பிரியாதிருக்க பிறிதொரு நாள் சந்திப்போம்
NEWYEAR TEASER
HAPPY NEWYEAR 2024 DEARIES
முகிலினி தன் அருகில் படுக்கையில் இருந்த மூதாட்டிக்கு மருந்துகளைக் கொடுத்து விட்டு மெல்ல எழுந்தாள். அமெரிக்காவின் வெர்மான்ட் மாகாணத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் இருந்தாள் மகிழினி. அந்த வீட்டில் இருக்கும் வயதான மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கும் செவிலியர் பணியில் இருந்தாள். அவளுடை புன்னகை மாறாத சேவையும் சாந்த முகமும் இயல்பாகவே எல்லோருக்கும் உதவிடும் மனமும் அவளை தொழிலை தேர்ந்தெடுக்க வைத்தது முக்கியமாக அவளுடைய பணித்திறனும் பணிவும் படைப்பாற்றலுடன் கூடிய கனிவான அணுகுமுறையும் அவளை மரண நோயர் மருத்துவ செவிலியர் ஆக மாற்றியது.
மரண நோயர் செவிலியர் தொழில் என்பது இதற்கு மேல் மருத்துவத்தால் எதுவும் இயலாது என்ற கைவிடப்பட்ட நோயாளிகளின் கடைசி ஆறு மாதங்களில் அவர்களை இறப்புக்கு தைரியமாக எதிர்கொள்ள வைப்பதும் சந்தோஷமாக வைத்திருப்பதும் மருத்துவ உதவி செய்வதுமே. இதோ இப்போது இருக்கும் குளோரியா மூதாட்டி கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக படுக்கையில் தான் இருக்கிறார். அவருக்கு நான்கு மகன்கள் இரு பெண்கள். மாதத்திற்கு இரு முறை அவரவர் தங்கள் குழந்தைகளுடன் வந்த அவரை பார்த்துவிட்டு செல்வார்கள் குளோரியா அவருடைய கணவர் இறந்த பின்னர் உடல்நலம் குன்றி அவருடைய மூத்த மகன் வ
நோவா ரிச்சர்ட்ஸ் கண்காணிப்பில் வசித்து வருகிறார். மூத்த மகன் சாம் இங்கிருந்து சற்று தள்ளி இன்னொரு வீட்டில் வசித்து வருகிறார். வழக்கம் போல் அன்று முகிலினி அவருக்கு மருந்துகளை கொடுத்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அறையில் சத்தம் கேட்க திரும்பினால். நான்கு மாதம் படுக்கையில் இருந்த குளோரியா எழுந்திருந்தார். மெல்ல அவர் நடக்க முகிலினியின் பார்வை தீவிரமானது. அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் வினவினாள்.
“என்ன ஆச்சு பாட்டிமா ? ஏன் என்ன பண்ண போறீங்க?”
“ரிச்சர்ட்ஸ் அவருக்கு பிடிச்ச சான்விச் செய்ய சொன்னாரு..மஸ்ட்ர்ட் சாஸ் எடு”
முகிலினி அதை அவர் கையில் கொடுத்து விட்டு சாம் ரிச்சர்ட்ஸ் கு அலைபேசியில் அழைத்தாள்.
ஏங்க மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார் குளோரியா முடித்து களைப்பாக வந்து அமர முகிலினி அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள்.
“ஹலோ மிஸ்டர் ரிச்சர்ட்ஸ் உங்க அம்மா எழுந்து நடக்கிறாங்க, இன்று இரவு இல்லைனா நாளை அவங்களோட முடிவு எதிர்பார்க்கலாம் நீங்க எல்லாரும் வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்”
அவள் சொல்லி முடித்து கிட்டத்தட்ட ஆறு ஏழு மணி நேரத்தில் அந்த குடும்பத்தினரின் அத்தனை பேரும் அங்கே இருந்தனர். அந்த வயதான மூதாட்டியுடன் அனைவரும் நேரம் செலவிட்டனர் முகிலினி அவர்கள் அனைவரையும் பார்த்திருந்தாள். அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு மெலிதாக திரும்ப மீண்டும் கிளோரியாவின் குரல் கேட்டது.
“ரிச்சர்ட்ஸ் ரிச்சர்ட்ஸ் இங்க பாருங்க நம்ம பசங்க எல்லாம்”
அவர் பேசிக் கொண்டே நடக்க ஆச்சரியமாகி
நோவா திரும்பினார்.
“அம்மா நடக்குறாங்க,ஆனா அவங்க கடைசி நாள்ல இருக்கிறாங்கனு சொல்றீங்க புரியலையே”
நோவாவின் கேள்விக்கு முகிலினி புன்னகைத்தாள்.
“இப்ப நீங்க அவங்களோட கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழிக்கிறது தான் முக்கியம்,இந்த ஆராய்ச்சி எல்லாம் பிறகு சொல்றேன்”
முகிலினி சொல்ல அன்றிரவு விருந்து பெரும் கொண்டாட்டமாக இருக்க முகிலினி அனைத்து ஏற்பாடும் செய்தாள். குளோரியா அவளது கரங்களைப் பற்றி நன்றி சொல்லி உறங்கச் சென்றார்.
மறுநாள் முகிலினி சொன்னது போல மறுநாள் அந்த மூதாட்டி இறந்திருந்தார். முகிலினி அந்த இறப்பில் கலந்து கொள்ளவில்லை மெல்ல அங்கு இருந்து புறப்பட்டாள். அவர் வேலை செய்யும் ஏஜென்சிக்கு வந்து இரு வாரங்கள் விடுப்புக்கு விண்ணப்பித்து வந்தாள். அவளது உடம்பும் மனதும் களைத்து போய் இருந்தது. என்னதான் இந்த தொழிலை ஆத்மார்த்தமாக விரும்பி வந்தாலும் ஆறு மாதம் தன்னுடன் பழகிய அந்த மூதாட்டியின் முகமும் மனமும் மனதை ஏதோ செய்தது. இந்த செவிலியர் பணிக்கு மட்டும் அளப்பரிய மனத்திடனும் அசாத்திய துணிவும் தேவையாக இருந்தது. முகிலினி இருபத்தாறு வயது இந்திய நாட்டு இளம்பெண். அவளை வளர்த்த அவளது அப்பா வழி பாட்டி ராசம்மா உடல்நலன் குன்றிய போது அவருக்கு நிகழ்ந்த உதாசீனங்களால் உந்தப்பட்டு இந்த பணியை தேர்ந்தெடுத்து இருந்தாள். அதற்காகவே படித்தாள். அமெரிக்காவில் படிக்த உதவித்தொகை கிடைத்து அமெரிக்கா வந்தாள். செவிலியர் படிப்பு முடிந்த பின் மரண நோயர் செவிலியருக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் சிறந்து விளங்குகிறாள்.
ஏனோ குளோரியா இறப்புக்கு பிறகு தனது மனதை சாந்தப்படுத்திக் கொள்ள அவள் இருவாரம் இந்தியா சென்றாக வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட இரு வாரங்கள் இந்தியா சென்ற பின் அவளது மெயிலில் அவளுக்கான பணி சுவிர்ட்சலாந்து ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏஜென்சி பயணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளுடன் செய்தி அனுப்பியிருந்நது. அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில் நோயாளியின் கோப்புகளைக் கூட ஆராயாது கடவுச்சீட்டு பயணச்சீட்டு மட்டும் பார்வையிட்டு கிளம்பினாள். குளோரியாவின் இறப்பு இன்னும் அவளை இயல்பு நிலைக்கு திரும்ப விடாதிருந்தது.
சுவிட்சர்லாந்து வந்து இறங்கியாயிற்று. சுவிட்சர்லாந்து பனி இல்லாது மிதமான தட்பவெப்ப நிலை நிலவியது. ஆரஞ்சு இலை மரங்கள் வானுயர்ந்து நிற்க விமான நிலையத்தில் இருந்து அந்த சொகுசு மகிழ்வுந்து அவளை அழைத்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய வீட்டின் முன்பு நிறுத்தியது. மிகப்பெரிய மரங்கள் சூழ நடுவில் அழகான கட்டமைப்பு உள்ள ஒரு பிரம்மாண்ட கண்ணாடி வீடு அது. சுவர் முழுவதும் முற்றிலும் கண்ணாடியினால் இருந்தது. வெளியே தெரிந்த காட்டின் அழகை ரசித்துக் கொண்டே வருடக்கணக்கில் அமரக்கூடும் ஒரு ரசனையுள்ள கவிஞன் எழுதிய கவிதை போலிருந்தது அதன் அழகு.
அவளுடைய அனுபவத்தில் இவ்வளவு ரசனைோடு இயற்கை ரசித்த வயதானவர்கள் இருப்பார்களா? அவள் யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
வேலையாட்கள் இருவர் அவளை வரவேற்று அமர வைத்தனர் சிறிது நேரத்தில் அவளிடத்தில் வந்த அந்த வீட்டின் மேலாளர் அவளை ஒரு அறைக்கு அனுப்பி வைத்தார். அங்கே காத்துக் கொண்டு இருந்த முகிலினி சத்தம் கேட்டு சற்றே திரும்பினாள். அங்கே 16 வயதிருக்கும் ஒரு இளைஞன் வீல்சேரில் அமர்ந்திருத்தான். மிகச்சிறுவன் ஆனால் அவன் முகச்சாயல் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே??! முகிலினி திகைத்து போய் மீண்டும் அவனை உற்று நோக்கினாள்.