப்படி ரூம்குள்ள நுழஞ்ச மைதிலி?" என்றான் பயமாக. "தர்ஷமித்ரன், நீங்க தாள் போட்டா நாங்க எப்படி உள்ளே வரப்போறோம்? ஆனாலும், பூரணி இவ்வளவு நேரம் தூங்க கூடாது. போய் தலைக்கு குளிச்சுட்டு வா. சாப்பாடு எல்லாம் ரெடி." என்றதோடு அவ்விடம் விட்டு இருவரும் மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.அபிரனை தேடி வந்தால் ப்ரித்விகுப்தா. "அபிரன்!!! என்ன இன்னும் உனக்கு தூக்கம் கேக்குது. புதுசா திட்டம் வைச்சிருக்கேன். என் தர்ஷனை செட் பண்ணி கொடுத்துட்டு நீ எவ்ளோ நேரம்னாலும் தூங்கிக்கோ." அறை தூக்கத்தில் தான் அவன் இருந்தான். "என்ன? உன் தர்ஷனா? அவேன் துர்கபூரணியோட புருஷன். நீ இப்போ என் அவந்திகாவ என்னோட சேர்க்கணும்." என்றான் அவளது திட்டத்தின் படி "முடியாது! என்னடா பண்ணுவ? நீ நாய் மாதிரி சுத்தியும் அவ திரும்பினாலா? நோ!!! அவ உனக்கு கிடையாது!" என்றாள் எகத்தாளமாக. ப்ரித்வியின் இறுதி வார்த்தைகளை கேட்டதும் அங்கிருந்த பீர் பாட்டலை கொண்டு தலையில் ஓங்கி அடித்தான் அபிரன்.
Snapchat-354991155.jpg

அனலின் வேட்டை ஆரம்பம் 🔥
 
Last edited:
Snapchat-1323844215.jpg

அனல் 20💞

அதே போல் ப்ரித்விகுப்தாவைக் கட்டிப்போட்டு வைத்திருந்தான் அபிரன். அவளை பார்த்து "உன்னை தான் எதிர்பார்த்துக் காத்திட்டு இருந்தேன்! ஏன் தெரியுமா?" பெண்ணவளுக்கு யோசனை..அது அவளது பார்வையிலேயே தெரிந்ததைக் கண்டெடுத்த அபிரன் "நீ என்னமோ சொன்ன தானே அன்னைக்கி. அவந்திகாவோட உன்ன சேர்த்து வைக்காமல் போனா என்ன கொன்றுனு சொன்ன. ஆசை பட்டு சவால் விட்ட, அந்த ஆசையை நிறைவேத்த வேணாமா?" என்றபடியே அவளது இடது பாதத்தில் இரும்பு வேலியை சுத்த அவள் "ஏய்! என்ன டா பண்ற? என்னை விட்டுடு அபிரன் நா முசிறி பொய்றேன். அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது." என இவள் முழுவதுமாகக் கூற கட்டிய வேலியை தன் காலால் ஓங்கி மிதிக்க பாவம் அவள். இது நாள் வரை தான் செய்தப் பாவத்தின் பலனை அபிரனிடம் இன்று தண்டனையாக வாங்குகிறாள். 'ஆ!!! நா..இனி தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன்.' என்று கதறுவாள் என நினைத்து பார்த்தான். ஆனால் அவள் "இந்த ப்ரித்விகுப்தா சாவுறது தயார். ஆனா எனக்கு ஒரு ஆசை,செய்வீயா?" என்றாள் நிதானமான குரலில். "என்ன ஆசை?" என்றான் அவளை பார்க்காமல் "அபிரன்..நீ அந்த துர்கப்பூரணிய கதற கதற கொல்லணும். அப்போ தான் என் ஆன்மா சாந்தி அடையும். என்னை ஓரேயடியா இப்போ கொன்னாலும் பிரச்சனை இல்ல." என்றாள் அப்போதும் அவளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு. இதை கேட்டதும் அபிரனுக்கு கோபம் "ச்சி! நீயெலாம் ஒரு பொண்ணா டி? என் வந்தியோட விளையாட்டு மூலம் என் தோழனுக்கு நல்ல பொண்ணு மனைவியா வந்துட்டா. உன்னோடக் கெட்ட புத்தி வெளிவந்துடுச்சு." என்றான் மனதளவில் ப்ரித்வியைப் பற்றி அபிரன் என்ன நினைத்திருந்தான் என்பதை..இதோ கூறிவிட்டானே? அவனது எண்ணத்தை. "உன் பேச்சை இனி நா கேட்கவே மாட்டேன்.!" என்றான் அபிரன் "ஐயோ!! இந்த ப்ரித்வியுடைய ஆசைய இந்த கொலகார அபிரன் நிறைவேத்தி தான் ஆகணும். ஏன் தெரியுமா? இது என் கடைசி ஆசை." என்றாள் சிரித்து கொண்டே "துர்கப்பூரணி..அவளை கொல்றது உன் கடைசி ஆசையா?" என்றான் மீண்டும் ப்ரித்வியிடம் தெளிவு படுத்தி கொள்ள. "க்யாபாத் ஹே! சுனிய..மேரா பேகலா ப்யார் தர்ஷன். மேரா ஜீந்திக்கி ஜர்னி லாஸ்ட் டே ஆஜ். (அட..என் முதல் காதலன் தர்ஷன். என் வாழ்க்கை பயணத்தில் என்னோட கடைசி நாள் இன்னைக்கி.) என்னை கொன்னுடு!!" என்றாள் அபிரனிடம் அவனோ 'இவளை கொன்னுட்டா..நம்ம துர்கபூரணிய கொன்னாலும், கொல்லாமல் போனாலும் இந்த அழுக்கானவளுக்கு தெரியவா போகுது.' என்றபடி அவளது நெற்றியில் மீதி இருந்த வேலி கயிறை சுற்ற..அதிலுள்ள முட்கள் போன்ற பகுதிகள் அவளை காயப்படுத்த..மூச்சுவிட முடியாத படி வலியில் துடித்து கொண்டு இருக்கும் போது ஆறு குண்டுகள் அவளது உடம்பை குத்தியது. இறுதியாக ப்ரித்விகுப்தா தன் குடும்பத்தை பற்றி சிந்தையே செய்யாமல் இறந்தது தான் மிச்சம்.

*****

தர்ஷமித்ரன் தன் மனைவியோடு முசிறிக்கு காலை உணவை சாப்பிட்டு விட்டு அவனது தங்கையோடு, தன் மனைவியின் தோழி அவந்திகாவோடு நேரத்தைக் கடத்தியவன். நேரம் போனது தெரியாது..மாலைப்பொழுது விமான நிலையத்தில் தன்னவளோடு முசிறி விமானத்தில் பறந்தான். "ரௌடி பையலே! பேரிஸ் போனது தெரிஞ்சா? அவந்தி என்னை கொன்னுடுவா." பயணம் முடிந்து முசிறி வர அனிஸ்குப்தாவின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய முகவரியைச் சொல்ல ஓட்டுனர் அவர்களை அங்கு கொண்டு சென்றார்.
"வா தங்கச்சி. வாங்க தர்ஷமித்ரன்." என இருவரையும் அன்போடு அழைத்தான் அனிஷ். வீட்டிற்கு வந்தவர்களை அன்போடு அவனது தாயார் தண்ணீர் தர, அதை அவர்கள் பருகியதும். "அப்புறம், என் தங்கச்சி ப்ரித்விய கட்டிக்கிற விருப்பம் தானே?" என்றான் அனிஷ். "அத பத்தி பேசத் தான் வந்திருக்கேன். அனிஷ் நா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவந்திகா ஃபோட்டோவ மாத்தி அனுப்பிட்டா.." என ஆதி முதல் துர்கப்பூரணியை மணந்து கொண்டது,அவளை ப்ரித்வி வார்த்தைகள் கொண்டு குத்தி காயப்படுத்தியது, என அனைத்தையும் கூறினான். ஆரம்பத்தில் கோபம் கொண்டவன், தன் தங்கை இப்படி இழிவாக துர்கபூரணியை நடத்தியது காதுகளில் கேட்டவனுக்கு "சாரி துர்கா. அவளுக்காக நா மன்னிப்பு கேட்டுக்கிறேன். அம்மாவுக்கு இந்த விஷயமெலாம் தெரியாது. நா பேசிக்கிறேன். எது எப்படியோ, இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம். ரெண்டு பேரும் காதலோட வாழுங்க. உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன் துர்கா." என அனைத்து நினைவுகளை தன் கைகளால் அள்ளி கொண்டாள்.

அனிஷ் ப்ரித்வியைப் போல் அல்லாது சூழ்நிலையை புரிந்து நடந்தது. தர்ஷமித்ரனுக்கு மகிழ்ச்சியாக இருக்க. அங்கு தங்குவதற்கு பாவம் மனமின்றி போனது காரணம் ஹர்ஷினியோடு அவள் வாழ்ந்த நிகழ்வு ஒவ்வொன்றும் முசிறியின் காற்றில் கூட துர்கபூரணியினாள் அறிந்து கொள்ள முடிந்தது. "காபி?" என்ற ஒற்றை சொல் அவளது ரௌடி பையனின் குரல் இரண்டும் அவனது பூ(துர்கபூரணி) மனதைச் சமநிலைக்குக் கொண்டு வர முகத்தில் புன்னகையோடு அவள் அவனை இறுக்கி அணைக்க அவனுக்கு அலாதி மகிழ்ச்சி. பின்னாலிருந்து அணைப்பது ஒரு சுகமல்லவா? அதை அனுபவித்தான் தர்ஷமித்ரன். நாள் எப்படி சென்றது? என தெரியவில்லை. பேரிஸிற்கு வந்து ஒரு ஒரு மாதமாகிவிட்டது. தர்ஷமித்ரன் அவளை தினம்தோறும் சாமத்து சங்கிதத்தை படைப்பான். சேலையில் வீடு கட்டி..படுக்கை உடைந்தால் என்ன செய்வது? என்பது போல் போர்வைக்குள் நடந்து வரும் காமப்போர். இவனை விட இவனது துர்கபூரணி ஒரு படி மேலே சென்று அவன் உறங்கினாலும் தன் கணவனை உறக்கத்தை கெடுப்பாள் மூக்கை சீண்டும் படி. அந்த நகத்தின் ஸ்பரிசம் சொல்லும் 'வா மீண்டும் ஒரு முறை?' என இப்படி அலைபேசிக்கு அங்கு இடமின்றி போனது. இன்று தான் அவனுக்கு அவனது தாயார் வித்யபாரதி அழைக்க நொடியில் அழைப்பை ஏற்றவன் "அம்மா." என கூற "உடனே, நீ வா மித்ரா. நா..துர்கப்பூரணியை என் மருமகளா ஏத்துகிறேன். ப்ரித்வி இப்படி இழிவான காரியம் செஞ்சிருக்கா. அதை வைச்சு நா என் மருமகளை நல்லா வாழ்த்தவே இல்ல. வா மித்ரா!" என அழுகுரலில் தாயார் பேச அதே வேலை பார்க்க துர்கப்பூரணி அவனது முதுகில் தட்ட அலைபேசியை ஏதும் பேசாது துண்டித்தவன் "ஏய்!!! முக்கியமான விஷயத்தை கேட்டுட்டு இருக்கேன், சும்மா இல்லாம உன் உடல்பசியை தீர்த்துக்கிற? போய் உன் வேலை என்னவோ அத பார்! உன்னையெலாம் கல்யாணம் பண்ணி எப்படி தான் காலத்த தள்ள போறேனோ?" முதலில் கூறிய வார்த்தைகளை கூட அவள் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.
இறுதியில் கூறிய வார்த்தைகள் கேட்டதும் அவன் கட்டிய தாலியை கண்முன் காட்ட "இது..என்னனு தெரியுதா??? எ..என் வாழ்க்கையில யாரோ ஒருத்தன் எனக்கு குழந்தை கொடுத்தான். அப்புறம், உனக்கு தான் எல்லாம் தெரியுமே? என் உயிரை கையில் பிடிச்சுட்டு ஓடி வந்த போது தாய் மாதிரி தாங்குன அதெலாம் பொய்யா?" என்றாள் அழுகையோடு. தர்ஷமித்ரன் மனம் உடைந்து போனான். மீண்டும் அவள் "நீயும் அவனும் ஒன்னு." என்றதோடு அலைபேசியில் அவந்திகாவின் எண்ணை தொடர்பு கொள்ள "அவந்தி உதைய்பூர்க்கு இரண்டு டிக்கட் போடு." அந்த பக்கத்தில் அவளோ "..." அதற்கு துர்கப்பூரணி "என் வாழ்க்கையில் நீ மட்டும் தான். நம்ம கிளம்புறோம்." "பூ..ஏன் என்னை விட்டு தொலைவு போக பார்க்குற?" என்றான் சோகமாக. "என்ன பண்ண சொல்ற? ஹான்! இங்க பார், நா உன்கிட்ட பிச்சையா கேக்குறேன். என்னை இந்தியாவுக்கு கூட்டிட்டு போய்டு. நானும் அவந்தியும் எங்காவது கண்கானாத இடத்துக்கு போய்கிறோம்." என்றாள் இறுதியாக.

அலைபேசியில் கேட்டு கொண்டு இருந்த அவந்திகா "ஏன்டி இப்படி சண்டை போட்டுக்கு இருக்கீங்க?" என்றாள் அப்போது தான் அவளிடம் பேசிவருகிறோம் என அவளுக்கு புரிந்தது. அலைபேசி வாங்கிய தர்ஷமித்ரன் ஸ்பிக்கரில் போட "பூரணி..இரண்டு வாரம் போயிட்டு வரதா இருந்தது. இவ்ளோ நாள் சந்தோஷமா..
இருந்திருக்கீங்க. நா நிறைய முறை ஃபோன் பண்ணினோம். எடுக்கல." என கூறும் போது அவளிடம் இருந்து ஐநூறுக்கு மேல் அழைப்பு வந்திருக்கிறது என்பதை புரிந்து "என்ன விஷயம் நாங்க வரணுமா?" என்றாள் பதட்டமாக "ஆமா பூரணி..ப்ரித்விக்கு நீ போஸ்மாட்டம் செய்யணும்னு அனிஷ் இங்க ஒரு மாசமா இருக்கார்." தன் உயிர் தோழி இறந்ததை கேட்டதும் துர்கப்பூரணிக்கு வார்த்தைகள் வரவில்லை. "அவந்திகா நானும் பூரணியும் இன்னைக்கி ஈவினிங் பிளைட்ல வந்துடுவோம்." என்றதோடு அழைப்பைத் துண்டித்தான்.அழுது கொண்டே வரும் மனைவியை தேற்றிக்கொண்டு வந்தான் அவளது அவனான தர்ஷமித்ரன்.

தமிழ்நாடு வந்து சேர்ந்தவுடன்..அவந்திகாவை ஏர்ப்போட்டில் பார்த்ததும் அவளை கட்டியணைத்த துர்கப்பூரணி "எப்போ டி ஆச்சு?" என்ற கேள்வியோடு ப்ரித்வியின் பிணத்தை தனியாக பராமரித்து வைத்திருந்த பழைய கட்டிடத்தில் துர்கபூரணியுடன் அனிஷ் மற்றும் அனைவரும் வெளியே காத்திருக்க. பிணத்தின் எண்ணை அவந்திகா துர்கபூரணிக்கு கொடுத்திருந்தாள். அதை வைத்து ப்ரித்வியின் சடலத்தை ஆய்வு செய்து முடித்ததும். ஆய்வு செய்யும் போதும் துர்கப்பூரணி விழிகள் நெனைந்து கொண்டே இருந்தது. "அனிஷ் அண்ணா, நா சொல்ல போறதை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க." என்றாள் துர்கப்பூரணி. "பூ என்ன சொல்ற?" என்கிற கேள்வியை முன்னெடுத்து வைத்தான் தர்ஷமித்ரன். "தர்ஷமித்ரன், ப்ரித்விக்கு கொடூரமான சாவு. போஸ்மாட்டம் பண்ணும் போது..ஐ கான்ட் கன்ட்ரோல். அவ பாதத்துல வேலியால சுத்தி அதுல இருந்த முல் பகுதியால கிளிக்கவைச்சிருக்காங்க. கோபத்துல மிதிச்சால் எப்படி காயம் படுமோ அப்படி. அதோட, அதை போல முகத்துல சுத்தினது ப்ரித்வி முகத்தில் ஊசி போல குத்திருக்கணும். அப்புறம், எப்பையும் போல நெஞ்சுல குண்டு. ஆனா.." என அவள் இடைவேளை விட அனிஷ் "என்ன..மா?" என்றார் உடைந்து போன குரலில். "ஆ..ஆனா அந்த குண்டுகளை ஹார்ட் ஷெப் வரது போல சுட்டிருக்கான்." என்றாள் உடைந்து போய். "ஐயோ!! ப்ரித்வி பேட்டி. உனக்கு இப்படி வாழ வேண்டிய வயசுலையா சாவு வரணும்." என அவளது அன்னை புலம்ப அனிஷ் "இங்கையே ப்ரித்விக்கு இறுதி சடங்கு செஞ்சுட்டு நம்ம ஊருக்கு போவோம்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார்கள். "ரௌடி பையா. இவளை ஏன் நம்ம தேடுற கொலைகாரன் கொலை பண்ணிருக்ககூடாது." என்றாள் சரியாக "என்ன சொல்ற? அந்த குழந்தைகளை கொன்னவன்ன சொல்றியா?" என்றான் தர்ஷமித்ரன் தெரியாமல் "ஆமா! தன்னோட திறமைய வைச்சு கொலை பண்றான்." இப்போது தான் தர்ஷமித்ரனுக்கு புரிய வந்தது 'கொலை பண்றவன் இப்போ நம்ம பக்கம் ஏன் திரும்பினான்?' என்று.

நாட்கள் சென்றது..விசாரணை நடந்து கொண்டே இருந்தது..மறுபக்கம் அன்று பேரிஸில் நடந்த சண்டையை மறந்தார்கள். அபிரன் பித்தனனான், காரணம் துர்கபூரணியை கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என ப்ரித்விகுப்தா அவனிடம் அவந்திகா மீது சத்தியம் செய்து விட்டாள். ஆதலால், அவன் இன்றே துர்கபூரணி உயிரை பரிக்க நினைத்தான்.

தர்ஷமித்ரன் வீட்டில்..

"மருமகளே! மருமகளே!" என்ற சத்தத்தோடு சமையலறைக்கு வந்தார் வித்யபாரதி. அவள் இருக்கும் நிலையை பார்த்ததும் அவர் "மருமகளே! என்ன டா ஆச்சு?" என அவளது முதுகில் தடவ கொப்பழித்து விட்டு அவரிடம் "அ..அம்மா என்னனு தெரியலை. நாள் தள்ளிப்போய்டுச்சு, இரண்டு நாள் வாந்தி வந்து வாட்டுது." இதை கேட்டதும் "என் கண்ணு! நீ முழுகாம இருக்க. மித்ரா கூட ஹாஸ்பிட்டல் போயிட்டு வா." இந்த சம்பவத்தை உட்டு கேட்ட மைதிலி "அண்ணி, ப்ரக்நன்ஸி கிட் வாங்கிட்டு வானு சொன்னிங்க. இந்தாங்க." என அவள் நீட்ட பரிசோதனை செய்து பார்த்த பின்னர் இரண்டு சிவப்பு கோடுகள். அதை தர்ஷமித்ரன் வீட்டிற்கு வந்தவுடன் காட்டலாம் என சொல்லாமல் வைத்திருக்க. வித்யபாரதி மற்றும் மைதிலி இருவரும் அமைதியாக இருக்க. வீட்டிற்கு வந்தவுடன் அவளுக்காக மாங்காய் வாங்கி வந்தான்.


"அண்ணா! உனக்கு அண்ணி சொல்லிட்டாங்கள் போல?" தங்கை மைதிலி இடையில் கைவைத்த படி முறைப்பாக கேட்க "மைதிலி என்ன சொல்ற?" என்றான் புரியாத படி. "ஆமா அண்ணா! நீ அப்பாவாக போற. கற்பகாலத்துல மாங்காய் சாப்பிடுறது வழக்கமாச்சே?" என்றாள் தர்ஷமித்ரனுக்கு புரியும் படியாக. "பூ!!! அம்மா.. தாங்க்ஸ் மைதிலி!" என்றதோடு அவ்விடம் விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான்.

தாய்மை முகத்தில் பூசி கொள்ள பெண்ணவள் பார்க்கும் பார்வை அவனை அழகாக வசப்படுத்தியது. "ரௌடி பையா.. நம்ம பையன் பொண்ணுக்கு பெயர் யோசிச்சு வைச்சிருக்கேன். சொல்லட்டா?" என்றாள் சந்தோஷமாக. அவனும் 'சொல்லு?' என்கிற படி தலையை ஆட்ட "பையன் பிறந்தால் சத்வஜன் பொண்ணு பிறந்தா மனிஷா." "நேம் சூப்பர் துர்கபூரணி. நாளைக்கு போய் கைநகாலாஜிட்ட போய் பார்ப்போம்." என்றதோடு இரவு பொழுது சென்றது..மறுநாள் விடிந்தது.மருத்துவரை பரிசோதித்து இரட்டை கரு வளர்ந்து வருகிறது என கூறவும் அவளை அவன் அன்றிலிருந்து உள்ளங்கையில் தாங்கி வந்தான்.
மாதங்கள் சென்றது..வேகமாக. இறுதியாக தர்ஷமித்ரனின் மூப்பதாவது பிறந்த நாள் அன்று அபிரனிடம் இவ்விஷயத்தை பகிர. அவன் 'இப்போ இவளை கொன்னா..அது பெரிய பாவம். அந்த ப்ரித்வி என் அவந்தி மேல சத்தியம் பண்ணிட்டா. குழந்தை பிறக்கட்டும் பிறகு பார்த்துகலாம்.' என்றதோடு நிறுத்திக்கொண்டான் மனதளவில்.

கோயிலுக்கு கிளம்பிய போது துர்கபூரணிக்கு வலி வந்தது. அடுத்த அறைமணி நேரத்தில் அவனது கைகளில் ஆண் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தார் மருத்துவர். "வாழ்த்துக்கள்! உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும். எங்களால் இந்த ஒரு குழந்தை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது." என்றார் இதை கேட்ட தர்ஷமித்ரன் "அப்போ இன்னொரு குழந்தை?" என்றான் கண்களில் கண்ணீரோடு அவர் "ஐயம் சாரி. காப்பாத்த முடியல." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார். குழந்தையை அன்னையிடம் கொடுத்து விட்டு மனைவியை பார்க்க சென்றான். அவளோ அழுகையோடு அவனது மார்ப்பில் சாய்ந்து "ரௌடி பையா!! நம்ம பொண்ணு.. ஏன்? எனக்கு மட்டும் இப்படியெலாம் நடக்கணும். ஹர்ஷினி என்னை விட்டு போயிட்டா. இப்போ மனிஷா. நா என்ன பாவம் பண்ணினேன்?" என்றாள் கவலையின் உச்சகட்டத்தில் இப்படியே சில நாட்கள் சென்றது கவலையோடு இருக்கும் மனைவி சமாதானம் செய்து வந்தவனின் அரவணைப்பு துர்கபூரணியை மாற்றியது.

சத்வஜனின் முதல் பிறந்தநாள், தர்ஷமித்ரன் துர்கபூரணியின் முதல் சந்திப்பு நடந்த இடத்தில் கொண்டாடினார்கள். அங்கு அபிரனும் வந்திருக்க அவந்திகாவை ரசித்து வந்தவன் துர்கபூரணியை பார்த்ததும். அவளிடம் பேச சென்றான் "துர்கபூரணி. கொஞ்சம் வெளிய வர முடியுமா முக்கியமான விஷயம் பேசணும்." அவளும் அபிரனோடு சென்றாள். "என்னை மன்னிச்சிடு, நா தான் தர்ஷன் தேடி வந்த குழந்தைகளை கொன்னவன். அ..அதோட, ப்ரித்வியை கொன்னதும் நா தான். ஆனா..அவ ஒரு சொன்னா.." முதலில் கேட்டவளுக்கு கோபம் பொங்கியது. பின் அபிரனின் இறுதி வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது. "என்ன சொன்னால்?" என்றாள் வேகமாக. "அவ ஆசையே உன்னை நா கொடூரமா கொலை பண்ணனும். இதை அவள் அவந்திகா மேல சத்தியம் செஞ்சு என்னை நிம்மதியா இருக்கவிடாம பண்ணிட்டா. நா உன்னை கொல்லாமல் போனா..வந்தி உயிருக்கு ஆபத்தாகிடும்." என்றான்.

துர்கப்பூரணி இது நாள் வரை ப்ரித்விகுப்தாவிடம் 'உனக்கு என்னை செஞ்சா நீ சந்தோஷமா இருப்ப?' என முசிறியில் இருக்கும் போது கேட்பாள். இப்போது, தன் உயிரை கேட்டு இருக்கிறாள். நொடியும் சிந்திக்காமல் "என்னை கொன்னுடு. அதுக்கு முன்ன நா கடைசியா என் குழந்தைய பார்த்துட்டு. நைட்டு வரேன்." என்றதோடு படியேறி சென்றாள்.குழந்தையை உறங்க வைத்துவிட்டு தன்னவனை காண செல்ல அவன் மைதிலியோடு விளையாட. 'உங்க கிட்ட கடைசியா பேச கூட முடியாமல் போச்சு ரௌடி பையா. அவந்திகா..' என அவளது மனம் தோழியை தேடி செல்ல "பூரணி..என்ன பண்ற?" என்றவாறு அவளே வர "என் மகன் சத்வஜன், நீ எப்படி பார்த்திப்ப? நா இல்லாத போது." என்றாள் கேள்வியாக முகத்தில் புன்னகையோடு. "ஏய்!! சத்வஜ் என் பையன்ல. நா பெறாத பிள்ளை. நீ எங்க போற?" என கேள்வி எழுப்ப "நா..என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன்." என அவள் கூற "சரி..போயிட்டு தாமதமாக்காம வந்துடு." என்றதோடு குழந்தை பக்கம் சென்று உறங்க தொடங்கினாள்.

அபிரனின் வீட்டினுள் நுழைந்ததும். துர்கப்பூரணி தானாக நார்க்காளியில் அமர அவன் கைகளையும்,
கால்களையும் கட்ட அவனிடம் "என் வாயை கட்டிடு. நா கத்துறது என்னோட இருக்கணும். என் ரௌடி பையனுக்கும், யாருக்கும் தெரிய கூடாது. என் கடைசி ஆசை நீ காவல் துறைகிட்ட எல்லா தவறை ஒத்துகிட்டு சரன் அடையணும். இது அவந்திகா அப்புறம் என் தாலி மேல சத்தியம்." என்றாள். அபிரனும் ஒப்புக்கொண்டான்.

அதற்கு மேல் அங்கு பேச்சுக்கு இடம் இன்றே போனது தன் தோழி பிர்த்துவின் ஆசைக்கு இணங்க தன் உயிரைப் பனைய வைத்தால் துர்கபூரணி. முதல் படியாக அவன் அவளது விரல்களை ஒவ்வொன்றாக தன்னுடைய ட்ரில்லரைக் கொண்டு வரைய ஆரம்பித்தான் ரத்த ஓவியமானது ரங்கோலியாக இருந்தாலும் அதன் குருதி வழிய வழிய அவளது கண்களில் கண்ணீர் பெருகி வந்தது ஆனால் சத்தம் போட முடியாமல் திக்கி திணறிக் கொண்டு இருந்தால் அதோடு அபிரனும் ஏதும் பேசாமல் இல்லை அவளிடம் அவ்வப்போது பேசிக் கொண்டு வருவதை வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தான். "என்ன மன்னிச்சிடு பூரணி. நான் வேணும்னு பண்ணல, பிரித்வி தான் அவந்திகா மேல சத்தியம் வாங்கி இப்படி எல்லாம் என்னை பண்ண வைச்சுட்டா." இப்படி அபிரன் பேசி வந்தாலும் அவனுக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு ஆவளால் பேச முடியவில்லை ஏனென்றால் தனக்கு ஏற்படும் இந்த வலியினால் எங்கே நாம் சத்தமிட்டு விடுவோமோ என்கிற ஒரு மன வேதனை அவளிடம் இருந்து கொண்டே தான் இருந்தது மனதில் வேதனையோடு அபிராமி கொடுக்கும் ஒவ்வொரு வழிகளையும் தாங்கிக் கொண்டால் பெண்ணவள்.

இரண்டு நாட்களாகத் துர்கபூரணியை தர்ஷமித்ரன் தேடி வருகிறான் எங்கே என்று தெரியவில்லை. அவந்திகாவிற்கோ சத்வஜனை பார்த்துக் கொள்வதற்கு நேரம் சரியாக இருந்தது தாயில்லாமல் சேயை எப்படி வளர்க்க என்ற கேள்வியும் அவளது மனதில் எழுந்து கொண்டே தான் இருந்தது நாட்கள் செல்ல செல்ல தர்ஷமித்ரன் அவளை நினைத்து வருந்தினான்.

கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா எங்கோ போவது நம்மிடம் வந்து சேருமா பக்கத்துல வாழும் போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும்போது பக்கத்துல நீ இல்ல தன்னந்தனி படகு போல தத்தளிக்கும் வாழ்க போல தண்டனைகள் ஏதுமில்லை எந்த மண்ணுல..


அவளது புகைப்படத்தையும், அவர்களது நினைவுகளையும் ஒன்று படுத்திய ஒரு குடும்ப வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு அவளது முகத்தைத் தன்னோட முகம் கொண்டு புதைத்தவன் அழுக அந்த குடும்ப வரைபடத்தில் இருக்கும் கண்ணீர் பட்டுத் தெறிக்க ஈரம் ஏற்பட்டது "நீயும் அழுகிறாயா? பூ நானும் இங்கு அழுதுட்டு தான் இருக்கேன். நம்ம குழந்தை சத்வஜன பத்தி எனக்கு நினைப்பு தோணல? நீ எப்படி இருப்ப உயிரோட தான் இருக்கியா? எதுவும் எனக்கு தென்படல? தேடிக்கொண்டே இருக்கிறேன்.. உன்னை எப்போதான் என் கையில வந்து சேருவ?" என அவன் புலம்பிக் கொண்டு இருக்க அவனது புதல்வன் அழத் தொடங்கினான். "சத்வஜா.. உன் அம்மா இப்படி நம்மள விட்டுட்டு போறது எனக்கு பிடிக்கல!!! அம்மாவ வர சொல்லு சர்வஜா! நீ அழுத அம்மா கண்டிப்பா வருவா!!" தர்ஷமித்திரனின் நிலையைப் பார்த்த அவந்திக்காவிற்கு என்ன செய்வது ஏது செய்வதென்று தோணவில்லை. ஆனால் அவனிடம் அன்று நடந்த உண்மையை சொல்ல வேண்டும் என தோன்றியது. அதே சமயத்தில் அவர்கள் வீட்டின் மணியோசை அடிக்க தொடங்கியது. அவந்திகாவை பார்த்தவன் "கொஞ்சம் யாருன்னு போய் பாத்துட்டு வரியா?" என்றதோடு மீண்டும் அந்தப் புகைப்படத்தினுள் மூழ்க ஆரம்பித்தான் தர்ஷமித்ரன்.

கதவைத் திறந்து பார்க்க அங்கு சின்னதாக ஒரு பெட்டி இருந்தது. அதை திறக்கவும் அவளுள் பயம் எழும்பியது ஏன் என்றே தெரியாமல்.. பெட்டியை திறக்கத் திறக்க குருதி வழிய வழிய.. 'யாராக இருக்கும்? எதற்கு இந்த பொருள் நம் வீட்டிற்கு வந்திருக்கிறது?' என அவளது மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக்கொண்டே தான் இருந்தது. ஆனால், பெட்டியைத் திறந்தவுடன் அவளது கண்கள் விரிந்தன, அவளது கண்களில் இருந்து கண்ணீர் தானாகப்‌ பெருக்கி எடுத்தது, என்ன செய்வதென்று தெரியாதவளுக்கு வாயை மூடிக்கொண்டு எப்படிக் கத்துவது? என்று தெரியாமல் நேராகத் தர்ஷமித்திரனின் அறைக்கு சென்றாள். அவள் ஓடி வருவதைப் பார்த்த மற்ற இருவரும் அங்கு சென்றார்கள். "அவந்திகா என்ன ஆச்சு ஏன் இப்படி ஓடி வந்த?" என மைதிலி கேட்க. "அது.. அது வாசல்ல வாசல்ல.. வாங்க வாங்க நான் காட்டுறேன் வாசல்ல ஏதோ ரத்தம் இரத்தமா இருக்குது." என்றால் திக்கித்தனை ரத்தம் என்கிற வார்த்தையைக் கேட்டதும் அனைவரும் ஓடோடிச் செல்ல பெட்டி இருப்பதை பார்த்தவுடன் அவர்களால் நம்ப இயலவில்லை! துர்கபூரணியின் கை, கால், எலும்பு, சதை உட்பட அனைத்தும் வெட்டித் தனித்தனியாக அந்த பெட்டியில் புத்தகத்தை எடுக்குவது போல் அடுக்கி, அதன் மேலே அவளது முகத்தை வைத்து, வாயில் கட்டிய துணியை அவிழ்க்காமல் அப்படியே வைத்திருந்த. சித்திரவதையான சாவு துர்கபூரணிக்கு வந்திருந்ததை பார்த்த தர்ஷமித்ரனால் நம்ப முடியவில்லை.


"பூரணி ஐயோ! பூரணி என்ன பூரணி!!!!" என அவந்திகா அழுக "அண்ணி.. எந்திரிங்க! அண்ணி.. அண்ணி இல்ல..?!" என மைதிலி தலையில் கைகளை வைத்து கொண்டு புலம்ப "ஐயோ!!! மருமகளே உனக்கு இப்படியா ஒரு சாவு வரணும்? வாழ வேண்டிய வயசுல உன் மகனா வளத்து அவனோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் பகிர் முடியாமல் இவ்வளவு சீக்கிரம் அந்த கடவுள் உன்ன அழைச்சுட்டாரே..!!!" என வித்யபாரதி புலம்பினார்.

அதே சமயம் தர்ஷமித்ரனின் அலைபேசி அலறியது. "சார் நம்ம இவ்வளவு நாள் தேடிட்டு இருந்த அந்த சீரியல் கில்லர் கைக்கு கிடைச்சுட்டான். இன்னைக்கு வாலண்டியரா நம்ம ஏரியா போலீஸ்ல போய் சரண்டர் ஆயிருக்கான். நீங்க சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க." என்றதும் தர்ஷமித்திரனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஆனால் துர்கபூரணிக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் அதனால் அவன் யோசித்து "நீ வேலைய பாரு. நான் இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா அங்க இருப்பேன். அவனை நம்ம கஷ்டடிக்கு கொண்டு போ. நாளைக்கு கோர்ட்ல மேஜிஸ்ட்ரேட்க் கிட்ட அவனுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்." என்றதோட அழைப்பை துண்டித்து விட்டு அந்த சமயத்திலும் மனைவியைக் கொன்றவனைப் பார்க்க வேண்டும் என்று தான் துடித்தானே தவிர, அவள் இருக்கும் நிலையைக் கண்டு அவன் அஞ்சவும் இல்லை, அழுதாலும் அதை அடக்க முயலவில்லை. ஏனென்றால் அவளுக்கு நேர்ந்தது தற்கொலை அல்ல கொலை என தெரிந்து விட்டது. அதனால், அவந்திகாவும் அவனிடம் எந்த ஒரு விஷயத்தையும் பகிராது, தன் தோழியின் இறப்பை சந்திக்க நேரிடும் ஓர் பாவியாக மாறினாள்.

காவல் நிலையத்திற்கு வந்தவுடன் தர்ஷமித்திரனுக்கு மற்றொரு அதிர்ச்சி, ஏனென்றால்.. அத்தனை கொலைகளையும் பண்ணது தன் நண்பன் அபிரன் என தெரிந்தவுடன் அவனுக்கு தூக்கி வாரி போட்டது. இருப்பினும், சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என்பதன் காரணமாக இரவோடு இரவாக அவனை மெஜிஸ்ட்ரேட்டிடம் இரு காவலர்களைக் கொண்டு அங்கு அவனுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. அவனுக்கு மெஜிஸ்ட்ரேட்த் தூக்கு தண்டனை வழங்கினார். ஆனால், இரண்டு நாட்கள் அவனுக்கு தள்ளி வைக்கப்படவில்லை. ஏனென்றால் அபிரன் செய்த தீமைகள் அப்படி. ஆதலால், நாளைக்கு காலையில் தூக்கு தண்டனை வைக்கப்பட வேண்டும் என கூறிவிட. இவனது மனதில் இருப்பது அவந்திகா, ஆகையால் கடைசி ஆசையாக ஒரு முறையாவது அவந்திகாவை பார்த்து பேசி விட வேண்டும் என்ற ஏக்கம் அவனது மனதில் இருந்தது. அதனை கண்களால் தர்ஷமித்ரன் பார்த்து உணர்ந்து கொண்டான்.

வீட்டிற்கு வந்தவன் அவந்திகாவை மறுநாள், தன்னோடு விடியற்காலையிலேயே அழைத்துச் சென்றான். அவந்திக்காவோ குழந்தையை தூக்கி வராமல் எங்கும் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்க, 'நீ வா!' என அவள் கையைப் பிடித்து அவளை அழைத்துச் செல்ல குழந்தையையும் தூக்கிக் கொண்டே தான் வந்தாள். அங்கு அவ்விடத்தில் அபிரனை தூக்கு மேடையில் நிறுத்தி வைத்திருந்தனர். அவள் வந்தவுடன் அவன் வெகு விரைவாக கீழே இறங்கி சென்று அவளை பார்த்து "உன் பேர்ல இருந்த ரெண்டு சின்ன குழந்தைங்களை கொன்னது நான் தான்! அதே மாதிரி நான் பண்ணினது தப்பு தான்! நான் இல்லைன்னு சொல்லல? ஆனா நீ என்ன விட்டுட்டு போனது எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. தனிமையக் கொடுத்தது கடைசி வரைக்கும் உன் வாயால அந்த வார்த்தையை நான் கேட்க மாட்டேனானு இருந்துச்சு. மூனு வருஷம் முன்ன அப்போ கேட்டேன். இப்போ கேட்க மாட்டேனானு ஏங்குறேன். ஒரு கைக்கிளையா ஏங்கிக்கிட்டு இருக்கேன். உன் மனசுல நான் இன்னுமா இல்ல?" என்றான் அப்போதும் அவளது வாயில் இருந்து நீ இருக்கிறாய் என்கிற வார்த்தை வர வேண்டும் என்பதற்காக. அந்த சமயம் அவந்திகாவின் கண்களில் கண்ணீர் வழிய அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ அபீர்!! எனக்காக நீ உன் தப்பை எல்லாத்தையும் ஒத்துக்கிட்ட. இதுவே என் அபிரன் திரும்பி வந்துட்டான்னு சொல்லிடுச்சு. இனிமே என் மனசுல உன்ன தவிர வேற யாருக்கும் இடம் இல்ல. நீ போ! கைக்கிளையா உனக்காக கடைசிவரை நான் காத்திருப்பேன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றாள். அபிரனிடம் பேச செல்வதற்கு முன் குழந்தையை தர்ஷமித்திரனிடம் கொடுத்து விட்டாள்.

"ஏதாவது கோவில் இருந்தா நிப்பாட்டுரிங்கல்ல தர்ஷமித்ரன்?"
"கண்டிப்பா நிறுத்துறேன்." என்றான் தர்ஷமித்ரன் வழியிலேயே ஒரு அம்மன் கோவிலில் இருந்தது ஆகையால் அந்த அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு பெண்ணிடம் தாலிக்கயிறு வாங்கிக் கொண்டு அம்மன் சன்னதியின் முன் செல்ல தர்ஷமித்திரனுக்கு கண்கள் இரண்டும் விரிந்தனைகள் 'என்ன செய்யப் போகிறாள்?' என்ற நோக்கத்தோடு அவளை பின்தொடர்ந்து கையில் குழந்தையோடு சென்றான் கோவிலில் நுழைந்தவள் அம்மனின் முன் நின்று "அம்மா! இங்க பாருங்க நான் துர்கபூரணிக்கு கொடுத்த வாக்கு அவ இல்லாத போது அவளோட குழந்தை சத்வஜன் ஒரு அம்மாவா நான் பார்த்துப்பேன். இப்போ என் மனசுல இருக்குறது அபிரன் மட்டும்தான்! அதோட தர்ஷமித்ரன் கூட நான் எப்போதும் களவு வாழ மாட்டேன்!! இது சத்தியம். என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு கிடைச்ச ஒரே குழந்தை துர்கபூரணி உடைய பையன் சத்ரியன் மட்டும் தான்! அதே மாதிரி தர்ஷமித்ரன் அப்படி நடந்துக்க மாட்டார். அவர் எனக்கு அண்ணா மாதிரி, அவர் மனசுல இருக்குறது என் பூரணி, என்னோட தோழி! அதனால இன்னைக்கி இந்த தாலிய என் கையாலேயே நான் கட்டிக்கிறேன். அபிரனே எனக்கு கையில தாலி கட்டி விடுறதா நெனச்சு இப்போ உங்க சன்னதிக்கு முன்னால இந்த தாலியை என் கழுத்துல கட்டுகிறேன்." தர்ஷமித்ரனைப் பார்த்து அவன் கேள்வி கேட்கும் முன் அவந்திகாவே "கவலைப்படாதீங்க நான் சத்வஜனுக்கு அம்மா! ஒரு வழிகாட்டுற தாயா என்னென்ன கடமைகள் செய்ய முடியுமோ அதெலாம் செய்வேன், பொண்ணோ அம்மா இல்லாமல் வாழ முடியாது. அப்பா இல்லாமல் அம்மா மெனக்கெட்டு அந்த குழந்தையை வளர்த்துடுவா. அதனால தான் அந்த காலத்துல இருந்து பொண்ணு இறந்து போயிட்டா பையனுக்கு அடுத்த கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.. பையன் இறந்து போயிட்டா அந்த பொண்ணுக்கு அடுத்த கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்லை. என்னை பொருத்தவரைக்கும் என் பையன் சத்வஜன் மட்டும் தான் என் மகன். அதோட, உங்க மனசுல கைகிளையா துர்கபூரணி இருக்கா. என் மனசுல கைகிளையா என் அபிரன் இருக்கான். உங்க காதலை பார்க்கும் போது என் அபீர் தான் ஞாகபத்தில் வரான். உங்ககூட நா களவு வாழ்க்கை வைச்சுக்க மாட்டேன். என் தோழி எனக்காக கொடுத்த பரிசு சத்வஜன்."

சுபம் என்று சொல்லி முடிப்பதற்கு இங்கு மகிழ்ச்சி இல்லை.
IMG_20240316_135657.jpg

அனல் அடங்கியது🔥 கைக்கிளை பெருகியது💞💞.
 
Last edited:
நீங்கள உங்கள் விமர்சனங்களை இந்த திரியில் பதிவிடலாம்👇🏻👇🏻

 
Status
Not open for further replies.
Top