எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

”முகவரி” - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK-88

Moderator
ஹாய் ப்ரண்ட்ஸ்..

அனைவருக்கும் காலை வணக்கம்!!

”முகவரி”

கதையைப் பற்றி என்ன சொல்ல!! பலரது வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம்.. என்ன ஒன்று! அதை அவர்கள் ஓரளவு எதிர்பார்த்து, அதற்காக தங்களை.. தங்களின் மனபலத்தை தயார் படுத்திக் கொள்வார்கள். இங்கே நாயகனுக்கோ சற்றும் எதிர்பாராத, ஏற்றுக் கொள்ள முடியாத சில சம்பங்கள் அவன் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போடுகிறது. அதை அவன் எப்படி கையாள்கிறான் என்பதை கதையின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

விரைவில் முன்னோட்டத்துடன் உங்களை சந்திக்க வருகிறேன்..


(நான் இந்த தளத்திற்கு புதியவளாக இருக்கலாம்.. ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவள் தான்.. என் எழுத்தின் வழியே என்னுடன் பயணித்திடுங்கள்.. பார்க்கலாம் வாசகர்களின் திறமையை;))


- நான் NNK 88
 
Last edited:

NNK-88

Moderator
முகவரியின் முதல் முன்னோட்டம்..

”என்ன ஓனரம்மா.. உங்க அப்பா பைக்கை வாடகைக்கு தான் எடுத்துட்டு போறேன்.. அதுக்காக உங்களுக்கு டிரைவர் வேலை பாப்பேன்னு எப்படி நீங்க நினைக்கலாம்.. சாரி டு சே திஸ்.. நீங்க வேற ட்ராவல் அரேஞ்ச் பண்ணிக்கோங்க..” என்றவன் பைக்கை முறுக்கியபடி அவளைப் பார்த்தான்.

அவளோ முகத்தில் எதையும் காட்டாது அமைதியாக நின்றாள். தினமும் பேருந்து நிறுத்தம் வரை சென்று விடும் தந்தை இன்று ஏன் இப்படி செய்தார் என நினைத்தவளுக்கு தலை வலித்தது. நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டுமே!

அவனோ அவளின் அவசரம் புரியாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

“இங்க பாருங்க விஷ்வா.. டெய்லி அப்பா தான் என்னை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணுவார்.. இன்னைக்கு அவருக்கு லீவ் என்கிறதால.. மறந்து போய் பைக்கை உங்க கிட்ட கொடுத்துட்டார்..” என்று அவர் கூறும் பொழுதே.. அவன் இடை மறித்தான்.

“வேலைக்கு போகிற பொண்ணு.. ஒரு வேக்கில் வச்சுக்க வேண்டாமா.. இல்ல ஆட்டிட்டர் அம்மாகிட்ட பணம் தான் இல்லையா..?” என நக்கல் செய்தவன்..

“இது என்ன! யாருன்னே தெரியாதவன் கிட்ட எல்லாம் லிப்ட் கேட்பது.. எனக்கு சோசியல் சர்வீஸ் செய்யலாம் நேரமில்லை.. ஏதோ ஓனரம்மா ஆச்சேன்னு நின்று பேசிட்டு இருக்கேன்.. உங்க வீட்ல வாடகைக்கு இருக்கிறதால் என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காதீங்க..” என சுடுசுடுவென முகத்தைக் கொண்டு கூறியவன் மனதிலோ ‘விஷ்வா தேறிட்ட போ..’ என தன்னையே சிலாகித்துக் கொண்டு பைக்கை நகர்த்தியவன்.. சில அடிகள் தூரம் சென்று நின்றவன்.. பைக்கை உறும விட்டு திரும்பி அவளைப் பார்த்தான்.

இமைக்காது தொடர்ந்த.. அவனைப் பார்த்த.. அவள் விழிகளிலோ சிறு மின்னல்..!
அதைத் தயங்காது எதிர்கொண்ட.. அவன் விழிகளிலோ பிடிவாதம்..!

அடுத்த நொடி அவன் அங்கு நிற்கவில்லை. செல்லும் அவனைக் கண்டவளுக்கோ புதிதாய் கவலை பிறந்தது. அவனைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது தான்.. ஆனால் அவளுக்குத் தெரிந்தவரை? என யோசித்தவளுக்கு.. சில காலமாக குறைந்திருந்த மனதின் போரட்டம் இனி வரும் காலங்களில் அதிகமாகும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவள் வாழ்க்கை வட்டத்தில் வந்த இரண்டாம் நாளே அவனைப் பற்றி யோசிக்க வைத்து விட்டானே என கோபம் ஒரு புறம்.. அலுவலகம் செல்ல நேரம் ஆன பதற்றம் ஒரு புறம் என பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.


22.jpg

ஹாய் ப்ரண்ட்ஸ்..
கதையின் முதல் முன்னோட்டம்.. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி..

அன்புடன்..
நான் NNK 88

கருத்துத் திரி..

 
Last edited:
Status
Not open for further replies.
Top