எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக! - டீசர்

NNK-64

Moderator
# திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக! டீசர்

ஹாய், புது எழுத்தாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாசகர்கள் தங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆதரவையும் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. கட்டாயம் இந்த கதை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எனக்கு தெரிந்த வகையில் டீசர் போட்டிருக்கிறேன்.. வாசக தோழமைகளின் ஆதரவிற்காக காத்திருக்கிறேன்.. நன்றி

காட்சி 1

“ஹலோ, எங்கே போகணும்னு கேட்டேன்” என்றான் சத்தமாக..

அதில் அவள் உடல் அதிர்ந்து குலுங்கியது.. பதட்டமாக அவனை பார்த்தாள்.. கண்கள் படபடத்தது..

“ரிலாக்ஸ், ஏன் இவ்வளவு பதட்டம்? எங்கே போகணும்னு தானே கேட்டேன்.. சொன்னால் தானே அந்த பாதையை நோக்கி செல்ல முடியும்” என்றான் தணிவான குரலில்..

“அதுதான் தெரியலை” என்றாள் மொட்டையாக..

“என்ன தெரியலையா?” என்றான் நிரஞ்சன் வியப்புடன்..

“உன்னை காரில் கொண்டு போக வந்தவர்கள் யாரு?, அந்த இளைஞன் உன்னோட காதலனா?” என்றான்,

“தெரியலை” என்றாள் மீண்டும்

இவள் என்ன லூசா என்பது போல பார்த்தான்.. “அப்போ அவன் நீங்க இரண்டு பேரும் காதலர்கள், திருமணம் செய்துக்க முடிவெடுத்திருக்கோம்னு சொன்னானே.. அப்பவே மறுத்திருக்கலாம் தானே” என்றான்

“அவன் சொன்னது உண்மை, அதுதான் மறுக்கலை” என்றாள்..

“நீ எப்பவும் புரியாம தான் இப்படி இரண்டு வார்த்தைல பதில் சொல்வியா?” என்றான் சற்று எரிச்சலான குரலில்..

அவள் மெளனமாகவே அமர்ந்திருந்தாள்.. காரை சற்று ஓரமாக நிறுத்தினான் நிரஞ்சன்..

அவன் காரை நிறுத்தியதும் பதட்டமாக காரின் கதவின் மேல் ஒண்டி கொண்டாள்.. “ப்ளீஸ் என்னை எதுவும் செய்திடாதீங்க” என்று தன் கைகளை வணங்குவது போல கூப்பினாள்..

அவள் கண்களில் கண்ணீர் கரை புரண்டோட, அயர்ந்து போனான் அவன்..

இதென்னடா வம்பா போச்சு.. இவள் அழறதை பார்த்தால் நான் என்னவோ கடத்திட்டு வந்த மாதிரி எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? என்று நினைத்தவன் காரை வேகமாக இயக்கினான்..

“நான் காரை நிறுத்தி உன் மேல் பாய்ஞ்சிடுவேனு நினைச்சியா? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?” என்று அடிகுரலில் சீறினான்

“நீ எங்கே போகணும்னு சொல்லி தொலை.. எங்கே போறதுனு தெரியாமல் காரை ஓட்டிட்டு இருக்கேன்.. இடம் மட்டும் சொன்னால் போதும் எந்த விளக்கமும் எனக்கு சொல்ல தேவையில்லை” என்றான் அழுத்தமான குரலில்..

மறுபடியும் அவளிடம் மெளனம்.. நிரஞ்சனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது..

“இப்போ காரை நிறுத்த போறேன்.. மறுபடியும் தப்பா நினைச்சு அழ தொடங்காதே.. நீ காரை விட்டு இறங்கிக்கோ.. எனக்கு நேரமாச்சு, நான் என் வீட்டிற்கு போகணும்” என்றான்..

அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்தவள், “தனியா என்னை விட்டுட்டு போகாதீங்க ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக

“என் மேல் தான் உனக்கு நம்பிக்கை இல்லையே.. உன்னை விட்டுட்டு போனால் உனக்கு நல்லது தானே” என்றான் புருவம் உயர்த்தி..

தலையை குனிந்து கொண்டாள்.. நம்பிக்கை இருக்குனு சொல்றாளா பாரு என்று நினைத்தவன்..

“நீ இப்போ எங்கே போகணும்னு சொல்லலைனா, எனக்கு வேற வழி இல்லை” என்றான்.

“வவந்து எங்கே போறதுனு தெரியாம தான் அந்த அக்கா வீட்டில் இருக்கலாம்னு நினைச்சேன்.. விடியறதுக்குள்ள யோசித்து எங்காவது போகலாம்னு இருந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்..

“எங்கே போறதுனு தெரியலையா? ஏன் உனக்கு வீடு இல்லையா? அப்பா அம்மா இல்லையா? அவங்க இந்நேரம் தேடிட்டு தானே இருப்பாங்க” என்றான்..

ஆமாம் என்பது போல தலையாட்டினாள்..

“அப்போ அங்கே போக வேண்டியது தானே?” என்றான் கேள்வியாக..

“இந்நேரம் நான் வீட்டை விட்டு வந்தது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.. என்னை வீட்டில் சேர்த்து கொள்வாங்களா என்று தெரியல.. அதுதான் தனியாக எங்காவது தங்கி வேலை தேடி கொள்ளலாம்னு நினைக்கிறேன்” என்றாள்..

ஓ காதலனுடன் ஓடி வந்து விட்டாள்.. இந்நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்று பயப்படுகிறாள்.. ஆனால் அவனுடன் போவதாக சம்மதித்தவள் ஏன் போகவில்லை.. அவனுக்கு குழப்பமாக இருந்தது.. கேட்டால் சொல்ல மாட்டாள் என்றே தோன்றியது..

“சரி என் வீட்டில் இன்றிரவு தங்கி கொள்.. நான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே ஒரு வேலை வாங்கி தருகிறேன்” என்று அவன் சொன்னது தான் தாமதம்..

“அது உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்று கேட்டாள் தயக்கத்துடன்

“நான் மட்டும் தான் பிளாட்டில் தங்கியிருக்கேன், ஏன்?”

“இல்லை , நான் என் வீட்டுக்கே போயிடுறேன்” என்றாள் அவசரமாக..

ஒரு கணம் புருவம் நெறித்து அவளை பார்த்தவன் பின்பு தோளை குலுக்கிவிட்டு “உன் இஷ்டம், அட்ரசை சொல்லு” என்றான்..

அவள் சொன்னதும் காரை திருப்பினான்..”ஏன் காரை திருப்பறீங்க, இதே வழியாக போகலாமே..அந்த பக்கம் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது” என்றாள்..

அவளை ஆழ்ந்து பார்த்தபடி காரை ஓட்டினான்,.. “நான் போற வழி சரியானது தான்.. உனக்கு நம்பிக்கை இல்லைனா இங்கயே நீ இறங்கிக்கலாம்” என்றான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்


காட்சி 2

“பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு திமிரும் தேவைப்படுகிறது.. அது ஆணவ திமிர் அல்ல.. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சமுதாயத்தை எதிர்கொள்ள மகாகவி பாரதி சொன்னது போல திமிர்ந்த ஞான செருக்கும் தேவைப்படுகிறது.. ஒரு ஆணிடமிருந்து உன்னை காப்பாற்ற எந்த ஆணும் வருவானா? என்று காத்திருக்காதே..

உனக்காக நீயே போராடு, உடல்வலிமையுடன் அவனிடம் சண்டையிட தேவையில்லை, உன் எதிர்ப்பை உன் பேச்சால் உன் நடத்தையால் கூட காட்டலாம்

பேரழகியாக இந்த சமூகத்தில் போராட முடியாது சகி, திமிரழகியாக மாறி எல்லாரையும் துணிவுடன் எதிர் கொள்ள பழகு, உன்னோடு நான் இருக்கிறேன் என்றான் நிரஞ்சன்

திமிரழகியாக மாறுவாளா இந்த எழிலழகி?
 

Attachments

  • WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    83.9 KB · Views: 6
Last edited:
Top